4 views
Skip to first unread message

Sivan Krishnan

unread,
Aug 11, 2026, 12:47:36 AM (3 days ago) Aug 11
to amrith...@googlegroups.com

சுந்தரகாண்டம்  26ம்  ஸர்கம் . சீதையின் துயரம். - நங்கநல்லூர்  J K  SIVAN 

ராமாயணம்  ஒரு சோக காவியம். அடிபட்டு இழந்த  ஒரு  பக்ஷியின் ஜோடி,   அதன் இழப்பை, துணையின் பிரிவை, தாங்கமுடியாமல் வெளிப்படுத்திய  சோக குரலை கேட்டு வால்மீகி  புனைந்த மஹா காவியம் ராமாயணம், ராமன்  சீதா இருவரின் தியாகம், துயரம் ஆகியவற்றின் தொகுப்பு.  சீதாவின் துயரம் என்றே தனியாக  சுந்தரகாண்டத்தில்  26வது ஸர்கமாக 51 ஸ்லோகங்களில் சீதாதேவி அசோகவனத்தில்,  விரக்தியில்,   இனி வாழ்ந்து பயனில்லை என உயிரைப் போக்கிக்கொள்ள துணிந்தபோது  இருந்த அவள் மன நிலையை விவரிக்கிறது. இதை இதுவரை அறியாதவர்களுக்கு இது விருந்தாக அமையலாம்.

1. प्रसक्ताश्रुमुखी त्वेवं ब्रुवती जनकात्मजा ।अधोगतमुखी बाला विलप्तुमुपचक्रमे ॥ ५-२६-१ ॥
prasaktāśrumukhī tvevaṃ bruvatī janakātmajā | a

ஜனகரின் புத்ரி சீதம்மா, தொடர்ந்து கண்ணீர் வழியும்  முகத்துடன், தலையைக் குனிந்தபடி தனக்குத்தானே  பேசிக்கொண்டு புலம்புகிறாள்;

2. उन्मत्तेव प्रमत्तेव भ्रान्तचित्तेव शोचती ।उपावृत्ता किशोरीव विवेष्टन्ती महीतले ॥ ५-२६-२ ॥
unmatteva pramatteva bhrāntacitteva śocatī |upāvṛttā kiśorīva viveṣṭantī mahītale ||

பித்து பிடித்த, மதுபோதையில்  நிலை குலைந்த பெண் போல மனம் குழம்பி சீதை அழுதாள், யுத்தத்தில் அடிபட்டு, தரையில் புரண்டு துடிக்கும்  பெண் குதிரையைப்  போல் துடித்தாள்.

3.राघवस्य प्रमत्तस्य रक्षसा कामरूपिणा ।रावणेन प्रमथ्याहमानीता क्रोशती बलात् ॥ ५-२६-३ ॥
rāghavasya pramattasya rakṣasā kāmarūpiṇā |rāvaṇena pramathyāhamānītā krośatī balāt ||

நான் எப்படி இங்கே வந்து சிக்கிக் கொண்டேன்? ராமர் இல்லையென்று அறிந்து, தனிமையில் நான் இருந்தபோது. நினைத்த நேரத்தில்  தான் விரும்பிய உருவம் எடுக்கக் கூடிய  ராவாணாசுரன் என்னை வலுக்கட்டாயமாகப் பிடித்து, நான் கதறிக் கொண்டிருக்கும்போதே இழுத்துச் சென்றான்.

4.राक्षसीवशमापन्ना भर्त्स्यमाना सुदारुणम् ।चिन्तयन्ती सुदुःखार्ता नाहं जीवितुमुत्सहे ॥ ५-२६-४ ॥
rākṣasīvaśamāpannā bhartsyamānā sudāruṇam | cintayantī suduḥkhārtā nāhaṃ jīvitumutsahe ||

இந்த தனிச்சிறையில் என்னை சுற்றிலும்  ராக்ஷஸிகள். பயமூட்டும் உருவம் கொண்ட கொடிய  ராக்ஷஸிகள் என்னை கோரமாக மிரட்டும் இந்த  நிர்கதியான நிலையில்  துயரத்தால் வாடும் நான் இனியும்  உயிர்வாழ்ந்து பயனில்லை. 

5.न हि मे जीविते नार्थो नै वार्थैर्न च भूषणैः ।वसन्त्या राक्षसीमध्ये विना रामं महारथम् ॥ ५-२६-५ ॥
na hi me jīvite nārtho naivārthairna ca bhūṣaṇaiḥ | vasantyā rākṣasīmadhye vinā rāmaṃ mahāratham ||

மகாராஜாவின் பெண்ணாக  இருந்தும், வீரத்தால் என்னை வென்ற மஹா சக்திமான்  ஸ்ரீ ராமனை விட்டுவிட்டு இந்த கொடிய  ராக்ஷஸிகளின் நடுவே வாழவா நான் பிறந்தேன்?. எனக்கு  செல்வமும் வேண்டாம், ஆபரணமும் வேண்டாம் இந்த உயிரும் உடலும் வேண்டாம். 

