பழங்கதைகள்

6 views
Skip to first unread message

Sivan Krishnan

unread,
Apr 10, 2026, 12:25:35 AMApr 10
to amrith...@googlegroups.com
எங்கம்மாவுக்கு புடிச்ச கதை -  நங்கநல்லூர் J K  SIVAN

கிட்டத்தட்ட ஐந்நூறு வருஷங்களாக  ஒரு கதை நம்மிடம் உலவி வருகிறது. அதை கேட்கும்போதெல்லாம் கண்ணில் நீருக்கு பஞ்சமே இல்லை. அது உண்மையில் நடந்த சம்பவமா என்றும் தெரியவில்லை, யார் முதலில் சொன்னது, என்றும் தெரியவில்லை. நாயக்கர்கள் ஆண்ட காலத்தில் பஞ்சம் நிலவியதால் அப்போது பல குடும்பங்கள் பசியில் உயிரிழந்தது என்று காற்று வழி யாக  ஒரு  பேச்சு.  நான் சொல்லப்போகிற கதை எல்லோருக்கும் தெரிந்தது. பல பாட்டிகள் அத்தைகள் இதை பாடி அழுதிருக்கிறார்கள். அல்லது அழுது கொண்டே பாடியிருக்கிறார்கள். என் அம்மா  அழுது கொண்டே படிப்பதை  சின்ன வயதில் பார்த்திருக் கிறேன்.

எங்கள் வீட்டில் பெரிய எழுத்து  நல்லதங்காள் கதை புத்தகம் கிழிந்த நிலையில் பல இடங்களில் ஒட்டு  போடப்பட்டு எங்கள் அம்மாவிடம் இருந்தது.  அவளே ஊசி நூலால் அதை துணி போல் தைத்து வைத்திருந்
தாள் .

நல்லதங்காள் கதை இது தான்.  அர்ச்சுனாபுரம் விருது நகரில் ஒரு கிராமம்.  வத்திராயிருப்பு அருகில் உள்ளது வளலான பூமி, மா பலா வாழை, பாக்கு தேக்கு,  தென் னை, பனை  ஜாஸ்தி ஓடை, ஆற்று நீர் ஓடிய காலம். எங்கும் வயலும் வரப்புமாக பச்சை கலர்.

நல்லதங்காள் அப்பா ராமலிங்க ராஜா. தாயார் இந்தி ராணி. அண்ணன் நல்லதம்பி. சின்னவயதிலேயே அப்பா அம்மாவை இழந்தவள் நல்லதங்காள். மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு அண்ணன்  தங்கச்சியை கட்டிக் கொடுத்த போது அவளுக்கு வயது 7. .கல்யாணம் 7 நாள் நடந்தது. பனைமரத்த  பொளந்து  பந்தக்கால் நட்டாச்சு.  தென்னையைப் பொளந்து தெருவெல்லாம் பந்தல் போட்டாச்சு. நல்ல தம்பி தங்கச்சிக்கு  சீர் சீனத்தில் செஞ்சான். வேலி நிறைய வெள்ளாடு.  பட்டி யெல்லாம் பசுமாடு.  தங்கத்தில் மோர் கடைய முக்காலி, மோர் அளக்கற படி, மரக்கால் எல்லாம் நிறைய குடுத்தான்., ஊருக்கெல்லாம் சாப்பாடு, மாருலே  கம கம சந்தனம்.

  ''அண்ணே  உன்னை வுட்டுட்டு எப்படி போவேன்...  அழுதுகொண்டே நல்லதங்காள் புருஷனோடு மானா மதுரை போனாள் . தெருவிலே அழுது புரண்டா,  ஆபரணம் நகை எல்லாம் அறுந்து விழுந்துது .முட்டி அழுததில முத்து மணி அற்று விழுந்தது.  நல்லதம்பி தங்கச்சிக்கு ஆறுதல் சொன்னான்.

