411 views
Skip to first unread message

sivan jaykay

unread,
Apr 1, 2025, 8:18:09 PM4/1/25
to amrith...@googlegroups.com
ஒரு புனித யாத்திரை.   நங்கநல்லூர்  J K  SIVAN

சித்ர கூடம்
'' ராமா உன்னை  அப்பா காட்டுக்கு போக சொல்லிட்டார்''  அப்படின்னு அப்பா சொல்லலை .ஒரு அம்மா சொல்லிட்டா.  கைகேயி அம்மா ராமன் மேல பெத்த தாயைவிட ரொம்ப பாசமா இருக்கிறவள்.அம்மா அப்பா சொன்னா என்ன அம்மா சொன்னா என்ன உடனே காட்டுக்கு கிளம்பிட்டார் ராமன்.

''ராமா  நீ இப்படியே போகக்கூடாதுப்பா,  மரவுரி தான் உனக்கு டிரஸ். ஜடாமுடியோடு கிளம்பனும்.''

''ஆஹா  அப்படியே  அம்மா''

''ராமா  காடுன்னா எங்கே, எந்த காட்டுக்கு, எவ்வளவு நாளு ன்னு  நீ கேக்கலியேப்பா,  . அதையும் சொல்றேன் கேட்டுக்கோ.  தண்டகாரண்யம் னு ஒரு காடு கங்கைக்கு அப்பாலே இருக்கு. அதிலே நீ பதினாலு வருஷம் இருக்கணும் அப்பறம் தான் அயோத்யாவுக்கு திரும்பி வரணும்''

''ரொம்ப சந்தோஷம்மா  உடனே  கிளம்பறேன்''

அப்பாவை நமஸ்காரம் பண்ண  ராமன்  சென்றபோது, அப்பாவால் பேசமுடியவில்லை. கண்களில் கங்கை. பேச்சு வரவில்லை.  பக்கத்திலே இருக்கிற  சுமந்திரர் என்கிற மந்திரியை கூப்பிட்டு.  நடந்து போகவேண்டாம். நீ அவர்களை தேரில் கொண்டு விட்டுவிட்டு வா''  என்றாவது சொல்ல முடிந்தது. காரணம். அந்தக்காலத்தில் சொன்ன வார்த்தைக்கு, கொடுத்த வார்த்தைக்கு அத்தனை கௌரவம், மரியாதை.  

அயோத்தியிலிருந்து தேரில் புறப்பட்ட ராமன் சீதா லக்ஷ்மணன் மூவரும் தமஸா நதிக்கரை வரை தேரில் செல்கிறார்கள். தேரை திருப்பி அனுப்பிவிட்டு  அங்கிருந்து கோமதி நதிக்கரை வரை சென்று கங்கை நதிக்கரை செல்கிறார்கள். ஸ்ருங்கி பேரம் எனும் அந்த இடத்தில் தான் குகன் சந்திக்கிறான். அவனது படகில்  ஏறிக்கொண்டு அக்கரை  செல்கிறார்கள்.

பாரத் வாஜ மகரிஷி இருந்த  ஆஸ்ரமத்தை அடைகிறார்கள். கங்கா யமுனா ஒன்றுசேரும் இடம் அது. இப்போது  பிரயாகை எனப்படுவது.

''ராமா  நீ யமுனையை படகில் கடந்து செல்'' என்று பாரத்வாஜ ரிஷி சொல்கிறார்.

அப்புறம் தான்  சித்ரகூடம் வந்து சேர்கிறார்.  நான்  எந்த ரிஷியின் அறிவுரையும், குகனின் படகும், சுமந்திரர் தேரும்  இல்லாமல்  யாரும் என்னை காட்டுக்கு போகசொல்லமலேயே  சித்ரகூடம் சென்றேன். நான் மட்டும் இல்லை. 120 பேர் அப்படி தான் சித்ரகூடம் வந்தடைந்தோம். எங்களுக்கு மரவுரியோ ஜடாமுடியோ இல்லை. மூட்டை முடிச்சுகளோடு கயா எக்ஸ்பிரஸ் எனும் தேரில் தான் வந்து இறங்கினோம் . மாணிக்பூர் என்ற பேரளவு ஜங்க்ஷனில் ரயில் ரெண்டு மூன்று நிமிஷங்கள் தான் நிற்கும். ஆகவே வேகமாக பெட்டிகள் பைகளை இறக்கினோம்.  ஐம்பது கி.மீ தாண்டி தான் சிட்ரகூடம். ஒரு பஸ்  ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். ஆனால் PLATFORM லிருந்து அத்தனை மூட்டைகளுடன்  பாலத்தின் மேல் ஏறி வெளியே செல்ல முடியாதே. ஒரு கைவண்டி ஆயிரத்தைந்நூறு ரூபாய் கொடுத்து வாடகைக்கு எடுத்துக்கொண்டு  படியேறாமல் \சுற்றி
வளைத்து வெளியே வந்து பஸ் ஏறினோம்.  

சித்ரகூடம் மத்திய பிரதேசத்தில் சதனா ஜில்லாவில் இருக்கும் கிராமம். ராமனால் பெருமை பெற்ற  ஸ்தலம். இந்த  வனப் பகுதிக்கு  பாகெல்கண்ட் என்று பெயர்.  சிட்ரகூடம் மத்யாபிரதேசத்தின் எல்லையில் உத்தரப்பிரதேசத்தை தொடுகிறது.  இங்கு தான் ராமனும் பரதனும் சந்தித்தார்கள். சிட்ரகூடம் என்றால் ''பல அதிசயங்கள் கொண்ட குன்று'' என்று  அர்த்தம். அத்ரி,அகஸ்தியர், சரபங்கர் போன்ற ரிஷிகள் வாழ்ந்த காடு. 

உலகத்திலேயே  அதிகமாக நடந்த மனிதன் ராமனாக தான் இருக்கவேண்டும். சித்ரகூடத்தில் இப்போது கூட நடக்க முடியாமல் மேடும் பள்ளமுமாக இருக்கிறது. வனப்பகுதி திருத்தப்பட்டு நகரமாக இருந்தாலும் பழைய கல்லோ, மேடு பள்ளமோ முற்றிலும்  அகலவில்லை. ஏழாயிரம் வருஷம் முன்பு சித்ரகூடம் எவ்வளவு அடர்ந்த காடாக இருக்க வேண்டும் என்று நினைத்துப் பார்க்க முடிகிறது.

சித்ரகூடத்தில் ராமர்  முதலில் அத்ரி மகரிஷி அனசூயா வசித்த  ஆஸ்ரமதத்துக்கு செல்கிறார்.   ஏதோ சுலபத்தில் சென்றுவிடலாம் என்று நினைக்க வேண்டாம்.  இப்போது போவதானால், நிறைய  படிகள் ஏறி மலை உச்சிக்கு போகவேண்டும். ஏழாயிரம் வருஷம் முன்பு படிகளோ, விளக்கோ,  குடிநீர், கழிவறை வசதியோ கிடையாதே. ராமன் சீதா லக்ஷ்மணன் மூவரும் பலசாலிகள். அதுவும் காலில் நல்ல பலம். விடுவிடுவென்று ஏறி  இருக்கிறார்கள்.

நான் பார்த்த இடங்கள், பார்க்காத இடங்கள் எல்லாமே சொல்கிறேன்.

sivan jaykay

unread,
Apr 1, 2025, 8:18:10 PM4/1/25
to amrith...@googlegroups.com
ஒரு புனித யாத்திரை - நங்கநல்லூர் J K. SIVAN 

ராமன் வசித்த சித்ர கூட தர்சனம் பற்றி எழுதுவதற்கு  முன் அற்புதமான அவன் மஹாத்ம்யயத்தை கேட்போம்.\
ராமன் எனும் மஹாவீரனின் வைபவம் -
கத்யம் என்றால்  சமஸ்க்ரிதத்தில்  பாட்டும்  வசனமும் கலந்து வரும் ஒரு அற்புத  அமைப்பு.  ஸ்ரீ சுவாமி தேசிகன் ராமர் மேல்  ரகுவீர கத்யம் இயற்றியிருக்கிறார்.அதற்கு இன்னொரு பெயர்  ஸ்ரீ மஹாவீர வைபவம்.கேட்பதற்கும் பாடுவதற்கும் இனிமையானது. ராமாயணத்தில் ஸ்ரீ ராமனின்  கல்யாண குணங்களை பாடியிருக்கிறார். வார்த்தைகள் அற்புதமாக விழுந்துள்ளது. திருவஹீந்திரபுரத்தில்  தேவநாத பெருமாள் கோவில் ராமர் விகிரஹம் முன் நின்று  சுவாமி தேசிகன் ராமனின் ப்ரபாவத்தை பாடியது தான் ர

ஜயத்யாஶ்ரித ஸந்த்ராஸ த்வாந்த வித்வம்ஸநோதய: ।ப்ரபாவாந் ஸீதயா தேவ்யா பரம-வ்யோம பாஸ்கர: ॥
ஜய ஜய மஹாவீர ! மஹாதீர தௌரேய !தேவாஸுர ஸமர ஸமய ஸமுதித நிகில நிர்ஜர நிர்தாரித நிரவதிகமாஹாத்ம்ய !தஶவதந தமித தைவத பரிஷதப்யர்தித தாஶரதி-பாவ !
ரணாத்வர துர்ய பவ்ய திவ்யாஸ்த்ர ப்ருந்த வந்தித !ப்ரணத ஜந விமத விமதந துர்லலிததோர்லலித !
தநுதர விஶிக விதாடந விகடித விஶராரு ஶராரு தாடகா தாடகேய !
ஜட-கிரண ஶகல-தரஜடில நட பதி-மகுட நடந-படு விபுத-ஸரித்-அதி-பஹுல மது-கலந லலித-பத
நலிந-ரஜ- உப-ம்ருதித நிஜ-வ்ருஜிந ஜஹதுபல-தநு-ருசிரபரம-முநி வர-யுவதி நுத !
குஶிக-ஸுதகதித விதித நவ விவித கத !
மைதில நகர ஸுலோசநா லோசந சகோர சந்த்ர ! கண்ட-பரஶு கோதண்ட ப்ரகாண்ட கண்டந ஶௌண்ட புஜ-தண்ட !
சண்ட-கர கிரண-மண்டல போதித புண்டரீக வந ருசி லுண்டாக லோசந மோசித ஜநக ஹ்ருதய ஶங்காதங்க !
பரிஹ்ருத நிகில நரபதி வரண ஜநக-துஹித குச-தட விஹரண ஸமுசித கரதல !
ஶதகோடி ஶதகுண கடிந பரஶு தர முநிவர கர த்ருத துரவநம-தம-நிஜ தநுராகர்ஷண ப்ரகாஶித பாரமேஷ்ட்ய !
க்ரது-ஹர ஶிகரி கந்துக விஹ்ருதிமுக ஜகதருந்துத ஜிதஹரிதந்த-தந்துரோதந்த தஶ-வதந தமந குஶல தஶ-ஶத-புஜ  ந்ருபதி-குல-ருதிரஜர பரித ப்ருதுதர தடாக தர்பித பித்ருக ப்ருகு-பதி ஸுகதி-விஹதி கர நத பருடிஷு பரிக !
அந்ருத பய முஷித ஹ்ருதய பித்ரு வசந பாலந ப்ரதிஜ்ஞாவஜ்ஞாத யௌவராஜ்ய !
நிஷாத ராஜ ஸௌஹ்ருத ஸூசித ஸௌஶீல்ய ஸாகர !
பரத்வாஜ ஶாஸநபரிக்ருஹீத விசித்ர சித்ரகூட கிரி கடக தட ரம்யாவஸத !அநந்ய ஶாஸநீய !
ப்ரணத பரத மகுடதட ஸுகடித பாதுகாக்ர்யாபிஷேக நிர்வர்தித ஸர்வலோக யோகக்ஷேம !
பிஶித ருசி விஹித துரித வல-மதந தநய பலிபுகநு-கதி ஸரபஸஶயந த்ருண ஶகல பரிபதந பய சரித ஸகல ஸுரமுநி-வர-பஹுமத மஹாஸ்த்ர ஸாமர்த்ய !த்ருஹிண ஹர வல-மதந துராலக்ஷ்ய ஶர லக்ஷ்ய ! தண்டகா தபோவந ஜங்கம பாரிஜாத ! விராத ஹரிண ஶார்தூல ! விலுலித பஹுபல மக கலம ரஜநி-சர ம்ருக ம்ருகயாநம்ப ஸம்ப்ருதசீரப்ருதநுரோத ! த்ரிஶிர: ஶிரஸ்த் ரிதய திமிர நிராஸ வாஸர-கர !
தூஷண ஜலநிதி ஶோஶாண தோஷித ருஷி-கண கோஷித விஜய கோஷண ! கரதர கர தரு கண்டந சண்ட பவந ! த்விஸப்த ரக்ஷ:-ஸஹஸ்ர நல-வந விலோலந மஹா-கலப ! அஸஹாய ஶூர !
அநபாய ஸாஹஸ ! மஹித மஹா-ம்ருத தர்ஶந முதித மைதிலீ த்ருட-தர பரிரம்பண விபவவிரோபித விகட வீரவ்ரண ! மாரீச மாயா ம்ருக சர்ம பரிகர்மித நிர்பர தர்பாஸ்தரண ! விக்ரம யஶோ லாப விக்ரீத ஜீவித க்ருக்ர-ராஜதேஹ திதக்ஷா லக்ஷித-பக்த-ஜந தாக்ஷிண்ய ! கல்பித விபுத-பாவ கபந்தாபிநந்தித !
அவந்த்ய மஹிம முநிஜந பஜந முஷித ஹ்ருதய கலுஷ ஶபரீ மோக்ஷஸாக்ஷிபூத ! ப்ரபஞ்ஜந-தநய பாவுக பாஷித ரஞ்ஜித ஹ்ருதய ! தரணி-ஸுத ஶரணாகதிபரதந்த்ரீக்ருத ஸ்வாதந்த்ர்ய !
த்ருட கடித கைலாஸ கோடி விகட துந்துபி கங்கால கூட தூர விக்ஷேப தக்ஷ-தக்ஷிணேதர பாதாங்குஷ்ட தர சலந விஶ்வஸ்த ஸுஹ்ருதாஶய ! அதிப்ருதுல பஹு விடபி கிரி தரணி விவர யுகபதுதய விவ்ருத சித்ரபுங்க வைசித்ர்ய ! விபுல புஜ ஶைல மூல நிபிட நிபீடித ராவண ரணரணக ஜநக சதுருததி விஹரண சதுர கபி-குல பதி ஹ்ருதய விஶால ஶிலாதல-தாரண தாருண ஶிலீமுக ! அபார பாராவார பரிகா பரிவ்ருத பரபுர பரிஸ்ருத தவ தஹந ஜவந-பவந-பவ கபிவர பரிஷ்வங்க பாவித ஸர்வஸ்வ தாந ! அஹித ஸஹோதர ரக்ஷ: பரிக்ரஹ விஸம்வாதிவிவித ஸசிவ விப்ரலம்ப ஸமய ஸம்ரம்ப ஸமுஜ்ஜ்ரும்பித ஸர்வேஶ்வர பாவ !
ஸக்ருத்ப்ரபந்ந ஜந ஸம்ரக்ஷண தீக்ஷித ! வீர ! ஸத்யவ்ரத ! ப்ரதிஶயந பூமிகா பூஷித பயோதி புலிந !
ப்ரலய ஶிகி பருஷ விஶிக ஶிகா ஶோஷிதாகூபார வாரி பூர ! ப்ரபல ரிபு கலஹ குதுக சடுல கபி-குல கர-தலதுலித ஹ்ருத கிரிநிகர ஸாதித ஸேது-பத ஸீமா ஸீமந்தித ஸமுத்ர ! த்ருத கதி தரு ம்ருக வரூதிநீ நிருத்த லங்காவரோத வேபது லாஸ்ய லீலோபதேஶ தேஶிக தநுர்ஜ்யாகோஷ ! ககந-சர கநக-கிரி கரிம-தர நிகம-மய நிஜ-கருட கருதநில லவ கலித விஷ-வதந ஶர கதந ! அக்ருத சர வநசர ரண கரண வைலக்ஷ்ய கூணிதாக்ஷ பஹுவித ரக்ஷோ பலாத்யக்ஷ வக்ஷ: கவாட பாடந படிம ஸாடோப கோபாவலேப !கடுரடத் அடநி டங்க்ருதி சடுல கடோர கார்முக ! விஶங்கட விஶிக விதாடந விகடித மகுட விஹ்வல விஶ்ரவஸ்தநயவிஶ்ரம ஸமய விஶ்ராணந விக்யாத விக்ரம !கும்பகர்ண குல கிரி விதலந தம்போலி பூத நி:ஶங்க கங்கபத்ர !
அபிசரண ஹுதவஹ பரிசரண விகடந ஸரபஸ பரிபதத் அபரிமிதகபிபல ஜலதிலஹரி கலகல-ரவ குபித மகவ-ஜிதபிஹநந-க்ருதநுஜ ஸாக்ஷிக ராக்ஷஸ த்வந்த்வ-யுத்த ! அப்ரதித்வந்த்வ பௌருஷ !
த்ர யம்பக ஸமதிக கோராஸ்த்ராடம்பர !ஸாரதி ஹ்ருத ரத ஸத்ரப ஶாத்ரவ ஸத்யாபித ப்ரதாப !
ஶிதஶரக்ருதலவநதஶமுக முக தஶக நிபதந புநருதய தரகலித ஜநித தர தரல ஹரி-ஹய நயந நலிந-வந ருசி-கசித நிபதித ஸுர-தரு குஸும விததி ஸுரபித ரத பத ! அகில ஜகததிக புஜ பல வர பல தஶ-லபந லபந தஶக லவந-ஜநித கதந பரவஶ ரஜநி-சர யுவதி விலபந வசந ஸமவிஷய நிகம ஶிகர நிகர முகர முக முநி-வர பரிபணித! அபிகத ஶதமக ஹுதவஹ பித்ருபதி நிர்ருதி வருண பவந தநதகிரிஶப்ரமுக ஸுரபதி நுதி முதித.  அமித மதி விதி விதித கதித நிஜ விபவ ஜலதி ப்ருஷத லவ ! விகத பய விபுத விபோதித வீர ஶயந ஶாயித வாநர ப்ருதநௌக ! ஸ்வ ஸமய விகடித ஸுகடித ஸஹ்ருதய ஸஹதர்மசாரிணீக !
விபீஷண வஶம்வதீ-க்ருத லங்கைஶ்வர்ய ! நிஷ்பந்ந க்ருத்ய ! க புஷ்பித ரிபு பக்ஷ !
புஷ்பக ரபஸ கதி கோஷ்பதீ-க்ருத ககநார்ணவ ! ப்ரதிஜ்ஞார்ணவ தரண க்ருத க்ஷண பரத மநோரத ஸம்ஹித ஸிம்ஹாஸநாதிரூட ! ஸ்வாமிந் ! ராகவ ஸிம்ஹ ! ஹாடக கிரி கடக லடஹ பாத பீட நிகட தட பரிலுடித நிகிலந்ருபதி கிரீட கோடி விவித மணி கண கிரண நிகர நீராஜிதசரண ராஜீவ ! திவ்ய பௌமாயோத் யாதிதைவத ! பித்ரு வத குபித பரஶு-தர முநி விஹித ந்ருப ஹநந கதந பூர்வகாலப்ரபவ ஶத குண ப்ரதிஷ்டாபித தார்மிக ராஜ வம்ஶ ! ஶுச சரித ரத பரத கர்வித கர்வ கந்தர்வ யூத கீத விஜய காதாஶத !
ஶாஸித மது-ஸுத ஶத்ருக்ந ஸேவித ! குஶ லவ பரிக்ருஹீத குல காதா விஶேஷ !
விதி வஶ பரிணமதமர பணிதி கவிவர ரசித நிஜ சரிதநிபந்தந நிஶமந நிர்வ்ருத !ஸர்வ ஜந ஸம்மாநித !
புநருபஸ்தாபித விமாந வர விஶ்ராணந ப்ரீணித வைஶ்ரவண விஶ்ராவித யஶ:
ப்ரபஞ்ச ! பஞ்சதாபந்ந முநிகுமார ஸஞ்ஜீவநாம்ருத !த்ரேதாயுக ப்ரவர்தித கார்தயுக வ்ருத்தாந்த !
அவிகல பஹுஸுவர்ண ஹய-மக ஸஹஸ்ர நிர்வஹண நிர்வ ர்தித நிஜவர்ணாஶ்ரம தர்ம !
ஸர்வ கர்ம ஸமாராத்ய ! ஸநாதந தர்ம ! ஸாகேத ஜநபத ஜநி தநிக ஜங்கம ததிதர ஜந்து ஜாத திவ்ய கதி தாந தர்ஶித நித்ய நிஸ்ஸீம வைபவ ! பவ தபந தாபித பக்தஜந பத்ராராம ! ஶ்ரீ ராமபத்ர ! நமஸ்தே புநஸ்தே நம: ॥
சதுர்முகேஶ்வரமுகை: புத்ர பௌத்ராதி ஶாலிநே । நம: ஸீதா ஸமேதாய ராமாய க்ருஹமேதிநே ॥
கவிகதக ஸிம்ஹகதிதம் கடோத ஸுகுமார கும்ப கம்பீரம் । பவ பய பேஷஜமேதத் படத மஹாவீர வைபவம் ஸுதிய: ॥ ஸர்வம் ஶ்ரீ க்ருஷ்ணார்பணமஸ்து.

சுருக்கமான  விளக்கம்:
வைகுண்டவாசி ஸ்ரீமந்  நாராயணன் ராமநாகை அவதரித்து  ராவணாதிகளை மட்டும் அழிக்க வில்லை. பக்தர்களின்  பயத்தையும் அழித்தான். ஒளிவீசும் வைகுண்டத்தில் ஸ்ரீமந்  நாராயணன் ஒளிவீசும் சூர்ய குல ராமனாக அவதரித்தவர்.  ஜய  ஜய  மஹாவீர !வீரருள், தீரர்களில்  முதல்வன். தேவாசுர யுத்தத்தில்  தேவர்கள்  அசுரர்களை வெல்ல உதவியவன். எல்லையற்ற பராக்ரமன். பத்து தலை ராவணனின் கொடுமை, அக்கிரமம் தாங்கமுடியாமல் தேவர்கள் அவதிப்பட்டதால் அவர்கள் பிரார்த்தனைக்கு செவி சாய்த்தவன். தந்தை சொல்லை மந்திரமாக ஏற்று வனம் சென்றவன். துர்  எண்ணம் கொண்ட சூர்ப்பனகையை அவமானப்படுத்தி அனுப்பியவன்.தங்கமான்  உருவெடுத்த மாரீசனை கொன்றவன். தவறு செய்த வாலியை கொன்றவன். 
 சமுத்திரத்தின் மேல்  சேது பந்தனம் எனும் பாலம் அமைத்வன். ராமன் என்றால் ஆனந்தம் தருபவன்.
ராமன் ஒரே சமயம் வீரமும், தர்மமும், கருணையும் கொண்டவன்.தர்மம் எப்போதும் வெல்லும் – ஆனால் அதை நிலைநாட்ட யுத்தமும் தேவையாக இருந்ததால் சிவபக்தன் ராவணனும் கொல்லப்பட்டான். நமஸ்காரம் ராமா உனக்கு அநேக கோடி நமஸ்காரம்.

இத்துடன் ரகுவீர கத்யம்  வீடியோ ஒன்றை இணைத்திருக்கிறேன்.  வார்த்தைகள் எப்படி  கங்கை வெள்ளம் போல் பாய்கிறது என்று கேட்டு ரசிக்கவும் https://youtu.be/1tuaHui9rfg?si=L3-hc1kzY44HG62G

sivan jaykay

unread,
Apr 2, 2025, 7:48:46 PM4/2/25
to amrith...@googlegroups.com
 'என்  ப்ரம்மா ''    -   நங்கநல்லூர்  J K  SIVAN 

ஏப்ரல் முட்டாள் தினம் என்று கொண்டாடப்படும் ஏப்ரல் 1ம் தேதி என்னுடைய பிறந்த நாள். ரொம்ப  பொருத்தமான பிறந்த  தினம். 86 வருஷங்களாக  எனக்கு சொந்தமான நாள் என்பதால் நேற்று அநேகர் என்னை வாழ்த்தினார்கள், நேரில் சிலர், டெலிபோனில், வாட்சப்பில்,  முகநூல் FACEBOOK ல் எல்லாம் வாழ்த்துக்கள். என்னை வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. 

தஸ்தாவேஜ்கள், ஏப்ரல் 1 என் பிறந்தநாள் என்று  நிரூபிப்பதால்,  எல்லா ஆவணங்களும்  அதே  என் பிறந்தநாள் என்பதால் அதை இனி மாற்றவேண்டிய அவசியமும் இல்லை. ஆனால்  நான் அன்று பிறக்கவில்லையே. என்னை பிறக்க வைத்த ப்ரம்மா  சூளைமேடு  எலிமெண்டரி ஸ்கூல் வாத்யார், ஹெட்மாஸ்டர் எல்லாமே ஆன சுப்ரமணிய ஐயர். பள்ளியில் சேர்க்கும்போது ஆறு வயது ஆகி இருக்கவேண்டும் என்பது வெள்ளைக்காரன் ஆட்சியில் சட்டம். ஆகவே  ஐந்தரை வயதான என்னை சேர்க்க அப்பா சுப்ரமணிய அய்யரை வந்து பள்ளிக்கூடத்தில் பார்த்தார். 
''வாங்கோ கிருஷ்ணய்யர் சௌக்யமா?''
'சௌக்கியம் தான். என் பயலை பள்ளிக்கூடத்தில் சேர்க்கணும்?
''சேர்த்துட்டா போச்சு. உங்களுக்கு இல்லாமலா?''
சுப்ரமணிய  ஐயர்  அப்பாவின் நண்பர்.  வழுக்கைத்தலை, சுருங்கிய முகம்,  வெள்ளையாக முள் முள்ளாக தாடி மீசை. கண்ணாடிக்கு கீழே தலையை குனிந்து என்னை  ஊடுருவி பார்த்தார். எதிரே மேசையில் ஒரு ரிஜிஸ்டர். இங்க் புட்டி. கட்டை பேனா.ஒரு அடி நீள ஸ்கேல்.
''இந்த பயல் பேர் என்ன?''
'சிவசாமி''
''என்ன வயசு?''
அஞ்சு முடிஞ்சு  நாலு மாசம்?"' ?  என்று  மூக்குக்  கண்ணாடிக்கு  மேல் வழியாக  அப்பாவைப் பார்த்தபடி  கையை ரிஜிஸ்டரிடம் கொண்டு போனார். 
பெரிய குடும்பம். நிறைய  குழந்தைகள்,  பலதில் சிலது  அல்பாயுசில்  மரணம். எஞ்சியதில் மிஞ்சிய தற்கு  எதற்கு  என்ன  பிறந்த தேதி  என்று  பெற்றோர்களுக்கு தெரியாத காலம் அது. ஆகவே அப்பாவால் சரியாக எனது பிறந்தநாளை சொல்ல முடியவில்லை.  எல்லா  குடும்பங்களிலும்  இது தான்  நடைமுறையில் அக்கால  வழக்கம்..  வைத்த பெயர்  ஒன்று,   அழைக்கும் பெயர்  வேறு. பள்ளியில்  இன்னொன்று. 
''பிறந்த தேதி  சீக்ரம்  சொல்லுங்கோ   நிறைய வேலை இருக்கு.  ரிஜிஸ்டரில்  என்ட்ரி  பண்ணனும்''  என்றார்  
''புரட்டாசிலே  மஹம், ஆனால்  என்ன வருஷம் னு யோசிக்கிறேன்....''-  அப்பா.
''இங்க்லீஷ் தேதி  தான்  வேணும்.  அதைச் சொல்லுங்கோ முதல்லே.''
''.............................''
அப்பாவின்  யோசனையை  அறுத்தவாறு, சுப்ரமணிய அய்யர்  என்னைப் பார்த்து கண்ணாலேயே அளந்தார்.
 
''டேய்  இங்க வா'' 
  என்னை  கையைப் பிடித்து  இழுத்துக்கொண்டு போய்  கதவின் நிலைப்படியில்  நிற்க வைத்தார்  சுப்ரமணிய  அய்யர்.   கதவின் நிலையில்  பென்சில்   கோடுகள்  சில  தெரிந்தன.   என்  தலை உச்சிமேல் ஸ்கேல்  ஏறியது. நடிக்கப்போகிறார் என்று அழுதேன்.  ஸ்கேலுக்கு அருகே  ஒரு  கோடு.\

''பரவாயில்லே  உயரம்  சரியாகத்தான்  இருக்கு.  ஆறு வயசுன்னு போடறேன்.  ' இன்று என்ன தேதியோ  அது லேர்ந்து  6 வருஷம் முன்னாலே''   
''சரி'' என்றார்  அப்பா 
''புரியறதா?  இன்றைய தேதிக்கு  உங்க  பையனுக்கு  6 வயது  என்று  எழுதிக்கிறேன் "?''  என்று  என்னை  எக்ஸ்ரே  கண்களோடு  கண்ணாடி வழியாக  பார்த்தார் வாத்தியார்  சுப்ரமணிய  அய்யர்( பாதிநாள்  தலைமை ஆசிரியர் வரமாட்டார்  எனவே  சு. அ. தான் பள்ளிக்கூடத்தின் சர்வாதிகாரி) .

'கிருஷ்ணய்யர், இல்லேன்னா. இப்படி  செய்யட்டுமா?   6 வருஷத்துக்கு  முன்னாலே  ஏப்ரல் முதல்  தேதி  என்று  போட்டுக்கட்டுமா?''  என்று கேட்டார் சு. அ ,
'' அப்படிப்  போட்டால் என்ன  பிரயோசனம்?  -   என்  அப்பா. 
'' நீங்கள்  ஜூலை  1  அன்று வந்திருக்கேள் .  ஏப்ரல்  என்றால்  மூன்று  மாதம்  பையன்  முன்னால்  பிறந்ததாக  காட்டும்.  6  வயது தாண்டிட்டுது  என்று ரெகார்டும்   பேசும் .  சந்தேகமில்லாமே  பள்ளியில்  சேர்த்துக் கொள்வோம்.  தேதியும்  சுலபமா  கவனத்திலே  நிக்கும்.   உங்களுக்கும்  சிவன்  பிறந்த  தேதி  சட்டென்று 
 ஞாபகம் இருக்கும். இப்படி யோசிக்கவோ தடுமாறவோ  வேண்டாமே. ''
''ததாஸ்து''--அப்பா.  
இப்படியாகத்தானே   இந்த  பூவுலகில் நான்  சத்தியமாக  பிறக்காத   ஏப்ரல் முதல் நாள்  1939 அன்று  அரசாங்க கணக்கு  தொடங்கும்  நாளில்  ''பிறந்து''   நிறைய பேரிடம்  வாழ்த்துகளை  வாங்கிக்கொண்டு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன்.  என்னைவிட  ஒரு  சிறந்த  ஏப்ரல் முதல்  நாள்  ''அறிவாளியை''  பார்த்ததுண்டா?  
வருஷாவருஷம்  என்  அம்மா  எப்பவோ  சொன்ன கணக்குப்படி   புரட்டாசி  மக  நக்ஷத்ரம்  அன்று வீட்டுக்கருகில் இருக்கும்  திருமால்  மருகன்  கோவிலில்  அர்ச்சனை  நடந்து வருகிறது. வீட்டில் பாயசத்தோடு  சாப்பாடு. ஒரு மேல் துண்டு புதுசாக  அன்று  போட்டுக் கொள்கிறேன். வெளியே  அதிகம் தெரியாத  பிறந்தநாள் ரகசிய விழா.  மற்றொன்று புரட்டாசி மகத்துக்கு சொந்தமான இங்கிலிஷ் தேதி 9.10.1939  ஆகவே  ஆக்டொபர் 9ம் தேதி அதிகம் வெளியே தெரியாத உண்மை இங்கிலிஷ் பிறந்ததேதி. இதை வருஷா வருஷம் சொல்லியே ஆக வேண்டியது நியதியாகிவிட்டது.

sivan jaykay

unread,
Apr 3, 2025, 8:20:12 PM4/3/25
to amrith...@googlegroups.com
என் குருநாதர்  - நங்கநல்லூர்  J.K. SIVAN
சுவாமி விவேகானந்தர்.

பதிவு 4

வாழ்க்கையே  சொற்ப கால  சமாச்சாரம்.  செல்வந்தன், ராஜா, பிச்சைக்காரன் யாராயிருந்தாலும் இதில் வேறுபாடு கிடையாது. உடல் ஆரோக்யமாக இருந்தாலும் சரி, வியாதியஸ்தனாக இருந்தாலும் சரி, நல்லவன் கெட்டவன், யாராக இருந்தாலும் ஒன்று தான்.  இருக்கும் வரை அதை ஆனந்தமாக  வாழ்பவன் அதிர்ஷ்டக்காரன். இதில் கடவுள் என்ற ஒன்று இருப்பதை உணர்ந்தால் கடவுளை அனுபவிக்க முடியும். கடவுளைத் தேடுபவன் அடைவான். 

கல்கத்தாவில் ஒரு சிறுவன் காளி கோவிலில் பூசாரியானான் அல்லவா? அவன் மனம் அந்த காளியையே  சுற்றி சுற்றி வந்தது. அவளையே மனமார தேடி  ''நீ என் முன் வா, உன்னைக்  காணவேண்டும்'' என்று அழுதான், அவளோடு பேசினான். 

''அம்மா  நீ இருப்பது உண்மையா? வெறும் ஸ்தோத்ரத்தில் மட்டும் தான்  நீ இருக்கிறாயா? ''
அவன் புத்தகத்தை நம்பி இல்லை, முழு மனதோடு அந்த விக்ரஹத்தை அவளாகவே  பார்த்தான். அவன் கல்லூரிக்கு சென்று பல விஷயங்களை நம்மைப்போல்  மனதில் அடைத்துக் கொள்ளாத  பரிசுத்தன். அவளை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்பதிலேயே  அவன் மனம் லயித்ததால், வேளாவேளைக்கு   மற்றவர்கள்  போல் அவனால் பூஜைகளை விதி  ப்ரஹாரம் செய்ய இயலவில்லை.  காளிக்கு  நைவேத்தியம் வைப்பதையே மறந்துவிட்டான்.  அவன் சிந்தை  பூரா ஒரே எண்ணம்.  
'அம்மா, நீ இருப்பது உண்மையா?   நீ ஏன்  இன்னும் என்னிடம் பேசவில்லை? நீ இறந்து விட்டாயா?''

நாம் அடிக்கடி  எல்லாவற்றையும்  துறந்து வெறுப்படைகிறோம். எதுவுமே பிடிக்கவில்லை. சே  என்ன வாழ்க்கை இது என்று சலிப்படைகிறோம் அல்லவா? அது போல் அவனும் அவளைக்  காணாத வாழ்க்கை வியர்த்தம் என்ற நிலை அடைந்தான்.  இருட்டில் தடுமாறும் எனக்கு யாராவது ஒளி காட்டமாட்டார்களா ?என்ற ஏக்கம்.
'' ஏனிந்த பாராமுகம்?  நீ வரவில்லை என்றால்  உன் சார்பில் யாரையாவது அனுப்பேன்? நான் உன்னையே நம்பி வாழும் சிறு குழந்தை அல்லவா, தாயே நீ வா''

அவனால் கோவிலில் பூசாரி வேலை செய்ய முடியவில்லை.  கோவிலை விட்டு வெளியேறினான். அருகே ஒரு மரம் சூழ்ந்த வனம் . அதில் போய்  இருந்தான். சூரிய உதயம், அஸ்தமனம் எதுவும் அவனுக்கு தெரியவில்லை. எப்படி வாழ்கிறோம் என்ற எண்ணமும் இல்லை.  அன்ன ஆகாரம் எதுவுமில்லை. யாரோ பார்த்துவிட்டு வாயில் ஏதாவது உணவை அடைத்தால் மிஷின் மாதிரி விழுங்கினான். இரவு பகல் வித்தியாசமில்லாமல் இப்படி இருந்தான். கோவில் மணி அடித்தால் ''அம்மா அம்மா வா''  என்று கதறுவான். எல்லாவற்றையும் உதறித் தள்ளினால்  தான் அவள் கிடைப்பாள் என்று நம்பினான். வீடு வாசல் சொந்தம் பந்தம் எல்லாம் துறந்தான்.  பணத்தை தொடவே இல்லை. ஆசை, பேராசை எதுவுமே  எதிரி. மனிதன் என்றால் ஆத்மா மட்டும் தான். ஆண் பெண் வித்யாசமற்றது. இதை உணர்ந்தால் அம்மா தெரிவாள் என்று நம்பினான்.  பெண் உருவம் எல்லாமே அம்மா தான் அவனுக்கு. அவளை வேறு எப்படி பார்க்க முடியும் என்னால்?''  என்பான். அவன் வாழ்க்கை இவ்வாறே சென்றது.   இப்படிப்பட்ட உன்னத புருஷர் தான்  என் குருநாதர்.   ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்கிறார் சுவாமி விவேகானந்தா. 

என் குருநாதர்  என்னிடம் சொன்ன ஒரு வார்த்தை இன்னும் விடாமல் என் காதில் ஒலிக்கிறது. ''ஒரு அறையில் பாளம் பாளமாக தங்கக் கட்டிகள் இருக்கிறது.  அடுத்த அறையில் இருக்கும் திருடனுக்கு இது தெரியும். அவனால் தூங்க முடியுமா? முடியாதே. அவன் மனம் பூரா எப்படி அந்த தங்கத்தை அபகரிப்பது என்பதல்லேயே இருக்கும் அல்லவா?'' 
பகவான் என்பது பிறப்பு இறப்பு அற்றவன், பேரானந்த ஸ்வரூபி, அவனை அடையவேண்டும் என்ற ஒரே எண்ணம் என் குருநாதரின் மனதில் நிரம்பி இருந்தது.  அந்த  ஆசை ஒன்றே அவரை பைத்யமாக்கியது. 
நாள், வாரம், மதம் வருஷம் என்று அவரை விடாமல் ஏங்க வைத்தது.  மூடியிருந்த திரைகள் ஒவ்வொன்றாக மெதுவாக விலகியது.    அன்னை காளிகாம்பிகா அவருக்கு குருவானாள் .  அம்பாள் படித்தவள்அல்ல. கல்வி, ஞானத்தின் மொத்த உரு.  அஞ்ஞானத்தில் உழலும் பிரபஞ்சத்தில் அவள் ஞான தேவி. சன்யாசினி. 
என் தடுமாற்றத்தை கண்டு இரக்கம் கொண்டு என்னை கைதூக்கி விட்டவள் என்பார். 

''மகனே, என் மீது இத்தனை ஆர்வம் ஆசை கொண்ட உன்னை எனக்கு பிடிக்கிறது என்றாள்  உலகமே  பிரபஞ்சமே  இதன் பின்னோ நிழலைத்தேடி  பைத்தியமாக  ஓடுகிறது.அதை விட்டு என்றும் சாஸ்வதமான தெய்வத்தை நோக்கி ஒருவனை பைத்தியம் என்கிறது. இப்படிப்பட்டவர்கள் உலகில் ஒரு சிலரே  என்கிறார் சுவாமி விவேகானந்தா.

sivan jaykay

unread,
Apr 5, 2025, 8:23:37 PM4/5/25
to amrith...@googlegroups.com

''ஓ  ராமா  நீ  நாம  எந்த ருசிரா!!    - நங்கநல்லூர் J K SIVAN

6.4.2025 அன்று ஸ்ரீ ராமநவமி.  ராமனின்  பிறந்த நேர  ஜாதகம்  காட்டும்  ராசி, க்ரஹ, நக்ஷத்திர கூட்டமைப்பு   லக்ஷக்கான வருஷங்களாகியும்  மீண்டும் அதே போல்  இன்னும்   இதுவரை  அமையவில்லையாம்.  பட்நகர் என்கிற சரித்திர ஆராய்ச்சியாளர், இது  மாதிரி  யாராலும்  கற்பனை கூட   பண்ணக்கூட  முடியாது.  இது ஓர்  அதிசயம்  என்கிறார்.  இது  இவ்வாறு  நேரப்போகிறது  என்று  அறிந்து, முன்கூட்டியே  தான்   வால்மீகிக்கு அந்த பாக்யத்தை  நாராயணனே  கொடுத்திருக்கிறார். தன்னைப்பற்றி  எழுத வைத்திருக்கிறார். நமக்கு  வேண்டுமே  என்பதற்காகத்தான் ராமாயணத்தை  வால்மீகி எழுத  வைத்திருக்கிறார்.

ततो यज्ञे समाप्ते तु ऋतूनां षट् समत्ययुः |ततश्च द्वादशे मासे चैत्रे नावमिके तिथौ || १-१८-८
नक्षत्रेऽदितिदैवत्ये स्वोच्चसंस्थेषु पंचसु |ग्रहेषु कर्कटे लग्ने वाक्पताविंदुना सह || १-१८-९

प्रोद्यमाने जगन्नाथं सर्वलोकनमस्कृतम् | कौसल्याजनयद्रामं सर्वलक्षणसंयुतम् || १-१८-१०
विष्णोरर्धं महाभागं पुत्रमैक्ष्वाकुनंदनम् | लोहिताक्षं महाबाहुं रक्तौष्ठं दुंदुभिस्वनम् || १-१८-११

ராமாயணத்தில்,   ராமன்  நவமி திதியில்,  சுக்ல  பக்ஷத்தில்,  சைத்ர  மாதத்தில், (ஒன்பதாம்  நாள்,  வளர்பிறையில், புனர்பூச  நக்ஷத்ரத்தில்  பிறந்தான். அப்போது,  சூரியன்,  செவ்வாய்,  சனி, புதன், சுக்ரன்  எந்த க்ரஹத்தில் , எந்த  ராசியில், லக்னம், என்ன  என்று   ராமாயணத்தில்  ஸ்லோகம்  1.18.8,9 ல் வால்மீகி  சொல்லியிருக்கிறார்.

ராமன் பிறந்தபோது  ''வசிஷ்ட மகரிஷி, நீங்களே இவனுக்கு ஒரு பெயர் வையுங்கள்''''  என்கிறார் தசரதர்.
யோசனையே பண்ணவில்லை வசிஷ்டர்    '''ராம '' என்று எல்லோராலும்   இவன்  வணங்கப் படுபவன்.''
யோசித்தால்  ஏன்  வசிஷ்ட மகரிஷி ''ராம'' என்ற பெயர் வைத்தார்  என்பது புரியும்.

ஹிந்து சமயத்தில்  சைவர்கள்   தொழ ஏற்றது  ''ஓம் நமசிவாய'' எனும் பஞ்சாக்ஷரம். வைணவர்கள்  ஏற்றது  ''ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய'' என்ற அஷ்டாக்ஷரமும் .  ''ரா'' என்ற  அஷ்டாக்ஷர  நாராயணாய மந்திரத்தின் ரெண்டாவது எழுத்தையும் ''நமசிவாய'' எனும் பஞ்சாக்ஷர மந்திர ரெண்டாவது  எழுத்து ''ம' வையும் சேர்த்து , சிவனும் நாராயணனும், ஹரியும் ஹரனும் சேர்ந்த நாமமாக ' ராம' எனும் பெயரை வைத்தார் வசிஷ்டர்.

ராமாயண இதிகாச நாயகன் ஸ்ரீ ராமன்.. ஸ்ரீராம நாமம்  தாரக மந்திரம். பாவங்களை போக்கக் கூடியது.மி.  பங்குனி அமாவாசைக்கு பிறகு வளர்பிறை  நவமி மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகவும், முதல் முழு மனித வடிவ அவதாரமாகவும்  ஸ்ரீராமனாக அவதரித்த தினம்.  அயோத்தியில் மட்டுமல்ல  ஹிந்துக்கள் உள்ள இடங்களில் எல்லாம்  6.4.25 அன்று  ஸ்ரீராம நவமி கொண்டாடுகிறோம்.   7000 ஆண்டுகளுக்கு முன் த்ரேதா யுகத்தில்  பிறந்தாலும்  என்றும் நம் மனதில் உள்ளவன் ராமன். ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் கம்ப ராமாயணம் துளசி தாசர் ராமாயணம்  அத்யாத்ம ராமாயணம், கம்ப ராமாயணம் என்று பல அற்புத நூல்கள் ராம சரித்திரம் சொல்கின்றன.

ராம நவமியன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்தை வைத்து, பூக்கள் சூட்டி அலங்கரிப்பார்கள். ஸ்ரீராமருக்கு பிரியமான வெண் பொங்கல், பருப்பு வடை, நீர் மோர், பானகம்  நைவேத்தியம்.  முடியாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது இரண்டு மஞ்சள் வாழைப்பழம், ஒரு டம்ளர் பால் அல்லது நீர்மோர். எதை அர்ப்பணித்தாலும் " ஜெய்ராம் சீதாராம்'' எனும்  ராம  மந்திரத்தை சொன்னாலே  போதும். நாள் முழுவதுமே ராம நாமத்தை சொல்லிக் கொண்டே இருப்பதோ  மனதில் நினைப்பதோ ரொம்ப  உன்னதம்.

 துளசி, தாமரை  புஷ்பங்கள் ராமருக்கு சாத்தலாம்.  கோவில் வாசலில் நின்று,  வருவோர் போவோர்க்கு  வெயிலுக்கு  நீர் மோர் தானம் கொடுக்க முடிந்தவர்கள் பாக்கியசாலிகள்.  குடை  விசிறி தானமாக கொடுப்பவர்கள்  கர்ணன்கள்.

உலகெங்கும் ராமன்  அறியப்பட்டவர். பல வித கதைகள், பெயர்கள் உருவங்களோடு  திரிந்த ராமாயணம் அங்கெல்லாம் உள்ளது.  ராமன் சம்பந்தப்பட்ட, ராமாயண கால  நிகழ்ச்சிகள் பல ரூபங்களில் ஊருக்கு ஊர் மாறுதலோடு காணப் பட்டாலும் அத்தனைக்கும் ஏதோ ஒரு ஸ்வாரஸ்ய  கதை, காரணம், இருக்கிறது.  ராமாயணம் என்றும் அழியாத காவியமாக நிலைத்திருக்க இதுவும்  ஒரு காரணம்.

என்னைப்பொறுத்தவரை  என் அம்மா வழி பாட்டனார்  கம்பராமாயண உபன்யாசகர்.  காஞ்சி மஹா பெரியவாளால் கௌரவிக்கப்பட்ட  புராண சாகரம் என்ற விருது பெற்றவர். என் கொள்ளு தாத்தா எள்ளு தாத்தா அவர்கள் மூதாதையர் எல்லோருமே  ராம பக்தர்கள். ராமநாடக கீர்த்தனைகள் பாடி பிரசங்கம் பண்ணியவர்கள். பிரபுக்கள் ஜமீன்தார்கள்,  ராஜாக்களின் சமஸ்தானம்ங்களில் ஆதரிக்கப்பட்டவர்கள் என்பதால் எனக்கும்  சிறிது ராம வாசனை உண்டு.

''நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ''ராம''  என் றிரண்டெழுத்தினால்”

நாட்டில் உள்ள எல்லா மக்களிடையேயும் தெய்வ பக்தியும், நன்னடத்தையும் வேரூன்றி வளரவேண்டும் என்று எல்லோரும் ஸ்ரீ ராமநவமியன்றும், மறுநாள் புனர் பூஜையிலும், ஸ்ரீராம சந்திர மூர்த்தியைப் பிரார்த்தித்து  நம்மை சூழ்ந்துள்ள  தீய சக்திகள் விலகி எல்லோரும் அன்போடும் பண்போடும், பக்தியோடும் அவன் கருணையோடு வாழ்வோமாக.

sivan jaykay

unread,
Apr 5, 2025, 8:23:37 PM4/5/25
to amrith...@googlegroups.com
சந்தியா வந்தனம் -  நங்கநல்லூர்  JK  SIVAN 

நமக்கு தெரியாத எத்தனையோ விஷயங்களில் இதுவும்  ஒன்றாக இருப்பது ஆச்சர்யம் தான்.  நான் மூன்று வேளையும் சந்தியாவந்தனம் செய்கிறேன் சார் என்று என்னிடம்  சமீபத்தில் பலரைக் கேட்டபோது சொன்னார்கள். அவர்களில் அநேகருக்கு மந்திரம் அர்த்தம் தெரியவில்லை. தேடினால் இன்னும் அநேக விஷயங்கள் புலப்படும். புரிந்து கொண்டு செய்யும் காரியங்கள் மேலும் நமக்கு தூண்டுதலைத் தரும் என்பதைத் தவிர  ஆத்ம திருப்தியும் அளிக்கும். 

பிராமணன் சந்தியாவந்தனம் பண்ணுவது எங்கோ இருக்கிற எந்த கடவுளையோ திருப்தி படுத்த இல்லை.
ஆத்மாவை சுத்தப்படுத்தி தீயவையை மனதிலிருந்து நீக்குவதற்காக. ஒவ்வொரு  வினாடியும் பகவானை நினைக்கவேண்டும். சந்தியாவந்தனம்  ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயத்தின் முன்,  மத்தியானம் உச்சிக்கு முன், சாயந்திரம் அஸ்தமனத்துக்கு முன் பண்ணவேண்டியது. உண்மையான ஆத்மாவைத்தான் கடவுள் விரும்புகிறார்.

ஸந்த்யாவந்தன காயத்ரி மந்திரம் யஜுர்வேதத்தில்(36/3) வருகிறது.
சந்த்யாவந்தனம் செய்வது எப்படி?
1. ஆசமனம் (Āchamanam)
2. ப்ராணாயாமம் (Prāṇāyāmaḥ)

ॐ भूः ॐ भुवः ॐ सुवः ॐ महः ॐ जनः ॐ तपः ॐ सत्यम्।
ॐ तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्।

ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் ஸத்யம்,ஓம் தத் சவிதுர் வரேண்யம் பகோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்

பரம்பொருளின், பரமாத்மாவின்,  திவ்ய ஒளியை தியானிக்கிறோம்; எங்கள் புத்தியைக் களங்கமின்றி வளரச் செய்ய வேண்டும்  என்று பிரார்த்திப்பது.

3. சங்கல்பம் (Sankalpam)
நாள், திதி, யோக, கரணம், நக்ஷத்திரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு, இன்று சந்த்யாவந்தனம் செய்வதை உறுதி செய்வது.

அஸ்மிந் ப்ரஹ்மணே த்விதீய பரார்தே...  (இன்றைய காலத்திலே, இந்த நாளிலே, இந்த வேளையில், இந்த இடத்தில், நான்  சந்த்யாவந்தனம் செய்கிறேன்...)

4. அர்க்ய பிரதானம் (Argya Pradhānam)   ॐ भास्कराय नमः। ॐ मित्राय नमः। ॐ पूष्णे नमः। ஓம் பாஸ்கராய நம:! ஓம் மித்ராய நம:! ஓம் பூஷ்ணே நம:!
(சூரியனுக்கு, உலகத்துக்கு ஒளி யூட்டுபவனுக்கு  நமஸ்காரம்)
5. காயத்ரி ஜபம் (Gāyatrī Japam)   மந்த்ரமும் அர்த்தமும்  மேலே சொன்னபடி. 
6. உபஸ்தானம் (Upasthānam)
ॐ आदित्याय च सोमाय च मङ्गलाय बुधाय च।  गुरु शुक्र शनिभ्यश्च राहवे केतवे नमः।
ஓம் ஆதித்யாய ச சோமாய ச மங்களாய புதாய ச குரு சுக்ர சனிப்யச ராகவே கேதவே நம:
(சூரியன், சந்திரன், செவ்வாய், புத்தன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய  நவகிரகங்களை வணங்குகிறேன்.)
7. சூர்ய நமஸ்காரம் (Sūrya Namaskāram)
சூரிய தேவனை நமஸ்காரம் செய்து, நமஸ்கார மந்திரங்களை சொல்Vல வேண்டும்.
8. புனராசமனம் (Punar āchamanam)
மீண்டும் ஆசசமனம் செய்து களங்கங்களை நீக்கி, தியானம் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் காலை, மதியம், மாலை சந்த்யாவந்தனம் செய்வது முக்கியம்.
Devi Gayatri
ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ॥  Om Bhuur-Bhuvah Svah Tat-Savitur-Varennyam
Bhargo Devasya Dhiimahi  Dhiyo Yo Nah Pracodayaat ||

1:  ஓம்  பூ லோக  (Earth),  புவர் லோக  (அந்தரிக்ஷம் ,  மத்யம ஆகாசம், )  ஸுவர்லோக  (ஆகாசம், விண், தெய்வீக மனம்),
2: தத் ஸவிதுர் r (சாவித்ரி, சூரியனின் தெய்வாம்சம்)
3: அந்த  தெய்வீக ஒளியை தியானம் செய்கிறேன். என் ஆன்மீக புத்தியை அது பிரகாசிக்க செய்யட்டும். தெய்வீக உணர்வை எழுப்பட்டும்.  வேதம், அதன் ஆறு அங்கங்கள், பாதம், கிரமம்  எல்லாம் பசுவின் வாயில் உள்ளது.  ஹரியும் கேசவனும் பசுவின் கொம்புகளில் உறைகிறார்கள். ஸ்கந்தன் அதன் வயிற்றில்   உள்ளான்.• அதன் சிரசில் ப்ரம்மா. அதன் நெற்றியில் சங்கரன். கொம்பின் நுனியில் இந்திரன்.அதன் காதுகளில் அஸ்வினி தேவர்கள்.பசுவின் கண்களில் சூரியனும் சந்திரனும். பற்களில் கருடன். நாக்கில் ஸரஸ்வதி . அதன் பின்புறத்தில் சகல புண்ய க்ஷேத்ரங்களும்.  அதன் கோமியத்தில் கங்கை. அதன் சருமத்தின் மெல்லிய நாளங்களில் சகல ரிஷிகளும். முகத்தின் பின்புறம் யமன். வலது பக்கம்  குபேரனும் வருணனும். 
நடு முதுகில்  கந்தர்வர்கள். பசுவின் பின்பாக குளம்புகளில்  விண்ணுலக தேவலோக தேவதைகள். கோமியத்திலும் சாணியிலும் லக்ஷ்மி தேவி. அதன் கால்களின் முனையில் விண்ணுலக தேவர்கள். அதிகப சப்தத்தில் பிரஜாபதி.  நான்கு பால் சுரக்கும் காம்புகளில் நான்கு சமுத்திரங்கள்.  இதெல்லாம் பத்ம புராணம் சொல்வது. 

sivan jaykay

unread,
Apr 6, 2025, 8:28:15 PM4/6/25
to amrith...@googlegroups.com
உபநயனம். -    நங்கநல்லூர்  J K  SIVAN 

ப்ராமண குடும்பங்களில்  அடிக்கடி  பூணல் கல்யாண  பத்திரிகைகள் வருகிறதே. பூணல் கல்யாணம் என்றால் என்ன? சமஸ்க்ரிதத்தில் அதற்கு உபநயனம் என்று பெயர்.  அப்படியே என்றால் என்ன ஸார்?
கிட்டே வா என்று அழைப்பது.   இதை ஒரு சிறப்பான  பெரிய விழாவாக படா படா  ஆடம்பரத்துடன்  நடத்துபவர்கள்  அநேகர்.ப்ராமணர்களைத் தவிர மற்ற சில குலத்தோருக்கும் பூணல் உண்டு. ஆனால் இதுவரை எனக்கு மற்ற குலத்தோர்  வீட்டு பூணல் பத்திரிகை ஒன்று கூட  வந்ததில்லை. 

பூணல் என்கிற  நூலை சாதாரணமாக  தக்ளியில் நூற்று தருவது சரியல்ல.  அதற்கென்று சில  வேத மந்திரங்கல் இருக்கிறது. அவற்றை ஜபம் பண்ணி , பிராண பிரதிஷ்டை செய்து  தயாரிப்பது தான் சரியான  பூணல்.

கிட்டத்த்தட்ட  நூறு   இழைகள் அதில் உண்டு.  சுத்தமான பஞ்சைத் தக்ளியில் நூலாக நூற்று, அதிலே 96 இழைகள் சேர்த்து, காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டு , பிராண பிரதிஷ்டை செய்து   மிக்க கவனமாக பூணூல் தயாரிப்பதை  அணிவிப்பது தான் ஸமஸ்க்ரிதத்தில் யக்ஞோபவீதம் என்பது.காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம்.  அப்படி ஜபித்து ஜபித்து உரு ஏற்றப்பட்ட பூணூலுக்கு சக்தி அதிகம். 

எப்போதோ ஒரு கதை படித்தது ஞாபகம் வருகிறது. ஒரு ஏழை பிராமணர்  மேலே சொன்னபடி சாஸ்த்ரோக்தமாக காயத்ரி சொல்லிக்கொண்டே பூணல் தயாரிப்பார். அதை விற்று வரும் வருமானத்தில் அவர் ஏழைக்குடும்பம் வாழ்ந்தது. அவர் பெண்ணுக்கு கல்யாணவயது, அதாவது 8 அல்லது 9வயதாகிவிட்டது. அந்த வயத்துக்குள் தான் அப்போதெல்லாம் கல்யாணம் பண்ணுவார்கள். கல்யாணம் எப்படி பண்ணுவது, பணத்துக்கு எங்கே போவது? ராஜாவிடம் இவர் பற்றி சேதி போனது. ராஜா கூப்பிட்டான் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டபோது  ஒரு ஜோடி பூணலை வைத்து அதற்கீடான பணம் போதும் என்று சொல்லிவிட்டார்.  ஒரு தராசில் ஒரு பக்கம் ஒரு ஜோடி பூணல், இன்னொரு தட்டில் பல தங்கக்கட்டிகள் வைத்தும் பூணல் உள்ள தட்டு தாழ்ந்து இருந்தது.  ராஜாவுக்கும் மந்திரிக்கும் ஆச்சர்யம். மந்திரி கெட்டிக்காரன். ஆகவே. ''பிராமணரே, நீங்கள் நாளை வாருங்கள்.  வரும்போது ஒரு புது ஜோடி பூணல் பண்ணிக்  கொண்டு வாருங்கள்''  என்று அனுப்பிவிட்டான். அன்று வீடு திரும்பிய பிராமணருக்கு மனதில் புயல். அடடா, நமது ஒரு ஜோடி பூணலுக்கு  இத்தனை தங்கக்கட்டிகளா மதிப்பு.. நாளை ராஜா இன்னொரு பூணல் பண்ணிக்கொண்டு வா என்கிறாரே. ஒருவேளை இன்னும் அதிக தங்கக்கட்டிகள் கொடுப்பதற்காகவா. அதில் தாராளமாக பெண்ணுக்கு கல்யாணம், நகைகள் பண்ணிப் போட்டுவிட்டு மீதியை நமது குடும்பம் சொச்ச காலம் சௌகர்யமாக வாழ வசதியாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றி விட்டது.  பூணலை ராஜாவுக்கு த்ரிப்திகரமாக பண்ணிக்கொண்டு போகவேண்டும் என்று பண்ணி எடுத்துக்கொண்டு போனார். மந்திரி புது பூணலை தராசில் ஒரு தட்டில் வைத்து விட்டு இன்னொரு தட்டில் ஒரு வெள்ளிக்கட்டியை போட்டான். பூணல் தட்டு மேலேயும்  வெள்ளிக்காசு இருந்த தட்டு கீழேயும் இருந்தது. அதை எடுத்துவிட்டு சின்னதாக ஒரு வெண்கல காசு தட்டில் போட்டான், அப்போதும் தட்டு கீழேயே இருந்ததால்  அதை எடுத்து  ''இந்தாருங்கள் ப்ராமணரே , உங்கள்  பூணலுக்கு  ஈடான பொருள் என்று வெண்கல காசை நீட்டினான் மந்திரி.
ராஜாவுக்கு ஆச்சர்யம். நேற்று நிறைய தங்கக்கட்டிகள் வைத்தும் போனாலும் ஈடாகவில்லை, இன்று ஒரு சிறு வெண்கலக்காசுக்கு ஈடாகிவிட்டதே பூணல். ஏன்?'' என்று மந்திரியை கேட்டபோது மந்திரி சொன்னது;

''மஹாராஜா, நேற்று கொண்டுவந்த பூணல் வழக்கமாக அந்த பிராமணர் காயத்ரி மந்திரம் சொல்லிக்கொண்டு தயாரித்த பூணல். அதற்கு எவ்வளவு தங்கக்கட்டிகளும் ஈடாகாது. இன்று கொண்டுவந்த பூணல் பிராமணர்  தனக்கு இன்னும் எவ்வளவு தங்கக்கட்டிகள் வரும், எப்படி சௌகர்யமாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு தயாரித்த பூணல். ஆகவே அது தரம் தாழ்ந்துவிட்டது. காயத்ரிமந்திரத்துக்கு அவ்வளவு சக்தி, மஹிமை'' என்று மந்திரி எடுத்துரைத்தான். 

உபநயனம் என்பது ஒரு மாணவன் பிரம்மச்சாரி ஆஸ்ரமத்தில் கால்வைப்பது. உபநயனம் ஆணவத்துடன் குருகுலவாசம் துவங்கும். கல்வி கற்று முடிந்தபின் க்ரஹஸ்தாஸ்ரமம்  ஆரம்பிக்கும்

ஒரு ஹிந்து வின் வாழ்வில் சடங்குகள் பல உண்டு. மூன்று வகையானவை அவை. நித்ய கர்மா, நைமித்திக கர்மா, காம்ய கர்மா.சந்தியாவந்தனம் நித்யகர்மாநுஷ்டானம் அது.   குழந்தை பிறந்ததும் அதற்குண்டான மந்திரங்கள் ஜாதகர்மா போன்ற  சடங்குகள், 7 வயது முதல் 11 வயதுக்குள் பூணல் போடும் உபநயனம் போன்றவை ஏதோ ஒரு நிமித்தமாக செய்யப்படுவதால் நைமித்திக கர்மா.  எதையாவது எதிர்பார்த்து, விரும்பி, அது நடக்கவேண்டும் என்று செய்யப்படும் கர்மா  காம்ய கர்மா, கார்ய சித்திக்காக செய்யப்படுபவை. அததற்கு என்று தனிப்பட்ட தெய்வங்களை  வழிபடவேண்டும். 
உபநயனத்துக்கு தேவதை காயத்ரி தேவி. 

sivan jaykay

unread,
Apr 8, 2025, 8:01:49 PM4/8/25
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம் -   நங்கநல்லூர் J K. SIVAN

''நாளைக்கே  உபநயனம் பண்ணிடு''

எவ்வளவு தடவை கேட்டாலும்  அலுக்காதது  மஹா பெரியவாளின் அற்புதங்கள்.  எண்ணற்ற பக்தர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் அநேகர்  அறியாதது. ஏனென்றால்  மஹா பெரியவா விளம்பர பிரியர் அல்லர். மேலும் பக்தர்கள் தமது வாழ்வில் நடந்த சம்பவங்களை வீட்டில் மட்டுமே வெளிப்படுத்துபவர்கள். வெளி யுலகத்துக்கு தெரிபவை மஹா பெரியவாளின் அணுக்க தொண்டர்கள் கண்ணால் கண்டது, காதல் கேட்டது,இதைத் தவிர  சில பக்தர்கள் அவர்கள் அருகே நின்று சாட்சியாக  கண்ணால் கண்டு, காதல் கேட்டு அனுபவித்தவர்கள் மூலம் பரவிய செய்திகள் மட்டுமே.

மஹா பெரியவா ஒரு த்ரிகால ஞானி.     நடமாடும், பேசும் தெய்வமாக  வாழ்ந்தவர். அவர் அருள் இன்னும் அநேக பக்தர்கள் வாழ்வில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இதோ ஒரு அதிசய சம்பவம். ஏற்கனவே உங்களுக்கு தெரிந்தால் சந்தோஷம். தெரியாவிட்டால் சந்தோஷம் காத்திருக்கிறது. 
 
திருவல்லிக்கேணியிலிருந்து ஒரு பக்தர் காஞ்சிமடத்துக்கு தரிசனத்துக்கு சென்றார்.  அவர் ஒரே மகன் ராம  சுப்ரமணியம் எட்டாம் வகுப்பு மாணவன். அவனையும் அழைத்துப் போக விரும்பினார்.  பையனோ,   ''அப்பா எனக்கு  நாளைக்கு பரிக்ஷை.  நான் வரலை'' என்று சொன்னான்.அப்பா  கேட்கவில்லை.  

''ராமு  பரிக்ஷை  கிடக்கட்டும் நீ கண்டிப்பா என்னோடு வரணும். மஹா பெரியவாளை தரிசனம் பண்ணணும்  '',
ரெண்டு பெரும்  மஹா பெரியவா முன் நமஸ்கரித்து கைகட்டி நின்றபோது தெய்வம் பேசியது.''
''உன் பையனா?''
''ஆமாம் பெரியவா''
''ப்ரம்மோபதேசம் பண்ணிட்டியா?''
''பெரியவா அனுகிரஹத்திலே வேளை வரணும் பெரியவா''
''வேளை  வந்துட்டுதுடா.  மைலாபூர்லே  சங்கர மடம் இருக்கு தெரியுமோல்லியோ. நாளைக்கே அவனை அழைச்சுண்டு போய்  பூணலை போட்டுடு ''
பக்தருக்கு  அதிர்ச்சி. வீடு திரும்பியவர்  மைலாப்பூர் சங்கரமதத்துக்கு போனார்.  புள்ளையோட பூணலை பிரமாதமாக பெரிசா பண்ணனும்னு கனவு.  பெரியவா இப்படி சொல்லிட்டாளே.  இருந்தாலும் அவர் சொன்னதை கேட்கவேண்டாமா.  மடத்தில் மேனேஜரை தெரியும். அவர்கிட்டே போய் ''பெரியவா திடீர்னு இப்படி சொல்லிட்டாளே. என்ன பண்றதுன்னு சொல்லுங்கோ?''
''பெரியவா சொன்னா அதிலே  ஏதோ காரணம் இருக்கும். அவர் சொன்னபடியே பண்ணிடுங்கோ. ஆத்துக்கு போய் ஆம்படையாளை கூட்டிண்டு  சாயந்திரம் உடனே வாங்கோ.

''பையனுக்கு பரிக்ஷை இருக்கே..''
''கவலையே வேண்டாம்.  பரிக்ஷை நாளைக்கு மத்தியானம் தானே, காலம்பரவே வந்து உபநயனம் பண்ணிடலாம். நான் மடத்ததுலே சொல்லி ஒரு வண்டிலே அவனை ஸ்கூல்லே கொண்டு விட சொல்லிடறேன். போய் பரிக்ஷையை எழுதட்டும் ''  என்கிறார் மானேஜர். 
 
மறுநாள் காலையில்  எந்த ஆடம்பரமும் இல்லாமல், சிம்ப்பிளா  பையனுக்கு உபநயம் மடத்தில் நடந்தது. 
மத்தியானம் பரிக்ஷை  எழுதினான்.  அப்புறம் குடும்பத்தோடு பெரியவாளைத் தேடி அவர் ஆசிர்வாதம் வாங்க சென்றார்கள். 
பெரியவா குழந்தையை ஆசீர்வாதம் பண்ணினார். 
சில மாதங்கள் ஆனபின் ஒருநாள் திடீரென்று பக்தர் மரணம் அடைந்தார். 
பையன் அப்பாவுக்கு தகன க்ரியைகள் செய்தான். 
அம்மா இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. 
 ''ஏண்டா ராமு, பெரியவாளை நீ தரிசனம் பண்ண அப்பாவோடு போனியே அப்போ அவர் என்ன சொன்னார்?
''பையன் நடந்ததை சொன்னான். 
''பாத்தியாடா, அப்பாவுக்கு முடிவு வந்துட்டுதுன்னு நம்ம யாருக்கும் தெரியலே. ஆனா பெரியவாளுக்கு தெரிந்திருக்கு. அதை  வெளியே  சொல்லாமே, சூசகமா உனக்கு  உடனே பூணல் போட சொல்லி இருக்கார். அதுக்கு என்ன அர்த்தம்? அப்பாவுக்கு நேரம் வந்துட்டது. உனக்கு கர்மா பண்ண நேரம் வந்துட்டுது. உனக்கு உபநயனம் பண்ணி, பூணல் உடனே போடலேன்னா இப்போ அப்பாவுக்கு நீ  புத்ரனா பண்ணவேண்டிய கர்மா  நடக்காம போயிருக்குமே . உனக்கு காட்டு பூணல் போட்டு வச்சிருப்பா, அதோடு நீ வாழ்க்கை பூரா இருந்திருப்பே. அப்பா ஆசைப்பட்டது நடக்காம போயிருக்கும்.  இதை  உணர்ந்து தான் வெளியே சொல்லாம உடனே மறுநாளே  மடத்திலே உனக்கு உபநயனம் நடத்தி இருக்கார்.அவர் தெய்வம் டா''
அம்மா கண்களில் கங்கை.  என்னதான் சோகமாக இருந்தாலும் மஹா பெரியவா மேல் இருந்த பக்தி, அவருடைய கருணை சோகத்தை  குறைத்தது. அவள் சொன்னதைக் கேட்ட உறவினர்கள் மற்றும்  அருகே இருந்தவர்கள் அதிசயித்தார்கள். 

பெரியவா பற்றி  பிறர் சொல்லித்தானா தெரியவேண்டும்.....

sivan jaykay

unread,
Apr 9, 2025, 7:58:09 PM4/9/25
to amrith...@googlegroups.com


ஒரு அற்புத தரிசனம்  8.4.2025.-  நங்கநல்லூர் J K   SIVAN 

திருப்பதி வெங்கடாசலபதி இருக்கும் இடம்  ஒரு அசாதாரண  ஸ்தலம்.  ஏழுமலைகள் ஒன்றோடொன்று இணைந்து ஏழாவது மலை வேங்கடகிரி மேல் அமைந்துள்ளது. அந்த மலைக்கு எத்தனையோ மொழிகளில் பலவித பெயர்கள். தமிழில் ஏழுமலை, வடமலை, திருமலை, வடவேங்கடம், இன்னும் எத்தனையோ.
மலையில் ஸ்ரீனிவாசன் என்கிற பாலாஜி, உலகத்தில் பல ஹிந்துக்கள் வந்து தரிசிக்க, பல நூற்றாண்டுகளாக நின்று கொண்டிருக்கிறார். இரவு பகல் பூரா  ஜனக்கூட்டம். சுற்றி சுற்றி பல  மண்டபங்கள்,அதில்  பக்தர்கள் வெள்ளத்தை  கட்டுப்படுத்தி எவ்வளவு சீக்கிரம் தரிசிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வசதியாக இருந்து தரிசிக்க அற்புத ஏற்பாடுகள். எண்ணற்ற படிகள் நடந்து பல மணி நேரங்கள் காத்திருந்து அரை வினாடி அவனை தரிசிக்க பக்தர்கள் பொறுமையாக  நிற்கிறார்கள்.  ஐம்பது அறுபது வருஷங்களுக்கு முன் வெங்கடேசனை ரொம்ப அருகில் நின்று அரைமணி நேரத்துக்கு மேல் தரிசித்தேன். காரணம், நான் ஸ்ரீ P .V  அனந்தசயனம் ஐயங்காருடன்  சென்றதால். அவர் தான் அப்போதெல்லாம் விடிகாலை வெங்கடேசன் முன் நின்று வெங்கடேச சுப்ரபாதம் பாடுவார். MSS பாடுவதற்கு முந்தைய காலம். TT தேவஸ்தானம் அவரை விடிகாலை  மூன்றரை மணிக்கு சுப்ரபாதம், ஸ்ரீனிவாச கத்யம் பாட நியமித்திருந்தது. அவர்மகன் ஸ்ரீ ராமதுரை என்னோடு  ஒன்றாக கப்பல் கம்பெனியில் பணி புரிந்தவன் என்பதால் என்னை குடும்பத்தோடு இந்த அற்புத தரிசனம் பெற உதவினார்.  அடுத்தது  நேற்றுதான் 8.4.25 அன்று. என் மகன் கண்ணன் என்னையும் என் மனைவியையும் அழைத்து சென்று தலா  பத்தாயிரம் ரூபாய் நன்கொடை+500 ரூபாய் தரிசன டிக்கெட் வாங்கி பெருமாள் அருகே நிற்க ஏற்பாடு செய்தான். ஒருநாளைக்கு  800 பேருக்கு மட்டும் வாய்ப்பு. இந்த பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுக்க ஆயிரக்கணக்காக மக்கள் வெள்ளம்.  காலை 9.30க்கு வரிசையில் நின்று  11.30 மணிக்கு வெளியே வர முடிந்தது. தலா ஒரு லட்டு பிரசாதம். ஜருகண்டி வேறு விதத்தில்,  ஆணும் பெண்ணுமாக  கைங்கர்யம் பண்ணுபவர்கள்  கையைப் பிடித்து மெதுவாக இழுத்து விடுகிறார்கள். ரெண்டு நிமிஷம் அருகே நின்று தரிசிக்க முடிந்தது. 

வேங்கடேசன்  ஆலயம் ஒரு  மலைக்  கோவில்.  ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று .ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில்  உள்ளது.  சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகளின்  சூழலில்  இருப்பதால்   ஸ்ரீனிவாசனுக்கு ஏழுமலையான் எனப்  பெயர். அவரை  எல்லோருக்கும் தெரிந்தது  ''பெருமாள்'' என்ற பெயரில். அவர் ரொம்பவே பெரிய ஆள். கலியுகத்தில் கண்கண்ட தெய்வம். வரப்ரஸாதி . தாயார்  பத்மாவதி. அவளை  அலமேலு மங்காபுரத்தில் கீழ் திருப்பதியில் சென்று தரிசிக்கவேண்டும்.

வெங்கடாத்ரி மலை 3200 அடி உயரமும், 10.33 சதுர மைல்கள் பரப்பு கொண்டது. லட்டு பிரசாதம்  உலகப்புகழ் பெற்றது.  பிரத்யேகமாக தயாரிக்கப்படுவது. புவி சார் குறியீடு கொண்டது. இங்கு முடி காணிக்கை செலுத்துவோர்  தான் உலகிலேயே அதிகமான  எண்ணிக்கை கொண்ட பக்தர்கள் தான்.  பாரத தேசத்திலேயே  அதிக  வருமானம் பெரும் ஆலயம். பெருமாள் ஸ்ரீனிவாசன் கலியுக வரதன்.
ஒரு சமயம்  பிருகு போன்ற முனிவர்கள் யாகம் செய்து, யாக பலனை சாந்தமான மூர்த்திக்கே  அர்ப்பணிக்க எண்ணி  பிருகு  மும்மூர்த்திகளில் திருமாலின் இருப்பிடத்திற்கு சென்றார். பிருகு முனிவரின் வருகையை அறியாது உறங்கிக் கொண்டிருந்த திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார். அதனால் திருமாலின் இதயத்தில் இருந்த திருமகள் கோபம் கொண்டு அவரிடமிருந்து சென்றார்.

திருமால் பூமியில் திருமகளைத் தேடி வேங்கட மலையில் ஓரிடத்தில் தவமிருந்தார். அவரைச் சுற்றி புற்று உருவானது. அப்புற்றில் தவமிருந்த திருமாலின் மீது புற்றினை உடைக்க வீசப்பட்ட ஒரு  கோடாறியால் திருமாலின் தலையிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. திருமால் தவம் கலைந்து வகுளாதேவி ஆசிரமம் சென்றார். அங்கு சீனிவாசன் என்று  பெயரிட்டு  வகுளாதேவி அன்புடன் உபசரித்து  தாயாக வளர்த்தாள். .
 
அவர்களின் ஆசிரம  பகுதி சந்திரகிரி நாட்டினை சேர்ந்தது.  அதன் ராஜா ஆகாசராஜனுக்கு  அழகிய ஒரு மகள்  பத்மாவதி.     வகுளாதேவி   பத்மாவதியை  சீனிவாசனுக்கு   மணம்  முடித்தாள். திருமணமும் மிகச் சிறப்பாக நடந்தேற சீனிவாசன், குபேரனிடம் கடன் வாங்கினார் இன்னும்  செலுத்த முடியாமல் பாக்கி இருந்து கொண்டே இருக்கிறது.

இக்கோயிலின் நிர்வாகம்   திருமலை திருப்பதி தேவஸ்தானம்  கையில்  உள்ளது.  வெள்ளைக்காரன் காலத்தில்  நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தினை சேர்ந்த சேவா தாஸ்ஜி  வசம் இருந்தது. 1932 வரை  மதராஸ் அரசாங்கத்தை சேர்ந்த ஆலயம்.   1933ல் தான்  திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவாகியது.

மூன்று பிரகாரங்கள் , ராஜகோபுரம்.  ரங்க மண்டபம்  சரித்திரம் வாய்ந்தது.  இஸ்லாமியர்கள் தாக்குதலின்  போது ஸ்ரீ ரங்கம்  உத்ஸவர்  ரங்க நாதரை திருப்பதிக்கு இங்கே கொண்டு வந்தார்கள்.

முதல் பிரகாரம் சம்பங்கி பிரதட்சணம். இதில் பிரதிம மண்டபம், ரங்க மண்டபம், திருமலைராய மண்டபம் (துவஜஸ்தம்ப மண்டபம்), சாலுவ நரசிம்ம மண்டபம் ஆகியவை  அடக்கம்.
 
விமான பிரதட்சணம்  ரெண்டாவது பிரகாரம். இதில் கல்யாண மண்டபம், விமான வேங்கடேசுவரர், ஸ்னபன மண்டபம், சயன மண்டபம், ஆனந்த நிலையம், மூலவர்  கர்ப்பகிரஹம் ஆகியவை அடக்கம்.
 மூன்றாவது  வைகுண்ட பிரகாரம்.  வருஷாவருஷம் வைகுண்ட ஏகாதசி அன்று  திறக்கப்படுகிறது.
மூலவர்  பல நூற்றாண்டுகளாக நிற்பவர்.   மூலவர்  சந்நிதி மண்டபத்தில் ஒரு படியின் பெயர்  ரு படி குலசேகர ஆழ்வார் படி.  மூலவர்  வேங்கடநாதன்  உண்மையில் ஒரு  காளி  சிலை என்றும்  சுப்ரமணியன் என்றும்  கருத்துகள் உண்டு என்றாலும்  வேங்கடேசனை  பெருமாள் என்று வழிபடுபவர் லக்ஷக்கணக்கான பக்தர்கள்.
மூன்றாவது பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சந்நிதி.  சதுர் புஜங்கள்  சங்கு சக்கரம் கொண்டு மஹா விஷ்ணுவைப் போல்  இருக்கிறார்.  சிவாலயங்களில்  சண்டீசுவரர்  மாதிரி இவர்.  திருமாலுக்கு சமர்ப்பிக்கப்படும் மாலைகள், பிரசாதங்கள் விஷ்வக்சேனருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
இரவும் பகலும்  மக்கள் வெள்ளம் நிரம்பிய இந்த ஆலய மண்டபங்களின் பெயர்கள்:
கிருஷ்ண தேவராய மண்டபம்
ரங்க மண்டபம்
திருமலை ராய மண்டபம்
ஜனா மண்டபம்
துவஜஸ்தம்ப மண்டபம்
திருமாமணி மண்டபம்
உண்டியல் மண்டபம் -  பரகாமணி மண்டபம்.  இங்கே தான் கோயிலின்  காணிக்கை  உண்டியல் உள்ளது.  இவ்வுண்டியல் காவாளம் எனப்படும் பித்தளை அண்டாவினைச் சுற்றி துணி கட்டி அமைத்திருக்கிறார்கள்.

திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு நடப்பதற்காக  கீழ் திருப்பதியிருந்து படிகள்  ஆரம்பம். பாதையின் இருபுறமும் ஆழ்வார்களின் சிலைகள். அலிபிரி பகுதியில் கருடாழ்வாரும், கபில தீர்த்தமும். இதைத் தாண்டி சென்றால் ஆஞ்சநேயர் சிலையும், முழங்கால் முறிச்சான் மலைப்படிகள்,  காளிகோபுரம்
எல்லாம் வரும்.  நடந்து வருபவர்களுக்கு  தர்ம தரிசனமும், தங்குமிடமும் இலவசமாக தேவஸ்தானம் தருகிறது.நிறைய இடத்தில்  உடல் கைப்பை  பரிசோதனை துரிதமாக அடிக்கடி  நடைபெறுகிறது. மனிதர்களில் விஷமிகளும் உண்டே..

இந்த கோவிலைப் பற்றி நான் எழுதியது கடுகை விட சிறியது. நிறைய  சொல்லவேண்டி இருக்கிறது.


sivan jaykay

unread,
Apr 11, 2025, 8:09:39 PM4/11/25
to amrith...@googlegroups.com

மஹாவீரரின் ஜெயந்தி -   நங்கநல்லூர்  J K  SIVAN 

இன்று மஹாவீர ஜெயந்தி சிறப்பாக  உலகெங்கும் ஜைனர்களால் கொண்டாடப்படுகிறது. 

பாரத தேசத்தில் நமது ஹந்து சமயத்தைத் தவிர மற்ற சில மதங்களும் உருவாகின.  அவற்று ள்  ஒன்று சமணம், ஜைனம் என்று சொல்லப்படும் மதம். ‘சிரமண’  எனும்  சமஸ்க்ரித சொல்லிலிருந்து பிறந்தது.  சிரமணர்கள் சமணர்கள் ஆனார்கள். சிரமணன் என்றால்  சுக துக்கங்களை சமமாக ஏற்பவன்.  அவனுக்கு நட்பும் இல்லை விரோதமும் இல்லை.  கோபமும் இல்லை பெருமையும் இல்லை.  அன்பு  பொறுமை  எளிமை மட்டுமே குணமாக கொண்டவன். இறப்பு பிறப்பு லக்ஷியமே இல்லை.எவ்வுயிர்க்கும் தீங்கு நினைக்காதவன். 

சமண குருமார்கள்  ‘தீர்த்தங்கரர்கள், அதாவது  'ஆத்மாவை  பிறவிக்கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்கள்',  இன்றுவரை ஜைனர்கள் எனும் சமணர்களுக்கு 24 தீர்த்தங்கரர்கள்  குருமார்கள்.   மஹாவீரர்  ஒரு  தீர்த்தங்கரர்.    ஜைனமதத்தை ஸ்தாபித்தவர்   ரிஷப தேவர். ஆதி பகவன், ஆதிநாதர்  என்றும் பெயர்கள் கொண்டவர். 23வது தீர்த்தங்கரர்  பார்ஸ்வநாதர்  8ம்  நூற்றாண்டு குரு.  22வது குரு வர்  நேமிநாதர். இவரக்ளை எல்லாம் பற்றி அதிக விஷயம் இன்னும் தெரியவில்லை.  மகாவீரரும் புத்தரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்கிறார்கள்.  ரெண்டு பேர் கொள்கைகளும் கிட்டத்தட்ட ஒரே.மாதிரிதான். 
 ரிக்வேதம் சமண சமயத்தை  பற்றி சொல்கிறது. 

 சிவபுராணம், அக்னிபுராணம்  ஆதிபகவன் துதி பாடுகிறது. ரொம்ப பழைய சமயம்.

மஹாவீரர் வர்த்தமானர் என்ற இயற்பெயர் கொண்டு பிஹாரில்  (வைசாலி நகரம்)   க்ஷத்ரிய குண்டம், அல்லது குந்தபுரம் என்கிற ஊரில் பிறந்தவர்   அவர் காலம்  (599 – 527)

கல்ப சூத்ரம், மற்றும் அச்சரங்க சூத்ரம்  மஹாவீரரை  ''அருகன், அருக தேவன், வீரன்,வீரபிரபு, சன்னதி, அதிவீரன் ஞாத் புத்ரா '' என்கிறது.  முற்றும் துறந்தவன், சாது, ஞானி என்ற பொருள்.   அவர் அம்மா பெயர்  தேவானந்தா.   வர்த்தமானர் பிறக்கும்போதே  அவர் ஒரு பெரிய அரசன் அல்லது துறவி என்று ஜோசியர்கள் சொன்னார்களாம்.  பலராமன் போலவே ஒரு கருவிலிருந்து இன்னொரு கருவுக்கு (த்ரிசலாவின்)  
மாற்றப்பட்டவராம்.  புத்தரைப்போலவே  ராஜ வாழ்க்கையை விட்டு முப்பதாவது வயதில் துறவியானவர். 
ஆடையின்றி ;நிர்வாணமாக  நடையாக  எங்கும் சுற்றியவர். 72 வயது வாழ்ந்தவர். ஆரம்பத்தில் திகம்பரர்களாக, ஆடையின்றி தெரிந்தவர்கள் பிற்காலத்தில்  வெள்ளை ஆடை ஆடை உடுத்திய  ஸ்வே தாம்பரர்களானார்கள்.

ஜைனர்கள் தர்மிஷ்டர்கள். நிறைய  கல்வி நிறுவனங்கள் போஜன சாலைகள் ஆஸ்பத்திரிகள் நிறுவுகிறவர்கள்.  எங்கள் நங்கநல்லூரில்  ஜெயின் காலேஜ் பிரபலமான பெரிய  விசாலமான  இடம். 
பள்ளிக்கூடமும் உள்ளது. வியாபாரிகள், வர்த்தகர்கள். 


sivan jaykay

unread,
Apr 11, 2025, 8:09:39 PM4/11/25
to amrith...@googlegroups.com

மறதியைக்  குறைப்போம்.  -   நங்கநல்லூர் J K  SIVAN 

ஒரு நாள்  பேங்க் போய் பணம் எடுத்து வந்தேன்.  ஸ்கூட்டர் வீட்டு வாசலில் நிறுத்தியபோது ஒரு ஆச்சர்யம். அட நாம் பேங்க் போகும்போது  நமது வீட்டு வாசலில் மரம் கிடையாதே.  மாடியில்  ஏதோ ஒரு பிரவுன் கருப்பு வர்ண  நாய்  எதற்கு என்னை பார்த்து  ஜென்ம விரோதியாக குலைக்கிறது. எப்படி  எங்கள் வீடு மஞ்சள் நிறத்திலிருந்து பச்சை வர்ணமாக  ஒரு மணிநேரத்தில்  மாறிவிட்டது என்று யோசிக்கும்போது தான் நான் என் வீட்டைத் தாண்டி அடுத்த காலனியில் ஒரு வீட்டு வாசலில்  நான் ஸ்கூட்டரை நிறுத்தியது புரிந்தது. ஏன் இங்கே வந்தேன்? இது யார் வீடு? இன்று  வரை புரியாத ரெண்டுவருஷ ரஹஸ்யம் இது.

அடிக்கடி  ரொம்ப நன்றாக தெரிந்த  பெயர்கள் திடீரென்று  மறந்து போகிறது. அடிக்கடி பாடும் பாட்டு ஞாபகத்தில் வரவில்லை.. ஏன்?  85க்கு மேல்  இதெல்லாம் சகஜமோ?  எனக்குத் தெரிந்து என் மண்டையில் எந்த அடியும் காயமும் படவில்லையே. நான் போதைப்பொருள் சாப்பிடுவதில்லையே. வெற்றிலை கூட போடாதவன்.

ஒருவேளை தூக்கமின்மையாலோ? தூக்கம் வந்தால் தூங்குகிறேனே. இது முதுமையின் இயல்பு என்று எடுத்துக் கொள்ளலாமா? நான் மருந்துகள் எதுவும் சாப்பிடுவதில்லையே. என் உடலில் எந்த குறைபாடும் இல்லையே.  மன அழுத்தம், அதிக வேலை, போதுமான ஓய்வு இல்லாத நிலை  என்பதெல்லாம் கப்ஸா. எனக்கு ஒரு ப்ராபளமும் இல்லையே.   ஒன்று நிச்சயம். அடிக்கடி எனக்கு மேலே சொன்ன மறதி வருவதில்லையே.. எப்பவோ சில சமயங்களில் , நான் எதிர்பாராமல்...  ஒருவேளை நிறைய படிப்பதால்  கூட  இது ஏற்படுமோ?
மனிதன் இளமையில் திறமையாக இருந்தாலும், முதுமை வந்த  பின் நினைவாற்றல் குறைவதால் பல சிரமங்களை சந்திக்க நேரிடும்.  இது இயற்கையின் ஓர் அங்கம் என்பது உண்மை.

முதுமை என்பது இயற்கையின் தவிர்க்கமுடியாத ஒரு கட்டம், அதனை அனைவரும் புரிந்துகொண்டு  ஏற்றுக்கொள்ளத்தான்  வேண்டும். வேறு வழியில்லை. முதியவர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டியது  அவசியம்

ஞாபக  மறதி  வயதில் குறைந்தவர்களுக்கும் கூட நேர்கிறது.  உலகளவில் 50 மில்லியன் மனிதர்களுக்கு இந்த நிலை இருப்பதாகவும், 10 மில்லியன் பேர் ஒவ்வொரு வருடமும் புதிதாக இந்நிலைக்கு ஆட்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.  அல்ஸிமர் நோயே இந்நிலைக்கான முதன்மைக் காரணியாகவும் 60-70% காரணமாக உள்ளது.

என் போன்ற  மூத்த  குடிமக்களுக்கு  ஞாபக சக்தியை வளர்க்க சில  அறிவுரைகள், குறிப்புகள்;

மூக்குக்கண்ணாடி, பர்ஸ், மொபைல், சாவி இதெல்லாம் மறந்து போகிறதா?  கவலையே வேண்டாம். எல்லோருக்கும்   ஏற்படுவது தான்  இது.  ஒவ்வொருநாளும்  சுருசுறுப்பாக இருங்கள். ரத்த ஓட்டம்  சீராக  உடலில் ஓடும். முக்கியமாக  மூளைக்கு. தினமும் அரைமணி நேரமாவது  நடக்கவேண்டும். 

நண்பர்கள் பெயர்கள், டெலிபோன் நம்பர்கள், பழைய பாட்டுக்கள்  எல்லாம்  ஞாபகத்துக்கு கொண்டுவாருங்கள். நண்பர்களோடு பேசுங்கள். தனிமையில் காலம் கழிக்க வேண்டாம். உலகத்தோடு ஒட்டி உறவாடவேண்டும்.
பத்திரிகைகளில்  குறுக்கெழுத்து போட்டி, sudoku , நம்பர் விளையாட்டுகள்,  வார்த்தைகள் அமைப்பது போன்ற  போட்டிகள் வருமே அததிலெல்லாம்  முடிந்த போதெல்லாம்  ஈடுபடலாம். பரிசுக்காக அல்ல. வாத்தியங்கள் வாசிக்க தெரிந்தால் அதை  முயற்சிக்கலாம்.
சாயந்திரம்  பார்க்  கோவில் போன்ற  பொது இடங்களில் பழக்கமானவர்களோடு பேசலாம்.  நாய் பூனை வளர்த்தால் அவற்றோடு விளையாடலாம். செடி வளர்க்கலாம்.  புத்தகம் படிக்கலாம், பாட்டு கேட்கலாம். கூடவே பாடலாம். சமையலில் உதவலாம். காய்கறி  நறுக்கலாம் .   எனக்கு  கம்பியூட்டரில் படிப்பது பேசுவது எழுதுவது வரப்பிரசாதம். 
தூக்கம் வரும்போது தூங்கலாம். 
சாப்பிடும் உணவை விரும்பி  அளவோடு  சாப்பிடலாம்.  காய்கறி, பழங்கள், வேர்க்கடலை, முந்திரி, பொட்டுக்கடலை பச்சையாக சாப்பிடலாம்.

சமீபத்தில் திருப்பதிக்கு சென்றபோது கீழ் திருப்பதியில் ஹோட்டலில் என்னுடைய கழுத்து ஸ்படிகமணி மாலையை வைத்து விட்டு மறந்து போனேன். திடீரென்று ஞாபகம் வந்து ஹோட்டலுக்கு போன் பண்ணி அவர்கள் எடுத்து வைத்திருந்ததை திரும்ப சென்று பெற்றுக்கொண்டேன். 


 

sivan jaykay

unread,
Apr 11, 2025, 8:09:40 PM4/11/25
to amrith...@googlegroups.com
கடவுளை நினை- அது போதும் .                 நங்கநல்லூர்  J K  SIVAN

சத்யம் தான் கடவுள். அருவமும் உருவமும் ஆனவர்.  அணுவுக்குள் அணு, எல்லையற்ற பேருருவம். ஸாஸ்வத  ஒளிமயம்.   எங்கும் எல்லாமுமாக  நிறைந்த அன்பு, கருணாமூர்த்தி. ஆதி அந்தமற்று காத்து ரக்ஷித்து அழிக்கும்  நீதிமான். ஒன்றே பலவாக காண்பவர். பிரபஞ்ச காரணர். வேத, ஞான ஸ்வரூபம்.  சிந்தைக்கு எட்டாதவர். ஒவ்வொரு ஜீவனிலும் உள்ளுறைந்த  சைதன்ய வஸ்து. குணமற்றவர். நாம ரூபமற்றவர் என்றாலும் எந்த உருவிலும் பெயரிலும் அருள்பவர்.எம்மதத்துக்கும் ஆதாரமானவர். எவரிடத்திலும் பாரபக்ஷமற்ற பரம்பொருள்.  எவ்வுயிரிலும் அந்தர்யாமியாக உள்நின்று ஒளிர்பவர். அவரன்றி ஓர் செயலுமில்லை. ஸர்வ சக்தியுள்ள மெய்ப்பொருள். நமது மானுட சரீரத்துள் ஆத்ம ஞானம் சித்திக்க செய்பவர்.

 மரணம்  இரவோ பகலோ  எந்த நேரமும் முன் அறிவிப்பு இன்றி  நம்மை  அதாவது  நம் உடலை தின்றுவிடும் நிலையில் இது தெரிந்தும் நாம் ஸாஸ்வதமாக  இருக்கப்போகிறோம் என்று  திட்டம் போடுகிறோமே  அது தான்  ஆச்சர்யம்.   ஒரு பழைய  MSS   பாட்டு ஞாபகம் வருகிறது. அதி அற்புதமான பாட்டு  அது.அடிக்கடி பாடுவேன், இன்றும் பாடுகிறேன்.

மனமே கணமும் மறவாதே, ஜகதீசன் மலர் பதமே.
மோகம் மூழ்கி பாழாகாதே,  மாய வாழ்வு சதமா
நாளை என்பார், யார் அதை கண்டார்
ஆதலால் பவ ரோஹம் ஒழிந்திடவே

நடையும் தளர தேகம் ஒடுங்க, நாவது குழர கண்கள் மங்க
என்ன செய்வார் துணை யார் வருவார்- ஈசன் மலர் பதமே
மனமே கணமும் மறவாதே

இந்த பாட்டு  ஆணி அடித்தது போல  மனதில் பதியுமே.  இதற்கு எதற்கு அர்த்தம் சொல்ல வேண்டும்? 
இந்த மாதிரி அடிக்கடி ஏதாவது மனசுலே தோணும். அதை எழுதிப்பிடறது வழக்கமாயிடுத்து.

JKS IN TRAIN.PNG

sivan jaykay

unread,
Apr 11, 2025, 8:10:02 PM4/11/25
to amrith...@googlegroups.com
பங்குனி உத்ரம் -  நங்கநல்லூர்   J K   SIVAN

இன்று ஒரு  புண்ய தினம். விசேஷ கல்யாண நாள். பங்குனி உத்ரம்.  ஹிந்துக்கள்  சிறப்பாக கொண்டாடும் சுபதினம்.. பங்குனி மாதம் கோடைகாலத்தில் மார்ச் ஏப்ரலில் வரும் மாசம். உத்ரம் நக்ஷத்ரம் முக்கியத்வம் கொண்டது. மூன்று தெய்வங்களுக்கு திருமண நாள். சுப்ரமண்யன்-தேவசேனா,  பரமேஸ்வரன்-பார்வதி,  ராமர்-சீதா  ஆகியோரின் விவாக வைபவ நாள். 
கல்யாண உத்சவங்கள் கோவில்களில் விமரிசையாக நடைபெறும்.  முருகன் க்ஷேத்ரங்களில் முக்கியமாக 
பழனி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி, குன்றகுடி, காசிமுத்திராயர் கோவில் போன்ற முருகன் கோவில்களில் கோலாகலமாக இருக்கும். அதேபோல்  திருப்பதி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சிதம்பரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் விசேஷ பூஜைகள் நடக்கும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலும் சிறப்பு திருவிழா நடைபெறும். பக்தர்களின் ஆனந்தத்துக்கு குறைவே இல்லை. 

பங்குனி உத்திரத்தில் சிறப்பாக விரதம் இருந்து வழிபாடு செய்தால் வாழ்வில் சகல சுபத்தையும் பெறலாம்.
திருமணத்திற்காக பாடுபடுபவர்களுக்கு பங்குனி உத்திர வழிபாடு மிகுந்த பலன் அளிக்கும்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த நாளில் முருகன் அல்லது சிவனுக்கு வழிபாடு செய்தால் விரைவில் ஆசீர்வாதம் கிடைக்கும்.
எல்லாப் பலன்களும் பெறும் புண்ய நாளாக பங்குனி உத்திரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
பங்குனி உத்திரம் அன்று தான்  ஸ்ரீ ராமனுக்கும்  சீதா தேவிக்கும் கல்யாணம்.
பங்குனி மாதம் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் சேர்ந்து வரும் தினம்  ஸ்ரீ சுப்பிரமணியனுக்கு உகந்த விசேஷ நாள். தமிழ் 12 மாதங்களில் பங்குனி கடைசி 12வது. உத்ரம் 27 நக்ஷத்ரங்களில் 12வது. முருகனுக்கு 12 கரங்கள். பன்னிரு விழிகள். என்ன பொருத்தம் !

 சோமாஸ்கந்தனின் அப்பா சுந்தரேஸ்வரருக்கும் அம்மா மீனாட்சிக்கும் மதுரையில் கல்யாண நாள். மீனாட்சி சுந்தரேஸ்வரரின்   கல்யாணம் பண்ணி வைத்த விஷ்ணுவும்  ராமனாக அவதரித்து சீதையை மணந்த நாள். சுப்பிரமணியருக்கு தெய்வயானைக்கும் கல்யாண நாள். அரங்கனாக ஆண்டாளோடு கலந்த நாள். கிருஷ்ணனின் நண்பன் அர்ஜுனன் பிறந்த நாள். அர்ஜுனனுக்கு பல்குணன் என்று பெயர் பங்குனிக்கு பல்குனி என்று பெயர். தர்ம சாஸ்தா ஐயப்பன் பிறந்த நாள். இன்னும் என்ன பாக்கி இருக்கிறது  பங்குனி உத்ரா மஹாத்ம்யயம் சொல்வதற்கு ?

 இன்று 
 முருக உபாசகர்கள் உபவாசம் இருக்கும் நாள். சிவபக்தர்களுக்கு கல்யாண சுந்தர விரதம். 
 மலைக்கோயில்கள்,சிறு சிறு ஆலயங்களில் சிறப்பாக விழாக்கள் ஏற்பாடு நடக்கும்.  வழியெல்லாம் சில இடங்களில் சப்பரம், குட்டித் தேர்கள். காவடிகள் .அறுபடை வீடுகளில் முருகனுக்கு விசேஷமாக திருநாள். பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ திரண்டு வரும் நாள்.

திண்டுக்கல் மாவட்டமும், அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தவர்கள், ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று காவிரி நதியில் தீர்த்தம் (புனித நீர்) கொண்டுவந்து, பழனியில் போகரால் நிறுவப்பட்ட நவபாஷாண முருகனுக்கு செலுத்துவார்கள். பங்குனியில் வெயில் கடுமை   சொல்லவே வேண்டாம். மணலில் வெறும் கால் அப்பளமாக  பொரிந்து போகும். 

 நவபாஷாண பழனி முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி நதியின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது பங்குனி உத்தரம் திருவிழா.

கெட்டதை நல்லது, தீமையை  நன்மை வென்ற நாள். அன்பின் வெளிப்பாடு. வசந்தத்தின் வரவை அறிவுறுத்தும் நாள் என்றெல்லாம் இதற்கு காரணம்  சூட்டுவது வழக்கம். மொத்தத்தில் சந்தோஷம் எப்படி வந்தால் என்ன?  எங்கள் நங்கநல்லூரில் அநேக கோவில்கள் இருக்கிறதே. பக்தர்கள் கூட்டத்துக்கு பஞ்சமே இல்லை. நான் வசிக்கும் கன்னிகா காலனியில்  காசி விஸ்வநாதர்,ஸ்ரீனிவாசன், திருமால்மருகன் சுப்ரமணியன் மூவருமே இருக்கிறார்கள்.  ஒரேநாளில் ஒரே மண்டபத்தில் மூவருக்கும் கல்யாண விழா. பக்தர்களுக்கு கைநிறைய பிரசாதம். 

sivan jaykay

unread,
Apr 11, 2025, 8:10:21 PM4/11/25
to amrith...@googlegroups.com

சிறந்த ஒரு வாயுஸ்தலம்  -  நங்கநல்லூர் J K  SIVAN 
ஸ்ரீ காளஹஸ்தி 

இன்று பங்குனி உத்ரம்.  ஆகவே  சமீபத்தில் நான் ஒரு அற்புத சிவாலயம் சென்று தரிசித்ததை
 சொல்கிறேன்.

திருப்பதியில் வேங்கடேசனை பார்க்க  ஒரு நாள் முந்தியே  வரிசையில் நின்று  முதல்  800 பேர்களுக்குள்  அடக்கமாகி பெயர் கொடுத்து   ஒவ்வொரு நபருக்கும் தலா 10500 ரூபாய் கட்டி ரசீது பெற்றுக்கொண்டு கீழ் திருப்பதி திரும்பியவுடன் நேராக  காளஹஸ்தி சென்றோம் .  திருப்பதியிலிருந்து காளஹஸ்தி 43 கி.மீ.  வழியெல்லாம் வித வித உருவங்களில் மலைக் கூட்டம். சாலை நல்லவேளை  குண்டு குழி இல்லாமல் சௌகர்யமாக போக முடிந்தது. நல்ல வெயில். வெள்ளை நிற கோபுரம் கண்ணில் பட்டது. 

ஸ்ரீ காளஹஸ்தி   ராகு -கேது  தோஷ பரிகார ஸ்தலம். பஞ்ச பூத ஸ்தலங்களுக்குள் வாயுஸ்தலம். கஷ்டங்கள் நீங்க, திரு மணத்தடை நீங்க தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே வருகிறார்கள். 
500 வருஷ கோவில். 

ஸ்ரீ காலஹஸ்தியில் சிவபெருமான்  காளஹஸ்தீஸ்வரர்,  காளத்திநாதர். அம்பாள்  ஞானப்பிரசன்னாம்பிகை.
 காடாக இருந்த இடம்.  சிவன் இங்கே  வாயு லிங்கமாக தோன்றியபோது  ஒரு சிலந்தி தினமும் வரும். ஸ்வயம்புவாக வெற்றிடத்தில் கோபுரம் இல்லாமல்  மழையில் நனைந்த சிவலிங்கத்தை பார்த்த சிலந்தி  தன்னுடைய உமிழ் நீரில் இருந்து  சிலந்தி வலையை  உருவாக்கி குடையாக பின்னியது . பெரும் இடியில் சிலந்தி வலை எரிந்து சாம்பலானது. சிலந்திக்கு  வருத்தம்.  சோகத்தில்  இறந்து போனது. சிவபெருமான் அதன் பக்தியை மெச்சி  முக்தி கொடுத்தார்.

சிவன் இருக்கும் இடத்தில் சர்வ சாதாரணமாக நாகம் குடி கொள்ளும் அல்லவா.  ஆகவே  ஒரு நாகமும் தினமும்  அந்த  லிங்கத்தை ஆரத்தழுவி மாணிக்கங்களை கக்கி அர்ச்சனை பண்ணி வழிபடும்.  அப்புறம் ஒரு யானை ஒன்றும்  தினமும் தவறாமல் சிவலிங்கத்தை தரிசிக்க வரும்.  தும்பிக்கையால் நீரை வாரி இறைத்து லிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும். நிறைய  மலர்களை பறித்து வந்து அர்ச்சனை பண்ணும்.  அதன் வேகத்தில் நாகம் அர்ப்பணித்த  மாணிக்கங்கள் கீழே விழுந்து சிதறி ஓடும். 

இது வாடிக்கையாக தொடர்ந்து நடந்து கொண்டு வர  நாகத்திற்கு சந்தேகம் வந்தது.  யார்  என்  மாணிக்கங்களை தள்ளி விடுவது.  காரணம்   யானை என்று ஒருநாள் தெரிந்து கொண்டு ஒருநாள் கோபமுற்ற நாகம் யானையின் தும்பிக்கையினுள் சென்றுவிட்டு மூச்சடைக்க செய்தது.  சமாளிக்க முடியாமல் யானை ஓடி ஆடி,   ஒரு  பாறையில் மோதி  நாகமும்  இறந்தது. அதன் தும்பிக்கையில் மாட்டிக்கொண்ட நாகமும்  சேர்ந்தே  இறந்து போனது.  இந்த ரெண்டின் பக்தியை மெச்சிய சிவபெருமான் யானைக்கும்  நாகத்துக்கும்  முக்தியை கொடுத்தார் என்று ஸ்தலபுராணம்  ஸ்வாரஸ்யமான  விஷயம் சொல்கிறது.  
 காளத்திநாதர் உருவத்தில் கீழே இரண்டு தந்தங்களும், இடையில் பாம்பும், பின்புறம் சிலந்தியும்  இன்றும்  காணலாம்.
ஸ்ரீ என்பது சிலந்தி,  காளம் என்பது நாகம்,  அத்தி என்பது யானையையும் குறிப்பதால் ஸ்ரீ காளஹஸ்தி என இந்த க்ஷேத்ரத்துக்கும்  ஸ்ரீ கா லஹஸ்திநாதர் என்று சிவனுக்கும் பெயர் நிலைத்துவிட்டது. .

கோவிலைப்பற்றி பல குறிப்புகள் தேவாரப் பாடல்களும், புராணங்களும் தெளிவாக கூறுகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு எத்தனை குறைகள் இருந்தாலும் உடனே நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. திருப்பதி செல்பவர்கள் பெரும்பாலும் காளத்தி நாதரை வழிபடாமல் வீடு திரும்புவதில்லை. அனைவரும் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களில் திருக்காளஹஸ்தி ஒன்று.

காளஹஸ்தி  ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. ஞான  சம்பந்தரால் பாடப் பெற்ற ஸ்தலம். கண்ணப்பர் கதை ஏற்கனவே சொல்லி இருக்கிறேனே  ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். 

ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் கட்டிய கோவில்.  வில்வ மரம், கல்லால மரம் ஆகிய இரண்டும்  ஸ்தல விருக்ஷங்கள்.  கோவில் அருகே  பொன்முகலி  ஆறு ஓடுகிறது. நான் பார்க்கும்போது தண்ணீர் தெரிந்தது. 

பல்லவர் காலத்தில்  இக் கோயிலை  புனருத்தாரணம் செய்தார்கள். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். மூன்றாம் குலோத்துங்க சோழனும் சில சிறு கோயில்களை இங்கு எடுப்பித்துள்ளான்.12 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரநரசிம்ம யாதவராயன் தற்போதுள்ள சுற்று வீதிகளை அமைப்பித்ததுடன், நாற்புறமும் நான்கு கோபுரங்களையும் கட்டுவித்தார். பொ.ஊ. 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகர சக்ரவர்த்தி  கிருஷ்ண தேவராயர்  கோவிலை சீரமைத்து  அவர்  கல்வெட்டு  நூறுகால் மண்டபம்,   மேலக்  கோபுரம்  கட்டினதை சொல்கிறது. 

அம்பாள் ஞானபிரசுனாம்பிகை செங்குந்த கைக்கோளர்களின்  குலதெய்வம். வெள்ளாத்தூரார் கோத்திரகாரர்கள்  இங்கு நடைபெறும் சிவன் பார்வதி திருக்கல்யாணத்தில் பெண் வீட்டு சீதனம் கொண்டு  வந்து சமர்ப்பிப்பது இன்றும்  வழக்கம். அதிக கூட்டம் இல்லாத போதும்  பல கூண்டுகளில் சுற்றி சுற்றி வளைந்து வளைந்து நடந்து உள்ளே சென்று காளஹஸ்தீஸ்வர் , அம்பாள் தரிசனம் பெற்றதில் எனக்கு கண்ணப்பனை விட அதிக சந்தோஷம்.

sivan jaykay

unread,
Apr 14, 2025, 7:34:35 PM4/14/25
to amrith...@googlegroups.com
              
சுமை தாங்கி  - நங்கநல்லூர்  J K  SIVAN 

வெற்றி!   வெற்றி!.   அதர்மத்துக்கும் தர்மத்துக்கும்  நடந்த யுத்தத்தில்  தர்மம் வென்றது.  தர்மன்  சக்ரவர்த்தியானான்.   பாண்டவர்கள் பக்கம்  அனைவரும்  சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தனர்.  ஹஸ்தினாபுரம்  களைகட்டியது.  வேத கோஷங்கள் முழங்கின. அனைவருக்கும்  தான தர்மங்கள்  கணக்கின்றி  கிட்டியது  மக்கள்  எல்லோருக்கும்  ஆனந்தம். அரண்மனையில்  கோலாகல  ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது  மெதுவாக அங்கு நுழைந்தான் கிருஷ்ணன். அவனை பாண்டவர்கள் கட்டி தழுவினர். நன்றிப் பெருக்கில்   வார்த்தைகள்  எவருக்கும் வரவே இல்லை. பாண்டவ சைனியத்தில்  பங்கு கொண்ட அரசர்கள்  எல்லோரும்  விருந்தாளிகளாக சிலகாலம்  இருந்து  ஒவ்வொருவராக விடைபெற்று  தத்தம் ஊர் போய்  சேர்ந்தாகிவிட்டது. 

கிருஷ்ணன் த்வாரகைக்கு திரும்ப ஆயத்தமானான்.   பாண்டவர்கள்  அவனுக்கு பிரியா விடை கொடுத்தனர். அரண்மனையில்  திரௌபதி  குந்தி அனைவரிடமும்  விடை பெற சென்றான் கண்ணன். குந்தியை  சந்தித்த
போது
“அத்தை,   நான்  விடை பெற்றுகொள்கிறேன்.!”
“எங்கு போகிறாய்?”
“ஏன்,   என்  ஊருக்கு  தான் வேறெங்கு ?”
“கண்ணா!   நீ எங்களை  விட்டு  செல்கிறாயா ?”
“அத்தை,   என்ன பேசுகிறாய்,    நான்  த்வாரகைக்கு  திரும்ப வேண்டாமா,?”
“எதற்காக?”
“எனக்கு அங்கும் கடமை  இருக்கிறதல்லவா,  அத்தை?”
“கண்ணா,”  
உணர்ச்சி பெருகிய  குரல்  அடிவயிற்றிலிருந்து  எழுந்தது குந்திக்கு. தடாலென்று கீழே விழுந்தாள் .அவள்  கண்கள்  குளமாயின. அவளை  தூக்கி  நிறுத்தி  ஆச்வாசபடுத்தினான்  கண்ணன்
“ஏன்  அத்தை  அழுகிறாய். எல்லோரும்  சந்தோஷமாயிருக்க நீ  மட்டும்  ஏன் அழுகிறாய்? உன் பிள்ளைகள் மூன்று உலகத்தில் யாராலும் வெல்ல முடியாத  சக்ரவர்த்திகள் ஆகிவிட்டார்கள். நீ  ஹஸ்தினா புரத்துக்கு ராஜ மாதா!  உனக்கு  எதற்கு  துக்கம்?”
“ஊர்  உலகுக்கு நீ  சொல்லும்  சந்தோஷம் இருக்கலாம். எனக்கு  நீ  எங்களை  பிரிகிறாய் என்ற எண்ணமே  தாங்க முடியாத  துக்கம்  தருகிறது கண்ணா”
“என்ன  அத்தை இது.  உன் பேச்சு  விந்தையாக உள்ளது”!  
“ஆம்,  கிருஷ்ணா, ஆம் .  என் மக்கள் மட்டுமல்ல  நானும்,  என்றும் இதுவரை  உன் குடை நிழலில்  இருந்தோம். அதுவே முழு  சந்தோஷத்தை தந்தது. எத்தனை  சோதனைகள், எத்தனை துன்பங்கள், எத்தனை எதிர்ப்புகள், மனிதர்களால் தாங்க முடியாத  கஷ்டங்களை நாங்கள்  சந்தித்தபோது,  நீ யல்லவோ  எங்களது சுமை தாங்கியாய் இருந்து தாயினும் மேலாக  காத்தவன்.  உன்னை  பிரிய  என்னால் முடியாது.”  கண்ணா ! இத்தனை  துன்பம் வந்தபோது நான்  யாரை நினைத்தேன்  உன்னையல்லவா. நீயன்றோ அவற்றை போக்கினவன்?”
“அத்தை,  நீ  ஏதேதோ பேசுகிறாய்.  என் மீது உள்ள  பாசத்தினால்  இதெல்லாம் உனக்கு தோன்றுகிறது என நினைக்கிறேன்”
“கண்ணா,  நீ  கண்டிப்பாக த்வாரகை  போகவேண்டுமா?”
“இதில் என்ன சந்தேகம்  அத்தை?”.
“எனக்கு  ஒரு  வரம்  கொடேன்!”
“இன்னுமா வரம்”
“ஆமப்பா,  என்னை, இந்த குந்தி அத்தையை, எப்போதும்  துன்பப் படுவளாகவே ஆக்கிவிடு”
“ஏன்  இப்படி கேட்கிறாய் அத்தை. நீ பட்ட கஷ்டங்கள் போதாதா?''
“நான்  துன்பம் அனுபவிக்கும்போதெல்லாம் உன்னை  நினைப்பது எனக்கு  பழக்கமாகி விட்டது, வழக்கமும் ஆகிவிட்டது. அப்போதெல்லாம் நீ தான்  எப்போதும்  என்னிடம் இருப்பாய்”
கண்ணன்  சிரித்து விடைபெற்றான்.
கஷ்டம் வந்தால் மட்டும் நாம் குந்தியைப் போல் கிருஷ்ணனை நினைக்கவேண்டாம்.  சந்தோஷத்திலும் அவனையே நினைப்போம். அவன் தான் நமக்குள்ளே எப்போதும் சாஸ்வதமாக இருக்கிறானே. 

sivan jaykay

unread,
Apr 14, 2025, 7:34:35 PM4/14/25
to amrith...@googlegroups.com
ஒரு  கிருஷ்ண விஷயம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

நேற்று என்ன செய்தோம், என்ன சாப்பிட்டோம், யாரைப் பார்த்து என்ன பேசினோம், எங்கே போனோம், என்பதே மறந்து விடுகிறது. ஆனால்  ஐந்தாயிரம் வருஷம் முன்பு வாழ்ந்த  கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் சற்றும் மறக்கவே இல்லை. அடிக்கடி நினைவில் வந்து கொண்டே இருக்கிறது. அவனைப் பற்றி எழுத வைக்கிறது. இதில் எனக்கு பரம சந்தோஷம்.

அவனைப் பற்றி ஒரு விஷயம் சொல்கிறேன்.  ஏற்கனவே உங்களுக்கு  தெரிந்திருந்தாலும்  மீண்டும் அதை நினைவூட்ட உபயோகமாக இருக்கும். தெரியாதவர்களுக்கு  ஒரு குட்டி விருந்து.

ஸ்ரீ மந்  நாராயணன் கிருஷ்ணனாக  அவதாரம்  பண்ணுவதற்கு முன் கபில முனிவராக  அவதரித்தார் என ஒரு  ஐதீகம். கர்தம  ரிஷிக்கும்  தேவஹூதிக்கும்  மகனான கபில முனிவர் பெரிய யோகீஸ்வரர்.  சாங்க்ய யோகத்தை போதித்தவர்.  தனது  தாய்க்கு  "ஆத்ம போதனையும்   சாங்க்ய  யோகமும் " உபதேசித்தவர். இந்த  மாதிரி ஒரு  அருமையான  பிள்ளையைப்  பெற்ற  தாய் என்னதான்  வாழ்க்கை நிலையாமை,  யோகம்,  ஆன்ம போதம் அறிந்தாலும்  தன்னுடைய ஒவ்வொரு பிறவியிலும்  அவனே  மகனாக வேண்டும்  என்று ஆசைப்படுவாள்  இல்லையா. ஆகவே  கடவுளை வேண்டி  அவனே தனக்கு மகனாக பிறக்க ஒரு வரம் பெற்றாள் .

கபிலரின்  அப்பா  கர்தம  ரிஷி  கபிலன் பிறந்ததும்  காட்டுக்கு தவம் செய்ய சென்றுவிட்டார்.  அந்த பக்கமாக அரசன் அனுப்பிய  காணாமல் போன  யாக  குதிரையைத் தேடிக்கொண்டு  ராஜாவின் பிள்ளைகள்  வந்தார்கள்,   ஒருவர் இருவர் இல்லை. 60000 ஆசாமிகள்   (சகரர்கள்). காணாமல் தேடிவந்த ராஜாவின் யாக  குதிரை கர்தம ரிஷி ஆஸ்ரமத்தில்  தவம் செய்யும்   கபில முனிவர் அருகே  ஒரு மரத்தில் கட்டபட்டிருந்ததைக்   கண்டு  ஆச்சர்யமும் கோபமும் அடைந்தார்கள்.  ஓஹோ  இது இந்த  ரிஷியின் வேலை  என்று  கருதி அவரை சத்தமாக மரியாதை இன்றி ஏசினர்.    தவம் கலைந்து  கண் திறந்த  கபிலரின்  பார்வை  சகரர்கள்    மேல்  பட்ட அக்கணமே அவர்கள் அனைவரும்  எரிந்து சாம்பலாயினர்.

காணாமல் போன  குதிரையை தேடப்போய்,  காணாமல்  போன  அத்தனை  பிள்ளைகளையும் தேட  ராஜா தனது  பேரன்  அன்சுமானை அனுப்பினான்.  அவன் அலைந்து திரிந்து கடைசியில்  கபிலர் ஆச்ரமத்தருகே  ஒரு  சாம்பல் மலையை கண்டு  விசாரித்து  அவையே அவன்  தேடிவந்த சகரர்களின் சாம்பல் என   அறிந்து கொண்டான். கபிலரைக்  கண்டு  அவர் காலில் விழுந்தான்.

''மகரிஷி,   சாம்பலாகிக்  கிடக்கும் என் முன்னோர்கள் உயிர் பிழைக்க வழி சொல்ல வேண்டும்''  என  வேண்டினான் .
''ஆகாச கங்கை நீர் ஒன்றே  சகரர்களை  மீட்டுத்  தர முடியும். முடிந்தால்  கொண்டுவா'' என்கிறார் கபிலர்.
அன்சுமான் தவமிருந்தான். பகீரதன் என்ற பெயர் கொண்டான் என்பது வேறு கதை. உங்களுக்கு தெரிந்தது.

கிருஷ்ணன் குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனனுக்கு  கீதோபதேசம்  செய்தபோது முனிவர்களில் ரிஷிகளில் நான்  கபிலர் என்று  சொன்னது) நினைவுக்கு வருகிறதா?
 अश्वत्थः सर्ववृक्षाणां देवर्षीणां च नारदः ।  गन्धर्वाणां चित्ररथः सिद्धानां कपिलो मुनिः ॥ १०-२६॥
aśvatthaḥ sarvavṛkṣāṇāṃ devarṣīṇāṃ ca nāradaḥ  gandharvāṇāṃ citrarathaḥ siddhānāṃ kapilo muniḥ 10-26
சித்தர்களில்,  முனிவர்களில்  நான் கபில முனி.
 
கபிலனின்  தாய் தேவஹூதியின்  விருப்பம் வீண் போகவில்லை.அடுத்த பிறவியில் கபிலமுனிவரின்  தாய்,  தேவஹுதி,  தான்  வேண்டியபடியே துவாபரயுகத்தில்   கிருஷ்ணனின்  தாய்  யசோதை யானாள். இதில் என்ன வேடிக்கை என்றால்,  யசோதை மகனாக வளர்ந்த கிருஷ்ணன் அவளுக்கு  எந்த  வேதாந்தமும்  உபதேசிக்க வில்லை. நிறைய விஷமங்கள் தான் செய்து மகிழ்வித்தான். இதுவே ரகசியம்.

 

sivan jaykay

unread,
Apr 14, 2025, 7:34:46 PM4/14/25
to amrith...@googlegroups.com
குந்தியின் பிரார்த்தனை ‘’ - நங்கநல்லூர்  J K   SIVAN 
பதிவு 1 

நான் எப்படி மஹா பாரத ஸ்லோகங்களை கதையாக்கி '' ஐந்தாம் வேதம்'' என்ற புத்தகமாக்கி, 1000 பக்கங் களில் ரெண்டு பாகங்களாக வெளியிட்டேன் என்று எனக்கு இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது. மூன்று வருஷங்கள் தினமும் சராசரி 18 மணி நேரம் இதில் செலவிட்டேன் என்பதை என்னாலேயே நம்ப முடிய வில்லை. எல்லாம் கிருஷ்ணன் செயல். அவன் என்னை ஊக்குவித்து இடை யூறில்லாமல் தனது காரியத்தை என் மூலம் சாதித்துக் கொண் டான்.    நான் ஒரு நல்ல கருவியாக அவனுக்குப் பயன்பட மேலும் அவனை வேண்டுகிறேன்.