6. अश्मसारमिदं नूनमथवाप्यजरामरम् । हृदयं मम येनेदं न दुःखेनावशीर्यते ॥ ५-२६-६ ॥
aśmasāramidaṃ nūnamathavāpyajarāmaram | hṛdayaṃ mama yenedaṃ na duḥkhenāvaśīryate ||

ஒருவேளை  என்  இதயம்  நிச்சயம்  ஒரு இரும்பு தானோ? அழிவில்லாததா? நான் இத்தனை காலம்  துடிதுடிக்கும்போதும் ஏன் என் இதயம் சுக்கு நூறாக உடையவில்லை?

7,धिङ्मामनार्यामसतीं याहं तेन विना कृता ।मुहूर्तमपि रक्षामि जीवितं पापजीविता ॥ ५-२६-७ ॥
dhik mām anāryām asatīṃ yāhaṃ tena vinā kṛtā | muhūrtamapi rakṣāmi jīvitaṃ pāpajīvitā ||

எப்போது நான்  என் ராமனை விட்டு  பிரிக்கப்பட்டேனோ, அப்போதே அந்த கணமே நான் உயிரைவிட்டிருக்க வேண்டும்.ஏன் இவ்வளவு காலம் காத்திருக்கவேண்டும்? இனியும் ஒரு கணமும் காத்திருக்கப்போவதில்லை. அது என் தப்பு. ராமனின் மனைவி என்ற தகுதிக்கு புறம்பானது. உடனே சாகவேண்டும். 

8.का च मे जीविते श्रद्धा सुखे वा तं प्रियं विना । भर्तारं सागरान्ताया वसुधायाः प्रियंवदम् ॥ ५-२६-८ ॥
kā ca me jīvite śraddhā sukhe vā taṃ priyaṃ vinā | bhartāraṃ sāgarāntāyā vasudhāyāḥ priyaṃvadam ||

சமுத்ரங்களால் சூழப்பட்ட இந்த பூமிக்கே  சக்ரவர்த்தியான, ம்ருது பாஷியான,  என் ராஜா, ராமனைதவிர  எனக்கு வாழ்வில் எதில் இன்பமோ விருப்பமோ, உயிரோடு இருக்கவோ  முடியும்?

9. भिद्यतां भक्ष्यतां वापि शरीरं विसृजाम्यहम् । न चाप्यहं चिरं दुःखं सहेयं प्रियवर्जिता ॥ ५-२६-९ ॥
bhidyatāṃ bhakṣyatāṃ vāpi śarīraṃ visṛjāmyaham |na cāpyahaṃ ciraṃ duḥkhaṃ saheyaṃ priyavarjitā ||

என் உடல் துண்டு துண்டாக உடைந்து  சிதறட்டும். எண்ணற்ற மிருகங்கள், பக்ஷிகள்  என் உடலை உண்ணட்டும்; நான் இந்த உடலை விட்டுவிடுகிறேன். என் அன்புக் கணவனைப் பிரிந்து இனியும்  நீண்ட காலம் இந்தப்  பிரிவு சோகத்தை,துயரத்தை என்னால்  தாங்க முடியாது.

10.चरणेनापि सव्येन न स्पृशेयं निशाचरम् ।रावणं किं पुनरहं कामयेयं विगर्हितम् ॥ ५-२६-१० ॥
caraṇenāpi savyena na spṛśeyaṃ niśācaram | rāvaṇaṃ kiṃ punarahaṃ kāmayeyaṃ vigarhitam ||

மஹா கொடியவன்  ராக்ஷஸன் ராவணனை என் இடது காலால் கூட நான் தொடமாட்டேன் எனும்போது நானா அவனை விரும்புவேன்?  இந்த எண்ணம் எழுந்தால்  முதலில் மனதை கங்கைநதியால்  கழுவி புனிதப்படுத்திக் கொள்ளவேண்டும். 

11. प्रत्याख्यातं न जानाति नात्मानं नात्मनः कुलम् ।यो नृशंसस्वभावेन मां प्रार्थयितुमिच्छति ॥ ५-२६-११ ॥
pratyākhyātaṃ na jānāti nātmānaṃ nātmanaḥ kulam | yo nṛśaṃsa-svabhāvena māṃ prārthayitum icchati ||

நான்  நன்றாக புரியும்படி அவனை  நிராகரித்தும்  ஏனோ  அந்த முட்டாள்  ராவணாசுரன் தான் விரும்பபடவில்லை, என்று அறியவில்லையே. என்னால் நிராகரிக்கப்பட்டும், என்னை விரும்புகின்ற இராவணன், தான் என்னால் நிராகரிக்க
ப்பட்டவன் என்பதை அறியவில்லையே.தனது  குலம் , கோத்ரம், தன்மை பெருமை அறியாத கொடூர இயல்பு கொண்டவனல்லவா?

