உருவாய் அருவாய் உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

217 views
Skip to first unread message

Ramakrishnan K S

unread,
Apr 19, 2021, 6:58:46 AM4/19/21
to Abridged Recipients
 உருவாய் அருவாய்
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
..............................................................................................................................................................................................
அடியார் : வருமானம் பத்தாம ரொம்பக் கஷ்டமாயிருக்குங்க.

பாராயணத்துக்குப் பெரியவங்க ஏதாவது ஸோஸ்தரம் [ஸ்தோத்திரம்} சொல்லணுங்க.

ஸ்ரீசரணர்: நீதான் முருக பக்தனாச்சே, தினமும் '[கந்தர்] அனுபூதி' சொல்றவனாச்சே! அதுக்கு மேலே புதுசா என்ன பாராயணம் பண்ணணும்கிறே?

அடியார்: [சற்று நேரம் முகதைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்துவிட்டு} அது ஞான நூலான்னாங்க இருக்கு? நமக்கோ அன்னாட அல்லாட்டத்துல வருமானம்னா தேவையாயிருக்கு!

ஸ்ரீசரணர்: [கணமும் யோசியாமல், குமிண் சிரிப்புடன்] ஸரி, அதுல கடைசி வரி என்ன?

அடியார்: "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!"
ஸ்ரீசரணர்: "வருவாய்"னாலும் வருமானம்தானே? 'வருவாய் அருள்வாய்'னே வரதே! அதுவும் முடிஞ்சு முடிவா ஸ்தோத்ரத்தின் ஈற்றடியிலே வரதே! அதையே சொல்லிண்டிரு, போறும்.

வார்த்தைகளில் புகுந்து விளையாடும் அவரது வித்தகத்துக்கும் ஒரு சான்று

Reply all
Reply to author
Forward
0 new messages