GRAHANAM 3.3.26

7 views
Skip to first unread message

Sivan Krishnan

unread,
Mar 1, 2026, 11:29:21 PM (4 days ago) Mar 1
to amrith...@googlegroups.com
3.3.2026  சந்திர க்ரஹணம்.-    நங்கநல்லூர்  J K   SIVAN

க்ராஹணம்  என்றால்  பிடித்துக்கொள்வது. கல்யாணத்தில்  பாணி கிரஹணம் என்பது மணப்பெண், மணமகன் வலதுகையை கெட்டியாக பிடித்துக் கொள்வது.

அதேபோல் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படும் விண்வெளி நிகழ்வு. இது இரண்டு வகை: சூரியனையே சந்திரனையோ பாம்பு பிடித்துக் கொள்வதாக புராணம் சொல்வது கிரஹணம். விஞ்ஞான ரீதியில் சூரிய க்ரஹணம் என்பது
சூரியன் – சந்திரன் – பூமி   மூன்று கிரஹங்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் வந்து சூரியனை மறைக்கும்.அப்போது பூமியின் சில பகுதிகளில் சூரிய ஒளி மறைக்கப்படும்.  அது  முழு சூரிய க்ரஹணமாகவோ,  கொஞ்சம் சூரியனை மட்டும் மறைப்பதாகவோ அமையலாம்.

சந்திர க்ரஹணம் என்பது  சூரியன் – பூமி – சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது,
நமது பூமி சூரிய ஒளியை மறைத்து சந்திரன் மீது நிழல் விழச் செய்வது. அதுவும் முழுதாகவோ, கொஞ்சமாகவோ இருக்கலாம்.

இதை ஸ்ரீமத் பாகவத புராணம் ,  விஷ்ணு புராணம் ஆகியவை கதையாக சொல்கிறது.
தேவர்களும் அசுரர்களும்  அமிர்தம் கிடைக்க பாற்கடலை கடைந்தார்கள்.அமிர்தம் கிடைத் தது. ஒரு அசுரன்  தேவர்கள் போல் வேஷம் பூண்டு அமிர்தம் குடித்தான். அதை  மோகினி
யாக வந்த மகாவிஷ்ணு கண்டுபிடித்து, சக்கராயுதத்தால் அவன் தலையை வெட்டினார். அசுரன் தலை “ராகு”, உடல் பகுதி “கேது” என  பாம்பு உருவம் ஆனது. அமிர்தம் பருகியதால் அசுரன் தலையோ உடலோ அழியவில்லை. அவன் அருகே  அமர்ந்து இருந்து அவனை
 தேவன் அல்ல என்று காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களை, பழிவாங்க, அசுரன்   ராகுவாக
 சூரியனையும்  கேதுவாக சந்திரனையும் விழுங்குவது தான் சூரிய சந்திர க்ரஹணம் என்கிறது.
க்ரஹணகாலம் நல்லதல்ல, அப்போது உணவு சாப்பிடக்கூடாது, உறங்கக்கூடாது. வெளியில் தேவையில்லாமல் செல்லக்கூடாது.  பேசாமல் க்ரஹணம் விடும் வரை காயத்ரி ஜபம்
செய்வது வழக்கம்   காயத்ரி மந்த்ரம் ரொம்ப சின்னது;

 ''ॐ भूर्भुवः स्वः ।तत्सवितुर्वरेण्यं । भर्गो देवस्य धीमहि । धियो यो नः प्रचोदयात् ॥
ஓம் பூர்புவஸ்வ: தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோத யாத்''
அதோடு கூட   மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரமும் சொல்வதுண்டு.
ॐ त्र्यम्बकं यजामहे  सुगन्धिं पुष्टिवर्धनम् ।  उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात् ॥
Om Tryambakam YajamaheSugandhim PushtivardhanamUrvarukamiva Bandhanan,Mrityor Mukshiya Maamritat ॥
இதைத்தவிர  ராகு பீஜ மந்திரம் சொல்வார்கள்; 
ॐ भ्रां भ्रीं भ्रौं सः राहवे नमः ॥
Om Bhrām Bhrīm Bhraum Sah Rāhave Namah ॥
கேது பீஜ மந்த்ரம்;  ॐ स्रां स्रीं स्रौं सः केतवे नमः ॥Om Srām Srīm Sraum Sah Ketave Namah ॥

க்ரஹணம் முடிந்ததும் உடனே ஸ்நானம்  செய்ய வேண்டும்.நதியிலோ, வீட்டிலோ, கங்கை
ஜலம் இருந்தால் தண்ணீரில் அதை கொஞ்சம் கலந்து குளிக்கலாம்.
தர்ப்பணம் பண்ணவேண்டும்.
ன்னதானம்,ஸ்த்ர தானம்தில தானம், தக்ஷிணை  கொடுப்பது புண்யம் சேர்க்கும் என்பார்கள். 

