pandurangan story

46 views
Skip to first unread message

jksivan

unread,
Apr 20, 2013, 10:14:49 PM4/20/13
to jks...@gmail.com

                                                                              

 

                                                                                            ஓடக்காரன்

 

 ஒரு குடு குடு  கிழவி.  அவளுக்கு யாருமே  இல்லை.  தள்ளாத  வயதிலும் தினமும் கொஞ்சம் அரிசி வாங்கி இட்டிலி தோசை  பண்ணி,   விற்று  அதிலேயே  தானும்  கொஞ்சம் சாப்பிட்டு  காலம்  தள்ளி வந்தாள். அவள் பெயர்  கோமா பாய்.  இட்டிலி  வேகும்போது  அவள்  பாண்டுரங்கன் பஜனை  பண்ணிக் கொண்டே சமைப்பாள் அவள்  வீடு  ஒரு  மரத்தடி  அவளுக்கு  வாழ்க்கையில்  ஒரு  குறிக்கோள்.  எப்படியாவது  பண்டரிபுரம போக வேண்டும்  ஒரு தரமாவது விட்டலனை தரிசனம்  பண்ணவேண்டும் . 

ஒரு  ஏகாதசி  அன்று  பண்டரிபுரம் போக  முடிவு பண்ணிவிட்டாள். மெதுவாக  நடையாய்  நடந்து சந்திரபாகா நதிக்கரை  வரை  சென்று விட்டாள்.  யாரோ  சொன்னார்களே. நதியை  கடந்து போனால் அக்கரையில்

பாண்டுரங்கன கோவில்  தெரியுமே  என்று.

நதியை  எப்படி கடப்பது?.  அவள்  போன சமயம்  நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

எப்போது அது வற்றி  எப்போது  அவள்  அக்கரை  சேர்ந்து  ஏகாதசி  தர்சனம்  கிடைக்க போகிறது?.

வெகுநேரம்  நின்று கொண்டிருந்தாள்.  நதியில்  ஒரு  ஓடம்  வந்து போய்க் கொண்டிருந்தது. அந்த ஓடக்காரன்  ஒரு  வாலிபன். 

"என்னை கொஞ்சம்  அக்கரை கொண்டு விடுகிறாயா?"

"ஒரு  ரூபாய்  கொடு"

"என்கிட்டே  காசு  இல்லையே?"

நான்  சும்மா உன்னை  ஓடத்தில்  ஏற்றிக்கொள்ள முடியாது.  போ "

அவள்  இருந்த  இடம்  ஒரு  காடு. ஜன சஞ்சாரம்  இல்லாத  இடம்.  கொடிய  விலங்குகள்  இரவில் நடமாடும.  நதியில் நீர் குடிக்க வருமே? .

நிறைய  பேர்  அந்த கரைக்கு  ஓடத்தில் போனார்கள்.  அவர்களையும்  கெஞ்சி பார்த்தாள்.

ஹும்ஹும்  ஒருத்தரும்  லட்சியம் பண்ணவில்லை. என்ன செய்வதுஇருட்டி விட்டதே?

 மறுபடியும்  ஒடக்காரனையே  கெஞ்சினாள் 

தம்பி  நீ  கடைசி தடவை அந்த பக்கம்  போகும்போதாவது  என்னை  கூட்டி செல்லேன்? ரொம்ப

 பயமாக  இருக்கிறதே. இங்கு  தனியாக  இருக்க பார்க்கலாம். இப்போ  பேசாம  போ 

நரிகள் ஊளையிட ஆரம்பித்தன.  இருட்டு கவ்வியது.  சரி நமது  கடைசி முடிவு  நரி வாயில் தான் போலிருக்கிறது.  இங்கு சாவதை விட  பண்டரிபுரத்தில்  மண்டையை போட்டாலாவது கொஞ்சம்

 புண்ணியமாச்சே."

ஓடக்காரன் வரவில்லை. அங்கேயே தங்கி விட்டானோ?.

விட்டலா  என்ன  துர்பாக்கிய சாலி நான். அப்பாடா  அதோ  ஓடக்காரன் வருகிறான் பாடிக் கொண்டே வருகிறானே  ரொம்ப சந்தோஷம்போல இருக்கிறது  நிறைய  சம்பாதித்திருப்பான்  இன்று.

"ஏ பாட்டி,  சட்டு புட்டுன்னு  வா  ஓடம்  கிளம்ப போகிறது. 

