1,219 views
Skip to first unread message

sivan jaykay

unread,
Nov 12, 2017, 7:16:26 PM11/12/17
to amritha varshini
                                          வாழ்க்கைப்  பாடம்.

ராவ்ஜி  ஒரு  தொட்டாசிணுங்கி.  பொசுக் என்று கோபம் வரும்.   சில சமயம்  மாலை மாலையாக  கண்ணீர்  விடுவார்.  தேம்பி தேம்பி ஸ்லேட்டு குச்சி,  பலப்பம்  தொலைத்த  எங்க  கால மூணாம் கிளாஸ் பையன்  போல்  அழுவார்.  சின்ன விஷயங்களைக்கூட  பல வருஷங்கள் ஞாபகம்  வைத்துக்கொண்டு  சிரிப்பார், பல்லைக் கடிப்பார்,  பெருமூச்சு விடுவார்.  நிறைய பேர்  இப்படி ராவ்ஜி போல   உண்டு.

 என்னிடம்  வந்து மனதைக்  கவிழ்த்து கொட்டி  சூடு ஆற்றிக்கொள்வார்.   அன்று ராவ்ஜி,   ஏதோ விசனமாக இருந்தார்.  அவர் முதுகில் தட்டிக் கொடுத்து   

''சுப்ரமணிய  ராவ்,  கவலையே  படாதேங்கோ. அனாவசியமாக  மனதைப் போட்டு  அலைக்  கழிக்காதேங்கோ.  நான்  ஒரு தடவை சில சிம்பிள் விதிகளைப் படிச்சு  எழுதி வச்சிருக்கேன். அதை  இப்போ  தரேன் .  அதை  நீங்களும் எழுதி வச்சிண்டு  அப்பப்போ  எடுத்து  படிச்சு பாருங்கோ கொஞ்சம் அதைப் பத்தி சிந்தனை பண்ணனும் அது தான் ரொம்ப  அவசியம்.  வெறுமே  படிச்சுட்டு  தலையாட்ற தாலே  கழுத்து தான் சுளுக்கிக்கும். மூளைக்கு  போகணும் விஷயம். அப்போ தான்  உபயோகப்படும்.

ராவ்ஜிக்கு நான் கொடுத்த  லிஸ்ட்   இது. உங்களுக்கு ஏதாவது ப்ரயோஜனப்படுமா என்று பார்த்து   'ஹுஹும்'  என்றால் சின்ன கப்பல் செய்து   மழைத்தண்ணீரில்  மிதக்க விடுங்கள்:  

1. பிறத்தியார்  உன்னை  எப்படி  பாக்கணும்னு  நினைக்காதே.  நீ  எப்படி  இருக்கணும் னு  நினைக்கிறயோ அப்படியே  இரு. மற்றவர் மதிப்பீடு உன் எதிர்பார்ப்பு மாதிரி இருக்காது அப்பனே.

2.   வாழ்க்கை  வாழ்வதற்கே. நடிப்பதற்கு  அல்ல.  மற்றவரை கவர  முயர்ச்சிக்காதே. இதனால்  மற்றவர் மட்டுமல்ல உன்னையுமே  நீ  ஏமாற்றிக்கொள்வாய்.

3.  சந்தோஷம்  வேண்டுமானால்  வாழ்க்கையில்  எது அத்யாவசியமோ அதைத்  தேடு. பார்ப்பதை, ஆசைப்படுவதை எல்லாம் துரத்தாதே. ஏமாற்றும்.    

4. எவ்வளவோ  மழை நீர்  கடலில் விழுந்தாலும்  இருந்த இடம்  தெரியாது. ஒரு துளி இலையின் மேல் பட்டால் மட்டும் தானே அது முத்துப் போல் ஜொலிக்கும் . எங்கு உன் திறமையைக் காட்டவேண்டுமோ அங்கு காட்டு. பளீர் என்று டால் அடிக்கும். 

5.   நீ  வெற்றி அடைந்தால் உன்னை  வாழ்த்துபவர்கள்   நீ  யாரென்று அறிவார்கள்.  நீ  வீழ்ந்த சமயம் தான்  உன்னை  உண்மையாக நேசிப்பவர் கண்ணில் படுவார்.

6.  வாழ்க்கையை  நீ  விடும் மூச்சு  அளப்பதில்லை. எந்த எந்த  சந்தர்ப்பங்களில்  உன் மூச்சு எப்படியெல்லாம்  வெளியேறியது என்பது தான் அதை  நிர்ணயிக்கும்.

7.  தைரியம் என்பது  உன் தவறுகளை நீ ஏற்றுக்கொள்வதும்  திருத்திக் கொள்வதும் தான்.

8.  முயற்சி தான்  முக்கியம்  என்பது வாஸ்தவம்.  ஆனால் எங்கே  எதற்காக ஏன்  முயற்சி  அவசியம் என்பதை நன்றாக அறிந்து பிறகு  அதை தொடங்கவேண்டும்.  இது  தான்  வெற்றி பெறுபவர்களுக்கும்  பெறாதவர்களுக்கும் உள்ள  வித்யாசம்.

9.  கோபாலன் சொன்னான், கோவிந்தன் சொன்னான்  என்று  எதையும்  ஏற்காதே.  சரியான  அனுபவஸ்தன், உன்னிடம்  உண்மையான அக்கறை கொண்டவனை பின்பற்று.  இல்லாவிட்டால்  கண்ணாடிச்  சில்லை  பொறுக்குவதிலேயே  காலம் போய்விடும்.  எப்படி  வைரம் கிடைக்கும்?.  வாழ்வில் இது  முக்ய பாடம்.

10. ரொம்ப உறுதியானவன், வலி என்றால்  என்ன  என்றே  அறியாதவன்  என்று அர்த்தம் அல்ல.  உண்மையிலேயே, உறுதியானவன்  தான் வலியைப்  பற்றி நன்றாக  தெரிந்தவன். அதை ஏற்பவன்.

11.  உனது  வலி  எவனாவது சிரிக்க  ஒரு காரணமாக இருந்தது என்றாலும்  உனது சிரிப்பினால்  மற்றவன் காயம் அடையக்கூடாது.

2.  எதிர்பார்ப்பதெல்லாம்  தானாகவே  வரவே வராது தம்புடு.    உழைப்பின் பயன்   நீ வியர்வை சிந்தி, முட்டி மோதி  அடைந்ததாக இருந்தால்  அதற்கு  தனி மதிப்பும்  பெருமையும் கிடைக்கும்.  உன்னை யார்  என்று  அறிய வைக்கும்.

குழந்தைகளை  இளம் வயதிலேயே  உழைப்பு  என்றால்  என்ன  என்று  புரிய வைக்கவேண்டும். வாழ்க்கை சுலபமானதல்ல என்று அறிந்தால்  அவர்கள்  பின்னால்  கஷ்டப்பட மாட்டார்கள்.

 

sivan jaykay

unread,
Nov 19, 2017, 8:39:23 PM11/19/17
to amritha varshini
                                       மணி மணியான வாசகர் 


திரு வாசகம் என்றாலே எளிதில் மனதில் படுவது.  திரு: தெய்வீக, அழகிய, வாசகம்: சொல், வாக்கு, பாடல்.  ஆகவே மாணிக்க வாசகர் எழுதிய இப்பாடல்கள் உண்மையிலேயே தெய்வீகமானவை. நல்ல  பொருத்தமான பெயர்.  சிவன் கருணாமூர்த்தி. அவனை ஐம்புலன்களால் அறியமுடியாது. இனிய தோத்திரத்தால் அறிவது எளிது என்பது  ஞானிகள் கண்ட உண்மை.  திருவாசகம் உள்ளத்தை உருக வைத்து பரிசுத்தமாக்கும் தன்மை கொண்டது.  அதை உணர்ந்து ஓதுபவனுக்கு சிவன் தோன்றுவான். 

சொற்பதம் கடந்த தொல்லோன், -  சிவ பிரான் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவன். 
கண் முதற் புலனால் காட்சியும் இல்லோன்: கண் முதலான  ஐம்புலனால் காண முடியாதவன். 
உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படான் – உணர்ச்சிகளில் பிடிபடாதவன் என்கிறது திருவாசகம். 

ஏதோ வார்த்தைகள் அழகாக தொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதற்காக படித்து மகிழ அல்ல திருவாசகம். உள்ளத்தை மெழுகாக உருகவைக்க ஆழமான பக்தி உணர்வு வேண்டும். படிக்கும்போது  எழுத்துகள் மறையும்படியாகி கண்ணில் நீர் பெருகவேண்டும். குலுங்கி குலுங்கி மனம் கரைந்து அவனருளை அறிய வேண்டும். அப்போது தான் திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது நியாயமாகும். காகிதத்தில் சர்க்கரை இனிப்பு என்று எழுதி அறிவது அல்ல இந்த இனிப்பு. திருவாசகம் தேன் .

எப்படி மனம் உருக வேண்டும் தெரியுமா? ''காதலாகி கசிந்து கண்ணீர் மக்க என்கிறார் ஒரு அடியார். ''கற்றாவின் (கன்றை ஈன்ற பசுவின்) மனம் போலக் கசிந்துருகி '' என்கிறார் மணிவாசகர். பசு கன்றை ஈன்றபின் அதற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. கன்றின் மேல் அன்பு ஒன்று தான். 

 “உன் ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிமேல் அன்பு கனிந்து கசிந்து உருகும் மனத்தை எனக்கருளவே யான் உன்பால் வேண்டுகிறேன்” -- மணிவாசகர் குற்றாலநாதரை இப்படி வேண்டுகிறார். 

ஒரு  அருமையான பாடல் சொல்லுகிறேன். 

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;

கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரைகழற்கே

கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே! – திருவாசகம்:39-3


''என்  தெய்வமே, சிவபெருமானே, இதோ பார்  எனக்கு எந்த சொந்த பந்தமும் வேண்டாம். எனக்கு  எந்த ஊரும் சொந்த ஊர் இல்லை. படிப்பு, கல்வி இதெல்லாம் கிட்டவே வரவேண்டாம். எனக்கு தெரிந்ததெல்லாம் உன்னுடைய சிலம்பணிந்த திருவடிகள் மட்டுமே தான். குற்றாலநாதா, உன்னிடம் நான் வைத்த பாசமும் நேசமும் பக்தியும், புதிதாக கன்றுக்குட்டி போட்டுவிட்டு அதன் மேல் அளவற்ற பாசம் அன்பு கொண்ட தாய்ப்பசுபோல நினைக்க நினைக்க என் மனம் அனலிடை மெழுகென உருக்கவேண்டுமப்பா.'' என்கிறார் மணிவாசகர்.இப்படி ஒரு பக்தி பாசம், இருந்தால் ஏன் சிவன்  நரியை பரியாக்க மாட்டான். நீங்களே சொல்லுங்கள்.

புடம்போட்டு தங்கம் போல்  சோதனைகளை தாங்கி நின்றவர் மணிவாசகர். 


''புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் 30

இந்த பாடலில் ஒரு அற்புதமான விளக்கம் அமைந்திருப்பதை கவனமாக நோக்குங்கள். 
 
புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும்,பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும், கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும் இந்த அசையும் மற்றும் அசையாத வற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று.....பிறவிக்குப் பிறவியாக  பல பிறவிகள், பல ஜென்மங்கள் பிறந்து அல்லல் பட்டது போதுமடா சாமி.'' என்கிறார் மணிவாசகர். என்ன வரிசை, என்ன தீர்க்க தரிசனம். எங்கே எந்த பல்கலைக்கழக பட்டதாரி அவர்?


''யோவ்  டார்வின்,  எப்படியோ யார் மூலமோ  எங்கள்  மணிவாசகர் பாடிய இந்த ப்பாடலின் அர்த்தம் உனக்கு தெரிந்திருக்கிறது போல் தோன்றுகிறது.  இதை இங்கிலீஷில் எழுதி கொளுத்திப்  போட்டுவிட்டு,   நீ ஏதோ புதிதாக கண்டுபிடித்தது போல்  மனித இனம் தோன்ற இது தான் பரிணாம தத்துவம் என்று சொல்லி விட்டு அகில உலக புகழ்  உனக்கு.  உண்மையை முன்னாலேயே சொல்லிவிட்டு  அகல் விளக்குக்கு கூட வழியில்லாமல் பல கோவிலில்  அவர்.  அதை நம் மூட மக்களும் கை  தட்டி வரவேற்ற கொடுமைக்கு என்ன சொல்வது.  ;நம்மவர்கள் இங்கே இருப்பதை என்றுமே கண்டு கொள்வதில்லை.  எல்லாமே இக்கரைக்கு அக்கரை  பச்சை தான். என்று தான் ஞானம் வருமோ?

நேரம் கிட்டிய போதெல்லாம்  மணிவாசகரை அணுகவேண்டும்.  அதற்கு சிவனே உன் கருணை வேண்டும். 

sivan jaykay

unread,
Nov 22, 2017, 7:26:56 PM11/22/17
to amritha varshini


எங்கள் வம்ஸம் 

                                                                        அந்த நாள்  ஞாபகம்  நெஞ்சிலே....


 ஊர் சிறிய து.  உள்ளம் பெரியது  என்று  இருந்த காலம்  அது.  யாருமே  பணம், கஷ்டம், என்று நினைத்து கூட பார்க்கவில்லை.  ஒருவரை மற்றொருவர்  பணக்காரன்  ஏழை என்று வித்தியாசப்படுத்த வில்லை  உறவுகளாகவே ஒன்றாக கூடி வாழ்ந்தார்கள்.  இருப்பதை பங்கிட்டு கொண்டார்கள். தனிக்குடும்பங்கள் என்பது எண்ணத்தில் கூட  இல்லை. 

பொது இடங்களில் தான்  ஊர் செயதிகள், விவகாரங்கள் பேசப்பட்டு  அறிந்து கொண்டார்கள்.  

யாராவது  வெளியூரிலிருந்து வந்தால்  என்ன சேதி என்று கேட்டு,  அது மத்தியானத்துக்குள்   அந்த  சமாசாரம் அக்குவேறு  ஆணிவேராக பல ரூபங்கள் எடுத்து  ராமன் குப்பனை அடித்தான்  என்பது  ராமனின் ஊரில் அனைவருமே  குப்பன் எதிரிகளாகவும்  அவர்களை  வேட்டையாடி முறியடித்ததாக  செயதி உருவம் பெறும்.

வெளியூரில் இருந்து  திரும்பியவர்கள்  மூலம்  அடுத்த  ஊர்  கதைகளும்  கோவில் பக்கத்தில் விநாயகர் உட்கார்ந்திருக்கும்  ஆலமரத்தடிக்கு  வந்துவிடும். அங்கே போய்  தான்  மத்யஸ்தம், பிரச்னைகளுக்கு  தீர்வு.  

முத்து தீட்சிதர்,  வாத்யார்  நாகராஜன், ஜோசியர்  ராமன்  போன்ற  உள்ளூர் ஞானஸ்தர்கள்  அளிக்கும்  தீர்ப்பு தான்  சுப்ரீம்  கோர்ட்  ஜட்ஜ்மெண்ட்.  தலையாரி தாமோதரன்  தமுக்கடித்து  ஊரில்   விஷயம் சொல்வான்.  

 ''ஊர்லே  கல்யாணம்  மார்லே  சந்தனம்''  என்பது  வழக்கத்தில்  இருந்தது. யார் வீட்டுக்கல்யாணம்  என்றாலும்  அனைத்து  வீடுகளுக்கும்  அதில்  பங்கு உண்டு.     கல்யாணத்துக்கு  இப்போது போல்  ஒரு வருஷம்  முன்னாலேயே  சத்திரம்  தேடும்  வழக்கம்  இல்லை.  சமையல்  கான்ட்ரக்டர்  பிறக்காத  காலம்.  

கோட்டை அடுப்பு  என்று  தெருவில்  ஓரமாக  சில  ஒலைத்தட்டிகளை  மடக்கி  கூறை போட்டு   உள்ளே  கண  கண வென்று  பெரிய  வாய்  திறந்து கொண்டு  கல்  அடுப்புகள்  நிற்கும்.  அதில் நிறைய  விறகுகள்  எரிந்து கொண்டிருக்கும்.  சாம்பார்,  ரசம்,  தாளிப்பு  மணம்  எங்கும்  வீசும்.  பெரிய தவலை   அல்லது வாய்  அகன்ற  பாத்திரத்தில்   அரிசி  வெந்து கொண்டிருக்கும்.    சில  சமையல்காரர்கள்  ஒரு பக்கம்  காய்கறி  நறுக்க, சிலர்  அம்மியில் பொடி செய்தோ  கல்லுரலில்  கொட  கொட  என்று  கைவிடாமல்  அரைத்துகொண்டோ  இருப்பார்கள்.   தலைமை பரிசாரகர்  அவர்களை  விரட்டிக் கொண்டே  இருப்பார்.  

''சாமா சாதம்  ரெடியா?''  என்று  குரல்  வரும்.  

''அண்ணா இன்னும்  சத்தே பொறுங்கோ  ரெடி.   சாதம்   கஞ்சி வடிச்சுட்டேன்   கொஞ்சம்  ஓலைப்பூறட்டும்.  எலே  பாலு  சீக்கரம்  இலை போடு.''    

 தெருவை  மடக்கி  பந்தல்.  அப்போதெல்லாம்  அத்தி பூத்தாற்போல   மாட்டு  வில் வண்டி  குதிரை வண்டி ஏதாவது   மட்டும் போகும்;  வண்டிச்சக்கரத்தில் குச்சியை நீட்டி சத்தம் பண்ணிக்கொண்டு வருவது  தான்   ஹார்ன்.   ஓரம்போ என்று கத்துவான் வண்டிக்காரன்.  

நாயனம் வகையறா  காலம்பரத்திலே இருந்தே  விடாமல் கீர்த்தனங்கள்  வாசிக்கும்.  தவில்  சத்தம்  ஊரின்  அமைதியைக்  கொன்று, அனைவரும்  எங்கே மேளம்  யார் வீட்டில்  விருந்து என்று தெரிந்ததால்  ஒன்றாகக்  கூடிவிடுவார்கள்.  சிலர்  நீர் மோர்  பானகம் தங்கள் வீட்டில் தயாரித்துக் கொண்டுவந்து  விநியோகம்  செய்வார்கள். பரந்த மனம்.  

 சின்ன   மடக்குப் பாய்  நீளமாக  விரித்து   வரிசையாக  தெருவே கூடி  எல்லோரும் உட்கார்ந்து இருப்பார்கள்.  பெண்  வீட்டுக்காரர்கள்  அத்தனை பேரும் வந்து  ''வாருங்கோ  வந்து  சாப்பிடுங்கோ''  என்று உபசாரம் கட்டாயம் சொல்வார்கள் .  பதில்  சொல்லி  வாய் வலிக்கும்.    பிள்ளை  வீட்டுக்காரர்கள்  ஒரு பக்கம்  இதே  உபசாரம்  பண்ணுவார்கள்.   ''இன்னும்  இன்னும் '' என்று  மேலே  மேலே   இலையில் சாதமும்  பலகாரங்களும்  சாம்பார்  ரசம் கூட்டு  எல்லாம்  விழும்.  பெரிய  வாழை இலை.  


ஐஸ்க்ரீம்  ப்ரூட்சாலட்   எல்லாம்  தெரியாது.  இலையில்  பலவித   பலகாரங்கள் நிரம்பும் . நொறுக்குத் தீனி இல்லாததால்  எல்லோருமே  ஒரு  கை  பார்ப்பார்கள்.    அப்பளம் பெரிசு  பெரிசா  இலையையே  மறைக்கிற மாதிரி  இருக்கும்.  யானையடி  அப்பளம் என்று இதற்கு பெயர்.   ரெண்டு அப்பளம் முழுதாக சாப்பிட்டால்  இப்போது நாள் முழுதும் பசிக்காது.  

 இந்த  அப்பளம் எல்லாம்  கல்யாணத்துக்கு  பல  மாதங்களுக்கு  முன்பே  எல்லா  மாமிகளும் கூடி  தினம் தினமாக   பல நாள்  ஒன்றாக  ஜமா  கச்சேரி  போட்டு இட்டது.  வெயிலில்   நன்றாக  காய்ந்து   சுட்ட அப்பளம். எல்லாம்  ருசிகரமாக  இருக்கும்.  பாயசத்தில்  அப்பளம் நொறுக்கி  சாப்பிடுவார்கள்.  இன்னும் எனக்கு ரொம்ப பிடிக்கிறது.   தொன்னையில்  நெய்  நிரப்பி பரிமாருவார்கள்.  ரசம் வாங்கி வாங்கி  குடிப்பார்கள். யாருமே  கொலஸ்ட்ரால் என்றால்  என்ன என்றே  தெரியாதவர்கள்.  ''டயட்டிங்'' என்றால் ஏதோ ஊசி  மருந்து  என்று  ஓடுபவர்கள்.  அப்போதெல்லாம்  ஊசி  பெரிதாக இருக்கும்.   ரொம்ப  ரொம்ப  வலிக்கும்.  

வடகம்  வத்தல்  எல்லாமே      'MADE  BY  MAMIS ''  மாமிகளின்  ''மேக்''  தான்.  வெளியில்  விற்க  யாருமில்லை  ஆதலால்  கிடைக்காது. கல்யாணத்தில்  பாட்டு  தூள் பறக்கும்.  இட்டுக்கட்டி  பாடுவதற்கு  தயார் செய்து கொண்டு வருவார்கள்.  நலங்கின் போது   அவர்கள்   சாமர்த்தியங்கள் பிள்ளை வீடா, பெண்வீட்டாரா எது ஜெயித்தது  என்று சளைக்காமல்   போட்டி போட்டு அவர்களின்  திறமை  வெளிப்படும்.  

கல்யாண  உற்சாகம்  6 நாள்  7நாள்  கூட  தொடரும்.  கட்டுச் சாத  கூடை  வைக்கிற அன்று  கண்ணீர்  பிரவாகமாக பெருகும் பெண் வீட்டாரோடு   தெருவில் உள்ளவர்களும்   ஊர்க்காரர்களும் கூட  சேர்ந்து  அழுதாலும்  பெற்றோரைத்  தேற்றுவார்கள்.

கல்யாண  பெண்ணுக்கோ பிள்ளைக்கோ இதில்  சம்பந்தமே  இல்லாமல்  அந்த  சிறுசுகள்,  வாண்டுகள்,  விளையாடிக் கொண்டு  இருக்கும். தங்களுக்குக்  கல்யாணம் என்று  ஒன்று நடந்ததாக  அறியாத வயது அல்லவா. புதுத்  துணியும் பட்சணமும்  தான்  பிரதானம். பிள்ளைக்கு  ஒன்பது  பத்து வயசும்  பெண்ணுக்கு  ஆறு  ஏழு  ஆனாலே கல்யாணம். இப்போது  ஒண்ணாம் க்ளாஸ் வயசு.  இல்லை இல்லை  கான்வென்டில் முதலாம் வகுப்பு.!!!

நாணா  மாமா  பெருமாள்  சந்தனம்  கோவிலில் இருந்து கொண்டுவந்து  எல்லோருக்கும்  இட்டு விடுவார். ''நாணா  ஸ்லோகம் சொல்லிண்டே  சந்தனம்  இட்டா  ஓடம்புக்கு  ஒரு  வியாதியும்  இல்லை''  என்று  ஊரில்  பிரசித்தம். ரயில்  பார்த்ததில்லை.  பஸ் என்ன என்றே  தெரியாது.  எதற்கும்  ரெட்டை மாட்டு  வண்டி,  வில்  வண்டி  தான்.  நடை  அத்தியாவசியம்.  கையில்  கூஜா,  ஒரு  பெரிய  மூங்கில் தடி.   ஜோல்னா  பையில் கட்டுசாதம் தலையில்  ஒரு  துணி மூட்டை   இது  தான்  நெடும்பயணம் செய  தேவைப்பட்டது.  இருட்டில் பயணம்  கிடையாது.  யார்  வீட்டுத்   திண்ணையிலாவது  படுக்கை.   வீடுகளுக்கு  காம்பௌண்ட்  வேலி  இல்லாமல்  மனதைப்போல  திறந்ததாகவே  இருந்தது.

sivan jaykay

unread,
Nov 26, 2017, 7:53:56 PM11/26/17
to amritha varshini
யாத்ரா விபரம் 

                                       விண்ணில் தாரகனை எதிர்த்தவர்! 

சென்னைக்கருகே  காஞ்சிபுர வட்டத்தில்,  மிக முக்கியமான ஒரு சுப்ரமணியசுவாமி கோவில்  திருப்போரூரில் இருக்கிறது.  
 சோழர்  பல்லவ ராஜாக்கள்  காலத்தை சேர்ந்த கோவில்.  2ம்  நரசிம்ம பல்லவன் (கி.பி.691) கால கல்வெட்டு மண்டபத்தூண்கள் இரண்டில் உள்ளது.  முதலாம் குலோத்துங்கன் சோழன் கல்வெட்டு  (கிபி 1076) இவ்வூரை  ''ஜெயங்கொண்ட சோழ மண்டல ஆமூர் கோட்டம் குமிழி நாட்டு திருப்போரியூர் சுப்பிரமணிய தேவர்''  ஆலயம் என்கிறது. 

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவிலில்  சந்நிதிகள் தந்தைக்கு உபதேசம் செய்த ப்ரணவமந்த்ரத்தை  ''ஓம்'' எனும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது ஆச்சர்யம். 

 தேவசேனாபதியாகி  சூரனை எதிர்த்து அவன் சக்திவாய்ந்த சகோதரன் தாரகாசுரனை வதம் செய்த கோலத்தில் கந்தசுவாமி இங்கே காட்சி அளிக்கிறார்.  ஆகவே தாரகாபுரி என்ற பெயர் நாளடைவில் திருப்போரூராகியது என்பார்கள். இன்னொரு பெயர் சமராபுரி.  கந்தசஷ்டி கவசத்தில்  ''சமராபுரிவாழ் சண்முகத்தரசே'' என  பாலதேவராய சுவாமி வர்ணிக்கிறார். 

இக்கோவில் ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு போனது. சுவாமி சிலையும் ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையில் வசித்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றிய முருகன், இதுபற்றி அவருக்கு தெரிவித்தார்.

 சிதம்பர சுவாமி இங்கு வந்து, முருகன் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். காட்டை சீர்திருத்தி புதிய கோவில் எழுப்பினார். கந்தசுவாமியைப் போற்றி 726 பாடல்கள் பாடினார். இவருக்கு இங்கு சன்னதி உள்ளது.

இத்தலத்தில் முருகன் சிலை கண்டறியப்பட்டபோது, அது ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பாத்திரத்தை தற்போதும் வைத்துள்ளனர். அள்ளஅள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போல இந்தப் பானை செல்வத்தை தருவதாக ஐதீகம்.

ஷண்முகனுடன்  அசுரர்கள் யுத்தம் செய்யும்போது மாயையில் மறைந்து  தாக்கினார்கள்.  ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும்  அவர்களை  முருகன் கண்டு சம்ஹாரம் செய்ததால் இந்த இடம் ''கண்ணகப்பட்டு (கண்ணில்  அகப்பட்டு)   என்று  திருப்போரூர் அருகில் உள்ளது.

 சிதம்பர சுவாமிகள்   மதுரை மீனாட்சி சொக்கநாதரை அனவ்ரதம் த்யானிப்பவர்.   மீனாட்சி கலிவெண்பா பாடியவர்.  அவரது த்யானத்தில்  ஒரு அழகிய மயில்  தோகை விரித்தாடியது . கூடவே மீனாட்சி அம்மன் தோன்றி கட்டளை இட்டாள்: 

‘சிதம்பரா! மதுரைக்கு வடக்கே, காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் உள்ளது. அங்கே குமரக்கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து, அழகிய திருக்கோவில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்து. அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுப
வர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டும்’ என்று அருள, திருப்போரூர் வந்து  கந்தசுவாமி திருக்கோவிலை, மதுரை மீனாட்சி அம்மன் திருவருளால் மகான் சிதம்பர சுவாமிகள்  நிர்மாணித்தார்.   அவருடைய  திருமடம் அருகே  உள்ளது.

சுயம்பு முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப்பெருமானின் உருவில் இருந்து முருகப்பெருமான் வெளிப்பட்டு,  சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து ‘சிவாயநம’ ஓதி மறைந்தார். அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோவிலின் தோற்றமும், அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் என்பதை உணர்ந்தவர், மனதில் தோன்றிய கோவில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

ஒருமுறை   திருடர்கள் திருப்பணிக்கான பொருள்களை திருட முயன்று உடனே கண்  பார்வை இழந்தனர்.  அவர்கள் பார்வை இழந்து கதறி சிதம்பர சுவாமிகளை வணங்கி மீண்டும் கண் பார்வை பெற்றனர்.  நன்றியோடு  தாங்கள் களவாடிய தங்கம், வெள்ளி, காசு,  பொருட்களை திருப்போரூர் ஆலய திருப்பணிக்கு கொடுத்து விட்டு சென்றனர்.

இந்தப்பகுதியை அப்போது  ஒரு நவாப் ஆண்டு வந்தான். அவன்  மனைவிக்கு  தீராத வயிற்று வலி.  நவாப்  சிதம்பர ஸ்வாமிகளை வேண்டி   அவர் முருகன் அருளினால்  அவன் மனைவிக்கு திருநீறு பூச,  அவளுக்கு உடனே வலி நீங்கி,  நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் கட்டிக்கொண்டிருக்கும்  முருகன் கோவிலுக்காக 650 ஏக்கர் நில தானம் வழங்கினான்.  அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில்..
ஆற்காடு நவாப் திருவுருவ படம் இங்கே   உள்ளது

ஆலயத்தின் தெற்கே ‘வள்ளையார் ஓடை’ என்னும் சரவணப் பொய்கை. 
 திருக்குளத்தில்  நீராழிமண்டபம். குளத்தில்  8 கிணறுகள். ஆகவே,  வற்றாத நிலை. தைப்பூசவிழாவில் பிரமாதமாக தெப்போற்சவம் நடக்கும். 

கிழக்குப் பார்த்த ராஜகோபுரம்  கருவறையில் முருகப்பெருமான் வள்ளி– தெய்வானையுடன் கிழக்கு நோக்கி  காட்சி தருகிறார்.  கீழே ஒரு சிறு பீடத்தில் கந்தசுவாமி   இங்கே   சுயம்புமூர்த்தி. பிரதான பூஜைகள் செய்ய  சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். அபிஷேகம் கிடையாது.  விசித்திரமாக  இங்கே  முருகன்   பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக  விளங்குகிறார்.

கருவறையில் உள்ள மூலவருக்கு புனுகுச் சட்டம் சாத்தி, கவசம், திருவாபரணம் முதலியன அணிவிக்கிறார்கள். எதிரில் யானை வாகனமும், பலிபீடமும் உள்ளன. கணபதி, தண்டாயுதபாணி, பிரம்ம சாஸ்தா, துர்க்கை, அகத்தியர், நாகராஜா, வீரபாகு, வீரபத்திரர் சன்னிதிகளும் ஆலய உட்பிரகாரத்தில் உள்ளன. கருவறை பின்புறம் பஞ்சலோகத்தில் அமைந்த விநாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், பிரம்மா, தேவேந்திரன், நந்தி, த்வனி சண்டேசர், மாத்ரு சண்டேசர், அஸ்திரதேவர், 'உபதேச மூர்த்தி'' சன்னிதிகள்.

சிவபெருமானது மடியில், தந்தையின் திருமுகத்தைப் பார்த்தபடி முருகன் அமைந்திருக்க, சிவபெருமானோ தன் குழந்தையிடம் பிரணவப் பொருளை உபதேசம் பெறும் அதி அற்புத திருஉருவம் தான் ''உபதேச மூர்த்தி''.
 உபதேச மூர்த்தி விக்கிரஹத்திற்கு மரிக்கொழுந்து சாத்தி, நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமார சுவாமி வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளார். தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து, 6 நெய் தீபம் ஏற்றி வழிபடுவோர்க்கு  எதிரிகள், பகைவர்கள் கிடையாது..

வெளி  பிராஹாரத்தில் விநாயகர்,சனீஸ்வரர் சந்நிதிகள்.  சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால், சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகலும்.

ஸ்தல விருக்ஷம்  வன்னி மரம்.  அருகே வன்மீகநாதர், புண்ணியகாரணி அம்பாள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வன்னிமர விநாயகர், இடும்பன், சூரியன் சன்னிதிகளும் உள்ளன. இங்கே  பைரவருக்கு  நாய் வாகனம் இல்லாமல் தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் காண்கிறார்..

திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மாமல்லபுரம் எல்லாம் இங்கிருந்து சுமார் 14 கி. மீ.தான். 

'' திருப்போரூர் சந்நிதி முறை'' என்று  சிதம்பர சுவாமி 762 பாடல்களை முருகன் மீது பாடியுள்ளார்.வள்ளலார் பாம்பன் சுவாமிகள், சந்தானலிங்க சுவாமிகள், அருணகிரிநாதர்  பாடல்கள்  பெற்ற ஸ்தலம். .

விநாயகர் இங்கு கணநாதனாக முன்புற பகுதியிலேயே கிழக்கு நோக்கி  அமர்ந்திருப்பதால் அவரை வணங்கிய பின்  தம்பி கந்தசாமியை  ராஜகோபுரம் வழியாக கருவறைக்கு சென்று வணங்கவேண்டும் . அருகே  சிதம்பர சுவாமி சந்நிதி. பெரிய வட்ட வடிவிலான மண்டபம்.   கொடிமரம் மயில் வாகனம் பலிபீடம் உள்ளது.    24 கால் மண்டபம் வழியாக உள்ளே சென்றால் வலதுபுறத்தில் தெய்வயானை சந்நிதி .
 இடது புறத்தில் கருவறை மூலவரான முருகன் வள்ளி தெய்வயானை விக்கிரஹங்களுக்கு  வில்வமாலை இங்கேயே தொடுக்கிறார்கள். கடைகளில் விற்கும் மற்ற மாலைகள் சாற்று வதில்லை. 

உள்   பிராகாரத்தில் வடகிழக்கில் சிதம்பர சுவாமிகள் அமைத்துள்ள ஸ்ரீசக்கர யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதில் விநாயகர், வள்ளி– தெய்வானையுடன் கூடிய முருகர், சிவன், உமையவள், சண்டேசர், அஷ்டதிக் பாலகர், பைரவர்களுக்கு உரிய மந்திர எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது.. கூர்மம், அஷ்டநாகம், அஷ்டகஜங்கள், கணங்கள் ஆகியவை கொண்ட பீடத்தில் இச்சக்கரம் அமைந்துள்ளது. தினமும் இதற்கு பூஜைகள். விசேஷகாலங்களில் சிறப்பு  பூஜை. 

கோயில் நேரம்:  காலை 7 மணிக்கு - நண்பகல் 12.30 மணிம்  மாலை 4.30 மணி-இரவு 8.30 மணி வரை.

Jambunathan Iyer

unread,
Nov 26, 2017, 7:55:33 PM11/26/17
to

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் குட்மார்னிங் நண்பர்களே

யார்இந்தசனிபகவான்? இவரைஎப்படிவழிபடவேண்டும்?*

 

சனீஸ்வரன்_வரலாறு :

Inline image 1 

சூரியனுக்குரிய_மனைவியரில் ஒருத்தி_உஷா. இவள்_சூரியனின் வெப்பம்தாளாததால்தன் நிழலையேஒருபெண்ணாக்கி சாயாதேவிஎன்றபெயரில் தங்கியிருந்தாள். சாயாதேவிக்கு சனீஸ்வரன்_பிறந்தார்.  பின்னர் உண்மை தெரிந்தது. சூரியன் தன்னை ஏமாற்றிய மனைவியைக் கடிந்து கொண்டார். அவளுக்கு பிறந்த சனீஸ்வரனை வெறுத்து ஒதுக்கி விட்டார். சனி காசிக்கு சென்று விஸ்வநாதரை வணங்கி நவக்கிரக மண்டலத்தில் இடம் பெற்றார்.

 

சனிஅறிவியல்தகவல் :

 

இந்த கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பார்த்தார். பூமியில் இருந்து 128 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. சில சமயத்தில் பூமியிலிருந்து விலகிப்போனால் 164 கோடி கி.மீ., தூரம் இருக்கும். பூமியை விட 750 மடங்கு பெரியது. சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன். அதற்கடுத்த இடத்தை சனி பெறுகிறது.

 

சனீஸ்வரனை_வணங்கும் முறை :

 

காலை 5 மணிக்கு நள தீர்த்தத்தில் நீராடி, கரையிலுள்ள நளவிநாயகர் மற்றும் பைரவரை வணங்க வேண்டும். கோவிலுக்குள் உள்ள கிணறான கங்காதீர்த்தத்தை தரிசித்து, கோபுர வாசலுக்கு வந்து ராஜகோபுர தரிசனம் முடித்து, உள்ளே நுழையும் போது முதல் படிக்கட்டை வணங்கி முதல் பிரகாரத்திற்கு செல்ல வேண்டும்.

 

இந்த சுவரில் வரையப்பட்டுள்ள நள சரிதத்தை பக்திப்பு ர்வமாக பார்த்த பிறகு, காளத்திநாதரை வணங்க வேண்டும். பின்னர் சுவாமி சன்னதிக்குள் சென்று மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, தியாகவிடங்கர் சன்னதிக்கு செல்ல வேண்டும்.

 

இங்குள்ள மரகதலிங்கத்தை வணங்கிய பிறகு, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கிய பின் வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும். அங்குள்ள தெய்வங்களை தரிசித்து கட்டைக் கோபுர வாசல் சென்று அம்பிகை பிராணேஸ்வரியை வழிபட வேண்டும்.

 

பிறகு தான் சனீஸ்வரர் சன்னதிக்கு செல்ல வேண்டும். சிலர் முதலிலேயே சனீஸ்வரனை தரிசிக்க சென்று விடுகின்றனர். இது சரியான வழிபாட்டு முறையல்ல. இங்குள்ள இறைவனை பார்த்த பிறகு சனீஸ்வரனைக் கண்டால் தான் சனிதோஷ விமோசனம் கிடைக்கும்.

 

சனீஸ்வரனுக்கு_உரியவை :

 

ராசி - மகரம், கும்பம்

திசை - மேற்கு

அதிதேவதை - எமன்

நிறம் - கருப்பு

வாகனம் - காகம்

தானியம் - எள்

மலர் - கருங்குவளை

வஸ்திரம் - கருப்பு ஆடை

 

சனி

 

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம யமாக்ரஜம்

சாயா மார் தாண்டஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குடும்ப சனீஸ்வரரின் அருள் பெற்று வரலாம்!

N Jambunathan (Ex: REVL & IMPAL)
Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004y

sivan jaykay

unread,
Nov 26, 2017, 7:57:24 PM11/26/17
to amritha varshini
சிவபுராணம்   ---    ஜே.கே. சிவன் 

                        அன்பெனும்  பிடியுள் அகப்படும்  மலையே 

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் 20

சிவனுக்கு  ஈடு இணை இல்லை.   வாரி வழங்கும் தகைமையன்.  எல்லையற்ற  இன்பம் அருளும் கருணையின் மலை.   அன்பெனும் பிடியில் அடங்காத மலை.  சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால்
அவனுடைய திருவருளே துணையாகக் கொண்டு அவனுடைய திருவடியை போற்றி வணங்குகிறேன்.  உள்ளத்தில்  அடியிலிருந்து பொங்கி வழியும்  இந்த  சிவபுராணத்தை  சொல்கிறேன்.  என்னைப்போலவே எண்ணற்ற பக்தர்களும் இதை படித்து மகிழ்ந்து  முன் வினைகள் எல்லாம் அவர்களை விட்டு அகல இதை விட சிறந்த சாதனம் இல்லை என்பேன்.  "சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" மகிழ்வோம்.

கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் 25


சிவன் முக்கண்ணன்.   நெற்றிக்கண் நெருப்புக்கண் என்று தவறாக கொள்ளவேண்டும். யாருக்கு அது நெருப்பாக இருக்கவேண்டுமோ அவர்களுக்கு தான் அது அவ்வாறு.  குழந்தையை ஆசையாக கொஞ்சி பார்க்கும் நாம்  தவறு செய்தவர்களை  நம் கண்ணாலேயே சுடுகிறோமே. அவர் சுடக்கூடாதா? எரிக்கக்கூடாதா?  அவர் நம்மை அன்பாக என்றும் அழைக்கிறார். நாம்  தான்  போவதே இல்லை.   விவரிக்க முடியாத  குனித்த புருவம், குவளைச்செவ்வாயழகன். 

பஞ்ச பூதமும்  எல்லையில்லா  பரவெளியிலும்  பரந்து  காணும் பரமேஸ்வரன்.  மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும், அளவிடும் எல்லைகள் எல்லாம் கடந்து உள்ள பெருமானே ! நீ எங்கே   நான்  எங்கே.  புழுவினும் கடையவன்.  பெயர் தெரியாத பாபங்கள் கூட நிறைய பண்ணினவன். உன்னை புகழ்ந்து பாடக்கூட  தெரியாத அறிவிலி.

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

நான்  ஏதோ ஒரு ஜென்மத்திலாவது  கொஞ்சூண்டு,  துக்கிணியூண்டு புண்யம் பண்ணியிருக்கவேண்டும். இல்லாவிட்டால்  சிவனே, உன்  தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே மோக்ஷ கதியை நிச்சய அடையமுடியுமா? 
நான்  இவ்வாறு மேம்பட வேண்டும் என்றுதானே  நீ  எனது உள்ளத்துள் ஓம் நமசிவாய  எனும் பஞ்சாக்ஷரத்தை  ஒலிக்கச் செய்திருக்கிறாய் .  சத்ய ஸ்வரூபனே?ரிஷப வாகனா!   ஆ  என்று  வாய் பிளந்து உன்  அற்புத லீலைகளை நினைத்து பார்க்கிறேன்.  நான்  அற்பன்  என்று உணர்கிறேன்.  நீ  பெரிதில்லை பெரிதானவன் மட்டுமில்லை சிறிதில் சிறிதானவனே .  ''ஐயா !" எனப் பெரிதும் வியந்து கூறி ஆழமாகவும் வார்த்தைகளற்று அதிசயிக்கத்தக்கவனே.   உன்னை வணங்குகிறேன். 

''வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

என்ன  ஆச்சரியம் அப்பனே!  நீ அக்னியாகவும் இருக்கிறாய். குளிர்ந்த புனலாகவும் மகிழ்விக்கிறாய்.   என்னை  ஆண்டருளும்   நடராஜனே.   எஜமானனே .  மாசற்ற மகாதேவா !   பொய்மை விலக  அருள்வாய் புண்ணியா.  உண்மை அறிவாக ஒளிவீசும் மெய்ஞான தீபமே.  !  அறிவற்ற  புழுவிற்கும் கீழான எனக்கும் இன்பமளிக்கும் களிப்பொருளும்  களிப்பே .

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

தந்தை,  தாய்,   பிறந்தநாள், இல்லாத பெரியோனே.  ஆரம்பமோ முடிவோ இல்லாதவனே.  உலகயாவையும்  தோற்றுவித்தவனே. அழிக்கும் கடவுள் என்று பெயர்கொண்டவனாக இருந்தாலும் பிரபஞ்சத்தை காத்தருளும்  பரமேஸ்வரா. எங்கோ  வெகு தூரத்தில்  இருப்பது போல் தோன்றினாலும் மிக மிக என்னருகே அருகே இருப்பவனே.   உ ன்னுடைய அடியார் திருக்கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொள்வாய். 


sivan jaykay

unread,
Nov 26, 2017, 7:57:24 PM11/26/17
to amritha varshini
                                 
                                        என்  கண்ணம்மாஆஆ !

குழந்தை ஆண் தான். சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை. இருந்தும் செல்லம் கொஞ்சும் போது நாம் ஆணைப் பெண்ணாக்கி பெண்ணை ஆணாக்கி அழைத்து மகிழ்கிறோம்.  இதையும் மீறி குழந்தையை செல்ல நாய்க்குட்டி, கிளி, என்றும் சில பேர் அக்றிணைப் பொருளாகக் கூட கொஞ்சுவது அதீத ப்ரேமையால். இது இயற்கையாக ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் உண்மை அல்லவா?

எனக்கு தெரிந்த ஒருவர் ஸ்ரீ குருவாயூரப்பனை தனது செல்லக் குழந்தையாக ஏற்றுக்கொண்டு வீடெங்கும் எங்கு நோக்கினும் குட்டி கிருஷ்ணனின் பல வித ரூப தரிசனம். அவர் வீட்டில் நானும் என் நண்பர் சுந்தரம் ராமச்சந்திரனும் இந்தக் கண் கொள்ளாக் காட்சியில் மகிழ்ந்து திளைத்தோம். அவர் படுக்கையில் அருகே ஒரு சிறு குட்டிக் கட்டில் (தொட்டில்) , அதில் மெத்தை, போர்வை, தலையணை, அதில் குட்டி கிருஷ்ணன் படுத்துக்கொண்டிருப்பான். அவனுக்கென்று தனி உடைகள், ஆபரணங்கள். பார்த்து பார்த்து ஊர் ஊராக சென்று வாங்கி சேர்த்து வைத்திருக்கிறார் அந்த கிருஷ்ண ப்ரேமி. அவரோடு அவனும் சாப்பிடுவான். இருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள்.
வீட்டில் ரேஷன் கார்டில் இல்லாத வாக்காளர் பட்டியலில் இல்லாத ஒரு குடும்ப நபர் அந்த குட்டி கிருஷ்ணன். வெளியே எங்கு போனாலும் அவனிடம் சொல்லிக்கொண்டு போவது. அவனுக்கும் ஏதாவது வாங்கி வருவது.... இதுபோன்று

வேறு சில நண்பர்களையும் நான் அறிவேன்.
அவர்கள் தெய்வங்களையே தம்மோடு இணைத்துக்கொண்டு வாழ்பவர்கள். அவர்கள் அனைவருக்கும் சாஷ்டாங்க நமஸ்காரங்கள். 

நம்மில் பலரோ, கோவிலுக்கே செல்லாதவர்கள், கோவிலுக்கு போனாலும் மனதை வெளியே உள்ள செருப்பில் நிலைத்து நிறுத்தி, வெங்கடேசன் முன் நின்று கொண்டு அடுத்த கணமே ஜருகண்டி என்று பிடித்து தள்ளப்படுவதற்கு முன் அவனைப் பார்க்கக் கிடைத்த சில நிமிஷங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு இயந்திரமாக கை கூப்புபவர்கள். 

ஒருவருக்கு  கண்ணன் குழந்தையாக அதுவும் பெண் குழந்தையாக தோன்றினான்..அவர் அவனைக் கொஞ்சுவதைப் பார்ப்போமா ?

''என் கண்ணம்மா, குழந்தை, நீ சின்னஞ் சிறு கிளியடி, , எனது செல்வக்களஞ்சியம். அம்மம்மா. எத்தனை கஷ்டங்களடி துன்பங்கள், அவை எல்லாவற்றிலிருந்தும் நான் தேறி, விடு பட்டு, வாழ்வில் அடுத்த கட்டம் முன்னேற வைத்தவளே நீ தான்.
கண்ணம்மா, உன்னை நான் எப்படிப்பார்க்கிறேன் தெரியுமோ? என் கனி அமுதாக. என்னுடன் பேசுகின்ற தங்கப் பதுமையாக. அழகான ஓவியமாக. நான் ''வாடி, வாடி என்னருகே என்று உன்னைத் தேடி தேடி வருவேன். உன்னை அள்ளி அப்படியே மார்புற அணைத்துக் கொள்ள நெஞ்செல்லாம் ஆசையோடு வருவேன். நீ என்ன செய்வாய் தெரியுமா? ஆடிக்கொண்டே என்னருகே வருவாய். என் தேனினும் இனிமையான சுவையே''

கண்ணம்மா என்று கூப்பிடுவேனே, நீ ஓடி வருவாயே, அதைப் பார்த்து என் உள்ளம் எப்படியெல்லாம் பனிமலை மேல் இருப்பதுபோல் குளிரும் தெரியுமா? 

எங்காவது வெளியே சென்று வீடு திரும்புவேன். என் கண் உன்னைத் தான் முதலில் தேடும். நீ விளையாடிக் கொண்டிருப்பாய் எங்காவது. நான் உன்னை நெருங்குவதற்கு முன்னரே, என் மனம் ஆவி எல்லாம் அங்கே ஓடிப் போய் உன்னைக் கட்டித் தழுவுமே.''

உச்சி முகர்தல் ஒரு சிறந்த அனுபவம். எத்தனை பெற்றோர்கள் அதனை அனுபவித்திருக்கி
றார்கள் . அது கொடுக்கும் இன்பம் ஷாம்பூ வாசனைக்கும் அப்பாற்பட்டது . என் பேரன், என் பேத்தி, என்று பாட்டி தாத்தா ஒரு புறம் உரிமை கொண்டாடட்டும். தந்தை தாய்க்கு கிடைக்கும் இன்பம் எவ்வளவு அவர்களை பெருமிதத்திலும் யாருக்கும் கிடைக்காதது எனக்கு கிடைத்திருக்கிறதே என்ற கர்வத்திலும் உயர்த்திக் காட்டும்.

''சார் உங்க பையன், ரொம்ப ஸ்மார்ட் பெல்லோ, படு கெட்டிக்காரன். ஒரு கணக்கு கொடுத்தேன். பளிச்சுன்னு பதில் சொன்னான் சார். அசந்து போய்ட்டேன். ஐ க்யூ ஜாஸ்தி அவனுக்கு. எப்படி சார் உங்க பையனை இப்படி வளர்த்தீர்கள்?''

'' ரொம்ப அறிவாளி உங்க பையன், ரொம்ப வினயமானவன், அழகன், ஆள் மயக்கி, படிப்பு விளையாட்டு எல்லாத்திலேயும் உங்க பையன் தான் சார் முதல்''

என்று ஊரில் பலர் மெச்சும்போது நான் இந்த உலகத்தில் இல்லை. வானுலகில் மிதந்தேன்.

''கண்ணம்மா உன் பட்டுக் கன்னத்தில் முத்தமிடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒரு ரகசியம். இழுத்து பிடித்து அணைத்து இச் சென்று ஒரு கன்னத்தில் முத்தம் பதிக்கும்போது காசு கொடுக்காமலேயே, டாஸ்மாக் போகாமலேயே நிறைய கள் வெறி என் நெஞ்சில் ஏற்பட்டு விடுமே. அப்படி ஒவ்வொரு தரமும் உன்னை இறுக்கிப் பிடித்து அணைத்துக் கொள்ளும் போதெல்லாம் என் கண்ணம்மா, எனக்கு நினைவே அழிந்து விடும். நான் யார், என்ன பெயர், எந்த ஊர், என்ன உலகம் என்றே தெரியாத ஒரு உன்மத்தத்தின் உச்சியில் ஒரு இன்ப போதை எனக்கு தானாகவே லயித்துவிடும். எனக்கு அதிலேயே இருக்க ரொம்ப ரொம்ப ஆசை கண்ணம்மா.

யாராவது ஏதாவது உன்னைச் சொன்னாலோ, உனக்கு எங்காவது அடிபட்டாலோ, உனக்குப் பிடிக்காதது ஏதாவது நடந்து விட்டாலோ, நீ விசனத்தோடு பொங்கி வரும் அழுகையோடு, முகம் சிவப்பாக நிற்பதைக் கண்டால் ... ஐயையோ ,  எனக்கு உலகமே சுற்றுமடி கண்ணம்மா. என்னன்னவோ பயங்கரமான எண்ணங்கள் நெஞ்சில் தோன்றி என்னை அடியோடு குலைத்து விடும். உன் ஒரு நெற்றிச் சுருக்கத்தில் என் நெஞ்சு பதினாயிரம் சுக்கலாக வெடித்து விடுமே. பித்தம் பிடித்தவனாகி விடுவேனே. வேண்டாம், அந்த அனுபவம், வேண்டவே வேண்டாம்... கண்ணம்மா அந்த துன்பம் .
அந்த மாதிரி ஒரு கணம் நீ துன்பத்தில் ஆழ்ந்து உன் கண்ணிலிருந்து முத்துக்களாக கண்ணீர் வந்தது என்றால் நான் தொலைந்தேன். அங்கே சொட்டுவது உன் கண்ணீராக இருக்காது கண்ணம்மா, அங்கே என் உதிரம், என் ரத்தம் கொதித்து ஆறாக நெஞ்சிலிருந்து பொங்கி எழுந்து வெள்ளமென பெருகி ஓடும். 


உன்னைப் பொத்தி பொத்தி வளர்க்கிறேன் கண்ணம்மா. என் கண்ணின் பாவை மட்டுமல்ல பார்வையும் கூட நீ தானடி தெய்வமே.

எனக்கு என்று தனியாக ஒரு உயிர் இருக்கிறது என்று யாரேனும் நினைத்தால் அவர்களைப் போல் விஷயம் அறியாதவர்கள் உலகத்திலேயே கிடையாது. எனக்கு உயிர் இருக்கிறது ஆனால் அது என்னிடம் இல்லையே. அதைத் தான் உன் உயிர் என்று நான் உன்னுள் வைத்திருக்கிறேனே. 

நீ மழலையில் பேசும் போதெல்லாம் நான் மயங்கிப்போய் விடுவேனே. எத்தனையோ கஷ்டங்கள், துன்பங்கள் என்னை வாட்டும். தூக்கமின்றி தவிப்பேன். அப்போதெல்லாம் உன் ஒரு பேச்சு, மழலை மொழி, என் அத்தனை துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் தூக்கி வெளியே எறிந்துவிடுமே. 

விடியற்காலையில் பூக்கள் மலிந்த தோட்டத்தில் உலாவிய அனுபவம் உண்டா?. பூக்களைப் பிடித்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?. உங்களுக்குத் தெரியுமே தோட்டத்தில், உங்கள்  பூத்தொட்டியில், முந்தாநாள் இல்லாமல்,  அப்புறம்  ஒரு  சிறு மொட்டாக நேற்றுப் பார்த்து, காத்திருந்து, அது இன்று காலை கண்கள் தேடும்போது அழகாக விரிந்து   ''என்னைப் பார்த்தாயா, நான் அழகா இல்லையா?'' என்று கேட்டிருக்குமே?

அப்போது இருக்கும் மன நிலை தான் உனது முல்லைச் சிரிப்பில் கண்ணம்மா. நெஞ்சில் ஈவு இரக்கம் இல்லாதவனையும் அந்த முல்லை மலர் முன் கொண்டு நிறுத்துங்கள். அவன் மூர்க்கம் அனைத்தும் தொலைந்து அவன் சன் மார்க்கம் பெறுவானே. நான் சந்தோஷப்படுவதில் என்ன ஆச்சர்யம்.

ஒரு குழந்தையை அதன் தந்தை 'தனது நண்பருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ''அம்பி மாமாவுக்கு இந்தி பேசி காட்டு.'' ஆறு வயது அம்பி மாமாவை பார்த்தான். சிரித்தான்.

''அம்பி மாமாவுக்கு இந்தி பேசி காட்டுடா. சீக்கிரம் ''.
''அம்பி பேசுடா பயலே நான் கேட்க காத்திருக்கிறேன்'' என்றார் அந்த மாமாவும்
அம்பி பேசினான்.
''மாமா மர்கயா'' 
அம்பியின் அப்பாவுக்கு இந்தி தெரியாது. சந்தோஷமாக மாமா பக்கம் திரும்பும்போது மாமா வெளியே சென்று வெகு நேரமாயிருந்தது. 

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

''கண்ணம்மா, உன் பேச்சுக்கள் எனக்கு இன்பக் கதைகள். எத்தனை பெரிய பெரிய ஆசிரியர்களின் புத்தகம் படித்தாலும் உன் வார்த்தை போல் அவை எனக்கு இனிக்கவில்லையடி.

புத்தகம் அறிவைத் தந்தது. அன்பைத் தரவில்லை. நீ அன்பையே புத்தகமாக தருகிறாயே கண்ணம்மா. அன்பே தெய்வம் என்பது உன்னில் நான் அறிந்த பாடம்.
நான் நகைகள் நிறைய வாங்கி நெஞ்சில் மார்பு மறைக்க அணிவதில் விருப்ப மில்லாதவன். விருப்பமிருந்தாலும் அந்த ஆசை நிறைவேற வசதி இல்லாதவன். எனக்கு இப்படிப்பட்ட நகைகள் தரக்கூடிய பெருமை, இன்பம், சுகம், எல்லாமே, உன்னை மார்புறத் தழுவும்போது கிடைக்கும் போது நான் அனுபவிக்கிறேனே. அதற்கு கால் தூசியாகுமா? 

எனக்கு வாழ்வில் பெருமிதம் உறுவதற்கு, சுகமடைய, ஈடிணை அற்ற நான் பெற்ற சங்க நிதி பத்ம நிதி எது தெரியுமா?    நீ, நீ, நீயே கண்ணம்மா. என் செல்வமே.


இது வரை நீங்கள் படித்தது என் கற்பனையல்ல. நான் ரசித்து மகிழ்ந்த மகாகாவி சுப்ரமணிய பாரதியாரின் கண்ணம்மா என் குழந்தை என்று கண்ணனை குழந்தையாக பாவித்து அனுபவித்த மகா காவியம். நான்  அதை வர்ணித்தேன். பாரதியோடு கலந்து ரசித்தேன். அவ்வளவு தான்.   இதோ அது: 

                                        கண்ணம்மா - என் குழந்தை

(ராகம் - பைரவி, தாளம் - ரூபகம்)
ஸ ஸ ஸ - ஸா ஸா - பபப
தநீத - பதப - பா
பபப -பதப - பமா - கரிஸா
ரிகம - ரிகரி - ஸா
என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக்கொண்டு
மனோவாபப்படி மாற்றி பாடுக.

சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! ... 1

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந் தேனே! . ... 2

ஓடி வருகையிலே - கண்ணம்மா!
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ! ... 3

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ! ... 4

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா!
உன்மத்த மாகுதடீ! ... 5

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ! ... 6

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ? ... 7

சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய். ... 8

இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ? ... 9

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ ? ... 10

sivan jaykay

unread,
Nov 27, 2017, 7:58:11 PM11/27/17
to amritha varshini
எங்கள் வம்சம்: 
   

                       அன்னதான சிவன்   - 2

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.  எங்கோ எவரோ ஒரு சிலர்  எப்போதோ  செய்த தவறுகள் இருப்பின், அதற்காக ஒட்டுமொத்தமாக  அந்த தவறு செய்தவர்களின் வர்கத்தையே வெறுப்பதும் அக்குலத்தையே  எதிரிகளாக பாவித்து, அவர்கள்  மீது வெறுப்பும் காழ்புணர்ச்சியும் காட்ட  சிலர் முனைகிறார்கள்.  

இது அவர்களது பலவீனத்தையே காட்டுகிறது. நேர்மையின்மை, அநியாயம்  அக்ரமத்துக்கு துணைபோவது  புலப்படுகிறது. 

பிராமணர்களை பொறுத்தவரை எத்தனையோ நல்லவர்கள் எத்தனையோ  நல்ல சேவைகள் புரிந்திருக்கிறார்களே. யாராயிருப்பினும் பாராட்டுவோம்.  குறுகிய மதியினர் தானே திருத்தட்டும். காலம் திருத்தும்.

பசிப்பிணி மருத்துவராக  ஸ்ரீ அன்னதான சிவன் அரை நூற்றாண்டுக்காலம்  தமிழகத்தில் பல லக்ஷம் உயிர்கள் போற்ற  உணவளித்திருக்கிறார். ஒருவேளை சோற்றுக்கே  நாம்  அன்னமிட்டவருக்கு கடமைப்பட்டிருக்கும்போது  இவ்வளவு காலம்....! அடேயப்பா.


        சின்னஞ் சிறுவயதில் செயலதுவோ பெரியதுவாம்
        செவியில் ஒலித்ததுமே சிலுசிலுத்துப் போகுதடா
        அன்னதான சிவம் அறமேற் கொண்டதுவோ
        அதுவல்லோ தேப்பெருமாள் நல்லூரின் அழியாப்புகழ்
        ஆவியை தந்தவர் அன்னதான சிவன்.

     1852 இல்  பிறந்த  சிவனுக்கு  பெயர்   ராமசாமி.  அப்பா அசுவத நாராயண சாஸ்திரியார்,  அம்மா: லக்ஷ்மி அம்மாள். கூடப் பிறந்தவர்கள்": அன்னம்மாள், சகோதரி.   சுப்ரமணிய சாஸ்திரி:  சகோதரர்: 
தேப்பெருமாள் நல்லூர் சிவன் கோவிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தியிடம்  குழந்தை பருவம் முதல் அசாத்திய பக்தி.   பள்ளிக்கூடம் போகாமல்   சிலேட்டில் பூக்களை  வைத்துக்கொண்டு தக்ஷிணாமூர்த்திக்கு ஸமர்பிப்பார்.

 உள்ளூர் காளியாட்டத்திருவிழாவின் போது தண்ணீர் பந்தல் வைக்கவேண்டும் என்று  ஆரம்பித்த  ஆசை, தயாள மனசு, பின்னாளில்  பெரிதாக வளர்ந்து  ராமசாமியை  அன்னதான சிவனாக்கியது.

 வேத அத்யயனம் நடந்தது.  வைதீகத்துக்கு செல்ல மனம் இல்லை.  திருவிடைமருதூர் செட்டியார் சத்திரத்தில் தங்கும் யாத்ரீகர்களுக்கு  போஜனம் தயாரிக்கும் தலைமை சமையல்காரர் வேலை.. மாத சம்பளம் மூன்று ரூபாய்+சாப்பாடு. திண்ணை படுக்கை. 

