Fwd:

140 views
Skip to first unread message

Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:26:30 PMOct 24
to amrith...@googlegroups.com


---------- Forwarded message ---------
From: Sivan Krishnan <jks...@gmail.com>
Date: Thu, 24 Jul 2025 at 17:41
Subject:
To: <amrith...@gmail.com>


 ஒரு கணம் நினைப்போம்  -   நங்கநல்லூர்  J K  சிவன் 

நாம்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  பகவான் நம்மோடு  நம்  அருகிலேயே இருந்து கொண்டு தாயன்போடு கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.  நம் நலத்தில் அவனை விட  அக்கறை கொண்டவர்  வேறு யார்? 

நாம் செய்யவேண்டியது அவனை சதா நினைத்து அவனிடம் முழுசாக சரணடைவதே. அவனிடம் நம்மை ஒப்புவித்தால் அப்புறம் நமக்கு தனியாக என்ன கவலை?

 'பகவானே  வெங்காயத்தின் தோலை உரிப்பது போல்   என்னிடமுள்ள  சுயநலம் , பொறாமை,  கோபம் போன்ற தீய குணங்களை  அகற்றி விடு. '  என வேண்டிக்கொள்வோம்.

நமக்கு நடக்கும்  நல்லது கெட்டது  எல்லாமே  நம்  கர்ம  வினைகளால்  நமக்கு  நாமே உற்பத்தி செய்து கொண்டவை. அதன் பலனிலிருந்து தப்ப முடியாவிட்டாலும்  அவற்றின் பலனை அனுபவிக்கும்போது  கஷ்டங்களை குறைத்தும்  சுகம் அதிகரிக்கவும் அவன் அருள் தேவை.  எல்லாம் அவன் செயல் என  ஏற்றுக்கொள்ள மனம் பக்குவப்பட வேண்டும்.   
';அவனன்றி ஓர் அணுவும் அசையாது' என்பது அடிக்கடி நெஞ்சில் சதா  நிற்கவேண்டிய ஒரு அற்புத வாக்கியம். சத்ய வாக்கு. 
மறையும் வரை உலக நாடக மேடையில் நம்மை ஆடவைத்து ரசிக்கும்  தாய் அந்த தாயுமானவன். ஆசாபாசங்கள் தானே நமது ஆட்டம். 
நாம்  அவனை 

குட்டிக்  குரங்கு   தாயை கெட்டியாக பற்றிக்கொண்டு  கிளைக்கு கிளை  தாவும் தாய்குரங்குடன் எங்கும்  செல்வதைப் போல அவனைக் கெட்டியாக  பிடித்துக்கொண்டால் வலிக்காமல்   தூங்குகின்ற குட்டிகளை வாயில்  கவ்விக்கொண்டு  ஒவ்வொரு இடத்துக்கும்  ஜாக்கிரதையாக தூக்கிச் செல்லும்  தாய்ப்  பூனை போல்  போற்றி காப்பாற்றுவான். இது தான்  'மர்க்கடஞாயம்  மார்ஜால ஞாயம்'.  

நீ முழு மனசோடு என்னை சரணடைந்தால் உன்னை காப்பாறுவது என்னுடைய கடமை என்று கிருஷ்ணன் கீதையில் சொல்வதும் இது தானே.' நன்றியோடு  அவனை எந்நாளும் நினைப்போம். 
 

Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:26:31 PMOct 24
to amrith...@googlegroups.com
ஒரு குரு பரம்பரை  -  நங்கநல்லூர் J K  SIVAN 

மாலையும் இரவும் சந்திக்கும் வேளை.  சூரியனின் பொன்னிற கதிர்கள் எங்கும் எதுவும் தங்கமயமான காட்சி தர,   விஜயநகர அரண்மனையில் ஒரு பகுதி  ஆஸ்ரமம் போல்  அமைதியாக  சுற்றிலும்  செடி கொடிகள் சூழ்ந்து மான்கள்  பசுக்கள் நிறைந்து இருந்தது. எண்ணற்ற பறவைகளின் சப்த ஜாலங்கள் செவிக்கு இனிமையூட்டின.   ஸ்ரீ வியாசராஜர்  பூஜை அறையில்  கண்ணை மூடி தியானம் செய்து கொண்டிருந்தவர் மனதில் எண்ண ஓட்டம். 

இத்தனை காலம் இங்கே இருந்த விஷ்ணு தீர்த்தர் எனப்படும் ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர் ஸ்ரீ சுரேந்திர தீர்த்தரோடு சென்று விட்டார். என்னால் தான் அனுப்பப்பட்டார். அதில் வருத்தம் இல்லை. ஸ்ரீ கிருஷ்ணன் ஏற்பாடு அது.  இந்த வியாசராஜ மடத்தில்  எனக்குப் பின் யார்  பீடாதிபதி இதை வழி நடத்திச் செல்ல? அதற்குப்  பொருத்தமானவர்  இனி  ஸ்ரீநிவாஸ தீர்த்தரே  என்று  தீர்மானித்து   அவரை  பீடாதிபதியாக  நியமித்தார். 

'' கிருஷ்ணா  நீ எனக்கிட்ட கடமை தீர்ந்தது என்று வியாசராஜர் துங்கபத்ரா நதிக்கரையில் பல்குண சதுர்த்தி அன்று நவபிரிந்தாவனத்தில் முக்தி அடைந்தார்.    ஸ்ரீ விஜயீந்திரதீர்த்தர் , கனகதாசர், வாதிராஜர், புரந்தரதாசர் ஆகியோர் அவரது பிருந்தாவனத்தில் அவரை வணங்கி ஆசி பெற்று திரும்பினர்.
காலம் தனது வேகமான பாதையில் தங்கு தடையின்றி  சுழன்றது. 

ஸ்ரீ சுரேந்திர தீர்த்தர் கும்பகோணம் சென்றார். ஸ்ரீ விஜயீந்த்ர தீர்த்தர்  இன்னொரு சிஷ்யரை சன்யாச மார்க்கத்துக்கு தீக்ஷை அளித்து அவருக்கு  ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் என்ற  பட்டம், நாமம் வழங்கப்பட்டது.  ஸ்ரீ மடம் மூன்று  பீடாதிபதி களால் சிறப்புற நிர்வகிக்கப்பட்டது.  ஸ்ரீ சுரேந்திரர், ஸ்ரீ விஜயீந்திரர், ஸ்ரீ  சுதீந்திர தீர்த்தர்.
வியாசராஜரால், ஒரு சிறு குழந்தை பெற்றோரிடமிருந்து பெறப்பட்டு, வளர்க்கப்பட்டு, சன்யாச தீக்ஷை பெற்று  ஸ்ரீ விஷ்ணு தீர்த்தராக  பட்டம் சூட்டப்பட்டு,  ஸ்ரீ சுரேந்திர தீர்த்தருக்கு  அளிக்கப்பட்டு, அவரால் ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தராக பீடத்துக்கு அதிபதியாகி  பொறுப்பேற்றது எல்லாமே  எவ்வளவு சீக்கிரம் நிகழ்ந்து விட்டன. இது தான் காலத்தின் கதி. (வேகம்)
காலம் தனது சுழற்சியில்  விஜயநகர சாம்ராஜ்யத்தையும் விட்டு வைக்கவில்லை.   கிருஷ்ணதேவராயருக்குப் பின் ராமராயர் ராஜாவானார் . மதுரை  விஸ்வநாத  நாயக்கர், கிருஷ்ணப்ப நாயக்கர்  தலைமையில் செயல் பட்டது.  தஞ்சாவூர்  செவ்வப்ப நாயக்கர் தலைமையில் இயங்கியது. 

கிருஷ்ணதேவராயர் தலை சாய்ந்த பின், சாம்ராஜ்யம் சக்தி இழந்தது.  தலைக்கோட்டை யுத்தத்தில் இஸ்லாமிய படையை எதிர்க்க முடியாமல் துரதிர்ஷ்டம் வாய்த்தது. கோவில்கள், அரண்மனைகள் இடிந்து  சிதிலமாயின. 

விஜயநகர அரசவை கவிஞர் திம்மண்ண பட்டா,வெளியேறி செவ்வப்ப நாயக்கர் ஆட்சியில் இருந்த தஞ்சாவூருக்கு மனைவி, பெண் வேங்கடம்பா, மகன் குருராஜனுடன் புறப்பட்டார்.  திம்மண்ண பட்டாவின் கவித்துவம் அறிந்த ஸ்ரீ சுரேந்திரர் அவரை ஸ்ரீ மடத்துக்கு அழைத்தார்.  பின்னர் தனது பொறுப்புகளை  ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தரிடம் அளித்துவிட்டு  மதுரை சென்றார். அங்கே ஸ்ரீ சுரேந்திர தீர்த்தர் இறைவனோடு இணைந்தார். அவரது பிருந்தாவனம் மதுரையில் உள்ளது.  கும்பகோணத்தில்  ஸ்ரீமடம் காலூன்றியது. 

அக்கால வழக்கப்படி திம்மண்ணாவின் மகள் வேங்கடம்பாவுக்கு  சிறுவயதிலேயே திருமணமாகி புக்ககம் சென்று
விட்டாள். மகன் குருராஜன் குருகுலம் சென்றுவிட்டான். திம்மண்ண பட்டா தம்பதியர் திருப்பதி சென்றார்கள் . எங்கள் வாழ்க்கை தனிமையில் செல்கிறது. ''வெங்கடேசா, எனக்கு இன்னொரு மகனைத் தா''  என வேண்டினார்.  

விஜயநகரம் இப்போது பெனுகொண்டாவை தலைநகராக கொண்டுவிட்டது.  திம்மண்ண பட்டா மனைவி கோபிகாம்பாவுடன் காஞ்சிபுரம் சென்றார். வரதனை தரிசித்து  விட்டு அவர் குடும்பம் புவனகிரிக்கு சென்றது. 

திருமலை வேங்கடேசன் அருளால் கோபிகாம்பா ஒரு அழகிய ஆண்மகவைப்  பெற்றாள். வெங்கடேசன் நாமத்தையே   வேங்கடநாதன் என்று  குழந்தைக்கு  சூட்டினார்கள்.   சில காலத்தில் குடும்பம் கும்பகோணம் ஸ்ரீ மடத்துக்கு  குடி பெயர்ந்தது.  ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர்   திருப்பதி வேங்கடேசன் அருளால்  பிறந்த வேங்கடநாதனைப் பார்த்ததும்   மகிழ்ந்தார். இது தெய்வீக குழந்தை.  எதிர்காலத்தில்  நம்மை வாழ்விக்க வந்தவர் என ஞான த்ரிஷ்டியால்  புரிந்து கொண்டார்.வாஸ்தவம்.  வேங்கடநாதன் தான் பிற்காலத்தில் ஸ்ரீராகவேந்திர  தீர்த்தர். இன்றும் ஜீவன்முக்தராக மந்த்ராலய மஹானாக அருள் பாலிக்கும் அவரைப் பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது ஒன்றுமில்லை.

Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:26:32 PMOct 24
to amrith...@googlegroups.com

Gain peace of mind. -  Nanganallur J.K. SIVAN

The problems, we face,most them, are created by our own selves, by inerfering  too often and too much in others' affairs. We feel our way is the best. We believe that our logic  is the perfect one to be followed by others. We blindly are convinced that we are always on the right direction.  This is against  individual freedom of thinking.  In God's creation each one of us definitely is different and unique. No two human beings can think or act alike.  We  must mind our own business to ensure peace for us and others.

Everything and everyone around is subject to change, and we cannot change them as we wish.  First we should change ourselves according to the situation and environment.

The old maxim 'what cannot be cured must be endured '' should not be forgotten.  It will turn any disadvantage to an advantage.  We have no control over many of the the things  causing  aiment, inconvenience, irritation or accident  and only patience pays.  We should be wise to adopt to demands of situation if we cannot change or control any of them. 

Our biggest blunder is that most of the time, we  assume  responsibiities we are not capable of performing well. This is caused by egoism and ignoring to realise our limitations.  In result, we are faced with avoidable worries and  lose peace of mind. 

Indulging in self introspection and meditation solves many problems and bring peace of mind. Uncluttered mind will produce greater peace of mind avoiding  disturbing thoughts. 

Half an hour of meditation  everyday, will  help to become peaceful during the remaining  twentythree and half-hours. Mind will be free from any disturbance  if we practice more hours of meditation in a day, it will help mind to concentrae on the task taken up , in our daily work, with increased efficiency.

There should be no wavering of thought in decisions.  Whether to do this or that, to do it or not, such debates eat up our valuable time, for days, weeks, months and years.  A free mind can plan enough  estimating and evaluating  the possible and probable  future happenings.Failures and misakes can happen but it should open the mind to improve and avoid recurrence by learning from experience.  Regretting and worrying over it is of no use as it only weakens the mind and body. No use cryng over spilt milk. 

Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:26:32 PMOct 24
to amrith...@googlegroups.com

*சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர்' -  நங்கநல்லூர்  J K SIVAN 

மஹா பெரியவா போற்றிய மஹான்.        

தமிழ் தெரிந்த ஹிந்துக்களுக்கு  சேங்காலிபுரம் ப்ரம்ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் என்ற பெயர்  தெரியாவிட்டாலும் அவர்  குரல் நன்றாக பரிச்சயமுண்டு.  66 வருஷங்கள் வாழ்ந்தவர்  (2.8.1903 – 30.10.1969) உபன்யாச சக்கரவர்த்தி. அவர் வாயால் பாடியும்  சொல்லியும்  குருவாயூரப் பனின் நாராயணீயம்  கேட்டவர்கள் பாக்கியசாலிகள். இன்னும்  யூட்யூபில்  அவர் குரல் ஒலிக்கிறது. 

தஞ்சாவூரில் சேங்காலிபுரம் கிராமத்தில் பிறந்தவர். அப்பா  சுப்ரமணிய  தீக்ஷிதர்.  இவரை  சின்ன முத்தண்ணாவாள் என்று தான்  ஊர்  அழைக்கும்.  பெரியப்பா  வைத்யநாத தீக்ஷிதர் தான்  பெரிய முத்தண்ணாவாள்.  பேசும் தெய்வம் மஹா பெரியவாளே  போற்றிய ஒரு மஹான்.

