அருணாச்சலேஸ்வரர் கோயில்

79 views
Skip to first unread message

amritha varshini

unread,
May 12, 2015, 9:58:10 PM5/12/15
to amrith...@googlegroups.com
From: Ramakrishnan K S <ramk...@yahoo.com>
Date: 2015-05-12 11:18 GMT+05:30
Subject: அருணாச்சலேஸ்வரர் கோயில்
To: VASUVANJA GROUPS <ramk...@googlegroups.com>


கிரிவலம் நேரம 2015 மேலும் படிக்க...
 அருணாச்சலேஸ்வரர் கோயில் 

கிரிவலம் – 2015 :

திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் இருக்கும் மிக பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பபடுகிறது. பல மா மன்னர்களின் முயற்சியால் நன்கு வளர்ந்து இன்று புகழுடன் விளங்குகிறது. மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் கவிதைகள் மூலம் பாராட்டுகளை பெற்ற ஸ்தலமாக உள்ளது. பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி வடிவத்தில் உருவெடுத்துள்ளதால் பக்தர்களிடையே இதற்கு மேலும் சிறப்புண்டு. உலகை உருவாக்கிய மற்ற நான்கு பூதங்கள் நீர், வாயு, ஆகாயம், மற்றும் பூமி. இந்த அழகிய சிவனடியார்களின் கோயில் அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை அடிவாரத்தில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயிலை சென்றடைய காட்பாடி [ வேலூர் ]. ரயில் நிலையத்திலிருந்து சுமார் 80 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 180கி.மீ தொலைவில் உள்ளது. சிவன் இங்கு மலை வடிவத்தில் தோன்றுவதால் அண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறார். சிவனை அசைக்க முடியாத மலை என நம்புவதால் பக்தர்கள் சிவனடியாரை அண்ணாமலையார் என்றும் பெயர் சூட்டி வழிபடுகின்றனர். அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆறு பிரகாரங்கள் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது பழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது. லட்ச கணக்கான சிவ பக்தர்கள் இங்கு பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர். கிரி என்று அழைக்கப்படும் மலையை சுற்றி வலம்வருவதால் கிரிவலம் என்ற பெயர் வந்தது. ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண்டும். இதை மேற்கொள்ளும் அனைத்து பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மன அமைதிபெற்று உடல் முழு உற்சாகமும் பெரும் என்பதில் பக்தர்களிடையே உள்ள முழு நம்பிக்கை. தற்பொழுது அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை பல்வேறு காலங்களில் பலவிதமான உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும், தீர்த்தயுகத்தில் மாணிக்க கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது என நம்பபடுகிறது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன. இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம், என்று அழைக்கப்படுகிறது.இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது. அத்துடன் பக்தர்களின் நன்மைக்காக பல நன்மைகளால் அருள்புரிந்து சிறப்பான வாழ்கை அமைய வழி செய்கிறது. இவ்வெட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங்களை குறிக்கிறது. இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார்கள்.
 
கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது. சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.
 
கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள். இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.
 
கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பபடுகிறது.
 
கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.
 
கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.
 
கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையிறல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.
 
கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய வேண்டும்.
 
கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிருவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.
 

கிரிவலம் செல்பவர்களுக்கு சில யோசனைகள் :-

  • பாதணிகள் இல்லாமல் செல்வது பொருத்தமாகும்.
  • கிரிவலம் வரும்போது மலையின் உச்சியை நோக்கியே வலம் வருவது மிகவும் நல்லது.
  • கிரிவலம் பௌர்ணமி தினமும் அல்லது இரவில் செல்வது தான் சிறந்தது.
  • கிரிவலம் செல்பவர்கள் “ஓம் அருணாச்சல” என சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.
 
திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமம் ரமண மகரிஷி ஆசிரமம். மகான்  ரமண மகரிஷி அருணாச்சல கடவுளின் தீவிர பக்தர் ஆதலால் சிவனின் சக்திகளை முழுமையாக பெற்று தனது வாழ்க்கையின் அதிகமான வருடங்களை திருவண்ணாமலையில் கழித்தார். இவருக்கென்று பலலட்ச பக்தர்கள், மற்றும் சிஷ்யர்கள் இருக்கின்றனர்.