12.छिन्ना भिन्ना विभक्ता वा दीप्तेवाग्नौ प्रदीपिता । रावणं नोपतिष्ठेयं किं प्रलापेन वश्चिरम् ॥ ५-२६-१२ ॥
chinnā bhinnā vibhaktā vā dīptevāgnau pradīpitā | rāvaṇaṃ nopatiṣṭheyaṃ kiṃ pralāpena vaś ciram ||

என்னை  எவ்வளவு சித்ரவதை செயதாலு, உடலை துண்டுதுண்டாக  வெட்டினாலும், எரியும்  அக்னிஜிவாலையில் போட்டாலும் அந்த ராக்ஷஸனை ஒரு வினாடியும்  நான் நினைக்கமாட்டேன், ஏற்றுக் கொள்ளமாட்டேன். சரி இவ்வளவு நேரம் நான் அழுது புரண்டு கதறி என்ன பயன்?

13.ख्यातः प्राज्ञः कृतज्ञश्च राघवः ।सद्वृत्तो निरनुक्रोशः शङ्के मद्भाग्यसंक्षयात् ॥ ५-२६-१३ ॥
khyātaḥ prājñaḥ kṛtajñaś ca rāghavaḥ | sad-vṛtto niranukrośaḥ śaṅke mad-bhāgya-saṃkṣayāt ||
க்யாதஃ ப்ராஜ்ஞஃ க்ருதஜ்ஞஶ்ச ராகவஃ । ஸத்வ்ருத்தோ நிரநுக்ரோஶஃ ஶங்கே மத்பாக்யஸங்க்ஷயாத் ॥

என் மணாளா, ஸ்ரீ ராகவா, நீ புகழ் பெற்றவன், அறிஞன், நன்றி உணர்வு கொண்டவன்,  நல்லொழுக்கத்துக்கு  உதாரணமானவன்.  என்ன  காரணமோ,, என் அதிர்ஷ்டம் அழிந்து விட்டதாலோ அவர் இளகிய மனது என்மில்  பாறைக்கல்லாக  இரக்கமில்லாமல் ஆகிவிட்டதோ என்று பயம் என்னை கொல்கிறது .

14. राक्षसानां सहस्राणि जनस्थाने चतुर्दश । येनैकेन निरस्तानि स मां किं नाभिपद्यते ॥ ५-२६-१४ ॥
rākṣasānāṃ sahasrāṇi janasthāne caturdaśa | yenaikena nirastāni sa māṃ kiṃ nābhipadyate ||

ஜனஸ்தானத்தில் பதினான்கு ஆயிரம் இராட்சசர்களை ஒருவராகவே அழித்தவன் அல்லவா என் ஸ்ரீ ராமன். ஏன் அவர் இன்னும் என்னைக் காப்பாற்ற இங்கே வரவில்லை?

15.निरुद्धा रावणेनाहमल्पवीर्येण रक्षसा ।समर्थः खलु मे भर्ता रावणं हन्तुमाहवे ॥ ५-२६-१५ ॥
niruddhā rāvaṇenāham alpa-vīryeṇa rakṣasā | samarthaḥ khalu me bhartā rāvaṇaṃ hantum āhave ||

ராமனுக்கு எதிரே  ராவணன் ஒரு கொசு. குறைந்த வீரியம் கொண்ட ராக்ஷஸன் ராவணனால் நான் இங்கே சிறைப்பட்டுள்ளேன்.  ஸ்ரீ ராமனால் எளிதில் ராவணனை வெல்லவோ கொல்லவோ  முடியும் என்று எனக்குத்தெரியுமே.

16. विराधो दण्डकारण्ये येन राक्षसपुङ्गवः ।रणे रामेण निहतः स मां किं नाभिपद्यते ॥ ५-२६-१६ ॥
virādho daṇḍakāraṇye yena rākṣasa-puṅgavaḥ | raṇe rāmeṇa nihataḥ sa māṃ kiṃ nābhipadyate ||

நேற்று நடந்தது போல் இருக்கிறது. தண்டகாரண்யத்தில் வலிமை மிக்க  ராக்ஷஸன் விராதனைப் போரில் இராமர் கொன்றாரே.  அப்படிப்பட்டவர்  ஏன் என்னைக் காப்பாற்ற இது வரை  வரவில்லை?

