ஈசனின் அருளால் மாணிக்கவாசகர் மீதும் அவர் எழுதிய திருவாசகத்தின் மீதும் கவிதை எழுத வேண்டுமென்று ஆவல் கொண்டு ஒரு சிறு முயற்சி செய்துள்ளேன்.
மாணிக்கவாசகரை இறைவன் ஆட்கொண்டு அவன் நடத்திய திருவிளையாடல் எண்ணில் அடங்கா. அவற்றை என்னால் இயன்றளவு இந்தக் கவிதையில் சொல்ல முயற்சித்துள்ளேன்.
ஆன்றோர்கள் சான்றோர்கள் போற்றிய திருவாசகத்தின் பெருமையை சொல்ல எனக்கு அருகதை இல்லை. மாணிக்கவாசகருக்கும் பெருமைமிகு திருவாசகத்திற்கும் இச்சிறியேனின் அன்புக்காணிக்கையே இந்த கவிதை.
மார்கழியில் ஆண்டாளின் திருப்பாவையும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் நெடுங்காலமாக பாடப்பெற்று வருகிறது. மார்கழி முதல் நாளன்று ஆண்டாளின் கவிதையை பகிர்ந்ததும் இப்பொழுது மார்கழியின் இறுதிநாளன்று மாணிக்கவாசகர் பற்றிய கவிதையை பகிர்வதும் எல்லாம் வல்ல இறைவனின் அருளேயன்றி வேறென்சொல்வது?
நம் அம்ருதவர்ஷினி அன்பர்கள் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
அன்பர்கள் இக்கவிதையை படித்து தங்களுடைய கருத்தையும், நண்பர்களிடமும் பகிர வேண்டுகிறேன்.
அன்புடன்
ஆனந்த் வாசுதேவன்
14th JAN 2016 | மார்கழி 29 | குருக்ராமம்
Humble Pranams
Anand Vasudevan