வைணவ விண்ணொளி

231 views
Skip to first unread message

Sivan Krishnan

unread,
Feb 4, 2017, 8:33:27 PM2/4/17
to Sivan Krishnan

                                                             ஆச்சார்யர்களும் ஆழ்வார்களும்        

                                                           4 ''பெரு'' மாள்  தந்த ''பெரும் '' ஆழ்வார்........ 

 
யார்  வைஷ்ணவன் என்று ஒரு கேள்வி கேட்டால் அதற்கு  கேள்வி ரூபத்திலேயே  கிடைக்கும் ஒரு அருமையான பதில் -- 

எவன்  விஷ்ணுவின் குணங்களை கொண்டவனோ அவன்!  

என்ன அப்படிப் பட்ட குணம் விஷ்ணுவிற்கு?   என்று கேட்டால் மீண்டும் கேள்வி ரூபத்திலே  விடை 
''முதலில் விஷ்ணு யார் தெரியுமா?''   

விஷ்ணு  என்றால்  காப்பவர், தாங்குபவர், எங்கும் இருப்பவர்  என்ற அர்த்தம் .  விஷ்ணு சர்வ வியாபியாக, உலகையே, பிரபஞ்சத்தையே  தாங்குபவராக, எல்லோரையும், எல்லாவற்றையும் காக்கும் கடவுள் , திருமூர்த்திகளில்  படைத்தல், காதல்,  அழித்தலில்  மிக முக்யமான  காத்தலை பொறுப்பாக கொண்டவர் என்று புரிகிறது.  காப்பதற்கு என்ன தேவை,   பொறுமை, தயை, கருணை, அன்பு, ............ 

 இது போன்ற குணம் கொண்ட மனிதன், என்ன செய்வான்?  விஷ்ணுவிடம் சரணாகதி அடைந்தவனாக,  மற்றவர்களை மதிப்பான், உதவுவான், அன்பாகவும், கருணையோடும்,  மற்றோருக்கு நல்லதே செய்யும்   இரக்க குணம் கொண்டவனாக இருப்பான். அப்படி இருப்பவன் விஷ்ணுவை பின்பற்றுபவன், வைஷ்ணவன். இதில் ஜாதி கிடையாது. வித்யாசம்?  இல்லவே இல்லை. மதம்,  இனம், ஆண், பெண்,  வித்தியாசம் எல்லாம் கடந்த பேரன்பு.

இந்தியாவில் ஒரு நேரத்தில் நமது சனாதன தார்மீகம்  சிறிது க்ஷீணமான நிலையில் இருந்தபோது   தோன்றியவர்கள் முதல் மூன்று ஆழ்வார்கள். அடுத்து அடுத்து நாட்களில் மயிலையில், காஞ்சியில்,  மாமல்லையில்  ''தானாக'  தோன்றியவர்கள். பக்தி, ஞானம், தர்மம்,   ஆகியவை செழித்தோங்க செய்த ''ஆழ்ந்த''  விஷ்ணு பக்தி கொண்டவர்கள் ஆழ்வார்கள். 

 பொய்கை ஆழ்வாரின் பாசுரங்களில் ஞானம் இழையோடுகிறது.  பூதத்தாழ்வார் பாசுரங்களில் பக்தி பிரவாஹம் கரை புரண்டோடும்.  பேயாழ்வார் பாசுரங்களோ  கேட்கவே வேண்டாம். ''தன்னை'' இழந்த உயர்ந்த நிலை சரணாகதி, தியாக  பாவம். (BHAAVAM ).  

எந்த தெய்வத்தையும் தாழ்ச்சி சொல்லாத உயர்ந்த உள்ளங்கள். பிற்கால சிலர்  இதற்கு மாறாக நடந்து கொண்டது  விதி என்று தான் சொல்லவேண்டும்.

முதல் ஆழ்வார்களின் பாசுரங்கள்  அந்தாதி வகை.  முதல் பாசுரத்தின் கடைசி வார்த்தை  'அந்தம்''    அடுத்த பாசுரத்தின் முதலாக அதாவது ''ஆதியாக'' தொடரும். 

 எல்லா ஆழ்வார்களையும்  ''ஒரே  ஒருவரின்'' உடல் உருவமாக  சொல்வதுண்டு. அந்த உருவம் தான் நம்மாழ்வார். பெரியாழ்வார் தலை.  மற்ற ஆழ்வார்கள் விஷ்ணுவிடம்,  மோக்ஷம், ஞானம் இவற்றை வேண்டியபோது, பெரியாழ்வார் மட்டும்  தனித்து நிற்கிறார்.   அவர் படைப்பில்  வாத்சல்ய பாவம் (AFFECTION AND  DEEP  LOVE ) தொனிக்கிறது.  நாராயணனுக்கே பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் நின் திருவடிகள் ஒளிவீசி காத்து அருள வேண்டும் என்று வாழ்த்தியவர்.இதனால் தான் அவர்   மற்ற எல்லா ஆழ்வார்களை விட  ''பெரிய''  ஆழ்வார். 

முகுந்தாச்சாரி என்கிற ஒரு பிராமணர் ஒரு காலத்தில் தனது மனைவி பத்மாவோடு  எளிய வைணவ சம்ப்ரதாய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவர்  வாழ்ந்த  ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர். திருநெல்வேலி ஜில்லாவில் இருக்கிறது.  தம்பதிகள் இருவருமே ''நாராயணா, உன் தயவால்  எங்களுக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் '' என்று வேண்டினார்கள்.

 ''ஒரு''   குழந்தை என்ன   ''பெரும் '  குழந்தையையே  பெறுவீர்கள் என்று திருமால் அருளால் பிறந்தவர்  பெரியாழ்வார் என்று பிற்காலத்தில் அறியப்பட்ட  விஷ்ணு சித்தர். '' கருடா, நீயே போய் குழந்தையாக உருவெடு '' என்று  திருமால் அனுப்பியதால்  ''பெரியா'' ழ்வார்   ''பெரிய''   திருவடி அம்சம்.

 மதுரையில் அடிக்கடி  பெரிய அளவில்  மத மாநாடு கூடும். பல மதக் கோட்பாடுகள் கொண்டவர்கள் வந்து தங்கள் பெருமையை  ஸ்லாக்கியமாக பேசுவார்கள். வைஷ்ணவர்கள், சைவர்கள், சாக்தர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், என்று பலர் கார சாரமாக வாதம் புரிவார்கள்.  மற்ற மதங்களை இழிந்து கேவலமாக பேசுவார்கள்.  எனவே மதுரையில் பாண்டியன் அரண்மனையில் இப்படி  ஒரு மாநாடு கூடி எல்லோரும் காரசாரமாக    விவாதித்தார்கள்.  பாண்டிய ராஜாவுக்கு இவர்கள் வாதத்தில் திருப்தியில்லை. பகவானை வேண்டினான்.

