2,605 views
Skip to first unread message

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:46:06 AM4/19/21
to amrith...@googlegroups.com
ஒரு  வெளிப்படையான சிந்தனை   -  நங்கநல்லூர்  J K  SIVAN  

அப்பாடா,    ஒரு வழியா  கெட்ட வார்த்தை பரிமாறல் யூ ட்யூப்பிலே  இனிமே அவ்வளவா கேக்க  வேண்டியி ருக்காது.  எல்லாம்  நம்மளை யாரு  வழி நடத்தணும்னு,  ஆளணும்னு  தெரு  நாய்  சண்டை மாதிரி  வெறி, போட்டி, த்வேஷம்.  எலெக்ஷன் டைம்லே தான்  ஜாதி தலை தூக்குது.  நான் என்ன ஜாதின்னு  என்னை தவிர மற்றவன் நினைவூட்டறான். ஏன் ஏன்ஏன்?  எங்களை ஆள  அவ்வளவு போட்டி ஏன்?  எங்களுக்கு நல்லது செய்யவா?  இப்படி நம்பி  நம்பி தான்  70 வருஷமா கிழடு தட்டி போயடுத்தே. இன்னுமா  நமக்கு நப்பாசை. 

அரசியல்  பணம் சம்பாதிக்க ஒரு குறுக்கு வழி.  அதில் தவறான பாதைகள் அநேகம் என்பதால்  தான் சிலர் ராஜபோகம் நாம்  மேலும் மேலும் கஷ்டம் துன்பம்  இதெல்லாம் அனுபவிக்கிறோம்  குடிகள் நலம், நலன் பற்றி எவனுக்கு கவலை.  அவன் வசதி, சுயநலம், தனது குடும்ப முன்னேற்றம் இதற்கு நம்மை பலிக்கடாவாக்க  தேடுவது தான் அரசியலில் ஐந்து வருஷத்துக்கு ஒரு முறை நல்ல சான்ஸ் இந்த எலெக்க்ஷன்.  

எல்லோரும் கெட்டவர்கள் என்று எண்ணவேண்டாம்.  நல்லவர்கள்  வளர, வாழ வழியில்லாதபடி செயதிருப் பது இந்த 70 வருஷ சாதனை.  எதற்கு சுதந்திரம் பெற்றோம்?  நமது வியர்வையில், உழைப்பில் எவனோ வளரவா?  இந்த தவறு ஒரு போதாவது நீக்கப்படவேண்டாமா?  இலவசம் ஏன்?  உழைத்து சம்பாதித்து வாங்கி உபயோகப்படுத்துவதில் உள்ள சுகம்  அதை செய்தால்  தான் புரியும்.  

கட்சிகள், கொடிகள், கொள்கைகள்  இருப்பதே அதிகம். வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பெருத்துவிட்டதால்  அதால் ஒன்றோடு ஒன்று மோதி சண்டையிட்டு மண்டை உடைவது தான் நாம் காண்பது.  இனி அவை வளர இடம் கொடுக்காதீர்கள். எல்லோருக்கும்  சமமான வாய்ப்பு, சந்தர்ப்பம், வித்யாசமின்மை இருக்க எவரையும் வெறுத்து, உயர்த்தி  தாழ்த்தி, எவரையும்  ஒதுக்காமல் இருந்தாலே போதும். இதில் குளிர்காய்ப்பவர்களை அணுக விடாதீர்.

 விலை வாசி குறையப்  போவதில்லை. குறைக்க முடியாது. ஏன்?  விளைச்சல், விற்பனை இரண்டுக்கும் இடையே  பல  கைகள் இருப்பதை குறைத்தால் தான்  விலை குறையும்.  விளைக்கிறவனே, உற்பத்தி செய்கிறவனே, உபயோகப்படுத்துபவனை நேரடியாக தொடர்பு கொண்டால்  தான்  அவனுக்கு சிறிது லாபம் போக  நமக்கு  விலை சல்லிசா கிடைக்கமுடியும்.  உற்பத்தி செய்கிறவனைத் தவிர நடுவிலே சம்பந்தமே இல்லாத பல பேர்  தலையிட்டு, ஆளுக்கு ஆள்  லாபம் ஒதுக்கினால்   விலை ஏறத்தானே செய்யும்.   ஓரணா சமாச்சாரம் ஒரு ரூபா ஆயிடுது.

அதே மாதிரி, வீண் செலவு செய்யறதை நாம்  குறைக்கணும். படாடோபம், டம்பம் , ஆடம்பரம் வேண்டாம்.  ஒரு விதத்திலே  கொரோனா சில நல்ல பழக்கத்தை மறுபடியும் நமக்கு நினைவு படுத்திடுச்சி.  ஒரு  நல்லது கெட்டதுன்னா சம்பந்தப்பட்ட  சில பேர்  சேர்ந்தா போதும். மற்றவர்கள் இருந்த இடத்திலே இருந்தே வாழ்த்து இரங்கலோ சொல்லிட்டு போகட்டும்.   கல்யாணம் விழாக்கள்னு  ஆளை கூட்டி வியாதியை பரவ விடவேண்டாம். அவஸ்தைப் பட  விட வேண்டாம்.  

சாப்பாடு விஷயத்திலும்  ஒரு ஸ்வீட், ஒன்று ரெண்டு காய்கறி, ஊறுகாய், அப்பளம், சாதம், சாம்பார், பருப்பு, ரசம், பாயசம் மோர்  போதும்டா  சாமி. இதை சாப்பிட வயிறு இருந்தாலே   அவன் பாக்கியசாலி. உணவுப் பொருளை வேஸ்ட் பண்ணவே கூடாது. அதே மாதிரி  தெருவெல்லாம்  எங்கே பார்த்தாலும் மின்சார கலர் விளக்கு எதுக்கு?  

தெருவிலே  விளக்கே இல்லாம  எத்தனை நூறு வருஷம் அவஸ்தை பட்டு இருக்கோம். நிலா வெளிச்சத்திலே, லாந்தர் விளக்கு வெளிச்சத்திலே நடந்தவனுக்கு தான் அது தெரியும்.  தேவையான கண் கூசாத வெளிச்சம்  போதுமே.  மின்சாரம் எவ்வளவு சேமிப்பாகும்.

வெளியே போய் வந்தா கை கால் முகம் கழுவணும்.  வெளியே  எதுவும் வாங்கி சாப்பிடவேண்டாம்.  வீட்டிலே நல்ல சுவையான  பதார்த்தங்கள் சமைக்கலாம்.  பெண்கள் ஆண்கள் இருவருமே  சமையல் கலை  பழகணும். ரொம்ப  அத்த்யாவஸ்யம்.  அந்தநாள் லே  ஏன் இப்பவும் கூட  மாசம் மூணு நாள் அவங்களுக்கு ரெஸ்ட் கொடுத்து சமைக்கற குடும்பங்கள் இருக்கு.  அப்பா அம்மா சமையல் செயறதைப் பார்த்து குழந்தைகளும் கத்துக்கும்.  

''எம் பொண்ணு  சமைக்கமாட்டா. காபி போட கூட தெரியாது'' என்று  அறிவிப்புடன்  ''இதெல்லாம் தெரிந்த''  மாப்பிள்ளையைத்  தேடும்  பெண்கள்  உண்மையில் வெட்கப்படவேண்டும்.  நூலைப்போல சேலை, தாயைப்போல சேய் . இப்படிப்பட்ட  பெண்கள்  ஹிந்து என்று சொல்லிக்கொண்டு  பெருமைப்பட வழியே இல்லை.   ஹிந்து பண்டிகைகளுக்கு விசேஷமான வழிபாட்டு முறை,   வித வித  பிரசாதங்கள் செய்து நைவேத்தியம் செய்ய  எப்படி  தெரியும்?.  

முதலில்  பன்னிரண்டு தமிழ் மாதங்கள் பெயர் தெரியுமா அப்புறம்  27 நக்ஷத்ரம் தெரிந்து கொள்ளவோ,  வளர்பிறை தேய்பிறை திதிகள் தெரியவோ வாய்ப்புண்டு.  

பாபா  ப்ளேக்   ஷீப்  நமக்கு  போதும்.  வெள்ளைக்காரன் போய்  75 வருஷம் ஆகியுமா இன்னும்  நானூறு வருஷ  மோகம்?  ஆத்திச்சூடி  கொன்றை வேந்தன்  என்றைக்கு கற்றுக்கொள்ளப்போகிறோம்.   நிறைய  எழுதுகிறேன் ஏதோ ஒரு நம்பிக்கையில்.

இனி எந்த அரசாங்கம் வந்தாலும்  லஞ்சம் கொடுத்து  சலுகை பெறவேண்டாம்.  சட்டப்படி  அணுகுவ தையே வழக்கமாக கொள்வோம். சீக்கிரம்,  குறுக்குவழி,  என்று தேடும்போது தான் இந்த பிரச்னை தலை தூக்குகிறது.  வரும் அரசாங்கமும் இனி எவரும் நேரில் வரவேண்டாம். எல்லாமே  வீட்டிலிருந்தே  கணினியில் பெற  வழி செய்யவேண்டும். நாடு சுபிக்ஷப் பாதையை நோக்கி கொஞ்சமாவது  முன்னேறவேண்டாமா?  அதற்கு நம்மாலான ஒத்துழைப்பு தரவேண்டாமா?  ஒருநாளைக்கு ஒரு தடவையாவது அருகே உள்ள உங்கள் வழிபாட்டு ஸ்தலம், கோவில் சென்று ஒரு சில நிமிஷங்களாவது த்யானம் செய்யும் பழக்கம் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் வந்தால்  போதும்  நமது ஆன்மீக சிந்தனை  வளரும். தவறுகள் வாழ்வில் குறையும். தான தர்ம சிந்தனை வளரும். அன்பு அனைத்து உயிர்களிடமும் மலரும். அது தான் மோக்ஷ மார்க்கம்.

இன்னும்  நிறைய  சொல்ல விருப்பம். ஆனால்  இப்போதைக்கு இது போதுமே.


sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:46:06 AM4/19/21
to amrith...@googlegroups.com
மரியாதை ராமன் கதை 2  -   நங்கநல்லூர்  J K SIVAN  ---

 '' வைரமோதிரம் எங்கே?''


இன்னிக்கு  ஒரு வழியாக  ஒரு மாத  காலமாக இருந்த உஷ்ணமான  போட்டா போட்டி  சவால்கள்,  ஆக்
ரோஷ 
பேச்சுக்கள், அவமரியாதை கத்தல்கள், அராஜக பொய்கள், எல்லாம் ஒருவழியாக முடிந்து அமைதியாக  ஐந்து வருஷங்களுக்கு பிறகு  ஒரு முக்கியமான  நாள்,   நமது அடுத்த அரசாங்கத்தை தேர்வு செய்யும் பொறுப்பை  நம் எல்லோரும் நிறைவேற்றினோம்.

நங்கநல்லூரில்  என் வீட்டுக்கு அருகிலேயே, பொடி நடையாகப் போய்  வெயிலின் கடுமை  உச்சி வானத்துக்கு போகுமுன்,  காலை  எட்டுமணிக்கே   ஒட்டுச்சாவடி சென்றேன்.  செல்லம்மாள்  ஸ்கூலில், நங்கநல்லூரில், நன்றாக யோசிக்கப்பட்டு  எல்லா  ஏற்பாடுகளும் அருமையாக  செய்யப்பட்டு இருந்தது.  காவலர்கள் எங்கும் கண்ணில் பட்டார்கள்.   பள்ளிக்குள் நுழைந்த பதினைந்து நிமிஷங்களில்,  வாக்களித்து திரும்பினேன்.

வந்தவர்க்கு முதலில் கையலம்பி, பிறகு ஜுரம் இருக்கிறதா என்று  பரிசோதித்து,   நான்  எங்கே  போய் ஓட்டளிக்கவேண்டும் என்று அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தபோது  ஒருவர்  ஓடிவந்து என் சீட்டைப் பிடிங்கி  344  அதோ அந்த பக்கம்  ஒரு ஈசான மூலை  வரிசையை காட்டினார்.   என் நண்பர்கள் தெரிந்தவர்கள் எல்லோருமே  முகமூடியுடன் கையாட்ட  ஆங்காங்கே  வரிசைகளில்  வட்டங்களில் நிற்க வைத்து,  ஒட்டு போடும் அறை  வாசலில்  ஒரு கைக்கு  பிளாஸ்டிக்  கையுறை   மாட்டி, பின்னர்  எனது  பெயர் பட்டியலில் தேடி கண்டுபிடிக்கப்பட்டு என் பெயர் உரக்க சொல்லப்பட்டு, மற்றவர்கள்  அதை கேட்டு என்ன செய்யவேண்டுமோ அதை செய்தபின் எனக்கு ஒரு சிறு துண்டுச்சீட்டு கொடுத்து ( நான் படிக்க அல்லது  பார்த்துப்பேச அல்ல) அதை  அடுத்த   நபரிடம் கொடுத்து, அவர் என் ஆதார்  அட்டையோடு பார்த்து  ஒரு நோட்புத்தகத்தில் நான்  கையெழுத்திட, பிறகு  அடுத்ததாக ஒரு பெண்மணி   இடது ஆள்காட்டி விரலில்  நகத்தில் பாதியோடு சேர்த்து  நீலவண்ணம் பூசிவிட   எதிரே   ப மாதிரி  ஒரு மறைவிடத்தில் நீளமான ஒரு இயந்திரத்தில் நான் போட விரும்பிய  சின்னத்தின் அருகே  பொத்தானை அழுத்தியவுடன் ,  உள்ளே  ஒரு சீட்டு கடகடவென்று கண்ணாடி வழியாக தெரிந்ததும் வெளி வந்தேன். நான் இந்த செயல் மூலம் சுதந்திர இந்திய  பிரஜையாக வாக்களித் தவன் என்று நிரூபித்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்தேன். இதே மாதிரி  இன்னொரு  முறைக்கு நியாயமாக ஐந்து வருஷங்கள் காத்திருக்க வேண்டும். 

வாக்களித்தவன்  உங்களுக்கு  ஒரு நீதிக்  கதை சொல்லவேண்டாமா? மரியாதை ராமனை  நிறைய வாசகர்களுக்கு பிடிக்கிறதே அவனைப் பற்றிய ரெண்டாவது  அற்புத  தீர்ப்பு கதை சொல்கிறேன் .  சுருக்கமாக.  

''கோபாலசாமி பணக்காரன்.  கஞ்சன் என்று சொல்லாமலே எல்லோருக்கும்  கஞ்சனூரில் தெரிந்தவன் . வேலை யாட்களிடம் நன்றாக வேலை வாங்கி  கூலி மட்டும் குறைத்து கொடுப்பவன்.  ஏமாந்த சோணகிரியாக இருந்தால் கூலியே  கொடுக்காதவன்.   அவனுக்கு  எவ்வளவு சேர்த்தாலும் பணத்தின் மீது ஆசை பேராசையாக வளர்ந்துகொண்டே வந்தது. புண்ணாக்கு   தேங்காய்  வியாபாரி..  புண்ணாக்கு விற்று  ஒரு   பை நிறைய  பணத்தோடு   மாட்டுவண்டியில் உட்கார்ந்து வீடு திரும்பினவனுக்கு ஒரு   பெரிய ஷாக்.  முதல் நாள் தென்னந்தோப்பில் பறித்து  தேங்காய் மண்டியில் விற்ற பணமும் சேர்த்து மொத்தம்  பதினான்காயிரம் ரூபாய் கொண்ட  சுருக்குப்பையைக்   காணோமே. எங்கே தொலைத்தான்? இப்படி பணப்பையை  மறப்பது இது தான் முதல் தடவை.  மற்றவர்கள் பணப்பையையே  தூக்கிக் கொண்டு வருபவன் தன்னுடைய பையை மறப்பதாவது?. ஒருவேளை வயதாகி விட்டதோ?

எங்கு தேடியும் பணப்பை  கிடைக்கவில்லை.  இவ்வளவு பணம் அவன் யாருக்கும் கொடுப்பவனில்லை.  வண்டிக்காரனை துளைத்தெடுத்தான். அவனுக்கும் தெரியவில்லை.  மாடு  பணப்பையை திங்கவில்லை .புலம்பி தள்ளினான் .  எல்லாவற்றுக்கும் மனைவியைக் கோபிப்பவன் கோபாலசாமி.  அவளுக்கு  அடி  உதை புதிதல்ல.  முப்பது வருஷமாக அலுத்துவிட்டது. 

அவன் மனைவி ஒரு ஐடியா கொடுத்தாள் .  

'' இன்னாங்க , உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது  பார்த்திருந்தா, கிடைச்சா, கொண்டு வந்து கொடுப்பாங்க’  உள்ளூர அவளுக்கு   ஊரில் கணவனைத் தவிர நல்லவர்களும்  இருக்கிறார்கள் என்று அசையாத  நம்பிக்கை''.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே .  கோபாலசாமி தண்டோராக்காரனை அழைத்து  சேதி சொல்ல  ஊர் முழுதும், அண்டை அசல் எங்கும்  '' காணாமல் போன  பணப்பையைத் தேடிக்  கண்டு  பிடித்தவர்களுக்கு தக்க சன்மானம்'' என்ற சேதி எதிரொலித்தது.  ஒரு வாரம் ஆகியும் எவரும்  பணப்பையை கொண்டுவந்து கொடுத்து சன்மானம் பெறவில்லை.

குப்புசாமி  ரெண்டு ஊர் தள்ளி  கொட்டாம்பட்டியில்   வத்யார். நல்லவன்.  நேர்மையானவன். ஏழை என்றாலும்  உழைத்து வாழ்ந்து அதில் மிச்சம் பிடித்து தான தர்மம் செய்பவன். விவசாயி.  நிலத்தடி நீர்  BORE போட்டு நீர்ப்பாய்ச்ச பணம் இல்லை. எங்காவது ஊர் போய் பள்ளிக்கூடத்தில் வேலை தேடலாம் என்று   கஞ்சனூர் வந்தான்.  வரும் வழியில் ஒரு  மாந்தோப்பு  நிழலில்  ஒரு கல்லின் மேல்  காலாற உட்கார்ந்தான். அவன் அருகே  ஒரு துணிப்பை  அரளிச்செடி அருகே அதனடியில் வெளியே  அதிகம்  தெரியாமல் கிடந்தது.  

இங்கே எப்படி ஒரு பை , குண்டாக இருக்கிறதே?''  எடுத்து  பிரித்து பார்த்தான்   நிறைய  நோட்டுகள், காசுகள். மூடி விட்டான்.  ஓஹோ யாரோ தொலைத்து விட்டார் போல் இருக்கிறதே... விசாரிப்போம்''  என்று ஊருக்குள் நுழைந்து வழியில் திரௌபதி அம்மன் கோவில் சாமி கும்பிட்டு குங்குமம் இட்டுக்கொண்டான்.   

''அம்மா  தாயே,  நான் சத்தியமாக  எப்படியாவது இதன் உரிமையாளர் யார் என்று தேடிப்பார்த்து விசாரித்து கொடுக்கிறேன். மூன்று நாளுக்குள் கிடைக்கவில்லையென்றால் உன் அருளால் கிடைத்ததாக எடுத்துக் கொண்டு என் வயலுக்கு நீர் பாய்ச்ச  உபயோகிக்கிறேன். பின்னர் என்றாவது  ஒருநாள் உரிமையாளன் யார் என்று தெரிந்தால் பணத்தை எண்ணிக்  கொடுத்துவிடுகிறேன்''

கஞ்சனூருக்குள் நுழைந்தபோது  அங்கே ஒரு  தேநீர் கடைக்காரரை சந்தித்தான் குப்புசாமி.  ஊர் முழுதும் தண்டோரா போடப்பட்டு  கோபாலசாமி பையைத் தொலைத்தது டீ கடைக்காரனுக்கு தெரியுமே. ஆகவே  அவன் குப்புசாமியை கோபாலசாமியிடம் அனுப்பினான்.    

''அவரது தான் இருக்கும்  இது . போய் கொடுத்தா  உனக்கு நிறைய  சன்மானம் கொடுப்பார் அந்த ஆளு . பெரிய பணக்காரன்''

கோபாலசாமிக்கு தனது காதுகளை, கண்களை நம்பவே முடியவில்லை. '' அடியே லெச்சுமி, நீ  சொன்ன ஐடியா பலிச்சுடுச்சிடி... உனக்கு கமர்கட்டு வாங்கியாறேன்.''

''அடப்பாவி,   பதினாலாயிரம்  ரூபாய்  கிடைச்சதுக்கு ரெண்டு கமர்கட்டா....? நீ    எங்கேயோ தொலைச்சிட்டு  என்னை சாவடிக்காம இருந்தா அதுவே போதும்''என்று  லெச்சுமி  தலையை குனிந்துகொண்டு உள்ளே சென்றாள் .

கோபாலசாமி பணத்தை எண்ணினான். கணக்கு பார்த்த போது  ஒரு தம்பிடி கூட குறையவில்லை.  ஆஹா  என்ன செய்வது?? இவனுக்கு சன்மானம் கொடுக்கவேண்டுமே ?  அதை எப்படி தவிர்ப்பது?  ஒரு ஐடியா  தோணியது.

''யோவ்,   குப்புசாமி, இன்னாய்யா  இது அக்கிரமம்? பையில் வைச்சிருந்த என் வைர மோதிரம் காணோமே? எடுத்ததை மரியாதையா கொடுத்துடு . உன்னை  விட்டுடுறேன்.  

''உங்க பையை நான் திறந்து கூட பார்க்கலியே. வைரமோதிரம் பத்தி எனக்கு எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்களே''. சன்மானம் கொடுக்காட்டி கூட பரவாயில்லே. பையை கொடுத்துட்டு நான் போயிடறேன்''

''வேஷமா போடறே.''     ஊரைக் கூட்டி கோபாலசாமி கத்தினான்.  எல்லோரும் அவன் சொல்வது உண்மையென நம்பும்படி இருந்தது  அவன் கத்தல்.  இந்த பிரச்சினையை  அடுத்த  ஊரில்  இருக்கும்  மரியாதை ராமனிடம் தான் கொண்டு செல்லவேண்டும். அவன்  விசாரணை செய்து  தீர்ப்பு சொன்னால் அது நியாயமாக இருக்கும் என்று  ஊர் பஞ்சாயத்து முடிவு செய்தது.  

எல்லோரும் மாட்டு வண்டியில் மரியாதை ராமன் இருந்த இடம் சென்று அவன்  வழக்கை விசாரித்தான்.  தண்டோராக்காரன் என்ன சேதி சொன்னான் என்று அவனைக் கேட்டறிந்தான்.  கோபாலசாமி  மனைவியிடம் என்ன சொன்னான் என்று அவளை விசாரித்தான்.  தண்டோராக்காரனுக்கு  கோபாலசாமி  பையில் இருந்தது பற்றி என்ன சொன்னான் என்று கேட்டறிந்தான். கோபாலசாமி மனைவியிடம் தனியாக   வைரமோதிரத்தின்   அடையாளம் பற்றி கேட்டபோது  அவள்  ஆச்சர்யமாக  விழித்ததில் இருந்தே  ராமன்  புரிந்துகொண்டான். வைர மோதிரம்  வீட்டிலேயே  கிடையாதே என்று  அவள்  எப்படி சொல்வாள். தண்டோரா காரனுக்கும்   வைர மோதிரம் பையில் இருந்ததாக  சொல்லப்படவில்லை. இன்னொரு விஷயம் .  கோபாலசாமியிடம்   அரளிச்செடி  எங்கிருக்கிறது  எப்படி  பை  அங்கே  கிடந்தது என்று கேட்டபோது  எனக்கு அரளிச்செடி எங்கே இருக்கிறது என்றே தெரியாது  என்றான்.  

 உண்மையில்  கோபாலசாமி அரளிச்செடி அருகே  இருந்த மாந்தோப்பிலிருந்து ஒரு கிளையில் நிறைய  மாம்பழங்கள்  வேலிக்கு  வெளியே  தொங்கிக்  கிடந்ததைப் பார்த்து  தனது பை  நிறைய  தோட்டக்காரனுக்கு தெரியாமல் நிரப்பிக் கொண்டபோது தான் அந்த பையிலிருந்த  பணப்பை  அருகே  அரளிச்செடி அடியில் விழுந்தது என்று  கோபாலசாமிக்குத்  தெரியாது.   தான்  மாம்பழம் திருடி  பையை மாட்டு வண்டியில் வைத்ததை  வெளியே சொல்லவில்லை.  

மரியாதை ராமனுக்கு  உண்மை புரிந்துவிட்டது.    கோபாலசாமி பொய்யன். அயோக்கியன்.  குப்புசாமி ஞாயமானவன் என்பது கோபாலசாமி பணம் குறைந்திருக்கிறது என்றே  சொல்லாததால்  புரிந்தது.
 கோபாலசாமி  வைரமோதிரம் மட்டும் தான் காணோம் என்று திருப்பி திருப்பி சொன்னான்.   டீக்கடைக்காரன்  குப்புசாமி நேர்மையாக தனக்கு ஒரு பை  நிறைய பணம் கிடைத்தது  அது தன்னுடையது இல்லை, யாருடையது என்று தெரியவில்லை, கண்டுபிடித்து கொடுக்கவேண்டும் என்று சொன்னதும்  மரியாதை ராமனுக்கு குப்புசாமி மேல்  நல்லபிப்ராயம்  விழுந்தது .

மரியாதை ராமன்  ஊர்காரர்களிடம் தனது தீர்ப்பை எப்படி சொன்னான் தெரியுமா?

மக்களே, இந்த பையோ, அதில் உள்ள பணமோ  உங்கள் ஊர்  அரளிச்செடி அருகே கிடைத்தது.  கோபாலசாமி  அந்தப்பக்கம்  போகவில்லை.  அரளிச்செடி எங்கே இருக்கிறது என்று கூட  தெரியாது என்று சத்தியம் செய்வதால் அவனது பையாக இருந்தால் அங்கே விழுந்து கிடைக்க  நியாயம் இல்லை.  இந்த  பையும் இதில் உள்ள பணமும் வேறு யாருடையதோ என்று ஊர்ஜிதம் ஆகிறது.  கோபாலசாமி பையாக இருந்தால் அதில் எவ்வளவு பணம் இருந்தது என்று சொல்லி இருப்பான்.  வைரமோதிரம் நிச்சயம்  ஜாக்கிரதையாக இருந்திருக்கும்.    இந்தப்பையில்  வைர மோதிரம் இருந்தால் அதை எடுத்தவன் பணத்தையும் எடுத்திருப்பானே. வேறு யாரோ தொலைத்த பை இது. அதைத் தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் பத்தில் ஒரு  பங்கு  திரோபதை அம்மன்  கோயிலுக்குக்  காணிக்கை கொடுத்துவிட்டு, மீதியை   அதை கண்டுபிடித்தவருக்கே உரிமை ஆக்கி விடுவோம். எடுத்தவரே  அதை வைத்துக்கொள்ளலாம்.

என்றாவது ஒருநாள்  கோபாலசாமியின் பையும் பணமும், வைர மோதிரமும் கிடைத்தால், கண்டுபிடிக் கப்பட்டால் அவர் அறிவித்தபடி  கண்டுபிடித்தவருக்கு  கால் பாகம்   பணம் சன்மானமாக தருவோம்.

மரியாதை ராமன் தீர்ப்பு   எல்லோருக்கும் நியாயமானது என்று  ஏற்கப்பட்டதால் கோபாலசாமி வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு வீட்டுக்கு ஓடினான்.  

குப்புசாமி த்ரோபதை அம்மனுக்கு  கிடா வெட்டி  பொங்கலிட்டு  எல்லோருக்கும் அன்னதானம் செய்தான் . அவன் வயலில் புது மோட்டார் டூர்ர்ர் என்று சத்தத்தோடு  நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தது.   இப்போதெல்லாம் ஒரு புது சைக்கிளில் போகிறான்.


sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:46:06 AM4/19/21
to amrith...@googlegroups.com

சாஸ்திரிகளின் முப்பது நாள் ராமாயணம்-   4

நங்கநல்லூர்  J K SIVAN


  '' ராம  பரத  சம்வாதம்''  

நான்  சொல்லிக்கொண்டு வருவதெல்லாம்  ராமாயண கதை அல்ல.  அதில் வரும்  சில காட்சிகளை பற்றிய குறிப்புகள். ஸ்ரீ ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் தனது அற்புதமான ஆங்கிலத்திலும்  சமஸ்க்ரித புலமையிலும்  அனுபவித்த சில  அருமையான காட்சிகள்.  இதெல்லாம் கூறி முடித்தபின்னரே  ராமாயண பிரசங்கத்தில் புகுவேன்.

''ஸ்ரீ  ராமன் நினைத்தபடி நடக்கவில்லை.  மாரிக்காலம்  நீண்டு கொண்டே போயிற்று.  சுக்ரீவனும் அவனது வீரர்களும்  இன்னும்  சீதையைத் தேடும் பணியில் ஈடுபடவில்லை.   இதற்கிடையே  ஹனுமான், சுக்ரீவனிடம்  ''அரசே  நீங்கள் கொடுத்த  வாக்கு  தவறுகிறது.  ஸ்ரீ ராமனிடம் நீங்கள் சீதா தேவியைத்தேடி கண்டுபிடிக்கும்  பணியில்  நமது வீரர்களை  நாலா பக்கமும் அனுப்புவதாக சொன்னீர்களே. உடனே அதில் ஈடுபட வேண்டாமா?  கால தாமதமாகிறதே''  என்று  அறிவுறுத்துகிறார்.

ஸ்ரீ ராமனின்  பொறுமை  எல்லை கடந்துவிட்டது.   லக்ஷ்மணனை அனுப்புகிறான்.   சுக்ரீவனிடம்  பேசும்போது  வார்த்தைகளில் கோபம் வேண்டாம் என்று அவன் சுக்ரீவனை  எச்சரித்தபோதும்  லக்ஷ்மணன் வெகுண்டு  ''சுக்ரீவா,  என்  அம்புகளால் வீணில் உன் உயிரை இழக்காதே '' என கோபிக்கிறான்.  சுக்ரீவன்  தனது திட்டத்தை விவரித்த பிறகு தான்  லக்ஷ்மணன் கோபம் தணிகிறது.  சுக்ரீவனிடம்  ''நண்பா  என்னை மன்னித்துவிடு'' என்கிறான்.  சுக்ரீவன் நேரில் வந்து ராமனை தரிசித்து தனது தேடல் திட்டத்தை விளக்கியதும்  ராமன்  மகிழ்கிறார் .

சுக்ரீவன்,  வானர வீரர்கள்,  ராம லக்ஷ்மணர்கள் கலந்து ஆலோசிக்கும் ஒரு கட்டம் விபீஷண சரணாகதியின் போது.    விபீஷணனை  ஏற்கக்கூடாது கொல்ல வேண்டும் என்று  ராமனைத்தவிர அனைவரும் ஏக முடிவாக இருக்கிறார்கள்.  ஹனுமான் ஒரு படி மேலே போய்  ''தனது சகோதரனையே  காட்டிக்கொடுத்து  துரோகம் செய்த விபீஷணன் எந்த நிலையிலும்  நமக்கும் துரோகம் செய்ய தயங்கமாட்டான். அவன்  நம்பத்தகாதவன்'' என்கிறான்.  

ராமனோ  ''சுக்ரீவா,  சிலர்  உன்போல் நம்பிக்கைக்கு பாத்ரமானவர்கள் என்பதை மறக்காதே.   அண்டி  சரணடைந்தவனை கைகொடுத்து  தைர்யமளித்து காக்கவேண்டும் என்பது ஒரு அரசன் கடமை.'' என்கிறார்.
பரதனை சுட்டிக்காட்டுகிறார்.  தன் காலடியில் விழுந்து காத்திருக்கும்  ராஜ்யத்தையே  வெறுத்து சகோதரனின் காலடியில் விழுந்து சரணடைந்த அவன் போல  லட்சுமணனுக்கு நிரூபிக்க  இதுவரை   சந்தர்ப்பம் எதுவும் கிடைக்கவில்லை'' என்கிறார்.

 ராமர் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை அயோத்தியில் மட்டுமல்ல  ராஜ்யத்தை  தனது வசத்தில் கொண்ட  பரதன்  சித்ரகூடத்தில் வந்து  ராமனை அழைத்து மீண்டும் அரசனாக ஆள  அழைத்த போதும்  தந்தை சொல் ஒன்றே மந்திரம் பதினான்கு வருஷம் வனவாசத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதியாக நிற்கிறார்.   உத்தம  சகோதர உறவுக்கு, பாசத்துக்கு,   ராமர் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு  என்கிறார் ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் தனது பிரசங்கத்தில். எண்ணற்ற  சமஸ்க்ரித ஸ்லோகங்களை வால்மீகியிடமிருந்து எடுத்து கொட்டுகிறார்.

பதினான்கு வருஷம் முடிந்ததும்  ராமர்  முதலில் ஹனுமனை  நந்திக்ராமத்துக்கு அனுப்புகிறார். தான் பாரத் வாஜர் ஆஸ்ரமத்தில் தங்குகிறார்.  பரதன் ஒருவேளை  ராஜ்யபாரம் ஏற்கும் மனநிலையில் இருக்கிறானா என்று அறிய ஹனுமனை அனுப்பினாரா?  என்கிறார்  சாஸ்திரிகள்.  ஆனால்  பரதன் தனது முடிவில் இம்மியும் மாறவில்லை.  ராமன் திரும்பிய  அடுத்த கணமே  பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க முள்ளின் மேல் காத்திருந்தான்.

சித்ரகூட சந்திப்பில்    ராமரிடம்   பரதன் மூன்று  முக்கிய விஷயங்களை குறிப்பிடுகிறான்.

1. அண்ணா,  நமது இக்ஷ்வாகு வம்சத்தில் மூத்தவன் தான் அரியணை ஏற வேண்டும்.
2.எனது தாய்  கைகேயியின் வார்த்தைகள் எடுபடாது.  அது சுயநலத்தில் பிறந்தது. ஆகவே  ஏற்கத்தகாதது.
3.அயோத்தி குடிமக்கள் அனைவரும் ஒருவர் விடாமல்  ஸ்ரீ ராமனே அடுத்த  அரசன் என்று ஏகமனதாக காத்திருக்கிறார்கள். 

''பரதா, தாயைப் பழிக்காதே, அது என் காதில் ஏறாது. என்னைப் பொறுத்தவரையில்  அம்மா வேறு அப்பா வேறு இல்லை.  இருவரும் தர்ம சீலர்கள் என்பதை மறக்காதே'' என்று ராமர்  திரும்ப மறுக்கிறார்.

''அண்ணா,  இந்த  நாடு இப்போது எனது என்றால் நான் ராஜா இல்லையா. என் வாக்கு அதிகாரம் கொண்டது இல்லையா. நான் அரசனாக அதை உனக்கு அளித்து நீ ஏற்கவேண்டும் என்று சொல்கிறேன். இப்போதாவது என்னோடு அயோத்தி  திரும்பு. இதை நீ மறுக்க முடியாது'' என்கிறான்.  இதற்கு ராமன் பதிலளிக்கும் ஸ்லோ கங்கள் பொன்னானவை.  விதி,   மனிதனின் வாழ்க்கையில் விளையாடுவதைப் பற்றி, அதை தவிர்க்க  முடியாதது பற்றி எடுத்துச் சொல்கிறார்.

ராமன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்  பரதன் மனம் மாறவில்லை.  தாய் கைகேயியின் செயலை, சொல்லை அவனால் மறக்கவோ மன்னிக்கவோ முடியவில்லை.  தந்தை தசரதர்  கைகேயியின் மோகத்தில் நேர்மையாக  சிந்திக்கும் திறனற்றவர் என்று  கருதுகிறான்  ''அண்ணா  நீ  பொறுப்புள்ள  மகனாக தந்தையின் செயலைப்  புறக்கணித்து  அவருக்கு நற்பெயர் சம்பாதித்து தரவேண்டும், அவரை  காக்க வேண்டும் ''  என்கிறான்.

''ஊரறிய  உன்னை  அடுத்த  அரசன் என்று, யுவராஜ்ய பட்டாபிஷேகத்துக்கு  ஏற்பாடுகள் பண்ணிய தந்தையின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காமல்  அவர் மனைவிக்கு அவர் கொடுத்த  வாக்குக்கு  அடி  பணிந்து  நீ  தியாகம் செயகிறாய். அது ஏற்புடையதல்ல''    என்று கூட சொல்லிப்பார்க்கிறான் பரதன்.

'' அண்ணா  இன்னொரு  விஷயமும் நீ மறவாதே.  நான் இளைஞன். அனுபவமில்லாதவன். நாட்டை ஆள  தகுதியற்றவன். நாட்டின் நலன் கருதி, நாட்டு மக்கள்  விருப்பத்துக்கிணங்க   நீ   ராஜ்ய பாரம் ஏற்றுக்கொள். இதோ வசிஷ்டர் என் கூட வந்திருக்கிறார். உடனே  உனக்கு   இங்கேயே   பட்டாபிஷேகம் நடத்தி வைப்பார். என்கிறான் பரதன்.  அவனோடு வந்த அனைவரும் அதுவே சரி என்று  ஏகமனதாக சொல்கிறார்கள்.

''தந்தையின் வாக்கை  நிறைவேற்றுவது ஒன்றே பிரதானம். மற்ற எதுவும் அதற்கு நிகராகாது.  அவரது வார்த்தையை தாய் மூலம் வந்தாலும்  நீயும் உத்தம புத்திரனாக  அதை  ஏற்று அரசனாகவேண்டும்  என்று மறுக்கிறார் ராமர். 

''வனவாசம்  கொடுமையானது அண்ணா ''  அயோத்தி திரும்புங்கள் என்கிறான் பரதன்.  

''பரதா , நீ அயோத்தியில் அரசனாக பொறுப்பேற்று வாழ்வதற்கு எந்த விதத்திலும் இந்த  கானக வாழ்க்கை குறைவில்லையப்பா. எந்த பயமுமில்லை.   நீ நாட்டரசன், நான் காட்டரசன். சீதையோடு சந்தோஷமாக இங்கே வாழ்வேன் கவலை வேண்டாம்''  என்கிறார் ராமர்.

வசிஷ்டரும்  பரதன் சொல்லை ஆமோதித்து  '' ஸ்ரீ ராமா,  இக்ஷவாகு வம்சத்தின் பாரம்பர்யம் முதல் மகன் தான் அடுத்த ராஜா''. மேலும் தந்தை வாக்கைப் போன்றது குலகுரு,  ஆசார்யன் வாக்கும். நான் சொல்கிறேன் நீ ராஜாவாக பட்டாபிஷேகம் செய்துகொள் '' என்கிறார்.

பரதனை ''உன் தந்தை ஆணையின் படி, விருப்பப்படி  அரசனாக பதவி ஏற்றுக் கொள் '' என்ற வசிஷ்டரை அனைவர் எதிரிலும் சபையில் பரதன் கடிந்து கொண்டு ஏற்கனவே  நிராகரித்தான் .

கடைசி அஸ்திரத்தை பரதன் பிரயோகிக்கிறான்.   காய்ந்த  தர்பைப் புல்லை நிரப்பி  பரப்பி    தீமூட்டி ராமன் எதிரிலேயே  தனது உயிரை ''ப்ராயோபவேசம்'' செய்யப்போவதாக  சொல்கிறான்.  

ராமர்  அது தவறு என்று தர்ம நியாயங்களை உபதேசிக்கிறார்.  

கடைசி  முயற்சியும்  தோல்வியுற ''ராமா, நான் உன்னுடன் காட்டில் வசிக்கிறேன்'' என்று ஆரம்பிக்கிறான்.

''இல்லை பரதா,  நான் தந்தை சொல் வார்த்தையை மதித்தது போல் நீ  தாய் சொல்லை தட்டாமல் அவர்கள் அனைவரையும் நாட்டையும் மக்களையும் ரக்ஷிக்கவேண்டியது உன் தலையாய கடமை என்கிறார்.  அப்போது   தேவர்கள் விண்ணோர்  அனைவரும் ராமனின் முடிவு சிறந்தது, இதனால் தசரதன் நரகம் செல்லாமல்  மோக்ஷம் அடைகிறான் என்கிறார்கள்.

விறுவிறுப்பாக செல்கிறது அல்லவா இந்த தொடர்.  இன்னும்  அறிவோம்.

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:46:56 AM4/19/21
to amrith...@googlegroups.com
பத்ரகிரியார்  புலம்பல்  --  நங்கநல்லூர்  J K  SIVAN  --


    ஒரு ராஜாவின் கதறல்...

ஏக்கம் என்பது மனதின் அடியே தேங்கி நிற்கும் வண்டல் எனலாம்.  அது வெளியே அடிக்கடி வருவதில்லை. அது வந்தால் அதன் வெளிப்பாடு எப்படியெல்லாமோ இருக்கும். சிலர் அழுவார், சிலர் வெறுப்பில் சிரிப்பார், சிலர் கோபிப்பார்,  சிலர்  அழுதுகொண்டே சிரிப்பார்....சிலர் பொறாமைப் படுவார், வாடி தனிமையில் வதங்குவார். ஏக்கம் எதனால் வருகிறது? நினைத்தது நடக்காமல் போனால் மட்டும் அல்ல. முயன்றும் கிடைக்காதபோது. சோதனைகள் பல மேலும் மேலும் தலை நீட்டி உற்சாகத்தை கொல்லும்போது . அந்த நேரத்தில் மனம் தேடுவது ஆறுதல். இறைவனை நாடுதல். நண்பர்களின், உறவினர்களின் ஆதரவும் ஆதங்கமும்.வேதாந்தம் மனதுக்கு இனிக்கும் நேரம் அது. தத்துவங்கள் வாயிலும் வரும். செவியிலும் நுழையும்.

ரெண்டே அடியில் மிக உயர்ந்த தத்துவங்களைச் சொல்ல சிலரால் தான் முடியும்.  தத்துவங்கள் என்றாலே புரியாத விஷயம் என்று நாம் நினைக்கும் தருணத்தில், கால கட்டத்தில், அவற்றைப் படிக்க விருப்ப மூட்டும் வகையில் அமைந்திருப்பது பத்ரகிரி எனும் பழைய கால ராஜாவின் நீதி வாக்யங்கள். அந்த ராஜா பர்த்ருஹரி, பத்ரகிரியார் எனும்  பட்டினத்தாரின்  சீடராக  திருவிடை மருதூரில் கோவில் வாசலில் அமர்ந்திருந்தார் என்றும் அறிகிறோம். 

வடக்கே வாழ்ந்த ராஜா பர்த்ருஹரீ என்ற வேதாந்தி ராஜாவின் சமஸ்க்ரித ஸ்லோகங்களான நீதி சதகம், (சுபாஷிதம்)  வைராக்கிய சதகம்   என்பனவற்றை தமிழில் அவ்வப்போது உங்களுக்கு அளித்து வருகிறேன். 

ஒருவேளை எனக்கு தெரியாத எவ்வளவோ விஷயங்களில் இதுவும் ஒன்றாக  இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஏதோ முயன்று சிறிது புரிந்துகொள்ளாமலும் இருக்கலாம்.   இந்த நீதி வாக்யங்கள் தமிழில் பத்திரகிரியார் புலம்பல் என்று சிறப்பான கவிதைத் தொகுப்பாக உள்ளது.

திருக்குறளில் இதே போன்று அருமையான விஷயங்கள் உள்ளது. எனினும் சில குறள்களை மற்றொருவர் விளக்கிச்சொன்னால் மட்டுமே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சில நேரடியாகவே புரிகிறது.    இந்த ராஜா அப்படியல்ல. எளிய தமிழில் சிறப்பாக சொல்கிறான். ஒரு சமாசாரம் என்னவென்றால் அவன் சொல்லும் விஷயத்தின் தன்மை. மும்மலம், சுழுமுனை, இட பிங்கல விவகாரங்கலாகிய  உயர் தத்துவம்.

ஏற்கனவே கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தால் இந்த வாக்யங்கள் பூரணமாக தெட்டத் தெளிவாக மண்டையில் ஏறும்.

மிகவும் சக்தி வாய்ந்த மருந்துகளை நிறைய சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றில் அம்மாதிரியான மருந்துகளை  நிறைய  உட்கொள்ளக்கூடாது என்பதற்காக  250mg  தருவார்கள்.    விளைவு  தாங்க முடியாமல் போய்விடும்.  இந்த நீதி வாக்யங்களை  அப்படித்தான்  ஒவ்வொன்றாகத்தான் அனுபவித்து படிக்கவேண்டும். அது பற்றி சிந்திக்க வேண்டும். அப்போது தான் அவற்றின் உள்ளே புதைந்து கிடக்கும் உயர்ந்த கருத்து புலப்படும்.  இதை நிதித்யாஸம் என்பார்கள்.   எனவே கொஞ்சூண்டு மட்டும் அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம்  சொல்கிறேன்.

எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே
அழுத்தமாய்ச் சிந்தையை வைத்தன்பு கொள்வது எக்காலம்?

எழுத்து என்றால்  என்ன, நான் இதுவரை படித்தவை, எழுதியவை, கேட்டவை, திருப்பி திருப்பி  அவற்றால் எனக்கு என்ன பயன். நேரம் தான் வீணாகியது.உள்ளே ஒன்றும் ஏறவில்லை.  என் சிந்தையிலே  குடிகொள்ள வேண்டிய  ஒரே எழுதது ஐந்தெழுதது ஓம் நமசிவாய  என்ற உன் பஞ்சாக்ஷரம். அதை திருப்பி திருப்பிச்சொல்ல முடியவில்லை என்றாலும் ரெண்டே எழுத்து போதும்.   சிவ சிவா.  மஹா பெரியவா இதைத்தான் விடாமல் சொல்லிக்கொண்டே இருங்கள் என்றார்.  ராம ராம  என்றும் சொல்லலாம். இதையும் சுருக்கி  ஒரே  எழுதாக   ஓம்  என்று சொல்லலாம்.  சொல்ல சொல்ல அதுவே  மனதில் எப்போதும் தங்கிவிடும்.
இதை நான் அனுஷ்டிப்பது எக்காலம் என்று அழுத்தமாக கேட்கிறார்  பத்ரகிரியார்.

அருளாய் உருவாகி ஆதி அந்தம் ஆகின்ற
குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம்?

ஆண்டவன், பகவான்  என்று எந்த பேரில் அவனை அழைத்தாலும்  அவன் அருள்மயமான ஒருவன் தான்.  ஆதி அந்தம் இல்லாத  எல்லாம் அன்பேயானவன்.  அவன்  என் குருவாக வந்து என்னை நல்வழிப்படுத்தி நான்  உயர்வது எப்போது?

நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம் 
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம்?

நீ யார்  என்று எவரேனும் என்னை கேட்டால்  நான்  ஜே  கிருஷ்ணய்யர் மகன் ஜே.கே. சிவன்  என்று தானே சொல்லிக்கொண்டிருக்கிறேன். நான் அது இல்லை. நான் என்பது நீயே என்று என்றாவது ஒருநாள் சொன்னேனா?   நானும் உணரவேண்டும்.    பத்திரகிரியார் இதை ஒருநாள் உணர விரும்பி  நான் என்பது நீ தான் என்று என்றைக்கு நான்  புரிந்துகொண்டு  உய்வது  என்று கேட்கிறார் பத்ரகிரியார்.

என் மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்த பின்பு
தன் மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம்?

இது என் பெரிய  மாளிகை, இது என் கார்,  இது என் மனைவி குழந்தைகள் உறவினர் என்று எதைப்பார்த்தாலும் எனதாகவே, நானாகவே  இதுவரை வாழ்ந்த வாழ் நாளை வீணாக்கிவிட்டேனே ப்ரபோ,  இதெல்லாம் எண்ணும்போது  இனியாவது  எல்லாமே  நீ தான் உன் உருவம் தான், நான் உன் அடிமை, உன் உடைமையே,  இனி நான் நீயே  என்று எப்போது  அறிவேன்?

ஒளியில் ஒளியாம் உருப்பிறந்த வாறதுபோல்
வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம்?

ப்ரம்மம் ஒக்கட்டே  என்று நூறு தடவை  சதாசிவ ப்ரம்மேந்திராள் பாட்டை கேட்டாலும் அதன் அர்த்தம் இன்னும்  நெஞ்சில் பதியவில்லையே.  பாட்டின் ராகம் தானே மனதை கவர்ந்தது. அதற்காகவா அவர் பாடினார்?  சர்வம் ப்ரம்மமயம் என்று சொன்னால் போதாது அப்பனே, உணரவேண்டும், எல்லாம் ஒளிமயமாக தோன்றுவது அவனே, ஒளியில் ஒளி அவனே, பரவெளியில் எங்கும் நிறைந்திருப்பது அவனே  என்று என்று நான் அறிந்து நற்கதி அடைவேன்?  என்கிறார் பத்ரகிரியார் .

மேற்கொண்டு  பார்ப்போம் 

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:47:38 AM4/19/21
to amrith...@googlegroups.com

    ஒரு  லெச்சுமி  கதை.     நங்கநல்லூர்  J K  SIVAN 

சுப்ரமணிய பிள்ளைக்கு  தமிழ் பிடிக்கும்.  நாலு  க்ளாஸ்  தாண்ட  மூன்று  வருஷம் பெயில் ஆகி மேலே படிக்காமல் விட்டு விட்டு  அறுபது வயதில் திருக்குறள் படிக்க ஆசை.   வந்து திருக்குறள் படிக்கச்சொல்லி கேட்டு ரசிப்பார். 

''ஏனுங்க  திருக்குறள்  அம்புட்டு பேர் பெற்றாலும்  சின்னூண்டு  பாட்டாக இருக்கு.''
''அது தான் பிள்ளைவாள் அதன் மஹிமை, விசேஷம்.'குறுகத் தரித்த குறள் '' குறள்  என்றால்  குள்ளமான சின்ன என்று அர்த்தம். ஆனால் கடல் போல் விஷயம் அதில் அடக்கம் 1330  ஒண்ணரை  அடி பாடல்கள்.  மூன்று  பிரிவு. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால், என்று   அறம் , பொருள், இன்பம்  என்ற மூவகையில் அமைத்திருக்கிறார்  வள்ளுவர்.
''படிச்சா புரியலீங்களே ''
'' சங்க கால தமிழ் கொஞ்சம்  கஷ்டம் தான்.  மு.வ.  என்ற பேரறிஞர்  அர்த்தம் எழுதி இருக்கிறார் அதைப் படித்தால் நல்லா  புரியும். நான் அதைப் பார்த்து தான் புரிஞ்சுண்டேன்.  சங்ககால தமிழ் எனக்கும் நெருடல் தான் பிள்ளைவாள்.  நான் தமிழறிஞர் இல்லை.   திருக்குறள் எல்லோரும்  படிக்க வேண்டிய  ஒரு  நூல்.  ரொம்ப  அருமையான  அற்புதமான  ஒரு  புத்தகம்''

''ஒரு விஷயம். ஒரு பள்ளியிலே  தமிழ் வாத்தியார்  ராமசாமி  சார்  திருக்குறள் பாடம் நடத்தும்போது அன்பு பற்றி அதிகாரம்   குறள்  உரக்கச்  சொல்லி  அர்த்தம் விளக்கிக் கொண்டிருந்தார்.  ரெண்டு  பசங்க  கவனிக்கலே. அவருக்கு  ரொம்ப  கோபம் வந்துடுத்து.  அவங்க  ரெண்டு  பேரையும்   தலையிலே மளுக் கென்று குட்டி,  காதைத்   திருகி,  திட்டி,  அவங்க ரெண்டு பேரும்  கத்த  கத்த   வெளிலே  அனுப்பி  முட்டி போட வைத்தார்.   அந்த  பீரியட் முழுக்க  அவங்க  ரெண்டு  பெரும்  வெளிலே   முட்டி போட்டு நின்று கொண்டிருந்தாங்க''  இதை ஹெட்மாஸ்டர் பார்த்துட்டு  ஹா ஹா என்று சிரித்தார். 
தமிழ் வாத்தியாருக்கு என்னவோ போல் ஆயிட்டது.  

''ராமசாமி,  தமிழ் லே  திருக் குரள்  ரொம்ப நல்லா சொல்லிக்கொடுக்கறீங்க. அதுவும் அன்பு பற்றி சொல்லிக்
கொடுக்கும்  போதே  இவ்வளவு  கோவம்  வந்தா  அப்புறம் எப்படி அன்பு  புரியும்?. குரள்  அன்பு பத்தி என்ன சொல்லுது. சொல்றேன் கேளுங்க: 

''உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது.  நாம்  ஒருத்தர்  கிட்டே  அன்பு  வைத்தால்  அவர்  எதாவது  கஷ்டப்   பட்டால்  தானாகவே  நம்  கண்களில்   கண்ணீர் துளிக்கும்.  இது தான்   உண்மையான  அன்பு .

அன்பு இல்லாதவர்களை   யாருமே  விரும்ப மாட்டார்கள்.  அவர்கள்  தமக்குத்  தாமே  தான் உரிமை கொண்டாட வேண்டும்.  அவர்களை  எவரும்  சீந்தக்கூட  மாட்டார்கள்.  எல்லோருடனும்   அன்பு செலுத்துவோர்  தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென அர்ப்பணிப்பவர்கள்.  

உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த தன்மையாகும். 

 அன்பு பிறரிடம் பற்றுதல்  கொள்ளச் செய்யும்.  அந்த உள்ளம்,  நாள் செல்லச் செல்ல நட்பு எனும் பெருஞ் சிறப்பை உருவாக்கும்.

உலகில்  சந்தோஷமாக  வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவ தன் பயனே என்று தாராளமாக கூறலாம்.

 மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை எப்படிப்பட்டது  தெரியுமா ,   பாலைவனத்தில் பட்டமரம்  போன்றது. அதாவது ஈரம்  என்பதே  அறியாதது.  வரண்டது.

அன்பு என்பது   மனத்திலே குடி கொள்ளாத மனிதர்களுக்கு   வெளியே  உடல்  உறுப்புகள் அழகாக இருந்து என்ன பிரயோஜனம். சொல்லு ?  நான் கேக்கலே. வள்ளுவர் பளிச்சுனு கேக்கறாரு.

அன்பு உள்ளத்தில்  நிறைந்து  இயங்குபவனே உயிருள்ள மனிதன்.  இல்லையேல்,  அவன்  ஒரு  எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடல் மட்டும்  கொண்டவன் ஆவான்.''

''அடடா  எப்படி  ஸார் ,  நீங்க   இதெல்லாம்  தெரிஞ்சுண்டிருக்கீங்க ?''

''பிள்ளைவாள் இதெல்லாம்   திருக்குறளில்  திருவள்ளுவர்  சொல்றது.   உங்களுக்கு  அன்பு  செலுத்துறது  பற்றி ஒரு  கதை சொல்றேன் கேளுங்க.  எனக்கு பிடிச்சுது இந்த கதை.  

''ஒரு  கிராமத்திலே ராஜாம்மா என்று ஒரு   கிழவியும், சேது என்று   அவள் பிள்ளையும்  இருந்தார்கள். .  கிழவி பையனுக்கு  ஒரு  சிறு  பெண்ணை  கல்யாணம் பண்ணி வைத்தாள்.   அந்த பெண் லெச்சுமி.  வந்த நாள்  முதல்  அவளை அதிகாரம் பண்ணி எல்லா வேலையும்  வாங்கினாள்  ராஜம்மா.  துளிக்கூட  அவளிடம்  அன்பு  காட்டவில்லை.  அந்த  பெண்  லெச்சுமி வாடியது.  எதிர்த்து  பேசாது.  பயம். மிஷின்  மாதிரி  வேலை செஞ்சுது.  அதுக்கு  வாழ்க்கையே  வெறுத்து போய்விட்டது.  அந்த ஊரில்  ஒரு  நாட்டு  மருந்துக்காரர்  சோமு செட்டியார்.  அவர்  நண்பர்  மகள்  தான்  இந்த லெச்சுமி.   அப்பப்போ யாருக்கும் தெரியாம  செட்டியார் கிட்டே போய் லெச்சுமி அழும். 

புருஷன் சேதுவோ  அம்மா மனைவி  விஷயத்தில்  தலையிடாமல்  தப்பித்துக்  கொள்பவன்.  கண்டும் காணாம இருப்பான்.  தாங்க முடியாமல் போய்  லெச்சுமி  ஒருநாள்  செட்டியாரிடம் ''ஏதாவது  விஷம்  கொடுங்கள்  நான்  சாப்பிட்டு  இறந்து போகிறேன்''   என்றாள்.  அவர்  புத்திமதி  சொன்னார்.  அவள்  என்ன சொல்லியும்  கேட்காமல்  விஷம் கேட்டாள் .  செட்டியாருக்கு  ஒரு யோசனை தோன்றியது.

'லெச்சுமி குட்டி, நீ   எதுக்கு   சாவணும் . அந்த  கிழவிக்கு   இந்த  விஷத்தை  சோத்துல கலந்து வை. இந்த  மூலிகை இலை , வேர் இருக்குது பார். இதை  கொஞ்சம் கொஞ்சமா  வெட்டி  தினமும்  அதுக்கு  நல்ல  ருசியா  சாப்பாடு செய்து  அதிலே கொஞ்சம்  இந்த  இலை , வேர்  சேர்த்துடு.  ரெண்டு மாசம்  விடாம  நல்ல  சாப்பாடு  செய்து  அது சாப்பிடும்போது   கலந்து  வை.   ஆறே  மாசத்திலே  அது காலம்  முடிஞ்சுடும்.  அதுவரையிலும்  அதுங்கிட்டே  அன்பா  இரு. மூஞ்சியை காட்டாதே.   கிழவி என்ன தான்,  எவ்வளவு  தான்  கெட்டவளா  இருந்தாலும்,  கோவிச் சுக்கிட்டாலும்  நீ  அதுங்கிட்ட  அன்பா  சிரிச்சுகிட்டு பழகு.  அப்ப தான்  அதுக்கு  ஏதாவது  நடந்தா  கூட  உன்  மேலே   ஊரிலே  யாரும்  சந்தேகப்  படமாட்டாங்க.  புரியுதா.?

லெச்சுமி  மூலிகை  இலை வேர்  எல்லாம்  எடுத்துக்கொண்டு  வீட்டுக்கு  வந்தாள் .  கிழவியிடம்  ரொம்ப  பாசமாக  நடக்க ஆரம்பித்தாள் .  தினமும்  கொஞ்சம் கொஞ்சமாக  விஷ  இலை  வேர்  எல்லாம்  துண்டு துண்டாக  கிழவியின்  ஆகாரத்தில்  சேர்த்தாள் .   மாதங்கள்  ஓடியது.  என்ன ஆச்சரியம். கிழவி  இப்போ தெல்லாம்  லெச்சுமியை எதுவும் சொல்றதில்லே. கஷ்டப்படுத்தலே.  சந்தோச மா  பெருமையா ஊரிலே    எல்லோர் கிட்டயும்   நான் எவ்வளவு  அதிர்ஷ்டக்காரி  இத்தகைய  அருமையான  மருமகள்  கிடைச்சதுக்கு என்பாள்.  தினமும்   நல்ல  ருசியான  சாப்பாடு.  அன்போடும்  பாசத்தோடும்  கவனிப்பு.  கிழவிக்கு  லெச்சுமியை  ரொம்ப ரொம்ப  பிடிச்சுட்டுது.   அதேபோல் லெச்சுமிக்கும்  இப்பல்லாம் கிழவி மேலே பாசம், மரியாதை,  ஆசை.   ஆறுமாசம்  ஆகப்போவுது.  இன்னும் கொஞ்ச நாளிலே தினப்படி   உணவில் கலந்து கொடுத்த  விஷ இலையும்  வேரும்  வேலை செய்யப்போவுது.  அய்யய்யோ  ழவி மண்டையைப் போட்டு டுவாளே.  என்ன செய்யறது?    உள்ளே  என்னமோ  கலக்கிச்சு  லெச்சுமிக்கு.  ரொம்ப பிடிச்ச  அந்த கிழவி போய்ட்டா என்ன செயறது ?

வீட்டிலே  நிம்மதி, அமைதி,  பொண்டாட்டி, அம்மாக்காரி  ரெண்டு பேத்துக்கும்  ரொம்ப  பிடிச்சுப்போனதிலே  சேதுவுக்கு சந்தோஷம்.  ரெண்டுபேரையும்  கொஞ்சினான் 

தூக்கமில்லாமல் தவித்த  லெச்சுமி செட்டியாரிடம் ஓடினாள்.  
 ''என்னம்மா லெச்சுமி    ஏன்  இப்படி  படபடப்போடு ஓடி வந்தே என்ன விஷயம் சொல்லு?  நான்  கொடுத்த  இலை  வேர் எல்லாம்  கொடுத்தியா?  இன்னும்  எத்தனை  நாள்  இருக்கு?''
''செட்டியார்  மாமா,  அதுக்கு  தானே  ஓடி வந்தேன்.  இன்னும்  15  நாளிலே  எங்க  ஆத்தா  செத்துடுமேன்னு  கவலை  புடுங்கி தின்னுது.  
 ''ஒ   அப்படின்னா  உனக்கு  சந்தோஷமா  தானே  இருக்கணும் புள்ளே''
 ''இல்ல  மாமா, நீங்க  என்னா  செய்வீங்களோ தெரியாது.  எப்படியாவது  வேற மருந்து  கொடுத்து  எங்க   ஆத்தா  சாவாம  பண்ணனும்.''      
 ''ஏன் புள்ள.  நீந்தானே  அவங்க  சாவணும்னு   விரும்பினே''
''அது  அப்போ.  அவங்க இப்போ  ரொம்ப   ரொம்ப  நல்லவங்க  மாமா.  எங்கிட்ட  எம்புட்டு  பிரியமா  இருக்கா ங்க.  அவங்க  சாவக்கூடாது. வேற  ஏதாவது மாத்து  மருந்து   கொடுத்து   நீங்க  கொடுத்த விஷம்  வேல செய்யா ம  பண்ணிடுங்க''
''நான்  எங்க  உனக்கு  விஷம்  கொடுத்தேன் ?''
 ''இதென்னா  அப்படி   பேச்சு மாத்தி  சொல்றீங்க.  நீங்க விஷம் இலை  வேர் கொடுத்து   இத்தினி நாளா   விடாம  அவங்களுக்கு  கொடுத்தேனே,தினம்  நல்ல  சாப்பாடு செஞ்சி  அதிலே கலந்து  நான்  தானே நீங்க சொன்னபடி   கொடுத்தேன். ''
 செட்டியார்  சிரித்தார்.
'' இதோ பார்  லெச்சுமி,  உனக்கு  நான் கொடுத்தது  விஷ இலை , வேர்,  இல்லை.  சாதாரண  உடம்புக்கு  ஒண்ணும் கெடுதல் செய்யாத  இலை, மூலிகை  வேர்.   உன்னை  மாத்தறத்துக்கு  அந்த  மாதிரி சொல்லி  அவங்க கிட்ட  அன்போடு  பாசத்தோடு  நடக்க  சொல்லி கொடுத்தேன்.  நீ  அன்பா பாசமா  இருந்ததாலே  அவங்க  பல மடங்கு திருப்பி  உன் மேலே  பாசத்தை கொட்டறாங்க.  நீங்க  ரெண்டு  பேத்துக்கும்  இப்ப  சந்தோஷம்  தானே. போய்ட்டு  வா.  நீ  என் பொண்ணு மாதிரி.  ஆத்தாவுக்கு தப்பு  செஞ்சதா  மனசிலே நினைக்காதே.  நீ  அப்படி  செய்யலையே. ''

 இந்த  ''அன்பு  பாசம்'' கதை எப்படி இருக்கு?  முன்  கை  நீண்டா தான் முழங்கை நீளும்.

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:47:59 AM4/19/21
to amrith...@googlegroups.com


     அறியாத பெயர், அருமையான பாடல்  --  நங்கநல்லூர்  J K SIVAN -


பாணிக்ரஹி என்ற பெயர் கேட்டதாக, தெரிந்ததாக  ஞாபகம் இருக்கிறதா? தெரியாவிட்டால் பெரிய  குற்றம் இல்லை. குயிலின்  இசையைக் கேட்டு மகிழும் போது  குயில் கண்ணுக்கு தெரிகிறதா, அல்லது அதன் பெயர் தான் நமக்கு தெரிகிறதா? இசையில் மற்றதெல்லாம்  மறந்துவிடுவதில்லையா?  ஒரு அற்புத குரலோன் பாணிக்ராஹி.  அவர் பாடிய  ரெண்டு பாடல்களை சொன்னால் சட்டென்று ஞாபகம் வரும்.

 சுதர்ஸன் பிக்சர்ஸ் தயாரித்து 1959-இல் வெளிவந்த “அவள் யார்” என்ற படத்தில்  சிவாஜிக்காக  பாடியவர் இவர்.  அந்த பிரபல  ரெண்டு   பாடல்கள்   ''நான்  தேடும் போது நீ ஓடலாமோ''    ''கண் காணும் மின்னல்தானோ'',   என்போன்ற  எத்தனையோ  ரசிகர்களைக் கொள்ளை கொண்ட பாடல்கள் இவை.  
கண்டசாலா, பிபி ஸ்ரீனிவாஸ்,  பாலமுரளி க்ரிஷ்ணாவோடு   ''மதி சாரதா'' என்ற  இன்னொரு கர்நாடக இசை பாடல்  தான் நான் இவரைக் கவரச் செய்தது.

பண்டிட்  ரகுநாத்  பாணிக்ரஹி  என்ற  ஒரிசாக்காரர்  81  வருஷங்கள் வாழ்ந்த ஒரு சங்கீத வித்வான். (1932 – 2013). அவருடைய  கீத கோவிந்த  ஜெயதேவர் அஷ்டபதி கீர்த்தனைகள் அபாரமானவை. கேட்க திகட்டாதவை.  ஒரு சினிமா பாட்டு இணைத்திருக்கிறேன் கேளுங்கள்


sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:47:59 AM4/19/21
to amrith...@googlegroups.com


ஆச்சரியம் மட்டும் இல்லை  அதிசயம்... நங்கநல்லூர்  J K  SIVAN 


சிவன் ஸார், அதிசயம்  என்றால் என்ன? 
நீங்கள் கேட்கிறீர்களே அது தான்.   
அதிசயம் என்றால் எல்லோரும் ஏதோ ஒன்று நடக்ககூடாதது, நடக்கமுடியாதது,  நினைத்துப் பார்க்காதது   நிகழ்ந்ததாக நினைகிறார்களே  அது.  
இதைத்தவிர மற்றொரு பரிணாமமும் இருக்கிறது.  ஏற்கனவே  நடந்த விஷயங்கள்.  ஆஹா  எவ்வளவு அற்புதமாக இது நடந்தது. இது எப்படி நடந்தது, எப்படி முடிந்தது என்று வியக்க வைப்பது.  

 கல்லே இல்லாத  தஞ்சாவூரில் எப்படி அவ்வளவு பெரிய  கல் கோபுரம் ராஜராஜன் கட்டி அது இன்றும் ஆயிரம் வருஷங்களாகியும் ஆடாமல் அசையாமல் அழகாக நிற்கிறது.  பல்லவர்களால் எப்படி ஒரே கல்லில் இவ்வளவு தேர்கள் அமைக்க முடிந்தது. 
 
கரிகாலன் எப்படி  வேண்டப்பட்ட  எந்த கன்டராக்டரிடமும் கொடுக்காமல்,  கமிஷன் கையூட்டு பெறாமல்  அடாஸ்  பேர்வழிகளிடம் வேலையை ஒப்படைக்காமல் காவிரி நதியின் நீர்  கடலில் வீழ்ந்து வீணாகாமல்  கல்லணை கட்டி  அது   ஆயிரக்கணக்கான வருஷம் ஆகியும்  இன்றும் அப்படியே  எல்லோராலும்  மூக்கின் மேல் விரல் வைத்து  கண்விரிந்து ஆனந்தப்பட வைக்கிறது.  மூன்று வருஷத்தில் நம் காலத்து  பிரிட்ஜ்கள்
 வீரல் , கீறல் விட்டு  உடைந்து விழுகிறதே .  இது போல் சில அதிசயங்களை மட்டும் சொல்கிறேன். எத்தனை யோ  இருக்கிறது. சொல்வதை ரொம்ப பழைய  விஷயங்களாக சொன்னால் தான் இன்னும்  மவுசு அதிகம்.  அதிசயிக்க வைக்கும்.

நமது சரித்ரங்களில்  இதிகாசங்களில் இருந்தே சில விஷயங்களை நினைவு கூர்வோம்.  ஒவ்வொரு நாட்டின் கலைச்  செல்வமும்  அதன் சரித்திரமும் புராணமும் தான். இயற்கையாகவே சில நிகழ்ந்தது இன்னும் அதற்கு அழகையும்  ஆச்சர்ய மெருகையும்  ஊட்டுகிறது.  

ராமாயண மஹாபாரத  பாகவத புராணங்களில் நாம் காண்பது.  ஆகாய ஊர்திகள்  புஷ்பக விமானங்கள்.  ராவணனிடம் இருந்தது.  மஹா பரதத்திலோ  ஸால்வனிடம்  இருந்தது.  பறக்கும்  பெரிய ரதங்கள்  கடவுள்களிடம் தான்  அதிகமாக காணப்பட்டது.  நமது  நன்கு படித்த  அனுபவம்  வாய்ந்த புதைபொருள்  தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள்  என்ன சொல்கிறார்கள்?.  இப்படி பறக்கும்  விமானங்கள் இருந்தது வாஸ்தவம் என்று தெரிகிறது என்கிறார்கள். ராமாயணத்தில்  ராமன் புஷ்பக விமானத்தில்  இலங்கையில்  ராவணனை அழித்துவிட்டு விபீஷணனோடு அயோத்தி  திரும்புகிறான்.  ராவணன் புஷ்பக விமானத்தில் வந்து தான்  சீதையை கடத்தி  பஞ்சவடியிலிருந்து  இலங்கைக்கு  கடல்மேல்  பறந்தான்.  இது நடந்தது  ராமர் கால  த்ரேதா யுகத்தில்   7000 வருஷங்களுக்கு முன்பு.

உலகின் மிக புராதன ஏழு  நகரங்களில் ஒன்று துவாரகை.   கண்ணன் வாழ்ந்த  அவனது  தலைநகரம்.  இன்றும் குஜராத்தில் இருக்கிறது.  அவன் வாழ்ந்த காலத்திலேயே  அவன் அரண்மனை பிரதேசம் [ப்ரபாஸ நகரம்) கடலில் மூழ்கிவிட்டது.  கிருஷ்ணன் தனது மறைவுக்கு முன்பு  உத்தவனிடம்  எல்லோரையும் அங்கிருந்து  வெளியேறச் சொல்லு. இன்னும்  ஏழு நாளில்  இந்த பிரதேசமே கடலில் மூழ்கும் என்று சொல்லியது அதிசயம். இன்றும் கடலடியில்  கண்ணன் அரண்மனை இருக்கிறது.  அங்குள்ள  மண்டபங்கள், சிலைகள் விக்ரஹங்கள் எல்லாம் அற்புதமாக இருப்பது ஒரு இணையற்ற அதிசயம்.   இதிகாசங்கள், புராணங்கள் பொய்யல்ல. சற்று மிகைப் படுத்தி சொல்லியிருக்கலாம்..  கண்ணன் வாழ்ந்த  துவாரகை துவாபர யுகத்தில் மூழ்கியது  5000 வருஷங்களுக்குப் பின்  இன்றும்   தெரிகிறது.  இருக்கிறது. 

இன்னொரு  த்ரேதாயுக அதிசயம் தான்  ராம சேது. கிஷ்கிந்தா வீரர்கள்  ஹனுமான், சுக்ரீவன், ஜாம்பவான் தலைமையில் நளன் , நீலன் ஆகியோர் பொறுப்பில்  தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு  நீரில் மிதக்கும்  கற்களால் பாலம் அமைத்த அதிசயம். இன்றும் அது இருக்கிறது.  ராம சேது பாலம் உலக அதிசயம் என்று சொன்னால் மிகையாகாது. இதுவும்  த்ரேதா யுக  7000 வருஷ சமாச்சாரம்.

வடக்கே, ஹிமாச்சல பிரதேசத்தில் கங்க்ரா எனும் ஸ்தலத்தில்  ஒரு அம்பாள் கோவில். சக்தி பீடம் இருக்கிறது.  ஜ்வாலா தேவி ஆலயம் என்று பெயர். இன்னும் அங்கே  தீ  ஜ்வாலை  எரிந்துகொண்டே  இருக்கிறது.  பார்வதி தேவி  தாக்ஷயணியாக  தக்ஷன் யாகத்தில்  தீயில்  இறங்கி மறைந்தபோது  அவள் உடலை எடுத்துக்கொண்டு சிவன்  கோபமாக  ருத்ர தாண்டவமாடுகிறார். அவள் உடல் 51  துண்டுகளாக பூமியில் விழுந்த இடங்கள் தான் 51 சக்தி பீடங்கள்.  கங்க்ராவில்  தாக்ஷாயினியின் நாக்கு விழுந்து   ஜ்வாலையாக எரிகிறது.  

ஹனுமான் கர்ஹி  என்று வருடம். அயோத்யாவில் இருக்கிறது.  ஆஞ்சநேயர் கோவில்.ராமருக்காக  ஹனுமான் காத்துக்கொண்டிருக்கும் இடம்  என்கிறார்கள்.   அங்குள்ள சக்தி அதீதமாக இருக்கிறதாம்.  
நம்பினவருக்கு தான் இதெல்லாம்  ஆச்சர்யமும் அதிசயமுமாக  இருக்கும் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

பிருந்தாவனத்தில்  நிதிவனம் என்று ஒரு இடம். அங்கே  ஒவ்வொரு இரவும் கிருஷ்ணன் இன்றும்  கோபியருடன் ராஸலீலை விளையாடுகிறார் என்று நிறைய ஆச்சர்யமான விஷயங்களை சொல்கிறார்கள். 
அங்கு  இன்றும் ஒரு பயம் கலந்த நம்பிக்கை என்ன தெரியுமா?  யாராவது  இருட்டியபிறகு  அந்த பகுதிக்கு  அஸ்தமனத்துக்கு பிறகு சென்று  எதையாவது  பார்க்க  முயன்றால் கண் உடனே குருடாகிவிடுகிறதாம்.  செவி  டமாரமாகி  ஒன்றுமே கேட்காமல் போய்விடுமாம். வாய்  பேசமுடியாமல் ஊமையாகுமாம்.  சிலர் மரணம் அடையவும் சாத்தியமாம்.

நேபாளத்தில்    ஜானகி ஆலயம் இருக்கிறது.  இந்த பகுதி ஜனக மஹாராஜா ஆளுமையில் இருந்தது.  இந்த ஆலயத்தில் தான்  ஸ்வயம்வரத்திற்கு பிறகு ராமனை  சீதை மணந்தாள் . ராமனும் சீதையும் கணவன் மனைவியாக வாழ்ந்த இடம் இப்போது ஜானகி கோவில். இந்த கோவிலில் சீதையின் தங்க விக்ரஹங்கள் கிடைத்தது என்கிறார்கள்.  இன்னும் தரிசனம் செய்யப்படுவது  தான்  அதிசயம். நமது ஊராக இருந்தால் சிலை காணாமல்  போய்விடுவது அதிசயம் இல்லை. 

ஜம்மு காஷ்மீர் பகுதியில்   பனி மலையில் ஒரு குகை.  அங்கு தான் சிவபெருமான்  பார்வதிக்கு  வாழ்க்கை ரஹஸ்யம், சாஸ்வதம், அம்ருத்வம்  இறவாமை   பற்றி உபதேசம் செய்த இடம்.  அங்கே ஒரு சிவலிங்கம் இருப்பது அதிசயமில்லை. ஆனால்  யாரும்  செதுக்காமலேயே வருஷாவருஷம் பிரம்மாண்டமான  பனி லிங்கம் தானே  தோன்றி  அமர்நாத்தில்  நம்மை மகிழ்விப்பது தான் அதிசயம்.

இன்னும் சொல்லாமல் விட்ட  அதிசயங்கள் எத்தனையோ இருக்கிறது.  

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:47:59 AM4/19/21
to amrith...@googlegroups.com
ஸூர்தாஸ்   -  நங்கநல்லூர்   J  K  SIVAN 


34.   ஆயிரம் நாக்கு கொடு

உலகமே அவன் ஒருவன் தான்.  காக்கும் கடவுள்.  இந்த பிரபஞ்சமே அவன் எண்ணம். சங்கல்பம். அவன் நம்மைப் போன்றவனா? நினைத்த மறுகணமே அதாகிவிடுபவன்.

அவன் என்ன செய்தான் என ஞாபகம் இருக்கிறதா? ராமனாக பிறந்தான். ரகுவம்சத்தில் ராஜாக்களின் ஒருவன். பிரதானமானவன். அந்த குலத்திற்கே பெருமை ஊட்டியவன் .

அடுத்தது   அதற்கு  நேர்மாறாக. தனது வளர்ச்சியை ஒரு பசுக்களை மேய்த்து வாழும் இடைக் குலத்தில் கோகுலத்தில் அமைத்துக் கொண்டான். அவன் விரும்பி.     ஏதோ  எவருடைய   கட்டாயத்தால் அல்ல. பரம சந்தோஷமாக அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து இன்றும் நம்மை அந்த பேரானந்தத்தில் ஆழ்த்துகிறான்.

ஆஹா என்ன கருணை, பேரன்பு. தயாள குணம். பேதமற்ற மனம். எல்லோரையும் அரவணைத்து போகும் அன்பு.

சொல்ல மறந்துவிட்டேன் பார்த்தீர்களா? அவன் கருணை காட்டிய எத்தனையோ பேரில்  ஒரு   சிறுவன் துருவன். ஒரு ராஜ குமாரன். அதே போல் கொஞ்சமும்  கருணை கம்மியாகாமல் மன நிறைவோடு அருளியது ஒரு ராக்ஷஸ குமாரனுக்கு. என்ன ?  யாரென்று யோசிக்கிறீர்களா? நம்ம பிரஹலாதன் தான். இரணிய கசிபு என்ற  ராக்ஷஸனின்  பிள்ளை. கிருஷ்ணனின் கருணையும் அன்பும் ராஜ குமரனுக்கு ஒன்று,  ராக்ஷஸ குமாரனுக்கு வேறு என்று எந்த யுகத்திலும் மாறு படவே இல்லையே.

ஹஸ்தினாபுரத்தில் ஒருத்தன் பாக்கி இல்லாமல்  துரியோதனனைச் சேர்ந்த எல்லோரும் ஆனானப்பட்ட விதுரரை அவன் தாழ்ந்த குலம். வேலைக்காரி பிள்ளை என்று ஏசினார்கள்.   அப்படி  ஏசப்பட்ட விதுரனை யார்  மனமுவந்து   தேடி  தானே  சென்று  மதித்து வணங்கியது??    ஆமாம்.    எத்தனையோ  மகாராஜாக்கள் எல்லாம் வா வா என்று வருந்தி அழைத்தும் விருந்துக்கு  போகாத  கிருஷ்ணன், தானாகவே  தேடிப்போன இடம் விதுரன் வீட்டுக்கே. அவனுக்கு விதுரர் மதிப்பு தெரியாதா.  தர்ம தேவதை அவதாரம் விதுரர் என்று அறியாதவனா  கிருஷ்ணன்!

''கிருஷ்ணா, நீ தான் எங்களது  ஏகோபித்த முடிவில்  அக்ராசனன்.      நீ தான் இந்த உலகமே, பூமண்டலமே வியக்கும்  இந்த  மகா பெரிய ராஜசூய யாகத்தில் முதன்மையானவன்.     நீ தான் துவக்கி வைக்க வேண்டும் இந்த யாக வைபவத்தை  என்று பாண்டவர்கள் வேண்டியபோது,  ''ஆஹா  அதற்கென்ன என்று 
ஒப்புக்கொண்டாயே கிருஷ்ணா, நீ செய்த  அனைத்து செய்கைகளும்   நாங்கள் அறிவோமே.

உன் பக்தர்கள் பாதங்களை நீ ஜலம் விட்டு கையால் கழுவியதை கண்ணால் பார்த்தவர்கள் அத்தனைபேரும். விண்ணிலும் மண்ணிலும். என்ன பெருந்தன்மை. கர்வம் இல்லாத எளிமை. பக்தவத்சலன் என்ற பெயர் அரசியல்வாதிகள்  சிலரைப்போல நீ கேட்டுப் பெற்ற   விருதா  என்ன?

பரந்தாமா, நீ பக்தனின் அடிமை என்பது தெரிந்ததால் தான் உன் மீதுள்ள பாசம், அன்பு, பக்தி கொஞ்சமும் மாறவே இல்லை எங்களுக்கு.    ஒவ்வொரு கணமும்  அது  பெருகிக்கொண்டே அல்லவா போகிறது நாளாக ஆக.

ஒரு காரியம் செயகிறாயா. கிருஷ்ணா?   என் நாக்கை ஆதிசேஷனின் நாக்காக ஆக்கி விடுகிறாயா?.
ஏன் என்றா கேட்கிறாய்? . ஒரு நாக்கு எப்படி அப்பா போதும் உன் பெருமையை பேச? குறைந்தது ஆயிரம் நாக்காவது வேண்டாமா சொல்? . அது தான் என்னை ஆதிசேஷனாகப்   பண்ணு என்று கேட்டேன்.

உன்னை ஏதோ கொஞ்சம் புகழ இதைச் சொன்னேன் என்று நினைக்காதே. நான் சொல்லவில்லை. இந்த சூர்தாஸ் சொல்லவில்லை. சகல புராணங்களும் இதிகாசங்களும் வேதங்களும் சொல்கிறது இதை .  மறுபடியும்  ஞாபகப் படுத்துகிறேன். உனக்குத்  தெரியாதா என்ன?  நீ அறியாதது ஏதாவது உண்டா?

Rama was born in the Raghu clan
Krishna found his home in Gokula.
Words fail to tell of
the Lord's love
universal, all-embracing;
Dhruva was a Kshatriya,
Prahlada a demon and Vidura the son of a maid:
yet the Lord gave them his supreme love,
Krishna washed the devotees' feet
at the Rajasuya.
The Lord is the slave
of his devotees
age after age.
The tongue can't relate
his countless deeds.
Says Suradasa, the Puranas and Vedas
are witness to these

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:48:07 AM4/19/21
to amrith...@googlegroups.com
சாஸ்திரிகளின் முப்பது நாள் ராமாயணம்-   5

நங்கநல்லூர்  J K SIVAN


ஸ்ரீ  V S  ஸ்ரீனிவாச சாஸ்திரிகளின் அழகான  ஆங்கில பிரசங்கம்  ஒவ்வொருவரையும்  கவர்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம் அவரது நோக்கு.  எவ்வளவு அருமையாக  வால்மீகியை அவர் அணு அணுவாக ரசித்து மற்றவர் கண்ணுக்கு படாதவற்றை அற்புதமாக எடுத்துக் காட்டுகிறார்.

பரதன் சும்மா வரவில்லை. நன்றாக யோசித்துவிட்டு  பரிக்ஷைக்கு போகும் மாணவன் மாதிரி எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு தக்க பதிலை தயார் செயது கொண்டு போவது போல  ராமன் தன்னோடு வருவானா, மாட்டானா, அவனை  திரும்ப அழைத்து வர முயலாவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தவன்.  

''சரி அண்ணா, தங்கள் அறிவுரைப்படி நடக்கிறேன். நாட்டை என் பொறுப்பில் நடத்திவருகிறேன் ஆனால் அரசனாக அல்ல. உங்கள் சேவகனாக என்று சொல்லி  தனது பையிலிருந்து ஒரு தங்க பாதுகை  ஜோடியை எடுக்கிறான்.    ''அண்ணா  நீங்கள் இதை அணிந்து நில்லுங்கள் விழுந்து வணங்குகிறேன்''  என்கிறான். ராமனின் தெய்வீக சக்தி அந்த பாதுகையில் சேர்ந்ததால்  அவற்றை புனிதமாக  தனது சிரத்தின் மேல் தாங்கி நந்திக்ராம்  எடுத்து செல்கிறான். அங்கே  பாதுகைகளை  சிம்மாசனத்தில் அமர்த்தி  அவற்றிடம் ஆணை பெற்று நாடாள்வதாக அறிவுறுத்துகிறான். பதினான்கு வருஷங்கள் இப்படி நகர்ந்தது.

வாலி வாதத்தைப் பற்றி சொல்லும்போது, சுக்ரீவன் கேட்கும் முன்பே  ராமர்  தனது செயலைப் பற்றி விளக்குகிறார்.  வாலியை எனது அம்புகளால்  கொள்வேன் என்ற போது  ராமர் மனதில்  வாலியோடு மோதும்  அவனோடு போர் புரியும் வாய்ப்பு இருந்தது தெரிகிறது. பின்னர்   ஏழு மராமரங்களை  சுக்ரீவனுக்கெதிரே  ஒரே அம்பினால்  துளைத்தபோது  வாலியையும் ஒரே அம்பினால் சாய்ப்பேன் என்கிறார்.

நீ  போய்  வாலியை  யுத்தத்துக்கு அழைத்து வா. ஒரே அம்பினால் அவனைக் கொல்கிறேன் என்று சுக்ரீவனிடம் சொல்கிறார்.   வாலியோடு நேரடியாக மோதினால் அது பலநாள் யுத்தமாகும், சுக்ரீவன் நம்பிக்கை இழப்பான் என்று  ராமர் மனதில்  தோன்றி இருக்கலாம். முதலில்  வாலியை வீழ்த்தாமல் இரண்டமுறையாக  சுக்ரீவனை அனுப்பி அவனை மீண்டும் பொறுக்கழைத்து அப்போது  கொன்றதன் காரணம்?

சுக்ரீவா நீயும்  வாலியும் கட்டிபுரளும்போது யார் வாலி யார் சுக்ரீவன் என்று அடையாளம் காண முடிய வில்லை. இருவரும் ஒன்றேபோல் இருக்கிறீர்கள்  என்று சொன்னது மேல் பூச்சு.  வேறு ஏதோ காரணம் இருக்கும்  என்கிறார்  சாஸ்திரிகள். 
 
சீதை  பண்பின் சிகரம் .ராமாயண கதாநாயகி.   உதாரண ஸ்த்ரீ.  
ஹனுமானையும்  மற்ற  பாத்திரங்களையும் கூட  பற்றி சில வார்த்தைகள் சொல்கிறார். 
ராமாயணம்  எனும்  காவியம்  ஒரு  மேடை நாடகம் என்று வைத்துக் கொண்டால் கூட, நம்மை  நல்வழிப்படுத்த,   கதாநாயகன் ராமன், கதாநாயகி சீதை ஆகியோரின் உயர்குணங்களை கற்று பின்பற்ற வால்மீகி வகுத்த ஒரு அற்புத  வழி.   எத்தனைமுறை கேட்டாலும், படித்தாலும்  அலுக்காத சிரஞ்சீவி  இதிகாசம் ராமாயணம் எனலாம்.   அதில் நாமும்  ஒரு துளி பங்கு கொண்டவர்கள்.  ராமாயண பாத்திரங்கள் அனைவருமே தெய்வங்கள், தேவர்கள்,  நமக்கு படிப்பினை புகட்ட  அவர்கள்  நடித்துக் காட்டிய நாடகம் என்று எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை.  ராமாயண  காட்சிகளை  படித்து, கேட்டு, நெஞ்சுருகி கண்ணீர் வடிக்காதவர்கள் கிடையாது. இது காலம் காலமாக உண்மை.

இன்னும்  வளரும்.


sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:48:08 AM4/19/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம் --   நங்கநல்லூர்  J K  SIVAN 



     சாமியார் இல்லை,  ''ஸ்வாமி '' யார்?


மஹா பெரியவா எப்போதும் யார்  இதைக் கேட்டாலும் பாரபக்ஷம் இல்லாமல்  அருளுபவர். இது  அவர் பக்தர்களுக்கு நன்றாக தெரியும்.  இன்றும்  அவரை வீட்டில்  படமாக  கண் எதிரே  வைத்தும்  பூஜையில் வைத்தும்  வணங்குகிறோமே  எதனால்?  அவரது   படம் இருந்தாலே  அந்த வீட்டில் தெய்வீகம் தானே  நிரம்பிவிடும். அப்படிப்பட்ட  தவ வலிமை அவரது உருவப்படத்திலும், சிலையிலும், ஏன் அவரது நாமத்தை சொல்லும்போதும்  எவராலும் உணரமுடியும்.  

மஹா பெரியவா உங்களை  மஹா  ஸ்வாமி  என்று தான் சொல்ல முடிகிறது.   நீங்களே  சொல்லுங்கள்  ஸ்வாமி  என்றால் என்ன. உங்களுக்கே  உரிய  எளிய  மொழியில்  அருமையாக புரியும்படி உபதேசம் செய்யுங்கோ:

''ஸ்வாமி  என்றால்  என்ன, அது யார்?''

''நான்  தான் ஏற்கனவே  சொல்லிஇருக்கேனே. சரி  அதையே  மறுபடி சொல்றேன் கேட்டுக்கோ:''

'' 'ஸ்வம்' என்கிற வார்த்தைக்கு 'உடைமை', 'சொத்து' என்று அர்த்தம். 'ஸ்வம்' என்பதே தெலுங்கில் 'ஸொம்மு' என்றாகியிருக்கிறது. 'ஸொம்மு' என்றால் 'சொத்து'. ஸ்வந்தம் - நமக்குச் சொந்தமானது - அதுவே நம் சொத்து. கோயிலைச் சேர்ந்த சொத்தைக் கேரளத்தில் 'தேவஸ்வம்' என்று  தான் சொல்கிறார்கள். உனக்குத் தான் தெரியுமே.  ஆகவே  உடைமைக்கு சொந்தக்காரர் யாரோ அந்த உடையவர்தான் 'ஸ்வாமி'. ஸ்வாமி என்பதற்கு நேர் தமிழ் வார்த்தை 'உடையார்' என்பது. முன் காலத்தில் கோயில் சுவர்களில் வெட்டப்பட்ட கல்வெட்டு களிலெல்லாம் 'திருச்சிற்றம்பல முடையார்', 'திருவேங்கட முடையார்', 'திருநாகேச்சுரமுடையார்', 'கபாலீஸ் வரமுடையார்', என்று  சொல்லி இருக்கிறதே.    அதிலிருந்து  என்ன தெரிகிறது?   ''உடையார்' என்ற பெயரில்தான் தெய்வங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

குருவும் ஸ்வாமியும் ஒன்று என்பதால்தான் வைஷ்ணவர்கள் ஸ்ரீ ராமாநுஜரை 'உடையவர்' என்றே சொல்கிறார்கள்.

'ஸ்வாமி' என்றால் சொத்துக்கு உரிமைக்காரர் என்றேன். எந்தச் சொத்து? 

சொத்து என்பது  சகலப் பிரபஞ்ஜமும்தான். அதிலுள்ள நாமும் அவனுடைய  சொத்து  தான். உள்ளதனைத்தும் அவன் ஒருவனுக்கே உடமையாகும். 'எல்லாம் என் உடமையே' எல்லாம் உன் அடிமையே,  எல்லாம் உன் உடைய பொருளே''  என்று தாயுமானவரும் பாடினார். நம் சொத்து, பிறர் சொத்து என்றெல்லாம் பாத்தியதை கொண்டாடுகிறோமே, உண்மையில் இந்தச் சொத்தெல்லாம்- அவற்றுக்குப் பாத்தியதை கோரும் நாம், பிறர் எல்லோருமே - அவனுடைய சொத்துதான். அவன் இல்லாவிட்டால் இந்தப் பிரபஞ்சமும் இல்லை, நாமும் இல்லை. நாம் பாத்தியதை கோருகிற சொத்துக்களும் இல்லை.

நாம் வீடு, வண்டி போன்ற சில சொத்துக்களைப் புதிதாக உண்டாக்கினதாக நினைக்கிறோம். விஞ்ஞானிகள் புதிது புதிதாக இயந்திரங்கள் செய்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் அடிப்படையில் எந்த மூலப் பொருள்களை வைத்துக் கொண்டு செய்கிறோமோ, அவை  எல்லாமே  ஸ்வாமியுடையது. அவன்   செய்ததுதான். நாம் அவர் சொத்தை எடுத்து வேறு ஒரு ரூபத்தில் மாற்றுகிறோமே தவிர புதிதாக எதுவும் செய்யவில்லை.

 'மூலப்பொருளை (element) செய்'. 'அணுவை (atom) உண்டாக்கு' என்றால் எந்த விஞ்ஞான நிபுணராலும் அது முடியாத காரியம். இத்தனை மெஷின்கள், குண்டுகள் செய்கிற விஞ்ஞானியால் ஒரு சின்னஞ்சிறிய இலையைச் செய்ய முடியுமா? சின்ன புல்லைக்கூட   எவ்வளவு பெரிய  விஞ்ஞான  கூடத்திலும்  அந்த உயிரணுக்களோடு, உயிர் சக்தியோடு  உருவாக்க முடியாது.  ''புல்லைப்போல''  ஒன்று  வாசமில்லாமல், உயிரற்று செய்யலாம்.

எல்லாவற்றையும் செய்கிற ஒரே ஒருத்தருக்குத்தான் அவையெல்லாம் சொந்தம். அதனால்தான் அவர் உடையவர், ஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார். நாமும் அவரது உடமைகள்தான். நம் சொத்து என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை நம் இஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிறோம் அல்லவா? அப்படியே ஸ்வாமியின் சொத்தாகிய நாமும், நம்மை அவன் இஷ்டப்படி நடத்தட்டும் என்று விட்டுவிட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒரே ஆனந்தம்தான்.

இப்போது, 'நான், நான்' என்று எதையோ சொல்லிக்கொண்டு அலைகிறோமே, உண்மையில் இது அவனுக்குதான் சொந்தம் என்று புரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் நாமாகக் கிடந்து அலையமாட்டோம். நமக்கென்று சொந்தமாக ஒரு ஆசையும் ஒரு துவேஷமும் பாராட்டுவதற்கு உரிமை இல்லை என்று தெரிந்து கொண்டு விட்டால், அப்புறம் ஒரு அலைச்சலும் இல்லை. ஒரே நிம்மதிதான்!

 'ஸ்வாமி' என்கிற வார்த்தையே, நமக்கு நம்மிடமே எந்த சொந்தமும் இல்லை. நாம் அவன் தன்னிஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிற அவனுடைய சொத்துத்தான் என்பதை உணர்த்துவதாக அமைந்தி ருக்கிறது. இப்படி உணர்வதுதான் பக்தியின் பரம லக்ஷியமான சரணாகதி என்பது.   புரிஞ்சிண்டியா?''

''இப்போது புரிகிறது மஹா பெரியவா.  இன்னும்  உங்களை நிறைய கேட்பேன். நீங்க சொல்லிக் கொடுக்கணும். அந்த உரிமையை  ஸ்வாமியாகிய நீங்க எனக்கு  கொடுக்கணும்.  நானும் தெரிஞ்சுண்டு எல்லோருக்கும் சொல்வேன்''

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:49:05 AM4/19/21
to amrith...@googlegroups.com

கீதாஞ்சலி--   நங்கநல்லூர்   J K  SIVAN 
தாகூர்  


   43.  கருணா சாகரா   வா

43 The day was when I did not keep myself in readiness for thee;
and entering my heart unbidden even as one of the common crowd, unknown to me,
my king, thou didst press the signet of eternity upon many a fleeting moment of my life.
And today when by chance I light upon them and see thy signature,
I find they have lain scattered in the dust mixed with the memory of joys
 and sorrows of my trivial days forgotten.
Thou didst not turn in contempt from my childish play among dust,
and the steps that I heard in my playroom are the same that are echoing from star to star.

கிருஷ்ணா, நீ எப்போது வருவாய் என்று தெரியாதே. நான் தயாராகவில்லையே .
நீ  அழைக்காமலே வருபவன், சொல்லாமலே வந்து நிற்பவன் .
 முன் பின் அறியாத ஏதோ வெளியூரான் போல, என் ராஜா, கிருஷ்ணா, நீ எனது   மாறி மாறி தோன்றும் எண்ணற்ற கணங்களில் உன் அழிவற்ற அன்பின் முத்திரையை என் மீது பதிவிடுபவன்..

ரொம்ப  ஆச்சர்யம்  கிருஷ்ணா.   இன்று   அதிர்ஷ்டவசமாக  நான் உன்  அன்பின் அடையாளத்தை  என் எண்ணங்களில் தேடினேன்.

அடப்பாவி,  எவ்வளவு முட்டாள்  நான்.   உன் அருமையான  தூய கருணையை   குப்பை குப்பையான என்  இன்ப துன்ப எண்ணப்  புழுதியில்  கலக்கும்படி விட்டுவிட்டேன் என்று தெரிந்தது.
 
நீ எங்கே  நான்  எங்கே?   துளியும்  என் செயலுக்காக  என் மீது நீ அருவருப்பைக் காட்டவில் லையே.
நீ தான்  எங்கும் பரவி இருப்பவனாயிற்றே.   சிறு குழந்தைக்கு  என்ன தெரியும்?   அப்படித்  தான் எந்த  பொருளைக்  கொடுத்தாலும்  அதன் அருமை பெருமை தெரியாமல் டப்பென்று  தூக்கி எறிந்து  உடைக்கும் என்று பெரும்போக்காக  என்னை  அரவணைத்தவன்.

என் குடிசையில் உன் காலடி சத்தம் கேட்கிறது கண்ணா.  
 நீ   பெரிய  மாட  மாளிகை, புழுதி மிகுந்த குடிசை ரெண்டுமே ஒன்றாக  கருதுபவன்.   என் சுக துக்க கணங்களில் நான் உழலும்  அஞ்ஞானி  நான்.   முட்டாள்  சிறுவன்,   புழுதியில் புரண்டு விளையாடுபவன். நீ என்னை புறக்கணிக்கமாட்டாய்.    

அடடா,   நீ  என்னை நெருங்கி வரும் காலடி சப்தம் காதில் மெதுவாக கேட்கிறதே. ஒருவேளை  இது , ஆகாயத்தில் ஒரு நக்ஷத்ர மண்டலத்திலிருந்து இன்னொன்றுக்கு நீ நகரும் எதிரொலியோ?

 

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:49:05 AM4/19/21
to amrith...@googlegroups.com

இப்படி தான் வழக்கம்... நங்கநல்லூர் J K SIVAN ---
இது ஒரு வித்யாசமான கட்டுரை. கொஞ்சம் படிக்கும்போது நெளியவேண்டி இருக்கும். என்னசெய்வது

நேற்று வரை ஒன்றாக இருந்தவர்கள், எத்தனையோ  வருஷங்கள் ஒன்றாக வாழ்ந்தவர்களில் ஒருவர்  இன்று இல்லை என்றபோது அந்த பிரிவு  மற்றவரை எவ்வளவு வாட்டும், அவரது வேதனை எப்படி இருக்கும் என்று எழுதவோ சொல்லவோ இயலாது.  அனுபவித்தவருக்கு தான் அதன் உண்மை நிலை புரியும்.  நெஞ்சம் அவ்வளவு சுலபமாக  எதையும் மறப்பதில்லை.  காலம் தான் கொஞ்சம் கொஞ்சமாக  சகிப்புத் தன்மையை வளர்க்கும். 
எவ்வளவு வார்த்தைகள் வேண்டுமானாலும் ஆறுதல் சொல்லலாம். முதுகில் தட்டிக்கொடுக்கலாம்.  அது பிரிவின் துயரைப் போகாது.

 என் நண்பர் ஒருவர் சில வாரங்களுக்கு முன் தனது  மனைவியை இழந்து டெலிபோனில் என்னிடம்  கதறினார். நானும்  செத்துவிட வேண்டும் என்று விருப்பத்தைத்  தெரிவித்தார்.   அவருக்கு முடிந்தவரை அவருடைய முடிவு அவர் கையில் இல்லை. மற்றவர்களுக்கு இன்னும் சேவை செய்ய பகவான் உடலை, உயிரை விட்டு வைத்திருக்கிறான் என்று புரியவைப்பதற்கு படாத பாடு பட்டேன்.

இறந்தவர் விஷயத்துக்கு வருவோம்.   இறந்தபின் இந்த உடல் ஒரு   உணர்ச்சியற்ற மரக்கட்டை.  உயிர் இருக்கும் வரை கால் சுண்டுவிரலில்   எங்காவது இடித்துக் கொண்டால்  உச்சி மண்டை வரை வலிக்கும். ஆஹா  ஊஹூ  என குதிக்கிறோம்.  இந்த உடலை இப்போது நெருப்பிலிடப்போகிறார்கள்.  அதனாலென்ன?

எரிப்பது முன்போல் ஆற்றங்கரையில்,   ஒதுக்குப்புரம்  இல்லை. விறகுகள் சேர்த்து விரட்டி மேல்  இப்போது இல்லை.  இடமும் இல்லை, ஆளும் கிடையாது. புகையும்  நாற்றமும்  மறுக்கப்படும்.  எங்கும் மின்சார மேடை எரிப்பு, ஒரு டப்பாவில் சாம்பல் தான்.  மின்சார எரிப்பு வசதி எங்கும் இன்னும் நாடு முழுதும் பரவவில்லை என்பதால் ஆங்காங்கே  விறகு வைத்து சிதை மூட்டி எரிப்பது தொடர்கிறது.  காசியில் ஒரே நேரத்தில் பல எரியும் சதைகள்.
                                                        
இத்தனை நாள் நம்முடன் காரில்  வண்டியில்  அருகே   பேசிக்கொண்டு அமர்ந்திருந்தவர்  இப்போது நமது பையில் ஒரு டப்பாவில் பிடி சாம்பல்.  அரைமணியில் இந்த மாறுதல்.
அந்த சாம்பலை பாலில் கரைத்து, கலந்து,   சென்னை  போன்ற நகரங்களில் கடலில் கொட்ட வசதி இருக்கிறது.   புண்ய நதிகளுக்கு சென்று அங்கே கரைக்கும்  வழக்கமும் இருக்கிறது. இது தான் மந்திரங்களோடு செய்யும்  சஞ்சயனம்.   குளித்துவிட்டு  மொட்டைத்தலையோடு வீடு திரும்பும்  பிள்ளைகள்  பலர் இன்னும்  உண்டு.   பிறந்ததிலிருந்து  பன்னிரண்டு நாட்கள்  காரியங்கள் எல்லா இடங்களிலும் எல்லா நாட்களிலும் செய்யும் வழக்கம் நின்று விட்டது.  இப்போதெல்லாம் ஈம, அந்திம காரியங்கள் செய்ய தனி இடம் இருக்கிறது.  அங்கே  இதற்கென  ப்ரோஹிதர்கள், வைதீகர்கள் இருக்கிறார்கள். மொத்தமாக  பேசி ஒரு தொகை வாங்கி ஏற்பாடுகள்  செய்யும் குடும்ப வாத்யார்களும்  இருக்கிறார்கள் .

  பதிமூன்றாம் நாள் சுபஸ்வீகரணம்  எனும்  தீட்டு நீக்கி  பரிசுத்தமாக்கும்  நாள். அன்று எல்லா உறவினர்களும் பங்குகொண்டு  பாயசம் வடையோடு சாப்பிட்டு விட்டு செல்வது  வழக்கம் .

வசதிக்காக  வாத்தியார்கள்  முதல் நாள் அன்று  இறந்தவரின்  ஜீவனை ஒரு கல்லில் ஆவாஹனம் செயது மற்ற நாள் காரியங்களுக்கு உபயோகிப்பது வழக்கம்.   இந்த  கல்லூன்றி  பாஷாண  ஸ்தாபனம் செய்வதை  மூன்றாம் நாள்  ஆரம்பிக்கிறார்கள்.  பிளாட்களில், இதற்கெல்லாம் வசதியோ அனுமதியோ சில இடங்களில் கிடைப்பதில்லை  என்பதால் இதற்கென உள்ள பொது இடங்களில் செய்யவேண்டி இருக்கிறது.

ஏன் இந்த கல் ஊன்றுதல் என்றால் இறந்தவுடன்  ஜீவன்  உடலை விட்டு சென்றாலும் உலகை விட்டு  வெளியே செல்வதில்லை. வேறு உடலுக்கு காத்திருக்கும். அது பத்துநாள்  என்று உத்தேசம் என்பதால் அங்கேயே  சுற்றிக்கொண்டிருக்கும் என கருடபுராணம் சொல்கிறது.  சென்ற ஜீவனுக்கு இனி வடை பாயசம் ஐஸ்க்ரீம் கிடையாது. அதற்கு தேவை எள்ளும் ஜலமும்.  கல் ஊன்றிய இடத்தில் மற்ற  பன்னிரண்டு நாள் காரியம் நடப்பதற்கு காரணம் அந்த ஜீவன் அங்கே தான் சுற்றிக்கொண்டிருக்கும் என்பதால்.  அதைக் கரை ஏற்ற தான் இந்த  காரியங்கள்.   

வாரிசுகள்  வெளிநாட்டில் இருப்பதால்  சடங்குகளில் கொஞ்சம் மாறுபாடுகள் இருந்தால் அதை தவிர்க்க முடியாது. வேறு யார் செய்ய முடியும்?  முறைப்படி  நடக்கவேண்டுமானால்  இறந்த  பத்துமணி நேரத்துக்குள் அவரது உடல் தகனம் செய்யப்படவேண்டும்.   

ஒரு கருடபுராண விஷயம் சொல்லி முடிக்கிறேன்.   இறந்தபின் உடனே  தஹனம்  கூடாது.   மூன்றரை நாலு மணிநேரத்திற்கு பிறகு தான் ALLOWED .  ஏன் என்றால் இறந்தவுடன் யமதூதர்கள்  அட்ரஸ் கண்டு பிடித்துக்கொண்டு வருவார்கள். ஜீவனை உடனே அவர்கள் யமலோகம் தூக்கிக்கொண்டு செல்ல அனுமதி இல்லை. சித்ரபுத்ரன் கணக்கு பார்க்கவேண்டும் அல்லவா? இறந்தவன் காலத்தை அவன் வாழ்வை கண்காணித்து இனி அவனை தூக்கிக்கொண்டு வா என்று சித்ரபுத்ரன் சொல்ல கண் சிமிட்டும் நேரம் ஆகுமாம். அவன் கண் சிமிட்டும் நேரம் நமக்கு மூன்றரை நாலு மணிநேரம் என்று எங்கோ படித்தேன். 

மீதி அப்புறம்.

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:49:05 AM4/19/21
to amrith...@googlegroups.com
சாணக்கியன்.    --    நங்கநல்லூர்  J K  SIVAN --

சகலகலா வல்லவன் கௌடில்யன் சொற்கள்.

प्रलये भिन्नमर्यादा भवन्ति किल सागराः ।
सागरा भेदमिच्छन्ति प्रलयेऽपि न साधवः ॥ ०३-०६

pralaye bhinnamaryādā bhavanti kila sāgarāḥ।
sāgarā bhedamicchanti pralaye’pi na sādhavaḥ॥ 03-06

கடல் பொங்கும்.  பிரம்மாண்டமாக எழும்பும் அலைகளைக் காட்டி  பிரமிக்க வைக்கும். அதற்கு இருபக்கமும்   கரை உண்டு.  கரையைத் தாண்டுவதில்லை.   ஆனால்  என்றோ ஒருநாள் கட்டுக்கு மீறிவிடும். வானத்துக்கும்  பூமிக்குமாக   பூதாகார பிரவாகமாக ஓவென்று படுவேகமாக பரவும். அது தான் பிரளயம். எங்கும் நீர். ஞானி அப்படியில்லை.   என்றும்  மாறாதவன். சகல சக்திகள் கொண்டவனாக இருந்தும்  அவனுடைய   நிதானத்தில், அமைதியில் எந்த மாறுபாடும் எப்போதும் இல்லை என்பது தான் ஆச்சர்யம்.

 रूपयौवनसम्पन्ना विशालकुलसम्भवाः।
विद्याहीना न शोभन्ते निर्गन्धाः किंशुका यथा॥ ०३-०८

rūpayauvanasampannā viśālakulasambhavāḥ।
vidyāhīnā na śobhante nirgandhāḥ kiṃśukā yathā॥ 03-08

குலத்தளவே ஆகுமாம்  குணம் என்று இப்போதெல்லாம்  சொல்வதில்லை.   தானாகவே அது வெளிப்படும்.   இளமை,  அழகு, பணம்,  அந்தஸ்துள்ள குடும்பம்  என்று  ஊரே  போற்றினாலும் படிப்பு வாசனையே இல்லாமல் எங்கோ எளிதில் பட்டத்தை வாங்கி பேருக்கு பின்னால்  அடுக்கிக் கொண்டவன் சாயம் எளிதில் வெளுத்து விடும்.  துடைப்பத்துக்கு பட்டு குஞ்சலம்!  ஊமத்தம்பூவுக்கு மணம்  எங்கிருந்து வரும்?  என்கிறார்  சாணக்கியர்.

कामधेनुगुना विद्या ह्यकाले फलदायिनी।
प्रवासे मातृसदृशी विद्या गुप्तं धनं स्मृतम्॥ ०४-०५

kāmadhenugunā vidyā hyakāle phaladāyinī।
pravāse mātṛsadṛśī vidyā guptaṃ dhanaṃ smṛtam॥

கல்வி  என்பது  காமதேனு  என்று  அறிந்து கொள் .  காமதேனு  கேட்டதெல்லாம் கொடுக்கும்  பசு .   எந்த காலத்திலும் கல்வியறிவு  கை  கொடுக்கும்.  அதற்கு  நேரம் காலம்    எல்லையே இல்லை.   தாய் மாதிரி அது.   குழந்தை எங்கு சென்றாலும் அதற்கு பசி என்று தானே அறிந்து  பால் புகட்டுபவள் போல்,  கற்றோர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு.  மற்றவனுக்கு செருப்பு.   கல்வி கண்ணுக்குத் தெரியாத  பெரும் செல்வம். திருட முடியாதது.

यथा चतुर्भिः कनकं परीक्ष्यते
निघर्षणच्छेदनतापताडनैः।
तथा चतुर्भिः पुरुषः परीक्ष्यते
त्यागेन शीलेन गुणेन कर्मणा॥ ०५-०२

yathā caturbhiḥ kanakaṃ parīkṣyate
nigharṣaṇacchedanatāpatāḍanaiḥ।
tathā caturbhiḥ puruṣaḥ parīkṣyate
tyāgena śīlena guṇena karmaṇā॥ 05-02

ஸ்புடம் போடுவது என்றால் அக்னியில் தங்கத்தை  போட்டு அதை  தேய்த்து, வெட்டி, முறுக்கி,  அடித்து, அழகூட்டுவதால் தான்  அது மேன்மை பெறுகிறது.   AC  ஷோ கேஸில்  தானாக போய்  அதிக  விலை யோடு   உட்காரவில்லை.   இத்தனை  கஷ்டங்களைத் தாங்கியபிறகே  அதற்கு உயர்ந்த ஸ்தானம்.   ஒவ்வொரு மனிதனும் பொன் போன்றவன்.  தியாகம், அவன்  குணம், அவன்  பொறுமை,  அவன்  நம்பிக்கை, செயல்கள் அவனை  உயர்த்துவதற்கு முன் அவன் தன்னை தானே பல  சோதனைகளுக்கு  உட்படுத்திக் கொண்டு ஒளிர்பவன்.