மஹாபாரதம் லக்ஷக்கணக்கான ஸ்லோகங்கள் கொண்டது. மஹா சமுத்திரம். என்றும் அழியாத இதிகாசம். அதில் கணக்கிலடங்காத அற்புத மனிதர்கள்,சம்பவங்கள், மனிதனாக வந்த கடவுளோடு சேர்ந்து நமக்கு கிடைக்கிற அனுபவம் சொல்லில் அடங்காது.

மஹா பாரதத்தில் ஒரு அருமையான  பாத்திரம் குந்திதேவி.
கிருஷ்ணன் அவதரித்த யதுகுல சூரசேன ராஜாவின் மகள். வசு தேவரின் சகோதரி, குந்தி போஜ மகாராஜாவின் வளர்ப்பு மகள். கிருஷ்ணனின் அத்தை. பாண்டுவின் மனைவி, பாண்டவர்களின் தாய். பாண்டுவின் மறைவிற்குப் பின் ஹஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் மாளிகையில் ஐந்து குழந்தைகளோடு வாழ்ந்தவள்.

பாண்டவர்களை வெறுத்த துரியோதனனின் பல திட்டங்களில் பாண்டவர்களும் குந்தியும் உயிர் தப்பி னார்கள். பாண்டவர்கள் அனைத்தையும் இழந்து 12+1 வருஷம் வனவாசம் இருந்தபோதிலும் துரியோ தனனின் பகை மாறாமல் அதிகமாகவே வளர்ந்து பாரத யுத்தம் நடந்து கௌரவர்கள் அனைவரும் அழிய, அஸ்வத்தாமன் பாண்டவர்களது குழந்தைகளைக் கொன்றான். அவனது பிரம்மாஸ்திரம் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் வளரும் பரீக்ஷித் சிசுவையும் கொல்ல விரைந்தது. பாரத யுத்தம் முடிந்து  துவாரகை திரும்பும் நேரம் உத்தரை ''கிருஷ்ணா   என்று ஓடிவருகிறாள்''  குந்தி. அவளையும், உத்தரை வயிற்றில் வளரும் சிசு பரீக்ஷித்,  அனைவரையும் கிருஷ்ணனின்  சுதர்சன சக்ரம் காப்பாற்றுகிறது.

மஹா பாரத யுத்தம் பதினெட்டு நாளாக மும்முரமாக நடந்து முடிந்து விட்டது. பாரத தேசத்தில் பாதிக்கும் மேலாக ராஜாக்கள் மறைந்து விட்டனர். யுத்தத்தில் பங்கேற்காத சிலர் மட்டுமே உயிரோடு இருந்தனர். எத்தனையோ ராஜாக்களின் வம்சங்கள் அனாதையாகி விட்டன. கௌரவர் பக்கம் ஒருவர் கூட பாக்கி யில்லை. பாண்டவர் பக்கமும் ஐந்து சகோதரர்களை விட முக்கியமாக வேறு யாருமில்லை. ஹஸ்தினா புரத்தில்  கிருஷ்ணன் சிலநாள் எல்லோருக்கும் துக்கம் தீர ஆறுதல் அளித்துவிட்டு தனதுராஜ்யமான  நாடான துவாரகைக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது. ஹஸ்தினாபுரம் அரண்மனையில் ஒவ்வொருவராக எல்லோரிடமும் சென்று விடை பெறுகிறான் கண்ணன்.

குந்தியை வணங்கி விடைபெற ராணிகளின் அந்தப்புரம் செல்கிறான். குந்தி கிருஷ்ணன் வந்திருப்பதை அறிந்து மகிழ்கிறாள். அவளை கிருஷ்ணன் வணங்குகிறான்.

''அப்போ, அத்தை நான் என் ஊருக்கு திரும்பி போகிறேன். நீ சௌக்கியமாக சந்தோஷமாக இரு. மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது பார்க்கலாம். உனக்கு உன் மக்கள் இந்த தேசத்தின் இணையில்லாத சக்கரவர்த்திகளாக ஆகிவிட்டதில் சந்தோஷம் தானே''. கேட்டுவிட்டு கண்ணன் சிரித்தான்.

பதில் சொல்லாமல் குந்தி சிலையாக கிருஷ்ணனையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் மனதில் சூறாவளி வீசியது. கடலில் காற்றின் வீச்சில் கொந்தளிப்பு...தன் எதிரே எல்லாமே தலைகீழாக ஏன் இப்படி வேகமாக தாறுமாறாக சுற்றுகிறது? சந்தோஷம் மகிழ்ச்சி எல்லாம் வெறும் அர்த்தம் இல்லாத வார்த்தை களாகி விட்டன. மனத்தில் அந்த காட்சி மீண்டும் ரீ வைண்ட் rewind ஆகி ஓடியது.

உத்தரா நிறை கர்ப்பவதியாகி ஓடிவந்தது. கிருஷ்ணன் அவள் வயிற்றில் வளரும் சிசுவையும் காப்பாற்றியது .. ஆம் அது தான் கிருஷ்ணனின் சமீபத்திய உதவி.. வம்சம் வளர ஒரே ஒரு வாய்ப்பு. அஸ்வத்தாமன் தான் பாண்டவ வம்ச வாரிசையை பூண்டோடு அழித்துவிட்டானே. ஒன்றா இரண்டா, எத்தனை அக்கிரமங்கள், ஆபத்துகள் எல்லா வற்றையும் இந்த பாவி துரியோதனன் மூலம் நானும் என் மக்களும் அனுபவித்தோம். அப்போதெல்லாம் எனக்கு உதவிய ஒரே ஆத்மா இந்த கிருஷ்ண பரமாத்மா... 

''நான் போகட்டுமா விடை கொடு'' என்கிறானே கிருஷ்ணன் எப்படி விடைகொடுப்பது?

''என்ன அத்தை சிலையாகி விட்டாயா? நான் சொன்னது காதில் விழுந்ததா? எனக்கு விடை. நான் துவாரகையில் சில காரியங்கள் பாக்கி வைத்திருக்கிறேன். அவற்றை முடிக்க வேண்டும்.''

கண்கள் குளமாக குந்தி இரு கைகளை சிரத்திற்கு மேல் உயர்த்தி கூப்பினாள் .

''கிருஷ்ணா.... கிருஷ்ணா... வார்த்தை மேலே வரவில்லை. குரல் தழுதழுத்தது. ''என் உயரிய தெய்வமே
.உன்னை வணங்குகிறேனப்பா. நீயே எல்லாம். எல்லாம் நீயே..கண்டும் காணாமலும் அருள்பவன் நீயே .

''என் கிருஷ்ணா, நீயா கன்றுக்குட்டிகளோடு விளையாடிய யாதவ சிறுவன், கோபியரோடு குலாவிய மாதவன். எண்ணற்ற அரக்கர்களை எளிதில் வீழ்த்திய மாவீரன். பாண்டவ குல நேசன். மகா சக்தி கொண்ட ஆண்டவன் மஹா விஷ்ணு, நீ சாதாரண மனிதனாக வந்து எளிமையாக என் எதிரே நிற்கிறாய். பீஷ்மர் முற்றும் உணர்ந்த ஒரு ஞானி. எங்கள் எல்லோருக்கும் குல குரு. பிதாமகர். உன் ஆயிர நாமங்களை  விஷ்ணு ஸஹஸ்ரநாமமாக அற்புதமாக எங்களுக்கு செவிக்குச் செல்வமாக வழங்கியவர்.  அதுவும் உன் ஏற்பாடு தானே?   பீஷ்மர் ஆத்ம ஞானத்தால் உன்னை அறிந்தவர். நான்  அனுபவத்தால் உன்னை உணர்ந்தவள்.

குந்தியின் மனக்கண்  காட்சிகள்  ஒன்றன் பின் ஒன்றாக  வேகமாக ஓடியது. முன் நடுச்சபையில் திரௌபதி துச்சாசனன் என்ற மகா பலசாலியால் ஆடை அவிழ்த்து அலங்கோலமாக அவமானப்பட நேரும் சமயம் இரு கை உயர்த்தி தன்னை காத்துக்கொள்ளும் சர்வ சக்தியும் இழந்து ''ஆபத் பாந்தவா என்று கிருஷ்ணனை வேண்ட அவள் காக்கப்பட்ட சம்பவம் .திரௌபதிக்கு  உடல் நடுங்கியது. மீண்டும் நெஞ்சடைத்தது. கண்களில் நீர் பெருகியது. கரங்கள் கூப்பியவண்ணமே இருந்தன.
திரௌபதிக்கு மட்டுமா உதவனினவன் கிருஷ்ணன். பௌமாசுரன் என்கிற நரகாசுரன் பதினாயிரம் அரசிளங் குமரிகளை சிறைப் பிடித்து அவர்களை யாகத்தில் பலி கொடுக்க உத்தேசித்த போது அவனைக் கொன்று அவர்களை விடுவித்து ''நீங்கள் உங்கள் நாடு திரும்புங்கள் '' என்று விடை கொடுத்த போது நடந்தது என்ன?

''ஒரு இரவு வீட்டை விட்டு வெளியே தங்கினாலே மீண்டும் வீட்டில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். பல காலம் அந்நியன் சிறையில் லிருந்த எம்மை எவரும்  மீண்டும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எம்மைக் காத்த நீயே கதி. உன்னுடனேயே வந்து விடுகிறோம்'' என்ற அவர்கள் 16000 பேருக்கும் தனித்தனியே இல்லம் அமைத்து அத்தனைபேருக்கும் வாழ்வளித்தவன் அல்லவா கிருஷ்ணன் ?

பிருந்தாவன மக்கள் இந்திரன் கோபத்துக் காளாகிய போது ஏழுநாளாக பிரவாஹமாக பெருகிய வருணன் விடுத்த பெரு மழையிலிருந்து கோவர்த்தன கிரியை அனாயாசமாக இடது சுண்டுவிரலாலேயே தூக்கி அனைவரையும் காத்தவன் அல்லவா கிருஷ்ணன்?.

பார்த்தன் முதல் பசுக்கள் வரை அனைத்துயிர்களையும் பேராபத்துகளிலிருந்து பாதுகாத்தவன் அல்லவா கிருஷ்ணன்?.........................................
நேரம் ஓடியது..
கிருஷ்ணன் வாசல் பக்கம் தேரை நோக்கி சென்றான். குந்தி வாசலுக்கு ஓடுகிறாள். தாருகன் தயாராக தேரில் குதிரைகளைப்பூட்டி கிருஷ்ணன் ஏறி அமர காத்திருக்கிறான். சுற்றிலும் மக்கள் வெள்ளம். நேராக குதிரைகள் துவாரகை நோக்கி பறக்கப் போகின்றன. கிருஷ்ணன் ஏன் இன்னும் ஹஸ்தினாபுர அரண்மனையை  விட்டு வெளியே வரவில்லை. விடை பெற இவ்வளவு நேரமா? என்று தாருகன் அதிசயித்தான். குதிரைகள் கனைத் தன.
''போகாதே கிருஷ்ணா, போகாதே, இங்கேயே ஹஸ்தி னாபுரத்தில் எங்களோடு இரு'' என்று வேண்டுகிறாள் குந்தி.
கிருஷ்ணன் அரண்மனை வாயிலில் தேரில் அமர்ந்து விட்டான். அவனது இரு கைகளையும் பிடித்துக் கொண்டு மண்டியிட்டு தரையில் அமர்ந்திருந்தாள் குந்தி. கண்களில் கங்கையும் காவிரியும் சேர்ந்து வெள்ளத்தை உருவாக்கின. நாக்கு தழுதழுக்க பிரார்த்திக்கிறாள்.

கிருஷ்ணன் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருக்கிறான். இதழில் புன்னகை.
''அத்தை, உன் மனம் புரிகிறது'' என்றான்.

sivan jaykay

unread,
Apr 14, 2025, 7:34:58 PM4/14/25
to amrith...@googlegroups.com

என் குருநாதர்  - நங்கநல்லூர்  J.K. SIVAN
சுவாமி விவேகானந்தர்.

பதிவு  5
 

என் குருநாதர்  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்  ஆரம்ப காலத்தில் இவ்வாறு  கல்கத்தா காளி கோயில் வளாகத்தில் தனித்து பக்தியில் மூழ்கி இருந்த வேளையில் ஒருநாள் ஒரு சந்நியாசி வந்தார். நன்றாக கற்ற ஞானி, வேதாந்தி, அவர்.  உலகமே இல்லாத  ஒன்று என்ற தெளிவு கொண்டவர். வெயில் மழை புயல் எதுவானாலும் தெருவிலேயே வசித்தவர். ராமகிருஷ்ணனை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது. வேதங்களை கற்பித்தார். தன்னைவிட  மாணவன் சிறந்த ஞானி என அறிந்தார். சில மாதங்கள் ராமக்ரிஷ்ணனோடு இருந்து  ராமகிருஷ்ணனுக்கு சன்யாசம் கொடுத்துவிட்டு அந்த ஞானி கிளம்பினார். ராமகிருஷ்ணனின் உயர்ந்த வேதாந்த ஞான நிலையை உணராத கல்கத்தா பக்தர்கள் அவரை ஒரு பைத்தியம் என்று முத்திரை குத்திவிட்டார்கள்.   உறவினர்  அவருக்கு கல்யாணம் பண்ணினால்  பைத்தியம் தெளியும் என்று ஊருக்கு அழைத்துச் சென்று கல்யாணம் பண்ணி வைத்தார்கள். 
அதனால் எந்த பலனும் இல்லை.  முன்னை விட ராமகிருஷ்ணன்  இன்னும்  ஆன்மீக பைத்தியமாக காளி உபாசகராக  மாறிவிட்டார்.
 
அந்த காலத்தில் பால்ய விவாகம் பழக்கத்தில்  இருந்தது.  பெற்றோர்கள் தாங்களாகவே முடிவு செய்தனர்.பெண் வயதுக்கு வந்ததும் பிள்ளை அவள் வீட்டுக்குப் போய் அவளை அழைத்து வரவேண்டும். 

ராமக்ரிஷ்ணனை மணந்த சாரதா எனும் பெண்ணுக்கு  தன் கணவன் ஒரு பைத்தியம் , அவனை எப்படியாவது சரியான மனநிலைக்கு கொண்டுவரவேண்டும் என்று தோன்றி, தானாகவே ராமகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தாள் .ராமகிருஷ்ணனுக்கு தனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்ற நினைப்பே கூட இல்லை. தன்  எதிரே நின்ற பெண்ணை உற்று பார்த்தார். அவளுக்கு தன வாழ்க்கையில் பங்கு உண்டு என்று தோன்றியது. 
தடால் என்று அவள் காலடியில் விழுந்தார். 

''ஆஹா, என் தாயே, அம்மா, நீயே  என்னைத் தேடி வந்தாயா?''என்று வணங்கினார்.  அவரைப் பொறுத்தவரை எந்த பெண்ணுமே  அம்பாள் காளியின் உருவம் தான். அம்மா  என்னை உலக பந்தத்தில்  சிக்க வைக்க நீ எண்ணம் கொண்டால்  நான் உன் அடிமை நீ என்னை அப்படி வேண்டுமானாலும் வழி நடத்திச் செல் '' என்று சரணடைந்தார்.

சாரதாவுக்கு அவர் நிலை புரிந்தது.  அவர் மேல் பரிவும் இரக்கமும் ஏற்பட்டது. 
''ஐயா, உங்களை சம்சார பந்தத்தில் உழல விட நான் விரும்பமாட்டேன். உங்களோடே  இருப்பேன். தொண்டு செய்வேன். நானும் ஞானம் பெறுவேன்.  ராமகிருஷ்ணனை முதலில் பார்த்த அந்த நாளிலேயே அவருடைய  சிஷ்யை ஆனாள்  சாரதா.  தெய்வமாக போற்றி  மதித்தாள் .
ராமக்ரிஷ்ணரின் ஆன்மீக வாழ்க்கை இவ்வாறு சலனமின்றி தொண்டர்ந்தது. மற்ற மதங்களைப் பற்றி  அறியும் அவா அவருக்கு வந்தது.  பிற மதச்சார்யர்களைத் தேடினார் .  ஆசார்யன் என்றால் வெறுமே நிறைய புத்தகங்கள் படித்த ஒருவர் அல்ல. மத கோட்பாடுகளை நன்கு உணர்ந்து அவற்றை பிறழாமல் பின்பற்றும் சீலர்கள். 
ராமகிருஷ்ணர் ஒரு முஸ்லீம் குருவை அடைந்து அவர் சீடனானார்.  தீவிரமாக அவரிடம் பயிற்சி பெற்றபோது அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. தனக்கு ஏற்கனவே தெரிந்த ஆசார சீலங்களை, அனுபவத்தைத் தான் முஸ்லீம்  மதமும் சொல்கிறது என புரிந்தது.  கிறிஸ்தவ மதமும் அவ்வாறு தானா என அறிய கிறிஸ்தவ மத கோட்பாடுகளை பழக்கவழக்கங்களை அறிந்து பழையபடி அதுவும் தான் ஏற்கனவே பின்பற்றி வந்த ஞான நிலையையே காட்டுவதை  உணர்ந்தார். எல்லா மதங்களின் நோக்கம் ஒன்றே, வழிமுறை, மொழி  மட்டுமே,வெவ்வேறு என்பது புரிந்தது. 
மதத்தை பின்பற்றுபவர்கள் சுயநலத்தாலேயே  வித்யாசங்கள், சச்சரவுகள் தோன்றுவதை அறிந்தார்.  பெயர்கள் அடையாளங்கள் மட்டுமே  பிரித்துக் காட்டுவதை அறிந்தார்  அதுமுதல் மனதில்  எல்லாவற்றிடமும், எல்லோரிடமும்  அன்பு, அமைதி, சமம், எளிமை ஆழமாக அஸ்திவாரம் அமைத்தது.  எதிலும் ''நான்''  அல்ல, பகவானே, தாயே  '' நீ'' மட்டுமே என்பது பதிந்தது. 

ராமகிருஷ்ணர் காலத்தில் உயர்ந்த ஜாதி தாழ்ந்தவர்,தீண்டத்தகாதவர் என்றெல்லாம் மக்களுக்குள்ளே  வித்யாசம் பழக்கத்தில் இருந்தது. மிக உயர்ந்த பரம ஞானியான ராமகிருஷ்ணரை அது நெருங்குமா?  அவர் வசித்த  ஆஸ்ரமம் அருகே இருந்த  தீண்டத்தகாதவர்கள் வீட்டுக்குள் சென்று வீட்டை பெருக்கி சுத்தம் செய்வார். அவர்களை மேலானவர்களாக மதித்து வணங்குவார். 

''அம்மா, நான் எல்லோரிலும் தாழ்ந்தவன், என்னை இவர்களுக்கு பணிவிடை செய்ய அருள் புரிவாய்'' என்று காளியிடம்  முறையிடுவார்.  நமது வேதங்கள் என்ன சொல்கிறது?. பகவான் கிருஷ்ணனே '' என் தொண்டனை நீ மதித்து போற்றினால் நான் உன் தொண்டன் ஆவேன்'' என்று தானே.  பக்த வத்சலன் என்று தானே அவனுக்கே பெயர்.


sivan jaykay

unread,
Apr 14, 2025, 7:34:59 PM4/14/25
to amrith...@googlegroups.com

காலயவன் பெற்ற  பரிசு --   நங்கநல்லூர்  J K   SIVAN


மஹா பாரதத்தில் வரும் கதைகளை எத்தனை முறை கேட்டாலும் சொன்னாலும் படித்தாலும்  யாருக்காவது  சே வேண்டாம் என்று வெறுக்க தோன்றுமா?  ஏன் அப்படி?  அதில் இழையோடும்  உயிரோட்டம், நிதர்சனம், நமது பண்பாடு, முன்னோர்களின் திறமை,  வாழ்க்கை முறை,  குணாதிசயங்கள், அற்புத கற்பனை இதெல்லாம் வேறே எங்கே  ஒரே இடத்தில் கிடைக்கும்?


நல்லது  செய்பவர்களுக்கு,  நல்லவர்களுக்குதுன்பமும்கஷ்டமும்  சோதனையாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.   நமக்கு இறைவனை நினைக்க அவன் அருள் பெற   துன்பம் அவசியமாகிறது.  இப்போது தானே   குந்தி கதை சொன்னேன்.


கடவுளே  மனிதனாக வந்து பிறந்த போதும் இந்த சோதனை கிருஷ்ணனுக்கும் பிறந்த கணம் முதல் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.   குழந்தையாக இருந்ததிலிருந்தே  மரணம் அவனை ராக்ஷஸர்கள் வழியாக துரத்தியது.  இல்லை, தப்பு தப்பு.  அவன்  மரணத்தை  ராக்ஷஸர்களுக்கு, தீயவர்களுக்கு, பிறந்தது முதல் தந்து கொண்டே  இருந்தான். அவன் எதிர்கொண்ட  இன்னல்களை ஏற்று, தீயவர்களுக்கு அவர்கள் தனக்குத் தர விரும்பிய மரணத்தை அவர்களுக்கே  தந்து அழித்தான்.


கிருஷ்ணன் மதுராபுரி  ராஜ்யத்தை அரசாள  முன்வந்தபோது  நாலா  பக்கத்திலும் எதிரிகள்  பெருகிவலுக்கவேராஜ்யத்தை மேற்கே துவாரகைக்கு மாற்றினான்.  கிருஷ்ணன் எதிரிகளைக்  கண்டு அஞ்சிபயந்து மதுரையிலிருந்து ஓடவில்லையாதவர்களைக் காப்பாற்றவே இந்த மாற்றம்அங்கே கடற்கரையில் ஒரு நகரம் உருவாகியதுதுவாரகை நமக்கு கிடைத்தது. 

கர்க மஹரிஷி புத்திரன்  மகன் காலயவன் மூலம் யாதவர்களுக்கு ஆபத்து  என்று கண்ணனுக்கு  நன்றாக தெரியும். . யாதவர்களால் காலயவனைக் கொல்ல முடியாது என்பது சிவன் கொடுத்த வரம்.  ஆகவே  துவாரகைக்கு குடியேறினார்கள்.


ஜராசந்தன் கிருஷ்ணனை வெல்லவோ, கொல்லவோ,  முடியாமல்,  சிசு பாலன்  மூலம் சால்வனின் நண்பனாகி  அவனோடு இருந்த காலயவன் மூலம்  யாதவ குலத்தையும்  கிருஷ்ணனையும் அழிக்க திட்டம் தீட்டினான்.

மதுராவிலிருந்து காலயவன் துவாரகைக்கு  வந்துவிட் டான்.  அவனை எப்படி முடிப்பது என்று கிருஷ்ணன்  ஏற்கனவே தீர்மானித்து விட்டு  அந்த திட்டம் நிறைவேறக்  காத்திருந்தான்

 

காலயவனை  யாதவ குல  கிருஷ்ணன்  கொல்ல முடியாது.  ஆகவே  காலயவனிடமி ருந்து தப்பி ஓடுவது போல் கிருஷ்ணன் ஓடி, காலயவன் தன்னைப்  பின்  தொடரச் செய்துஒரு மலைக் குகை அருகே சென்றான்.  அந்த குகையில் பல  யுகங்களாக முசுகுந்தன் தூங்கிக் கொண்டு இருந்தான்அவன் தூக்கத்தை யாராவது  கெடுத்தால்  தூக்கம் கலைந்து கண் விழித்துப் பார்த்த அக்கணமே அவனை  எழுப்பியவன் மரணமடைவான் என்று இந்திரனிடம் வரம் பெற்றவன் முசுகுந்தன்.
இது கிருஷ்ணனுக்குத்  தெரியாதா?  காலயவன் தன்னைத்   துரத்திக்கொண்டு வந்த   போது  பயந்தவன் போல்  கிருஷ்ணன் நடித்து முசுகுந்தன் இருந்த குகைக்குள் ஓடி இருட்டில் ஒளிந்து கொண்டு தனது பீதாம்பரத்தை தூங்கிக் கொண்டிருந்த  முசுகுந்தன் மேல் போர்த்தி  விட்டான்.  கிருஷ்ணனைத் துரத்திக் கொண்டே  பின்னாலே ஓடிவந்த காலயவன்,  இருண்ட குகையில் கிருஷ்ணன் தான் தனது மஞ்சள் வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு படுத்து ஒளிந்து  கொண்டிருக்கிறான் என்று  நினைத்தான்.

''
பேடிப்  பயலே , கிருஷ்ணாஇங்கேயா வந்து தூங்குபவன் போல் பாசாங்கு பண்ணுகிறாய்உன்னை என் கையால் கொல்லும்  முன்  அச்சாரமாக முதலில் பலமாக  ஒரு உதை வாங்கிக் கொள்இந்தா '' என்று காலால் பலமாக , தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தனை உதைத்தான்.

முசுகுந்தன் துவாபர யுகத்தில் கிருஷ்ணனின்  வருகைக்காக காத்திருந்து  அவனை சதுர் புஜனாக தரிசித்துவிட்டு விண்ணுலகம் போக காத்திருந்தவன் அது வரை எவர் தொந்தரவும் இல்லாமல் இந்த குகையில் தூங்கிக் கொண்டிருந்தான்.

காலயவன்  தன்னை பலமாக  காலால் உதைத்ததும்  முசுகுந்தனுடைய  உறக்கம் கலைந்தது.  கடுங்கோபமாக,  ''யாரது என்னை உதைத்து அவமதித்து எழுப்பியது?''   என்று காலயவனை உற்றுப் பார்த்தான்இந்திரன் கொடுத்த  வரம் அந் கணமே பலித்தது.  

ஒரு பெருந் தீ  முசுகுந்தன் கண்ணில் இருந்து புறப்பட்டு காலயவனை விழுங்கி அவன் எரிந்து  அந்த ஸ்தலத்திலேயே சாம்பலானான்.  

தீயின் ஒளியில்  முசுகுந்தன் அந்த குகையில் இன்னொருவன் இருப்பதைப்  பார்த்தபோது அங்கே  சதுர்புஜ நாரயணன் தரிசனம் அவனுக்கு கிடைத்து மகிழ்ந்தான்.  சந்தோஷ மாக கிருஷ்ணனை வணங்கி விண்ணுலகம் திரும்பினான்

sivan jaykay

unread,
Apr 14, 2025, 7:35:19 PM4/14/25
to amrith...@googlegroups.com
பத்ம புராணம்   - நங்கநல்லூர்  J K  SIVAN

மகரிஷி புலஸ்தியரிடம் பீஷ்மர்  சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்கிறார்.

''பத்மா'' என்று  ஒரு கல்பம் முடிந்தது. ரெண்டாவது பரார்த்தம் உருவானது. 'வர்தம்' என அதன் பெயர்.
.''மகரிஷி, பகவான் நாராயணன் எப்படி கல்பத்தின் ஆரம்பத்தில் சிருஷ்டியை புரிந்தார்?''

''பீஷ்மா,  நாராயணன் ஒரு இரவு கண் மூடி எழுந்தால் அது ஒரு கல்பம். எங்கும் ஜல ப்ரவாஹம்  
. பூமி ஜலத்தில் மூழ்கியதால் பூமாதேவி நாராயணனை வேண்டினாள். பகவான்  மத்ஸ்யம், கூர்ம, வராஹம்  உருவங்களில் அவதாரம் எடுத்தார். அழித்து, பூமியை மேலே கொண்டுவந்தார். தனது மனதில் சங்கல்பத்தாலேயே  ஜீவன்களை உருவாக்கினார்.
மாதவனால் உருவாக்கப்பட்ட பூமாதேவிக்கு மாதவி என்று ஒரு பெயர்.
லோகங்கள்  உருவாயின. ஸ்ரீமன் நாராயணனின் வராஹ அவதார தேஹத்திலிருந்து பல்லுயிர்கள், ரிஷிகள் தோன்றினர். ஸ்வாசத்திலிருந்து  மேகங்கள்,  இடி சப்தம்.  மலைகள் உருவாயின.  பிரபஞ்சத்தில் ஏழு பிரிவு, நான்கு லோகங்கள் தோன்றின.  வரம் பெற்று சக்தி வாய்ந்த அசுரர்களை அழிக்கும் பொறுப்பு நாராயனுக்கு  சேர்ந்தது. தான் உருவாக்கிய  பிரபஞ்சத்தை காப்பதும் அவன் பொறுப்பு அல்லவா.எங்கும் இருள்.அஞ்ஞானம். த்ரியக்ஸ்ரோதாஸ் எனப்படும்  நான்கு கால் பிராணிகள், தலை பூமியை நோக்கி குனிந்தவை உருவாயின. அப்புறம்  ஊர்த்வ ஸ்ரோதாஸ், எனப்படும்  நிற்கும் ஜீவன்கள் உருவாயின. அதன் பிறகு அடுத்த வகை  சிந்திக்க முடிந்துதவை, தாமச குணம் ராஜஸ குணம் நிறைந்தவை. அதன் பயனாக  துன்பம்  கஷ்டங்கள் திரும்ப திரும்ப அனுபவிப்பவை. மானிட இனம். ஆக  மொத்தம்  சிருஷ்டியை பல பகுதிகளாக பிரிக்கலாம். முதலில் மஹத் எனும்  பிரம்மாண்டம்.அடுத்தது புத்தி சர்கம். மூன்றாவது வைக்த்ரிக சர்கம் . மூன்றும் ஒன்று சேர்ந்து  ப்ரக்ரித சர்கம் எனப்படும். நான்காவது முக்ய சர்கம் .அடுத்து வைக்ருத சர்கம்.  தேவ சர்கம், அனுக்ரஹ சர்கம், என ஒன்பது சிருஷ்டிகள். ஸ்ரிஷ்டிப்பவர் பிரஜாபதி, ப்ரம்மா என பெயர் கொண்டார்.  இருள் கலைந்து ஒளி உருவாக  சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் உருவாயின.
வேதங்கள்  தெய்வங்கள் தேவதைகள் ரிஷிகள் உருவாகினர். பஞ்ச பூதங்களில்  பருவ காலங்கள் தோன்றின.
ரிஷிகளின்  வேதங்கள், உபநிஷதுகள், ஸூக்தங்கள் , பிரபஞ்சம் உருவானதை, மனிதர்கள் உருவானதை சொல்கிறது.  மனிதர்கள்  அவர்களின் காரியங்கள்,பொறுப்புகள் வகையாக  பிரிக்கப்பட்டனர். அதற்கு பெயர்  சாதி இல்லை. வர்ணம் என்றால் நிறம் என்றும் அர்த்தம். ஒவ்வொரு வர்ணமும் நிறமும் வெவேறு இதில் எது உசத்தி எது தாழ்த்தி என்று இல்லை. அப்படி பிரித்தவர்கள், பிரிப்பவர்கள்  விஷமிகள்.  கல்வி ஞானம் கற்று பிறருக்கும் கற்பிக்கும் வகையினர், பக்தி ஒழுக்கம் வளர்ப்பவர்கள், தேக ஆரோக்கியத் தோடு எல்லோரையும்   பாதுகாப்பவர்,ரக்ஷிப்பவர்கள்,  .  பொருள்களை , வாழ்க்கைக்கு தேவையானதை அற்புதமாக தருவித்து, விவசாயம் மூலம்  விளைவித்து விநியோகம் பண்ணுபவர்கள்,  எல்லோருக்கும்  சரீர சேவை புரிபவர்கள். இதம் சரீரம் பரோபகாரம். இந்த உடம்பு எடுத்ததே பிறர்க்கு சேவை செய்ய என்ற புனித நோக்கம் கொண்டவர்கள். இதற்கு மேல் ஒரு சமூகத்தில் வேறே என்ன வேண்டும்.  நதிக்கரைகளில் மக்கள் வளமையை அனுபவித்து  வாழ்ந்தார்கள். 


பீஷ்மர், நான்  புலஸ்தியன், என் போன்ற மற்ற ரிஷிகள்  பிருகு, புலஹர், க்ரது,ஆங்கிரஸ் ,மரீசி,  அத்ரி,வசிஷ்டர், போன்றவர் தோன்றி  ஞானம் புகட்டினார்கள்.  ஜீவன்கள் ஆணும் பெண்ணுமாக  பிரிந்து தோன்றி வம்சம் வ்ரித்தியாகியது.  ஸ்வயம்புமனு-- சதரூபாவிலிருந்து  வம்சங்கள் பிறந்தன.  அப்புறம் தோன்றியவர்கள் சிலர் பெயர் மட்டும் சொல்கிறேன். 
ப்ரியவ்ரதா , உத்தானபாதன், ப்ரசூதி, அகுதி ,தக்ஷன், ருசி, யஜ்பியன், எம தேவர்கள், ஸ்ரத்தா, லக்ஷ்மி , புத்தி, க்ரியா, சாந்தி, புஸ்தி, துஸ்தி, மேதா, க்ரியா, லஜ்ஜா, ரித்தி, கீர்த்தி, தர்மம், க்யாதி, சதி, சம்பூதி, ஸ்ம்ரிதி, ஸ்வாஹா, ஸ்வதா, ப்ரிதி, க்ஷமா, சன்னதி, அனசுயா,ஊர்ஜா, காமா,த்ரிதி, நியமா, சந்தோச, லோபா, ஸ்ருதா , தண்டா ,  நயா, வினயா, வ்யவசாயா, க்ஷேமா, சுகா, யஸஸ், ஹர்ஷா, அதர்மா , அன்ருதா , நிக்ரிதி, பயா , நரகா, மாயா, வேதனா, ம்ருத்யு, துக்கா.   மேலே சொன்ன பெயர்களை பார்த்தாலே  நல்லது  கெட்டது  எல்லாம் கலந்திருப்பது புரியும். அது தான் மானுட வாழ்க்கை. 

 

sivan jaykay

unread,
Apr 14, 2025, 7:35:19 PM4/14/25
to amrith...@googlegroups.com
பட்டினத்தார்  பாடல்கள் -   நங்கநல்லூர்  J K  SIVAN 

''வேதாந்த தத்துவத்தை கரைத்துக்  குடித்தவர், வாழ்வின் நிலையாமையை முழுதும் உணர்ந்தவர். இறைவன் அருளே கதி, என்று புரிய வைத்தவர்,  எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக எழுதுபவர், ஒருவர் பெயரைச் சொல்?

இந்த கேள்வி என்னிடம் கேட்கப்பட்டால் உடனே என் பதில் ''பட்டினத்தார்''. 
அதை நிரூபிக்க வேண்டாமா.  கீழே படியுங்கள்  சில அற்புத பாடல்களை .

1.காப்பாத்தும் புனிதா களைகின்ற பாவா
கடவுளே நின் திருவடி மலர் காணும் நாளை
மறக்காமல் வாழ்வேன் வஞ்சகம் சொல்லேன்
மனத்தில் பொய் வைத்தல் மாயையாய் தோன்றும்

என்னப்பன், திருவெண்காடா, என்னை பெற்ற  தாயாக  இரவு பகல்கண்ணில் வைத்து  காப்பாற்றும் பரம தயாளன் நீயே,  ஒவ்வொரு கணமும் நான் உன்னைத் தரிசிக்கும் நாளைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறேன். அது வரையிலும்  நான்  எந்த வித மாறுபாடும் என்னிடம்  இல்லாமல் வாழ்வேன். உண்மையை மட்டுமே பேசுவேன். என் மனத்தில் பொய்க்கு  இடமே  கிடையாதப்பனே.  எனக்கும் அது மாயை என்று. 
 மட்டுமே.

2.'அரண்மனையிலே துயின்றாலும்
அடைமடியிலே உறங்கினாலும்
உடம்புக்கே அந்த மாயை தான்
உயிர்க்கேது இவ் ஊனை?''

ஒரு ராஜாவாக அரண்மனையில் சப்ர மஞ்ச கட்டிலில் பஞ்சு மெத்தையில் மெத்து மெத்தென்று படுத்தாலும், தெரு வோரத்தில்  மரத்தடியில்  ஒரு நாய்க்கு பக்கத்தில் நானும் படுத்து உறங்கினாலும், என்றோ ஒருநாள் இந்த உடம்புக்கு  மாயையாகிய மரணம் வந்தே தான் தீரும். இப்படிச்  சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று  விட்டுப்  போகும் உடலை,  கெட்டியாக நான்  பற்றிக் கொண்டிருப்பது அவசியமா சொல்? நான் ஆத்மாவை யல்லளோ எப்போதும் நினைக்க வேண்டும். 

3 அவர்தம்மை நோக்கித் தவமிருப்பேன்
நம்பரையே நினைத்துக் கொண்டிருப்பேன்
நாலு காலமும் பாவமே தவிர்க்கிறேன்.

பொன்னம்பலத்தில்  சிதம்பரத்தில் ஆடும் நடராஜா, உன்னை நோக்கி அல்லவா தவம் செய்யவேண் டும்.உன்னை அல்லவா நினைக்க வேண்டும்?. அது ஒன்றே தான் என் பாபங்களைத் தவிர்க்க 
ஒரே வழி.

4.வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்
போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியமென்?
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே!

பட்டினத்தாரின் சிறந்த வாக்கியம்  '' காதற்ற ஊசியும் வாராது காண்  கடைவழிக்கே''  இது அவரது ஒரு நாலு வரி ப்பாடலில் கடைசி வரி.  அந்த முழுப்பாடலும்  தான் மேலே கொடுத்திருக்கிறேன். திருவருணாச்சலம் உறையும்  அண்ணாமலையானே, உன்  மென் மலர்ப் பாதங்களை எப்போதும் போற்றி  என் நெஞ்சம் புகழ்கிறது.  சே சசே,   இந்த பூமியில் தீமையை ஏற்படுத்தும் செல்வம்  எவ்வளவு இருந்தாலும் என்ன பயன்? தேடித் திரட்டி எவரும்  பார்க்காமல் திருத்தனமாக  மறைத்து வைத்துப் புதைத்த பொருள்  யாருக்கு என்ன பயன் தரும்? காது இல்லாத  சின்னதாக  ஒரு  ஊசி கூட  நாம் மரணமடைந்த பிறகு  நம்மோடு  கூட வரபோவதில்லை என்பது தான் ஸாஸ்வதமான  உண்மை.  நெஞ்சே  இதை புரிந்து கொள் . அடிக்கடி நினைத்துக் கொள்.

5.  ''இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தாம்'

என் மட நெஞ்சே! உலகத்தில்  நாம் இருப்பது பொய், போவதுதான் மெய் என்று எண்ணி, யாருக்கும் தீங்கு செய்யாதே. பருத்த தொந்தி நம்முடையது என்று நாம் நினைக்கிறோம், ஆனால் நாய்கள், நரிகள், பேய்கள், கழுகுகள் எல்லாம்  ஆர்வமாக   சில்க் ஜிப்பா  மறைத்துக்கொண்டிருக்கும்  நம்  தொந்தியை  பசியோடு இது என்றோ ஒருநாள் நமக்கு தான் ஆகாரம். காத்திருப்போம். கடவுளே சீக்கிரம் அதை எங்களுக்கு கொடு'' என்று  வாடி நிற்கின்றன, என்கிறார் பட்டினத்தார். என்ன தமிழ் நடை, என்ன தெளிவு, எவ்வளவு ஞானம். 

இன்னும் நிறைய  கொடுக்க நினைக்கிறேன். நீங்கள் படிப்பீர்களா?

sivan jaykay

unread,
Apr 14, 2025, 7:35:19 PM4/14/25
to amrith...@googlegroups.com

திருவாசகம் எனும் தேன்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

நாம் ஹிந்துக்கள். நமது சனாதன கோட்பாடுகள்  காலத்தால் புராதனமானவை. அழியாதவை. நமக்கு பெருமை சேர்ப்பவை. மற்ற மதங்கள் என்ன சொல்கிறது  என நம் கவனம் திசை திருப்ப வேண்டாம். நம்மைப் பொறுத்தவரை மனிதப் பிறவி  அரிதானது. கிடைத்தற்கரிய பிறவி. மறுபிறவி என்பது நாம் நம்புவது. நமது கர்மாவுக்கு ஏற்ப  அமைவது.  கர்மபலனுக்கேற்ப  கடைசியில்  பரம  ஞானம் அடையுவம் வரப்பிற்கு, மோக்ஷம் எனும் முக்தி கிடைக்கும் வரை பல பிறவிகள் நாம் எடுத்தே ஆகவேண்டும்.
வேத சாஸ்திரங்கள், பகவத்கீதை  இல்லம் இதைத்தான் திரும்ப திரும்ப நமக்குநினைவூட்டுகிறது.
நல்ல காரியங்கள், கர்மாக்களுக்கு தக்கவாறு  சொர்க்கமும், பாபங்களுக்கு ஏற்ப  நரகமும் அனுபவிக்கிறோம்.  மொத்தத்தில்  நரகமும் சொர்க்கமும் கடந்து, 84 லட்சம் யோனிகளில் பிறவிக்குப் பிறவி எடுக்கிறது  நமது உயிர். இதில் 84 லட்சம் யோனிகள்  என்ற எண்ணிக்கை எண்ணற்ற  பிறவிகள், வித வித  உருவங்களில் என்பது ஞாபகம் இருக்கட்டும்.  கடைசியில் மனிதப்பிறவி கிடைக்கிறது.  அப்புறம் தான்  மோக்ஷம்.

மாணிக்க வாசகர்  நாம்  திரும்ப திரும்ப  பல பிறவிகள் எடுப்பதை அற்புதமாக ஒரு திருவாசக பாடலில்
விளக்குகிறார். அது இது தான் ;


''புல்லாகிப் பூடாகிப் புள்ளினமாகி
வெள்ளாட்டியாகி விரிகடலாகி
மல்லாகி மானாகி யானையுமாகி
அல்லாவை யெல்லாம் அண்ணிப்பான் தன்னை
நல்லார்வ மெய்த நமசிவாயவே
சொல்லாய்மெய்ஞ் ஞானத் தொகை

நமது கர்மத்துக்கேற்ப நமக்கு பலவித பிறவிகளை அளிக்கும் பரமேஸ்வரனின்  பார்பக்ஷமற்ற அருளை மாணிக்க வாசகர் பாடுகிறார். 

"பரமேஸ்வரா  என்னை  சாதாரண அற்பமான புல்லாக பிறவியெடுக்க வைத்தாய். பூண்டுகளாகி பிறந்தேன், பூவாக பிறந்தேன்,  பல வித  பறவைகளாக  பிறவி எடுத்தேன்.  மே  மே  என்று  கத்தியவாறு வெள்ளாடாக  பிறந்தேன், மா ளப்பெறும் கடலாகவும் பிறந்த அனுபவம் எனக்கு உண்டு. வீரனாக , மல்லனாக , வனத்தில் திரியும் புள்ளி மானும் நான் தான் ஏதோ ஒரு பிறவியில்.  சக்தி மிக்க  பெரிய  யானையாக  ஒரு ராஜாவிடம் இருந்த பிறவியும் எனக்கு உண்டு.  பகவானே  நீ தான் நான்.   நான் தான் நீ.  ஆகவே  இதெல்லாம் நீ எடுத்த பிறவிகள் தான். வித வித  உயிரினங்கள். நீயே உன் மாயையில் உலகை படைத்து  ஆள்பவன்.  
"அல்லாவை யெல்லாம் அண்ணிப்பான் தன்னை" ஏதோ பிற  மதம் ஒன்றின் கடவுளை சொல்வதாக நினைக்க வேண்டாம். அல்லாவை எல்லாம்  என்றால் எல்லா உருவங்களையும் தன்னுள் எடுத்தவனே,  எப்பிறவி எடுத்தாலும்  கடைசியில் ஒருநாள் உன் திருவடி அடையவேண்டும் என்ற நல்ல  ஆர்வமும்  விருப்பமும் எனக்கு வேண்டும் அதை  எனக்கு தந்தருள்வாய்.   நமசிவாயா  என்று என்  நாவால் விடாமல் நான்  பாடவேண்டும்.இதுவே பிரம ஞானம் பெறும் வழி'' என்கிறார்  மணிவாசகர்.

திருவாசகத்தில் மாற்றொரு பாடலில் இதையே கொஞ்சம் மாற்றி பாடுகிறார்; 

''புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே ''

என் பிறவிகள், புல், பூண்டு, புழு, மரம், பல வித விலங்குகள், பறவைகள், ஊர்வன இனமாக, பாம்பு, பாறைக்கல், எண்ணற்ற உயிர்கள், கடல், கடைசியில்   ஒரு நல்ல மனிதன் என்று பிறந்தேன்.  ஆகவே இந்த பிறவியிலாவது  நமசிவாயா என்று  வேதநாயகா, ரிஷபாரூடா,  ஓங்கார ஸ்வரூபா, உன்னை மனதார போற்றி உன் திருவடி அடைந்து உய்ய  நீ தான் அருள் புரிய  வேண்டும்.  

sivan jaykay

unread,
Apr 14, 2025, 7:35:29 PM4/14/25
to amrith...@googlegroups.com
விஸ்வாவஸு  -       நங்கநல்லூர்   J.K. SIVAN

14.4.2025 முதல்  நமக்கு  விஸ்வாவஸு  என்கிற புது   தமிழ் வருஷம் ஆரம்பமாகிறது.   13.4.25 ஞாயிற்கிழமை கிழமை  51.16 நாழிகைக்கு நடு இரவுக்கு பின் காலை 02.38 க்கு பிறக்கின்றது அதனால் சித்திரை மாத விஷு புண்யகால தர்பணம் 14.04.2025 திங்கள் கிழமை காலை 7.00 மணிக்கு மேல் செய்யலாம்  என்று நண்பர்  வேதிக் ரவி சொல்கிறார். 

புதுசு என்றால் பெரிசுகளுக்கு கூட ஒரு தனி உத்ஸாகம். பழசெல்லாம் நினைத்துப் பார்க்கும். காது கேட்காமல் பல்லில்லாமல் வாய் நிறைய சிரிக்கும். ஆம். நாம் எல்லோருமே புதுமை விரும்பிகள். புதுசா துணி, புஸ்தகம், படம், என்பதிலிருந்து ஆட்சிவரை புதியதை எப்போதும் தேடுபவர்கள். அறுபது  எழுபது  வருஷ ப்ரயோஜனமில்லாத அருதப் பழசுக்கு பதிலாக அஞ்சு வருஷ புதுசு தொடர்ந்து இருந்தாலே போதும் என்று சேதி பலரிடமிருந்து எங்கும்  காதில் விழுகிறது.

நமது தேசத்தில்  ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு மொழி பேசுகிறோம்.  நமக்கு தமிழ் புத்தாண்டு சித்திரை மாதம் ஆரம்பம். வடக்கே  இதை குடி பட்வா என்று கொண்டாடுகிறார்கள். உகாதியும் குடி பட்வா கொண்டாடு பவர்களும்  தேசத்தில் பாதிக்கு மேல் உள்ள  தெலுங்கானா, ஆந்திர, மஹாராஷ்ட்ரா ஜனங்கள். தெலுங்கு பேசுபவர்களுக்கு உகாதி, கன்னடக்காரர்களுக்கு யுகாதி, சிந்தி ஆசாமிகளுக்கு  'சேதி சாந்த்'  என்று  நிறைய இனிப்புகளோடு இந்தியில். காஷ்மீர் காரர்கள் சும்மா இருப்பார்களா? ''நாவ்ரே''என்று ஏதோ விரட்டுகிற மாதிரி, கோபமாக அடிக்க வருகிறாற் போல் ஒரு பெயர்.   மணிப்பூரில் இந்த புது வருஷத்துக்கு என்ன பெயர் தெரியுமா? எங்கே சொல்லிப்பாருங்கள். அதற்குள் புது வருஷம் போய் அடுத்தநாள் வந்து விடும். எங்கே சொல்லுங்கள் அதன் பெயரை :'' சஜிபு நொங்மா பண்பா சீய்ரா ஒபா'' . நான் தான் ஓடிவிட்டேனே. என்னை நீங்கள் எப்படி அடிக்க முடியும்? ஒருவர்  அருகே   இன்னொருவர் வரமுடியாது   என்கிற தைரியம் எனக்கு.
புது வருஷத்துக்கு என்ன பேர் வைக்கலாம் எப்படி அழைக்கலாம் என்பது இருக்கட்டும்.   வழக்கமாக இந்த நாளில் என்ன செய்வார்கள் என்பதைச்  சொல்கிறேன். வீடுகளை சுத்தமாக்குவார்கள். பழசு வெளியேறும். புது துணிகள், மாவிலை, தென்னை ஓலை தோரணங்கள்வீட்டை அலங்கரிக்கும். . குடி என்றால் பொம்மை. மரப்பாச்சி யாக கூட இருக்கலாம். வீட்டு வாசலில் மூங்கில் பொம்மைகள் வேப்பிலை அலங்காரம் பண்ணி நிறைய தொங்கவிடுவார்கள். குளிக்காதவர்கள் கூட காலையிலேயே எழுந்து குளித்து எண்ணெய் தடவி தலை வாரி நெற்றிக்கு எது வழக்கமோ அதை பூசி நிறைய பேர் புதுவருஷ பஞ்சாங்கம் அந்தந்த பாஷையில் படிப்பதை கேட்க போய்விடுவார்கள். சாயந்திரம் கேளிக்கைகள், டான்ஸ். கூத்து கும்மாளம், சாப்பாடு. இதை இப்போது நினைத்து கூட பார்க்க முடியாது.

தமிழ் நாட்டில் நமக்கு தெரிந்த ஒரு வழக்கம். துன்பம், கசப்பான நிகழ்ச்சிகள் போக, வேப்பம்பூ வெல்ல பச்சடி. வேப்பம் பூ துயரத்தையும், வெல்லம் சந்தோஷத்தையும் சேர்த்து அனுபவித்ததை நினைவூட்ட. பச்சை மிளகாய் கோபம். உப்பு : பயம் . புளி : அருவருப்பு. அரை பழுத்த மாங்காய் : ஆச்சர்யம் இதெல்லாம் சேர்ந்தது தானே மனித வாழ்க்கை. நாம்ப கொழுக்கட்டை பண்ணுவோமே அதுபோல் பூரண போளி என்று ஒரு பக்ஷணம் மஹாராஷ்ட்ரர்கள் பண்ணுவார்கள். இது மாதிரி ஒன்றை பொப்பட்டு (bobbattu ) என்று தெலுங்கர்களும் ஹோலிகே, ஒப்பட்டு என்று கன்னடியர்களும் பண்ணி  சாப்பிடுவார்கள்.

"எல்லோரும் ஒன்றாக கூடி மகிழ்ந்து வாழ என்ன பாஷை பேசினால் என்ன? எந்த பக்ஷணம் இனிப்பாய் ஏதேதோ பேரில் சாப்பிட்டால் என்ன? நாம் எல்லோரும் இந்தியர்கள். பாரத  தேச புண்ய பிரஜைகள்.

புது வருஷம்  விஸ்வாவஸு பற்றி சொல்லட்டுமா?
சித்திரை மாதம் வருடத்தின் முதல் பருவமான வசந்த காலத்தின் முதல் மாதம். வண்ண வண்ண மயமாக பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதம். இந்த மாதத்திற்கு அதிதேவதை விஷ்ணு. விஷ்ணு என்றால் எங்கும் நிரம்பியுள்ளவர். அதிக ஒளி உடையவர் என்று பொருள். பகவத் கீதையில் பருவ காலங்களில் நான் வசந்த ருதுவாக இருக்கிறேன் என்று சொன்னதால் பகவானின் மதிப்பிற்குரிய மாதம். சித்திரை மாதத்தில் தான் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்தார்கள்.

தமிழ் வருஷங்கள் 60.  அவை பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும்... மீண்டும் பிரபவ ஆண்டுத் தொடங்கி அறுபது ஆண்டுகள் நடக்கும்... பிறகு மீண்டும் இப்படியே தொடரும்... இந்த வரிசையில் 39-வது ஆண்டின் பெயர் விசுவாவசு. விசுவாவசு என்றால் ''நேர்மையான பண்பாளர் ,தயாள சிந்தனை,செல்வந்தர்'' என்று அர்த்தம். 

இடைக்காட்டுச் சித்தர் நமது சித்தர்களில் ஒரு அற்புதமானவர். தமிழ் அறுபது வருஷங்களையும் நன்றாக ஆராய்ந்து அவை எப்படி இருக்கும் என்று தனது தீர்க்க தரிசனத்தில்  அறுபது வருஷ வெண்பாவாக எழுதி வைத்திருக்கிறார். அவர் கூற்றுப்படி  இந்த விஸ்வாவஸு நமக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? இயற்றியதாக கூறப்படும் அறுபது வருட வெண்பாவில்

 ''விசுவா வசு வருடம் வேளாண்மை யேறும்
பசுமாடு மாடும் பலிக்குஞ் - சிசுநாசம்
மற்றையரோ வாழ்வார்கண் மாதவங்கண்
மீறுமே யுற்றுலகி னல்லமழை யுண்டு.''

இடைக்காட்டு சித்தர் தீர்க்க தரிசனத்தின் படி பார்த்தால்  நாளை தொடங்கும் வருஷத்தில் விசுவாசு ஆண்டில் ஜோரான மழை பெய்யும். ஆற்றில் வெள்ளம் ஓடி,வயல்களில் வேளாண்மை செழிக்கும். ஆடு மாடு கோழி  நிறைய பெருகும். ஆனால்  குழந்தைகளுக்கு நோய்களால் தொந்தரவு ஏற்படலாம், ஜாக்கிரதை.  இன்னொரு முக்கியமான விஷயம். பகைவர்களுக்கு சிலரின் கூட்டணி, ஆதரவு கிட்டும்.  என்ன செய்வது? நல்லதும் கெட்டதும் கலந்தே நடக்கும். இந்த வருஷத்துக்கு ராஜா சூர்யன்.  அரசியல் கட்சிகளின் தலைவர்களில் மாற்றம் உண்டாகும்.  பாருங்கள் எப்படி கரெக்டாக இடைக்காட்டு சித்தார் அப்பவே யூட்யூப்  பார்க்காமலேயே சொல்லி இருக்கிறார். தொழிற்சாலைகள் கை மாறும்.  வெயில் கொளுத்தும், புயல் இருக்கும், மழை குளிரும் நிறைய இருக்குமாம். பூமியின்  காலநிலை கடுமையாக இருக்கும் என்கிறார்  சித்தர். 

எனக்கு பிடித்த  பஞ்சாங்கம் மஞ்சள் நிற பாம்பு பஞ்சாங்கம் விஸ்வாவஸு பற்றி  சொல்வது; 

 கலியாப்தம் 5126 சாலிவாகனம் 1947-1948 நவகிரக ஆதிபத்தியங்களில் இராஜா  சூர்யன். மந்திரி-சந்திரன், அர்க்காதிபதி சூரியன், மேகாதிபதி - சூரியன், ஸஸ்யாதிபதி - குரு, சேனாதிபதி சூரியன், இராஸாதிபதி - சனி, தான்யாதிபதி செவ்வாய், நீரஸாதிபதி - புதன், பசுநாயகர் - கோபாலன், வருஷாதிபதி தேவதை ஹிரண்ய கர்ப்பர்
சகல வித ஜீவராசிகளுக்கு சுபிக்க்ஷம் 1-க்கும் 2-க்கும் உடைய சனிபகவான் ஆட்சிபலம் பெற்று இந்த விசுவாவசு வருடம் இரஸாதிபதியாக பதவி வகிக்கிறார். சூரியன் பகவான் இவ்வாண்டு இராஜாவாகவும், அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதி வருவதால் உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கு (ஓசோன்) ஆக்சிஜன் முழுமையாக கிடைக்கும். இயற்கைவளம் பெருகும். மழை நன்றாக பொழியும். அணு ஆயுத உற்பத்தி அதிகரிக்க நேரும். இரும்பு எக்கு தளவாடங்கள் உற்பத்தி அதிகரிக்கும்.  உலகத்தில் உணவு பொருட்களின் உற்பத்தி அதிக அளவில் குறையக்கூடும். உப்பு உற்பத்தி அதிகரிக்க நேரும். விமான போக்குவரத்தில் பல அதி நவீன வசதிகள் ஏற்படும். எரிவாயு உற்பத்தி அதிகரிக்க நேரும் உடனுக்குடன் விலை வாசியும் அதிகரிக்க நேரும். மருத்துவத்தில் இந்தியா முதலிடம் வகிக்க நேரும். , இவ்வாண்டு நீல மேகம் கிழக்கு திக்கில் உற்பத்தி ஆவதால் வடமாநிலம் கடுமையாக வெள்ளத்தில் பாதிக்க நேரும். மரக்கால் (குறுணி) மழையும் இவ்வாண்டு ஆதாயம் 65, விரையம் 59, வருவதால் அதிகமான ஆதாயம் 06 வருவதால் பல நலத்திட்டங்களை மத்திய மாநில அரசாங்கம் அறிவிக்க நேரும். புதிய வரிகள் விதிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். தனியார் நிறுவனங்கள் அதிக அளவிலான பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்.
குரு பகவான் சித்திரை மாதம் 28-ந் தேதி ஞாயிறுக்கிழமை (11.05.2025)) மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புரட்டாசி மாதம் 22-ந் தேதி புதன் கிழமை (08.10.2028)|கடகம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். தேவகுருவாகிய குரு அசுர சுக்கிரன் வீட்டில் செய்வதாலும் 09-பார்வையாக லக்னத்தை பார்ப்பது உகந்த காலம் ஆகும். இதனால் குடிநீர் தேவை அதிகரிக்க நேரும். அடிக்கடி மின்சாரம் தடைகள் ஏற்படும். உற்பத்தி ஆகும். மோட்டார் ரக பேட்டரி வாகனத்தில் உற்பத்தி அதிகரிக்கும், பொது இடங்களிவு போக்குவரத்து 
நெரிசல் அதிகரிக்க நேரும். பல புதிய ரக மோட்டார் ரக வாகனங்கள் அதிக அளவில் உருவாகும்.  அந்நிய நாடுகளின் முதலீடு அதிக அளவில் இந்தியாவிற்கு  வர வாய்புள்ளது. மஞ்சள் விலை ஏறி இறங்கும். பொன் தங்கம் வெள்ளி விலை உச்சத்தை தொடும். மருந்து பொருட்களின் விலை அதிகரிக்க நேரலாம். நிலக்கரி இரும்பு சுரங்கங்கள் பெட்ரோலிய கிணறு போன்றவற்றில் விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். உலக ஜெகத் ஜாதகத்திற்கு மகரம் லக்னம் ஆகும்.  இந்தியாவில் பல புதிய சுத்த சம்மந்தப்பட்ட  வெளிநாடுகளில் இருந்து தொற்று கிருமி பரவ நேரும். இந்த ஆண்டு 08-க்குடைய அஷ்டமாதியான ராஜ கிரஹமாகிய சூரியன் பசுவான 4 பதவிகளை வகிப்பதாலும் தனது நட்பு வீடான மீனத்தில் அமர்ந்து ஆட்சி பெற்று 7-ஆம் பார்வையாக புதன் வீட்டையும் 10-ஆம் பார்வையாக குரு பகவான் வீட்டையும் பார்ப்பதால் போலி பொருட்கள் அளவுக்கு அதிகமாக புழக்கத்தில் இருக்கும். நிலுவையில் உள்ள அனைத்து கோர்ட் கேஸ் வழக்குகள் உடனுக்குடன் முடிக்கு வரும், 5-க்கும் 3-க்கும் உடைய புதன் பகவான் மீனத்தில் நீச்சம் பெற்று இருப்பதால் பெண்களுக்கு அவமாரியாதை நடைபெறலாம். பாலியல் தொல்லைகள் அதிக அளவில் நடைபெற வாய்ப் புள்ளது. தீர்த்த யாத்திரை புனிதபயணம் செல்பவர்களுக்கு பல தொல்லைகள் ஏற்படும் சற்று ஜாக்ரதையாக பிரயாணம் செய்வது நலம் தரும். பூச்சி-கருவண்டு போன்ற ஜீவராசிகள் அதிக அளவில் இனபெருக்கம் செய்யும்.  சித்திரை மாதம் 01-ந்தேதி திங்கள் கிழமை வருவதால் தண்ணீர் பிரச்சனை இருக்காது. இந்த விசுவாவசு ஆண்டு இரவில் பிறப்பதால் உலக அளவில் புதிய வைரஸ் நோய் தாக்குதல் வரலாம். ஐப்பசி மாதம்  01-ந்தேதி சனிக்கிழமை வருவதால் வெங்காயம் தக்காளி சிறுதான்யம் வகைகளின் விலை உயரும். பூண்டு  ஏலக்காய் தேங்காய் மாங்காய் புளி போன்றவை விளைச்சல் அதிகரிப்பதுடன் விலை உயர்வும் இருக்க கூடும். சிறுபான்மையினர் வாழும் இடத்தில் ஏவுகணை தாக்குதல்கள் அதிகரிக்க கூடும். திருட்டு நில அபகரிப்பு,  பெண்களுக்கு எதிரான வழக்கு அதிகரிக்க நேரும்.
பஞ்சாங்கம் சொல்வதைப் படித்துவிட்டு  பயப்பட வேண்டாம்.  நல்லது கெட்டது  எல்லாம் நாம் எப்படி ஒவ்வொரு சம்பவத்தையும்  உள் வாங்க்கிக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது.  பகவான் மேல் நமக்கு நம்பிக்கை உண்டு.  நம்பினோர் கைவிடப்படார். பகவான் சர்வ லோக ரக்ஷகன். அவன் குழந்தைகளை அவன் நன்றாக பாதுகாப்பவன். அவனைச் சரணடைந்து நமது கடமைகளை செய்வோம்.  பஞ்சங்ககள் ஜோசியர்கள் இப்படித்தான் ஒவ்வொருவருஷமும் சொல்வார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். அது அவர்கள் கணிப்பு. எல்லாவற்றுக்கும் மேலே ஆண்டவன் முடிவு என்பது வேறு. 

எல்லோருக்கும்  எனது மனங்கனிந்த விஸ்வாவஸு  தமிழ்ப்   புத்தாண்டு வாழ்த்துக்கள்.

sivan jaykay

unread,
Apr 15, 2025, 7:51:09 PM4/15/25
to amrith...@googlegroups.com
குந்தியின் பிரார்த்தனை. ----நங்கநல்லூர்  J K  SIVAN 
பதிவு 1 

ராமன் கதை அற்புதம் என்றால் கிருஷ்ணன் கதை அதி அற்புதம். ரெண்டு கண்களில் எது சிறந்தது? 
ஸ்ரீ ராமன் ராஜகுமாரனாக பிறந்து வாழ்ந்து ராஜாவாகவே மறைந்தான். கிருஷ்ணன் ராஜகுமாரனாக பிறந்தும் ஒரு சாதாரண பசுமேய்க்கும் இடையர் குடும்பத்தில் வளர்ந்து எல்லோருடனும் இயற்கையாக சகஜமாக பழகினவன். குந்தி ஒரு ராணி. குந்தி போஜன் மகள். துர்வாசரால் புகழப்பட்டவள். பக்தை.  மிகவும்  பொறுமையோடு வாழ்வில் தான் எதிர்கொண்ட கஷ்டங்களை எல்லாம் கிருஷ்ண பக்தி யோடு ஏற்றவள்.  பாண்டவர்களின் தாய்.

 கிருஷ்ணன் பங்கேற்ற பாரத யுத்தம் முடிந்து பாண்டவர்கள் கௌரவர்களைக் கொன்று வெற்றி பெற்று ஹஸ்தினாபுரத்தில் பாண்டவர்களோடு சில காலம் தங்கி  கிருஷ்ணன் துவாரகை திரும்புகிறான். போகுமுன் எல்லோரிடமும் விடை பெறுகிறான். குந்திதேவியை வணங்கி விடை பெறும்போது அவள் கதறுகிறாள். அவனை பிரார்த்திகிக்கிறாள். எங்களை விட்டு போகாதே என்கிறாள்.... அதை 25 ஸ்லோகங்களாக ஸ்ரீமத் பாகவ தத்தில் 8வது காண்டத்தில் படித்து சுருக்கமாக சொல்கிறேன்.

 ''ஹே பரிபூர்ண பரமாத்மா, தேவாதி தேவா, சர்வ பிரபஞ்ச காரணா, எங்கும் நிறை மனமோஹனா, உள்ளும் புறமும் வியாபித்தருளும் வாசுதேவா, உன்னை கையெடுத்து கும்பிடும் பாக்யம் பெற்றதற்காகவே உன்னை வணங்குகிறேன் கிருஷ்ணா'' என்கிறாள் குந்தி தேவி.'

கிருஷ்ணா, நானோ ஒரு எழுத்து வாசனை அற்ற, அஞ்ஞானி, கல்வி அறிவற்றவள், மாயத்தோற்றம் கொண்டு மதி மயக்கும் கண்ணா, கபட நாடக சூத்ரதாரி, உன்னை அறிந்து கொள்ளும் திறன் இல்லாதவள் நான். எளிதில் மாயையின் வலையில் விழுந்து அவஸ்தைப்  படுபவள்.

''என் அப்பனே, ஜெகன்னாதா, உன்னை சகலமும் உணர்ந்த ஞானிகளே கண்டறியமுடியாதபோது. மறையோதும் ஞானியர் கண்ணுக்கே மறைந்து இருப்பவனான நீ, என் போன்ற எளிய பேதை, அறிவற்ற ஜீவனுக்கு, புரிபடுவாயா ? உன்னை அறியும் சக்தி எனக்கு ஏது?. உன் மீது பக்தி ஒன்றையே எப்போதும் செலுத்தி உன் அருள் கிடைப்பதற்கே பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் நான்.

தேவகி மைந்தா வாசுதேவா, யசோத நந்தனா, நந்த குமாரா, கோவிந்தா, உன்னை திரும்ப திரும்ப விழுந்து வணங்குவதே நான் செய்ய முடிந்தது கண்ணா. பசுக்களை ரக்ஷிப்பதால் தானே நீ கோ விந்தன் என்ற பெயர் கொண்டவன். அதற்கு தானே பிருந்தா வனத்தில் நந்தகோப குமாரனாக தோன்றியவன்.

''नम: पङ्कजनाभाय नम: पङ्कजमालिने ।नम: पङ्कजनेत्राय नमस्ते पङ्कजाङ्घ्रये ॥५॥    5 (8.22)
நம: பங்கஜநாபாய நம: பங்கஜ மாலினே நம: பங்கஜநேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே’’

(இந்த ஸ்லோகத்தை  நான் ஐந்தாறு வயது சிறுவனாக இருந்தபோது என் அப்பா தினமும் காலையில் சொல்லும்போது கேட்டது  என் மனதில் பதிந்து,  86ல் இப்போதும் நினைவிலிருக்கிறது. அப்போது ஏதோ காதுக்கு இனிமையாக இருந்ததே தவிர அர்த்தம் தெரியாமலேயே  ரசித்தேன்.)

 பத்மநாபா, எண்ணற்ற எனது நமஸ்காரங்கள், தாமரை கண்களை உடையவனே, வனமாலி , வாசுதேவா, பத்மலோசனா, நினது தாமரைத் திருவடிகளை தொழுகிறேன்.

''கிருஷ்ணா, ஹ்ரிஷிகேசா, எதைச்சொல்வேன் எதை விடுவேன்?. நீ செய்த உதவிகள் எக் காலத்திலும் மறக்க முடியாதவை அல்லவா? . நீ உன் தாய் தேவகியை, தந்தை வசுதேவரை மட்டுமா கம்சனின் சிறையிலிருந்து மீட்டவன்? என்னையும் என் குழந்தைகளையும் அல்லவா இடைவிடாத, எண்ணற்ற துயர துன்ப கொடுமை யின் சிறைகளிலிருந்து மீட்டவன். மஹாத்மா, பரமாத்மா, உன்னை தஞ்சம் அடைந்தல் லவோ நாங்கள் ஜீவிக்கிறோம்.
''கிருஷ்ணா, அப்பப்பா, இப்போது நினைத்துப் பார்த்தால் கூட என் உடல் நடுங்குகிறதே. ஒன்றா இரண்டா எங்களுக்கு வந்த சோதனை கள். சிறுவயதிலேயே என் பிள்ளைகளுக்கு விஷ உணவை கொடுத்தான் துரியோதனன். அரக்கு மாளிகையில் கூண்டோடு எங்களை தீயில் எரிக்க திட்டமிட்டான். எண்ணற்ற அசுரர்களை எங்கள் வாழ்வில் சந்தித்தோம். காட்டில் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி அலைந்தோம், ஒருநாளா இரு நாளா, பன்னிரண்டு வருஷங்கள், படைகளை வேறு ஏவி எங்களை அழிக்க ப்ரயத்தனம் செய்தான். மஹா ரதர்கள் எதிர்த்தார்கள். கடும் ஆயுதங்கள் அஸ்திரங்கள் என் குழந்தைகளை அழிக்க வந்தன. துரோணன் மகன் அஸ்வத்தாமன் எங்கள் வம்சத்தை நாச மாக்கினான். அவனது கொடிய பிரம்மாஸ்திரத்திலிருந்து உத்தரை வயிற்றில் பாண்டவ வம்சம் வளர பரீக்ஷித் உயிரை  நீ தானேயப்பா  காப்பாற்றினாய். எந்த துன்பம் வந்தபோதிலும் அவற்றிலி ருந்தெல்லாம் அவ்வப்போது தக்க தருணத்தில் வந்து எங்களை காப்பாற்றினவன் நீ அல்லவா? தீன ரக்ஷகா. திக்கற்றோர்க்கு தெய்வமே துணை என்பதின் அர்த்தம் புரிய வைத்தவனே கிருஷ்ணா.

எனக்கு துன்பம் தொடரட்டும், துயரம் நீடிக்கட்டும், உன்னை அவ்வப்போது நினைப்பேன் உன் அருள் பார்வை என்மீது படுமே என்ற நம்பிக்கை. அதுவே எனக்கு ஸ்வர்க்கம், மோக்ஷம், அழியாத செல்வம்.
என்னப்பனே,  கிருஷ்ணா,அவ்வளவு சீக்கிரம் மறந்து விடும்படியாகவா நீ எங்களுக்கு உதவியவன்!
விஷத்தில் உணவை வைத்து என் குழந்தைகளை உண்ண வைத்தான் துரியோதனன். ஆனால் அவர்கள் இன்றும் உயிரோடு இருப்பதே உன்னால் தான்.

 இருட்டில் ஒரு வீட்டில் அப்படியே  தீ மூட்டி  எங்களை  கூண்டோடு கைலாசம் செல்ல துரியோதனன் திட்டம் போட்டான். அதுவும் ஏதோ ஒரு கெட்ட கனவு போல முடிந்தது உன்னால் தானே. எத்தனை ராக்ஷஸர்கள் -- அப்பப்பா, அவர்கள் அத்தனை பேரையும் கொன்றுவிட முடிந்ததே உன்னால் தான். காட்டில் தான் எத்தனை வருஷம் எத்தனை கஷ்டங்கள். எல்லாம் முடிந்து கொஞ்சமாவது வாழ்வோம் என்று நினைக்கும்போது ஒரு மஹா பாரத யுத்தம். உலகின் சிறந்த சக்திமான்கள் எதிர்த்தார்கள். அவர்களை எல்லாம்  என் பிள்ளைகள்  வென்று இன்று வாழ்வதே உன்னால் தானே.

கிருஷ்ணா, எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா? இது போல்,  மலை  மலையாக  நிறைய கஷ்டங்கள் தொடர்ந்து எனக்கும் என் மக்களுக்கும் மேலும் மேலும் வரவேண்டும். அப்போது தான் நீ எங்களோடு இருந்து எங்களை உய்விப்பாய். காப்பாற்றுவாய். கஷ்டங்களிலிருந்து தீரும் நிம்மதியை விட நீ  எங்களோட அருகில் இருக்கும் சுகம், அடாடா, வார்த்தையில் விவரிக்கமுடியாத ஒரு இன்பம்.

சிறு குழந்தை பிரஹலாதன் படாத கஷ்டமா? அவனை எல்லாவித கஷ்டங்களிலும் இருந்து காப்பாற்றியவன் நரசிம்மராக வந்த நீ தானே. கஷ்டம் வர வர தான் பக்தன் உன்னை நினைக்கிறான். தேடுகிறான். நீயும் கருணை புரிய ஓடி வருபவன்.

இந்த உலகத்தில் ஏன் கஷ்டம் எங்களுக்கு என்றால் உலகமே கஷ்டமயமானது. என்னதான் கஷ்டம் சூழ்ந்தி ருந்தாலும் ''கிருஷ்ணா'' என்ற உன் பெயருக்கு தான் எவ்வளவு சக்தி அப்பா!! அத்தனை துன்பங்களும் சூரியன் முன் பனித்துளி தான். ஹரே கிருஷ்ணா என்ற வார்த்தையே பெரிய தபோபல சக்தி அல்லவா?

என் கஷ்டங்களை வரிசைப்படுத்தி சொன்னேனே. இனி அந்த மாதிரி துன்பங்கள், துயரங்கள் கஷ்டங்கள் என்னை அணுகக் கூடாது என்பதற்காகவா? இல்லவே இல்லவே, லோகநாயகா, லோக சம்ரக்ஷகா, என் அருமை கிருஷ்ணா,   இதோ பார் உன்னிடம் என் பிரார்த்தனை விசேஷமானது. நான் எல்லோரையும் போல் இல்லை. எனக்கு இதைவிட இன்னும் அதிக துன்பங்கள் துயரங்கள் கஷ்டங்கள் மேன் மேலும் வரவேண்டும், தொடர வேண்டும். ஏன் தெரியுமா? அப்போது தான் என் மனம் எப்போதும் உன்னையே தேடும் ,உன்னை  வேண்டும். நீயும் உடனே வருவாய். அப்படியாவது உன்னோடு இருக்க முடியும் இல்லையா கிருஷ்ணா? உன் முகம் தோன்றினவுடனேயே கதிரவனைக் கண்ட பனி போல் என் துன்பங்கள் என்னை விட்டு ஓடுமே.. உன் முகம் ஒன்றே எனக்கு சகல சந்தோஷங்களையும் வார்த்தையில் வர்ணிக்க இயலாத,  விவரிக்கமுடியாத மகிழ்ச்சியை, ஆனந்தத்தை அளிக்குமே பரந்தாமா. அதற்கப்புறம் பிறப்பேது இறப்பேது?..

செல்வம் மட்டும் எதிர்பார்த்ததற்கு மேல், அல்லது அவன் எதிர்பாராமலோ, ஒருவனிடம் சேர்ந்துவிட்டால் ஆஹா, அடுத்த கணம் அவன் குணம் மாறிவிடும். அவன் கர்வம் தலைக் கேறி விடும். கடவுளா யார் அது?, என்னைவிடவா அவன் புத்திசாலி, சக்திமான்?  என்ற அகம்பாவம் இவனுக்கு மட்டும் அல்ல இவனுக்கு முன்பே பல ராவணர்களுக்கு, கம்சர்களுக்கு, துரியோதனர்களுக்கும்  இருந்தது தானே.

செல்வம் மட்டும் அல்ல, பக்தியற்ற கல்வி  கூட ஒருவனை மண்டை பெருக்கச் செய்துவிடும். நாம் தான் பார்க்கி றோமே  அன்றாடம் ஒவ்வொருவனும் பேசுவதை.  கிருஷ்ணா,  உன் பேரைச் சொல்லும் பாக்யம் 
இழந்தவர்கள் அவர்கள்.  எதுவுமே தனதில்லை, தனக்கில்லை என்று உணர்ந்தவனிடம் தானே நீ  இருப்பவன்.
நமஸ்காரம் கிருஷ்ணா, ஒன்றோ ரெண்டோ சொன்னால் போதாது. வாழ்நாள் பூரா, அடுத்து வரும் ஜென்மங்களில் எல்லாம் கூட  நாங்கள்  விடாமல்  உன் பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். பரம தாரித்ரியத்தில் இருந்த எங்களை வாழவைத்த தெய்வமே. எங்கள் மீது அன்பு கொண்ட பக்தவத்சலா, பேரானந்த ஸ்வருபனே, சாந்த மூர்த்தி, ஆபத் பாந்தவா,  உன்னை தாள் தொட்டு வணங்குகிறேன் அப்பா. கிருஷ்ணா, ஏழை பங்காளா. இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டவன், எதிலும் விருப்பு வெறுப்பற்றவனே, பரமானந்த மூர்த்தி உன்னை நமஸ்கரிக்கிறேன்.

தீனர்களுக்கு தானாகவே நேரே சென்று அருள் புரிந்து பாவம் தீர்த்து மோக்ஷம் தரும் தீன பந்து, உன்னை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். நீயே ஏழைகள் எங்களது பெரும் செல்வம். 

அழகிய நீல வண்ணா, நீ ஆதி அந்தமில்லாத அருட்பெருஞ்சோதி. காலகாலன். சர்வ வியாபி. ஓயாமல் ஒழியாமல் உதவும் ஏழை பங்காளன்.   நீ   காலத்தால் மாறாத ஸாஸ்வதன். புருஷோத்தமன்.  ஆதி அந்தமில் லாதவன். சர்வவியாபி. காருண்ய மூர்த்தி. அஞ்சேல் என அடைக்கலம் கொடுப்பவன்.  எங்கும் எதிலும் நிறைந்தவன். எங்களைப் போன்று உணர்ச்சிகளால் உந்தப்படாதவன்.''

கடல் மடை திறந்தது போல  கண்களில் நன்றிக் கண்ணீரோடு எதிரே  ''போகாதே'' என்று கெஞ்சியவாறு தேரைப்பிடித்துக்கொண்டு நிற்கும் குந்தியை கிருஷ்ணன் பார்த்துக்கொண்டே  நிற்கிறான். அவளோ   உணர்ச்சி வெள்ளத்தில் கண்ணன் செய்த உதவிகளை வரிசைப்படுத்தி சொல்லி  பிரிய மனமில்லாமல் அரற்றுகிறாள். இனி ஹஸ்தினாபுரத்திற்கு கண்ணன் வரப்போவதில்லை. குந்தியும் இனி கண்ணனை காணப்போவதில்லை  என்ற எண்ணம் அவளை வாட்டுகிறது.

தொடர்ந்து சொல்கிறேன். 

sivan jaykay

unread,
Apr 16, 2025, 8:11:23 PM4/16/25
to amrith...@googlegroups.com

ஹனுமான் க்ஷேத்ரம்   -   நங்கநல்லூர்  J K  SIVAN 

பஞ்ச பூதங்களில் நீரைப்பார்க்கிறோம், கடல், ஆறு  வெள்ளம், சுனாமி எல்லாம் கண்ணுக்கு தெரிகிறது. பூமியை பார்க்கிறோம், மலை, காடு, வயல், பாலைவனம், சேறு பள்ளம்  என்று பலவகையாக தோற்றம் அளிக்கிறது. நெருப்பு பயப்பட வைக்கிறது. அதன் வெப்பம்  விரட்டியடிக்கிறது.  காட்டுத்தீயை அணைக்கவே முடியவில்லை, ஆகாசம் எங்கும் பரத்து விரிந்து எல்லையற்றதாக இருக்கிறது. ஆனால் காற்றை அனுபவிக்க தான் முடிகிறது கண்ணால் பார்க்க முடியவில்லை.  சூழல், சூறாவளி என்று அதன் கோர விளைவை அனுபவிக்கிறோம்.  

ஹனுமான் வாயு புத்ரன். அவனை அனுபவிக்கலாம். அவன் சிரஞ்ஜீவி எங்கும் நிறைந்தவன். ராம சப்தம் கேட்கும் இடத்தில் நிச்சயம் அவன் இருப்பவன்.  இன்றும் என்றும்  உள்ளவன் ஹனுமான்.

ஹிமாலய நிசப்தத்தில்  பனி  சிகரங்களில் அவன் ராம ஜபம் பண்ணிக்கொண்டு தவத்தில் இருப்பவன். கேதார்நாத் குகைகளில் உள்ளான்.  அடர்ந்த காடுகளில்  ராம ஆலயங்களில் அவன் உள்ளவன்.  ஹனுமனை தரிசிக்க  புராணங்கள் பல  க்ஷேத்ரங்களை  முக்கியமாக  குறிப்பிடுகின்றன.

ராமேஸ்வரம்  ராம க்ஷேத்திரம் என்பதால் ஹனுமான் அங்கே  எப்போதும் இருப்பவன். கந்தமாதன பர்வதம் ஹனுமான் ஸாஸ்வதமாக  உறையும் ஸ்தலம்.  நாம்  ராமேஸ்வரம் சென்றபோது ஒரு சிறு மலையை காட்டினார்கள். அதன் மேல் ஏறி நின்ற ஞாபகம் இருக்கிறது.  ராமேஸ்வரம் தீவில் அமைந்துள்ள  இந்த குன்றின் மீதிருந்து தான் ஹனுமான் இலங்கையை நோக்கினான் என்பார்கள்.  ராமேஸ்வரம்  ஸ்ரீ  ராமநாதசுவாமி கோயிலிலிருந்து சுமார் 3 கி.மீ.  அங்கே  ராமர்  பாதம் தரிசித்தேன். இந்த குன்று ராமர் பாதம் என்ற பேரில் தான் பிரபலம்.  எனக்கு முன் பல  ஆயிரம் வருஷங்களுக்கு முன் விபீஷணன் ராமரை சந்தித்த இடம். நம் கண்ணுக்கு தெரியாமல் இங்கு உள்ள ஹனுமான் கண்ணுக்கு நாம் தெரிவோம். இன்னொரு விசேஷம் இங்கே  பஞ்சமுக ஹனுமான் உள்ளார்.  அஹிமஹி ராவணர்கள்  ராமலக்ஷ்மணர்களை கடத்திச் சென்றபோது ஐந்து முகங்களோடு ஹனுமான் சென்று  அவர்களை மீட்டு வந்தான் என்று புராணம் சொல்கிறது.   ஹனுமான் முகத்தோடு, நரசிம்மர், வராஹர், கருடன், ஹயக்ரீவர் முகங்களும் சேர்ந்துள்ளது. ஆகவே அளவற்ற சக்தி கொண்ட ஹனுமான்.  சிரஞ்சீவியாக ஹனுமான் என்றும் நமக்கு இங்கே  அருள் பாலிக்கிறார். 

வடக்கே  கைலாச பர்வதம் அருகே  மானசரோவர் ஏரி உள்ளதே  அங்கும்  ஹனுமனை தரிசிக்கிறோம். அங்கே வயதானவர்கள் எளிதில் போகமுடியாது. ஆகவே மானஸரோவரை மானசீகமாக நான்  கண்ணை மூடிக்கொண்டு தரிசிக்கிறேன். ஹனுமான் அருள் வேண்டுகிறேன். வேதவ்யாஸருடனும்  மஹாபலி சக்ரவர்த்தியோடும் ஹனுமான் இங்கே  உலவி இருக்கிறான். இன்னும் உலவுகிறான். 

நான் சமீபத்தில்  சென்று வந்த  சித்ரகூடத்தில் இன்னும் ஹனுமனை சுவாசிக்க முடிகிறது. ராமன் பதினோரு வருஷங்கள் இருந்த இடமல்லவா?. ஹனுமான் தாரா என்ற ஒரு  ஹனுமான் கோவில்  அங்கே இருக்கிறது. ராவணன் வாலில் தீ  மூட்டியபிறகு லங்கை அரண்மனைகளை அழித்துவிட்டு உஷ்ணத்தோடு ஹனுமான் திரும்பியபோது சித்ரகூடத்தில் தான் கொஞ்சம் ஓய்வெடுத்து வாலின் உஷ்ணத்தை போக்கிக்கொண்டதாக  ஐதீகம். 

சமீபத்தில் அயோத்தி சென்றபோது  ஒரு மலை மேல் ஏறினேன். அதாவது  நிறைய படிக்கட்டுகள் ஏறி மேலே  ஹனுமனை தரிசித்தேன்.  ஹனுமான் க்ரஹி  என்று அந்த ஆலயத்துக்கு பெயர். ராம் லல்லா கோவில் அருகேயே உள்ளது. கும்பல் தாங்கமுடியவில்லை.  அங்கிருந்தபடியே  அயோத்தி ராமனை ஹனுமான் கண்கொட்டாமல்  இன்றும் என்றும்  பார்த்துக்கொண்டிருக்கும் ஸ்தலம் இது. அனுமன் வீடு என்று அர்த்தம் உள்ள ஹனுமான் க்ரஹி. 

கர்நாடகாவில்   ஹம்பி நகரம் அருகே  அஞ்சனாத்ரி என்று மலை ஹனுமான் பெயரில் இருக்கிறதே தெரியுமா?  ஹனுமான் பிறந்த இடம் அது. தனக்கு  பிள்ளை பிறக்கவேண்டும் என்று ஹனுமானின் தாய் அஞ்சனை தவமிருந்த இடம்.  கிட்டத்தட்ட  அறுநூறு  படிகள் ஏறவேண்டும். ஹநுமானால்  படியேறாமல் எந்த மலை உச்சிக்கு பறந்து  செல்ல முடியும். நாம் மெதுவாக மூச்சு வாங்கிக்கொண்டு நடக்க வேண்டும். 
ஹனுமான் இருக்கும் சோளிங்கர் மலையோ , திருபதியோ, எதுவாக இருந்தாலும்  ஏறமுடிந்தவர்கள் சென்று ஹனுமனை தரிசிக்கலாம். முடியாத முதியவர்கள், மனதிலேயே அத்தனை மலைகளையும்  கண்மூடி  தரிசிக்கலாம். அதற்கும் உதவுபவன் தான் ஹனுமான் எனும் கருணை வள்ளல்.  ஹனுமான் வாயு புத்ரன்.  காற்றுள்ள இடத்தில் அவன் இருப்பவன். எனக்கு மூச்சு சுவாசம் உள்ளவரை அவன் என்னுள்ளே இருந்து தானே ஆகவேண்டும்.!

sivan jaykay

unread,
Apr 16, 2025, 8:11:23 PM4/16/25
to amrith...@googlegroups.com
குந்தியின்  பிரார்த்தனை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
பதிவு 2

''என் அருமை கிருஷ்ணா,  நீ சாதாரணனாக தோன்றினாலும்,  ப்ரபஞ்சத்துக்கே  ஆத்மாவானவன்.   சகல ஜீவன்களுக்கும்  ஆதார  ப்ராணன்  நீ. என் போன்றவர்களின் சிற்றறிவுக்கு  எட்டாதவன். வேண்டியது வேண்டாதது இல்லாதவன்.   பாரபக்ஷமில்லாத கருணா சாகரம்.  என்போல்  உன்னை வேண்டுபவர்களுக்கு  அருள்பவன். காண்போர்க்கு கண்ணிறைந்து காணும் கண்ணன் .
 
''கிருஷ்ணா, நீ செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும், சொல்லும் வார்த்தைக்கும் எத்தனையோ அர்த்தங்கள், காரணங்கள் இருக்கிறதே. நீ எவருக்கும் உடந்தையும் அல்ல, விரோதியும் இல்லை. சர்வ ஜீவன்களிடமும் அன்பு கொண்ட ரக்ஷகன் நீ. எனக்கு உன்னை நன்றாக தெரியும். பார்ப்பவர்களுக்கு நீ தவறு செய்பவ னாகவோ, தவறுக்கு உடந்தையாக இருப்பது போலோ, வேண்டியவர் வேண்டாதவர் என்ற பக்ஷபாதம் உள்ளவன் போலவோ  தெரிவாய். அப்படி  எண்ணுபவர்கள்  உன்னை அறியாத அஞ்ஞானிகள். நீ எதுவும் எவரிடமும் தேவையற்றவன்.  எல்லாமே உன் செயலால் நடந்தாலும்  எந்த கர்மத்திலும்  சம்பந்தமில்லாதவன் பரம் பொருள். என் மனம் நீ அறிவாய், உன்மனம் நான் அறிவேன்.

''கிருஷ்ணா,  பிரபஞ்ச காரணனே.  பரம ஆத்மாவே,  எனக்கு தலை சுற்றுகிறது.   நீ  ஒரு புதிர்.  புரிபடாதவன்.  ஏன் தெரியுமா?  உனக்கு என்று எந்த காரியமும் இல்லை.  ஆனால்  எல்லா காரியத்தையும்  நீயே  செய்பவனாக இருக்கிறாய்.  ஜனன மரணம் இல்லாதவன் நீ என்றாலும் நீ எல்லாவற்றிலும் தோன்றி மறைகிறாய். மரமாகவும், மன்னிக்கவும், மாந்தராகவும், மக்களாகவும் , மஹரிஷிகளாகவும், மலர்களாகவும் உன்னை காண்கிறேனே.''

குந்தி கிருஷ்ணனை மனத்திலே இறுக்கி பிடித்து வைத்துக் கொண்டவள். இருந்தாலும் கிருஷ்ணன் ''அத்தை, அப்போ, நான் போய் வரட்டுமா?'' என்ற அவன் கேள்வி அவளைத் துளைத்தது. இவனைப்  பிரிவதா, அது முடிவதா?  என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லையே என ஏங்குகிறாள்,

'கண்ணா, நீ இங்கேயே இரு.. என்கிறாள். பழசை எல்லாம் நினைக்கிறாள், கெஞ்சுகி றாள்..வேண்டுகிறாள்....

''அப்பா, கிருஷ்ணா,  ஒன்றன் பின் ஒன்றாக எனக்கு பழைய நினைவுகள் தொடர்ச்சியாக மனக்கண் முன் வருகிறதே. சொல்கிறேன் கேள்.

உன்னை ஒருநாள் யசோதை என்ன செய்தாள் என்று ஞாபகம் வருகிறதா? உன் விஷமம் தாங்கமுடியாமல் போய் விட்டது. எப்போதும் உன்னைப்பற்றி எல்லோருமே அவளிடம் புகார்கள் கொடுத்த வண்ணம் இருந்தால் அவள் என்ன செய்வாள்?   எப்படி உன் விஷமத்தை குறைப்பது. அவளுக்கு தோன்றிய ஒரே யோசனை. உன்னை வெளியே விடாமல் எப்படி நிறுத்துவது?. ஆம், ஒரே வழி உன்னை கட்டிப்போட வேண்டியது தான். ஒரு சிறு தாம்புக்கயிறு கண்ணில் பட்டது. .ஓஹோ. அதனால் தான் கண்ணினுள் சிறு தாம்போ!, ''வாடா இங்கே'' என்று  அவளிடமி ருந்து தப்பி ஓடிய   உன்னை இழுத்துப்  பிடித்து வயிற்றில் கயிற்றைக்  கட்டி அதன் மறுமுனையை எதோடு கட்டுவது? கண்ணில் ஒரு உரல் தென்பட்டது. உன் வயிறும் உரலும் கயிறோடு இணைந்தன.

''இப்போ எப்படி வெளியே ஓடுவாய், எப்படி ஒவ்வொருத்தர் வீட்டிலும் போய் வெண்ணெய் திருடுவாய் என்று பார்க்கிறேன்?'' என்று உன்னைப்பார்த்த யசோதைக்கு நீ எப்படி தோன்றினாய்?

அழகிய மலர்ந்த கரு நிற காந்த முகம். அதில் பரந்த விரிந்த கண்கள். அவை இரண்டுமே முழுதும் கண்ணீ ரால் நிரம்பி பொங்கின. நீ வேதனையோடு செய்வதறியாது பரிதாபமாக அவளைப்  பார்த்தாயே , உன் கண்களில் அவள் தீட்டிய மை கண்ணீரில் கரைந்து கலந்து கன்னத்தில் வழிந்ததே. பயம் உன் கண்களில் தெரிந்ததா? உனக்கு பயமா? இந்த காட்சியை அவள் கண்டாள் , நான் கேள்விப்பட்டேன். திகைத்தேன் ... பிரேமையால் அவள் கட்ட நீ தானாகவே உட் பட்டவன். நீ கட்டுண்ணப்  பண்ணிய மாயன்.

கிருஷ்ணா,  உன்னைப் பற்றி யார் பேசினாலும் நின்று ஆர்வமாக கேட்பேன்.   பிறப்பற்ற நீ பிறந்ததே   ராஜாக்களுக்கு  சந்தோஷம் தரவாமே,  அதுவும் நீ  யது வின் குலத்தில் பிறந்தது இன்னும் விசேஷமாமே.  உனக்கு  யதுவையும் அவன் குலத்தையும் ரொம்ப பிடிக்குமாம் அதனால் நீ   மிக ஸ்ரேஷ்டமான  மலய  சிகரத்தில் மலய  பர்வதத்தில்,  விளைந்த  ஒரு சந்தன மரமாமே.  உனக்கு சந்தனம் பிடிக்கும் என்று எனக்கு தெரியும்.

வேத வியாசர் மலய மலைகளில் இருக்கும் சந்தனமரங்கள், சந்தன த்தின்  'கம கம' வாசனை பற்றி சொல்கிறார்.   எதிலும் மற்றவர்கள் போல் ஜனிக்காத நாராயணன் ஒரு சிறந்த ராஜ குடும்பத்தை தேர்ந் தெடுத்து அதில் பிறக்கிறான்  என்றால், அதுவும்  மஹாராஜா யது வை பக்தனாக பிடிக்கும் என்பதால் யது குல நந்தனாக அவதரித்தவன் என்பதால்   என்னென்னவோ மரங்கள் தோன்றும் மலய மலைச்சாரலில் அழகிய வாசமிகுந்த சந்தனமரமாக கிருஷ்ணன் பிறந்தான் என்று குந்தி சொல்வதாக எழுதுகிறார் வியாசர்.

''ஆமப்பா , கிருஷ்ணா, நீ பிறப்பு இறப்பு அற்றவன் தான். என்றாலும் வசுதேவன் தேவகி  நீ அவர்களுக்கு   பிள்ளையாக  பிறக்கவேண்டும் என்று வேண்டியதால் அவர்களுக்கு மகனாக பிறந்தவன். தேவர்களைக்  காக்க,  ராக்ஷஸர்களை அழிக்க,  இப்படி ஒரு வேஷம் உனக்கு என்று அறிந்து கொண்டேன். அது எப்படி உன்னால் மட்டும் பக்தர்கள் எல்லோரையும் திருப்தி பண்ண முடிகிறது?

''கிருஷ்ணா, யார்  யாரோ சொல்லி நான் கேட்டேனே.  
 நீ  ப்ரம்மாவின்  பிரார்த்தனையால் இந்த பூமியில் அவதரித்தவனாம்.  எப்படி  நீர் பரப்பில் செல்லும் படகு  எல்லா சுமைகளையும் சுமந்து  அக்கரைக்கு கொண்டு செல்கிறதோ அப்படி  நீ  இந்த உலக வாழ்வில் என் போன்றோர்களுக்கு எல்லாம் விளையும் எல்லா  துன்பச் சுமையையும்  சுமப்பவன், எங்களை எல்லாம்   மோக்ஷத்திற்கு கொண்டு செல்பவன்..  உன்னை  எப்படிப் போற்றுவேன்?

இப்போது மட்டும் அல்ல, எப்போதுமே எனக்கு தெரியும் . இந்த பூமியில் பாரம் பெருகிவிட்டது. பூமாதேவி அலறினாள். ' என்னால்  இப்படி  என்  மேல் திணிக்கப்படும்  அநீதி, அக்கிரமம், அதர்மம்,  அளவு கடந்துள் ளதை சுமக்க முடியவில்லை. என்னால் தாங்க, பொறுக்க, முடியவில்லையே, பெருமானே, வாருங்கள் என் துயர் தீருங்கள்' என்றாள். படைக்கும் கடவுள் ப்ரம்மா, உன் மகன், ''அவசியம் நீங்கள் தலையிட்டு பூமாதேவியின் துன்பம் தவிர்க்க வேண்டும்'' என்றான். நடுக்கடலில் செல்லும் படகு அனைவரது சுமையும் தூக்கி ஆழமான கடலைக் கடக்க உதவுவது போல் பூமாதேவி நம்மைச்  சுமக்கிறாள். ஒரு நேரத்தில் படகின் சுமை , பாரம், அதிகமானால் முழுகும் அபாயம் உண்டல்லவா?  

 ''வா கிருஷ்ணா வா என் சுமையைக் குறை. நானே காணாமல் போய்விடுவேன் போல் இருக்கிறதே''  என்று பூமா தேவி  வேண்ட, நீ உடனே பூமிக்கு சென்று அவதரித்து அக்ரமக்காரர்களை அழித்து, அதர்மத்தை ஒடுக்கினாய் கிருஷ்ணா. பூமி பாரத்தை குறைத்த நீ காருண்யமூர்த்தி அல்லவா?
 
இன்னும் கூட  உன்னைப் பற்றி சில அருமையான விஷயங்கள் அறிந்தேன் கண்ணா.  நீ  அஞ்ஞானிகள், அறியாதவர்கள், என்னைப்போல உலக நாட்டங்களின் ஆசையாலும், உணர்ச்சிகளாலும், அறியாமையாலும் அவதிப்படுவர்களை   உன்னைப் பற்றி கேட்க,  தெரிந்துகொள்ள, வழிபட  மாற்றிக்கொள்ள, திருந்த உதவு பவனாம். 

'' கண்ணா, நான் கல்வியறிவு அற்றவள். பேதை. ஆனால் ஞானிகள் ரிஷிகள், பெரியோர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இந்த பூமியில் அஞ்ஞானத்தை போக்கவும், பக்தியை பெருக்கவும் சுருதி, ஸ்ம்ருதி நிதித்யாஸம் சரணாகதியை மக்கள் உணர, சம்சார துன்பங்களிலிருந்து விடுபட குருவாக நீ அவதரித்தாய் என்று சொல்வதை அறிவேன்''

குந்தியின் பிரார்த்தனை  தொடரும்..

sivan jaykay

unread,
Apr 16, 2025, 8:11:23 PM4/16/25
to amrith...@googlegroups.com

ராமகிரி வாலீஸ்வரர்  -    நங்கநல்லூர்  J K. SIVAN 

சென்னையிலிருந்து பெங்களூருக்கு சல்லென்று  காரில் சில மணி நேரங்களில் போகிறோமே. வழியில் வேலூர், கிருஷ்ணகிரி என்று பெயர்கள் வரும்.  கிருஷ்ணகிரி என்கிற பெயர் எல்லோரும் அறிந்தது. ஆனால்  ஆந்திராவுக்கு சென்னை ஊத்துக்கோட்டை வழியாக போகும்போது ராமகிரி என்று ஒரு அற்புத ஊர் வருமே அது எத்தனை பேருக்கு தெரியும்?

சென்னையிலிருந்து  ஆந்திராவுக்கு ஊத்துக்கோட்டை வழியாக  சென்றிருக்கிறேன். வழியில் நாகலாபுரம், பிச்சாட்டூர்  என்கிற  ஊர்கள்.  நாகலாபுரம் ஒரு பிரசித்தி பெற்ற க்ஷேத்ரம்.  புராணத்தில் இதற்கு திருக்காரிக்கரை என்று  பெயர்.  இங்கே உள்ள பைரவர் ஸ்வேதபைரவர், கல்யாண பைரவர், சந்தான பைரவர் என்ற பெயர்களில்  வணங்கப்படுகிறார்.
அருகே  இன்னொரு ஆலயம்  ராமகிரி வாலீஸ்வரர் கோவில். ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  சென்னையிலி  95 கி.மீ..   அமைதியான  ராமகிரி ஆலயம்  9ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் கட்டியது. ஒரு சிவன் கோவில் "திவ்ய தேசம்" என்றோ "வைப்பு ஸ்தலம்" என்றோ கூட சொல்லலாம்.

 ராமகிரியில்  சிவனுக்கு பெயர்  வாலீஸ்வரர். அம்பாள்  மரகதாம்பிகை. விசேஷ தெய்வம்  காலபைரவர் (சந்தான ப்ராப்தி பைரவர்). கோஷ்டங்களில்  காளிகாம்பாள், முருகன், விநாயகர் அருள்பாலிக்கிறார்கள்.  
ரொம்ப ரொம்ப  விசேஷமான ஒரு காட்சி இங்கே; நந்தி தீர்த்தம்: நந்தியின் வாயிலிருந்து நீர் தொடர்ந்து பாயும் ஒரு தீர்த்தம் ஆஹா  அந்த  தீர்த்தத்தின் ருசிக்கு ஈடே கிடையாது. வயிறு நிரம்ப கையில் வாங்கி குடித்திருக்கிறேன்.

ராமகிரி வாலீஸ்வரர் ஆலயம்  பஞ்ச ப்ரம்ம ஸ்தலங்களில் ஒன்று சிவனுக்கு  ஈசான முகம். கர்ப்ப
கிரஹத்தை  சுற்றி  கோஷ்டங்களில் மேற்கில் இருவரும், வடக்கில் இருவருமாக  நாலு பைரவர்கள். இது  ஒரு அற்புத பைரவ ஸ்தலம். நடுவில் சாமுண்டி.

 ராவணனை வதம் செய்தபிறகு ராமர்,  ப்ரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட, ஹனுமனை காசியிலிருந்து சிவலிங்கம் கொண்டு வரச் அனுப்புகிறார். ஆஞ்சநேயர் காசிக்குச் சென்றார்.  காசி நகரத்தின் காவலராக இருப்பவர் காலபைரவர். அவரது அனுமதியின்றி தனது ஸ்ரீ ராம பிரானின் உத்தரவை நிறைவேற்றிட ஸ்ரீஆஞ்ச நேயர் அவசரப்படுகிறார். காசி நகரைச் சுற்றி பறந்து வரும்போது, சரியான சிவலிங்கத்தை அதன் நேர் மேலே கருடன் வட்டமிட்டுக்காட்டுகிறது; அந்த சிவலிங்கத் தின் அருகில் வந்ததும், பல்லியின் குரல் போன்ற சுபசகுனத்தின் மூலமாக அடையாளம் கண்டுகொண்டார்.

தனது அனுமதியின்றி காசியிலிருந்து சுயம்புலிங்கத்தை எடுத்துச் சென்ற அனுமனை தடுத்து கால பைரவர் தடுத்து போரிட்டார்.  தேவாதி தேவர்கள் அனைவரும் காசிக்காலபைரவரிடம் முறையிட்டு வேண்டியதால் அனுமனை சுயம்புலிங்கத்தைக்  கொண்டு செல்ல அரை மனதோடு அனுமதித்தார். ஆனாலும் காலபைர வருக்கு திருப்தியில்லை; அனுமன் பறந்து செல்லும் வழியில் உள்ள திருக்காரிக்கரையில், (ராமகிரியில்) அனுமன் வரும் நேரத்தில் சூரியனை முழு சக்தியுடன் நன்கு பிரகாசிக்க ஆணையிட்டார். கங்காதேவியை அனுமன் கண்ணில் படாமல் ஒளிந்திருக்கக் கட்டளையிட்டார். வாயுவை பலமான காற்றை வீச உத்தர விட்டார். (பஞ்சபூதங்களும், நவக்கிரகங்களும் கால பைரவரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதற்கு இந்த சம்பவமே நேரடி ஆதாரம்)

பஞ்சபூதங்களில் மூவரின் (நெருப்பு, நீர், காற்று) தாக்கத்தை தாள முடியாமல் அனுமன் தாகமிகுதியால் துடித்தார்; அப்பொழுது ஸ்ரீகால பைரவர் மாடுமேய்க்கும் சிறுவன் ரூபத்தில் இருந்தார். குடிக்க நீர் தேடிய அனுமனுக்கு, காளிங்கமடு என்னும் நீருள்ள தடாகத்தைக் காட்டினார். அனுமன்,தான் நீரருந்தி வரும் வரையிலும் தன் கையில் உள்ள சுயம்புலிங்கத்தை சிறுவனாகிய கால பைரவரிடம் கொடுத்தார்.

சிறுவன் உருவெடுத்த காலபைரவர் அந்த சுயம்புலிங்கத்தை திருக்காரிக்கரையில் பிரதிஷ்டை செய்துவிட்டு மறைந்துவிட்டார். அகந்தை கொண்ட அனுமன்,தன் வாலினால் அந்த சிவலிங்கத்தை கட்டியிழுக்க முயன்று தோற்றார்.  

ஸ்ரீரங்கத்தில் விபீஷணன் ரங்கநாதரை பிள்ளையாரின் தந்திரத்தால் தரையிலிருந்து மீண்டும் எடுத்துச் செல்லமு டியாதது   மாதிரி  தான் ராமகிரி வந்த ஹநுமானுக்கு தரையில் வைத்த லிங்கத்தை தனது பலமான வாலினால் சுற்றி இழுத்துச் செல்லமுடியவில்லை. ராமகிரியில் சிவனுக்கு அதனால் ''வாலீஸ்வரர் என்று பெயர்.ராமகிரி வாலீஸ்வரர் கருவறையுள் சிவலிங்கத்தை வணங்குகிற சிலாரூபம் உள்ளது. 

பின்னர், மீண்டும் அனுமன் காசிக்குச் சென்று. கால பைரவரை வணங்கி, அவரது முறையான அனுமதியைப் பெற்றுவிட்டு, அங்கிருந்து வேறொரு சுயம்புலிங்கத்தை ராமேஸ்வரத்துக்குக் கொண்டு வந்தார். அதற்குள் குறிப்பிட்ட நேரம் (நல்ல முகூர்த்தம்) கடந்து விட்டதால், சீதாதேவி மணலில் உருவாக்கிய லிங்கத்தை ராமேஸ் வரத்தில் ராமர் பூஜை செய்தார்.

எட்டாம் நூற்றாண்டு பல்லவ கால  ராமகிரி என்ற  சிறிய மலை மேல் ஒரு சிவன் கோவில்.    நுழைந்ததும் நந்திக்கு எதிரே ஹனுமான். மலைமேல் வழக்கம்போல்   குன்று தோராடும் குமரன் குடி கொண்டிருக்கிறான். இதன் அருகே தான் கைலாஸ கோனே நீர் வீழ்ச்சி.  எப்போதோ அதில் நீர்  வீழ்ந்து  பல  யுகங்களுக்கு முன் ஒரு தடவை குளித்திருக்கிறேன்.

ராமகிரி ஆலயத்தை பெரியபாளையத்திலிருந்து புத்தூர் சாலைவழியே நாகலாபுரம் அருகில் சென்று அடையலாம்.  ராமகிரி அடிவாரக் கோயிலில் கால பைரவர் சக்தி வாய்ந்தவராக அருள் பாலிக்கிறார். 

அருகே ஒரு அற்புதமான  குளம். அதில் ஒரு கல் நந்தி முகம். அதன் வாயிலிருந்து இரவு பகலாக பல வருஷங் களாக ராமகிரி மலையிலிருந்து அருமையான சுனைநீர் ஊற்றிலிருந்து பெருகி வருகிறது. அந்த ஊர் காரர்கள்  அத்தனைபேரும் கல்கண்டாக இனிக்கும் இந்த  நந்தி வாய் மூலிகை நீரை பருகி சந்தோஷம டைகிறார்கள்.   குளத்தில் இறங்கி ரெண்டு கை நிறைய நந்தியின் வாயில் இருந்து நீர் வாங்கி குடித்தேன். என்ன ருசி அப்பப்பா!

பஞ்ச முக சிவன் இந்த பகுதியில் இருக்கிறார். ஒரு சிவன் தான்  ராமகிரி வாலீஸ்வரர். ராமகிரிக்கு இன்னொரு பெயர் திரு ஏரிக்கரை -   ஈசானன் முகம்.  

ரெண்டாவது சிவன் பள்ளிகொண்டீஸ்வரர் சுருட்டப்பள்ளியில். தத்புருஷ முகம்
.
மூன்றாவது முகம் சம்பங்கி ராமேஸ்வரர் வாமதேவ புரம் எனும் ஆரணி (பெரிய பாளயத்துக்கருகே உள்ளது.) வாமதேவ முகம். அற்புதமான கோவில்.   நான் தரிசித்திருக்கிறேன்.

நான்காவது முகம் வரமூர்த்தி. அறியத்துறை . ஸத்யோஜாத முகம். தென் கோகர்ணம் என்று  இந்த ஊருக்கு பெயர்.

ஐந்தாவது முக சிவன் சிந்தாமணீஸ்வரம் எனும் ஊரில் இருப்பவர். மீஞ்சூர் அருகே காட்டூர் என்கிற இடத்தில் இருப்பவர். அங்கே ப்ரம்மாரண்ய நதி கடலோடு சங்கமமாகிறது. இங்கே சிவனின் முகம் அகோரமூர்த்தி. அதற்கும் சென்றிருக்கிறேன்.

ராமகிரியில் அம்பாள் பெயர் மரகதாம்பிகை. தெற்கு நோக்கியவள். அழகான வல்லப கணபதி இங்கே தும்பிக்கையை சுருட்டி வைத்திருக்கும் அழகே தனி. .

காலபைரவர் சந்நிதி   ரொம்ப முக்கியமானது. அவரது வாகனமான வாலை சுருட்டிக்கொண்டு நிற்கும் நாய் தத்ரூபமாக உள்ளது. அவரை சுற்றி நாலு பக்கமும் குட்டி குட்டியாக நாய் உருவங்கள். கிழக்கு நோக்கிய சிவன். நந்திக்கும் சிவனுக்கும் இடையே வாலால் கட்டி தூக்கிச் செல்ல முயன்று தோற்ற ஹனுமான்.

குளத்தின் அருகே இப்போதோ இதை நீங்கள் படித்த பிறகோ இடிந்து நொறுங்கும் நிலையில் ஒரு சிதிலமான சிவன் கோவில். உள்ளே ஒரே இருட்டு. மொபைல் டார்ச் வழியாக பார்த்தபோது அழகிய பெரிய சிவ லிங்கம். விவரம் தெரியவில்லை. ஹநுமானைத்தான் கேட்கவேண்டும். ஹனுமானால்  கிளப்ப முடியாத சிவலிங்கம்.
ராமகிரி வாலீஸ்வரர்- ஈசான ஸ்வரூபம்ராமகிரியில் அம்பாள் பெயர் மரகதாம்பிகை. தெற்கு நோக்கியவள். அழகான வல்லப கணபதி இங்கே தும்பிக்கையை சுருட்டி வைத்திருக்கும் அழகே தனி. .

காலபைரவர் சந்நிதி   ரொம்ப முக்கியமானது. அவரது வாகனமான வாலை சுருட்டிக்கொண்டு நிற்கும் நாய் தத்ரூபமாக உள்ளது. அவரை சுற்றி நாலு பக்கமும் குட்டி குட்டியாக நாய் உருவங்கள். கிழக்கு நோக்கிய சிவன். நந்திக்கும் சிவனுக்கும் இடையே வாலால் கட்டி தூக்கிச் செல்ல முயன்று தோற்ற ஹனுமான்.

குளத்தின் அருகே இப்போதோ இதை நீங்கள் படித்த பிறகோ இடிந்து நொறுங்கும் நிலையில் ஒரு சிதிலமான சிவன் கோவில். உள்ளே ஒரே இருட்டு. மொபைல் டார்ச் வழியாக பார்த்தபோது அழகிய பெரிய சிவ லிங்கம். விவரம் தெரியவில்லை. ஹநுமானைத்தான் கேட்கவேண்டும். ஹனுமானால்  கிளப்ப முடியாத சிவலிங்கம்.
இதெல்லாம்   பார்க்காமல் விடக்கூடாது.


sivan jaykay

unread,
Apr 18, 2025, 8:06:36 PM4/18/25
to amrith...@googlegroups.com
சாணக்ய  நீதி ஸாஸ்த்ரம்  -   நங்கநல்லூர்  J K   SIVAN 
 
'எங்கே  சொல்லுங்கள் பார்க்கலாம்?   உலகில் குறை இல்லாத  ஜீவன் யாரவது உண்டா? கிடையாது .  ஏதோ உனக்கு மட்டும் தான் நிறைய  குறை  என்று எண்ணி உன் கஷ்டங்களை, குறைகளை, எல்லோரிடமும் சொல்லி  அழாதே.  உன்னை விட  பெரிய  ப்ராப்ளங்களில்  அவர்கள் முழி பிதுங்கி தவித்துக் கொண்டிருப்பது  உனக்குத் தெரியாது.  மேலுக்கு சிரிப்பதில் அது மறைந்திருக்கும்.  நெருப்பை விழுங்கினவர்கள் அவர்கள்.  குறைகள்  இன்னொருவரிடம் சொன்னால் குறைந்து போகாது. அதை நீக்க உன்னிடம்  இருக்கும் குறைகளை என்ன என்று  முதலில்  அலசி  ஆராய்ந்து அதற்கு சரியான தீர்வு என்ன என்று யாரிடமாவது கேட்டு  புரிந்து கொண்டு, தெரிந்து கொண்டு, அதைக்  கடைப் பிடி.

*பொறுமை இல்லாதவனுக்கு   நிகழ்காலமும் எதிர்காலமும் கிடையாது.  எப்போதும் என்றோ நடந்ததையே பற்றி நினைத்து  அதே மாதிரி மறுபடியும்  நடக்கும் என்று நம்புவது மனப்பால் குடிப்பது.

 *அளவோடு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.சிலர்  வெளியே  சாப்பிடுவதற்கு என்று ஒரு வயிற்றில் ஒரு தனி  இடம் வைத்திருப்பார்கள், அதை நிரப்ப முயல்வார் கள்.  வெகு சீக்கிரம் டாக்டரிடம் அது அழைத்துச் சென்றுவிடும். சேமித்து வைத்த பணம் எல்லாம்  மருந்து மாத்திரை, ஸ்கேன் , ஆஸ்பத்திரி, டெஸ்ட் என்று காணாமல் போகும்.

 வயதான காலத்தில், எப்போது, எந்த  ஆபத்து, எந்த ரூபத்தில், வரும் என்று தெரியாது. நிறைய  வழிகள் இருக்கிறது நம்மைத்  தூக்கிக்கொண்டு போவதற்கு.  ஆகவே, சின்ன  உபாதைகளைக் கூட  என்ன ஏது என்று புரிந்துகொண்டு அதை அலட்சியப் படுத்தாமல்  அதிலிருந்து  தப்ப முயலவேண்டும்.

*திருடுவதைவிடச் சாவது மேல் '' .   கௌடில்யா!,    உன் தீர்க்கதரிசனம் இதில் தோற்றுவிட்டதடா. நமது பாரத தேசம் இப்போது மிகுந்த ஜனத்தொகை கொண்டது.  உன் கொள்கைப்படி பார்த்தால்  முக்கால் வாசி மனிதர்கள் 
காணாமல் போயிருக்க வேண்டுமே!. சவுதி அரேபியாவில் திருடினால் கையை வெட்டுவார்களாமே, அந்த சட்டம் இங்கே இருந்தால், பாதி பேருக்கு மேல் கையே இருக்காது சாணக்யா.

 *பசியைவிடப் பெரிய எதிரி இல்லை.  வாஸ்தவம். அன்றுமுதல் இன்றுவரை  எண்  சாண்  உடம்புக்கு  வயிறே  பிரதானமாகத்தான்  இருந்து  வாட்டி வதைக்கிறது. அதை ரொப்புவதற்கு  எத்தனை பொய்,  பித்தலாட்டம், ஏமாற்று வித்தைகள், சிலருக்கு அவசியமாகிவிட்டது. பலருக்கு அதுவே தொழிலாக, பிழைக்கும் வழியாகிவிட்டது.

 *பாத்திரமறிந்து தானம்செய்.''    நீ எவ்வளவு  சாதம்  மீந்து போனதை   போடப்போகிறாய் என்ற அளவு இல்லை இது. பாத்திரம் என்றால் இங்கு ஆசாமி.  தானம் பெற தகுதியானவனா, தானம் அவனுக்கு அளிப்பதன் மூலம் சரியான காரியத்துக்கு பயன்படுமா?  நோக்கம்  வீணாகுமா?  என்று ஆராய்ந்து, பரிசீலித்து உதவுதல்.வேஷத்தில் மயங்காதே. பேச்சில்  ஏமாறாதே.

*வயதுக்கேற்ற ஆடை அணி''. சாணக்யா,  ஆடைகளின் வகைகள் ரொம்பவே மாறிவிட்டதடா  இக்காலத்தில்.  இப்போதுள்ள ஆடைகளில்  எதிரே  நிற்பது  ஆணா  பெண்ணா என்றே  தெரியவில்லையடா. ஆடை  பொதுவாக ஆகிவிட்டது.  ஆடைகள் உடலை மறைக்கவா, மறைக்கவேண்டியதை காட்டுவதற்கா என்றும் தெரியவில்லையடா.  ஆடையில்லாதவன் அரை மனிதன் என்பது உன் காலத் தில்.   அதிக ஆடை  அநாகரீகம் இப்போது.   சாயம் போன, கிழிந்த, ஒட்டு போட்ட, நார் நாராக தொங்கும் அரைகுறை ஆடை தான் அழகிய கோலம்..

 *மேதை, முட்டாள், நண்பன், ஆசிரியர் மற்றும் உன் எஜமானன்,  இவர்களுடன் தர்க்கம் செய்யாதே''.--
சாணக்யா, நீ சொல்வது வாஸ்தவம்.அப்பா. மேதையுடன் வாதம்  தோற்கும்.  முட்டாளுடன் தர்க்கம் வீண்.  நண்பனுடன் தர்க்கம் நெருக்கத்தை குறைக்கும்,  ஆசிரியருடன் தர்க்கம்  அவரை அவமதிப்பது, கர்வம்,  கடைசியில்  எஜமானனுடன் தர்க்கம் செய்தால்  அப்புறம்  நிம்மதியாக  வேலையில்லாமல் வீட்டிலேயே இருக்கவேண்டியது தான். சாப்பாட்டுக்கு??

*தாயார்தான் எல்லா குருமார்களைவிடச் சிறந்தவள்''. ஆமாம்  சாணக்யா, உன் வாய்க்கு சர்க்கரை போடவேண்டும். என்றும் அது தான்  மாறாதது.  அம்மாவிடம் தான் முதலில் ஒருவன் கற்கிறான். கல்விச்சாலை ஆலயம் என்றால்  தாய் தான்  தெய்வம்.

*கடைசியாக ஒரு நீதி வாக்கியம் . 
''முட்டாள் நண்பனைவிட புத்திசாலி எதிரி சிறந்தவன்''.  சாணக்யா, நீ சொல்லுவது  ரொம்ப நிதர்சனமான உண்மை. நம்பிக்  கெட்டுப்போக முட்டாள் நண்பனை விட வேறு யாரும்  சிறந்தவனில்லை என்று அரசியலே போதிக்கிறதே.

