பிரம்ம மந்திரக்கல்லால் 25 ஆண்டுகளாக கட்டப்பட்ட தஞ்சாவூர் பிரகதீஸ்வரர்

93 views
Skip to first unread message

Ramakrishnan K S

unread,
Nov 15, 2016, 7:52:34 PM11/15/16
to VASUVANJA GROUPS
பிரம்ம மந்திரக்கல்லால் 25 ஆண்டுகளாக கட்டப்பட்ட தஞ்சாவூர் பிரகதீஸ்வரர்



sivan-thanjaurr

 தஞ்சாவூரில் உலக புகழ்பெற்ற ராஜராஜ சோழனால் 80 டன் பிரம்ம மந்திர கல்லால் 25 ஆண்டுகளாக கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பெரிய நாயகியுடன் பிரகதீஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார். இத்தலம் ராஜராஜசோழனால் ஆத்மார்த்தமாக கட்டப்பட்ட கோவில் என்பது இங்கு என்ன வேண்டினாலும் நிறைவேறும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
 பிராத்தனை நிறைவேறியதும் நேர்த்திகடனாக சுவாமிக்கு பால் தயிர் பஞ்சாமிருதம் அரிசி மாவு தேன் பண்ணீர் இளநீர் சந்தனம் விபூதி மாப்பொடி மஞ்சள் பொடி ஆகியவற்றால் சாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர். அம்பாளுக்கு 9 கஜ சேலை சாத்தி நேர்த்தி கடனை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.கோபுரத்தின் உச்சி நிழல் தரையில் விழாதவகையில் கட்டப்பட்டுள்ளது.சண்டிகேஸ்வரருக்கு இங்கு மட்டுமே மிகபெரிய சன்னதி உள்ளது.
 பெரிய கோவில் என்ற அடைமொழியை பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் இந்த லிங்கம் மத்திய பிரோதச மாநிலம் நர்மத நதிகரையில் உள்ள ஒரு மலையில் இருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.பிரகதீஸ்வரர் உடுத்தும் வேட்டியின் நீலம் 35 மீட்டர் ஆகும்.அபிஷேகம் செய்ய லிங்கத்தின் இருபுறமும் மோடை அமைக்கப்பட்டுள்ளது.இங்கு தலவிருச்சமாக வன்னிமரமும் தீர்த்தமாக சிவகங்கை உள்ளது.தஞ்சை பெரிய கோவிலில் கட்டுமானமும்
ராஜராஜ சோழனின் தமிழ் பற்றும்
கோவில் கோபுர உயரம் 216 அடி
தமிழ்உயிர் மொய் எழுத்துக்கள் 216
சிவலிங்க உயரம் 12 அடி
தமிழ் உயிர் எழுத்துக்கள் 12
சிவலிங்கத்தின் பீடம் 18 அடி
தமிழ்மொய் எழுத்துக்கள் 18
சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள தூரம் 247 அடி
தமிழ் மொத்த எழுத்துக்கள் 247
தஞ்சாவூர் பெரிய கோவில் ஆலயக் கோபுரம், விமானம் மட்டுமல்ல.. சுவாமி, அம்பாள், நந்தி என அனைத்து சிலைகளும் அளவில் மிகப்பெரியவை. திருநாவுக்கரசர் தேவாரத்தில் போற்றிப்பாடியுள்ள தஞ்சாவூர் தளிக்குளத்து ஈசன் கோவிலையே, ராஜராஜ சோழன் மாற்றி அமைத்து பெரிய கோவிலாக்கினான்.
 brihadishwara_temple_at_sunset_-_thanjavur_-_india-1கோவிலைச் சுற்றிலும் மதில் சுவரும், அகழியும் அமைக்கப்பட்டது. கோட்டை போல் இருக்கும் கோவிலின் நுழைவு வாசலுக்கு ‘கேரளாந்தகன் திருவாயில்’ என்று பெயர். அதனைக் கடந்தால் ‘ராஜராஜன் திருவாயில்’. இந்த இரண்டு வாசல்களையும் கடந்து சென்றால், மிகவும் விசாலமான பரந்த வெளியில் ஆலயம் அமைந்துள்ளது. இத்தல விநாயகர் கன்னி விநாயகர். ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் வராகி அம்மனுக்கு தனிக் கோவில் இருக்கிறது. வலது கையில் உலக்கையுடனும், இடது கையில் கலப்பையுடனும் காட்சி தருகிறார் வராகி அம்மன். கன்னி விநாயகருக்கு அடுத்த மரியாதை-பூஜை இந்த அம்மனுக்கே. பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபட்டால் வறுமை, பிணி, பில்லி, செய்வினைகள் அகலும். எதிரிகள் விலகுவர் என்பது ஐதீகம். மூலவர் கருவறையின் நேர் எதிரில் நந்தி மண்டபம் உள்ளது. இந்த நந்தி ஒற்றைக் கல்லால் ஆனது. 12 அடி உயரம், 19½ அடி நீளம், 8¼ அடி அகலம் கொண்டது. கருவறையில் பெருவுடையார் என்னும் பிரகதீஸ்வரர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத்தின் உயரம் 13 அடி. அதன் கீழ் பகுதியான வட்டவடிவ பகுதியின் சுற்றளவு 54 அடியாகும். சுமார் 25 ஆயிரம் கிலோ எடை கொண்டது இந்த சிவலிங்கம்., அழகான, எடுப்பான தோற்றத்தில் ஈசன் அருள்பாலிக்கிறார். இந்த பிரகதீஸ்வரரை பிரதிஷ்டை செய்தவர், பதினெண் சித்தர்களில் ஒருவரான கருவூரார். கோவிலின் மேற்கு பிரகாரத்தில் கருவூர்த் தேவருக்கு சிறிய கோவில் உள்ளது. இவர் பாடிய ‘திருவிசைப்பா’ பதிகம் பெருவுடையார் மீது பாடப்பட்டுள்ளது. கருவூர் சித்தரின் சன்னிதியில் வியாழன் தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
 பிரகதீஸ்வரர் கோவிலின் பக்கச் சுவர்களிலும், மாடங்களிலும் சந்திரசேகரர், பிட்சாடனர், சூல தேவர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்த நாரீஸ்வரர், கங்காதரர், கல்யாண சுந்தரர், மகிஷாசுரமர்த்தினி, மகாலட்சுமி முதலியோர் அருள்பாலிக்கிறார்கள். இங்குள்ள சுப்பிரமணியர், அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றவர். சண்டிகேஸ்வரரும் பெரிய தனிச் சன்னிதியில் இருந்து அருள்புரிகிறார். இத்தல அம்பிகை பெரியநாயகி, 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். நவராத்திரியில் அம்பாளுக்கு தினமும் ஒவ்வொரு அம்மன் வடிவில் அலங்காரம் செய்யப்படுகிறது.
 இங்கு வைகாசியில் ‘ஆட்டைத் திருவிழா’ என்னும் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. திருக்கார்த்திகை, ஆடிப்பூரம், சிவராத்திரி, நவராத்திரி என பல்வேறு திருவிழாக்களை தஞ்சை பெரியகோவில் கண்டாலும், அவற்றுள் மிகவும் விசேஷமான பெருவிழாவாக இருப்பது ‘ஐப்பசி சதயம் விழா’ ஆகும். ராஜராஜ சோழனின் திருஅவதார நாளே ‘ஐப்பசி சதயம்’. இந்த விழாவில், ராஜராஜேஸ்வர நாடகம் பாவனையாக நடித்துக் காட்டப்படுகிறது. மேலும் அன்றைய தினம் மூலவர் பெருவுடையாருக்கு பிரமாண்ட அபிஷேகம் நடைபெறும்.
 ஐப்பசி சதயம் விழாவிலும் முதல் பூஜை வராகி அம்மனுக்குத்தான். ராஜராஜ சோழனின் குலதெய்வம் இந்த வராகி அம்மன் என்று கூறப்படுகிறது. பெருவுடையாருக்கு வில்வம், வன்னி, பிச்சி, நொச்சி, சாம்பிராணி, தைலம், திரவியப்பொடி, வாசனைப் பொடி, மஞ்சள் பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், மாதுளை முத்து, பலாச்சுளை, திராட்சை, விளாம்பழம், அன்னாசி, சந்தனம், அன்னம், பன்னீர், இளநீர் உள்பட 47 வகையான அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. ஐப்பசி மாதம் நடைபெறும் அன்னாபிஷேகமும், இந்த ஆலயத்தில் நடைபெறும்
தொடர்புக்கு:   91-4362-274476 – 223384