दारिद्र्यनाशनं दानं शीलं दुर्गतिनाशनम्।
अज्ञाननाशिनी प्रज्ञा भावना भयनाशिनी॥ ०५-११

dāridryanāśanaṃ dānaṃ śīlaṃ durgatināśanam।
ajñānanāśinī prajñā bhāvanā bhayanāśinī॥ 05-11

தானம் கொடுக்க கொடுக்க  தான் தரித்திரம்   தொலையும்.  துன்பம் வந்தால் நகுக  என்றபடி  தளராத நெஞ்சம் கொண்ட திட மனம் துக்கத்தை, துன்பத்தை அகற்றும்.   எதை அறியவேண்டும் என்ற அறிவு அஞ்ஞானத்தை விளக்கும்.  பாகுபாடுடன் ஈடுபடும் செயல்  சொல் இரண்டும்  பயத்தை போக்கும். .

जन्ममृत्यू हि यात्येको भुनक्त्येकः शुभाशुभम्।
नरकेषु पतत्येक एको याति परां गतिम्॥ ०५-१३

janmamṛtyū hi yātyeko bhunaktyekaḥ śubhāśubham।
narakeṣu patatyekaeko yāti parāṃ gatim॥ 05-13

ராஜாவோ, பிச்சைக்காரனோ,  கோடிஸ்வரனோ, பரதேசியோ,  ஒவ்வொருவனும்  தனியாகத்தான் துணையின்றி பிறந்து தனியாக துணையின்றி மறைபவன்.  அவன்  யாராக இருந்தால்  தான் செய்த கர்ம பலனுக்கேற்றவாறு இன்பமும் துன்பமும்  அனுபவிக்கிறான்.   அதன் பலனாக தனியாக  மோக்ஷமோ, நரகமோ செல்கிறவன். 

सत्येन धार्यते पृथ्वी सत्येन तपते रविः।
सत्येन वाति वायुश्च सर्वं सत्ये प्रतिष्ठितम्॥ ०५-१९

satyena dhāryate pṛthvī satyena tapate raviḥ।
satyena vāti vāyuśca sarvaṃ satye pratiṣṭhitam॥ 05-19

நம்மைத்  தாங்கி  வாழ்விக்கும் இந்த  பூமி ஏதோ ஒரு சத்தியத்துக்கு கட்டுப்பட்டது. அது தான்  ப்ரம்மம்.  அந்த சக்தியே  சூரியனை சரியாக காலையில் எழுப்பி  ஒளி வீசிவிட்டு சாயந்திரம் மறையச்  செய்கிறது.  காற்றை மிருதுவான தென்றலாகவும் சூறாவளியாக வும்  வீசச்  செய்கிறது.  சர்வம் ப்ரம்ம மயம் ஜகத்   என்பது புரிகிறதா?  ப்ரம்மம் ஒக்கட்டே , ஒன்று தான்.   அதுவே பரம்பொருள் என்று   நம்மால் இரு கை கூப்பி வணங்கப்படுவது.

இன்னும் சொல்கிறேன்.

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:49:27 AM4/19/21
to amrith...@googlegroups.com

சில  நல்ல  அறிவுரைகள்.    நங்கநல்லூர்  J K  SIVAN  ---
                                    

ஒண்ணா ரெண்டா,  ஒவ்வொருத்தருக்கும்  எத்தனையோ  விதமான  மன அழுத்தங்கள்.  சிலர்  தனக்குள் தானே  அதை திரும்ப திரும்ப நினைத்து  தனியாக அழுது புழுங்குகிறார்கள்.  சிலர் கத்துகிறார்கள், கையில் கிடைத்ததை  விட்டு எறிகிறார்கள். கோபத்தை  ஆத்திரத்தை  ஒன்றுமறியாத  சம்பந்தமே இல்லாத குழந்தைகள் மேல் காட்டுகிறார்கள்.  சிலர்  ஆண்டவனிடம் கண்ணீர் விட்டு  கதறுகிறார்கள்.  சிலர்  தூக்கம் இழந்து,    சரியாக  உண்ணாமல்    உள்ளத்தில் இருப்பதன் வெளிப்பாடாக  உடலிலும் வியாதியை வரவழைத்துக் கொள்கிறார்கள்.   ஒரு சின்ன  விஷயம் செய்து பார்ப்போம்.   மலைபோல் வந்ததெல்லாம் கூட பனி போல் நீங்கும் என்பார்களே.

தன்னம்பிக்கை அவசியம் வேண்டும்.  மனோதிடம், தைர்யம் அவசியம்.   என்னதான் நடக்கும் நடக்கட்டுமே  பாட்டு மனதில் அடிக்கடி ஓடவேண்டும்.  எல்லாம் நல்லதுக்கே  என்ற  பாசிட்டிவ் குணம் வளரவேண்டும்.  தோல்வி மனப்பான்மை விலகவேண்டும்.  எங்கிருந்து ஆரம்பிக்கலாம்?

முதலில் நம்மை சுற்றி பார்ப்போம்.  சாத்தி இருக்கும் ஜன்னல்களை , திரைச்சீலைகளை திறப்போம். காற்றும் சூரிய வெளிச்சமும் உள்ளே  புகட்டும்.  இது ரெண்டுமே   நெகடிவ் மனப்பான்மைக்கு எதிரி. 

சுற்றியுள்ள  வேண்டாத குப்பைகளை  அகற்று. வீட்டைபெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்வோம்.  குப்பையும்  கூளமும் , அழுக்கும்  நெகடிவ் சக்திகள்.  தீபாவளி  பொங்கல்  போகி யின் போது  நமது  முன்னோர்கள் அதனால் தான் பழையன கழிதலுக்கு  முக்யத்துவம் கொடுத்தார்கள்.   வருஷம் ஒருநாள் போகி சொக்கப்பனைக்கு  நாம் காத்திருக்க வேண்டாம். வாரத்திற்கொருமுறை  க்ளீன் செயது அப்புறப்படுத்துவோம். 

வீட்டிற்குள் செருப்பு போட்டு நடக்கும் பழக்கம் நமக்கு வேண்டாம். தரை  உள்ளங் காலில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். தரை  நெகடிவ் சக்தியை  தின்றுவிடும்.    வீட்டைச் சுற்றி புல் தரை இருந்தால்  பிரம்மானந்தம்.  பக்கத்தில் பார்க் இருந்தால் கூட பொடிநடையாக சென்று   வெறுங்காலோடு நடக்கலாம். 
செருப்பு  காலணி , வீட்டுக்கு வெளியே  ஒரு ஓரமாக இருக்கவேண்டும்.   வெளியே சென்றால் காலைக்  கழுவிக்கொண்டு வீட்டுக்குள் வரலாம்.  அடிக்கடி கைகள், முகத்தை கழுவிக்கொள்வது இன்னும் விசேஷம். வீட்டு வாசலில் ஒரு பக்கெட்  நிறைய  தண்ணீர் வைப்போமே.

வெட்ட வெளியில்  விடிகாலை,  மாலை நேரங்களில்  கொஞ்சம்  வாக்கிங் போவது நல்லது.  கொரோனா சமயத்தில் பெரிய விசாலமான  மொட்டை மாடிகள் இதற்கு மிகவும் உதவும்.  இயற்கையோடு ஒன்றிய வாழ்வு உடல் உள்ளம் இரண்டுக்கும்  ஆரோக்யத்தை தரும் .

துணிகளைத் தோய்த்து  வெயிலில் கொடிகட்டி உணர்த்துவது அவசியம்.   சூரியன்  மிகவும் சக்தி வாய்ந்த கிருமிநாசினி. sanitizer. உலர்ந்த சுத்தமான  ஆடைகளை  அணிந்தால் உற்சாகம் உள்ளம் உடல் ரெண்டுக்கும் கிடைக்கும். 

தொட்டிகளில் பச்சை பசேலென  சிறு  பூச்செடிகள் ,  தக்காளி, மிளகாய், கொத்தமல்லி, வெண்டை  போன்ற காய்கறி செடிகளை வளர்க்கலாம்.  அவற்றிற்கு தண்ணீர் விடும்போது கிடைக்கும்  சுகம்  சொல்லில்  கிடைக்காது.   அவற்றால்  பாசிட்டிவ்  எனர்ஜி ரொம்ப கிடைக்கிறது.

குளிர்ந்த  நீரில் குளிப்பதால் உடல் உள்ளம் புத்துணர்ச்சி பெறுகிறது.    நல்ல  தெய்வீக பாடல்கள், ஸ்தோத்திரங்கள்,  பஜனை  பாடல்கள்.   ஓம்   சப்தம்  மெல்லிதாக கேட்டுக்கொண்டே இருந்தால்  சுகமோ சுகம்.

எவரையும் குறைவாக எண்ணாமல், அன்போடு  பழகுவோம். எல்லோரிடமும்  கூப்பிட்டு பேசுவோம். நலன் விசாரிப்போம்.  இதனால்  நம்மை வாழ்த்துவோர்கள் நம்மிடம் அன்பு செலுத்துவோர் நட்பு நிறைய கிடைக்கும். இது ஒரு விதத்தில் உம்மணாமூஞ்சியாக   இருக்காமல், ஏதோ சோகத்தோடு,  குரங்கை சாகக் கொடுத்த ஆண்டி என்று என் தாயார்  அடிக்கடி சொல்வாள்  அது போல் இருக்கவேண்டாம்.
பாட முயற்சி செய்து முடிந்தவரை  மனதை இதமாக தடவிக்கொடுக்கும் பாடல்களை  கேட்கும்போது நாமும் கூடவே பாடிப்பார்க்கலாம்.    பாசிட்டிவ்  வைப்ரேஷன் VIBRATION   கிடைக்கும்.


கடோசியாக  ஒரு வார்த்தை. நீ தண்டம் இல்லை.  கெட்டிக்காரன்.உன்னால் முடியும் தம்பி  என்ற  எண்ணம் ஒரு சிறு குரல் உள்ளே  ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும்.  அப்புறம் ......
டாக்டர் வீடு மறந்து போய்விடும். 


sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:49:59 AM4/19/21
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம்  -   நங்கநல்லூர்   J K  SIVAN 


          ''  இந்தாங்க  ஸ்தபதி பாக்கி...''


தமிழக  புண்ய ஸ்தலங்கள்  பெயர்களை நினைக்கும்போது  கண் முன் நிற்பது  காஞ்சிபுரம்.  காஞ்சிபுரம் என்றாலே  உடனே  நினைப்பது சங்கரமடம்.  அதிலிருந்து உலகெங்கும் ஆன்ம ஒளி வீசிய  மஹா பெரியவா பேசும் தெய்வமாக எத்தனையோ  கோடி  பக்தர்களின்  மனதில் என்றும் இருந்து அருள்புரிந்து வருகிறார்.

மஹா பெரியவாளுக்கு கைங்கர்யம் பண்ணும் பாக்யம் எல்லா பக்தர்களுக்கும் கிட்ட முடியுமா.  அந்த பாக்யம் ஒரு சிலருக்கு கிடைத்தது.  அவர்களில் ஒருவர்  எப்போதும் மஹா பெரியவா அருகிலேயே இருந்து  அவருக்கு  சிரத்தையாக பணிவிடை புரிந்த  காஞ்சி சங்கரமடத்து வாத்தியார்   மேச்சேரி பட்டு ஸாஸ்த்ரிகள் . 
வேதோபநிஷத், புராணங்களை  நன்றாக  படித்து  அறிந்தவர்   மேச்சேரி பட்டு சாஸ்திரிகள். மஹா பெரியவாளை  நிதர்சன தெய்வமாக போற்றி வணங்கியவர்.  

மஹா பெரியவா காலத்திலேயே  அவரது  ஜன்ம நட்சத்திரமான அனுஷ நாளில், சென்னை மேற்கு மாம்பலத்தில் வேத பாராயணம், பாதுகாபிஷேகம் என்று விமரிசையாகக் கொண்டாடினார் பட்டு சாஸ்திரிகள். மஹா பெரியவா  இதற்காக தன் பாதுகைகளையும் 32 ரூபாயையும் கொடுத்து, அனுஷத்தைக் கொண்டாடுவதற்கு பட்டு சாஸ்திரிகளுக்கு ஆசிர்வாதம் செய்தார்.   சாஸ்திரிகள் இல்லத்தில்   பெரியவா  பாதுகைகளை  வைத்து   மாசாமாசம்  அனுஷ நட்சத்திர உற்ஸவம்  ஜம்மென்று நடைபெறும். மகா அனுஷ நட்சத்திர உற்ஸவம்   இடவசதிக்காக மேற்கு மாம்பலம்- அயோத்தியா மண்டபத்தில் கொண்டாடப் படும். 

ஆரம்பத்தில்  சொந்த செலவில், இந்த வைபவத்தை  பட்டு ஸாஸ்த்ரிகள் நடத்தினார்.  போகப்போக  மஹா பெரியவா பக்தர்கள்  உதவியுடன்  இந்த   சேவை  இன்றும் தொடர்கிறது.  

2001-ஆம் வருட மகா அனுஷ உற்ஸவம், அயோத்தியா மண்டபத்தில் நடைபெற்றபோது  நடந்த ஒரு 
சம்பவம்.

சுவாமிநாதன் (மகானின் பூர்வாஸ்ரமப் பெயர்…சுவாமிநாதன்) என்ற  ஒரு  பக்தர், இரண்டு பித்தளை சொம்புகளை பட்டு சாஸ்திரிகளிடம் கொடுத்து, ”மகா ஸ்வாமிகளுக்குப் பஞ்ச லோக விக்கிரகம் வடித்து, உற்ஸவம் நடத்துங்கள்” என்று கூறி விட்டு நகர்ந்தார். இதை மைக்கில் அறிவித்த   பட்டு சாஸ்திரிகள்  ஸ்வாமிநாதனை கௌரவிக்க  ‘சுவாமிநாதனை மேடைக்கு அழைக்கிறேன்’ என மைக்கில் அறிவித்தார்.  ஆனால், சுவாமிநாதன்   மேடைக்கு வரவே இல்லை. 

இதை அடுத்து    சில நாட்களில்   அநேக  பக்தர்கள் வீடுகளிலிருந்து    செம்பு பித்தளை, வெண்கலம், வெள்ளி என்று   நிறைய  பழைய பாத்திரங்கள்  பட்டு சாஸ்திரிகள் வசம்  சேர்ந்தது.  பஞ்சலோக  விக்ரஹம்  வடிக்க  த் தேவையான உலோகங்கள்  சேர்ந்தது.  சுவாமி  மலையில்  ஒரு  ஸ்தபதியிடம்   இவற்றை உருக்கி  விக்ரகம் செய்ய  ஒப்படைத்தார்.  


 பெரியவாளின்   வைகாசி  மகா ஜயந்தி நாள் நெருங்கும்  சமயம்  மஹா  பெரியவா விக்கிரகத்துடன் பட்டு சாஸ்திரிகளின் இல்லத்துக்கு வந்தார் ஸ்தபதி. சாஸ்திரிகள் சொன்ன கால அவகாசத்துக்கு முன்னரே வேலையை முடித்து விட்டார் சுவாமிமலை  ஸ்தபதி.   சந்தோஷம்  நிறைந்திருக்க வேண்டிய  சாஸ்திரிகள்   மனதில் கவலை புகுந்தது.  ஏன்?

அட்வான்ஸ்  கொடுத்தது போக இப்போது  பாக்கி ஆறாயிரம் ரூபாயை ஸ்தபதிக்கு தர  எங்கே போவது?
 ”இப்ப உங்களுக்கு கொடுக்க  என்கிட்டே  பணம் இல்லையே…” என்றார். 
”பரவாயில்லீங்க. பணம் வந்ததும் கொடுங்க!” என்றார் ஸ்தபதி. 

மேற்கு மாம்பலத்தில் ஸ்தபதியை  ஸாஸ்த்ரிகள் பேசி  அனுப்பும் சமயம் காஞ்சியில் அப்போது என்ன நடந்தது?

தன் உண்மையான பக்தன் கஷ்டப்படுவதை  அறிந்து  பேசும் தெய்வம்  சும்மா இருக்குமா?
கணேஷ்குமார் (கடம் விநாயக்ராமின் சகோதரரின் மாப்பிள்ளை) என்பவர், மகா பெரியவாளின் தீவிர பக்தர்; அப்போது அமெரிக்காவில் இருந்தார்.   அவர் கனவில் மஹா பெரியவா:

‘ நீ  மேச்சேரி  சாஸ்திரிகள்  கிட்ட ஆறாயிரம் ரூபாயை உடனே கொடுத்துடு''    சட்டென்று விழித்த கணேஷ்குமார்,  ஒரு கணம்  நம்பவில்லை.  மீண்டும்  உறக்கம் அவரை ஆட்கொண்டது.  அப்போது எவரோ வந்து தன்னை தட்டி எழுப்புவது போல் உணர்ந்தார் கணேஷ் குமார்.  ''என்னடா  தூங்கறே. என்று பெரியவா எழுப்புகிறாரோ?;;

விடிகாலை சீக்கிரமே  எழுந்த  கணேஷ்குமார் தான் கண்ட கனவு குறித்து யோசித்தவர், இது  அவசரமான விஷயம். இல்லையென்றால் பெரியவா கட்டளையிடுபவர்  இல்லையே என்று  உணர்ந்தவர். உடனே  சென்னையில் ஒரு உறவினரை டெலிபோனில்  கூப்பிட்டார்.   

''என்னப்பா  நடு ராத்திரி  கூப்பிடறே, என்ன உடம்பு ஏதாவது சரியில்லையா?  என்று உறவினர் பதைபதைக்க''
''இப்போ  அங்கே  ராத்ரின்னு  தெரியும்...  நீங்க  காலம்பற  எப்படியாவது  ஒரு   ஆறாயிரம் ரூபாய் திரட்டி  மேற்கு மாம்பலம்  நம்ம   பட்டு சாஸ்திரிகள்  வீட்டிலே   நான் பெரியவா உத்தரவுப்படி கொடுத்தேன்னு சொல்லுங்கோ ''

சென்னையில்  மறுநாள்  சாயந்திரம்   பட்டு சாஸ்திரிகள்  வீட்டு   கதவை யாரோ தட்ட  
வெளியே வந்து யார்  என்று கேட்டார் 

அவர் கையில்  ஒரு பையில்  ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கண்ணில் நீர் மல்க வாங்கிய சாஸ்திரிகள், உடனே பூஜை அறைக்கு ஓடிச் சென்று, மகா பெரியவாளின் திருவுருவப்படத்துக்கு முன் விழுந்து நமஸ்கரித்தார். ஸ்தபதிக்கு பணத்தை பட்டுவாடா செய்தார்; பஞ்ச லோக விக்கிரகத்தை பூஜிக்கலானார்!
இந்த விக்கிரகத்தைக் கொண்டு, மாதந் தோறும் சாஸ்திரிகளின் இல்லத்திலும் மகா அனுஷ நாளில் அயோத்தியா மண்டபத்திலும் உற்ஸவ வழிபாடுகள் நடந்தேறும். கொடியேற்றத்துடன் துவங்கி, ஹோமங்கள், வேத பாராயணம், கச்சேரிகள், விக்கிரக ஊர்வலம் என்று அமர்க்களப்படும் விழாவில்… தினமும் 108 குடங்களில் திரவியங்கள் மற்றும் மலர்கள், விபூதி ஆகியவை சேகரித்து அபிஷேகம் செய்யப்படும். தவிர 1008 சங்காபிஷேகம், 1008 இளநீர் அபிஷேகம், பாதுகைக்கு 1008 வடைமாலை மற்றும் 1008 ஜாங்கிரி மாலை ஆகியவையும் சார்த்தப்படுகிறது.

”என் காலத்துக்குள்ளேயே மகா பெரியவாளுக்கு ஒரு கோயில் கட்டணும்னு ஆசை” என்கிற பட்டு சாஸ்திரிகள்  விருப்பம் நிறைவேறியது.  
 சாஸ்திரிகள்  மகன் சந்திரமௌலி   இந்தப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு    சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி பக்த ஜன ட்ரஸ்ட் இயங்கி வருகிறது.  விலாசம்:, 18/9, காமாட்சிபுரம் முதல் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 600 033.போன்: (044) 2371 1971, 98844 9557  

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:50:07 AM4/19/21
to amrith...@googlegroups.com
 
 
 இந்தா என்  சிறந்த பரிசு -   நங்கநல்லூர்  J. K  SIVAN  


வசந்த காலம் என்று  ஒரு ஆனந்தமயமான  தட்ப வெட்ப நிலைக்கு ஒரு காலம் வருஷா வருஷம் வரும்.  ஆனால்  இன்னொரு விஷயம் மறக்கவே கூடாது.

மன நிறைவு  இருந்தாலே  அது தான் எப்போதுமே  வசந்தகாலம். கிருஷ்ணனின் நினைவு நமக்கு அந்த சுகமான காலத்தை  இரவு பகலாக கொடுப்பதை நான் உணர்ந்தவன் 

ஒரு சம்பவம் மனதில் தோன்றுகிறதே அதை உங்களிடம் பரிமாறிக்கொள்ளட்டுமா?

 கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் இருந்த காலம் ஒவ்வொரு கணமும்  வசந்த காலம் தான். ''எங்குமே  ஆனந்தம், ஆனந்தமே  ஜீவித மகரந்தம்....'' கண்டசாலாவின் குரல் என் காதில் இன்னும் ஒலிக்கிறது.

வழக்கமான வசந்த  காலம் வேறு   வழக்கம் போல் வந்துவிட்டதால்  கிருஷ்ணன் இருக்கும்  பிருந்தாவனத்தில் சந்தோஷத்தை எப்படி  சொல்வது.?    மரங்களும்  கொடிகளும்  செடிகளும் பூத்து குலுங்குகின்றன. யமுனையில்  நீர் கரை புரண்டு ஓடுகிறது .   குளுமையான  பரிசுத்த நீர்.  ஆயர் பாடி சிறுவரும்  சிறுமியரும்  தென்றல்  காற்றில் மிதந்துவரும்  மலர்களின் நறுமணத்தை சுவாசித்துக்கொண்டு  அன்று மாலை வெயிலின்  மென்  சுகத்தில்  நீரில் நேரம் போவது தெரியாமல்  சுகமாக  விளையாடுகின்றனர்.   சிறு பெண்கள்  கூட்டமாக  வட்டமாக அமர்ந்துகொண்டு  எல்லா பூக்களையும் பறித்து கிருஷ்ணனுக்கு மாலை தொடுக்கிறார்கள்.

 வழக்கமான  அந்த பெரிய  மகிழ  மரத்தடியில்  நாற்காலி போல்  கிளைகள் வளைந்து கொடுக்க, அதன்மேல் அமர்ந்து கிருஷ்ணன் இடது காலை மடித்து வலது தொடைமேல் போட்டுகொண்டு  சுகமாக  புல்லாங் குழல்   ஊதுகிறான். அவனது இசையில் அவனே  மயங்கி அரைக்கண் திறந்து  தலையாட்டி  தனது வேணுகானத்தை ரசித்து வாசிக்கிறான்.   அதிலிருந்து புறப்படும்   இன்னிசை  வெள்ளம்  வேறு இந்த  சூழ்நிலையில் கலந்து எல்லா  ஜீவன்களையும் மெய் மறக்கச் செய்தது.

 மழை  வரலாம்  என்று  அறிவிக்க கார்முகில் கூட்டம்  மெல்ல மெல்ல கவிந்து வர  அந்த  பிரதேசத்தில்  உள்ள  மயில்களுக்கு  கொண்டாட்டம்.  இந்த  சூழ்நிலையில்  தானாகவே  தோகை  விரித்தாடும்  அவற்றுக்கு  கண்ணனின்  குழலோசையின்  பதங்கள்  சற்று   அதிக சந்தோஷத்துடனேயே  ஆட வைத்தது. இந்த பதத்தை ஞானத்தால் அறிந்து தானே  நமது   ஊத்துக்காடு  வேங்கடசுப்பையர்  இயற்றிய  ஆடாது அடங்காது வா கண்ணா  பாடலில்  ஒரு இடத்தில்  

''கனித்த/ (கதித்த) மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
கனித்த/(கதித்த) மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து மகிழ்த்தவா
கலை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா''

என்று  இந்த  பிருந்தாவன   வனத்தில் நிகழ்வதை  ரன்னிங்  கமெண்ட்ரி போல்  பாடினார் .. ''டடங்  டடங்   என்று  ரயில் போவது போல்   ......  கதித்த மனத்தில்  உறுத்தி பதத்தை .... என்று பாடுகிறார்.  அற்புதமான இந்த பாடலை  வித்வான்கள்   இந்த   இடத்தில் எவ்வளவு தாள பா(BAA ) வத்துடன் உடலை அசைத்து  பாடுவார்கள்.  நடன நாரீமணிகள் எப்படி எல்லாம்  அபிநயம் பிடித்து  ஆடுவார்கள்.. ஆஹா  அதை  கேட்கும்போதும் பார்க்கும்போதும், நாமும் ஆடுவோமே.  அப்படி ஆடுகின்றன   பிரிந்தாவனத்து மயில்கள் .

"கண்ணே,   என்னமாக  வாசிக்கிறான்  பார்த்தாயா இந்த  கிருஷ்ணன்?"   என்றது  மயில் கூட்டத்தின்  ராஜா   தன்   ராணியிடம்.

"நீ  எப்போதும்  தப்பாகவே தான்  எதையும்  செய்வாய்,  சொல்வாய்"  என்றது  ராணி.   அதற்கு எப்போதும் கணவனை குறை சொல்லிக்கொண்டே  இருக்க பிடிக்கும்.  மயில்கள் கூட  மனிதர்கள் போல  நடந்து கொள்ளும்  போல்  இருக்கிறது.

" நான்  என்ன  தப்பாக  சொல்லி விட்டேன்"  என்று  ஆட்டத்தை  நிறுத்தி கேட்டது  ராஜா மயில்.
 
" பின்னே  என்ன,  கிருஷ்ணன்  குழல் ஓசையை  ''பார்த்தாயா''  , என்கிறாயே. ''கேட்டாயா''  என்று  தானே  சொல்லணும்.  கேட்கவேண்டிய விஷயத்தைப்போய்  பார்க்க சொல்வது தப்பு இல்லையா?

''ம் ம் ம் ம் .......கிருஷ்ணனைப்   பார்த்தால்  எல்லாம்  மறந்து விடும் . அப்பறம்  எப்படி  கேட்பது?   ஆமாம்   ஆமாம் ,   நீ  எப்பவும்  எதிலும்  சரியே"   என்று  பேச்சுக்கு  முற்றுப் புள்ளி  வைத்தது   கணவனான  ராஜா   மயில்.
பேச்சை மாற்றுவதற்காக   ''ராணி, "இவ்வளவு  அழகாக  இன்னிசை  பொழிந்த  கண்ணனுக்கு  நாம்  என்ன  பரிசு  கொடுப்பது?"  என்றது  ராஜா மயில்.    மறுபடியும்  எதாவது  சொல்லி  அது தப்பாகி  மாட்டிக்  கொள்வதை விட  ராணியையே  யோசிக்க வைக்கலாமே  என்று அதற்கு தோன்றியது. ராஜா இல்லையா?  எதையாவது பேசுவானேன்  மாட்டிக்  கொள்வானேன்?

"நீ  தான்  நம்  கூட்டத்திலேயே  அழகன், உன்னிடம்  என்ன  அழகான பொருள்  இருக்கிறதோ   அதை யே  அவனுக்கு  பரிசாகக்   கொடேன்"    என்றது ராணி.

பாருங்கள்.     ராணி மயில் எவ்வளவு தாராள மனம் கொண்டது. நாம்  கல்யாண  காலங்களில் என்ன செய்கிறோம்?   யாருக்காவது ஏதாவது பரிசு கொடுக்கும்போது, நம்மிடம் எது தேவையில்லாமல் இருக்கிறதோ, எது வேண்டாமோ, அதை அழகாக பார்சல் பண்ணி கொடுத்து    விடுகிறோம்.  தனக்குப்   பிடித்ததை, தன்னிடம் உள்ள அருமையான பொருளை மனமுவந்து கொடுப்பது தான்  தானம், பரிசு.  அதனால் தான் நம்மிடம் உள்ள சிறந்த  மனத்தை, தூய ஹ்ருதயத்தை பகவானுக்கு அர்பணிக்க  வேண்டும்.

கண்ணன் குழல் தந்த இனிமையில், ஆனந்தத்தில் எல்லோரும் ஆடிக்கொண்டிருக்க  ராஜா மயில் தன்னிடம் எது சிறந்தது என்று யோசித்து நடன மாடிக்கொண்டே  கிருஷ்ணனை  அணுகியது.  அவன் மடியில்  தன்  தலையை  வைத்து கொண்டது.  குழலை  வாயிலிருந்து எடுத்து விட்டு  கிருஷ்ணன்  கேட்டான்.  

" என் அருமையான அழகிய மயிலே  எதற்கு என்னிடம் வந்தாய்.சொல்."

 "கிருஷ்ணா,  எங்களைப்    பரவசப்படுத்திய நீ  எல்லோரையும்  பரவசப் படுத்த உனக்கு நாங்கள் மயில்கள்   எல்லாரும் சேர்ந்து உனக்கு  ஒரு பரிசு   தருகிறோம் ஏற்றுக் கொள்வாயா ?"

 "மிக சந்தோஷமாக பெற்றுக் கொள்கிறேனே  "

" இந்தா"   என்று  அந்த  அழகு  ஆண் மயில்  தன்னிடத்தில் இருந்த ஒரு   பெரிய அழகிய மயில்  இறகை  கண்ணனுக்குப்   பரிசாக கொடுத்து  "இதை  எப்போதும்  உன்னிடம்  வைத்து கொள்வாயா? என்று  கேட்டது.

" அப்படியே  செய்கிறேன்   அழகு மயிலே,  இந்த  இறகு  என்றும்  என் தலையில்  செருகப்பட்டு  இருக்கும். உனக்கு   திருப்தியா"

மனமுவந்து கொடுத்த  எதுவுமே மதிப்பிட முடியாதது .  ஒரு சிறு துளி ஜலம் , ஒரு இலை , ஒரு காய்ந்த பழம் இது போதுமே எனக்கு''   என்றவன் அல்லவா  கண்ணன்.  கண்ணனை  மயிலிறகு இல்லாமல் நாம்  யாராவது  எப்போதாவது  பார்த்திருக்கிறோமா?

 

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:50:24 AM4/19/21
to amrith...@googlegroups.com
சாளக்ராமம் (முக்திநாத்)   --   நங்கநல்லூர்   J K  SIVAN 

நான்  சிறுவயதில் வசித்த ஒரு இடத்தின் பெயர் வடபழனிக்கருகே  சாளிக்ராமம் .  அதற்கு ஏன் அந்த பெயர், அதன் அர்த்தம் எல்லாம் தெரியாது.  ஆனால் அது  ஒரு  மறக்கமுடியாத இன்ப மயமான காலம் என்று மட்டும் தெரியும். 

நான்  ஒரு கப்பல்  நிறுவனத்தில்  பணியாற்றியபோது  நண்பர்களோடு  நேபாளம் சென்றேன் .   அங்கே   கண்டகி நதியை   முதன் முதலில்  கண்ணாரக் கண்டேன். அங்கே தான் சாளக்ராமம் என்பதன் முழு விபரமும்  என் அறிவிற்கு எட்டியது.   பிறகு   அறிந்த  அற்புத விஷயங்களைச்  சொல்ல  எனது  26-27 வயதுக்கு பின் நோக்கி  திரும்பி,  இதோ நேபாளத்தில் நான்:  

கண்ணுக்கெட்டியவரை  எங்கும்  ஆலமரங்களாக இருக்கிறது. அதற்கு அங்கே  ''சால மரம்''  என்று பெயர். அந்த நேபாள கிராமம் அமைதியாக இருந்தது.  சாலமரம் நிறைந்த  அது  தான்  சால  க்ராமமா ?   என் எதிரே ஒரு நதி அகலமாக நீண்டு ஓடியது.   அதில் இறங்கினேன். என்னை இழுத்துக் கொண்டு போகிறது.... எங்கே போகிறேன்? சந்தோஷமாக இருக்கிறது.

''ஹே, நதியே புனிதமான  பளிங்கு  நீராக இருக்கிறாயே, உன் அழகு கொள்ளை கொள்கிறதே. உன் பெயர் என்ன சொல்லம்மா?  நான் கற்றுக்கொண்ட பாடம்  நதிகள் புனித பெண்மணிகள். எனவே தான்  ''அம்மா'' சேர்த்தேன். 
நதி சல சலவென்ற  சப்தத்தோடு  பளிங்கு நீராக   களுக் என்று சிரித்துவிட்டு பதில் சொல்லியது.
 
 ''என் பேரா....கண்டகி..''..
''  ஓ   கண்டகி  என்று கேட்டிருக்கிறேன்.  நீ தானா  அது ?''
''ஆமாம் எப்போதுமே  அது தான் என் பெயர்.   நீ சொன்னபடி நான் ஒரு  அழகிய பெண்ணாக இருந்தபோதும் இதே பெயர் தான்.''..
''அட நீ சொல்வது வினோதமாக இருக்கிறதே. நீ எப்போது பெண்ணாக இருந்தாய், இப்போது அழகிய நதியாக அல்லவோ தெரிகிறாய்?''
''நானும் யாரிடமாவது சொல்ல வேண்டாமா? சொல்கிறேன் கேள்.
''நான் விஷ்ணு பிரியை. ஒரு ரிஷியின் பெண். அளவு கடந்த மோகம் விஷ்ணுவின் மேல். என்ன செய்வேன்?
''நீ தவம் இரு உனக்கு விஷ்ணு கிடைப்பார்''  என்று யாரோ சொல்ல  தவமிருக்க  இங்கே வந்தேன். ''
''இந்த நதிக் கரைக்கா?
''அப்போது  இங்கு நதியே இல்லை,  குறுக்கே  குறுக்கே  பேசாதே.   பேசாமல் நான் சொல்வதை மட்டும் கேள். எங்கும் சால மரங்கள்... (SAL ,PINE , FIR, spruce DEVADARU என்று பூகோள புத்தகத்தில் படித்த ஹிமாலய மலை மரங்கள் பேர் ஞாபகம் வருகிறது).   அதன் நடுவே  
என் தவம் துவங்கியது, தொடர்ந்ந் ந் ந் ந் ந் தது.......காலம் வருஷமாகி .வருஷங்களாகியது.  சிறுபெண் அல்ல இப்போது, கிழவி,,,,எனக்கு அந்திம காலம் வந்தது.   என் தவத்தை  ஏற்று  இன்னும்  விஷ்ணு வரவில்லை.    இனியும் விஷ்ணு வரவில்லை என்றால் நான் மடிகிறேன் என்று நினைத்தபோது  ஒருநாள் என் எதிரே,   இந்த வயதான கிழவி முன்,    விஷ்ணு தோன்றினார். அதற்குள் நான் கரைந்து நீராகி விட்டேன்.  

''நாராயணா , இனியாவது நான் உன்னை அடைவேனா? என் மகனாகவாவது  நீ வந்து   வளர்வாயா?

''அம்மா,   உனக்கு என்னை அடையும் நேரம் இப்போது தான் வந்தது... இப்போது மட்டும் அல்ல இனி எப்போதுமே நான் உன்னோடு  தான் இருப்பேன், உன்னிடம் வளர்வேன்,  உன் நதியில் கல்லாக இருப்பேன். நீயும்  இனி இங்கே பெரிய  நதியாக என்றும் ஓடுவாய் .  உனக்கு நான் சூட்டும் பெயர்   கண்டகி'' என்கிறார் நாராயணன்..
''உன்னை எப்படி வளர்ப்பேன் நாராயணா?

''நான் தான் சொன்னேனே, நான் என் பல அம்சங்களாக உன்னிடம் வளர்ந்து உன்னோடு கலந்திருப்பேன் போதுமா. நீ நதி நான் கல். சேர்ந்தே இருப்போம். கண்டகி  இனி உனக்கு திருப்தியா?

''பிரபோ,  என் பெயரை சொல்லி அழைத்தீர்களே, உங்கள் பெயர் என்ன இப்போது, வெறும் கல்லா? என் மகன் பெயர் என்ன என்று தெரியாத தாயா நான்?''

''இல்லை கண்டகி, நான் இந்த சாலமரங்கள் வளரும் கிராமத்தில்    ''சாளக்ராமம்''  என்ற பெயரில் கல்லாக உன்னிடம் வளர்வேன் என்னை என் பக்தர்கள் தேடி வந்து உன்னை வணங்கி எடுத்து செல்வார்கள்.. நான் அங்கும் இங்குமாக இருப்பேன். ....'' என்கிறார் நாராயணன்''.  

என்  எதிரே  கண்டகியைப்  பார்த்துக்கொண்டிருக்கும்  கற்பனை லோகத்திலிருந்து  மீண்டேன்.  என் வாய் என்னை அறியாமல்  ''சாளக்ராமம், சாளக்ராமம்'' என்று  முனகியது.    சாளக்ராமம் பற்றி  விவரங்கள் கொஞ்சம்  சேகரித்தேன்.

முக்திநாத் (Muktinath), இமயமலை நாடான  நேபாளத்தில், ஒரு பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த,
புனித ஸ்தலமாகும். வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் 105வது திவ்ய தேசமாகும்.முக்தி க்ஷேத்திரம் எனப்படும் தாமோதர குண்டத்தில் கிடைக்கிறது

 திருமங்கையாழ்வாரும் பெரியாழ்வாரும்  நடந்தே  வந்து முக்திநாதரைப்  போற்றிப் பாடி மங்களா சாசனம் செய்துள்ளனர்.   இப்போது தான்  முக்திநாத் சீஸன்.  மார்ச் மாதம் முதல் ஜூன்  முடிய முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாகும்.  இங்கு   கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராம கற்களை  சேகரித்து வைணவர்கள் நாரா யணனின் அம்சமாகக்  கருதி  பூஜையில்  வைத்து வழிபடுகிறார்கள்.

 முக்திநாத்  பற்றி இன்னொரு விசேஷம்,  இது  51 சக்தி பீடங்களில் ஒன்றாக  சக்தி உபாசகர்கள், சாக்தர்கள்,  வழிபடுகிறார்கள்.  முக்திநாத்தை நூறு புனித நீர் நிலைகள் எனப் போற்றி  தாந்திரீக திபெத்திய பௌத்தர்கள்,   டாகினி என்ற பெண் தெய்வத்தின் இருப்பிடமாக கருதுகின்றனர்.

சாளக்கிராமத்தை தொட்டாலே கோடி ஜென்ம பாபங்கள் விலகும். சாளக்ராமம் விஷ்ணுவின் அநேக அம்சங்களில் தோன்றுகிறது.  கண்டகி நதியில் கிடைக்கும்  ஒவ்வொரு சாளக்ராமத்துக்கும் விஷ்ணு சம்பந்தப் பட்ட ஒரு நாமம்.   பாஞ்சஜன்யம், கௌமோதகி, சார்ங்கம். ஸ்ரீவத்சம், கதாதரம்.    எல்லாமே  விஷ்ணு நாமங்கள், அவதாரங்கள் பெயர்கள், இன்னும் எத்தனை எத்தனையோ.

வாசுதேவன் எனும் சாளக்ராமம் வெள்ளை நிறம். ரெண்டு வட்ட கோடுகள் அதன் வாயில் தெரியும். சங்கர்ஷணன் என்பது சிவப்பாக இருக்கும். வாயில் ரெண்டு வட்ட கோடுகள். ப்ரத்யும்னன் என்பது மஞ்சள், சின்னதாக ஒத்தை வட்ட கோடு .அநிருத்தன் என்பது வட்டவடிவம். நீல நிறம். மூன்று கோடுகள் வாயருகே. நாராயணன் என்பது கருப்பு வண்ணம். கதாயுதம் மாதிரி.     
ஒரு உருவம் அதன் வாயில் தெரியும். கிருஷ்ணா என்பது கருப்பு வர்ணம்.பின்பக்கம் கொஞ்சம் சப்பையாக இருக்கும். சாளக்ராமங்களை விவரிக்கவே ஒரு தனி கட்டுரை எழுதலாம்.


நேபாளத்தின் வடமேற்கே. சாளக்ராமம் எங்கிருக்கிறதோ அங்கே மஹாலக்ஷ்மி சமேதராக விஷ்ணு இருக்கிறார். அதற்கு விலையே கிடையாது. உலகத்தில் உள்ள எல்லா தங்கங்களைக்  கொட்டி கொடுத்தாலும் ஒரு சாளக்ராமத்தின் மதிப்புக்கு ஈடாகாது என்பார்கள். சாளக்ராமத்திற்கு சங்கு தீர்த்த அபிஷேகம் செயது பூஜிப்பவன் பாக்கிய சாலி. மரணாந்த காலத்தில் சாளக்ராம தீர்த்தம் அருந்தியவன் மறுபிறப்பற்றவனாம்.
இன்னொரு  விஷயம்  அடுத்த பதிவில் சொல்கிறேன்..

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:50:33 AM4/19/21
to amrith...@googlegroups.com


ஆத்ம ஞானம் .--  நங்கநல்லூர் J K  SIVAN 

திரும்ப திரும்ப  யோசித்தால்  சில  அற்புதமான  விஷயங்கள்  தெரியவரும்.  அந்த உணர்வு ஆனந்தத்தைத் தரும்.  த்யானம்,  மெடிடேஷன் MEDITATION   பற்றியெல்லாம்  உடனே  தாவ வேண்டாம்.. கொஞ்சம் கொஞ்சமாக மனதை அதற்கு தயார் செய்து கொள்ள  முதலில்  சில சில்லறை விஷயங்கள் நன்றாக புரியவேண்டும். 
 உபநிஷதங்கள் எழுதுவதை கொஞ்சம் குறைத்துக் கொண்டுவிட்டேன்.  எங்கே போகிறது. கொஞ்சம் பின்னால் யோசித்து பார்த்துக் கொள்வோம்..

மனம் எங்கே  இருக்கிறது ?    இதற்கு விடை:   நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது.  எவரை நினைக்கிறோமோ அவரிடம் உடனே சென்றுவிடுகிறது.    அதற்கு தூரம் தடை இல்லை.  போக்குவரத்து  ப்ராப்ளம் இல்லை.  மாஸ்க் தேவையில்லை.

மனம் எங்கே இருக்கிறது..  மார்பிலா,  நெஞ்சிலா?    NO ,  தனியாக  ஒரு இடத்தில் என்று இல்லாமல் உடல் பூரா இருக்கிறது.   நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும்,   சுய உணர்வு உள்ளது.
தரை என்கிறோமே,  நிலம், மண்,  அதன்  பிராண சக்தி நமது  உடலுக்கு உறுதியைத்  தருகிறது. நாம் பிறப்பதை அதனால் தான் இந்த மண்ணில் விழுந்தோம்,  மஹான்களாக  இருந்தால் ''அவதரித்தோம்''.

ஒவ்வொரு மனிதனுக்கும்  உள்ளே  குட்டியாக  ஒரு கட்டை விரல் உயரத்தில்  ஒரு  ஸூக்ஷ்ம ‬ சரீரம் உண்டு.
இதுவே ஒளி உடல் எனப்படும் .உருவம் இல்லை.  ஜோதி ஸ்வரூபம். அது தான் உடலை விட்டு ஒருநாள் பிரிகிறது.

நாம்  அனுபவிக்கிறோமே  இன்ப துன்பங்கள்,  வலி, சுகம்  எல்லா உணர்வும் நமது பிராண  உடலால் உணரப் பட்டு   அதன் உரையான இந்த  தேகத்தில்  பிரதிபலிக்கிறது.  நமது  பேச்சு,  செயல்  ஏதாவது நமக்கு   ஆத்ம திருப்திக்காக  என்று சொல்கிறோமே,  அது தேகத்தோடு சேராது.

சில  மகான்கள், சித்தர்கள் ,  படங்களைப்  பார்க்கும்போது  அவர்களைச் சுற்றி,  அல்லது   தலைக்கு பின்னால்  மஞ்சள், ஆரஞ்சு  நிறத்தில் பெரிய ஒளி  ஒரு வட்டம்  போட்டுக் காட்டுகிறார்களே   அது தான்  ஆத்ம  ஒளி,  AURA,  கண்ணுக்கு தெரியாத  இந்த   ஒளி உடல் பல நூறு அடிகள்  வரை அவர்களைச்  சுற்றி  பரவி இருக்கும்.  அதனால் தான் மஹா பெரியவா  போன்றவர்களை பார்க்கும்போது, நம்மை அறியாமல்,   நமக்கு ஒரு இனம் புரியாத   VIBRATION  வைப்ரேஷன் , பய பக்தி,  தோன்றுகிறது. 

நமது உடல் அனுபவிக்கும்  எத்தனையோ  நோய்களின் பதிவுகள்  மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது. சூக்ஷ்ம சரீரத்துக்கு அது  தெரியும். 

சில    ஆண்கள் பெண்களின் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள்    அவர்கள் சமையல் செய்வது மூலமாக
ருசியாக வெளிப்படுகிறது.  சிலர்  தொட்டால் அந்த காரியம் துலங்கும்.  சிலரது பார்வையிலேயே  நாம்  புத்துணர்ச்சி பெறுகிறோம். சிலர்  புன்னகைக்கும்போது எங்கோ பறக்கிறோம்.   இதெல்லாம் அவரிடம் உள்ள ஆத்ம சக்தியின்  வெளிப்பாடு.

 மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை  பிராணசரீரம் குணப்படுத்துகிறது. அதை   வெள்ளைக் காரன் ஏதோ கொஞ்சம் சரியாக புரிந்துகொண்டு   WILL POWER என்றான். அதை அனுபவிப்பது  தேகம் எனும் உடல்.

பிரஞை, எனும்  ஆத்ம உணர்வு,  மனிதனின் உள்ளுணர்வு, என்று சொல்கிறோமே  அது தான் நமக்கு எப்போதும்  என்றும்  மிகப்பெரிய வழிகாட்டி.

இன்னொரு முக்கியமான  விஷயம் . நன்றாக எப்போதும் நினைவில் இருக்க வேண்டிய விஷயம்.  
மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அதன் உள்ளே கண்ணுக்கு தெரியாமல் இருந்து அதை ஆட்டிவைக்கும்  ஆத்மா, ஒளி, உள்ளுணர்வு. பிரஞை.  உடல் ஏதோ அடையாளத்துக்காக ஒரு பெயரைப்  பெறுகிறது. உடல்  உயிரை  இழந்ததும்  பெயர்  காணாமல் போகிறது. 
  
கோவில்களில், சித்தர் சமாதிகள் ,  அதிஷ்டானங்கள் ஏன் இருக்கிறது தெரியுமா?  அங்கே  ஆத்ம சக்தி  ஜீவ சமாதியாக என்றும் இருக்கிறது.  நான் மேலே சொன்னேனே   மஹான்கள் சித்தர்களின்  VIBRATION  எனும்  ஜீவ சக்தி நமக்கு கிடைத்து  நாம் உயர்வதற்கு.

என் கட்டுரைகள் ரொம்ப நீளமாக இருக்கிறது என்று பலர் சொல்கிறார்கள். எழுத ஆரம்பித்தால்  ஹனுமார் வாலாக  நீள்கிறது. ஆகவே  முருங்கைக் காயை ஒடிப்பது போல்  ஒடித்து  மீதியை அடுத்ததில்  சொல்கிறேன்.
     

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:50:33 AM4/19/21
to amrith...@googlegroups.com
 
ஸூர்தாஸ்   -  நங்கநல்லூர்  J K  SIVAN   


   35   பொழுது  புலர்ந்தது....


விழியற்ற ஸூர்தாஸுக்கு  வெளி உலகம் பிறவியிலிருந்தே    ''அப்படியே''   தான்   இருந்தது.  மாற்றமே இல்லையே.   வெளிச்சம் தெரிந்தால் தானே இருட்டு என்றால் என்ன  என்று உணர முடியும். பகல்  தெரிந்தால்  தானே  இருள் எப்படி இருக்கும் என  புரியும்.  அவருக்கு  எல்லாமே  இருளா  ஒளியா?   உருவமா  அருவமா? அவர் கிருஷ்ணன் என்ற ஒரே வார்த்தை மட்டும் தான் அறிந்தவர்.  தான் கேட்டவற்றை வைத்துக்கொண்டு  மனதில் அவனை எப்படியெல்லாம் மனக் கண்ணால் துய்க்க முடியுமோ அப்படி அனுபவிப்பவர். அவனாகவே வாழ்பவர்.

காதில் எல்லோரும்  பொழுது விடிந்தது என்ற சொல்லை உச்சரிக்கும் போது அது உறக்கமின்மை என்று மட்டுமே  தெரியும். ஆகவே கிருஷ்ணனை  தூங்கியது போதும்  கிருஷ்ணா  எழுந்திரு. இரவு முடிந்து  விட்டதே. படுக்கையை விட்டெழு. இதோ  பார்த்தாயா  கூட்டத்தை. உன்நண்பர்கள், கோபர்கள்  பசுக்களோடு கன்றுகளோடு வாசலில் நிற்கிறார்களே   நீ யில்லாமல் அவர்களுக்கு எப்படி பொழுது போகும். யாருக்கு தான் போகும்? 

''என்னடா கிருஷ்ணா இன்னுமா தூக்கம்? என்று குரல் கொடுக்கிறார்களே. தாமரை மலர்களை  சுற்றி  வண்டுகள் கூட்டம் கூட்டமாக வட்டமிடுவது ஏன். அதன் தேனிலும் அழகிலும் மயங்கு வதால் தானே. நீயும்  அப்படித்தானே கிருஷ்ணா?


கீச்கீச் சென்று எத்தனை பறவைகள், வண்டுகள் கீதம் ராகம் ராகமாக இசைக்கிறது. தம்புரா போல ஒரே ஆதார சுருதி யில் சில வண்டுகளின் சுநாதம். என்ன உற்சாகம் அவற்றிற்கு.  உன் காதில் விழுகிறதா? என் இனிய கண்ணா,  என் உயிரின் உயிரே, என் செல்வமே, கோபியர் கொஞ்சும் கோபாலா, ஆஹா  எத்தனை  ரிஷிகள்,  முனிவர்கள் , மஹான்கள்  உன்னை  வாயார ஜெய ஜெய கோவிந்தா  
கோபாலா என்று  வாய் 
மணக்க பாடுகி றார்கள். நானும் சேர்ந்து கொள்கிறேன்.  
 
Listen, the birds sing
aloud with glee O sweet child,
life of my life,
my sole wealth,
O darling boy,
bards and minstrels
sing your praises,
saying 'victory! victory!'

 

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:50:47 AM4/19/21
to amrith...@googlegroups.com

                 
                புது ''பிலவ '' வருஷம்.      நங்கநல்லூர்  J.K. SIVAN

வசந்த ருது மன மோஹனமே ... வசந்த ருதுவை நினைத்தால்   MKT  பாகவதர்  குரல் காதில் ஒலிக்கிறது. புது வருஷம்.....பிரளயம் முடிந்து ப்ரம்மா புதுசாக சிருஷ்டி ஆரம்பித்த நாள் என்று ஒரு ஐதீகம்.

புதுசு என்றால் பெரிசுகளுக்கு கூட ஒரு தனி உத்ஸாகம். பழசெல்லாம் நினைத்துப் பார்க்கும். காது கேட்காமல் பல்லில்லாமல் வாய் நிறைய சிரிக்கும். கொரோனா தெரியாமல்  வாழ்ந்த  ஆனந்த காலம். 

நாம் எல்லோருமே புதுமை விரும்பிகள் என்பதில் என்ன சந்தேகம்? . புதுசா  துணி, புஸ்தகம், படம், என்பதிலிருந்து ஆட்சி  வரை புதியதைத்  தேடுபவர்கள்.   மே  ரெண்டாம் தேதி  தெரிந்து விடுமே..

எழுபது  வருஷ   ப்ரயோஜனமில்லாத  அருதப் பழசுக்கு   பதிலாக அஞ்சு வருஷ புதுசு   தொடர்ந்து இருந்தாலே போதும் என்று புரிந்தவர்கள்.

நமது தேசத்தில்  வெவ்வேறு மொழி பேசுபவர்கள் நாம்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளில் புது வருஷம் வரும்.   தெலுங்கு மொழி பேசுபவர்களுக்கு புத்தாண்டு  உகாதி.    நமக்கு தமிழ் புத்தாண்டு 14.4.21 அன்று  சித்திரை அன்று.  வடக்கே சிலருக்கு  புது வருஷம்  குடி பட்வா.  உகாதியும் குடி பட்வா கொண்டாடுபவர்கள் இவ்வளவு  பெரிய தேசத்தில் பாதிக்கு மேல்.     ஆந்திர மஹாராஷ்ட்ரா ஜனங்கள்.   தெலுங்கு பேசுபவர்களுக்கு உகாதி,   கன்னடக்காரர்களுக்கு யுகாதி,   சிந்தி ஆசாமிகளுக்கு  இது  சேதி சாந்த் என்று நிறைய இனிப்புகளோடு இந்தியில் வரும்.   காஷ்மீர் காரர்கள்  சண்டை போடாமல்  அவர்கள் பாஷையில்  இதை  ''நாவ்ரே'  என்று  சொல்வது பெயரே கோபமாக அடிக்க வருகிறாற்போல் இருக்கிறதே!   அது தான் காஷ்மீர்.  மணிப்பூரில்  புது வருஷத்தின் பெயரை   சொல்லி பார்ப்பதற்குள் அது போய்  அடுத்த  புது வருஷம்  வந்து விடும். எங்கே சொல்லுங்கள் அதன் பெயரை :'' சஜிபு நொங்மா பண்பா சீய்ராஒபா'' !!

என்ன பேர் வைக்கலாம் எப்படி அழைக்கலாம் என்பது இருக்கட்டும். அன்று எல்லோருமே மொத்தத்தில் வீடுகளை சுத்தமாக்குவார்கள். பழசு வெளியேறும். புது துணிகள் மாவிலை, தென்னை ஓலை தோரணங்கள். ''குடி;; என்றால் பொம்மை. மரப்பாச்சி யாக கூட இருக்கலாம். வீட்டு வாசலில் மூங்கில் பொம்மைகள் வேப்பிலை அலங்காரம் பண்ணி நிறைய தொங்கவிடுவார்கள். குளிக்காதவர்கள் கூட காலையிலேயே குளித்து எண்ணெய் தடவி தலை வாரி நெற்றிக்கு எது வழக்கமோ அதை பூசி நிறைய பேர் புதுவருஷ பஞ்சாங்கம் அந்தந்த பாஷையில் படிப்பதை கேட்க போய்விடுவார்கள். சாயந்திரம் கேளிக்கைகள், டான்ஸ். கூத்து கும்மாளம், சாப்பாடு.

நமது பாரம்பரிய  வழக்கம். வருஷப்பிறப்பு அன்று   இன்பம்  +துன்பம்  கலந்த  அனுபவத்தை ஏற்க,  கசப்பானவற்றை  தித்திப்பாக  ஏற்றுக்கொள்ள,   வேப்பம்பூ வெல்ல பச்சடி பண்ணுவோம்.   வேப்பம் பூ துயரத்தையும் வெல்லம் சந்தோஷத்தையும் சேர்த்து அனுபவிப்பதை  நினைவூட்ட.  பச்சை மிளகாய் கோபம்.   உப்பு : பயம் .  புளி : அருவருப்பு. அரை பழுத்த மாங்காய் : ஆச்சர்யம் இதெல்லாம் சேர்ந்தது தானே மனித வாழ்க்கை. 

நாம் கொழுக்கட்டை பண்ணுவோமே அது போல் பூரண போளி என்று ஒரு பக்ஷணம் மஹாராஷ்ட்ரர்கள் பண்ணுவார்கள். இது மாதிரி ஒன்றை பொப்பட்டு (bobbattu ) என்று தெலுங்கர்களும் ஹோலிகே, ஒப்பட்டு என்று கன்னடியர்களும் பண்ணுகிறார்கள். 

"எல்லோரும் ஒன்றாக கூடி மகிழ்ந்து வாழ என்ன பாஷை பேசினால் என்ன? எந்த பக்ஷணம் இனிப்பாய் ஏதேதோ பேரில் சாப்பிட்டால் என்ன?  நாம் எல்லோரும் இந்தியர்கள். பாரத தேச புண்ய பிரஜைகள்.  
       
20்21 ஏப்ரல்  14 அன்று தமிழ் புது வருஷத்தின் பெயர்   பிலவ/ ப்ளவ. என்கிறார்கள்.   அறுபது தமிழ் வருஷங்களில்  வரிசையில்  இது 35வது. 

இடைக்காட்டு சித்தர்  ரொம்ப  தீர்க்க தரிசி.  அறுபது  தமிழ் வருஷங்களுக்கு பொதுவாக எப்படி இருக்கும் என்று  யோசித்து  ஒவ்வொன்று பற்றியும்  எப்போதோ  வெண்பா எழுதியவர்.  பிலவ  வருஷம் பற்றி:

பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்
சலமிகுதிதுன்பந்  தருக்கும் நலமில்லை
நாலுகாற் சீவனெல்லா நாசமாம் வேளாண்மை
பாலுமின்றிச் செயபுவனம் பாழ்

விளக்கம்:
சித்தர்  என்ன சொல்கிறார்?   பிலவ ஆண்டில் மழை குறைவாக பெய்யும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர் களுக்கு துன்பம் அதிகரிக்கும், அதனால் அதிகம் கோபம் கொள்வர், மக்களுக்கு நலமில்லை. ஆடு, மாடு உள்பட நான்கு கால்களைக் கொண்ட உயிரினங்கள் பெருமளவில் மடியும். உணவும், பாலும் இன்றி உலகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

எதிர்பார்ப்பு  வழக்கம் போல் ஏமாற்றம் தருகிறதோ?   இந்த ஆண்டு பணப் பிரச்சனை, பணத் தட்டுப்பாடு ஏற்படும். அரசாங்கத்தினை ஆள்பவர்களுக்கும், ஆட்சி செய்பவர்களின் உயிருக்கும் ஆபத்து உண்டாகும். வேளாண்மை நன்றாக இருக்காது.  கால்நடை உயிரினங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். கடுமையான உணவுப் பிரச்சனை உண்டாகும். அதன் விளைவாக, கால்நடைகளும், பிற உயிரினங்களும் உணவின்றி மடியும். நிலமும் பாழாகும். அத்துடன் நிலத்தடி நீர்மட்டமும் அதிரடியாகக் குறைந்து போகும் என்றுக் குறிப்பி டப்பட்டு உள்ளது. எப்பொழுதும் சித்தர்களின் வாக்கு நிச்சயம் பலிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.


ஹிந்துக்களாகிய நமக்கு  பஞ்சாங்கம் ஒரு இன்றியமையாத கையேடு. வரப்பிரசாதம்.  நமது உலக வாழ்க்கை பிறப்பது முதல், இறப்பது வரை, அதற்குப் பின்னும் நாம் அனுசரிக்க வேண்டிய நியதிகளை,   நேம நியமங்
களை,  சொல்லித்தருவது பஞ்சாங்கம். நமது வாழ்க்கையே இந்த பஞ்ச பூத  இயற்கையால் அமைவது, அதனுடன் வளர்ந்து மாறுவது, அதனிலே ஐக்யமாவது.எனவே இயற்கையை அறிந்துகொள்ள பஞ்சாங்கம் அவசியம்.

பஞ்சாங்கம்  ஐந்து விஷயங்களை சொல்வது.   அது  ஒரு காலம்  நேரம்  காட்டும் அட்டவணை மட்டும் அல்ல. நமது செய்கைகளை, எண்ணங்களை நேர் படுத்த சீராக்க  உதவும் ஒரு அத்யாவசிய கருவி.  சம்பிரதாயங்கள்,  முக்கிய நாட்கள்,  கிரஹணம், அமாவாசை, பௌர்ணமி, திதி, நக்ஷத்திரங்கள்  மாதங்கள் தவிர  பண்டிகை, கர்மானுஷ்டான மந்த்ரங்கள், சுப முகூர்த்த நேரங்கள் அறிய  உதவும் ஒரு வசதியை   இப்பஞ்சாங்கங்கள் அளிக்கிறது.  எல்லாம் சொல்லித்தரும்.    வீட்டில் டாக்டரை  தேடும்படியாக  செய்யாமல்,  தொந்தரவு பண்ணாத சாப்பிடாத பேசாத  அதிகாரம் பண்ணாத  பாட்டி தாத்தாக்கள் இந்த பஞ்சாங்கங்கள். 

ரொம்ப  சுவாரஸ்யமான  விஷயங்கள் அடங்கியது பஞ்சாங்கம். அதைப் பற்றி தனியாகவே ஒரு கட்டுரை எழுத சமாச்சாரம் இருக்கிறது.
அட்வான்ஸ்  புத்தாண்டு வாழ்த்துக்கள்  உங்கள் அனைவருக்கும். -  ஜே கே சிவன் 

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:51:21 AM4/19/21
to amrith...@googlegroups.com
மரியாதை ராமன் கதைகள். 2 


குழந்தையைக் கொன்றது யார்?  --  நங்கநல்லூர்  J K  SIVAN 


மரியாதை ராமன் என்று ஒருவன் இருந்தானா?  விக்ரமாதித்தன் கதைகளில்   அவனை  ரொம்ப கெட்டிக்காரனாக எந்த  புதிரையும் அவிழ்க்கும் சாமர்த்திய சாலியாக, நீதிமானாக, அதி புத்திசாலியாக  காட்டியிருப்பார்கள்.   உண்மையாகவே  யாரோ இப்படி இருந்ததால்  தானே ஒரு  பாத்திரம் உருவாகி இருக்கிறது.  தெனாலி ராமன் கெட்டிக்காரன்.  ஆனால்  அவனை விதூஷகனாக,  விகடகவியாக கோமாளியாக  காட்டியிருக்கிறார்கள்.  பரமார்த்த குரு கதைகளில் முட்டாள்களை ஒன்று சேர்த்து காட்டி இருக்கிறார்கள்.

இங்கிலிஷ் கதைகளில் ஷெர்லாக் ஹோம்ஸ்  படு புத்திசாலி.  துப்பறிவாளன். உட்கார்ந்த இடத்திலிருந்தே  எங்கோ நடந்த  கொலை,கொள்ளைகளை  எப்படி நடந்தது, யார் செய்தது என்று அடையாளம் காட்டும் சாமர்த்தியசாலி.  ஷெர்லாக் ஹோம்ஸ் இருந்தானா  அல்லது  அவனை உண்டாக்கிய  ஆர்தர்  கானன்  டாயில் அவ்வளவு கெட்டிக்காரனா?  

 பெர்ரி மேசன்  ஒரு கெட்டிக்கார வக்கீல். குறுக்கு விசாரணை கேள்விகளில் உண்மையை வெளிக் கொணர்ந் து  குற்றவாளியை கண்டு பிடிப்பவன்.  பெர்ரி மேசன் யார் என்றால்  அந்த பாத்திரத்தை உருவாக் கிய  ஏர்ல் ஸ்டேன்லி கார்ட்னர்  தான்.  அகாதா கிறிஸ்டி அப்படித்தான்.  நமது தமிழ் வாணன் சங்கர்லாலை உருவாக்கி  சங்கர்லால் என்றும் நமது மனதில் இருக்கிறார். தமிழ்வாணனை ஞாபகம் இல்லை. 

இன்று ஒரு மரியாதை ராமன் கதை. அநேகருக்கு தெரிந்த கதையாக இருக்கலாம்..

ஒருத்தன்  ரெண்டு பொண்டாட்டிக்காரன்.  சாந்தா  காந்தா அவர்கள் பெயர்கள்..  சாந்தா முதல் மனைவி. காந்தா ரெண்டாவது.  அவன் எவ்வளவு பெரிய  தொந்தரவை தானே  விலைக்கு வாங்கி இருக்கிறான். எரிகிற கொள்ளிக் கட்டை ஒன்று அல்ல ரெண்டை, எடுத்து தலையிலே ஏன்   செருகிக்கொண்டான்?
 
அந்த  வீட்டில்  எப்போதும் சத்தம்.  சண்டை போடாத நாளே கிடையாது.  சூரியன் உதிப்பது நேரமானாலும் ஏதோ ஒரு  சண்டை சரியாக பொழுது விடிந்தவுடனேயே  தொடங்கிவிடும். 

அந்த ரெண்டு பேர் இன்று வழக்கில்  ஆஜர்.   வழக்கு   ராஜாவின்  அரண்மனையில் விசாரணைக்கு வந்தது..  ராஜா உட்கார்ந்திருக்க  அருகே  ஒரு ஆசனத்தில் மரியாதை ராமன்.   ராஜாவால்  நியமிக்கப்பட்ட  விசார ணை  ஜட்ஜ்.

ஒருத்தி மேல் இன்னொருத்தி  புகார். புருஷன்காரன் பொட்டி பாம்பாக  ஒரு மூலையிலே தலையிலே கை வைத்துக்கொண்டு முட்டிக்கால் போட்டு தரையில் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறான். சுற்றி  கிராமத்து  மக்கள் கும்பலாக  சபை நிறைந்திருக்கிறது. 

ரெண்டாம் மனைவி  காந்தா  கம்ப்ளைண்ட் கொடுத்தவள்.  வாதி.  அதை  இல்லை என்று  மறுப்பவள்  முதல்  மனைவி  சாந்தா.  பிரதிவாதி.    தன்மேல் அபாண்டமான வழக்கு இது  என்று அழுபவள் . 

என்ன குற்றம் என்ன வழக்கு இது?  யார்  குற்றம் சொல்வது ஆரம்பி உன் வாதத்தை''  என்று  ராஜா கூறினான். எல்லோரும் அமைதியாகி நிற்க  வாதியாகிய  ரெண்டாம் மனைவி காந்தா  அழுது கொண்டே  சொன்னாள் :

''என்  குழந்தை இறந்து விட்டது.   ஐயா  நான் வயதில் சிறியவள்  எப்போதுமே  சிறிஸைக்கண்டால் பெரிசுகளுக்கு பிடிக்காது.  பொறாமை. ஆத்திரம்.  யார்  கொன்றது என் குழந்தையை என்று நீங்கள் கண்டு பிடிக்கவேண்டும். பெத்த வயிறு பத்தி எரியுது  என்று அழுதாள்.

மரியாதை ராமன்   அவளைப்   பார்த்து, “அழாதேம்மா! உன்னுடைய கஷ்டம் ஈடில்லாதது.  யார் உன் குழந்தையைக்  கொன்றது என்று தெரியலை. உனக்கு  யார் மேலே சந்தேகம்?

“அதை என் வாயாலே எப்படிச் சொல்வேன்? நீங்க கேட்டதாலே சொல்றேன்! எம் புருசன் ஒரு புள்ளைப்  பூச்சி. ஒண்ணுமே  தெரியாது.  என் சந்தேகம்  இதோ எதிர்த்தாப்பலே குத்துக் கல்லாட்டம் நிற்கிறாளே அவ  மேலே தான் என் சக்காளத்தி. அவ மலடி! எனக்குக் குழந்தை பிறந்தது அவளுக்குப் பொறாமை! இந்த ஒரு காரணமே போதுமே! அவளுக்குத் தூக்குத்தண்டனை கொடுத்தா கூட என் ஆத்திரம் தீராது!”

மரியாதை ராமன் அவளை ஓரமாக நிற்க சொல்லிவிட்டு முதல் மனைவி  சாந்தாவை  அழைத்தான்.  ''உன் மேலே  குற்றம் சாத்தி இருக்கிறது. நீ என்ன சொல்றே?''

“நான் என் புருஷனுக்கு முதல் மனைவி. குழந்தை பிறக்காததாலே, நானே என் புருசனுக்குப் பெண் பார்த்து  இவளை கட்டி வச்சேன்.  கூடப் பிறக்கல்லன்னாலும் அவ என் தங்கச்சி. குழந்தை பிறக்கப்போவுதுன்னு செய்தி வந்ததும்  முதல்லே  அதிக சந்தோசம் பட்டவ நான்தான் ஐயா!“தாய் இல்லாத பெண்ணாச்சே! பிரசவத்தை நம்ம வீட்லேயே பார்த்துடலாம்னு இவளைப் பொறந்த ஊட்டுக்குக் கூட அனுப்பலே! நல்லபடியா குழந்தை பொறக்கணும்னு நான் வேண்டாத தெய்வம் இல்லே, முடிச்சுப் போடாத காணிக்கை இல்லே!” என்றாள் மூத்தவள் சாந்தா.

இளையவள் காந்தா குறுக்கிட்டாள் .

 “குழந்தை திடீர்னு எழுந்துக்கும். போய் ஆசையா பெரியம்மாகிட்ட படுத்துக்கும். அப்படிப் படுத்த குழந்தையை கழுத்தை நெரிச்சுக் கொன்னுட்டு, ஒண்ணும் தெரியாத பாப்பா போல நடிக்கறதைப் பாரு!” என்று சீறினாள்.

மரியாதை  ராமன்    இளையவளிடம்  “குழந்தைக்குக் குளிப்பாட்டுவது யார்? மருந்து கொடுப்பது யார்? தூங்க வைப்பது யார்? அழகா உடுத்தி, கண்ணுக்கு மை தீட்டி, காற்றாட வெளியில் தூக்கிக்கிட்டு வேடிக்கைக் காட்றது யார்?” என்று கேட்டான்.

“என்னமோ தான் பெத்த புள்ளை மாதிரி என் குழந்தைக்கு எல்லாம் செய்றது  அவள் தான்.  எதுக்கு? புருசன் தன்னைத் தள்ளி வச்சிடுவாரோ என்ற பயம். பாக்கறவங்க தன்னைப் பாராட்டுவாங்கன்ற சுயநலம்தான்! தாய்ப்பால் குடிக்க மட்டும்தான் குழந்தையை என்னண்டை கொடுப்பா! ஏன்னா அது அவளால முடியாது!” என்று ஏளனமாக சாந்தாவைப் பார்த்துச் சொன்னாள் இளையவள்.

மரியாதை புருஷனை எதிரே நிற்க வைத்து    ''நீ என்னய்யா  சொல்றே? குழந்தையை யார் கொன்றது? தெரியவில்லை என்றால் யார் கொன்றிருப்பார்கள் என்ற  உன்  ஊகத்தைச் சொல்லு''

''நான் ஊரிலே  இல்லேங்க. பெத்தவள் செய்தாளா? மத்தவள் செய்தாளா? யார் செய்திருந்தாலும் கண்டுபிடிச்சு   கடுமையான தண்டனை கொடுங்க? எனக்கு ரெண்டாவது கல்யாணம் செய்து வச்சதே முதல்தாரம்தான். மனப்பூர்வமாகத்தான் ஒத்துக்கிட்டா! நமக்குக் குழந்தை வேணும்! என்னாலே முடியாதபோது எனக்கு வர ‘உடன்பிறவா சகோதரி’ மூலமாவது அந்தப் பாக்கியம் கிட்டட்டும்னு சொன்னவளே பெரியவள்தான்!   அடிக்கடி சின்னவ எங்கிட்ட பெரியவளைப் பத்தி தூபம் போடுவா! அவளை விரட்டுங்க. என் குழந்தையை எப்பவும் அவளே கவனிச்சுக்கறா. அப்புறம் குழந்தைக்கு எம்மேலே எப்படிங்க பாசம் வரும்! குழந்தையும் அவகிட்ட நல்லா ஒட்டிக்கிச்சு. அப்படிச் சொல்லும்போது நான் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’னு புத்தி சொல்வேன்.

“இன்னொரு  உண்மையை இந்தச் சபையில் சொல்றேன். சின்னவளுக்குக் குழந்தை பிறந்த ஆறுமாசம் கழிச்சு பெரியவள் என்னை வைத்தியர் கிட்ட அழைச்சிட்டுப் போனா! வாந்தி மயக்கம்னு சொன்னா! வைத்தியர் அவளைப் பரிசோதித்து  பெரியவளும் தாயாகப் போறா ன்னு சொன்னார்.  ஆனா  அவளோ, வைத்தியய்யா ,  எனக்கு குழந்தை வேணாம்.  கருவைக் கலைக்கிற மருந்து கொடுங்க''  இருக்கிற குழந்தை யை ஆசையா வளக்கணும் எனக்கு. அதுக்கு போட்டியா இன்னொண்ணு  வேணாம்'' னுகருவை கலைக்க சொல்லிட்டா.  இது சின்னவளுக்கு தெரியாது.''  எனக்கு  அவ குழந்தையை கொன்றாள்  என்று நம்ப முடியவில்லை என்றான். 

மரியாதை ராமன் யோசித்தான். அவனுக்கு ஒரு பொறி தட்டியது.  அதை நிரூபிக்கவேண்டும். குழந்தையைக் கொன்றது யார் என்று தெரிந்துவிடும்.
  
மரியாதை ராமன்  சின்னவளிடம்   அம்மா  நீங்க  குழந்தையைப் பெத்தவங்க  ஆகவே தண்டனை நீங்க தான் கொடுக்கணும்.  இந்த  கொலைகாரி,  மூத்தவளைக் கட்டிப் போட்டு  சாட்டையால்  நீங்களே அடிக்கலாம்.  கயிறால் கட்டினால் அறுந்து விடும். எதனால் கட்டினால் உடலை இறுக்கும்?” நீங்களே சொல்லுங்க  என்றான் .

 பொங்க ‘மரத்தைச் சுத்திப் படரும் பாடவரங்காய் கொடியை வெச்சுக் கட்டினால் கொடி அறுபடாது. உடலை இறுக்கி விடும்’ என்றாள். ‘என் வீட்டுத் தோட்டத்திலேயே அந்தக் கொடி படருது’ 

சொன்னபடியே இளையவள் வீட்டிலிருந்த நீளமான பாடவரங்காய் கொடி அறுத்துக் கொண்டுவரப் பட்டது. சபையில் நிசப்தம்.

மரியாதை ராமன் ராஜாவிடம்   ரகசியமாக ஏதோ சொன்னான். “அப்படியா!” என்பதுபோல் அரசர் ஆச்சரியத்தால் வாய் பிளந்தார்.

மரியாதைராமன் அந்தப் பாடவரங்காய்க் கொடியை  ராஜாவின்  காவலாளியிடம் கொடுத்து. அவள அந்த அம்மாவை கொடியால் இறுக்கிக்  கட்டுங்கள்  என்றான். சேவகனிடம் கொடுத்து அந்த அம்மாவைக் கொடியால் கட்டுங்கள்!” என்று உத்தரவிட்டான். ‘எந்த அம்மா’ என்பதை மக்கள் யோசனை செய்வதற்குள், காவலாளி இளையவளைக் கட்டத் துவங்கினான்.

இளைவள் பதறி “வேண்டாம்! என்னைக் கட்டாதீர்கள். நானே உண்மையைச் சொல்லி விடுகிறேன். என்  குழந்தைக்கு  என் மேலே  பாசம் இல்லை.  பெரியம்மா கிட்டேயே எப்போதும் இருக்கும். விளையாடும். அதைக் கண்டால் எனக்கு பிடிக்கலே.  ஒரு பிளான் போட்டேன்.  எங்க தெரு  கசாப்புக் கடைக்காரனின் உதவியை நாடினேன். அவன்  குழந்தையை  கத்தியால் வெட்டமாட்டேன்.  கொடியால் கழுத்தை நெரித்து பெரியம்மா பக்கத்தில் போட்டுடறேன் என்று சொன்னான். என்   புருஷன் ஊரிலே  இல்லாத நேரம் பார்த்து த் தகவல் சொன்னேன்.  ஒரு ராத்தரி  அவன்  காரியத்தை முடித்தான்.   எனக்குக் குழந்தை போனாலும் பரவாயில்லை. பெரியவ மேலே எங்க வீட்டுக்காரர் வெச்சிருக்கிற பாசத்தை நாசப்  படுத்தணும்கிறதான் என் ஒரே நோக்கம். அதனாலே இந்த கொலையை செய்ய வச்சேன்.   எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க!” என்று மண்டியிட்டு அழுதாள்.

மரியாதை ராமன், “குற்றவாளி வாயாலே குற்றத்தை ஒப்புக் கொள்ள” வைத்ததை,  ராஜாவும்  ஊராரும்  போற்றினார்கள்.  இளையவளுக்கும்  கசாப்பு கடைக்காரனுக்கும்  சிறைத் தண்டனை கிடைத்தது.

இளையவள் மூத்தவள் கால்களில் விழுந்து அழுதாள். “அக்கா! நம் குலத்தைத் தழைக்க வந்த செல்வத்தை  அழித்து விட்டேனே! நான் ஒரு மகா பாவி! அந்தப் பழியை உன் மேலே  போட்டு உன்னை   ஒழிச்சிட  நினைச்சேன்.  நான் துரோகி.   எனக்கு வாழ்வு கொடுத்து  உங்க குழந்தையைக்கூட தியாகம் செய்தவங்க நீங்க.  எனக்கு இந்த தண்டனை போதாது. என்று அழுதுகொண்டே  சிறைக்குச்  சென்றாள்.




sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:51:54 AM4/19/21
to amrith...@googlegroups.com

காளமேகம்   --   நங்கநல்லூர்  J K  SIVAN 


முருகன்  மேல் ஒரு விசித்திர பாடல்.


ஒருவன்  ஏதாவது ஒரு துறையில்  சிறந்தவனாக இருந்தால்  அந்த துறையில் உள்ள  மற்றவர்களுக்கு அவன் மேல் பொறாமை, ஆத்திரம், கோபம், எல்லாம் தாராளமாக வருவது   மானுட இயல்பு. 

 எனக்கு சௌகர்யம்  என்னவென்றால்  எந்த துறையிலும்  நான் துரை  இல்லை .  என் மேல் பொறாமைப்பட எவரும் இல்லை, என்னை நினைக்கவே  நேரம் இல்லாதபோது எனக்கு எங்கிருந்து எதிர்ப்பு வரும்?.  ரொம்ப சந்தோஷமாக இருக்கும்  சுகவாசி நான்.   

பாவம்,   காளமேகப்  புலவருக்கு அப்படி இல்லை. ஒவ்வொரு  ராஜா சபையிலும் அவரை எதிர்க்க புலவர்கள்  கிளம்பிக்  கொண்டே இருந்தார்கள்.   பி[போட்டிக்கு அழைத்தார்கள்.   அவரும் எதற்கும் சளைக்காதவர். அவர்களையெல்லாம் வென்று  அவர் பெருமை நாளுக்கு நாள் இதனால் பெருகிக்கொண்டே போயிற்று.

 எப்படியாவது காளமேகத்தை  தடுமாறச் செய்யவேண்டும்,  அவமானப்படுத்தவேண்டும் என்று  பல நாள் தூங்காத புலவர்கள்  யோசிக்கும் வேளையில் ஒரு ஊருக்கு  காளமேகம் வந்தார். அந்த ஊர்  ராஜா அவரை வரவேற்றான்.   வழக்கம்போல்  காளமேகத்தை அரசவைப் புலவர்கள் கேள்விகள் கேட்க அவர் அனைத்துக்கும் தக்க பதில் அளித்து  ராஜாவின்  நல்மதிப்பை பெற்றார். 

ஒரு புலவன்  காளமேகத்தை  எப்படி மடக்குவது என்று  ஏற்கனவே  யோசித்து வைத்திருந்தான்  அவன்  சபையில் எழுந்து   

'' காளமேகப்   புலவரே, நீர்  சிறந்த  புலவர்,உடனே கவிபாடும்  சக்தி உள்ளவர் என்கிறார்களே.  எங்கே  நான் கேட்கும் ஒரு கேள்விக்கு பதில்,  கவிதையாக,    உங்களால்  சொல்லமுடியுமா? தயாரா?  இன்று கந்த சஷ்டி  ஆகவே  முருகன் மேல் பாடவேண்டும். .

''கேளுங்கள்  முயன்று பார்க்கிறேன்.  ''வேலில்   ஆரம்பித்து  மயிலில் முடிக்கட்டுமா?'' என்கிறார் காளமேகம். 

 ''அதெல்லாம் வேண்டாம்.   முதல் அடி  ''செருப்பில்''  ஆரம்பித்து,  கடைசி அடி  ''விளக்குமாறு''  என்று முடித்தால்   அதுவே   போதும்.  எங்கே  ஆரம்பியுங்கள்?  சபையில்  எல்லோரும் உஷ்    சே  என்ன இது,  என்று  அமைதியற்று  முனகினார்கள்.   எல்லோரையும் அமைதியாக இருக்க  ராஜா சைகை காட்டினான்.  

''முருகா,  இது என்ன சோதனை,  நான் உன் பக்தன்.  உன்னை, முத்தமிழ் முதல்வனை, செந்தமிழ் தெய்வத்தை, வெல்வேல் அழகனை, கருணைக் கடவுளை, கண்கவர் காளையை, உன்னைப்  பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா?  இது  தகுமா? முறையா? இப்படி  சோதிக்கிறானே  இந்த பாழும் புலவன். உன் அருளால்  உன் அனுகிரஹத்தால்  பாடுகிறேன்.

முருகனை மனதார கும்பிட்டு  கணீர் என்று ஆரம்பித்தார்  காளமேகப்புலவர்..

"செருப் புக்கு வீரர்களை சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனை புல்ல- மருப்புக்கு
 தண்தேன் பொழிந்ததிரு தாமரைமேல் வீற்றிருக்கும்
 வண்டே விளக்குமாறே"

இதற்கு  அர்த்தம் சொன்னால்  தான் சட்டென்று புரியும்.

செரு -   யுத்தகளம் .  செருப்புக்கு என்றால் போர்க்களம் புகுந்து. அப்படி போர்க்களத்தில் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம். குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே, அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறு  (சொல்லு என்று)   அடியேன் உன்னைக் கேட்கிறேன். 

அப்புறம்  என்ன  கந்த சஷ்டி அன்று முருகன் அருளால்  ராஜா  காளமேகப்புலவருக்கு நிறைய  சன்மானங்கள் தந்தான்.  மரியாதை எல்லாம் கொடுத்தான். மகிழ்ந்தான்.  குசும்பு பிடித்த புலவன் ராஜாவின் ஆட்கள் அவனைப் பிடிக்கும் முன்பு எவ்வளவு வேகமாக  ஓடமுடியுமோ  அவ்வளவு வேகமாக அந்த ''யுத்தகளத்தை '' விட்டு ஓடினவன் இன்று வரை அங்கே திரும்பவில்லை என்று கேள்வி.  அவனுக்காக  செருப்பு  விளக்குமாறு  காத்துக்கொண்டிருக்கிறதாம்.  

இன்னொரு காளமேக கவிதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.



sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:52:03 AM4/19/21
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி --  நங்கநல்லூர்  J K  SIVAN --
தாகூர்  


44.  தென்றலில் நம்பிக்கை மணம்  
 
 
44.  This is my delight, thus to wait and watch at the wayside
where shadow chases light and the rain comes in the wake of the summer.
Messengers, with tidings from unknown skies, greet me and speed along the road.
My heart is glad within, and the breath of the passing breeze is sweet.
From dawn till dusk I sit here before my door,
and I know that of a sudden the happy moment will arrive when I shall see.
In the meanwhile I smile and I sing all alone.
In the meanwhile the air is filling with the perfume of promise.


கிழக்கு கடற்கரை  ஒய்வு  வீட்டில்  ஒரு வாரம்  விடுமுறை போல்  விஸ்ராந்தியாக  வீட்டு சாப்பாடு, கடற்கரை மணலில் நடை,  கரையோர மஹாளய தர்ப்பணம், கடல் நீரில்  சிண்டைப் பிய்க்கும் இனிய குளிர் காற்றில் ஸ்நானம். எங்கும் மனித, விலங்கு சுவடே இல்லாத ஒரு சில  கடல் காக்கைகள், மைனாக்கள் நட்போடு உரத்த குரலில் பாடல் பயிற்சி.  வீட்டில் தபதப என்ற சுவையான நிலத்தடி நீர் மேலே இருந்து தலையில் விழ  இன்னொரு ஸ்னானம்,  வயிறு நிறைய  பெரிய  இளநீர் வழுக்கை தான் ஆகாரம/   விளையாட  கலர் கலராக   சிறிய,  பெரிய,   பட்டாம் பூச்சிகள் .  என்ன  சுறுசுறுப்பு.!   எவ்வளவு வேகமாக  சுற்றி சுற்றி பறக்கிறது!    

 மாலையிலும் இதே மாதிரி நடை, இயற்கை ரசிப்பு,  கொசு இல்லாமல் இரவில்  கொஞ்சம் தூக்கம்.  அவ்வப்போது தலை நீட்டும்  இன்டர்நெட் கன்னக்க்ஷனில்   ஏதாவது செய்திகள், வீட்டு ஆசாமிகளோடு தொடர்பு.  மற்ற நேரத்தில் தனியாக  மாடியில் கடலைப்  பார்த்தவாறு, பிளாஸ்டிக் பின்னல் ஒற்றைக்  கட்டிலில் சயனம்.   கிருஷ்ணனைப் பற்றிய சிந்தனை. இப்படியே  ஒரு ஸப்தாஹம்  ஓடிவிட்டது.   கம்ப்
யூட்டர் பக்கமே  போகவில்லை. இருந்தால்  தானே  போவதற்கு. 

 நங்கநல்லூர்  திரும்பியபோது தான் மீண்டும் கொரோனா, அரசியல் நாற்றம், வம்பு தும்புகள் மறுபடியும்  அன்றிரவு  முதல் ஆரம்பித்துவிட்டது.  அன்றாட  வாழ்க்கையிலிருந்து மாறுதல் எவ்வளவு அவசியம் என புரிந்தது.

தாகூர்  என்ன சொல்கிறார் இன்றைய  கீதாஞ்சலியில் என  ரசிப்போமா?

நான் சந்தோஷமாக இருக்கும்போது என்ன செய்கிறேன்  என்று சொல்கிறேன் கேள் கிருஷ்ணா. இதோ இந்த ஜன்னல் பக்கத்தில்  கருங்கல் சிலையாக அமர்ந்துகொண்டு வெளியே வேடிக்கை  பார்த்தவாறு மணிக்கணக்காக  என்னை மறப்பது. எதிரே ஒரு மண்  ஒத்தையடிப்பாதை   கண்ணில் படுகிறதே. அது நீண்டு எங்கே போகிறது?  அங்கே  வெளிச்சத்தை நிழல் தொடர்ந்து பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறதே.  பிசு பிசு என்று தூறல். அது நிற்பதற்குள் பெரிய இடியோடு மழை. சில  நேரம் நாள் முழுதும் கூட.   வெயில் காலம் இனி ஆரம்பிக்கும் முன்பு இப்படி கோடை மழை இங்கே வழக்கமாக உண்டு.

வானத்திலிருந்து தேவ தூதர்கள் நல்ல சேதி கொண்டு  வருவார்களோ ? எனக்கும்  ஏதேனும் அதில் உண்டோ?  எதிரே தோன்றும் தெருவில் தான் அவர்கள் வேகமாக செல்வார்களோ?   என்னைப்  பார்த்து சிரித்து தலை ஆட்டம்  எதற்கு?  என் இதயம் அமைதியாக, சந்தோஷம் நிரம்பி இருக்கிறது. சில்லென்று காற்று என் மூச்சோடு கலக்கிறது. சுகம் சுகம். சுகம்.  மென்காற்றின்   சுகமே, சுத்தினுறு பலனே ... என்று  வள்ளலார் எழுதியது  அனுபவத்தில் தான்  புரிகிறது.   என்  எழுத்தில் அந்த சுகம்  பிடி படவில்லை.

சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை நான் இதோ   இங்கேயே  இந்த  கதவு ஓரத்தில்  வாசலைப் பார்த்துக் கொண்டே  ''இடிச்ச புளி ''.     என் சந்தோஷ நேரத்திற்காக  காத்திருக்கிறேன். கட்டாயம் வரும். அதுவரை சும்மா இருக்கமாட்டேன். இதோ சிரித்துக்கொண்டே இருக்கிறேனே.   எனக்குள்  நான்  பாடப்போகிறேன்.  என் பாட்டு   யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ, எனக்கு பிடித்தே ஆகவேண்டும்.  இந்திக்கு நடுவே  தமிழ், அதற்கு இடையே  தெலுங்கு, கன்னடம், மலையாளம்    என்ன தோன்றுகிறதோ, வருகிறதோ அது.    அதற்கெல்லாம்  இடையே என்னை சுற்றி காற்றில்   கிருஷ்ணா உனைக் காண்பேன் எனும் நம்பிக்கை நறுமணம்  ஏராளமாக  தாராளமாக கலந்து வீசுகிறதே.  அது போதாதா?

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:52:35 AM4/19/21
to amrith...@googlegroups.com
ஸூர்தாஸ்   -   நங்கநல்லூர்  J K  SIVAN --


36     'யார் சொன்னது  பார்வை இல்லை என்று?

புறக்கண் மட்டும் தான்  பார்வை தருமா?  யார் சொன்னது?  கண்ணனைக் காண  வெளிக் கண் மட்டுமா வேண்டும்?  கண்ணனைக் காண  கண்ணாடி தேவையா ?  எப்போதும் உள்ளே  நன்றாக  தெரிகிறானே .  நான் பார்க்கிறேனே .  போதாதா?  

கூட்டம் கூட்டமாக தாமரைகள் எவ்வளவு அழகாக  மொட்டு  அவிழ்ந்து  மலர்கிறது.  எத்தனை வித வண்ண வண்ணங்களில்  காண்கிறது.   சிறிதும் பெரிதுமான   வித வித வண்டுகள் அதை மொய்த்துக் கொண்டிருக்கிறது .    தேன்  பருக  போட்டா போட்டி.     உரக்க ரீங்கார சப்தம் ஆனந்தமாகக்  கேட்கிறதே. அந்த  ஒலி  எப்படி இருக்கிறது என்று சொல்லட்டுமா?   உலக பந்த பாசங்களை வெறுத்த ஞானிகள்  எங்கு சென்றாலும் வழியெல்லாம்  கிருஷ்ணா உன் மீது ஆனந்தமாக  நாம சங்கீர்த்தனம் பாடுவார்களே  அது போல்  சீராக  ஒன்று சேர்ந்த குரலில் ஒரே  ராகமாக  காதில் விழுகிறது.!

உன்  அம்மா  யசோதை  இதோடு  நான்கு   தடவை  உன்னை  உலுக்கி  ''எழுந்திரடா  கிருஷ்ணா, பொழுது  விடிந்து  விட்டதே''  என்று  எழுப்புவது  எனக்குத்   தெரியும். அவளது  அன்பு, பாசம் உனக்கு  மட்டுமா புரியும், எனக்கும் தெரியும்.  அவள் குரலைக்  கேட்க விரும்பி அவளைக்  கெஞ்ச வைத்து,  மெதுவாக  உன் பொய்  உறக்கம்  நீங்கி நீ  தாமரை மொட்டு அவிழ்வது போல்  கண்  விழிக்கிறாயே.  அந்த பார்வையில் என் உலக பந்த பாசங்கள்   அனைத்துமே தூர  விலகி  விட்டதே. ''பார்வை  ஒன்றே  போதுமே''. 

என்  அகங்கார  மாயை  அகன்று  விட்டதே.  என்  மன  சஞ்சலங்கள் அழிந்து விட்டனவே.  கோவிந்தா  கோபாலா  என்று  சொல்லும்போது  எனக்கு  எவ்வளவு ஆனந்தம், பரமானந்தம்.
 வார்த்தையில்  எழுத்தில் சொல்ல முடியவில்லையே!

''Clusters of lotuses burst into bloom
the bumblebees humming with sweet sound
leave the lotuses;
as though the devout renouncing worldly ties,
in your love drowned
chant your name as they go about.
 
Hearing his mother's words with love
drenched the Lord of Mercy arose from his bed;
the world's woes vanished,
maya's net was rent.
Says Suradasa,
'Seeing his lotus face delusion fled;
all doubts and dualities were destroyed and I found in Govinda eternal joy.

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:52:35 AM4/19/21
to amrith...@googlegroups.com
சாணக்கியன்.    --    நங்கநல்லூர்  J K  SIVAN --

சகலகலா வல்லவன் கௌடில்யன் சொற்கள்.


कालः पचति भूतानि कालः संहरते प्रजाः।
कालः सुप्तेषु जागर्ति कालो हि दुरतिक्रमः॥ ०६-०७

kālaḥ pacati bhūtāni kālaḥ saṃharate prajāḥ।
kālaḥ supteṣu jāgarti kālo hi duratikramaḥ॥ 06-07

காலம்  இருபக்கமும்  கூரான கத்தி.  ஜீவன்களை உன்னதமாக வாழ்விக்கும். அதே சமயம்  அவர்கள் ஈவிரக்கம் இன்றி அழிக்கும் தன்மை கொண்டது.  எது உறங்கினாலும்  விழிப்போடு எப்போதும்  செயல்படுவது காலம் தான் என்பது நினைவிருக்கட்டும்.  அதை மீறவே முடியாது. அதற்கு கட்டுப்பட்டு தான் நாம் வாழவேண்டும்.  அது சத்யத்திற்குட்பட்டது.

संतोषस्त्रिषु कर्तव्यः स्वदारे भोजने धने।
त्रिषु चैव न कर्तव्योऽध्ययने जपदानयोः॥ ०७-०४

saṃtoṣastriṣu kartavyaḥ svadāre bhojane dhane।
triṣu caiva na kartavyo’dhyayane japadānayoḥ॥ 07-04

மனைவி, உணவு, பணம்  இது மூன்று தான் ஒருவனின் வாழ்வில்  அவனுக்கு தெம்பு கொடுப்பவை திருப்தி அளிப்பவை.  கல்வி,  தியானம்,  தர்மம்  இவற்றுக்கு  எல்லையே இல்லை, மேலும் மேலும்  ஈடுபட்டுக்கொண்டே இருக்கவேண்டியவை. போதும் என்ற திருப்தி இதற்கில்லை. 

दीपो भक्षयते ध्वान्तं कज्जलं च प्रसूयते।
यदन्नं भक्षयेन्नित्यं जायते तादृशी प्रजा॥ ८ – ०३
dīpo bhakṣayate dhvāntaṃ kajjalaṃ ca prasūyate।
yadannaṃ bhakṣayennityaṃ jāyate tādṛśī prajā॥

தீபத்தின்  குணம் என்ன தெரியுமா ?  இருட்டை கடித்து மென்று விழுங்கி கரியாக, புகையாக வெளிவிடுவது..
நாம்  சாப்பிடுகிறோமோ  உணவு,  அதைப் பொருத்து தான் நமது செயல்களின் வெளிப்பாடு இருக்கும். நமது வாரிசுகளும் அதற்கேற்ப தான் உருவாகும்.   ரிஷிகள், ஞானிகள் அதனால் தான்  சாத்வீக உணவை தேர்ந்தெடுத்தார்கள்.  
 
क्रोधो वैवस्वतो राजा तृष्णा वैतरणी नदी ।
विद्या कामदुधा धेनुः संतोषो नन्दनं वनम् ॥८-१४॥

krodho vaivasvato rājā tṛṣṇā vaitaraṇī nadī ।
vidyā kāmadudhā dhenuḥ saṃtoṣo nandanaṃ vanam ॥8-14॥

கோபம்  ஆத்திரம் இதெல்லாம்  யார்?  யமனின்  உருவங்கள்.   தாகம்  இருக்கிறதே  அது தான் நரகமான  வைதரணி நதி.  ஞானம்  தான்  காமதேனு. எதேஷ்டமாக  கேட்பதெல்லாம் அருள்வது.   திருப்தி என்பது தான் இந்திரனின்   நந்தவனம் போன்றது.   போதும் என்ற மனம்  பொன்செய்யும் மருந்து என்று தெரியாமலா சொல்லி இருக்கிறார்கள்.  

 
प्रलये भिन्नमर्यादा भवन्ति किल सागराः ।
सागरा भेदमिच्छन्ति प्रलयेऽपि न साधवः ॥ ०३-०६

pralaye bhinnamaryādā bhavanti kila sāgarāḥ।
sāgarā bhedamicchanti pralaye’pi na sādhavaḥ॥ 03-06

யுக  சந்தியில் ஏற்படுமே  ப்ரளயம்  உலகத்தை அழிக்க.  அப்போது  சமுத்திரங்கள் எல்லை மீறும்.  மாற்றம் கண்டுவரும். பழையனவெல்லாம்  மறைந்து புதியன  புகும்.  ஞானி இதனால்  மாறுவதில்லை.  

रूपयौवनसम्पन्ना विशालकुलसम्भवाः।
विद्याहीना न शोभन्ते निर्गन्धाः किंशुका यथा॥ ०३-०८

rūpayauvanasampannā viśālakulasambhavāḥ।
vidyāhīnā na śobhante nirgandhāḥ kiṃśukā yathā॥ 03-08

வாழ்வில்  எது  முக்கியம்.  அழகா? யௌவனமா?  மஹாராஜா, பிரபு குடும்பத்தில் பிறப்பதா?? சே சே  இதெல்லாம் பிரஜோனமே இல்லை.   கல்விஞானம் இல்லாதவன் மேலே  சொன்னதெல்லாம் இருந்தாலும்  வாசனையற்ற  ஒரு காட்டுப்பூ .  எவராலும் லக்ஷியம் பண்ணப்பட்ட மாட்டான்.  நாம் தான்  பார்க்கிறோமே.

कामधेनुगुना विद्या ह्यकाले फलदायिनी।
प्रवासे मातृसदृशी विद्या गुप्तं धनं स्मृतम्॥ ०४-०५

kāmadhenugunā vidyā hyakāle phaladāyinī।
pravāse mātṛsadṛśī vidyā guptaṃ dhanaṃ smṛtam॥

கல்விக்கு இணையே இல்லை.  அது வற்றாத  ஜீவநதி.  வேண்டியதெல்லாம் தரும் காமதேனு.  எப்போதும் வாரி வழங்குவது.  தாயானவள்  சேய்  எங்கு சென்றாலும்  எப்போதும்  பசித்தபோதெல்லாம் நேரத்தில்   பால் தருவதைப்போல் ,  ஒருவனை எங்கு சென்றாலும் வாழவைப்பது அவனது கல்வி தான்.  திருடனால் கொள்ளை போகாத செல்வம்.  .

இன்னும் சொல்வேன்.

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:53:03 AM4/19/21
to amrith...@googlegroups.com
வாருங்கள்  சுற்றுலா போவோம்  -   நங்கநல்லூர்  J K SIVAN ---

எனக்கு  திடீரென்று ஒரு  ஆசை வந்தது.   நான் முன்பெல்லாம்  அநேக  நண்பர்களை அழைத்துக்கொண்டு சுற்றுலா செல்வது வழக்கம். ஒருநாள்,  இருநாள்,   மூன்று-நான்கு நாள், ஒரு வார  சுற்றுலா  என்றெல்லாம்  பல ஊர்களுக்கு  சென்று தென்னகம் முழுதும்  போயிருக்கிறோமே, இப்போது  நாமே  வெளியே எங்கும் செல்ல முடியாதபோது எப்படி உங்களை அழைத்துச் செல்வது.

அதுவும் இப்போது முன்னைவிட  அதிகமாக  கொரோனா  தொற்று பரவுகிறதாமே . ஆகவே உட்கார்ந்த இடத்திலிருந்தே  உலக உலா சுற்றுவோம் என்று ஒரு எண்ணம். இதில்  ரெண்டு லாபம். ஒன்று  வெளியே போகவேண்டாம்.  ரெண்டாவது அவரவர்  வீட்டிலிருந்த படியே  என்னோடு சேர்ந்து எல்லா இடத்தையும் பார்க்கலாம். எப்படி  ஐடியா?   

எங்கிருந்து ஆரம்பிக்கலாம்.  எல்லா எழுத்துமே  ''அ '' விலிருந்து தானே ஐயா  ஆரம்பிக்கிறது. அதிலிருந்தே ஆரம்பி என்கிறார்  பிள்ளையார்.  அ வில்  எந்த சிவன் கோவில்,  விஷ்ணு கோவில் என்று யோசிப்பதை விட்டுவிடுகிறேன். நிறைய சைவ வைஷ்ணவ ஆலயங்கள்  பார்த்துவிட்டோம்.  புத்தரைப் பிடித்தால் என்ன?  அவரை நாம் மறந்து விட்டோமே.  அ  வில்  புத்தர் எங்கே  கிடைப்பார்.  அஜந்தா குகைகள் என்று பக்ஷி உள்ளே சொல்லியது. 

அதென்ன  அஜந்தா, எங்கே இருக்கிறது? மகாராஷ்டிராவில் மலைகளைக் குடைந்து  குகைகளுக்குள்  செதுக்கப்பட்ட   குடைவரைக்  கோயில்கள். அசாத்திய திறமைகளை கொண்ட  பௌத்தர்கள் வேலை இது.   அஜந்தா குகைகள்  ஒரு மாயா ஜால  குகை.  உலக அதிசயம்.  2500  ஆண்டுகளுக்கு முன்பு  குடைந்த  குகையில் உள்ள  ஓவியங்களின் வர்ணம் இன்னும்  மங்கவில்லை, அழியவில்லை.   எல்லாமே புத்தர்  பற்றிய சமாச்சாரம்.  

ஆராயாச்சியாளர்கள் மண்டையைப்  பிளந்துகொண்டு    குகைகளின் சுவர்கள், கூரைகளில் உள்ள  ஓவியங்களை தீட்டுவதற்கு முன்  களிமண்ணும் சாணியும் கலந்த கலவை பூசப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புச்சாந்து பூசப்பட்டு இறுக்கப்பட்ட பரப்பில் பலவண்ணக் கூழாங்கற்களை அரைத்து உருவாக்கப்பட்ட நிறங்களைக்கொண்டு வரையப்பட்டவை  என்கிறார்கள்.   இன்னா  பெயின்டிங்  பா!!

அவுரங்காபாத்திலிருந்து சுமார் 107 கி.மீ தொலைவில்  அஜந்தா  கிராமம் உள்ளது.   12 கி.மீ க்கு மேல்  விஸ்தீரணம்.  புத்த பிக்ஷுக்கள்  இங்கு வசித்தனர்.  சீனாவிலிருந்து வந்த யுவான் சுவாங்  பார்த்திருக்கிறான். 


இவ்வளவு  ஆயிரம் வருஷங்களுக்கு முன் இருந்த  அஜந்தா குகை ஓவியங்கள் வெளியே  யாருக்குமே தெரியாமல் மறைந்து, மறந்து போய்  இருந்தது.

கிட்டத்தட்ட  முன்னூறு   வருஷங்களுக்கு முன் வெள்ளையர்கள்  இங்கே வந்து உட்கார்ந்து கொண்டு நம்மை ஆண்டபோது ஒரு வெள்ளைக்காரன்  ஜான் ஸ்மித்  வீட்டில் சும்மா இல்லாமல்  மனைவியிடமிருந்து தப்பி  புலி வேட்டை ஆடலாம் என்று துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு  இந்த  காடுகளில் ஒரு புலியைப்பார்த்து விட்டு அதைத் துரத்திக்கொண்டு  வழிதெரியாமல் வந்துவிட்டான். 

மாடு மேய்க்கும் பையன்களைக் கேட்டான்  ''பசங்களா  இங்கே  புலி வந்ததா?''
''அதோ நேரா  போனா  ஒரு குகைமாதிரி இருட்டா  மலை அடியிலே இருக்கும் பாருங்க.  அங்கே   தான் புலிங்க  நிறைய  இருக்கும்.  நாங்க அங்கே போகமாட்டோம்''

ஜான்  ஸ்மித் மனைவிக்கே பயப்படாதவன். நேராக  புலி குகைகள் அருகே சென்றான் டுபிடித்தார்.   புதர்கள் மண்டிக்கிடந்த ஒரு குகைக்குள் நுழைந்தான். புலிக்கு பதிலாக  இந்த புவியிலே காணக்கிடைக்காத  அதிசயத்தை கண்டுபிடித்தான்  அஜந்தா  குகை ஓவியங்கள். வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததால்  நமக்கு கிடைத்தது. நமது ஆட்கள் பார்த்திருந்தால்  பங்கு போட்டு அஜந்தாவின் உயிரோவியங்களை    கொஞ்சம் கொஞ்சமாக  விற்றிருப்பார்கள்.

அருகே  வகோரா  நதி. அதை தொட்டபடி  குதிரை  லாடம்  மாதிரி  வளைந்த குகைகள்.  76 மீட்டர் உயரம். 30 குகைகள்.   சிறிய  நுழை வாயிலுக்குள்  பெரிய பெரிய  தூண்கள், பெரிய  மண்டபங்கள், நிறைய புத்தர்கள்  நின்று, உட்கார்ந்து படுத்துக்கொண்டு  எல்லாம்.

இந்த  அஜந்தா ஓவியங்களை பற்றி எழுத மனதில் ஒரு எண்ணம் ஓடியது.  அதைக்காட்டிலும்  நேராக  உங்களை அஜந்தாவிற்கு கூட்டிச் சென்றால் என்ன என்று முதல் பாராவில் சொன்ன எண்ணம் தோன்றியதால், ஒரு வீடியோ  இணைத்திருக்கிறேன்.  வாருங்கள் நாம் சேர்ந்து போய் அவற்றை ஒவ்வொன்றாக ரசிப்போம். மற்றவர்களையும்  செல்ல வைப்போம்   https://youtu.be/YH3-x3Ioz4g


sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:53:19 AM4/19/21
to amrith...@googlegroups.com
           
     
பஞ்சாங்கம்.   --  நங்கநல்லூர்  J.K. SIVAN

 நமது  பாரத தேசம் முழுதும் ஒவ்வொரு மூலை முடுக்கிலும்  பஞ்சாங்கம் பயன்படுத்துபவர்கள்  இருக்கிறார்கள்.  கை  தேர்ந்த  சாஸ்த்ர விற்பன்னர்களால் கணிக்கப்பட்டு பல குடும்பங்கள் அவரவர் விரும்பும் பஞ்சாங்கங் களை பாரம்பரியமாக  வாங்கி  அவ்வப்போது  அதன்படி  நடப்பார்கள்.

பஞ்சாங்கம் கணிப்பது  ரொம்ப கஷ்டம். என்னைப்போல் எதையாவது எழுதுவதல்ல.  துல்லியமாக கனக்குப் போடவேண்டும்.   சூக்ஷ்மமாக  கவனமாக  கிரஹங்களின் சுழற்சி, அவற்றின் சுற்று,  நேரம், பிரயாணம், குறிப்பிட்ட  காலம், சூரிய உதயம்,  அஸ்தமன நேரங்கள் எல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்கூட்டியே  சரியாக கணக்கில் கொண்டு வரும்  கணித நூல் பஞ்சாங்கம்.  இருபது முப்பது ரூபாய்க்கு வாங்கி  மூலையில் போடுபவன் இதன் மஹிமை அறியமாட்டான்.

பல ரிஷிகள் ஆராய்ந்து வகுத்த வழிமுறையில் தொடர்ந்து கண்காணித்து அறிவிக்கும் அற்புத படைப்பு பஞ்சாங்கம்.    விஸ்வ  விஜய பஞ்சாங்கம் என்பது நூறு  வருஷங்களுக்கு கணிக்கப்படுவது. இதில் சூரிய சித்தாந்தம், கிரஹ லாகவ கணக்குகள் உண்டு. புரியாத நமக்கு தலை சுற்றும் கணக்குகள். அதற்குள் போகவேண்டாம். திரும்பி வர வழி தெரியாது.

ஹிந்துக்கள்  அநேகருக்கு  சந்திரனின் அசைவு  நமது பஞ்சாங்கத்தில் முக்கியமான ஒரு அம்சம். எல்லா கிரஹங்களையும் விட சந்திரன் ஒருவனே வேகமாக சுழல்பவன்.  எனவே   பஞ்சாங்கத்தின் திதி, நக்ஷத்ரம், ராசி, யோகம், கரணம், ஆகியவை சந்திரனின் சுழற்சியை அடிப்படியாக கொண்டவை.   WE   FOLLOW LUNAR CALANDER  என்கிறோம்.  

''பஞ்ச அங்கம்'' என்பதே  முன்பே சொன்னதை  திரும்ப சொல்கிறேன்.  சூரிய சந்திர நிலைகளை நிலையான துவக்கப்புள்ளி (சித்திரை அல்லது அஸ்வினி நட்சத்திர) பின்னணியில் பகுத்து திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என மிக  முக்கியமான ஐந்து விஷயங்களையும், இதர பஞ்சாதி(புத, சுக்கிர, மங்கள, குரு, சனி) கிரகங்கள் மற்றும் ராகு, கேது (சந்திர புவி  வட்ட பாதையில் ஏற்படும் வெட்டுப்புள்ளி) ஆகிய தகவல்கள் வான  சாஸ்திர அடிப்படையில் கணிப்பதாகும். ஜோசியர்களுக்கு இது மிகவும் உதவுகிறது. பிழைப்புக்கே  ஆதாரமான  டிக்ஷனரி  DICTIONARY.

  மூன்று முறைகளில் பஞ்சாங்கம் கணிக்கிறார்கள்.   சூரிய சித்தாந்தம், ஆரிய சித்தாந்தம், திருக்கணித சித்தாந்தம் .  ஒருகாலத்தில்  18க்கும் மேற்பட்ட சித்தாந்தங்கள் ,  கணிதமுறைகள் இருந்தன . மெதுவாக மறைந்தன.   அநேகர் பின்பற்றுவது திருக்கணித பஞ்சாங்கம்.

இப்போது  டெலஸ்கோப் உபயோகித்து  கிரகநிலையை மிக துல்லியமாக கணித்து  சிக்கலான கணித சூத்திரங்கள்(Lunar theory - modern numerical theories) உருவாக்கி, திருத்தி,  (Ephemeride Lunaire Parisienne)  தகவல்கள் திரட்டி,  வானியல் துறை  புள்ளிவிபரங்கள் பிரகாரம் தயாரிப்பது திருக்கணித பஞ்சாங்கம். அடேயப்பா  நமக்கு  ஒரு ராகுகாலம்  எமகண்டம்  தெரிந்துகொள்ள  அவர்கள்  இவ்வளவு வேலை செய்யவேண்டுமா?

இஸ்ரோ , நாஸா  விவரங்கள், வானியல் தகவல்களின்  அடிப்படையில்  கிடைக்கும்  துல்லியமான தகவல்கள் அனுசரித்து  திருக்கணிதமுறை பஞ்சாங்கம்  கணிக்கிறார்கள்.   நாம் தாராளமாக நம்பலாம்.  

இந்திய அரசின் வான் நிலையியல் துறையின்  கீழ் இயங்கும் வானியல் கிரக நிலை கண்காணிப்பு பிரிவு கொல்கத்தா அருகில் உள்ளது இங்கிருந்து பெறப்படும் தகவல்கள் முறைப்படி அரசு அனுமதிப்பெற்று திருக்கணித பஞ்சாங்கம் கணிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த துறையினரும் லஹரி அயனாம்ஸ நிலைக்கொண்டு ராஷ்டீரிய பஞ்சாங்கம் என்கிற மிகதுல்லியமான திருக்கணித பஞ்சாங்கத்தை வெளியிடுகின்றனர்.  மங்களாயன்,  சந்திராயன் விண்வெளிக்கலத்தை மிகதுல்லியமாக சந்திரனுக்கு அனுப்ப பயன்பட்ட புள்ளிவிபரங்களும் திருக்கணிதபஞ்சாங்கத்திற்கு வழங்கப்படும் புள்ளிவிபரங்களும் ஒன்றேயாகும்!