நீ  ரொம்ப  நல்லவன் பா. பெரிய மனசு பண்ணி  காசில்லாத  இந்த  கிழவியை  பண்டரிபுரம் போக  வைத்தாயே.  நாளைக்கு பண்டரிபுரம் போய்  பிச்சையெடுத்தாவது  உனக்கு  சேர வேண்டிய  கூலி  கொடுத்து விடுகிறேன்.  கோமாபாய்  விட்டலனை  தரிசித்தாள். ரொம்ப  மகிழ்ச்சி அவளுக்கு.  அங்கு  கோவில்  வாசலில்  அமர்ந்து  பஜனை  பாடி பிச்சை எடுத்தாள்

நிறையவே  காசு  சேர்ந்தது.  சந்தோஷமாக  சந்திரபாகா நதிக்கரை வந்தாள். ஓடக்கார பையன்

உட்கார்ந்திருந்தான்.  

தம்பி  இந்தா ஒரு ரூபாய்  என்று கொடுத்தவளை  ஏற  இறங்க  பார்த்தான்  அவன்.

நீ  எப்படி  இங்கு வந்தே?” 

நீ தானே  ராத்திரி  என்னை  ஓடத்தில்  கூட்டி வந்தே  மறந்து போய் விட்டாயா?”.

நானா? உன்னை  கூட்டி வரவே இல்லையே?”

கோமா பாய்க்கு  விட்டலன்  தான்  ஓடக்காரன்  என்று தெரிந்ததும்  மீண்டும்  ஓடினாள்  விட்டலனை தரிசிக்க.

 

              

 

Sivan Krishnan

unread,
Apr 26, 2013, 3:55:28 AM4/26/13
to sivan

                                                           "கடிதத்தில்  கண்ட படி"

நமது  பாண்டுரங்கன்  கதைக்கு  இன்று   சிறந்த விட்டல பக்தர்  நார்சி மேத்தா  மீண்டும்  வருகிறார்.   சும்மா சொல்லக்கூடாது.  கிளி  என்றால்  கிளி  தான்.  
அவ்வளவு  அழகான  ஒரு  பெண் அவருக்கு.   திருமணவயது.  அவருக்கோ  இது பற்றி  கவலையே  கிடையாதே!! . சதா  விட்டல தியானம்,  பஜனை,  பக்தர்களுக்கு  அதிதி உபசாரம். பாவம்.  ரம  ஏழை  குடும்பம்.    ஒருநாள் அவர் ஊருக்கு  ஒரு  பணக்கார  வியாபாரி  வந்தான்.   தாகத்துக்கு தண்ணீர்  அருந்த வந்தவன்   மேத்தாவின் பெண்ணை  பார்த்தான்.  அவள்  பதவிசு,  அதிதி உபசாரம்,  பண்பு, அடக்கம்  எல்லாம்  அவனைக்கவர  தன்  பிள்ளைக்கு  அவளை  மணமுடிக்க விருப்பம்  வந்து விட்டது. 

"எனக்கு  உங்களிடம்  சம்பந்தம்  பேசும்  அளவுக்கு  அந்தஸ்தோ  பணமோ  இல்லையே.  இந்த கல்யாணம்  எப்படி  நடக்க முடியும்"   என்றார்  மேதா 

"பணம்  என்னய்யா பணம்,  மனம்,  குணம்,  இது தான்  என்னைப் பொருத்தவரை ரொம்ப  அவசியம் இது  எதேஷ்டம்  உங்கள்  பெண்ணுக்கு  இருக்கு"
ஆனால்  வியாபாரி  மனைவிக்கோ  இந்த  சம்பந்தம்  துளிக்கூட  பிடிக்க வில்லை.  நிறைய  சீதனம் வரதக்ஷணை கொண்டு வராத  இந்த பெண்ணை  பரம  வைரியாக  கருதினாள். கல்யாண த்துக்கு ஒத்துக்கொண்டாளே  தவிர  பெண்ணை  சித்ரவதை செய்தாள்.  ஒரு  நாள்   பணத்தோடு  திரும்பிவா என்று  மேதா வீட்டுக்கே  திருப்பி  அனுப்பியும்  விட்டாள்.
நாள்   உருண்டதே  தவிர  பெண்ணும்  மாமியார்   வீடு போகவில்லை. மேதாவிடமும்  ஒரு  பைசாவும்  இல்லை.!   சம்பந்தி  கேட்ட வரதக்ஷணைக்கு  எங்கே  போவது??