 அன்னம்  தயாரித்தவுடன் ஒரு சின்ன கிண்ணத்தில் கொஞ்சம் சாதம் தனியாக எடுத்து வைத்து விட்டு, அனைவரும் போஜனம் செய்தபின், மீண்டும் ஸ்நானம் பண்ணிவிட்டு, திருவிடைமருதூரிலிருந்து தேப்பெருமாள் நல்லுர்  சிவன் கோவிலுக்கு நடந்து வந்து  தக்ஷிணாமூர்த்தி சன்னதிக்கு நிவேதனம் செய்வார் அப்புறம்  தனது  வீட்டில் உணவு உண்பார்.

  சிலசமயம் நேரம் ஆகி சாதம் கெட்டு போய் விடக்கூடாதே  என்று  அதன் மேல் ஜலம் சேர்த்து எடுத்துக்கொண்டு வந்து தேப்பெருமாநல்லூர்  தக்ஷிணாமூர்த்திக்கு   நீர் கலந்த சாதம் நைவேத்தியம்.  இப்படி  ''பழையதை''  நைவேத்தியம் பண்ணுவதாக  சிலர்  கேலி செயது   ''பழையசோத்து சிவன்” என பெயரிட்டதும் உண்டு.  தக்ஷிணாமூர்த்தி ஒருவேளை ராமர்  சபரி கொடுத்த  கடித்த  எச்சில் பழத்தை விரும்பி சாப்பிட்டது போல் பக்தியோடு சிவன் அளித்த  பழையதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாரோ?

 சிவனுக்கு  25வயசில் சிவகாமி மனைவியானாள். சிவனுக்கேற்ற சிவகாமியாக அவருக்கு உதவினாள் . 

வருஷாவருஷம்  தேப்பெருமாநல்லூர்  பெருமாளுக்கு  சித்திரை வஸந்தோத்ஸவம் விமரிசையாக நடக்கும்.  எங்கிருந்தோ எல்லாம்  வித்துவான்கள் நாட்டிய நாடக விற்பன்னர்கள் வருவார்கள். ஸம்ப்ரதாய நாட்டிய நாடகம் எல்லாம் கோலாகலமாக  நடக்கும்.   விழாவிற்கு  பல ஊர் மக்கள் ஜேஜே என்று கும்பல் சேர்வார்கள். ''ஆஹா  இந்த  சந்தர்ப்பத்தை விடலாமோ?  இவர்களுக்கெல்லாம்  அன்னதானம் செய்யலாமே ''  என்று ராமசாமிக்கு தோன்றி  அப்போது தான் தனது  பூர்வீக சொத்தினை விற்று ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஸ்ரீ ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத வரதராஜர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர்  உத்ஸவத்தில் அவருடைய  முதல் அன்னதானம்  துவங்கியது. அப்புறம்  50வருஷங்கள்  உலையில் சாதம் பொங்கிக்கொண்டே இருந்தது. தேப்பெருமாள்நல்லூரில் மட்டும் அல்ல. தங்கு தடையின்றி   தமிழ் நாட்டின் பல ஊர்களில் கோயில் திருவிழாக்களில். பாத்திரங்களோடு  முதல் நாள் இரவு செல்வார் .சிப்பந்திகள் வருவார்கள். முதல் நாள் மாலை வரை அன்னதானத்திற்கான எந்த அறிகுறியும் தெரியாது.   மறுநாள் காலை ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் எப்படி நடந்தது??

சிவன் உபயோகித்த சமையல் பாத்திரங்கள் பல கும்பகோணம் ஸ்ரீ காஞ்சிமடத்தில் இருந்தது.

தொடரும்  

sivan jaykay

unread,
Nov 28, 2017, 7:36:15 PM11/28/17
to amritha varshini
                  '' உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே..''.

ஒரு சில பழைய தமிழ் சினிமா பாட்டுக்களை இன்னமும் மறக்க முடியவில்லை.
''கையிலே வாங்கினேன் பையிலே போடலே ஆனா காசு போன இடம் தெரியலே''

ஏறக்குறைய 50-60 வருஷங்களுக்கு முன்பு கூடவா இந்த எகனாமிக் ப்ராப்ளம் என்று நினைக்கும்போது ஒன்று புரிகிறது. விலைவாசி கொஞ்சமாக இருக்கிறதே என்று பார்க்காதே அதை வாங்க உன்னிடம் ஐவேஜ், வரும்படி, எவ்வளவு இருந்தது என்று பார். எதுவுமே  தாறு மாறாக ஏறலை  இரங்கலை.  வருமானம் கொஞ்சமாக இருந்தபோது விலைவாசியும் அதற்கேற்றமாதிரி கொஞ்சமாக இருந்தது.  

அப்போதெல்லாம்  எல்லாமே  ரொம்ப  சீப், விலை குறைச்சல் என்று வருமானத்தை, வாங்கும் சக்தியை பற்றி யோசிக்காமல் பேசுகிறோம்.   இப்போது  வருமானம் எங்கோ மேலே போய்விட்டது.  இட்டிலி வடையும் ஆகாசத்தில் பறக்கிறது. கைக்கு எட்டவில்லை.ஆகவே வாய்க்கு எப்படி எட்டும்?

பஸ், டாக்சி, ஆடோ, டூ வீலர், கார், எதுவுமே ஓட தார் ரோடே இல்லாத காலம், மின்சாரம் தெருவில் அங்கொரு இங்கொரு விளக்காக முணுக் முணுக் என்று கூட எரியவில்லை. கண்ணாடி கூண்டில் கெரொசின் எண்ணெய் விளக்கு வெளிச்சம் தான்.

அப்படியும் இவ்வாறு பணத்துக்கு முடையா என்றால் ஆமாம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஆறு ஏழு எட்டு டிக்கட் என்று இருந்ததாலும் ஒருவர் இருவர் வருமானத்தில் வண்டி ஓடியதாலும் பண முடை நிறைய குடும்பங்களில் வீட்டுக்கு வீடு வாசப்படியாக இருந்தது. எல்லோரும்  அதே கஷ்டத்தில் இருக்கும்படியாக வாழ்க்கை முறை அமைந்திருந்ததால் யாருமே அதை கஷ்டமாக நினைக்கவில்லை.  சமாளித்தார்கள்.

இது ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் பூதாகாரம் எடுத்தது.

நான் வேலைக்கு சென்றபோது வருஷத்துக்கு ரெண்டு ரூபாய் இன்க்ரிமெண்ட். Rs 45-2-80-5. என்று சம்பள ஸ்கேல். பஞ்சப்படி என்றே அல்லவன்ஸ் களுக்கு பெயர் பொருத்தமாகவே இருந்தது. அது ஒரு 20+25 ரூபாய் சேர்ந்து வரும். பச்சை யாக ஒரு அச்சு எழுத்து மங்கி படிக்க முடியாமல் உத்தியோக வரி நோட்டிஸ். அதை பார்க்கவே நாங்கள் வெறுத்தோம். 5 ரூபாய் அதன் மூலம் போய் விடும்.

திடீரென்று ஒருவர் கத்தையாக மடித்து இந்த நோட்டிஸ் களோடு கார்ப்பரேஷன் ஆபிசிலிருந்து  ஒண்ணாம்தேதி  சம்பள பட்டுவாடா அன்று வந்து  சம்பளம் பட்டுவாடா  பண்ணுபவர் அருகில் உட்கார்ந்து கொண்டு   சம்பளம் வாங்குபவர்களை  பேர் சொல்லி கூப்பிட்டு பணம் வாங்கிக்கொண்டு ரசீது  கொடுத்து வசூல் பண்ணுவார்.

சம்பள நாள் அன்று  அந்த காலகண்டன் '' ஜே.கே. சிவனா? ஏதோ ரெண்டு மூணு பாக்கி நோட்டிஸ் லே இந்த பேர் பார்த்தேனே'' என்று தேடி நோட்டிஸ் பாதி கிழித்து கொடுத்து கை மாறி 15-20 ரூபாய் என்னிடமிருந்து போய்விடும்.

பத்தரை மணி பார்த்தசாரதி திருவல்லிக்கேணி ஒரு கோவில் வேலை முடித்துவிட்டு நான் வேலைசெய்த M.E.S   (அப்புறம்  MSEB ,  TNEB   ஆகி  இப்போது  ஏதோ பிரைவேட் கம்பனி ஆகிவிட்டதாம்) .ஆபிஸ் வருவார். 10 மணி ஆபிசுக்கு பத்தரைக்கு நேரம் தவறாமல் நாள் தோறும் வந்து விடுவார். அட்டேண்டன்ஸ் ரிஜிஸ்டர்லே கையெழுத்து போடும்போது அலட்சியமாக சிரிப்பார். நிறைய பேர் என் காது கேட்க அவரை ''லேட்'' பார்த்தசாரதி என்று உயிரோடு இருக்கும்போதே அழைத்தார்கள். அவர் காலம் தவறி வந்ததால் இப்படி ஒரு பேர்.

என் வருமானம் வருமான வரி கட்டும் அளவுக்கு அப்போது இல்லை என்பதாலோ வருமான வரி அதிகம் பேரிடம் வாங்க அரசாங்கத்துக்கு (நல்ல அரசாங்கம்!) அவசியம் இல்லாததாலோ அதை பற்றி நாங்கள் ஆபிசில் பேசாமல் மற்ற அக்கப்போர் பேச்சுகள் தான் பேசிக்கொண்டே வேலை செய்வோம். எங்கும் காகித மலைகள். அவைகளுக்கு நடுவே அங்குமிங்குமாக சில ரெமிங்க்டன், அண்டர்வூட் டைபிஸ்டுகள்.

ஏனோ தெரியவில்லை நிறைய ராஜாக்கள் சுல்தான்கள் இருந்தாலும்  பழைய வஸ்துக்களுக்கு  என்று ஒரு தனி பெயர்.  

மேலே சத்தம் ஏராளமாக போட்டுக்கொண்டு எப்போது  வேணுமானாலும் கீழே விழுந்துவிடுவேன் என பயமுறுத்திய மின் விசிறிகளுக்கு ''ஹைதர்'' காலத்தவை என்று பேர்.  என் தலைமேல்  ஒரு  CROMPTON  விசிறி  மெதுவாக சுற்றிக்கொண்டு இருந்தாலும் ஊரைக் கூட்டும் அளவுக்கு சத்தம் போட்டு அது பழக்கமாகி விட்டது.

சம்பளம் வாங்கின மறுநாளே நரசிம்மன் ரெண்டு ரூபா கை மாத்தாக கேட்பார். சம்பளம் வாங்கி தரேன் என்று சொல்லப்பட்ட அந்த ரெண்டு ரூபாய், எட்டணா ஒரு ரூபாயாக சில்லரையாக பல நாட்களுக்கு பிறகு நாணயமாக வந்து விடும்.

பெரிய ஹால்.   12வது  பிளாக்   பிளாக்  BLOCK   என்று வெள்ளைக்காரன் வைத்த பெயர் கொண்ட  திருமலைநாயக்கர் மஹால் மாதிரி ஒரு  இடம்.  200 பேருக்கு மேல் அதில்  காகித மலைகளுக்கு இடையே தலைமட்டும் தெரிய  உட்கார்ந்து இருப்போம்.   இருந்தோம். ஆறு மணி ஆனால் பெருச்சாளி காலடியில் ஓடும். நிறைய பைல் (files) களை எங்கள் அதிகாரிகளோ பணியாளர்களோ தீர்வு காணாமல் கட்டி போட்டிருந்த கஷ்டமான விவகாரங்களை எலியாரும் பெருச்சாளியாரும் சம்பளம் வாங்காமலேயே முடித்து விட்டார்கள். அந்த file களில் பிரச்சனை தீராமல் சம்பந்தப்பட்டவர்கள் ஒருவேளை பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்க வேண்டிக்கொண்டதால் அவர் தனது வாகனங்களை அனுப்பி பிரச்சனையை முடித்திருக்கலாம்.

பணம் இருப்பவனிடம் குணம் இருப்பதில்லை. குண வந்தன் பணக்காரனாவதில்லை. இதை பல பேர் சொல்லி கேட்டிருக்கிறோம். ஏன் பணமும் குணமும் ஒத்துப்போவதில்லை?

பணம் கொடுத்துக்கொண்டே இருக்கும் வரை பெறுபவர்கள் புகழ்கிறார்கள். பணம் கொடுப்பவனிடம் குறைந்தால் அவனை ஏசுகிறார்கள். கருமி, கஞ்சன் என்ற பட்டம் அவனை எளிதில் சேர்கிறது. சரி பணத்தை கட்டுப்பாட்டோடு வைத்துக்கொண்டு ஜாக்ரதையாக ஒருவன் செலவழித்தாலும் அதே கஞ்சன் கருமி பட்டம் தானே வந்தடைகிறது. மறுநாள் பற்றிய கவலை இன்றி ஒருவன் தன்னிடமுள்ள பணத்தை வாரி இறைப்பானாகில் அந்த ஒருநாள் தர்மிஷ்டன் மறுநாள் காணாமல் போகிறான். அதனால் தான் கொடுப்பதே தெரியாமல் கொடுப்பது என்கிற வழக்கம். கேட்டுக் கொடுப்பதைவிட கேளாமல் தானே பார்த்து உணர்ந்து தருமம் செய்வது. வெளியே அதை காட்டிக்கொள்வது இல்லாமல் நடக்குமானால் அவன் செல்வந்தனாகவும் தர்மிஷ்டனாகவும் காலம் தள்ள முடியும். எண்ணற்ற செல்வங்கள் மேலே மேலே குமிந்து கொண்டிருப்பவனுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை.

சூரியனிடம் பெற்ற செல்வத்தை எல்லாம் கர்ணன் வாரி வழங்கினான். கொடுத்து கொடுத்து கரம் சிவந்தான். கொடுப்பதைத் தவிர வேறு ஒன்றும் அறியாத அளவுக்கு அவன் தானம் செய்பவன் ஆனான்.

கல்யாணங்கள் விசேஷங்களுக்கு போனால் பவன்ஸ் ஜர்னல் அலுவலகம் பாரதிய வித்யா பவன் வெளியீடுகள் ராஜாஜியின் ராமாயணம்,(சக்ரவர்த்தி திருமகன் கல்கியில் வாரா வாரம் ஓடிப்போய்  வியழைக்கிழமை நாலு அணா கொடுத்து வாங்கிவந்து படித்திருக்கிறோம். மகாபாரதம்  வியாசர் விருந்து என்ற பெயரில் வந்தது. ஒரு ரூபாய் ஒரு புத்தகம். (
நானும் ஒருநாள் மஹா பாரதம் எழுதுவேன் என்று கனவிலும் தெரியாது).   மு.வ. எழுதிய திருக்குறள்  கையடக்க புத்தகம் கூட ஒரு ரூபாய் தான்.   இதெல்லாம் வாங்கி  பரிசாக அளித்து இருக்கிறோம்.  இதே பரிசு எனக்கும் வீட்டில் நிறைய வந்திருக்கிறது.

 என். எஸ். கிருஷ்ணன் பாட்டில் வருமே ''முதல் தேதி.. முப்பதாம் தேதி'' என்று. அவர் சொன்ன உத்தி, அதாவது பெருமாள் உண்டியிடம் ''லோன்'' பெற்று செலவு செய்து சம்பளம் வந்தவுடன் வட்டியோடு உண்டியில் திரும்ப போட்டு பொருளாதார சிக்கலுக்கு விடை தேடிய குடும்பங்கள் பலஅக்காலத்தில் உண்டு.

எவ்வளவோ எண்ணங்கள்   எத்தனையோ நெஞ்சின் அலைகளாக நினவுகள் பிரவாகமாக  பெருக்கெடுக்கிறது. ஓடிவரும்போது வரட்டும். அணையா போட்டிருக்கிறேன்!

sivan jaykay

unread,
Dec 3, 2017, 7:00:06 PM12/3/17
to amritha varshini

                                         பாரத பூமியில் நாம்  பாக்கியசாலிகள் 


நமது தேசத்தில்  கோயில்கள், குளங்கள் எல்லாம் யாரால் கட்டமுடியும்?. 


அதுவும் தஞ்சாவூர், சிதம்பரம், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், திருவாரூர் மதுரை கும்பகோணம்  கோவில்கள், அடடா  சொல்லி முடியுமா......


திருவாரூர் கமலாலயம் போன்ற  சமுத்திரம் போன்ற குளங்கள்.... அடேயப்பா, அந்த கால ராஜாக்கள் மனசு எவ்வளவு விசாலமோ அவ்வளவு விசாலம் கோவில்களும் குளங்களும். அதில் தான் எத்தனை அழகான சிற்பங்கள்!

எத்தனை சிற்பிகள் எத்தனை காலம் முழுமனதோடு ஆசை ஆசையாக  இதெல்லாம் நமக்காக  செய்திருக்கிறார்கள். நமது ராஜாக்கள்  அழகான சிற்பத்துக்கும் சிலைக்கும் பரிசாக செதுக்கியகவான் கையையோ, விரலையோ, கழுத்தையோ, வடக்கே அராஜக முஸ்லீம் அரசன் செய்ததுபோல் வெட்டவில்லையே.  நாம் தான்  நமது பெயரை இங்கிலிஷ் இனிஷியலை அதில் ஆணியால் செதுக்கி விட்டு வருகிறோம். இல்லை பரிக்ஷை நம்பர்களை எல்லாம் விகிரஹங்கள் மேலே எழுதியோ, தொங்கவிட்டோ அழகு பார்க்கிறோம்.


''இந்த தூணில் தான் ஏழு ஸ்வரமா என்று அந்த பழங்கால கல் தூணை  இன்னொரு கல்லால் அடித்து சத்தம் கேட்கிறோம். எத்தனை காலம் அது தாங்கும்?'' 


ராஜாக்கள் மட்டுமல்ல, தனவந்தர்கள், செல்வந்தர்கள்  பரோபகாரிகளும்  இதற்கு உதவியிருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் வருஷ கோவில்களை காண்பதே அபூர்வம். அதை நாம் தான் பராமரிக்க வேண்டும். 


கோயிலுக்கு செல்லும்போது   ''ஆஹா, இப்படி பிரம்மாண்ட பொதுஜன சேவைக்கு யார் யாரெல்லாம் பாடு பட்டார்களோ அவர்கள் திருவடி தொழுது வணங்குகிறேன்  வேண்டும். நம்மால் நினைத்து பார்க்க கூட முடியாது இப்படி ஒரு சேவையில் பங்கேற்க கூட. பணமிருந்தால் மனம் இருப்பதில்லை, மனம் இருப்பவனிடம் பணம் இல்லை என்ற நிலை வேறு.


மதம் என்பதே ஒருவன் தான் வழிபடும் கடவுளை ஸ்பர்சிப்பது,உணர்வது, அனுபவிப்பது ஆனந்தமடைவது தான்.  இதை தனது வீட்டில் தனி அறையில், தனக்குத்தானே  மௌனமாக,கண்மூடி தியானத்திலும், ஆற்றங்கரை, குளக்கரை, ஏரிக்கரையில், தனியே மரத்தடியில், மொட்டை மாடியிலும் அனுபவிப்பரும் உண்டு.  நேராக கோயிலுக்கு சென்று தான் வழிபடும் விக்ரஹத்திற்கு நடத்தப்படும்  பூஜை, அலங்காரம், அபிஷேகம் இதில் களிப்பவரும்  உண்டு. மகான்கள்,ஞானிகளிடம் கூடி அவர்கள் வாக்கால் அனுபவிப்பதும் ஒரு ரகம்.  அமைதியாக தனக்குத்  தானே புத்தகத்தில் தேடி காண்பவரும் உண்டு. சிந்திப்பவரும் உண்டு.  எந்த வழியிலும் இஷ்ட தேவதையை, பகவானை உணரலாம்.


கமார்புகூரில் வாழ்ந்த ஒரு  படிக்காத  ஏழைச் பிராமணச்சிறுவன் ''வா என்னோடு கல்கத்தாவுக்கு, அங்கே  தக்ஷிணேஸ்வரம்  என்ற இடத்தில் ஒரு  காளி  கோவிலில் என்னோடு நீயும் சேவை செய்ய வேலைக்கு வா ''  --  என்று அண்ணன்  அழைத்து போனார்.  தக்ஷிணேஸ்வரத்தில்  அடைக்கலமான  ஏழை பிராமணன  பவதாரிணி எனும் அந்த காளிமாதாவை பக்தியால் நெருங்கி   அவளைத்தன் தாயாக உணர்ந்தார். அவளும் அவரை தனது சேயாக ஏற்று அகில உலகத்துக்கும் ஞான ஒளி வீசிய  ராமகிருஷ்ண பரம ஹம்சர் நமக்கு கிடைத்தார். 


இந்தியாவில் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போது தாய்ப்பாலுடன் தெய்வ  பக்தியும் ஊட்டித்தான் வளர்க்கப்படுகிறது. நடுவில்  ஏதோ சில தீய சக்திகள் அதை  நாகரிக  வளர்ச்சி என்ற பெயரில் பிரிக்க்க முயல்வதும் அது இயல்வதும் பரிதாபம்.  பக்தியை புத்தகங்களோ பிறரோ வளர்க்க முடியாது. இயல்பாகவே ஒவ்வொரு மனதிலும்  அது வேரூன்றி வளர்வது. மற்றவை அதற்கு உதவும் உரங்கள். 


நமது தேசத்தில் எண்ணற்ற மஹான்கள், ஞானிகள் தங்கள் உடலை வருத்தி, உலக வாழ்வை துறந்து கடும் சோதனைகளை தாங்கி ஆத்ம ஞானத்தை பெற்று நமக்கெல்லாம் இலையில் தட்டில் சூடான சர்க்கரை பொங்கல் போல் தந்திருக்கிறார்கள்.  நாம் அவர்களுக்கு எத்தனையோ ஜென்மங்கள் கடன் பட்டிருக்கிறோம்.  அவர்கள் காட்டிய நல்வழியில் பயணித்து மேன்மை பெறவேண்டும்


எந்த நிமிஷமும் நம் வாழ்வு காற்றில் விளக்கு அணைவது போல் முடிந்துவிடும். இருப்பது சாஸ்வதம் அல்ல. இருக்கும் சிறிது காலத்தில் ஒவ்வொருகணமும் இறைவனுக்கு நன்றி கூறி நாலுபேருக்கு ஏதாவது நல்லது செய்து மனத்திருப்தி படுவோம்.


''அடே மனிதா  இது தாண்டா அது'' என்று நமது ஹிந்து சனாதன தர்மத்தைப்பற்றியும், கடவுள் பற்றியும்  புரியவைத்தால் வாழ்வு சீர்படும், நிம்மதி கிட்டும்.  வாழ்க்கையின் அர்த்தம் புரியும்.

முதலில் அடிக்கடி கோவிலுக்கு செல்வோம்...



sivan jaykay

unread,
Dec 3, 2017, 7:00:19 PM12/3/17
to amritha varshini
                                            அலகிலா விளையாட்டுடையான்

 குழந்தையும்  தெய்வமும்  கொண்டாடும் இடத்திலே தான்.  மஹாகவி  பாரதி, உலக வாழ்க்கையில் ஒரு ஏழை பிராமணன். மனதளவில் பெரும் செல்வந்தன்.   அவன் மனதில்  அளவிடமுடியாத  மதிப்பிடமுடியாத பெரும் செல்வத்தை ஆழமாகப்  புதைத்து வைத்துக்கொண்டவன்.  அதை எல்லோருடனும் ஆசையாக  ஆர்வமாக பகிர்ந்து கொண்டவன்.  அந்த ஈடிணையற்ற செல்வம்  கண்ணன் எனும் கிருஷ்ணன்.  

 தந்தையாக, ஆசானாக,   சீடனாக,  சிறு பெண் குழந்தையாக, காதலியாக,   கண்ணம்மாவாக, சேவகனாக  பார்த்தது ஒருபுறம் இருக்க,  இன்று  அவனை ஒரு குறும்புக்கார  சிறுவனாகவும் பார்க்கிறார்.  

கோகுலத்தில்  பிருந்தாவனத்தில் கண்ணனின் விஷமங்களை அவன் தாய் தந்தை யசோதை, நந்தகோபன்,  எப்படியெல்லாம்  நாளொரு புகாரும்  பொழுதொரு  சமாதானமுமாக    எதிர்கொள்ள  நேர்ந்தது  என்பதை எப்படி  பாரதியாரால்   கற்பனை செய்யமுடிகிறது என்று வியப்போருக்கு ஒரே விடை  ''கொண்டை இருப்பவள் முடிந்து கொள்கிறாள்''.

 பாரதியார்  பாரதியார்  தான்.  மீசையும், முண்டாசும் நெற்றியில்  கீற்றாக குங்குமமும் கழுத்து வரை யில் பெரிய பொத்தானோடு கருப்புக் கோட்டும் இடுப்பில் பஞ்சகச்சமும்  மட்டுமே ஒருவரை அமரகவி ஆக்குமா?.   

சுதந்திர  இந்தியாவின் ஆரம்ப காலத்தில்  எத்தனைபேர்  நேருவைப் பார்த்து  தாங்களும்  ஒரு  வெள்ளை குல்லாவை  அணிந்துகொண்டார்கள், நேரு ஆக முடிந்ததா ?   இப்போது நாம்  மோடி கோட் பார்க்கவில்லை?

 ஆயர்பாடியில்  நந்தகோபனை அவன் நண்பர்கள் பிடுங்கி எடுத்தனர்  'எநினைப்பா இப்படி  ஒரு  சோகம் கவலை உனக்கு ?''

''இன்று யார்  என்ன புகார் கொண்டுவரப்போகிறார்களோ... பொழுது விடிந்து விட்டதே?''

'  ஓஹோ. நீயும் அமைதியில்லாமல்  இருக்கிறாய்.  உன் மனைவி யசோதாவும்  எப்போதும்  ஒரு  தடுமாற்றத்தோடு   சில நேரம் சந்தோஷம்  சில நேரம் நடுக்கமாகவும்  உள்ளாளே . என்ன நடக்கிறது இங்கே?

'' என்னத்தை  சொல்வேன்  போங்கள் ''

ஏதோ  பத்து காத தூரம் ஓடினாற்  போல மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க  ஆயாசமாக இருக்கிறாயே  நந்தகோபா ''

''என்னத்தை சொல்வேன்  எல்லாம்  அந்தப்  பயல் செய்யும் லூட்டி?  ஒவ்வொருநாளும்  விடாமல் ஊர் வம்பை  விலைக்கு வாங்கி வந்து விடுகிறான். பொழுது விடிந்தால்  பொழுது போனால் அவனுக்காக  மற்றவரிடம்  மத்யஸ்தம், தாஜா  செய்வதற்கே  சக்தி போய்  விடுகிறதையா.''

''ஒ, அப்படி என்ன செய்கிறான்  உங்கள் பையன்? '' என்று  அங்கு மிங்கும் அவன் கண்ணில் தென் படுகிறானா  என்று பார்த்துக்கொண்டே  கேட்பார் நந்த கோபனின் நண்பர்.   அவர் பயம் அவருக்கு தெரியும்.  அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே  அவர் பின்னால்  அவன் ஏதாவது விஷமம் செய்துவிட்டால்?  ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிவிட்டால்?  இருந்தாலும் அப்படி என்னதான் செய்கிறான் அவன் என்று  தைரியமாகவே  கேட்டுவிட்டார்.

''சொல்கிறேன் கேளுங்கள் '  என்று  ஒரு காலை  நீட்டிக் கொண்டு ஒரு காலை மடித்துக்கொண்டு  திண்ணையில் ஒரு தூணில் சாய்ந்து கொண்டு  ஆரம்பித்தார்  தந்தை நந்த கோபன்.

''உமக்கு தெரியும் இல்லையா,   இந்த  தெருவில்  16வீடுகள்,  அதில்  13 வீட்டில்  இளம் பெண்கள். ஏறக்குறைய  ஒரே வயது. சிலதுகள்  சற்று  பெரியது   சின்னது. ஆனால்  அவர்கள்  எப்போதுமே  அவனுடன் சேர்ந்து தான்  விளையாடுவார்கள்.  நம்  பயலும் அவர்களோடு சேர்ந்து கொள்ளாத நாளே  இல்லை.  ஆண்  பிள்ளை என்றாலும் அவனை அவர்களுக்குப் பிடிக்கும்.  எல்லோரோடும் பேசி மயக்குபவன்.  அவர்களுக்கு  ஜோடியாக விளையாடுபவன். புதிது புதிதாக  ஏதாவது ஐடியா சொல்லுவான், செய்வான். அவன் சுவாரசியமானவன் என்று அவனையும் சேர்த்துக் கொள்வார்கள். அங்கு தான்  ஆபத்து உருவாகும்''.

''ஏன், என்ன பண்ணுவான் ?''

''அவனோடு கூட  சேர்ந்து சந்தோஷமாக  விளையாடினாலும்  தினமும்  யாராவது  ரெண்டு பெண்ணாவது  எங்கள் வீட்டுக்கு வந்து யசோதாவிடம்  அவனைப்பற்றி   ஏதாவது ஒரு குறை  சொல்லாத நாளே கிடையாது.  விளையாட்டு விளையாட்டு  விளையாட்டு. தீராத  விளையாட்டு, இந்த கண்ணன் பயலுக்கு.  ஆமாம்  அவன் பெயர் கண்ணன் தான்.  குறும்புக்கு மற்றொரு பெயர் கண்ணன் அல்லவா?''.

''ராதே, இந்தாடி  கொய்யாப்பழம்  என்று  ஒரு பெரிய பழத்தை எங்கோ மரத்தில் பறித்து,   அந்தப் பெண் ராதாவுக்கு கொடுத்தான். அவள்  ''நீ நல்ல  கண்ணன் டா. எப்படிடா உனக்கு தெரியும்  எனக்கு கொய்யாப்பழம் பிடிக்கும்''   என்று  சொல்லி ஆசையாய் அதை வாங்கி வாயில் வைத்து கடிக்கு முன்பாக  மின்னல் வேகத்தில் அவள் வாயில் ஒரு கடி படும் முன்பே அந்த பழத்தைத்  தட்டி விடுவான். அது கீழே விழுவதற்குள் அதை ஒரு கையால் பிடித்துக்கொண்டு  தான்  ஒரு  கடி கடித்து  கால் பழம் அவன் வாயில் சென்றுவிடும்.

அவள் அழுவாள்.கெஞ்சுவாள்.  ''கண்ணா  கண்ணா  தரேன்  என்று சொல்லி தந்து  ஏனடா  ஏமாற்றுகிறாய், கொடுடா'' என் கண் இல்லையா என்  அப்பன் இல்லையா நீ '' என  அவன் பின்னே  கெஞ்சி சரணடையும்போது போனால் போகிறது   இந்தா''  என்று  கடித்த பழத்தை அவளுக்குக்   கொடுப்பான். அதென்னவோ அவன் கடித்து கொடுத்த பழம் முன்னைவிட அதிகமாக இனிக்கும்!

யாராவது ஒருவர்  வீட்டிலிருந்து  நிறைய  நெய் சர்க்கரை தின் பண்டங்கள் நிறைய  கொண்டுவருவான். அவனுக்கு  தான்  எல்லா வீட்டிலும் செல்லமாயிற்றே.  ''எல்லோரும்  வாருங்கள் உங்களுக்கும் தருகிறேன்'' என்று அவர்கள் அத்தனைபேரும்  ஆசையோடு ஓடி வர,  கைக்கெட்டாத  உயரத்தில்  அதை  மேலே  வைத்து விட்டு,   வேண்டுவோர்  எடுத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு தானே  கொண்டுவந்தேன்'' என்று  அவர்களை  திண்டாட வைப்பான். ரொம்ப கெஞ்சினால்  கொஞ்சம் எடுத்து தருவான்.  

ஒரு  பெண்  ரொம்ப அழகானவள்.  உன்னைப்பார்த்தால்  மான்  மாதிரி இருக்கிறாய்  என்று  அவளைப் பற்றி எல்லோர் எதிரிலும்  புகழ  அந்தப்  பெண்ணுக்கு  உச்சி குளிர்ந்தது.  அவனைச்சுற்றி  அவன் சொன்னதெல்லாம் செய்தது.  அருகில் அது வந்ததும்  நறுக்கென்று அதை  வலிக்க வலிக்க இடுப்பில்  கிள்ளி  விட்டு  ஓடி விட்டான். அந்த  பெண்  வலியோடு ஓலம் இட்டுக்கொண்டு  தன் வீட்டுக்குள் ஓடியது. கேட்க வேண்டுமா  அதன் தாய் முகத்தைத் தூக்கிக்கொண்டு  இங்கே யசோதையிடம்  முறையிட வந்துவிட்டாள்.''

''பிரேமா,  இங்கே வாயேன் உனக்கு  ஒரு அழகான பூ  நந்தவனத்தில் பறித்துக் கொண்டு வந்திருக்கிறேன்''  என்று அந்தப் பூவை   அவளிடம் காட்ட  அவள்  பெருமிதத்தோடு ஓடிவந்தாள்.  மற்ற பெண்கள்  

''கண்ணா,  எங்களுக்கும்  பறித்துக் கொண்டுவந்து தாயேன்''  

ஆஹா,   கண்ணன் பிரேமாவின் அருகில் சென்று   ''நீ கண்ணை மூடிக்கொள்  உன் தலையில்  நானே இதை அழகாக  சூட்டுகிறேன்'' என்றான்.  அந்தப் பெண்ணும்  அவனை நம்பி   கண்ணை மூடிக்கொண்டு  நிற்க  ராதையின் தலையில் அந்தப்  பூவை  சூட்டிவிட்டு  ஓடிவிட்டான்.  ஏமாந்த  பிரேமா  அவனைத் துரத்தினால்  அகப்படுவானா?

 இதையும் கேளப்பா.   ஒரு நாள்  ஒரு வீட்டில்  விசேஷம்  ஒரு பெண்  தனது பிறந்த தினம் என்பதற்காக  தானும்  நீளமாக  தலையைப் பின்னி, தாழம்பூ வைத்து மற்ற தோழிகளுக்கும் பின்னி எல்லோரும்  தாழம்பூ மணம்     கமகமக்க  விளையாடிக் கொண்டிருந்தனர். வந்து விட்டான்  இந்த  ராக்ஷசன். அவன் கவனம்  அவர்கள் பின்னல் மேல் சென்றது.  ஒளிந்து கொண்டே  அவர்கள் அறியாமல்  பின் பக்கமாக வந்து  அவர்களது பின்னலை  பிடித்து இழுத்து விட்டு யார் என்று அவர்கள் பார்க்குமுன்பு ஓடிவிட்டான்.  

இதுபோல்  தான்  ஒருநாள்  கோவிலில் விசேஷம் என்று  மைதிலி என்ற பெண்  புதிதாக  நீல வண்ணச் சேலை  ஒன்றை  எடுத்து கட்டிக்கொண்டு வந்தது.கண்ணன் பயல் விடுவானா அவளை.

'எங்கே காட்டு   உன் புடவை ரொம்ப புதிதாக  அழகாக இருக்கிறதே. நீல கலர் எனக்கும் ரொம்ப பிடிக்குமே ''  என்று அதைப் பார்ப்பதுபோல் அருகே வந்து  அந்த  புடவையில்  நிறைய சேற்றைப் பூசிவிட்டு  ஓடினான். அழுது புலம்பி  ஊரையே கூட்டிவிட்டது அந்தப் பெண்.   யசோதை  எப்படியோ அந்த  பெண்ணின் தாயை சமாதானம்  செய்து அன்று சாயந்திரம்  ஒருவாறு  அனுப்பி வைத்தாள்  

 ''அடடா   பார்ப்பதற்கு  ஒன்றும் தெரியாத  பிள்ளையாக  இருக்கிறான் உன் வீட்டுக் கண்ணன். இவ்வளவு விஷமமா இந்த  6 வயதிற்குள்.  அதுசரி  அவன் எங்கே  சங்கீதம் படித்தான்.  ஒரு  புல்லாங்குழலில் வெகு  நன்றாக  ஊதுகிறானே.  நாங்கள்  அதிசயிப்போம்.  எப்படி  இந்த நந்தகோபன் பிள்ளை  இவ்வளவு நன்றாக  குழல் ஊதுகிறான் என்று. ''

 'அதை  ஏன்  கேட்கிறீர்கள்.  எங்கள்  குடும்பத்தில்  இதுவரை  யாருமே  இப்படி  ஒரு  வாத்தியம்  உபயோகித்ததில்லை.  எதிலுமே இந்தப் பயல்  கண்ணன் தானே முதல்வன். ஒருநாள்  சில பயல்களோடு  யமுனா நதிக்கரையோரம் ஒரு  மூங்கில் கொத்தில்  இருந்து  ஒரு சில மூங்கில்  கொண்டுவந்தார்கள். இவன் அதில் ஒன்றை  எடுத்து  வெட்டி, துளை போட்டு, ஊத ஆரம்பித்தான்.  எங்கிருந்தோ மந்திரம் போட்டது போல் இசை வெள்ளம்!!

எப்படி  அவனுக்கு  இது முடிந்தது  என்று  அடிக்கடி யோசித்தால்  களைப்பு தான்  வரும்.  இந்த  ஊரே திரண்டு அவன் பின்னே  ஓடும்.  கையில் இருந்த வேலையைப் போட்டுவிட்டு  மந்திரத்தால் கட்டுண்டது போல் அல்லவோ  அந்த பெண்களும், அவர்கள் தாய்மார்களும் மற்ற கோபியரும் இந்த ஊரில் அவன் வாசிக்கும் இடத்துக்கு ஓடுகிறார்கள்.  

''இதில் என்ன ஆச்சர்யம்  என்றால்  பசுக்களும் கன்றுகளும், பறவைகளும்  கூட இதில் அவனோடு   கூட்டு. எப்போது ஆரம்பிப்பான் எப்போது முடிப்பான்  என்று யாருக்குமே தெரியாது.  கண்ணன் பயல்  ரொம்ப  வினோதமானவன். அவன் செய்யும்  விஷமங்களுக்காக  தண்டனை கொடுக்கவேண்டும் என்று  கோபமாக  அவனருகில் செல்வேன்.  என்னவோ மாயம் செய்து விடுவான்.  ஒரு சிரிப்பில் நான்  அவன் அடிமையாகி  அவனை  வாரி அணைத்து  முத்தமிட்டு விட்டு திரும்புவேன். நானே  இப்படி என்றால்  யசோதையைப் பற்றி சொல்லவா வேண்டும்? என்கிறார் நந்தகோபன்.

 உண்மையிலேயே  யமுனையின் சல சல  நீரோட்டத்தில், மாலைவேளையிலும், அதி காலை சிலு சிலு குளிரிலும்  வித விதமான  நறுமண போதையில்,  மரங்களின் அசைவில்,  செடி கொடிகளின் ஆட்டத்தில் தென்றல் புகுந்து வீச  எண்ணற்ற மயில் மான்  பசு கன்று ஒன்று சேர,  கோபியர்களின் கூட்டத்திற்கு இடையே ஒரு மரக்கிளையில் அமர்ந்து அந்த கண்ணன்  குழல் ஊதும்போது கண்ணை மூடி  கேட்பேனே!  ஆஹா!    அந்த  இன்பத்திற்கு மாறாக ''இந்திர லோகமாளும்  அச்சுவை பெறினும் வேண்டேன்''. அவன் குழலோசை கேட்காத செவியென்ன செவியே''.

ஒரு பெண் அடிக்கடி  வாயைத் திறந்து சிரித்துக்கொண்டிருந்தாள் ,  என்ன தோன்றியதோ அவனுக்கு.   அருகே ஓடிக் கொண்டிருந்த  ஆறு  ஏழு   பெரிய கருப்பு நிற  கட்டெறும்புகளைப் பிடித்து அவள் வாயில் போட்டு விட்டான். பயந்துபோன  பெண்  அப்படியே  துப்பிவிட்டு  பேச்சு வராமல்  உளறலோடு ஓடி விட்டது.  எல்லாருமே  கொல்லென்று சிரித்து விட்டார்கள். அதற்கப்புறம் அந்த பெண் கண்ணன் எதிரே  வாயை பிளந்து நின்றாலும் துணியால் மூடிக்கொண்டு தான் நிற்கும்.

கண்ணன்  குறும்புகளை பட்டியல் போட்டு காணாது. ஒரு புத்தகமே  தனியாக  எழுதவேண்டும்.  நான் சொல்வது எல்லாமே  அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் தான்.

 ''ஏய், வாடி விளையாடலாம் என்று  வீடு வீடாகப்  போய்  அந்த பெண்களை கூட்டி வருவான். ''நீ  போடா  எங்களுக்கு வேலை நிறைய  இருக்கிறது''  என்றால் கூட  விடமாட்டான். கையைப் பிடித்து தர தர  என்று இழுத்துக் கொண்டு ஓடுவான். சின்னக் குழந்தைகளைக் கூட  விடமாட்டான். எல்லோரோடும் அவனுக்கென்று ஒரு தனி விளையாட்டிருக்கும். மும்முரமாக  பாதி விளையாட்டில்  திடீரென்று  காணாமல்  போய்விடுவான். வீட்டுக்கு ஓடிவந்துவிடுவான். அவர்கள் அவனைத்தேடி   கூட்டமாக வருவார்கள். அவன் எங்கோ ஒளிந்து கொள்வான்.

நம்ம கண்ணன் கிட்டே  ஒரு  சாமர்த்தியம் என்ன தெரியுமா?  எல்லோருக்கும் நல்லவன்.
அம்மா,  அப்பா, பாட்டி, அத்தை, சித்தி எந்த வீட்டிலும் அவன் நல்ல பிள்ளை என்ற பெயர் வாங்கும் திருட்டுப் பிள்ளை. கூசாமல் பொய்  சொல்வான். தான் செய்ததை  அப்படியே  அபாண்டமாய்  அடுத்தவன் செய்தான் என்று நம்பும்படியாக நடிப்பான். ஆளுக்குத் தகுந்தபடி  மன நிலையை அந்த வயதிலேயே  தெரிந்து அதன் படி நடந்து அவர்களை தன் வழிக்குக் கொண்டுவரும் சமர்த்தன்.  என்ன சொக்குப் பொடி  போடுவானோ தெரியாது கோகுலம் ஆயர்பாடி பிருந்தாவனம் பூரா அவன் ஆட்டுவித்தபடி ஆடாத பெண்ணே கிடையாது  போங்கள் '' என்று  நண்பனிடம்  சொல்லி முத்தாய்ப்பு  வைத்தார் நந்தகோபன் .

உண்மையிலேயே  இன்றும்  அந்த கண்ணன்  தீராத விளையாட்டுப்பிள்ளை  தான் என்பதில்  ஒரு சந்தேகமும் இல்லையே. பாரதியாரின்  கற்பனையில் ஊறிய  இந்த  அற்புதப் பாடலை கீழே படியுங்கள்.  நான்  மேலே  எழுதியது ஒரு சிறு விளக்கம் தான்.  

9. கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

கேதாரம் - கண்டஜாதி - ஏகதாளம்
ரசங்கள்; அற்புதம் , சிருங்காரம்

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. ... (தீராத)

1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். ... (தீராத)

 2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; ... (தீராத)

3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், ''கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்'' - என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். ... (தீராத)

4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். ... (தீராத)

5, புல்லாங் குழல்கொண்டு வருவான்; - அமுது
பொங்கித் ததும்புநற்கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். ... (தீராத)

6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? ... (தீராத)

7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். ... (தீராத)

8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். ... (தீராத)

9. கோளுக்கு மிகவும் சமர்த்தன்; - பொய்ம்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். ... (தீராத)

-------

sivan jaykay

unread,
Dec 3, 2017, 7:00:31 PM12/3/17
to amritha varshini

                              நளோபாக்யானம் 

                            
பேரழகி தமயந்தி கிடைக்க  வழி இருக்கிறது என்று செய்தி வந்தால் ருதுபன்னன் ராஜா சந்தர்ப்பத்தை நழுவ விடுவானா? ஆனால்  முடியாது போல் இருக்கிறதே.  அந்த பிராமணன் சுவேதன் நாளை அல்லவோ அந்த ஸ்வயம்வரம் நடக்கப்போகிறது.  விதர்ப்ப தேசத்துக்கு  அயோத்தியிலிருந்து எப்படி போய் சேரமுடியும். இபோதே  கிளம்பினால்   கூட துர்லபம் போல் இருக்கிறதே என்று கவலைப்பட்டால்.

அவனருகே இருந்த அவனது தேரோட்டி  வாகுகன் (நளன்) 
  
அயோத்தி மன்னா,  கற்புடையாளும், தன்னை மனையாளாகக் கொண்ட கணவனுக்கே யல்லாமல்(பிறர் யார் பொருட்டும் தன்னுயிரை) விடுவதற்குத் துணியாத தன்மையுடையவளுமாகிய  பேரழகு வாய்ந்த  அரச மங்கையான தமயந்தி, தன் கணவனை விட்டுப்பிரிந்து  ஏங்கி  வேறு வழியின்றி இரண்டாம் சுயம்வரம் செய்ய முற்பட்டாள்  என்று சொல்வதே மிகவும் துன்பமானது. சொல்லத்தகாதது.

''குறையாத கற்பினாள் கொண்டானுக் கல்லால்
இறவாத எந்திழையாள் இன்று - பறிபீறி
நெல்லிற் பருவரால் ஓடும் நெடுநாடா
சொல்லப் படுமோஇச் சொல். ''                                              

என்மேல் எறிகின்ற மாலை எழில்நளன்றன்
முன்னே விழுந்ததுகாண முன்னாளின் - அன்னதற்குக்
காரணந்தான் ஈதன்றோ என்றான் கடாஞ்சொரியும்
வாரணந்தான் அன்னான் மதித்து.                                     

''வாகுகா,  ஒருவேளை நாளைக்குள் நான்  விதர்ப்ப நாடு செல்ல முடிந்தால், எனக்கென்னவோ ஸ்வயம்வரத்தில்  தமயந்தி  தனது கையில் வைத்துள்ள  மாலையை  என் மேல் வீசியெறிந்து   நானே அவளைக் கைப்பிடிக்க இது ஒரு சந்தர்ப்பம்.  
எப்போது எனக்கு, அவளே சுவேதன் மூலம்  செய்தி சொல்லி அனுப்பினாளோ அது நிச்சயம் என தோன்றுகிறது.  அப்படி நான்எண்ணுதற்குரிய காரணமாக இவ்விரண்டாஞ் சுயம்வரம் எனக்கு  சுவேதன் மூலம் செயதியாக வந்துள்ளது.

நளனாகிய வாகுகன் துடிக்கிறான்.  தமயந்தியா இப்படி குலமுறைக்கு  விரோதமாக இந்த மறு ஸ்வயம்வரத்துக்கு இசைந்தாள். இதுவும்  நான் முன்செய்த தீவினை விளைவோ? தமயந்தியின் குணம் நான் நன்கு அறிவேன். ஒருவேளை  நான் நினைப்பது போல் அவள்  என்னைக்  காண்பதற்காகவே உரைத்த மாற்றமோ இந்த சுவேதன் மூலம் வந்த சேதி . புரியவில்லையே!''  என்று குமுறுகிறார் நளன்.

''முன்னை வினையான் முடிந்ததோ மொய்குழலாள்
என்னைத்தான் காண இசைந்ததோ - தன்மரபுக்
கொவ்வாத வார்த்தை உலகத் துரைப்பட்ட
தெவ்வாறு கொல்லோ இது. ''


காவலனுக் கேவற் கடன்பூண்டேன் மற்றவன்றன்
ஏவல் முடிப்பென் இனியென்று - மாவைக்
குலத்தேரில் பூட்டினான் கோதையர்தம் கொங்கை
மலர்த்தேன் துளிக்குந்தார் மன்.                                           

''நான்  இந்த அயோத்தி மன்னனுக்கு கடன் பட்டவன். என்னை ஆதரித்து காப்பாற்றுகிறவன். அவன் கட்டளைப்படி நடக்க கடமைப்பட்டுள்ளேன். அவன் விருப்பத்தை பூர்த்தி செயகிறேன்.  முதலில் சிறந்த குதிரைகளை தேர்ந்தெடுத்து தேரில் பூட்டில் தேரை அவசர பிரயாணத்துக்கு தயார் பண்ணுகிறேன்'' என்று ஏற்பாடு செய்தான் வாகுகன். 

முந்தை வினைகுறுக மூவா மயல்கொண்டான்
சிந்தை யினுங்கடுகச் சென்றதே - சந்தவிரைத்
தார்குன்றா மெல்லோதி தன்செயலைத் தன்மனத்தே
தேர்கின்றான் ஊர்கின்ற தேர்.                                               

''அழகும் மணமும் பொருந்திய மாலையை மாறாதுகொண்ட மெல்லிய கூந்தலையுடையதமயந்தி (இரண்டாம் சுயம்வரத்தை) நாடிய செயலைப்பற்றியே நளன் மனம் திரும்ப திரும்ப நினைத்தது. வேகமாக தேர் ஓடியது.  நளனின் மனம் அதைவிட வெகு மடங்கு வேகமாக விதர்ப்ப நாடு போய்சேர்ந்து அவன் மனைவி தமயந்தி மேல் பரவியது. காற்றை விட வேகமாக  நளன்  தேரைச் செலுத்தினான். 

''மேலாடை வீழ்ந்த தெடுவென்றான் அவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே - தோலாமை
மேல்கொண்டான் ஏறிவர வெம்மைக் கலிச்சூதின்
மால்கொண்டான் கோல்கொண்ட மா.                            

துன்பமோ இன்பமோ என்றும் சாஸ்வதம் இல்லை. துன்பப்பட்டவன் அதிலிருந்து மீள்வான். இன்பம் துய்த்தவன் ஒருநாள் துன்பத்தை அடைந்தே தீருவான். இது விதியின் விளையாட்டு. நலனுக்கு  கலீல் இழைத்த தீங்கு முடியும் நேரம் வந்து விட்டது.  அவன்   வெகுவேகமாக தேரை செலுத்தி குதிரைகளை  பேயாக விரட்டிக்கொண்டிருக்கிறான். அந்த நேரம். சுகமாக தேரில் அமர்ந்திருக்கும்  ருதுபன்ன மகாராஜாவின் மேல் துண்டு காற்றில் பறந்து கீழே விழுந்து விட்டது.  ''

''வாகுகா, வண்டியை நிறுத்து. என் மேலாடை கீழே விழுந்து விட்டது. கீழேயிருந்து அதை எடு''  என்று ருதுபன்னன் சொல்லி முடிப்பதற்குள் வாகுகனாகிய  நளன்  பதில் சொல்கிறான்.

'' அரசே,  உங்கள் மேலாடை விழுந்த இடம் தாண்டி நாம் இப்போது இருபத்து நாலு காத வந்துவிட்டோம்.. வண்டியை நிறுத்தி என்ன பயன் ?'' என்கிறான் வாகுகன்.

இவ்வளவு வேகமாக சென்றும்  உங்களை என்னால் இன்று  சுயம்வர மண்டபம் கொண்டு சேர்க்கமுடியவில்லை. அடுத்த பகுதியில் அடைவோம்.

Sivan Krishnan

unread,
Dec 3, 2017, 7:03:11 PM12/3/17
to amritha varshini
ரெண்டு சிலேடைகள்.
​​

காளமேகப் புலவர்
​ ​
அதிர்ஷ்டக் காரர்.   அவர் புலவராக வேண்டும் என்று நினைத்துக் கூட பார்க்காதவர்.  திடீர் புலவரானவர். அது கூட மற்றொருவன் முட்டாள் தனமாக இழந்த அதிர்ஷ்டம் அவரை தேடி வாயில் நுழைந்தது.
சக்தி
​ உபாசகன் வாக்கு பலிக்கும் என்பார்கள்.  ஆசுகவியாக மதிக்கப்பட்டவர் காளமேகம். அதே சமயம் உயர்ந்த கலைஞானம் அவரிடம் இருந்தது. சிலேடை  என்ற  இரு பொருள் அலங்கார சொற்கள் அவர் பாடல்களில் பரிமளித்தது.  இன்று ஒரு சில சிலேடைகளை சொல்கிறேன்.  நான்  ரசித்தவை.​


ஆமணக்கு
​  என்பது விளக்கெண்ணெய் தயாரிக்கும் ஒரு தாவரம். அதன்  விதைகள் காய்ந்து அதிலிருந்து தான் எண்ணெய் தயாராகும்.  அந்த ஆமணக்கு  ஒரு  யானை போன்றது.  எப்படி அய்யா  மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்  என்று என்னை கேட்கக்கூடாது. நேராக அதோ காளமேகம் நிற்கிறார் அவரைக் கேட்கவேண்டிய கேள்வி. 

உங்களுக்காக நானே கேட்டேன்.  அவர் என்ன பதில் சொன்னார்?  
வழக்கம்போல் .கவிதை ரூபத்தில் தான் 

முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரு
​ம் 
​கொ ​
த்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – ஏத்திசைக்கு
​ம்  
​தே​
மணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையி
​ல்  
​ஆ​
மணக்கு மால்யானை யாம்.
​''

புரிந்திருக்காதே?  விளக்குகிறேன்.​

ஆமணக்குச் செடியில் 
​அதன் விதையில் ஆ
மணக்கு
​  கொட்டை முத்து போல் இருக்கும் அல்லவா. 
 
​அந்த செடி  ​
ஊன்றுகோல் போன்ற
​  தனது  கிளையை, கொம்பை,  காற்றில் ஆட வைக்கும். அசைக்கும். ​
 தன் கொம்பை அசைக்கும். 
​  அதன்  உள்ளே இருக்கும்  
துளை 
​யினில் 
மூரித்தண்டு 
​வளரும்.​
​  வளர்ந்து பெரிதாகும் 
வளரும். 
​ கொத்து ​
கொத்தாக இருக்கும் ஆமணக்குக் குலையை
​ கிளை மேலே தாங்கி  அதன் பளுவால் தலையை சாய்ப்பது போல்  தாழ்வாக்கும்.  இது தான் யானையா?  பேத்தல்.  இல்லை அரைகுறையாக முடிவுக்கு வரவேண்டாம்.

யானை முத்துப்போன்ற தன் வெண்ணிறக் கொம்பை (தந்தத்தை) அசைக்கும்.
​ அந்த இரண்டு தந்தங்களுக்கு நடுவே, இடையே, 
 
​உள்ள இடத்த்தில், 
தன் துதிக்கைத் தண்டை ஏந்திக்கொண்டு வரும். 
​ துதிக்கையில் மூச்சு விட துளை இருக்கும். வாழை மரத்தை பார்த்து விட்டால்  துதிக்கையை தூக்கி  ​
கொத்தாகப் பழுத்திருக்கும் வாழை
​க்  ​
​குலையைச் 
சாய்க்கும்.
​ சௌகரியமாக பழத்தை காலி செய்துவிடும்.  இப்போது பாடலைப் படியுங்கள் ரெண்டுக்கும் பொருத்தம் தெரியும்.​
​ ​


​யானையை  காளமேகம் விடுவதாக இல்லை .  இன்னொரு சந்தர்ப்பத்தில்,  யானையையும்  அது தின்னும் வைக்கோலையும்  ஒன்றாக  பார்த்தார்.  எப்படி ?

​வைக்கோலை பிரிக்க, அதை களத்தடி கொண்டு சென்று  அங்கே வீசி அடிப்பார்கள்.  நெற்கதிர்,மணிகள் உதிர்ந்து வெறும் வைக்கோல் தனியாக பிரியும்.  பின்னர் வைக்கோலை மலைபோல் குவித்து  போராகும். கோட்டைக்குள் போர்  போராக சேமித்து வைக்கப்படும்.  பொன்வண்ணத்தில் அழகாக காட்சி அளிக்கும். 

யானை போர்க்களத்தில் எல்லோரையும் வாரி வீசும், அடித்து நொறுக்கும். போர்க்களத்தில் வேலை முடிந்தபிறகு யானையை  கட்டுத்தறியில்  கோட்டைக்குள் கொண்டு சென்று கட்டிவிடுவார்கள். போர்க்களத்தில்  யானை சிறப்போடு  காணப்படும்.

​​
களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்போ
​போ​
ரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையி
​ல் 
​வைக்கோ
லும் மால்யானை யாம். 

​இன்றைக்கு ரெண்டு போதும்.  மீதி நாளைக்கோ இன்னொரு நாளோ வரும்.
 ​


sivan jaykay

unread,
Dec 3, 2017, 7:03:11 PM12/3/17
to amritha varshini
எங்கள் வம்சம் 

                                      பாரதி மானியம் 

என் தந்தைக்கு வயது 11 என் அம்மாவுக்கு  6 அல்லது 7 வயதோ தெரியவில்லை. எப்படியும்  10த்துக்குள் நிச்சயம்  திருமணம் நடந்தது.  அது அக்காலத்து வழக்கம். 

அந்தகாலத்தில்  சிறு குழந்தைப்  பருவத்திலேயே  திருமணம்  செய்து வைத்தார்கள்.  கணவன் 15 வயது சிறுவனாக இருந்திருக்கிறான்.   பெண்ணோ 9 வயதிலேயே  மனைவி  பதவி  அடைந்தவள்.  மருத்துவ  வசதிகள் அதிகமில்லாத காலத்தில்,  வியாதிகள்  அடையாளம்  காணாத  காலத்தில்,  பால்ய விவாகத்தால் சிசு மரணத்தால் எண்ணற்ற  இளம் பெண்கள்  விதவையாகி ,  அவர்களை  உடன்கட்டையும்  ஏற வைத்தது, கொடுமைகளுக்குள்  ராஜா. அதையெல்லாம்  இப்போது  நினைக்கவே  என்னவோ  செய்கிறதே. இதைப்பற்றி மேலே  எழுத மனமில்லை.   ஒரு சிறு பெண்குழந்தைக்கு  தனக்கு திருமணம் நடந்தது என்றால் என்ன என்று புரியும் முன்பே அவள் விதைவையும் ஆகி பலர் முன்னிலையில் கணவனின் சடலத்தோடு தானும் பற்றி எரியும் நிகழ்ச்சி... அய்யோஓஓஓஓஓ !

இந்த பழக்கம்  ஏறக்குறைய  100-130 வருஷங்கள்  முன்பு வரை இருந்தது.  அக்பர் சக்ரவர்த்தி இதை  தடுக்க எடுத்த  முயற்சி பலன் தரவில்லை.   பின்னர்  வில்லியம்  பெண்டின்க் காலத்தில்  சட்டமாகியது.  காலம் செல்லச்  செல்ல  சாரதா  சட்டமும் நிறைவேறி  பால்ய விவாகமும்  தடை  செய்யப்பட்டுள்ளது.

வைத்தியநாத பாரதி மனைவி ஜானகி  அம்மாள்  தனது  உடன்  பிறவாச்   சகோதரியாக இருந்த  ராமசாமி பாரதிமனைவி  ஞானம்மா சக கமனம் செய்துகொண்ட பின்னர்  மனம் உடைந்தாள். பிரிவு  அவளை  வாட்டி  வைத்யநாத பாரதியின்  மனைவி  ஜானகியும்  சிறிது காலத்தில்  இயற்கை  எய்தினாள்

வைத்யநாத பாரதியின்  மகன்  பரசுராம  பாரதிக்கு  அப்போது  20 வயது.  ராமநாடக  கீர்த்தனை போன்ற  தமிழ் நூல்களில்  கற்றுச்  சிறந்தார். சங்கீதமும்  கை கொடுத்தது.  ராம நாமமே  அவர்களுக்கு  வழிகாட்டி.  

அந்த காலத்தில்  இத்தகைய  சிறந்த  பக்தர்கள்  யாராவது  ஒருவரை  வாழ்த்தினால்  அவர்கள்  சிறந்து வாழ்ந்தனர்.  மனமொடிந்து  சிலரை  கடினமாக  சபித்தால்  அதுவும்  பலித்தது.  பரசுராம  பாரதியை  இப்படி ஒரு சிறந்த  தூய  ராம  பக்தராக, வாக்தேவி  சக்திவாய்ந்த தெய்வமாக சாத்தனூர் கிராம மக்கள் பார்த்தனர். போற்றினர். எவருக்கு  வியாதி வந்தபோதும்,  ராமநாமம்  உச்சரித்து  துளசி ஜலத்தால், சில  சமயங்களில்  வெறுமே  கை நிறைய  மண் எடுத்து கொடுத்து  குணமாக்கியதாகச்  சொல்வார்கள்.   எந்த மாடு கன்று நோய் வாய்ப் பட்டாலும் அவரிடம்  வந்து  மந்திரித்து, குணமாகியது. இதனால்  அவர் பெயர்  பிரசித்தமாகி  பக்கத்து  ஊர்களில் இருந்தெல்லாம்  மக்கள்  திரண்டனர்.  

அதிகாலையில்  காவேரி  ஸ்நானம் செய்து  நியமங்கள்  முடித்து கம்பராமாயணச் சுவடியோடு உட்கார்ந்துவிடுவார்.   ராம  பாராயணம், பூஜை.   பிறகு  உச்சி வேளையில்  போஜனம்.  பிறகு  தன்னையே   மறந்து  ராமத்யானம்.  அவருக்கு  ராமத்யானம்  (ராமனைப் பற்றிய  தியானம்)    '' ரா (இரவு)   ''மத்யானம்'' (பகல்)  என்று இடைவிடாமல்  நடந்தது  என்று சொல்வார்கள் .  இப்படிப்பட்ட   சுத்த ராம பக்தர்  அவர்.

 காவேரிக்கரையில்  மதகடியில் அரசமரத்தருகே   ஒரு பிள்ளையார் இருந்தார் .  அவர்க்கு  ஒரு  சிறு  ஆலயம்  கட்டி  மதகடிப்பிள்ளையார்   பென்று  பெயர் சூட்டினார்.  அந்த  பிள்ளையார்  பெயரில்  பஞ்சரத்ன மாலை,  வேறு  பதிகங்கள், எல்லாம்  இயற்றினார்.  பிள்ளைகள்  விளையாட்டுக்காக  மானம்பு பாட்டு,  கோலாட்ட  பாட்டு  எல்லாம் பாடியிருக்கிறார்.  மழைவராவிடில்  பரசுராம பாரதிகளிடம்  விவசாயிகள்  வந்து  முறையிட்டு  அவரை  பிரார்த்திக்க  சொல்வார்கள்.