திருக்கணித முறையில் அயனம் வேண்டுமானால் வேறுபடலாம் ஆனால் திதி, நக்ஷத்ரம், யோகம் எக்காரணம் கொண்டும் மாறாது.  இந்திய விண்வெளித்துறை மற்றும் நாஸாவின் அமாவாசை முடிவு நேரமும் திருக்கணித அமாவாசை முடிவு நேரமும் ஒன்றாக இருக்கும்.  இது கிரகணத்தின் பொழுது கண்ணுக்கு நன்றாக தெரியும் வானியல் நிகழ்வு.

அண்டை மாநிலங்களான ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகியவற்றில் நூறாண்டுகளாக திருக் கணித முறையே பின்பற்றப்படுகிறது. பிறந்த ஜாதகம் கணிப்பதிலும் இவர்கள் திருக்கணித முறையை  மட்டுமே கடைப்  பிடிக்கிறார்கள்.

திருக்கணித முறையில் சந்திரன் கிரகநிலை மட்டும் கணக்கிட 100க்கும் மேற்பட்ட சூத்திரங்கள், திருத்தங்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 10 ஆண்டுக்கு ஒருமுறை வானியல் விஞ்ஞானிகள் கூடி கூடுதல் திருத்தங்களை விவாதித்து ஏற்றுக்கொள்கிறார்கள். (இது போன்ற எந்த வித ஏற்பாடும் வாக்கிய முறை பஞ்சாங்கத்தில் இல்லை 400 வருடங்களாக வாக்கியத்தில் திருத்தமே இல்லை !)

ஆராய்ச்சியாளர்களால்  அங்கீகரிக்கப்பட்டு கணிக்கப்பட்ட  லஹரி அயனாம்சத்தின்  அடிப்படையில் அமையும் திருக்கணித பஞ்சாங்கம் சரியானது எனலாம்.  லஹரி அயனாம்ஸம் சர்வதேச விஞ்ஞானிகளால் விவாதிக்கப்பட்டது, அறிவியல் சஞ்சிகைகளால்  ஆமோதிக்கப்பட்டது. சூரிய சித்தாந்த அயனாம்ஸ கொள்கை வேறு, நவீன சித்தாந்த அயனாம்ஸ கொள்கை வேறு  என்பதால் அறிவியல் முறைப்படி கூறப்படுவதை ஏற்றுக்கொள்வது நியாயமே.  மேலும் அயனம்  என்பது குறிப்பிட்ட அளவிற்கு பின்னர் குறையும் மற்றும் அயனம் ஏற்றம் மட்டுமே இருக்கும் என்ற சில வேறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்கிறது. எனவே வானியல் அறிவியலாளர்களின் முடிவை  ஏற்போம்.  விவரமாக அதற்குள் நாம் போகவேண்டாம்.

இப்போதைய நிலையில் நமக்கு தேவையானது  அமாவாசை தர்ப்பண நாட்கள்,மந்திரங்கள், ஸ்ராத்த திதி, கிரஹண, மஹாளய தர்ப்பண கால நேரம், மந்த்ரங்கள், தவிர சுப முஹூர்த்தங்கள், கல்யாண காரியங் களுக்கு நல்ல நாட்கள், பண்டிகைகள், ஜாதகத்திற்கு  தேவையான விபரங்கள்,  யஜுர் உபா கர்மா, சாம, ரிக், யஜுர் வேத வேதங்களுக்கு ஏற்ப. போனஸாக இவர்கள் பஞ்சாங்கத்தில் சில பூஜா அஷ்டோத்ர, நாமாவளி ஸ்லோகங்களும் இருக்கிறதே.  போதாதற்கு  தேவைப்பட்டால் அபர  காரிய விபரங்களும் நிறைய இருக்கி  குடும்ப வாத்யாரைத் தேடி ஓடவேண்டாமே. எனது நண்பர் திரு வேதிக் ரவியும்  ஸ்ரீ புவனேஸ்வரி   சாரிடபிள்  டிரஸ்ட்  நிறுவனம்  நண்பர்களுடன்  அற்புதமாக  இலவச பஞ்சாங்கம்  சகல விஷயங்களுடன் வருஷா வருஷம் அளிக்கிறார்கள். வீட்டில்  ஹோமம் செய்ய, பூஜைகள் நடைபெற,  சாப்பாடு  விஷயங்கள்,    இலவச  சமஷ்டி  உபநயனம், சஷ்டி அப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம்  எல்லாம்  நன்கொடை பெற்று  அற்புதமாக நடத்துகிறார்.  அவரை அணுக Vedic RaviSri Bhuvaneswari Vedic Center,Marthy Nagar, Rajakilpakkam,ChennaiTamilNadu,India600 073+91-044 - 2227 2645,+91 98407 87957
     
நாம்  ஜப்பானியர் போல் உழைப்போம்.  அனைவரும்  ஒற்றுமையாக இருப்போம்.   ஜாதி மத வித்யாசம் வேண்டாம்.  நாமெல்லாரும் ஒரே மண்ணில் பிறந்தவர்கள்,  வளர்ந்தவர்கள் மறைபவர்கள் என்று எண்ணம் இருந்தால் போதும்.  நம்மைப்  பிரித்து அதன் மூலம்  ஆதாயம் தேடுபவர்களை  தீய சக்திகளை   அடையாளம் கண்டு  அவர்களை ஒதுக்குவோம்.   அவர்களுக்கு சாஸ்திர சம்பிரதாய  நெறிமுறைகள் பிடிக்காது, தெரியாது, அதனால்  நம்பிக்கை இல்லை.  உழைப்பவர்களை  உண்மையானவர்களை  நமது பிரதிநிதி களாக ஆக்குவோம்.     நம்மை வைத்து  சம்பாதித்து தம் குடும்ப முன்னேற்றஅடையும்  கூட்டம் நமக்கு வேண்டாமே.   நாம் முயன்றால் வேண்டியதைப்   பெறலாம்.  முயற்சி திருவினையாக்குமே .   என்றும்  ''தெய்வம் துணை நமக்கு  பாப்பா''   பாரதி சொன்னது போல்  இறைவன் துணையிருப்பான். நமது நம்பிக்கையில்  அஸ்திவாரம் அவனாகவே  இருப்பான். அப்புறம் எல்லாமே நல்ல நாள் தான் நமக்கு. பொழுது போகாதபோது  அப்பனையங்கார் குமாரர் அண்ணாவையங்கார் வாரிசு ஐயங்காரின்  கணிப்பு  எல்லாம் படிப்போம். தெரியாத விஷயங்கள் அனைத்தும்  அறிவோம்.  மனதார வாழ்த்துக்கள்.

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:53:19 AM4/19/21
to amrith...@googlegroups.com


கவனிக்காமல் விட்ட  சில  நல்ல விஷயங்கள் -  நங்கநல்லூர்   J K  SIVAN --

மனிதர்களாகிய  நாம்  மிகவும் பெருமைப்பட வேண்டியவர்கள்.  இந்த  பிறவி மிக மிகச் சீர்நத பரிசு.  நாம் கேட்காமலேயே நமக்கு கிடைத்த போனஸ்.  பகவானே  உனக்கு எப்படி நன்றி சொல்வேன் என்று நன்றிக் கண்ணீர்  உகுக்க வேண்டிய விஷயம்.    ஆனால்  நாம் அதன் அருமை பெருமை தெரியாதவர்களாக  நமக்கு கிடைத்த  நல்லதோர்  வீணையை  நலம் கெட புழுதியில் எறிபவர்களாக இருக்கிறோம்.  ஒரு சிலர்  விஷயம் அறிந்தவர்கள்.  அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நமது ஜீவனுக்கு சக்தி  ஆத்மாவிடமிருந்து தான் கிடைக்கிறது. இதை பலமுறை சொல்லி இருக்கிறேன். 

அடிக்கடி  மயக்கம் அடைகிறோமே  அது என்ன?  டாக்டர்  பணம் வாங்கிக்கொண்டு என்ன காரணம் சொன்னாலும் ஏற்கிறோம்.  ஆனால்  அது  நமது இந்த தேகத்திற்கு உள்ளே உள்ள  சூக்ஷ்ம சரீரத்துக்கு உள்ள தொடர்பு  பாதிக்கப்படும்போது  உண்டாகிறது.  பவர்  POWER CUT  ஆனால் மின் விசிறி,  லைட்  எரியாமல் அணைந்து போவது போல.

வயதான முதியோர் ஏன்  குழந்தைகளிடம் அதிகம் அன்பும் பாசமும் வைத்திருக்கிறார்கள்?  குழந்தைகளின்  உடலில் உள்ள இளமை சக்தி ஓட்டம்  பெரியவர்களுக்கும்  கிடைக்கிறது. புத்துணர்ச்சி  பெறுகிறார்கள்.  சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கிறது.  நான்  என் ரெண்டு வயது பேத்தியுடன்  தாவி தாவி  82ல் குதிக்கிறேனே 

நோயாளிகளிடம், படுக்கையில் படுத்திருக்கும் வியாதியஸ்தர்களிடமும் ஏன் நாம் அதிகம் பேசுவதில்லை. சைகையில்  சுருக்கமாக  விசாரிக்கிறோம்.  அங்கே   அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.
 
மனிதன் ஒரு வினோத  மரம்.  தலைகீழாக வளரும் மரம்.   மூளை என்ற வேர்  தலையில் தான் உள்ளது. மற்ற தாவரங்களுக்கு  கீழே  வேரிலிருந்து  அனைத்து சக்தியும் மேலே  செல்கிறது. 

நாம்  மட்டுமா  பேசுபவர்கள். நமது  தேகம் ரொம்ப  நன்றாக பேசுகிறதே.    இதயம்,  வயிறு,  எலும்புகள், கண், காது, மூக்கு, கால் கைகள் முதுகு  எல்லாமே  தனக்கு என்ன வேண்டும், எது வேண்டாம், என்று அழகாக தெரிவிக்கிறதே.  எங்கேனும் பிசகு இருந்தால்  வலிக்கிறதா, போதுமென்றால்  ஏப்பம் விடுகிறதே. கை போதும் வேண்டாம் என  மறுக்கிறதே .   வேண்டும் என்றால் நீள்கிறதே. தா  என்கிறதே.  மார்பு  படபடவென்று துடித்து  ஒய்வு  தேடுகிறதே.  கால் வலித்து   ஒய்வு வேண்டும் என்கிறதே. கண் சுற்றி   கொட்டாவி விடாமல் வந்து  எனக்கு  தூக்கம் தா. என்கிறது.  முதுகு   நிறைய வேலை செய்து விட்டேன். சாய்ந்து   கொள்ள வேண்டும் என்கிறது.  வயிறு எங்கேடா  ஆகாரம் என்று பசியைக் கிளப்புகிறது.  எதை சாப்பிடலாம் என்று கண் தேடுகிறது.  உடல் களைப்பு  தண்ணீர் கொண்டுவா  முகம்  கழுவி குடிக்கவேண்டும் என்று கேட்கிறது.   இயற்கை  பேசாமல் உணர்த்துவதை  நான் அறிவிலிகளாக  புறக்கணிக்கிறோம்.  அவஸ்தைப் படுகிறோம். வலி என்பது  உடலின் மொழி. மாத்திரையால் அதை அமுக்கி மேலும் துன்பத்தில் மாட்டிக்கொள்ளவேண்டாம்.

எவனையும்  கத்தி,துப்பாக்கி, வாள் கொண்டு  கொல்ல  வேண்டாம் .  ஒரு மனிதனினை புண்பட, துடிக்கச்  செய்வது சுடும் கடுமையான வார்த்தைகள் தான்.  இது  நூதனமான கொலை.  அரசியலில் இதை  ஆயுதமாக கொண்டு எல்லோரும் தாக்குவதால் அதன் வீரியம் காணாமல் போகிறது.  எதிர்ப்பு  தடுப்பு சக்தி  கூடிவிடுகிறது!!

மனிதனைத்  தவிர மற்ற இனங்கள்  சூக்ஷ்ம  உணர்வு  instinct  மூலமே எதையும் அணுகுகிறது. ஆபத்தை உணர்ந்து  தப்பிக்கிறது.  

நமது  துன்பம் துயரம் ஏமாற்றம்,  நிம்மதியின்மை எல்லாவற்றுக்கும் காரணம்  நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தி  மெய்ஞான அறிவை கோட்டை விட்டுவிட்டதால் தான். 

நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து  அறைகளிலும் ஓடிக்   கொண்டிருக்கவேண்டும்.  ஓம் சப்தம் எங்கும் ஒலிக்க  வேண்டும். 

பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பதால் பசி தீராது.   எங்கே  உணவை  அடைய முடியும் என்ற நிகழ்கால உணர்வுடன் இருக்க வேண்டும்.  

ஒரு ரகசியம் சொல்கிறேன்.  நமது உடல் உறுப்புகள் நமது மனத்துடன் ஒன்றி, ஒற்றுமையாக இருக்க பழகினால்  அதுவே ஆரோக்யம். 

விவசாய நிலத்தில்,  தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது. அன்னபூரணி, அன்னலட்சுமி வாசம் செய்யும் இடம்  விளைநிலம்.

நாம் ஏன் ஓடும் புனித நதி, அருவிகளைத் தேடி அலைகிறோம்?.  தேங்கி  நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும்  அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.  தலை முங்கி, முழுக்கு போடுவதன் காரணம்  உடல் முழுதும்    புத்துணர்ச்சி தரும்  சலசலவென்று   ஓடும்  புதிய தண்ணீர் படுவதால் அங்கெல்லாம் பிராண சக்தி உடலில் இறங்குகிறது.   தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது. விடிகாலை,  மாலை  வேளைகளில் வெளியே  காற்றாட நடக்கவேண்டும்.

சமுத்திர  ஸ்னானம் , கடல்நீரில்  குளிக்கும்போது  நம்முடைய பாவ தீய கர்ம வினைகள்  நீங்கி  விடுகிறது.   அவற்றை  உள்வாங்க கூடிய ஆற்றல்  கடல் நீருக்கு  உள்ளது.

உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.  கடல் நீரில்  அமாவாசை, மற்றும்  கிரஹண, புண்ய காலங்களில்  ப்ரோக்ஷணம் செய்து கொள்வது அதனால் தான்.

மலர்ந்த முகத்துடன் எப்போதும்   மற்றவர்களை அணுகும் போது பேசும்  போது   நமது ஸூக்ஷ்ம சரீரத்தின் கவசம்  நமக்கு  அதிகமாகிறது.  அன்பும் நட்பும் தான் அதன் அடையாளம்.

ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடந்தால்  உடல்  உள்ளம்  ரெண்டுமே  ஆரோக்கியம் பெறும். .

இன்னும் சில நல்ல விஷயங்களை தேடி கவனிப்போமா?

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:53:19 AM4/19/21
to amrith...@googlegroups.com
பிரம்மஹத்தி  --    நங்கநல்லூர்  J K  SIVAN

கோபம் வந்தால்  அதிக பக்ஷமாக  என் தந்தையார்  அடிக்கடி  உபயோகிக்கும் ஒரு வசவு . ( திட்டு)   " ப்ரம்மஹத்தி'' .  நான்  பலமுறைகள் என் செய்கைகளால்  சிறு வயதில் ப்ரம்மஹத்தியாக  வாழ்த்தப்பட நேர்ந்தது.   அவர்  1978ல்   83 வயதில்  மறையும் வரை.   என்னை மட்டும் அல்ல.  பாரபக்ஷம் இல்லாமல்  எங்கள் குடும்பத்தில்  எல்லோரையும் ஆண்  பெண் பால் வித்தியாசமின்றி  ப்ரம்மஹத்தி யாக்கியவர்.  

ப்ரம்மஹத்திக்கு அப்போது எனக்கு அர்த்தம் தெரியாது.  ப்ராமணனைக் கொன்றால் உண்டாகும் தோஷம் தான் ப்ரம்ம ஹத்தி.  ராமர்  ராவணனைக் கொன்று ராமேஸ்வரத்தில்  பரிகாரம் தேடியது உங்களுக்கு தெரியும்.   சிவனுக்கும் அதே போல்  பிரமன் தலையை கொய்த  ப்ரம்மஹத்தி சாபத்தை நிவர்த்தி செயய  ஹரசாப விமோசன பெருமாள் கோவிலுக்கு  திருவையாறு பக்கத்தில் திருக்கண்டியூர் சென்று தவமிருந்து  விமோசனம் ஆயிற்று. அந்த கோவில் சென்று அதைப் பற்றி எழுதி இருக்கிறேன்.  சப்தஸ்தான க்ஷேத்ரம். 

ப்ரம்மஹத்தி என்றால் மறக்கமுடியாத  ஒரு ஸ்தலம் இருக்கிறதே  ஞாபகம் இருக்கிறதா.  மத்யார்ஜுனம்.  அப்படி ஒரு ஸ்தலமா என்று கேட்காதீர்கள்.  அது  தான் உங்களுக்கு தெரிந்த  திருவிடை மருத்துவர்.  இடை என்றால் மத்ய .  அர்ஜுனன் என்றால் மருத மரம். அருமையான  ஆலயம்.  திருவிசை நல்லூர் ஐயாவாள்  பற்றி எழுதும்போது  சொல்லி இருக்கிறேன். தினமும்  மஹாலிங்கஸ்வாமியை நமஸ்கரிக்காமல் ஒருநாளும் வீணானதில்லை.  ஐந்தாறு முறை இந்த ஆலயத்துக்கு சென்று  மகாலிங்க தரிசனம் பெற்றிருக்கிறேன்.  

ப்ரம்ம ஹத்தி பற்றி  ஒரு குட்டி கதை சொன்னால் நன்றாக இருக்கும் அல்லவா?

7வது நூற்றாண்டில்  மதுரையை ஆண்ட  பாண்டிய  ராஜா  வரகுண பாண்டியன்  ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாட சென்றான்.  வேட்டையாடி  பல மிருகங்களைக் கொன்றுவிட்டு  களைத்து குதிரை மேல் திரும்பி வந்து கொண்டிருந்தான். குதிரைக்கு  அவனைவிட களைப்பு அதிகம். பாவம்  அது தானே அவனையும் தூக்கிக் கொண்டு காட்டுக்குள்  அங்கும் இங்கும் ஓடி மிருக வேட்டைக்கு உதவியது.  இருள் சூழ்ந்து விட்டது.  வேகமாக  பசியோடு அரண்மனைக்கு திரும்பிக்கொண்டிருந்த  குதிரை  வழியில் இருட்டில்  மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு  கிழ பிராமணன்  கழுத்தின் மேல் காலை வைத்து மிதித்து கொன்றுவிட்டது. நிரபராதி யான ஒரு  ப்ராமணனைக்  கொன்ற  ப்ரம்ம ஹத்தி தோஷம் பாண்டியனைப் பிடித்துக் கொண்டது.

வரகுண பாண்டியன் சிவ பக்தன்.   நேராக மதுரை சுந்தரேஸ்வரர் முன் சென்று முறையிட்டான்.

 ''பரமேஸ்வரா, நான்  வேண்டுமென்றோ,  தண்டனையாகவோ ,காரணமில்லாமலோ,  அந்த பிராமணனைக் கொன்றதால்   ப்ரம்ம ஹத்தி தோஷம்  பிடித்துக் கொண்டது.  யாகமெல்லாம் செய்தேன். தான தர்மம்  புரிந்தேன். என் குதிரை செய்த தவறு என்னுடையது என்று ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு எப்படியாவது இந்த தோஷத்தி லிருந்து விமோசனம்  தரவேண்டும்'' என்று வேண்டினான்.

''என்னுடைய  ஆலயம் இருக்கும் திரு விடைமருதூருக்குப்  போ. அங்கே  என்னை வழிபடு '' என்று கனவில் மதுரை சொக்கநாதர் சொல்லிவிட்டார்

பாண்டியனுக்கு ஒரு சங்கடம்.  

''சுந்தரேஸ்வரா,  திருவிடை மருதூர்  சோழ தேசத்தில் இருக்கிறதே. பாண்டியன் நான் , எப்படி அங்கே செல்வது. உறவு இருவருக்கும் சரியில்லையே.  பகைவர்களாகி விட்டோமே.  என்னை அங்கே போகச் சொல்கிறாயே, எப்படி?''

''வரகுணா , கலங்காதே, இன்னும் சிறு நாளில் சோழன் உன் மேல் படையெடுத்து தோற்று, சோழ தேசம் உன் வசமாகும் நீ திருவிடைமருதூர் செல்வாய்''

பாண்டியனுக்கு  ப்ரம்மஹத்தி தோஷத்தோடு  அதிர்ஷ்டமும் அவன் பக்கம் இருந்தது. சில நாளில் சோழன் படையெடுத்து திடீரென்று    பாண்டிய நாட்டைத்  தாக்கினான்.  கடும்போர்  பாண்டியன் படைக்கும் சோழ படைக்கும் நடந்து பாண்டியன் போரில் வென்றான்.  சோழனை வென்று திருவிடை மருதூர் அவன் கைவசம் வந்தது. அங்கே  மஹாலிங்க சுவாமி கோவில் கிழக்கு வாசல் வழியாக  உள்ளே சென்றான். வேண்டிக் கொண்டான்.

அவனை நிழல் போல் தொடர்ந்து வந்த ப்ரம்ம ஹத்தி  சிவாலயம் உள்ளே செல்ல முடியாமல் வாசலிலேயே  பாண்டியன் திரும்பி வெளியே வந்தால் மீண்டும் பிடித்துக்கொள்ள  காத்திருந்தது.

விஷயம் தெரியாத  வரகுணன் திரும்பி  வந்த வழியே  கிழக்கு வாசலில் வெளியே திரும்ப யத்தனித்தபோது ஒரு அசரீரி அவனுக்குள் கேட்டது.

''அடே   வரகுணா , வந்த கிழக்கு வாசல் வழியே  வெளியே செல்லாதே. அடுத்த  வாசல் வழியாக செல். இனி ப்ரம்மஹத்தி உன்னைத் தொடராது. உன் தோஷம் இங்கு வந்ததால் நீங்கியது''   என்கிறார் மகாலிங் கேஸ்வரர்.

அன்று முதல் யாருக்கெல்லாம்  ப்ரஹ்மத்தி  மற்றும் தோஷங்கள் உண்டோ, அவர்கள் திருவிடைமருதூர் மகாலிங்கத்தை வேண்டி வழிபட்டால் நிவர்த்தியாகும் என்று பக்தர்கள் நம்பிக்கை.

தோரண வாயிலில்  தெற்கு சுவற்றில் இரு  கைகளால் முழங்கால்களை கட்டிக் கொண்டு  முழங்கால்களுக்கு இடையே  கோரமான முகத்தை புதைத்துக் கொண்டு ப்ரம்மஹத்தி உட்கார்ந்திருப்பதைப் போல் ஒரு சிலை வடித்திருக்கிறது.  திருவிடைமருதூர் சென்ற போதும் அதைப் பார்க்காதவர்கள்  அடுத்த முறை செல்லும் போது பார்க்கலாம்.

வீட்டில் யாராவது  முழங்காலை கட்டிக்கொண்டு உட்கார்ந்தால் போதும் என் அம்மா  படு பயங்கரமாக கத்துவாள்  ''எடு கையை, சரியாக உட்காரு. ப்ரம்மஹத்தி மாதிரி உட்காராதே''   அதைப்போல்   கன்னத்தில் கை  ஊன்றினாலும் கோபம் வரும்.  கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை ஊன்றாதே.   யார் ஊன்றினாலும்   ஊன்றவே கூடாது. கப்பல் கம்பெனியில்  வேலை செய்பவன் அப்போது.  என் பிழைப்பே  கப்பல் கவிழாமல்  மிதப்பதால் தானே..

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:53:41 AM4/19/21
to amrith...@googlegroups.com

சாஸ்திரிகளின் முப்பது நாள் ராமாயணம்-   6

நங்கநல்லூர்  J K SIVAN

 
ராமன் ஒரு கடவுள் என்று அறிந்து ராமாயணம் படித்தால்  நாம் அவனை விட்டு  சற்று தூரத்தில் போய்விடுவோம்.  அவனும்  நம்மைப்போல்    எலும்பு  நரம்பு,   சதை, ரத்தத்தோடு பிறந்த ஒரு மனிதன், என்று உணர்ந்து படித்தால் அவன் எப்படி ஒரு சிறந்த மகனாக, கணவனாக, ராஜாவாக, வீரனாக  இருந்தான் என்று போற்ற முடியும்.  என்ன துன்பம் வந்தாலும் நேர்மை, நீதியை விட்டு வழுவாத உறுதி மனம் படைத்த மனிதனாக, தியாக சிந்தனை உள்ள  தயாள குணவானாக, குருபக்தி, பெரியோரிடம் மரியாதை உள்ளவனாக இருந்தான் என்று அறிந்து அவனை ஒரு ஆசானாக வழிகாட்டியாக   ஏற்றுக்கொள்ள முடியும். நாமும் அவன் போல் வாழவேண்டும் என்ற படிப்பினை வலுப்பெறும்.

மனிதனாக தோன்றிய ராமனுக்கும்  சில  சந்தர்ப்பங்களில் கோபம்  வந்தது. அந்நேரங்களில் அவனை  சமாதானப்படுத்தி   சம நிலை பெறச் செய்தது லக்ஷ்மணன்  வார்த்தைகள்  என்பது ராமன் நம்மைப்  போன்றவன் என்ற உணர்வை  வாலமீகி ஸ்லோகங்களில் காட்டுகிறது.

ஏன்  ராமன்  வாலியிடம் சமரசமாக  நட்பு பாராட்டி அவன் உதவியைப் பெறாமல் சுக்ரீவனின் நட்பை தேடினான் என்று ஒரு கேள்வி வருகிறது.   அதற்கு காரணங்கள் உள்ளன.  வாலியை விட  ''சுக்ரீவனிடம் சென்று  நீ உதவியை நாடு''   என்று  கபந்தன் என்கிற  ராக்ஷசனாக இருந்த  கந்தர்வன் கூறிய வார்த்தைகள் முக்கியமானவை.  ஹனுமான்  வாலியை விட  சுக்ரீவனுக்கு  மந்திரியாக இருக்கவே  விழைந்தான் என்றும் புரிகிறது.  வாலியின் செயல்கள் அவன் மனசாட்சி இல்லாதவன் என்று புரிந்தது. ஆகவே ராமன் சுக்ரீவனை தேர்ந்தெடுத்தான். அவனைத்  தேடி ரிஷ்யமுக பர்வதம் சென்றான்.   சுக்ரீவனின்  நிலை அறிந்ததும்  அவன் மேல் ராமனுக்கு  இரக்கம் வந்தது.  இருவர் மனைவிகளும் கடத்தப்பட்டவர்கள் என்ற நிலைமையும்  அவனை நெருங்கச் செய்தது. கடத்தியவர்கள்  இருவரும்  நீதிக்கு தலை வணங்காத பெரும்  பலசாலிகள் எவராலும்  வெல்ல  முடியாதவர்கள்,  மற்றும்  வாலி  ராவணன் இருவரும்  மனமுவந்த நண்பர்கள்  ஒருவருக்கு ஒருவர் உதவுபவர்கள்  என்பதும் கூட,   ராமர்-சுக்ரீவன்   ஒன்று சேர்ந்ததற்கு காரணமாக இருக்கலாம்.   ராமனுக்கும்  சுக்ரீவனுக்கும்  கொடுப்பதற்கும்  பெறுவதற்கும்  ஏதோ  இருந்ததே. 

ராமனை  அவன் பெருமைகளை  இக்காலத்து  விஞ்ஞான  அணுகுமுறைகளை  அளவுகோலாக வைத்துக்கொண்டு  நெருங்கக்  கூடாது.  அவன் கால  நீதி நியாய  நெறி முறைகளை வைத்து தான்  புரிந்து கொள்ள  வேண்டும். 

வாலி செய்த தவறுகளுக்கு  மரணம் தான் தண்டனையா?  ராமனின் இயற்கைக்கு விரோதமாக அவன் செயல் இருந்ததா  வாலிவதத்தில்?  என்றெல்லாம் கேள்வி எழுகிறது.

  
சாஸ்திரிகள் தனது ராமாயண பிரசங்கத்தில்,   பஞ்சவடியில் ராவணன் வரும் முன்பு தீக்குளித்து மாய  ஸீதையாக அவனால் தூக்கிச் செல்லப்பட்டு பின்னர் யுத்தத்தில்  ராவணன் மாண்டபின் ராமனைச் சேரும்போது   மீண்டும் தீக்குளித்து மாய சீதா மறைந்து  ஒரிஜினல்  சீதாவாகிறாள் என்பதை  ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகிறார். 

சீதை  பஞ்சவடியில் ராவணன் வரும் முன்பு,   தகாத வார்த்தைகள் கூறி  அபச்சாரம் செய்து  லக்ஷ்மணனை விரட்டினாள்  என்று   சீதையின்  குணத்தில்,  நடத்தையில்   களங்கம் கற்பிப்பதை, குறை கூறுவதை  அவரால் ஜீரணிக்க முடியவில்லை. 

 ''சீதா,  உன் மீதுள்ள களங்கத்தை போக்கவே  நீ  தீக்குளிக்க செய்தேன் , இது உன் மீது கோபத்தாலோ, வெறுப்பால் அல்ல, குடும்ப, குல பெருமையை  நிலைநாட்டவே''  என்கிறார்  ராமர்.

 பின்னர்  அவள் மீது ஒரு அபவாதம் சூட்டப்பட்டபோது  ''சீதா  உன் மீது குறை சொல்லப்பட்டு உன்கற்பின்  மேல் கறை  படிந்துவிட்டது. எனக்கு உன்மேல் எந்த  பிடிப்பும் இல்லை.  விருப்பமும் இல்லை.  நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் . நீ லக்ஷ்மணனோடோ , பரதனோடோ , சத்ருக்னனோடோ  எவரொடு  வேண்டுமானாலும்  சென்று தங்கலாம். இங்கு என்னோடு உனக்கு இடமில்லை''  என்று சொன்னதாக  வரும் இடத்தில் ரொம்ப  கடின வார்த்தைகள்  வால்மீகி மூலம் கிடைக்கிறது.   அதை நாம் மாற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை.  அந்த நேரத்தில் வெளிப்பட்ட கோபம் எரிச்சல்,  வெறுப்பு அதில்  த்
வனிக்கிறது.   ராமன் தானும் ஒரு மனிதன் என்று அந்த இடத்தில் காட்டிக் கொள்கிறான் அவ்வளவே.  சீதையும் தான் எதிர்த்து பேசுகிறாள். ''லக்ஷ்மணா,  மூட்டுடா  தீயை, கொழுந்து விட்டு எரியட்டும் அது.  அது ஒன்று தான் இதற்கெல்லாம்  தீர்ப்பு,  விடை''   என்கிறாள்.   ராமன் மறுப்பு சொல்லவில்லை.

தீயில் சேர்ந்த  சீதையை அக்னி பகவான் ஜாக்கிரதையாக தாங்கி ராமனிடம் சேர்க்கிறான்.  அப்போது ராமன் சொன்னது   ''நான் சீதையை சந்தேகிக்கவே இல்லை,  அவள் நடத்தையில் எனக்கு எந்த ஐயமும் இருந்ததில்லை''  . இதை எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும்?.  ராமனுக்கு முன்பே தெரிந்ததை  இந்த  நிகழ்ச்சிக்கு அப்புறம் வெளிப்படுத்துவதாக.   அப்படித்தான்.

ராமன் உண்மையில்  இரு மன  திகைப்பில் இருந்தான்.  ''சீதை அப்படிப்பட்டவளோ.  சே சே   அவளாவது  அப்படி நடப்பதாவது?''  இந்த  ஒரு  நிலையில்லாத தன்மையில் தான் சீதையைப்  புறக்கணித்தான்.   ராமனிடம் ஹனுமான் எவ்வளவோ மன்றாடியும்  செவி சாய்க்காத  ராமன்  அக்னி பரிக்ஷை மூலம்   அவளை  மீண்டும் அவன் மனதோடு இணைத்துக்கொண்டான்.  வேறு எந்த  சாட்சியங்கள் விளக்கங்கள் தேவையில்லை. 

இன்னும் மேலே  ரசிக்கலாம்.


sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:54:30 AM4/19/21
to amrith...@googlegroups.com

பல்லி சமாச்சாரம்  --  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஹிந்துக்களாகிய  நமது   எத்தனையோ  நம்பிக்கைகள்  ஆழமாக நமது வாழ்க்கையின்  வழிமுறைகளில்  பொதிந்தவை.  காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருபவை.  தேய்ந்து கொண்டே  வரும் இது காலப்போக்கில்  முற்றிலும் மாறவில்லை.   அதன் சுவடுகள் இன்னும் இருக்கிறது என்பதற்கு ஒரு சின்ன பல்லி விஷயம் உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

பல்லி  விஷயத்தில்  ரெண்டு சமாச்சாரம்  முக்கியம்.  அது  டொக் டொக் என்று  கத்துவது. இன்னொன்று  விழுவது. ரெண்டுக்கும்  பல அர்த்தங்கள் எச்சரிக்கைகள் உண்டு என்று நமது முன்னோர்கள் கவனித்து வைத்திருக்கிறார்கள்.    

ரொம்ப அருவருப்பான  ஒரு பிராணி பல்லி .அப்போதெல்லாம்    பல்லி  இல்லாத  வீடே இல்லை.  முக்கால்வாசி  கூரை வீடுகள், ஒட்டு வீடுகள். இந்து இடுக்கில் நிறைய  பூச்சிகளை  சந்தோஷமாக  வேளா வேளை  பிடித்து சாப்பிட்டுக்கொண்டு நிறைய  குண்டு பல்லிகள்  சுவற்றில் இருக்கும். விளக்கு வைத்தால் போதும். எண்ணற்ற  ஈசல்கள்,  பூச்சிகள்   விளக்கைத் தேடி வரும்.   சுற்றி சுற்றி வளையமிடும்.  வேட்டை தான் பல்லிகளுக்கு.  பார்த்துக்   கொண்டே நெருங்கி வந்து டபக் என்று பிடித்து விழுங்கும்.

இப்போது  நகர வீடுகளில்  பல்லி  நடமாட்டம் குறைந்து விட்டது.  பிளாட்களில்  மருந்தடித்து பல்லிகளை  வெளியேற்றி விடுகிறார்கள்.  மயிலிறகு செருகி வைத்தால் பல்லி  வராது என்ற நம்பிக்கை நிறைய  வீடுகளில் காண்கிறேன்.    பல்லிகளை நீங்கள் உற்றுக் கவனிப்பது உண்டா? இல்லை என்றால் இனி கூர்ந்து  கவனியுங்கள். அவை ஒருவகையான டிக் டிக்  சத்தம் எழுப்பும். அதிலிருந்து நல்லது  கெட்டது நடக்கும்    போன்ற  விஷயங்களை  என் சிறிய வயதில் அம்மா  சொல்லி  கேட்டதுண்டு.   நான் வளர்ந்த  பிறகு பல்லி யைப் பற்றி சிந்திக்க நேரமில்லை. உத்யோக கவலைகளில் பல்லி  மறந்து போய்விட்டது.

பல்லியின்  கால்கள்  வெகுவேகமாக  சுவர் ஏறும் . மணிக்கணக்காக  சுவரில் நிற்கும். தலையை தூக்கி தூக்கி  பார்த்து நாக்கை நீட்டி இரை  பிடிக்கும்.  சிலநேரங்களில் தொப்பென்று கீழே விழுகிறது.  அப்படி விழும்
போது நாம்  தரையில், சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு,  கீழே  படுத்துக்கொண்டு இருந்தால் நம் மீது விழும் இல்லையா?.  அப்படி விழுந்தால் நாம் குதித்து எழுவோம்.  தூர தள்ளுவோம். அதைத் தவிர அது விழுவதால் ஏதோ  பலன் உண்டாம். பாம்பு பஞ்சாங்கம்  சொல்வதை அறிவோம்.

பல்லி நம் தலையில் விழுந்தால்…வீட்டிலோ எங்கோ  கலகம் . முகத்தில் :  பந்து தரிசனம்.  புருவ மத்தியில்:  ராஜனுகிரஹம்.  அதாவது அரசாங்க சலுகை என்று கொள்வோம்.   மேலுதடு:  பணம் விரயம். அட சனியனே. அதே  கீழுதடில் விழுந்தால்:  தன லாபம்.   மூக்கு:   வியாதி சம்பவம்.   வலது காது:  தீர்காயுசு ,பல்லிக்கல்ல , நமக்கு,     இடது காது:   வியாபாரத்தில்  லாபம்.     கண்களில்:   ஜெயில்.  முகவாய்கட்டையில்:   ராஜ,அரசாங்க தண்டனை.  வாயில்:  பயம்.   கழுத்து:  விரோதிகள் காலி.   வலது தோள் : ஆரோக்யம்.  இடது தோள் : பெண் சுகம்.  வலது மணிக்கட்டு:   பீடை.  இடது மணிக்கட்டு:   கீர்த்தி.  பெண்கள் மார்பு:   பாப  கார்யம்.  வயிறு:  தான்ய லாபம்.  மார்பு:   தன  லாபம்.  முழங்கால்:  சுகம்.  கணுக்கால்:   சுபம்.  பாதம்:  பிரயாணம்.    இது போதும்.  ஒன்றே ஒன்று நிச்சயம்.    

பல்லி  எங்காவது  விழுந்துவிட்டு போகட்டும். அசிரத்தையாக  சமைக்கும் இடத்தில் தொப்பென்று சாம்பாரில் விழுந்து பாவம்  தெரியாமல் சாப்பிட்டால்   அன்று நிறைய  பேர்   ஆஸ்பத்திரியில்   உயிருக்கு மன்றாடுவது நிறைய  பள்ளிக்கூட  சிறுவர்களாக இருக்கிறது ரொம்ப வருந்த வேண்டிய விஷயம். அடிக்கடி பத்திரிகைகளில்  வரும்  விஷயம்   இது. 

பல்லி  நமது  மேலே எங்காவது விழுந்தால் குளித்துவிடுவது ரொம்ப நல்லது.

பல்லி விழுவது  தவிர பல்லியின்  டிக் டிக் சொல்லுக்கு   பலன்  என்ன என்று பாம்பு பஞ்சாங்கம் சொல்கிறது.  
ஞாயிறுக்கிழமை  கிழக்கு பக்கத்தில் கத்தினால்:  பயம், நெருப்பு தொந்தரவு.தீமை.
தெற்கில்:   சுபம்.   மேற்கில்:  சண்டை.  வடக்கில்:  தன லாபம்.   மேலே கூரையில்:   ஜெயம்.    தரையில்:  நினைத்த காரியம்  வெற்றி.      இதுமாதிரி  வாரம்   ஏழு  நாட்களுக்கும்  பல்லி  எந்த திசையில் கத்துகிறது என்று கவனித்து பஞ்சாங்கத்தை பார்த்தால்  வினோத  விஷயங்கள் தெரிந்துகொள்ளலாம். பொறுமை  நேரம்  ரெண்டுமே அவசியம் இதற்கு தேவை.    நாம்  தான் சத்தம் கேட்டதும்  எங்கே என்று பார்த்து பல்லியை  விரட்டி  விடுகிறோமே.

நிறைய  ஜோசியர்கள்  பல்லி விழும் பலன்,  சொல்லுக்கு பலன்  பரிகாரங்கள் சொல்லி  பிழைக்கிறார்கள்.  அவர்கள் பல்லியை  வாழ்த்துவார்கள். 

காஞ்சிபுரம்  வரதராஜ பெருமாள் கோவில் பல்லிக்கு உகந்த கோவில்.  அங்கு   விதானத்தில்  உள்ள  ள்ள தங்க வெள்ளி  பள்ளிகளை தொட  காசு கொடுத்ததாக  ஞாபகம்.  அதற்கும் க்யூ வரிசை உண்டு.  தொட்டால்  தீய அசம்பாவிதங்கள் மற்றும் தோஷங்கள் நீங்கும் என  நம்பிக்கை.   ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலும்  பல்லி  வழிபாடு  உண்டு. 

பல்லியை  கேது அம்சமாக  சொல்வதுண்டு .. கேது  ஸ்வரபானு அசுரனின் உடல்.   அவனுடைய தலையை வெட்டியது விஷ்ணு.  

தீபாவளியன்று வீட்டில் பல்லியை காணவில்லை என்றால் வெளிச்சங்களின் பண்டிகையான தீபாவளி முழுமை பெறுவதில்லை. தீபாவளி அன்று பல்லியை காண நேர்ந்தால் குடும்பத்திற்கு செல்வமும் வளமும் வந்து சேரும் என நம்பிக்கை.  இதுவரை  எந்த  தீபாவளியன்றும் எங்கள் வீட்டில் பல்லி  ஏனோ  வந்து தரிசனம் கொடுத்து செல்வம் வளம் எல்லாம் பெருகவில்லை என்பது எங்கள் துர்பாக்கியம்.


sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:54:30 AM4/19/21
to amrith...@googlegroups.com

   '' வருக  ப்ளவ,   பிலவ   வருஷமே   வா.    -   நங்கநல்லூர் J K  SIVAN  -


நாளைக்கு மங்களகரமான  ''பிலவ''  தமிழ்ப் புத்தாண்டு 14-04-2021 புதன்கிழமை   சித்திரை 1 

பஞ்சாங்கம் கணிப்பு: திதி : 12:48 PM வரை துவிதியை பின்னர் திருதியை:     நட்சத்திரம் : பரணி 05:23 PM வரை பிறகு கார்த்திகை.  யோகம் : ப்ரீதி 04:15 PM வரை, அதன் பின் ஆயுஷ்மான்.  கரணம் : கௌலவம் 12:48 PM வரை பிறகு சைதுளை 02:07 AM வரை பிறகு கரசை. கரசை - Apr 15 02:07 AM – Apr 15 03:27 PM.  ஆயுஷ்மான் - Apr 14 04:15 PM – Apr 15 05:20 PM.    நாள் - கீழ் நோக்கு நாள்.   பிறை - வளர்பிறை.  திதி சுக்ல பக்ஷ துவிதியை - Apr 13 10:17 AM – Apr 14 12:48 PMசுக்ல பக்ஷ திருதியை - சூரியோதயம் - 6:00 AM சூரியஸ்தமம் - 6:17 PM  சந்த்ரோதயம் - Apr 14 7:21 AM
சந்திராஸ்தமனம் - Apr 14 8:13 PM.  சூரியன் மேஷம் ராசியில் சந்திர ராசி.  பூர்ணிமாந்த முறை - சைத்ரம்
விக்கிரம ஆண்டு - 2078, ஆனந்த சக ஆண்டு - 1943,  மேஷ லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. 

பரணி சுக்கிரன் நட்சத்திரம் என்பதால் பெண்களுக்கு உற்சாகத்தையும் மனநிறைவும் தரும்படியான ஆண்டாக பிலவ ஆண்டு இருக்கும்.  இந்த ஆண்டில் மிக அதிகம் பேருக்கு திருமணங்கள் நடக்கும்.
சூரியன் முதல் சனி வரை   பிலவ வருடம் பிறக்கும் போது கிரக நிலைகள் மிக வலுவாக இருக்கின்றன.

மேஷத்தில் சூரியன் உச்சமாகவும் உடன் சுக்கிரனும் சந்திரனும் பயணிக்கின்றனர். ரிஷபத்தில் ராகுவும், மிதுன ராசியில் செவ்வாயும் பயணிக்கின்றனர்.விருச்சிக ராசியில் கேது பகவானும், மகர ராசியில் ஆட்சி பலத்தோடு சனிபகவானும், கும்ப ராசியில் அதிசார குரு பகவானும், மீனத்தில் புதன் பகவான் நீசமடைந்தும் சஞ்சரிக்கின்றன.  விவசாயம் செழிக்கும்.  பரணி நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறப்பதால் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்படியான வருமானம் சிறப்பாகவே இருக்கும். ஹோட்டல், உணவுத் தொழில் இந்த ஆண்டும் கொடிகட்டிப் பறக்கும். நிறைய பேர் ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். விவசாயம் செழிப்பாக இருக்கும், பங்கு வர்த்தகம் சிறப்பாக இருக்கும்.மந்த நிலையில் இருந்த கட்டுமானத் தொழில் அசுர வேகத்தில் வளர்ச்சி யடையும்.  தொழில் லாபம் வரும்.

வாகனம் தொடர்பான தொழில் சிறப்பாகவே இருக்கும்.சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்கள், உற்பத்தி தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் மன நிறைவைத் தரக் கூடிய வகையில் தொழில் வளர்ச்சி ஏற்படும். லாபமும் கிடைக்கும்.

அரசு, தனியார் வேலை.  தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படும். தற்போது பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டியது வரும். அரசுப் பணியாளர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள். பிரச்சினைகள், வழக்குகள் என அதிகம் சந்திக்க வேண்டியது வரும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் மிதமான வளர்ச்சி இருக்கும். அந்தத் துறையில் இருப்பவர்களுக்கு வேலை இழப்பு அல்லது வேலை மாற்றம் உண்டாகும். கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் வெளிநாடு தொடர்பு உடைய தொழில்களில் மந்தநிலை ஏற்படும். வெளிநாட்டு வர்த்தகம் குறையும். கலைத்துறை வாய்ப்பு
இசை நாட்டியக் கலைஞர்களுக்கு நல்ல வளர்ச்சியும், அங்கீகாரமும், மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். சார்வரி வருடத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது திறைத்துறை கலைஞர்கள்தான். இந்த பிலவ ஆண்டிலும் திரைத் துறைக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் ஓரளவுக்கு மட்டுமே வளர்ச்சியை அடைய முடியும்.

பிலவ வருடம் புதன்கிழமை வருடப்பிறப்பு இருப்பதால் நன்றாக மழை பெய்யும். செவ்வாயின் வீட்டில் சுக்கிரன், சுக்கிரன் வீட்டில் செவ்வாய் இருப்பதால் கால்நடைகளுக்கு புதிய நோய்கள் தாக்கும். விவசாயிகளுக்கும் பாதிப்பு அதிகமாகும் வாகன போக்குவரத்து மூலம் சாலை விபத்து ஏற்படும். பலவிதமான வியாதிகளால் மக்கள் துன்பப்படுவார்கள். மருத்துவர்களை கடவுளாக மக்கள் பாவிக்கும் நேரம் வரும். புழுதி சூறாவளி காற்றுகள் பலமாகத் தாக்கும். ஆன்லைன் மூலம் வியாபாரம் அதிகரிக்கும்.

அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் நடக்கும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டி வரும். அரசியல்வாதிகளுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும். பத்திரிகை மற்றும் ஊடகத் தொழில் சில பாதிப்புகளையும், பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். பாதிப்புகள் குறைய தொழில் வளர்ச்சியடைய ராகு காலத்தில் ஸ்ரீதுர்க்கையை வணங்கலாம். சனிபகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கலாம்.

சார்வரி வருடத்தில் மாணவர்களுக்கு கல்வி சாலைகளின் வாசனையே இல்லாமல் போய்விட்டது ஆன்லைன் கல்விதான் ஆசானாக இருந்தது. ஏராளமான மாணவர்கள் வாசிக்கம் பழக்கத்தை மறந்து விட்டனர். எனவே இந்த பிலவ ஆண்டில் பல மாணவர்களுக்கு ஞாபக மறதி, கவனமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தேர்ச்சி விகிதம் குறையவும் வாய்ப்பு உண்டு. கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலைகள் கூட ஏற்படும், மாணவர்கள் கல்வியில் மிக அதிக அளவில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

பஞ்சாங்களில் வருடம் மற்றும் மாதங்கள் இரண்டு வேறுபட்ட முறைப்படி கணக்கிடப்படுகின்றன.
1. சௌரமான முறை   --  சூ
ரியனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடும் முறை. இதிலும் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. அவை : 1 சௌர வருஷ முறை 2 சாயன வருஷ முறை.

2.சந்திரமான முறை-  சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன்பு வரும் பூர்வபக்ஷ பிரதமை திதி தொடங்கி அடுத்த சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன் வரும் அமாவாசை முடியவுள்ள ஒரு ஆண்டு காலத்தைக் குறிப்பது சந்திரமான முறை எனப்படும். இம்முறையில் ஒரு வருடம் என்பது சுமார் 354 நாட்கள் கொண்டது.

பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 1. திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும், திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிடம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும்.

1.திருக்கணித பஞ்சாங்கம்-   சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது.

2.வாக்கிய பஞ்சாங்கம் -  
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்த ரிஷிகள் ஒன்றுகூடி தங்களுக்குள் இருக்கும் கருத்துக்களை பரிமாறி இயற்றிய ஸ்லோகங்களில் உள்ள கணிதமுறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் இன்றளவும் எழுதப்படுவது வாக்கிய பஞ்சாங்கமாகும்.  காலமாற்றத்தினால் எவ்விதமான மாற்றத்திற்கும் உட்படாத, அதாவது திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. நம் முன்னோர்களின் கருத்துக்களையும் அவர்கள் பின்பற்றிய கணிதமுறைகளை இன்றளவில் எள்ளளவும் மாற்றாமல் பழமையை பிரதிபலிக்கும் பஞ்சாங்கம்
வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும். தமிழ் நாட்டில் வாக்கிய பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது. திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை கருவி   பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.
வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் வேறுபாடு..!!

நமது  கோவில்களில்  இறைவழிபாடுகள் யாவும் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் பின்பற்றப் படுகின்றன.

தமிழ்நாட்டில் வெளிவரும் வாக்கிய பஞ்சாங்கங்கள்  என்ன தெரியுமா?   ஆற்காடு ஸ்ரீசீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம்,   அனுஷ்டான வாக்கிய பஞ்சாங்கம்,  மஞ்சள் நிற 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், 
திருநெல்வேலி வாக்கிய பஞ்சாங்கம்,  ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம் முதலியவையாகும்.

திருக்கணித பஞ்சாங்கம்    ஜாதகம் கணிக்க மற்றும் ஜாதக பலன் உரைக்க ஜோசியர்களால்  பயன்படுத்தப் படுவது.    திருக்கணித பஞ்சாங்கங்கள்   சில:   ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம். வாசன் சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம்,  குமரன் திருக்கணித பஞ்சாங்கம், ராஷ்ட்ரீய பஞ்சாங்கம், பாலன் திருக்கணித பஞ்சாங்கம்,    சபரி சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம். 


பிலவ வருடம் பிறக்கும் போது கிரக நிலைகள் மிக வலுவாக இருக்கின்றன. திருக்கணிதப்    பஞ்சாங்கப்படி நவ கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால், மேஷத்தில் சூரியன் உச்சமாகவும் உடன் சுக்கிரனும் சந்திரனும் பயணிக்கின்றனர். ரிஷபத்தில் ராகுவும், மிதுன ராசியில் செவ்வாயும் பயணிக்கின்றனர்.விருச்சிக ராசியில் கேது பகவானும், மகர ராசியில் ஆட்சி பலத்தோடு சனிபகவானும், கும்ப ராசியில் அதிசார குரு பகவானும், மீனத்தில் புதன் பகவான் நீசமடைந்தும் சஞ்சரிக்கின்றன.

 இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். 

ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலம்.  பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருஷத்தின்  கால அளவு.  சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கி  மீன இராசியிலிருந்து வெளியேறும்வரை  உள்ள காலம்.  ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருப்பதால்    இங்கிலிஷ்  காலண்டரில்  ஏப்ரல்  14   தமிழ்  புது வருஷம்   அநேகமாக மாறுவதில்லை.

தமிழ் புத்தாண்டு   அன்று   அதிகாலையிலேயே   தூக்கம் விழித்து,  இந்த சித்திரை மாதம் முதல் தினத்தன்று புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் உடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும் தோஷ நிவர்த்திக்காகவும் பல மூலிகைகள் சேர்ந்த மருத்து  நீரை தலையிலும் உடம்பிலும் தடவி முதலில் நீராடுவது வழக்கம்.மருத்து நீரில் அனைவரும் குளியலை மேற்கொள்ள வேண்டும். 

மருத்து நீர் என்பது நமது முன்னோர்கள்  தமிழ் வருடப் பிறப்பு அன்று குளிக்க  தயாரித்தது.  இப்போது   மருத்து  நீரா??  அப்படியென்றால் ??   என்று கேட்பதால்  மருத்து நீரை தயாரிக்க தேவையான பொருட்கள்  என்ன, எப்படி  தயாரிப்பது என்று சொல்கிறேன். 

ஒரு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி அதில் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி,  , வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற் றில் சிறிதளவை போட்டு நன்கு காய்ச்சி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலேயே இந்த மருத்து நீரை தயாரிக்க தெரியாதவர்கள், இப்புனித மருத்து நீரை,  சில  கோயில்களில்  தயாரிப்பார்கள்  என்றால்  கேட்டுப்  பெறலாம்.  குளிக்கும் போது தலையில் கொன்றை இலையையும், காலில் புங்கம் இலையையும் வைத்து குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் பிறந்திருக்கும் தமிழ் வருடத்திற்குரிய தோஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்க பெறும். மற்ற நட்சத்திரக்காரர்களும் இப்படி குளிப்பதால் அவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி, புதிதாக பிறந்திருக்கும் புத்தாண்டில் அதிர்ஷ்டங்கள் பெருகும்.

 மஞ்சள் நிறம் என்பது வளமை, தெய்வீகம் மற்றும் நன்மையை குறிக்கும் ஒரு நிறமாக நமது கலாச்சாரத்தில் போற்றப்படுகிறது. எனவே புத்தாண்டு தினத்தில் மேற்கண்ட முறையில் குளியலை முடித்த பின்பு , மஞ்சள் நிறப் பட்டாடை அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய ஆடைகளை அணிந்து கொள்வதால் பிறக்கின்ற புத்தாண்டு உங்கள் குடும்பத்தில் வளமையை கொடுக்கும் என்பது ஐதீகம்.மஞ்சள் நிற ஆடை இல்லாவிட்டாலும் புதிய ஆடையில் ஒரு சிறு பகுதியிலாவது மஞ்சள் அரைத்துப் பெற்ற கலவையை பூசி விட்டு அணிந்து கொள்வது நன்மை தரும்.

பூஜையறையில் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், போன்றவற்றை வைத்து, இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வ படங்களையும் தரிசித்து வணங்க வேண்டும். வயதில் மூத்தோரான தாத்தா, பாட்டி, தாய், தந்தை மற்றும் இன்ன பிற பெரியோர்களை வணங்கி, அவர்களின் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். பிறகு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும்.

மாங்காய்  பச்சடி புது வருடத்தின் சிறப்பு அங்கம் என்பது நாம் அறிந்ததே. மாங்காயின் புளிப்போடு சேர்ந்த துவர்ப்பும், வெல்லத்தின் இனிப்பும், வேப்பம்பூவின் கசப்பும், மிளகாயின் காரமும் சேர்ந்த பச்சடி வாழ்வின் பல சுவைகளை நினைவுறுத்தும் வண்ணமாக அமைகிறது. இதனை உண்ணுவதன் மூலம் வாழ்வின் பலவிதமான நிகழ்ச்சிகளையும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை புது வருட ஆரம்பத்தி லிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்து. மேலும் இதோடு உவர்ப்பு சுவையும் சேரும்போது அது அறுசுவையாகி மகிழ்ச்சியளிக்கிறது. 

வருடத்தின் முதல் நாள் போலவே அனைத்து நாட்களும் அறுசுவை நிரம்ப வேண்டும் என்பதற்காகவே அறுசுவை உணவு உண்டு பலவிதமான பட்சணங்களுடன் விருந்தினர்களை உபசரித்தல் புத்தாடை அணிதல், பெரியோரை வணங்கி ஆசி பெறுதல், பொங்கல் பொங்குதல் ஆகியன இரு மக்களிடையேயும் ஒரே மாதிரியாக கை கொள்ளப்பட்டு வருகின்றன.பௌத்த மக்களும் இந்துத் தெய்வ நம்பிக்கையுடன் வாழ்கின்றார்கள்.

எனது மனங்கனிந்த   தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:54:30 AM4/19/21
to amrith...@googlegroups.com

நகங்கள் காணவில்லை   --    நங்கநல்லூர்  J K  SIVAN 

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா எனும்  ஆங்கிலேய  அறிவாளி  அவர்கள் ஊரில்  கண்டுபிடித்த  கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி  எங்கோ  எவரிடமோ  ஒரு அபிப்ராயம் சொன்னது :  

 ''பதினோரு முட்டாள்கள்  ஆடுவதை பதினொன்றாயிரம் முட்டாள்கள்  பார்க்கிறார்கள் ''

நேற்று  இரவு  பதினோரு ஆயிரத்துக்கும் மேலே  வெளியே போக  முடியாமல்  வீட்டோடு கொரோனா நேரத்தில் கிடைக்கும்  இந்தியர்களுக்கு ஒரு விருந்தாக  IPL  போட்டி நடந்தது.   ராஜஸ்தான் ராயல்ஸ் எனும்  ரோஸ் கலர் ஆடைக்காரர்களும்  பஞ்சாப்  கிங்ஸ் எனும்  சிவப்பு கலர்  ஆடை ஆட்களும் மோதினர். ஆளுக்கு இருபது ஓவர். 120 பந்துகள்.

முதலில் ஆடிய  சிகப்பு ஆடை ஆட்கள்  வீராவேசமாக  தொடக்கத்திலிருந்து  ஆறும் நாலுமாகி  விளாசி ரன் மழை.   அணித்தலைவர்  KL  ராஹுல்  மற்றும் புது ஆசாமி ஹூடா  இருவரும் எவர் போட்டாலும்  மாங்காய்  அடிப்பதை போல் மட்டை அடி  உத்சவம் நடத்தி மொத்தத்தில்  120 பந்துகளில் 6  விக்கெட் நஷ்டத்துக்கு  221 ரன்கள் குவிக்க,  ரோஸ்  ஆடை ஆசாமிகள் ஆட ஆரம்பித்தார்கள்.   ஏற்கனவே  இவ்வளவு பெரிய  ரன்  தேவை ஆட்டத்தை பார்த்தவர்கள்.   அவ்வளவு தானே  என்று அனாயாசமாக  அடித்து ஆடினார்கள் . 

அட எவ்வளவு லாகவமாக  கவலையே படாமல் வெள்ளையர்களும்  நம்மவர்களுமாக  கலந்து ஆடி ரொம்ப   கிட்டே கிட்டே வந்துவிட்டார்கள்.  சஞ்சு சாம்சன் உண்மையிலேயே   தான்  அசைக்கமுடியாத  மலை  அரண் போன்ற  அணித் தலைவன் என்று  நிரூபித்தான்.    மொத்தம்  20 ஓவர்களில்  19 வது  ஓவரில்  209  ரன்  எடுத்தவர்கள் இன்னும் 13 ரன்கள் எடுக்கவேண்டும். சஞ்சு ராக்ஷஸனுக்கு அது  ஜுஜுபி . 63  பந்துகளில் 119 ரன்கள்  எடுத்து  வீராவேசமாக  ஆடுகிறான்.   தேவையான ரன் எளிதில் எடுக்க முடியும் போல் இருந்தது. 

 கடைசி  ஆறு பந்துகளில் முதல் பந்தை வீசிய  பஞ்சாப்  வீர வாலிபன்  அர்ஷ்தீப்  கலங்கவில்லை.  முதல் பந்து ரன்  எடுக்கமுடியாமல் போட்டான்.  
இன்னும் ஐந்து பந்துகளில் 13.  
ரெண்டாவது பந்தில் 1.  
இன்னும்  4பந்துகளில் 12  எடுக்கவேண்டும்.  

என் விரல்களில்  நகங்கள் குறைந்து கொண்டே வந்து விரல்களை  நகமென எண்ணி விரல்களை கடித்துக் கொண்டிருந்தேன்.  பத்து விரல் போதாது  போல் இருந்தது.  

அடுத்த பந்தில் சஞ்சு ராக்ஷஸன் ஒரு சிக்ஸர் விளாசிவிட்டான். ஐயோ என்று    பஞ்சாப்  கிங்ஸ்  ரசிகர்கள் எல்லார் முகத்திலும்  ஒரு  திகில்.   இன்னும்  ஐந்து ரன்கள் தான் தேவை. இருப்பதோ  ரெண்டு பந்து.  போடுபவன்  புது சீக்கியன்.  அதை எல்லைக்கு அனுப்ப காத்திருக்கும் ராக்ஷஸன்  சிகப்பு ஆடை அணி தலைவன் சஞ்சு சாம்சன்.  வாலிபன்  கவலையில்லாமல் கடவுள்களை  எல்லாம் வேண்டிக்கொண்டு  ஐந்தாவது பந்தை வீச  எல்லைக்   காவலர்கள் அதை வெளியே போக விடாமல் தடுக்க இன்னும் ஒரு ரன். 

கடோசி  கடோசி  பந்து.  அதில் ஐந்து  அடிக்க  வேண்டுமானால்  சிக்ஸர்  எடுத்து ஆகவேண்டும். அல்லது சீக்கியன் காலை தப்பாக வைத்தால் அல்லது  அளவுக்கு   மீறி  இடது வலது பக்கங்களில், மேலே  எங்காவது போட்டு விட்டால் வைட்  WIDE   NO BALL   என்று ஏதாவது க்ரஹசாரம்   விழுந்து தொலைத்தால்  கோவிந்தா.   ராஜஸ்தான் ஜெயித்து விடும்.   

பையனின் கடைசி பந்து ஒரே ஒரு ரன்,   பஞ்சாப்  ராஜாக்கள்   4 ரன் வித்தியாசத்தில்  ஜெயித்துவிட்டனர்.  மகாபலியை  வாமனன் வென்றுவிட்டான்.

டீவியை அணைத்துவிட்டு  குறைந்து போன விரல்களை அலம்பிக்கொண்டு படுக்க போகும்போது 11.30  மணிக்கு மேல் ஆகி இருந்தது..    

இது  மாதிரி அதிர்ச்சிகள்  இப்போதெல்லாம் அதிகமாக தொடர்ந்து  உற்சாகத்தை ஊட்டுகிறது.  அடுத்த மாத கடைசி வரை கவலையில்லை. கொரோனாவை கொஞ்சம் மறக்கலாம்.  வீட்டிலே  நன்றாக பொழுது போகும்.  பெர்னார்ட்  ஷாவை மதித்து மன்னிக்க வேண்டும்.  அவர் பார்த்த  11 முட்டாள், 11000 முட்டாள்களுக்கு   T20-20   விளையாட்டு  தெரியாதே     https://www.iplt20.com/video/229844/m04-rr-vs-pbks-match-highlights


sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:54:48 AM4/19/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்   -  நங்கநல்லூர்  J K  SIVAN 

                        ''பாம்பு குழந்தை''

ஐம்பது வருஷங்களுக்கு  முன்பு   இந்த சம்பவத்தைப் பற்றி  ஆனந்தவிகடனிலோ வேறு எதிலோ படித்து நான், என் மனைவியிடம் சொல்லும்போது எனக்கு  நாக்கு தழுதழுத்தது.  கேட்டபின் அவளிடமிருந்து எந்த  பதிலும் வராதபோது தான் கவனித்தேன்.  கண்களில் நீரோடு  அழுதுகொண்டிருந்தாள்....பேச முடியவில்லை...

இது கற்பனையல்ல.  மஹா பெரியவா நமது தர்மமிகு சென்னையில், மைலாப்பூரில்,  ஸமஸ்க்ரித  கல்லூரி  வளாகத்தில் தங்கி இருந்தபோது தினமும் உபன்யாசம் பண்ணுவார்.  அதில் ஒரு நாள் சொன்ன விஷயம்.  வெகுநாளாக இதை சொல்லவேண்டும் என்று நினைத்து காலம் தாழ்த்தியது ஏன் என்று எனக்கு  ஆச்சர்யமாக இருக்கிறது.   ஒருவேளை  இந்த  தமிழ் புத்தாண்டு சிறப்பு செய்தியாக சொல்லவேண்டும் என்பது  மஹா பெரியவா சங்கல்பமாக இருக்கலாம்.

பெரியவா   பேசுகிறார்...  உஷ்..... சப்தம் போடாமல் கேளுங்கள்:  

''முன்னூறு வர்ஷங்களுக்கு முன்னால் இது  ஒரு  குடும்பத்திலே  நடந்த மிக மிக ஸ்வாரஸ்யமான ஒரு ஸம்பவம்.    நான்  இதை  என்னுடைய  பால்ய வயஸில் கேட்டிருக்கேன்.    

“நா…. கொழந்தையா இருந்தப்போ, எங்களுக்கு தெரிஞ்ச ஒரு family-ல, அவாத்து பொம்மனாட்டிகள் யாருமே தாழம்பூவ,   தலேல வெச்சுக்க மாட்டா...!

“அந்தக் குடும்பத்ல ஏன் யாருமே தாழம்பூ வெச்சுக்கறதில்ல  ன்னு நா…ஒரு தடவை கேட்டப்போ, இந்தக் கதையை, எங்காத்துப் பெரியவாள்ளாம் சொன்னா…! அது மட்டும் இல்ல, இன்னிக்கும் அந்த வம்ஸத்ல யாராத்துலயாவுது…. ஆம்பளைக் கொழந்தை பொறந்தாக்க… நாகராஜன்-னோ, நாகேஶ்வரன்-னோதான் பேர் வெப்பாளாம்!

(எங்கள் நெருங்கிய உறவில் ஒரு  குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும்  ஆனாங்க இருந்தால் நாகராஜன், நாகநாதன், நாகேசன், நாகேஸ்வரன்,  நாக பூஷணம்,மாதிரி பெயர்கள் பெண்ணாக இருந்தால், நாகம்மா  நாகமணி,  நாகேஸ்வரி,  நாகு  என்று  ஏதாவது ஒரு நாகம் பெயர் இன்றும் வைக்கிறார்கள்.)

எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாள்  சமஸ்க்ரித கல்லூரி  வளாகத்தில்  நல்ல கும்பலாக இருந்த பக்தர்கள் அனைவரும்  காதுகளைத் தீட்டிக் கொண்டு, நாகபூஷண, நாகஸயன, நாகரூபமான அந்த தெய்வமே சொல்லப் போகும் கதையைக் கேட்க  தயாராக  இருந்தார்கள்.!   பேசும் தெய்வத்தின் குரல் ஸன்னமாக  மைக்கில்  ஒலித்தது  எல்லார் காதுகளிலும் விழுந்தது. 

“ஒரு க்ராமத்ல, ஒரு பொண்ணுக்கு…. ‘நல்லபாம்பு‘ ஒண்ணு, கொழந்தையா பொறந்துது! என்ன? ஆஸ்சர்யமா இருக்கோ?… மனுஷக் கொழந்தைக்கு பதிலா, அவ.. பெத்து எடுத்தது, ஒரு நல்லபாம்பு! மொதல்ல எல்லாரும்… கொஞ்சம் என்ன? ரொம்பவே பயந்தா!… அப்றம் அந்த பாம்புக் குட்டியை ஒரு கொழந்தையாட்டம் நெனச்சு, அதுக்கு “நாகராஜன்“ன்னு பேர் வெச்சா…….

…..அதுவும், கொழந்தையாட்டம்… ஆத்துல வளைய வந்துது. ‘நாகராஜா!’..ன்னு கூப்ட்டா, அவன் திரும்பிப் பாப்பான்! வா-ன்னு கூப்ட்டா வருவான்.! மடில ஏறிப் படுத்துப்பான்.! யாரையும் பாத்து பயப்படவும் மாட்டான், யாரையும் பயமுறுத்தவும் மாட்டான்! மொத்தத்ல எல்லார்க்கும் ஸந்தோஷத்தைத்தான் குடுத்துண்டிருந் தான்….

நாகராஜன்… வெறும் பால்தான் ஸாப்டுவான். அதுனால, அவன் பால் ஸாப்டறதுக்காக, கூடத்ல [living room] சின்னதா பள்ளம் பண்ணி வெச்சிருந்தா. பாலைக் காய்ச்சிட்டு, நன்னா ஆறினதும், அந்தக் குழில விட்டுட்டா…… அவன் வந்து குடிச்சுட்டுப் போவான்.

தெனோமும்… காலேல பத்தரை மணிக்கு அவனோட குழில… பாலை விடறது வழக்கம்….

இப்டியா ஒருநா….. அந்த அம்மாக்கு.. அடுத்த க்ராமத்ல ஒரு ஸொந்தக்காரா கல்யாணத்துக்கு போக வேண்டியிருந்துது. அவளுக்கு, தன்னோட பாம்புக் கொழந்தையையும் தங்கூட அழைச்சிண்டு போகணும்னு ரொம்ப ஆசை. ஆனா, பாம்பைத் தூக்கிண்டு போனா… ஒண்ணு,   மத்தவா எல்லோரும்  கேலி செய்வா !இல்லாட்டா.. பயப்படுவான்னு தோணித்து. அதுனால, ஆத்துல இருந்த ஒரு பாட்டிகிட்ட, நாகராஜனைப் பாத்துக்கொங்கோ  என்று  சொல்லிட்டு,   அந்த  அம்மா  ஆத்திலே எல்லாரும் கல்யாணத்துக்குபி புறப்பட்டுட்டா. !

அந்தப் பாட்டிக்கி… கண்ணு ஸெரியா தெரியாது! ஆகையி னால, தன்னோட ஸ்நானம், ஸமையல் எல்லாத்தையுமே ரொம்ப நிதானமாத்தான் பண்ணுவா….

அதுனால அன்னிக்கும், அவளோட எல்லாக் கார்யத்தையும் முடிச்சுண்டு, நாகராஜனுக்கு பாலைக் காய்ச்சி கொண்டு வரதுக்குள்ள, மணி கிட்டத்தட்ட மத்யானம்… 1 மணி ஆய்டுத்து!

பாவம்! கொழந்தை நாகராஜன் பட்னியாக் கெடந்தான்!

வழக்கமா… பத்தரை மணிக்கி, கூடத்துக் குழில தனக்கான பாலைத் தேடித் பாத்துட்டு, பால் இல்லாததால, பஸியோட அந்தக் குழிலேயே சுருண்டு படுத்துண்டுட்டான்….கொழந்த!

இந்தப் பாட்டியோ, மத்யானம் 1 மணிக்கி பாலைக் காய்ச்சிட்டு, கண்ணு தெரியாததுனால, நாகராஜன் அந்தக் குழிக்குள்ள படுத்துண்டு இருக்கறது தெரியாம, அப்டியே சுடச்சுட பாலை அந்தக் குழிக்குள்ள விட்டுட்டா!…..

இதை இத்தனை வருஷங்கள்  கழித்து  இன்று  நாம் படிக்கும் போதே, நமக்குள்  ஏதோ  ஒரு வேதனை ஏற்படுகிறது அல்லவா. அது தான்  பாசம் என்பது.     அடிவயிற்றைக்  கலக்கி, மனஸை பதைபதைக்க வைக்கிறதே  அது மஹா கொடிய விஷமுள்ள  நாகப் பாம்பு என்று  இதை படிக்கும் யாருக்காவது மனதில் தோன்றுகிறதா?   ஐயோ  அந்த குழந்தை கதி  என்ன ஆயிற்று என்று தானே நினைக்க வைக்கிறது?  
 நம் நினைவிலிருந்து  கொடிய விஷம் கொண்ட ஒரு பாம்பு என்ற எண்ணமே  அடியோடு மறைந்துவிட்டது! அன்பின் ஶக்தி இதுதானோ?. பகவான்   நாம்  எவ்வளவு கொடியவர்களாக நாம் இருந்தாலும்  நம்மை   எவ்வளவு ப்ரேமையுடன் பரிபாலிக்கிறான், அருள் கிறான் என்று புரிகிறதா?

வம்… அந்த  சின்ன  பாம்பு   கொழந்த…. அப்டியே…. வெந்து, கருகி, அப்டியே… செத்துப் போய்ட்டான்! பாலுக்காக காத்துண்டிருந்த    பசியோடு இருந்த   அந்த  கொழந்தை நாகராஜனுக்கு, அந்தப் பாலே…..எமனா முடிஞ்சுடுத்து!

தூரத்தில்   எங்கேயோ  ஒரு ஊரிலே  கல்யாணம் தடபுடலா  நடக்கிறது.  அந்த  கல்யாண ஆத்துல… எங்கேயோ ஒரு   மூலையிலே ராத்ரி தூங்கிண்டிருந்த அம்மாக்காரியோட  கனவிலே   அவளோட அருமைப் பிள்ளை செல்லக்குட்டி  நாகராஜன் வந்தான்.  எழுப்பினான்.  

 “அம்மா! பாட்டி, எம்மேல கொதிக்கற பாலை ஊத்திட்டா…! நா… செத்துப் போய்ட்டேன்! என்னை தாழம்பூ காட்டுல பொதைச்சிடுங்கோ! நா… தெய்வமா இருந்து ஒங்களையெல்லாம் காப்பாத்தறேன்”ன்னு சொன்னான்.

ஐயோன்னு கத்தினா  அந்த அம்மா.   பாவம்! பெத்த வயறு பத்தி எரிஞ்சுது! ஒடனேயே தன்னோட க்ராமத்துக்கு ஓடி வந்தா… அந்த   ஆசை அம்மாக்காரி !

கருகிப் பொணமா கெடந்த தன்னோட  பாம்பு கொழந்தையை  எடுத்து மடிலே போட்டுண்டு நெஞ்சு வெடிக்கிறமாதிரி  ஒரு பாட்டம் கதறி தீர்த்தா.  கண் சரியா தெரியாத   பாட்டியையும்  கருகிப்போன  பாம்புக்கு குழந்தையையும்  மாறி மாறி பாத்து  கதறி அழுதா! …..வேறே என்ன பண்ணுவா?

“ஐயோ! பாட்டி! என்ன கார்யம்   பண்ணிட்டே நீ.   என்  கொழந்தையைப் பாத்துக்கச் சொன்னா, அவனை பரலோகத்துக்கே அனுப்பிச்சுட்டியே  பாட்டி.  உன்னை நம்பித்தானே என் செல்வத்தை உன்கிட்ட ஒப்படிச்சுட்டு இந்த மஹா பாவி போனேன் ன்னு அலறினா…

அந்தப் பாட்டியும், பாவம்… கண்ணு தெரியாததால தான் பண்ணின தப்பை நெனச்சு, குமுறிக் குமுறி அழுதா….!

….அருமையா, செல்லமா வளர்த்த கொழந்தை நாகராஜனை, பக்கத்ல இருந்த தாழம்பூ தோட்டத்ல   அவன் கேட்டதுண்டா  மாதிரியே  பொதைச்சா…! அந்த ஶோகமான ஸம்பவத்தால, அந்தக் குடும்பத்ல, பரம்பரை பரம்பரையா பொம்மனாட்டிகள் யாருமே தாழம்பூவை தலைக்கு வெச்சுக்க மாட்டாளாம்…!

இந்த பரம்பரைல வந்திருக்கற ஒரு குடும்பத்தை, வடஆற்காடு மாவட்டத்ல போளூர்கிட்ட ஒரு க்ராமத்ல ஸந்திச்சிருக்கேன்…..!

அவா… எங்கிட்ட ஒரு தாம்ர [copper] ஸாஸனத்தை காட்டினா…! அது அச்சுததேவராயர் குடுத்த ஸாஸனம்! ராஜா… அவாளுக்கு அஞ்சு க்ராமங்களை தானமா குடுத்திருக்கார்.

ஆனா, ராஜப்ரதிக்ரஹ தோஷத்துக்காக, அவா, அதுலேர்ந்து 108 ப்ராஹ்மணாளுக்கு தானம் பண்ணியிருக்கா. அந்த ஸாஸனத்ல, பேரைப் பாத்தா… நாகராஜன், நாகேஶ்வரன்னுதான் நெறைய இருக்கு….!”

பெரியவா கதையை முடிச்சா.  

அங்கிருந்த பலர் கண்ணீரால் நிரம்பிய கண்களை துடைத்துக் கொண்டனர். அந்த கடும் விஷமுள்ள பாம்புக் குட்டியிடம் கூட, “தான், தன்னுடையது” என்ற அபிமானத்தை, கதை கேட்ட நாமும் வைத்துவிட்டதால், அதன் ஶோகமான முடிவு, நம்மை கலங்க அடிக்கிறது. இதே அபிமானத்தை அத்தனை ஜீவராஸிகளிடமும் வைத்துவிட்டால், லோகமே அன்பு மயமாக ஆகிவிடாதா!....

பெரியவாளுடைய மெட்ராஸ் விஜயத்துக்கு பின், பல வர்ஷங்களுக்குப் பிறகு, பெரியவாளின் அனுக்ரஹத் தோடு ஶ்ரீ பரணீதரன், பர்வதமலைக்கு சென்று வருவதற்காக, கடலாடியில் உள்ள மணியக்காரர் ஶ்ரீ நாகேஶ்வரன் வீட்டுக்கு சென்றார்.

அவரைத் தகுந்த துணையோடு பர்வதமலைக்கு அனுப்பி வைத்தவர் ஶ்ரீ நாகேஶ்வரன். 400 வர்ஷங்களுக்கு முன் விஜயநகர ஸாம்ராஜ்யத்தை ஆண்ட அச்சுததேவராயர், இவருடைய முன்னோர்களுக்கு பல க்ராமங்களை மான்யமாக வழங்கியதற்கான தாமிரப்பட்டயங்களை பரணீதரனிடம் காட்டினார்.

அதோடு, தங்கள் வம்ஸத்தில்தான் ஒரு பெண்ணுக்கு, நல்லபாம்பு குட்டி பிறந்த கதையையும் சொன்னார்….!

பெரியவா சொன்னது வெறும் பொழுதுபோக்கு கதையல்ல! நிஜமாகவே நடந்த ஒரு ஸம்பவம்!

அதோடு மிகமிக முக்யமான இன்னொரு விஷயம்……

ஶ்ரீ பரணீதரன் ஸந்தித்த ஶ்ரீ நாகேஶ்வரன் வேறு யாருமில்லை….. ஸாக்ஷாத் நம்ம பெரியவாளின் பூர்வாஶ்ரம மூத்த ஸஹோதரர் ஸ்ரீ கணபதி ஶாஸ்த்ரிகளின் மாப்பிள்ளைதான்! அவருடைய மனைவிக்கு, நம்ம பெரியவா…. பூர்வாஶ்ரம ஸொந்த சித்தப்பா!

“பெரியவா… 1907-ல ஸ்வாமிகளா…. பட்டத்துக்கு வந்தப்போதான் நா…. பொறந்தேன்! அதுனால எங்க தாத்தா பெரியவாளின் அப்பா ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகள்] எனக்கு த்ருபுரஸுந்தரி-ன்னு பேர் வெச்சார்..”

ஶ்ரீ பரணீதரனுக்கு, தன் கையால் உப்புமாவை பண்ணிப் பறிமாறிக்கொண்டே, ஶ்ரீ நாகேஶ்வர ஐயரின் மனைவி சிரித்துக் கொண்டே  இதைக் கூறினாள்.

எப்பேர்ப்பட்ட பாக்யஶாலியான பரம்பரை! 

இன்னொரு  நாகராஜன் விஷயமும் சொல்கிறேன். அடுத்த பதிவில்.

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:54:48 AM4/19/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்  -   நங்கநல்லூர்   J  K  SIVAN 


                      மஹா  பெரியவா  சொன்ன  ஒரு கதை.  

நாம்  சாப்பிடும் உணவு உடம்பை மட்டுமல்ல; மனசையும் பாதிக்கிறது.   
ஒரு  ராஜா . அவனுக்கு  ஒரு குரு.   குரு  அடிக்கடி  அரணமனைக்கு வந்து ராஜாவுக்கு உபதேசம் பண்ணி விட்டு  காட்டுக்கு திரும்புவது  வழக்கம்.  

ஒருநாள்  வெகுநேரம் அரண்மனையிலிருந்து பகல்  போஜன காலம் வந்தது.  

குருநாதா   ”இன்று ஒருநாள் எனக்காக இங்கேயே  பிக்ஷை  பண்ணிட்டுப் போகணும். ஆசார நியமத்தோடு, தனியாகப் பண்ண  ஏற்பாடு செய்றேன்”

ரொம்ப  கெஞ்சிய அவனுடைய பிரார்த்தனையை மறுக்க முடியாமல்   சரி  என்ற குரு  அரண்மனையில்  புசித்தார்.  நல்ல வெயில் வேளை! பஞ்சபக்ஷ்ய போஜனம் பண்ணிய  களைப்பு.   அங்கேயே கொஞ்ச நேரம் இளைப்பாறினார்.

அவர் சிரம பரிகாரம் பண்ணிக்கொண்டிருந்த  அறையின் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு படத்தின் மேல்  அழகான  நல் முத்துமாலை  கண்ணில் பட்டது.   தன்னையறியாமல் அந்த   முத்தாரத்தைப் பார்த்தவுடன், எடுத்து வைத்துக்கொள்ள தோன்றியதால் எடுத்து தனது  மேல்  வஸ்திரத்துக்குள் முடிந்து வைத்துக் கொண்டுவிட்டார்.   காட்டில் ஆஸ்ரமம் திரும்பிய போது அன்றிரவு  முழுக்க  சரியாகத் தூக்கமே இல்லை. மறுநாள் முழித்துக் கொள்கிறபோதே வயிற்றில் ‘கடமுடா’ பண்ண ஆரம்பித்தது.  வயிற்று வலி தாங்க முடியவில்லை.  ஆற்றங்கரையில் உட்கார்ந்து விட்டு குளித்து விட்டு  திரும்பினார். 

அப்போது தான் உடம்பு ஆயாசம்  விட்டுப்போனது.   மனசில் ஒரு தெளிவு. முதல்நாள் உண்டான கெட்ட எண்ணமும், ஆசைகளும் கொஞ்சங் கொஞ்சமாக விலகிக்கொண்டே வந்தன. , அவருடைய வழக்கமான உசந்த மனசே அவருக்குத் திரும்பிவிட்டது. 

 மேல் துண்டில்  முடிந்து வைத்திருந்த   முத்துமாலை கண்ணை, நெஞ்சை உறுத்த,   நேராக  ராஜாவின் அரண்மனைக்கு ஓடி

''ராஜா,   என்ன காரணமென  தெரியவில்லை. நேற்றைக்கு மத்தியானத்திலிருந்து என் புத்தி கெட்டுப்போய்க் கிடந்தது. அந்தக் கெட்ட ஆவேசத்தில் நான்தான் இந்த மஹாபாவத்தைப் பண்ணினது. திருடனை எப்படித் தண்டிக்க வேண்டுமோ அப்படி எனக்கு  சிக்ஷை பண்ணு!’''  என்கிறார்..

ராஜா யோசித்தான்.  ”நீங்களே  சொல்வதால் நீங்கள்தான் ஹாரத்தை எடுத்ததை  நம்புகிறேன்.  எதற்காக அப்படி  பண்ணினீர்கள்?  என்று தெரிந்தால் தான்   நீங்கள் செய்த  குற்றத்துக்குத் தக்க  தண்டனை தரலாம் என்று  நீதி சாஸ்திரம் சொல்கிறது.    யார்,  எதற்கு, என்ன  சந்தர்ப்பத்தில், எந்த நோக்கத்துக்காகக் குற்றம் செய்தார்  என  ஆராய்ந்து   தீர்ப்பு ம் தண்டனையும்  தரவேண்டும்.  அதை கண்டுபிடுக்கவேண்டும்.  

''ராஜா,   நேற்று நீ பிரியமாக  நிர்பந்தம் செய்ததால் நான் இங்கே சாப்பிட்டேன். அதற்கப்புறந்தான் இந்த ப் பாப கார்யத்தில் என் புத்தி பிரவேசித்திருக்கிறது. நேற்றுச் சாப்பிட்ட அன்னம் வயிற்றில் இருந்தவரையில் மனசு கெட்டுப் போயிருந்தது. இன்றைக்கு தெய்வ ஸங்கல்பத்தால்  அது வெளியே போகப் போகக் கெட்ட எண்ணமும் வெளியேறியிருக்கிறது என்று தோன்றுகிறது. இதிலிருந்து, சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி  ஏதோ குணதோஷம் ஏற்பட்டிருக்கிறது.  அந்த   அநுமானத்தை ஊர்ஜிதம் பண்ணிக் கொள்வதற்கு நீ வேண்டுமானால்  ஒரு காரியம் செய்.

 நேற்று அன்னமாகப் பக்குவம் பண்ணின அரிசி முதலானதுகள் எங்கேயிருந்து வந்தன என்று விசாரணை செய் '' என்கிறார் குரு/ 

நாம்  சாப்பிடும்  உணவில்  ப்ரோட்டின், கார்போஹைட்ரேட், வைட்டமின் முதலியன மட்டும் இல்லை. அதைச் சமைத்தவர், தான்யமாகவும், பச்சைக் காய்கறியாகவும் அதை விலைக்கோ தானமாகவோ கொடுத்தவர், அதைப் பயிர் பண்ணியவர் ஆகியவர்களுடைய குணதோஷங்களும்  கூட  அந்த  அன்னத்தில் சூக்ஷ்மமாக டெபாஸிட் ஆகி, சாப்பிடுகிறவனுக்குள் போகிறது. இவர்கள் தோஷமுடையவர்களாயிருந்தால் சாப்பிடுகிறவனையும் அந்தத் தோஷம் தொற்றிக்கொள்ளும். இதுதான் அன்னதோஷம் என்பது.

ராஜா    உக்ராண மணியக்காரனை  வரவழைத்து    ''நேற்று குருவுக்குச் சமைத்துப் போட்ட அரிசி எங்கேயிருந்து வந்தது  சொல்?''  என்றான்.

''ராஜா,    சில நாள் முந்தி ஒரு பெரிய கொள்ளைக்காரன், கடைத் தெருவில் ஒரு பெரிய மளிகைக் கடையிலிருந்து ரொம்ப உசந்ததான ஸன்ன சம்பா மூட்டைகளைத் திருடி, அப்புறம் ராஜ சேவகர்களிடம் பிடிபட்டான். அவனோடு அரிசி மூட்டையும் கைப்பற்றப்பட்டது. அப்புறம், அவனுக்கு  தண்டனையும் கிடைத்தது.   உடைமைக்கு (அரிசிக்கு) சொந்தக்காரன் அதை ராஜாங்கத்திலிருந்து திரும்பி வாங்கிக் கொள்ள  வரவில்லை.   அந்த அரிசி  மூட்டைகள்  அரண்மனைப் பண்டகசாலையில் சேர்க்கப்பட்டுவிட்டது. நேற்றுவரை பிரயோஜனப்படுத்தாத அந்த அரிசியைத்தான் முதன்முதலில் குருவுக்குச் சமைத்துப் போட்டி ருக்கிறார்கள்''

திருட்டுச் சொத்து  ராஜாவிடம் வந்ததால், அது சமைக்கப்பட்டு உண்டதால்  குருவின்  சாத்விக சந்நியாச தர்மத்துக்கு விரோதமானதாக  அவரை ‘அஃபெக்ட்’ AFFECT  பண்ணிவிட்டது.  அவராக  மனசறிந்து குற்றம் பண்ண வில்லை.  அதன்  தீய சக்தி அவரிடமிருந்து வெளியேறியவுடன் அவர்  நார்மல் ஆகிவிட்டார். 

இந்த கதையின்  தத்துவம் என்ன? சாப்பாட்டோடு சம்பந்தப்பட்டவர்களின் குண தோஷங்கள் சாப்பிடுகிற வனை பாதிக்கிறது .  சுத்தமான ஆகாரம் என்றால் ரெண்டு விஷயம் கவனிக்கவேண்டும்.  ஒன்று, ஆகாரமாக ஆகிற வஸ்துக்கள்- தானியம், காய்கறி முதலான பதார்த்தங்கள் சுத்தமானவையாக இருக்க வேண்டுமென் பது.  அதனால் தான்   வெங்காயம், முள்ளங்கி மாதிரி மனசைக் கெடுக்கிறவைகளை   உபயோகிப்பதில்லை.  ரெண்டாவது  அந்த ஆகாரம் நம் இலையில் வந்து விழுகிற வரையில், அதில் சம்பந்தப்பட்டவர்கள் சுத்தமாயிருக்க வேண்டும்!  இப்போதிருக்கும் நிலையில் இது சாத்தியமில்லையே  என்று ஏக்கமாக இருக்கிறது.


sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:55:17 AM4/19/21
to amrith...@googlegroups.com

மானசீக  புனித/உல்லாச பயணம்--       நங்கநல்லூர்  J K SIVAN

       2.  நிழல் சிவலிங்க ஸ்தாணு   -

இந்த கொரோனா காலத்தில்  வெளியே  போக இயலுமா?   உட்கார்ந்த இடத்திலிலிருந்தே  பல இடங்களுக்குச் சென்று   ''தனித்த கூட்டமாக''   அதாவது எத்தனை பேர் சேர்ந்து பயணித்தாலும் ஒருவரை ஒருவர் பார்க்காமல், தொடாமல், வீட்டிலிருந்தே  பல இடங்களுக்குச் சென்று தரிசித்து  மகிழ்வுறும்  வசதி.  தொற்று இல்லாமல்  கற்றுணறும்  அனுபவம்  பெறுகிறோம்.  காசுக்கு அவசியமே இல்லை.  அவரவர்  மொபைல்  அல்லது கம்ப் யூட்டரில் பார்த்து மகிழலாம்.  

முதல் பயணத்தில் அஜந்தா குகைகள் சென்றோமல்லவா. அதை தொடர்ந்து உங்களை ஆந்திர மாநிலம் அழைத்துச் செல்கிறேன்.

நான்   சிறுவயதில் சூளைமேட்டிலிருந்து  கோடம்பாக்கம் ரயில் தண்டவாளம் கடந்து வடக்கு தியாகராயநகர் சென்று பனகல் பார்க்கில் விளையாட செல்வேன்.  அங்கு சாயந்திரத்தில்  வெள்ளை சீருடை அணிந்து மேலே சிகப்பு நீலம்  பச்சை என்று  கலர் கலராக  பட்டையாக  இடுப்பில் பெல்ட் மாதிரி கட்டிக்கொண்டு தலைப்பாகை அல்லது தொப்பி அணிந்து நிறைய  வாத்தியங்களோடு  15 -20  பேர்  ரவுண்டாக நின்றுகொண்டு ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம்  வாசிப்பார்கள்.  அவர்களுக்கு  கார்பொரேஷன் பேண்ட் BAND   என்று பெயர்.   பெரிய   BAND   ஒன்றை சுமந்து  துணி பந்து மாதிரி சுற்றிய முனையோடு ஒருவர் அதை   தொம்  தொம்  என்று அடிக்கும்போது  நாமும் அடிக்க மாட்டோமா என்று ஏக்கமாக இருக்கும்.   இரு பனகல் பார்க்கில்  ரேடியோ சாயந்திர வேளைகளில்  பாடும்.  பெரிய பார்க். எங்கு வேண்டுமானாலும் கேட்கும்.    நிறைய  முதியோர்கள் இவற்றை கேட்க வருவார்கள்.  வாய்  வேர்க்கடலை கொரித்துக் கொண்டிருக்கும்.  சுவாரஸ்யமாக ஊர் வம்பு பேசுவார்கள்.

எனக்கு   கார்பொரேஷன்  BAND  ஆட்கள் வாசிக்கும் பாட்டு புரியாவிட்டாலும் அவர்கள் யூனிபாரம்  தலை தொப்பி,  வாத்தியங்கள் அதிலிருந்து வரும் சப்தம் எல்லாம் ஆர்வமாக  கேட்க பிடிக்கும்.    சுற்றி நின்று    கொண்டோ  அல்லது அங்கே உள்ள  சிமெண்ட்  பெஞ்சுகளில் பல முதியோர்களை, பெண்களை போல் உட்கார்ந்து கொண்டோ அல்ல,  மரங்களை செடிகளை சுற்றி பிடிக்கிற விளையாட்டு ஆடிக்கொண்டு ஓடிக்கொண்டு.  பார்க் நடுவே  பனகல் மஹாராஜா சிலை நின்று கொண்டு இந்த வாத்தியகோஷத்தை அசையாமல் கேட்கும்.

பனகல் ராஜா  வெள்ளையன் ஆட்சியின்  போது  மெட்ராஸ் முதல் அமைச்சராக இருந்தவர்.  வெள்ளைக்காரன் இந்த  ராஜாவை திவான் பகதூர் ஆக்கி  1923-26  கால கட்டத்தில்  மெட்ராஸ் ப்ரெசிடென்சி  முதலமைச்சர்.

ஏன் பனகல் பார்க், மஹாராஜா எல்லாம் இப்போது  நினைவுக்கு வந்தது என்றால்  பனகல் என்ற ஊரை பற்றி  இன்றுபடித்தேன். ஆந்த்ரப் ரதேசத்தில்   நால்கொண்டா ஜில்லாவில்  பனகல் கிராமம் இருக்கிறது.  அங்கே  11-12ம் நூற்றாண்டு  இக்ஷ்வாகு வம்ச ராஜா கட்டிய  சிவாலயம் ஒன்று அற்புதமானது மட்டுமல்ல அதிசயமானதும் கூட இன்னும் இருக்கிறது.   சிவன்  சாயா சோமேஸ்வரஸ்வாமி.  

சாயா என்றால் நிழல் என்று தெரியுமல்லவா?  அந்த கோவிலில்  தினமும் ஒரு  பெரிய நிழல் ஸ்தம்பம் காணப்படுகிறது. எந்த தூணின்  நிழல் சுவற்றில்  அப்படி விழுகிறது என்று எவராலும் இன்னும்   கண்டு பிடிக்கப் படவில்லை.  அடிமுடி காணாத ஸ்தாணு.சோழர்கள் கட்டியது என்கிறார்கள். த்ரிகூடஆலயம் என்று பெயர்.  அற்புதமான  கற்சிலைகள், வேலைப்பாடுகள் நிறைந்த கோவில். ஆ வென்று தாராளமாக  பார்த்து வாயைப் பிளக்கலாம்.  கிழக்கு பார்த்த ஒரு கர்ப்பகிரகத்தில் தான் இந்த  நிழல் தூண் காட் சி  தருகிறது.

ஹைதராபதிலிருந்து 104 கி.மீ.  நால் கொண்டா  பஸ் நிலையத்திலிருந்து 4 கி.மீ.  பனகல்  பஸ் நிலையத்  திலிருந்து 1.4 கி.மீ.  கர்பக்ரஹ ம் எதிரே இருக்கும் நான்கு தூண்களின் ஒட்டு மொத்த நிழல் என்று சொல்கி றார்கள்.   நாள் முழுதும் இந்த நிழல் ஸ்தாணு காட்சி தருகிறது.  

நமது தமிழக ஊரைப்போல்  இல்லை  இந்த கோவில்  பற்றிய  அதிக விவரங்கள் அங்கெல்லாம் இல்லை. 
 தெலுங்கில் இருந்து நமக்கு தெரியவில்லையோ என்னவோ?

 கோவில் தூண்களில்  ராமாயண பாரத  சம்பவங்கள்  செதுக்கி இருக்கிறான் சிற்பி.   நிறைய  யாத்ரீகர்கள் தெலுங்கு ஹிந்தி பேசிக்கொண்டு வருகிறார்கள்.    தமிழ் என்றோ எப்போதோ காதில் விழும்போல் இருக்கிறது.  

இனி  இந்த கோவிலுக்கு நாம் சேர்ந்து செல்வோம்.  அதாவது  ''தனித்து கூட்டமாக '' ,இந்த கோவிலை நேரில் சென்று பார்க்காத வர்களுக்கு  இத்துடன்  இணைத்துள்ள  தெலுங்கு  வீடியோ   விவரங்களைத் தரும்.   நிழல் சிவலிங்கத்தை தரிசியுங்கள். யூட்யூப் கிளிப்பிங்    https://youtu.be/9JLtDDIMR2k

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:55:29 AM4/19/21
to amrith...@googlegroups.com

      வாழை இலை  சாப்பாடு  தீர்க்காயுசு.  --   நங்கநல்லூர்  J K  SIVAN 


நமக்கு  முந்தைய தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள்  என்பதில் சந்தேகம் எனக்கில்லை.   என்  சின்ன வயசில் அரையணாவுக்கு  கையகல  சூடான  இட்லி வாழை இழைக்  கிழிசலில் வைத்து கெட்டியான  தேங்காய் சட்னி இலவச சாம்பாருடன் சாப்பிட்ட்டோம்.  சூடான  சாதமோ, இட்லியோ நன்றாக அலம்பிய வாழையிலை மேல் பட்டவுடன் ஒரு புது மணம்  இட்லிக்கு  கூடிவிடும். தாளித்துக்  கொட்டிய  மிளகாய்ப் பழத்தை  தூர வைத்துவிட்டு  சட்னியோடு பிசைந்து இட்லி  சாப்பிட்டவர்கள் அநேகர்  85-90 வரை வாழ்ந்தார்கள்.  

ஓட்டலுக்கு சென்று  சாப்பிடும் வழக்கம் கிராமங்களில் இல்லை. பெரிய பட்டணங்களில் இருந்தது. ஹோட்டல் என்றால் டேபிள் சாப்பாடு என்று அர்த்தம் இல்லை.  கூடம் மாதிரி  சுவர் ஓரம் தரையில் உட்கார்ந்து  ரெண்டு வரிசை. எதிரும் புதிருமாக. அங்கேயும்  முதலில் வாழை  ஏடு தான் ஒரு பெரிய  பித்தளை டம்ளர் ஜலத்தோடு முதலில்  வரும். அப்பறம் தான்  சூடான  இட்லிகள்.    பட்டு மிளகாய்பொடி என்பது சிகப்பாக 
மிளகாய்த்  தூள், வறுத்து கமகம எனும் மணத்தோடு இலையில்  வைப்பார்.  அரைகுறையாக  அரைத்தால் தான் ருசி. மாவு மாதிரி  பொடியாக  அரைக்கும் வழக்கம் இல்லை. ஒருவேளை  மிக்சி இல்லாமல்  கல்லுரலில்  இடிப்பதாலோ, அம்மியில் பொடிப்பதாலோ அப்படி இருந்ததோ என்னவோ. வாசனையாக செக்கு நல்லெண்ணெய் அதன் மேல் தாராளமாக நனைத்து சூடான  வெள்ளை வெளேர் இட்லி  கொஞ்சம் சிகப்பாக மாறி வாயில் போகும்போது கண்ணில் தண்ணீர் வரும்.  காரம் அவ்வளவு  தேவை சாப்பிடுபவர்களுக்கு.  நான்கு இட்லிகளுக்கு மேல்  சாப்பிட வயிற்றில் இடம் இருக்காது.    ரெண்டணாவுக்கு  சுத்தமான கலப்பட மில்லாத ஆகாரம் கிடைத்த காலம். இட்டலி சாப்பிட்ட வாய்க்கு சூடாக  அரைகப்  டிக்ரீ காப்பி. பீபரி கொட்டை  வறுத்து காப்பி அரைக்கும் மெஷினில் கையால் சுற்றி அரைத்து பில்டரில் வடிகட்டி இறக்கிய  டிகாஷனில் சூடான பால் கலந்த  திக்  THICK   காபி.  ஆவி பறக்கும் மனத்தோடு. சிக்கிரி சேர்க்கமாட்டார்கள்.

அளவு சாப்பாடு வழக்கத்தில் வரவில்லை. கோடம்பாக்கம் ரயில்வே கேட் அருகே  உடுப்பி சீதாராம விலாஸில்  ஆறு அணாவுக்கு முழு சாப்பாடு.  வாசலில் பிராமணாள் ஹோட்டல் என்று   பல ஹோட்டல் பலகைகள் காட்டியதை அப்புறம்  அழித்து  ஹோட்டல் ஆக்கிவிட்டார்கள்.   பேரும்  மாறி  விலையும்  ஏறிவிட்டது.  நாங்கள் சாப்பிடும் காலத்தில்  ஒரு தூக்கு  எடுத்துக் கொண்டு போவோம்.  சீதாராமய்யர் சட்டை போட்டுக்கொண் டு பார்த்ததில்லை. '' என்னடா, அப்பா சௌக்கியமா?  என்று கேட்டு  அரை தூக்கு சாம்பார், ஒரு வாழை இலை யில் நிறைய  உருளைக்கிழங்கோ, கத்திரிக்காயோ, சக்கரைவள்ளிக்கிழங்கு கறியோ தருவார். ரசம் ஒரு  ஹார்லிக்ஸ் சீசாவில் பாதிக்குமேல். சாதம் தாராளமாக  ஒரு பகாசுரன் சாப்பிடும் அளவுக்கு,  பத்தணாவுக்கு கிடைத்தது.  

 பாதி சாப்பாடு  ஆறணாக்கு   தான் வாங்குவோம். அப்பளம் நெய்  எல்லாம் கிடையாது. சாம்பார் ரசம், மோர், கறி , கூட்டு.   அவர் கட்டிக்கொடுக்கிற  வாழையிலையே   மூன்று பேர் சாப்பிட உதவும்.

நான் சொல்ல வந்தது வாழையிலை பற்றி.  நண்பர்கள், சொந்தக்காரர்கள், கல்யாணங்கள்  எங்கேயும் வாழையிலையில் சாப்பிட்டவர்கள். அப்புறம் தட்டு பழக்கம் வந்த பிறகும், தட்டின் மேல் வாழை இலை  கொஞ்சநாள் முழங்கியது.

டிபன், சாப்பாடு  எதுவாக இருந்தாலும்  நமது கலாசாரப்படி வாழை இலையில் சாப்பிடுவதுதான் வழக்கம் அப்போது.  அது தனி  ருசி.  தலைவாழை இலை போட்டு விருந்து என்றாலே தனி மரியாதை,   மகிழ்ச்சி.  தாட் இலை  என்று சொல்வோம். தாட் என்றால் என்ன அர்த்தம் என்று இதுவரை யோசிக்கவில்லை. தெரியாது.  வாழையிலை மறந்து போனபிறகு அதை தெரிந்து கொண்டு என்ன பயன் என்று விட்டுவிட்டேன்.

 வெள்ளைக்காரன் வாழை இலை தெரியாதவன் மட்டுமல்ல  வாழவே தெரியாதவன்..  சல்பர்டை ஆக்சைடு, பாலிவினைல் குளோரைடு, டையாக்சின், எத்திலின், பாலிஸ்டிரின் போன்ற புற்று நோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் நிறைந்த பிளாஸ்டிக்  தட்டுகள், ஹாட் பேக்குகள், பாலிதீன் ஷீசீட்டுகள் தான் இப்போது நமது  வாழை இலையாகி விட்டது.  டாக்டர்கள் சமுதாயம்  வளர்ந்து விட்டது.  என் பிள்ளை டாக்டருக்கு படிக்கிறான் என்று பெருமை வேறு.  

 புது  வீட்டில் பால் காய்ச்சி வாழை மரத்தை கட்டுவது முதல், திருமணம் போன்ற மங்களகரமான
 நிகழ்வுகள் அனைத்திற்கும் வாழை மரத்துக்கே முதலிடம் என்பது    இப்போதும் என் காலத்தில்   இன்னும்   கொஞ்சூண்டு பழக்கத்தில் இருக்கிறது.  சாமிக்கு   வாழையிலையில் படையல்  போட்டு விட்டு, பிளாஸ்டிக் தட்டில் நாம் சாப்பிடுவதே மங்கள நிகழ்வாகி விட்டது. நமது வயிற்றுக்குள் செல்லும் ஆபத்தை நாம் உணரவில்லை.

 சூடான உணவுகளை வைப்பதால் பிளாஸ்டிக் தட்டுகள், தாள்களில் கிளம்பும் ஸ்டிரின், பைஸ்பீனால்
போன்ற நச்சு வாய்வுகளானது இதய குழாய் அடைப்பு, சிறுநீரகம், ரத்த புற்று  நோய், மலட்டுத் தன்மை,
 ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.  எந்த வீட்டில்  இப்போது அரை டஜன் குழந்தைகள் இருக்கிறது?

வாழை இலையில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா?  உடல் எடை கூட விடாமல்  தடுக்கும் நார்ச்சத்து,
உடலில் உப்புகளை சரியாக வைத்திட  பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்புச் சத்துக்கள், கண்களை பாதுகாத்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ.சி,  மற்றும்  குடற்புண்களை ஆற்றும்  சக்தி.  

 ஆல்வான்பியின் கிருமிகளை அழிக்கும் பீனால், ரத்தம்  உறைவதைத் தடுக்கும் சாலிசிலிக் அமிலம் புற்று
நோய் காரணிகளை அழிக்கும். செல்முதிர் பாதுகாப்பு கலன்கள், நிறமிகள் ஆகியன வாழை இலையில் உள்ளன. இவையெல்லாம் வாழை  இலையின் மேல்புறத்தில் உள்ள குளோரோபில் என்னும் பொருளுடன் பின்னி பிணைந்து  காணப்படுகிறது.  நீரை தெளித்து வாழை இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி அந்த இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, மேற்கண்ட சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன்
 கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதனால் ஒவ்வொரு முறை வாழை இலையில்  சாப்பிடும்
 பொழுதும் நமக்கும் ஆயுள் கூடுகிறது.

 வயிற்று புண்ணை குணமாக்கும் வாழை இலையின் குளோரோபில் செல்கள் நீண்ட காலம் அழியாமல்
 இருக்கக் கூடியவை மட்டுமல்ல, வாய், இரைப்பை, சிறுகுடல் போன்ற பகுதிகளில் உள்ள  என்சைம்கள்
 enzyme  மற்றும் செரிமான செல்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு துணை புரிகின்றன.  அல்சர் நோயி
னால் ஏற்பட்ட வயிற்று புண்களை வாழை இலை விரைவில் ஆற்றக்கூடியவை. இரைப்பை மற்றும் முன்
சிறுகுடலில் தோன்றிய புண்களின் அழுகி சதைகளை கரைத்து விட்டு, புதிய  செல்களை தோற்றுவித்து
 புண்களை ஆற்றும் தன்மை வாழை இலைக்கு உண்டு.

ஆகையால் தான் நெருப்பில் சுட்ட புண்களை ஆற்ற வாழை இலையைக் சுற்றுவது நமது வழக்கம்.
 வாழை இலையில் உணவு உட்கொள்வதால் இனப்பெருக்கம் செல்களும் பல்கி பெருகுகின்றன.

 தினமும்  ஒரு வேளை சூடாக உணவை இலையில் வைத்து சாப்பிடுவதால் ஆண் உயிரணுக்கள் அதிகப்படு
வதாக மேற்கத்திய நாடுகளின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.உணவின் விஷத்தன்மை  கெட்டுப்
 போன அல்லது விஷம் கலந்த உணவுகளை வாழை இலையில் வைத்தால் இலையின்  மேற்புறத்தில்
 புதிய நிறத்தில் ஒரு வித நீர் உற்பத்தியாகி, இலையில் ஒட்டாமல் வடிந்து விடும். இதனைவைத்து உணவின்
 விஷத் தன்மையை அறியலாம்.  

'எதிரி  சாப்பிட கூப்பிட்டால் கூட  தலை வாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம்'  என அக்காலத்தில் ஏன் சொன்னார்கள் என்று புரிகிறது.

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:55:29 AM4/19/21
to amrith...@googlegroups.com

பாரத தேசம் என்று தோள்  தட்டுவோம்  --  நங்கநல்லூர்  J K  SIVAN 

நமது பாரத  தேசம்  ஒரு ஏழை நாடு என்று நிறைய  சொல்லும்போது  எனக்கு கண்ணில் ரத்தம் வடிகிறது. என்றும் குன்றா வளம் பெற்றது நமது தேசம்.  என்ன இல்லை இந்த வள நாட்டில். ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்  என்று ஒரு அருமையான  பாடல் இருக்கிறதே. 

அதிருக்கட்டும்.   ஒரு  ஏழை நாட்டுக்கும்  பணக்கார நாட்டுக்கும் என்ன  வித்யாஸம்? அது  பழையநாடு அதனால்  ஏழையோ?   புதிது என்பதால்  பணக்கார தேசமோ?  அதன் வயதை வைத்தா  சொல்வது ? 

பாரதநாடு பழம்பெரும்  நாடு என்பதால் ஏழையா?.  அமெரிக்கா  இப்போது தான்  சில நூறு ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்ததால் பணக்கார தேசமா?  ஒருவேளை   பழைய தேசம் என்பதால் பரம்பரை பணக்கார தேசமா?  அப்படியென்றால் எகிப்து, கிரீஸ்  இத்தாலி   எல்லாம் ரொம்ப பழசாச்சே.   கோடீஸ்வர தேசமோ?  இல்லையே.  புதுசு என்பதால்  பணக்கார நாடோ? அப்படியென்றால்  நியூசீலாந்து, ஆஸ்திரேலியா, கனடா  எல்லாம்  கோடீஸ்வர தேசங்களோ?   ஆகவே  வயசு முக்கியமில்லை.

இயற்கை வளங்களை வைத்து ஒரு நாடு பணக்கார தேசம் எனலாமா?

ஜப்பான்  பாவம்  சின்ன சின்ன தீவுகள் தானே. இருப்பதில் மலைகள் வேறு  ஜாஸ்தி. எரிமலைகள் வேறு.  விவசாயத்துக்கு பொருத்தமில்லை என்றாலும்  உலகில் மிக பெரிய  பணக்கார நாடு.  எங்கிருந்தெல்லாமோ  பொருள்களை  இறக்குமதி செய்து  அதை  முடிவில் விற்பனைப் பொருளாக்கி   ஏற்றுமதி   பணம் சம்பாதிக்கிறதே.

இதோ   ஸ்விட்சர்லாந்து . கோகோ விளையாத நாடு.   ஆனால்  உலகிலேயே  சிறந்த  சாக்லேட்கள் அங்கிருந்து தான் கிடைக்கிறது. பணக்கார நாடு.   எல்லோருடைய பணத்தையும் சேமித்து வைத்திருக்கும் நாடு. கால் நடைகளை பராமரித்து கொஞ்சம் விவசாயம் செய்து உலகில் சிறந்த பால்  சம்பந்தப்பட்ட  பொருள்களை விற்கிறது.  எல்லோர் நம்பிக்கையையும் கொண்ட தேசம். இல்லாவிட்டால் பணத்தை கொண்டு  போடுவார் களா அங்கே?

பணக்கார  ஏழை நாடுகளில் உள்ள  புத்திசாலிகள்  ஒரே மாதிரி தானே  இருக்கிறார்கள்,   கருப்பு வெள்ளை நிறம்  மூளையில்  வித்யாசமாக காட்டவில்லையே.  

ஒரு நாட்டில்  உதவாக்கரைகள்  என்று பட்டம் சூட்டப்பட்டவர்கள்  வேறு எங்கோ சென்று  பொருள்  ஈட்டி நல்ல பெயர் பெறுகிறார்கள்.   கோபு  இங்கே   ஏதோ ஒரு  கம்பெனியில் சிங்கி அடிச்சவன்  அமெரிக்காவிலே போய் பட்டையை கிளப்பி  கொழிக்கிறான்  என்கிறோம்... எங்கே  வித்யாசம் இருக்கிறது?  அப்படி வா வழிக்கு.