அனந்தராம தீக்ஷிதரின் குரு  பருத்தியூர் பெரியவா கிருஷ்ண சாஸ்திரிகள். தீக்ஷிதர் முத்தண்ணாவாள் குருகுலத்தில்  அக்ஷராப்யாசம்  பெற்றார். மஹா பெரியவா அவருக்கு   ''பிரசன்ன ராகவம்'' என்ற  புத்தகம் பரிசளித்தார். அதிலிருந்து தீக்ஷிதருக்கு  ஸ்ரீ ராம பக்தி பெருகியது. இதிஹாஸ புராணங் களில் தேர்ச்சி பெற்றார். பின்னர்  கடலங்குடி  நடேச சாஸ்திரிகளிடம் சாஸ்திரங்கள் வேதங்கள் பாடமாகியது. நடேச சாஸ்திரிகள் பெண்ணை மணந்தார். கும்பகோணம் வேத தர்ம பரிபாலன சபையில் முதலில் பிரவசனம் பண்ணியவர்  தீக்ஷிதர்.  வேத தர்ம சாஸ்திர  பரிபாலனத்துக்காக இந்த சபையை ஆரம்பித்தவர் மஹா பெரியவா.

குருவாயூரில்  ஸ்ரீமத் பாகவத சப்தாஹங்கள் நிகழ்த்தினார். கேரளாவில் த்ருப்யார் என்கிற ஊரில் ராமர் ஆலயத்தில் ஒரு நவாஹம் நடத்தவேண்டும் என்று கட்டளை யிட்டதே  ஸ்ரீ ராமர் தான் என்று சிருங்கேரி சங்கராசார்யர்  ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள்  குறிப்பிட்டு அந்த நவாஹத்தில் பங்கேற்றார். பகவான் ஸ்ரீ ராமரே இந்த நவாஹம் நடப்பதில் ஆர்வம் கொண்டதை அறிந்து எல்லோருக்கும்  ஆச்சர்யம்.  தீக்ஷிதர் உபன்யாசத்தை பல்லாயிரக் கணக்கானோர்  ஆர்வமாக  கேட்டு ரசித்தார்கள்.  மஹா பெரியவா  அறிவுரையின்படி  பல கேசட்டுகள்  வெளியாயின.  இப்படி  விற்கப்பட்ட  கேசட்டுகள் மூலம் கிடைத்த வருமானம் ஸ்ரீ தீக்ஷிதர்  அதிஷ்டானம் நிர்மாணிக்க உதவியது.  மறைவுக்கு முன்பு ஸ்ரீ தீக்ஷிதர்  சன்யாசம் மேற்கொண்டார். சேலம் சின்ன திருப்பதியில் தீக்ஷிதர் அதிஷ்டானம் உள்ளது.  நான் சென்று தரிசித்திருக்கிறேன்.

குருவாயூரப்பன் மேல் மேல்பத்தூர்  நாராயண நம்பூதிரி இயற்றிய  ஸ்ரீமன் நாராயணீயத்தில்  ஒரு சிறு பகுதியை   தீக்ஷிதரின்  குரலில் கேட்டு மகிழ  இதனுடன்  இணைத்திருக்கிறேன். கேட்டு மகிழவும். https://youtu.be/6dt1XrwAo8k?si=0aa6uXqo1mKOE8KF

Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:26:33 PMOct 24
to amrith...@googlegroups.com

Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:26:34 PMOct 24
to amrith...@googlegroups.com


மூணு கால்  ரிஷி  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

சில பேருக்கு  இயற்பெயரை  விட  காரணப்பெயர் பிரபலமாக அடையாளம் காட்டும்.  விஷ்ணுவையே சித்தத்தில் நிரம்பியவராக  இருந்ததால் விஷ்ணு சித்தர்.   கருத்த கால்களை உடையதால் கரிகால் சோழன்,    அப்படித்தான் ஒரு ரிஷிக்கும்  பிரிங்கி ரிஷி என்று பெயர். பிருங்கி  என்றால்  கருவண்டு, குளவி என்று பெயர். யாராவது  ரொம்ப ஒடிசலாக  ஒல்லியாக இருத்தால் அவரை பிரிங்கி ரிஷி என்று சொல்வதுண்டு. பிருங்கி ரிஷி பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன அறிமுகம் இந்த கட்டுரை.

எங்கள் நங்கநல்லூரை அடுத்த ஸ்தலம். பரங்கிமலை எனப்படும் செயின்ட் தாமஸ் மலை எனப்படும் ஸ்டேஷன். அது உள்ள ஊர்  ஆதம்பாக்கம். ரயில்வே ஸ்டேஷனை ஓட்டினால் போல்  ஒரு பழைய சிவன் கோயில். நந்தீஸ்வரர் கோமதி அம்பாள் (ஆவுடைநாயகி) ஆலயம்.  ரிஷி இருந்த இடம் என்பதாலும்  நந்தியாக காட்சி கொடுத்ததால் பரங்கி மலையை ஓட்டி நந்தம்பாக்கம் என்ற ஊர் இருக்கிறது. 

நந்தீஸ்வரர் ஆலயம்   1000 வருஷங்களுக்கு முன்பு குலோத்துங்க சோழன் (3வது) காலத்தில் கட்டப்பட்டது.. கல்வெட்டுகள் உள்ளன.  பிரிங்கி ரிஷி இங்கே சிவனை நோக்கி தவம் இருந்ததால் இந்த இடத்திற்கு பிருங்கி மலை  (பின்னர் பரங்கி மலை)  என்றும், சிவன் நந்தியாக காட்சி கொடுத்ததால் நந்தீஸ்வரர் என்று சிவனுக்கு இங்கே பெயரும் உள்ளது என்று புராணம் சொல்கிறது. 

காஞ்சிபுரம்  ஏகாம்பரேஸ்வரர் , காமாக்ஷி ஆலயங்களிலும் பிரிங்கி மகரிஷி  சிலை, சிற்பம்  உள்ளது. இந்த ரிஷி பற்றிய விசேஷம் என்னவென்றால் அவர்  நூற்றுக்கு ஆயிரம் மடங்கு சிவனை மட்டுமே ஆராதிப்பவர். அருகே  பார்வதி தேவி இருந்தால் அவர் லக்ஷியமே பண்ணுவதில்லை.   கைலாசத்தில்  பிரதி தினமும் சிவனை மட்டுமே சுற்றி வந்து வணங்குவார். இதை  எப்படி பார்வதி தேவி பொறுத்துக்க கொள்வார்?  ஆகவே  இந்த ரிஷி சிவனை வணங்க வரும்போதெல்லாம் அம்பாள் சிவனோடு ஒட்டி அமர்ந்து கொள்வார். பிருங்கி ரிஷி  படு  சாமர்த்யக்காரர். சிறு கருவண்டாக, குளவி போல, உருவெடுத்து சிவனுக்கும் பார்வதிக்கும் இடையில் நுழைந்து சிவனை மட்டும் வலம்  வருவார்.

'ஓஹோ அப்படியா, இருக்கட்டும், இப்போது பார் உன்னை என்ன செய்கிறேன்' என்று அர்த்தநாரியாக சிவனின் ஒரு  பாதியாகிவிட்டாள் அம்பாள். அப்படியும்இருவர்க்கும் இடையே கொஞ்சம் துளைத்துக்கொண்டு நுழைந்தார் வண்டு  ரூபத்தில் என்பதால் ரிஷியின் உடலில் உள்ள  ரத்தம், சதை எல்லாம் நீக்கி அவரை ஒரு எலும்புக்கூடாக பண்ணிவிட்டார்  அம்பாள்.

ரிஷியால்  நிற்கக்கூட முடியவில்லை.  எனவே தனது பரம பக்தன் ரிஷிக்கு சிவன் கால்  ஊன்றி நிற்பதற்கு  மூன்றாவதாக ஒரு காலை அளிக்கிறார். அதனால் பிருங்கி ரிஷிக்கு மூணு கால் ரிஷி என்று பெயர்.  பிருங்கி ரிஷி சரித்திரம் அவருடைய அதீத சிவபக்தியை வெளிப்படுத்துகிறது.  அதே சமயம் சக்தியே சிவன் என்றும் புரிய வைக்கிறது. 


Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:26:34 PMOct 24
to amrith...@googlegroups.com
பகவத் கீதை  3.  நங்கநல்லூர் J K  SIVAN 

இதுவரை  ரெண்டு  பதிவுகள் பகவத் கீதையைப் பற்றி  வெளியிட்டேனே.  ஏற்றுக்கொள்ளும்  படியாக இருந்ததா?. இதோ அடுத்த பதிவு. 
மனது தான் ஒருவனின் ஆன்மீக வளர்ச்சிக்கு  அஸ்திவாரம்.  அலைபாயும், உணர்ச்சிகளுக்கு கட்டுப்படும்,  மனம் வளர வாய்ப்பில்லை. சூரிய வெளிச்சமில்லாத செடி.  
மனது என்றால் எண்ணங்கள், விருப்பங்கள், ஆசைகள், உணர்ச்சிகளின் கலவை. ஒருவனை தவறான வழியில்  இழுத்துச் செல்லும் தாறு மாறாக  திசை மாறி  ஓடும் குதிரை.  அதைக்  கட்டுப்படுத்தினால் மோக்ஷம் பெறலாம். வெல்வது கடினம். ஐம்புலன்களின்  ஈர்ப்பிலிருந்து  பிடிப்பிலிருந்து விடுபட்டு மனதை  அதன் எஜமானனாக கட்டுப்படுத்தினால்  சாத்தியம்.  மனத்தை பாழ் படுத்துபவை மலம், ஆவரணம், விக்ஷேபம் எனப்படுபவை.

இந்த ஜென்மம், முந்தைய ஜென்மம் ஆகியவற்றில் சேமித்த  குப்பை, தவறுகள், அழுக்கு,  ஆணவம் தான் மலங்கள் எனப் படுகிறது. அதை சேமிக்கும் இடம் தான் சித்தம் எனப்படுவது.  அதனால் தான் மணிவாசகர் போன்ற சித்தர்கள்  ''சித்த மலம் தெளிவித்து சிவமாக்கி..'' என பாடினார்கள். 

ஆவரணம் என்றால்  திரை. உண்மையை மறைப்பது.  நாம் இந்த உடம்பு மட்டுமே என்று தவறாக காட்டுவது.
விக்ஷேபம் என்றால்  மனதின் சலனம். ஓயாத அலைகள் போன்ற  எண்ணச் சிதறல்கள். மாயையை நிஜம் எனக் காட்டுவது. கயிறு பாம்பாக, காங்க்ரீட்  போஸ்ட் பேயாக, மரம் பிசாசாக தோன்றுவது போல.  ஆசையே இல்லாமல் பற்றற்று, செயல் படும் போது இது மறையும். 'நிஷ்காம கர்மா'  என்று அதற்கு பெயர். சித்தத்தை சுத்தப்படுத்தும் வழி. 

இந்த பிரபஞ்சத்தில் மூன்று குணங்கள் தான் இதற்கு காரணம். தாமசம், ராஜஸம், சத்வம். புத்தியை செலுத்தாமல் சிந்திக் காமல் இருப்பது தாமச குணம். உணர்ச்சி, கோபம், பொறாமை, பேராசை, சலனம், இதெல்லாம் ராஜஸ குணங்கள். 

ஞானம்,அமைதி,  நிதானம், மௌனம் மிருதுவான குறைந்த பேச்சு, பாரபக்ஷமற்ற அன்பு,  இதெல்லாம் சாத்வீக குணங்கள். 
அதெல்லாம் சரி, இதெல்லாம் இந்த  மூன்று குணங்களை நமக்குள் வளர்க்கிறது?  

சரியான கேள்வி.  நாம் சாப்பிடும் ஆகாரங்கள், உணவு வகைகள் தான் முக்கிய காரணம். இப்போது  புரிகிறதா,  ஏன் வெங்காயம்,  பூண்டு, பட்டை, மசாலா  போன்ற கார சார, உணர்வை தூக்கும்  பண்டங்களை பொருள்களை உபயோகிக்  காமல் சாத்வீகமான உணவை உட்கொள்ள வேண்டும் என்று சொல்வதன் அர்த்தம் ? சாத்வீக உணவுப்  பொருள் சக்தியை வளர்க்கவேண்டும். உடல் உள்ள ஆரோக்யத்தை தர வேண்டும்.

உடலுக்கு தான் மேலே சொன்ன சாப்பாடு.  உள்ளத்துக்கும் சாத்வீகம் வேண்டும். எப்படி? 
தீயவற்றை நினைக்க  கூடாது,பேசக்கூடாது, பார்க்க கூடாது, கேட்கக்கூடாது.  நல்ல தெய்வீக எண்ணங்கள், சிந்தனைகள்  தான் ஆத்மாவை உணர வைக்கும்.  
உணவை பரிசுத்தமாக்கி  உண்பதற்கு என்ன வழி?
உணவை உண்ணுமுன் பிரார்த்தனை ஸ்லோகங்கள் துதிப்பாடல்கள் மந்திரங்கள் சொல்லிவிட்டு பகவானுக்கு நைவேத்தியமாக  அர்பணித்துவிட்டு சாதத்தை  பிரசாதமாக உண்பது. 

Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:26:34 PMOct 24
to amrith...@googlegroups.com


வா  உனக்காகவே காத்திருந்தேன்...   
நங்கநல்லூர்  J K   சிவன் 

வாதவூரர்  தனது பூஜை அறையில் இறைவனைத் துதிபாடி தன்னை மறந்து  இறைவனோடு ஒற்றியிருந்த நேரம்  காவலாளி மெதுவாக அவரது அருகே கைகட்டி நின்றான். அவர் கண் திறக்க காத்திருந்தான்.

வாதவூரரர்  தியானம் முடித்து கண்ணை திறந்தபோது  எதிரே நின்றபின் தென்பட்டான்.  ஏதேனும் விஷயம் இல்லையென்றால்  பிரதம மந்திரி வாதவூரரை எவரும்  அணுகமாட்டார்களே.

''என்னப்பா  வேண்டும் உனக்கு?''
''ஐயா, உங்களை  உடனே  மஹாராஜா பார்க்க வேண்டும் என்கிறார். அழைத்து வர சொன்னார்''
''இதோ வருகிறேன்''
பாண்டிய மன்னன் வாதவூரரை முகமலர்ச்சியோடு வரவேற்றான்.
''வாதவூரர், இதோ நிற்கிறார்களே  நமது  அஸ்வபடை தளபதிகள்.  சில நாட்களாகவே  நமது குதிரைப்படை வலுவிழந்து விட்டது. வயதான குதிரைகளை நம்பி  போரில்  நாம் வெல்வது கடினம் என்பதால் இளம் குதிரைகளை பழக்கப்படுத்தி  படையை பாப்படுத்தவேண்டியது அவசியம் என்று ஒற்றர்கள் தெரிவிக்கிறார்கள்.  எதிரிகள் சோழநாட்டில் நம்மை விட சிறந்த குதிரைப் படையை வைத்திருக்கிறார்கள் என்பதால் நாம் உடனே தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.''