ஒருவழியாக நல்லதங்காள் மானாமதுரைக்குப் புறப் பட்டுப் போனாள்.அண்ணனும் அழுதுகிட்டே

''நான் வாரேன்  அடிக்கடி ளுவாதே தங்கச்சி''ன்னான்.   அண்ணன் பொண்டாட்டி பேர்   மூளி  அலங்காரி. பேர்லேருந்துதே எவ்வளவு பொல்லாதவ, கிராதகி ன்னு தெரியல?.

ஒரு நா கூட  அண்ணன்  தங்கச்சியை போய் பாக்காம  தடுத்துட்டா. நல்லதங்காளுக்கு ஏழு புள்ளைகள் பொறந்
தது .நாலு ஆணு, மூணு பொட்ட புள்ள.

புருஷனும் ஒருநாள் பொசுக்குனு போய்ட்டான்.  ஊர்லே மழையே  இல்லை. வறட்சி. இன்னா செய்வா நல்லதங்கா?  ''இந்த  அண்ணன்  புயலையும் காணோம். இங்கேயும் நிலமை சரியில்லே. நாமளே அவனைத் தேடிக்கிட்டு போவோம்'' னுட்டு ஏழு புள்ளைய ளோடு
அர்ச்சுனாபுரம் வந்தா.

அவ வந்த நேரம்  அண்ணன்  ஊர்லே இல்ல. எங்கேயோ காட்டுக்கு போனவன் மூணு  நாளா வரலே. நடந்து வந்த களப்பு , பசி. புள்ளெங்க  வீல் வீலுனு பசியில அழுவுது.

''நீ எங்க வந்த இஞ்சே?''
இது தான் மூளியலங்காரி வரவேற்பு

.''அண்ணி, பசியும் தாகமும் மாரடைக்குது. புள்ளெங்க தவிக்குது முதல்ல கொஞ்சம் தண்ணி குடுங்க'?'

'தண்ணிக்கு நான் எங்கே போறது... நானே  தேடிக்கிட்டு அலையறேன் உனக்கெங்கே கொடுக்குறது'''வந்த வளியே போ''

"அய்யோசாமி, எனக்கு ஏன்  இந்த கதி? ஒருத்தருக்கும் ஒரு தீங்கும் செய்யலியே. இந்த நிலையில் நான் என்ன செய்யறதுன்னு தெரியலே. தவிச்ச வாய்க்கு தண்ணீ  கூட தர மாட்டேங்கறாளே.. அண்ணனை பாக்காம லேயே செத்துடுவேனா?
என் புள்ளைங்க அப்புறம் என்ன செய்யும்?
நினைச்சு கூட பாக்க முடியல்லயே இந்த பாவிக்கு''
புள்ளெங்க  விடாம கதறிச்சுங்க. பசிக்குது மா.  தாக
மா இருக்குதும்மா... தண்ணியாவது குடுக் மாட்டியா?
என்று அழுதுச்சு.எதையாவது திங்க வாங்கி குடுக்க காசு இல்லியே.

காட்டுப்பாதையில் அப்போது தானா  ஒரு பாழும் கிணறு கண்ணில் படவேண்டும்...
''சாமி  இதை எதுக்கு எனக்கு காட்டினீங்க?.. இது தான் எனக்கு தாகம் பசி தீக்க போவுதா?

வயிறு முட்ட தண்ணி குடிச்சு வயிறு நிறஞ்சு உசுரு போவறதுக்காகவா?
சரி, அப்படியே உன் சித்தப்படி ஆவட்டும்''

கிணறு ''வா நல்ல தங்கா'' என்று கூப்பிட்டுச்சி.ஏழு குழந்தைங்களோடு கிட்டே போனா.

ஏழாவதை  'வா' ன்னு கூப்பிட்டா. ஆசையா அம்மாகிட்டே ஓடிவந்துச்சு. அணைச்சு முத்தம் கொடுத்தவ , அப்படியே அதை கிணத்துக்குள்ளே தபால்னு போட்டாள் .
ஆறாவது, அஞ்சாவது, நாலாவது, மூணாவது, ரெண்டாவது, தலைச்சன்.. எல்லாத்துக்கும் தண்ணி ஏராளமா காட்டி பசி தாகம் எல்லாம் ஒரேயடியா உசிரோடு போயிடுச்சி.