 *  மனிதனுக்கு எத்தனையோ தரம் புகட்டினாலும்  மண்டையில்   ஏறாத  பாடம்  :  ''இந்த உலகில் எதுவும்  சாஸ்வதம் இல்லை"'. இருந்தாலும்  அடுத்தவன் சொத்தை ஆக்கிரமித்து  பணம் நிறைய சேர்க்கிறான். கணக்கு காட்டாமல் மறைக்கிறான்.. கடைசியில்......


sivan jaykay

unread,
Apr 18, 2025, 8:07:00 PM4/18/25
to amrith...@googlegroups.com

வாழ்க்கை சக்ர விசேஷங்கள்; நங்கநல்லூர் J K SIVAN


ஒரு பிராமணன் பிறந்தது முதல் பல வித சடங்குகள் செய்வது சம்ப்ரதாயம். பழக்கம். பாரம்பரிய வழக்கம்.
அதில் முக்கியமான சிலவற்றை சொல்கிறேன்.
ஜாதகர்மா என்பது பிறந்தவுடன் செய்யப்படும் சடங்கு. குழந்தையின் மூக்கில் நெய் வைத்து , காதில் ஓம் சொல்கிறோம். உயிர் மூச்சு உறுதிப்படுத்தப்ப டுகிறது. அதை தொடர்ந்து நாமகரணம். அது குழந்தை பிறந்த 10, 11, 12 நாட்களில் அவரவர் வழக்கப்படி செயகிறோம். குழந்தைக்கு பெயர் சூட்டுவது. குலதெய்வத்தின் பெயர், தாத்தா பாட்டிகள் பெயர், இஷ்ட தெய்வத்தின் பெயர் வைக்கும் சடங்கு.
குழந்தைக்கு 6 மாதம் ஆன உடன் அன்ன ப்ராசனம். கோவிலில் துலாபாரம் போட்டு காணிக்கை கொடுத்து அங்கே அன்னப் ப்ராசனம் அப்பா அம்மா பண்ணுவதை குருவாயூர் கோவிலில் கூட பார்க்கலாம். பலர் வீட்டிலேயே பண்ணுகிறார்கள். குழந்தை முதன் முதலாக அரிசி சாதம் கொடுக்கப்படும் நாள்.
கர்ணபூஷணம், கர்ணவேதனம் என்பது காது குத்துவது. முதல் வயது அப்த பூர்த்தி ஆன அன்று செய்வது. ஆண் பெண் குழந்தைகளுக்கு பொதுவானது.
குழந்தை வயிற்றில் இருக்கும்போதே தாய்க்கு எட்டாம் மாசம் சீமந்தம் நடைபெறுகிறது தெரிந்த விஷயம் தானே. நல்ல மன நிலை குழந்தைக்கு ஏற்பட வேண்டும் என்று செய்யப்படும் சடங்கு.
ஆண் குழந்தைக்கு அந்தக் காலத்தில் ஐந்து வயதிலேயே உபநயனம். இப்போது அதிக பக்ஷம் 11 வயதுக்குள் உபநயனம் நடப்பது, , பூணல் போடுகி றோமே. ( கல்யாணம் ஆகும் போது ஒரு சில நிமிஷங்கள் மாப்பிள்ளை பூணல் போட்டுக்கொள்வதும் வழக்கமாகிவிட்டது. சட்டை மேலே பூணல் போட்டு பார்த்திருக்கிறேன்)
காயத்ரீ மந்திரம் பிரம்மோபதேசம் அப்பா மூலம் வாத்யார் உபதேசிப்பார். அந்த கணம் முதல் பிராமணன் ரெண்டாவது பிறவி எடுக்கிறான். அதனால் தான் “த்விஜன்” (இரண்டாவது பிறப்பு) எனப்படுகிறான்.
ஆரம்ப காலத்தில் அப்புறம் தான் சிறுவன் குருவின் வீட்டுக்கு கல்வி வேதம் கற்பதற்கு அனுப்பப்படுவான். குருகுலவாசம் தான் பள்ளிக்கூடம் அப்போது. பிரம்மச் சரியம் எனும் வாழ்க்கை நிலை இது.
கல்வி கற்றபின் விவாகம். திருமணம். பெற்றோர் தகுந்த பெண்ணை தேர்ந்தெடுத்து கன்யாதானம், மங்கலஸூத்ர தாரணம் எல்லாம் கிரமமாக சாஸ்த்ர ஸம்ப்ரதாயத்தோடு நடக்கும். பிறகு குடும்ப வாழ்க் கை இது தான் க்ரஹஸ்தாஸ்ரமம் எனப்படும் ரெண்டாவது நிலை. இதில் நித்ய கர்மா, தேவ கடன்,பித்ரு கடன், ரிஷிகளுக்கு செய்யவேண்டிய கர்மமாக்கள் செயகிறான்.
பிள்ளை பேரன் பேத்தி எடுத்த பிறகு அவன் வாழ்க்கை நிலை வானப்ரஸ்தம்: இப்போதெல்லாம் காட்டுக்கு போவதில்லை, அதிக பக்ஷம் OLDAGE HOME , முதியோ ரில் லம் தான் வானப்ரஸ்தம். இங்கு தான் ஆன்மீக வாழ்க்கை வளர்கிறது.
காட்டுக்கு போய் தவமிருக்கும் சந்யாசிகள் இப்போது இல்லை. குடும்பத்தில் ஈடுபாடு கொள்ளாமல் தனித்து இருப்பதே தான் இப்போதைய ஸந்நியாசம்: உலக ஈடுபாடுகள் கவர்ச்சிகள் துறந்து முழுமையாக ஆன்மிக வாழ்வு. மனது த்யானம், தத்வம் எல்லாம் தேடும் புரிந்துகொள்ளும் பருவம்
.
கடைசி நிலை பற்றி சொல்லப்போவதில்லை.
வாழும்போது வயது ஏற ஏற சில சடங்குகள் செயகி றோமே அதைப் பற்றி சொல்கிறேன்.
ஹிந்துக்களின் வாழ்க்கையில் பிறந்தது முதல் ஒருவருஷம் கழித்து கொண்டாடுவது அப்த பூர்த்தி
55வது வருஷ ஆரம்பத்தில் பீம சாந்தி
60வது வயசு ஆரம்பத்தில் உக்ர ரத சாந்தி.
60 வயது முடிந்து 61 ஆரம்பத்தில் ஷஷ்டி அப்த பூர்த்தி
69 முடிந்து 70 ஆரம்பத்தில் பீம ரத சாந்தி. பீம என்றால் பெரிய, நீண்ட, ரதம் என்றால் வாழ்க்கை தேர். அது பீமனின் ரதம் போல் பலமுள்ளதாக வரும் நோய் நொடிகளை, எதிர்த்து தாங்கக்கூடியதாக முன்னோக்கி எஞ்சிய வாழ்க்கையை நிம்மதியாக நடத்த ஓடவேண் டும் என்று வேண்டிக்கொள்ளும் சடங்கு. பீமா என்றால் வாழ்க்கை எனும் பொருளில் LIC க்கு கூட பீமா என்ற வார்த்தை நிறைய பிடிப்பதால் பல பாலிஸிகளை இந்த பெயரோடு கொடுக்கிறார்கள்.
இது அதிக விமரிசையாக கொண்டாடப்படுவதில்லை. வீட்டோடு உறவினர்கள், நண்பர்களுடன் திருப்தியாக கொண்டாடுபவர்கள் அதிகம்.
72 ஆரம்பத்தில் ஏக சாந்தி
77 வருஷம் 7 மாசம், 7 நாள் முடிந்ததும் விஜயரத சாந்தி.
80 முடிந்து 8 மாதங்கள் ஆனதும் : சதாபிஷேகம்.85 சதாயுஷ்ய பூர்த்தி ஸதாயுஷ் ஹோமம் 85 வயது முடிவு. 90 நவதி பூர்த்தி 90வயது முடிந்தவுடன் செய்வது.
100 வருஷம் முடிந்தபின் ஸதாயுஷ் ஹோமம் (Sadayush Homam) சதாயுஷ்ய பூர்த்தி – சத பூர்த்தி சாந்தி. பூர்ணாபிஷேகம் எனும் கனகாபிஷேகம்.
ஒரு முக்கிய விஷயம். இவை எல்லாமே இங்கிலிஷ் வருஷம் சம்பந்தமே இல்லாதது. வெள்ளைக்காரன் வருவதற்கு முன்பே பாரத தேசத்தில் வேதகாலத்தி
லிருந்து வழக்கத்தில் இருந்த சடங்குகள்.
ஹிந்துக்களுக்கு, தமிழினத்துக்கு, அறுபது ஆண்டுகள் ஒரு வட்டம். பிறந்ததிலிருந்து, அந்த ஜென்ம தினத்தி லிருந்து 60 வருஷங்கள் முடிந்து மீண்டும் அதே ஜென்ம நக்ஷத்ரம் வரும் தினம் அன்று கொண்டாடப்படுவது
ஷஷ்டி அப்த பூர்த்தி.வீட்டோடு உறவினர்கள், நண்பர்களுடன் திருப்தியாக கொண்டாடுபவர்கள் அதிகம்.
சதாபிஷேகம் (80வது ஆண்டு நிறைவு ) 80வருஷம் + 8 மாதம் + 8 நாள் கணக்கு இதையே ஆயிரம் பிறை காண்பது . ஸஹஸ்ர சந்திர தர்சனம் என்பது.
நூறு வயது முடிந்தால் கனகாபிஷேகம். சதம் ; நூறு அபிஷேகம்; ஸ்னானம்.. சதாபிஷேகம் ஒரு பெரிய ஹோமம், ஆயுள் விருத்திக்காக செய்யப்படும்.
யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்திற்கு சனகாதிகள் போயிருந்ததின் காரணம் அங்கே நிச்சயம் கிருஷ்ணன் வருவார் தரிசித்து வணங்கலாம் என்பதற்கு தான். ஆனால் கிருஷ்ணனோ அங்கு வந்திருந்த பெரியவர் களுக்கு பாத நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருந்தார்.
”கிருஷ்ணா, நாங்கள் உன்னை நமஸ்கரிக்க வந்தால் நீ வேறு யாரையெல்லாமோ வணங்கிக் கொண்டிருக் கிறாயே ஏன்?”
முனிவர்களுக்கு கிருஷ்ணனின் பதில்;.
” நான் ஆறு பேரை முக்கியமாக நமஸ்கரிக்கிறேன். :
1. .தினசரி அநேகருக்கு உணவு அளிப்பவன்,
2. இளம் வயதிலேயே யாக யஞம் பண்ணுபவன்,
3. உலகியலில் சிக்கிக்கொள்ளாதவன்,
4. தியாகிகளாக வாழும் சிறந்த பெண்மணிகள்,
5. ப்ரம்ம ஞானிகள்,
6. ஆயிரம் பிறைக்கண்ட 81 வயதான முதியவர்கள்..
முக்கிய நோக்கம்: வாழ்ந்த நூறு ஆண்டுகளுக்காக பகவானுக்கு நன்றியுடன் நிவேதனம் செய்வது, வாழ்வின் றைவுபுள்ளியை சாந்தியாக மாற்றுவது.
இது ஒரு முக்கிய வைதிக சடங்கு. ஹோமம் வளர்த்து வேத மந்த்ரம் சரியாக சொல்லி தேவதைகளுக்கு, த்ரிப்தியடைய நன்றியோடு ப்ரீதி செய்யும் பூஜை. வாழ்க்கையில் தொடர்ந்து இடையூறுகள் நிகழாமல் பாதுக்காக்க , தேஹ ஆரோக்யம் பெற இறைவனை வணங்கும் பூஜை. தம்பதிகளில் வயதில் 70 நெருங்கியவர் கணவனாகத் தான் இருப்பார் என்றாலும் தம்பதிகள் இருவரும் இந்த சடங்கில் பூஜையில் கௌரவிக்கப்படுகிறார்கள்.
குடும்பத்தார், நண்பர்கள், மற்ற உறவினர்கள் அநேகமாக கலந்துகொள்வார்கள். சிறியவர்களுக்கு தம்பதிகள் ஆசி வழங்கி மந்த்ர அக்ஷதை ப்ரோக்ஷிப்பார்கள். தங்களை விட பெரியவர்களிடம் சென்று அக்ஷதை கொடுத்து ஆசி பெறுவார்கள். சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் எல்லாம் பெற்ற குழந்தைகள் பெற்றோர்க்கு ஆசையாக சநதோஷமாக நடத்தி வைக்கும் விழாக்கள் என்பது நமது ஹிந்து சமூகத்திற்கு ஒரு தனிப் பெருமை.
பீமரத சாந்தி ஹோம பூஜையில் பிரதானமாக வழிபடுவது ஆயுள் தேவதை, ஸாத் குண்ய தேவதா , சப்த சிரஞ்சீவிகள் ஹனுமான், விபீஷணன், மஹாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயன், வேதவியாசர், பரசுராமர், அஸ்வத்தாமன் ஆகியோரை வணங்கி ஆசிபெறுவது. குடும்ப லோக க்ஷேமத்துக்கு வேண்டுவது.
இந்த ஹோம பூஜைகளில் நவகிரஹ ஹோமம், கணபதி ஹோமம், ஆயுஷுஹோமம், தவிர முக்கியமாக ஏகாதச ருத்ர ஜபம் அவசியம் பண்ணுவது வழக்கம். பணம் செலவழித்து ஊர் கூட்டி கோலாகல
மாக பண்ணினாலும் வீட்டோடு பண்ணினாலும்
ஹோம பூஜை, மந்த்ரங்கள், ஜபம் இருந்தே ஆகவேண்டும்.சிலர் கோயில்கள் புண்ய க்ஷேத்ரங் களில் இதெல்லாம் பண்ணிக் கொள்கிறார்கள்.


sivan jaykay

unread,
Apr 18, 2025, 8:07:11 PM4/18/25
to amrith...@googlegroups.com
நல் வெள்ளிக்கிழமை,  GOOD FRIDAY   - நங்கநல்லூர் J.K. SIVAN

இன்று  உலகளாவிய  விடுமுறை நாள்.  ஏனென்றால் இன்று  ஒரு நல்ல வெள்ளிக்கிழமை என்று கொண்டாடப்படுகிறது. 
ஹிந்துக்கள் நமக்கு  எல்லா வெள்ளிக்கிழமைகளுமே  ரொம்ப ரொம்ப நல்ல விசேஷ  நாள்.  கெட்ட வெள்ளிக்கிழமை என்று ஒன்று நமக்கு இல்லை. 

கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு வருஷமும் சிறப்பாக கொண்டாடும்  ஒரு புனித நாள்  நல்  வெள்ளிக்கிழமை.  இந்தநாளில், இயேசு கிரிஸ்து சிலுவையில்  அறையப்பட்ட  தினம்.  இம்மானுவேல் தேவனின் மகன் இயேசு தனது மக்களின் பாவங்களைத் துடைப்பதற்காக தன்னையே பலியாக அர்ப்பணித்த நாள்.ஒவ்வொரு வருஷமும்  குட் பிரைடே  ஈஸ்டர் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.  அநேகமாக  இந்த நல் வெள்ளி தினம்  மார்ச் மாதம் கடைசி வாரத்திலிருந்து   ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை  நிகழ்வது. 

அது சரி ஏன்  யேசு கிரிஸ்து சிலுவையில் அறையப்பட்டார்?
 யூதர்களின்  எதிர்ப்புக்கும், ரோம அரசின் திட்டங்களுக்கும் எதிராக உண்மை, அன்பு, பொறுப்பு, தூய்மை ஆகியவற்றை எடுத்துரைத்ததால்.  இயேசு  நிகழ்த்திய 
 அதிசயங்கள் மற்றும் போதனைகள் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டன  என்றாலும்  சிலர் பொறாமையால் அவரை கைது செய்து, பொய் குற்றச்சாட்டுகள் கொண்டு சிலுவையில்  அறைந்தார்கள்.  கால்வெரி மலையில் (Mount Calvary) அவர் மாலை 3 மணியளவில் உயிர் நீத்தார் என்கிறார்கள். 

குட் பிரைடே  எனும் நல்வெள்ளிக்கிழமை இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தார்.  மூன்று நாட்களுக்கு பிறகு ஞாயிறு அன்று அவர்  உயிர்த்தெழுந்ததுதான் ஈஸ்டர் சண்டே. easter sunday .

போனவருஷம்  29.3.2024  அன்று நல் வெள்ளிக்கிழமை. பல்லாவரத்தில்  ஒரு  நண்பர்  இல்லத்தில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணியதோடு பகவத் கீதை பாராயணமும் ஆரம்பித்தோம். சிறிய ஹால். முழுமனதோடு உச்சரிக்க வந்தவர்கள் நிரம்பி இருந்தார்கள். எங்கள் எதிரில் இடுப்பில் கை வைத்துக்கொண்டு நீல நிற கிருஷ்ணன் மலர் மாலைகளை அணிந்து கொண்டு ரெண்டரை மூணு அடி உயரத்தில் புன்னகையோடு எங்களை பார்த்துக்கொண்டு நின்றான். இப்படித்தானே பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாமம் உபதேசிக்கும்போது அதைக் கேட்டுக்கொண்டு குருக்ஷேத்திரத்திலும் நின்றிருப்பான்!

ஒரு ஆசிரியை மாணவிகளைக்  கேட்டாள் :

'குட் ஃப்ரைடே  GOOD FRIDAY  எந்த நாளில் இந்த வருஷம் வருகிறது..?
நிறைய குழந்தைகள் ஞாயிறு முதல் சனி வரை சொல்லிக் கொண்டே போனது. FRIDAY என்றால் வெள்ளிக்கிழமை தானே என்று கூட  யோசிக்காத  ஆசிரியை, அவளிடம் பயிலும் மாணவிகள்...!

ஹெட் மாஸ்டரின்  பெண் வியாழக்கிழமை என்று சொன்னது. HM பெண் என்பதால் அது சொன்னதே சரி என்று ஆசிரியை அதற்கு மார்க் 50 போட்டாள் .

''சிவன் மாமா, கிழமைகளில் எது புனிதமானது?'' என்று சுப்புணி ஒரு தரம்  என்னைக் கேட்டான்.

''சுப்புணி, எல்லா கிழமைகளும் புனிதமானது தான். நாம் ஹிந்துக்கள் ஒவ்வொரு கிழமையும் ஒரு கிரஹத்துக்கு என்று ஒதுக்கி வைப்பவர்கள், அதிலும் வெள்ளிக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். அம்பாளை, தாயாரை வழிபடும் நாள். வெள்ளிக்கிழமை அன்று மயிலாப்பூர் கற்பகாம்பாள் சந்நிதிக்கு போ, காஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாட்சி ஆலயங்களில் நிற்கக்கூட இடம் கிடைக்காது.

வெள்ளிக்கிழமை பொதுவாக  சுக்ரனுக்கு உகந்தநாள். வெள்ளி என்பது சுக்ர கிரஹம் .மற்றவர்களும் இதை வணங்குகிறார்கள். புனிதமான வெள்ளி என்று.''
''ஓஹோ கிறிஸ்தவர்களை சொல்கிறீர்களா?''
'' ஆமாம் என்றோ வருஷத்தில் ஒருநாள் ஒரு வெள்ளிக்கிழமை நல்ல வெள்ளிக்கிழமை அவர்க ளுக்கு. GOOD FRIDAY. நமக்கு எல்லா வெள்ளிக் கிழமைகளும் நல்ல வெள்ளிக்கிழமைகள்''
''சிவன்  மாமா  GOOD FRIDAY பற்றி இன்னும் ஏதாவது சொல்லுங்கள்''.
''சுப்புணி,  நான் படித்து தான் தெரிந்து கொண்டேனடா. தெரிந்ததை சொல்கிறேன் கேள்.
''கால்வரி என்கிற இடத்தில்  ஒரு  சின்ன  மலை உச்சிக்கு   கனமான  பெரிய  மர சிலுவையை  முதுகில் சுமக்க வைத்து  இழுத்துக்கொண்டு போய்  அங்கே இயேசுவை கை கால்களில் ஆணி அடித்து முள் கிரீடம் தலையில் சுற்றிக்  கட்டி  தொங்க விட்டார்கள். ரத்தம் சொட்டி சொட்டி   இயேசு  மரணம் அடைந் தார். மூன்றாம் நாள் உயிர்ப்பித்தெழுந்தார்  என்பதால்  அதை புனித நாளாக கொண்டாடுகிறார் கள். நமக்காக ஒருவர் தன்னுயிரை விட்டாரே என்று.  கருப்பு வெள்ளி, பெரு வெள்ளி, புனித வெள்ளி என்றும் அதற்கு பெயர் உண்டு.   ஊருக்கு ஊர் மாறுபடும். Holy Friday, Great Friday, and Black Friday.  உண்மையில் அதுGOOD  FRIDAY  என்பதை விட GOD FRIDAY  என்பது பொருத்தமாக இருக்கும். . நம் ஊரில் கோவில்கள் ஊர்கள் பேர் போல் அதுவும் நாளடைவில் god , good ஆகிவிட்டது என்கிறார்கள். எனக்கு தெரியாது.

பைபிளில் ஒரு சங்கதி சொல்கிறேன் கேள். 
 கெத்சமெனே என்கிற ஊர் தோட்டத்தில் இயேசு  உயிர் தப்ப  ஒளிந்திருந்தபோது அவருடன் கூடவே இருந்த  இஸ்காரி யோத்  என்பவன்  முப்பது வெள்ளிக் காசுக்கு ஆசைப்பட்டு இயேசுவைத் தேடிக்கொண்டிருந்த எதிரியான ராஜாவிடம் காட்டிக் கொடுத்து விடுகிறான்.
 ''என்னுடன் வா நான் இயேசுவை காட்டுகிறேன்' என்று ராஜாவின் வீரர்களை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றான்.
''எல்லோரும் தாடி மீசையோடு நீளமாக தொள தொள வென்று அங்கி அணிந்து கொண்டிருகிறார்களே. இதில் யார் ஏசு? என்று திகைத்தார்கள் காவலர்கள்.
''நான் யாரை அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுக்கிறேனோ அவர் தான் இயேசு. அவரைப் பிடித்துக் கொண்டு போங்கள் ' என்றான் இஸ்காரியோத்.

இயேசுவைப் பிடித்துக்கொண்டு போய் விசாரணை செய்வதாக  பாவலா காட்டி  தேச துரோகம், ராஜாவுக்கு வரி ஏய்ப்பு, தானே ராஜா என்று அறிவித்தது போன்ற குற்றங்கள் சுமத்தினார்கள். இயேசு பதிலே சொல்லவில்லை. இயேசுவை ரோமாபுரி கவர்னர் பிலேட் முன் கொண்டு போய் நிறுத்தினார்கள். அவன் இயேசுவை குற்றவாளியாக கருதவில்லை. யூதர்களிடம் அபிப்ராயம் கேட்டு அவர்களும் குற்றம் நிரூபணம் இல்லை என்கிறார்கள். பிலேட் அதனால்   இயேசுவை  ராஜா ஹெரோட் முன் கொண்டு நிறுத்தி அவனும் இயேசு குற்றவாளி இல்லை என்றான். சவுக்கடி கொடுத்து விடுதலை செய்யலாம் என்று பிலேட் எண்ணினான்.

இயேசு தன்னை கடவுளின் மைந்தன் என்று சொன்னது குற்றம் என்று அர்ச்சகர்கள் சொல்ல பிலேட் கலங்கினான். ஒருவேளை இயேசு கடவுளின் மைந்தனாக இருந்தால்? என்ன செய்வது என்று யோசித்தான். ஏசுவுக்கு எதிரானோர் கொந்தளிக்க வேறு வழியின்று பிலேட் முடிவெடுத்தான்.

''நாசரேத்தை சேர்ந்த இயேசு, யூதர்களின் ராஜா'' என்ற வாசகத்தை சிலுவையில் செதுக்கி அதை யேசுவையே சுமக்க வைத்து கால்வரி என்ற இடத்துக்கு கொண்டு சென்றார்கள். மற்ற ரெண்டு சாதாரண குற்றவாளிகளுக்கும் அன்று அதே தண்டனை. மொத்தம் மூன்று மூன்று குற்றவாளிகள்  முதுகிலும்  சிலுவைகள்  சுமத்தி நடக்க வைத்தான்.

இயேசு சிலுவையில் ஆறு மணி நேரம் வேதனைப் பட்டதாக தெரிகிறது. கடைசி மூன்று மணி நேரம் உச்சிப் பகல் பொழுதிலிருந்து மாலை மூன்று மணிவரை எங்கும் இருள் சூழ்ந்தது. இயேசு சிலுவையிலிருந்து பேசின வார்த்தை
''இறைவா என் இறைவா, என்னை ஏன் கைவிட்டாய்?'' (PSALM 22 ).

இயேசுவின் மூச்சு நின்றது. பூமி நடுங்கியது. கட்டிடங்கள் நொறுங்கி விழுந்தன. சூரைக் காற்று. யூதர்களின் கோவில் ஆட்டம் கண்டு விழுந்தது. யூத மக்கள் ஓடி வருகிறார்கள் அவர்கள் வழி படும் ஆலய அர்ச்சகரை விட இயேசுவை நம்பு கிறார்கள். சிலுவையில் மூவரையும் கண்காணிக்கும் காவலன் உரக்க கத்துகிறான்

''ஆம் உண்மையில் இயேசு தான் கடவுளின் மைந்தன்'. (Matthew 27:45–54)
இயேசு இறந்து போய்விட்டாரா என்று பிலேட் கேட்கிறான். காவலன் ஒரு ஈட்டியால் இயேசுவின் இடுப்பு பகுதியில் குத்தி ரத்தம் நிணம் வந்து விட்டது. இறந்தாகி விட்டது என்கிறான். (Mark 15:45).

நந்தவனம் போன்ற ஒரு மரங்கள் செடி கொடிகள் சூழ்ந்த இடத்தில் ஒரு மலை குகையில் ஒரு கல்லறை கட்டி அதில் இயேசுவின் உடல் வாசனை திரவியங்கள் சாற்றி புதிய துணியால் சுற்றி உள்ளே வைக்கப் படுகிறது. (Matthew 27:59–60)

ஒரு பெரிய பாறையை உருட்டி அந்த குகையின் வாயில் மூடப்படுகிறது. சூரியன் அஸ்தமனமானான் (Matthew 27:60). (Luke 23:54–56). Matt. 28:1

ரெண்டு நாள் கழித்து விடியற்காலையில் மேரி மெக்தலீன் ஓடி வருகிறாள். வந்து அந்த குகையைப் பார்க்கிறாள். உள்ளே எட்டிப்பார்த்தவள்   ''யேசுவைக் காணோமே. எழுந்து போய் விட்டார் '' என்கிறாள். .(Matt. 28:6) அந்த ஞாயிறு தான் ஈஸ்டர் ஞாயிறு Easter Sunday (or Pascha),

சில கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு  அன்றைய உபவாசமாக  ஒருவேளை  முழு சாப்பாடு  அல்லது  ரெண்டு குட்டி பலகாரம்.  ரெண்டு பலகாரமும் சேர்ந்து ஒரு முழு சாப்பாடுக்கு ஈடாகக் கூடாது. மாமிசம் சேர்க்க கூடாது. ஆகவே சில இடங்களில் இதை ''மீன் வெள்ளி'' (fish friday ) என்று மாமிசத்தை மட்டும் ஒதுக்கி 'ஜல புஷ்ப''த்தை சாப்பிடும் வழக்கம் உள்ளது.

1662ம் வருஷத்திய பொது பிரார்த்தனை புஸ்தகம் நல் வெள்ளிக்கிழமை என்ன செய்யவேண்டும், எப்படி கொண்டாட வேண்டும் என்று சொல்ல வில்லை. ஆகவே உள்ளூர் வழக்கம் என்ன வென்றால் அன்று சிலுவையிலிருந்து சொன்ன கடைசி 7 வார்த்தைகள் அப்புறம் மூன்று மணி நேர பிரார்த்தனை என பழக்கப்படுத்திவிட்டது.

மாண்டி வியாழன், நல் வெள்ளி, புனித சனிக் கிழமை என்று வரிசையாக கொண்டாடும் பழக்கமும் உண்டு. இதெல்லாம் ஈஸ்டர் பிரார்த்தனைக்குட்பட்டது. மெழுகுவர்த்திகள் நிறைய எரியும். சில கிறிஸ்துவர்களுக்கு அன்று உப வாசம். ஒரு தடவை மட்டும் சிம்பிளாக மாமிசம் இல்லாமல் சாப்பிடலாம் என்று சாஸ்திரம். சில ப்ரோட்டஸ்டண்ட்கள் அன்று விசேஷ பிரார்த்தனை ஜெபங்கள் செய்வார்கள்.
நல் வெள்ளிக் கிழமை நமது தேசத்தில் ஒரு விடுமுறை நாள்.

ஒரு முறை என் நண்பன் கோபு '' குட் ஃப்ரைடே என்னிக்கு வரது? சனி ஞாயிறோடு ஒட்டி வந்தா எங்கேயாவது ஊருக்கு போகலாமே' என்றபோது அவனுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வில்லை.

மலேசியா முஸ்லீம் நாடு என்றாலும் நல்ல வெள்ளிக்கிழமை அன்று விடுமுறையை கூடுதல் சந்தோஷத்தோடு அனுபவிக் கிறார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் சில தீவிர ஏசு பக்தர்கள் தாங்களும் சிலுவையில் அறைந்து கொள்கி றார்கள். கை கால்களில் ஆணி. சவுக்கடிகள். . இதற்கு மேல் என்னால் எழுத கை நடுங்குகிறது. அங்கே மத்தியானம் மூணு மணிக்கு தான் ஹோட்டல்கள், கடைகள் திறக்கும். அப்போது தான் இயேசுவை சிலுவையில் அறைந்த நேரமாம். பாதிரிகள் மற்றும் பக்தர்கள் சிலுவை சுமந்து செல்வார்கள். சிலுவையை நல்லடக்கம் செய்வார்கள். பிரார்த்தனை நடக்கும். மௌன ஊர்வலம்.
பிரிட்டன் ஆஸ்திரேலியாவில் சுட சுட சிலுவை ரொட்டி (hot cross buns ) சுட்டு தின்பார்கள்.

உலகளவில் ஈடுபடும் பங்கு சந்தை , வங்கிகள், எல்லாமே நல் வெள்ளிக்கிழமை விடுமுறை அனுஷ்டிக்கும்.

ஈஸ்டருக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை நல் வெள்ளிக்கிழமை என கொண்டாடுகிறார்கள். இதை ஒவ்வொரு நாடுகளில் என்னென்னமோ விதமாக கணக்கிடுவது வழக்கமாகிவிட்டது. நல் வெள்ளிக்கிழமை வெவ்வேறு தேதிகளில் வந்தாலும் வெள்ளிக்கிழமை தான் வரும். அதில் சந்தேகம் கோபுவைப் போல இருக்கவேண்டாம்.

sivan jaykay

unread,
Apr 18, 2025, 8:07:11 PM4/18/25
to amrith...@googlegroups.com
விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

மூன்று ரசிகர்கள்‌ கதை

ரொம்பநாளாகிவிட்டது. விக்ரமாதித்தனையும் வேதாளத்தையும்  உங்களிடம் காட்டாமல் பிரித்து விட்டேன். இன்று மீண்டும்  அறிமுகமாகிறார்கள்.
வழக்கம் போல விக்கிரமாதித்தன் முருங்கை மரம் ஏறி வேதாளத்தை பிடித்து இறக்கி தோளில்  போட்டுக் கொண்டு நடந்தான்.
வேதாளம் பேசத்தொடங்கியது;
 அங்க தேசத்திலே, ஒரு பிராமண அக்ரஹாரம். விருக்ஷ் கடம்‌ என்று  பெயர். அதில் விஷ்ணுஸ்வாமி என்று ஒருவன்‌  வசித்தான்.அவனுக்கு  நல்ல குணங்கள் நிறைந் த ஒரு மனைவி, மூன்று பிள்ளைகள். பிறவியிலிருந்தே மூன்று பிள்ளைகளும் நல்ல ரசிகர்கள். அப்பா விஷ்ணுஸ்வாமி ஒரு யாகம் பண்ணினான். ''கடலுக்கு சென்று ஒரு ஆமையை பிடித்துக்கொண்டு வா அதற்கு பூஜை பண்ண வேண்டும்''என்று மூன்று பிள்ளைகளையும் அனுப்பினான்.  மூவரும் கடலுக்குச் சென்று ஒரு ஆமையைப் பார்த்தார்கள். 

முதல் பிள்ளை;   “இந்த ஆமையின்‌ உடம்பை பார்த்தீர் களா ரொம்ப வழவழ வென்று  இருக்கிறது.என்னால் அதை தொட முடியாது. உங்களில் யாராவது தொட்டு தூக்குங்கள்'

'2வது பையன்;  ''அண்ணா.  நீ அதைத்‌ தொடுவதற்கு யோசித்தால்‌ நாங்கள்‌ மட்டும்‌ தொடுவோமா?”

மூத்தவன்‌, " அப்படிச் சொல்லாதீர்கள், நீங்கள்தான்‌ இதை எடுத்துக்‌  கொண்டு வரவேண்டும்‌. இல்லா விட்டால்‌,  நம் அப்பா  செய்ய  இருக்கும்‌ யாகத்தை தடை செய்த பாபம்‌ உங்களுக்குச்‌ சம்பவிக்கும்‌. தவிர, அந்தப்‌ பாபம்‌ அவரையும்‌ பாதிக்கும்‌!”

இரண்டு தம்பிகளும்‌ கலகலவென்று சிரித்தார்கள்‌.
"அண்ணா, எங்களுடைய கடமை என்ன என்பதைப்‌ பற்றி கூறும்‌ நீ உன்‌ கடமையை மறந்துவிட்டாயே? அதே கடமை உனக்கும்‌ இல்லையா?"
“என்ன இப்படிக்‌ கேட்கிறீர்கள்‌? நான்‌ எப்படிப்பட்ட ரஸிகன்‌  என்பது உங்களுக்குத்‌ தெரியாதா? சாப்பா ட்டை அதன்  வாசனையிலிருந்தே அறிந்து சொல்வதில் நான்‌ சமர்த்தனாயிற்றே? அருவருப்பான ஒரு  வஸ்து வை நான்‌ எப்படித்‌ தொடுவேன்‌?" என்று மூத்தவன்‌  கேட்டான்‌. 

நடுவில்‌ பிறந்தவன்‌,: “பெண்களின்‌ தராதரத்தை  அறிந்து சொல்லக்‌ கூடிய சாமர்த்தியம்‌ வாய்ந்த நான்‌ உன்னைக்‌  காட்டிலும்‌ உயர்ந்த ரஸிகன்‌ ஆவேன்‌”

"அப்படியானால்‌  கடைசித்‌ தம்பி இந்த ஆமையை எடுத்துப்‌ போகட்டும்‌" 

கடைசி பையன்;  ''நான்‌ படுக்கையின்‌ சுகம்‌  அறிந்த வன்‌. ஆகவே, உங்கள்‌ இருவரைக்‌ காட்டிலும்‌ நான்‌ தான்‌  உயர்ந்தவன்‌“ 

இவ்விதம்‌ மூவரும்‌ ஒருவருக்கொருவர்‌ சண்டை போட்டுக்‌  கொள்ள ஆரம்பித்தார்கள்‌. மமதை அதிகமாயி ருந்ததால்‌, யாரும்‌ தாழ்ந்து போவதாக இல்லை. ஆகவே அவர்கள்‌ ஆமையைஅப்படியே போட்டுவிட்டு. விவாதத்தை அவ்வூர்‌ அரசனிடம்‌  தெரிவித்து முடிவைப்‌ பெறக்‌ கிளம்பினார்கள்‌.

அந்த நாட்டு ராஜாவான பிரசேனஜித்‌ என்பவன்‌ தன்‌ நலைநகரான விடங்கபுரியில்‌ இருந்தான்‌. அங்குள்ள அரண்மனையை ரஸிகர்கள்‌ மூவரும்‌ அடைந்து. அரசனிடம்‌ தங்கள்‌ விவாதத்தை முறை யிட்டுக்‌ கொண்டார் கள்‌. அதைக்‌ கேட்ட ராஜனும்‌

"சரி. இவ்விடத்தில்‌ தங்கியிருங்கள்‌. ஒவ்வொருவரையும்‌ பரீக்ஷித்துப்‌ பார்க்கி றேன்‌ என்றான்‌. அவர்களும்‌ சம்மதித்து அங்கேயே தங்கினார்கள்‌.

அன்றைக்கு ராஜா சாப்பிடப்‌ போகும்‌ சமயத்தில்‌ அம் மூவரையும்  தன்னுடன்‌ உட்கார வைத்து உபசரித்து
அறுசுவையுடன்‌ ராஜபோஜனம்‌ அளித்தான்‌. மற்ற எல்லோரும்‌ சம்பிரமாகக்‌ சாபபிட்டுக்‌ கொண்டிருக்கும்‌ போது சாப்பாட்டு ரஸிகன்‌ மட்டும்‌ எதையும்‌ சாப்பிடா மல்‌ அருவருப்புடன்‌ முகத்தைச்‌ சுளித்துக்‌ கொண்டு உட்கார்ந்திருந்தான்‌. சமையல்‌ நிரம்ப ருசியாக இருந்தும்‌ அவன்‌ ஏன்‌ சாப்பிடவில்லையென்று
அரசனே  கேட்டபோது, "இந்த சாதத்தில்‌ பிணத்தின்‌ வாடை வீசுகிறது. ஆகவே சாப்பாடு எவ்வளவுதான்‌ ருசி யாக இருந்தாலும்‌ என்னால்‌ அதைச்‌ சாப்பிட முடிய வில்லையே” என்று பதில்‌அளித்தான்‌ போஜன சுகம்‌ அறிவதில்‌ நிபுணனானவன்‌ .

சாப்பிட்டுக்‌ கொண்டிருந்த அத்தனை பேர்‌ எதிரிலும்‌ அவன்‌ அப்படிச்‌ சொன்னவுடன்‌, அரசன்‌ உத்தரவுப்படி அவர்கள்‌ ஒவ்வொருவரும்‌ சாதத்தை எடுத்து முகர்ந்து பார்த்தார்கள்‌. பிறகு, அவர்கள்‌ அனைவரும்‌
"வெண்மையான அரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த உணவு நல்ல மணம்‌ உள்ளதாகவே இருக்கிறது” என்றனர்‌. ஆனால்‌ போஜன சுகம்‌ அறிந்த அவனோ  மூக்கைப்‌ பிடித்துக்‌ கொண்டு சாப்பிடவே மறுத்து விட்டான்‌.

அரசன்‌ விசாரித்த போது, அன்றைக்கு சமைத்திருந்த அரிசி ஏதோவொரு கிராமத்தின்‌ சுடுகாட்டுக்குப்‌ பக்கத்தில்‌ இருந்த நிலத்தில்‌ விளைந்தது என்ற உண்மை தெரிய வந்தது. இதையறிந்த மன்னன்‌ ஆச்சரியத்தால்‌  திகைத்துவிட்டான்‌. உ டனே மூத்தவனைப்‌ பார்த்து, "உண்மையிலேயே நீ போஜன சுகத்தையறிந்த ரஸிகன்‌ தான்‌. அதிலே உன்னை வெல்லக்கூடிய நிபுணர்கள்‌ இந்தப்‌ பூ லோகத்தில்‌ இல்லை! ஆகவே, வேறு ஆகாரம்‌ உட்கொள்ள வேண்டும்‌” என்று சொல்லி உபசரித்தான்‌.
சாப்பாடு முடிந்த பிறகு அரசன்‌ அந்த ரஸிகர்களை அவர்கள்‌ விடுதிக்கு அனுப்பிவிட்டான்‌. 

அஸ்தமித்தவுடன்‌ தன்‌ பரிவாரத்திலே மிக்க அழகுள்ள வளாக இருந்த கணிகை ஒருத்தியைப்‌ பொறுக்கி எடுத்து அதிலாவண்யமாக அவளைச்‌ சிங்காரித்து, அவளை ஸ்திர்‌ சுகம்‌ அறியும்‌ ரஸிகனான இரண்டாவது சகோதரன்‌ விடுதிக்கு அனுப்பினான்‌. பூர்ண சந்திரன்‌ போன்ற முகப்பொலிவுடன்‌ அந்தப்‌ பெண்‌ அவன்‌  அறை யிலே நுழைந்தபோது, அவன்‌ தன்‌ மூக்கைப்‌ பிடித்துக்‌ கொண்டு இடது கையால்‌ ஜாடை காட்டி அவளை வெளியே அழைத்துச்‌ செல்லுமாறு உடன்‌ வந்த ராஜ சேவகர்களுக்குத்‌ தெரிவித்தான்‌.

“அவளை அழைத்துச்‌ செல்லுங்கள்‌. உடனே செல்லா விட்டால்‌, நான்‌ இறந்து விடுவேன்‌. அவளிடமிருந்து வெள்ளாட்டு  நாற்றம்‌ வீசுகிறது” என்றான்‌ ஸ்திரீ சுகம்‌ அறிவதில்‌ நிபுணன்‌.

அவர்கள்‌ உடனே கணிகையை மன்னனிடம்‌ அழைத் துச்‌ சென்று நடந்ததை எடுத்துச்‌ சொன்னார்கள்‌. அரசன்‌ தந்திரமான கேள்வி களால்‌ அந்தக்‌ கணிகையி டமிருந் தே அவளுடைய  ஆதிப்பிறப்பு விருத்தாந்தத்தை விசாரித்த போது அவள்‌  குழந்தையாக இருந்தபோது தாயும்‌, செவிலியும்‌ இல்லாமல்‌ வெள்ளாட்டுப்‌ பாலால்‌ வளர்ந்தவள்‌ என்பது தெரிய வந்தது.  மன்னனுக்கு மலைப்பு இன்னும்‌ அதிகமாயிற்று. "இவனையும்விடச்‌ சமர்த்தன்‌ சப்தலோகங்களிலும்‌ உண்டா?" என்று மன்னன்‌ ஆச்சர்யத்துடன்‌ ஸ்திரீ சுகம்‌ அறிவதில்‌
நிபுணனைப்‌ புகழ்ந்தான்‌.

பிறகு நித்துரை சுகம்‌ அறிவதில்‌ வல்லவன்‌ என்று கூறிய மூன்றாவது சகோதரனைக்‌ கூப்பிட்டு, அவனுடைய ரஸிகத்‌ தன்மையையும்‌ பரீட்சிக்க முற்பட்டான்‌. நன்றாக அலங்கரிக்கப்பட்ட  பள்ளி யறையிலே அவன்‌ விருப்பப்படியே ஒரு கட்டிலில்‌ மிக மிருதுவான ஏழு மெத்தைகளை ஒன்றன்‌ பின்‌ ஒன்றாகப்‌ போட்டு அவனைப்‌ படுக்க வைத்தான்‌
மன்னன்‌. ஆயினும்‌ பாதி ஜாமம்‌ கழிவதற்குள்ளாகவே அந்த ரஸிகன்‌ எழுந்து வலி பொறுக்க முடியாமல்‌ அலழினான்‌. பக்கத்தில்‌ காவல்‌ இருந்த அரசாங்க அதிகாரிகள்‌ அவன்‌ விலாவிலே ஒரு மயிர்‌ பதிந்து அழுத்தியது போன்ற வளைந்த அடையாளம்‌ ஒன்று இருக்கக்‌ கண்டார்கள்‌. உடனே அவர்கள்‌ மகாராஜனிடம்‌ ஓடிச்‌ சென்று செய்தியை அறிவித்தார்கள்‌.

அரசனும்‌ மெத்தைகளின்‌ அடியில்‌ ஏதாவது இருக்கிறதா என்று பரிசோதிக்க உத்திரவு அளித்தான்‌. அவர்கள்‌ அவ்விதமே  ஒவ்வொரு  மெத்தையாக எடுத்துச்‌ சோதித்து வரும்போது  ஒரு புஷ்பத்தோடு ஓட்டி க்கொண்டு ஒரு கேசம்‌  இருப்பதைக்‌ கண்டார்கள்‌. அதை எடுத்துக்‌ கொண்டு, அவர்கள்‌ அந்த ரஸிக னையும்‌ . அழைத்துச்‌ சென்று அரசனிடம்‌  காட்டி னார்கள். அவன்‌ உடலிலே  கேசத்தின் அடையாளத்தைக்‌ கண்ட  ராஜா திகைத்துப்‌ போனான்‌. ஏழு மெத்தைக ளுக்கு அடியிலிருந்த கேசம்‌ ஏழு மெத்தைகளையும்‌ தாண்டி எப்படி அவன்  உடலில் அழுந்தி இருக்க முடியும்‌ என்பதை எண்ணி எண்ணி அரசன்‌ அன்றிரவு முழுவதும்‌ சரியாகத்‌ தூங்கவில்லை.

மறுநாள்‌ காலையில்‌ அவன்‌ அம்மூவருக்கும்‌ அவர்களு டைய  ரஸிகத்தன்மையை மெச்சி மூன்று லக்ஷம்‌ பொன்‌ சன்மானம்‌ வழங்கினான்‌. அவர்களும்‌ ஆமையை மறந்து அரசன்‌  சபையிலேயே தங்கி விட்டார்கள்‌. தங்கள்‌ தகப்பனார்‌ செய்ய வேண்டிய யாகத்தைத்‌ தடை செய்த தோஷம்‌ தங்களுக்குக்‌  கிட்டியதே என்றும்‌ அவர்கள்‌ கவலைப்படவில்லை.

இவ்விதம்‌ வேதாளம்‌ கதையை சொல்லி விட்டு  விக்கிரமாதித்தனைப்‌ பார்த்து, "ஓ! ராஜனே! போஜன சுகம்‌, ஸ்திரீ ஈகம்‌, நித்திரை சுகம்‌, ஆகிய இம்மூன்றிலும்‌ முறையே  சமத்தர்களான இம்மூவருள்‌ எவனுடைய ரஸிகத்தன்மை  அதிகமானது? எவன்‌ அசகாய நிபுணன்‌?” என்று கேட்டது. சரியான பதிலை கூறா விட்டால் உன் தலை நூறு சுக்கல் சுக்களாக உடைந்து விடும் என்பது ஞாபகம் இருக்கட்டும்'' என்றது.
அதற்கு விக்கிரமாதித்த மகாராஜன்‌ பின்வருமாறு பதில்‌ சொன்னான்‌:

“போஜன சுகம்‌ அறிந்தவனும்‌. ஸ்திரீ சுகம்‌ அறிந்த வனும்‌  ஐம்புலன்களும்‌ விழித்திருக்கும்‌ நேரத்தில்‌ புத்தியினாலே சொன்னார்கள்‌. சுயபுத்தி இல்லாமல்‌ தூங்கும்‌ போது அனுபவித்ததைச்‌ சொன்ன நித்திரை சுக ரஸிகனே அசகாய நிபுணன்‌!"
 
இதைக்‌ கேட்ட வேதாளம்‌ முன்‌ போலவே கட்டவிழ்த்துக்‌ கொண்டு முருங்க மரத்தில்‌ ஏறிக்‌ கொண்டது.
 

sivan jaykay

unread,
Apr 18, 2025, 8:07:11 PM4/18/25
to amrith...@googlegroups.com
ஜட்ஜின் சந்தேகம்.        நங்கநல்லூர்_J_K_SIVAN

ராமநாதய்யர் ஏழை இல்லை.  வேதங்கள் கற்ற த ஸம்ஸ்க்ரித பண்டிதர். கல்லூரி ஆசிரியர். சொல்லிக்கொள்ளும்படியாக  ஏதோ ஊரில் கொஞ்சம்  நிலம் வீடு உள்ளவர். உள்ளூர் ராமர் கோவிலின் தர்மகர்த்தா. ஒரே மகன் கோதண்டராமன்  நன்றாக படித்து கிராமத்திலி ருந்து குடும்பம் சென்னைக்கு குடி பெயர்ந்து நங்கநல்லூரில் வாசம்.  ஒன்றரை கிரவுண்ட் நிலம். வீடு தோட்டம்.  பள்ளிப்படிப்பு முடித்து கோதண்டராமன் காலேஜ் போய் அங்கும் நன்றாக படித்துஎன்ஜினீயராக  டில்லியில் வேலைக்கு
சேர்ந்து அப்படியே அமேரிக்கா  போய் விட்டான்.

ஒரே மகனை பிரிந்து ராமநாதய்யர் சுசீலா தம்பதியர்  ஏங்கினார்கள் .அடிக்கடி டில்லியிலிருந்து வந்து சில நாட்கள் பெற்றோருடன் இருக்கும் வழக்கம் இருந்த  கோதண்டராமன் அமேரிக்கா போனவுடன் இந்தியாவை பெற்றோரை அடியோடு மறந்து போய்விட்டானோ?  முன்பெல்லாம்  வருஷத்துக்கு ஒருதடவையாவது சில நாள் வந்தவன் இப்போது ஐந்து வருஷங்கள் ஓடியும் வரவே இல்லை. அங்கேயே கல்யாணம் ஆகி அப்பாவாகிவிட்டானாம். அப்பா அம்மாவோடு 
 போனில் கூட பேச நேரம் இல்லை. அழுது அழுது  அம்மா சுவற்றில்  படமாகி விட்டாள் அப்பா ஞாபகம் அடியோடு இல்லாத  பிள்ளை. 

தனிமையில்  ராமநாதய்யர்  மனம் ஒடிந்து உடலில் பாதிப்பு.இந்த நிலையில் தான் ராமநாதய்யர் பிள்ளை மேல் ஒரு கேஸ் கோர்ட்டில் போட்டார்.   

ஒவ்வொரு மாதமும் வசதியாக இருக்கும் மகன் அப்பாவுக்கு மாதம் பணம் நேரிலே வந்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை. நீதி மன்றம்  இந்த வழக்கை நியாயமான கோரிக்கை என்று ஏற்றது.
நோட்டீஸ்  பறந்தது.  கோதண்ட ராமனுக்கு கோபமும் ஆச்சர்யமும் ஒருங்கே வந்தது.

''அப்பா எதற்கு என் மேல் இப்படி வழக்கு போடடிருக்கிறார்? வசதிகளுக்கு குறைவில்லையே''
என்று அதிசயித்தான். அவன் அமெரிக்க மனைவிக்கும் குழந்தைகளுக்கும் இதெல்லாம் புரியவில்லை.
கோர்ட் விசாரணையில் நீதிபதி அதிசயித்தார்.

ஏன் வசதியுள்ள ராமநாதய்யர் மகன் ஒவ்வொரு மாதமும் ஒரு ரூபாய் நேரில் தனக்கு உயிர் பிரிகிற வரை வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என்று புரியவில்லை என்றாலும்  அவர் வாதம் நியாயமானது  கோரிக்கைக்கு , உரிமை இருக்கிறது என்று யோசித்து  தீர்ப்பு  ராமநாதய்யருக்கு சாதகமாயிற்று. தீர்ப்பெல்லாம் முடிந்து  போனாலும்  ஏன் ராமநாதய்யர் ஒரு ரூபாய்க்கு கேஸ் போட்டார் என்று அறிந்துகொள்ள  
ஜட்ஜ் கைலாசம் தனியாக ராமநாதய்யரை அழைத்தார்.

''ஐயர்வாள் ,உங்க பிள்ளை கோதண்டராமன்  நிறைய சம்பாதிக்கிறான், வசதி யோடு இருக்கிறான் என்று தெரிந்தும்  நீங்க ஏன்  மாதம் ஒரு ரூபாய் மட்டும் அவன் தரவேண்டும் என்று கேட்டீர்கள். நிறையவே  பணம் கேட்டிருக்கலாமே? ''
ராமநாதய்யர் சிரித்தார் . பதிலளித்தார்;

''ஜட்ஜ் அவர்களே, நீங்கள் கேட்பது புரிகிறது. எனக்கு மகன் சந்தோஷமாக வாழ்கிறான் என்று தெரியும், அதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.ஆனால் இப்படி ஒரு நீதி கிடைத்ததால், எனக்கு ரெட்டிப்பு சந்தோஷம்,
அடுத்த மாதம் முதல் மாதம் ஒரு தடவையாவது ஒவ்வொரு மாதமும் என் மகன் முகத்தை கண்ணுக்கு எதிரே என்னால் பார்க்க முடியுமே, அவன் கையால் கிடைக்கும் ஒரு ரூபாயை விட அவன் நேரில் வந்து தரிசனம் கொடுத்தால் நான் பெறப்போகும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இதுவரை அவனைப் பார்க்க வோ, நேரில் பேசவோ கூட இயலாமல் போய்விட்டதே என்று தான் இப்படி ஒரு நீதி கேட்டேன்.''

பெற்றோர் பாசம் எப்படிப் பட்டது புரிகிறதா?
உலகில் மிகவும் சிறந்த பாக்யம் பெற்றோர் நீண்டகாலம் உயிரோடு இருப்பது, அதுவும் அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வது எல்லோருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம். அது கிடைத்தவர்கள் அதை உதாசீனம் பண்ணுவதோ மிஸ் பண்ணி விட்டு பின்னால் வருந்துவதில் பயனில்லை.அது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். எந்த புண்ய நதியில் குளித்தாலும், எந்த க்ஷேத்ரம் போனாலும் மன சாக்ஷியின் உறுத்தல் தீராது.

sivan jaykay

unread,
Apr 18, 2025, 8:07:22 PM4/18/25
to amrith...@googlegroups.com
விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் 

                                                                                உண்மை நண்பன். 


சித்திர சேனன் என்கிற அரசகுமாரனும்  வில்லிய சிங்கன் எனும் வேடனும் நண்பர்கள். காட்டில் ஒரு முனிவர் வசம் ஒரு அழகிய பெண் இருக்கிறாள் என்று வில்லிய  சிங்கன் மூலம் அறிந்து அவளை காண ஆசைப்படுகிறான்.  வில்லியசிங்கன் வழி காட்ட, அந்த முனிவர் அழகிய பெண் மடியில்  தலை  வைத்து உறங்க, சித்திர சேனனுக்காக வில்லியசிங்கன்  மெதுவாக முனிவர் தலையை அந்த பெண் மடியில் இருந்து தூக்கி தனது மடியில் வைத்துக்கொள்ள  சித்திரசேனன் அந்த பெண்ணோடு ஓடி கல்யாணம் பண்ணிக்கொள்கிறான்.  தூக்கம் முடிந்த முனிவர் வில்லியசிங்கன் மடியில் தான் படுத்திருப்பதை உணர்ந்து அவனோடு பேசி  ''உன் நண்பன்  சுயநலம் பிடித்தவன்.  நண்பன் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு கதை சொல்கிறேன் என்று ஆரம்பிக்க  வில்லியசிங்கனோடு   நாமும் முனிவர் சொன்ன கதை கேட்போமா?  
 
ப்ரம்மபுரி  என்று ஒரு சின்ன ஊர். அதற்கு ஒரு ராஜா. அவன் பெயர்  சன்மார்கன்.  அவன் நண்பன் குணபத்ரன். வழக்கம் போல் நம் கதைகளில்  வருகிறமாதிரி அவன் மந்திரி குமாரன்.  நெருக்கமான தோழர்கள். வயதாகி ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிற்று.  சன்மார்க்கனுக்கு  சுரதவல்லி என்ற அரசகுமாரி. கலிங்க நாட்டில் ஒரு அரசகுமாரியை குணபத்ரன் மணந்தான். கல்யாணம்  ரெண்டு பெண்களும் அவர்கள் பெற்றோரிடம் வசித்தார்கள்.  கொஞ்சம் நாள் கழித்து  நண்பர்கள் இருவரும்  தத்தம் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவிகளை தம் வீட்டுக்கு அழைத்து வர கிளம்பினார்கள்.. ரெண்டு  பேரும்  நடந்து போகும்போது சன்மார்கன் முன்னாலும்  குணபத்ரன் பின்னாலும் செல்லும்போது  அவர்கள் போகும் வழியில் இருந்த ஒரு மரத்தில்  ஒரு பறவை இன்னொரு பறவையிடம் என்ன சொல்லியது தெரியுமா?  ''கண்ணே, இதோ முன்னால்  நடக்கிறான் அவனுக்கு  மரணம் காத்திருக்கிறது'' என்று.   இது எப்படி  குணபத்ரனுக்கு தெரிந்தது?  அவனுக்கு  தான் விலங்குகள்  பறவைகள் பேசும் பாஷைகள் நன்றாக தெரியுமே . அதனால் அவன் அவை பேசுவதை புரிந்து கொள்ள முடிந்தது..  '' சன்மார்க்கா, நீ  என் பின்னாலே வா  நான் வழி காட்டுகிறேன் என்று தனது நண்பன் அரசகுமாரன் உயிரை காக்க  தான்  முன்னாலே சென்றான். 

அப்போது  அதே  பறவைகள் சிரித்தன. ''பாவம் பின்னால் நடக்கிறவனுக்கு நிச்சயம் மரணம் தான் ''  என்றன. குணபத்ரனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.  சரி  நாம் இருவரும் சேர்ந்தே நடப்போம் என்று அவனோடு சேர்ந்து நடந்தான்.
ஓஹோ!  ஒருவேளை  சன்மார்க்கனுக்கு  அவனது மாமனார் ஊரில் மரணம் சம்பவிக்குமோ என்ற பயம் உண்டானது. சில நாட்களில் சன்மார்கன் மனைவி வசிக்கும்  ஊருக்கு சென்றார்கள். ஊர்  எல்லை அடைந்தது  சன்மார்கனின் மாமனார் ராஜாவுக்கு சேதி சொல்லி அனுப்பினார்கள்.  ராஜாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி. மாப்பிள்ளை  ராஜகுமாரனை வரவேற்க தந்த பல்லக்கு அனுப்பினான்.  குணபத்ரன் ஒரு பச்சை பல்லக்கில் பின்னால்  சென்றான். குணபத்ரனுக்கு ஒருவேளை தந்த பல்லக்கில் ஏதாவது ஆபத்து நேருமோ என்று தான்  அந்த தந்த பல்லக்கில் அமர்ந்தான். சன்மார்கனை தனது பச்சை பல்லக்கில் பிரயாணம் செய்ய வைத்தான். 

இரவு  சன்மார்கனின் மனைவி அவளது அந்தப்புரத்தில்  கணவனை காண  இனிப்புவகைகள்,  பால், பழங்களுடன் வந்தாள் ல். சன்மார்கன்  நீண்ட நடை நடந்து வந்ததால் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.  தனது நண்பன் சன்மார்கன் உயிருக்கு  பறவைகள் சொல்லியபடி ஆபத்து நேருமோ என்று அவனைக் காக்க  குணபத்ரன் அந்த அந்தப்புர அறையில் யார் கண்ணிலும் படாமல் ஒளிந்து கொண்டிருந்தான். அவன்  நண்பன் மனைவி உள்ளே நுழைந்தது. தனது கணவன் அசந்து தூங்கியதை  பார்த்ததும்  அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பிறகு மெதுவாக  பக்ஷணங்கள், பழங்களுடன்  வெளியே சென்றாள் .குணபத்ரன் நடப்பதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தான்.  அவள்  வெளியே சென்றதும் அவளைப்  பின்  தொடர்ந்தான். வெளியே  வேகமாக நடந்த  அந்த பெண் ஒரு இடத்தில் தனது ரகசிய காதலனை சந்திக்கிறாள். கொடூரமான அழகற்ற அந்த மனிதன்  முடவன். அவனைப்பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது. ''ஏன் உனக்கு இவ்வளவு நேரம் என்னை பார்க்க வருவதற்கு'' என்று அவளை கோபித்தான்.  

''நான் என்ன பண்ணுவேன், எனக்கு தாலி கட்டிய கணவன் வந்து  விட்டானே '' என்று சமாதானம் சொன்னாள். 
நீ என்ன பண்ணப்போகிறாய்?

'' தெரியவில்லை, என்னை அவன் ஊருக்கு அழைத்துக்கொண்டு போய்விடுவான். உன்னை இனி சந்திப்பது முடியாது''

''ஏன் இப்படி உளறுகிறாய். இந்தா என்று தனது அரையிலிருந்து ஒரு கூரிய  கத்தியை எடுத்து அவளிடம் கொடுத்து. நீ இரவோடு இரவாக உன் கணவனை தலையை சீவி அதை என்னிடம் கொண்டுவந்து காட்டு. அப்போது  தான் நீ என்னை உண்மையாகவே காதலிக்கிறாய் என்று எனக்கு புரியும் '' என்றான்.

அந்த ராணி கத்தியோடு தனது அறைக்கு சென்றாள் . ஓட்டமும் நடையுமாக குணபத்ரன் பின் தொடர்ந்தான். அவள் முடவன் கொடுத்த கத்தியால் சன்மார்கனின் தலையை சீவினாள். அதற்குள் ஓடி வந்து அவள்  கையை பிடித்தான் குணபத்ரன். டூ  லேட்.  அதற்குள் சன்மார்கன் தலை துண்டாகிவிட்டது.  அந்த பெண் கூச்சலிட்டாள். ஐயோ ஐயோ என்ற அவள் குரல் கேட்டு எல்லோரும் ஓடிவந்தார்கள். அவள் அந்தப்புரத்தில் குணபத்ரனுக்கு என்ன வேலை? 

இந்த ஆள் என் கணவனை கொன்றுவிட்டான் . என்னை கற்பழிக்க முயன்றான் என்று அவள் கத்தினதை நம்பிவிட்டார்கள்.
அவள் தந்தை ராஜா தனது சேவகர்களின் குணபத்ரனை ஒப்படைத்து. ஊர் முழுதும் அவனை சுற்றி  இழுத்துக் கொண்டு போய் வெட்டுங்கள்  அவனை வெட்டி கொன்றபின்   ரத்தம் தோய்ந்த கத்தியை கொண்டு வந்து காட்டுங்கள்'' என்று கட்டளையிட்டான். 

வீரர்கள்  குணபத்ரனை இழுத்துக் கொண்டு சென்றபோது அவன் எவ்வளவு நல்லவன் என்று புரிந்துகொண்டார்கள். அவனை கொள்ளாமல் தப்பிக்க விட்டு ஒரு மிருகத்தை கொன்று அந்த ரத்தம் தோய்ந்த கத்தியை ராஜாவிடம் காட்டினார்கள்.
தயவு செயது சன்மார்கனின் உடலை பாதுகாத்து வையுங்கள் என்று அந்த வீரர்களை குணபத்ரன் வேண்டியபடியே மறைத்து வைத்தார்கள்.

குணபத்ரன் சொன்னபடியே  மறுநாள் இரவு அந்த பெண் ரகசியமாக தன் காதலன் முடவனை சந்திக்க சென்றபோது கூடவே மறைந்து சென்றார்கள். அந்த முடவனையும் அவளையும்  கையும் களவுமாக பிடித்து ராஜா முன் கொண்டு நிறுத்தினார்கள்.  ராஜா ரொம்ப  நொந்து போனான். இப்படி ஒரு பெண்ணா? என்று கோபத்தில் அவளையும் அந்த முடவனையும்  வாளால் வெட்டி கொன்றான்.  இந்த பாவம் தொலையட்டும் என்று காசிக்கு சென்றுவிட்டான் ராஜா.
குணபத்ரன் நண்பன் சன்மார்கனின் உடலை ஜாக்கிரதையாக பத்திரப்படுத்தி தன்னோடு எடுத்துக் கொண்டு தனது மனைவி ஊரான  கலிங்கநாட்டுக்கு  சென்றான். அங்கேயும் ஒரு அதிசயம்.
குணபத்ரன் மனைவி கலிங்க நாட்டு இளவரசி இரவு அவன் தூங்குவதாக நடிப்பதை நம்பி வெளியே சென்றாள் . குணபத்ரன் மெதுவாக அவளை பின் தொடர்ந்தான்.   உள்ளூர் காளி  கோவிலுக்கு சென்ற அவன் மனைவி ''அம்மா தாயே, பகவதி, என் கணவன் என்னை வந்து சேர்ந்ததும் என் தலையை உனக்கு காணிக்கை ஆக்குகிறேன் என்று வேண்டிக்கொண்டேன்  அதன் படி இதோ என் தலை உன் காலடியில் என்று தனது தலையை வெட்டிக்கொள்ள முயன்றாள் . 

காளி  ப்ரத்யக்ஷமாகி ''பெண்ணே நீ என் பக்தை. உன் பக்தியை மெச்சுகிறேன். நீ உயிரிழக்க வேண்டாம். இந்தா விபூதி எலுமிச்சம்பழம். உன் கணவன் அவனோடு  ஒரு உடலை கொண்டு வந்திருக்கிறான். அந்த  இளவரசன் சன்மார்கன் உயிர் பெற்று அவனோடு நாடு திரும்பாவிட்டால்  உன் கணவன் குணபத்ரன் தன்  உயிரை போக்கிக் கொள்வான். ஆகவே  வீட்டுக்கு போ. இந்த எலுமிச்சையின் சாறையும், விபூதியையும் அந்த இறந்த உடல் மேல் பூசு. அவன் உடனே  தூங்கியவன் தூக்கம் கலைந்து எழுந்தவன் போல்  உயிரோடு எழுந்திருப்பான்'' என்றாள்  காளி.  அவ்வாறே அரண்மனைக்கு சென்றாள்  அந்த பெண்.

இதெல்லாம் நன்றாக  கவனித்த குணபத்ரன்.  மறுநாள் காலையில் தான் ஒரு கனவு கண்டதாக முதல் நாள் இரவு நடந்ததை எல்லாம்  மனைவியிடம் சொல்ல அவள் வியந்தாள். 

''நீங்க  கனவு காணலீங்க . அப்படி தாங்க நடந்தது '' என்றாள்  அந்த பெண். இருவரும் சன்மார்கன் உடலை வைத்திருந்த இடத்திற்கு சென்று காளி  சொன்னபடி செயது சன்மார்கன் மீண்டும் உயிர் பெற்றான். 


இந்த கதையை  வில்லியசிங்கனிடம்  கூறி  இப்படித்தான், உண்மை நண்பன்  இருக்கவேண்டும்.உன்னுடைய  உபயோகமில்லாத நண்பன் சித்திரசேனன்  மாதிரி இருக்கக்கூடாது.என்று சொல்லி தவம் செய்ய புறப்பட்டு 
விட்டார்.

விக்கிரமாதித்தன் பெண்ணாக   வேடம் பூண்டு சம்பகவல்லி என்ற இளவரசியிடம் அந்தப்புரத்தில் நட்போடு இருக்கும்போது அவள் இந்த கதையை ''விக்ரமாதித்திக்கு''  சொல்லி  உன் மனதை திறந்து  நீ  என்ன நினைக்கிறாய் என்று என்னிடம் சொல்'' என்கிறாள்.

விக்ரமாதித்தி,  ''ஆமாம்  இளவரசி, உலகத்தில் எங்கும் மணமான பெண்கள் இல்லறவாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கிறார்கள். ஆடவர்களை வெறுப்பதில்லை.  என்னைப்பொறுத்தவரை நீ  அனாவசியமாக ஆண்களை வெறுக்கிறாய். வாழ்க்கையை  வீணடிக்கிறாய்.  அது தான் எனக்கு வருத்தம் '' என்கிறாள்.
''உனக்கு தெரியாது. பெண்ணே  நான்  ஏன்  ஆண்களை வெறுக்கிறேன் என்று. அது நீளமான ஒரு கதை... அது என்னுடைய பூர்வ ஜென்மம் சம்பந்தப்பட்டது ..... என்கிறாள் 

பெண்ணாக  வேஷமிட்டு சம்பகவல்லியுடன் இருக்கும்  விக்ரமாதித்தன். ''அது என்ன நீளமான கதை. சொல்லேன் கேட்போம் என்று கேட்கிறான்.  நாமும் கேட்போம்.



sivan jaykay

unread,
Apr 20, 2025, 7:57:39 PM4/20/25
to amrith...@googlegroups.com
விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் -
நங்கநல்லூர் J K SIVAN

ஞானி, சூஸ்திரவான்‌, சூரன்‌, கதை

விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் படிக்க, சயன்ஸ், இங்கிலிஷ், விசேஷமாக கல்வி அறிவு எதுவுமே தேவை இல்லை. அது ஒரு காந்த சக்தி கொண்ட விஷயம். பெரியவர்கள் குழந்தைகள் யார் படித்தாலும் ஒரு தனி உலகத்துக்கு நம்மை இட்டுச் செல்பவை. நமது முன் னோர்கள் அடிக்கடி திரும்ப திரும்ப சொல்லிய, கேட்டு ரசித்த கதைகள். என்றும் சாகா வரம் பெறவை . வேதாளம் சொல்லும் ஒரு கதையை இப்போது கேளுங் கள்.

விக்ரமாதித்தன் தோளில் தொங்கிய வேதாளம் சொல்ல ஆரம்பித்தது.

''விக்ரமாதித்தா, உஜ்ஜயினி நகரத்தில்‌ ஹரிஸ்வாமி என்ற ஒரு பிராமணன் இருந்தான். புண்ணியசேனன்‌ எனும்‌ ராஜா அவனை ஆதரித்தான். ஹரிஸ்வாமிக்கு மனைவி, தேவஸ்வாமி என்கிற பிள்ளை, சோம பிரபா என்கிற அழகிய பெண் இருந்தார்கள். பெண் வயதுக்கு வந்ததும் அவளுக்கு கல்யாணம் பண்ண ஹரிஸ்வாமி முனைந்தான். அவன் மனைவி ''என் பெண்ணை “வீரம்‌, ஞானம்‌, விஞ்‌ஞானம்‌ '' இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில்‌ வல்லவனுக்கே கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண் டும்'' என்று சொல்லிவிட்டாள் . ஹரிஸ்வாமிக்கு கவலை. எப்படி இப்படி ஒரு மாப்பிள்ளையை தேடி பிடிப்பது?

அந்த நேரத்தில் புண்ணியசேனன் ராஜ்யத்தின் மீது தக்ஷிண தேசத்து ராஜா ஒருவன் படையெடுத்தான். அவனிடம் சமாதானம் பேச புண்யசேனன் ஹரி ஸ்வாமி யை அனுப்பினான். ஹரிஸ்வாமி வெற்றிகரமாக சமா தான செய்தியைப் பேசி முடித்துக்‌ கொண்டார்‌.

அப்போது அங்கே இருந்த சூஸ்திரவான் என்ற பிராமணன் ஹரிஸ்வாமியின் பெண் சோம பிரபாவின் அழகைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் ஹரி ஸ்வாமி யிடம் ''உங்கள் பெண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிகொடுங்கள்'' என்று கேட்டான்.

''என் பெண்ணை வீரம், ஞானம், விஞ்ஞானம் இந்த மூன்றில் ஏதாவதொன்றில் சிறந்தவனுக்கு தான் கொடுப்பேன். உனக்கு என்ன தெரியும் சொல்? '' என்றான் ஹரி சுவாமி.

''எனக்கு விஞ்ஞானத்தில் நல்ல பயிற்சி'' என்றான் பிராமணன்.

''எங்கே , அதை எனக்கு நிரூபி பார்க்கலாம்'' என்றான் ஹரி ஸ்வாமி.

அந்த பிராமணன் உடனே தனது அனுபவத்தால், சாமர் த்தியத்தால்‌ ஒரு ஆகாயவிமானத்தை தயார் செய் தான். அதில் ஹரிஸ்வாமியை ஏற்றிக்கொண்டு இந்திர லோகம் வரை பறந்து எல்லா லோகங்களையும் காட்டி னான்.

அவருக்கு இற்திரலோகம்‌ முதலிய எல்லா உலகங்க ளையும்‌ காட்டி விட்டு தக்ஷிண தேச ராஜா அரண்ம னைக்கே திரும்ப அழைத்துக் கொண்டு வந்தான். ஹரிஸ்வாமிக்கு பரம திருப்தி. இன்னும் ஏழு நாளில் கல்யாணம் என்று அறிவித்தான்.

இதற்கிடையில் ஹரிஸ்வாமியின் பிள்ளை தேவ ஸ்வாமியை உஜ்ஜயினியில் சூரன் என்பவன் சந்தித்து அவன் சகோதரி சோமா பிரபாவை கல்யாணம் பண்ணிக்கொள்ள விருப்பம் தெரிவித்தான். தேவ ஸ்வாமி மேலே சொன்ன கண்டிஷனை அவனுக்கு சொன்னான்.

உடனே சூரன் என்பவன் தான் உண்மையான சுத்த வீரன் தான் என்று நிரூபிக்க வில் வித்தை, வாள் வித்தை, கத்தி சண்டை எல்லாம் தேவ ஸ்வாமிக்கு செய்து காட்டி, தேவஸ்வாமியும் ''என் தங்கை அடுத்த முகூர்த்தத்தில் உனக்கு தான்'' என்று வாக்கு பெற்றான். ஹரிஸ்வாமி அதே முகூர்த்தத்தில் தான் விஞ்ஞானிக் கும் சோம பிரபாவை கல்யாணம் பண்ணி வைக்கி றேன் என்று வாக்கு கொடுத்திருந்தான்.

இதற்கு நடுவில் இன்னொரு கூத்து நடந்ததே அது தெரி யுமா? ஹரி ஸ்வாமியின் மனைவி ஒரு ஞானியை சந்திக்கிறாள்.அவனை சோதிக்கிறாள். அவள் கேட்கும் கேள்விகளுக்கு அவன் சரியாக நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எஎல்லாவற்றையும் புட்டு புட்டு வைக்கிறான். ரொம்ப சந்தோஷத்தோடு அந்த ஞானிக்கு தான் அடுத்த முகூர்த்தத்தில் தனது பெண் மனைவியாவாள் என்று வாக்கு விட்டாள் .

ஹரிசுவாமி தக்ஷிண தேசத்திலிருந்து திரும்பி வந்து தான் விஞ்ஞானிக்கு பெண்ணை விவாகம் செய்து வைப்பதாக வாக்கு கொடுத்ததை சந்தோஷமாக சொல்லும் போது தான் தேவ ஸ்வாமி தான் வீரனுக்கு கொடுத்த வாக்கையும் ஹரிஸ்வாமி மனைவி ஞானிக்கு கொடுத்த வாக்கும் அறிந்து பெரிய கவலை வந்து விட்டது. ஒரே நாளில் எப்படி சோம பிரபாவை மூணு பேருக்கு கல்யாணம் பண்ணி வைப்பது?
அடுத்த முகூர்த்தத்தில் சொல்லி வைத்தாற்போல மூன்று மாப்பிள்ளைகளும் உறவினர்களோடு கல்யாணத்துக்கு வந்து விட்டார்கள். ஹரி ஸ்வாமி குடும்பம் என்ன செய்யும்? அப்போது தான் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. எல்லோரும் இருக்கிறார்கள் ஆனால் மணப்பெண் சோம பிரபாவை காணோம். எங்கே மாயாமாக போய் விட்டாள்? எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை?

அப்போது தான் ஹரிஸ்வாமிக்கு ஞானோதயம் உதித்தது. மூன்று மாப்பிள்ளைகளில் ஞானியை கூப்பிட்டு ஐயா என் பெண் சோம பிரபா எங்கிருக் கிறாள் என்று கண்டுபிடித்து சொல்லுங்கள்? என்று கேட்டான்.

''சுவாமி, உங்கள் பெண் சோம பிரபாவை தூம்ரசிகன் என்கிற ராக்ஷஸன் தூக்கிக்கொண்டு போய் இருக்கி றான். விந்திய மலைக்காட்டில் அவன் குகைக்கு கொண்டு போய் வைத்திருக்கிறான்'' என்று சொன்னான் ஞானி.

எப்படி விந்திய மலைக்காட்டுக்கு போவது?. எப்படி பெண்ணை மீட்பது? விஞ்ஞானி எதிரே நிற்பதைப் பார்த்ததும் ஹரி ஸ்வாமிக்கு பொறி தட்டியது.

''ஐயா என் பெண்ணை சீக்கிரம் விந்தியமலை காட்டு குகையிலிருந்து மீட்டு தரமுடியுமா? என்று கெஞ்சினான்.
விஞ்ஞானி ஒரு கணம் யோசித்தான். அவனால் உடனே விமானம் தயாரிக்க முடியுமே, ஒரு விமானம் ரெடியாகி விட்டது. அதில் பறந்து விந்திய மலைக்காட்டுக்கு ஆகாய விமானத்தில் வீரன், ஞானி, விஞ்ஞானி மூவரும் ஹரி ஸ்வாமியோடு பறந்தார்கள். வீரன் நிறைய ஆயுதங் களை கைவசம் கொண்டு போனான்.

ஒருவேளை ராக்ஷசனோடும் அவன் படையொடும் சண்டை போட்டு கொள்ளவேண்டுமானால் ஆயுதம் வேண்டும் அல்லவா?

தனது குகை வாசலில் ஏதோ ஒன்று மேலே இருந்து இறங்குவதைப் பார்த்த ராக்ஷஸன் கோபத்தோடு ஓடிவந்தான். அவனை எதிர்பார்த்து தயாராக இருந்த வீரன் ஆயுதங்களை உபயோகித்து ராக்ஷஸனை வதைத்தான். சிறிது நேரத்தில் ராக்ஷஸன் தலை துண்டாக கீழே விழுந்தது.

குகைக்குள் சென்று ஸோம ப்ரபாவை தூக்கிக் கொண்டு ஆகாய விமானத்துக்கு வந்தான் வீரன். அதே மாய விமானத்தில்‌ உஜ்ஜயினி திரும்பினார்கள்‌.

முஹூர்த்தம் வேளை கடந்து போய் விட்டது. கல்யாணம் எப்படி யாருடன் நடக்கும்?

''சோம பிரபா எனக்கு உனக்கு என்று மூன்று பேரும் சண்டை போட்டார்கள்.

ஞானி, ''சோம பிரபா எங்கே இருக்கிறாள் யார் தூக்கிக் கொண்டு போய் எங்கே வைத்திருக்கிறார்கள் என நான் சொல்லாவிட்டால் எப்படி அவள் கிடைத்திருப்பாள். ஆகவே நான் தான் அவள் கணவன்'' என்றான்.

''இடம் சொல்லிவிட்டால் போதுமா? அமெரிக்கா, ரஷ்யா என்று ஊர் பேர் தெரிந்து என்ன செய்வீர்கள். அங்கே எப்படி போவீர்கள்? உடனே பறந்து போக முடியுமா? ஆகவே அவளை அடைய விமானம் தயாரித்த நான் தான் அவள் கணவன் ஆக உரிமை கொண்டவன்'' என்றான் விஞ்ஞானி.

''நீங்கள் சொல்வதெல்லாம் வெறும் குப்பை சமாசாரம். ஊர் பேர் தெரிந்து, வேகமாக பறந்து போனாலும் சோம பிரபாவை உயிரோடு மீட்க உங்கள் ரெண்டுபேராலும் முடியுமா?

பஜ்ஜி மாதிரி உங்கள் ரெண்டு பேரையும் ராக்ஷஸன் ஒரே வாயில் கடித்து விழுங்கி இருப்பானே. நானல்லவா அவனோடு உயிரைத் திரணமாக மதித்துசண்டையிட்டு கடைசியில் அவன் தலையை சிரச்சேதம் செய்து கொன்று ஸோமப்ரபாவை உயிரோடு மீட்டவன்?

ஆகவே என்னைத்தவிர வேறு யாரும் அவளுக்கு கணவனாக உரிமை இல்லாதவர்கள்.'' என்றான் வீரன்.
இதெல்லாம் கேட்ட ஹரிஸ்வாமியும் அவன் குடும்பமும் திடுக்கிட்டு என்ன செய்வதென்று விழித்தனர்.

விக்ரமாதித்த ராஜனே! இப்போது நீர் பதில் சொல்லும். சோமபிரபா யாருக்கு மாலையிட வேண்டும்? தப்பாக சொன்னால் உன் தலை நூறு சுக்களாக உடைந்துவிடும் என்பது ஞாபகம் இருக்கட்டும்'' என்றது வேதாளம்.

இத்தனை நேரம் பேசாமல் கவனமாக இதை கேட்டுக்கொண்டு வந்த விக்ரமாதித்தன் ''வேதாளமே , உன் கதை அருமையாக இருக்கிறது. நன்றாக புரிந்து கொள்.

“தன்‌ உயிரையும்‌ பொருட்படுத்தாமல்‌. ராக்ஷஸனுடன்‌ சண்டை போட்டுத்‌ தோள்‌ வலிமையால்‌ அவனைக் கொன்று ஸோம ப்ரபாவை வென்றவன் வீரன். அவனுக்கு அவளை அவளை மணம்‌ செய்வித்தல்‌ வேண்டும்‌!

வீரத்திற்கே காதலுரியது. ஞானியும்‌, விஞ்ஞானியும்‌ வீரனுக்கு உதவி புரிவதற்காகவே கடவுளால்‌ படைக்கப் பட்டவர்கள்‌. கணக்கர்களும்‌, வினைஞர்களும்‌ பிறருக்கு அடங்கி உதவி யாளர்களாகத்தானே இந்த உலகத்தில் இருக்கிறார்கள்‌?”

விக்ரமாதித்தன் பதில் கேட்ட வேதாளம்‌ மறுபடியும்‌ முருங்கை மரம்‌ நோக்கி ஓடி, அதில் ஏறிக்‌கொண்டது.

sivan jaykay

unread,
Apr 20, 2025, 7:57:49 PM4/20/25
to amrith...@googlegroups.com
குந்தியின் பிரார்த்தனை -  நங்கநல்லூர்  J K  SIVAN 
பதிவு  3

குந்தியால்  கிருஷ்ணனுக்கு   ''போய் வா''  என்று விடை கொடுக்க முடியவில்லை.  அவன் தேரிலே புறப்பட தயாராகிவிட்டாலும் அவன் கையை பிடித்துக்கொண்டு  கதறுகிறாள்.  அவள் மனதில்   கடைசியாக  உத்தரைக்கு  கிருஷ்ணன் செய்த ஈடற்ற உயிர்ப்பிச்சை சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

உத்தரை வயிற்றில் பரீக்ஷித் சிசுவாக இருக்கும் நிலையில் அவனைக் கொல்ல  அஸ்வத்தாமன் ப்ரம்மாஸ்திரத்தை அனுப்புகிறான். அதன் சக்தியிலிருந்து எதுவும் எவரும் தப்பவே முடியாது.  உத்தரை கிருஷ்ணனை நோக்கி ஓடிவருகிறாள். அவளோடு குந்தியும் அலறிக்கொண்டே  ஓடி வருகிறாள். உத்தரையை அஸ்வத்தாமனின் ப்ரம்மாஸ்திரம் துரத்திக் கொண்டு வருகிறது. 

''கிருஷ்ணா, மகாயோகியே. தேவதேவா, லோக நாயகனே,  ஒருவருக்கொருவர் யமனாக உள்ள இந்த உலகத்தில் உன்னைத் தவிர  எனக்கு வேறு கதி இல்லையே  அப்பா !'' (இது தற்காலத்திலும்  ரொம்ப  ரொம்ப பொருந்தும் )’ உத்தரை  குந்தியை தொடர்ந்து ஓடிவந்தவள் கிருஷ்ணன் காலில் விழுந்தாள். 

'' பகவானே, பழுக்கக் காய்ந்த இரும்பு போல் என்னை  ஒரு  பாணம்  தொடர்ந்து வந்து தஹிக்கிறது.   அதால் நான்  மரணமடைந்தாலும் என் கர்ப்பம் அழியாமல்  நீங்கள் தான் காக்க வேண்டும் .” என்று  அலறினாள்..

கிருஷ்ணனுக்கு தெரிந்துவிட்டது.  'ஓஹோ  இது அஸ்வத்தாமன் செலுத்திய ப்ரம்மாஸ்திரம். அதை எதிர்க்க  ஒரே வழி, தனது சக்ராயுதம் தான்' என்று.   உத்தரையின் கர்ப்பத்துள்  சக்ராயுதம் புகுந்து   அதன் சக்தியால்  உத்தரையின் கருவை காப்பாற்றி  ப்ரம்மாஸ்திரத்தின்  சக்தி குன்ற வைத்தார். பரீக்ஷித் கருவில் கிருஷ்ணனால் காப்பாற்றப்பட்டான்.

யோகேஸ்வரன் கிருஷ்ணன் எல்லா  ஜீவன்களின் உள்ளே ஹ்ருதயத்திலும் பிரகாசிக்கும் ஆத்மா அல்லவா?  உத்தரை யினுள்ளும்  இருந்து கொண்டு குரு வம்சத்தை அழியாமல் காக்க தன் மாயாசக்தியால் அவள் கருவுக்கு  கிருஷ்ணன் சுதர்சன சக்ர கவசம் அளித்தார்.  உண்மையில் பகவான் கிருஷ்ணனால்  உத்தரையின் கர்ப்பத்தினுள்  சுதர்சன சக்ரம் புகாமலேயே சிசுவைக் காப்பாற்ற இயலும்.  ஆனால் பரீக்ஷித்திற்கு அருள வேண்டி சங்கு சக்கரத்துடன் அங்குஷ்ட மாத்ரமாக சிசுவின் முன் தோன்றினான். அதனால் பரீக்ஷித் மிகச்சிறந்த பாகவதன் ஆனான்.  
 சிசு உயிர் பிழைத்தாலும் ப்ரம்மாஸ்திரத்தின் கடுமையால் கரிக்கட்டை போல்  பரீக்ஷித்  பிறந்தான்.  கிருஷ்ணர் தன் பாதத்தால் அதை வருடிய பின் அதற்கு உயிர் வந்தது. பிறந்ததும் அந்த சிசு தன் முன்னால் கர்பத்தில் தோன்றியவர் யார் எனத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரையும்  சோதித்து ஆராய்ந்து பார்த்ததால் பரீக்ஷித் என்ற பெயர் ஏற்பட்டது.

''கிருஷ்ணா, ஆதிபுருஷனான  ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்ட  இறைவனான,  எல்லா உயிர்களுக்கும்  உள்ளும் புறமும்
 நிறைந்திருப்பவனான,  ஆனால்,  அவைகளால் அறியப்பப்டாதவனான உன்னை  வணங்குகிறேன். அறியாமை என்ற மாயத் திரையினால் மறைக்கப்பட்டு இந்த்ரியங்களால் அறியப்படாதவன்  மாறுபாடற்றவன் நீ.  எவ்வாறு  ஒரு நடிகன்  நாடகத்தின் வேஷம் போடுகிறானோ அதுபோல் உள்ள நீ  மூடர்களின் பார்வையில்  காணப்படுவதில்லை

பரிசுத்த இதயம் உள்ள முனிவர்களுக்கும்  முற்றும் துறந்தவர்களுக்கும் அவர் மனதில் பக்தியை தோற்றுவிப்பதற்காக
 அவ்வாறே நீ மறைந்துள்ளாய். அப்படியிருக்க எவ்வாறு  ஸ்திரீகளாகிய நாங்கள் உன்னைக் காண்பது? கிருஷ்ணனுக்கு, வாசுதேவனுக்கு, தேவகி நந்தனனுக்கு, நந்தகோபனின் குமாரனுக்கு, கோவிந்தனுக்கு, நமஸ்காரம்.
தாமரையை உந்தியில் உடையோனுக்கு , தாமரை மாலை அணிந்தோனுக்கு, தாமரைக்கண்ணனுக்கு , தாமரைப் 
பாதம் உடையோனுக்கு நமஸ்காரம்

ரிஷிகேசா,பிரபோ, எவ்வாறு  தேவகி துஷ்டனான கம்சனால்  சிறைப்படுத்தப்பட்டு  துக்கமுற்று விடுவிக்கப்பட்டாளோ அதேபோல,  நானும்  என் பிள்ளைகளுடன் எங்கள் ரக்ஷகனான உன்னால் அடிக்கடி ஆபத்துகளில் இருந்து காப்பாற்றப் பட்டோம்.

விஷத்தில் இருந்தும் ( பீமனுக்கு துரியோதனன் விஷம் கொடுத்தது)பெரிய நெருப்பில் இருந்தும் ( அரக்கு மாளிகை)
 ராக்ஷசர்களிடம் இருந்து ( ஹிடும்பன் பகாசுரன் முதலியவர்கள்) தீயவர்களின் கூட்டத்தில் இருந்து ( சூதாட்டம் வஸ்த்ராபஹரணம் முதலியவை ) வனவாசத்தின் கஷ்டங்களில் இருந்து ( அக்ஷயபாத்ரம் , துர்வாசர் முதலியவை)
யுத்தங்களில்  பெரும் யுத்தவீரர்களின் அஸ்திரங்களில் இருந்து தப்பிய நாங்கள், இப்போது  அச்வத்தாமாவின் ப்ரம்மாஸ்திரத்தில் இருந்து  ஹரியே உன்னால் அபிரக்ஷிதா காப்பாற்றப்பட்டோம்.

கிருஷ்ணா, ஆபத்துகள் எப்போதும்  எங்களுக்கு  தொடர்ந்து ஏற்படட்டும். ஜகத்குருவே அப்போதெல்லாம் தான்  உன்னைக் காண்போம்.   
பிறப்பு,  செல்வம், பதவி, புகழ், இவைகளால் மனித  மனம்  இறுமாப்படைகிறது.  உண்மையில்  பக்தி ஒன்று தான் உன்னை அடைய  உதவும். மூன்று குணங்களின் செய்கைக்கு அப்பாற்பட்டவன் நீ. .ஆத்மானந்தமானவன். சாந்தன்.   மோக்ஷகாரகன்.  நீயே   ஈசன்.  ஆதி அந்தம் அற்றவன். எங்கும் உள்ளவன்.  காலம்   மக்களிடையே  பேதத்தை உண்டுபண்ணி முடிவில் அழிக்கிறது. ( மகாபாரத யுத்தமே உதாரணம்) . எல்லாம்  உன் செயலே என்கிறாள் குந்தி.
.

sivan jaykay

unread,
Apr 22, 2025, 8:00:39 PM4/22/25
to amrith...@googlegroups.com

''எவ்வுட்கிடந்தான்'    -  நங்கநல்லூர்  J K  SIVAN 


1.5.25  அன்று முதலில்  தரிசிக்கும்  ஆலயம் திருவள்ளூரில்  ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் . அது பற்றிய விளக்கம்.
கிருத யுகத்தில் புருபுண்யர் என்ற முனிவர் தன் மனைவி சத்யவதியுடன் பத்ரிகாஸ்ரமத்தில் வசித்து வந்தார். பிள்ளைப் பேறு  வேண்டி புத்ரகாமேஷ்டி  யாகம் (சாலி யாகம்) துவங்கி  தினமும் ஒரு நாளைக்கு 1000 தடவை  மந்திரம் சொல்லி  நெய்யை ஹோமகுண்டத்தில் சேர்ப்பார். இப்படி  ஒரு வருஷம். யாகம் முடிவில்  ஸ்ரீமந்  நாராயணன் ஹோம ஜ்வாலையில் தோன்றி  புத்திர பாக்கிய வரம்  அளித்து  ''உனக்கு பிறக்கும்  பிள்ளைக்கு   இந்த  யாகத்தின் பெயரையே வை'' என்று அருளியதால்  முனிவருக்கு  சாலிஹோத்திரன் பிறந்தான்.

ஓர் தை அமாவாசை நாளில் சாலிஹோத்ரர் திருவள்ளூர் வந்து  அங்கே  ஹ்ருத்தாபனாசினி தீர்த்தத்தில் ப்ரம்மாதி  தேவர்களும் வசிஷ்டர்  முதலான ரிஷிகளும் ஸ்நானம் பண்ணுவதை பார்த்தான். ஆகவே அவனும் ஒரு வருஷ காலம் ற்கு பெருமாளைக்  குறித்து கடும் தவம் பண்ணி  ஹ்ருத்தாபனாசினியில் நீராடி காலை பூஜைகளை துவங்கினான்.  ஒருவருஷ காலமம் அவன் உபவாசம்.  ஆகவே  தவம் முடிந்து கொஞ்சம்  அரிசி மாவு சிறிது எடுத்து  பிரசாதம் தயார் செய்து அதை  மூன்று பாகமாக்கி  முதல் பாகம்  ஸ்ரீமந்  நாராயணனுக்கும், இரண்டவது பகுதியை விநியோகத்திற்கும், மூன்றாவது பகுதியை தனக்கும் வைத்துக்கொண்டார்.

ஸ்ரீந்  நாராயணன் ஒர் கிழ பிராமணர்  ரூபத்தில்  சாலிஹோத்ரரிடம்  பிரசாதம் வாங்கி உண்டார்.  அவர் முகத்தில் திருப்தி இல்லை . எனவே சாலிஹோத்ரர்  ''உங்களுக்கு என்ன குறை/?'' என கேட்டார்.
''அப்பனே  நான் நாலு ஐந்து நாளாக எதுவும் சாப்பிடவில்லை. நீ கொடுத்த பிரசாதம்  போதவில்லை.''
''அடாடா, இந்தாங்கோ''  என  சாலிஹோத்ரர் தனக்கென  வைத்திருந்த பாகத்தையும்  தந்தார்.  கிழவர் அதை வாங்கி உண்டு திருப்தியோடு சென்றார்.

 மீண்டும் சாலிஹோத்ரர் உணவு நீர் ஏதுமின்றி தவம் செய்து  அடுத்த புஷ்ய அமாவாசையன்று தவத்தை முடித்து ஹ்ருத்தாபனாசினியில் புனித நீராட செல்லுகையில் நற்சகுனங்கள்  பல தோன்றின பூஜை பண்ணி  நைவேத்யத்திற்கு அரிசிமாவு  கொண்டு வந்து  முதல் வருஷம் போலவே  மறுபடியும் மூன்று பாகங்களாக்கி ஸ்ரீமன் நாராயணனுக்கு முதல் பாகத்தை  நைவேத்தியம்  பண்ணிவிட்டு ரெண்டாவது பாகம்  யாரவது அதிதிக்கு, மூன்றாவது பாகம் தனக்கு என வைத்துக்கொண்டார்.

 இந்த முறையும் ஸ்ரீமந்  நாராயணன் கிழ பிராமண வடிவில் வந்து   பிரசாதம் பெற்றார்.  ''நான் எங்கேயப்பா படுத்து ந்து ‘நன் படுத்து ஓய்வு எடுப்பது?(எவ்வுள் ?)’ என்று சாலிஹோத்ரரிடம் கேட்டார்.
''இங்கேயே  என சாலிஹோத்ரர் கை காட்டிய அவர் ஆஸ்ரமம் தான்  ஹ்ருத்தாபனாசினியின் தென் புறம் உள்ள   ஸ்ரீ வீரராகவ சுவாமி திருக்கோயில்  முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பிராமணர்  பெருமாளாக சயனித்தார். "படுக்க எவ்வுள்" என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும்  ''எவ்வுட்கிடந்தான்'' என்று பாசுரம் சொல்கிறது. எவ்வுள் ஊர்  திருவள்ளூர் என 108  திவ்ய தேசங்களில் ஒன்று.

 ஒரு சமஸ்க்ரித ஸ்லோகம் சொல்வதை கேட்போம்;

दार्शनात् स्पर्शनात् स्नानात्  स्तोत्रेन श्रद्धया वाऽपि  यः पिबेत्तोयमङ्गल्यं तस्य रोगो न जायते॥
  
''தர்சநாத் ஸ்பர்ச்நாத் ஸ்னானாத், ஸ்தோத்ரேன ஸ்ராத்தய்யா  வாபி யா: பிபேத்  தோயம்  மங்கல்யம்  தஸ்ய ரோகோ ந ஜாயதே'' 

திருவள்ளூர்  ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி  திருக்குளத்தை, பார்த்தாலோ, தொட்டாலோ,  இதில் ஸ்நானம் பண்ணினாலோ,மனதில் ஸ்மரணை  பண்ணினாலோ போதும்.  அனைத்து வியாதிகளும், பாபங்களும் போய்விடும்''
அவ்வளவு புனிதமான தீர்த்தம்.  கங்கை, கோதாவரி நதிகளை விட புனிதமானது எனலாம். 

எத்தனையோ முனிவர்கள்  வாழ்ந்து பிக்ஷை பெற்ற ஆரண்யம், காடு, என்பதால்  பிக்ஷாரண்யம்  என்று புராண காலத்தில் பெயர். அஹோபில மடம் பராமரித்து வருகிறது. ஐந்து நிலை ராஜ கோபுரம். பல்லவர்கள்  கட்டியது.  கனகவல்லி தாயார்
கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகர், ராமானுஜர் , லக்ஷ்மி  நரசிம்மர் தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கிறார்கள்.  5000 ஆண்டுகள் புராதன ஆலயம் என்பார்கள்.  விஷ்ணுவே வீரராகவப் பெருமாளாக இக்கோவிலில் குடி கொண்ட இடம்.  பெருமாள்  ”வைத்ய வீரராகவர்”.  தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பவர்.  பெருமாளுக்கு சந்தன எண்ணெயால் அபிஷேகம்.

 ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்குப் பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் வேட்டைக்குச் சென்ற பெருமாள், தாயாரை மணமுடித்ததாக ஸ்தல  வரலாறு.

sivan jaykay

unread,
Apr 22, 2025, 8:00:51 PM4/22/25
to amrith...@googlegroups.com


 ஸ்ரீ  ராகவேந்திர க்ராந்தாலயம் 

1.5.2025  அன்று புனித யாத்திரையில்  ரெண்டாவதாக நாம்  தரிசிக்க விரும்புவது  ஸ்ரீ ராகவேந்திர கிரந்தாலயம்,
இது ஒரு அழகிய  ஆன்மீக, பாரம்பரிய நிலையம்.  திருவள்ளூர் மாவட்டத்தில்  நாம்  திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை போகும் வழியில் பூண்டி ஏரிக்கு அருகே  உள்ள சூரியோதய நகர், நெய்வேலி கிராமத்தில் அமைந்துள்ளது. இது மந்திராலய மடத்தின் பிரதிரூபமாக கட்டப்பட்டுள்ளதால்  சாந்நித்தியம் பெற்றது.   இங்கே ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் மிருதிகா (புனித மண்)  ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  வேறு சில  சன்னதிகளும் உள்ளன:   த்வாரகா கிருஷ்ணர், மாஞ்சாலம்மா (மந்திராலய நதி தாய்), மாங்காடு காமாக்ஷி  அம்மன், ஐஸ்வர்ய கணபதி, பிக்ஷாளய நாகர், ஆஞ்சனேயர்,, ஸ்ரீ ராகவேந்திரர் தவத்தில் இருந்தபோது வழிபட்ட 72 தெய்வங்களின் உருவங்களும் வெகு சீக்கிரம்  இங்கே  நிறுவப்படப்போகிறது.  இங்கே  வேதபாராயணம், ஹோமம் சாஸ்த்ரோக்தமாக நடைபெறும்.  போகும் வழியில் தரிசனம் செய்யலாமே.  நேற்று அந்த ஆலயத்தில் நிர்வாகி ஒருவரிடம் பேசினேன். மத்தியானம். பன்னிரண்டு மணிவரை திறந்திருக்கும் என்று போவதற்கு வழி சொன்னார். ஆகவே  பன்னிரண்டு மணிக்குள் தரிசிப்போம்.  அந்த மந்திராலய வீடியோ ஒன்று இணைத்திருக்கிறேன். 

sivan jaykay

unread,
Apr 23, 2025, 8:12:24 PM4/23/25
to amrith...@googlegroups.com
ஆதி சங்கரர் ஜெயந்தி   -  நங்கநல்லூர்  J K  SIVAN 

1.5.2025  புனித பயணம் ஒரு முக்கியமான நாள். ஆதி குரு  சங்கரர் அவதரித்த  நாள். அன்று சங்கர ஜெயந்தி உலகெங்கும் உள்ள ஹிந்துக்கள்  கொண்டாடுகிறார்கள்.  சங்கரரைப் பற்றிய  அதிசய விஷயங்களை சொல்கிறேன்.

முப்பத்திரெண்டே வருஷங்களில் மூவாயிரம் வருஷமானாலும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாததை அளித்தவர் ஆதி சங்கரர். ஹிந்துக்கள் சகலருக்கும் சொந்தமான விலைமதிப்பற்ற புதையல் சொத்து நமக்கு விட்டுச் சென்றவர்.

சங்கரர் வாழ்ந்த காலத்தில் மலையாள தேசத்தில் காலடி கிராமத்தில் ஒரு பழைய ஒடும் கூரையும் போட்ட சின்ன வீட்டில் இரு ஆசாரமான ஏழை பிராமண தம்பதியர் வாழ்ந்தார்கள். சிவகுரு. ஆர்யாம்பா என்ற  பேர் கொண்டவர்கள். பாவம்  ஒரு தீராத குறை. புத்ரன் இல்லையே! . திரிசூர் சென்று வடக்குநாதனை வேண்டினால் கைமேல் பலன் கொடுப்பானல்லவா?.

''மஹாதேவா,எங்களுக்கு ஒரு மகனைத் தருவாயா?  நாங்க என்ன பாபம் செய்தோமோ எங்கள் குறை தீர்ப்பாயா?

மஹாதேவன் வேண்டியவர்க்கு வேண்டியதை வேண்டாமலேயே தருபவனாச்சே. திரிசூரில் ஒரு மண்டலம் தங்கி தினமும் புஷ்கரணியில் ஸ்நானம் செய்து விரதமிருந்தனர் இருவரும். ஆர்யாம்பா கனவில் வடக்கு நாத ஈஸ்வரன் தோன்றினான்.

‘’கவலைப்படாதே, உன் வயிற்றில் பிள்ளையாய் நானே வருவேன்’’ என்றான். பெயர் சொல்ல எவனோ ஒருவன் வேண்டும் என்று வாடும்போது சிவனே உன் மகனாக வருவேன் என்றால் எப்படியிருக்கும்? அந்த ஆனந்தத்தை இந்த சிவனால் எழுத முடியுமா? மனதில் நினைத்தால் இனிக்கும் அந்த இன்பம் எழுத்தில் வருமா?

சர்வேஸ்வரனைப் பொருத்தவரை இது ஒரு தக்க தருணம் எனலாம். ஏனென்றால் இது நிகழ்ந்த காலத்தில் நிரீஸ்வர வாதிகள் பெருகி, கொஞ்சம் கொஞ்சமாக பௌத்தம், சமணம் எல்லாம் ஹிந்து தார்மீகத்தை விழுங்கிவந்த சமயம்.

''சனாதன தர்மத்தை பின் பற்றுபவர்கள் தக்க துணையின்றி, சாய்ந்து கொள்ள ஒரு பக்க பலமின்றி திணறுகிறார்களே. உடனே நீங்கள் ஏதாவது செய்து இந்து தார்மீகத்தை புனருத்தாரணம் செய்யவேண்டும்'' என்று பிரம்மாதி தேவர்கள் சதாசிவனை வேண்ட அந்த தக்ஷிணாமூர்த்தி நானே அவதரிப்பேன் என்று வாக்களித்திருந்தார். எனவே ஆரியம்பா கனவில் கண்ட வடக்குநாத ஈசன் அவளுக்குப் பிள்ளையாய் பிறந்தான். சிவனின் பெயரான சங்கரன் (சம்: மங்களம், கரன்: தருபவன்) என்ற பெயர் பெற்று பெயருக்குத் தகுந்தபடி சகல சந்தோஷத்தையும் தந்தான். சாஸ்திரம் சகலமும் கற்றான். இனி கற்க ஒன்றுமில்லை என்ற நிலை வந்ததோ என்னவோ? அது அந்த அவதார புருஷனுக் கல்லவோ தெரியும். வந்த கார்யம் சடுதியில் நடக்க ஆயத்த மாகக் கூட இருக்கலாம். சங்கரன் மனதில் சன்யாசம் கொள்ள மிக்க விருப்பம் உண்டாயிற்று. பால் மணம் மாறாப் பாலகன் என்று கூட சொல்லும் ஏழு வயதில் இப்படி ஒரு ஆசை. சங்கரன் ஒரு சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக்கொண்டான்.

ஓடும் ஆற்றில் ஒருநாள் விடிகாலை அம்மா ஆர்யாம்பா வோடு ஸ்னானம் பண்ணிக்கொண்டிருந்தபோது பசியோடு ஒரு முதலை அவன் காலைக் கவ்விக் கொண்டது. சங்கரன் கத்தினான்.
''அம்மா அம்மா, முதலை என் காலைப் பிடித்துக் கொண்டு இழுக்கிறது இன்னும் சில நிமிஷங்களில் என் உயிர் போய்விடும்
'''மகனே சங்கரா எப்படியாவது உயிர் பிழைத்துக் கொள்ளடா. ஈஸ்வரா என் பிள்ளைக்கு உயிர்ப்பிச்சை கொடு'' '
'அம்மா எனக்கு உயிர் அடுத்த பிறவியில் தான் கிடைக்கும்.. நான் என்ன செய்யமுடியும்?'
''சங்கரா எனக்கு நீ வேண்டுமே''
''நான் மறுபிறவி எடுத்தால் உயிர் தப்புவேன், முதலை என் காலை விட்டுவிட வாய்ப்பு இருக்கிறது'
''எப்படிடா கண்ணா அது சாத்தியம்?''
'இந்த பிறப்பில் நான் இப்போது சன்யாசம் பெற்றால் அது எனக்கு வேறு பிறவியாகிவிடும். முதலை என்னை விட்டுவிடும். ஆனால் சன்யாசியானால் உன்னோடு வீட்டில் தங்கி இருக்க முடியாதே. துறவியாக என் உயிர் பிழைக்கவேண்டுமா, வேண்டாமா?. 
நான் சந்நியாசி யாவதற்கு நீ ஆசிர்வாதம் பண்ணி சம்மதித்தால் நான் உயிர் பிழைத்து நீ என்னைக் கண்ணாலாவது பார்க்க முடியும்'
'''சரிடா சங்கரா, எனக்கு நீ எப்படியாவது உயிரோடு இருந்தால் அதுவே போதும்''

ஆதிசங்கரர்  பாலா சன்யாசியானார். அழகான அவர்  பால் வடியும் முகம் கொண்ட படம் ஒன்று எனக்கு கிடைத்தது. இணைத்திருக்கிறேன். இதற்கு முன் பார்த்திருக்கிறீர்களா?  எதற்கு சங்கரன் அவதரித்தானோ, காத்திருந்தானோ அந்த சந்தர்ப்பம் கிடைத்தபோது விடுவானா? சந்நியாசியாகி சங்கரன் தனது குருவைத் தேடிப் புறப்பட்டுவிட்டான்.

போகுமுன் தாய் சங்கரரைக் கை கூப்பி வணங்கினாள். கண்ணீர் மல்க நா தழுதழுக்க ஒரு வேண்டுகோள்;
''சங்கரா எனக்கு ஒரே ஒரு ஆசை , அது நிறைறுமா?
'சொல்லுங்கள் தாயே'
'''என் கடைசி நிமிஷம், என் உயிர் போகுமுன் உன்னை ஒருதரம் பார்க்க வேண்டுமடா என் செல்வமே''
சங்கரர் கடை சிநேரத்தில் அம்மாவை மடியில் போட்டுக் கொண்டு அவள் உயிர் பிரிந்து மோக்ஷம் அடைய உதவிய போது இயற்றிய மாத்ரு பஞ்சகத்தை பல முறை பதிவிட்டிருக்கிறேன். மீண்டும் ஒருதடவை வேண்டுமா?
அடுத்த பதிவில் தருகிறேன்.எத்தனை முறை எழுதினாலும் படித்தாலும் என் கண்களும் உங்கள் கண்களும் குளமாகிடும் ஒரு ஐந்து ஸ்லோகம்...

sivan jaykay

unread,
Apr 23, 2025, 8:12:24 PM4/23/25
to amrith...@googlegroups.com
1.5.2025  
சாதனா  கோ சாலா. 

அடுத்ததாக நாம்  விஜயம் செய்யப்போவது  சாதனா கோசாலா.. காஞ்சிபுரம் மஹா பெரியவா துவங்கி வைத்து 37 வருஷங்களாக பல நல்ல உள்ளங்களின்  ஆதரவோடு அற்புதமாக  இயங்கி வரும் கோ சாலை. கிட்டத்தட்ட  700 பசுக்களும், 100 கன்றுகள் , எருமை ,காளை மாடுகள்  இங்கே உயிர் வாழ்கின்றன.  முக்கியமான விஷயம்  இவை  அனைத்தும் கொலையிலிருந்து, வெட்டப்படுவதிலிருந்து காக்கப்பட்டு  மீட்டு எடுக்கப்பட்ட, வயதான , கறவை நின்ற, நோயுற்ற மாடுகள் ஆகும்.

இந்த கோசாலை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சாதனா ராவ் லண்டனில் படித்து . இந்தியா திரும்பியவுடன்  வீட்டிலேயே கறவை நின்ற மாடுகளை வாங்கி  பாதுகாக்க துவங்கினார். இது மகா பெரியவர் அருளாசியுடன் தான் நடந்தது ."மனிதர்களை கவனித்துக் கொள்ள  நிறைய பேர்கள் இருக்கிறார்கள். நீ இந்த கை விடப்பட்ட பசுக்களை பாதுகாக்க வேண்டும்" என்று  பரமாச்சாரியார் நேரில் ஆசி வழங்கியதை  பெட்ரா புண்யசாலி டாக்டர் சாதனா ராவ். இதே  சாதனாவுக்கு வேத வாக்காக ஒலித்தது.  தன்னார்வலர்கள் , கொடை உள்ளம்   கொண்டவர்கள் , பிராணிகளை நேசிப்பவர்கள் மனமுவந்து  தரும்   நன்கொடை மூலம் தான் இந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறார்கள். சென்னையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் ஊத்துக்கோட்டை அருகில் வேங்கடாபுரம்   என்ற கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கோசாலையில்  60க்கு மேற்பட்டோர் மாடுகளை கவனித்துக் கொள்கிறார்கள். . மாதத்திற்கு சுமார் ரூ.18 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை செலவு ஆகிறது. இதில் சுமார்  ரு. 15  லட்சம் தீவனத்திற்கும் , வைக்கோல் மற்றும் , மருத்துவ செலவிற்கும் செலவிடப்படுகிறது.  இவர்களிடம் அடைக்கலம் புகும்  மாடுகளை  அவற்றின்  கடைசி மூச்சு வரை பாதுகாப்பதே  இந்த கோசாலையின் லக்ஷியம். நல்ல சத்தான தீனி கொடுத்து நல்ல ஆரோகியத்துடன்  பாதுகாக்கிறார்கள்.
எண்ணற்ற குழந்தைகள், உயிர்கள் வாழ பால் தானம் பண்ணுபவை காமதேனு எனப்படும் பசுக்கள் தான். ஆகவே தான் அவற்றை கோமாதா, குலமாதா  என வணங்குகிறோம். 

பசுக்களின் பாலை  உட்கொள்கிறோமே  நாம்,  அந்த பசுக்களின்  பால்  வற்றியவுடன் ஏன் நமக்கு அந்த பசுக்கள் வேண்டாத ஒன்று ஆகி விடுகிறது?  பால் கொடுப்பவள் அம்மா அல்லவா? அம்மாவை எங்கிருந்தாலும் காப்பது நம் கடமை அல்லவா? வெட்டுக்கு அனுப்புவது மகா மகா  பாவம் அல்லவா? அதை தடுப்பதை மனதில் கொண்டு உதவுபவர்கள் தான் இது போன்ற கோசாலைகள்  உருவாக உதவுபவர்கள். நாமும் அதில் சேர்ந்து கொள்வோம். எங்கு இப்படிப்பட்ட கோசாலை இருக்கிறதோ அங்கு சென்று  நம்மால்  ஆன சேவை , நன்கொடை செய்வோம்.  வாழ்வில் நிம்மதி கிடைக்கும் . நம்மை தொடரும் ஜென்ம ஜன்மாந்தர பாவங்கள்  விலகும்.

இன்று நாம் அனைவரும் ஒரு குடும்பமாக வந்து நமது  கைகளால்  பசுக்களுக்கும் இதர மாடுகளுக்கும்  உணவு கொடுக்கிறோம்.  நல்ல மன நிறைவு  கிடைக்கும் . வாழ்வில் நலம் பெறுவோம். . நன்கொடையை  பணமாக கொடுக்காமல் , காசோலையாகவோ  அல்லது வஙகி கணக்கில் பணம்  கட்டியோ செலுத்துவோம். . தீவனங்கள் , கீரை , வாழைப்பழம் , காய் கறிகள், வெல்லம் , சப்பாத்தி இவைகளையும் நீங்கள் வரும்போது கொண்டு வரலாம்.

இப்போது ;இதை நிர்வகித்து வரும்   சகோதரி  திருமதி  கமலா ராமமூர்த்தியிடம் (Chairperson ,  Sadhana Goshala ,9840456623)  பேசி இந்த கோசாலை  பற்றி அறிந்த பிறகு தான் இந்த  புனித பயணத்தை மனதில் உருவாக்கினேன்.    இங்கே  ரெண்டு ஆர்த்தி  ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பசுக்கள் அருகே அமர்ந்து சொல்ல உத்தேசம். அவரவர் முடிந்தால் விஷ்ணு சஹஸ்ரநாமம் புத்தகம் கொண்டுவாருங்கள். நானும் 20 புத்தகங்கள் கொண்டுவருகிறேன்.  நம்முடன் வரும் நண்பர்  ஸ்ரீ   கிரி என்பவர் பூஜை பண்ணுவார். நாம் பாராயணம் பண்ணுவோம். பசுக்களுக்கு மாடுகளுக்கு ஆகாரம்  நமது கைகளால் மனது திருப்தியோடு கொடுப்போம்.

இந்த கோசாலைக்கு நன்கொடை வழங்க ;  Indian Institute of Animal Welfare, Andhra Bank, Neelangarai Branch,  SB A/c No. 132710100033564, IFSC: ANDB0001327..  நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு உண்டு.  நீங்கள் உங்கள் கைகளாலேயே அங்கே  CHEQUE   GPAY  NEFT  TRANSFER பண்ணலாம். 
 
இங்கே தான் நாம் கொண்டுவந்த  மத்தியான உணவை சாப்பிட்டு முடித்து  சற்று  ஒய்வு எடுத்துவிட்டு பிற்பகல் ஆலய தர்சனம் தொடர்வோம். 



sivan jaykay

unread,
Apr 27, 2025, 8:26:48 PM4/27/25
to amrith...@googlegroups.com
சிவசாமியைத்  தெரியுமா? -  நங்கநல்லூர்  J K  SIVAN 

நம்மைப் போல அவரும் ஒரு குடும்பஸ்தர் தான்.  பிள்ளை குட்டி  உண்டு. மனைவி சக்தி வாய்ந்தவள்.  ஆனால் நம்மிலிருந்து ரொம்பவுமே வேறுபட்டவர்.   பொறுப்பில்லாத அப்பா என்று தோன்றும்.  யாரைப் பார்த்தாலும் அவரை   பித்தன், பேயன் என்றே சொல்கிறார்களே . எப்போ doபார்த்தாலும் தனியே   ஒரு மலை உச்சியில்  போய் அரைக்கண் திறந்த படி  உட்காருவார்.   அப்படி உட்கார்ந்திருப்பவர் அருகே  சென்று ஏதாவது பேசினால்  அவ்வளவு தான்.  நெருப்பு சுடும்ல்ல.  இதுக்குன்னு ஒரு கண்ணு நெத்திலே வச்சிருக்கார்.  அதை திறந்தால்  அவ்வளவு தான்.  எரிச்சிடுவாரு.  எதிரே எல்லாமே  சாம்பல் ஆயிடும்.

மற்ற நேரத்தில் சுடுகாட்டுலே போய்  சாம்பலை வாரி பூசிக்கிட்டு  ' தா, தை 'னு  ஆட்டம். எப்போ கோபம் வரும்னு தெரியாது. யாரானாலும் சரி  எரிச்சு சாம்பலாக்கிடுவார் . ரொம்ப ஜாக்கிரதையாக பழகவேண்டிய  ஆளு.  ஏன் இப்படி இருக்கிறார்?,  ஒருவேளை  அப்பா, அம்மா,  பேச்சை  கேக்கலியா, அவங்க  அவரை நன்றாக  வளர்க்கவில்லையா?ன்னு கேப்பீங்க. ஆனா, 
யாருக்கு தெரியும் பா ?  அவருக்கு  அப்பா அம்மாவே  கிடையாது.  அவர் ஒத்தை கட்டை.  தனி ஆள். அவர் தான் முதல் ஆசாமி என்கிறபோது அப்பா அம்மா எப்படி இருக்க முடியும்?  பிறப்பு இறப்பு  தெரியாதவர்.   என்ன உத்யோகம் இவருக்குன்னு கேட்டால்...   உயிரை வாங்குறாரே?  என்னா செய்றது இவரை?    அட அந்த உத்யோகமே கொடுத்திடலாம். அதுக்கும் சரியான ஒரு த்தர் வேணும்ல. அழிப்பவர். ஸம்ஹார மூர்த்தி. எல்லோரையும் அல்ல. கெட்டவர்களை.''எல்லாத்தையும் நீயே   முடிச்சுடுப்பா''  ன்னு  விட்டுட்டாங்க.  

அவருக்கு  எதுவுமே  தேவை இல்லீங்க.   டைலர் கிட்டே போற வேலையே இல்லை.   எங்கேயாவது ஒரு யானை, புலி  கண்ல பட்டுதுன்னா, தோலை உரிச்சு,  இடுப்புல சுத்திக்குவாரு.  வெம்புலியோ  ஐம்புலனோ இவர்கிட்டே வாலாட்டாது.  

இன்னொரு வேடிக்கையான விஷயம்.  இவரு போட்டிருக்கிற  நகையை எவனும்  அறுத்துக்கினு ஓடவே மாட்டான்.   விஷம் கக்கிற பெரிய  நல்ல பாம்பை,  தலையிலே, கழுத்திலே, கையிலே, உடம்பிலே சுத்திக்கினா எவன்யா  கிட்டே வருவான்?.  கண்ணு தெரியாம  கிட்டே  வந்து மாட்டிக்கினவனை நாலு பேர் வந்து தான்  தூக்கினு  போவணும்.  ஆனாலும்  அவருக்கு அந்த  பாம்புங்க எவ்வளவு  அழகு  தருது  பா.   எதையும்  லக்ஷியம் பண்ணாத  அப்பான்னு சொன்னேனே  அவரு கிட்டே சாப்பிட  ஒரு  தட்டு கூட  இல்லைப்பா. ஒரு மண்டை ஓட்டை தான் கையிலே வச்சிருக்கிறாரு. என்ன தோணுச்சோ.  நிறைய தட்டு தேவைப்பட்டா   ஒண்ணு  கழட்டிக்கலாம் னு நினைச்சாரோ என்னவோ,  நிறைய  மண்டை ஓட்டை  துளை போட்டு  கட்டி மாலையா கழுத்திலே போட்டுக்கிறாரு.  சுடுகாட்டு சாம்பலை வாரி  உடம்பிலே பூசிக்கிறாரு. நெத்தி  பூரா வேறே.  வேறே வாசனை சாமான் மேலே ஆசை இல்லேப்பா.

''அவர்கிட்டே போய்  உங்களைப் போல்  யாரும் இல்லீங்க''  ன்னு மட்டும் சொல்லிடுங்க, அப்புறம் பாருங்க  நீங்க  எது கேட்டாலும் குடுத்துடுவாரு.  இவரு குணம் தெரிஞ்சு மத்தவங்க  ஒரு தடவை  என்னா  செய்தாங்க தெரியுமா? அது ஒரு பெரிய  கதை  அப்படீன்னாலும் சுருக்கமா சொல்றேன் கேளு.

''அதோ பார்  பெரிய  கடல். எப்படி இருக்குது.  எல்லாமே  பால் ,  வெள்ளையா இல்லை ?  
பின்னே  பாலு கருப்பாவா இருக்கும்?
ஏன்  கடலு  வெளுப்பா அப்படி இருக்குது?
அதுக்குள்ளாற  தேன்  மாதிரி  ஒண்ணு   இருக்குதே அதுக்கு அமிர்தம் னு பேரு . அதை எடுத்து சாப்பிட்டா, சாவே கிடையாதுப்பா.
''அப்போ  வாங்க உள்ளே இறங்கி எடுத்து சாப்பிடலாம். கும்பல் சேர்ந்தா கிடைக்காம போயிடும்.''
''அதெல்லாம் அவ்வளோ  சுளுவு   இல்லே தம்பி. இந்த பாலை தயிர் மாதிரி கடையணும் ?.
''எல்லாத்தையுமா?''
''பின்னே,  கொஞ்சூண்டு கடைஞ்சா  அமிர்தம் வராதே,  அவ்வளவு  பாலையும் கடைஞ்சா ஒரு சொம்பு அமிர்தம்  தேறும்,''  
 ''சரி எப்படி கடையறது?
''அதுக்கு வழி கண்டுபிடிச்சுட்டாங்க..  மத்து மாதிரி  ஒரு பெரிய மலையை புடுங்கி வச்சிட்டாங்க.  அதுக்கு பேர்  மந்தர மலையாம்.  அதை சுத்தி கடையறதுக்கு கயிறுக்கு எங்கே போறது?   தேடிப் பிடிச்சு நீளமா  ஒரு பெரிய  பாம்பு  வாசுகி ன்னு பேரு. அதை எடுத்தாந்து மலை  வயத்துல சுத்தினாங்க.   தேவருங்க  அசுரர்ருங்கன்னு  ரெண்டு சைட்லே  நின்னுகிட்டு  பால் கடலை கடைஞ்சாங்க. இவங்க இழுக்கிற  இழுப்புலே  வாசுகிக்கு நுரை தள்ளிச்சு.  வாசுகியோட வாயிலேயிருந்து ரொம்ப கொடிய  விஷம் முதல்லே வந்தது. அப்புறம் தான்  அம்ருதம். எங்கே பார்த்தாலும்   கொடிய  ஹாலஹால விஷம். என்ன செய்யறது இதை?  'இந்தாங்க'' ன்னு  கொடுத்தா  யார் யா  வாங்கிக்குவா? இருக்கவே இருக்காரு நம்ம  சிவ சாமி.''