ஒருசமயம்  புரட்டாசி  வரை  கூட மானம்  பொய்த்து  விட்டது. ஆனி  மாசம்  ஹஸ்த நக்ஷத்ரத்தில்   விதை  விதைத்தால் அமோக  விளைச்சல்  என்று  நம்பிக்கை. கம்பர்அவர் எழுதிய  ராமாயணத்தில்  ''ஏரெழுபது'' எனும்  காவியத்தில்  ''விரை விடு  இலக்கணம் '' எனும்   செய்யுளில்  இதை  விளக்கியிருக்கிறார்.  

 வைகாசி  மாதம்  காவேரியில்  வெள்ளம் வராமலும்   ஆனி ,  ஆடி,  ஆவணி, புரட்டாசி வரைகூட  மேல் மழை  பெய்யவில்லை  என்றால்  வேளாளர்களுக்கும்  சோழகர்களுக்கும்   வயிற்றில் புளி  கரைக்குமே.  ஓடி வருவார்கள்  பரசுராம  பாரதியிடம். வாசல்  நிரம்பிவிடும்.

 ''பாரதி  சாமி, மழை  பெஞ்சால்  தான்  இன்ஜெயிருந்து நவுருவோம்''.  

வெய்யில் தான்  ஏறியதே  தவிர  வேளாளர்கள் இடத்தை விட்டு  நகரவே இல்லை.  கண்கள்  ஆர்வமுடன்  நம்பிக்கையோடு  பாரதிகளையே  பார்த்துக்கொண்டிருந்தன.

 வெகுநேரம்  ஆகாயத்தையே கண் கொட்டாமல்  பார்த்துக்கொண்டு   ராமநாமம் சொல்லிகொண்டே இருந்த  பரசுராம  பாரதி  ஒரு  கவி  உடனே  இயற்றினார்.

''சீராமன்   பாதத்தை சிந்திக்கப்  பெய்யும்  மழை
வாரா  வளங்கள் எல்லாம்  வந்திடுமே  தேறீர்  
நன்மைகள்   யாவும் நாளுக்கு நாள்  பெருகும்
தினமைகள்  ஏதேதும் வாராதே''  

 (இந்த  பாடலை என் அம்மாவழி  தாத்தா  பிரம்மஸ்ரீ  வசிஷ்ட  பாரதிகள்   ஞாபகம்  வைத்திருந்தார்.  அதை  தனது வம்சாவளி என்ற தொடரில் இந்துநேசனில் பிரசுரித்து அதன் ஒரு பிரதி  கிடைத்தது  நம்முடைய  அதிர்ஷ்டம். )  

 மேற் சொன்ன  பாடலை பரசுராம பாரதி உடனே இயற்றி  பாடியதன் அர்த்தம்: 

 ' ஸ்ரீ   ராமனின்  கிருபை  என்கிற  மழை,  கருணை மழையாக  அமோகமாக பொழியும், என்  அப்பன்  மதகடி விநாயகன் எங்கே  போனான்? அவன் இதை கவனிப்பான்.  நீங்கள்   யாவரும் மனம்  தளர வேண்டாம். இது  சத்தியம்.  தைரியமாகச்  செல்லுங்கள்.  நம்புங்கள்.   மழை வரும். ''

 விடுவிடென்று  கிளம்பினார் பரசுராம  பாரதியார்.  மதகடி பிள்ளையார் ஆலயம்  சென்றார்.  விபூதியைக் குழைத்து  பூசிக்  கொண்டார்.   விநாயக மூர்த்தியை  வலம்  வந்தார்.  

 ''மண்ணுருகப்  பேயும்,  பொன்னுருகக்  காயும்,,  
 மண்ணாளப்  புரட்டாசி என்பது  பிரட்டா-சீ  போ
எண்ணுரு   தேதியுமாச்சே  இனிமேல்   எப்படி விரைப்பு?
 எப்படி நாத்து  விடல்?  எப்படியே நடவாகும் ?
அண்ணலே இது  உனக்கு  சம்மதமா?  உந்தன்

 அடிமைகளாம்  குடிகளுரை  சாத்தனூர் அதனில்
பண்ணுரு  செய் பயிர்  தழைக்க  உயிர்களெலாம் செழிக்க
 பக்ஷமுடன் மதகடி வாழ்  கணபதியே  அருள்க.''

அவர்  மழை பெய்யாத  விஷயத்தைச்  சொல்லி,  பெய்யவைக்கும்  பொறுப்பை  மதகடிப்பிள்ளை யாரிடம் தள்ளிவிட்டு   சந்தோஷமாக  வெற்றிலை  போட்டுக்கொண்டு  குடியானவ  ஜனங்களிடம்  பேசிக்  கொண்டிருந்தார்.   வானம்  கருத்தது.  இடி இடித்தது.  கார் மேகங்கள்  நகர்ந்து  வந்தன. ஒரு நாழிகை  நேரம்  மழை கொட்டோ கொட்டு என்று  மண்வாசனை நிறக்க  மழை பெய்தது.  

 மழையில் நனைந்து கொண்டே  கம்பர்  இயற்றிய  ஒரு  ராமாயணப் பாடலை  பாடிக் காட்டினார்  பரசுராம  பாரதிகள்.  

 அதன் பொருள்   '' களைக்கோட்டு மாமுனி  (ரிஷ்ய ஸ்ரிங்கர் ) வரவால் அங்க தேசத்தில்  மழை பொழிந்து வறுமை  நீங்கியவாறு''   இங்கும்  பெய்யும்.. ஒரு குறைவு மில்லை. போய்   விரை  விடுங்கள் '' என்று  குடியானவர்களை சந்தோஷத்தோடு அனுப்பினார்.  

அந்த வருஷம்  அமோக விளைச்சல்.  ஊர்  மக்கள் கூடி  பொதுவில்  ''கோவிலடி செய்'' என்ற  பெயரில் ஒரு பெரிய ''செய்""  (நன்செய்,  புன்செய்""  மாதிரி நிலம்) அதன் பக்கத்தில் வேறு  சில  நிலங்களும் ஊர்ப் பொது ''பாரதி மானியம்'' என்று   அவருக்கு  ஒதுக்கினார்கள்.

இந்த  நிலம்  வெகுகாலம்  அவர் குடும்ப  அனுபவத்தில்  இருந்து வந்தது.  வருஷம் தோறும்  கறவைப்பசுவும்,விளைச்சலில்  பங்கும்  அவர்  குடும்பத்தை  வந்தடைந்தது.

sivan jaykay

unread,
Dec 3, 2017, 7:03:11 PM12/3/17
to amritha varshini
உத்தவ கீதை. 

கிருஷ்ணா, சத்ய ஸ்வரூபனே, தேவாதி தேவனே, பக்தர்களுக்கு தரிசனம் தருபவனே, உன்னைத் தவிர எனக்கு  ஞானம் தர நான்  யாரை அறிவேன்? உன்னைப்போன்ற சிறந்த ஆசார்யன் எங்கே எவர் கிடைப்பார் ? ப்ரம் மாதி தேவர்கள் இதை நன்றாக உணர்ந்தவர்கள். நான் உன்னை சரணடைந்து விட்டேன். நாராயணா, எவ்வுயிரும் விரும்பும் தெய்வமே, காத்தருள்வாய்.

உத்தவா!, இந்த மாய உலகை நன்றாக உணர்ந்தவன் உலக ஆசைகளிலிருந்து விடுபட்டு தம்மை உயர்த்திக் கொள்பவன். அவனது புத்தி, ஞானத்தால் உலக வாழ்வின் இச்சைகளை வெறுத்து ஒதுக்கி விடுபவன் தனக்கு தானே  ஆசார்யன் ஆகிவிடுவான். மனிதர்களில் தன்னடக்கம் கொண்டவர்கள், சாங்கிய யோகத்தில் ஈடுபட்டு என் சக்திகளை அறிந்தவர்களாகிறார்கள். 

இந்த பூவுலகில் எண்ணற்ற ஜீவராசிகள், ஒரு கால், ரெண்டு கால், மூன்று கால், நாலு கால், எத்தனையோ கால்,  காலே  இல்லாமல் கூட  என்று பல, ஆனால் மனிதர்கள் மட்டுமே எனக்கு பிரியமானவர்கள்.

எளிதில் என்னை அறிய முடியாதிருந்தும், மனிதன் தனது புத்தியால், மனதால், இதயத்தால் என்னை உணர முடியும்  அடையவும் முடியும்''  என்கிறார்  கிருஷ்ணன்.  இந்த சந்தர்ப்பத்தில் தான் யது மஹாராஜாவுக்கும் அவதூதரான  தத்தாத்ரேயருக்கும் நடந்த சம்பாஷணையை ஞாபகப்படுத்துகிறார்.  எப்படி தத்தாத்த்ரேயர்  24 ஜீவராசிகளை தனது குருவாக கொண்டு ஞானம் பெற்றார் என்கிற  அற்புதமான ஒரு சம்பாஷணையை ஏற்கனவே உங்களுக்கு சொல்லி இருக்கிறேன். 

ஒருவன் தனது முயற்சிகளால் சேர்த்து வைத்த செல்வத்தை மற்றொருவன் சுலபமாக எடுத்துச் சென்று விடுகிறான். தேனீக்கள் சுறுசுறுப்பாக எங்கெல்லாமோ சென்று பூக்களில் தேனை சேகரித்து தமது கூட்டில் சேமித்து வைக்கிறது. இதை பார்த்துக்கொண்டே இருக்கிறன் காட்டு வாசி நிறைய தேனை  தேனீக்கள் அடையில் சேர்த்துவைக்கும்  வரை காத்திருந்து ஒருநாள் தேனீக்களை விரட்டி, கொன்றுவிட்டு தேனை அபகரிக்கிறான்.

சந்நியாசி, துறவி, ஆகியோருக்கு உலகியலாக உள்ள  சங்கீதமோ புலன்  உணர்ச்சிகளை ஈர்க்கும் பாடல்களோ கூடாது.  ரிஷ்யஸ்ரிங்கர் அப்படித்தான்  ஈர்க்கப்பட்டு  உலக வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டி அமைந்தது.

நாக்கு ருசிக்கு அடிமையாகி  மீன் தூண்டிலில் மாட்டி உயிரிழப்பது ஒரு பாடம்.   யா காக்காவிட்டாலும் நா காக்க வேண்டாமா.  அதற்கடிமையாகி உண்பதாலும் பேச்சினாலும் தான் துன்பங்கள் அனைத்தும் வந்து சேருகிறது.

பணத்தை விரும்பி உடலை விற்கும் வேசி பிங்களை ஆசைகள் நிறைவேறாமல் ஏமாற்றமடைந்து ஒரு இரவு அவளுக்கு ஞானம் பிறக்கிறது.  மனதை அடக்காமல், என் இதயத்தில் குடி கொண்டுள்ள உன்னை  நினைக்காமல் உன்னை வேண்டாமல் எவனெவனையோ தேடினேன். நான் பரம முட்டாள். எது உண்மையான திருப்தி என இப்போது நினைக்கும்போது அறிந்தேன். உண்மையில் என் உடல் ஒரு வீடு. வசிப்பது ஆத்மா. எலும்புகள் தான் வீட்டின் தூண்கள், உத்தரம், கடைக்கால்  எல்லாம். சதையும் தசையும் தோலும் தான் வீட்டின் சுவர்கள், கூரை. இந்த வீட்டிற்கு ஒன்பது வாசல். இதிலிருந்து வெளியேறுவது அசுத்த வஸ்துக்கள்.    இந்த வீட்டில் இருப்பவன் ஆத்மாவை நினைக்காமல் இந்த அழியும் வீடான உடலையே பெரிதாக மதித்தேன். தவறை உணர்ந்து  விஷ்ணுவின் பாதகமலங்களில் சரணடைந்து விட்டேன். ஆனந்தம் அடைகிறேன்''  என்கிறாள்  பிங்களை .

உலகில் வாழும் ஒவ்வொருவனும் ஏதோ ஒன்றில் மயங்கி,  அதன்  மாயப்பிடியில் சிக்கி உலக வாழ்வில் துன்புறுகிறான். அதனால் துன்பம் தான் நிகழுமே  தவிர  எதிர் பார்க்கும் இன்பம் குதிரைக் கொம்பு  என்று அறிந்தவன் தப்பித்துக் கொள்கிறான்.

தொடரும் 

sivan jaykay

unread,
Dec 3, 2017, 7:03:11 PM12/3/17
to amritha varshini

                             கீதா  ஜெயந்தி 5000

இன்றைக்கு  யார்  யாரெல்லாம் பிறந்திருக்கிறார்களோ அவர்  பகவத் கீதையின்  சகோதர சகோதரிகள். 5000 வருஷத்துக்கு முன்பு  இன்றைய தினம் தான் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு குருக்ஷேத்ரத்தில் பகவத் கீதையை உபதேசித்தார். கீதை பிறந்தது. கிருஷ்ணன் கீதையை உபதேசித்தது ஏகாதசி அன்று 
ஆம்  இன்று உலகெங்கும் ஹிந்துக்கள் கீதா ஜெயந்தி கொண்டாடுகிறார்கள்.

கீதை 700 ஸ்லோகங்களும், அர்த்தம் புரியாமலேகூட,  மனப்பாடமாக ஒப்பிக்கும் சிறுவர் சிறுமியரை நான் அறிவேன். அவர்கள் பாதம் தொட்டு வணங்குவேன்.

கிருஷ்ணனின் கீதையின் முக்கிய சாராம்சம்:

முக்தி மோக்ஷம் என்றதும் உலகத்தை விட்டு வாழ்க்கையை விட்டு, பெண்டாட்டி பிள்ளையை கைவிட்டு பொறுப்பற்று எங்காவது கண்காணாமல் ஓடு என்று அர்த்தம் இல்லை.  உன்னுடைய கடமைகளை செவ்வனே செய். எண்ணத்தை பகவான் கிருஷ்ணன் மேல் வைத்து அதை செய். பலனை நாடாமல் சந்தோஷமாக உன் கடமையை செய். அது தான் மோக்ஷம் தரும்.

நீயும் நானும் இந்த உடம்பு அல்ல. நமக்குள்ளே ஒரு தீபமாக ஆத்மா சுடர்விட்டுக்கொண்டு இருக்கிறது. அது ஜனன மரணமற்றது. மரணம் ஜனனம் இந்த உடம்புக்கு தான். அடிக்கடி கூடு விட்டு கூடு மாறும் அழிவற்றது நீயாகிய ஆத்மா. பேர் உருவம் எல்லாம் உடம்புக்கு தான்.

ஆசை, பாசத்திற்கு அடிமையாகி விடாதே.  அது உன்னை எங்கோ சகதியில் கொண்டு அமிழ்த்தி விடும். மேலே எழும்பி வருவது முடியாத காரியம்.  ஆகவே  ஜாக்கிரதையாக அதை தூர தள்ளிவை. வலையில் போய் சிக்கிக்கொள்ளாதே.

உனக்கு உன் கடமையை,   காரியத்தை,( இது தான் கர்மா)  செய்ய மட்டுமே உரிமை. பலன் அவன் தருவது. அதை எதிர்பார்த்து செய்வது பயனற்று போகிறது. ஆட்டுவித்தால் ஆடு.  ஆடினதற்கு கூலி எங்கே? என கேட்காதே. நீ ஆடவில்லை. அவன் தான் உன் மூலம் ஆடுகிறான்.

ஐம்புலன்களும் ஓயாமல் ஒழியாமல் உன்னை ஈர்க்கும். டிவியில்  வரும்  வியாபார செயதிகளை பார்க்காமல்  விளம்பரங்களில்   சேனலை  மாற்றுகிறாயே . அது தான்  இந்த ஐம்புலன்களின்  ஈர்ப்புக்கும் நீ செய்ய வேண்டியது.  உன் மனதை அதில்   இழந்துவிட்டால்,  நீச்சல் தெரியாதவன் ஆழமான குளத்தில் விழுந்த  கதி தான்.

எதுவுமே  எவருக்குமே சொந்தமல்ல.  நாமெல்லாம் தற்காலிக யாத்ரிகள். இன்று நமது எதுவோ, அது நேற்று வேறு ஒருவனது, நாளைக்கு  யாருடையதோ  என்று இருக்கும்போது எது உனக்கு சொந்தம்.  பந்தமும் சந்தையில் கூட்டம் தான்.  வெறுங்கையோடு வந்தவன்  கைவீசம்மா கை வீசு என்று வெறுங்கையை வீசிக்கொண்டு போகப்போகிறோம் நடுவில் எது யார் சொந்தம். பந்தம் ?

நடப்பது நல்லதாகவே. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று நிம்மதியாக அவன் மீது பாரத்தை போட்டு உன் மனச்சாட்சி சொல்படி நட.

கர்வம், வீண் பெருmai டம்பம் ,அகங்காரம், இதெல்லாம் அறிவுக்கு சத்ரு.  அடக்கம் அமரருள் உய்க்கும்  என்பது ஞாபகம் வரட்டும். தான தர்ம சிந்தனை வேண்டும்.  
உன்னுள்ளே  கிருஷ்ணன் இருக்கிறானடா , வேறே என்ன வேண்டும் உனக்கு?  அவன் உன்னுள்ளே இருப்பதால் நீ தான் கிருஷ்ணன். 

தோல் மேலே இருந்தாலும் உள்ளே வேர்க்கடலை இருந்தாலும் தோலோடு சேர்ந்ததை தான் கிலோ என்ன விலை என்று வாங்குகிறோம்.   கிருஷ்ணனை நம்மிலிருந்து பிரிக்கமுடியாதவர்கள் நாம்.

இன்று கிருஷ்ணன் கோவில்கள் ஜெகஜோதியாக  ஒளி வீசும். தீபங்கள் வரவேற்கும்.பெரியவர்களும் சிறியவர்களுக்கு கீதை ஸ்லோகங்களை உச்சரிப்பார்கள். நிறைய பேர்  குருக்ஷேத்திர தரிசனம் செய்வார்கள்.  நாம் இதெல்லாம் முடியாதவர்கள் இருக்கும் இடத்திலேயே மனதில் கிருஷ்ணனை நினைத்து மகிழ்வோம். 

ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சங்கம் ஞாயிறு, 10.12.1ல் அன்று  மாலை  5 மணிக்கு கீதா ஜெயந்தி 5000 எப்படி கொண்டாடப்போகிறது தெரியுமா?  

sunday   10.12.2017     5pm
venue:  No. 10,  first main road,  Ramnagar, Nanganallur, Chennai 600061

சிறு குழந்தைகள் கீதா ஸ்லோகம் சொல்லப்போகிறார்கள். தீபம் ஏற்றப்போகிறார்கள்.  
ஸ்ரீமதி வித்யா கிருஷ்ண நாம  சங்கீர்த்தனம் பண்ணப்போகிறார். 
''அற்புத சொற்பெருக்கர் ''  ஸ்ரீ  உ.வே. வடகரை  நா. விஜயராகவ அய்யங்கார் ஸ்வாமிகள்  ''கீதா ஸாரம்''  என்று இனிக்க இனிக்க சுவையாக  கீதையை  தெளிவாக சொல்லப்போகிறார்.
 ஸ்ரீ கிருஷ்ணனின் பிரசாதம் அனைவருக்கும் விநியோகத்தோடு  நாம் மன நிறைவோடு  இரவு  7.30 மணிக்கு விடைபெறுவோம். 
முக்கியமான விஷயம்:  நீங்கள் அனைவரும் கலந்து கொள்ளப்போகிறீர்கள்.
   

sivan jaykay

unread,
Dec 6, 2017, 8:37:52 PM12/6/17
to amritha varshini
எங்கள் வம்சம்:                                                          

                                                                             பாரதி பெற்ற  சம்பாவனை   

 எனது  அம்மாவழி தாத்தாக்கள்  கதையெல்லாம்  சொல்லி வருகிறேனே.  அந்த  வம்சத்தை  பற்றிய குறிப்புகள் எனது தாத்தா ஜீவித வந்தராக  இருந்தபோது இந்து நேசன் என்ற தமிழ் பத்திரிகையில் 1930களில் எழுதிவந்ததை  ஜாக்கிரதையாக பாதுகாத்து வந்த எனது மாமாக்களுக்கு பல கோடி நமஸ்காரம்.  எனக்கு அதன் நகலை எனது  மாமா  ஸ்ரீ  வ. சுப்ரமணியன் தந்தபோது அதனுள் இருக்கும் விஷயம் எனக்கு தெரியாது.  அது ஒரு அரிய பொக்கிஷம்.  உடனே  அதில் இருந்து சில பகுதிகளை மட்டும் புத்தகமாக்கி  இலவசமாக எனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு வழங்க ஒரு விழா தயாரானது. அதற்கு உறுதுணையாக இருந்தவர் எனது கடைக்குட்டி மாமா  ஸ்ரீ வ. மஹாலிங்கம்.  ஸ்ரீ வசிஷ்டபாரதி நினைவு நாள் ஒன்று 5.3.15  அன்று  கிரோம்பேட்டையில் ஒரு  மண்டபத்தில் சிறப்பாக நடந்தது.   ''எங்கள் பாரதி வம்சம் - புராண சாகர  நினைவலைகள்''  எனும் அந்த புத்தகத்திற்கான விபரங்களை  என்  தாய் மாமன்  ஸ்ரீ  வ.  சுப்ரமணிய அய்யரை   (96 வயதாகிறது.  கண்களில்  பார்வை இல்லை. தாத்தா  வாழ்ந்த அதே வீட்டில் ரெண்டு  தலைமுறையாக  புரச வாக்கத்தில்  வாழ்கிறார்)  சித்ரவதை செய்து, பிடுங்கி பிடுங்கி  சிறிது சிறிதாக பழங்கதைகளைச்  சேகரித்தேன்.   நினைவில் சில  குறிப்புகளை  வைத்திருந்தார்.   அவருக்கு  நான் இப்போது  எழுதுவதையெல்லாம் அவர்  மகன் (அடுத்த தலைமுறை  பெயரில் மட்டும்  வசிஷ்ட பாரதி ) அவருக்கு  படித்துக் காட்டினதில்   பரம  சந்தோஷம்  அவருக்கு.   கண்  இருந்தும் விழியின்றி  பார்வை இன்றி,  தனக்குத்  தெரிந்த  தமிழில்  '' சிவா,  நான் ஒரு  சிறு  பாட்டு  எழுதினேன்  மனத்திலேயே''  என்று  சொல்லி அதை  ஜூனியர் வசிஷ்ட பாரதி முலம்   எழுத  வைத்து எனக்கு  அனுப்பினார் .

 இதில்  சொற்குற்றம் , பொருட்குற்றம், சந்தம், யாப்பு,  தளை , எதுகை,மோனை எதுவுமே  தேட வேண்டாம்.  அவற்றை  தேட  புத்தி  போய்விட்டால்  நான்  முன்பே  எழுதியதுபோல்  '' மரத்தை  மறைத்தது  மாமத  யானை,  மரத்தில்  மறைந்தது  மாமத  யானை''  கதையாகி,  அவர்  பாட்டில்  இழையோடியிருக்கும்  அன்பு,  ஆசை, பாசம்,  நம்பிக்கை, வாத்சல்யம்,  மகிழ்ச்சி எல்லாம் காணாமல்  போய் விடுமே.

இது தான்   மனதில் அன்போடு  விழியில்  பார்வை இன்றி  அவர்  இயற்றி  அவர்  மகன் வசிஷ்ட பாரதி  எழுதி என்னை வந்தடைந்த சிறு  பாடல்:

''  அவனன்றி    ஓர்  அணுவும்  அசையாது
           என்பது  ஊரறிந்த  உண்மை

   இவனன்றி   இச்செயல்  செய வல்லாரில்லை          
              என்பது   நாமறிந்த  உண்மை

   எவனவன் என்று  வினவுவாராகின்
          அனைவருமறிந்த நம்  ஜே. கே.
   சிவனன்றி வேறுயார் கொலோ? ''

அன்னாரின்  சீரிய  பணி  சிறப்புற செயல்பட  வாழ்த்துகிறேன்    -  சுப்ரமணியன்   மாமா
   
இதில்  நான்  ஒரு  வயதான  மனிதனின்  உணர்ச்சிகளைப்  புரிந்துகொள்ள வேண்டுகிறேன். தன் மூதாதையரைப்  பற்றி  தானோ தனக்கு முன்  எவரோ,  தன்னுடன்  பிறந்தாரோ  எடுத்துச் சொல்ல முன் வராததை அடுத்த  தலைமுறையில் ஒருவன் முயற்சிப்பதை பாராட்டும் வாழ்த்து. இதில் முக்யமான  பெருமை  என் எழுத்துக்கல்ல. அதில் வரும்  மகனீயர்களின் வாழ்க்கை விபரம்.  

இனி   மேலே  தொடர்வோம்: 

 பரசுராம  பாரதிக்கு  25வது  வயதில்  கல்யாணம்  நடந்தது.  அவரும்  உடையார்  பாளையம்  ஜமீன்தாரால்  ஆதரிக்கப்பட்ட ஒரு  கலைஞன். அப்போது உடையார்பாளையம்  ஜமீன்தாரின்  ஆஸ்தானத்தில்  ஒரு  மகா மேதை  இருந்தார்.  அவர்  வேறு  யாருமில்லை  ஸ்ரீமான்  கனம்  கிருஷ்ணய்யர்.  கனம்  என்றால்  என்ன  தெரியுமா? weight  அல்ல.  கர்நாடக சங்கீதத்தில் இது ஒரு கடின  அம்சம். வாயை  மூடிக்கொண்டு, நாபியின் ஜீவனாடியிலிருந்து,  நாதத்தை  எழுப்பி,  வாய் திறவாமல்,  கண்டத்தையும்  நாசியையும்  ஆதாரமாக கொண்டு ஸ்ருதியோடு  கீர்த்தனைகளை  பாடுவது.   இது  ரொம்ப  ஸ்ரமம்.  பல  காலம்  சாதகம்  தேவை.  யாரும்  முயற்சி செய்து பார்த்து  டாக்டருக்கு  நிறைய  பீஸ்  கொடுக்க வேண்டாம்.  

 அந்தகால  சங்கீத  வித்வான்களை  பற்றி  அப்புறம்  நிறைய  சொல்கிறேன்.    கனம்   கிருஷ்ணய்யரிடம்  மீண்டும்  போவோம்.

கிருஷ்ணய்யர் தனது  தமக்கை  பெண் சங்கரியையே பரசுராம  பாரதிக்கு மணம் செய்து வைத்தார்.   இந்த  கனம்  கிருஷ்ணய்யர் தமிழ் தாத்தா  மகாமஹோபாத்யாய ஸ்ரீ  உ.வே.  ஸ்வாமிநாதய்யரின்  நெருங்கிய  உறவினர்.  எங்கள் அம்மா வழி  மனைவி வழி  உறவினர்.  

திருச்சி  ஜில்லா, முசிறி தாலுக்கா, முசிறிக்கு  வடக்கே 6  மைலில்   உள்ள  மங்கலம்   கிராமத்தில்  பரசுராம பாரதியின் தம்பி நாகசாமி  பாரதிக்கு தனது ஒரே  பெண்ணை  மங்கலம்  தக்ஷினாமூர்த்தி அய்யர் கல்யாணம் செய்து கொடுத்து  அங்கு  ஒரு வம்சம்  தொடர்ந்து வருகிறது.  

பரசுராம  பாரதிக்கும்  வயதாகியது.  ராமத்யானம்  ஒன்றே  அவர்  தொழில் என்றேனே.   அவர்  தந்தை  வைத்யநாத  பாரதியும் கைலாசம்  சேர்ந்தார்.  பல  வருஷங்களுக்கு  பிறகு  மீண்டும்  ஒருமுறை சாத்தனூரில்  வானம் பொய்த்தது.  ஆற்றில்  நீர் குறைந்தது.  வைகாசி மாதம்  வரவேண்டிய வழக்கமான  வெள்ளம் வரவில்லையே?  சாகுபடிக்கு என்ன வழி? சோழகர்கள் பரசுராம பாரதியைத்தானே  தேடுவார்கள்?    அவரும்  வழக்கம் போல் மதகடிப் பிள்ளையாரைப்  பிடித்துக் கொண்டார், வேண்டிக்கொண்டார்:

 ''உள்ளமுனக்கே  தெரியும் உணர்த்துவதென் அய்யனே
  பள்ளம்  படுகுழியும்  உலர்ந்ததுகாண்  பாரதனில்
  தெள்ளுமதி மயக்கமிது தீரன் உந்தன் கடைக்கணருள்
  வெள்ளம் பெருகிவரச்  செய்மதகார் விநாயகனே''

 அன்று  இரவே வானத்துக்கு  ரோசம் வந்து  பொத்துக்கொண்டதாம். மறுநாள்  பாரதியை போற்ற வந்த  அனைவரையும் 

 'இதற்கு நான் ஒன்று செய்யவில்லை, நீங்கள் எல்லோரும் நமது  மதகடி பிள்ளையாரிடம் போய்  நன்றி சொல்லுங்கள்''  என்று  விரட்டிவிட்டார். வேளாள  மக்கள்  இவர்   மற்றொரு காளமேகம்,  புது பெயரோடு வந்திருக்கிறார். அவர்  பெயர்  இப்போது  பரசுராம  பாரதி  என்று வணங்கினார்கள்.

காலாட்டி சோழகர்  சும்மா இருப்பாரா?   ஊர் கூட்டி பேசினார் 

 '' நாம  ஏற்கனவே நஞ்சை  நிலம்  ஊரில் மானியம்  உட்டிருக்கோம்லே .
   இன்னலேர்ந்து  படுகையில்  புஞ்சைலே  சோளம், கம்பு, கேழ்வரகு, உளுந்து, பயறு,எள்ளு, எது விளைச்சாலும்       ஏத்துக்கு குறுணி  (மரக்கால்  என்பது ) பாரதி சாமி குடும்பத்துக்கு  நாம கொடுக்கோணும். சரியா? ''   \

   அப்பீல்  இல்லாமல் அந்த தீர்மானம்  நிறைவேறியது.  

 அந்த காலத்தில்  கல்யாணத்தின் போது ,பெண்ணுக்கு  திருப்பூட்டினதுக்கு  பிறகு,  பிள்ளையையும்,  பெண்ணையும்,  குடும்பத்தில் பெரியவர்களும்,  பந்துக்களும், பச்சை  அரிசி, அருகம்புல் எல்லாம்  சேர்த்து  ஆசிர்வதித்து  ரெண்டு  கையாலும் ,   வாரி விடுவது  வழக்கம்.   இதற்கு  ''சேடை ''  இடுவது  என்று  பெயர்.  

 சோழகர்  மற்றொரு  தீர்மானம் கொண்டுவந்தார்  ''  இஞ்செலுருந்து  நம்ம  பாரதி  சாமி சேடை  இடும்போது காணிக்கையா  ஒத்த ரூவாக்கு  குறையாம,  ஒவ்வொரு வூட்டிலேருந்தும் கொடுக்கோணும் ''  .

அனைவரும்  ஒப்புக்கொண்டார்கள்.  

 ஊரில் அக்ரஹாரத்தில் இருந்த  பிராமண குடும்பங்களும்  தங்கள்  வீட்டில் கல்யாணம்  நடந்தால்  பாரதியை  உபசரித்து ஆசீர்வாதம்  பெற்று  சம்பாவனை செய்தார்கள்.  

ஹரிஹர சம்பாவனை என்று  சிவாலயம் விஷ்ணு  ஆலயத்துக்கு   4  அணா ,ஆச்சர்ய சம்பாவனை என்பது  தமது  மத  ஆசார்யாளைப்  பணிந்து  அளிப்பது.    இதுவும்  4  அணாதான்.  

சரஸ்வதி சம்பாவனை என்பது  பரசுராம பாரதிக்கு  அவர்கள் கொடுத்த ஒரு ரூபா.  இது  தான்  அவர் குடும்ப  வருமானம். தினமும்  அல்ல.  வருஷாந்திர  வருமானம்.  

இதைப்படிக்கும்   I .T.  மனிதர்களே.  உங்கள்  ஆண்டு வருமானத்தை  பாரதியின்  வருமானத்தோடு  ஒப்பி டாதீர்கள்.  இருநூறு வருஷங்களுக்கு முன்பு  கால நிலையே  வேறு.  அவர் வாழ்ந்த  வசதி,  அவருடைய  சந்தோஷம்,   நீங்கள்  என்றுமே  கனவிலும்  கூட பெற  முடியாது.
IMG_3654.JPG

sivan jaykay

unread,
Dec 14, 2017, 6:56:00 PM12/14/17
to amritha varshini
எங்கள் வம்சம்  j.k. sivan 

                                                 பழைய நினைவுகள்...  
                             

காலம்  என்பது  நிற்காமல்  வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்  ஒரு  பிரேக் இல்லாத  வாகனம்.  அது  நின்றது  என்றால்  சகலமும் முடிவுறும்.    அதில் பிரயாணம் செய்யும் நாம்  எப்போது  திரும்பி பார்த்தாலும் இனிக்கும்.

கடந்த காலத்தை நினைப்பது  என்பது  இறைவன் அளித்த ஒரு அற்புத பரிசு.  பழைய நினைவுகள் வாழ்க்கைக்கு  தெம்பை அளிப்பவை என்று எல்லோரும் ஒப்புக்கொண்டு தலை ஆட்டுவீர்கள். 

ஆம், அவரவர் வாழ்க்கையில் நடந்தது அவரவர்க்கு புத்துணர்ச்சி தருவது. சில  நினைவுகள்  பொதுவாகவே எல்லோருக்கும் சந்தோஷம் அளிப்பவை. நான் தேர்ந்தெடுப்பது எல்லோருக்கும் மகிழ்ச்சி தரவேண்டும் என்ற ரகத்தை சேர்ந்தது.

++

பரசுராம  பாரதியின் ஜேஷ்ட புத்திரன்  ராமஸ்வாமி  பாரதி  அப்பாவைப்போலவே  வாக் பலிதம்  பெற்றவர் ஆகிவிட்டார். சொன்னது  நடக்கும்  என்று  சாத்தனூர்   வேளாண் குடி மக்கள்  நம்பி வந்தனர்.  கல்யாணங்களுக்கு நடத்திக்கொடுப்பதில்  வரும்  வருமானம் தவிர சரஸ்வதி  சம்பாவனை வரும்படி,   ஊர்காரர்களுக்கு  அறிவுரை சொல்வதில்  கிடைப்பது,   ஊரார்  விட்ட  மானியம்   ''ஏத்துக்கு  ஒரு குறுணி '' யில் கிடைத்த உணவு  தானியங்கள்  எதேஷ்டமாக  அவர்  குடும்பத்துக்கு  உதவியது.
 

ஊரில்  செக்கான்   சாமிநாதன் என்று   ஒருவன்  வாணியன்,  எண்ணெய்  ஆட்டும்  செக்கு  வைத்திருந்தான். படுகையில்  நிறைய  எள்ளு  விதைத்து நல்ல  போகம்.  ஆனால்  ஊர் பஞ்சாயத்து கட்டுப்பாட்டின் படி  முதல் வருஷமும்  ''ஏத்துக்கு   ஒரு குறுணி   எள்ளு''  கொடுக்கவில்லை. ரெண்டாவது வருஷமும்  கொடுக்கவில்லை.

ராமசாமி பாரதி  ஒருநாள்  அவனை  ஊர் கிணற்றருகே பார்த்து விட்டார்.   அவன்  எண்ணை விற்பதற்காக , எண்ணெய் நிரம்பிய பீப்பா  வண்டியை தள்ளிக்கொண்டு வந்தான்.  

'' சாமிநாதா என்னடா  தண்டம் ரெண்டு வருஷமாக   நீ எனக்கு  தரலே''  என்று கேட்டார் ராமஸ்வாமி பாரதி. 

''நிலமை  சரியில்லே  சாமி. அப்பாலே  தாரேன்,  எங்கே போவுது பாக்கி.  அதுக்கின்னா  இப்போ''  என்று  அலட்சியமாக  சொல்லிவிட்டு  போனான்.  பாரதி மறுவார்த்தை பேசவில்லை. 

 பாரதி  திண்ணைப் பள்ளிக்கூடத்தில்  உட்கார்ந்திருக்கும்போது  வெகுநாள்  கழித்து  செக்கான்   அந்த பக்கமாக  போனான்.

 ''சாமிநாதா ''  என்று  கூப்பிட்டும்  காது கேளாததுமாதிரி  பார்த்தும்  பார்க்காமல்  அலட்சியமாக போனான்.  ராமஸ்வாமி பாரதி சாந்த குணம் கொண்டவரானாலும்  வேண்டுமென்றே  அலட்சியம் பண்ணிய  அவன் மீது  மனம் ஒடிந்து  வருந்தினார் .

 திண்ணைப் பள்ளிக் கூடத்திலி ருந்தபடியே அப்போது அவர்  ஒரு  ஆசு கவி பாடினார்:

 ''    வாரேன்   என்றான்  வரவில்லை  
      தாரேன்  என்றான்  தரவில்லை
      சேரான்  செக்கான்   சாமிநாதன்
      பாராக் கண்கள் படைத்தானே ''

இயல்பாக  அவன்  பாராதது  போல் சென்றதைப்பற்றி  அவர்  பாடினார்.    சில நாள் கூட  ஆகவில்லை.   திடீரென்று  ஒரு நாள்  சாமிநாதனுக்கு கண்கள்  பார்வை  இழந்தன.    அவ்வூர் ஜனங்கள்  இது  பாரதியின்  வாக்கு பலன்  என்று  புரிந்துகொண்டார்கள்.  ஊரெங்கும்  இதே  பேச்சு.  

சாமிநாதன்  எங்கெங்கோ அலைந்து  பல வைத்தியங்கள்  பண்ணிப்  பார்த்தும்  குணமில்லை.  தான் செய்த தப்பு அவனுக்கு உரைத்தது.  எள்ளும்  எண்ணையும்   அதிகமாகவே கொண்டு  வந்து ராமசாமி பாரதியிடம்'
 கொடுத்தான் .  ஆனால்  அவர் அதை  ஏற்றுக்கொள்ளவில்லை. ஊர்  ஜனங்களுக்கு  அவர்  மேல்  இருந்த   மதிப்பும் பக்தியும்    இந்த சம்பவத்திற்குப் பிறகு ரொம்ப அதிகமாயிற்று.

சாமிநாதன்  எண்ணைக்கடை  சாத்தனூரிலிருந்து  மகாராஜபுரம் போகும்  வழியில்  இருந்ததாம்.  சில காலத்தில் அவனுக்கு  ஒரு  பிள்ளை  பிறந்தது.  துரதிர்ஷ்ட வசமாக  அந்த  குழந்தைக்கும்  பிறவியிலிருந்தே பார்வை  இல்லை என்பார்கள்.  

எங்கள்  தாத்தா  வசிஷ்ட  பாரதியார்  80- 85  வருஷங்களுக்கு  முன்னர்  அந்த  பகுதியில் செல்லும்போது  இந்த விவரம்  சேகரித்தார்.

 +++

ராமஸ்வாமி  பாரதியார்  4  மைல்  தொலைவில்  இருந்த  திருவையாறு  க்ஷேத்ரத்துக்கு  அடிக்கடி   செல்வார்.  சப்தஸ்தான உற்சவங்களில் பங்கேற்பார்.  பரம்பரையாக இருந்த  ராம  பக்தியோடு  அதீத  சிவ பக்தியும்  உண்டு. அவர்  எப்போதும்  தோய்த்து உலர்த்தி  வெளுத்த  வஸ்த்ரம்,  பட்டை  பட்டை யாக  விபூதி   ருத்ராக்ஷ  தாரணம்,  வாக்கில் சிவ  ராம நாம  ஸ்மரணத்தோடு   இருப்பதைக்  கண்டு  அனைவரும்  இவர்  சிவப்பழமோ,தவப்பழமோ  என்று  வியந்தனர். 

நான்  போன வாரம் திருவையாறு முதலான  சப்தஸ்தான க்ஷேத்ரங்களுக்கு சென்று வந்தேன். அதைப் பற்றி எழுதுவதாக இன்று தீர்மானம் செய்து  முதலில்  திருவையாற்றைப்  பற்றி இங்கு  கொஞ்சம்  சொல்கிறேன்.

 ஊர் மக்கள்  திருவாதி, ஐயாறு, திருவையாறு என்றெல்லாம்  சொல்வார்கள்.  மஹா சிவ க்ஷேத்ரம்.  இங்கு பெரும்  தரிசனம்  தான்  கைலாச தரிசனம் என்பதற்கு  பிரமாணம்    பெரியபுராணத்தில்  வரும்  தொண்டர் புராணம்.  அப்பர் என்று  பெயர் பெற்ற  திருநாவுக்கரசர் சைவ சமயக்குரவர்களில் முதல்வர்.  அறுபத்து மூன்று   நாயன்மார்களில்  நால்வரில்  முதல்வர்.  அவர் கைலாய தரிசனம்  காண  விரும்பி,  நடந்து, தவழ்ந்து, புரண்டு, உருண்டு, சென்ற போதும்,  காண  முடியாத காட்சியை, மகேஸ்வரனான பரம சிவன் அருளால் அங்கு ஒரு  தடாகத்தில்  மூழ்கியவர்   அங்கிருந்து,  இங்கு  திருவையாற்றின் தென்  ப்ரஹாரத்தில்  அக்னி மூலையில்  உள்ள சிவ  தீர்த்தமென்னும்  தடாகத்தில் இருந்து  எழுந்து  ஆச்சரியமாக பார்த்தார் .   திருவையாறே, கயிலாயமாக  தோற்றம் அளித்தது.    ப்ரஹாரத்தில்  காண்பவர்கள்  சிவ கணங்களாக  தோன்றினர்.     காணும் யாவுமே   சிவ சக்தி ஸ்வரூபமாகவே காட்சியளித்தது. '' யாதும்  சுவடு படாமல்  ஐயாரடைகின்ற போது 

''மாதர் பிறைக்கண்ணியானை,  ........கண்டேன்  அவர்  திருப்பாதம்   கண்டறியாதன  கண்டேன் ''   என பாடியவர்   அல்லவா அப்பர்.  

திருவையாறு  நான் சென்றபோது மனதுக்கு சந்தோஷம் அளிக்கவில்லை. எவ்வளவு அதை புனிதமின்றி அசுத்தமாக்க முடியுமோ அப்படி நமது மக்கள் பாழ் படுத்துவது கண்டு மனம் வெதும்பினேன். எவ்வளவு புண்யம்  வாய்ந்தது  அந்த பஞ்சநதி.எத்தனை மஹான்கள் கால் பட்டது.  அங்கே நீராடினேன். கரையில் ஒரு டேங்கில் பிடித்து வைத்த தண்ணீரில்....  

பாரதிகள் திருவையாற்றிற்கு  தவறாமல்  வருவார். கங்கையிற் புனிதமாய  காவிரி ஸ்நானம் செய்து  மனைவி  காமாக்ஷியோடு தெற்கு  கோபுர  வாயிலில்  காட்சி தரும்   ஆட்கொண்டார் சந்நிதியை வணங்கி  நிறைய  குங்கிலியம்  இட்டு   ''பவ சங்கிலியை''  அறுத்துவிட்டோம்  என்று  பிரார்த்தனை  பண்ணிக்கொண்டு  கோவிலில் நுழைந்து  சிவகங்கையில்  ஆசமனம்   பண்ணி, மேற்கே  திரும்பி   அப்பர் சுவாமிகளுக்கு  தரிசனம்  தந்த  தக்ஷிண  கைலாச மூர்த்தியை தரிசனம்  பண்ணி,  வலம் வந்து  கிழக்கு  அணுக்கன் வாயிலில் நுழைந்து நடு  இடை ஆடி  நந்தியைத் தொழுது  ஐயாரப்பனை தரிசித்து  உள்   பிரதட்சிணம் செய்து நந்திகேஸ்வரர் தவம்  செய்த  ஜப்பேசர் மண்டபத்தில்  சிவ பஞ்சாக்ஷர்  மந்திரம்  ஜபம் செய்து  பிறகு  பரிவார  தேவதைகளை பணிந்து  வடக்கே உள்ள  தர்மாம்பிகா  சந்நிதியை நமஸ்காரம் பண்ணி  வணங்கி விட்டு  பிறகு  மனிவியோடு  வீடு  செல்வது  வழக்கம்.  

நான் முன்பு சென்றபோது பஞ்ச பூத லிங்கங்களை எவரும் அருகே சென்று தரிசிக்க முடிந்தது. இப்போது கம்பி வலை கட்டி காட்சிப் பொருளாக்கி விட்டார்கள்.  கோவில் பராமரிப்பு என்பது துளியும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிற மதத்தவர் போல் நம் மதத்தவரும் நடந்து கொள்வது ஏனோ? 

++++

அப்பரின்  தேவாரங்கள்  தேன்  சுவை சொட்டுபவை.  எளிய  தமிழில் சொற்சுவை பொருட்சுவை கொண்டவை.   நாவுக்கே அரசர் எழுதியது எப்படி  இருக்கும்  என்று  சொல்ல வேண்டுமா?.   நிறைய    பிறகு தேவாரம் பாடல்களை பற்றி  பேசுவோம்

அப்படியே  எனது சமீபத்தைய சப்தஸ்தான  தரிசனம்  பற்றியும்  சில  வார்த்தைகள் சொல்கிறேன்.......

 
panchanathi.jpe

sivan jaykay

unread,
Dec 15, 2017, 6:52:43 PM12/15/17
to amritha varshini

                    இவர் ஒரு தமிழ்  தியாகராஜ  ஸ்வாமிகள்...

நேற்று இரவு  ஒரு அசாத்தியமான பாடலை கேட்டு அனுபவித்தேன்.   ''ஆனந்த நடமாடுவார்  தில்லை.''.... என்ற 

நீலகண்ட சிவன் (1839-1900) கிட்டத்தட்ட  ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு  கர்நாடக இசை மேதை.  இயற்கையாக அமைந்த ஞானம்.  சாதாரண இசைப் பயிற்சி பெறாதவர். 

நீலகண்ட சிவன்ள நாகர்கோவில் பக்கம் உள்ள வடிவீஸ்வரத்தில் 1839 ஆம் ஆண்டில் பிறந்தார், நன் பிறப்பதற்கு நூறு வருஷங்களுக்கு முன்பு பிறந்தவர்.  அந்தக்கால  திருவாங்கூர் தலைநகரான பத்மநாபபுரத்தில் வாழ்ந்தவர்.  அவரது தந்தை சுப்பிரமணிய ஐயர்’ பத்மநாபபுரம் நீலக்கண்டஸ்வாமி கோவிலில் ஒரு அதிகாரியாக இருந்தார். அவரது தாயார் அழகம்மாள்.

சிவன்ஒ சில வருஷங்கள்  கிராமப்பஞ்சாயத்து தலைவராக  வேலை பார்த்தார்.  ,மதாச்சார பழக்கங்களை பின்பற்ற வேலையை  விட்டுவிட்டார்.

இவரது பாடல்கள் சிலவற்றை நான் முன்பே கேட்டு ரசித்தவன்.  சங்கீத மஹாதேவ சாரம் (ராகா பவ்லி);   என்றைக்கு சிவக்கிருபை வருமோ,   என்ன வந்த்தாலும் நான் உன்னை மறப்பதில்லை ; ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்....    ஆஹா  எம். கே. தியாகராஜ பாகவதர் பாடிய இந்த பாடல் இன்னும் காதில் ஒலிக்கிறது. அதை இந்த கட்டுரையுடன் சேர்த்திருக்கிறேன்.  லிங்க்  சொடுக்கி  கேளுங்கள்.  

நிறைய பாடல்கள் இயற்றியிருக்கிறார்  நீலகண்ட சிவன். தமிழ் மொழியில் மிகவும் பிரபலமான பாடல்கள்.

சிறு வயது முதலே  கவி இயற்றும் திறன் அமைந்திருந்தது.  கோடகநல்லூர்  சுந்தர ஸ்வாமிகளை  ஒருதரம் சந்தித்தபின் வாழ்க்கை பாதை திசை திரும்பியது. தெய்வீக பாடல்கள் நிறைய தோன்றியது.  பஜனை சம்பிரதாய கீர்த்தனைகள் அவரது நேரத்தை ஆட்கொண்டது. 

ஏறக்குறைய  2,000 கிருதிகள் பண்ணி இருக்கிறார்.  நீலகண்ட தாசர்  என்று தமது முத்திரை பதித்தவர். நிறைய  சிவன் கோவில்களுக்கு சென்று பாடி அந்தந்த க்ஷேத்ர ஸ்வாமிகள் மீது  பாடி   எல்லோரும் அவரை  64வது நாயன்மார் என்று சொல்லும்படி  பேர் எடுத்தவர்.  ஒரு முக்கியமான விஷயம்  இவரது பிரதம சிஷ்யர் தான்  பாபநாசம் சிவன். 

பல வருஷங்கள் புத்ர பாக்யம் இன்றி  பெற்றோர்கள்  அம்பாள் அழகம்மையை வேண்டி பால் காவடி சுமந்து பிறந்த பிள்ளைக்கு சுப்ரமணியன் என்று பேர் வைத்தார்கள். குலதெய்வமான முருகன் மீது  ''உன்னைக் குலதெய்வம் என்று நினைத்து சதா  என் உள்ளம் நினைப்பது நீ  அறியாததா...'' என்ற பாடல் முருகன் மீது அமைந்துள்ளது.

பத்மநாப புரம்  ஆலயத்தில்  நீலகண்டேஸ்வரர்  ஆனந்தவல்லி சந்நிதிகளில் அவரை அடிக்கடி பார்க்கலாம். பஜனை பாடிக்கொண்டே இருப்பார்.  முத்து தாண்டவர் அருணாச்சல கவி  பாடல்கள்  அவருக்கு அம்மா மூலம் பாடமாகி இருந்தது.  பதினாலு வயதில் அந்த கால வழக்கப்படி  கல்யாணமும் ஏற்பாடானது.

தாணு ஐயர் என்ற ஜோசியர்  ''இந்த பயலுக்கு  கல்யாணம் பண்ணினால் அந்த பெண்  ஒரே வருஷத்தில் விதவையாகிவிடும் என்று ஜாதகம் சொல்கிறதே  '' என்றார்.  வேறு பெண் பார்க்கவும் திட்டம்.  சுப்ரமணியன் இதை கேட்டதும் வீட்டை விட்டு   சென்றுவிட்டான்.சுசீந்திரத்தில்  ஸ்தாணுமாலயம்  சென்றான். 

''இல்லறமே நல்லறம்'' என்று  ஒரு அசரீரி அங்கே அவனுக்கு கேட்டது. மணவாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே  பக்தி யில் தொடர முடிவெடுத்தான் .  அப்பா அம்மா ஏற்பாடு பண்ணிய பெண்ணை திருமணம் செயது கொண்டான். 

18வயதில்  வீட்டை விட்டு சொல்லாமல் வெளியேறிய சுப்ரமணியன் ஸ்தாணுமாலயன்  தேரில் ஏறி மறைந்து கொண்டு மூன்று நாள் அன்ன ஆகாரம் இன்றி இருந்தான். அவனது ஒரே நோக்கம்  பகவானை எப்படியாவது தரிசிக்க வேண்டும். தியானத்தில் ஆழ்ந்தான். பல்லி பாம்பு தேள் ஆகியவை சூழ்ந்த போதும் கவலைப் பட வில்லை. 

மூன்றாம் நாள் இரவு யாரோ ஒரு தம்பதி எதிரே தோன்றினார்கள். பசித்திருந்த அவனுக்கு  உணவு, பால், பழங்கள் கொடுத்தார்கள். வாயில் வெற்றிலை பாக்கு தாம்பூலம் அவனுக்கு அந்த தாய் ஊட்டினாள். மின்னல் போல் உடனே அவன் முகத்தில் தேஜஸ் கூடியது. கோவிலை விட்டு வெளியேறும்போது   சுப்ரமணியன் மற்றுமொரு திருஞான சம்பந்தராகி இருந்தான்.  ஞானப்பால் பருகியவன் அல்லவா? ''பண்டென்ன  பூசை யான் செய்த பயனோ அலாது  பரமனின் கருணையிலோ  பாவி என்னை ஆட்கொள்ள வேண்டுமென ''என பாடினார்.

ஆனந்தவல்லியை  நெஞ்சுருக  நன்றியோடு  இரு கைகூப்பி பாடினார் இதுவரை சுப்ரமணியனாக இருந்த  நீலகண்ட சிவன்:   ''தாயே எனக்கு அருள் தா  அனைத்துலக தாயே  என்னை கை  விட்டு விடாதே''

அவரது முதல் க்ரிதி  ''ஸ்ரீ நீலகண்ட தசகம்''  சில அற்புத பாடல்களை ஒன்று ரெண்டு பேர் சொல்கிறேன்  : ''என்ன விதம் பிழைப்போம், எளியோரே , நாம் எப்படி தேறுவோம்  சொல்வீரே ". "  பணமே  நீ  ஒரு பிணமே ''
லலிதா மஹாத்மியம்  அவரது ஒரு சிறந்த படைப்பு. 

அவர் மாமனார்  வில்லன் நம்பியார்.  சிவனது அருமை அறியாது  நூற்றுக்கணக்கான  கிருதிகள்  எழுதி வைத்திருந்ததை எல்லாம் தெருவில் வீசி விட்டார்.  இரவில் விளக்கில் எண்ணெய் ஊற்றுவதில்லை.  இருட்டில் கிடக்கட்டும். இவன் எழுதவில்லை என்று யார் அழுதார்கள்''.   இப்படி ஒரு ஆசாமி அந்த மாமனார்.  சிவன் கவலைப்படவில்லை.  வெற்றிலை வாயில் குதப்பிக்கொண்டே இருப்பவர்என்பதால் அடிக்கடி   வாய்  கொப்புளிக்க ஒரு சொம்பில் ஜலம் வைத்திருப்பார். அந்த  சொம்பில் இருந்து கொஞ்சம் ஜலத்தை விளக்கில் விட்டு விளக்கு எரிந்தது!!  இதே போல்  கோவிலிலும்  ஒரு தரம் எண்ணெய்  இல்லாத போது  குளத்து   ஜலத்தை விட்டு  விளக்குகள் எரிந்து  இருக்கிறது. 

108  சிவாலயங்கள் சென்ற மஹான்  நீலகண்ட சிவன். எத்தனையோ அதிசயங்கள் நிகழ்த்தி இருக்கிறார். .
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

திருநெல்வேலி அருகே  ஒரு ஊர்.  கருங்குளம் என்று பெயர். மழை பெய்யாமல் பஞ்சம் மக்களை கொடுமைப்படுத்தியது.  சிலர்  நீலகண்ட சிவனை அந்த ஊருக்கு அழைத்து வந்தார்கள்.  

''நீங்கள் சிவ பக்தர். மஹான். எப்படியாவது எங்களை இந்த பஞ்சத்திலிருந்து விடுவிக்க  மழை தருவிக்க வேண்டும்''   என்று கேட்டுக்கொண்டார்கள்.

''பகவானே மார்த்தாண்டேஸ்வரா, தாயே  குலசேகரி , நீயே கதி  ''   என்று   அந்த ஊர்  சிவனை வேண்டி,  நீலகண்ட  சிவன் நெஞ்சுருகி ஒரு விருத்தம் பாடினார்:

" பிழைகளெல்லாம்  நீ பொறுப்பாய்  பெற்றவளே, பிள்ளைகளுக்கு உன் கழலிணை திருவடிகளே துணை அல்லதோர்  கதி  காணோம்  கண் திறவாய், மழையென வந்தருள் தருவாய் '' என்று பாடுகிறார்.  இந்த பக்தி பிரவாகத்தை தொடர்ந்து  ஜோ  என்று வானம் பொத்துக் கொண்டு மழை கொட்டோ கொட்டு என்று பெய்கிறது.
நாட்கணக்கில் மழை தொடர்கிறது. 

 ஒரு முறை  திருடர்கள் அவர் பிரயாணம் செய்யும்போது அவரைத்தடுத்து  அவரிடமிருந்து  பொருள்களை கொள்ளையடிக்கிறார்கள்.   அவர்   கொள்ளைக்கார்கள்  ஓடும்போது நிறுத்தி   ''என்ன அவசரம், இந்த வண்டியில்  என்னுடைய  வாத்தியங்கள்  சிலதும்  இருக்கிறதே அதையும் எடுத்துச்  செல்லுங்கள்''  என்று அழைக்கிறார்.   பேராசை பிடித்த திருடர்கள் வண்டியில் இருந்த அவரது பஜனை  சங்கீத வாத்தியங்களை எடுத்துச் செல்ல தொடுகிறார்கள்.  அவ்வளவு தான்.  அவர்கள் கைகளும்  கால்களும்  புஸ்  என்று வீங்கி  கைகால்களை  .அசைக்க முடியவில்லை. 

கண்களில் நீர் மல்க அந்த கொள்ளைக்கார்கள் நீலகண்ட சிவன் பாதங்களில் விழுகிறார்கள். அவர் அவர்களை திருந்தி நல்லவர்களாக வாழ ஆசீர்வதிக்கிறார்.  அவரிடம்  ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருந்தது.  


ஒரு கிராமத்தில் இருக்கும்போது அவரது சிஷ்யர்கள்  அங்கே இரவில் தங்க  ஏதோ ஒரு  வீட்டி திண்ணையில் படுக்க இடம் தேடினார்கள். வீட்டுக்காரன் அனுமதிக்க வில்லை.  இதை கவனித்த சிவன்  திடீரென்று 

''அடாடா,  நாளை என்னை தேய்த்து குளித்து விட்டு  இறக்கப்போகும் இவன் ஒரு திண்ணையைக் கொடுத்து உதவ மறுக்கிறானே ''  என்று சொல்கிறார்.  அதே மாதிரி  மறுநாள்  அந்த வீட்டுக்காரன் எண்ணெய் தேய்த்து  குளிக்க ஆற்றுக்கு சென்றவன் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்படுகிறான்.  அவன் பிணம் மட்டும் எங்கோ கரையில் ஒதுங்குகிறது.  தன்னை எந்த தீங்கு செய்தலும் பொறுக்கும் அவர் தனது சிஷ்யர்களுக்கு, பக்தர்களுக்கு,  துன்பம் நேர்ந்தால் தாள மாட்டார். 

அவரிடம் இன்னொரு பழக்கம்.  எங்கே சென்றாலும் மதியம்  உணவுக்கு வரும்போது  நிறைய பெரு சாப்பிடும்படியாக சாதம் வடியுங்கோ என்று சொல்வார்.  வீட்டில் அரிசி தானியங்கள் இருக்கிறதா என்று கூட தெரியாது. முக்கால்வாசி அரிசி மணியளவு கூட இருக்காது.

அப்படித்தான் ஒருநாள்  இரவு திடீரென்று ராத்திரி எட்டு மணிக்கு  தனது மகனை கூப்பிட்டார்.

 ''நாளைக்கு ஒரு ஆயிரம் பேருக்கு அன்னதானம் பண்ணணுமே. ஏற்பாடு பண்ணு ''
  
 ''ராத்திரி எட்டு மணி ஆயிடுத்தே. இனிமே  இருட்டில் எங்கே போய் என்ன பண்றது'' என்று கவலைப் பட்டான்.

''எட்டு மணின்னு  கவலைப்படறியே.  நாளைக்கு  காலம்பற  ஆறு மணிக்கு பாரு'' என்று சொல்லி விட்டு போய்விட்டார் சிவன்.

காலை ஆறுமணிக்கு சொல்லி வைத்தாற் போல,  வண்டி வண்டியாக  அரிசி பருப்பு தானியங்கள் எல்லாம் வீட்டு வாசலில் வந்து இறங்கின.  யாரோ  மஹாராஜா வின் பக்தர்கள் அனுப்பினதாம்.

 தமிழ் தியாகராஜ ஸ்வாமிகள்  என்று அழைக்கப்பட்ட  பக்தர்  நீலகண்ட சிவனுக்கு  தனது அந்திம காலம் நெருங்குவது தெரிந்தது.  வயது  அறுபது ஆரம்பித்தது. குடும்பத்தாரை அழைத்தார்  

''எனக்கு உலக வாழ்க்கை போறும்''.   மனைவி மக்கள் துடித்து போனார்கள்  இதை கேட்டு.  சேதி விரைவில் எங்கும் பரவியது.  மஹானுக்கு கபால மோக்ஷம் நடக்கப்போகிறது. மூன்று நாட்கள் இரவும் பகலுமாக விடாமல்  பஜனைகள் தொடர்ந்து  ஒலித்தன.  

''சிவன்  உரக்க  ''  மஹாதேவ, மஹாதேவ, மஹாதேவா என்று உன்னை அழைத்தேன்'' என்று பாடினார்.  விபூதி அலங்கரித்த  இரு கரங்களையும் மேலே தூக்கினார்.  கபாலம் வெடித்தது. பிராணன்  மேலே எழும்பி பரம சிவனோடு ஐக்கியமானது. அவர்  வழிபட்டு பூஜை செய்து வந்த சிறிய சிவலிங்கம் பூஜை அறையின் கதவை பிளந்து வெளிப்பட்டது  மேலே சென்று விண்ணில் மறைந்தது.   

எத்தனை எத்தனை மஹான்கள் நம்மோடு வாழ்ந்திருக்கிறார்கள்  என்று நினைக்கும்போது நாம்  எவ்வளவு புண்ணியம் செய் திருக்கிறோம் என்று புரியும். 

PLEASE CLICK THE LINK https://youtu.be/vdodll1aKns  TO ENJOY MKT BAGAVATHAR SONG  ''ORUNAAL ORUPOZHUDHAAGILUM ''   IN  THE OLD MOVIE  ''THIRU NEELAKANTAR''


neelakanta SIVAN.jpg

sivan jaykay

unread,
Dec 15, 2017, 6:55:51 PM12/15/17
to amritha varshini
                                  இப்படிப்பட்டவன் அல்லவோ  ஆள வேண்டும்.         
      