ஒரு நாடு  ஏழையா பணக்கார தேசமா என்பதற்கு மேலே சொன்னது காரணங்கள் இல்லை.  
அந்த  தேசத்து மக்கள் , அவர்களின்  

1.கல்வித்தரம்.  2 பண்பாடு  3. நம்பிக்கையான உழைப்பு.  4. பொறுப்பு. 4. சட்டத்தை மதித்து ஒழுக்கமான  நடவடிக்கை. 5. உழைக்க விருப்பம்.   6. சிக்கனம்.  சேமிப்பு    7.  எதையாவது  பிரயோஜனமாக செய்யவேண்டும் என்ற உந்துதல்  9. நேரத்தை வீணாக்காமல் குறித்த வேளையில்  செயல்படுவது.   சுறுசுறுப்பு  

இந்தியா  ஏழை நாடு என்றால் என்ன அர்த்தம்?  அநேக  இந்தியர்கள் இன்னும் உழைப்பின் ரஹஸ்யத்தை, மேன்மையை உணரவில்லை என்று பொருள்.

 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை  இன்னும்  புரிந்துகொள்ளவில்லை.  உயரவேண்டும்,  வளரவேண்டும்,  என்பது தனிமனித வாழ்க்கை அல்ல, நமது தேசம் என்ற  குறிக்கோள் மனதில் இன்னும் இடம் பெறவில் லை...மற்றவர்  உழைப்பில் வாழும் சுகம்  மனதை விட்டு போகவேண்டும். தவறுகள் தெரிந்து செய்யப்படுகிறது.  சகல வளமும் பெற்ற  உலகில்  அதிக  மனித சக்தி கொண்ட ஒரு தேசமாக இருந்தும் முதல் நிலை வகிக்க தவறுகிறோம்.     

 இந்தியனே, விழித்துக்கொள், எழுந்திரு, செயல்படு.  உனது நாட்டை உன்னதமான இந்த தேசத்தை அதற்கே உரிமையான உயர்ந்த இடத்தில் கொண்டு சேர்.  அது உன் கடமை. ரத்தத்தில் உள்ள  உணர்வு.  புரிந்து செயல்படு .  நீ வணங்கும் தெய்வம் உனக்கு துணை நிற்கும். 

 

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:56:14 AM4/19/21
to amrith...@googlegroups.com

  இப்படி தான் வழக்கம்...   நங்கநல்லூர்   J K  SIVAN ---


இது ஒரு வித்யாசமான கட்டுரை.  கொஞ்சம்  படிக்கும்போது நெளியவேண்டி இருக்கும். என்னசெய்வது?

நேற்று வரை ஒன்றாக இருந்தவர்கள், எத்தனையோ  வருஷங்கள் ஒன்றாக  கூடவே  சாப்பிட்டவர்கள், படுத்தவர்கள், சண்டை போட்டவர்களில், உதவி செய்தவர்களில்   ஓருவர்  இன்று இல்லை,   இனி இல்லை, என்றபோது அந்த பிரிவு  மற்றவரை எவ்வளவு வாட்டும்?, அவரது வேதனை எப்படி இருக்கும்?  என்று எழுதவோ சொல்லவோ இயலாது.  அனுபவித்தவருக்கு தான் அதன் உண்மை நிலை புரியும்.  நெஞ்சம் அவ்வளவு சுலபமாக  எதையும் மறப்பதில்லை.  காலம் தான் கொஞ்சம் கொஞ்சமாக  சகிப்புத் தன்மையை வளர்க்கும். எவ்வளவு வார்த்தைகள் வேண்டுமானாலும் ஆறுதல் சொல்லலாம். முதுகில் தட்டிக் கொடுக் கலாம்.  அது பிரிவின் துயரைப் போகாது.

 என் நண்பர் ஒருவர் சில வாரங்களுக்கு முன் தனது  மனைவியை இழந்து டெலிபோனில் என்னிடம்  கதறினார். நானும்  செத்துவிட வேண்டும் என்று விருப்பத்தைத்  தெரிவித்தார்.   அவருக்கு முடிந்தவரை அவருடைய முடிவு அவர் கையில் இல்லை. மற்றவர்களுக்கு இன்னும் சேவை செய்ய பகவான் உடலை, உயிரை விட்டு வைத்திருக்கிறான் என்று புரியவைப்பதற்கு படாத பாடு பட்டேன்.

இறந்தவர் விஷயத்துக்கு வருவோம்.   இறந்தபின் இந்த உடல் ஒரு   உணர்ச்சியற்ற மரக்கட்டை.  உயிர் இருக்கும் வரை கால் சுண்டுவிரலில்   எங்காவது இடித்துக் கொண்டால்  கூட  உச்சி மண்டை வரை வலிக்கும். ஆஹா  ஊஹூ  என குதிக்கிறோம்.  அடிபடாதவரை அந்த சுண்டுவிரல் நமது எண்ணத்திலோ கவனத்
திலோ இல்லை.  அப்படி வலி பொறுக்காத இந்த உடலை இப்போது நெருப்பிலிடப்போகிறார்கள்.  அதனாலென்ன?

எரிப்பது முன்போல் ஆற்றங்கரையில்,   ஒதுக்குப்புரத்தில்   இல்லை. விறகுகள் சேர்த்து விரட்டி மேல் வைத்து நெருப்பு மூட்டுவது  இப்போது இல்லை.  இடமும் இல்லை, ஆளும் கிடையாது. புகையும்  நாற்றமும்  மறுக்கப்படும்.  எங்கும் மின்சார மேடை எரிப்பு  ஊருக்கு ஊர்  வந்துவிட்டது. , ஒரு டப்பாவில் சாம்பல் தான்.  மின்சார எரிப்பு வசதி எங்கும் இன்னும் நாடு முழுதும் பரவவில்லை என்பதால் ஆங்காங்கே    சிற்சில கிராமங்களில் விறகு வைத்து சிதை மூட்டி எரிப்பது தொடர்கிறது.  காசியில் ஒரே நேரத்தில் பல எரியும் சிதைகள்.
                                                        
இத்தனை நாள் நம்முடன் காரில்,  வண்டியில்,   அருகே   பேசிக்கொண்டு அமர்ந்திருந்தவர்  இப்போது நமது பையில் ஒரு டப்பாவில் பிடி சாம்பல்.  அரைமணியில் இந்த மாறுதல்.   அந்த சாம்பலை பாலில் கரைத்து, கலந்து,   சென்னை  போன்ற நகரங்களில் கடலில் கொட்ட வசதி இருக்கிறது.   புண்ய நதிகளுக்கு சென்று அங்கே கரைக்கும்  வழக்கமும் இருக்கிறது. இது தான் மந்திரங்களோடு செய்யும்  சஞ்சயனம்.   குளித்துவிட்டு  மொட்டைத்தலையோடு வீடு திரும்பும்  பிள்ளைகள்  பலர்  மற்ற  பன்னிரண்டு நாள்  காரியங்களை பணத்தை கருதாமல்  செய்பவர்கள்  இன்னும்  இருக்கிறார்கள்.   இறந்ததிலிருந்து  பன்னிரண்டு நாட்கள்  காரியங்கள் எல்லா இடங்களிலும் எல்லா நாட்களிலும் செய்யும் வழக்கம் நின்று விட்டது.  இப்போதெல்லாம் ஈம, அந்திம காரியங்கள் செய்ய தனி இடம்  கர்மஸ்தலங்கள்  இருக்கிறது.  அங்கே  இதற்கென  வாடிக்கையான   ப்ரோஹிதர்கள், வைதீகர்கள் இருக்கிறார்கள். மொத்தமாக  பேசி ஒரு தொகை வாங்கி ஏற்பாடுகள்  செய்யும் குடும்ப வாத்யார்களும்  இருக்கிறார்கள் .

 பதிமூன்றாம் நாள் சுபஸ்வீகரணம்  எனும்  தீட்டை  நீக்கி  பரிசுத்தமாக்கும்  நாள். அன்று எல்லா உறவினர்களும் பங்குகொண்டு  பாயசம் வடையோடு சாப்பிட்டு விட்டு செல்வது  வழக்கம் .

முன்பெல்லாம்  வாத்தியார்கள்  முதல் நாள் அன்று  இறந்தவரின்  ஜீவனை ஒரு கல்லில் ஆவாஹனம் செயது மற்ற நாள் காரியங்களுக்கு உபயோகிப்பது வழக்கம்.  இந்த  கல்லூன்றி  பாஷாண  ஸ்தாபனம் செய்வதை     காலப்போக்கில், மற்ற வசதிகளை கருத்தில் கொண்டு  மூன்றாம் நாள்  ஆரம்பிக்கிறார்கள். பல மதத்தினர்  வசிக்கும்  FLAT  பிளாட்களில், இதற்கெல்லாம் வசதியோ அனுமதியோ சில இடங்களில் கிடைப்பதில்லை  என்பதால் இதற்கென உள்ள பொது இடங்களில் செய்யவேண்டி இருக்கிறது.

ஏன் இந்த கல் ஊன்றுதல் என்றால் இறந்தவுடன்  ஜீவன்  உடலை விட்டு சென்றாலும் உலகை விட்டு  வெளியே செல்வதில்லை. வேறு உடலுக்கு காத்திருக்கும். அது பத்துநாள்  என்று உத்தேசம் என்பதால் அங்கேயே  சுற்றிக்கொண்டிருக்கும் என கருடபுராணம் சொல்கிறது.  சென்ற ஜீவனுக்கு இனி வடை பாயசம் ஐஸ்க்ரீம் கிடையாது. அதற்கு தேவை எள்ளும் ஜலமும்.  கல் ஊன்றிய இடத்தில் மற்ற  பன்னிரண்டு நாள் காரியம் நடப்பதற்கு காரணம் அந்த ஜீவன் அங்கே தான் சுற்றிக்கொண்டிருக்கும் என்பதால்.  அதைக் கரை ஏற்ற தான் இந்த  காரியங்கள்.   

வாரிசுகள்  வெளிநாட்டில் இருப்பதால்  சடங்குகளில் கொஞ்சம் மாறுபாடுகள் இருந்தால் அதை தவிர்க்க முடியாது. வேறு யார் செய்ய முடியும்?  முறைப்படி  நடக்கவேண்டுமானால்  இறந்த  பத்துமணி நேரத்துக்குள் அவரது உடல் தகனம் செய்யப்படவேண்டும்.   

ஒரு கருடபுராண விஷயம் சொல்லி முடிக்கிறேன்.   இறந்தபின் உடனே  தஹனம்  கூடாது.   மூன்றரை நாலு மணிநேரத்திற்கு பிறகு தான் ALLOWED .  ஏன் என்றால் இறந்தவுடன் யமதூதர்கள்  அட்ரஸ் கண்டு பிடித்துக்கொண்டு வருவார்கள். ஜீவனை உடனே அவர்கள் யமலோகம் தூக்கிக்கொண்டு செல்ல அனுமதி இல்லை. சித்ரபுத்ரன் கணக்கு பார்க்கவேண்டும் அல்லவா? இறந்தவன் காலத்தை அவன் வாழ்வை கண்காணித்து இனி அவனை தூக்கிக்கொண்டு வா என்று சித்ரபுத்ரன் சொல்ல கண் சிமிட்டும் நேரம் ஆகுமாம். அவன் கண் சிமிட்டும் நேரம் நமக்கு மூன்றரை நாலு மணிநேரம் என்று எங்கோ படித்தேன். 

மீதி அப்புறம்.

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:56:14 AM4/19/21
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி   --   நங்கநல்லூர்   J K  SIVAN 
தாகூர்      


                          45  பாரோ  க்ரிஷ்ணய்யா


45    Have you not heard his silent steps? He comes, comes, ever comes.
Every moment and every age, every day and every night he comes, comes, ever comes.
Many a song have I sung in many a mood of mind,

but all their notes have always proclaimed, `He comes, comes, ever comes.'
In the fragrant days of sunny April through the forest path he comes, comes, ever comes.
In the rainy gloom of July nights on the thundering chariot of clouds he comes, comes, ever comes.
In sorrow after sorrow it is his steps that press upon my heart,

 and it is the golden touch of his feet that makes my joy to shine.

உங்களுக்கு  காலடி சத்தம் கேட்கிறதா?  அவன்  மெல்லிய  பாதங்கள்  தண்டை கொலுசுவுடன் ஒலிக்கும் சங்கீத சப்தம் மெல்லிதாக  கேட்கிறதா?  எனக்கு  கேட்கிறது.

அவன் வருகிறான். கண்ணன் என்னும் மன்னன் இதோ வருகிறான், வருகிறான், வந்துகொண்டே இருக்கிறான்.  வா கண்ணா வா.

ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு காலமும், ஒவ்வொரு தினமும், பகலும், இரவும் வருகிறான், வருகிறான், வந்து கொண்டே இருக்கிறான்.

என் மனம்  ஆனந்தமாக களிக்கும்  போதும் சரி,  துக்கத்தில்  கண்ணீர்  வடித்துக்  கொண்டு ''துன்பம் நேர்கையி''லும்  சரி, என் எல்லா பாட்டிலும்  உள்ள  ஒரே வார்த்தை  நீ  '' வருகிறாய், வருகிறாய், வந்துகொண்டே இருக்கிறாய்'' தான்  கண்ணா.

ஏப்ரல் மாதம்  வெயில் எப்படி?   சென்னையில்  இருக்கிறவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.  கோடை வெயிலில் எங்கும் பூத்து குலுங்கும் காட்டுப்பாதையில் நீ  'வருகிறாய், வருகிறாய்,  வந்துகொண்டே இருக்கி றாய் ''.  கண்ணா,  வா வா வா.

கொட்டும் மழையிலும் உன் மேகத் தேர் மீது  ஏறி  கடகட வென்று சப்தம் செய்து கொண்டு குதிரைகள் கனைக்க , வேகமாக வருகிறவனாயிற்றே  நீ,   இதோ    'வருகிறாய் , வருகிறாய், வந்துகொண்டே இருக்கிறாய் '' என்பேனே.

துன்பங்கள் தனியாக வருவதில்லை, ஒன்றன் பின் ஒன்றாக அடி  மேல் அடி.  அலைக்கு மேல் மேல் அலையாக வரும்போது என் இதயம் நொறுங்கும். அப்போது. உன் திருப் பாதம்  பஞ்சு போல் மெத்து மெத்தென  என் நெஞ்சை   வருடும்.  அப்போது  எங்கிருந்து தான் அவ்வளவு சந்தோஷம் எனக்கு கிடைக்கிறது ????பரமானந்தம் ப்ரம்மானந்தத்தில்  ஜொலிப்பேனே. எப்படி கண்ணா  உன் சின்னஞ்சிறிய பதத்திற்கு,   பாதத்திற்கு, அவ்வளவு அபூர்வ சக்தி??  பாரோ  க்ரிஷ்ணய்யா ....

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:56:26 AM4/19/21
to amrith...@googlegroups.com

சாஸ்திரிகளின் முப்பது நாள் ராமாயணம்-   7

நங்கநல்லூர்  J K SIVAN
 
ராமனின்  மனதை  உறுத்திக்கொண்டே  இருந்த எண்ணம். 
 '' சீதை  நாணயமானவளா?  எனக்கு சிறிது சந்தேகம் இருந்தபோது  அக்னிபரீக்ஷையில்  தேறிவிட்டாள் .   ஆனால்  ஊரில் அபவாத  பேச்சு,  அவளை பற்றி கேள்வியுறும்போது  ராமனின்  மனதில் முன்பு  சிறிதாக  இருந்த சந்தேகம் விருக்ஷமாகி வளர்ந்து  நிர்தாக்ஷண் யமாக அவளை  கர்ப்பிணியாக இருந்தும்  நாடு கடத்தச் செய்துவிட்டது.  

 இந்த செயல்  சற்று ராமனின் மேல்  அதிருப்திப்  பட வைக்கிறது. ஏற்றுக் கொள்ளமுடியவில்லை  என்கிறார் சாஸ்திரிகள்.  வால்மீகி  ஸ்லோகம்  அப்படி சொல்கிறது.  நானோ சாஸ்திரியோ சொந்தமாக அபிப்ராயம் தெரிவிக்கவில்லை.    

ராமன்  சகோதரர்களை அழைக்கிறான்,  நமது  குலத்திற்கு இப்படி ஒரு  கெட்டபெயர் வருமானால் முதலில் உங்களையெல்லாம் கொன்றுவிட்டு நானும்  என்னை மாய்த்துக்கொள்வது ஒன்றே வழி.   உலகத்தில் தனது பெயர் கெட்டுப்போனவனை கடவுளும் வெறுப்பார்.  என்கிறான்.

 சீதையைப்  பற்றி  துளியும் கவலைப்படவில்லை ராமர்.  ஒன்று புரிந்து கொள்ளவேண்டும். ராமர் காலத்தில்  பெண்கள்  ஆண்களின் சொத்து. போகப் பொருள். ஆண்களின்  எண்ணமே, தீர்ப்பு.   எப்போதும் முடிவானது.  ஆண்களின்  கௌரவத்துக்கு,  சமூக அந்தஸ்துக்கு முன்  பெண்கள் சுய கெளரவம் அற்றவர்கள். அவர்கள் பேச்சு எடுபடவில்லை.    ஆகவே  தான்  ராமர்  சீதையை  நாடுகடத்தினார். அவள்  வாதத்தை கேட்கவில்லை.  ராமரின் சகோதரர்கள்  குனிந்த தலை நிமிரவில்லை.  ராமன் முடிவே முடிவு என ஏற்பவர்கள்.

ராமரின்  பெருமைக்கு  களங்கம் விளைவித்த,  கறை படர்ந்த நிகழ்ச்சி இது.  மனைவியின்   நடத்தையில் சந்தேகம் கொண்ட  ஒரு  கணவனின்  பொறாமைச் செயல்.

ராமாயணத்தில் மூன்று சகோதர்கள்  ராஜ்யதிகாரத்துக்கு  போட்டியாக இருந்தவர்கள்.  மூவருமே   தம்பிகள்.   சுக்ரீவன்,  விபீஷணன்  இருவரும்  அண்ணனால் உயிரிழக்காமல் தப்பியவர்கள்.  அண்ணன் மறைவுக்குப்   பின்னர்  ராஜாவானவர்கள் , சுக்ரீவனும்  விபீஷணனும்  அப்படி என்றாலும் பரதன் அண்ணனால் தனக்கு கிடைத்த  ராஜ்யத்தை வேண்டாம் என்றவன்.  அண்ணன்  வரவுக்காக  அதை தியாகம் செய்தவன்.  அண்ணன் மீது அளவற்ற பக்தி கொண்டவன். மற்ற இருவரை விட இவன் வித்யாசமானவன்.

லக்ஷ்மணனையும்  பரதனையும் ஒப்பிடுகையில்,  லக்ஷ்மணன் மீது   அவன் ஒரு பச்சைமிளகாய். சட்டென கோபம் கொள்பவன், அடுத்த நிமிஷமே  சாந்தமாகி  விடுபவன். படபடப்புக் காரன்.   அண்ணனைத் தெய்வமாக வழிபட்டவன்,   என்கிற  அன்பு நமக்கு  மேலிடுகிறது.  

ஆனால்  அதே சமயம்  பரதன் மேல் அளவற்ற மதிப்பு, மரியாதையும் உண்டாகிறது.  ஸ்திர புத்திக்காரன்.  தன்னம்பிக்கை கொண்ட  நேர்மையாளன்.  அவர் செய்தது தவறு  என்று  வசிஷ்டரையே  எதிர்த்தவன்,  ஞானி என்ற உணர்வு ஏற்படுகிறது.  

கோபத்தில் கௌசல்யா பரதனை ஏசுகிறாள்.  அக்னிகுண்டத்தை  அவனிடமிருந்து  பிடுங்கி  ''நீ  உன் தந்தை  தசரதனுக்கு கொள்ளி போட லாயக்கு இல்லாதவன்''   என்கிறாள்.  பரதனோ  நான் ராமன் வனவாசம் செல்வதற்கு காரணமாக இருந்தால்  இந்த கணமே  அதே அக்னி என்னை ஆட்கொள்ளட்டும் என்று தனது தலைமேல் அடித்து சத்தியம் செய்கிறான்.  

 பரதனுக்கு எப்படி  ஒரு ஐடியா இப்படி வந்தது.  ராமன் வராவிட்டால் அவன் பாதுகையாவது ஆளவேண்டும் என்று.   இது  இன்னொரு விஷயத்திலும் புரிகிறது.  அயோதித்திக்கு அவசரமாக திரும்பி வந்த பரதன் அவன் அம்மா கைகேயி செய்த விஷயங்களை, ஏற்பாடுகளை அறிந்து கோபமும் வருத்தமும் அடைகிறான்.  ராமனுக்கு பதில் பதினாலு வருஷம் நான் காட்டுக்கு போகிறேன் என்று ஆரம்பிக்கிறான்.  ஒன்றுக்கு பதிலாக மற்றொன்று என்ற எண்ணம் அவன் மனதில் முன்பே  இருந்திருக்கிறது.

ராமனும் சீதையும்  படுத்திருந்த  புல் தரையை பார்த்து கண்ணீர் வடிக்கிறான்.  அங்கே  சீதையின் நகை  களிலிருந்து உதிர்ந்த சில  தங்க துகள்களை பார்க்கிறான் என்கிறார்  வால்மீகி.  அந்த காலத்து பொன்னாபரணம் செய்யும்  தட்டார்கள் அவ்வளவு  மட்டமாகவா   உதிரும்படி   நகைகளைச்   செய்வார்கள்?    

பாரத்வாஜ  மகரிஷி ஆஸ்ரமம் போகும்போது பட்டாடை அணிந்திருந்த  பரதன்   பிறகு ராமனை பார்க்கும்போது அவன் மரவுரியை கண்டு  துயரம் கொண்டு  தானும்  மரவுரி தரிக்க எண்ணுகிறான்.

''சத்ருக்னா , அண்ணா ராமனின் திருப்பாதங்களை தரிசிக்கும் வரை எனக்கு  நிம்மதி இல்லை''  என்கிறான்.
 பாரத்வாஜ மகரிஷியிடம்  தனது தாய்  கைகேயியின்  தீய எண்ணங்களைப்  பற்றி ஏசுகிறான். பிறகு  ராமனிடம், ''அண்ணா நீ  ஏற்றுக்கொள்ளமாட்டாய்  என்ற  பயத்தினால்  நான் அவளை கொல்லாமல் விட்டேன்''  என்கிறான்.

சித்ரகூடத்திற்கு  கௌசல்யா சுமித்ராவுடன்  கைகேயியும்  வருகிறாள். தனது செயலுக்கு வருந்துகிறாள். அப்போதும்  பரதன் மனம் இளகவில்லை.   ராமன்  கைகேயியை கண்டதும்  மற்ற இரு அன்னைகளை  வணங்குவது போல் அவளையும் மரியாதையுடன் வணங்குகிறான்.  அவளைப்பற்றி உயர்வாக பரதனிடம் பேசுகிறான்.  பரதனை அவளுக்கு    தாய் ஸ்தானத்துக்குண்டான உரிய மரியாதைகளை கொடுக்கவேண்டும் என்று வற்புறுத்துகிறான்.

சாஸ்திரிகள் ராமாயண பிரசங்கம் தொடரும்  

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:56:26 AM4/19/21
to amrith...@googlegroups.com

ஸூர்தாஸ்   -   நங்கநல்லூர்  J K  SIVAN  ---


        37,   நடையா இது. ஒரு நாடகமன்றோ நடக்குது !


கோகுலத்தில்  ஒவ்வொருநாளும்   பரபரப்பான செய்தி காற்றை விட வேகமாக எங்கும் பரவி விடும் . இன்று  ஒரு விறுவிறுப்பான செய்தி.   
ஓஹோ  அப்படியா , என்ன விசேஷ செய்தி..
கண்ணன் பயல் எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டான்.  தவழ்ந்தான். உட்கார்ந்தான். பிறகு? மெதுவாக எதையாவது பிடித்துக் கொண்டு நிற்க முயன்றான். - அப்புறம்?   
''ஸார் இப்போ   அம்மா கையை பிடிச்சுண்டு  நடக்க ஆரம்பித்து விட்டார்!

உடம்பு முழுதும் நீலமேக சியாமள வர்ணம். என்ன என்ன ஆபரணங்கள் அவனுக்கு அணிவிக்க முடியுமோ அதெல்லாம் அவன் மேல் பார்க்கலாம்.  எண்ணக்கூட முடியாது. எண்ணம் கொள்ளாத அளவு மனம் நிரம்பிய ஆபரணங்கள்.

தலையில் அலை அலையாக, சுருண்ட திரண்ட கேசம். அதன் மேல் தலையை சுற்றி கிரீடம் போல் ஒரு ப்ரோச். அதில் மயில் இறகு. ஒரு அழகான பெரிய மயில் அளித்த பரிசு அவனுக்கு.   அழகிய கால்கள். அதில் கொலுசு தண்டைகள் .

அவனை அவன் நகைக்காக கடத்திக்கொண்டு போவதை விட அவன் அழகுக்காகவே கடத்திப் போக எண்ணற்ற கோபியர்கள்!!

யசோதா அவனது மெத்து மெத்தென்ற சிறிய கைகளை தன் இருகைகளால் பிடித்துக் கொண்டு குனிந்து நிற்கிறாள். எதிரே அவன் பிரயாசைப் பட்டு ஒரு காலை மெதுவாக தூக்கி வைக்கப்  பார்க்கிறான். ஒரு கால் தூக்கியாயிற்று. இன்னொன்று இன்னும் தரையில் அழுந்தி இருக்கிறது. தூக்கிய கால் இப்போது தரையில். தரையில் இருந்த காலை இப்போது  தூக்கியாகிவிட்டது. ஒரு சில அங்குலங்கள் அவன் நகர்ந்து விட்டான்.

அட கண்ணன் நடக்கிறானே .   ரெண்டு ரெண்டு அடியாக.    அடடா,   என்ன கொள்ளை அழகு.  யசோதா இந்த உலகத்திலேயே இல்லை. அவ்வளவு சந்தோஷம் முகத்தில். அவளுக்கு மட்டுமா. அத்தனை கோபியர்களுக்கும் தான். எழுதும் எனக்கும் படிக்கும் உங்களுக்கும் கூட தான்.

மூன்று உலகையும் ஆகாயத்தையும் அளந்த கால்களைக்  கொண்டவனா ரெண்டு அடி எடுத்து வைக்க பிரயாசைப் படுகிறான். எல்லாம் மாயாவியின் நடிப்பு. நம்மை மகிழ்விக்க.

ருணுக் ஜுணுக் கிளிங் க்ளாங் -- சங்கீத ஒலியாக வேத நாதமாக அவன் காலில் அணிந்த தண்டை கொலுசு சபதிக்கிறது. அவன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும்போது. மனது கிலேசம் கலைந்து பரவசம் அடைகிறது. ஞானத்தின் எல்லையை தொடுகிறதே.

பாவம் அந்த சின்ன கண்ணன். குழந்தைப் பயல். நாலைந்து அடி எடுத்து வைத்ததில் களைத்து போய் விட்டது. அப்படியே தொபுக்கடீ என்று தரையில் அம்மா யசோதை கையைப் பிடித்தபடி தரையில் உட்கார்ந்து விட்டு சிரிக்கிறது. விஸ்வரூபத்தின் விளையாட்டு சிரிப்பு.

குழந்தையை '' கால் வலிக்கிறதா கிருஷ்ணா'' என்று அம்மா யசோதை பிடித்து விடுகிறாள். அடுத்த கணம் எழுந்து நிற்கிறான். நடக்க ஆசை வந்துவிட்டது. எது நடக்கிறதோ, எது எப்படி நடக்கவேண்டுமோ, எது நடந்தாக வேண்டுமோ, எது நடக்க கூடாதோ எல்லாம் அனுசரித்து நம்மை வழி நடத்துபவன் நடக்க ஆரம்பித்து விட்டான்.
கலகலவென்று அத்தனை பெண்களும் சிரிக்க அவனும் தலையாட்டி கைகொட்டி சிரிக்கிறான்.
ஆட்டுவிப்பவன் அல்லவா? ஆடாது அசங்காது வா கண்ணா !

ஸூர்தாஸ் என்ன அற்புத கற்பனை சக்தி கொண்டவர். கண்ணன் முதலில் நடை பயின்றதை பற்றி நாம் எவராவது இதுவரை சிந்தித்து இருக்கிறோமா?. அவர் சிந்திக்க காரணம்? அவர் மனதில் அவன் நடந்து காட்டி இருக்கிறான். கண் இல்லை உனக்கு. உன் மனக்கண்ணில் தோன்றுகிறேன் என்று சொன்னானோ!

Kanha walks
Two steps at a time,
Yasoda's desires see
Fulfilment sublime.
'Runuk jhunk' sing His anklets,
A sound
So pleasing to the mind.
He sits,
But then is up immediately,
A sight difficult to describe.
All the ladies of Braj tire
Of seeing such beauty divine.

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:56:43 AM4/19/21
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி   --    நங்கநல்லூர்   J K  SIVAN  --
தாகூர் 


      46. அருகில் வாராய்  கண்ணா                                      
                      
46.  I know not from what distant time thou art ever coming nearer to meet me.
Thy sun and stars can never keep thee hidden from me for aye.
In many a morning and eve thy footsteps have been heard and 
thy messenger has come within my heart and called me in secret.
I know not only why today my life is all astir, and
 a feeling of tremulous joy is passing through my heart.
It is as if the time were come to wind up my work, and
I feel in the air a faint smell of thy sweet presence.


கிருஷ்ணா, நீ எங்கோ  வெகுதூரத்தில் இருப்பவன் என்று மட்டும் தெரியும். எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால்  நீ  கிட்டேயும் இருப்பவன் என்று  ஏனோ  யாரும்  நினைவில் வைத்துக்கொள்வதில்லை. 
ஆகவே  எந்த நேரம் என் அருகில் நீ வருவாய் என நான் அறியேன். நீ படைத்த சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் உன்னை  நான் பார்க்கவிடாமல் தடுக்க முயன்றாலும் நான் விடமாட்டேன்.  
ஆமடா,கண்ணா,   என் கண்ணில் நீ படாமல் போக முடியாது.

எத்தனையோ காலை  வேளைகளிலும், சாயந்திரங்களிலும் நீ வரும் காலடி சத்தம் என் காதில் கேட்டிருக்கிறேன். நீ அனுப்பிய ஆள் என் மனக்கதவை தட்டி உள்ளே புகுந்து ரகசியமாக என்னை கூப்பிட்டதுண்டு.

அனால்  இன்று   ஏனோ என் மனது அளவுகடந்த குதூகலத்தில் ஆடுகிறது.  ஒரு படபடப்பு  நடுக்கம்  இன்றுமட்டும்  ஏன்? 
எங்கோ ஆகாயத்தில் பறப்பது போல் ஆனந்தத்தில் ஆடுகிறேன்! எங்கும் எதுவுமே சந்தோஷமாக தான் கண்ணில் படுகிறது. என் இதயம் மகிச்சியில் பெருத்து விட்டது.

ஒருவேளை  என் காரியங்கள் எல்லாம் முடிந்து விட்டதோ? என்னை சுற்றிலும் வீசும்  காற்றில் உன் மீதிருந்து பரவும்  சுகந்தம் மெலிதாக மணக்கிறது. ஆம்  எனக்கு  புரிந்துவிட்டது.  
இன்று  நீ என்  அருகில் வந்துவிட்டாய் கண்ணா!

 கண்ணா ,  நீ  எப்போதும்  அருகிலேயே  இருப்பவன்,  என்  கூடவே உள்ளவன்  என்று புரிந்து கொண்டு விட்டால்  நீ   வெகு தூரத்தில் எப்போதுமே இல்லை.   நம்முள்ளே   எப்போதும்   நம்முடனேயே  வாழ்பவனை நாம் அறிந்து  கொள்ளாவிட்டால் தவறு அவனுடையதில்லையே .     ஆனந்த பரவசத்தில்  ஆகாசத்தில் பறக்கிறேன் .

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:56:52 AM4/19/21
to amrith...@googlegroups.com
நன்றி கிருஷ்ணா, நன்றி    -   நங்கநல்லூர்   J K  SIVAN


கிருஷ்ணா,  நான்  பெரும்  பணக்காரனடா, உன்னருளால்.  ஏன் தெரியுமா?

என் வீட்டில் எனக்கு அடுத்த வேளைக்கும் தேவையான  உணவு இருக்கிறது.  நாளைக்கு  மாற்றி போட்டுக்கொள்ள  ஒரு  சொக்காய்,  இடுப்பில் சுற்றிக்கொள்ள  ஒரு   வேஷ்டி இருக்கிறது.  நாளை இரவும் தூங்க  எனக்கு மேலே  ஒரு கூரை இருக்கிறது. சுகமாக தூங்க ஒரு  கடகடா  மின் விசிறியும் இருக்கிறதே.   உலகத்தில்  இதெல்லாம் இல்லாமால் தடுமாறிக்கொண்டு  முக்கால்வாசி பேர் இருக்கிறார்களே.   அவர்களை பார்க்கும்போது  நான் பணக்காரன் இல்லையா?

இன்னொரு காரணம் சொல்லட்டுமா?  இப்போது தான் கொரோனாவால் வெளியே போக முடியவில்லை. எப்போதும் என் மணி பர்சில்  இருபது  முப்பது ரூபாய், சில்லறைகள் இருக்கும்.  எங்கு வேண்டுமானாலும் நடந்து போய்  ஒரு  வாழைப்பழம் வாங்கி கூட  சாப்பிட முடியும். வேர்க்கடலை பத்து ரூபாய்க்கு வாங்கி கொரித்துக்கொண்டே நடக்க முடியும்.  இந்த அளவு பணம் இருப்பதால்  உலகத்தில்  18 சதவிகித  செல்வந்தர்களின் நானும் ஒருவன் என்று  பொருளாதார குறிப்பு சொல்கிறதே.  எனக்கு பெருமையாக இருக்கிறது.

இன்று வெள்ளி,  ஞாயிறு வரை தாண்டமுடியாத எத்தனையோ பேரை  விட  நோய் நொடியின்றி மெதுவாக நடக்கும் நான்  அதிர்ஷ்டக்காரன் தான்.  இருமல் இருக்கிறது. இருந்து தொலையட்டும். உயிருக்கு அதால்  ஆபத்தில்லையே.

நண்பர்களே,  நீங்கள் எழுதும் கட்டுரைகளை வாசிக்க கண் இருக்கிறது.  கொஞ்சம் பெரிய  எழுத்தாய்  அளவு  FONT  மாற்றி  கணினியில் படிக்கிறேன்.  அடடா  உலகத்தில்  மூன்று  பில்லியன் மக்களுக்கும் மேலாக  எதையும் பார்க்க முடியாத, படிக்க முடியாதவர்கள்,  மனநோய் காரணமாக  படிக்க புரிந்து கொள்ள முடியாதவர்கள் எல்லாம்   இருக்கிறார்களே.   அவர்களை விட  நான்  அதிர்ஷ்டக்காரன் இல்லையா?

இதெல்லாம் பார்க்கும்போது  கிருஷ்ணா  எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா?

ஏன்  நிறையபேர்  எப்போதும்  ஏதேனும் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.  தாங்கள் ரொம்ப துன்பப்  படுவதாக அழுகிறார்கள்.    உனக்கு நன்றி  சொல்ல  ஆயிரமாயிரம்  விஷயங்கள் இருக்கிறதே.  மேலே  சொன்னது  துளியூண்டு தானே.  யோசித்தால்  இன்னும் ஆயிரமாயிரம் விஷயங்கள்  உனக்கு   நன்றி சொல்ல  விஷயங்கள் இருக்கிறதே. நன்றி டா கிருஷ்ணா.

எங்கோ  சினிமாக்காரர்கள்,  கிரிக்கெட், விளையாட்டுக்காரர்களை, அரசியல் வாதிகளை யெல்லாம்
 போட்டோவுக்கு   மாலை போட்டு,   கட்டவுட்     CUTOUT  வைத்து பால் அபிஷேகம் பண்ணுகிறார்கள், ஒரு

கணமாவது  எங்கோ பனிமலையில் நமது நாட்டுக்காக  எந்நேரமும் இரவு பகல் மரணத்தை எதிர்நோக்கி, துளியும் அஞ்சாமல் நம் எல்லைகளைக் காக்கும் அந்த  முகமறியாத   பச்சை உடை ராணுவ வீரர்களை நினைத்து வணங்குகிறோமா?     நம் உயிர், உடமை , சுதந்திரத்தைக்  காக்க தானே  அவர்கள்  கண் விழித்து காவல் புரிகிறார்கள்.  ஜெய் ஹிந்ந்   பாரதமாதா கி ஜெய் .. ராணுவ வீரர்களே உங்களுக்கு கோடி நமஸ்காரம்.

 ஆங்கிலத்தில்   ஒரு வாசகம் உண்டு.  IGNORANCE  IS  BLISS  என்று.  அறியாமை  சந்தோஷமாக இருக்க   ஒரு ஆசிர்வாதமா?   அப்படியென்றால்  ஒன்றுமே தெரியாவிட்டாலும், ஏன்  அநேகர்  சந்தோஷமாக இல்லை?  நான்  உலகத்தில் ஒருவனாக இருந்தாலும் கிருஷ்ணா  நீ தான்  என் உலகமே.

 நன்றி ஒன்று தான் என்னிடம் இருக்கிறது உனக்குத் தர.  என் இதயத்தை என்றோ தந்துவிட்டேன், அதில் தான் நீ குடியேறிவிட்டாயே.

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:57:01 AM4/19/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்   -  நங்கநல்லூர்  J K  SIVAN


 ஒரு   பாம்பு குழந்தை பற்றி  மஹா  பெரியவா   தன்னுடைய   இளம் வயதில் அறிந்ததைப்பற்றி    எழுதி இருந்தது  அநேக  வாசகர்களுக்கு  அதுவும்  புதிதாக படிப்பவர்களுக்கு பிடித்திருந்தது   என்று  மகிழ்ச்சி.

மஹா பெரியவா அந்த பாம்புக் குட்டியின் கதையை மட்டும் உருக்கமாக சொல்லவில்லை!    ;எல்லா உயிர்களிடத்திலும்  பிரேமை,  அன்பு,  வாத்சல்யம் கொண்ட  உன்னத மஹான்  அவர்.  

 கொடிய விஷமுள்ள பாம்புகளையும் கூட, ரக்ஷித்த காருண்யமூர்த்தி, நம் பெரியவா….ஒரு   சம்பவம் நினைவூட்டுகிறேன்.

மஹாராஷ்ட்ராவில்  ஓரு பாழடைந்த மண்டபத்தில் பெரியவா தங்கியிருந்த .சமயம் அது.  ஒருநாள் பெரியவா முற்றிலும் அந்தர்முகமாக ஜபயோகத்திலிருந்தபோது, ஒரு பெரிய கருநாகம் அவருக்கு பின் பாங்காக குடை பிடித்து கொண்டிருந்தது…!

இன்று இதைப்  படிக்கும் நாம், ‘ஆஹா! பன்னகபூஷணா! பரமேஶ்வரா! அனந்தஸயனா! நமோ நாராயணா!…நாகம் குடை பிடிக்க லிங்கமூர்த்தியாக, ஸ்ரீமன் நாராயணனாக பெரியவா தர்ஶனம் தந்திருக்கிறார்..!‘ என்று ஸந்தோஷப்படலாம். ஆஹா! நமக்கு அப்படி அவரைப் பார்க்க பாக்யம் இல்லியே! என்று ஏங்கவும் ஏங்கலாம்.

ஆனால், அந்த க்ஷணத்தில் கன்னங்கரேலென்று, பளபளவென மின்னும் கண்களோடு, பெருஸ்ஸாக தன் படத்தை விரித்துக் கொண்டு, “ஸுப்பராயன்” பெரியவா தலைக்கு மேல் நிற்பதை நேரில் கண்ட  பெரியவாளின்  தொண்டர்களுக்கு   வியர்த்துக்கொட்டியது.  .பேச்சு வரவில்லை.  குலை நடுக்கம்.  பெரியவாளை  விஷநாகம்  தீண்டாமல் இருக்கவேண்டுமே  என்று கவலை.  

தாங்கள்  ஏதாவது  சப்தம் செய்து,  கையை காலை அசைத்தால் கூட    அந்த சின்ன அதிர்வில் 
அவ்வளவு பெரிய   கொடிய விஷநாகம் குருநாதனை தீண்டிவிடக்கூடுமே என்பதால் அலமாந்து போய் நின்றனர்!

“ஈஶ்வரோ ரக்ஷது! அவரை… அவரே…. ரக்ஷது”

பெரியவாளிடமே மானஸீகமாக ப்ரார்த்தனை பண்ணிக் கொண்டு நின்றனர்.

நல்ல காலமாக கொஞ்ச நேரம் அப்படியே படமெடுத்தாடி விட்டு, அந்தப் பாம்பு இறங்கி, அங்கிருந்த ஒரு த்வாரத்தின் வழியாக போய் விட்டது.

பெரியவா ஜபம் முடிந்து எழுந்ததுதான் தாமதம்! பாரிஷதர், அந்த த்வாரத்தை அடைக்க முற்பட்டார்.

” இரு! இரு!….என்ன பண்ற?”….

” நல்லவேளை…பெரியவா..! ஒரு பெரிய்ய நாகப்பாம்பு ! இத்தன நேரம் ஒங்க பின்னாடி தலைக்கு மேல ஜோரா படமெடுத்து ஆடிண்டிருந்துது…! பயங்கரமா இருந்துது பெரியவா! அது இந்த பொந்துக்குள்ளதான் போச்சு..! அதான் இனிமே வராம….”

அவரை முடிக்க விடாமல் பெரியவா சொன்னார்…

“அதுக்காக?   ரொம்ப நன்னாருக்கே!    நீ சொல்றது.   பாரு..! நாம என்னமோ நேத்திக்கு வந்தோம். நாளக்கே இங்கேர்ந்து போய்டுவோம்.  நாம  யாத்ரீகர்கள்.  நாம வரதுக்கு முன்னாலேயும்  அதுக்கு    அப்புறம் இனிமேலேயும்   இந்த எடம் என்னென்னவோ ஜீவராஸிகளுக்கு   .தான் சொந்த வாஸஸ்தலமா இருக்கு. .! இனிமேயும் இருக்கப்போறது! நடுவாந்த்தரத்துல நாம அதுகள் எடத்துல வந்து பூந்துண்டது போறாதுன்னு…… அதுகள் வர   போகிற  வழியை  அடைக்கணுமா.?     நம்மாத்துக்குள்ள வந்து வழிப்போக்கன்   எவனாவது பூந்துண்டவன், நாமல்லாம்… உள்ள வரப்படாதுன்னு கதவை அடைச்சா எப்டி இருக்கும்? பொந்தை அடைக்கற தெல்லாம் ஒண்ணும் பண்ணாதீங்கோ!   பேசாம  போங்கோ''    
அது போன த்வாரத்தை அடைப்பதை தடுத்துவிட்டார்.

“நமக்கு அது ஒரு ஹிம்ஸையும் பண்ணாதபோதே, “இனிமே பண்ணும்”ன்னு இப்பவே நாமளாவே…. நெனச்சுண்டு, அதுகளை ஹிம்ஸை பண்ணினா என்ன ஞாயம்?”   ரமணர்  மஹா பெரியவா  இது போன்ற மஹான்கள்   கிட்ட எல்லா ப்ராணிகளிலும் தைரியமா சொந்தம் கொண்டாடிண்டு  வரும்.  அவர்  ஒண்ணும்  அதுகளை  பண்ணமாட்டார்னு நன்னா தெரியும்.

ஒரு நாள், பெரியவா கொஞ்சம் விஶ்ராந்தியாக அமர்ந்திருந்த போது, பெரியவாளை அடிக்கடி தர்ஶனம் செய்ய வரும் ஒரு பக்தர் வந்து நமஸ்காரம் பண்ணினார்.

பெரியவா அவரிடம் ஸஹஜமாக ஏதோ பேச ஆரம்பித்தார். பேச்சுவாக்கில்.. ஸ்ரீமடத்தின் மற்றொரு பக்தரைப் பற்றி பெரியவா அவரிடம் ஏதோ கேட்டதும், அவரைப் பற்றி தூஷணை பண்ணினார்…..

யாரிடம்?…….
பெரியவாளிடமே!…..
“அம்மாடி! அவனா? அவன் ஶுத்தக் கார்கோடகனாச்சே…!..”
யார் முன்னால் என்ன பேசுகிறோம் என்பதை மறைப்பதே மாயை!….

பெரியவா அவரை அமைதியாகப் பார்த்தார்…..
“அப்போ…நீ  அவன். நல்லவன்-னு சொல்றியா?…” என்கிறார்.
பக்தருக்கோ….. பயங்கர ஷாக்! ஒண்ணும் புரியவில்லை!
“இல்ல… பெரியவா! மனுஷனுக்கு ஒடம்பு பூரா….பயங்கர வெஷம்! அதான்….. பயங்கர வெஷமுள்ள கார்கோடகன்-ன்னு சொன்னேன்…”
“அப்டியா சொன்ன?…. நா… எப்டி எடுத்துண்டேன்னா…. ஒனக்கு ப்ராதஸ்மரண ஸ்லோகம் தெரியுமோ?…”
….தெரியாது…. பெரியவா!”

“கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா நளஸ்ய ச
ரிதுபர்ணஸ்ய ராஜர்ஷே: கீர்த்தனம் கலிநாஶனம்……

கார்கோடகன், தமயந்தி, நள   மஹாராஜா ரிதுபர்ணன்…. இவாளை நெனச்சிண்டாலே… பாபம், கலிதோஷம்…. போய்டுமாம்! அவாள்ளாம்…   அவ்வளவு   புண்யவான்களா இருக்கப்பட்டவா…! தெரியுமோ?…”

தூஷித்தவரோ…. தர்ம ஸங்கடத்தில் நெளிந்தார்!……

“ஆக…. அவன்… ரொம்ப நல்லவன்னு நீயே சொல்லிட்ட! அப்டித்தான?...”

“நா….. தப்பா, சொல்லிட்டேன்…..தெரியாம சொல்லிட்டேன்…பெரியவா!…”

  இன்னும் மஹா பெரியவா  --   நாக சம்பந்த விஷயங்கள்   பற்றி கொஞ்சம்   சொல்கிறேன்.



sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:57:13 AM4/19/21
to amrith...@googlegroups.com

ஆத்மா  பற்றி   ரமணர். --   நங்கநல்லூர்   J  K  SIVAN 


இந்த உலகத்தில் எல்லோரையும்  ஆட்டிப்படைப்பது   அகந்தை எனும்  அஹம்பாவம் . நான் எனது என்ற நினைப்பு.   அடையார் தியாஸாஃபிகல் சொசைட்டி  தலைவர்  ஜீனராஜ தாஸா வின் மனைவி  ஒருநாள்   இது எதனால் இப்படி ஆட்டிப்படைக்கிறது என்ற காரணத்தை அறிய  முற்பட்டார்.  இதனால்  தான்  உலகத்தில் நாடுகளிடையே, குடும்பங்களிடையில், தனி  நபர்களிடையே  பிளவு,  வேற்றுமையும்  வளர்கிறது,  ஏற்படுகிறது. எதனால் இது உண்டாகிறது?   என்று  அறிந்துகொள்ள  பகவான் ரமண மகரிஷியிடம் சென்றார்.
அவர்களுக்குள் நடந்த சம்பாஷணை இது: 


'ஸ்வாமி, அஹம்பாவத்திற்கும்  ஆத்மாவுக்கும் என்ன  வித்யாசம்?''

 ''எதெல்லாம்  வந்து போகிறதோ,  எது  உண்டாகி,  வளர்ந்து அஸ்தமனமாகிறதோ,  எது  பிறந்து மறைகிறதோ  அது தான்  அகம்பாவம்.  எது மாறாத  ஸ்திதியில் உள்ளதோ இது போன்ற குணங்கள் அற்றதோ அதுவே ஆத்மா''. 

''ஸ்வாமி ,  கடவுள் எரியும்  தீ, நாமெல்லாம் தீப்பொறிகள் என்று சொல்லலாமா? 

தீப்பொறிகள்  தீயிலிருந்து  வெளிப்பட்டு,  வெளியே  விழுந்து மறைவன , நாம்  கடவுளை விட்டு எப்போதும் 
 விலகாதவர்கள்''.

''நம்மைத்  தவிர  கடவுள் என்ற சக்தி உள்ளதா?  இந்த பிரபஞ்சத்தை படைத்தவர் ஒருவர் இருக்கவேண்டுமே?

''நாம் என்று சொல்லும்போது  உனது தேகத்தை சொல்கிறாயா, அப்படியென்றால் அதை ஸ்ரிஷ்டித்தவன் உண்டு,  நாம்  என்று நீ சொல்வது ஆத்மாவானால், அதை படைத்தவன் என்று ஒருவன் வேறு யாருமில்லை;
 இந்த பிரபஞ்சத்தை   ஒரு வஸ்துவாக  எண்ணி  பார்த்தாயானால், உன்னைத்தவிர  அதில் மற்ற எவ்வளவோ வஸ்துக்களைக்  காணமுடியும்.  படைத்தவன் ஒருவன் இருக்கிறான்  என்று  தோன்றும்.  தேகம், கடவுள்  இந்த உலகம்  எல்லாமே   தோன்றி  ஆத்மாவில்   மறைவதாக  காண்பாய்.   கடவுளை  ஆத்மாவிலிருந்து வேறு  பட்டவனாக கண்டால்,    அவன்  தனித்துவமாக வெளியில் எங்கும் இயங்குபவனாக இல்லாமல், காணாமல், எங்கும்  இல்லாதவனாக உணர்வாய்.''

''ஸ்வாமி,  அப்படியென்றால் ஒருவன்  இந்த  அகம்பாவ ஆத்மாவின்  செயல்பாடுகளிலிருந்து  அதை  உயர்த்தி   உண்மையான ஆத்மாவில் நிலை  நாட்ட வேண்டும் அல்லவா"

''அகம்பாவ ஆத்மா  என்று  ஒன்று இல்லையே அம்மா ''

'' இல்லாத ஒன்று  ஏன் சுவாமி, அவ்வளவு தொந்தரவு கொடுக்கிறது?  மக்களிடமும்,நாடுகளிடையேயும்  நீ  உயர்ந்தவனா நானா  என்றெல்லாம்   எண்ணவைத்து அழிவை உண்டாக்குகிறதே. ''.

'' யாருக்கு  அம்மா நீ சொல்லும் துன்பம் எல்லாம்?   எல்லாம் வெறும் கற்பனை தான். இன்பம் துன்பம் எல்லாமே  அகம்பாவத்தால் விளையும் இல்லாத  சுய கற்பனையே.. அகந்தை எதனால்,  ஏன்,  எப்படி,  என்று  மனதிற்குள் ஆராய்ந்தால்  அகந்தை எனும் அகம்பாவம் காணாமல் போகும்.  இன்பம் துன்பம் எனும்  மாயை விலகும். எல்லாவற்றுற்கும் ஆதாரமான  ஆத்மா  புரியும்.   சத்தியத்தை  அறிந்துகொண்டால் அங்கே  அகந்தையோ அஞ்ஞானமோ  தலை காட்டாது.  

''ஸ்வாமி , எப்படி  இந்த  அகந்தை உருவாகிறது?'  என்று கேட்கிறார்   ஜீன ராஜதாஸாவின் மனைவி.

''அகந்தை என்பதே  இல்லாத ஒரு விஷயம்.  இது இருந்தால்  இரு மனிதர்களாக நாம் செயல்படுவோம். அகந்தை கொண்டவன் ஒருவன்.  ஆத்மன்  ஒருவன் என்று.    நாம்  ஒரே ஒரு ,   கண்ணுக்கு புலப்படாத  முழுசாக இருக்கிறோம்.  உனக்குள்ளே  ஆத்ம விசாரம் பண்ணிக்கொண்டே  இருந்தால்  நாம் இருப்பதாக நினைக்கும்  அகந்தையோ அஞ்ஞானமோ உண்மையில் இல்லை என்று புலப்படும். 

''மனதை ஏன்  நாம் ஒருமைப்படுத்த வேண்டும்?''

இதோ பார் அம்மா .  மனதை கஷ்டப்பட்டு  ஒருமைப்படுத்தி  கடினமாக மனதை  செலுத்துவதோ, தியானமோ,  ஆன்மீக  செயல்பாடுகளோ ஆத்மாவை அறிந்துகொள்ள  செய்யவேண்டும் என்கிற கட்டாயமோ அவசியமோ  இல்லை.  ஏனென்றால் இப்படி கஷ்டப்பட்டு எதை தேடுகிறோமோ  அந்த ஆத்மா  எப்போதும் நிலையாக நம்முள் இருக்கிறது.  அறியாமை, அஞ்ஞானம், அதை மறைக்கிறது.  நாம்  இந்த தேகத்தோடு இருக்கிறோம் என்று அறிய கண்ணாடி அவசியமில்லை.  நாம்  இருக்கிறோம்  என்பதே  புரிதல்.  ஏதோ ஒன்று இயக்குகிறது என்று அறிவதே  அறியாமையை  போக்குகிறது.  

''பின்  எதற்காக மனிதன் துன்பத்தை அனுபவிக்கிறான்?''

'' அவன் தன்னை  யார் என்று புரிந்து கொள்ளாததால்,  தன்னை அறியாமையால் அகந்தைக்குட்படுத்திக் கொள்வதால் துன்பங்கள் அவனைத் தேடி வருகிறது. உண்மையில் அதுவல்ல அவன். 

 ''நான்   கோபாலசாமி,  குப்பனின் மகன்''  என்று  சொல்லும் வரை அவனை துன்பங்கள் விடாது.  உண்மையில் அவன்  ஆத்மா.   நாம ரூப பேதங்கள், குணங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று புரிந்துகொள்ள  தவறியவன்.

கனவு காணாமல் அவன்  அசந்து தூங்கும்போது  இந்த குணங்கள் எங்கே போயிற்று?  அவன் உருவம், பெயர், காணும் காட்சிகள்  எங்கே போயிற்று?  உடம்பு தெரிந்ததா அப்போது?   அவன் இருக்கிறான்,    ஆனால்  அது அவன் நினைக்கும்  ''அவன் '' இல்லை  என்று அறிகிறானா?  உடலற்ற ஏதோ ஒன்று என்று அறிகிறானா?

''நீ   அதுவாக இருக்கிறாய் ''   '' தத்  த்வம் அஸி ''   என்று  அறிந்தவன்,  ஞானி  கூறுகிறான்.   இது தான் முழு உண்மை.  அசையாமல்  ஆத்மாவை எண்ணிக்கொண்டு  இரு.  நானே  அந்த  கடவுள்,  எனும் ஆத்மா, என்ற நினைவில்   திளைப்பது தான் தியானம்.  அதுவாகவே ஆகிவிடுவது அப்போது புரியும்.  
.
” அசையாமல்  '' என்றால்  என்ன?

''எண்ண  ஓட்டங்கள் இல்லாமல்.  அது ஒன்றே  உருவங்கள்,  வண்ணங்கள், குணங்கள், காலம், நேரம்,  இடம்  எல்லாவற்றையும்  உருவாக்கி காட்டும் வித்தையை செய்கிறது.

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:57:20 AM4/19/21
to amrith...@googlegroups.com

சாணக்கியன். - நங்கநல்லூர் J K SIVAN --


சகலகலா வல்லவன் கௌடில்யன் சொற்கள்.



कश्चित् कस्यचिन्मित्रं, न कश्चित् कस्यचित् रिपु:। 
अर्थतस्तु निबध्यन्ते, मित्राणि रिपवस्तथा ॥

கஸ்சித் கஸ்ய சிந் மித்ரம், ந கஸ்சித்  கஸ்யசித் ரிபு:  ।
அர்த்தஸ்து நிபத்யந்தே, மித்ராணி  ரிபவஸ்ததா ॥

இந்த உலகத்தில்  எவனுமே  மற்றவனின் நண்பனுமில்லை, எதிரியுமில்லை.   செய்யும் கர்மத்தால் எவரும்  ஒருவரின் நண்பனாகவோ  எதிராகவோ ஆவதுமில்லை.   அவனவன் மனமே அவனைத் தூண்டி விட்டு  மற்றவனோடு ஆன உறவை  இவ்வாறு பாகு படுத்தி துன்புறுகிறது.     

 
2. मूर्खशिष्योपदेशेन दुष्टास्त्रीभरणेन च।
 दुःखितैः सम्प्रयोगेण पण्डितोऽप्यवसीदति॥

மூர்க ஸிஷ்யோ  பதே ஸேந துஷ்டா ஸ்த்ரீ  பரணேநச  ।
து: கிதை:    ஸம்ப்ரயோகேண  பண்டி தோ s   ப்யவஸீததி ॥

முட்டாள்களை  சீடராக்கி  ஞானம் போதிக்கும்போதும்,  கெட்ட பெண்ணோடு  உறவு கொண்டு வாழும்போதும்,   வியாதியஸ்தர்களோடு வாழ்வதும்  ஒரு  பண்டிதன் துக்கமடைகிறான். துன்புறுகிறான் 


3. दुष्टा भार्या शठं मित्रं भृत्यश्चोत्तरदायकः
। ससर्पे गृहे वासो मृत्युरेव न संशयः॥

துஷ்டா   பார்யா    ஸடம்   மித்ரம்ப்ருத்ய   ஸ்சோத்தர   தாயக:  ।
ஸஸர்பே  க்ருஹே   வாஸோ  ம்ருத்யு ரேவ  ந   ஸம்ஸய:  ॥

கொடிய  மனைவி,   அதிகமாக பேசி திசை திருப்பும் நண்பன், எதை சொன்னாலும்  வெளியே சொல்லும்  வேலையாள், வீட்டில் உறையும்  பாம்பு,  இதெல்லாம்   அழிவுக்கும், மறைவிற்கும் காரணமானவை.  சந்தேகமே  துளிகூட இதில் வேண்டாம்.
 

4. धनिकः श्रोत्रियो राजा नदी वैद्यस्तु पञ्चमः।
 पञ्च यत्र न विद्यन्ते न तत्र दिवसे वसेत ॥

தநிக:   ஸ்ரோத்ரியோ   ராஜா  நதீ  வைத்யஸ்து பஞ்சம:।
பஞ்ச  யத்ர   ந   வித்யந்தே  ந    தத்ர  திவஸே வஸேத் ॥

எங்கே  ஒரு   செல்வந்தனும் வாழ வில்லையோ,   எங்கே  வேத விற்பன்னர்கள் காணப்படவில்லையோ,  எங்கே  ராஜாவோ, ஒரு  வைத்யனோ  இல்லையோ,  எங்கே ஒரு நதி கூட ஓடவில்லையோ,  அங்கே  ஒரு நாளும்  சென்று வசிக்க கூடாது. வசிக்க தகுதியற்ற இடம் அது.  

5. जानीयात्प्रेषणेभृत्यान् बान्धवान्व्यसनाऽऽगमे।
 मित्रं याऽऽपत्तिकालेषु भार्यां च विभवक्षये ॥

ஜாநீ யாத்    ப்ரேஷணே   ப்ருத்யாந்   பாந்தவாந்  வ்யஸநா ss கமே ।
மித்ரம்   யா ss பத்திகாலேஷு  பார்யாம்  ச  விப வக்ஷயே  ॥

வேலையாள்  ஒரு முக்கியமான  வேலையை கொடுத்து அனுப்பும்போது புரிந்துகொள்ளலாம் . துன்ப துயர நேரங்களில் தான்  மனைவியின் உண்மையான  பாசமும் நேசமும்  புரிபடும்.  நமக்கு  ஒரு கஷ்ட காலத்தில் தான் உண்மையான நண்பன் யார் என்று அறிந்து கொள்ளமுடியும்.
 
6. यस्मिन् देशे न सम्मानो न वृत्तिर्न च बान्धवाः। 
न च विद्यागमोऽप्यस्ति वासस्तत्र न कारयेत् ॥

யஸ்மின்   தே ஷே ந   ஸம்மாநோ   ந வ்ருத்திர்  ந  ச  பா ந்தவா: ।
ந  ச  வித்யா கமோ s  ப்  யஸ்தி   வாஸஸ்தத்ர   ந  கார யேத் ॥

எந்த ஒரு பிரதேசத்தில்  மதிப்பு, மரியாதை, அங்கீகாரம் இல்லையோ,  எங்கே   பயமின்றி வாழ வசதியில்லையோ,   எங்கே  மக்கள் சகோதரர்களாக  சேர்ந்து வாழ  முடியாதவர்களோ,  எங்கே  கல்வியறிவு புறக்கணிக்கப்பட்டு  கல்வி வளரவில்லையோ,  அங்கே சென்று வாழவே  கூடாது. 

சாணக்கியன் இன்னும் சொல்லப்போகிறான் .

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:58:00 AM4/19/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம் --  நங்கநல்லூர்  J K  SIVAN 


           இது தான்  அது.


நம் எல்லோருக்கும்  தெரிந்த விஷயங்களைக் கூட  சிலர்  சொல்லும்போது  அதை படிக்கவோ,  கேட்கவோ தனி சுவாரஸ்யம் உண்டாகிறது.  ஏன்?   அந்த கதையின் அல்லது விஷயத்தின் தனிச் சிறப்பாக இருக்கலாம், அல்லது தெரிந்த விஷயமாக இருந்தாலும் மீண்டும் அதைச் சொல்லும் விதம்  ரசிக்கும்படியாக இருக்கலாம்.  மஹா பெரியவா சொல்லும் விஷயங்கள் அப்படிப்பட்டவை.  ஒரு கதை அவர் அழகாக சொன்னது  மீண்டும் உங்களுக்கு சொல்கிறேன். கேளுங்கள். இதை  சக்திவிகடனில்  எப்போதோ  படித்த ஞாபகம்.. 

நமது ஸ்வபாவம்  விசித்திரமானது.  இருப்பது பிடிக்காது. இல்லாததை மனது தேடும்.  இது  எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்.  அதாவது  கல்யாண விஷயத்திலிருந்து கடவுள் விஷயம் வரை. 

அந்தக்காலத்தில்  மாட்ரிமோனியல் matrimonial   விளம்பரங்கள் கிடையாது.  பெண்ணுக்கு  ஒரு நல்ல நாள் பார்த்து ஜாதகக்கட்டு தூக்கிக்கொண்டு கிளம்புவது என்று பெயர். பல வீடுகளில்  அலசி எந்த வீட்டில் பொருத்தமான பையன் இருக்கிறான் என்று விசாரித்து, பிறகு அவன் ஜாதகம் வாங்கி  ஜோசியர்  பொருத்தம் பார்த்து சொன்னபிறகு தான்  குடும்பத்தை பற்றி விசாரிப்பார்கள்.  அப்போதெல்லாம் குடும்பத்திலேயே  அத்தைமகன், மாமன் மகன் என்று எவனாவது கிடைப்பான்.  கல்யாணங்களில், பண்டிகைகளில் பெண்கள் மூலம்  விஷயம் சேகரித்து பையன் பெண்கள் கிடைப்பார்கள்.   சில  பெண்களுக்கு சீக்கிரமே  விவாக பிராப்தி கிடைக்கும், சில பெண்களுக்கு வருஷக்கணக்கில்  பையன் தேடுவார்கள்.  கண்ணெதிரில் எதிர்த்த வீடு, பக்கத்து வீடுகளிலேயே  பொருத்தமான  பையனோ பெண்ணோ கிடைப்பதும் உண்டு.  ஒரு பெண்ணுக்கு பையன்  எப்படி கிடைத்தான் என்று மகா பெரியவா சொல்லும்   ஹாஸ்ய கதை கேளுங்கள்:


'கல்யாணம் ஆகவேண்டிய பெண் ஒருத்தி இருந்தாள்.  அவளுடைய  அப்பா அம்மா,  சொந்தத்திலேயே  ஒரு முறைப் பையனைப் பார்த்து,  கல்யாணம் பண்ணிக் கொடுக்கத் தீர்மானித்தனர். ஆனால், அந்தப் பெண்ணோ, ''புருஷர்களில் எல்லாம் உயர்ந்தவன் எவனோ, அவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்'' என்று பிடிவாதம் பண்ணினாள். அவர்களும், ''உன் இஷ்டப்படியே செய்!'' என்று விட்டுவிட்டார்கள்.

அந்தப் பெண், 'புருஷர்களுக்குள்ளேயே உயர்ந்தவன் ராஜாதான். எனவே, அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு, அவ்வூர் ராஜா பின்னாலேயே போய்க் கொண்டிருந்தாள்.

ஒருநாள், ராஜா பல்லக்கில் போய்க்கொண்டு இருந்தபோது, ஒரு சாமியார் எதிரே வந்தார். ராஜா பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி, அந்தச் சாமியாருக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பவும் பல்லக்கில் ஏறிப் போனான். இதைப்  பார்த்த பெண்   'அடடா! ராஜாதான் புருஷர்களுக்குள் உயர்ந்தவன் என்று எண்ணி இத்தனை நாளும் ஏமாந்துவிட்டேனே! ராஜாவைக் காட்டிலும் உயர்ந்தவர் சாமியார் தான் போல் இருக்கிறதே! கல்யாணம் பண்ணினால் இந்தச் சாமியாரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானித்து, அந்தச் சாமியார் பின்னாலேயே சுற்ற ஆரம்பித்துவிட்டாள்.

ஒருநாள், சாமியார் தெருக் கோடியில் ஓர் ஆலமரத்தடியில் இருந்த பிள்ளையார் முன் நின்று நெற்றியில் குட்டிக்  கொண்டு, தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்தாள். 'சரி சரி, சாமியாரைவிடப் பெரியவர், உயர்ந்தவர் இந்தப் பிள்ளையார்தான். அதனால் பிள்ளையாரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டாள். சாமியாரோடு போகாமல், அந்தப் பிள்ளையாருக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்துவிட்டாள்.

அந்த பிள்ளையாருக்கு பாவம்  கோவில் கூட கிடையாது.  அரசமரத்தடியில் சிவனேன்னு  உட்கார்ந்திருப் பவர்.   அந்த பெண்  பிள்ளையார் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள் . 
 தெருவோடு போகிற நாய் ஒன்று அந்தப் பிள்ளையார்  சிலை மேலே காலைத் தூக்கிக்கொண்டதைப் பார்த்ததும்   

 'அடடா, இந்தப் பிள்ளையாரையும் விட  உயர்ந்தது இந்த நாய் தான் போலிருக்கிறதே!’ என்று, அந்த நாயைத் துரத்தினாள் .  அந்த நாய் மீது ஒரு பையன் கல்லை விட்டெறிந்தான். அது 'வள்... வள்’ என்று குரைத்துக் கொண்டு முன்னிலும் வேகமாக ஓடியது.

 ''ஏண்டா அந்த நாயை அடித்தாய்?'' என்று அந்தப் பையனை ஒருவன் பிடித்து அதட்டினான் முதுகில் ஒன்று வைத்தான். 'நாயைக் காட்டிலும் நாயை அடித்தவன் பெரியவன் என்று எண்ணிய  அந்த பெண்  பையனை அடித்தவன்  தான்  எல்லோரிலும் உயர்ந்தவன் என்று முடிவு கட்டினாள் . 

இப்படிக் கடைசியில் அவள் கண்டுபிடித்த அந்த ஆசாமி வேறு யாருமல்ல; அவளுடைய அப்பா- அம்மா பார்த்து, முதலில் அவளுக்குத் தீர்மானம் பண்ணியிருந்த பிள்ளைதான்!

'வெகு தூரத்தில் யாரோ இருக்கிறான், இருக்கிறான்’ என்று எண்ணிக்கொண்டே சுற்றியவள்  கடைசியில்,அவளுக்கு அருகிலேயே இருந்தவனை தான்  பிடித்தாள் என்று கதை முடிகிறது.


''எங்கோ தூரத்தில் இருக்கிறார்  ஸ்வாமி என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே! தெரியாத வரையில் அவன் தூரத்தில் இருப்பவன்தான். ஊரெல்லாம் சுற்றினாலும் அவனைப் பார்க்க முடியாது. அவன் உன்கிட்டேயே இருப்பவன்தான். 'தத்தூரே தத்வந்திகே’ - தூரத்திற்கெல்லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம் என்று ஸ்ருதி சொல்கிறது.

horizon  என்பார்களே, தொடுவானம்; இங்கிருந்து பார்த்தால் ஆகாசமும் பூமியும் அந்த இடத்தில் சேருவதுபோல இருக்கும். அங்கே ஒரு பனை மரம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். 'அந்தப் பனை மரத்தடிக்குப் போனால் பூமியும் வானமும் சேருகிற இடத்தைப் பிடித்துவிடலாம்’ என்று இங்கே இருந்து பார்க்கிறபோது நமக்குத் தோன்றும். ஆனால், அங்கே போனால், தொடுவானமும் அங்கிருந்து வெகு தூரத்திற்கு அப்பால் போய்விட்டது போலத் தெரியும். நாம் போகப்போக அதுவும் போய்க்கொண்டே இருக்கும். 'இந்தப் பனை மரத்தின் கீழ் வந்து நின்றால் தொடுவானம் வெகுதூரத்திற்குப் போய்விட்டதே, அதைப் பிடிக்க இன்னும் நாமும் போக வேண்டும்’ என்று போய்க்கொண்டிருந்தால், அதைப் பிடிக்க முடியுமா? இந்தப் பனை மரத்துக்கு வெகு தூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்த இடத்தில்தான் தொடுவானம் இருப்பதுபோல இருந்தது. இந்த இடத்திற்கு வந்தவுடன், அது நம்மைவிட்டு இன்னும் வெகு தூரம் போய்விட்டது. ஆகவே, அது எங்கே இருக்கிறது? நீ இருக்கிற இடத்தில்தான் இருக்கிறது. நீ இருக்கிற இடம்தான் அது. அப்படி 'அது’, 'அது’ என்று சொல்லப்படுகிற, வெகு தூரத்தில் இருக்கிற ஸ்வாமி, உன் கிட்டேயே- உன் உள்ளேயே இருக்கிறார்; நீயே அதுதான் என வேதம் உணர்த்துகிறது.

'நீயே அது’ என்பதை 'தத்-த்வமஸி’ என்ற மஹாவாக்கியமாக வேதம் சொல்கிறது. 'தத்வம்’ என்றால் இங்கே தத்தின் தன்மை என்று அர்த்தமில்லை. 'த்வம்’ என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு. 'தன்மை’ என்பது ஒன்று. 'நீ’ என்பது இன்னொரு அர்த்தம். தத்-த்வம் அஸி என்னும்போது 'தத்-அது, த்வம்-நீ(யாக), அஸி-இருக்கிறாய்’ என்று அர்த்தம்.

நான்... நான் என்று எதை நினைத்துக்கொண்டிருக்கிறாயோ, அதுதான்- அந்த அறிவுதான் ஸ்வாமி. அந்தப் பிரகாசம் உன்னிடத்தில் இல்லையென்றால், உன்னால் ஸ்வாமி என்றே ஒன்றை நினைக்க முடியாது. 'நான் என்று அறிகிறேன், நான் என்று நினைக்கிறேன், அப்படி நினைக்கிற அறிவுக்கு மூல வஸ்து வெகுதூரத்தில் இருந்து கொண்டிருக்கிற 'தத்’ என்று நினைக்கிறாயே, அந்த 'தத்’தும் நீயும் ஒன்றுதானப்பா!’ இதுதான் வேதத்தின் முடிவில் சொல்வது.'

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:58:23 AM4/19/21
to amrith...@googlegroups.com
மானசீக புனித/உல்லாச பயணம்-- நங்கநல்லூர் J K SIVAN

3. யாழ்ப்பாண நல்லூர் கந்தசாமி ஆலயம்
 
இன்று  நாம்  இந்தியாவைக் கடந்தே பறந்து சென்று  யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பழம் பெரும்  கோயிலை தரிசிக்கிறோம்.     

இலங்கைத் தீவின்  வடபுரத்தில் இருக்கும்  யாழ்ப்பாணத்தில்  உள்ள   நல்லூர்  நான்கு வாயில்களை கொண்டது. ஒவ்வொரு வாயிலிலும் ஒரு ஆலயம். உலகப்பிரசித்தி பெற்ற  நல்லூர் கந்தசாமி ஆலயம்   உலகெங்கும் பக்தர்களால் வழிபடப்படும் சிறந்த  ஒரு கோவில்.   இங்கே  என்ன விசேஷம் என்றால்  கந்தசாமி எனும் ஷண்முகம்  வேல் வடிவில் வணங்கப்படுகிறார். இப்போதுள்ளது 1749ல்  நான்காம் முறையாக கட்டப்பட்ட கோவில்.  கட்டியவர்கள்  கிருஷ்ண சுப ஐயரும்  ரகுநாத மாப்பாண  முதலியாரும்.  

10ம் நூற்றாண்டில்  சோழராஜ  கண்டராதித்த சோழன் மனைவி  செம்பியன் மாதேவியால்  அளிக்கப்பட  செப்புச் சிலையாலான  நல்லூர்  தேவி  அம்பாளை  பிரதிஷ்டை செய்திருந்தார்கள். 

948ல்  முதலில் குருக்கள் வளவு  என்ற  இடத்தில்   கட்டப்பட்டது.  ரெண்டே ரெண்டு ஹால்  மாதிரி இடம். கோபுரம் இல்லை.  அந்நியர்கள்  ப்ரவேசத்தால், படையெடுப்பால் அடிக்கடி இடம் மாறியது இந்த  ஆலயம்.
 அப்போது தான் நல்லூரில் இடம் பெயர்ந்தது.   இந்த  பழைய  முருகன் ஆலயம்.  13வது நூற்றாண்டு  யாழ்ப்பாண  அரசன் கலிங்க மஹா வின் மந்திரி  புவனேக வாஹு வால்  புணருத் தாரணம் ஆனது.  முன்றாவது முறை  புனருத்தாரணம்  ஆனது  கோட்டை அரசன்  செண்பக பெருமாள் காலத்தில்.  அவனது இன்னொரு பெரியார்  சப்பும் குமாரயா ,  ராஜாவின் வளர்ப்பு மகன்.  நல்லூர்  யாழ்ப்பாண  தலைநகரம். சுற்றிலும் கோட்டை மதில் சுவர்கள்.

1902ல்  வேல்  ஸ்தாபிதம் நடந்தது.   அது தான் கந்தசாமி...   1964ல்  வசந்த மண்டபம் புதுப்பித்தார்கள். 

1621ல்  சங்கிலி தோப்பு எனும் இடத்தில் இருந்த  கந்தசாமி கோவில்   போர்ச்சுகீசிய   தளபதி பிலிப்   டீ  ஆலிவீரா  வால்   தகர்க்கப்பட்டு அங்கே   1624ல்  கிருஸ்தவ ஆலயம் உருவானது.   ஹிந்து கோவில்களை அழித்து கிறிஸ்த்தவ தேவாலயங்கள் உருவான  மதவெறி காலம்  அது.   நல்லூர்  முருகன் ஆலயம் முதலில் இருந்த இடத்தில் இப்போது  செயின்ட்  ஜேம்ஸ்  சர்ச்.   சிவலிங்கம் உடைக்கப்பட்டது.  ஆவுடையார்  இன்னும் இருக்கிறது.  

இப்போது இருக்கும்  நல்லூர் கந்தசாமி ஆலயம்  1734ல்  டான் ஜுவான் என்பரால் உருவானது.  அப்போது  இந்த ஆலயத்தில்  ஒரு  இஸ்லாமிக்  சபையின்  ஆலயம்  இருந்தது. அதை  1749ல்  இடம்  பெயரச்செய்தார்கள்.  

இந்த ஆலய வரலாறு  யாழ்ப்பாண வைபவ மாலை எனும் நூலிலிருந்து  அறியப்படுகிறது.  

 1890ல் இருந்து  இந்த ஆலயம்  ஆறுமுக மாப்ப்பாண  முதலியார் குடும்பத்தின் கைக்கு வந்து  சாந்நித்தியம் மீண்டும் பெற்றது .அரும்பாடு பட்டு அந்த குடும்பம் ஆலயத்தை ஹிந்து சனாதன தர்ம  ஆகம  சாஸ்திர  பின்பற்றுதல்களோடு  வழிபாட்டுக்குரியதாக  நிர்வாகம் செய்துவருகிறது.


1917 ல்   கோயில்  அதிகாரியான 4 ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் மனதில்  முருகப்பெருமானுக்கு   தீர்த்தக் கேணித்  திருப்பணி செய்ய வேண்டும் என தோன்றி    1922ல்   நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கான தீர்த்த கேணி   சதுர வடிவில் சுண்ணாம்புக் கற்களாலும் வெள்ளைக் கல்லாலும் உருவானது.
குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையார் காலத்தில் அமைக்கப்பட்ட தீர்த்தக்கேணியானது, கடப்பாக் கற்களைக் கொண்டு தற்போது திருப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது.


குபேர கோபுரவாசல் கும்பாபிஷேகம்நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்பட்ட தீர்த்த கேணித்  திருப்பணி இரண்டு வருடங்களில் நிறைவடைந்துள்ளதுடன், சண்முக தீர்த்தக்கேணி பிரதிஷ்டா கும்பாபிஷேகம்  கார்த்திகை உற்சவ தினத்தன்று (15.08.2017 செவ்வாய்கிழமை) நடைபெற்றுது.
நல்லூர் கந்தசுவாமி கோயிலின் நிர்வாக உரிமை மாப்பாண முதலியார் குடும்பத்துக்கே உரித்தானது.

இவ்வருடத் திருவிழாவானது (2020 ஆம் ஆண்டு) மாப்பாண முதலியார் குடும்பத்தினரின் 286 ஆவது நிர்வாக வருடமாகும்.

தற்போது மாப்பாண முதலியார் குடும்பத்தின் பரம்பரையில் வந்த குமாரதாஸ் மாப்பாண முதலியார் கோயில் 10 ஆவது அதிகாரியாக நல்லூர் கந்தனுக்கு தன் சேவைகளை செய்து வருகிறார்.

சிறு வயது முதல் கிடைத்த தந்தையின் வழிகாட்டல் வளர்ந்த குமாரதாஸ் மாப்பாண முதலியார், வெளியாட்களுடான தொடர்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காது தெய்வப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனக்கும் முருகனுக்கும் இடையிலான உறவை பிரபலப்படுத்தத் தேவையில்லை என்ற எண்ணம் கொண்டவர். முருகனுக்குக் கிடைக்கும் ஒரு சதமேனும் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு, முருகன் குடியிருக்கும் கோயில் வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

இவரது காலத்தில் நல்லூர்க் கோயில் பிரமாண்ட வளர்ச்சி பெற்றதுடன், மாப்பாணர் கட்டடப்பாணி என்னும் பெயர் நல்லூருக்குக் கிடைக்கக் காரணமாக விளங்கியவர்.

அது மாத்திரமல்லாமல் முருகனுக்கு மிகவும் பிடித்த கோயில் அதிகாரி எனக் குறிப்பிடும் வகையில் கிட்டத்தட்ட ஜம்பது வருடங்களுக்கு மேலாக முருகனுக்குத் தொண்டாற்றி வருபவர்.

தற்போதைய கோயில் அதிகாரியான குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தமையனாரான ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் காலமான 1964 ஆம் ஆண்டு தேர்த் திருப்பணி நிறைவேற்றப்பட்டது.  

அவரது மறைவிற்குப் பின்னர் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற குமாரதாஸ் மாப்பாண முதலியார், மிகவும் குறுகிய காலப்பகுதியில் அதாவது 6 – 7 மாதத்தில் பழைய வசந்த மண்டபத்தின் வாசலைப் பெரிதாக்கினார்.

ஒவ்வொரு வருடமும் கொடியேற்றத்திற்கு முன்னர் ஏதாவது ஒரு கோயில் திருப்பணி மேற்கொள்ளும் நடைமுறை அக்காலப் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்தப் பாரம்பரியம் இன்றும் நல்லூர்க் கோயிலில் தொடர்வது முருகனின் அருளே.

குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையான நான்காவது இரகுநாத மாப்பாண முதலியார் காலத்தில் நல்லூர்க் கோயிலுக்கு முன்பாகவுள்ள இராஜகோபுரம் மற்றும் சண்முகருக்கு முன்பாக அமைந்துள்ள கோபுரம் ஆகியவற்றின் திருப்பணிகள் வெள்ளைக்கல் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், அவரது காலத்தில் அக்கோபுரங்கள் இரண்டும் வியாழவரி வரைக்கு மாத்திரமே நிறைவு செய்யப்பட்டன.

தந்தையார் ஆரம்பித்திருந்த வெள்ளைக்கல் கோபுரத்திருப்பணிகளில் ஒன்றான இராஜகோபுரத் திருப்பணியை ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் பூர்த்தி செய்தார்.

அத்துடன் முருகனின் மனைவியரான வள்ளி – தெய்வானையைக் குறிக்கும் வகையில் இராஜகோபுரத்திற்கு அருகில் இரண்டு மணிக்கூட்டுக் கோபுரங்களின் திருப்பணியையும் நிறைவு செய்தார்.

தந்தையார் விட்டுச் சென்ற சண்முகருக்கான கோபுரத் திருப்பணியை 1966 ஆம் ஆண்டு குமாரதாஸ் மாப்பாண முதலியார் நிறைவு செய்தார்.

தொடர்ந்து வந்த காலப்பகுதியில் கோயில் அமைப்பு ஆண்டு தோறும் மாற்றியமைக்கப்பட்டாலும், மூலஸ்தானத்தில் மாத்திரம் மாற்றங்களை ஏற்படுத்தாமல், அதைச்சுற்றியுள்ள பழைய மண்டபங்கள் அனைத்தும் புதிதாக்கப்பட்டன. ஓவ்வொரு வருடமும் ஒவ்வொரு திருப்பணியை ஆரம்பித்து, அதை அடுத்த திருவிழாவிற்கு முன்னர் நிறைவேற்றும் வழக்கம் உருவானது.

இவ்வளர்ச்சிப் படி முறைகளில் மகா மண்டபம், ருத்திர மண்டபம் என்பன அமைக்கப்பட்டன. சண்முகப் பெருமானுக்கு சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள நடராஜரைப் போன்று, ஒரு சபை அமைக்கப்பட்டது. ருத்திர மண்டபத் திருப்பணியின் போது, சிறிய கோயிலில் எழுந்தருளியிருந்த முத்துக்குமாரசுவாமிக்கு, விமானத்துடன் கூடிய கோயில் அமைத்துத் திருப்பணி நிறைவேற்றப்பட்டது.

1970 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோயில் கட்டடக்கலை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டது. அதாவது வெளி மண்டபத்தை சொக்கட்டான் பந்தல் முறையில் அமைத்து கோயில் அழகுபடுத்தப்பட்டது.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஒவ்வொரு திருப்பணிகளும் முருகன் அருளால் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுற்றன.

குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தமையனாரான ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் காலமான 1964 ஆம் ஆண்டு கோயிலுக்கான தேர்த் திருப்பணி நிறைவேற்றப்பட்டது. ஈடு இணையற்ற முறையில் அமைக்கப்பட்ட, அழகுப் பொக்கிஷமான தேரில்  கந்தசுவாமியார் காலங்காலமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் கொடுக்கப் போகிறார் என எண்ணிய காரணத்தால், குறித்த தேரை நீண்ட காலம் பாதுகாக்கும் பொருட்டு தேர்முட்டியை குமாரதாஸ் மாப்பாண முதலியார் அமைத்தார்.

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் தேரும் மஞ்சமும் இலங்கையின் இருபெரும் கலைப்பொக்கிஷங்கள்  ஆகும்.தொடர்ந்து வந்த ஆண்டுகளில் படிகளுடனான தேர் மண்டபத் திருப்பணி நிறைவேற்றப்பட்டது. குறித்த தேர் மண்டபத்தின் கட்டடக்கலை அமைப்பானது, நல்லூர்க் கோயில் அமைப்பிற்கும் சொக்கட்டான் பந்தல் அமைப்பிற்கும் பொருந்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டது.
நல்லூரில் மேற்கொள்ளப்படும் எந்தத் திருப்பணியையும் மூடிக்கட்டும் வழக்கம் கிடையாது. அனைத்து வேலைகளையும் கோயில் அதிகாரிகள் மேற்பார்வை செய்யும் அதேவேளை, அவற்றை பக்தர்களும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நல்லூரில் பின்பற்றப்படுகின்றது.

கட்டடக்கலை வரை படங்களுக்கு அப்பால் சென்று, கோயில் வளாகத்திலும் முருகன் முன்னிலையிலும் திருப்பணிகளுக்கான முக்கிய முடிவுகளை கோயில் அதிகாரிகள் எடுக்கும் வழக்கம் உள்ளது. இவ் வழக்கம் உலகில் உள்ள எந்தக் கோயிலிலும் இல்லாத வழக்கம் என்பதுடன், முக்கிய முடிவுகளை முருகனே எடுப்பார் என்பது ஜதீகமாகும்.

ஆண்கள்  வேஷ்டி அணிந்து மேலே சட்டை போடாமல்  தரிசிக்க  பெண்கள் பாரம்பரிய உடை அணிந்தால்  கோவிலில் அனுமதிக்கப்படுவார்கள்.  போட்டோ எடுக்க அனுமதியில்லை.  

கந்த சஷ்டி  ஆடி  கிருத்திகை அன்று அலகு குத்திக்கொண்டு  காவடி எடுப்பார்கள்.  நம்மை விட  இலங்கைத் தமிழர்கள் முரட்டு பக்தர்கள்.. தீவிர முருக பக்தர்கள் என்று தாராளமாக சொல்வேன். இனி   ஆலயத்தை காண்போம்   https://youtu.be/jVDl65QoYHY

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:58:24 AM4/19/21
to amrith...@googlegroups.com

சாஸ்திரிகளின் முப்பது நாள் ராமாயணம்- 8
நங்கநல்லூர் J K SIVAN

சுக்ரீவனுக்கு   வாலியிடம்  மரண பயம்.  ராமலக்ஷ்மணர்களை முதலில்   ரிஷ்யமுக பர்வதம் அருகே பார்த்ததும் கலங்குகிறான். ஒருவேளை  வாலியின் கையாட்களோ, தன்னை கொல்ல  ஏவப்பட்ட வர்களோ என்று அஞ்சி  ஹனுமனை விட்டு விசாரிக்க சொல்கிறான்.  சுக்ரீவன்  ராவணனை தெரியாது என்று  சொன்னதும்  நிஜமல்ல.  உத்தரகாண்டத்தில்  வாலி கிஷ்கிந்தையில் ஒரு மாத காலம் ராவணனை விருந்தின னாக உபசரித்தான் என்பது  சொல்லப்பட்டிருக்கிறது.   ஆகவே  ராவணனைப் பற்றி  சுக்ரீவன் அறிவான். வாலியோடு  கிஷ்கிந்தையில் இருந்தபோது  எப்படி  ராவணனை தெரியாமல் இருக்க முடியும்? என்கிறார் சாஸ்திரிகள். 

துக்கத்தில் ஆழ்ந்த சுக்ரீவனால் சரியாக  நினைவோடு பேசமுடியவில்லை என்று ராமர் அவனது பேச்சில் குறை கண்டுபிடிக்கவில்லை. ராமனின் நல்ல நண்பனாகிவிடுகிறான் சுக்ரீவன்.

சுக்ரீவன்  சுகமாக  வாழ்ந்துகொண்டு  தனக்கு கொடுத்த வாக்கை மறந்ததாக, காலம் தாழ்த்துவதாக ராமன் நினைக்க இடம் கொடுத்துவிட்டான் சுக்ரீவன்.   ஆனால்  அவன் முன்பே  ஹனுமான் மற்றும்  நீலன்  ஆகியோரிடம் கட்டளையிட்டு எப்படி  எங்கெல்லாம் சீதையைத்  தேடவேண்டும் என்று  கூறியிருந்தான்  எனது பின்பு  தெரிகிறது.

ராக்ஷஸர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், அளவுக்கு மீறி  நம்பிக்கை கூடாது என்பதால் தான் விபீஷணனை ஏற்கவேண்டாம் என்று ராமனிடம் சொல்கிறான் சுக்ரீவன்.  நம்மை அண்டி அடைக்கலம் கேட்டவனை ஆதரிக்கவேண்டும் என்று ராமர் கூறியபிறகு விபீஷணனிடம் அன்பாக  நட்பாக பழகுகிறான்.

பாலம் கட்டுவதற்கு முன்பே  சுக்ரீவன்  ராவணனைக் கண்ணால் கண்டால் உடனே  கொல்வேன்  என்கிறான். 
ராவணனிடம் தனியே மோதுகிறான். ராவணனின் கிரீடத்தை தரையில் உருளச் செய்கிறான். 

என்ன  சுக்ரீவா இப்படிச் செய்துவிட்டாய் என்று ராமன்  அவனை கோபிக்கும்போது,   ''சுவாமி தங்களது ராணி சீதையை தூக்கிச் சென்றவனைப் பார்த்தவுடன்   நான் எப்படி சும்மா  இருக்க முடியும்?  என்ன மரியாதை காட்ட முடியும்?  என்கிறான்.

சுக்ரீவனை  கும்பகர்ணன் யுத்தகளத்தில்  பிடித்து  லங்கை மாநகருக்குள்  கொண்டு  செல்ல முயலும்போது சுக்ரீவன் அவன் மூக்கை கடித்து,  காதை கிழித்து,  நகங்களால் அவன் முகமெல்லாம் கீறி, அவன் பிடியிலிருந்து தப்புகிறான். கும்பன் , விருபாக்ஷன், மஹோதரன்  ஆகியோர் கொல்லப்பட்டதில்  சுக்ரீவன் பங்கு பெரியது.

சுக்ரீவன்  கொடியவன்  இல்லை.  வானர  வீரர்கள்  ஒரு மாத காலத்தில்  சீதை இருக்கும் இடம் கண்டுபிடிக்க தவறினால் மரண தண்டனை என்று அறிவித்தவன்   அவர்கள் திரும்பி வந்து அவனது மது வனத்தை அழித்த போது   எந்த  தண்டனையும் தரவில்லை.    அவர்கள்  தந்த மகிழ்ச்சி செய்திக்கு  பரிசு என்று விட்டுவிடுகிறான்.


வாலி மாயாவி எனும்  ராக்ஷஸனை தொடர்ந்து ஒரு குகைக்குள் சென்று  சண்டையிடுகிறான். வெகுநாள் வாலி குகைக்கு  வெளியே  வராதததால்  வெளியே வழிந்த ரத்தம்  வாலி யுடையது என்று  சுக்ரீவன்  தப்புக் கணக்கு போட்டு குகையின் வாசலை பாறையால் மூடியது  தவறான செயல். அதே நேரம்    வாலி  இறந்து அவன் ரத்தம் தான் வெளியே வழிந்தது என்று முடிவு கட்டி  கிஷ்கிந்தாவுக்கு   அரசனானது அவசரமான செயல்.  வாலி மகன் அங்கதன் அனுமனிடம்  இதைச் சொல்லி இருக்கிறான்.  

விபீஷணனை ஒரு  துரோகி என்ற முறையில் வடக்கே  சித்திரிக்கப்பட்டு இருக்கிறது.  ராமனின் குணங்களை அறிந்து  நல்ல பண்புகளை பற்றி தெரிந்து தான் விபீஷணன் அவனோடு சேர விரும்பினான்.   ராவணனின்  தீய குணங்கள், செயல்கள்  பற்றி எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லியும், அறிவுறுத்தியும் ராவணன் செவி மடுக்கவில்லை என்பதால்  அவன்  ராமனிடம் சரண் அடைந்தவன்.  ராவணனின் வம்சத்தில் எவரும் மிஞ்சவில்லை,  லங்கைக்கு   நீதிமானாக  ஒரு நல்ல அரசன் தேவையாக இருந்த நேரத்தில்  விபீஷணன்  ராவணனின் ஒரே வாரிசாக லங்கைக்கு அரசனாக முடி சூட்டப்பட்டான்.  அதில் சுயநலம் இல்லை.

சாஸ்திரிகள் பிரசங்கம் தொடரும்  


sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:58:24 AM4/19/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்  --  நங்கநல்லூர்   J K  SIVAN  


          மரநாய்  விஜயம்  

 பேசும் தெய்வத்திற்கு  தாய் தந்தை வைத்த பெயர்  ஸ்வாமிநாதன்.  அப்பா  சுப்ரமணிய சாஸ்திரிகள்  பள்ளிக்கூடங்களுக்கு  இன்ஸ்பெக்ஷன்  INSPECTION   செல்லும்  மேற்பார்வையாளர்.   அடிக்கடி  ஊரை விட்டு செல்ல வேண்டிய உத்யோகம்.  ஆகவே  பணி மாற்றமும்  இடப்பெயர்ச்சியும்  இருந்ததால்  பல ஊர்களுக்கு அந்த குடும்பம்  சென்று வாழ்ந்தது.      சின்னவயசிலேயே விழுப்புரம், திண்டிவனம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, விக்கிரவாண்டி என்று பல ஊர்களை சுவாமிநாதன்  பார்த்தாயிற்று. பின்னால்  சந்நியாசியாக ஜகதகுருவாக  எத்தனை ஊர்களுக்கு நடந்து சென்றிருக்கிறார்  மஹா பெரியவா.  

இந்த பதிவில் குறிப்பிடும் சம்பவம்  நூறு வருஷங்களுக்கு முன்பு நடந்த ஒன்று.  அப்போது ஸ்வாமிநாதன் வயது 3.   பொம்மைகளை வைத்துக்கொண்டு  விளையாடும் பையன்.  வீட்டு தாழ்வாரம் பெரிசு.  ஆகவே நிறைய  இடம் விளையாட இருந்தது.

ஒரு நாள் ராத்திரி நேரம்...

கிராமம்  என்பதால்,  மின் வசதிகள் இல்லாத காலத்தில்  ஏழு எட்டு மணிக்கே  ஊர் உறங்கிவிடும். எல்லோர் வீட்டிலும் ஏதோ ஒரு தீபம்  முணுக் முணுக் என்று எரிவது தான்  வெளிச்சம்.    ஒன்பது மணி என்பதே  நடு நிசி மாதிரி நிசப்தம்.  ஆங்காங்கே நரிகள், நாய்கள்  ஓலமிடும் சப்தம் பழக்கமானது.

சுப்பிரமணிய சாஸ்திரிகள் வீட்டில்   சுவாமிநாதன், அம்மாவின் அரவணைப்பில் அசந்து தூங்கிக் கொண்டி ருந்தான்.  

சமையல்  கட்டில்  திடீரென்று ஏதோ சத்தம். பாத்திரங்கள் உருளும் ஒலி.  பெரிய  பழையகால வீடு  அடுக்கடுக்காக  இருக்கும்  ஓட்டு விடு.   சுப்ரமணிய அய்யர்  மனைவி எல்லோரும் தூக்கம் தடைபட்டு விழித்தார்கள். யாரோ திருடன் வீட்டுக்குள்  நுழைந்து விட்டான் என்று பயம்.   பக்கத்து வீட்டிலும் இந்த சப்தம் கேட்டு  சிலர்  ஹரிக்கேன் விளக்குகள்,  கம்பு தடி, கடப்பாரை என்று கையில் கிடைத்த ஆயுதத்தை  எடுத்துக்கொண்டு வந்து விட்டார்கள்.

சுவாமிநாதனும்  விழித்துக்கொண்டான்.  அவனுக்கு என்னவோ ஏதோ என்று பயம்.  கால்கள் நடுங்குகின்றன. அறையில் இருந்த ஸ்டூல் மேல் ஏறிக்கொண்டுவிட்டான்.  

 தைரியசாலிகள் நான்கைந்து பேர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு,  ஹா  ஹூ  என்று கத்திக்கொண்டே   கதவைத் திறந்து கொண்டு  சமையல்  கட்டில் நுழைந்தார்கள்.   அங்கே நன்றாக கொழு கொழு வென்று
ஒரு மரநாய் தன் தலையை ஒரு பாத்திரத்துக்குள் நுழைத்து சிக்கிக்கொண்டு, அதிலிருந்து விடுபட முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தது.

மரநாய்  பார்த்திருக்கிறீர்களா.  நரி மாதிரி  முகம்,  மரம் ஏறும். சிலர்  அதை  புனுகுப் பூனை  ஜாதி என்பார்கள்.  ஆங்கிலத்தில் அதற்குப் பெயர்   PALM  CIVET . நீண்டு மெலிந்த உடல்.   எடை  கிட்டத்தட்ட   2  -  5 கிலோ  இருக்கும்.. நீண்ட  அடர்ந்த வால். கட்டான உடல் முழுவதும் சாம்பல் நிறத்திலும் கால்கள், காதுகள், முகப்பகுதி என்பன கரு நிறத்திலும் மயிரடர்ந்து சொர சொரப்பானதாகக் காணப்படும்.  உடம்பில்   மூன்று கறுப்புக் கோடுகள்.   மரங்களில் ஏறி  வாழும். 
 
எது எப்படியோ   கண் தெரியாமல்  அது சொம்புக்குள்  தலையை விட்டு வெளியே  எடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தது.   அதைப் பிடித்துத் தூணில் கட்டு கிறார்கள். மரநாயை இருவர் பிடிக்க, பாத்திரத்தை இருவர் பற்றி இழுக்க மரநாய் விடுபடுகிறது. அதற்கு மூச்சுத் திணறுகிறது. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த மரநாயை இழுத் துப் போய் ஊருக்கு வெளியே விட்டு விடுகிறார்கள். சுவாமிநாதனுக்கு பயம் விலகியது.  சுவாமிநாதனுக்கு   அம்மா  ஒரு டம்பளர்   தீர்த்தம் கொடுத்தாள். குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டான் 

பாத்திரத்தில் வெல்லம் வைக்கப் பட்டிருந்தது. பேராசைப்பட்டு அதை ருசி பார்க்க வந்த மரநாய், தலையைப் பாத்திரத்துக்குள் நுழைத்திருக்கிறது. பின்பு விடுவித்துக்கொள்ள இயலாமல் தவித்திருக்கிறது. பாவம், அந்த ஜீவன் ஆசைப்பட்டது வெல்லத்துக்காக. அது கிடைக்கவில்லை. துன்பம் மட்டுமே மிஞ்சியது. வீட்டிலும், அக்கம் பக்கத்திலும் இருந்தவர்களுக்குத் தூக்கம் தடைப்பட்டதுதான் மிச்சம்!

இந்த சம்பவத்தால்  நடுங்கிக்கொண்டிருந்த  சுவாமிநாதனை  மடியிலிட்டுக் கொண்ட தாய், ``ஸ்வாமிநாதா... அழியக்கூடிய பொருள்கள் மீது நாம் ஆசைவைக்கவே கூடாது. பாவம், அந்த நாய்... வெல்லத்துக்கு ஆசைப்பட்டு எத்தனை கஷ்டம் அனுபவிச்சது பார்த்தியா?” என்று பெரிய தத்துவத்தைப் பிஞ்சு மனதில் புகட்டினாள். சுவாமிநாதனுக்குப் புரிந்தும் புரியாதது போல் இருந்தது. தூக்கம் கண்களைச் செருகியது.

விடியற்காலை மகாலட்சுமி அம்மாள்   எழுந்து கொண்டுவிட்டாள். வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போட்டாள். ஸ்நானம் செய்துவிட்டு வந்து, நெற்றியில் திலகமிட்டுக்கொண்டு, பூஜை அறையில் ஸ்லோகங்கள் முணுமுணுத்துக் கொண்டே சுவாமி படங்களை புஷ்பங்களால் அலங்கரித்தாள். ஊதுவத்தி ஏற்றினாள்.

கண்களைக் கசக்கிக்கொண்டே வந்த சுவாமிநாதனிடம் மணி எடுத்துக் கொடுத்தாள்.  கனகணவென்று  மணி அடித்தான்.  கற்பூரத்தை ஏற்றி சுவாமி படங்களுக்குக் காட்டினாள். குளித்து முடித்துவிட்டு வந்த சுப்பிரமணிய சாஸ்திரிகள், தீபத்தை உள்ளங்கையால் தொட்டு, சுவாமிநாதனின் கண்களில் ஒற்றி எடுத்தார்.

பிற்காலத்தில்  காளஹஸ்தியில் நடந்த சதஸ் ஒன்றின்போது, மணி அடித்து தீபாராதனை செய்வதில் புதைந்துள்ள தத்துவத்தை விளக்கியிருக்கிறார் மகா பெரியவர்:

‘தீபாராதனைக்கு முன், திரை போடுவதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. நாம் ஏதேதோ நினைவுகளில் மனதை அலையவிட்டுக் கொண்டிருப்போம். அப்போது சட்டென்று மணியோசைக் கேட்டதும் நம் காதுகளைத் தீட்டிக் கொள்கிறோம். இதர அநாவசிய சத்தங்கள் நம் காதில் விழுவதில்லை. அடுத்த கணம் திரை விலகுகிறது. நம் கண்கள் தேவையற்ற வேறு காட்சிகளைக் காணாதபடி தீபாராதனையின் ஒளி நம் கவனத்தைக் கவருகிறது.

கண்ணும் காதும் ஒரே இடத்தில் லயிப்பதுடன், மனத்தை யும் அதே இடத்தில் நிலைபெறச் செய்வதுதான் (concentration) பூஜையின் பலன். அதனால்தான் கோயில்களிலும் இதர இடங்களிலும் பூஜையின்போது   டாண்  டாண்  என்று  மணி யடித்து, கற்பூர ஆரத்தி காட்டுகிறார்கள்.’



sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:58:31 AM4/19/21
to amrith...@googlegroups.com
 
  நன்றி கிருஷ்ணா, நன்றி 2    -   நங்கநல்லூர்   J K  SIVAN

குழந்தைகள்  வண்ணம் தீட்ட கலர் மெழுகு குச்சிகளை   CRAYONS   உபயோகிக்கும்  பார்த்திருக்கிறீர்களா? அது நமக்கு எத்தனை பாடம் சொல்லித்தருகிறது!    சிலது முனை கூறாக இருக்கும்,  சிலது அழகாக இருக்கும்,  சிலது மங்கிய கலரில் இருக்கும்,   சிலதுகளுக்கு விசித்திர பெயர்கள். எல்லாம்  வெவ்வேறு வண்ணங்களில் உள்ளவை.  எல்லாமே  ஒரே அட்டைப்பெட்டிக்குள் தான் வரிசையாக இருக்கும்.    பாரதியார் பாடுவார்  பல  வர்ண பூனைக்குட்டிகள்,  தாய்க்கு எல்லாம்  ஒன்றே தான் என்பது போல் அன்பு தான் எல்லாரையும் இணைக்கும் அட்டைப்பெட்டி. கிருஷ்ணா, நீ தான்  அந்த அட்டை பெட்டி .. எல்லோரிடமும் உன் அன்பை, பாசத்தை சமமாக  பொழிபவன். 

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எத்தனை  அபூர்வ சக்திகளை வைத்திருக்கிறாய்.  எல்லையற்ற சமுத்திரம் போல் சக்தி இருந்தும் அதை உணராமலேயே  வாழ்கிறோம்.   உலகில் மற்றவர்களுக்கு எத்தனை நன்மை செய்யலாம்.  நேற்று இறந்த ஒரு நடிகனை எடுத்துக் கொள்வோம்.  சிரிப்பு அவன் பிழைப்பு.  அவன் வாழ்க்கை எப்படிப் பட்டது? இறந்த பிறகு அல்லவோ மற்றவர்கள் விழித்துக் கொள்கிறார்கள்?  பச்சைப் பசேலென எங்கும்  லக்ஷக்கணக்கான  மரங்களை நட்டவன் அவன்.   யார் அவனுக்கு அதைச் செய் என்று சொல்லிக்கொடுத்தது. சொல்லிக்கொடுத்ததையெல்லாம் நாம் கடைப்பிடிப்பதில்லையே. அவன் உள்ளுணர்வு அவனை உந்தித் செலுத்தியது.   நாம்  ஒவ்வொருவரும் என்ன செய்யப்போகிறோம்? 

வாழ்வில் முன்னேற நம்பிக்கை வேண்டும்.  உன் மீது, மற்றவர் மீது, நல்லவை மீது, நல்லவர்கள் மீது. அன்பு வெல்லும் என்ற சொல்லின் மீது.

சந்தோஷம் எங்கிருந்தோ  வந்து குதிக்குமா ?  நீ  யார்  என்பதா முக்கியம்?  உன்னிடம் என்ன இருக்கிறது என்பதும்  பொருட்டல்ல.   நீ  என்ன நினைக்கிறாய்  என்பது தான் உன் சந்தோஷத்துக்கு  அடிப்படை காரணம்.

மனதுக்குள் செல். வேண்டாத  எண்ணங்களை  களையெடு .அவை நீ செல்ல வேண்டிய  பாதைக்கு தடங்கல்கள். 

ஆங்கிலம்  ஒரு  அழகான மொழி.  அதை  மற்ற மொழிகளில் சொல்லும்போது அதன் அழகு குறைந்து விடுகிறது.  உதாரணமாக  ஒரு  குட்டி கதை சொல்கிறேன் கேளுங்கள் .

This is a story of four people called Everybody, Somebody, Anybody and Nobody.   There was some important work that had to be done, and Everybody was sure that Somebody would do it. Anybody could have done it, but Nobody did it. Somebody got angry because of this, since it was Everybody's job. Everybody thought Anybody could do it, but Nobody understood that Everybody wouldn't do it. It ended with Everybody blaming Somebody as Nobody did what Anybody could have done

நேர்மையும்  அநியாயமும்,,  பொய்யும்  நிஜமும்,  சிலருக்கு ஒன்றாகவே  தோன்றுகிறது.  அவர்கள் பேச்சில், நடத்தையில்  ரெண்டும் கலந்து ஒன்றாகவே  இருக்கிறது.  அவர்களால்  கொஞ்சம் கூட  வித்யாசப்படுத்திக் கட்டமுடியாமல்  ரெண்டிலும் அவர்கள் முகம்   ஒரே  மாதிரி  மலர்ச்சியாகவே  இருக்கிறதே!    அநியாயமும்,   பொய்யும் , அவர்களது  பேச்சு  செய்கையில் ஒன்றாக கலந்து  இருந்தாலும்,    அவர்கள் அதைப்பற்றி மனச்சாட்சியின் உறுத்தல் இல்லாமல் சகஜமாக காட்டிக்கொள்வது   எப்படி? யாரை ஏமாற்றுகிறார்கள் என்று யோசித்தால் பாவம்  அவர்கள் தங்களைத்தான் ஏமாற்றிக் கொள்கிறார்கள்  ஏனென்றால் மற்றவர்கள்  அவர்களை பற்றி  நன்றாக அறிந்து  கொள்ள முடிகிறதே. 

sivan jaykay

unread,
Apr 19, 2021, 6:58:31 AM4/19/21
to amrith...@googlegroups.com


ஸூர்தாஸ் --      நங்கநல்லூர்  J K  SIVAN 


38.    கண்ணனை பணி மனமே...!!

பக்தி பரவசத்தில்  தன்னை இழந்து இறைவனோடு ஒன்றி அவனது ப்ரபாவத்தில் மூழ்கி ஆனந்த நிலையிலி ருக்கும் மஹான்கள் இந்த உலக சிந்தனை துளியும் இல்லாதிருப்பவர்கள். அவர்களது வாக்கில் சத்யம் எதிரொலிக்கும். அவர்கள் எழுத்தில் கற்பனையில் கூட  உண்மை தான்   பிரதிபலிக்கும். நம்மால் காண முடியாததை எளிதில் ஆனந்தமாக கண்டு ரசிப்பவர்கள், அனுக்ரஹிப்பவர்கள்.

அப்படி ஒருவர் தான் கண்ணற்ற   ஸூர் தாசர். கண்ணன் அவர் மனதில் நிரம்பி, மூச்சாக அவரிடமிருந்து வெளிப்பட்டு பாடலாக வெளிவந்து எவராலோ எழுத்தில் இன்று நம் முன்னே புத்தகமாக நிற்கிறான். அவனை அந்த புத்தகத்தில் ரசிக்கவேண்டாமா? அதன் மூலம் சூர்தாஸின் இன்பத்தில் கடுகளவாவது நாமும் பங்கு கொண்டு அனுபவிக்க வேண்டாமா?  ஆனால்  அவர்  பாடிய மொழியோ  அதை எழுதியவரின்  ஹிந்தி மொழியோ நமக்கு தெரியாமல் நம்மை வளர்த்து விட்டார்களே  இந்த தமிழ் தமிழ் தமிழ் எனும்  பற்றில்லாதவர்கள்.

ஸூர்தாஸ் சொல்கிறார்:

''ஹே மனமே வா உனக்கு ஒரு நல்ல வழி சொல்லித்தருகிறேன். அங்கே இங்கே ஓடாதே. அதோ பார் ஒளிவீசும் சிவப்பு நிறத்தில் ஏதோ தெரிகிறதே என்னவென்று புரிகிறதா? என்ன யோசனை? நானே சொல்கிறேன்.

ஓ.  அது  யாருடைய பாதம் என்று தெரியவில்லையா?அவன் யாரென்று யோசிக்கிறாயா ? அதுதான் அப்பா, நமது நந்தகோபன் மகன் கிருஷ்ணன். எவன் திருவடி துணை இருந்தால் பயங்கள் நீங்குமோ அவன்.

அரிது அரிது மானுடராகப் பிறத்தல் அரிது. அப்படிப் பிறந்து, இந்த வாழ்க்கை எனும்  சம்சார கடலை தாண்ட    வேண்டாமா? அதற்கு சாதுக்களின் சத் சங்கம் தேவை ஆயிற்றே.

இதோ என்னை பார். இரவு எது பகல் எது எனக்கு? எல்லாமே இருட்டு. .எல்லாமே வெளிச்சம். தூக்கம் ஏது? உடலில் உஷ்ணம் குளிர்ச்சி, மழை வெயில் படுவது தெரிகிறது. அனுபவிக்கிறேன்.


என் விஷயத்தில்  அற்ப சுகத்தை, (என் விஷயத்தில் காகித பணத்தை தேடி,) நாடி எத்தனையோ வருஷங்கள் கடினமான  கருமிகளுக்கு உழைத்தேன். என்ன பிரயோஜனம்?

நான் யார்? அந்த கோவிந்தனின் தாசானு தாசன். நவ வித பக்தி என்பார்களே  அது எனக்கு தெரியாது  என்றாலும் என்ன என்று தெரிந்து கொண்டேன்.  உங்களுக்கும் அதை தெரிந்து கொள்ள  விருப்பம் உண்டா ?
 அது  என்ன  நவ வித பக்தி?    சொல்கிறேன். 

என் ஹரியின் பெருமைகளை கேட்பது, 
அவன் பெருமைகளை நாவினிக்க சொல்வது, பேசுவது, ஸ்மரிப்பது, 
கணநேரமும் விடாமல் அவனை நினைவினில் நிறுத்திக் கொள்வது, 
பிரார்த்திப்பது, 
அவன் செந்தாமரை திருவடிகளில் சரணடைவது, 
நறுமண வாசமிகு மலர்களால் அவனை அர்ச்சிப்பது, 
வாசனாதி திரவியங்களால் அவனை மகிழ்விப்பது, 
அவனுக்கு உற்ற நண்பனாக சேவை புரிவது, 
இதையெல்லாம் விடு..... என்னையே அவனுக்காக மறந்து இழந்து அவனுக்கு என் உயிர் உடல் பொருள் ஆவி அனைத்தும் அர்ப்பணிப்பது.... போதுமா ??

போதும் போதும் போதும்..... என்கிறார் சூர்தாஸ் இந்த அருமையானபாடலில்:

Bhajahoon re man sri nand nandan abhaya charan arvind hey
Durlabh manav janam satsange tar jaave bhav sindh re
Sheet Aatap Vatavariyat , ae din aavanijaani re
Biphale sevenu kripan durjan chapal sab sukh lagi re…
Sravan Kirtan Smaran Vandan Paadsevan Dasya re
Poojan Sakhijan Atmanivedan , Govind Das abhilashi re…
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare .

 

sivan jaykay

unread,
Apr 21, 2021, 9:55:03 PM4/21/21
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J K SIVAN -


ஸ்ரீ ராமநவமி -  தெய்வத்தின் குரல் 


மஹா பெரியவா பக்தர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய  ஒரு நூல் தெய்வத்தின் குரல்  அத்தனை பாகங்களும். 
அதில் ஒரு  அத்தியாயத்தில் மஹா  பெரியவா  ஸ்ரீ ராம நவமி என்ற தலைப்பில்   கூறிய  அறிவுரைகளை  ஸ்ரீ ரா கணபதி அற்புதமாக எழுதி இருக்கிறார். அதை கீழே  தருகிறேன்.  


“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைத்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”

இது கம்பராமாயணத்தில்  -- சிறப்புப் பாயிரம் 14)


ஸ்ரீ ராமநவமியன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் கம்பராமாயணத்தில் ஸ்ரீ ராமாவதார கட்டத்தில் உள்ள கீழ்காணும் பாகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.


''வேய்புனர் பூசமும் விண்ணுளோர்களும்
தூயகற் கடகமும் எழுந்து துள்ளவே
சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்
வித்தக முனிவரும் விண்ணு ளோர்களும்
நித்தரும் முறைமுறை நெருங்கி யார்ப்புறத்
தத்துறல் ஒழிந்துநீள் தருமம் ஒங்கவே.

ஒருபகல் உலகெல்லாம் உதரத்துட் பொதிந்
தருமறைக் குணர்வரும் அவனை யஞ்சனக்
கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்
திருவுறப் பயந்தனள் திறங்ககொள் கோசலை.

(கம்ப ராமாயணம் : பாலகாண்டம் – திரு அவதாரப் படலம்)


இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீ ராமநவமியன்று முழுவதும் பட்டினி (சித்த உபாவாஸ) விரதம் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நிதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ஸ்ரீராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து, பிறகு, “ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்” என்னும் பதின்மூன்று அக்ஷரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லிக்கொண்டு, ஊரைச் சுற்றிக் கொண்டு வந்து, முதலில் ஆரம்பித்த இடத்தை அடைந்து, அங்கு பத்து நிமிஷம் பஜனை செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.


மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, ஸ்ரீ ராமாவதாரத்தில் (கம்ப ராமாயணத்தில்) ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை வர்ணிப்பதாக உள்ள கீழ்காணும் பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது ஸம்ஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்து, பத்து நிமிஷம் பஜனை செய்து, ஊர்ப் பொதுச் செலவில் ஏழை மக்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும்.


மங்கள கீதம் பாட
மறையோலி முழங்க வல்வாய்ச்
சங்கினம் குமுறப் பாண்டில்
தண்ணுமை யொப்பத் தாவில்
பொங்குபல் லியங்கள் ஆர்ப்பப்
பூமழை பொழிய விண்ணோர்
எங்கள் நாயகனை வெவ்வேறு
எதிர் அபிடேகஞ் செய்தார்.

மாதவர் மறைவ வாளர்
மந்திரக் கிழவர் முற்று
மூதறி வாளர் உள்ளஞ்
சான்றவர் முதனீ ராட்டச்
சோதியான மகனு மற்றைத்
துணைவரும் அனுமன் தானும்
தீதிலா இலங்கை வேந்தும் – பின்
அபிடேகஞ் செய்தார்.


சித்தமொத் தனன்என் றோதுந்
திருநகர்ச் செல்வ மென்ன
உத்தமத் தொருவன் சென்னி
விளங்கிய உயர்பொன் மௌலி
ஒத்துமெய்க் குவமை கூர
ஒங்குமூ வுலகத் தோர்க்குந்
தத்தம் உச்சியின்மேல் வைத்தது
ஒத்தெனத் தளர்வு தீர்ந்தார்

(கம்ப ராமாயணம் : யுத்த காண்டம் திரு அபிடேகப் படலம்)


‘ராம பிரானின் சிரத்தின் மேல் பொன்கிரீடம் விளங்கியது கண்டு, மூவுலகிலும் உள்ள மக்களும் தத்தம் சிரமேல் பொற்கிரீடம் வைக்கப்பட்டது போலவே எண்ணி மகிழ்ந்தார்கள் என்பது கடைசிச் செய்யுளின் கருத்து.

நாட்டில் உள்ள எல்லா மக்களிடையேயும் தெய்வ பக்தியும், நன்னடத்தையும் வேரூன்றி வளரவேண்டும் என்று எல்லோரும் ஸ்ரீ ராமநவமியன்றும், மறுநாள் புனர் பூஜையிலும், ஸ்ரீராம சந்திர மூர்த்தியைப் பிரார்த்தித்து கொள்ள வேண்டும்''.

இப்போதுள்ள  கொடிய  கொரோனா காலத்தில்  கூட்டமாக  சேர்வதோ, வெளியே சுற்றுவதோ முடியாது என்கிற பக்ஷத்தில்  அவரவர்  வீட்டிலேயே  இதை அனுஷ்டிக்கலாமே .  எல்லோரும்  தனித்தனியே சொன்னாலும் அது கூட்டமாக செய்ததற்கு  சமமானது அல்லவா ?


sivan jaykay

unread,
Apr 21, 2021, 9:55:03 PM4/21/21
to amrith...@googlegroups.com
TOMORROW   SRI RAMA NAVAMI:  21.4.2021.


ஸ்ரீ ராம ஜனனம் -  நங்கநல்லூர் J K SIVAN

இந்தியாவுக்கு ஒரு தனிச் சிறப்பு என்ன தெரியுமா.  இன்றுவரை  அதிகம் ஹிந்துக்கள் வசிக்கும் நாடு. இனிமேல் வருங்காலத்தில் எப்படியோ?   நாம்  பல் வேறு கருத்துக்கள் இருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட மக்கள். . விவேகானந்தர் அடிக்கடி சொல்வாரே வேற்றுமையிலும் ஒற்றுமை (unity in diversity)  அதே தான்.

ராமன் சம்பந்தப்பட்ட, ராமாயண கால  நிகழ்ச்சிகள் பல ரூபங்களில் ஊருக்கு ஊர் மாறுதலோடு காணப் பட்டாலும் அத்தனையும் அற்புதமான காரணங்களோடு விளக்கப்படும். ராமர் நம்மைப்போலவே ஒரு காலத்தில் இருந்தவர் தான் என்று புரிய வைக்கும். இதுவும் ஒரு விதத்தில் ராமாயணம் என்றும் அழியாத காவியமாக நிலைத்திருக்க ஒரு காரணம்.

ஊர் மக்கள் கூற்று ஒரு புறம் இருக்கட்டும். புதைபொருள் ஆராய்ச்சி, சரித்திர ஆதராரங்கள், இலக்கிய, சாஸ்திர வேத நூல்கள், புராணங்கள், புலவர்கள், கவிஞர்கள் எழுதி வைத்தது, கூறுவது, நாட்டுப்பாடல்கள், கூத்துகள், சாராம்சம் இவற்றினாலும் ராமாய ணம் வாழ்ந்தது, இன்னும் வாழ்கிறது.  இனிக்கிறது.  ஆளுக்கு ஆள்  ஏதேதோ சொல்லும்போது கொஞ்சம் அங்கங்கே உதைக்கும். வேறுபடும். . அதனால் என்ன?. ராமன் என்றும் உள்ளான்.   ராமனோ  ராமாயணமோ  கட்டுக்கதை அல்ல, ஒரு உண்மையின் நிருபணம்.  இலங்கையில் ஆடம் ப்ரிட்ஜ் இருக்கும் வரை, சேது பாலம் அழியாத வரை, கொஞ்சம்  மண்ணை முதுகில் தடவி கடலில் சேர்த்த  அணிலின்  முதுகில் மூன்று கோடுகள் இருக்கும் வரை ராமாயணமும் ராமனும்  நமக்கு மறக்காது. .

எப்போதுமே எது ரொம்ப மோசமோ,  உயர்ந்ததோ, அது மட்டுமே ஞாபகத்தில் நிற்கும்.  ராமனை நாம்  7000 வருஷங்களுக்கு அப்புறமும் நினைக்கிறோம் , படிக்கிறோம், பாடுகிறோம், புகழ்கிறோம், வணங்குகிறோம். ஏன்?  ராமன் ஒரு உன்னத புருஷன், ஈடற்ற மனிதன், அரசன், உதாரணன்.   இது உயர்ந்த குணம் பண்பு.  கடைசி ஹிந்து வரை மறக்கமாட்டேன். நடுவில் யாராவது என்ஜினீயரா, டாக்டரா , வக்கீலா என்று குதர்க்கம் பேசினால்   அதை காலில்  தூசியாக  தட்டிவிடுகிறோம். 

ராமனை உலகமே புகழ்கிறது.  தென் கிழக்கு ஆசிய நாடுகளில், பர்மா, தாய்லாந்த், இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன் தீவுகள், வியட் னாம், மலேசியா, சிங்கபூர் இங்கெல்லாம் ராமாயணமும் ராமனும் நன்றாகவே பரிச்சயம்.

ஆப்ரிக்காவே ஒரு கால கட்டத்தில் குசத்வீபம் என்று பேர் கொண்டது. குசன் ராமனின் ஒரு பிள்ளை, அங்கு ஆட்சி புரிந்திருக்கிறான்.

கோவிலில் ராமனை விக்ரஹமாக பார்த்து வழிபட்டாலோ, ராமனைப  பற்றி கதை படித்தாலோ, பிரசங்கமாக கேட்டாலோ, டிவியில் பார்த்தாலோ, ராம நாடகப் பாட்டு கேட்டாலோ, நாமே தெரிந்தவரையில் பாடினாலோ, ஒருவித சந்தோஷம், உள்ளே ஏற்படுகிறதல்லவா. இதை அனேக கோடி மக்கள் இன்றும் அனுபவித்து வருகிறார்களே.

ராமன் பிறந்த நேரம், காலம், ஜாதக பலன் அனைத்தும் அநேக பண்டிதர்கள் அலசி வைத்திருக்கிறார்கள். ராம சகாப்தம் என்று ஒரு புத்தகம். எழுதினவர் புஷ்கர் பட்நகர் . ராமன் சரித்திர பூர்வமானவன். வால்மீகி, ராமன் காலத்தில் வாழ்ந்த  ரிஷி. ராமன் அவதாரமான நேரம், அப்போது காணப்பட்ட கிரகங்கள் ,ராசிகள், நக்ஷத்ரங்கள், இவை எந்த இடத்தில் இருந்தன என்று ராமாயணத்தில் விலாவாரி யாக புட்டு புட்டு வைத்திருக்கிறார் வால்மீகி. இது ஒரு அதி உன்னதமான வான சாஸ்திர உண்மை. தற்கால விண்வெளி நிபுணர்கள் astro physics specialists இது சரியே என்று தலையாட் டுகிறார்கள். எனவே ராமாயணம் கட்டுக்கதை இல்லை. ராமனது வாழ்க்கையில் அந்த ஜாதக பலனின் செயல்பாடுகள் விளங்குகிறதே.

ராமனின் பிறந்த நேர ஜாதகம் காட்டும் ராசி, க்ரஹ, நக்ஷத்திர கூட்டமைப்பு லக்ஷக்கான வருஷங்களாகியும் மீண்டும் அதே போல் இன்னும் இதுவரை அமைய  வில்லையாம். பட்நகர் சொல்கிறார். இது மாதிரி யாராலும் கற்பனை கூட பண்ணக்கூட முடியாது. இது ஓர் அதிசயம் என்கிறார். இது இவ்வாறு நேரப் போகிறது என்று அறிந்து, முன்கூட்டியே தான் வால்மீகிக்கு அந்த பாக்யத்தை நாராயணனே கொடுத்திருக்கிறார். எழுத வைத்திருக்கிறார். நமக்கு வேண்டுமே என்று நிதர்சனமாக பார்த்து இதை ராமாயணத்தில் வால்மீகியை எழுத வைத்திருக்கிறார்.

ராமாயணத்தில், ராமன் நவமி திதியில், சுக்ல பக்ஷத்தில், சைத்ர மாதத்தில், (சித்திரை ஒன்பதாம் நாள், வளர்பிறையில், புனர்பூச நக்ஷத்ரத்தில் பிறந்தான். அப்போது, சூரியன், செவ்வாய், சனி, புதன், சுக்ரன் எந்த க்ரஹத்தில் , எந்த ராசியில், லக்னம், என்ன என்று ராமாயணத்தில் ஸ்லோகம் 1.18.8,9 ல் வால்மீகி சொல்லி யிருக்கிறார்.

tato yajñe samāpte tu ṛtūnām ṣaṭ samatyayuḥ |
tataḥ ca dvādaśe māse caitre nāvamike tithau || 1-18-8

nakkṣatre aditi daivatye sva uccha saṃstheṣu paṃcasu |
graheṣu karkaṭe lagne vākpatā iṃdunā saha || 1-18-9

ராமன் பிறந்தபோது  ''வசிஷ்ட மகரிஷி, நீங்களே இவனுக்கு ஒரு பெயர் வையுங்கள்''''  என்கிறார் தசரதர்.
யோசனையே பண்ணவில்லை வசிஷ்டர்
'''ராம '' என்று எல்லோராலும்   இவன்  வணங்கப் படுபவன்.''
யோசித்தால்  ஏன்  வசிஷ்ட மகரிஷி ''ராம'' என்ற பெயர் வைத்தார்  என்பது புரியும்.

ஹிந்து சமயத்தில்  சைவர்கள்   தொழ ஏற்றது  ''ஓம் நமசிவாய'' எனும் பஞ்சாக்ஷரம். வைணவர்கள்  ஏற்றது  ''ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய'' என்ற அஷ்டாக்ஷரமும் .  ''ரா'' என்ற  அஷ்டாக்ஷர  நாராயணாய மந்திரத்தின் ரெண்டாவது எழுத்தையும் ''நமசிவாய'' எனும் பஞ்சாக்ஷர மந்திர   ரெண்டாவது  எழுத்து ''ம' வையும் சேர்த்து , , சிவனும் நாராயணனும், ஹரியும் ஹரனும் சேர்ந்த நாமமாக ' ராம' எனும் பெயரை வைத்தார் வசிஷ்டர்.

மொத்தத்தில் எல்லா ஹிந்துக்களும் வணங்கி அருள்பெறவேண்டியவன்  ராமன்.

''நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ''ராம''  என் றிரண்டெழுத்தினால்”

நாட்டில் உள்ள எல்லா மக்களிடையேயும் தெய்வ பக்தியும், நன்னடத்தையும் வேரூன்றி வளரவேண்டும் என்று எல்லோரும் ஸ்ரீ ராமநவமியன்றும், மறுநாள் புனர் பூஜையிலும், ஸ்ரீராம சந்திர மூர்த்தியைப் பிரார்த்தித்து கரோனாவை  அவன் கருணையோடு அழிப்போம்.

sivan jaykay

unread,
Apr 21, 2021, 9:55:03 PM4/21/21
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி    --    நங்கநல்லூர்   J K  SIVAN 
தாகூர்.   



   47.  கண்ணா  நீ  வேறு நான்  வேறோ?

                           
47.  The night is nearly spent waiting for him in vain.
I fear lest in the morning he suddenly come to my door when I have fallen asleep wearied out.
Oh friends, leave the way open to him---forbid him not.
If the sounds of his steps does not wake me, do not try to rouse me, I pray.
I wish not to be called from my sleep by the clamorous choir of birds, 
by the riot of wind at the festival of morning light.
Let me sleep undisturbed even if my lord comes of a sudden to my door.
Ah, my sleep, precious sleep, which only waits for his touch to vanish.
Ah, my closed eyes that would open their lids
 only to the light of his smile when he stands before me
 like a dream emerging from darkness of sleep.
Let him appear before my sight as the first of all lights and all forms.
The first thrill of joy to my awakened soul let it come from his glance.
 And let my return to myself be immediate return to him
                                                         

குளிரில்  உடலை நடுங்க வைக்கும்  ஊதக்காற்றில் வெளியே திண்ணையில் போர்வை போர்த்திக்கொண்டு உட்கார்ந்து ராவெல்லாம் கொட்டு கொட்டென்று கண்  விழித்தது தான் மிச்சம்.   ஒருவேளை  அவன்  திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் காலை வேளையில் வந்து என் கதவு சார்த்தி இருந்ததை பார்த்துவிட்டு அப்போது  நான்  அசதியில் என்னை மறந்து தூங்கும்போது  திரும்பி போய் விட்டால்.....
நண்பர்களே,  கதவு  திறந்தே இருக்கட்டும்.  வழி விடுங்கள்.   என்  கிருஷ்ணன்  வருவான்,  
அவன் வரும்போது வரட்டும், தடை ஒன்றும் வேண்டாம்.
தூக்கம்  என் கண்ணைச் சுற்றுகிறது.  நான் தூங்கப்போகிறேன். யாரும் என்னை எழுப்பவேண்டாம். கிருஷ்ணன் வரும்போது அவன் காலடி சப்தம் என்னை எழுப்பாவிட்டாலும்  கூட பரவாயில்லை.  கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், என்னை எழுப்பவே  வேண்டாம்.  
இங்குள்ள  மாமர குயில்களின்  இனிய சங்கீதமோ,  சூரியன் பொன்னிற கிரணங்களைக்  கொண்டாடும் , சுகமான தென்றல் காற்றோ கூட என்னை தூக்கத்திலிருந்து கண் விழிக்க வைக்க வேண்டாம்.
 என் தலைவன், எஜமானன் கிருஷ்ணன் வந்து திடீரென்று என் வாசல்  கதவில் நுழைந்தாலும் என் தூக்கம் கலைய வேண்டாம்.

ஆஹா   என்  நித்திரையே,   எவ்வளவு சுகம் நீ.    தூக்கத்தின் அருமை  அது வராதபோது, அது கிடைக்காதபோது தான் ஐயா  தெரிகிறது. கிருஷ்ணன் வந்துவிட்டான், மெதுவாக அவன்  என்னை தொட்டாலே போதும். பளிச்சென்று அத்தனை  தூக்கமும் காணாமல் போய்விடும். ஸ்ப்ரிங் கம்பி மாதிரி எழுந்து  விடுவேன். 
.ஆஹா  ஆஹா.  எங்கே  போச்சு என் தூக்கம் எல்லாம்?

அவனது குறும்பு முகத்தின் புன்னகைச்  சிரிப்பு ஒன்று தான் என் விழிகளை டக் கென்று திறக்க வைக்கும். தூக்கத்தில்  கார் இருளில் பளிச்சென்று மின்னல் போல் ஒரு கனவு. அதில் அவன் ஜொலிக்கும் முகம் .
ஆஹா ஆஹா.

எனக்குள்ளே ஆத்மா என்று ஒன்று இருக்கிறதாமே , அதைத்  தட்டி எழுப்பி  முழுதும் நிரப்புவது அவன் கடைக் கண் பார்வை ஒன்றே என்ற அளவற்ற சந்தோஷம்  மட்டும் எனக்கு  போதும். சுருக்கமாக சொல்லட்டுமா? நான் மீண்டும் என்னை அடைவது என்பதே நான் அவனைச்  சேர்வது தான். புரிகிறதா? இதை தான் வேதங்கள், உபநிஷத்துகள் சொல்கிறது.

sivan jaykay

unread,
Apr 21, 2021, 9:56:38 PM4/21/21
to amrith...@googlegroups.com

''அவசியம் வந்துவிட்டது''    --     நங்கநல்லூர்   J K SIVAN --

ஒரு காலத்தில்  ஹிந்து சமயம்  க்ஷீண கதியில் இருந்த  போது   பிற மதங்களில்  பௌத்தம், ஜைனம் போன்றவை தலை தூக்கி இருந்தது. நல்லவேளை  அப்போது கிறிஸ்தவர்கள்  முஸ்லிம்கள் இல்லை.  ஏனைய சில  குட்டி குட்டி  மதங்கள், நம்பிக்கைகள் பரவலாக இருந்தது. அவற்றில் ஒன்று காபாலிகம், கபால ஓடு தரித்த காளாமுகர்கள்  நரபலி கொடுப்பவர்கள்.   சுடுகாட்டில் வசிப்பவர்கள்,  நர மாமிசம் உண்பவர்கள். சாம்பல் பூசிக்கொண்டு திரிபவர்கள். 

ஆதி சங்கரர்  தோன்றி பலரை  அத்வைத மார்க்கத்துக்கு  கூட்டிச் சென்றார்.   சைவம் துளிர்த்து வளர்ந்தது. பலரை வாதத்தில் வென்று ஷண்மத ஸ்தாபனம் செய்தார்.  காபாலிகர்களையும் அவர்  விட்டு வைக்கவில்லை. அவர்களையும்  சாத்வீகர்களாக மாற்றிக் கொண்டு வந்தார்.

இப்படிப்பட்ட  காபாலிகர்களின் தலைவன் ஒருவன் இருந்தான். சுடுகாட்டில் வாஸம் பண்ணுவது, நரபலி கொடுத்து மாம்ஸத்தையும் மஜ்ஜையையும் பச்சையாகத் தின்னுவது என்றிப்படி  க்ரூரமாக ‘வாமாசார’  ங்களை பின்பற்றி வந்தவனுக்கு   ஆதி சங்கரர்  அவனைப்  போன்ற பலரை   திருத்தி வருவது தெரியும்.  அவர் மீது கடும்  கோபம் அவனுக்கு.   அவனோடு சேர்ந்த  பல  காபாலிகர்கள் மனஸ் மாறிவிட்டார்களே.  மிச்சமிருந்த  ஒரு  சில காபாலிகர் களுக்கு  ஆதி சங்கரர் பரம வைரியாக  தோன்றிபதில் ஆச்சர்யம் இல்லை.  

மேலே சொன்ன  காபாலிக  தலைவனுக்கு   சங்கரரை  வாதத்தில்  எதிர்க்க முடியுமா?   அவரை தொலைத்து கட்டவேண்டும் என்ற எண்ணம்  வலுத்தது.  மஹா கருணையுள்ளம்  கொண்ட  ஆதி சங்கரர்  அவனுக்கு  பரம த்வேஷியாக  தெரிந்தார்.  

ஒருநாள்   அவரிடமே  நேரே   போய் நம் இஷ்டத்தைச் சொல்லுவோம்’ என்று நினைத்து, அவர் தனியாய் இருந்த ஸமயத்தில் அவரிடம் போய் இந்த காபாலிக  தலைவன்  நமஸ்காரம் பண்ணினான்.

கருணையோடு அவனை பார்த்தார்  சங்கரர்.

''ஐயா,  நான்  இதுவரை  விதவிதமாக பலி கொடுத்தும் கபாலி ஏனோ ப்ரத்யக்ஷமாகவில்லை. ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகமான ஒரு ராஜாவின் தலையையோ, அல்லது அஷ்ட மஹாஸித்தி பெற்ற ஒரு ஆத்மஞானியின் தலையையோ பலி கொடுத்தால் நிச்சயம் என் முன்னால்  கபாலி   ப்ரத்யக்ஷமாவார். ராஜாவின் தலைக்கு நான் எங்கே  போவேன்?   ராஜாவின்  தலைக்கு  நான்  முயற்சி பண்ணினால்  அவ்வளவு தான்...  அவன் என் தலையை வாங்கிவிடுவான்!    தாங்கள் மஹாஞானி, மஹா யோகஸித்தர். அதனால் என் மனோரதப் பூர்த்திக்காகக் கருணாமூர்த்தியான தங்களிடம் உதவி கேட்டு  வந்தேன்” என்றான்.

இப்படிக்   கூட ஒருத்தரிடம்  போய்  அவருடைய  தலையை  யாராவது கேட்பார்களா?  ஆதி சங்கரர்  கருணா  சாகரம் என்பதால் தைரியமாக காபாலிகன் கேட்டான். 

காபாலிகன் கேட்டதில்  சங்கராச்சார்யருக்கு  கோபம் வரவில்லை. அதற்கு பதிலாக ரொம்பவும் ஸந்தோஷம் உண்டாயிற்று: 

‘அட, ஒன்றுக்கும் உதவாதது என்று நினைக்கிற இந்த மநுஷ சரீரம்  கூடவா ஒருத்தனுக்கு ஈச்வர தர்சனமே கிடைப்பதற்கு உதவுகிறதாம்! மரம் பட்டுப்போனாலும் விறகாக உபயோகப்படுகிறது. மாட்டுக் கொம்பு ஈச்வர அபிஷேகத்துக்கே உபயோகமாகிறது. யானை தந்தமும் எத்தனையோ ப்ரயோஜனங்களைக் கொடுக்கிறது. மான் தோல், க்ரூரமான புலித் தோல்கூட, த்யானத்துக்கு ஆஸனமாகிறது. மநுஷ்ய சரீரம்தான் எதற்கும் ப்ரயோஜனப்படாதென்று நினைத்தால், இதை ஒருத்தன் கேட்டுப் பெற வருகிறானே!’ என்று ஸந்தோஷித்தார்.

“உன் ஆசைப்படியே ஆகட்டுமப்பா! ஆனால் என் சிஷ்யர்களுக்கு    நீ கேட்ட இந்த விஷயம் தெரியப்படாது. அவர்கள் பொல்லாதவர்கள்! உனக்கு ஏதாவது கஷ்டம் உண்டாக்குவார்கள். ஆகையால் நான் தனியாக த்யானத்தில் இருக்கும் ஸமயத்தில் வந்து  என்னுடைய  சிரஸை எடுத்துக் கொண்டு போ”என்றார்.

காபாலிகன்   அவர்  எப்போது யாருமில்லாத நேரத்தில்  தனியாய் த்யானத்திலிருக்கிறார் என்று கவனித்துக்கொண்டே வந்தான். தக்க சமயம் வந்தது.    அவரை நெருங்கி தனது கூரிய   கத்தியை உருவினான்.   ஆச்சாரியார் தலையை சௌகரியமாக  குனித்து காட்டிக்கொண்டிருந்தார்.  காபாலிகனின்  ஓங்கிய கத்தி கழுத்தை நோக்கி இறங்கியது.   

அந்த க்ஷணம்  பார்த்து  எங்கேயிருந்தோ  ஒரு  ஆக்கிரோஷமான  சிம்ம ஸ்வரூபத்தில்  ஒரு  மனிதன் தோன்றினான். அப்படியே  காபாலிகன் மீது  பாய்ந்து  அவனை அலக்காகாக  கையால் தூக்கி சுழற்றினான். காபாலிகனின் கத்தி காற்றில் பறந்து எங்கோ போய் விழுந்தது.  அடுத்த கணம்  காபாலிகன் அந்த நரசிம்மனின் மடியில்  கிழிந்த  வயிறோடு ரத்தம் சொட்ட சொட்ட  இறந்து கிடந்தான். 

க்ஷண கால நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில்  காபாலிகனின்   கோர சப்தமும்,  சிம்ம கர்ஜனையும் ஒரே சமயம் கேட்டு ஆதிசங்கரரை கண் விழிக்கச்  இந்த செய்தது.    திரும்பி பார்த்த  ஆதிசங்கரரின் கண்ணில்   அவரது சிஷ்யர்  பத்மபாதர்   தெரிந்தார்.  

ஆச்சரியமடைந்த  ஆச்சார்யர்,    பத்மபாதா, “என்ன ஆச்சு?   நீ எப்படி இங்கே வந்தாய்,  யார் இந்த  காபாலிகனைக்  கொன்றது. நீயா? சிம்மக்குரல் கர்ஜனை கேட்டதே.   இது யார் பண்ணிய கார்யம்?” 

பத்ம பாதர்   ''குருநாதா,  எனக்கு ஒண்ணும் தெரியலை.  நான்  கங்கையில் த்யானத்தில்   இருந்தேன். அப்புறம் எனக்குள்ளே   என்னவோ மாதிரி   ஒரு ஆவேசம், அவசரமாக ஆட்டி வைத்தது. . இப்பத்தான ஸ்வய ப்ரக்ஞை வந்திருக்கு” என்றார்.

ஆசார்யாள், “ஓஹோ, உனக்கு நரஸிம்ஹ மந்த்ரம் உபதேசமாயிருந்ததா?” என்று கேட்டார்.

“இருந்தது. ஆனால் ஒண்ணும் ப்ரயோஜனமில்லை குருநாதா.  நரசிம்ம  ஸ்வாமி என்னை ஏமாற்றிவிட்டு   யாரோ  ஒரு வேடனுக்கு தர்சனம் தந்தார். என்னவோ சொன்னார், 

‘அவஸ்யம்  ஏற்பட்ட சமயத்திலே  உன்னிடம்  வருவேன்’ என்று” – இப்படி  பத்மபாதர்  சொல்லும் போதே  அவருக்கு பொறிதட்டியது.    சட்டென்று தெளிவாயிற்று.

 “குருநாதா,  நரசிம்மஸ்வாமி தான் என் மேல் வந்திருக்கிறார்.  அவர்  சொன்னபடிதான் இப்போது பண்ணியிருக்கிறார்!  உங்களுக்கு இந்த காபாலிகனால்  உயிருக்கு   ஆபத்து நேர்வதை அறிந்து  என்மேல்  ஆவிர்பவித்து என்னை ஒரே  தாவு தாவி இங்கே ஆவேசமாக   ஓடி வரச்செயது  ஆக்கிரோஷத்தோடு  அவனைக் கிழித்து கொல்லச் செய்திருக்கிறார். அவர் ஆவேசித்துத்தான் இந்தக் கார்யம் நடந்திருக்கிறது. இதைவிட ஆபத்தில் ரக்ஷணம் காட்ட ஸமயமுண்டா?”  


ஆதி சங்கரர் கண்களை மூடினார். அவர் மனதில்  நரசிம்ம ஸ்துதி வேகமாக  ஓடிக்கொண்டிருந்தது.  ஆபத் பாந்தவா, அநத ரக்ஷகா  என்று  பத்மபாதரும்  வேண்டிக்கொண்டு நின்றார்.

 

sivan jaykay

unread,
Apr 21, 2021, 9:56:52 PM4/21/21
to amrith...@googlegroups.com

கருணைக்கடலே  ஸ்ரீ  ராமா     --   நங்கநல்லூர்   J.K. SIVAN

கோபன்னா ராம பக்தர். அவருடைய மாமா மத்தன்னா. கோல்கொண்டா சுல்தான் அப்துல் ஹசன் தானா ஷாவுக்கு மந்திரி. கோபன்னா,  மாமாவின் செல்வாக்கால் சுல்தானின் கஜானாவிலிருந்து பணம் எடுத்து சிதைந்து போயிருந்த பத்ராச்சலம் ராமர் கோவிலை புதுப்பித்தார். விஷயமறிந்த தானா ஷா கொதித்தான். உடனே ஆணை இட்டான்.

''கோவில் கட்ட என் பணம் கிடையாது .எனவே பணத்தை உடனே கட்டு இல்லாவிட்டால் பன்னிரெண்டு வருஷம் ஜெயில் தண்டனை''. நல்லவேளை கோபன்னாவின் தலை தப்பியது. ஆனால் சுல்தானின் கோல் கொண்டா சிறையில் கோபன்னா வாடினார். ராமனையே நினைந்து உருகி பாடினார்.

கோபன்னாவின் குரல் கோதண்ட ராமனுக்கு கேட்காமலா போகும்?

ஒருநாள் காலை தானா ஷாவின் அரண்மனை வாசலில் இருவர் நின்றனர். ஒருவர் கையில் பெரிய மூட்டை ஒன்று. வாசல் காவலர்கள் சுல்தானின் அனுமதி வாங்கி உள்ளே அனுப்பினார்கள்.

''யார் நீங்கள் ? என்ன விஷயமாக என்னை பார்க்க வந்தீர்கள்?''
''நாங்கள் கோபன்னாவின் பணியாளர்கள்''
''ஓ அப்படியா. என்ன விஷயமாக வந்தீர்கள்?
''அவர் உங்களுக்கு பணம் திருப்பி தரவேண்டுமாம். அதை வட்டியோடு சேர்த்து கொண்டு வந்திருக்கிறோம். சரி பார்த்து பெற்றுக்கொண்டு அவரை உடனே சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்.
''அப்படியா? என் கஜானாவிற்கு சேரவேண்டிய பணம் வந்து சேர்ந்துவிட்டால் எனக்கு கோபன்னாவை விடுதலை செய்வதில் தயக்கம் இல்லை. எங்கே பணம்?

ஒரு பெரிய பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அதில் பையிலிருந்த தங்க மோஹராக்களை வந்த இருவரும் கொட்டினார்கள். அளந்து கொள்ளுங்கள், எண்ணிக் கொள்ளுங்கள்'' என்கிறார்கள்.

ராஜாவின் ஆட்கள் மொத்த பணத்தை எண்ணினார்கள். வந்த இருவரும் உட்காரக் கூட இல்லை. நின்று கொண்டே இருந்தார்கள்.   பணத்தை எண்ணினதில் முஸ்லீம் ராஜாவுக்குச் சேர வேண்டிய தொகையை விட அதிகமாகவே ரொக்கம் இருந்தது. சுல்தானுக்கு பரம சந்தோஷம்.

''சரி, கோபன்னாவை விடுதலை செய்யுங்கள் நாங்கள் வருகிறோம்'' -    வந்த வீரர்கள் இருவரும் புறப்பட்டு விட்டார்கள்.

சிறையில் வாடி ராமனை வேண்டி உருகிக் கொண்டிருந்த கோபன்னாவின் முன்னால் சுல்தானின் ஆட்கள்.
''வாருங்கள் எங்களோடு. சுல்தான் உங்களை அழைத்து வர கட்டளை இட்டிருக்கிறார்.
''ஓஹோ,  எனக்கு சிரச்சேதமா? அதற்கு தான் தான் அழைப்பா? எதுவானால் என்ன. எல்லாம் ராமனின் சித்தம்.''

சுல்தான் முன்னே நின்றார் கோபன்னா '
சுல்தான் முக மலர்ச்சியாக இருந்தான். ''கோபன்னா, நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்தர் என்பது தெரியா மல் உங்களை அவமானப் படுத்தி விட்டேன். எனக்கு சேரவேண்டிய பணம் எல்லாம் அதிகமாகவே திரும்ப தந்து விட்டீர்கள். நீங்கள் தாராளமாக இனி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். உங்களை விடுதலை செய்தாகிவிட்டது. இனி நீங்கள் என் விருந்தாளி''.

கோபன்னாவுக்கு புரியவில்லை.

'சுல்தான், நானா? செல்வந்தனா? என்னுடைய ஆட்கள் உங்களுக்கு சேரவேண்டிய பணத்தை தந்தார்களா? யார் அவர்கள்?, எனக்கு அப்படி யாருமே கிடையாதே, என்னிடம் செல்வமே இல்லையே? - குரல் தழுதழுக்க தட்டு தடுமாறி கேட்டார் கோபன்னா.

''என்ன சொல்கிறீர்கள் கோபன்னா. இரண்டு வீரர்கள் ஆஜானுபாகுவாக பொன்னிற சரீரத்தோடு, காதில் குண்டலம், ஜடாமகுடம் தரித்து, கையில் நீண்ட வில் வைத்துக் கொண்டு இங்கே என்னை சந்தித்தார்களே, அதில் கொஞ்சம் பெரியவன் நீல நிறத்தில் இருந்தான். மற்றவன் பளபளக்கும் பொன்னிறமாக இருந்தான். இளையவன் தான் கையில் தங்க மோஹராக்கள் கொண்ட  மூட்டை  இருந்தது.

''சுல்தான் சுல்தான்.....என்ன சொல்கிறீர்கள். எனக்காக பணம் கட்டிய அவர்கள் யார் ?
''என்ன கோபன்னா,  உங்களது பணியாளர்கள் என்கிறார்கள் தெரியவில்லை என்கிறீர்களே. நான் அவர்கள் பெயரைக் கேட்டேனே.''

கோபன்னாவுக்கு உடல் நடுங்கியது. ''சுல்தான் யாரும் எனக்கு அப்படி இல்லையே. என்ன பெயர் சொன் னார்கள் ? ஸ்ரீ ராமா இது என்ன சோதனை!

''கொஞ்சம் இருங்கள் எனக்கு அவர்கள் பெயர்  மறந்து விட்டது. இதோ   என் சேனாபதி. அவர்  அப்போது  அருகில் இருந்தார் அவர் நினைவு வைத்திருப்பவர். சேனாபதி கை கட்டிக்கொண்டு அருகே வந்தான். ''அஹமத், இங்கே வந்தவர்கள் என்ன பெயர் சொன்னார்கள்?''
' நீல நிறமாக கொஞ்சம் பெரியவராக இருந்தவர்  பெயர்   'ராமோஜி, மற்றவர் லக்ஷ்மோஜி'' என்று சொன்னார்கள் .
 கோபன்னா சிலையானார்.இரு கைகளும் சிரத்தின் மேல் சென்றது. கண்களில் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் வழிந்தது. கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய இரு கைகளை தலைக்கு மேலே தூக்கி வணங்கிய வாறு சிலையாக நின்ற கோபன்னா தனக்காக பணம் கொண்டு வந்து கடனைத் தீர்த்தவர்கள் ராம லக்ஷ்மணர்களே என்று புரிந்து கொள்ள வெகு நேரமாக வில்லை.

தானா ஷாவும் அவர் வழிபட்ட தெய்வமே தனக்கு முன் காட்சியளித்தவர்கள் என்று புரிந்து கொண்டு ஆச்சர்யப்பட்டான். அவன் கோபன்னாவை பல்லக்கில் ஏற்றி பத்ராசலம் அனுப்ப, அவர் அங்கேயே தங்கி ''ராமதாசனாக'' சேவை செய்து வாழ்ந்தார். ராமர் கொடுத்த தங்க மோஹராக்கள் சில இன்னும் அங்கே இருக்கிறதாம். நான் சென்றபோது ஆலய அரும்பொருள் காட்சி நிலையத்தில் கண்ணாடி பெட்டகத்தில் சில காசுகள் பார்த்தேன்.

பத்ராசல ராமதாஸ் தெலுங்கு பக்திப் பாடல்கள் மனதை உருக்கக்கூடியவை. தெலுங்கு தெரியவேண்டும் என்பது தேவையில்லை. பக்தி பாவம் ஒன்றே போதும்.அவர் பாடிய பாடல்களில் ஒன்று :

ஹே ராமா, ரவிகுல சோமா, ரகுகுல திலகா, நீ எந்த விதத்திலாவது, எப்படியாவது ஒரு வழியில், என் மீது கருணை காட்டமாட்டாயா உத்தமா?

தாமரைக்கண்ணா, உன் தயவில்லாமல், அருளில்லாமல், கருணையில்லாமல் என்னால் இந்த கொடிய சம்சார சாகரத்தை கடக்க முடியுமா? நீ தானே தாரக ராமன்.ye theeruga nanu daya joochedavoராகவா. ரகுராமா, சீதா மணாளா, ரகுநந்தனா, பக்தர்களை அரவணைத்து காக்கும் பக்தவத்சலாகருணை நிரம்பிய ஆலயமே, பக்தர்கள் வேண்டும் வரமளிப்பவனே,கோசாலைக்கு மகனாக பிறந்து அவளுக்கு வரமளித்தவனே,ராமா நான் எண்ணற்ற கொடூர குரூர செயல்கள் புரிந்தவன் என்றாலும் உன்னை நம்பி வந்துவிட்டேன் அப்பா, என் கொடுமைகளை புறக்கணித்து, என்மீது கருணை கொள்வாய்.நான் நிரம்ப அவஸ்தை பட்டுவிட்டேன் அதற்கெல்லாம் பரிகாரமாக, என் பக்தியை ஏற்று அருள்வாய்.என் தெய்வ சிகாமணியே. ஓ ராமா என் துன்பத்திலிருந்து என்னை விடுவி.இந்திராதி தேவர்கள் வணங்கும் தசரதன் மகன் தாசரதீ எனக்கு அபாயம் அளிக்க வேண்டும். பக்த பரிபாலனம் செய்யும் பட்டாபிராமா''

வழக்கம் போல அவரது தாய் மொழியிலான இந்த தெலுங்கு பத்ராசல ராமதாசர் கீர்த்தனையை அற்புதமாக மனமுருகி பாடி இருக்கிறார் ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா. எத்தனையோ பேர் பாடிஇருந்தாலும் இது மனதை தொட்டதால் நானும் பாடிப் பார்த்தேன். யூ ட்யூப் லிங்க் கிளிக்       https://youtu.be/MKXTj0qH42g

Ye theeruga nanu daya joochedavo
Inavamsotthama Raama.
Naa tharamaa Bhava saagarameedanu nalina dalekshana raama
Shree Raghunandana Seetharamanaa Sritha jana poshaka raama.
Karunyalaya- bhaktha varada ninu.
kannadi kaanupu raama
Krura karmamulu neraka chesithi
neramu lenchaku raama ridryamu parihaaramu seyave- daiva sikhamani raama...
Vasavanutha raamadhasa poshaka vandhamayodhya ramaaDasarchchitha maa kabayamu changave Dasarathi Raguramaa

sivan jaykay

unread,
Apr 21, 2021, 9:58:30 PM4/21/21
to amrith...@googlegroups.com
துளசிதாசர்:  நங்கநல்லூர்  J.K. SIVAN


ராமனும் நாமமும்


வடக்கே கம்பரைப்பற்றி அவர் எழுதிய ராமாயணத்தை பற்றி சொன்னால் காதில் விழாமல் எதிரே மேயும் பசுமாட்டின் மேல் கவனம் வைப்பார்கள். வால்மீகி துளசி தாசர் ராமாயணம் என்றால் கை கட்டி அதை கேட்க ஓடி    வருவார்கள். அதே கதை தான் இங்கேயும். வால்மீகி ராமாயணம் வடமொழி அறிந்த நம்மவர்களுக்கு கொஞ்சம் தெரியலாம்.   துளசி தாசர் ராமாயணம் என்றால் என்ன  என்பார்கள்?  துளசி தாசர் பற்றி கொஞ்சம் சொல்கிறேன். 

யாருக்காவது ஸ்ரீ ராம் என்று மூச்சு உள்ளேயும் வெளியேயும் பிரயாணம் செய்தால் அவரை  நிறுத்தி   ''நீங்கள் தான் துளசிதாசரா?'' என்று கேட்டால் ஆம் என தலையாட்டுவார். பல முறைகள் ராமனை நேரில் கண்டவர்,  பேசியவர் எனலாம். ஒருமுறை துளசிதாசர்  ஹனுமனை சந்திக்கிறார்.

 '' ஜெய் மாருதி வீரா, நமஸ்காரம் "

' ஜெய் ராம் சீதாராம். என்ன துளசிதாசரே இவ்வளவு தூரம்?''

'' ஆஞ்சநேயா, மஹாவீரா,  எனக்குள் ஒரு ஆசை. உங்களுக்கு ராம – லட்சுமணரின் அனுக்ரஹம் கிட்டியது போல் எனக்கும் நேர  வேண்டும் . அதற்கு நீங்கள் தான் அனுக்ரஹம் செய்யவேண்டும்''

''துளசி தாசரே,  நீங்கள்  அழைத்தாலே  ஸ்ரீ ராமன் ஓடிவருவார். இதோ பாருங்கள் எதிரே தெரிகிறதே ஒரு ஊர், அது தான் சித்ர கூடம். இந்த இடத்திற்கு ராமகிரி என்றும் பெயர்.  ஸ்ரீ  ராமன் வனவாசம் செய்த இடம். அங்கே வெள்ளி உருகி ஓடுவதை போல் தெரிகிறதல்லவா?  அது தான் புண்ய நதி மந்தாகினி. அங்கே சென்று அமர்ந்து ராமஜபம் செய்யுங்கள். ராம தரிசனம் நிச்சயம் உங்களுக்கு  கிட்டும் ''

''மாருதி ராயா, எனக்காக நீங்களும் சற்று நேரம் என்னுடன் இருந்து ராம ஜெபத்தில் ஈடுபடலாமே. உங்களோடு சேர்ந்து நானும் அவ்வாறே ஸ்ரீ ராம நாம ஜபம் செய்வேன். அது எனக்கு ஒரு  பாக்யம் அல்லவா? '' என்கிறார் துளசிதாசர்.

''ஓ, சந்தோஷம்.    கரும்பு தின்ன கூலியா வேண்டும்'' ஹநுமானோடு துளசி தாசரும் ராம ஜபம் செய்தார். உள் மனதில் ராமர் எப்போது வருவார், எப்படி வருவார்? தனியாகவா கூடவே லட்சுமணனுடனுமா ? சீதையை நீங்களும்  வாருங்கள் என்று நான் அழைக்காததால் வரமாட்டாளோ? , 

நான்  அழைத்தால்  ராமர்  வருவாரா மாட்டாரா? ராமர் எப்படி இருப்பார்? தலையில் ஜடாமுடியுடன் வருவாரா? அல்லது  பட்டாபிஷேக கோலத்தில்  வைரக்கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? என்ற பல சிந்தனைகளோடு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக் கொண்டார் துளசிதாஸர் .
கண்களை இமைக்காமல் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தார். வெகுநேரமாகியது. சூரியன் மேலே ஏறி மெதுவாக மேற்கே இறங்கி விடுவான் போல் இருக்கிறதே. மலைப்பாதை, ஒற்றையடிப்பாதை. இருபுறமும் புதர் அங்கிருந்த பாறாங்கல்லில் நின்றுகொண்டு ராம, ராம என்று ஜபித்து நர்த்தனமாடினார் துளசி தாசர். 

திடீரென்று மலை உச்சியில் இருந்து வேகமாக இரண்டு குதிரைகள் வந்தன. அதன் மீது இரண்டு ராஜகுமாரர்கள். துளசிதாசர் எத்தனையோ ராஜாக்களைப் பார்த்திருக்கிறார். ஆனால் குதிரையில் வந்த ராஜகுமாரர்களோ தலையில் தலைப்பாகை, அதைச் சுற்றி முத்துச் சரங்கள் கொண்டை மீது வெண்புறா இறகுகள் என்று வித்தியாசமாக இருந்தனர். குதிரையில் வந்தவர்கள் தாஸரைப்பார்த்துச் சிரித்துக் கொண்டே போய்விட்டனர். துளசி தாசர் அந்த ராஜகுமாரர்களை அலட்சியமாக பார்த்தார். , இவர்கள் யாரோ வழிப்போக்கர்கள்.   ராஜகுமாரர்களாக இருந்தால் என்ன?  . இவர்கள் என் ராம, இலட்சுமணனுக்கு ஈடாவார்களா? தலையில் ரத்ன கிரீடமும் மார்பில் தங்கக் கவசமும், தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புறாத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக் கொண்டே என்ன அழகாக இருப்பார் என் ராமர் என்று ராமனை தியானித்தவாறே ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார். நேரமாகி விடவே, ஹனுமான் எழுந்தார். துளசி தாசரைப் பார்த்து

''என்ன துளசி தாசரே '' ஆனந்தமாக ராம லட்சுமணர்களை தரிசித்ததில் சந்தோஷம் தானே?'' என்கிறார்

'' ராம லக்ஷ்மண தரிசனமா எங்கே. நான் பார்க்கவில்லையே'' '' என்ன சொல்கிறீர்கள் நீங்கள்,

''உங்களை பார்த்து புன்னகைத்து கை அசைத்து, வெகு அருகில் மெதுவாக குதிரை மேல் இருந்தவாறே காட்சி தந்தார்களே , நான் பார்த்தேனே'' என்கிறார் ஹனுமான்.

''அடாடா, நான் கண்ட ராஜகுமாரர்கள் ராம லட்சுமணர்களா? ஏமாந்து கோட்டை விட்டேனே. அப்படி வருவார் கள் என எதிர்பார்க்கவில்லையே '' என புலம்பினார் துளசிதாசர்.

''என்ன துளசிதாஸரே ,  ராமர் உமது இஷ்டப்படிதான் வரவேண்டுமா? அவர் இஷ்டப்படி வரக்கூடாதா?'' -- ஹனுமான்.

 ''ஸ்ரீ ராம தூதா, என்னை மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாத பேதை நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு ராம லக்ஷ்மணர்களை அலட்சியம் செய்து விட்டேனே ''. 

''வாயுகுமாரா. இன்னும் ஒருமுறை தயவு செய்யும். ஸ்ரீ ராமன் எந்த வடிவில் வந்தாலும் ஆனந்தமாய் தரிசிக்கிறேன்'' என்றார் துளசிதாசர்.

'' சரி நீங்கள் போய் மறுபடியும்  மந்தாகினியில் இறங்கி நீராடி ஜபம் செய்யும். ராமாயண பாராயணம் செய்யும். ராமன் மறுபடியும் வருவாரா பார்க்கலாம்'' என்றார் ஹனுமான்.

மந்தாகினியில் மீண்டும் நீராடி துளசிதாஸர் ராம நாம ஜபம் செய்தார். வால்மீகியின் ராமாயண பாராய ணம் செய்தார், இரண்டு நாட்கள் ஓடிவிட்டது.    அன்றைய தினம் ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்பு ராம, லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்று கட்டத்தைப் படித்துக் கொண்டிருந்தார்.

 எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் நதியிலிருந்து கரை ஏறி துளசி தாசரிடம் வந்தனர். ஒருவன் நல்ல கருப்பு நிறம், மற்றவன் தங்க நிறம். முகத்தில் பத்துப் பதினைந்து நாள் வளர்ந்த தாடி, கருப்பன் துளசிதாசரிடம்

''சுவாமி, உங்களிடம் கோபி சந்தனம் இருக்குமா? என கேட்டான்.
ராம ஜபம் சொல்லிக்கொண்டே ''ம்ம். இந்தா . இருக்கிறது'' என தாசர் சந்தனம் நீட்டினார்.
 மற்றவன் '' சுவாமி, எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்களேன் '' என்றான்
''ஆஹா, இட்டு விடுகிறேனே''.
இடது கையில் நீர் விட்டுக் கொண்டே சந்தனத்தைக் குழைத்த போது கருப்பு இளைஞன் எதிரே உட்கார்ந்து முகத்தை நீட்டுகிறான். தாசர் அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்க்கிறார். அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்க்கின்றன. பார்த்தவுடன் தன்னை மறந்துவிட்டார். அந்த இளைஞன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தைத் தன் கட்டைவிரலில் எடுத்து தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு அவருடைய நெற்றியிலும் தீட்டினான். தன்னுடன் வந்தவனுக்கும் தீட்டினான்.

அவர்கள் உட்கார்ந்திருந்த படித்துறைக்கு அருகில் ஒரு மாமரம், மரத்தின் மீது இருந்த கிளி கூவியது. அது ஸ்லோகமாக துளசிதாசர் காதில் விழுகிறது. கிளி என்ன சொல்லியது:

''சித்ர கூடகே காடபரே பகி ஸந்தக கீ பீர துளசிதாஸமே சந்தந கிஸே திலக தேத ரகுபீர. ''

''சித்ரக் கூடத்துக் கரையில்எப்போதும் சாதுக்கள் கூட்டம். ஒரு ஓரமாக துளசிதாசர் அமர்ந்து சந்தனம் குழைக்கிறார்.ஆனால் எதிரே இருந்த ராமன் அதை துளசிதாசருக்கு திலகமிடுகிறார்;

துளசிதாசர் திடுக்கிட்டு எதிரே உள்ள கருப்பனை பார்க்கிறார்: சிரித்துக்கொண்டே அவன் கேட்கிறான்: '

'சுவாமி, என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா? '' 

''ராமா, உனக்கு இதைவிட பொருத்தமான நாமம் ஏது?'' துளசி தாசர் பக்தியில் திளைத்து கதறிக்கொண்டே அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசிதாசர். இளைஞர்களுக்கு பதில் அங்கே ராம லக்ஷ்மணர்கள் அவருக்கு தரிசனம் தருகிறார்கள்.

sivan jaykay

unread,
Apr 21, 2021, 9:58:30 PM4/21/21
to amrith...@googlegroups.com
    ''ஏரி எந்தநேரமும் உடையும் '' - நங்கநல்லூர்   J K  SIVAN  --


இன்று  ஸ்ரீ ராமநவமி என்பதால் இந்த  சம்பவம் நினைவுக்கு வந்தது.  உண்மையில் நடந்த இது கதை அல்ல. 
புரளி, பீதி,   இதெல்லாம் ஏதாவது  ஒரு  பெரிய  சம்பவம், எதிர்பாராத நிகழ்ச்சி  நடக்கும்போது  போனசாக நமக்கு  கிடைத்து,  நம்மை  கொஞ்சம்  ஆட்டி வைக்கும். நிஜம்போல்  இருக்கும்.  அது பொய்  என்று  சொல்ல முடியாதபடி  அதில்  ஒரு கடுகளவாவது உண்மை  உள்ளே  எங்கோ கலந்திருக்கும். அதை மலையாக நம்மிடம் யாரோ தள்ளும்போது நாம்  தூக்கம் இழக்கிறோம்.  ஏன் உதாரணமாக இப்போது தினமும் ஒரு நாளைக்கு  எத்தனையோ முறை  மாற்றி மாற்றி  அந்த  க  ஜெயிக்கும்,  இல்லை இல்லை  இந்த  க  தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்... சே சே  கொஞ்சம்  அடுத்தமாதம் முதல் வாரம்  வரை பொறுக்க பொறுமையே இல்லையே. 

நூறு வருஷங்களில் இப்படி சென்னையில்  நடந்ததில்லை.  ஏரியில் வீடு கட்டினதால்,  மரங்களை எல்லாம் வெட்டி  கான்க்ரீட் காடுகளாக  வீட்டு மனைகள், அடுக்கு வீடுகள் என்று கட்டியதால்,  என்றெல்லாம்  காரணம் வந்தாலும்,  செம்பரம்பாக்கம்  ஏரி , ,மதுராந்தகம் ஏரி  உடைந்ததால்  என்றெல்லாம்  அதிர்ச்சிகள்  வந்து  நிலைகுலையச் செய்ததல்லவா?.  செய்திகளில்,  முகநூல்களில், வாட் சப்பில்.


வாட்சப்  ராக்ஷசன்  மிக சக்தி வாய்ந்தவன். எளிதில் எல்லோரையும் கவர்பவன்.  பொய்யானாலும் செய்திகளை முந்தித் தருபவன்.

மதுராந்தகம்  கிராமம்  77   கிமீ  தூரத்தில் சென்னையிலிருந்து ஒதுங்கி இருக்கிறது.  அதன்  ஏரி  உடைப்பு  ஒரு சில  நூறு  ஆண்டுகளுக்கு முன்பு கூட  பிரபலப்பட்ட  விஷயம்.  

 கொட்டும் மழையில், பருவகாலப் பேய்  மழையில்,  ஏரி நிரம்பி, உபரியாக  வெளியேறி அண்டை அசல் கிராமங்களை  எந்த  நேரமும் பசியோடு  விழுங்கிவிடும் என்ற கவலை  அப்போதிருந்த கலெக்டர்-- வெள்ளைக்காரர்  தான்- லஞ்சம் கேட்க தெரியாத காலம், கரெண்ட் இல்லை என்று மக்கள் கத்தாத கும்மிருட்டு காலம். வருஷம் 1884.  மக்கள்  மீது  அக்கறை கொண்ட  ஆட்சியாளர்கள் ஆண்ட காலம். 

 லயனல் பிளேஸ்  என்றும் ப்ரைஸ்  என்றும்  கூட  சொல்கிறார்கள் அவர் பெயரை. அந்த கலெக்டர் தூங்கவில்லை, எப்படி  இந்த  மழையை நிறுத்துவது, எப்படி ஏரியை உடையாமல் பாதுகாத்து  மக்களுக்கு உயிர்பிச்சை அளிப்பது. எப்படி பயிர்களை வயல் வெளிகளை காப்பது. இந்த நேரத்தில்  கிராம அதிகாரி களை கூப்பிட்டு  ஆலோசித்தார்.  இந்த முட்டாள்களுக்கு எப்படி  உருவாகப்போகும் ஆபத்தை விளக்குவது. இவர்கள் என்ன யோசனை சொல்கிறார்கள் கேட்டுத்தான் வைப்போமே  என்று  கலெக்டர் அவர்களோடு பேசினார்.  

எல்லோருக்குமே  மதுராந்தகத்தை  அந்த புராதன கோவில் தெய்வம்  ராமர் மட்டுமே  காக்க முடியும்  என்று  ஒட்டு மொத்தமாக நம்பிக்கை என்று புரிந்தது.  அவர்கள் வேறு  யாரையும்  நம்பவில்லை. என்று தெரிந்தது.  வேறு வழியும் தோன்றவில்லை  யாருக்குமே.

''சரி  நீங்களும்  ராமரை வேண்டிக்கொள்ளுங்கள்,  நானும் உங்கள்  ராமரை  பிரத்யேகமாக  வேண்டிக் கொள்கிறேன்.  இன்றிரவு கொஞ்சம் மழை நின்று,  எப்படியாவது இந்த இக்கட்டில் இருந்து மதுராந்தகம் காக்கப்பட வேண்டும். அவர் அதை செய்யட்டும். நான்ஏதாவது செய்ய வேண்டுமானால் என்ன ஏற்பாடுகள் தேவை என்று சொல்லுங்கள். செய்கிறேன் '' என்றார் கலெக்டர்.

ராமருக்கு  பூஜைகள்  நடந்தது.  மக்கள் ஒருபுறம் வேண்டிக்கொள்ள,  இரவில் மழை  விடாமல் பெய்யவே, கலெக்டர்  இரவில்  இருட்டில், குடை எடுத்துக்கொண்டு ஏரியின்  நிலையைத்  தானே  நேரில் சென்று பார்த்து வரலாம் என்று  கிளம்பினார் .அவர் மனதில் எங்கோ ஒரு மூலையில்  கோவில் இருந்த பக்கம்  பார்வை சென்று 

 ''ஹே  கடவுளே,  எப்படியாவது இந்த ஏரியை காப்பாற்றுங்கள்''  என்ற மானசீக   வேண்டுதல் பிறந்தது. என்ன இது? யார் இது?  

 கும்பிருட்டில்  ஏரிக்கரையில் இருவர் நடமாட்டம் தெரிந்தது.
'ஆஹா  இந்த  ஊரில்  விஷமிகள் கிடையாதே.  என்  ஆட்சியில்  எவனாவது ஏரியை உடைக்க முயற்சித்தால் அவன் தப்ப முடியாதே'' யார்  இந்த நேரத்தில் இங்கே,  என்னதான் செய்கிறார்கள் என்று  பார்ப்போம். கையும் களவுமாக பிடிப்போம் என்று  ஏரியின் கரை மீது ஏறி அருகே சென்று பார்த்தார்.  

அந்த  இருவர்களும்  தங்க நிற மேனி,  உயர்ந்த  ஆஜானுபாகுவாக இருந்தனர்.  அரச குடும்பத்தார்கள் போல் இருக்கிறது. கிரீடம் தலையில் இருக்கிறது. உடலில் மின்னும்  ஆபரணங்கள், இடையில்  பட்டு பீதாம்பர ஆடை.  இருவர் கையிலும்  பெரிய வில்.  ஏரியை கண்காணித்துக் கொண்டு அங்கும் இங்கும் அவர்கள்  இரவெல்லாம்  அது உடைபடாமல் காத்துக்கொண்டிருந்தது தெரிந்தது.கோவிலில் இந்த  உருவத்தைப் பார்த்திருக்கிறோமே!   ஏதோ உள்ளே  ஒரு  வித உணர்ச்சி கொந்தளித்தது. கண்களில் நீர் வழிந்தது. அவர்கள் முகத்தை ஒரு நிமிடமே நேருக்கு நேர்  பார்த்தார்.  அவரை அறியாமல்  கைகள் கூப்பின. மண்டியிட்டு  அமர்ந்து அந்த  கரை மேட்டி
லேயே  வணங்கினார்.

மழையும் ஒருவழியாக நின்றது. ஏரி நீர்  கொஞ்சம் கொஞ்சமாக  பாசனங்களுக்கு  சென்றது. பொழுது விடிந்தது.  மழை பெய்த  சுவடு இல்லாமல்,  ஏரி வழக்கம்போல்  கவலைக்கிடம் அளிக்காமல்  சாதாரணமாக காட்சி அளித்தது.  

கலெக்டர் அசந்து போனார். இயற்கையையே  வெல்லக்கூடிய  சக்தி வாய்ந்த அந்த இருவர் யார்?. கிராம அதிகாரிகள் ஓடிவந்தனர்.  கலக்டருக்கு வந்தனம் செய்தனர். அவர் தான் கண்ட  அந்த  இரு வில்லாளிகளை வர்ணித்தார்
.    கிராமத் தலைவர்களில் முதியவர்  ''ஹே  ராமா, ஹே  லக்ஷ்மணா  என்று  கதறிக்கொண்டு  கலெக்டர் கால்களை கெட்டியாக  பிடித்துக் கொண்டார். தாரை தாரையாக  கண்ணீரால்  அந்த வெள்ளைக் காரர் பாதங்களை கழுவினார்.  எல்லோரும் அப்படியே செய்தார்கள்.  

''எத்தனை  எத்தனை ஜன்மங்கள் தவமிருந்தாலும் கிடைக்காத  தரிசனத்தை எளிதில்பெற்ற மகான் என்று  கலெக்டரை  வாழ்த்தி போற்றி வணங்கினர்.

செப்பனிடாத நிலையில் இருந்த  மதுராந்தகம் கோவிலை  கலெக்டர் உடனே புதுப்பித்து கும்பாபிஷேகம் நடந்தது. தாயாருக்கு சந்நிதி இல்லாமல் இருந்தது.  அப்போது முதல் மதுராந்தகம் கோவில்  கோதண்ட  ராமர்  ஏரி காத்த ராமர் என்ற பெயர் பெற்றார்.   பய பக்தியோடு  கலெக்டர்  தம்பதிகள்   ராமரை  வணங்கி  நன்றியை  தெரிவித்தனர் .

சீதா தேவிக்கு  ஒரு  புது சந்நிதி கலெக்டர்  உத்தரவில்  உருவானது..  அதன் மேல் உத்தரத்தில் இன்றும் ஒரு கல்வெட்டு  காணப் படுகிறது. அங்கு செல்பவர்கள் மறக்காமல் அதை பார்க்கவும்.      “இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது”

இப்போது  ஆட்சியில் உள்ளவர்கள்  எந்த  கோவிலும்  கட்டவேண்டாம்.   கோவில்கள்,   நிலங்களை இழந்து குறுகி  அகத்தியர் உரு   பெறாமல், கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை  கோவிலுக்காக, அந்தந்த ஊர்  தர்ம காரியங்களுக்காக  பயன் பட ஒத்துழைத்தால்  அதுவே போதும்.  கடவுள் 
பக்தி  மதம் கடந்தது என்பது புரிந்தால் அதுவே போதும்.   

sivan jaykay

unread,
Apr 21, 2021, 9:58:30 PM4/21/21
to amrith...@googlegroups.com
ஆதி சங்கரர்

ஆத்மா பற்றி  பஞ்ச  ரத்னங்கள்  -   நங்கநல்லூர்   J.K. SIVAN

சங்கரர் நமக்கு  புரிவாரா?    ஐந்து  வருஷங்களுக்கு முன்பு இப்படி  கேட்டிருந்தால் சத்தியமாக இல்லை. மணி சங்கரய்யர் தான் புரிகிறார் என்றிருப்பேன். நான் இப்போது சுனாமியாக மாறிவிட்டேன். ஆன்மிகம் என்னை ஆட்கொண்டுவிட்டது. அதில் திளைக்கிறேன்.  ஒரு நாளைக்கு குறைந்தது 18  மணி நேரம் ஈடுபாடு.   துளியும் களைப்பு தரவில்லை. உற்சாகமளிக்கிறது.   எனக்கு பேனாவோ,   பால் பாய்ன்ட் பேனாவோ  பிடித்து  எழுதும் பழக்கம் போயே போய் விட்டது. என்றைக்கு  இந்த கம்ப்யூட்டரில் இங்க்ளிஷில் எழுதி அது தமிழாக வருகிறதை என் மகன் சொல்லிக் கொடுத்தானோ, அன்று எனக்கு மறுபிறவி. அது முதல் நான் வேறு உலகில் சஞ்சரிக்கிறேன். சுகானுபவம், சந்தோஷம் விடாமல் தொடர்கிறது.   எனக்கு இங்க்ளிஷில் டைப் அடிக்க  வரும்.  பல வருஷ அனுபவம்.  அதனால் என் மன அலைகளை, அசைவுகளை அப்படியே   எளிதாக  அவ்வப்போது தமிழிலும் வெளிப்படுத்த  முடிகிறது.  சுலபமாகவும் இருக்கிறது. என் உலகமே இது தான். ஆங்கிலத்தில் நான் வெளிப்படுத்தும் எண்ணங்கள் எனக்கே ஆச்சர்யமளித்து தமிழாக என் கண் முன்னே தோன்றினால் பின் எப்படி இருக்கும்?

கம்ப்யூட்டரில்   வேண்டிய அளவுக்கு  கண்ணை உறுத்தாமல்  பெரிய எழுத்தில்,  நிறைய படிக்க முடிகிறது. சிலவற்றை எடுத்துச் சொல்லவேண்டும் என்கிற ஆசையில் நான் எப்படி புரிந்து கொள்கிறேனோ, அப்படியே குட்டி குட்டி வாக்யத்தில், மூலத்திலிருந்து பிறழாமல் மூளையை கசக்கி தொந்தரவு பண்ணாமல் சொல்ல முடிந்தால் அது போதுமே. இது தான்  நான் எதையும் எதிர்பாராமல்  தாராளமாக எல்லோருக்கும்  என்னால்  செய்ய முடிந்த சேவை. இது யாரேனும் ஒருவருக்காவது திருப்தி அளித்தால்  என் முயற்சிக்கு தக்க பரிசு  கிடைத்ததாக  என் மனது மகிழும்.

ஆதி சங்கரரின்  ஆத்ம பஞ்சகம்  வாசிக்கும்போது பிடித்தது.  உடனே  எழுதினேன்.  முன்பு ஒருமுறை   பதிவிட்டதாக ஞாபகம். .  அடிக்கடி படிக்க வேண்டிய விஷயம் தான். சில நல்ல சமாசாரங்களை, மஹா பெரியவா பற்றியது போன்றவை, எத்தனை தடவை, யார் யாரோ சொன்னாலும் கேட்க ருசியாகத்தான் இருக்கிறது அல்லவா?. இது இன்னும் கொஞ்சம் '' மஹா மஹா  '' பெரியவா சொன்னது.   ஆதி சங்கரர் எழுதிய ஐந்து ஸ்லோகங்கள். ஆத்மா பற்றி. இதற்குப் பெயர் ''ஆத்ம பஞ்சகம்'' .

ஒரு நாள்  சாயங்காலம்  வீட்டில்  மற்றவர்கள்  TV யில்  ஒரே ஓசையாக எதையோ  பார்ததுக்   கொண்டிருக்கும்போது அமைதியாக  என் அறையில்  கம்ப்யூட்டரில் ஆதி சங்கரர், அவருடைய  ஆத்ம பஞ்சகம் ,  நான்  மூன்றே பேர் இருந்தோம்.
சந்தோஷம் என்பது நாலு பேருடன் பகிர்ந்து கொண்டால் தானே அது இன்னும் அதிகமாகும். எனவே தான் நான் படித்து மகிழ்ந்த  இந்த சிறு எண்ண பிரதிபலிப்பை  உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்:

नाहं देहो नेन्द्रियाण्यन्तरंगं
नाहंकारः प्राणवर्गो न बुद्धिः
दारापत्यक्षेत्रवित्तादिदूरः
साक्षी नित्यः प्रत्यगात्मा शिवोऽहम् ॥१॥

நாஹம்  தேஹோ நேந்திரியன்யந்தரங்கம் 
நாஹம்கார பிராணவர்கான புத்தி ,
தாராபத்ய  க்ஷேத்ர விஹதி தூர 
சாக்ஷி நித்ய பிரத்யாகாத்மா சிவோஹம்: 

தேஹாத்ம புத்தி என்பார்கள். சிவா என்று கூப்பிட்டால் திரும்பி பார்க்கிறேன் இந்த உடம்பு சத்தியமாக நான் இல்லை. இந்த தேகத்தை தான்  நாம்  ஆத்மா என்று தப்புக் கணக்கு போடுகிறோம். தெரிந்தும் போடுகிறோம். தெரியாமலும் போடுகிறோம். பஞ்ச இந்திரியங்களும் ஆத்மா இல்லை. இன்னும் சொல்லப் போனால் நமது புத்தியும் ஆத்மா இல்லை. விடுகிறோமே மூச்சு. பிராணன். அதுவும் ஆத்மா இல்லை. நான்  சிவம் எனும் ஆத்மா.

 குப்பு ராவ் கடைசி மூச்சை விட்டு கட்டையாகி விட்டார். கும்பல் வீட்டில் சேருகிறது. பிராணன் போய் விட்டது என்கிறோமே தவிர ஆத்மா போய் விட்டது என்றா சொல்கிறோம்?. அவரை  ஒரு நல்ல ''ஆத்மா'' என்கிறோமே. ஆகவே ஏதோ கொஞ்சம் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம் அல்லவா? அதை விஸ்தாரமாக புரிந்துகொள்ள முயலவில்லை. அஹங்காரமும் ஆத்மா இல்லை. பின் எது ஐயா ஆத்மா என்பது? எதுவா? பிள்ளை, பெண் டாட்டி, வீடு வாசல் சொத்து சுதந்திரம் எல்லாவற்றுக்கும் அப்பால் தள்ளி ஒரு சாட்சியாக தூரத்திலிருந்து  ஏதோ ஒன்று  எந்த சம்பந்தமும்  இல்லாமல்  வேடிக்கை பார்க்கிறதோ அது தான் ஆத்மா. அடுத்த தெருவில் ஒரு பெரிய மாளிகை வீடு ஒரு செட்டியார் கட்டியிருப்பதை பார்க்கும்போது அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அதுபோல்  இந்த உடம்பையும், மற்ற உறவையும் கிட்டே சேர்க்காமல் வைத்துக்கொள்வது. கொஞ்சம் புரிந்ததா?  

रज्ज्वज्ञानाद्भाति रज्जुर्यथाहिः
स्वात्माज्ञानादात्मनो जीवभावः।
आप्तोक्त्या हि भ्रान्तिनाशे स रज्जु-
र्जीवो नाहं देशिकोक्त्या शिवोऽहम् ॥२॥

ரஜ்ஜ்வகணாத் பாதி ரஜ்ஜயூர்யாஹி  
ஸ்வாத்மா ஞாநாத் ஆத்மனோ ஜீவா பாவ 
ஆப்தோக்த்ய  ஹி பிராந்தி நாசே  ஸ  ரஜ்ஜுர் 
ஜீவோ நாஹம்  தேஸிகோக்த்யா  சிவோஹம் 
 
என் வீட்டுக்கு பக்கத்தில் சுவற்றின் மேல் தெரு வழியாக அசைந்து அசைந்து ஒரு ஐந்து அடி நீளத்தில் ஒரு நாகம். ஆஹா. நெளிந்து கொண்டு இருக்கிறது என் வீட்டின் உள்ளே போக பார்க்கிறது. ஐயோ என்று கத்தி நடுங்குகிறேன். வியர்த்து, மார்பு படபடவென்று துடித்து பாதி உயிர் போய் விட்டது. யாரோ ஒரு தைரியசாலி என் அலறல்  கேட்டு டார்ச் எடுத்துக் கொண்டு கையில் ஒரு பெரிய மூங்கில் தடி. அருகில் தைர்யமாக சென்று பார்த்து அதை கையில் எடுத்து அது ஒரு பிளாஸ்டிக் தோரண கயிறு என்று காட்டியதும் என் உயிர் வந்தது.

பாம்பு எங்கே போய் விட்டது?. பிரதி பாசிகம் என்பது சமஸ்க்ரிதத்தில் ஒன்றை மற்றொன்றாகவே கண்டு உணர்வது. அரை இருட்டில் பளபள வென்று எவனோ கட்சி தலைவன் பிறந்த நாளுக்கு கட்டிவிட்டு போன ஒரு பளபள  பிளாஸ்டிக் தோரணக் கயிறு சுவர் ஓரமாக காற்றில் ஆடி அசைந்து பாம்பாக மாறி என்னை பயமுறுத்தி, கடைசியில் அது பிளாஸ்டிக் கயிறு மட்டுமே என மிஞ்சியது. பயமும் போனது இது பாம்பு இல்லை என்ற ஞானம் வந்ததால். அது போல் உயிரற்ற உடம்பை உயிர் என்று கருதுகிறோம். மகா பெரியவா போன்ற ஒரு ஞானி, குரு, நமக்கு புரியும்படியாக ''சுவாமி உங்க உடம்பு ஆத்மா இல்லை'' என்று உணர்த்தினால் தான்  பாம்பு கயிறாகும்.

இப்படி தட்டி எழுப்பின பிறகு தான் என்னுள் இருப்பது ஜீவன் அல்ல அந்த சிவனே என்று அந்த ஞானி, குரு, சொல்லிக் கொடுப்பது புரியும். அப்பறம் என்ன?. சதா ஆனந்தம் எனும் சிவம்  நான். 

आभातीदं विश्वमात्मन्यसत्यं
सत्यज्ञानानन्दरूपे विमोहात् ।
निद्रामोहात् स्वप्नवत् तन्नसत्यं
शुद्धः पूर्णो नित्य एकः शिवोऽहम् ॥३॥

ஆபாதீதம்  விஸ்வமாத்மன்ய  சத்யம் 
சத்ய ஞாநானந்த  ரூபே  விமோஹத் 
நித்ரா மோஹாத்  ஸ்வப்னாவைத் தன்ன சத்யம் 
சுத்த பூர்ணோ நித்ய ஏக சிவோஹம் 

காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள். இந்த உலகமே என்றும் சாஸ்வதம். இந்த பூலோக வாழ்க்கை அழிவற்றது என்ற எண்ணங்கள் திரையாக ஒரு உண்மையை மூடி மூடி மறைக்கின்றன. அதனால் எது அழிவற்றது, உண்மையானது, நிரந்தரம்? என்று தெரியவில்லை. உறக்கத்தில் காணும் எல்லாமே வெறும் கனவுத் தோற்றம். நிஜம் மாதிரியே இருக்கும். ஆனால் அது பொய். அநித்யமானது. எது சுத்தமோ, எது பூரணமானதோ, எது ஒன்றேயோ, அது தான் என்னுள் உறையும் சிவம்  என்கிற 'நான்'. சட்டை மூக்குக்  கண்ணாடி போட்டுக்கொண்டிருக்கும் இந்த உடம்பல்ல.

मत्तो नान्यत् किञ्चिदत्रास्ति विश्वं
सत्यं बाह्यं वस्तुमायोपक्लिप्तं ।
आदर्शान्तर्भासमानस्यतुल्यं
मय्यद्वैते भाति तस्माच्छिवोऽहम् ॥४॥

மத்தோ நான்யத் கிஞ்சித் அத்ராஸ்தி விஸ்வம் 
சத்யம்   பாஹ்யம் வஸ்து மாயோபாக் லிப்தம் 
ஆதர்ஸாந்தர்  பார்ஸமானஸ்ய துல்யம்    
மய்யத்வைதே  பாதி தஸ்மாத் சிவோஹம் 

எங்கும் பரவி இருக்கும் இந்த உலகம், நானே தவிர வேறில்லை. மாறிக்கொண்டே இருக்கிறதே. மாற்றம் என்றால் என்ன?. கண்ணாடி தனக்கு எதிரே இருக்கும் அசையும் அசையா வஸ்துவை அப்படியே காட்டுவது போல் தான் இந்த உலகமும் நம்மை பிரதிபலிக்கிறது. எதிரே ஒன்று இருந்து, அது மறைந்து வேறொன்றாக காட்சி அளிப்பது தானே மாற்றம். நானும் அப்படித் தானே. ஐந்து வயது நான், இருவது வயது நானில்லை, நாப்பது வயது நான் இப்போதிருக்கும்  எண்பத்திரெண்டு வயது நான் கிடையாது. ஆனால் ஐந்து வயதிலிருந்து 82  வயது வரை மாறி மாறி தோன்றும் எல்லாமே நான் தான். அப்போ எல்லாத்திலும் உள்ள சிவனும் நான், நானே தான் எல்லாத்திலும். எல்லாம் ஒண்ணே--- தலை சுற்றுகிறதா? பொறுமை. பொறுமை. மெதுவாகத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.  சுப்பிரமணி கத்தியை கையில் எடுத்துக் கொண்டு அப்பறம் என்ன செய்தான் என்று தெரிந்து கொள்ள இது ஒரு  கதை அல்ல.

नाहं जातो न प्रवृद्धो न नष्टो
देहस्योक्ताः प्राकृताः सर्वधर्माः।
कर्तृत्वादिश्चिन्मयस्यास्ति नाहं-
कारस्यैव ह्यात्मनो मे शिवोऽहम् ॥५॥

நாஹம்  ஜாதவ் ந ப்ரவ்ருதோ ந நஷ்டோ  
தேஹ ஸ்யோக்தா ப்ராக்ருத  சர்வ தர்மா 
கர்த்ருத்வாதிஸ் சின்மய ஸ்யாஸிதி நாஹம் 
காரஸ்யைவ   ஹ்யாத்மனோ மீ  சிவோஹம் 

அப்படி என்றால், நான் பிறக்கவில்லை, வளரவில்லை, இறக்கவில்லையா?  என்ன சார் ? நான் தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே. இந்த உடம்பு நான் இல்லை என்று. உடம்பு தானே இந்த மாறுதல்களை எல்லாம் அடைகிறது. எல்லாம் இந்த உடல் தான் சார். அது தான் நான் இல்லையே! . நான் கல்கத்தாவுக்கு ரெண்டு மணியிலே வரேன் என்று சொல்கிறேனே. நானா பறந்தேன்? ஏதோ ஒரு ஏரோப்ளேன் என்னை தூக்கிக் கொண்டு போய் சேர்த்தது. ப்ளேன் வந்துது என்றா சொல்கிறேன். நான் வந்தேன் என்று தானே என் வாயில் வார்த்தை வருகிறது.  அது போல் என்னைத் தாங்கி நிற்கும் இந்த உடம்புக்கு தான் எல்லா மாற்றங்களும். இதில் அஹங்காரம்  குடி  கொண்டு இருந்தால் அது எனதில்லை. பெருமை, கர்வம்..ஹுஹூம். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நான் தான்   பேரிலும்   உள்ளேயும்  சிவனாயிற்றே.   (அப்பா,    நீ  எனக்கு இந்த பேர் வச்சதுக்கு  நான் பல ஜென்மத்தில் உனக்கு கடமைப்பட்டிருக்கிறேன்).  ''நான்''   கண்ணுக்கு தெரியாமல் உள்ளே ஆட்டி வைக்கும் ஆத்மா சார். அதுக்கு எதோடும் அட்டேச்மென்ட் இல்லையே.

नाहं जातो जन्ममृत्यू कुतो मे
नाहं प्राणः क्षुत्पिपासे कुतो मे ।
नाहं चित्तं शोकमोहौ कुतो मे
नाहं कर्ता बन्धमोक्षौ कुतो मे ॥६॥
 
நாஹம்  ஜாதவ் ஜென்ம ம்ருத்யு குதோ மே 
நாஹம்  ப்ராண  க்ஷுத் பிபாஸே  குதோ மே 
நாஹம் சித்தம்  சோக மொஹௌ குதோ மே 
நாஹம்  கர்த்தா பந்த  மோக் குதோ மே  

மறுபடியும்  நான் உரக்க சொல்கிறேன் அப்பவாவது புரிகிறதா பார்க்கிறேன். நான் தான் பிறக்கவில்லையே. குழந்தையாக  பிறந்தது   இந்த என் உடல் தானே.  அப்படியென்றால், எங்கேயிருந்து பிறப்பு,  அதை தொடர்ந்து இறப்பு? நான் தான் இந்த உடலின் ஜீவன் இல்லையே, எங்கேயிருந்து பசி, தாகம் ?    நான் தான் மனம் இல்லையே, இந்த கோப தாப துக்க சந்தோஷ உணர்ச்சிகள் எங்கே இருந்து, எப்படி   என்னை அணுகும்?
நான் தான் எதையும் பண்ணவில்லையே எங்கேயிருந்து இந்த சொந்த பந்த பாசம் நேசம் எல்லாம் எனக்கு.? சார் நான் ஆத்மா. இதெல்லாம் கடந்தவன். எனக்கு நிஜமாக பெயரோ, வயதோ, ஆண்பால் பெண்பாலோ, உருவமும் பசி தாகம் எதுவுமே கிடையாதே. நான் தான் உண்மையில் ''அந்த சிவன் '' .

'யாராவது இன்னொருவர் ஆதி சங்கரரைப் போல மீண்டும் பிறக்கமாட்டாரா? வாரி வாரி இன்னும் நிறைய அற்புத விஷயங்களை தரமாட்டாரா ? ''

இதைக் கேட்டு சங்கரர் சொல்வது காதில் விழுகிறதா?

''ஏண்டா,  நீ என்ன பேசறே? ஏற்கனவே நான் கொடுத்ததெல்லாம் படிச்சுட்டியா ? படிச்சாலும் புரிஞ்சிண்டிட்டியா? நான் 32 வயசிலே உனக்கு  கொடுத்ததே  இன்னும் பத்து ஜன்மத்துக்கு நிறைய இருக்கே. புதுசா என்னை மாதிரி இன்னொருத்தரா? அவர் வேறே எழுதணுமா? போ. போ,   முதல்லே நான் எழுதினதை படிச்சிட்டு அப்புறம் பேசு. படிச்சா தான் பேசவே மாட்டாயே . அப்படியே ஆனந்த சாகரத்தில் அமிழ்ந்துட்டா பேச்சு எங்கிருந்து வரும்?''

sivan jaykay

unread,
Apr 23, 2021, 9:17:01 PM4/23/21
to amrith...@googlegroups.com
ரெண்டு  பேரும்  வேறே. --   நங்கநல்லூர்  J K  SIVAN --



தக்ஷிணாமூர்த்தி என்பவர் யார்? 
குரு என்பவர் யார்? 
குரு பகவான் என்பவர் வேறு  தக்ஷிணாமூர்த்தி வேறு. இருவரும் ஒருவரல்ல.   ஆனால்   நம்மில் அநேகர் தக்ஷிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவரே  என நினைத்துக்கொண்டு வழிபடுகிறோம்.   நானும்  அவ்வாறு  பலகாலம் நினைத்தவன். அப்புறம் தான் கொஞ்சம் புரிந்தது.   தக்ஷிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் உள்ள  வேறுபாJ டுகள் என்ன?

தக்ஷிணாமூர்த்தி  சிவஸ்வரூபம்.  
குரு பகவான் என்பவர்  நவகிரஹத்தில் ஒருவர்.  பெயர்   பிரஹஸ்பதி.
 தக்ஷிணாமூர்த்தி முதலாளி.  குரு  அவருடைய  ஒரு அதிகாரி. 
தக்ஷிணாமூர்த்தி சிவகுரு. தெற்கு நோக்கி உள்ளார்.
 குரு தேவகுரு. வடக்கு நோக்கி உள்ளார். 
தக்ஷிணாமூர்த்தி கல்லாலமரத்தின்  கீழ் அமர்ந்து நான்கு  வேதங்களோடு  ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர்,சனாதனர்,சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுககு உபதேசிப்பவர். 
குரு பகவான்  நவகிரஹங்களில்  வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில்  செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து,  கொண்டு சேர்ப்பவர். 
தக்ஷிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர். 
குரு   நவகிரஹங்களில்  5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர். 
சிவன் தோன்றுதல் மறைதல் என்கின்ற  தன்மைகள் இல்லாதவர். 
குருவோ உதயம் அஸ்தமனம் என்கின்ற தன்மைகள் உடையவர்.

இத்தனை தத்துவ  வேற்றுமைகளைக்  கொண்டுள்ள இந்த   இரு பகவான்களை  ''குரு'' என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர்.இவர்தான் அவர் என்று வாதிடுவது சரிஇல்லை அல்லவா?

தக்ஷிணாமூர்த்தியை  (சிவகுருவாக)வழிபடவேண்டும்.  சில ஆலயங்களில் தக்ஷிணாமூர்த்தியை குருபகவான் என்றே மாற்றிவிட்டார்கள்.  அவர் சனகாதி முனிவர்களுக்கு  மௌன உபதேசம் செய்வதால்  குரு  என்று சொல்வது  அஸ்திவாரத்தையே  மாற்றிவிடுகிறது.  போதாதற்கு சில  சிவாலயங்களில்   அனைத்து  
பரிகார பூஜைகளையும்  தட்சிணாமூர்த்திக்கு செய்கிறார்கள்.  குருவிற்கு அணிவிக்க  வேண்டிய மஞ்சள் துணியை தக்ஷிணாமூர்த்திக்கு அணிவிப்பதும்  கடலை சாதம் போன்ற குரு கிரஹ  நைவேத்திய பொருள்களை தக்ஷிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்வதும்  நடக்கிறது. 

குருபெயர்ச்சியன்று தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள் சாந்தி பரிகாரங்கள் செய்கிறார்கள்.

இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள்சொல்கின்றார்கள் என்கின்றபோதும் தட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகிறார்கள்.

பிரஹஸ்பதி எனும் குருபகவான்  தேவகுரு மட்டும்தான் .
தக்ஷிணாமூர்த்தி   ப்ரஹஸ்பதிக்கும்  குருவான பெரிய குரு.   அதனால்  குருவுக்கு செய்வதை இவருக்கு செய்வதில் தவறில்லை என்று வாதிடுகின்றார்கள். 
.
குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யாதி  தேவதை  பிரம்ம தேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன.

sivan jaykay

unread,
Apr 23, 2021, 9:17:01 PM4/23/21
to amrith...@googlegroups.com
       
பேசும் தெய்வம் -   நங்கநல்லூர்  J K  SIVAN 



'' நான் பாடத்தை க்ரஹிச்சுண்டு தான் இருந்தேன்''

                        
இதை  நான் எழுத ஒரு  உந்துதலாக இருந்தது  நமது முகநூல்   நண்பர்  ஸ்ரீ சிவகுமார் ராமபத்ரா.   இலங்கையில் குடும்பத்தோடு  வாழும் திருவிசநல்லூர் (திருவிசலூர்)  காரர்.  அவரது தாய்வழி முப்பாட்டனார் தான்  இந்த கட்டுரை நாயகன்  ''மஹா மஹோபாத்யாய  வேதாந்த கேசரி   ''கச்சபி''   பைங்காநாடு ஸ்ரீ  கணபதி சாஸ்திரிகள்'' (மகா பெரியவாளின் பால்ய  வேதசாஸ்திர குரு).

 (Our family is very close to Periyava. My maternal great grandfather, Mahamahobhadyaya Vedanta Kesari (Painganadu) Ganapathi Sastrigal was the guru of Periyava. My mother used to relate several incidents when Periyava had visited our ancestral house in Tiruvisaloor (Kumbakonam). I am happy to note that there is a wider seeking for Periyavas blessings now. Hara Hara Sankara, Jays Jaya Sankara. - சிவகுமார் ராமபத்ரா )

துளசேந்திரபுரம் என்றால் சிலருக்கு புரியும்.  பைங்காநாடு  என்றால் ஏதோ தமிழ்நாடு போல ஒரு தேசம் என்று நினைப்போரும் உண்டு. ஆனால்  ரெண்டுமே ஒரே சின்ன  ஊரை குறிக்கும். மன்னார்குடியிலிருந்து  திருமாக்கோட்டை சாலையில் தெற்காக நடந்தால் இந்த ஊர்  அடையலாம்.    8 கி.மீ தூரம்.   அருமையான பூர்ண புஷ்கலாம்பா சமேத தர்ம சாஸ்தா  கோவில் கொண்டிருக்கிறார். அதைத்தவிர  பழங்காலத்திய  பசுபதீஸ்வரர்  சிவன் கோவிலும் உண்டு.  உள்ளூர் காரர்களால் தான் நிறைய கோவில்களில் கொஞ்சம் முணுக் முணுக் என்று எண்ணெய்  தீபம் எரிகிறது. மூர்த்திகளுக்கு வஸ்திரம், நெய்வேத்தியம், விசேஷகாலங்களில் பூஜை எல்லாம் நடைபெறுகிறது. வாழ்க்கையின் இதர தேவைகளுக்கு பக்கத்தில் உள்ள பெரிய ஊர்  மன்னார்குடி தான்.

கிராமத்தில் இன்னும்  சிலர் மூன்று நான்கு நூற்றாண்டுகளாக  வாழ்ந்த வம்சம் இருக்கிறது. முன்னோர் பெயர்கள் வேடிக்கையாக இருக்கிறது.  சுப்ரமணிய சாஸ்திரிகள் , அவர் பிள்ளை நரியஞன்,  பிறகு  வண்டி ராமு (ரேக்ளா வண்டி )(தீவட்டி ராமு... இது போல் அடையாள பெயர்கள் சொல்கிறார்கள்.

இந்த சின்ன கிராமம் ஒருவரால் பிரசித்தி பெற்றது என்றால் அவர்  ஸ்ரீ பைங்காநாடு  கணபதி சாஸ்திரிகள்,  மஹா பெரியவாளுக்கு இளமையில் வேத சாஸ்த்ர பயிற்சி அளித்த  மன்னார்குடி பெரியவாளின் பிரதம சிஷ்யர். பிறகு கும்பகோணம் அத்வைத சபாவின் முக்கிய அதிகாரி. வெள்ளைக்காரன் காலத்தில் ஒரு சிலர் மட்டுமே  மஹா மஹோபாத்யாய விருது  பெற்றவர்கள்.அவர்களில் ஒருவர்  பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள்.   28.4.1871ல் அந்த கிராமத்தில் பிறந்தவர். அவர் தந்தை சுப்ரமணிய சாஸ்திரிகள்  யஜுர்வேத சாஸ்திர  வித்துவான். அம்மா வழி தாத்தா சுவாமிநாத சாஸ்திரி தான் ஆரம்ப கால குரு. வேதாரண்ய  பாடசாலை தலைமை ஆசிரியர்.  அம்மா   சீதாலட்சுமியின் தந்தை  சுவாமிநாத சாஸ்திரிகள் தான்  கணபதி சாஸ்திரிகளின்  ஆரம்ப குரு. 

1879ல்  8 வயது  கணபதி சாஸ்திரிக்கு  உபநயனம் முடிந்து  பைங்கா நாடு  வெங்கடேச சாஸ்த்ரியிடம்   வேத  அத்யயனம்.   அவரிடம் காவ்யம், நாடகம் , அலங்காரம்  சாஸ்திரங்களை பயின்றார். 16ம் வயதில்   'கடாக்ஷ சதகம் ' என்னும் அம்பாள் மேல் பக்தி ஸ்தோத்ரம் ஸமஸ்க்ரிதத்தில்  எழுதினர்.

மஹாமஹோபாத்யாய ப்ரம்மஸ்ரீ தியாகராஜமஹி   எனும் ராஜு சாஸ்திரிகளிடம்  (ஸ்ரீ மன்னார்குடி பெரியவா) சிஷ்யனாக இருந்து தர்க்கம், வியாகரணம், மீமாம்சம் வேதாந்த சாஸ்திரம் பூர்த்தியாயிற்று.
மன்னார்குடி பெரியவா  ராஜு சாஸ்திரிகள்,   சந்நியாசி இல்லை. கிரஹஸ்தர்.  ''குலபதி'' என்று போற்றப்பட்டு  ஏராளமான சிஷ்யர்களுக்கு  இலவசமாக உணவு கல்வி போதிக்கும்   குருகுலம் நடத்தி  எண்ணற்ற பண்டிதர்களை உருவாக்கியவர். அவரும் ஒரு மஹாமஹோபாத்யாயர்.  சிறந்த சிவபக்தர்.  ஆச்சார  அனுஷ்டானங்களில் சீலர். மஹா  பெரியவாளுக்கு குரு.
90 வயது வரை வாழ்ந்த மஹான். ஞானி. அப்பய்ய தீக்ஷிதர் வம்சம் . தியாகராஜ மஹி என்று இயற்பெயர். வீடும்   ஊரில் அறிந்தவர் தெரிந்தவர்  அழைத்த பெயர்  ராஜு சாஸ்திரி.

குரு  மன்னார்குடி பெரியவா  ஆக்கினையில் கணபதி சாஸ்திரி கோனேரிராஜபுரம் சென்று ''அத்வைத மஞ்சரி ''போன்ற  புத்தகங்கள் .அச்சிட்டு வெளிவர உதவினார்.  அவ்வப்போது   யாத்ரிகர்களாக  பைங்காநாடு,  மன்னார்குடி ஊருக்கு வந்த  வடநாட்டு யோகி ரிஷி முனிவர்களிடம் இருந்து வைத்ய, யோக சாஸ்திரங்களைப் பயின்றார். பழமானேரி ஸ்வாமிகளிடம்  வேதாந்தத்தில் மேல்படிப்பு க்கு பயிற்சி  பெற்றார்..

1892-ம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் துலாபார மஹோத்ஸவம் போது திருவாங்கூர் கொச்சி  ராஜா   ராம வர்மா வின்  சமஸ்தானம்  ஒரு  வித்வத் சபை கூட்டி  அதில் கணபதி சாஸ்திரிகள்  அறிஞர்களால்''கச்சபி'' விருது பெற்று  கௌரவிக்கப்பட்டார்.

1900-ம் ஆண்டு  ஹூப்ளியில்  சங்கராச்சாரிய உத்சவ மண்டலி கூட்டிய  சபையில்   துவாரகா சங்கரமட ஆச்சார்யர்  வேதாந்தத்தில்  சில நுட்பமான ஏழு கேள்விகள் கேட்ட  போது    கணபதி  சாஸ்திரிகள்  அளித்த விளக்கம் சிறப்பாக இருந்ததால்  ஸ்ரீ துவாரகா மடாதிபதி   அவருக்கு *’வேதாந்த கேசரி ‘  விருது வழங்கினார்.

1901--1911 வரை அத்வைத சபையில் அங்கம் வகித்து  அத்வைத சபையின்  அதிகாரியாக பங்கேற்றார்.
1905-ல்  ஸ்ரீ காமகோடி பீடத்தில் ஆஸ்தான விதவானாக  பொறுப்பேற்றார்.

கணபதி  சாஸ்திரிகள் காமகோடி பீடாதிபதி  மஹா பெரியவாளுக்கு  சிறு வயதில்   காப்பியம்,  சாஸ்திரங்கள்   கற்பிக்கும் பெரும் பாக்கியம் பெற்றவர்.   அப்போது தினமும்  மடத்தில்  பகவத் கீதை, ஞான வாசிஷ்டம், ஸூதஸம்ஹிதை பிரசங்கம் செய்தவர்.

கணபதி சாஸ்திரிகள்  40 வயது ஆகுமுன்பே,  சமஸ்க்ரிதத்தில்  நூற்றுக்கணக்கான  நூல்களை எழுதியவர். வெள்ளையன் அரசாங்கம் அவர் மறைந்த பத்தே நாளில்  அவருக்கு  '' மஹா மஹோபாத்யாய'' விருதை வழங்கியது. கும்பகோணம் சங்கர மடத்திற்கு எதிர் வீடு.  தினமும்  காலை மடத்திற்கு சென்று  சிறுவனாக  பட்டத்திற்கு வந்த   மகா பெரியவாளுக்கு  பாடங்கள் கற்பித்தார்.  மாலையில்  சாஸ்திரங்கள், சமஸ்க்ரிதம் எல்லாம் கற்பித்தார்.. வசந்தகாலத்தில்  காவிரி ஆற்றங்கரை  மணலில்  சிஷ்யர்களுக்கு  பாடம் நடத்துவார்.

ஒருநாள்   இப்படி மணலில் பாடம் நடத்தும்போது    கணபதி சாஸ்திரிகள், மாணாக்கரான  மகா பெரியவா இடது கை  விரல்களால் மண்ணைப்  பறித்து குழிப்படுத்திக் கொண்டு  அவர்  கவனம் சிதறியதை கவனித்தார்.   அடுத்த நாள்  காலை  மடத்திற்கு சென்றபோது  அங்கே   மஹா பெரியவா முன் சாஷ்டாங்கமாக  நமஸ்கரித்தார். வயதில் சின்ன மாணாக்கனாக இருந்தாலும் பதவியில்  மஹாபெரியவா  ''ஜகத் குரு''  பீடாதிபதி  அல்லவா?

''சுவாமி நான் கும்பகோணத்தை   விட்டு என் ஊர்  பைங்காநாடு  போக உத்தரவு தரவேண்டும்''  என்கிறார்.
ஆச்சார்யாருக்கு  ஆச்சர்யம்.

''எதற்காக திடீர்னு இப்படி ஒரு   முடிவு. என்ன காரணம்?''

 “நீங்க பெரியவா.   எனக்கு என் குரு கற்றுக்கொடுத்தது என்னவென்றால்   ஒரு மாணவன் ஞானம்  பெற ஆசார்யனிடம் அமர்ந்திருக்கும்போது அவன் முழு கவனமும்  பாடத்தில் இருக்க வேண்டும்.  வேறெதிலும்  மனம்  சிதறக்கூடாது.  எனது குரு ஆற்றங்கரையில் மணலில் பாடம் எடுக்கும்போது   மணலைத்  தொடவோ, அதன் மேல் கவனம் செல்வதோ அனுமதித்த தில்லை. கையில் கூரான கத்தி இருந்தாலும் அதை எதற்கும்  உபயோகிக்க  கூடாது.  மனம் ஸ்திரமாக  பாடம் ஒன்றிலேயே   லயித்திருக்க வேண்டும். அது தான்  ஸ்தித  பிரஞை  என்பார் எனது குரு.  நேற்று நான் பாடம்  கற்பிக்கும்போது பெரியவா கவனம் பாடத்தில் இல்லை, மணல் மேல் இருந்தது. அது தான் காரணம்''

'நீங்கள் சொல்வது போல் இல்லை.  என் கை  மணலை அளைந்தாலும்  நீங்கள் கற்பித்ததில்  என் முழு கவனம் இருந்தது. நீங்கள் நேற்று சொல்லிக்கொடுத்தது அத்தனையும் இப்போது ஒப்பிக்கிறேன் கேளுங்கள் '' என்று மஹா பெரியவா கடகட  வென்று அத்தனையும் திரும்ப சொன்னார்.

கணபதி சாஸ்திரிகளுக்கு  ஆச்சர்யத்தில்   அதிர்ச்சியில் உடல்   வியர்த்தது.   கை  லேசாக நடுங்கியது.

''நீங்கள்  பரம ஞானி.  இனி இங்கே எனக்கு எந்த வேலையுமில்லை . பெரியவா நீங்க  எவர் உதவியும் தேவையில்லாமல் ஆசிரியர்  அவசியமின்றி சகல சாஸ்திரங்களும்  தானாகவே கற்றுக்கொள்ள முடிந்தவர். இனி நான் போகலாம் ''  

ஆனால் பெரியவா  கணபதி சாஸ்திரிகள்  மடத்தை விட்டு போக  அனுமதிக்க வில்லை.   அதற்குப்பிறகும் 10 மாதங்கள் கணபதி சாஸ்திரிகள்  மஹா பெரியவாளுக்கு  பாடங்கள் கற்பித்தார்.

நமது   மஹா  பண்டிதர்களுக்கு  ஒரு சாபக்கேடு. ஒன்று வம்சம் தொடராது. அல்லது  ஆயுள் நீண்ட காலம்  தொடராது. கணபதி சாஸ்திரிகள்  சதா  பரமாத்மாவின் மீது  நினைவாகவும்,  ஆதி சங்கரர்,  சதாசிவப் பிரம்மேந்திர சரஸ்வதிகள்   போன்ற ஞானிகளின்  கிரந்தங்களிலேயே  மூழ்கி பற்றற்ற ஞானிகளாக வாழ்ந்தார்கள்.

1912- ம் வருஷம்  கணபதி  சாஸ்திரிகளும் தனது  மரணம் நெருங்குவது தெரிந்தது.  ஆகவே  ஆபத் சன்யாசம்  பெற்றுக் கொண்டார்.  41  ஆண்டுகள் வாழ்ந்த  மகானின் பூத உடல்  மறைந்தது.   எண்ணற்ற  நூல்களை   இயற்றிய இந்த மகானின்  சில  புத்தகங்களை மட்டும்  தான் அச்சாகின. பல கிடைக்கவே இல்லை.  கணபதி சாஸ்திரிகள் இயற்றிய சில நூல்கள் இப்போது :இவை தான்:

வைதிக – கர்மகாண்ட கிரந்தங்கள்:
1) முகரம் (வைதீகாபரண வ்யாக்யானம் (யஜுர் வேதம் ), 2)காலஸ்வர கௌமுதீ (ஸாம வேத தொடர்புள்ளது),
3) அநியாபதேச பஞ்சாசத், 4) காயத்ரீ பாஷ்யம்,  5) யக்ஞவைபவப்ரகாச:, 6)முகுரமுகமுத்ரணம், 6) ஆபஸ்தம்ப பித்ரு மேத ஸூத்ர வ்ருத்தி 7) சபிண்டீகரண விதி, 8) *சபிண்டீகரண क्षौर நிர்ணய: :(published) * 9) தீபாவளீ நிர்ணய: 10)வயோநிர்ணயம்,
11) விபூதி தாரணம்:,

*வேதாந்த கிரந்தங்கள்:*
12) ஈசோபநிஷத் விபூதி:, 13) ஈசாவாஸ்ய வ்ருத்தி, 14) கேனோபநிஷத் விபூதி:,15)நைர்குண்ய ஸித்தி,16) அதசப்தார்த்தவிசார: ,17) சாரீரக மீமாம்ச ரஹஸ்யம்,18) நி:ஸ்ரேயஸ நிஸ்ரேணி:,19)ஆச்சார்யோக்த்தி விபூஷணம், 20)மாயாநிவிருத்தி சதகம்,
21) யோகீஸ்வர தர்சன மஹிமா, 22) ஆசா தூஷணம், 23)கர்மணாம் சித்த சுத்திபிரகார:24)த்ரவ்யகுணப்ரகாச: ,
 25) ஸ்ரவண விதி வாக்யார்த்த:  26) பார்த்தப் ப்ரஹரணம் (வ்யாக்யானம்)

*காவ்ய – நாடக கிரந்தங்கள்:*
27) துருவ சரிதம், 28) தடாதகா பரிணய, 29)சாரசிகாசந்தான: (நாடகம் ), 30)பிரஹசனம் (நாடகம் ), 31)ஜீவவிஜய (சம்பூ), 32) ரசிக பூஷணம் :(published), 33)அந்யாபதேச பஞ்சாசத் :(published), 34)லக்ஷ்மீவிலாச: (நாடகம் ), 35)வ்ருத்த மணி மாலா :(published), 36)பர்யாயோக்தி சதவ்யாக்யா:, 37)சாம்ராஜ்ய லக்ஷ்மீ பரிணய: (நாடகம்)

*ஸ்தோத்திர கிரந்தங்கள்:*
38)கடாக்ஷ சதகம் 39)ஸாரஸ்வத சஹஸ்ரம், 40)துரக சதகம், 41)பரமேஸ்வராஷ்டகம், 42)மஹாமாயாஷ்டகம் :(published), 43)சூர்யத்வாதசம், 44) ஸம்ஸ்க்ருதாஷ்டகம், 45) ஸுப்ரஹ்மண்யாஷ்டகம், 46)சனைஸ்சராஷ்டகம், 47)க்ருஷ்ண த்வாதசகம், 48) குருவாயுபுரேஸாக்ஷர மாலாஸ்தவ: :(published), 49) ஸ்ரீ வாதபுர நாதாஷ்டகம், 50) குருவாயுபுர நாத பஞ்சரத்னம், 51)தேசிக தண்டகம், 52)ஸ்ரீ சங்கராச்சார்யாஷ்டோத்தரம், 53) குருராஜ ஸப்ததி:, 54)ஆர்த்திஹராஷ்டகம், 55)தேவீ த்வாதச மஞ்சரீ, 56)கும்பேசாஷ்டகம், 57)தேவ்யஷ்ட ப்ராஸ:,58) மூகப் ரஸாதா தர்சன:, 59)அனந்த பத்மநாப ஸ்துதி:, 60)ஆசீர்வாத மஞ்சரி.

*தொகுக்கப்பட்ட கிரந்தங்கள்:*
61) ந்யாய ரக்ஷா மணி(appaya dikshitar) :(published) 62) ஸ்ரீருத்ர பாஷ்யம், 63)காச்யப க்ஷேத்ர மஹாத்ம்யம், 64) மஹாபாரதம் – சாந்தி பர்வம் (தமிழ்) :(published) – 240 அத்தியாயங்கள்



sivan jaykay

unread,
Apr 23, 2021, 9:17:23 PM4/23/21
to amrith...@googlegroups.com
பட்டினத்தார்    -- நங்கநல்லூர்   J .K. SIVAN


பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா
திறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே

பிறக்கும்போது  எவன் எதை கொண்டுவருகிறான்?  வெறும் கையை  பிஞ்சு விரல்களால் மூடிக்கொண்டு தான் அழுதுகொண்டு ஆடைகூட இன்றி  வெறுமனே வருகிறான்.  போகும்போதும்,  அவன் பேரில் என்ன தான் குபேர சொத்து இருந்தாலும் ஒரு செல்லாத  காசு கூட  அவன் எடுத்துக் கொண்டு போக முடிவதில்லை.   இதற்கிடையில்  எத்தனை வருஷங்கள் வாழ்ந்தாலும் அந்த இடைவேளைகளில்  அவன்  பெறுவது, சேமிப்பது, எல்லாமே யார்  தந்தது.  என்னப்பன்  சிவன் தந்ததல்லவோ அத்தனையும்.  இதை  அவன் திருப்திப்படும்படியாக  மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் என்ன?  இல்லாதவர்களுக்கு கொஞ்சம் கொடுத்தால்  என்ன?  ஏன்  இப்படி ஒரு எண்ணம் தோன்றுவதில்லை எவருக்கும் செல்லப்பா  காஞ்சிபுரம்  ஏகாம்பரேஸ்வரா?  என்று யோசிக்கிறார்  பட்டினத்தார்.


“உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்”

போனவாரம்  என்னுடன் நன்றாக பேசியவன் இன்றில்லை. கொரோனா விழுங்கிவிட்டது.  இந்த உலகத்தில் எவர் எப்போது இருப்பார் இல்லாமல் மறைவார் என்று நம்பவே முடியவில்லை.  இந்த உடல் நிரந்தரமானது, நம்பகமானது அல்ல. இதை  போற்றி வணங்கவேண்டாம். அதைப் பாதுகாக்க நம்மால் முடியாது.    ஒன்று நிச்சயம்  அப்பா.  இதெல்லாம்  உலகில் தோன்றியதோ, அதெல்லாம்  நிச்சயம் ஒருநாள் மறைந்தே தீரும்.   மறைந்து போனதெல்லாம்  மீண்டும்  வேறு ஒரு உருவில் தோன்றும். எந்த உருவும் நிரந்தரம் அல்ல.  நானே 5 வயதில், 15 வயதில், 35 வயதில், 50வயதில்  75ல் இப்போது 82ல்  எப்படியெல்லாம்  மாறிவிட்டேன். இது என் போட்டோவா?  நான் இப்படியா இருந்தேன்... என்கிறோமே.


நாய்க்குண்டு தெண்டு, நமக்குண்டு பிச்சை, நமனை வெல்ல
வாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சரம், மதியாமல் வரும்
பேய்க்குண்டு நீறு, திகைப்புண்டு நின்ற பிறவிப்பிணி
நோய்க்குண்டு தேசிகன் தன் அருள், நோக்கங்கள் நோக்குதற்கே (43,பொது)


பொது இடங்களிலோ, வீட்டிலோ   நாம் ஏதாவது சாப்பிடும்போது எதிரில் ஒரு நாய் இருந்தால், அதன் பார்வை நாம் சாப்பிடுவதன் மேலேயும்  நமது கண்கள் மேலேயும் இருக்கும்.  நாக்கை தொங்கவிட்டுக்கொண்டு  ''எனக்கும்  கொஞ்சம் கொடேன்'' என்று கேட்கத்தெரியாமல்  அதன் பசி கலந்த  தீனமான பார்வை உங்களுக்கு தெரியும்.   அது அப்படிதான் கெஞ்சி பிழைக்கும். நாம்  வாய் திறந்து ''அம்மா தாயே, பசிக்குது. சோறு போடு '' என்று கேட்கிறோம்.  பசியை இப்படி வெல்கிறோம்.  இதோ எதிரே  யமன் நிற்கிறான் நம்மைக் கொண்டு போக, அவனை விரட்ட  இருக்கவே இருக்கிறது ஓம்  நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  நம்மை துளியும்  லக்ஷியம் பண்ணாமல் நம்மை விரட்டும்  பேய் அகலவேண்டுமா ?  சூ மந்திரக்காளி  என்று  மந்திரித்த விபூதி. அதை விரட்டும்.  இப்படி காலம் காலமாக  பல ஜென்மங்கள்  பிறவித்துயரில் வாடும் நமக்கு  ஆசார்யன் அருள், இருந்தால் போதும்  கிருஷ்ணன் ஞானாச்சார்யன்,   சிவன்  மஹா குரு.  அவனை நோக்குவோம்.  பிணிகள்  அகலும்.


கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே (2, திருவேகம்பமாலை)

கோபால் போய்ட்டான். மேலே விழுந்து அலறும் மனைவி மக்கள், உறவு அனைவருடைய  உணர்ச்சிகளும் சில மணி நேரங்கள் மட்டும் தான்.  பெரிய  மரத்தை வெட்டி வீழ்த்துகிறான் மரம் வெட்டும் தச்சன்.  காலன் எனும்  தச்சன் இந்த உடல் என்னும் விருக்ஷத்தை ஒருநாள் வெட்டி வீழ்த்துவதால் விழுந்து கிடக்கிறோம் .  மயானம் வரை தான் இந்த தாரை தம்பட்டம், அழுகை  மணி எல்லாமே.  அப்பறம்  கொஞ்சம் கொஞ்சமாக  மறந்து போகிறது.   இது தான் உன் வியாதியா  காஞ்சிபுரம்  ஏகாம்பரேஸ்வரா.  

பட்டினத்தார் இன்னும் படிப்போம் 

   

sitaramen varadharajan

unread,
Apr 23, 2021, 9:17:23 PM4/23/21
to sivan jaykay, amrith...@googlegroups.com
Whole hearted thanks to Sri J.K.Sivan Ji.   You deserve all praise....These types of historical facts should be brought out often and the "present generation"  should be educated.
Long live  JKS Ji.....
vsitaramen
Ithihasamayam - Hinduism on 4G

--
Kindly visit http://amrithavarshini.proboards.com/ for reading more articles.
 
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
தாயுமானவர் [பராபரக்கண்ணி – 221]
---
You received this message because you are subscribed to the Google Groups "Amritha Vahini" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to amrithavahin...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/amrithavahini/CAGpuz-L3za66JxVyy8x1ULT%3D6Xo-yQ5NG7ocY4%2B867S6z9VZng%40mail.gmail.com.