லிங்கம் தரிசனத்தின் பயன்கள் :

தற்பொழுது அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை பல்வேறு காலங்களில் பலவிதமான உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும், தீர்த்தயுகத்தில் மாணிக்க கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது என நம்பபடுகிறது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன. இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.
 
இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது. அத்துடன் பக்தர்களின் நன்மைக்காக பல நன்மைகளால் அருள்புரிந்து சிறப்பான வாழ்கை அமைய வழி செய்கிறது. இவ்வெட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங்களை குறிக்கிறது. இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார்கள்.

கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது. சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும். கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள். இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.

கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கமாகும். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பபடுகிறது.

கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.

கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.

கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையிறல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய வேண்டும்.

கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் எசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிருவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.

யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் :

யோகி ராம்சுரத்குமார் ஸ்வாமிகள் அவர்கள் சிஷ்யர்களிடையே உயர்ந்த மரியாதையுடன் விளங்கினார். இவரை விசிறி சாமியார் எனவும் அழைத்தனர். யோகி ராம்சுரத்குமார் காசியில் பிறந்தவர். சில காலங்கள் அங்கு வாழ்ந்த பின் அவருடைய ஆன்மீக ஈடுபாடுகளை பெருக்கிகொள்ள திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை தொடர்ந்து வணங்கி வந்தார்.அவர் நல்ல தெய்வ பக்தி மிகுந்த பரம்பரையை சேர்ந்தவர். அவருடைய குழந்தை பருவம் முதலே யோகிகள் மற்றும் ஆன்மீகவாதிகளை பின் தொடர்ந்து கங்கை கரையோரங்களில் அவருடைய தியானங்கள் சிறப்படைந்தன. மகான் யோகி ராம்சுரத்குமார் டிசம்பர் மாதம் முதல் தேதி 1918ம் ஆண்டு கங்கை கரையோரம் உள்ள ஓர் சிறிய கிராமத்தில் பிறந்தார்.அவர் குழந்தையாக இருந்த முதலே அவருடைய செயல்கள் பார்ப்பவர்களை ஈர்த்தது. அவரிடத்தில் தெய்வ அனுகிரகங்கள் தென்பட்டன. அவர் எப்பொழுதும் ரிஷிகள் மற்றும் யோகிகளை பின் தொடர்ந்து அவர்களுக்கு சிஷ்யனாக விருப்பப்பட்டார். கங்கை கரையில் வாழ்ந்த சாதுக்களுக்கும் இவர் நாம ஜபம் செய்து வந்தார். யோகி ராம் இந்த செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தெய்வ வழிபாடுகளில் அவரை முழுமையாக  அர்பணிக்க தொடங்கிவிட்டார். சாதுகளுடன் பணிவிடை செய்து அவர்களின் நன்மதிப்பை பெற்று அவர்களுடைய புராண சிஷ்யனாக சேவை செய்தார். சுவாமிகள் அனைவரும் இவருடைய ஆர்வத்தை கண்டு இவரை பாராட்டி மேலும் ஆன்மீக சிந்தனைகளை புகட்டினர். ஸ்ரீ யோகி ராம் பல மகான்களை தொடரும் ஆர்வத்தில் பல இடங்களுக்கு பயணம் செய்தார். 1947 ம்  ஆண்டு அவர் ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு தென்னிந்தியாவை நோக்கி புறப்பட்டார்.அவர் ஸ்ரீ அரவிந்த கோஷ் சுவாமிகளை காண விரும்பி அவர் ஆசிரமம் வந்தடைந்தார்.சுவாமி அரவிந்த் கோஷியின் சிபாரிசின் அடிப்படையில் மகான் ரமண மகரிஷியை சந்திக்க திருவண்ணாமலை
புறப்பட்டு இங்கு வந்து சேர்ந்தார்.அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் பிரார்த்தனை செய்துவிட்டு ரமண மகரிஷியின் ஆசிரமம் வந்தடைந்தார். இங்கு ரமண மகரிஷியின் ஆசீர்வாதம் பெற்று மகிழ்ந்தார்.
 