இப்போதெல்லாம்  ராஜாக்கள் இல்லை.  ராஜா என்ற பெயர் இருந்தாலும்  ஆளுவதற்கு சிலர் வந்தாலும் அவர்களே நாட்டை சீர்கேடாக்குவதில் முதல் இடம் பெற்று  துரோகம் செயகிறார்கள்.  ஒரு  நாட்டில் எல்லோரும் நன்றாக வாழ வேண்டுமானால் (நான் அக்காலத்தைப் பற்றி சொல்கிறேன் என்பது கவனமிருக்கட்டும்) சிறந்த அரசன் தேவை. அன்பும் பண்பும் கொண்ட மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பார்களே. அந்த மாதிரி அரசர்களும் மக்கள் நலத்தையே மனத்தில் கொண்டு ஆண்டுவந்தார்கள். 

எங்களுக்கு அவ்வாறே ஒரு அரசன் கிடைத்தான். நாம் மிக்க பாக்ய சாலி என்பது நன்றாக நினைவில் இருக்கட்டும்.

நம் ராஜா சிறந்த குணவான். 'எடுத்தேன் கவுத்தேன்'  பேர்வழி அல்ல. எதிராளிக்கு நிறைய சந்தர்ப்பங்கள் கொடுத்து பிறகு தான் தண்டிப்பான். அவன் செய்வதைப்பார்த்தால்  என்ன இவ்வளவு கொடுமைகள் எதிரிகள் செயதும் பேசாமல் பார்த்துக் கொண்டு சிரித்துக்கொண்டு  இருக்கிறானே...நாள், மாதங்கள் நகர்ந்து வருஷம் ஒன்று கூட ஓடிவிடும்போல இருக்கிறதே என்று ஐயம் முதலில் நமக்கு ஒருவேளை தோன்றும். ஆனால்  எங்கள் ராஜாவுக்கு நன்றாகவே தெரியும் எப்போது அணைக்கவேண்டும், எப்போது அழிக்க வேண்டும் என்று. தீயணைக்கும் எஞ்சின் ஓடாது, நகராது. ஆனால் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் அல்லவா. தக்க நேரத்தில் அது பறப்பது போல் எதுவும் வேகமாக ஓடாது.

எங்களது ராஜாவின் பராக்கிரமம் கண்டு திகைப்போம். அவனை அறியாமல் தவறாக நினைத்து நினைத்து நாம் வாடின நாட்கள் மறைந்து யுகமாக முடிந்து போகும். அவன் யாரையாவது எதிர்க்கவேண்டுமானால், படைகள் சேர்க்க ஆரம்பிக்க மாட்டான், ஆள் படை அம்பு தேட இது எதையுமே தேட நாட மாட்டான்.

''இவனால் என்ன செய்யமுடியும்? வீரமற்ற கடையன், இடையன், பயந்தாங் கொள்ளி, பெண்கள் பின்னே சுற்றுகிறவன்'' என்றெல்லாம் எதிரிகள் ஏசினாலும் அவன் பதில் சிரிப்பு ஒன்றே. 

ஒரு விஷயம் ஞாபகமூட்டுகிறேன். பொல்லாத இரக்கமற்ற அவனது மாமனே , அவனை அழித்துவிடவேண்டும் என்று அவன் சிறு குழந்தையாக இருந்த போதே ஒருத்தர் பின் ஒருத்தராக அநேக பலமிக்க ராக்ஷதர்களை அனுப்பினாலும் அவன் அவர்களை எதிர்கொள்ள நொடியில் அழிக்க, ஒழிக்க, எந்த முஸ்தீபும் தேவை இன்றி  ஆடிப் பாடிக்கொண்டு தானே இருந்தவன்.  அவன் இருந்த ஊர் மக்கள் மயங்கி,  கலங்கி,  மழை இல்லையே பயிர்கள் வாடுகிறதே என என்று கவலையுற்ற போ து நம் அரசன் கவலை கொண்டானா? அவன் தானுண்டு தனது குழலுண்டு என்று பசுக்கள், கன்றுகள், மான்கள், மடந்தைகள் என்று விளையாடிக் கொண்டிருந்தான். தக்க நேரம் வந்தது. கடுமழையிலிருந்து அவர்கள் அனைவரையும் காக்க, மலையையே சுண்டு விரலில் தூக்கி நின்றவன் நமது அரசன் அல்லவா?

எங்களுக்கு ஒரு கதி காட்டு என்று அவனிடம் சென்றால் தனது கால் கட்டைவிரலை கையில் பிடித்து வாயில் போட்டுக் கொண்டு சிரிப்பான் அந்த ராஜா குழந்தைப்பருவத்திலேயே. இது எதை உணர்த்தியது ? ''என் கால் இருக்கும்போது உனக்கென்ன கவலை '' என்று நமக்கு அவன் உணர்த்தியதன் அர்த்தம் புரிந்து கொள்ள நமக்கு தான் வெகு காலம் நேரமாகிறது.

அவன் நம்மைக் காப்பவன் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். அவன் எங்கோ மறைந்து வாழ்ந்தான். வளர்ந்தான். இருந்தாலும் சும்மாவா அங்கிருந்தான்?. இருந்த இடத்திலேயே அரக்கர்களை ஒருவர் பின் ஒருவராக தீர்த்துக் கட்டி அல்லவோ உலகம் காத்தான். அவனது சட்டத்தில் ''தானே திருந்து,  நிறைய நேரம் காலம் தருகிறேன், இல்லையேல் தீர்த்து விடுகிறேன்'' என்ற ஒரே நிபந்தனை தான்.

ஒரு ராஜாவுக்கு என்னென்ன தெரியவேண்டும் என்று எங்கள் ராஜாவிடம் தான் மற்றவர் தெரிந்து கொள்ளவேண்டும். தந்திரம், மந்திரம்,சர்வ சாதாரணம் அவனுக்கு. தான் வலிமையுள்ளவனாக காட்டிக் கொள்ளவே மாட்டான். எங்க ராஜாவிடம் தான் ஆங்கிலேயன் camouflage என்றால் என்ன என்று கற்றுக்  கொண்டானோ?

என் ராஜா விசித்ரமானவன். புரிந்து கொள்ள எளிதானவன். அதே சமயம் புரிந்து கொள்ள முடியாதவன். இரண்டுமே எப்படி? காலம் கனிந்தால் புரிபவன். அமையான பசுவின் கன்று போல் சாது என எண்ணி தீங்கிழைக்க நினைப்பவர் உலகத்தையே அசைக்கும் ஆலகால விஷத்தைவிட அவன் கொடியவன் என்று அனுபவித்துப் புரிந்து கொள்வார்கள். இது நான் சொல்ல வேண்டாம் சரித்திரம் பேசுகிறது.

நம் ராஜா பற்றி சொல்லவேண்டுமானால் துஷ்ட நிக்ரஹன், சிஷ்ட பரிபாலனன். எதிரிகளை வேர் மட்டுமல்ல வேரடி மண்ணும் இல்லாமலேயே வெந்து போக பகைவரைச் சுட்டுப் பொசுக்கிவிடுவான். அதே நேரம் துன்பம் எதுவாயினும் '' என் ராஜா, கண்ணா '' என்று மனமுருகி வேண்டினால், இந்த பூமி மட்டுமல்ல, வானமும் கூட ஆயிரமாயிரம் ஆண்டுகள் பட்ட துன்பங்கள் எல்லாமே ஒட்டு மொத்தமாக கணத்திலே மாற்றிவிடுவான் அந்த மூங்கில் மந்திரக் கோல் மன்னன்.

நேரம் வந்தால் மட்டுமே, அவசியம் ஏற்பட்டால் மட்டுமே எங்கள் ராஜா வேறு வழியின்றி அவனது பிரத்யேக ஆயுதமான சக்ரத்தை கையில் எடுப்பான். அப்போது தர்மம் பாரில் தழைக்க வேண்டும், தக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். இதை நிறைவேற்றும்போது பகை எந்த ரூபத்தில் வந்தாலும், தடை எப்படிப்பட்ட தானாலும் மாய்ந்து விடும் என்பதில் சந்தேகம் வேறா?

எங்கள் ராஜா கண்ணனைப் பற்றி நினைத்தாலே அவன் புகழ் பேசினாலே கவிதையாக வார்த்தைகள் வந்து விழுகின்ற மாயம் கவனித்தீர்களா? அவனைக் காலமெல்லாம் போற்றுவேன்.

வாசலில் பெருக்கி மெழுகி கோலம்போட்டு திண்ணையைத் துடைக்க வந்தவனைக் கூட தனது மந்திரியாக்கிக் கொள்ளும் அன்பு படைத்தவன் அல்லவா எங்கள் ராஜா.

அடுத்த வேளைச் சோற்றுக் கென்ன வழி என்று தெரியாமல் அவனைத் தேடி வந்தேனே? என்ன செய்தான் தெரியுமோ? எனக்கு நிகர் யாருமில்லை என்று உலகோர் போற்றுமளவிற்கு என்னை செல்வந்தனாக்கினான் - இது குசேலனே சொல்வது போல் காதில் விழுகிறதா? அப்படியென்றால் முற்றிலும் சரியே.

எங்கள் ராஜாவிடம் செல்லும்போது எனக்கு ஒரு வித்தையும் தெரியாதே. வெறும் சோற்றாலடித்த பிண்டம். எண்ணிப்பாருங்கள் இப்போது எனக்கு எத்தனை கலைகள் தெரியும் என்று. உங்களால் நிச்சயம் எண்ணவே முடியாது. வேத சாஸ்திரங்கள் எனக்கு அத்துபடி.

எங்கள் ராஜாவே, கண்ணா, எம்பெருமானே நீ வாழ்க வாழ்க. இந்த கலியுகம் அழிந்து புவி மீண்டும் புனருத்தாரணம் பெற அருள்வாய் தெய்வமே. கண்ணா. எங்கள் உலகம் நீ தோன்றிய உலகம் அண்ணலே. எங்கள் அவலம் நீங்கி, நீ அதை நீக்கி, நாங்கள் மீண்டும் புகழில் ஒங்க அருள் புரிவாய் பரந்தாமா கண்ணா. எங்கள் அரசே.

(மகா கவி சுப்ரமணிய பாரதியார் ''கண்ணன் என் அரசன்'' என்று அருமையாக சில பாடல்களைப் பாடி இருக்கிறார். அதைப் பிழிந்தெடுத்து வடித்தது தான் மேலே எழுதப் பட்டது.)’

 

                                  கண்ணன் -- என் அரசன்


பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்
பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்;
நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோ
நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான்;

கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம்
கண்ணிற் காண்ப தரிதெனத் தோன்றுமே;
எண்ணமிட் டெண்ண மிட்டுச் சலித்துநாம்
இழந்த நாட்கள் யுகமெனப் போகுமே.

படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல்
பணமுண் டாக்கல் எதுவும் புரிந்திடான்;
‘இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன்’
என்றவர் சொலும் ஏச்சிற்கு நாணிலான்;

கொல்லப் பூத மனுப்பிடு மாமனே
கோலு யர்த்துல காண்டு களித்திட,
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும்
மோக முற்றுப் பொழுதுகள் போக்குவான்;4

வான நீர்க்கு வருந்தும் பயிரென
மாந்தர் மற்றிவண் போர்க்குத் தவிக்கவும்,
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துக்கள்
தனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான்;5

காலினைக் கையினால் பற்றிக் கொண்டுநாம்
கதியெ மக்கொன்று காட்டுவை யென்றிட்டால்.
நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்;
நாமச் சொல்லின் பொருளெங் குணர்வதே?6

நாம வன்வலி நம்பி யிருக்கவும்,
நாண மின்றிப் பதுங்கி வளருவான்;
தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்;
சிறுமை கொண்டொளித் தோடவுஞ் செய்குவான்;7

தந்தி ரங்கள் பயிலவுஞ் செய்குவான்;
சவுரி யங்கள் பழகவுஞ் செய்குவான்;
மந்தி ரத்திற னும்பல காட்டுவான்;
வலிமை யின்றிச் சிறுமையில் வாழ்குவான்;8

காலம் வந்துகை கூடுமப் போதிலோர்
கணத்தி லேபுதி தாக விளங்குவான்;
ஆல கால விடத்தினைப்போலவே,
அகில முற்றும் அசைந்திடச் சீறுவான்;9

வேரும் வேரடி மண்ணு மிலாமலே
வெந்து போகப் பகைமை பொசுக்குவான்;
பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்
பட்டதுன்பங்கள் கணத்திடை மாற்றுவான்;10

சக்க ரத்தை யெடுப்ப தொருகணம்;
தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்;
இக்க ணத்தில் இடைக்கண மொன்றுண்டோ?
இதனுள் ளேபகை மாய்த்திட வல்லன் காண்!11

கண்ண னெங்கள் அரசன் புகழினைக்
கவிதைகொண் டெந்தக் காலமும் போற்றுவேன்;
திண்ணை வாயில் பெருக்கவந் தேனெனைத்
தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான்.12

நித்தச் சோற்றினுக் கேவல் செயவந்தேன்;
நிகரிலாப் பெருஞ் செல்வம் உதவினான்.
வித்தை நன்குகல் லாதவன் என்னுளே
வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்.13

கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே!
கலி யழிந்து புவித்தவம் வாழ்கவே!
அண்ண லின்னருள் நாடிய நாடுதான்
அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே!
krishnaasking3.jpg

sivan jaykay

unread,
Dec 15, 2017, 6:55:51 PM12/15/17
to amritha varshini

                                                               The Navagraha Yoga Hanuman  in Guduvancheri......

Real Estate was  once  a flourishing business in big cities,  particularly in and around Chennai, resulting in concentration of population in certain areas only creating  all sorts of problems. Water shortage, too many vehicles with no parking space, price hike in certain basic commodities and what not.

Guduvancheri is one such satellite town near Chennai.  It was a sleepy village till recently and picked up its share of real estate prospects. Many agricultural fields have now disappeared  yielding place to rising flats with not much change in infrastructure like proper roads, street lights etc., Price of vacant plots had gone up beyond imagination, for no reason whatsoever,  in various mushroom nagars.  One such is Mahalakshmi nagar where  I  found the admixture of both village type houses still existing until some prospective real  estate trader usurping them and newly constructed flats here and there. along with certain new colorful structures.

An old bearded man welcomed me and the group. It was an ordinary housing plot of about a ground or so, in which there is a sannidhi for Anjaneyar,  Goddess Bhavani, a little space for the relaxing Ananthanarayanan, et al. This temple is not far away from the main GST Road and is closer to Nandivaram Sivan temple.  

The bearded man invited us for Navarathri celebrations in this temple, and we took little Aiswarya who has a rich voice and promising voice. She has won prizes for her  carnatic music vocal performances. 

 She sang about 10 selected songs. Sri Keeranur Ramamurthi  who was with us spoke a few words having visited this temple at its inception and earliest kumbabishekam, before I took over and talked about the prowess and powers of goddess Durga Parameswari and Anjaneyar.

Now let me tell you about the Anjaneyar in this remote small temple.  The Hanuman here is quite rare. He has Adiseshan over his head as an umbrella, has four hands, Chathurbujas, is a Trinethra, the three eyed, and his third eye on His forehead is  visible when the Naamam (thiruman) plate is shifted aside. I remember having seen such a hidden third eye of Lord Narasimha at Singaperumal koil.  The Hanuman has all the nine planets  (nava grahas) all over Him, Rahu at the back, Kethu  over His head, moon and saturn, sun, sukra, Angarakan et al at  various parts of His huge body.

This Hanuman is known as  ARULMIGU SRI THRINETHRA CHATHURBUJA, NAVAGRAHA YOGA ANJANEYAR.  He is seated in a yoga posture  with two hands in folded position on his lap. This temple is known as Sri Yoga Santhosha Peetam.  

This temple came  to be established purely through hard work and earnest efforts of the bearded man.  He was once a  Tamilnadu Govt Pallavan bus conductor and  a devotee of Hanuman for long.  

Oneday he had a strange dream in which Hanuman  appeared showing His huge feet to the devotee. The urge for constructing a small temple somewhere for Him, compelled  ''Maruthi Dasar'', the bearded man, the  poorvasrama  bus conductor, who recalls the miracle  in acquiring a piece of land in Mahalakshmi Nagar, Guduvancheri.  The temple was construted about  ten  years ago where Maruti Dasar lives  in a small room.  Slowly and steadily the sannidhis of Hanuman, Bhavani Amman, and a small sannidhi for Bala Sayana Ranganathan have all been  constucted with public support and cooperation of devotees in and around Guduvancheri.

It may be interesting to note that Maruthi Dasar wears only a gunny cloth (jute bag material) instead of a dhoti and is breathing Hanuman always.   

It is worth visiting this temple whenever you pass through Guduvancheri and have the divine dharshan of Sri Thrinethra Chathurbuja Navagraha Yoga Anjaneyar, a rare combination of power and divine love.

 







gudu 4.681683_10154726162358469_4719294464390681208_n.jpg
gudu.1 14725703_10154726161563469_2914600753789424058_n.jpg
gudu.3 14695304_10154726161978469_3318681168666576127_n.jpg
gudu.214641991_10154726161598469_1339937186488796197_n.jpg

sivan jaykay

unread,
Dec 15, 2017, 6:55:51 PM12/15/17
to amritha varshini
   
                                       A Divine Educationist cum Composer of Songs 

Last week I visited the Dant Raksha Foundation Hall for our next function to be organized in January 2018. Dr Jay Krishna was busy and could not be met and I met his daughter a child of about 10-12 yrs who is fond of my story books in English as she could not read in her mother tongue Tamil, which  is common now with most children in Tamilnadu! She invited me to her home upstairs and I followed her.

I was very happy to meet Smt. B. Rajeswari,  wife of late Sri R. Balasubramanian,  and the mother of Dr Jay Krishna . The elderly lady is a well qualified Graduate Educationist, an experienced teacher and the former principal of Vivekanand Vidyalaya.  She is also  a composer of divine songs set to attractive tunes.   Being a devotee of Devi Karumari, she had written many songs on Her composed to be sung, set to easy tunes of popular Tamil  and Hindi movies of yester years. 

 In fact Mrs Rajeswari, a septuagenarian,  sang a couple of songs written by her in her well modulated sweet voice with ease and comfort.  I enjoyed her songs.  She is interested in distributing her compositions for interested  devotees of Devi Karumari.

She presented a book to me which I enjoyed reading and copy below a model song composed by her to the tune of  the popular tamil film song 
''திருப்பரங்குன்றத்தில்  நீ சிரித்தால் ''  மெட்டு.


''பாண்டியாக் கோயிலிலே  நீ சிரித்தால் -  அம்மா 
திருவேற்காட்டிலே  எதிரொலிக்கும் 
அமெரிக்க மண்ணிலே உன் கழலாடும் -  இந்த 
அகிலம் எல்லாம் போற்றி  உன் புகழ் பாடும் 

மாநகர் மதுரையிலே  மீனாட்சி 
மஹா பாவம் தனைப் போக்கும் காசிவிசாலாட்சி 
காஞ்சி மாநகர் தனிலே காமாட்சி - பக்தர் 
நெஞ்சில் என்றும்  நிலவும் உன் அருளாட்சி.

சிவனுடன் உன்னாட்சி  கயிலையிலே - என்றும் 
சிறப்பான பொன்னாட்சி  மயிலையிலே 
தவக்கோல அருளாட்சி மாங்காட்டில் - அமெரிக்க 
அன்பர் போற்றும் அன்பாட்சி பாண்டியாக்கில்.''

Mrs Rajeswari bereaves the  recent demise of Sri Balasubramanian, who was the President of the Federation of Residential Welfare Associations of Ullagaram, Puzhuthivakkam, Madipakkam etc., and was a well known philanthropist and social activist.  

Smt Rajeswari can be contacted over phone: 9940196936/37












rajeswari MG-20171202-WA0142.jpg
PARASAKTHI TEMPLE AT PONTIAC.jpg

sivan jaykay

unread,
Dec 17, 2017, 8:45:14 PM12/17/17
to amritha varshini
குங்கிலியக்கலய நாயனார்


காவிரி பாயும் சோழவளநாட்டில் திருக்கடவூர் (இப்போது திருக்கடையூர்)  என்று  ஒரு ஸ்தலம்.  திருக்கடவூர் வீரட்டானம் என்று பெயர்.  அந்த ஊரில்  கலயனார் என்ற ஒரு சிவபக்தர் வாழ்ந்தார். அந்த ஊர்  சிவனுக்கு,  அமிர்தகடேசருக்கு,  அவர் ஒரு  விசித்தரமான திருப்பணி செயது வந்தார்.    அதாவது  சிறுவன்  16வயதான மார்கணடனுக்கு  விதி முடிந்து  மரணம் சம்பவிக்கும் நேரம்.  அவனைத்தேடி காலனே வருகிறான். பாசக்கயிற்றை அவன் மேல் வீசுகிறான்.  மார்க்கண்டன் சிவ பக்தன். ''ஐயனே  நீ தான் என் உயிரைக் காப்பாற்றவேண்டும் என்று  சிவலிங்கத்தை கட்டிக்கொள்கிறான். சிவன்மேல்  பாசக்கயிறு விழா  சிவன் லிங்கத்திலிருந்து வீறிட்டு எழுந்து காலனை காலால் உதைத்து, கால சம்ஹார மூர்த்தியாக  காட்சி தந்து  மார்க்கண்டேயனை காப்பாற்றிய க்ஷேத்ரம்.  சிவனின்   இந்த  கருணையை நினைத்து, கலயனார் அனுதினமும்  விதிப்படி ல் சாம்பிராணி போன்ற  குங்கிலியத்தால்  தூபம் இடும் திருப்பணியை நியதியாகச் செய்து வந்தார். ஆதலால் அவரைக் குங்கிலயக்கலயர் என்று  ஊரில் எல்லோரும் அழைத்தனர்.

வறுமையில் வாடினாலும்   இந்த  குங்கிலிய தூபத்திருப்பணியை  விடாமல் செயதுவந்தார் கலயனார்.  பணமில்லாத நேரம்  வறுமை வாட்டியதால்,  இருந்த கொஞ்சம்  பயிர்  நிலம்  முழுவதையும்,  அதில் வேலை செயதவர்களையும்  துறந்து தூபப் பனி தொடர்ந்தார். அப்போதும்  வறுமை விடவில்லை அவரை. வேறு வழியின்றி  தாமும், மனைவி, மக்களும் சுற்றமும் உணவில்லாமல்  பட்டினி கிடக்க  நேரிட்டது. அப்படியும்  விடாமல் குங்கிலிய தூப பணி எப்படி தொடர்வது?? ரெண்டு மூன்று நாள் பசி. உணவில்லை.  

கலயனார்ம  மனைவி யோசித்தாள் . கணவனின்  தூப  பணி நிறைவேற்ற  என்ன செய்யலாம்?  காசில்லையே.  சரி  எனது திருமாங்கல்யத்தில் இருக்கும்  தங்க தாலியை கழட்டி தருகிறேன். இதை விற்று வரும் பணத்தில் நெல் வாங்கி வாருங்கள்'' என்றாள் .  அதை எடுத்துக்கொண்டு நடந்த கலயனார் எதிரே  ஒரு  வியாபாரி வந்தான்.  அவனிடம் வண்டியில் நல்ல வாசனை மிக்க குங்கிலியம் மூட்டையாக  இருந்தது.   கலயனார் விடுவாரா இதை சந்தர்ப்பத்தை ?   

"என் சிவனுக்கேற்ற  நல்ல மணமுடைய குங்கிலியம் இதுவாயின் இன்று நல்ல பேறுபெற்றேன். இது அத்தனையுமே வாங்கிவிட வேண்டும். . தம்பி  இந்தா இந்த தங்கத்தை வைத்துக்கொண்டு  உன் குங்கிலிய மூட்டையஹே என் சிவனுக்கு தூப வழிபாட்டை நடத்த  உதவுகிறாயா?'' என்று கேட்டார்.  

அவனும் அவர் தந்த பொன் பெற்றுக்கொண்டு குங்கிலியப் பொதியினை அவருக்கு தந்துவிட்டு சென்றான். கலயனார் சிந்தை மகிழ்வுடன்  குங்கிலிய மூட்டையை சுமந்துகொண்டு  சிவன் கோவில் களஞ்சியத்தில் மூட்டை நிறைந்த  குங்கிலியத்தைச் சேமித்து வைத்தார். தூபத் திருப்பணி செய்துகொண்டு சிவசிந்தையுடன் அங்கேயே தங்கினார். வீட்டை, மனைவியை, குடும்பத்தை, அவர்கள் பசியை  எல்லாமே மறந்துவிட்டார். ஒரே சந்தோஷம்  சிவனுக்கு  நிறைய குங்கிலியம் வெகுநாள் தூப வழிபாட்டுக்கு கிடைத்துவிட்டதே.  கோவிலிலேயே தங்கிவிட்டார்.

அன்று இரவு மனைவியாரும், மக்களும் பசியால்   மயங்கி.  ''இன்னும்  கணவர் வரவில்லையே.   தாலியை விற்று பணம் கிடைத்து  நெல்லோ  அரிசியோ  கொண்டுவருவார். கஞ்சியாவது காய்ச்சி பசியாறலாம்''   என்று காத்திருந்து களைத்து போனாள்  மனைவி.''. 

இரவு நேரம்.  சிவன் சும்மா இருப்பானா?   அவன்  திருவருளினாலே குபேரன் தனது செல்வத்தைப் பூமியில் கொண்டுவந்தான்.  கலயனார்  வீடு முழுதும் பொற்குவியலும் நெற்குவியலும் அரிசி முதலிய பிற எல்லா வளங்களுமாக நீரைத்தான்.   

''எழுந்து போய் பார்''    சிவன்  அம்மையாருக்குக் கனவில் உணர்த்த, அவர் எழுந்தார்.  தனது வீடு அடையாளமே தெரியவில்லை அவளுக்கு.  எங்கும் லக்ஷ்மிகடாக்ஷம். யதேஷ்டமாக  உணவு தானியங்கள்.   

''இறைவா  இதெல்லாம் உன்  அருள் ஒன்றினால் தான்'' என்று   கைகூப்பித் தொழுதாள். அவசரமாக  தனது கணவனுக்கும்  குழந்தைகளுக்கும் உணவு  சமைத்தாள் .

''கலயா , நீ உன் வீடு சென்று உணவு அருந்தி பசி தீர்ந்து பிறகு வா''   சிவன் உத்தரவிட,  கலயனார்  வீடு சேர்ந்தார். செல்வமெல்லாங் கண்டு  ஆச்சர்யர்த்தோடு   ''இதெல்லாம்  எப்படி,   ஏது ?' என கேட்க, 

 "திருநீலகண்டர் அருள் " என்றாள்  மனைவி. 

"என்னையும் ஆட்கொள்ள எம்பெருமான் திருவருள் இருந்தபடி இதுவோ? '' என்று  அதிசயித்தார்.  விடாது குங்கிலிய தூப திருப்பணி தொடர்ந்தது. 

திருப்பனந்தாள்  என்ற ஊரில்   சிவலிங்கம் சாய்ந்து விட்டது என்ற சேதி வந்தது.  தாடகை என்ற ராணிக்கு அருள  அவ்வாறு  சாய்ந்தது.  சோழ ராஜா என்னவெல்லாமோ  முயன்றும் லிங்கம் நிமிரவில்லை. . சாய்ந்த லிங்கத்தை நிமிர்த்த  வந்த யானைகளும் இளைத்து வீழ்ந்தன. அரசன் மிகவும்  கவலை கொண்டான். 

கலநாயனார் விஷயம் கேட்டு  வருந்தினார்.  எப்படியாவது  சாய்ந்திருந்த சிவலிங்கத்தை  நேராக்க  திருப்பனந்தாள் சென்றார். 

இறைவரது திருமேனிப் பூங்கச்சிற்கட்டிய பெரிய வலிய கயிற்றினை தம் கழுத்திற் பூட்டி இழுத்து வருந்தலுற்றார். இவர் இவ்வாறு செய்து இளைத்த பின் இறைவர் சரிந்து நிற்க ஒண்ணுமோ? இவர் தமது அன்பின் ஒருமைப்பாட்டினைக் கண்டபோது அண்ணலார் நேரே நின்றார். தேவர்கள் விண்ணில் ஆரவாரித்துப் பூமழை பெய்தனர். வாடியசோலை தலைமழை பெய்து தழைப்பது போல யானை சேனைகள் களித்தன. சோழ மன்னன் கலயனாரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி மேருவை வில்லாக வளைத்துப் புரமெரித்த கடவுளின் செந்நிலை காணச் செய்தீர்! திருமாலுங் காணாத மலரடியிணைகளை அன்புடைய அடியாரே அல்லலால் நேர்காண வல்லார் யார்? என்று துத்திதான். பின்னர் அரசன் இறைவர்க்குப் பிறபணிகள் பலவும் செய்து தனது நகரத்திற்குச் சென்றான். அரசன் சென்ற பின்னரும் கலயனார் சிலநாள் இறைவனை பிரிய ஆற்றாது அங்கு தங்கி வழிபட்டுப் பின் திருக்கடவூர் சேர்ந்தனர்.

திருக்கடவூரிலே தூபத்திருப்பணிசெய்திருக்கும் நாளில் ஆளுடைய பிள்ளையாரும் ஆளுடைய அரசுகளும் அத்திருத்தலத்திற்கு எழுந்தருளினார்கள். மிக்கமகிழ்ச்சி பொங்கக் கலயனார் அவர்களை எதிர்கொண்டு அழைத்துவந்தார். தமது திருமனையில் அவர்களது பெருமைக்கேற்றவாறு இன்னமுது அளித்து வழிபட்டார். அதனால் அவர்களது அருளே அன்றி இறைவரது அருளும் பெற்றார். இவ்வாறு கலயனார் அரசனுக்கும், அடியவர்களுக்கும் ஏற்றனவாய்த் தமக்கு நேர்ந்த பணிகள் பலவும் செய்து வாழ்ந்திருந்து சிவபெருமானது திருவடி நிழலிற் சேர்ந்தார்.

"கடவூரிற் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை

உசாத்துணைகள்[தொகு]

பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

சிவாலயங்களிலே சிவசந்நிதானத்தில் நறுமணம் மிக்க குங்கிலியத் தூபம் இடல் சிறந்த சிவபுண்ணியம். சிவபெருமானுடைய திருவடிகளை மெய்யன்போடு பற்றுவார்க்கு இறைவர் திருவருள் கிடைக்கும். பத்தியுடன் சிவப்பணிகள் செய்யும்போது வறுமை, வற்கடம் முதலியன வந்துற்ற போதிலும், சிந்தை சிதறாது சிவபுண்ணியங்களை செய்தால் சிவபெருமான் பேரின்பப் பெருவாழ்வு நல்குவர். இரண்டு நாள் பசியோடு வருந்திய மனைவி, மக்கள் துன்பம் துடைக்க, மனைவி தந்த தாலியை விற்று, நெல் வாங்கச் சென்ற கலயனார், வழியிலே ஒரு வணிகன் நல்ல குங்கிலியம் கொண்டு வருவதைக் கண்டார். அதனை விரும்பி, தாலியை கொடுத்து, குங்கிலியத்தை வாங்கி, சிவாலயத்தில் சேர்த்து மகிழ்ந்தார் கலயனார். சிவனடியார்களை பூசித்து, அவர்களுக்கு ஏற்றபடி இனிய திருவமுது ஊட்டி, மாகேசுர பூசை செய்து வழிபடுதல் சிறந்த சிவதருமம். அப்போது சிவன் அவ்வடியார்களின் உள்ளே இருந்து பூசனையையும், அமுதினையும் ஏற்று, மகிழ்ந்து அருள் புரிவர். அன்பால் நினைந்து சிவனை வழிபடும் அடியார்கள் எவரேயாயினும், அவர்களது எளிமையையும், சிறுமையையும் பார்த்து, சிவன் அவர்களுக்கு எளியனாக, திருமுடி சாய்த்தும், அவர்கள் வழிபாட்டை ஏற்று அருளுவர். குரு, லிங்க, சங்கமம் வழிபாடு செய்தற்குரிய இடங்களாம். இம் மூன்றில் இருந்து சிவபெருமான் அவ்வழிபாடுகளை ஏற்று அருளுவர். இவ்வண்ணம் சைவத்திரு பொலிய குங்கிலியக்கலய நாயனார் வாழ்ந்து, சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

                  *            யில் ...
சிவபத்தார். திருக்கோயிலிலே சுகந்த தூபம் இடும் வழக்கம் உடையவர். வறுமை வந்துற்ற போது, தூபத்துக்கு குங்கிலியம் பெறப் பொருள் இல்லாது வருந்தியிருக்கும் போது, வீட்டிலே மனைவி, மக்கள், மற்றுமுள்ளோர் பசியால் வருந்துவதைக் கண்ட மனைவியார், தம் தாலியைக் கணவனாரிடம் கொடுத்து, நெல் வாங்கிவரக் கொடுக்க, அவர் வழியிலே குங்கிலியம் விற்பானைக் கண்டு, அவனிடம் கொடுத்து, குங்கிலியம் பெற்றுக் கோவிலுக்குப் போய் தூபம் இட்டவர். சம்பந்தரையும், அப்பரையும் தம் வீட்டுக்கு அழைத்து, அவர்களுக்கு அமுது அளிக்கும் பெரும்பேறு பெற்றவர். தாடகே அரசன் யானைப்படை முதலியவற்றாலே நிமிர்த்த முடியாதிருந்த சிவலிங்கத்துடன் தன் கழுத்தை ஒருகயிற்றால் பிணைத்து, இழுத்து, நிமிர்த்தி முத்தி அடைந்தவர்.

sivan jaykay

unread,
Dec 17, 2017, 8:45:15 PM12/17/17
to amritha varshini
                                                         மணிவாசகரின்   மனம்  இனிக்கும் திருவெம்பாவை.


திருவெம்பாவை எனும் வார்த்தையை பிரித்தால்  திரு+வெம்+பாவை ஆகிறது.  எமது பாவையே, நீ விரதம் இரு.    பரமேஸ்வரன் திருவருள் பெறுவாய்'' என்று  மணி வாசகர் தானே  ஒரு பெண்ணாக மாறி பக்தி பூர்வ உணர்ச்சிகளை கொட்டும் பாடல்கள். அருணாச்சலேஸ்வரர் மீதும்  சிதம்பர நடராஜர் மீதும் பாடப்பட்டவை.

உத்தராயணம்  தை  முதல்  ஆறுமாதம்  ஆனி வரை தொடரும். அத்தனையும்  ஒரு பகல் வேளை --தேவர்களுக்கு! தக்ஷிணாயனம் மற்ற ஆறுமாதம். ஆடி முதல் மார்கழி வரை... அது தேவர்களின் ஒரு இரவு வேளை--  அதாவது நமது ஒரு வருஷம் அவர்களுக்கு ஒரு நாள்!

ப்ரம்ம முஹூர்த்தம் நேரமே பார்க்க தேவையில்லை.  விடிகாலை 4லிலிருந்து  காலை 6 வரை. சூரியன் தலை தூக்கும் முன்பு.அதுவும்  மார்கழியில் இது உசத்தி.

அற்புதமாக  முதல் திருவெம்பாவையை மணிவாசகர் எப்படி பாடுகிறார்?

கல்வி வேறு.  அருள் வேறு.  முதலாவதை  வைத்து  இறைவனை தேட வேண்டும்.   இரண்டாவது இறைவனால் பெறப்படும் பரிசு.  இப்படி அருள் பெற்றவர்களில்  முதன்மையானவர்  சைவ சமயத்தில் மணிவாசகர்.  திருவாதவூரர் .  அருள் பொதிந்த வார்த்தைகள் மணி மணியாக  கோர்க்கப்பட்டவை. அவருடைய வாசகம் அதனால்  திரு வாசகம் என்று பெயர் தாங்கி அவரை  மணி வாசகராக்கியது.  கடல் மடையென்ன அவர் பாடல்களில்  
 சிவபெருமானையே தலைவனாகக் கொண்டு பக்திப் பாடல்களை நமக்கருளியவர்.  நெஞ்சை உருக்கும்  பக்தி கொண்ட வார்த்தைகள். ஆகவே தான்  திருவாசகம்  என்ற  பக்தி பாடல்களை  பற்றி   ''திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்''  என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. .

திருப்பாவை, திருவெம்பாவை இரண்டிலுமே  மார்கழி மாதம் விடியலில் எழுவதும், நீராடுவதும், திருக்கோயில் சென்று வழிபடுவதும் முக்கியமாக சொல்லப்படுகிறது.   மணமாகாத  கன்னிப்பெண்கள்  காத்யாயினி விரதம் இருந்து , அதிகாலையில்  ஒருவரை ஒருவர எழுப்பி, ஒன்றாகக் கூடிக்கொண்டு நீர்த்துறை சென்று நீராடித் தமக்கு இறையன்பு மிக்கவரே கணவராக வாய்க்க வேண்டும் என்று இறைவனை நோக்கிப் பாடியும் வணங்கும் நிகழ்வு. .

மாணிக்க வாசகர் 
திருவெம்பாவை யில்  இலக்கிய ரசத்தை பிழிந்து பக்திரசத்தோடு  சேர்த்து சுவை கூட்டி அளிக்கிறார். சிவபெருமான்  மீது எல்லையற்ற பக்தி ஒருபுறம். அவனது அருள் அதனால்  .விளைவது மறுபுறம்.   மொத்தமே  திருவெம்பாவைப் பாடல்கள்  20  தான். 

பதினெட்டாவது பாடலில்  '' அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்'' என ஆரம்பிக்கிறார். மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் தான் திருவெம்பாவை இயற்றி பாடினார் என்று தோன்றுகிறது. சிவனது  செம்பொற் திருவடிகள்  அனைத்திற்கும்  முதலும் முடிவும் ஆகும்  என கூறுகிறார். .
 தேவர்கள்  சிவன்  திருவடிகளில்  அடி  பணிந்து வணங்க,  அவர்கள் சிரங்களில் இருந்து மாணிக்க  கற்கள்  எல்லாம்  ஒளி வீச   சிவனின் திருவடிகளே  பேரொளி வீசுகிறது என்கிறார்.   "விண்மீன் ஒளிகள் கதிரவன் ஒளியால் மறைவதற்கு முன் நீராட வேண்டும்' என்பதைக் குறிக்குமிடத்தி

திருவெம்பாவையில்மு முதல்  8 பாடல்கள்  விடிகாலை  எழுந்து நீராட செல்வது குறித்து. தூங்குபவர்களை தட்டி எழுப்பி ''வா நீராட'' என்று அழைப்பவை.

முதலாவது திருவெம்பாவை: 


''ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே
ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.

முதலும் முடிவும் இல்லாத, காணுதற்கு அரிய பெருமையையுடைய ஒளியான சிவபெருமானை
நாங்கள் பாடுவதைக் கேட்டும்,  வாள்போலும் பெரிய கண்களைக் கொண்ட  பெண்ணே,    இன்னுமா தூங்குகிறாய்?  உன் காது கேட்காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை
 புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் சப்தம்  தெருவெல்லாம்  எதிரொலிக்கிறது. உன்  டமார செவியில் மட்டும்  புகவில்லையோ?  இதோ பார் எங்கள் தோழி ஒருத்தி பக்தி மேலீட்டால் பொருமி அழுது, உடம்பை மறந்து  மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து  புரண்டு  அப்படியே ஸ்தம்பித்து  சிறிதும் தனது  நினைவின்றி கிடக்கிறாள்.  இது என்ன அற்புதமான  நிலைமை பார்!  என் கண் போன்றவளே ,  இவளது   பக்தியின்  பெருமை உணர்வாய்.? 

 
#4

Re: திருவெம்பாவை

 by சாமி on Mon Dec 16, 2013 9:04 pm

பாடல் எண் : 2

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :
சிறந்த அணிகளை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும் பொழுது எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப் பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாய். இப்பொழுது அருமை யாகிய படுக்கைக்கே, அன்பு வைத்தனையோ? பெண்களே! சீச்சி நீங்கள் பேசும் நகை மொழிகளில் இவையும் சிலவாகுமோ! என் னோடு விளையாடிப் பழித்தற்குரிய சமயம் இதுதானோ? தேவர்களும் வழிபடுதற்கு நாணுகின்ற தாமரை மலர் போன்ற திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவன்; தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு, அன்பு பொருந்திய நாம் உனக்கு யார்?

(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#5

Re: திருவெம்பாவை

 by சாமி on Tue Dec 17, 2013 7:36 pm

பாடல் எண் : 3

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன்ஆ னந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :

முத்தைப் போன்ற வெண்மையான பற்களை யுடையவளே! நாள்தோறும் எங்களுக்கு முன்னே எழுந்து எதிரே வந்து, எந் தந்தை இன்ப வடிவினன்; அமுதம் போன்றவன் என்று வாழ்த்தி வாய் மிகுதியும் ஊறி, இனிமை பயக்கும்படிப் பேசுவாய். எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறவாய். நீங்கள் இறை வனிடத்தில் பேரன்புடையீர்! இறைவனது பழமையான அடிமை யுடையீர்! ஒழுங்குடையீர்! புதிய அடியவராகிய எங்களது, சிறுமையை ஒழித்து அடிமை கொண்டால், தீமையாய் முடியுமோ? உன் அன்புடைமை வஞ்சனையோ? உன் அன்பு உண்மை என்பதை நாங்கள் எல்லாம் அறிய மாட்டோமோ? மனம் செம்மையுடையவர் நம் சிவபெருமானைப் பாட மாட்டார்களோ? உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இவ்வளவும் வேண்டும்.
(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#6

Re: திருவெம்பாவை

 by சாமி on Wed Dec 18, 2013 9:05 pm

4. பாடல் எண் :-
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :
ஒளியையுடைய முத்துப் போன்ற பல்லினை உடையாய்! இன்னும் உனக்குப் பொழுது விடியவில்லையா?. அழகிய கிளியின் சொல்லின் இனிமை போன்ற சொல்லினை உடைய தோழியர், எல்லோரும் வந்து விட்டார்களோ? எண்ணிக் கொண்டு, உள்ளபடியே சொல்லுவோம்; ஆனால், அத்துணைக் காலமும் நீ கண்ணுறங்கி வீணே காலத்தைக் கழிக்காதே. தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதம் போல்வானை, அறம், பொருள், இன்பம், வீடு என்கிற தமிழ் வேதத்தில் சொல்லப்படுகின்ற மேலான பொருளானவனை, கண்ணுக்கு இனிய காட்சி தருவானைப் புகழ்ந்து பாடி, மனம் குழைந்து உள்ளே நெகிழ்ந்து நின்று உருகுவதன் பொருட்டு நாங்கள் எண்ணிச் சொல்லமாட்டோம். நீயே எழுந்து வந்து எண்ணிப் பார்த்து, எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் போய்த் தூங்குவாயாக.
(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#7

Re: திருவெம்பாவை

 by சாமி on Thu Dec 19, 2013 9:28 pm

பாடல் எண் : 5

மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்
றோலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :
திருமால் அறிய முடியாத `பிரமன் காணமுடியாத அண்ணாமலையை, நாம் அறியக் கூடும் என்று, உனக்குத் தெரிந்துள்ள பொய்களையே பேசுகின்ற, பால் சுரக்கின்ற, தேன்போல இனிக்கும் வாயினையுடைய, வஞ்சகீ, வாயிற்கதவைத் திறப்பாயாக. இந்நிலவுல கினரும், வானுலகினரும், பிற உலகினரும் அறிவதற்கு அருமை யானவனது அழகையும், நம்மை அடிமை கொண்டருளிக் குற்றத்தை நீக்கிச் சீராட்டும் பெருங்குணத்தையும் வியந்து பாடிச் சிவனே! சிவனே!! என்று, முறையிடினும் அறியாய், துயில் நீங்காது இருக் கிறாய். இதுதானோ மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையுடைய உனது தன்மை?

(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#8

Re: திருவெம்பாவை

 by சாமி on Fri Dec 20, 2013 9:31 pm

பாடல் எண் : 6
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :
பெண்ணே! நீ, நேற்று, நாளைக்கு வந்து உம்மை எழுப்புவேன் என்று சொன்ன சொல்லுக்கும், வெட்கப்படாமல், நீ போன திக்கைச் சொல்வாய். இன்னும் பொழுது விடியவில்லையோ?. வானுலகத்தவரும், நிலவுலகத்தவரும், பிறவுலகத்தவரும், அறிதற்கு அருமையானவன் தானாகவே வலிய வந்து எம்மைக் காத்து அடிமை கொண்டருளுகின்ற மேலாகிய, நெடிய கழலணிந்த திருவடியைப் பாடி, வந்தவர்களாகிய எங்களுக்கு, நீ, உன் வாய் திறவாது இருக் கின்றாய். உடலும் உருகப் பெறாது இருக்கின்றாய். இவ்வொழுக்கும் உனக்குத்தான் பொருந்தும். எமக்கும் பிறர்க்கும் தலைவனாய் இருப் பவனை எழுந்து வந்து பாடுவாயாக!
(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#9

Re: திருவெம்பாவை

 by சாமி on Sat Dec 21, 2013 10:36 pm

பாடல் எண் : 7
அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :
தாயே! உன் குணங்களில் இவையும் சிலபோலும். பல தேவர்கள் உன்னற்கு அரியவனும், ஒப்பற்றவனும், பெருஞ் சிறப்புடையவனுமாகிய இறைவனைப் பற்றிய, சங்கு முதலியவற்றின் ஒலிகள் கேட்க, சிவசிவ என்று சொல்லியே வாயைத் திறப்பாய். தென்னவனே என்று சொல்வதற்கு முன்பே, தீயிடைப்பட்ட மெழுகு போல உருகுவாய். என் பெருந்துணைவன், என் அரசன், இன்னமு தானவன், என்று யாம் எல்லோரும் வெவ்வேறு விதமாகப் புகழ்ந் தோம். நீ கேட்பாயாக. இன்னமும் உறங்குகின்றனையோ? திண்ணிய மனமுடைய அறிவிலார் போல, சும்மா படுத்திருக்கின்றாயே! தூக்கத் தின் சிறப்புத் தான் என்னென்று உரைப்பது.
(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#10

Re: திருவெம்பாவை

 by சாமி on Sun Dec 22, 2013 10:23 pm

பாடல் எண் : 8
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :
கோழி கூவ, எங்கும் மற்றைய பறவைகள் ஓசையை எழுப்பும்; வாத்தியங்கள் ஏழிசை முறையில் இசைக்க, எவ்விடத்தும் வெண்மையான சங்கமானது முழங்கும்; ஒப்பற்ற மேலான கருணை யுடைய சிவபெருமானது, நிகரில்லாத உயர்ந்த புகழை நாங்கள் பாடினோம். அவற்றை நீ கேட்கவில்லையா? வாழ்வாயாக; இது எத்தகையதான தூக்கமோ? வாயைத் திறக்க மாட்டேன் என்கிறாயே! பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் போல இறைவனிடத்தில் அன்புடையவளான திறமும் இப்படித்தானோ? பேரூழியின் இறுதியில் தலைவனாய் நின்ற ஒருத்தனாகிய உமை பாகனையே பாடுவாயாக.
(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#11

Re: திருவெம்பாவை

 by சதாசிவம் on Mon Dec 23, 2013 10:23 am

பயனுள்ள பதிவு,,தொடருங்கள் சாமி
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்




இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

#12

Re: திருவெம்பாவை

 by சாமி on Tue Dec 24, 2013 8:24 pm

பாடல் எண் : 9
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :
முற்பட்டனவாகிய பழமையானபொருள்களுக்கும் முற்பட்ட பழமையான பொருளே! பிற்பட்டனவாகிய புதிய பொருள் களுக்கும் புதிய பொருளாகி நின்ற அத்தன்மையனே! உன்னை ஆண்டவனாகப் பெற்ற உன் சிறப்பு மிக்க அடிமைகளாகிய யாங்கள் உன் தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம்; அங்கே அவர்களுக்கு உரிமை உடையவர்களாவோம்; அவர்களே எங்கள் கணவராவார்கள். அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட வண்ணமே, அவர்கட்கு அடிமையாய் நின்று ஏவல் செய்வோம்; எங்கள் பெருமானே! எங்களுக்கு இம்முறையே கிடைக்குமாறு அருள் புரிவாயாயின் எவ்வகையான குறைபாடும் இல்லாதவர்களாய் இருப்போம்.
(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#13

Re: திருவெம்பாவை

 by சாமி on Wed Dec 25, 2013 9:26 pm

பாடல் எண் : 10
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :
இறைவன் திருவடிக் கமலங்கள், கீழ் உலகம் ஏழினுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கும்; மலர்கள் நிறைந்து அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியும், மேலுள்ள பொருள் எல்லாவற்றுக்கும் மேலுள்ள முடிவிடமாய் இருக்கும்; அவன் ஒரேவகையானவன் அல்லன்; ஒரு பக்கம் பெண்ணுருவாய் இருப்பவன்; வேதமுதலாக, விண்ணுலகத்தாரும், மண்ணுலகத்தாரும் புகழ்ந்தாலும், சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற நண்பன்; அடியார் நடுவுள் இருப்பவன். அத்தன்மையனாகிய சிவபெருமானது ஆலயத்திலுள்ள, குற்றமில்லாத குலத்தையுடைய, பணிப்பெண்களே! அவன் ஊர் யாது? அவன் பெயர் யாது? அவனுக்கு உறவினர் யாவர்? அவனுக்கு அந்நியர் யாவர்? அவனைப் பாடும் வகை யாது?
(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#14

Re: திருவெம்பாவை

 by சாமி on Thu Dec 26, 2013 8:18 pm

பாடல் எண் : 11
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :
நிறைந்த நெருப்புப் போன்ற செந்நிறம் உடைய வனே! வெண்மையான திருநீற்றுப் பொடியில் மூழ்கியவனே! ஈசனே! சிற்றிடையையும், மைபொருந்திய பெரிய கண்களையும் உடைய உமையம்மையின் கணவனே! அழகனே! வண்டுகள் மொய்த்தலைப் பொருந்திய அகன்ற தடாகத்தில், முகேர் என்ற ஒலி எழும்படி புகுந்து, கையால் குடைந்து குடைந்து மூழ்கி, உன் திருவடியைப் புகழ்ந்து பாடி, பரம்பரை அடிமைகளாகிய நாங்கள், வாழ்ந்தோம்; தலைவனே! நீ எங்களை அடிமை கொண்டருளுகின்ற திருவிளையாட்டினால், துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறுபவர்கள் அவற்றைப் பெறும் வகைகளை எல்லாம் யாங்களும் படிமுறையில் பெற்று விட்டோம். இனி, நாங்கள் பிறவியில் இளைக்காதபடி எங்களைக் காத்தருள்வாயாக.
(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#15

Re: திருவெம்பாவை

 by சாமி on Sat Dec 28, 2013 7:34 am

பாடல் எண் : 12
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :
நம்மைப் பிணித்த பிறவித் துன்பம் ஒழியும்படி, நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன், அழகிய தில்லையின் கண்ணுள்ள ஞான சபையில் அனலேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான். விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும் நம் எல்லோரையும், தோற்று வித்தும் நிலை பெறுத்தியும், நீக்கியும், விளையாடுபவனாகிய இறை வனது பொருள் சேர் புகழை உரைத்து, வளையல்கள் ஒலிக்கவும், நீண்ட மேகலை முதலிய அணிகள் அசைந்து ஓசை எழுப்பவும் அழகிய கூந்தலின் மேல், வண்டுகள் எழுந்து முழங்கவும் மலர்கள் விளங்குகின்ற பொய்கையில் ஆடி, நம்மை உடைய இறைவனது பொன் போன்ற திருவடிகளைத் துதித்துப் பெரிய மலைச் சுனை நீரில் மூழ்குவாயாக.
(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#16

Re: திருவெம்பாவை

 by சாமி on Mon Dec 30, 2013 7:32 am

பாடல் எண் : 13
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :
பசுமையான குவளையின் கருமையான மலர் களை உடைமையாலும், செந்தாமரையின் குளிர்ந்த மலர்களை உடைமையாலும், கையில் வளையற் கூட்டத்தை உடைமையாலும் பின்னிக் கிடக்கின்ற பாம்பினாலும் தங்கள் மலம் கழுவுவார் வந்து நீக்கிக் கொள்ள அடைதலாலும், எம்பெருமாட்டியையும் எங்கள் பெருமானையும் போன்று பொருந்திய நீர் பொங்குகின்ற மடுவை யுடைய பொய்கையில் புகும்படி வீழ்ந்து, மூழ்கி, நம் சங்கு வளையல்கள் கலகலக்கவும் காற்சிலம்புகள் கலந்து ஒலிக்கவும் தனங்கள் பூரிக்கவும், முழ்குகின்ற நீர் பொங்கவும் தாமரை மலர்கள் நிறைந்த நீரில் பாய்ந்து ஆடுவாயாக.
(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#17

Re: திருவெம்பாவை

 by சாமி on Mon Dec 30, 2013 9:23 pm

ஈசனின் இன்ப அன்பு

திருவெம்பாவையின் முதல் எட்டுப்பாடல்கள் உரையாடற் போக்கில் அமைந்தன. அவற்றுள் சில பாடல்களில் எது உள்ளே இருப்பவள் பேச்சு, எது வெளியே இருப்பவர்கள் பேச்சு என்பதில் அறிஞர்கள் மாறுபடுகிறார்கள். அத்தகைய பாடல்களுள் "பாசம் பரஞ்சோதியும்' ஒன்று.

"பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல்நாம்
பேசும்போது எப்போது இப்போதுஆர் அமளிக்கே
நேசம் வைத்தனையோ நேரிழையாய்''

என்பது வெளியே இருப்பவர்கள் பேச்சு. இதனை அடுத்து வரும் பகுதி உள்ளே இருப்பவள், வெளியே இருப்பவர்கள் ஆகிய இருவர் பேச்சா? அன்றி உள்ளே இருக்கும் ஒருத்தி பேச்சா? பண்டிதமணி கதிரேசச் செட்டியார், ரா. சண்முகசுந்தரஞ் செட்டியார், பி.ஸ்ரீ. போன்றோர் இருவர் பேச்சாகக் கொண்டுள்ளனர்.

"நேரிழையீர்
சீசி இவையும் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ?''

என்பதை உள்ளிருப்பவள் பேச்சாகவும்,

"விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்''

என்பதை வெளியில் இருப்பவர்கள் பேச்சாகவும் கொண்டுள்ளார்கள். மேலும், ""ஈசனார்க்கு அன்பார் யாம் ஆர்'' என்பதற்கு, ""தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு பொருந்திய நாம் உனக்கு யார்? அயலவர் அல்லவே'' என்று பண்டிதமணியும், ""பெருமானுக்கு நாம் யாவரும் அன்புடையவர் அல்லவா என்று நல்லுரை பகர்ந்தனர்'' என்று ரா. சண்முகஞ் செட்டியாரும், ""வெளியே இருப்பவர்களுள் ஒருத்தி, பெருமானுக்குச் செலுத்த வேண்டிய அன்பு என்றால் அது சாமானியமா? அந்த அன்பின் தன்மை என்ன? எங்கள் தன்மை என்ன?'' என்கிறாள் என்று பி.ஸ்ரீ.யும் விளக்கம் அளித்துள்ளனர். இவ்விளக்கங்களில் ஈசனார்க்கு அன்பு என்பது பெண்கள் இறைவன்மீது செலுத்துதற்குரிய அன்பினைச் சுட்டுகிறது.

"வாகீச கலாநிதி' கி.வா.ஜ. மட்டும் இப்பகுதி முழுவதையும் உள்ளே இருப்பவள் பேச்சாகக் கொண்டு, ""நேரிழை அணிந்த பெண்களே, இப்படி விளையாட்டாகப் பேசி ஏசும் இடம் இதுதானா? ஆண்டவனுடைய மலர்ப்பாதம் தேவர்களால் துதிப்பதற்கு அடங்காமல் அவர்களுடைய வாயைக் கூசச் செய்கிறது. நாமாக முயன்று அந்தப் பாதத்தைப் பற்றிவிட முடியாது. இறைவனாக அருள்செய்து தன் திருவடியை நமக்குத் தந்தருள வந்தருளுவான். அவன் தெய்விக தேஜஸ் உடையவன். சிவலோகத்தில் இருக்கிறான். அடியார்களுக்கு அருள் செய்வதற்காகத் தில்லைச் சிற்றம்பலத்தில் வந்து நடனம் ஆடுகிறான். அத்தகைய பெருமானிடத்துள்ள அன்புக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? நம்மிடத்தில் சிறிதும் அன்பு இல்லையே என்கிறாள்'' என்று விளக்கியுள்ளார். இவ்விளக்கத்தில் ஈசனார்க்கு அன்பு என்பது இறைவனிடத்தில் உள்ள அன்பைச் சுட்டுகிறது.

இவற்றுள் எப்பகுப்பு தக்கது? இதனை அறிவதற்கு "ஈசனார்க்கு அன்பார் யாம் ஆர்' என்பதன் பொருளைத் தெளிதல் வேண்டும். பண்டிதமணி உள்ளிட்டோர், ஈசனார்க்கு என்பதில் உள்ள நான்காம் வேற்றுமைக்குக் கொடைப் பொருளையே கொண்டுள்ளனர். நான்காம் வேற்றுமை இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு, ஏழு ஆகிய பிற வேற்றுமைப் பொருள்களிலும் மயங்கி வரும். (தொல்.சொல், வேற்றுமை மயங்கியல், நூற்பா.27) "இப்பெருமை அவனுக்குச் சேரும் என்றால் அவனைச் சேரும் என்றும், இது அவனுக்கு முடியும் என்றால் அவனால் முடியும் என்றும், அவனுக்கு இவன் நல்லவன் என்றால் அவனைவிட இவன் நல்லவன் என்றும், அவனுக்கு அறிவு நுட்பம் என்றால், அவனுடைய அறிவு நுட்பம் என்றும், கோடைக்கு வருவான் என்றால் கோடையில் வருவான் என்றும் பொருள்படும்.

இந்த அடிப்படையில், "ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர்' என்பதற்கு ""ஈசனாருடைய அன்பு எத்தன்மைத்து? நாம் எத்தன்மையோம்?'' என்று பொருள்கொள்வதே தகும். இங்கு நான்காம் வேற்றுமை ஆறாம் வேற்றுமை உடைமைப்பொருளில் வந்துள்ளது. அன்பு ஓர் உடைமைப்பொருள் என்பதனை அன்புடைமை என்னும் திருக்குறள் அதிகாரப்பெயரே காட்டும். "ஆர்' என்பதற்கு எத்தன்மைத்து என்பது பொருள். ""நான் ஆர் என் உள்ளம் ஆர்'' (திருக்கோத்தும்பி,பா.2) என்பது "நான் எத்தன்மையேன்? என் உள்ளம் எத்தன்மைத்து?' என்று பொருள்படுவதே சான்று.

இப்படிப் பிற்பகுதி முழுவதையும் உள்ளிருப்பவள் பேச்சாகக் கொள்ளும்போது, வெளியில் இருப்பவர்கள் உள்ளே இருப்பவளிடம் படுக்கையின்மீது நேசம் வந்துவிட்டதா என்று வினவ, அவள், மலர்ப்பாதம் தந்தருள வந்தருளுகிற சிவபெருமானுடைய இன்ப அன்பினைக் கூறி அவனது எளிவந்த தன்மையையும் அதனை அறியாமல் விளையாடிக் கொண்டிருக்கிற தங்களுடைய தன்மையையும் உறழ்ந்து காட்டுவதாகவும், ஈசனார்க்கு அன்பு என்பது இறைவனது அன்பைச் சுட்டுவதாகவும் அமைந்து இன்பம் பயக்கும் என்பது ஒருதலை.
- முனைவர் தெ. ஞானசுந்தரம் - dinamani
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#18

Re: திருவெம்பாவை

 by சாமி on Tue Dec 31, 2013 9:05 pm

பாடல் எண் : 14
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :
காதில் பொருந்திய குழை அசையவும், பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும் பூமாலை கூந்தலில் இருந்து அசையவும் மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ச்சியாகிய நீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி, அவன் ஆதியான தன்மையைப் பாடி, அவன் அந்தமான முறையைப் பாடி, பக்குவமுறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி, நம்மை ஆக்கமாய வேறுபாடுறுத்தி உயர்த்திய, வளையலை உடைய உமாதேவியின் திருவடியின் தன்மையைப் பாடி ஆடுவாயாக.
(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#19

Re: திருவெம்பாவை

 by சாமி on Wed Jan 01, 2014 9:22 pm

பாடல் எண் : 15
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :
கச்சணிந்த அழகிய அணியுடன் கூடிய கொங்கை களை உடையீர்! ஒவ்வொரு சமயத்தில், எம்பெருமான் என்று சொல்லி வந்து இப்பொழுது நம்மிறைவனது பெருமையை ஒருகாலும் வாயினாள் கூறுதலை நீங்காதவளாகிய இவள் மனம் மகிழ்ச்சி மிக விழிகளினின்றும், ஒருபொழுதும் நீங்காத நீரின் நீண்ட தாரைகள் ஒழுகப் பூமியின்மேல் ஒருமுறையே வீழ்ந்து எழாது வணங்குவாள். பிற தேவரைத் தான் வணங்கமாட்டாள். பெரிய தலைவனாகிய இறைவன் பொருட்டு ஒருவர் பித்தராகுமாறும் இவ்வாறோ? இவ் வாறு பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர் யார் ஒருவரோ, அவருடைய திருவடியை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த நீரில் நீர் குதித்து ஆடுவீராக.
(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#20

Re: திருவெம்பாவை

 by சாமி on Fri Jan 03, 2014 6:52 am

பாடல் எண் : 16
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :
மேகமே! முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு, மேல் எழுந்து எம்மையுடையாளாகிய அம்மையினது திருமேனி போல நீலநிறத்தோடு விளங்கி எம்மை அடிமையாக உடையவளது சிற்றிடை போல மின்னி விளங்கி, எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து, அவளது திருப்புருவம் போல் வானவில் விட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய அவ்வம்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கள் தலைவனாகிய இறைவனது, அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று பொழிவாயாக.
(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#21

Re: திருவெம்பாவை

 by சதாசிவம் on Fri Jan 03, 2014 10:33 am

அருமையான பாடல்கள், அழகான விளக்கம்...