நார்சி மேதா  உருகினார்.   நிர்கதியாக  அவர் மனம்  " ஹே  விட்டலா  நீ  தானே  என்னை  தூண்டினாய்.  நான்  வேண்டாம்  வேண்டாம்  என்று  தடுத்தேனே.  அவர்கள்   கேட்ட பணத்தை  எங்கிருந்து  கொடுப்பேன்."?  
 
மேத்தாவின்  மனைவியோ  துடித்தாள்.  பெண்ணும் சகல துன்பத்தையும்  வெளிக்காட்டாமல்  எரிமலையை  விழுங்கிக்கொண்டு  அமைதியாக  இருந்தாள்.

ஒருநாள்  தாங்கமுடியாத  துக்கத்தில்  அவர்  மனைவி  "இதோ பாருங்கோ.  நீங்க  இன்னிக்கே  நம்ம  பொண்ணை    சம்பந்தியாத்தில் கொண்டு விடறேள்.  என்ன பண்ணுவேள்  தெரியாது.   அவா கேட்டதை  கொடுக்க  ஏற்பாடு  பண்றேள்.  பொண்ணு  படற   கஷ்டம்  தாங்க முடியலே' கிளம்புங்கோ!!":

நார்சி  மேதா பெண்ணை அழைத்து கொண்டு  கிளம்பிவிட்டார் அவள்  கணவன் வீட்டுக்கு.  வழியெல்லாம்  அவர் மனம்  "விட்டலா விட்டலா"  என்றே  வேண்டிக்கொண்டு வந்தது.  வந்தவர்களை  முகம் கொடுத்து கூட  பெண்ணின்  மாமியார்  வரவேற்கவில்லை.  "எதற்கு  வந்திருக்கிறீர்கள்.  வெருங்  கையோடு?"  என்று  சுட்டாள். 

நார்சி   மேத்தாவுக்கு என்ன ஆயிற்று!! ?  ரொம்ப  தைரியமாக  வீட்டில்  நுழைந்தவர்  மிடுக்கோடு  பேசினார் 
" என்னம்மா  எப்போ  பார்த்தாலும்  பணம்  நகை  என்றே  பினாத்துகிறீர்கள்.  சும்மா  சும்மா  சொல்லிக்கொண்டே  இருக்காதீர்கள்.  ஒரு  காகிதத்தில் என்ன  எல்லாம்  வேண்டுமோ  சப் ஜாடா  எழுதிக்கொடுங்கள்.   4  நாளில்   வீடு வந்து சேரும்" .

எல்லோருமே  அசந்து போனார்கள்.  இவ்வளவு தைர்யம்  யார்  கொடுத்தார்கள்  மேத்தாவுக்கு? .  என்ன  ஆச்சு அவருக்கு? நாலு நாளில்  எங்கேயிருந்து பணம் கொட்ட போகிறது? .    மாமியார்  ஆடிப்போய்விட்டாள்.  நடுங்கும் கரத்தோடு  தேவைகளை  சுருக்கமாக  எழுதிக்கொடுத்தாள்.  வீடு  திரும்பியதும் தான் மேத்தாவுக்கு  தான்  எவ்வளவு  அசட்டுத் தைரியமாக  நடந்து விட்டோம்  என்று  தோன்றியது.  அவள்  கொடுத்த    லிஸ்ட்  பிரகாரம் ஏறக்குறைய  ஒரு  லக்ஷம் ஆகுமே??"  தலை சுற்றியது  அவருக்கு.   தூக்கம்  போச்சு! ஒரு  நாள்  ரெண்டு நாளும்  போச்சு.  மூணாம்  நாள்  காலையில்  ஒரு  விட்டல் பக்தர்கள்  கூட்டம்  தெருவில் போனது.  அவர்களை கூப்பிட்டு  வழக்கம்போல  உபசாரம் செய்து  நீர் மோர்  கொடுத்தார்.   