''விஷ்ணு சித்தா, எழுந்திரு. உடனே மதுரை போ. அங்கு  மத மாநாடு ஒன்று பாண்டிய ராஜா முன்னிலையில், தலைமையில்  நடக்கிறது.  நீயும் சென்று அதில் பங்கு கொள்.''என்று கனவில் விஷ்ணுசித்தரை விஷ்ணுவே தூண்டினார்.  

''பகவானே,  நானா,  மகாநாட்டில் வாதமா?   வாதம் பண்ணும் திறமை இல்லாத சாதாரணன் ஆச்சே நான். என்னை போகச் சொல்கிறீர்களே!''

''அதெல்லாம் இல்லை, விஷ்ணு சித்தா,  நீ போய்ப்  பேசு,   நீயே ஜெயிக்கப் போகிறாய்.  ஹரி பக்தியை எடுத்துச்சொல்ல உனக்கு யாரும் கற்றுத் தரவேண்டியதில்லையே?  உடனே போ. பாண்டியனுக்கும் சபையோருக்கும் அதை  எடுத்துச்  சொல்லேன் '' என்கிறார்  விஷ்ணு.

புது தெம்போடு  விஷ்ணு சித்தர் மதுரை நடந்தார். வைணவ மத சார்பாக ஒருவர் வந்திருக்கிறார் என்று பாண்டியன் அறிந்து அவரை வரவேற்றான்.   ''உங்கள் வாதத்தை முன் வையுங்கள்''  என்றான். 

எத்தனையோ கேள்விகள் அவரை துளைத்தன.  பெரியாழ்வாருக்கு எங்கிருந்தோ ஒரு அமானுஷ்ய சக்தியும் ஞானமும் வந்து அனைத்துக்கும் அசாத்தியமாக விளக்கங்கள் கூறினார். நாராயணன் ஒருவனே உயர் தெய்வம். உயர் சத்யம்,  சர்வ லோக ரக்ஷணன். அவனை சரணடைந்தவர்களுக்கு  எந்த குறையும் இல்லை.  குறையொன்றும் இல்லாத கோவிந்தனே  காக்கும் தெய்வம் பாதுகாக்கும் ரக்ஷகன். 
  ''ஓம் நமோ நாராயணாய '' என்கிற சர்வ சக்தி வாய்ந்த அஷ்டாக்ஷர  மஹா  மந்த்ரத்துக்கு எதுவும் ஈடு  இணையில்லை . இதுவே தாரக மந்திரம், சர்வ சக்தியோடு, சர்வ வியாபியான ஹரியின் பாதங்களை பிடித்தோர்க்கு பரகதி நிச்சயம் ''.  சண்டமாருதமாக  மூச்சு விடாமல்  பேசி அசத்திவிட்டார்  விஷ்ணு சித்தர். 

அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.  பொற்கிழி ஒன்று ஒரு உயர்ந்த கம்பத்தில் நடு நாயகமாக  வெற்றி பெற்றவர்க்கு பரிசாக வைக்கப் பட்டிருந்தது. T 20  கிரிக்கெட் போட்டியில்  அழகான ஒரு கார் பரிசாக வைக்கப்பட்டு  கண்ணை உறுத்துமே  அது போல்.  விஷ்ணு சித்தர் பேசி முடித்ததும் அந்த பொற்கிழி தானாகவே  தாழ்ந்து வளைந்து அவர் காலடியில் ''தொப்'' பென்று வந்து விழுந்தது. பாண்டியன் அசந்து விட்டான். பரம திருப்தி அவனுக்கு.

 
பெரியாழ்வார்  இயற்றிய திருப்பல்லாண்டு 12 பாசுரங்கள் கொண்டது. மற்றது பெரியாழ்வார் திருமொழி என்ற 461 தேனினுமினிய பாசுரங்கள். சமஸ்க்ரிதத்தில் எப்படி  பிரணவ மந்த்ரமான  ''ஓம்'' என்ற சொல்லுக்குப் பிறகே வேதம்  உச்சரிக்கப் படுகிறதோ அதே போல் திராவிட வேதத்தில்  பெரியாழ்வாரின் திருப் பல்லாண்டு  இல்லாமல் மற்ற பாசுரங்கள் துவங்காது. பெரியாழ்வார் திருமொழியில் கண்ணன் லீலா விபூதிகள் கொள்ளையாக இருக்கிறது. பாகவதமே தான் அது என்று கூட சொல்லலாம்.  எண்பத்தி ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த பெரியார் கண்டெடுத்த மற்றொரு ஆழ்வார் தான் அவரால் வளர்க்கப்பட்ட  சூடிக் கொடுத்த சுடர்க்கொடி   திரு  ஆண்டாள் நாச்சியார். 

 இவர்கள் எல்லாருமே இனி வரிசையாக வரப்போகிறார்கள்.மரியாதையோடு வரவேற்று வணங்குவோம்.

sivan jaykay

unread,
Feb 4, 2017, 8:33:27 PM2/4/17
to Sivan Krishnan
வைணவ விண்ணொளி -


                                        ஆச்சார்யர்களும் ஆழ்வார்களும்
  
                                      3.   ''வேதம் தமிழ் செய்த காரி மாறன்.....''

 
மிகச் சிறந்த ஞானி அவர்.  அவதார புருஷர்.  ஆனால் யாருக்கு தெரியும்?  அவர்  தான்  பிறந்தது முதல்  வாய் பேசாமல்,  பாலோ, ஆகாரமோ, நீரோ அருந்தாமல் மௌனியாகவே இருந்தாரே.

 பிறந்தது முதல் கண்ணே திறக்கவில்லையாம், அழவில்லையாம், ஒரு அபூர்வ குழந்தையாக இருந்தாலும் பெற்றோருக்கு கவலை இருக்காதா?   அந்த ஊர்  பெருமாள்  பொலிந்து  நின்ற பிரான் ( ஆதி நாதன்) என்ற பெயர் கொண்டவர்.  குழந்தை பிறந்த 12ம் நாளே   பெருமாள் முன் குழந்தையை கிடத்தி வேண்டினார்கள் பெற்றோர்.  என்ன ஆச்சர்யம்?  குழந்தை கண் திறந்து பார்த்து  நேராக தவழ்ந்து அருகே இருந்த புளியமரத்தை அடைந்தது. அங்கே ஒரு பெரிய  பொந்தில் அமர்ந்தது.   இது  ஸ்தல விருக்ஷம். சமீபத்தில் திருநெல்வேலி பக்கம் சுற்றினேன். அப்போது இந்த திவ்ய தேசத்துக்கு சென்று அந்த விருக்ஷத்தின் விருத்தாப்பிய  கோலத்தில் கண்டு வணங்கினேன். நிறைய பேர் வந்திருந்தார்கள். புளிய மரம் பார்க்க  தட்டில் ஒருவர் காசு வாங்கி னார். 