தொடருங்கள் சாமி
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்




இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

#22

Re: திருவெம்பாவை

 by சாமி on Sun Jan 05, 2014 12:28 pm

"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே
ஈதேஎம் தோழி பரிசேலோர் எம்பாவாய்''

என்பது திருவெம்பாவையின் முதற்பாடல். இப்பாடல் இரு பெண்களைப் பற்றிப் பேசுகிறதா? அன்றி ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுகிறதா? என்னும் ஐயம் உரையாசிரியர்களிடையே நிலவுகிறது.

வரதராஜபிள்ளை இப்பாட்டிற்கு, ""ஒளி பொருந்திய நீண்ட கண்களையுடைய பெண்ணே, முதலும் முடிவுமில்லாத அரிய பெரிய சோதிப்பிழம்பான இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும் உறங்குகின்றனையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று தெருவின்கண் கேட்ட அளவிலேயே எங்கள் தோழி ஒருத்தி, பொருமி அழுது, உடம்பை மறந்து, மலர்நிறைந்த படுக்கையின்மீதிருந்து புரண்டு விழுந்து, இந்நிலத்தே ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை. என்ன வியப்பு!'' என்று பொருள் கொண்டுள்ளார். அவர் கருத்துப்படி இப்பாடல் எழுப்பப்படும் பெண்ணொருத்தியும், வாழ்த்தொலி கேட்டு மயங்கிய பெண்ணொருத்தியுமாக இருவர் நிலையைக் கூறுவதாகும்.

அருணைவடிவேல் முதலியார், ""மாதேவன் வாழ்த்திய வாழ்த்தொலியைக் கேட்டவளும் உள்ளே கிடப்பவளும் ஒருத்தியே'' என்கிறார். அஃது இன்னொரு பெண்ணின் நிலையினைக் கூறுவதாயின், அவள் கிடந்தாள் என்று மட்டும் கூறியொழியாது பின்னர் எழுந்து வந்தாள் என்றும் ஒருதலையாகக் கூறவேண்டும். அப்படிக் கூறாமையால் பொருந்தாது என்கிறார். மேலும்,

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

என்பது வரை, ""சென்ற மகளிர் உறங்குவாளை நோக்கிக் கூறியன என்றும், எஞ்சிய பகுதி அவளைப் பற்றி அவர்கள் தங்களுள் நகையாடிக் கூறுவன என்றும் இவையும் அவள் கேட்டு எழுந்துவருவாள் என்னும் கருத்தினால் கூறுவனவேயாம்'' என்றும் தெரிவிக்கிறார். "நம் தோழி உறக்கத்தால் எழாது இருக்கிறாள் அல்லள்; நமது பாடல் வீதியில் எழும்போதே அதனைக் கேட்டு மனம் உருகிப் படுக்கையிலேயே மெய்ம்மறந்து கிடக்கிறாள்; இவளது அன்பின் பெருமை எத்தகையது?' என்பது அப்பகுதியின் திரண்ட பொருள் என்று எழுதுகிறார்.

இப்பாடலில் ஒரு பெண்ணின் நிலையே பேசப்படுகிறது என்பது சரியே. ஆனால், பாட்டில் "வாழ்த்தொலிபோய்' என்னும் தொடர் அமைந்துள்ளது. "வாழ்த்தொலி இங்குப் போயிற்று' என்று வாராது; "அங்குப் போயிற்று' என்றுதான் வரும். எழுப்ப வந்த பெண்கள், உறங்குபவள் வீட்டின் வாசலில் நிற்கிறார்கள். ஆகவே, வாழ்த்திய வாழ்த்தொலி அங்கு வீதியில் போய் ஒலிக்க, இங்கு இவள் அதனைக் கேட்டு மயங்கிக் கிடக்கிறாள் என்று பொருள் கொள்வது பொருந்தாது. பலரும் இந்தப் "போய்' என்பதனை விடுத்து வீதியில் வாழ்த்திக்கொண்டு வந்தது கேட்டு என்றே பொருள் கூறியுள்ளனர். இப்படிப் பொருள்கொள்ளும்போது "போய்' என்பது வறிதே நிற்கிறது. இச்சொல் ஏடு எழுதுபவரால் ஓசையின்பத்திற்காகச் சேர்க்கப்பட்டுவிட்டதோ என்னும் ஐயம் உண்டாகிறது. "வாழ்த்தொலிபோய் வீதிவாய்' என்பது காய் முன் நேராய் வெண்சீர் வெண்டளை ஆகும். "வாழ்த்தொலி வீதிவாய்' என்பது விளமுன் நேராய் இயற்சீர் வெண்டளை ஆகும்.

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

என்று இருந்தாலும் யாப்புக் கெடாது. நாம் வாழ்த்திய வாழ்த்தொலி வீதிமுனையில் கேட்டலும் விம்மி விம்மி அழுதாள் என்று பொருளும் பொருத்தமாக அமைகிறது. இப்பாட்டிலேயே ஆறு இடங்களில் இயற்சீர் வெண்டளை வருதல் காணலாம். இது குறித்து அறிஞர்கள் சிந்திப்பார்களாக. - முனைவர் தெ. ஞானசுந்தரம் / dinamani
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#23

Re: திருவெம்பாவை

 by சாமி on Tue Jan 07, 2014 7:21 am

பாடல் எண் : 17
செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :
மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முக னிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளு கின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடிமை களாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக.
(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#24

Re: திருவெம்பாவை

 by சாமி on Wed Jan 08, 2014 6:53 am

பாடல் எண் : 18
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :
தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது திருவடித் தாமரையைப் போய் வணங்குகின்ற தேவர்களது முடி யிலுள்ள இரத்தினங்களின் தொகுதி, ஒளி இழந்தாற்போல கண் களுக்கு நிறையும் சூரியன் தனது கிரணங்களுடன் தோன்றின மையால், இருளானது மறைய நட்சத்திரங்கள் குளிர்ச்சி பொருந்திய ஒளி குன்றி ஒழிய அப்போழ்தில், பெண்ணாகியும், ஆணாகியும், அலி யாகியும், விளங்குகின்ற ஒளி பொருந்திய ஆகாயமாகியும் பூமியாகியும் இத்தனைக்கும் வேறுபட்டும் கண்ணால் பருகப்படுகின்ற அமுதமாய் நின்றவனாகிய இறைவனது திருவடியைப் பாடி இப்புது நீரில் வீழ்ந்து ஆடுவாயாக.
(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்




இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

 
#25

Re: திருவெம்பாவை

 by சாமி on Thu Jan 09, 2014 10:05 pm

பாடல் எண் : 19
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.


விளக்கம் :
எங்கள் தலைவனே! உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று வழங்கிவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக. எங்கள் தனங்கள் உன்னடியவர் அல்லாதார் தோள்களைத் தழுவாதிருக்க; எம் கைகள் உனக்கன்றிப் பிறதேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க; இந்நிலவுலகில் இம்முறையே எங்கள் தலைவனே! நீ எங்களுக்கு அருளுவாயாயின், சூரியன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?
(தொடரும்)
சாமி




கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்!
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும்!
கேழில் பரஞ்சோதி! கேழில் பரங்கருணை!
கேழில் விழுப் பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?

வாழி ஈதென்ன உறக்கமோ? வாய் திறவாய்!
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை,
ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்!

கோழி கூவுது! குருகு கூவுது! ஏழிசைச் சங்க நாதம் எங்கும் கேக்குது! குற்றமில்லாத பரஞ்சோதியின் பரங்கருணையைப் பாடுறோமே? உன் காதில் விழவில்லையா? நல்லா இருடீ! இப்படியா தூங்குவ? எழுந்து வாசலைத் திற!

எம்பெருமானான சக்கரம் சுழலும் பெருமாள், சிவபெருமான் மேல் எம்புட்டு அன்பு வச்சிருக்கான்! அதில் நீ கொஞ்சமாச்சும் வச்சிருக்கியா?
ஊழிக் காலத்தில் அழிக்கும் கடவுளாக ஈசன் நிற்கிறான்! ஆனால் காக்கும் காலத்தில் ஏழைப் பங்காளனாய் இருக்கானே! அவனைப் பாடவோம்! எழுந்து வா, போகலாம்!
________________________________

இப்போ கொஞ்சம் பிரிச்சி மேயலாமா? (அப்படியே உங்க கிராமத்துக் காலைக் காட்சிக்கும் போங்க பார்ப்போம்!)

கோழி சிலம்ப = கோழி கூவும்! அது என்னா சிலம்பும்?
சிலம்பில் பரல்கள் கம்மி! கொலுசு மாதிரி கிடையாது! அதுனால நடக்கும் போது சத்தம் வரும், ஆனா தொடர்ந்து ஜல்ஜல் வராது! விட்டு விட்டு வரும்! அதே போலத் தான், கோழியும் விட்டு விட்டுக் கூவுது! தொடர்ந்து கூவித் தூக்கத்தைக் கெடுத்துச்சினா, நீங்க அந்தக் கோழியை என்ன பண்ணுவீங்க-ன்னு எனக்குத் தான் நல்லாத் தெரியுமே! :)

சிலம்பும் குருகு எங்கும் = குருகு-ன்னா ஒரு வகையான நீர்ப்பறவை! கொக்கு போல! திரு+குருகூர் என்று நம்மாழ்வார் பிறந்த தலத்தைச் சொல்றோம்-ல? குருகுகள் இருக்கும் ஊர் குருகூர்! இங்கன கோழி கூவ, அதைக் கேட்டு குருகு கூவுது! Chain Reaction போல! :)

ஏழில் இயம்ப இயம்பும், வெண் சங்கு எங்கும் = ஏழிசை சரிகமபதநி! அந்த ஏழிசையும் காலையில் பூபாளமாய் ஒலிக்க, கூடவே வெண் சங்கு எங்கும் ஒலிக்குது! கோயில்களில் காலையில் சங்கு ஊதுவது மங்கல மரபு! இன்னிக்கித் தான் சங்கு ஊதறது-ன்னா வேற மாதிரி பொருள் ஆயிரிச்சி! :)

கேழில் பரஞ்சோதி! கேழில் பரங்கருணை! = ஆகா! நம்ம வள்ளலார் சொல்வது போலவே இருக்கே! அருட் பெருஞ்சோதி! தனிப் பெருங்கருணை!
கேழ் = ஒப்புமை! ஒப்பில்லாத சோதியான்! ஒப்பில்லாத கருணையான்!

சிவபெருமான் வரப்பிரசாதி, பக்த கோலாகலன்! சோதனைகள் நிறைய கொடுத்தாலும், தவத்தில் வென்று விட்டால் அள்ளி அள்ளிக் கொடுப்பவர்!
இந்தப் பெருமாள் அப்படி அல்ல! மகா கஞ்சன்! :) அவ்வளவு சீக்கிரம் பெயராது! "ஆராய்ந்து" அருளேலோ ரெம்பாவாய் தான்! ஏதோ தாயார் அவன் மார்பில் இருக்கா! நாம எல்லாரும் பொழைச்சோம்!

கேழில் விழுப் பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ? = இப்படி ஈசனின் பெருமைக்குரிய பொருட்கள் - ஜடாமகுடம், கங்கை, பிறைச் சந்திரன், திருநீறு, நாகாபரணம், புலித்தோல், மழு-மான், கையில் தீ, எடுத்த பொற்பாதம், சூலம், டமருகம்(உடுக்கை), ரிஷபக் கொடி, நந்தி தேவர் - என்று பாடினோமே! ஒன்னு கூடவா நீ கேக்கலை? அடிப் பாவீ!

வாழி = நல்லா இரு!
ஈதென்ன உறக்கமோ? வாய் திறவாய்! = அப்படியென்ன தூக்கம்? கதவைத் திற!

ஹிஹி! இந்தக் காலத்தில் நண்பன் மேல ரொம்ப கோவம் வந்தாச் சொல்றோமே! = நல்லா இருங்கடே! அதே தான்! வாழி என்கிறார்! :)
சிவபிரானை இம்புட்டு பாடுறோம்? நீ பாட்டுக்குனு ஏதோ தூங்கிக்கிட்டு இருக்க? நல்லா இரு டீ! சீக்கிரம் கதவைத் தொற! தொறந்து, கேஆரெஸ் பதிவுல போயி, நமசிவாய வாழ்க!-ன்னு பின்னூட்டம் போட்டுட்டு வா! :)
________________________________

ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ? = இந்த வரிகளை நல்லபடியா நோக்கணும் என்று அனைவரையும் கேட்டுக்கறேன்! மாணிக்க வாசகரின் ஒரு வாசகம் என்றாலும் அது திருவாசகமான வரிகள் இவை!
ஆழியானான பெருமாள், ஈசன் மேல் வைத்திருக்கும் அளவிலா அன்பில், ஒரு சிறு பங்காவது நீ வச்சிருக்கியா? - என்று கேட்கிறார் மாணிக்கவாசகர்!
யாரை? திருவண்ணாமலை வீதியில் இருக்கும் ஒரு பொண்ணையா? இல்லை! நம்மை! என்னை! உங்களை! ஏன்?

சைவத்தைக் காக்கிறேன் பேர்வழி என்று சிவத்தை மறந்து விடுகிறோம்! சிவன் பால் மாசற்ற அன்பைத் தருவதில்லை! மனசின் கலப்படப் பாலை ஊற்றுகிறோம்! நமக்காக அமைத்துக் கொண்ட கட்டமைப்பைக் காக்கும் பொருட்டு, சைவத்தைப் பிடிச்சிக்கறோம்! சிவனை மறக்கிறோம்!

* இல்லையென்றால் தில்லையில், பொன்னம்பலத்தில், எண்ணெய் ஊற்றி வழுக்கி ஓடச் செய்வார்களா? "அய்யோ! நம் பிள்ளை ஆடும் அம்பலமாச்சே! ஆடும் அம்பலத்தில் அம்பலவாணப் பிள்ளை வழுக்கி விழுந்தால் என்ன ஆகும்" என்ற துளி பாசம் வந்ததா?
உள்ளே வரும் காவலரைத் தடுக்கணும்-ன்னா, தான் படுத்து, தன் மேல் ஏறிப் போங்கள்-ன்னு சொல்லலாமே? ஹிஹி! பாசம் பரஞ்சோதிக்கா வைத்தாய்? என்று இடித்துக் கேட்கிறார் மணிவாசகப் பெருமான்! :(
* "தேவாரத் திருப்பதிகங்களை அம்பலத்தில் பாடி விட்டுப் போகட்டுமே! வீண் அவப்பெயர் மட்டும் அல்லாமல், வளரும் தலைமுறை இதையெல்லாம் பார்த்துவிட்டு, நாத்திகர்கள் அல்லவா ஆவார்கள்? சிவ துவேஷத்திற்கு நாமே காரணம் ஆகலாமா?" - இப்படி எல்லாம் யோசிக்கவே மாட்டார்கள் இந்தக் கர்ம சீலர்கள்! கர்மானுஷ்டானம்! யார் கர்மம்? சிவபெருமானோட வேலையா? இல்லையில்லை! தங்கள் வேலை! தங்கள் கர்மம்! ஏன்? நம்ம கட்டமைப்பைக் காத்துக்கிடணும்! சிவன் என்னவானா நமக்கு என்ன? :(

* அது என்ன நந்திக்குப் பின்னால் இருந்து தான் தமிழ் பாடணும்-ன்னு ஒரு குருட்டு வாதம்? அதான் நந்திக்கு முன்னால் இருந்து, ஈசனே பாடி விட்டாரே! "மாணிக்கவாசகன் சொல்லச் சொல்ல, நாமே எழுதியது" என்று பொன்னம்பலத்தில் தானே தமிழில் திருக்கடைக்காப்பு இட்டார்? பொன்னம்பலம் என்ன நந்திக்குப் பின்னா? அப்புறம் என்ன? பொன்னம்பலத்தில் அவர்களும் தமிழ் பாடட்டும்! கருவறைச் சிற்றம்பலத்துக்குள் நாமும் தமிழ் பாடுவோம் என்ற எண்ணம் வருமா? வராது! சுட்டுப் போட்டாலும் வராது! :(

* ஏன்? = தங்களை முன்னுக்குத் தள்ளி, இறைவனைப் பின்னுக்குத் தள்ளும் போக்கு!
தங்களையும், தங்கள் பூஜா முறைகளையும், தங்கள் கர்ம அனுஷ்டானங்களையும் காத்துக் கொள்வோம்! ஈசனை அவரே பார்த்துக் கொள்வார்! அவர் சன்னிதியில் நாமே எண்ணெய் ஊற்றினால் என்ன? பெட்ரோல் ஊற்றினால் தான் என்ன? சிவோஹம்! சிவோஹம்!

அதான் மாணிக்கவாசகப் பெருந்தகை நெத்தியடி அடிக்குறாரு! ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ? --- ஆழியானாகிய பெருமாள், நம் ஈசனிடம் வைத்த பாசத்தில், ஒரு சிறு பங்கு இருக்கா உங்க கிட்ட? என்று கேட்கிறார் மாணிக்க வாசகர்!
இந்த மணி வாசகத்தை மட்டும் மன்னன் படிச்சிருந்தான் என்றால், தில்லையில் கோவிந்தராசரை அப்புறப்படுத்தியே இருக்க மாட்டான்! :(
என்ன செய்வது! காலம் காலமாக, தனிப்பட்ட மனிதர்களின் சுய லாபங்களும், சுய பிரதாபங்களும் முன்னே! ஈசனும் அம்பிகையும் பின்னே! ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ?
________________________________

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை = (ஆக்கல், காத்தல், அழித்தல்) ஊழிக் காலத்தில் அழிக்கும் கடவுளாய் நிற்கும் சிவபிரானை! "ஒருவனை"! ஊழியின் போது வேறு எவரும் கிடையாது! சிவபிரான் ஒருவரே! அவரே தனியாக இருந்து அழிக்கிறார்! அதனால் "ஒருவனை" என்கிறார்!

ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய் = அது என்ன ஏழைப் பங்காளன்? சிவபெருமான் அரசியல் கட்சி எதுவும் தொடங்கலையே? அவிங்க தான் ஏழைப் பங்காளன் என்பார்கள்! :) இதுக்கு என்னவா இருக்கும்-ன்னு திருவாசக உரைகளைத் தேடினேன்!
ஏழை = உமை அன்னை! அவளைத் தன் பங்கில் கொன்டவன்! = ஏழைப் பங்கு ஆளன்!

ஏன் உமையன்னையை ஏழை-ன்னு சொல்லணும்? ஏந்திழை-ன்னு இருக்குமோ? ஏழை-ன்னு சுருங்கிருச்சோ? அவ மலையரசன் மகளாச்சே! அவளா ஏழை? மதுரையின் அரசியாச்சே! அவளா ஏழை? யோசிச்சிப் பார்த்தேன்! ஆமாம் அவள் ஏழை தான்! இல்லாதவள் தான்! ஏன்னா Wealthy Accumulate! Poor Spend!

பக்தர்களின் குறைகளை மனசுக்குள்ளாற தேக்கி வச்சிக்கத் தெரியாது அவளுக்கு! போனாப் போகட்டும், போனாப் போகட்டும்-ன்னு, தன்னருளைச் செலவு செய்து கொண்டே இருப்பாள் உலகன்னை! ஜகன் மாதா! அவள் ஏழையே தான்! ஏழை பங்கு ஆளனையே பாடேலோர் எம்பாவாய்!

ஆழியான் பெருமாளின் அன்பைப் பெற்று விளங்கும் அம்பலவாணன் திருவடிகளே சரணம்! திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!

sivan jaykay

unread,
Dec 17, 2017, 8:45:15 PM12/17/17
to amritha varshini

                                                         மணிவாசகரின்   மனம்  இனிக்கும் திருவெம்பாவை. 2


''பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய். 

''ஹே  பெண்ணே, சிறந்த  ஆபரணங்களை உடலில் அணிந்தவளே! 
என்னடி எப்போதும்  பேசுகிறாயே, யாரைப்பற்றி?''  என்று கேட்பேனே , அப்போது நீ  சொல்வாய்?
இரவும் பகலும் நாம் பேசுவது  ஒன்று தான்.  அது தான்  எப்போதும்  என் உள்ளே  நிறைந்திருக்கும் அந்த  தில்லை நாதனைப் பற்றி தான்.  என் அன்பு,   ஒருவரிடத்தில்   மட்டுமே,அது  மேலான ஒளிப் பிழம்பானஅந்த  தில்லை நாதனுக்கு மட்டும் தான் மட்டும் தான்''  என்று சொல்வாய். 

  அப்படிப்பட்ட நீ  ஏன்  இப்போது இந்த  பட்டு விரித்த படுக்கையிடம்   அன்பு வைத்து  அதை விட்டு  எழுந்திருக்கவே  இல்லை!   என்கிறார்கள் அந்த தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் அவள் தோழிகள்.  அவளுக்காக  காத்திருக்கிறார்கள் விடியற்காலை எழுந்து நீராட செல்வதற்கு.

அதற்கு அந்த தூங்கிய, அவள் தான் இப்போது விழித்துக் கொண்டு விட்டாளே! என்ன சொல்கிறாள்?

''பெண்களே! சீச்சி . போதுமடி ..... நீங்கள் பேசும் நகை மொழிகளில்  இதுவும் ஒன்று , இதைப்போல் பல  நான் உங்களிடம்  கேட்டிருக்கிறேன்.   என்னோடு  விளையாடி என்னை  கேலி செய்ய இது சரியான ஒரு  சமயம் என்று  முடிவெடுத்து விட்டீர்களா? 

தேவர்களும் வழிபடுதற்கு  கூச்சப்படும்  அழகிய  தாமரை மலர் போன்ற  தனது திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவமானவன்  என் தெய்வம்.   தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு, 
ஒரு காலைத் தூக்கி  நின்றாடும்  கண்கண்ட  தெய்வம்  அந்த  சபாபதி  மீது  அன்பு பொருந்திய நாம்-- அது தான்  நானும்  நீங்களும்...  என்னைப்போய் நீங்கள்.....!!   அந்த பெண் எழுந்து விரைந்து வாயிலில் காத்திருக்கும் பெண்களோடு சேர்ந்து கொள்கிறாள்






.
THILLAI.jpe

sivan jaykay

unread,
Dec 18, 2017, 6:53:43 PM12/18/17
to amritha varshini
                                                        
                                                                  ஆஞ்சநேயன் வந்தான்

இந்த வருஷம்  ஹனுமத் ஜெயந்தி மார்கழி அமாவாசை  மூல நக்ஷத்திரத்தில் அன்று விமரிசையாக நாடெங்கும்  கொண்டாடப்படுகிறது.   வானர யூத முக்யன் ஒரு வரப்பிரசாதி. உண்மையாக உண்மையாக மனநிறைவுடன்   வேண்டுவோர்க்கு தவறாமல் அருள்பவன். சிரஞ்சீவி.  அந்தந்த ஊர்களில்  வெவ்வேறு நம்பிக்கைகள்  வழக்கங்கள் பழக்கங்கள் என்பதால்  வடக்கே சித்ரா பௌர்ணமி அன்றும் அனுமனுக்கு  பிறந்தநாள்  41 நாள் விமரிசையாக கொண்டாடுவோர்கள். வைசாக க்ரிஷ்ணபக்ஷத்தில்  ஹனுமத் ஜெயந்தி நிறைவு பெறும்.

ஹநுமானை பற்றி ஒரு செய்தி இன்று சொல்கிறேன்:

சிருங்கேரியில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று  ஜகத்குரு  அபிநவ வித்யாதீர்த்த மஹா சந்நிதானம், தனது நித்திய பூஜைக்குப் பிறகு  பிக்ஷை முடித்த பின், ஏகாந்தமாக அமர்ந்து மடத்துச் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

திருநெல்வேலி, மதுரை.  ராமநாதபுரம்  ஊர்களில்  வேதபாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் பலர் சிருங்கேரி  வந்து  சாரதாம்பாளையும் ஜகத்குருவையும் தரிசிக்க வந்தவர்களைச் சில நாட்கள் தங்கிப் போகும்படி, ஸ்வாமிகள் கட்டளை இட்டிருந்தார். அந்த மாணவர்களும் ஸ்வாமிகளது உரையாடலை தினமும் க் கேட்டுக் கொண்டிருந்தனர்.

 பிரவசன (ஆன்மிக விளக்க உரை)  உபன்யாசகர்களைப் பற்றி பேச்சு வந்தது .  மதுரை தல்லாகுளம் வேத பாட சாலையைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன்  எழுந்து, ஜகத்குருவை நமஸ்கரித்து  ”இந்த பிரவசனம் பற்றி மனசுல உள்ள ஒரு விஷயத்தை, குருநாதர்கிட்ட விக்ஞாபனம் (வேண்டுகோள்) பண்ணிக்க ஆசைப்படறேன்” என்றான்.

ஆச்சார்யாள், ”என்னது? சொல்லேன்!” எனப் பணித்தார்.

வேற ஒண்ணுமில்லே குருநாதா! இப்பல்லாம் கதா பிரவசனம் பண்ற சில உபன்யாசகர்கள், சாராம்சத்தை விட்டுட்டு, இதர விஷயங்களைத்தான் நிறைய பேசறா! இதனால… சாராம்சம் மறந்து போயிடறது. இதர விஷயங்கள் மட்டும் நன்னா ஞாபகத்தில் இருக்கு. ‘நல்ல பிரவசனம் கேட்டோம்’கிற திருப்தி ஏற்பட மாட்டேங்கறது! இது, பிரவசனம் பண்றவாளோட குறைபாடா அல்லது கேக்கறவாளோட குறைபாடா? மகா ஸ்வாமிகள்தான் தெளிவுபடுத்தி அனுக்கிரகிக்கணும்!”

ஜகத்குரு புன்னகைத்தார்.  ”மொதல்ல, நீங்கள்லாம் போஜனம் பண்ணியாச்சா?” என்றார்

அனைவரும்  கைகூப்பி, ”பண்ணியாச்சு ஸ்வாமி” என்றனர்.

”சந்தோஷம்.  எங்கே ப்ரவசனம்   யார் சொல்லக்  கேட்டாலும், அதுல இருக்கிற நல்ல சாராம்சத்தை மாத்திரம் நாம கிரகிச்சுண்டு, மத்ததை விட்டுடணும். இதுக்கு, நம்ம மனசை பரிபக்குவப்படுத்திக்கணும். அதுதான் ஒசத்தியான குணம். உபன்யாசம் பண்றவா, காலத்தையும் சபையையும் அனுசரிச்சுண்டு அதே நேரம், ‘சப்ஜெக்ட்’டையும் விட்டுடாமத்தான் பூர்த்தி பண்றா! நாமதான் அன்னபட்சி மாதிரி அதுலேர்ந்து தேவையானதை மட்டும் கிரகிச்சுக்கணும்… என்ன புரியறதா?” என்றார்

சூர்யநாராயணன் என்ற சிஷ்யன் பய பக்தியுடன்  ”ஜகத்குருவிடம் ஒரு பிரார்த்தனை! நாங்கள்லாம் ஸ்ரீமத் ராமாயணம் நீங்க சொல்லி  கேக்கணும்னு ஆசைப்படறோம். ஜகத்குருதான் கிருபை பண்ணி…”

”அதுக்கென்ன… பேஷா ஏற்பாடு பண்ணிட்டா போறது. நன்னா வாசிச்ச பௌராணிகாளா (உபன்யாசகர்) மைசூர்லேர்ந்து வரவழைச்சு சொல்லச் சொல்றேன்” என்றார் ஸ்வாமிகள்.

 யக்ஞநாராயணன் என்ற சிஷ்யன் ”ஜகத்குருவின் அம்ருத வாக்கால ஸ்ரீமத் ராமாயணம் சிரவணம் (கேட்டல்) பண்ணணும்னு எங்களுக்கு ரொம்ப நாளா ஆசை. குருநாதர் அனுக்கிரகிக்கணும்!”

”ஓஹோ… இதுக்குத்தான் இவ்வளவு பீடிகையா?! பார்ப்போம்… பார்ப்போம்…” என்றபடி எழுந்து உள்ளே சென்று விட்டார்.

நாட்கள் கடந்தன. அன்றும் வெள்ளிக்கிழமை; சந்தியாகால வேளை. சாரதாம்பாள் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. திடீரென அம்பாளைத் தரிசிக்க வந்தார் ஸ்வாமிகள். அவர், தரிசனம் முடிந்து வெளியே வரும்போது ராத்திரி மணி எட்டு இருக்கும்!

அவர்களைப் பார்த்து புன்னகைத்தபடியே, ”ஏதேது, விடமாட்டேள் போல இருக்கே. சரி… சரி… நீங்க ஆசைப்பட்டபடியே நடத்திடலாம்! ஒரு நல்ல நாள் பார்த்து ப்ராரம்பம் (ஆரம்பம்) பண்ணுவோம்” என்றார். அந்த நல்ல நாளும் வந்தது. ஏழு நாட்கள் ஆச்சார்யாள் சுந்தரகாண்டம் சொல்வதென முடிவாயிற்று. ‘மஹா சந்நிதானமே பிரவசன அனுக்கிரகம் பண்ணப் போறார்’ என்ற செய்தி பரவ, ஏகக் கூட்டம். அன்று மழை வேறு தூறி ஓய்ந்திருந்தது!

ஆசனத்தில் அமர்ந்த ஜகத்குருவை அன்று தரிசித்தவர்கள், சாட்சாத் வேத வியாஸ பகவானே வந்து அமர்ந்திருப்பது போல் உணர்ந்தனர். கணீரென்ற குரலில் பிரவசனம் ஆரம்பமானது. அரை மணி நேரம் கடந்திருக்கும். திடீரென பிரவசனத்தை நிறுத்திய ஸ்வாமிகள், மடத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்தார். அவரிடம், ”ஆரம்பத்திலேயே சொல்லணும்னு இருந்தேன்… மறந்துட்டேன்! நீ என்ன பண்றே… என் பக்கத்துல கொஞ்சம் தள்ளி, ஒரு மணைப் பலகையைக் கொண்டு வந்து போடு. அதுமேல பட்டு வஸ்திரத்தை விரி. அப்புறம், ஒரு வெள்ளித் தட்டுல ரெண்டு பெரிய கொய்யாப் பழத்தை கொண்டு வந்து வை… சீக்கிரம்!” என்று கட்டளையிட்டார். உத்தரவு பூர்த்தி செய்யப்பட்டு, உபன்யாசம் தொடர்ந்தது.

ஐந்தாம் நாள் உபன்யாசமும் பூர்த்தி அடைந்தது. மாணவர்களுக்கும் நன்கு புரிகிற மாதிரி விவரித்த ஸ்வாமிகள், இடையிடையே தர்மசாஸ்திர நுணுக்கங்களையும் விளக்கினார்.

திருநெல்வேலி வேத பாடசாலையைச் சேர்ந்த வேங்கடேசன் என்ற மாணவன் மெள்ள வந்து ஜகத்குருவை நமஸ்கரித்து, ”எனக்கு ஒரு சந்தேகம் குருதேவா” என்றான் தயங்கியபடி.

”என்ன சந்தேகம், கேள்!” என்றார் ஸ்வாமிகள்.

அவன் திக்கித் திணறியபடி  ”குருநாதா! உபன்யாசம் ஆரம்பிச்ச நாள்லேர்ந்து… உங்க பக்கத்துல ஒரு பலகையைப் போட்டு, அதுக்கு முன்னால ஒரு தட்டுல கொய்யாப் பழத்தையும் வைக்கச் சொல்றேள்! அது எதுக்குனு புரியலை…”

இதைக் கேட்டு கலகலவென சிரித்த ஆச்சார்யாள், ”சொல்றேன் கேளு… ‘யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்… தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்’னு… எங்கெல்லாம் ஸ்ரீ ராமனின் பெருமை பேசப்படறதோ, அங்கெல்லாம் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி வந்துடுவார்னு ஒரு நம்பிக்கை. இங்கே நாம்  ஸ்ரீமத் ராமாயணம்னா சொல்றோம். அதனால நிச்சயம் ஸ்வாமி வருவாரில்லையா? அவரை நாம நிக்க வைக்கலாமோ? அவர் ‘நவ வ்யாகரண’ பண்டிதராச்சே! அவர் உட்காரத்தான் ஆசனப் பலகை! அப்புறம்… நம்ம வீட்டுக்கு யாராவது ‘கெஸ்ட்’ வந்தா பழம்- பட்சணம், காபியெல்லாம் குடுத்து உபசாரம் பண்ற மாதிரிதான் இது! ஸ்வாமிக்கு கொய்யாப் பழம்னா ரொம்பவும் புடிக்கும். இப்ப புரிஞ்சுண்டியா?” என்று கேட்டார்.

தலையாட்டினான் வேங்கடேசன். அந்த இளம்பிஞ்சு இன்னும் தெளிவடைய வில்லை என்பது அந்த தெய்வத்துக்கு தெரியாதா என்ன!

ஆறாம் நாளன்றும் நல்ல கூட்டம். அன்றைய உபன்யாசத்தை உருக்கமாகக் கூறி முடித்தார் ஜகத்குரு.

அனைவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்துச் சென்ற பின்னர், பாடசாலை மாணவர்களும் ஒருவர்பின் ஒருவராக நமஸ்கரித்து நகர்ந்தனர். கடைசியாக, முதல் நாள் சந்தேகம் கேட்ட திருநெல்வேலி பாடசாலை மாணவன் வேங்கடேசன் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து விட்டு, கைகூப்பி நின்றான். புன்முறுவலுடன் அவனை ஏறிட்ட ஸ்வாமிகள், ”ஒம் முழுப் பேரென்ன?” என்று வினவினார்.

”பிரசன்ன வேங்கடேசன் குருநாதா!”

”பூர்வீகம் எது?” என்று கேட்டார்.

”திருநெல்வேலி- கடையநல்லூர் பக்கம் ஒரு குக்கிராமம் குருநாதா”

”தகப்பனார் என்ன பண்றார்?”

”உபாத்தியாயம் (வைதீகத் தொழில்) குருநாதா!”

உடனே ஆச்சார்யாள், ”பேஷ்… பேஷ்” என்று கூறிவிட்டு, அன்றைய தினம் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு கொய்யாப் பழங்களை தன் தங்கக் கைகளால் எடுத்து, அவனிடம் தந்தார். பிறகு, ”வேங்கடேசா! இவை ஆஞ்சநேயர் சாப்பிட்ட உச்சிஷ்ட (மீதி) பிரசாதம். நறுக்கி நீயும் வாயில போட்டுண்டு, எல்லாருக்கும் கொடு!” என்று விடைகொடுத்தார்.

ஆனால், பிரசன்ன வேங்கடேசன் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஆச்சார்யாள் அளித்த இரு கொய்யாப் பழங்களையும் கைகளால் உருட்டி உருட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தான்!

அவனது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட ஆச்சார்யாள் தனக்குள் சிரித்தபடி, ”என்ன பிரசன்ன வேங்கடேசா! பழங்களைக் கையில் வெச்சுண்டு அப்டி என்ன யோசனை? கொஞ்சம் சொல்லேன், நானும் தெரிஞ்சுக்கறேன்!” என்றார். அவன் தயங்கினான்.

”சொல்லு”- தைரியப்படுத்தினார் ஜகத்குரு.

”வேற ஒண்ணுமில்லே குருநாதா! அந்த ஆசனத்துல ஆஞ்சநேய ஸ்வாமி வந்து ஒக்காந்து ஸ்ரீமத் ராமாயணம் கேட்டுட்டு, அவருக்கு அர்ப்பணிச்ச கொய்யாப் பழங்களையும் சாப்டுட்டுப் போறதா…” என்று அவன் முடிப்பதற்குள் ஸ்வாமிகள் இடைமறித்தார்.

”இத நான் சொல்லலே! பரம்பரை பரம்பரையா நம்ம தேசத்துல ஸ்ரீமத் ராமாயண பிரவசனம் பண்ணிண்டு வர பெரியவாள்லாம் பூர்ண நம்பிக்கையோட கடைப் பிடிக்கிற வழக்கம். இது சத்தியமும் கூட! இதுல, உனக்கு என்ன சந்தேகம்?” என்று கேட்டார் ஞானகுரு.

பிரசன்ன வேங்கடேசன் பேசத் தயங்கினான். அவனை அருகில் வரச் சொன்ன ஆச்சார்யாள், ”எதுவா இருந்தாலும்… மனசுல பட்டதை தைரியமா சொல்லு!” என்றார் .

 ”நானும் பிரவசனம் கேக்கறச்சே அந்தப் பலகையையே அடிக்கடி பார்த்துண்டிருந்தேன்… என் கண்ணுக்கு ஆஞ்சநேய ஸ்வாமி வந்து ஒக்காந்ததா தெரியவே இல்லியே! பக்கத்துல இருந்த சகாக்களையும் கேட்டேன். அவாளும் ‘தெரியலே’னுட்டா. அதான்…”  மென்று விழுங்கினான் வேங்கடேசன்.

”சரி… சரி. இது உன்னோட முதல் சந்தேகம்! ‘ரெண்டு கொய்யாப் பழமும் வெச்சது வெச்சபடி அப்படியே இருக்கே! ஆஞ்சநேய ஸ்வாமி சாப்பிட்டிருந்தா, குறைஞ்சிருக்கணுமே’ங்கறதுதானே ரெண்டாவது சந்தேகம்?” என்று கேட்டார்.

 ”ஆத்மார்த்தமான பக்தியும், சிரத்தையும் இருந்தா ஆஞ்சநேய ஸ்வாமி பவ்யமா, பக்தியோடு அமர்ந்து ஸ்ரீமத் ராமாயண சிரவணம் பண்றத நாமும் தரிசிக்கலாம்! ஆஞ்சநேயர் விஸ்வரூபியா வந்து உட்கார்ந்துட்டார்னா அத பார்த்துட்டு, தாங்கிக்கிற சக்தி எல்லோருக்கும் இருக்குமா? அதனால அவர், சூட்சுமமா வந்து கேட்டுட்டுப் போவார்!” என்று விளக்கம் அளித்தார்.    ''உனக்கு கிரந்த எழுத்து வாசிக்கத் தெரியுமா?” என்று வேங்கடேசனிடம் கேட்டார்.

”தெரியும் குருநாதா” என்றான் அவன்.

 உள்ளேயிருந்து உபநிஷத் சம்பந்தமான ஒரு கிரந்த புத்தகத்தைக் கொண்டு வரச் செய்தார் ஆச்சார்யாள். அதில் ஒரு பக்கத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு, ஒரு சிறு பகுதியை சுட்டிக் காண்பித்து, ”இதை, ஐந்து நிமிஷத்தில் மனப்பாடம் செய்து அப்டியே என்னிடம் ஒப்புவிக்க வேண்டும். முடியுமா பார்” என்றார் சிரித்தபடி!

புத்தகத்துடன் சற்றுத் தள்ளிப் போனான் பிரசன்ன வேங்கடேசன். சரியாக ஐந்து நிமிடம் ஆயிற்று. ஆச்சார்யாளிடம் வந்தவன், அவர் குறிப்பிட்ட பகுதியை அட்சர பிசகின்றி ஒப்பித்தான்.

ஆச்சார்யாள் முகத்தில் பரம சந்தோஷம். புத்தகத்தைக் கையில் எடுத்தார். தான் உருப்போடச் சொன்ன அந்தப் பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு,

 ”வேங்கடேசா, நான் சொன்னபடி அஞ்சே நிமிஷத்துல படிச்சு ஒப்பிச்சுட்டே! நீ அந்த புஸ்தகத்திலேர்ந்து குறிப்பிட்ட அட்சரங்களை கிரகிச்சுட்டதால… அவை, அந்த இடத்திலேருந்து மறைஞ்சு போயிடலையே! கிரந்த எழுத்துக்கள்லாம் இருந்த இடத்துல அப்படியே இருக்கோல்லியோ? அதுமாதிரிதான் இதுவும்! தெய்வத்துக்கு நாம எதை அர்ப்பணிச்சாலும், அதுல இருக்கிற பக்தி சிரத்தையுடன் கூடின ருசியை மாத்திரம் ஸ்வீகரிச்சுண்டு, பதார்த்தங்களைப் பரம கருணையோடு நமக்கே விட்டுடுறார். வெச்ச கொய்யா ரெண்டும் வாடாம- வதங்காம, முழுசா அப்படியே இருக்கிற ரகசியம் இப்ப புரியறதா உனக்கு?”

பிரசன்ன வேங்கடேசன் பிரமித்தான். அங்கு, சற்று நேரம் அமைதி நிலவியது. அனைவரும் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தனர்.

பிரவசன பூர்த்தி நாள்! மதியம் மூன்று மணிக்கே மேடைக்கு ஆச்சார்யாள் வந்து விட்டார். உபன்யாசம், மிக உருக்கமாகப் போய்க் கொண்டிருந்தது. பூர்த்தி கட்டம். அனைவரும் மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது!

பெரிய வானரம் ஒன்று தாவித் தாவி அந்த உபன்யாச கூடத்துக்கு வந்தது. ஒருவரையும் லட்சியம் பண்ணாமல் மேடையில் பாய்ந்து ஏறி, ஆஞ்சநேய ஸ்வாமிக்காக போடப்பட்டிருந்த பலகையில், ஆச்சார்யாளைப் பார்த்தபடி- சாதுவாக அமர்ந்து கொண்டது! ஜகத்குரு சற்று நேரம் வைத்த கண் வாங்காமல் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். எதிரிலிருந்த கொய்யாப் பழங்களை ‘அது’ ஏறெடுத்தும் பார்க்கவில்லை! கூட்டம் இதைப் பார்த்து வியந்தது!

மாலை ஐந்து மணி. அதுவரை, அந்த வானரம் அப்படி இப்படி அசையவே இல்லை! பழங்களையும் தொடவில்லை. ஆச்சார்யாள் உபன்யாசத்தைப் பூர்த்தி செய்து, ‘பலசுருதி’ (பலன்) சொல்லி முடித்தார். பிறகு வலப் புறம் திரும்பி வானரத்தைப் பார்த்து,

”ஆஞ்சநேய ஸ்வாமி! ஸ்ரீமத் ராமாயணம் கேக்கறதுக்காக நீங்க வந்து உக்காந்திருக்கறதுல ரொம்ப சந்தோஷம்! அந்த ரெண்டு கொய்யாப் பழங்களும் உங்களுக்குத்தான்… ஸ்வீகரிச்சுக்கணும்” என்று கேட்டுக் கொண்டார்.கூட்டத்தை ஒருமுறை நோட்டம் விட்ட வானரம், பழங்களை எடுத்துக் கொண்டு, ஆச்சார்யாளையே வாஞ்சையுடன் சற்று நேரம் உற்றுப் பார்த்தது.

 கூட்டத்திலிருந்து குரலொன்று, ”ஆஞ்சநேயா… ராமா… ராமா!” என்று முழங்கியது. அனைவரும் குரல் வந்த திசையை ஆர்வத்துடன் பார்த்தனர். அங்கே பிரசன்ன வேங்கடேசன், கண்களில் நீர் மல்க கைகூப்பி நின்றிருந்தான்! இந்த நேரத்தில், மெள்ள மேடையை விட்டுக் கீழிறங்கிய வானரம், ராஜநடை போட்டபடி நடந்து சென்று மறைந்தது.

கண்களில் நீர் முட்ட ஜகத்குருவிடம் வந்த பிரசன்ன வேங்கடேசன், ”குருதேவா! ஒங்க பக்கத்துல பலகையில வந்து ஒக்காந்துட்டுப் போனது, என் கண்ணுக்கு வானரமா தெரியலே. சாட்சாத் ஆஞ்சநேய ஸ்வாமி, ஆஜானுபாகுவான சரீரத்தோட கம்பீரமா உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன்! ஆச்சார்யாளோடு ஸ்வாமி ஏதோ பேசியதையும் பார்த்தேன்! நீங்க சொன்ன தாத்பர்யம் இப்ப எனக்குப் புரிஞ்சுடுத்து குருநாதா!” என்று ஜகத்குருவின் பாதார விந்தங்களில் விழுந்தான். எத்தனையோ பேர் தேற்றியும் அவனது கண்ணீரை மட்டும் எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த பரப்பிரம்மம் கரம் உயர்த்தி வேங்கடேசனை ஆசீர்வதித்தது!

sivan jaykay

unread,
Dec 20, 2017, 7:48:38 PM12/20/17
to amritha varshini
திருவெம்பாவை 5 J.K SIVAN

சிவனை நினைந்தார் எவர் தாழ்ந்தார்.?

பனிமலையில் வெற்றுடம்புடன், தலையில் இன்னும் குளிர்ந்த ரெண்டு விஷயங்கள். ஒன்று குளிர்ந்த பால் போல் ஓளி வீசும் தண்ணொளி வெண்ணிலாவான சந்திரன். போதாதற்கு பனிக்கட்டிகள் பாயசத்தில் முந்திரி போல் மிதக்கும் பனிக்கட்டிகள் கொண்ட சில்லென்று எலும்பை ஊடுருவும் கங்கை நதி... உலகத்தின் உயரத்தின் மேல் பனிமலையோடு ஒன்றாக வாழம்போல் பால் வெண்ணீறு பூசி கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்போடு சிவன்....பிரமனும் பெருமாளும் அடிமுடி காணாது வியந்தவன். அக்னிப்பிழம்பாக ஒளிமயமான தாணு. ஆதிஅந்தமில்லாத பழமனாதி. நாம் அவனை இவ்வாறு அறிந்துகொள்வோம். அது போதும். அவனை இதற்கு மேல் அறிவோம் என்ற வார்த்தைக்கு இடமே இல்லை. அறியவொண்ணா அரன் அவன்.

பெண்ணே தேன் போல், பால் போல் இனிக்க பேசுபவளே, எழுந்திரு. நாங்கள் சிவன் இல்லை. குளிரில் நடுங்குகிறோம். வா, வந்து கதவைத் திற. அவனை நினைவில் மட்டும் நிறைத்து வைத்துக்கொள்வோம். அறிய முடியாததை அறிந்து கொள்ள முயல்வதே முடியாது. நமது சிற்றறிவுக்கு எட்டியவரை அவனை புகழ்ந்து போற்றி பாடுவோம்.

அவனுக்கே நாம் ஆளாவோம். நம்மை அவன் அல்லவோ வழி நடத்தி செல்பவன். கடலில் மிதக்கும் காகித கப்பல் நாம். எந்நேரமும் அழிபவர்கள். நம்மை காப்பாற்றி, சீராக்கி, நல்லொழுக்கம் தருபவன் சிவன். அதற்கு நன்றி சொல்வதற்கே இனி வரும் ஜென்மங்கள் போதாதே.
நன்றாக எண்ணெய் தடவி, கம்மென்று வாசனை வீசும் மலர் அணிந்து, கூந்தலை சிங்கரித்துக்கொண்டு சப்ர மஞ்ச கட்டிலில் சாய்ந்திருக்கும் பெண்ணே, வாசலில் சிவனே சிவனே என்று போற்றிக்கொண்டு சிவனே என்று உனக்காக காத்திருக்கும் எங்கள் நினைவு கொஞ்சமும் உண்டா உனக்கு ? சீக்கிரம் எழுந்து வாயேன். கொஞ்சம் சிவ தத்துவம் புரிந்துகொள். வா. முதலில் தமோ குணத்திலிருந்து விடுபட்டு... மற்றது தானாக விளங்க ஆரம்பிக்கும்.

மணிவாசகரின் அழகிய பாடலை இனி படியுங்கள் கொஞ்சம் புரியும்.

''மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்க ளேபேசும்
பால்ஊறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவுஅரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
ஏழக் குழலி பரிசு ஏலோர் எம்பாவாய் !! (5)

amarnath ice lingam.png

Sivan Krishnan

unread,
Dec 20, 2017, 7:51:41 PM12/20/17
to amritha varshini
அக்காரவடிசல் சுடச்சுட. - J.K. SIVAN

மார்கழி 4ம் நாள் ''ஞான மழை''

நாம் இப்போது ஆயர்பாடியில் :

காற்று ஈரத்தோடு குளிர்ச்சியாக வீசும்போது அதன் அருமையே தனி. வெயில் காலத்தில் வறண்ட காற்று உடலையும் உள்ளத்தையும் களைத்துப் போக செய்கிறதே. எல்லையற்ற கடலாக ஓ வென்று யமுனை நதி ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் கம்பீரம் கண் நிறைந்த காட்சியாக அது ஓடுவதில் தான். ஒரு சில பட்சிகள் மட்டுமே பொழுது தெரியாமல் சீக்கிரமாக குரல் கொடுத்தன. சிறுமிகள் சேர்ந்து விட்டனர். நடுவே ஆண்டாள்.

"இன்னிக்கி மார்கழி 4ம் நாள் காலையிலேயே என்னமாக இருட்டிக்கொண்டு வருகிறது பார்த்தாயா..நேற்று தானே நாமெல்லாம் அந்த நாராயணனைப்பற்றி பேசினோம், பரிசுத்தமாக ஸ்நானம் செய்துவிட்டு பாடி ஆடினோம். நிறைய மழை இருந்தால் தான் சுபிக்ஷம் என்பதற்காகதானே இல்லையா? ஆண்டாள் தலையைச் சாய்த்து ஆர்வத்தோடுஅந்த பெண்களிடம் கேட்டாள்.

“ஆண்டாள் நீ சொன்னால் அது நிஜம்தான் அம்மா எப்போதுமே .”

“இப்போ எல்லாரும் அந்த வருணனுக்கு நன்றி சொல்வோம் வாருங்கள் ''

"வருண பகவானே, நீ எங்களுக்கு சமர்த்தியாக இடி இடித்து, ஜோ என்று மழையைக் கொடு . சமுத்ரம் எல்லாம் ரொம்பணும். மேலே பார்த்த மேகம் வானம் எல்லாம் அந்த கிருஷ்ணன் மாதிரி கருப்பாக இருக்கணும். மின்னல் அந்த நாராயணன் சக்ரம் மாதிரி மின்னணும். இடி சத்தம் கிருஷ்ணனுடைய பாஞ்ச ஜன்யம் மாதிரி ஒலிக்கணும் . மழை விடாது பெய்யணும். எங்க ஊர் யமுனையில் நிறைய தண்ணீர் வந்து நாங்க ரொம்ப சந்தோஷமாக குளிக்கணும் ,

ஆண்டாள் நீ சமுத்ரம் பார்த்திருக்கியா?

'இல்லையே.. அது ரொம்ப பெரிய ஆறு, இந்த யமுனையை விட என்று மட்டும் தெரியும்.''

''எங்களுக்கு தெரியாது ஆண்டாள் , நீ ரொம்ப விஷயம் தெரிந்தவள் . எப்படி உன்னாலே இவ்வளவு அழகாக ஒண்ணுஒண்ணுக்கும் உதாரணம் எல்லாம் கொடுக்க முடிகிறது. மழை அந்த நாராயணனுடைய சார்ங்கம் என்கிற வில்லிலிருந்து புறப்படும் சரங்கள் மாதிரி விடாமல் தொடர்ந்து பெய்யணும் என்கிறது ரொம்ப பொருத்தமாக புரியும்படியாக சொல்கிறாய். இதெல்லாம் எங்கடி படிச்சே''.

'''நான் எங்க படிச்சேன். மனசிலே தோணினது தான்.''

''ஆண்டாள், உன்னோடு நாங்க இந்த நோன்பு நோர்க்கும் போது நிறையவே தெரிந்து கொள்கிறோம். நதியில் நீராடி, ஈரத் தலையைத் துவட்டி முடிந்து கொண்டு பரிசுத்தமாக அந்த பெண் குழந்தைகள் அந்தரங்க சுத்தியோடு நாராயணனை வேண்டின. பாடிக்கொண்டே வீடு திரும்பின. பிரசாதங்கள் படைத்து நோன்பு செய்தனர்.

ஆண்டாள் உனக்கு நன்றி. எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஆயர்பாடி சிறுமிகள் வீடு சென்றனர்.

நாளைக் காலையில் மீண்டும் அவர்களை ஆயர்பாடியில் சந்திப்போம்.அதற்குள் தெற்கே மீண்டும் நேரே வில்லிப்புத்தூர் திரும்புவோம்.

வில்லிப்புத்தூரில் விஷ்ணு சித்தர் மனத்திலும் கோதை உருவாக்கிய மேற்கண்ட காட்சி தத்ரூபமாக பிரதிபலித்தது.

அந்த சின்னஞ்சிறுமிகள் குதூகலமாக ஆண்டாளைச் சுற்றி ச் சுற்றி வந்து நூறு கேள்விக் கணைகளைத் தொடுத்து அவளும் ஓயாமல் அவர்களுக்கு பதில் சொல்லும் பாங்கு அவருக்கு ரொம்பவே பிடித்தது. எல்லாம் கோதையின் கற்பனை. என்ன திறமை. இதை அடிப்படையாகக் கொண்டதல்லவோ மேற்கண்ட கோதை தீட்டிய சித்திரம்.

''எங்கே மீண்டும் ஒருமுறை அந்த பாசுரத்தைப்படி. இல்லை, இல்லை, பாடு கொழந்தே!''

விஷ்ணுசித்தர் நீட்டியிருந்த காலை மடக்கி கையைக் கட்டிக்கொண்டு எதிரே இருந்த ரங்கனின் பதுமையைப் பார்த்துக்கொண்டே காதைத் தீட்டிக்கொண்டார். அப்பாவை மகிழ்விக்கவும், தானே மீண்டுமொரு தரம் அந்த நாராயணனை, அரங்கனை,. மனம் களிக்க பாடுவதற்கும் கோதை தயாரானாள். கண்கள் மூடி இருந்தன. அவள் வில்லிப்புத்தூரில் இல்லை. பிருந்தாவனத்தில் கண்ணனோடு அல்லவா இருந்தாள்! . ஆனால் குரல் மட்டும் அங்கேயிருந்து வில்லிப்புத்தூரில் கேட்கிறதே.

''ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.''

பெரியாழ்வார் கண்கள் குளமாயின. பெண்ணைக் கட்டி உச்சி முகர்ந்தார். தெய்வமே! என்ன ஒரு உயர்ந்த தத்துவத்தை எளிதாக்கி விட்டாய். அந்த பாசுரம் அவர் மனதில் எவ்வாறு பதிந்தது தெரியுமா?

''எவ்வளவு பலமான சக்தியா யிருந்தாலும், மழையோ, இடியோ, நீரோ நெருப்போ, பரமனின் அடியார்களை அருகில் நெருங்காது என்பதை அந்த சிறிய பெண்கள் மூலம் கோதை உணர்த்துகிறாளே. நாடு செழிக்க வேண்டும் என்ற பெருந்தன்மை பரந்த மனப்பான்மை பிராட்டிக்கு அல்லவோ உரித்தானது. கோதையே அந்த பிராட்டிதான்.

வால்மீகி சொன்னது நினைவுக்கு வருகிறதா?
நாற்பதாயிரம் அரக்கர்களை ராமன் கொன்றபோது, எவருமே அவன் கோதண்டத்தை கையில் எடுத்ததையோ, காது வரை நாணை இழுத்ததையோ, அம்பைக் குறி பார்த்து செலுத்தியதையோ மின்னல் வேகத்தில் சரங்கள் சென்று தாக்கியதையோ காணவில்லை. அரக்கர்கள் கதறி விழுந்தது ஒன்றுதான் தெரிந்தது.

ஆண்டாளின் ஆசை என்னவென்று தெரிகிறது. நிறைய இடி இடித்து, கொட்டோ கொட்டு என்று ஆயர்பாடியில் மழை பொழியவேண்டும். ஆநிரைகள், மக்கள் சுபிக்ஷமாக வாழவேண்டும். அவ்வளவுதான்.

''ஆஹா, ஆசார்யன் தான் பிரம்ம ஞானம் கொண்டவன். பரமனன்றி வேரெதிலும் மனம் லயிக்காது. எப்படி கருமேகம் உப்பான கடல் நீரை சுமந்து இனிய மழையாக பொழிகிறதோ அவ்வாறு ஆண்டாள் பகவத் விஷயத்திலும், போதனையிலும் சிறந்து விளங்குகிறாளே ஞான மழை பொழிகிறாளே."

Sivan Krishnan

unread,
Dec 20, 2017, 7:51:41 PM12/20/17
to amritha varshini
மணிவாசகரின் மனம் இனிக்கும் திருவெம்பாவை. 3 - J.K. SIVAN


இந்த மார்கழி மாதத்திற்கு ஒரு தனிச் சிறப்பு. ஆண்டாளின் திவ்ய திருப்பாவையும் மணி வாசகரின் திருவெம்பாவையும் ஹரியையும் ஹரனையும் இரு செவிகளிலும் நிரப்பி மனதை அதன் மூலம் பரிசுத்தப் படுத்திக்கொள்ள அதிசய வாய்ப்பு நமக்கு.

திருவெம்பாவையில் மூன்றாவது பாடலாக மாணிக்க வாசகர் நினைவூட்டுவது:
''முத்துஅன்ன வெள்நகையாய் முன்வந்து எதிர்எழுந்துஎன்
அத்தன்ஆ னந்தன் அமுதன்என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துஉன் கடைதிறவாய்
பத்துஉடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குஉடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கு ஏலோர் எம்பாவாய் !!3

அழகிய பெண்ணே, உன் முத்துப்போன்ற வெண்மையான பற்கள் ஒளிவீச, வாய் திறந்து நீ பேசுபவள். உனது இனியகுரலில் நீ பேசுவது எப்போதும் என் மனத்தை கொள்ளைகொள்கிறதடி. என் முன்னே, நீ எல்லார்க்கும் எதிராக, வந்து, ஆஹா அந்த பரமேஸ்வரனைப் பற்றி எவ்வளவு அழகாய் போற்றுபவளாச்சே. நானும் நீ சொல்வதை கொஞ்சம் திரும்பிச் சொல்கிறேன்:

''என் அப்பன், என் தந்தை, ஆனந்த ஸ்வரூபன், நினைத்தாலே அமிர்தமாக இனிப்பவன்,உமாமகேஸ்வரன்''. ஆஹா, இதை விட இனிய சொல்லொன்று வாயினின்று வெளிவர முடியுமா?

இப்படி எல்லாம் சொல்பவள் இன்று ஏன் இன்னும் உறக்கம் உனக்கு? வாசலில் நாங்கள் வந்து நிற்பது தெரியவில்லையா, எழுந்திரு உன் வீட்டு கதவை திற. இந்த பெண்கள் எல்லோருமே ஈசனின் இணை பிரியாதவர்கள். அர்த்தநாரியின் அடிமைகள். குண சீலர்கள். ஒழுக்கம் தவறாதவர்கள். சிவ பக்தர்கள்.

என் போன்றோர் இப்போது தான் வந்து சேர்ந்த புத்தம்புது அடிமைகள். தயவு செயது எங்களை ஆராயாதே. நிறைய குற்றம் தென்படும். பேசாமல் எங்களையும் உங்கள் போன்றோரோடு இணைத்துக் கொள். இதனால் ஏதாவது கெடுதல் விளையுமா என்ற ஐயம் துளியும் வேண்டாம். எல்லாம் நல்லது தான். அதுவும் எங்களுக்கு.

அதற்குப் பெயர் தான் சுருக்கமாக ''சத் சங்கம்''

_nagalingapoo.jpg

sivan jaykay

unread,
Dec 20, 2017, 7:53:06 PM12/20/17
to amritha varshini
 

                                     மணிவாசகரின் மனம் இனிக்கும் திருவெம்பாவை. 4 

''ஒள்நித் தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்
உள்நெக்கு நின்றுஉருக யாம்மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில்ஏலோர் எம்பாவாய் !!  (4)


மணி வாசகர் ஆண்டாள் திருப்பாவையில் சிந்தித்தவாறே  திருவெம்பாவையில் காட்சிகளை வைக்கிறார். அற்புதமான தமிழ் இருவருடையதுமே.  ஒன்று  விஷ்ணு பக்தர்களை மகிழ்த்துவது போல் மற்றது  சிவ பக்தர்களை சந்தோஷப்படுத்துகிறது.  இரண்டுமே  தமிழ் விரும்பிகளுக்கு  அமிர்தமாக கிடைத்தவை. 

திருவெம்பாவையில் தலைவியான பெண் மற்ற பெண்களையும் சேர்த்து சிவனை வணங்கி விரதமெடுக்க விடிகாலையில் இன்னும் வந்து சேராத பெண்களை வீடு சென்று எழுப்பி நீராட அழைத்துக் கொண்டு செல்லும் காட்சி. 
ஒரு பெண் வீட்டில் அரைத்த தூக்கத்தில் இருப்பவள் ''என்னடி அவசரம் என்னை எழுப்புகிறாய், எல்லோரும் வந்து விட்டார்களா என்று எண்ணிப் பார்த்து விட்டு என்னை அப்புறமாக எழுப்பு '' என்கிறாள். 
 
''எல்லோரும் வந்தாகி விட்டார்கள் உன்னைத்தவிர. சீக்கிரம் கிளம்பு ''  என்று எழுப்பும் பெண் கூற அவளும் தயாராகி கிளம்புகிறாள்.

இந்த பாடல் சொல்வது:   ஜொலிக்கும் முத்தைப்போல  வெண்மைநிற முத்துக்களை கோர்த்தது போன்ற பற்களை உடையவளே, இன்னுமா உனக்கு பொழுது விடிந்துவிட்டது தெரியவில்லை.  