பாண்டி நாட்டு துறைமுகங்களில் சோழ நாட்டு  துறைமுகங்கள் போலவே  யவனர்கள், அராபியர்கள் மற்றும் வெளிநாட்டினர் குதிரைகளை இங்கே  கொண்டுவந்து நல்ல விலைக்கு விற்கிறார்கள் என்று அறிகிறோம். நீங்கள் யார் இப்படி  நிறைய குதிரைகளை கொண்டுவருகிறார்கள் என்று அறிந்து எங்கே நல்ல குதிரைகள் தேர்வு செய்ய முடியும் என்று கணி
த்து  இருநூறு  குதிரைகளை உடனே நமக்கு படைக்கு வாங்கி பயிற்சி அளிக்க பொறுப்பேற்க வேண்டும். இன்றே புறப்படுங்கள்.  சில யவனர்கள் தங்கியுள்ள இடங்கள் அடையாளம் கண்டு பிடித்திருக்கிறார்கள். அது இந்த ஓலைச்சுவடிகளில் இருக்கிறது.  இந்த பையில்  பல ஆயிரம் பொற்காசுகள் உள்ளன. இன்னும் தேவையானால் நீங்கள் ஓலை அனுப்பினால் மேற்கொண்டு பொற்காசுகள் உங்களை வந்தடையும்''  உங்களை ஏன் இந்த காரியத்தில் ஈடு படுத்தினேன் தெரியுமா வாதவூரரே?""

இல்லை மஹாராஜா  நீங்களே சொல்லுங்கள்''
இன்று அவையில்  அனைத்து மந்திரி பிரதானிகளும்  உங்கள் பெயரையே திரும்ப திரும்ப சொல்லி சமயோசிதமாக  திறம்பட செயல் புரிய உங்களைப்போல் எவரும் இல்லை என்கிறார்கள்.  எனக்கும் உங்களைப்  பற்றி தெரியுமே. சகல சாஸ்த்ராவல்லுநர் உங்களுக்கு அஸ்வ சாஸ்திரமும் அத்துபடி  என்று எங்கும் பேச்சு''

''எல்லாம் சிவன் அருள் மன்னவா. தங்கள் உத்தரவை ஏற்று உடனே நாளை காலை புறப்படுகிறேன். சீக்கிரம் குதிரைகள் நமது படைக்கு வந்தடையும்''

அன்று இரவு  வாதவூரர் கனவில் இறைவன் வந்தான்.  இறைவனாக வரவில்லை, நிறைய சிவனடியார்களாக, யோகிகளாக,  சித்தர்களாக தோன்றி அவர் அவர்களை வணங்கி உபசரிக்கும் காட்சிகள் மாறி மாறி வந்தான். அவர் வெகுகாலமாக தேடும் ஞான குரு  அவர்களில் ஒருவராக இருக்கலாமா?

காலை குளித்து பூஜை எல்லாம் முடித்து மதுரை சொக்கனை வணங்கி  ப்ரசாதம் பெற்று குதிரை மீது ஏறி  பலர் அவரோடு   கூட  சேர்ந்து பயணிக்க  ஸைன்யமாக புழுதியை கிளப்பிக்கொண்டு குதிரைகள் பறந்தன.   வடபுறமாக  விருதுநகர் நோக்கி  பாதையில் சீரான.  ஆங்காங்கே  ஓய்வெடுத்து சிரமபரிகாரம் பண்ணிக்கொண்டு  வழியில் தென்பட்ட சிவாலயங்களை தரிசித்தவாறு  வாதவூரர் பயணித்தார்.  இரவு வெகுநேரமாகியது எங்கும் இருள் சூழ ஆரம்பித்தது.  இரவு காட்டுப்பாதையில் கொடிய விலங்குகள் நடமாடும். எங்கே தங்கலாம். அந்த ஊரைச் சேர்ந்த சிலர்  வழி தெரிந்தவர்கள் இரவு  திருப்பெருந்துறையில் தங்கலாம் என்று யோசனை சொன்னார்கள். 

திருப்பெருந்துறையில் தங்க முடிவானது.  சேவகர்கள் பணியாளர்கள்  அங்கே  வாதவூரர் தங்குவதற்கான  இடம்  வசதி ஏற்பாடு செய்ய கிளம்பிவிட்டார்கள்.  
மங்கிய  ஒளியில்  வாதவூரர் அந்த ஊர்க்காரர் காட்டிய   ஒத்தையடிப்பாதையில் நடந்து  மரங்கள் வனங்கள் சூழ்ந்த ஒரு பழைய  சிதிலமான கோவிலை காட்டினார்கள்.  
அதன் எதிரே  ஒரு குருந்த மரம். 
அதன் அடியே  ஒரு வயதான அந்தணர்  தரையில் அமர்ந்திருந்த சிலருக்கு  வேத மந்திரங்கள் கற்பித்துக் கொண்டிருந்தார். 

வாதவூரர்   மெதுவாக அவரை அணுகினார்.. இல்லை  ஏதோ காந்தம் போல் அவரை அந்த முதியவரிடம் இழுத்து சென்றது. 

மெதுவாக தன்னை நோக்கி வந்த வாதவூரர் மேல் முதியவர் கவனம் சென்றது.
''யார் நீங்கள்?''
''ஐயா  நான் யார் என்றே எனக்கு இன்னும் தெரியவில்லை"''
''பாண்டிய நாட்டு மந்திரி அதிகாரிகள் இங்கே வருகிறார்கள் என்று சேதி சொன்னார்களே''
''ஐயா நானும் பாண்டிய நாட்டிலிருந்து தான் வந்துள்ளேன்.
''என்ன காரியமாக வந்திருக்கிறீர்கள்.''
''உங்களைத்தேடி  தான் என்று சொல்வேன். என் குருவைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஏதோ உள்ளே ஒரு ஆனந்த அலை வீசுகிறது... நீங்களே நான் தேடிய குரு என்று என் உள்ளுணர்வு கூறுகிறது'' ஓம் நமசவாயம்.
''நீர் வாதவூரரா?''
''ஆம் குருநாதா''
'' நீ வருவாய் என்று எனக்கு தெரியும். நானும் உனக்காகவே இங்கே காத்திருக்கிறேன்.. 
''எம்பெருமானே, என்ன ஆச்சர்யம்''
''காலம் கனிந்துவிட்டது. வாதவூரா. நீ இங்கேயே  இருக்கப்போகிறாய். உன்னால் சிவத்தொண்டு பெருகப்போகிறது. ஆத்மநாதன் தீர்மானித்துவிட்டான் என்றால்  எந்த தடையும் இன்றி எல்லாம் நடந்தே தீரும்''
''சுவாமி  ஆத்மநாதன் யார்?
'' நீ, நான் இதோ இந்த பழம் பெரும் ஆலயத்தில் உள்ளவன். வா  உள்ளே  சென்று  அவனை தரிசிக்கலாம்.
''முள்ளும் புதரும் நிறைந்த  இடிபாடுகள் கொண்ட சுவர்கள் இடையே ஆத்மநாத லிங்கம்  விளக்கொளியில் தரிசனம் தர, வாதவூரர் தன்னை மறந்து சிவனை துதி பாடினார்.  கண் திறந்தபோது அருகே  அந்த முதியவரைக் காணோம்...  ஆச்சர்யத்தோடு அங்குமிங்கும்  தேடினால் எங்கும் எவரும் தென்படவே இல்லை...  எதிரே  ஆத்மநாதர் ஒரு கணம்  அந்தணராக தோன்றி மறைந்தார்.....
அதன் பிறகு  வாதவூரர்  திருப்பெருந்துறை க்ஷேத்ரத்தை விட்டு எங்கும்  நகரவில்லை. குதிரை தேட போகவில்லை, பொற்காசுகளை உபயோகித்து  சிவாலயத்தை புதுப்பித்தார்..  கூடவந்தவர்களை மதுரைக்கு அனுப்பிவிட்டார். குதிரைகள்  மூன்று மாத காலத்தில் மதுரை வந்து சேரும் என்று சொல்லி பல மாதங்களாய்விட்டது....
வாதவூரரை தடுத்தாட்கொண்ட ஆத்மநாதன் தானே  முதிய அந்தணனாக அவருக்காக காத்திருந்தானோ?
இது ஒரு சிறு சம்பவமாக  மாணிக்கவாசகர் சரித்திரத்தில் காணப்படுகிறது. 

Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:26:34 PMOct 24
to amrith...@googlegroups.com

வேதாளம் விக்ரமாதித்தன் கதை                              நங்கநல்லூர்  J K SIVAN 

மதனசேனை கதை

வழக்கம்போலவே  விக்கிரமாதித்தன்‌ வேதாளத்தை  முருங்கை  மேலிருந்து பிடித்து கீழே இறக்கி  அது இருந்த இறந்த உடலைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு நடந்தான். வேதாளமும் வழக்கம் போலவே பேச ஆரம்பித்தது. 

''விக்ரமா, உனக்கு  நான் இப்போது ஒரு கதை சொல்கிறேன் கேள்.  மகத நாட்டை வீரபாகு என்ற ராஜ ஆண்டுவந்தபோது அந்த ராஜ்ஜியத்தில்   அநங்கபுரம் என்ற ஊரில்  அர்த்த தத்தன் என்கிற பெரிய வியாபாரி வாழ்ந்து வந்தான்.  அவனுக்கு தனதத்தன் என்ற பிள்ளை, மதன சேனை என்ற பெண். அழகி, நல்ல குணம்.  அண்ணனின் நண்பன் தர்மதத்தன்  சிறுவயதிலிருந்து அவளோடு பழகி விளையாடுபவன். மதன சேனை வளர்ந்து பெரியவளானதும் அவளையே கல்யாணம் பண்ணிக்கொள்ள விரும்பினான்.  அவளை ஒருநாள் சந்தித்து தனது காதலையும் விருப்பத்தையும் சொன்னான். ஆனால் அவள் தந்தை அர்த்த தத்தன்  வேறு ஒரு ஊரில்  வசித்த வியாபாரி சமுத்திர தத்தனுக்கு மதன சேனையை கல்யாணம் பண்ணி வைக்க முடிவெடுத்துவிட்டார்.  ஆகவே தந்தை சொல் மீறமுடியாதே. தர்மதத்தனிடம் மதனசேனை இதை சொன்னாள் .

''தர்மதத்தா,  நான் ஒரு கன்னிப்‌ பெண்‌. என்னை ஏற்கனவே வேறொரு வணிககுமாரருக்கு மணம்‌ முடித்துக்‌ கொடுக்க நிச்சயமாகி விட்டது. சிறிது காலத்திற்குள்ளாகவே  எப்படியும்‌ விவாகம்‌ நடந்தே தீரும்‌. ஆகவே உங்கள்‌ காதலானது
மணம்‌ பெற வழியேயில்லை! யார்‌ கண்ணிலும்‌ படாமல்‌  வந்தவழியே திரும்பிச்‌ சென்று விடுங்கள்‌. இல்லாவிட்டால்‌ வீண்‌
அபவாதம்‌ ஏற்படக்‌ கூடும்‌” என்றாள் .
 “மதனா, எது வேண்டுமானாலும்‌ வரட்டும்‌. நீ 'இல்லாமல்‌ என்னால்‌  வாழ முடியாது!“ என்றான் தர்மதத்தன்.
 "தருமதத்தா! உன்னுடைய நோக்கம்‌ பிசகானதென்றாலும்‌ உன்ம்து எனக்குக்‌ கோபம்‌ ஏற்படவில்லை! என்‌ கன்னி அழகுதான்‌ உன்னை இவ்வாறு  தூண்டுகிறது. அதை நீ ஒரு முறை பருகிவிட்டால்‌ உன்‌ மோகம்‌ தீர்ந்து போகும்‌ என்பது எனக்குத்‌. தெரியும்‌! னால்‌ உன்‌  ஆசையை இப்போது அடக்கிக்‌ கொள்‌! நான்‌ கன்னிப்‌ பெண்‌!  கலியாணமாகும்‌ முன்‌ கன்னித்‌ தன்மையை அழிப்பதனால்‌ உனக்கு  மகாதோஷம்‌ உண்டாகும்‌! முதலில்‌ எனக்கும்‌ அந்த வணிக குமாரருக்கும்‌ கலியாணம்‌ முடியட்டும்‌. அதனால்‌ என்‌ தந்தைக்குக்‌  கன்யா பலன்‌ கிட்டட்டும்‌. அதன்‌ பிறகு உன்னைச்‌ சந்திக்க ஒரு நாள்‌ நானாகவே வருகிறேன்‌" என்றாள்‌ மதனசேனை.

"தாமரையிலே  ஒரு வண்டு தேன்‌ அருந்திய பிறகு மற்றொரு வண்டு அதை அடையுமா? பிறன்‌ ஒருவன்‌ தொட்ட பெண்ணை நான்‌  தொடமாட்டேன்‌. உன்‌ முதல்‌ முக  மலர்ச்சி எனக்குத்தான்‌ முதவில்‌ சமர்ப்பணமாக வேண்டும்‌!" என்றான்‌ தருமதத்தன்‌.

"தர்மதத்தா, காதலித்த  கன்னிகையின் அழகு முதலில்‌ உனக்குத்தான்‌ உல்லாசம்‌  தரவேண்டும்‌ என்கிறாய்‌! . அப்படியானால்‌ எனக்குக்‌ கல்யாணம்‌ ஆனவுடனே நான்‌ உன்னை அடைகிறேன்‌. அதன்‌ பிறகே கொண்ட கணவனை அடைவேன்‌! என்‌ கணவர்‌ என்‌ அழகை. ரசிக்கும்‌ முன்‌. கன்னித்தன்மை அழியாதவளாகவே, ஆடாத: மலராகவே,
உன்னிடம்‌ ஒரு நாள்‌ வருவேன்‌! என்னை நம்பு! அர்த்ததத்தரின்‌ மகள்‌ சொன்ன சொல்‌ தவறமாட்டாள்‌!" என்று தெரிவித்தாள்‌.
அவள்‌ இவ்வாறு  சத்தியம்‌ செய்து கொடுத்த.பிறகே அவளைப்‌போகவிட்டான்‌.

மதன சேனைக்கு கல்யாணம் நடந்தது.  புருஷன்‌ வீட்டை அடைந்த மதனசேனை, பகல்‌ முழுவதும்‌ குதூகலத்துடன்‌ இருந்தாள்‌. ஆயினும்‌ இரவு வந்து புருஷன்‌ அவளை நெருங்கியதும்‌, அவள்‌ அழ ஆரம்பித்தாள்.
திகைத்துப் போன  புருஷன்  "பெண்ணே!  ஏன் அழுகிறாய்? என்னை உனக்குப் பிடிக்க வில்லையா? நீ என்னை நேசிக்காவிட்டால்  நானும்‌ உன்னைத்‌ தொட விரும்பவில்லை. ஆகவே, உன்‌ உள்ளத்தைக்‌ கவர்ந்த காதலன்‌ யாராக இருந் தாலும்‌ சரி. அவனிடம்‌ செல்‌!"  என்றான்.