கிணத்துக்கும் பசி அடங்கிச்சா?
இல்லியே. அவளையும் முளுங்கினாத்தானே?
கிணத் துக்குள்ளே எட்டிப்பார்த்தா. எந்த குழந்தையும் தெரியலே.
''எல்லாமே கிணத்துக்கடியிலே தூங்குதுங்களோ?. நான் போய் பாக்குறேன்.''
அவளும் குதித்தாள். மறைந்தாள்.
அடுத்தநாள் கருக்குலே நல்லதம்பி அருச்சுனாபுரம்
 வந்தவன் மனசு சரியில்லே. என்னவோ மனசை புழியுது. வயக் காட்டுக்கு போனான். அங்கே சனங்க கூடி கூடி பேசுறது காதுலே விழுந்தது,

''யாரோ ஒருத்தி இளவயசு பொம்பளே ஏழு புள்ளங்க ளோடு கிணத்துல செத்து கிடக்கிறா. டானாக்காரன்  வந்து பாத்துட்டு தலையாரி கிட்டே சொல்லி ஊரு விசாரிக்குது. வெளியூரு  பொம்பளங்கறாங்க''

அவனும் அவங்களோடு  கிணத்துக்கிட்டே போய் பாத்தான். தல சுத்துச்சு.

''அடிப்பாவி  மவளே. நீயா?''எப்படி ஊருக்கு வந்த. உன் புள்ளிங்களா?''

வீட்டுக்கு ஓடினான். மூளியலங்காரி கிட்ட தங்கச்சி வந்தாளா?" ன்னு கேட்டான்.
''வந்தாளே  நல்ல  விருந்து சமைச்சு போட்டேனே. யாரையோ பாக்கணும்னு சொல்லிட்டு போனாளே , அவளா செத்துட்டா? ஏன் இப்படி செஞ்சுட்டா?''

.அண்ணனுக்கு பொண்டாட்டியை நல்லா தெரியும்..
எதுத்த வீட்டு கிழவி மாட்டுக் கொட்டாயிலேருந்து உக்காந்து கிட்டு பாத்திருக்கு. அதுக்கு தெரியாதா? அவனை கூப்பிட்டு நடந்ததெல்லாம் விலாவாரியா சொல்லிடுச்சி.

''சீ  இனிமே எனக்கு எதுக்கு இந்த பொண்டாட்டி, வீடு வாசல், உசிரு எதுவுமே. என் தங்கச்சி யோடு
நானும் போறேன்''
அன்னிக்கி ராத்ரியே  தானும் அந்த கிணத்துல உளுந்து
 செத்துட்டான். இது தான் நல்லதங்கா கதை.

அப்புறம் சிவன் சாமி பார்வதியோடு வந்து அவங்க எல்லாத்தையுமே எழுப்பி, உசிர் குடுத்து காப்பாத்தி எல்லாருமே நல்லா இருந்தாங்கோ.. மூளியை  அண்ணன்  அடிச்சி விரட்டிப்புட்டான். செத்துட்டா. இப்படி ஒரு கதை சொல்றாங்கோ சிலர்

சிலர் பாவம் நல்ல தங்கான்னு அவளை சாமியாக்கி  கோவில் கட்டி கும்பிடறாங்கோ.

இந்த கதை கேட்டுட்டு தான் பாசமலர் படம் எழுதுனாங் களோ? அண்ணன் தங்கச்சி பாசம் நேசம் இதுக்கு மேலே எப்படி சொல்றது?.

நல்லதங்கா கோவில் வத்திராயிருப்பு பக்கத்தில் அர்ச்
சுனாபுரத்திலே இருக்குது. அந்த கிணறும் இருக்கு
தாம்.

நிறைய பேத்துக்கு  அவ குலதெய்வம்.கோவை, கடலூர், மற்றும் திருப்பூர்லே ருந்து சனங்க வருசா வருசம்
ஆனிமாசம் பொங்கல் வைக்கிறாங்க. நாலு நாளு  விழா.
Reply all
Reply to author
Forward
0 new messages