"இங்கு  நார்சி  மேதா  என்பவர்  யார்?"
"அய்யா  அது  இந்த  நாயேன்  தான்" .
 "உங்களைத்தான்  பார்க்க  சொன்னார்கள்.  நாங்கள்  பண்டரிபுரம்  போகிறோம்.  எங்களுக்கு திரும்பி வர  ஒரு மாத காலம்  ஆகும்  எங்களிடம் உள்ள நகை, பணம்  எல்லாம்  தங்களிடம் கொடுத்தால்  ஜாக்ரதையாக  நம்பகமாக  இருக்கும்  என்று  சிலர்   பேசிக்கொண்டதை கேட்டு இவற்றை  உங்களிடம்  ஒப்புவிக்கிறோம்.  முடிந்தால்     பணத்தை  எல்லாம்  எங்களுக்கு  பண்டரி புரத்தில்  தரும்படியாக உங்களால் ஏதாவது ஏற்பாடு செய்யமுடியும்  என்றும்  சொன்னார்கள். உங்களுக்கு  வேண்டியவர்கள்  பண்டரி புரத்தில்  யாரோ  இருக்கிறார்களாமே?" 
 
மறுபடியும் ஏதோ  சக்தி  உள்ளே  புகுந்து கொண்டது.    "ஆம்   எனக்கு  வேண்டிய  சியாமள ஸா பண்டரியில்  இருக்கிறார்.  ஒரு கடிதம்  எழுதி கொடுத்தார் . இந்த  கடிதத்தை  அவரிடம் கொடுத்தால்  பணம்  கொடுப்பார்"    நார்சி பணம்  நகை  எல்லாம்  பெற்றுக்கொண்டு  விட்டார்.  யாத்ரிகர்களும்  சந்தோஷமாக  பண்டரிபுரம்  சென்றார்கள்.  நார்சி  ஒரு  காகிதத்தில்  அவரிடம் கொடுக்கபட்ட  நகைகள் பணங்கள் எல்லாம்  எழுதி வைத்தார். என்ன  ஆச்சர்யம்?  சம்பந்தி அம்மாள்  போட்ட  லிஸ்ட்  தானோ இது என்கிறமாதிரி அச்சாக  தேவைப்பட்ட  பணமும்   நகைகளும் சரியாக  இருந்தன.  " விட்டலா  இதுவும்  உன்  விளையாட்டா?"என்று  எண்ணிக்கொண்டு  அவற்றை எடுத்துக் கொண்டுசம்பந்தி  வீடு சென்றார். அவற்றை பெற்றுக்கொண்ட சம்பந்தி  ராஜோபசாரம் செய்தாள்.  பெண்ணை  சந்தோஷமாக  வைத்து கொண்டாள்  என்றெல்லாம்  எழுதவே  தேவையில்லையே.  

இதற்கிடையில் பண்டரிபுரம் சென்ற  யாத்ரிகர்கள்  அங்கு  யார்  யாரையோ  கேட்டபோதும்  ஒருவருக்கும்  சியாமள  ஸா வை தெரியவில்லை.   கையில் பணமும்   இன்றி  எங்கு தங்குவது என்று தெரியாமல்,  பண்டரிபுரம்   விட்டலன்  ஆலயத்திற்
குள்ளே   சென்று  வாடினார்கள்.   நார்சி மேதா  ஏமாற்று பேர்வழி அல்லவே.  ஏதோ தவறு நடந்திருக்கிறது. என்ன செய்வது இப்போது? என்று  தவிக்கையில்  ஒரு  வியாபாரிகள்  கூட்டம்     நுழைந்தது.  ஒரு வேளை   இவர்களில்  யாருக்காவது  சியாமள ஸா வை தெரிந்திருக்குமா? என்று  விசாரித்தனர்  "அதோ  நடுவில்  நிற்கிறாரே எங்கள்  தலைவர்  அவர்  தான்  சியாமள  ஸா  என்று காட்டப்பட்ட  வியாபாரியிடம்   யாத்ரிகர்கள் தலைவன்   அணுகினான்.
"யார்  நீங்கள்?" 
"அய்யா  தாங்கள்  தான்  சியாமள ஸா என்பவரா?" 
"ஆமாம்".
" தங்களுக்கு  ஜுனகாத் என்ற  ஊரில்  வசிக்கும்  நார்சி  மேதாவை  தெரியுமா  அவர்  ஒரு   கடிதம் கொடுத்திருக்கிறார்" 
"அப்படியா.  நார்சி  நமக்கு  ரொம்ப  வேண்டியவராச்சே.  எனக்கு  முதலாளி!.    அவர். இங்கு  வரவில்லையா.   கடிதம் படித்து விட்டு  சியாமள ஸா  கடிதத்தில் தங்களுக்கு  பணம்  கொடுக்க சொல்லி எழுதியிருக்கிறார்.எங்கே  தங்க போகிறீர்கள்."?
"தெரியவில்லை  பிரபு." 
சியாமள ஸா   உள்ளூர்  வியாபாரி ஒருவரை  அழைத்து  "  இவர்களை  நமது  நார்சி அனுப்பியிருக்கிறார்  நமக்கு  ரொம்ப  வேண்டியவர்கள் என்பதால்  நமது  மாளிகைக்கு  அழைத்து சென்று  வேண்டிய  வசதிகள்  எல்லாம் செய்து கொடுத்து  அன்ன  ஆகாரம்  எல்லாம்  வேளா  வேளைக்கு கிடைக்க  உடனே  ஏற்பாடு செய்யுங்கள். இதில்  கண்ட  பணத்தையும் அவர்களுக்கு  உடனே  கொடுத்து விடுங்கள் சியாமள  ஸா  அடிக்கடி அவர்களை  வந்து  பார்த்துக்கொண்டார்.  அவர்களுக்கு  புளகாங்கிதம்.  அவரை பார்த்தாலே  பாண்டுரங்கனை  தரிசித்தது போல  மனம் இனித்தது.