  இந்த புளியமர இலைகள்  இரவில் கூட  மற்ற மரங்கள் இலைகள் போல  மூடி உறங்குவதில்லை.  ''உறங்காப்புளி'' என்ற  பிரசித்த பெயர் பெற்றது.   இந்த புளிய மர பொந்தை,  ஆதிசேஷனே  பூமியில் அவதரித்து  படம் விரித்து நிற்பதாக  கூறுவதுண்டு.

  புளிய மரத்தில் சவுகரியமாக அமர்ந்த  குழந்தை  த்யானத்தில் ஆழ்ந்தது. வருஷங்கள் பதினாறு  ஓடியது. அதற்கப்புறம்  ஒரு 16 வருஷம் தான் வாழ்ந்தார். மொத்த வயது 32 தான். அதற்குள்ளா  இத்தனை யுக விஷயங்கள்?  ஆதிசங்கரரும் விவேகானந்தரும் கூட  இப்படித்தானோ?   ஏன் ஆதி சங்கரர், விவேகானந்தர்  நம்மாழ்வார், மார்க்கண்டேயன் -- இவர்களுக்கு எல்லாம் வெறும் 16, 32 வயசு மட்டும் ?? மகான்களுக்கு ரொம்ப வயசு தேவையில்லையோ!

இந்த ஆழ்வார்  இருந்த காலம்  கி.மு.  3102,  கலியுகத்துக்கு முன்னாலேயே  என்றும்,    இல்லை,   அப்புறம் தான், அதாவது   6,  8,  9ம்  நூற்றாண்டு  கி.பி.  என்கிறார்கள்.  நாம் எதற்கு வடையை  எண்ணச் சொன்னால் துளையை எண்ண வேண்டும். வருஷமா முக்கியம்.?

அவர்  அவதாரம் செய்தது  ஆழ்வார் திருநகரி என்று அழைக்கப்படும்  குருகூர்.  இது தாமிர பரணி ஆற்றங்கரையில் உள்ள ஒரு சிற்றூர். திருநெல்வேலியிலிருந்து 20 கி.மீ.   திருச்செந்தூரிலிருந்து 17 கி.மே.  ஸ்ரீ வைகுண்டம் என்று ஒரு ஊர் 3 கி.மி. தூரத்தில் இருக்கிறது.  ஆழ்வார் திருநகரி  மிகச் சிறந்த ஒரு  வைணவ ஸ்தலம். திவ்ய தேசம்.

ஆழ்வாருக்கு விளங்கும் மற்ற சில பெயர்கள், சடகோபன், பராங்குசன், சடாரி, மாறன்,  வகுளாபரணன், குருகையார் கோன். அவருடைய பெற்றோர் காரி என்ற பெயர் கொண்ட தந்தையும்,  உடைய நங்கை என்ற தாயும்.  மிகவும் புண்யம் பண்ணினவர்கள். வெள்ளாள பிள்ளை வகுப்பை சேர்ந்தவர்கள். விஷ்ணு பக்த குடும்பம். திருவண் பரிசாரம்  என்று ஒரு திவ்ய தேசம் இருக்கிறதே அதில் தான் உடைய நங்கை வசித்தார். அந்த ஊரில் தான் உடையநங்கையின்  தந்தை வைஷ்ணவ ஸ்தானிகராக இருந்தவர். அவரைத்தான்  காரி மாறனுக்கு மணமுடித்தார்கள்.  திருவண் பரிசாரம்  மேற்கு தொடர்ச்சி மலைக்கு அந்தப் பக்கத்தில் உள்ள ஊர்.

அப்போதெல்லாம் தமிழ் வருஷங்கள் தானே கணக்கு. கலியுகம் பிறந்து 43வது  பிரமாதி வருஷம் வைகாசி மாசம், விசாக நக்ஷத்ரம் என்று ஆழ்வாரின்  பிறந்தநாளைச் சொல்கிறார்கள்.

பெருமாளின் படைத் தலைவராம் விஷ்வக்சேனரே  இந்த ஞானி யாக பிறந்தவர் என்பார்கள். இனி அவரை  நாம்  'நம்' ஆழ்வார்   என்று அறிவோம். இது நாம் வைத்த பெயர் இல்லை.  ஸ்ரீ ரங்க நாதரே  இவர்  ''நம் ஆழ்வார்'' என்று பெருமையாக சொன்னதால் அந்த பேர்  உலகம் உள்ளவரை நம்மை மகிழ்விக்கும்.  அவர்  ஞானியாக மட்டும் இல்லை. இணையற்ற  கவிஞன். ஆழவார்களிலேயே  மிகச் சிறந்த முதன்மையான ஆழ்வார்.  இவர் புலமையைக் கண்டு  நாமா மகிழ்ந்தோம்.  தமிழ் மொழிக்  கவிகளில் நிகரில்லாத கம்பர்  சடகோபரந்தாதி என்று இவரைப் பற்றி எழுதிய பாடல்களில்  இவருக்கு ஈடான தமிழ் ஞானம் கொண்ட பக்திக்  கவிஞன் கிடையாது என்று அல்லவோ எழுதியிருக்கிறார்.

நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.நினைவிருக்கலாம்.  மதுர கவி என்று சோழ தேசத்து பிராமணர் ஒருவர். வேதங்களில்  நன்றாக தேர்ச்சி பெற்றவர். வானிலே ஒரு  ஒளி அவரை வடக்கே இருந்து வழிகாட்டி  குருகூர் வரை அழைத்துக் கொண்டு சென்று நம்மாழ்வார் முன் நிறுத்தி மறைந்தது.  அப்போது மதுரகவி  ஒரு கேள்வி நம்மாழ்வாரை கேட்கிறார்.

''செத்தது வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தை தின்று எங்கே  கிடக்கும்?''  

இந்த கேள்வியை நம்மிடம்  யாரவது ஒருவர் கேட்டால் அவரை ஒருமாதிரியாக பார்த்து விட்டு ''பாவம்  இப்படி ஆகிவிட்டாரே '' என்று பரிதாபப்பட்டு நகர்வோம்.    ஏனென்றால் நமக்கு இது புரிந்து கொள்ளவே பல யுகங்கள் ஆகும்.  ஆனால் இதுவரை பேசாதிருந்த அந்த புளியமர பொந்து  பாலகனோ, அடுத்த கணமே  ''அத்தை தின்று அங்கே கிடக்கும்'' என்று பதில் சொன்னார்.  இதன் உள்ளர்த்தம்  ''ப்ரக்ரிதியில் உழலும் ஜீவன், அதிலேயே  அனுபவம் பெற்று ஜீவிக்கும். பரத்தில் திளைத்து பரமனிலேயே உய்யும்''  என்ற உயர் தத்துவம் இதில் அடங்கும் என்பார்கள். நிதானமாக படித்து புரிந்து கொள்ளுங்கள்.   

