தரிசனம் கண்டவர்க்கு இனிப் பிறவி இல்லையாம்

7 views
Skip to first unread message

amritha varshini

unread,
3:06 AM (20 hours ago) 3:06 AM
to amrith...@googlegroups.com

 

 

இன்று மாசி அனுஷம் (09-03-2026) ஶ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்!

 

பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன் 

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி மோஹனா கிருஷ்ணன் 

 

ராகம் - மோஹனம் 

 

தாளம் - ரூபகம் 

 

பல்லவி 

 

தரிசனம் கண்டவர்க்கு இனிப் பிறவி இல்லையாம்

 

அனுபல்லவி 

 

பங்கயக் கரம் உயர்த்தி அபயம் நல்கிடும் காஞ்சி மாமுனி

 

( தரிசனம் கண்டவர்க்கு ) 

 

சரணம் 

 

உள்ளக் கமலத்தில் என்றும் உறைபவரை 

கள்ளத்தனம் நீக்கி வெள்ளமென அருள்பவரை

இன்பம் அளிக்கும் ஈடில்லா பெருந்தகையை

துன்பம் களையும் துரிய நிலை கடந்தவரை

 

( தரிசனம் கண்டவர்க்கு ) 

 

விழுப்புரத்தில் பிறந்த விழுப்பொருளை

மழுவேந்தி அருளும் முழுமுதலை

வேதம் காத்திடும் ஊழி முதல்வனை

பாதகம் நீக்கிடும் ஒப்பிலா மூர்த்தியை

 

( தரிசனம் கண்டவர்க்கு )

 

https://youtu.be/jd_8rsDVXUE
Reply all
Reply to author
Forward
0 new messages