கவலை தோன்றினால் காஞ்சி நீ வந்திடு

6 views
Skip to first unread message

amritha varshini

unread,
3:08 AM (13 hours ago) 3:08 AM
to amrith...@googlegroups.com


ஸ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்

பாடல் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்து பாடியவர் - ஸ்ரீமதி சுபாஷிணி ஸ்ரீசைலன்
கீ போர்டு - ஸ்ரீ பிரசன்னா ஸ்ரீசைலன்

ராகம் - கானடா / தாளம் - ஆதி

பல்லவி

கவலை தோன்றினால் காஞ்சி நீ வந்திடு
காஞ்சி மகானின் சன்னிதி நீயும் அடைந்திடு

அனுபல்லவி

தெய்வத்தின் குரலினை பொருள் உணர்ந்து நீ படித்திடு
நடமாடும் தெய்வம் பகர்ந்ததை புரிந்து நீயும் தெளிந்திடு

( கவலை தோன்றினால் )

சரணம்

எளிமையே உருவான குருவை நீ வணங்கிடு
ஒருமையுடன் அவர் திருவடி ஏற்றி நீயும் போற்றிடு
துயரம் அனைத்தும் அவர் காலில் நீ போட்டிடு
உயரம் சென்றிட அவர் கழலினை நீயும் பற்றிடு

( கவலை தோன்றினால் )

சரணம்

தர்மத்தின் வழியினில் தவறாமல் நீ சென்றிடு
கர்ம யோகத்தில் வழுவாது நீயும் நிலைத்திடு
போட்டி பொறாமை என்பதை சற்றே நீ விலக்கிடு
நாளும் அவர்தாள் வணங்கி நல்லதை நீயும் செய்திடு

( கவலை தோன்றினால் )


Reply all
Reply to author
Forward
0 new messages