17,कामं मध्ये समुद्रस्य लङ्केयं दुष्प्रधर्षणा । न तु राघवबाणानां गतिरोधो भविष्यति ॥ ५-२६-१७ ॥
kāmaṃ madhye samudrasya laṅkeyaṃ duṣpradharṣaṇā | na tu rāghava-bāṇānāṃ gatirādho bhaviṣyati ||

ஒருவேளை  இந்த  லங்காநகரம்  எளிதில் அணுக முடியாத தீவுக்கு கோட்டை என்பதாலா?  சே. என்ன நினைப்பு இது? ஸ்ரீ ராகவனின் அம்புகளின் வேகத்தைத் தடுக்க எதனால் முடியும்.?

18. किं नु तत्कारणं येन रामो दृढपराक्रमः ।रक्षसापहृतां भार्यामिष्टां नाभ्यवपद्यते ॥ ५-२६-१८ ॥
kiṃ nu tat kāraṇaṃ yena rāmo dṛḍha-parākramaḥ |  rakṣasāpahṛtāṃ bhāryām iṣṭāṃ nābhyavapadyate ||

மஹா வீரன் ராமன், தனது அன்பு மனைவியை  ஒரு ராக்ஷஸன் கவர்ந்து சென்றும் உடனே அவனைக் கொன்று அவளைக் காப்பாற்ற வராத காரணம் என்ன?

19, इहस्थां मां न जानीते शङ्के लक्ष्मणपूर्वजः ।जानन्नपि स तेजस्वी धर्षणं मर्षयिष्यति ॥ ५-२६-१९ ॥
ihasthāṃ māṃ na jānīte śaṅke lakṣmaṇa-pūrvajaḥ | jānann api sa tejasvī dharṣaṇaṃ marṣayiṣyati ||

ஐயோ, ஒருவேளை என் ராமனுக்கு நான் இங்கே இருப்பது தெரியவில்லையோ? தெரிந்திருந்தால் எனக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானத்தை அவர் எவ்வாறு பொறுத்துக்கொள்வார்?

20.हृतेति योऽधिगत्वा मां राघवाय निवेदयेत् । गृध्रराजोऽपि स रणे रावणेन निपातितः ॥ ५-२६-२० ॥
hṛteti yo'dhigatvā māṃ rāghavāya nivedayet | gṛdhra-rājo'pi sa raṇe rāvaṇena nipātitaḥ ||

“சீதை கடத்தப்பட்டாள்” என்று இராமரிடம் தெரிவிக்கச் சென்ற கழுகுகளின் அரசனான ஜடாயுவையும் இராவணன் போரில் கொன்றுவிட்டான்.கண்ணால்  பார்த்தேனே. அவருக்கு எப்படி சேதி  கிடைக்கும்?

21.कृतं कर्म महत्तेन मां तथाभ्यवपद्यता । तिष्ठता रावणद्वन्द्वे वृद्धेनापि जटायुषा ॥ ५-२६-२१ ॥
kṛtaṃ karma mahat tena māṃ tathābhyavapadyatā | tiṣṭhatā rāvaṇa-dvandve vṛddhenāpi jaṭāyuṣā ||

பாவம்  ஜடாயு, முதிய வயதான  கழுகரசன்,  எனக்காக  எப்படி ராவணனுடன் நேருக்கு நேர் போரிட்டு வீரனாக என்னைக் காப்பாற்ற முயன்று உயிர்த் தியாகம் செய்தவர்?

22 यदि मामिह जानीयाद्वर्तमानां स राघवः ।अद्य बाणैरभिक्रुद्धः कुर्याल्लोकमराक्षसम् ॥ ५-२६-२२ ॥
yadi mām iha jānīyād vartamānāṃ sa rāghavaḥ | adya bāṇair abhikruddhaḥ kuryāl lokam arākṣasam ||

ஒன்று மட்டும் நிச்சயம்.  நான் இங்கே உயிருடன் இருப்பதை என் ராமன் அறிந்தால், சாந்தஸ்வரூபி அவருக்கே  எவ்வளவு கோபம் வரும்? எப்படி சரமாரியாக தன் அம்புகளால் இன்றே இந்த உலகையே  ராட்சசர்கள் இல்லாத உலகமாக மாற்றிவிடுவார்!.

23. विधमेच्च पुरीं लङ्कां शोषयेच्च महोदधिम् ।रावणस्य च नीचस्य कीर्तिं नाम च नाशयेत् ॥ ५-२६-२३ ॥
vidhamet ca purīṃ laṅkāṃ śoṣayet ca mahodadhim |rāvaṇasya ca nīcasya kīrtiṃ nāma ca nāśayet ||

ஆமாம் என் ராமன் , இந்த லங்கா நகரத்தையே  கணப்பொழுதில் அழித்துவிடுவார்; பெருங்கடலையே வற்றச் செய்து விடுவார்; இழிவான ராவணனின் பெயரும் புகழும் முற்றிலும் அழிந்துபோகும்.