ரமண சுவாமிகள் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு  சக்தியை வழங்கினார். இதன் பின் ரமணாவின் அறிவுரைப்படி யோகிராம் ஸ்வாமிகள் ஸ்ரீ ராமதாஸ் சுவாமிகளை காண கேரளாவிற்கு புறப்பட்டு சென்றார். அங்கு ராம்தாஸ் ஸ்வாமிகள் ஆசிரமத்தில் அவருடைய சிஷ்யனாக சேவை செய்தார். இங்கு தீவிர ஆன்மீகம் மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்ட யோகி ராம் சுரத்திற்கு ராம்தாஸ் ஸ்வாமிகள் பக்தி வழங்கினார். மேலும் யோகிராம் காதுகளில் ராம்தாஸ் ஸ்வாமிகள் தெய்வ மந்திரமான ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் என உச்சரித்தார். அதன் பின் மகான் யோகி ராம் (  விசிறி சாமியார் ) அவருடைய புனித யாத்திரையை தென்னிந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல முற்பட்டார். இறுதியில் ஸ்வாமிகள் திருவண்ணாமலை கோயில் அருணாச்சலேஸ்வரர் சன்னதி வந்தடைந்தார். இவர் இங்குள்ள முக்கிய ஸ்தலங்களில் தியானம் செய்தார். அதில் அவருக்கு மிகவும் பிடித்த இடம் கோயில் தேர் அருகில் மற்றும் கோயில் சுற்றியுள்ள பிரகாரங்கள்.பின்பு அவர் கோயில் சன்னதி வீதியில் ஓர் சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் வாழ்ந்து வந்தார். இங்கு அவர் ஆசிகளை பெற தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அவர் ஆசியை பெற்று சென்றனர். இங்கு வரும் அவருடைய பக்தர்கள் அவரை பெரிய இடத்தில் ஆசிரமம் அமைக்க உதவி செய்து அக்ரஹார சேலை என்னும் இடத்தில் சுமார் நான்கு ஏக்கர் பரப்பில் ஓர் ஆசிரமத்தை நிறுவினர். இங்கு அவர் தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கி வந்தார். ஸ்வாமிகள் இறுதியில் 2001ம் ஆண்டு வரை வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார். இவர் மறைவிற்கு அனுதாபம் செலுத்த பல்லாயிரம் சிஷ்யர்கள் திருவண்ணாமலை நோக்கி வந்து விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகிராம் சுவாமிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சேஷாத்ரி மகரிஷி ஆசிரமம் :