மதுரகவி ஆழ்வார், இதன் பொருளை உணர்ந்து அந்த கணம் முதல்  நம்மாழ்வாரையே   தமது குருவாகக் கொண்டார். முன்பே எழுதியபடி மதுரகவியாரின்  கண்ணினுட் சிறு  தாம்பு 11 பாசுரங்களே  ஆனாலும் ''ஆச்சார்ய நிஷ்டை'' என்ற வகையில் ஆச்சார்யனான நம்மாழ்வாரைப் பற்றியே பாடப்பட்டும்  நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் ஒரு சிறந்த நிரந்தர இடத்தை பெற்றிருக்கிறது.

நம்மாழ்வார்   இயற்றியவை:  திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி,  திருவாய் மொழி. கடைசி யாக சொன்ன திருவாய் மொழி மிகவும் சுவை வாய்ந்த பாசுரங்களைக் கொண்டது. ரசித்தேன்.  நிறையவே சொல்லவேண்டும்.  இப்போது  இயலவில்லை. ஒவ்வொருவருமே படித்து ஸ்வானுபவம் பெற வேண்டிய ஒரு அபூர்வ, அதிசய நூல்.  இது அத்தனையும்  நம்மாழ்வார் சொல்ல சொல்ல  மதுர கவியாழ்வார்  பனை ஓலைச் சுவடிகளில் பொறித்து நமக்கு அளித்த கருவூலங்கள். இது தான் தேவ ரஹஸ்யம் என்பது. எப்படி  அந்த மாயவன் எங்கோ இருந்த மதுர கவியாழ்வாரைப்பிடித்து  முக்கால் இந்தியாவுக்கு மேல்  நடக்கவைத்து  காடு மேடு எல்லாம் கடந்து  தெற்கே எங்கோ ஒரு சிறு ஊரான திருகுருகூர் அடைந்து பேசாத நம்மாழவாரை பேசவைத்து அவரது பாசுரங்களை   படியெடுக்க வைத்தான்!! எல்லாம் நம் மேல் கொண்ட அன்பினால் தானே! நாம் அனுபவிக்கத்தானே!

 நம்மாழ்வார்  'சர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்று  அனுபவித்து  வாழ்ந்தவர். எதிரே ஒரு கம்பமோ, கன்றுக்குட்டியோ, மரமோ இருந்தாலும் அதை அணைத்து ''என் கண்ணப்பா'' என்று விஷ்ணுவாக பாவித்து அனுபவித்தவர். 

திருநகரியிலிருந்து  ஸ்ரீ ரங்கம் நடந்தார். ரங்கநாதனை சேவித்தார். ஸ்ரீ வைஷ்ணவத்திலே ஜொலிக்கும் ஒரு தாரகை நம்மாழ்வார். அந்த  மஹா பெரிய வைஷ்ணவ  வரிசை, ஸ்ரீதரன் , ஸ்ரீ, விஷ்வக்சேனர், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக் கொண்டார், மணக்கால் நம்பி,யாமுனாச்சார்யர், பெரியநம்பி, ராமானுஜர்...''  

 விஷ்ணு ஆலயங்களில் நாம் தலையில் கிரீடம் மாதிரி பட்டாச்சாரியார் முன் தலை குனிந்து  சாற்றிக் கொள்கிறோமே , அதன் மேல் இரு திருவடிகள் தோன்றும்.  இது தான் சடாரி, நம்மாழ்வார்.  ஒவ்வொரு முறை பெருமாளை தரிசிக்கும் போதும்  நாம் கேட்காமலேயே  நம்மாழ்வார் நம்மை ஆசீர்வதிக்கிறார்!  இது இனி நினைவிலிருந்தால் மனது குளிரும்.

 

 

sivan jaykay

unread,
Feb 12, 2017, 8:52:08 PM2/12/17
to Sivan Krishnan

ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும்                                                  

                                                வெள்ளி வட்டிலும் விப்ர நாராயணாவும்

'' காவிரி சூழ் சோழநாடு சோறுடைத்து''  என்பதால் எங்கும் வளமை, சுபிட்சமாய் இருந்ததோடு தெய்வீகப் பிறவிகளும்  அவதரிக்க  காரணமாக இருந்தது தான் ஆச்சர்யம். அந்த சோழநாட்டில் ஒரு கிராமம் திரு மண்டங்குடி. நாலு வேதங்களும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்த ஊர். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று சொல்வார்களே, அந்த குடுமி சோழிய பிராமணர் வகுப்புக்கு 'விப்ரா' என்றும் ஒரு பெயர் உண்டு. அவர்கள் வைணவர்கள். நாராயணனையே தொழுது ஜீவிப்பவர்கள்.

இந்த வகுப்பு குடும்பம் ஒன்றில் வேத விசாரதர் என்று ஒரு பிராமணர். அவர் நாள் தோறும் நிறைய புஷ்பங்களை சேகரித்து மாலை கட்டி எம்பெருமானுக்கு சாற்றி மகிழும் வழக்கமும் பழக்கமும் கொண்டவர்.

எம்பெருமான் பிரதியுபகாரம் பண்ணாமலா இருப்பான்? பிராமணருக்கு பிரபவ வருஷம், மார்கழி மாதம் கிருஷ்ண சதுர்த்தி அன்று செவ்வாய் கிழமை, கேட்டை நக்ஷத்ரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சாதாரண குழந்தை அல்ல, சுவாமி! --  
வேத விசாரதர்  மலர்மாலை தொடுத்து சாற்றி பெருமாளை மகிழ்வித்ததால் பெருமாள் ஸ்ரீ நாராயணனின் வைஜயந்தி வனமாலையே,  மனித குழந்தையாக பிறந்தது. குழந்தைக்கு புன்யாஹவசனம் செய்து விப்ர நாராயணன் என்று பெயர் சூட்டினார் பிராமணர்.

மிக அழகாக பொன் மேனியுடன் வளர்ந்த சிறுவனுக்கு வைணவ சம்ப்ரதாய சாஸ்த்ரங்கள், எல்லாம் கற்றுக் கொடுத்தார்கள். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான் விப்ர நாராயணன். எல்லோரிடமும் மரியாதை வினயத்தோடு நடந்து நல்ல பெயர் எடுத்தான்.

ஒருநாள் பெருமாளிடமிருந்து சேனை முதலியார் வந்து தரிசனம் கிடைத்ததில் விப்ர நாராயணன் தனது பிறவிக்கான காரணம் புரிந்து கொண்டான். இதை அறிந்தபின் விப்ரநாராயணன் எம்பெருமானிடம் இன்னும் அதிக பக்ஷ பக்தி செலுத்தினார். எம்பெருமான் எங்கெல்லாம் குடிகொண்டிருக்கிறாரோ அங்கெல்லாம் சென்று அந்த க்ஷேத்ரங்களில் அவரை தரிசிக்க ஒரு ஆவல் பிறந்தது விப்ரநாராயணருக்கு. 

