அப்படித் தரிசித்தால் செய்வினை பாதிப்பு, சனீஸ்வரால் ஏற்படும் தொல்லை மற்றும் பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள், வியாதிகள் நீங்கும். மோட்சம் கிடைக்கும். உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம். *ஓம் சிவாய நம"🙏

30 views
Skip to first unread message

Ramakrishnan K S

unread,
Aug 26, 2021, 6:44:13 AM8/26/21
to Abridged Recipients
Inline image
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅 குஞ்சிதபாதம் என்றால் என்ன?

சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கித் திருநடனம் ஆடியதற்குக் குஞ்சிதபாதம் என்று பெயர். 
இந்த தரிசனத்தைக் கண்டாலே தீராத வியாதியும் நீங்கும். பல மூலிகைகளால் செய்யப்பட்ட ஒரு பொருளை ந்டராஜரின் தூக்கிய திருவடியில் அணிவிக்கப்படும் போது, அந்த மூலிகை வேர்களுக்குக் குஞ்சிதபாதம் என்றும் பெயர் இருக்கிறது. 

சிவபெருமானின் இடது பாகத்தில் சக்திதேவி இருக்கிறார். அதனால்தான் எமதர்மராஜன், மார்க்கண்டேயனைத் துரத்திப் பாசக்கயிற்றை வீசிய போது மார்க்கண்டேயன், சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். அப்போது எமனின் பாசக்கயிறு சிவலிங்கத்தின் மேல்பட்டது. இதனால் கோபம் அடைந்து எமனை இடது காலால் எட்டி உதைத்தார் ஈசன். 

தாயும்-தந்தையுமான சிவ-சக்தியை மார்க்கண்டேயன் சரண் அடைந்ததால் சிவபெருமான், சக்தி தேவியின் அம்சமான தனது இடது பாகத்தில் உள்ள பாதத்தால் எமனை எட்டி உதைத்தார். அந்த இடது கால் சக்தி தேவியின் அம்சம் என்கிறது புராணம்.
அதனால் ஆடல் நாயகனைத் தரிசிக்கும் போது கண்டிப்பாக இடது காலைத் தரிசிக்க வேண்டும். 

அப்படித் தரிசித்தால் செய்வினை பாதிப்பு, சனீஸ்வரால் ஏற்படும் தொல்லை மற்றும் பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள், வியாதிகள் நீங்கும். மோட்சம் கிடைக்கும். உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம்.
*ஓம் சிவாய நம"🙏🌹🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

Reply all
Reply to author
Forward
0 new messages