சேஷாதிரி ஸ்வாமிகள் காஞ்சிபுரத்தில் 1870ம் ஆண்டு பிறந்தார். இவர் தன் சிறு வயதிலேயே திருவண்ணாமலை சென்றடைந்தார். ரமண மகரிஷியை போல் இல்லாமல் இவர் சக்தி தேவியின் தீவிர பக்தர். வேறு பட்ட கடவுள்களின் பக்தர்களாக இருந்த போதிலும் இவர்கள் இரண்டு பேரும் சிறந்த நண்பர்களாக வாழ்ந்தனர். சேஷாதிரி ஸ்வாமிகள் மிகவும் மாறுபட்ட மனிதராக அவர்களுடைய பக்தர்களுக்கு காணப்பட்டார். அவர் தனக்கென்று ஒரு வீடு வைத்துக்கொள்ளாமல் நினைத்த இடத்தில உட்காருவதும் படுப்பதும் என்று இருந்தார். எப்பொழுதும் திருவண்ணாமலை தெருக்களில் கண்ட நேரங்களில் சுற்றி திரிந்தார். உட்கார்ந்த இடத்தில தூங்குவதும் ரோட்டோர கடைகளில் சாப்பிடுவதும் என வாழ்க்கையில் ஓர் ஒழுக்கமில்லாமல் காலத்தை கழித்தார். சேஷாதிரி ஸ்வாமிகள் உணவருந்தும் விடுதிகளுக்கு காசு கொடுப்பதில்லை. இருந்தும் கடை வைத்திருப்பவர்கள் ஸ்வாமிகள் வந்து உணவு உட்கொண்டால் அது அவர்களுக்கு நல்ல சகுனம் என சந்தோஷப்படுவார்கள். அன்றைய தினம் இக்கடைகளில் நன்கு வியாபாரம் நடை பெறுவது வழக்கம்.சேஷாதிரி ஸ்வாமிகள் பல நாட்கள் தொடர்ந்து குளிப்பதில்லை. ஆனால் பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி பல மணி நேரம் நின்றுகொண்டு அல்லது நடனமாடிக்கொண்டும் பாட்டுப்பாடிக்கொண்டும் பக்தர்களை உற்சாகப்படுத்துவார். இவர் சித்தர்கள் போல வாழ்ந்து அவ்வப்போது பக்தர்களுக்கு தெய்வவாக்கு கூறுவார். அவரை நாடி வரும் பக்தர்களுக்கு சில சமயங்களில் அருள் கூறாமல் ஓடி விடுவார். பக்தர்கள் அவருடைய கால்களில் விழுந்து வணங்குவதும் தொடுவதும் அவருக்கு அறவே பிடிக்காத செயல் ஆகும். இதனால் அவரை நாடி வரும் பக்தர்களை அவ்வப்போது திட்டி உதாசீனப்படுத்துவார். சில சமயங்களில் கல்லால் அடிப்பார். பெரும்பாலும் தனியே உட்கார்ந்து தனக்கு தானே பேசி கொள்வார். சில சமயங்களில் நோய்வாய்பட்டு இருப்பவர்களை தொட்டு அவர்கள் குணமடைய செய்வார். இவர் சக்தி கடவுளின் தீவிர
பக்தராக இருப்பதனால் சக்தியின் மகிமையை பெற்றிருக்கிறார் என பக்தர்களிடையே நிலவும் எண்ணமாகும். மேலும் இதை தவிர அருணாச்சலேஸ்வரர் மற்றும் ராமபிரானுடைய அனுகிரகம் உள்ளது என நம்பப்படுகிறது. சேஷாதிரி ஸ்வாமிகள் காமாட்சியின் அருளால் அவர்கள் தாய் தந்தைக்கு நீண்ட நாட்கள் தவமிருந்து பிறந்தார் என புராணம் கூறுகிறது.

ஆதலால் தான் இவருக்கு காமாட்சியின் அருள் இருக்கிறது என பக்தர்கள் பலரும் நம்புகிறார்கள். சேஷாதிரி ஸ்வாமிகளின் தந்தை பெயர் வரதராஜன். தாய் பெயர் மரகதம். இவர்கள் காமாட்சிதேவிக்கு தீவிர தவம் இருந்து சேஷாதிரி ஸ்வாமிகள் பிறந்தார் என நம்பப்படுகிறது.சேஷாதிரி ஸ்வாமிகள் ஒரு தெய்வ கடவுள் என அனைவரும் எண்ணினர். அதற்கேற்றார்போல குழந்தை பருவத்திலிருந்தே அதிகாலையில் சேஷாதிரி எழுந்து தீவிர பூஜைகளில் ஈடுபடுவார். சேஷாதிரி சிறு பாலகனாக இருந்த போது அவர் தாயாருடன் காஞ்சிபுரம் கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்பொழுது அவன் அங்குள்ள கடையில் விற்பதற்காக வைத்திருந்த கிருஷ்ணர் பொம்மையை எடுத்துக்கொண்டான். அவனுடைய அம்மா காசு இல்லாததால் அப்பொம்மையை திருப்பி கொடுக்க சொன்னால். அவன் திருப்பிகொடுக்க மறுப்பதை பார்த்த கடைக்காரர் இவன் மேல் பரிதாபம் மற்றும் ஆச்சரியம் அடைந்தனர். காசு வாங்காமலேயே அந்த பொம்மையை சேஷாதிரிக்காக இலவசமாக கொடுத்துவிட்டார். கடைக்காரர் இவன் ஒரு தெய்வ பிறவியாக இருக்கலாம் என்று எண்ணினான். அதற்கேற்றபடி அன்று அவர் கடையில் இருந்த அனைத்து பொம்மைகளும் விற்றுவிட்டன. இந்த சிறுவனின் மகிமையை அனைவரிடத்திலும் கூறி பூரித்துப்போனார். அன்று முதல் அந்த சிறுவனின் புகழ் திருவண்ணாமலையில் உள்ள அனைவரிடையே பரவ தொடங்கியது. அவன் ஒரு தெய்வ பிறவி என்று நம்பினர்.