மதனசேனை  புருஷனுக்கு கை கூப்பி பதிலளித்தாள் 
 "நான்‌ உங்களை என்‌ உயிரினும்‌ அதிகமாக நேசிக்கிறேன்‌. ஆயினும்‌ நான்‌ சொல்வதை தாங்கள்‌ சாவதானமாகக்‌ கேட்க வேண்டும்‌. முதலில் என்னை மன்னிப்பதாக  வாக்குறுதி  அளிக்கவேண்டும். பிறகு தான் சொல்வேன்'' என்றாள் 
வேண்டா விறுப்பாக  அவனும் வாக்களித்து கேட்க ஆரம்பித்தான். 

 “ஐயா, நான் ஒரு நாள்‌ தோட்டத்தில்‌ தனியே இருக்கையில்‌ என்‌  அண்ணனின் நண்பன்  தருமதத்தன்‌ என்னைக்‌ கண்டு என் மேல் உள்ள மோகத்தை தெரிவித்தான்‌. என்னை பலாத்காரம்‌ செய்யப்போகும்‌ தருணத்தில்‌ என்‌  தந்தைக்குக்‌ கன்யாதான பலனை அளிக்கவும்‌, வீண்‌ அபவாதத்துக்கு இடம்‌ கொடுக்காமல்‌ இருக்கவும்‌ நினைத்து,எனக்குக்‌ கல்யாணம்‌ ஆனவுடன்‌ கணவனை அடைவதற்கு  முன்னதாக அவனிடம்‌ வருகிறேன்‌ என்று அவனுக்கு வாக்குறுதி அளித்து அவனை அனுப்பினேன்‌. ஆகவே என்‌ வாக்கை நான்‌  காப்பாற்றவேண்டும்‌. என்‌ குழந்தைப்‌ பருவத்திலிருந்து நான்‌ உண்மையாக நடந்து வருகிறேன்‌. கொடுத்த வாக்கைக்  காப்பதே எங்கள்‌ குல தர்மம்‌. ஆகவே அதை மீறாமல்‌ அவனைப்‌ போய்  பார்த்துவிட்டு தங்களை அடைவதற்கு அனுமதி அளிக்கவேண்டும்‌” என்று வேண்டினாள்‌.

இதைக்‌ கேட்ட கணவன் சமுத்திர தத்தனுக்கு தலை மேல் இடிவிழுந்தது போல் ஆனது. என்ன செய்வதுஎன்பது விளங்கவில்லை. ஆயினும்‌ கொடுத்த  வாரக்கை மீறக்கூடாதே.  ''மதன சேனை 
வேறு ஒருவன்‌ மீது நாட்டம்‌  கொண்டாலும் இல்லையென்றாலும்  வாக்குறுதி கொடுத்தபடி அவள் போகத்தான்‌ வேண்டும்‌. நான்‌ எதற்காக அவளைத்‌ தடுக்க வேண்டும்‌? '' என நினைத்தான்.
'மதனா,  நீ  கொடுத்த சத்யத்தைக்‌ காப்பாற்ற கலியாணமாகியும்‌ கன்னியாகவே போ!'  என அனுமதித்து அவள்‌ முகத்தைக்‌
கூடப்‌ பாராமால் வேறு பக்கம்  திரும்பிப்‌ படுத்துக்கொண்டான்‌.

மதனசேனை எழுந்து முக்காடிட்டுக்‌ கொண்டு தன்‌ புருஷன்‌ வீட்டைவி ட்டுக்‌ காதலன்‌ ஊருக்குக்‌ கிளம்பினாள்‌. நடுநிசியிலே,
அவள் செல்லும்போது  வழியில்  நடுவே  சிறுகாடு. அதில் பயங்கரமான  ஒரு வழிப்பறிக்‌ கள்வன்‌ இருந்தான்‌.
ள்ளிரவிலே. மதனசேனை  தனியே போவதைப்  பார்த்தவன் பாய்ந்து வந்து, அவள் முந்தானையைப்பற்றி இழுத்து அவளைப்‌ பிடித்துக்‌ கொண்டான்‌.
 "நீ யார்‌? எங்கே போகிறாய்‌?" என்று கேட்டான்‌.
நீ யார் அதைப்பற்றி கேட்க உனக்கென்ன? என்னைவிட்டுவிடு! நான்‌  அவசரமாகப்‌ போகவேண்டும்‌!” என்றாள்‌.
“நான்‌ திருடன்‌, உன்னை விட்டுவிடுவேனா?” என்றான் அவன்.
“அப்படியானால்‌ என்‌ நகைகளை எடுத்துக்கொள்‌!” 
"பார்த்தவர்களை மயக்கும்‌, பெண்கள்‌ குலத்துக்கே ஆபரணமான உன்னை விட்டுவிடுவேனா? உன்னை விட்டுவி ட்டு.
இந்தக்‌ கல்‌ நகைகளைப்பற்றியா நான்‌ யோசிக்கப்‌ போகிறேன்‌?”  என சொல்லி  திருடன் ஹாஹா  என்று சிரித்தான். 
மதன சேனை கலங்கினாள். "ஐயோ! என்‌ உடல்‌ அழகால்‌ யோக்கியர்களும்‌ அயோக்கியர்களாக மாறுகிறார்களே! ஆனால்‌ என்‌ உள்ளத்தின்‌  அழகால்‌ கெட்டவனும்‌ நல்லவனாக மாறக்கூடாதாவென ஏங்குகிறேனே!” என்று புலம்பினாள்‌.
“திருடனே! என்‌ கன்னித்‌ தன்மையை மட்டும்‌ திருடாதே! அதை முதன்‌ முதலாக என்னிடமிருந்து திருடிக்‌ கொள்ள
வாக்குறுதி பெற்றவன்‌ வேறொருவன்‌ இருக்கிறான்‌. அந்தத்‌  திருடனிடம்‌ போகத்தான்‌ இந்த அர்த்தராத்திரியில்‌ கணவன்‌
அனுமதியுடன்‌ கிளம்பி வந்திருக்கிறேன்‌!" என்று அவள்‌ தன்‌  கதையையெல்லாம்‌ அவனிடம்‌ சொல்லி வேண்டினாள்‌.
தருமதத்தனிடம்‌ நான்‌ கொடுத்த வாக்கை நிறைவேற்றத்தான்   நடுநிசி  காட்டுப்பாதை என்றும்‌ கலங்காமல்‌ நடுநிசியில்‌
தனியாக கணவன்‌ வீட்டிலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறேன்‌. அதைக்‌  காப்பாற்ற நீ மனமிளகி அனுமதி கொடு! சத்தியம்‌ காப்பது  எங்கள்‌ குல தர்மம்‌! இப்போது என்னை விட்டுவிடு! என்னைக்‌ காதலித்தவனிடம்‌ .கலியாணமாகியும்‌ கன்னி யாகவே என்‌ முதல்பலி கொடுத்து, என்‌ வாக்கைக்‌ காப்பாற்றி விட்டு. மறுபடி உன்னிடம்‌ வருகிறேன்‌. நிச்சயம்‌ இதே இடத்திற்கு வருகிறேன்‌. நான்‌ திரும்பி வரும்போது நீ இங்கே இருந்தால்‌ உன்‌ ஆசையை நிறைவேற்றிக்‌ கொள்ளலாம்‌! என்னை நம்பு! இது சத்தியம்‌!” என்று மதனசேனை வாக்குறுதி கொடுத்தாள்‌.

இதைக்‌ கேட்ட திருடன்‌ அவள்‌ வார்த்தையில்‌ ஓரளவு  நம்பிக்கை கொண்டு, அவள்‌ தன்‌ சொல்லை மீறமாட்டாள்‌ என்று
என்னவோ ஒன்று அவன்‌ மனச்சாட்சியில்‌ உறுத்தவே,  மதனசேனை  போக விட்டான்.  அவள் திரும்பி வருவதை எதிர்நோக்கி அங்கேயே காத்திருந்தான். 
தரும தத்தனை அடைந்த  மதனசேனை நடந்ததை எல்லாம் அவனிடம் சொன்னாள் .அதைக்  கேட்டதும்  அவளை ஏறிட்டுப்‌
பார்க்கவே அவன்‌ கண்கள்‌ கூசின.
"இதோ பார்‌! தர்மதத்தா, கொடுத்த வாக்கின்படி கலியாணமாகியும்‌ பசுமை மாறாமல்‌, புதுமை மறையாமல்‌, வழிப்பறிக்‌ கள்ளனிடம்‌ சிக்கியும்‌ எச்சிற்‌ பாண்டமாகாமல்‌, கன்னிப்‌ பெண்ணாகவே  உன்னிடம்‌ வந்திருக்கிறேன்‌! இந்த ஒர்‌ இரவில்‌ அவ்வளவையும்‌ உன்னிடம்‌ பலிகொடுக்க வந்திருக்கிறேன்‌! அருகில்‌ வா! ஏறிட்டுப்பார்‌ என்னை!” என்றாள்‌ மதனசேனை.

தருமதத்தனால்‌ அவளை ஏறிட்டுப்‌ பார்க்க முடியவில்லை. உடம்பெல்லாம்‌ சிலிர்த்தது.
"மதனசேனா! உன்‌ கணவனின்‌ பெருந்தன்மையையும்‌, ஒரு வழிப்பறிக்‌ கள்ளனின்‌ பெருந்தன்மையையும்‌ விட என்‌ மனது
குறுகியதல்ல! :என்னிடம்‌ பதிதையாக வந்தவள்‌ இந்த இரவில்‌ என்‌ வீட்டைவிட்டுப்‌ புனிதவதியாகவே போய்விடு! சொன்ன
சொல்‌ தவருமல்‌ நடந்து கொண்ட உன்‌ நடத்தை ஒன்றே என்னைப்‌ புதுமனிதனாக்கிவிட்டது. என்‌ காதல்‌, கள்ளனின்‌ இருதயத்தையும்‌ விடக்‌ குறுகலானதோ, குரூரமானதோ அல்ல!” என்று தருமதத்தன்‌ கூறி அந்த மங்கையைத்‌ திருப்பி அனுப்பிவிட்டான்‌.

மதன சேனை சரியென்று அங்கிருந்து  கிளம்பி,  வழியிலே காட்டில்  தனக்காகக்‌ காத்திருந்த திருடன்‌ இருக்குமிடம்‌ வந்து
சேர்ந்தாள்‌. அவளைக்‌ கண்டவுடனே, "போன இடத்திலே என்ன நடந்தது என்பதைச்‌ சொல்‌!“ என்று அந்தத்‌ திருடன்‌ கேட்டான்‌.

அவளும்‌ நடந்தது நடந்தபடி, தருமதத்தன்‌ எவ்விதம்‌ தன்னைத்‌ தொடாமல்‌ திருப்பி அனுப்பிவிட்டான்‌ என்பதைக்‌ கூறத்‌
தொடங்கி, "தருமதத்தனுக்கு இப்போதுதான்‌ கண்‌ திறந்தது!  கள்ளனுக்கு இருக்கும்‌ இதயம்‌ காதலனுக்கு இராதா என்று
சொல்லி என்னைக்‌ கன்னிப்‌ பெண்ணாகவே திருப்பி அனுப்பி  விட்டான்‌!” என்றாள்‌. அதைக்‌ கேட்டதும்‌ கள்ளன்‌ கண்ணீர்‌
வடித்தான்‌.
 “அப்படியானால்‌ நானும்‌ உன்னை விட்டு விடுகிறேன்‌! உன்‌ நேர்மையை நான்‌ பெரிதும்‌ பாராட்டுகிறேன்‌! விலைமகளும்‌
கண்டு மிரண்டோடும்‌ பயங்கரக்‌ கள்ளனான என்னிடம்‌ குலமகள்‌ வந்திருக்கிறாய்‌, சத்தியம்‌ காக்க! உன்னைப்போல்‌ ஒரு பெண்ணை என்‌ வாழ்நாளில்‌ கண்டதில்லை. உன்‌ நகைகளும்‌ எனக்கு வேண்டாம்‌. நீயே எடுத்துக்‌ கொண்டு புனிதவதியாக வீடு போய்ச்‌ சேர்‌! இருதயம்‌ என்ற விலை மதிப்பற்ற நகை உன்னால்‌ எனக்குக்‌ கிடைத்திருக்கிறது. அதுவே, இணி என்‌ ஆயுள்‌ முழுவதற்கும் போதும்.'' என்று சொல்லி அவளுக்கு துணையாக தானே சென்று அவளை வீட்டில்‌  சேர்த்துவிட்டுப்‌ போனான்‌ திருடன். 
இவ்வி தம்‌ அவள்‌ தன்‌ கற்புக்கும்‌ பங்கம்‌ ஏதும்‌ நேரிடாமல்‌ திரும்பி வீடு வந்து சேர்ந்த மதனசேனை கணவன் சமுத்திர தத்தனிடம் நடந்ததை ஒன்றுவிடாமல்‌ முழுவதையும்‌ சொன்னாள். தன்‌ உடல்‌ அழகால்‌ ஒழுக்கம்‌ கெடவிருந்த இருவர்‌,
உள்ளத்தூய்மையாகி நல்லவர்களாக மாறிய விந்தையையும்‌  குறிப்பிட்டாள்‌. தன்‌ மானத்தையும்‌ குடும்ப கெளரவத்தையும்‌
இழக்காமல்‌, சொன்ன சொல்லைக்‌ காப்பாற்றிய தன்‌ மனைவியை  கண்ட சமுத்திரதத்தன்‌, உள்ளம்‌ பூரித்தான்‌. அவ்வளவு தூய உள்ளம்‌ படைத்த அவளை அவன்‌ மறுபடியும்‌ ஏற்றுக்கொண்டு அவளுடன்‌ ஆனந்தமாக மணவாழ்க்கை நடத்தி வந்தான்‌.''

