மணிதாஸர் சாஸ்தா விருத்தம்.

856 views
Skip to first unread message

ABHIRAMI PHARMA- INDIA

unread,
Nov 20, 2016, 8:04:35 PM11/20/16
to amrith...@googlegroups.com

சாஸ்தா விருத்தம் :-

ஆனைமுகத்தோன் தம்பி
அருள் குமரனக்கிளையோன்
வானவா் போற்றும் வாணி வந்தெனக்கருள வேணும் 
சேனையின் தலைவா் போற்றும்
தென் குளத்தூரையா
உன் கானக விளையாட்டெல்லாம் கருத்துடன் போற்றாய் நெஞ்சே.

அந்தணா் முனிவா் சூழ
அற்புத சபையைபோற்றி
மந்திரம்கையிலேந்தி
வாழ்குளத்தூரன் மீதில்
சிந்தையில் உதீித்ததெல்லாம் செப்புமுன் கவிவிளங்க
ஸ்கந்தனும் குருவும் வாணி
கஜமுகன் காப்பதாமே.

முந்தைய சிவனாா் போற்றி மூா்க்கனாம்  அசுரா் போற்றி
இந்திர வரவும் ஏந்தி
ஈசனாா் வேஷம் போற்றி பந்தடிக்கமலம்  பற்றி
வந்ததோர் விறகம் மாற்றி
சந்ததியான மூர்த்தி 
தா்ம சாஸ்தா  நமஸ்தே.

தாகம் கொண்டு தனிவழியில்
தர்ம சாஸ்தா ஐயனென்று
வேகமாய் ஓடிவந்தேன்
வேண்டும் வரம் தந்திடுவாய்
பூஜை செய்யும் வேளையயிலே பூங்காவிற்குள்ளிருந்து நேசமுடன் வரமளிக்கும் திரு ஆரியங்கா ஐயாவே.

சாஸ்தா நமக்குண்டு தாய்போல் வருவார் அந்த தனிவழிக்கே பார்த்தால் நமக்கு பயமேதுமில்லை பயந்து பயந்து ஆற்றாதே சொல்லி அபயமிட்டோடி வரும் சுரர்தமதை காத்தேவரும் கடிய குன்றேறிய காவலனே.

அலைகடல் துரூம்பெனவே அடிமை மனம் தத்தளிக்க  பலப்பல பக்கம் என்னை  பாழ்குலம் இழுத்துச் செல்ல நிலையற்று நீந்துகின்றேன் நான் துணை செய்வாய் ஐயப்பா
நாரணன் தாயுமாகி நஞ்சுண்டோன் தந்தையாகி தாரணி காக்க வந்த  தர்ம சாஸ்த்ரையனாகி கலையெனும் வடிவம் கொண்ட காரணப் பரம் பொருளே மலை தனில் வாசம் செய்யும் மா மணிகண்டா.

வாழையும் தெங்கும் வரிக்கைப் பலாவுன் மாங்கனியும் சோலையும் சுருள் வண்டுலாவும் குளத்தூர்பியில் சென்றால் கங்கா நதிக்கும் ஹிமசேது மட்டும் இந்தக்கலியுகத்தில் உன்காவின் அதிசயம் போல் கண்டதில்லை என்ற பேர்க்கும்  சிங்காரமலையேறி சனிவாரம் தொழுத பேர்க்கும் மங்காத ஸர்வாபீஷ்டமும் கொடுப்பதாமே.

அத்தாதி புத்திரனார் ஆதிகுளத்தூரானும் வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூமுகப்பும் சுற்றிவரப் பொற்கதவும் ஸ்தூபியின் மேல் பொற்குடமும் இத்தலங்கள் காணப்பதனாயிரம் கண் வே்ண்டுமையா.

ஓங்காரப் பஞ்சணைமேல் உவந்து விளையாட வந்த ஆங்காரப் பூரணியே ஆதரிக்கும் தென்குளத்தூர் தேங்காய் கொடுத்தாலும் சிரட்டை கொடான் இண்டலையான் பூங்காவிற்குள்ளிருக்கும் புண்ணியனைக் கொண்டாட.

ஆராதித்தன்பரெல்லாம் அழைத்தும் வாராதிருந்தால் உன் பெருமை புமுகமும் பெற்றும் போய் விடுமா வீராதி வீரா     வீரமணிகண்டாசூராதி சூரா குளத்தூரின் ஐயாவே.

எத்தனைதான் ஆனாலும் எந்தன் முன்னே வார்்தை சொ ல்ல முத்தமிர்த வாய்முத்துதிர்ந்து போய்விடுமோ வேல் பிடித்த கையினாலே வ்யாக்்ரத்தை பால் கறக்கும் சூல் எடுத்த கோமானே குளத்தூரின் ஐயாவே.

நீருண்டமேகமதுபோலவேதிருமேனியழகும்நீண்டுவளர்மீசையழகும்நெற்றியில் கஸ்தூரித்திலகமுமமணிமகுடமும  நேர்புருவிழியினழகும பார் கொண்டநவரத்னம்ஔிர் பொற்பதக்கமும் பல்வரிசைபோலழகும் ்

கோட்டைத்தலைமலையான் குண்டாந்தடிபூதம் நாட்டைவளம்செய்யும் நல்லவனும் வன்னியனும் சாட்டை எடுத்து வீசும் சாமுண்டிவேதாளம் ஆட்டமதை நோக்கிவரும் ஆரியங்கையாவே.

இடிஇடிஇடிவாள்மின்ன இடமலை பூதத்தானும் கொடுமுடி மலைமேல் ஏறி கூவி ஆர்பாட்டம்செய்ய வெடிமுழக்கோடு வாளேந்தி வெறிக்கலி முதலாயுள்ளோர் மலையடி கூடிச்செசன்று வணங்கினார் தலைவர் முன்னே.

பார்த்தால் பசிதீரும் பாங்கியரைக் கைபிடித்து ஆதரவுடன் காக்கும் திரு ஆரியங்கை யாவே வருந்திதினம் உனையழைத்தும் நீ வாராதிருந்தால் பெருந்தணலில் நெய்யதுபோல் எந்தனுள்ளம் உருகிடுமே.

சித்திரச் சல்லடம்பூண்டு சிரசினில் உருமாலிலங்க வஜ்ஜிரமும் இழைத்த மார்பினில் பதக்கமும் பூண்டு எத்திசையும் விளங்கவே இலங்கவேதான் பிரம்பூம் கொண்டு  சித்திர ஸ்வரூபன்  எங்கள் செல்லப்பிள்ளை யும் தோன்றினாரே.

ஊரெல்லாம்  வழிகாட்டும் ஒருவனே குளத்தூரான் ஆதரவுடன் காக்கும் குளத்தூரின் ஐயாவே உமதுபக்தன் எங்கு சென்றாலும் காக்கவே தேடிஎங்கும் காப்பாற்றும்  தெய்வமன்றோ.

படம்பெற்ற பாம்பின்மீது அனுதினமும் பள்ளிகொள்ள இடம்பெற்ற பொன்னருள்பாலனே உம்பர்க்கு உதவியாய்இடம்பெற்ற பொழுது சர்வாபீஷ்டமும் தந்து எங்கள் குடும்பத்தை ரக்ஷித்தருளும் குளத்துரின் வீரமணிகண்டனே.

Reply all
Reply to author
Forward
0 new messages