ஆஹா இதை விட வேறு நல்ல எண்ணம் ஏதேனும் உண்டா? ஆனால்,  எங்கிருந்து ஆரம்பிப்பது? இப்படிச் செய்தால் என்ன? நல்ல யோசனை. காவேரிக்கரையில் ஸ்ரீரங்கம் மிக உன்னதமான விஷ்ணு ஸ்தலம் ஆயிற்றே. அங்கிருந்தே ஆரம்பிப்போமே!   இப்படி தீர்மானித்த  விப்ரநாராயணர் நடக்க ஆரம்பித்தார்.

ஸ்ரீரங்கம் அடைந்தவர் பாம்பணை மேல் பள்ளி கொண்ட  ரங்கநாதனைக் கண்டவுடன். ''இதுவே போதுமே, வேறெங்குமே போக அவசியமில்லையே '' என்று எண்ணமும் தோன்ற    'இனி இங்கேயே தான் நான். என் ரங்கனுக்கு அன்றாடம் அருமையான மலர்மாலைகளை தொடுத்து சூட்டுவேன்'' என முடிவெடுத்தார். 

ஒரு அழகான நந்தவனம் தயாராயிற்று. நறுமணம் கொண்ட வெவ்வேறு ஜாதி வகை மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த அகண்ட நந்தவனத்தின் மையத்திலே ஒரு குடிசை. அதுவே விப்ரநாராயணர் ஆஸ்ரமம். விடிகாலை நாள்தோறும் நாராயணனைத் துதி செய்துகொண்டு நந்தவனத்தில் மலர்களை கொய்து மாலை தொடுப்பார். திருமாலைத் தவிர, அவருக்கென்று தொடுக்கும் பூவைத் தவிர, பூவையர் மேல் புத்தி போகவில்லை, அதற்கு நேரமும் இல்லை.

ஊரே இந்த விப்ரநாரயாணன் என்கிற விந்தை மனிதனைக்  கவனித்த போது வைகுண்ட நாதனுக்கும் பிராட்டிக்கும் அவனைத் தெரியாமலா இருக்கும்?.

''நாதா, இந்த விப்ர நாராயணன், உங்கள் மேல் உள்ள பக்தியால், அழகிய ஆணாக இருந்தும், ஏன் பெண்கள் மேல் மனம் செலுத்தாமல் அவர்கள் மூலம் பெறும் அன்பு, பாசம், நேசம் எதுவும் அறியாமல் உள்ளானே! அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ?'' என்று நாராயணனைக் கேட்டாள் திருப் பிராட்டி. .

''என்ன ஆகும் என்றா கேட்டாய், நீதான் பார்க்கப் போகிறாயே'' என்று சிரித்தார் எம்பெருமான்.

திருக் கரம்பனூர் என்று அருகே ஒரு ஊர். அதில் அக்காலத்திய முறைப்படி இறை பணியில் தம்மை அர்ப்பணித்த இரு பெண்கள் (தேவ தாசிகள் என அழைக்கப் பட்டவர்கள் ) ராஜ சபையில் நாட்டிய மாடுபவர்களாக அரசர்கள் ஆதரவில் வாழ்ந்தவர்கள். அந்த இரு பெண்களின்  பெயர்கள் தேவி, தேவதேவி. இருவருமே மிகச் சிறந்த அழகிகள். பார்ப்போர் நெஞ்சங்களை வலை வீசி பிடித்து,   பிழிந்து அடிமையாக்கும் விழிகளைக் கொண்டவர்கள். ஆடலோடு பாடவும் தெரிந்தவர்கள். கேட்க வேண்டுமா ராஜாவின் ஆதரவுக்கு, அவர்கள் செல்வாக்குக்கு?

சோழ ராஜா உறையூரில் அரண்மனையில் வசித்தான். அரசனின் நல் ஆட்சியில் எல்லோருக்கும் எங்கும் சுபிட்சமான வாழ்க்கை. அவர்களது ஆடல் பாடலில், அழகில் மயங்கி அரசன் முத்தும் பவழமும் பொன்னும், வைரமும் வாரி இறைத்தான் அவர்களுக்கு.

''தேவி அக்கா , நாம் போகும் வழியில் ஸ்ரீ ரங்கம் சென்று ரங்கநாதனை தரிசிக்க ஆவலாக இருக்கிறது. செல்வோமா?'' என்றாள் தேவதேவி, இளையவள், பேரழகி.

பல்லக்கு ரங்கநாதனின்  கோவிலை நெருங்கியபோது வழியில் விப்ர நாராயணரின் நறுமண, மலர்கள் பூத்து குலுங்கிய நந்தவனம் கண்ணில் பட்டது.

''அமைதி சூழ்ந்த இந்த நந்தவனம் யாருடையது? இது பூலோகத்திலா, வைகுண்டத்திலா எங்கிருக்கிறது . இது போல் எங்குமே கண்டதில்லையே அக்கா ?''

''ஒ இது விப்ர நாராயணர் என்கிற ஒரு பிராமண பக்தருடைய நந்தவனம். அவர் செடி வளர்த்து மலர்கள் பறித்து தன் கையால் மாலை தொடுத்து அரங்கனுக்கு அன்றாடம் சாற்றும் ஒரு துறவி''

''அப்படியா, அவரைக் கட்டாயம் பார்த்து சேவிக்க வேண்டும் அக்கா'' என்றாள் தேவதேவி.

''அதற்கென்ன  வா  உள்ளே போய்  அவரை தரிசிப்போம்''  என்றாள்  தேவி. 

அவர்கள் ஆஸ்ரமத்தில் நுழைந்தபோது நாராயணனைத் துதித்துக்கொண்டு மலர்ச்செடிகளுக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்தார் விப்ரநாராயணர். அவரது கம்பீரத்தில், அழகிய தோற்றத்தில், மனம் பறி கொடுத்து கண்டதும் காதல் கொண்டாள் தேவதேவி. தனது காதலை தெரிவித்து வணங்கினாள். ஏதோ ஒரு பூனை, நாயைப் பார்ப்பது போல் அவர்களைப் பார்த்து விட்டு அவர்  துளியும் அவர்களை லக்ஷியம் செய்யாமல்  தனது வேலையில் தொடர்ந்தார்.