''உங்கள மாதிரி உண்டா,   நீங்கள் தான் இந்த விஷம்  யாரையும்  கொல்லாமல் பார்த்துக்கோணும் ''  ஏதாவது வழி சொல்லுங்க''  ன்னு  கேட்டவுடனே இவருக்கு தலை கால் புரியவில்லை.  
''கவலைப்படாதீங்க,   நானே  அதை  எல்லாம் எடுத்து ஒரே  வாயிலே முழுங்கிடுறேன். அப்புறம்  அதால் யாருக்கும் துன்பம் வராது'   என்று சொன்னவர்   ஏதோ அல்வா சாப்பிடக்  கொடுத்தது போல் அந்த கொடிய  விஷத்தை, '' லபக்''  என்று எடுத்து  ஒரே  வாயில்  விழுங்கிட்டாருப்பா.  அவரு  ஸம்ஸாரத்துக்கு  இவரைப் பத்தி நல்லா தெரியும்லே.    அதுக்கு தானே   இவரை தனியா  விடக்கூடாதுன்னு  அவரு  பாதி உடம்புலே  இருந்துகினு அவரை கவனமா  பார்த்துக்கறாங்கல்லே.   அவரு  முழுங் கின அந்த விஷம் எல்லாம் உள்ளே இறங்காமல்  கழுத்தை ஒரே அமுக்கு அமுக்கிறாங்கல்லே.  அது பாதி  கழுத்திலே  அப்படியே  'கப்' புனு  நின்னு போச்சு.  நீல கழுத்து காரர்னு இப்போ கூட எல்லோரும் அதனால் தான் சொல்றாங்க.  ஆளு   ஏற்கனவே  செக்கசேவேலுன்னு  இருப்பாரா,  பளிச்சுனு நீலமா கழுத்திலே விஷம் நின்னுது கூட  அவருக்கு  அழகா இருக்குதுப்பா.
''அடேடே  அப்புறம்'''
அப்புறம் என்னா. அம்ருதம் வந்துதுப்பா. தேவருங்க  அதை எடுத்துக்கிட்டாங்க. வேறே என்னாவெல்லாமோ கூட  அப்போ வந்தது..  பெரிய  லிஸ்ட் பா அது.  அதெல்லாம் யார் யாருக்கோ கொடுத்தாங்க.  அப்பால சொல்றேன்.
நீ  சுருட்டப்பள்ளி  போயிருக்கிறயா?
இல்லேயே  ஏன்?
ஒரு தபா நீ  போவணும் பா. அருமையான ஊர் பா. அங்கே ஒரு கோவில்லே  நீளமாக  காலை நீட்டிக்கினு  ஸம்ஸாரம்  மடிலே  படுத்துக்கினு இருக்கிறார் போய் பார்.  அது மாதிரி உலகத்திலே எங்கேயுமே  கிடையாது பா  படுத்துகினு  இருக்கிற  நம்ம சாமி.''  
''சாமிக்கு  என்ன பேர்?
''பள்ளி கொண்ட ஈஸ்வரர்..  சிவன் சாமி படுத்துக்கினு  இருந்து  அவரை நான் பார்த்ததே இல்லை.' சுத்தி எல்லோரும் நிக்கிறாங்க. ப்ரம்மா, விஷ்ணு ரிஷிங்க.   எல்லோர்  முகத்திலேயும் கவலை .
''ஏங்க ?'
'இம்மாம்  விஷம் முழுங்கினா என்னாத்துக்கு ஆவும்? ஆனா  அவருக்கு ஒண்ணும்  ஆவல.  ஆவாது.  அது தான் அவரு. பிறப்பு  இறப்பு எதுவுமே  கிடையாது பா அவருக்கு.' அவருக்கு சாவு எப்படி வரும்?
'விஷம் சும்மாவா  இருக்கும்?    திகு திகு ன்னு  எரிச்சல் குடுத்தது.   பேசாம  சில் லுனு  ஐஸ் மலை உச்சியில் போய்   உக்காந்துட்டார்.  அந்த இடம் இருக்குது  இப்போ கூட.  கைலாசம் என்கி றாங்க.  வருஷா வருஷம்  எம்புட்டு பேர்  போய் பார்த்துட்டு வராங்க.   நம்மளைமாதிரி கிழம் கட்டை போகமுடியாது. அவருக்கு எவ்வளவோ வேலை, பேசாம எப்போவும்  பனி மலைமேல்  எப்படி உக்காந்துக்கிட்டே இருக்கிறதுன்னு ஒரு யோசனை பண்ணார் போல.''
''எங்கேயாவது போனா கூட  சில்லுனு இருக்கணும்னு ஏன்னா செய்யலாம்னு யோசிக்கும்போது  ஒருத்தன் வந்தான்.
''யார் நீ?ன்னாரு.-
''சாமி  நான்  பகீரதன். உங்களைப்  பார்த்து உங்க உதவி வேணும்னு  கேட்க வந்தேன். ''
என்ன செய்யணும் உனக்கு?
''எங்க தாத்தன் பாட்டன் பூட்டன் அவனுக்கு பாட்டன் பூட்டன் எல்லோரும் நரகத்தில் இருக்காங்க. அவங்க மோக்ஷம் போகணும்னா ஆகாச கங்கை நதியை இங்கே கொண்டாரணும் னாங்க . நான் பல வருஷம் தவம் இருந்தேன். நேத்து கங்கை அம்மா  வந்து பேசினாங்க.
''டேய்  பகீரதா, என்னை இங்கே கூப்பிடறேயே, நான் வேகமா  கீழே இறங்கி வந்தா உங்க பூமி அந்த வேகத்தை  தாங்காது. யாரு தடுப்பாங்க அதை தெரியுமா உனக்கு ?அதுக்கு நீ   என்ன செய்யப்போறே?''
''தெரியலேம்மா, நீங்களே சொல்லுங்க''ன்னு கேட்டேன் . அவங்க தான்  ஒரே ஒருத்தர் னாலே  தான் என்னோட வேகத்தை தாங்கமுடியும். அவரு கிட்டே போய்  வேண்டிக்கோ. அவர் தலை  மேலே இறங்கி நான் மெதுவா  பூமிக்கு வரேன்ன்னு சொன்னாங்க சாமி.
''யார் அவரு? ன்னு பகீரதன் கிட்டே சிவசாமி கேட்டார். 
''அது நீங்க தான்.  கங்கையம்மாஉங்களை தான் சொன்னாங்க.''
இவரு  தான் எப்போதும்  பிரத்தியாருக்கு  உதவ  உடனே சரின்னுடுவாரு. அதனால்  '' நீ  போய்  கங்கையை வரச் சொல்லுன் னுட்டாரு''  
''அப்புறம் ?''
''ரெண்டு கையும்  இடுப்பிலே வச்சிக்கினு  கங்கையம்மா  வேகமாக ஓ ஓ  ன்னு மேலே ஆகாசத்திலிருந்து பெரிய  சத்தத்தோட  கீழே  வர இடத்திலே  தலையை விரிச்சுக்குனு  சிவ\ சாமி  நிக்கிறார். அப்படியே  சில்லுனு அந்தம்மா  கீழே அவர் தலையிலே  இறங்கிட்டாங்க. அவங்களை மெதுவாக கீழே இறக்கி விட்டுட்டு மீதியை தலையிலே வச்சிக்கிட்டாரு. சில்லுனு அவங்க எப்போதும் அவர் உடம்பிலே இருக்கிறாங்க. சூடு எரிச்சல் பத்தி அப்புறம் நினைக்கவே நேரமில்லே.''  அந்தம்மா  அவர் தலை மேலே எப்போவும்  இருக்கிறாங்க.  அவரு அப்படி நின்ன இடம்  தான்  ஹரித்வார் னு சொல்றாங்க. 
''இதிலே இன்னொரு விஷயமும் இருக்குப்பா.
''என்னதுங்க?''
''அவருக்கு  எப்போவும் குளிச்சிட்டே இருக்க ரொம்ப பிடிக்குமே. இந்த கங்கையம்மா தலைமேலேயே எப்போதும் இருக்கிறதால சில்லுன்னு ராவும் பகலும் அவருக்கு குளிச்சிக்கிட்டே  இருக்க முடியுது. . தண்ணியை  தேடிக்கிட்டு எங்கேயும் போகவே வேணாம்.
''அடடே, சிவ சாமி  ரொம்ப வித்யாசமானவரா  இருக்காரே.''
''ஆமாம்பா  இப்போ சொல்றத கேட்டுக்கோ''.
''யாராவது  பாடம் கேக்க வந்தா  வாத்தியாரு என்ன செய்வாரு? .  எழுதிக்காட்டுவாரு, உரக்க பேசிக்கிட்டே சொல்லிக்கொடுப்பாரு இல்லையா.  இவரு கிட்டே நிறைய ரிஷிங்க  வந்து  பாடம் கேக்கறாங்க. அவருக்கு  தெரியாததே இல்லையே''.
''இவரு  பேசாம  ஒரு மரத்தடிக்கு போனார்.  சாதாரணமா நாம் பார்க்கற  பச்சை இலை யோட  காக்கா குருவி கிளி  சத்தம் ம் போட்டுக்கிட்டே ஆடுமே அந்த மரம் இல்லை.  சத்தம் ஒரு பொட்டு  கூட  இருக்க கூடாதே. அதனாலே  ஒரு மரத்தை பிடிச்சாரு. அது கல்லாலே செஞ்ச  ஆடாத அசையாத மரம்.  அதுங் கீழே போய்  உக்காந்துகினு  இன்னா பண்ணாரு தெரியுமா?''
''பாடம் சொல்லி கொடுத்தாரா?''
''அதான்  இல்லேப்பா.  அவங்க  பாடம் தானாகவே  தெரிஞ்சுக்க வச்சாரு.    ஒண்ணுமே  பேசலே. எல்லாரையும் கண்ணாலே  பார்த்துக்கிட்டே இருந்தாரு. கொஞ்சம் கொஞ்சமாக  கண்ணை அரை மூடினார். அது அவர் வழக்கம் இல்லையா?.  எதிரே உக்கார்ந்தவங்க சத்தமே போடாம அவரையே பார்த்துக்கிட்டு இருந்தாக.  தெற்கு பக்கம் பாத்துக்கிட்டே  எவ்வளவு நேரம் அசையாம உட்காந்தாருன்னு தெரியாது. தெக்கே பாத்து உக்காந்ததாலே   தக்ஷீணா மூர்த்தின்னு  பேரு வச்சிட்டாங்க அவருக்கு.
அவங்க  அத்தனை பேருக்கும் எதை கேட்க வந்தங்களோ அதெல்லாம் பட்டுனு புரிஞ்சுடுச்சு.  அதனாலே தான் நான் புரிஞ்சு ''போச்சு''ன்னு சொல்லல.''
''பேசாமலேயே  அப்படி எல்லாத்தையும் புரியவைக்க முடியுமாப்பா?''
''ஏன் முடியாது.  இப்போ கூட  கொஞ்சம் வருஷம்  முன்னாலே  நம்ம திருவண்ணாமலை ரமண ரிஷிக்கிட்டே  நிறைய கேள்வி கேக்கணுமுன்னு ஒரு வெள்ளைக்காரரு  நோட்டிலே  கேள்வி எழுதி எடுத்துக்கிட்டு போனாரு. ஒரு மணிக்கு மேலே எதிரே உக்காந்து பாத்துக்கிட்டே இருந்தார். ஒண்ணும்  கேள்வி கேக்கலே. ரமணரும்  ஒரு வார்த்தை பேசலே . வெள்ளைக்காரரு  அப்புறம்   ரமணரை வணங்கிட்டு எழுந்து வந்துட்டாரு.
''என்னங்க ஏதோ எல்லாம் கேக்கணும்னு எழுதிக்கிட்டு வந்திங்களே,  ஒன்னும்  கேக்கலியா?'' ன்னு  நண்பர் கேட்டப்போ என்ன சொன்னாரு தெரியுமா வெள்ளைக்காரரு.  
''எல்லாத்துக்கும் பதில் தெரிஞ்சுடுச்சு '' பேசாமலேயே  விளக்கிட்டாருன்னாரு.''
மனசு மனசுகூட பேசும்போது வார்த்தை எதுவுமே  தேவையில்லை பா.

நம்ம சிவசாமிக்கு  ஆட்டம் மட்டும் இல்லை  பாட்டுக்கூட  பிடிக்கும்.  இதை தெரிஞ்சுக்கின்னு  ஒரு பெரிய  ராக்ஷஸன் என்னா  பண்ணான் தெரியுமா?  ரொம்ப வருஷம் தவம் இருந்தான்.  தனது உடம்பிலிருந்து நரம்பெடுத்து  எலும்பிலே  ஒரு வீணை பண்ணி  சாம கானம் என்கிற ரொம்ப  நிரடலான வேதத்தை  பாட்டா பாடினான். வாசிச்சான். அவன் வீணை வாசிக்கி றதுலே  பெரிய வித்துவான் பா. அவரு  உட்காந்திருந்த  கைலாச மலையை ஆட்டிட்டான் பாடியே . இவருக்கு  படா  சந்தோஷம். 'டேய்  நீ கேட்டதெல்லாம் கொடுத்துட்டேன்  போ''ன்னுட்டாரு.  
அப்புறம்?
அவனுக்கு  எல்லா  பலமும் வஞ்சிடுச்சி.  சர்வ சக்தி பெற்ற  ராவணன் பா.  அவன் அக்கிரமம் தாங்க முடியாமல்  அப்புறம்  நம்ம  கிருஷ்ணன் தான் ராமரா  வந்து  அவனை முடிச்சிட்டாரு.''
''ஐயா  உங்களுக்கு  இந்த  சிவ சாமி பத்தி நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கே.''
நான் சொன்னது கொஞ்சம். இன்னும் அவரு ஆடின  நாடக வித்தை நிறைய இருக்குப்பா.  எத்தனையோ  வருஷம் பூரா  அதெல்லாம் சொல்லிக்கிட்டே  இருக்கலாம்.
அப்படி என்னங்க சிவசாமி நாடகமாடுனாரு?
'நம்ம தமிழ் நாட்டிலே  மருதை, இல்லை மதுரைன்னு ஒரு பெரிய ஊர் இருக்கு தெரியுமா.  மதுரைலே  அவருக்கு   சொக்கன்னு பேரு.  அந்த ஊர் ராஜா  பாண்டியன்  சங்கம் நடத்துவான். நிறைய படிச்சவங்கள், விஷயம் தெரிஞ்சவங்களை எல்லாம் கூப்பிட்டு  அவங்கவங்க சாமர்த்தியம் படிப்பு எல்லாம் காட்டி. போட்டி போட வச்சு,  ஜெயிச்சவங்களுக்கு பரிசு கொடுப்பான். நம்ம சிவசாமி  அதிலெல்லாம் பங்கேற்பார். ஒருத்தருக்கு பரிசு கூட வாங்கிக் கொடுத்தார்.  திருவிளையாடல்னு  நிறைய  வேடிக்கை வித்தை எல்லாம் காட்டி  சிவனடியார்களை சோதனை பண்ணி  முக்தி கொடுத்திருக்கார்.  திருவிளையாடல் படம் போய் பாருங்க. கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம். மத்ததை படித்து புரிஞ்சிக்கலாம்.
அட ஆச்சர்யமா இருக்குது சிவசாமி கதை.
அது மட்டுமா. அவன் பிள்ளைங்க, அவன் மனைவி பத்தி சொன்னா ஆவ் னு வாயை பொளந்துடுவே. 
சொல்லுப்பா அதையும் கேக்கறேன்.
கொஞ்சம் பொறு அப்பாலே சொல்றேன்.

sivan jaykay

unread,
Apr 27, 2025, 8:27:44 PM4/27/25
to amrith...@googlegroups.com

கந்தகோட்டம்       நங்கநல்லூர்  J K  SIVAN

ஒரு நண்பர்  நினைவு கூர்கிறார்;
''1967ல் திமுக  அரசு அமைந்தபோது, சென்னையில் வள்ளலார் வாழ்ந்த பகுதி உள்ளிட்ட "மின்ட்" பகுதியை " வள்ளலார் நகர்" என்று பெயரிட்டது. இப்போதுள்ள  நமது சென்னை  வள்ளலார் காலத்து " தருமமிகு சென்னை" இல்லை. ரொம்பவே மாறிவிட்டது.

ஒரு நண்பர் சொல்கிறார்:  'நான் ஆறாம் வகுப்புப் பāடித்துக் கொண்டிருந்த பொது நடந்த ஒரு நிகழ்வைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் !  எங்களது வீட்டில் 60-70 களில் அநேகமாக தமிழ்நாட்டின் உள்ள அனைத்து முருகன் ஆலய திருவுருவப் படங்கள் இருப்பதுண்டு . அதில் ஒன்றில் " சென்னை கந்த கோட்டம் ஸ்ரீ கந்த சாமி" என்று அச்சிட்ட ஒரு முருகன் படம் இருந்தது.  மற்ற படங்களில் பழனி கோவில், திருத்தணி திருசெந்தூர் கோவில் என்று இருக்கிறது - இதில் மட்டும் ஏன் "கோட்டம்" என்று இருக்கிறது என்று எனது தந்தையாரிடம் கேட்ட போது அவர் கூறினார்" கோட்டம் என்றாலும், கோவில் என்றாலும் ஒன்று தான்"  வள்ளலார் சென்னையில் உள்ள கந்தசாமிக் கோவிலை "கந்த கோட்டம் " என்று தான் தமது பாடல்களில் குறிப்பிடுவார், அன்றாடம் எனது தந்தையார் இறைவழிபாட்டில் பாடும்  "ஒருமையுடன் நினது திருமலரடி" என்று ஆரம்பிக்கும் பாடலில்    தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே"  என்று கூறியிருக்கார் " என்று சொன்னார்.

அடுத்த நாள் எனது பள்ளியில் வருடாந்திர கல்வி அதிகாரியின் நேரடி வகுப்பு ஆய்வு !  எந்த நேரத்தில் எந்த ஆசிரியர் எந்த பாடம் எடுக்கும்போது ஆய்வாளர் எந்த வகுப்பறைக்குச் செல்வார் என்று ஆய்வாளரைத் தவிர யாருக்கும் தெரியாத 'அதிரடி" ஆய்வுகள் நிகழ்ந்த கால கட்டம் ! எனது  தமிழாசிரியர் செய்யுள் பகுதி நடத்திக்  கொண்டிருக்கும் போது கல்வி அதிகாரி மற்றும் தலைமை ஆசிரியர் இருவரும் எங்கāகுப்பிற்கு வந்தார்கள் !   கல்வி ஆய்வாளர் எனது தமிழாசிரியாரிடம் என்ன பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டு உள்ளீர்கள் என்றார் ! எனது ஆசிரியர் தமிழ் செய்யுள் பகுதி சொல்லிக் கொடுத்துக் கொண்டு உள்ளேன் என்றார். கல்வி அதிகாரி, " சரி நான், மாணவர்களை சில கேள்விகள் கேட்கிறேன் " என்று சொல்லிவிட்டு, தமிழாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நாங்கள் அனைவரும் அதிகாரி என்ன கேள்வி கேட்கப் போகிறாரோ என்ற பதைபதைப்பில் இருக்க,  கோவில் என்றால்  - ஆலயம் - சாமி கும்பிடும் இடம் என்று தெரியும், "கோட்டம் என்றால்" என்ன என்று யாருக்காவது தெரியுமா ? என்று கேட்டார்.  அதுவரை தமிழ்ப் பாடத்தில் நடத்தப்பட்ட செய்யுள் அல்லது பாடங்களில் கோட்டம் என்ற சொல்லே வந்ததில்லை அதனால் தமிழாசிரியர் கோட்டம் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுக்க சந்தர்ப்பமில்லை.  எனவே, மாணவர்கள் இந்த ஆய்வாளரின் இந்த கேள்விக்கு எப்படி பதில் அளிப்பார்கள் என்ற திகிலில் தமிழாசிரியர் !   முந்தைய தினம் தான் வீட்டில் இருந்த "கந்த கோட்டம் முருகன் படத்தில் இருந்த வாசகங்களுக்கு எனது தந்தையார் கூறிய விளக்கங்கள் என்னுடைய நினைவில் இருந்ததால்,  சற்றும் தாமதிக்காமல் முன் வரிசையில் இருந்த நான், "பதில் சொல்லுகிறேன்" என்று கூற, முன் பெஞ்சில் இருந்த நான் கையை உயர்த்தினேன் !  உடனே, கல்வி அதிகாரி, " சரி சொல்லு" என்றார்.  எனāலை "கந்த கோட்டம் " என்று தான் தமது பாடல்களில் குறிப்பிடுவார், அன்றாடம் எனது தந்தையார் இறைவழிபாட்டில் பாடும்  "ஒருமையுடன் நினது திருமலரடி" என்று ஆரம்பிக்கும் பாடலில்    தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்     தலமோங்கு கந்த வேளே"  என்று கூறியிருக்கார் " என்று சொன்னார்.

உடனே கல்வி அதிகாரி, "சபாஷ், சரியான பதிலைச் சொன்னாய்" என்று கூறிவிட்டு எனது தமிழாசிரியர் வசம், " மாணவர் களுக்கு மிகச் சிறப்பாக சொல்லிக் கொடுக்கிறீர்கள் என்று பாராட்டி விட்டு, மேலும் பல வகுப்பறை ஆய்வுகளுக்குச் செல்ல வேண்டி இருந்ததில் அந்த ஒரு கேள்வி -பதிலிலேயே அவர் திருப்தியுடன் சென்றது-அதன் பின்னர் தமிழாசிரியரும் தலைமை ஆசிரியாரும் என்னைத் தட்டிக் கொடுத்ததும் இன்றும் நினைவில் உள்ளது !

  எனது தந்தையார் மூலம் வள்ளலாரே "கோட்டத்திற்கு"விளக்கம் கூறி அடுத்த நாள் எங்கள் வகுப்பறையில் கல்வி ஆய்வாளர் வருகையை திருப்தி அடையச் செய்ததாகத்தான் இன்றும் கருதுகிறேன் !''
++
அளவுக்கு மீறி  பெருத்து விட்ட  சென்னை நகர, நரக நெரிசலில் அமைதியாக பல நூற்றாண்டுகளாக  சென்னை ராட்டன் பஜார் பகுதியில்  திகழ்வது கந்தசாமி கோயில். ஐந்து நிலை ராஜ கோபுரம்.  பலமுறை சென்று முருகனை தரிசித்திருக்கிறேன். எனக்கு ரொம்ப பிடித்த முருகன் ஆலயம் இது. 

1673ல் மாரி செட்டியார், கந்தப்ப ஆச்சாரி இருவரும் சேர்ந்து கட்டியது.  ரெண்டு  பேரும் திருப்போரூர் முருகன் கோவில் செல்லும் பக்தர்கள். அங்கே ஒரு புற்றுக்குள் அரசமரத்தடியில்  கந்தசாமி விக்ரஹம் அவர்களுக்கு கிடைத்தது. முத்தியாலு நாயக்கருக்கு சொந்தமான இந்த இடத்தில் கந்தசாமி குடியேறினார்.   அப்போது அங்கே ஒரு சின்ன பிள்ளையார் தான் இருந்தார். தம்பிக்கு இடம் கொடுத்தார்.

மாரி செட்டியார் மனைவி நகைகள் சொத்தெல்லாம் விற்று கோயில் கட்டினார். நண்பர் கந்தப்ப ஆச்சாரி எட்டு ஏக்கர் நிலத்தை கோவிலுக்கு கொடுத்தார்.  நமக்கு கந்த கோட்டம் கிடைத்ததை வரலாறு இது. சிதம்பரம் ஸ்வாமிகள், பாம்பன் ஸ்வாமிகள், ராமலிங்க அடிகளார், தண்டபாணி ஸ்வாமிகள், அருணகிரி நாதர்,  பாரதியார் ஆகிய மஹான்கள் தரிசித்த ஆலயம். வள்ளலாரின்  ஆன்மீக வாழ்க்கை துவங்கிய ஆலயம்.  'தெய்வமணி மாலை' இங்கே தான் இயற்றி பாடினார். அதில் எல்லோருக்கும் பிடித்த ஒரு பாடல் இது; அர்த்தம் சொல்ல தேவையே இல்லை;

''ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமைவேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்  மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும்
மருவு  பெண் ஆசையை மறக்க வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும்
மதி வேண்டும் நின்  கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையில் கந்தகோட்டத்துள்  வளர் தலம் ஓங்கு கந்தவேளே
தண் முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.''

sivan jaykay

unread,
Apr 27, 2025, 8:27:44 PM4/27/25
to amrith...@googlegroups.com
1.5.2025.   புனித பயணம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

சிறுவாபுரி முருகன் ஆலயம்.

தமிழகத்தில்  பிரபலமான  முருகன் கோவில்களில் ஒன்று சிறுவாபுரி முருகன் கோவில்.  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற  ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட ஸ்ரீ பால சுப்ரமணிய சுவாமி ஆலயம். அருணகிரி நாதர்  வந்து இந்த முருகனின்  திருப்புகழ் பாடி இருக்கிறார் என்ற செய்தியே போதுமே. குறைந்தது ஐந்நூறு ஆண்டுகளாவது நிச்சயம்  ஆகி இருக்குமே இதைக் கட்டி.  இது தான் அந்த பாடல்;

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
     அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
     ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
     மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
     மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
     புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
     பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
     தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
     தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.''

 ''தேவேந்திரனை மறுபடியும் இந்திரபதவி அடைய வைத்து, இடையூறாக இருந்த  அசுரர்களை வென்று கொன்று, அதனால் தேவர்களை மகிழச்செய்து, பத்ரகாளியுடன் நடனமாடும்  பரமசிவன் களிப்புற, கணபதியும், பார்வதி தேவியும் களிப்படைய,  எட்டுத்திசை, பூமி எங்குமுள்ளோர்கள்  எல்லாம் ஆனந்திக்க, இந்திரனும் பிரம்மனும் எதிரே நின்று  மகிழ மஹா விஷ்ணு  மஹாலக்ஷ்மியோடு இன்பமுற, என்னப்பா  சுப்ரமணியா , நீ மாமயில்மேல் ஆடிக்கொண்டு  என் முன் தோன்றுவாயாக.  தாமரைக் கண்ணா, தேவர்கள் அளித்த தேவயானை மணாளா, அறிவு நிறைந்த மஹா ஞானியே, திரண்ட தோளை  உடையவனே,  ஹோ என்று பேரலைகளுடன் பொங்கிய  கடலின் சீற்றம் அடக்கி, கிரெளஞ்சமலையைப்  பிறந்தவனே, ஏழு மலைகளின் வலிமையையும் பாய்ந்து அழித்த  தங்க வேலாயுதா,  குளிர்ந்த முத்துமாலையை அணிந்த
மார்பா, பளபள வென்று மின்னும் செம்பொன் நிறத்தவனே,   தமிழ் மேல்  மிக்க நேசமும் பாசமும் கொண்ட முருகா, எப்போதும் உன் உன் அடியார்கள் மனம் நிறைந்தவனே, தண்மை கொண்ட குளுகுளுவெனும் சிறுவாபுரி ஸ்தலத்தில் அருள் பாலிக்கும்  பெருமாளே''  என்று வர்ணிக்கிறார்  அருணகிரியார். 

சென்னை கல்கத்தா மார்கத்தில் சின்னம்பேடு எனும் ஊரில்  பொன்னேரி அருகில் உள்ள ஸ்தலம் சிறுவாபுரி. ராமரின் புத்திரர்கள் லவனும் குசனும் வாழ்ந்த  ஊர்.  இங்கே  முருகனின் வாஹனம்   பச்சை நிற மரகத மயில். மரகத விநாயகரும் உண்டு. 

sivan jaykay

unread,
Apr 27, 2025, 8:27:44 PM4/27/25
to amrith...@googlegroups.com
 
பத்ம புராணம் -8     நங்கநல்லூர்  J K  SIVAN

நைமிசாரண்ய வனத்தில் எண்ணற்ற  ரிஷிகள் முனிவர்கள் தவ யோகிகள் கூடி இருக்க அனைவருக்கும்  சுத மகரிஷி உபதேசம் செயகிறார். ரிஷிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறார்.

'பகவான் படைக்கும்போது ஜீவனுக்கு மூன்று குணங்களை உள்ளடக்கி தான்  அனுப்புகிறார்.சாத்வீகம், ராஜஸம், தமோ குணங்கள் தான் அவை. பஞ்ச பூதங்களின் சேர்க்கை தான் ஜீவனின் ஐம்புலன்கள்.  பஞ்ச பூதங்களை பற்றி சொல்லும்போது முதலில் ஆகாசம். சப்தம் உருவாகும் ஸ்தலம். பிறகு  வாயு, காற்று, மிகவும் சக்தி வாய்ந்தது. ஸ்பரிஸம்  அதனால் புரிகிறது.  அதன் பின் அடுத்த தோற்றம்  ஒளி, அக்னி, உஷ்ணம், வெப்பம்,  காற்றினால் பரவுகிறது. அதற்கும் ஸ்பரிச சம்பந்தம் உண்டு.  அடுத்ததாக உருவானது  நீர்.உருவம்  கொண்டது. மணம்  உணரமுடிகிறது. ஸ்பரிஸ சம்பந்தம் உண்டு. இதெல்லாம் ஒன்று சேர்ந்து அடுத்து பூமி. ப்ரித்வி.  உருவம் கொண்டது.  ஜீவனுக்கு  ஞான இந்திரியங்கள் கர்ம  இந்த்ரியங்கள் இவற்றால் தான் செயல்படுகிறது.   பதினோராவது இந்திரியம் மனம். மனிதனை ஆக்கிரமித்து ஆட்டிப்படைப்பது.   ஐம்புலன்களை வைகாரிகம் என்று சொல்வோம்.  அவை  சருமம், கண், மூக்கு, நாக்கு, காது.  கர்ம இந்திரியங்கள்.   உலகத்தில் வாழும்போது நாம்  பேசுவது, கேட்பது, தொடுவது, முகர்வது, பார்ப்பது இதன் மூலம் தான்.

''புலஸ்திய மகரிஷி, எனக்கு   எவ்வாறு  ஸ்ரீமந்  நாராயணன், ப்ரம்மாவாக கல்பத்தின் ஆரம்பத்தில் சிருஷ்டியை ஆரம்பித்தார் என உபதேசியுங்கள் பிரபு,'' என்று பீஷ்மர் கேட்டுக்கொண்டதால் புலஸ்தியர் சொல்வதை சூதர் நைமிசாரண்ய ரிஷிகளுக்கு சொல்கிறார்.

ப்ரம்மா  நாராயணனிலிருந்து தோன்றியவர், ஆதி அந்தமில்லாதவர்.  எங்கும் ஜலமயமாக  பிரளயம் தோன்றி முடிந்தது. ஸ்ரீமந் நாராயணன் பல அவதாரங்களை எடுத்தார். பூமி ஜலத்திலிருந்து மேலே வந்தது. நாராயணன் தன்னை ப்ரம்மா சிவனாக வேறு பிரித்துக்கொண்டு  ஸ்ரிஷ்டி ஸ்திதி  ஸம்ஹார  செயல்களில்  ஈடுபட்டு உயிர்களை பராமரித்தார்
முதலில் பெரிதாக  மஹத்,  அதிலிருந்து ப்ரம்மா தோன்றி, அவர் உடலிலிருந்து பல உயிர்கள் தோன்றின.  சிருஷ்டியை ப்ரம்மா துவங்கிவிட்டார். இரவு, பகல், காலங்கள்  உருவாயின.   பல்வேறு உயிரினங்கள் பெருகின. அவற்றுள் குணங்கள் உருவாயின.  அசையும் அசையா வஸ்துக்கள்  உருவாயின. சூரிய  சந்திர நக்ஷத்திரங்கள் அசைவால் தட்ப வெப்ப சீதோஷ்ண நிலை மாறி மாறி உலகத்தில் வியாபித்தது.
உலகத்தை உயிர்களை தோற்றுவித்த  ஸ்ரீ மந் நாராயணன் பத்து அவதாரங்கள் எடுத்து  தீயவற்றை நீக்கினார். புருஷ ஸூக்தம் சொல்வது படி  ஸ்ரீமந்  நாராயணன் ஆயிரம் சிரசு உள்ளவன், ஆயிரம் கண்ணுடையான், ஆயிரம் பாதங்கள் கொண்டவன். எங்கும் நிறைந்தவன். முக் காலமுமானவன். சகல உயிர்களுக்கும் தாய் அவனே எனலாம். ஏனென்றால் வானிலிருந்து தான் உயிரினங்கள் அனைத்தும் தோன்றின. பெரிதிலும் பெரிதாகவும். அணுவுக்குள் அணுவாகவும் உள்ளவன்.
''நாரதா  உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்று நாராயணன் சொன்னபோது  நாரத ரிஷி அற்புதமாக ஒரு பதில் சொன்னார்; 
''ஸ்ரீமந்  நாராயணா, நீ ஸர்வேஸ்வரன் , நீ எல்லார் மனத்திலும் எப்போதும் நிறைந்திருக்கவேண்டும். என் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்பது கூட  நீ அறிந்தது தானே''   
''ஆஹா  அப்படியே ஆகட்டும் நாரதா. நீ   ரிஷிகளில் சிறந்தவனாக,  திரிலோக சஞ்சாரியாக என்றும் எமது சிறந்த பக்தனான விளங்குவாய்''
 

sivan jaykay

unread,
Apr 27, 2025, 8:27:44 PM4/27/25
to amrith...@googlegroups.com
1. 5.2025  புனித யாத்திரை.-  நங்கநல்லூர்  J K SIVAN 

பள்ளிகொண்ட ஈஸ்வரன் ஆலயம்  -சுருட்ட பள்ளி. 

ஒரு அற்புத சிவாலயம்   ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர்கோவில்.   தமிழ்நாடு  ஆந்திரா எல்லையில் ஊத்துக்கோட்டை அருகே ம் சித்தூர் மாவட்டம், நாகலாபுரம் தாலுக்காவில்  சுருட்டப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ளது.  பரமேஸ்வரன் படுத்துக்  கொண்டிருக்கும்  உலகத்திலேயே  ஒரே கோவில் இது.   பார்வதி தேவி, மரகதாம்பிகை  மடியில் தலை வைத்து  ஆலஹால விஷத்தின்  கொடுமையைப்  பொறுத்துக்கொண்டு  படுத்திருக்கிறார்.  ப்ரம்மா,  விஷ்ணு,  ரிஷிகள்,முனிவர்கள் கவலையோடு  பார்க்கிறார்கள்.   ஆலகால விஷத்தை நெஞ்சில் தேக்கி  மயக்கத்தோடு  கண் மூடியவாறு பரமேஸ்வரன் காணப்படுகிறார். சிற்பி உயிரோட்டம் கொடுத்து அமைத்த  விக்ரஹம்.  பிரதோஷ காலத்தில்  தரிசனம் பெற ரொம்ப  கும்பல் இருக்கும்.  நெருக்கி தள்ளும் பக்தர்கள் கூட்டம் சேரும் ஆலயம்.

இங்கே  வால்மீகிஸ்வரர் - மரகதாம்பிகை, விநாயகர் - சித்தி, புத்தி, சாஸ்தா - பூரணை, புஷ்கலை, குபேரன் - கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் உள்ள சந்நிதிகள் அற்புதம்.  மூலவர் பெயர்  வால்மீகிஸ்வரர். எதிரில் ராமலிங்கம். 

வழக்கமான துவார பாலகருக்கு பதில் விசேஷமாக  இங்கே சங்கநிதி- வசுந்தராவுடனும், பத்மநிதி- வசுமதி யுடனும் காணலாம். அம்பாள் மரகதாம்பிகை  நின்ற திருக்கோலத்தில்  சிம்ம வாஹினி.  சன்னதிக்கு வெளியில் துவார பாலகியருக்கு பதிலாக  பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும், கற்பகவிருட்சமும்.  வேறே எங்காவது இதெல்லாம்  காண முடியுமா?.

மரகதாம்பிகை சன்னிதி அருகில் ராஜராஜேஸ்வரி, மகாலட்சுமி, சரஸ்வதி, அன்னபூரணி ஆகிய தேவிகளின் சிலைகள் உள்ளன. கையில் கிளியுடன் அழகிய வடிவில் ஞானதுர்க்கை காட்சி தருகிறார். வடக்கு பிரகாரத்தில் சுப்பிரமணியர் தனது இரு தேவியர்களுடன் தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். ராஜயோகத்தை தரும் ராஜமாதங்கி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு கீழே ஒரு சுரங்கப்பாதை காணப்படுகிறது. எங்கே போகிறது? யாருக்குத் தெரியும்?

விசாலமான கோவில்.  ப்ரஹாரத்தில்  விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் சந்நிதிகள். 
 மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றது இந்த ஸ்தலம். இங்கே  அநேகமாக  எல்லா மூர்த்திகளும்  குடும்ப சமேதராக காட்சி தருவது, முக்கிய அம்சம். 

புராண சம்பவம் ஒன்று  சொல்கிறேன்.
துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரன் பதவி இழந்தான். அசுரர்கள் இந்திரலோகத்தை  ஆக்கிரமித்தனர்.  மீண்டும்  தான்  இழந்த இந்த்ர பதவியைப்  பெற பாற்கடலை கடைந்து, அம்ருதம் பெற்றால் தான்  உண்டு. வேறே வழியில்லை  என்று  தேவகுரு  ப்ரஹஸ்பதி சொல்லிவிட்டார். 

மஹா விஷ்ணுவின்  உதவியோடு,  வாசுகி என்ற  பெரிய  நாகத்தைக்   கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை  ஒரு ஏகாதசி தினத்தில் கடைந்தனர்.   ரெண்டு பக்கமும்  தேவர்களும் அசுரர்களும் பலமாக  இழுத்ததில், வாசுகிக்கு  வலி தாங்கமுடியாமல்  விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள பரமேஸ்வரனை வேண்டினர். சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரமூர்த்தி நாயனாரை  அனுப்பி அந்த விஷத்தை  எல்லாம்  திரட்டி எடுத்து வர கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவனிடம் தந்தார். அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும், "சிவபெருமானே! இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான சூழ் நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள்"என மன்றாடினர்.  உடனே சிவன் 'விஷாபகரண மூர்த்தி'   யாகி அந்த கொடிய நஞ்சினை ஒரே மூச்சாக  'லபக்'' என்று  விழுங்கினார். இதைக் கண்டு பயந்த லோகமாதா பார்வதி, சிவனை  அப்படியே சாய்த்து தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு  கீழே உள்ளே  செல்லாதவாறு கை  வைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் (கண்டத்தில்) நீலநிறத்தில் விஷம் தங்கிவிட்டது. பரமேஸ்வரனுக்கு அன்று முதல்  "நீலகண்டன்'என பெயர். விஷத்தை தடுத்து அம்ருதம்  கிடைக்கச் செய்ததால் அம்பாளுக்கு  "அமுதாம்பிகை' என பெயர்.  இது நடந்த இடம்  சுருட்டப்பள்ளி என்கிறார்கள். சிவபுராணமும், ஸ்கந்த புராணமும் இதெல்லாம் பற்றி சொல்கிறது.   பரமேஸ்வரன் பள்ளி  கொண்டதால் 
 "பள்ளி கொண்டீஸ்வரர்' எனப்படுகிறார். பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது  பக்தர்கள் நம்பிக்கை. 

இது ஒரு ஆயிரம் வருஷ கோவில்.  விஜயநகர பேரரசர் வித்யாரண்யரால் கட்டப்பட்டது. இங்குள்ள சிவபெருமான் மனித உருவில், ஆலகால விஷம் உண்ட பிறகு  பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து படுத்த கோலம்.  இந்த ஸ்தலத்தை தான் முதன் முதலாக  ப்ரதோஷ  பூஜை  வழிபாடு நடந்தது.  பாற்கடலில் தோன்றிய சங்கநிதி  பத்மநிதி  த்வாரபாலகர்கள் . இங்கே அபூர்வமாக  தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் அவரை மனைவி தாராவுடன் தரிசனம் தரிசிக்கலாம். 

 பிருகு முனிவர், பிரம்மா, மகாவிஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், அகத்தியர், புலஸ்தியர், கவுதமர், தும்புரர், வசிஷ்டர், விசுவாமித்திரர், வால்மீகி, தேவேந்திரனோடு விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் முருகன் ஆகியோரும் அருள்  பாலிக்கிறார்கள். 

சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து 60  கி.மீ.  ஊத்துக்கோட்டையிலிருந்து 2 கி.மீ தொலைவிலும் சுருட்டப்பள்ளி   உள்ளது.

ஆந்திர கோவில்களில் தட்டில் காசு போடு என்று ஜாடை காட்டி கேட்கும் அர்ச்சகர்களை அங்கு தான் கண்டேன். ஒரூ முக்கியமான விஷயம். மறந்து போகாம சொல்லிவிடுகிறேன். இந்த 
 ஆலயத்தின் கம்பீரமான  ஐந்தடி உயர  அழகிய நந்தியை பார்க்காமல் போக மனசு இடம்  கொடுக்காது. 

5 நிலை கொண்ட ராஜகோபுரம். மரகதாம்பிகை சன்னிதி முன்பாக சாளக்கிராம கணபதியும், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியரும், இடது புறம் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய நாயன்மார்களின் திருவுருவச்சிலைகளும், வால்மீகி மகரிஷியின் சிலையும் உள்ளது. அதற்கு அடுத்து ஏகபாத திரிமூர்த்தி காட்சி அளிப்பது அரிய ஒன்றாகும். தான் ஒருவராய் படைத்தல், காத்தல் தொழில் புரிபவராக பிரம்மா, விஷ்ணுவை தன்னிடத்தே கொண்ட சிவவடிவமே ‘ஏகபாத திரிமூர்த்தி’ ஆவார். பிரம்மா நான்கு முகங்களுடன் அன்ன வாகனத்துடனும், சிவன் நந்தியுடனும், விஷ்ணு கருடாழ்வாருடனும் ஒரே கல்லில் மிக அழகான சிற்பமாக காட்சி அளிக்கிறார்கள்.

வரசித்தி விநாயகர் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். தேவர்களுக்கு ஏற்பட்ட வெப்ப நோயை தணிப்பதற்காக, சிவன் தனது கையில் அக்னியுடனும், மூன்று தலை, மூன்று கால்கள், மூன்று கைகளுடன் எடுத்த அவதாரமே ஜுரஹரமூர்த்தி. இந்த சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாவுக்கு கீழே தனி சன்னிதியில் சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். சப்த கன்னிமார்கள் 7 பேரும் தங்களது வாகனங்களுடன் காட்சி தருகின்றனர். இங்கு பிரதோஷ மூர்த்தி வண்ணப்படமாக தனி சன்னிதியில் உள்ளார். இந்த சன்னிதியின் வெளிப்புறத்தில் வேணு  கோபாலசுவாமி தனது கரங்களில் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறார். மற்றொரு பக்கம் வேறெங்கும் காண முடியாத வகையில், நந்தீஸ்வரர் கைகூப்பிய நிலையில் அதிகார நந்தியாக அருள்கிறார்.*

*கிழக்கு பக்கத்தில் ஒரு சன்னிதியில் சீதாதேவி, ராமர், லட்சுமணன் அருள்கின்றனர். அவர்களுக்கு அருகில் பரதன், சத்ருக்னர், ஆஞ்சநேயர் உள்ளனர். இதை கடந்து சென்றால் ராமலிங்கேஸ்வரர், பர்வத வர்த்தினியுடன் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். அருகில் வால்மீகிஸ்வரர் சிலை உள்ளது.

வாழ்க்கையில் ஒரு தடவையாவது சென்று தரிசிக்க வேண்டிய  ஆலயம் இது. 


sivan jaykay

unread,
Apr 27, 2025, 8:28:11 PM4/27/25
to amrith...@googlegroups.com
இது தான்  கிருஷ்ணன்.   நங்கநல்லூர்  J K SIVAN

விஷ்ணு  என்கிற ஸ்ரீமந்  நாராயணன் தான் சர்வமும். சகல தெய்வங்களும் அவர் ஒருத்தரே .  ப்ரம்மா, சிவன், ருத்ரன்,  ராமன், கிருஷ்ணன், எத்தனையோ பெயர்கள்  அவருக்கு உண்டு.  பல  அவதாரங்கள் எடுத்து அதற்கான ஆயிரக்கணக்கான நாமங்களை ரூபங்களை கொண்டவர். ஒரே தெய்வம் பல ரூபங்களில் பல நாமங்களில். அவ்வளவு தான்.  'ஈஸ்வர: பரம: கிருஷ்ணா:'  நாம் பார்க்கும்  பிரபஞ்சத்திலும்  அதற்கு அப்பால் இருந்தும் அதைக் கண்காணிக்கும்  ஒரு சக்திதான் கிருஷ்ணன்.
 
கீதையில் ஒன்றிரண்டு ஸ்லோகங்கள்;
मत्त: परतरं नान्यत्किञ्चिदस्ति धनञ्जय |मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव ||  கீதை  7. 7||
mattaḥ parataraṁ nānyat kiñchid asti dhanañjaya mayi sarvam idaṁ protaṁ sūtre maṇi-gaṇā iva 7.7:
மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சித³ஸ்தி த⁴நஞ்ஜய|மயி ஸர்வமித³ம் ப்ரோதம் ஸூத்ரே மணிக³ணா இவ | கீதை  7-7||

"என்னை  விட  பெரிய  உண்மை  எதுவும் இல்லேப்பா.  ஸர்வமும்  நானே.   எல்லாரும்  என்னையே சார்ந்து அல்லவோ  இருக்கிறார்கள்'.  ஒரு நெருக்கமாக கட்டிய  ஹாரத்தில் தங்கம்,  வெள்ளி,  வைர,  மரகத, முத்துமணிகள்  தான் கண்ணுக்கு பளிச்சென்று ஒளிவீசும்.   ஆனால் இந்த மணிகளை  எல்லாம் உள்ளே இருந்து இணைக்கும்  வெள்ளி, தங்க, தாமிர கம்பியோ,  சாதாரண நூல்  கயிறு கண்ணில் படாது.  நான் அப்படித்தான் உள்ளே இருந்து கொண்டு வெளியே தெரியாத கம்பி  மாதிரி உலகில் எல்லாவற்றையும் இணைப்பவன்''

न मे विदु: सुरगणा: प्रभवं न महर्षय: |अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वश: || கீதை  10.2.||
na me viduḥ sura-gaṇāḥ prabhavaṁ na maharṣhayaḥ aham ādir hi devānāṁ maharṣhīṇāṁ cha sarvaśhaḥ
ந மே விது³: ஸுரக³ணா: ப்ரப⁴வம் ந மஹர்ஷய: ।அஹமாதி³ர்ஹி தே³வானாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஶ: ॥ 2 ॥

மஹா ரிஷிகளாகட்டும்,  எண்ணற்ற தெய்வங்களாகட்டும், எல்லோருக்குமே  எல்லாவற்றுக்குமே நானே ஆதாரம். என்னை முழுமையாக அறிந்தவர்கள் எவருமே  இல்லை.
 
" அக்னி,   வாயு, இந்திரன், சந்திரன், முப்பத்து முக்கோடி  தெய்வங்கள் எதை வணங்கினாலும் அவற்றை  இயக்கும்  என்னையே  (கிருஷ்ணனையே )  அது சேரும். அதாவது  கிருஷ்ணன்  தான்  'சர்வ  ஆதார சக்தி'.   விஷ்ணுவின் அவதாரங் கள்  கார்யார்த்தமானவை. அவர்  மகா விஷ்ணு, கர்போதகசாயி விஷ்ணு,  க்ஷீரோதகசாயி விஷ்ணு  என்றும்  காணப் படுபவர். எந்த விஷ்ணுவாக வர்ணிக்கப் பட்டாலும்  எல்லாமே   நாராயணன் ஒருவரே தான்..

சச்சிதானந்த விக்ரஹ என்று  சொல்கிறோமே அதன் மூலம்  கிருஷ்ணன் எப்படி மற்றவற்றிலிருந்து வேறுபட்டவர் என்பது புரியும்.  கிருஷ்ணனின் சரீரம் 'சத் (நிரந்தரம்), சித் (பூரண ஞானம்)'  ,ஆனந்தம் (எல்லையிலாத இன்பம்) இவற்றின் மொத்த உருவகம்.  நாம் எல்லோரும் அவரவர் கர்ம பலனுக்கேற்ற உடல்  தரிக்கிறோம். பிறக்கிறோம். உலகில் பிறக்கும்போது உலகத்தின் காரணமான  பஞ்ச பூதங்களிலிருந்தே உருவாகி அதிலேயே கரைகிறோம். இது உடல் பற்றி  மட்டுமே. உடலுக்கு உள்ளே  இருக்கிறதே  ஆத்மா, அது  இதில் சேராதது. சுதந்திரமானது. அது ஒன்றே  நமது  அடையாளம். மாறாதது.  உடல்  மாறக்கூடிய உருவம் கொண்டது, மரணம் எய்துவது.  ஆத்மா உருவமற்ற, மரணமற்ற ஒரு பாகம் நம்மில், நம்முள்.  அதன்  உண்மையான  தன்மை தான்  சத், சித், ஆனந்தம்.  எனவே  உடல்  அசத், அசித்,  நிரானந்தம்  கொண்டது என்று புரிகிறதா? எத்தனை தடவை திரும்ப திரும்ப சொன்னாலும்  மனதில் ஏறாத, பதியாத  ஒரு விஷயம் இது.  

கிருஷ்ணன்,  அழியாத ஆத்மாவையே  உடலாக கொண்டவன்.  உலக வியவஹாரங்களில்  சம்பந்தப் படாதவன். ஜனனம் மரணம் அற்றவன். இது ஒன்றே  கிருஷ்ணனை  மற்ற  முப்பத்து மூன்று கோடி தேவதைகளிலிருந்து தனித்து  காட்டுகிறது.  இந்த  தேவதைகள் எல்லாமே   நம்மைப் போன்றவர்கள் தாம் ஒரு வகையில்.   உருவம், உடல், கொண்டவை. மேலும்  ஒரு  சில  குறிப்பிட்ட  அதிகாரங்கள், சக்திகள் மட்டுமே  கொண்டவர்கள். பரம்பொருள் என்று  அவர்களை  அடையாளம் காண முடியாது. 

அவரவர் கர்ம பலனுக்கேற்ப  இந்த பூமியில்  தோன்றுபவர்கள்.  நமது உலகத்துக்கு அதனால் தான் கர்ம பூமி என்று பெயர். சத்வ குணம் அதிகம் காண்பின், அவர்கள் மனிதரை விட உயர்ந்த பதவிகளை  அடைபவர்கள். தேவர்கள்.  தேவதைகள்.   எல்லோருமே எல்லைக்குட்பட்ட ஸ்தானம் வகிப்பவர்கள்.  இந்திரன், கணபதி, பிரம்மா  ஆகியோர்  அந்தந்த  ஸ்தானத்தில்  வரையறுக்கப்பட்ட  காலத்திற்கு மட்டும்  தான்  பதவி, தலைமை வகிப்பார்கள் .  முடிவற்றதல்ல. மாயையில் கட்டுண்ட நாம்  பின் தங்கிய  நிலையில்  உள்ளோம்.  ரஜஸ்,  தமஸ்,  ஜாஸ்தி நம்மிடம் என்பது தான்  வித்யாசம்.  

sivan jaykay

unread,
Apr 27, 2025, 8:28:12 PM4/27/25
to amrith...@googlegroups.com

''உள்ளது நாற்பது''   அறிமுகம். -   நங்கநல்லூர் J K  SIVAN 

பகவான் மகரிஷி  ரமணரின் ஆத்ம தத்வம் எளிதில் புரியாதது என்பார்கள். நமது மனது பக்குவம் அடையாத நிலையில் எதுவுமே  புரியாது. மனதை வேறு ஏதோ எண்ணங்கள் அமுக்கி தன் வசப்படுத்தி வைத்த்திருக்கும்போது அற்புதமான ஆத்ம தத்வத்துக்கு  அங்கே  ஏது இடம்?  கொஞ்சம் கொஞ்சமாக அவரை நிதானமாக, பொறுமையாக மனதை ஒருமைப்படுத்தி  புரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தோடு படித்தால் ரமணர் நன்றாக புரிவார்.

அவரது எண்ணற்ற நூல்களில் ஒன்று 'உள்ளது நாற்பது'' இதை ஸ்ரீ நொச்சுர்  வெங்கட்ராம  ஸ்வாமிகள்  அற்புதமாக பல சொற்பொழிவுகளில் பிரசாங்கங்களில்  விளக்கி இருப்பதைக்   கேட்டவர்கள், படித்தவர்களுக்கு  நான் சொல்வது நன்றாக புரியும்.  அதைப் படித்துவிட்டு தான்  ''உள்ளது நாற்பதை''  முடிந்தவரை எளிமையாக  விளக்கி இருக்கிறேன். அது புத்தகமாக வெளிவந்துள்ளது. விலை இல்லை. ஆனால்  அதை தயாரித்து விநியோகிக்க ,ஒரு சிறு நன்கொடை கொடுத்து மேலும் இத்தகைய  புத்தகங்கள் வெளிவர உங்களது நன்கொடை பெரிதும் உதவும். 
ரூ 100 + கூரியர் /தபால் செலவு RS  50  அனுப்புபவர்களுக்கு அவர்கள் விலாசத்துக்கே  புத்தகம் வந்து சேரும்.  GPAY எண் .9840279080.   

உள்ளது நாற்பது  3.5.2025 அன்று  ஆழ்வார் அரங்கம் 7ம் ஆண்டு விழா வைபவத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. முடிந்தவர்கள் விழாவில் வந்து கலந்து கொள்ளலாம். அழைப்பிதழ் இணைத்திருக்கிறேன்.  
IMG-20250106-WA0034.jpg
ulladhu narpadhu invitre Scan.jpg

sivan jaykay

unread,
May 1, 2025, 8:25:12 PM5/1/25
to amrith...@googlegroups.com
EFFECTIVE COMMUNICATION -   Nanganallur  J  K SIVAN.

There is no entertainment  needed than watching  tv, youtube and whatsapp clippings. How our leaders talk behave and contradict is interesting. NO ONE seems to be  interested in knowing  the art of public speech. 
Let me tell you something about what is speech and how it should be used, which I learned from listening to many a great wisemen of the past globally.
Speech is power. needed to  persuade, convert  and it compels also because of its power. When we listen to a good speech,  the effective communication  should be for   listeners also  to say ‘Me too!  instead of  ‘So what?” 
The speaker should watch the  audience as he speaks to know their reaction.  Spoken words have power , provide food for the mind and create light for understanding and awareness.,
We jocularly say   'Light travels faster than sound. That’s why certain people appear bright until you hear them speak.”
We must remember  that  it takes a lot of words to say what we have in mind. I  therefore  give  more thought before I speak or write anything.
The international truth is  'A wise man speaks because he has something to say; a fool speaks because he has to say something.”

Whoever speaks  must be  conscious to  get into the subject, take it in, and get it  into the heart of  audience.
Words have incredible power. They can make people’s hearts soar, 

To communicate,  it must be realized that everyone is  different in the way everyone perceives this world  and understand it as a guide to communication with others. Many speakers have the problem of not knowing when to stop. Speech or talk is like a a voyage with purpose and it must be properly planned.  The man who starts out going nowhere, generally gets no where.
Speech must be clear, precise, and every word  should be carved before it leaves the mind or mouth. 
The best speeches come from the heart and reflect the speaker's  passion. 
Every writer or speaker  should be aware that he is  not being judged. it is  the value of what he brings forth is being judged by its quality.

After writing the above,  I DO REALISE THAT I AM NEITHER A GOOD ,QUALIFIED, SPEAKER OR WRITER.. LET ME IMPROVE

sivan jaykay

unread,
May 1, 2025, 8:25:13 PM5/1/25
to amrith...@googlegroups.com

ருசிகர தகவல்கள்  -   நங்கநல்லூர்  J K  SIVAN


புராணங்கள்  பொய்யோ  புருடாவோ இல்லை.  அவற்றை ஊர்ஜிதப்படுத்து என்றால் காற்றைப் பிடித்து கையில் கொடு என்பதைப் போல் தான். நம்பிக்கைக்கு  ஏதோ ஒரு சில  சான்றுகள்,  ஊன்றுகோல்களாக   இருப்பதால்  நமது முன்னோர்கள்  அவற்றை ஆதரித்தனர். அவர்கள் முட்டாள்கள் அல்ல. நம்மைவிட புத்திசாலிகள்.   இல்லாவிட்டால் இவ்வளவு அற்புத உலகத்தை நமக்கு விட்டுச் சென்றிருப்பார்களா?

மஹா பாரதம்  நமக்கு முந்தைய துவாபர யுகத்தில் நடந்தது. ராமாயணம்  இன்னும் முன்னால் ஏழாயிரம் வருஷம் முன்பு  த்ரேதா யுகத்தில் நடந்தது. அதற்கு சான்றுகள் இன்னும் ஆங்காங்கே சில இருக்கின்றனவே. நானே  நேரில் சித்ரகூடம், அயோத்யா பிரயாகை சென்றபோது பார்த்தேனே.

மஹாபாரத சம்பவங்களை   டாக்டர் K N S  BATNAIK  என்ற சரித்திர ஆராய்ச்சியாளர்  ரொம்ப ரொம்ப சிரமப்பட்டு புராணங்கள்  பஞ்சாங்கங்களை தேடி அலசி  நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார். மஹாபாரதம் பற்றிய சில விஷயங்கள் அதில்   சில  தேதி  நாள்கள் குறிப்பு  ருசிகரமானதாக இருந்ததால்  சுருக்கமாக  அதைத் தருகிறேன்.

கர்ணன்  மாசி மாத வளர்பிறை முதல் நாள் பிறந்தவன்.  யுதிஷ்டிரனை  விட 16 வயசு பெரியவன் என்கிறது ஏதோ சில ஆதாரம்.
பிரம்மகூடத்தில் உள்ள சப்தசிருங்க மலையை பாண்டு மஹாராஜா, ஐப்பசி மாத வளர்பிறை ஐந்தாவது நாளில் அடைந்தான்.  அப்போது யுதிஷ்டிரனுக்கு ஒரு வயஸு ஆகிவிட்டது.  யுதிஷ்டிரன் பிரஜோத்பத்தி  வருடம், ஐப்பசி மாத வளர்பிறை 5வது நாளில் கேட்டை நட்சத்திரத்தில், தனுசு லக்கினத்தில், மதிய வேளையில் அபிஜித் முகூர்த்தத்தில் பிறந்தான். அது கலியுக ஆரம்பத்திற்கு 127 வருடம் 5 மாதம் 25 நாள் முன்னதாக நடந்தது. கி.மு. 3229 - 8 -15  நாளில்.

 பீமன் ஆங்கீரச வருடம், ஐப்பசி மாதம் தேய்பிறை 9வது நாளில் மக நட்சத்திரத்தில் மதிய வேளைக்குப் பிறகு பிறந்தான். அண்ணா  யுதிஷ்டிரனை விட 1 வருடம் 19 நாட்கள்  சின்னவன்.

 அர்ஜுனன்  ஸ்ரீமுக வருடம் பங்குனி மாதம் பௌர்ணமி  பகலில் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தான். பீமனை விட 1 வருடம் 15 நாட்கள் சின்னவன்.  

 நகுல சகாதேவர்கள் பவ வருடம், பங்குனி மாதம் பௌர்ணமி நாள்  மத்தியானம்  அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தனர். அர்ஜுனனை விட 1 வருடம்    15நாட்கள்  சின்னவர்கள்.  

கிருஷ்ணன்  ஸ்ரீ முக வருடம் ஆவணி மாதம்  தேய்பிறை எட்டாம் நாள், ரோகிணி நக்ஷத்ரம்,  நள்ளிரவில் ரிஷப லக்னத்தில் பிறந்தான்.

துரியோதனன்  பீமன் பிறந்த  மறுநாள்  பிறந்தான். அந்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் 99 கௌரவர்களும் அவர்களது ஒரு தங்கையும் பிறந்தனர். அதே போல, ஹிடிம்பன், பகன், மற்றும் கீசகன் ஆகியோர் அதே காலகட்டத்தில் மகம் மற்றும் சுவாதி நட்சத்திரங்களுக்கு இடையில் பிறந்தனர்.
பாண்டு மஹாராஜா,  சர்வதாரி ஆண்டு, சித்திரை மாத, வளர் பிறை உத்திரம் நட்சத்திரத்தில் இறந்தான். அப்போது அர்ஜுனன் பிறந்து 14 வருஷம் 7 நாள். யுதிஷ்டிரனுக்கு 16 வயது 6 மாதங்களும் 7 நாள் .

பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்கு சர்வதாரி வருடம், சித்திரை மாதம் தேய்பிறை 13வதுநாள்  அழைத்து வரப்பட்டனர். அதாவது அவர்கள் தந்தை {பாண்டு} இறந்து 16 நாட்களுக்குப் பிறகு. சர்வதாரி வருடம் சித்திரை மாத தேய்பிறை 13வது நாளில் இருந்து வைகாசி மாதம் வளர்பிறை 10வது நாள் வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு பாண்டுவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 16 வருடம், 6 மாதம், 28 நாளாகும்.

பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தில்  13வருடங்கள்  தங்கி  இருந்தனர். அதாவது சர்வதாரி வருடம் வைகாசி மாத வளர்பிறை 10ம் நாளிலிருந்து, பிலவ வருடம் வைகாசி மாதம் 10ம் நாள் வரை இருந்தனர். அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 29 வருடம் 6 நாள் 23 நாட்கள் ஆகும். பாண்டவர்கள் துரோணரிடம் வில்வித்தை பயின்றனர்.

துருபதன் மகள் த்ரோபதி ஸ்வயம்வர  வில் வித்த்தை போட்டி பிலவ வருடம் வைகாசி மாதம் பௌர்ணமி அன்று நடைபெற்ற  போது யுதிஷ்டிரனுக்கு 30-31 வயது, அர்ஜுனனுக்கு 28-29.

துரோணருக்கு  குரு தக்ஷிணையாக  பாஞ்சால ராஜா துருபதனை  பாண்டவர்கள் சிறைபிடித்தது  பிலவ வருடம் வைகாசி மாத தேய்பிறை 5வது நாளில் ஆரம்பித்து 1 வருடம் 4 மாதம் 5 நாட்களுக்கு நடந்தது. அதாவது சோபகிருது வருடம் திருவாதிரை மாதம் வளர்பிறை 10 வது நாள் வரை நடந்தது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது  31 வருடம்  5நாள்.

பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தில் 5 வருடம் 4 மாதம் 20 நாட்களுக்கு, அதாவது பிலவங்க வருடம் மாசி மாதம் அமாவாசை வரை இருந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 36 வருடம் 4 மாதம் 25 நாள்.
 பிலவங்க வருடம், மாசி மாதம் வளர்பிறை 8ம் நாளில் பாண்டவர்கள் வாரணாவதத்திற்குள் நுழைந்தனர். அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 36 வருடம் 4 மாதம் 3 நாட்கள்.

கீலக வருடம், பங்குனி மாதம் 13 / 14ம் நாள் இரவு மூன்றாம் ஜாமத்தில்  பாண்டவர்கள் தங்கி இருந்த  அரக்கு மாளிகை திகு திகு என்று இரவில் தீ வைக்கப்பட்டு  எரிந்தது.  ஒருநாள் = 8 ஜாமம் கொண்டது. 4 பகலிலும், 4 இரவிலும்)   ஆகவே இரவு  3வது ஜாமத்தில் தீப்  பற்றி எரிந்தது.  பீமன் தோண்டிய சுரங்கம் வழியாக  கீலக வருடம் பங்குனி மாத அமாவாசை அன்று பகலில் பாண்டவர்கள் கங்கை நதியைக் கடந்தனர்.

சவுமிய வருடம், சித்திரை மாதம், வளர்பிறை முதல் நாளில் ஹிடிம்பன் பீமனால் கொல்லப்பட்டான் பீமனுக்கு அப்போது   வயது 37
சவுமிய    வருடம்,   ஐப்பசிமாதம் வளர்பிறை   2ம் நாளில் கடோத்கசன்  பிறந்து ஒரே நாளில் பெரியவனாக வளர்ந்தான்.
 
பாண்டவர்கள் சாலிஹோதாஸ்ரமம் என்ற இடத்தில் 6  மாதங்கள் தங்கியிருந்தனர். அது சவுமிய வருடம் ஐப்பசி மாத வளர்பிறை 2ம் நாளில் இருந்து சாதாரண வருடம் சித்திரை மாதம் வளர்பிறை 2ம் நாள் வரை ஆகும். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 38 வருடம் 5 மாதம் 7 நாட்கள் ஆகும்.

 பாண்டவர்கள் ஏகசக்கரபுரத்தில் 6  மாதங்கள் தங்கியிருந்தனர். அது சாதாரண வருடம், சித்திரை மாதம் வளர்பிறை 2ம் நாளில் இருந்து, ஐப்பசி மாதம் வளர்பிறை 2ம்நாள்     வரைஆகும்.

சாதாரண வருடம் வளர்பிறை 10ம் நாள்  பீமனுக்கும்  பகனுக்கும் யுத்தம் நடந்து பீமன் பகனைக்  கொன்றான். பீமன் வயது 37.    பாண்டவர்க்ள ஏக சக்ரபுரத்தில்  இன்னும்  1 மாதம் 10 நாட்களுக்கும் தங்கினர். அதாவது சாதாரண  வருடம் மார்கழி மாதம், தேய்பிறை 5ம் நாள் வரை தங்கியிருந்தனர். பிறகு அவர்கள் பாஞ்சால தேசம் நோக்கி நடந்து  மூன்று நாட்களில் தௌமியரின் ஆசிரமத்தை அடைந்தனர். அங்கே அவர்கள் பதினைந்து நாட்கள் தங்கினர். பதினெட்டாவது நாளில் பாண்டவர்கள் பாஞ்சால நாட்டுத்  தலை நகரத்தை அடைந்தனர். அதாவது சாதாரண வருடம் தை மாதம் 7ம் நாள்  அடைந்தனர். திரௌபதி சுயம்வரம் சாதாரண வருடம் தை மாதம் வளர்பிறை 10ம் நாளில் நடைபெற்றது. பாஞ்சால தேசத்தில்  பாண்டவர்கள் ஒரு வருடம் 15 நாட்கள் தங்கியிருந்தனர். அதாவது விரோதி கிருது வருடம், தை மாதம் அமாவாசை நாள் வரை தங்கியிருந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 40 வருடம் 3 மாதம் 25 நாள் ஆகும்.

விரோதிகிருது வருடம், மாசி மாதம் வளர்பிறை 2ம் நாள் அன்று பாண்டவர்களை  திருதராஷ்டிரன் அழைத்து ஹஸ்தினா புரம் அழைக்கப்பட்டு பாதி நாட்டைப் பெற்றார்கள். அவர்கள் ஹஸ்தினாபுரத்தில் 5 வருடம் 6 மாதங்களுக்குத் தங்கினர். அதாவது பிங்கள வருடம் ஆவணி மாதம் வளர்பிறை 2ம் நாள் வரை தங்கினர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 45 வருடம் 9 மாதம் 27 நாள். இந்திரப்பிரஸ்த நகரம் அந்தக் காலத்தில் தான் கட்டப்பட்டது.

பிங்கள வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 10ம் நாளில் யுதிஷ்டிரன் 46வது வயதில்  பட்டம்  சூட்டப்பட்டான்.  
அர்ஜுனன் 12 வருடம் தீர்த்த யாத்திரை சென்றான். அவன் காளயுக்தி வருடத்தில் சென்று பிரமோதூத வருடத்தில் திரும்பினான். பிரமோதூத    வருடம்   வைகாசி மாத  வளர்பிறை 10ம் நாளில் அர்ஜுனன்  57வது வயதில் சுபத்ராவோடு  கல்யாணம் நடந்தது. அபிமன்யு பிரமோதூத வருடத்தில் பிறந்தான்.

அதே வேளையில் திரௌபதி தனது ஐந்து கணவர்கள் மூலம் ஐந்து மகன்களைப் பெற்றெடுத்தாள்.

பிரமோதூத வருடம்  ஆவணி மாத வளர்பிறை 2ம் நாளில் காண்டவ வனம் எரிக்கப்பட்டது. யுதிஷ்டிர னுக்கு அப்போது வயது 58 வருடங்கள் 10 மாதங்கள் 15 நாட்கள். மயன் கட்டிய சபாமண்டபத்தைக் கட்டி முடிக்க 1 வருடம் 2 மாதம் ஆகியது.

பாண்டவர்கள் மயசபைக்குள் பிரசோத்பத்தி வருடம் ஐப்பசி மாத வளர்பிறை 10ம் நாளில் நுழைந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 60 வருடம் 5 நாள் ஆகும்.   இந்திரப் பிரஸ்தத்தை 16 வருடங்கள் ஆண்டு வந்தனர். அதாவது சர்வஜித் வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 10ம் நாள் வரை ஆண்டனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 5 நாட்கள் ஆகும்.

பீமனுக்கும் ஜராசந்தனுக்கும்  மல்யுத்தம் சர்வஜித்த வருடம் கார்த்திகை மாதம் வளர்பிறை 2ம் நாள் துவங்கி 14 நாட்கள் தொடர்ந்து, 14வது நாள் மாலையில் ஜராசந்தன் பீமனால் கொல்லப்பட்டான்.

 சர்வதாரி வருடம் சித்திரை மாத பௌர்ணமியில் ராஜசூய வேள்வி தொடங்கியது. அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 76 வருடம் 6 மாதம் 15 நாள்.

ஹஸ்தினாபுரத்தில் யுதிஷ்டிரன் சகுனி  ரெண்டு  பகடை ஆட்டங்களும் சர்வதாரி வருடம் ஆவணி மாத தேய்பிறை 3ம் நாள் முதல் 7ம் நாள் வரை நடைபெற்றது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 10 மாதம் 2 நாள்.  பாண்டவர்கள் விரோதிகிருது வருடம் மாசி மாத வளர்பிறை 2ம் நாள் தொடங்கி சர்வதாரி வருடம் ஆவணி மாதம் தேய்பிறை 7ம் நாள் வரை 36 வருடம் 6 மாதம் 20 நாட்கள் மட்டுமே  இந்திரப்பிரஸ்தத்தை  ஆண்டார்கள். சூதாட்டத்தில் தோற்றபோது  யுதிஷ் டிரனுக்கு  வயது 76.  பீமனுக்கு  75, அர்ஜுனனுக்கு 74, நகுல  சகாதேவர்களுக்கு  73.  துரியோதனனுக்கு 75 கர்ணனுக்கு 92 ,கிருஷ்ணனுக்கு 74.  இந்த வயது களைப் பார்த்துவிட்டு  அடாடா கிழவர்களா இத்தனை அட்டகாசம் பண்ணினார்கள் என்று நினைக்க வேண் டாம். அப்போது ஆயுசு ரொம்ப அதிகம் எல்லோ ருக் கும். இதெல்லாம் இளவயது, நடு வயது அவ்வளவு தான்.  கிருஷ்ணனுக்கு மொத்தம் 125 வயது என்று தெரியுமல்லவா?

sivan jaykay

unread,
May 1, 2025, 8:25:13 PM5/1/25
to amrith...@googlegroups.com
ராவணன் -    நங்கநல்லூர்  J K  SIVAN 

''ராமாயணத்தை பற்றி உனக்கு தெரிந்ததை யோசிக்காமல் உடனே சொல்லு?'' என்று கேட்டால் எல்லோருமே  
ராமன்  ராவணனைக் கொன்றான் என்று சொல்லி ராமாயணத்தை  மூன்றே வார்த்தைகளில் சொல்லி முடிப்பார்கள். இதைத்தான் ஆங்கிலத்தில்  RAMA KILLED RAVANA என்று சொல்வோம்.

ராவணனைப் பற்றி நிறைய விஷயங்கள் சுவாரஸ்யமாக இருப்பதை அநேகர் அறிய மாட்டோம். தேடினேன் கிடைத்தது. 
ஸமஸ்க்ரிதத்தில்  ராவணன்  என்றால்  "கர்ஜனை செயகிறவன்''  சிங்கத்தைப் போல  என்று அர்த்தம். ராவணனின் அப்பா  ஒரு  வேத கால ரிஷி  விஸ்ரவஸ் என்று பெயர்   கொண்ட ப்ரம்ம ரிஷி.  ப்ரம்மாவின்  பேரன். அம்மா  ராக்ஷஸ குலத்தை சேர்ந்தவள்.  குணத்தில் அல்ல. அவள் பெயர்  கேகசி.  அம்மா வழி தாத்தா  மால்யவான் எனும் ராக்ஷஸ ராஜா.  லங்கை ராவணன் காலத்தில் அந்திக நகரம் என்ற .பெயர் கொண்டது.

ராவணனுக்கு பல மனைவிகள் இருந்ததாக தெரிந்தாலும் முக்கியமான மனைவி மண்டோதரி.
ராவணன் நன்றாக  வேதங்கள் படித்தவன்.  ஞானி,  சமஸ்க்ரிதத்தில் பண்டிதன். அப்பா விஸ்ரவஸ் மூலம் , பல வேதங்கள், ஞானம், யோகம் எல்லாம் கற்று  தேர்ந்தவன்.  

ராவணனுக்கு  ஐந்து முகங்கள் என்று சொல்வார்கள். பத்து தலை ராவணன் என்பது தான் பிரபலமாக நாம் அவனைப் பற்றி அறியும் அடையாளம். தசமுகன் என்று பெயர் அவனுக்கு. பல வருஷங்கள் விடாமல் கடும் தவம் செய்து  சிவபெருமானிடம் வரங்கள் பெற்றவன். ''ராவண ஸ்தோத்ரம்''  பிரபலமானது. சிறந்த சிவபக்தன். தனது உதட்டில் நரம்புகளால் வீணை தந்திகள் அமைத்து  வீணையில் சாம கானம் பாடி  சிவன் மனதை வென்றவன். கைலாய மலையை பெயர்த்தெடுக்க முயற்சித்து தோற்றவன்.த்ரேதா யுகத்திலே  ராவனிடம் நமது ஆகாய விமானம் போல  "புஷ்பக விமானம்" என்று வானில் பறக்கும் சிறப்பு வாகனம் இருந்தது. அதில் தான் சீதையை கடத்தினான், அதில் தான் ராமர் அயோத்தி திரும்பினார். 
ராவணன் நவரசம், அஷ்டசித்தி, மகாசித்திகள்  பெற்றவன்.   ராவணன் வழிபட்ட ஒன்பது  சிவாலயங்கள் இன்றும் உள்ளன.  ராமேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், மற்றும் மன்னார் அதில்  முக்கியமானவை.
தாய்: கேகசி — மாலியவான் என்ற ராட்சசனின் மகள். 
ராவணனின்  இரு சகோதரர்கள்  கும்பகர்ணன்,  விபீஷணன்.  சகோதரி சூர்ப்பணகை. ராவணனின் மகன் இந்திரஜித், மேக நாதன்.
ராம ராவண யுத்தம் பதினைந்து நாள் நடந்ததாம். 
ராவணன் முற்பிறப்பில்  ஸ்ரீமந்  நாராயணனின் த்வாரபாலகர்கள் ஜெய விஜயர்களில்  ஜெயன். மூன்று பிறவிகள் பகவானுக்கு எதிரியாக பிறப்பெடுக்க வரம்  பெற்று ராவண கும்பகர்ணர்களாக, ஹிரண்யன், ஹிரண்யாக்ஷனாக, சிசுபாலன் வக்ரதந்தனாக பிறந்தவர்கள். 
சின்ன வயசில் அம்மா கதை சொல்லும்போது அஹிமஹி ராவணன், மாயா ராவணன், மயில் ராவணன் என்று பிற ராவணர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். 

sivan jaykay

unread,
May 1, 2025, 8:25:13 PM5/1/25
to amrith...@googlegroups.com

மயில் ராவணன் கதை -   நங்கநல்லூர்  J K SIVAN 

அன்னையர்  தினம் கொண்டாடுகிறார்கள்.  சந்தோஷமாக இருக்கிறது. என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது. 

பள்ளிக்கூடமே  பார்க்காத, படிக்காத  என் அம்மா ஜம்பாவதிக்கு தெரிந்த விஷயங்களில் நூற்றில் ஒன்று கூட இன்னும் 86 வருஷ  அனுபவங்களில்  எனக்கு தெரியாது என்று சொல்வதில் எனக்கு பெருமை தான். அவ்வளவு கெட்டிக்காரி என்  தாய்.
ராவணன் கதை சொல்வாள். அதில் அடிக்கடி  மயில் இராவணன்,  அஹி மஹி மாயா ராவணன் என்றெல்லாம் சொல்வாளே அவர்கள் யார்?  நானே  தேடி சில விஷயங்கள் இப்போது தான் கண்டுபிடித்தேன். அவன் மஹி ராவணனா, மயில் ராவணனா? அம்மா   மயில்ராவணன் என்று சொன்னதால் அந்த பெயரே அவனுக்கு இருக்கட்டும். 

லங்கேசன் இராவணனுடைய தாயார் வழியில், இராவணனுக்கு ஒன்று விட்ட தம்பியாக  ஒரு ராக்ஷஸன் இருந்தான். அவன் பெயர் தான் மயில்ராவணன். பாதாள இலங்கையின்  ராஜா  அவன்.  ரொம்ப  புத்திசாலி  மாயா ஜாலங்களில் வல்லவன். 

காளியிடம் பெற்ற வரத்தால்,   ஹனுமானையே   ஏமாற்றியவன்.   ஆஞ்சநேயரின்  பலத்த காவலில் இருந்த இராம, லக்ஷ் மணர்களை தந்திரமாகக் கடத்திச் சென்று, பாதாள இலங்கையில் சிறை வைத்தவன் . ராமனையும்  லக்ஷ்மண னையும் காளிக்கு  பலிகொடுக்க முயன்ற சமயம் ஹனுமனால் கொல்லப்பட்டவன்.  அம்மா  மயில் ராவணன் கதை  சொல்லும்போது   ஏழு எட்டு  வயதில்  எனக்கு பயம், திகில், அதிக ஆர்வமாகவும்  இருந்தது. மிகவும் சுவாரஸ்யமான கதை மயில்ராவணன் கதை

வால்மீகியோ, கம்பரோ  சொல்லாத  இந்த மயில் ராவணனை பலர்  விறுவிறுப்பாக  கதை சொல்வார்கள். நாட்டுப்பாடல்கள் பாடுவார்கள்.  தெருக்கூத்தில் மயில் ராவணன் கையில் கத்தியோடு பனைமரத்தடியில் சூளைமேட்டில் சுற்றி சுற்றி வருவான். நடுநடுவே  மரத்தத்துக்கு பின்னால் சென்று   ஒதுக்குப்புறமாக  பீடி பிடித்துவிட்டு வந்து ஆடுவான்.   ஹனுமனுக்கு, "திமிதி" என்ற மனைவியோ , "மத்ஸ்யவல்லபன் ''என்ற பிள்ளையோ இருந்ததாக எல்லாம்  சொல்வார்கள். எது ஆதாரமோ அந்த ஹநுமானுக்கு தான் தெரியும். 

ராமாயணத்தில் வரும்  பத்து தலை இராவணனின் அப்பா  விஸ்ரவஸ் மஹரிஷி.   விபீஷணன், கும்பகர்ணன் தம்பிகள். சூர்ப்பனகை தங்கை. இந்திரஜித், பிள்ளை. இது நாம் அறிந்த விஷயம். ராவணன் பிரம்மாவின்  கொள்ளுப்பேரன் . புலஸ்தியர் மகரிஷி பேரன்.   இராவணனுடைய மனைவியான மண்டோதரியின் தகப்பன் மயன்.

இராமாயண யுத்த காண்டத்தின் இறுதியில் இராவணன் தேரேறும்போது 'இன்று  ரெண்டில் ஒண்ணு . யார்  வயிற்றி லும்  வாயிலும் அடித்துக்கொண்டு அழப்போகிறார்கள்.  சீதையா, மண்டோதரியா?''  என்று தீர்மானத்தோடு தான் யுத்தத்துக்கு  வருகிறான்.


ராம, ராவணப் போரில் ராவணனின் படைகள் முழுவதும் அழிந்தன இராவணன் கலக்கத்தில் இருந்தான்.  
ராவணனின் மந்திரி  பிரகஸ்தன்   ‘ மஹாராஜா,  நான்  சொல்வதை கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். மறந்து போய்விட்டீர்களா, நமது சேனை அழிந்தாலும் கூட  உமக்கொரு  தாயாதி  உறவினன் பாதாளத்தில்  இருப்பதை மறந்து போய்விட்டீர்களா?  அவன் கபட நாடகத்தில் வல்லவன். சூதும் வாதும் அவனுக்கு அத்துபடி. அதி மாயாவி. வானம் முதல் பாதாளம் வரை அத்தனை மாயக் கலையையும் கரைத்துக் குடித்தவன். இத்தனையும் கொண்டவன் அதி பராக்கிரசாலியும் கூட. அவர் உதவியை ஏன் நீர் இன்னும் நாடவில்லை?’ என்று கூறி முடிக்கும் முன்னே ராவணன் பதைபதைத்துக் கேட்கிறான் 

‘ ப்ரஹஸ்தா,  எனக்கு  மறந்தே போய்விட்டதே, யார்  அந்த தாயாதி, அவன் பெயர் என்ன, எங்கே இருக்கிறான், உடனே சொல்?''

‘மஹாராஜா,  உங்களுக்கென்ன ஆயிற்று? உங்களது  தாயாதிகள்  யார், எங்கே  உள்ளார்கள் என்று கூட நினைவில்லையா ? பாதாள இலங்கையில்  மயில் ராவணன் ஒருவன்தானே உமக்கு தாயாதி முறை சகோதரன். அவனை அழைத்தால் அவன் யுத்தம் செய்தும், தந்திரம் செய்தும் ராம-லஷ்மணர்களின் படைகளை துவம்சம் செய்து விடுவான். அவனை வெல்ல இன்னும் யாரும் பிறக்கவில்லை. ஜெயிக்க வேண்டும்  என்று மனது வைத்தால் அவன்  ஜெயித்தே காட்டுவான். உடனே மயில் ராவணனை அழைப்பீராக’ என்று தூபம் போட்டான் ப்ரஹஸ்தன்

'' மயில் ராவணா, நான் உன்னைப் பார்க்க வேண்டுமே’ என மனதார அவனை நினைத்தான். மனதில் நினைத்தால் போதும், மயில் ராவணனுக்கு அங்கே ராவணன் தன்னை நினைத்தது தெரிந்து விடும். அவன்தான் மாயாவி ஆயிற்றே. மயில் ராவணன் யோசனை செய்தான் ‘இதென்ன திடீர் என என்னை என் தமயன் ராவணன் என்னை நினைக்கிறான்? தீர்க்க முடியாத கஷ்டம் இல்லை ஏதாவது  ஆபத்து என்றால் தவிர என்னை நினைக்க மாட்டனே. அப்படி அவனாலேயே தீர்க்க முடியாத என்ன ஆபத்து அவனுக்கு வந்திருக்கும்? இனி தாமதிக்கலாகாது…யோசனையும் செய்யக் கூடாது’ என நினைத்தவன் பாதாளத்தில் இருந்து சூறாவளிக் காற்றைப் போல கிளம்பி ராவணனைப் பார்க்க இலங்கைக்குச் வந்தான்.

' மயில் ராவணா,  உடனே சென்று ராம, லக்ஷ்மணர்களைக் கொன்றுவிட்டு வா''  என்று ராவணன் ஆணையிட்டான். 
''அவர்களை பிடித்து வந்து  காளிக்கு பலி கொடுப்பேன்'' எனச் சபதம் செய்தான்  மயில் ராவணன். 

கடலை தாண்டி பறந்து கொண்டிருந்த ஹனுமானின் உடல் முழுதும் வியர்வை.  அது கடலில் சொட்டியபோது  அங்கே வாய் திறந்து கொண்டு இருந்த  மச்சகன்னியின்  என்பவளின் வாயில் விழுந்து அவள் பின்னர் கருவுற்று ஒரு பிள்ளை பெற்றெடுத்தாள். அவன் தான்  மச்சவல்லபன் எனப் பெயரிட்டாள். மச்சவல்லபன் தனது தாத்தா  வாயு பகவானிடம் சென்று வணங்கி வரம் பெற்றான்.  
''என்னடா வரம் வேண்டும் உனக்கு''
''என் அப்பா  ஹனுமானுக்கு நிகரான ஆற்றல் எனக்கு வேண்டும். அவரையும் வெல்லும் சக்தி வேண்டும்'' என்றான் மச்ச வல்லபன். 
''அப்படியே ஆகட்டும்''
மச்சவல்லபன் பதினான்கு உலகங்களையும் வெல்ல  புறப்பட்டபோது அவனை பாதாள லோகத்தில்  மயில் ராவணன் சந்தித்து  தன்னோடு இருக்கும்படி வேண்டினான். மச்சவல்லபன் மயில் ராவணனின் பாதாள இலங்கைக்கான கோட்டைக்கு படைத்தலைவன் ஆனான். மயில் ராவணனின் இரண்டாயிரம் கோடி அரக்கர்களும் கோட்டை வாயிலைக் காத்தனர்.
தந்திரத்தால் ராம, லட்சுமணரை பாதாள இலங்கைக்கு கடத்தி வந்தான். அனுமன்  அவர்களைத் தேடி  பாதாள உலகம் வந்தான். அங்கே கோட்டைக்கு காவலாக நின்ற மச்சவல்லபனுடன் போர் புரிந்தான்.  மச்சவல்லபனை எளிதில் வெல்ல முடியவில்லை. பிள்ளையாயிற்றே. அவனுக்கு சமமான சக்தி படைத்தவனல்லவா. ஹநுமானுக்கு அவனைத் தெரியாதே?அனுமன் ஆச்சர்யத்தோடு  '' நீ யாரப்பா, இவ்வளவு திறமையோடு சக்தியுடன் என்னோடு மோதுகிறாய்? என்று கேட்டான் ஹனுமான். 
மச்சவல்லபன் நடந்தது அனைத்துயும்  முழுசாக கதையாக சொன்னான்.  ஹனுமான் சந்தோஷத்தோடு  அவனுக்கு தன்  விஸ்வரூபத்தைக்  காட்டி  '' மச்சவல்லபா, நான் உன்னுடைய அப்பா மகனே'' என்று அறிமுகப்படுத்திக்கொண்டு 
மச்சவல்லபனை மயக்கமுறச் செய்தான். பிறகு வேகமாக  ஹனுமான்  பாதாள இலங்கையில் மயில் ராவணனைக் கண்டு, அவனையோடு யுத்தம் செயது அவனைக் கொன்றான். 

 மயில் ராவணனின் தங்கை தூரதண்டியின் மகனான நீலமேகனுக்கு அனுமன் பட்டம் கட்டினான். அவனுக்கு காவல் நிற்கும் படி தன் மகன் மச்சவல்லபனை படைத்தலைவனாக நியமித்து பூலோகம் மீண்டான்.

இந்த கதையை நான் எந்த புத்தகத்திலும் படித்ததில்லை. எல்லாம் அம்மா சொன்னது. அவளுக்கு எப்படி எங்கே யார் மூலம் தெரிந்தது. எல்லாம் தாத்தாவிடம்  இருந்து தான். இந்தப்  பழம் கதை பல பேருக்கு தெரிந்தது. நாரத முனிவர் கௌதம ரிஷிக்கு சொன்னதாக நாட்டுப்புறக் கதையில்  பாட்டாக பாடுவார்கள். அந்த காலத்தில் மயில் இராவணன்  நாட்டுப்புற கதை பாட்டு புஸ்தகமாக அச்சிட்டப்பட்டு விற்கப்பட்டது.   தெருக்கூத்து தோல் பாவைக் கூத்து என்று பொம்மலாட்டமாக பாடப்பட்டு வந்தது. 
மயில் ராவணன் கதை விவரமாக சொன்னால் இன்னும்  ரொம்பவே  சுவாரஸ்யமாக இருக்கும்.  நிறைய  விஷயங்கள் இருக்கிறது அதில். 

sivan jaykay

unread,
May 1, 2025, 8:26:15 PM5/1/25
to amrith...@googlegroups.com
சாணக்ய  நீதி ஸாஸ்த்ரம்  -   நங்கநல்லூர்  J K   SIVAN 
 
சாணக்கியனுக்கு மட்டும் எப்படி இத்தனை அற்புத ஞானம். தெளிவான  தீர்க்கமான  எண்ணம்!!. சாணக்யரே , உடலெல்லாம் மூளையை உமக்கு மட்டும் எப்படி அந்த பிரம்மதேவன் நிரப்பி விட்டான். ஒருவேளை படைத்தல் தொழிலில் ஈடுபடும் போது கவனக்குறை வோ? அல்லது உமக்கு மட்டும் வேண்டு மென்றே அப்படி ஒரு அதிசயத்தைக் கொடுத்தானோ? அப்படிதான் இருக்க வேண்டும். 

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் மழை கிடைக்குமே என்ற அடிப்படையில் தனித்தனியே நிறைய மூளையை அடைத்து மனிதர்களை படைத்து பூமிக்கு அனுப்பி, அவர்கள் அதை ஜார்க்கிரதையாக உபயோகிக்காமல் வீணாவதைத் தடுக்க அத்தனையும் உம்மைப் போன்ற சிலருக்கு கொடுத்து அனுப்பினால் ஊருக்கே, நாட்டுக்கே, உலகுக்கே அது பயனாகும் என்ற எதிர்கால நோக்குடன் தீர்க்க தரிசியான உம்மை படைத்தி ருக்கிறான். ப்ரம்மதேவனுக்கு நன்றி சொல்வோம்.  இதோ சில சாணக்கியன் வார்த்தைகள். .
 
''நமது சனாதன தர்மத்தின்  சின்னம் எது?  
''அஹிம்ஸை தான்'' ..
 ''ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்  ஐந்து முக்கிய விஷயங்கள் அவன் கருவில் இருக்கும்போதே  தீர்மானிக்கப்பட்டு விடுகிறதே அவை என்ன தெரியுமா?   
''1. அவனுக்கு எவ்வளவு ஆயுஸு ? 2. என்ன தொழிலில், வேலையில்  ஈடுபடுவான்?  3.அவனுடைய   பொருளாதார வசதி எப்படி இருக்கும்? 4. அவன் படிப்பு எந்த அளவு?  5.அவன் மரணம் எப்போது. எங்கே, எப்படி ?''  இதெல்லாம்  நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவை. 

''இந்த உலகத்தை ஜெயிக்க ஆசைப்பட்டால்   ஒரே ஒரு காரியத்தினால் தான்  முடியும்.  மற்றவர்களை அவமரியாதையாக, தூஷணையாக பேசத் துடிக்கும் உன் நாக்கை அடக்குவதால்.  வள்ளுவர்  அதனால் தானே  ''நா காக்க'' என்கிறார்.

'வீட்டை விட்டு வெளியேறி  எங்கோ வெளிதேசம் செல்லும்போது எது ஒருவனுக்கு  அவசியமான துணைவன்?  பணமா? இல்லவே இல்லை.  அவனது அறிவும் படிப்பும் தான் கை கொடுக்கும். .  அதேபோல் வீட்டுக்குள் உன் மனைவி தான் உன்னுடைய  உண்மையான நண்பன். நோயாளிக்கு  மருந்து தான் நண்பன். நீ செய்த  தர்ம காரியங்கள் தான் உன் மரணத்திற்குப் பின் உன் நண்பன்.''

'ஒருவனை  அப்படியே  கொன்று  எரிக்க   எது இன்ஸ்டன்ட்   நெருப்பு.?
' ரொம்ப ஆசையோடு இருந்தவர்களிடமிருந்து  பிரிவு, ரொம்ப ரொம்ப  நெருங்கிய உறவினன்  சொன்ன  அவமானமான, அவமதிப்பாக  வார்த்தைகள், தீர்க்க முடியாத கடன் சுமை,    கொடுங்கோல்  அரசனுக்கும், கெட்டவனாக  எஜமானனுக்கும்  சேவை செய்வது.    ரொம்ப தீயவர்களின்  நட்பு''   இவை போதும் ஒருவனை தீர்த்துக் கட்ட.''-

''வயோதிக  காலத்தில்  மனைவியின் மரணம்,  சகோதரர்கள், சகோதரிகளின் கையில்  பண அதிகாரம்,  அன்றாட சோற்றுக்கு எவரிடமாவது கையேந்தி நிற்கும் நிலை.  இது தான் நரகம், துக்கத்திற்கு காரணங்கள்.

 ''வாழ்க்கையில்  படித்து முன்னேற  விரும்பும் மாணவன் எதைச் செய்ய கூடாது தெரியுமா?   மனதில் காமம், குரோதம், லோபம்,  தன்னை சிங்காரித்துக்கொள்ள  நினைப்பு,  தேவையற்ற விழங்களில் பொழுது போக்கில் நேரம் செலவழிப்பது,   அதிக  தூக்கம்,   எல்லா விஷயங்களில் பெரியோர் சொல் மீறி, தான்தோன்றியாக  எல்லை மீறி நடப்பது.   இவை போதாதா?''

''பகவான் நமக்கு தந்த இந்த அழகிய உலகம்  ஒரு பழம் தரும் மரம். அது தரும் அற்புத  சுவைமிக்க பழம்  ரெண்டு.  ஒன்று  அழகான அளவான பேச்சு.  ரெண்டாவது பேசுவதை மிருதுவாக பேசுவது.  சத் சங்கம்''

நண்பர்களே, ரொம்ப ரொம்ப அவசியமான  ஒரு  பாடம் நாம் கற்க கௌடில்யன் எனும்  சாணக்கியன் சொன்னதை டயரியில் குறித்து வைத்துக்கொண்டு அடிக்கடி பார்த்து அதன் படி நடப்போம்.  அது என்ன"?  ''பாம்பிற்குப் பல்லில் விஷம். விஷப் பூச்சிக்கு அதன் தலையில் விஷம். தேளுக்கு அதன் வாலில் விஷம். கெட்ட குணம் படைத்த மனிதனுக்கு, அடேயப்பா,  உடல் பூரா விஷம்''  எவளவு  நூற்றுக்கு ஆயிரம் மடங்கு வாஸ்தவமான வார்த்தை. 

கௌடில்யனை அடிக்கடி நினைவு படுத்துவேன். 

sivan jaykay

unread,
May 5, 2025, 8:22:38 PM5/5/25
to amrith...@googlegroups.com
உலக வாழ்வு-  ஒரு அலசல் -      நங்கநல்லூர்  J K   SIVAN 

நாம்  ஒவ்வொருவரும் பணக்காரரும் இல்லை, ஏழையுமில்லை.  எதற்கும் சொந்தக்காரர் இல்லை, எவருக்கும்  எதுவும்   பாக்கியோ , கடனோ  இல்லை.  எந்த லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை.   ஒரு வீடோ  நிலமோ வாங்கினால் உயிருள்ளவரை அதை அனுபவித்ததற்கு கொடுத்த வாடகை தான் அதை வாங்க செய்த செலவு. அது  நம்முடையதல்ல. நம்மோடு வரப்போவதில்லை.  மனைவியும் அப்படி தான். நமக்கு உழைப்பவள் . எங்கேயோ பிறந்து, வளர்ந்து நம் வாழ்வில் ஒருநாள் பங்கு கொண்டு, சிலகாலம் கூடவே வாழ்பவள். தியாகி.  அவள் அன்பு பாசம் எல்லாம் நம் கடைசி மூச்சு வரை தான். எவரும் என்றும் சொந்தமில்லை. அப்படித்தான் பிள்ளை குட்டிகளும். சிறந்த பணக்காரனாக இருந்தாலும் அந்த பணமெல்லாம் இந்த பரந்த உலகில் நாம் வசதி, சுகம் என்று எதை நினைக்கிறோமோ,  அப்படி வாழ செலவுக்காக.  நீ கட்டு கட்டாக  சேமித்து வைத்திருக்கும் ரூபாய் நோட்டு காகிதங்கள் உன்னுடையதல்ல, ரிசர்வ் பேங்க் அச்சடித்து அரசாங்கத்துக்கு உதவியது.  உன்னுடன் சில காலம் இருந்து உன் சொச்ச கால உலக வாழ்க்கையில் உன் செலவுக்காக உதவுவது. பூமியிலிருந்து விளைந்த  பொருள்கள் உணவாக உன்னை அடைகிறதே, அதுவும் சில மணி நேரங்கள் தான் உன் ருசிக்கு, பசிக்கு உதவுபவை. மீண்டும் மலஜலமாக வெளியே  வந்த இடத்தையே போய் சேர்கிறதல்லவா? எது நமது?
குப்பன், ராமன், கிருஷ்ணன் என்ற பேரோடு உலவும்  இந்த உடம்பு கூட  சில காலம் நமதாக உறவாடுகிறது. சாஸ்வதமல்ல. அதுவும்  தோன்றியவாறு பஞ்ச பூதங்களோடு ஒருநாள் கலந்துவிடும். எல்லாமே  வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கும் சமாச்சாரம் தான்.  இந்த வியாபாரத்தில் லாபமுமில்லை, நஷ்டமும் இல்லை,  அசலும் இல்லை, வட்டியுமில்லை. இதில் எது கொண்டுவந்தது, எது கொண்டுபோகப்படுவது, எல்லாம்  வாடகை, டெம்பொரரி  விஷயம் தானே.  

பட்டினத்தார்  பாடல் ஒன்று கண்ணில் இன்று பட்டது. அதைப் பார்த்துவிட்டு தான் மேலே உள்ளதை எழுதினேன். அந்த  மட்டும் தருகிறேன்.அர்த்தமே சொல்ல தேவையில்லை. எளிமையான பதங்கள்.

ஒன்பது   வாய்  தோல்பைக்கு ஒரு நாளைப் போலவே
அன்பு  வைத்து நெஞ்சே  நீ  அலைந்தாயே! - வன்
கழுகு கள் தித்தத் திச்செட்டை தட்டிக் கட் டிப்  பிட்டுக்
கத்திக்,  குத்தித்  தின்னக் கண்டு! மு

தற்சங்கு அமுதூட்டும்,மெய்குழலார் ஆசை
 நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் - 
கடைச்  சங்கம்  சாகும்  போது  ஊதும், அம்மட்டோ?
இம்மட்டோ? நாம்  பூமி வாழ்ந்த நலம்!

எத்தனை  நாள் கூடி எடுத்த சரீரம் இவை!
அத்தனையும் மண்  தின்ப தல்லவோ - வித்தகனார்
காலைப்  பிடித்து மெள்ளக் கங்குல்  பகல் அற்றடித்தே
மேலைக் குடி   யிருப்போமே?  

இருப்பது  பொய்  போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்த  ருக்கும் தீங்கினை யுன்னாதே- பருத்த  தொந்தி
நம்ம தென்று நாமி  ருப்ப நாய்  நரிகள் பேய்க்  கழுகு
தம்ம  தென்று தாமி  ருக்கும் தான்! -

sivan jaykay

unread,
May 5, 2025, 8:22:38 PM5/5/25
to amrith...@googlegroups.com
ஒரு அதிசயம் -   நங்கநல்லூர்  J  K SIVAN 

உலகத்தில் மனிதன் பேச ஆரம்பித்ததிலிருந்து  அவன் கேட்கும் ஒரு கேள்வி ''கடவுள் இருக்கிறாரா?  இன்று வரை அதற்கு ''ஆமாம்,  இல்லை'' என்ற ரெண்டு பதில்களும் தான் விடாமல்  கிடைக்கிறது.  அதில் ''கடவுள் உள்ளார்'' என்பதும் அதை நம்புபவர்களும் அதிகமாக இருப்பதால் தான்  இவ்வளவு மதங்கள், கோவில்கள்  கண்ணில் படுகிறது.   என் பதில் எப்போதும் ''ஆமாம், கடவுள் இருக்கிறார்''  ஒரு உண்மை நிகழ்ச்சியை சொல்கிறேன். கேளுங்கள்.
வெள்ளைக்காரன்  இந்த தேசத்தில்  அழையாத விருந்தாளியாக புகுந்து  வியாபாரத்தில் தொடங்கி மெதுவாக நாட்டையே  ஆழ நேரிட்டதற்கு காரணம்  இன்றுபோல்  அன்றும் நம்மிடையே  ஒற்றுமை இல்லை.  தனது ஆயுத பலத்தால் இங்கிருந்த குட்டி குட்டி ராஜாக்களை வென்று ராஜ்ஜியம் ஸ்தாபித்தான்.   நாட்டை ஆள  ஆங்காங்கே  கலக்டர்கள், கவர்னர்களை  நியமித்தான்.  அந்த கலக்டர்களில், கவர்னர்களில் நல்ல இதயம் கொண்டவர்களும் ஒரு சிலர் இருந்தார்கள்.
என்னுடைய முதலிய கட்டுரைகளில்  மதுரை மீனாட்சி தரிசனம் பெட்ரா  கலக்டர்  பீட்டர், மதுராந்தகத்தில் ராமர் தரிசனம் பெற்ற  கலெக்டர் லயனல் பிளேஸ், மந்த்ராலயத்தில்  ராகவேந்திரரை சந்தித்த கலெக்டர் மன்றோ பற்றிய   சம்பவங்களை எழுதி  இருக்கிறேன்.
 ஏழு வருஷங்களுக்கு முன்பு  ஆங்கிலத்தில் இன்னொரு சம்பவம் எழுதியதை இப்போது தமிழில் சொல்கிறேன். நான் மேலே சொன்னதெல்லாம் புருடா இல்லை. சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள உண்மை நிகழ்வுகள்.

மத்திய பிரதேசத்தில் அகர் மால்வா எனும் இடத்தில் ஒரு சிவாலயம். பைஜ்நாத் மஹாதேவர் என்று சிவனுக்கு பெயர்.  வெள்ளைக்காரர்கள் ராஜ்யத்தில்  அவர்கள் கட்டிய ஒரே  கோவில், சிவாலயம் இது தான்.  இதற்கு காரணம்.  லெப் டினண்ட் கர்னல் மார்ட்டின் என்பவரும் அவர் மனைவியும் தான்.  1879ல்   ஆப்கனிஸ்தானோடு  வெள்ளைக்காரர்கள் யுத்தம் செய்தார்கள். அகர் மால்வாவில் இருந்த மார்ட்டின் மனைவியை விட்டுவிட்டு  போருக்கு சென்றான். இருவரும்  கடிதம்  மூலமாகத்  தான் சம்பாஷித்துக் கொண்டார்கள். 

சில  மாதங்களாக  மார்டினிடமிருந்து  அவன் க்ஷேமலாபங்களைப் பற்றி  கடிதங்கள் வரவில்லை. மனைவி தவித்தாள்.  கணவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்று கவலை.    வழக்கமாக  குதிரைமேல் சவாரி செய்து  கொண்டு செல்பவள் ஒருநாள்   மால்வாவில்  போகும் வழியில் உள்ள அந்த  பழைய 15ம் நூற்றாண்டு மஹாதேவன் சிவாலயத்தை பார்த்தாள் . ஆர்த்தி நேரம்.   அர்ச்சகரின் மந்த்ர சப்தம், சங்கு, டாண்  டாண்  என்ற மணி சத்தம் அவள் மனதுக்கு தெம்பளித்தது.  குதிரை மேலிருந்து கீழே இறங்கி நின்று கொண்டாள் . மார்ட்டின் பற்றிய கவலை கண்களில் நீராக பெருக  அதை  அர்ச்சகர் கவனித்துவிட்டு  வெளியே அவள் அருகில் வந்து ''உனக்கென்னம்மா கவலை . சொல். மஹாதேவன் தீர்த்துவைப்பார்''  என்று ஆறுதல் அளித்தார்.  அவள் மார்ட்டின் உயிரோடு இருக்கிறானா என்று தெரியவில்லை என்று அழுதாள்
''அம்மா, கண்ணீர் விடாதே, எந்த ஆபத்தையும் மஹாதேவன் தீர்த்து வைப்பார். உன்னால் முடிந்தால்  ''ஓம் நமசிவாய'' என்று பதினோரு நாள் சொல். நல்ல சேதி உனக்கு கிடைக்கும் '' என்று பிரசாதம் அளித்தார். 

பதினோரு நாள்  மார்ட்டின் மனைவி அப்படியே ஜபித்தாள் . என்ன ஆச்சர்யம் பாருங்கள். பதினோராம் நாள் சாயந்திரம் அவள் வீட்டு வாசல் கதவை ஒருவன் தட்டினான். ஆப்கானிஸ்தானிலிருந்து ஒரு ராணுவ சிப்பாய்,  மார்ட்டின் அவளுக்கு எழுதியிருந்த கடிதம் ஒன்றை கையில் கொடுத்தான். அதில் மார்ட்டின்  மயிர்கூச்செரியும் சம்பவம் ஒன்றை பற்றி என்ன எழுதியிருந்தான் தெரியுமா?''

''.......  பதினைந்து நாட்களாக  இங்கே  பிரிட்டிஷ் வீரர்களுக்கும்  ஆப்கானியர்களுக்கும்  கடுமையான யுத்தம். நான்  தலைவனாக  இதில் முக்கிய பொறுப்பை வகிப்பதால் நகர முடியவில்லை.  உயிருக்கே சவால். ஒரு சமயம் ''இனி தப்ப முடியாது. மரணம் ஒன்றே முடிவு''  என்ற நிலைமை.  நம்பிக்கை, உன்னை பார்க்க முடியாதோ?  என்ற ஏக்கம்....இருந்தும் கடைசி நிமிஷ போராட்டம். அப்போது தான் திடீரென்று  யாரோ ஒருவன்  தோன்றினான்.  விசித்திரமான ஆள்.  இடுப்பில்  புலித்தோல் வேஷ்டியாக கச்சை கட்டிக் கொண்டிருந்தான். விரித்த  சடையன். கையில் நீளமான கனமான ஒரு  திரி சூலம். அதால் என்னமாக   தாவித் தாவி  ஆப்கானியர்களை தாக்கினான்  என்கிறாய்!  ஓட  ஓட  அவர்களை விரட்டி கொன்றான். தாக்கினான். பயந்து போய் எல்லோரும் ஓடிவிட்டார்கள். அதற்குள் எனக்கு பக்க பலமாக  ராணுவ வீரர்களும் சேர்ந்து விட்டார்கள்.  யுத்தத்தில் எங்கள் ராணுவ படை வென்றுவிட்டது. அப்பாடா  என்ன ஒரு நிம்மதி.!  அந்த விசித்திர வீரன் என்னை நெருங்கினான். முகத்தில் நட்புறவோடு ஒரு புன்னகை. பேசினான்.  அவன் ஜாடையிலுருந்து, பேச்சிலிருந்து ''நீ கவலையை விடு'' என்று சொன்னதைப்  புரிந்துகொண்டேன்... அவன் வந்தமாதிரியே  திடீரென்று சென்றுவிட்டான். அவனை அப்புறம் பார்க்கவே இல்லை. ''

மார்ட்டின் மனைவிக்கு  மால்வா மஹாதேவன் படம் தெரியும்.  இடுப்பில் புலித்தோல், கையில் திரிசூலம் பார்த்திருக் கிறாளே .  இங்கே  தான்  இந்த பதினோரு நாள்  ''ஓம் நமசிவாய''  சொன்னதன் பலன் அங்கே  ஆப்கானிஸ்தானில் கணவன் மார்டினுக்கு பலன் அளித்திருக்கிறதே!'' 

வெற்றிகரமாக  யுத்தம் முடிந்தது. மார்ட்டின் திரும்பி மால்வா வந்தான்.  தம்பதிகள் இருவருக்கும் மால்வா மஹாதேவன் மேல் பக்தி அதிகரித்து  ஆழ்ந்த பக்தர்களானார்கள்.   1883ல் மார்ட்டின்  அந்த பழைய கோவிலின் புணருத்தானத்துக்கு  அக்காலத்திலேயே  ரூபாய்  15000  தானமாக கொடுத்தான்.  பின்னர் கப்பல் ஏறி  லண்டன் போனாலும் கடைசிவரை இருவரும் மஹாதேவ பக்தர்கள் தான். இந்த சம்பவம் கல்வெட்டில்  மால்வா அகர்  மஹாதேவன் கோவிலில்  காணப்படுகிறது. 

sivan jaykay

unread,
May 12, 2025, 8:16:21 PM5/12/25
to amrith...@googlegroups.com
ஆத்ம பஞ்சகம்   நங்கநல்லூர்  J .K. SIVAN
ஆதி சங்கரர் 

'யாராவது இன்னொருவர் ஆதி சங்கரரைப் போல மீண்டும் பிறக்கமாட்டாரா? வாரி வாரி இன்னும் நிறைய அற்புத விஷயங்களை தரமாட்டா? '' 
இந்த ஏக்கம்  என் மனதில் மட்டும் அல்ல. எண்ணற்ற  பக்தர்களின் மனத்திலும் எதிரொலிக்கிறது.   இதைக் கேட்டு  ஆதி சங்கரர்  என்ன சொல்கிறார்?
''அப்பனே, நீ என்ன பேசறே? ஏற்கனவே நான் கொடுத்ததெல்லாம் படிச்சியா? படிச்சாலும் புரிஞ்சிண்டிட்டியா? அதுவே இன்னும் பத்து ஜன்மத்துக்கு நிறைய இருக்கே. புதுசா என்னை மாதிரி இன்னொருத்தரா? அவர் வேறே எழுதணுமா? போ, போ, முதல்லே நான் எழுதினதை படிச்சிட்டு அப்புறம் பேசு. படிச்சா தான் பேசவே மாட்டாயே . அப்படியே ஆனந்த சாகரத்தில் அமிழ்ந்துட்டா,  பேச்சு எங்கிருந்து வரும்?''

இன்று  காலை எழுந்ததும்  மீண்டும் ஆதி சங்கரரின் ஆத்ம பஞ்சகம் மனதில்  தோன்றியது.  மீண்டும் அதை எழுத வேண்டும் என்று ஆர்வம் வளர்ந்தது.  ஆத்ம பஞ்சகம் ஆன்மா பற்றிய ஐந்தே ஐந்து ஸ்லோகம்''

சந்தோஷம் என்பது நாலு பேருடன் பகிர்ந்து கொண்டால் தானே அதற்கு இன்னும் அது அதிகமாகும். எனவே தான் இந்த சிறு எண்ண பிரதிபலிப்பு. இந்த ஸ்லோகங்களை  என் அருமை நண்பர், மதிப்புக்குரிய வித்தகர்  ஸ்ரீ பி. ஆர். ராமச்சந்தர் வெகு எளிமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அதையும் கொடுத்திருக்கிறேன்.

1. नाहं देहो नेन्द्रियाण्यन्तरंगं  नाहंकारः प्राणवर्गो न बुद्धिः  दारापत्यक्षेत्रवित्तादिदूरः  साक्षी नित्यः प्रत्यगात्मा शिवोऽहम् ॥१॥
Naham deho, nendriya nyantharangam,  Nahamkara prana vargaa na budhi,  Darapathya kshethra vithadhi dhoora, Sakshi nithya prathyagathma shivoham.
I am neither the body, nor the senses nor the mind, Neither am I pride, soul nor intellect, But I am Shiva, who is eternal, Who is completely unattached. Who is far , far and far away From wife, son , lands and assets, And is the witness for everything.

தேஹாத்ம புத்தி என்பார்கள். இந்த தேகத்தை தான் ஆத்மா என்று தவறான கணக்கு போடுகிறோம். தெரிந்தும் போடுகி றோம். தெரியாமலும் போடுகிறோம். பஞ்ச இந்திரியங்களும் ஆத்மா இல்லை. இன்னும் சொல்லப் போனால் நமது புத்தியும் ஆத்மா இல்லை. விடுகிறோமே மூச்சு. பிராணன் அதுவும் ஆத்மா இல்லை. குப்பு ராவ் மூச்சை விட்டு கட்டையாகி விட்டார். கும்பல் வீட்டில் சேருகிறது.    ''மூச்சை விட்டார். பிராணன் போய் விட்டது'' என்கிறோமே தவிர ஆத்மா போய் விட்டது என்றா சொல்கிறோம். அவர் ஒரு நல்ல ஆத்மா என்கிறோமே. ஏதோ கொஞ்சம் நாமும் தெரிந்து வைத்திருக் கிறோம் அல்லவா? அதை விஸ்தாரமாக புரிந்து கொள்ள முயலவில்லை. அஹங்காரமும் ஆத்மா இல்லை. பின் எது ஐயா ஆத்மா? எது பிள்ளை, பெண்டாட்டி, வீடு, வாசல், சொத்து, சுதந்திரம் எல்லாவற்றையும் விட்டு விலகி  ஒரு சாட்சியாக தூரத்திலிருந்து சம்பந்தமே  இல்லாமல் பார்க்கிறதோ அது தான் ஆத்மா. அடுத்த தெருவில் ஒரு பெரிய மாளிகை வீடு ஒரு செட்டியார் கட்டியிருப்பதை பார்க்கும்போது அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? என்பது போல் இந்த உடம்பையும், மற்ற உறவையும் கிட்டே சேர்க்காமல் வைத்துக்கொள்வது.

2. रज्ज्वज्ञानाद्भाति रज्जुर्यथाहिः स्वात्माज्ञानादात्मनो जीवभावः। आप्तोक्त्या हि भ्रान्तिनाशे स रज्जु- र्जीवो नाहं देशिकोक्त्या शिवोऽहम् ॥२॥
Rajjwagnanath bhathi rajjuryadhai, Swathma jnanad athmano jeeva bhava, Aapthokthya hi branthinase sa rajjur,Jjevo naham desikokthya shivoham.

Due to ignorance I think that a rope is a snake, For due to absence of Jnana .I ascribe life in to lifeless thing.And when the realized one points it out, I wake up from this illusion, And understand that it is a rope and not a snake. Similarly I am not the soul but Shiva, Which I only understand by the teaching of the great teacher.Similarly I am not the soul but Shiva, Which I only understand by the teaching of the great teacher.\

பிரதி பாசிகம் என்று சமஸ்க்ரிதத்தில் ஒன்றை மற்றொன்றாகவே கண்டு உணர்வது. அரை இருட்டில் 'பள பள' வென்று ஒரு தோரணக் கயிறு சுவர் ஓரமாக காற்றில் ஆடுகிறது. ஐந்து அடி நீளத்தில் ஒரு நாகம் அங்கு நெளிந்து கொண்டு இருக்கிறது என்று அதைக் கண்டு நடுங்குகிறோம். வியர்த்து, மார்பு படபடவென்று துடித்து பாதி உயிர் போய் விட்டது. பிறகு யாரோ அருகில் தைர்யமாக சென்று பார்த்து அதை கையில் எடுத்து அது ஒரு கயிறு என்று காட்டியது. பாம்பு போய் விட்டது. கயிறு மிஞ்சியது. பயமும் போனது. இது பாம்பு இல்லை என்ற ஞானம் இல்லாததால் கயிறு பாம்பாக பயமுறுத்தியது. அது போல் உயிரற்ற உடம்பை உயிர் என்று நம்பி  படாத பாடு படுகிறோம்.  மஹா  பெரியவா போன்ற ஒரு ஞானி, குரு, ''சுவாமி உங்க உடம்பு ஆத்மா இல்லை'' என்று உணர்த்தினால் தான் பாம்பு கயிறாகும்.
இப்படி தட்டி எழுப்பின பிறகு தான் என்னுள் இருப்பது ஜீவன் அல்ல அந்த சிவனே என்று அந்த ஞானி, குரு,  சொல்லிக் கொடுப்பது புரியும். அப்பறம் என்ன, சதா ஆனந்தம் தான்.

3. आभातीदं विश्वमात्मन्यसत्यं  सत्यज्ञानानन्दरूपे विमोहात् । निद्रामोहात् स्वप्नवत् तन्नसत्यं शुद्धः पूर्णो नित्य एकः शिवोऽहम् ॥३॥
Aabhadhedham vishwamathmanya sathyam, Sathya jnanananda roope vimohat, Nidhramohat swapnavath thanna sathyam, Shuddha poorno nithya eka Shivoham.

Due to the veil of ignorance, I see this world in the eternal life,Which has the form of truth and joy,Similar to the dream which I see due to veil of sleep, For I am the pure complete, perennial and single Shiva.

காமாலைக் கண்ணனுக்கு கண்ட தெல்லாம் மஞ்சள். இந்த உலகமே என்றும் சாஸ்வதம். இந்த பூலோக வாழ்க்கை அழிவற்றது என்ற எண்ணங்கள் திரையாக ஒரு உண்மையை மறைக்கின்றன. எது அழிவற்றது, உண்மையானது, நிரந்தரம்? என்று தெரியவில்லை. உறக்கத்தில் காணும் கனவுத் தோற்றம். நிஜம் மாதிரியே இருக்கும். ஆனால் அது பொய்.     எது சுத்தமோ, எது பூரணமானதோ, எது ஒன்றேயோ, அது தான் என்னுள் உறையும் சிவன் என்கிற நான்.

4. मत्तो नान्यत् किञ्चिदत्रास्ति विश्वं  सत्यं बाह्यं वस्तुमायोपक्लिप्तं ।  आदर्शान्तर्भासमानस्यतुल्यं मय्यद्वैते भाति तस्माच्छिवोऽहम् ॥४॥
Mathi nanyath kinchid athrasthi viswam,Sathyam bahyam vasthu mayopak li ptham,Adarsho andhar bhasamanasya thulyam,
Mayyadwaithe bhathi thasmad shivoham.

This world is in no way different from me, Similar to everything getting reflected in a mirror, All the world is within me,
So I am that Shiva which is without two.

எங்கும் பரவி இருக்கும் இந்த உலகம், நானே தவிர வேறில்லை. மாறிக் கொண்டே இருக்கிறதே. மாற்றம் என்றால் என்ன. ஒன்று இருந்து, அது மறைந்து வேறொன்றாக காட்சி அளிப்பது தானே மாற்றம். நானும் அப்படித்தானே. ஐந்து வயது நான், இருவது வயது நானில்லை, நாப்பது வயது நான் எண்பது வயது நான் கிடையாது. 80 வயது நான்  இப்போது 86 வயதானவன் இல்லை.  மாற்றம் இருந்தாலும்  மொத்தத்தில் எல்லாமே நான். நானே எல்லாம். அப்போது எல்லாத்திலும் உள்ள சிவனும் நான், நானே தான் சிவன். எல்லாம் ஒண்ணே .

5.. नाहं जातो न प्रवृद्धो न नष्टो  देहस्योक्ताः प्राकृताः सर्वधर्माः।  कर्तृत्वादिश्चिन्मयस्यास्ति नाहं-कारस्यैव ह्यात्मनो मे शिवोऽहम् ॥५॥ 
Naham jatho na pravrudho na nashto, Dehasyoktha prakrutha sarva dharma, Karthruthwadhi schinmaya syasthi naham,Karasyaiva hyathmano may Shivoham.

Nor was I born nor grew nor die, For birth, growth and death are for the body, The nature of taking up a work is , The reflections of pride and not,
For my soul which is eternal, And so I am the unattached Shiva.

அப்படி என்றால், நான் பிறக்கவில்லை, வளரவில்லை, இறக்கவில்லை, என்றால் புரிகிறதா? அது ஆத்மா பற்றிய விஷயம்.  அது புரியாததால்  ஆத்மா என்றால்  இந்த உடல் தான் சார்  என்கிறோம்.  உண்மையில் உடல் நான் இல்லை. நான் கல்கத்தாவுக்கு ஒரு மணியிலே வரேன் என்று சொல்கிறேனே. நானா பறந்தேன்? ஏதோ ஒரு ஏரோப்ளேன் என்னை தூக்கிக் கொண்டு போய் சேர்த்தது. ப்ளேன் வந்துது என்றா சொல்கிறேன். நான் வந்தேன் என்று தானே வார்த்தை. அது போல் என்னைத் தாங்கி நிற்கும் இந்த உடம்புக்கு தான் எல்லா மாற்றங்களும். இதில் அஹங்காரம் கொண்டு இருந்தால் அது எனதில்லை. பெருமை, கர்வம்..ஹுஹூம். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நான் தான் சிவனாயிற்றே. எதோடும் அட்டேச்மென்ட் இல்லையே.

नाहं जातो जन्ममृत्यू कुतो मे  नाहं प्राणः क्षुत्पिपासे कुतो मे ।  नाहं चित्तं शोकमोहौ कुतो मे  नाहं कर्ता बन्धमोक्षौ कुतो मे ॥६॥
Naham jatho janma mruthyu kutho may, Naham prana kshuth pipase kutho may, Naham chitham sokamohou kutho may, Naham kartha bandha mokshou kutho may.

I was not born, whence birth and death came to me, I am not the soul, whence came hunger and thirst to me, I am not the mind, whence came passion and sorrow to me, I am not the doer, whence came attachment and detachment to me?

நான் தான் பிறக்கவில்லையே எங்கேயிருந்து வந்தது  பிறப்பு ; அதைத்  தொடர்ந்து இறப்பு?
நான் தான் ஜீவன் இல்லையே, எங்கேயிருந்து பசி, தாகம் ?
நான் தான் மனம் இல்லையே, இந்த கோப தாப துக்க சந்தோஷ உணர்ச்சிகள் எங்கே இருந்து என்னை அணுகும்?
நான் தான் எதையும் பண்ணவில்லையே எங்கேயிருந்து இந்த பந்தம் பாசம் எல்லாம்? விட்டுத் தள்ளு.

sivan jaykay

unread,
May 12, 2025, 8:16:38 PM5/12/25
to amrith...@googlegroups.com
1.5.2025  ஆலய தர்சனம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN

1. திருவள்ளூர்  ஸ்ரீ வைத்ய வீரராகவ பெருமாள் தரிசனம். 

 பல வருஷ இடைவேளைக்கு பிறகு  திடீரென்று  1.5.25  அன்று  நண்பர்கள் பலரோடு  முன்பு போல் ஒரு புனித யாத்திரை துவங்க முடிவெடுத்தோம்.  21 பேர் உடனே சேர்ந்து விட்டார்கள்.  21 பேர் அமரும் மினி பஸ் ஒன்று  வாடகைக்கு எடுத்தோம்.  அன்று தரிசிக்க  தீர்மானித்தது. திருவள்ளூர்  வீர ராகவ பெருமாள் ஆலயம்.  நெய்வேலி க்ராமம் அருகே  ஸ்ரீ ராகவேந்திரா க்ராந்தாலயம்,   ஊத்துக்கோட்டை  வேங்கடபுரம் சாதன கோசாலை. சுருட்டப்பள்ளி  ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயம், ஸ்ரீ சிறுவாபுரி முருகன் ஆலயம்.....எப்படியும் இரவு ஒன்பது மணி இதற்கே  ஆகிவிடுமே..

திருவள்ளூரில்  ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் . அது பற்றிய விளக்கம். எனது நண்பர்  கண்ணன் எல்லோருக்கும் இட்டலி காபி, காலை உணவு, மதியம் புளியோதரை சிப்ஸ், தயிர்சாதம் ஊறுகாய் பெரிய பாத்ரங்களில், குடி தண்ணீர் ஒரு பெரிய கேன் ஒன்றும் சேர்த்து வண்டியில் ஏற்றிவிட்டார். 