ANBUDAN
<>KSR<>


Sundararajan

unread,
Nov 16, 2016, 8:15:22 PM11/16/16
to Ramakrishnan K S, Abridged Recipients
"பிரம்ம மந்திர கல்லால் .."  அப்படி என்றால் என்ன?
கோபுரத்தின் உச்சி நிழல் தரையில் விழாதவகையில் கட்டப்பட்டுள்ளது - இது சரியன தகவல் இல்லை
tanjore big temple shadow.pngbig temple shadow 2.pngbig temple shadow 3.png
To explode the myth, researchers have taken photographs, using digital camera, which show the shadow of the vimanam casting  on the ground.

From morning till evening, at all times, the shadow of vimanamwith shikara, keethimugas and kalasam casts on the ground, they say.  The report has not confirm about the shadow at noon.  Probably the shadow does not appear at noon time form which the myth grew I suppose.

Describing the temple as an architectural marvel built 1000 years ago, they say the temple has no parallels in the world.  There is no need to float such myths.






यो मां पश्यती सर्वत्र सर्वं : मयि पश्यती
तस्याहम प्रणश्यामी   मे प्रणश्यति
"He who sees me everywhere, and sees everything in Me, he never gets separated from Me, nor do I get separated from him"  -Bhagwat Gita Ch.  VI verse 30


On Wednesday, 16 November 2016 6:34 AM, 'Ramakrishnan K S' via Amritha Vahini <amrith...@googlegroups.com> wrote:


பிரம்ம மந்திரக்கல்லால் 25 ஆண்டுகளாக கட்டப்பட்ட தஞ்சாவூர் பிரகதீஸ்வரர்


Reply all
Reply to author
Forward
0 new messages