24. ततो निहतनाथानां राक्षसीनां गृहे गृहे ।0थाहमेवं रुदती तथा भूयो न संशयः ॥ ५-२६-२४ ॥
tato nihata-nāthānāṃ rākṣasīnāṃ gṛhe gṛhe | yathāham evaṃ rudatī tathā bhūyo na saṃśayaḥ ||

அப்போது என்ன நடக்கும்? தங்கள்  கணவர்களை இழந்த ராக்ஷஸப் பெண்கலின் அழுகை, ஒவ்வொரு வீட்டிலும் இங்கு கேட்குமே.  நான் எப்படி அழுகிறேனோ  இப்போது, அப்படித்தானே  இங்கே ஒவ்வொரு வீட்டிலும்  அழுகுரல் கேட்கும்?

25. अन्विष्य रक्षसां लङ्कां कुर्याद्रामः सलक्ष्मणः ।न हि ताभ्यां रिपुर्दृष्टो मुहूर्तमपि जीवति ॥ ५-२६-२५ ॥
anviṣya rakṣasāṃ laṅkāṃ kuryād rāmaḥ salakṣmaṇaḥ | na hi tābhyāṃ ripur dṛṣṭo muhūrtam api jīvati ||

என்  ராமனும்  அற்புதமான  தம்பி  லக்ஷ்மணனும் இந்த இடத்தை கண்டுபிடித்து வந்துவிட்டால் போதும். அவர்கள் கண் பார்வையில் பட்ட எந்த  ராக்ஷஸனும் உயிர் தப்ப முடியாதே.

26. चिताधूमाकुलपथा गृध्रमण्डलसंकुला । अचिरेण तु लङ्केयं श्मशानसदृशी भवेत् ॥ ५-२६-२६ ॥
citā-dhūmākula-pathā gṛdhra-maṇḍala-saṅkulā | acireṇa tu laṅkeyaṃ śmaśāna-sadṛśī bhavet ||

இந்த லங்கையே அப்போது ஒரு சுடுகாடாக அல்லவோ மாறிவிடும். எங்கும் எரியும் சடலங்கள், புகை, உடலைத் தின்ன அலையும் கழுகுக் கூட்டங்கள்  நிறைந்து காணப்படுமே .

27. चिरेणैव कालेन प्राप्स्याम्येव मनोरथम् ।दुष्प्रस्थानोऽयमाख्याति सर्वेषां वो विपर्ययम् ॥ ५-२६-२७ ॥
acireṇaiva kālena prāpsyām eva manoratham | duṣprasthāno'yam ākhyāti sarveṣāṃ vo viparyayam ||

ஸ்ரீ ராமா, என் விருப்பம் வெகு விரைவில்  நிறைவேறும்.   இங்கே  இப்போது இந்த ராக்ஷஸர்களின்  தீய செயலே,அவர்களை கூடாது நாசமாக்கும். 

28. यादृशानीह दृश्यन्ते लङ्कायामशुभानि वै ।अचिरेणैव कालेन भविष्यति हतप्रभा ॥ ५-२६-२८ ॥
yādṛśānīha dṛśyante laṅkāyām aśubhāni vai |acireṇaiva kālena bhaviṣyati hataprabhā ||
இங்கே  நிறைய  தீய சகுனங்களைக்   காண்கிறேன். ஆகவே  விரைவில்  இலங்கை  ஒளியையும் பெருமையையும் இழந்து அழியும் என்பது நிச்சயம். 

29.नूनं लङ्का हते पापे रावणे राक्षसाधमे ।शोषं यास्यति दुर्धर्षा प्रमदा विधवा यथा ॥ ५-२६-२९ ॥
nūnaṃ laṅkā hate pāpe rāvaṇe rākṣasādhame | śoṣaṃ yāsyati durdharṣā pramadā vidhavā yathā ||
30. पुण्योत्सवसमृद्धा च नष्टभर्त्री सराक्षसी । भविष्यति पुरी लङ्का नष्टभर्त्रीयथाङ्गना ॥ ५-२६-३० ॥
puṇyotsava-samṛddhā ca naṣṭa-bhartṛī sa-rākṣasī | bhaviṣyati purī laṅkā naṣṭa-bhartṛr yathāṅganā ||

ஆம்.  மஹா பாவியான ராவணன் ராமனால் கொல்லப்பட்டதும்  ஒருகாலத்தில் புகழ் பெற்ற இந்த லங்காபுரி, கணவனை இழந்த கைம்பெண் போல தன் பொலிவை இழக்கும்.

31. नूनं राक्षसकन्यानां रुदन्तीनां गृहे गृहे ।श्रोष्यामि नचिरादेव दुःखार्तानामिह ध्वनिम् ॥ ५-२६-३१ ॥
nūnaṃ rākṣasa-kanyānāṃ rudantīnāṃ gṛhe gṛhe | śroṣyāmi nacirād eva duḥkhārtānām iha dhvanim ||
நான்  உயிரோடு இருந்தால்  வெகு விரைவில் இந்த மாநகரின் ஒவ்வொரு வீட்டிலும்  துயரத்தால் வாடி அழும் இராட்சசப் பெண்களின் அழுகுரலை கேட்பேன்.