7.40க்கு  திருமழிசையில்  ஒரு  வசதியான இடத்தில் காலை உணவு முடித்து திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவ பெருமாள் ஆலயம் சென்றோம். 9.30 மணிக்கு தான் தரிசனம் என்பதால் அனுமார் வால் க்யூ நின்றது.  தலா  RS  110  கொடுத்து விசேஷ தரிசன வரிசையில் நகர்ந்து பதினைந்தே நிமிஷத்தில்  தரிசனம் பெற்றோம். 

 கிருத யுகத்தில் புருபுண்யர் என்ற முனிவர் தன் மனைவி சத்யவதியுடன் பத்ரிகாஸ்ர மத்தில் வசித்து வந்தார். பிள்ளைப் பேறு  வேண்டி புத்ரகாமேஷ்டி  யாகம் (சாலி யாகம்) துவங்கி  தினமும் ஒரு நாளைக்கு 1000 தடவை  மந்திரம் சொல்லி  நெய்யை ஹோமகுண்டத்தில் சேர்ப்பார். இப்படி  ஒரு வருஷம். யாகம் முடிவில்  ஸ்ரீமந்  நாராயணன் ஹோம ஜ்வாலையில் தோன்றி  புத்திர பாக்கிய வரம்  அளித்து  ''உனக்கு பிறக்கும்  பிள்ளைக்கு   இந்த  யாகத்தின் பெயரையே வை'' என்று அருளியதால்  முனிவருக்கு  சாலிஹோத்திரன் பிறந்தான்.


ஓர் தை அமாவாசை நாளில் சாலிஹோத்ரர் திருவள்ளூர் வந்து  அங்கே  ஹ்ருத்தாபனாசினி தீர்த்தத்தில் ப்ரம்மாதி  தேவர்களும் வசிஷ்டர்  முதலான ரிஷிகளும் ஸ்நானம் பண்ணுவதை பார்த்தான். ஆகவே அவனும் ஒரு வருஷ காலம் ற்கு பெருமாளைக்  குறித்து கடும் தவம் பண்ணி  ஹ்ருத்தாபனாசினியில் நீராடி காலை பூஜைகளை துவங்கினான்.  ஒருவருஷ காலமம் அவன் உபவாசம்.  ஆகவே  தவம் முடிந்து கொஞ்சம்  அரிசி மாவு சிறிது எடுத்து  பிரசாதம் தயார் செய்து அதை  மூன்று பாகமாக்கி  முதல் பாகம்  ஸ்ரீமந்  நாராயணனுக்கும், இரண்டவது பகுதியை விநியோகத்திற்கும், மூன்றாவது பகுதியை தனக்கும் வைத்துக்கொண்டார்.

ஸ்ரீந்  நாராயணன் ஒர் கிழ பிராமணர்  ரூபத்தில்  சாலிஹோத்ரரிடம்  பிரசாதம் வாங்கி உண்டார்.  அவர் முகத்தில் திருப்தி இல்லை . எனவே சாலிஹோத்ரர்  ''உங்களுக்கு என்ன குறை/?'' என கேட்டார்.
''அப்பனே  நான் நாலு ஐந்து நாளாக எதுவும் சாப்பிடவில்லை. நீ கொடுத்த பிரசாதம்  போதவில்லை.''
''அடாடா, இந்தாங்கோ''  என  சாலிஹோத்ரர் தனக்கென  வைத்திருந்த பாகத்தையும்  தந்தார்.  கிழவர் அதை வாங்கி உண்டு திருப்தியோடு சென்றார்.

 மீண்டும் சாலிஹோத்ரர் உணவு நீர் ஏதுமின்றி தவம் செய்து  அடுத்த புஷ்ய அமாவாசையன்று தவத்தை முடித்து ஹ்ருத்தாபனாசினியில் புனித நீராட செல்லுகையில் நற்சகுனங்கள்  பல தோன்றின பூஜை பண்ணி  நைவேத்யத்திற்கு அரிசிமாவு  கொண்டு வந்து  முதல் வருஷம் போலவே  மறுபடியும் மூன்று பாகங்களாக்கி ஸ்ரீமன் நாராயணனுக்கு முதல் பாகத்தை  நைவேத்தியம்  பண்ணிவிட்டு ரெண்டாவது பாகம்  யாரவது அதிதிக்கு, மூன்றாவது பாகம் தனக்கு என வைத்துக்கொண்டார்.

 இந்த முறையும் ஸ்ரீமந்  நாராயணன் கிழ பிராமண வடிவில் வந்து   பிரசாதம் பெற்றார்.  ''நான் எங்கேயப்பா படுத்து ந்து ‘நன் படுத்து ஓய்வு எடுப்பது?(எவ்வுள் ?)’ என்று சாலிஹோத்ரரிடம் கேட்டார்.
''இங்கேயே   என சாலிஹோத்ரர் கை காட்டிய அவர் ஆஸ்ரமம் தான்  ஹ்ருத்தாபனாசினியின் தென் புறம் உள்ள   ஸ்ரீ வீரராகவ சுவாமி திருக்கோயில்  முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பிராமணர்  பெருமாளாக சயனித்தார். "படுக்க எவ்வுள்" என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும்  ''எவ்வுட்கிடந்தான்'' என்று பாசுரம் சொல்கிறது. எவ்வுள் ஊர்  திருவள்ளூர் என 108  திவ்ய தேசங்களில் ஒன்று.

 ஒரு சமஸ்க்ரித ஸ்லோகம் சொல்வதை கேட்போம்;
दार्शनात् स्पर्शनात् स्नानात्  स्तोत्रेन श्रद्धया वाऽपि  यः पिबेत्तोयमङ्गल्यं तस्य रोगो न जायते॥
''தர்சநாத் ஸ்பர்ச்நாத் ஸ்னானாத், ஸ்தோத்ரேன ஸ்ராத்தய்யா  வாபி யா: பிபேத்  தோயம்  மங்கல்யம்  தஸ்ய ரோகோ ந ஜாயதே''

திருவள்ளூர்  ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி  திருக்குளத்தை, பார்த்தாலோ, தொட்டாலோ,  இதில் ஸ்நானம் பண்ணினாலோ,மனதில் ஸ்மரணை  பண்ணினாலோ போதும்.  அனைத்து வியாதிகளும், பாபங்களும் போய்விடும்''

அவ்வளவு புனிதமான தீர்த்தம்.  கங்கை, கோதாவரி நதிகளை விட புனிதமானது எனலாம்.

எத்தனையோ முனிவர்கள்  வாழ்ந்து பிக்ஷை பெற்ற ஆரண்யம், காடு, என்பதால்  பிக்ஷாரண்யம்  என்று புராண காலத்தில் பெயர். அஹோபில மடம் பராமரித்து வருகிறது. ஐந்து நிலை ராஜ கோபுரம். பல்லவர்கள்  கட்டியது.  கனகவல்லி தாயார்
கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகர், ராமானுஜர் , லக்ஷ்மி  நரசிம்மர் தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கிறார்கள்.  5000 ஆண்டுகள் புராதன ஆலயம் என்பார்கள்.  விஷ்ணுவே வீரராகவப் பெருமாளாக இக்கோவிலில் குடி கொண்ட இடம்.  பெருமாள்  ”வைத்ய வீரராகவர்”.  தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பவர்.  பெருமாளுக்கு சந்தன எண்ணெயால் அபிஷேகம். பிரம்மாண்டமான உருவத்தோடு கம்பீரமாக பல நூற்றாண்டுகளாக  வலது கையை கீழே  தொங்கவிட்டுக்கொண்டு சிவலிங்கத்தை பிடித்தவாறு, கரிய பெரிய திருமால்.....இப்போதும் கண்முன்னே தோன்றுகிறார்..


 ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்குப் பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் வேட்டைக்குச் சென்ற பெருமாள், தாயாரை மணமுடித்ததாக ஸ்தல  வரலாறு.

அடுத்த பதிவில் ரெண்டாவதாக தரிசித்த ஆலயம் பற்றி சொல்கிறேன். 

sivan jaykay

unread,
May 12, 2025, 8:16:40 PM5/12/25
to amrith...@googlegroups.com

ஏகாதசி கிருஷ்ண தரிசனம்.-  நங்கநல்லூர்  J K  SIVAN 

'நாளைக்கு காலை  6.30 மணிக்கு  என்னோடு  மஹாரண்யம் வருகிறீர்களா''  என நண்பர்  நவநீத கிருஷ்ணன் கேட்டால்  அதுவும்  ஏகாதசி  அன்று கிருஷ்ண மந்த்ரம் ஒலிக்கும்  முரளீதர ஸ்வாமிகளின் ஆஸ்ரமத்துக்கு போக வலிக்குமா?
நான் தயாராக இருக்கிறேன் என்று சொன்னதும்  இன்று காலை  6.30 மணிக்கு வந்துவிட்டார்.

மஹாரண்ய  கிராமத்தில்  மதுராபுரி ஆஸ்ரமம்  1990ல்  முரளீதர சுவாமிகளால் நிறுவப்பட்டது.  நாற்பது நிமிஷத்தில்  நங்கநல்லூரிலிந்து படப்பைக்கு காரில் சென்றுவிட்டோம்.  படப்பையில் யாரைக் கேட்டாலும்  ஆஸ்ரமத்துக்கு வழி  சொல்வார்கள்.  உள்ளே நுழையும்போதே  பெரிய நீர்ப்பரப்பாக ஒரு ஏரி. கரையில் பெரிய  வயசான அரசமரம்.  கிராமிய சூழலில் ஆன்மீக காடாக  ''மஹாரண்யம்' இங்கே  ராமர்  மூன்று  இரவுகள் தங்கினதாக ஐதீகம். அருகே  மணிமங்கலம் கிராமம்  கிருஷ்ண சம்பந்தப்பட்டது.    த்வாரகை  கடலில்  மூழ்கியபின்  அங்கிருந்து பலர்  மணிமங்கலத்துக்கு  குடி பெயர்ந்து வாழ்ந்தார்கள் என்பார்கள்.  

தனி  ஆலயத்தில், ஸ்ரீ கல்யாண ஸ்ரீனிவாசர் அற்புதமாக திருப்பதி வெங்கடாசலபதியைப் போலவே அருள் பாலிக்கிறார். அருகே தெப்பக்குளம்.   பெரிய  ஆஞ்சநேயர்.   ஆஸ்ரமத்தில் கோசாலையில் கிட்டத்தட்ட நூறு பசு, கன்றுகள் உள்ளன. .

ஆஸ்ரமத்தில்   பெரிய   பிரார்த்தனை ஹால்  (''பாகவத பவனம'' )ஒன்று  இருபிரிவாக, ஆண்கள் பெண்கள் தனியே  ஜம்மென்று உட்கார்ந்து   மனதை   'ஹரே ராம  ஹரே ராம  ராம ராம  ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண  ஹரே  கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே'' என்ற  மனம் கவரும்  ராகத்தில்  பாடும்   நாம சங்கீர்த்தனத்தில்  காலை  6 முதல் மாலை 6 வரை   சுகமாக  ஈடுபட வைக்கிறது.  அங்கே  ப்ரேமிகா வரதனாக  கிருஷ்ணன், மதுரி  சகி யாக  ராதா அருள் பாலிக்கி றார்கள். ஆஸ்ரமத்தில்  இதர தெய்வங்களின் சந்ந்நிதிகளும் உண்டு. விநாயகர், பாண்டுரங்கன், வராஹர்,விஷ்ணு துர்கையை வணங்க வசதி உள்ளது.  ஆஸ்ரமத்தில்  கோவர்தன கிரி கூட உள்ளது. மதுராசலம் என்று பேர். கோவிந்த பட்டாபிஷேகம் இங்கே விமரிசையாக நடக்கும்.    

ஒரு அருமையான விஷயம் என்ன தெரியுமா?  ஸ்ரீ சாந்தீபனி குருகுலம் எனும்  பாடசாலையில்  நூறு  மாணவர்கள் யஜுர், சாம வேதம் கற்கிறார்கள்.

ஐநூறுக்கு மேல்  இன்று  காலை பக்தர்கள் நாமசங்கீர்த்தனத்தில்  ஈடுபட்டு  ஸ்வாமிகள் நின்று கொண்டே அத்தனை பேருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கினார்.  என்னுடைய புத்தகங்களில் சிலவற்றை ஆர்வத்தோடு பெற்றுக்கொண்டு எனக்கு மல்லிகை மலர், மாம்பழ பிரசாதம் அவர் கைகளால் வழங்கியது எனது  பாக்யம்.   பெருமையோடு ஒரு விஷயம் நினைவு கூர்கிறேன்.
எனது சிறந்த படைப்பான  ''ஐந்தாம் வேதம்'' இரு பாகங்களை வெளியிட ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளை அணுகியபோது அந்த குறிப்பிட்ட தேதியில் அவர்  சென்னையில் இல்லை என்று அறிந்து  ஸ்ரீ ரகுவீரா பட்டாச்சாரியார் அவர்கள் வெளியிட்டார்கள்.  வெளியிடும் நாளுக்கு ஒரு வாரம் முன்பு  மதுராந்தகம் சென்று ஸ்ரீ பட்டாச்சார்யரிடம் ஐந்தாம் வேதம் புத்தக பாகங்களை சமர்ப்பிக்க சென்ற அன்று காலை அவர்  ஸ்ரீ ஏரி காத்த ராமன் ஆலயத்தில் பாராயணம் செய்து  கொண்டிருப்பதாகவும் கோயிலுக்கே நேரில் வந்துவிடுங்கள் என்று சொன்னதால் நண்பர்  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனோடு   ஏரி  காத்த ராமனை தரிசிக்க சென்றபோது வாயிலில் பட்டாச்சாரியார் எங்களுக்காக காத்துக்கொண்டு நின்று இருந்தார். ''
மிருதுவான பனித்துளிபோல் மழைத்தூற்றல்.   எங்கள் காரை நிறுத்திவிட்டு அவரிடம் சென்றபோது ''வாருங்கள் சரியான சமயத்தில் வந்திருக்கிறீர்கள்.  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  விழுப்புரம் வழியாக எங்கோ செல்லும்போது இப்போது வழியில்  ராமர் கோயிலில் தரிசிக்க வந்திருக்கிறார்.  அவரையும் தரிசிக்கலாம் என்கிறார்.  ஸ்ரீ ஸ்வாமிகளும் எங்களோடு ஸ்ரீ பட்டாச்சார்யார் இல்லத்துக்கு வருகை தந்தார். அங்கே  பூஜை அறையில் ஸ்வாமிகளிடம் பட்டாச்சார்யாருக் கென்று கொண்டுவந்த  ''ஐந்தாம் வேதம்''  இரு பாகங்களை அளித்து ''உங்கள் கையால் வெளியிட விரும்பிய எனக்கு இந்த முதல் பிரதிகளை உங்கள் திருக்கையில் சமர்ப்பிக்க இது ஒரு அதிசய சம்பவம். ஏரி  காத்த ராமனே எதிர்பாராமல் இதை  ஏற்பாடு  செய்துள்ளான் என்று சொல்லி வணங்கினோம்.  ஆசிர்வதித்தார். முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். பிறகு பட்டாச்சார்யருக்கு மற்றொரு பிரதியை சென்னையிலிருந்து அனுப்பினேன்.   இன்று  ஸ்வாமிகளை சந்தித்தபோது இந்த சம்பவத்தை நினைவூட்டியபோது  புன்னகையோடு ''ஆமாம் நினைவிருக்கிறது'' என்று சொல்லி விட்டு தான் பிரத்தியேகமாக  பிரசாதங்களை எனக்கு வழங்கினார்.

 
57677b20-a1da-472e-9e7a-51e1f312a66a.jpeg
5M VEDHAM.IMG_20171105_090336.jpg
5M VEDHAM IMG_20171105_090246.jpg

sivan jaykay

unread,
May 12, 2025, 8:16:50 PM5/12/25
to amrith...@googlegroups.com
மஹா லக்ஷ்மியும் மஹேஸ்வரியும் ஒன்றே.  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

இன்று வெள்ளிக்கிழமை  -  அம்பாள் யார்?  உமா, பார்வதி, பரமேஸ்வரி தானே  மகாலட்சுமியும் கூட, என்று தோன்றுகிறது.
ஆதி சங்கரர்  கனகதாரா  ஸ்தோத்ரம்  பாடி  மஹாலக்ஷ்மியைத் துதிக்கிறபோது ஆகாசத்திலிருந்து அசரீரி கேட்டது. “இந்த ஏழைப் பிராமண தம்பதி எத்தனையோ ஜன்மங்களாகப் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனைதான் தாரித்திரியம். பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில் இவர்களுக்குச் சம்பத்தைத் தருவதற்கில்லை” என்றது அசரீரி.

“மஹாலக்ஷ்மி தாயே,  இந்த ஏழை பெண்மணி  ஜன்மாந்தரங்களாகச் செய்த பாவம் இப்போது இருப்பதைவிடக்கூட அதிகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; இத்தனை அன்போடு அகத்தில் இருந்த ஒரே பக்ஷ்யமான நெல்லிக் கனியையும் எனக்கு இவள் போட்டிருக்கிறாளே. இந்த அன்பும் தியாகமும் எத்தனை புண்ணியமானவை! சாப்பாட்டுக்கே இல்லாத இவள் எனக்குப் பிக்ஷை போட்ட பலன் எத்தனை பாவத்தையும் சாப்பிட்டு விடுமே!.

''ம்ம்ம்ம்''   என்றாள் மஹாலக்ஷ்மி. அவளுக்கு ஆதிசங்கரரின் வாக்கு பிடித்தது. 

 “அம்மா, மஹாலக்ஷ்மி! இவளுக்கு இருக்கிற மாதிரி உனக்கும் நிறைய அன்பு இருக்கிறதே! அதனால் ரொம்பக் கண்டிப்போடு நியாயம் மட்டும் வழங்காமல், அன்பைக் காட்டி அநுக்ரஹம் பண்ணம்மா” ''

“दद्याद् दयानुपवनो द्रविणाम्बुधाराम्_ अस्मिन्नकिञ्चनविहङ्गशिशौ विषण्णे । दुष्कर्मघर्ममपनीय चिराय दूरं नारायणप्रणयिनीनयनाम्बुवाहः ॥८॥
Dadyaad Daya-Anupavano Dravinna-Ambu-Dhaaraam_ Asminn-Akin.cana-Vihangga-Shishau Vissannnne | Dusskarma-Gharmam-Apaniiya Ciraaya Duuram Naaraayanna-Prannayinii-Nayana-Ambu-Vaahah ||8||

தத்யாத் தயாநுபவனோ” எனும்  இந்த ஸ்லோகத்தில் “சாதக பட்சி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி இவர்கள் சம்பத்துக் காக ஏங்குகிறார்கள். இவர்களுடைய பூர்வபாவம் மழையே இல்லாத கோடை மாதிரி, இவர்களைத் தகிக்கிறது என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் உன்னிடம் தயை என்கிற காற்று இருக்கிறதல்லவா? அந்தக் காற்றினால் உன் கடாக்ஷ மேகத்தைத் தள்ளிக் கொண்டு வந்து இவர்களுக்குச் செல்வ மழையைப் பொழியம்மா!”

மஹா லட்சுமி திருப்தி அடைந்தாள்.  மனம் குளிர்ந்தது. அந்த ஏழைப் பெண் அன்போடு போட்ட ஓர் அழுகல் நெல்லிப் பழத்துக்குப் பிரதியாக அந்த வீட்டு வேலி எல்லை வரையில் தங்க நெல்லிக் கனிகளை மழையாகப் பொழிந்து தள்ளி விட்டாள்.  இந்த ஸ்தோத்ரத்துக்கு   “கனகதாரா ஸ்தவம்”  பொன்மழை துதி''.  நான் அர்த்தம் எழுதி இருக்கிறேன். இத்துடன் இணைக்கிறேன். யாருக்கு வேண்டுமோ படியுங்களேன்.

ஆதி சங்கரரின்  முதல் ஸ்துதி இது.  ''ஆசார்யாளுடைய அன்பு, பிராம்மண பத்தினியின் அன்பு. மஹாலக்ஷ்மியின் அன்பு, எல்லாம் இதில் சேர்க்கை.   இதைப் பாராயணம் செய்கிறவர்களுக்கும் துர்பிக்ஷங்கள் நீங்கி, தர்ம நியாயமாகக் காலக்ஷேபம் நடத்துவதற்குக் குறைவில்லாதபடி சம்பத்து கிடைக்கும்''  என்கிறார் மஹா பெரியவா.

ஜீவனுக்கும் ஈசுவரனுக்குமே பேதமில்லை.. அதனால் அவருக்குத் தெய்வங்களிடையே பேதபுத்தியே கிடையாது. எல்லாத் தெய்வங்களும் ஒரே பராசக்தியின் ரூபங்கள் தாம் . 

गीर्देवतेति गरुडध्वजसुन्दरीति  शाकम्भरीति शशिशेखरवल्लभेति ।  सृष्टिस्थितिप्रलयकेलिषु संस्थितायै तस्यै नमस्त्रिभुवनैकगुरोस्तरुण्यै ॥१०॥
Giir-Devate[aa-I]ti Garudda-Dhvaja-Sundarii-[I]ti Shaakambharii-[I]ti Shashi-Shekhara-Vallabhe[a-I]ti | Srsstti-Sthiti-Pralaya-Kelissu Samsthitaayai
Tasyai Namas-Tri-Bhuvanai[a-E]ka-Guros-Tarunnyai ||10||

மஹாலக்ஷ்மி வாக் தேவி என சொல்லலாம். கருட துவஜ சுந்தரி.  கருடனை கோடியாக கொண்ட மஹாவிஷ்ணு பத்னி. ''சசி சாகம்பரி' சந்திரசேகரனின்  தேவி. ஸ்ரிஷ்டி ஸ்திதி, சம்ஹாரம் எனும் முத்தொழில்களிலும் ஈடுபடுபவள். 

''மஹா லட்சுமி  நீயேதான் வாக்தேவியான ஸரஸ்வதியாகவும், தாவர வளத்தைத் தருகிற சாகம்பரியாகவும், சந்திர மௌலீசுவரரின் பத்தினியான பார்வதியாகவும், இருக்கிறாய். மூன்று லோகங்களுக்கும் குருவான ஒரு பரமாத்மா இருக்கிறது. அதன் சக்தியே நீ. இருவருக்குமாகச் சேர்ந்து உலக சிருஷ்டி பரிபாலனம், சம்ஹாரம் என்கிற விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்” என விளக்குகிறார் காஞ்சி மஹா பெரியவா. 

பராசக்தியான காமாக்ஷியும் காஞ்சி மண்டலத்தில் இதே மாதிரியாகப் பொன் மழை பொழிந்து மஹாலக்ஷ்மிக்கும் தனக்கும் அபேதத்தைக் காட்டியிருக்கிறாள்.

sivan jaykay

unread,
May 12, 2025, 8:16:59 PM5/12/25
to amrith...@googlegroups.com
மே 11,  2025   நரசிம்ம ஜெயந்தி -    நங்கநல்லூர்  J K  SIVAN 

ஹிந்துக்கள்  ரொம்ப ரொம்ப பாக்கியசாலிகள் என்பதற்கு காரணம் ஒவ்வொருநாளும் ஏதாவது  ஒரு தெய்வத்தோடு  நமக்கு சம்பந்தம் கிடைக்கிறது. இன்று   நரசிம்ம ஜெயந்தி. நிறைய  நரசிம்மனைப் பற்றி  பலமுறை எழுதி இருக்கிறேன்.
மஹா விஷ்ணுவின் நாலாவது அவதாரம் நரசிம்மன். ஹிரண்யகசிபுவை  வதம்  செய்ய  ப்ரஹ்லாதனை காப்பாற்ற அவதரித்த  நாள்  தான் நரசிம்ம ஜெயந்தி.

மார்கழி  23ம் நாள்  திருப்பாவை பாசுரத்தில் ஆண்டாள் கண்ணனை நேரில் காண்கிறாள். அவள் மனதில் அந்த கம்பீரன் ஒரு பெரிய சிம்மமாக எழுந்து  வருவதை நினைவூட்டுகிறது.  கண்ணன் சிங்கம் தானே. அவனல்லவோ நரனாகவும் சிம்மமாகவும் கலந்து சேர்ந்து அவதரித்தவன் . ப்ரஹ்லாதனுக்கு அருள் புரிந்து அவன் தந்தையை, கொடியவன் ஹிரண்யனை,  வதம்  செய்தவன்.  நரசிம்மனை ஆண்டாள் மட்டுமா நேரில் கண்டாள் . ஒரு  சாதாரண மனிதரும்  பாசுரங்கள் பாடாமலேயே   நரசிம்ம தரிசனம் பெற்ற விஷயம் தான் இப்போது சொல்லப்போகிறேன். 

ஆந்திராவில் மட்டப்பள்ளியில் ஒரு  லக்ஷ்மிநரசிம்மர் கோயில் மிகப் பிரபலமானது.  ஜன நடமாட்டம் இல்லாத வனப் பகுதியில்  ஒருகாலத்தில்  இருந்தது.  அங்கே வாழ்ந்த ஒரு காட்டுவாசிக்கு மட்டப்பள்ளி  நரசிம்மன் மீது  எல்லையற்ற பக்தி.   அவன் வசித்த இடத்திலிருந்து  கோவில்  ரொம்ப தூரம்.  ஆபத்தான காட்டுப்  பகுதியில் நடந்து போய் தான் கோவிலை அடைய முடியும்.

 அந்த காட்டு வாசி ஒருநாள் நரசிம்ம ஸ்வாமியை தரிசிக்க அரிசி, பருப்பு, காய், கனிகள் ஆகியவற்றை மூட்டைகட்டி தலையில் வைத்துக்கொண்டு மட்டப்பள்ளிக்கு  நடந்தான் . காட்டில் இரண்டு பகல், ரெண்டு இரவு  நடப்பது எவ்வளவு சிரமம் என்பது நடந்தால் தான் தெரியும்.   ஒருவழியாக  நடந்து மட்டபள்ளி  அடைந்தபோது அவனது துரதிருஷ்டம் பூஜை நேரம் எல்லாம்  முடிந்து  நரசிம்மனின்  ஆலய வாசல் மூடி இருந்தது. இரவு நேரம்.   இருள்  இன்னும் முழுதாக ஆக் ரமிக்கவில்லை.  நக்ஷத்ரங்களின் ஒளி  முணுக் முணுக்  மட்டும். மற்றபடி  இருட்டு. ரொம்ப களைத்துப் போய்   அந்த வயதான காட்டுவாசி என்ன செய்யலாம் என்று யோசித்தபோது கோயில் வாசலை ஒட்டி ஒரு சிறு கூரை வேய்ந்த ஒட்டு வீடு  கண்ணில் பட்டது.  ''சரி,  இந்த இரவு இங்கே கட்டையைப் போடுவோம். பொழுது விடிந்தவுடன் நரசிம்ம தரிசனம் பெறலாம்'' என்று அந்த வீட்டின்  சிறிய திண்ணையில்  துண்டை விரித்து படுத்தான் . அடுத்த  கணமே  நடந்துவந்த களைப்பில் அசந்து உறங்கிவிட்டான் .

யாரோ எழுப்பினார்கள்?  எழுந்து பார்த்தான்.   நரசிம்மன் கோவில் பட்டாச்சார்யார்.   அரைத்தூக்கம் கிராமவாசிக்கு.  ஏன் எதற்கு இவர்  என்னை எழுப்பினார்,  யார் இவர்?  தூக்கக்  கலக்கத்தில் காட்டு வாசிக்கு  ஒன்றும்  தெரிய வில்லை புரியவில்லை.
''கும்பிடறேன் சாமி''
“யாரப்பா நீ? எழுந்திரு. ஏன் இங்கே வந்து படுத்தாய், எங்கிருந்து வந்தவன் நீ ?”
'' சாமி, நான் அந்தால இருக்கிற காட்டு பக்கம் தாண்டி ஒரு கிராமத்திலே இருக்கேனுங்கோ. நரசிம்ம சாமி பாக்க வந்தே னுங்கோ. உள்ளே போவ முடியல்லீங்கோ. கதவு சாத்திருக்குது.   இப்போ திறந்து  என்னை  உள்ளே உடுவீங்களா? இல்லாட்டி இங்கிருந்தே கதவு திறந்ததும் பாக்கிறேனுங்கோ ''

“அதெல்லாம் வேண்டாம் நீ உள்ளே வா. இங்கே  காட்டு மிருகங்கள்  ரா வேளையில்  உலாவும். ஆபத்து. பாவம் நீ ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்கிறாய். வயதானவன் உன் பக்தியை நான் மெச்சுகிறேன்'' என்கிறார் அந்த நல்ல பட்டர்.

கதவைத்  திறந்து உள்ளே அழைத்துச் சென்று காட்டுவாசி கொண்டு வந்தவற்றை எல்லாம் நரசிம்மனுக்கு நைவேத்தியம் செய்து, சடாரி வைத்து தீர்த்தம் கொடுத்தார்.

நரசிம்ம ஸ்வாமியை தனிமையில் மிக அருமையாக தரிசித்த காட்டுவாசிக்கு பரிபூர்ணானந்தம். அவன் இதுவரை நரசிம்மனைத் தரிசித்ததில்லை. கேள்விப்பட்டு மனதில் போற்றியதுண்டு.

''ஏம்பா,   இருட்டிப்போயிடுத்தே. நீ எப்படி போவே இங்கிருந்து?'' என்கிறார் பட்டர்.
''ரொம்ப சந்தோசமுங்கோ. மெதுவா சாமி பேர் சொல்லிக்கிட்டே நடப்பேனுங்கோ.'
''இந்த அகால இருட்டில் போகாதே. கொடிய விலங்குகள் ஜாஸ்தி இந்தப் பக்கம். இதோ இங்கேயே ராத்திரி கோவில் உள் மண்டபத்தில் தங்கி படு.   நான் காலையில் வந்து நடை திறந்த பிறகு வெளிச்சத்தில் போவது நல்லது.''
'சாமி, ரொம்ப பெரிய மனசுங்கோ உங்களுக்கு. நல்லா யிருப்பீங்க.''

அன்று இரவு கழிந்து மறுநாள் காலை பட்டாச்சார்யார் கதவை திறந்தார்.  கோவிலுக்குள் உள்ளே  யார் இந்த  ஆள்,
 அழுக்காக  கந்தல் ஆடையுடன் குளிக்காமல் படுத்திருக்கிறான்?   ரொம்ப  ஆத்திரமடைந்து பட்டர்  கிராமவாசியை  கடுங்கோபத்துடன் திட்டினார்.
“யாரடா நீ?  எப்படி கோயிலுக்குள்  நுழைந்தாய்?” என்று ஆத்திரத்தோடு கத்தினார்.
காட்டு வாசி அதிர்ந்து போனான். ராத்திரி உள்ளே விட்ட அதே பட்டாச்சாரி இப்போது ஏன் இவ்வளவு கோபமாக பேசு கிறார்?.
“சாமி,  நீங்க தானே என்னை எழுப்பி உள்ளார கூட்டி வந்து சாமியைக்  காட்டி நான் கொண்டாந்த பிரசாதத்தை  நைவேத்தியம் பண்ணி என்னை உள்ளாற வந்து இங்கே படுக்க சொன்னீங்கோ. அதுக்குள்ள மறந்துட்டீயளா?''

பட்டாச்சாரியாருக்கு தலை சுற்றியது. யார் இவன்? எப்படி கோவில் உள்ளே வந்தான்? நான் தானே கதவை சார்த்தி பூட்டி விட்டு சாவியை இடுப்பில் செருகிக்  கொண்டு வீட்டுக்குப் போனேன். ''நீங்கதானே உள்ளே கூட்டிப்போய், படுக்க சொன்னீங்க ''  என்கிறானே.    நான் உள்ளே ஸ்வாமிக்கு  அவன் கொண்டுவந்த எதையோ நைவேத்தியம் பண்ணியதாக வேறே  சொல்கிறான். என்ன இது?'' '

எதிரே நரசிம்மன் சந்நிதி.  கர்ப்பகிரகத்தை  இழுத்துப் பூட்டிய சாவி அவர் இடுப்பில்  இருக்கிறது. அவசரமாக பூட்டியிருந்த சன்னதிக்கு சென்றார். பூட்டை இழுத்துப்  பார்த்து சாவியால் திறந்தார்.  என்ன ஆச்சர்யம். அந்த அழுக்கு ஆள் சொன்னது போலவே நரசிம்மனுக்கு  அவன் கொண்டு வந்த  காய், வேர், பழங்கள் எல்லாம் நைவேத்தியம் செய்யப் பட்டிருந்தது.

பட்டாச்சாரியார் கிழவர். பரம்பரையாக நரசிம்மனுக்கு சேவை செய்பவர். பரம பக்தர். அவருக்கு விஷயம் சட்டென்று பொட்டில் அடித்தது போல் புரிந்து விட்டது .  நரசிம்மனே தன்னைப் போல் நேரில் வந்து அந்த காட்டுவாசிக்கு அருளி யிருக்கிறான்.   சன்னதிக்குள் நைவேத்தியம் தவிர அனைத்தும் அவர் வைத்துவிட்டு போனது போலவே இருந்தது. இது வேறு யார் வேலையும் இல்லை. நிரபராதியாக அந்த காட்டு வாசி நிற்கிறான்.அவனை உள்ளே விட்டது, படுக்க வைத்தது எல்லாம்  நரசிம்மன், நரசிம்மன், நரசிம்மனே  தான்.

''நரசிம்மா,  இத்தனை காலமும் பூஜை செய்கிற  எனக்கு காட்சி தராமல், எவ்வித ஆசாரமும் இல்லாமல், பக்திக்கு முதலிடம் தந்து வந்த அந்த காட்டுவாசிக்கு அருள் தந்தாயே, என்ன பாக்கியவான் அவன். ''

பட்டர் மேலே பேசமுடியாமல் நரசிம்மனின் கருணையில் உருக அவர் கண்களில் நீர் பிரவாகம் பெருகி தரையில் சொட்டியது. 
 ஒரு   குட்டி அற்புத  ஸ்லோகம் நரசிம்மனைப் பற்றி.  படியுங்கள்.  
''மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ: .ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ: வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:

''நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை, சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே;  அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே; எஜமானும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே''
அடுத்த பதிவில் இன்னொரு அற்புத நரசிம்ம அதிசயம் சொல்கிறேன். காத்திருக்கிறீர்களா?



sivan jaykay

unread,
May 12, 2025, 8:17:10 PM5/12/25
to amrith...@googlegroups.com
சித்ரா பௌர்ணமி-  நங்கநல்லூர்  J K   SIVAN 

மே மாதம் 12ம் தேதி சித்ரா பௌர்ணமி. 

''நிலா நிலா ஓடிவா, நில்லாமல் ஓடிவா '' என்று பாடி குழந்தைக்கு சாதம்  ஊட்டிய  அம்மாக்கள்  நிறைந்தது நமது தேசம். பூரண நிலாவை பிடிக்காத்தவர்கள் இன்னுமே பிறக்கவே இல்லை எனலாம்.  அதிலும் சித்ரா பௌர்ணமி விசேஷமானது. 
எத்தனையோ நாட்கள் மொட்டை மாடியில் பல மணிநேரம் நிலவைப் பார்த்துக்கொண்டு எனக்கு நானே பாடிக்கொண்டு படுத்திட்டு ரசித்திருக்கிறேன்.  என் வீட்டில் நான்கு தென்னை மரங்கள். தென்னை ஓலை காற்று அசைந்து சுகமான தென்றலில் ஆடும் ஓசை இனிமையானது. அது வீசும்  குளிர்ந்த காற்றில்  இயற்கை  AC அனுபவித்திருக்கிறேன். . வானத்தில் நக்ஷத்திரம் அங்குமிங்கும் எங்காவது தெரியும். மறையும்.  வடக்கு வானத்தில் திருசூலத்திலிருந்து புறப்படும்   விமானங்கள் சத்தம்  போட்டு  என்னை மேலே பார்க்க வைக்கும். பூர்ண சந்திரன் வட்டவடிவமாக  மஞ்சள் கலந்த  ஆரஞ்ஜு  நிறத்தில் கிழக்கே  வானத்தில்  தோன்றியபோது  வணங்கி இருக்கிறேன்.  வானத்தில் அழகாக வட்டமாக முழு நிலா. பகலின்  வெப்பத்தை அற்புதமாக இரவில்  தணிப்பவன்  பூரணச்சந்திரன்.

எல்லோருக்கும் எல்லாமும் அமைவது அபூர்வம்.  ''நல்ல'' மனைவி என்ற வார்த்தை சொல்லவே மாட்டேன். நாம் நல்ல கணவன் மார்களாக நடந்து  கொண்டால் எந்த தாலி கட்டிய பெண்ணும் நல்ல மனைவி யாகவே மாறிவிடுவாள் ''நல்ல கணவனாக'' என்று சொல்லும்போது தான் சிக்கல் வரும்.   ப்ரம்ம தேவனால் கூட அதற்கு விளக்கம் சொல்லமுடியாது. மனைவியின் எதிர்பார்ப்புகள் பொறுத்து தான் அதை நிர்ணயம் செய்ய முடியும்.

யமதர்ம  ராஜனுக்கு  சித்ரகுப்தன்  வலது கை . அவனைப் போல் ஒரு அஸிஸ்டண்ட்  அமைவது அபூர்வம்.  ராமகிருஷ்ண ருக்கு விவேகானந்தர்.  சாமுவேல் ஜான்சனுக்கு ஒரு போஸ்வேல், ராபின்சன் க்ரூஸோவிற்கு ஒரு வெள்ளிக்கிழமை,(man Friday )   ராமனுக்கு ஒரு  ஹனுமான்.   மோடிக்கு  ஒரு  அமித்ஷா போல என்று அடுக்கிக் கொண்டே  போகலாம்.    யமதர்ம ராஜனின் நம்பகமான கணக்காளன் சித்ரகுப்தன். இவனுக்கும்  மௌரிய வம்சத்து சந்திரகுப்தன், சமுத்திர குப்தன் ஆகியோருக்கு எந்த ஸ்நானப் ப்ராப்தியும்  கிடையாது. அவன் க்ஷத்திரியன் இல்லை. தேவலோக வாசி. காமதேனு புத்ரன். 
பார பக்ஷமில்லாமல்  பூலோக வாசிகளின் வாழ்க்கை குறிப்பு எடுத்து வைத்திருப்பவன்.  கொரோனா வந்த பிறகு சித்ரகுப்தனுக்கு  எக்ஸ்ட்ரா வேலை.   அவன் கணக்கிலோ கண்ணிலோ  நாம் படாதவரை  நமக்கு  க்ஷேமம்.  இவன் குறிப்பின்படி தான் யமதர்மன் அந்தந்த ஜீவன்களுக்கு  அவர்கள்  செய்த   பாப புண்ய காரியங்களுக்கு தக்கவாறு  தீர்ப்பு தண்டனை வழங்குவான்.

இப்படிப்பட்ட  அருமையான  சித்ரகுப்தனை நாம் ஏன்  நினைப்பதே இல்லை?. அவனும் அது பற்றி கவலைப்பட வில்லை.   இடறி விழுந்தால்  ஏதோ ஒரு சிவன்,  பெருமாள்  கோவில் மேல் தான் விழவேண்டுமென்ற அளவில் நிறைய கோவில்கள் உள்ள காஞ்சியில் இந்த  சித்ரகுப்தனுக்கு ஒரு குட்டி கோவில் இருக்கிறது. நான் சென்று தரிசித்திருக்கிறேன்.  சித்ரகுப்தன் சூரியன் பிள்ளை, எமதர்மனின் தம்பி.    கேது கிரஹ அதிதேவதை அவன். பௌர்ணமி அன்று   அவன் கோவிலில் பக்தர்கள் ரொம்ப வருவார்கள். சித்ரா பௌர்ணமி அன்று கேட்கவே  வேண்டாம்.  உள்ளே நுழையவே வெளியே வெகுநேரம்  ஹனுமார் வால்  போல  நீளமான  வரிசையில்  காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம்.  காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ள  அதிசய  புராதனமனா சின்ன  கோவில் இது.  ஒன்பதாம் நூற்றாண்டு சோழன் யாரோ சித்ர குப்தனை நினைத்திருக்கிறான். அவன் கட்டிய அதிசய கோவில் இது.

மூன்றடுக்கு ராஜகோபுரம்.  உள்ளே சித்ரகுப்தன் அமர்ந்துகொண்டு ஒரு கையில் எழுத்தாணி இன்னொன்றில் சுவடு. எப்போதும் கடமையில்  ஈடுபட்டு  வேலையில் மும்முரமாக  இருக்கிறான். கர்ணிகாம்பாள் சமேதன். இன்னொரு சேதி. சித்ரகுப்தனுக்கு மூன்று தேவியர்கள்.  கர்ணிகாம்பாள்,பிரபாவதி, நீலாவதி.  சித்ர குப்தன் ஊர்  அமராவதி . அவன் மனைவி கர்ணிகாவின் எட்டு குழந்தைகள் தான் பிற்காலத்தில் கர்நாடகாவில் வசிக்கும் கருணீகர்களின் முன்னோடிகள் என்பார்கள். ஆதம்பாக்கத்தில் கருணீகர்  வீதி என்று பிரபலமான தெருவுக்கு அடிக்கடி போயிருக்கிறேன். 

தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட 14 கோவில்கள் சித்ரகுப்தனுக்கு. காஞ்சிபுர கோவிலில் சித்ரவேலைப்பாடு நேர்த்தி.
 ஒரு தடவை சென்று பாருங்கள், அப்படியாவது நம்மை பற்றி அவன்  நாலு வார்த்தை நல்லதாக எழுதட்டுமே .  
 சித்திரை பவுர்ணமிக்கு முன்னால் சித்ரகுப்தர் -கர்ணிகா  அம்பாள்  கல்யாண உத்சவம் நடக்கும்.  கர்னிகாவுக்கு வேறு பெயர்  சித்ரலேகா.   கல்யாணமாகி, சித்ரகுப்தன்  பவுர்ணமி அன்று நகர்வலம் வருகிறார். திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழ்ந்துவருகிறார்கள். இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோக்ஷமும் எளிதில் கிடைக்குமாம். 

ஒருநாள்  வழக்கம் போலவே  கைலாசத்தில்  சிவ பெருமானும், பார்வதியும் அமர்ந்து  பேசிக்  கொண்டிருக்கிறார்கள். 
 ''தேவி! அவரவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை எழுதி வைக்க ஒருவனை உருவாக்கி வைக்க நேரம் வந்து விட்டது 
''ஆம்! சுவாமி'' என்றார் பார்வதி
உடனே இருவரும் பிள்ளை வரம் வேண்டி கடும் தவமிருக்கும் தேவேந்திரனுக்கும், இந்திராணிக்கும் காட்சியளித்து ''இந்திரா! கவலைப்படாதே! உன் எண்ணம் நிறைவேறும். மகிழ்ச்சியுடன் போ'' என்று ஆசி கூறி அவர்களுடன் தெய்வப்பசுவான காமதேனுவை  பசுங் கன்றாக மாற்றி உடன் அனுப்பி வைத்தார்.
''தேவி! ஒரு தங்கப்பாகையும், சித்திரக்கோலும் கொண்டு வா! என்றார் சிவன்.
அவற்றை  உடனே அம்பிகை கொண்டு வந்தார் சிவபெருமான் வண்ணங்களை குழைத்து தூரிகைகளால் தன்னைப் போலவே ஒரு உருவத்தை பலகையில் வரைந்தார் அம்பிகை அந்த ஓவியத்தை உயிர்பிக்க கருணை ததும்பும் கண்களால் பார்த்தார்.
 ''சுவாமி! நீங்கள் வரைந்த இந்த ஓவியக் குழந்தையை நீங்களே கூப்பிடுங்கள்'' என்றார்.
சிவபெருமான் தன் கைகளை நீட்டி  ''சித்ர குப்தா வா '' என உள்ளம் நிறைந்த அன்போடு கூப்பிட்டார். ஓவியக் குழந்தை உயிர்பெற்று எழுந்தது.  குப்தன்  என்றால் கணக்குப்பிள்ளை என்றும் ஒரு அர்த்தம் உண்டு.  அம்மையப்பனான  பார்வதி பரமேஸ்வரனை வணங்கியது. பரமேஸ்வரன் அந்த சித்ர  குழந்தையின்   சிரத்தில்  தனது கரங்களை வைத்து  ஆசீர்வாதம் செய்து சித்திரத்தில் இருந்து பிறந்ததால் சித்ரகுப்தன் என பெயரிட்டார்.
''குழந்தாய் நீ நீடூழி வாழ்வாய்,  எல்லா ஜீவராசிகளும் அவரவர் செய்யும் எல்லா செயல்களையும் நீ ஒன்று விடாமல் கவனித்து பாவ, புண்ணிய கணக்கு எழுதும் வேலையை செய்து வா,  இந்திராணி மாளிகை தடாகத்தில் நீ ஒரு பூவாக இரு.  காமதேனு தண்ணீர் குடிக்கும் போது பூவான உன்னையும் சேர்த்து உண்ணும் அதன் வயிற்றில் இருந்து சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் ஆதி வாரம் பிரம்ம முகூர்த்தம் (திங்கள்) அன்று நீ குழந்தையாக அவதரிப்பாய் .அதனால் இந்திரனின் குழந்தை இல்லா குறையும் தீரும்'' என்றார். ஆகவே  இந்திராணி பராமரிப்பில் இருந்த காமதேனு  தண்ணீர் குடிப்பதற்காகத் தடாகத்துக்குச் சென்றது குளத்தில் தாமரைப் பூவாக மாறி இருந்த சித்தரகுப்தனை அந்தப் பசு ஆர்வத்துடன் தின்றது.
சிவபெருமான் அருளாசியால் அந்தப் பசுவுக்கு வயிற்றில் ஏடும், எழுத்தாணியும் கொண்டு சித்திரகுப்தன் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் ஆதி வாரம் பிரம்ம முகூர்த்தத்தில்   மகனாய் அவதரித்தார் .சித்திரம் என்றால் ஓவியம். குப்தன்  என்றால்  ரஹஸ்யன் .

மனிதன் உயிருடன் இருக்கும் போது செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்றவாறு அவனுடைய இறப்புக்குப் பின்பு, அவனுடைய  ஜீவன்  அதற்கான பலன்களை அடைகிறது. அவன் செய்த நற்செயல்களுக்கு நற்பலன்களையும், தீயசெயல்களுக்குத் தண்டனைகளையும் அந்த   ஜீவன் அடைகிறது.

இந்தப் பூமியில் நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் இறைவன் சிவபெருமான் சித்ர குப்தரைக் கொண்டு கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார். தெரியாமல் செய்த தவறு களை மன்னிக்க வேண்டியும், இனி எந்தத் தவறையும் செய்யப் போவதில்லை என்பதை உறுதியாகக் கொண்டும் சித்திரகுப்தனை நாம் வழிபட வேண்டும்.  ஜீவனுக்கு  தீய செயல்களில் இருந்து விடுவிப்பு கிடைப்பதுடன், அந்த  ஜீவன்   நரகம் செல்லாமல் காப்பாற்றப்பட்டு சொர்க்கத்துக்கு அனுப்பப்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. சித்ரகுப்தரை வணங்குபவர்கள் கேதுவால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும் விடுபடு வார்கள்.
காஞ்சிபுர  சித்ரகுப்தன் கோவிலில்  மூலவராக  உட்கார்ந்து கொண்டும், , உத்ஸவராக நின்ற  நிலையிலும் சித்ரகுப்தன் அருள்பாலிக்கிறார்.   இந்தக் கோயில், கருணீகர் மரபினரால் நிர்வகிக்கப்படுகிறது.சித்ரா பௌர்ணமிதோறும் இந்திரனே இந்த ஆலயத்தில் வந்து பூஜிப்பதாக   ஐதீகம்.  
 பிராமண நித்ய கர்மானுஷ்டானத்தில் யமவந்தனம் என்று ஒன்று, சாயங்கால  வேளையில்   அஸ்தமனத்த்தில்   சூரியன் மறையும் முன் ஸந்த்யாவந்தனத்தில்  செய்வது.
அதில் மரணத்தைப் பற்றி - அதாவது யமனைப் பற்றி ஓர் ஸ்லோகம் தான்  ''வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:''
வ்ருகோதரன் என்றால்  ஓநாய் போன்ற பெரிய வயிறு உடையவன் என்று பொருள். மரணம் ஒரு கட்டத்தில் எல்லா உயிர்களையும் உண்டு விடுகிறது. மரணத்தின் வயிறு பெரிது என்று சொல்வது ஒரு கவித்வ அழகு.  மரணத்தை அழகானவன் என்று வர்ணனை. நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு மரணம் அழகான நண்பன்.

சித்ரகுப்தன் என்றால் நம் பாவ புண்ணியங்களைக் கணக்கு வைத்துக்கொள்பவன் என்று தப்பர்த்தம் செய்து கொண்டு விட்டோம். யமனுக்கு வடமொழியில் சித்ரகுப்தன் என்று ஒரு பெயர். குப்த என்றால் ரகசியம். சித்ர என்றால் அழகான மரணம். ஓர் அழகான ரகசியம். அதற்குரிய காலம் வரும்போது அதைத் தெரிந்து கொள்ளலாம். இப்போது வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு ராஜா  ஒரு சந்யாசியை வணங்கி  வேண்டினான்
''ஸ்வாமி எனக்கு ஆசிர்வாதம் பண்ணுங்கள்''
"உன் தந்தையார் சாவார், அப்புறம்  நீ  சாவாய், உன் பிள்ளை  மகன் இறப்பான்.  அப்புறம் அவன் பிள்ளை,  உன்பேரனும் இறப்பான்''
சந்நியாசி இப்படி  ஆசிர்வதித்தால்  ராஜாவுக்கு எப்படி இருக்கும்.   ரொம்ப  கோபத்தில் கண்கள்  சிவந்தது.மீசை துடித்தது. "இப்படியா ஒருவனை வாழ்த்துவது?'' என்று பொங்கி எழுந்து உரக்க கேட்டு விட்டான்.
" இல்லை ராஜா, இதுதான் உச்சகட்ட மகிழ்ச்சி. யாருமே நிரந்தரமாக வாழ முடியாது. முதலில் நிறைவாக வாழ்ந்துவிட்ட உன் தந்தை இறக்க வேண்டும். அதன்பின் நீயும் நிறைவாக வாழ்ந்து இறக்க வேண்டும். இப்படி வரிசைக் கிரமத்தில் மரணம் நிகழுவதுதான் பெரிய வரம். இந்த வரிசை கொஞ்சம் மாறினால் அதனால் நடக்கும் விபரீதங்களைச் சிந்தித்துப் பார். உன் தந்தை உயிருடன் இருக்கும்போது நீ மாண்டால் அந்தப் புத்ர சோகத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா?''

சந்நியாசியின் வாக்கு  ராஜாவுக்கு புரிந்து அவன் சாந்தமானான்.  நிறைவாக வாழ்ந்து விட்டவனுக்கு ஆசை இருக்காது. ஆசையில்லாத மனிதனை மரணத்தால் பயமுறுத்த முடியாது. தன் வாழ்க்கையில் விரும்பியதையெல்லாம் செய்து முடித்தவனை   "க்ருதக்ருத்யன்'' என்று மகாபாரதம் சொல்கிறது. அப்படிப்பட்டவனுக்கு மரணம் ஓர் இனிய நண்பன் என்றும் சொல்கிறது. காயஸ்தர்கள்  என்ற  வம்சம்  சித்ரகுப்தன் வம்சாவழி  என்பார்கள்.

chithra 3.jpeg
chitrhra. 2.jpg
full moon.jpg

sivan jaykay

unread,
May 12, 2025, 8:17:18 PM5/12/25
to amrith...@googlegroups.com
அம்மாவுக்கு ஒரு தினம்   - நங்கநல்லூர்  J K SIVAN

இன்று   உலக அம்மா  தினமாம்.  அதாவது  வருஷத்தில் ஒருநாள், அதாவது இன்று  ஒருநாள்  எல்லோரும்  அம்மாவை நினைத்து வாழ்த்தவோ ஏதோ செய்ய  ஒரு சந்தர்ப்பமாம்.  அடப்  பாவிகளா, அம்மாவைபற்றி தெரிந்தது அவ்வளவு தானா?.  என்றோ ஒருநாள் வருஷத்தில்  அம்மாவுக்கா?  இந்நாள் மட்டும் இல்லை, எந்நாளுமே அம்மா அம்மா தானடா.  மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசையில் முதலில் அம்மா தான்.  என் கம்ப்யூட்டர், மொபைல் ரொம்பி வழிகிறது. அம்மா தினத்தை பற்றி செயதிகள் படங்கள், குட்டி குட்டி செய்திகள், வாழ்த்துக்கள், அம்மா பெருமை பொம்மைகள். தொப்பி போட்ட குரங்கு டமாரம் அடித்துக்கொண்டே சிரிக்கிறது.. கம்ப்யூட்டரில் என்னென்னவெல்லாம்  தகிடு தத்தம் நடக்கிறது. குரங்குக்கும் அம்மா உண்டே. அதற்கும் அம்மாவின் வயிற்றைக் கட்டிக்கொண்டு மரத்துக்கு மரம் தாண்டின, தாவிய அனுபவம் என்றும் உள்ளதே .
அது என்ன   ஒருநாள் மட்டும் அம்மா தினம். அம்மாவுக்கு ஒரே ஒரு தினம் போதாதே . இது நியாயமில்லையே. வாழ்நாள் பூரா ஒவ்வொரு கணமும் நன்றிக்  கண்ணீரோடு நினைக்க வேண்டியவளுக்கு வருஷத்தில் ஒரு நாள் ஒதுக்குவது அக்கிரமம்.  இருந்தாலும் எனக்கு சந்தோஷம்... பரவாயில்லை ஒரே ஒரு நாளாவது அம்மாவை நினைக்கலாமே என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்து.

அம்மா படித்தவளாக இருக்கவேண்டாம். அழகே தேவையில்லை. அவள் யாராக இருந்தாலும் அவள் தியாகத்தால் உருவானவள். தனக்கென எதையும்  வைத்துக்கொள்ளாதவள்.  உங்களையும் என்னையும் போல் உலகில் பிறந்தவள் தான். ஆனால், தன்னுள் ஒரு சிசு பிறந்ததும் முழுதும் மாறிவிடுபவள் . இது தான் அம்மா 'அதிசயம்'  இதைத்தான் பகவான் ஒவ்வொரு பெண்ணிலும் புதைத்து வைத்திருக்கிறான். அது தானாகவே முளைவிட்டு அரும்பாகி விருக்ஷமாகிறது. அம்மா எனும் ஜீவன், அன்பு, எல்லை இல்லற பாசம், பரிவு, தன்னலமற்ற தியாகம் எல்லாம் தன் வயிற்றில் பிறந்த மற்றொரு ஜீவனுக்காகவே அர்ப்பணிக்கும் தெய்வம்.

ஐயா மார்களே,அம்மா மார்களே அம்மாவைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாமே. அலுக்காத ஒரு சப்ஜக்ட் அம்மா. ஒரு கதை சொல்லி நிறுத்திக்கொள்கிறேன். பதிவு நீண்டாலும் பரவாயில்லை. அம்மாவைப்  பற்றி  எவ்வளவு நீளமாக இருந்தாலும் படிக்கலாமே. 

நாம்  எல்லோரும்  யமனுடைய  பட்டினத்துக்கு  சீசன் டிக்கெட்  வைத்திருப்பவர்கள்.  அடிக்கடி போய் வந்து கொண்டே  இருப்பவர்கள்.  கர்மா எல்லாம் முற்றும் தீரும் வரை  இந்த  பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும்.

சுப்பு சாஸ்த்ரி வாழ்நாளில் ஒரு சில கோவில்களில் ராமாயணம் ,பாரதம், பாகவதம் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லி அதிகபக்ஷம் பத்து பேருக்கு மேல் கேட்க வராததை கண்டவர். உலக வாழ்க்கை முடிந்து மேலுலகம் சென்றார். மீண்டும் பூவுலகில் மனிதப்  பிறவி எடுக்கவேண்டிய நேரம் வந்தது.

சுப்பு சாஸ்திரி எப்பவும் கிருஷ்ணா கிருஷ்ணா என்று போன பிறவியில் நினைத்து இறந்ததும் மேலே கிருஷ்ணனோடு தொடர்பில் இருந்தவர். அதனால் ''மறுபிறப்பு'' தீர்ப்பு  வந்ததும் ரொம்பவும் வருத்தம்.   கிருஷ்ணனைக் கேட்டார்.

''கிருஷ்ணா,  நான் அவசியம் மறுபடியும் பூவுலகில் குழந்தையாக பிறக்கவேண்டுமா  ''
'ஆமாம்''
நாள் ஓடியது.   குழந்தை (பழைய சுப்பு சாஸ்திரி) ஒரு வயிற்றில் வளர்ந்தது. பிறக்க வேண்டிய நேரம் வந்தது. அது கேட்டது.''
''நாளைக்கா நான் பிறக்கப்போகிறேன்? இவ்வளவு சின்னக்குழந்தையாக இருக்கிறேனே கிருஷ்ணா, நான் எப்படி வாழ்வேன்?''
''உன்னை தவிக்க விட்டு விடுவேனா? ஒரு நல்ல தேவதையை உன்னை ஜாக்ரதையாக பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறேனே?''
''நான் ஏதோ பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இங்கே உன்னோடு இருந்தேனே... எதற்கு எனக்குப் போய்........''
''கவலைப் படாதே. உனக்காக அந்த தேவதையே ஆடும் பாடும் சிரிக்கும். போதுமா?''
குழந்தையாக வளர்ந்து வரும் சுப்பு சாஸ்த்ரியின் கவலை முகத்தில் தெரிந்தது.மெதுவாக கிருஷ்ணனைக்  கேட்டார்.
''எனக்கு பூலோக பாஷை தெரியாதே எப்படி பேசுவேன், புரிந்து கொள்வேன் ?''
''இப்படி உனக்கு கவலை வரும் என்று தெரிந்து தான் அந்த தேவதை உன்னோடு பேசி, பாடி உனக்குப் பேசக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்''
''மீதி பேரோடு பேசுவது இருக்கட்டும், கிருஷ்ணா, உன்னோடு எப்படிப் பேசுவேன்?''
''உனது ரெண்டு கையும் சேர்த்து கூப்பி  மனதில்  என்னை நினைவில்  வைத்துக்கொள்ள அந்த தேவதை கற்றுக் கொடுக் கும்'. அது தான் என்னோடு பேச சுலப வழி. '
''பூலோகத்தில் கொடூரமான ஆசாமிகள் இருக்கிறார்களாமே. நான் எப்படி பிழைப்பேன்?''
''அந்த தேவதையிடம் இதைப்  பற்றியும் சொல்லியிருக்கிறேன். தன் உயிரைக் கொடுத்தாவது உன்னைக் காப்பாற்றும். உனக்கு பயம் ஏன்?''
''கிருஷ்ணா, எனக்கென்னமோ இங்கிருந்து உன்னை விட்டு போக மனமே இல்லை''
''கவலையை விடு. அந்த தேவதை என்னைப்பற்றி உனக்கு ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கும். எப்படி என்னை மீண்டும் சேர்வதென்று சொல்லித்தரும்.''

இப்படி பேச்சு நடக்கும்போது, சுப்பு சாஸ்த்ரி ஒரு குழந்தையாக பிறக்கும் நேரம் வந்துவிட்டது. ஏகப்பட்ட சத்தம் பூமியில் அவர் அவதரித்த வீட்டில் கேட்டது. எல்லோரும் ஆவலாக குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருந்தனர். என்னென்னவோ பேசினார் கள் . அடிக்கடி கடிகாரத்தை பார்த்துக் கொண்டி ருந்தனர்.

.''கிருஷ்ணா நான் பிறக்கும் நேரம் வந்துவிட்டது போல் இருக்கிறது. முக்யமாக கேட்க மறந்து விட்டேனே? அதுசரி, யார் அந்த தேவதை, அதன் பெயர் என்ன?''

''அதன் தனிப்பட்ட  பெயர் உனக்கு அவசியமில்லை. உலகமுழு தும் அதற்கு  பொதுவாக  ''அம்மா'' என்று தான் பெயர், அம்மா என்று கூப்பிட்டாலே அது ஓடி வந்து உனக்கு சகல பணிவிடைகளும் செய்யும். ஏன், உனக்கு அப்படி கூப்பிடத் தெரிவதற்கு, பேச்சு வரப்பிக்குவதற்கு  முன்னாலேயே கூட, நீ கூப்பிடாமலேயே அது தன்னை உனக்கு அர்ப்பணிக்கும். ''

சுப்பு சாஸ்திரிக்கு மட்டும் அல்ல, எந்த குழந்தை பிறந்தாலும் அதற்கு அவன் நியமித்த தேவதை தான் அம்மா. அவள் எந்த ரூபத்திலும் இருப்பாள்.    கிருஷ்ணா உனக்கு நன்றி எப்படி சொல்வது?
அடுத்த பதிவில்  ஆதிசங்கரர்  அம்மாவைப் பற்றி அழுவது காது கேட்கும். காத்திருப்பீர்களா?

sivan jaykay

unread,
May 12, 2025, 8:17:19 PM5/12/25
to amrith...@googlegroups.com

அம்மா தினம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

'' அம்மா இங்கே வா வா  ஆசை முத்தம்  தா தா..'' ஒருவர் தப்பாமல் நாம்  எல்லோருமே  குழந்தைகளாக இருந்தபோது பாடிய  முதல் பாட்டு இது.  அம்மா  தெய்வம். இன்றியமையாத ஜீவன்.  உலகத்தில் அம்மா தினம் வருஷா வருஷம் நல்லவேளை  ஒருநாளாவது  கொண்டாடுகிறார்கள்.  அம்மாவை நினைக்க தோன்றியதற்கு  கிருஷ்ணா  உனக்கு ஆயிரம்  நமஸ்காரம்.

' ஹே, வெள்ளைக்காரா,  அம்மாவைப் பற்றி நினைக்க வருஷத்தில் ஒரு நாள்  அவளுக்கு ஒதுக்கிய  நீ  சத் புத்ரன்.  வீட்டிலேயே இருந்தும், ஊரில் இருந்தும், உயிரோடு இருந்தும்   அம்மா ஞாபகம்  இல்லாத   எங்களில் பலரை விட  நீ  உயர்ந்தவன்.

 அம்மா'' --- இந்த வார்த்தைக்கு மிஞ்சிய சக்தி வாய்ந்த ஒரு சக்தி வாய்ந்த  சொல் தமிழில்  கிடையாது. அம்மா ஸ்தானத்தில் ராஜாவின் அம்மாவும் பிச்சைக்காரனின் அம்மாவும் ஒரே நிலையில்  தான். உலகில் முதன்மை யானவள்  ப்ரத்யக்ஷ தெய்வம்  அவள்.  'மாத்ரு தேவோ பவ : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்: தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை..... இன்னும் நிறைய....மாதா,   பிதா, குரு  தெய்வம்''  என்று முன்னிலையில்  இருப்பவள். என் அம்மா ஜம்பாவதி பற்றி அடிக்கடி எழுதுவேன்.  அதைப் படித்து பிடித்தவர்கள் அவர்கள் அம்மாக்களைப்  பற்றி நினைக்க தோன்றினால் அது நான் செய்த புண்யம். என் அம்மாவுக்கு நான் செய்த நன்றிக் கடன். 

''அம்மாவைப் பற்றி எழுதினால் யாருக்கு தான் பிடிக்காது. எத்தனை தரம் படித்தாலும் விருப்பும் விறுவிறுப் பும் பாசமும் பழைய ஞாபகமும் குறையுமா?.  ஆதி சங்கரர் போன்ற முற்றும் துறந்த சந்நியாசிக்கு கூட அம்மாவை  ரொம்ப  பிடித்தது.   அவருடைய மாத்ரு பஞ்சகம் என்ற ஐந்தே ஐந்து ஸ்லோகங்கள் ஐந்து யுகங்களிலும் அழியாத ஒன்று. அதை பலமுறை எழுதினாலும் இன்றும்   மீண்டும்  சொல்கிறேன்.

''என் கண்ணே, சங்கரா,  எனக்கு  இருப்பது நீ ஒருவனே. உன் தகப்பனாரும் என்னை விட்டுச் சென்று விட்டார். பல வருஷம் தவமிருந்து திருசூர் வடக்கு நாதன் அருளால் நீ பிறந்தாய். கண்ணை இமை காப்பது போல் உன்னை வளர்த்தது நீயும்  உயிரோடு இருப்பதற்காக உனக்கு சன்யாசம் அளித்தேன். என்னை விட்டுபிரிந்து போவதற்காகவா உன்னைப்  பெற்றேன். நீ சந்நியாசியாவது   நீ  உயிருடன் இருந்தாலு,  நான் உன்னை உயிருடன் இழப்பதற்கல்லவோ சமமாகும்?'' என்று கதறினாள் ஆர்யாம்பா.

'' என் அருமை அம்மா, நீ தாய் என்பதோ நான் ஒரு நேரத்தில் உன் மகன் என்பதோ பிரிபடும் உறவோ? உடலால் பிரிந்தாலும் உள்ளத்தால் நாம் இதயத்தில் ஒன்றாகவே தானே இருப்போம். உன் மனத்தில் இருக்கும் அந்த இறைவன் தான் என் மனத்திலும் இருப்பவன் அல்லவா? நான் எங்கிருந்தாலும் நீ தான் என் மனதில் முழுவதுமாக இருப்பாய்''.தாயின் அனுமதி பெற்று விட்டு ஒரு நிபந்தனையுடன் சன்னியாசி யானான் 7 வய து மகன் சங்கரன்..

''சங்கரா, என்  குழந்தே, நீ என் மரணத் தருவாயில் என் அருகில் இருக்க வேண்டும். உன் கையால் தான் எனக்கு தகனம். செய்வாயா? சரி என்றால் நீ என்னை விட்டு செல்லலாம் ''.
''நிச்சயம்  அம்மா,  அப்படியே ஆகட்டும்.

வருஷங்கள் உருண்டது. அந்த சந்நியாசி ஸ்ரிங்கேரியில் இருக்கும்போது அன்னையின் அந்திம காலம்  நெருங்கிவிட்டதை ஞான திருஷ்டியில் உணர்ந்தார். திரிகால ஞானி அல்லவா அவர்? அம்மாவுக்கு கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்தது.

இறைவன் அருள் மிக்க அந்த ஞானி அடுத்த கணமே  அம்மா  இருந்த கேரள தேச  காலடி கிராமத்தில்  தாயின்  காலடியில் வணங்கி அருகே அமர்ந்தார். மடியில் இருத்தி க்கொண்ட அம்மாவின் தேகத்தில்  கண்கள் மட்டுமே ஏதோ  பேசின. கொஞ்சம் கொஞ்சமாக உடல் ஒவ் வொன்றாக சக்தியை இழந்து வந்தது. நினைவு தப்பியது. சிறிது நிமிஷங்கள் கசிந்தது. மரணம் அவளை முழுவதுமாக ஆட்கொண்டது. தாய் வெறும் உடலானதை உணர்ந்த அந்த துறவி, அவளுக்கு அந்திம கடன்களை ஆசாரத்தோடு சாஸ்த்ரோக்தமாக செய்தார். எப்படி? ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையே.   துறவிக்கு  ஏது குடும்ப  உறவு  என்று எல்லோரும்   எள்ளி நகை யாடினர்.

துறவியின் மனத்திலிருந்து, எண்ணக் குவியல்கள் , பால்ய ஞாபகங்கள்  எரிமலையாய்  வெடித்து வாய் வழியே கடல் மடையென ஐந்து ஸ்லோகங்கள் அப்போது வெளியேறியது . அந்த ஞானியின் மற்ற காவியங்களிலிருந்து முற்றிலும்  மாறுபட்டது இது.  இதில்  தாய் பாச  ஏக்கம் பொங்கும். உறவும் நினைவும் தொக்கி நிற்கும். அதுவே இன்றும் என்றும் அழியாத காவியமாக  உள்ளது.

தாயைக் கடவுளாகவே போற்றுவதும்  கடவுளைத் தாயாக  அணுகுவதும் ஒன்றே. உலகில் ஒரு தாய்க்கு  தான் மகனாகப் பணி புரியவில்லையே என்ற ஏக்கம் எத்தனை மகன்களுக்கு தோன்றுகிறது?. முக்கியமாக அவள் இருக்கும்போது.  கவனிக்காமல் விட்டதை  மனசாக்ஷி சாட்டையால் அடித்து  நொறுக்கும். உறுத்தல்  நெருடும்.

आस्तं तावदियं प्रसूतिसमये दुर्वारशूलव्यथा नैरुच्यं तनुशोषणं मलमयी शय्या च संवत्सरी ।
एकस्यापि न गर्भभारभरणक्लेशस्य यस्याक्षमः दातुं निष्कृतिमुन्नतोऽपि तनयस्तस्यै जनन्यै नमः ॥ १॥

''ஆஸ்தம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம : தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:

''என் அம்மா! என்  சிரசு, தலை,  உன்னிலிருந்து வெளிப்படும் போது என்னமாக பல்லைக் கடித்துக்கொண்டு தாங்க முடியாத பிரசவ வலியைப் பொறுத்துக்கொண்டு என்னை உலகில் வெளியே தள்ளினாய் , வருஷக் கணக்காய் உன் அருகே படுத்து உன் ஆடையை, படுக்கையை தாராளமாக  நிறைய  ஈரமாக்கி  நனைத் தேனே. ஒரு வார்த்தை நீ கோவித்ததில்லையே . மாறாக சிரித்து  அல்லவரோ ஆசையாக என்னை அணைத்தாய்.   என்னால் உன் உடல் இளைத்தது, சக்தி இழந்தது. பல இடங்களில் வலி கண்டது. ஒரு பத்து மாச காலம் என்னமாய் நான் உன்னை படாத பாடு படுத்தினேன். இதற்கு என்ன கைம்மாறு, பரிகாரம், செய்வேன்.  உலகம் என்னை பெரிய  ஞானி  என்று  புகழ்வதால் அது  ஸ் சரியாகிவிடுமா, ஈடாகுமா?

गुरुकुलमुपसृत्य स्वप्नकाले तु दृष्ट्वा यतिसमुचितवेशं प्रारुदो मां त्वमुच्चैः । गुरुकुलमथ सर्वं प्रारुदत्ते समक्षं सपदि चरणयोस्ते मातरस्तु प्रणामः ॥ २॥

''குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம் ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II

என் அம்மா!! திடீரென்று ஒருநாள் நான் காவி உடுத்திக்கொண்டதாக கனவு கண்டாய். அது எவ்வாறு உன்னை உலுக்கியது. கண்ணீர் கங்கையாய் பெருக  அலறிப் புடைத்துக்கொண்டு என் குருகுல வாச ஆசான் வீட்டுக்கு ஓடிவந்தாய்.என்னைத் தேடினாய்,  நான் உடுத்திக்கொண்டிருந்த  என்இடுப்புத் துண்டை தான் முதலில் கவனித்தாய். வெள்ளையாக தான் இருந்தது. காவி இல்லை.. அப்பாடா, என்று  நிம்மதியாக   என்னைக் கட்டிக்கொண்டாய் .உச்சி முதல் பாதம் வரை நீ  தடவிக் கொடுத்தது நினைவுக்கு வருகிறதே. என்னோடு படிக்கும் மற்ற பையன்களும் என் ஆசானும் கூட உன்னோடு  சேர்ந்து அழுதது இப்போது நடந்தது போல் இருக்கிறதே. நான் என்ன செய்யமுடியும்?. பேசாமல் உன் காலில் விழுகிறேன். மனப்பூர்வமாக வணங்கு கிறேன்.

अंबेति तातेति शिवेति तस्मिन्  प्रसूतिकाले यदवोच उच्चैः । कृष्णेति गोविन्द हरे मुकुन्द  इति जनन्यै अहो रचितोऽयमञ्जलिः ॥ ५॥

''அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்  ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே - த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II

ஒ ! என் அம்மா ! உனக்கு ப்ரஸவ வலியெடுத்த போது நீ என்ன கத்து கத்தினாய் ஞாபக மிருக்கிறதா? '' அப்பா, அம்மா ! தேவாதி தேவா,   பரம சிவா, தெய்வமே, கிருஷ்ணா, கோவிந்தா, ஸ்ரீ ஹரி, பகவானே, முகுந்தா ''
அதற்கு  ஈடாக  நான் இப்போது என்ன செய்யப்போகிறேன் தெரியுமா ? என் அன்புள்ள அம்மா, பணிவோடு கண்ணீர் மல்க  உன் காலில் விழப்போகிறேன்.

न दत्तं मातस्ते मरणसमये तोयमपिवा स्वधा वा नो दत्ता मरणदिवसे श्राद्धविधिना । न जप्त्वा मातस्ते मरणसमये तारकमनु-रकाले सम्प्राप्ते मयि कुरु दयां मातुरतुलाम् ॥ ३॥

''ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு: அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II

''என் தாயே, உனக்கு நான் ஒரே மகனாக, என்னவெல்லாம் செய்யவில்லை தெரியுமா? தவித்த வாய்க்குத் தண்ணீர் கூட தரவில்லை. உன் கடைசி யாத்திரைக்கு உபகாரமாக ஒரு விரலைக்கூட அசைக்க வில்லை. கடமை என்று ஒன்று இருந்ததா எனக்கு? போனதெல்லாம் போகட்டும் உனக்கு நினைவு அழியுமுன்னே அந்த அந்திம நேரத்தில் உன் காதில்  ''ஒ ராமா, ஸ்ரீ ராமா -- ஏதாவது ஒரு வார்த்தையாவது சொல்ல நான் இருந்தேனா? ஈடற்ற,   இணை கூற  முடியாத தாயே, இரக்கமற்ற என் மேல் கொஞ்சூண்டு இரக்கம் வை. என்  தவறையெல்லாம் மறந்துவிடு, மன்னித்து விடு. ஏதோ கடைசி, கடைசியாக வாவது உன் உயிர் பிரியும் சற்று நேரத்திற்கு முன்பாவது வந்தேனே. முடிந்ததைத் செய்தேனே. அதற்காகவாவது  என்னை மன்னித்து என்மீது கருணை காட்டு..

मुक्तामणि त्वं नयनं ममेति राजेति जीवेति चिर सुत त्वम् । इत्युक्तवत्यास्तव वाचि मातः ददाम्यहं तण्डुलमेव शुष्कम् ॥ ४॥

''முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத: ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II

''அம்மா, நீ நீடூழி வாழ்க. '' என் முத்தே, என் நவ நிதியே, என் கண்ணின் கருமணியே, என் ராஜா குட்டி, என் உயிரின் உயிரே,'' என்றெல்லாம் இட்டுக்கட்டி நீயாக ராகம் போட்டு என்னை இடுப்பில்  தூக்கிக்  கொண்டு  ஆடி,  மடியில் வைத்து கொஞ்சி பாடுவாயே, நான்  நன்றிக்கடனாக  இப்போது உனக்கு என்ன செய்கிறேன்?.  அன்பின் ஈரத்தோடு, பாசத்தின் பனித்துளி யோடு, கருணையின் குளிர்ச்சியோடு நீ பாடிய அந்த வாய்க்கு ஈரமில்லாமல் வறண்ட உலர்ந்த அரிசியைத்தான் கொஞ்சம் வாய்க்கரிசியாக போடுகிறேன்.''

ஆதி சங்கரர்  சந்நியாசி, ப்ரம்ம ஞானி, முற்றும் துறந்த துறவி, உலகம் போற்றும் அரிய அத்வைத முனி, மாத்ரு பஞ்சகம் எனும்  மேலே சொன்ன  ஐந்து ஸ்லோகமும் அவர் தாய் ஆர்யாம்பாவுக்குகொடுத்த வாக்கினைக் காப்பாற்ற காலடிக்கு  வந்து அவளது அந்திம கிரியைகளை செய்யும்போது பாடியவை.

நாம்  நமது தாய் தந்தையைப் பேண தவறவேண்டாம்.  காலம் கடந்து சங்கரர் போல் துடிக்க வேண்டாமே. அவர் சன்யாசி அதனால் ஒப்புக்கொள்ளலாம். நமக்கு மன்னிப்பே கிடையாது.  உலகத்தில்  எங்கெங்கோ  ஏதேதோ  காரணத்தால்  நகர  முடியாமல்  தவிக்கும் அம்மாவைக் காண துடிக்கின்ற, காண இயலாமல் தவிக்கும்  அன்பு உள்ளங்களே  பகவான் கிருஷ்ணன் உங்களுக்கு மன ஆறுதலை கொடுக்கட்டும். விரைவில் அம்மாவைப்  பார்த்து ஆசி பெற  உங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
+++

sivan jaykay

unread,
May 12, 2025, 8:17:39 PM5/12/25
to amrith...@googlegroups.com
   பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN

''கனவா நனவா ''

மஹா பெரியவாளை பத்தி நான் எது எழுதினாலும் அது  ''பேசும் தெய்வம்'' என்கிற  தலைப்பிலே  தான் கண்ணுக் கு தெரியும்.  இது வரை  ஏழோ எட்டோ  புத்தகம் எழுதி முடிச்சாலும் ரெண்டு தான் என்னாலே  அச்சடித்து வெளியிலே  கொண்டு வர முடிந்தது.

ஒரு புஸ்தகம் வெளியிலே வரணும் என்றால் குறைந் தது  எழுவது எண்பதாயிரம் ஆகும். கிட்டத்தட்ட  150-200  பக்கம். வண்ண கனமான அட்டை அவசியம்.  ஆயிரம்  பிரதிகள்  போட்டால் தான்  அச்சுக்கூலி கட்டிப்பிடி ஆகும்.

எங்கள் புத்தகங்கள் விலைக்கு விற்பதில்லை. NOT FOR  SALE  என்று தான் தெளிவாக போட்டிருப்போம். அதற் காக இலவசமாக  கிடைக்கிறதே என்று கைநீட்டி வாங்கி  பழைய பேப்பர் கடைக்கு போடுவர்களுக்கு தருவதற்கு யோசிப்போம்  .உண்மையாகவே ஆர்வத் தோடு படிப்பவர்களுக்கு,  நூல் நிலையங்களுக்கு,   முதியோர் இல்லங்களுக்கு இலவசமாக தருவோம்.

யார் வீட்டிலாவது விசேஷங்களுக்கு  RETURN GIFT  கொடுக்க   நன்கொடை கொடுத்து வாங்கிக்  கொண்டு போவார்கள் . இப்படி சேருகிற பணத்தில் தான் புத்தகம் அச்சிட முடிகிறது.  யாருக்கு வேண்டும் என்றாலும் கேளுங் கோ. நேரில் நங்கநல்லூர் வாங்கோ.

இதோ ஒரு பெரியவா அனுபவ விஷயம்  சொல்றேன். படியுங்கோ. ரொம்ப  நாளாச்சு நான் பெரியவாளைப் பத்தி எழுதி.

+++
 எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு, சோழவரம் பக்கத்துல ஒரு ஊர்ல  பள்ளிக்கூட வாத்யார் ஒருத்தர் இருந்தார்.  அவர் மஹா பெரியவாவின்  மானசீக பக்தர் அவர். அவரோட மனைவிக்கும்  பெரியவா தான் எல்லாமும்.  அவர்கள் இருவரும்  மஹா  பெரியவா  பேரைச் சொல்லாத நாளே கிடையாது.  பொழுது விடிவதே மஹா பெரியவா பேரோடு தான்.  அந்த தம்பதிகளுக்கு  மனசுலே  ரொம்ப நாளா ஒரு  ஏக்கம்  என்னவென்றால்,  அவர்களால்  காஞ்சிபுரம் போய்  மஹா பெரியவாளை  கண்ணாலே தரிசனம் பண்ண முடியவில்லையே,  என்னிக்காவது ஒரு நாள்  அந்த பாக்யம் கிடைக்காதா?''''  என்பது தான்.

 இப்போது  மாதிரி அவர்கள் காலத்திலேயே   பஸ்  கார்  வசதியெல்லாம் இல்லையே.  பள்ளிக்கூடத்தில் லீவ்  வேறு கிடைக்காது.    

இப்படியே நாள்,வாரம்,மாசம்,வருஷம்  என  காலம் ஓடிண்டு இருந்த நிலையில, ஒரு நாள் அந்த பக்தரோட  மனைவி  ஒரு விடியற்காலை  கனவு கண்டாள் . அதில்  மஹா பெரியவா அவளிடம்

 "என்னைப் பார்க்கணும்னு சதா ஏங்கிண்டு இருக்காதே. பகவானோட நாம சங்கீர்த்தனத்தைப் பாடிண்டு இரு. உங்க அகத்துல பூஜை பண்ண நானே வருவேன்!"

என்று வாக்கு கொடுத்தார்.  பெரியவா  சொன்னதைக் கேட்டதும் அப்படியே சிலிர்ப்போட எழுந்த அந்தப் பெண்மணி. பக்கத்துல  படுத்திருந்த  கணவரை எழுப்பி விஷயத்தைச் சொன்ன பொது  வாத்யாருக்கும்  மயிர்க் கூச்செரிந்தது.  கண்ணுலேர்ந்து ஆனந்த பாஷ்பம  பெருகியது. '
'ஆஹா  என்ன பாக்யம் நமக்கு''
விடியற்  காலை வேளைகளில் கண்ட கனவு  கட்டாயம் பலிக்கும் என சொல்வதுண்டு.
 ''நம்ப ஆத்துக்கு  கண்டிப்பா மஹா பெரியவாளே  வருவார்'  நம்பிக்கை வீண் போகாது என்பதால்  இருவருமே  பெரியவா வாக்கு பிரகாரம்  பகவானோட நாம சங்கீர்த்தனத்தைப்  பாடிக்கொண்டே  இருந்தார் கள்.

நாட்கள் தேய்ந்து  நகர்ந்தது. ஒரு துளி கூட அவர்களு டைய  நம்பிக்கை  குறையவில்லை.
'' மஹா பெரியவா கட்டாயம் நம் வீட்டுக்கு வருவார்''.,

ஒரு நாள் மத்தியான நேரம்.  வாத்யார்  வீட்டு  வாசலில் ரெண்டு பேர் வந்து நின்றார்கள்.  யாரோ வெளி ஆசாமி கள். பார்ப்பதற்கு  ரொம்ப   ஆசாரமானவர்களாக
தெரிந் தது.  அந்த ரெண்டு பெரும்  அங்கேயும் இங்கே யும்  தலையை திருப்பி   சுத்து முத்தும் திரும்பித் திரும் பிப் பார்த்து விட்டு விடுவிடுவென்று வாத்யார்  வீட்டுக் குள் நுழைந்து விட்டார்கள்.   வாத்யார்  பெயரைச் சொல்லி அவரைப் பார்க்கத்தான் வந்திருப்பதாக  சொன்னார்கள்.
''வாங்கோ, உட்காருங்கோ ''
"நாங்க ஸ்ரீமடம் முகாம்லேர்ந்து வரோம். மஹா   பெரிய வா  திருப்பதியில இருந்து மெட்ராஸுக்கு யாத்திரை பண்ணிண்டு இருக்கார். வழியில பல இடங்கள்ள தங்கி பூஜை பண்ணிட்டு யாத்திரையைத் தொடர்வார்.   அந்த வகையில  மஹா பெரியவா நாளைக்கு மறுநாள், இந்தப் பக்கமா வரப் போகிறார்.  அவர் ரெண்டு நாள் இங்கே தங்கறதா  உத்தேசம். உங்க ஆத்திலே மஹா பெரியவா தங்கிக்க அவருக்கு வேண்டிய  வசதிகளை  பண்ணத் தான்  இங்கே வந்தோம். உங்களுக்கு சம்மதமா'' ன்னு
 கேட்க தான் உள்ளே நுழைந்தோம். ...."

வந்தவர்கள்  சொல்லி முடிப்பதற்குள்ளேயே  வாத்யார்  தம்பதிகளுக்கு  காதில் தேன்  வந்து பாய்ந்தது போல் இருந்தது. அந்த சந்தோஷத்துல சகலத்தையும் மறந்து விட்டார்கள்.

"மஹா பெரியவாளோட திருவடி எங்க அகத்துல படற துன்னா, அதுக்கு நாங்க எத்தனையோ பிறவிகளிலே  புண்ணியம் பண்ணியிருக்கணும். இதோ இந்த க்ஷணமே எங்க அகத்தை உங்ககிட்டே ஒப்படைச்சு டறோம். நீங்க  பார்த்து எதை எப்படி பண்ணணுமோ அப்படி மஹா பெரியவாளுக்கு சௌகர்யமாக இருக்க எல்லா ஏற்பாடுகளும் பண்ணுங்கோ''

 இதை சொல்வதற்குள் அவர்கள்  உணர்ச்சி வசப்பட்டு திக்கு முக்காடினார்கள்.

மஹாபெரியவா அந்த ஊருக்கு  வரப்போறதும், ரெண்டு நாள் வாத்யார் வீட்டில் தங்கப்போகிறார் என்கிற விஷ யம் ஊர்க்காரர்கள்  எல்லாருக்கும் தெரிஞ்சுது. ஆளாளுக்குப் போட்டி போட்டுண்டு, தெருவை,ஊரை சுத்தப் படுத்தி, தோரணமெல்லாம் கட்டி,வாசல் தெளிச் சு கோலம் போட்டு... அமர்க்களமா ஏற்பாடுகளைப் பண்ணினா. அந்த கிராமமே அடையாளம் தெரியல.   கனிவர்க்கம்,காய்கறிகள்,தானியங்கள் இப்படி அவசிய மான திரவியங்களைப் பலர் கொடுத்தனர் . பூ, இலை சந்தனம், குங்குமம் கற்பூரம்  என்று பூஜைக்குத் தேவை யானதுக்கெல்லாம்  கடகவென்று அங்கே வந்து சேர்ந்தது.

மஹா  பெரியவா அந்த ஊருக்கு வந்துட்டார் ஏராளமான பக்தர்கள் விஷயம் கேட்டு எங்கெல்லாமோ வெல்லாம்
இருந்து  திரண்டு வந்து பூர்ண கும்ப மரியாதை குடுத்து
பெரியவாளை  வரவேற்றார்கள்.

எல்லாருக்கும் ஆசிர்வாதம் பண்ணிண்டே  வாத்யார் அகத்துக்குள்ளே மஹா பெரியவா காலடி எடுத்து வைத்தார் .எதிரே நமஸ்கரித்து நின்ற  வாத்யார்
தம்பதிகளை பார்த்தார்.  அவர் மனைவியைப் பார்த்து புன்முறுவலோடு மஹா பெரியவா சொன்னது;

"என்ன? பார்க்கறது எல்லாம்  சொப்பனம் மாதிரி இருக்கா?"

இந்த வார்த்தை காதில் விழுந்ததும்  வாத்யார்  தம்பதி கள் மஹா பெரியவா  காலடியில் அப்படியே   தடால்னு விழுந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.
.
பகவானோட நாமசங்கீர்த்தனத்தைச் சொன்னா கலி யுகத்துல கைமேல நற்பலன் கிடைக்கும்கறதுக்கு, அந்த பகவானோட அம்சமா, காமாக்ஷி அம்பாளாக  விளங் கின மஹா   பெரியவா நடத்தின திருவிளையாடல் னு தான் சொல்லணும். இது மாதிரி எத்தனை எத்தனை யோ நிகழ்வுகள் நடந்திருக்கு.  

sivan jaykay

unread,
May 12, 2025, 8:17:39 PM5/12/25
to amrith...@googlegroups.com
புருஷாமிருகம்  -    நங்கநல்லூர்   J K SIVAN

நமக்கு தெரியாத புரியாத விஷயங்களை ஒரேயடியாக இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. கூடாது. 
''என் புருஷனா... அதை ஏன் கேக்கறே... அவன் எல்லாம் ஒரு புருஷனா.... மிருகம். காண்டா மிருகம்...''... இது மாதிரி வார்த்தைகள் கேட்கிறோம்.  
ஓஹோ அப்படியா புருஷன் ஒரு மிருகமா...  உண்மையிலேயே ' புருஷா மிருகம்'  என்று ஒரு ஜீவன் உண்டு. பல கோயில்களில் பார்க்கலாமாம் .ஆனால் எனக்கு  சுத்தமா தெரியாது.''என்றான் ராஜப்பா. அவனுக்கு சொல்லும்போது உங்களுக்கும் சொல்றேன் இதை. கேளுங்கோ, சாரி, படியுங்கோ :

என் சிறிய வயதில் கோடம்பாக்கம் வடபழனி ஆண்டவர் கோவில் அருகேயும் பின்னர் ஆற்காடு ரோடு வெங்கீஸ்வரர் கோவில் அருகேயும் வசித்ததால் இந்த கோவில்களுக்கும் மற்றுமுள்ள சில கோவில்களுக்கும், வாகன மண்டபங்களுக்கும் சென்று விளையாடுவது எங்கள் பொழுதுபோக்கு.
மூஷிக வாகனம், ரிஷப வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், குதிரை,கருட வாகனங்கள் தெரியும். ஒரு வாகனம் இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்ட ஒரு புது வாகனமாக வேடிக்கையாக இருந்தது. ''இது தாண்டா புருஷா மிருகம்'' என்று அப்பா ஒருநாள் காட்டினார். மஅப்போது என்னால் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. ஈடுபாடும் இல்லாமல் போய்விட்டது. அது என்போல இன்னும் பலருக்கும்  இப்போதும் இன்னும் கூட தெரியாமல் இருக்கலாம்? நிறைய சிவன் கோவில் உற்சவங்களில் மனித தலையுடன் ஒரு மிருகஉடல் மண்டி போட்டு உட்கார்ந்து உத்ஸவ விக்ரஹத்தை தூக்கி வருவதை நிறைய பேர் பார்த்திருப்பீர்கள். அப்படித்தானே?
புருஷா மிருகம் என்று ஒன்று உண்டா ?  மேலே சொன்னபடி புருஷர்களை மிருகமாக திட்டுவது தானே நமக்கு பழக்கம். எருமை மாடு, பன்றி, நாய், குரங்கு என்று சொல்வோம். ஆனால் அது எப்படி புருஷ மிருகமாகும்?

மஹா பாரதத்தில் ஒரு கதை வருகிறது. என் ''ஐந்தாம் வேதம் '' புத்தகத்தில் கூட  நான் அதை எழுதி இருக்கிறேன். யுதிஷ்டிரன் ராஜசூய யாகம் செய்கிறான். அது வெற்றிகரமாக நிறைவேற புருஷாமிருகத்தை அந்த யாகத்திற்கு கொண்டு  வரவேண்டும் என்று ரிஷிகள் சொல்லி விட்டார்கள். 

''டேய்,  பீமா,  நீ தான் சரியானவன். போய் அதை அழைத்துக் கொண்டு வா' என்று யுதிஷ்டிரன் அனுப்ப, பீமன் எங்கெங்கோ காட்டில் அதைத்  தேடுகிறான். ஒரு நடுக்காட்டில் அதை பிடித்து ''என்னுடன் வா'' என்று வேண்டிக் கேட்கிறான்.

''ஓஹோ, உன் அண்ணன் யுதிஷ்டிரனுக்கு ராஜசூய யாகமா , நான் வருகிறேன் ஆனால் ஒரு கண்டிஷன். நானும் நீயும் இங்கிருந்து ஓடுவோம். என்னை விட நீ முதலில் ஹஸ்தினாபுரம் போய் சேர்ந்தால் நான் உன் அடிமை. நீ முதலில் ஓடு. நாலு காத தூரம் நீ ஓடிய  பிறகு நான் உன்னை துரத்துகிறேன். ஹஸ்தினாபுரம் போய் சேர்வதற்குள் என்னிடம் நீ பிடிபட்டால் நீ என் அடிமை. உன்னைத்  தின்றுவிடுவேன். நான் தோற்றால் நீ சொல்வதெல்லாம் செய்கிறேன். சம்மதமா?'' .  பீமன் நிபந்தனைக்கு  ஒப்புக்கொண்டு தலையாட்டினான். 

''ஓடு'' என்றது புருஷாமிருகம். பீமன் தலைதெறிக்க ஹஸ்தினாபுரம் நோக்கி ஓடினான். புருஷாமிருகம் வேகமாக அவனைத்  துரத்தியது. அவனை விட அதன் வேகம் அதிகம் என்று  பீமன் புரிந்து கொண்டான். எப்படியோ ஒரு காலை ஹஸ்தினாபுரம் எல்லைக்குள் வைத்து விட்ட சமயம் புருஷாமிருகம் அவனது இன்னொரு காலைப் பிடித்து விட்டது.
''நான் உன்னை ஜெயித்து விட்டேன். இனி பீமா நீ என் அடிமை ''என்றது. நான் நீ பிடிப்பதற்கு முன் ஹஸ்தினாபுரம் எல்லையை நான் தொட்டுவிட்டதால் நீ தோற்றாய் , நான் தான் ஜெயித்தவன். நீ தான் என் அடிமை'' என்றான் பீமன். ரெண்டு பேரும் நீதி தவறாத யுதிஷ்டிரனிடம் தத்தம் வழக்கை எடுத்துச் சொன்னார்கள்.

யுதிஷ்டிரன் அளித்த தீர்ப்பு வினோதமாக இருந்தது. ''இருவர் சொல்வதிலும் நியாயமுண்டு. ஆகவே பீமனை ரெண்டாக வெட்டுவோம். நீ ஜெயித்ததாக சொல்கிற நீ பிடித்த அவனது கால் பகுதி சேர்ந்த பாதி உடல் உனக்கு. மீதி உடல் பாகம் அவன் ஜெயித்ததாக சொல்வதால் என்னிடம் இருக்கும்.

''யுதிஷ்டிரா,இது என்ன விபரீத தீர்ப்பு. அவனை ரெண்டாக வெட்டி கொல்வதை விட என்னிடமே அடிமையாக விட்டு விடலாமே?
''நீ சொல்வதில் நியாயமில்லையே புருஷா  மிருகமே , அவன் உடலில் பாதி பாகம் உனக்கு  அடிமையில்லையே? எப்படி நீ அவன் முழு உடலுக்கும் உரிமை கொண்டாட முடியும்?

''உன் சகோதரன் என்று கூட பாராமல் நீ நேர்மையாக தீர்ப்பளித்ததால் என் பாதியை விட்டுத் தருகிறேன். நீயே அவனை முழுதாக வைத்துக் கொள் ''என்றது புருஷாமிருகம். புருஷாமிருகம் வந்ததால் யாகம் வெற்றிகரமாக முடிந்து தக்க பரிசுகளுடன் யுதிஷ்டிரனை வாழ்த்திவிட்டு காட்டுக்கு திரும்பியது.

இந்த கதை வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. வியாக்கிரபாதர் ஒரு முனிவர். சிவபக்தர். வண்டுகள் தொடாத மலர்களை பறித்து சிவனுக்கு அர்ச்சனை செய்ய காடும் மலைகளும், மரங்களும், செடியும் ஏறி பறித்தார். கல்லும் முள்ளும், இடையூறாக இருந்ததால் ''பரமேஸ்வரா எனக்கு புலியின் கால்களைக் கொடேன்'' என்று கேட்டுப் பெற்றுக்கொண்டவர். அவர் புருஷாமிருகம் இல்லை.

புருஷா  மிருகமும் ஒரு சிறந்த சிவபக்தன். வேகமாக ஓடக்கூடியது. அதன் பலஹீனம் weakness என்ன என்று பீமன் தெரிந்து வைத்திருந்தான். வழியில் எங்காவது சிவலிங்கத்தை பார்த்து விட்டால் புருஷாமிருகம் நின்றுவிடும். சிவபூஜை செய்து விட்டு தான் பயணம் தொடரும்.

யுதிஷ்டிரனின் ராஜசூயயாகத்தில் யாகசாலை தூய்மை பெற புருஷாமிருகம் தேவைப்பட்டது. நாம் கிரஹப்ரவேசம் சுப கார்யங்கள் செய்யும்போது பசு  மாட்டை கொண்டு  வருவதில்லையா. அதுபோல். பீமன் தொந்தியும் தொப்பையுமானவன் அல்ல. வாயு புத்ரன். ஹனுமான் சகோதரன். வாயு எவ்வளவு வேகம் என்பதை புயல்கள் நமக்கு அறிவுறுத்துகிறது அல்லவா? ஆனால் புருஷாமிருகம் இன்னும் வேகமாக ஓடும். பீமனை புருஷ மிருகம் நெருங்கும் போதெல்லாம் பீமன் அதன் பார்வையில் படும்படியாக ஒரு சிவலிங்கத்தை கீழே வைத்து விட்டு வேகமாக ஓடுவான். நிறைய சிவலிங்கம் கையில் ஸ்டாக் வைத்திருந்தான். புருஷாமிருகம் சிவலிங்கத்தைப் பார்த்ததும், நின்று தனது வழக்கப்படி சிவபூஜையைச் செய்துவிட்டு, அப்புறம் வேகமாக அவனைத் துரத்தும்.

இப்படியே ஹஸ்தினாபுரம் எல்லை வரை பல சிவலிங்கங்களை வழியில் வைத்துவிட்டு ஓடினாலும் ஒரு கால் ஹஸ்தினாபுர எல்லையில் இருக்கும்போது இன்னொருகாலை பின்னால் புருஷாமிருகம் பிடித்துவிட்டது.

இந்த புருஷ மிருகம் மனித தலை, புலி உடல் ....உள்ட்டா நரசிங்கம் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள்...சிலைகள் பல கோவில்களில் இருக்கிறது. யாளி பார்த்திருக்கிறீர்களா? அது மாதிரி.

புருஷ மிருக சிற்பங்களை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். புருஷ மிருகத்தின் உடல் சிங்கத்தை போலவும் தலை ஒரு தாடி வளர்த்த ரிஷி போலவும் உள்ளது. புருஷ மிருகத்தின் இடது பக்கத்தில் சக்கரத்தாழ்வார் கோயிலில் உள்ள சக்கரம் போல் செதுக்கப்பட்டுள்ளது. ரிஷியின் முகம், தாடி, தலைமுடி மிருகத்தின் கால்களின் நகங்கள், வாலில் உள்ள கொத்தான முடி முதலியன சிறப்பாக ஒரே கல்லில் மிகச்சிறந்த சிற்பியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் கிருஷ்ணாபுரம் சிற்பங்களுக்கு இணையாக உள்ளது. எனக்கு தெரிந்து சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் புருஷாமிருக வாகனம் பார்த்த  மாதிரி ஒரு கவனம்.  அடுத்த தடவை போகும்போது ஞாபகமாக பார்க்கவேண்டும். 

sivan jaykay

unread,
May 17, 2025, 9:36:52 PM5/17/25
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN

கலவையில் துளசி

இன்று அனுஷம் என்ற உடனேயே கவனம் பூரா மஹா பெரியவா மேல் படர்கிறது. 31.5.25 நாங்கள் 2வது பயணத்தில் கலவை காஞ்சிபுரம் தேனம்பாக்கம் எல்லாம் போகிறோம். கலவையைப் பற்றி சில வார்த்தைகள் இவை.

சென்னை யிலிருந்து கலவை 120கி.மீ. காஞ்சிபுரத்திலிருந்து 45 கி.மீ. 31.5.25 மத்தியானம் 3 மணிக்கு அங்கே போகிறோம்.கலவை காஞ்சியோடு சம்பந்தப்பட்டது.

அதிசயங்கள், அற்புதங்கள் உலகத்தில் எங்கெங்கோ நிறைய நடக்கலாம். நமக்குத் தெரியாது. கண்கூடாக நாம் பார்த்து அறிந்தது காஞ்சி மஹா பெரியவா வாழ்க்கையில் தான். சந்தேகமே இல்லை

காஞ்சி காமகோடி பீட குரு பரம்பரை அபூர்வமானது. ஒவ்வொரு ஆச்சார்யரும் ஒப்பிடமுடியாத ரத்தினங்கள். ஆதிசங்கரர் முதல் தற்போதைய 71 வது பீடாதிபதி ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி வரை ஞான தீபங்கள்.

66வது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி (1891-1907) (பூர்வாஸ்ரமத்தில் இவர் பெயரும் ஸ்வாமிநாதன்) 1907 வரை ஆசார்யர். மஹா பெரியவாளை சிறுவயது முதல் அறிந்தவர். அவர் பீடாதிபதியாக வரவேண்டும் என்று விரும்பியவர். அந்த ஆச்சார்யரின் அதிஷ் டானம், சமாதி, 1907லிருந்து இன்று வரை பக்தர்களால் வணங்கப்பட்டு கலவையில் காஞ்சி மடத்திற்குள் உள்ளது. இவர் மஹா பெரியவாளின் பரமேஷ்டி குரு.

67வது பீடாதிபதி மஹாதேவேந்த்ர சரஸ்வதி.1889ல் நரசிம்ம சாஸ்திரிக்கும் லக்ஷ்மி அம்மாளுக்கும் பிறந்து லட்சுமிநரசிம்மன் என்ற பூர்வாஸ்ரம பெயர் கொண் டவர். மஹா பெரியவாளின் பெரியம்மா பிள்ளை. இருவருமே 66வது பீடாதிபதியால் தேர்வு செய்யப் பட்டவர்கள். 67வது பீடாதிபதி 18 வயதில் பட்டத்துக்கு வந்தவர். ஏழே நாளில் உடல் நலக்குறைவால் சமாதி
யடைந்தார். அவருடைய அதிஷ்டானம்/சமாதியும் கலவையில் உள்ளது.

காஞ்சி மடம் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருந்த அந்த நேரத்தில் அடுத்த பீடாதிபதி யார்? 66வது பீடாதிபதி விரும்பிய நமது பரமாச்சார்யருக்கு அப்போது 13 வயது. திண்டிவனத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது மஹா பெரியவாளை, பிரியத்தோடு, எதிர்கால நம்பிக்கை நக்ஷத்ரமாக உணர்ந்து, ஆசிர்வ தித்தவர். 13 வயதில் மஹா பெரியவா ஸ்வாமிநாதாக இருந்தவர் கலவையில் சன்யாசியாகி 68வது பீடாதி பதியாகி, என்றும் நமக்கு மஹா பெரியவாளாக 100 வருஷங்கள் அருள் பாலித்தார், கலவையில் மஹா பெரியவா வெகு காலம் தங்கி தியானம் செய்தவர். மஹாபெரியவாளின் பரமேஷ்டி குரு 66வது பீடாதி பதிகள்.

66வது, 67வது பீடாதிபதிகள் இருவருமே கலவையில் முக்தி அடைந்தவர்கள், என்பதால் அடுத்த 68வது பீடாதிபதி மஹா பெரியவாளுக்கு தனக்கும் கலவை யில் முக்தி கிடைக்கவேண்டும் என்று ஒரு விருப்பம். ஆனால் அவரது அதிஷ்டானம் காஞ்சி காமகோடி மடத்திலேயே அமைந்து விட்டது. இந்த மூன்று ஆச்சார் யர்களின் சம்பந்தத்தால் கலவையில் தெய்வீக ஆன்மீக உணர்வலைகளைப் பெற முடிந்தாலும் மஹா பெரியவாளின் விருப்பம் எப்படி நிறைவேறியது என்பது தான் அதிசயம், அற்புதம். அதைத்தான் சொல்லப்போகிறேன்.

66வது 67வது பீடாதிபதிகள் அதிஷ்டானத்துக்கு நடுவே கலவையில் ஒரு சின்ன துளசி செடி உருவானது. அதிஷ் டானங் களை சுற்றிவரும் பக்தர்களுக்கு இந்தச் செடி வளர்ந்தால் இடையூறாக இருக்குமே என்று கலவை யில் அதிஷ்டானத்தில் தொண்டாற்றிவரும் சுப்ரமணிய கனபாடி களுக்குத் தோன்றியிருக்கிறது. அதைப் பிடுங்கிவிட முயற்சித்தார். பலமுறை அகற்றியும் ஏனோ அங்கே துளசி மீண்டும் மீண்டும் தலை தூக்கி யது. அதை எப்படி நிரந்தரமாக அகற்றுவது என்ற யோசனையில் இருந்தார். அப்போது தான் சுப்ரமணிய கன பாடிகளின் கனவில் மஹா பெரியவா தோன்றினார்.

''சுப்ரமணியா, எனது குருநாதர் , பரம குருநாதர் ரெண்டு பேருடைய அதிஷ்டானத்துக்கும் அருகே நானும் நித்யவாஸம் பண்ண ஆசைப்படறேண்டா, துளசியா இருக்கேன். அதை பிடுங்கணும் , அகற்றணும் என்கிற எண்ணத்தை, முயற்சி யை இனிமே விட்டுடு''

இன்றும் கலவையில் அதிஷ்டானங்கள் இடையே துளசி மலர்ந்துகொண்டு தானிருக்கிறது. அவசியம் அடுத்தமுறை கலவை சென்றால் மூன்று பீடாதி பதிகளையும் ஒருமிக்க தரிசிக்கவும். நாங்கள் 31.5.25 அன்று தரிசிக்கப்போகிறோம்.

sivan jaykay

unread,
May 17, 2025, 9:37:10 PM5/17/25
to amrith...@googlegroups.com
யாத்ரா விபரம் -   நங்கநல்லூர்  J.K. SIVAN 

தோயாத்ரி தெரியுமா?

எத்தனையோ  கோடி விஷயங்கள் நமக்கு தெரியவில்லை என்பதற்காக எப்போவாவது நாம் கவலையோ வருத்தமோ பட்டு சாப்பிடாமல் இருக்கிறோமா. விசனப்பட்டுக்கொண்டு  ''இனிமேல் எனக்கு பிடித்த வறுத்த உப்பு போட்ட  வேர்க்கடலை வேண்டாம்'' என்று ஒதுக்குகிறோமா? 

மனித ஸ்வபாவம் விசித்திரமானது. அருகிலே இருக்கும் க்ஷேத்ர விசேஷ கோவிலுக்கு தினமும் சொல்லாவிட்டாலும் வாரம் ஒரு  நாளாவது செல்ல மனதில் தோன்றாது. எங்கோ இருக்கும் ஒரு க்ஷேத்ரத்துக்கு ஓடுவான். இதற்கு நானும் விதி விலக் கல்ல. இல்லாவிட்டால் ஏன் ரெண்டு மூன்று வருஷங்களுக்கு அப்புறம் ஒருநாள் சமீபத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய திருநீர் மலை பெருமாள் கோவில் சென்றேன். 108 திவ்ய தேசத்தில் ஒன்று இந்த க்ஷேத்ரம். தோயம் என்றால் நீர் '' த்ரி'' என்று முடிந்தால் மலை. சேஷாத்திரி, கருடாத்ரி, பத்ராத்ரி, வேங்கடாத்ரி மாதிரி.   சலம் என்றும் மலையை சொல்வதுண்டு.  ஹிமாச்சலம், அருணாசலம், வேதாசலம், விரித்தாசலம், மருதாசலம்  எல்லாம் இல்லையா?
எனவே தோயாத்ரி என்பது '' நீர் மலை''. ''திரு''  அடைமொழி. திருநீர்மலை அதற்கு இப்போது பெயர்.

பல்லாவரத்தில் இருந்து 4 கி.மீ. சென்னை விமான நிலையத்திலிருந்து 10 கி.மீ.     வண்டிகளுக்கு பஞ்சமே இல்லை. சில வருஷங்களுக்கு  முன்  நங்கநல்லூரில் இருந்து ஸ்கூட்டரில் தான் சென்றேன். சிரமமே தெரியவில்லை.  இப்போது அது முடியாத ஒரு காரியம்.

ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவருக்கு ராமனை கல்யாண கோலத்தில் பார்க்க ஆசை தோன்றியது. யோசித்தார். நடந்தார். திருநீர்மலை வந்தார். அமைதியான சூழ்நிலை மன நிம்மதி தந்தது. அமர்ந்து தவம் செய்தார். ராமர் சீதா சமேதராக, லக்ஷ்மண பரத சத்ருக்னர்களோடு காட்சி அளித்தார்.

''ராமா இந்த திவ்ய காட்சியை  நான் பார்த்தால் மட்டும் போதுமா?. இந்த வையத்தில் அனைத்து பக்தர்களும் இந்த அற்புத கோலம் காணவேண்டாமா?'' என்று வால்மீகி வேண்ட, ராமர் திருநீர்மலையில் காட்சி தருகிறார். வால்மீகிக்கும் மலை அடிவாரத்தில்  ஒரு சந்நிதி  இருக்கிறது.  இங்கும் கிரிவலம் பவுர்ணமியில் பிரசித்தம்.   மலையைச் சுற்றிலும் எங்கும் நீர். எனவே மலைக்கு பெயர் திருநீர் மலை பொருத்தமான பெயர். . பெருமாள் ''நீர்வண்ண பெருமாள்''. போக ரங்கநாதர். அபிஷேகம் கிடையாது. தைல காப்பு.  நாலு தினுசில் தரிசனம் தருகிறார் பெருமாள் இங்கே.  

நீர்வண்ணர் - நின்ற திருக் கோலத்தில் மலை அடிவாரத்தில்.
பால நரசிம்மர் - இருந்த திருக்கோலம் (கோபமுகமில்லை. சிரித்த சாந்த திருமுகம்). இரணியனைக் கொன்று கோபம் அடங்கி குழந்தை பிரஹலாதன் பயப்படக்கூடாதே என்று பாலனாக காட்சி அளித்த நிலை.
திரு விக்ரமன் - நடந்த திருக்கோலம்
ரங்கநாதர் - கிடந்த திருக்கோலம் மலை மேல்.

இங்குள்ள புஷ்கரணி நாலு தீர்த்தங்கள் சேர்ந்தது. சித்த, ஸ்வர்ண, காருண்ய, க்ஷீர தீர்த்தங்கள்.
ஒரு விஷயம். இந்தியாவிலே எட்டு விஷ்ணு ஆலயங்கள் ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள் என புகழ் பெற்றவை.  அவற்றில் ல் தோயாத்ரி எனும்  இந்த திருநீர்மலையும் ஒன்று. மற்றவையும் தெரிய வேண்டுமா?. இதோ சொல்கிறேன். 
திருச்சி ஜில்லாவில் ஸ்ரீ ரங்கம், கடலூர் ஜில்லாவில் ஸ்ரீ முஷ்ணம், ஆந்திராவில் திருப்பதி. அப்புறம் வடக்கே சாளக்ராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாரணபுரம்.

திருமங்கை ஆழ்வார் பூதத்தாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த பழம் பெருமை வாய்ந்த கோவில்.
மேலே ஜிலு ஜிலு வென்று காற்று. எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு சென்றபோது அங்கே உச்சியில் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி சதாசிவம் தம்பதியர் கட்டியுள்ள மண்டபத்தில் ஆனந்தமாக காற்று வாங்கியிருக்கிறேன்

31.5.2025 பதினெட்டு பேருடன்  குளு குளு  வண்டியில் மீண்டும் இவர்களை சந்திக்க ஆவலாக காத்திருக்கிறேன். போய்விட்டு வந்து எழுதுகிறேன். 

sivan jaykay

unread,
May 17, 2025, 9:37:29 PM5/17/25
to amrith...@googlegroups.com
ஸ்வாமி தேசிகனின்  ஸ்ரீ ஸ்துதி -   நங்கநல்லூர்  J K  SIVAN 

அதிசயங்கள் எல்லா சிறந்த மஹான்களாலும் மட்டுமல்ல, பக்தர்களால் கூட  நிகழ்த்த முடியும்.  ஆதி சங்கரர், சிறுவயது பாலகனாக  காலடியில் ஒரு ஏழை ப்ராமண ஸ்திரீ வீட்டு  வாசலில் டில்  ''பவதி பிக்ஷாந்தேஹி ''  என குரல் கொடுத்தபோது அவள், பிக்ஷையாக   தன்னிடமிருந்த ஒரே ஒரு  காய்ந்த  வாடிய நெல்லிக்கனியை அளிக்க, அதற்கு  ஈடாக, ஸ்ரீ மஹா லக்ஷ்மியை  அவர் அவள் ஏழ்மையைப் போக்க வேண்ட ,அவள்  ஆதி சங்கரரின் பக்தி பாவ வேண்டுகோளுக்கிணங்கி,  தங்க நெல்லிக்கனிகளை மழையாக பொழிந்தாளல்லவா? அதே போல தான் ஸ்வாமிதேசிகனின் ப்ரார்த்தனைக்கும்  இணங்கி அவள் காஞ்சியில் பெருந்தேவி தாயாராக  ஒரு ஏழை வைணவ வாலிபன் திருமணத்துக்கு தங்கமழை பொழிந்தாள். அந்த 25 ஸ்தோத்ரங்கள் தான் ஸ்ரீ ஸ்துதி.

''யாரப்பா நீ என்ன வேண்டும் உனக்கு? '
'ஸ்வாமி தேசிகன் என்பது நீங்கள் தானே? அப்படியென்றால் உங்களை தரிசிக்க தான் வந்தேன். ஒரு வேண்டுகோள்  வைக்க வந்தேன்''
''என்னப்பா என்னிடம் உனக்கு வேண்டுகோள்?''
''நீங்கள் தனவந்தர், கேட்டதெல்லாம் கொடுப்பவர். என் திருமணத்துக்கு  பணம் தேவைப்படுகிறது தாங்கள்  தான் தந்தருளவேண்டும். நான் யாசகம் கேட்ட இடத்தில் உங்களிடம் கேட்டால் கிடைக்கும் என்று சொல்லி அனுப்பினார்கள்''
''அப்பனே  இரவு நேரம் ஆகிவிட்டது.  நாளை காலை காஞ்சி ஸ்ரீனிவாச வரதன் ஆலயத்தில் தாயார் சந்நிதியில் நான் உனக்காக காத்திருப்பேன். அங்கே வா இருவரும் உன் கோரிக்கையை தாயாரிடம் வைப்போம்.''
'மறுநாள் காலை அந்த வைணவன் ஸ்வாமிதேசிகனை தாயார் சந்நிதியில் பார்த்தான் அவனைப் பார்த்த 

வுடனே, கண்களில் கண்ணீர் நிரம்பியவாறு,  அவர் பெருந்தேவி தாயாரின் கருணைக்கு பிரார்த்தனை செய்த ஸ்லோகம் இது; 

1. मानातीतप्रथितविभवां मङ्गलं मङ्गलानां     वक्षः पीठं    मधुविजयिनो भूषयन्तीं स्वकान्त्या ।
प्रत्यक्षानुश्रविकमहिमप्रार्थिनीनां प्रजानां   श्रेयोमूर्तिं श्रियमशरणस्त्वां शरण्यां प्रपद्ये ॥ १॥

Maanaatheeetha prathitha  vibhavaam , mangalam  mangalaanaam;  Vaksha peetim  madhu  vijayino bhooshayanthim   swakanthyaa;   
Prathyakshanu sravika mahima  prarthaneenaam  prajaanaam Sreyo moorthim sriyam asarana  thwaam saranyaam prapadhye

எல்லையில்லாமல் வாரி வாரி வழங்கும் தாயே, நல்லவற்றை , மேலும் மேலும் மங்களமாக வாரி வழங்குபவள்,  மது எனும் ராக்ஷஸனை சம்ஹரித்த மாதவனின் இதயத்தை  உனது  பீடமாக கொண்டவளே,ஸ்ரீனிவாசன் என்று அவனுக்கு அதால் பெயர் அளித்தவளே, பெருமைக்கு பெருமை தருபவளே, வேதம் புகழும் வேதவல்லி, உன்னை சரணடைந்தேன் அம்மா. 
 
2.
आविर्भावः कलशजलधावध्वरे वाऽपि यस्याः   स्थानं यस्याः सरसिजवनं विष्णुवक्षःस्थलं वा ।
भूमा यस्या भुवनमखिलं देवि दिव्यं पदं वा   स्तोकप्रज्ञैरनवधिगुणा स्तूयसे सा कथं त्वम् ॥ २

Aavirbhava kalasa jaladhow, adhware vaapi yasyaa Sthaanam   yasyaa  sarasijavanam Vishnu vaksha  sthalam vaa
Bhoomaa yasyaa  bhuvanamakhilam Devi, dhivyam padham vaa Sthoka prajnair anavidha gunaa sthooyase saa  kadham thwam
 
அம்மா, நீயோ பாற்கடலில் உதித்தவள் , யாகத்தில் தோன்றுபவள், தாமரைக்காட்டின் அரசி, மஹாவிஷ்ணு வக்ஷஸ்தல நாயகி,  ப்ரபஞ்ச அறிவிற் சிறியேன் என்னால் உன்னை முழுதுமுணர்ந்து பிரார்த்திக்க முடியும்?லோகங்களுக்கெல்லாம்  ராணி.
 
3.
स्तोतव्यत्वं दिशति भवती देहिभिः स्तूयमाना  तामेव त्वामनितरगतिः स्तोतुमाशंसमानः ।
सिद्धारम्भः सकलभुवनश्लाघनीयो भवेयं  सेवापेक्षा तव चरणयोः श्रेयसे कस्य न स्यात् ॥ ३॥

Sthothavyathwam  dhisathi bhavathi dehibhi  sthooyamaanaa,Thaamevathwaam anithara gathisthothum  aasamsamaanaa
Sidhaarambha sakala bhuvana slaaghaneeyo bhaveyam, Sevaapekshaa thava   charanayo, sreyase kasya  na syaath?
 

அம்மா  ஸ்ரீதேவி  உனக்கு ஒன்று தெரியுமா?  உன்மேல் உணர்வுள்ள  பக்தர்கள் உன்னைப்  போற்றி புகழ்ந்து பாடும்போது அவர்கள் பக்தியை மற்றவர்கள் மரியாதையோடு கொண்டாடுகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் உன்மேல் கொண்ட பக்தி என்பதை விட, உனது பெருமை, மஹிமை,  தான் மிகவாக உணரப்படுகிறது.  நீ தானே  அவர்களை அதை உணரச்செய்பவள். எனக்கு உன்னைவிட்டால் வேறு யாரம்மா கதி?உன்னைச் சரணடைந்து தொழுவதினால் என்னையுமல்லவா உலகம் கௌரவிக்கும். உன் திருவடியைப்பிடித்தோர்க்கு சகலமும் கைகூடுமே . இதிலென்ன ஆச்சர்யம்? உன் மஹிமை பூரா அறியும் ஞானம் இல்லாவிட்டாலும் எனக்கு அந்த  சக்தியை அளிப்பவள் நீயல்லவா?
 
4. 
यत्सङ्कल्पाद्भवति कमले यत्र देहिन्यमीषां  जन्मस्थेमप्रलयरचना जङ्गमाजङ्गमानाम् ।
तत्कल्याणं किमपि यमिनामेकलक्ष्यं समाधौ   पूर्णं तेजः स्फुरति भवतीपादलाक्षारसाङ्कम् ॥ ४॥

Yath sankalpaath bhavathi kamale  yathra dehinyameeshaam, Janma sthema pralaya  rachanaa jangama jangamaanam
Thath kalyaanam kimapiyaminaam yeka lakshyam samadhou,Poornam theja sphurathi bhvathee padha lakshaara saangam
 
மஹா தேவி, கமலே,  உனது நாதன் ஸ்ரீனிவாசன் எண்ணற்ற விபவங்களை உடையவன்.  அந்த விஸ்வரூபனின் சரீரமே  உணர்வுள்ளவை, உணர்வில்லாதவை கலந்ததுஅவற்றுள் அவன் அந்தராத்மாவாக வசிப்பவன். அவன் சங்கல்பமே பிரபஞ்சத்தில் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம்  அனைத்தும்.சகலத்துக்கும் புனிதம், அந்த புனிதனே, அவன் மங்கள ஸ்வரூபமே எங்கும் புனிதத்தை பரவச்செய்கிறது.  அவன் அனுக்ரஹத்தால்  தானே  யோகிகளும் அவர்கள் உணர்வுகளை கட்டுப்பாட்டில் வைப்பவர்கள். அஷ்டாங்க யோகமும் அடைபவர்கள். அவனை ஹ்ருதய கமலத்தில் ஸ்தாபித்து  போற்றி வணங்குபவர்கள்.  சர்வ வியாபி அந்த பரிபூர்ண நம்பி. சகல கல்யாண குணங்களும் கொண்டவன்.  அவனது ஹ்ருதயத்தில் ஒரு கணமும் அவனை விட்டு நீங்காதவள் நீ. நாராயண  ஹ்ருதயவாஸினி. அந்த செங்கண்மாலின் செந்நிறம் உன் திருவடியில் பளபளக்கிறது.  அழகை  மேலும்  கூட்டுகிறது. அந்த லக்ஷணம் அல்லவோ உபநிஷதங்கள்   மேன் மேலும் ஞானத்தைப்  பெற்று  பரமாத்மனின்  சத்யஸ்வரூபத்தை  பிரதிபலிக்கிறது.  
 
