TODAY'S POST- VISHWAVASU-UTHRAYANAM-SISIRA-MEENA-KRISHNA-CHADURDASI-BOUMA-SRAVISHTA

4 views
Skip to first unread message

sreemutt...@gmail.com

unread,
Mar 17, 2026, 12:29:39 AM (7 days ago) Mar 17
to
40197102_599493190448912_7566188085700984832_n

பொறாமை-தெய்வத்தின் குரல்- ஏழாம் பகுதி

இன்னொரு பெரிய அழுக்கு, குழந்தைகளிடம் சுலபத்தில் சேர்கிற அழுக்கு, பொறாமைக் குணம். இன்னொரு பையன் படிப்பிலோ, விளையாட்டிலோ நம்மைவிடக் கெட்டிக்காரனாக இருந்தால், அல்லது ஸில்க் சட்டை போட்டுக் கொண்டு வந்தால், காரில் வந்து இறங்கினால், முதல் கிளாஸில் ஸினிமாவுக்குப் போனால் உடனே அவனைப் பார்த்துப் பொறாமை உண்டாகி விடுகிறது. அது அழுக்கு மாதிரி மனத்தை ரொம்பவும் கெடுத்து விடும். பலவிதமான சண்டைகளில் நம்மைக் கொண்டு தள்ளிவிடும். அவனைச் சண்டை போட்டு ஜயிக்க முடியவில்லை என்றால், கோள் சொல்லிக் கெடுக்கத் தோன்றும். இம்மாதிரி ஓர் அழுக்கிலிருந்து இன்னோர் அழுக்கு என்று வளர்ந்து கொண்டே போகும். இந்த அழுக்கான எண்ணங்களாலே நம் படிப்பிலே கவனம் குறையும். விளையாட்டில் உற்சாகம் குன்றும். இவ்வாறு அறிவு, உடம்பு இரண்டையும் பாழாக்கிக் கொள்வோம். நம்மை நாமே கெடுத்துக் கொள்வதைத் தவிர பொறாமையால் வேறு எந்த விதப் பயனும் இல்லை.

படிப்பில் போட்டி

ஒன்றே ஒன்றில்தான் போட்டியிருக்க வேண்டும். ‘அந்தப் பையன் இவ்வளவு நிறைய மார்க்கு வாங்குகிறானே! நாமும் அப்படி வாங்க வேண்டும்’ என்ற ஆசையுடன் ஊக்கமாகப் படித்துப் போட்டி போட வேண்டும். இந்தப் போட்டியும் பொறாமையாகிப் போவதற்கு விடக்கூடாது. அறிவாளியாக, நல்லவனாக இருப்பதற்குப் போட்டி போடலாமே தவிர, பொறாமை கூடவே கூடாது. விளையாட்டிலும் அப்படியே!

விளையாட்டு

உடம்பை பலமாக வைத்துக் கொள்வதற்காகவும், மனம் உற்சாகமாக இருப்பதற்காகவும் நீங்கள் யாவரும் விளையாட வேண்டியது அவசியம். நான் சொல்லாமலே, உங்களுக்காகவே விளையாட்டில் இஷ்டமும், ஈடுபாடும் இருக்கத்தான் செய்யும். இங்கேதான் ஜாக்கிரதை தேவை. உங்கள் படிப்புக்குச் சிறிதுகூட இடையூறு இல்லாதபடியும், பிறருக்கு எந்த விதத்திலும் இம்சை ஏற்படாதபடியும் உங்களுடைய விளையாட்டு ஆசையை அளவுக்குள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விளையாட்டு என்றால் மற்றவரை ஜயித்தாக வேண்டும் என்ற ஆர்வமும், விடாமுயற்சியும் ஏற்படவே செய்யும். ஆகையினால் அதில் போட்டியும் தவிர்க்க முடியாத அம்சமாகிவிடுகிறது. அதனால் தவறில்லை. ஆனால் இது காரணமாக, ஜயிக்கிறவர்களிடம் பொறாமை எண்ணம் ஏற்பட இடம் தரக் கூடாது. விளையாட்டுப் போட்டி சண்டையாகவும், விரோதமாகவும் ஆகிவிடக் கூடாது. நம்மை ஜயிக்கிறவனை நமக்கு உதாரணமாகக் கொண்டு சிநேகம் பாராட்ட வேண்டுமேயன்றி விரோதியாகக் கருதலாகாது.

WITH PRANAMS 

N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536

TIRUPUR RAMANATHAN-63816 83335
1
40197102_599493190448912_7566188085700984832_n[1].jpg
1[1].jpg
Reply all
Reply to author
Forward
0 new messages