🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🪴🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦 🇲🇦 சங்கராம்ருதம் ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் 🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦 எமர்ஜன்ஸி காலத்தில் பார்லிமெண்டில் ஒரு கேள்விக்கான பதிலை இவரைச் சார்ந்த அரசாங்கத் துறைக்காக எழுத வேண்டியிருந்தது. அந்தப் பதிலை எழுதி நிதி அமைச்சக செயலாளரிடம் இவர் சமர்பிக்க, அந்த செகரட்ரி அறையிலே அ

2 views
Skip to first unread message

Ramakrishnan K S

unread,
Jan 26, 2026, 5:38:46 AM (8 days ago) Jan 26
to Abridged Recipients
🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🪴🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦
🇲🇦  சங்கராம்ருதம் ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்

நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்
🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦
 எமர்ஜன்ஸி காலத்தில் பார்லிமெண்டில் ஒரு கேள்விக்கான பதிலை இவரைச் சார்ந்த அரசாங்கத் துறைக்காக எழுத வேண்டியிருந்தது. அந்தப் பதிலை எழுதி நிதி அமைச்சக செயலாளரிடம் இவர் சமர்பிக்க, அந்த செகரட்ரி அறையிலே அதைப் பற்றி விவாதிக்க இவரை அழைத்தார்.
🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦☀️🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான செகரட்ரி அந்தப் பதிலில் சில மாற்றங்களை செய்தாக வேண்டுமென வலியுறுத்தினார். கீழ் அதிகாரியான இவரோ அந்த மாற்றங்களில் தனக்கு ஒப்புதல் இல்லை என்றும், அதை மாற்றக்கூடாதென்றும் தன் கருத்தைக் கூறினார்.

“மன்னிக்க வேண்டும். அப்படி பதிலை மாற்றி அமைப்பது சரியான உண்மையை மறைப்பதாக ஆகும். அப்படியே மாற்றினால் அதற்கு முழுப் பொறுப்பையும் நீங்கள்தான்  ஏற்க வேண்டும்” என்று மிக அழுத்தமாக இவர் கூறியபோது, தன் கீழ் வேலை செய்யும் ஒருவர் தன் கட்டளையை கீழ்ப்படியாததில் அதிகாரிக்கு கோபம்.

மிகவும் பதட்டமடைந்த அதிகாரி உடனே போன் செய்து ரிசர்வ் பேங்க் டெபுடி கவர்னரை டில்லிக்கு விமானத்தில் அடுத்த நாளே வந்தாக வேண்டுமென்று இவர் முன்னாலேயே உத்தரவிட்டார். சூழ்நிலை மிகவும் பாதகமாக இருந்தது.

“சரி! நீங்க போகலாம்…..ரிசர்வ் பேங்க் டெபுடி கவர்னரை நாளைக்கு இது சம்பந்தமாக ரெகார்டுகளுடன் வரச் சொல்லியிருக்கேன். நீங்க எழுதி வைச்சிருக்கிற இந்த பதிலுக்கும் அவர் கொண்டு வரப்போகிற விபரங்களுக்கும் தாறுமாறா ஏதாவது இருந்தால் உங்க மீது உடனே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்”.

இப்படி மிரட்டலும், பயமுறுத்தலுமாக அதிகாரி இவரை அறையிலிருந்து போகச் சொன்ன போது இவருக்கு பயத்தில் வியர்த்துக் கொட்டியது. தன்மேல் எப்படியாவது நடவடிக்கை எடுக்க தீர்மானித்து விட்டதால் தான் செகரட்ரி கோபமாக இத்தனை தடாலடி விவகாரம் செய்கிறார் என்பது சுந்தரராஜனுக்குப் புரிந்தது.

தான் எழுதி வைத்த பதில் நேர்மையாகவும், சத்தியமாகவும் இருந்தாலும் அதிகாரி தன் கோபத்தைக் காட்ட எந்த வகையிலும் முயற்சிக்கலாமென்பதும் இவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

அன்று இரவு அடுத்த நாள் தன் நிலைமை என்னவாகுமோ என்ற நடுக்கமும் கவலையுமாக தூக்கம் வராமல், ஸ்ரீ பெரியவாளையே நினைத்து வேண்டிக் கொண்டிருந்தார்.

அதிகாலையில் ஒரு அதிசயம்.

இரவின் ரோடில் ‘கணேஷ் மந்திர்’ என்ற கோயிலின் அர்ச்சகர் இவர் வீட்டுக் கதவைத் தட்ட இவர் திறந்தார். அந்த அர்ச்சகர் கையில் பிரசாதத்துடன் நின்றார்.

“ஸ்ரீ பெரியவாளை நேத்து தரிசனம் செய்யப் போனேன். அவா இந்த பிரசாதத்தை உங்க கிட்ட இன்னிக்கு விடியற்காலையிலேயே கட்டாயம் சேர்த்துடணும்னு கொடுத்து அனுப்பினா” என்றார்.

இவருக்கு இன்ப அதிர்ச்சி! இங்கே ஒரு பக்தன் இரவு முழுவதும் வேதனைப்பட்டு வேண்டிக் கொண்டதை எங்கிருந்தோ எப்படியோ தெரிந்து அனுக்ரஹிக்கும் ஸ்ரீ பெரியவா கருணையை எண்ணியபடி கண்ணீர் மல்க பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டார்.