Ramakrishnan K S

unread,
Apr 23, 2021, 9:17:55 PM4/23/21
to Abridged Recipients
Inline image
🌹🌺" என்னை ஏமாற்றிய நீங்கள் யாராக இருந்தாலும் கல்லாகப் போவாயாக!" என்று ஸ்ரீ மகாவிஷ்ணுவை சாபமிட்ட பக்தை - விளக்கும் எளிய கதை 🌹🌹
🌹🌺வடக்கே  கங்கை நதிக்கரையில் ஒரு அழகு பிரதேசம். அதன் மன்னர் யவனராஜா.  தீவிர விஷ்ணு பக்தர் . அவருக்கு ஒரே ஒரு செல்லமகள். 

🌺அவளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பல நாள் யோசித்து  ஸ்ரீ விஷ்ணுவிற்கு  பிடித்த  துளசி  என்ற பெயரையே வைத்தார் . 

🌺பெண் வளர்ந்தாள் . தனக்கு  ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கு பிடித்த துளசி என்ற பெயர் இருக்கும்போது தன்னையே  ஸ்ரீ மகாவிஷ்ணுவிற்கு பிடிக்குமே.  அவனை எப்படியாவது அடைய வேண்டும் என்று தவம் இருந்தாள் .

🌺அப்போது துளசியிடம் மஹா விஷ்ணு நான் உனக்கு காட்சி தருகிறேன் என்று  அசிரிரியாக சொல்ல அந்த நாள்  துளசி  அவருக்காக  காலையிலிருந்து காத்திருந்தாள். 

🌺வேடிக்கையாக ஸ்ரீ மகாவிஷ்ணு மாறு வேடத்தில் ஒரு முதியவராக சென்றதால்  துளசிக்கு  வந்தது தன்னுடன் பேசியது, யாரோ ஒரு  முதிய பிராமணன் அல்ல , மஹா விஷ்ணு என்று தெரியவில்லை.  

🌺மனது ஒடிந்து போன  துளசி தற்கொலை செய்துக்கொள்ள தயாரானாள்.  அந்த நேரத்தில்  மஹாவிஷ்ணு அவளுக்கு தான்  யாரென்று காட்டிக்கொண்டார்.

🌺துளசிக்கு மஹா விஷ்ணு இப்படி தன்னை ஏமாற்றியதில் அவர் மீது ரொம்ப கோபம். 

🌺"என்னை ஏமாற்றிய நீங்கள் யாராக இருந்தாலும் கல்லாகப் போவாயாக!" என்று சாபமிட்டாள். அந்த கல்தான் சாளக்கிராம கல்.

🌺உடனே மஹாவிஷ்ணு   சாளக்ராமமாக மாறியதும்  துளசி  ரொம்ப  பதறிப் போனாள் துளசி.   ஐயோ என் தெய்வமே  ஆத்திரத்தில் இப்படி சபித்துவிட்டேனே என்று கண்ணீர் உகுத்தாள் .  

🌺மஹா விஷ்ணு  புன்னகை புரிந்தவராக    ''அஞ்சாதே துளசி!   கலங்காதே,  எல்லாம் என் சித்தப்படியே  தான்   நடக்கிறது.   உனக்குத் தெரியாததை  ஞாபகப்படுத்துகிறேன்  கேள்.  

🌺நான்   கிருஷ்ண   அவதாரம் எடுத்த போது  பிருந்தாவனத்தில்  நீ ஒரு  கோபிகையாக இருந்தவள் .  என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம்  இருந்தவளும்  நீயே.

🌺பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவே இத்தகைய லீலைகளும்  நாடகங்களும்  நடந்தேறுகின்றன. 

🌺 நீ  என்னை கல்லாக மாறுமாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான்.    என்னை தரிசனம் செய்ததால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது.

🌺இப்போது நீ கண்டகி நதியாகவும், துளசி செடியாகவும் மாறிவிடுவாய்.    என்னை கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால், நான் சாளக்கிராமக் கற்களாக மாறுகிறேன்.       
நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா?

🌺அதனால் நீ கண்டகி நதியாக ஓட, நான் உன்னில் கிடப்பேன், ஆம் சாளக்கிராமக் கற்களாக கிடப்பேன். என் பக்தர்களுக்கு கிடைப்பேன்.   அவைகளில்  நான் இருக்கிறேன் என்பதற்கு  ஆதாரமாக  அந்த கற்களில் சங்கு, சக்கர சின்னங்களும் உண்டாகும்.

🌹சாளக்கிராமமாக நானே இருப்பதால், பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள்.

🌺நாடெங்கும் எடுத்து சென்று தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள்.

🌺சாளக்கிராம கற்கள் கிடக்கும் நதியான நீயும், புனித நதியாக கங்கையை போல் சிறந்த நதியாக போற்றி  வணங்கப்படுவாய். 

🌺உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன்.

🌺இங்கே வர முடியாதவர்கள்   எத்தனையோ பக்தர்கள் இருப்பார்களே.   அவர்கள் உன்னை (துளசியை) எனக்கு அர்ச்சித்தால் போதும். துளசி தீர்த்தத்தை பருகினாலும்  போதும். நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அருள் பாலிப்பேன்" என்றார்.

🌺"யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ, அந்த வீட்டில் வைக்கப் பட்டு இருக்கும் சிறு இடத்தையே, கோயிலாகக் கொண்டு அங்கே நான்  எழுந்தருள்கிறேன். 

🌺அந்த சாளகிராமத்தில் நான் எப்போதும்  குடியிருப்பவன். அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது.

🌺சாளகிராமம் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தோஷம்,சௌபாக்கியம் முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன்" என்றும் மஹாவிஷ்ணு கூறினார்

🌺 தங்கமயமான ஒளியுடன் திகழும் "வஜ்ர கிரீடம்" என்னும் பூச்சியின் வடிவம் கொண்டு சாளகி ராம கல்லை குடைந்து அதன் மையத்தை அடைந்து, அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும், தனது அவதார ரூபங்களையும் விளையாட்டாக வரைகிறார்.

🌺இவைதான் சாளகிராம மூர்த்திகள்.
எதுவும் வரையப் படாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும். 

🌹அவற்றுக்கு "ஹிரண்ய கர்ப கற்கள்" என்று பெயர். இவையும் பூஜைக்கு உகந்தவை.  இந்த சாளகிராமங்கள், சங்கு, நத்தைகூடு, பளிங்கு போன்று பலவித வடிவங்களிலும் கிடைக்கின்றன.
--------------------------------------------------------------------------
🏵️🌹 சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🏵️🌹🏵️

sivan jaykay

unread,
Apr 26, 2021, 10:08:31 PM4/26/21
to amrith...@googlegroups.com
ஸூர்தாஸ்   -   நங்கநல்லூர்  J  K  SIVAN 

39.  என்  தோணி மூழ்குகிறதே...

ஹே,  கிருஷ்ணா,  நான் எதை சொல்வேன், என்னத்தை செய்வேன் சொல்? என் அகம்பாவம் என்னை ஆட்டிப்படைக்கிறது .  . என் செயலுக்கு  நான்  பொறுப்பில்லாமல் எல்லாம் நடப்பதால்  அதற்கு நீ தான் பொறுப்பேற்க வேண்டும். உனக்குத்  தான் எல்லாமே தெரியுமே. என் செயலால் எது ஆகும்? என் தகுதி என்ன? என்னால் இயன்றது என்ன? நானாக நினைத்தது எல்லாம் நிறைவேறவா முடியும்?  எனக்கு தெரிந்து  என்னால் ஒரு நல்லது கூட  இதுவரை நடக்கவில்லை.  செக்கு மாடு போல்  என் மனைவி, சுற்றம், குழந்தை குட்டி, என்று கெட்டியாக  பிணைக்கப்பட்டிருக்கிறேனே.. பணத்துக்கு  அடிமையாகி விட்டேனப்பா.  எனக்கு எது செய்யவேண்டியது, எதை செய்யக்கூடாது என்று  அறியும் அறிவு இல்லாமல் மழுங்கி போய்விட்டதே.
என்னை இங்கேயிருந்து கழட்டி விட்டு விடப்பா கண்ணப்பா, என் வாழ்க்கைத்  தோணியில் நீர்  நிறைந்து  விட்டது  இனி எதற்கும் இதில் இடமில்லை. ஒரு சிறு கடுகை ஏற்றினால் கூட முழுகிவிடும்.  எந்தநேரமும் நான் படகோடு  நீரில் மூழ்கி மறையவேண்டும். வா வந்து காப்பாற்றி கரைசேர்த்து உன்னிடம்  அழைத்துக் கொள் .

ஸூர்தாஸ்   மீராபாய்  போல்  அற்புதமான கிருஷ்ண  பக்தி கானங்கள் இயற்றி பாடியவர்.  இயற்கையிலேயே கண் பார்வை இழந்தவர். 

டில்லி பாதுஷா  ஒளரங்க சீப் காலத்தில் வசித்தவர்.  கிருஷ்ணன் அவதரித்த மதுராவில்  கிருஷ்ணா கத்ர தேவ் எனும்  கிருஷ்ணன் ஆலயத்தில் வசித்து வாழ்ந்தவர்.  அது இப்போது கிருஷ்ண ஜென்ம பூமி  என அழைக்கப்படுகிறது.  முஸ்லீம் அரசாட்சியில் இந்த ஆலயம்  அழித்து தரைமட்டமாக்கப்பட்டது  ஒரு அநியாயமான செயல். என்ன செய்வது?


तुम मेरी राखो लाज हरि
तुम जानत सब अन्तरयामी
करनी कछु न करी
तुम मेरी राखो लाज हरि
औगुन मोसे बिसरत नाहीं
पल चिन घरी घरी
तुम मेरी राखो लाज हरि
दारा, सुत, धन, मोह लिये हौं
सुध बुध सब बिसरी
अब मोरी राखो लाज हरि
सूर पतित को बेगि उबारो
अब मोरी नांव भरी
तुम मेरी राखो लाज हरि


sivan jaykay

unread,
Apr 26, 2021, 10:08:31 PM4/26/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்  --   நங்கநல்லூர்  J .K  SIVAN --

மாயமான  தலைவலி  

யாருக்காவது  ''நான்  எப்படியாவது  மஹா  பெரியவாளை  தரிசனம் பண்ணவேண்டும் '' என்ற உண்மையான மனப்பூர்வமான எண்ணம் இருந்தால் அது எப்படியோ நிறைவேறிவிடும்.  அநேக  பக்தர்கள் இதை   கற்பூரம் ஏற்றி அடித்து  சத்யம் செய்வார்கள்.  

சுந்தர்ராஜன் என்ற  ஒரு  பெரியவா பக்தருக்கு   டில்லியில் பெரிய  அரசாங்க  உத்யோகம்.  1969-ம் வருஷம் ஸ்ரீபெரியவா ஆந்திரபிரதேசத்தில் யாத்திரை செய்து கொண்டிருந்தபோது   பெரியவாளை  எப்படியாவது ஒரு முறை  தரிசிக்க வேண்டுமென்று மனதில்  தவிப்பு.  1969 ஜனவரி 24-  முதல் தினமும் இரவில் தாங்க முடியாத  தலைவலி.   சுமார் 10 மணி முதல் 11 மணி வரை தினமும் இரவில் இப்படி வலி வந்து சுந்தர்ராஜன் தவிப்பார்.    மூளையில் புற்றுநோய்  மாதிரி  ஏதாவது   இருக்குமோ என்ற  பயம்  வலுத்தது.  ஆபிசுக்கு   ஒரு மாசம்  லீவ்  போட்டு  விட்டு   டில்லியிலிருந்து ஐதராபாத்துக்கு பிப்ரவரி 15-ஆம் தேதி  வந்தார்.
.
விஜயவாடாவிலிருந்து இருபது கி.மீ.தூரத்தில் இருந்த தெலாபொரலு என்ற கிராமத்தில்  மஹா பெரியவா  அப்போது வாசம் செய்த  இடத்துக்கு   மாலை  வந்து சேர்ந்தார்.    சுமார் நாலு மணிக்கு  மஹா  பெரியவா விஸ்ராந்தியாக படுத்துக் கொண்டிருந்த  போது   சுந்தரராஜன்   மஹா பெரியவா முன்பாக  நமஸ்கரித்து விட்டு  நின்றார்.

'உனக்கு பிரஹசரணம்னா  என்னன்னு  தெரியுமா?'  

 சுந்தர்ராஜனுக்கு  ஒன்றுமே  புரியவில்லை. ஏன் திடீரென்று  பெரியவா இப்படி கேட்கிறார்.  அவர்  வடமாள் பிரிவு.  ஆனால்  அவர் மனைவி  பிரஹசரணம் பிரிவைச்  சேர்ந்தவள்.  ஒருவேளை அதைச்  சுட்டிக்காட்டுகிறாரோ?  எப்படி  பெரியவாளுக்கு  நம்முடைய சொந்த விஷயம் தெரியும்?
''பிராமணர்களில்  அது ஒரு பிரிவு என்று தெரியும்  பெரியவா''
'நீ எதுக்கு வந்தே?''
''எனக்கு ஒருமாசமா  விடாமல் தினமும் பொறுக்க முடியாத தலைவலி  பெரியவா.  ஆபிஸுக்கு லீவ்  போட்டுட்டு வந்தேன். உங்களை தரிசனம் பண்ணனும்னு ரொம்பநாளா ஆர்வம்.  உங்கள் கிருபையால் என் தலைவலி தீர அனுக்ரஹம்  பண்ணணும்''
'உனக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியுமோ?'''
''இல்லை  பெரியவா  கத்துக்காம போய்ட்டேன்''
'பரவாயில்லே.  இன்னிலேருந்து  நீ தினமும் நாராயணீயத்திலே ஒரு தசகம் படிச்சுண்டு வா'''
பெரியவா ஆசிர்வாதத்தோடு  சுந்தரராஜன் உத்தரவு வாங்கிக்கொண்டு வெளியே வந்து தன்னுடைய காரில் ஏறும்போது யாரோ  ஒரு பெண்மணி ஓடிவந்தாள்.

'பெரியவா என்னை உங்க காரிலே விஜயவாடா வரை போகச் சொன்னார்'  என்று அந்த பெண்மணி சொன்னாள் . 
ஆஹா  அப்படியே என்று  அவளை ஏற்றிக்கொண்டு  சுந்தரராஜன் காரில் புறப்பட்டார்.

விஜயவாடா வந்ததும் அந்தப் பெண்மணியை அவள் வீட்டில் இறக்கி விட்டார்.  
''நீங்க  உள்ளே வந்து இன்று இரவு எங்கள் வீட்டில்  சாப்பிட்டுவிட்டு தான் போகவேண்டும் 'என்றாள்  அந்த அம்மாள்.
சாப்பிட உட்கார்ந்தால் இன்னும் நேரமாகிவிடும்.  இரவு சீக்கிரம் ஹைதராபாத் போகவேண்டும். பத்து மணி ஆகிவிட்டால் பாழாய்ப்போன தலைவலி வந்து விடுமே...

'ரொம்ப நேரமாகாது. சீக்கிரமே  நீங்க  சாப்பிட்டுவிட்டுப் போகலாம்' என்று அந்த  அம்மாள்  அக்ரஹாரத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒவ்வொரு பலகாரமாக வாங்கிவந்து சுவையாகப் பரிமாறினாள்.

பதினைந்து நிமிடத்தில் சாப்பிட்டு இவர் புறப்பட்டு ஹைதராபாத் சென்ற  போது இரவு  10 மணி.   ஆனால் ஆச்சர்யமாக  வழக்கமாக வரும்  தலைவலியைக்  காணோம். 

 ஆஹா  மஹா பெரியவா எனும் மகா வைத்யநாதனைத் தரிசனம் செய்ததிலேயே இவ்வளவு  பலனா!!

அதிசயமாக  அதற்கப்புறம் ஒருநாள் கூட  இரவு 10 மணிக்கு வழக்கமாக வரும் தலைவலி,  தலையைக் காட்டவில்லை.  
மஹா  பெரியவா  உத்தரவின் படி  சுந்தரராஜன்  அந்த வருஷம்   மார்ச் மாதம் 7ஆம் தேதி ஸ்ரீகுருவாயூரப்பன் சன்னதியில் நாராயணியம் பாராயணத்தை  ஆரம்பித்தார். நூறு நாட்கள் பாராயணம் செய்வதற்குள் இவரால் நாலு  கல்யாணங்கள்  மங்களகரமாக நிச்சயித்து நடத்தப்பட்டது.  

சுந்தர்ராஜனுக்கு  டில்லி யில் பெரிய  அரசாங்க உத்யோகம்.   எமெர்ஜென்சி  காலம்.  ஒரு முக்கியமான கேள்விக்கு 
பார்லிமெண்டில் மந்திரி பதிலளிக்க  சரியான பதிலை எழுதும் பொறுப்பு  அவருக்கு வந்துவிட்டது.  அதை எழுதி நிதி அமைச்சக செயலாளரிடம் இவர் சமர்ப்பிக்க, அந்த செகரட்ரி அறையில் அதைப் பற்றி விவாதிக்க இவரை அழைத்தார்.
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான செக்ரட்ரி அந்த பதிலில் சில மாற்றங்களைச் செய்தாக வேண்டுமென வலியுறுத்தினார். கீழ் அதிகாரியான  சுந்தரராஜன் அந்த மாற்றங்களில் தனக்கு ஒப்புதல் இல்லை,  மாற்றக்கூடாதென்றும் தன் கருத்தைக் கூறினார்.  
''இல்லை  நீங்கள் இதை மாற்றி எழுதவேண்டும்''  என்கிறார் உயர் அதிகாரி.
'மன்னிக்க வேண்டும், அப்படி பதிலை மாற்றி அமைப்பது  உண்மையை மறைப்பதாக ஆகும். அப்படியே மாற்றினால் அதற்கு முழுப் பொறுப்பையும் நீங்கள்தான் ஏற்க வேண்டும்' என்று மிக அழுத்தமாக சுந்தரராஜன் கூறினார்.  

உயர் அதிகாரிக்கு  கோபம்.  தனது கீழ் வேலை செய்யும் ஒருவன்  உத்தரவை மீறுவதா?   உடனே  டெலிபோன்  பண்ணி  ரிசர்வ் பாங்க் டெபுடி கவர்னரை டில்லிக்கு அடுத்த விமானத்தில் வரவழைத்தார்.  சூழ்நிலை மிகவும் பாதகமாக இருந்தது.

'சரி. சுந்தரராஜன்  நீங்க போகலாம்... ரிசர்வ் பாங்க் டெபுடி கவர்னர் நாளைக்கு இது சம்பந்தமான ரெகார்டுகளுடன் வரச் சொல்லியிருக்கேன். நீங்க எழுதி வெச்சுருக்கிற இந்த பதிலுக்கும் அவர் கொண்டு வரப்போற விபரங்களுக்கும் தாருமாறா ஏதாவது இருந்தால் உங்க மீது உடனே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்'.

இப்படி மிரட்டலும், பயமுறுத்தலுமாக அதிகாரி இவரை அறையிலிருந்து போகச் சொன்ன போது இவருக்குப் பயத்தில் வியர்த்துக் கொட்டியது.  தன்மேல்   கோபத்தில் எப்படியாவது  நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்து விட்டார்  என்று தோன்றியது. 

தான் எழுதி வைத்த பதில் நேர்மையாகவும், சத்தியமாகவும் இருந்தாலும் அதிகாரி தன் கோபத்தைக் காட்ட எந்த வகையிலும்
முயற்சிக்கலாமென்பதும் இவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அன்றிரவு  கவலையும், நடுக்கமும், தூக்கமின்றி மஹா பெரியவாளை மனதில் வேண்டிக்கொண்டார்.  
அதிகாலையில் ஓர் அதிசயம்.

டில்லியில்  இர்வின் ரோடில் 'கணேஷ் மந்திர்' என்று  ஒரு பிள்ளையார் கோவில்.  அதன்  அர்ச்சகர் இவர் வீட்டுக் கதவைத் தட்ட இவர் திறந்தார். அந்த அர்ச்சகர் கையில் பிரசாதம்.   

''சுந்தரராஜன் ஸார்  நீங்கள் தானே.    நான்   மஹா பெரியவாளை  தரிசனம் செய்யப் போஇருந்தேன்.  அவா இந்தப் பிரசாதத்தை உங்க கிட்டே இன்னிக்கு   விடியற்காலையிலேயே   கட்டாயம் சேர்த்துடனும்னு கொடுத்து அனுப்பினா'  நேத்திக்கு ராத்திரியே  டில்லி வந்துட்டேன்''.   என்றார்!

பகவானே, பேசும் தெய்வமே,  என்ன கருணை உனக்கு இந்த அநாதை பக்தன் மேல்.  நேற்று  ராத்திரியெல்லாம் நரக  வேதனைப்பட்டு உங்களை வேண்டியது எப்படி உங்களுக்கு தெரிந்தது.  பக்தன் வேதனை பகவானே உங்களுக்கு எப்படியோ தெரிந்து விடுகிறதே.  என் மேல்  மஹா பெரியவா  நீங்க  எவ்வளவு கருணை வைத்து  ''பயப்படாதே இந்தா என் பிரசாதம் என்று அனுப்பியிருக்கிறீர்கள்.''

கண்ணீர் மல்க   அர்ச்சகர் கொடுத்த  பிரசாதங்களை சுந்தரராஜன்  பெற்றுக் கொண்டார்.  இனி எது வரினும்  கவலை இல்லை என்ற தெம்பு வந்துவிட்டது. அன்று மதியம் பதினொரு மணியளவில் ஆபிசில்  நிலைமை தலைகீழானது.

அப்போது நடந்த அதிகாரிகளின் கூட்டத்தில், அந்த ரிசர்வ் பாங்க் டெபுடி கவர்னர் சுந்தர்ராஜன் எழுதியிருந்த பதில் முற்றிலும்
பொருத்தமானதென்றும் அவை யாவும் சரியான தகவலை உடையதென்றும் அதில் சிறிதும் மாற்றம் செய்யக் கூடாதென் றும் மீட்டிங்கில் கூறிவிட்டார்.   கூடியிருந்த மற்ற மூத்த அதிகாரிகளும் இதையே வழி மொழிந்தனர்.   சுந்தர் ராஜனின் உயர் அதிகாரி   நிதி அமைச்சரக செக்ரட்ரிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தர்மசங்கடமான நிலையில் சுந்தர்ராஜனிடம் நேற்று கடுமையாக தான் நடந்து   கொண்டதற்கு வருந்துவதாகவும், அதற்கு பிராயச்சித்தமாக தன் அறையிலேயே இவரையும் மதிய உணவு அருந்துமாறு கேட்டுக் கொண்டு அழைத்தார். 

ஒரு அரசாங்கத் துறையில் இப்படி ஒரு கீழ் அதிகாரியை மேல் அதிகாரி உபசரித்து கூப்பிடுவது எப்போதும் நடப்பதல்ல 

இன்னொரு  சம்பவம்  இதே  சுந்தரராஜன் சம்பந்தமாக  சொல்கிறேன். மஹா  பெரியவா அதிசயத்துக்கு  முடிவே இல்லை.


sivan jaykay

unread,
Apr 26, 2021, 10:08:31 PM4/26/21
to amrith...@googlegroups.com

ராதையின் மந்திரம்   --   நங்கநல்லூர்  J K  SIVAN 


தாகம்  தொண்டையை  விரட்டுகிறது.  தண்ணீர்  தேடுகிறோம். குடிக்கிறோம். தாகம் .தீர்கிறது.  கண்ணன்  ராதை  விஷய  தாகம் அப்படிப்பட்டதல்ல.  மேலே மேலே  படிக்க,  அறிய,  தெரிந்துகொள்ள,  தாகம்  இன்னும் அதிகமாகிறதே தவிர குறையவே இல்லை.  இது என் அனுபவம்.  பாருங்களேன்.  ஸூர்தாஸ்,  கீதாஞ்சலி எழுத எழுத இன்னும்  அழகாக வளர்ந்து கொண்டே போகிறதே. பிடிக்கிறதா?  இதோ ஒரு குட்டி சம்பவம். 

பிருந்தாவனத்தில் ஒவ்வொரு  வினாடியும்  கோலாகலம் கேளிக்கை,  ஆனந்தம்,  பிரம்மானந்தம்  ஆயிற்றே.  இருக்காதா பின்னே?. கிருஷ்ணன்  இருக்கிறானே.  சந்தோஷம்  முழுசாக  எங்கும் நிறைந்திருக்க வில்லை. ஒரு சில மனங்களில்  கிருஷ்ணன் ராதா மேல் பொறாமையும் இருந்தது. அது இன்னும்  ராதா கிருஷ்ணன்  பெருமையை  வளரச்செய்தது என்று சொல்லலாம். 

அழகிய   மென்மையான   ரோஜாவிலும் முள்  இருக்கறதே.  நல்லவர்  என்றிருந்தால்  கெட்டவரும்  உண்டே.  சூரிய  ஒளி  யோடு இரவின்  இருட்டும் வருகிறதே.  கிருஷ்ணனைபற்றியும் ராதை அவன் மேல் கொண்டிருந்த  பற்றையும்  சில  விஷமிகள் தங்களைப்போலவே  அவளை நினைத்து  சந்தேகித்தனர். அவளைச் சீண்டிப்பார்க்க ஒரு  திட்டம் உருவானது. ஒரு சிலர்  ஒருநாள்  ஒரு பொது இடத்தில்  மரத்தடியில் அமர்ந்து கொண்டிருந்தனர். அந்தப்பக்கமாக ராதை நடந்து போவதைப் பார்த்தார்கள். 

''ராதா  இங்கே வா ''
எதற்கு  என்னை கூப்பிட்டீர்கள்?''

 நீ தான்  எல்லோருக்கும்  நல்லது  செய்கிறவள்  ஆயிற்றே,  உதவி  என்றால்  உன்னிடம்  தானே  எல்லோரும்  ஓடி வருகிறார்கள்.  எங்களுக்கும்  ஒரு உதவி செய்யேன்''

''ஆஹா  அப்படியே,  என்ன செய்யவேண்டும் உங்களுக்கு. சொல்லுங்கள்  ''

'கொஞ்சம்  நீர்  மொண்டு வா  இதில்''

 அவர்கள் ராதாவிடம் கொடுத்தது  ஒரு  ஒட்டை பானை.  அதில்  நூறு  பொத்தல். அது  வெளியே தெரியாதவாறு மறைத்து  அவளிடம் கொடுக்கப்பட்டது.    விஷயம் தெரியாத  ராதை  அதை எடுத்துக்கொண்டு  யமுனை சென்றாள் .

வெகு தூரம்  நடந்து போகவேண்டும்.   ஆகவே   வழக்கம் போல  ராதா கண்ணனை  நினைந்து கொண்டே, அவன்  மேல்  தானாகவே  ஒரு  பாட்டு  இட்டுக்  கட்டி , ராகம் போட்டு,   அதை ரசித்து  பாடிகொண்டு  யமுனை சென்றாள் .   அந்த ஓட்டைப் பானையை யமுனையில் முழுக்கி, நீரை  மொண்டாள்.  எடுத்து  தலையில் வைத்துக்கொண்டு  நடந்தாள் .  மீண்டும்  வழி முழுதும்  கண்ணன் நினைப்பு.  அவனை  கேலி செய்து  

''ஏ, கிருஷ்ணன்  என்னும்  பானையே ,  ஜம்மென்று  என் தலைமேல்  ஏறி  உட்கார்ந்து கொண்டாயே.  நான்  என்ன   குதிரையா உனக்கு  சவாரி செய்ய''  என்று  பாடினாள் .  தன  பாட்டைத்    தானே  ரசித்தாள் , சிரித்தாள்.  வீடு  நோக்கி நடந்தாள் . வழியில்  அந்த விஷமிகள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.  

தண்ணீர்  கேட்டவர்களிடம்   நீர்  நிரம்பிய  பானையைக்  கொடுத்தாள.  நூறு  பொத்தல்  கொண்ட  பானை முழுதும்  நீரோடு அவர்கள் கையில்  கொடுக்கப்பட்டது  அவர்கள் திகைத்தார்கள்.. ஆச்சர்யத்தில் அசந்து போனார்கள்.
 
 'ராதா , இது  ஓட்டைப்பானை  என்று உனக்கு  தெரியாதா?
''தெரியாதே.  நான்  கவனிக்க வில்லையே''  
''தண்ணீர்  எப்படி இந்த  சர்வ ஓட்டைப் பானைக்குள் நிரம்பியது  என்று  நினைத்து கூட  பார்க்கவில்லையா?''
''இல்லையே ''
''அப்படி  என்ன  சிந்தனை உனக்கு?
''எனக்கு எப்போதும்  ஒரே சிந்தனை,  கண்ணன்  தான். வேறெதுவுமில்லையே.!  

கண்ணனையே  நினைத்து  ராதா  அந்த  ஓட்டைப்பானையை  யமுனையில் முழுக்கியதும்  அந்த  ஒட்டைப்பானை  அவள்  கை பட்ட பாக்யத்தில்  தானும்  கண்ணன் மகிமையை அவன்  விளையாடிய  யமுனையில்  முழுகியதால்  பெற்றது.  கண்ணன் என்கிற  சொல், நாமம், அதன் சக்தி  உயிருள்ள  நம்  மனத்தையும்  இதயத்தையும்  நிரப்பும்போது  அது  அதிசயமில்லை.  உயிரற்ற  ஜடப்பொருள்கள்  கூட  கண்ணன்  நாம  மகிமையால்  பயனுற்று உபயோகமாகும் என்று  புரிகிறது.   நம்  மனத்தைபோல் அந்த  பானையும்  ஓட்டைகளை  அவன்  பெயரால்  அடைத்துக்கொண்டதே.

ராதா  கண்ணனை நினைத்து  பாடிய  பாடல்கள்  அனைத் துமே   பாவ (பெரிய  ''பா") சங்கீர்த்தனம்  என்ற வகையைச் சேர்ந்தது. அவள்  எண்ணம் செயல், சொல் எல்லாமே  உள்ளே நிரம்பியிருந்த கிருஷ்ணனிலிருந்து வெளிப்பட்டவை.  அவளது  பக்தியை ஐந்து  வகையாக பிரித்து உணரமுடியும்.  சாந்தம்.  நட்பு,  தாய்க்கு  சேயின்  மேல்  உள்ள  அபிமானம்,  உறவு, (அனுராகம்), இனிமை (மதுரம்)

 இன்னுமொரு கதை சொல்லி முடிக்க வேண்டும்  என்று  எண்ணிவிட்டேன்.

நான்  இதுவரை  பலமுறை  எடுத்து  சொன்ன ராதா தத்துவம்  மிக ஆழமானது.  பரிசீலிக்க முடியாதது.  பூரண  நம்பிக்கை ஒன்றே அந்த  பக்தியின் அடித்தளம்.  மற்ற  பக்தர்களைப்  போல்  அவள்  கிருஷ்ணனை  வேண்டி  தவம்  செய்யவில்லை, புகழ்ந்து பாடவில்லை.  கோவில் கோவிலாக  சென்று  குளங்களில் முழுக வில்லை.  எதுவும்  வேண்டவுமில்லை.    தானே அவனாகினாள் .அவ்வளவே..

ஒரு நாள்  பிருந்தாவனத்தில்  கண்ணனைத்  திடீரென்று  காணோம். அவனைத்தான்  எப்போதும்  அபாயம்,  அரக்கர்கள்   மயமாக சூழ்ந்து நின்றதே.  வழக்கமான  இடங்களில் தேடியும்  அவனைக்  காணோம்.  எங்கெல்லாம்  அவன் வழக்கமாக போவானோ அங்கெல்லாம்  ஓடிச் சென்று யசோதை    ''கிருஷ்ணா கிருஷ்ணா''    என்று  கூப்பிட்டாள் .  பதிலே  இல்லை.   இருட்ட ஆரம்பித்து விட்டதே.  என்ன செய்வது?  என்ன  ஆயிற்று  என்   அருமைக் கண்ணனுக்கு?  கலங்குகிறாள்  யசோதை.

என்னவோ  திடீரென்று  ஒரு  எண்ணம்  தோன்ற  ஓடினாள்   ராதாவின்  வீட்டுக்கு.   கதவை  இடித்தாள், கதவைத் திறந்த  ராதா  திடுக்கிட்டாள்.  பேயறைந்தால்  போல்  அலங்கோலமாக  அழுதுகொண்டு  யசோதை.!!

''அம்மா  என்ன ஆயிற்று  உங்களுக்கு.  அவளை  அணைத்து  உள்ளே  அழைத்துச்  சென்றாள்.சொல்லுங்கள் என்ன  விஷயம். நான்  என்ன  உதவி  செய்யட்டும்.

'கிருஷ்ணனைக்  காணோம் ''  அழுதுகொண்டே   தேம்பலுக்கிடையே யசோதையின்  வார்த்தைகள்  வெளிப்பட்டது.

ராதை  அசந்து போனாள்.  கிருஷ்ணா  உனக்கு  என்ன  ஆயிற்று.  அவளுக்கு  உடல்  திடீரென்று அக்னிவசப்பட்டது  மூச்சு  திணறியது. உடல்  நடுங்கியது.   கண்களை மூடினாள்.  உள்ளத்திலே முதலில் அவன் எங்கே  என்று  தேடினாள்,    சிலையாக அமர்ந்தாள்.  

 ''கிருஷ்ணா   என்  கிருஷ்ணா ''  அவள்  வாயில்  மெல்ல  வார்த்தைகள்  வெளி வந்தது.  கிருஷ்ணனைப்  பிடித்து விட்டாள்.  கண்ணைத்  திறந்தாள்.   எதிரே கிருஷ்ணன்   சிரித்துக்கொண்டு நின்றான்.

யசோதைக்கு  பேச்சு  வரவில்லை. கண்களில்  ஆனந்த கண்ணீர்  நன்றியோடு அவை  ராதையைப்  பார்த்ததே பேச்சானது.

''ராதா. உனக்கு   நிகர் நீ  தான்.   நான்   கிருஷ்ணனை ஒரு  அம்மா, அவன்  என்னுடைய மகன்,   என்ற  கடமை  உணர்ச்சியோடு  மட்டுமே  நெருங்கினேன். நான்  அவனை விட  பெரியவள்.   அவனுக்குப்   பொறுப்பானவள், அவனுக்கு  ஆபத்து  வராமல் காக்க வேண்டியவள் ,  அவனுக்கு  நல்ல வழியில்  செல்ல போதிக்க   தக்கவள்'' என்ற  எண்ணம்  என்னில் தலை தூக்கி எழுந்தது.    அவனைப்   பரிபூர்ண  ப்ரேமையோடு உன்போல் பார்க்க  தவறினேன்.  இந்த  நிகழ்ச்சி மூலம்  அவன்  பேசாமலேயே   உன் மூலம்  எனக்கு  போதித்து விட்டான்.  

வயது வித்யாசம் பார்க்காமல்  யசோதையின்  கரங்கள்  தானாகவே  ராதையை நோக்கி  குவிந்தன.

 

sivan jaykay

unread,
Apr 26, 2021, 10:08:43 PM4/26/21
to amrith...@googlegroups.com


பேசும் தெய்வம் -   நங்கநல்லூர்   J K  SIVAN  --

   
மஹா  பெரியவா அனுக்ரஹம்   தொடர்கிறது...... 


மஹா பெரியவா ஒரு  யுக புருஷர். அவர்  வாழ்ந்த காலம் ஒரு  புண்ய சகாப்தம்.  மீண்டும் அப்படி ஒரு காலம் வருமா?  அவரைப்போல் ஒருவர் அவதரிப்பாரா  என்பது அந்த பரம்பொருளுக்கு தான்  தெரியும்.    

மஹா பெரியவா  சம்பந்தப்பட்ட  நிகழ்வுகள், சம்பவங்கள்  கட்டுக்கதை அல்ல.  எங்கோ யாரோ  அனுபவித்து நமக்கு கைகள் மாறி வந்து சேர்ந்தவை.  ஸ்ரீ சுந்தரராஜன்  என்ற  பக்தர், டில்லியில்  மத்திய அரசாங்க நிதி அமைச்சராக  அலுவலகத்தில் ஒரு முக்கிய அதிகாரி. அவர் வாழ்வில் அனுபவித்த ஒரு சில சம்பவங்களை முன்பு ஒரு கட்டுரையில் எழுதி இருந்தேன். இது அதன் தொடர்ச்சி என கொள்ளலாம். 

ஐ.நா. சபையின் ஒரு முக்கிய பதவிக்கான தேர்வு நடந்தபோது  சுந்தரராஜன்   தன்னுடைய விவரங்கள் அடங்கிய மெடிகல் ரிபோர்டை தேர்வுக்காக  டெல்லியில் கொடுக்கச் சென்றார். 1976-ஆம் வருடம் பிப்ரவரி 4ஆம் தேதியன்று இவர் அப்படி ஐநா சபையின் டில்லி அலுவலகத்தில்   கொடுத்தபோது ஸ்ரீபெரியவாளின் திருக்கரங்கள் அனுக்ரஹிப்பதாகக் காட்சி தெரிந்தது. ஸ்ரீபெரியவாளின் மேல் கொண்டிருந்த மிகுந்த   நம்பிக்கையோடு தான் நிச்சயம் தேர்வாகிவிடுவோம் என்று உறுதியாக நினைத்து அப்படி அயல்நாடு போவதற்கு முன் தன் பத்து வயது  மகனுக்குத் திருப்பதியில் உபநயனம் செய்து வைக்க ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டார்.

மஹா சிவராத்திரி அன்று  மஹா பெரியவாளை தரிசித்தார்.  

''பெரியவா,  நான்  வெளிநாடு  சொல்லணும்னு ஆபிஸ்லே உத்தரவாயிருக்கு.  வயசான அப்பா அம்மாவை விட்டு விட்டு போகணுமே ன்னு கவலையா இருக்கு. என்ன செய்யறதுன்னு புரியலை. நீங்க தான் எனக்கு எல்லாமே.   எது நான் செய்யணும்னு உத்தரவிடறேளோ  அதை பண்றேன்.''

பெரியவா  ஒன்றும் பேசவில்லை,  கை தூக்கி  அனுக்ரஹம்.  மெல்லிய புன்சிரிப்பு. பிரசாதங்கள் பெற்று  சுந்தரராஜன் திரும்பினார். 

அடுத்த நாள் டெல்லியில் அலுவலகத்தில் லீவ் முடிந்து வேலையில் சேர்ந்தார்.   ஐ.நா.  சபையில் சுந்தர்ராஜனை  தேர்வு செய்து விட்டதாக   தந்தி மூலம் உத்தரவு வந்தது.    ஜூன் மாதம் இவர் ஸ்பெயினில் ஐ  நா சபையில் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றபின் இவர் தேர்வான விபரங்கள் அடங்கிய கோப்பு இவரிடம் கொடுக்கப்பட்டது.

அந்தக் கோப்பில் ஒரு அதிசயம் காத்திருந்தது.     அந்தப் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்த ஏழு நாடுகளின் நபர்களில் அந்த நாட்டின் ஃபைனான்ஸ் செகரட்ரி பிளாக்கிலிருந்து ஒரு நபரைத் தேர்வு செய்து அதை பிரதம மந்திரிக்கு அனுப்பியிருந்தது தெரியவந்தது. 

ஆனால் டிரினிடாட் டுபாகோவின் பிரதம  மந்திரியான டாக்டர் எரிக் வில்லியம்ஸ் அதை ஏற்காமல் அந்த ஏழு பெயரில் முன் பின் தெரியாத  சுந்தரராஜன்  பெயரைத் தேர்வு செய்து உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார்.

இதில்  என்ன  அதிசயம் இருக்கிறது?

அந்த அயல்நாட்டு பிரதமமந்திரி கையெழுத்திட்ட அந்த அயல்நாட்டு நேரம் சரியாக இந்திய நேரத்தின் படி   மஹா சிவராத்திரி தினம்.  சுந்தர்ராஜன்  அன்றைய தினம்  தான்  நீங்க என்ன உத்தரவு இடறேளோ  அதன் படி நடக்கிறேன் என்று சொன்ன நேரம்.  மஹா பெரியவா  மெளனமாக சிரித்து  அனுக்ரஹம் செய்த நேரம்.!! இதை கவனித்த சுந்தர்ராஜனுக்கு  மயிர்க் கூச்செறிந்தது.  மேனி சிலிர்த்தது. வியர்த்தது.   இது உலக மஹா அதிசயம் இல்லையா?

1987-ஆம் வருஷம் நவம்பர் மாதம் சுந்தர்ராஜனுக்கு ஒரு கடுமையான சவாலான பணி கொடுக்கப்பட்டது. யுகோஸ்லாவி யாவில் ஒரு அகில நாடுகளின் வர்த்தக சபையின் பிரதிநிதிக்கான தேர்தலில் நம் நாட்டின் உறுப்பினருக்கு பிரசாரம் செய்ய இவரை இந்திய அரசாங்கம் நியமித்தது.  அப்போது இந்திய நாட்டில் வறட்சி காரணமாக இதற்கான செலவுகளை தாராளமாகச் செய்ய முடியாத நிலையில் இவருக்குப் பக்கபலமாக ஆட்களையோ, தேர்தல்  பிரசாரத்தில்  செலவழிக்க பணமோ கிடைக்கவில்லை.

 ஆனால் இந்திய உறுப்பினரும், பாகிஸ்தான் உறுப்பினரும் நேருக்கு நேர் போட்டியிடும் நிலைமை வந்தது. மற்ற 27 நாடுகள் இதில் கலந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான் வேட்பாளருக்கு தக்க பலமாக ஆறு உயர் அதிகாரிகளுடன் மற்ற நாடுகளின் அங்கத்தினரை மகிழ்விக்க கேளிக்கைகளுக்காக நிறையப் பணமும் அந்த நாடு கொடுத்திருந்தது.   

பெல்கிரேட் சென்று நம் நாட்டு தூதரை சுந்தர்ராஜன் சந்தித்தபோது அவர், "நீங்க எப்படி பிரசாரம் செஞ்சாலும், பாகிஸ்தான் காரன் மத்தவங்களுக்கு பணத்தைக் கொட்டி சந்தோஷப்படுத்தி நம்மை தோக்க வைக்கத்தான் போறான்"  என்று  அவநம்பிக்கையோடு பேசினார்.  

 சுந்தர்ராஜனுக்கும் அது  தான் யதார்த்தமான உண்மை என்று தோன்றியது.     இருந்தாலும் நாடு தனக்கு இட்டிருந்த பணியை இந்த இக்கட்டில் எப்படி நிறைவேற்றுவ தென்று மன உளைச்சலோடு தூக்கம் வராமல் இரவு சென்றது.  மஹா பெரியவாளை மனதி த்யானம் செய்து கொண்டே   அன்றிரவு படுத்தார். 

அதிகாலை ஒரு அதிசயக் கனவு.
மஹாபெரியவா சுந்தரராஜன்  முன் தோன்றி தன் இருகரங்களை விரித்து அபயகரமாக காட்டுகிறார். நடுநாயகமாக நடராஜ மூர்த்தியான   மஹா  பெரியவா  தரிசனம் நல்க வலது திருக்கரத்தில் வெங்கடாசலபதியும் இடது திருக்கரத்தில் பத்மாவதித் தாயாரும் தோன்ற அருள்கின்றனர்.  

இந்த சொப்பனம் கண்டவுடன் மெய்சிலிர்க்க  சுந்தரராஜன்  உடல் சிலிர்க்க  உடனே எழுந்து, அப்போது எத்தனை மணி என்றும் பார்க்காமல் நம் நாட்டுத் தூதரை போன் மூலம் தொடர்பு   கொண்டு தான் கண்ட கனவைக் கூறினார். 

மஹா  பெரியவாளைக் கனவில் காண்பது அத்தனை சுலபமல்ல அப்படிக் கனவில் மஹான் வந்து ஆசீர்வதித்தால்
எப்படியும் நம் நாடு  தான் ஜெயிக்கப் போகிறதென்று இவர் உணர்ச்சி பொங்கப் பேசினார். அந்த அகாலத்திலும்   இவர் சொல்வதை அவமதிக்காமல்  அந்த அதிகாரி கேட்டுக் கொண்டார்.

அடுத்த நாளில் 27 நாடுகளின் வாக்காளர்களிடம் சுந்தர்ராஜன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார். ஸ்ரீபெரியவாளின் மாபெரும் கருணையினால்   அந்த 27 நாடுகளிலிருந்து 20 நாடுகளின் வோட்டு இந்தியாவிற்கும் மற்ற 7 வோட்டு பாகிஸ்தானுக்கும் கிடைக்க இந்தியப் பிரதிநிதி அமோக வெற்றி யடைந்தார். இது இந்தியாவுக்கும், ஏன் நமக்கும் பெரிய வெற்றி.

sivan jaykay

unread,
Apr 26, 2021, 10:08:53 PM4/26/21
to amrith...@googlegroups.com

மானசீக புனித/உல்லாச பயணம்-- நங்கநல்லூர் J K SIVAN

     4.    ஹம்பி 

உலகத்திலேயே  அற்புதமான  கலைச்செல்வங்களைப் பெற்றது நமது பாரத தேசம்.  அதை  எண்ணற்ற அந்நியர்கள்  ஆக்கிரமித்து  அழித்தும்  எஞ்சியவற்றை  நம்மால்  பாதுகாக்க முடியவில்லை என்றால்  அழித்தவர்களை விட  அதிக குற்றவாளிகள் நாம் தான்.  

அப்படி ஒரு கலைச்செல்வமான ஹம்பி எனும் மாநகரத்தை  சுற்றுலாவாக காண  உங்களை அழைத்துச் செல்லப்போகிறேன். யாரும் என்னோடு உங்கள் வீட்டிலிருந்தே பயணிக்கலாம்.  காசில்லாமல்  கர்நாடகா பறந்து செல்கிறோம். கொரோனா பயமின்றி ஒவ்வொருவரும்  தனித்தனியே  அமர்ந்தபடியே எங்கும் சுற்றப்போகிறோம்.  ஆயிரம் வருஷங்கள் பின்னோக்கி செல்வோம்.

Hampi, ஹம்பி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர்.விஜயநகரப் பேரரசின் தலைநகரம். புராதனமான  புகழ்பெற்ற விருபாக்ஷர்  கோயில்  உள்ள  ஸ்தலம்.

விஜயநகர சம்பிராஜ்ய  படையில்  20 லக்ஷம்  வீரர்கள் இருந்தார்கள்.  1500ல்   விஜயநகர அரசின் போது  500,000  மக்கள் இருந்தனர்.

14-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் விஜயநகர சாம்ராஜ்யம்  பலம் வாய்ந்ததாக இருந்தது.   தலைநகரம் ஹம்பி. .8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இந்த நகரம்.  துங்கபத்ரா ஆற்றின் கரையில்  அமைந்தது  

950 மீட்டர் நீளமுடைய  கடைகள் இருந்த சந்தை, 30 சதுர மீட்டர் அளவுடைய ராணிகளின் குளியலறை, பிரம்மாண்ட அரண்மனையின் எச்சம் என அந்த நகரம்   விரிந்திருந்தது.

  உலகில்  எல்லோர்  நெஞ்சிலும்  இடம் பிடித்த  ஹம்பி  வட  கர்நாடகாவில்   பெல்லாரியில்  இருந்து  80  கி.மீ.   பெங்களூரிலிருந்து  420 கி.மீ.  தூரத்தில் உள்ள  ஹம்பி.  ஹோஸ்பேட்டிலிருந்து  8 கி.மீ. தூரத்தில் உள்ளது. 

 உலகத்தில் ஒரு  சிறந்த பழங்கால அடையாள சின்னம் துங்கபத்ரா நதிக்கரையில்  ஒதுங்கி அமைதியாக  தனது   புகழ் மிக்க  சரித்ரத்தை  சத்தம் போடாமல்  வெளிப்படுத்துகிறது. அங்குள்ள  விட்டலன் கோவிலின் சிற்ப அழகுக்கு ஈடு உண்டா?   அங்கே இருக்கும்   56 இன்னிசை எழுப்பும் கல் தூண்களுக்கு தான் இணையுண்டா?  ஸ  ரி க ம  தூண்கள்  என்று பெயர் கொண்ட அவற்றை மெல்லிதாக தட்டினாலே போதும்.  வீணை தோற்றது.  கவனிப்பாரற்று சிதைந்த புராதன சின்னம் ஹம்பி.

ஹம்பி நாம் நினைப்பது போல் விஜயநகர காலத்திய சிற்பக் கோயில் இல்லை. முதலாம் நூற்றாண்டை சேர்ந்தது. மூன்றாம் நூற்றாண்டில் அசோகனின் அதிகாரி அதை  ஆண்டிருக்கிறான். ஹம்பியின் புராணப்பெயர்  கிஷ்கிந்தா க்ஷேத்ரம்., பம்பா க்ஷேத்ரம், பாஸ்கர க்ஷேத்ரம்,  இங்கே துங்கபத்ரையின் முந்தைய பெயர் பம்பா. அதன் தென் கரையில் தான் ஹம்பி உள்ளது.  பம்பாவை ஹம்பே என்பார்கள் கன்னடத்தில். அதிலிருந்து புறப்பட்டது ஹம்பி.    இங்கே  ஹஸாரா  ராமர் கோவில் உண்டு.  ராமர் கிருஷ்ணன் காலத்திய அடையாளங்கள் இங்கே காணப்படுகிறது. சுவர்களில்  இராமாயண நிகழ்ச்சிகள்  சிலையாக காண்கிறதே.

எட்டடி  உயர  கணேசர் கண்ணைப்  பறிக்கிறார். இடுப்பில் நாகம் சுற்றி இருக்கும். அது தான் BELT . சதுர் புஜம்.  ஒரேகல்லில் ஆன சிலை.  விஜயநகர  ராஜா  ராணி வசித்த  59000 சதுர மீட்டர் தடுப்பு  கொண்ட   தாமரை மஹால் அரண்மனை பெண்டிர் வசித்த பகுதி சிதிலமடைந்துள்ளது.  சரித்திர சிறப்பு மட்டுமல்ல  அருங்கலை நிறைந்த அற்புத  உல்லாச பயண ஸ்தலம்.

14ம் நூற்றாண்டில் விஜயநகர சாம்பிராஜ்யத்தின் தலைநகரம் ஹம்பி.  உலகத்தில்  சீனாவின்  பீகிங் நகரத்திற்கு அடுத்து விஸ்தாரமான, விசாலமான நகரம் ஹம்பி.  ராம லக்ஷ்மணர்கள் அடிக்கடி விஜயம் செய்த ஸ்தலம்.  கம்பியின் மலைக்குகைகளில்  சுக்ரீவன் வாழ்ந்ததாக  சொல்வார்கள்.  இங்கே உள்ள  ஹேமகூட சிகரத்தில் தான்  சிவன் தவமிருந்த போது  அவர் கவனத்தைக்கலைத்த  மன்மதனை  நெற்றிக்கண்ணால் எரித்த இடம்.  ஹனுமானின் ஜென்ம ஸ்தலம் அஞ்சனாத்ரி  மலை ஹம்பியில் தான் உள்ளது.1060 படிகள் கொண்ட  ஆஞ்சநேயர் ஆலயம்.   அங்கேயே  அவர் தாய்  அஞ்சனாவிற்கும் கோவில்.

இங்குள்ள 7ம்  நூற்றாண்டு கட்டப்பட்ட 160 அடி  உயர  கோபுரம் கொண்ட  விருபாக்ஷ ஆலயத்தின் எதிரே ஒன்று கி.மீ தூர, நீளம் கொண்ட,   ஹம்பி கடைத்தெரு.  நடப்பதற்கு சுகமான தெரு.   தெருவின் கிழக்கு மூலையில்  பெரிய  நந்தி சிலை. ஐநூறுக்கும் மேற்பட்ட  சரித்திர சான்றான  ஓலைச்சுவடுகள் நிறைய  ஹம்பியைப் பற்றி சொல்கிறது.

கிருஷ்ண தேவராயர் காலத்தில் 15ம் நூற்றாண்டில்   தான் அநேக  ஹிந்து கோவில்கள் கட்டப்பட்டன. புனரமைக்கப் பட்டன. அவற்றில் ஒன்று  ஹஸாரா ராமா கோவில்.  

பரமேஸ்வரன்,  கிருஷ்ணன் ஆலயங்கள்  இன்னும்  சிவன் மற்றும் கிருஷ்ணர் கோயில் இப்போதும் உயிர்ப்புடன் வழிபாட்டில் தொடர்ந்து வருகிறது.   உலகெங்கிலிருந்தும்  ஹிந்துக்கள் வழிபாட்டுக்கும்  சுற்றுலா  உல்லாசப்பயணத்திற்கும் கலையை ரசிக்கவும்  விடாமல்  எறும்பு போல்  சாரி சாரியாக  வருகிறார்கள்.

ஹம்பி மலையில்  ஒரு  அழகான  ஆலயத்தில் இருப்பவர்  மால்யவந்த ரகுநாதர். அங்கிருந்து பார்த்தால், ஹம்பி பள்ளத்தாக்கின் ஒட்டுமொத்தக் காட்சியும் காணக்கிடைக்கும். பாறைக்குன்றுக் கூட்டங்களும், தென்னையும், வாழையும், வயல்களும் துங்கபத்திரையின் வளைந்த ஓட்டமுமாய்க் கண்ணுக்கினிய  குளு  குளு  காட்சிகள்.

கிருஷ்ண தேவராயருக்கு அப்புறம் வந்த ராஜா அச்சுத ராயர். அவர் கட்டியது அச்சுதராயர் ஆலயம்   போடி நடையாக அங்கிருந்து நடந்தால் விட்டலன் ஆலயம் தரிசனம் தரும்.சிறந்த கலைச்சிற்ப  வேலைப்பாடு கள்   நுணுக்கங்கள் நிறைந்தது.

ஹம்பியில் எல்லாமே இருக்கிறது.  யானை கொட்டடி, படைகள் தங்குமிடம், காசு பட்டறை, மசூதி, நவராத்ரி விழா மேடை,  படிகள் நிறைந்த குளம்,  சிவாலயம்,  ஒரே கல்லில் நரசிம்மர், ஒரே கல் விநாயகர்,  மண்டபங்கள்,  இன்னும் என்னென்னவோ.  ஜம்மென்று  இங்கே  துங்கபத்ரா  ஸ்னானம் பண்ணலாம்.   புரந்தரதாசர்   ராம கீர்த்தனைகள் இயற்றியது இங்கே தான். பட்டாபிராமன் கோவில்.   இன்னும் என்னென்னவோ ஸ்வாரஸ்யமான  விஷயங்கள் கொண்டது.  .   ஹம்பியில் முழுதும் சுற்றி பார்க்க குறைந்தது நாலு நாள்  தங்குவது  சமயோசிதம். அபூர்வங்கள் நிறைய  இருக்கிறது.

விஜயநகர சாம்ராஜ்ய காலத்தில்  தலைநகரான ஹம்பியை சுற்றி    ஏழு வரிசை கொண்ட கோட்டைகள்  இருந்தது.  ஹம்பியை பற்றி  ஆயிரம் பக்கங்களுக்கு குறையாமல் எழுத  நிறைய  சமாச்சாரம் இருக்கிறது.  யார் படிப்பார்கள்?

இனி   ஹம்பிக்குள்  நுழைந்து  சுற்றி பார்ப்போம்  https://youtu.be/ChchmDc_OhI


sivan jaykay

unread,
Apr 26, 2021, 10:09:43 PM4/26/21
to amrith...@googlegroups.com


சாஸ்திரிகளின் முப்பது நாள் ராமாயணம்- 9

நங்கநல்லூர் J K SIVAN


இந்த  ரெண்டு பேரை பாருங்கள்.  சுக்ரீவன்,  விபீஷணன்..  ரெண்டு பேருமே  ராம   லக்ஷ்மணர்களால்  பட்டாபிஷேகம் செய்யப்பட்டவர்கள்.  சுக்ரீவன்  பட்டாபிஷேகம்  ஆன  பின்  ராமனுக்கு உதவியவன்.  விபீஷணன்.  பட்டாபிஷேகம் ஆகும் முன்பே  சரணடைந்தவன்.  இருவரில்  சுக்ரீவன்  நண்பனா  கூட்டா  என்று பார்த்தால்  ராம லக்ஷ்மணர்களைப் போலவே  அவனும் அவர்களில் ஒருவனாக  உழைத்து  நன்  மதிப்பை பெற்றவன்.  விபீஷணன்   ராம லக்ஷ்மணர்களின் அன்பையும்  நம்பிக்கையையும்   பெற்று  சிரஞ்சீவியானவன். 

விபீஷணன் சரணடைய  வந்த போது  அவனைப்  பற்றிய  எந்த விஷயமும் ராமலக்ஷ்மணர்கள் அறிய வாய்ப்பு இல்லை.   சூர்ப்பனகை ஒரு முறை   விபீஷணனைப்   பற்றி சொல்லும்போது  அவன்  அசுரர் குலத்தில்  பிறந்தாலும்  தர்மாத்மா என்கிறாள். 

ஹனுமான் கூட  சொல்லி இருக்கலாம்.   அசோக  வனத்தில்  சீதையிடம்  நட்போடு  பழகியவள்  விபீஷணன் வீட்டுப்  பெண் தான்.   ஹனுமானின் உயிரையே  காப்பாற்றியவன்  விபீஷணன்.  தூதனாக வந்த ஒரு  விலங்கைக்  கொல்லக்கூடாது  என்று ராவணனிடம் வாதாடியவன்  விபீஷணன்.   ஹனுமான்  ஏனோ இதெல்லாம்  ராமனிடம் சொல்ல மறந்து போயிருக்கிறான். ஆகவே தான் போர்வீரர்கள்   ஒன்று கூடி  ராமலக்ஷ்மணர்களோடு  விபீஷணனை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா  என்று ஆலோசிக்கும்போது   ஹனுமான் இதைச் சொல்லவில்லை.  

ராவணனின் சபையில் இந்திரஜித்  வீரம், அவனது சாகசம் பேசப்படுகிறது. அவன்  விபீஷணனை இகழ்ந்து பேசுகிறான். அவனை தர்மஹத்தை ஏளனம் செயகிறான். எவரும் தடுக்கவில்லை.

இந்திரஜித்தின்  மாயாஜாலங்களை, நாகபாச பந்த  எதிர்ப்பைப் பற்றி  அறிந்தவன் விபீஷணன். அவன்  சுக்ரீவனுக்கு  அதை விளக்குகிறான்.   லக்ஷ்மணனுக்காக  ராமன்   வருந்தும்போது,  விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்யாததற்கு  மனம் வாடுகிறான்.  

கும்பகர்ணனும் ராவணனின்  சகோதரன் என்றாலும்  அவன் எத்தனையோ முறை ராவணனுக்கு  அறிவுரை  சொல்லி அதை ராவணன் ஏற்காதபோதும் அவனுக்காக தனது உயிரையும் தியாகம் செய்ய தயாரானவன்.  அவ்வளவு சகோதர பாசம். மஹாபாரதத்தில் பீஷ்மர் எவ்வாறு   துரியோதனனிடம் நடந்து கொண்டாரோ அப்படி  ராவணனிடம் நடந்துகொண்டவன் கும்பகர்ணன்.

விபீஷணனின் முக்கிய உதவி  இந்திரஜித்  நிகும்பலை யாகம் நியக்ரோதா  மரத்தடியில் எவரும் அறியாமல் செய்வதை தக்க சமயத்தில்  ராமலக்ஷ்மணர்களுக்கு   உணர்த்தியது. அந்த யாகத்தை  இந்திரஜித் நிறைவேற்றியிருந்தால்  அவனை 
 வெல்வதோ கொல்வதோ  இயலாத காரியம்.  லக்ஷ்மணன்  உடனே சென்று  அவனோடு போர் தொடுத்து அவனைக்  கொல்கிறான் .

போரில்  விபீஷணனும்  இந்திரஜித்தும் ஒருவர் மேல் ஒருவர்  குறை சொல்லி விவாதிக்கிறார்கள்.  இந்திரஜித்  விபீஷணன் செய்தது  தேசத்துரோகம் என்கிறான். பலமாக  எதிர்க்கிறான்.  விபீஷணன் அவனுக்கு தனது நிலையை  உண்மையை  விளக்குவது அவ்வளவாக  எடுபடவில்லை.  இது  வாலிவதத்தில்  வாலி  ராமனை எதிர்த்து பேசுவதும்  ராமன் சமாதானம் கூறுவதும் போலதான் இருக்கிறது என்கிறார்  சாஸ்திரிகள் தன்னுடைய ஆங்கில பிரசங்கத்தில்.

விபீஷணன்   தன்னுடைய  வில்லையும் அம்பையும் எடுத்து இந்திரஜித் மேல் தாக்கும்போது அவன் கண்கள் கண்ணீரால் நிரம்பி, தனது மகன் போன்ற அவன் மேல் இருந்த பாசத்தை நினைவூட்டுகிறது.  அவன் கரங்கள் செயலிழக்கிறது. தர்ம சங்கடமான நிலை அவனுக்கு.  ஒருபுறம்  இந்திரஜித்தின் பயங்கர சக்திகள்,  மாயாஜாலங்களை ராமலக்ஷ்மணர் களுக்கு எடுத்து சொல்லியவன்  மறுபக்கம் அவன் மேல் பாசத்தையும் பொழிகிறான். 

விபீஷணனுக்கும் அதே  மாயாஜாலங்கள் தெரிந்திருந்ததால்  தான் இந்திரஜித்  மாயஸீதையை   ராம லக்ஷ்மணர்கள் முன் கொல்லும்  காட்சியில்  அதை மறுத்து,   உண்மை சீதை அது அல்ல  என்று நிரூபிக்க முடிகிறது.  அவள் ஜாக்கிரதையாக இருப்பதை அறிவிக்க முடிகிறது.

விபீஷணன்  ராவணனின் தேரை நொறுக்கி  குதிரைகளை விடுவிக்கிறான்.  ராவணனின் மறைவுக்கு  வருந்துகிறான்.  அண்ணனுக்கு  ஈமக்ரியைகள் செயகிறான்.  விபீஷணன்   துரோகி அல்ல.  அப்படி இருந்தால்  சிரஞ்சீவியாக அவன்  ஆகியிருக்க முடியாது.    அவனது பலம் அவனுக்குத் தேவையான  நேரத்தில்  நினைவுக்கு வந்தது.  

இதே போல் தான் ஹநுமானுக்கும்  தனது சக்தி தெரியாமல் இருந்தது. தக்க நேரத்தில் அவனது வலிமை அவனுக்கு நினைவூட்டப்பட்டதும்  ஹனுமான்  சக்தி மிக்கவனாக எ சாகசங்கள் புரிகிறான்.  இதை  சாபம் என்றும்   எடுத்துக் கொள்ளலாம். மதங்க ரிஷி  ஆஸ்ரமம் ஒரு அடைக்கல  ஸ்தலம்  என்பது  ஹநுமானுக்கு  மறந்து போயிற்று.  சுக்ரீவன் தனது கடமையைச் செய்தவன்  என்று சொல்ல மறந்து போயிற்று. அது தன்னுடைய தவறு என்பதும் அவன் மறந்து போனான்.

ராமன் சுக்ரீவனை  கிஷ்கிந்தா ராஜ்யத்துக்கு  அரசனாக்குவது பற்றி சொன்னது மறந்ததால் தான் வாலிமனைவி தாரையிடம்  அடுத்த  அரசன்  அங்கதன் என்று ஹனுமான்  சொல்கிறான்.  இதைத்தவிர  இன்னொரு  மறதி,    லக்ஷ்மணன் மூர்ச்சை விலக, அவன் உயிர்பெற  எந்த  மூலிகையை  ஜாம்பவான், மற்றும்  ,  வானர மருத்துவன் கொண்டுவரச்சொன்னான் என்று மறந்து போய்  அந்த  சஞ்சீவி மலையையே  தூக்கிக் கொண்டு வந்தது.

ஹனுமான்  பரதனை  நந்திக்ராமத்தில் சந்தித்தபின்  உடனே  ராமனிடம் வந்து பரதனின் மனநிலையை ஏன் சொல்ல வில்லை?  பரதனிடம்  சீதை பட்ட    கஷ்டங்களை சொல்லவில்லையே  ஏன்?   

அங்கதனின் முடி சூட்டலை  தாரை பார்க்கவில்லை.    கிஷ்கிந்தை திரும்பியபின்  ஸ்வயம்பிரபை  குகையின் பின்  ஹனுமான் அமர்ந்து விடுகிறான்.

'' என் மேல் அமர்ந்து  கொள்ளுங்கள் ராமனிடம்கொண்டு  சேர்க்கிறேன்''   என்று  சீதையிடம் சொல்லியபோது  சீதை  ஹனுமான் யோசனையை  ஏற்கவில்லை.   ''எனக்கு உத்தரவிடுங்கள், இந்த  ராக்ஷச பெண்களுக்கு ஒரு பாடம்  கற்பிக்கிறேன்'' என்று  ஹனுமான் சொல்லிய போதும்  சீதை அதை  லக்ஷியம் செய்யவில்லை.  ஆனால் இதெல்லாம்  ஹனுமானின்  பெருமை
யை மஹிமையை ஒரு போதும்  பாதிக்காது.

சாஸ்திரிகள்  பிரசங்கத்தை தொடர்வோம். சாஸ்திரிகள்  வால்மீகி ராமாயண  ஸ்லோகங்களை மேற்கோள் காட்டியே  தனது பிரசங்கத்தை  நிகழ்த்தியவர்.  ஆங்கிலம் தமிழ்  சமஸ்க்ரிதம் மூன்று மொழிகளிலும்  ஞானஸ்தர். 

sivan jaykay

unread,
Apr 26, 2021, 10:09:54 PM4/26/21
to amrith...@googlegroups.com
பத்திரகிரியார்  புலம்பல்   -   நங்கநல்லூர்  J K  SIVAN   --


 ஒரு ராஜாவின் புலம்பல்

ஏக்கம் என்பது மனதின் அடியே தேங்கி நிற்கும் வண்டல் எனலாம்.  அது வெளியே அடிக்கடி வருவதில்லை. அது வந்தால் அதன் வெளிப்பாடு எப்படியெல்லாமோ இருக்கும். சிலர் அழுவார், சிலர் வெறுப்பில் சிரிப்பார், சிலர் கோபிப்பார், சிலர் பொறாமைப் படுவார், வாடி தனிமையில் வதங்குவார். ஏக்கம் எதனால் வருகிறது?    நினைத்தது நடக்காமல் போனால் மட்டும் அல்ல. முயன்றும் கிடைக்காதபோது. சோதனைகள் பல மேலும் மேலும் தலை நீட்டி உற்சாகத்தை கொல்லும்  போது .கொரோனா எதிர்பாராத  அதிர்ச்சிகளை தந்து  தெரிந்தவர்கள், வேண்டியவர்களை,  அகாலத்தில் கொண்டு செல்லும்போது,    அந்த நேரத்தில் மனம் தேடுவது ஆறுதல். இறைவனை நாடுதல். நண்பர்களின், உறவினர்களின் ஆதரவும் ஆதங்கமும்.வேதாந்தம் மனதுக்கு இனிக்கும் நேரம் அது. தத்துவங்கள் வாயிலும் வரும். செவியிலும் நுழையும்.

ரெண்டே அடியில் மிக உயர்ந்த தத்துவங்களைச் சொல்ல சிலரால் தான் முடியும்.  தத்துவங்கள் என்றாலே புரியாத விஷயம் என்று நாம் நினைக்கும் தருணத்தில், கால கட்டத்தில், அவற்றைப் படிக்க விருப்ப மூட்டும் வகையில் அமைந்திருப்பது பத்ரகிரி எனும் பழைய கால ராஜாவின் நீதி வாக்யங்கள். அந்த ராஜா பர்த்ருஹரி, பத்திரகிரியார்,  பட்டினத்தாரின்  சீடராக  திருவிடை மருதூரில் கோவில் வாசலில் அமர்ந்திருந்தார் என்றும் அறிகிறோம். 

நான் வடக்கே வாழ்ந்த ராஜா பர்த்ருஹரீ என்ற வேதாந்தி ராஜாவின் சமஸ்க்ரித ஸ்லோகங்களான நீதி சதகம், (சுபாஷிதம்) என்பனவற்றை தமிழில் அவ்வப்போது உங்களுக்கு அளித்து வருகிறேன். அந்த ராஜா தெற்கே வந்து திருவிடை மருதூரில் வந்து பட்டினத்தாரின் சிஷ்யராகி பத்திரகிரியார் என்ற பெயரில் தமிழிலும் வேதாந்த பாடல்கள் பாடினார் என்று சொல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஒருவேளை எனக்கு தெரியாத எவ்வளவோ விஷயங்களில் இதுவும் ஒன்று என நான் புரிந்துகொள்ளாமலும் இருக்கலாம். இந்த நீதி வாக்யங்கள் தமிழில் பத்திரகிரியார் புலம்பல் என்று சிறப்பான கவிதைத் தொகுப்பாக உள்ளது.

திருக்குறளில் இதே போன்று அருமையான விஷயங்கள் உள்ளது. எனினும் சில குறள்களை மற்றொருவர் விளக்கிச் சொன்னால் மட்டுமே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சில நேரடியாகவே புரிகிறது. ராஜா அப்படியல்ல. எளிய தமிழில் சிறப்பாக சொல்கிறான். ஒரு சமாசாரம் என்னவென்றால் அவன் சொல்லும் விஷயத்தின் தன்மை. மும்மலம், சுழுமுனை, இட பிங்கல விவகாரங்களை ஏற்கனவே கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தால் இந்த வாக்யங்கள் பூரணமாக தெட்டத் தெளிவாக மண்டையில் ஏறும்.

மிகவும் சக்தி வாய்ந்த மருந்துகளை நிறைய சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றில் அம்மாதிரியான மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. அதுபோலவே இந்த நீதி வாக்யங்களை ஒவ்வொன்றாகத்தான் அனுபவித்து படிக்கவேண்டும். அது பற்றி சிந்திக்க வேண்டும். அப்போது தான் அவற்றின் உள்ளே புதைந்து கிடக்கும் உயர்ந்த கருத்து புலப்படும். எனவே கொஞ்சூண்டு மட்டும் அவ்வப்போது நேரம் கிடைத்தால் சொல்கிறேன்.

எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே
அழுத்தமாய்ச் சிந்தையை வைத்தன்பு கொள்வது எக்காலம்?

எழுத்து என்றால்  என்ன, நான் இதுவரை படித்தவை, எழுதியவை, கேட்டவை, திருப்பி திருப்பி  அவற்றால் எனக்கு என்ன பயன். நேரம் தான் வீணாகியது.உள்ளே ஒன்றும் ஏறவில்லை.  என் சிந்தையிலே  குடிகொள்ள வேண்டிய  ஒரே எழுதது ஐந்தெழுதது ஓம் நமசிவாய  என்ற உன் பஞ்சாக்ஷரம். அதை திருப்பி திருப்பிச்சொல்ல முடியவில்லை என்றாலும் ரெண்டே எழுத்து போதும்.   சிவ சிவா.  மஹா பெரியவா இதைத்தான் விடாமல் சொல்லிக்கொண்டே இருங்கள் என்றார்.  ராம ராம  என்றும் சொல்லலாம். இதையும் சுருக்கி  ஒரே  எழுதாக   ஓம்  என்று சொல்லலாம்.  சொல்ல சொல்ல அதுவே  மனதில் எப்போதும் தங்கிவிடும். இதை நான் அனுஷ்டிப்பது எக்காலம் என்று அழுத்தமாக கேட்கிறார்  பத்ரகிரியார்.

''அருளாய் உருவாகி ஆதி அந்தம் ஆகின்ற
குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம்?''

ஆண்டவன், பகவான்  என்று எந்த பேரில் அவனை அழைத்தாலும்  அவன் அருள்மயமான ஒருவன் தான்.  ஆதி அந்தம் இல்லாத  எல்லாம் அன்பே யானவன்.  அவன்  என் குருவாக வந்து என்னை நல்வழிப்படுத்தி நான்  உயர்வது எப்போது?

''நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம் 
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம்?''

நீ யார்  என்று எவரேனும் என்னை கேட்டால்  நான்  இன்னார் மகன்  இது தான் என் பெயர்  என்று தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் அது இல்லை. நான் என்பது நீயே என்று என்றாவது ஒருநாள் நானும் உணரவேண்டும். பத்திரகிரியார் இதை ஒருநாள் உணர விரும்பி  நான் என்பது நீ தான் என்று என்றைக்கு நான்  புரிந்துகொண்டு  உய்வது  என்று கேட்கிறார் பத்ரகிரியார்.

''என் மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்த பின்பு
தன் மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம்?''

இது என் பெரிய  மாளிகை, இது என் கார்,  இது என் மனைவி குழந்தைகள் உறவினர் என்று எதைப்பார்த்தாலும் எனதாகவே, நானாகவே  இதுவரை வாழ்ந்த வாழ் நாளை வீணாக்கிவிட்டேனே ப்ரபோ,  இதெல்லாம் எண்ணும்போது  இனியாவது  எல்லாமே  நீ தான் உன் உருவம் தான், நான் உன் அடிமை, உன் உடைமையே,  இனி நான் நீயே  என்று எப்போது  அறிவேன்?

''ஒளியில் ஒளியாம் உருப்பிறந்த வாறதுபோல்
வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம்?''

ப்ரம்மம் ஒக்கட்டே  என்ற   சதாசிவ ப்ரம்மேந்திராள் பாட்டை   நூறு தடவைக்கு மேலே  கேட்டாலும் அதன் அர்த்தம் என் நெஞ்சில் பதியவில்லையே.  பாட்டின் ராகம் தானே மனதை கவர்ந்தது?  . அதற்காகவா அவர் பாடினார்?  சர்வம் ப்ரம்மமயம் என்று சொன்னால் போதாது அப்பனே,   அதை  யோசித்து  சிந்தித்து  அர்த்தம்  உணரவேண்டும், எல்லாம் ஒளிமயமாக தோன்றுவது அவனே, ஒளியில் ஒளி அவனே, பரவெளியில் எங்கும் நிறைந்திருப்பது அவனே  என்று எப்போது நான் அறிந்து நற்கதி அடைவேன்?  என்கிறார் பத்ரகிரியார் .

மேற்கொண்டு  பார்ப்போம் 

sivan jaykay

unread,
Apr 26, 2021, 10:10:06 PM4/26/21
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி  --    நங்கநல்லூர்  J K  SIVAN ---
தாகூர்  


 48.  கிருஷ்ணா,  என்னில்  நீ  எப்போதும் !  

 
இது கொஞ்சம் பெரிய  கீதாஞ்சலி பாடலாக இருக்கிறது. 

48.   The morning sea of silence broke into ripples of bird songs; and
the flowers were all merry by the roadside; and the wealth of gold was scattered through the rift of the clouds
while we busily went on our way and paid no heed.
We sang no glad songs nor played; we went not to the village for barter;
we spoke not a word nor smiled; we lingered not on the way. We quickened our pace more and more as the time sped by.
The sun rose to the mid sky and doves cooed in the shade. 
Withered leaves danced and whirled in the hot air of noon.
The shepherd boy drowsed and dreamed in the shadow of the banyan tree, and
I laid myself down by the water and stretched my tired limbs on the grass.
My companions laughed at me in scorn; they held their heads high and hurried on;
they never looked back nor rested; they vanished in the distant blue haze.
They crossed many meadows and hills, and passed through strange, far-away countries.
All honour to you, heroic host of the interminable path! Mockery and reproach pricked me to rise,
but found no response in me. I gave myself up for lost in the depth of a glad humiliation---in the shadow of a dim delight.
The repose of the sun-embroidered green gloom slowly spread over my heart.
I forgot for what I had travelled, and I surrendered my mind without struggle to the maze of shadows and songs.
At last, when I woke from my slumber and opened my eyes,
I saw thee standing by me, flooding my sleep with thy smile.
How I had feared that the path was long and wearisome, and the struggle to reach thee was hard!

 
இன்னும் சூரியன் வெளியே  வரவோ, விடியவோ யில்லை. காலையின்  மௌனக்கடல் உலகை  வியாபித்திருக்கிறது.  எங்கும் கொப்புளிக்கும்  பறவைகளின் சப்தஜாலம் அலை அலையாக  ஒலிக்கிறது. தெருவோரங்களில் புதிதாக  மலர்ந்த  குட்டி குட்டி புஷ்பங்கள் சிரிக்கிறது.  தங்கக் கம்பிகளாக  சூரியன்  சிதறி மேகங்களின் ஊடே இருந்து பூமிக்கு பாய்கிறது.  

நாங்கள் ஏதோ நினைவாக இதை யெல்லாம் லக்ஷியம் பண்ணாமல் நம் வழியே  மெஷின் மாதிரி நடக்கிறோம். பாடவில்லை, ஆடவில்லை, விளையாடவில்லை,  பஜாரில் சென்று பேரம் பேசவில்லை.  ஒரு அக்ஷரம் பேசவுமில்லை, சிரிக்கவுமில்லை. எங்கள்  பாதையில் நடக்கிறோம், கொஞ்சமும் களைப்புற்று துவளவில்லை,  நேரமாக ஆக  ஆக  வெயிலின் உஷ்ணம்  எகிறுகிறது.  எங்கள்  நடையில் ஒரு புது வேகம்.  பயணம் தொடர்கிறது. சூரியன் உச்சிக்கு தலைமேல் வந்து கோபச்சூடாக பார்க்கிறான். புறாக்கள் மரக்கிளை நிழலிலிருந்து  கூவுகின்றதே  கேட்கிறதா?.   உச்சி வெயிலின் அனல் காற்றில் மரக் கிளைகளில் மடிந்து போன  மஞ்சள் நிற காய்ந்த இலைகள் உதிரும்  கடைசிப் பயணத்தை துவங்கிவிட்டன.  காற்றில் அடித்து செல்லப்பட்டு சுருண்டு காலடியில் கிடக்கிறது.

ஹுஹும்.. முடியவில்லை,  இனி கொஞ்சம் களைப்பாறினால் தான் பயணம்.  அங்கே பாருங்கள் ஒரு மாட்டுக்கார பையன் ஆலமரத்தடியில் என்ன சுகமாக  தலை ஆட  தூங்கிக் கொண்டிருக்கிறான். எந்த ராஜகுமாரி அவன் கனவிலோ?  சிலு சிலு வென்று ஒரு சின்ன  ஆற்றின் கரையில் நிழலில் புல் படுக்கையில் மெத்து மெத்தென்று  காலை நீட்டி கட்டையைச்  சாய்த்தேன்.  எங்கும்  நிசப்தம். 

என்னோடு  கூட வந்தவர்கள்   என்னைப் பார்த்து ஏளன சிரிப்போடு  தலையாட்டி  விட்டு  மேலே தொடர்ந்து நடக்கிறார்கள். நடக்கட்டுமே , போகட்டுமே. ஒரு தடவையாவது கூட வந்த என்னை திரும்பிக்கூட பார்க்காமல் விடுவிடென்று நடை.  தலையை நிமிர்த்தி நடை.    பார்த்துக் கொண்டே இருந்த என் கண்ணில் அவர்கள்  தூரத்தில் புள்ளிகளாக மாறும் வரை தெரிந்தார் கள்.  அவர்களது வழியில் தான் எத்தனை வயல்கள், மேடும் பள்ளமும் ஆக  கிராமங்கள், சிற்றூர்கள். புதுப்புது பளிச்சென்ற கிராமங்கள், தேசங்கள், எல்லாம் கடந்து செல்கிறார்கள்.  போகட்டுமே.
 
கிருஷ்ணா, எனக்கு  நீ தான் ஹீரோ. என் முன்னே  நீண்டு முடிவில்லாமல் செல்லும்  அந்தப் பாதையின் நாயகன் நீயல்லவா?
படுத்துவிட்ட  என்மேல் எத்தனை கேலிகள், கிண்டல்கள்,   ஏச்சும் பேச்சும்!     என்னை  எழுப்ப முயன்றார்கள். நான் மசிவேனா?

யார் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகட்டுமே. சந்தோஷம் தான்.  எல்லாமே  நிறைய கேட்டாயிற்று . இனி உடலிலும் உள்ளத்திலும் அதெல்லாம் புகாது. கிருஷ்ணா, எனக்கு   நீ இருக்கிறாய்  என்ற  ஒரு சிறு நுண்ணிய  வெள்ளிக்கம்பி மாதிரி நம்பிக்கை ஒளி. காரிருளைக்  கிழித்துக்  கொண்டு பச்சை இலைக்கு தங்க ரேக்கு கரையிட்டமாதிரி வெளிவருகிறது. ஒரு நிம்மதி, அமைதி.  குட்டி ஆனந்தம்.

என்  வாழ்க்கைப்பாதையில் நான் நடந்து  கடந்து வந்த பாதை ரொம்ப நீளம். அந்த பயணமே  ஏன், எதற்காகா  என்பதே கூட  தெரியவில்லை,  தெரிந்தாலும்  மறந்து போய்விட்டது கிருஷ்ணா.  என்னைச் சுற்றிலும்  எங்கும்  உன் திருவடி ஒன்றே கதி, என்று உன்னை சரணடைந்து விட்டேனே.  

என் மனது தெளிவடைந்து விட்டது.  என்  நீண்ட  உறக்கத்திலிருந்து நான் விழித்துக் கொண்டு விட்டேன்.  என் கண்ணை  நீ திறந்து  விட்டாய்.   ''கண்ணா''  என்று எவ்வளவு பொருத்தமான பெயர் உனக்கு.    

என்  எதிரே நீ  புன்னகை பூத்தவனாக  நிற்கிறாய்  கிருஷ்ணா.  வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல்  உன்னைக் கண்டதும்   என்  உறக்கம்,  நீண்ட  அரை மயக்க  தூக்கம் எல்லாம்  பறந்தே போய்விட்டது. 
 
எனக்கு  அடக்க முடியாமல்  சிரிப்பு.  எவ்வளவு பெரிய  முட்டாள் நான். என் எதிரே காணும்  என் வாழ்க்கைப் பாதை முடிவில் லாதது, கரடு முரடான முள் நிறைந்த பாதை. அதை என்னால் கடக்க முடியுமா,  அதன் முடிவில் நிற்கும் கிருஷ்ணன்  அடைய முடியாதவன்  என்ற  பயத்தை  எல்லாம்  போக்கி,   என் முன்னே தோன்றி ஒரு புன்னகையால்  என் பயத்தை மட்டும் அல்ல, என்னையே  மாற்றியவன் நீ,  கிருஷ்ணா. என்னுள்ளே நான்  அறியாமலேயே என்னோடு  எப்போதுமே இருந்தவன் நீ என்பதை நான் ஏன் உணரவில்லை?

 

sivan jaykay

unread,
Apr 26, 2021, 10:10:06 PM4/26/21
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி   -   நங்கநல்லூர்  J K  SIVAN  ---
தாகூர்          


49   நான் பாடியது ஒரு பாட்டா ?

49.  You came down from your throne and stood at my cottage door.
I was singing all alone in a corner, and the melody caught your ear.
 You came down and stood at my cottage door.
Masters are many in your hall, and songs are sung there at all hours.
But the simple carol of this novice struck at your love.
One plaintive little strain mingled with the great music of the world,
and with a flower for a prize you came down and stopped at my cottage door

 
மஹா மேதாவி தாகூர். அவருடைய கீதாஞ்சலி   அழகிய வார்த்தை மாலைகளில் தொடுக்கப்பட்ட அற்புத பக்தி
மலர்க்  கொத்து.  கிருஷ்ணன் என்கிற வார்த்தையை மட்டும்  காணமுடியவில்லை.  ஆகவே  அவர் பாதங்களைத் தொட்டு வணங்கி  கிருஷ்ணனை கீதாஞ்சலியில்  சேர்த்துக்கொண்டு வருகிறேன்.  தாகூரின்  இனிமை இதனால்  இன்னும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை.

கிருஷ்ணா,   நீ,  எங்கோ தூரத்தில் இருக்கும் துவாரகை அரண்மனையில் சிம்ஹாஸசனத்தில் இருந்தபோதிலும்   உன் காதில் என்னுடைய  இந்த  பாட்டு  விழுந்து தானே  நீ என் குடிசையின் வாசல் கதவை திறந்து வந்திருக்கிறாய்.  நீ  கேட்காத  வித்துவான்கள்  சங்கீத  கானமா?   என் பாட்டு எந்த பெரிய சபையிலும் பக்க வாத்யத்தோடும்  நடக்கவில்லை. என் குடிசையில், ஓரு மூலையில் அமர்ந்து  எனக்கு நானே  கை தட்டி பாடினேன்.  நான் தான் பாடகன், நான் தான் ரசிகன்,  என் கைதட்டல்  தான் என்  வாத்யம்.  பாடும்போது என்னை மறந்துவிட்டேன்.  ஏனென்றால்  நான் பாடுவது எல்லாமே உன் மேல் தான். உன்னைப் பற்றி தான்.  ஓஹோ, என் பாட்டு பிடித்து  தான்   நீ இங்கே வந்தாயா.    சிரிக்கிறாயே! என் பாட்டின் இனிமையிலா? அல்லது அட இதுவும் ஒரு பாட்டு என்றா? இவன் பாடுகிறானா   இல்லை ஏதோ உடம்பு வலியில் கத்தினானா என்று பார்க்கவா?

எப்படி இருந்தால் என்ன கிருஷ்ணா, நான் பாடியதும் நீ வந்திருப்பதும் ஏதோ சந்தர்ப்பவசத்தால் என்றாலும் இருந்து விட்டுப் போகட்டும். உன் அரண்மனையில் நீ கேட்காத பாட்டா? சங்கீத ஜாம்பவான்கள், மஹா வித்துவான்கள், வைணீகர்கள் வாத்திய கோஷ்டிகள், சதா சர்வகாலமும் உன்னை புகழ்ந்து பாடுவார்களே அதெல்லாம் எனக்கு தெரியாதா?

''வா க்ரிஷ்ணய்யா வா'' என்று இந்த கத்துக்குட்டி ஆசையாக, பாசமாக, மனதில் உன் நினைவு பூரா நிரம்ப அழைத்தேன், கத்தினேன். நீ வந்துவிட்டாயே .

உன் கருணையை நான் எப்படி சொல்வேன்? . எப்படி நன்றியை உணர்த்துவேன்? என் மனத்துயர் நீங்க உருகி, உருகி, உன்னை நினைந்து நான் பாடியது ஒரு பாட்டா ?

என் கண்ணில்  ஒரு காட்டுப்பூ  பட்டது.  அதை எடுத்து உன் படத்தில் மேல் போட்டு உன்னை நினைத்து பாடினதற்கு இவ்வளவு பெரிய பரிசா.... நீயாகவே வந்தாயே. என் குடிசை வாசல் கதவு க்ரீச்ச் என்று சத்தமிட அதை திறந்து உள்ளே தலை இடி படாமல் குனிந்து வந்து என் எதிரே நிற்கிறாயே கண்ணா. உன் கையில் ஒரு புஷ்பம் எனக்கு பரிசாக கொண்டுவந்திருக்கிறாயே. என்ன சொல்வேன்?. வார்த்தையை  இன்னும்  தேடிக்கொண்டே இருக்கிறேன்.  




 

sivan jaykay

unread,
Apr 26, 2021, 10:10:33 PM4/26/21
to amrith...@googlegroups.com

பழைய  நினைவுகள்.     நங்கநல்லூர் J K  SIVAN 



''அப்போ  இப்படியெல்லாம்  நடந்தது..''..


ஐம்பது அறுபது வருஷங்கள் முன்பு கல்யாணங்கள் எப்படி நடந்தன?.  இப்படி த்தான்  என்று  ஒரு வரை முறை சொல்ல முடியாது. 

பெண் வீட்டில் ஒரு நல்ல நாளில் தை  பிறந்ததும்,  பெண்ணுக்கு குருபலன்  வந்துவிட்டது,  வரன் தேடவேண்டும் என்று  பெண் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு  ஜோசியர் வீட்டுக்கு போவார்கள். அப்போது பெண்ணுக்கு  18 வயது நெருங்கி கொண்டிருக்கும்.  கல்யாண ஏற்பாடுகள் முடிவதற்குள் பெண் மேஜர் ஆகிவிடுவாளே. எதற்கு டைம் வேஸ்ட் பண்ண வேண்டும்?

 சொந்தத்தில்,  கல்யாணங்களில்,  பண்டிகை  சந்திப்புகளில்  பெண்ண்ணுக்கு  வரன்   தேடும் விஷயம் பரவும்.  குடும்ப  ஜோசியர்கள்  ஒரு டாட்டா பேங்க்,   data bank .  நிறைய  பிள்ளைகள்   பெண்கள்  ஜாதகங்கள்  வைத்திருப்பார்கள் . . பொருத்தம் பார்த்து சொல்வார்.  பெண் பிள்ளை  ஜாதகம்  எட்டு பொருத்தம்  பார்த்துவிட்டு  மேலே  நடக்கட்டும் என்பார் ஜோசியர்.

அப்பறம்  பெண் வீட்டுக்காரர்கள்,  முக்கியமாக  அப்பா, அம்மா, மாமா  மாமி  பிள்ளை வீட்டுக்கு போவார்கள்.  ஜாதகம் பொருந்தியிருக்கு என்று சொல்வார்கள்.  பிள்ளை வீட்டுக்காரர்கள்  ஆஹா சந்தோஷம். எங்க ஜோஸ்யரையும்  ஒருவார்த்தை  கன்சல்ட் பண்ணிட்டு  சொல்றோம் என்பார்கள்.  மூணு நாலு  இடத்திலே  பெண்  பிள்ளை  தேர்ந்தெடுத்து வைத்திருப்பார்கள். ஏதாவது ஒன்றை  நிச்சயம் பண்ணவேண்டும்.  க்ராமங்களிலோ, பட்டணங்களிலோ,   பையன் உத்யோகம், குடும்ப சரித்திர விஷயங்களை  எல்லாம்  மெதுவாக சேகரித்து வைத்திருப்பார்கள். இதுவும்  முடிவில் நிச்சயம் பண்ண உதவும்.

அப்புறம் பெண் பார்க்கும் படலம்.  பிள்ளை வீட்டுக்காரர்கள் பையனோடு  ஒரு குறிப்பிட்ட  நாளில்  முன்பே அறிவித்தபடி  பெண்  வீட்டுக்கு செல்வார்கள்.  கூடவே  நிறைய  நெருங்கிய உறவுகள் ஜோடியாக செல்வார்கள்.  பெண் வீட்டில் தடபுடலாக ஏற்பாடுகள்.  வாசலிலேயே காத்திருந்து  வரவேற்பார்கள். பெரிய  மாக்கோலம், தோரணம் எல்லாம் கூட கட்டி இருக்கும். பெண் கண்ணில் படமாட்டாள். பிடில்,  ஹார்மோனியம்,  வீணை  ஏதோ ஒன்றுடன் தான் வருவாள். பாடவேண்டும்.  பட்டுப்பு டவை, ஏராளமாக நகைகளோடு, பட்டுப்பாயில் அழைத்து  உட்கார வைப்பார்கள்.  அதற்குள்  வீட்டு  ஹாலில்  கூட்டம்  நிறைந்து விடும். பாயில் உட்கார இடம்  இருக்காது.  ஒன்றிரண்டு  நாற்காலிகள்  வயதான  பிள்ளை வீட்டுக்காரர்கள்,  சில  சமயம் மாப்பிள்ளை கூட  ஒரு நாற்காலியில்   உட்கார்ந்திருப்பார்.  அவர்  அதிகம் பேசமாட்டார்.  கூட வந்த மாமா  மாமிகள்  கூடி ப்  பேசுவார்கள். கல்யாணம் எங்கே, எப்போ, என்னென்ன  சீர்  செய்வார்கள்,  மாப்பிள்ளைக்கு...........   எல்லாம்  பேசி முடிப்பார்கள். பெண் ஒரே பெண்ணா,  மூன்று நாலுக்குள் ஒன்றா, பெண்ணின் அப்பாவின்  உத்யோகம்,   பூஸ்திதி,  வசதிகள் எல்லாம் ஆராயப்படும்.   அதற்கேற்ப சீர்  செனத்திகள்  மாறுபடும்.  இப்போது  போல் கண்டிஷன்கள்  .போடாதவர்கள். 

பேச்சு  மட்டும்  ''எங்களுக்கு பெண் தான் முக்கியம், மற்றதெல்லாம்  ''அப்புறம்''.  பிள்ளைக்கு  பெண்ணைப் பிடிக்கணும் அது தான் முதல்லே'' என்று தான்   ஆரம்பிக்கும்.

அமெரிக்க  ரஷ்யா  சண்டை,  ஐநா சபை வரை  பற்றிய  பேச்சுக்கள்  பேசுவார்கள். நடுநடுவே  கல்யாண சமாச்சாரங்கள் எல்லாம்  கலந்திருக்கும்.  பிடி   கொடுக்காமல்  அமர்த்தலாக  பிள்ளை வீட்டார் பேசுவார்கள்.   ''பெண்ணைக் கூப்பிடுங்கோ''.    இது தான்  முக்ய காட்சி.   

பெண் உயரமா,  குள்ளமா குண்டா, ஒல்லியா, மாநிறமா சிகப்பா  என்றெல்லாம் கூறிய கண்கள் நோக்கும். பல் வரிசை, மெல்லிசாக பேசினால் காது கேட்கிறதா,  நடக்கும்போது கால் நொண்டுகிறதா, அடேயப்பா  கழுத்தில் கையில்  உள்ள நகைகள் கூட   பிள்ளை வீட்டு மாமிகளின்  எக்ஸ்ரே கண்களுக்கு தப்பாது.  அப்புறம்  தான்  பாட்டு.  குரல் எப்படி இருக்கிறது.  பெண்  பயந்து  கொண்டு  தயார்    செய்து வைத்திருக்கிற  பாட்டை பாடும்.  காப்பி டவராக்களை  ட்ரேயிலோ தாம்பாளத்தில்   வைத்தோ   எல்லோருக்கும்  நீட்டும்போது  கை நடுங்கும். மாப்பிள்ளைக்கு  தனியாக  ஒரு சில  நிமிஷங்கள்  டிலே பண்ணி கொடுக்கும்.   முகம் பார்க்க தயங்கும்.   மாப்பிள்ளை  பெண்ணின் முகத்தையே பார்த்துக்கொண்டு டவராவை தவறவிடுவது  சில சமயங்களில் நடக்கும்.   லவ்  பண்ணி கல்யாணம் பண்ணாத காலம்.

பெண்ணுக்கு சமைக்க தெரியுமா.   கூட்டுக்குடும்பம், பல  பெரிசுகள்  இருக்கும் வீடு . எல்லோரையும் கட்டி காக்க வேண்டும் என்று  எச்சரிக்கைகள்  ஒற்றுமையாக  பொறுமையாக வீட்டில் உள்ள  அரை டஜன் குழந்தைகளை  கவனிக்க வேண்டும்.   அக்காலத்திய பெண்கள்  உத்யோகக் செல்பவர்கள் இல்லை.  வீட்டு வேலைக்கு இன்னொரு ஆள்.  பூஜை எல்லாம் பண்ணுவாளா?  பண்டிகை பக்ஷணங்கள் பண்ணுவாளா? விடிகாலம்பற  குளிச்சுட்டு தான் எங்க கிரஹத்திலே அடுப்படி போவோம்.  மாடு கறப்பாளா ?  எங்க வீட்டுலே  ரெண்டு காராம்பசு கன்னுக்குட்டி இருக்கு''.

பெண்  தியாகராஜ ஸ்வாமிகள் பாட்டு  பாடியதை  எவரும்  கேட்டதாக  சரித்திரம் இல்லை.  சங்கீதம் ரசிக்கும் வேளை  அல்ல அது.  வெற்றிலை பாக்கு பழங்கள் தட்டுகள்  இருபக்கமும் வைக்கப்படும்.   பஜ்ஜி சொஜ்ஜி என்று காரம்  இனிப்பு  அயிட்டங்கள் வீட்டிலேயே செய்து வைத்திருப்பார்கள்.  கடலை எண்ணெய் , நெய் , தான் .   விறகு அடுப்பில்  கமகம என மணத்தோடு  செய்யப்பட்டு  தட்டுகளில் வரும் 
 
 ஊர்லே பாட்டி  அத்திம்பேர் ஒண்ணு விட்ட   மாமா கிட்டே   சொல்லிட்டு லெட்டர் போடறோம்......என்று  பிள்ளை வீட்டு கும்பல் வெளியேறும்.   பெண்  வீட்டில் தேர்தல் முடிவு  போல .ஆர்வமாக காத்திருப்பார்கள்.   பிள்ளை வீட்டிலிருந்து   ஒரு போஸ்ட் கார்டு வந்தால் முதலில்  நாலு முனைகளை பார்ப்பார்கள்  நிச்சயம் ஆய்விட்டது  என்றால்  கார்டு ஓரத்துல மஞ்சள்  குங்குமம்   தடவி இருக்கும்.  இரண்டு பக்கத்து சொந்தகாரர்கள்,  அண்டை அசல் எல்லா   குதூகல செய்தி  தந்தி போல் பறக்கும்.

இன்னும்  சொல்வேன்.


sivan jaykay

unread,
May 1, 2021, 8:09:30 AM5/1/21
to amrith...@googlegroups.com
பழைய  நினைவுகள்.     நங்கநல்லூர் J K  SIVAN 

ஊர்லே கல்யாணம்  மார்லே  சந்தனம்  என்று  வாழ்ந்த  கிராமங்கள்.  கல்யாணத்துக்கு  மண்டபங்கள் சத்திரங்கள்  கிடையாது. தேவைபடவில்லை.  அவரவர் வீட்டிலேயே  தெருவை அடைத்து பெரிய கொட்டகை  பந்தல் போடுவார்கள்.  எதிரும் புதிருமாக வீடுகள்  சம்பந்திகளுக்கு  உறவினர்களுக்கு   ஒதுக்கப்படும்.    யார் வீட்டில் யார் வேண்டுமானாலும் தங்குவார்கள்.
மூன்று நாளைக்கு மேல்  கல்யாணங்கள்  ஆறு நாள் வரை கூட  நடக்கும்.

 வாசலில்   ஜலத்தை தெளித்து  எல்லா வீட்டு வாசலிலும்  பெரிய  மாக்கோலம்போட்டு,  காவி பார்ட ரோடு BORDER  கண்ணைப் பறிக்கும்.    ஊர்  உறவு எல்லாம் ஒன்று கூடி  மூன்று வேளையும் சாப்பாடு. 

ஒரு மாதம் முன்பே  அப்பளம்  வடாம், ஊறுகாய்கள்  பக்ஷணங்கள்  பண்ண  மாமிகள்  தயாராகிவிடுவார்கள்.  மூட்டை மூட்டையாக அரிசி பருப்பு,  செக்கிலிருந்து நல்லெண்ணெய், கடலெண்ணெய் தேங்காயெண்ணை எல்லாம் வந்து விடும்.  கல்லுரல்கள்  அம்மிக்கல், கல் இயந்திரம்  விடாமல் எதையாவது அரைத்துக் கொண்டே இருக்கும்.  ஊர் சமையல்கார கோஷ்டி கீத்து தட்டி கட்டி  ஒரு பக்கமாக  கோட்டையடுப்பு மூட்டிவிடும்.   மரங்கள் வெட்டி காய்ந்த விறகுகள் அம்பாரமாக அடுக்கி வைத்திருக்கும்.    மாடுகள் அநேகம் என்பதால் பாலுக்கு தயிருக்கு, வெண்ணைக்கு  நெய்க்கு பஞ்சமே இல்லை.  பட்டணத்திலிருந்து  பத்து ஆறு  வேஷ்டிகள், சேலம் குண்டஞ்சி,  உத்தரீயங்கள் , நிறைய  சேர்ந்துவிடும்.  பதினெட்டு முழ புடவைகள் வாங்கி வைத்திருப்பார்கள்.  ஆறு  முழம் கட்டுபவர்களுக்கு  ஒரு சில கட்டுகள்  ரெடியாக இருக்கும்.

பிள்ளை வீட்டு  அத்தைகள், சித்திகள், மாமிகள்  மாப்பிள்ளைகள்,  எல்லாரும்  VIP க்கள்.  அதிகாரம் தூள் பறக்கும். பளபளவென்று தேய்த்த  பித்தளை டவராக்களில்  வீட்டிலேயே  காப்பிக்கொட்டை வறுத்து அரைத்த  பில்டர் காப்பி  கூஜாக்கள் நிறைய  ஜமக்காளங்களில்  மும்முரமாக சீட்டாடும் கோஷ்டிகளுக்கு  அனுப்பப்படும்.   தட்டு தட்டாக கொழுந்து வெற்றிலைகள்  கொட்டைப்பாக்குகள், பாக்குவெட்டிகள், சுண்ணாம்பு  டப்பிகள்  கண்ணில் எங்கும் படும்.  பன்னீர்  புகையிலை  சந்தன  நறுமணம் மூக்கைத்  துளைக்கும்.

வில் வண்டி,  ரெட்டை மாட்டுவண்டி, குதிரை வண்டிகள்  ரயிலடி சென்று திரும்பும்   வேலையில்  பிசியாக இருக்கும். 
யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதே கணக்கு கிடையாது.  இப்போது மாதிரி வருபவர்கள் கணக்கு போடுவதில்லை . எல்லோர் கையிலும்  பனை ஓலை விசிறி இருக்கும். பன்னீர் சொம்புகள்  எல்லோர் மீதும்  பன்னீர்  தெளிக்கும்.   இது  வாண்டுகளின்  வேலை.  அண்டை அசல் வீட்டுக்கார்களின் உழைப்பு  அதிகமாக இருக்கும்.  அவரவர் வீட்டு கல்யாணம் போல்  எடுத்து  நடத்துவார்கள். அவ்வளவு ஒற்றுமை. இப்போது அடுத்த சுவருக்கு பின்னால்  இருப்பவர்களை  நமக்கு  தெரிவதில்லையே.

அப்போது  சினிமா சங்கீதம் முதற்கொண்டு எல்லாமே   கர்நாடக   சங்கீதம் தான்.  நாயனக்காரர் கோஷ்டி எந்த ஊரிலிருந்து வரவேண்டும் என்று முன்னேற்பாடு செய்து  அபூர்வ ராகங்கள்  ஆலாபனைகள்   இரவு பகலாக  காற்றில் மிதக்கும்.   விடியற்காலையில்  இரவில்  எல்லாம் தாளம் தப்பாத   தவில் ஓசை கேட்கவே ஆனந்தமாக இருக்கும்.

கல்யாணத்துக்கு முதல் நாள்  பிள்ளை வீட்டார்  யாத்ரா தானம் பண்ணி முடிக்க  குடும்ப வாத்தியார்கள் கோஷ்டி  உத்தரவுகள் பிறப்பிக்கும்.  அவர்கள் அவ்வப்போது கேட்கும் சாமான்களை எடுத்துத் தர ஒரு  குழு தயாராக இருக்கும்.

பிள்ளைவீட்டுக் காரர்கள் வந்து இறங்கியாசச்சு  என்ற வுடன் வாத்ய கோஷ்டியுடன் வரவேற்று  மாலை போட்டு
மாப்பிள்ளைக்கு ஆரத்தி சுத்தி விரதம்  ஆரம்பிக்கும்.   காலையில் பிள்ளை வீட்டு  விரதம்,  அப்புறம்  பெண் வீட்டில் விரதம்  நடக்கும்.   

சாயந்திரம்  நிச்சயதார்த்தத்திற்கு நல்ல கூட்டம்.    அக்ராஹாரத்தில்  ஒரு கோடியில் பெருமாள், இன்னொரு கோடியில் பிள்ளையார், சிவன்  கோவில், அம்மன்  உண்டு.    கோவில் பிரசாதங்கள் அர்ச்சகர்கள் , தர்மகர்த்தாக்கள்   கொண்டு வந்து கொடுப்பார்கள் . இன்னார் புத்ரன் பௌத்ரன்,   தெளஹித்ரன்  என்றெல்லாம்  பிள்ளை, பெண்கள்  ப்ரவரம் வாசித்து  கல்யாண பத்திரிகை உரக்க வாசிப்பார்கள். மேள தாளங்கள் முழங்கும்.  மைக், ஒலிபெருக்கி  கிடையாது. கோவிலிலிருந்து  சாரட் வண்டியில், அல்லது காஸ் லைட்  நடுவில்  திறந்த     மோட்டார்காரில்  புஷ்பங்கள்  அலங்காரத்தோடு , அல்லது    நடந்தோ  மாப்பிளை  ஜான்வாச ஊர்வலம். எல்லா உறவினர்களும் பின்னால் நடந்து வருவார்கள்.  குழந்தைகளுக்கு ஏக கொண்டாட்டம்.  நாதஸ்வர தவில் வித்துவான்கள் பின்னாலேயே சுற்றுவார்கள்.  கேஸ்  லைட்  ஒளிவீசும் .  அக்ரஹார வீதிகளில்  ஊர்வலம் மெதுவாக சென்று முடிந்த பின்  கல்யாண வீட்டு வாசலுக்கு வந்தபின்  வரவேற்பு.  சங்கீத  கச்சேரிகள்  நாட்யம்  நிகழ்ச்சிகள்  உண்டு.    அது முடிந்தபின் சாப்பாட்டு கடை. 
 
வரிசையாக  பந்திப்பாய்  விரித்து   வாழை இலைகள் போடப்படும்.  கமகமவென்று மணத்தோடு  தட்டு தட்டாக உணவு பரிமாறி எல்லோரும் வயிறு நிறைய சாப்பிடுவார்கள். யானையடி அப்பளம் என்று  இலைமுழுதும் பெரிதாக  ஒரு விசேஷ அப்பளம் எல்லா இலையிலும் விழும்.

விச்ராந்தியாக  சாப்பாடு முடிந்தபின்  சில திண்ணைகளில்   சீட்டு கச்சேரி,    பெண் வீட்டுக்காரர்கள்  அடுத்து நடக்க  வேண்டிய நிகழ்ச்சிகளுக்கான  ஏற்பாடுகளை செய்து  கொண்டிருப்பார்கள்.  முகூர்த்த தேங்காய் பைகளை துணிப்பைகளில் போடும் வேலை  ரொம்ப கடினம்.   ஏன்  சரியாக உபசரிக்கவில்லை என்று கோபத்தோடு  சில  பிள்ளைவீட்டுக்கார  மாமா மாமிகளை  பெண்  வீட்டுக்கார  மாமா மாமிகள்  காலில் விழக குறையாக சமாளிப்பது  வழக்கமான ஒரு நாடகம்.

இன்னும்  யோசிக்கிறேன்.


sivan jaykay

unread,
May 1, 2021, 8:09:40 AM5/1/21
to amrith...@googlegroups.com
ஸூர்தாஸ் --  நங்கநல்லூர்   J K  SIVAN   ---

40.    மோசமானவர்களில் முக்கியமானவன் நான்....

ஸூர்தாஸ்   ஏதாவது  எழுதவேண்டும்  என்று யோசித்து  தீர்மானித்து  எழுதியவை அல்ல அவர் பாடல்கள். அற்புதமான  காட்சிகளை அவர் மனக்கண்ணால் காணவைத்து  ''இதை  அப்படியே  எழுது பார்க்கலாம்''   என்று கண்ணன் இயக்கியவை.  

குறிப்பிட்ட நேரம் என்று இல்லமால்  எந்நேரமும் அவர் மனதில் கண்ணன் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருந்ததால் இருவருக்குமே  உறக்கம் இல்லாததால்   நமக்கு நிறைய  ஸூர்தாஸ்  பாடல்கள் கிடைத்ததற்கு நான் புண்யசாலிகள்.
அவர் பேசிய மொழி நமக்கு தெரியாதது ஒரு குறையல்ல.  எந்த மஹாநுபாவனோ, பாவர்களோ, ஹிந்தி  ஆங்கிலத்தில் அவற்றை  ஒருவாறு மொழிபெயர்த்து  எழுதி வைத்து நமக்கு  நிஜத்திற்கு பதில் நிழல் கிடைத்திருக் கிறது.   இதுவே இவ்வளவு ருசி என்றால் அவர்  இயற்றிய,  பாடிய,  பிரிஜ்பாஸி, எனும்   வ்ரஜபாஷா தெரிந்தால் நாம்  எவ்வளவு பாக்யசாலிகளாக இருப்போம்.

சிலர் யுத்தத்தில் அம்புகள் துளைத்து காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்தி வலியில் துடிப்பார்கள். ஆனால் சிலரோ சூர்தாசரின் கிருஷ்ண பக்தி பாடல்களின் சக்தியால் இதயம், மனம் எல்லாம் கிருஷ்ணா பக்தியால்  சல்லடைக்கண்ணாக துளைக்கப்பட்டு  ஆனந்த சாகரம்  கண்ணீரில்  பெருக  இன்பத்தில்  திளைப்பார்கள் 

சூரதாஸர் 1478ல் பிறந்தவர்.  1581-1585 கால கட்டத்தில் மறைந்தவராம். அக்பர்  காலத்தவர்  .


ஒருமுறை ஸ்ரீ வல்லபாச்சார்யர் வ்ரஜ் கிராமம் வந்தபோது  ஸூர்தாஸ் கௌகட் என்ற ஊரில் இருப்பதை அறிகிறார். ஸூ ர்தாஸ் அருகே இருந்த  சில பக்தர்கள்,  சிஷ்யர்கள்,    ''குருநாதா, ஸ்ரீ வல்லபாச்சார்யர் இங்கே வந்திருக்கிறார் '' என்கிறார்கள். கண் பார்வை இல்லாத  ஸூர்தாஸ்  ''அப்படியா, எவ்வளவு பெரிய மஹான் அவர், என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர் பாதத்தில் விழுந்து வணங்க வேண்டும் என்கிறார் ..

''ஸூர்தாஸ்  , உங்கள் கிருஷ்ண பக்தி என்னை இங்கே இழுத்து வந்திருக்கிறது. வாருங்கள் உட்காருங்கள் என்று அவரை கையால் அணைத்து அமரச் செய்கிறார்  வல்லபாச் சார்யர்.  

 ''சுவாமி உங்கள் வாயால் நேராக ஒரு கிருஷ்ணன் பாடல் பாடி கேட்கும் பாக்யம் எனக்கு அருளவேண்டும் '' என்று வேண்டுகிறார்.   ஸூர்தாஸ் என்னபாடினாரோ, ஆங்கிலத்தில்  எனக்கு கிடைத்தது இது.  

   சூர் தாசரைப்பற்றி  இது வரை அறியாதவர்க ளும் சரி  தெரிந்தவர்களும் சரி,   மிக ஆவலோடும்  ஆர்வமோடும்  என்னுடைய  கட்டுரைகளை படிக்கும்போது  நான் பட்ட ஸ்ரமம்  இன்ப  அனுபவமாக இனிக்கிறது. 18-20மணி நேரம் தினமும் உழைப்பவனை  இன்னும்  நேரம் கிடைக்குமா  என்று தேட வைக்கிறது. எனக்கே தெரிகிறது.  நான் நிறைய   பெரிய பெரிய  விஷயங்களை ஒரே  நேரத்தில் கையாள்கிறேன் என்று,  ஸ்ரீமத் பாகவதம், மஹா பாரதம், மகா பெரியவா,  ஸ்லோகங்கள், சூர் தாசர், கிருஷ்ண  கர்ணாம்ருதம், கீத கோவிந்தம், சித்தர்கள், ஆச்சார்யர்கள்,  தாகூர், ரமணர், விவேகானந்தர் ...திவ்ய க்ஷேத்ரங்கள், சிவாலயங்கள், ஆச்சார்யர்கள் வாழ்க்கை, சிறந்த கவிஞர்கள், எழுத்தாளர்களின் அமர படைப்புகள்  .. என்று என்னென்னவோ....  ஏதோ நம்மால்  சில நல்ல காரியங்கள் எளிமையாக தர முடிந்தால்  அதை மனப்பூர்வமாக செய்வோமே   என்ற நப்பாசை....  உடல் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது.  வயது,   விருத்தாப்பியம்  (82)   ஒரு முக்கிய காரணமாகி விட்டது.  இரும்பு மனது அதை லக்ஷியம் செய்யவில்லை... கிருஷ்ணன் ஒத்துழைக்கிறான். தொடர்கிறேன்...