32. सान्धकारा हतद्योता हतराक्षसपुङ्गवा ।भविष्यति पुरी लङ्का निर्दग्धा रामसायकैः ॥ ५-२६-३२ ॥
sāndhakārā hata-dyotā hata-rākṣasa-puṅgavā | bhaviṣyati purī laṅkā nirdagdhā rāma-sāyakaiḥ ||

ராமனின்  அஸ்த்ரங்களால் எரிந்த லங்கை  இருளில் கடலில் மூழ்கும், ஒருவன் கூட  இங்கே மிஞ்சமாட்டான்.

33.यदि नाम स शूरो मां रामो रक्तान्तलोचनः ।जानीयद्वर्तमानां हि रावणस्य निवेशने ॥ ५-२६-३३ ॥
yadi nāma sa śūro māṃ rāmo raktānta-locanaḥ |jānīyād vartamānāṃ hi rāvaṇasya niveśane ||

ராமனுக்கு மட்டும்  நான் இந்த  ராக்ஷஸன் ராவணன் மாளிகையில் இருப்பது தெரிந்தால் அவர் கண்கள் எப்படி சிவக்கும். அதன் விளைவால் எப்பேர்ப்பட்ட  பேரழிவு இங்கே  நிகழும். 

34.अनेन तु नृशंसेन रावणेनाधमेन मे ।समयो यस्तु निर्दिष्टस्तस्य कालोऽयमागतः ॥  स च मे विहितो मृत्युरस्मिन् दुष्टे न वर्तते ॥ ५-२६-३४ ॥
anena tu nṛśaṃsena rāvaṇenādhamena me |samayo yas tu nirdiṣṭas tasya kālo'yam āgataḥ 

கொடிய ராக்ஷஸன் ராவணன் எனக்கு  காலக்கெடு விதித்திருக்கிறான். அது நெருங்கப்போகிறது. எனக்கு  அவனால் மரணம் இன்னும் நிகழவில்லையே. 

35. अकार्यं ये न जानन्ति नैरृताः पापकारिणः । अधर्मात्तु महोत्पातो भविष्यति हि सांप्रतम् ॥ ५-२६-३५ ॥
36. नैते धर्मं विजानन्ति राक्षसाः पिशिताशनाः ॥ ५-२६-३६ ॥
akāryaṃ ye na jānanti nairṛtāḥ pāpa-kāriṇaḥ | adharmāt tu mahotpāto bhaviṣyati hi sāmpratam ||
naite dharmaṃ vijānanti rākṣasāḥ piśitāśanāḥ ||

எவ்வளவு கொடிய  பாவிகள், உயிரினங்களை உண்பவர்கள்  இந்த ராக்ஷஸர்கள். அதர்மம், அக்ரமம் எத்தனை செய் கிறார்கள். அதன் விளைவை வட்டியும் முதலுமாக  சீக்கிரமே  சந்திக்க போகிறார்கள். அவர்களது அழிவை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. 

37. ध्रुवं मां प्रातराशार्थे राक्षसः कल्पयिष्यति ।साहं कथं करिष्यामि तं विना प्रियदर्शनम् ॥ रामं रक्तान्तनयनमपश्यन्ती सुदुःखिता ॥ ५-२६-३७ ॥
dhruvaṃ māṃ prātarāśārthe rākṣasaḥ kalpayiṣyati | sāhaṃ kathaṃ kariṣyāmi taṃ vinā priyadarśanam  rāmaṃ raktānta-nayanam apaśyantī suduḥkhitā ||

எந்த நேரத்தில் யாரோ  ஒரு ராக்ஷஸன் என்னை அவனது காலை உணவாக  சாப்பிடப்போகிறான். ஹா, என் பிரபு, இனிய தோற்றம் கொண்ட  சிவந்த கண் ஓரங்களைக் கொண்ட ராமா, உன்னை பார்க்காமல் இனி எவ்வாறு வாழ்வேன்?

38. यदि कश्चित् प्रदाता मे विषस्याद्य भवेदिह ।क्षिप्रं वैवस्वतं देवं पश्येयं पतिना विना ॥ ५-२६-३८ ॥
yadi kaścit pradātā me viṣasyādya bhaved iha | kṣipraṃ vaivasvataṃ devaṃ paśyeyaṃ patinā vinā ||
இங்கே  யாராவது எனக்கு  விஷம் கொடுக்க மாட்டீர்களா?நன்றியோடு உண்டு, என் கணவனைப் பிரிந்த இந்த வாழ்க்கையிலிருந்து உடனடியாக விடுபட்டு, யமதர்மராஜனைச் சந்தித்துவிடுவேனே .

