TODAY'S POST- VISHWAVASU-DAKSHINAYANAM-SHARATH-THULA-KRISHNA-SAPTHAMI-BOUMA-PUNARVASU

6 views
Skip to first unread message

sreemutt...@gmail.com

unread,
Nov 10, 2025, 11:47:20 PM (3 days ago) Nov 10
to
1090
வழிவழி வரும் உபதேசம்- தெய்வத்தின் குரல்- ஏழாம் பகுதி

ப்ரத்யட்ச குருவைப் பிதா என்றால், அந்தப் பிதா அவருக்கு ஒரு பிதா இல்லாமல் எப்படி உண்டாவார்? அப்படியே அந்தப் பிதாவுக்கும் பிதா, அவருக்குப் பிதா என்று போகுந்தானே? அப்பா இருந்தால் தாத்தா, கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா என்று அப்படியே போய்க்கொண்டுதானே இருக்கிறது? அப்பாவுக்கு ச்ராத்தம் என்றாலும் தாத்தா, கொள்ளுத் தாத்தாவையும் அங்கே கூப்பிடத்தானே செய்கிறோம்? அதே மாதிரி குரு என்ற அப்பாவையும் பரம்பரா க்ரமமாகச் சேர்த்துதானே பூஜிக்கணும்? ஆதியிலிருந்து அந்தந்தக் கால சிஷ்யர்களுக்குப் பரமோபகாரம் பண்ணிவந்திருக்கிற குரு பரம்பரையை நாம் மறக்கவே கூடாது. 'பரமரிஷிகள்' என்று (மூலத்தில்) வருவதை ஆசார்யாள் 'ப்ரஹ்மவித்யா ஸம்ப்ரதாய கர்த்தாக்கள்' என்று மரபு வழி வந்த குரு பரம்பரையாகவே அர்த்தம் பண்ணியிருக்கிறார்.

வழி வழி வழியாக ஒரு உபதேசமோ அநுஷ்டானமோ வந்திருக்கணும். அதற்குத்தான் Weight. அதிலே வந்த ஒவ்வொருத்தரின் அநுஷ்டான பலமும், அநுபவ பலமும் சேர்ந்து சேர்ந்து அதுதான் வஜ்ரம் பாய்ந்த மரம் மாதிரி எது ஸத்யமோ, எது ஹிதமோ அதை உறுதிப்பண்ணித் தரும். பல பேர் பல தலைமுறைகளாக வாழ்க்கையிலேயே நடத்திக் காட்டி, பலனைடந்து வெற்றி கண்ட வழியாக ஒன்று இருக்கிறெதென்றால் அவர்கள் அத்தனைபேரும் கண்டு கொண்ட லட்சியம் ஸத்யமாகத்தானே இருக்க முடியும்? Free thinking, சுதந்திர சிந்தனை, அது - இது என்று சொல்லிக் கொண்டு நம் ஒருவருடைய அல்ப புத்தியைக் கொண்டு மாத்திரம் கண்டுகொள்வது எப்படி இத்தனை நிலைப்பட்ட ஸத்யமாயிருக்கமுடியும்?

" மரபு மீறுபவன் மூடன்" - ஆசார்யாள்

ஸம்ப்ரதாயத்துக்கு விருத்தமாக (முரணாக) வேறே அபிப்ராயம் சொல்கிறவனை ஆசார்யாள் 'மூர்க்கன்' என்றே சொல்வார். அவர் கருணாலயமாக இருந்தவர். அவரே இப்படிக் கடுமையானகச் சொன்னாரென்றால், பரம ஸத்யம் என்று அவருக்குத் தெரிந்த ஒன்றை எப்படிச் சொல்லாமலிருக்க முடியும்? ஜனங்களின் நல்லதற்காவே, அவர்களை நல்ல வழியில் கொண்டு வரணும் என்ற கருணையினாலேயே, 'ஸம்ப்ரதாயத்தை ஒட்டியே போங்கள் சொந்த முடிவு பண்ணி வீணாகப் போகாதீர்கள்!'என்பதை இப்படிக் கண்டிப்பான வார்த்தை போட்டு உபதேசித்தார். அழகான ஒரு பெரிய மரபு வழிவழியாக வந்திருக்கும்போது, அதை விட்டு விட்டுப் பிடிவாதமாகத் தன்னையே வீண் பண்ணிக் கொள்கிறவன் மூர்க்கனில்லாமல் வேறே என்ன? அதைத்தான் சொன்னார்.

ஸம்ப்ரதாயத்தில் வராத புது அர்த்தத்தை சாஸ்திரங்களில் புகுத்திச் சொல்கிறவனை ஆசார்யாள் 'ஆத்மஹா', அதாவது தன்னையே கொலை பண்ணிக் கொண்டவன், 'மூடன்', மூடனாயிருந்தும் வாயைமூடிக் கொண்டிருக்காமல் ஊருக்கு உபதேசம் பண்ணி மற்றவர்களையும் குழப்புகிறவன் என்றெல்லாம் பலமாகவே கண்டித்து கீதா பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார். எனவே அவன் அத்தனை சாஸ்திரமும்

WITH PRANAMS 

N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536

TIRUPUR RAMANATHAN-63816 83335
1-3

படித்தறிந்தவனாயிருந்தாலும் அவனை மூர்க்கன் என்றே தள்ளவேண்டும் என்கிறார்.

1090[1].jpg
1-3[1].jpg
Reply all
Reply to author
Forward
0 new messages