''என்ன ஆணவம் இவனுக்கு?   உலகமே மயங்கும் என் அழகில் மயங்காத ஒரு ஆடவனும் உண்டா? இந்த மனிதனை என் அழகில் மயங்கச்  செய்கிறேன் பார்'' என்று வீரம் பேசிய தேவதேவி,

 ''அக்கா,  இங்கே சில நாள் நான் தங்கி இவனை மாற்றிக் காட்டுகிறேன் பார். நீ போ. நான் என் சபதத்தை முடித்துவிட்டு வருகிறேன்'' என்றதும் தேவி சென்று விட்டாள். தேவ தேவி ஸ்ரீரங்கத்தில் இடம் பிடித்து தங்கினாள் .ஆடம்பர உடை ஆபரணங்களைக்  களைந்தாள் . ரிஷிபத்னி போல காவி உடை அணிந்தாள். விப்ர நாராயணர் ஆஸ்ரமம் சென்றாள்

''யார் நீ? என்ன வேண்டும் உனக்கு?''

''சுவாமி நான் இதுவரை ஒரு நரக வாழ்க்கை அனுபவித்தவள். சொச்ச காலத்தையாவது தங்களோடு சேர்ந்து எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து மன நிம்மதி பெற விழைகிறேன்.'' நடிக்கத் தெரியாதா தேவதேவிக்கு.

'' அடடா, என்னே அந்த பெருமாளின் கருணை. தாராளமாக இங்கே தங்கி நீயும் என் அரங்கநாதனுக்கு உன்னாலான சேவைகளை புரியலாம்''

ஒரு இயந்திரம் போல் தனது காரியங்களை செயது கொண்டிருந்தார் விப்ர நாராயணன். அவளை அருகே சேர்ப்பதில்லை. அவளை ஆஸ்ரமத்தின் வெளியே தங்க அனுமதித்தார். 

ஒரு நாள் கொட்டும் மழையில் நனைந்து வெளியே நின்றிருந்த தேவதேவி  மழையில் ஒதுங்க இடம் இன்றி தவிப்பதைப் பார்த்துவிட்டு, உள்ளே பூஜை செய்து கொண்டிருந்த விப்ர நாராயணா  இரக்கம் கொண்டவராய் அவளை உள்ளே அழைத்து தனது மேல் ஆடையை கொடுத்து உதவுகிறார். அதன் பிறகு  கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு அவள் சிஸ்ருஷைகள் செய்து நெருங்க, பஞ்சும் நெருப்பும் ஒன்றாகி விட்டது. பிறகு ஒருநாள் தனது சகோதரி, மற்றும் தாயிடம் அவரை அழைத்து செல்கிறாள். விப்ர நாராயணா அவளிடம் தன்னை இழந்த நிலையில் தன்னிடமிருந்த பொருள்களை எல்லாம் அவர்களிடம் கொடுத்துவிட்டு இனி கொடுக்க ஒன்றும் இல்லை என்ற நிலையில் அவர்களால் விரட்டப் படுகிறார். சோர்ந்து மனம் உடைந்த விப்ர நாராயணர் நந்தவனம் திரும்பி களைத்து  நாராயணா  எனக்கு  தேவதேவி வேண்டுமே. அவள் வீட்டார் என்னை ஆண்ட விடவில்லையே என் செய்வேன் என்று மயங்கிய நிலையில் தேவதேவியின் தாய் வீட்டுக்கு யாரோ  ஒருவர் வருகிறார்.

''யார் நீங்கள் என்ன வேண்டும் ?''

''அம்மா,  என் குரு விப்ர நாராயணா, இதை தாங்களிடம் சேர்ப்பிக்க கொடுத்தனுப்பினார்''

ஒரு பெரிய வெள்ளிப் பாத்திரம் அவரிடமிருந்து பெற்ற தேவதேவியின்  தாய்க்கு மகிழ்ச்சி இருக்காதா?

'' நீங்கள் சென்று  விப்ர நாராயணாவை  இங்கே  வரச் சொல்லுங்கள்'' தாய் அவரை வீட்டில் அனுமதிக்கிறாள்.

இதற்குள் தேவதேவி உண்மையிலேயே அவரது தூய பக்தியால் ஈர்க்கப்பட்டு விப்ர நாராயணரின் அடிமையாகிறாள்.

வெள்ளிப் பாத்திரம் கொடுத்த சிஷ்யர் நந்தவன ஆஸ்ரமம் சென்று  சோர்ந்து கிடந்த விப்ரநாராயணாவை  எழுப்புகிறான்.

''யாரப்பா நீ ?''

''சுவாமி நான் தேவதேவி அம்மாள் வீட்டிலிருந்து வருகிறேன். அவர்கள் உங்களை உடனே வரும்படி செய்தி சொல்ல சொன்னார்கள் ''

''ஆஹா  அப்படியா,  நாராயணா  என்னே உன் கருணை !  தேவ தேவியை தேடி ஓடிச் சென்ற விப்ர நாராயணரை  அவள் அன்போடு  கட்டி அணைக்கிறாள் .

ஸ்ரீரங்கம் ஆலயத்தின் அர்ச்சகர் மறுநாள் காலை வழக்கமான பூஜை செய்யும்போது அன்றாடம் உபயோகிக்கும் பெரிய வெள்ளி வட்டில் பாத்திரம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்து, ராஜாவிடம் முறையிட, ஊரெங்கும் அது தேடப்பட்டு, தேவதேவி வீட்டில் இருப்பதை கண்டுபிடித்து அவளும் அவள் தாயும் அரசர் முன்னே நிறுத்தப் படுகிறார்கள்.

விசாரணையில் ''விப்ர நாராயணர் தான் அதை  தனது சீடன் மூலம் என் வீட்டுக்கு  கொடுத்தனுப்பினார்'' என்கிறாள் தேவதேவியின் தாய்.

விப்ரநாராயணா  அரசன் முன்னே கொண்டு வரப்பட்ட போது '' அரசே நான் இதை திருடவில்லையே, மேலும் எனக்கு யாருமே சிஷ்யர்கள் கிடையாதே'' என்கிறார். ஆனால்  கோபம் கொண்ட அரசனால்  கோவிளை சேர்ந்த பூஜா பாத்திரத்தை திருடிய குற்றத்துக்காக சிறையில் அடைக்கப் படுகிறார்.

''எம்பெருமானே, ரங்கநாதா  இதென்ன சோதனை. உன் பாத்திரத்தை நானா திருடுவேன். எனக்கு ஏன் இப்படி ஒரு அவல நிலைமையை தருகிறாய்?

பக்தன் கதறிய நேரத்தில் பகவான்  சோழ அரசன் கனவில் அவனுக்கு தானே சிஷ்யனாக வந்து அந்த பாத்திரத்தை எடுத்து தேவதேவி வீட்டில் கொடுத்ததை கூற திடுக்கிட்ட  அரசன் அவரை விடுதலை செய்கிறான். பிறகென்ன. விப்ர நாராயணர் ராஜோபசாரங்களோடு கௌரவிக்கப் பட்டு அவர் பெருமை எல்லோருக்கும் புரிய அவருக்கும் எம்பெருமான் திருவிளையாடல் புரிகிறது.