இனி எது வந்தாலும் கவலை இல்லை என்ற தெம்பு ஏற்பட்டுவிட்டது! அன்று மதியம் பதினொரு மணியளவில் அதுபோல் நிலைமை தலைகீழானது. அப்போது நடந்த அதிகாரிகளின் கூட்டத்தில், அந்த ரிசர்வ் பேங்க் கவர்னர், சுந்தரராஜன் எழுதியிருந்த பதில் முற்றிலும் பொருத்தமானதென்றும் அவையாவும் சரியான தகவலை உடையதென்றும் அதில் சிறிதும் மாற்றம் செய்யக் கூடாதென்றும் கூற, மீட்டிங்கில் மற்ற மூத்த அதிகாரிகளும் இதையே வழி மொழிந்தனர்.

செகரட்ரிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தர்மசங்கடமான நிலையில் சுந்தரராஜனிடம் நேற்று கடுமையாக தான் நடந்துக் கொண்டதற்கு வருந்துவதாகவும், அதற்கு பிராயச்சித்தமாக தன் அறையிலேயே இவரையும் மதிய உணவு அருந்துமாறு கேட்டுக் கொண்டு அழைத்தார்.

ஒரு அரசாங்கத் துறையில் இப்படி ஒரு கீழ் அதிகாரியை மேல் அதிகாரி உபசரித்துக் கூப்பிடுவது எப்போதும் நடப்பதல்ல. ஆனால் உலகாளும் மேலதிகாரியான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் அனுக்ரஹம் முன் இவையெல்லாம் எம்மாத்திரம் என்று சுந்தரராஜனுக்கு அப்போது தோன்றியிருக்கலாம்.

ஐ.நா. சபையின் ஒரு முக்கிய பதவிக்கான தேர்வு நடந்தபோது இவர் தன்னுடைய விபரங்கள் அடங்கிய மெடிகல் ரிப்போர்ட்டை தேர்வுக்காக டெல்லியில் கொடுக்கச் சென்றார். 1976-ஆம் வருடம் பிப்ரவரி 4-ஆம் தேதியன்று இவர் அப்படி ஐ.நா. சபையின் டில்லி அலுவலகத்தில் கொடுத்தபோது ஸ்ரீ பெரியவாளின் திருக்கரங்கள் அனுக்ரஹிப்பதாக காட்சி தெரிந்தது. ஸ்ரீ பெரியவாளின் மேல் கொண்டிருந்த மிகுந்த நம்பிக்கையோடு தான் நிச்சயம் தேர்வாகிவிடுவோம் என்று உறுதியாக நினைத்து அப்படி அயல்நாடு போவதற்கு முன் தன் பத்து வயது மகனுக்கு திருப்பதியில் உபநயனம் செய்து வைக்க ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டார்.

ஸ்ரீ பெரியவாளிடம் மகாசிவராத்திரி அன்று தரிசித்து தான் அயல்நாடு செல்ல நேர்ந்தால், வயதான பெற்றோர்களை விட்டுவிட்டுச் செல்லும் நிலைமை ஏற்படுமென்றும், அதனால் ஸ்ரீ பெரியவாளே எது சரியானதோ அதை அனுக்ரஹிக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்.

அடுத்தநாள் டெல்லியில் அலுவலகத்தில் விடுப்பு முடிந்து சேர்ந்தபோது ஐ.நா.சபையிலிருந்து இவரைத் தேர்வு செய்து தந்தி மூலம் உத்தரவு வந்தது. பின் ஜூன் மாதம் இவர் ஸ்பெய்னில் ஐ.நா. சபையில் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றபின் இவர் தேர்வான விபரங்கள் அடங்கிய கோப்பு இவரிடம் கொடுக்கப்பட்டது.

அந்தக் கோப்பில் ஒரு அதிசயம் காத்திருந்தது. அந்தப் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்த ஏழு நாடுகளின் நபர்களில் அந்த நாட்டின் ஃபைனான்ஸ் செகரட்ரி பிளாக்லிருந்து ஒரு நபரை தேர்வு செய்து அதை பிரதம மந்திரிக்கு அனுப்பியிருந்தது தெரியவந்தது. ஆனால் டிரினிடாட், டொபாகோவின் பிரதம மந்திரியான டாக்டர். எரிக் வில்லியம்ஸ், அதை ஏற்காமல் அந்தப் பெயரில் இவர் பெயரைத் தேர்வு செய்து உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார்.

இதில் அதிசயம் என்ன? அந்த அயல்நாட்டுப் பிரதம மந்திரி கையெழுத்திட்ட அந்த அயல்நாட்டு நேரம் சரியாக இந்திய நேரத்தின் மகாசிவராத்திரியன்று சுந்தரராஜன் உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமேஸ்வரரான பெரியவாளைத் தரிசித்து இதற்கான அனுக்ரஹம் வேண்டிய அதே நேரம்.

பக்தருக்கு மெய்சிலிர்த்தது.


அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம்
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்

 

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦☀️🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦

Reply all
Reply to author
Forward
0 new messages