கர்ப்பிணி பெண்கள் வெளிச்சமே படாதபடி கதவு ஜன்னல் எல்லாம் சாற்றிக்கொண்டு 
பாரம்பரிய நம்பிக்கைப்படி உள்ளே அடைந்து கிடப்பார்கள். கத்தி கத்திரிக்கோல் போன்றவை உபயோகிக்க மாட்டார்கள்.  விஷ்ணு நாமம் ஜபிப்பார்கள்.
சாஸ்திரம் சொல்வது படி கிரஹணம் என்பது  கர்ம  நிவர்த்தி நேரம்.  ஜபம் 1000 மடங்கு பலன் தரும். பித்ரு தர்ப்பணம் முன்னோர் ஆசியை அளிக்கும். 

சூரிய சந்திர க்ரஹணங்கள் விஞ்ஞான ரீதியாக இயற்கை நிகழ்வு என்றாலும், நமது ஹிந்து  மதத்தில் ஆழ்ந்த ஆன்மிக சக்தி வாய்ந்த நேரமாகும். 

 சூரிய க்ரஹணத்தை நேரடியாக  பார்ப்பது கண்ணுக்கு கோளாறு உண்டாக்கும்.  நாங்கள் சிறுவயதில்  கருப்பு  புகை படிந்த  கண்ணாடி வழியாக பார்ப்போம்..சூரிய ஒளி நேரடியாக கண்ணில் பட்டால் கண்படலத்தை எரித்து விடும். Solar Retinopathy எனப்படும் நிரந்தர குருடு  ஆக்கிவிடும்.  இப்போதெல்லாம் ISO certified eclipse glasses கிடைக்கிறதே.
சூரிய கிரஹண காலத்தில் சில நிமிடங்கள் வெப்பநிலை குறையும்.பறவைகள் இரவு வந்தது போல நடந்து கொள்ளலாம். விலங்குகள் குழப்பமடையலாம். ஆனால் இது தற்காலிகம் மட்டுமே.
நாம்  ராகு கேது என்ற பாம்பு சூரிய சந்திரனை விழுங்குகிறது என்பது போல் சீனாவில் ஏதோ ஒரு பெரிய டிராகன் dragon  ஆகாயத்தில் பறந்து சூரியனை விழுங்குகிறது என்று நம்புகிறார்கள்.  பழைய கால சீனர்கள்  தாரை தப்பட்டை அடித்து சத்தம் போட்டு டிராகனை விரட்ட முயன்றனர்.
ஜப்பானியர்கள் க்ரஹணம்  பொல்லாதது, தீய சக்தி நேரம் என்று நம்பினதோடு நம்மைப்போல்  கர்ப்பிணிகளை  வெளியே தலைகாட்ட விடுவதில்லை. 

கொரியா ஆசாமிகள் ஒரு படி மேலே போய்  ஒரு  நெருப்பு  நாய் (fire dog) சூரியனை கடிக்க முயற்சிக்கிறது என்று  நம்பியவர்கள். 
தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து முன்னோர்கள்  ஒரு வானவில் பாம்பு சூரியனை விழுங்குகிறது என்ற புராண நம்பிக்கை  கொண்டவர்கள். 

கிரஹணம் முடிந்தபின் சமைத்த உணவில் துளசி இலை ரெண்டு போட்டு பாதுகாப்பது வழக்கம்.  கிரஹண காலத்தில் கோயில் கதவுகள் மூடப்படும்.  பூஜைகள் கிடையாது.
கிரகண நேரம்   ...பகுதி கிரகணம்   மார்ச்  3,  அன்று    மாலை 03:20 துவங்கும்.  முழு க்ரஹணமும்  துவங்கும் நேரம்   மாலை 04:34 PM   முழு க்ரஹணம்   உச்சத்தில் இருக்கும் நேரம்  கிட்டத்தட்ட  மாலை 5:03    கொஞ்சம் கொஞ்சமாக  குறைந்து பாகு கிரஹனமாகி  கடைசி  பகுதி க்ரஹணாமாக    சுமார்  மாலை  05:33   முழு கிரகணமும் பிடித்து  முடிந்து விட   மாலை 6:47.  அப்புறம் தான் ஸ்னானம்.  இந்தியாவில் பல இடங்களில் தெரியும் என்கிறார்கள்.நிலா  எஸும்பும் நேரம்.  சென்னையில் இது அதிகமாக ~6:15 PM – 6:47 PM வரை காணப்படும் என்று விண்வெளி ஆராய்ச்சி நிலையம் சொல்கிறது. 

விஞ்ஞானிகள் இந்த க்ணம் சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தில் இருந்து கடைசியில் பின்னால் நிலாவை சிவப்பாக பிரதிபலிக்கும் “Blood Moon” போன்ற காட்சி தரும்  என்கிறார்கள். பார்ப்போமா?.  இதைப்பார்க்க  விசேஷ கண்ணாடி வேண்டாம் ஸார் .
Reply all
Reply to author
Forward
0 new messages