யாத்திரை முடிந்து அவர்கள்  நார்சி மேதா இருந்த  ஜுனகாத்  வந்தார்கள்.  அடி வயிற்றில்  புளி கரைத்தது  மேத்தாவுக்கு.  பணமும்  நகையும்  எப்படி  திருப்பி தருவது??.  பாவம்  பணத்தை அனுப்புவேன் என்று  எதிர்பார்த்து எப்படியெல்லாம்  தவித்தார்களோ  பண்டரிபுரத்தில்??  எந்த முகத்தோடு  அவர்களை  சந்திப்பது?? விட்டலா  இந்த  ஆபத்திலிருந்தும்  காப்பாற்று"  என்றுவேண்டினார் 

அவர்கள்  வந்ததும்  வராததுமாக  மேதா  காலில்  விழுந்து வணங்கி கண்ணீரால்  அவர்  கால்களை  அலம்பினர்.  "அய்யா  உங்கள்  சியாமள ஸா எவ்வளவு பெரிய  பணக்காரர்  உங்கள் பெயரை  சொன்னதுமே  எங்களுக்கு  இதுவரை  வாழ்வில்  நாங்கள்  அடைந்திராத சுகத்தோடு  எங்கள்  பண்டரி யாத்திரை முடித்து கொடுத்தார்.  கேட்ட   பணத்திற்கும் மேலாக  வாரி வழங்கினாரே!!. உங்கள்  மீது எத்தனை  மதிப்பு  மரியாதை  அவருக்கு? .  நொடிக்கு நொடி "மேதா எப்படி இருக்கிறார் அவர்  ஏன்  உங்களோடு  வரவில்லை?"  என்று  கேட்டுக்கொண்டே  இருந்தார். நீங்கள்  அனுப்பிய  எங்கள்  நகையும்   ஜாக்ரதையாக எங்களிடம்  திரும்பி வந்துவிட  செய்தார். "

மேத்தாவுக்கு  தலை  சுற்றியது. பேச்சு வரவில்லை.  "விட்டலா  விட்டலா  என்  சியாமளா ஸா,   இப்பவே  கிளம்புகிறேன்  உன்னை  கண்டு சேவிக்க "  என்று  பண்டரிபுரம் நடந்தார்.   விட்டலனின் மேல்  தேன்  மாரியாக  நாமாவளி  மனதில் சுரந்தது  நார்சிக்கு.  வைஷ்ணவ  ஜனதோ  பாட்டு  நாம் எல்லாம்  கேட்டு  மகிழ்கிரோமே  அது  ஒன்றே  போதுமே  நார்சி மேத்தாவின்  இனிமையான  பக்தி கீதத்துக்கு  ஒரு  எடுத்துக் காட்டு      


amritha varshini

unread,
Apr 26, 2013, 5:29:07 AM4/26/13
to amrith...@googlegroups.com
From: Sivan Krishnan <jks...@gmail.com>
Date: 2013/4/26
Subject: pandurangan story
To: sivan <jks...@vsnl.com>
Reply all
Reply to author
Forward
0 new messages