மேற் கண்ட  கதையை மயானத்தில்‌ வேதாளம்‌ சொல்லி முடித்துவிட்டு,  " விக்ரமாதித்தா. இந்தக்‌ கதையில்‌ கணவன்‌, காதலன்‌, கள்ளன்‌ ஆகிய மூவரும்‌.பெருந்தன்மையாக நடந்து கொண்டார்கள்‌ என்றாலும்‌, மூவரில்‌ யாருடைய செயல்‌ மிகவும்‌ சிறப்பானது?" சொல்.  சரியான விடையை சொல்லவில்லையென்றால் உன் தலை சுக்கு நூறாக வெடிக்கும். ஜாக்கிரதை. என்றது .
விக்கிரமாதித்தன்‌ பதில்‌ காதலன்‌ கணவன் ஆகிய இருவரும்‌ நாணயம்‌ மிக்க வணிக குலத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌. நாணயம்‌ கெட்ட இருதயமில்லாதவன்‌ என மனித சமூகத்தால்‌ ஒதுக்கப்பட்ட கள்ளன்‌ இருதயத்தோடு  பெருந்தன்மையாக நடந்து கொண்ட செயலே மிகவும்‌ சிறப்பானது!  கணவனாகப்பட்டவன்‌ தான்‌ மணந்து கொண்ட மனைவியை வெளியே போக அனுமதித்தது பெருந்தன்மையானதென்றாலும்‌,  காதலனுடைய பழைய மோகம்‌ தணிந்து போயிருக்கலாம்‌ என்றோ. அவளுடைய கணவனுக்கு எல்வா விஷயங்களும்‌ தெரிந்து போய்விட்டதால்‌ மறுநாள்‌  மனஸ்தாபமும்‌ சமுதாயப்‌ புறக்கணிப்பும்‌ ஏற்படுமெனப்‌  பயம்  ஏற்பட்டிருக்கலாம்‌ என்றோ  கருதலா மல்லவா? ஆனால்‌ முன்னிரவில்‌ அஞ்சாநெஞ்சுடன்‌ யாருக்கும்‌ பயப்படாமல்‌ திருட்டுத்‌  தொழில்‌ செய்யும்‌ ஒரு வழிப்பறிக்‌ கள்ளன்‌ அழகான அந்தப்‌ பெண்ணைச்‌ சிறிதும்‌ தொடாமல்‌ அவளுடைய நகைகளையும்‌  கொடுத்துத்‌ திருப்பியனுப்பிய செயலே மிகவும்‌ பெருமைப்‌
பபடத்தக்கதாகும்‌! ஆகையால்‌ கள்ளனின்‌ பெருந்தன்மைதான்‌  மிகவும்‌ சிறப்பானது!"

பதில் சொன்னதால்  மௌனம் களைந்து விடவே,  வேதாளம்  கட்டவிழ்த்துக்‌ கொண்டு பழையபடியே முருங்கமரத்தை  நோக்கி பறந்து தலைகீழாக  உச்சாணிக்கிளையில்  தொற்றி தொங்க ஆரம்பித்தது.   அடுத்த கதையில் வேதாளத்தை சந்திப்போம். 
 

 

Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:26:34 PMOct 24
to amrith...@googlegroups.com

THUS SPOKE SWAMI VIVEKANANDA - (Simplified by NANGANALLUR J K SIVAN )
( AT SHAKESPEARE CLUB, PASADENA,CALIFORNIA ON 3.2. 1900 )
The universe, according to the theory of the Hindus, is moving in cycles of wave forms. It rises, reaches its zenith, then falls and remains in the hollow, as it were, for some time, once more and repeats this act. What is true of the universe is true of every part of it. The march of human affairs is like that. The history of nations is like that: they rise and they fall. This motion ialways goes on. In every nation's spiritual life, there is a fall as well as a rise. The nation goes down, and everything seems to go to pieces. Then, again, it gains strength, rises; a huge wave comes, sometimes a tidal wave — and always on the topmost crest of the wave is a shining soul, the Messenger. Creator and created by turns, he is the impetus that makes the wave rise, the nation rise: at the same time, he is created by the same forces which make the wave, acting and interacting by turns. He puts forth his tremendous power upon society; and society makes him what he is. These are the great world-thinker, the Prophets,the Messengers of life, and the Avatharas of God.
There cannot be one religion, only one Prophet, or one Incarnation because each, is destined to play only a part, The harmony consists in the sum total and not in one note. No particular race is born to alone enjoy the world. Each race has a part to play in this divine harmony of nations. Each race has its mission to perform, its duty to fulfil. The sum total is the great harmony.
We believe in a personal religion. We talk of principles, we think of theories, and that is all right; but every thought and every movement, every one of our actions, shows that we can only understand the principle when it comes to us through a person. We can grasp an idea only when it comes to us through a materialised ideal person. We can understand the precept only through the example. God is an Omnipresent Principle — everywhere:
If you ask me, "Is there any God?" and I say "Yes", you immediately ask my grounds for saying so, and poor me has to exercise all his powers to provide you with some reason. it is a direct perception, and not at all the ratiocination of reason. There is no groping in the dark, but there is the strength of direct vision. I see this table; no amount of reason can take that faith from me. It is a direct perception. If the man who cannot believe in himself, how we expect him to believe in anything else? I am not sure of my own existence. One moment I think that I am existing and nothing can destroy me; the next moment I am quaking in fear of death. One minute I think I am immortal; the next minute, a spook appears, and then I don't know what I am, nor where I am. I don't know whether I am living or dead. One moment I think that I am spiritual, that I am moral; and the next moment, a blow comes, and I am thrown flat on my back. And why? — I have lost faith in myself, my moral backbone is broken.
The great Teachers have intense faith in themselves. Such intense faith is unique, and we cannot understand it. That is why we try to explain away in various ways what these Teachers speak of themselves; and people invent twenty thousand theories to explain what they say about their realisation. We do not think of ourselves in the same way, and, naturally, we cannot understand them.
Do yu have you anything to give? — that is the first question. If you have, then give. It is but one of the many modes. Sometimes we do not speak at all. There is an old Sanskrit verse which says, "I saw the Teacher sitting under a tree. He was a young man of sixteen, and the disciple was an old man of eighty. The preaching of the Teacher was silence, and the doubts of the disciple departed."Such Teachers do not speak at all, but yet they convey the Truth from mind to mind. They come to give. They are the living Gods on this earth. Whom else should we worship? They are higher than any conception of God that I could ever form.
Talking is not actuality. Talking about God and the Impersonal, and this and that is all very good; but these Teachers, the man-Gods are the real Gods of all nations and all races. These divine men have been worshipped and will be worshipped so long as man is man. Therein is our faith, therein is our hope, of a reality. Of what avail is a mere mystical principle!
I have found it possible in my life to worship all of them, A mother recognises her son in any dress in which he may appear before her; and if one does not do so, I am sure she is not the mother of that man. Now, as regards those of you that think that you understand Truth and Divinity and God in only one Prophet in the world, and not in any other, naturally, the conclusion which I draw is that you do not understand Divinity in anybody; you have simply swallowed words and identified yourself with one sect, just as you would in party politics, as a matter of opinion; but that is no religion at all. Religion is neither talk, nor theory, nor intellectual consent. It is realisation in the heart of our hearts; it is touching God; it is feeling, realising that I am a spirit in relation with the Universal Spirit and all Its great manifestations. Recognise all the great, spiritual men and women in every age and country, and see that they are not really at variance with one another. Wherever there has been actual religion — this touch of the Divine, the soul coming in direct sense-contact with the Divine — there has always been a broadening of the mind which enables it to see the light everywhere.
There is another thing: atavism. There is a tendency in us to revert to old ideas in religion. Let us think something new, even if it be wrong. It is better to do that. We become wiser through failures. Time is infinite. Look at the wall. Did the wall ever tell a lie? It is always the wall. Man tells a lie — and becomes a god too. It is better to do something; never mind even if it proves to be wrong it is better than doing nothing. The cow never tells a lie, but she remains a cow, all the time. Do something! Think some thought; it doesn't matter whether you are right or wrong. But think something! What is life worth if we have no living ideas, no convictions of our own about religion? There is some hope for the atheists, because though they differ from others, they think for themselves. The people who never think anything for themselves are not yet born into the world of religion; they have a mere jelly-fish existence. They will not think; they do not care for religion. Struggle Godward! Never mind if you fail, never mind if you get hold of a queer theory. Light must come. Spiritual death is the result of following each other like a flock of sheep. Death is the result of inaction. Be active; and wherever there is activity, there must be difference. Difference is the sauce of life; it is the beauty, it is the art of everything. Difference makes all beautiful here. It is variety that is the source of life, the sign of life. Why should we be afraid of it?
where there has been any real thinking, any real love for God, the soul has grown Godwards and has got as it were, a glimpse now and then, has come into direct perception, even for a second, even once in its life. Immediately, "All doubts vanish for ever, and all the crookedness of the heart is made straight, and all bondages vanish, and the results of action and Karma fly when He is seen who is the nearest of the near and the farthest of the far."
Take Krishna for instance. You who have read the Gitâ see that the one idea is non-attachment. Remain unattached. The heart's love is due to only One. To whom? To Him who never changeth. Who is that One? It is God. Do not make the mistake of giving the heart to anything that is changing, because that is misery. The Lord is the only One who never changes. His love never fails. Wherever we are and whatever we do, He is ever and ever the same merciful, the same loving heart. He never changes, He is never angry, whatever we do. The real attraction is the Lord, who is present everywhere. He is the only attraction, there is no other; Wherever there is love, wherever there is a spark of joy, know that to be a spark of His presence because He is joy, blessedness, and love itself. Without that there cannot be any love.
When a Hindu does anything, even if he drinks water, he says "If there is virtue in it, let it go to the Lord'. He says hat God is omnipotent and that He is the Soul of every soul everywhere; "Whosoever lives in the midst of the world, and works, and gives up all the fruit of his action unto the Lord, he is never touched with the evils of the world. Just as the lotus, born under the water, rises up and blossoms above the water, even so is the man who is engaged in the activities of the world, giving up all the fruit of his activities unto the Lord" (Gita, V. 10).
Krishna strikes another note as a teacher of intense activity. Work, work, work day and night, says the Gita. You may ask, "Then, where is peace? If all through life I am to work like a cart-horse and die in harness, what am I here for?" Krishna says, "Yes, you will find peace. Flying from work is never the way to find peace."
Krishna teaches us not to shirk our duties, but to take them up manfully, and not think of the result. The servant has no right to question. The soldier has no right to reason. Go forward, and do not pay too much attention to the nature of the work you have to do. Ask your mind if you are unselfish. If you are, never mind anything, nothing can resist you! Plunge in! Do the duty at hand. And when you have done this, by degrees you will realise the Truth: "Whosoever in the midst of intense activity finds intense peace, whosoever in the midst of the greatest peace finds the greatest activity, he is a Yogi, he is a great soul, he has arrived at perfection."Each man's work is quite as good as that of the emperor on his throne. Be not afraid even if there is evil in your work, for there is no work which has no evil." "Leave it unto the Lord, and do not look for the results."
Time flies; this world is finite and all misery. With your good food, nice clothes, and your comfortable home, O sleeping man and woman, do you ever think of the millions that are starving and dying? Think of the great fact that it is all misery, misery, misery! Note the first utterance of the child: when it enters into the world, it weeps. The world is a place for weeping!. Readiing the Gita, and you will find that it is exactly borne out by the life of Krishna, the Teacher.

Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:26:34 PMOct 24
to amrith...@googlegroups.com
கந்த ஷஷ்டி   சூர ஸம்ஹாரம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN

 ஐப்பசி மாசம், சுக்ல பக்ஷம் முடிந்து க்ருஷ்ண பக்ஷத்தின் ஆறாம் நாள் தான் கந்த ஷஷ்டி.  ஷஷ்டி  என்றால் ஆறு, ஆறாவது.   ஐப்பசி  சதுர்த்தஸி  நாலாவது நாள் மாமன்  நரகாசுரனை கொன்றநாள். 20.10.25 அன்று  தான் தீபாவளி. ஆறாவது நாள்  22.10.25  இன்று. 
இன்று முதல்  ஆறுநாள் நாள் சுப்ரமண்யனுக்கு உகந்த ஷஷ்டி  விரத  திருநாள். தெய்வீக வெற்றி விழா.  சூரபத்மனோடு
போர் புரிந்து சூரனை சம்ஹாரம் செய்தது ஆறாவது நாள் அன்று.  

சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய மூன்று  அரக்கர்கள் தவமிருந்து சிவபெருமானின் ஆசீர்வாதத்தால் அசாதாரண வலிமை பெற்றனர்.அவர்கள்  அபரிமித சக்தி பெற்று, தேவர்களை துன்புறுத்தினர். சிறை வைத்தனர். கொடுமை பல செய்தனர்.  

இதற்கு விடி மோக்ஷமாக  பரமனின் நெற்றிக்கண் பொறியாக வெளிப்பட்டு சரவணப்பொய்கையில் ஷண்முகனாக
உருவாகி, சூரனை வதம் செய்தவர் ஷண்முக பெருமான், எண்ணற்ற பெயர்கள் உடையவர். முக்கியமாக  கந்தன், முருகன், ஸ்கந்தன், சுப்பிரமணியன். சூரனைக்  கொன்றதும் அவன் சேவலும் மயிலுமானான்.  

விரதம் பிரதமை திதி முதல் ஷஷ்டி வரை 6 நாட்கள்.  ஏழாம் நாள்  சுப்ரமணிய சுவாமி தேவானை  திருகக்கல்யாணம்
திருப்பரங்குன்றத்தில் மட்டுமல்ல,  மற்ற அறுபடை வீடுகளிலும், எல்லா முருகன் கோவில்களிலும் விமரிசையாக நடைபெறும். 
திருச்செந்தூரில் கந்த ஷஷ்டி முக்கிய பண்டிகை. சூரசம்ஹாரம் நாடகம் நிகழும்  நான் தூத்துகுடியிலிருந்தபோது பல மைல்கள் ஆணும் பெண்ணும், குழந்தைகளோடு குடும்பமாக,  சிவப்பு, அல்லது மஞ்சள் ஆடை தரித்து  தலையில் ஆகாரம், துணி சமையல் பாத்திரங்கள்  மூட்டைகளோடு வெறும் காலோடு நடந்து திருச்செந்தூர் வருவார்கள்.  பார்த்திருக்கிறேன். 