5. 
निष्प्रत्यूहप्रणयघटितं देवि नित्यानपायं विष्णुस्त्वं  चेत्यनवधिगुणं द्वन्द्वमन्योन्यलक्ष्यम् ।
शेषश्चित्तं विमलमनसां मौलयश्च श्रुतीनां  सम्पद्यन्ते विहरणविधौ यस्य शय्याविशेषाः ॥ ५॥

Nishprathyuha prana gatitham devi, nithyaanapaayam Vishnu sthwam   chethya navathi   gunam dhwandhwam anyonya  lakshyam
SEshaschitham   vimala manasaam  moulayascha srutheenaam, SAmpadhyanthe   viharana vidhou yasya sayyaa viseshaa
 

ஆஹா,  பெருந்தேவி எனப்படும் பெரிய பிராட்டியே, ஸ்ரீ நீயும், ஸ்ரீனிவாசன் உன் நாதனும் இணை பிரியாத வர்கள்.  ஒப்பற்றவர்கள்.உங்கள் பிரேமை பிரகாசம், அன்பு, எள்ளளவும் குறையாதவை. ஸாஸ்வத  தம்பதிகள் நீங்கள். உங்கள் ஒவ்வொருவரின் கல்யாணகுணங்களை  வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. உங்களை பிரார்த்திக்கும்  என் போன்ற பக்தர்கள் கூட  உங்களை எப்படி அடையாளம் காண்கிறோம் தெரியுமா? ஸ்ரீமன் நாராயணனை வணங்கும்போது ''ஸ்ரீயின் பத்தி, ஸ்ரீயப்பதே, என்கிறோம். உன்னை ''விஷ்ணு பத்னி'' என்று தான் பிரார்த்திக்கும் பெயரில் கூட உங்களை பிரிக்க முடியாதே.   உங்களுடைய நித்ரா யோகத்துக்கு  தக்க இடமாக நான் அறிபவை   1.  ஆதிசேஷன் சயனம், 2. யோகிகளின் ஹ்ரிதய கமலம். 
 3. உபநிஷதங்கள் சாரம். இவையே உங்கள் விபவத்தை  உணர்த்துபவை. 

ஸ்வாமி தேசிகர்  அந்த  வைணவ வாலிபனோடு பெருந்தேவி தாயார் சந்நிதியில் சில நிமிஷங்களில் 25 ஸ்லோகங்களை பாடி முடித்து விட்டார். அவரால் முடியும். எனக்கு அவற்றை உங்களுக்கு எடுத்து எழுத மூன்று நாள் தேவைப்படுகிறதே. முதல் ஐந்து ஸ்தோத்ரங்களை இந்த பதிவில் இடுகிறேன். மற்றவை அடுத்தடுத்து. 

sivan jaykay

unread,
May 18, 2025, 8:48:57 PM5/18/25
to amrith...@googlegroups.com
  
ஆனை  ஐயா சங்கீதம் - நங்கநல்லூர்  J K  SIVAN 

உ.வே.சா. என் உறவினர் என்பதில் எனக்கு பெருமை  இருந்து என்ன பயன்?  
ஒரு எழுத்து கூட அவர் போல் எழுத ,தமிழ் ஞானம், திறமை,  இல்லையே என்ற வருத்தமும் எனக்கு உண்டு.   உ.வே.சா. நினைவு கூர்ந்து  'புதியதும் பழையதும்'  என்ற தலைப்பில் அற்புத கட்டுரைகள் வழங்கி இருக்கிறார். அதில் ஒன்று சுருக்கமாக தருகிறேன். . 

தஞ்சாவூரில் ஒரு ப்ராமண நிலச்சுவான்தார். நிறைய நிலபுலன்கள் உள்ளவர். பெரும் தனவந்தர். அவர் வீட்டில் ஒரு கல்யாணம். தடபுடலாக ஏற்பாடு. அப்போதெல்லாம் ஐந்து  நாள் ஏழுநாள் கல்யாணம். ஊரையே வளைத்துப் போட்டு பந்தல், கச்சேரிகள், வருவோர் போவோர்க் கெல்லாம்  இன்சுவை விருந்து... ஒரு பெரிய கச்சேரி ஏற்பாடு செய்யவேண்டும் என்று வீட்டுப் பெண்மணிகள் ஆசைப்பட்டு யோசனை சொன்னதைக் கேட்டு, அவர்  அப்போது தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சிறந்த சங்கீத வித்வான்களாக  இருந்த ஆனை,  ஐயா,  என்ற    ரெண்டு சகோதரர்களின், சிறந்த  சங்கீத வித்வான்கள்  கச்சேரியாக   ஏற்பாடு பண்ணினார். இந்த வித்வான்கள் வையச்சேரி மஹா வைத்ய நாதய்யரின்  தாய்  வழி முன்னோர்கள்.  சமஸ்க்ரிதம், தெலுங்கு, தமிழ் எல்லாவற்றிலும் வல்லுநர்கள். 

ஒரு சமயம் தஞ்சாவூருக்கு  ஹைதராபாத் முஸ்லீம் வித்வான் பரம்பரையாக கற்று அனுபவத்தோடு பாடிய  ஹிந்துஸ்தானி சங்கீதத்தை ராஜா முன்னால்  பாடி பரிசு பெற்றபோது  உங்களில் யாராவது இது போல்  பாட முடியுமா என்று சவால் விட்டான் . ராஜா முன்னிலையில் ஆனை  ஐயா இருவரும்   அறுபது  நாள் அவகாசம் கொடுங்கள் அதைப்   பாடிக்காட்டுகிறோம் என்று அதைக் கற்றுக்கொண்டு பயிசற்சி, முயற்சியோடு, அந்த முஸ்லீம் வித்வான் முன்னால்  அவனை  விட அற்புதமாக பாடிக்காட்டியபோது அந்த முஸ்லீம் வித்வான் சரணடைந்தார். ''ஆஹா  எத்தனையோ வருஷங்களாக  முயன்று கற்று பாடியதை, இவர்கள் அறுபதேநாளில், மொழி தெரியாமல், ஹிந்துஸ்தானி சங்கீதம் அறியாமல், பாடி ஜெயித்துவிட்டார்களே  என்று போற்றினான். 

ஆனை  ஐயா இருவரும்  ஸ்வரப்ரஸ்தாரம்,  பல்லவி, ஆலாபனை, ராகம் எல்லாம் விஸ்தாரமாக  சேர்ந்தே பாடுவார்கள். 

பணக்காரர் வீட்டு கல்யாண விழாவில் ஆனை  ஐயா  கச்சேரி  என்ற விஷயம் பரவி, எண்ணற்ற ரசிகர்கள் பல வூர்களிலிருந்தும்  கூட வண்டி கட்டிக்கொண்டு வந்து வெள்ளம் போல  கூடி விட்டார்கள். கச்சேரி  மணிக்கணக்காக பிரமாதமாக  நடந்து கொண்டிருந்தது. 

 பணக்கார மிராசுதாருக்கு அவர்கள் எல்லோரும் தன்  பெருமை  அறிந்து தன்னைப்  பார்ப்பதற்கு வந்தவர் என்று நினைப்பு.  பெருமிதம் தாங்கவில்லை. அவருக்கு  சங்கீதம் சுட்டுப்போட்டாலும் தெரியாது. புரியாது.  சபையில் தனக்கு சங்கீத ஞானம் உண்டு என்று  காட்டிக்கொள்ள பேராசை. வந்தவர்கள்  எல்லோரையும் உபசரித்துக்  கொண்டே அங்கும் இங்கும் அலைத்தவர் நடுநடுவே  கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்து அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு  கச்சேரியை  ரசிப்பது போல் தலையாட்டிவிட்டு போவார். 

கச்சேரி களை கட்ட,  ஆனை  ஐயா இருவரும் ஒரு கீர்த்தனையின் பல்லவியை எடுத்துக்கொண்டு  அதில் பலப்  பல சங்கதிகளை போட்டு கற்பனா ஸ்வரங்கள்,  மனோபாவ பூர்த்தியாக  அற்புதமாக  அலசி பாடிக்  கொண்டிருந்ததை  பணக்கார மிராசுதாரால்  ரசிக்க முடியவில்லை.  ரசிகர்கள் மெய்ம்மறந்து கேட்டு  ஆனந்தக்கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நேரம்.   எஜமானர்  ஒரு தூணின் மேல் சாய்ந்து கொண்டு தலையைத் தலையை ஆட்டிவிட்டு  மூக்கின் மேல் விரல் வைத்து, தனது சங்கீத  ஞானத்தை பறை சாற்ற நினைத்தார்.  கண்கள் சிவக்க,  தூணைத்  தட்டினார்.  தனது கோபத்தை வெளிக்காட்ட முடிவெடுத்தார். உரக்க கத்தினார்.

''நிறுத்துங்கள் வித்வான்களே,  உங்கள் கத்தலை.    எனக்கோ  இங்கிருப்பவர்களுக்கோ சங்கீதம் தெரியாது என்று நினைப்பா உங்களுக்கு?. ஏதோ எல்லோரும் சொல்கிறார்களே பெரிய வித்வான்கள் என்று அதை  நம்பி உங்களைப்  பாட அழைத்தால்,  நீங்கள் என்னடா வென்றால் ஒரே அடியைத்  திரும்ப திரும்ப மணிக்கணக்காக நாராசமாக  ரெண்டு பெரும் மாற்றி மாற்றி  சொல்லிக்கொண்டிருந்தால்  பாட்டு எப்படி முடியும்?. பாட்டு முழுசாக  தெரியாது என்றால் எதற்காக அதை எடுத்துக் கொண்டு பாடுகிறீர்கள்?. ஏதாவது  முழுக்க வார்த்தை தெரிந்த   சின்னப்  பாட்டாக இருந்தாலும்  அதைப் பாடவேண்டியுது தானே...உங்களை நம்பி பணத்தை வீணடித்து விட்டேன். அந்த பணத்தை விவசாயத்தில்  போட்டாலாவது நல்ல பலன் கொடுக்கும்.  இதற்கு தான் கச்சேரிக்கு  பணம் செலவழிக்க  வேண்டாம் என்று சொன்னேன்.  வீட்டு பொம்மனாட்டிகள் என் வார்த்தையை மதிக்காமல்  உங்களைக்   கூப்பிட சொன்னார்கள்.''' 

சபை திடுக்கிட்டது. ஆனை  ஐயா பிரபல வித்வான்கள் அவமானம் தாங்கமுடியாமல் கண்களில் நீரோடு சபைக்கு வணக்கம் செலுத்திவிட்டு நேரே எழுந்து நடந்தார்கள்.  அந்த ஊரில் ஒரு வேங்கடேச  பெருமாள் கோவில்,  பெருமாள் முன்  நின்று கொண்டு  புன்னாக வராளி ராகத்தில்   மன வருத்தத்தோடு  ஒரு கீர்த்தனை பாடினார்கள்; 
பல்லவி 
போதும் போதும் ஐயா-   தலைமுறைக்கும், 

அநுபல்லவி, 
மதுவளர் வரகாபுரி தனில்  விளங்கிய  
மங்கை அலர்மேல்  மிக மகிழ் வேங்கடாசலனே 
சரணம் 
அரி யென்ற எழுத்தை அறியாத  மூடன் தன்னை 
ஆதிசேஷன் என்றும், 
ஆயுதமொன்றும் அறியாதவன் தனை, 
அரிய  விஜயன் என்றும் 
அறிந்தும் அரைக்காசுக்குதவா  லோபியை 
தான கர்ணன் என்றும் 
அழகற்ற வெகு கோரத்தோனை மிக 
அங்கஜன் என்று புகழ்ந்து அலைந்தது   (போதும் )

2.காசுக்கு ஆசை கொண்டு உலுத்தனை சபைதனில் 
கற்பக தருவென்றும் 
கண் தெரியா குருடன் என்று தெரிந்தும் சிவந்த 
கமலக்  கண்ணனென்றும் 
பேசுவதெல்லாம்  பொய்யான  ஒருவனை 
பிறந்தபோதே  அரிச்சந்திரன் என்றும் 
பெற்ற  தாய்க்கே  அன்னமிடாதான் தன்னை   
பெரிய தர்மன் என்றும் புகழ்ந்தலைந்ததும்  (போதும்)

3. அறிவில்லாத பெரும் மடையர் தம் அருகினில் 
அல்லும்  பகலும்  நாடி 
அன்னை  **உமாதாசன் (** ஆனை  ஐயா க்ரிதிகளில் அவர்கள்  முத்திரை) 
உரைக்கும் பதங்களை அவரிடத்தில் பாடி 
அறிவரோ , அறியாரோ  என்றே  மிக அஞ்சி மனது வாடி 
ஆசையெனும்  பேய்க்காளாய்  உலகினில்  
அற்பரைக் கொண்டாடி திரிந்தலைந்தது  (போதும்)

வெங்கடேச பெருமாள் முன் பாடி கண்ணீர் விட்டு  சுற்றி இருந்த ரசிகளை  வணங்கி, சாப்பிடாமலேயே  பணம் கூட வாங்கிக்கொள்ளாமல்  ஊருக்கு நடந்தார்கள். அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் சுவாமி சன்னிதானத்தில் தவிர எந்த நிகழ்ச்சிகளிலும்  பாடுவதில்லை.


sivan jaykay

unread,
May 18, 2025, 8:48:58 PM5/18/25
to amrith...@googlegroups.com
108  அடி உயர உலகிலேயே பெரிய விஸ்வரூப மஹாவிஷ்ணு.

நங்கநல்லூர்  J K SIVAN


வெகுநாளாக காத்திருந்த  ஒரு வைபவம் சம்பவிக்க போகிறது.  பெங்களூர், ஈஜிபுராவில்  ஒற்றைக் கல்லில்  எழுந்து நிற்கின்ற 108 உயர  உலகிலேயே பெரிய விஸ்வரூப மஹாவிஷ்ணுவுக்கு கண் திறந்து, நம்மை மஹா கும்பாபிஷேகத்தன்று ப்ராண பிரதிஷ்டை செய்யப்பட்டு  அருள் பாலிக்க தயாராகிவிட்டார்.

பகீரதன் போல் பல வருஷங்களாக  தவமிருந்து  விருப்பப்பட்டதை சாதித்து விட்டார்  டாக்டர்  B. சதானந்தா. ஆம்.  2.6.2025 அன்று  மஹா கும்பாபிஷேகம்.  1.6.25 அன்று முதல்  யாகசாலை வேத கோஷம், மந்திர பிராண ப்ரதிஷ்டைக்கான  ஆகம சம்பிரதாய நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.

அவசியம்  எல்லோரும் கலந்து கொண்டு  அடுத்த  45 நாட்களுக்கான  மண்டல பூஜை அபிஷேக அர்ச்சனைகளில்  குடும்ப க்ஷேமத்துக்கு பங்கு கொள்ளலாம்.

ஒரு முக்கியமான அறிவிப்பு.  கும்பாபிஷேகத்துக்கு முன்னால்  விஸ்வருப  மஹா விஷ்ணு ஆலயத்தில், உத்சவ விகிரஹங்கள், ஆலய இதர வழிபாட்டு இடங்களை சுத்தம் செய்து கைங்கர்யம்  23.5.25 முதல்  25.5.25 வரை மூன்று நாட்களுக்கு பூரணமாக  ஆலய சந்நிதி விக்ரஹ, உத்சவ விக்ரஹ  சுத்தம் செய்யும்  கர சேவா  கைங்கர்யம் பண்ண  வாலண்டீர்கள்,  ஆர்வமாக, கோவிலை சுத்தம் செய்ய  4  அல்லது 5   ஆண்கள்  உடனடி தேவை.  யார்  யார் இந்த  புண்ய காரியங்களில் பங்கேற்று உற்சாகமாக   சேவை செய்ய தயாராக இருக்கிறீர்களோ  அவர்கள்  திரு.  ஸ்ரீகாந்த் அவர்களை தொடர்பு கொள்ளவும்.  

பெங்களூரில் இருப்பவர்கள் முக்கியமாக இதில் பங்கேற்கலாம்.  சென்னையிலிருந்து செல்ல விரும்புபவர்கள் இங்கிருந்து செல்ல  ஸ்ரீகாந்தை தொடர்பு கொண்டு அவரோடு செல்லவும் சாத்தியமாகும். ஸ்ரீகாந்த்    டெலிபோன்  எண் . 9884073394

ரெண்டாவது முக்கிய அறிவிப்பு:  இந்த விஸ்வரூப  மஹா விஷ்ணு ஆலய நவீன உத்தாரணத்துக்கு  யாராரெல்லாம்  RS  10000 அதற்கு மேல்  காணிக்கை, நிதி உதவி  செய்த்திருக்கிறீர்களோ, அவர்களை  டாக்டர் சதானந்தா,  ஆலய சார்பில் கௌரவிக்க விரும்புகிறாராம். 2.6.2025 அன்று கும்பாபிஷேஷகத்தன்று அவர்கள்  கௌரவிக்க படுவார்கள். ஆகவே  யார் யார்  மேற்படி தொகையை ஆலயம் உருவாக   நிதி உதவி கைங்கர்யம் செய்தவர்களோ அவர்கள்  திரு ஸ் ஸ்ரீ காந்தை மேற்கண்ட டெலிபோன் நம்பரில் தொடர்பு கொண்டு அவர்கள் பணம் கட்டிய விபரங்களை அறிவித்து பங்கேற்று மஹாவிஷ்ணு பிரசாதம் பெற நினைவூட்டுகிறேன்

.கோவில் கும்பாபிஷேக பத்திரிகை இத்துடன் இணைத்துள்ளேன்.

108ft.3 .jpg
108ft 1.jpg
108ft.4.jpg
108ft. 2.jpg

sivan jaykay

unread,
May 19, 2025, 8:20:02 PM5/19/25
to amrith...@googlegroups.com
தாகூர்...- நங்கநல்லூர் J K SIVAN
இந்த மே மாதம் ஒரு அருமையான நல்ல தாடிக்கார ரின் பிறந்த நாள் வந்தது கிட்டத்தட்ட பத்து நாளுக்கு மேல் ஆகிவிட்டது. அவரைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தேன். எழுத மறந்து போய்விட்டது. ஆஹா அவருடைய கதைகள், சிறுகதைகள், கீதாஞ்சலி என்னை எவ்வளவு ஆக்கிரமித்து இருக்கிறது தெரியுமா. என் கண்களை நீரை வரவழைத்த காபுலிவாலா , சுபா, போஸ்மாஸ்டர், படிக் சக்ரவர்த்தி கதைகள் என்றும் நெஞ்சில் குடிகொண்டவை. அனைத்தையும் உங்களுக்கு எழுதி இருக்கிறேனே.
தாகூரின் கீதாஞ்சலி என்னை ரொம்பவே கவர்ந்ததால் அந்த அஸ்திவாரத்தில் நான் எழுப்பிய கட்டிடம் தான் என் கிருஷ்ணாஞ்சலி. என் எழுத்து எனக்கே ரொம்ப பிடித்த ஒரு புத்தகம்.தாகூரின் கற்பனையில், மனோ தர்மத்தில் கிருஷ்ணனை புகுத்தி அவன் பெருமையை ஊடுருவச் செய்தேன் .
தாகூரின் 103 கீதாஞ்சலி பாடல்களையும் க்ரிஷ்ணாஞ் சலியாக உங்களுக்கு முகநூலில், வாட்சப்பில் முன்பே அளித்திருக்கிறேன்.
தாகூரின் ஒரு கீதாஞ்சலி பாடல். அதற்கு என் க்ரிஷ் ணாஞ் சலியில் நான் கொடுத்த உருவம் ரெண்டை யும் இதோ மாதிரிக்கு ஒன்று தருகிறேன். பிடித்திருந்தால், புத்தகமாக படிக்க வேண்டுமானால் என்னை வாட்சப் பில் 9840279080ல் அணுகுங்கள்.
ஸ்பெஷலாக தேடி ஒரு பாடலை இங்கே அளிக்கவில் லை. எது கண்ணில் பட்டதோ அதைத் தான் இங்கே மாதிரியாக காட்டுகிறேன்.
+++
''கிருஷ்ணன் எப்போதும் என்னுடன்''.
ஆமை முயல் ஓட்டப் பந்தயம் கதை தெரியுமல்லவா? முயல் வேகமாக ஓடி அங்கங்கே நின்று கர்வத்தால் தோற்றது. ஆமை கருமமே கண்ணாயினார் பரம்பரை என்பதால் மெதுவாக விடாமல் நடந்து வந்தே வெற்றி பெற்றது. நான் ஒரு கிழ ஆமை. வெற்றி பெறுவேனோ மாட்டேனோ தெரியாது. மெதுவாக ஒவ்வொன்றாக எனக்கு கண்ணில் பட்ட, விருப்பமான அனைத்து ஆன்மீக விஷயங்களையும் தொட்டு ஒவ்வொன்றாக எழுதும் தீராத தாகம் என்னை செலுத்துகிறது. கீதாஞ்சலி நூற்றுமூன்றையும் எழுத முடியுமா என்ற மலைப்பு ஆரம்பத்தில் இருந்தது. தவிர, இந்த தாகூர் புரியாத பாஷையில் வேறு எழுதுகிறார். இதை எப்படி புரியும்படியாக நண்பர்களிடம் சேர்ப்பது. நமது முயற்சி வெற்றிபெறுமா. கேள்விக்குறி பெரிதாகவே இருந்தது. எவரெஸ்ட் சிகரம் போவதாக இருந்தாலும் ஒவ்வொரு அடியாகத்தானே போகவேண்டும் என்ற உள்ளுணர்வு உந்தித் தள்ள எழுத ஆரம்பித்தேன். தாகூர் புரியாமால் பூசி மெழுகி, அப்ஸ்ட்ராக்ட் ABSTRACT எழுத்தாளர். எதை நினைக்கிறாரோ அதை பூடகமாக சொல்பவர். அவரளவு சிந்தித்தால் தான் அவர் புரிவார்.ஆனால் அவரது இயற்கை ரசிக்கத்தன்மை, அதை வெளிப்படுத்தும் எழுத்தாற்றல், அதுவும் ஆங்கிலத்தில் அபாரம்...
நான் கிருஷ்ணனை அதில் உள்ளே புகுத்தினேன். காரியம் எளிதாகிவிட்டது. அவன் வல்லவனுக்கு வல்லவன் ஆயிற்றே.
தாகூர் சிறந்த வேதாந்தி. அவர் கவிதைகளில் நாம் காணும் இந்த உலகை வேறு ஒரு ஆனந்த உலகமாக உணரலாம். சாவைக்கண்டு அஞ்சாத ஆனந்த நிலை புரியும். இதுவரை வாழ்ந்த வாழ்க்கை இறைவன் தந்த பரிசு, நன்றியோடு அவனை நினைத்து வாழ்ந்து விடைபெறுவது ஒன்று தான் புத்திசாலித்தனம்.
ஒருவன் வாழ்க்கையின் எல்லையில் நின்று எல்லோரி டமும் விடைபெறுகிறான். இனி அவனுக்கு வேறு உலகத் தில் அனுமதி. அங்கும் இங்கு போல் நண்பர்கள் கிடைப்பார்களா? இந்த தாகூரின் பாடலை எனக்கு அன்போடு அனுப்பியவர் பம்பாய் திருமதி விஜயா கிருஷ்ணமூர்த்தி. அந்த பாடலில் அர்த்தமும் ஆங்கில பிரதியும் கீழே :
++
''நண்பர்களே, ரொம்ப ரொம்ப நன்றி உங்களுக்கு. விடைபெறுகிறேன்.ஆஹா எப்படிப்பட்ட அழகான வாழ்க்கை உங்களால் எனக்கு கிட்டியது. ஒவ்வொரு கணமும் இனிமையான மறக்கமுடியாத இன்பகரம். குறை யொன்று மில்லை கண்ணா என்று அவனிடமும் உங்களிடமும் பாடுகிறேன். ஏதாவது எனக்கு துன்பம், வலி, துயரம் இருந்திருந்தால் அதெல்லாம் இனி இங்கேயே விட்டுவிட்டு செல்கிறேன்.
எப்போதெல்லாம் என் மனம் துவண்டதோ, எனக்கு சோர்வு தட்டியதோ, அப்போதெல்லாம் என் இதயத்துக்கு புத்துணர்வு, பூரண அன்போடு தந்து, என்னை அரவணைத்த என் ஆன்மாவை மகிழ்வித்த கண்ணனின் கருணைக் கரங்களுக்கு கோடானு கோடி நன்றி.
என் வாழ்வில் நான் பெற்ற விலைமதிப்பில்லாத செல்வம், என் நண்பர்களே, நீங்கள் தான். என்னை என்றும் ஊக்குவித்து, வழி நடத்திய பெருந்தகைகளே , காலத்தை வென்றவர்கள் நீங்கள். காலம் என்னை வென்றால் எனக்கென்ன கவலை?
விடைபெறுகிறேன், என் நட்பு தெய்வங் களே, நான் மகிழ்ச்சியோடு, ஆனந்தமாக சிரித்து விடை பெறுகிறேன். இங்கு சிந்த வேண்டி யது ஆனந்தக் கண்ணீர் ஒன்று தான். அதுவும் நன்றி உணர்ச்சி மேலீட்டால். நீங்கள் யாருமே அழத்தேவையே இல்லையே. நான் விரும்புவது என்றும் உங்கள் புன்னகை மாறா முகங்களைத் தான். நீங்கள் விரும்பியவர் உள்ளத்தில் என்றும் குடியிருக்கும்போது அங்கு மரணமே இல்லை. என்னை நினைக்கும்போதெல்லாம் நான் எங்கோ மகிழ்ச்சியில் உங்களை இருகரம் கூப்பி நன்றியோடு வணங்குவேன்.
Farewell My Friends
It was beautiful
As long as it lasted
The journey of my life.
I have no regrets
Whatsoever said
The pain I’ll leave behind.
Those dear hearts
Who love and care...
And the strings pulling
At the heart and soul...
The strong arms
That held me up
When my own strength
Let me down.
At the turning of my life
I came across
Good friends,
Friends who stood by me
Even when time raced me by.
Farewell, farewell My friends
I smile and
Bid you goodbye.
No, shed no tears
For I need them not
All I need is your smile.
If you feel sad
Do think of me
For that’s what I’ll like
When you live in the hearts
Of those you love
Remember then
You never die.''

sivan jaykay

unread,
May 20, 2025, 7:49:15 PM5/20/25
to amrith...@googlegroups.com
யஞ சேனி - நங்கநல்லூர்  J K  SIVAN

திடீரென்று  ஏன்  த்ரோபதை என் மனதில் தலை நீட்டினாள்?.  கிருஷ்ணா என்று அவளும் பெயர் கொண்டதனாலா?  ஆஹா,  எவ்வளவு அற்புதமானவள் அவள்... உடனே  மனம் வலை பின்னியது. என்னென்னவோ மசாலா சேர்த்து ஒரு பண்டம் கதையாக உருவானது. அது தான் இது. 

''தொச்சா'' (தொரைசாமி ஐயர்),  தஞ்சாவூர் பரசுராம அக்ரஹாரத்து  பூர்விக  ஏழை.  கிருஷ்ண பக்தர்.  மஹா பாரதம்  ப்ரவசன  ஜீவிதம்.  மனைவி சரோஜா 11 வருஷங்களுக்கு முன் போய்விட்டாள்.   மூன்று  பெண்களில் ரெண்டு
பேருக்கு கல்யாணம் பண்ணி கடைசி பெண் ஜெகதீஸ்வரிக்கு  எப்போது என்று கேள்விக்குறி..

 ரெண்டு தலைமுறையாக  வீட்டில்  திரௌபதி மான சம்ரக்ஷண படம் பூஜையில். கிருஷ்ணனின் அபயஹஸ்தம்  தான்  நம்பிக்கை.  கடைசிவரை சரோஜா  பூஜித்த  படம்.  அடுத்த தெரு  திரோபதை அம்மன் கோவிலில் தினமும் விளக்கேற்றி  தியானம்.  அம்மாவைப் போல்  ஜெகதீஸ்வரிக்கும்  கிருஷ்ணன் திரௌபதி உபாசனா தெய்வம். ஜெகதீஸ்வரி ரவி வர்மா ஓவியம் போல் ரொம்ப அழகான பெண். ஆனால்  பிறவியிலிருந்து திக்குவாய்.  

தொச்சாவின் மாமா பிள்ளை ராமுடு  ஒரு விஷயம் சொன்னார்.
நம்ம ஊர்  கோபாலய்யர்  மெட்றாஸ்லே   பிரபல தமிழ் பத்திரிகை  'சுகபோதினி'   ஆசிரியர். ''சுகபோதினி போடு போடுன்னு போடறது. பலே  எழுத்தாளர்கள்  எல்லாம்  எழுதறா.   நீங்க  விஷயஞானம் தெரிஞ்சவர்.  ஸ்வாரஸ்யமா  கதைகள்  எழுதுங்கோ. பத்திரிகையில் போடுவா.

'' ராமு,   நாங்க  கிருஷ்ணன்  புகழ்  பாடி  பொழச்ச குடும்பம்.  கிருஷ்ணன் தான் ராமன்.  ராம நாடக  கீர்த்தனைகள்  பூரா அத்துப்படி,  நானும்  பாடுவேன். ஆனா சாரீரம் கட்டை. ஸ்ருதி பேதம் வரும்.  எனக்குள் நானே  பாடிப்பேன் . நிறைய  வாசிப்பேன்,  யோசிப்பேன், பேசுவேன்.  எழுதினதில்லே. என் பொண்ணு  ஜெகதீஸ்வரி எழுதுவோ..பேசத்தான்  ஸ்ரமப்படுவோ. அவள் கிட்டே சொல்றேன்''

''அடுத்த மாசம் சிறு கதைப் போட்டி.  முதல்  மூணு  பேருக்கு பத்தாயிரம் ரூபா பரிசு. ஜெகதீஸ்வரியை    எழுதச்  சொல்லுங்கோ. அதிர்ஷ்டம் இருந்தா   பரிசு கிடைக்கட்டுமே . 

''ஆஹா. சந்தோஷமா.  நான் அவகிட்டே  இப்பவே எழுத சொல்றேன்''.  பெண்ணிடம் சொன்னார். 

''ஜெகதீஸ்வரி  நீ  எப்போவும் ஏதாவது எழுதரையே ,  ஒரு சிறு  கதை போட்டிக்கு  எழுதிப் போடு,  கிருஷ்ண பரமாத்மா  மனசு வச்சால் நம்ம குடும்பமும்  ஸ்ரமமில்லாமே ஓடுமே.மா''.

' எ  எ எ  எ ழுதறேன்பா.'

எதிரே  பழைய படத்தில்,  இடுப்பில் புல்லாங்குழலுடன் மஞ்சள் வஸ்திரம் மயில் பீலி,  கன்னுக்குட்டியோடு  கடம்ப மரத்தடியில் கிருஷ்ணன் அபய ஹஸ்தத்துடன் புன்னகைக்கிறான். கையிலிருந்து  ஒளிக்கற்றை  படத்தின் மூலையில் இரு கரம் சிரமேற் கூப்பிய  த்ரோபதையின்  இடுப்பில் புடவையாக  வளர்கிறது..... கிருஷ்ணன் பின்னால்  ஜிலு ஜிலுவென்று  யமுனை ஓடுகிறாள்...

 ஜெகதீஸ்வரி  தீபமேற்றி, மலர் சாத்தி,  எதிரே அமர்ந்து வெண்ணை நைவேத்தியம் பண்ணினாள். அடுத்த  வீட்டு நாவல் பழ மரத்தில் காய்த்த  மூன்று  பழங்கள் எதிரே தட்டில் அர்ப்பணித்து அழுதாள். கண்ணை மூடி கெஞ்சினாள்;

''கிருஷ்ணா, எனக்கு என்ன எ எ  எ  ழுதறதுன்னு  தெரியல.. நீ  ஹெ ஹெ  ஹெ  ஹெல்ப் பண்ணுவியா?  எத்தனையோ பேருக்கு  ஹெல்ப் பண்ணியிருக்கியே. என்னையும்  த்  த் த் த்  ரோபதியா நினைச்சுக்கோயேன்? எங்கம்மா  உ உ உன்னையும் அவளையும் எவ்வளவோ  வேண்டிண்டு இருக்கா. நானும்  தா தா  தான்...''       
 ஓவென்று  ஜெகதீஸ்வரி திக்கி திக்கி கதறினாள்.
'அழாதே நான்  த்ரோபதி கிட்டேஉன்னைப் பற்றி  சொல்றேன்.''
முதுகில் யார் தட்டினது?  
திரும்பினாள் ஜெகதீஸ்வரி.  திரௌபதி.  கருப்பாக, நிறைய அலையலையாக கருங்கூந்தல். வனமாலை அணிந்தவளாக  தீர்க்கமான நெற்றி ஆழ்ந்த ஊடுருவும் கண்களுடன் பேசினாள்:

''என்னைப்பத்தி தான் உன்கிட்டே  இப்போ சொல்லப்போறேன்..கேட்டுக்கோ. எழுது.  என் பேர்  கிருஷ்ணா. ஆமாம்  கிருஷ்ணனும் நானும் அண்ணா  தங்கை. என் உயிர் அவன். அவன் இல்லேன்னா நாங்க யாருமே  இல்லை. அப்பப்பா ஒண்ணா ரெண்டா. எத்தனை தடவை தேடித் தேடி  காட்டிலேயும் மேட்டிலேயும் நாங்க அலைஞ்சபோது வந்து ஆறுதல் தந்து காப்பாத்தினவன்''

''அம்மா  உ உ உ   உன்கிட்ட நான் ஒ ஓ  ஓ  ஓண்ணு  கேக்கட்டா?  ஏன்  தர்மர் சொக்கட்டான் ஆஆஆ ஆடும்போது
 கிருஷ்ணன் வந்து காப்பாத்தலை?"'

எல்லோரும்  அப்படிதாண்டி கேட்டா.  எது நடந்ததோ  அது அத்தனையும் அவனுக்கு தெரியும். இப்படித்தான் நடக்கப்  போறதுன்னும் தெரியும்? அப்போ தான் யுத்தம் வரும்.  மத்தியஸ்தம் பேச தூது போனான். விரும்பியபடியே தூது பலனளிக்காமல் திரும்பினான்.  யுத்தத்தில்  ஆயுதம் தாங்கி பங்கேற்காமல்  அர்ஜுனனுக்கு  ரதம்  மட்டும்  ஓட்டினான். .ரதத்தில் அவன் மட்டுமா?   ராமன் இல்லையா அவன் ? ரதத்துக்கு மேலே கொடியில்  ஆஞ்சநேயனும்  இருக்க செய்தான்.   ஆஞ்சநேயன் யார்? லங்கையையே புரட்டி போட்டவன். அவன் ஒருத்தனே  ராவணனை அழிச்சிருப்பான். ஆனால்  அவன்  ராம பக்தன். தூதன்...' ராமசாமியின் தூதன் நானடா ராவணா'  என்றவன்.  ''ராமன் வரப்  போறான் உனைக் கொல்ல . அதற்குமுன்  சீதையைத் திருப்பிக்  கொண்டுபோய் விடுன்னு நல்புத்தி சொன்னவன்.  தன்  பலத்தைக்   காட்ட லங்கையை அழிச்சவன்''

அர்ஜுனன் மேல்  பீஷ்மதுரோணர்கள்   வீசிய  அத்தனை  மந்த்ர சக்தி மிக்க  அம்புகளையெல்லாம்  கிருஷ்ணன் தனது முகத்தில், உடம்பில் வாங்கிண்டவன்.  திருவல்லிக்கேணி போய்  வெள்ளை மீசை பார்த்தசாரதி  முகத்தைப்பார். உனக்கே தெரியும்..

''என் இடுப்பு ஒத்தை வஸ்திரத்தை துச்சாதனன் இழுத்து என்னை நிர்வாணமாக்க நினைச்ச ஆபத்தான நேரத்திலே  ப்ரவாஹம்  மாதிரி வஸ்திரம் என் இடுப்பிலே  மேலேமேலே  வளர்ந்துண்டே வர பண்ணினவன். துச்சாதனன் கை  வலிக்க ஓய்ந்துபோய் மயங்கி  கீழே விழப்பண்ணினவன்.. ''ஆபத் பாந்தவா, அனாத ரக்ஷகா''  ன்னு  கத்தினேன்... அவன் வரலே . அவன் திவ்ய நாமமே எனக்கு வேண்டிய உதவியை செய்தது.   அதுக்கு நான் செஞ்ச நன்றிக்கடன் ஒரு சம்பவமா..
...அப்புறமா.....

''என்ன ச ச  ச  ம்பவம்  தா தா தாயே   அது?  சொ சொ  சொ  சொல்லுங்கோம்மா?- திக்கல் பேச்சு

''இப்போ நினைச்சாலும்  ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கு.  இந்திரப்பிரஸ்தம் கட்டி  ராஜசூய யாகம் பண்றபோது  கிருஷ்ணனின் அத்தை பிள்ளை சிசுபாலன் வந்தான்.  பெரிய கூட்டம். கிருஷ்ணன் தான் முக்கியஸ் தன்  யாகத்திலே, அவனுக்கு அக்ராசன பூஜை பண்ணி கௌரவிக்க கூடாதுன்னு  சிசுபாலன் கத்தினான்.  எப்போவுமே கிருஷ்ணனைக்
 கண்டா அவனுக்கு ஆகாது.  அவ்வளவு பெரிய சபையிலே  வாய்க்கு வந்தபடி யெல்லாம் கிருஷ்ணனை அவமரியாதையாக  பேசினாலும் கிருஷ்ணன் பதில் பேசலே.  பேசாம  பார்த்துண்டிருந்தான்.  என்ன தோணித்தோ  தெரியல.  திடீர்னு கிருஷ்ணன் எழுந்தான். அவன் கண்ணிலே ரௌத்ரம்.  கருப்பு முகம் நெருப்பாக சிவந்தது.

''சிசுபாலா,   இதுவரை  உன் அம்மாவுக்கு நான் கொடுத்த சத்தியத்தை  நிறைவேற்றிட்டேன். 100 தடவை என்னை அவமதிச்சு பேசினாலும்  உன்னை உயிரோடு விட்டு வைத்திருந்தேன்.  இனி மேல்  தப்பமுடியாது. தண்டிக்காமல் விடேன் .உன் கொடிய எண்ணங்கள், இந்த  பாபம்  நிறைந்த பிறவி முடியும்  நேரம் வந்துவிட்டது .''

''வாளை  வீசிக்கொண்டு  சிசுபாலன்  பாய்ந்து கிருஷ்ணனைக்  கொல்ல வந்தான்.  இமைப் பொழுதில் கிருஷ்ணனின்
கையில்  சுதர்சன சக்கரம் ஒளிவீசி மின்னல் வேகத்தில்  சுற்றிப்  பறந்தது. போகும் வேகத்தில்  கிருஷ்ணனின் வலது ஆட்காட்டி விரலை கீறிவிட்டுப்  புறப்பட்டது.  

''அடடா.   அப்போது  என்ன நடந்தது தெரியுமா? கிருஷ்ணன் லக்ஷியமே பண்ணவில்லை.  விரலிலிருந்து சிவப்பாக  ரத்தம்  வழிந்ததை  நான் தான்  முதலில்  பார்த்தேன்.  என்னை அறியாமல்  ஓடி கிருஷ்ணனைப்  பிடித்து  வலது கையை என் மடியில் வைத்துக் கொண்டேன். விலை உயர்ந்த மஞ்சள் பீதாம்பரத்தை யுதிஷ்டிரன் ராஜசூயயாகப் பரிசாக  வாங்கி கொடுத்ததை அணிந்தவள்,  துளியும் யோசிக்காமல் சர் ரென்று கிழித்தேன். ஒரு நீள  துண்டை எடுத்து கண்ணன் கைவிரலைத்  துடைத்து ரத்தம் கசியாமல் கட்டு போட்டேன். கிருஷ்ணன் என்னைப்  பார்த்து சிரித்து  ''கிருஷ்ணா '' என்றான்.  நானும் அவன் பெயர் கொண்டவளல்லவா?  கண்களில் நீர் மல்க   நானும் '' கிருஷ்ணா'' என்றேன். என்னை வாரி அணைத்தான். நாங்கள்  என்றும் இணைபிரியாத சகோதர சகோதரிகள்,  அந்த நாள் தான் அப்புறம் உலகத்தில் எல்லோரும் கொண்டாடும் ரக்ஷா பந்தன் தினமாகியது.  சகோதரர்களின் கைகளில்  சகோதரிகள்  ரக்ஷை கட்டி  அன்பும் நேசமும் எங்கும்  பரவும் நாள். பந்தபாசம் தான் எல்லோரையும்  வாழவைக்கிறது.

'அ  அ அ  அம்மா   உங்களை  கல்யாணம் ப ப ப  பண்ணிக்கொள்ள  கர்ணனும் ஆஅ ஆ ஆ ஆசைப்பட்டாரா? உ  உ உ உ ங்களுக்கும்  அப்படி எண்ணமா ?''

'அடி  அசடே..எனக்கு கணவனாக வருபவன் பதினாலு  உயர்ந்த குணங்கள்  கொண்டவனாக இருக்க  மகாதேவனை வேண்டினேன்.   ஐந்து பேரிடம் அது கலந்து  இருந்ததால் மஹாதேவன் எனக்கு  பஞ்ச பாண்டவர்களை  கணவர்களாக  கொடுத்தார்.   கர்ணனை ஒருபோதும் நான்   விரும்பியதில்லை.  ஒரு வீரனாக மதித்தேனே  தவிர மனதில் இடம் தரவில்லை.  அவன் எண்ணம் பற்றி  எனக்கு  என்ன அக்கறை?  நான் அவன் மனைவி யாகி இருந்தால் நீங்கள்  வணங்கும்  'மஹாபாரதி 'யாக   இருப்பேனா?  என் கிருஷ்ணன் என்னை மதித்தோ உதவியோயிருப்பானா?  என் தந்தை  துருபதன் நான் அர்ஜுனன் மனைவியாக வேண்டும் என்று வரம் கேட்டு யாகத்தில் பிறந்து  யஞசேனியாக புகழ்பெற்றிருப்பேனா?''
 என் கஷ்டம் யாருக்கும் வேண்டாம். அப்படிப்பட்ட கஷ்டம் வருவதாக இருந்தால்  நிச்சயம் கிருஷ்ணன் சகோதரனாக இருக்க வேண்டும்.''

ஜெகதீஸ்வரி கண்ணைத் திறந்தபோது எதிரே கிருஷ்ணன் வழக்கம்போல் சிரித்தான். மனத்திரையில்  ஓடிய   சம்பவம் அவளை பேனா எடுத்து எழுத வைத்தது.  யஞசேனி தன்னைப்  பக்கங்களில்  நிரப்பிக்கொண்டாள். ஜெகதீஸ்வரி   'ரோபோ'  போல  எழுதி   ''யஞசேனி''யை  உறையில் போட்டு  சுகபோதினிக்கு அனுப்ப ஆசிரியர்  கோபாலன் உறையை  பிரித்து படித்தார். 

 'ஆஹா, அசாத்தியம். வித்யாசமான கதை. இதுக்கு  தான் முதல் பரிசு . '' வாசு, போய்  எழுதினவரைப்  பார்த்து  போட்டோ பிடிச்சுண்டு வா. ''
உதவியாசிரியன் வாசுவுக்கு  ஜெகதீஸ்வரியே யஞசேனியாகத்  தோன்ற  'கல்யாணமே  வேண்டாம்'  என்றிருந்தவனுக்கு  சத்குணங்கள் கொண்ட அழகிய ஜெகதீஸ்வரியைப்  பிடித்தது.  கிருஷ்ணன் படத்தை  இருவரும் சேர்ந்து  நமஸ்கரித் தார்கள். ரெண்டு  குடும்பத்துக்கும்  திருப்தியோடு சித்திரையில் கல்யாணமாம்.  பத்திரிகை வந்தவுடன் தஞ்சாவூர்  போவோம்.  

sivan jaykay

unread,
May 20, 2025, 7:49:15 PM5/20/25
to amrith...@googlegroups.com
ஸ்வாமி தேசிகனின்  ஸ்ரீ ஸ்துதி -   நங்கநல்லூர்  J K  SIVAN 

ஸ்லோகம்  12-18 

12. आसंसारं विततमखिलं वाङ्मयं   यद्विभूतिर्यद्भ्रूभङ्गात्कुसुमधनुषः किङ्करो मेरूधन्वा ।
यस्यां नित्यं नयनशतकैरेकलक्ष्यो महेन्द्रः  पद्मे तासां परिणतिरसौ भावलेशैस्त्वदीयैः ॥ १२॥

Asamsaaram   vithatha makhilam vaangmayam yad vibhuthi Yath brungaath  kusuma dhanusha kimkaro merru dhanwaa
Yasyaam  nithyam  naya nasa thakair yeka lakshyo mahendra Padme  thaasaam parina thirasou bhava  lesai thwadheeyai
 
ஹே  புண்யவதி,  யார்  இந்த சரஸ்வதி, பார்வதி, சசி,  போன்ற  தெய்வீக பெண்மணிகள், பெண் தெய்வங்கள்? உன்னுடைய அம்சங்கள், உன் திருமேனியின் மற்ற பெயர்கள் தானே..உன் சங்கல்பத்தின் உருவங்கள், தோற்றங்கள் தானே. ஞானத்தை நீ பரப்பும்போது நீ தான் ஸரஸ்வதி. காமனை சுட்டெரிந்த  காமேஸ்வரன்  நீ காமேஸ்வரியாக அவதரித்த போது  தானே..ஆயிரம் கண்ணுடையான் இந்திரன் மனைவி சசி , உன் தோற்றமே. உனக்கே  வேறு பெயர்கள் உண்டே,  சாம்ராஜ்ய லக்ஷ்மி, இந்த்ராணி.  மஹா லக்ஷ்மி , எல்லாம் உன் அனுக்ரஹ  ஸங்கல்பம் தான். 

13. अग्रे भर्तुः सरसिजमये भद्रपीठे  निषण्णामम्भोराशेरधिगतसुधासम्प्लवादुत्थितां त्वाम् ।
पुष्पासारस्थगितभुवनैः पुष्कलावर्तकाद्यैः  क्लृप्तारम्भाः कनककलशैरभ्यषिञ्चन्गजेन्द्राः ॥ १३॥

Agre   Bharthu  sarasijamaye bhadra peede nishannam Amboraase adhika sudhaa samplavaadh udheeyathaam  thwaam
Pushpa saarai swagitha bhuvanai pushkala   varthakaadhyi Klupaarambha kanaks kalasair abhyashinchan gajendraa
 

மஹா லக்ஷ்மி  மஹா ராணி. அவளுடைய பட்டாபிஷேகம் எப்படி  இருக்கும்! அவள்  சிம்மாசனம் எது?  ஸ்ரீமந்  நாராயணனின் திரு மார்பு எனும் திருக்கோவில். .    இந்த  ஸ்லோகம்  முழுக்க முழுக்க  தாயார் மேல்  தியானம் பற்றியதின் மகுட மணி.
மஹாலக்ஷ்மி தாயே,  நீ  பாற்கடலில் உதித்த திருமணி.. புஷ்களா,  ஆவர்த்தகம்  எனும்  பெரும் மேகங்களி லிருந்து  பூமாரி பொழிகிறது உன் மீது. அந்த மலர் மலையில்  உலகமே  முழுகி மறைந்து போய் விட்டது. அஷ்ட திக் கஜங்கள் தும்பிக்கையில் பெரிய தங்க கலசங்கள் தானி அவற்றில்  நிறைய  புனித நீர் நிரப்பி உனக்கு  அபிஷேகம் செய்தன. இந்த அபிஷேகம் சாதாரணம் அல்ல. உன் பட்டாபிஷேகம்.  சகல மகரிஷிக
ளின் வேத மந்த்ர கோஷம்  வானைப்  பிளந்தது. இது அற்புத  விசேஷம் அல்லவா!

14,  आलोक्य त्वाम् अमृत सहजे विष्णु वक्षः स्थलस्थां.  शापाक्रान्ताः शरणमगमन् सावरोधाः सुरेन्द्राः।
लब्ध्वा भुयस् त्रिभुवनमिदं लक्षितं त्वत् कटाक्षैः सर्वाकार स्थिर समुदयां संपदं निर्विशन्ति॥ १४॥

ālokya tvām amṛta sahaje viṣṇu vakṣaḥ sthalasthāṁ, śāpākrāntāḥ śaraṇamagaman sāvarodhāḥ surendrāḥ|
labdhvā bhuyas tribhuvanamidaṁ lakṣitaṁ tvat kaṭākṣaiḥ, sarvākāra sthira samudayāṁ saṁpadaṁ nirviśanti|| 14||

அம்மா,  நீ  அம்ருதத்தின்  சகோதரி. யாரும் உன்னை இப்படி  அழைத்திருக்க மாட்டார்கள். தேவர்கள் அனைவரும்  தேவிகளோடு சேர்ந்து உன்னை சரணடைந்தார்கள். அவர்களுக்கு புத்துணர்ச்சி, பாதுகாப்பு நீ தானே தருபவள். துர்வாசர் கொடுத்த  சாபத்தால்  பதவி, ஐஸ்வர்யம் இழந்தவர்கள் இந்த  இந்திராதி தேவர்கள்.  அந்த சாபத்திலிருந்து அவர்களை மீட்டு மீண்டும் பதவி பொருள் பெற நீ  தானே விமோசனம்  அளிப்பவள்.  அதற்காகத்தானே  தேவாதி தேவர்கள் உன்னை சரணடைந்தவர்கள். உன் கடைக்கண் பார்வை ஒன்றே போதுமே  இந்திராதி தேவர்களுக்கு மீண்டும்  மூன்று லோகங்களிலும் பதவியும்  பெருமையும் பெறுவதற்கு. 
 
15.  आर्त त्राण व्रतिभिर् अमृता सार नीलाम्बुवाहैः अम्भोजानाम् उषसि मिषताम् अन्तरङ्गैर् अपाङ्गैः।
यस्यां यस्यां दिशि विहरते देवि दृष्टिस् त्वदीया तस्यां तस्याम् अहम् अहमहमिकां तन्वते संपदोघाः॥१५॥

ārta trāṇa vratibhir amṛtā sāra nīlāmbuvāhaiḥ ambhojānām uṣasi miṣatām antaraṅgair apāṅgaiḥ|
yasyāṁ yasyāṁ diśi viharate devi dṛṣṭis tvadīyā tasyāṁ tasyām aham ahaMahāmikāṁ tanvate saṁpadoghāḥ||15||

தேவி  மஹாலக்ஷ்மி,  உன் கடை விழி பார்வை  விடிகாலையில்  செந்தாமரை புஷ்பம் மலர்வதைப் போல் உள்ளது. அதன் சக்தி பிரபஞ்சம் அறியும்.  தேன் மாறி பொழியும் நீல மேகங்கள் போல  கருணை மழை பொழியும் அல்லி விழிகள். பார்வை பட்ட இடத்திலெல்லாம்  அளவற்ற செல்வம் நிரம்பும்.  கதியற்றவர்கள், தீனர்களுக்கு ஒரே புகலிடம் உன் கடைவிழி பார்வை ஒன்றே. 
 
16.   மிக அற்புத ஸ்லோகம் இது. இதை  சுவாமி தேசிகன் பெருந்தேவி தாயார் முன்பு மனமுருக பாடும்போது தான் தாயார் கனகமழை பொழிந்தாள். வைணவ வாலிபனுக்கு திருமணம் நடைபெற தேசிகர் தாயார் அருளை வேண்டியது  அல்லவா ஸ்ரீஸ்துதி ஸ்தோத்ரம்.  வைணவ ப்ரம்மச்சாரிக்கு ஆச்சர்யம். தங்கக்காசுகள் மழையாக பொழிந்தால் அந்த ஏழை வாலிபனுக்கு சந்தோஷமில்லாமலா இருக்கும்?

16.  योगारम्भ त्वरित मनसो युष्मदैकान्त्य युक्तम् धर्मं प्राप्तुं प्रथममिह ये धारयन्ते धनायाम्।
तेषां भूमेर् धनपति गृहाद् अम्बरादम्बुधेर्वा धारा निर्यान्त्यधिकम् अधिकं वाञ्छितानां वसूनाम्॥ १६॥

yogārambha tvarita manaso yuṣmadaikāntya yuktam dharmaṁ prāptuṁ prathamamiha ye dhārayante dhanāyām|
teṣāṁ bhūmer dhanapati gṛhād ambarādambudhervā dhārā niryāntyadhikam adhikaṁ vāñchitānāṁ vasūnām|| 16||

கர்ம யோகம் ஆரம்பிக்க  சிலர்  செல்வத்தை நாடுவார்கள். அதுவே  மெதுவாக உன்மேல் பக்தியாக மாறும். குபேரன் வீட்டு கதவை திறந்து உள்ளே சென்றது போல் எங்கும் கண்ணை  நிரப்பும்  பொற்காசுகள்.  பக்தி யோகத்தில் ஈடுபட்டவர்களுக்கும் அவ்வாறே , சமுத்திரம் கரை புரண்டு வெள்ளமாக பாய்வது போல் எங்கும் பொன் மயம்.

17. श्रेयस् कामाः कमल निलये चित्रमाम्नायवाचां  चूडा पीडं तव पद युगं चेतसा धारयन्तः।
छत्रच्छाया सुभग शिरसश् चामर स्मेर पार्श्वाः श्लाघा शब्द श्रवण मुदिताः स्रग्विणः सञ्चरन्ति॥ १७॥

śreyas kāmāḥ kamala nilaye citramāmnāyavācāṁ cūḍā pīḍaṁ tava pada yugaṁ cetasā dhārayantaḥ|
chatracchāyā subhaga śirasaś cāmara smera pārśvāḥ ślāghā śabda śravaṇa muditāḥ sragviṇaḥ sañcaranti|| 17||

அம்மா பரதேவதே,  உன் திருவடிகளை  நெஞ்சில், இதயத்தில் சுமந்தவர்களுக்கு இந்த  பூ கத்தில் சக்ரவர்த்திகளாவதில் ஆச்சர்யமே  இல்லை. சகல சௌபாக்கியங்களும் அவர்கள் வசமே...உன் திருவடிகள் தான் வேதத்தின் சிகரம். சர்வாலங்காரம். 
 
18  ऊरीकर्तुं कुशलम् अखिलं जेतुमादीनरातीन्  दूरी कर्तुं दुरितनिवहं त्यक्थुम् आध्यामविध्याम्।
अम्ब स्तम्बावधिक जनन ग्राम सीमान्त रेखाम्  आलम्बन्ते विमल मनसो विष्णुकान्ते दयां ते॥ १८॥

ūrīkartuṁ kuśalam akhilaṁ jetumādīnarātīn  dūrī kartuṁ duritanivahaṁ tyakthum  ādhyāmavidhyām|
amba stambāvadhika janana grāma sīmānta rekhām  ālambante vimala manaso viṣṇukānte dayāṁ te|| 18||
Those with blemishless minds hold on to Your Dayā as their supporting staff in their life's journey.

அம்மா,  வாழ்க்கை பயணத்தில், உன் கருணை, தயை ஒன்றே  உள்ளே துன்புறுத்தும் எதிரிகளை வெல்லலாம். பாபங்களை அகற்றலாம். அஞ்ஞானத்தை  விலக்கலாம்.  பிறவிப்பிணி அகலும்.  செய்ய வேண்டியதெல்லாம் உன்னை தியானம் செய்வது ஒன்றே தான். 

அடுத்த பதிவோடு சுவாமி தேசிகரின்  ஸ்ரீ ஸ்துதி நிறைவு பெறும். 

sivan jaykay

unread,
May 20, 2025, 7:49:15 PM5/20/25
to amrith...@googlegroups.com
சாணக்ய நீதி ...   நங்கநல்லூர்  J K SIVAN

ஒரு  மனிதன் இவ்வளவு கெட்டிக்காரனாக கூட  இருக்க முடியுமா? என்று திகைக்க வைப்பவன்  சாணக்கியன் எனும் கௌடில்யன்.  வேத சாஸ்திரம் ஒன்றே அவன் அறிந்தவன்.  இதோ அவன் வார்த்தைகள் சில.

இந்த உலகத்தில் ஏதாவது ஒரு  குடும்பம்  குறை இல்லாமல் பார்க்க முடிகிறதா?
எவனாவது  நோய் வாய்ப்படாமல், துன்பம் அனுபவிக்காமல் இருந்ததுண்டா?
எவனாவாவது உலகத்தில்  எவனாவது உலகத்தில் சதா சர்வ காலமும் சந்தோஷமாகவே  இருந்ததாக சரித்திரம் உண்டா?

ஒருவனை மதிக்க, அவனது நல்ல குணம்  வெளிப்படவேண்டும்.அவன் வாயிலிருந்து புறப்படும் வார்த்தை,  அவன் மனதை திறந்து காட்டும். அவன் நடத்தை, எவன் எந்த தேசத்தவன் என்று புரியவைக்கும்.  அவன் எளிமை, பதவிசு, அவன் எப்படி நட்பை பாராட்டுபவன் என்று தெரிவிக்கும். அவன் தேக ஆரோக்யம் அவன் எதை எவ்வளவு உண்கிறான் என்பதைக் காட்டும்.

பெண்ணை நல்ல குடும்பத்தில் கொடு.  பிள்ளையை நன்றாக படிக்க வை.  

உன் எதிரியை சதா கண்காணித்துக்கொண்டே இரு.  பரிதாபமோ, இரக்கமோ காட்ட அவன் தகுதியற்றவன் என்று தெரிந்தால் அவனுக்கு மேலும் மேலும் துன்பம் கொடு.அப்போதாவது அவன் திருந்தட்டும்.  தர்மத்தை
 நண்பர்களோடு சேர்ந்து பழகும்போது  பின்பற்று.

ஒரு அயோக்கியன்,  பாம்பு  இந்த ரெண்டில்  பாம்பை நம்பலாம். அது தன்னை தாக்குபவரை பதிலுக்கு தாக்கும். அயோக்கியன் எந்த நேரமும் எதிர்பாராத விதத்தில் துன்பம் தருபவன்.
சாணக்கியன் கால ராஜாக்கள்  நம்பகமான நல்ல குடும்பத்தவர்களையே மட்டும் தங்களோடு ராஜாங்கத்தில்  அரசவையில்  உத்யோகம் தந்து  பராமரித்தார்கள். அவர்களும் துரோக சிந்தனை இல்லாமல் உதவினார்கள்.

ப்ரளய காலத்தில் சமுத்திரம் பொங்கும். எல்லை மீறும்.  ஆனால்  ஒரு ஆத்ம ஞானி எப்போதும் என்றும்  நிலை குலையாதவன்.

முட்டாளோடு  சங்காத்தம் வைத்துக்கொள்ளாதே. அவன் ரெண்டு கால் மிருகம் என்பதை மறக்காதே. எப்படி  காலில் சுருக்கென்று முள் குத்துமோ அது போல. அவன்  சுருக்கென்று சொல்லும் வார்த்தைகள் இதயத்தை துளைத்து விடும்.

தனவந்தனின் பிள்ளைகள், அழகாக இருந்தாலும், இளமையோடு இருந்தாலும், படிப்பில்லாவிட்டால் கள்ளிச் செடிக்கு சமம்.
குயிலின்  பெருமை அதன் குரலில்.  குடும்பஸ்திரீயின் பெருமை அவள் கட்டுக்கோப்பாக  பொறுப்பாக  குடும்பத்தில் பெரியவர்களிடம் மரியாதையோடு  குடும்பத்தை ரக்ஷிப்பவள்.
குடும்பத்தை காப்பாற்ற ஒருவரை தியாகம் செய்யலாம். ஒரு கிராமத்தை காக்க ஒரு குடும்பத்தை தியாகம் செய்யலாம், தேசத்தை காக்க  ஒரு கிராமத்தையே  துறக்கலாம் . தப்பே  இல்லை. நீ நல்லவனாக இருந்தால் தேசமே உன்னை பின் நின்று காக்கும்.
இடையறாமல் உழைப்பவனுக்கு ஏழ்மை கிடையாது.  ஜெபத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவனை பாபம் நெருங்காது.  மௌனமாக இருப்பவனால் எந்த சண்டையும் மூளாது. சதா உஷாராக  இருப்பவனுக்கு பயம் என்னவென்றே தெரியாது.
பலவானுக்கு எதுவுமே  கனமானது இல்லை. முயற்சியோடு  முனைப்பாக  செயல்புரிபவனுக்கு  எதுவுமே  தூரமில்லை. நன்றாக கல்வி கற்ற சான்றோனுக்கு  எந்த நாடும் வேறானதல்ல. அவனுக்கு எங்கு சென்றாலும் மதிப்புகௌரவம்.

இன்சொல்லோடு பழகுபவனுக்கு எங்கும் எவரும் விரோதியில்லை. 
எவ்வளவு பெரிய காடானாலும் ஒரு நறுமணமிக்க மலர்களையுடைய ஒரு மரத்தால் கம்மென்று வாசனை பெறும்.  நன்றாக கல்வி கற்ற சான்றோனாக ஒரு மகன் இருந்தால் அவனது முழு குடும்பமும் அவ்வாறே புகழ், பெருமை பெறும்.
அதே சமயம்,  ஒரு காய்ந்த பிரயோஜனமில்லாத மரத்தில் தீ மூண்டால், முழு காடும் தீப்பற்றி எரிந்து வீணாகும். அது போல தான், ஒரு அயோக்கிய பிள்ளையால் மொத்த குடும்பமும்  அழியும். 
இன்னும் சொல்கிறேன்  

sivan jaykay

unread,
May 20, 2025, 7:49:15 PM5/20/25
to amrith...@googlegroups.com
புதியதும் பழையதும்.  - உவேசா. --    நங்கநல்லூர்  J K .SIVAN 

சுத்தமேளம் .

''பூமாதேவி, உனது இதயம் எது அம்மா? என கேட்டால்  ''இதில் என்ன சந்தேகம் உனக்கு. அது  திருவாரூர் சிவஸ்தலம்  தான்'' என்பாள்.  

 நான் சொல்லப்போகும் விஷயம் தஞ்சாவூரை மராத்தி ராஜாக்கள் ஆண்ட காலத்தில் திருவாரூரில் நடந்தது.  உ.வே.சா. நினைவு கூர்ந்த விஷயம்.  திருவாரூரில் முசுகுந்த சக்கரவர்த்தி  தேவலோகத்திலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை பண்ணிய தியாகேசன் இருக்கிறாரே, வேறே என்ன விசேஷம் வேண்டும்?  சாயந்திர வேளையில்  திருவந்திக்காப்பு அலங்காரம், அர்ச்சனை பூஜை ரொம்ப விசேஷம். அற்புதமான அலங்காரத்தால்  சிவனுக்கு  திருவந்திக்காப்பழகர் என்று பெயர்.  தஞ்சாவூர் ராஜா சில சமயம்  திருவாரூர்  வந்து திருவந்திக்காப்பு பூஜையின் போது  தியாகேசனை தரிசிப்பார். 

சரபோஜி  இப்படி ஒருநாள் வந்த போது  மேளம், நாயனம்,கொம்பு, எக்காளம் , ஜாலரா நகரா, வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. 

சின்னத்தம்பி என்கிற நட்டுவன் தியாகேசனின் தீவிர  பக்தன். தலையில் கழுத்தில்  கையில்  ருத்திராக்ஷம். பட்டையாக விபூதி.  அவன் சுத்தமத்தளம் வாசிப்பவன். 

ஒருநாள் கண்ணை மூடி தன்னை மறந்து சிவ த்யானத் தில் வாசித்துக் கொண்டிருந்தவனுக்கு ராஜா வந்தது தெரியவில்லை. மற்றவர்கள்  வணங்கி எழுந்தார்கள். அவன் கண்ணைமூடி வாசித்துக் கொண்டிருந்தான். எல்லோருக்கும் பயம். ராஜா என்ன தண்டனை தருவாரோ? என்று.    ராஜாவுக்கு சங்கீதம்   தெரியும். நட்டுவனின் மனோ லயம், வாத்ய, தாள, லயம்  ரொம்ப பிடித்தது. பேசாமல் நின்று கொண்டு கேட்டுக்கொண்டிருந்தார். 

''ஆஹா, தியாகேசனுக்கு எவ்வளவு பக்தியோடு பணிவிடை செய்கிறான்''  என்று வியந்தார்..  பூஜை முடிந்து, வாத்யம் வாசித்து முடித்து சின்னத்தம்பி கண்ணைத் திறந்தபோது எதிரே ராஜா நிற்பதை பார்த்து பயந்து மெதுவாக எழுந்து வணங்கினான்.

''மஹாராஜா  என்னை மன்னிக்கவேண்டும். தெரியாமல் போய்விட்டது''
''தம்பி, பயப்படாதே. உன் வாசிப்பு எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. உனக்கு என்ன வேண்டும் கேள். தருகிறேன் ''

சின்னத்தம்பிக்கு பயம். ராஜா தன்னை  தஞ்சாவூருக்கு அழைத்துக் கொண்டு   போய்விடுவாரோ? அங்கே அரண்மனையிலோ வேறு  எங்கேயோ  வாசிக்கச் சொல்வாரோ. ஊரை விட்டு போகவேண்டி இருக்குமோ??''
மெதுவாக  திக்கி திக்கி  ராஜாவை வேண்டினான்.

''மஹாராஜா, எனக்கு ஒரே ஒரு வரம் மட்டும் தாருங்கள்.  இந்த திருவாரூர் க்ஷேத்ரத்தில் தியாகேசன் முன்னால்  திருவந்திக்காப்புக்கு  விடாமல் நான் எனது  கடைசி  நிமிஷம் வரை  சுத்தமேளம் வாசிக்க அருள் புரியுங்கள். வேறெதுவும் வேண்டாம்''

மகாராஜாவுக்கு அவன் பக்தி புரிந்தது.

 ''இனிமேல் நீ தான் இங்கே  திருவந்திக்காப்பு பூஜை வேளையில் எப்போதும்  மேளம் வாசிக்கவேண்டும் என்பது என் கட்டளை. யாரும் மீற மாட்டார்கள்.'' என்று சொல்லிவிட்டு அவனுக்கு நிறைய  சன்மானங்கள் வழங்கினார் சரபோஜி ராஜா.. 

sivan jaykay

unread,
May 20, 2025, 7:49:23 PM5/20/25
to amrith...@googlegroups.com
கடவுள் வாழ்த்து.... நங்கநல்லூர் J K SIVAN

மிகவும் எளிய தமிழ். படிக்கும்போதே, பாடும்போதே, அர்த்தம் புரியும் பாடல். இராமலிங்க ஸ்வாமிகள் இயற்றிய இந்த பாடலை ஒவ்வொருநாளும் ஒன்பது மணிக்கு சூளைமேட்டு கூரைக்கட்டு பள்ளிக்கூடத்தில் அப்பாதுரை புங்க மரக்கிளையில் தொங்கும் தண்டவாள துண்டில் இரும்பு குழாயால் டாண் டாண் என்று மணி அடித்ததும் வரிசையாக நின்று  சரோஜினி டீச்சர் சொல்லிக்கொடுத்ததைப் பாடியது ஞாபகம் வருகிறது. அப்போது வயது ஒன்பது. இன்று 86ல் அதை முணுமுணுக்கும்போது மனம் கரைகிறது. பக்தி ரசம் ஊற்றாக மனதில் பொங்குகிறது.

''கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
''என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே''

இந்த உலகத்தில் படித்தவன், படிக்காதவன் இரண்டு பேருக்கும் அவனுக்கு வேண்டிய இன்பமாக இருப்பவன் ஈசன்.
பலம் மிக்கவர்களுக்கும் நோஞ்சான்களுக்கும் கூட பாரபக்ஷம் இன்றி வரம் தருபவன் ஈசன். நம்பினவர்க்கும், அவனை மதிக்காமல் தூற்றுபவர்களுக்கும் கூட அன்போடு அருள் புரிபவன் ஈசன்.
எதெல்லாம் நல்லதோ, எதெல்லாம் கெட்டதோ ரெண்டுக்கும் மத்தியில் நடுவாக நின்று புத்தியை தருபவன் ஈசன்.
மண்ணுலக மாந்தர்க்கும் விண்ணுலக தேவர்க்கும் அவன் பொது, எல்லோருக்கும் சொந்தம் அந்த பரமேஸ்வரன். எல்லோருக்கும் அவன் பொதுவானவன்.நலம் அளிப்பவன்.
நீயே எனக்கு ராஜா பரமேஸ்வரா, நான் உன்னை விடாமல் நினைத்து மகிழ்ந்து பாடுவதற்கும் நீயே அருள் புரியவேண்டும்.
என் பாடல்களையே உனக்கு பாமாலையாக அணிவிக்க வரம் தந்தருள்வாய்''

என்று அருமையாக பாடுகிறார் வள்ளலார்.
என்னைப்போல் உங்களில் பலரும் இந்த பாடலை சிறுவயதில் பள்ளியில் பாடி இருப்பீர்கள். சொல்லுங்கள். ஞாபகம் இருக்கிறதா?

sivan jaykay

unread,
May 27, 2025, 9:46:41 PM5/27/25
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
''கர்ப்ப வாசம் '' -
காஞ்சி மஹா பெரியவா பற்றி யாராவது ஏதாவது  பேசினால்  அது ஏதோ ஒரு அற்புத நிகழ்ச்சி யாகத்தான்  இருக்கும் என்பது தான் நமது அனுபவம்.  பேசும் தெய்வம் அதிசயங்கள் நிகழ்த்துவதில் என்ன  ஆச்சர்
யம் இருக்கிறது.    ஒரு கேள்வி  கேட்கிறேன்.    மஹா பெரியவா  கர்ப்பவாசம் அனுபவித்த சம்பவம் பற்றி உங்களுக்கு தெரியுமா?.  அநேகருக்கு  தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர் எந்த விளம்பரமும் செய்ததில்லை. எதையும் வெளிப்படையாக  பிறர் அறிய வேண்டும் என்பதற்காக  எதையும் செய்ததில்லை. அது அவரது இயல்பான செயல். 

31.5.25 காஞ்சிபுரம் அருகில்  இருக்கும் தேனம்பாக்கம் என்ற கிராமத்துக்கு சென்று அங்கே உள்ள பிரம்மபுரீஸ்வரர் எனும் சிவ ஸ்தலத்தை தரிசிக்க போகிறோம்.  ப்ரம்ம புரீஸ்வரர் சுயம்பு லிங்கம் . 
மஹா பெரியவா இந்த சிவாலயத்துக்கு அடிக்கடி வருவார். அங்கே வரும் பக்தர்களுக்கு பிரம்மபுரீஸ் வரரைத் தவிர மஹா பெரியவா அனுக்ரஹமும் சேர்ந்து கிடைக்கும். நான் தேனம்பாக்கம் சென்றிருக்கிறேன். ஆனால் மஹா பெரியவா அங்கே வாசம் செய்யும் சமயம் செல்லும் பாக்யம் கிடைக்காதது என் துரதிர்ஷ்டம். 

ஒரு குழந்தை தாயின் கருவறையில் பத்து மாதங்கள் தங்கி, பின் ஜனனமாவது தான் உலக வழக்கம். அதே போல, மஹா பெரியவா இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள ஒரு சிறிய இருந்த குடிலுக்குள் பத்து மாதம் தங்கி அனுஷ்டானங்களை நடத்திக் கொண்டிருந்தார். அவ்வாறு, இருந்த காலத்தில் ஒருநாள் கூட, அந்தக் குடிலை விட்டு அவர் வெளியே வந்ததே இல்லை. இது  பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. உள்ளே இருந்த காலத்தில், அவர் என்ன செய்தார்?
இதுவும் ரஹஸ்யம் தான்.
சூரியவெளிச்சத்தைக் கூட பார்க்காமல் அவர் இவ்வாறு ஓரிடத்தில் தங்கி இருக்க  என்ன அவசியம்? இது இன்றும் ஒரு புரியாத புதிர் .
ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது, சிசு வெளியுலகைப் பார்க்க முயாதே.
அதுபோல், மஹா பெரியவாளும் பத்து மாதம் அங்கு தங்கி வெளிவராமல் இருந்ததால் இந்த கால கட்டம் தான் “கர்ப்பவாசம்’ எனப்படுகிறது.
அந்த சிறிய அறைக்கு ஒரு சின்ன மாடப்பிறை இருந்தது. அந்த துவாரத்தின் வழியாக பிக்ஷை ஏற்றுக் கொள்வார்.
அதை திறந்து வெளியே பார்த்தால் எதிர் சுவற்றில் ஒரு சின்ன கல் பிள்ளையார் விக்ரஹம் தெரியும். அந்த பிள்ளையாரை அடிக்கடி நமஸ்கரிப்பார்.
அந்த அறையை ஒட்டி ஒரு கிணறு. அதில் தான் பெரியவா ஜலம் இறைத்து ஸ்னானம் பண்ணுவார்.
கிணற்றுக்கு அந்தப் பக்கம் தான் அவரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். பெரியவா கிணற்றுக்கு இந்த பக்கம் அறைக்குள். நடுவே கிணறு. அந்த பக்கம் பக்தர்கள்.
 இந்திரா காந்தி , மற்றும் பெரிய பெரிய அரசாங்க அதிகாரிகள் கூட அப்படி கிணற்றுக்கு பக்கம் நின்று தான் அறைக்குள் இருந்த பெரியவாளை தரிசித்தார்கள் .
கிணற்றுக்கு அருகிலேயே ஒரு சிமெண்ட் தொட்டி. அதில் ஜலம் நிரப்பி வைப்பார்கள் அதை தான். மஹா பெரியவா ஸ்னானத்துக்கு உபயோகிப்பார்.
கிணற்றை ஒட்டி ஒரு மரப்படி . அதன் மேல் ஏறி உச்சியிலிருந்து காஞ்சி ஆலய கோபுரங்களின் தரிசனம் பெறுவார். கோபுர தரிசனம் கோடி புண்யம் என்கிறோமே.
மஹா பெரியவா ஏன், எதற்காக இவ்வளவு அரிய தவத்தை அந்த சிறிய இருட்டறையில் பத்து மாத காலம் மேற்கொண்டார்?
உலகத்திற்கு என்ன நன்மை கருதி இதை அனுஷ்டித்தார்?
இதற்கு விடை மஹா பெரியவாளுக்கும்  அவர் தினமும் பூஜித்த திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரருக்கும்  மட்டுமே தெரியும் . மஹா பெரியவா கர்ப்பவாசம் அனுபவித்த கோயில் என்பதால், குழந்தை இல்லாதவர்கள் தேனம்பாக்கத்திலுள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு வந்து சுவாமியை வழிபடலாம்.   லோக க்ஷேமத்துக்காக  மஹா பெரியவா  அரும் பெரும் கோரிக்கைகளை   ஈஸ்வரன் முன்  வைத்தே இங்கே கர்ப்பவாசம் செய்திருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில், இங்கே கன்னியர் நல்ல வரன் வேண்டியும், ஊனமுற்ற குழந்தைகள் தங்கள் எதிர் காலம் சிறக்கவும் பூஜை செய்து வரலாம். பலன் கைமேல் கிடைக்கும் என்று உறுதியான நம்பிக்கை.  இறைவனால் ஆகாத காரியமும் உண்டோ!

ஆனையாம்பட்டி தண்டபாணி  என்ற ஜலதரங்க வித்வான்  1984ல் பெரியவா  மேலே  சொன்ன  தேனம் பாக்கம்  சிறு அறையில் தங்கி கிணற்றுக்கு அப்புறம் இருந்து தரிசனம் கொடுத்து வந்த கால\ கட்டத் தில் தரிசனம்  பெற  விரும்பினார்.  தண்டபாணிக்கு  உடல் நிலை மோசமாக இருந்ததால் அவரால் வர முடியவில்லை. அவர் தம்பி தனது  அண்ணா உடல் நிலை குறித்து பெரியவாளிடம்  ஆசி  கேட்க வந்திருந்தார்.
தம்பியும்  வித்துவான்.  ரேடியோவில் வாய்ப் பாட்டு, வயலின் வித்வான்.  இவர்களின் தகப்பனார்
சுப்பையர் மைசூர் அரண்மனையின் ஆஸ்தான வித்வான். தம்பி ஸ்ரீ  கணேசன் தண்டபாணியின் உடல் நிலை குறித்து  பெரியவாளிடம் கேட்டபோது, பெரியவா காஷ்ட மௌனத்தில் இருந்தார்.  ஜாடையில் அவர் சொன்னது; 
''நீயே ஜலதரங்கம் வாசியேன்'
 'பெரியவா எனக்கு ஜலதரங்கம் வாசிக்கத்  தெரியாதே'' 
மஹா பெரியவா ஜாடையாகா '' ட்ரை  பண்ணு,  நீயும் நீ வாசிப்பே ''
கணேசன் அங்கேயே  ஜலதரங்கம் வாசிக்க முயன்றார். 
என்ன ஆச்சர்யம்!  இதற்கு முன் வாசித்ததேயில்லை என்றாலும்  மஹா பெரியவா முன்னால்  அவரால் தங்கு தடையின்றி  ஜலதரங்கம் வாசிக்க முடிந்தது அவரால்! தன் அண்ணாவுக்குப் பக்க வாத்யமாக வயலின் வாசிப்பது தவிர இந்த  வாத்யம் பற்றிய சிறிதளவும் தெரியாத திரு கணேசன் அன்று அங்கு வாசித்தது அவர் அரங்கேற்றமாக  அமைந்தது! அன்று தொடங்கி பல நிகழ்ச்சிகளில்  வாசித்ததோடல்லாமல் ஸ்ரீ மடத்தின் ஆஸ்தான  வித்வானாகும் பாக்கியமும் கிட்டியது.  மஹா பெரியவா அருளிருந்தால் எதையும் சாதிக்க முடியும்  என்பது நிரூபணமாகியது.   

இந்த நிகழ்ச்சி நடந்து சரியாக பதினைந்து  நாட்களில்  ஸ்ரீ தண்டபாணி  இறைவனடி சேர்ந்தார். அதை முக்காலமும் உணர்ந்த மஹா பெரியவா அவர் தம்பியை  தண்டபாணியின் வாரிசாக  இசை உலகில் ப்ரக்யாதி அடையுமாறு செய்தது திரு கணேசன்  பெற்ற பெரும் பாக்கியம்!  

sivan jaykay

unread,
May 27, 2025, 9:46:41 PM5/27/25
to amrith...@googlegroups.com

ஸ்ரீ ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீ ஸ்துதி - நங்கநல்லூர் J K SIVAN


ஸ்லோகம் 19-25  ( இத்துடன் நிறைவு பெறுகிறது) இதை இலவச புத்தகமாக்கி அளிக்க முன்வருபவர்கள் என்னை அணுகலாம். ஜே கே சிவன் 9840279080

19:  जाता काङ्क्षा जननि युवयोर् एक सेवाधि कारे,  माया लीढं विभवम् अखिलं मन्य मानास् तृणाय।
प्रीत्यै विष्णोस्तव च कट्टतिनः प्रीतिमन्तो भजन्ते वेलाभङ्गः प्रशमनफलं वैदिकं धर्मसेतुम्॥ १९॥

jātā kāṅkṣā janani yuvayor eka sevādhi kāre  māyā līḍhaṁ vibhavam akhilaṁ manya mānās tṛṇāya|
prītyai viṣṇostava ca kaṭṭatinaḥ prītimanto bhajante velābhaṅgaḥ praśamanaphalaṁ vaidikaṁ dharmasetum|| 19||

தெய்வமே, தாயே, ஸ்ரீ விஷ்ணுவையும் விஷ்ணு பத்தினியான உன்னையும் இரு கண்களாக வணங்கி தொழும் பக்தர்களுக்கு எதுவும் குறைவில்லை. எதுவும் தேவை இல்லை. இந்த உலக சம்பத்துகள் எல்லாம் ஒரு புல்லாக திரணமாக  மதிப்பவர்கள்.  வேத கர்மாக்களை முறையாக  அனுஷ்டிப்பதன் மூலம் உங்களது பூரண த்ரிப்தியை பெறுபவர்கள். 
 
20. 
सेवे देवि त्रिदशमहिलामौलिमालार्चितं ते   सिद्धिक्षेत्रं शमितविपदां सम्पदां पादपद्मम् ।
यस्मिन्नीषन्नमितशिरसो यापयित्वा शरीरं   वर्तिष्यन्ते वितमसि पदे वासुदेवस्य धन्याः ॥ २०॥

seve devi tridaśa mahilā mauli mālārcitaṁ te  siddhi kṣetraṁ śamita vipadāṁ saṁpadāṁ pāda padmam|
yasmin nīṣan namita śiraso yāpayitvā śarīraṁ vartiṣyante vitamasi pade vāsudevasya dhanyāḥ|| 20||

மஹா தேவி, உன் திருவடிகளை சரணடைந்தவரகளள்  பாக்கியசாலிகள். இந்த ஊத்த சரீரத்தை விட்டபிறகு அவர்கள் நேராக  உனது நாதன் வாசம் செய்யும் ஸ்ரீ வைகுண்டத்துக்கு அல்லவோ செல்பவர்கள். அடியேனும் உனது தாமரைத் திருவடிகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு சரணடைகிறேன். தேவாதி தேவர்கள் அனைவரும் தமது சிரத்தை அந்த பாதங்களில் வைத்து வணங்குபவர்கள் அல்ல? சகல சர்வ சம்பத்தும் தோன்றும் இடமாயிற்றே  உன் திருவடிகள். பரம பதம் அடைய அது ஒன்று தானே வழி. 

21.  सानुप्रास प्रकटित दयैः सान्द्र वात्सल्य दिग्धैः अम्ब स्निग्धैर् अमृत लहरी लब्ध सब्रह्मचर्यैः।
घर्मे तापत्रय विरचिते गाढ तप्तं क्षणं माम् आकिञ्चन्य ग्लपित मनट्टैर् आर्द्रयेथाः कटाक्षैः॥ २१॥

sānuprāsa prakaṭita dayaiḥ sāndra vātsalya digdhaiḥ amba snigdhair amṛta laharī labdha sabrahmacaryaiḥ|
gharme tāpatraya viracite gāḍha taptaṁ kṣaṇaṁ mām ākiñcanya glapita manaṭṭair ārdrayethāḥ kaṭākṣaiḥ|| 21||

அம்மா, உன் திவ்ய நேத்ர கடாக்ஷத்தின் சக்தி  உலகறியும்.  உயிர்த்தேனை வாரி வழங்குபவை அவை. நிர்க்கதியாக நிற்பவரை கை தூக்கி காப்பவை. ஸம்ஸார துக்கங்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் காப்பவை. அடியேன்  அவதியுறுகின்ற  ஆதி ஆத்மீக, ஆதி பௌதிக, ஆதிதைவ  துன்பங்களிலிருந்து  என்னைக் கரை சேர்ப்பாயா?

22. संपध्यन्ते भव भय तमी भानवस् त्वत् प्रसादात् भावाः सर्वे भगवति हरौ भवितमुद्वेलयन्तः।
याचे किं त्वाम् अहमिह यतः शीतलोदारशीला भूयो भूयो दिशसि महतां मङ्गलानां प्रबन्धान्॥ २२॥

saṁpadhyante bhava bhaya tamī bhānavas tvat prasādāt bhāvāḥ sarve bhagavati harau bhavitamudvelayantaḥ|
yāce kiṁ tvām ahamiha yataḥ śītalodāraśīlā bhūyo bhūyo diśasi Mahātāṁ maṅgalānāṁ prabandhān|| 22||

புண்யவதி, உன்னிடம் நான் ஒரு வரமும்  கேட்கப்போவதில்லை. என்ன கேட்பேன் உன்னிடம்? உன் கடைக்கண் பார்வை ஒன்றே போதுமே. எண்ணிப்பார்க்க முடியாத சகல ஐஸ்வர்யங்களையும் கொண்டு வந்து கொட்டுமே.  ஸ்ரீ, ஸ்ரீ நிவாஸன் உங்கள் இருவரிடமும் எனக்கு பக்தி இன்னும்  பெறுக வேண்டும். அவ்வளவு தான். 

23माता देवि त्वमसि भगवान् वासुदेवः पिता मे जातः सोऽहं जननि युवयोर् एक लक्ष्यं दयायाः।
दत्तो युष्मत् परिजनतया देशिकैरप्यतस्त्वं किं ते भूयः प्रियमिति किल स्मेर वक्त्रा विभासि॥२३॥

mātā devi tvamasi bhagavān vāsudevaḥ pitā me jātaḥ so'haṁ janani yuvayor eka lakṣyaṁ dayāyāḥ|
datto yuṣmat parijanatayā deśikairapyatastvaṁ kiṁ te bhūyaḥ priyamiti kila smera vaktrā vibhāsi||23||

மஹாலக்ஷ்மி தேவி,  அடியேன்  உங்கள் இருவரின் தயை, கருணையை, அருளை, வேண்டி உங்கள் திருவடியில் நிற்கும்  ஒரு துகள். நீ என் தாய், ஸ்ரீனிவாசன் என் தந்தை.  என் குரு என்னை உங்கள்  தாசனாக அடிமையாக, பரிஜனமாக,  காணிக்கையாக பணித்து  விட்டார். அதுவே என் பாக்யம். எனக்கு வேறெதுவும் தேவையே இல்லை. 

24. कल्याणानाम् अविकल निधिः काऽपि कारुण्य सीमा नित्यामोदा निगम वचसां मौलि मन्दार माला।
संपद् दिव्या मधु विजयिनः सन्निधत्तां सदा मे सैषा देवी सकल भुवन प्रार्थना कामधेनुः॥ २४॥

kalyāṇānām avikala nidhiḥ kā'pi kāruṇya sīmā  nityāmodā nigama vacasāṁ mauli mandāra mālā|
saṁpad divyā madhu vijayinaḥ sannidhattāṁ sadā me saiṣā devī sakala bhuvana prārthanā kāmadhenuḥ|| 24||

என் இதயம்  நீ அமரும் தாமரை ஆசனம்.  மஹா  லக்ஷ்மி  தேவி,  வேதண்களின்  மந்தார மாலை.லோக  நாயகி,  மங்களம் அருள்பவள். கருணைச்சுரங்கம்.  வரம் தரும் காமதேனு. எனக்கருள்புரிவாய். கருணைக்கு ஆதாரம்.

25. उपचित गुरु भक्तेर् उत्थितं वेट्टटेशात्  कलि कलुष निवृत्त्यै कल्पमानं प्रजानाम्।
सरसिज निलयायाः स्तोत्रम् एतत् पठन्तः सकल कुशल सीमाः सार्व भौमा भवन्ति॥ २५॥

upacita guru bhakte utthitaṁ veṭṭaṭeśāt kali kaluṣa nivṛttyai kalpamānaṁ prajānām|
sarasija nilayāyāḥ stotram etat paṭhantaḥ sakala kuśala sīmāḥ sārva bhaumā bhavanti|| 25||

இது கடைசி ஸ்லோகம். பலஸ்ருதி .  இந்த ஸ்தோத்ரத்தை பாராயணம் பண்ணுவதால் கிடைக்கும் நற்பலன் என்ன என்று விளக்கும் ஸ்லோகம்.  சர்வமங்கலமும் தரும்  தங்கமழை பாடல் இது. அப்படியென்றால் இதை பா;பாராயணம் பண்ணுபவரால் பூலோக சக்ரவர்த்திகள் அல்லவா. மஹாலக்ஷ்மி மேல் சுவாமி தேசிகனுக்குள்ள அளவற்ற பக்தியில் விளைந்த  ஸ்லோகங்கள் இவை. கலியுகத்தில் நாம் துன்புறும்  இன்னல்களிலிருந்து நம்மை காப்பாற்றுபவை.  
ஸ்வாமி தேசிகன் ஸ்ரீமஹா லக்ஷ்மியின் அற்புதமான குணங்களைப் புகழ்ந்து இயற்றியவை.

மங்களானாம் ச மங்களம்:  மங்களங்களின் மூலாதாரம்.அனைத்து உயிர்களுக்கும் சரணாகதி அளிப்பவள் .
ந்த ஸ்லோகத்தில், ஸ்வாமி தேசிகன் ஸ்ரீமஹாலட்சுமியை சரணாகதி செய்து, தேவியின் அருளைப் பெறும்  வழியை இந்த  கனகாதாரா ஸ்தவம்  ஸ்லோகங்களில்  காட்டுகிறார் ஸ்வாமி தேசிகன்.

sivan jaykay

unread,
May 27, 2025, 9:46:42 PM5/27/25
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
ஸ்யாமந்தக மணி கதை.
ராமாயணம் தெரிந்தால் ஜாம்பவானை தெரியும். ராம ராவண யுத்தத்தில் ராம லக்ஷ்மண ஸைன்யத்தில் தளபதி. ''ஹனுமா, உன்னால் பறக்கமுடியும்டா, உடனே பற' என்று ஹநுமானுக்கு ஊக்கமளித்தவர். ஹனுமனை அனுப்பி ''பறந்து போய் சஞ்சீவி மூலிகை சீக்ரம் கொண்டு வா'' என்று சொல்லி ராம லக்ஷ்மணர் களை மயக்கத்திலிருந்து காத்தவர்.
அதே ஜாம்பவான் துவாபர யுகத்தில் ராமனே கிருஷ்ண னாக வந்தபோது அவரோடு மோதினவர். கிருஷ்ணன் யார் என்று தெரிந்ததும் 'ஸ்யமந்தகமணி''யை கொடுத் து, கூடவே தனது பெண் ஜாம்பவதியையும் கன்னிகா தானம் செய்து கொடுத்தவர்.
''ஸ்யமந்தமணி உபாக்யானம்’ கேள்விப்பட்டதுண்டா? அது பாகவதத்தில் ஒரு கதை என்றாவது தெரியுமா? அது தெரிந்தாலும், ஸ்யமந்தக மணி பற்றிய கதை தெரியுமா? . தெரியாதவர்களுக்கு அந்தக் கதையை நான் சொல்லப்போவதில்லை. மஹா பெரியவாளே அதை சொல்கிறார். கேட்கவேண்டாமா? கொஞ்சம் சுருக்கி தருகிறேன். அவ்வளவு தான். வீட்டில் சும்மா சும்மா, வெட்டியாக பொழுது போக்குவதை விட நல்ல பொழுதாக அது கழிய இது ஒரு வழி இல்லையா?
பெரியவா ஆரம்பித்துவிட்டார் கேளுங்கள், இல்லை, படியுங்கள் :
+++++
''ஸம்ஸ்க்ரிதத்தில் ''ஆக்யானம்'' னால் ' கதை. ''உப ஆக்யானம்'' என்றால் உப கதை, ஒன்றிலிருந்து கிடைக் கும் இன்னொரு கிளைக்கதை. குட்டிக் கதை. மஹா பாரதத்திழலும் ராமாயணத்திலும் அருமையான குட்டிக்கதைகள் அருமையாக ஏராளமா இருக்கு.
பெரிசாக ஒரு கதையை ஒரு இதிஹாசமோ, புராணமோ சொல்லிக் கொண்டு போகும்போது அதில் கிளைக் கதை யாக ஏதாவது ஒன்று வருவது தான் 'உபாக்யானம். ‘மெயின்’ கதையின் பாத்ரங்கள் ஸம்பந்தப்படாமல் முழுக்க வேறு பாத்ரங்களைப் பற்றியே உபாக்யானங் கள் வருவதுமுண்டு. மஹாபாரதத்தில் இப்படித்தான் பஞ்சபாண்டவர் ஸம்பந்தமேயில்லாத நளோபாக் யானம் சாவித்ரி சத்யவான் கதை போல பல கிளைக் கதைகள் வருகின்றன. இப்படியில்லாமல் ‘மெயின்’ கதையின் பாத்ரங்களுடைய ஸம்பந்தமுடையதாக மெயின் கதையிலிருந்து எடுக்கமுடியாத அதன் ஒரு பிரிவாகவே, அங்கமாகவே, ஆனாலும் ஒரு தனிக் கதாம்ச முள்ளதாக, அதாவது கழித்துக் கட்டமுடியாத கிளைகளாக உள்ள உபாக்யானங்களும் உண்டு.
ஸ்யமந்தகமணி உபாக்யானம் பாகவதத்தில் இப்படித் தான் part and parcel – ஆக இருக்கிறது. ஸ்யமந்தகம் என்ற தெய்விகமான மணியை மையமாக வைத்து ஸாக்ஷாத் ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவுக்கே ஏற்பட்ட பெரிய அப வாதம், அதைப் போக்கிக் கொள்ள அவர் பாடுபட்டது இவற்றை இந்தக் கதை சொல்கிறது.
இதே கதை விஷ்ணு புராணத்திலும் வருகிறது. கொஞ் சம் மாறுதலோடு ஸ்காந்தத்திலும் வருகிறது; அதில் நந்தி கேச்வரருக்கும் ஸநத்குமாரருக்கும் நடந்த ஸம்வாத ரூபமாக (ஸம்பாஷணை உருவில்) வருகிறது. இந்த ஸ்காந்தக் கதையில்தான் விக்நேச்வரர் ஸமாசாரம் வருகிறது. நான் (மஹா பெரியவா) சொல்லப் போவது ஸநத்கமாரருக்கு நந்திகேச்வரர் சொன்ன இந்தக் கதைதான். அங்கங்கே பாகவதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றின் version-களையும் கொஞ்சம் அவியல் பண்ணிக் கொள்வேன்.
प्रौढीकरोति विदुषां नवसूक्तिधाटी- चूताटवीषु बुधकोकिललाल्यमानम् । माध्वीरसं परिमलं च निरर्गलं ते कामाक्षि वीक्षणविलासवसन्तलक्ष्मीः ॥
ப்ரௌடீ⁴கரோதி விது³ஷாம் நவஸூக்திதா⁴டீ- சூதாடவீஷு பு³த⁴கோகிலலால்யமானம் ।
மாத்⁴வீரஸம் பரிமலம் ச நிரர்க³ளம் தே காமாக்ஷி வீக்ஷணவிலாஸவஸந்தலக்ஷ்மீ: ॥ 89 ॥
இது கடாக்ஷ சதகத்துல 89வது ஸ்லோகம்.
ஹே காமாக்ஷி! ‘ நீ 'வீக்ஷண விலாஸ வஸந்த லக்ஷ்மீ:’ அப்டீன்னு சொல்றார். அதாவது 'கடாக்ஷத்தினுடைய அழகு' என்ற வசந்த கால லக்ஷ்மி. வசந்தம் வந்தவுடனே எங்கும் ஒரு சந்தோஷம், அழகு மிளிர்றது இல்லையா!
அந்த வசந்த லக்ஷ்மி வந்தவுடன், ‘விது³ஷாம் நவஸூக்தி தா⁴டீ’ – வித்வான்களுடைய புதிதான வாக்கு என்ற ‘சூதாடவீஷூ’ – ‘ஏக சூத பதேஹே’ னு சொல்ற மாதிரி ‘சூத:’னா மாமரம்னு நமக்கு தெரியும். ‘சூதாடவீ’- ‘அடவி’ – என்றால் காடு, மாந்தோப்பு. அதாவது, கவிகளுடைய வாக்கு என்ற மாந்தோப்பு''.
அம்பாளுடைய கடாக்ஷத்தை வசந்தத்தின் வரவாகவும், வித்வான்கள் வாக்கில் உண்டான புதிய கவிதைகள் என்ற மாந்தோப்பு.
அந்த மாந்தோப்பு – ‘பு³த⁴ கோகில லால்யமானம்’. புத்திமான்கள் என்ற ‘கோகிலம்’ , குயில்கள். மாந்தோப்புக்கு எப்ப நிறைய குயில்கள் வரும்னா, எப்ப பூக்களில் தேனும், பழங்கள்ல இனிமையும் நிரம்பியி ருக்கும் போது தான் வரும்.
அப்படி புத்திமான்கள் என்ற ரசிகர்களான குயில்கள் விரும்பும் ‘லால்யமானம்’ – அவாள்லாம் மெச்சக்கூடிய, ‘மாத்⁴வீரசம்’ – தேனை போன்ற ‘பரிமளம்’ – நல்ல வாசனையும் கூடியதான ‘நிரர்க³ளம்’ – எந்த தங்குதடை இல்லாமல் அந்த வித்வான்களுடைய கவிதை என்ற மாந்தோப்பு, பூக்களையும் பழங்களையும் ‘ப்ரௌடி⁴ கரோதி’ – நிறைய வெளிப்படுத்துகிறது.
அதாவது அம்பாளோட கடாக்ஷம் என்ற வசந்த லக்ஷ்மி வந்தவுடனே, வித்வான்களுடைய புதிய வாக்கு என்ற மாந்தோப்பில், ரசிகர்கள் என்ற குயில்கள் கொண்டாடக் கூடிய, வாசனையுள்ளதும் தேனுடைய பெருக்கும் கொண்ட பழங்கள் தங்கு தடையின்றி நிறைய வரது. நிறைய பூ பூக்கறது. நிறைய பழங்கள் வெளிப் படுகிறது.
இந்த வாக்கே ஒரு மாந்தோப்பாகவும், அது ரொம்ப இனிமையானதாகவும், ரொம்ப வாசனையுள்ளதாகவும், தங்கு தடையில்லாமல் பெருகுவதாகவும் சொல்லும் போது, வாக்குக்கு எங்க வாசனை? அப்டின்னு எனக்கு அடிக்கடி தோணும்.. இந்த கவி நிறைய இடத்துல இப்படி சொல்றார். நிறைய கவிகளும் அப்படி சொல்றா.. அதுக்கப்புறம் தோணித்து.. என்னிக்கோ, எதோ யுகத் துல, வால்மிகியால பண்ணின ராமாயணத்தை, இன்னிக்கு எடுத்து படிக்கும்போது கூட அந்த காட்சிகள் எல்லாம் கண்முன்னாடி ஓடறதே! வாசனைக்கு என்ன விசேஷம்னா, அந்த வாசனை நமக்கு பழைய ஞாபகம் எல்லாம் உண்டுபண்ணும்.
“ஓ! அந்த ஊர்ல போயிருந்தபோது, அங்க இந்த வாச னை வந்ததே!” அப்டின்னு தோணும்.. அப்ப நடந்த தெல்லாம் ஞாபகம் வரும். அந்த மாதிரி இந்த வால்மிகியின் வாக்கு, வ்யாசருடைய ஸூக்தி, இதெல் லாம் படிக்கும் போது, அந்த காட்சி நடந்த இடத்துக்கு நம்பள அந்த smells, sights, sounds கூட்டிண்டு போகும்.. அந்த மாதிரி அந்த காட்சிகள், அந்த சத்தங் கள், அங்க இருக்ககூடிய சாப்பாட்டை பத்தி வர்ணிச்சா, அதோட வாசனைகள் எல்லாமே நமக்கு வரும் அளவிற்கு ரொம்ப சக்தி வாய்ந்ததாக சில கவிகளோட வாக்கு இருக்கு.
ரிஷிகளின் கருத்துக்கோ, அவாளுடைய வாக்குக்கோ மாறுதலா ஜனங்கள் ரசனைக்காக எதையும் பேச மாட்டா. தர்மத்திலேர்ந்து சலிக்காம இருக்கறது தான் first goal ஆக இருக்கும். அதுக்காக தான் ரிஷிகள் வாக்கை எடுக்கறது. அது வெறுமே வேடிக்கை பேச்சு பேசறது இல்லையே.. ஒவ்வொருத்தர் சொல்லும் போது, அவாளோட குரல் இனிமையா, தபஸா அல்லது வாழ்கை அனுபவமா இப்படி எல்லாமா சேர்ந்து அவாளோட வார்த்தைல வெளிவரும் போது ஒரு புதுமையான கவிதை மாதிரி இருக்கு. கேட்கறத்துக்கு ஆனந்தமா இருக்கு.
க்ருஷ்ணர் பூஜை பண்ணின கணபதிங்கறது ஸ்காந்த புராணத்துல வர்றது. பாகவதத்துல அது வரலை. . இந்த ஸ்யமந்தகமணி உபாக்யானத்தை, பிள்ளையார் சதுர்த்தியன்னிக்கு படிக்கணும்.
ஸ்யமந்தகமணி உபாக்யானத்தை படிச்சாலோ கேட்டாலோ மனசுல ஒரு தெளிவும் சந்தோஷமும் ஏற்படும். அபவாதம் போகும். அபவாதம் என்பது பண்ணாத தப்புக்கு ஏற்படற நிந்தை. Public figureஆ இருந்தா ஜனங்க மத்தில ஏற்படும். Privateஆவே யாராவது நம்பளை தப்பா நினைச்சா கூட, அந்த ஒரு person ரொம்ப importantஆ இருந்தா அது நம்ப மனசை வாட்டறது இல்லையா?. அந்த மாதிரி யாரும் நம்பள தப்பா நினைக்க கூடாது அப்டிங்கறதுக்காகவும் இந்த ஸ்யமந்தகமணி உபாக்யானத்தை படிக்கலாம். இதுல நிறைய நீதிகள் இருக்கு. முக்கியமா பணம், பெண், பேராசை, மோகம் இருந்தா அது எவ்வளவு தூரம் மனசை கெடுக்கும்ங்றது இந்த கதைல வர்றது.
யாதவ குலத்துல சத்ராஜித் ன்னு ஒரு ப்ரபு. அவனுக்கு சூர்ய பகவான் கொடுத்தது சியாமந்தக மணி.
சத்ராஜித் சூர்யபகவானை உபாசனை பண்ண சூரியன் “உனக்கு என்ன வேண்டும்?” னு கேட்டார்.
''நீங்க போட்டுண்டிருக்கற ஸ்யமந்தமணி எனக்கு வேணும்!”
“ஆஹா!”எடுத்துக்கோ. ஆனா இதை போட்டுண் டிருந்தா, உடம்புலயும் மனசுலயும் எப்பவுமே சுத்தியாக இருக்கணும். அப்படி இருந்தா தினம் எட்டு பாரம் தங்கம் கொடுக்கும். அந்த மணி இருக்கும் இடம் ரொம்ப சுபிக்ஷமாக இருக்கும். ஆனா அசுத்தி ஏற்பட்டால் விபரீதம் விளையும்!”
ஸ்யாமந்தகமணியை சத்ராஜித்துக்கு கொடுத்துட்டு சூரியன் போய்ட்டார்.
சத்ராஜித் அதை போட்டுண்டு, அவனே ஒரு சூரியன் மாதிரி ஜொலிச்சுண்டு உக்ரசேன மஹாராஜாவுடைய சபைக்கு வரான். வந்தவுடனே எல்லாரும் “ஆஹா!” ங்க றா அப்போ க்ருஷ்ண பகவான் சொல்றார்,
“இது ரொம்ப அபூர்வமான ரத்னமாக இருக்கு. நிறைய தங்கம் கொடுக்கறது. இதை நீ உக்ரசேன மஹாராஜா கிட்ட குடு. ‘ரத்னஹாரி ராஜா’ ன்னு உயர்ந்த வஸ்துக் கள் எல்லாம் ராஜாகிட்ட தான் இருக்கணும். நீ ஒரு ப்ரபு. உன் கிட்ட ராஜாவை விட ஜாஸ்தியான more valuable வஸ்து இருந்தா ஜனங்களுக்கு யார் ராஜா என சந்தேகம் வந்துடும். அதனால அதை ராஜாக்கு குடு!” னு கிருஷ் ணன் சஜஸ்ட் பண்றார்.
சத்ராஜித்துக்கு அதுல இஷ்டம் இல்லை. ''ஆகட்டும் பார்க்கலாம்''னு சொல்லிட்டு போய்டறான். உள்ளூர அவனுக்கு ரொம்ப பதட்டம். ''இந்த க்ருஷ்ணர் ரொம்ப பலசாலி. “முஷ்டிகாசூர சாணூர மல்லயுத்த விஷாரதாய நம:” அப்டின்னு நாமாவளி இருக்கே. “மல்லர்களையும் யுத்தத்துல வதம் பண்ணினவன்”. அவனுடைய ஆசைக் கு மாறுதலாக நான் ஸ்யாமந்தக மணியை வச்சிண்டி ருந்தா என்ன பண்ணுவானோ?'' ன்னு பயம். அவன் தம்பி ப்ரசேனஜித்திடம் கொடுத்து, “நீ இந்த ஸ்யாமந் தக மணியை பத்ரமா வச்சுக்கோ”னு குடுத்துடறான்.
ப்ரசேனஜித் அதைப் போட்டுண்டு காட்டுக்கு போகும் போது ஒரு இடத்தில் அசூசி ஆய்டறது. அவனால கை கால் அலம்ப முடியல. அந்த நேரத்துல ஒரு சிங்கம் வந்து, “இந்த மணி நன்னா இருக்கே!”னு, அவனை ஒரு அறை அறைஞ்சு, கொன்னு போட்டுட்டு மணியை கவ்விண்டு போய்டறது.
இதை ஜாம்பவான் பாக்கறார். ஜாம்பவான் வாமன அவதாரத்தின் போதே, வாமன மூர்த்திக்கு மத்தளம் கொட்டிண்டு ப்ரதக்ஷிணம் பண்ணி கைங்கர்யம் பண்ணினவர். ராமவதாரத்துல கேட்கவே வேண்டாம். நிறைய கைங்கர்யம் பண்ணினார். அதே ஜாம்பவான் ராமபக்தர். அவர் சிரஞ்சீவி. அதனால இன்னமும் உயிரோட இருக்கார். அவர் இப்போ இந்த க்ருஷ்ணா வதாரத்திலயும் உபகாரம் பண்ணப்போறார்.
ஆகவே சிங்கம் ரொம்ப பளபளன்னு ரத்னத்தை எடுத்துண்டு வரதை பார்த்தவுடன் அதை ஒரு அறை விட்டார். அது செத்து விழுந்துடறது. ஜாம்பவான் அந்த மணியை எடுத்துண்டு போய் அவர்க்கு வயசான காலத்துல ஒரு குழந்தை இருக்கு. ஜாம்பவதி என்கிற பொண்ணு. அவள் தம்பியாகிய அந்த குழந்தையோட தொட்டிலுக்கு மேல ஜாம்பவான் ஸ்யாமந்தக மணியை கட்டினதாலே அந்த குஹையே ரொம்ப சூரிய தேஜஸ் ஆகிடறது.
ப்ரேசனஜித் காட்டுக்கு போனவன் எங்கே காணோம்?னு சத்ராஜித் தேடறான். அவன் ஏற்கனவே ஒருத்தர் கிட்ட, “உங்கிட்ட மட்டும் சொல்றேன். என்ன ஆச்சு தெரியுமோல்லியோ”னு ஆரம்பிச்சு, “நான் இந்த மணி யை வச்சிருந்தேன்..சூர்ய பகவான் அதை எனக்கு கொடுத் தார்னு. அதை க்ருஷ்ணன் கேட்டான். நான் இல்லைன்னுட்டேன்! என் தம்பிகிட்ட கொடுத்தேன். என் தம்பி காட்டுக்கு போனவன் போயே போய்ட்டான். ஆளையும் காணோம்! மணியையும் காணோம்! என் மனசிலே அதை இந்த க்ருஷ்ணன் தான் என் தம்பியை கொன்னுட்டு எடுத்திருப்பான் னு படறது. கிருஷ்ணனுக் கு சின்ன வயசுல இருந்தே வெண்ணை திருடற பழக்கம் நிறையஉண்டே! நீ இதை யார்கிட்டயும் சொல்லாதே!” னு வேறே சொன்னான். அந்த மனுஷன் இந்த கதையை ஊர்லே நாடு நகரம் பூரா எல்லாரிடமும் பரப்பிட்டான். குணம் இருப்பவர்கள் கிட்ட தோஷத்தை பேசறது ஜனங்களுக்கு பால் பாயசம் சாப்டற மாதிரி! இல்லை யா?'' இப்படி எல்லாரும் பேசி பேசி, க்ருஷ்ணருக்கு அபவாதம் வந்துடறது.
க்ருஷ்ணர் பார்த்தார் “என்னடா இது? நம்ப மேலே இப்படி ஒரு அபவாதம். சரி ஸ்யாமந்த மணிக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கணும்”னு தீர்மானிச்சு ஒரு படை யை கூட்டிண்டு ப்ரசேனஜித் எங்கே போனான்னு கண்டுபிடிச்சு அங்க போறார். போய் பார்த்தால் அந்த ப்ரசேனஜித், அவன் குதிரை எல்லாம் அடிபட்டு செத்து கிடக்கான். அவன் கழுத்திலே ஸ்யாமந்தக மணியை காணோம். கொஞ்ச தூரம் போனா ஒரு சிங்கம் அடி பட்டு செத்து கிடக்கு. அங்கயும் மணியை காணோம். அப்டியே தேடிண்டே ஜாம்பவன் பாதச் சுவடு பாத்துண் டே அவர் இருக்கிற குஹைக்கு போறார்..
“குஹைக்குள்ள போய் பாக்கறேன்”னு சொன்னவுடன் ஜனங்கள் எல்லாம் வெயிட் பண்றா. குஹேக்குள்ள
போன கிருஷ்ணன் ஜாம்பவானோட இருபத்தோரு நாள் யுத்தம் பண்றார்! அதனால வெளில காத்துண்டி ருந் த ஜனங்க எல்லாம் நாலஞ்சு நாள்ல திரும்பி ஊருக்கு வந்துடறா. “
ஜனங்களோட நன்றி உணர்ச்சி அவ்வளவு தான்!”
ஏற்கனவே கோவர்த்தன கிரியை தூக்கி மக்களை எல்லாம் மழைலேர்ந்து காப்பாத்தினது போல பல உபகாரங்கள் பண்ணின க்ருஷ்ணரையே அபவாதம் பேசின ஜனங்கள்! குஹேக்குள்ள போன கிருஷ்ண னைக் காணோம் ஏதோ மிருகம் கொன்னுருக்கும் னு ஊருக்கு பயத்திலே திரும்பி வந்துடறா. குஹேக்குள்ளே கிருஷ்ணன் ஜாம்பவதியை பாக்கறார். அவளுக்கு க்ருஷ்ணர் மேல ப்ரேமை வந்துடறது. அவள் இதுமாதிரி “எங்க அப்பா ஜாம்பவான் வயசான காலத்துல தன் செல்லப்பிள்ளைக்கு இந்த மணியை வச்சுண்டிருக்கார். இதை எடுக்க வேண்டாம்” னு கேட்டுக்கறா. க்ருஷ்ணர் “நான் அந்த மணிக்காக தான் வந்திருக்கேன்”னு சொன்னவுடன், “வேண்டாம். நீங்க போய்டுங்கோ. உங்களுக்கு எதாவது ஆபத்து வரும்னு பயமா இருக்கு” அப்டின்னு சொன்னாளாம். க்ருஷ்ணர் அவளை சமாதானப்படுத்தி “பயப்படாதே! அந்த மணியை மீட்டுண்டு தான் நான் போகணும்”னு சொல்லிட்டு, தன் சங்கை எடுத்து பூம்பூம்ன்னு ஊதறார்.
அது கேட்டு ஜாம்பவான் வந்தப்பறம் ரெண்டு பேரும் கட்டி புரண்டு யுத்தம் பண்றா. அந்த ஜாம்பவான் குத்து எல்லாம், க்ருஷ்ணருக்கு பூமாலையால பூஜை பண்ற மாதிரி இருந்ததாம். ஜாம்பவான் “ராமா ராமா” னு சொல்லி குத்தினாலும் இவருக்கு எதுவும் ஆகாததை பார்த்த ஜாம்பவான், “என்னடா இது! நாம இப்படி குத்தியும் வந்தவனுக்கு ஒண்ணுமே ஆகலியே! நமக்கு எலும்பெல்லாம் நொறுங்கறது ஒரு அடி கொடுத்தாக் கூட!” என யோசிக்கையில, க்ருஷ்ணர் அடுத்த லீலை பண்ணனுமே! அதனால தான் யாருங்கிறதை புரிய வைக்கிறார்.
கண் திறந்து பார்த்தவுடனே, கோதண்டராமராக எப்படி ராமாவதாரத்தில தர்சனம் பண்ணினாரோ அதே மாதிரி, கோதண்டராமரா மார்பில மான் தோல், இடுப்புல மரவுரியோட, ஜடாபாரத்தோட ஜாம்ப வானுக்கு குஹையிலே காட்சி கொடுக்கறார்.
ஜாம்பவான் பார்த்துட்டு
“ஆஹா! உங்களை அடிச்சுட்டேனே! ராமா!” ன்னு வருந்தறார்.
“ஜாம்பவான், இருக்கட்டும். இந்த ஸ்யாமந்தக மணியை நான் எடுத்துண்டு போகணும். இதை காமிச்சா தான் என் மேலே இருக்கிற அபவாதம் போகும்”ங்கறார்.
“உங்களுக்கில்லாததா! எடுத்துக்கோங்கோ'' னு அந்த மணியையும் கொடுத்து ஜாம்பவதி என்ற கன்யா ரத்னத்தையும் கிருஷ்ணருக்கு கன்னிகாதானம் பண்ணி கொடுக்கறார் ஜாம்பவான்.
ஊர் ஜனங்க சொன்னதை கேட்டு கிருஷ்ணனுடைய அம்மா அப்பா, யசோதை, நந்தகோபர் இன்னும் எல்லா ஜனங்களும் துர்காதேவி கிட்ட பூஜை பண்ணி வேண்டி ண் டிருக்கா!” அப்படின்னு பாகவதத்துல வர்றது.
அந்த மாதிரி வேண்டிண்டவுடனே க்ருஷ்ணர் அந்த ஸ்யமந்தக ரத்னத்தோடு, ஜாம்பவதி என்ற கன்யா ரத்னத்தோடு திரும்பி வந்துடறார்.
“ப⁴யாத் த்ராதும் தா³தும் ப²லமபி ச வாஞ்சா²ஸமதி⁴கம்” அப்டிங்கற ஸௌந்தர்யலஹரியை quote பண்ணி, நாம நினைச்சதுக்கு மேல வரங்களை தரக்கூடிய அம்பாள் கிட்ட, “க்ருஷ்ணர் திரும்ப வரணும்”னு தான் அவா வேண்டிண்டா. இங்க “க்ருஷ்ணனும் வந்தான்! ஸ்யமந்தக மணியும் திருப்பி கிடைச்சது! அதோட ஜாம்ப வதிங்கர கன்னிகையும் கிடைச்சா க்ருஷ்ண ருக்கு!”
நடந்ததெல்லாம் எடுத்துச் சொல்லி ஸ்யாமந்தக மணியை க்ருஷ்ணன் சத்ராஜித் கிட்ட திருப்பி கொடுத்த போது சத்ராஜித்க்கு ரொம்ப வெட்கமா போய்டறது, உங்க மேலே இப்படி தப்பா அபவாதம் சொல்லிட்டேனே இனிமே நான் இந்த ஊர்ல இருக்க ணும் னா எதாவது பெரிய இடத்து சம்பந்தம் பண்ணிக் கணும்”னு நினைச்சிண்டு, பூமாதேவியின் அவதார மான தன் பொண்ணு சத்யபாமாவை, க்ருஷ்ணருக்கு கல்யாணம் பண்ணிகொடுக்கறான் சத்யாஜித்.
கிருஷ்ணன் சத்யபாமா கல்யாணத்துக்கப்பரம் சத்யாஜித் 'கிருஷ்ணா இந்த ஸ்யமந்தக மணியை நீயே வச்சுக்கோ ''ன்னு கொடுக்கறான்.
” இல்ல இல்ல! நீங்களே வச்சுக்கோங்கோ! இது உங்க ளுக் கு சூர்ய பகவான் கொடுத்தது” ன்னு அதை கிருஷ்ணன் திருப்பி கொடுத்துடறார்.
சத்யபாமா மேல அக்ரூரர், க்ருதவர்மா, சததன்வா என்கிற மூணு பேருக்கு ஆசை. சத்ராஜித்கிட்ட பெண் கேட்டுண்டிருக்கா. “இதோ அதோ!”னு சத்யாஜித் காலம் தள்ளிண்டிருந்த சமயத்திலே இப்படி க்ருஷ்ணருக்கு அவளை மனைவியா கொடுத்தவுடனே, இந்த மூணு பேருக்கும் பொறாமை. “ இந்த ஸ்யா மந்தக மணி மேல இந்த மூணு பேரும் ஆசை பட்டுண்டு, சததன்வா என்கிற போக்கிரியை கிருஷ்ணனுக்கு எதிரா கிளப்பி விடறா”
அப்போ க்ருஷ்ணர் ஹஸ்தினாபுரம் போயிருக்கார். அரக்கு மாளிகையில் பாண்டவர் எல்லாம் எரிஞ்சு போய்ட்டானு கேள்விபட்டு துக்கம் விசாரிக்கறதுக்காக த்ருதராஷ்ட்ரரையும், பீஷ்ம த்ரோணாதிகளை பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு போயிருக்கார். அவர்க்கு தெரியும் தான் காப்பாத்திட்டோம் பாண்டவர்களை எல்லாம் என்று. இருந்தாலும் அவர் போறார்.
அந்த நேரத்தில, இந்த சததன்வா சத்ராஜித்தை வதம் பண்ணி, இந்த மணியை எடுத்துண்டு ஓடறான். சத்யபாமா ஹஸ்தினாபுரத்துக்கு வந்து, தன் அப்பா சமாச்சாரத்தை சொல்லி அழுதவுடன், க்ருஷ்ணர் ரொம்ப கோபத்தோடு தேரில ஏறி சததன்வாவை துறத்தறார். அவனுடைய குதிரை ரொம்ப களைச்சு போய் விழுந்து இறந்துடறது. கீழ இறங்கி அவன் ஓடறான். அப்ப க்ருஷ்ணர் தானும் கீழ இறங்கி அவன் பின்னாடி ஓடறார். சததன்வாவை வதம் பண்றார்.
இதற்கு நடுல இந்த சததன்வா என்ன பண்றான் தெரியுமா? அந்த மணியை அக்ரூரர் வீட்டுல போட்டுட்டு ஓடறான். சததன்வாவை வதம் பண்ணிட்டி அவன் உடம்பை பார்க்கும் போது அந்த மணி இல்லை. இதை எல்லாம் பலராமர் பார்த்துண்டிருக்கார். அவர்க்கே க்ருஷ்ணர் மேல சந்தேகம் வர்றது. “நீ திருடன் டா! நீ எதோ திரஸ்க்ருணி பண்ணி மறைச்சுடற! இந்த மணியை நீ தான் எங்கயோ வச்சிருக்க”னு சொல்லிட்டு, மிதிலாபுரிக்கு விதேக தேசத்துக்கு போய்டறார் கோச்சிண்டு.
கிருஷ்ணன் ஊருக்கு திரும்பி வந்தா ஜனங்கள் எல்லாம் திரும்பவும் க்ருஷ்ணர் மேல சந்தேக பேச்சு பேசறா. க்ருஷ்ணருக்கு வருத்தமா இருக்கு. “என்னடா இது! நாம ஒண்ணுமே பண்ணலியே. இப்படி செய்யாத குற்றத்து க்கு நம்ப மேல அபவாதம் வந்துண்டே இருக்கே!”னு யோசிச்ச போது நாரதபகவான் வந்து சொல்றாராம்.
“கிருஷ்ணா ஒரு வாட்டி நீ நாலாம் பிறை சந்திரனை பார்த்தாய். சந்திரலோகத்துக்கு கணபதி போயிருந் தார். அப்போ எல்லார்க்கும் கணபதியை பார்த்தா ரொம்ப ஆனந்தம். ஆனா இந்த சந்திரனுக்கு சிரிப்பா வந்ததாம். “இவ்ளொ குள்ள குள்ள கால். பெரிய தொப்பை வயறு. யானை மூஞ்சி!” அப்டீன்னு சிரிக்க றான் பிள்ளையாரை பார்த்து . எல்லாருக்கும் பிள்ளை யாரொட ரூபம் ஆனந்தத்தை கொடுக்கும் போது இதை பார்த்த சந்திரன் மட்டும் சிரிக்கிறான். ஏன்னா, அவனுக் கு தான் ரொம்ப அழகு அப்டின்னு ஒரு எண்ணம். எல்லாரும் “சந்திரன் போல முகம்” அப்டின்னு தானே வர்ணிக்கறா. அதனால அவனுக்கு தான் ரொம்ப அழகுங்க றதால கணபதியை பார்த்து சிரிச்சானாம்.
பிள்ளையாருக்கு கோபம் வந்து “இனிமே உன்னை ஒருத்தரும் ஏறெடுத்து பாக்க மாட்டா. உன்னை பார்த்தா அபவாதம் வரும்” ன்னு சபிச்சுடறார். அதனால அவன் பயந்து போய் கடலுக்குள்ள ஒளிஞ்சுக்கறான். ஓஷதிகள் எதுவும் வளரலை. எல்லாருக்கும் ரொம்ப வருத்தமா இருக்கு.அதனால எல்லாரும் வந்து பிள்ளையாரை பார்த்து வேண்டிக்கறா. சந்திரனும் வந்து நமஸ்காரம் பண்ணி வேண்டிக்கறான். உடனே கணபதி சமாதானம் ஆகி, “சரி. நாலாம் பிறை சந்திரனை பார்த்தால் மட்டும் அபவாதம் வரும். அதுவும் கணபதி பூஜை பண்ணினா சரியா போய்டும்'' என்று வரம் அளிக்கிறார்.
இந்த ஸ்யமந்தகமணி உபாக்யானத்தை யார் படிக்கறாளோ அவாளுக்கும் அபவாதம் போய்டும்”
நாரதபகவான் கிருஷ்ணன் கிட்டே “நீங்க இது மாதிரி நான்காம் பிறை பார்த்ததால, நாய் படாத பாடு! உங்க ளுக்கு அபவாதம் வந்திருக்கு”னு சொல்லி “இது மாதிரி கணபதி பூஜை பண்ணுங்கோ” னு சொல்ல, க்ருஷ்ணரும் கணபதி பூஜை பண்ணினார். அதுக்கப்பறம் அவருக்கு மனசு தெளிவாயிடுத்து.
அக்ரூரர் என்ன பண்ணினார்னா, அவர் அவ்வளவு பெரிய பக்தர் இந்த வைரத்தை க்ருஷ்ணர் கிட்ட கொடுக்க வேண்டாமோ வைரம்ங்கறது மனசுல வைர்யத்தை ஏற்படுத்திடறது. அதனால இந்த ஸ்யமந்தகமணி அவருக்கு கெட்ட புத்தியை கொடுத்துடறது. அதை எடுத்துண்டு காசிக்கு ஓடி போய்டறார். காசி க்ஷேத்ரத்தில இருக்கும் போது, அவருக்கு நல்ல புத்தி வரது. நிறைய கோவில்கள் எல்லாம் கட்டறார். நிறைய திருப்பணி எல்லாம் பண்றார். அந்த மணி கொடுக்கற தங்கத்திலேர்ந்து நிறைய நல்ல காரியங்கள் எல்லாம் பண்றார். சுபிக்ஷமா இருக்கு காசி.
இதை கேள்விபட்டதும் க்ருஷ்ணருக்கு புரிஞ்சுடறது. க்ருஷ்ணர் காசிக்கு போய் அவரை பார்த்து, “உங்ககிட்ட தான் அந்த மணி இருக்கு என்பது எனக்கு தெரியும். எங்க அண்ணாவே என்னை சந்தேகப்படறார். அதனால நீங்க திரும்ப த்வாரகைக்கு வாங்கோ. அங்க ரொம்ப துர்பிக்ஷம் வந்துடுத்து. அதனால நீங்க அங்க வாங்கோ. என் மேல இருக்கற அபவாதத்தை சரிபண்ணினா போதும் . நீங்களே அந்த மணியை வச்சுக்கோங்கோ!”னு சொன்னதும், அவரும் நமஸ்காரம் பண்ணி மன்னிப்பு கேட்டுண்டு த்வாரகைக்கு வரார். அங்கும் திரும்பவும் சுபிக்ஷம் ஏற்பட்டது. க்ருஷ்ணர் மேல இருந்த அபவாதம் போய்டுத்து அப்டிங்கறது தான் ஸ்யாமந்தக மணி உபாக்யானம்.
“சித்தி விநாயகம் அனிஷம்”ங்கற பாட்டில, “ரௌஹி னேயா நுஜார்சிதம்” அப்டின்னு வரும். “ரோஹிணியோட பிள்ளை பலராமனுடைய தம்பியான க்ருஷ்ணனால் பூஜிக்கப்பட்டவரே” ன்னு கணபதி மேல பாடறார் முத்துஸ்வாமி தீக்ஷிதர். வேற எப்படியாவது பாடியிருக்கலாமேனா இந்த ரோஹிணிங்கற வார்த்தையை கேட்டவுடனே, “ரோஹிணியினுடைய கணவனான சந்திரன். அவனுக்கு ஏற்பட்ட சாபம். அதோட நிவர்த்தி. அந்த சந்திரனை பார்த்ததால க்ருஷ்ணருக்கு ஏற்பட்ட அபவாதம். கணபதி பூஜை பண்ணினதால அதோட நிவர்த்தி!” இது எல்லாமே ஞாபகம் வரும்ங்கறதுக்காக “ரௌஹினேயா நுஜார்சிதம்”ன்னு பாடிருக்கார் ''
ஜாம்பவான் குஹையில போன போது, அந்த ஜாம்பவதி அந்த குழந்தைக்கிட்ட ஒரு ஸ்லோகம் சொல்றா.
सिंह: प्रसेनमवधीत् सिंहो जाम्बवता हत:। सुकुमारक मा रोदी: तव एषस्स्यमन्तक:।।
ஸிம்ஹ: ப்ரஸேனமவதீ4த் ஸிம்ஹோ ஜாம்ப3வதா ஹத: | ஸுகுமாரக மாரோதி3: தவ ஏஷஸ்ஸ்யமந்தக: ||
சியாமந்தக மணி உபாக்யானத்தை முழுக்க படிக்க முடியலைனா பரவாயில்லை. இந்த ஸ்லோகத்தை மூன்று முறை சொன்னாலே அபவாதம் போகும்.''
++
இந்த மா திரி கதைகள் எதோ ஒரு யுகத்துல நடந்திருந்தா கூட, இன்னிக்கு படிக்கும் போது நமக்கு ஒரு சந்தோஷத்தையும், அது மூலமா பாடத்தையும் கொடுக்கிறது. அதுவும் மஹா பெரியவா அந்த கதை சொல்ற ஸ்டைல் நீதி வியாக்யானம். அபூர்வம்.

sivan jaykay

unread,
May 27, 2025, 9:46:53 PM5/27/25
to amrith...@googlegroups.com
மாதா  பிதா  குரு  தெய்வம்    -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒரு வார்த்தை.  நான்  எதையும் புதுசாக  ஆகாசத்திலிருந்து பிடித்து உங்களுக்காக எழுத முடியாதவன். எல்லோருக்கும் தெரிந்ததையே  திருப்பித் திருப்பி  சொல்பவன். ஏன்?  நாம் இன்னும் அதையே சரியாக புரிந்து கொள்ளவில்லையே.