''பகவானே, பக்தர்களுக்காக நீ என்னவெல்லாம் புரிகிறாய். உன்னைவிட உன் பக்தர்களே சிறந்தவர்களாக பாவிக்கும் பக்த வத்சலா. உன் பக்தர்கள் பாத தூளி என் சிரசில் படட்டும். இன்றுமுதல் உன் தொண்டர்கள் திருவடிப் பொடியாகவே நான் உன்னை சரணாகதி அடைகிறேன் என்று நெஞ்சுருகி, கல்லும் கரையும் பாசுரங்கள் அவரிடம் இருந்து வெளிவர அவரை நாம் தொண்டரடிப் பொடி ஆழ்வாராக அறிகிறோம். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக வணங்குகிறோம். 

திருப்பள்ளி எழுச்சி, 10 பாசுரங்களை கொண்டது. திருமாலை 40-45 பாசுரங்கள் கொண்டது. ஆழ்வாரின் 'பச்சைமாமலை போல் மேனி'' பாசுரம் நான் மட்டுமல்ல உங்களில் அனைவர் மகிழ்ந்து பாடும் பாசுரம் அல்லவா?

''வைஜயந்தி வனமாலா, உன் பூலோக அவதாரம் என் விருப்பப் படியே நடந்தது''என்று விஷ்ணுவும் மகிழ்ந்தார்.

sivan jaykay

unread,
Feb 21, 2017, 8:29:42 PM2/21/17
to Sivan Krishnan

                                   20      கோதையின் கீதை 

அருமை வாசகர்களே, இதுவரை வைணவ விண்ணொளி  என்ற  தலைப்பில்  பன்னிரு ஆழ்வார்களை பற்றி ஒரு சிறிது. ஆம்  கடல் அளவு நீரில் ஒரு உத்ரணி மட்டுமே  எடுத்து பதினோரு ஆழவார்களைப் பற்றி கொடுத்தது உங்களுக்கு தெரியும்.  

இனி பன்னிரண்டாவது ஆழவார்  இல்லை இல்லை  ஆழ்வாள் பற்றி சொல்லப் போகிறேன். அளவு ரெண்டு மூணு உத்ரணி தான். அதற்கு மேல் என்னிடம் விஷயம் இல்லையே என்ன செய்ய?  நிறைய கற்றறிந்த வித்தகர்கள் ஏற்கனவே ஆண்டாளை பற்றி கூடை கூடையாக சொல்லியிருக்கிறார்கள், சொல்கிறார்கள், சொல்லவும் போகிறார்கள்.  ஏதோ சாஸ்திரத்துக்கு  நானும் கொஞ்சம் சொல்லி இந்த தொடரை நிறைவு செய்ய உத்தேசம்.

எதற்கு ஆண்டாளை பற்றி மட்டும் கொஞ்சம் அதிகப்படி யான கட்டுரை என்பதற்கும் காரணம் உண்டு. அவள் ஒருவள் மட்டுமே பன்னிரு ஆழ்வார்களில் பெண். அவள் ஒருவள்தான்  இறைவனோடு ஐக்கிய மானவள். சிறு வயதினள் . பெரியாழ்வாரின் செல்லப்பெண். அவளது முப்பது பாடல்களே சைவ வைணவர்கள் அனைவராலும் மனப்பாடம் செய்யப்பட்டு ரசிக்கப் பட்டு பாடப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள். அவள் ஒருவளுக்கே ஒரு ஆழ்வாருக்கு மட்டுமே தனி சந்நிதி எல்லா வைணவ ஆலயங்களிலும். 
இன்னும் என்ன சொல்லவேண்டும்?

விஷ்ணு சித்தரைப் பொருத்தவரை அவரது ஒரே லட்சியம் தினந்தோறும் தனது பெரிய அகண்ட நந்தவனத்தில் துளசி மற்றும் அநேக நறுமண மலர்கள் பூத்துக்குலுங்க வேண்டும்.  அவற்றை மாலையாக தொடுத்து  ரங்கமானாருக்கு சார்த்தவேண்டும். தினமும்.    அதற்காகத்தான்  நிறைய  துளசி செடிகள்,  மலர்க் கொடிகள் எல்லாம் வளர்த்தார். குழந்தை போல் வளர்த்த அந்த நந்த வனம் புஷ்ப வனமாக காட்சியளித்தது. அன்றாடம் விடிகாலை பரந்தாமனைப் பாடியவாறு பெரிய பூக்குடலை யோடு விஷ்ணுசித்தர் நந்தவனம் முழுதும் சுற்றி அந்த மலர்கள் கொடிகளோடு பாசத்தோடு பேசியவாறு துளசியையும், மற்ற பூக்களையும்  பறித்து ஆஸ்ரமத்துக்கு கொண்டு வந்து தானே அவற்றை தொடுத்து மாலையாக்கி தனது கையாலேயே அழகிய மணவாளனுக்கு, ரங்க மன்னாருக்கு, வட பத்ர சாயீக்கு சூட்டி மகிழ்வார். விசிறுவார். அப்படி ஒருநாள் பூப்பறிக்கும் நேரத்தில் தான் கோதையை துளசிவனத்தில் காண நேர்ந்தது. அல்லவா. அவள் எழுதியவற்றில் முக்கியமானது தான் திருப்பாவை.

''அது சரி, திருப்பாவை, திருப்பாவை, என்கிறீரே சுவாமி. அதற்கு என்ன அப்படி ஒரு சிறப்பு, மகத்வம்'' என்று ஒருவர் ஒரு ஆழ்வாரைக் கேட்டிருக்கிறார். புரியும்படியாக ''நச்'' சென்று பொறுமையாக ஒரு பாசுரம் அக்கணமே இயற்றினார். அதுதான் இது:

''பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்துமைந்தும் (5x5)+5=30) அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு.''

இதற்கு பல அர்த்தம் இருந்தாலும் மேலெழுந்தவாரியாக இப்படியும் ஒரு அர்த்தம்:

''இப்படி கேட்டீரே ஒரு கேள்வி,  திருப்பாவையை பற்றி அறியாத   உம்மைப்போல ஆசாமிகளை இந்த பூமாதேவி சுமக்கிறாளே அது தேவையில்லாத வம்பு தானே அவளுக்கு'' என்று ஆழ்வார் நகைச்சுவை நிரம்பி பொங்கிவழியும் மேற்கண்ட ஒரு இனிய பாசுரம் அமைத்தார். ஆண்டாளின் 30 திருப்பாவையையும் பற்றி ''அப்படி என்றால் என்ன?'' என்று இன்னமும் கேட்போர் திருப்பாவையைப் படித்தால், கேட்டால், அது நாம் செய்த, செய்யும், பஞ்ச மகா பாதகங்க ளையும் அழிக்கும் வல்லமை வாய்ந்தது என்பதை அறிவார்கள். 