 
 
 

சேஷாதிரி தனது ஐந்தாவது வயதில் வேத பாடசாலைக்கு பெற்றோர்களால் அனுப்பப்பட்டார். அங்கு அவன் வேதம் மற்றும் மந்திரங்கள் படிப்பதில் தீவிர ஆர்வம் காட்டினான். அவர் பதினான்காம் வயதை தாண்டும் முன்னே வேதங்கள் பற்றி நன்றாகவே கற்றுக்கொண்டார். அவர் பதினான்காம் வயதில் அவனுடைய தந்தை இறந்தார். அதன் பின் சேஷாதிரி அவனுடைய மாமாவின் ஊருக்கு சென்றார். இங்கு அவர் உபநிஷம், வேதம், கிதா, வியக்ரமா, நியாய, ஜோதிடம், மற்றும் இசை பயின்று தேர்ச்சி பெற்றான். சேஷாதிரி தன் பதினேழாம் வயதில் தன் தாயை இழந்து அதன் பின் அவருடைய மாமாவிடம் முழுமையாக அவரின் அரவனைப்பில் வாழ  தொடங்கினான். சேஷாதிரி அழ்ந்த தியானம் செய்ய தொடங்கி அவர் சக்தி, அருணாச்சலேஸ்வரர் மற்றும் ராமாவின் படங்களை முன் வைத்து நீண்ட நேரம் தவம் இருந்தார். பின்பு சேஷாதிரி அவருடைய பத்தொன்பதாவது வயதில் பாலாஜி சுவாமிகளிடம் சிஷ்யனாக சேர்ந்து துறவறம் மேற்கொண்டார். பிறகு தமிழ்நாட்டில் உள்ள  பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று கடைசியாக அண்ணாமலையாரின் ஸ்தலமான திருவண்ணாமலை வந்தடைந்தார்.சேஷாதிரி தியானம் மேற்கொள்ள தனக்கென்று  தனியாக எந்த இடத்தையும் வைத்துக்கொள்ளவில்லை. அங்கு, இங்கு சென்று தியானம் செய்வார். அவருக்கு மிகவும் பிடித்த இடம் கம்பாட்டு இளையனார் கோயில், த்ரௌபதி அம்மன் கோயில், யோகேஸ்வர மண்டபம், மற்றும் பாதாள லிங்கம். சேஷாதிரி ஸ்வாமிகள் ரமண மகரிஷி வரும் முன்னரே திருவண்ணாமலை வந்தடைந்தார். இவர் ரமண மகரிஷியின் அண்ணன் என்று அழைக்கப்படுவார்.மகான் சேஷாதிரி அவர்களுடைய சீடர்கள் மற்றும் பக்தர்களுக்கு அளிக்கும் அறிவுரையில் என்றுமே சிவலிங்கத்தை பிரார்த்தனை செய்வதால் மான நிறைவும் சாந்தியும் அடைவது உறுதி என உரைத்தார். இந்த அறிவுரை மகான் சேஷாதிரியின் சிஷ்யர்கள் தவறாமல் கடைபிடித்து வாழ்கையில் வெற்றியும் சந்தோஷமும் பெற்றனர். சேஷாதிரி ஸ்வாமிகள் நாற்பது வருட காலம் திருவண்ணாமலையில் வாழ்ந்தார். பிறகு சில நாட்களில் நோய்வாய்ப்பட்டு இங்கேயே இறந்தார். அவருடைய ஆசிரமம் ரமணமகரிஷியின் ஆசிரமம் அருகில் திருவண்ணாமலையில் உள்ளது.