இதோ ஒரு விஷயம். நமக்கு அப்பா அம்மா தான் முதல் தெய்வம். இதை படிக்கும் உங்களில் அநேகருக்கு  இன்னும் அப்பா அம்மா இருக்கிறார்கள் என்றால் முதலில் எழுந்து ஓடி அவர்களுக்கு ஒரு நமஸ்காரம் பண்ணுங்கள். அந்த பாக்யம் எத்தனையோ கோடிஸ்வரர்களுக்கு  கூட  கிடைப்பதில்லை.  நீங்கள் எப்படி உங்கள் அப்பா அம்மாவை மரியாதையோடு வணங்கி தொழுகிறீர்களோ அப்படி தான் உங்கள் குழந்தைகளும் உங்களைக்  கொண்டாடுவார்கள்.  ஞாபகமிருக்கட்டும்.  

உங்களுக்கு ஞாபகமூட்ட இதை சொல்கிறேன்; நீங்களும் சொல்லுங்கள் உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

''குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு  குரு தேவோ மஹேஸ்வரஹ குரு சாக்ஷாத் பரப்ரம்மா  தஸ்மை ஸ்ரீ குருவே நமஹா'.

அப்பா  தான் முதல் குரு. பள்ளிக்கூடம் போவதற்கு முன்பே நமக்கு பாடம் சொல்லித்தந்தவர். அவர் தான் ப்ரம்மா போல் நம்மை ஸ்ரிஷ்டித்தவர்.  விஷ்ணுவை போல் காத்தவர் காப்பவர். நம்மை கண்ணும் கருத்துமாக சதா சர்வ காலமும் மடிமேல் தோள்மேலும் சுமந்து வளர்த்தவர். எங்கும் நம் நினைவாகவே இருப்பவர். பரப்ரம்மா அவர் தான்.  அப்புறம் நம்மை ஒரு குருவிடம் ஒப்படைத்தனர்.  
ஒழுக்கத்தை மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதால்  வாத்யார் என்கிற  குருவும்  பிரம்மாவாக கருதபடுகிறார்.மாணவர்களிடம் உள்ள நல்ல பழக்கங்களை பாதுகாப்பதால் அவர் விஷ்ணுவாக கருதபடுகிறார்.மாணவர்களிடம் உள்ள தீய குணங்களை அழிப்பதால் அவர் மகேஸ்வரராக கருதபடுகிறார்.இந்த மூன்று பணிகளையும் செய்வதால் அவர் மூம் மூர்த்திகளுக்கு சமமாக போற்றபடுகிறார்.

.அகண்ட மண்டலாகாரம் வ்யாப்தம்  யேந சராசரம் |
தத்பத3ம் த3ர்ஶிதம் யேந தஸ்மை ஶ்ரீகு3ரவே நமஃ ‖ 1 ‖

 எனக்கு தான் எல்லாம் தெரியும். என் அப்பாவுக்கோ, என் வாத்யாருக்கோ என்ன தெரியும் என்று சொல்லும் அமேரிக்கா பிள்ளைகளே, கொஞ்சம் சிந்தியுங்கள்.... உங்களின் வளர்ச்சி உங்களால் ஏற்படவில்லை. ஆரம்பத்தில் கையைப் பிடித்துக்கொண்டு தான் நடக்க கற்றுக்கொண்டீர்கள்.  உங்கள் ஞானத்தின் வித்து அப்பாவும் ஒண்ணாம் க்ளாஸ்  வாத்தியாரும் சொல்லிக்கொடுத்தது தான்.  அது  தான் உங்கள்  பலமான அஸ்திவாரம். அப்புறம் தான் நீங்கள் மேலே கட்டிய உயர  கட்டிடம்.   

மேலே சொன்ன ஸ்லோகத்துக்கு அர்த்தம்;  நம் கண்ணுக்கெட்டிய, கண்ணுக்கு எட்டாமலும்  பரந்த, விரிந்த, பிரிக்க முடியாத,  அசையும் , அசையாத, எல்லையற்ற, இந்த பூமண்டலத்தைப் போல, மற்ற பெரிய பெரிய மண்டலங்களை போல்  தான் நமது வாத்யார், குருவின்  ஞானமும். அதை அளவிட முடியாது. காலில் விழுந்து வணங்க வேண்டியவர். அவர் தான் யூனிவர்சிட்டி.  நான் இதை எல்லாம் சொல்லலை. ஆதி சங்கர பரம குரு 32 வயசுக்குள்ளே சகலமும் கற்றுக்கொடுத்துட்டு இன்னும்  அசரீரியாக இருக்கிறார். 
இன்னும்  ரொம்ப ரொம்ப நிறைய இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அப்பப்போ சொல்கிறேன். 


sivan jaykay

unread,
May 27, 2025, 9:46:53 PM5/27/25
to amrith...@googlegroups.com
My dear Mahavishnu priya brothers & Sisters.,

GRAND MAHA KUMBABISHEKAM.   2ND JUNE 2025 AT EJIPURA, BANGALORE.

I will be leaving on 1.6.25 to Ejipur, Bangalore to be a lucky participant  in the holy grand MAHA KUMBABISHEKAM OF VIRAT SWAROOPA VISWAROOPA MAHA VISHNU, world's tallest statue, to be held on 2.6.2025.

All doctors,  as we think, are making money  because it is a lucrative profession. Have you  come across  any one doctor who is busy 'spending' the money  he had earned,  and managed to receive from philanthropists whatever balance required .. what for? He like Bhageeratha, has achieved his goal. He visualised he world's greatest  Viswaroopa Mavishnu and here is the description as expressed by the abovesaid  Dr  B. Sadananda of  Ejipura, Bangalore.

Dr Sadananda's ancestors  constructed a beautiful temple for  Sri Kothandaramaswamy  at Ejipura ,  being traditional Rama devotees.  Moola Kodandaramaswamy temple is there now giving dharshan to all and I had the good fortune of havng His dharshan and meet Dr Sadanand. 

Lord  Rama had different plans and motivated Dr Sadananda to select the choicest, right  stone for carving his roopa, present Himself,  a 108 ft tall  monolithic  viraata swaroopa  MahaVishnu  being the tallest in the world as on date.  He  stands majestically on the magnificent pedestal of maha koorma, asta diggaja, and adishesha  peetam, in an unique form of Shiva Keshava swaroopam, with several hands and  heads adorning all His parivara devataas  wth all the vital elements of nature viz., bhoomi, parvatha,  agni,  akasha and jala embedded in Him.

Blessed are the karsewaks  involved in  noothana uththaranam of Viswa roopa Mahavishnu in various ways and forms. . May the Lord’s blessings be bestowed on all the bhagavad bandhus who have contributed their best selfless might to portray this noble sculpture in the present vivid form. 

Dr Sadanand and  his team of  sevaks convey their sincere gratitude  to all the people of Korakottai,  Tamilnadu and neighbouring areas, the  then collectors of  Tiruvannamalai district and the NHAI authorities and general public  for their cooperation  in isolating and transporting the megalith from the hillock during   2010 to 2019.

The LORD VISWAROOPA MAHAVISHNU; 
108 FT. tall. virata swaroopa, tallest in the world, His ten  heads are that of Maha Vishnu, Siva, Bramma, Skanda, Ganesa, Narasimha, Anjaneya, Garuda, Agni, Rishi Muni,  He has in his frame, parivar devatas; Surya, Chandra, Agni, Kundalini Chakra, 
His viswaroopa has within HIM, Sthanadhipathis, Vishnu, Siva, Narasimha, Bramma, Ganesa, Agni, 
Gnananetra in His forehead. Trinethram;  Surya, Chandra, Agni.  
Mahalakshmi and Saraswathi and Dattathreya, Naradha, Dasavathar are in his Vakshasthala..
Gayathri devi is  in His Abhayahastha. 
Others depicted in Him are:  Pancha bootha, Bhoomi with saptha loka, saptha samudhras, Thrigunas,  great parvaths such as Malaya, Mandara, Gandhamadhana, Vindhya,  Nishada.
There are also great Sacred Rivers in Him: Kaveri, Krishna,Tapthi, Yamuna, Narmada, Saraswathi, 
Because He is also Sivaroopam, there is Rudhrakshamala, Neelakanta haram, Saptarishi kanta haram, Also as He is Vishnu roopa, there is Vaijayanthimala, Geethopadesa pendant, Vakshasthala Lakshmi vanamala haram, shanka chakra padma, gadha, thirunamam, abha and varada hastham. 
It is now an occasion for a great congregation and unity among all sects of our sanatana dharma followers to unite for this special occassion and participate whole heartedly in the inauguration ceremony of this unique form of God , viz  VISWAROOPA MAHA VISHNU.  

The Devasthanam and Trustees  will accept your offerings with gratitude and pray to invoke the blessings of our supreme Vishwaroopa Lord upon all of you. “Danyosmi sathkrutthartha janmam”

Please accept this appeal as a personal invitation for a warm welcome to your goodself along with your family and other well wishers. May the Lord give all of us strength, courage and good health to attend this memorable ceremony.
Sarve jana sukino bhavanthu

There will be mandala poojas following  Maha Kumbabisheka. Donations accepted by 
SRI KODANDA RAMASWAMY DEVASTHANAM.EJIPURA BANGALORE. 560047    contact  for  donations and details to; TEL; 8105784897, 8761053123, 9845074415

“This life for me is an endeavor to help people experience and express their divinity and get the bliss of the Divine.”
Dr. B Sadananda, Chief Trustee, 

Maha kumbabisheka pathrika as personal invitation to you is  attched with details of poojas etc.,

 

sivan jaykay

unread,
May 27, 2025, 9:47:07 PM5/27/25
to amrith...@googlegroups.com
ஆலய தரிசனம்  1.5.2025.     நங்கநல்லூர்  J K  சிவன்

திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை  நெடுஞ்சாலையில்  சீத்தஞ்சேரி, கச்சூர்  தாண்டியவுடன்  இடது பக்கம் செல்லும் பாதையில் உள்ள வெங்கடாபுரம்  என்ற உள்ளடங்கிய கிராமம் .வரும். இருப்பக்கமும் மரங்கள் சூழ்ந்த அருமையான நிழற் சாலையில்  கோடை வெப்பம்  தெரியாமல் செல்வது சுகமாக இருந்தது.  அங்கே தான் ஒரு அருமையான கோ சாலை இருக்கிறது.

காலம் சென்ற டாக்டர்  சாதனா ராவ் அம்மையார்  நிர்மாணித்த  ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கோசாலை உண்மையில் ஒரு அற்புத  ''இந்திய விலங்குகள் நல  பராமரிப்பு நிலையம்' .  700 பசுக்கள், 100 கன்று குட்டிகள், பல எருமைகள், காளைகள்,  ஆடுகள்   கொடூரர்களிடம் சிக்கி வெட்டுப்படாமல்  காப்பாற்றப்பட்டு  தடுத்தாட்கொள்ளப்பட்டு ஆனந்தமாக கடைசி மூச்சு வரை  உயிர்  வாழ ஏற்படுத்தப்பட்ட ஒரு ஸ்வர்கபுரி.  

60-70  சிப்பந்திகள் ஆர்வத்தோடு பணி  புரிகிறார்கள்.  தற்போது திருமதி   கமலா ராமமூர்த்தி எனும் அம்மையார் பராமரிப்பில் இயங்கி வருகிறது. அந்த அம்மையார் மூலம் தான் இந்த கோசாலை பற்றி அறிந்து அங்கே செல்ல ஏற்பாடு செய்தேன் .  நாங்கள்  21 பேர்  ஒரு மினி பேருந்தில்  சென்று  அங்கே  பசுக்கள் எதிரே அமர்ந்து ரெண்டு  ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்  ரெண்டு ஆர்த்தி மனதார  ஜெபித்தோம்.   உங்கள் இருபுறமும் நிறைய  பசுக்கள் கன்றுக்குட்டிகள்  எங்களை ஆச்சர்யமாக பார்த்தன.  நாங்கள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தன.  ஒரு சத்தமும் போடவில்லை.  ஒரு  கருப்பு நிற கன்றுக்குட்டி என்னருகே என்னை நக்கிக்கொண்டே இருந்தது. என் மடியில் தலை வைத்து என் புஸ்தத்தையும் சேர்த்து நக்கிக்கொண்டிருந்தது. ஒரு கையால் அதை தடவிக்  கொடுத்துக்கொண்டே பாராயணம் செய்தது ஒரு புதிய ஆனந்த அனுபவம். தி இதுவரை அனுபவிக்காதது.  எனக்கு பரம திருப்தி.   அந்த கோசாலை  மேற் பார்வையாளர்  ஸ்ரீ  பாபு என்பவர்  ஒரு பெரிய பாத்திரம் நிறைய  குளிர்ந்த பசுமோர் பெரிய லோட்ட்டாக்களில்  எங்களுக்கு அளித்தபோது தேவாம்ருதம் என்றால் எப்படி இருக்கும் என்று அப்போது தான் என்னால் உணர முடிந்தது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.  உடல் வெட்டப்பட்டு உயிர் இழக்க வேண்டிய பசுக்கள், உயிர் காக்கப்பட்டு, அடைக்கலம் அளிக்கப்பட்டு, சில கன்றுகள் ஈன்று பாலும் தந்து அதில் மோர் தயாரித்து எங்களுக்கு  லோட்டா நிறைய என்பதைத் தவிர வயிறு முட்ட  அளிக்கப்பட்டது  எவ்வளவு ஆச்சர்யம். எல்லாம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆசீர்வாதம்.    இந்த கோசாலையில் இப்படி புனர்ஜன்மம் பெற்ற  பசுக்கள் எங்களுக்கு அளித்த பரிசு தான் பல பெரிய லோட்டாக்களில் நாங்கள் பருகி மகிழ்ந்த  குளிர்ந்த  பசு மோர்! அதன்  ருசியை எழுத வார்த்தைகள் அகப்படவில்லை.எவ்வளவு தேடினாலும் கிடைக்காது என்று தெரியும்.

கோசாலையில் நாங்கள்  உள்ளே நுழைந்ததும்  ஏக குரலில் அனைத்து பசுக்களும் 'அம்மா' என்று கூவி வரவேற்றது இன்னும் காதில் ஒலிக்கிறது.

நாங்கள் கேட்டுக்கொண்டபடி  பாபு, நாங்கள் பாராயணம் பண்ண  இடம் அளித்து, உட்கார  வசதியாக  பெரிய பிளாஸ்டிக் பாய் விரித்து, அது முடிந்ததும் அந்த இடத்தை சுத்தம் செயது,  நாங்கள்  கோ பூஜை பண்ண  மூன்று ஜோடி பசுக்கள் கன்றுக்குட்டிகளோடு அழைத்து வந்தார்.  அவற்றுக்கு மஞ்சள் குங்குமம், சநதனம், தடவி, மாலைகள் இட்டு,   பசு கோ மாதா என்பதால்  கோ பூஜை ஸ்தோத்ரம், லக்ஷ்மி  அஷ்டோத்ரம் எலாம் சொல்லி பூஜை செய்தொம்.   அனைத்து  ஆண்கள் பெண்களும்  இந்த   கோ பூஜையில் கலந்து கொண்டு ஆரத்தி காட்டி, மூவாயிரம் ரூபாய்க்கு  வாங்கப்பட்ட அனைத்து கீரை  வகைகளையும்  கண்ணில் பட்ட  பசுக்கள் அனைத்துக்கும், மாடுகளுக்கும் எங்கள் கைகளால் வழங்கியது ஒரு ஆனந்தானுபவம்.  

ஒரு முக்கிய விஷயம்.  பக்ரீத் பண்டிகைக்கு கொல்வதற்காக  லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட செம்மறியாடுகளை தடுத்து மீட்டு அவைகளும்  இந்த  சரணாலயத்தில் ஆனந்தமாக உயிரோடு  ஓடி ஆடி  திரிவதைக் கண்டபோது கண்ணில் வழிந்த நீரைத்  துடைத்துக்  கொள்ள மட்டுமே  என்னால்  முடிந்தது. வாய்  நன்றி உணர்ச்சியோடு  ''கிருஷ்ணா, கிருஷ்ணா என்னே உன்னருள் '' என்று முணுமுணுத்தது.

இத்தகைய உயிர் காக்கும்  நிலையங்களுக்கு உதவுவது நமது தலையாய கடமை.  பசுக்களில் பல நோய்வாய்ப்பட்டுள்ளது, ஒரு பசுவுக்கு புற்று நோய்  உடலெங்கும் பரவி இப்போது முகமெல்லாம் தடித்து இருக்கிறது. அதன் வலி நம்மால் உணரமுடியவில்லை. அதற்கு  மருத்துவ சிகிச்சை அளிக்கிறார்கள்.

 ஒரு பசுவுக்கு ஒரு கால் காணோம். எப்படி ஆபத்தில் இருந்து மீட்கப்பட்டு கால்  வெட்டப்பட்டு குணமடைந்து  மூன்று கால்களில்  தர்ம தேவதை போல் நிற்கிறது.  நடக்க முடியாத ஒரு பசுவுக்கு வயிற்றில் தூளி மாதிரி கெட்டியான துணி கட்டி, காலில் நிற்க பலமில்லாததால்  தரை தொடும்படியாக  தொங்கவிடப்பட்டிருந்தது.

வயது முதிர்ந்த பசுக்களுக்கு மருதுவான மண் தரையில் தொழுவத்தில் நின்று கொண்டிருந்தன. திடீரென்று கீழே விழுந்தாலும் அடிபடாது அல்லவா.

கொளுத்தும் அந்த வெயில் நேரத்தில் நிறைய மாடுகள், எருமைகள்   குறைகளுக்கு கீழே  குளிர்ச்சியாக  குழாய்கள் மூலம் குளித்துக் கொண்டிருந்தன. அவற்றின் சந்தோஷத்தை  கண்களில் கண்டேன்.

கோசாலையை நன்றாக சுற்றிப்பார்த்து விட்டு  வெளியே  கொளுத்தும் கோடை வெயிலிலிருந்து   பசி வேளையில்,  பகல் ரெண்டு மணிக்கு,  இந்த கோசாலை யில்  குளிர்ச்சியான ஒரு  ஹாலில்  நாற்காலிகளில் அமர்ந்தவாறு  தட்டு நிறைய   எங்கள்  ஆஸ்தான  நளன், கண்ணன் கொடுத்த  புளியோதரை, சிப்ஸ்,  புளிக்காத தயிர் சாதம், எலுமிச்சங்காய் ஊறுகாய்  நிறைய  சாப்பிட்டு  முடித்தோம். மீதமும் இருந்ததால் உணவை வீணாக்காமல் அந்த கோசாலையில் கண்ணில் தென்பட்ட  சிப்பந்தைகளை அழைத்து அவர்களுக்கும் வழங்கினோம்.

இந்த  சாதனா கோசாலை  37  வருஷங்களாக பல நல்ல உள்ளங்களின்  ஆதரவோடு அற்புதமாக  இயங்கி வருகிறது.  இதன் நிறுவனர்  காலம்சென்ற  டாக்டர் சாதனா ராவ் லண்டனில் படித்து . இந்தியா திரும்பியவுடன்  வீட்டிலேயே கறவை நின்ற மாடுகளை வாங்கி  பாதுகாக்க துவங்கினார். இது காஞ்சி மஹா பெரியவர் அருளாசியுடன் தான் நடந்தது .

"மனிதர்களை கவனித்துக் கொள்ள  நிறைய பேர்கள் இருக்கிறார்கள். நீ இந்த கை விடப்பட்ட பசுக்களை பாதுகாக்க வேண்டும்" என்று  பரமாச்சாரியார் நேரில் ஆசி வழங்கியதைப்  பெற்ற  புண்யவதி  அந்த  டாக்டர் சாதனா ராவ். இதே  சாதனாவுக்கு வேத வாக்காக ஒலித்தது.  தன்னார்வலர்கள் , கொடை உள்ளம்   கொண்டவர்கள் , பிராணிகளை நேசிப்பவர்கள் மனமுவந்து  தரும்   நன்கொடை மூலம் தான் இந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறார்கள். சென்னையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் ஊத்துக்கோட்டை அருகில் வேங்கடாபுரம்   என்ற கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

 மாதத்திற்கு சுமார் ரூ.18 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை செலவு ஆகிறது. இதில் சுமார்  ரு. 15  லட்சம் தீவனத்திற்கும் , வைக்கோல் மற்றும் , மருத்துவ செலவிற்கும் செலவிடப்படுகிறது.  இவர்களிடம் அடைக்கலம் புகும்  மாடுகளை  அவற்றின்  கடைசி மூச்சு வரை பாதுகாப்பதே  இந்த கோசாலையின் லக்ஷியம். நல்ல சத்தான தீனி கொடுத்து நல்ல ஆரோகியத்துடன்  பாதுகாக்கிறார்கள்.

எண்ணற்ற குழந்தைகள், உயிர்கள் வாழ பால் தானம் பண்ணுபவை காமதேனு எனப்படும் பசுக்கள் தான். ஆகவே தான் அவற்றை கோமாதா, குலமாதா  என வணங்குகிறோம்.   பசுக்களின் பாலை  உட்கொள் கிறோமே  நாம்,  அந்த பசுக்களின்  பால்  வற்றியவுடன் ஏன் நமக்கு அந்த பசுக்கள் வேண்டாத ஒன்று ஆகி விடுகிறது?  பால் கொடுப்பவள் அம்மா அல்லவா? அம்மாவை எங்கிருந்தாலும் காப்பது நம் கடமை அல்லவா? வெட்டுக்கு அனுப்புவது மகா மகா  பாவம் அல்லவா? அதை தடுப்பதை மனதில் கொண்டு உதவுபவர்கள் தான் இது போன்ற கோசாலைகள்  உருவாக உதவுபவர்கள். நாமும் அதில் சேர்ந்து கொள்வோம். எங்கு இப்படிப்பட்ட கோசாலை இருக்கிறதோ அங்கு சென்று  நம்மால்  ஆன சேவை , நன்கொடை செய்வோம்.  வாழ்வில் நிம்மதி கிடைக்கும் . நம்மை தொடரும் ஜென்ம ஜன்மாந்தர பாவங்கள்  விலகும்.

1.5.2025 ஆண்டு நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக  நமது  கைகளால்  பசுக்களுக்கும் இதர மாடுகளுக்கும்  உணவு கொடுத்தோம்.   நல்ல மன நிறைவு. வாழ்வில் நலம் பெறுவோம். . நன்கொடையை  பணமாக கொடுக்காமல் , காசோலையாகவோ  அல்லது GPAY  மூலமாக பெறுகிறார்கள். வாங்கி கணக்கில் நேரில் சேறு பணம் கட்டுகிறவர்களும் உண்டு.  ரசீது கொடுத்தார்கள். எல்லோரும் எங்களால் இயன்ற  சில  ஆயிரங்கள் அன்று நன்கொடை அளித்தோம்.

தீவனங்கள் , கீரை , வாழைப்பழம் , காய் கறிகள், வெல்லம் , சப்பாத்தி இவைகளையும் நீங்கள் அங்கே செல்லும்போது கொண்டு போகலாம்.
 சகோதரி  திருமதி  கமலா ராமமூர்த்தி  (Chairperson ,  Sadhana Goshala ,9840456623) யுடன் தொடர்பு கொள்ளலாம்.

இந்த கோசாலைக்கு நன்கொடை வழங்க ;  
ndian Institute of Animal Welfare,
Union Bank of India
Neelangarai Branch
 SB A/c No. 132710100033564
 IFSC: UBIN0813273

9840456623@paytm, phonepe

Gpay:
QR919840456623-3564@unionbankofindia
நான்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு உண்டு.
பயணக்கட்டுரை தொடரும். 



sivan jaykay

unread,
May 27, 2025, 9:47:07 PM5/27/25
to amrith...@googlegroups.com
வாழ்க்கை வாழ்வதற்கே.   நங்கநல்லூர்  J K  SIVAN 

காலத்தைப்  போல வேகமாக எதுவுமே ஓட முடியாது என்பது தான் வாஸ்தவம்.  திரும்பி பார்த்தல்  ஐம்பது வருஷங்கள் ஓடி விட்டதே. 

நங்கநல்லூர்  அப்போது இன்று போல் இல்லை.  எல்லார் வீட்டிலும்  கிணறு  முக்கியமான அம்சம். கிணற்று நீர் தான்  எல்லோருக்கும் குளிக்க, குடிக்க , துணி துவைக்க, சமையலுக்கு,  எல்லாவற்றிற்கும். தண்ணீர் ஒரு பிரச்னையாக இல்லவே இல்லை. 

ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தான் லீவ். அன்று தான்  துணிகளுக்கு இஸ்திரி, தலை முடி வெட்டிக்கொள்ள, பழைய பேப்பரை எடைக்கு போட, வீடு ஒட்டடை அடிக்க, தோட்டத்தில் புல் பூண்டு பிடுங்கு, தென்னை மரத்தில்  ஏறி காய் பறிக்க ஆளை தேடுவது, மாவு மிஷின் கடைக்கு போய் மாவுகள் அரைத்துக் கொடுப்பது. அம்மி கல்லுரல்  பொளிலயும் ஆளைத்தேடுவது. பழைய கிழிந்த துணிகளை டைலரிடம் கொண்டு போய் கொடுத்து தைத்து வாங்குவது. வண்ணான்  துணி நோட்டில் லிஸ்ட் எழுதி மூட்டை கட்டி வைப்பது. இதைத்தவிர எனக்கு ஒரு  எக்ஸ்டரா வேலை இருந்தது.  புழக்கடையில் கிணற்றில் இறங்கி தூறு வாருவது, நிச்சயம்  கிணற்றில் ஏதாவது ஒரு பாத்திரமோ, துணியோ   குழந்தைகள் கிணற்றில் போட்டிருக்கும். அதை மேலே கொண்டுவரவேண்டும். 

 மழைக்காலத்தில் கிணற்றில் இறங்க மாட்டோம். நிறைய தண்ணீர் இருந்தால்  பாதாள கரண்டி என்று  கொக்கி கொக்கியாக  ஒரு சங்கிலி   இருக்கும். எல்லோர் வீட்டிலும்  .இல்லாத வஸ்து. எதிர்த்த, பக்கத்து வீட்டில் போய் அதை கடன் வாங்கி தாம்பு கயிற்றில் கட்டி கிணற்று  தண்ணீரில் விட்டு  அலசி தேடினால் பாத்திரத்தை,  கிணற்றில் விழுந்த துணியை அடியில்  பாதாள கரண்டியின் கொக்கி ஏதாவது பிடித்துக் கொள்ளும். மெதுவாக அசையாமல் கயிற்றை மேலே இழுத்தால்  கொக்கியொடு பாத்திரமோ துணியோ வெளியே தலை காட்டும்.

 சில வீடுகளில் பல மாதங்களாக  பாத்திரங்கள் கிணற்றில்  அடியே கிடக்கும். தாமிரச் செம்பு  கிணற்றில் நீண்ட காலம் கிடந்தால் அதன் மேல் ஏறியிருக்கும்   பச்சை களிம்பைப்  போக்க  நிறைய  தேய்க்க வேண்டும். ஒருநாளில் முடியாது. தேய்க்க தேய்க்கத்தான் பழைய நிறம் வரும்.

 ரிஷிகள்  சொல்வது இப்போது புரிகிறது....  நம்முடைய  மனதில் எத்தனை ஜென்ம களிம்பு  சேர்ந்திருக்கிறது.  எவ்வளவு நல்ல கர்மாநுஷ்டானங்கள் செய்து அவற்றை நீக்க வேண்டும்.

ஐந்து ஆறு  வயது வரை  குழந்தைகளாக  வீட்டில்  சுதந்திரம்  அதிகம்.  ஒவ்வொரு வீட்டிலும் வாண்டுகள் நிறைய இருக்கும். எல்லாமே பள்ளிக்கூடம்  போகாத குழதைகள்.  ஒன்று சேர்ந்து  லூட்டி அடிக்கும். அவர்களது விஷமம் ஒரு பெரிய விஷயமாக இல்லை. 

பிறகு  ஒண்ணாங்கிளாஸ்  படிக்க பள்ளிக்கூடம் அனுப்புவார்கள் அப்போதெல்லாம். இப்போது வயிற்றில் குழந்தை உருவாகும்போதே  பள்ளியில்  இடம் பெற தேட வேண்டி இருக்கிறதே.

 பள்ளிக்கூடம் என்று அனுப்பினால்,  நேரம் முக்யமாகிவிடுகிறது.  இத்தனை மணிக்கு போகவேண்டும், சாப்பிட ஒரு  நேரம்.  விளையாட  என்று ஒரு நேரம். பள்ளியிலிருந்து திரும்பும் நேரம். வீட்டுப்பாடம் படிக்க நேரம். சாப்பிட, தூங்க  எல்லாம் நேரம் பிரகாரம் தான்.  கட்டுப்பாடு இப்படி வந்தபின் விஷமம்  கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் கவலை  பொறுப்பு எல்லாம் சின்ன வயதிலேயே  வளர்ந்தது. 

 சாஸ்திரத்தில் அதனால்தான்  நித்ய கர்மாநுஷ்டானம் செய்ய விதி முறை கண்டிப்பாக இருக்கிறது. .  அதனால்  மனதில்  கெட்ட  எண்ணம்  குடி புக  நேரம் இருக்காது. மனது முழுக்க  பக்தி, சிரத்தை, பூஜை, விரதம்  மந்த்ர உச்சாடனம் நிரம்பி விடுகிறதே.

 நாம் செய்யும் காரியத்தால் மற்றவருக்கு பிரயோஜனம், உபகரணம் இருந்தால் அதி விசேஷம். இல்லை யென்றால் நம்மையே அது திருத்தவாவது உதவும். பிறரிடம் அன்பு கருணை, பரிவு  உண்டாக சாஸ்திரங்கள் உதவுகிறது.

மகாபாரதம்  ஒன்றரை லக்ஷம் ஸ்லோகம் அர்த்தம் படித்து ஆயிரம் பக்கம் எழுதினேன்.  ''ஐந்தாம் வேதம்'' என்று பெயர் சூட்டி னேன். ரெண்டு பாகமாக வெளியிட்டேன். விலை இல்லை. நன்கொடை மட்டுமே. அதை எழுதும்போது என்ன தெரிந்து கொண்டேன்?

 பொறுமை, நேர்மை, நியாயம்,  தியாகம் தர்மம்  சத்யம் இதன் உருவமாக  தர்மன். கேட்பதற்கு முன் இடது கை  அறியாமல் வலது கையால் தானம் தர்மம் அளித்த கர்ணன்.  சத்யம் வீரம் வைராக்கியம்  உருவில்  பீஷ்மன். கம்பீரம் கண்ணியம் தைர்யம் என்று காட்ட  ஒருவன் அர்ஜுனன்.   இது போல்தான்  ராமாயணமும் நமக்கு நிறைய  ராமன்  லக்ஷ்மணன்  ஆஞ்சநேயன் மூலம் போதிக்கிறது. எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு ஒரு ராவணன்,  துரியோதனன் பாத்திரங்களை  வால்மீகி  வியாசர் போன்ற  ரிஷிகள் நமக்கு அளித்திருக்
கிறார்கள். 

வால்மீகி, ஸ்த்ரீ தர்மத்துக்கு  சீதையையும்  ராக்ஷஸன் மனைவியாக இருந்தாலும் மண்டோதரியையும்  உதாரணமாக  காட்டுகிறார்.   ராமாயண, பாரதங்களை படிப்பதால்  இதெல்லாம் நமக்கு பாடமாகிறது.  அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை என்ன என்று புரிகிறது.  நமது  தர்மம், பண்பாடு, பக்தி, சனாதன தர்மத்துக்கு  இவை அஸ்திவாரம். 

ஸ்லோகங்கள் படிக்கும்போது மனப்பாடம் செய்யும்போது அர்த்தம் கட்டாயம் புரிந்து கொள்ளவேண்டும். எனக்கு முடிந்ததை எனது பதிவுகள் எல்லாவற்றிலும் ஆங்காங்கே  சொல்லி வருகிறேன்.

மௌனம் அதேபோல் நிஜ வாழ்க்கையில் அவசியம். ஒரு மணி நேரமாவது தனியே நமக்கென்று ஒதுக்கி க்கொள்ள வேண்டும்.  நம்மை நாமே உள்நோக்கி புகுந்து அலச வேண்டும். பேச்சு குறைய வேண்டும். ஆத்ம சிந்தனை இறை சிந்தனையில் மனம் ஈடுபட வேண்டும்.

விசேஷகாலங்களில்  நல்லதோ கெட்டதோ  அப்போது உச்சரிக்கும் மந்திரங்களின் அர்த்தம் அவசியம் தெரிய வேண்டும். அசிரத்தை கூடாது. ஹிந்து மத குடும்ப பெண்கள் முக்கியமாக இவற்றில் அக்கறை காட்ட
வேண்டும். அவர்களால்தான் அடுத்த சமுதாயம் குழந்தை பருவத்திலிருந்து பாடம் பெறும் .

ஒன்பது கஜம் புடவை, பஞ்சகச்ச வேஷ்டி  எல்லாம் ஏதோவேடிக்கைக்கோ,  வேஷமோ  அல்ல.  விபூதி, நாமம், சந்தனம், எல்லாம் பண்ணி வைக்கிற வாத்தியாருக்காக அல்ல. அவர் காசு வாங்குவதால், அவரே சொல்லட்
டும் என்று அவர் மட்டுமே  சொன்னால் போதும் என்று நினைப்பதே மஹா பாபம் .

அர்த்தம் தெரிந்து செய்கிற காரியத்தில் ஈடுபடும் போது  சந்தோஷத்தை ஞானத்தை கொடுக்கும். நன்மை தரும்.
வழிபாடு ஒரு அவசியமான பயிற்சி.  நம்மை தீய எண்ணங்களிலிருந்து, செயல்களிலிருந்து நம்மை  திருத்தி நல்வழிப் பாதையில் செல்லவைப்பது.  கற்க வேண்டிய பாடம் இது.  நம்முடைய காரியங்களை மனப்பூர்வமாக செய்த்துவிட்டு அதன் பலனாக நம்மை ரக்ஷிப்பதை பகவான் பொறுப்பில் விட வேண்டும். நம்முடைய கடமை மட்டுமே நாம் செய்யவேண்டியது. பலன் பகவான் பார்த்து கொடுப்பது.  கிருஷ்ணன்தான் அழகாக இதை எடுத்து கிளிப்பிள்ளை மாதிரி கீதையில் திரும்ப திரும்ப  சொல்கிறானே.

மேலை நாட்டு  விஞ்ஞானிகள் இந்திய சாஸ்திர வேதாந்த  கருத்துகளை அப்படியே லட்டு மாதிரி விழுங்கி மேம்படுகிறார்கள். நாம் வைரத்தை கண்ணாடிக் கல்லாக வெளியே தூக்கி எறிகிற  பேர்வழிகளாக இருப்பதை மாற்றிக்கொள்ளவேண்டும்.
 உலக வாழ்வின் சுக துக்கங்கள் நம்மை பாதிக்காமல் செய்யும் கடமை மூலம் வேற்றுமை அகன்று உலகில் ஒற்றுமை பரவும்.  எல்லாவற்றிலும் எங்கும் எப்போதும் இருக்கும்  கிருஷ்ணன் நமக்கு அருள்  புரிவான். கருணை, தியாக நேர்மை உணர்வு மேம்படும்.
 நமக்கு தெரியாத இதை யெல்லாம்  எப்படி பின்பற்றுவது என்று கற்றுத் தருபவர்தான்  ஆசார்யன். குரு.  சம்பாதிக்க இதை தொழிலாக கொண்டவன் குரு அல்ல. ஜாக்கிரதை.

பரிசுத்தமான இதயத்தில் பகவான் நிச்சயம் குடி  கொள்வார். நம்மை வழி நடத்துவார். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் உயர்வது அவர்களது சொந்த முயற்சியாலும்  பயிற்சியாலும்தான்.  உனக்காக மற்றவன் சாப்பிட முடியாது. மற்றவன் தண்ணீர் குடித்தால் உன் தாகம் தீராது.   நான் நிறைய  மகான்களை பற்றி எழுதுவது  அவர்கள்  வாழ்வு நமக்கு ஒரு நல்ல பாடம் என்று உணர்த்தவேதான். சரிதானே?   இப்படிப்பட்ட என் பதிவுகள்  வரவேற்கப் படுகிறதா?? இல்லாவிட்டாலும் நான் ஓய மாட்டேன். 


sivan jaykay

unread,
May 27, 2025, 9:47:27 PM5/27/25
to amrith...@googlegroups.com


அலமேலு மங்கம்மா......   நங்கநல்லூர்  J K  SIVAN 

சனிக்கிழமை என்றாலே  வாய் தன்னிச்சையாக   ''கோவிந்தா கோவிந்தா,  ஏடு  கொண்டலவாடா கோவிந்தா வேங்கடரமணா'' என்று  கூவுகிறது.  கை  தானாகவே  சிரத்தின் மேல் எழுகிறது. 

நினைவு தெரிந்த நாள் முதல்  திருப்பதி ஏழுமலையானைத் தரிஸிக்க  லக்ஷோப லக்ஷம் பக்தர்கள் கூட்டம் தான் கண்ணில் படுகிறது. மணிக்கணக்காக  காத்திருப்பது வழக்கமாகி விட்டது.  அப்போதெல்லாம்  பஸ் ஒன்று தான் மலை ஏறவோ இறங்கவோ ஒரே சாதனம்.  ஏறவும் இறங்கவும் ஒரே மலைப்பாதை தான்.  பஸ் குலுங்கி குலுங்கி எதிரும் புதிருமாக வேகமாக வளைந்து வளைந்து நகரும். தெலுங்கு பஸ் டிரைவர். கோவிந்தா கோவிந்தா சத்தம்  பஸ் பிரயாணிகளிடமிருந்து  கேட்கும்.  ஏறும் பஸ்  நிறைய தாடி மீசை, இறங்கும் பஸ்  முழுக்க  மொட்டைத்தலை. சந்தன காப்பு.  ஏறுபவர்ககு  வழி விட்டு இறங்கும் பஸ் வழி விடும்.  இறங்கும் பஸ்ஸிலிருந்து ஜன்னல் வழியாக வாந்தி எடுப்பவர்கள் நிறைய பேர்.  

ஒரு வழியாக மலையிலிருந்து  பஸ் கீழே இறங்கியவுடன் குதிரை வண்டிகள்  நிறைய  காத்திருக்கும்  ஆட்டோ டாக்ஸி தெரியாத காலம்.  திருச்சானூர் அலமேலு மங்கா ஆலயத்துக்கு மண் பாதையில் ஓடி  கொண்டு சேர்க்கும். அங்கே அவ்வளவு கும்பல் அப்போதெல்லாம் இல்லை.   மங்காபுரம் திருப்பதியை ஒட்டிய ஒரு சிறு கிராமம், ஏழுமலையானை தரிசித்தவர்கள் கண்டிப்பாக  தரிசிக்க  வரும் இடம். கோவில் வாசலில் எங்கு பார்த்தாலும் சிகப்பு கலந்த  வண்ணங்களில்  குங்கும மலைகள் விற்கும் கடைகள்.   

அலமேலு மங்கை அவளது புகழ்பெற்ற பெயர். அந்த ஊருக்கே அவள் பெயர் தான். அலமேலு மங்காபுரம்.  
பத்மாவதி கதை சொல்லட்டுமா?   கொஞ்சூண்டாக சொல்கிறேன்.

வேதவதி அதிரூப சுந்தரி.  தபஸ்வினி.  காட்டில் தவமிருந்த போது  அங்கே வந்து பார்த்த  ராவணன்  ''பெண்ணே, நானே  உனக்கு ஏற்ற கணவன். என்னை திருமணம் செய்து கொள் '' என மிரட்டினான்.  

''நேரத்தை வீணாக கடத்தாதே. நான் ராமபிரானைத் தவிர, வேறு யாரையும் திருமணம் செய்ய உத்தேச மில்லை ''  என்றாள்  வேதவதி. 

''நான் உன்னை விடப்போவதில்லை  இதோ பார் '' என்று நெருங்கினான் ராவணன்.

“பெண்ணிச்சையால் என்னைப் பலவந்தப்படுத்த  எண்ணம் கொண்ட நீ இதே இச்சையால் அழிவாய்'' என சாபமிட்ட   வேதவதி தன் கற்பைக்  காத்துக்  கொள்வதற்காக அக்னியில் விழுந்தாள். அக்னி அவளை எரிக்க வில்லை. அவள் ராம பிரானைச் சந்தித்தாள். 

'ராமா, என்னை கல்யாணம் செய்து கொள்'' என்ற கேட்ட வேதவதிக்கு, 
 
“இப்பிறவியில் இல்லை அம்மா.  நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன். ஏகபத்தினி விரதன். கலியுகத்தில், நிச்சயம்  நான் திருமலையில் சீனிவாசன் என்ற பெயரில் வந்து தங்குவேன். நீ, அந்த மலையை ஆளும் ஆகாசராஜன்- தரணிதேவி தம்பதியருக்கு புதல்வியாகப் பிறப்பாய். அப்போது, உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்  என ப்ராமிஸ் பண்ணினார் ராமபிரான்.

ஆகவே  காத்திருந்த  வேதவதி கலியுகத்தில்  ஆகாச ராஜன் என்னும் இந்த ஊர் ராஜாவுக்கு அலமேலு என்ற பெண்ணானாள். அவள் ஸ்ரீ லக்ஷ்மி அம்சம், முற்பிறப்பில் வேதவதி  என்று ராஜாவுக்கும் வேறு யாருக்குமே தெரியாது.

அப்புறம்  திருமலைக்கு  சீனிவாசன் வந்து  பத்மாவதியைச் சந்தித்தார். தன் காதலை அவளிடம் வெளிப் படுத்தினார். தன் முற்பிறவி வரலாறை மறந்துவிட்ட பத்மாவதி, அவரைக் கண்டு அஞ்சினாள். பத்மாவதியின் தோழிகள் அவர் மீது கல்லெறிந்து துரத்தினர். காயமடைந்த சீனிவாசன், தன்னை வளர்த்து ஆளாக்கிய வகுளாதேவியிடம் தன் விருப்பத்தை தெரிவித்தார்.

சீனிவாசனுக்காக ஆகாசராஜனிடம் தூது சென்றாள் வகுளாதேவி. தன் மகன் சீனிவாசன், நாராயணனின் அம்சம் என்பதை மன்னனிடம் தெரிவித்தாள். அதுகேட்டு ஆனந்தமடைந்த  ஆகாசராஜன் திருமண ஏற்பாடுகள் வேகமாக நடத்தி,  சீனிவாசனுக்கும், பத்மாவதிக்கும் திருமணம்  நடந்தது. அதைக்  காண தேவலோகமே கூடியது.

சீனிவாசன் ஏழை என்பதால், ராஜா வீட்டுப்பெண்ணை மணம் முடிக்க வேண்டிய நிலையில், திருமணச்  செலவுக்காக குபேரனிடம் கடன் வாங்கினார்.

''ஸ்ரீநிவாஸா  உனக்கு  கடன் தருகிறேன். கல்யாணத்துக்காக  கேட்கிறாய். அவசியம் தருவேன். ஆனால் எப்படி திருப்பி தருவாய் அதைச் சொல்''  என்றான் குபேரன்.  அவன் கேட்டது  நியாயம் தானே?

“குபேரா!   நான் ஏழையானால் என்ன. என் திட்டம் இது தான்.  என்னை வணங்குவதற்கு இந்த திருத்தலத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அவர்களின் பாவக்கணக்குக்கு ஏற்ப அவர்களிடம் நான் செல்வத்தை வசூலித்து விடுவேன். அதை உனக்கு வட்டியாகத்  தருவேன்! கலியுகம் முடியும் போது அசலை முழுமையாகத் தந்துவிடுவேன்.  வாயால் சொன்னால் போதுமா சீனிவாசா?  கடன் பாத்திரம் எழுதி வாங்கினான் குபேரன். 

சீனிவாசன்- பத்மாவதி திருமணம் இனிதே முடிந்தது.  

''மோசம் போய் விட்டாய்  லக்ஷ்மி.  உன் புருஷன்  நாராயணன்,  பூலோகத்தில் திருமலையில் இன்னொரு பெண்ணை திருமணம் பண்ணிக்  கொண்டுவிட்டாரே உனக்கு தெரியுமோ?'' என மஹா லக்ஷ்மி யிடம் சென்று சிண்டுமுடித்தார் நாரதர். கோபமடைந்த லட்சுமி, சீனிவாசனிடம் வந்து விவரம் அறிந்தாள் . காரணம் கேட்டபோது  அவளைச் சமாதானம் செய்து விளக்கமளித்தார் சீனிவாசன்.

“லக்ஷ்மி! முற்பிறவியில் நீ சீதையாக பிறந்த போது ராவணன் உன்னைக் கடத்த வந்தான். அப்போது அக்னியின் பாதுகாப்பில் இருந்த மாய  சீதையான இவள், உனக்குப் பதிலாக ராவணனுடன் சென்றாள். உண்மையில் இவள் உன்னைக் காப்பாற்றியவள்…’ என்றார். சமாதானமடைந்த லட்சுமி, பத்மாவதியைத் தன் தங்கையாக ஏற்றாள்.

பின்னர், லக்ஷ்மியிடம், “நீ என் மார்பில் அமர்ந்துகொள். என் மார்பில் வலப்பக்கம் பத்மாவதி இருப்பாள். அவளது மற்றொரு வடிவத்தை பத்மசரோவர்  தீர்த்தக்கரையில் அமையும் வகையில் ஏற்பாடு செய். நீங்கள் இருவரும் இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர்களுடைய  தகுதிக்கேற்ப அருள் வழங்குங்கள்…’ என்றார் சீனிவாசன்.

 பத்மாவதி அமர்ந்த இடமே அலமேலுமங்காபுரம் ஆனது.  திருச்சானூர் என்ற பெயர் ஏன் எப்படி என்று நான் இன்னும் யோசிக்கவில்லை. தேடிவிட்டு சொல்கிறேன். 

ஆரம்ப காலத்தில் வேங்கடேஸ்வரனுக்கு  இங்கு தான் கோவில் இருந்தது.  இட வசதி நெருக்கடியால்  இடம் மாற்றம் செய்தார்கள்.  அதால் மக்களும் இந்த இடத்தை மறந்துவிட்டார்கள்.   பின்னர்  12ம்  நூற்றாண்டில் யாதவ ராஜாக்கள் காலத்தில் கிருஷ்ண பலராம கோவில் வந்தது.   16ம் நூற்றாண்டில்  சுந்தர வரதராஜன் கோவில் வந்தது. தனியாக  பத்மாவதிக்கு ஒரு ஆலயம்  திருச்சானூர்  குளத்துடன் உண்டானது.  இந்த குளத்தில் தான் பத்மாவதி தோன்றினதாக ஐதீகம்.  அவள் உட்கார்ந்திருப்பதே  பத்மாசனத்தில் தானே.

வெங்கடேசனுக்கு   திருச்சானூர் குளத்தில் தாமரை மலரில் தோன்றி காட்சி அளித்தாள்  பத்மாவதி.  பத்மம் என்றால் தாமரை .   அப்புறம் அவளுக்கும் ஸ்ரீனிவாசனுக்கும் திருமணம் நடந்தது. 

 திருமலையில்  வேங்கடாசலபதியை தரிசிக்கும் எவரும் திருச்சானூர் சென்று அங்கு வீற்றிருக்கும் பத்மாவதி தாயாரை வணங்காமல் திரும்பக்கூடாது என்று ஐதீகம்.  பாலாஜியை வணங்குவதால் கிடைக்கும் அருள், பத்மாவதி தாயாரை வணங்குவதன் மூலம் நிறைவேறும் என்பது தொன்றுதொட்டு இந்த ரெண்டு ஸ்தலங்களுக்கு செல்லும் பக்தர்கள் நம்பிக்கை. 

பெருமாள் கோவிலுக்குச் சென்றால், முதலில் தாயாரை வணங்கி, அதன் பிறகே பெருமாளை வணங்குவது மரபு.   ஆனால் திருப்பதி செல்பவர்கள், நேராக வெங்கடாசலபதியைத் தரிசித்த பிறகே திருச்சானூர் செல்கின்றனர்; ஆனால், முறைப்படி திருச்சானூர் சென்று, அலமேலு மங்கை எனப்படும் பத்மாவதி தாயாரைத் தரிசித்த பிறகே, வெங்கடாசலபதியை தரிசிக்க செல்ல வேண்டும். சொன்னால் யார் காதிலும் விழாது. 

நான் திருச்சானூருக்கு  அரும்பாக்கம்  ஸ்ரீனிவாசன் எனும் நண்பரோடு  ஒருமுறை சென்றேன். அவரது லக்ஷ்மியான மைதிலி மாமியும் வந்திருந்தார். 

காசு கொடுத்தால் சீக்கிரம்  பார்க்க  ஸ்பெஷல் கட்டணம்  இப்போதெல்லாம் அலமேலு மங்காபுரத்திலும் இருக்கிறது. வளைந்து வளைந்து கம்பிகள் இடையே வரிசைகள்.  எந்த  டிக்கெட் வாங்கி னாலும்  தாயார்  அருகே செல்லும்போது  அனைவரையும் ஒன்றாக பாரபக்ஷமின்றி இணைத்து விடுகிறார்கள். அதிகமாக நசுங்காமல்  அலமேலு மங்காவை தரிசித்து விட்டு வெளியேறி  மாவு லட்டு பெற்று திரும்பினோம்.

அடுத்து நாராயண வனம் எனும் ஊர் சென்றோம். அங்கே தான் ஸ்ரீனிவாசன் பத்மாவதி கல்யாணம் நடந்து அப்புறம் தான் அலமேலு மங்காபுரம் சென்றார்கள் என்று அங்கே சொன்னதை அப்புறம் விவரிக்கிறேன்.

sivan jaykay

unread,
May 27, 2025, 9:47:28 PM5/27/25
to amrith...@googlegroups.com

'மஹா சனி  ப்ரதோஷம்  ' .    நங்கநல்லூர்   J K  SIVAN

இன்று   மஹா சனி பிரதோஷம். இந்தோனேசியா ஜகர்த்தா  விமான நிலையத்தில் பெரிதாக  அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடையும் காட்சி கண் கொள்ளாதது.  அவர்கள் அப்படி கடைந்தபோது  அம்ருதம் வந்தது பெரிதல்ல. அதற்கு முன் வாசுகி கக்கிய  கொடிய டிய ஹாலஹால  விஷம் வந்தபோது அனைவரும் திடுக்கிட்டார்கள் . என்ன செய்வது அந்த விஷத்தை. ஒரு துளி எவராவது உண்டாலே போதும்  மரணம் நிச்சயம். இதென்னடா வம்பு. அம்ருதம் வேண்டும் என்று மெனக்கெடும்போது   'ம்ருத்யு'',  அதுவும் மிகக் கொடியது அல்லவோ  கிடைக்கிறது. மேலும் மேலும் வேறு வருமோ? முதலில் இதை என்ன செய்வது?    எவராலும் அதை தொடவும் முடியாது, ஆகவே. யோசித்து கடைசியில் தேவர்கள் எல்லோரும்  பரமேஸ்வரனிடம் ஓடினார்கள்.  

''யாமிருக்க பயமேன்?. காலனுக்கே காலன்  அல்லவா? ஹல்வா சாப்பிடுவது போல் லபக் என்று அத்தனை ஹாலாஹல விஷத்தையும் ஒரே வாயில் விழுங்கி விட்டார். அது அவருக்குள் போய் வேலை செய்யாமல் மின்னல் வேகத்தில் உமா தேவி சிவபெருமான் கழுத்தை பிடித்து விஷம் உள்ளே இறங்காமல் தடுத்து  விட்டாள் . உள்ளேயும் போகாமல் வெளியேயும் வராமல் அந்த கொடிய விஷம் பரமேஸ்வரன்  நெஞ்சில் தங்கி விட்டது.  சிவனுக்கு இன்னொரு பெயர் அந்த நாளில்  பெற்றார். அவர்  இனி  '' திரு நீலகண்டர்' 

தேவர்களுக்கு உதவிய  சந்தோஷத்தில் ஹாலாஹல விஷத்தின் கடுமையை தாங்கிக்கொண்டு  சிவ பெரு மான் மீண்டும் எழுந்து ஆனந்தத் தாண்டவம் ஆடியது இன்று மாதிரி ஒரு சனிக்கிழமை திரயோதசி திதி தினம். எனவே சனிக்கிழமைகளில் வரும் திரயோதசி திதிக்கு  'மஹா  பிரதோஷம்' என்று பெயர் உண்டானது.   'ப்ர' தோஷம் என்றால் பாவங்களை/தோஷங்களை  நீக்குவது என்று பொருள்

இன்று சர்வ பாவ விமோசன நாள். சிவாலயங்களில்   நந்திகேஸ்வரனுக்கு   விமரிசையாக அபிஷேகம் நடைபெறுவதைக் காணும்போது மனது இனிக்கும்,   பாவ மெல்லாமும் பறந்தோடும். சனியின் மோசமான தாக்கத்தை போக்க, பக்தர்கள் சனி பிரதோஷத்தன்று விரதம் அனுசரித்து, பகலில் சிவபெருமானுக்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

தாம்பரம் நண்பர்  குருமூர்த்தி  போனில் பேசும்போது மஹா பிரதோஷம் பற்றி பேச்சு வந்தது. சிவன் மேல் ஒரு பாட்டு பாடுங்கள் என்கிறார்.   கானடா ராகத்தில் பாலமுரளி கிருஷ்ணா சொந்த சாஹித்யம்  உடனே நினைவுக்கு வந்தது  எத்தனையோ கச்சேரிகளில் அந்த அற்புத பாடலை '' ப்ரஹதீஸ்வர மஹாதேவ...'' எனும் பாடலை கேட்டு, பிடித்து பாடுவேன். நிச்சயம் அவரை மாதிரி அல்ல.. என் மாதிரி.  அதுகூட  குருமூர்த்திக்கு பிடித்திருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு வேளை  அவருக்கு சங்கீத  ஞானம் போதாதோ, அல்லது நான் தான் நன்றாக பாடிவிட்டேனோ??  விஷம்  உள்ளேயும் போகாமல் வெளியேயும் வராத மாதிரி ரெண்டும் கெட்டானாக இருந்திருக்குமோ?

 திங்கட்கிழமைகளில் நிகழ்கிற  பிரதோஷம் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. திங்கட்கிழமையை சோம வாரம் என்கிறோம்.  சோமன் என்றால் சந்திரன், திங்கள்  என்றாலும் அவனே.   சந்திரனை பிறையாகச் சூடிக் கொண்டிருக்கும்  பரமேஸ்வரனை திங்கட்கிழமையன்று வரும் ப்ரதோஷத்தில் பூஜை செய்து வணங்கினால், மோக்ஷ கதி  காரண்டீ.    

குருவாரம் எனப்படும்  வியாழக்கிழமையில்  நிகழும்  ப்ரதோஷமும் முக்கியத்துவமானது.  சிவபெருமான், தக்ஷிணாமூர்த்தியாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு சின் முத்ரை காட்டி போதித்த நாள் என்பதால்  குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ர பாராயணம் செய்வதும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும்.

சனிக்கிழமை மஹா ப்ரதோஷ சிவ தர்ஸனம் சகல  பாவங்களையும் போக்கக்கூடியது.  16  வகையான த்ரவியங்களோடு, அதாவது  பால், தயிர், சந்தனம், தேன்,  நெய் பஞ்சாமிர்தம், இளநீர், கரும்பு சாறு, விபூதி இன்னும் திரவியப்பொடி முதலான அபிஷேகம் அற்புதம். பிரதோஷ அபிஷேகம் என்ன பலன் தரும்?  இதோ ஒரு லிஸ்ட்:

பால் நீண்ட ஆயுளைத் தரும்.
நெய் மோக்ஷ  நிலையைத் தரும்.
தயிர் நல்ல குழந்தைகளைத் தரும்.
தேன் இனிமையான குரல் கொடுக்கிறது.
அரிசி பொடி கடன்களில் இருந்து விடுபடுகிறது.
கரும்பு சாறு நல்ல ஆரோக்கியத்தை தரும்.
பஞ்சாம்ருதம் செல்வத்தைத் தரும்.
எலுமிச்சை மரண பயத்தை நீக்குகிறது.
சர்க்கரை பகையை நீக்கும்.
தேங்காய் மகிழ்ச்சியைத் தருகிறது.
சமைத்த அரிசி கம்பீரமான வாழ்க்கையை அளிக்கிறது.
சந்தனம் லட்சுமியின் அருளைத் தரும்.
ப்ரதோஷ காலம்  லை 4.30 மணி முதல் 6 மணிவரை. சிவன் சந்நிதியில் வைக்கும் கோரிக்கைகளை மற்ற  தெய்வங்களும்  பெற்றுத்தரும்.  சனிப்ரதோஷ  தரிசன பலன் ;  ஓர் வருஷம் முழுக்க  ப்ரதோஷ வழிபாடு செய்த பலன் கொடுக்கும்.   துன்பங்களால் வாழ்வில் திகைத்துப்போய் சோர்ந்து நிற்கும் அன்பர்களுக்கு சனிப்பிரதோஷம் ஓர் அருமருந்து. 
ஞாபகம் இருக்கட்டும்; இந்த வாழ்க்கைதான் பாற்கடல். அதில் நமக்கு கிடைக்கும்  மகிழ்ச்சி  தான் அம்ருதம்.  ஆனால் வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும்  துன்பங்கள் தான் விஷம்.  அந்த துன்பங்களுக்கு பயந்து ஓடாமல் பேசாமல்   சனி ப்ரதோஷம்  அன்று சிவாலயத்துக்கு சென்று  தரிசிப்பதே  சொல்யூஷன்.  காரணம்  பரமேஸ்வரனே விஷயத்தை விழுங்கி அம்ருதம் பெற வைத்தவர் அல்லவா? சனிக்கிழமை ப்ரதோஷத்துக்கு காத்திருக்க வேண்டாம். எல்லா பிரதோஷமும் கட்டாயம் செல்வோம்.

கடைசியாக ஒரு விஷயம். 
ப்ரதோஷ காலத்தில் எப்படி ப்ரதக்ஷிணம்  பண்ணுவது ?  முதலில்  நந்திக்கு பிரார்த்தனை  செலுத்தி எதிரே  சண்டீஸ்வரரை அணுகி வணங்கவேண்டும்.  வந்தவழியே  திரும்பி  நந்தியிடம் வாழ்ந்து நமஸ்கரிக்கிறோம். அங்கிருந்து  அபிஷேக ஜலம் விழும் கோமுகி வரை  செல்லவேண்டும்.. பின்னர் திரும்பி நந்தி பக்கம் திரும்பி வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை நோக்கி செல்கிறோம்.  அங்கிருந்து நந்திஇடம் திரும்பாமல் கடிகார திசையில்  சென்று  கோமுகியை அடைகிறோம்.  இறுதியாக அங்கிருந்து எதிரெதிர் திசையில் திரும்பி ரிஷபத்திற்கு வணக்கம் செலுத்தி சண்டீஸ்வரரைத் தொடர்ந்து நந்திக்கு திரும்பி, புனித காளையின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் உள்ள இடைவெளி வழியாக சிவலிங்கத்தை (பலிபீடத்தில்) வணங்கவேண்டும்.  இது ஒரு  ப்ரதக்ஷிணம்.   இந்த மாதிரி மூன்று  ப்ரதக்ஷிணம் செய்வது பிறை சந்திரன் மாதிரி டிசைன். ஆகவே இதற்கு பெயர்  ''சோம சூத்ரப் ப்ரதக்ஷிணம்''. சிவாலயங்களுக்கு  தும்பைப்பூ, வில்வம்,  நாகலிங்க புஷ்பம் எல்லாம் எடுத்த்துச் செல்வது விசேஷம். 



sivan jaykay

unread,
May 27, 2025, 9:47:28 PM5/27/25
to amrith...@googlegroups.com

ஒரு ரஹஸ்யம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

மஹா பாரதத்தின் விறுவிறுப்புக்கும்  அதன் விசேஷ ருசிக்கும்  காரணம் ரெண்டு பாத்திரங்கள். ஒன்று கர்ணன் இன்னொன்று கிருஷ்ணன். ரெண்டு பேருமே  விசித்ரமானவர்கள்.

குந்தி பெற்ற சூர்ய புத்ரன் கர்ணன். கவச குண்டலங்களோடு பிறந்தவன்.  தான தர்மத்தில் தலை சிறந்தவன். வீரத்திலும் தனுர் வித்தையிலும்  நிபுணன்.  பிறந்த குழந்தையாக இருந்த போதே பெற்றோரை அறியாது,  ஆற்றில் பெட்டியில் கைவிடப்பட்டு ஒரு தேர்ப்பாகனிடம் வளர்ந்து பல  அவமானங்களுக்கு ஆளான பாண்டவன்.பாண்டவர்களுக்கே ஜென்ம வைரியாக  கடைசி வரை இருந்தவன். தான் யார் என்று உணர்ந்தும் நன்றிக்கடனால் தாய், சகோதரர்களின்  உறவை மறைத்தவன்.

கிருஷ்ணனும் அப்படித்தான் ஆனால் வேறே மாதிரி வளர்ப்பு. தாய் தந்தையிடமிருந்து பிறந்தபோதே பிரிந்து யாதவ குல நந்தகோப குமாரனாக வளர்ந்தவன். அவதார புருஷன். பாண்டவர்களுக்கு நேயன். தர்மத்தை ரக்ஷித்தவன். ஒருவன் கண்ணன் இன்னொருவன் கன்னன் .  கன்னன்  தீயசக்திகளோடு வாழ்ந்தவன். கண்ணன் தீய சக்திகளை அழிக்கவே பிறந்தவன்.

கண்ணனின்  சமாதான தூது ஹஸ்தினாபுரத்தில் தோற்றது.    ஹஸ்தினாபுரத்தை விட்டு கிளம்பும் முன் கிருஷ்ணனின்  தேர்  கர்ணன் தனியாக விடிகாலை  சூரியனை பிரார்த்திக்கும்போது காத்திருந்தது.  

''வா கிருஷ்ணா, ஆச்சர்யமாக இருக்கிறதே . என்னிடம் உனக்கு என்ன வேலை?. நேற்றே அரசவையில் முடிவைச்  சொல்லிவிட்டோமே. இனி பாண்டவர்களோடு யுத்தம் மட்டுமே. அதற்காக தான் நான் இத்தனை வருஷங்கள் காத்திருக்கிறேன். அது நிறைவேறும்.  சந்தோஷம் எனக்கு''

உன்னிடம் ஒரு முக்கிய விஷயம் சொல்லத் தான்  கர்ணா நான் இப்போது வந்தேன்.
உன் கபட நாடகம் எதுவும் என்னிடம் வேண்டாம். நீ என்ன சொல்லப்போகிறாய் என்று தெரியும். என்னிடம் கெஞ்சி பாண்டவர்கள் உயிரை காப்பாற்ற முயற்சிக்காதே.  நீ யார்  எப்படிப்பட்டவன் எனும்  ரஹஸ்யம் எனக்கு தெரியும்''
''கர்ணா, .ரொம்ப சந்தோஷம். நான் யார் என் ரஹஸ்யம் என்பது கிடக்கட்டும். நீ யார்? உன் ரஹஸ்யம் என்ன? என்று உனக்கு முதலில் தெரியுமா. அதைச் சொல்லவே வந்தேன்..
''என்ன உளறுகிறாய் கிருஷ்ணா?''
கண்ணன் குந்தி தான் கர்ணனின் தாய், அவளே, ஒரு புடவையை சுற்றி அவனை  குழந்தையாக  பேழையில் வைத்து ஆற்றில் விட்டு தேரோட்டி வீட்டில் ஹஸ்தினாபுரத்தில் அவன் வாழ்வதை நினைவூட்டுகிறான். கர்ணன் உண்மையை கேட்டு உறைந்து போகிறான்... எனினும் மன உறுதி தளரவில்லை.
அவனை பாண்டவர்களோடு சேர்ந்துகொண்டு  ராஜாவாக தேசத்தை ஆண்டு ஒற்றுமையாக வாழ்ந்து, கௌரவர்களை அழிக்க வேண்டும் என்று சொல்கிறான்.  கேட்டதில் கர்ணன் தான் பாண்டவன், ராஜகுமாரன் என்று உணர்ந்து மகிழ்கிறான். என் தம்பிகள் அசகாய சூரர்கள், உலகப்புகழ் பெற்றவர்கள் என மகிழ்கிறான். அதே நேரம் அவன் மன உறுதி தளரவில்லை.  

''இல்லை கிருஷ்ணா, நீ என் சகோதரர்கள் பாண்டவர்களுக்கு உதவுவதில் எனக்கு பெருமை. என் தம்பி அர்ஜுனன் எவ்வளவு சிறந்த வில்வீரன் என பெருமை. ஆனால் அவனைக் கொல்லவேண்டிய  நிர்பந்தம் எனக்கு. அது என் வைராக்யமாகி விட்டது.  வளர்த்த நன்றிக்கடன் செயல் அது. தயவு செய்து எனக்கு பாண்டவர்களுக்கும் உள்ள உறவை வெளியே மூன்றாம் மனிதர் எவருக்கும் தெரிவிக்காதே . என்னோடு என் ரஹஸ்யமும் மறையட்டும்.  நான் துரியோதனன் வீட்டுக்கு செல்லும் முன்பே நீ என்னை பார்த்திருக்க வேண்டும்  என் வாழ்க்கையே  மாறி விட்டிருக்கும். நீ  தவறி விட்டாய். இப்போது காலம் கடந்துவிட்டது. கடமை முந்திக் கொண்டுவிட்டது.''

''கிருஷ்ணா  இந்த சந்திப்புக்கு நன்றி. என் கண்களில் நீர் பெறுக வைத்துவிட்டாய். உலகப்புகழ் பாண்டவர் கள் என் தம்பிகள் என உணரவைத்தாய். காலம் கடந்த பின் இனி ஒரு பிரயோஜனமும் இல்லை.  இனி நான் அவர்களோடு சேர்வதோ அவர்களுக்காக  கௌரவர்களை அழிப்பதோ, அவர்களுக்கு முதல்வனாக ராஜ்யமாள்வதோ  நடக்காத காரியம்.  பகல் கனவு. இதை  மறந்துவிடு. எல்லாவற்றையுமே மறந்து விடு. இந்த உடலும் உயிரும் துரியோதனனுக்கு மட்டுமே சொந்தம். பாண்டவர்களை அழிக்கவே என் உடம்பில்  ரத்தம் ஓடுகிறது. போய்  வா.  அதற்கு முன்  ஒரே ஒரு வேண்டுகோள்.  ''இந்த சந்திப்பை ரஹஸ்யமாக வைத்துக் கொள்வேன்.பாண்டவர்களிடம் சொல்ல மாட்டேன்'' என்று எனக்கு ஸத்யம் செய்.  என் கடமையைச் செய்ய விடு.'
கிருஷ்ணன் தலையை ஆட்டி ஆமோதித்தான். கண்களில் நீர் பெருகியதை துடைத்துக் கொண்டான்.

இது மகாபாரதத்தின் மிக உணர்ச்சிபூர்வமான தருணங்களில் ஒன்று . கிருஷ்ணனின் தூது  யுத்தத்தை நிறுத்துவதிலோ, கர்ணனோ பாண்டவர்களோடு சேர்ப்பதிலோ ஜெயிக்கவில்லை என்று நினைக்கவே வேண்டாம். அதுவும் கிருஷ்ணனின் ராஜ தந்திரம். துரியோதனாதியர்களை பூண்டோடு அழிக்க கிருஷ்ணன் எடுத்த  அவதார நோக்கம். எல்லாம் சரியாகவே நடக்கிறது கிருஷ்ணன் வழியில்.  

கர்ணனால் அர்ஜுனன் மற்ற பாண்டவர்கள் அழிவது உறுதி என அறிந்த கண்ணன் குந்தியை அவனிடம் அனுப்புகிறான்.
''அம்மா வாருங்கள், எதற்கு என்னை காண வந்தீர்கள்?''
''மகனே  நான் உன்னைப்  பார்க்க வந்த தாய் அப்பா''
''அம்மா, நீங்கள் உங்கள் வாயால் மகனே என்று என்னை அழைத்த கணத்தில்  என் மனம் இனிக்கிறது. உண்மையில் நீங்கள் என் எதிரிகளின் தாய் என எனக்கு தெரியும்''
''உனக்கு தெரியாதவையும் உண்டு கர்ணா, நான் உனக்கும் தாய் தான்''
''ஓஹோ, இப்படி ஒரு நாடகமா? உங்கள் ஐந்து மக்களை காப்பாற்ற  ஏன் இந்த வேஷம்? என்னை எதற்கு மகனே என்று அவர்களோடு  கூட்டு சேர்த்துக் கொள்கிறீர்கள்''
'' நீ  போற்றி வைத்திருக்கும்  புடவையை கொண்டுவா நான் உடுத்திக் காட்டி உன் தாய் என நிரூபிக்கிறேன்''
'அம்மா  நீங்கள் தானா என் தாய். நான் என்ன பாக்கியசாலி, அதே நேரம் துர்பாக்யசாலியும் கூட.''
இவ்வளவு நேரம் நாம் பேசியதில் நான்  யாரென உண்மையை அறிந்தேன். ஒரே ஒரு வரம் தருகிறேன். அர்ஜுனனைத் தவிர மற்றவர்களை நான்  கொல்ல மாட்டேன். அர்ஜுனனைக் கொல்லவே , துரியோதனனால் நான் வளர்க்கப்பட்டவன். நன்றி மறவேன். மேலும் நீங்கள் வேண்டியபடி அர்ஜுனன் மேல்  அவனைக் கொல்வதற்கு நான் தயாராக வைத்திருக்கும் நாக அஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பிரயோகிக்கமாட்டேன். நான் சத்யம் தவறாதவன். நமது  உறவு இத்தனை வருஷங்கள் போலவே இனியும்  ரஹஸ்யமானதாகவே
 இருக்கட்டும்.
அந்த அன்பு மௌனமானது, புலம்ப முடியாதது, அறியப்படாதது – ஆனால் மிகவும் உண்மையானது.
இது இருவருக்கும் இடையே ஒரு கண்ணியமான வலிமையான பாசம்,
அது தர்மம் மற்றும் நெஞ்சறிவு இடையே நடந்த ஓர் ஒத்திசைவு போல.
 கிருஷ்ணன் கர்ணனை உள்ளூர நேசித்தவன்.  கண்ணன்  கன்னனுக்கு  கொடுத்த வாக்குறுதி பாண்டவர்களிடம் சொல்லக்கூடாது என்பதால், குந்தியை மட்டும் தனியாக சந்திக்கிறான்.
''அத்தை, உனக்கு ஒரு விஷயம் ஞாபகப்படுத்த வந்தேன்''
'என்னப்பா கிருஷ்ணா, நீ தான் எதையும் மறக்காதவனாயிற்றே''
உனக்கு ஞாபகம் இருக்கிறதா,.. ஆற்றில் ஒரு பெட்டியில் ஒரு சிறு குழந்தை பல வருஷங்களுக்கு முன்பு மிதந்ததே.அப்புறம் அது என்னாயிற்று?''
குந்தி சிலையாக உறைந்தாள் . கண்களில் ப்ரவாஹம் .
''கண்ணா அது உனக்கும் தெரியுமா..  என்ன ஆயிற்று அந்த குழந்தைக்கு?? அது என் முதல் மகன்... என் மனத்தை ஈட்டி போல் குத்தி குளறி வாட்டும் துக்கம் அது... வேறு வழியின்று நான் செய்த மஹா பாபம்''
கர்ணன் சரித்திரத்தை கிருஷ்ணன் உரைத்தான்.
''கிருஷ்ணா, உனக்கு நன்றி, இப்போதே ஓடுகிறேன். கர்ணனை பார்த்து யுத்தத்தை நிறுத்தி என் ஆறு மகன்களையும் ஒன்று சேர்த்து மகிழ்வேன்.''
''அத்தை உன் ஆசை பேராசை. அது நடக்காது. நானும் முயன்று தோற்றேன்''
''கிருஷ்ணா, என் தாய்ப்பாசம் உன்னைவிட சக்தி மிகுந்தது. அது வெல்லும்''
''ஆஹா அதை உணர்ந்து தான் உன்னிடம் இப்போது வந்தேன்''
பிறகு தான் கண்ணன் குந்தியை கர்ணனிடம்  அனுப்பி அவளிடம்   பாண்டவர்களில் அர்ஜுனன் தவிர மற்றவர் உயிரை காப்பாற்ற, அர்ஜுனன் மேல் ஒரே ஒரு முறை மட்டும் நாகாஸ்திரம் விட வரம் பெற்றாள் .யுத்தத்தில் கர்ணனின் நாகாஸ்திரத்திலிருந்து  கிருஷ்ணன் அர்ஜுனனைக் காப்பாற்றி அர்ஜுனன் கர்ணனைக் கொல்ல வழி வகுத்தான்.

கண்ணன்  கர்ணனைப் பற்றிய  உண்மையை முன்பே பாண்டவர்களிடம்  வெளிப்படுத்தியிருந்தால்
மஹாபாரத யுத்தம் நடந்திருக்காது.  கிருஷ்ணன் தான் எடுத்த அவதார நோக்கத்தால் இந்த ரஹஸ்யத்தை  பாண்டவர்களுக்கு வெளிப்படுத்தவில்லை.    ஆகவே  கண்ணன் விரும்பியபடியே தான் நமக்கு  மஹா பாரதம் கிடைத்திருக்கிறது.  அண்ணன்  என்னடா, தம்பி என்னடா, அவசரமான உலகத்திலே, உறவெல்லாம் பொய் என்று கண்ணன்  கீதையில் சொல்லியிருப்பதை நினைவில் வைப்போம்.  சீர்காழி பாடிய  ஒரு பாடல் எப்போதும் காதில் ஒலிக்கிறது.... ''உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது....'

sivan jaykay

unread,
May 27, 2025, 9:47:28 PM5/27/25
to amrith...@googlegroups.com

கோவிலுக்கு போவோம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

இத்தனை  வருஷங்களில்  எத்தனையோ கோவில்கள் சென்றிருக்கிறேனே  எனக்குள் ஏதாவது மாற்றம்  நிகழ்ந்திருக்கிறதா?  இந்த கேள்வியை யாரும் கேட்கவில்லை. நானே எனக்குள் கேட்டதுண்டு. அதற்கு பதிலும் கிடைத்திருக்கிறது.

கோவில் சிறிதாக இருந்தாலும்,  பெரிதாக இருந்தாலும், பிரபலமானதாக இருந்தாலும், யாருமே  அதிகம் போகாத கோவிலாக இருந்தாலும்,  எனக்கு அங்கே போகும்போது வேறு மனிதனாக மாறிய அனுபவம் உண்டு. சொல்லத்தெரியாத ஒரு சந்தோஷம், கோவிலில் காணும் அமைதி, மந்திர ஒலி, தீபம், பூஜை பக்தர்களின் நாம சப்தம் மனதிற்கு இதம் தரும்.  இன்னும் கொஞ்சம் கூட சொல்வதானால், அதிகம் கூட்டம் இல்லாத கோவிலில் இன்னும் ஆனந்தம் அதிகம் ஏற்பட்டிருக்கிறது.  நெருஞ்சி முள் காலில் தைக்க  பிரகாரம் சுற்றி வர  இயலாத கோவில்களில் எனக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி. நானும் ஏன் உழவாரப்பணியில் சேர்ந்து இந்த மாதிரி கோவில்களுக்கு வந்து கர  சேவை செய்யவில்லை. ஒருவித அமைதியை தருகின்றன.  ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், சிதம்பரம், தஞ்சாவூர்  திருவாரூர் மன்னார்குடி போன்ற  பெரிய கோவில்கள்  என்னுள் ஒரு பிரமிப்பை தந்ததுண்டு. ப்ரம்மாண்டத்தில்,  அண்ட பகிரண்டத்தில் நான் எவ்வளவு அற்பமான சிறு தூசி! அதிலேயே  எவ்வளவு கர்வம், தலைக்கனம், எகத்தாளம்,அகம்பாவம், தற்பெருமை !

நாமே கடவுளை நேரில் பார்த்து, பூஜை செய்து, அர்ச்சனை செய்து, நன்றியுணர்வுடன் இருக்கும்போது நம் பக்தியும் அதிகரிக்கிறது. இது ஒரு ஆன்மிக வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது.  

31,5,2025   பதினெட்டு நண்பர்கள் சூழ  காலை 6.30 மணியிலிருந்து இரவு வரை பல கோவில்கள் செல்கிறோம். .கோவில்கள்  புனித ஸ்தலங்கள். அங்கு செய்யப்படும் பூஜைகள், வேத மந்திரங்கள், தீப ஒளி, வாசனை—எல்லாமே ஒரு புத்துணர்ச்சி தருபவை,  சொல்லத்தெரியாத   ஒரு அதிர்வை தருபவை. கோவில்களில் உள்ள ஆற்றல் அலைகள், நம்மை  தலைமுதல் கால்வரை பரிசுத்தப்படுத்துபவை. எண்ணற்ற மஹான்கள் ஆச்சர்யங்கள் சுவாசித்த  மின் காந்த அலைகள் நம்மை மாற்றிவிடுபவை. ஆசிகள் அளிப்பவை.
தர்ம தான, ஆன்மீக சிந்தனைகள் வளர்ப்பவை. சூழ்ந்துள்ள பக்தர்களின் பரவசம் நம்மையும் ஆனந்தமடைய செயகிறது. நிறைய பேர் தரிசனம் செய்து அமைதியாக சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்யும்போது நாமும் செய்யவேண்டும் என்று தூண்டுபவை. மனக்கட்டுப்பாட்டை வளர்ப்பதை. சஞ்சலங்களை ஒடுக்குபவை. 
ஒரு  மகன்  மாடர்ன் ஐடியா உள்ளவன். இருக்கவே இருக்கிறதே நிறைய  யூ ட்யூப் வாசகங்கள்.அதில் 
ஊரியவன். கோவிலுக்கு போகும் அம்மாவை கேட்கிறான்;
“அம்மா, அந்த பழைய கோவிலுக்கு போனால்தான் என்ன வரும்? கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரே!”
“ஆமா மகனே, கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார். ஆனா, கோவில் ஒரு சுமுகமான இடம்.  அங்கே நாம் கடவுளைப்பார்ப்பதை விட அவர் கண்கள் நம்மை பார்ப்பதே விசேஷம் டா  மகனே.''
மகன்  சில  ஏமாற்றங்களை  சந்தித்தான். மனம் வாடி, வலித்தது.  அம்மா சொன்னாளே , கோவிலுக்கு போய் பார்ப்போமே என்று கோவிலுக்கு போனான். அங்கே மந்திர ஒலி, தீப ஒளி, வாசனை, பூஜை எல்லாமும் ஒரு விதமான அமைதியை அவன் மனதில் தூண்டின. அவன் கண்கள் அடிக்கடி கலங்கின. அம்மா  சொன்ன  அமைதியை உணர்ந்தான்.அடிக்கடி கோவிலுக்கு போக ஆரம்பித்தான்.   கோவிலில் நாம் கடவுளை பார்க்கிறோமே, கடவுள் நம்மை பார்க்கிறாரோ இல்லையோ,   ''நம்மை நாமே, நமக்குள் நாமே' கடவுளை  உணர வைக்கும் அமைதி, நம்பிக்கை, நற்பண்புகள் அங்கே  உருவாகிறது. 

sivan jaykay

unread,
May 27, 2025, 9:47:40 PM5/27/25
to amrith...@googlegroups.com

ஸத் குரு   -  நங்கநல்லூர்  J K SIVAN

ஸத்குரு  सत्गुरु  என்றால் "உண்மையான குரு".  ஸத் என்றால் சத்யம். இசை சொல்லித் தருபவர்கள், வேத போதகர்கள், பெற்றோர்கள் இவர்கள் எல்லோருமே  ஸத் குருக்கள் தான். 
ஸத் குரு  ஒரு ஆத்ம ஞானி.  தான் துய்த்த  சதானந்தத்தை, சித்தானந்தத்தை பக்தர்களும் சிஷ்யர்களும் பெற  உதவுபவர்.  மோக்ஷத்துக்கு
 வழிகாட்டும் ஆன்மீக  குரு.   'குரு''  இருளைப்  போக்குபவர்.  நம்முடைய அஞ்ஞானம், அறியாமையை விலக்குபவர்"   இதற்கு மேல் யாரையாவது தாடி, தலைப்பாகையோடு  எங்கோ ஒரு  பணம் புரளும் ஆஸ்ரமத்தில்  ஆங்கிலத்தில்  சரளமாக நாக்கு புரள சத் குரு என்ற பெயரோடு இருந்தால், ஐயா,  அப்படி யாரையும்  நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை. 

ஆன்மீக பாதையில் நான் முன்னேற தேடிய, கண்டுபிடித்த,  ஸத் குருக்கள் ; ஸ்ரீ ஆதி சங்கரர், மஹா பெரியவா. ரமண மஹரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர், சேஷாத்ரி ஸ்வாமிகள் போன்ற  அற்புத அவதாரங்கள்.  எனக்கு இந்த குருக்களை பற்றி அறிந்து கொள்ள முடிந்தால் அதுவே என் பாக்யம்.  ஆத்மாவில் மனம் லயித்து, எல்லாமும், எல்லாரும் சமமென நோக்குபவர்கள் மேலே சொன்னவர்கள்.   எந்த சந்தர்ப்பத்
திலும்  அசைக்க முடியாத மனோ தைர்யம் கொண்டவர்கள்.

'அப்படியென்றால்   உண்மையான சிஷ்யன் யார்?'
''எவன் தனது மனதிலிருந்து துன்பம், துயரம், துக்கம், உலக ஈர்ப்பு,இன்பங்கள்  என்பன  எல்லாம் நீங்கி, சதா  நிலையான  ஆத்மானுபவ பேரின்பத்தில்   திளைக்க வேண்டும் என  குருவை நாடி  உபதேசம் தேடுபவன். 
''உபதேசமா? அப்படிஎன்றால்?'

''உப' என்றால்  அருகில், பக்கத்தில், கிட்டே, உட்காருவது. இடம் பெறுவது.  குரு என்பவர் சத், சித், ஆனந்தம் என்ற மூன்றின் மொத்த உருவம். அவருடைய அருகே இருந்து அவரிடம் அருள் பெறுவது. எங்கோ வெகு தூரத்தில் இருப்பதை அருகிலேயே பெறுவது, காண்பது. ப்ரம்மம் எங்கோ கிடைக்காத ஒன்று இல்லை.  அடைய முடியாத ஏதோ ஒன்று இல்லை. நாம் தேடினால்  மிக மிக  அருகே உள்ளது தான்.

''அப்பனே  சிஷ்யா, நீ தேடும் ப்ரம்மம் இதோ உன்னி டமே, உன்னுள்ளேயே இருக்கிறதப்பா,  அது ஏதோ ஒரு அந்நிய வஸ்து இல்லை, நீயே தான் அது,  அருகே வா  அதை உனக்கு காட்டித் தருகிறேன்''  என்று குரு அவனுக்கு வழிகாட்டுவது தான் உபதேசம்.
இதிலிருந்து என்ன புரிகிறது?  

குரு என்பது ஒருவனின்  ஆத்மா ப்ரம்மம் என்று அவனுக்குள் உறைவது என்று சொல்லும்போது ஒருவனுக்கு எதற்கு இன்னொரு மனிதர் குருவாக தேவைப்படுகிறார்? வ்வளவு புத்தி சாலியான, ஞானம் தேடும், சிஷ்யனுக்கு ஏன் குரு தேவைப் படுகிறார் என்றால் அவனால் அவ்வளவு சீக்கிரம் ஆத்மாவை அணுக முடியாது. அதற்கு அவனுக்கு  மற்றொருவரின் உதவி அவசியமாகிறது. அவரே குரு.    ரமணர், ராம கிருஷ்ண பரமஹம்சர்  போன்ற மஹான்கள் விஷயமே வேறு. அவர்களை நம் போன்ற சாதாரண மனிதர்களோடு ஒப்பிட வேண்டாம். 

ஒரு அடி  ஏறினால்  ஒன்பது அடி  சறுக்கும் விஷயம்  ஆத்ம விசாரம். நம்மை நாலா பக்கமும் சூழ்ந்திருக்கும்  மாயை,  நமது மனதை ஆக்கிரமிக்கும் பலம் மிக்க  காம, க்ரோத, மோஹ, மத விஷயங்கள், அகம்பாவம், அஹங்காரம் ஆகியவை சக்தி கொண்டவை.  நமது   மனம் இவற்றை மீறி,  ஆன்ம விசாரத்தில் ஈடுபட தடங்கலாக, இடையூறாக உள்ளவை.  குருவின் உதவியோடு தான் மெல்ல மெல்ல  அவற்றை வென்று, மனதை ஆன்மீகத்தில் செலுத்த  முடியும். 

என்னதான் உடம்பு நோயை எதிர்கொண்டு அதை எதிர்த்து போரிட் டாலும்  டாக்டரின் மருந்து தேவைப்
 படுகிறது அல்லவா? குருவருள் திருவருள். மனம் அதன்  பலத்தில், சக்தியில், முன்னேறமுடியும். நீரில் மூழ்குபவனை  பிடித்து  இழுத்து கரை நோக்கி சுமந்து கொண்டு,காப்பாற்றுபவர் குரு.

குரு இருக்கிறார் என்றால் மற்ற ஈர்ப்பு சக்திகள் நம்மை நெருங்க  கொஞ்சம் அச்சம் கொள்ளும்.  ஒருவன் ''நான் நிறைய படித்துவிட்டேன், கற்றுக் கொண்டு விட்டேன், எனக்கு எல்லாம் தெரியும்'' என்று பீற்றிக் கொள்பவனிடம் ஒரே ஒரு கேள்வி.

''அப்பனே  எல்லாம் அறிந்த நீ, உன்னை அறிந்து கொண்டு விட்டாயா?''
 ''என்னை தான் தினமும்  கண்ணாடியில் பார்க்கிறேனே. இதோ உங்கள் முன் நின்று கொண்டு பேசுகிறேனே. புதிதாக வேறு என்ன  இருக்கிறது தெரிந்து கொள்ள?'  என்று பதில் சொன்னாலே அவன் எவ்வளவு  அஞ்ஞானி என புரியவில்லையா?

''குரு கடாக்ஷம், குரு அருள், குரு ஆசி'' என்கிறோமே அதை எப்படி அடையாளம் காண்பது?''
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட  அதை உணர்த்த, உரைக்க வார்த்தைகளை இரவு பகலாக தேடிக் கொண்டி ருக்கிறேன், கிடைத்ததும் சொல்கிறேன். இந்த பிறவியிலேயே சிக்கு ஆகவேண்டும். அடுத்த பிறவி மீண்டும் மானிடப்பிறவியே  கிடைக்கும் என்று என்ன காரண்டீ. ஆப்ரிக்காவில்  தேளாக பிறந்துவிட்டால்???அல்லது அதைக்காட்டிலும் மோசமாக  இங்கேயே ஒரு அரசியல் வியாதியாக அவதரித்து விட்டால்????


sivan jaykay

unread,
May 31, 2025, 1:57:32 AM5/31/25
to amrith...@googlegroups.com
திருவையாறு  -  நங்கநல்லூர்  J K   SIVAN 

ஐயாறு எனப்படும் ஐந்து ஆறுகள் ஓடும் ஒரு  சோழ நாட்டு க்ஷேத்ரம் திரு ஐயாறு. திருவையாறு. பஞ்ச நதிகள் ஓடும்  பஞ்சநதம். வேறு பெயர்கள்;  ராஜராஜசோழன் மனைவி உலகமஹாதேவி கட்டியதால் உலகமாதேஸ்வரம் ,  ஈஸ்வர் ஜெபத்துக்கு உகந்த ஜப்பேஸ்வரம்   பூலோக கைலாசம்,காவிரிக்கோட்டம். இந்த சிவாலயத்தில் சிவனின் பெயர்; ஐயாறப்பன் , ஜெப்பேசன், செம்பொற்சோதியன், பஞ்ச நதேஸ்வரன், ஆட்கொண்டேஸ்வரர், ப்ரணதார்த்திஹரன். அம்பாளின் பெயர்கள்;  திரிபுரசுந்தரி, அறம்வளர்த்த நாயகி, தர்மஸம்வர்த்தனி ,தர்மாம்பிகை. இன்னும் எத்தனையோ.  பிள்ளையார் பெயர் ஓலமிட்ட விநாயகர்,ஆதிவிநாயகர்.  முருகன் இங்கே  வில் வேல் ரெண்டும் தரித்தவனாக -  இருப்ப தால் தனுசு சுப்ரமணியன்.

இங்குள்ள புண்ய தீர்த்தம்; காவிரியாறு, சூர்ய புஷ்கரணி, அயனரி  தீர்த்தம்.,  சமுத்ர தீர்த்தம். குளத்தின் படித்துறை  பூசமண்டபத்துறை.
நந்தி தவம் செய்தது. திருநாவுக்கரசருக்கு கைலாஸ  காட்சி ,சுந்தரருக்கு ஆறு விலகி வழிவிட்டது என போற்றப்படும் ஸ்தலம்.  மூலவருக்கும் அம்பாளுக்கும் தனித் தனி கிழக்கு பார்த்த சன்னதி. கிழக்கு தெரு வாசல்கள். நிறைய மண்டபங்கள். நாலு பெரிய ப்ரஹாரங்கள். இங்கே தக்ஷிணாமூர்த்தி சந்நிதி விசேஷம்.சிவபெருமான் ஜடை  விரிந்து  கர்ப்பகிரஹ  பின்புற ப்ராஹாரம் வரை வளர்ந்து பரவி இருப்பதால் யாரும் அங்கே போவதில்லை.  அநேக ரிஷிகள், முனீஸ்வரர் இன்றும்  தவம் செய்வதால் அங்கே யாருக்கும் அனுமதி இல்லை. 

முதலில் இங்கு திருப்பணி கும்பாபிஷேகம் செய்தது ஐயாறப்பர் சொற்படி சூர்ய வம்ச ராஜா  ப்ரியவ்ருதன். அடுத்து கும்பாபிஷேகம் பண்ணியது கரிகால் சோழ பெருவளத்தான் எனும் ராஜேந்திர சோழன், அடுத்தது நாயக்க மன்னன் அச்சுத தேவப்ப  நாயக்கன் காலத்தில் அவனது மந்திரி  கோவிந்த தீக்ஷிதரால் நடந்த கும்பாபிஷேகம்.. சைவசமய குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற  சிவஸ்தலம். சம்பந்தர்  ஐந்து பதிகங்கள், அப்பர் பாடியது பன்னிரண்டு பதிகங்கள். சுந்தரர் பாடியது பதினெட்டு பதிகங்கள்.

புத்ர பாக்யம் இல்லாத சிலாத முனிவருக்கு  இறைவன் அருளி , அவர் யாகம் செயது, யாகம் பூமியை உழும்போது ஒரு பேழையில் குழந்தையாக இறைவனே அவதரித்தார். ஜெப்பேசன் என்று பெயரிட்டனர். சபதஸ்தானங்களில் முக்கியமானது திருவையாறு. அகஸ்தியர் ஐயாறப்பர் அருளால் குறுமுனியான க்ஷேத்ரம். 
திரு மழபாடி  க்ஷேத்திரத்தில்  நந்தியின் திருமணத்துக்கு ஐயாறப்பர் அம்பாளுடன் சென்று அசிரவதிப்பது வருஷாவருஷம் நடைபெறும்.  சப்தஸ்தான  க்ஷேத்ரங்கள், திருவையாறு, திருப்பழனம்,  திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருவேதி குடி, திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்.   ஸப்தஸ்தான விழாவில் 12ம் நாள் கண்ணடிப்பல்லக்கில் ப்ரணதார்த்தி ஹரன் திருப்பழனம் சென்று திரும்புவார். 
இந்த க்ஷேத்திரம் சென்று நிறைய எழுதி இருக்கிறேன். 
  

sivan jaykay

unread,
Jun 2, 2025, 8:26:15 PM6/2/25
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

''நாத தனு மனிசம்...

இங்கிலிஷ்  புத்தாண்டு, ஜனவரி  1ம்  தேதிக்கும், நமக்கும்  ஸ்னானப்பிராப்தி கூட கிடையாது என்ற  போது காஞ்சி பரமாச்சார்யாளுக்கும், இந்த இங்கிலிஷ் புத்தாண்டுக்கு என்ன  சம்பந்தம் இருக்கும் என்கிறீர்களா?
 நிச்சயம் ஒரு சம்பந்தம் இருக்கிறது ஸார் . அன்று தான் வருஷா வருஷம்  சங்கீத வித்வான்கள் பெரியவா தரிசனத்துக்கு வந்து சபை  கூடுவார்கள். அவர் முன்னிலையில் அற்புதமான சங்கீத நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இது ஏதோ ஒரு எழுதப்படாத சட்டமாக பல வருஷங்கள் தொடர்ந்தது.  ஆகவே  எண்ணற்ற பக்தர்களும் இந்த அற்புத நிகழ்ச்சிகளை கண்டு கேட்டு ஆனந்திக்க  மடத்தில் வெள்ளமாக  திரள்வார்கள்.  மஹா பெரியவாளுக்கு சங்கீதம் ரொம்ப பிடிக்கும், அவரே ஒரு வீணை வித்வான் இல்லையா.. பாடின, வாத்யம் வாசித்த எல்லோருக்கும் பரிசுகள்,  பிரசாதங்கள் அளிப்பார்.

இப்படி ஓர் புத்தாண்டு அன்று  அற்புத சங்கீத விழா நடந்த பிறகு  மஹா பெரியவா கண்ணன் மாமாவையும்  பாட்டு ராம மூர்த்தி   மாமாவையும் கூப்பிட்டார்.

“சங்கீதத்தில்  ஏழு ஸ்வரம் ங்கறாளே. ஆதியிலே  அஞ்சு தான் ஸ்தானம் தான் இருந்ததோ?
''நாத தநு மனிஸம்  சங்கரம்...'' ங்கிற  கீர்த்தனையை எடுத்துண்டா, அதிலே   சரிகமபதனிச என்கிற சப்த ஸ்வரங்களும் பரமேஸ்வரனுடைய  அஞ்சு முகத்தை தானே  ஸ்வரமாக  காட்றது .....  சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், அகோரம், ஈசானம் னுட்டு.   இது எப்படி? ன்னு வித்வான்களை  கேட்டு சொல்லுங்கோ  .''

மஹா பெரியவா சொன்ன வார்த்தையை யாராவது தட்டுவாளா?  
மாமாக்கள்  அடையார்   கலா க்ஷேத்ராவுக்கு ஓடினார்கள்.  அங்கே  மைசூர் வாசுதேவாச்சார் இருந்த காலம் அது. ரொம்ப வயசானவர். ஸம்ஸ்க்ரித  வல்லுநர். வாக்கேயகாரர்.  மஹா பெரியவா ளோடு அவர் ஸம்ஸக்ரிதத்தில்  உரையாடுவதை பலர் கேட்டு அதிசயித்திருக்கிறார்கள்.  
''வாசுதேவாச்சார்  ஒரு ஆசுகவி'  என்று மஹா பெரியவா சொல்வார். அவர் மஹா பெரியவா மேலே  க்ருதிகள் பண்ணி இருக்கிறார்.

மஹா பெரியவளுடைய சந்தேகத்தை  மாமாக்கள் சொன்னதும்  அவர் அதிர்ந்து போனார். எப்படி  மஹா பெரியவா '' நாத தனுமனிசம்''  கீர்த்தனைலே  அஞ்சு முகத்திலே ஏழு  ஸ்வரம் தான் இருக்கிறது என்று சொல்கிறார்? எனக்கு தெரியவில்லையே '' என்று  கை  விரித்தார், குழம்பினார். பெரியவா தான் இதை விளக்கணும்னுட்டார் .

செகண்ட்  ஒப்பீனியன் வாங்க  மாமாக்கள்   வீணை வித்வான் காரைக்குடி சாம்பசிவய்யரிடம்
போனார்கள்.  அவரும்  விழித்தார். பெரியவாளே சரணம்னுட்டார்.

 நாத தனிமனிசம் கீர்த்தனையை பல கச்சேரிகளில்  பாடி பிரபலமடைந்த மஹா வித்வான்  கான கலாதர மதுரை மணி ஐயரைப் போய் கேட்போமா, ஒருவேளை அவருக்கு  பெரியவா கேள்விக்கு பதில் கிடைக்கலாம்''  என்று அவரைப் போய் பார்த்தார்கள்

'அடாடா,  நான் ரொம்ப சாதாரண  பாடகன். எல்லோரும் படுவதைப் போலவே தான் நானும் பாடுகிறேன். மஹா பெரியவா அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை.   அவர் தான் நாத தனு மனிசம், அவர் தான்  சங்கரம் ... எனக்கு வேறே ஒண்ணும்  சொல்ல தோணலை'' என்றார் மணி ஐயர் .

என்ன செய்வது, எப்படி  விடை கண்டுபிடிக்காமல்  மஹா பெரியவாளை போய் பார்ப்பது. எதற்கும் மஹாராஜபுரம்  விஸ்வநாதய்யரை போய் ப்பார்ப்போம் என்று அவரை அணுகியபோது  அவர் ''நமஸ்காரம் எனக்கு  பதில் தெரியல'' என்று சொல்லிவிட்டார்.

எல்லா வித்வான்களும் ஒருவருக்கொருவர் நேரிலும் போனிலும் பேசி ஒட்டு மொத்தமாக  எல்லோருமே  மஹா பெரியவா சந்நிதிக்கு வந்துவிட்டார்கள் .

''வித்வான்கள்  எல்லாருக்கும்  பெரியவாளை தரிசிக்க  வந்திருக்கா '' என்று கண்ணன் மாமா பெரிய வாளிடம் சொன்னபோது

''என் சந்தேகத்துக்கு பதிலோடு வந்திருக்காளா ?  என்று கேட்டுக்கொண்டே மஹா பெரியவா அவர்களை சந்தித்தார்.  எல்லோரும் பெரியவாளை  நமஸ்கரித்தார்கள்.

''என்னோட  சந்தேகத்துக்கு ஏதாவது  ஆன்ஸர்  answer  கிடைச்சுதா?''

''வாசுதேவாச்சார்;   ''பெரியவா, இத்தனை வருஷமா பாடறோம்,  இந்த  ஆதாரமான விஷயத்தை கொஞ்சம் கூட  யோசிக்கல. சிந்திக்கல. மஹா தப்பு.  பெரியவாள்  தான் இதற்கு பதில் சொல்லணும்''

மஹாராஜபுரம்  விஸ்வநாதய்யர்:   ' பெரியவாளுக்கு தெரியும்.  'நாங்க  வித்வான்கள்னு சொல்லிக்
கிறோம். காசு வாங்கிண்டு கிளிப்பிள்ளை மாதிரி  பாடறதோடு  சரி. சங்கீதம் தான் சோறு போடறது''

மஹா பெரியவா: '' வேங்கடபதி   'சதுர் தண்டி பிரகாசிகை' ன்னு  எழுதியிருக்காளே.யாராவது அதை பார்த்திருக்கிறேளா?''
''இல்லே பெரியவா''
பெரியவா:   'ஏழு  கலர், வர்ணங்கள் இருக்குங்கறா, ஆனால் அதிலே  சிகப்பு இல்ல.  போட்டோ  பிலிம் லைன் லே இருக்கிறவா கூட  போட்டோ வை  அலம்பறதுக்கு  டெவலப் பண்ணறத்துக்கு சிகப்பு லைட் தான் யூஸ்  பண்ணுவா. அது வெளிச்சத்தால்  பாதிப்பு தறதில்லே..  அதே மாதிரி தான் வெள்ளையும்.  அதை வர்ணங்களில் சேர்த்துக்கறதில்ல. அம்பாள் தான் சிகப்பு கலர் அவள்  பரமேஸ்வரனிலே ஐக்கியம்.  அர்த்த நாரீஸ்வரி.   பரமேஸ்வரன் ஸ்படிகம்,  வெள்ளைன்னும் சொல்வா.  விபூதி, பனிமலை  எல்லாமே வெள்ளை  தானே..இன்னும் என்ன ...இதெல்லாம் கூட நான் கேள்விப்பட்டது தான்.  '' ஸா''  'பா'' ங்கிறது  ப்ரதி ஸ்வரம்.  அதை  ஸ்வரங்களோடு சேர்க்கறதில்ல.  அதனால்  தான் போலிருக்கு  நாத தனு மனிசம் க்ரிதி பண்ணின  மஹான் அஞ்சு முகங்களோடிருக்கிற  பஞ்சமுக  பரமேஸ்வரனை  சப்தஸ்வரமாக  பாவிச்சு பாடி இருக்கார்.  அவரும் அம்பாளும் தவிர  மத்த அஞ்சு ஸ்வரங்கள  காட்டியிருக்கார்....
எல்லா வித்துவான்கள் கண்ணிலேயும்  கங்கை ப்ரவாஹம் .
சங்கீதம் தெரியாதவனை ''அவனுக்கு  ''ஸா  பா''  கூட  தெரியாது என்கிறோம். எல்லோரும் நமஸ்கரித்து விட்டு  மஹா பெரியவா ஆசிர்வாதம், பிரசாதம் பெற்று திரும்பினார்கள். அடுத்த தடவை நாத தனிமனிசம் பாடும்போது அர்த்தம் தெரிந்து பாடினார்கள்....

sivan jaykay

unread,
Jun 2, 2025, 8:26:16 PM6/2/25
to amrith...@googlegroups.com
THE ONE AND ONLY MAHA PERIYAVA -   Nanganallur J.K. SIVAN

To day is a day of blessing for me.  When I casually browsed my mobile to read whatsapp messages, a surprise was waiting for me.  It was  a message from Sri Ramakrishnan,  KSR,  as belovedly known to many,  the untiring editor of three popular monthly emagazines, viz., MALAR VANAM,  PATTUM BARATHAMUM, both being in Tamil, and the english emagazine  MIXED BAG. 

He asked me in his message,  to write a couple of pages on MAHA PERIYAVA, for the next issue. At a time when I was busy preparing and arranging for a holy yathra to Kanchipuram, Kalavai and Thenambakkam, in less than 48 hrs with 18 friends, it was a real blessing to be asked to write about the PARAMACHARYA. 

I started writing this immediaely, knowing well that it is impossible for anyone to write completely about the Maha Periyava, in a couple of pages. Hence this would be only a reminder and a short note on the great saint the world has never seen before. He was unique in every way, his  simplicity, his superior knowledge on Science, Religion, Music, Vedhas,  Agama, Vedhantha, Upanishad, epics and languages of  India, his research on history and etimology, the tenets of Hindu Sanathana Dharma and what not.!

The Kanchi Paramacharya,  was globally known as Maha Periyava,  from the time he became the 68th peetadhipadhi of Kanchi Kamakoti Peetam, from his 13th year.  Swaminathan, as he was then,  a school student of 13 yrs, one day became all of a sudden, as Jagath guru, H.H. Sri  Chandrasekharendra Saraswati Swamigal at Kalavai the 68th Peetadhipathi of the prestigious Kanchi Kamakoti Peetam, and served the whole humanity until his samadhi at 100th year at Kanchi Mutt. 

His long  life, spanning over a century, is a testament to unwavering  dedication, devotion, profound scholarship, and transformative leadership is not any exaggeration. 

Maha Periyava was born on May 20, 1894, in Villupuram, Tamil Nadu,  and was named Swaminathan by his father, Subramaniya Iyer, who served the British Government, then, as a  teacher at the Arcot American Mission High School in Tindivanam. His mother Smt  Mahalakshmi was fortunate to give birth to a living god worshipped by millions till date.  Swaminathan excelled academically and was  a brilliant student appreciated and encouraged by his English teachers and was  recognized for his proficiency in various subjects, including the recitation of the Holy Bible and his action on stage as Prince Arthur!

When Swaminathan was 11,  In 1905, he  had his  Upanayanam ceremony, marking his initiation into Vedic studies and in the next two years, at the age of  13, in 1907, there was a dramatic turning point in his life.  The  67th Peetadhipadhi, of Kanchi Kamakoti Peetam, passed away unexpectedly within 7 days of his becoming the peetadhipathi of the Mutt.  Incidentally he was the cousin of Swaminathan, and both he and his mother rushed to Kanchi to console the mother of the  deceased saint. It is in fact a miraculous  series of events that  followed and  considered divinely orchestrated,  the boy Swaminathan was chosen to succeed as the 68th peetadhipadhi. It was all so sudden without any premeditation, plan or wish of the parents too. We realise it as providence and divine plan to gift us a great saint to guide us for almost 87 yrs until his samadhi in his 100th year. 

Not a single day was wasted by the great saint from the time he assumed the role of Jagath Guru, being the head of the Mutt, since he relentlessly dedicated himself to the preservation and propagation of Vedic knowledge. During his time he had  established  many  Veda Patashalas and the Veda Rakshana samithi, and Nidhi to support Vedic scholars.  His efforts revitalized interest in Vedic studies and Dharma Shastras across India, and took all steps to revive and establish permanently the tenets of Hindu Sanathana Dharma to reach all corners of this globe.

Maha Periyava was hailed as living god  and his speeches were considered as DIVINE VOICE, தெய்வத்தின் குரல். So many volumes of collection of his speeches are trnslated in many languages as they are the beacon light to guide humanity to live a simple, scholarly, compassionate life. 

Maha Periyava never touched money and was instrumental in renovation of  countless dilapidated ancient Siva, Vishnu and other temples dedicated to various gods, in many places of this country.  He introduced numerous welfare programs, including the establishment of schools, hospitals, and orphanages. He was conscious and concerned about the poor,  needy, helpless, underprivileged  persons and helped them a  lot. They are reported by the beneficiaries with gratitude with tears in eyes, and I myself have collected many such incidents and reports and published them in tamil in many volumes under the title  பேசும் தெய்வம்.  My publications for SREE KRISHNARPANAM SEVA TRUST, are not priced and distributed freely to interested readers, libraries, children as gifts, etc., and out of donations received the expenses of  publication and printing met. 

What is special about Maha Periyava is he strictly  practiced what he preached, and was able to command the affluent to contribute for the welfare of the needy and poor, and followed the  principles of selfless service and humility .

Maha Periyava never  claimed ownership or authorship of any book of his preachings  or deeds of  help and service.  He never  exhibited or sought to display miraculous powers which helped in the lives of countless  devotees  who approached him fo solution to their problems, sorrows and difficulties.  He simply said his personal deity Chandramouleeswara will solve the problems. He was indeed worshipped as  Goddess Kamakshi. It was all the manifestation of his divine grace which was responsible for the relief the devotees experienced in life.  No doube therefore there are many temples for Maha Periyava.

Maha Periyava's long  life of hundred years, remained an unfailing commitment to Dharma. He walked miles and miles of this huge land undertaking  pilgrimages on foot.  He covered  vast distances  teaching people everywhere and it was a god send inspiration  and relentless endeavour to uplift communities.  During his time the  Kanchi Mutt  was much sought after by many devotees  from  all walks of life, from  different countries, including non Hindus, as he was the beacon of spiritual and social reform. 

Maha Periyava's life itself is  his  message for us. It was a reflection of his teachings. He was the living example of austere lifestyle, consuming minimal food and avoiding material comforts. His commitment to silence (mauna) was profound; he often observed strict silence, ' kashta mounam' ,  communicating through gestures or writing when necessary. This practice of silence was not merely a personal discipline but a means to cultivate inner peace and focus on spiritual pursuits.

Maha Periyava was quite humble, and  always repeated that he was only an  insrument and  not the doer,  and he wanted the beneficiaries to pray to God. or their ishta devathas, or kuladeivam. 

The Centurion Saint, Maha Periyava  led a life which was so much  deeply spiritual,  ausere, simple, detached, embodying timeless truth and ageless wisdom and gnanam.  He was a multifaceted genius, a  master musicia, an erudite thinker and scholar. 

Though the great saint  passed away on January 8, 1994 he is ever living in the heart and mind of numerous followers, devotees and admirers. and his  life-like image in Kanchi Mutt and elsewhere is the guiding spirit.  It continues to inspire millions to worship the Mahaperiyava.

sivan jaykay

unread,
Jun 2, 2025, 8:26:16 PM6/2/25
to amrith...@googlegroups.com
பூலோக வைகுண்டம்.   --  நங்கநல்லூர்  J K   SIVAN 

'ஏன் பள்ளிக்கொண்டீரய்யா, ரங்கநாதரே  ஏன்  ?''  எப்படி  அருணாசல கவிராயாரால் இப்படி உயிரோட்டம் கொண்ட வார்த்தைகளையோடு எழுத முடிந்தது? என்று யோசிக்கும்போது  ஸ்ரீரங்கம் ரங்கநாதன்   ஆலயம், கோபுரம், காவேரி, அவன் சந்நிதி.... இதெல்லாம் மனத்திரையில் ஓடியது.... .....
அருணாச்சல கவிராயர் பாட்டை  வாய் முணுமுணுக்கையில், அவன் ஜம்மென்று குளிர்ச்சியாக  காவேரி கொள்ளிடம்  ரெண்டு ஆற்றுக்கு நடுவே தீவாக  ஒரு  மேட்டில், கால் நீட்டி  'தாச்சுக்' கொண்டிருக்கிறான். (குழந்தை  பாஷையில்  'தாக்கோ' )  அவனைப் பார்க்க  எத்தனை லக்ஷம் ஜனங்கள்.! பக்தர்கள்!. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுத்து டிக்கெட் வாங்கி க்யூவை தவிர்க்க ரெடியானவர்கள்.

 ஸ்ரீரங்கத்தில் கோவில் வளாகத்தில் எண்ணற்ற பஞ்சக்கச்ச, அரைக்குடுமி, முழுக் குடுமி, நெற்றியில் பட்டையாக வெள்ளை சிகப்பு தென்கலை நாமம்,  சட்டையில்லாத கெட்டி பூணூல் வைணவர்கள் கையில் ஏதோ ஒரு  பூஜை சாமான், பாத்திரம், பை , எடுத்துக்கொண்டு  குறுக்கும் நெடுக்குமாக பிசியாக busy   அலைவது  கண்ணில் பட,  ரங்க க்ஷேத்திரம் உலகத்திலேயே ஒரு பெரிய ஆலயம். பூலோக வைகுண்டம்.108 திவ்ய தேசங்களில் முதல் க்ஷேத்ரம்.

ராமானுஜரின் சீடர் கூரேசனின் வம்சாவழியில் வந்த சுதர்சனா ச்சார்யார் காலத்தில் வடக்கே நாட்டை ஆண்ட  முகமதிய படைகள் ஸ்ரீரங்கத்தை  முற்றுகையிட்டு  வைணவர்கள் கொல்லப்பட்டார்கள்.  உயிரைத் திரணமாக மதித்து ஸ்ரீ ரங்கநாதன் உத்ஸவ விக்ரஹத்தை ஜாக்கிரதையாக  முஸ்லீம் மதவெறியர்கள் கண்ணில் படாமல் திருப்பதிக்கு கொண்டு சென்றதில் சுதர்சனாச்சார்யருக்கு பெரும் பங்கு  உண்டு.பிறகு  செஞ்சி கவர்னராக இருந்த கோபனார்யா என்னும் விஜயநகர நாயக்க மன்னன்  திருப்பதியிலிருந்து  ரங்கநாதரை சிம்ம ப்ரஹ்மா என்னு இடத்திற்கு கொண்டு சென்று மூன்று வருஷம் மணவாள பெருமாள் அங்கே இருந்தார். 1371ல் மீண்டும் ரங்கநாதர் ஸ்ரீரங்க ஆலயத்துக்குள் கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை பண்ணினார்கள்.   கோவில் கிழக்கு  சுவற்றில் வேதாந்த தேசிகர் எப்படி பெருமாள் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார் எனும் விவரத்தை எழுதியிருப்பதைக்  காணலாம்.  

ஸ்ரீரங்கம் ஆலயம் 3 சதுர மைல்  விஸ்தீரணம் கொண்டது. ஏழு மதில் சுவர்கள். அதில் 21 கோபுர வாஸல்கள்.  236 அடி உயர ராஜகோபுரம்.  பத்து  மைல்  தூரத்திலிருந்தே கோபுரம்  காரில் , ரயிலில், பஸ்ஸில், போகும்போது  தெரியும்.   சுறுசுறுப்பான ஸ்ரீரங்கம் பட்டணம்  ஒரு பகுதி கோவில் வளாகத்துள்ளேயே  இயங்குகிறது.

சேஷசயன ரங்கநாதர் காலடியில் பூதேவி, நீளா தேவி, எதிரே  உத்ஸவர்  மணவாள பெருமாள். காலடியில்  விபீஷணனை  சந்நிதியில்  பார்க்கலாம்.  ரங்கனின் சந்நிதி விமானம் சொக்கத் தங்கத் தகடுகளால்  ஆனது.    நான்கு பக்கத்திலேயும் நான்கு வித  பெருமாள் உருவம்.  தெற்கே பர வாசு தேவன் அருள் பாலிக்கிறார். திருப்பதியில்  கண்டு மகிழ்கிறோமே அதே போல.  தெற்கே அச்சுதன், வடக்கே  அனந்தன் , கிழக்கே கோவிந்தன்.

ஒவ்வொரு நாளும் விடிகாலையில் கோபூஜை, கஜபூஜை.  அடாடா, வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீரங்கத்தில் பெருமாளை தரிசிக்க லக்ஷோப லக்ஷம் பக்தர்கள் இங்கு போல் வேறெங்கும் காண இயலாது.  

புராணத்தில் யுக ஆரம்பத்தில், பிரம்மா நாராயணனின், பத்ம நாதனின்,  வயிற்று தாமரைக்கொடியில் தோன்றி ஸ்ரிஷ்டியை தோற்றுவித்ததிலிருந்து பிரபஞ்சம் உருவானது நினைவுக்கு வரலாம்.

''ப்ரம்மா, நான்  ஸ்வயம்வ்யக்தனாக எட்டு ஸ்தலங்களில் தோன்றுவேன். ஸ்ரீரங்கம், ஸ்ரீ முஷ்ணம், வெங்கடாத்ரி, சாலிக்ராமம், நைமிசாரண்யம், தோதாத்ரி ,புஷ்கரம், பத்ரிநாத், என்பவை தான் அவை'' என்கிறார் நாரயணன்.

ப்ரம்மா முதல் நாராயண விக்ரஹத்தை சத்யலோகம் எடுத்து சென்று வ்ரஜா நதிக்கரையில் பிரதிஷ்டை செய்தார்.அப்புறம் வைவஸ்வத மனு, அவன் மகன் இக்ஷ்வாகு, அவனது  நூறு வருஷ தவம். அப்புறம் அந்த வம்சத்தில் ராமர் அவதாரம்.  ராமாவதாரத்தில் விபீஷணன் சரணாகதி. அவனுக்கு ராமர் கொடுத்த மூர்த்தி விக்ரஹம் தானே  அவனால் இங்கே ஸ்ரீரங்கத்தில் தரையில் வைக்கப்பட்டு ரங்கநாதனாக பெருமாள் படுத்து விட்டார்.

'விபீஷணா, இது தான் என் வைகுண்டம்.  நான்  இங்கேயே  தங்க தீர்மானித்தது விட்டேன். நீ லங்கைக்கு திரும்பிப் போ, நான் உன்னை என்றும் காப்பாற்றுவேன். என் கண்ககள்  உன் லங்கையைப் பார்த்தவாறு இருக்கும்' என்று ராமன்  ஸ்ரீ  ரங்கத்தின்  நாதனாக  சொன்ன பிறகு  விபீஷணன் என்ன செய்வான்?  ராமர் கொடுத்த மூர்த்தியை அங்கேயே விட்டு விட்டு வெறும் கையோடு  மனதில் ராமனோடு லங்கை திரும்பினான்.

''அண்ணா,  ராவணேஸ்வரா,  நீ செய்தது ரொம்ப பெரிய தப்பு, சீதா தேவியை ராமனிடம் திருப்பி கொண்டு சேர்த்து விடு. அவள் வந்ததிலிருந்து லங்கையின் ஸுபிக்ஷம் குறைந்துவிட்டது''என்றான் விபீஷணன்.