சூர் தாஸர்  கண்ணை இழந்தவர் என்று நாம் தான்  சொல்கிறோம்.    அவர் கண்ணில்லா மலேயே கண்ணனை கண்ணார  அகத்தில் கண்டவர் அவர்.   அவர் கண்ணன் மேல்  ப்ரிஜ்பாஸி மொழியில் பாடியது   ஸுரஸாகர்  என்று ஹிந்தியில் இருக்கிறது.  கிருஷ்ண சமுத்திரம்.  எனக்கு ப்ரிஜ் பாஸி   தெரியாவிட்டால்  என்ன?  ஆங்கிலத்தில் படித்து  புரிந்துகொண்டு  தமிழில்  முடிந்தவரை எளிமையாக தருகிறேன்.   அப்படித்தானே  தாகூரின்  கீதாஞ்சலி, அவருடைய  அமர  கதைகளை கொடுத்தேன்.  

தன்னை முழுதாக  இழந்து  கிருஷ்ணனோடு  மூச்சாக கலந்தவர் ஸூர் தாசர். அதனால் தான் அவர்  சொற்களில் கிருஷ்ணனை நாம்  உணரமுடிகிறது.  பாரதியாரை, கம்பரை, தமிழிலே தானே அனுபவிக்க முடியும்.  நமக்கு  பிரிஜ் பாஸி தெரியாததால்  சூர் தாசரை நிறைய பேருக்கு அறிமுகமில்லை.   வடக்கே  சூர்தாஸ்  என்றால் சூரியன், துளசிதாஸ்  என்றால்  சந்திரன்,  வடுகன் கேசவ தாஸ்  என்றால்  நக்ஷத்திரம்  என்று  பக்தர்கள்  சொல்வார்கள்;

“ Kindhaun sur ko sar lagyo  kindhaun sur ki pir Kindhaun sur ko pada lagyo   Bmdhyaun sakal sarir ”

என் அப்பனே கிருஷ்ணா, என் தெய்வமே,  நான் யார் என்று உனக்கு தெரியாதா? பஞ்சமகா பாதகங்களை செய்தபாபிகளுக்கு நடுவே  நான் முடிசூடா சக்கரவர்த்தி.. நான் செய்த பாவங்களோடு  ஒப்பிட்டால் அவர்கள் அனைவருமே  கற்றுக் குட்டிகள்.  நான் கருவில் இருக்கும்போதே பெரிய மஹா பாபி.

அஜாமிளன் எனும்  கொடிய வேடுவன்,   மற்றும்  வேசி ஒருவள், உன்னையே  கொடிய விஷம் தடவிய தனது முலையில் பால் அருந்த செய்து கொல்ல  வந்த பூதகி ஆகியோருக்கெல்லாம்  கருணாசாகரமாக நீ முக்தி அளித்தாய். என்னை கவனிக்கவே மாட்டேன் என்கிறாயே?. 

எனக்கு நெஞ்சே வெடித்து  விடும் போல் இருக்கிறதே.  நான்  மறுபடியும் சொல்கிறேன் கிருஷ்ணா, நான் மஹா பாவி, கொடியவன், என்னைவிட  அதிக பாபங்கள் செய்தவன் இருக்கவே முடியாது. என் போன்றவர்களை அல்லவோ நீ அருள்  புரிந்து ரக்ஷிக்க வேண்டும்.  இன்னும்  உன் கடைக்கண் பார்வை கூட என் மேல் படாமல்  எனக்கே  அவமானம் அதிகமாகி மண்டையைப்  போட்டு விடுவேனோ என்று தோன்றுகிறது. 

பகைவனுக்கும் அருளும் பகவானே, என்னைவிட  உன் கருணையை  எதிர்பார்த்து  வாடும் ஒருவன் உண்டா சொல் ? ''    

 வல்லபாச்சார்யர்  மனம் குளிர்ந்து சூர்தாசருக்கு மஹாபாரதம், பாகவதம் எல்லாம் உபதேசிக் கிறார்.  அற்புதமாக  அவற்றை ஸ்ரவணம் பண்ணி  மனதில்  இறுக்கி பிடித்து வைத்துக் கொள்கிறார்  சூர்தாசர் அவை அத்தனையும்  ஒவ்வொரு சம்பவமாக  கவிதைகளாக  நமக்கு கிடைத்திருக்கிறதே.

 முகலாய சக்ரவர்த்தி  அக்பர்  கொஞ்சம் நல்லவன் போல் இருக்கிறது.  அப்படித்தான் அவனைப் பற்றி சரித்திரங்கள் சொல்கிறது.
   இசை ஞானம் கொண்டவன். பக்தி பாடல்களை தான்சேன் பாடிக்காட்டும் போது  ரசிப்பான். கண்களில் நீர் பெருகும் இதயம் கொண்டவன்.
ஒருநாள்  மாலை அரண்மனையில் அக்பர் முன் அமர்ந்து தான்சேன் சில பாடல்களை பாடுகி றான்.  நடுவே ஒரு பாடல்.  அது தான்சேன்  சூர்தாஸ் பாடி க் கேட்ட  அவனுக்கு பிடித்த பாடல். அது தான் மேலே  சொன்ன பாட்டு:  

அக்பருக்கு  சூரதாசரை அழைத்து  பாடவைக்க விருப்பமாகி  ஆள் அனுப்புகிறான்.   சூர்தாசர்  '
'சக்ரவர்த்தி  எனக்கு  கண்ணனை நினைத்து  அவன் எதிரே அமர்ந்து இங்கே ஆலயத்தில் பாடினால் தான்  பாடவரும் '' என்று  மறுக்கிறார். இப்படித்தானே  பிற்காலத்தில்  தியாகராஜ ஸ்வாமிகளும்  தஞ்சாவூர் மராத்திய ராஜாவிடம் எனக்கு  நீ தரும் நிதியை விட ராமன் சந்நிதி போதுமே என்று சொன்னதும்.

0 lord, 1 am the crown amongst the sinners.
The others are just the beginners
I have been born a crook.
To Ajamil, the hunter, and to the whore
■even to poison-breasted Putana you granted salvation.
You have shown favors to all but me. This hurts.
I claim, emphatically, confidently that nobdy else IS as capable of sinning as 1 have been.
Still amidst the sinners, and crooks,
I; Sur, die of shame, for not having had your favor.
Who else, deserves your grace More than I?

sivan jaykay

unread,
May 1, 2021, 8:11:13 AM5/1/21
to amrith...@googlegroups.com
பட்டினத்தார்    -- நங்கநல்லூர்   J .K. SIVAN

''வீடு நமக்குத் திரு ஆலங்காடு, விமலர் தந்த
ஓடு நமக்கு உண்டு வற்றாத பாத்திரம்

வீடு வாசல் மனைவி  குடும்பம் உலகம்  எல்லாம்  துறந்தவனுக்கு வீடு என்று ஒன்று எதற்கு ?  வீடு அவசியம் தான் என்றால்  அந்த வீடு இனி எனக்கு  திருவாலங்காடு.  பசி வந்தபோது உண்ண  பாத்திரம் அவன் கொடுத்த இரு கைகள்..  அதுவும் போதாதா?    இருக்கவே  இருக்கிறது அவனே  உபயோகித்த  திருவோடு.. அதைப்போல  எங்காவது  ஒரு  அக்ஷய பாத்திரம் பார்க்க முடியுமா, கிடைக்குமா?

முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

இதோ,   என் அன்னை.  என்னைப்  பெற்று,  பாலூட்டி,  சீராட்டி,  வளர்த்தவள் . இனி அவள் யாரோ,  நான் யாரோ. என் எதிரில் கிடக்கிறாள் கட்டையாக,   கட்டைகள் மேலே.     அவளுக்கு நான் செய்யவேண்டியது இனி என்ன பாக்கி?  இதோ தீயை மூட்டி அவளை எரிக்கிறேன் . அவள் மட்டுமா எரிகிறாள்?   எங்கும் தீ,   எதிலும் தீ?  முன்பு ஒரு காலத்தில்  அந்த பரமசிவன்  முப்புரங்களையும் தமது நெற்றிக்கண் தீயினால்  எரித்தான் .  அதை நினைவு கூர்ந்த ஹனுமான்  பின்னால் திரேதாயுகத்தில்  இலங்கையில் சீதையைக் கண்ட  பிறகு  ராவணனின் ஊரை  அவன்  தனது  வாலில்  இட்ட தீயாலே , எரித்தான் .   அம்மா,   நீ என்ன செய்துவிட்டாய் தெரியுமா?  மேலே சொன்ன ரெண்டு தீயை விட இன்னும் எரிச்சல் கூடிய  உன்னைப்  பிரிந்து  ஏங்கும்  என் அடிவயிற்றில் அத்தனை அக்னியையும் கொட்டிவிட்டாயே.  அதற்கு பதிலாக  நான்  மூட்டும் இந்த தீயும் உன்னை எரிக்கட்டும்  என்று பாடுகிறார்  பட்டினத்தார்.  தாய்ப்பாசம் எவரையும் விடாது.


ஒன்று என்று இரு; தெய்வம் உண்டு என்று இரு
உயர் செல்வம் எல்லாம் அன்று என்று இரு; பசித்தோர் முகம் பார்
நல் அறமும் நட்பும் நன்று என்று இரு; நடு நீங்காமலே நமக்கு இட்ட படி
என்றிரு; மனமே உனக்கு உபதேசம் இதே!

ஏ மனமே,  எப்போதும்   ஏதோ ஒரு  கவலையில், தேடலில், அலைகிறாயே, உனக்கு உபதேசம் செய்கிறேன் கேள்.  அலையாதே. ஒன்றே ஒன்று தான் இந்த பிரபஞ்சத்தில் சாஸ்வதம்.  அது  அந்த பரமன் ஒன்றே.    அதுவே  தான் நமக்கு தெய்வம்.  என்னதான்  இரவு பகல் தேடித்  தேடி சேமித்தாலும்  நாம் சேர்த்த செல்வம்  என்றும் நம்மோடு இருக்கப்போவதில்லை. ஒருநாள் நம்மை விட்டு நீங்கிவிடும்.  சுற்றிலும் பார், எத்தனை பசித்த முகங்கள். உன்னால் ஆனதைக்  கொடு. பசி தீர்.   நேர்மையான தர்மம் அன்பு  உண்மையான நட்பு  தான் என்றும் உதவும்.  நியாயமாக,  நேர்மையாக, மனச் சாக்ஷிக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள் . இது தான் நமக்கு  அந்த பரமேஸ்வரன் இட்ட  கட்டளை என்று புரிந்து கொண்டு வாழ்.  மனமே  இது ஒன்று தான் நான் உனக்குத் திருப்பி திருப்பிச்  சொல்லமுடியும்.

வாளால் மகவு அரிந்து ஊட்ட வல்லேன் அல்லன்; மாது சொன்ன
சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன்; தொண்டு செய்து
நாள் ஆறில் கண் இடத்து அப்ப வல்லேன் அல்லன்; நான் இனிச் சென்று
ஆள் ஆவது எப்படியோ திருக் காளத்தி அப்பனுக்கே.

ஆஹா,   எப்பேர்ப்பட்ட  பக்தர்கள் உன் அடியார்கள்  பரமேஸ்வரா,   ''பிள்ளைக்கறி கொண்டுவா என்று நீ சொல்ல அந்த சிறுத்தொண்டன் சிறிதாவது யோசித்தானா?  பெற்ற  தன ஒரே  பிள்ளையை சந்தோஷமாக  வெட்டி கறி சமைத்து உனக்கு  அளித்தது போல் எவராவது சிந்திக்க முடியுமா?    திருநீலகண்டர்  ''என்னைத் தொடாதே  என்று சொன்ன மனைவியை கடைசிவரை தொடாமல்  இளமை மறந்த  வைராக்யம் எவருக்காவது வருமா?  உன்கண்ணில் உதிரம் வடிவது கண்டு துடித்து  தனது கண்ணை  அப்ப முன்வந்த, மனம் வந்த,  கண்ணப்பனைப்  போல் நான்  ஆவேனா?  காளத்தீஸ்வரா   நான் எப்படி ஆளாவேன், எப்படி உன்னை அடைவேன்,  நீயே சொல்?  என்கிறார் இந்த பாடலில்  எளிதாக  பட்டினத்தார் புரிகிறார்.


ஆரூரர் இங்கு இருக்க அவ்வூர் திருநாள் என்று ஊர்கள் தோறும்
உழலுவீர்;–நேரே உளக் குறிப்பை நாடாத ஊமர்காள்! நீவீர்
விளக்கு இருக்க தீ தேடுவீர்

திருவாரூரில்  தியாகேசனைக் கண்டு புளகாங்கிதம் அடைகிறார் பட்டினத்தார்.  மக்களே,  எந்தெந்த ஊர்களுக்கோ   சென்று  விழாக்கள்  திருநாள் எல்லாம்  கொண்டாடுகிறீர்களே. இதோ இங்கே இருக்கிறானே திருவாரூரான்.  உள்ளத்தில் இருப்பதை அறியாத பேசவொண்ணா ஊமைகளே.  உங்களைப்பற்றி நான் என்ன சொல்வேன்..  ம்ம்ம்  விளக்கு தீபம், ஜோதி, இங்கே இருக்கிறது, ஆனால்  எங்கோ போய்  நெருப்பை, ஒளியை  தேடுகிறீர்கள்...!! அவ்வளவு தான்  சொல்லமுடிகிறது.

பட்டினத்தார் தொடர்வார்.

sivan jaykay

unread,
May 1, 2021, 8:11:13 AM5/1/21
to amrith...@googlegroups.com
 கீதாஞ்சலி    -    நங்கநல்லூர்  J K  SIVAN  ---
தாகூர்                               



50.   பிச்சைக்காரனிடம்  கேட்கிறாயே?
 
50.    I had gone a-begging from door to door in the village path,
when thy golden chariot appeared in the distance like a gorgeous dream and
I wondered who was this King of all kings!
My hopes rose high and me thought my evil days were at an end,
and I stood waiting for alms to be given unasked and for wealth scattered on all sides in the dust.
The chariot stopped where I stood.
Thy glance fell on me and thou camest down with a smile. I felt that the luck of my life had come at last.
Then of a sudden thou didst hold out thy right hand and say `What hast thou to give to me?'
Ah, what a kingly jest was it to open thy palm to a beggar to beg!
I was confused and stood undecided, and then from my wallet I slowly took out the least little grain of corn and gave it to thee.
But how great my surprise when at the day's end I emptied my bag on the floor to find
a least little gram of gold among the poor heap. I bitterly wept and wished that I had had the heart to give thee my all  


நான் என்ன சொல்வேன்!!  கிராமத்து  புழுதி தெருக்களில் வீடு வீடாகப் போய் நான் யாசித்து உன் புகழ் பாடிக்கொண்டு செல்பவன்.  திடீரென்று  என் எதிரே  பெரிய ஊர்வலம்.வருகிறது.   அடேயப்பா,   பெரிய தங்கத் தேர் வந்தது. . அதன்  அழகு மினுமினுப்பு ..  பளபள என்று கண்ணைப் பறித்தது.... அதனுள்ளே கம்பீரமாக வீற்றிருக்கும் ராஜாதி ராஜன் யார் என்று ஆர்வத்தோடு  அதிசயித்தேன்.  அந்த  பெரிய  தேர்  செல்லட்டும் என்னு நான்  ஒரு ஓரமாக  ஒதுங்கி வழிவிட்டு நின்றேன்.   தேர்   அருகில் வந்தபிறகு தான் தெரிந்தது    ''கிருஷ்ணா,  நீ தான் அந்த ராஜாதி ராஜன், தேரில் வருபவன்'' என்று.  இது நிஜமா  கனவா,  என் கண்ணை என்னால் நம்பவே முடியவில்லை.  

ஆஹா என் நம்பிக்கை வலுத்தது. என் கஷ்டங்கள் என் துன்ப தினங்கள் இனி  விலகிவிடும்.. இனி நான் பிக்ஷைக்கு சென்றால் தானாகவே எல்லாம் கிடைக்கும்.    எங்கும் புழுதி கிடக்க ,என் கண்ணுக்கு மட்டும் செல்வம் மலை மலையாகி குவிந்திருப்பது தெரிகிறதே ......

என்ன ஆச்சர்யம்.  நான்   ஓரமாக  நிற்கும் இடத்தில், என் எதிரே உன் தங்கத்தேரும் நின்றது.    ஆஹா   நீ  தலையை வெளியே நீட்டி என்னை பார்த்து விட்டு  சிரித்துக் கொண்டே  தேரிலிருந்து இறங்கி   என்  அருகில் வந்தாய். 

அடடா என்ன அழகு நீ.   அந்த காந்த புன் சிரிப்புக்கு இணை ஏது? எனக்கு வாழ்வில், என் கடைசி காலத்தில் எதிர்பாராத அதிருஷ்டம் கிடைத்து விட்டது. நான் பாக்கியசாலி.

 இது என்ன ஆச்சர்யம் கிருஷ்ணா. நீயா இப்படி செய்கிறாய்? திடீரென்று  உன் தங்கக் கையை என் பக்கம் நீட்டி
''எனக்குத் தர நீ  என்ன வைத்திருக்கிறாய்? '' என்று கேட்கிறாயே. 

இப்படி யாராவது விளையாடுவார்களா? எவ்வளவு பெரிய சர்வ சக்தி வாய்ந்த மஹா ராஜா, சக்ரவர்த்தி நீ, என் போன்ற பிச்சைக்காரனிடம் கை நீட்டி    நீ என்ன தருவாய் எனக்கு.... என்று .....கேட்கிறாயே .. எனக்கு தலை கால் புரியவில்லை. மதி மயங்கிவிட்டது. விரைந்து என் ஜோல்னா பையை த் துழாவினேன்.   நான்  பிக்ஷையில்  சேகரித்த  ஒரு சில தானியங்கள் சிதறி பைக்குள் இருந்தன.   அகப்பட்ட  ஒரிரண்டு   தானியத்தை  எடுத்து உன் கையில் ஒரு இயந்திரமாக வைத்தேன். சந்தோஷமாக வாங்கிக்கொண்டு போய் விட்டாய். உன் தேர் பறந்துவிட்டது. நான் கனவா காண்கிறேன்!  

சாயந்திரம் வரை இதே, உன் நினைவுதான். என்னால் உனக்கு ஒன்றும் கொடுக்க இயலவில்லையே என்ற வருத்தம் என்னை கண்ணீர் பொழிய வைத்தது. வழக்கம் போல் எங்கெங்கோ சுற்றிவிட்டு என் குடிசைக்கு திரும்பினேன். யாசித்தது, எல்லாவற்றையும் வழக்கம்போல் பையில் இருந்து  தரையில் கொட்டினேன். என்ன கிருஷ்ணா இப்படி செய்திருக்கிறாய்? எங்கிருந்து ரெண்டு மூன்று தங்க கட்டிகள் என் யாசக  ஜோல்னா பையில் வந்தடைந்தன?.

அப்போது எனக்கு சந்தோஷமாக இல்லை. அழுகை பொங்கி வந்தது. ''அடே மடையா,  பையிலிருந்த  அத்தனையும் அல்லவோ  நீ  அவன் கையில்  தந்திருக்கவேண்டும் ?  கிருஷ்ணன் கேட்டபோதும்  உனக்கு   கொடுக்க தோன்றவில்லையே? முட்டாளே,    கிடைக்க முடியாத  ஒரு  நல்ல சந்தர்ப்பத்தை கோட்டை விட்டு விட்டாயே?   ''என்று என் இதயம் கேட்கிறதே. அது வெடித்து விடுமோ?.

குசேலனிடம் கண்ணன் எனக்கு என்ன கொண்டுவந்திருக்கிறாய்?  என்று கேட்டது காதில் ரீங்காரமிடுகிறது.  திரௌபதியிடம்  பசியாக இருக்கிறதே, என்ன வைத்திருக்கிறாய்  கொண்டுவா உன்  அக்ஷய பாத்திரத்தை என்று கெஞ்சியது  நினைவுக்கு வந்தது.தாகூருக்கு  இந்த  சம்பவங்கள் நினைவுக்கு வந்து தான் இப்படி ஒரு கவிதை எழுதி இருப்பாரோ?


sivan jaykay

unread,
May 1, 2021, 8:11:13 AM5/1/21
to amrith...@googlegroups.com
பழைய  நினைவுகள்.     நங்கநல்லூர் J K  SIVAN

சமையல்காரருக்கு   இன்ஸ்ட்ரக்ஷன் INSTRUCTION   பறக்கும்.  

'' மாப்பிள்ளைக்கு  காரம்  ஒத்துக்காது.  தனியா சாம்பார், ரசம், கறி  எல்லாம்  எடுத்து வச்சுட்டு அப்புறம் காரம் உப்பு எல்லாம் சேத்துக்குங்கோ.  பால்பாயாசத்தில் சக்கரைக்கு பதிலா  வெல்லம் போட்டாதான் சம்பந்தி சாப்பிடுவார்.''
 
அதற்குள் இன்னொரு மாமி  ஓடி வருவாள்:  அவள் நிச்சயம்  மாப்பிள்ளைக்கு  அத்தையோ, சித்தியோ பெரியம்மாவோ , மாமியோ தான்... சம்மந்தி மாமி அதான், பெண்ணோட அம்மாக்கிட்ட:   ''எங்க பக்கத்து வயசான பெரியவாள்ளாம் காசிக்கு போயிட்டு வந்துருக்கா.   அவாளுக்கு சேஷமில்லாம மடி சமையலுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ.''

முகூர்த்த சாப்பாடு  ஆனபிறகும் கமெண்ட் வந்துகொண்டு தான் இருக்கும்.
''காலம்பற  காப்பி  திக்காகவே இல்லை , சுத்தமா  கழனி ஜலம் னு  பிள்ளயாத்துக்காரா  பேசிக்கிறா.  யார்  பாயசம் மாதிரி இத்தனை சக்கரை போடறது.  காபி போட தெரியாத வாளா பாத்து  ஏற்பாடு பண்ணிருக்கு போல இருக்கு''.

உங்க கிட்டே  சொல்லாம  இருக்க முடியலே... சொல்லிடறேன்... முகூர்த்த சாப்பாட்டுல இலைக்கு போட்ட குஞ்சாலாடு கண்ணுக்கே தெரியலே.  குணுக்கா  ன்னு  பையன் கேட்டான்..   க்ருஷ்ண ஜயந்திக்கு பண்ற   உப்பு சீடை சைஸ்ல இருந்த லட்டுவுக்கு  பெத்த பேரா   குஞ்சாலாடுன்னு சொல்லி சிரிக்கிறா . அதுக்குள்ளே  ஒரு மாமா  ''சின்ன குழந்தைகளை விட்டு  அதுகள் கையால  குஞ்சாலாடை பிடிக்க சொல்லி இருப்பா...ஹெஹெஹெ''  என்று சிரிப்பகாபி கழனி ஜலமாட்டம் இருக்கு,

 வெத்தலை வாழை இலை சைசுக்கு இருக்குன்னு ஒரு கம்மெண்ட்.    பஞ்சகச்சம் கட்டிக்கிற  வேஷ்டிக்கு கரை இவ்வளவு சின்னதா இருக்கே. எந்த ஊர்லே  வாங்கினது?''

இதெல்லாம்  முள் குத்தல்கள்.  பெண் வீடு   மூச்சு திணறும்.  அன்றைய பொழுது முடிந்து மறுநாள் காலை மேளதாளங்களோடு  மாப்பிள்ளை  காசியாத்ரைக்கு   மங்கள ஸ்நானம் பண்ணிட்டு  ரெடியா நின்னுண்டு இருப்பான். அவனுடைய பெரியம்மாவோ, சித்தியோ அத்தையோ ஒருத்தி   கண்ணுக்கு மையிடறேன்னு  நெத்தி கன்னம் எல்லாம் மையை அப்பி விடுவாள்.  மாப்பிள்ளை மயில்கண் வேஷ்டி பஞ்சகச்சத்தோடு கையில் விசிறி, வேத புஸ்தகம் கையி சிறிய  மூட்டையோடு காசியாத்திரை புறப்பாடு.

ஒரு மாமி  எலிக்குஞ்சு மாதிரி  ''தசரத  ராஜ குமாரா   .. என்று  திருப்பி  திருப்பி  பாடிக்கொண்டிருந்தாள் ...  யாரும் கேட்கவில்லை என்பதை அவள் லக்ஷியம் பண்ணவே இல்லை. 

பெண் வீட்டு சாஸ்திரிகள்  பெண்ணின் அப்பாவிடம்  சொல்லிக்கொடுப்பதை அவர்  உணர்ச்சி இன்றி  சொல்வார் :
  
''மாப்பிள்ளே   நீங்க  காசி யாத்திரை போகாதீங்கோ,   போகவேண்டாம்.  உங்களுக்கு  எங்கள் குமாரத்தியை கன்னிகாதானம் பண்ணித்தரப்போரோம்...  நீங்கள்  அவளை  கையைப் பிடிச்சு  ணிக்ரஹணம் பண்ணிக்கனும்.  வாங்கோ''

அப்புறம்  மாலை மாத்தற  சம்பவம் நடைபெறும்.   நல்ல குண்டு மாப்பிள்ளை.  இருந்தாலும்  அவனுடைய  மாமாக்கள்  ஒல்லிப்பிச்சாங்கள் ரெண்டு பேர் உதவியோடு  முழு பிதுங்க அவனைத்தோளில்  தூக்கிக்கொண்டு  ஓடுவார்கள்.  ஆடுவார்கள்.   பெண்  வீட்டு மாமாக்கள் கொடுத்து வைத்தவர்கள்.  40 கிலோ தாண்டாதவள்.  சுலபமாக  தூக்கிக்கொண்டு  ஆடுவார்கள்.  உறவு  ஊர்க்காரர்களுக்கு  ஏக குஷி. கொண்டாட்டம்   மாமிகள் புஸ்தகம் வைத்துக்கொண்டும் இல்லாமலும்    '' மாலை மாற்றினால்  கோதை  மாலை  சாத்தினாள்  '' என்று கோரஸாக  பலவித குரல்களில் பாடுவார்கள். பெண்  மன்மதனுக்கு  மாலையிட்டாள்   என்று  பாடி கைதட்டுவார்கள்.   நாதஸ்வர கோஷ்டி  பின்னி எடுத்து விடும்.

ஊஞ்சல் பலகை  மாக்கோலங்களோடு புஷ்ப தோரணங்களோடு தயாராக இருக்கும். அதைச்சுற்றி அடுத்து  கோஷ்டி தயாராகும்.

கன்னூஞ்சலில் பெண் மாப்பிள்ளை  உட்கார அருகில்  அரைடஜனுக்கு மேலும் குழந்தைகள் அலறிக்கொண்டு உட்கார  பால் பழம் கொடுப்பது,  பச்சை புடி  சுற்றுவது என்று சம்பரதாயங்கள்  தொடரும்.  ஒவ்வொரு மாமி ஒவ்வொருவிதமாக  ஸ்பின், பஸ், மீடியம் பேஸ் ,  பௌன்சர்,  கூக்ளி  மாதிரி  கலர் கலராக  பச்சிபுடி சுத்தி போடுவாள்.  நிச்சயம்  எங்கோ பராக் பாத்துக்கொண்டிருக்கும் சிலர்  தலையில் சட்டையில் எல்லாம் விழும்.

''பெண் தான்  காஞ்சனமாலை வழக்கம் போல்.   கன்னூஞ்சல் ஆடினாள்  காஞ்சனமாலை.... என்று  மறுபடியும் மாமிகள் குழு பாடும்.  ஆரத்தி எடுத்த மஞ்சள் நீரை வீசி ஊற்றும்போது பக்கத்தில் இருப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும். 

வாத்தியார்  நேரமாறுது. முகூர்த்தத்துக்கு என்று  விரட்டுவார். பெண்ணும்   மாப்பிள்ளையும்  மேடையை நோக்கி அழைத்துச் செல்லப்படுவார்கள். 

பெண்ணுக்கு அப்பா  அப்போதிலிருந்தே   மூணாம் பேஸ்த் அடித்தாமாதிரி முகத்தை அழாக்குறையாக வைத்துக்கொண்டு  ஒரு நாற்காலி மேல்  உட்கார  பெண்ணை  அவர் மடியில் உட்கார வைத்து  கூறைப்புடைவை  ஓதிக்கொடுப்பார்  வாத்தியார்.
முக்கியமாக இந்த  புடைவை மாத்தும் உத்யோகம்  பெண்ணுக்கு  நாத்தனார்  எனும்  மாப்பிள்ளை பையனின் சகோதரி ஒருவள் தான். வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்னை விட  என்ற பெருமிதமாக எல்லாரையும் அவள் பார்ப்பாள். பெண் கூறைப்புடவையின் கனம்  தாங்கமுடியாமல்  தள்ளாடி  சுற்றிக்கொண்டு  ஒரு பொம்மை மாதிரி வரும்.

மறுபடியும் அப்பா மடிமேல்.  கன்னிகா தானம் எனும்  சிறப்பான கல்யாண அம்சம் அப்போது நடைபெறும்.  குண்டுப்பெண்ணாக இருந்தால்  அவருடைய  மடி நிச்சயம் கனம்  தாங்காது.  ஆனால் ஒல்லியோ  குண்டோ எந்த பெண்ணாக இருந்தாலும்  அப்போது அப்பாவின் மனசு  ரொம்ப  கனமாக இருக்கும்.   இதுவரை அவர் வளர்த்த பெண் இப்போது முதல் இன்னொரு வீடு செல்லப்போகிறாளே.

வாத்யார் சொல்லும் ஒரு முக்கிய மந்திரம் அப்போது:     'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம், மம த்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..,,,,,''

மாப்பிள்ளே   என் பெண்ணை  உங்களுக்கு  தானம் பன்றேன்  அதுக்கு என்ன விசேஷம்  தெரியுமா?   நான்  இப்போ  என் பெண்ணை  கன்யாதானம்   பண்ணுகிறேனே,  எனக்கு  முன்னால் பத்து தலைமுறையும்,  எனக்கு அப்புறம் வர பத்து தலைமுறையும்,   என் தலைமுறையும்  சேர்த்து   10+10+1    :  21  தலைமுறையும்  இதனால்  கரை சேரும்.  தானத்தில் சிறந்த தானம் இந்த கன்யா  தானம்.  

''மாப்பிள்ளே,  உங்கள்   வம்சத்துக்காக, வம்ச விருத்திக்காக எங்கள் வீட்டு   குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் பா '' என்று  அப்பா  பெண்ணை  தானம் செய்கிறார்.  


ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு வம்சம்,   தலைமுறை மட்டுமே கரையேறும். ஆனால், பெண்ணைப்  பெற்று,  கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால்,   மேலே சொன்ன  நன்மை,  அதாவது  21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் அது அர்த்தம்  தெரிந்த  அப்பாவின் மனமும்  மடியும் எவ்வளவு கனமாக இருக்கும்? 

தொடரும்.

sivan jaykay

unread,
May 1, 2021, 8:12:28 AM5/1/21
to amrith...@googlegroups.com

பழைய  நினைவுகள்.     நங்கநல்லூர் J K  SIVAN


இப்போதெல்லாம்  கல்யாணங்களில்  யாருமே  நாதஸ்வரம் கேட்பவர்களில்லை.   எல்லோரையும்  நாலா  பக்கமும் பரிதாபமாக     பார்த்துக்கொண்டே    நாயனக்காரர்  , பிலஹரி  காபி,  தன்யாசி  என்று .வெளுத்து வாங்குவார்.  நல்ல  ஆலாபனை சுகமாக  ஆரம்பிப்பார், அல்லது  லயித்து  வாசித்துக் கொண்டிருக்கும்போது  வாத்யார்  கைதூக்கி  நிறுத்து  என்பார்.  அப்புறம்  மறுபடியும்  நாதஸ்வரம்  மீண்டும்ஒலிக்கும்  நிறுத்தப்படும்.    அக்காலத்தில்    நாதஸ்வர வித்வானுக்கே எப்போது  நிறுத்தவேண்டும்  கெட்டி மேளம்  வாசிக்கவேண்டும்  என்று  தெரியும். சங்கீத  ரசிகர்களும்  அவர்களைச்  சூழ்ந்துகொண்டு  இதைப்பாடு , அதைப்பாடு என்று  நேயர் விருப்பம்  கேட்பார்கள்.

இப்போது  ஒலிபெருக்கி வந்த காலத்தில்  மேடையில் வாத்தியார்கள்  நடுநடுவே  உபன்யாசம்  வேறு .செயகிறார்கள்.  மாங்கல்ய தாரணம் போது  கெட்டி மேளம்   கண்டிப்பாக வாசிப்பார்கள்.    அதற்கு    முக்கிய காரணம், அசுப மான வார்த்தைகள்  யாரிடமிருந்தாவது,   ஐயோ,அச்சச்சோ ,  போன்றவையோ   தும்மல்களோ  வேறு அமங்கல   வார்த்தைகள்  கேட்கக்கூடாது   என்பதற்காக மங்கள வாத்யத்தை  .ஒலிக்கச் செய்வது.

 அப்பா குடம்   குடமாக அழுவார். மாங்கல்ய தாரணம் போது  மலர்   மழை,மங்கள அக்ஷதை  மணமக்கள் வாத்தியார்கள்,  அருகில் உள்ளவர்கள்    தலையில்   பொழியும்.  உறவினர்கள்   நண்பர்கள்  ஊர்க்காரர்கள் பெண்வீட்டாரை, பிள்ளை  வீட்டாரை ஆலிங்கனம் செய்து   ''மாப்பிள்ளை வந்தாச்சா,   மாட்டுப்பொண்ணு வந்தாச்சா'' என்றெல்லாம்  சந்தோஷமாக  விசாரிப்பார்கள்.    பெரிசுகளிடம்  பேரன் ஆம்படையா வந்தாச்சா, பேத்தி ஆம்படையான் வந்தாச்சான்னு   பல் இல்லாத  ஜோடிகள் விஜாரிப்பதும்,   மற்றவர்கள்  அவர்களிடம்  ஆசீர்வாதம் வாங்கிப்பதும்  வழக்கமான  முறை. .பாட்டி தாத்தாக்கள் மதிக்கப்பட்டு  அவர்களது   ஆனந்தம்  கண்களில்  பொங்கித்  ததும்பும்.   அப்புறம்  ஆசீர்வாதங்கள்  வாத்யார்      எல்லாருமே ஓதியிட்டு   கொடுப்பார்கள்.   சுபே சோபனே  முஹுர்த்தே....   மாமா மாமி   ஆசீர்வாதம்  பதினாயிரம் கட்டி வராகன் என்று சொல்லி  ஒரு  வெள்ளி  ரூபா காசு கொடுத்த  காலம்  அது.  முதலில்  வீட்டு  பெரியவர்கள் நெருங்கிய உறவுகள் அப்புறம்  மற்றவர்கள்  என்று ஆசீர்வாதம் தொடரும்.   கோவில்களிலிருந்து    ஸ்வாமிக்கு  சாத்திய மாலை  பிரசாதங்கள்,  குலதெய்வம் கோவில் பிரசாதங்கள்  வரும். 

நிறைய விஷயங்கள்  நமது ஹிந்து சம்பிரதாயத்தில் புரிந்து கொள்ளாமலேயே கல்யாணங்கள் நடைபெறுகிறது.  நடத்திவைப்பவருக்கோ, சம்பந்தப்பட்டவர்களுக்கோ, மற்றவர்களுக்கோ  எடுத்துச்  சொல்ல வாத்தியார்கள் தயாரில்லை, அவர்கள் தயாராக இருந்தாலும்  கேட்பதற்கு ஆளில்லை.   மந்திரங்கள் சொல்வதில்லை,  மேடையிலிருதபடியே  மற்றவர்களோடு பேசுவது, ஜாடை காட்டுவது,  தலையாடுவது  போன்ற  ஸ்ரத்தையற்ற செயல்கள் அருவறுப்பானவை. எப்போது சம்பிரதாயப்படி ஒரு காரியம் செய்ய முற்படுகிறோம், அதில்  நடிப்பு எதற்கு? 

அப்போதிருந்த  ஆடம்பரம் இல்லாத அமோகமாக   நிஜமான சுற்றமும்/நட்பும் சூழ நடந்த அந்த நாள் கல்யாணங்களை நினைத்துப் பார்த்தால் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், மறு பக்கம் நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை அறிந்து  மனம் வேதனைப்படுகிறது.  உதாரணமாக  ரொம்ப முக்கியமான  சப்தபதி, அம்மி மிதித்து  அருந்ததி பார்ப்பது போன்ற  சடங்குகள் அர்த்தமற்றவையாக போய்விட்டது. 

நமது ஹிந்து சனாதன கல்யாணங்களில் சப்தபதி என்ற ஏழு அடி சத்ய பிரமாணம் மிக முக்கியமானது. கடைசி வரை வாழ்க்கையில் இதை கடைபிடித்தவர்களும் உண்டு. என் முன்னோர்களில் பலர் அவ்வாறே வாழ்ந்தவர்கள். தெய்வங்கள்.

தஞ்சாவூர் தமிழில் ''ஏழு தப்படி''   என்றால் ஏழு காலடி என்று அர்த்தம். தப்பான அடி அல்ல. மாப்பிள்ளை, பெண் இருவரும் வலது கையை பிடித்துக்கொண்டு ஹோம குண்டத்தையும் கல்யாணம் செய்து வைக்கும் வாத்தியாரையும் சுற்றி வருகிறார்கள். அவர் ஏதோ மந்திரம் சொல்கிறார். ஒவ்வொரு அடி வைக்கும்போதும் தம்பதியர் பகவானை பிரார்த்தித்துக் கொள்கிறார்கள். அதாவது வாத்தியார் சொல்லும் மந்திரத்தை 'தப்பில்லாமல்' திருப்பிச் சொல்வதின் மூலம். இந்த ஏழு அடி எடுத்து வைப்பதன் அர்த்தம்  என்ன?  

முதல் அடி வைக்கும்போது : ''அப்பனே, எங்களுக்கு சமர்த்தியாக சுத்தமான, புஷ்டியான, ஆகாரத்தை அளிப்பாயாக. உன்னை வழிகாட்டியாக வைத்துக் கொண்டோம். நாங்கள் வாழ்க்கைப் பாதையில் முதல் அடி எடுத்து வைக்கிறோம். எங்களுக்கு நல்ல மரியாதை, கௌரவம் கிடைக்கும்படியாக நாங்கள் இருவரும் சேர்ந்து நடந்து எங்கள் உணவைப் பெற அருள் புரிவாய்.

ரெண்டாவது அடி எடுத்து வைக்கும்போது : 'சுவாமி எங்களுக்கு மன, உள்ள, உடல், ஆன்ம உறுதி அருளி நல வாழ்வு தொடங்க அருள்வாய். எங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் சந்தோஷமாக நடக்க அருள்வாய். இந்த பலத்தை அடைய நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கைப் பாதையில் அடுத்த அடி எடுத்து வைக்கிறோம். காப்பாற்று.

மூன்றாவது அடியெடுத்து வைக்கும்போது: ' எங்களது செல்வம் பெருகட்டும். வாழ்க்கை வளம் பெறட்டும்.எங்கள் வாழ்க்கைப் பாதையில் இந்த அடி எடுத்துவைக்கும்போது உன்னை வேண்டுவது எதிர் வரும் இன்ப துன்பங்களை சேர்ந்து அனுபவித்து வாழ்க்கையின் சுபிக்ஷத்தை நோக்கி நடப்போம்''.

நான்காவது அடி வைக்கும்போது: ''எங்கள் வாழ்க்கையில் இந்த அடி எடுத்து வைக்கும்போது பகவானே, உன்னருளால், எங்கள் வாழ்க்கையில் நாங்கள் சந்தோஷத்துடன் ஒருவரை ஒருவர் நேசத்தோடும் அன்போடும், பாசத்தோடும். நம்பிக்கையோடும், வாழ வேண்டும் .எங்கள் பெற்றோர், முன்னோர், மூத்தவர் ஆசி பெறவேண்டும்"

ஐந்தாவது அடி எடுத்து வைக்கிறார்கள் தம்பதியர் - அப்போது அவர்கள் வேண்டும் வரத்தின் பொருள்: ' லோகா சமஸ்தா சுகினோ பவந்து' . உலகம் யாவையும், எல்லோரும் நல்லவர்களாக, சந்தோஷத்தோடு வாழ வேண்டும். நல்ல வாரிசுகளைப்  பெறவேண்டும. தான தர்மம் நாங்கள் இருவரும் சேர்ந்தே புரிய வேண்டும். எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும்'

ஆறாவது அடி : பகவானே, எங்களுக்கு நீண்ட சந்தோஷமான நோயற்ற வாழ்வு வாழ அருள்செய். எங்கள் இணை பிரியா வாழ்க்கை அமைதியாக நடக்கட்டும். அதற்கு இந்த அடியை நடக்கிறோம்.'

ஏழாம் அடி, சப்த பதியில் கடைசி அடி வேண்டுகோள்: தெய்வமே, எங்கள் இருவர் மனமும் கோணாமல் ஒன்றாகவே சேர்ந்து ஒருவருக்கொருவர் துணையாக, புரிதலோடு, அன்போடு, எந்த தியாகமும் புரியவேண்டும். எங்கள் இருவர் நட்பு நகமும் சதையுமாக, உயிரும் உடலுமாக பிரிக்க முடியாததாக அமைய வேண்டும்.

இந்த ஏழு வேண்டுகோள் இறைவனிடம் வைத்து கை கோர்த்து அக்னி சாட்சியாக வலம் வந்து வாழ்க்கையில் இவற்றை கடைப்பிடிக்க வாக்களிக்கிறார்கள். சத்தியத்துக்கு சான்றாக அக்னியை சாட்சியாக வைத்துக் கொண்ட சனாதன தர்மம் நமது. அப்போது புது கல்யாண மாப்பிள்ளை மனைவியிடம், ''இதோ பாரடி, இந்த ஏழடி நடந்த நாம் இனி உத்தமமான நண்பர்கள். உன் அன்பும் நட்பும் பிரியேன். நீயும் என் நிழலாக என்னோடு இணை பிரியாமல் இருப்பவள்'' என்கிறான்.'

இன்னும்  சொல்கிறேன்.  

sivan jaykay

unread,
May 1, 2021, 8:12:28 AM5/1/21
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம்   --  நங்கநல்லூர்  J K  SIVAN 



''நான் எதுக்கு இப்படி பண்ணேன் தெரியுமா?''


மஹா பெரியவா  என்றும்  மனிதர்களுக்குள்  வித்யாசம்  பாராட்டியதில்லை.  எல்லா ஜீவன்களும்  பரமேஸ்வரன் அவதாரம் என்ற திட நம்பிக்கை கொண்டவர்.  அவருக்கு  சாஸ்த்ர  சம்பிரதாயங்களை  மதித்து  அர்த்தம் புரிந்து அனுஷ்டிக்கிறவர்களை ரொம்ப  பிடிக்கும்.   அதெல்லாம் விட  எவன் ஒருவன் மனசை பரிசுத்தமாக  அன்போடு வைத்துக்கொண்டிருக்கிறானோ அவனே  பகவானின் அம்சம் என்ற அபிப்ராயம் உண்டு. எந்த  ஊரிலும்  முதலில் வணங்க வேண்டியது அந்தந்த ஊரிலுள்ள  கிராம தேவதைகள் என்பார். 

இப்போது நான் சொல்லும் சம்பவம்  எப்போதோ தினமலரில் ஒரு முறை படித்த ஞாபகம் இருக்கிறது.  

பல வருஷங்களுக்கு முன்  இது நடந்த சமயம்  மஹா பெரியவா காஞ்சிபுரம் அருகிலுள்ள கலவையில் முகாமிட்டிருந்தார்.  பக்கத்திலிருந்த  கிராமத்துக்கு சென்றவர்  அங்குள்ள கிராமதேவதை கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டு வருவார்.  

 ஒருநாள்  அதுபோல்  தான்  அந்த கிராமத்துக்கு சென்று விட்டு  தான்  தங்கி இருந்த    கலவையில்  அக்ரஹாரத்துக்குத்  திரும்பிக்   கொண்டிருந்தார்.   ''ஜெய ஜெய  சங்கர  ஹர ஹர சங்கர '' என்று  கூட இருந்த பக்தர்கள் தொண்டர்கள் வழக்கம் போல்  ஒலித்துக்கொண்டிருந்தார்கள்.  

அந்த கிராமத்திலிருந்து  கலவைக்குச் செல்லும் வழியில்  ஒரு  சிறு  ஓடை  குறுக்கிட்டது.  அதன்  இருபக்கமும் ஒரு கால்வாய் மதகு இருந்தது. அந்த கால்வாய்  மேல்  மதகில்  இருபுறமும் இரண்டு அடி உயரத்திற்கு சுவர்.பாதுகாப்புக்காக கட்டப் பட்டிருந்தது.  

அன்றும்  மஹா பெரியவா அதை நெருங்கி நடந்து  கொண்டிருந்தார்.   அவர்  கிராமத்துக்கு செல்லும்போதும் அந்த பக்கமாக தான் வந்தார் அப்போது   அந்த மதகின் சுவர்களின் மீது  ஒன்றுமில்லை.    இப்போது   திரும்பி  கலவைக்கு செல்லும் போது மட்டும் அந்த  மதகு சுவர் மேல்  பரங்கிக்காய், பூசணிக்காய், தேங்காய், அவரை, இளநீர், வேர்க்கடலை  மூட்டை எல்லாம் இருந்தது. 

மஹா பெரியவா எவ்வளவு  கூர்மையாக எல்லாம்  கவனிப்பவர் என்று தெரியுமல்லவா?  இதை கவனித்துவிட்டு  ஒன்றும் பேசவில்லை. 

மற்றவர்களுக்கு  ஒரு ஆச்சர்யம்.  ''நாம் போகும்போது, இங்கே ஏதுமில்லை. இப்போது, இதெல்லாம்  எப்படி இங்கு வந்தன என்று..!

மஹா பெரியவா அவர்களது முகத்தில் தோன்றிய  ஆச்சர்யக்  குறியை கவனிக்காமலா இருப்பார்?   மெதுவாக   நடந்து கொண்டிருந்தவர் அப்படியே  மதகின் அருகில்  நின்று விட்டார். அங்குமிங்குமாக   சுற்றி  சுற்றி நடந்தார். நாலு பக்கமும் மாறி மாறி திரும்பினார். தன்னுடன் வந்த தொண்டர்களிடம், சம்பந்தமில்லாத சில விஷயங்களைப் பேசினார்.   அவர்களுக்கு  ஒன்றும்  புரியவில்லை.  ஏன், எதற்காக  மஹா பெரியவா இப்படி  செய்கிறார்?  ஏதோ  விஷயம் இருக்கிறது.

அப்போது தான் தெரிந்தது.   மதகுக்குப்    பின்னால்  15 அடி தூரத்தில் அடக்க ஒடுக்கமாய், பக்திப் பரவசத்துடன்  யாரோ  ஒரு கிராம வாசி   கைகளைக் கட்டிக் கொண்டு   மஹா பெரியவாளைப்  பார்த்துக்கொண்டு  ஒரு மரத்தடியில் நிற்பது தெரிந்தது.  அவர் ஒரு   விவசாய  சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் தான்,   மதகின்  மீது  மஹா பெரியவா கண்ட  பொருட்களை அங்கு வைத்திருக்கிறார் என்பதை  மஹா பெரியவா  எளிதில்  புரிந்து கொண்டார்.

மஹா  பெரியவா ஒரு சிஷ்யரை  அழைத்து   '' அதோ  நிற்கிறானே  அவன்  எதற்காக இந்தப் பொருட்களை  இங்கே  மதகின் மேல் வைத்திருக்கிறான் என்று கேள்,'' என்றார்.

அவரும் அதுபற்றி கேட்க  அந்த  விவசாயி  பதில் சொன்னான்: 

"சாமிக்கு தான் வச்சிருக்கேன். எல்லாம் எங்க   தோட்டத்திலே வெளஞ்சது...சாமி  இந்த  கிராம  கோயிலுக்கு போறப்ப பாத்தேன்!   திரும்பவும்   இந்த வழியாகத்தான் வருவாங்கன்னு தெரிஞ்சுது.  அதனாலே   என்   வீட்டுக்கு ஓடிப்போயி இதெல்லாம்  எடுத்தாந்து, அவங்க கண்ணிலே படுற மாதிரி வச்சேன்!   நாங்க பாலு, தயிரு  ஏதாவது  தந்தா  சாமி  சாப்பிடுவாங்களோ மாட்டாங்களோன்னு  சந்தேகமா இருந்திச்சு.  அதனாலே தான் இந்த தோட்டத்து   காய்கறிங் களைப்  பறிச்சு கொடுத்தா  ஏத்துக்குவாரோ ன்னு  மனசிலே  தோணுச்சு.  எடுத்தாந்து அவர் கண்ணிலே படரா  மாதிரி  வச்சிட்டு  நிக்கேன்''

மஹா பெரியவா விஷயமறிந்து   தலையாட்டினார்.   சிஷ்யர்களை நோக்கி சைகை செய்து, அவற்றை எடுத்துக் கொள்ளும்படி கூறினார். 

" குகன் கொடுத்ததை ராமன் ஏற்றுக்கொண்ட மாதிரி, நாளைக்கு இதெல்லாம் சந்திர மவுலீஸ்வரருக்கு  (மஹா  பெரியவா அனுதினமும்  பூஜிக்கும்  பரமேஸ்வரன்) அர்ப்பணம்,'' என்றார்.

அடுத்ததாக   ''நான்  எதுக்கு  அந்த மதகுக்கு  இந்த பக்கமும் அந்தப்பக்கமும்  சித்தே  நடந்தேன்,  ஏன்  மாறி மாறி திரும்பி நின்னேன் னு  யோசிச்சேளே .அதுக்கு  காரணம் சொல்றேன்'' .

""ஏண்டா! என் முன்னாடி நமஸ்காரம் பண்றவாளுக்கு என் முதுகு தெரியுமோ?'' .

"தெரியாது' என்றார்கள் எல்லாரும்.

""என் முதுகைப் பார்க்கணும்னா என்ன பண்ணனும்? என்னை பிரதட்சணம் பண்ணனும் (வலம் வந்து வணங்க வேண்டும்). அந்த  கிராமவாசி என்னை தரிசனம் பண்ண ரொம்ப நேரமா நிக்கிறான்.  அவன் எப்படி என்னை பிரதக்ஷணம் பண்ணுவான்?  அவன்  எதிர்லே நான் ஆத்ம பிரதட்சணம் பண்ணினாத் தானே,  முன்னே, பின்னே, பக்கவாட்டிலே எல்லாம் அவன்  என்னைப்  பார்க்க முடியும். இல்லியோ!?'' என்றார்.

அப்போது தான், ஒரு சிவபக்தனுக்கு தன் முழு உருவத்தையும் காட்ட மஹா பெரியவர் அவ்வாறெல்லாம் செய்தார் என்பது சிஷ்யகோடிகளுக்கும் தொண்டர்களுக்கும்  புரிந்தது. 

அடுத்து  மஹா பெரியவா சொன்னது அவர் மன நிலையை  உணர்த்தியது.  

 "அவன் யாருன்னு  நினைக்கிறேள் ?  அவன் யார்  தெரியுமா? நந்தனார் பரம்பரை'  பக்தி பூர்வமானவன்''

அங்கிருந்து  கருணாசாகரம்  கண்களுக்கு மறையும்  வரை கண்களில் ஆனந்த கண்ணீரோடு  அந்த கிராமவாசி மதகுக்குப்  பின்னே மரத்தடியிலிருந்து  கூப்பிய கரங்களோடு  வணங்கி கொண்டிருந்தது தெரிந்தது.  

--

sivan jaykay

unread,
May 1, 2021, 8:12:28 AM5/1/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்   -  நங்கநல்லூர்   J K  SIVAN 

இருவழிச்சொல்  ....

எங்கள்  இளம் வயது காலத்தில்  கொம்பியூட்டர், டிஜிட்டல் விளையாட்டெல்லாம் கிடையாது.  அச்சடித்த  குழந்தைகள் புத்தகங்கள் கூட  நாங்கள்  பார்த்ததில்லை.  ஸ்லேட்டில்  சிவாஜி, வாயிலே,  ஜிலேபி  என்று குறுக்கும் நெடுக்குமாக  எழுதி அதே வாசகம்  மேலிருந்து கீழும்  வரிசையாகவும் வருவதில் படு குஷி  அடைந்தவர்கள்.   ஆங்கிலத்திலும் இது போல் விளையாடுவோம். ceylon, london   என்ற எழுத்துக்களை ரெண்டு வரிசையாக எழுதுவோம். மேலிருந்து கீழே படித்தாலும் அதே வார்த்தை வரும்.   தவிர  எங்களுக்கு  சிலர்  இருவழிச் சொல்  சிலவற்றை கற்று தருவார்கள்  (PALINDROME)  உதாரணமாக    மோருபோருமோ , விகடகவி   போன்ற வார்த்தைகள்.  இது ஒரு விளையாட்டு. இன்னும் ஒன்று கட்டம் கட்டமாக போட்டு  ஒரு கட்டத்தில்  ஒரு புள்ளி வைப்பது, அடுத்தவன் ஒரு புள்ளி.  புள்ளிகளை கோடாக சேர்த்து  நாம்  கட்டங்களை  மடக்குவது  போன்ற  வகுப்பு விளையாட்டுகள்.  

மஹா பெரியவா சம்பந்தப்பட்ட ஒரு  சம்பவத்திற்கும்,  மேலே சொன்னதற்கும்  என்ன    சம்பந்தம்  என்று  கீழே படித்துப் பார்த்தால்  விளங்கும்.

மஹா பெரியவா காஞ்சிபுரத்தில் இருந்த சமயம்.   தேர்தல் பிரசாரங்கள் எங்கும்  மும்முரமாக நடந்துகொண்டிருந்தது.  காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் எதிரில் ஒர் அரசியல் கட்சியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்.  வழக்கம்போல் கடவுள் எதிர்ப்பு ஆசாமிகள் பேசுவது எப்படி என்று தெரியும் என்பதால் அதற்கு மேல் சொல்ல விருப்பமில்லை.  

கோயிலுக்கு எதிரிலேயே - கோயில் எதிப்பு கூட்டம்.

”நல்ல வேளை,   கச்சபேஸ்வரர் சந்நிதியில் வழக்கமான  நாராச  ஒலி  எழுப்பும்   கூம்பு  ஒலி பெருக்கி கட்டப்படவில்லை., கட்டப்பட்டிருந்தால் தேவாரத் தமிழை கேட்ட திருச்செவிகள் 
, தெய்வத் தமிழை, தேன் தமிழை இவ்வளவு கேவலமாக உபயோகப் படுத்த முடியுமா? என்று பயந்து பதறி போயிருக்கும்.

ஸ்ரீ மடத்தில் வாசலில் தண்ணீர் (நீர் மோர்) விநியோகம் செய்து கொண்டிருந்த தெலுங்குப் பாட்டியை வெகு அவசரமாக அழைத்து வரச் சொன்னார்கள், மஹா பெரியவா.

பாட்டி வந்து நமஸ்கரித்தாள். அவரிடம் மஹா பெரியவாஎன்ன சொன்னார்?

 "இன்னிக்கு நிறைய தயிர் வாங்கி, ரெண்டு மூணு அண்டாவிலே நீர் மோர் தயார் பண்ணி வை. பெருங்காயம், கடுகு தாளிச்சுப் போடனும். கறிவேப்பிலை கசக்கிப் போடனும். ரெண்டு பச்சை மிளகாய் நறுக்கி போடலாம். இஞ்சித் துண்டு போடற வழக்கம் உண்டோ?

”தொண்டு செய்பவர்களுக்கும் தரிசனத்துக்காக வந்திருந்தவர்களுக்கு ஆச்சரியம். அத்துடன் வாசலில் நீர் மோர் குடுக்கின்ற அளவுக்கு திருவிழா காலமும் இல்லை, ரெண்டு அண்டா நீர் மோர் வீணாகப் போகிறது என்றி கவலையும் கூட.

கடவுள் எதிர்ப்புக் கூட்டம் சரியாக, பிற்பகல் ஒரு மணிக்கு முடிந்தது. எல்லா கோயில்களையும் இடித்துத் தள்ளிவிட்டு, தொழிற்சாலைகள் கட்டி, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கப் போவதாக சூளுரை உரைத்தார் த்லைவர்
பின்பு புன்னகை மாறாமல், சட்டை கசங்காமல் காரில் ஏறிப்போயி விட்டார் தலைவர்.

”கடல் போல் குழுமியிருந்த ( நூறு பேர்) கூட்டம், அவரவர் கிராமத்துக்குப் போக வேண்டுமே?
சித்திரை தேதி பதினெட்டு, தலைக்கு மேலே நெருப்பைக் கொட்டிக் கொண்டிருந்தான் சூரியன்.
ஸ்ரீ மடத்துக்கு அருகில் பேருந்து நிறுத்தம். நடந்து வந்ததில் தாகமோ தாகம். நகரசபைக் குழாய்களில் உஷ்ணக் காற்றுதான் வந்தது.
பாட்டி நீர் மோர் கொடுப்பதை பார்த்து, அங்கு வந்தார்கள். பாட்டிக்கு கை வலித்தது. பத்து நிமிஷத்தில் நூறு பேருக்கு நீர் மோர் கொடுத்து பழக்கமில்லை. கடைசி சொட்டு வரை தீர்ந்து விட்டது.

”வந்தவர்களில் சில பேருக்கு சாமியைப் பார்த்து விட்டு போக ஆசை...

. ”கூட வந்தவங்க திட்டுவாங்களோ”???

 நூறு பேருக்கும் இதே கவலைதான். எந்த தைரியத்தில் உள்ளே நுழைவது?

ஸ்ரீ மடம் வாசலில் பரபரப்பு. உம்மாச்சி தாத்தா நாலைந்து பண்டிதர்களுடன் வேதாந்த விசாரம் செய்து கொண்டு வெளியில் வந்தார்கள். மெல்ல நடந்தார்கள், எதிர்ப்பக்கம் இருந்த கங்கை கொண்டான் மண்டபத்து ஆஞ்ஜனேயரை தரிசிக்க.
வறுத்தெடுக்கும் தெருப் புழுதியில் நூறு பேரும் விழுந்த வணங்கினார்கள். “எல்லாருக்கும் நீர் மோர் கிடைச்சுதா? என்று கூட்டத்தை பார்த்து கேட்டார்கள் உம்மாச்சி தாத்தா..
.. என்ன ஒரு கருணை...!!!   

நான் படித்த  இந்த கட்டுரையின் தலைப்பு   மேலே சொன்ன  இருவழிச்  சொல்  '' மோரு  போருமோ ''


 

sivan jaykay

unread,
May 1, 2021, 8:13:08 AM5/1/21
to amrith...@googlegroups.com
தேனான  வேமனா   1   -   நங்கநல்லூர்   ஜே  கே   சிவன்  



ஒரு தேசத்தின் முன்னேற்றத்துக்கு  உயிர் நாடி  அதன் கிராமங்கள்.  சில வசதிகளுக்காக  ஏற்பட்டவை  பட்டினங்கள்.  அங்கே  வேலை, உத்யோகம்,  நீதி மன்றம்,  வங்கிகள், பெரிய  பள்ளிக்கூடங்கள்,  கல்லூரிகள்  எல்லாம்  ஒவ்வொன்றாக தோன்றின. இதெல்லாம்  வெள்ளைக்காரர்கள்  வந்த பிறகு வந்த மாற்றங்கள்.  அதற்கு முன்னர் நாடு முழுதுமே  சில்லறை, நடுத்தர  பெரிய க்ராமங்களாகத்தான்  திகழ்ந்தன.  வேண்டிய படிப்பு அங்கேயே  கிடைத்தது.  முக்கிய உத்யோகம்  விளைச்சல், பயிர்த்தொழில்,  விவசாயம்.  அதுவே  சுபிக்ஷத்தின்  அறிகுறி. மற்றது  அதற்கு மேல் தேவைப்பட்ட  சௌகர்யங்கள்.  

 ஒவ்வொரு  வீட்டிலும்  கிராமத்தில் பெரிய  நெல் குதிர்கள்,  களஞ்சியங்கள்  இருக்கும்.  அதில் தான்  அறுவடை, சாகுபடியான  நெல்லை சேமித்து வருஷமுழுதும்  உணவு  எல்லோருக்கும் தாராளமாக  கிடைத்தது.  மின்சாரம்  தேவைப்படவில்லை.  அதனால் நெல்லை உரலில் இடித்து  உமி நீக்கி  அரிசியாக   முறத்தில் புடைத்து  சமைத்தார்கள்.  

நமது நமது தமிழில், பிறமொழிகளில் உள்ள  அற்புத  படைப்புகளை  நான் நெல் களஞ்சியங்களாக  அள்ள  அள்ள  குறையாதவைகளாக கருதி இந்த கட்டுரை எழுதுகிறேன். 

இன்று ஒரு கைப்பிடி அதில் கிடைத்தது .  நமது  இலக்கிய களஞ்சியத்தில்  தமிழ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சமஸ்க்ரிதம், ஆங்கிலம் எல்லாமே  இருக்கும். எல்லாமே  மணிகள்.   ஆகவே  எப்போதாவது  ஒரு  கைப்பிடி  எடுத்து அனுபவிக்கும்  போது  அது தமிழ்  மணியாக த்தான்இருக்கவேண்டும் என்பதே இல்லை. ஆப்ரிக்க  மொழிகளில்  மணிகள் கிடைத்தாலும்  நமது களஞ்சியத்தில் இடம் பெறும். .இன்று தெலுங்கு சிக்கியது.

என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.  ஒவ்வொரு  புது வருஷம் வந்தாலும்   நாம்  ஏதாவது ஒரு தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்  என்றாவது நினைப்போம்.   இன்று  முதல் நமது வயது ஒரு வருஷம் கூடிவிட்டதே. ஏதாவது செய்ய வேண்டாமா?. இன்று முதல் சாம்பார் சாதம் ரெண்டாவது ரவுண்டு சாப்பிடக்  கூடாது. வெளியே  போண்டா, மசால் வடையைக்  கண்ணால்  பார்ப்பதையே கூட   விட்டு  விட  வேண்டும்.  யார் வீட்டிலாவது காபி கொடுத்தால்  இப்போது தானே சாப்பிட்டேன் என்று ஒரு பொய் சொல்லி  சாப்பிடாமல்  இருக்க வேண்டும்.... இது போல்   நிறைய பேர்  ஏதாவது புதிதாக ஒரு  பிரதிஞை எடுத்துக் கொள்வார்கள். இன்றிலிருந்து  மனைவியிடம்  அன்பாக  இருக்கிறேன் என்று முடிவெடுத்து  ரெண்டு நிமிஷம் கூட ஆகி யிருக்காது  எலியும்  பூனையும் ஒன்றை ஒன்று விரட்டிக்  கொண்டிருக்கும்.சிகரெட் பிடிக்கமாட்டேன், சினிமா போக மாட்டேன். காலையில் சீக்கிரம் எழுந்து கோவிலுக்கு போவேன்,  வாட்சப்பில்  தெரிந்து கொண்டபடி  மனைவி சமைத்த சமையல் சரியில்லை என்றாலும்   முக மலர்ச்சியுடன்உண்டு    ''ஆஹா,  இதைப்  போன்ற அமிர்தம் தேவர்களுக்கு கூட  கிடைக்காது'' என்று வாழ்த்த வேண்டும்.  
இதெல்லாம்  சும்மா  ஒரு  உதாரணம்..  இன்னும்   எத்தனை எத்தனையோ....ஆனால்  இவையாவும்  பிரசவ  வைராக்கியம், ஸ்மசான  வைராக்கியம்  போல்  உடனே  மறைந்துவிடும்   நிலைப்பதில்லை,   நிறைவேறுவதில்லை .  புது வருஷங்கள்   தான்  வந்து போகும்.

தெலுங்கு தெரியாவிட்டாலும்அல்பன், அதிகாரம் ... இது மாதிரி கொஞ்சம் தெரிஞ்சாலேபோதும். ... கோடிட்ட இடங்களை நிரப்பிக் கொள்ளலாம்.

இன்று  நான் சொல்லப்போவது  வேமனா என்ற  தெலுங்கு ஞானியின் சில  அற்புத  ரெண்டுவரி  பாடல்கள் பற்றி. அது பிடித்துவிடும் உங்களுக்கு என்பதால்  அடுத்த கட்டுரையில் அந்த வேமனாவைப் பற்றி சில விபரங்கள் தருகிறேன்.  


''அல்பபுத்திவானிகதிகாரமிச்சின
தொட்டவாரினெல்லதொலககொட்டு
செப்புதினெடி குக்கசிறகுதீப்பெருகுனா
விச்வதாபி ராம வினுர வேமா !

ஒருஅரசியல்வாதி எனும்  அல்பனுக்கு  அவன் தரும்  பிரியாணிக்கு ஆசைப்பட்டு ஓட்டுபோட்டு  அதிகாரம் கொடுத் தால் அவனிடமிருந்து என்ன கிடைக்கும். தன்னைப் போன்றோர்க்கே நிழல் கொடுப்பான். அறிவாளிகள், சிறந்தவர்கள் அனுபவஸ்தர்களை மதிக்காமல் விரட்டி யடிப்பான்.   இது எதுபோல தெரியுமா? கரும்பை பக்கத்தில் பார்த்தாலும் அதை ஒதுக்கி விட்டு கிழிந்த செருப்பைக்  கண்டதும் சந்தோஷமாக கடித்து  மெல்லும்  சொறிநாயின்  தன்மை போல  என்று அறிந்து கொள்ளடா வேமா  என்று தனக்குத் தானே  சொல்லிக்கொள்வது போல ஒரு தெலுங்கு பாடல். 

அந்த   அல்பன்  வேறென்னவெல்லாம்  செய்வான் என்பதையும்வேமனா சொல்கிறார்:

''அல்ப டைனவானி கை க திக பாக்யமுகலக
தொட்டவாரிதிட்டிதொலககொட்டு
அல்ப புத்தி வாடதிகுலனெருகுனா
விச்வதாபி ராம வினுர வேமா !

உயர்ந்த படிப்பு, பொறுப்பு, ஞானம் இல்லாத ஒருஅல்பன் திடீர் பணக்காரனாகிறான்.உடனேகர்வம் மண்டைக் கேறி விடுகிறது.   சுலபத்தில் அனைவரையும்  பகைத்துக் கொள்கிறான். பணத்தினால்  எடை  போட்டு  மிகுந்த அறிவாளிகளையும் ஞானிகளையும்   ஏசுவான். அவமதிப்பான் . அவனைப் புகழும் அல்பர்களின் சகவாசமே அவனுக்கு  சுகமளிக் கும். விரைவில் அழிவான் என்று அறிந்துகொள்ளடா வேமா.

அலனுபுடக புட்டி நப்புடேக்ஷயமவுனு
கலனுகாஞ்சு லக்ஷ்மி கனுடலேது
இலனு போகபாக்யமீதீரேகானுரு
விச்வதாபி ராம வினுர வேமா !

கடலைப்பார்க்கிறோம் .பெரிய அலைகள் ஒன்றன் மேல் ஒன்றாக எகிறி  எழும்புகிறது. அவற்றின் மகுடமாக  வெள்ளை நுரை.  பார்க்குமிடமெங்கும்  தோன்றும் அந்த  வெண்ணிற  நுரை  எங்கே போச்சு? அலை திரும்ப  சாதுவாக  கடலை நோக்கி  ஓடும் முன்பே நுரை  காணாமல்  போகிறது.   கனவில்  கார், பங்களா, ப்ளேன் எல்லாம் வாங்குகிறோம். கண் மூடித் தூங்கும் போது கனவு காணும் போது தான் அந்த ஐஸ்வர்யம். கண்ணைத் திறந்தால்  பழைய  ஏழ்மை நிலை தான். கனவில்  கண்ட செல்வம் எங்கே  போச்சு?   .எனவே  தான்  கிடைத்த போது செல்வத்தை நாமும்  உபயோகித்து மற்றோர்க்கும் அளிப்பது அவசியம்.  இலையேல்  அது   நுரை தான், கனவில் வாங்கிய  கார்  தான்  என்று தெரிந்துகொள்ளடா  வேமா.  

அனகனனக ராக மதி சயிலுச்சுனுண்டு
தினக தினகவேமுதீய நுண்டு
சாதனமுன பனுலு சமக்கூறு தரலோன
விச்வதாபி ராம வினுர வேமா !

பாடு, உரக்க பாடு, பாடிக் கொண்டேஇரு. உனக்கு  ராகம்  பாடவரும்.கசப்பானவேப்பிலையைக் கூடகொஞ்சம் கொஞ்சமாகவிடாமல் தினமும் சாப்பிட்டுக்கொண்டேவா. பிறகுசாப்பிடஅதுபழகிவிடும் மட்டுமல்லஇனிக்கவும்ஆரம்பிக்கும். இதுஎதுக்காக சொல்கிறார்வேமனா தெரியுமா? என்னகஷ்டமானகாரியமாக இருந்தாலும்விடாமல்செய்து வந்தால்அது எளிதாகிவிடும். த்யானம், ஜபம், எல்லாம்இதுபோல் தான்.சாதகம்தான் மனதில்லட்சியமாகஇருக்கவேண்டும்என்கிறாரோ?

வேமனா தொடர்வார்  

sivan jaykay

unread,
May 1, 2021, 8:13:08 AM5/1/21
to amrith...@googlegroups.com
பழைய நினைவுகள்.     நங்கநல்லூர்  J K SIVAN 



''கல்யாணம்  டும் டும்  டும்  கல்யாணம்''


நான்  எழுதும்  இந்த கல்யாண  விஷயங்கள்  ஏதோ  பொழுது போக்குக்காக  எழுதப்பட்டதல்ல . மூன்று  தலைமுறைக்கு முன் நடந்தது எவ்வாறு, இப்போது எப்படி  அது  சுருங்கி விட்டது.  காலத்திற்கேற்றவாறு  மாற்றம் என்ற  சால்ஜாப்பு எல்லாவற்றிற்கும் சொல்ல  முடியாது. சிலது அப்போதும் இப்போதும்  எப்போதும்  ஜாக்கிரதையாக  கவனித்து செய்ய  வேண்டிய விஷயங்கள்.  அப்படி செய்யாததால்  நிறைய  மணப்பெண்கள், மாப்பிள்ளைகள்  கருப்பு கோட்டுக்கு பணம் கொடுத்து கோர்ட் வாசலில் நிற்கிறார்கள். எத்தனையோ லக்ஷங்கள் கடன் வாங்கியாவது கல்யாணம் செய்த  பெற்றோர்  ரத்தக் கண்ணீர்  விட்டு வாங்கிய கடன்களை அடைக்கும் முன்பேஅவர்களது பெண்ணோ பிள்ளைக்கோ நடத்திய   கல்யாணம் ரத்து ஆகும் வருத்தமான சூழ்நிலை.  முடிந்தவரை  எதெல்லாம் தவிர்க்க முடியுமோ அதைச் செய்வோம். அப்புறம்  ஈஸ்வரன் விட்ட வழி. 

நமது ஹிந்து கலாச்சாரத்தில் சில மாதங்கள் ரொம்பவும் பிஸியான கல்யாண மாதங்கள். ஒரே நாளில் ரெண்டு மூன்று கல்யாணம். எங்கே எதற்கு போவது?. எதில் பங்கேற்று வாழ்த்தி சாப்பிடுவது? ஒன்றில் தலையைக் காட்டி அழைப்புக்கு'' (ரிசப்ஷன்) சென்று யாருமே கேட்காத இன்னிசையை காதில் வாங்கிக்கொண்டே சாப்பிட்டு, தெரிந்த சில முகங்களிடம் அர்த்தமில்லாமல் சிரித்து விட்டு பையை வாங்கிக்கொண்டு திரும்புவது. மற்றொன்றில் முகூர்த்தம் என்று அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் காலையில் வெறும் இட்டிலி பொங்கல், பூரி, தோசை,கேசரி சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொண்டு சாப்பிடாமல் திரும்புவது. சிலதில் காலையிலேயே ஏதாவது வீட்டில் கொஞ்சம் வயிற்றை நிரப்பிக் கொண்டு அங்கே முகூர்த்தம் முடிந்து போஜனத்தை உண்டு வீடு திரும்புவது வழக்கமா, பழக்கமா, ஏதோ ஒன்று ஆகி விட்டது.  ஒரே  கல்யாண மண்டப  கட்டிடத்தில் மூன்று கல்யாணம்.  நான் சம்பந்தமில்லாத தெரியாத ஏதோ ஒன்றின் ரிசெப்ஷன் சென்று சாப்பிட்டுவிட்டு தெரியாத பெண்ணுக்கு  பரிசு கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து திட்டு வாங்கினேன்.  நான் செல்லவேண்டிய கல்யாணம் மூன்றாவது மாடியில் இருந்த மண்டபத்தில் என்று பத்ரிகையை  சரியாக பார்க்காமல் செய்த தவறு.

கல்யாணம்  என்பது  கொஞ்சம் கூட  அவசரம் இல்லாமல் செய்யவேண்டிய  ஒரு முக்கிய கார்யம்.  அதில் எத்தனை விஷயங்கள் இருக்கிறது.  மறுபடியும்  ஞாபகப் படுத்துகிறேன்.

கல்யாண விஷயத்தில்  பெண் பிள்ளை  பொருத்தம்  பார்ப்பது  என்பது  வெறும்  ஜோசியர்  சமாச்சாரம் மட்டும் இல்லை. இப்போது போல்  டிடெக்ட்டிவ்   ஏஜென்ஸி  எடுத்து  பையன்  பற்றிய  ரகசிய  வேவு  பார்ப்பது போல்  அப்போது  கிடையாது.  
''வது வர குண பரிக்ஷம்'  என்று  சமஸ்க்ரிதத்தில்  சாஸ்திரம் ஒன்று இருக்கிறது.   இதன் மூலம் ஒரு பையன் பெண்ணுக்கு தகுந்தவனா அல்லது பெண்பையனுக்கு ஏற்றவளா என்று சோதிப்பதற்காகத்தான், பெரியவர்கள் சம்பந்தம் பேசுமுன் சகல விபரங்களையும் கேட்டு அறிவார்கள்.  ஒரு வீட்டில்  பெண் பார்க்கிறார்கள்  என்றால்  அந்த கிராமத்தில் அநேகருக்கு இது தெரிந்த விஷயமாக இருக்கும்.   அவர்களில் யாராவது  பெண்ணைப் பற்றி, பையனைப் பற்றி   சகல விஷயங்களையும் அஆற்றங்கரையிலோ, அரசமரத்தடியிலோ,   மதகு வாராவதி மேல்  அமர்ந்தோ கோயில் வாசலிலோ  எல்லாவிஷயமும் சொல்லிவிடுவார்கள்.  குடும்பம்  பற்றிய  சப்  ஜாடா  விஷயமும்  தெரிந்துகொள்ள  இயன்றது.  பொருத்தம்  பார்ப்பது இதற்காகத் தான்.

அதேபோல்  ஒருவீட்டில் பெண்  எடுக்கும்போது  திடு திப் என்று  செல்ல மாட்டார்கள்.  ' வரப்ரசேன, வரவரித்தி கர்மா''  என்ற  முறைப்படி, சரியானவர்களை, அனுபவஸ்தர்களை  தக்க படி  அனுப்பி பெண் வீட்டில்  பெண்ணைப் பற்றி  கல்யாணத்துக்கு இருக்கிறாளா என்று சகல விஷயமும் அறிந்து வருவார்கள்.  

 பெண்வீட்டார் முதலில் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பிள்ளை தேடுதல் வழக்கமானது. இப்போது இதற்கென சில ப்ரோக்கர்கள். அவர்களது நோக்கம் எப்படியாவது எவரையாவது ''பிடிப்பது'' தனக்கு ஆதாயம் பெறுவது. அப்போது  இந்த சுயநலம் இல்லை. அதனால் தான்  டைவர்ஸ் கோர்ட் விவகாரம் இல்லை.  தொங்க தொங்க தாலியோடு  கிழட்டு தம்பதிகளாக வெகுகாலம் ஒருவரை ஒருவர் பிரியாமல் இருந்தார்கள். பத்து குழந்தைகளாவது நிச்சயம் ஒவ்வொரு வீட்டிலும்.

 ''வரி நிஸ்சயம்.''  இந்த சமஸ்க்ரித வாக்கியம் என்ன சொல்கிறது என்றால்,  இப்படி  ஜல்லடை போட்டு தேடி சரியான பெண்ணையோ பிள்ளையையோ தேர்ந்தெடுத்து   நிச்சயம் செய்து கொள்ளுதல்.

 ''மண்டபகரணம்'' -என்றால்  ஒரு நல்ல இடமாக தேர்ந்தெடுத்து   கல்யாணம்  நடத்த இப்போதெல்லாம்   ஒரு வருஷம் முன்பே  அலைய வேண்டி இருக்கிறதே.  கல்யாண மண்டபம் தேடி பிடித்த பிறகு தான்  அதற்கு ஏற்றவாறு  கல்யாண தேதி வைக்கும் அவசியமும் வந்துவிட்டது.   அக்காலத்தில்  பெண் வீட்டிலேயே தெருவை மடக்கி பந்தல் போட்டு விமரிசையாக கல்யாணம் நடக்கும்  என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.  

அநேகர்  வீட்டு கல்யாணம்  அவர்களது  குல தெய்வ ஊரிலேயே   நடந்தது.   சில கோவில்களில் கல்யாணம் செய்ய அனுமதி உண்டு. இடமும் இருக்கும்.

'வது கிரஹ கமனம்''  இது என்னவென்றால்  மறு வீடு என்று  பால் பழம் சாப்பிட  செல்கிறார்களே  அது போல்.  கல்யாண மாப்பிள்ளை  பெண் வீட்டுக்கு செல்வது. அதற்கு முன் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பரிச்சயம் இல்லை. இப்போது படித்து சந்தோஷமாக ''பேத்தல் '' என்று சொல்லி சிரிக்கலாம். தடை இல்லை.

கல்யாண  சடங்குகள்  நடக்கும் முன்பு   'நாந்தி ச்ராத்தம், புண்யாஹவாசனம்' -போன்ற  முன்னோர்கள்,  தேவர்கள், தேவதைகள் ஆசியை பெறும்  சடங்குகளை    ஹோம  குண்டம் வைத்து   ஹோமங்கள்  ப்ரீதிகள்  செய்வது வழக்கம்.  .

வேதங்களில் '' தைல ஹாரித்ர லேபனம்'' என்று மஞ்சள் குங்குமம் தடவி பெண்ணை அலங்கரிப்பது பற்றி வருகிறது. ஒருவிதத்தில் மெஹந்தி, நலங்கு இது தான் இப்போது இதை குறிப்பதாக எடுத்துக் கொள்வோம்.

'மதுபர்க்கம்'' - பிள்ளையை பெண் வீட்டுக்கு அழைத்து பாலும் பழமும் கொடுப்பது. கல்யாண மண்டபத்திலேயே இது ஊஞ்சலில் இப்போது நடைபெறுகிறது. அந்த காலத்தில் 7 நாள் கல்யாணம் நடக்கும். இப்போது கல்யாணம் ஆகு  முன்பே சாயந்திரம் நிச்சயதார்த்தம்,  கல்யாணமானவர்களைப் போல  பெண்ணும் பிள்ளையும் அனைவரையும்   வரவேற்பது,  அவர்கள்  கல்யாணம்  நடந்த பின் சொல்லவேண்டிய  வாழ்த்தை முன்பாகவே சொல்வது.   கல்யாணமாகாத ''தம்பதிகளோடு'' போட்டோ  எடுப்பது,   இதெல்லாம் முடிந்த பின் அடுத்தநாள் காலை  உண்மையாகவே  கல்யாணம் . பண்ணிக்கொள்வது,   சாப்பிட்டவுடன்,   கை   ஈரம் காயும் முன்பே  மத்தியானம்  கல்யாண  ஹாலை , சாத்திரத்தை  இடத்தை காலி பண்ணுவது.  ஏதோ ஒரு மெஷின் மாதிரி  வேலைகள் நடக்கிறது.  

மாப்பிள்ளையை விஷ்ணுவாக பெண்ணை லக்ஷ்மிதேவியாக பாவித்து உபசரிப்பது வேதங்களில் சொல்லப்படுகிறது. இப்போது யாரேனும்  ஒரு நிமிஷம் இதுபோல் நினைக்கிறார்களா?

இன்னும்  கொஞ்சம் சொல்கிறேன்.


sivan jaykay

unread,
May 1, 2021, 8:13:28 AM5/1/21
to amrith...@googlegroups.com
ஒரு அற்புத  ஞானி -     நங்கநல்லூர்     J.K. SIVAN

 
சேஷாத்ரி ஸ்வாமிகள்   ஒரு ப்ரம்ம  ஞானி என்பதை அநேகர்  உணராத காலம்.  ப்ரம்மஞானியை எளிதில் பைத்தியம் என்று சொல்லிவிடலாம்.  ரெண்டு பேருமே  உலக ஸ்மரணை   இல்லாதவர்கள்,  உடை, உணவு, உறங்க  திண்ணை பற்றிய கவலை இல்லாதவர்கள்.  யாருடனும் நெருங்கி பழகதவர்கள்.  ஏதோ சிந்தனையாக எப்போதும் இருப்பவர்கள்.  தன்னைத்தானே  ரசித்து அனுபவிப்பவர்கள்.  

அப்படி இருந்தும்  பலர்   ஸ்வாமிகளைப்பற்றி  அறிந்த  அவரது பக்தர்கள்.  ஸ்வாமிகளின்  எண்ணற்ற பக்தர்களில் சிவப்பிரகாச முதலியார் என்பவரும்  ஒருவர்.

 ஒருநாள் விடிகாலையிலேயே ஸ்வாமிகளை தரிசிக்க எண்ணம் வந்ததால்  முதலியார்  ஸ்வாமிகளைத் தேடி  ஓடியவர்   சடைச்சி வீட்டு திண்ணையில்  ஸ்வாமிகள் உட்கார்ந்து கொண்டு  தனிமையில் ஏதோ யோசித்துக் கொண்டிருந்ததை ப்  பார்த்தார்.

ஸ்வாமிகள் எதிரே  கீழே  விழுந்து வணங்கி எழுந்த முதலியாரை நோக்கி    '' வா,  உனக்கு தான் காத்திண்டிருந்தேன். உனக்கு இன்னிக்கி ஒரு மந்திரம் கற்றுத் தரேன். ''

''  சரிங்க   சாமி  ''

 ''பலா அதிபலா'' மந்திரம் தெரியுமா உனக்கு ?

''தெரியாது சுவாமி.  அப்படின்னா  என்ன மந்திரம் சாமி ?''

''பலா-அதிபலா'  என்கிற  ' மந்திரம் ஸாவித்ரீ உபநிஷத்தில் காயத்ரி மந்திரங்களுடன் கலந்து வெகு ரஹஸ்யமாக நூறு எழுத்துகளுடன் கம்பீரமாக வைக்கப் பட்டுள்ளது.  அதற்கு யார் ரிஷி, எது சந்தஸ் தேவதை என்று விவரமாக இருக்கிறது. இதை ஸதாக்ஷரி, க்ஷுச்சதி, என்று மந்த்ர சாஸ்திரத்தில் பரிபாஷையாக சொல்வதுண்டு. . ஒவ்வொரு மந்திரத்தையும் அக்ஷர சுத்தமாக பலுக்கி சொல்லணும். ராமருக்கு லட்சுமணனுக்கு விஸ்வாமித்ரர் சொல்லிக்கொடுத்தது. இதெல்லாம்  உன்னாலே  புரிஞ்சுக்க முடியாது என்கிறதாலே  நான்  உனக்கு  வேறே மாதிரி இதை சொல்லித்தரேன்.


''சாமி  சாமி  நான்  அதிர்ஷ்டக்காரனுங்க . சொல்லிக்கொடுங்க''

''ஓம் சிவ சிவ. ஓம் ராம ராம'' இதை இப்படி நீ விடாம சொல்லு.

ஸ்வாமிகள்    முதலியாருக்கு  ஸதாக்ஷரி உச்சரிப்பு கடினம், சிரமமாக இருக்கும்   என்று எண்ணியிருப்பாரோ? முதலியாரால் அனுஷ்டிப்பது இயலாத காரியம் என்று தோன்றியதோ? அதனால் தான் சதாக்ஷரியை உபதேசிக்க வில்லையோ? எனவே தான் எளிமைப்படுத்தி மேலே சொன்ன நாமங்களை உபதேசித்தாரோ?

அந்த  உயர்ந்த  ஸமஸ்க்ரித  மந்திரத்துக்கு  ஈடானது இந்த சிவ-ராம நாம மந்திரம் என்று அறிந்து தான்  முதலியாரை  உத்தேசித்து  பூடகமாக   நமக்கும் இதை உபதேசித்தாரோ?

குருவின் வாயிலிருந்து வந்த எதுவானாலும், சிஷ்யர்கள் பக்தியோடு அதை ஏற்று அனுஷ்டிக்க வேண்டும்.  பலாஅ திபலா  மந்திரத்துக்கு  ஈடானது  என்று   ஸ்வாமிகள் சொல்லியதால் நாமும் இந்த சுலப மந்திரங்களை விடாமல் சொல்லப் பழக வேண்டும். எளிதில் கிடைக்கும் அற்புத விஷயங்களை நாம் விட்டுவிடுவது துரதிர்ஷ்டவசமாக  நமக்கு வழக்கமல்லவா?


இன்னொரு பக்தர்  சீதாராமய்யர்.  திருவண்ணாமலை வாசி. அடிக்கடி  ஸ்வாமிகளை வந்து வணங்குபவர்.  

ஒருநாள்  ''சுவாமி,   இருட்டில் போகும்போது பயமாக இருக்கிறது எங்கேயாவது பாம்பு, தேள், பூரான் விஷ ஜந்துக்கள் இருந்து தொல்லை கொடுக்குமோ  என்ற  பயமாக இருக்கிறது  எனக்கு  ஏதாவது ஒரு மந்திரம் சொல்லிக்கொடுங்கோ''    என்று  சீதாராமய்யர் ஸ்வாமிகளிடம் அங்கலாய்த்தார்.

''ஓஹோ   பாம்பு  பயமோ.   ஆஹா  அதுக்கு ஒரு சுலப மந்திரம் இருக்கே.  இதோ   இந்த மந்திரத்தை சொல்லிண்டே போ.

''அபஸர்ப்ப ஸர்ப்ப பத்ரந்தே, தூரம் கச்ச மஹாயஸா
ஜனமேஜயஸ்ய யஞாந்தே அஸ்தீக வசனம் ஸ்மர''

இதை மூணு தரம் காலை மாலை நேரத்திலே   சொல்லு. பாம்பு தேள் கிட்டேயே வராது. வந்தாத்தானே உன்னை  அப்புறம்   கடிக்க முடியும். ''

இந்த மந்திரம் சந்தியாவந்தனம் காயத்ரி மந்திரத்தில், வருகிறது.. மஹா பாரதத்தில் ஜனமேஜயன் பண்ற சர்ப்பயாகத்தில் அஸ்தீகர் எனும் ரிஷி சொல்வதாக வியாசர் எழுதியது.  தினமும் சந்தியாவந்தனம் பண்ணுபவர்கள் அறிந்தது. 

sivan jaykay

unread,
May 1, 2021, 8:14:51 AM5/1/21
to amrith...@googlegroups.com
பட்டினத்தார்    -- நங்கநல்லூர்   J .K. SIVAN

பட்டினத்தார்  ஒரு சிறந்த வேதாந்தி.  வாழ்க்கையின்  அநித்யத்தை   வசதி இருக்கும்போதே  புரிந்து  கொண்டு வீடு வாசல் சொத்து, சுற்றம் அனைத்தையும் துறந்தவர்.   இறைவனே அவருக்கு  காதறுந்த  ஊசியும் கடைவழி வாராது என்று உணர்த்திய  பாக்கியசாலி.   ஆஹா  அவர் தமிழ் தான் எத்துணை எளிதானது. படித்தால்  யாருக்குமே  புரியும். இன்று ஒரு சில தத்துவப் பாடல்களை  அளிக்கிறேன்.   

''இருப்பதுபொய் போவதுமெயென்றெண்ணிநெஞ்சே
யொருத்தருக்குந்  தீங்கினை நீ  யுன்னாதே - பருத்தொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்மதென்று தாமி  
ருக்குந்தான் ''  

எத்தனை பொய் , பித்தலாட்டம், ஏமாற்று  வித்தை, இதெல்லாம் செய்து,  கூட்டணி சேர்ந்து  காசு தேடி சொத்து சேர்த்து சுகமான வாழ்வை வாழும் தொந்தி பெருத்த  தனவான்களே. கொஞ்சம் இதை கேளுங்கள். ஒரு நிமிஷம் யோசியுங்கள்.  ''நீங்கள்  காண்பது கனவு.  இந்த உலக வாழ்வு  தாமரை இலைத்  தண்ணீர்.  சாஸ்வதம்  அற்றது.   இந்த உலகை விட்டு எதையும் கொண்டு போகாமல் வெளியேறப்போவது மட்டும் தான் நிச்சயம்.ஆகவே எவரையும் துன்புறுத்தாதே. தவறு  தீமை, தீங்கு எதுவும் நினைக்காதே. நீ  தடவிக் கொடுத்துக் கொண்டு ஊஞ்சலில் ஆடுகிறாயே , தம்பி,  உன் ஆசைத் தொந்தி  நீ  நினைத்துக் கொண்டிருப்பது போல்  உனதல்லவே அல்ல.  அதோ  எதிரில் தெரிகிறதே   இடுகாடு, அதில் உலவுகின்றதே, நாய்கள், நரிகள், கண்ணுக்குத்  தெரியாத பேய் பிசாசுகள்,  மேலே வட்டமிடுகிறதே உன்னைப் பார்த்தவாறே   ஒரு சில கழுகுகள் அவை எல்லாவற்றிற்கும்  நன்றாகவே தெரியும்  ''ஒரு நல்ல கொழுத்த தொந்தி நமக்கு நிச்சயம் ஆகாரமாக ஒருநாள் வரப்போகிறது. அது வரை  நன்றாக கொழுக்கட்டும்.''  பசியைப் பொறுத்துக்கொண்டு  காத்திருப்போம்.....என்று 
   
''எந்  தொழிலைச்  செய்தாலு  மே தவத்தைபட்டாலு
முத்தர் மனமிருக்கு மோனத்தே - வித்தகமாய்க்
காதி  விளையாடி யிரு கை வீசி வந்தாலுந்
தாதி மன நீர்க்குடத்தேதான் ''   

இந்த கிராமத்தில் கிழக்கே ஒரு ஆறு. அதன் கரையில் தினமும்  கிராமப் பெண்கள் குளித்து நீராடி, துணி பிழிந்து,  குடத்தை பளபளவென்று ஆற்றுமணலில் தேய்த்து  கழுவி நல்ல  குடிநீர் பிடித்து நிரப்பி  ஒன்றன் மேல்  குடங்கள் அவர்கள் தலையில்  இடம் பெற்றுவிட்டன.   
என்னென்னவோ ஊர் கதை பேசுகிறார்களே. வாய் ஓயாமல் பேசினாலும், கைகள் அதற்கேற்ப  அபிநயம் பிடித்தாலும், சிரித்தாலும், மேடு பள்ளம்  அசைந்து நடந்தாலும் அவர்கள் மனம் நினைவு, முழு கவனம்,  பூராவும் தலையில் சும்மாட்டில் இருக்கும் நீர் குடத்தின் மீது தான். அசையாமல்    கீழே விழாமல், அதில் நிறைந்திருக்கும் நீர்  சிந்தாமல்  வீடு போய் சேரவேண்டுமே  என்பதில் தான்  கவனம் பூரா இருக்கும்.  
 அது போலவே தான் முக்தர்களும். என்கிறார்  பட்டினத்தார்.  எப்படி என்றால்,  என்ன பணியில் வேண்டுமானாலும் நாம் ஈடுபட்டிருக்கலாம். அந்த பணி  காரணமாக பல விதமான அவஸ்தைகள் பட நேரிடலாம்.  இருந்தாலும் நல்லோர்,  சான்றோர்,முக்தி  நாடுவோர் மனது எப்போதும் மற்றதெல்லாம் மறந்து இறைவன் பால்  மட்டுமே சேர்ந்திருக்கும் . 

''மாலைப்பொழுதி னறுமஞ்சளரைத்தே குளித்து
வேலை மினக்கிட் டு விழித்திருந்து - சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்ற பிள்ளை
பித்தானால்  என் செய்வாள் பின்.    

'' கிருஷ்ணா, எனக்கு ஒரு தங்கமான பிள்ளை வேண்டும்  என்று ஒரு  தாய்   வேண்டினாள்.  தினமும்  மாலை  வேளையில்  இதற்காகவே பளபளவென்று  ஒளிவீசும்  நறுமணம் மிக்க மஞ்சளை  தானே அரைத்து பூசிக்கொண்டு  குளித்தாள்.  இரவும் பகலும் விழித்திருந்தாள். அவள் பட்ட  பாடு வீண்  போகவில்லை.ஒரு நாள் கருத்தரித்தாள் பத்து மாதம் காத்திருந்து ஈன்றாள்.  நான் பிறந்ததும்  எனக்கு ப் பெயரிட்டாள். ஊர் கூட்டி கொண்டாடினாள் .  வளர்த்தாள் . இதோ அவள் பெற்ற  நான் பித்தனாக இறைவனை மட்டுமே,   திருவெண் காடனை  மட்டுமே நாடி எல்லாம் துறந்து சொல்கிறேனே . அவள் கனவு என்னவானது??  ஆவென்று வாயைப் பிளந்து என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாளே. சிரிப்பு தான் வருகுதய்யா..


''நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியந் தேடி
      நலனொன்று மறியாத  நாரியரைக்கூடிப்
பூப்பிளக்கப்  பொய்யுரைத்துப் புற்றீசல்போலப்
      புலபுலெனக்கலகலெனப் புதல்வர்களைப்பெறுவீர்
காப்பதற்கும்வகையறியீர்கைவிடவுமாட்டீர்
      கவர்பிளந்தமரத்துளையிற்கானுழைத்துக்கொண்டீர்
ஆப்பதனையசைத்துவிட்டகுரங்கதனைப்போல
      அகப்பட்டீர்கிடந்துழலவகப்பட்டீரே''    

 ஆஹா இந்த உலகத்தில் நாம்  வாழும்  வாழ்க்கை பற்றி மொபைல் காமிராவில் செல்ஃபீ  படம் எடுப்பது போல் அல்லவா பட்டினத்தார்  படம் பிடித்து காட்டுகிறார்!  
ஒன்றா இரண்டா, இரவு பகல் என்று பாராமல் எப்போதும் பொய், பொய்,  பொய்,  மட்டுமே பேசி எல்லோரையும் ஏமாற்றி  காசு சேர்த்து, கட்டிடம் கட்டி, கார் வாங்கி, நாய்  வளர்த்து,  ஒன்றுமறியாத  அழகான மனைவியை, ( மனைவிகளை)   மணந்து,   இந்த பூமியே ரெண்டாக பிளந்துபோகும் அளவு பொய்களைச்   சொல்லி,  நிறைய புற்றீசல்  போல்,  மழைக்கால புழுக்கள் போல்  எண்ணற்ற குழந்தைகளைப்  பெற்று அவர்களை எப்படி வளர்ப்பது என்பது தெரியாமல், விழித்து, அவர்களை நல்ல படியாக  பாதுகாக்கவும் தெரியாமல்,  வெளியே விடவும்  முடியாமல், அங்கு   மிங்குமாக அலைந்து நீ  அவஸ்தைப்  படுவதை பார்க்கும்போது  யாரோ ஒருவன்  மரத்தை பாதி பிளந்து அது மீண்டும் ஒன்று  சேராமல்  இருப்பதற்காக  அதன்  பிளவின் நடுவில் ஒரு  ஆப்பு செருகி வைத்து விட்டுப்  போயிருந்த சமயம்  அந்தப்பக்கம் வந்த  ஒரு முட்டாள்  குரங்கு அந்த மரத்தின் மேல் அமர்ந்து அதன் வால்  அந்த பிளவில் நுழைந்திருப்பதை கவனியாமல்,  மரப்பிளவில்  இருந்த  ஆப்பை  வெளியே  பிடுங்கி விட்டது. மரப்பிளவு அடுத்த கணமே,  மீண்டும் ஒன்று சேர்ந்து, மரத்தின் இடுக்கில் வால் மாட்டிக்கொண்டு விட்டதால் தவிக்கும் குரங்கு  வேறு யாரோ இல்லை,  நீ   தான் ஐயா '  'என்கிறார்  பட்டினத்தார்.  இதைக்காட்டிலும் எப்படி  நாமாக வரவழைத்துக்  கொண்டு தவிக்கும்  உலகவாழ்க்கையைப்  பற்றி சொல்லமுடியும். 

sivan jaykay

unread,
May 1, 2021, 8:14:51 AM5/1/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்   -  நங்கநல்லூர்  J K  SIVAN 

''நிர்குண உபாசனை ''


இன்றும்  எனக்கு  ஒரு  ஆனந்தமான அனுபவம்.  மஹா பெரியவா படமாக  என் முன்  அபயஹஸ்தத் தோடு  அருளாசி வழங்கி கொண்டிருக்கிறார். எத்தனை ஆயிரம் முறை அவரைப் பார்த்துக்கொண்டே   இருக்கிறேன். கணக்கில் அடங்காது. எண்ணிக்கை இல்லை.  ஒரு விஷயத்தை, இதுவரை  நான் அறியாததை என் நண்பர்  ஸ்ரீ ராம் எனும்  பெரியவா பக்தர்  எனக்குக்  காட்டிக்கொடுத்ததை  என்றும் மறவேன்.  நான் பார்த்துக்கொண்டிருக்கும்  மகா பெரியவா படத்தில்  அவர் முகம் அருகே வெள்ளையாக மங்கலாக  ஏதோ சுவரோ, வான்வெளியோ, ஏதோ  தெரிகிறது. அதை இடை இடையே  செடிகொடிகள்  மறைத்திருப்பது போல் தெரிகிறது. 

''அதை உற்றுப்பாருங்கோ  என்ன தெரிகிறது ? -- ஸ்ரீராம்.   
உற்றுப்பார்த்தேன். 
''ஒன்றுமே தெரியவில்லையே ஸ்ரீ ராம்''
''இப்போ பாருங்கோ,  பக்கமா சாய்ந்துகொண்டு  தாடி மீசையோடு  பெரியவா தம்பி  சிவன்சார் தெரிகிறாரா?????''
''  ஆமாம்  சார்..என்றேன்...  (படம்  இணைத்திருக்கிறேன்.  சிவன் சார் முகம்  கலரில்  மார்க்  பண்ணி இருக்கிறது)
இது   ஒரு கண்முன் இருந்தும் தெரியாத சமாச்சாரம்.  மஹா பெரியவா விஷயங்கள் எல்லாமே அதுபோல் தான். எதையும் மேலெழுந்தவாறு நாம்  கவனிக்கிறோம், பார்க்கிறோம். ஊன்றி கவனிக்கும் சக்தி இருந்தும் உபயோகிப்பதில்லை.
பரமேஸ்வரன் போல் நமக்கு  நெற்றிக்கண் இல்லையென்றாலும் ஞானக்கண் என்று ஒன்று உள்ளே இருக்கிறது. அதை நாம் எவருமே யூஸ் பண்ணுவதில்லை.  

இதோ மஹா பெரியவா சொல்வதைக் கேளுங்கள்: 

''இதோ எனக்கு முன்னால் வாழைப்பழச் சீப்பு வச்சிருக்கு.   "இதைப் பார், மஞ்சளாக இருக்கிறது" என்று நான் சொன்னால் இது மஞ்சள் தான்  என  பார்க்கிறீர்கள்.  அதற்குமேல் மனஸில் அதைப்பற்றி எந்தப் பிரதி சிந்தனையும் ( reaction ) எழுவதில்லை. மாறாக, இதே வாழைப்பழத்தைக் காட்டி, "இதோ பார், இது சிவப்பாக  இருக்கு ''  என  நான்  சொன்னால் நீங்கள் மனஸில் ஒர் ஆட்சேப உணர்ச்சியோடு  அதை பார்ப்பீர்கள்.   இதை  மஞ்சள்,   சிவப்பு என்றோ  ஒன்றும்  நான் சொல்லாமல், "இந்த வாழைப்பழம் சிவப்பாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னால் அப்போது உங்கள் மனஸில் ஒருவிதமான பிரதி உணர்ச்சி உண்டாகிறது.    மஞ்சள் பழத்தையே சிவப்பாக இருப்பதுபோல் உங்கள் மனஸில் கற்பனை செய்து பார்க்கிறீர்கள். மனஸை ஒருமுகப்படுத்தினால் அப்படி பாவிக்கவும் முடிகிறது.

உபாஸனை  என்பது  இப்படி தான். பரம்பொருள் இப்படி இப்படி இருப்பதாக பாவியுங்கள் என்று பலவிதமான குணங்களைக் கொண்ட பல மூர்த்திகளைக் காட்டிக் கொடுப்பது  தான்  உபாஸனா மார்க்கம். வாழைப்பழம் உண்மையில் மஞ்சள் நிறம் என்பதுபோல் பரமாத்மாவின் உண்மையான குணம் என்ன? அது குணம் கடந்தது.   

பரமாத்மா எல்லா குணமும் கடந்த வஸ்து  என்றால்  அப்புறம்  ஜனங்களின் மனசு அதில் மேற்கொண்டு நிற்காது.   இது நமக்குப் புரிபடாத வஸ்து  என்று  நகர்வார்கள்.   வாழைப்பழத்தைச் சிவப்பு என்ற போது மனசு ஆட்சேபித்ததுபோல் ஒரு சிலையைக் காட்டி இதுதான் பரமாத்மா என்றாலும், அதை எவராலும் ஏற்க முடியாது. 

'இது ஒரு கல் பொம்மை அல்லவா? இது எப்படி உலகத்தை நடுத்துகிற பரமாத்ம சக்தி ஆகும்?' என்று  கேட்க தோன்றும். ஆனால், ஒரு சிலையைக் காட்டி, "இதைப் பரமாத்மா என்று பாவியுங்கள்" என்றால் அப்படி பாவிக்க முடிவதாகத் தோன்றும்- வாழைப்பழத்தைச் சிவப்பாகக் கற்பனை செய்வதுபோல். ஆனால் சிவப்பு என்றால் என்னவென்று மனசுக்குத் தெரிவது  போல் பரமாத்ம லக்ஷணம்  நமக்குத்  தெரியாதே! 

அதனால்  கடவுள் விக்ரஹத்தை   'ஏதோ பெரிய வஸ்து என்று  கொஞ்சம்  எண்ணிப் பார்க்கலாமே தவிர, அதிலேயே ஆழ ஊன்றி நிற்க முடியாது. 

தெரிந்த விஷயங்களில்தான் மனசு பிடிமானத்தோடு நிற்கும். எனவே ஒர் காருண்யமும் சௌந்தரியமும் வழிகிற மாதிரி ஸ்திரீ ரூபத்தில் விக்கிரகம் செய்து,     "இதில் பரமாத்மா தாயாராக வந்திருக்கிறார் என்று பாவனை பண்ணு" என்றால், மனசு அதை நன்றாகக்   க்ரஹித்துக்கொண்டு அப்படியே  அதில்  ஆழ்ந்து ஈடுபட முடிகிறது.

குணமற்ற பரமாத்ம வஸ்துவிலிருந்துதான் அனந்த கல்யாண  குணங்களும்  உண்டாகிறது.  ரூபமற்ற பரமாத்மாவிட மிருந்துதான் சகல உருவங்களும் தோன்றின.  அந்தந்த குணத்துக்கு அநுகூலமான ரூபம், முத்திரை, ஆயுதம் முதலியவற் றோடு திவ்ய மூர்த்திகளைக் காட்டினால் அவற்றில் மனசு ஈடுபடுகிறது.  புரியாத பரமாத்ம தத்துவத்தை நமக்குப் புரிகிற விதத்தில் உபாஸிக்க முடிகிறது.

சகலமும்  சர்வமும்  ஆன பரமாத்மா, அவரை  நாம்  எந்த ரூபத்தில் உபாஸித்தாலும்  அந்த உருவத்தில்  அருளுகிறார்.  படிப்படியாக நம் மனநிலையை உயர்த்துகிறார். 
கடைசியில் மனஸே இல்லாத, மனஸைக் கடந்த  ஒரு  நிலையிலேயே குணமும் ரூபமும் கடந்த  நிர்குண பரமாத்மாவை உள்ளபடி அநுபவிக்க நம்மால் முடியும்.  ஆரம்பத்தில் நமக்குப் பலவித மனோ விகாரங்கள் இருப்பதால்  "பரமாத்மா எல்லாம் கடந்தவர்"   என்பதில்  பிடிப்பு இல்லை.  ரூபத்தில், குணத்தில் அவரை உபாஸித்தால், அது முற்றிய நிலையில், எல்லாவற்றுக்கும் அதீதமான பரமாத்மாவை உள்ளபடியே   நம்மால்  அநுபவிக்க முடியும் . மஞ்சள் பழத்தை மஞ்சளாகவே பார்க்கிறபோது மனஸுக்கு வேலை இல்லை .   மனசுக்கு வேலை கொடுத்து அதை சிந்திக்க வைத்தால்  தான்  இதெல்லாம் புரியும். 

 "உபாஸனையின்போது, பரமாத்மாவை   இந்த இந்த ரூபத்தில், இப்படி இப்படி  உபாசித்தால், மந்திரம்  ஸ்லோகம் எல்லாம் உச்சரித்தால், பூஜித்தால்  இப்படி இப்படி பாவனை செய்தால் அதற்கு இன்னின்ன மந்திரம் ஜபிக்க வேண்டும். இன்னின்ன ஆசாரம் வேண்டும். இன்னின்ன பூஜா பத்ததி வேண்டும்" என்று விதிகள் இருக்கின்றன. பாவனை போய், அவரை உள்ளவாறு அறிகிறபோது எந்த விதியும் இல்லை, செயலும் இல்லை. சரீரம் மனசு இவற்றின் காரியமாகிற உபாஸனை இப்போதுதான் அநுபவமாகிற ஞானம் என்பதாகப் பழுத்து விடுகிறது.

இந்த ஞானம் நமக்கு ஆரம்பத்திலேயே வந்து விட்டதாக பாவனை செய்துவிடக்கூடாது. உபாஸனையே பெரும் பாலான ஜனங்களுக்கு ஞானம் பெற உபயமாகும்,   படிப்படியாக  ஏறி  தான்  மேலே  போகவேண்டும்.   திவ்ய மூர்த்திகள் நாமாகச் செய்கிற கல்பிதமான பாவனை மட்டுமல்ல. பரமாத்மாவே மகான்களுக்கும் ரிஷிகளுக்கும் இந்த ரூபங்கள், மந்திரங்கள், விதிகள் எல்லாவற்றையும் அநுக்ரஹித்  திருக்கிறார். பரமாத்மா வாஸ்தவமாகவே இப்படிப்பட்ட மூர்த்திகளாகி, அவற்றை அடைகிற மந்திர, யந்திர, தந்திரங்களாகவும் ஆகியிருக்கிறார். எனவே, உபாஸனை முறையை நம்பிக்கையுடன் சிரத்தையுடன் பின்பற்றினால் நிச்சயம் ஞானத்துக்கு வழி உண்டாகும்.

ஞானம் வருவதும் வராததும் இருக்கட்டும். இப்போது உபாஸிக்கிறபோது அன்போடு அதைச் செய்யவேண்டும். இந்த அன்பே, பக்தியே நமக்கு பெரிய நிறைவைத் தரும். அதனால் பகவானின் எல்லையில்லாத அன்பையும் அனுபவிப்போம். அதுவே பெரிய ஆனந்தம்.  இதற்கப்புறம் அவர் இஷ்டப்பட்டு அத்வைத ஞானம்  நமக்கு  தரட்டும்; தராமல்தான் இருக்கட்டும். அதைப்பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம். நாம் செய்யக்கூடியது பக்திதான். இதற்குப் பிரதியாகப் பெறக்கூடிய பகவதநுக்ரஹ  ஆனந்தமே நமக்குப் போதும்.''

sivan jaykay

unread,
May 1, 2021, 8:15:06 AM5/1/21
to amrith...@googlegroups.com
'' முதலை வாய் மதலை''  --  நங்கநல்லூர் J K SIVAN --

 என் நெருங்கின உறவினர்  திருப்பூரில்  பல வருஷங்களாக வசிப்பவர்கள்.  அங்கே  செல்லும்போது  எனக்கு கிடைத்த அரிய  பாக்யம்   அருகே  இருக்கும்  அவிநாசி சிவன் கோவிலுக்கு செல்வது.  அவிநாசி திருப்பூர்  எல்லாம் கொங்கு தேசம். தமிழ் கொஞ்சும்.  அவிநாசிக்கு  திருப்புக் கோழியூர் என்று முற்காலத்தில் பெயர். கொச்சி போகும் வழி.

அவிநாசிக்கு ஒரு புகழ். '' காசியில் வாசி அவிநாசி '' என்று.  வாராணாசி , காசி போய்  விஸ்வநாதனை வழி படுவதில் பாதி பலன் அவிநாசியில் அவிநாசி லிங்கத்தை  தரிசனம் செய்தால் என்பார்கள். விநாசம் என்றால் அழிவு என்று அர்த்தம். அவிநாசி என்றால் நிரந்தரம்,சாஸ்வதமான பாப விநாசம் :  மோக்ஷம். சுந்தரபாண்டியன் கட்டிய  ஆயிர வருஷ ஆலயம்.

சுற்றுவட்டார  பக்தர்களுக்கு  இது கருணையாத்தாள்  கோவில். தக்ஷிண வாரணாசி.  எல்லா இடத்திலும் சிவனுக்கு இடப்புறம் உள்ள அம்பாள் இங்கே வடக்கு பக்க சக்தி.

இந்த கோவிலுக்கு சுந்தரர்  வந்து சேர்ந்த சமயம்  எங்கும் ஒரே கூக்குரல்,  ஜனங்கள் சோகத்துடன் அழுகுரல். மறுபுறம் மேளதாளத்துடன் ஏதோ விசேஷம். என்ன இது ? என்ன நடக்கிறது இங்கே?  ஒருபக்கம் சோகம், அழுகுரல், இன்னொருபக்கம்  உற்சாகம்.