என்றும்  பக்திக்கு பஞ்சமே இல்லை நமது பாரத தேசத்தில்.   கந்த சஷ்டியை ஒட்டி எல்லா  சிவன் கோவில்களிலும்  முருகன் கோவில்களிலும் ஆறு நாளும்  விசேஷ  அலங்காரத்தோடு முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். 
திருசெந்தூரில்  சூரசம்ஹார  வைபவம் அன்று லக்ஷக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கண்டு களிப்பார்கள். அரோஹரா, முருகா, ஷண்முகா ஓம் சரவணபவா (ஷடாக்ஷரம் ) எனும் ஆறு எழுத்து மந்திரம் எல்லாம் உரக்க  எதிரொலித்து வானைப்  பிளக்கும்.  பல நாட்கள் விடாமல்  எங்கிருந்தெல்லாமோ  திருச்செந்தூருக்கு  நடந்து வரும் பக்தர்கள் எண்ணிலடங்கார்.
எனது ஐந்து ஆறு வயதில் எண்பது வருஷங்களுக்கு முன்,   வடபழனியில் பிள்ளைமார் தெருவில்  எங்கள் வீட்டு வாசலில் சூரஸம்ஹார  வைபவம் கோலாகலமாக இரவில் நடைபெறும்.   வெற்றிவேல்!… வீரவேல்!… ஷண்முக அரஹரோஹரா சப்தம் எங்கும் கேட்கும்.   காஸ் லைட் எனப்படும் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை    நரிக்குறவர்கள்.தலையில்  சுமந்து ஒளி தருவார்கள். கரெண்ட் கிடையாது. தீவர்த்திகள் எங்கும் எரியும். வறுத்த, அவித்த, வேர்க்கடலை, கமர்கட், வெற்றிலை,  கோலி சோடா, கலர், அரை நெல்லிக்காய்,அப்பம், கொடுக்காப்புளி காய், முறுக்கு,  அதிரசம்  இரவு முழுதும் விற்பனை அசாத்தியம். ஆங்காங்கே  குச்சிகளில் கலர் கலராக  மிட்டாய், அதை கையில் கடிகாரம் மாதிரி கட்டி விட்டு வியாபாரம் அமோகமாக நடக்கும். 

 திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கே நடை திறக்கப்பட்டு அபிஷேகங்கள் நடக்கும்.  பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் லக்ஷக்கணக்கில் ஆரவாரத்துடன் இந்த கந்த சஷ்டி விழாவைக் காண திருச்செந்தூருக்கு வருவார்கள்.  திருச்செந்தூர் கடற்கரை பூரா ஊசி குத்த இடமில்லாமல் எங்கும்  பக்தர்கள்  நிறைந்திருப்பார்கள்.  கடல் அலை சப்தத்தை மீறி ''வெற்றி வேல், சக்தி வேல், வீர வேல், முருகனுக்கு அரோகரா'' முழக்கம்  எதிரொலிக்கும்.  முருகனுக்கு இங்கே  ஜெயந்திநாதர் என்று பெயர்.

சூர ஸம்ஹார  உத்சவத்தில்   முதலில் யானை தலையுடன் வரும்  கஜமுகாசுரனை  ஜெயந்திநாதர்  சம்ஹாரம் செய்வார்.
இரண்டாவதாக சிங்கம் முகம் கொண்ட சிங்கமுகாசுரன் யுத்தத்துக்கு வருவான். அவனையும் வதம் செய்வார்.
மூன்றாவதாக சூரபத்மனை முருகனின் வேல்  பிளக்கும்.  சூரன் மயிலாகவும், சேவலாகவும் ஆட்கொள்ளப்படுவான் .

கந்த புராண சுருக்கம் ;
தக்ஷன் எனும் ராக்ஷஸன்  தான் வளர்த்த பெரிய யாகத்திற்கு அவன் மகள் தாக்ஷாயணியை  மணந்த  பரம சிவனை அவமதித்து  யாகத்திற்கு அழைக்கவில்லை.  மற்ற லோகங்களுக்குச் சென்று பிரம்மா, திருமால், இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும்  யாகத்திற்கு அழைத்தான்.  அவர்களும் அங்கே வந்தபிறகு தான் பரமசிவன் பார்வதி,  இருவரையும் அவமானப்படுத்த தக்ஷன் யாகத்திற்கு அழைக்கவில்லை என தெரிந்தது.  தந்தைக்குப் புத்தி  புகட்ட  பூலோகம் செல்ல  கணவனிடம் அனுமதி கேட்டாள்  ஈஸ்வரி.  ஈசன் வேண்டாம் என்று மறுத்தும், சிவன் சொல்லையும் மீறி, பூலோகம் சென்று  தக்ஷனிடம்  நியாயம் கேட்டாள் தாக்ஷாயணி. எல்லோர் எதிரிலும் அவளையும்  அவமானப்படுத்தி அனுப்பினான் தக்ஷன். மகள் ருத்ர காளியாக மாறினாள். யாகத்தீயிலேயே  மறைந்தாள்.  சிவனோ வீரபத்திரராக உருவெடுத்தார்.  யாக சாலையை அழித்தார்  முடிவில் தக்ஷனையும் கொன்றார். 

''தக்ஷா, நீ என் பக்தன் என்றாலும்  ஆணவத்தால் என்னை அவமதித்தாய்.  இனி  நீ ஆட்டுத் தலையுடன் திரிவாயாக. உனது அடுத்த ஜென்மத்தில் உனக்கு அசுர குணங்களே தலைதூக்கும். உன்னை அடக்க என்னில் பிறக்கும் ஒரு சக்தி உன்னிடம் வரும். சுப்ரமணியன் என்ற சக்தியிடம் நீ தோற்றுப் போவாய். நீ சூரபத்மன் என்றும், பத்மாசுரன் என்றும் பெயர் பெறுவாய். நீ செய்த நற்செயல்களின் பலனாக அகில உலகமும் உனக்கு கட்டுப்பட்டிருக்கும். உன் இறுதிக் காலத்தில், சுப்ரமணியன் உன்னை வதம் செய்வான்'' என்று  சாபமிட்டார் சிவன்.

தக்ஷன்  காஸ்யபமுனிவர்  மாயை தம்பதிகளுக்கு   சூரபத்மன் எனும் மகனாக பிறந்தான். தாரகன்  சிங்கமுகன் என்ற மகன்களையும், அஜமுகி என்ற மகளையும் காசியபர்  மாயை தம்பதிகள் பெற்றார்கள்.   சூரபத்மன் கடுந்தவம் புரிந்து  பரமேஸ்வரனை நோக்கி தவமிருந்து   அந்த பகிரண்டம் அனைத்தையும்  ஆளும் வரத்தையும், சிவனின் வழி வந்தவர் களைத் தவிர வேறு யாரும் தன்னை அழிக்கக் கூடாது எனவும்  வரம் பெற்றான்.  சூரபத்மன் பதுமகோமளையை  மணந்து பானுகோபன் எனும் ஒரு பிள்ளையும்  பிறந்தான்.

சூரன் பரமேஸ்வரனிடம் வரம் பெற்ற போது சிவன் தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் ஆழ்ந்த  மோன தவத்தில் இருந்தார். அவரின் தவத்தை கலைத்தவன்  மரணம் அடைவது நிச்சயம்  என அனைத்து கடவுள்களும் அறிந்திருந்தார்கள்.

தேவர்களின் வற்புறுத்தலால் மன்மதன் சிவ பெருமானின் தவத்தைக் கலைக்க ,  தவம்  கலைந்த  பரமசிவன்  நெற்றிக்கண் திறந்து  மன்மதனை எரித்தார்  வரம் பெற்ற  சூர பத்மன் தேவர்களை சித்திரவதை செய்து வந்தான்.  தேவர்கள் பிரம்மரிடம் சென்று  வேண்டினார்கள்.  சூரபத்மனை அழிக்க சிவனால் மட்டுமே முடியும் என்று பிரம்மா கூற  தேவர்கள் கயிலாயம் சென்று சிவனிடம் உதவி கேட்டனர். இதனால் சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் முருகனை உருவாக்கினார்.   சரவணப் பொய்கையில்  அறுமுகனாக முருகன் உருவானான். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு  சிக்கலில்  சிங்காரவேலன்  அன்னை  அளித்த  வேலாயுதத்தை பிரயோகித்து சூரனை ஸம்ஹாரம்  செய்கிறான்.

 ஆகவே  சூரபத்மனுக்கு திருச்செந்தூரில்  இறக்கும் நிலையில், தான்  முன்ஜென்மத்தில்  தக்ஷனாக இருந்தது நினைவுக்கு  வந்தது. எதிரே நிற்பது  தக்ஷனின் பேரன் ஷண்முகன் என அறிகிறான்.  மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தான்.

முருகா! என் முற்பிறவிப்படி நீ என் பேரன். உன்னை என் முதுகில் சுமக்க ஆசைப்படுகிறேன். நான் உன் மடியில் எந்நாளும் இருந்தால், என்னை மீண்டும் ஆணவம் ஆட்கொள்ளாது! என்றான்.   இவ்வாறு  தாத்தாக்கள்  பேரன்களை முதுகில்  உப்பு மூட்டை சுமக்கும் சுகத்தை சூரன் அனுபவிக்க வேண்டினான். சூரனின்  உடல் மயிலாகி  முகுகன் வாகனமாகியது. மீதி   உடல் சேவல் கொடியாகியது. 

முருகப்  பெருமானையே தமது முழுமுதற்கடவுளாக நினைத்துப் பலபாடல்கள் பாடிய வள்ளலார் இதனை சற்று சிந்தித்து பார்த்தார். அதன்பிறகு என்ன நடந்தது?   'எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்' என்று திடமாகக் கூறினார். அதுமட்டுமல்ல அதன் உண்மையினை தெளிந்து அதனை உலகிற்கு எடுத்துரைக்கவும் அவர் தயங்கவில்லை. சுப்பரமணியன் என்பது என்ன? என்று விளக்கம் அளித்துள்ளார்.  வள்ளலார்  முற்றுப்புள்ளி இல்லாமல் நீளமாக எழுதுபவர். ஆனால் படித்தால் புரியும். கையெழுத்து மணிமணியாக இருக்கும். 
 
ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் எனும் வள்ளலார் சூரஸம்ஹாரம் பற்றி சொன்னது;
பதுமாசுரன் என்பது = பதுமம்+அ+சுரன் , பதுமம் - நாபி (கொப்பூழ்)  அ - அவா; சுரன் - சுழித்து எழுதல்
நாபியினிடமாய் அடங்காமல் எழும்பும் குணத்தை அடக்கியும், தடைபடாதது பத்மாசுரனாகிய அவா/ஆசை.
கஜமுகம் என்பது மதம் (வெறி).
சிங்கமுகம் என்பது மோகம்.
இவைகளை வெல்வது அதாவது மதம் மற்றும் மோகத்தை வெல்வது என்பது நமது ஐந்தறிவாலும் உபசத்தியான பஞ்சசத்தி யாலும் கூடாது.
ஐந்தறிவு என்பது - பார்க்கும் அறிவு, கேட்கும் அறிவு, தொடும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு.
பஞ்சசத்தி என்பது - பரையாற்றல், முந்தையாற்றல், விருப்பாற்றல், அறிவாற்றல், வினையாற்றல் என்பதாகும்.

மேற்கண்ட சத்திகளாலும் அறிவாலும் மதம் மற்றும் மோகத்தை அடக்க முடியாது,த்தையும் ஒழிக்கமுடியவில்லை.
சுப்பிரமணியம் என்னும் சண்முகரால் அழிக்கப்படவேண்டியது எப்படி எனில்,
மேற்கண்ட பஞ்ச சத்தியோடு அனன்னியமாகிய (பஞ்ச சத்தியோடு ஒன்றியது) சம்வேதனை (சுத்த அறிவு ஆற்றல்) என்னும் அருட்சத்தியையுங் கூட்டிச் சுத்த அறிவே வடிவாகிய ஆறறிவு என்னும் முகங்களோடு,
சுத்தஞானம் சுத்தக்கிரியை என்னும் சத்தியுடன், கூர்மை பொருந்திய வேல் என்னும் விவேகத்தால், தயாவடிவாய் ஆசையென்னும் மதம், மோகங்களை நாசம் செய்வதே சூரசம்ஹாரம் ஆகும்.
மயில் வாகனம் என்பது, மேற்படி தத்துவங்களான மதம், மோகம் ஆகியவைகள் நாசமடைந்தபின்னும் அவற்றின் அக்கிரமம் (வரம்புமீறிய செயல்) அதிக்கிரமம் (நெறிதவறுதல்) கெட்டுக் கிரமம் (ஒழுங்கு) மாத்திரம் இருப்பது.

பூர்வ வண்ணமாய் விரிந்து ஆடுவது இயல்பாததால், அவற்றை அசைய விடாமல் மத்தியில் ஏறி இருப்பதாகிய சுத்த அறிவே சண்முகம். விகல்பஜாலமே (மாயை) மயில் ஆகும். (ஒருபொருளைக்கண்டால் அது அப்பொருள்தானா? என எழும் ஐயமே விகல்பம். ஜாலம் என்பது ஏமாற்றும் வித்தை).    இவ்வண்ணமே அண்டத்திலும் உண்டு.
 நமது புருவ மத்தியில் ஆறுபட்டையாய் மணிபோல் ஒர் ஜோதியிருக்கின்றது. அந்த ஜோதியே சண்முகம்.
மேற்படி சூர தத்துவத்தை (மதம் மற்றும் காமம்) தயாவடிவாய் ஒழிக்கும்போது மேற்படி தத்துவம் மகாமாயை மாமரமாகவும், மாச்சரியம் (பகைமை) சேவலாகவும், விசித்திரமாயை (அழகாக இருப்பதுபோன்ற மாயை) மயிலாகவும், மகாமதம் (அடங்காத வெறி) யானைமுகமாகவும், அதிகுரோதம் (மிகையான கோபம்) சிங்கமாகவும் விளங்கும்.

இன்னொரு தடவை கொஞ்சம்  புரிகிறமாதிரியாக  வள்ளலாரை சொல்கிறேன்:
நமது உடம்பில் உள்ள தொப்புள் கொடியிலிருந்து சுழன்று வீறுகொண்டு எழக்கூடிய அவா/ஆசை எண்ணும் வெறி மற்றும் காமம்  தான் சூர பத்மன் .
நமது உடம்பில் புருவமத்தியில் உள்ள ஆறுபட்டையாய், ஆறு கோணமாக, மணிபோல் உள்ள ஓர் ஜோதிதான் முருகன். அந்த ஜோதியினை எவர் காணுகிறார்களோ அவர்களே முருகன் ஆகிவிடுகிறார்கள்.  அவர்களால் மட்டுமே ஆசைகளை வதம் செய்யமுடியும். அவர்களே ஞானி.
நமது ஆசைகளை நாம்  நாசம் செய்வது தான் சூரசம்ஹாரம். நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் நமது ஆசைகளை வதம்  செய்யவேண்டும்.    நமது உடலில் உள்ள தத்துவங்களே  சூரன் அவன் சகோதரர்களான ராக்ஷ ஸர்கள் , சுப்ரமணியன்  என  உருவகப்படுத்தப்பட்டுள்ளது.    நமது அகத்தில் உள்ள அந்த  அறுகோண, ஆறு பட்டை, ஜோதிமணியே கடவுள்,முருகன். புறத்தில் ஏதுமில்லை.
சூரசம்ஹாரம் என்பது நமக்குள் உள்ள ஜோதியினைக்கண்டு தயவின் குணம்கொண்டு, மாமாயைகளான ஆசைகளை வெல்வதே என்று தெளியவேண்டும்.