இதைக்கேட்டு சிரித்த  லக்ஷ்மி தேவி ரங்கநாதனைக்   கேட்டாள் , ''நாதா, நான் இருக்கும் இடம் லக்ஷ்மிகரம் எனப்படுகிறது. சர்வமங்களமும் பொங்கும் என்கிறபோது விபீஷணன் சொன்னது  தப்பல்லவா?''

'தேவி, நீ இருக்குமிடத்தில் எங்கும், என்றும் சுபிக்ஷம் குறையவே குறையாது. ஆனால் ராவணன் செய்த துஷ்க்ரித்யங்களால் சுபிக்ஷம் மறையும் அல்லவா?. ஆகவே தான் நான் லங்கையில் சுபிக்ஷம் குறையாதிருக்க அதைப் பார்த்தவாறு படுத்துக்கொண்டு  விபீஷணனை அனுப்பினேன்.
 ஸ்ரீரங்கம் வைகுண்டம். காவிரியும் தேவலோக  வ்ரஜா நதி தான்.
சோழர்கள், பாண்டியர்கள் குலசேகரர் ஆகியோர்  ஸ்ரீ ரங்கநாதன் ஆலயத்தை சீரமைத்து விஸ்தரித்தவர்கள்.

I334ல்  உலுக் கான்  எனும்  முஸ்லீம் வெறியன்,  ஸ்ரீரங்கத்தை தாக்கியபோது பன்னிரெண்டாயிரம் வைஷ்ணவர்கள் அங்கே வாழ்ந்தவர்கள். அவர்கள்  வெறியர்களுடன் போரிட்டு தடுத்தபோது 11,250 பேர் கொல்லப்பட்டார்கள் என்கிறது சரித்திரம்.  மீதி 750  பேர் தப்பித்து கோபுரப்பட்டி எனும் கிராமத்துக்கு ஓடிவிட்டார்கள்.அந்த ஒவ்வொருவரும் எபடியெல்லாம் கோவிலை , பெருமாளை, விகிரஹங்களை  சொத்துக்களை காப்பாற்றமுடியுமோ அந்த பொறுப்பேற்றார்கள் என கோவில் ஒழுகு சொல்கிறது.
இந்தியா  சுதந்திரம் அடையும் வரை எண்ணற்ற இன்னல்களை ஸ்ரீரங்கம் சந்தித்துள்ளது.

ஸ்ரீ  சைதன்ய பிரபு ஸ்ரீரங்கம் வந்தபோது தினமும் காவிரி ஸ்னானம் செயது ரங்கநாதனை தரிசித்தார். ஆனந்தக்களிப்பில் ஆடினார்.சாத்தூர் மாஸ்யம் ஆனந்தமாக இங்கே கழிந்தது.

நாலாவது ப்ரஹாரத்தில்   மண்டபத்தில் பெரிய கருடன் 25 அடி  உயரமானவர். அவர் வேஷ்டி  முப்பது மீட்டர் நீளமானது.  அஷ்ட நாகம் , எட்டு நாகம் தான் ஆபரணம்.   இந்த அருமையான நெக்லஸ். எவரும் தொடவோ ததிருடவோ முடியாதது.

ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீரங்க சம்பந்தத்தை,  யமுனாச்சார்யர், கூரேசர், போன்றவர்கள் அனுபவத்தைச்  சொல்ல ஆரம்பித்தால்  குறைந்தது நூறு பக்கங்கள் ஓடிவிடும். ஆண்டாளை ப்  பற்றி சொன்னால் இன்னொரு நூறு பக்கம். எப்படி எல்லாவற்றையும் ஒரு பதிவில் நுழைப்பது என தெரியததால்  பேசாமல், சொல்லாமல் விட்டுவிடுகிறேன்.

sivan jaykay

unread,
Jun 2, 2025, 8:26:16 PM6/2/25
to amrith...@googlegroups.com
'மாமியா வீட்டு  விருந்து''  நங்கநல்லூர்  J K  SIVAN

எத்தனை தடவை எழுதினாலும் தாகம் தீராத ஒரு கற்பனைக் கதை. ஐயா, நல்ல தாடி தாத்தா, தாகூரே , ஊரெல்லாம் உங்களுக்கு சிலை வைக்காமல் இன்னொரு தாத்தா  சிலை தானே  கண்ணில் படுகிறது.  

பதினாறு வயதில் பள்ளியில் பாடமாக  படிக்கும்போது உள்ளர்த்தம்  புரியா மல், வெறுமே மார்க் வாங்க படித்தது  அப்புறம்  முடி கருப்பிலிருந்து வெள்ளி யாக மாறும்போது வெவ்வேறு உணர்ச்சி களை அள்ளி  தந்தது. ஆங்கிலத்தில் படித்த கதை மண்டையில் ஏறவில்லை. காபுலி வாலா என்கிற அந்த கதை சுருக்கம் இது தான்.

ஒரு  பணக்கார வங்காளிக்கு ஒரே பெண்.மினி.ஐந்து வயது விஷமக்காரி. பொட்டுக் கூடை பேச்சு. எதையாவது  கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பவள். பதில் சொல்லி மாளாது. ஒரு நிமிஷம்  நிம்மதி நமக்கோ அவளுக்கோ  கிடைக்க விடாத  துறு துறு குழந்தை. அம்மா அலுத்துப் போய் பதிலே பேசாள் அப்பா வான நான்  அப்படி இருக்கமுடியுமா?  அமுடிந்தவரை மினியின்  கேள்விக் கணைக ளுக்கு ஏதேதோ பதில் சொல்வேன்.

ஒரு நாள்.   நான் மும்முரமாக ஒரு புத்தகம் படித்துக் கொண்டி ருந்தபோது,  ராக்ஷசி வந்து விட்டாள்.
"அப்பா,  அப்பா,  நம்ப  வாச்மன் ராமுடு காக்கா வை காகம் என்கிறான் பா ''காக்கா '' என்கிற பேர் கூட  தெரியலை அவனுக்கு இல்லைப்பா?  அவன் சொல்றது தப்பு தானே? ''
 வார்த்தைகளைப் பற்றி  கொச்சை, தூயவை  என்று எப்படி  சொல்லிக் கொடுக்கலாம் என்று யோசிப்பதற்குள் அடுத்த அஸ்த்ரம்.
கையில் ஒரு கயிறைச்  சுற்றிக்கொண்டு  ஸ்கிப்பிங்  ஆட  முயற்சி செய்து கீழே  விழுந்துகொண்டே
''அப்பா,  இது கூட  நீ தான் சொல்லணும்.  அடுத்த வீட்டு  பலராம் மானத்துலே  ஒரு  பெரிய  கருப்பு  யானை  இருக்காம். நிறைய   தண்ணி குடிச்சுட்டு அது தான்  தும்பிக்கை வழியா  தண்ணியை கீழே தெளிக்கிறதாம்.  அது தானாம்  மழை? அவன் சொல்றானே?'
நெஞ்சை  கனைத்துக்கொண்டு இதற்கு பதில் எப்படி  சொல்வது என்று ஆரம்பிப்பதற்குள்...
 ''அப்பா நம்ப  அம்மா  உனக்கு  என்ன  உறவு?"'
அவளை  சற்று  அப்புறப்படுத்துவதற்கு ஒரே வழி ....
' மினி,  அதோ பார்  பலராம் வாசலிலே  உன்னை கூப்பிடறான்  போ.  அவனோடு விளையாடு. நான்  கொஞ்சம் படிக்கணும்''
''எதுக்கு படிக்கணும்?'' ... கேள்வி கேட்டுவிட்டு,  பதிலுக்கு காத்திருக்காமல்   மினி  பலராமைத் தேடி  ஓடிவிட்டாள் . ஐந்து ஆறு வயது பலராம் எனக்கு  கடவுள்.  அவனை மானசீகமாக வணங்கினேன். மினி யிடமிருந்து என்னை காப்பாற்றுபவன்.

என் எதிரே  வெராண்டா ஜன்னல் வழியாக வாசலில்  வருவோர்  போவோர் தெரிவார்கள்.  சற்று தள்ளி  வாசலில்  மினி கீழே உட்கார்ந்து என்னவோ விளையாடுகிறாள்.  வாய்  ஏதோ பாடுகிறது. தொடையில் தாளம் வேறு. பலராம்  ஆடுகிறான்.  

என் கையில் புத்தகத்தில்  விக்ரமன்  தனது  அரசகுமாரி காதலி  லதாவை மூன்றாவது உப்பரி கையிலிருந்து  அவள் பெற்றோர் கண்ணில் மண்ணைத் தூவி  கடத்தப் போகிறான்.என்ன நடக்கப்போகிறது...???

திடீரென்று  மினி கத்துவது கேட்டது.  'ஹே பட்டாணிக்காரன், பட்டாணிக்காரன்''.
வாசலில்  ஒரு  ஆப்கானிஸ்தான்  பதான் மெதுவாக போகிறான். தொள  தொள அழுக்கு ஜிப்பா  கால் வரை. முண்டாசு,பின்னால் அதன் வால் முதுகு வரை. ரெண்டு தோளிலும்  பெரிய பைகள் . தலையில் ஒரு மூட்டை,  கையில் திராக்ஷை கூடை. அவன் ஒரு நடமாடும் கடை.  மினியைப்  பார்த்து விட்டான். வாசலிலேயே  நின்றான்.  
அவனைப்  பார்த்து கூப்பிட்டு விட்டு  அப்புறம்  மினி  என்ன  நினைத்தாள்??. இதோ அவன் வீட்டுக்குள் நுழைகிறான். அவள் ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் ஓடுகிறாள்.

''விக்ரமன் - லதாவை மூணாவது உப்பரிகையில் ''விட்டுவிட்டேன். காபுல்காரன்  வீட்டுக்குள்ளே சிரித்துக்கொண்டே நுழைந்து  மினியைப்   பார்க்கிறான். முகத்தில் சந்தோஷம். அவளோ  அவனைப்  பார்த்து பயந்து  உள்ளே  அம்மாவிடம் ஓடிவிட்டாள் .அவனிடம் இருந்த பெரிய  தோள்  பைகளில்   சில குழந்தைகளை பிடித்து வைத்திருக்கிறான் என்று பலராம் சொன்னது பொய்யாக இருக்காதே? மினியின்  கவலை பட்டாணிக்காரனிடம்  பிடிபடாமல், பைக்குள்  மாட்டிக்கொள்ளாமல், தப்ப  உள்ளே  அம்மாவிடம் ஓட வைத்தது.   உள்ளே  வந்த  காபுல் காரன்  என்னை வணங்கி சிரித்தான்.
இடைஞ்சல் எந்த  ரூபத்திலும் வருமோ?  இவன் ஏதோ  விற்கிறான். அவனிடம் எதையாவது வாங்கி முதலில் அவனை  அனுப்ப வேண்டும். கூப்பிட்டு விட்டாளே  பாதகி.  
கொஞ்சம்  திராக்ஷை, முந்திரி,  பேரிச்சை எல்லாம்  வாங்கிக்கொண்  கேட்டேன்
 '' உன்  பேர் என்னப்பா?''
''அப்துல் ரஹ்மானுங்க''  
அவன் ஊரில்  ரஷ்யா காரன், வெள்ளைக்காரன் வருகை.  ஆக்ரமிப்பு.   எல்லை  சண்டைகள்  எல்லாம் பற்றியும்  ஏதேதோ அவனுக்கு தெரிந்த வைகளை அவன் பேச்சில் தெரிந்து கொண் டேன். என் மனம்  அதிலெல்லாம் செல்லவில்லை.  
''பாவம் விக்ரமன் என்ன ஆனான்?லதாவின் கதி என்ன?உப்பரிகையிலிருந்து..என்ன  ஆச்சு...?'''

காசை வாங்கிய காபுல்காரன் பை  தோளில் ஏறியது. கையில் திராக்ஷை கூடையோடு கிளம்பினான்.
போகும்போது '' ஐயா, அந்த  குட்டி பொண்ணு எங்கே ?''
எப்படியாவது மினி மனதில் உள்ள  பயத்தை போக்க வேண்டும்  என்று தோன்றியது. உள்ளே  போய்  அவளை அழைத்து வந்தேன். தயங்கியவாறு அவனை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே மெதுவாக  என்னை கெட்டியாக  பிடித்துக்கொண்டு வந்தாள் .

அவன்  தோளில்  இருந்த பெரிய  பை மேல் பார்வை. உள்ளே எத்தனை குழந்தைகள்  இருக்கிறார்கள் ?''
 அவன்  அந்த பையை  கீழே இறக்கி  திறந்தான்.  உள்ளே பயத்தோடும் ஆர்வத்தோடும் பார்த்தாள் .  நிறைய  முந்திரி, பேரிச்சை  பொட்டலங்கள்.  எல்லாவற்றிலும் கை நிறைய  எடுத்து அவளிடம் நீட்டினான். அவள்  பயம்  தீர்ந்தது.  ஆனால் அவள்  கை நீளவில்லை. அவனையே  பார்த்து கொண்டிருந்தாள்.  அவன் சிரித்துக் கொண்டே  போய் விட்டான்.  முதல் சந்திப்பு இவ்வாறு.
அடிக்கடி அப்புறம் வீட்டுக்கு வந்தான்.

 ஒருநாள்.  நான் வெளியே  எனது சைக்கிளில் புறப்படும் சமயம். வாசலில் பெஞ்சில் மினி. அவள் கால் கீழே  தரையில்  காபுல் காரன். இருவரும் ஏதோ  சிரித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குள் நட்பா?   இதுவரை  அவள்  பேச்சை  பொறுமையாக  நிதானமாக  கேட்டவர்கள்  என்னைத்தவிர  வேறு யாரும் இல்லை என்பது சரித்திரம்.   அஞ்சு நிஷம் கூட தாங்க முடியாது.   அவன்  சந்தோஷமாக  உன்னிப்பாக  அவள் சொல்வதை கேட்டுக் கொண்டு  தலை  ஆட்டிக்கொண்டு  ரசிக்கிறான். அவள் மடியில்  பேரிச்சை, திராக்ஷை, முந்திரி,  பாதம்,

''ரஹ்மான்  எதற்கு  அப்பா  இதை எல்லாம் அவளிடம் கொடுத்தாய்.  எனக்கு பயம்.  நான்  பில் கட்டவேண்டுமே?''
ஒரு எட்டணா காசு  எடுத்து கொடுத்தேன். பேசாமல் மெஷின் மாதிரி வாங்கி ஜிப்பாவில் போட்டுக்கொண்டான். நானும் வெளியே போனேன்.  ஒரு மணி நேரம் கழித்து வந்தேன்.  உள்ளே  எட்டணா பண்ணிய  ரகளை.  அம்மாவும்  பெண்ணும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்துல் ரஹ்மான் நான் கொடுத்த  எட்டணா காசை மினிக்கு  அன்பளிப்பாக  தந்திருக்கிறான்.
''ஏதுடி  உனக்கு  எட்டணா?'   கோபமாக  அம்மா.
"காபுல்காரன் தந்தான்''  சந்தோஷமாக மினியின் பதில்.
"காபுல்காரனா? "ஓ, எதுக்கு நீ வாங்கிண்டே ? எப்படி  இன்னொரு த்தர் கொடுத்தா காசு வாங்கலாம்?''
இந்த  கணத்தில் தான் நான் பிரசன்னமாகியிருக்கிறேன். விசாரணையை நான் கையில்  எடுத்துக்கொண்டதில் தெரிந்த விபரம்.
முதல் சந்திப்பிற்கு பிறகு  அப்துல் ரஹ்மான் அடிக்கடி  மினியை பார்க்க  வருகிறான். அவள்  பயம் முற்றிலும் அகன்று விட்டதற் கான முக்ய காரணம் பேரிச்சை, பாதம், முந்திரி  திராக்ஷை. இதை யெல்லாம் விட  அவர்களின் பேச்சு.   சிறந்த நண்பர்கள் அவர்கள் இப்போது.
வேடிக்கையாக இருக்கும் அவர்கள் பேச்சு.  சிரிப்பு வரும்  அவன் பதிலும் அவள் கேள்வியும்.  எப்போதும் அவன் தான்  கீழே உட்காரு வான். அவள்  அவன்  நெடிய உருவத்தை பார்த்துக்கொண்டு  பெஞ்சில் காலை ஆட்டிக்கொண்டு உட்காருவாள்.  அவள் முகத் தில் அவனைக் கண்டாலே  கோடி சூரியன்.
"காபுல் மாமா பையிலே இன்னிக்கு  என்ன பிடிச்சுண்டு வந்தே ?
''யானை''
 ஏதேதோ தினமும் சொல்வான் போல இருக்கு.  கலகலவென்று  சிரிப்பு. எப்படி  ஒரு குழந்தைக்கு இந்த  மனிதன்  ஈடு கொடுக் கிறான். எனக்கு  கொள்ளை  ஆச்சர்யம்.
அவனும் சளைத்தவன் இல்லை.  அவன்  கேட்டான்.
''மினி,  ஏ  குட்டி,  எப்போ  நீ  மாமியா வீட்டுக்கு போகப் போறே?'' கல கல சிரிப்பு  இருவருக்கும்!!
வங்காள பெண்களுக்கு  மாமியார் வீடு  ஒரு  கற்பனை  சுரங்கம். எத்தனையோ  எதிர் பார்ப்புகள். பயம், ஆச்சர்யம்,  மகிழ்ச்சி, பொறுப்பு. அதிகாரம், வேலை, கணவன்,மாமனார், மாமியார்   குணம்  ஆதரவு, எதிர்ப்பு   என்னென்னவோ கலந்து கட்டியாக  எண்ணங்கள் கொண்ட காலம்  அது.   அதையெல்லாம் நாங்கள்   சிறு குழந்தைகளிடம் பேசுவதில்லை. மினிக்கு  காபூல்காரன்   கேள்வி புரியவில்லை,  என்ன சொல்வது என்றா  அவளுக்கு  தெரியாது அந்த ராக்ஷசிக்கு?
''நீயும்  உன் மாமியார் வீட்டுக்கு  போறியா?''
பெரியவர்கள் வழக்கில் ''மாமியார்  வீடு''  ரெட்டை அர்த்தம் கொண்ட தாயிற்றே.  உண்மையான  ராஜ உபசாரம் தந்து கவனிக்கும்  மனைவியின் பிறந்த வீடு.''என்று ஒரு அர்த்தம்.   மற்றொன்று  செலவில்லாமல்  ''கவனித்து'' போலிஸ் காரன் தந்த  உதை  தின்கிற  ஜெயில்''.

அப்துல் ரஹ்மான்  மாமியார் வீட்டை  ரெண்டாவது அர்த்தத்தில் எடுத்துகொண்டான்
 ''ஆ ', கையை  மடக்கி  முஷ்டியை  காட்டி ,''விடுவேனா அந்த  தானாக்காரனை, என்  மாமனாரை.  பிச்சு  உதறிடுவேன் அவனை'' என்று  நடித்து காட்டுவான்.   மினி  மாமனாரை சாதாரண சாது கிழவராக  பாவித்து  காபுல் காரன்  கையில் அவஸ்தைப்  படுவதை  மானசீகமாக ரசித்து கைகொட்டி சிரிப்பாள். அவள்  சந்தோஷத்தை  இம்மி அளவும்  வீணாகாமல் அவனும் சேர்ந்து ரசித்து சிரிப்பான்.

வெளி நாட்டவர்  நம்  தேசத்தில் இருந்த காலம்.  வித வித மனிதர்.  அவர்கள் தேசம் எங்கெங்கோ, மலைகள், மடுக்கள், பாலைவனம், வெயில். மழை, காடு, நாடு.  காபுல்காரன் ஊரும் இப்படித்தானே,  மலை, குளிர்,  பலம் மிக்க மக்கள்,  புரியாத பாஷை.  கோவேறு கழுதை, ஒட்டக வாகனம். ஆயுதம்  தாங்கிகள்.  அடிக்கடி  மினியின் அம்மா  என்னிடம்  சொல்வாள்  
''இதோ பாருங்கோ. குழந்தை  அந்த  காபுல்காரன் கிட்டே  விளை யாடறது. கொஞ்சம் ஜாக்ரதையாக  இருக்கணும்.  அவன் ஈட்டிக் காரன்.அவனை கண்காணிக்கணும்''.

அவளுக்கு வாசலில் யாராவது சத்தமாக பேசினாலே  திருடனோ, கொள்ளக்காரனோ, போலிசோ , குடித்துவிட்டு  யாரோ கொலைகா ரனோ, பிள்ளை பிடிக்கிறவனோ'' என்று பயம். காபுல்காரன் ரஹ்மான் இந்த லிஸ்டில் ஒருவன் அவளைப் பொருத்தவரை.
மினியின் அம்மா, அதாவது என் தர்ம பத்னி அத்தனை  பயந்தாங்கொள்ளி. என்னை மட்டுமே  விரட்டுவாள். ஈட்டிக் காரர்கள்  என்கிற பெயர்  பணம் லேவா தேவி செய்து வட்டி சற்று அதிகமாக  வசூலிப்பவர்கள்.  பணம் தாமதமானால்  தாக்குவார் கள்.  பயம் வேண்டாமா கடன் வாங்கினவனுக்கு?  இப்போது ஈட்டிக்காரர்கள்  பணம் வாங்கியவர்கள் தான் . அவர்களிடமிருந்து கெஞ்சி கூத்தாடி  தானே  பணம் கொடுத்தவர்கள்  வசூலிக்க வேண்டியிருக்கிறது. வங்கிகளுக்கே  முழி பிதுங்குகிறதே.  சட்டம் அப்படி.
நான் அப்படியெல்லாம் ரஹ்மான் இல்லை என்று சொன்னால் அவள் ஷார்ப்பாக  கேட்பாள்
''ஏன்  குழந்தைகளை இதுவரை பிடித்துக்கொண்டு போனதில்
லையா, தெரியாதா உங்களுக்கு? காபுல் லே  குழந்தைகளை பிடித்துக்கொண்டு வித்துவிடுவார்களாமே ? இந்த காபுல்காரன்  நம்ம  மினியை தூக்கிக்கொண்டு  ஓட எத்தனை நேரம்  ஆகும்?''
''அதெல்லாம்  நடக்காது.  சும்மா இரு. நான் விட்டுவிடுவேனா''  

இத்துடன்  முற்றுப் புள்ளி இல்லை.  மீண்டும்  அவ்வப்போது தலை தூக்கும். அவன் சகவாசம் வேண்டாம் என்று  அவள் நினைக்க நினைக்க  மினி-காபுல்காரன்  நட்பு  நாளொரு த்ராக்ஷையும் பொழுதொரு கதையுமாக வளர்ந்தது.

கல்கத்தாவில் வசித்த  காபுல்காரன் வருஷத்துக்கொரு தரம்  காபுலுக்கு  போவான். அப்போது கொஞ்சம் பிசியாக இருப்பான். அவன் மும்முரமாக  பாக்கி  வசூல் வேட்டையாடும் நேரம் அது.  அப்படியும்  நாள் தோறும்  மினியை சந்திக்காமல் போக மாட் டான்.  காலையில் வரமுடியாவிட்டால் கட்டாயம் சாயந்திரம் அவனை அவளோடு பார்க்கலாம்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமே.   எதுக்கு கண்ட கண்ட நேரத்தில் இந்த அழுக்கு காபுல்காரன் என் பெண்ணோடு வந்து விளையாடுகிறான். இதை நிறுத்த வேண்டும் சீக்கிரமே.  ஆனால்  அவளை அவனிடமிருந்து பிரிப்பதே  இயலாத காரியமாக இருக்கிறதே. என்னன்னவோ  வேடிக்கை பேச்சு அவர்களுக்குள்ளே.  அவன் வருவதை வழிமேல் விழிவைத்து  பார்த்துக் கொண்டிருக் கிறாளே .
குளிர்ந்த காற்று வீசும் ஒருநாள் காலையில் சூரியன் லேட்டாக  வந்தான்.  ஜன்னலை மெதுவாக  கொஞ்சம் திறந்து வைத்தேன்.  காலை எட்டாகிவிட்டதே.  அந்த நேரம் பார்த்து தெருவில்  ஏதோ  சப்தம்.  என்ன கூச்சல் என்று பார்த்தேன்.
''ஐயோ  இதென்ன அக்கிரமம். காபுல்காரன் ரஹ்மானை  சில போலிஸ்காரர்கள்  இழுத்து சென்று கொண்டிருந்தனர். அவன் மேல் ரத்தக்கரை.  அவனைப் பிடித்துக்  கொண்டிருந்த  போலிஸ் காரன் கையில் ரத்தம் தோய்ந்த கத்தி.

ரஹ்மான்  என்னை பரிதாபமாக  பார்த்து  விலங்கு போட்ட கையால் வணங்க முடியாததால்  தலை குனிந்து  வணங்கினான். கண்களில் நீர்.  நான் போலிஸ் காரனை நிறுத்தி  என்ன விஷயம் என்று  விசாரித்தேன்.  இங்கொன்றும் அங்கொன்றுமாக  பராபரி  யாக செய்தி.
ரஹ்மான்  அண்டை வீட்டுக்காரன் ஒருவனுக்கு  அதிக பணம்  கடனாக கொடுத்து,  அவன் வட்டியோ அசலையோ  தராமல்  அலைக்கழித்து,  தான் கடன் வாங்கவேயில்லை என்று பொய் சத்தியம் செய்து, வாய் சண்டை கைச் சண்டையாக மாறி, கோபம் வந்து ரஹ்மான் அவனை கத்தியால் குத்திவிட்டான்.  அந்த ஆள்  குற்றுயிரும் குலையுயிரும்.    பணமும் போய்  கொலைக் குற்றம் வேறு.  
நான் வாசலில் பேசிக்கொண்டிருந்த போது  மினி  வெளியே  ஓடி வந்தாள். காபுல் காரனைக் கண்ட மகிழ்ச்சி.  குழந்தைக்கு  கத்தி, ரத்தம் கொலை குற்றம் எதுவும்  தெரியாதே.  வழக்கமான  கேலி பேச்சு அவனோடு.
''காபுல்காரா உன்னை காணோமே என்று  பார்த்தேன்,  ஒரே கூட்டம் ஊர்வலமாக உன்னோடு. நடுவில்  நிற்கிறாய்.  நீ  இப்போ உன் மாமியா  வீட்டுக்கு  போறியா"  

காபுல்காரன் கண்ணில் நீரோடு, முகத்தில் மகிழ்ச்சியோடு  அந்த குழந்தை மினிக்கு பதில் சொன்னான். வழக்கமாக கொடுக்கும்  முந்திரி  திராக்ஷை பை இன்று அவனிடம் இல்லையே.கையில் விலங்கு. விரக்தியோடு சிரித்தான்.

'ஆமாம்  குழந்தை. நன்  மாமியா வீடு தான்  இப்போ போறேன். ரொம்ப நாள்  விருந்தாளி.    தானாக்காரனை  பிச்சுடுவேன். ஆனால்  கையை கட்டி போட்டுருக்கே''

பல வருஷங்கள்  சிறை தண்டனை.  காலம் ஓடி விட்டது. மினி பதினாறு வயது பெண் இப்போது.  காபுல்காரனை மறந்துவிட்டாள். எங்கள் யாருக்குமே அவன் நினைப்பு இல்லை.  அவள்  நாணம் அச்சம் மடம் பயிர்ப்பு கொண்ட  பெண். பேச்சு சொல்பம்.  வேறு மினி.

மினிக்கு கல்யாணம்  நிச்சயமாகிவிட்டது. கல்கத்தா நவராத்திரி தான்  பிரசித்தியாயிற்றே.  பூஜைகள் முடிந்து  துர்கா கைலாச மலைக்கு திரும்புகிறாள்.  என் குல விளக்கு  மினியும் கணவன் வீடு செல்லும் நேரம் வந்தது.

அன்று  திருமணம் அவளுக்கு.  பன்னீர் தெளித்தது போல  சில்லறை மழை.  சுகமான வெயில். சூரியனின் தங்க கிரணங்கள் எல்லாவற்றையும் தங்க முலாம் பூசியிருந்தது.  நாதஸ்வரம்  ஒலிக்கிறது.  பைரவி ராகம்  காற்றில் இழைந்து  பரவுகிறது.  பெண்கள் கோலம். வாசலில் வாழைமரம். வரிசையாக வண்டிகள். ஜேஜே  என்று விருந்தாளி கூட்டம். இன்னும் சிறிது நேரத்தில் என் செல்லப்பெண் மினி என்னை விட்டு  பிரிவாளே .

வாசல் பந்தலுக்கு அருகே  விருந்தாளிகளை வரவேற்க  நின்று கொண்டிருந்தேன்.  யாரோ  வந்து என்னை வணங்கினார்கள். உற்று பார்த்தேன்.  
எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே. 
காபுல் காரன்  ரஹ்மான். முகம் நிறையவே மாறி யிருந்தது. வயோதிகம்  கோடிட்டு இருந்தது.  முதலில் அடையாளம் தெரியவில்லை. கையில் பை இல்லை. திராக்ஷை கூடை இல்லாத  ரஹ்மான். அதே சிரிப்பு. கண்களில் அதே  ஒளி .
''ரஹ்மானா.  என்னப்பா  எப்போது வெளியே வந்தாய்?
"நேத்து சாயந்திரம் ஐயா''
நான் மறந்தாலும்  இந்த மனிதன்  என்னையோ என் வீட்டையோ மறக்கவில்லையே.  இன்று எதற்காக  வந்து தொலைத்தான்?'.
''இன்று வீட்டில்  விசேஷம்  ரஹ்மான். முக்யமான  வேலையாக இருக்கிறேன்.  நீ  இன்னொரு நாள்  வாயேன்''
போவதற்கு  தயங்கினான். திரும்பினான்.  வாசல் கதவு வரை போனவன் கண்ணீரோடு பேசினான்.
 ''ஐயா,  நான்  குழந்தையை ஒரு நிமிஷம் பார்க்கலாமா? ''
''குழந்தையா?''.   அவன்  இன்னும்  மினியை  அப்படியேவா  நினைத்துகொண்டிருக்கிறான்?"  அவனைப் பொருத்தவரை  காலம்  ஓடவில்லை. அவளது  ''காபுல்காரா''  குரல்  இன்னும் அப்படியே  மழலையாகத் தான்  அவன் காதில் ஒலித்ததோ?  சிரிப்பும் வேடிக்கையும் எதிர்பார்க்கிறானோ? தோல் ஜோல்னா பையிலிருந்து  ஒரு பொட்டலம் எடுத்தான் அதை பிரித்தான்.  கொஞ்சம்  முந்திரி, திராக்ஷை, பாதம், பேரிச்சை...
''ரஹ்மான்,  இன்னிக்கு  இங்கே  விசேஷம் என்று சொன்னேனே. நீ  இங்கே யாரையும்  பார்க்க முடியாது."

அப்படியே  இடிந்து விழுந்தான். என்னை கெஞ்சும்  பார்வை கண்களில். கண்ணீரோடு கலந்து தெரிந்தது. 
''நமஸ்காரம் சார்.'' திரும்பினான்.  அது என்னை  திருகியது. அவனைக் கூப்பிடலாமா என்று ஒருமனம்.  அவனே எதற்கோ திரும்பினான்.  என்னருகே வந்து அந்த பொட்டலத்தை என் கையில் வைத்து  ''குழந்தைக்கு  ஆசையா வாங்கிக் கொண்டு வந்தேன். இதை அவளுக்கு கொடுக்கிறீங்களா சார்?'' அந்தக் குரலின் பாசம் என்னை கலக்கியது.

காசு கொடுக்க  பைக்குள் கையை விட்டேன். என் கையைப்  பிடித்தான். 
 ''ஐயா  நீங்கள் தர்மப்ரபு. என்னை  ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருப்பது போல் எனக்கும் ஒரு பெண் குழந்தை என் காபுலில். என் பாசத்துக்கு  காசு கொடுக்காதீர்கள் . உங்கள் குழந்தையை பார்த்தபோதெல்லாம்  என் குழந்தை கவனம் எனக்கு வரும்.  மினி யோடு ஆசையாக பாசமாக  சிரித்து விளையாடி மகிழ்ந்தேன். இதற்கு தயவு செய்து விலை பேசாதிர்கள்''

அவன் கை மீண்டும் அவன் சட்டைக்குள்  சென்றது. ஒரு கசங்கிய  காகிதம் வெளியே வந்தது. மடித்து மடித்து  அதை  ஜாக்ரதையாக பல வருஷம் வைத்திருந்தான் போலிருக்கிறது. பிரித்தான். மேசையில் வைத்தேன். அதில் ஒரு குழந்தையின்  கை  ஐந்து விரல்கள் மையினால் நிரப்பப்பட்டு அழுத்தப்பட்ட  பதிவு.  கை ரேகை. படிக்காத அவனுக்கு,  அவன் இருந்த  மலைப் பிரதேசத்தில் போட்டோ  எங்கே  கிடைக்கும்.    அந்த குழந்தை நினைவு,   அந்த  மை பதிவால்  அவன்  மனதை நிரப்பியிருக்கிறது.  பிழைக்க கல்கத்தா வந்திருக்கிறான். பழங்கள் விற்று ஜீவனம்.  சம்பாதித்ததை சேர்த்து ஊருக்கு  குடும்பத்துக்கு கொண்டு செல்லமுடியாமல் பணமும் போய்  ஏமாந்து கொலை குற்றம். ஜெயில்.

என் கண்கள் குளமாகியது. என் எதிரே  ஒரு ஏழை, அழுக்கு  காபுல்காரன் இல்லை. என் மாதிரி ஒரு தந்தை. பிரிவால்  வாடுபவன். நானும் அவனும் ஒரே நிலையில் தானே.  அவன் குழந்தை பிரபாவதியும்  என் குழந்தை மினியும்  ஒன்றே.  

உடனே  மினியை அழைத்து வரச்  சொன்னேன். கல்யாண கோலத்தில் சடங்குகளில் இருந்தவளை கூப்பிட்டதற்கு  எதிர்ப்பு  நிறைய எனக்கு. கவலையே படவில்லை நான். மகாலக்ஷ்மியாக அலங் காரத்தோடு வாசலில் மினி லஜ்ஜையோடு நின்றாள் .
காபுல்காரன் ரஹ்மான் அவளை கண்களால்  விழுங்கினான். 
''தேவதையா? என் எதிரிலா? '
அவனால்  அதை மினி என்று நம்பவே முடியவில்லை.   பழைய புன்னகையோடு,  சந்தோஷத்தோடு பூரிப்புடன்  வழக்கமாக அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்ளும் கேள்வி அவனிடமிருந்து வந்தது:
"மினி ம்மா  நீ  உன் மாமியா வீடு போறியா''
அதன்  அர்த்தம்  மினிக்கு  சரியாகவே  புரிந்தது.  வழக்கமான சிரிப்பு கலகலவென்று பதில்  வரவில்லை.  தலை குனிந்தது. முகம் சிவந்தது. இதழோரம் வெட்கம் கலந்த ஒரு புன்னகை. வியர்வை முத்துக்கள் முகத்தில்.  கேள்வி தான் புரிந்ததே?  உள்ளே  அழைத்து சென்றார்கள்.

எனக்கு  முதல் முதலாக  மினி-காபுல்காரன் சந்திப்பு மனத்திரையில்  படமாக ஒடியது .சோகம்  சூழ்ந்தது. ரஹ்மான் ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டான். அவன் மனதில் ஒரு  கேள்வி பூதாகாரம் எடுத்தது.  என் மகளுக்கு கல்யாண வயதோ? அவளை பார்ப்பேனா?  கல்யாணம்??

கெட்டி மேளம் வாசித்தது. வெயில் சுள் என்று முகத்தில் சுட்டது.  ரஹ்மான்  ஒரு  கல்கத்தா சந்தில் இருக்கிறான். எங்கோ ஆப்கானிஸ் தானத்தில் காபுலில் அவன் பெண் எப்படி இருக்கிறாளோ? .

கத்தையாக  பணம்  எடுத்தேன்.  அவன் கையில் திணித்தேன்.   "ரஹ்மான்   உன்  ஊருக்குப் போ. இந்தா   நம் பெண்  பிரபாவதி கல்யாணம் நடத்து. பிரபாவதி கல்யாணம் மினிக்கு நல்வாழ்த்தாக அமையட் டும் !"

கல்யாண செலவில் கொஞ்சம் சிக்கனம் காட்டி  பணம் பற்றாக்குறையை சரிக்கட்டி விட்டேன். விளக்கொளி அலங்காரம்  நின்றது. வாத்ய கோஷ்டி  குறைத்து வாசித்தது. பெண்களுக்கு வீட்டில் என் மேல் கோபம்.  வருத்தமும் கூட. ஆனால்  காபுலில் எங்கோ  ஒரு வீட்டில் தீபம் ஒளிவீசும்.  கலகலவென்று  அங்கே  மகிழ்ச்சி ஒலி  வாத்தியத்தை விட  இனிமையாக கேட்குமே.!!இதெல்லாம் அந்த சந்தோஷத்துக்கு ஈடாகுமா??

sivan jaykay

unread,
Jun 2, 2025, 8:26:17 PM6/2/25
to amrith...@googlegroups.com

ஒரு  ராத்திரி இருந்த இடம்..      நங்கநல்லூர்  J K SIVAN 

காஞ்சியிலிருந்து கலவை செல்லும் வழியில்  அரைமணியில்  ஓரிக்கை எனும் அமைதியான  கிராமத்தை அடையலாம்.  அந்த ஊரைப் பற்றி ரெண்டு விஷயங்கள்  ருசிகரமானவை.

ஒன்று  அதன் பெயர் ஓரிக்கை இல்லை.  ''ஒரு இரவு இருக்கை"  இது என்ன பெயர்,? எந்த இரவு, யாரின் இருக்கை? இதைத் தெரிந்து கொள்ள  குட்டியாக ஒரு கதை சொல்லித்த்தான் ஆகவேண்டும், சொல் லாவிட்டால் மண்டை வெடித்து விடுமே  என்ன செய்வேன் ? 

 சென்னையிலிருந்து 15 -20 கிமீ. தூரத்தில்  பூந்தமல்லி  இருக்காதே அதன் பெயரே தப்பு ஸார்.ஹாமில்டன் வாராவதி  அம்பட்டன் வாராவதி ஆகி, ஆக்கியத்திலும் ''Barber's  bridge'' ஆன மாதிரி,  பூவிருந்த வல்லி  என்ற நறுமணமான  அழகிய செடி கொடி  மலிந்து கம்மென்ற மணம் வீசிய  பெயர் இப்படி பொலிவிழந்துவிட்டது. 
அதன் அருகே இன்னொரு அமைதியான புனித கிராமம்  திருமழிசை. அதையும் வெள்ளைக்காரன் (வாயில் தர்ப்பையை போட்டு பொசுக்க ...)திருமுஷி ஆக்கிவிட்டான். 7ம்  நூற்றாண்டில்  இது வெறும்  மூங்கில் காடு. 

ஒரு நாள் அந்த பக்கமாக  பார்கவ ரிஷியும்  அவர் மனைவி  கனகாங்கியும்   கைகளில் அவர்களுடைய  12 மாசம்  கருவில் இருந்தும் உடல்  உறுப்புகள் இன்றி  ஒரு உயிரற்ற மாமிச  பிண்டமாக ( கிட்டத் தட்ட நாம்  இப்போது  சொல்கிறோமே ஸ்டில் பார்ன்  என்று  அதுபோல்)  பிறந்த  ஒரு சிசுவோடு  விசனத்தோடு வருகிறார்கள். 
''பகவானே, இதுவும் உன் செயலே என்றால் அப்படியே ஆட்டும்" என்று சொல்லியவாறு  தாம் பெற்ற அந்த சிசுவை மூங்கில் புதரில் விட்டுவிடுகிறார்கள். இந்த  இந்த குழந்தை உன் பொறுப்பில். அதன்  துன்பத்தை தீர்த்து  குழந்தை வைகுண்டம் செல்லட்டும்'' 
மூங்கில்  காட்டில் சிசுவை  விட்டு விட்டு கண்ணில் நீர் மல்க மனம் உடைந்து  பெற்றோர் திரும்பி  சென்றனர்.
 நாராயணன் சித்தம் வேறாக  இருந்தது அவர்களுக்கு எப்படி தெரியும்? அவன் கருணையை  என்  வார்த்தைகளில் ரொப்ப முடியுமா? தனித்து விடப்பட்ட "அது"  அந்த குறைப் பிரசவ சிசு, சில மணி நேரத்திலேயே பூரண தேஜஸோடு முழு வளர்ச்சியடைந்த குழந்தையாக  ''குவா குவா'' என  அழுதது.

காட்டில் உலவிக்கொண்டிருந்த குழந்தை செல்வமில்லாத இரு வயதான காட்டுவாசிகளான திருவாளன், பங்கயற்செல்வி ஆகிய  வேடுவ தம்பதியர் அந்தப் பக்கமாக  அப்போது தான் வரவேண்டுமா?  அவர்கள் காதில் 
மூங்கில் காட்டில் ஒரு குழந்தை அழும் ஒலி ஸ்பஷ்டமாக கேட்கவேண்டுமா?  கேட்டதும் ஆச்சர்யத் தோடு குழந்தையை தேடி கண்டு பிடிக்க வேண்டுமா? யார் இந்த அழகிய ஆண் குழந்தையை இங்கே விட்டு விட்டு சென்றது என்று தேட வேண்டுமா?  யாரும் உரிமை கொள்ள இல்லையே என்று வருந்தவேண்டுமா?  
அவர்களுக்கு குழந்தைச் செல்வம் இல்லாமல் இப்படி திடீரென்று ஒரு அபூர்வ குழந்தை கிடைக்கவேண்டுமா? இவ்வளவு கேள்விகளுக்கும் ஒரே பதில் ''எல்லாம் நாராயணன் ஸ் சங்கல்பம் ''.
குழந்தை காட்டு வாசிகள் குடிசைக்கு சென்று   ''திருமழிசையான்' என்றே பெயர் பெற்றது. வேடுவ தம்பதியர் மிக்க ஆனந்தத்தோடு அதற்கு பசும்பால் ஊட்டினார்கள்

''ஐயோ, இதென்ன சோதனை?  குழந்தை பால் கூட பருக மறுக்கிறதே. ஆகாரமே உட்கொள்ளாததால் அவர்களுக்கு கவலை வந்துவிட்டது.

"ஹே! திருமழிசையானே நீயே அருளவேண்டும், இந்த சிசு பாலுண்ண வேண்டும் என அந்த கிழ தம்பதியர் அந்த ஊர் பெருமாளையே தஞ்சமென வேண்டியவுடன், குழந்தை சிறிது பால் அருந்தி விட்டு மீதியை அவர்களே குடிக்க வைத்தது.

தொடர்ந்து இன்னொரு ஆச்சர்யம்! குழந்தை மறுத்து அவர்களுக்கு அளித்த  பாலை அருந்தியவுடன் அந்த கிழ வேடுவர்கள் இருவரும் இளம் தம்பதிகள் ஆகி அவர்களுக்கு விரைவில் இன்னொரு  குழந்தையும் பிறந்து அவனுக்கு கணிக்கண்ணன் என்று பெயரிட்டு அவன் திருமழிசையானின்  இளைய சகோதரனாக வளர்ந்தான்.  ஒருவரியில்  கதையை சுருக்கிவிட்டேன்.

திருமழிசையான் கல்வி கேள்விகளில் சிறந்தவனாகி பல மதங்களை ஆராய்ந்து பின்னர் சிவபக்த சிரோமணியாக மாறி சிவவாக்யர் ஆனார் என்று சொல்வதுண்டு.  
  
 சிவ  வாக்கியரை பேயாழ்வார் நாராயணனின் மகத்வம் உணர வைத்து வைணவராக மாற்றி திருமழிசை ஆழ்வார் என்று நாமகரணம் செய்தார்  என்று சொல்வதுண்டு.  சமஸ்க்ரிதத்தில் மழிசை என்பது 'மஹீஸாரம்' என்று பெயர் கொண்டது. திரு மழிசையை  மஹீஸார க்ஷேத்ரம் " (பூமிக்கே ஸாரமான ஊர்) என்று புகழ் பெற்றது.   மஹீஸாரத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் திருமழிசை ஆழ்வாருக்கு பக்தி ஸாரர்! என்றும் பேயாழ்வார்  நாம மிட்டார். .ஆழ்வார் கூடவே இருக்கும் அவரது இளைய சகோதரன் கணிக்கண்ணன் ஆழ்வாரின் பிரதம சிஷ்யனானான்.  இனி திருமழிசை ஆழ்வார் என்றே அழைப்போம்.

திருமழிசை ஆழ்வார்  கணிக்கண்ணனோடு காஞ்சீபுரம் வந்து ஒரு சின்ன  கிராமத்தில் பெருமாள் கோவில் அருகே வசித்தார். எப்போதும் அந்த  பெருமாள் கோவிலில் பாசுரம் பாடிக் கொண்டும்,  அங்கு வரும் பக்தர்களுக்கு உபதேசம் பண்ணிக்கொண்டும் அப்படியே யோக ஸமாதியில் ஆழ்ந்து கொண்டிருந்தார்

ஒரு வயதான  பெண்மணி பிரதி தினமும் அந்த  ஆலயத்துக்கு வந்து  பெருமாளுக்கு தொண்டு விடாமல் செய்வது கண்டு மகிழ்வுற்ற ஆழ்வார்  அவளுக்கு  இளமை திரும்ப பெருமாளிடம் வேண்டுகிறார். அழகிய யுவதியாக அந்த பெண் மாறுகிறாள். இந்த செய்தி காட்டுத்தீயாக எங்கும் பரவி அந்த ஊர் ராஜா காதிலும் புகுந்தது.  பல்லவ ராஜா அந்த யுவதி  அழகில் மயங்கி அவளை மணக்கிறான். அவள் மூலம் அவள் எழில் ரகசியம் அறிகிறான்.  அந்த ராஜாவுக்கும் இப்போது  தனக்கும்  இளமை திரும்ப வேண்டும் என்ற ஆவல் வந்து, அவள் மூலம் அந்த கோவிலுக்கு வருகிறான்.

ஒவ்வொருநாளும் பெருமாளை வழிபடும்போது கணிக்கண்ணனின் அழகு தமிழில் செவிக்கினிய பாசுர மியற்றும் பாங்கில் மயங்கி ராஜா தன் மீதும்  புகழ்ந்து  அவரிடம்  ''என்மீதும் ஒரு  பாடல் இயற்றி  பாடுங்கள்'' என்று உத்தரவிட்டான். 

 'மஹாராஜா, பெருமாள்  மீது அல்லாமல் எந்த மானுடர் மீதும் புகழாரம் பாடும் வழக்கம்  எம் குருநாதருக்கு  எனக்கும் இல்லையே'' என கணிக்கண்ணன் பவ்யமாக  மறுத்தபோது  ராஜாவுக்கு கட்டுக்கடங்காத கோபம். 

''யாரங்கே, மந்திரி, இதை கவனித்தாயா?  நமது நாட்டின் பிரஜை ஒருவன், அதுவும் ஏழைப் புலவன், இந்த கணிக்கண்ணன்,  என்னை அவமானப் படுத்திவிட்டான்? இவனை தண்டிக்காமல் விடக்கூடாது. ஆனால் அவன் அறியாமையால் செய்த பிழைக்காக அவன் மீது கருணை கொண்டு இன்னுமொரு வாய்ப்பு தருகிறேன்.  நாளை காலைக்குள் இவன் என் மீது பாட்டியற்றி பாட வில்லை என்றால், நாளையே  இவன் இந்த ஊரை விட்டே வெளியேற  வேண்டும். இல்லையேல் அவனுக்கு சிரச்சேதம்''    என்று உத்தரவு போட்டுவிட்டு சென்று விட்டான்.

கணிக்கண்ணன் அதிர்ந்து போய்  திருமழிசை ஆழ்வாரிடம் கண்ணீரோடு  நடந்ததைச்  சொன்னான்.  குருவின்  திருவடிகளில் விழுந்து வணங்கி  "குருநாதா,  நான்  தங்களது  நிழல், எவ்வாறு உங்களை விட்டு பிரிந்து  இந்த ஊரை விட்டு இப்போதே  செல்வேன்'? ' என்றதும், ஆழ்வார் அமைதியாக பெருமாளை நோக்கினார். பெருமாளும் ஆழ்வாரைப் பார்த்தார்;  
  
 'என்ன  பார்க்கிறாய்? ''''கணிகண்ணன் போகின்றான் காமரு பூங் கச்சி   மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்  பை நாகப்பாயை சுருட்டிக் கொள்'' என்று ஆழ்வார் பாடினார். 

 "ஹே!! நாகசயனா, என் அருமை  தம்பி, ஸ்ரீ வைஷ்ணவன்,  கணிக்கண்ணன் போகின்றான், நானின்றி அவனில்லை.  எனவே நானும் போகிறேன், நீயின்றி நானில்லை எனவே நீயும் சட்டு புட்டு என்று உன்னுடைய இந்தஅழகிய  நாக படுக்கையை சுருட்டி கொண்டு ஐந்தே நிமிஷத்தில் கிளம்பு மூவருமே இந்த ராஜாவின் தேசத்தை விட்டு நாம் செல்வோம் " என்று ஆர்டர் போட்டார்!

கணிக்கண்ணன்  முன்னே  நடக்க அவன் பின்னே  திருமழிசை ஆழ்வார் தொடர, அவர்கள் பின்னே தனது சேஷ சயன படுக்கையை தோளில்  தூக்கிக் கொண்டு பெருமாள் ஆகிய  மூவரும் காஞ்சியை விட்டு அகன்றனர். வழியில் எங்கோ ஊரில் அன்று இரவு தங்கினார்கள். 

காஞ்சிபுரத்தை விட்டு  பெருமாள், ஆழ்வார், கணிக்கண்ணன் மூவரும்  சென்ற அடுத்த கணமே அந்த ஊரே அஸ்தமித்து விட்டது. மண்மாரி பெய்தது. ராஜாவுக்கு விஷயம் தெரிந்து அலறி புடைத்துக்கொண்டு ஓடினான். அவர்கள் இரவு தங்கி இருந்த இடத்தை அடைந்தான்.  மூவர் திருவடிகளில் விழுந்து புரண்டான். அழுது தீர்த்தான். ''புண்யா ,பாதகன் நான் மாபெரும் தவறிழைத்தேன். செய்த தவறை உணர்ந்து உங்கள் திருவடிகளில் சரணடைந்து திருந்தினேன். என் தவறை மன்னித் தருளவேண்டும்'' என்று அலறினான். நீங்கள் வராமல் ஊர் திரும்பேன் என்று கெஞ்சினான்.

 ஆழ்வார் ''கணிக்கண்ணா, வா திரும்புவோம்" என்றார். பின்னால் நின்ற பெருமாளை பார்த்து " என்ன பார்க்கிறாய், நீயும் தான், நீ இல்லாமல் நாங்கள் ஏது? சுருட்டிய உன் பாம்பு படுக்கையை மீண்டும் தூக்கிண்டு வா திரும்புவோம். உன் இடத்துக்கே மீண்டும் போவோம். அங்கு வந்து படுக்கையை விரித்துக் கொள்"  என்றார். அந்த பாடல்:

''கணிக்கண்ணன் போக்கொழிந்தான், காமருபூங் கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டும்- துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன், நீயுன் உன்றன் பைந்நாகப் பாயில் படுத்துக் கொள்''  

மூவரும் திரும்பினர். இந்த பெருமாள் அந்தக் கணம் முதல் "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" (யதோக்த காரி'யதா உக்த':='சொன்னபடி', 'சொன்ன வண்ணம்';காரி'=செய்பவர்) என்று பெயர் வாங்கினான்.   இப்போது இந்த க்ஷேத்ரம் 
  திரு வெக்கா என்று  108  திவ்ய தேசங்களில் ஒன்று.  ஏறக்குறைய  ஆயிரம்  வருட  வயதுள்ள  வைஷ்ணவ  திவ்ய  தேச  கோவில்.  வரதராஜ பெருமாள்  கோவிலில் இருந்து  ஒரு  கி.மீ  தூரம்  தான்.   விஷ்ணு  காஞ்சி  பஸ்  நிலையத்திலிருந்து  2 கி.மீ.   எதிரே  அஷ்ட புஜம் பெருமாள்  கோவில்  அசாத்யமாக  இருக்கிறது.    நின்  கடன் அடியேனையும்  தாங்குதல் என்கடன்  பணி செய்து  கிடப்பதே  என்று   இறைவனே  மூச்சாக  வாழ்வார்க்கு இறைவன் சொன்னதையும்  ஏன்   சொல்லாததையும் செய்வான்.    இறைவன்  பக்தனுக்கு அடிமை என்பதற்கு  இந்த கதை ஒன்றே போதுமே!  இந்த கதை எதற்கு சொன்னேன்?  அந்த ஒரு இரவு பெருமாள், ஆழ்வார், கணிக்கண்ணன் மூவரும் தங்கி இருந்த இடம்  ஒரு இரவு இருக்கை என பெயர்பெற்று இப்போது ஓரிக்கை.

இந்த ஓரிக்கையில்  மஹா பெரியவாளுக்கு ஒரு அழகிய மணி மண்டபம் கட்டி இருக்கிறார்கள்.  

sivan jaykay

unread,
Jun 2, 2025, 8:26:41 PM6/2/25
to amrith...@googlegroups.com

அஹம் ப்ரம்மாஸ்மி -  நங்கநல்லூர்  J K  SIVAN 

வேதங்களின் சாரம். உபநிஷதுகள்.  நூற்றுக்கு மேலான  உபநிஷதங்கள் இருக்கிறது. அதில் பெரியது பிருஹதாரண்யக உபநிஷத் (Brihadaranyaka Upanishad)  ஒன்றாகும்.  ஸுக்ல யஜுர்வேதத்தின் ஒரு பகுதி.  பல  ஆயிரம் வருஷங்களுக்கு  முன்பே  இயற்றப்பட்டது. மூன்று  காண்டங்கள் கொண்டது.  மது காண்டம், யாஞ வல்கிய காண்டம், கிலா காண்டம்.
மது காண்டம்  ;  உலகம் எப்படி உருவானது, அதில்  உண்மைகள் என்ன  என்பதை சொல்கிறது.
யாஞ  வாக்கிய கண்டம் அந்த ரிஷியின் தத்துவங்களை  சொல்கிறது.
கிலா காண்டம் நமது பிரார்த்தனைகள் தவிர ஆன்மீக  வழிமுறைகளை  சொல்கிறது.
மேலே சொன்ன ஒவ்வொரு காண்டத்திலும்  பல பிரிவுகள் உள்ளது. அவை பிராமணம் (அந்தணன்  பற்றி இல்லை,  பிரம்மத்தை பற்றி சொல்வது) எனப்படும்.
மதுகாண்டத்தில்  ஆறு  பிராமணங்கள் . யஜ்ஞவல்க்ய காண்டத்தில் ஒன்பது.

பிருஹதாரண்யக உபநிஷதம் ஆத்மா, அதன் இயல்பு, ப்ரம்மத்தோடு ஜீவனுக்கு உள்ள தொடர்பு, ஆத்மீகத்தில் எப்படி  முன்னேறுவது, என்று பல ரொம்ப ரொம்ப  ஆழமான  தத்வங்களை சொல்கிறது. இல்லை  ஸமஸ்க்ரித  ஸ்லோகங்களில் பாடுகிறது.  

இந்த உபநிஷதத்தின் முக்கியமான மஹா மந்த்ரம் "அஹம் பிரம்மாஸ்மி" (நான் தாண்டா ப்ரம்மம்) எனப்படும் அத்வைத கோட்பாடு.

மதுகாண்டம் (Madhu Kanda) – இது உலகின் உருவாக்கம் மற்றும் அதன் அடிப்படை உண்மைகள் பற்றிய விவரங்களை வழங்குகிறது.

யஜ்ஞவல்க்ய காண்டம் (Yajnavalkya Kanda) – யஜ்ஞவல்க்ய முனியின் தத்துவங்கள் மற்றும் அவரின் உரையாடல்கள் இதில் உள்ளன.

கிலா காண்டம் (Khila Kanda) – பிரார்த்தனைகள் மற்றும் பிற ஆன்மீக நடைமுறைகள் பற்றிய பகுதி.

ஒவ்வொரு காண்டமும் பல பிராமணங்களாக (பிரதிகள்) பிரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மதுகாண்டம் ஆறு பிராமணங்களாகவும், யஜ்ஞவல்க்ய காண்டம் ஒன்பது பிராமணங்களாகவும் அமைந்துள்ளது.

வேதங்கள், உபநிஷதங்கள்  பற்றி முதலில் தெரிந்து கொண்டு பிறகு  கொஞ்சம் கொஞ்சமாக  உள்ளே போவது தான்  முறை. உசிதம். எடுத்ததும்  பெரிய உபநிஷதமான ப்ரஹதாரண்யக உபநிஷதத்தில் மூக்கை நீட்டலாமா?  ப்ரஹத் என்றால் ''பெரிய'' ,  ஆரண்யம் என்றால்  வனம், காடு, மிகப்பெரிய  உபநிஷத காட்டுக்குள் உங்களை கொண்டுபோய்  தள்ளுவதால் எனக்கு என்ன புண்யம்?  ஆகவே  இத்தோடு அதற்குள்ளே போகாமல் விடுகிறேன்.  பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போவோமா?  விடைபெறும் முன்  இந்த பெரிய  உபநிஷத்திலிருந்து நமக்கு கிடைத்த ஒரு மஹா வாக்கியம் பற்றி மட்டும் சொல்கிறேன்.

அஹம் ப்ரஹ்மாஸ்மி" (Aham Brahmasmi)
ப்ரஹதாரண்யக உபநிஷதத்தில் 1. 4.10  ஸ்லோகத்தில் வருகிறது.

ह्म वा इदमग्र आसीत्, तदात्मानमेवावेत्, अहम् ब्रह्मास्मीति । तस्मात्तत्सर्वमभवत्; तद्यो यो देवानाम् प्रत्यबुभ्यत स एव तदभवत्, तथार्षीणाम्, तथा मनुष्याणाम्; तद्धैतत्पश्यन्नृषिर्वामदेवः प्रतिपेदे, अहम् मनुरभवं सूर्यश्चेति । तदिदमप्येतर्हि य एवं वेद, अहम् ब्रह्मास्मीति, स इदं सर्वम् भवति, तस्य ह न देवाश्चनाभूत्या ईशते, आत्मा ह्येषां स भवति; अथ योऽन्यां देवतामुपास्ते, अन्योऽसावन्योऽहमस्मीति, न स वेद, यथा पशुरेवम् स देवानाम् । यथा ह वै बहवः पशवो मनुष्यम् भुञ्ज्युः, एवमेकैकः पुरुषो देवान् भुनक्ति; एकस्मिन्नेव पशावादीयमानेऽप्रियम् भवति, किंउ बहुषु? तस्मादेषाम् तन्न प्रियम् यदेतन्मनुष्याविद्युः ॥ १० ॥

brahma vā idamagra āsīt, tadātmānamevāvet, aham brahmāsmīti | tasmāttatsarvamabhavat; tadyo yo devānām pratyabubhyata sa eva tadabhavat, tathārṣīṇām, tathā manuṣyāṇām; taddhaitatpaśyannṛṣirvāmadevaḥ pratipede, aham manurabhavaṃ sūryaśceti | tadidamapyetarhi ya evaṃ veda, aham brahmāsmīti, sa idaṃ sarvam bhavati, tasya ha na devāścanābhūtyā īśate, ātmā hyeṣāṃ sa bhavati; atha yo’nyāṃ devatāmupāste, anyo’sāvanyo’hamasmīti, na sa veda, yathā paśurevam sa devānām | yathā ha vai bahavaḥ paśavo manuṣyam bhuñjyuḥ, evamekaikaḥ puruṣo devān bhunakti; ekasminneva paśāvādīyamāne’priyam bhavati, kiṃu bahuṣu? tasmādeṣām tanna priyam yadetanmanuṣyāvidyuḥ || 10 ||

அஹம் (Aham) = நான்

ப்ரஹ்மா (Brahman) = பரம்பொருள்,
அஸ்மி (Asmi) = ஆகிறேன் / தான்
என்ன அர்த்தம்?  நான் என்றால் இந்த உடம்பு இல்லை. உள்ளே உள்ள ஆத்மா. உள்ளே  இருக்கும் அதுவும் வெளியே பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் பிரம்மமும் ஒன்று தாண்டா பையா. ஆகவே இந்த உடம்பை பிடித்துக் கொண்டு
 வாட்டும் வியாதி, துக்கம்,சுகம், எல்லாமே வெறும் மாயை.
அதாவது  ஆதார் கார்டு, பாஸ்போர்ட் PAN  கார்டு வைத்திருக்கும்  போட்டோவில் நீங்கள் காணும்  சிவன் இல்லை."ந நான் அந்த பிரம்மமாகவே இருக்கிறேன்"  நான் மட்டும் இல்லை. இதை படிக்கும் நீங்களும் தான். ஆனால் இது புரிய கொஞ்சம் லேட்டாகும். பரவாயில்லை. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். 

sivan jaykay

unread,
Jun 4, 2025, 7:58:46 PM6/4/25
to amrith...@googlegroups.com
ஆபரணதாரி-   நங்கநல்லூர்  J K SIVAN

'பஞ்ச நாராயண பெருமாள் கோயில்கள் என்று தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் ஐந்து முக்கிய விஷ்ணு கோயில்கள்  இருக்கிறது. இவற்றில் பல  திவ்யதேசங்களாகவும்  அபிமான க்ஷேத்ரங்களாகவும்  பக்தர்களால் வழிபடப்படுபவை. 

அவை திருக்கண்ணங்குடி – லோகநாத பெருமாள் கோயில்.  திவ்ய தேசம்
தேவூர் – தேவ நாராயண பெருமாள் கோயில் (திருவாரூர்)
வடக்கலத்தூர் – வரத நாராயண பெருமாள் கோயில்  
கிழ்வேலூர் – யாதவ நாராயண பெருமாள் கோயில்
ஆபரணதாரி  அனந்த நாராயண பெருமாள் கோயில்.

இதில் ஐந்தாவது க்ஷேத்திரத்தை பற்றி மட்டும் இங்கே சொல்கிறேன். 
இதன் பெயர் இப்போது  ஆப்ரணதாரி என்று சொன்னால் யாருக்குமே புரியாமல்   பேந்த பேந்த விழிக்கிறார்கள். ஆவராணி  என்றால்  புரிகிறது. வழி காட்டுகிறார்கள். நான் சிக்கல் முருகன் ஆலயம் சென்ரத்பது அங்கிருந்து ரொம்ப அருகில் இந்த ஆலயம் இருப்பதை உணர்ந்தேன். இங்கே எங்காவது வேறே ஏதாவது கோயில்கள் இருக்கிறதா என்று கேட்டபோது  ''ஆவராணி போங்க அங்கே பெருமாள் இருக்கிறாரு ''
என வழி காட்டப்பட்டேன்

புராதனமான கோவில். திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட 10 பாசுரங்களால் புகழ்பெற்றது.
இது திவ்யதேசமாகவும், பஞ்ச நாராயண கோயில்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
பங்குனி உத்திரம்: திருக்கண்ணங்குடி கோயிலில் திருமங்கையாழ்வாரின் மங்கலாசாசன விழா.
வைகாசி விசாகம்: அபரானதாரி கோயிலில் ஆனந்த நாராயண பெருமாளின் விழா.
ஆடிப்பூரம்: தேவூர் கோயிலில் தேவ நாராயண பெருமாளின் விழா.
புரட்டாசி சனிக்கிழமை: வடக்கலத்தூர் கோயிலில் வரத நாராயண பெருமாளின் விழா.
பங்குனி உத்திரம்: கிழ்வேலூர் கோயிலில் யாதவ நாராயண பெருமாளின் விழா.
இந்த கோயில்களை தரிசிப்பது பக்தர்களுக்கு ஆன்மிக நன்மைகளை வழங்கும் எனநம்பிக்கை.

ஆபரணதாரி கிராமம் எப்படியோ  காலப்போக்கில்  ஆவராணி ஆகிவிட்டது. இங்கே அற்புதமாக பக்தர்கள் கூட்டம் நெரிசல் இல்லாமல் அமைதியாக  ஸ்ரீமந்  நாராயணர், சர்வாலங்காரத்தோடு அனந்த நாராயண பெருமாளாக  சயனம் கொண்டிருக்கிறார். 

பெருமாளுக்கு சிரத்திலிருந்து  சின்ன கால் விரல் வரை சர்வ ஆபரணங்களையும் சிற்பிகள் கல்லாலேயே அணிவித்து இருக்கிறார் கள். ஆகவே   பெருமாள் இவ்வளவு ஆபரணங்கள் தரித்திருக்கிறாரே களவு போய்விடுமோ என்ற பயமே வேண்டாம். எல்லாம் பெருமாளின் உடன்பிறப்புகள்.  

 சிக்கல் முருகன் கோயிலுக்கு அருகில், நாலு  கி.மீ. தூரத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான வைணவ ஸ்தலம்  இந்த ஆப்ரணதாரி எனும் ஆவராணி பெருமாள் கோவில் 

ஸ்பெஷல் டிக்கெட் வாங்காமல், ஜருகண்டி இல்லாமல், கூட்டத்தில் எவரும் தள்ளு முள்ளு செய்யாமல் அமைதியாக அவர் அருகிலேயே நின்று மணிக்கணக்காக தரிசனம் செய்ய  நான் பாக்யசாலி. 
பெருமாள்  ரங்கநாதர், 21 அடி நீளம், ஆதிசேஷன் மேல் தலை வைத்து படுத்து, முகத்தில் புன் சிரிப்புடன் பக்தர்களை வரவேற்கிறார்.  திருமேனியில் சர்வாபரணங்கள் அணிந்திருப்பதால், 'ஆபரணதாரி'. ஊருக்கும் அதே பெயர் ஆகிவிட்டது. 
தாயார்: அலங்காரவல்லி தாயார், தனித்துவமான சன்னிதியில் கிழக்கே நோக்கி உட்கார்ந்துள்ளார்.
 
ரொம்ப பெரிய கோவில் இல்லை என்றாலும் அழகிய மஹாமண்டபம், அர்த்தமண்டபம் மற்றும் சன்னிதி ஆகியவை உள்ளன. சன்னிதியில் மூன்று வாசல். பக்தர்கள்  பெருமாளை கண்குளிர, கண் நிறைய பார்த்து வணங்கலாம். பாடலாம். 
தலை வாயிலைக் கடந்து கோயிலுக்குள் சென்றால் மகா  மண்டபத்திற்குச் செல்லும் முன்புறம் கருடனைக் காண முடியும். சன்னதியில் எழுந்தருளி இருக்கும் இந்த கருடன் வரப்பிரசாதி ஆவார்.

அர்த்த மண்டபத்தின் வலது பக்கம் ஆஞ்சநேயர் உள்ளார். மகா  மண்டபத்தையும், அர்த்த மண்டபத்தையும் தாண்டி உள்ளது  பெருமாளின் கர்ப்ப க்ரஹம் .

தென் திசை  கிரீடத்தை வைத்துக்கொண்டு  வடக்கு நோக்கி  பாதம் நீட்டியுள்ளார். 21 அடி நீளத்தில் 7ஏழு தலைகள்  கொண்ட  ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ளார் பெருமாள். இங்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த காட்சியை வேறெங்கும் காண முடியாது.

இந்த பெருமாள் அனைத்து ஆபரணங்களையும் அணிந்து கொண்டு இருக்கிறார். அதனால் இவருக்கு ஆபரண தாரி என்கிற பெயரும் வந்தது. அதுவே இந்த ஊரின் பெயராகி பின்னர் ஆவராணி என்று மருவியது.

சயன கோலத்தில் இருக்கும் ஸ்ரீ அனந்த நாராயண பெருமாள். ஒரு கை  தலையைத் தாங்க  இன்னொரு கை முழங்கால் வரை நீண்டுள்ளது. கன்னங்கரிய வடிவத்திலே தைலக்  காப்புக்குள்ளே பெருமாள்  கருமுகில் வண்ணனாக  காட்சி தருகிறார். 
 சிரத்தின் மேல் மணிமகுடம், காதுகளில் குண்டலம், மார்பில்  தோள்களில், புஜத்தில், முன்கையில் என்று   வித விதமான  மணி மாலைகள்,  ஹாரங்கள், உத்தரியம் அணிந்து புஜங்களிலும் தகுந்த அணி  கலன்களோடு  காட்சி தருகிறார்.

ஸ்ரீ அனந்த  நாராயண பெருமாளின்  நாபிக் கமலத்திலிருந்து பிரம்மா எழுந்துள்ள கோலத்தையும் காணலாம். கோயிலின் தென் பிரகாரத்தில் தனிச்   சன்னிதியில் ஸ்ரீ அலங்கார வல்லி தாயார் எழுந்தருளியுள்ளார். பட்டாச்சாரியாருடன்  நாங்கள் எல்லோரும் சேர்ந்து திவ்ய தம்பதிகளுக்கு    வேஷ்டி புடவை எடுத்து அனுப்பாலாமா என்று கேட்டோம்.  ஆஹா திவ்யமாக  என்று சொன்னார்.   நங்கநல்லூர்  திரும்பியவுடன்  ஆவராணிக்கு  ஒரு பார்சல் பட்டாச்சாரியார் பெயருக்கு அனுப்பி வந்து சேர்ந்தது என்று அறிவித்தார்.

இக்கோயிலின் அருகிலேயே சற்று வடகிழக்கில் கோயிலுக்கான பெரிய திருக்குளம் உள்ளது. அனந்த புஷ்கரணி என்பது இக்குலத்தின் பெயர். இத்  திருக்குளத்தில் நீராடி நியமங்களை எல்லாம் முடித்துக் கொண்டு, “அச்சுதா, அனந்தா, கோவிந்தா” என்று மூன்று முறை ஜபித்தால் சகல நன்மைகளையும் பெற்று இன்பமாக வாழலாம் என்பது ஐதீகமாகும்.

இக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் சிக்கலுக்குத் தென்மேற்கில் 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.   
அநந்த புஷ்கரிணி, கோயில் வளாகத்திற்கு வெளியே வடகிழக்கில் அமைந்துள்ள தீர்த்தம். 
து.   மிகப்புராதன கோவில் என்றேனே. 2ம் ராஜராஜ சோழன் உட்பட பல சோழமன்னர்கள் ஆதரவுடன் பராமரிக்கப்பட்டதை  11 கல்வெட்டுகள்  சொல்கிறது. அந்த பாஷை நம்மால் படிக்க முடியாதது. இந்த ஊரை அவை 'ஆபரணாதாரி சதுர்வேதிமங்கலம்' என்கிறது .

காலை  9:00 மணி முதல் 11:00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை தரிசனம் செய்யலாம்.
 

sivan jaykay

unread,
Jun 8, 2025, 7:53:00 PM6/8/25
to amrith...@googlegroups.com


ராஜசூய  யாகம்.  - நங்கநல்லூர்  J K SIVAN 


ஒரு வாரம் முன்பு காஞ்சிபுரத்தில்  திருப்பாடகம்  க்ஷேத்ரத்தில் பாண்டவ தூத பெருமாளை தரிசித்தோம். அதிலிருந்து  கிருஷ்ணனைப் பற்றிய எண்ணங்கள் மனதில் அடிக்கடி தோன்றுகிறது.  அவர்  எப்படி நம்மைக் காட்டிலும் ஒவ்வொரு விஷயத்திலும் வேறுபட்டிருக்கிறார்  என்று ஆச்சர்யமாக இருக்கும். கிருஷ்ணனும்  சாதாரணமாக ஒரு குடும்பத்தில் குழந்தையாக அவதரித்தவன் தானே. 


அவன் தெய்வம் என்று அவனுக்கே தெரியும். அவனுக்கு நம்மைப் போல்  கர்மா எதுவும் இல்லை. அவனைப் போல் நாம் வாழ முடியவே முடியாது. அவனை வணங்கலாம் வழி படலாம் அவ்வளவு தான்.  நரகாசுரனை வதம் செய்து அவன் சிறையில் அடைத்திருந்த பதினாறாயிரம்  ராஜகுமாரிகளை மீட்ட போது அவனை விட்டு பிரிய அவர்கள் மறுத்து அவனே கணவனாக இருக்க வேண்டியபோது தன்னைப் பலவாக பிரித்துக்கொண்டு  அவர்களுக்கு தனித்தனியாக அடைக்கலம் கொடுத்ததை வேறு யார் பின் பற்ற முடியும்? ஒவ்வொரு நாளும் விடிகாலை ப்ரம்மமுகூர்த்ததில் எழுந்து குளித்து, அமைதியாக அமர்ந்து  கிருஷ்ணன் தியானத்தில் ஈடுபடுவான் என்று பாகவதம் சொல்கிறதே. எல்லாமே  அவராகவே இருக்கும்போது  பரமாத்மா தன்னைத் தவிர வேறு யாரை தியானம் பண்ணி இருப்பார் !   நாம் நம்முள் ஆத்மாவாக இருக்கும் அந்த பரமாத்வை ஒரு கணமாவது  தியானம் செய்கிறோமா? ஸ்ரீமன் நாராயணன் தான் ஸ்ரிஷ்டி ஸ்திதி ஸம்ஹார மூர்த்தியாக தன்னையே மூன்றாவதாக பிரித்து வெவ்வேறு நாமங்களில் ரூபங்களில் பக்தர்களை மகிழ்விக்கிறார். எல்லாம் ஒன்றே.  


கிருஷ்ணன் துவாரகை மன்னனாக இருந்தபோது  ஒரு காட்சி மனதில் ஓடுகிறது.


 கிருஷ்ணன்  13084  பசுக்களை  துவாரகையில் பிராமணர்களுக்கு தானம் பண்ணினார் ள். ஒவ்வொரு  பசுவுக்கும் பட்டு வஸ்திரம், முத்து மாலை, கொம்புகளுக்கு தங்க கவசம், கால் கொளம்புகளுக்கு வெள்ளி பூண்.  அவை அத்தனையும் வறட்டு, மலட்டு பசுக்கள் அல்ல. ஒவ்வொரு வேளையும் பல படிகள் கள்ளிச்சொட்டு பால்  கறக்கும் கறவைப் பசுக்கள். அத்தனையும் கன்றுக்குட்டிகளோடு.  இப்படிப்பட்ட பசுக்களைத் தவிர பிராமணர்களுக்கு வஸ்திரங்கள், தானியங்கள், பொற்காசுகள் வேறு. கிருஷ்ணனோ  மஞ்சள் பீதாம்பர வஸ்திரம், கௌஸ்துப, வனமாலை. மயில்பீலி, சந்தனம்  தரித்தவாறு.  ஒவ்வொரு  நாள் காலையிலும் ரிஷிகளும் ப்ராமணர்களும்  கிருஷ்ணன் தரிசனத்துக்கு காத்திருப்பார்கள். கிருஷ்ணன்  பிராமணர்கள் மட்டுமல்ல  மற்ற எல்லோருக்குமே  பாரபக்ஷமின்றி வாரி  வழங்குவார்.


வெளியே போகவேண்டும் என்றால் தேரோட்டி  தாருகன் கைகட்டி தேரை ரெடியாக  அரண்மனை வாசலில் நிறுத்தி பவ்யமாக கிருஷ்ணனை வணங்கி காத்திருப்பான். 

கிருஷ்ணனோடு சாத்யகி, உத்தவர் ஆகியோர் அநேகமாக கூடவே இருப்பார்கள். அவர்களோடு வருவார் கிருஷ்ணன். அந்தப்புர ராணிமார்கள் மற்ற பெரியவர்கள் அனைவரும் கிருஷ்ணனை வழியனுப்ப வரிசையாக நிற்பார்கள். 


கிருஷ்ணன் அரசவை சுதர்மம் என பெயர் கொண்டது. அதில் நுழைந்த எவருமே பசி தாகம், நோய் நொடி, துன்பம் துக்கம், முதுமை, மரண பயம்  எதுவுமே இன்றி சதானந் தத்தில்  ஆழ்ந்து காணப்படுவார்கள்.  யதுகுல ஸிம்ஹாஸனத்தில்  கிருஷ்ணன் அமர்வார். 

பூரண சந்திரனை சுற்று நக்ஷத்திரங்கள் போல் அரசவையில் மற்றவர்கள். கிருஷ்ணன் வந்து அமர்ந்ததும் வேத கோஷங்கள் முழங்கும். வாத்தியங்கள் ஒலிக்கும். தேவலோக பெண்கள் நடனம் ஆடுவார்கள். 


ஒருநாள் வாசலில் எவருமறியாத அந்நியர் ஒருவர் வந்து நின்று, கிருஷ்ணனால் உள்ளே அனுமதிக்கப்பட்டார். வந்தவர்  ஜராசந்தனால் சிறைபிடிக்கப்பட்ட ராஜாக்களின் பிரதிநிதி. 


''மஹா ப்ரபு , நீங்கள் கொடியவரை அழித்து தீயவரைக் கொன்று நல்லோரை காப்பவர். ஜராசந்தனால் துன்புறும் சக்தியற்றவர்களை நீங்கள் தான் காத்து உயிர்ப்பிச்சை வழங்கவேண்டும்.  உங்களை சரணடைந்தோரை காக்கும்  தெய்வம் நீங்கள்.  உங்களுக்கு தெரியும் ஜராசந்தன் பதினாயிரம் யானை பலம் கொண்டவன். அழிக்க முடியாதவன்.  பதினேழு முறை ஜராசந்தனை நீங்கள் வென்று விரட்டி இருக்கிறீர்கள்.  உங்களை அவன் வெல்ல முடியாது. நீங்கள் தான் அவனை வென்று சிறைப்பட்டிருக்கும் ராஜாக்களுக்கு உயிர் பிச்சை அளிக்க வேண்டும். இது அவர்களின்  சரணாகதி வேண்டுகோள் என் மூலம்''.


இந்த நேரம் பார்த்து நாரத முனிவர் கிருஷ்ணன் அரண்மனைக்குள் வந்தார். கிருஷ்ணன் நாரதரை எழுந்து வணங்கி வரவேற்று அருகே ஆசனத்தில் அமரச் செய்தார்.



''திரிலோக சஞ்சாரி மகரிஷி நாரதரே, எங்கெல்லாம்  சென்றீர்கள்? பாண்டவர்களை பார்த்தீர்களா என்ன செய்கிறார்கள்?''


'ப்ரபு, தாங்கள் அறியாததையா  நான் சொல்வேன்?  இருந்தும் என்னை மதித்து கேட்கிறீர் கள். அது என் மேல் உங்களின் கருணை. யுதிஷ்த்ரனை பார்த்தபோது ''கிருஷ்ணனின் ஆசியோடு, ராஜசூய யாகம் நடத்தவேண்டும்'' என்ற ஆசையை தெரிவித்தான். 


கிருஷ்ணனின் உத்தவரைப் பார்த்தார். 


''உத்தவா,  நீ என் நண்பன், சீடன், நீ  ஞானி, அறிவாளி, ஆகவே  நீ என்ன நினைக்கிறாய் சொல்? என கேட்டார்.


''மஹா ப்ரபு , குருநாதா, நாரத மகரிஷி சகலமும் அறிந்த திரிகால ஞானி, அவர் விருப்பம் போல் தாங்கள் ஹஸ்தினாபுரம் சென்று யுதிஷ்டிரர், மற்ற பாண்டவர்களுக்கு ராஜசூய யாக நடத்த வேண்டிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.  எல்லா அரசர்களையும் வென்ற பின் தான் சக்ரவர்த்தியாக  ராஜ சூய யாகம் புரியவேண்டும்.ஜராசந்தனை வெல்லாமல் அது நிறைவேறாது.  அவனை வென்றதோடு நில்லாமல் அவன் சிறைபிடித்த அரசர்களை

 விடுவித்து  அவர்களின் ஆதரவையும்  யுதிஷ்டிரனுக்கு பெற்று தரவேண்டும்.  நீங்கள் தான் அதற்கு வழி காட்டவேண்டும்  என்று எனக்கு தோன்றுகிறது'' என்றார்  உத்தவர்.  


ஸ்ரீமத் பாகவதம் நீளமானது. அதை சுருக்கி கொடுக்கும்போது ஒரு நிலையில் நிப்பாட்ட வேண்டும் அல்லவா? அது தான் இது. அடுத்த பதிவில்  கிருஷ்ணனின் ஹஸ்த்தினாபுர

 பயணம் பற்றி சொல்லலாம் என்று எனக்கு  எண்ணம். சர்வம் க்ரிஷ்ணார்ப்பணமஸ்து. 


sivan jaykay

unread,
Jun 8, 2025, 7:53:00 PM6/8/25
to amrith...@googlegroups.com


31/5/2025 புனித யாத்திரை.    நங்கநல்லூர்  J K  SIVAN
கடைசி பதிவு.

கடும் கோடையில் அக்னி நக்ஷத்ரம் இப்போது தான் முடிந்த நிலையிலும் சூடு தாங்கமுடியவில்லை. அப்படிப்பட்ட வெயிலில் வயதானவர்கள் கோயில் கோயிலாக  திரிய முடியும் என்றால் அதற்கு குளிர் சாதன சௌகரியமான குலுங்காத பஸ் தேவை. அது தான் எங்களது டெம்போ FORCE  18 இருக்கை  வண்டி.

பிற்பகல் ரெண்டு மணிக்கு மோரணம்  கிராமம் வந்து சேர்ந்தோம். அமைதியான கிராமம். வாசலிலேயே சுந்தரேசன் ஜெகதீஸ்வரி தம்பதிகள்  உண்மையாகவே  வழிமேல் விழி வைத்து  காத்திருந்தார்கள்.
அக்ரஹாரத்தில் ப்ராமண குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. நாலு வீடு தள்ளி  ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத அஷ்ட மூர்த்தீஸ்வரர் சின்ன ஆலயம். அர்ச்சகர் பட்டாபிராமன் கொடுத்து வைத்த மகராஜன். ரெண்டு பிள்ளைகளும் சங்கநிதி பத்மநிதி  படித்துக்கொண்டிருந்தாலும் கோயில் கைங்கர்யத்தில் அப்பாவுக்கு இரு கரங்களாக சேவை செய்பவர்கள். பகல் ரெண்டு மணிக்கே   ரெண்டாம்  ராஜராஜ சோழன்  காலத்து  சிவலிங்கம்.   காஞ்சி பெரியவா வந்து தரிசித்திருக்கிறார்.  அவரால்  அஷ்ட மூர்த்தீஸ்வரர்,  என பெயர் அடையாளம் காணப்பட்டனர். அம்பாள் இருவருக்கும் அபிஷேகம், அர்ச்சனை, அலங்காரம் செய்ய எங்கள் வருகைக்காக காத்திருந்தார்கள். 

அதற்குள் நாங்கள் சுந்தரேசன் தம்பதிகள் வீட்டுக்குள் நுழைந்து கைகால்  அலம்பி வரிசையாக வாழை இல்லை முன் அமர்ந்து விட்டோம். தரையில் உட்காரமுடியாத என்போன்ற சிலருக்கு  நாற்காலிகளில் அமரவைத்து  , மேசைமேல் இலையில் அல்லது கையில் பாக்குமரத்தட்டில் பரிமாறினார்கள். அர்ச்சகர் மனைவி, ஜெகதீஸ்வரி, அவர்களது மகன் சுடச்சுட உணவு படைத்தார்கள். சுத்த பசும்பால் பால்கோவா ஊரில் தயாரிக்கிறார்கள். அதில் எல்லோருக்கும் கொஞ்சம்  இலையில் விழுந்தது.  

சாம்பார், ரசம், கூட்டு, பொரித்த அப்பளம், ஊறுகாய், முட்டைகோஸ் காய், என்று மாறி மாறி  அயிட்டங்கள் வயிறு நிரம்ப பரிமாறப்பட்டு  உண்டோம். கோவிலுக்கு ஓடி அபிஷேகம், அர்ச்சனை, அலங்காரத்தை ரசித்தோம்.  அபிஷேகத்தின் போது , சுந்தரேசன், கங்காதீஸ்வரன்,  கணேசன், நான் ஆகியோரும் ஸ்ரீ ருத்ரம் சமகம் பாராயணம் பண்ணினோம்.   அர்ச்சகர் மகன்கள் தந்தைக்கேற்ற தனயர்கள். அற்புதமாக அலங்காரம் அபிஷேகம்  பண்ண தெரிந்தவர்கள்.  அம்பாளும் அரனும்  எங்களுக்கு  கண்கொள்ளா காட்சி அளித்தார்கள். 

எங்கள்  அனைவர் குடும்பத்தினருக்கும் அர்ச்சனை செய்வித்தோம். எங்களுக்கு மாலை மரியாதை செய்து கௌரவித்தார்கள். கோவிலுக்கு எங்களான காணிக்கைகளை  தந்தோம்.  150 கி.மீ. தூரத்தில் இருப்பது மூன்றே மூன்று அர்ச்சகர்கள் தான் என்ற அவல நிலை நமது ஹிந்து சனாதனத்தில்  இப்போது நிலவுவதை புரிந்து  கொண்டோம்.   கிராம கோவில்களை கவனிப்பார் இல்லை.  ஆகவே  நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்தவரை  அவரவர் ஊர்களில் உள்ள சிறிய பழைய கோவில்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய மறக்கவோ, தவறவோ கூடாது.  பெரிய கோவில்களுக்கு வருமானம் வரும், அதனால் அங்கே அரசுத்துறை ஆட்களும் நடமாடுவார்கள். 

 சாயந்திர வேளை.  நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. அனைவருக்கும்  காப்பி டீ  சுந்தரேசன் தம்பதியர் வழங்கி, வெற்றிலை பாக்கு பழம் தாம்பூல மரியாதைகள் கொடுத்து வழி அனுப்பியதோடு வழியில் இரவு சாப்பிட  சப்பாத்தி இஞ்சி ஊறுகாய் போன்றவையும் பொட்டலம் கட்டி கொடுத்தார்கள். பிரிய மனமில்லாமல் பிரிந்து கலவை நோக்கி பயணித்தோம். 

கலவையி  66வது 67வைத்து காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் அதிஷ்டானங்கள் இரண்டுக்கும் நடுவே துளசியாக 68வது மஹா பெரியவாளும் இருப்பதால் வணங்கி வழிபட்டு  வீடு திரும்பினோம். இரவு ஒன்பதரை மணிக்கு நங்கநல்லூரில் நெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்ததும்  சிதறி வீடுகளை நோக்கி ஓடியது.  



sivan jaykay

unread,
Jun 8, 2025, 7:53:08 PM6/8/25
to amrith...@googlegroups.com

எங்கும் உள்ள பரம்பொருள் -   நங்கநல்லூர்  J K SIVAN 

மூன்று விஷயங்களை பிரித்து புரிந்து கொள்ள முடியாது.  ப்ரபஞ்சம் , அதைப் படைத்த பகவான்.  ப்ரபஞ்சத்தோடு  இணைந்த  மாயை.  

இந்த சேர்க்கை தான் நமது உலக வாழ்வு. சாஸ்வதமான ஒன்று  பகவான் மட்டுமே. ஆனால் மற்றதெல்லாம் நமக்கு ஸாஸ்வதமாக தோன்றுகிறது.  ஞானம் என்பதன் மறு பெயர் தான் பகவான். ப்ரம்மம்.  
வார்த்தைகளற்றது. அமைதி. சாந்த ஸ்வரூபம். எல்லையில்லாத அதை, அளக்க முயல்வது அறிவீனம், அறியாமை.   நமது செயல்களுக்கு சக்தி அளிப்பது ஆத்மா. அதுவே  அண்டத்தின் பிம்பமான ஒளி. நம்முள் இருந்து நம்மை ரக்ஷிப்பது. இயக்குவது. 

எத்தனை ஆயிரம் சூர்ய ஒளியும் ஆத்ம ஒளிக்கு முன்  ஈடாகாது. ஆத்மா  பகவானின் பிரதிபலிப்பாக, அமைதி சின்னமாக, பூர்ண அழகோடு திகழ்வது. உருவமின்றி ரமிக்க வைப்பது.   நான்கு வேதங்களிலும் 'ஓம்'  எனும் மந்திர சக்தியாக ஒளிர்வது. உள்ளே மட்டும் இல்லை, வெளியேயும் எங்கும் நிறைந்ததாக இருப்பதால் தான்  ''அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அருளொளி நிறைந்த....'' என்று ஞானிகள் பாடி இருக்கிறார்கள்.   அதை சத்சிதானந்தம், பரிபூரணம், ஆதி அந்தமில்லாதது,, பிறப்பு பிறப்பற்ற நித்யம், அலையற்ற ஆழ் அமைதி கடல்,  என்று வர்ணிக்க முடியாத அதை  வர்ணிக்கிறார்கள். 

 பிரபஞ்சத்தில்,  இல்லாததெல்லாம் இருப்பது போல் தோன்ற வைக்கும் மாயையில் சிக்குண்டு, 
அவஸ்தைப்
படுகிறோம். , இருப்பதெதுவும் இல்லாதது என்று புரிந்து கொள்ள தயங்குகிறோம்.  மறுக்கிறோம்.  சம்சார சாகரத்தில் மூழ்கி அமைதி இழக்கிறோம். ஆணவம், விருப்பு, வெறுப்பு, அசூயை,  .கோபம், காமம்,  இதில்  மயங்கி சாகிறோம்.   சிலந்தி போல் நம்மை சுற்றி நாமே வலை பின்னிக்கொண்டு அதில் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறோம். 

மாயை ஒரு கானல் நீர்.   உலகம்  ஒரு நீர்க்குமிழி.  பிரபஞ்சம் என்பதை மனதின் வெளிப்பாடு. கனவு போன்றது. மனதின் எண்ணங்களுக்கு ஏற்ப  உலகம் மாறி மாறி காண்கிறது.   இதை கொஞ்சமாவது உணர்ந்து  விழித்துக் கொள்வோம்.  எண்ணங்கள் எல்லாமே  நாம் காணும் உலக வண்ணங்களும்  ஒலியும்  தான். மனது இறைவன் மேல் ஒருமைப்பட்டால் இதெல்லாம் ஓடிப்போய்விடும்.  அவன் ஒருவனே சகலமும் என்பது புரியும். 

வித வித பெயர்கள்  வேகங்கள் கொண்ட நதிகள் எல்லாம் கடைசியில் கடலில் கலந்த பிறகு தனது அடையாளத்தை இழந்து  அமைதியான அலையற்ற நீராக மாறுவது போல், அப்போதும் நாம் கடவுளில் நாம் கரைவோம். 

அதற்காகத்தான் கோயிலுக்கு போவது. அங்கு சென்றால் அங்கிருக்கும் சில நிமிஷங்களில் ஆவது நமது மனது அமைதி பெறுகிறது. நாம் எவ்வளவு  அல்பம் , சிறிய தூசி என்று உணர்கிறோம் அல்லவா?. கடவுள் தரிசனத்தில் மனம் இன்புறுகிறது அல்லவா?. அதுவே  ஆரம்பம்.. எல்லா வர்ணங்களும் கண்ணில் தான் இருக்கிறது. சூரியனின் பிம்பம் எல்லாவற்றிலிலும் பிரதிபலிப்பது போல் நாம் அத்தனை பேரும்  பிரம்மத்தின் பிம்பங்கள். 
 
நிறைய பேரை நான் கோவில்களுக்கு அழைத்துப் போவதற்கு இதுவும்  ஒரு முக்கிய காரணம்.

sivan jaykay

unread,
Jun 8, 2025, 7:53:08 PM6/8/25
to amrith...@googlegroups.com

சாப்பாட்டில் கவனம்.   நங்கநல்லூர்  J  K  SIVAN 

''சாப்டும்போது என்னடா பேச்சு? 
என்னவோ போன்லெ எப்பப்பார்த்தாலும்  யாரோடயோ பேசிண்டே சாப்ட்டா எப்படி ஜீரணம் ஆகும்?.
 உடம்புலே ஒட்டாது''   
பாட்டியோ, அத்தையோ, அம்மாவோ இப்படி  சொல்றது ஞாயமா?. ஏதோ ஒண்ணை  தான் பண்ணனும். ஒண்ணுலே தான் மனசு இருக்கணும். சாப்பாடா? பேச்சா?

''வேக வேகமா பறக்காவாட்டியாட்டமா சோத்தை  முழுங்காதே டா. தரித்ரம் தான் வந்து சேரும். மெதுவா கடிச்சு சாப்பிடு. புஸ்தகம் எதுக்கு சாப்பிடும்போது?''  
 இதுவும் சரியா?
புஸ்தகத்தை மூடிட்டு, போனை off  பண்ணிட்டு,  மெதுவா சாப்பிட்டா மனசு  சாப்பாட்டுல, சாப்பிடறதிலே  போகுமா?  யாராவது  காரண்டீ கொடுக்க முடியுமா?
 மனசு வாய்லேயா இருக்கு இல்லே கண்லே  இருக்கா?  அதை முதல்லே புரிஞ்சுக்கணும்.
மனசை வைக்கிறதுக்கு  இங்கிலீஷ்லே  mindful னு சொல்றோமே என்ன அர்த்தம்?. மனசு பூரா ஒண்ணுலே இருப்பது. 

 காய்கறியை கூரான கத்தியால் வெட்டும்போது கவனம், மனசு,  கத்தியின்  கூரிலே இருக்கணும். விரல்  காய்கறியை  கத்தியின் முனைக்கு  நகர்த்துவதில் லாகவமாக  நகரணும் . அதுக்கு மனசு, புத்தி, அது மேலே தான் இருக்கணும். இதுக்கு மெதுவா தான் வெட்டணும்னு அவசியம் இல்லை. வேக  வேகமா வெட்டினாலும் மனசு அதிலே தான் இருக்கணும்.  இப்படி நிமிஷமா வெட்டுகிறவர்கள் இருக்கிறார்களே. 
சாப்பிடறது  எதுவானாலும் ரசிச்சு, விரும்பி சாப்பிடணும். அப்படி தான் நான் கொஞ்சமா சாப்பிட்டாலும் ரசிச்சு சாப்பிடுவேன். இதுக்கு வேகம், மெதுவா என்று ஒன்றும் இல்லை. பிடிக்காததை சாப்பிட்டா அது உடம்புக்கு ஒட்டாது. வாயிலெடுக்க வரும். அஜீரணம் உண்டாக்கும். பாத்ரூம் தேடி ஓடணும். தேவையா? 

அளவோடு சாப்பிடணும். ருசியா இருக்குன்னு வாரி வளச்சு விழுங்க கூடாது. ஒரே நாளில்  ரெண்டு கல்யாணத்துக்கு போய் ஏதாவது சாப்பிட்டாலும் அளவா, பிடிச்சதை கொஞ்சமா சாப்பிட்டா ஒன்னும் ஆகறதில்லே.  என்ன சாப்பிடறோம் என்கிறதிலே மனசு இருக்கணும். அதை கிருஷ்ணனுக்கு அர்ப்பணிச் சுட்டு சாப்பிடுவேன். தண்ணி குடிச்சாலும் முதல்ல அது கிருஷ்ணன் வாய்க்கு தான்.  

சில பேர் சாப்பிட்டா  குழம்பு, ரசம், கூட்டு ,பாயசம்,  காய் எல்லாம் சட்டையில், வாயில், கன்னத்தில் இருக்கும். அந்த அவசரம் வேண்டவே வேண்டாம். ஒவ்வொரு ஸ்பூனாக, அல்லது கைவிரல்களால்,  கொட்டாமல் சிந்தாமல், சிதறாமல் நிதானமாக  எடுத்து வாயில் போட்டுக்கொள்ளலாம். இலையிலிருந்து வழிந்து வெள்ளை வேஷ்டியிலோ, ஜிப்பாவிலோ படவே படாது. டேபிளில் இருக்கும்  இலைக்கும்  என் சட்டைக்கும் போதிய இடைவெளி இருக்கும்.  பசித்து சாப்பிடவேண்டும். 

குழந்தைகளுக்கு ஊட்டுவது எவ்வளவு கஷ்டம்? ஏன்? அவர்களுக்கு சாப்பிடுவதிலோ, உணவின் ருசியோ  தெரியாது. தாய்க்கு தான் அதை அவர்களுக்கு பழக்கப்படுத்துபவள். ஆகவே  அவள் பிரயாசைப் பட்டு கற்பிப்பது தான்  சாதம் ஊட்டுவது.   அது ஒரு அவசிய பாடம்.  நிலவைக் காட்டி,  டிவியில் ஏதோ ஒரு கார்ட்டூன் காட்டி, புத்தகத்தில் ஏதோ ஒரு வண்ணவண்ண படம் காட்டி , காக்கா , குருவி காட்டி, டான்ஸ் ஆடிக்கொண்டே, ஊட்டுகிறாள்..   குழந்தையின் உணவுக்கும் அதற்கும் ஒருஉறவு அமைத்து உணவு ஊட்டுகிறாள்.  அதட்டி உருட்டி  ஊட்டினால் பாதி குழந்தைகள் துப்பி விடுகிறது. 

எப்போதும் மனசு ஏதோ ஒரு கவலையிலோ, ஏதோ ஒரு ப்ராப்ளம்  மீதிலோ இருந்தால் சாப்பிட பிடிக்காது. அதில் சந்தோஷம் இருக்காது. சந்தோஷமாக இருந்தால் தான் சாப்பிட முடியும்.  உணவு சந்தோஷத்தை தரும் என்பது தவறு.
பசி தான் ருசியை கூட்டுகிறது. 
ஒவ்வொரு தடவை சாப்பிடும்போதும்  பல மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். என் விஷயத்தில் நிச்சயம் மூன்று மணி நேரமாவது இருந்தால் தான் ஏதோ ஒரு சின்ன  தின்பண்டமாவது  உள்ளே போகும். 
முட்டாளுக்கு மோரும் சாதமும் என்பது ஒரே வித உணவை தினமும் சாப்பிடுவது. அது விருப்பத்தையோ, உடலில் உணவின் செறிமானத்தையோ பாதிக்கும்.

சிலர்  இதைத் தான்  இவ்வளவு தான் சாப்பிடவேண்டும், இது இதயத்துக்கு, குடலுக்கு, மூளைக்கு, நரம்புக்கு, எலும்புக்கு, ரத்தம் ஊற, கொலஸ்ட்ரால் வராமல் இருக்க,  சர்க்கரையை கட்டுப்படுத்த  என்று  உணவை தேடி சாப்பிட்டால் அது உணவல்ல, மருந்து.  நிச்சயம் உடலுக்கு உதவாது. 

அதற்காக  நிறைய  எண்ணையில் ஊறிய, வறுக்கப்பட்ட, காரமான, கெடுதல் செய்யும் என தெரிந்தும் அளவுக்கு அதிகமாக அதன் ருசிக்காக சாப்பிடுவனுக்கு நிச்சயம் உணவு எதிரியாகமாறிவிடும்.  

sivan jaykay

unread,
Jun 8, 2025, 7:53:08 PM6/8/25
to amrith...@googlegroups.com


31.4.2025  புனித யாத்திரை  -  நங்கநல்லூர்  J K  SIVAN
2வது  பகுதி

18 பேர், வெவ்வேறு வயதினர், ஆண்  பெண், முதியவர்கள்  ஒரே வேகத்தில் நடக்க முடியாது. படி ஏற முடியாது.  வெறும் காலில் கோவில்களின் சுடும்  கல் தரையில்  நடப்பது சுகம் இல்லை. அப்படியும்  என்னுடன் வந்த அனைவரும்  தொய்வின்றி நடந்தார்கள். மனம் நிறைய சந்தோஷம் காலுக்கு தெம்பு கொடுத்தது. பன்னிரண்டு மணிக்குள் எவ்வளவு கோவில் பார்க்க முடியுமோ அதை பார்த்து விட வேண்டும். எங்கே அடுத்தது என்று தேட நேரமில்லை என்பதற்காகவே  சுதா என்ற உள்ளூர்  பெண் உதவி தேவையானது. அவளும் விடாமல் நேரம் தாமதமாகாமல் முடிந்தவரை  ஒன்றன் பின் ஒன்றாக  கோவில்களுக்கு அழைத்துச் சென்றாள் . நமஸ்காரம் அந்த பெண்மணிக்கு.

அடுத்து நாங்கள் திருவேளுக்கை  எனும்  திவ்யதேச கோவிலுக்கு சென்றோம். ஆழ்வார்களால் மங்களா சாசனம்  செய்யப்பெற்றது.   திருத் தண்கா எனும்  விளக்கொளி பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் அட்டபுயக்கரம் கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வேள்  என்றால் ''ஆசை'' .  வேட்கை என்போமே அது.   ''இங்கே  இருக்கவேண்டும்'' என்ற ஆசை  அஹோபில நரசிம்மருக்கு தோன்றியதால் இந்த இடம் செலக்ட் செய்தார்.   ''வேள்  இருக்கை''  என்பது நாளடைவில்  'வேளுக்கை'  ஆனது.  அழகிய சிங்கர் இங்கே  நரசிம்மரின் நாமம்.
. காமாட்சிகா நரசிம்ம சன்னதி என்றும்  இன்னொரு பெயர். யோக முத்திரை யுடன் மேற்கு நோக்கி அழகிய சிங்கர்  அமர்ந்த திருக்கோலம். தாயார்  வேளுக்கை வல்லி, அம்ருத வல்லி, தனிக் கோவில் நாச்சியார் என்ற பெயர்கள்  கொண்டவர்.  8ம் நூற்றாண்டு பல்லவ கோயில். பின்னால்
 சோழர்கள் விஜயநகர நாயக்கர்கள்  பராமரித்து இன்று நமக்கு  தரிசிக்க கிடைத்திருக்கிறது.  கோயிலில். கல்வெட்டுகள் நிறைய  இருக்கிறது.

அழகிய சிங்கர்  தரிசனம் பெற்று திருத்தண்கா, தூப்புலுக்கு  ஓடினோம்.  இந்த ஆலயத்துக்கு இன்னொரு பெயர் விளக்கொளி பெருமாள் கோயில். பெருமாள் தீபப்ரகாசர்.  திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திவ்ய தேசம்.  வேதாந்த தேசிகன்" அவதாரம் செய்த திருத்தலம் இந்த    தூப்புல். ''தண்''=குளிர்ச்சி. ''கா''=  சோலை. குளிர்ச்சியாக இருக்கும் சோலை பற்றி சம்மரில், கோடைகாலத்தில் பெயர் கேட்கும்போதே உடலில் சுகமாக இருக்கிறது. 

ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலை   நிறுத்த திருமால் உதவி புரிந்தபோது, யாகத்தைத் தடுக்க   ஸரஸ்வதி தேவி  நினைத்து அதை தடுக்க முயன்று  தோற்று கடைசியில்  உலகையே இருளடைய செய்தாள். ப்ரம்மா மகாவிஷ்ணுவைத் துதிக்க,   அவர்  ஜோதி மயமாய்த் தோன்றி பிரம்மனின் யாகம் தொடர தீப பிரகாசம் கொடுத்ததாக  புராணம்.   மேற்கு  நோக்கி நிற்கும் பெருமாள் கையில் அக்னி தான் தீபம். . தாயார் மரகதவல்லி.

விளக்கு ஒளிச்சம் தேவைப்படாமல்  வெயிலில் அடுத்து வேகமாக  நாங்கள் சென்றடைந்தது பாண்டவ தூத பெருமாள்  கோவில். அது பெரிய காஞ்சிபுரத்தில் உள்ளது. திருப்பாடகம்  என்ற பெயர் கொண்டது.  திவ்ய தேச க்ஷேத்ரம். கிருஷ்ணன் கோவில்.  ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. அற்புதமான  கிருஷ்ணன் கருப்பு சிலையாக   25 அடி உயரத்தில், மூலஸ்தானத்தில் அமர்ந்த நிலையில் எங்களை  தலை தூக்கி உயரே பார்க்க வைத்து ஆசி அளித்தார்.

கண்ணன் பஞ்ச  பாண்டவர்களுக்குத்  தூதுவராக ஹஸ்தினாபுரம்  சென்றதால், கிருஷ்ணனுக்கு "பாண்டவ தூதப் பெருமாள்" என பெயர்.   கல்வெட்டுகள்  "தூத ஹரி" எகிறது.  இங்குள்ள கோலம்  திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான்  காட்டிய சம்பவம் இங்கே  சிலையாக நாம் காண்கிறோம்.  

வைசம்பாயன மகரிஷிக்கு தானும் கிருஷ்ணனின் விஸ்வரூபம் தரிசிக்க ஆசை. ஆகவே  இங்கே வந்தார். தவமிருந்தார்.  நமக்குச் சிலையாக காட்சி தரும் கிருஷ்ணன் அவருக்கு ஸ்வயமாக  விஸ்வ  ரூபத்தை காட்டினார் என்பார்கள்.

சூரியன் உச்சியை தொட்டு  விட்டான்.  பகல் பன்னிரண்டு ஆகி கடிகார முள் நகர நேராக 1230க்கு சென்றால்  காஞ்சி சங்கர மடத்தில் அதிஷ்டானத்தில் தீர்த்த பிரசாதம் பெறலாம் என்று ஓடினோம். வரிசையில் நின்றோம். மெழுகு உருவத்தில் தத்ரூபமாக  மஹா பெரியவா அமர்ந்திருக்கும் காட்சியை க் கண்டு மகிழ்ந்து வணங்கி வரிசையில் நின்று தீர்த்தம் வாழைப்பழ பிரசாதம் பெற்று அருகே  குமர கோட்டம் சென்றோம். அங்கே பூக்கடை வைத்திருக்கும்  சுதா எப்படியோ எங்களை ஆலயம் மூடுவதற்குள் உள்ளே அழைத்து சென்று தரிசனம் பெற வைத்தார்.   

காஞ்சிபுரத்தில் முருகன் ஆலயம் குமரகோட்டம்  என பிரபலமானது. தேவ சேனாபதீச்வரம் என்றும் பெயர். இங்கே தான் கந்தபுராணம் கச்சியப்பரால் இயற்றப்பட்டு  அரங்கேறியது. அந்த  கல் மண்டபம் தற்போது கச்சியப்பர் நூலகம். அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள்  ஆகியோர்  தரிசித்து பாடல் பெற்ற ஸ்தலம். வள்ளி தேவயானை  சமேத  சுப்பிரமணியர், ருத்ராக்ஷம் தரித்து கமண்டலம் ஒருகையில்  ஏந்தி  இன்னொரு கையில்  வேல் தாங்கி அழகாக நிற்கிறார். இடையில் மான் தோல் வஸ்திரம், தர்ப்பை அரைஞாண். இந்த ஆலயம் செல்வோர் கட்டாயம் இங்கே உள்ள நாக சுப்ரமணியரை தரிசிக்கவேண்டும்.

 கர்நாடகாவில் குக்கே சுப்பிரமணியனுக்கு அடுத்தபடி இங்கே தான் நாக சுப்ரமணியன்  ஐந்து தலை நாகம் குடைபிடிக்க அருள் பாலிக்கிறார்.  சர்ப்ப தோஷம் விலகும். 

முருகன் தமிழ்க்  கடவுள். கச்சியப்ப சிவாசாரியாருக்கு  முதல் வார்த்தை  "திகடச் சக்கரம்" என அடி யெடுத் துக் கொடுத்து கந்தபுராணம் எழுத வைத்த  அற்புத ஸ்தலம். ஒரு தரமாவது கண்டிப்பாக பார்க்க வேண்டிய  க்ஷேத்ரம். 
 காஞ்சிபுரம் நடுப்பகுதியில்   பெரிய காஞ்சிபுரம் எனும் சிவகாஞ்சியில், மேலண்டை இராசவீதி யில் ஆலயம் அமைந்துள்ளது. 
ஒரு முக்கிய விஷயம். காஞ்சி காமாக்ஷி ஆலயம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆதி காமாக்ஷி ஆலயம் இருப்பது தெரியுமா? குமரகோட்டத்தின் அருகே உள்ளது ஆதிகாமாக்ஷி எனும் காளிகாம்பாள் ஆலயம். 

நேரம் அதிகமாகி விட்டது.  பிற்பகல் ஒரு மணிஆகிவிட்டதால் எல்லோர் முகத்திலும் களைப்பு, கண்களில் பசி. ஆகவே பஸ் ஓட்டும் சுப்பிரமணியர் தயவால்  பஸ்ஸை வேகமாக  ஓடவைத்து  கலவை அருகே, வெம்பாக்கம் தாலுக்காவில் மோரணம்  கிராமம் நோக்கி பறக்க செய்தோம். 41 கி.மீ. சென்ற பிறகு தான் கண் எதிரே  இலையில் சுடச்சுட சாதம் விழப்போகிறது.  

நீங்களும் காத்திருங்கள். அடுத்த பதிவில்  சாப்பிடுவோம், சந்திப்போம். 



sivan jaykay

unread,
Jun 8, 2025, 7:53:08 PM6/8/25
to amrith...@googlegroups.com

மயில் ராவணன்.    நங்கநல்லூர் J K  SIVAN 

ராவணனின்  தர்பார்.  அனல் பறக்கிறது விவாதங்களில்.  கேவலம் ஒரு  மனிதன். ராமன். கால் தூசி  போல எனக்கு. அவனை வெல்லமுடியாமல் நமது சேனை மேலும் மேலும் சேதமடைகிறதே? அவனிடம் இவ்வளவு பயமா? நமது வீரம் எங்கே போயிற்று? நம்முள் அவனை வெல்லும் வீரன் எவனும் இல்லையா?''
ராவணன் கொதித்தான். 
மந்திரி ப்ரஹஸ்தன் மெதுவாக இருக்கையை விட்டு எழுந்தான். 
''மஹாராஜா,  நீங்கள் அற்புதமான அசாதாரணமான ஒரு பக்க பலத்தை ஏன் இன்னும் நினைக்கவில்லை என்று எனக்கு புரியவில்லை''
''பிரஹஸ்தா, யாரைச் சொல்கிறாய் நீ?''
''உங்கள் உறவினன், பலம் மிக்க அசகாய சூரன் மயில் இராவணன்''
‘ஆஹா,  நான் ஏன் அவனை நினைக்கவே இல்லை?  எனக்கு அவனைப்  பற்றிய நினைப்பு ஏன் வராமல் போனது?  மயில்  ராவணன் நிச்சயம் ஒரு அசாத்திய சூரன். இந்த யோசனை நல்ல யோசனைதான். போகட்டும்,
 ''மயில் ராவணா, நான் உன்னைப் பார்க்க வேண்டுமே’ 
ராவணன் அவனை  நினைத்த  அடுத்த கணத்திலேயே  மயில் ராவணனுக்கு ராவணன் தன்னை நினைத்தது தெரிந்துவிட்டது. அவ்வளவு சக்தி உள்ள மாயாவி அவன். 

''ஏன் அண்ணா  ராவணேஸ்வரன் என்னை நினைக்கிறான்? தீர்க்க முடியாத கஷ்டம் இல்லை ஏதாவது  ஆபத்து என்றால் தவிர என்னை நினைக்க மாட்டானே. அப்படி அவனாலேயே தீர்க்க முடியாத  ஏதோ ஒரு  ஆபத்து அவனுக்கு   எது வந்திருக்கும்? இனி தாமதிக்கலாகாது…யோசனையும் செய்யக் கூடாது. உடனே நான் செல்ல வேண்டும்'  என்று முடிவெடுத்து பாதாளத்தில் இருந்து   சுனாமி போல  லங்கைக்கு வந்துவிட்டான். 
ராவணனை கட்டி நமஸ்கரித்தான். 

'அண்ணா  என்ன ஆயிற்று உநாக்கு. நான் வரும் வழியெல்லாம் பார்த்தேன் . ஏன் லங்காபுரி  நிர்மூலமாகிக் கிடக்கிறது ?அங்கங்கே பிணக்  குவியலும், நாற்றமும் தாங்க முடியவில்லையே……என்ன நடந்தது ?

''வாடா,  மயில் ராவணா, உன்னை தான் நினைத்தேன்.  உனக்கு தெரியுமே  தசரதன். அயோத்தி ராஜா. அவன் பிள்ளைகள்  ரெண்டு பேர், ராமன், லக்ஷ்மணன். தண்டகாரண்ய  வனத்தில்  நம் தங்கை  சூர்ப்பனகை யை
 அந்த  லஷ்மணன் மானபங்கம் செய்து காயப்படுத்தியதால் அவள் ஓடிவந்து என்னிடம் து முறையிட்டாள். அதனால்  நான் கோபத்தோடு அவர்களுக்கு பாடம் கற்பிக்க ராமன் மனைவி சீதையை தூக்கிக் கொண்டு வந்து இங்கே  சிறையிலிட்டேன். ராமன் ஒரு பலசாலிக் குரங்கை அனுப்பி சீதையை தேடினபோது , அந்த குரங்கு இங்கே வந்து  சீதையைக் கண்டு பேசிவிட்டு  அதோடு நிற்காமல்  லங்கை முழுதும்  தீ வைத்து நாசப்படுத்தி விட்டுப் போயிற்று.   அதன் மூலம்  சீதை இங்கே இருப்பதை அறிந்த ராமனும் லக்ஷ்மணனும்  பெரிய  வானர சேனையுடன்  இங்கே வந்து  போர் புரிகிறார்கள். நம் சந்ததியினர் அனைவரையும் அழித்து விட்டார்கள்.  பாதிக்கு மேல்  நமது சேனை அழிந்து விட்டது. 

எனக்கே  அதிர்ச்சி. என்ன செய்வது என்று கலங்கிய வேளையிலே பிரஹஸ்தன் உன்னை நினைவு படுத்தினான்.   மயில் ராவணா, நீ தான் உடனே சென்று அந்த ராம லக்ஷ்மணர்களை நிர்மூலமாக அழிக்க வேண்டும். அவர்களுக்கு ஆத்ம பலத்தை விட வேறேதோ பலமும் உள்ளது. அது என்ன என்பதே தெரியலே. அதனால்தான் அவர்களை மாயத்தாலேயே அழிக்க முடியும் என நினைத்தேன். மாயாஜால, மந்திர சக்தி உள்ள, ஜெகத்ஜால  வித்தகனான நீ  ராம லஷ்மணர்களையும், வானர சேனைகளையும் அழித்து என்னைக் காப்பாற்ற வேண்டும் ’.

மயில் ராவணனுக்கும்  திகைப்பு. ராவணனாவது தோற்பதாவது? மூவுலகும் அஞ்சு பராக்ரமன் அல்லவோ ராவணேஸ்வரன். 

‘அண்ணா, கலங்காதே,   நீ மஹா வீரன். அதிசூரன். உனக்கா இந்த நிலை. முன்பே நீ என்னை அழைக்காமல் போய்விட்டாயே. நான் என்ன செய்யவேண்டும் சொல். உடனே செய்கிறேன்’ '' மயில் ராவணன் கோபத்தில் கண்கள் சிவக்க கத்தினான். ஆக்ரோஷத்தோடு எழுந்து குதித்தான். 

''மயில் ராவணா  .பதற்றப்படாதே.  நீ நினைப்பது போல ராமனும் லஷ்மணனும் சாமான்யமானவர்கள்  இல்லை.  மிக மிக பலசாலிகள். அவர்களுக்கு எதோ தெய்வ அனுக்ரஹம் உள்ளது.அதனால்தான் நம் சேனைகளை காட்டிலே மரத்துக்கு மரம் தாவி பழம் தின்னும் வானரங்களைக் கொண்டே நிர்மூலப்படுத்தி விட்டார்கள். ஆகவே அவர்களை தந்திரத்தாலே  தான் அழிக்க வேண்டும். யோசி ''

'' அண்ணா , நீ சொல்வது போல்  தந்திரமாக  அந்த ரெண்டு  பேரையும் பாதாளத்துக்கு கொண்டு போய் என் காளிக்கு பலி தருவேன். காளி மேல் சத்தியம்’.''

காளிக்கு பலி தருவேன் என்று மயில் ராவணன் சத்யம் செய்தான் என்றால் எவராலும் அவனை தடுக்க முடி யாது.   அதல பாதாள காளி  உக்ரமானவள். பலியை  ஏற்காமல் விட மாட்டாள்.

பாதாள காளிக்கு பலி தர சங்கல்பம் செய்யும்போது  யாரை பலி தரவேண்டுமோ அவர்களது  பொம்மைகளைச் செய்து காளி காலடியில் வைக்க வேண்டும். அவர்களைக் கொண்டு வர அவள் சக்திதர  வேண்டும் என பிரார்த்தித்து   அந்த பொம்மைகள்  மீது ரத்தத்தை கொட்டி சத்யம் செய்யவேண்டும். மயில் இராவணன் இப்படி செய்தான் 

ராவணன் அரண்மனையில்  ராவணனும், மயில் ராவணனும் பேசிக் கொண்டிருந்ததை விபீஷணனின் பெண் திரிசடை ஒட்டுக் கேட்டு விட்டாள்.  மயில் ராவணன்  வந்தபோதே அவளுக்கு சந்தேகம். ‘என்னிக்கும் இல்லாமல் இன்னிக்கு ஏன் இவன் வரான்?. ராம லக்ஷ்மணர்களை கொன்று காளிக்கு பலியிட  திட்டம் என கேட்டு கவலைப்பட்டாள் . பாதாள காளி படு ரொம்ப  கோபக்காரி. சக்தி வாய்ந்தவள். பிராத்திப்பதை கடுப்பவள் என்று தெரியும். 

திரிசடை கண்ணில் நீர்.  ஐயோ, இதென்ன நிலைமை.  என்அப்பா  விபீஷணன்  ராமனை  சரணாகதி அடைந்து அவருடன் இருக்கிறார். ராவணன் மந்த்ர தந்திர ரஹஸ்யம் தெரிந்ததால் தானே அவர் ராமலக்ஷ்மணர்களுக்கு உதவுகிறார். எப்படி  இந்த மயில் ராவணன் விஷயத்தை அப்பாவுக்கு தெரிவிப்பது?
ஆஹா  என்ன அதிர்ஷ்டம் இது !அந்த பக்கமாக வாயு பகவான்  வேகமாக சென்று கொண்டு இருந்தார். இலங்கை மீது செல்லும்போது அவருக்கு வானத்தில் பறந்து செல்லும் சக்தி மட்டுமே உண்டு. வேறேதும் சக்தி கிடையாது. அதனால்தான் சீதைக்கு அவரால் எந்த வழியிலும் உதவி செய்ய  முடியவில்லை. ஆனால் வாயு பகவானைக் பார்த்த திரிசடை  வாயுவை அழைத்து மயில் ராவணன் காளிக்கு சத்யம் செய்த விஷயத்தை சொல்லிவிட்டாள். 
''வாயு பகவானே, உடனே கிளம்பிச் சென்று இந்த செய்தியை என் தந்தை விபீஷணரிடம் சொல்லுங்கள். ராமலக்ஷ்மணர்களை  காப்பாற்றுங்கள்''.

இன்று ராத்திரி மேல் ராவணன்  தந்திரமாக ராம லஷ்மணர்களை கடத்திக் கொண்டு போய் பாதாளத்தில் காளிக்கு பலியாக்க பிரதிக்ஞை கொண்டுள்ளான். அவன் பெரும் மாயாவி. எளிதில் அனைவரையும் ஏமாற்றி விடுவான். காளியின் அருளினால் நினைத்ததை நடத்தி விடுவான். அதனால்தான் சொல்கிறேன், உடனே போய்  விபீஷனரிடம் விஷயம் சொல்லுங்கள்'' என்றாள்  திரிசடை.

‘அம்மணி, உனக்கு  கோடி புண்யம். இதோ இப்போதே பறக்கிறேன்'' என சொல்லி உடனே விபீஷணன் காதில் சேதியைப் போட்டார் வாயு.

''வாயு பகவானே கவலை வேண்டாம். எனக்கு தெரியும் மயில் ராவணனைப் பற்றி. அவன் திட்டத்தை முறியடிப்பேன்'' என சொல்லிய விபீஷணன் ராம லக்ஷ்மணர்களை சென்று பார்த்தார். 
அங்கே  சுக்ரீவன் ஹனுமான்,  அங்கதன், நீலன் ஜாம்பவன் என பலர் அமர்ந்து இருந்தார்கள். 

 ‘என்ன விபீஷணரே, இன்று உங்கள் முகம் கறுத்து  வாடி வதங்கி உள்ளது. என்ன கவலை ?''என ராமன் கேட்க  அவரப்பி காதில் ரஹஸ்யமாக  திரிசடை சொல்லி அனுப்பிய விஷயத்தை சொன்னார் விபீஷணன்.
 
ராமபிரான் காதில் மட்டும் கேட்குமாறு வாயு பகவான் மூலம் தனக்கு கிடைத்த சேதி அனைத்தையுமே அவருக்குக் கூறினார்.

சிரித்துக்கொண்டே ராமர்  ''விபீஷணரே, இதென்ன பெரிய விஷயமா?கவலையா ?! மயில் ராவணன் மாயாவியாயிருந்தால் நமக்கென்ன? சுக்ரீவனிடமும் ஜாம்புவானிடமும்  கூறி அவர்களுடைய ஆலோசனைக் கேட்போம். நல்ல உயபாயம் சொல்பவர்கள்.  யார் அந்த மயில் ராவணன்? அவனுக்கென்ன பலம் என்பதை எங்களுக்கு சொல்லுங்கள்?'' என்றார் .

விபீஷணர் சொல்வதை நாமும் அடுத்த பதிவில் கேட்போம். 
It is loading more messages.
0 new messages