''என் பல் இருக்கட்டும். அழகிய கிளியைப் போன்று பேசுபவளே,  நீ  முதலில் எண்ணி ப்பார்த்து சொல் மற்றவர்கள் எல்லோரும் வந்துவிட்டார்களா?''  என்று  வீட்டிற்குள் இருப்பவள் கேட்க, 

''நான் எண்ணிச்சொல்வது இருக்கட்டும், அதுவரை நீ  சும்மா விருதாவாக படுக்கையில் படுத்து காலத்தை ஓட்டாதே. நினைத்துப்பார் அந்த  தேவர்களும் விண்ணுலகோரும் போற்றும் அமிர்த ரூபனை, வேதங்கள் தொழுதேத்தும்  ஞான தேசிகனை, கண்ணுக்கினியானை,  பரமசிவனை, போற்றி பாடு, மனம் உருக வேண்டுவாயாக. 

அதைவிட்டு  நான் எண்ணிச் சொல்வதற்குள் நேரத்தை வீணாக்காதே. நீயே வந்து எண்ணிக்கொள். அப்படி யாராவது விட்டுப்போயிருந்தால், அவர் களும் வரும்வரை கிடைக்கும் நேரத்தில் மீண்டும் போய் தூங்கு.



sivan jaykay

unread,
Dec 25, 2017, 8:01:49 PM12/25/17
to amritha varshini

                                              ''சேட்டு வந்தார்''

இரு வருஷங்களுக்கு முன்பு பாண்டுரங்கனைப் பற்றி  ''தெவிட்டாத  விட்டலன்''  என்று ஒரு புத்தகம் எழுதினேன். அதில்  100 குட்டி கதைகளாக  பாண்டுரங்கனின் மஹாத்மியத்தை   ஸ்ரீ பக்த விஜயம் என்ற மூல நூலை அடிப்படையாக கொண்டு  குழந்தைகளுக்கு தயாரித்து மிக்க நல்ல வரவேற்பை பெற்று. அதை ஆங்கிலத்திலும்  ''VITOBA THE NECTAR '' என்ற  தலைப்பில் எழுதி நல்ல வரவேற்பை பெற்றது.

அதில் ஒரு கதை இது.  இதை  ஹிந்து கல்ச்சர்  என்ற  டிவி க்காரர்கள்  குட்டிக்கதையாக சொல்லுங்கள் என்று கேட்டதற்கிணங்கி சொன்னேன். அதையும் இத்துடன் இணைத்துள்ளேன்.    

  ++                   

ஒருவரது  வாழ்க்கை  மற்றவர்களால் நினைவு கூறப்படுகிறது  என்பது எதனால்? அவரிடம்  எல்லோரும்  போல் அல்லாது  ஏதோ ஒரு சிறப்பு  தன்மை இருந்து அவரால் வெளிப்படுத்தப்  படுவதால்  தானே!!.  அது  பணத்தால், அழகால், எளிமையால்,  த்யாகத்தால் என்றெல்லாம்  பலவகை படலாம்.   நாமதேவர் வாழ்க்கை   நம்மால்  சிறப்பாக நினைக்கப்  படுவது  அவரது  எளிமையான,  பரிசுத்தமான, சிம்பிள், பக்தியினால் தான். உள்ளத்தை  கபடு இன்றி பரிசுத்தமான  பீடமாக  மாற்றி அதில் விட்டலனை  பரிபூர்ணமாக ஏந்தி, தோழனாக, ஆசானாக,  சகலமும் நீயே  என்ற சரணாகதி  தத்வமுடன்  வாழ்ந்த தன்மையால் தான்.  சரி,  கதைக்கு வருவோம்

நாமதேவர்  இப்போது இளைஞர்.  ராஜாய் அவர் மனைவி. கல்யாமாகிவிட்டதால் அவர் ஒன்றும் மாறிவிடவில்லை. 24 மணி நேரமும்  பாண்டுரங்கன் தான், அவன் கோவில் தான், அவன் பக்தர்கள் கூட்டம் தான். நாம சங்கீர்த்தனம்  ஒன்றே மூச்சு.   அவருக்கு ஒரு மகன். நாராயணன் என்று  பேர். அந்த குடும்பத்திற்கு  வருமானம்  ஈட்டிகொண்டிருந்த ஒரே நபரான  அப்பா  தாமாஜி காலமாகிவிட்டதால்  அம்மா கோனை, மனைவி, குழந்தை ஆகியோரும்  நாமதேவர் கொண்டுவரும்  வருமானத்தையே  நம்பி வாழ்ந்தபோதிலும் அவர்  இதெல்லாம்  பற்றி ஸ்மரணையே இல்லாமல்  இருந்தாரே!!.  எங்காவது வேலைக்குப் போனால் தானே சம்பாதிக்க முடியும்.  எப்போதும் பாண்டுரங்கனோடு கோவிலில் இருந்தால்??

உடுக்க உடையோ  ஒருவேளை உணவோ  கூட இல்லாத  நிலைமை. மனைவி  ராஜாய் அவர் தாய் கோனை அனைவரும் வருந்தி  "விட்டலா, நீயாவது  எதாவது செய்யேன். நாமதேவரை கொஞ்சம்  எங்களை பற்றியும்  நினைக்க செய்யேன். வேறே கதியின்றி நிற்கிறோமே" என்று அழுதனர்.     

 ரெண்டு மூணு  நாள் கழித்து  பண்டரிபுரத்துக்கு  ஒரு வேறு ஊர்க்காரர்  வந்தார்.  அவர் பெயர் கேஷவ்  சேத். பணக்கார சேட்டு.  விட்டலன் கோயில் சென்று பார்த்து விட்டு நாமதேவர்  வீட்டுக்கு  வந்தார். வீட்டில்  ராஜாய் மட்டும்  தான் இருந்தாள்.

"இது தானே அம்மா  நாமதேவர்  வீடு?

"ஆம். ஆனால்  அவர்  இல்லையே"   நீங்கள்  யார்?

"நான்  அவர் நண்பன்.  கேசவ்  சேத்.  அவரைத்தான்  பார்க்க  வந்தேன்"

"சாயந்திரமாக  வந்தால்  அவரை பார்க்கலாம்"  

"ஏதாவது  சாப்பிட  இருக்கிறதா?"

"அய்யா, எங்களுக்கே ஆகாரத்துக்கு  வழியில்லை.  நாமதேவர் ஊரிலுள்ள  சாதுக்களை அழைத்து வந்து  உணவு கேட்கும் போது  என்ன செய்வது  என்பதே  கவலையா யிருக்கிறதே"   

"அம்மா  இது விஷயமாகத்தான்  நான்  அவரை பார்க்க வந்தேன். அவருக்கு  ஊரெல்லாம்  கடன் இருக்கிறது.  கடனுக்கு  சாமான் வாங்கி  உணவு படைத்து சாதுக்களை  திருப்தி  அடையச்  செய்கிறார், வீட்டிலிருப்ப   வர்களின்  ஞாபகம்  கூட  கிடையாது  என்று  கேள்விப்பட்டேன்.அதனாலேயே  அவருக்கு  உபயோகமா   யிருக்கட்டும் என்று  இந்த  பை  நிறைய  தங்க காசுகள்  கொண்டுவந்தேன். இந்தாருங்கள்  இதை  அவரிடம் சேர்ப்பியுங்கள்".    பை கை மாறியது.

"உள்ளே வாருங்கள்  தீர்த்தமாவது  சாப்பிடுங்கள்." 

"பரவாயில்லை  அம்மா.  நான்  வருகிறேன்"   சேட்டு நகர்ந்தார் 

நாமதேவரின் தாய் கோனை  எங்கோ சென்று  கொஞ்சம்  அரிசி  பருப்பு  கடன் வாங்க சென்றவள் அது  கிடைக்காமல்  வருத்ததோடு  விட்டலன் ஆலயம் சென்று அவனை கேள்விக்கணைகளால் தாக்கினாள்.

"விட்டலா, இன்னும்  எத்தனை நாள்  எங்களை  இப்படி  வாட்டி வதைக்கபோகிறாய்?"  

அங்கே அமர்ந்து பக்தர்களோடு  பாடிக் களித்துகொண்டிருந்த  நாமதேவை  சபித்து  வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தாள்.   

வீட்டு வாசலிலேயே உள்ளிருந்து  கமகமென்று  மணம் மிக்க  உணவு பண்டங்களின் வாசனை.  குழந்தையும்  ராஜையும் நல்ல உடை அணிந்திருந்தனர். அவர்கள் மேல்  நகை ஆபரணங்களும்  மின்னிற்று.

 இதை கவனித்த  நாமதேவர்  "இதெல்லாம்   ஏது .  எதற்கு இந்த  வழக்கமில்லாத  பகட்டும் ஆடம்பரமும்  என்று  வருந்தினார்  

"ஏது  இதெல்லாம்  என்று கேட்டபோது எனக்கு ஒன்றுமே  தெரியவில்லை  என்றாள்   தாய்.

ராஜாய் பதிலே பேசவில்லை. அவள்  அவரோடு பேசியே  எத்தனையோ காலம் ஆச்சே!! . வீட்டில்  உதவி செய்துகொண்டிருந்த  ஜானி என்ற பணியாளன் விவரம் எல்லாம் சொன்னான் 

"விட்டலா,  ஏன் என்னை மாற்றிவிட சோதனை செய்கிறாய்? .  நீ கொண்டு வந்ததெல்லாம்  உன் பக்தர்களுக்க ல்லவோ போய் சேரவேண்டும்  என்று  அனைத்து  பொருள்களையும்  ஆலயத்துக்கு எடுத்து சென்று  எல்லாருக்குமாக  தானம்  செய்தவர் நாமதேவர். இப்படி  ஒருவரை நாம்  பார்க்கமுடியுமா?  

முடியுமே,  யார் யார் எல்லாம்?  என்று வரும்  கதைகளே  சொல்லட்டும்.  

 இந்த கதையை வீடியோவில் சொன்னதை தான்  ஹிந்து கல்ச்சர் டிவி விடியோவாக்கியது. அவர்களது இணையதளத்தில் ஒளி பரப்பிவருகிறது.  அந்த லிங்க்:    https://youtu.be/I0Ypwfeh2_I

sivan jaykay

unread,
Dec 25, 2017, 8:01:49 PM12/25/17
to amritha varshini
திருவெம்பாவை  6

''ஆஹா, அதற்கென்ன, இதோ இப்போதே செய்து முடித்துவிடுகிறேன்''  என்று நாம் அடிக்கடி சொல்வோம். அதை கேட்போரும் தலையை ஆட்டி சந்தோஷமாக சிரித்துக்கொண்டு செல்வார்கள். மறக்காமல் கை கூப்பி வணங்குவார்கள். ஆனால் நமக்கே தெரியும்,  நாம் அப்படி செய்பவர்கள் இல்லை, நம்மால் முடியாததை முடியும் என்று நம்புபவர்கள்.  இதை மணிவாசகர் நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார் அப்போதே. அதாவது பலநூறு  ஆண்டுகளுக்கு முன்பே.

''நீ தானேடி,  நேற்று சொன்னவள். என்ன சொன்னாய் என்பதே மறந்து விட்டதா?  '' நாளைக்கு பார்  காலையில் நானே  வந்து எங்கள் எல்லோரையும் எழுப்புகிறேன்'' என்று.  இதோ நாங்கள் உன் வீட்டுக் கதவை தட்டுகிறோம். நீயோ இழுத்துப் போர்த்திக்கொண்டு மார்கழியில்  காலையில் இன்னும் தூங்குகிறாய்.  நீ இங்கிருக்கிறாயே, நீ சொன்ன பேச்சு எந்த பக்கம் போயிருக்கிறது?

எங்கோ இருக்கும், எங்கும் இருக்கும் அந்த மஹாதேவன்  தானே  வந்து  நமக்கு அருள்கிறான் என்பதாவது அறிவாயா?.ஆனந்தமாக  அவனைப் போற்றி பாடிக்கொண்டு வருகிறோம் அதாவது உன் காதில் விழுகிறதா பெண்ணே? ஆமாம் பெண்களே என்று ஒரு வார்த்தை, படுக்கையிலிருந்து எழுந்து வந்து சொல்லமாட்டாயா?
ஈசன் மேல் பாசம் இல்லையோ  பேய்ப் பெண்ணே?   சரி உனக்காவது அப்படி இயற்கையாக தோன்றவில்லை என்றால்  நாங்கள் வந்து சொல்கிறோமே அதையாவது மனதில் வாங்கி எங்களோடு சேர்ந்து சிவன் புகழ் பாடமாட்டாயோ?  உன் குணமே அலாதி. விசித்ரமானதடி.  எழுந்திரு, எங்களுக்காகவாவது பாடு. பரமேஸ்வரா என்று வாய் நிறையச் சொல். 

நாங்கள் அறிவோம். நீ ஒரு பக்தை. அழகிய புத்திசாலிப் பெண். உன் நெஞ்சம் நெக்குருகி நீலகண்டனை பாடும் என்று எமக்கு தெரியும். எங்கே அதை நிரூபி. பார்க்கலாம். 


''மானே நீ நென்னலை நாளைவந்து உங்களை
நானே எழுப்பவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ

வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய்திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடுஏலோர் எம்பாவாய் !!  (6)

sivan jaykay

unread,
Dec 25, 2017, 8:02:17 PM12/25/17
to amritha varshini

சுடச்சுட அக்காரவடிசல்    --      ஜே.கே. சிவன் 
மார்கழி  7வது நாள் 

                                                                         'நாராயணன் மூர்த்தி கேசவன்''

''கோதை கோதை, எங்கேம்மா இருக்கே நீ?''

''இதோ வந்துட்டேன் பா,''
''என்ன பண்ணிண்டு இருக்கே''
 ''ஒரு புது ரோஜா மொட்டு இன்று காலை மலர்ந்திருக்கிறதே. அதோடு பேசிக்கொண்டிருந்தேன். அதற்கு ரங்கம்மா என்று பேர் வைத்தேன்''. 

முகத்தில் சந்தோஷத்தோடு உள்ளே நுழைந்தாள் கோதை. இன்று மழையில்லை, அவ்வளவாக குளிரும் தெரியவில்லை. காற்று சக்தி குறைந்து வீசியதில் அதிக குளிரை தன்னோடு தூக்கி வந்து வீசவில்லை. 

நந்தவனத்தில்   என்றுமில்லாத அளவுக்கு குண்டு மல்லிகை நிறையவே பூத்திருந்து மணத்தை வாரித் தெளித்தது. கோதை கை நிறைய மல்லிகை 
அடர்த்தியாக தொடுத்து   ரங்கனுக்கு மாலை தயார்.  .

''இன்னிக்கி மார்கழி 7வது நாளாச்சே. அந்த கிருஷ்ணன் மேல் என்னம்மா பாடப்போறே?''

அந்த அதி காலையிலேயே அருகில் வந்து அமர்ந்துகொண்டு விட்டார் விஷ்ணுசித்தர். அவர் கை  அவரது செல்லப்பெண், அந்த புண்யவதி,  கோதையின் சிரத்தை தடவிக்கொடுத்தது.நந்தவனத்திலிருந்து வந்த கோதையின் மேனியிலிருந்து  ஒட்டிக்கொண்டு வந்த மல்லிகை மணம் ஆஸ்ரமம் பூரா வீசியது.

''இதோ பாருங்கள் அப்பா. உங்களால் படிக்க முடியாது. நெருக்கி நேருக்கு  ஓலைச்சுவடியில்  எழுதியிருக்கிறேன். நானே படிக்கிறேன். அப்பறமா அதை பாடுகிறேன்''.

 ஓலைச்சுவடியை வாங்கிப் பார்த்து தலையாட்டினார் சித்தர். பாசுரத்தை வார்த்தை வார்த்தையாக கோதை வாசித்தாள். பிறகு  அதை ராகமாக பாடினாள் .

""கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.''

கண்களை மூடிக்கொண்டு இந்த பாவைப்பாடலில் வரும் காட்சியை ஆயர்பாடியில் மனக்கண்ணால் கண்டு களித்தார் பெரியாழ்வார்  என்று பின்னால் உலகம்  போற்றப்போகின்ற விஷ்ணு சித்தர்.

இவர்களை அப்படியே விட்டுவிட்டு  ஆயர்பாடி சென்று அங்கே நடப்பதை பார்க்கவேண்டாமா?

++

பொழுது விடிந்து விட்டதே. ஆண்டாள் தான் வேக வேகமாக வருகிறாள். தோழிகளைத் தேடுகிறாள்.

அதுக்குள்ள, இன்னியோடு மார்கழி 7 நாள் ஆயிட்டுதே!! இன்னிக்கும் நாம போய் கதவை தட்டினால் தான் இந்த பெண்கள் எழுந்திருப்பாளோ ! சரி வீடு வீடாக ஏறி கதவைத் தட்டுவோம் ''

"ஏ பெண்களே எழுந்து வாருங்களடி சீக்கிரமாக . மரத்திலே எல்லா பட்சிகளின் கானம்,வண்டுகளின் கீச் கீச் சத்தம், எல்லா வீட்டிலேயும் கை வளை குலுங்க சர் சர் னு கயிற்றை மத்தில் கட்டி தயிர் கடைகின்ற சத்தமோ எதுவுமே உங்கள் காதிலே விழவில்லையா? வாங்கடி அழகிகளா, வழக்கம் போல நாராயணன் பெருமை பாடுவோம், எழுந்திருங்கள் , கதவை சீக்கிரம் திறவுங்கள்.  சீக்கிரம் “ ஆண்டாள் சிறந்த பொறுப்பான தலைவி அல்லவா. நோன்புக்கு ஆள் சேர்க்கிறாள்.......

+
வில்லிப்புத்தூரில்  ...பாசுரமும் அதன் காட்சியும் கோதையின் குரலில் தேனினிக்கும் பாடலாக வெளிவந்து முடிந்தது.

''அப்பா அப்பா '' கோதையின் குரல் சித்தருக்குக் காதில் நுழையவில்லை.  கண்ணை மூடி ரங்கனின் சிலை முன்னே அமர்ந்திருக்கிறார். அவர் தான் ஆயர்பாடியில் வீடு வீடாக போய் ஆண்டாளோடு சேர்ந்துகொண்டு மனதளவில் ஒவ்வொருவீடாக சென்று  கதவைத் தட்டுகிறாரே .

நேரம் நழுவியது. கண் திறந்த விஷ்ணுசித்தர் கோதையை கண்ணாரக் கண்டு இரு கை தூக்கி வாழ்த்தினார். அமைதி நிலவும் அந்த விடியற்போதிலே விஷ்ணு சித்தர் வெளியே சென்று அன்று மலர்ந்த அந்த ரோஜா செடியின் எதிரே கைகட்டி யோசிக்கிறார். பாசுரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று அலசுகிறார்.

''கிருஷ்ணனை துதிக்க எல்லாப் பெண்களையும் எழுப்புகிறாள் ஆண்டாள்.

''எதுக்குடி ஆண்டாள் இவ்வளவு சீக்ரம் எழுப்பறே. ஒரு பெண் புலம்புகிறாள்

'ஏய் எழுந்திருடி, வெளிச்சமே வந்துட்டுது. வலியன் குருவி கீச் கீச் என்று கத்தறதே கேக்கலையா உனக்கு. ஆகாரம் தேட கிளம்பிட்டுதே. பகவானைக்காட்டிலும் பாகவதர்கள், பக்தர்கள் உயர்ந்தவர்கள். நமது கிராம ஆய்ச்சியர் தயிர் கடைய ஆரம்பிச்சாச்சு. எல்லோருடைய கை வளை, மத்து சத்தம், தலையை அசைக்கும்போது கழுத்தில் மணி மாலைகள் அசைகின்ற சத்தம் எல்லாம் ஒண்ணாக சேர்ந்து வினோதமாக கேட்கலையா உங்களுக்கு . வெண்ணை வாசனை மூக்கை துளைக்கவில்லையா. இவ்வளவு பாலும் வெண்ணையும் எப்படி சேர்கிறது தெரியுமா. அந்த மாயக்கண்ணன் ஆயர்பாடி வந்ததிலிருந்து பசுக்களுக்கு கொண்டாட்டம். மடி நிறைய பால் சொரிந்து தருகின்றன . அது சரி ஒரு விஷயம் சொல்றேன். கேளு. கேசின்னு ஒரு ராக்ஷசன் குதிரையா வந்து நம்ம கிருஷ்ணனை கொல்ல வந்தது நினைவிருக்கிறதா? பாவம் அந்த முட்டாள் ராக்ஷசன். யாரைக் கொல்லவந்தானோ அவனிடமே தன உயிரை விட்டான். நம்முடைய கிருஷ்ணன் கையால் மரணம் சம்பவிக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா?''

"அப்படியா'' என்று குதித்து எழுந்தாள் ஒரு ஆயர்குலச் சிறுமி.

''அப்பறம்?''

''எழுந்து யமுனைக்கு வா. மீதியை அங்கு சொல்றேன்'' ---  ஆண்டாள்..

 

 

MAARGAZHI 8TH DAY

8 தேவாதி தேவன்

வாழ்க்கையில் சில விஷயங்கள் அலுப்பு தட்டுவதில்லை. காரணம் மனம் தான். பிடித்ததையே பேசுகிறது, பாடுகிறது, நினைக்கிறது, பார்ப்பது. இது போலவே படிப்பதும் தான். ;ஏற்கனவே தெரிந்தது தானே, புதிதல்லவே என்று அப்போது நினைப்பதில்லை. ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்கள் இப்படிப்பட்டவை. எண்ணற்றோர் எத்தனையோ முறை, எத்தனை வருஷங்களாகவோ பக்தியோடு படித்திருக்கிறோம், இன்னும் அதில் படிக்க நிறைய இருக்கிறது. முப்பது பாசுரத்தில் மூன்று லோக விஷயங்களையும் அடைத்து வைத்திருக்கிறாள் அந்த சிறுமி ஆண்டாள்.

இன்றும், ஆமாம் மார்கழி 8 வது நாளும், ஆண்டாள் மற்ற சில பெண்களை துயிலெழுப்பி கூட்டி சென்று பாவை நோன்பை வழக்கம் போல் தொடர்ந்தாள். அந்தச் சிறிய கிராமத்தில் என்ன இருக்கிறது? ஒரு பக்கம் உயிர்நாடியாக ஓடும் யமுனை, ஊர்க்கோடியில் பெருமாள் கோயில், நீண்ட வயல்கள், மரங்கள், செடி கொடிகள், கோபர்களின் மாளிகைகள், வீடுகள்,ஒரு சில வீதிகள், தூர தெரியும் காடு, மலை,அங்கே தான் யாரும் செல்வதில்லையே!

''என்னடி இது, ஆண்டாள் வந்து எழுப்பினா தான் நோன்புக்கு வரது என்று ஒரு வழக்கமாயிட்டுது. நாம வந்து கதவை தட்டி எழுப்பினா தான் வருவார்கள் போலிருக்கிறது" என்று ஒரு சிறுமி பரிந்து பேசினாள்

''அதனால் என்ன, வாங்க போய் எழுப்புவோம் அவர்களை எல்லாம்'' என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தாள் ஆண்டாள்

''எழுந்திருங்கோ, உள்ளேயிருக்கும் எருமைகளே !! கிழக்கே வெளுத்தாகி விட்டது. வெளிச்சம் வந்ததாலே வெளியிலே கறவை எருமை எல்லாம் கூட நிதானமா அசைந்து மேச்சலுக்கு வந்துவிட்டனவே. . சிலது காத்திருக்கிறது. எங்களைப் போல!! நாம் எல்லோரும் விரதமிருந்து அந்த கிருஷ்ணனை, சாணுரனை வாய் பிளந்து கொன்றவனை, தேவாதி தேவனை எவ்வளவு போற்றினாலும் மேலும் மேலும் புகழ்ந்து பாட வைக்கிறவனை பூஜிப்போம். எழுந்து வாருங்களேன்.நேரமாகவில்லையா?''

ஆண்டாள் மற்ற சில பெண்களுக்காக அவர்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும் நேரத்தில் நாம் பொடி நடையாக வில்லிபுத்தூர் வந்து விடுவோம்.

ஆஸ்ரமத்தில் வழக்கம் போலவே வாயிலில் பெரிய கோலம் போட்டு வைத்திருக்கிறாள் கோதை. அதன் அருகே மான் விழியோடு ஒரு இளம் பொன்னிற பசுங் கன்றுக்குட்டி அம்மா என்று நின்றுகொண்டு அம்மாவைத் தேடுகிறது. ஆயர்பாடியில் எருமையும் இங்கே பசுவுமா? ''பலே பலே''

உள்ளே விஷ்ணு சித்தர் முகம் அந்த சிறிய அகல் எண்ணெய் விளக்கொளியிலும் மலர்ந்து காண்கிறதே. தலை ஆடுகிறதே அவ்வளவு சுகமாக ரசிக்கிறார் அன்று அவர் மகள் கோதை எழுதிய பாசுரத்தின் அர்த்தத்தையும் அவள் பாடும் இனிமையும் சேர்த்தே.

ஆயர்பாடி ஆண்டாளின் துயிலெழுப்பலை வில்லிப்புத்தூர் கோதை பல ஆயிரம் வருஷங்கள் கழித்து எப்படி யூகித்து பாசுரமாய் எழுதினாள் என்று யோசிக்கவே ஆச்சர்யமாக இருக்கிறதே! எவ்வளவு அழகாக அந்த கண்ணனின் வீரத்தை, அவன் சானூரனை வதம் செய்த காட்சியை மனதில் கொண்டு போற்றி, அந்த சிறுமியரின் நோன்பு சிறப்பாக நடைபெற மாதவனைப் போற்றி பாட அழைக்கிறாள். இதோ அந்தப்பாடல்.

''கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.''

விஷ்ணு சித்தர் இந்த பாடலைத் தானே படித்து மகிழ்ந்து அதன் உள்ளர்த்தத்தை அழகாக புரிந்து புளகாங்கித மடைகிறார்:

ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால் இதைவிட பரமனிடம் சரணாகதி அடைவதைப்பற்றி யாரும் சுருக்கமாக சொல்லமுடியாது. தூக்கத்தை விட்டு எழுந்திரு என்பதே உலகமாயையிலிருந்து விடுபடு, பரமனடி பாடு. மோக்ஷம் பெறு என்கிற விஷயம் தான். வெளிச்சம் வந்துவிட்டது என்பதே உன்னை நீ புரிந்துகொண்டாய் என்று பொருள் கொள்ளலாம். இருட்டு என்பதே இந்த பாசுரங்களில் அஞ்ஞானம் தான். கிழக்கே வெளுத்தது என்பது பனியைப்போக்கும் சூர்யன். மாயையிலிருந்து நம்மை நீக்கும் கண்ணன் பாதங்களின் சுடரொளி. ஆஹா பிரமாதம். அந்த பாடலை மனதிற்குள் தானே அசை போட்டு ரசித்தவாறு அவர் பூக்குடலையைத் தேடினார். ரங்கனுக்கு மாலை தயாராக வேண்டுமே. பாமாலையோடு பூமாலையும் சூட்டவேண்டுமே.

9. மாமாயன் மாதவன்

ஆயர்பாடியில் ஆண்டாள் மனம் கலங்கவில்லை. எல்லோருக்கும் ஊக்கமளித்து உற்சாகத்தோடு அவர்களை பாவை நோன்பில் பங்கு கொள்ள சகல முயற்சிகளிலும் துவள வில்லை. நீங்கள் கேட்டதனைத்தும் அந்த கண்ணன் தருவான். அவன் புகழ் பாடி மகிழ்வோம் என்று விடியற்காலையில் வீடு வீடாக ச்சென்று பெண்களைத் திரட்டினாள்

''என் உற்ற சிநேகிதிகளா, நீங்களாவது என்னோடு தினமும் வந்து மற்றவர்களை எழுப்புவது மகிழ்ச்சியாய் இருக்கிறது. இன்றும் (மார்கழி 9 தேதி) வழக்கமான வேலை - அது தான்,கதவை தட்டி எழுப்புவது- நடக்கட்டும்.

‘’அடியே! செவிடு, பதிலே சொல்லாமல் தூங்குகிற ஊமை, பைத்தியம், சுகமாக கொசு கடிக்காமல் அகில் புகை போட்டுகொண்டு வாசனையாக , மெத்து மெத்து என்று கட்டில் மேலே கனவு கண்டு கொண்டே இருக்கின்றவளே!, எழுந்து வாடி வெளியே, காத்துக்கொண்டிருக்கோம் உனக்காக. நாங்கள் மட்டுமில்லை அந்த கிருஷ்ணனான நாராயணனும் நம்ப நோன்பு பாட்டு எல்லாம் கேட்க ஆசையாக காத்துக்கொண்டு இருக்கிறானே , கேட்டு அருள்வதற்கும் தான்!

அந்த தூங்கி வழியும் பெண்ணின் தாய் கண்ணில் படுகிறாள். அவள் தயவை நாடுகிறாள் ஆண்டாள்.

''மாமி மாமி, கொஞ்சம் அவளை எழுப்புகிறீர்களா? பாருங்களேன் எத்தனை நாழி தூங்குகிறாள் உங்கள் பெண்''

வில்லிப்புத்தூரில் இந்த காட்சியைப் படம் பிடித்து ஏட்டுச்சுவடியில் எழுத்தாக்கினாள் கோதை.

விஷ்ணுசித்தர் நாளுக்கு நாள் சூடு பிடிக்கும் இந்த சுடர்க்கொடியின் கைவண்ணத்தில் மகிழ்ந்து போனார்.

''கொழந்தே, இன்னிக்கு பாசுரத்தை நீ இப்போ பாடினே பார், அதை என்னாலே வர்ணிக்க முடியாதும்மா, நானும் தான் நிறைய எழுதறேன், உன் கைவண்ணமே, தனி, அலாதி அம்மா.''

அப்படி என்ன கோதை எழுதினால் அன்று -- ஆண்டாள் ஒரு வீட்டில் ஒரு பெண்ணை துயிலெழுப்பும் வழக்கமான நிகழ்ச்சி தான் அந்தச் சிறு பாசுரம் .

''தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.''

பூக்களைப் பறித்துக்கொண்டே விஷ்ணு சித்தர் சிந்தித்தார்.

இந்த தூங்கும் பெண், ஏன் தூங்குகிறாள்? அவளுக்கு ஒரு கவலையும் இல்லை. அனைத்தையும் அந்த கிருஷ்ணனிடமே சரணாகதி என்று விட்டு விட்ட சந்தோஷத்தில் நிம்மதியாக தூங்குகிறாள் என்ற உபாயத்தை ஆண்டாள் மறைமுகமாக அறிவிக்கிறாள்.

கூரத்தாழ்வான் ஒரு இடத்தில் ''ரங்கா இந்த ராமானுஜருடன் எனக்கு ரத்த சம்பந்த உறவு என்று ஒன்று இல்லையே. அந்த பாக்கியம் முதலியாண்டானுக்கும் எம்பாருக்கும் அல்லவா கிட்டியது'' என்று உணர்த்துவதுபோல் ஆண்டாள் ''மாமி, உங்கள் பெண் '' என்று அந்த பெண்ணின் உறவைப்பற்றி குறிப்பிடுவது அந்தப்பெண்ணால் அந்தக்குடும்பமே கண்ணன் அருளைப் பெறும் பாக்யத்தை பெற்றது என்று குறிப்பிடவே தான்.

விஷ்ணு சித்தரின் எண்ணத்தை அன்றலர்ந்த ஒரு பெரிய அழகிய மலர் கலைத்தது.

 

10. நாற்றத் துழாய் முடி நாராயணன்

ஆண்டாள் விடாப்பிடியாக ஒவ்வொன்றும் சாதிப்பவளாயிற்றே. முடியாதது என்று ஒன்றில்லை. மனத்தில் உறுதி இருந்தால் எதுவும் நினைப்பதாகவே நிகழும். கிருஷ்ணனை தரிசிக்க வேண்டும். அவன் அருளினால் வேண்டியதைப் பெறவேண்டும். அதற்கு அவனை விடாது நினைத்து விரதம் இருக்க அவள் முனைந்தாள். மற்ற பெண்களையும் அவ்வாறே அவன் அருள் பெற வழிகாட்டிய பெருந்தகை அந்தச் சிறு பெண் .

''மார்கழி பத்து .அல்லவா இன்று. வாருங்கள் பெண்களே, செல்வோம் உடனே. இன்றும் விடப் போவதில்லை, வழக்கம் போல் கதவை பிளப்போம். துயில் கொண்ட பெண்களை எழுப்பி விரதத்தில் பங்கேற்க வைப்போம்.'' ஆண்டாளுடன் பெண்கள் சென்றனர்.

''ஆண்டாள் இன்று எங்களுக்கு நீ இயற்றிய பாடலைச் சொல்கிறாயா?

ஆஹா சொல்கிறேனே. பெண்களே, உங்களுக்கு ராமனைத் தெரியுமா?

''ரொம்பத் தெரியாதும்மா ஆண்டாள்? பாட்டி சொல்வாளே கதை. அதில் வருகிற ராமன் தானே? கோவிலில் வில் வைத்துக்கொண்டு நிக்கிறவர்? ''

''சொல்றேன் கேளுங்கள். போன ஜன்ம புண்யத்தாலே நாம் பாவை நோன்பிலே புகழ்ந்து பாடும் கிருஷ்ணனாக வந்த நாராயணன் அதற்கு முன்னாலே ராமனாக வந்து ஒரு நல்ல வேலை செய்தான். என்ன தெரியுமா? ராவணன் என்கிற அரக்கனை கொல்வதற்கு முன்னால் ராமனோடு சண்டை போட அவனது தம்பி கும்பகர்ணன் என்கிற பலம் கொண்ட அரக்கன் கோபத்தோடு வந்தான். ஆனால் அவன் ஒரு வரத்தைத் தப்பாக கேட்டு அதனால் எப்போதும் மீளாத் தூக்கத்தில் எப்போதும் மாட்டிக்கொண்டான். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அந்த வீராதி வீரன், பொல்லாத ராமன், தன்னிடம் சண்டையிட்டு கும்பர்கணன் இறந்துபோவதற்கு முன்னால் அவனுடைய மீளா தூக்கத்தை இந்த வீட்டில் இருக்கும் நமது தோழியிடம் கொடுக்க வைத்தான் பார்!!

சில பெண்கள் இன்னும் தூங்குவதை வேடிக்கையாக இவ்வாறு ஆண்டாள் கேலி செய்வது, கூட இருந்த பெண்களை கலீர் என்று சிரிக்க வைத்தது. ஆண்டாள் கதவைத் தட்டி உள்ளே தூங்கியவளை

''சீக்கிரம் எழுந்து ஓடி வந்து கதவை திற. நின்னு நின்னு மார்கழி 11ம் நாள் வந்துடும் போல இருக்கு!!'' என்றாள்.

இதைக்கேட்டு இதுவரை தூங்கிய அந்தப் பெண்ணும் வெட்கப்பட்டுக் கொண்டு எழுந்து வெளியே வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.

அனைவரும் யமுனையில் நீராடி, அந்த மாய கிருஷ்ணனை, வாயாரப்பாடி புகழ்ந்தனர்.

''துளசி கமகமக்க, மாலையை போட்டுக்கொண்டு, நாம் பாடும் அவன் நாமங்களை நம் வாயாலே கேட்பதற்கு காத்துக்கொண் டிருக்கான் பார்த்தீர்களா அந்த கிருஷ்ணன் ! . இன்னிக்கு உண்டான பாவை நோன்பை சீக்கிரம் முடிப்போம்.''

உற்சாகம் பொங்க அவர்கள் வழக்கம்போலவே அந்த விடியற் காலையில் யமுனையின் குளிர்ந்த நீரில் நீராடி நோன்பை முடித்து வீடு திரும்பினர். ஆயர்பாடியை விட்டு நாமும் வில்லிப்புத்தூர் செல்வோம்.

ஆண்டாளும் அவளது தோழியரும் எப்படி அந்த உறக்கம் பிடித்த பெண்ணை எழுப்பினர், என்பதை எவ்வளவு அழகாக தனது ஈடிணையற்ற தமிழில் எளிய நடையில் கோதை பாசுரமாக எழுதியுள்ளாள், என்று வியக்கும் விஷ்ணு சித்தரோடு சேர்ந்து ரசித்து நாமும் பலத்த கரக்கம்பமும் சிரக்கம்பமும் செய்வோம். இது அவள் சிறப்பாக இயற்றிய, ஈடிணையற்ற , என்றும் பெருமையுடன், கோடானு கோடி மக்கள் பூஜித்து பாடிய, பாடும் திருப்பாவை பாசுரம்

' நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.''

விஷ்ணு சித்தர் பூஜா விக்ரஹங்களை அபிஷேகம் செய்து கொண்டே மேற்கண்ட பாசுரத்தை தனக்குள் ஒரு முறை பாடினார்.

சொல்லாமல் சொல்லி, ஆண்டாளாக மாறி, கோதை எதை விளக்கினாள் என்று அவர் மனம் உள்ளே ஆராய்ந்து கொண்டிருந்தது

''சுவர்க்கம்'' என்று சொல்வது அந்த நாராயணனோடு ஒன்றுவது.
''அருங்கலமே'' என்று எதை கோதை குறிப்பிடுகிறாள்? ஒருவேளை, இந்த உடலே ஒரு பாத்திரம் அதில் அந்த நாராயணனை நிரப்பவேண்டும் என்பதற்காகவா?
நாம் உடுத்துகின்ற உடைக்கும் 'கலம்' என்று ஒரு பொருள் உண்டே . எது உடை? நாராயணன் என்கிற அந்த கிருஷ்ணனி ன், ரங்கனின் பெருமைகளை வாய் சொல்வது தான் இந்த உடலுக்கு உடையோ ?
அவனை சுற்றி வந்து சரண் புகுவது தான் இந்த உடலுக்கு உடையோ? ஆபரணமோ?

விஷ்ணு சித்தரின் கேள்விக்கு 'ஆமாம் ஆமாம்' என்று மலர்கள் நந்தவனத்தில் தென்றல் காற்றில் பதிலாக தலையாட்டின

 

 




9. மாமாயன் மாதவன்

ஆயர்பாடியில் ஆண்டாள் மனம் கலங்கவில்லை. எல்லோருக்கும் ஊக்கமளித்து உற்சாகத்தோடு அவர்களை பாவை நோன்பில் பங்கு கொள்ள சகல முயற்சிகளிலும் துவள வில்லை. நீங்கள் கேட்டதனைத்தும் அந்த கண்ணன் தருவான். அவன் புகழ் பாடி மகிழ்வோம் என்று விடியற்காலையில் வீடு வீடாகச் சென்று பெண்களைத் திரட்டினாள்

''என் உற்ற சிநேகிதிகளா, நீங்களாவது என்னோடு தினமும் வந்து மற்றவர்களை எழுப்புவது மகிழ்ச்சியாய் இருக்கிறது. இன்றும் (மார்கழி 9 தேதி) வழக்கமான வேலை - அது தான்,கதவை தட்டி எழுப்புவது- நடக்கட்டும்.

‘’அடியே! செவிடு, பதிலே சொல்லாமல் தூங்குகிற ஊமை, பைத்தியம், சுகமாக கொசு கடிக்காமல் அகில் புகை போட்டுகொண்டு வாசனையாக , மெத்து மெத்து என்று கட்டில் மேலே கனவு கண்டு கொண்டே இருக்கின்றவளே!, எழுந்து வாடி வெளியே, காத்துக்கொண்டிருக்கோம் உனக்காக. நாங்கள் மட்டுமில்லை அந்த கிருஷ்ணனான நாராயணனும் நம்ப நோன்பு பாட்டு எல்லாம் கேட்க ஆசையாக காத்துக்கொண்டு இருக்கிறானே , கேட்டு அருள்வதற்கும் தான்!

அந்த தூங்கி வழியும் பெண்ணின் தாய் கண்ணில் படுகிறாள். அவள் தயவை நாடுகிறாள் ஆண்டாள்.

''மாமி, மாமி, கொஞ்சம் அவளை எழுப்புகிறீர்களா? பாருங்களேன் எத்தனை நாழி தூங்குகிறாள் உங்கள் பெண்''

வில்லிப்புத்தூரில் இந்த காட்சியைப் படம் பிடித்து ஏட்டுச்சுவடியில் எழுத்தாக்கினாள் கோதை.

விஷ்ணுசித்தர் நாளுக்கு நாள் சூடு பிடிக்கும் இந்த சுடர்க்கொடியின் கைவண்ணத்தில் மகிழ்ந்து போனார்.

''கொழந்தே, இன்னிக்கு பாசுரத்தை நீ இப்போ பாடினே பார், அதை என்னாலே வர்ணிக்க முடியாதும்மா, நானும் தான் நிறைய எழுதறேன், உன் கைவண்ணமே, தனி, அலாதி அம்மா.''

அப்படி என்ன கோதை எழுதினால் அன்று -- ஆண்டாள் ஒரு வீட்டில் ஒரு பெண்ணை துயிலெழுப்பும் வழக்கமான நிகழ்ச்சி தான் அந்தச் சிறு பாசுரம் .

''தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.''

பூக்களைப் பறித்துக்கொண்டே விஷ்ணு சித்தர் சிந்தித்தார்.

இந்த தூங்கும் பெண், ஏன் தூங்குகிறாள்? அவளுக்கு ஒரு கவலையும் இல்லை. அனைத்தையும் அந்த கிருஷ்ணனிடமே சரணாகதி என்று விட்டு விட்ட சந்தோஷத்தில் நிம்மதியாக தூங்குகிறாள் என்ற உபாயத்தை ஆண்டாள் மறைமுகமாக அறிவிக்கிறாள்.

கூரத்தாழ்வான் ஒரு இடத்தில் ''ரங்கா இந்த ராமானுஜருடன் எனக்கு ரத்த சம்பந்த உறவு என்று ஒன்று இல்லையே. அந்த பாக்கியம் முதலியாண்டானுக்கும் எம்பாருக்கும் அல்லவா கிட்டியது'' என்று உணர்த்துவதுபோல் ஆண்டாள் ''மாமி, உங்கள் பெண் '' என்று அந்த பெண்ணின் உறவைப்பற்றி குறிப்பிடுவது அந்தப்பெண்ணால் அந்தக்குடும்பமே கண்ணன் அருளைப் பெறும் பாக்யத்தை பெற்றது என்று குறிப்பிடவே தான்.

விஷ்ணு சித்தரின் எண்ணத்தை அன்றலர்ந்த ஒரு பெரிய அழகிய மலர் கலைத்தது.


10வது விருந்து:

ற்றத் துழாய் முடி நாராயணன்

ஆண்டாள் விடாப்பிடியாக ஒவ்வொன்றும் சாதிப்பவளாயிற்றே. முடியாதது என்று ஒன்றில்லை. மனத்தில் உறுதி இருந்தால் எதுவும் நினைப்பதாகவே நிகழும். கிருஷ்ணனை தரிசிக்க வேண்டும். அவன் அருளினால் வேண்டியதைப் பெறவேண்டும். அதற்கு அவனை விடாது நினைத்து விரதம் இருக்க அவள் முனைந்தாள். மற்ற பெண்களையும் அவ்வாறே அவன் அருள் பெற வழிகாட்டிய பெருந்தகை அந்தச் சிறு பெண் .

''மார்கழி பத்து .அல்லவா இன்று. வாருங்கள் பெண்களே, செல்வோம் உடனே. இன்றும் விடப் போவதில்லை, வழக்கம் போல் கதவை பிளப்போம். துயில் கொண்ட பெண்களை எழுப்பி விரதத்தில் பங்கேற்க வைப்போம்.'' ஆண்டாளுடன் பெண்கள் சென்றனர்.

''ஆண்டாள் இன்று எங்களுக்கு நீ இயற்றிய பாடலைச் சொல்கிறாயா?

ஆஹா சொல்கிறேனே. பெண்களே, உங்களுக்கு ராமனைத் தெரியுமா?

''ரொம்பத் தெரியாதும்மா ஆண்டாள்? பாட்டி சொல்வாளே கதை. அதில் வருகிற ராமன் தானே? கோவிலில் வில் வைத்துக்கொண்டு நிக்கிறவர்? ''

''சொல்றேன் கேளுங்கள். போன ஜன்ம புண்யத்தாலே நாம் பாவை நோன்பிலே புகழ்ந்து பாடும் கிருஷ்ணனாக வந்த நாராயணன் அதற்கு முன்னாலே ராமனாக வந்து ஒரு நல்ல வேலை செய்தான். என்ன தெரியுமா? ராவணன் என்கிற அரக்கனை கொல்வதற்கு முன்னால் ராமனோடு சண்டை போட அவனது தம்பி கும்பகர்ணன் என்கிற பலம் கொண்ட அரக்கன் கோபத்தோடு வந்தான். ஆனால் அவன் ஒரு வரத்தைத் தப்பாக கேட்டு அதனால் எப்போதும் மீளாத் தூக்கத்தில் எப்போதும் மாட்டிக்கொண்டான். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அந்த வீராதி வீரன், பொல்லாத ராமன், தன்னிடம் சண்டையிட்டு கும்பர்கணன் இறந்துபோவதற்கு முன்னால் அவனுடைய மீளா தூக்கத்தை இந்த வீட்டில் இருக்கும் நமது தோழியிடம் கொடுக்க வைத்தான் பார்!!

சில பெண்கள் இன்னும் தூங்குவதை வேடிக்கையாக இவ்வாறு ஆண்டாள் கேலி செய்வது, கூட இருந்த பெண்களை கலீர் என்று சிரிக்க வைத்தது. ஆண்டாள் கதவைத் தட்டி உள்ளே தூங்கியவளை

''சீக்கிரம் எழுந்து ஓடி வந்து கதவை திற. நின்னு நின்னு மார்கழி 11ம் நாள் வந்துடும் போல இருக்கு!!'' என்றாள்.

இதைக்கேட்டு இதுவரை தூங்கிய அந்தப் பெண்ணும் வெட்கப்பட்டுக் கொண்டு எழுந்து வெளியே வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.

அனைவரும் யமுனையில் நீராடி, அந்த மாய கிருஷ்ணனை, வாயாரப்பாடி புகழ்ந்தனர்.

''துளசி கமகமக்க, மாலையை போட்டுக்கொண்டு, நாம் பாடும் அவன் நாமங்களை நம் வாயாலே கேட்பதற்கு காத்துக்கொண் டிருக்கான் பார்த்தீர்களா அந்த கிருஷ்ணன் ! . இன்னிக்கு உண்டான பாவை நோன்பை சீக்கிரம் முடிப்போம்.''

உற்சாகம் பொங்க அவர்கள் வழக்கம்போலவே அந்த விடியற் காலையில் யமுனையின் குளிர்ந்த நீரில் நீராடி நோன்பை முடித்து வீடு திரும்பினர். ஆயர்பாடியை விட்டு நாமும் வில்லிப்புத்தூர் செல்வோம்.

ஆண்டாளும் அவளது தோழியரும் எப்படி அந்த உறக்கம் பிடித்த பெண்ணை எழுப்பினர், என்பதை எவ்வளவு அழகாக தனது ஈடிணையற்ற தமிழில் எளிய நடையில் கோதை பாசுரமாக எழுதியுள்ளாள், என்று வியக்கும் விஷ்ணு சித்தரோடு சேர்ந்து ரசித்து நாமும் பலத்த கரக்கம்பமும் சிரக்கம்பமும் செய்வோம். இது அவள் சிறப்பாக இயற்றிய, ஈடிணையற்ற , என்றும் பெருமையுடன், கோடானு கோடி மக்கள் பூஜித்து பாடிய, பாடும் திருப்பாவை பாசுரம்

' நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.''

விஷ்ணு சித்தர் பூஜா விக்ரஹங்களை அபிஷேகம் செய்து கொண்டே மேற்கண்ட பாசுரத்தை தனக்குள் ஒரு முறை பாடினார்.

சொல்லாமல் சொல்லி, ஆண்டாளாக மாறி, கோதை எதை விளக்கினாள் என்று அவர் மனம் உள்ளே ஆராய்ந்து கொண்டிருந்தது

''சுவர்க்கம்'' என்று சொல்வது அந்த நாராயணனோடு ஒன்றுவது.
''அருங்கலமே'' என்று எதை கோதை குறிப்பிடுகிறாள்? ஒருவேளை, இந்த உடலே ஒரு பாத்திரம் அதில் அந்த நாராயணனை நிரப்பவேண்டும் என்பதற்காகவா?
நாம் உடுத்துகின்ற உடைக்கும் 'கலம்' என்று ஒரு பொருள் உண்டே . எது உடை? நாராயணன் என்கிற அந்த கிருஷ்ணனி ன், ரங்கனின் பெருமைகளை வாய் சொல்வது தான் இந்த உடலுக்கு உடையோ ?
அவனை சுற்றி வந்து சரண் புகுவது தான் இந்த உடலுக்கு உடையோ? ஆபரணமோ?

விஷ்ணு சித்தரின் கேள்விக்கு 'ஆமாம் ஆமாம்' என்று மலர்கள் நந்தவனத்தில் தென்றல் காற்றில் பதிலாக தலையாட்டின


11வது விருந்து: (26,12.2016)
முகில் வண்ணன்

வானகம் வேறு வையகம் வேறு. அதை இங்கு காணமுடியாது. முடியும் என்கிற வகைCயில் பூலோகத்தில் சில இடங்கள் தேவ லோகங்களாக காட்சியளிப்பது விந்தையிலும் விந்தை. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று ஆயர்பாடி . ஆயர்பாடி எப்போதும் கோலாகலமான ஒரு பூலோக வைகுண்டம் அல்லவா?

ஏற்கனவே அது ஒரு அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம். ஒவ்வொரு மரமும் செடியும் கொடியும் போட்டி போட்டுக்கொண்டு நிறைய புஷ்பங்களை வாரி வழங்க, என் பங்குக்கு நான் சும்மா இருப்பேனா என்று தென்றல் அந்த அழகிய மலர்களின் நறுமணத்தை அப்படியே தூக்கிக் கொண்டு போகுமிடத்தில் எல்லாம் எங்கள் கிருஷ்ணனுக்கு எங்களது அன்புக் காணிக்கை என நறுமணத்தைப் பரப்ப, நான் என்ன இளைத்தவளா என்று யமுனை அழகாக தன்னுடைய குளுமையை அந்தக் காற்றுக்கு கொடுக்க ஆனிரைகளும், பறவைகளும் தங்கள் பொறுப்பாக இனிமையாக அந்த சிற்றூருக்கு தத்தம் அழகையும் சங்கீத ஓசையும், வளமையும் சேர்த்தன.

இந்தச் சூழ்நிலையில், எந்த ஒரு சிறு நிகழ்ச்சியும் அனைவரும் பங்குகொள்ளும் வைபவமாக ஆகி விடுவதில் என்ன அதிசயம்? ஆயர்பாடி சிறுமிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த புத்திசாலி சிறுமி ஆண்டாளோடு மார்கழி முப்பது நாளும் பாவை நோன்பு நோற்கிறார்கள் என்பது ஆயர்பாடி மக்களுக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது. அனைவரும் அந்த சிறுமிகளுக்கு நல்ல ஆதரவைக் கொடுத்தார்கள்.

இன்று மார்கழி 11ம் நாளை அவர்கள் ஆவலாக எதிர் கொண்டார்கள். ஆண்டாள் தலைமையில் அனைத்து சிறுமிகளும் சேர்ந்து தினமும் காலை நாராயணனின் அவதாரமான கிருஷ்ணனை போற்றி ராக பாவங்களோடு பாடி ஆடி பரவசமாக வீடு வீடாக சென்று பெண்களை எழுப்பி நோன்பில் பங்கு கொள்ள செய்வதல்லவோ வழக்கம் கடந்த பத்து நாட்களாக?. இன்று ஒரு செல்வ மிக்க கோபனின் பெண்ணுடைய வீட்டு வாசலில் ஆண்டாள் மற்றவர்களோடு நின்று குரல் கொடுத்தாள்.

அவளை எழுப்ப வேண்டுமே. ஆண்டாள் தன்னுடைய குரலில் மிக அழகாக பாடுவாளே. அந்த பாட்டிலேயே அந்த பெண்ணை ''உடனே நீ எழுந்திரு'' என்ற கட்டளையும் இருக்குமே.

"உன்னைத்தானடி அழகிய பெண்ணே, தங்கக் கொடியே, படிப் படியாய் பால் கறக்கும் எண்ணற்ற ஆனிரை உள்ள செல்வனின் மகளே, எதிரிகளைப் பொடிக்கும் வீரன் மகளே, எழுந்து வாடி, உனக்காக உன் வீட்டு முன் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம். உன்னோடு சேர்ந்து நாம் அனைத்து பெண்களும் அந்த கார்மேக வண்ண கண்ணன், மாதவன் கேசவன் மேல் வாயினிக்க செவியினிக்க பாடுவோம் . உன் குரலும் இதில் சேர வேண்டாமா? இன்னும் என்னடி தூக்கம்? வா வெளியே".

ஆண்டாளின் இனிய குரல் கேட்ட அந்தப் பெண் எழுந்து மெதுவாக வெளியே வந்தாள்,அவர்களோடு சேர்ந்தாள். அனைவரும் யமுனையில் வழக்கம்போல நீராடி விரதமிருந்து அன்றைய நோன்பை ஸ்ரீ கிருஷ்ணனுக்கே அர்ப்பணித்து வேண்டி சந்தோஷத்தோடு வீடு திரும்பினர்.

மேற்கண்ட பாசுரத்தை ஆண்டாளின் குரலில் தவழவிட்டு பாடிக்கொண்டிருந்தவள் கோதை என்கிற சிறுபெண். ஆயர்பாடியில் கேட்ட குரலின் உரிமைக்கு உடையவள் வில்லிபுத்தூர் கோதை.

இடைச்சிறுமிகள் ஆயர்பாடியில் ஆண்டாளோடு வீடு திரும்பும்போதுதான் விஷ்ணு சித்தரும் அருகில் இருந்த ரங்க மன்னார் ஆலயத்தில் திருப் பல்லாண்டு பாடிவிட்டு அரங்கன் பிரசாதத்தோடு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

விஷ்ணு சித்தர் வீட்டில் நுழையுமுன்பே கோதையின் கணீர் என்ற வெண்கலக்குரல் அன்றைய திருப்பாவையின் முக்ய இடமான "சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி '' என்ற வார்த்தைகளை ஆலாபனம் பண்ணி பாடிக்கொண்டிருந்தது கேட்டு சிலையாக நின்றார் ஆண்டாளாக ஆகிவிட்ட கோதை முழுமையாக தான் அன்று எழுதிய பாசுரத்தை மீண்டும் முழுசாக பாடினாள். அது தான் இது:

''கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்''

ஆண்டாள் தன்னையே அந்த முகில் வண்ணனின் செல்வப் பெண்டாட்டியாக மனத்திலிருத்திக் கொண்டிருக்கிறாளோ?

இது ஒரு பக்கம் அவள் பக்தியை செய்தாலும், அவளது அரங்கன் பித்து அவரைத் திக்குமுக்காடவும் வைத்தது. இது நடக்கக்கூடியதா என்கிற அச்சம் வேறு உள்ளே அந்த முதியவரை உலுக்கியது.

ராமன் பிறந்தபிறகு முதியவன் தசரதன் மீண்டும் உடலிலும் உள்ளத்திலும் இளைஞனானான் என்று சொல்வது வழக்கம். ஆயர்பாடியில் ஆண்டாள் குரல் கேட்டு, கண்ணன் மேல் உள்ள அபிமானத்தில் கிழப்பசுக்களும் மீண்டும் இளமை பெற்று நிறைய பால் கரந்தனவாம். ஆழ்வார்களும் வைணவர்களும் நாராயணன் பெயரைச் சொல்லும் போதும், பாடும்போதும், நினைக்கும்போதுமே தன்னை மறந்த நிலையில் மகிழ்வோடு திளைத்தார்கள் என்பது நாம் எல்லாரும் அறிந்ததல்லவா?

இந்த களிப்போடு மார்கழி 12வது பாசுரத்தைச் சந்திப்போமே!


12வது விருந்து: (27.12.2016) J.k.sivan

மனத்துக்கு இனியன்

யாரோ எங்கோ கணக்கிட்டு பார்த்ததில் உலகிலேயே அதிகமாக பரிச்சியமான ஒரு இந்து கடவுள் கிருஷ்ணன் தான். அதற்குப்பிறகு ராமன் என்று சொல்கிறார்கள். அவர்கள் வாக்கிலே சந்தேகமே வேண்டாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறே பதம் என்றபடி பார்த்தாலே இங்கேயே நமக்குத் தெரிந்தவர்களிடையே அதிகம் பேசப்படும் தெய்வம், இஷ்ட தெய்வம் கிருஷ்ணன் தானே.

ஆயர்பாடியில் வழக்கம் போலவே நிறைய சிறுமிகள் ஆண்டாளை மொய்த்துக்கொண்டு அந்த அதிகாலையிலும் வீதியில் ஒரு பெண்ணின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு நடுவே ஆண்டாள் மற்றும் சிலரை எதிர்பார்த்து காத்திருந்தாள். காற்று சில்லென்று வீசியதையும், பனி எங்கும் சூழ்ந்திருந்ததையும் அவர்கள் லக்ஷியம் பண்ணவே இல்லை.

'ஆண்டாள், பாடு. நீ தான் நிறைய தானாகவே இட்டுக்கட்டி நன்றாக படுவாயே. என்னவோ அம்மா. உனக்கு இயற்கையாகவே வெகு நன்றாக பாட்டும் வருகிறது அழகாக பாடவும் முடிகிறது. . அந்த கிருஷ்ணன் உனக்கு நல்ல குரலையும் கற்பனை வளத்தையும் வேறு பிரசாதமாக அளித்திருக்கிறான். கொடுத்து வைத்தவள் நீ. இன்று என்ன பாடப்போகிறாய் என்று காத்திருக்கிறோம்'.

'இதோ பாடுகிறேன்' என்று ஆண்டாள் சொன்னபோதும் அவள் எதையோ நினைத்துக்கொண்டிருந்தாள் என்று ஒரு பெண்ணுக்குத் தோன்றியது.

“ஆண்டாள் என்னடி இன்று ஒருமாதிரி இருக்கிறாய்?”

“ஒண்ணுமில்லை. தினமும் இவர்களை நாம் போய் எழுப்பி, கிளப்பி, நோன்பில் பங்கேற்க வைக்க வேண்டியிருக்கிறதே. அப்படி என்ன தினமும் நாம் அவர்களை எழுப்பும் கடிகாரம் போல் ஆகி விட்டோமே என்று யோசித்தேன். ஆனால் இப்படி இவர்களை துயிலெழுப்பும் போதும் அந்த மாயகிருஷ்ணனின் நினைவோடும் அவன் பெருமை பாடும் பாசுரங்களை பாடிக்கொண்டும் இவ்வாறு செய்வது மனதிற்கு இனிக்கிறது. ஒரு வேடிக்கை பார்த்தாயா?''

“ இதோ அந்த கோபாலனின் நண்பன் சுதாமாவின் வீட்டு வாசலில் நிற்கிறோமே. இன்று மார்கழி 12 இந்த வீட்டுக்கும் நம்பர் 12, என்ன பொருத்தம்!. இந்த வாசல் முன்புறத்தில் மேலே கூரையில்லை. மார்கழி பனி நம் தலை பூரா மழையென நனைத்து குளிர் காற்றில் நம்மை எங்கோ கொண்டு செல்கிறது. கீழே பார்த்தீர்களா?. இதென்ன அதிசயம்! சுதாமாவின் வீட்டு செழுமையான எருமைகளில் ஒன்று என்ன செய்கிறது பாருங்கள் பெண்களே! அதன் கன்று மெதுவாக அருகில் வர, பரம ஆனந்தத்தோடு அந்த தாய் எருமை அதன் மடியில் வெள்ளம் போல் தானாகவே சுரக்கும் பாலை எல்லாம் கீழே விழ வைத்து இங்கு நிற்கும் நம் கால்களை நனைத்து நம் கால்களுக்கு பால் அபிஷேகம் நடக்கிறதே!

மேலே பனிநீர், பன்னீருக்கு பதிலாக, கீழே பால்! இரண்டு அபிஷேகம் ஒரே சமயத்தில்!! ஏன் தெரியுமா?

அந்த கிருஷ்ணனை நாம் பாடிக்கொண்டே நிற்பதால் தான்.

''கோபாலனின் தங்கையே, உன்னைத் தானடி பெண்ணே, நாங்கள் வாசலில் பாடி நிற்பது தெரிந்துமா இன்னும் கதவு தாள் திறக்கவில்லை நீ? எங்கள் பாட்டைக் கேட்டு அண்டைஅசல் வீட்டு வாசலில் கூட எல்லாரும் எங்களை வரவேற்று பால், பூ, பழங்களோடு நிற்க நீ என்னடி இன்னும் படுக்கையில் கண் மூடி கிடக்கிறாய்? சீக்கிரம் வந்து சேர்ந்துகொள். இன்று உனக்கு பிடித்த ராவண சம்ஹார மூர்த்தி ராமனைத்தான் போற்றி பாடுகின்றோம். வா, சீக்கிரம் வெளியே”.

இது பாட்டாக வெளிவந்தது. ஆண்டாள் மிக நன்றாக பாடுவாள் என்பது தான் தெரிந்த விஷயமாயிற்றே. அவள் பாடியதை மற்ற பெண்கள் ஒரே குரலில் திருப்பி சொன்னது அண்டை அசல்வீடுகளில் இருப்போரை எல்லாம் எழுப்பிவிட்டது. தூங்கிக்கொண்டிருந்த அந்த வீட்டுப் பெண்ணும் வந்து விட்டாள்,

அனைத்து பெண்களுமாக சென்று வழக்கம்போல் யமுனையில் அமிழ்ந்து நீராடி கண்ணனைப்பாடி மனம் உடல் தூய்மையுடன் தங்களது அன்றைய பாவை நோன்பை இனிது முடித்து வீடு திரும்பினார்கள் என்பது இந்த 12 நாட்களாக திரும்பத் திரும்ப சொல்வது வழக்கமாகி விட்டதல்லவா?