ரமண மகரிஷியின் ஆசிரமம் :

திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமண மகரிஷி மக்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் மதுரை அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவர் 1879ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி பிறந்தவர். இவருடைய அசல் பெயர் வேங்கட ரமணா. இவர் தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு தாயுடன் மதுரையில் உள்ள தனது மாமாவின் வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்பொழுது அவருக்கு மிகவும் சிறிய வயதாக இருந்தது. இங்கு தான் அவர் மாமாவின் வீட்டிற்கு திருவண்ணாமலையில் இருந்து வந்த மாமாவின் நண்பரை சந்தித்தார். மாமாவின் நண்பர் திருவண்ணாமலை பற்றி கூறிய சில விஷயங்கள் இவரை ஈர்த்தது. இவர் அருணாச்சலேஸ்வரரை காண திருவண்ணாமலை செல்ல வேண்டும் என்ற எண்ணம் இவர் மனதில் குடியேறியது.விரைவில் அவர் தன் தாயாருடன் திருவண்ணாமலை புறப்பட்டு சென்றடைந்தர். இங்கு அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் எப்பொழுதும் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டுகொண்டுள்ளதால் பல நாட்கள் தொடர்ச்சியாக தியானத்தில் இருந்தார். இவருடைய தெய்வீக போதனைகள் பலரை ஈர்த்தன. அவர் 58 வருடத்தில் நிர்வாண அடைந்த சமயம் பல லட்சம் பக்தர்கள் இவருடைய சீடர்களாக இருந்தனர். இன்றும் இவருடைய தீவிர பக்தர்கள் இவர் அருளாசி பெற திருவண்ணாமலையில் உள்ள இவருடைய ஆசிரமத்திற்கு வருவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவருடைய பல பக்தர்கள் குறிப்பாக சிவராத்திரியன்று இவர் ஆசிரமத்திற்கு வருவதுண்டு. ரமண மகரிஷி மக்கள் மத்தியில் அவர்  இறந்த பின்பும் அவருடைய சிந்தனைகள் மற்றும் ஆன்மீக சக்தியால் பக்தர்களிடையே அவர் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார். திருவண்ணாமலையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமம் வந்தடைய சென்னையிலிருந்து சுமார் 120 மைல் தூரம் தென்மேற்கு திசையில் பயணம் செய்ய வேண்டும். திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 மைல் தூரத்தில் உள்ள  ஆசிரமத்தை டாக்ஸி மூலமாகவோ அல்லது பஸ் பயணம் மூலமாகவோ சென்றடையலாம். திருவண்ணாமலை ரயில் நிலையம் விழுப்புரம் மற்றும் காட்பாடி  ரயில் நிலையங்களிடையே  அமைந்துள்ளது.