39.नाजानाज्जीवतीं रामः स मां लक्ष्मणपूर्वजः ।जानन्तौ तौ न कुर्यातां नैराश्यं हि मम मार्गणम् ॥ ५-२६-३९ ॥
nājānāj jīvatīṃ rāmaḥ sa māṃ lakṣmaṇa-pūrvajaḥ | jānantau tau na kuryātāṃ nairāśyaṃ hi mama mārgaṇam ||

எனக்கு நன்றாக தெரியும்.  லக்ஷ்மணனும், அண்ணா  ராமனும் நான் உயிரோடு இருக்கிறேனா என கவலையில் இருக்கலாம். நான் இன்னும் இங்கே உயிரோடு இருப்பதை அறிந்தால், துளியும் கால தாமதம் செய்யாமல் தேடி ஓடி  வந்து விடுவார்கள். 

40. नूनं ममैव शोकेन स नीरो लक्ष्मणाग्रजः ।देवलोकमितो यातस्त्यक्त्वा देहं महीतले ॥ ५-२६-४० ॥
nūnaṃ mamaiva śokena sa vīro lakṣmaṇāgrajaḥ |devalokam ito yātas tyaktvā dehaṃ mahītale ||

ஐயோ நினைத்தாலே,   உடல் பதறுகிறதே.... ஒருவேளை........ என் பிரிவால் உண்டான துயரத்தில்  என் ராமன் தனது உடலை விட்டு தேவலோகத்துக்கு சென்று இருப்பாரோ?? அதனால் தான் இன்னும் வரவில்லையோ?

41. धन्या देवाः सगन्धर्वाः सिद्धाश्च परमर्षयः ।मम पश्यन्ति ये नाथं रामं राजीवलोचनम् ॥ ५-२६-४१ ॥
dhanyā devāḥ sagandharvāḥ siddhāś ca paramarṣayaḥ | mama paśyanti ye nāthaṃ rāmaṃ rājīva-locanam ||
அப்படி சென்றிருந்தால், தாமரைக்கண்ணன் என் ராமனை நேரில்  காணும் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், மகரிஷிகளும் உண்மையிலேயே பாக்கியசாலிகள். என்னை மாதிரி அதிருஷ்ட கட்டை இல்லை. 

42. अथवा न हि तस्यार्थो धर्मकामस्य धीमतः । मया रामस्य राजर्षेर्भार्यया परमात्मनः ॥ ५-२६-४२ ॥
athavā na hi tasyārtho dharma-kāmasya dhīmataḥ |mayā rāmasya rājarṣer bhāryayā paramātmanaḥ ||

ஓஹோ... தர்மம் நீதி நியாயம் விரும்பும் மஹா புத்திமான் அறிவாளி,ராஜரிஷியான  ஸ்ரீ ராமனுக்கு  அவரது மனைவியாக என்னால் இனி எந்தப் பயனும் இல்லையோ? 

43. दृश्यमाने भवेत्प्रीतिः सौहृदं नास्त्यपश्यतः ।नाशयन्ति कृतघ्नास्तु न रामो नाशयिष्यति ॥ ५-२६-४३ ॥
dṛśyamāne bhavet prītiḥ sauhṛdaṃ nāsty apaśyataḥ |nāśayanti kṛtaghnās tu na rāmo nāśayiṣyati ||

நான் ராமனின் மனைவி, காதலி, நண்பி.  அன்பு நட்பு ஒருவரை ஒருவர் நேரில் காணும்போது தான் வளருமோ? நீண்டகாலம்  காணாததால் அது குறைந்து போயிருக்குமோ? நன்றியில்லாதவர்கள் மட்டும் தானே நட்பை அழிப்பார்கள். ராமரோ நானோ அப்படி இல்லையே. என் நட்பை ஒருபோதும் என் ராமன் அழிக்கமாட்டார்.

44.  किं नु मे न गुणाः केचित्किं वा भाग्यक्षयो मम ।याहं सीदामि रामेण हीना मुख्येन भामिनी ॥ ५-२६-४४ ॥
kiṃ nu me na guṇāḥ kecit kiṃ vā bhāgya-kṣayo mama |yāhaṃ sīdāmi rāmeṇa hīnā mukhyena bhāminī ||

ஐயோ, பகவானே, என் ஸ்ரீ ராமா, என்னிடம் எந்த நல்ல குணமும் இல்லையா?  என்னுடைய பாக்கியம் அவ்வளவு தானா?  அதனால் தான் இப்படி  துன்பத்தில் வாடுகிறேனா?