அதேபோல் நாம் வழக்கமாகச் செல்லும் வில்லிபுத்தூர் கிராமத்தில் ஒரு ஆஸ்ரமத்தில் என்ன நடக்கிறது என்றும் அறிவோம்

விடியற்காலை நிசப்தம். பட்சிகள் கூட இந்த அரை இருட்டில் வெளியே வர தீர்மானிக்க வில்லை. மரங்களில் இலைகள் சல சல வென்று காற்றில் ஆடி மலர்ந்த மலர்கள் கீழே விழுந்து வண்ண வண்ணப் பாய் விரித்தன. சாதாரணப் பாயை விட மென்மையானது மட்டுமில்லை, வாசனையும் சேர்ந்த அதிசயப் பாய்.

''அந்த தீபத்தைச் சற்று பெரிதாக தூண்டி விடு கோதை, என்னால் இந்த ஓலையைப் படிக்க முடியவில்லை.''

'நீங்கள் எதற்கப்பா சிரமப்படுகிறீர்கள். நானே பெரிதாக இன்று மாக் கோலத்தில் வாசலில் அந்த பாசுரத்தை எழுதியிருக்கிறேன் பாருங்கள். விஷ்ணு சித்தர் சுவற்றை பிடித்துக்கொண்டு எழுந்து வெளியே சென்றார். இருட்டிலும் வெள்ளை வெளேரென்று மாவில் கோலம் அதன் நடுவே பாசுரம் பெரிய எழுத்தில் ...

விஷ்ணு சித்தர் ஆர்வமுடன் அந்த பாசுரத்தைப் பார்த்து படித்தார்.

''கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்''

''அடாடா, இந்த கோதை எவ்வளவு பக்குவப்பட்டவள். கண்ணனும் ராமனும் ஒன்றே. அவர்களுள் என்ன வித்யாசம் என்பதை ஒரே வார்த்தையில் ஆணி அடித்தாற்போல் சொல்லி விட்டாளே ! ராமன் தனது எதிரிகளாலும் விரும்பப்படுபவன். கிருஷ்ணனும் அவ்வாறே எதிரிகளாலும் மதிக்கப்படுபவன். கண்ணனை கண்ணுக்கினியான் என உணர்த்தும்போது ராமனை மனத்துக்கினியான் என்றல்லவோ அலங்கரிக்கிறாள்!

நெஞ்சம் உருகி கண்ணீராக வெளிவந்ததை ''ஹே ரங்கா, ரங்கா'' என்று உச்சரிப்போடு துடைத்துக்கொண்டு உள்ளே திரும்பினார் பெரியாழ்வார்



13 வது விருந்து: (28.12.2016)--J.K.SIVAN

புள்ளின் வாய் கீண்டான்

திருப்பாவையின் சிறப்பு அதை எழுதியவள் ஒரு சிறு பெண்.

படிக்காதவள் என்று சொல்வது தவறு. பீஸ் கட்டி பள்ளியிலோ காலேஜிலோ முதுகில் பொதி சுமந்து பொருத்தமில்லாத ஒரு வர்ணத்தில் ஒரு உடையை யூனிபாரம் என்று அணிந்து விஷயமே தெரியாதவர்களிடம் தெரிந்து கொள்வது தான் படிப்பு என்று நாம் எண்ணினால் அது கிருஷ்ணனால் கூட மன்னிக்க முடியாத ஒரு தவறு.

கல்வி புத்தகத்தில் இல்லை. அனுபவத்தில் உள்ளது. அதை உணர்விப்பவர் பொறுப்போடு, விருப்போடு தனக்குத் தெரிந்ததை புரியும்படியாக பாலாடையில் புகட்டுவது போல் உள்ளே செலுத்தினால் தான் படிப்பு. முன்னோர் எந்த தேசத்திலும் அப்படித்தான் கற்றனர். ஆண்டாளின் திருப்பாவை தமிழ் யாப்பு இலக்கணத்தில் அளவான சீர் வரிசைகளோடு மிளிர்கிறது. ஆண்டாள் எங்கே இதை பயின்றாள் ?.

பெரியாழ்வாரிடமிருந்து என்றால் அங்கே அவர் பாசுரங்களில் நெருடுகிறதே?. எளிதில் புரியும்படியாகவும் அமைய வேண்டும், அர்த்தம் பலமுள்ளதாகவும் இருக்கிறது. பெரிய அளவில் சிந்திக்க வைக்கும சிறு சங்கதிகள். பாடுவதற்கு எளியதானவை.
M L வசந்தகுமாரி , அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், அவர்களைத் தொடர்ந்து காலம் காலமாக எத்தனையோ பேர் இன்று சயந்திரம் வரை பாடுகிறார்களே, ஒருவராவது திருமுருகாற்றுப்படையை இப்படி பாட முடிகிறதா? உபமானம் உபமேயம் எத்தனை அழகாய் எல்லோருக்கும தெரிந்ததாக கொடுத்திருக்கிறாள் ஆண்டாள். அதனால் தான் வருஷத்தில் குறைந்தது ஒரு மாதம் முழுதுமாகவாவது நம்மை குளிர்விக்கிறாள்.

விஷ்ணு சித்தர் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார். இது அந்த மாயன் ரங்கனின் அருள். தாயாரையே அவன் தன்னிடம் அனுப்பி தமிழில் விளையாட விட்டிருக்கிறான். என்னே அவன் கருணை.

''இன்னிக்கி என்னம்மா பாடப்போறே.?''

அதி காலையிலேயே அருகில் வந்து அமர்ந்துகொண்டு விட்டார் விஷ்ணுசித்தர். அவர் கை அந்த புண்யவதி கோதையின் சிரத்தை தடவிக்கொடுத்தது.

''இதோ பாருங்கள் அப்பா. இந்த அகலமில்லாத சிறு ஓலையில் எழுத்தாணியால் தாராளமாக எழுத்துக்களை வடிவமைக்க இயலாதல்லவா?. உங்களால் படிக்க முடியாது. ரொம்பவுமே நெருக்கி நெருக்கி எழுதியிருக்கிறேன். நானே படிக்கிறேன். அப்பறமா அதை பாடுகிறேன்''. பாசுரத்தை வார்த்தை வார்த்தையாக கோதை வாசித்தாள்

'' புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.''

இந்த பாசுரம் விஷ்ணு சித்தரின் மனதில் ஆயர்பாடி நிகழ்ச்சியை, கண்கள் மூடியிருந்தும் தெளிவாக மனத்திரையில் பளிச்சிட்டது. அவள் பாடும்போது அவர் வைகுண்டத்தில் இருந்தாரா வில்லிப்புத்தூரிலேயே இருந்தாரா என்றால் ரெண்டிலுமே இல்லாமல் இரண்டும் கலந்த தெய்வீக ஆயர்பாடியில் ஆண்டாள் அருகே தான் இருந்தார். இடைச்சிறுமிகள் அங்கே ஆண்டாளுடன் பேசுவது காதில் விழுகிறதா?.

“இன்று என்ன கிழமை ஆண்டாள்? வெள்ளிக்கிழமைதானே?''
''தாமோதர கிழமை''
''அப்படி ஒரு கிழமை இருக்கா என்ன?''
“எல்லா நாளும் கிருஷ்ணன் நாள் தான் எனக்கு என்று சொல்லி மேலே பார்த்தாள் ஆண்டாள்.
''என்ன பார்க்கிறே?''
''அதோ மேலே பார். வெள்ளி முளைத்து விட்டது. அப்படியென்றால் வியாழன் முடிந்து விட்டது, மார்கழி 13வது நாள் என்று எடுத்து கொள்ளேன்? சரி சரி, வாருங்கள். இன்று வராதவள் யார்? அவள் வீட்டுக்கு போய் எழுப்பி கூப்பிட்டு கூட்டிச செல்வோம். நல்லவேளை, இந்த பெண்ணின் வீடு நாம் வழிபடும் யமுனை நதிக்கரை அருகிலேயே இருக்கிறதே. வெள்ளியை பற்றி சொன்னபோதே அந்த வெள்ளை நிற கொக்கு ராக்ஷசன் பகாசூரன் தான் ஞாபகத்துக்கு வருகிறான். அவன் கிருஷ்ணனை மோதி வாய் கிழிந்து வசமாக மாட்டிகொண்டு வதமானதையே இன்று பாடுவோம்.

தூங்கு மூஞ்சி பெண்ணே, சீக்கிரம் வெளியே வா, அற்புதமாக பறவைகளின் கானம் மரங்களில் கேட்க, குளிர் நீரில் சுகமாக முகம் கை கால் உடம்பு பூரா சில்லென்று புத்துணர்ச்சி அளிக்க எங்களுடன் சேர்ந்து வந்து நீராடு, நமது பாவை நோன்பு இன்று நன்றாக நடக்கட்டும் .

ஒரு சிறுமி மற்றோருவளிடம் சொல்கிறாள்:

“ஆனாலும் இந்த ஆண்டாள் ஒரு ராணி தான்டீ. என்னமாய் நம் எல்லோரையும் கவர்ந்து நோன்பை நடத்த செய்கிறாள்."

மேலே சொன்ன காட்சி எளிதாக ஓடினாலும் பெரியாழ்வார் அந்த சிறிய எளிய பாசுரத்தின் உட்பொருளில் மூழ்கினார்.

ராமனும் கிருஷ்ணனும் ஒருவரே. ராவணனின் 10 தலைகளையும் நொடியில் கிள்ளி எறிந்தான் ராமன். பகன் என்னும் நாரை வடிவில் வந்த அசுரனையும் கிருஷ்ணன் அவ்வாறே எளிதில் வாயைக் கிழித்து கொன்றான். என்ன சொல்கிறாள் ஆண்டாள்?

. உலக ஆசா பாசங்கள் என்னும் அலைமோதும் உலகம் என்னும் சம்சார சாகரத்தில் மூழ்கி தத்தளிக்கிறோம் .
இந்த கடலில் ஒரு சிறு தீவு நாம் எல்லோரும். ஆண்டாள் ஏன் ராமனை நினைக்கிறாள் தெரிகிறதா? இந்து மகா சமுத்ரத்தில் இலங்கை ஒரு துக்குணியூண்டு தீவு. அதற்கு சர்வாதிகாரி இராவணன் எனும் அரக்கன். உலக சமுத்ரத்தில் நாம் ஒரு கொசு தீவு. நம்மை ஆட்டுவிப்பவன் மனம் எனும் ராவணன். அந்த தீவில் சிக்குண்டு தவிக்கும் சீதை தான் நமது மனத்தின் தளைகளால் கட்டுண்டு தவிக்கும் ஜீவாத்மா. நிர்கதியான சீதைக்கு ஒரு ஹனுமான்.நமக்கு வழிகாட்டுபவள் ஆண்டாள். இலங்கையை அடைந்து ராவணனைக் கொன்று சீதையை காப்பாற்றினவன் ராமன். சிக்குண்டு தவிக்கும் நமது ஆன்மாவுக்கு தெம்பு அளிப்பது கிருஷ்ணனின் மூல மந்த்ரம்.

'' ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே'

ராமன் வந்து ராவணனைக் கொன்று சீதையை மீட்டது போல் நாம் அவன் தாளையே சரணாகதி என்று அடைந்தால் நம்மை சம்சார சாகரத்திலிருந்து மீட்டு கண்ணன் மோக்ஷ பதவி பெற வைப்பவன்.

இந்த எண்ணம் பெரியாழ்வார் சிந்தனை மூலம் நம்மில் வேலை செய்யட்டும்.



14வது விருந்து: (29.12.2016)

பங்கயக் கண்ணான்

கிராமங்கள் என்றால் பொழுதே போகாது என்பார்கள். ரொம்ப தவறு. பொழுது போய் விடுகிறதே என்று ஏங்கும் அளவுக்கு இயற்கை கொழிக்கிறதே அங்கே. இப்பவே இப்படியென்றால் 5-6000 ஆண்டுகளுக்கு முன்பு ஆயர்பாடி கிராமம் எவ்வளவு தெய்வலோகமாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாக தெய்வமே அங்கே வாழ்ந்தபோது!

இத்தகைய கிராமியச் சூழ்நிலையிலே மார்கழி 13வது நாள் நகர்ந்து மார்கழி 14வதுக்கு வழி விட்டது. .

ஆண்டாள் எப்போதுமே ஒரு இயந்திரம் மாதிரி.
சொல்லி வைத்தாற்போல் அதிகாலையில் எழுந்து மற்றவர்களையும் எழுப்ப வந்துவிட்டாள்.
அவள் தோழியர்கள் அனைவரும் ஏறக்குறைய வந்தாகி விட்டதே. வழக்கம்போலே ஒரு சிலரைத்தவிர.
ஆண்டாள் தேடுகிறாள் யார் இன்னும் வரவில்லை என்று.

''ஆண்டாள் இதைப் பார்த்தாயா, இந்த கோமளா வீட்டு புழக்கடையில் இதோ தெரிகிறது பார் இந்த அல்லிக்குளத்தில் நேற்று ராத்திரி பூத்த ஆம்பல் தூக்கம் வந்து மெதுவாக கூம்பிவிட்டது. பக்கத்தில் இருக்கும் அல்லி எல்லாமே ஜோராக மொட்டவிழ்ந்து மெதுவாக மலர்கிறதே. "

ஆண்டாள் சிரித்துக்கொண்டே தலை அசைத்தபடியே கோமளா வீட்டு வாசலில் வந்து கதவைத் தட்டி எழுப்புகிறாள்.

''அடியே, கோமளா, உன் வீட்டு பின்புறம் குளத்துக்கு அப்பால் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சில துறவிகள் செல்வதை வெளியே வந்து பாரேண்டி? வெள்ளையாக தாடி மீசை, பல், உடலில் செங்கல் நிற காவி உடை, கையில் வெள்ளை சங்கு. அதன் மூலம் தான் பெருமாள் முன் நின்று பரவசத்தோடு அவர்கள் சங்கத்தை ஊதி சுப்ரபாத சேவை பண்ணப்போகிறார்கள். ''வா, அவர்களை பார்த்துக் கொண்டே நாம் நதிக்கு சென்று நீராடி, வழக்கமாக செய்யும் நோன்பு பிரார்த்தனைகள் முடித்து பிறகு பெருமாள் கோவிலுக்கும் செல்வோம்''

ஆண்டாள் குரல் கோமளாவுக்கு உள்ளே கேட்டதோ இல்லையோ, வில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தருக்கு ஸ்பஷ்டமாக கணீரென்று கேட்டது. வில்லிப்புத்தூரிலும் முதல் நாள் பெய்த மழை இன்னும் முழுதும் நிற்கவில்லை. எனினும் அதிகாலையில் அன்றும் எழுந்த விஷ்ணுசித்தர் ஸ்நானம் முடிந்து பூஜைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். கோதை அன்றைய பாசுரத்தை எழுதி தயாராக வைத்திருந்ததால் அதை ரசித்து படித்தாகி விட்டது. அந்த ரசானுபவத்தில் தான் ஆயர்பாடி ஆண்டாள் நினைவில் நின்றாள்.

மார்கழி முப்பது நாளுக்கு பதிலாக முன்னூறு நாளாக இருக்கக்கூடாதா என்றே அவர் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. எதற்காக? தினமும் ஆண்டாளின் பாசுரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்குமே என்ற ஒரு ஆர்வம்!

மீண்டும் ஓலைச்சுவடியை எடுத்து அந்த வார்த்தைக் கோவையின் அழகைப் படித்தார்.

'' உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

மேலெழுந்தவாரியாக இதில் வர்ணனை என்று தென்பட்டாலும் அதன் உள்ளர்த்தம் அவரைக் கவர்ந்தது.

ஞானத்திலும் கண்ணன் மீதுள்ள பற்றிலும் கோதை சிறு பெண்ணல்ல. பழுத்த கிழவி. அவளது திருப்பாவை ஒரு உபநிஷதம் என்றால் அதில் யாதொரு சந்தேகமும் இல்லை. என்ன ஞானம் அந்த சிறு வயதிலேயே அவளுக்கு!

நாக்கு உணவை ருசிக்க மட்டுமல்ல. சாக்ஷாத் கிருஷ்ணனின் பெருமையைப் பாடுவதற்காகவே .'வா வந்து கிருஷ்ணனைத் துதி செய்' என்று அந்த தூங்கும் பெண்ணையா எழுப்புகிறாள்.? அல்ல! அஞ்ஞானத்தில் உழலும் மாந்தர்களே உய்வீர்களாக என்று உலகத்துக்கே ஒரு வரியில் வழிகாட்டுகிறாளே !

''அப்பா'' என்று கோதை அழைக்கும் குல் கேட்டு சிந்தனை தடைப்பட்டு விஷ்ணு சித்தர் மனம் வில்லிபுத்தூர் ஆஸ்ரமம் திரும்பவே அவர் தானாகவே கோதையை நோக்கி உள்ளே சென்றார்.


15வது விருந்து: (30,,12.2016) J,K,SIVAN

வல்லானைக் கொன்றான்

ஆயர்பாடியில் மார்கழி மாதம் ஒரு மகோன்னத வைபவமாக காணப்பட்டது. ரொம்ப சிறிய கிராமம். அதில் சில வீடுகளே இருந்தன. எல்லோருமே ஒருவரை ஒருவர் வெகுவாக நெருக்கமாக தெரிந்தவர்கள். அநேக வீடுகளில் இருக்கும் பெண்கள் ஒன்று சேர்ந்து ஒரு விரதம் அனுஷ்டிக்கிறார்கள் என்பதில் எல்லா வீட்டு கோப கோபியரும் பெருமிதம் அடைந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஊரில் இதே பேச்சு. அந்த ஆண்டாள் எவ்வளவு பக்தி பூர்வமாக உற்சாகமாக கண்ணனைத் துதித்து வழிபட ஊரிலுள்ள மற்ற பெண்களையும் விடியற்காலையில் எழுப்பி நீராடி பாவை நோன்பை பண்போடு செய்ய வைக்கிறாள் என்று அவள் மேல் மட்டற்ற அன்பும் பாசமும் அனைத்து கோப கோபியரிடத்தே தோன்றியது.

வைதேகி வீட்டு வாசலில் ஆண்டாள் நின்ற அன்று மார்கழி 15ம் நாள். வைதேகி பொல்லாத வாயாடி.

“வைதேகி, வாடி வெளியே, நேரமாச்சு!” ஆண்டாள் குரல் அவளுக்கு உள்ளே கேட்டது. ஆனாலும் அவள் பதிலுக்கு குரல் கொடுத்தாள் .

“ஆண்டாள், உன்னை பத்தி எனக்கு நிறையவே தெரியும், உன் அழகு, பேச்சு, பாட்டு, சாமர்த்தியம், பக்தி எல்லாமே தான். இவ்வளவு சீக்கிரமே ஏண்டி வந்து எழுப்பறே, எல்லாரும் வந்துவிட்டார்களா? எத்தனை பேர்? என்னை இன்னும் கொஞ்சம் தூங்க விடேன்”,

“எல்லாருமே வந்தாச்சு. கூட்டமாக யமுனா நதிக்கும் கிளம்பி நடந்தாச்சு. இன்னிக்கு அந்த குவலயாபீடம் யானையை சம்ஹாரம் பண்ணின கிருஷ்ணனைப் பத்தி நீ அடிக்கடி பாடுவாயே அதை எல்லோரும் கேட்கப் போகிறோம். உடனே அதைப் பாட சீக்கிரமா எழுந்து வாடி”

யாரிடம் என்ன சரக்கு இருக்கிறது என்று ஆண்டாளுக்கு நன்றாகவே தெரியும். அதை உபயோகித்து தானும் மகிழ்ந்து மற்றோரையும் மகிழ்விப்பதில் அவளுக்கு நிகர் அவளே தான். இதுவரை தூங்கிக்கொண்டிருந்த அந்தப்பெண் எழுந்தாள். கூட்டத்தில் சேர்ந்தாள், யமுனைக்கு நடந்தார்கள், நீராடினார்கள். பாடினார்கள். அவள் நன்றாக பாடக்கூடியவள் . அந்த கிருஷ்ணனே கேட்டு மயங்கினான் என்றால் பாருங்களேன். . அனைவரும் திருப்தியாக அன்றைய நோன்பு முடிந்து வீடு திரும்பினர்.

நாமும் இதோ வில்லிப்புத்தூருக்கு திரும்பிவிட்டோம்.

கோவிலிலிருந்து யாரோ ஒருவர் அதிகாலையிலேயே வந்துவிட்டார். விஷ்ணு சித்தர் கோதை இயற்றும் திருப்பாவை பாசுரங்களை பற்றி அன்றாடம் அருகே இருந்த ரங்க மன்னார் என்ற பெயர் கொண்ட வட பத்ர சாயீ கோவிலில் சொல்வதை அனேக பக்தர்கள் கேட்பார்கள். அவர்கள் பாசுரத்தின் அழகிலும் உட் கருத்தின் திண்மையிலும் ஆச்சர்யம அடைந்தனர். பரம சந்தோஷம். ஆஸ்ரமத்துக்கு அவரைத் தேடி வந்தவரும் தினமும் விஷ்ணு சித்தரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டு மகிழ்வார். இன்று நேரிலேயே கோதை பாடுவதைக் கேட்க வந்துவிட்டார்.

''கோதை அவருக்கும் ஒரு தடவை இன்றைக்கு நீ எழுதிய பாசுரத்தை பாடிக் காட்டம்மா. ரொம்ப ஆர்வமா கேட்க காத்திருக்கார். அந்த சாக்கிலே நானும் இன்னொரு தரம் சந்தோஷமா அதை கேட்கிறேனே.''

கோதை அமர்ந்தாள் . எதிரே ஓலைச் சுவடியைப் புரட்டினாள் . அன்று அவளால் இயற்றப்பட்ட பாசுரம் இது தான்.

''எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

''ரொம்ப ஆச்சர்யம். சுவாமி, உங்க பொண்ணு, தெய்வப்பிறவி. சாக்ஷாத் அந்த மகாலட்சுமி தாயாரே வந்து பொறந்திருக்கா '' என்று தோன்றுகிறது. இதிலே உள்ள உள்ளர்த்தத்தை வழக்கம்போலே நீங்களே அடியேனுக்கு சொல்லணும்.''

''ஒருத்தர்கிட்டே ஒரு நல்ல குணம், திறமை, சாமர்த்தியம் இருந்தா அதைப் போற்றணும்.'' ஆயர்பாடிலே எந்த பொண்ணு தூங்கிக் கொண்டிருந்தாளோ, அவள் கிளி மாதிரி குரல் உடையவள். நன்றாக பாடுபவள். நீ பாடினால் அந்த கிருஷ்ணனே நேரில் வந்து கேட்பவனாயிற்றே. நீ வந்தால், பாடினால், அவன் வந்து கேட்டால், மனம் மகிழ்ந்தால் அனைவருக்கும் அல்லவோ அந்த மாதவனின் அருள் கிட்டும். லோக க்ஷேமத்துக்காகவே தான் இந்த பொண்ணு இதை பாடியிருக்கா, சுவாமி.''

முதல்லே, நீங்க எல்லோரும் வந்தாச்சா என்று போய் எண்ணுங்கோ. நான் இப்போ எதுக்கு வரணும். என்னை எழுப்பாதேங்கோ என்று எதிர்த்து அடம் பிடித்த பெண் தான் அப்பறம் முதல்லே ஆண்டாளோடு நோன்புக்கு வந்தா. இதற்கென்ன அர்த்தம்?

வைஷ்ணவன் என்பவன் யார்? விஷ்ணுவின் அம்சம். விஷ்ணு யார்? யார் என்ன தவறு செய்தாலும் பொருமை யாக அவர்கள் திருந்த சந்தர்ப்பம் கொடுத்து, நல்வழி காட்டி, அப்படியும் திருந்தாதவனை தண்டிப்பவன். தான் செய்வது தவறு என்று உணர்ந்த மறுகணமே பெருந்தன்மையோடு அதை ஒப்புக்கொண்டு பிராயச்சித்தமாக தன்னைத் திருத்திக் கொள்பவன் உதாரண புருஷன். மற்றவர் மேல் அதிக அன்புடையவன். அவர்களை மதிப்பவன். சரணாகதி அடைபவன்.

ராமன் காட்டுக்கு சென்றதற்கு தன் தாயோ, கூனியோ காரணம் இல்லை, தானே என்று வலிய பரதன் ஒப்புக்கொண்ட மாதிரி. இதைத்தான் ''நானேதான் ஆயிடுக'' என்று அந்தப் பெண் கூறுகிறாள் என்று இந்த கோதை எழுதியது அதி அற்புதம்.

கோவிலில் மணி அடித்தது. வந்தவர் சென்று விட்டார். அவர் தனக்குள் முணுமுணுத்தது காதில் விழுகிறது:

'ஆண்டாள், கண்ணன் குவலயாபீடம் என்கிற பலம் கொண்ட மதயானையையும், கம்ச சாணூரர்களைக் கொன்றதும் எதற்கு இங்கு உதாரணம் காட்டுகிறாள் தெரியுமா? ஒவ்வொருவனுக்குள்ளேயும், காம, க்ரோத, மோக, மத குவலயாபீடங்கள், கம்சர்கள், சாணூரர்கள் இருக்கிறார்களே அந்த கிருஷ்ணன் துதி பாடி அவர்களையும் ' கொல்லப்பா என் செல்லப்பா' என்று வேண்டிக்கொள்ளவே.''


16வது விருந்து: (31.12.2016) J.K. SIVAN

''மா மாயன் மணிவண்ணன்''

இன்று விடியற்காலையில் சில பசுக்களும் கன்றுகளும் கூட அல்லவா ஆண்டாளுடனும் அவள் தோழிகளுடனும் சேர்ந்து நடக்கின்றன .

யமுனைக்கு சில்லென்று வீசும் இனிய குளிர் காற்றில் தன் சினேகிதிகளோடு ஆண்டாள் பேசிக்கொண்டே போகின்றாள், மற்ற பெண்களையும் எழுப்பி நீராட. வைக்க.

இன்று மார்கழி 16 நாள் ஆகிவிட்டதே. . இதுவரை விடாது அந்த பெண்கள் அன்றாடம் யமுனையில் நீராடி விரதமிருந்து,உள்ளும் புறமும் தூய்மையோடு கிருஷ்ணனையும் நாராயணனையும் அருள் வேண்டும் இச் சிறுமிகள் இப்போது யமுனையில் நீராடி நோன்பிருந்து விட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

'ஆண்டாள், இப்போ எங்கேடி போகிறோம்?''

'நந்தகோபன் அரண்மனை போன்ற வீட்டுக்கு.

'' இன்று என்ன விசேஷம்.?

''என் கூட வாருங்கள், தானாகவே தெரியும்.''

இந்த பதினைந்து நாட்களாக எல்லோர் வீட்டிலேயும் சென்று பெண்களை துயில் எழுப்பிய ஆண்டாள் இன்று காலை யார் வீட்டுக்கு சென்றாள் தெரியுமா?

ஆயர்பாடியில் கண்ணன் வசிக்கும் அவன் தகப்பன் நந்தகோபன் அரண்மனைக்கே. எளிதில் உள்ளே போக முடியுமா? வாசலில் நந்தகோபனின் வாயில் காவலாளி கொடிய கூர்மையான வேல் போன்ற ஆயுதங்களோடு காவல் காத்துக்கொண்டிருக்கிறான்.

யாரும் உள்ளே நெருங்க முடியாது. ''கண்ணனை''க் ''கண்'' போல் பாதுகாக்கிறான் நந்தகோபன். ஏன்? நாளொரு அரக்கனும் பொழுதொரு ஆபத்தும் தான் அந்தச் சிறுவனைக் கொல்ல கம்சனால் எந்த நேரமும் அணுகுகிறதே அதனால் தான்.

''சிறுமிகளா, யார் நீங்கள் எல்லாம் ? அதுவும் இந்த வேளையிலே? இந்நேரத்தில் இங்கு என்ன வேலை உங்களுக்கு?''.

''அய்யா, வாயில் காப்போனே, இந்த உயர்ந்த மணிகள் பொருத்திய உங்களது பெரிய கோட்டை மணிக்கதவை திறவுங்கள். எங்களை உள்ளே விடுங்கள்'' என்கிறாள் ஆண்டாள்

'' சிறு பெண்களா முதலில் கேட்டதற்கு பதில் சொல்லுங்கள், யார் நீங்கள், எதற்கு உள்ளே போகவேண்டும்?''

''இந்த தெய்வீக மார்கழி மாதத்தில் விடியலில் நீராடி பாவை நோன்பு நூற்று எங்கள் தெய்வத்தை அந்த கிருஷ்ணனை தரிசிப்பதுடன் அவனைத் துயில் எழுப்பவும் வந்துள்ளோம். உள்ளே இருக்கும் உங்கள் தலைவன், எங்கள் மனம் நிறைந்த அந்த கண்ணன் நேற்று எங்களை இங்கே வரச்சொல்லி அனுமதி கொடுத்ததால் அல்லவா அவனை தரிசனம் செய்து அருள் ஆசி பெற வந்துள்ளோம். இது அவன் நேரம். நாங்கள் உள்ளே சென்று அவன் ஆயிர நாமங்களை சொல்லி அவனை துயிலெழுப்ப விழைகிறோம். எங்களைக் குறுக்கிடாது தயவு செய்து கதவை மட்டும் திறவுங்களேன்?''

''விசாரிக்காமல் நான் யாரையும் உள்ளே விடமுடியாது.''

''நாங்களோ சிறு பெண்கள் எங்களால் என்ன துன்பம் உங்களுக்கோ,அந்த மாயக் கண்ணனுக்கோ நேரும்?"

''சூர்பனகை, பூதகி ஆகியோரும் பெண் தானே?'' என சிரித்தான் காவலாளி.

''அவர்கள் வெளியே இருந்து இங்கே வந்தவர்கள். நாங்கள் இதே ஊரில் கிருஷ்ணனுடன் பிறந்து வளர்ந்தவர்கள். கோப குடும்பப்பெண்கள். மேலும் நாங்கள் கொல்ல வந்தவர்கள் இல்லை. எங்கள் மனத்தை அவன் வெல்ல வந்தவர்கள். புரிகிறதா?''

''இங்கேயே சற்று இருங்கள். பொறுங்கள். நான் கிருஷ்ணனிடம் சென்று அனுமதி தருகிறானா என்று கேட்டுத்தான் உங்களை உள்ளே விடமுடியும்'' என்ற காவலாளி உள்ளே சென்றான். அவர்கள் அங்கேயே பாடிக்கொண்டு நின்றார்கள்.

உள்ளே சென்று வந்த அந்த காவலாளி அந்தப் பெண்களை உள்ளே விட்டான். ஆண்டாள் எதையும் சாதிப்பவளாச்சே.

ஆண்டாளும் ஆயர்பாடிச் சிறுமிகளும் கண்ணனின் அரண்மனையில் உள்ளே போகும் அதே நேரம் தான் வில்லிப்புத்தூரில் ஆஸ்ரமத்தின் தட்டி வாயிற் கதவைத் திறந்து வெளியே சென்று அழகிய பெரிய கோலம் போட்டுக்கொண்டிருந்த கோதை ஆஸ்ரமத்தில் நுழைந்தாள்.

அவள் எதிரே அந்த அழகிய அரங்கனின் உருவச்சிலை அவளையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டி ருக்க அன்று எழுதிய பாசுரத்தை மனதிலிருந்து வாய்க்கு நகர்த்தி இனிமையான குரலில் அன்று இயற்றிய பாசுரத்தைப் பாடினாள். மேலே கண்ட காட்சி அவள் செய்த அற்புதக் கற்பனையாக, தீஞ்சுவைத் தமிழில் ஈடில்லா பாசுரமாக, பக்தி சொட்ட வெளிப் பட்டது.

'கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்''

''அம்மா, கோதை, நீ இந்த 16 நாட்களாக என்னை வைகுண்டத்தில் ஆழ்த்தி விட்டாய் தாயே. நீ சாதாரண கவிதையாக சொல்லலங்காரமாக இதை இயற்ற வில்லை. ஒரு தத்துவத்தையே புகட்டி விட்டாய்.''

''அப்படி என்னப்பா எழுதினேன் ?'' சிரித்தாள் கோதை.

''சொல்கிறேன் கேள்: முதல் 15 நாட்களாக ஆண்டாளும் சிறுமிகளும் யாரை வேண்டி நோன்பிருந்தார்களோ', அவனை , ஏன் 16வது நாளன்று பார்க்க நேரிட்டது?'' -- விஷ்ணு சித்தர் கேட்டார்..

''தெரியவில்லையே அப்பா? நீங்களே சொல்லுங்களேன்?''

''கிருஷ்ணனை வேண்டித் தானே இந்த மார்கழி முப்பது நாளும் அவர்கள் நோன்பிருந்தார்கள். பாதி மாதம் (15 நாள்) ஆகிவிட்டதே. மீதியை அவர்கள் அவனைத் தேடி போகவேண்டாம். பக்தன் பாதி வழி கிருஷ்ணனை நோக்கி நடந்தால் மீதி வழியை கிருஷ்ணனே நடந்து வந்து அவனை எதிர்கொள்ளுவான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டாய் அம்மா. எனக்கு இப்படித்தான் படுகிறது ''என்றார் ஆழ்வார்.

எவ்வளவு ஆழமான அர்த்தம் பார்த்தீர்களா!

17வது விருந்து: (1.1.2017) j.k. sivan


17. உலகளந்த உம்பர் கோமான்

நேற்றைய விருந்தாகிய திருப்பாவை பாசுரத்தில் என்ன பார்த்தோம்?

ஆண்டாள் மற்ற ஆய்ப்பாடி பெண்களை அழைத்துக்கொண்டு நந்தகோபன் அரண்மனைக்குள் சென்றாளல்லவா? எல்லோரும் குதூகலத்தோடு நந்தகோபனை சந்தித்தனர். இந்த துயிலெழுப்பும் பாசுரம் பற்றிய நமது இந்த குட்டிக் கற்பனை மார்கழி 17வது நாளாகிய இன்று இடம் பெறுகிறது.

உள்ளே சென்ற ஆண்டாளும் மற்ற சிறுமிகளும் நேராக நந்தகோபன் அறைக்கே சென்றார்கள்.

நந்த கோபன் படுக்கையிலிருந்து எழுந்தவர் முதன் முதலாக இந்த சிறுமிகளின் முகத்தில் தான் விழித்தார் என்றே வைத்துக் கொள்ளலாம்.

ஆண்டாள் அவரை வணங்கி நின்றாள் :

''குழந்தை, யாரம்மா நீ, நீங்கள் எல்லாம் எதற்கு இங்கே அதிகாலையில் வந்திருக்கிறீர்கள்?''

''ஐயா, மகானுபாவரே, நந்தகோப பிரபுவே, நீங்களல்லவோ எங்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளும் செய்பவர், உம்மாலல்லவோ நாங்கள் குடி நீர் பெறுகிறோம், உங்கள் தயவால் அல்லவோ எங்களுக்கு உடுக்க உடை கிடைக்கிறது. உலகில் வாழ தேவையான அனைத்தும் எங்களுக்கு வாரி வழங்கி அன்போடு அளிக்கும் பெருந்தகையே! உங்களை துயிலெழுப்ப முகமன் பாட நாங்கள் பாக்கியம் செய்தவர்கள்.''

இதற்குள் யசோதை அங்கு வந்துவிட்டாள் . இக் குழந்தைகளைக் கண்டு ஆனந்தித்தாள்

அருகில் அவர்களை அன்பாக வரவேற்ற யசோதையைக் கண்டதும் ஆண்டாள்

''எங்களின் தாய், அம்மா, யசோதை! நீ அல்லவோ எங்கள் இல்லங்களின் ஒளி விளக்கு. எங்கள் பசுக்கூட்டம், அவற்றை கண்காணிக்கும் எங்கள் ஆயர் பாடி கோபர்கள் மற்றும் வீட்டில் உள்ள கோபியர் எல்லோருமே உங்கள் அன்பாலும் பாசத்தாலும் அன்றோ கட்டுண்டு இருக்கிறோம். உங்களைத் துயில் எழுப்ப திருவுள்ளம் கொண்டு வந்தோம் தாயே. எங்களை ஆசிர்வதிப்ப்பீர்களாக''

இதற்குள் கிருஷ்ணனைக் கண்டு விட்டாள் ஆண்டாள். அருகே துயில் கொண்டிருந்த பலராமனையும் பார்த்துவிட்டவள் வணங்கினாள்.

''எங்கள் உயிராய் விளங்கும் ''ஹே கிருஷ்ணா, கடவுளுக்கெல்லாம் கடவுளே, தெய்வமே துயிலெழு. நீ உறங்கினால் உலகமே உறங்கிவிடுமே.!

''எங்கள் தலைவனின் சகோதரா, அழகிய வீர பலதேவா நீயும் உன் சகோதரனும் எழுந்திருங்கள்.''

''எங்களை ஆசிர்வதியுங்கள். எங்கள் நோன்பு சிறக்க உங்கள் அருள் வேண்டும் ''

இவ்வாறு வேண்டி ஆண்டாளும் சிறுமிகளும் பல துதிப்பாடல்களை ப் பாடினர். (அந்த பாடல்களின் பெயர்கள் எனக்கு மறந்து போய் விட்டது. ஞாபகம் வந்தபோது சொல்கிறேன் !!)

ஆண்டாள் அழகாக அன்று அவர்கள் அனைவரையும் வணங்கி போற்றி ஒரு அழகான பாசுரம் பாடுகிறாள். தோழியர்களும் சேர்ந்து கொள்கிறார்கள்.

இந்த நந்தகோபன் குமரன் கதையில் அந்த ஆயர்பாடிப் பெண்கள் போற்றிப்பாடும் அந்த நாராயணனின் கலியுக தோற்றமாகிய திருப்பதி வெங்கடேசனுக்கு இந்த நன்னாளில் ஸஹஸ்ரகலசாபிஷேகம் விமரிசையாக நடைபெறும். கலியுக தெய்வமே, கண்கண்ட வரதா'' என நாமும் அவனைப் பணிவோம்.

ஆண்டாள் பாடியது எங்கோ தென்கோடியில் உள்ள வில்லிப்புத்தூரில் விஷ்ணு சித்தர் காதிலும் விழுந்தது.
இதை யார் பாடுகிறார்கள்?

ஆண்டாளா கோதையா?

ஆஹா! ஆண்டாள் கண்ணனைக்கண்ட ஆனந்தத்தில் கடல் மடையென பாசுரம் ஒன்று பாடுகிறாள்.
இல்லை, இல்லை, ஆண்டாள் உருவில் வில்லிப்புத்தூரில் மற்றொரு இளம்பெண் கோதை அல்லவோ ஆண்டாளாகி இதைப் புனைகிறாள்.

ஏட்டில் எழுத்தாணி விரைகிறது.

வார்த்தைகள் மனசிலிருந்து பொங்கி மதியை நிரப்பி கண்வழியே கைக்குத் தாவி ஏட்டில் படைக்கப்பட்டது. இனி காலம் காலமாக அந்தக் காணற்கரிய நிகழ்ச்சி மகிழ்ச்சி தரும் எழுத்துச் சிலையாக என்றும் நம் மனத்திலும் நிற்கச் செய்த ஆண்டாளே, கோதையே, உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறோம்.
இதோ அந்த அற்புத பாசுரம்.

''அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்'

தூணில் சாய்ந்தவாறு விஷ்ணுசித்தர் இது வரை நூறு தடவையாவது மேற்கண்ட பாசுரத்தை படித்து வாயாரச் சொல்லி மகிழ்ந்திருப்பார்.

இன்னும் அவருக்கு அந்த ஓலைச்சுவடியை கீழே வைக்க மனம் வரவில்லையே. எதிரே மலர்களைத் தொடுத்துக்கொண்டே அவரைப்பார்த்து பாசத்தோடு கோதை அமர்ந்திருக்கிறாள்.

''பாமாலையில் மகிழ்ந்த அரங்கா உனக்கு ரெட்டிப்பு சந்தோஷம் இன்று, கோதை படைத்த பாமாலையோடு கோதை தொடுத்த பூமாலையும் சூடிக்கொள்''.
18 வது விருந்து: J.K. SIVAN

'' உந்து மத களிற்றன்''

அதிர்ஷ்டக்காரி அந்த ஆண்டாள் குட்டி. அடடா! எவ்வளவு புண்யசாலி. சாதாரண, படிக்காத எளிய இடைச்சாதி பெண். இல்லவே இல்லை. மிக உயர்ந்த படிப்பான ஞானத்தில் பிறக்கும்போதே தேர்ந்த உயர்ந்த பெண். சாதி உடம்புக்கு தானே. உள்ளத்திற்கேது?

சாக்ஷாத் பரமாத்மன் நாரயணனே, தான் வளர, ஆயர்குலத்தைதானே தனக்கு வேண்டும் என்று தேர்ந்தெடுத்தான்,

உலகில் உத்தமமான, பூஜிக்கத் தக்க பிராணியான பசுவை பராமரிக்கும் ஆயர்பாடி மக்கள் அனைவரும் தான் ஆயர்குலம் (higher குலம் )என்ற உயர்குலம் கொண்டவர்கள். அதனால் தான் ஆண்டாளால் கிருஷ்ணனை அவன் வீட்டிலேயே காண முடிந்தது. ஆண்டாள் நினைத்ததை சாதிப்பவள்.

நந்தகோபன், யசோதை, கிருஷ்ணன் பலராமன் ஆகியோரை எல்லாம் துயிலெழுப்பும் வேலையில் ஈடுபட்ட ஆண்டாள் தன் தோழியருடன் சுற்றும் முற்றும் பார்க்கிறாள், இன்னும் யாரை இங்கே துயில் எழுப்பாமல் விட்டு விட்டேன் என்று. அப்போது தான் நப்பின்னை தெரிகிறாள். அடடா, இவளை விடலாமா என்று அவர்கள் அனைவரும் அவளை ஸ்தோத்ரம் செய்கிறார்கள்.

''அழகிய நப்பின்னையே (நீளா தேவி) , கமகமக்கும் தைல வாசனையோடு மணப்பவளே நந்தகோபன் மறுமகளே, உன் மாமனார் எப்படிபட்டவர் தெரியுமா உனக்கு?.

அவரது செல்வங்கள் கணக்கிலடங்காது. அனேக பசுக்கள், எருமைகள்,கன்றுகள் மட்டுமல்ல. யானைகளையும் உடையவர். எதிரிகள் தான் அவரைக் கண்டு அஞ்சி ஓடுவர்களே தவிர அவர் அஞ்சியதாக சரித்திரமே இல்லை. வெளியே சேவல்கள் குரல் கொடுத்து பொழுது விடிந்ததை பறை சாற்றுகிறதே.

அதோ பார், மல்லிப் பந்தல் முழுதும் குயில் கூட்டம் என்னமாக சூழ்ந்து கொண்டு பேசுகின்றன. மல்லிகை மலர்ந்து மணம் வாரி வீச அவற்றை அனுபவித்து தென்றலில் விடியலின் குளுமையில் லயித்து குயில்கள் கூவ, அவைகளின் இனிய குரலோசை, குழலோசையாக துயிலெழுப்பும் வேலையைச் செய்கிறதே தினமும். பந்து விளையாடும் பருவப் பெண்ணே, உன் கைகளின் வளையோசை கலகலவென ஒலிக்க உடனே வந்து கதவைத் திற. உள்ளே வந்து ஆசி பெறுகிறோம். எங்கள் நோன்புக்கு உன் நல்லாசியும் தேவையம்மா.''

நப்பின்னை யார்? இது பரம ரகசியமல்ல. ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே ஒரு பாலம்.
அது புரிந்தால் போதுமானது. அவளது அனுகூலத்துடன் தான் நாம் வீடு பேறு அடைய முடியும்.

சூர்ப்பனகை சீதையை ஒதுக்கிவிட்டு ராமனைத் தேடினாள், ராவணன் சீதையைத் தேடினவன் ராமனை மறந்தான். முடிவில் இருவருமே அழிவைத்தான் தேடிக்கொண்டனர். நப்பின்னைப் பிராட்டி தான் ஆண்டாள் குரல் கேட்டு, கதவைத் திறந்து அந்த ஆயர்பாடி சிறுமிகளைக் கண்ணனிடம் உள்ளே அழைத்துச் சென்றாள். அதற்கப்புறம் தான் ஆண்டாள் கிருஷ்ணனை நேரே காண்கிறாள்.

ஆண்டாளின் இந்த இந்த பாசுரம் ஸ்ரீ ராமானுஜரை மிகவும் கவர்ந்த ஒரு பாசுரம். அவர் பிக்ஷைக்கு போகும்போது இதையே பாடிகொண்டு தான் தனது ஆசார்யன் வீட்டு வாசலில் நின்றார் என ஒரு சரித்திரம் உண்டு. அதை சுருக்கமாக சொல்கிறேன்.

ஸ்ரீ ராமானுஜருக்கே திருப்பாவை ஜீயர் என்று ஒரு பெயர். பெயரை வைத்ததே அவரது ஆசார்யன் பெரிய நம்பிகள். என்ன காரணம் ?

ஸ்ரீ ராமானுஜருக்கு திருப்பாவையின் உள்ளர்த்தங்களில் பொதிந்த வேத சாஸ்திர சாரமும் அதன் பொருட் செறிவும், தெள்ளிய நடையும் அதைப்பாடும்போது கிடைக்கும் நாவின் சுவையும் அனுபவமாயிற்றே. அடிக்கடி ஆண்டாள் பாசுரங்களை பாடிக்கொண்டே செல்வார். அதுவும் முக்யமாக பிக்ஷைக்கு அவர் வெறுங்காலோடு பாதரக்ஷை அணியாமல் செல்வது வழக்கம்.

அவரை மிகவும் ஈர்த்த பாசுரம் இந்த 18வது திருப்பாவை ''உந்து மதக் களிற்றின்''

ஒரு முறை திருக்கோஷ்டியூரில் இவ்வாறு வெறுங்காலுடன் ''உந்து மதக்களிற்றின்'' பாசுரம் பாடிக்கொண்டே தனது ஆசார்யன் வீட்டு வாசலில் பிக்ஷைக்கு நின்றார். அவர் நின்ற சமயம் அவரது ஆசார்யனின் பெண் வாசல் கதவை திறந்த அந்த நேரம், ராமானுஜர் பாசுரத்தின் மற்றொரு அடியான ''செந்தாமரைக் கையாள் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்'' என்ற வரியை பாடிக்கொண்டிருந்தார். '' வளை ஒலிப்ப'' என்று சொல்லும் போது தான் தற்செயலாக அந்தப் பெண் கையில் வளைகள் அணிந்து வந்து, கதவைத் திறந் தாள்

கை வளை ஒலிக்க ஆண்டாளே பிரத்யக்ஷமாக தோன்றியதாக ராமானுஜருக்கு மனதில் பட்டது. அந்த ஆனந்த அநுபவத்தில் ராமானுஜர் மூர்ச்சையானார். பெரிய நம்பி ஆச்சர்யருக்கு விஷயம் சென்றது.

''வாசலில் என்ன சத்தம், என்னம்மா அத்துழாய் நடந்தது?''

''வாசலில் பிக்ஷைக்கு யாரோ வந்திருக்கிறாரே என்று கதவைத் திறந்தேன். உங்கள் சீடர் ராமானுஜர் தான் நின்றார். என்னைகண்ட அடுத் த வினாடி அவர் மூர்ச்சையடைந்து கீழே விழுந்து விட்டார் அப்பா. ஏன் எதற்கு விழுந்தார் என்று தெரியவிலையே ''

அப்போது அவர் என்னபண்ணிக்கொண்டிருந்தார்?.

''ஏதோ சீரார் வளை ஒலிப்ப '' என்று உச்சரித்துக்கொண்டிருந்தார்.''

''ஓஹோ ராமானுஜன் உந்து மதக்களிற்றன் பாசுரத்தை பாடிக்கொண்டு வந்திருக்கிறான் போலும். வளைக்கரங்களோடு நீ கதவை திறந்தது அவன் பாடிய பாசுரத்தில் வரும் காட்சியை நினைவூட்டி இருக்கும். ஆண்டாளே நேரில் வந்து கதவைத் திறந்ததாக ராமானுஜனுக்கு தோன்றியிருக்கலாம்'. அந்த ஆனந்தானுபவத்தில் தன்னை இழந்திருக்கிறான்' என்று ஊகித்தார். அதனால் தான் அவருக்கு ''திருப்பாவை ஜீயர்'' என்ற பெயரும் இட்டார்.

அது சரி ஏன் ராமானுஜர் திருப்பாவை பாடல்கள் பாடும்போது பாத ரக்ஷை அணிவதில்லை? . காரணம், ஆண்டாள் பூமி தேவி. அவளது சாக்ஷாத் அவதாரம். அவளைப் பாடும்போது செருப்பு அணிவது தாயாருக்கு செய்யும் அபசாரம், அவமரியாதை அல்லவா என்று எண்ணினவர். என்னே அவர் பக்தி!! இதோ அந்த பாசுரம்:

''உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்''

மேலே சொன்ன ஆண்டாள் குரல் ஒலித்தது கோதை மூலம் வில்லிப்புத்தூரில். எங்கோ ஒரு அமைதியான நந்தவனத்தில் பறந்து செழித்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென்று பூத்துக்குலுங்கும் பல ஜாதிப்பூக்கூட்டங்களுக்கிடையே அந்த பர்ண சாலையை நந்தவனப்பூக்கள் எல்லாம் நறுமணத்தால் குளிப்பாட்ட உள்ளே விஷ்ணு சித்தர் பூஜைக்காக ஏற்றிய தூப தீபங்களின் இனிய மணத்தோடு கலந்து மேலும் இன்ப மூட்டியது. கண்ணுக்கு தெரியாமல் எங்கிருந்தெல்லாமோ வித வித பட்சி ஜாலங்களின் சப்தக்கலவை ஏழு ஸ்வரங்களின் ஓசையைக் கலந்து கட்டியாக பரிசளித்தது. இவற்றை எல்லாம் உள்ளடக்கி மேலே காற்றில் கோதையின் தெய்வீகக் குரலில் மேற்கண்ட பாசுரம் ஒலி பரப்பானது.

''அம்மா கோதை, நீ பாடுவது ஒவ்வொன்றும் அபூர்வம். அசாத்தியம். அதன் அர்த்தம் அலாதி. நான் இப்போதெல்லாம் வில்லிப்புத்தூரில் இல்லை அம்மா. நீ தான் என்னைக் குண்டு கட்டாக கட்டித் தூக்கி ஆயர்பாடியிலே வைச்சுட்டியே. நான் கேக்கறதெல்லாம், '' என்னை ஆயர்பாடியிலேயே வச்சுடு. அந்த ஆண்டாளோடு சேர்ந்து நானும் அவள் எங்கெல்லாம் போறாளோ அவள் கூடவே போறேன். அவளை எனக்கு ரொம்ப பிடிக்கிற காரணம் என்ன என்பது உனக்கு தெரியவேண்டுமா? சொல்கிறேன் கேள் :

''நீ தான் எனக்கு அந்த ஆண்டாள். என்னை மட்டுமல்ல எவரையுமே நீதான் ஆண்டவள் ''


19வது விருந்து J.K. SIVAN

'' மலர் மார்பா''

மாதங்களில் அந்த மாதவன் மார்கழியாக உள்ளான். எனவே மார்கழி ஒரு உன்னதமான மாதம். நாராயணன் அம்சமாக, திருப்பதியில் கண் கண்ட தெய்வமாய் அருளும் ஸ்ரீ வெங்கடாசல பதிக்கு புஷ்பாங்கி சேவையும் சஹஸ்ரநாம அர்ச்சனையும் உண்டே. அவனை வணங்கி, இந்த மார்கழி 19ம் நாள் நாம் ஆயர்பாடி செல்வோம்.
இதுவரை நமது பயணம் சுகானுபவமானதற்கும் நன்றி சொல்வோம்.
அன்று, 19வது நாளில் ஆயர்பாடி சிறுமி ஆண்டாள் என்ன செய்தாள் என்பது நமது கட்டுரையின் இன்றைய பகுதி அல்லவா?
அந்த கிராம சிறுமிகள் கள்ளம் கபடமில்லாத கல்மிஷமில்லாத தூய மனம் கொண்டவர்கள். உள்ளே சுத்தமாக இருப்பினும் புறமும் சுத்தமாக இருக்க யமுனை ஆற்றில் நீராடி விரதமிருந்து மனத்திலும் வாக்கிலும் கண்ணன், நாராயணன் என்ற திருநாமங்களே நிரம்பி வழிய, இந்த தனுர் மாதம் பூரா தங்களை பகவத் சிந்தனையில் ஈடுபடுததிக் கொண்டதே பாவை நோன்பு என்பது தெரிந்தது தானே?

திரும்ப திரும்ப அந்த சிறு கிராமத்தில் வேறு எங்கு செல்ல வழி இருக்கிறது ?

ஆண்டாளும் அவள் இடைச்சிறுமி தோழிகளும் ஆயர்பாடியிலே மிகப்பெரியதான -- ''பெரிய கடவுள்'' -- உள்ளே இருக்கும், நந்த கோபன் மாளிகைக்கு இன்று காலையும் வந்து விட்டார்கள். எதற்கு? சர்க்கரை இருக்கும் இடத்தில் எறும்பு சுற்றாதா? வழக்கம் போல்கண்ணனைத் துயிலெழுப்பவே!!

நப்பின்னை பிராட்டியுடன் தலைவன் உறங்குகின்ற அழகை அந்தப் பெண் ஆண்டாள் எவ்வளவு விவரமாக வர்ணிக்கிறாள் பாருங்கள். அவள் குரல் அந்த விடியற் காலையில் எங்கும் சஞ்சரித்து, அருகே யமுனையின் நீர் பரப்பின் மேல் மோதி எதிரொலிக்கிறதே காது கேட்கிறதா? அதைத் தொடர்ந்து பின் பாட்டு பாடுவது போல் எண்ணற்ற பறவைகளும் உயர்ந்த குரலில் இன்னிசை கீதம் இசைக்கின்றனவே.ஆண்டாளின் குரல் கணீரென்று எப்போதும் முழங்குமே .

'குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்''
+++
இங்கே வில்லிப்புத்தூரில் ......

விஷ்ணுசித்தர் மனம் ஆயர்பாடியில் இருக்கிறது. உடல் ஆஸ்ரமத்தில், வில்லிப்புத்தூரில் ஒரு தூணில் சாய்ந்தவாறு விளக்கொளியில் தெரிகிறது.

அந்த விடியற்காலை நேரத்திலும் அருகே கோவிலில் அர்ச்சனை செய்யும் பட்டாச்சார்யர் அவரைத் தேடி ஆஸ்ரமத்தில் நுழைகிறார். உள்ளே கோதை அன்றைய மேற்கண்ட பாசுரத்தை பாட ஆரம்பித்து விட்டாள் . இருவருமே உட்கார்ந்து கோதை பாடிகொண்டிருக்கும் பாசுரத்தின் இனிமையிலும் அவள் பாடிய இனிய குரல் இன்பத்திலும் லயித்து சுகானுபவம் பெறுகிறார்கள்.

''மைத்தடம் கண்ணினாய் நீ'' என்கிற இடத்தில் கோதை வெகு அனாயாசமாக ஆத்மபூர்வமாக ஆலாபனம் விஸ்தாரமாக பண்ணி அவர்களை வைகுண்டத்திற்கே கொண்டு செல்கிறாள்.

பட்டாச்சார்யர் விஷ்ணு சித்தரைக் கண்டு வணங்கினார்

''விஷ்ணு சித்தர் சுவாமிகளே, சமீபத்தில் உங்களை அடியேன் தரிசிக்க நேரவில்லை. நேற்று சாயங்காலம் ஊரிலிருந்து வந்ததிலிருந்து உடனே உங்களை தரிசித்து பாவை நோன்பு பாசுரங்களின் விளக்கம் கேட்க ரொம்ப ஆவலாக இருக்கிறது. இதோ இப்போது கோதை பாடினாளே அதன் விளக்கம் எனக்கு உங்கள் வாயிலாக அளிப்பீர்களா?

''சுவாமின், என் பெண் என்பதற்காக சொல்லவில்லை. மற்ற சில பாசுரங்களை விட என் கோதை அருளிச்செய்கிற இந்த திருப்பாவை பாசுரங்கள் புரிந்துகொள்ள அவ்வளவு கடினமில்லை.
எதையும் நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதில் தான் சூக்ஷ் மம் இருக்கிறது. அவரவர் மனத்திற்கு, எதிர்பார்ப்புக்கேற்ப பொருள் விளங்கும்'' என விஷ்ணு சித்தர் நெஞ்சம் தழு தழுக்க சொன்னார்.
வில்லிபுத்தூர் வட பத்ர சாயி கோவில் பட்டாச்சார்யார் பரம சந்தோஷத்தோடு விஷ்ணுசித்தர் வாயிலாக என்ன அறிந்து கொண்டார் என்பதை நாமும் தெரிந்து கொள்ளவேண்டாமா ?

''குத்து விளக்கு சாதாரண பெட்ரூம் விளக்கோ, அகலோ, அல்ல. பஞ்ச பூதங்களையும் காத்தருளும் பரமன் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கொளியில் நறுமண அகில் புகை கமகமக்க சப்ர மஞ்ச கட்டிலிலில் அருகே நப்பின்னை உறங்க தானும் உறங்கிக் கொண்டிருக்கிறான்.
மெதுவாக ஆண்டாள் கதவைத் தட்ட நப்பின்னை விழித்துகொண்டு கிருஷ்ணனை பார்க்கிறாள். யார் முதலில் எழுந்து கதவை திறப்பது?
வெளியே ஆண்டாள் குரல் கேட்கிறது---

‘ஹே துளசியும் வண்ண,மணமிக்க மலர்களும் மார்பில் புரள நப்பின்னை அருகிருக்க துயில்பவனே, கொஞ்சம் வாயை திறந்து அருள்வாயா? மையிட்ட கண்களால் வையம் குளிர வைக்கும் நப்பின்னையே, கொஞ்சம் அவனை எங்களுக்காக வெளியே விடுவாயா? நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். எங்கே அவன் வாய் திறந்து இதோ வருகிறேன் என்று சொல்லி எழுந்து வந்துவிடுவானோ'' என்ற சந்தேகத்தில் அவனை ஒரு கணமும் பிரிய விரும்பாத நீ நாங்கள் அவனை எழுப்ப விடமாட்டாய் என்று ரொம்ப நன்றாகவே எங்களுக்கு தெரியும். நீ செய்வது தகுமா, ஞாயமா, முறையா? இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. உன்னருளும் அவனருளுடன் எங்களுக்கு கிடைத்து எங்கள் பாவை நோன்பு பலனளிக்க செய்வது உன் தயவால் தானே அம்மா ! '' என்றவாறு அவளை வணங்கிவிட்டு அந்தப் பெண் கூட்டம் அன்றைய நோன்பு முடிந்து வீடு திரும்பியது''

இது தான் அந்த பாசுரத்தின் சாராம்சம் என்று ஆண்டாள் பாடியதாக அமைந்துள்ளது இந்த அழகிய கற்பனை வளம் நிறைந்த பாசுரம்.

'' நாராயணனின் காருண்யத்தைச் சோதிக்க ஒரு முறை தாயார் என்ன சொன்னாள் என்று நினைவிருக்கிறதா?

''உங்கள் பக்தன் என்றுசொல்லிக்கொள்கிறீர்களே, இவனைப் பாருங்கள் மிகப்பெரிய தவறைச் செய்கிறான் என்று ஒருவனைச் சுட்டிக்காட்ட, பெருமான் சிரித்துக்கொண்டே ‘’என்னைத் தூய மனத்தோடு வேண்டும் எனது பக்தன் ஒரு போதும் தவறு செய்ய மாட்டான், எந்தத் தவறுக்கும் காரணமாகவும் இருக்கமாட்டான். அப்படி அவன் செய்யும் எந்தச் செயலாவது தவறாகத் தென்பட்டாலும் அது யாரோ ஒருவரின் நன்மைக்காகவோ செய்ததாகவே இருக்கும்'' என்றான் நாராயணன்.
.
விஷ்ணு சித்தரை நமஸ்கரித்து பட்டர் கோயிலுக்கு மீண்டார்

20வது விருந்து
J.K. SIVAN

''கப்பம் தவிர்க்கும் கலியே''

காற்று வீசும்போதெல்லாம் குறிப்பாக அந்த மூங்கில் காட்டில் இருந்து விசேஷமான காந்த சக்தி யுடைய சப்தம் வரும் என்று ஆயர்குடி கோப கோபியர் நன்றாக அறிவார்கள். வித வித மான இசையோடு காற்றில் கலந்து வரும் அதை ரசிப்பார்கள். யமுனையின் மறு பக்க கரையில் தான் மூங்கில் காடுகள் இருந்தன.

கண்ணன் அங்கிருந்து தான் ஒரு மூங்கில் குழாயில் தனது புல்லாங்குழல் தயார் செய்து கொண்டான். மற்ற மரங்களுக்கெல்லாம் அந்த மூங்கில் கொத்து மரங்களின் மீது இயற்கையாகவே பொறாமை இருக்க இதற்கு மேல் என்ன காரணம் தேவை? .

எல்லா மரங்களுக்கும் ஒரு புறம் பெருமையாகவும் இருந்தது. அனைவரும் விரும்பும் கண்ணன் அந்த மூங்கில் குழாய் மீது தனிப் பிரேமை வைத்ததால் அவை அடிக்கடி காற்று வீசாதா அது மூங்கில் காட்டிலிருந்து இன்னிசை எழுப்பாதா என்று எங்கும்.

காற்று தாங்கிக்கொண்டு வந்த இன்னிசை ஒரு பாட்டாகவே அந்த வ்ரஜ பூமி எங்கும் எதிரொலித்தது.
''புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே அந்த புருஷோத்தமன் புகழ் பாடுங்களே''

மார்கழி 20வது நாளான இன்று ஆண்டாளும் சிறுமியர்களும் வழக்கம்போலவே இன்று காலையும் நந்தகோபன் மாளிகை சென்று துயிலெழுப்ப தயாராயினர்.

