யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷசாந்தகம்.
எந்த மூலை முடுக்கிலும் ஹிந்துக்கள் வாழும் பூமியில் எங்கெல்லாம் ஸ்ரீ ராமன்,ரகுநாதன்,புகழ் பாடப்படுகிறதோ அங்கெல்லாம் கரங்களை கூப்பி, ஹஸ்தாஞ்சாலியோடு, தலை குனிந்து வணங்கிக் கொண்டிருக்கும், ராமன் பெயர் செவியில் கேட்டாலேயே தானாகவே கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிய, திடகாத்ரனாக, மஹா புத்திசாலியாக, நவ வ்யாகரண பண்டிதனாக, ராக்ஷர்களுக்கு எமனாக விலகும் ஹனுமான் நமக்கு தைர்யம் அளித்து, பயமற்று வாழ, நோய்கள் நெருங்காமல் இருக்க, அருள் பாலிக்கிறான்.