''யாருக்கு என்ன ஆயிற்று  இங்கே ?''  என்று ஆரூரர்  அருகில்  இருந்தவரைக்  கேட்கிறார்.  எதிரே  குளம். அதன் கரையில்  சில  பிராமண அக்ரஹார வீடுகள். அங்கே தான்  ஏராளமாக கூட்டம். மேலே சொன்ன சப்தம். 

காதில் விழுந்த  சேதியின்   சாராம்சம் என்னவென்றால்  ரெண்டு பிரம்மச்சாரி பிள்ளைகள்  அந்த பிராமண குடும்பங்களில் நண்பர்கள்.    குளத்தில் இறங்கி குளிக்கும்போது ஒருவனை  ஒரு முதலை விழுங்கி விட்டது. அந்த குளத்தில் முதலை இருப்பது தெரியாது.  ரெண்டு பையன்களில் ஒருவன் இவ்வாறு முதலை விழுங்கி மரணமடைய , மற்றொரு பையனுக்கு அன்று  உபநயனம்.  ஒரே பிள்ளை,  என்பதால் அந்த வீட்டில்  உற்சாகமாக கொண்டாடுகிறார்கள் பெற்றோர் சுற்றத்தார்.  பையனை இழந்த  இன்னொரு வீட்டில்  சோகம்.   ஏழு எட்டு வயது  பையன்கள்  அவர்கள்.   நல்ல நண்பர்கள்.  மற்றவன் உயிரோடு இருந்தால் இன்று அவனுக்கும் கோலாகலமாக உபநயனம் நடந்திருக்கும்.  விதி என்ன தலையில் எழுதியிருக்கிறதோ அதை மீற முடியுமா?

இந்த விஷயம்  சுந்தரரை  உலுக்கி விட்டது. அவர் மனது கரைந்தது. அந்த முதலை விழுங்கிய பையன் மீது பரிதாபம் ஏற்பட்டது. அவருக்கு எந்த உணர்ச்சியும்  சிவன்  சம்பந்தப்பட்டது தானே.  சுந்தரர் அந்த இறந்த பையன் வீட்டு வாசலில் வந்து நின்றார்.  கண்களில் கண்ணீர்.  உள்ளே இருந்து  அவன் பெற்றோர் மற்றும் உறவினர் வந்து சுந்தரரை வணங்கினார்கள்.  சுந்தரர் சிலையாக நின்றார். கண்களை மூடினார்.

''அவிநாசி லிங்கேஸ்வரா, உன்னை தரிசிக்க வந்த எனக்கு இந்த துன்பச் சுமை வேறா? நீ அப்படியாவது அந்த முதலை வயிற்று  பையனை திரும்ப உயிரோடு கொண்டுவந்து தருவாயா?''  


வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ
ஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே
பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணிஎன் னைக்கிறி செய்ததே.

எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்கால்
கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பார்இலை
பொங்கா டரவா புக்கொளி யூரவி நாசியே
எங்கோ னேஉனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே.

 உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.

'' பரமேஸ்வரா,   நீ  அந்த யமனிடம்  சொல்லி முதலையின் வாய் திறந்து அந்த பிள்ளையை ஜாக்கிரதையாக உயிரோடு தரச்சொல்லு ''

அவிநாசி லிங்கேஸ்வரன்  என்ன செவிடா?  சுந்தரன் தமிழ் இனிக்காதா. அந்த இனிப்பு  முதலையின் வாயை ஆ வென்று பிளக்க செய்யாதா?    உள்ளே இருந்த பையன் ஜம்மென்று வெளியே குதிக்க மாட்டானா?  அப்பா அம்மாவிடம் ஓடமாட்டானா?''   முதலைவாய் மதலை பிழைத்தது  மேலே சொன்ன ஒரு பதிகத்தால்.

உபநயன வீட்டாரை விட இங்கே இந்த அதிசயப்பையன் வீட்டில் கோலாகலம். அவன் பெற்றோருக்கு அவனோடு சேர்ந்து சுந்தரர் காலில் விழுந்து உயிர்கொடுத்த அந்த சிவனடியாரை வணங்குகிறார்கள். இந்த அதிசயம் விரைவில் எங்கும் செயதியாக  பரவுகிறது.

அந்த பையனை கை பிடித்து சுந்தரர்  அவிநாசி லிங்கேஸ்வரன் சந்திக்கு அழைத்து சென்று நன்றி தெரிவிக்கிறார். தானே அவனுக்கு பூணல் அணிவித்து உபநயனம் அவனுக்கும் நடைபெறுகிறது.

sivan jaykay

unread,
May 1, 2021, 8:15:06 AM5/1/21
to amrith...@googlegroups.com
பழைய நினைவுகள்.     நங்கநல்லூர்  J K SIVAN

மணப்பெண் தலையில் நுகத்தடி  ஏன்?
 
நமது ஹிந்து சம்பிரதாயமே புனிதமானது. பெருமைப் படக்கூடிய ஒன்று. ஏனோ இப்போது கொஞ்சம் விசித்ரமானது. அதில் எல்லோருக்கும் ஈடுபாடு முழுவதுமாக இருக்குமா என்று யாராவது கேட்டால், சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் ''கிடையாது சார் '' என்று சொல்லிவிடலாம். ஏன்?

சம்ப்ரதாயம் முழுதும் யாருமே தெரிந்து கொள்ள முயல வில்லை. நமது முன்னோர்களை எடுத்துக் கொண்டால் அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற சம்பிரதாயங்களை மற்றவரிடமிருந்து  பாரம்பரியமாக, வாழையடி வாழையாக  தெரிந்து பழக்கத்தில் வைத்திருந்தார்கள். அந்த ''மற்றவர்கள்'' வேறு ''மற்றவர்களிடமிருந்து'' அறிந்த விஷயமாக அது இருந்தது. கர்ண பரம்பரை என்பது இதைத்தான். அதனால் தான் இடத்துக்கு இடம், குடும்பத்துக்கு குடும்பம் இந்த சம்பிரதாயங்கள்  கொஞ்சம் மாறுபடும்,  வேறுபடும். எங்கும் முழுதும் புத்தகமாக யாரும் எழுதி வைத்துக் கொள்ளவில்லை.
எனவே தான் விஷயம் அறிந்தவர்களாக காட்டிக்கொண்ட சில வைதீகர்கள் காட்டில் கொள்ளை சிரபுஞ்சி மழை. ஒவ்வொருத்தர் சொல்வதும் ஒரு விதமாக இருக்கும். அது தான்  சம்ப்ரதாயம் என்று அடித்து வேத வியாசர் மாதிரி தன்னை காட்டிக் கொள்வார்கள்.

சில சம்ப்ரதாயங்கள் அனைவராலும் கடைபிடிக்கப் படுகிறதா? என்று கேட்டால். ஏதோ வாத்தியார் சொல்கிறாரே, அதை செய்யவேண்டும். அதை எல்லாம் சொல்லிக்கொடுக்க தானே அவருக்கு சம்பாவனை'' என்று விட்டு விடுபவர்கள் தான் ஜாஸ்தி.

உண்மையில் சம்ப்ரதாயங்கள் என்ன சொல்கின்றன. எதற்காக, ஏன் எப்படி ? என்று ஊன்றி கவனித்து தேடி விஷயம் சேகரித்தால் அதன் ருசியே தனி. அதன் அர்த்தமே வேறு தான்.கல்யாணத்தில் மட்டுமல்ல  நமது வாழ்க்கையே  பிறந்த கணம் முதல்  கடைசியில் மேலே  பித்ருலோகம் செல்லும்வரை  ஏகப்பட்ட சம்ப்ரதாயங்கள்.  மந்திரங்கள்  இருக்கிறது.   அடேயப்பா  இதுபோல்  வேறு எந்த மதத்திலும் இருக்குமா என்பதே  சந்தேகம்.

கல்யாணம் என்று எடுத்துக் கொண்டால்,  நாந்தி. ஜாதகர்மா,நாமகர்மா, ஜானவாசம், மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயதார்த்தம், முஹுர்த்தம், பாணி கிரஹணம். கன்னிகா தானம், அம்மி மிதிப்பது, அருந்ததி பார்ப்பது, சப்தபதி, ஹோமம். இதெல்லாம் நடக்கிறதே. கொஞ்சமாவது அதையெல்லாம் பற்றி சிந்திக்கிறோமா. அதன் அர்த்தங்கள், காரணங்கள் புரியுமா. தெரிய வேண்டாமா?   எல்லாவற்றையும் பற்றி எழுதவேண்டும் என்றால் ஒரு பெரிய தலைகாணி புத்தகம் எழுதவேண்டியிருக்கும்.  அவை பற்றியும்  ஒவ்வொன்றாக  சொல்ல  விருப்பம்.  ஒரு சில  விஷயங்கள் மட்டுமாவது நாம் புரிந்துகொள்வோம்.

மணமகன் ஒரு தாம்பாளத்தில் திருமாங்கல்யம் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, அக்ஷதை புஷ்பங்கள் போட்டு பூஜிக்க வேண்டும்.

மணமகள் கூறைப்  புடவை கட்டிக்கொண்டு மேடைக்கு வந்தவுடன்  பிள்ளையாண்டான்  கன்னியின் வலது கரத்தை பிடித்த வண்ணம், அக்னியின் அருகில் அழைத்து வந்து   அந்த கன்னிகையிடம் கூறும் மந்திரத்தின் அர்த்தம்  

''நீ எனது வீட்டிற்கு தலைவியாகவும் அடக்கி ஆள்பவளாகவும் நற்காரியம் எவை என அறிவித்து, செயல்படுபவளாகவும் இருப்பாயாக'.  இனிமே ல் நீ தான் நம் வீட்டு  எஜமானி.   நம் குடும்ப  கெளரவத்தை காப்பாற்றுவது உன் பொறுப்பு.  ''நாமிருவரும் நமக்கிட்ட  கர்மாக் களை செய்வோம். நல்ல  ஸத் புத்திரர்களை அடைவோம். தீர்காயுள் உள்ள பிள்ளைகளை பெறுவதற்காகவும்,தெய்வ பக்தி உள்ள வளாகவும் என்னை சேர்ந்த மனித ர்களிடமும், நாற்கால் மிருகங்க ளிடமும் நீ நன்மை பயப்பவளாக இருப்பாயாக.''.

நெல்  பரப்பி போல   (இதை விரை கோட்டை ) அதன் மேல்   கல்யாணப்பெண்ணின் அப்பா  உட்கார  அவரது மடியில் பெண் அமர்ந்திருக்க

மணமகன்   ''இதமஹ யா த்வயீபதிக்னீ அலக்ஷ்மீ:தாம் நிர் நிஷாமி ''  என்ற மந்திரம் சொல்லி  தனது வலது கட்டை விரலாலும் மோதிர விரலாலும் தர்பையை பிடித்து கொண்டு , மண பெண்ணின் இரு புருவங்களிடையே துடைத்து தர்பையை மேற்கு பக்கமாக எறிந்து விட்டு கை அலம்ப வேண்டும்.  இது  எதற்காக என்றால்:
'' கன்னிப்  பருவமாய், தனது வீட்டில் செல்ல மகளாய் , வளர்ந்து வந்த அந்த பெண்ணிடம் ஏதேனும் தீய குணங்கள், தீய சக்திகள் அவளை யே அழிக்க கூடிய வகையில் இருந்தால் அவை யாவும் தூக்கி எறிய படட்டும் ''

அப்புறம்  பெண்ணின்  தலைமீது தர்ப் பையால் ஆன சிறிய பிரிமணை போல் வடமாக செய்து,அதை வைத்து, அதன் மேல் சிறிய நுகத்தடி , அதன் வலது துவாரத்தில் ஸ்வர்ணம் வைத்து( தற்போது திருமாங்கல்யம் வைக்கிறார்கள் ) ஜலத்தால் மந்திர ஸ்நானம் செய்யபடும்.

ஸ்வர்ணத்தில் பட்ட இந்த நீர் துவாரத்தின் வழியாக பெண்ணின் தலையில் பட வேண்டும்.   நுகத்தடி வைக்கும் போது சொல்லும் மந்திரம்:

'' கேநஸ: கேரத: கேயு கஸ்ய ஷஸீப்தே அ பாலாம் இந்திர த்ரி: பூர்த்வீ அகரத் ஸூர்ய வர்ச்சஸம்.''

அர்த்தம்:   சசி தேவியின் கணவனான இந்திரனே,  நீ   அத்ரி முனிவரின் பெண்ணான  அபாலா   என்பவளது சரும நோயை  உனது தேரின்  சக்ரத்தின் தேர்தட்டு,  நுகத்தடி,   இவற்றிலுள்ள  துவாரத்தின் வழியாக  விட்ட  ஜலம்  அவள் மேல் பட்டு அந்த பெண்  சரும நோய் நீங்கி   சூரியனை போல் ஒளி வீசுபவளாய் ஆக்கினாய்.   அது போல  இதோ இந்த பெண்ணின்  சிரசில் வைக்கப்பட்டுள்ள நுகத்தடி துவாரத்தின் வழியாக சேர்க்கப்படும் புனித நீரால் இவளது தோஷங்களையும் போக்கி யருள வேண்டும்.  யார்  இந்த  பெண்  அபாலை ? இதற்கு சுருக்கமாக  ரிக் வேதத்தில் கூறப்பட்டிருக்கும்  ஒரு கதை சொல்கிறேன். 

தொழுநோய், சொரி, சிரங்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட  ஒரு பெண்  தான்  அபாலை .  அத்ரிமுனிவரின்  புத்ரி.   இவளை எவரும்  கல்யாணம்  செய்துகொள்ள  தயாராக இல்லை.  அவள் மணம்புரிந்து கணவனுடன் ஸோமனை வழிபட ஆவலாய் இருந்தாள். இந்நிலையில் ஒரு தினம் அவள் ஒரு நதியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள். அவ்வெள்ள நீரில் ஸோம தேவனுக்கு மிகவும் ப்ரியமான ஸோமரஸத்தைக் கொண்ட ஸோமலதை எனும் கொடி அவள் கையில் தற்செயலாகக் கிட்டியது. அவள் அதன் ரஸத்தை பல்லால் கடித்துப் பிழிந்து ஸோமனை த்யானித்து அவனுக்குச் ஸமர்ப்பித்தாள். இதனால் த்ருப்தியடைந்த இந்த்ரன், அவளை தன் தேர் சக்கரம், தேர்த்தட்டு, நுகத்தடி இவற்றின் வாயிலாக மந்திரிக்கப்பட்ட தீர்த்தத்தைச் செலுத்தி அவளை நல்ல அழகுள்ள ரூபவதியாக்கினான்.

நுகத்தடியில் ஸ்வர்ணத்தை (தற்போது திருமாங்கல்யம்) வைக்கும் மந்த்ரம்:

''சந்தே ஹிரண்யம் :- ஏ பெண்ணே! மந்திர ஜலத்தின் ஸ்பரிசத்திற்காக உன் தலையில் வைக்கப்படும் இந்த ஸ்வர்ண மயமான தங்கமானது உனக்கு எல்லாவித நலன்களையும் அளிக்கட்டும். அபாலையை பரிசுத்தப்படுத்திய அதே மந்திரத்தால் நுகத்தடி வழியாக செலுத்தப்பட்டு, தங்கத்தில் தோய்ந்து உன் அங்கங்களை வந்தடையும் இந்த ப்ராஹ்மணர்களால் கொண்டுவரப்பட்ட பரிசுத்தமான புண்ணிய ஜலம் உன்னை ஸகலவிதமான தோஷங்களிலிருந்தும் விடுவித்து பரிசுத்மாக்கி என்னுடன் இரண்டறக் கலந்து எல்லா மங்கலங்களையும் அநுபவிப்போமாக.''
அப்புறம்  ஒரு   5 மந்திரங்கள் உச்சரிக்க பட்டு ஜலம் ப்ரோக்ஷிக்க படுகிறது.   இந்த  நுகத்தடி வைக்கும் வைபவம் யஜுர வேத காரகள்  மட்டுமே  பின்பற்றுகிறார்கள்.  

இன்னும்  நிறைய  விஷயங்கள் பற்றி பேசுவோம்.

sivan jaykay

unread,
May 1, 2021, 8:15:19 AM5/1/21
to amrith...@googlegroups.com

ஒரு அற்புத ஞானி  ---   நங்கநல்லூர்   J  K  SIVAN 


யாரையாவது ஒருவரை நான்  ஆஹா  எவ்வளவு புண்யம் பண்ண  பாக்கியசாலி என்று கருதுவேனானால் அது  நிச்சயம்  ஸ்ரீ  குழுமணி நாராயண சாஸ்திரி அவர்களைத் தான் . நிச்சயம்.   அவரைப் போல் பலர்  சேஷாத்திரி ஸ்வாமிகள் அருகே அதிக நேரம் வாழ்க்கையில்  கழித்திருக்கலாம். ஆனால்  நூறு வருஷங்களுக்கு அப்புறம்  நம்மைப் போன்றவர்களுக்கு  அதால் என்ன பயன்.  ஸ்ரீ  சாஸ்திரிகள் அல்லவோ  தனது அனுபவத்தை நமக்குப்புட்டு புட்டு வைத்திருக்கிறார்.  ஆனந்தத்தை அருள்கிறார்.  இதுவும்  தெய்வ சங்கல்பம் தான்.  சேஷாத்திரி ஸ்வாமிகள்  அவரை இதற்கு பயன் படுத்தி இருக்கலாம்.

மஹான் சேஷாத்திரி ஸ்வாமிகள்  அவ்வப்போது  சிலருக்கு   ஒரு சில  குட்டி குட்டி  வார்த்தைகள்  சொல்வது தான் உபதேசம்.  எத்தனையோ பேர்  அதை லக்ஷியம் செய்யவில்லை.  ஏதோ பைத்தியக்காரன் பேத்தல் என்று சிரித்து விட்டு  வடை சாப்பிட போனவர்கள் தான் முட்டாள்கள்.  புதையல் கிடைத்தும் பிச்சை எடுப்பவர்கள்.  

 நன்றாக யோசித்தால், பின்பற்றினால்,  ஸ்வாமிகளின்  ஒரு சில  வார்த்தைகள் எவ்வளவு அதீத சக்தி கொண்டவை என்று   புலப்படும்.  ஓரிரு  உதாரணங்கள்  சொல்கிறேன்.  

ஒருவருக்கு  அவர் சொன்ன உபதேசம்:   நீ  இப்போதி லிருந்து   ''ராம ராம மஹா பாஹோ '' ன்னு  அடிக்கடி  சொல்லிண்டே வா.   மோக்ஷம் உடனே''. 

 இதென்ன  பெரிய உபதேசமா?   ஆமாம்.  இது  ஏதோ உளறல் இல்லை.   ஆதித்ய ஹ்ருதயத்தில் வரும் வார்த்தை.    அகஸ்திய  மகரிஷி   ஸ்ரீ   ராமனுக்கு உபதேசித்த  வாக்கு. ராமனுக்கு  ராவணனைக்  கொல்லும் யுக்தி சக்தி இதனால்  அமோக மாக  கிடைத்தது.   இந்த ஸ்லோகங்களை நாமும் சொல்லி வருவதால்  நமது தீமைகள்  அழிந்து  மோக்ஷ சாதகம் என்கிறார் ஸ்வாமிகள்.

''ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் பண்ணு . உதய காலத்திலேயே  அரை நிமிஷமாவது உட்கார்ந்து சொல்லு. ராக்ஷஸன் சாவான்''    

குழுமணி நாராயண சாஸ்திரி  முடிந்தவரை  சேஷாத்திரி ஸ்வாமிகளின் நிழலாக  அவரை தொடடர்ந்தவர் போல் இருக்கிறது.     மத்தியானம் உச்சி வெயில் நேரத்தில் ஒருநாள்  மேலே  சொன்ன  ஆதித்ய  ஹ்ருதயம் பற்றி   சாஸ்திரிகளுக்கு  ஸ்வாமிகள் உபதேசித்தார். சாஸ்திரி கீழே விழுந்து வணங்கி எழுவதற்குள் சுவாமியைக் காணோம்.   அவர்   சடைச்சி வீட்டு திண்ணைக்கு ஓடிவிட்டார்.    ஸ்வாமிகள்  நமது மனத்தில் உள்ள மலங்கள் விலகி பரிசுத்தமடையும் என்பதை  ' ராக்ஷஸன் சாவான்'  என்கிறார். 

இன்னொருவரிடம் ஸ்வாமிகள் சொன்ன  உபதேச வார்த்தை என்ன தெரியுமா?  

 ' நீ  சுந்தர காண்டம் வாசி. ஞானம் பிறக்கிறதா இல்லையா பார் ''   . இதற்கு அர்த்தம் சொல்லவேண்டாம். சுந்தர காண்டத்தின் மஹிமை தெரியாதவர் யார். 

இன்னொரு  பக்தருக்கு  ஸ்வாமிகள்  வழங்கிய  உபதேசம்  ஆசையை ஒழிக்கவேண்டும்  என்ற கருத்தில் அமைந்துள்ளது.  அது  இராமாயண சம்பூ காவ்யத்தில் அகஸ்திய முனிவரை வர்ணிக்கும் ஸ்லோகம்.  அதை ஸ்வாமிகள் நினைவு கூர்ந்து சொன்னது: 

 ''பரித்யக்த ஸர்வாசமபி  உபகத தக்ஷிணாசம்''  

 அதாவது,  அகஸ்தியர்  நான்கு திசைகளில் மூன்றை விட்டு தெற்கு திசை (தக்ஷிணம்) நோக்கி வந்தவர்.   இன்னொரு அர்த்தம்   எல்லா ஆசைகளையும் விட்டொழித்தாலும்  தக்ஷிணை யாசகம் வாங்குபவர் என்று ஒரு சிலேடை. அது முக்கியமில்லை.  

ஸ்வாமிகள்  '' இந்த ஸ்லோகத்தை சொல்லி நீங்கள் எல்லோரும்  நன்றாக அப்யாசம் பண்ணவேண்டும்''  என்று சொன்னது   ' உணவு பிரதானம் இல்லை, ஆசை வேண்டாம். இருப்பதைக்  கொண்டு திருப்தியோடு  சந்தோஷமாக இரு. பகவான் நாமாவை சொல்''  என்று உணர்த்துவதற்காகவே.

ஒரு முறை  தனது கட்டைவிரலை ச் சுண்டி விட்டு ''ராமன் எங்கேயும் வியாபித்திருக்கிறான். அப்படி இருப்பதால் ''ராம ராம ராம ' என்று  சதா விடாமல் ஜெபிக்கவேண்டும்''  என உபதேசித்தார்.

ஸ்வாமிகள் இதை நிறைய பேரிடம் சொல்ல காரணம்  கலியுகத்தில் இதை விட சிறந்த மோக்ஷ சாதனம் கிடையாது.  அதனால் தான் ''சதா'' என்கிறார். இதைச் சொல்ல  கால தேச நியமம் ஒன்றும் வேண்டாம். 

ஒருநாள் சாஸ்திரிகளிடம்  ''வா  என்னோடு  இளையனார் கோவில் மண்டபத்தில் ராத்திரி படுத்துக்கோ '' என்று சொல்லி  ஸ்வாமிகளின்  திருவடிகளை  சாஸ்திரிகள் தனது சிரத்தின் மீது தாங்கி படுத்திருக்கும்போது'' மேற்படி உபதேசம் அவருக்கும்  கிடைத்தது.    

ஏழு நாள்  இரவு  அங்கே சாஸ்திரி  ஸ்வாமிகளோடு சயனித்தார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தை  அடுத்ததில் சொல்கிறேன்.
 

sivan jaykay

unread,
May 1, 2021, 8:15:38 AM5/1/21
to amrith...@googlegroups.com
விருந்துபசாரம்.... நங்கநல்லூர்  J K  SIVAN  

மனித மனத்துக்கு   கொள்ளளவு என்பது கிடையவே கிடையாது.  எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி எங்கேயோ போட்டுக்கொள்ளும்.  சில சமயம்  ஏதோ ஒன்று  வேண்டும் என்று அதில் தேடுவது  கடினம்.  அதிர்ஷ்டமும் இருந்தால் தான்  கிடைக்கும்.  சட்டென்று நினைவுக்கு வந்துவிடும்.  சில  சமயம்  எனக்கு  என்  அப்பா பேர் கூட  எவ்வளவோ யோசித்தாலும்  ஞாபகம் வராது. 

 எங்கோ என்றோ பார்த்த  நீல சட்டை  பழைய பேப்பர் காரன், எவ்வளவு பழைய ஹிந்து பேப்பர் போட்டாலும் அத்தனையும் அவன் தராசில்  ரெண்டு கிலோ தான் காட்டும் அளவுக்கு ஏதோ ஒரு வித்தை பண்ணுபவன்  பேர்  மாணிக்கம் என்று உடனே ஞாபகம் வரும்.    இது மனதின் தன்மை.

இதோ பாருங்கள் என்னுடைய  மொபைல் டெலிபோனில்  எப்போதோ சேமித்து வைத்த  தியாகராஜ ஸ்வாமிகளின் உபச்சாரமு என்ற பைரவி கீர்த்தனை கொஞ்சம் கேட்டபோது  ஏதோ ஒரு  பழைய ஞாபகம் நெஞ்சிலிருந்து மேலெழும்பியது.....சம்பந்தா சம்பந்தமில்லாத  விஷயங்கள் ஒன்றோடொன்று ஏன் ஒட்டிக் கொள்கிறது. 

என் சிறு வயதில்,   அதாவது 75 வருஷங்களுக்கு முன்பு, நமது குடும்பங்களில் என்ன பழக்கம் என்றால்  எந்த  சொந்தக்காரரும் , நண்பர்களும்  முன்கூட்டியே   நான் உங்கள் வீட்டுக்கு வரேன் என்று  சொல்லிவிட்டு வரமாட்டார்கள்.

திடீரென்று வாசலில் மாட்டு வண்டியோ குதிரை வண்டியோ வந்து நிற்கும்.   பெட்டி  பை யோடு  இறங்குவார்கள்.  போன் வசதிகள் கிடையாது. லெட்டர் போட்டிருந்தார்களாம்.  அந்த போஸ்ட் கார்டு  அவர்கள் வந்தபிறகு தான் வந்து சேரும். 
அன்று  காக்கை  காலை ரொம்ப  நேரம்  விடாமல்  கொல்லையில்  மல்லிகைப்  பந்தலில் உட்கார்ந்து கத்திக்  கொண்டே இருந்தது.   பசியோ  ஆகாரம்  தேடுகிறதோ என்று  ஏன் என்று நான் கூட  ரெண்டு தடவை சென்று பார்த்தேன்.  

காக்கை இப்படி விடாமல் கத்தினால்   வீட்டுக்கு விருந்தாளி வரப்போகிறார்கள் என்று அர்த்தம் என்று அம்மா சொல்வாள்..

அது காலை 10-11 மணிக்கு பலித்து விட்டதே.   வாசலில்  குதிரை வண்டியிலிருந்து மூட்டை முடிச்சோடு  ஒரு நாலு டிக்கெட் வந்து இறங்கியது.  

 '' அம்மாஞ்சி   ஒண்ணேகால் ரூபா  கொடுங்கோ வண்டிச்  சத்தத்துக்கு.   ரயிலடிலேருந்து வீட்டுக்கு கொண்டுவிட    அவ்வளவா கேட்பா இங்கே   ?''   

தொச்சா எனும் துரைசாமி அய்யர்  உரக்க அப்பாவைப்பார்த்து காசு   கேட்டார்.  இல்லை கத்தினார்..

நம்மிடமே சில்லரை   கேட்டு வண்டிக்கு கொடுத்து விட்டு  வந்து இறங்கும் சில உறவுகள்  அப்போது உண்டு.  சிலது நடந்தே வந்து  கதவை தட்டும்.

''அட  சின்னம்பியும்  வந்திருக்கானா,  அண்ணா,   வாங்கோ, வாடா வா, வாம்மா சுப்பு, என்று வாசலில் சென்று அம்மா வரவேற்றாள். வண்டிக்காரனுக்கு சில்லறை கொடுத்தாள் .

''பாத்து ஒரு யுகம் ஆகிறது.  கடோசியா   கும்பகோணம்  வைத்தா கல்யாணத்தில்  பார்த்தது...  சௌக்கியமா '' என்கிறார்  தொச்சா.

அதற்குள் சட்டையை கழட்டிவிட்டு பூணலால்  முதுகை சொரிந்து  கொண்டே  உள்ளே வந்தார்.   வாங்கோ வாங்கோ  என்று  அப்பா  உபசரித்தார். 

'' வாங்கோண்ணா  வாங்கோ''  . 

புகையிலை  வெற்றிலை காவியேறிய   வாய் முழுதும் நிறைந்த  பல்லோடு  தொச்சா  அவர் பின்  நாணிக்கோணிக் கொண்டு அவர் மகன் சின்னம்பி என்கிற   சாமிநாதன்  அவன் தாய்  சுப்புலக்ஷ்மி கூடவே   சிறிய பெண்  கோகிலா    அனைவரும்  உள்ளே வந்துவிட்டார்கள்.  

வந்த  ஒரு நிமிஷத்தில் கோகிலா உள்ளே ஓடி  நடையில் தொங்கிய  ஊஞ்சலை  ஆட்டி  ஏறி  அமர்ந்தாள்.  கீழே அவள்  கால்  பட்டு  தூண் அருகே  கீழே வைத்திருந்த  தேங்காய் எண்ணெய்  சம்படம்  சரிந்து கொட்டியது. அப்பா ஓடிப்போய் அதை நிமிர்த்தி மீதி எண்ணையை
 காப்பாற்றி  தரையில் கொட்டிய எண்ணையை  துடைக்க  துணியை எடுக்க உள்ளே போனார். 

எல்லோருக்கும் அம்மா காப்பி கொடுத்தாள் . அடுத்த அரைமணி நேரம்  ரெண்டு வருஷ விஷயம் வேகமாக  பரிமாறிக்  கொண்டார்கள். 

'' என்னடி சுப்பு ரொம்பவே  இளைச்சு போயிட்டே.?  உன் பெரிய அக்கா  நாகு என்ன ஊரோட வந்துட்டாளா? அவ ஆம்படையான் இன்னும் மளிகை கடைலே   தான்  வேலை பார்க்கிறானா?  பெரியம்மா வீட்டோட இருக்காளா புள்ளே கிட்டே போய்ட்டாளா?   சின்னம்பி   இப்போ  எத்தனாங்க்ளாஸ்  ?''   இது மாதிரி எல்லாம் அடுக்கடுக்காக .... பல கேள்விகள். சிலது  உறுத்தும்.

''அம்மாஞ்சி உங்களைப்  பார்த்து யுகமாய்டுத்து. '' என்று  திரும்பி திரும்பி  தொச்சா சொல்லிக்
கொண்டே இருந்தார்.  அவரிடமிருந்து விஷயம் எதுவும் வாங்க முடியாது. 

அவருக்கு பட்டணத்தில் உயிர் காலேஜ்  செத்த காலேஜ் பார்க்க  வெகு காலமாக  ஒரு அபிலாஷை. இந்த தடவை அதை நிறைவேற் றிடவேண்டும் என்று  தீர்மானம். 

 எல்லோரும்  அப்பா அம்மாவுக்கு நமஸ்காரம் பண்ணினார்கள்.  வெற்றிலை பாக்கு தட்டில்  ரெண்டு ரூபா பணம் வைத்து அம்மா அப்பா கொடுத்ததை  தொச்சா  தொடும் முன்பே  சுப்பு எடுத்து முடிந்துகொண்டாள்.

சின்னம்பி கண்ணில்   அடுத்த வீட்டு பலராம பிள்ளை  வீட்டு மாமரமும் அதன் கிளையில் தொங்கிய  மாங்காய்களும்  பட்டதால்  யாரையும் கேட்காமல் பக்கத்து வீட்டு   மரத்தில்   தாவி  ஏறிவிட்டான்.    பிள்ளைவாள் முசுடு.  யாருக்கும் எதுவும் கொடுப்பதே பிடிக்காதவர்.  அவர் மனைவி மரகதம் அம்மாள் அப்படியில்லை. கையில் எது  கிடைத்தாலும் யாராவது  கேட்டால்  கொடுப்பவள்.  அரைநிஜார் பை நிறைய  ஆறு ஏழு மாங்காய் பறித்து நிரப்பிக் கொண்டு  சின்னம்பி இறங்கி ஓடிவந்துவிட்டான்.  அப்புறம் என்ன?  அவனைப் பார்த்துவிட்ட பிள்ளை மரகதத்திடம் கத்திக் கொண்டிருந்தார்.  

''பிள்ளைங்க அப்படிதான்  செய்யும். பல்லில்லாத நீங்களா  புளிப்பு மாங்கா கடிக்கப் போகிறீங் க சும்மா வுடுவீங்களா .  பெரிசு படுத்தி  லபலப  ன்னுவீங்களா.?

''அவன்  வேறே   யாரோ பையன்.  பக்கத்து அய்யர் வீட்டு பிள்ளை இல்லை.. பார்த்துட்டு .  சும்மாவா இருக்கறது.  

''வேறே பையன் யாரும் இல்லை,  பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கிறா உறவு   மனுஷா வெளியூர்லேருந்து வந்திருக்காங்க.  அந்த பையன் நம்ம அய்யர் பையன்  ஈடு தான்.  ஏதாவது பேசி  உறவைக் கெடுத்திடாதீங்க.''

கோகிலா  வீட்டை  சுற்றி பார்த்தாள் .  அலமாரி யில் இருந்த  நீல நிற   கண்ணாடி குடுவையை  JUG பார்த்துவிட்டாள் .  அப்பாவுக்கு  யாரோ கொடுத்த   பரிசு அது.    அதைத் தூக்கி போட்டு பிடிக்கிறேன் பார் என்று கீழே போட்டு   உடைத்து விட்டாள் . 

''அடடா  இதிலே போயா  விளையாடுவா''... என்று சொல்லிக்கொண்டே  அம்மா  அந்த கண்ணாடி துண்டுகளை பெருக்கி பொறுக்கி  வெளியே போட்டு விட்டு வரும்போது     மேஜையின் மேல்  வைத்திருந்த  அப்பாவின்  வெள்ளை வேஷ்டி  ஜிப்பா மேல்  நீல  இங்க் பாட்டிலை  தொச்சா  கவிழ்த்து விட்டிருந்தார்.    

''அடடா,   இங்க்  கொட்டிடுத்தே.   மேஜைமேல்  இங்க் பாட்டிலைப் பார்த்தேன்.  என் பேனாவுக்கு கொஞ்சம் இங்க்  போடலாம்னு திறந்தேன், கை நழுவி கீழே விழுந்துட்டுதே.  வெள்ளை வேஷ்டி  சட்டை யெல்லாம்  மேஜைமேலேயா  வைப்பா  அலமாரிலே வைக்க கூடாதோ.   மேலே  எங்கேயா வது கொடியிலே போடமாட்டாரோ அத்திம்பேர்?  

''இல்லை   அண்ணா,   அவர் இன்னிக்கு    ஒரு கல்யாணத்துக்கு போய்ட்டு வரணும்னு  உள்ளே  சலவை பண்ணின துணியிலேருந்து எடுத்து  அதை   இங்கே வச்சார். அதுக்குள்ளே  வேறே  வேலை  எல்லாம்  வந்துட்டுது. கவனிக்க  முடியல்லே.  பரவாயில்லே நான் தரையை துடைச்சுட்டு   ட்ரெஸ்ஸெல்லாம்   உடனே  சோப்பு போட்டு  கசக்கி காய  போட்டுடறேன் '' 

அம்மா  குரல் கொடுத்து முடிக்கிறதுக்குள் வாசலில்  வீல் என்று கத்தல் .

''என்னடா  அங்கே சத்தம்?''  என்று அம்மா  ஓடினாள்.

வாசலில்  திண்ணை அருகே  கோகிலா வாக்குமூலம் கொடுத்தாள் .விவரம் இது தான்: 

நான்,  என் அண்ணா, சின்னம்பி  கோகிலா.  இந்த  கும்பல்  நடுவே  என் அண்ணா கையில் நடு விரலில்  ரத்தம்.   அவனது  ''ஹா லக்ஷ்மணா''  என்ற  மாரிசன் குரல்  தான்  அம்மாவை அங்கே  இழுத்தது.   

''என்ன ஆச்சு, ஏன் ரத்தம்  பாலு   விரல் லே  ? 

''சின்னம்பி   மரத்துலே  ஏறி  பறிச்சுண்டு வந்த மாங்காயை வெட்டி மிளகாய் பொடி  போட்டு சாப்பிடலாம்னு சொன்னான். நான் உள்ளே போய்  மிளகா பொடி ,உப்பு, கொண்டு வந்து கொடுத்தேன்.   சின்னம்பி அப்படியே   ஒரு கத்தி கொண்டுவா நறுக்க  என்று சொன்னதால்  அண்ணா சமையல் ரூம்லேருந்து ஒரு  கத்தியைக்  கொண்டு வந்து கொடுத்தான் . 

''நான் தான் நறுக்குவேன்'' ன்னு   சின்னம்பி  கத்தியைப்   பிடுங்கினான். 
''இல்லே   நான்  தான் நறுக்குவேன் '' னு  அண்ணா  கத்தியை பிடிச்சிண்டு தரல .  சின்னம்பி  வேகமாக கத்தியை பிடுங்கினான்.  அண்ணா வலது கை  நடு விரல்லே கத்தி பட்டு  வெட்டிடுத்
து.

அம்மா  சுண்ணாம்பு கொண்டுவந்து போட்டு கட்டுப்போட்டாள் .  பெருமூச்சு விட்டாள்.

 உள்ளே  மித்ததிலேயிருந்து   சுப்புலக்ஷ்மி அம்மாள் குரல் கேட்டது.

''ஏண்டி மீனு,    உங்காத்து  பாத்ரூம் வழுக்குமா. தெரியாம வேகமா நடந்துட்டேன்.  கீழே சறுக்கி விட்டுடுத்து.  இடது  கால் சப்பை வலிக்கி றது.  எழுந்துக்க முடியல.   விண்  விண் ணுனு  தெரிக்கிறதே. என்ன பண்றது?.  இங்கே  யாரு  நல்ல டாக்டர்.  அவா  கிட்டே போய் பாக்கலாமா?? ஆத்துக்காரர்ட்டே சொல்லி ஏற்பாடு பண்ணு .''

இன்னும்   ஏழு நாள்  இந்த குடும்பம் இங்கே இருக்கப்போவதாக  விஷயம் அறிந்த  அப்பாவும் அம்மாவும் பெருமூச்சு விட்டார்கள்....  அந்த  ஏழு நாட்கள்...... நான்  எப்படி  விலாவாரியாக  விவரிக்க முடியும்? 

ஏனென்றால்  சின்னம்பி  பிள்ளைவாள் வீட்டுக்கு விஜயம் செய்தான், பிள்ளையார் கோவிலுக்கு சென்றான், சத்தார் கடைக்கு  போய்  அங்கே  அவருடைய  சைக்கிளை ஓட்டினான்,    நீலவேணி அம்மன் கோவில் குளத்தில் நீந்தப் போவதாக சவால் விட்டு  குளத்தில் இறங்கினான்.   பம்பரம் விளையாட்டில்  ரெண்டு பேருடன் சண்டை. பம்பர ஆணியால்  நெற்றியில் கிட்டுவை குத்தியதாக ஒரு கம்ப்ளெயிண்ட்.    இன்னும் எத்தனையோ இருக்கிறதே..

sivan jaykay

unread,
May 3, 2021, 10:36:05 AM5/3/21
to amrith...@googlegroups.com
வேமனா - நங்கநல்லூர் J K SIVAN


தேனான வேமனா- 2


1950 ல் யாரோ ஒரு வெள்ளையர் எழுதிய ஒரு புத்தகம் என் வழியில் வந்தது. அதைப் படிக்க ஆரம்பித்தேன்.
நமது நாட்டில் ரிஷிகள் எண்ணற்றவர், தவம் செய்யும்  முனிவர்கள் பலர், வேத சாஸ்திர விற்பன்னர்கள் அனேகர். கற்றுணர்ந்த பண்டிதர்கள் கணக்கற்றவர்கள். இதில் சேராத இயற்கையிலேயே ஞானிகளாக உலா வந்தவர்களோ சிலர் தான். இப்படிப்பட்ட  ஞானிகள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள். அவருள் பலரை நாம் முழுதும் அறிந்து கொள்வதற்குள் அவர்கள் மறைந்து விட்டனர்.  வாழ்ந்தபோது பைத்யங்களாக கருதப்பட்டு  அஞ்ஞானிகளுக்கிடையே வாழ்ந்தவர்கள் .

ஞானிகளுக்கிடையே  நாம் காணும் ஒரே ஒற்றுமை, அவர்கள் முறைப்படி கல்லாதவர்களோ அல்லது அன்றாட பேச்சு வழக்கிலேயே மிக உன்னத தத்துவங்களை உணர்த்தியவர்களோ, பலன் எதுவும் எதிர்பாராமல் விளம்பரம் தேடாமல், அமைதியாக நம்மில் ஒருவராக வாழ்ந்த வழி காட்டிகளோ வாழ்ந்தவர்கள் என்பது ஒன்றே தான்.    அவர்கள் அனைவருமே, பல வேறு மொழிகளில் தமது ஞானத்தை, பொன்மொழிகளை, தத்துவத்தை, சிந்தனை முத்துக்களை நமக்கு ஊட்டியவர்கள்.

சந்தர்ப்பம், சூழ்நிலை, தகுதி இல்லாத இடத்தில் மகான்களைப் பற்றி பேசவேண்டாம்.    அறிமுகப்படுத்தா ததால் மகான்களின் பெருமை குன்றாது. நாலே பேர் கூடினாலும் சத்சங்கம் தான் அங்கே பேசலாமே.   கீதை ஒருவனுக்கு மட்டுமே  உபதேசிக்கப்பட்டது என்றாலும் உலகெங்கும் தேடப்பட்டு அறியப்படுகிறது.

ஒரு பெரிய மலையைக்கூட ஒரு சிறு மொபைல் டெலிபோன் கேமரா படம் பிடிக்கிறதே. வேமனாவுக்கு மொபைல் தெரியாது. ஒரு தெலுங்கு பாடலில் சிறு கண்ணாடித்துண்டு என்றாலும் அதில் பெரிய மலையின் பிம்பம் தெரியுமே என்கிறார். இப்படிப் பட்ட ஞானிகளின் வாக்குகள், வாசகங்கள் நம் வாழ்வின் இருளைப் போக்கும் தீபங்கள். இதை ஜப்பானிய மொழியிலோ,இத்தாலி பாஷையிலோ, தமிழிலோ அறிந்தாலும் உண்மை ஒன்றுதானே.   ஞானி  வேமனாவைப் பற்றி  அறிந்து ஆனந்தித்தேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆவல் அதிகரித்ததால் இந்த  தொடரை  எழுதுகிறேன்.  

கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு ஆந்திரா என்ற பிரிவினை   கிடையாது. அப்போது வாழ்ந்த  ரெட்டியார் வம்சத்தில் உதித்தவர்  வேமனா.   ஏறக்குறைய 7000 பாடல்களுக்கு மேல் இயற்றிப்பாடியவர் என்பது ஆச்சர்யம்.   வேமனாவைப்  போல் இன்னும் எத்தனை   தெய்வங்கள் எங்கிருந்தெல்லாமோ எந்தெந்த மொழிகளிலோ நமக்கு தந்ததை எல்லாம் நாம் இழந்து நிற்கிறோம்.

வேமனாவின்  வார்த்தைகள் எல்லாமே எளிய அன்றாட, கொச்சையான, புரியும்படியான தெலுங்கில், வழக்கில் உள்ளது.  ல க்ஷோப லக்ஷம் தெலுங்கர்கள், படித்தவர், படிக்காதவர் அனைவரின் அன்றாட வாழ்க்கையில் பழமொழியாக, வார்த்தைகளாக, சொல்லாக மிளிர்பவை வேமனாவின் சொல்லோவியங்கள்.
ஞானஸ்தர்களும் பண்டிதர்களும் கூட கையாள விரும்புவது இவையே. இந்த சிறு சிறு நல்வழிப் பாடல்கள் மக்களைத் திருத்தி இறைவன் பால் வழிகாட்டுபவனவாக இன்றும் நடைமுறையில் உள்ளதே இவற்றின் சிறப்பு .

கொண்டவீடு என்ற  ஒரு கிராமத்தை  ரெட்டியார்கள் ஆண்ட காலம். அந்த ராஜவம்சத்தைச் சேர்ந்தவரா யிருந்தாலும் வேமனா ஒரு எளிய ஞானி. மறைந்தது கத்தரப்பள்ளி என்கிற ஊரில். அங்கு வேமனாவின் சமாதி இன்னும் உள்ளது. ஒரு தரம் அந்த சமாதிமேல் மின்னலோடு இடி தாக்கி சமாதியைப் பிளந்தது. அதிலிருந்து வேமனா ஒரு பன்னிரெண்டு வயதுள்ள பாலகனாக தாக்கிய இடி மின்னலைக் கையில் பிடித்துக் கொண்டு வெளிவந்து மீண்டும் அதனுள்ளேயே சென்றார் என்று பலர் நம்புவதை நாமும் நம்புவதால் தப்பு  இல்லை. மகான்களுக்கு எதுவும் சாத்தியம்.

வேமனாவின் பாடல்களில் தர்ம ஞாயம், நேர்மை, வாழ்க்கை நிலையில்லாமை, பண்பாடு, இடைவிடாத பக்தி, உலக இயல், மக்களின் எதிர்பார்ப்பு, சகலமும் அடங்கும்

தூங்குபவனை சாட்டையடி கொடுத்து எழுப்பி திசை திருப்புகிற தன்மை கொண்டவை அவரது சக்தி வாய்ந்த ரெட்டை அடி கவிதைகள்!!
 
அருமையான தெலுங்கில் சரளமாக இவற்றை அனுபவிக்க நமக்கு தெலுங்கு தெரியாதே! பரவாயில்லை. தெலுங்கை ருசிக்க முடியவில்லையானாலும் அர்த்தத்தை ரசிக்கலாமே என்ற எண்ணத்தோடு சிலவற்றை எனக்குத் தெரிந்த எளிய முறையில் எழுத இருக்கிறேன்.( மேலே கண்டவை போன்று)

Alaya ceesi malaci Ad`igamd`lu maligamd`lu ,
Tiripem id`ed`u kat`iki Deebel ellan,
Elami mannu tined`un Erral auduru sumii
Vis`vada abhi raama Vinura Veema!
 
" நாளைக்கு வா"  என்று  கால்  ஓடிய  அலையவைத்து  கடைசியில்  செல்லாத காலணா    கொடுக்கும்  பணத்தில் உழலும் லோபிகளே,   மறு ஜென்மத்தில்  சேறு ரெடி,  அதில் புழுவாய்   உழல தயாராகுங்கள்"

"Annam ad`ugani atanik Annambu pet`t`ina
Paara veeyu daana phalitam eemi?
Dhaniku nakun osamgu Daanambun at`u vale
Vis`vada abhi raama Vinura Veema!"

" தொப்புளுக்கு மேல் கஞ்சி  ஆசாமிக்கு ஏன் அன்ன தானம்?. அது வீண்?  . பசித்தவனுக்கு அது  சேராமல், அதை  வெளியே கொட்டி பாழானதற்கு அல்லவோ இது சமம் .

Kanaka mrugamu bhuvini kadhu Ledhanakanu.....కనక మృగము భువిని కలదు లేదనకను
Tharuni veedi chaniye DhaasharathuDu.........................తరుణి వీడి చనియె దాశరధుడు
Budhi Lenivaadu Dhevudetlaayaraa............................బుద్ధిలేనివాడు దేవుడెట్లాయెరా?
Viswadhaabhiraama, Vinura Vema...............................విశ్వధాభిరామ, వినుర వేమ

"தங்கமான்  எங்கேப்பா இருக்கு? பாவம்  ராமன் மனைவியை   விட்டு  மானை  ஏன்  தேடினான். மாயை  எவ்வாறு  கஷ்டங்களை  எல்லாம்   அவனுக்கே   தந்தபோது  நாம் எங்கே தப்புவது?"

Gangi govu paalu garitadainanu chaalu...................గంగి గోవు పాలు గరిటడైనను చాలు
Kadivedainanemi kharamu paalu............................కడివెడైననేమి ఖరము పాలు
Bhakti kalugu koodu pattedainanu chaalu................భక్తి కలుగు కూడు పట్టెడైనను చాలు
Viswadhaabhiraama, Vinura Vema...........................విశ్వధాభిరామ, వినుర వేమ
 
"ஒரு உத்ரணி சுத்தமான காராம்பசுவின் பாலுக்கு  ஒரு குடம்   கழுதையின் பால்   ஈடாகுமா? .  அன்பாக உபசரித்து  உண்மையான  பாசத்தோடு ஒரு  கரண்டி சாதம் போதுமே,  "இந்தா  கொட்டிக்கோ"  என்று மனதில் நினைத்துகொண்டு  ஒரு வாழை இலை நிறைய விருந்து வைப்பதை விட"

 Atmasuddhi leni acharamadi ela...................ఆత్మశుద్ధి లేని అచారమది ఏల
Bhandasuddhi leni pakamadi ela...................భాండశుద్ధి లేని పాకమేల
Chittasuddi leni sivpujalelara........................చిత్తశుద్ది లేని శివ పూజలేలర
Viswadhaabhiraama, Vinura Vema................విశ్వధాభిరామ, వినుర వేమ

ஆத்மாவில்   சுத்தமில்லாமல்  ஆச்சாரமாக  மடியாக இருந்து   என்ன பயன்?   பாத்திரத்தை  சுத்தமாக  துலக்காமல்  பாயசம் அதில்  பண்ணி என்ன  புண்ணியம்?  சித்தத்தை அவன்   பாலே   வைக்காத சிவன்  பூஜையால் யாருக்கு  பலன் ?


Alpudeppudu palku adamburamu ganu..............ఆల్పుడెపుడు పల్కు ఆడంబురము గాను
Sajjanundu palku challaganu....................................సజ్జనుండు పల్కు చల్లగాను
Kanchu moginatlu kanakammu mroguna...................కంచు మోగినట్లు కనకమ్ము మ్రోగునా
Viswadhaabhiraama, Vinura Vema............................విశ్వధాభిరామ, వినుర వేమ
 
வெங்கலபாத்திரத்தை  தட்டினால்  வரும் சத்தம்  தங்கபாத்திரத்தை  சுண்டினால் வருமா?  ஆழ்ந்த ஞானஸ்தன் அரைவேக்காடு  மாதிரியா வெளிலே  காட்டிக்கொள்வான் "

 Anagananaga raga matisayilluchunundu..............ఆనగననగ రాగ మతిశయిల్లుచునుండు
thinaga thinaga vemu tiyyanundu.................................తినగ తినగ వేము తియ్యనుండు
sadhanamuna panulu samakuru dharalona...................సాధనమున పనులు సమకూరు ధరలోన
Viswadhaabhiraama, Vinura Vema...............................విశ్వధాభిరామ, వినుర వేమ

 பாடப் பாட  தான்   ராகம் வரும்.   கசப்பான   வேப்பிளையைக்கூட மேலே மேலே  மென்று  தின்றால் அதுவே  இனிக்கும்  அல்லவா   அதுபோல தான் வாழ்க்கையிலும்   விடாத   சாதகத்தில்  மெய்ப்பொருள் கைகூடும்.

Anuvu gani chota Nadhikulamanaradu...................అనువు గాని చోట అధికులమనరాదు
Kochmayina nadiyu kodava gadu..........................కొంచమైన నదియు కొదవ గాదు
konda addamandu knochami undada...................కొండ అద్దమందు కొంచమై ఉండదా
Viswadhaabhiraama, Vinura Vema........................విశ్వధాభిరామ, వినుర వేమ

நேரம்  இடம்   சரியில்லை என்றால்  வெற்றி யேது  நிம்மதியேது? அதனால்  உன்னுடைய  திறமை   சக்தியெல்லாம்  மட்டமாகி விடுமா? சின்னக்  கண்ணாடியிலே பார்க்கும்போது  பெரிய  மலை   கூட
குட்டியாகத்தான் தெரியும்

இன்னும்  வேமனா  பாடுவார் 

sivan jaykay

unread,
May 3, 2021, 10:36:05 AM5/3/21
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி    -     நங்கநல்லூர் J K  SIVAN  ---
தாகூர்  


51.  நள்ளிரவில் ராஜா விஜயம்


51.  The night darkened. Our day's works had been done.  
We thought that the last guest had arrived for the night and the doors in the village were all shut.
Only some said the king was to come.   We laughed and said `No, it cannot be!'
It seemed there were knocks at the door and we said it was nothing but the wind.
We put out the lamps and lay down to sleep.
Only some said, `It is the messenger!' We laughed and said `No, it must be the wind!'
There came a sound in the dead of the night.
We sleepily thought it was the distant thunder.
The earth shook, the walls rocked, and it troubled us in our sleep.  
Only some said it was the sound of wheels.
We said in a drowsy murmur, `No, it must be the rumbling of clouds!'
The night was still dark when the drum sounded.
The voice came `Wake up! delay not!' We pressed our hands on our hearts and shuddered with fear.
Some said, `Lo, there is the king's flag!'
We stood up on our feet and cried `There is no time for delay!'
The king has come---but where are lights, where are wreaths?
Where is the throne to seat him? Oh, shame! Oh utter shame! Where is the hall, the decorations?
Someone has said, `Vain is this cry! Greet him with empty hands, lead him into thy rooms all bare!'
Open the doors, let the conch-shells be sounded! in the depth of the night has come the king of our dark, dreary house. 
The thunder roars in the sky. The darkness shudders with lightning.
Bring out thy tattered piece of mat and spread it in the courtyard.
With the storm has come of a sudden our king of the fearful night.


இரவு  நெருங்க நெருங்க  இருள் கவ்வியது. இன்றைய வேலைகள்  எல்லாமே முடிந்து விட்டன. ஆச்சு இனிமேல் யாரும் வரப்போவதில்லை,  ஊரே  அடங்கிவிட்டது. கதவுகள் மூடப்பட்டுவிட்டது  எங்கோ ஒரு சில குரல்கள் மட்டும் ''இன்னும்  ராஜா வரவில்லையே. எந்நேரமும் வருவார் '' என்று  மெலிதாக கேட்டது.

''அதெல்லாம் இல்லீங்க, அவரு எப்படி இங்கே வருவாரு?''  என்றும் சிலர் சிரித்தனர்.

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.   ஒருவேளை  ராஜாவோ?''
'' இல்லீங்க, காற்று பலமாக  மரக் கதவை மோதுது,  அதனாலே  சத்தம்.  இனிமே  காத்திருக்க வேணாம். வரமாட்டாரு .  தீபங்களை அணைச்சுட்டு  படுக்கலாம்''   எல்லோரும்  சாய்ந்தோம் .

' யாரோ வரமாதிரி இருக்கே.    ஆமாம்   யாரோ  வந்திருக்காங்க  . கதவை தட்டுற மாதிரி இருக்கு. ''

''அட  இதென்னப்பா, உன்னோட தொந்தரவு ஜாஸ்தியாயிடுச்சு.  சும்மா  இரு. , யாருமில்லை  காத்து தான் கதவை இடிக்குது''

நள்ளிரவில் கதவை  யாரோ  மறுபடியும்  ''பட  பட''  வென்று  அடித்து தட்டுவது போல்  இருந்தது.  அரைத் தூக்கத்தில்   ''இது பலமா வீசுற  காத்துடைய வேலை. வேறே ஒண்ணுமே இல்லை  பேசாம படுக்கமாட்டியா? ''  

'எங்கேயோ  இடி இடி க்குது  அதோட  சத்தம் '' என்று சொல்லி புரண்டு படுத்தோம்.  
' ஊ ஊ என்று  காற்றின்  சப்தம் தொடர்ந்தது. பூமி  மெலிதாக  நடுங்குகிறதோ. சுவர்கள்  அதிர்கிறதா, ஆடு கிறதா? எப்படி இனிமேல் தூக்கம் வரும்?

''கட கட வென்று சப்தம் மறுபடி  கேட்டது.   ஓஹோ  இது ஏதோ ஒரு  தேர் சக்கர ஒலி தான்''.எல்லோரும் எழுந்திருங்கோ. ராஜா வருகிறார்  போல இருக்கு''

''என்னய்யா  இது,  உனக்கு மேகங்கள் சேர்ந்து  இடி இடிப்பது  கேட்கவில்லையா,  தேராவது,சக்ரமாவது . உளறிக்கிட்டே இருக்கியே ''  

இருட்டு  நள்ளிரவை தாண்டி எங்கும்  காரிருள் அப்பிக்கிடக்கும்போது என் காதில்  எங்கோ   டமடம என்று முரசு சப்தம் அல்லவோ  கேட்கிறது? என்று உரக்க சொன்னேன்.  எல்லோரும்  எழுந்து திண்ணைக்கு சென்று உட்கார்ந்தோம்.

''எழுந்திருங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்..என்று  கூட்டத்தில் ஒரு குரல்.  மார்பு படபடவென்று  அடித்துக்கொண்டது.  ஒரு மின்னல் வெளிச்சத்தில்  யாரோ  ''அதோ  ராஜாவின்  கொடி  தெரிகிறது''என்கிறார். எல்லோரும்  எழுந்து நின்றோம்.

''ராஜா வந்தாச்சு.   எங்கே  வெளிச்சம்?  விளக்குகள்? எங்கே நாம்  வாங்கி வைத்திருந்த  மாலைகள்?   வரவேற்க  என்ன  ஏற்பாடு ?  ராஜா வந்துவிட்டால்  எங்கே  அவர் உட்கார  ஒரு  பீடம்? 

  சே,  சே   என்ன கேவலம் இது ?  ஒரு  அலங்காரம், தோரணம் இல்லை, ஒரு மண்டபம், சபை  மாதிரி ஒன்றும் இல்லையே ?  என்ன செய்வது? எப்படி  ராஜாவை மரியாதையோடு  வரவேற்பது?

''எதற்கு  இப்படி  வீணாக  அர்த்தமில்லாத கூச்சல், நம்மிடம்  ஒன்றும்  இல்லை என்று தெரியுமல்லவா, வெறும் கைகளை  கூப்பி  வரவேற்கிறேன். சகல  உள்ளன்பு மரியாதை நேசத்தோடு கையைப் பிடித்து உள்ளே  அழைத்து வருகிறேன்.  இருக்கும் கதவு ஜன்னல்களை நன்றாக திறந்து,   தரையைச்  சுத்தம் செய்து,  பூஜை மேடையில் உள்ள  சங்கை எடுத்து  ஊதுங்கள்''  என்று ஒரு குரல் 

இருளில்  இருண்ட இந்த வீட்டில் ராஜாவின் வருகை.. ஹா ஹா.   மேலே  வானில் இடி முழக்கம்.  பளிச் பளிச்சென்று  இந்த  இருளைப்  பிளக்கும்  மின்னல் கீற்றுகள். இருள்  மிரள்கிறது.   இந்த கூரை வீட்டின் முன் வாசல் முற்றம் வரவேற்பறை.  அங்கே அதோ இருக்கும் என் கிழிந்த பாயை  விரித்து விட்டேன்.  பயங்கர காரிருளில்  விளக்குகள் அணைந்து போய்,  அட்டை கருப்பு   இருட்டில், நடுக்கும் குளிர்  இருட்டில்  ராஜாவின்  திடீர் விஜயம்  துவங்கட்டும்.  கிருஷ்ணா நீ வருவாய் என்று தெரியுமடா !!

sivan jaykay

unread,
May 3, 2021, 10:36:28 AM5/3/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்  --  நங்கநல்லூர்  J  K SIVAN 


 ''மாறிக் கொண்டே  இருக்கும் மனஸு ''


மனித  மனம்  இருக்கிறதே,  அதை சரியாகத் தான்  பலர்   அது ஒரு  குரங்கு என்றார்கள்.   குரங்கு  ஒரு  நிமிஷம் கூட  ஒரு   நிலையில்  இல்லாமல் கிளைக்கு கிளை தாவுகிறதைப்  போல்  எதிலும் ஒரு கண  நேர விருப்பம், ஈடுபாடு,  உடனே  அதில் அலுப்பு, சலிப்பு  இப்படி  மாறி மாறி செயல்படும் மனது   குரங்கைக்   காட்டிலும் மோசம். 

இதை அனுபவித்து  இதில்  இருந்து  மீள  ஒரு  உன்னத ஏற்பாடு, சலிப்பு தட்டாத வகையில் எதிலும் மாறுதல், மாறுபாடு  எல்லாம் உண்டாக்கி   இந்து மதத்தில் பெரியோர்கள் அளித்திருக்கிறார்கள்.   மாறுபாடு ஒரு  ருசி தந்து  அலுப்பை போக்குகிறது.  இது  மனித இயற்கை  - 

மனம் அடிக்கடி  சலிப்படையும் . அதை   விருப்பாக  மாற்ற உதவும்  வழி  தான்   பகவானை பல  ரூபங்களில் பல   முறைகளில், பல பண்டிகைகள்,  பட்சணங்களோடு  வழிபடுவது   என்பதை  தெளிவாக  மஹாபெரியவா  சொன்னதை  சுருக்கி  விளங்கும்படியாக  சொல்கிறேன்.  

சாதாரண மநுஷயர்கள் மட்டுமல்ல பக்குவ ஸ்திதியில் ரொம்ப தூரம் முன்னேறியவர்களாக இருந்தால்கூட, மநுஷ ஸ்வபாவம் எப்படியிருக்கிற  தென்றால் ஒன்றிலேயே எக்காலமும் முழு மனஸையும் கொடுப்ப தென்றால் முடிவதில்லை. இது இப்போது பிடிக்கிறது, சற்று நேரத்தில் அது அருவறுப்பாகிறது.  எதை வேண்டாம் என்று சொன்னோமே, வெறுத்தோமோ , அதன் பின் மனம் சிறிது கணத்திலேயே  ஓடுகிறது. 

எத்தனை நன்றாயிருந்தாலும்  அது ஒன்றிடமே முழு ஈடுபாட்டை ஸதா காலமும் வைக்க முடிவதில்லை.

இன்றைக்குச் சமையல்-- ஸாம்பார், ரஸம், கறி---நன்றாகத்தானிருக்கிறது. அத்ருப்திக்குக் கொஞ்சங்கூட இடமில்லை. ஆனால், நித்யம் (தினந்தோறும்) இதே சமையல் என்றால் பிடிக்கிறதா?

கறி காய்களை, குழம்புத் தானை மாற்றத் தோன்றுகிறது!  அப்புறம், 'இது எதுவுமே வேண்டாம். ஒரு நாள் சித்ரான்னங்களாகச் சாப்பிடலாம்' என்று தோன்றுகிறது.

வித்வான் எத்தனை நன்றாகப் பாடினாலும், அதே பாட்டு, அதே ராகத்தை ஒவ்வொரு கச்சேரியிலும் பாடினால் அலுத்துப் போகிறது.

எதில் (எந்தத் துறையில்) போனாலும் இப்படித்தான் பல தினுஸாக,மாறுபாடாக வேண்டியிருக்கிறது.

அவ்வப்போது ஒவ்வொன்றிடமும் முழு ஈடுபாடு இருந்தாலும்- இன்றைக்குத் தயிர்வடை என்றால் சப்பு கொட்டிக்கொண்டு ஐந்து ஆறு என்று உள்ளே தள்ளினாலும், நாளைக்கு, நாளன்றைக்கு, நாலாம் நாள்,அஞ்சாம் நாளும் அதுவேதான் என்றால், இன்றைக்குச் சப்புக் கொட்டினவர்களே அன்றைக்கு முகத்தைச் சுளிக்கிற மாதிரி-திரும்பத் திரும்ப அது ஒன்றேதான் என்று வரும்போது அதிலே ருசி, ஈடுபாடு குறைந்து விடுகிறது.

இது தெரிந்துதான் நம்முடைய மதத்தில் இத்தனை ஸ்வாமி, விதவிதமான ரூபம், விதவிதமான அலங்காரம், விதவிதமான வாஹனம், அததற்கும் விதவிதமான பூஜா பத்ததி என்று வைத்திருக்கிறது.

கோயிலுக்குப் போகிறோம். பிள்ளையார் ஸந்நிதியில் நிற்கிறோம். அப்போதைக்கு ஒரு க்ஷணம்,இரண்டு க்ஷணம் மனஸு குவிந்த மாதிரிதான் இருக்கிறது. அப்புறம் கையை, காலைச்  சொறிந்து கொள்கிறோம். கைக்கடிகாரத்தில் மணி பார்த்து  எப்போது வெளியே போவோம் என்று எண்ணுகிறோம்.   மனஸு பிய்த்துக்கொண்டு  வேறு எங்கோ  கிளம்பி விடுகிறது!  

மனஸை அப்படியே எந்தக் குப்பைத் தொட்டிக்கு வேண்டுமானாலும் ஓடட்டும் என்று விட்டு விடுவதா?
அப்படி விட்டு விடாமல், நல்லதிலேயே, தெய்வ ஸம்பந்தமாகவே அந்த மனஸை இழுத்தால்தானே தேவலை?
மனஸை  எப்படி சுண்டி  எப்படி இழுப்பது?

பாழும் மனஸுக்கு இந்த விக்னேஸ்வரமூர்த்தி, தொப்பையும் தொந்தியுமாக இத்தனை அழகாக உட்கார்ந்தி ருந்துங்கூட, அவரிடமே தொடர்ச்சியாக ஒட்டிக்கொண்டிருக்க முடியவில்லையே!'
''பரவாயில்லையப்பா!'  என்று இங்கேதான் நம் ஸமயாசார புருஷர்கள் ஆறுதல் தர வருகிறார்கள்.

'மனஸின் நேச்சர் அப்படித்தான் அப்பா!   அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் திருத்தி நிலையாக ஒருமுகப் படுத்த முடியுமப்பா!  

அதற்கு எதிலும் 'சேஞ்ச்'வேண்டும். தெய்வ ஸம்பந்தமாகவுங்கூட அப்படி வேண்டும். அதையும்தான் நம்முடைய மதம் தருகிறதே!

விக்நேஸ் வரரிடம் ஈடுபாடு குறைகிறதா, அழாதே!  இதே 'சேஞ்சா'க ஸுப்ரஹ்மண்யர் ஸந்நிதி,அப்புறம் இன்னும் பல 'சேஞ்ச்'கள் -  அம்மன், ஸ்வாமி, தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை, நடராஜா, மநுஷ்ய ரூபத்தில் வந்த அறுபத்து மூவர் என்று எல்லாம் ஒன்று சேர்த்துத்தானே கோவில் என்று வைத்திருக்கிறோம்.

ஒவ்வொன்றிடமும் ஒரு க்ஷணம், இரண்டு க்ஷணம் மனஸ் ஈடுபட்டுக் கும்பிட்டு விட்டுப்  போயேன். மொத்தத்தில் ஒரு கணிசமான நாழி உன் மனசு தெய்வ ஸம்பந்தமாகவே ஈடுபட்டிருக்கும்  இல்லையா?. இதுவே பெரிய விஷயம்.  

நம்முடைய மதத்தின் சிறப்புகளிலெல்லாம் பெரிய சிறப்பு ஒன்று எது தெரியுமா?  ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே  தான் என்று காட்டுகிற ஒரே மதம் ஹிந்து மதம்தான் என்று பலபேர்,அறிவாளிகள், அந்நிய தேசத்தவர்கள்கூட, ரொம்பவும் சிறப்பித்துச் சொல்கிறார்கள். 

'எந்த மதத்திலும் இல்லாத அத்வைத ரத்னம் இருக்கிற இந்த மதத்தில், எந்த மதத்திலும் இல்லாத அளவுக்கு இத்தனை த்வைதமான ஆசார அநுஷ்டானங்களும், சாமிப்  பட்டாளமும் இருக்கிறதே!  இவை ஒன்றுக்கொன்று ஒரே முரண்பாடாக இருக்கிறதே'  என்று அவர்களில் ரொம்பப் பேர் வருத்தப்படுகிறார்கள்.

எனக்கோ (மஹா  பெரியவாளுக்கு) என்ன தோன்றுகிற  தென்றால்,அத்வைதம் நம்முடைய பெரிய சிறப்புத்தான் என்றாலும் , அதைவிடவும் சிறப்பாக எது தோன்றுகிறது?  இப்படி ஒன்றேயான அத்வைதத்தைச் சொன்ன மதத்திலேயே வித்யாஸம் வித்யாஸமாக இத்தனை வர்ணாச்ரம வ்யவஸ்தைகளும், இத்தனை பட்டாளமாக தெய்வங்களும் வைத்திருப்பதுதான்!  

அத்வைதம் ஏக பரமாத்மா என்பது ஐடியல்.   அப்படியென்றால்  இத்தனை ஸ்வாமி பட்டாளம்  ஏன்  ?  இத்தனை விதமான ஆசார வ்யவஸ்தைகள் எதற்கு?  என்பது ப்ராக்டிகல்.   ப்ராக்டிகலில் ஆரம்பித்து க்ரமேண (படிப்படியாக) முன்னேறினால்  தான்  ஐடியலுக்குப் போய்ச்  சேர முடியும். இப்போதே ஐடியல் என்று யத்தனம் பண்ணினால் ஒன்று தோல்வியாக ஆகும், அல்லது, அதைவிடத்   தப்பாக ஹிபாக்ரிஸியாக, போலி வேஷ மாகத்தான் ஆகும்.

அத்வைதத்தைச் சொன்ன மதத்தில் இத்தனை த்வைதத்துக்கு இடம் கொடுப்பதா என்று கொஞ்சங்கூடத் தயங்காமல், ஜனங்களின் மனப்பான்மையை நன்றாகப் புரிந்துகொண்டு, அநுதாபத்துடன், பரம கருணையுடன் இத்தனை தர்மாசாரப் பிரிவினைகளையும், சாமிப் பட்டாளத்தையும் இடம் கொடுத்து வைத்துக்   கொண்டிருப்பதுதான் சிறப்புக்களில் பெரிய சிறப்பு. அதனால்தான் அத்வைத ஆசார்யாளான நம்முடைய பகவத் பாதாளே வர்ணாச்ரம வ்யவஸ்தைகளையெல்லாம் மறுபடி நன்றாக ஒழுங்குபடுத்தி நிலை  நாட்டினார்.

பஞ்சாயதனம் என்று ஐந்து தெய்வங்களை வைத்துப் பூஜை பண்ணும்படியாக ஏற்பாடு செய்தார். அதோடு, 'ஸுப்ரஹ்மண்யரையும் பூஜை பண்ணு'   என்கிற மாதிரி (ஸுப்ரஹ்மண்ய) புஜங்கம் பாடி வைத்திருக்கிறார். ஷண்மத ஸ்தாபனம் என்று பண்ணும்போது அதில் (ஸுப்ரஹ்மண்ய உபாஸனையான) கௌமாரம் என்பதையும் சேர்த்துக்  கொண்டார். இன்னும்,  ராமன், க்ருஷ்ணன், நரஸிம்மமூர்த்தி, அம்பாள் என்று எடுத்துக்கொண்டால் அதிலேயே த்ரிபுரஸுந்தரி, பவாநி, ப்ரமராம்பா, சாரதாம்பா என்று பல ரூபபேதங்கள், கங்காதி புண்ய நதிகள்-என்று ஒன்று பாக்கியில்லாமல் அத்தனை சாமிப்பட்டாளத்தின் மேலேயும் ஸ்தோத்ரங்களைப் பாடி வைத்திருக்கிறார்.

 

sivan jaykay

unread,
May 3, 2021, 10:36:28 AM5/3/21
to amrith...@googlegroups.com

குற்றால  நினைவு  ....   நங்கநல்லூர்  J K  SIVAN 


கோடை வெயில் தஹிக்கிறது.  ரெண்டு  மூன்று  வருஷம் முன்பு  குற்றாலம்  போனதை   நினைத்தால்   சந்தோஷமாக இருக்கிறது.   கிட்டத்தட்ட  ஒரு வருஷத்துக்கு மேலாக  நான் தான் வீட்டை விட்டு வெளியே  காலை வைத்து  நகரவே முடியவில்லையே.  

முன்பு,  குற்றால நாதனை தரிசித்து, ஐந்து சபைகளில் ஒன்றான சித்ர சபை மண்டபத்தில் சென்று அற்புத சித்திரங்களை, ஓவியங்களைப்  பார்த்தது, சிலு சிலு வென்று  காற்றில்  அருவியின்  சாரல் மெலிதாக என்னை என் உடையை நனைத்தது, அருவியில்  திருப்திகரமாக  ஜல தாரை இருந்தது.  அரைமணிக்கும் மேலாக  குளித்தது.  எங்கும்  குரங்குகள்  சேஷ்டை, கண்ணாடியை,  மொபைல் போன், பையை, பர்ஸை   எல்லாம் பிடுங்க வந்தது  எல்லாம்   கண் முன் தோன்றுகிறது.   

 ஒரு அற்புதக்  கவிராயர்  குற்றாலத்தில் வசித்தார்.   அவர் எழுதிய  அமர  நூல் தான்  திருக் குற்றாலக் குறவஞ்சி. அவர் பெயர்  திரிகூட இராசப்பக்கவிராயர்,    சந்தம்  ஓசை  நயம் உள்ள  பாடல்கள் அதில் உள்ளன.  பள்ளியில் நான் படித்த காலத்தில் அதன் அருமை தெரியாத வயது.  குற்றால குறவஞ்சி 200 வருஷங்களுக்கு முன்பு   மேலகரம் என்ற ஊரில் வாழ்ந்த  மேலே சொன்ன  திரிகூடராசப்பக் கவிராயர் எழுதியது.  

இதுவரை எத்தனையோ  ஆயிரம்   பள்ளி மாணவிகள்  குழந்தைகள் இந்த பாடல்களுக்கு  குறத்தி வேஷம் போட்டு  நடனம் ஆடி இருக்கிறார்கள்.   குற்றால அழகை, எழிலை, இயற்கை சூழ்நிலையை  கவிராயர்  பாடல்களில்  காட்டுகிறார். சிலது சொல்கிறேன். படித்து ரசியுங்கள்.  காசு கொடுக்காமல் இந்த வெயில் காலத்தில், கொரோனா  தொந்தரவோ, பயமோ இன்றி   வீட்டிலிருந்தே   குற்றாலம் போவோம்.

''வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
     மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்
    கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரை எழுப்பி வானின்வழி ஒழுகும்
     செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங்காரர்
     குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே.''

குற்றால  அருவி கொட்டும்  மலையின் மேலே  நிறைய  பழம் தரும்   மரங்கள் கண்ணைக் கவரும் கனிகளோடு இருப்பதால்   குரங்குகளுக்கு  படு குஷி.   குரங்கு குடும்பங்களில்  ஆண் குரங்குகள் என்ன செய்யும் தெரியுமா?  மரங்களில் தாவி ஏறி உச்சாணி கிளையில் அமர்ந்து  சுவையான  பழங்களைப் பறித்துக்கொண்டு வந்து பெண்  குரங்குகளுக்குக் கொடுத்து அவற்றோடு   ஆசையோடு  கொஞ்சும். அப்போது நிறைய  பெண் குரங்குகளின் கைகளில் இருந்து கீழே  விழுகின்ற  பழங்களை எடுத்துக் கொள்ள   விண்ணிலிருந்து வந்த  தேவர்கள் கெஞ்சுவார்கள்.  வேடுவர்கள் அந்த வானவர்களைக்  கீழே வருமாறு அழைப்பார்கள். வானத்திலிருந்து சித்தர்கள் வந்திருந்து சித்த  மூலிகைகளைப் பயிரிட்டு வளர்ப்பார்கள். தேன் அருவியின் அலைகள் மேலெழுந்து வான்  வழியாக ஒழுகிக்  கொண்டிருக்கும். அதிலே செங்கதிரவனின் தேர்ச் சக்கரங்கள் வழுக்கி விழும். வளைந்த பிறையினைச் சடையிலே அணிந்திருக்கும் குற்றாலநாதன்   குடிகொண்டிருக்கும் அத்தகைய வளம் கொண்ட திரிகூட மலைதான் எங்கள் மலை'' என்கிறாள் ஒரு குற வஞ்சி.

 இன்னொரு பாடலில்  அந்த  வஞ்சி  தனது ஊரான  குற்றால மலை, அதைச் சார்ந்த மற்ற மலைகள் பெயர்களை சொல்லி, அங்கெல்லாம் அவள் சுற்றத்தார், உறவினர் இருப்பதை சொல்கிறாள். எல்லா மலைகளுமே   எங்கள் சொந்தக்காரர்கள் ஊர் மலைகள் தான்,   ஆனாலும் அந்த மலைகளில்  எங்கே  மேகங்களின்  மேகங்களின் இடியோசை  டமடம  வென்று  பெரிய முழவு, மாதிரி  ஒலிக்கிறதோ,  அந்த  மேகங்களின் இடி சப்தத்தில் மயங்கி,  மயில்கள்  கூட்டம் கூட்டமாக வந்து  தோகைகளை  விரித்து ஆடுகின்றதோ  அது தான் எங்கள்   திரி கூட மலை. நான்  வசிக்கும் மலை என்கிறாள்.   

நான் படிக்கும்போது கோடம்பாக்கம் சூளைமேட்டில் கார்பொரேஷன் பள்ளிக்கூடத்தில்  சரோஜினி  டீச்சேர் இந்த பாடல்களை பாடி  தானும்  ஆடி,   மாணவிகளுக்கும்  நடனம் சொல்லித் தருவாள். அப்போது மைக், டேப் ரெக்கார்டர்,  வீடியோ எல்லாம் இல்லை.  மனப்பாடமாக  பாடுவார்கள்.  நடுவில் கூடை வைத்து கும்மி அடிப்பது கண் முன்னே நிற்கிறது.  ஆகஸ்ட் 15,  ஜனவரி 26   பள்ளி விழாக்களுக்கு  ஒரு மாதம் முன்னே  இந்த ரிஹெர்சல்  தினமும்  காலை மாலை தொடர்ந்து நடக்கும்.

''கொல்லிமலை எனக்கிளைய செல்லி மலை அம்மே
     கொழுநனுக்குக் காணிமலை பழநிமலை அம்மே
எல்லுலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே
     இமயமலை என்னுடைய தமையன்மலை அம்மே
சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே
     தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே
செல்லினங்கள் முழவுகொட்ட மயிலினங்கள் ஆடும்
     திரிகூட மலையெங்கள் செல்வமலை அம்மே!


sivan jaykay

unread,
May 3, 2021, 10:36:28 AM5/3/21
to amrith...@googlegroups.com
நமது   வாழ்க்கை  பயணம்     --  நங்கநல்லூர்   J K  SIVAN                                      
                        
ஆன்மிகம் என்றால்    ஏதோ பழுத்த கிழம் சம்பந்தப்  பட்டது என்ற எண்ணம் வேண்டாம்.  ஏழு வயதில் கூட  ஆன்மீகம் வரவேற்கத் தக்கது.  கடவுள் என்று ஒருவர் நமக்கு மேலே, நம்முள்ளே இருக்கிறார்.  அவரைப் போற்றி பணிவது நமது கடமை..  நன்றியறிவித்தல்.  அவர் இரவு பகல் சதா நமது நன்மைக்கே  எந்த பிரதிபலனும் எதிர்பாராமல்  ஈடுபடுகிறார். அவரை  நினைக்கவாவது செய்வோமே  என்ற எண்ணம்  தான்  ஆன்மிகம். அவரை நாம் பார்க்க முடியவில்லை, அவர் பற்றி கேட்போம், படிப்போம், பேசுவோம், அவர் இருப்பதாக நம்பும் கோவிலுக்கு செல்வோம்.  அவரை ஏற்றி போற்றி ஈடுபடும் பஜனை, நாம சங்கீர்த்தனையில் பங்கு கொள்வோம்,  இல்லையேல் மற்றவர் பங்குகொள்வதையாவது ரசிப்போம்...  இது தான் ஆன்மிகம். இப்படி வாழ்வது தான் ஆன்மீக வாழ்க்கை.  பட்ட வர்த்தனமான  வேஷமில்லாத  வாழ்க்கை. 

 கடவுளோடு நெருங்கிய வாழ்க்கை தான்  சுதந்திர  வாழ்க்கை.  எந்த  நல்ல எண்ணமும், செயலும், வார்த்தையும்   நன்மையைத் தான்  பயக்கும்.   வாழ்வில்   அமைதி   இருந்தால், அது   நம்மோடு மட்டுமின்றி  சுற்றிலும் மற்றோருக்கும்  பரவும். இது நான் அனுபவிக்கும் நிதர்சனமான உண்மை. உதாரணம்  நமது ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட்  முகநூல் பக்கம்,  JKSIVAN  முகநூல் பக்கம்  அடேயப்பா  ஆயிரக்கணக்கான  அன்பர்கள்  ஏன் இதை பார்க்கவேண்டும், படிக்கவேண்டும், மற்றவர்களுக்கு அனுப்பவேண்டும், என்னோடு தொடர்பு கொள்ளவேண்டும்???  எனக்காக  அல்லவே அல்ல.  இதில் காணப்படும்  சத் விஷயம், ஆன்மீக விஷயங்கள்,   மஹான்களை பற்றி, ஆலயங்களை பற்றி,  வேத, இதிகாச, புராண விஷயங்கள்  நமது ஹிந்து  பண்பாடு, பழக்கவழக்கங்கள்,  நம்பிக்கை எல்லாம் பற்றி அறிய.   இதில் என்ன காசா பணமா செலவு செய்யவேண்டும்?  வீணாகும் நேரத்தை திருப்திகரமாக செலவழிக்கிறோம்.

நமக்கு ஒரு  பொற்காலம்  ஏற்படுத்திக் கொள்ள   நாம்  செய்யவேண்டியது  ஒவ்வொருவரிடத்திலும்  உள்ள  நல்ல குணம், நல்ல செய்கை,  நல்ல  வார்த்தையை  மட்டுமே  மதிக்கவேண்டும்.   மற்றதை அறவே புறக்கணிக்க வேண்டும்.  இதால்   எல்லோரிடமும் அன்பு வளரும்.  அன்பு  நிறைந்த இடத்தில்  அணு சக்தி அழிவு எதற்கு  தேவை?.  அதற்கென்ற  அவசியம்   காணாமல் போய்விடும்.  உன் உள்ளே  உனக்காக  என்றும்  இருக்கும்,  இறைவன் மீது  அன்பை செலுத்து.  சக  மனிதரை  நேசி.  ''அவன்  குழந்தை மனசு கொண்டவனடா'' என்ற  பேர்  எடு. இது  தான்   அன்பு வழி.''

உடல்  வளர்ச்சி போல்   மன வளர்ச்சி, உள்ள  வளர்ச்சியும் ரொம்ப  அவசியம்.  ஒன்றாம் வகுப்பிலிருந்து  நேரே அடுத்த  ஜூன் மாதம்  காலேஜ்  போக  முடியுமா?.  அதே போல்  உள்ள  அமைதி  கொஞ்சம்  கொஞ்சமாக  தான்  விருத்தி அடையும்.  விடாது முயற்சி செய்ய வேண்டும்.   முக்யமாக பொறுமை  வேண்டும்.  ஒரே நாள்  ராத்திரியில்  அடையும்  சமாசாரம்   அல்ல இது.

 ஒரு மந்திரம் சொல்கிறேன்.  அது  தக்க சமயத்தில்  காக்கும்.   ''யாரையும்  தூக்கி எறிந்து  நிந்தித்து  பேசவேண்டாம்.  அப்போது தான்  நாம்  நிந்திக்கப்பட மாட்டோம். ''

வாழ்க்கையில்  '' அடிபடாததால் '' ( அனுபவ முதிர்ச்சி இல்லாததால்)  கஷ்டங்களை   அநேகர் எதிர் கொள்ள வேண்டி அமை கிறது. குழந்தைகள்  எப்படி  பெரியவர்கள்  ஆகிறார்களோ  அப்படித்தான்  வாழ்வில் அனுபவம் (maturity )  ஏற்படும்.  நாம்  நம்மை  ஆள  எவ்வளவு  தலைவர்களை நம்பி  பதவியில்  அமர்த்துகிறோம்  நாளை  முடிவு தெரிந்து விடுமே.  ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன கதை தான்.  நமது  செய்கையின் பலனை  அப்பறம்  தானே   ''அனுபவித்து '' உணர்கிறோம்.   இதையே வாழ்க்கையில்  ''பாடம் ''  என்று  கற்றுக்கொள்கிறோம்.  

நம்மை  விட ஏதோ  ஒரு  மேலான சக்தி  நிச்சயம்  உள்ளது.    சந்தேகமே வேண்டாம்.  அது நம்முள்  குடி கொண்டு  நம்மை  ஆட்டுவிக்கிறது மட்டும் அல்ல, எங்கும்  எதிலும்  பரவி அங்கிங்கெனாதபடி   எங்கும்  எதிலும்  நிறைந்திருக்கிறது  என்கிற  எண்ணம்  விடாமல் இருக்கவேண்டும்.   கடவுள்  என்று  அதை  எந்த பிடித்த  பெயராலும்  அழைப்போம்.    அன்பை எல்லோரி டத்திலும்  செலுத்தி   முழுமையாக இதை  உணரமுடியும். உள்ளத்தின்  அமைதியில்  அவனைக் காணலாம்.  ஒரு  தனி  ஆனந்தம்  உள்ளே   உருவாவதை அனுபவிக்க முடியும்.

நன்றியை  எதிர்பாராமல் தன்னால் இயன்றதை, தன்னிடம் இருப்பதை  கொடுப்பவன், அமோகமாக  பிரதிபலன்  பெறுவான். இதை நான் இரவு பகலாக தொடர்ந்து பல வருஷங்களாக  செயது வருகிறேன். என்னால் முடிந்தது நான் கற்று அதை மற்றவர்களோடு பகிர்வது மட்டும் தான். 83ல் அதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய இயலாது. 

தனக்கு நல்லது  என்று  தெரிந்ததை, அறிந்ததை,  செயல்படுத்தி  மற்றோருக்கும் உதவுபவன்  ச்ரேஷ்டன்.  
பகவானே  உன் செயல்  என்று  எதையும்  தன்னாலியன்றவரை  சிறப்பாக  செய்பவன்  நல்ல பலனையே பெறுவான்.
எல்லோரும்  நல்லவரே,  எல்லோரும்  என்னவரே  என்று  எவன்  அன்போடு பழகுகிறானோ அவன்  பலமடங்கு அன்பை பெறுபவன்.
நமக்கு  வரும்  கஷ்டங்கள், துன்பங்கள்  எல்லாமுமே  நாம் நம்மை  செலுத்தும் அந்த  பரம சக்தி காட்டும் வழியை புறக்கணிப்பதால்  தான்.
மனதில்  எப்போது  அமைதி  தோன்றுகிறதோ,  ஆன்மீக வளர்ச்சியில்  நீ  தொடர்கிறாய்  என்று அறியலாம்.  காரணம் என்னவென்றால்  நாம்  நம்முள்  நம்மை  செலுத்தும்  அந்த  அதீத  சக்தியை உணர ஆரம்பித்து விட்டதால் தான். 

பிறரிடம்  மாற்றத்தை  எதற்கு  எதிர் பார்க்க வேண்டும்?   முதலில் நாம்  மாறினாலே  அவர்களிடம்  மாற்றம் தானாக  தெரியும்.

கடவுள் மீது  நம்பிக்கையும், பக்தியும்  உள்ளவனுக்கு  எதிலும்   பயம் தோன்றாது.   அவன் தான்  எதையும் எவரையும் அன்பினால்  சொந்தம்  கொள்கிறானே.  பயம்  எங்கிருந்து வரும்?

நமக்கு  கஷ்டங்களும்  துன்பங்களும்  வருவது  கூட ஒரு   விதத்தில்  அந்த  நேரங்களில்  நம்மை  அவனை நினைக்கச் செய்வதால்  நன்மையே  என்று  கூட  தோன்றுகிறது.

அடிக்கடி  உடலில்  தோன்றும்  உபாதைகள்  அடே  மானிடா, உன் இந்த உடல்  ஒருநாள்  திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல்   அழிந்து விடும்  என்று  நினைவூட்டவே.    பழைய  சட்டையை  தூக்கிப்  போட நேரம் நெருங்கி வருகிறது.  புதியது  நமக்கு   எங்கோ தயாராகி வருகிறது  என்று  உணர்த்தவே.

மற்றவரின்  செய்கைகள்  தவறு, சரி  என்று  சொல்ல  நமக்கேது  உரிமை?.   அவர்கள்    தாமாகவே தம்மை  ஆராய்ந்து கொள்ள  நீ  உதவினால்  இறைவன் உனக்கிட்ட  பணியை கொஞ்சமாவது  செய்து வருகிறாய்  என்று  அர்த்தம்.

ஒரு விஷயம்  கவனப்படுத்துகிறேன்.   மனம்  எப்போது  இறைவனின்  தொடர்பில்  ஈடுபட்டு விட்டதோ, அந்தக் கணம்  முதல்    நீ  தனியாக  இல்லை.  அவனது  அழகிய  ''நெட் வொர்க்''  திட்டங்கள்,  நேர்த்தியான  செயல்கள்  உனக்கு  பலனளிக்கத்  தொடங்கிவிட்டது  என புரியும்.  எப்போது  மனதில்  அமைதி  குடி புகுந்ததோ,  அப்போது  உனக்கு  வெளியே இருந்து ஒரு   புத்துணர்ச்சி  வந்து சேரும். களைப்பு  அலுப்பு  என்பதே  காணாமல்  போகும்.  20 மணி படித்து எழுதும் எனக்கு களைப்பு தோன்றவில்லை. திருப்தியாக இருக்கிறதே.

எப்போது  நீ  அவனை  நினைக்க  ஆரம்பித்துவிட்டாயோ,  நீ    வெளிச்சம் தேடி  வேறு விளக்கொளி நாட தேவையே  இல்லை.  நீ  தான்   சூரியனையே நோக்கி   நடக்க ஆரம்பித்து விட்டாயே,   விளக்கொளி வெளிச்சம் அவசியமில்லை.

உண்ணும்  உணவு  உடலை நன்றாக  செயல்  பட தேவையானதாக மட்டும்  இருக்கட்டுமே.  அது   தான் ஆரோக்கியம்.  வாழ்வதற்கு  தான்  உணவே  தவிர  உண்பது  தான்  வாழ்க்கை  அல்ல. இன்னும்  வேண்டும்  என்ற  எண்ணம்  வரும்போது உண்பதை நிறுத்திக் கொள்.  அப்புறம்   டாக்டர்  வீடு  அட்ரஸ்  மறந்து,   தெரியாமல் போகும். வாழ்க்கை   இதால் முழுமை  பெரும்.

நமது  நல்ல  எண்ணங்களும் நற்செய்கைகளும் தான்  நமக்கு மட்டுமல்ல  பிறர்க்கும்  உதவுகிறது என்பதை விட  உள்ளும்  புறமும்  தூய்மையடைய உதவுகிறது. இது  இருந்தால்   அவன்   தானே  நம்முள்  வந்து அமர்வானே.  குப்பையிலா  ஒருவன் வசிப்பான்?  ஒரு   இனிய சங்கீதம்   மனதை வருடவில்லையா?.  அது போல்  இதயம்  இதால் குளிரும்.  

உள்ளே நின்று   ஒருவன்  அக்கறையோடு வழி காட்டினால், தப்பான  பாதையில் எப்படி  போகமுடியும்?.  கல் முள்   எதுவும் இல்லாத  சீரான  பாதை  அல்லவா  அது.?  பயணம்  - ஒரு  சுற்று  பயணம்  ஆகிறது -  சுற்றி  சுற்றி  அவனையே  அல்லவா  சேர்கிறோம்.

 கடவுள்  என்பவர்  ஏதோ  ரொம்ப  படித்த,  யாகம் செய்த,   தானம் செய்த,  தனவந்தனுக்கு,  ஆயிரம்  கோவில்  குளங்கள்  சென்றவனுக்கு  மட்டும் சொந்தமானவர்  என்பது   ராங் நம்பர்.  கடவுள்  எல்லோருக்கும் எப்போதும் எங்கும்  கிடைப்பவர்.  ஒரே  ஒரு  கணம் மட்டுமே  போதும்.    சுத்தமாக,  கலப்படமில்லாத,   மனத்தால்  நினைத்தால்  அவனை  உணரமுடியும்.  
அவனை  அடைந்து விட்டோம்  என்று  எப்படி  தெரியும்? அன்பு  உன்னிடமிருந்து  எதனிடமும்  எவரிடமும் பெருகி விட்டதல்லவா?  அதே அதே.

கடவுள்   நமக்காக காத்திருக்கிறான்.    நாம் தான்  எதிர்   திசையில், வேறு பக்கம் நோக்கி  போய்க்  கொண்டிருக்கிறோம்.   அவன்   உள்ளே  இருக்கும்  போது, நம்  இதயத்தை   பூரணமாக  ஆக்ரமித்த போது,        ' நான்,   எனது ''      எப்படி  ஞாயமாகும் ? .  வீட்டை  வாடகைக்கு  விட்டு விட்டு  ''எனது என்று  சொல்லலாமா,  ''நான்''   அங்கு  வசிக்க முடியுமா'' ?
   
ஒரு   காற்றின்  சுகத்தில்,  நீரின் தெளிவில்,  பூவின்  மணத்தில்,  பறவையின்  குரலில்,  நிலவின்  ஒளியில்,  உலகத்தின் இயக்கத்தில்,  விடியல் அமைதியில்,   நிசப்தத்தில்,  எதில் வேணுமானாலும்  அவனை  உணர முடியுமே.     கும்பலாக  சப்தம்  போட்டுக்  கத்த வேண்டாம்.   ஸ்பெஷல்  வரிசைக்கு  டிக்கெட்  தேவையில்லை.  கண்ணை முடி  உள்ளே நோக்கினால்  ''நான்   இங்கே தானேடா  உனக்காக எப்போதும் இருக்கிறேன்'' என்று  குரல் கொடுக்கிறானே. ஆரவாரத்தில்  அமைதியை  தேடலாமா?  இது நான்  புதிதாக  கண்டுபிடித்து சொல்லவில்லை.  காலம் காலமாக   பல மஹான்கள், ரிஷிகள், முனிவர்கள், சிறந்த பக்தர்கள் அனுபவித்து சொன்ன உண்மை  ஏட்டிலும் எழுத்திலும்  பாட்டிலும்  இருக்கிறது.   யார்  அதை லக்ஷியம் செய்கிறார்கள்?  இருந்தாலும் நான் விடுவதில்லை. அதெல்லாம் பற்றி எழுதிக்கொண்டே தான் இருப்பேன்.


sivan jaykay

unread,
May 3, 2021, 10:36:46 AM5/3/21
to amrith...@googlegroups.com

யாரிந்த கவிஞர்?   2   --- நங்கநல்லூர்   J K SIVAN   --
விவேக சிந்தாமணி 

''மயில்குயில் செங்கா லன்னம்
வண்டு கண் ணாடி பன்றி
அயிலெயிற் றரவு திங்கள்
ஆதவ னாழி கொக்கோடு
உயர்விண் கமலம் பன்மூன்
றுறுகுண முடையோர் தம்மை
யியலுறு புவியோர் போற்று
மீசனென் றெண்ண லாமே.''

ஜம்புவும் தம்புவும் நண்பர்கள். பேசிக்கொண்டே ஆற்றோரம் நடக்கிறார்கள். எதிரே ஒரு பெண்மணி வந்தாள். அவர்களைப் பார்த்து புன்னகைத்து வணக்கம் என்று சொல்லி கை கூப்பி ஜாடை காட்டி விட்டு அசைந்து சென்றாள்.

''ஜம்பு, பார்த்தாயா, அன்னம் போன்ற சிவந்த கால்கள், மயில் போல் நடை, என்னைப்பார்த்து குயில் போன்ற குரலில்  என் மீது அன்போடு  வணக்கம் சொல்கிறாள்''

தம்பு, உனக்கு கண்ணில் கோளாறு என்று இப்போது தான் தெரிகிறது. அவள் என்னையல்லவோ வணங்கி புன்னகைத்து சென்றாள்''

மயில் குயில் அன்னம், என்று பேசியதுபோக பன்றி , நாய்,  கோட்டான் கழுகு  என்று ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளும் அளவுக்கு வாக்கு வாதம் தொடர, அந்தப்பக்கமாக வந்த நன்றாக சாத்திரங்கள் அறிந்த ஒரு கற்றவர் இவர்கள் ஒருவருக்கொருவர் பேசியதைக் கேட்டு அவர்களைத் தடுத்து,

''அன்பர்களே, இருவருமே ஒன்று தெரிந்துகொள்ளுங்கள்: சாத்திரங்கள் என்ன சொல்கிறது தெரியுமா?, மயில், குயில், அன்னம், வண்டு, கண்ணாடி, பன்றி, கூரான விஷப்பற்களைக் கொண்ட பாம்பு, சூரியன்,சந்திரன், சமுத்திரம், கொக்கு, ஆகாசம், தாமரை, இந்த பதின்மூன்றும் தெய்வீக தன்மை வாய்ந்த மங்கள வஸ்துக்கள். ஒவ்வொரு கணத்திலும் இவற்றின் குணத்தை பிரதிபலிக்கிறவர்கள் தெய்வமாக கருதப்படுவார்கள் என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார்.

''அரும்பு கோணிடில் அதுமணம் குன்றிடா
கரும்பு கோணிடில் கட்டியும் பாகுமாம்
இரும்பு கோணிடில் யானையை அடக்கலாம்
நரம்பு கோணிடில் நாமதற் கென்செய்வாம்.''

நிறைய மல்லிகை பூத்துக் குலுங்கும் நந்தவனம். மல்லிகைச் செடிகளில் ஏராளமாக அரும்புகள். அவை அரும்புகள் என்பதால் மல்லிகையின் சுகந்த நறுமணம் அவற்றுக்கு இல்லாமல் போய்விடுமா? கரும்பு தோட்டத்தில் பார்க்கிறோம். ஏராளமாக கரும்புகள் குச்சி குச்சியாக உயர்ந்து நிற்கின்றன. சில கரும்புகள் நேராக வளராமல் வளைந்து இருக்கிறதே, அதனால் அந்த கோணல் கரும்புகள் சுவை இல்லாமல் போகுமா, வெல்லக்கட்டி அதிலிருந்து வராதா? இரும்புக் கம்பிகளை பார்க்கிறோம், நீளமாக கட்டு கட்டாக இருப்பதன் நடுவில் சில கோணலாக இருக்கிறது. அதனால் பயனில்லையா? அங்குசம் வளைந்து இருப்பதால் தானே யானையை அடக்க முடிகிறது? இதெல்லாம் சரி அதற்காக நரம்புகள் நமது உடலில் அது எப்படி இருக்கவேண்டுமோ அப்படி விண் என்று இல்லாமல் தளர்ந்து போனால் நாம் தளர்ந்த நரம்புகள் கொண்ட வீணை எப்படி மீட்ட உபயோகம் இல்லையோ அப்படி மூலையில் விழுந்து கிடைக்கவேண்டியது தான். உடலை, நரம்புகளை எலும்புகளை நன்றாக வளர்ச்சி பெற்று இயங்க நாம் பயிற்சி கொடுக்கவேண்டும். இந்த விவேக சிந்தாமணி இயற்றியவர் விவரமானவர் என்று தெரிகிறது.

''முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்
மடவனை வலியான் கொன்றால் மறலிதா னவனைக் கொல்லும்
தடவரை முலைமாதேயித் தரணியி லுள்ளோர்க் கெல்லாம்
மடவனை யடித்த கோலும் வலியனை யடிக்கும் கண்டாய்.''


அதோ பாருங்கள் பாவம் ஒரு கால்கள் நடக்கமுடியாமல் ஒருவன் ஊர்ந்து போய் கொண்டிருக்கிறான். கொடிய ராஜா எதிரே வருகிறான். ''யாரவன் மரியாதை இல்லாமல் நான் போகும் பாதையில் அடைத்துக்  கொண்டு மெதுவாக போகிறவன்.. கொல்லுங்கள் அவனை'' அவ்வளவு தான். அந்த முடவன் வாழ்க்கை முடிந்துவிட்டது. பாவம் எளியவன், சக்தியில்லாதவனை பலமுள்ளவன் வாட்டி வதைத்தால் அதோ யமன் பார்த்துக் கொண்டே இருக்கிறான். ரெடியாக இருக்கவே இருக்கிறது அந்த கொடியவனுக்கு கொதிக்கும் எண்ணெய் சட்டி, அவன் இனி வறுவல். எந்த சக்தி எளியவனை தாக்கி துன்புறுத்தியதோ, அதே சக்தி அந்த கொடியவர்களையும் தாக்கிக் கொல்லும். இது இயற்கை நியதி. எளியாரை வலியார் கொன்றால் வலியாரை தெய்வம் கொல்லும் என்பது இது தான்


''திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க் கீயாக் கைகள் இனியசொல் கேளாக் காது
புரப்பவர் விழிகள் கண்ணீர் பொழிதரப் போகாத் தேகம்
இருப்பினும் பயன்தான் என்னே எரிப்பினு மில்லை தானே''


''ஆஹா, உலகில் எங்குமில்லாத அதிசயமாக இந்த பாரத தேசத்தில் எத்தனை அருமையான புகழ் பெற்ற எண்ணற் ற ஆலயங்கள், க்ஷேத்ரங்கள் இருக்கிறது. நடந்து போய் அவற்றை வணங்காத, அடையாத,கால்கள் இருந்தும் பயனற்றவை. தலையே நீ வணங்காய் என்று பாடுவார்கள் அப்படி நமது எண் சாண் உடம்புக்கு பிரதானமான சிரம் இருந்தும் சிவனை வணங்கா விட்டால் அதனால் ஒரு பயனும் நமக்கு இல்லை. ''ஐயா, அம்மா, பசி காதை அடைக்குது '' என்று கெஞ்சும் உயிருக் கும் ''ஒண்ணும் இல்லை. போ போ'' என்று ஒரு கவளம் பழைய சோறு கூட கொடுக் காத கைகள் வீணானவை. நல்ல விஷயங்களைக் கேட்காத காது செவிட்டு டமாரம். பிற உயிர்களின் துன்பம் கண்டு தனது துன்பமாக இரக்கப் படாத , கண்ணீர் வடிக்காத கண்கள் பார்வை இழந்த குருட்டு கண்கள். இப்படிப் பட்ட தலை, கை , கால், கண், காது, உடைய தேகம் இருந்தும் அதால் எந்த பயனும் இல்லை, அதை எரித்தாலும் எரி பொருள் நஷ்டத்தை தவிர வேறு எந்த பயனும் இல்லை
.
''குரைகடல் வறுமையும் குறத்தி உண்மையும்
நரையற மருந்தையுண் டிளமை நண்ணலும்
விரைசெறி குழலிவேசி ஒருவனை யெண்ணலும்
அரையரின் அன்பறா வாக்கமு மரியதே.''

''ஓ'' வென்று சப்தித்து அலைபாயும் கடல் வற்றிவிட்டது என்பதும், ''ஸோஸியம் பாக்கலையோ ஸோஸியம்'' என்று வாசலில் கத்திக்கொண்டு நடக்கும் குறத்தி சொல்லும் ஜோசியம் உண்மையில் பலித்தது  என்பதும் '' ''ஸார், இந்த ஒரு பாட்டில் எண்ணெயை தலையில் விடிகாலையில் பரபர வென்று தேய்த்துக் கொள்ளுங்கள் , உடனே முடி கறுப்பாகும், இளைஞனாகி விடுவீர்கள்''    என்று சொல்லி வாங்கி நரை தீர்ந்து போய் இளமை ஆகியது என்பதும், காசுக்கு ஒருவனை மயக்கும் விலைமாது, உண்மையாகவே ஒருவனை  நேசிப்பதும், ராஜா யாராவது ஒருவன் மேல் மட்டும் அன்பு குறையாமல் நடந்து கொள்வதும் உலகில் நடக்காத காரியங்கள் என்று அடித்து சொல்கிறார் பேர் தெரியாத புலவர். ,

sivan jaykay

unread,
May 3, 2021, 10:37:37 AM5/3/21
to amrith...@googlegroups.com

இறைவன் திட்டம். --   நங்கநல்லூர்   J K  SIVAN 
   
மாற்றம் காலத்தின் கட்டளை. நிகழ வேண்டிய ஒன்று  என்பதால் அதை ஏற்பதில் தயக்கம் அவசியம் இல்லை.
நல்லதே நடக்கும்  என்ற நம்பிக்கை போதும் 

பழசை நினைக்கும்போது அந்த கால  வாழ்க்கை, எந்த அளவு   இப்போது நாம் வாழும்  வாழ்க்கையை விட எப்படி மாறுபட்டு இருந்தது என்று காட்டுகிறது.    இன்னும்   எழுபது  என்பது ஆண்டுகளுக்கு  பிறகு   நமது இப்போதைய  வாழ்க்கை  ''ஆஹா எவ்வளவு அற்புதமாக நம்முடைய முன்னோர் வாழ்ந்தார்கள்''  என்று நினைக்கப்படும்.   அது தான காலத்தின் மாறுதல்.    மக்களின் மனமாற்றம் தான் காலத்தின் மாறுதல்..      கடந்தகாலம்  என்பது ஒரு வழிப்பாதை.. நம்மால் அதை மீண்டும்  அனுபவிக்க முடியாது.  நடந்தது நடந்தது  தான்.   அப்போது  கற்ற  அனுபவம், பாடம், இப்போதைய வாழ்வில் எப்படி பயன் தரும் என்று யோசித்து  நடக்கும் காலத்தை  சுகமானதாக  வேண்டுமானால் மற்ற முயல்வோம்.  

வாழ்வு  நலமானதாக, சுகமானதாக மாற, முதலில்  சிலரை  தவிர்க்க வேண்டும்.   புறங்கூறுபவர்கள், எதையும்  எதிர்த்து வாதம் செய்பவர்கள்,  கூடிக் கூடி  ரகசியமாக தீய சிந்தனைகளை  பரப்புபவர்கள்., எல்லோரையும் சபிப்பவர்கள்,  குறுக்கு வாதங்கள் புரிபவர்கள், குதர்க்க வாதிகள்,   லஞ்சப்பிரியர்கள்,,  --  இவர்களுடன் பழக கூடாது.  இது சத்சங்கமல்ல.

எவருடைய  செய்கையையும் நாம்  சீர்தூக்கி  பார்த்து  நீதி சொல்லவேண்டாம். அது நம் வேலையல்ல. மற்றவர்களின்  எண்ணம் செயல்கள் பற்றி நாம் சிந்திப்பதால், அது நம்முடைய  எண்ணங்களை தன்வயமாக்கி,   மன அமைதியைக்  குலைத்து  தின்றுவிடும். 

நன்றி மறப்பது நன்றன்று.  எவர் என்ன சின்ன சின்ன உதவி செய்தாலும் மறக்காமல் நன்றி கூறவேண்டும்.  
''ஐயா  கிருஷ்ணா,  உன்னருளால் ஏதோ  உடல் வியாதிகள் இன்றி,  கடன் இன்றி,   படுக்க ஒரு படுக்கை இருக்க,  மூன்று வேளையும்  சாப்பாடு  உண்டு,  கம்ப்யூட்டரில் இன்டர்நெட்  தடைபடாமல்  இருக்க  என் எண்ணங்களை எழுத்தாக வடிக்க என்னால்  முடிகிறதே. எத்தனை பில்லியன்  கோடானு கோடி  மக்களுக்கு  இதெல்லாம் வெறும் பகல் கனவாகவே இன்னும் இருக்கிறது.  நன்றிடா கிருஷ்ணா  உனக்கு.''
 
நிறைய  புத்தகங்கள் படிக்க  ஆசை.   இன்டர்நெட்டில்  நிறைய  நல்ல விஷயங்கள்  இருக்கிறதே. இன்னும்  தேடி அறியவேண்டும்.  படிக்கவேண்டும்.  புதிதாக எதையாவது தெரிந்துகொள்ளவேண்டும்.  இதனால் என்னைப் பற்றி சதா நினைப்பதை, என் உடலின் நிலையைப்பற்றி கவலைப்பட நேரமே இல்லை.    குறைகூற ஒன்றுமே இல்லை. எல்லோரும் நல்லவரே. 

 
ஒவ்வொரு  ஜீவனிலும் ஆத்மா என்று ஒன்று இருக்கிறது.  யாரையும் எதிர்த்து  விளாச  என்ன அவசியம்?  ஒவ்வொருவர்  உணர்வையும் மதிக்க வேண்டும்.   அவர்கள் சொல்வதை கேட்போம். அபிப்ராயம் சொல்ல தேவை இல்லை.   ஒவ்வொரு   ஜீவனும் வித விதமானது. என் எண்ணங்கள்  மற்றவர்கள் எண்ணங்களாக இருக்க வேண்டும் என்று  அவர்கள் மேல் அதை திணிக்க எனக்கு அதிகாரம் இல்லை. சில சமயம் நமது எண்ணங்களே  அபத்தமானதாக, எனக்கே  ஆபத்தை தரும் விதமாக  இருக்கலாம்.இப்படி  நினைப்பது மன அழுத்தத்தை குறைக்கும்.  

இன்னொரு  முக்கிய விஷயம்,   மற்றவர் எண்ணங்களை நாம் சரியாக  புரிந்து கொள்கிறோமா? எண்ணங்களை வெளிப்படுத்திய  வார்த்தைகள்  அவர்  மனதை  சரியாக காட்டியதா, அல்லது நாம் அதை சரியாக அவர் எண்ணம் பிறந்த வழியில்  புரிந்துகொண்டோமா?  உணர்ச்சிகள்  வார்த்தைகளை விழுங்கிவிடும்.  என் மனப்பார்வையில் அவர் எண்ணங்களை  புரிந்துகொள்வது தப்பாகிவிடும்.
 
சந்தர்ப்பங்கள்  நம்மை கேட்டு நம் விருப்பப்படி  அமைவதில்லை. நாம் ஒன்று நினைப்போம், விரும்புவோம்,. அது ஒன்றாக  விளையும். அதைக் கண்டு துவளாமல்  அதற்கேற்ப நம்மை திருத்திக் கொள்ள தயங்கக்கூடாது.  மனித முயற்சிகள்  இறைவன் எண்ணத்தை, தீர்மானத்தை,  மாற்றவே முடியாது.
 
பயம்  எதற்கும் வேண்டாம்.  நாம் பிறர்க்கு தீங்கு விளைவிக்காதவரை நம்மை தீங்கு தீமைகள் அணுகாது. பாம்பு நம்மை தேடி வந்து கடிப்பதில்லை, தேள்  அட்ரஸ் தேடிக்கண்டுபிடித்து வந்து  கொட்டுவதில்லை . அதன் வழியில் நாம் குறுக்கிட்டபோது தற்காப்புக்காக இறைவன் கொடுத்த வசதியை அது பயன்படுத்திக் கொள்கிறது.  எல்லா ஜீவன்களும்  அவரவர் நெறிமுறையை வாழ  இறைவன் உலகை அமைத்திருக்கிறான்.  அன்பு எல்லாவற்றையும், எல்லோரையும்,  இணைக்கும். இதற்கென்றே  மனிதனுக்கு மட்டுமே  இறைவன் கொடுத்த  சிறப்பு பரிசு   சிரிப்பு.   மனம்  அன்பினால் விசாலமானால் உலகமே  ஒரு இனிய  பெரிய  ஆனந்த ஸ்தலமாக மாறும்.


It is loading more messages.
0 new messages