திருப்பாவை ஒன்றே நமக்கு அந்த பரமனின் திருவடியை அடைய வைக்கும் வழிகாட்டி என்றும் அறியமுடியும். திருப்பாவை சாமான்யமான ஒரு பாடல் புத்தகமல்ல. நான்கு வேதத்தையும் தன்னுள்ளே அடக்கிகே கொண்டிருக்கும்  ஒரு அதிசய அபூர்வ நூல். அழகு தமிழில், எளிதில் கண்ணனைக் காட்டும் கோதை என்கிற ஆண்டாள் எழுதிய திருப்பாவையை பற்றி ஒன்றுமே தெரியாத மூடர்களை இந்த பூமாதேவி சுமப்பது வேண்டாத ஒரு வேலை. தேவையில்லாத வம்பு இது. அந்த பூமா தேவிக்கு எதற்கு? என்று  ஆழ்வார் கேட்டதில் என்ன தப்பு? 

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆண்டாளைப் போற்றி புகழ்ந்து பாடிய கோதாஸ்துதியில் ஒரு ஸ்லோகம். இதில் ஆண்டாள் ரங்கனுக்கு ரெண்டு மாலைகள் தொடுத்தாள் ஒன்று பாமாலை மற்றொன்று பூமாலை என்கிறார். 


'''தாதஸ்து தே மதுபித: ஸ்துதி லேசா வஸ்யாத்
கர்ணாம்ருதை : ஸ்துதி ஸதை: அநவாப்த பூர்வம்
த்வன் மௌலி கந்த சுபகாம்: உபஹ்ருத்ய மாலாம்
லேபே மஹத்தர பதானுகுணாம் பிரசாதம்

"எண்ணற்ற நூற்றுக் கணக்கான பாசுரங்களை அரங்கனைப் போற்றி விஷ்ணு சித்தர் பாடியிருக்கலாம். இருந்து விட்டு போகட்டுமே. இதற்காக பகவான் மதுசூதனன் அவருக்கு எந்த பட்டமும் சிறப்பும் அளிக்கவில்லையே. அம்மா, கோதையே , சுடர்க்கொடியே, எப்போது நீ சூடிய மலர் மாலையை, உன் கூந்தல் சுகந்தத்துடன் விஷ்ணு சித்தர் அரங்கனுக்கு சூட்டினாரோ அக்கணமே அவர் அரங்கனைப் புகழ் பாடும் ஆழ்வார்களிலேயே ''பெரிய'' ஆழ்வார் என்ற பட்டம் பதவி பெற்றுவிட்டார். '' என்று அமைகிறது ஸ்ரீ தேசிகரின் மேற்கண்ட கோதாஸ்துதி ஸ்லோகம்.

மார்கழி மாத  அனைத்து நாட்களும் இறைவனுக்கு உகந்த நாளாயிற்றே. கோதை நாச்சியார் இயற்றிய 30 பாசுரங்களையுமே ஒவ்வொரு நாளிலும் ஒரு அமுதப்பாடலை படைத்ததாகவே எடுத்துக்கொள்வோம். அன்றாடம் இறைவனுக்கு மலர்களைத்தொடுத்து தந்தையோடு சேர்ந்து மாலையாக்கி அரங்கனுக்கு அனுப்பினாள். பூமாலையோடு இந்த அழகிய என்றும் வாடாத பாமாலையும் தொடுத்து அரங்கனுக்கு சூட்டினதாகவே ஸ்ரீ தேசிகர் மனத்தில் எழுந்த அற்புத எண்ணத்தில் பங்கு கொள்வோமே.

நாம் எதையே நினைக்கிறோமோ, எதையே விழைகிறோமோ, மனம் பூரா நிரப்பிக் கொள்கிறோமோ நாம் அதுவே ஆகி விடுகிறோம், என்பது தெரிந்தது தானே. கிருஷ்ணன் அதைத்தானே கீதையில் தெளிவாக சொல்கிறான்

பெரியாழ்வாரிடமிருந்து அரங்கனைப்பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டு அவன் மேல் பற்று வளர்ந்து, அவனன்றி தான் இல்லை என்ற நிலை அடைந்து, அவனே மூச்சு, அவனே ஜீவன், என் இக வாழ்வில் கணவன் என்ற ஒருவன் உண்டென்றால் அது அவனன்றி வேறில்லை என்ற முடிவெடுத்தாள் கோதை.

 அழகன் அவனுக்கு தான் நிகராக வேண்டுமே என்றே மிக கவனமாக  தன்னை அலங்கரித்துக்கொண்டாள். ஒருவருமறியாமல் ரங்கனுக்கு என்று தொடுத்த வித விதமான மலர் மாலையைத் தன் கழுத்தில் முதலில் அணிந்து அழகு பார்த்தாள். தனக்கு பிடித்திருந்தால் அது அரங்கனுக்கும் பிடிக்குமே. இருவர் எண்ணமும் ஒன்று தானே, என்று ராதாவைப் போல் கோதாவும் தீர்மானித்தாள் .

ஒரு மனித ஜீவன்  அணிந்த மலர் இறைவனுக்கு ஏற்காது என்று தெரியாதா என்ன அவளுக்கு? அவள் வேறு அவன் வேறு என்று இருந்தால் தான் இது வாஸ்தவம். ஆனால் மனத்தால் எப்போதோ ஆண்டாள் அரங்கனாகி விட்டாளே ! எனவேதான் அவள் அணிந்த மாலை அரங்கன் தோளில் அவன் விருப்பத்தோடு பரிமளித்தது.

ஒருநாள் இதை அறிந்த தந்தை வெகுண்டார். அபசாரம் என்று அரற்றினார். அரங்கனிடம் ''நடந்த தவறை மன்னித்தருள். என் பெண் சிறியவள் அறியாமல் செய்த தவறு என்று வேண்டி வேறு மாலையை உடனே தயார் செய்து எடுத்துக் கொண்டு சென்றார். 

''ஆண்டாள், சூடிய மாலையே எனக்கு ஆனந்தமளிக்கிறது, அதையே கொண்டு வா. அவளையும் இங்கே அழைத்துக் கொண்டு வா '' என்று அரங்கனே அங்கீகரிக்க அரசன் மற்றும் அவள் அப்பாவின் கனவில் ஆண்டாளை அலங்கரித்து மேள தாளங்களோடு வரவழைத்து தன்னோடு இணைத்துக்கொண்டான் அரங்கன். தெரிந்த விஷயம் என்றாலும் தெவிட்டாத அமுது ஆண்டாளின் வரலாறு. இது சரிதானே? 

 
Reply all
Reply to author
Forward
0 new messages