ரமண மகரிஷியின் ஆசிரம நுழைவாயில் மிகவும் அழகாக அமைந்து இருக்கும். ஆசிரமத்தை சுற்றி இருக்கும் இடங்களில் நிறைய மரங்கள் வளர்ந்து பசுமையாக காணப்படும். இதில் 450 வருட பழமையான மரம் ஒன்று மிக நேர்த்தியாக உள்ளது. மேலும் ரமண ஆசிரமத்தில் வருபவர்களை கவர்ந்திழுக்கும் சிறப்பம்சம் இங்கு அமைக்கப்பட்டிருக்கும் அழகிய கோபுரங்கள் ஒன்று ரமண மகரிஷியின் தாயாரின் சமாதியின் மேல் நிறுவப்பட்டுள்ளது. மற்றொன்று புதிய மண்டபத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது.இந்த புதிய மண்டபத்தில் ரமண மகரிஷியின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கல் சிலை நன்கு இழைக்கப்பட்டு கருப்பு நிறத்தில் உள்ளதால் பளிங்கு கல்லால் செய்ததை போல காண்பதற்கு மிகவும் கம்பீரமாக தோற்றமளிக்கிறது. இங்கு கட்டப்பட்ட புதிய மண்டபத்தில் வருடந்தோறும் வரும் நிறைய பக்தர்கள் அமர வசதி செய்யப்பட்டுள்ளது. ரமண மகரிஷி உயிர் வாழ்ந்த காலத்தில் இந்த புதிய மண்டபத்தில் சில நாட்கள் இங்கு தங்கினார். மற்றுமொரு கோபுரம் மாத்துரு புதேஸ்வர கோயில் மீது அமர்த்தப்படுள்ளது. இக்கோயில் உள்ளே செல்ல புதிய மண்டபத்தின் மேற்கு புறத்தில் உள்ள நுழைவாயில் வழியாக செல்லலாம். இந்த கோயில் புகழ் பெற்ற சிற்பி வைத்தியநாத ஸ்தப்பதினால் கட்டப்பட்டது. இங்கு வழிபடும் கடவுள் சிவலிங்கம் மற்றும் சக்கரமேரு ஆகும். இங்கு அனைத்து வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி தினத்தன்றும் பிரதி மாதம் அனைத்து முதல் நாட்களிலும் சக்கர மேரு பூஜை நடைபெறும். இக்கோயில் வெளிப்புற கற்ப கிரகங்கள் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், லக்ஷ்மி, மற்றும் விஷ்ணு உருவங்கள் பொருத்தப்படுள்ளது. இச்சிலைகள் யாவும் கைதேர்ந்த வினைநர்களால் செய்யப்பட்டு உயிரோட்டத்துடன்  உள்ளது. மேலும் கணேசாவின் சிலை தென்மேற்கு திசையிலும் முருகன் சிலை வடமேற்கு திசையிலும் நிறுவப்பட்டுள்ளது. சண்டிகேஸ்வரியின் சிலை புது மண்டபத்தின் வடபுறம்
நிறுவப்பட்டுள்ளது. வடகிழக்கு திசையில் நவகிரகங்கள் நிறுவப்பட்டுள்ளது. கற்பகிரகத்தை நோக்கி நந்தி உள்ளது. மேலும் இந்த மண்டபத்தின் தூண்கள் அனைத்திலும் வெவ்வேறு இந்து கடவுள்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

 
ரமண மகரிஷியின் சமாதி :-

ரமண மகரிஷியின் சமாதி மீது அழகிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் நான்கு தூண்கள் நிறுத்தப்பட்டு அதன் மேல் ஓர் விமானம் நிறுவப்பட்டுள்ளது. இந்த நான்கு தூண்களும் சலவைகற்களால் மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் நடுப்புறத்தில் வெள்ளை நிற பளிங்கினால் செய்த அழகிய தாமரை அலங்கரிக்கிறது. இந்த அழகிய தாமரையின் மேல் சிவலிங்கம் அமர்த்தப்பட்டு மிகவும் கம்பீர தோற்றமளிக்கிறது. இந்த சமாதியில் மேலும் ஒரு பெரிய அளவில் தியானமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் இங்கு அமர்ந்து சௌகரியமாக தியானம் செய்ய வசதியாக உள்ளது. இதனை அடுத்துள்ள பழைய மண்டபத்தில் தான் ரமண மகரிஷி தன் கடைசி நாட்களை தியானத்தில் கழித்தார். நீண்ட நேரம் தியானத்தில் உட்காரும் பக்தர்கள் அனைவரும் இந்த பழைய மண்டபத்தை தான் விரும்புவார்கள். இந்த மண்டபத்தின் வடக்கு திசையில் தான் அழகிய நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேற்கு புறத்தில் ஏழைகளுக்காக இலவச மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. கிழக்கு புறத்தில் உள்ள பாதை சமையலறை மற்றும் உணவருந்தும் மண்டபத்தை சென்றடைகிறது. மலையின்
வடபுறதிலுள்ள இப்பாதை ஸ்கந்தஸரமம் சென்று அடைய உதவுகிறது. இங்கிருக்கும் உணவருந்தும் மண்டபம் சுமார் ஆயிரம் பக்தர்கள் ஒரே சமயத்தில் அமர்ந்து உணவு எடுத்துக்கொள்ள சௌகரியமாக உள்ளது. பெரும்பாலும் ரமண மகரிஷியின் பிறந்த நாட்களில் பக்தர்களுக்கு உணவு படைக்க இந்த உணவருந்தும் மண்டபமும் சமையலறையும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள வேத பாடசாலைக்கு இந்த உணவு மண்டபத்திலிருந்தும் சென்றடையலாம்.