45. श्रेयो हि जीवितान्मर्तुं विहीनाया महात्मनः ।रामादक्लिष्टचारित्राच्छूराच्छत्रुनिबर्हणात् ॥ ५-२६-४५ ॥
śreyo hi jīvitan martuṃ vihīnāyā mahātmanaḥ | rāmād akliṣṭa-cāritrāc chūrāc chatru-nibarhaṇāt ||

குற்றமற்ற நடத்தையுடையவரும், வீரரும், எதிரிகளை அழிப்பவருமான மகாத்மா என் ராமனைப்  பிரிந்து வாழ்வதை
சாவே எனக்கு மேலானது.

46. अथवा न्यस्तशस्त्रौ तौ वने मूलफलाशिनौ ।भ्रातरौ हि नरश्रेष्ठौ संवृत्तौ वनगोचरौ ॥ ५-२६-४६ ॥
athavā nyasta-śastrau tau vane mūla-phalāśinau | bhrātarau hi nara-śreṣṭhau saṃvṛttau vanagocarau ||

என்னை இழந்து தேடி காண முடியாத நிலையில் ஒருவேளை, மனிதர்களில் சிறந்தவர்களான என் ராமனும், லக்ஷ்மணனும் தங்கள் ஆயுதங்களைத் தூர எறிந்து விட்டு  காட்டில்  பழங்களையும் கிழங்குகளையும் உண்டு, வாழும்  மற்ற முனிவர்களைப் போல வாழ்கிறார்களோ? சே. நிச்சயம் இருக்காது. 

47. अथवा राक्षसेन्द्रेण रावणेन दुरात्मना ।छद्मना घातितौ शूरौ भ्रातरौ रामलक्ष्मणौ ॥ ५-२६-४७ ॥
athavā rākṣasendreṇa rāvaṇena durātmanā |chadmanā ghātitau śūrau bhrātarau rāma-lakṣmaṇau ||

ஐயோ,   நினைத்தாலே பகீர் என்கிறதே. ஒருவேளை.... கொடியவன், தீயவன் ராவணன் துயரத்தில் வாடும் என் ராமனையும் லக்ஷ்மணனையும்  ஏமாற்றி கொன்றிருப்பானோ?

48. साहमेवं गते काले मर्तुमिच्छामि सर्वथा ।न च मे विहितो मृत्युरस्मिन् दुःखेऽपि वर्तते ॥ ५-२६-४८ ॥
sāham evaṃ gate kāle martum icchāmi sarvathā | na ca me vihito mṛtyur asmin duḥkhe'pi vartate ||

எண்ணங்கள் என்னை  கலக்குகிறது. காலம் ஓடிக் கொண்டே போகிறது.  எந்த வகையிலாவது நான் இறந்து விட வேண்டும். ஏன் மரணமே  நீ இன்னும் என்னை நெருங்கவில்லை?

49. धन्याः खलु महात्मानो मुनयस्त्यक्तकिल्बिषाः ।जितात्मनो महाभागा येषां न स्तः प्रियाप्रिये ॥ ५-२६-४९ ॥
dhanyāḥ khalu mahātmāno munayas tyakta-kilbiṣāḥ |jitātmano mahābhāgā yeṣāṃ na staḥ priyāpriye ||

பாவங்களே  இல்லாத , விட்டொழித்த, மகாத்மாக்கள், மனதை வென்ற ரிஷிகள், முனிவர்கள், ரொம்ப ரொம்ப  பாக்கியசாலிகள். விருப்பம்–வெறுப்பு, இன்பம்–துன்பம் எதுவும் அவர்கள் மனதை பாதிக்காதே .

50. प्रियान्न संभवेद्दुःखमप्रियादधिकं भयम् ।ताभ्यां हि ये वियुज्यन्ते नमस्तेषां महात्मनाम् ॥ ५-२६-५० ॥
priyān na saṃbhaved duḥkham apriyād adhikaṃ bhayam | tābhyāṃ hi ye viyujyante namas teṣāṃ mahātmanām ||

அன்பு வைத்தால் தான் துன்பம். விருப்பத்திலிருந்து தான்  பயம்.  ரெண்டுமே  மனதில் இல்லாவிட்டால் என்ன சுகம்... மஹரிஷிகள், மஹாத்மாக்களே உங்களுக்கு நமஸ்காரம் .

51.साहंत्युक्ता प्रियेणैव रामेन विदितात्मना । प्राणांस्त्यक्ष्यामि पापस्य रावणस्य गता वशम् ॥ ५-२६-५१ ॥
sāhaṃ tyuktā priyeṇaiva rāmeṇa viditātmanā | prāṇāṃs tyakṣyāmi pāpasya rāvaṇasya gatā vaśam ||

என் ப்ராண நாதன், உண்மை அறிந்த ராமனால் நான் கைவிடப்பட்டவளாகி, இப்போது பாவியான ராவணனுடைய கட்டுப்பாட்டில் சிக்கியிருக்கிறேன். ஆகவே நான் என் உயிரை இதோ  விட்டுவிடுகிறேன்....


Reply all
Reply to author
Forward
0 new messages