யாரைப் பிடித்தால் காரியம் ஆகும் என்பது ஆண்டாள் என்கிற கெட்டிக்கார சிறுமிக்கு சுலபமாக தெரியுமே. தங்கள் பாவை நோன்பு பலனளிக்க எவர் ஆசியும் அருளும் தேவையோ அவரையே இயங்க வைக்கும் சக்தி நப்பின்னை பிராட்டியே என்பதால் ஆண்டாளின் சிறுமியர் குழாம் நப்பின்னையையே வளைய வந்ததில் என்ன ஆச்சர்யம்! மாளிகையில் முன் வாசலில் அவர்களின் இனிமையான குரலில் நாராயணனையும் கிருஷ்ணனையும் போற்றி பாடினர்.

ஆண்டாள் பாடினாள். தனது பாடலிலே கண்ணனை வேண்டினாள்: அதன் சாராம்சம்:

''முப்பத்து முக்கோடி தேவர்கள் வணங்கும் தேவாதிதேவா. நாராயணா, கேளாமலேயே அனைவரையும் ரட்சிக்கும் தேவனே துயிலெழு. அம்மா, நப்பின்னைப் பிராட்டியே, உலக நாயகியே, நீயும் துயிலெழு. உங்கள் ஆசியுடன் எங்கள் நோன்பு நன்று தொடர வாழ்த்தி அருளவேண்டும். தூய மனங்களில் என்றும் வீற்றிருக்கும் நாராயணனும் பிராட்டியும் தேவர்களை எல்லாம் காத்ததுபோல் நம்மையும், நாம் வேண்டாமலேயே, கேளாமலேயே, காப்பார்கள்.''

அச்சிறுமிகள் அன்றும் யமுனை நீராடி விரதம் வழக்கம் போல் கொண்டாடினர். கை நிறையபுஷ்பங்களை எடுத்து கொண்டு வாய் நிறைய நாமாவளி சொல்லி கொண்டு வீதி வழியாக அருகே இருந்த பெருமாள் கோயில் சென்று வழிபட்டு அன்றைய விரதம் முடிந்தது.

மார்கழியில் இந்த புனித நாளில் கீழ் திருப்பதியில் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் ஊஞ்சல் சேவையுடன், மாடவீதி புறப்பாடு. காலம் மாறலாம். காட்சிகள் மாறுவதில்லை!!. கோலத்தில் சற்று வேறுபாடு. அவ்வளவே!

எப்போதோ யார் செய்த புண்ணியமோ, நமக்கெல்லாம் அந்த சிறுமி கோதை ஆண்டாளாக உருவெடுத்துக்கொண்டு அளித்த புதையல் இதோ கர்ணாம்ருதமாக வில்லிப்புத்தூர் நந்தவனம் பூரா எதிரொலிக்கிறது.

''முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்''

வாசலில் மாவு எடுத்து பெரிதாக கோலம் போட்டிருந்தாள் கோதை.

செடி கொடிகளை தத்ரூபமாக வரைந்திருந்தாள் அல்லவா? அவளுக்கு மிகவும் நெருக்கமான வைதேகி என்கிற பசு அந்த கோலத்தை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தது. பாவம், அந்தப் பசு. கோதை வர்ணம் தீட்டி வரைந்திருந்த செடிகொடிகளை நிஜம் என்று நம்பி ஆர்வமுடன் நாவால் நக்கி தின்ன முயற்சித்ததில் கோலம் கலைந்து விட்டது. நமக்கென்றால் மிக்க கோபம் வரும். வாயில்லா ஜீவன் என்று கூட பார்க்காமல் ஒரு கொம்பினால் அதை அடித்து விரட்டுவோம். ஆண்டாள் நம் போல் இல்லையே!. ஆனந்தமாக சிரித்தாள். பசுவை அணைத்தாள் . மெச்சினாள் . கழுத்தைக் கட்டிக்கொண்டு '' வைதேகி ஏமாந்தாயா, நிஜம் என்று நம்பின நீ ஏமாந்து போகலாமா? பாவம் உனது ஆசை நிறைவேற வேண்டாமா? நிஜமாகவே உனக்கு இலை தருகிறேன் என்று உள்ளே சென்று நிறைய அகத்திக்கீரை கட்டாக கொண்டு வந்து வைதேகியின் வாயின் ஊட்டினாள் . ( வைதேகி யின் கண்களில் இருந்து வெளிப்பட்ட நன்றியை யும், அன்பையும், பாசத்தையும் எனக்கு எழுதத் தெரியவில்லையே . வார்த்தை தேடியும் கிடைக்கவில்லையே . நான் ஒரு சாதாரணன் என்னால் அதை எப்படி அழகாக எழுத முடியும். மன்னிக்கவும்.- சிவன்)

இப்போதெல்லாம் வடபத்ர சாயி கோவிலில் விஷ்ணு சித்தரைச் சுற்றி நிறைய பக்தர்கள் அன்றாடம் ஆண்டாள் எழுதிய பாசுரங்களை படிக்கச்சொல்லி கேட்டு அர்த்தமும் அவர் சொல்லி புரிந்துகொண்டு மகிழ்கிறார்களே. மேற்கண்ட 20வது நாள் பாசுரம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது


21. ஊற்றம் உடையாய் பெரியாய்

இந்த உலகத்திலேயே அதி வேகமாக ஓடக்கூடியது எது என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை ஊகித்து நான் சொல்லட்டுமா?

புலி, சிறுத்தை, மான், என்று சிலர் சொல்வது காதில் விழுகிறது, யாரோ ஒருவர் ...." நாய்''!!. மன்னிக்கவும் . இது எதுவுமே இல்லை. ''நேரம், நாள்'' இது தான் எதைக்காட்டிலுமே அதி வேகமாக ஓடுகிறது என்பேன்.

விஷ்ணு சித்தரும் இதைத்தான் உரக்க செடிகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

''மார்கழி ஆரம்பித்ததே தெரியவில்லை. நழுவிக்கொண்டே இன்று 21 நாள் ஓடி விட்டதே. என்ன அற்புதமான அனுபவம் இத்தனை நாளும். கோதையின் பாசுரங்கள் எனக்குப் புத்துயிர் அளித்து வருகிறதே, இன்னும் ஒன்பது நாள் மட்டுந்தானா இந்த இன்பம் ! வேகமாக ஓடும் நாளே, நீ ஏன் மார்கழிக்கு மட்டும் குறைந்தது இருநூறு நாட்களாவது இருக்கக்கூடாது ! '

ரோஜாப்பூ, சண்பகம், மல்லிகை எல்லாமே இதைக்கேட்டு குபீர் என்று சிரித்தன.

''ஏன் சிரிக்கிறீர்கள்'' என்று அவற்றைப்பார்த்து பெரியாழ்வார் கேட்டார்?

''ஆழ்வாரில் பெரியவர் எனப் பெயர் பெற்றவரே, சிறந்தவரே, கோதையின் அப்பாவே, இந்த மார்கழிக்கு முப்பது நாள் போதாது என்றே குறைப்பட்டுக் கொள்கிறீர்களே, எங்களைப்பற்றி ஒரு கணமாவது சிந்தித்தீர்களா? காலையில் மலரும் நாங்கள், மாலையில் மடிகிறோமே, எங்கள் வாழ்வு சோகமானதல்லவா? ''

''ஆஹா !ரோஜாக்களே, நீங்கள் சொல்வது என் மனத்தில் உங்களிடம் உள்ள முள்ளைப்போல் சுரீர் என்று தைக்கிறதே!''

''அது தான் இல்லை! நாங்கள் பரம திருப்தியாக இருக்கிறோம், பரம்பரை பரம்பரையாக. காலையில் மலர்ந்தோமா, எங்களை யாராவது உங்களைப்போல் உள்ளவர்கள், ஆசையாக வளர்த்தார்களா, எங்கள் அழகை ஸ்லாகித்து பேசி, பாடி, பறித்து, மாலையாக்கி, தங்களுக்கோ, இறைவனுக்கோ சூட்டி மகிழ்ந்தார்களா , அது போதுமே. எங்கள் வாழ்வின் லட்சியம் அதோடு முடிந்ததே! இது அல்லவா பேரின்பம். சிறிதும் துன்பமே இல்லையே. பிறந்தோம், வளர்ந்தோம், மகிழ்ந்தோம், மகிழ்ச்சியளித்தோம், முடிந்தோம். எல்லாம் சிறிது நேரத்திலேயே. போதுமே! இதற்கு மேல் என்ன வேண்டும்?

பயனற்று பலகாலம் வாழ்ந்து தானும் வருந்தி, பிறரையும் வருத்தி வாழ்வது நல்லதா, சுகமான சொல்ப வாழ்வு சிறந்ததா? நீங்களே முடிவெடுங்கள்!'' என்றது ரோஜா.

பெரியாழ்வார் கண்களை மூடி ''ரங்கா, ரங்கா, வட பத்ர சாயி'' என்றார். அது தான் முடிவு, அதில் தான் எல்லாம் அடக்கம்!

கற்பனை உலகம் ஒன்றில் தான் யாருமே நினைத்த நேரத்தில் எங்கு வேணுமானாலும் கண் மூடி திறப்பதற்குள் சென்று விடலாம். அங்கு RAC கிடையாது.

வழக்கம்போல் தினமும் யமுனையில் நீராடி கிருஷ்ணன் வளர்ந்து வாழும் ஆயர்பாடியில் நந்தகோபன் மாளிகைக்கு தினமும் சென்று கிருஷ்ணனை துயிலெழுப்புவது எல்லாருக்கும் கிடைக்கும் சந்தர்ப்பமா? சாத்தியம் தானா?. அந்த சிறுமி ஆண்டாளுக்கும் , அவளால் மற்ற சிறுமிகளுக்கும், இது வரப்ரசாதமாக அமைந்ததே! அதி புத்திசாலியான ஆண்டாளின் வர்ணனைக்கு ஈடு இணை இல்லை.

நந்தகோபன் வீட்டு பசுக்கள் மந்தையாக மலை போன்று பருத்துப் பெரிதாக நிற்கின்றன அந்த அதிகாலையில். கோபர்கள் பெரிய பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அந்த கறவைப் பசுக்களை அணுகி பால் கறக்க அந்த பாத்திரங்களை மடிக்கருகில் வைத்த கணத்திலேயே, தானாகவே பால் வெள்ளம் பொங்கி பாய்கிறது பாத்திரத்தில். கண்ணிமைக்கும் நேரத்தில் பாத்திரம் பொங்கி வழிகிறது இடமில்லாமல்!!

ஒரு வள்ளல் என்பவன் அவனைத்தேடி பலமுறை படையெடுத்து, அவனை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்தால் மட்டுமே பணமோ பொருளோ கேட்டு கொடுப்பவனல்ல. கேளாமலேயே வாரி கொடுப்பவன் பேர் தான் வள்ளல். நந்த கோபன் பசுக்கள் ஒவ்வொன்றுமே பால் வள்ளல்கள்.

'கிருஷ்ணா, உன் வீட்டு பசுக்களே இப்படி வள்ளல்கள் என்றால் எண்ண வொண்ணா சகல உயிர்களையும் ஊட்டி வளர்க்கும் நீ எத்தனை பெரிய வள்ளல்? உன்னை "பெரிய கடவுள்" '' பெரும் ஆள் ' பெருமாள் 'என்பது எத்தனை பொருத்தம். உன்னை எதிர்த்தவர்கள் பின்னர் தம் தவறை உணர்ந்து உன்னைச் சரணடைந்ததும் உன் பேரருளுக்கல்லவோ?. உலக மாயை இருளகற்றும் பேரொளியே! துயிலெழு!, உன்னைத் தேடி வந்த இந்த சிறுமிகளுக்கும் வழிகாட்டு. எங்கள் பாவை நோன்பின் கருப்பொருளாக வந்து எங்களை எப்போதும் உன் நினைவிலேயே போற்றி புகழ்ந்திட அருள்வாய்.'' -- அருமையாக பாடுகிறாள் ஆன்டாள்

இப்படி அந்த இடைச்சிறுமி ஆண்டாள் பாடுவதாக கோதை அபூர்வமாக ஒரு பாசுரம் எழுதினாள் . காலத்தால் அழியாத சிறிய காவியம். அது இதோ:

''ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்''

வில்லிப்புத்தூரில் கோதை மேலே சொன்ன பாசுரத்தை எழுதியிருந்த ஓலைச்சுவடியை இதுவரை குறைந்தது பத்து முறையாவது வழக்கம்போல் விஷ்ணுசித்தர் படித்து மகிழ்ந்தார். அருகிலிருந்தோரிடம் எல்லாம் அர்த்தத்தை விளக்கினார்.

'அம்மா, கோதை, என் செல்வமே, பல்லாண்டு பல்லாண்டு என்று பெரிய பாசுரங்களை எல்லாம் எழுதினேன்.அந்த நாராயணனை விடியலில் எழுப்பி வாழ்த்தினேன். எல்லோரும் என்னைப் புகழ்ந்தார்கள். நான் எழுதிய பல்லாண்டுக்கு ஈடு இணை இல்லை என்று புகழ்ந்தார்கள். இன்று தோட்டத்தில் நந்தவனத்தில் ஒரு சிறு ரோஜாப்பூ எனக்கு உணர்த்திய உண்மை இதற்கும் பொருந்தும் தாயே. ஒரு சிறிய பாசுரத்தில் நீ துயிலெழுப்பின அழகுக்கு எடைக்கு எடை என் பெரிய பாசுரம் தாங்குமா தெரியவில்லை என் தெய்வமே!''

Jan 06, 2017 2:13am
மார்கழி முப்பது நாள் விருந்து - இன்று 22வது
J.K. SIVAN

22 ''செங்கண் மாலே''

இறைவன் எங்கும் உள்ளான். அவனை எப்பெயரிலும் எவர் வேண்டுமானாலும் அறியலாம் என்பதால் தான் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற பரந்த நோக்கம் நம்மிடம் உண்டு. எனினும் ஒரு தாயைப் பொறுத்தவரை எல்லாக் குழந்தைகளும் பிடிக்கும் என்றாலும் ''என் குழந்தை'' என்று நோக்கும்போது அதன் மீது அலாதி பிரியமும் பாசமும் வைப்பவள்.

கிருஷ்ணன் அவ்வாறே நம் இதயத்தில் குடிகொண்டவன். இந்த மார்கழி முப்பது நாளும் அவன் விடியற்காலை ஒவ்வொருநாளும் ஆயர்குடிப் பெண் ஆண்டாளால் துயிலெழுப்பப்பட்டு நம் அனைவரையும் வந்தடைகிறான் என்று உணரும்போது மனம் மகிழ்கிறது.

ஆண்டாளின் திருப்பாவை 21 பாசுரங்களை இதுவரை எனக்குத் தெரிந்த தமிழில், என் மனத்தையும், ஆர்வத்தையும் சேர்த்துக் கலந்து மிக்க மகிழ்வோடு பகிர்ந்து வருகிறேன்.

இது உங்களை திருப்தி கொள்ளச்செய்து, ஒரு கணம் அந்த இளம் சிறுமியை நினைக்கச் செய்தால் என் முயற்சிக்கு அதுவே அன்பர்களே, நீங்கள் எனக்கு கொடுத்த சிறந்த பரிசு, சன்மானம்.

இன்னும் என்னை திருப்திப்படுத்த நினைத்தால் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆண்டாளை அறிமுகம்செய்யுங்கள். மார்கழி மாதம் கோவிலுக்குக் கூட்டிச் செல்லுங்கள். ஆண்டாள் சந்நிதி இருக்கும். அங்கே ''இதோ உள்ளே இருக்கும் உம்மாச்சி பத்தித் தான் உனக்கு தினமும் சொன்னேன்'' என்று ஞாபகப்படுத்துங்கள். அவர்கள் பெரியவர்களாகி தங்கள் குழந்தைகளுக்கு அவ்வாறு சொல்ல நேரிட்டால் நீங்கள் நினைவில் நிற்பீர்கள்!

இந்த உலகில் உண்மையாக பாடுபட்டு உழைத்தால் கைமேல் பலன் என்று நாம் கூறுகிறோம் அல்லவா? அந்த காலத்திலேயே ஆண்டாள் என்கிற சிறு பெண் இதை நிரூபித்திருக்கிறாள். தினமும் முழுமனதோடு இறைவன் மீது தீராத அன்பும் பக்தியும் கொண்டு தன்னொத்த சிறுமிகளையும் விடியற்காலை யிலேயே கூட்டிக்கொண்டு யமுனை நதியில் நீராடி மார்கழி குளிரில் நாவினிக்க மனமினிக்க நாராயணனை, பரந்தாமனாகிய கிருஷ்ணனை வேண்டி அருள் பெற விரதமிருந்தாள்.

இதோ இன்று மார்கழி 22ம் நாள் நந்தகோபன் அரண்மனையில் கிருஷ்ணனின் அறையில், நப்பின்னையின் பூரண ஆசியோடும் உதவியோடும் கிருஷ்ணனையே நேரில் கண்டு தோழியரோடு நிற்கிறாள்.

கிருஷ்ணனை அவன் அறையிலேயே பிடித்த கின்னஸ் ரெகார்ட் பெண்ணல்லவோ ஆண்டாள்.
அவள் என்ன சொல்லிப் பாடுகிறாள் இனிய குரலில் கிருஷ்ணனை நோக்கி, எனக் கோதையின் எழுத்து வடிவில் பார்ப்போமா:

''அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்''

“கிருஷ்ணா, இதோ உன் அறையில் எண்ணற்ற மாவீரர்களும் அரசர்களும் உன்னோடு மோதி, தோற்று, உன் அருமை பெருமை அறிந்து, தம் தவறை உணர்ந்து, கைகட்டி, வாய் பொத்தி, தலை குனிந்து, பணிவோடு, உன் அடிமையாக நின்றி ருப்பதை நாங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறோமே. அதே போல் நாங்களும் உன் கட்டிலின் அருகே செயலிழந்து சரணாகதி என நிற்கிறோமே. பாரேன்! உன்னுடைய சூர்ய சந்திரர்கள் போன்ற செந்தாமரைக்கண் சற்றே திறந்து கொஞ்சம் கொஞ்சமாவது எங்கள் மேல் பட்டாலே எங்கள் ஜன்ம ஜன்மாந்தர பாபங்கள் எல்லாம் தீருமே!! எங்கள் பாவை நோன்பின் பலன் கைமேல் கிட்டட்டுமே".

இதோ இங்கே பார்த்தீர்களா?

வில்லிப்புத்தூரில் வடபத்ரசாயி ஆலயத்தின் வாசலில் நிற்கும் இருவரும் ஏற்கனவே நமக்கு அறிமுகமானவர்கள் தான். கோவில் பட்டாசார்யர் சுவாமி விஷ்ணுசித்தரை நோக்கி தலையாட்டி உள்ளன்போடு என்ன சொல்கிறார்:

"சுவாமின் என்ன ஆழ்ந்த பக்தி உங்கள் அருமைப் பெண்ணுக்குப் பார்த்தீர்களா?. தனது தூய பக்தியை அந்த ஆயர்பாடிச் சிறுமி மேல் புகுத்தி அவள் கிருஷ்ணனை நேரில் கண்டு வணங்கியது போல் சித்திரம் தீட்டியிருக்கிறாளே . உண்மையிலே இன்று உங்கள் பெண்ணுக்கு ரங்கன் காட்சி தந்தானோ என்னவோ.? அதால் தான் இப்படியெல்லாம் எழுத வருகிறதோ?''

அவள் பெற்ற அந்த அருள் கொஞ்சம் கொஞ்சமாவது சிந்தி நம் மேல் விழட்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.

இன்று நாம் இதை படித்துக்கொண்டு இருக்கும் மார்கழி 22ம் நாள் வழக்கமாக ஸ்ரீ வில்லிபுத்தூரில் என்ன விசேஷம் தெரியுமா ஸ்ரீ ஆண்டாள் பிரியா விடை காட்சி நடைபெறும். அங்கிருக்கும் பக்தர்களுக்கும், எங்கிருந்தோ அங்கு சென்று களிக்கும் பக்தர்களுக்கும் இங்கிருந்தே அதையெல்லாம் நினைத்து பார்க்கும் நமக்கும் அந்த நாராயணனின் அருள் கிடைக்க வேண்டி இன்றைய பாசுர பகுதி விடை பெறுகிறது.

23வது விருந்து
J.K. SIVAN

23. பூவைப் பூவண்ணா

ஒவ்வொரு நாளும் நமக்கு புத்தம் புதிதாகத் தான் அமைகிறது.

புதிய எண்ணங்கள், புதிய எதிர்பார்ப்புகள். சில புதிய நம்பிக்கைகள். இதை முன்னேற்றம் என்று சொல்லலாமா? முன்னேற்றம் என்பது ஒரேயடியாக மேலே தாவுவது அல்ல. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக மேலே நகர்வது.

இந்தச் சிறு பெண் ஆண்டாள், எப்படி முதலில் மற்ற ஆயர்பாடி இடைச்சிறுமியர்களை அழைத்தாள். கூட்டம் போதவில்லை என்று வராதவர்கள் வீடெல்லாம் சென்று அவர்களை தட்டி எழுப்பினாள் . அனைவரையும் ஒன்று சேர்த்து தினமும் யமுனையின் குளிர்ந்த நீரில் நீராட வைத்து அவர்கள் அனைவரும் பாவை நோன்பு நோற்க வைத்தாள் . பின்னர் நந்தகோபன் மாளிகை சென்றாள் . அவனை எழுப்பியதோடல்லாமல் யசோதையை, பலராமனை, நப்பின்னையை, எழுப்பினாள். எழுப்பியும் எழுந்திராத கண்ணனையும் எழுப்பிவிட்டாள்

கிருஷ்ணனை அவன் கட்டிலுக்கருகிலேயே நின்று அவர்கள் எல்லோரும் அவனது திவ்ய தரிசனம் கண்டு, அவனது க்ருபா கடாக்ஷம் வேண்டுமென்று பார்வை தங்கள் மேல் விழுந்து பாபங்கள் அகலவேண்டுமேன்று சரணாகதி அடைந்தனர் என்பது இதுவரை நாம் அனுபவித்த மார்கழி விருந்து.

இன்று மார்கழி 23ம் நாளில் இருக்கிறோம். இதோ இன்று ஆண்டாள் பாடும் அருமையான பாசுரம்.

''மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் போங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் அறிந்து அருளேலோர் எம்பாவாய்''

ஆண்டாள் சாதித்து விட்டாள். அவள் விரதம் பலன் கொடுக்கத் துவங்கிவிட்டதே. (நர) சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்து விட்டாளே.

இந்த சந்தோஷம் நம்மை அப்படியே தூக்கி வில்லிபுத்தூரில் துளசி வனத்தில் அல்லவா போட்டு விட்டது. இதோ நமக்குத் தெரிந்த குரல் பேசுவதும் கேட்கிறதே.

ஆம், விஷ்ணுசித்தர் தான், தனது அருமை மகள் அன்று எழுதிய பாசுரத்தைப்பற்றி வடபத்ர சாயீ ஆலய பட் டாச்சாரியாரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அவர்களோடு பட்டாச்சாரியாரின் பாரியாளும் கையைக் கட்டிக்கொண்டு கேட்டுக்கொண்டிருக்கிறாள். மேலும் சில வைஷ்ணவர்களும் அவர்களோடு இருப்பதும் காண்கிறோம். விஷ்ணு சித்தர் அவர்களிடம் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்?

ஆயர்பாடியில் ஆண்டாள் சொன்னதையே தான் விஷ்ணு சித்தரும் சொல்கிறார். ஆண்டாள் அன்று காலை நந்தகோபன் அரண்மனையில் கண்ணனைச் சந்தித்த விவரங்களைத் தான் சொல்கிறார். நாமும் தெரிந்துகொள்வது நாம் செய்த பாக்கியம்.

கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடுபவளா அந்த குட்டி ஆண்டாள். எவ்வளவு சமயோசிதம் தெரிந்தவள்.

''கிருஷ்ணா, உன்னைப் பார்க்கும்போது எனக்கு என்ன மனதில் தோன்றுகிறது தெரியுமா? ஒரு அடர்ந்த வனம். அதில் ஒரு பெரிய மலை. அதன் அடிவாரத்தில் இயற்கையாக அமைந்த ஒரு பெரிய குகை. அந்த குகையில் தனது ராணியுடன் ஒரு சிங்கம் வசிக்கிறது. மழை காலம் எனவே, அடக்கமாக ராஜா சிங்கமும் ராணி சிங்கமும் உறங்குகின்றன. கொஞ்சம் மழை விட்டது. சூரிய வெளிச்சமும் கொஞ்சம் குளிரை விரட்டியடித்துவிட்டது. எனவே சிங்கராஜா எழுந்து விட்டார். தலையை அசைக்கிறார். கம்பீரமான அவரது மஞ்சள் விழிகள் சிவந்த நிறத்தை அடைந்து விட்டன. நெருப்பு உமிழ்கின்றன. எல்லாபக்கமும் நோட்டம் விடுகின்றன. அடர்ந்த பிடரியை அனாயாசமாக ஒரு உலுக்கு உலுக்குகிறார் சிங்க ராஜா. தலையைத் தூக்கியவாறு கம்பீரமாக ராஜா குகைக்கு வெளியே வருகிறார். ஒரு பெரிய பாறை எதிரே தெரிகிறதே அதன் மேல் ஏறி நின்றதும் தனித்துவமான சிம்ம கர்ஜனை ஒன்று அவரிடமிருந்து வெளிப்படுகிறது. வனாந்திரமேல்லாம் அது கர்ஜித்து எதிரொலிக்கிறது.

காயாம்பூ வர்ண மலரணிந்த கண்ணா, அந்த சிங்கம் நீயே! . உன் தலையை நிமிர்த்தி, உயர்த்தி, எழுந்து ராஜ நடை போட்டு இந்த அழகிய ரத்ன சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு '' பெண்களே, எதற்காக என்னை வந்து எழுப்பினீர்கள்?'' என்று நீ கேட்பாயானால் நாங்கள் நீ கேளாமுன்னரே எங்களுக்கு உன் அருள் உண்டு, எங்கள் நோன்பின் பயனை உன் தரிசனத்திலே அடைந்தோம் என்று அர்த்தமாக எடுத்துக்கொள்வோம். எங்கள் மீது கருணை கொண்டு எங்களை ரட்சிக்க வேண்டும். ''

ஆண்டாள் இப்படி வக்கணையாக பேசுவது நமது நன்மைக்காகவும் தான். இந்த பாசுரத்தில் ஆண்டாள் கிருஷ்ணனை நரசிம்ஹ மூர்த்தியாக பாவிப்பது அபூர்வம். என்ன வளமான கற்பனை அந்த சிறிய இடைப்பெண்ணுக்கு!

சிங்கம் இந்த இடத்தில் நரசிம்மனாக ஸ்ரீமந் நாராயணன் அவதாரமெடுத்து ப்ரஹலாதனைக்காக்க ஹிரண்யனை வதம் செய்ததை நினைவு கூர்வதாக அமைகிறது. வழக்கமாக இன்றைய தினம் வில்லிப்புத்தூரில் ஸ்ரீ ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு உற்சவம். மனதாலேயே நாம் இந்த வைபவத்தில் கலந்து கொள்வோம்.

மார்கழி விருந்தில் இன்று 24வது விசேஷ விருந்து:
J.K. SIVAN

24. குன்று குடையாய் எடுத்தாய்

மார்கழி என்றாலே நாளுக்கு நாள் குளிர் அதிகமாகிக்கொண்டே தான் போகிறது. இருந்தும் ஆயர்பாடியில் ஆண்டாளும் அவளுடைய தோழியர்களும் சிறு பெண்களாயிருந்தாலும் விடாப்பிடியாக தங்களது பாவை நோன்பை ஸ்ரத்தையோடு நிறைவேற்றி வருகிறார்கள். கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் அருளட்டும். அவர்களுக்கு நல்ல கணவன்மார்கள் கிடைக்கட்டும். ஆண்டாளுக்கு அவள் தேடும் கிருஷ்ணனே கிடைக்கட்டும்.

ஆண்டாள் உரக்க ப்பாடுகிறாள். விடியற் காலை அமைதியில் அவள் வெங்கலக் குரல் கோவில் மணி போல் தனக்கே உரித்தான நாதத்தால் உள்ளத்தைத் தொடுகிறது. எங்கும் எதிரொலிக்கிறது.

''அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்''

தெய்வத்திடம் நாம் வைக்கும் நமது பூரண பக்தி நம்மை அவரிடம் கொண்டு சேர்க்கும் என்பதை விட அவரை நம்மிடம் கொண்டு வந்து விடும் என்பது இந்த சிறு ஆயர்பாடி பெண்ணிடமிருந்து தெரிந்து கொள்வோம்!!
நேற்று மார்கழி 23ம் நாள் நடந்ததை நினைவு கூர்வோம். அவள் பாடுவதின் பொருள் என்னவாக நமக்குப் படுகிறது?

“அழகிய சிங்கமே வீறு நடை போட்டு உன் சிம்மாசனத்துக்கு வா, கம்பீரமாக எங்களை உன் காந்த விழியில் நோக்கி “என்னடி பெண்களா எதற்கு என்னை எழுப்பி இங்கு உட்கார சொல்லுகிறீர்கள்?. என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று கேட்கச்செய்யும் அளவுக்கு பரந்தாமன் கிருஷ்ணன் மீது அந்த ஆண்டாளுக்கு செல்வாக்கு இருந்தது என்றால் அவளது பக்தி எத்தனை ஆழமானது என்று புரியும் . கிருஷ்ணன் அவ்வாறு கேட்டதும் அவளும் அந்த பெண்களும் என்ன செய்தார்கள் தெரியுமா? அப்படியே ஆண் டாளும் அவள் கூட்டமும் கண்ணன் காலடியில் சரணாகதி என விழுந்தனர்.

''கண்ணா, உன் திருவடிகளே சரணம். இந்த பாதங்கள் தானே மண்ணுலகும் விண்ணுலகும் அளந்தவை. இவையல்லவோ தென்னிலங்கை சென்று ராவணாதியரை அழித்தவை. இவை தானே சகடாசுரனை உதைத்தவை. வத்சாசுரனை கன்று வடிவத்தில் வந்தவனை உதைத்து கொன்றவை. இவை தானே உன்னை சுமந்து சென்று கோவர்தன கிரியை தூக்க வைத்து குடையாக்கி இந்திரனின் சீற்றத்திலிருந்து எங்களை யெல்லாம் காத்தவை.

“கண்ணா, உன் கையில் இருப்பதென்ன கூர்வேலா? அது தானே உனக்கு சென்ற விடமெல்லாம் வெற்றியையும் சிறப்பையும் தருவது. எங்களுக்கு எது கவசம் தெரியுமா? உன்னை புகழ்ந்து பாடிக்கொண்டே இருப்பது. அதுவே எங்கள் மூச்சு. எங்களை என்றும் காக்கும் சுலபமான மந்திரம்.''

“அம்மா, ஆண்டாளே அழகிய ஆயர்பாடி சிறுமியே! உன் வழியையே நாம் இந்த மார்கழி 24ம் நாளை வில்லிப்புத்தூரிலும் அனுபவிக்க வேண்டாமா?

''எவ்வளவு அழகாக உங்கள் பெண் கோதை, இந்த ஆண்டாள் என்ற சிறுமியை ஆயர்பாடியில் உருவாக்கி அவளையும் அவள் தோழிகளையும் அந்த சாக்ஷாத் கிருஷ்ணனையே தரிசிக்க வைத்திருக்கிறாள்.'' தத்ரூபமாகவே காட்சியைச் சித்தரித்திருக்கிறாளே'' என்றார் வில்லிப்புத்தூர் ரெங்கமன்னார் கோயில் பட்டாச்சார்யர்.

விஷ்ணு சித்தர் ஆனந்தத்தில் லயித்திருந்தார்.

''சுவாமி, எல்லாம் என் ரங்கனின் வரப்ரசாதம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் எனக்கு சொல்லத் தெரியவில்லை. எனது பாக்கியம் அவள் என் பெண்ணாக அவதரித்தது. இந்த மார்கழி எனக்கு வைகுண்ட வாசமாக இருக்கிறது இந்த அருமையான பாசுரங்களைக் கேட்டு மகிழ்வதற்கு நான் பூர்வ ஜென்ம புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும்.'' என்கிறார் விஷ்ணு சித்தர்.

''விஷ்ணு சித்த சுவாமி, இன்றைய பாசுரத்தைப் படித்துக்காட்டினீர்களே .அதன் அர்த்தத்தை விளக்குங்கள். கேட்க ஆவலாக உள்ளேன்'' என்றார் பட்டாச்சார்யர்.

''கோதை எழுதிய அருமையைச் சொல்கிறேன் கேளுங்கள்.''.

''அந்த ஆண்டாளும் ஆயர்குடிச் சிறுமியரும் கிருஷ்ணனைச் சந்தித்ததும் எதற்காக அவனைப் பார்க்க வந்தோம் என்பது மறந்து, அவனை வாழ்த்தி பல்லாண்டு பாடினர். உலகளந்த அவன் திருவடி போற்றினர்,
தசரதர் எப்படி ராமனைப் புகழ்ந்து அவன் ராக்ஷசர்களை அழிக்க வாழ்த்தினாரோ அதுபோல் ஆண்டாளும் அந்த ராமன் சேது பாலம் கட்டிய பராக்ரமத்தையும், சிவ தனுசு ஓடித்ததையும் புகழ்ந்தவள், கிருஷ்ணன் ஒருவேளை எங்கு தன்னைப் புகழாமல் இவள் ராமனைப் புகழ்கிறாளே என்று நினைத்துக்கொள்வானோ என்று மனதில் தோன்றியதால் உடனே சகடாசுரனையும் வத்சாசுரனையும் கிருஷ்ணன் வதைத்தது பற்றியும் புகழ்கிறாள்.

விடாமல் ஏழு நாள் கோவர்தனகிரியை ஒரு சிறு விரலால் சுமந்து ஆயர்பாடியைக் காத்ததையும் போற்றுகிறாள்.
அந்த சிறு பெண்ணுக்கு எவ்வளவு அற்புத ஞானம். எல்லாம் அந்த அரங்கன் செயல் தான்'' என்றார் விஷ்ணுசித்தர்.

பெருமாள் பிரசாதம் எடுத்துக்கொண்டு விஷ்ணு சித்தர் தனது நந்தவனத்திற்கு நடந்தார்.
வழியெல்லாம் அடுத்த நாள் என்ன பாசுரம் எப்படி வரும் என்ற ஆவலுடன் நடந்ததால் வழிநடந்த களைப்பும் இல்லை. கோதையை வாழ்த்தி அவளுக்கு வட பத்ர சாயியின் பிரசாதம் அளிக்கவேண்டும் என்ற ஒரு ஆவல் மட்டும் அவரை துளசி வன ஆஸ்ரமத்தை நோக்கி வழி நடக்கச் செய்தது.


25



26
27வது விருந்து.
J.K. SIVAN

27. கூடாரை வெல்லும் கோவிந்தா

இந்த தீஞ்சொல் பாசுரத்தின் முதலடியே பண்டிகையாகி விட்டது. 'கூடாரை வெல்லி'' கரைந்து தேய்ந்து கூடார வல்லி ஆகிவிட்டது திரு அல்லிக்கேணி ''ட்ரிப்ளிகேன்'' ஆனமாதிரி.

''கோதையே, நீ என் பெண்ணல்ல. என்னை உய்விக்க வந்த அந்த மகாலட்சுமி தாயார் தான் என்பதில் எள்ளளளவும் எனக்கு சந்தேகமில்லை என்று பூரிக்கிறார் விஷ்ணுசித்தர்.

இதையே எதிரொலிக்கிறார் சுவாமி தேசிகன் கோதா ஸ்துதியில்.''துளியும் எனக்கும் கூட சந்தேகமில்லை பெரியாழ்வார் ஆன விஷ்ணுசித்தர் சொன்னது வாஸ்தவம் தான் என்று பறை சாற்றுகிறார் கோதா ஸ்துதியில் சுவாமி வேதாந்த தேசிகன். இதோ அந்த ஸ்லோகம்:

''ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீ ரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம்!
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்யசரண: சரணம் ப்ரபத்யே!!

''கோதையே, நீ ஸ்ரீ விஷ்ணுசித்தருடைய குலத்தில் பெண்ணாக வந்த , கேட்பதை அனைத்தும் வாரித் தரும் கற்பகக் கொடி. அரங்கன் ஒரு சந்தன மரம். நீ அவனைச் சுற்றிப் படர்ந்திருக்கின்ற கற்பகக் கொடி. பூமிதேவியே கோதையாக அவதரித்தாளோ அல்லது ஸ்ரீலக்ஷ்மியே கோதையாக வடிவெடுத்தாளோ, வேறு புகலற்ற நான், கோதை நாச்சியாரைச் சரணடைகிறேன் .(கோதா ஸ்துதி, ஸ்வாமி ஸ்ரீ தேசிகர்).

ஆண்டாள் என்று ஒவ்வொரு பெருமாள் கோவில் சந்நிதியிலும் பெருமாளோடு தரிசனம் தருபவள் கோதை தான். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயர் வாங்கியவள். பூமாதேவியின் அவதாரம்.கலியுகத்தில், பக்தர்களை உய்விக்க வேண்டி, எம்பெருமானின் கட்டளையை ஏற்று, ஸ்ரீவில்லிப்புத்தூரில், விஷ்ணு சித்தரின் (பிற்காலத்தில் பெரியாழ்வார்) திருமகளாக, துளசி வனத்தில் தோன்றியவள் கோதை. சகல வேதங்களையும் பிழிந்து வடிகட்டினால் கிடைக்கும் சாரம் தான் திருப்பாவை. வேதத்தின் வித்து. திருப்பாவையை கோதோபநிஷத் என்று ஆங்கிலத்தில் தமிழ் அறியாத குழந்தைகளுக்காக பிரத்யேகமாக ஒரு புத்தகத்தை உருவாக்கிக்கொண்டு வருகிறேன். விரைவில் கோதை ஆங்கிலத்தில் பேசுவாள்-- சிவன்)

மார்கழி 27ம் நாள் நம் எதிரே தோன்றுவது இந்த இருபத்தாறு நாட்களாக கண்டு மகிழும் நீண்ட அழகிய கண்ணைக்கவரும் யமுனை ஆறு. இதோ கேட்கிறதே ஆண்டாளின் குரல் இந்த விடியற்காலையில். அவள் பாடும் அற்புதப் பாடல் நம் காதில் தேனாகப் பாய்கிறது. உண்மையில் ''தேன்'' என்பது பொருத்தமே. இன்று இனிய சுவையான அக்கார அடிசில் பற்றியல்லவோ ஆண்டாள் பாடுகிறாள்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

ஆண்டாள் இப்போது இடைச்சிறுமியா? அல்லது பழுத்த ஞானியா? என்று சந்தேகிக்கும் அளவிற்கு அவள் கண்ணனுடன் கலந்து விட்டாள். இந்தத் ''திருப்பாவை'' யில் கண்ணன் ஆண்டாளின் ''கைப்பாவை'' ஆகிவிட்டதல்லவோ அதிசயம்! என்னமாய் அவள் கண்ணனிடம் பேசுகிறாள் பாருங்களேன்.

''கண்ணா! உன் புகழ் பாடி நோன்பு நோற்று அது நிறைவேறும் நிலையில், உன்னிடம் வேண்டுவன எல்லாம் கேட்டு அவற்றைப் பெற்று, நோன்பின் பயன் அடைந்தோமே, இந்த சிறுமிகளுக்கு நீ தக்க சன்மானம் தர வேண்டுமல்லவா? முதலில் இந்த ஆயர்குல சிறுமிகள் நோன்பு முடியும் இந்த தருணத்தில் அவர்கள் நல்ல புத்தாடைகள் உடுத்தி, கை, கால், கழுத்து நிறைய நகைகள் அணிந்து (அந்த கால நகைகள் பெயர்கள் தோள்வளை, செவிப்பூ -- நெக்லஸ் வராத காலம்) மலர்கள் சூட்டிக்கொண்டு இனிப்பான கம கம வென மணக்கும் நெய் , பால்,சர்க்கரை கலந்து உனக்கு ''நெய்' வேத்யம் கொண்டு வந்திருக்கிறார்களே, வாசனை மூக்கைத் துளைக்க வில்லையா உனக்கு ?

உடனே வந்து அக்கார அடிசில் கை நிறைய எடுத்துக் கொள். இதை உண்ணும்போது உன் கையிலிருந்து முழங்கை வழியாக நெய் கீழ் நோக்கி ஓடி வழிய வழிய ருசித்து உண்ண நீயும் எங்களோடு வா, கண்ணா, வா ! எங்களுடன் நீயும் மகிழ்சசியோடு உண்ண வாயேன் !! நாம் எல்லோரும் கூடி இருந்து மனம் குளிர களிப்போமே.'' நீ நல்லவர்களோடு (இருக்கக் ) கூடாதவர்களை, ''வென்று'' அவர்களையும் திருந்தக் ''கூடிய'' வர்களாகப் பண்ணுபவனாச்சே . எங்களோடு ''கூடி'' உண்ண வா'' என்று அழைக்கிறாள் கோதை வில்லிப்புத்தூரில் ஆண்டாள் என்கிற இடைச்சிறுமியாக கற்பனை உருவெடுத்து!.

ஆண்டாளின் இந்த 27 வது பாசுரம் மிக அருமையான ஒன்று. கோதை ஆண்டாளாக சொல்கிற ஒவ்வொரு சொல்லும் நெய், பால் சர்க்கரை பொங்கலைப் போன்று இனிக்க வல்லது என்பதில் ஏதேனும் ஐயம் உண்டோ?

இதுவரை நாம் ரசித்த, ருசித்த, திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரமும், பாவை நோன்பு நோற்க வேண்டுகின்ற தோழியரே, காத்யாயனி விரதத்தில் பங்கு கொள்ள வாருங்களேன். இன்னுமா தூக்கம்? என்று மற்ற பெண்களை ஆண்டாள் தூக்கத்திலிருந்து எழுப்புவது போன்று அமைகிறது. ஆஹா, என்னே இந்த விந்தை. நம்மை அஞ்ஞான இருளில், தாமச குணத்திலிருந்து மீட்டு உயர் சத்வ குணம் அடைய, உள்ளும் புறமும் தூய்மை பெற, ''யமுனை நதி நீராட்டலை'' உதாரணமாக காட்டி ''நோன்பு நோற்பது'' என்கிற ஏகாக்ர விடா முயற்சியில் ஈடுபட்டு அந்த பரமனை அடையச் செய்து, அவன் அருளாகிய '' அக்கார அடிசிலை'' அவனுடனேயே ''கூடி 'மனம் குளிர்ந்து '' இனிமையாக அனுபவிக்கும் சுகானுபவத்தை அல்லவோ போதிக்கிறது அந்த சிறுமியின் பாசுரம். கோதை வாக்கு உபநிஷத் தான் என்பதில் இன்னுமா சந்தேகம்?


28



29


கோதை அளிக்கும் 30 வது விருந்து J.K. SIVAN

செல்வத்திருமால்

''வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே சொன்ன
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.''

மேலே கண்டது கோதை நாச்சியார் அருளிச்செய்த திருப்பாவையின் முடிவுக்கான கடைசி பாசுரம். இதை பலஸ்ருதி என்று சொல்வது வழக்கம். இந்த ஸ்லோகத்தை, இந்த மந்திரத்தை, இந்த உச்சாடனத்தை சொன்னால் இன்ன பலன் கிடைக்கும் என்று பல முக்ய பாராயணங்கள், ஸ்தோத்ரங்கள் அளிக்கும் உறுதி.

''சுலோகம் சொல்லுங்கள் ஸார் , பாராயணம் பண்ணுங்கள் மாமா , அதன் பிரகாரம் நடக்கவும்'' என்று ஒன்றை ஒருவரிடம் சொன்னால், '' ஓஹோ அப்படியா, இதைச் செய்தால், இதன் படி நடந்தால், எனக்கு என்ன பயன், என்ன பலன்?'' என்று கேட்பவர்கள் நம்மில் அநேகர் இருப்பதை அந்த இளம் பெண் கோதை நாச்சியார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்து வைத்திருக்கிறாள். அவர்களை, (நம்மை) திருப்திப்படுத்த அவள் கொடுத்த வாய் மொழி இது .

மார்கழி முடிந்தவுடன் தான் உத்தராயண புண்ய காலம் ஆரம்பமாகிறது. இந்த முப்பது ஆண்டாள் பாசுரங்களை எத்தனையோ மகான்கள் வியாக்யானம் செய்திருக்கிறார்கள். அனுபவித்து உரையாற்றி யிருக்கிறார்கள், பிரசங்கித்து வருகிறார்கள். பாடிக்கொண்டும் வந்திருக்கிறார்கள் நேற்று மாலை வரை.

இங்கொன்றும் அங்கொன்றுமாக சில பெரிய விஷயங்களை தொடுகிறது என்பதைத் தவிர என்னுடைய இந்த மார்கழி விருந்து கட்டுரைகள் பாராயண புத்தகமல்ல. குழந்தைகளுக்கும் சில பெரியவர்களுக்கும் திருப்பாவையை எளிதில் அறிமுகம் செய்ய என்னாலான ஒரு சிறிய முயற்சி என்று தான் சொல்வேன் .

முப்பது பாசுரங்களும் தினமும் விஷ்ணுசித்தரிடம் விளக்கம் கேட்ட பட்டாச்சார்யர் என்னவோ கேட்கிறாரே, அது என்ன ?

''சுவாமி, நீங்கள் இன்று விளக்குகின்ற பாசுரம் தான் மார்கழிக்கான கடைசி பாசுரம் என்று அறியும்போது இனி தொடராதே என்கிற வருத்தம் மிகவும் இருக்கிறது ' என்றார் '

' அப்படிச் சொல்லவேண்டாம். இதற்கு முடிவே கிடையாது. ஒன்றில்லை எனில் மற்றொன்று. இந்த பாசுரத்தில் ஆண்டாள் கேசவா மாதவா என்று கிருஷ்ணனை அழைக்கிறாள். ''க '' என்பது பிரமனைக் குறிக்கும் சொல். ''ஈசா'' என்பது சிவனைக்குறிக்கும் சொல். (க+ஈசா = கேசவா). மும்மூர்த்திகளும் ஒன்றே என்ற அழகான வார்த்தை. மாதவா என்பது மஹாலக்ஷ்மி .தாயாரை உடையவர் என்று பொருள். திருப்பாற்கடலைக் கடைந்ததில் கிடைத்தவள் மகா லக்ஷ்மி. (இந்த கோதை, தன்னை அரங்கனை அடைய வந்த மஹாலக்ஷ்மி என்பதை விளக்குகிறாளோ?)

முதல் பதினைந்து பாசுரங்களிலும் மற்ற பெண்களுடன் யமுனையில் நீராடி அன்றாடம் நோன்பு நோற்பதையும், 16வதில் நந்தகோபன் அரண்மனையை அடைவதையும் , அடுத்த 5 பாடல்களை நந்தகோபன், பலராமன், முதலானோரை துயிலெழுப்புவதையும், 23வது பாசுரத்தில் கண்ணனை துயில் எழுப்பி அவனை சிம்மாசனத்தில் அமரச்செய்வதையும், மற்ற இருபாடல்களில் பரிபூர்ண சரணாகதித்வம் பற்றியும் 26ல் விரதத்துக்கு தேவையான பொருள்களை வேண்டுவதையும், 27ல் அந்த ஆயர்பாடிச் சிறுமிகளுக்கு சன்மானம் கேட்பதையும், 28வதில் அவனது மேன்மையை எடுத்துச்சொல்லி தாங்கள் செய்த நோன்பில் ஏதேனும் தவறுகள், குறைபாடுகள் இருப்பின் அவற்றை க்ஷமிக்க வேண்டுவதையும், 29ல் நோன்பின் நோக்கத்தை அருளிச்செய வேண்டுவதையும், 30ல் அதை அடைந்தனர் என்ற பலஸ்ருதியையும் எத்தனை அழகாக மணி மாலையாக அந்த பட்டர்பிரான் வளர்த்த கோதை கோர்த்து அளித்திருக்கிறாள்.

திருப்பாவையை மனதில் பக்தியோடு, நம்பிக்கையோடு படித்து பாராயணம் செய்பவர்க்கு நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும். இதற்கு கண்ணன் அருள் புரிவான். 'வாரண்டி, கேரண்டீ' இதுதான்.

இந்த பாசுரம் திருப்பாவையை பூர்த்தி செய்கிறது. ஒரு அழகிய மணிமாலையில் ஒரு மணி உதிர்ந்தாலும் மாலைக்கு மதிப்பில்லையே. அது போல் இந்த முப்பது பாசுரங்களையும் முழுமையாக பாடி வேண்டுவோர்க்கு பொங்கும் மங்களம் எங்கும் தங்கும் என்பது சான்றோர் வாக்கு.

திருப்பாவை 30 பாடல்கள் முடிந்து விட்டது என்பதால் இத்துடன் எனது தடாக்கள் காலியாகவில்லை. இனிமேல் தான் அக்கார அடிசலே வருகிறது. ஆண்டாள் அரங்கனை அடையப் போகிறாள். பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்துகொண்டு வருகின்றன. திருமண அழைப்பு உங்களை அடையப்போகிறது. அதிகமாக பொங்கல் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொண்டால் ஆண்டாள் கல்யாண சாப்பாடு நிறைய சாப்பிடமுடியாதே. நாளை வயிற்றை காலியாக வைத்துக்கொண்டு காத்திருக்கவும்.
சுடச்சுட அக்காரவடிசல்:   மார்கழி விருந்து

மார்கழி 7வது நாள்.
 

sivan jaykay

unread,
Dec 25, 2017, 8:04:20 PM12/25/17
to amritha varshini, amrit...@yahoo.co.in, meera.h...@gmail.com, prof...@yahoo.com, rajago...@yahoo.com, ramani_...@yahoo.com, rsrini...@hotmail.com, s1...@live.com, S. Shankar, shanu...@hotmail.com, sivankri...@yahoo.de, skann...@yahoo.com, smathr...@yahoo.co.in, sriniva...@yahoo.co.in, subash...@gmail.com, sundar2...@yahoo.in, sutha...@yahoo.com, vibh...@hotmail.com, aalaya dharisanam, amrith...@googlegroups.com, Anjana Raghavan, Aravamudhan K N, balaji srinivasan, ba...@sakthiscanners.com, brag...@hotmail.com, Chandra Shanmugam, Chandrika Desigan, chitra. thyag, Chittanandam V R, D T Thyagarajan, eswar KOTI, G Palani, G Sivaswamy, G.Subramaniyam ganapathy, ganapathi subramanian, Girija Gomatam, gita vishwanathan vishwanathan, Gomathi Sundar, Gurumurthy Thiagarajan, Harish Mohan, Jaya Surya, Jayamani VR, jayaram ramaiah, kalyanasundaram s, Kamakshi Venkatraman, krishnan raja, krishnan shankarmani, Kuppuswami Thiagarajan, manis...@gmail.com, Mathrubootham Srinivasa sharma, Mohan Muthusamy, Nalini Seshadri, narasimha arunachalam, Narayanan Venkatraman, nath...@hotmail.com, Nithyameera Hariharan, P. Ramachander, Partha Sarathy Iyengar, PARTHASARATHY SRINIVASAN, PlasticChandraREACH, pp balaji, Prasannam Narayanaswamy, R,SOWRIRAJAN RAJAN, r.visw...@tvslsl.com, Raj, rajagopalan srinivasan, Rajagopalan Subramanian, RajaLakshmi Jay, Rajendran Ganesan, Rajeswari C, raji sridhar, Ram Ramakrishnan, Ram Srinivasan, ramachandran ramaswamy, Ramakrishnan Natarajan, ramanan iyer, Ramanathan SK, Ramani Balasubramanian, ramanujam srinivasan s rinivasan, ramarathnam, ramaswamy iyer, RAMASWAMY VISWANATHAN, Ramesan Visvanathan, ram...@yahoo.co.in, Ramki Krishnan, ramnath ramnath, ramsh...@hotmail.com, Ramya Raja, Rathnam K, Rengasamy Ramaswami, Renuka Narasimhan, Revathy Gopal, Revathy Mohan, RS Rajan, Rukmani Sundaram, s chandrasekaran, S Gurunathan, S Jayaraman, S.R. Sankaran, s_va...@yahoo.com, Sahasranam Ananthraman, Sairam N, Sanjeevi S, sankar s, Santhanam V, sbal...@yahoo.co.in, Sethuganesan K, Shamala Krishnan, Sharada Krishnan, Shyamala Ravishanker, shyamala swaminathan, Shylaja Narayan, Shylaja Suresh, siva ramakrishnan, Sivasubramanian Narayanan (via Google Drive), sramakrishnan, sree krishna, Sri Sridhar, Sridharan Ranganathan, Srinivasan Parthasarathy, srinivasan ramanathan, srinivasan varadhan, sripriya suresh, Sriraman K, Subbaiah Kakamada, Subramanian Krishnaswami, Subramanian V, Sudha Asuri, Sudha Raghavan, Sudha Subramanian, SUDHA VENKATESWARAN, SUGAVANAM K, sugunda ss, Sundar, sundaramrr...@yahoo.com, Sundareswaran, SundarVINTAGEHERITAGE, suresh, Surya Ramesh, suryanarayanan ramachandran, swarna a, Thiagarajan Neelakantan, UmaGuru, V Ganapathy, ven_...@yahoo.co.in, venkat01951, Venkata Ramanan, Vijayaraghavan Gopal, Viswanathan, குவைத் தமிழ்நேசன்

                                                  ''  குந்தியின்  பிரார்த்தனை....2                 ஜே.கே. சிவன் 

கிருஷ்ணன் தான் பரமேஸ்வரன் எனும் பரமாத்மா.  உள்ளும் புறமும் நிறைந்தவன்.  அவன் குந்தியின் எதிரே அவள் சகோதரன் மகனாக மானிட உருவில் நின்றாலும் அவள் உள்ளத்திலே பரமாத்மா ஸ்ரீ நாராயணனாக அவன் அம்சமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவாக ஒளி வீசியவன். 


குப்புஸ்வாமி நாடகத்தில்  செட்டியாராக வேஷம் போட்டால் நாம் செட்டியாரை பார்க்கிறோமே தவிர குப்புஸ்வாமி அங்கே தென்படவில்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்  அப்படித்தான் எல்லோரிலும் இருந்தாலும் நாம் எல்லோரையும் பார்க்கிறோமே தவிர எல்லோரிலும் அவனை பார்க்க தவறுகிறோம்.

தவம் செய்து சக்தி பெற்றாலும் அசுரர்கள்  அவன் மூலம்  பெற்ற தங்களது அதிகாரம் சக்தி அவற்றை  உயர்வாக மதித்து, அவனையே இகழ்ந்து, எதிரியாகத்  தான் பார்த்தார்கள்.  அழிந்தார்கள். 

பகவானை புலன்களையும், ஐம்பூதங்களையும் கடந்து உணரவேண்டும். கண்ணால் கண்டால் தான் அவன் இருப்பதை  உணர்வேன்  என்ற எண்ணம்  மறைய, அவன் நமது சரீரத்தில் அவன் அளித்த ஐம்புலன்களின் சக்தியை மீறிய  உணர்வு என்ற அறிவு தேவை.  அர்ச்சாரூபமாக  ஆலயங்களில் அவன் தோன்றுவது அவன் அதையும் தாண்டிய   அருவமான, அதீத,  ஒரு மா பெரும் சக்தி என்பதை கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு உணர்த்தவே. கட்டம் போட்ட நோட்டு புத்தகத்தில் ஒவ்வொரு எழுத்தாக எழுதி பழகியவன் தான் பின்னால் மாபெரும் கவிஞனாக, புலவனாக, அறிஞனாக, எழுத்தாளனாக பக்கம் பக்கமாக வெள்ளைத்தாளில் எந்த கோடுகளும் இன்றி எழுதுபவனாக மாறுவது போல்.  விழுந்து வணங்குவது, சரணடைவது என்பதே அவனே எல்லாம், அணுவுக்குள் அணுவாக, அண்டத்தில் பேரண்டமாக மிளிர்பவன் என்பதை உணர்வதால். நமது அகந்தை அழிந்தபின்.  அறிவினால் அறியமுடியாத கிருஷ்ணனை  அன்பினால், கருணையால் அறியமுடியும்.   பக்தியால் தான் பரமனை பருக முடியும்.

வயதில் முதிர்ந்தவள், தனது அத்தை என்று அவளிடம் விடைபெற வரும் கிருஷ்ணன் அவள் காலடி மண் தொட்டு வணங்குகிறான் என்றால் அவளது பக்தியை தான் அங்கே நான் உணரவேண்டும். அவன் பக்தவத்சலம்.  பக்தனுக்கு அடிமை. கத்தியவாரில் பிறந்தவர்கள் எல்லோரும்  மஹாத்மா காந்தியாகி விடமுடியுமா. காந்தி என்ற பெயரை ரொட்டி விற்பவன்  கூட வைத்துக்கொள்ளலாம்.  பூர்வ ஜென்ம பலன் பக்தி ஒருவனை  மாற்றிவிடும்.  படிப்பு பண்டிதனாக வேண்டுமானால் மாற்றும். பக்தனாக மாற்றாது.பரமனை உணர உதவாது. இதயமும் மனமும் பக்தியோடு ஒன்று சேரவேண்டும். பரமஹம்சர் படிக்காமல் தான்  பார் புகழும் ப்ரம்மஞானியானார்.  அறிவுக்கனலான விவேகானந்தரால் குருவாக ஏற்றுக்கொள்ள
ப்பட்டார்.  அறிந்தார், பவதாரிணியை நேரில் கண்டார். அருள் பெற்றார். படிப்பு வேறு ப்ரம்ம ஞானம் வேறு.பிராமண குலத்தில் பிறப்பதால் மட்டும் அல்ல. அகந்தை இன்றி, தன்னை புல்லினும் தாழ்வாக கருதுபவன் எளிதில்  உயர்வடையமுடியும்.   உள்ளே இருக்கும் ஆத்மாவின் தன்மைப்படியே தான் ஒவ்வொரு  மனிதனும் இயங்குகிறான். கிருஷ்ணன்  பரம ஆத்மா  என்பதால் அவனது செயல்கள் நன்மை பயக்குபவை என்பதை குந்தி ஒரு பரம பக்தையாக அறிவாள் .

 ராமன்  ராஜகுமாரனாக பிறந்து வாழ்ந்து ராஜாவாகவே மறைந்தான். கிருஷ்ணன் ராஜகுமாரனாக பிறந்தும் ஒரு சாதாரண பசுமேய்க்கும் இடையர் குடும்பத்தில் வளர்ந்து எல்லோருடனும் இயற்கையாக சகஜமாக பழகினவன்.  குந்தி ஒரு ராணி. இது தெரிந்தவள்.  யசோதைக்கு நந்தகோபனுக்கும்  கிருஷ்ணன் ராஜவம்சம் என்பது தெரியாமலே அவனை அன்போடு வளர்த்தனர்.  கிருஷ்ணனுக்கோ  எல்லாம் தெரிந்து  அவன் நினைத்தபடி  நிகழ்வுகள் எல்லாமே நடந்தவை.  ஞானிகள்  கிருஷ்ணன் சர்வ காரணன் என்று அறிந்து போற்றினார்கள். விரிந்த மனம் கொண்டவன் எவனும் கிருஷ்ணனை  மஹா ஆத்மா என அறிவான்.அவன் நம் எல்லோரையும் அறிவான். நாம் தான் அவனை தெரிந்து கொள்வதில்லை.  புரிந்துகொள்பவன் அதிருஷ்ட சாலி அறிந்தும் தெரிந்தும் கொண்டு சுகமடைவான்.ஒரு பணக்காரனின் பிள்ளை   உடுத்த உடை, உண்ண  உணவு, உறங்க இடம் பற்றி என்றாவது கவலை கொள்வானா?  நாம்  அனைவரும் கிருஷ்ணனின் பிள்ளைகள், நமக்கு ஏது  பொருளாதார பிரச்னை?  அவன் எல்லாம் உடையவன் நம் மேல் அன்புகொண்டவன். ''யாம் இருக்க பயம் ஏன் ?'' என்று உரைப்பவன். நமக்கினி பயமேது! இப்படியொரு மனநிலை கொண்டவள் குந்தி.

நமது வாழ்வில் நாம் உழைத்து எல்லாம் சம்பாதித்து  நமது முயற்சியால் எல்லாம்  அடைவதாக சுபிக்ஷமாக இருப்பதாக பகல் கனவு காண்கிறோம். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என அழுத்தமாக உண்மை அறிந்தவர்கள் நாம் எப்போதும் சுபிக்ஷமாகவே இருப்போம் என்று அறிந்தவர்கள்.  சுபிக்ஷம் என்பது அவரவர் டிக்ஷனரியில் வெவ்வேறு அர்த்தம் கொண்ட வார்த்தை.   நாம் எப்படி எல்லாம் முற்பிறவிகளில் இருந்தேனோ, நாயாக, பறவையாக, விலங்காக... எல்லாம் என் முயற்சியாலா அப்படியெல்லாம் வாழ்ந்தேன். கஷ்டப்பட்டேனா. அந்தந்த வாழ்க்கை வாழும் ஜீவன்கள் கஷ்டமா படுகிறது? கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல்லுணவே தந்து  பாதுகாப்பவன்  ''காக்கும் கடவுள்'',    '' கோவிந்தன்', ' என்ற பேரோடு தான் இருக்கிறானே! கஷ்டம் என்று ஏதாவது இருந்தால் அது நமது கர்ம பலனால் . அதையும் தணிக்க அவன் இருக்கும்போது நாம் தானே அதற்காக வேண்டியதை,  அவனை வேண்டுவதை செய்வதில்லை. அவனென்ன செய்வான்?


Reply all
Reply to author
Forward
0 new messages