ரமண மகரிஷியின் நிர்வாண அறை :- 

இந்த அறையானது புதிய மண்டபத்திற்கு கிழக்குபுறத்தில் உள்ளது. இந்த அறைக்கு வடக்குபுறத்திலுள்ள அறையில் தான் அநேக நாட்களை ரமண மகரிஷி கழித்தார். பக்தர்கள் அனைவரும் இந்த அறைக்கு தவறாமல் வந்து அவர்கள் பிரார்த்தனையை செலுத்துகின்றனர். இந்த அறைக்கு தெற்குபுறத்தில் ரமண மகரிஷியின் அம்மாவின் சமாதி உள்ளது. இதனை தொடர்ந்து பக்தர்கள் வந்து தங்குவதற்கு வசதியாக நவீன அறைகள் கட்டப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது. இந்த அறைகளை சுற்றிலும் அடர்த்தியான மரங்கள் மேலும் இந்த இடத்திற்கு அழகை கூட்டுகிறது. இதை தவிர இங்கு ஓர் சிறந்த நூலகம் செயல்பட்டுவருகிறது. இங்கு ரமண மகரிஷியின் வாழ்கை மற்றும் ஆன்மீக சிந்தனை என பல்வேறு புத்தகங்கள் பக்தர்கள் வசதிக்காக வைக்கபட்டுள்ளது.

ரமண மகரிஷியின் ஆசிரமம் செயல்படும் நேரம் மற்றும் சடங்குகள் :-

  1. காலை 6.30 மணிக்கு – சமாதியில் வேதங்கள் உச்சரிக்கப்பட்டு பின்பு ரமணவிற்கு பால் வழங்கப்படும்.
  2. காலை 7.00 மணிக்கு – காலை உணவு பரிமாற்றம்.   
  3. காலை  8.00 மணிக்கு - ரமண ஆசிரமம் முன் வேதங்கள் உச்சரிக்கப்படும்.
  4. காலை 8.30 மணிக்கு – பகவான் மகரிஷி மற்றும் அவர் தாயார் சமாதியிலும் பூஜை நடைபெறும்.
  5. காலை  11.30 மணிக்கு - மதிய உணவு பரிமாற்றம்.
  6. மாலை  4.00 மணிக்கு – விருந்தினர்களுக்கு பால் மற்றும் தேநீர் வழங்கப்படும்.
  7. மாலை 4.30 மணிக்கு – ரமண மகரிஷியின் சமாதியில் விருந்தினர்கள் தமிழ் மற்றும் ஆங்கில ஆன்மீக புத்தகங்களை வாசித்தல்.  
  8. மாலை 5.00 மணிக்கு – மகரிஷியின் சன்னதியில் வேதங்கள் ஓதப்படும்.  
  9. மாலை 5.30 மணிக்கு – ரமண மகரிஷி மற்றும் அவர் தாயார் சன்னதியில் பூஜை நடைபெறும்.
  10.  மாலை 6.45 மணிக்கு – திங்கள் மற்றும் சனிக்கிழமை வரை பிராயன வாசிக்கப்படும்
  11.  இரவு 7.30 மணிக்கு – இரவு விருந்துடன் நிகழ்ச்சிகள் நிறைவேறும்.
மேலும் வெள்ளிக்கிழமை அனைத்து பவுர்ணமி தினங்கள் மற்றும் ஓவ்வொரு மாத முதல் தேதிகளில் மாத்ரு புதேஸ்வரர் சன்னதியில் சக்ர பூஜை செய்யப்படும்.


Reply all
Reply to author
Forward
0 new messages