![Inline image Inline image]()
திருவாதிரை.பஞ்ச சபைகளில் ரத்தினசபை திருவாலங்காடு சிவகாமசுந்தரி சமேத ஊர்த்துவ தாண்டவ நடராஜர்🙏🙏
*கம்பன்,நிகம்பன் எனும் இரு அசுரர்கள் ஆலமரம் மிகுந்த இப்பகுதியில் இருந்து தேவர்கள் ரிஷிகளுக்கு மிகுந்த துன்பம் விளைவித்தனர்
*பாதிக்கப்பட்டவர்கள் சிவபார்வதியை வேண்ட பார்வதிதேவி காளியை தோற்றுவித்து அசுரர்களை அழித்து ஆலங்காட்டுக்கு தலைவியாக ஆக்கினாள்
*அசுரர்களின் ரத்தத்தை குடித்த காளி கோரச்செயல்களை புரிய ஆரம்பித்தாள்
*மூஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளை ஏற்று சிவன் கோர ரூபத்துடன் ஆலங்காட்டுக்கு வர காளி தன்னுடன் தாண்டவம் ஆடி வென்றால் ஆலங்காடை விட்டு வெளியேறுவேன் என சபதமிடுகிறாள்
*காளியுடன் ஊர்த்துவ தாண்டவமாடிய சிவன் காது குழையை வீசி இடது கால் பெருவிரலால் பொருத்தி காளியை தோற்கடித்தார்
*ஆனாலும் சக்தியில்லாது சிவனில்லை காளியை வணங்கி விட்டு என்னை வணங்குவர் என அருளினார்
*ஈசனால் அம்மையே என அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து வந்து நடராஜர் திருவடியின் கீழிருந்து அவரை தரிசிக்கும் தலம்
*மூலவர் வண்டார்குழலி சமேத வடாரண்யேஸ்வரர் சுயம்புமூர்த்தி
*51 சக்திபீடங்களில் இது காளிசக்தி பீடம்
சிவாயநம