வள்ளலாரைப்போன்று எத்தனையோ ஞானிகள் இப்படிப்பட்ட சூரசம்ஹாரத்தை தங்களது அகத்தில் செய்திருக்கிறார்கள், நாமும் செய்வோம்.
பி.கு;  இன்று எனது நண்பர்  இறைஅருட்ச்செல்வர் இளநகர் காஞ்சிநாதன் ''செந்தூர் கலம்பகம்'' நூற்றிரண்டு பாடல்கள் எழுதி அதற்கு புத்தகமாகு முன்  அணிந்துரை எழுத சொல்லி இன்று தான் அதை படித்து எழுதினேன். கந்த சஷ்டி அன்று அது முடியவேண்டும் என்பதும் அவன் அருள் தான். 
 

Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:26:34 PMOct 24
to amrith...@googlegroups.com
 ஸுர்தாஸ் -  நங்கநல்லூர்  J K  SIVAN

தேவகியிடம்சொல்லுங்கள்
 
இந்த பிரபஞ்சத்தை பகவான் உருவாக்கிய நேரம் முதல் ஒவ்வொரு வினாடியும் அது மாறிக்கொண்டே தான் இருக்கிறது. காலத்தை  ஏதோ நாள்,வாரம் மாதம்,வருஷம் என்று கணக்கிடுகிறோம்.யுகாந்திரங்கள் கணக்கற்று இருக்கிறது.எவராலும் கணக்கிடமுடியாதது. அறிவிற்கு எட்டாத அளவு.  கிருஷ்ணன்  பிருந்தாவனத்தைவிட்டு சென்றது நேற்று போல்இருந்தாலும்எத்தனையோ வருஷங்கள்ஆகிவிட்டன. பிருந்தாவனம் முழுதும் மாறிவிட்டது.  கிருஷ்ணனே நேரில் வந்து பார்த்தால் கூட அடையாளம் தெரியாது.

உத்தவர் மெதுவாக  பிருந்தாவனத்தில்நுழைகிறார். ஒரு ஆச்சர்யம் என்ன தெரியுமா?  இவ்வளவு மாறுதல்களுக்கு இடையிலும்  யசோதை  நந்த கோபன்  வீடு மட்டும் அப்படியே மாறாமல் இருக்கிறது. வாசலில் யசோதை நிற்கிறாள்.  
''அம்மா''  என்ற குரல் வாசலில் இருந்து வருகிறது.
''யார்  இவன் ?. கிட்டத் தட்ட  என் கிருஷ்ணன் போலவே இருக்கிறானே. ஒரு வேளை என் கிருஷ்ணனே  இப்படி
மாறிவிட்டானோ ''
உத்தவர்  உருவத்தில் கிருஷ்ணனைப் போல் இருப்பவர்.நெருங்கின உறவும் கூட.  யசோதைக்கு தெரியாதே?   யார்  இவன்?
வீட்டுக்கு வந்தவரை உபசரிப்பது நமது பண்பு அல்லவா.
''வாருங்கள் சுவாமி.''..   யசோதா உத்தவரை உள்ளே அழைக்கிறாள்.  சில்லென்று கடைந்த மோர் ஒரு பெரிய பாத்ரத்தில்  தருகிறாள்.
''நான்  துவாரகையிலிருந்துவருகிறேன். உத்தவன் என் பெயர்.  என் குரு, என் தோழன் என் சகோதரன்  கிருஷ்ணன்
வாழ்ந்த இந்த இடத்தைக் காண இங்கே  வந்தேன்.  கிருஷ்ணனும் நீ கோகுலம் பிருந்தாவனம் எல்லாம் சென்று வா என்று என்னை அனுப்பினான்.''
கிருஷ்ணன் எனும் பெயர் யசோதையின்  காதில் இன்பத் தேனாகப்  பாய்ந்தது. அப்படியே  உத்தவர் காலடியில் அமர்ந்து வரையே  கண்கொட்டாமல் நோக்கினாள். கிருஷ்ணனைப் பார்ப்பது போன்ற ஆனந்தத்தில் வார்த்தைகள் வரவில்லை.  எப்படியோ ஒருவாறு சுதாரித்துக் கொண்டு   பேசுகிறாள்:
'' என் கண்மணி, என் செல்லம், என் கிருஷ்ணன் நன்றாக இருக்கிறானா? அவனை எப்போதும் 
என் கண்  இமையில்
வைத்து மூடிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லுங்கள்.அவன் எப்போதும் இங்கே தான் என்னோடு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அதை விட  முக்கியமாக  நீங்கள்  மதுராவுக்கு திரும்பும்  போது  அவனைப் பெற்ற  அந்த புனிதவதி தேவகியிடம் இதைச் சொல்லுங்கள்:
''தேவகி அம்மா, இந்த யசோதை உங்கள் வேலைக்காரி, உங்கள் மகன் கிருஷ்ணனின்  பணியாள். அவன் மீது சொல்ல முடியாத அன்பும் பாசமும் நிறைய கொண்டவள். அவன் அழகில் கட்டுண்டவள். அப்பப்பா அவன் விஷமங்கள், பிடிவாதம் கொஞ்சமா நஞ்சமா? உங்களுக்கு தெரிந்திருக்குமே !  
விடிந்ததும் வெண்ணை தேடுவான். குளிப்பாட்டலாம் என்று அவனுக்காக  எண்ணெய், நறுமண சிகைக்காய்  வாசனை பொடிகள், சுத்தமான வெந்நீர்வஸ்திரங்கள் எடுத்து வைப்பதைப்  பார்த்தவுடன் இமைக்கும் நேரத்தில் சிட்டாய்ப் 
பறந்து ஓடி விடுவான். எப்படியோ ஒருவாறாக அவனை தாஜா பண்ணி, வெண்ணை தின் பண்டங்கள் கொடுத்து பிடித்து வருவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும். என் உடம்பில் பாதி தெம்பு காணாமல்போய்விடும்.   இதெல்லாம் உங்களிடம் சொல்லியிருக்க மாட்டான். சங்கோஜப்பட்டு மறைத்திருப்பான் என்பதற்காக சொல்கிறேன்.''
ஸூர்தாசர் கற்பனையே  அலாதி.  கீழே  வ்ரஜ்பாஷாவில்அவர் ஸ்வயமாக மனதில் தோன்றிய மேற்கண்ட விஷயத்தைப்  பாடியது கிடைத்தது:

संदेसो दैवकी सों कहियौ।
`हौं तौ धाय तिहारे सुत की, मया करति नित रहियौ॥
जदपि टेव जानति तुम उनकी, तऊ मोहिं कहि आवे।
प्रातहिं उठत तुम्हारे कान्हहिं माखन-रोटी भावै॥
तेल उबटनों अरु तातो जल देखत हीं भजि जाते।
जोइ-जोइ मांगत सोइ-सोइ देती, क्रम-क्रम करिकैं न्हाते॥
सुर, पथिक सुनि, मोहिं रैनि-दिन बढ्यौ रहत उर सोच।
मेरो अलक लडैतो मोहन ह्वै है करत संकोच॥

Sandeso devaki so kahiyo
Hau to dhai tihare sut ki maya karat nit rahiyo
Yadapi tev tum jaanat unki tau mohi kahi aave
Prat hot mero laal ladaiti maakhan roti bhaave
Tel ubatano aru tato jal tahi dekhi bhagi jaave
Joi joi mangat soi soi deti kram kram kari nahave
Sur pathik suni mohe rain din bado rahat dar soch
Mero alak ladaito mohan hwaihe karat sankoch

 

Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:26:34 PMOct 24
to amrith...@googlegroups.com
---------- Forwarded message ---------
From: Sivan Krishnan <jks...@gmail.com>
Date: Wed, 22 Oct 2025 at 04:06
Subject:
To: <amrith...@gmail.com>


திருவானைக்காவல் ஆலய புதையல்.    நங்கநல்லூர் J K  SIVAN 

புதையல்  என்றால்  எல்லோருக்குமே  ஆச்சர்யம்.  எந்தகாலத்திலோ  யாரோ, எதற்காகவோ  நிறைய  தங்கம் வைரம் வெள்ளி ஆபரணங்கள், காசுகள் மணிகள்  பித்தளை, வெள்ளி , வெண்கல அண்டா, குண்டாவிலோ,  மண் பானையி லோ போட்டு மூடி பூமிக்கடியில்  புதைத்துவிட்டு மறந்து போயிருப்பார்கள். அல்லது அதை யாருக்கும் சொல்லக்கூடாது என்று  ரஹஸ்யமாக புதைத்து  எந்த விஷயமும் வெளியே வராமல் அவர்களே  கண்ணை மூடி இருப்பார்கள். அது பல நூறு வருஷங்களுக்கு பிறகு ஒருநாள் எதற்கோ யாரோ எங்கேயோ  மண்ணை தோண்டும்போது  எவருக்கோ கிடைக்கிறது. 

நங்கநல்லூரில் ஒருவர் வீடு கட்ட நிலம் வாங்கினார். கஷ்டப்பட்டு பணம் சேர்த்து வாங்கிய  மனை.  வீடு கட்டலாம் என்று அஸ்திவாரத்துக்கு  மண்ணை தோண்டும்போது  அங்கே  பல்லவர் காலத்து  தர்மலிங்கேஸ்வரர் கோவில் புதையுண்டு கிடப்பது தெரிந்தது. நானே நேரில் சென்று 50 வருஷங்களுக்கு முன்  பார்த்தேன். இன்று அற்புதமான தர்மலிங்கேஸ்வரர் கோவில் அங்கே ராஜகோபுரத்தோடு நிற்கிறது. 

ஐந்து ஆறு வருஷங்களுக்கு முன்பு  ஒருநாள்  திருவானைக்காவல் பக்கம் காரில் போகும்போது கோவில் வாசலில் நின்றேன். நிறைய கூட்டம். அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும். கசமுச என்று கூட்டம் கூட்டமாக  பேச்சு. 

2020ம் வருஷம் பெப்ரவரி மாதம்  ஒரு மூடப்பட்ட பித்தளை தவலை  பூமிக்கடியிலிருந்து  கிடைத்திருக்கிறது. உடனே  அதிகாரிகளுக்கு விஷயம் அறிவிக்கப்பட்டு  திறந்து பார்த்திருக்கிறார்கள். 
அடேயப்பா, அந்த பழைய பித்தளை தவலை நிறைய  மூடி வரை,  505  தங்க காசுகள், 1.716 கிலோ.எடையுள்ளவை
வைக்கப்பட்டு இருந்ததாம். 

செய்தியில் அப்புறம் படித்தேன்.   அகிலாண்டேஸ்வரி  ஆலயத்தின்  அருகே   உள்ள புதர்களை, காட்டை  அழித்து அங்கே  ஒரு புதிய  நந்தவனம் அமைக்க  ஒரு இடத்தை தேர்வு செய்து கோவில் நிர்வாகிகள் ஆட்களை விட்டு  மண்ணை தோண்டி இருக்கிறார்கள்.  ஏழு அடி  ஆழத்தில் இந்த பித்தளை தவலை  சுகமாக கிட்டத்தட்ட  ஆயிரம் வருஷ காலம் தூங்கிக்  கொண்டிருந்திருக்கிறது.   தொல் பொருள் ஆராய்ச்சிகாரர்களுக்கு இது அல்வா மாதிரி சமாச்சாரம்  அல்லவா?.  ஆராய்ச்சி பண்ண கிளம்பி விட்டார்கள். 

நாணய வல்லுநர்கள் ஆராய்ந்து 1691ல் கிழக்கிந்திய கம்பனி ஆட்சியி உபயோகித்திருந்த  தங்க காசுகள் அவை என்று கண்டுபிடித்தார்கள் .சில நாணயங்களில்  திருப்பதி வெங்கடாசலபதி உருவம்.  சிலவற்றில்   அரேபிய எழுத்துக்கள் இருந்ததாம்.   1000 முதல்  1200வது  வருஷத்தியவை.  எத்தனை கோவில்களில் எத்தனை பக்தர்கள் இது போல் தானம் தர்மம் செய்து இன்னும்  வெளியே வராமல் பூமாதேவி மடியில் இருக்கிறதோ? எல்லாம் பகவானுக்கே வெளிச்சம். 

ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி ஆலயம் கிட்டத்தட்ட  2000 வருஷத்துக்கு முன்  கோச்செங்கணான் என்ற சோழ அரசன்  காலத்தில் கட்டப்பட்டது.   அருகே  ஸ்ரீரங்கம் ரங்கநாதர்  ஆலயம் உள்ளது.
 
கிழக்கிந்திய கம்பனி அச்சிட்ட தங்க நாணயங்கள்  பகோடா  pagodas, வராகன்,  எனப்பெயர் கொண்டவை. ஒரு சாமி பகோடாவில் ஒரு தெய்வம் அச்சு உருவம். மூணு சாமி பகோடா நாணயத்தில் மூன்று ஸ்வாமிகள் உருவம்  அச்சாகி இருக்கும்.  வெங்கடாசலபதி தனித்தும், ஸ்ரீ தேவி  பூதேவி சமேத நாராயணனாகவும்  உருவம் கொண்டவை. .   ஒரு பத்து  கிராம் தங்க காசு  ஆற்காட் நவாப் காலத்தை சேர்ந்தது. 

ஆலயங்களுக்கு எண்ணற்ற பக்தர்கள், அரசர்கள், பிரபுக்கள், தனவான்கள் , வாகனங்கள், தங்க  ஆபரணங்கள், நிலம், காசுகள் எல்லாம்  காணிக்கையாக கொடுப்பது வெகுகாலமாக நாம் சார்ந்தது.  அந்த விவரங்கள் தெரிந்தவை பாதி தெரியாதவை மீதி.   கோவில் பராமரிப்புக்கு விளக்கேற்ற, பூஜைகள் நடத்த,  ஆடு  நிலம், ஆகியவை கொடுத்தது கல்வெட்டுகளில் நிறைய  படித்திருக்கிறோமே .  புதையல் சமாச்சாரம் ரஹஸ்யமானது.  வெளியே யாருக்குமே  தெரியக்
கூடாது என்பது தானே ரஹஸ்யம்.    ஆகவே  அது ஆச்சர்யத்தை தான் கொடுக்கும்.  நமது திருச்சி, ஸ்ரீரங்கம்,  திருவானைக் காவல் நண்பர்கள் இது பற்றி தெரிந்த மற்ற விஷயங்களை எனக்கு அனுப்பலாமே!



Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:26:34 PMOct 24
to amrith...@googlegroups.com
யார் யா, அதிர்ஷ்டக்கட்டை?   -- நங்கநல்லூர்  J K  SIVAN


உலகத்தில் எத்தனையோ அதிர்ஷ்டக்  கட்டைகள் இருக்கிறார்கள். சிலர்  எதைத்  துவங்கினாலும் அது நஷ்டத்தையே  அளிக்கும். சிலர்  வாயினால், காரியத்தை கெடுத்துக்கொள்ளும்  சாமர்த்யசாலிகள்.  சிலரை  நேரில்  பார்த்தாலே 'போ நீ வேண்டாம்' என்று திருப்பி விடுவார்கள்.  எல்லாவற்றிலும் மேலாக சிலர் பேரை சொன்னாலே   சாதாரணமாக நடக்க கூடிய காரியமும்  துளியும் நடக்காது.  அப்படி ஒரு வடிகட்டிய அதிர்ஷ்டக்கட்டை  ராமண்ணா.

B .A. படித்தான்  நல்ல  மதிப்பெண். இருந்தும் எங்கும் வேலை கிடைக்கவில்லை.  வாத்யாராக ட்யூஷன் எடுத்து பார்த்தான் ஒருவரும் வரவில்லை.  B .COM  படித்தான் அப்படியும்  வெகுநாள் கிடைக்காமல் ஒருநாள் ஒரு கம்பெனியில் வேலைக்கு வா என்று அழைத்தார்கள் அவன் போகும்போது பஸ்ஸிலிருந்து இறங்கும்போது  கீழே விழுந்து கால் உடைந்து ஆஸ்பத்ரியில் ரெண்டு மாசம்  இருந்த செலவு தான் மிச்சம். வேலை  அவனுக்காக காத்திருக்க வில்லை. பம்பாயில் சில நாட்கள் இருந்து வேலை தேடினான். ஒரு வேலையில் மூன்று மாதம் இருந்தும் சம்பளமே தரவில்லை.  இன்னொரு கம்பெனியில் வேலை கிடைத்தது. சம்பளம் குறைவாக இருந்தாலும் ஒப்புக்கொண்டான்.  ஏதோ  சட்டத்துக்கு எதிராக தில்லு முல்லு செய்வதாக புகார். அந்த கம்பெனி தண்டிக்கப்பட்டு மூடிவிட்டார்கள்.  அவன் புதிதாக  வேலைக்கு சேர்ந்ததால் அவனை காவல் துறை  விசாரணை மட்டும்  செய்து விட்டு  அவனுக்கு ஒன்றும் தெரியாததால் வெளியே விட்டது.

தண்டாங்கோரை கிராமத்தில் அம்மா பாஷையை  தொத்தல் வீட்டை வித்து கடன் அடைத்து மீதி இருந்ததை கொடுத்தாள் . அந்த   பதினான்காயிரம் ரூபாயும் கரைந்து விட்டது. அம்மா தள்ளாத வயதில் எங்கோ சத்திரத்தில் தங்கி வீட்டு வேலைகள் ஏதோ செய்து வயிறு கழுவிக் கொண்டிருந்தாள்.  

ராமண்ணாவுக்கு பம்பாயில் ஏதோ ஒரு  பாவ் பாஜி  சமோசா கடையில்  கணக்கெழுத  வேலை கிடைத்தது.  அதுவும் அந்த கடை முதலாளி  தஞ்சாவூர்காரர் என்பதால். அவருக்கு எப்படியோ ராமண்ணாவை பிடித்து அவன் மேல் பரிதாபம் ஏற்பட்டது.  

தண்டாங்கோரை தங்கம்மா விடம் இருந்து போஸ்ட் கார்ட் வரும். அதில் அவனைப் பற்றி நிறைய விசாரித்து விட்டு கடைசி வரியில் "ராமு, நீ சம்பாதிப்பதில் ஏதாவது மிச்சம் இருந்தால்  எனக்கு ஏதாவது பணம் அனுப்புகிறாயா? என்று கேட்பாள், அந்த கடைசி வரியை அவனால் படிக்க முடியாது. அவன் கண்களில்  தான்  காவேரி பிரவாகமாக வெளிப்பட்டு எழுத்தை மறைக்குமே.  

இந்த வருஷமாவது எப்படியாவது தீபாவளிக்கு ஊர் போகணும். அம்மாவுக்கு கொஞ்சம் பணம் கொண்டு போகவேண்டும். முதலாளியை கெஞ்சி கூத்தாடி அவர்  1150 ரூபாய் கொடுத்தார். ''ஆனால் நீ லீவு கிடையாது.  நீ  போக முடியாது. இங்கே வியாபாரம் தடைபடும்''. என்று சொல்லிவிட்டார். அந்த 1150 ரூபாயும் கொஞ்சம் கொஞ்சமாக சம்பளத்தில் கழித்துக் கொள்ள  ஒப்புக்கொண்டார்.

இன்னும்  பதினைந்து நாளில் தீபாவளி. எப்படியோ ஒரு நண்பனை கண்டுபிடித்து அவன் தஞ்சாவூர் பக்கம் போகப் போகிறேன் என்று சொன்னபோது அவனிடம் கெஞ்சி எப்படியாவது என் அம்மாவை பார்த்து இந்த கடிதம் கொடுத்து அதோடு  இந்த கவரிலேயே  வைத்திருக்கும் 1150 ரூபாயைக்  கொடுத்து விடுகிறாயா என்று கேட்டான். அவனும் ஒப்புக் கொண்டு கடிதம், பணம் ரெண்டும் உள்ள கவரை வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.

ராமண்ணா  அதிரிஷ்டக்கட்டை என்று முதலிலேயே சொல்லி இருக்கிறேனே. அதன்படி நடக்க வேண்டாமா?  பணத்தை எடுத்துக் கொண்ட போன முஸ்லீம் பையன் ட்ரெயினில்  ரிசர்வ் பண்ணாமல்  திடீரென்று ஒருநாள் ரயிலில் முந்தி அடித்து டம் பிடித்து ஏறிக்கொண்டு பம்பாயில் இருந்து சென்னைக்கு ரயில் நகர்ந்தது.   சென்னையில் ஒரு பஸ்  பிடித்து தஞ்சாவூர் போனான் அந்த பையன்.  தீபாவளி சமயம் அநேகர் பிரயாணம் செய்ய நினைத்ததால் ரயில் பஸ் எல்லாமே கஜகஜ வென்று கூட்டமாக இருந்து.  மூன்று பைகள் வைத்திருந்த பையன் கும்பல் நெரிசலில்  தஞ்சாவூரில்  இறங்கிய போது  ரெண்டு பையோடு மட்டும் இறங்கினான். எங்கு தேடியும் மூன்றாவது பையை காணோம். சின்ன நீல கலர் பையில்  ராமண்ணா கொடுத்த  அம்மாவுக்கு சேலை,பக்ஷணம், கவர் அதில் லெட்டர் பணம். எல்லாம் இருந்தது எங்கே மாயமாக மறைந்தது. பையன் தேடி அலுத்து கடைசியில் எப்படியாவது ராமண்ணாவை சந்தித்து சமாதானம் செயது கொஞ்சம் கொஞ்சமாக 1150 ரூபாயை  கொடுத்து விடலாம் என்று முடிவு செய்தான்.

தீபாவளிக்கு முதல் நாள் தண்டாங்கோரை கிராம போஸ்ட் மாஸ்டர் டெலிபோன் நம்பர் அவனுக்கு தெரிந்ததால் அவரை எப்படியோ லைனில் பிடித்து  அம்மாவை பார்த்து  லெட்டர் பணம் கிடைத்ததா என்று கேட்க சொன்னான்.  அவர் ரெண்டு நாள் கழித்து உங்கம்மாவை பார்த்தேன் நீ வரப்போவதாக சொன்னாள்.  உன்னிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்று வருந்துகிறாள். வறுமையில் வாடுகிறாள். நீ ஏதாவது பணம் அனுப்ப முடியமா என்று கேட்டாள்  என்றார்.''

தீபாவளி முடிந்து பதினைந்து நாள்  ஆகிவிட்டது.  ஒரு போஸ்ட் கார்டு வந்தது.  கடைசி வரி அவனால் படிக்க முடியவில்லை வழக்கம் போல். என் நண்பன் ஏன் இன்னும் அம்மாவை பார்க்கவில்லை  பணம் கொடுக்க வில்லை என்று கவலை வேறு வாட்டியது.

நான்கு நாள் கழித்து  ஒரு கடிதம் அம்மாவிடம் இருந்து வந்தது. பிரவுன் கவர்.  அம்மா எப்போதும் போஸ்ட் கார்ட் தானே எழுதுவாள். இப்போது ஏன் கவரில் கடிதம் எழுதுகிறாள் என்று பயந்து கொண்டே பாரத்தால் கவரின் மேல் விலாசம் அம்மா கையெழுத்து இல்லை. பிரித்து பார்த்தான். உள்ளே இருந்த ரெண்டு கடிதங்களில்  அம்மா கையெழுத்தில் ஒன்று 
  ஊர் விஷயங்கள் எல்லாம் எழுதி விட்டு போன ஞாயிற்றுக்கிழமை தீபாவளிக்கு  ஒரு வாரம் கழிந்து  சுப்ரமணியன் என்பவர் என்னை வந்து பார்த்தார்.  நீ கொடுக்க சொன்னதாக  ரூபாய்   2000 கொடுத்தார் . நீ அனுப்பியதாக ஒரு சேலையும் கொடுத்தார், பக்ஷணங்கள்  நிறைய  வாங்கி வந்தார். இதை வைத்துக்கொண்டு சவுகரியமாக இருக்க சொன்னார். அப்புறம் இனி லீவு கிடைத்தால் வருவதாக சொன்னார். அவர் விலாசம் எதுவும் தரவில்லை. அவரிடம் தான் இந்த எழுதி கொடுக்கிறேன்- ஆசியுடன்  உன் அம்மா தங்கம்மா .''

யார் இந்த  சுப்ரமணியன்? எப்படி  2000 ரூபாய்?   நான் 1150 ரூபாயும் கடிதமும் தானே முஸ்லீம் பையனிடம் கொடுத்தேன் அம்மா  என் கடிதாசை பார்க்கவில்லையோ? அதில் நான் படும் கஷ்டங்களை சொல்லி , கஷ்டப்பட்டு கிடைத்த 1150 ரூபாய் தான் அனுப்புவதாக எழுதினேன்.. நான் அனுப்பிய  புடவை பக்ஷணங்கள்  கிடைத்ததாக மட்டும் சொல்கிறாளே. ஆச்சர்யமாக இருக்கிறதே என்னவென்று புரியவில்லையே'' என்று வாயைப் பிளந்த ராமண்ணா அப்போது தான் அந்த கவரில்  இருந்து கீழே விழுந்து கிடந்த ரெண்டாவது  சிறிய கடித்ததைப்  பார்த்தான்.

''நண்பா. நீ யாரோ நான் யாரோ. எனக்கு அம்மா இல்லை. ஒரே ஒரு சகோதரி.  அவளை  மாதா மாதம் பார்க்க போவேன். அப்படி  சமீபத்தில் பஸ்ஸில் போகும்போது கும்பலில் யாரோ தவறவிட்ட   ஒரு சின்ன நீலப்பை என் காலடியில்  என் பெட்டிக்கு பின்னால் இருந்தது.   எனக்கு ஒரு கால் ஊனம். ஆகவே, மெதுவாக  கடைசியாக  நான்  இறங்கும்போது வேறு யாரும்   பஸ்ஸில் இல்லை. மழை வேறு. இருட்டு நேரம்.  அந்த பையையும் என் பெட்டியையும் எடுத்துக்கொண்டு என்  வீட்டுக்குச்  சென்றேன். உன் கடிதம், சேலை, பக்ஷணங்கள், பணம் எல்லாம் பார்த்தேன். உன் விலாசம் இருந்தது. கவர் மேல்  உன் அம்மாவின் விலாசம் இருந்தது. . நானே உன் தாயைக்   கண்டு பிடித்து உன் பணத்தை சேர்த்து விடலாம் என்று புறப்பட்டேன். உன் அம்மாவை பார்த்ததும், அவள் உன்மேல் கொண்டுள்ள பாசம், அவளும் நீயும் படும் கஷ்டம் எல்லாம்  அறிந்து நானே மேற்கொண்டு என்னால் முடிந்தவரை 850 
சேர்த்து ரெண்டாயிரமாக உன் தாயிடம் நீ கொடுத்ததாக தந்தேன். உன் கடிதம் கொடுத்தால் நீ தந்தது  1150 ரூபாய் மட்டும் என்று அவள் புரிந்து கொள்வாள். 2000ரூபாயுமே நீ தந்தாக இருக்கட்டுமே.  ஆகவே உன் கடிதம் இதோ இணைத்திருக்கிறேன்.  ஒரு தீபாவளி அன்று ஒரு ஏழை அம்மாவுக்கு என் பரிசும் சேர்த்து தந்ததில் எனக்கு  மட்டற்ற மன மகிழ்ச்சி.  சுப்ரமணியன்''  . விலாசம் போன் நம்பர் எதுவும் இல்லை.

பி. கு. ரெண்டு மாதம் கழித்து  முஸ்லீம் பையன் கண்ணில் பட்டான். அவன்  கும்பலில் ரயிலிலோ பஸ்ஸிலோ ராமண்ணா தந்த நீல  பையை  தொலைத்துவிட்டதாக அழுதான். எப்படியாவது 1150 ரூபாய்  கொஞ்சம் கொஞ்சமாக தந்து விடுவதாக சொன்னான். ராமண்ணா விஷயம் சொன்னதும் ரெண்டு பேருக்குமே சந்தோஷம்.  பையன் வேலை பார்த்த  ப்ரிண்ட்ங் பிரஸ்ஸில்  ஒரு வேலை காலி இருப்பதால்  முதலாளியான தனது பெரிய மாமாவிடம் சொல்லி அந்த வேலையில் ராமண்ணா  சேர்ந்துவிட்டான். மாதம் 12ஆயிரம் சம்பளம்..



 

Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:26:35 PMOct 24
to amrith...@googlegroups.com

தீபாவளி சிந்தனை…   நங்கநல்லூர்  J K  SIVAN 

”நான்  டாண் என்று விடிகாலை நாலு மணிக்கே எழுந்திடுவேன் ஸார்”  சரி, சந்தோஷம்,  எழுந்து என்ன செயகிறோம் என்பது தான் முக்கியம்.
  ‘நான்  ஒவ்வொரு நாளும் பூஜை பண்ணிட்டு தான் சாப்பிடுவேன்’ .  இதுவும்  அதிசயிக்க தக்கதில்லை.  பூஜையின் போது  உன் மனம்   எதன் மேல் இருந்தது?. அது தான் முக்கியம்.
”என் அலமாரியை திறந்து காட்றேன் பாருங்கோ.  ஐநூறு புஸ்தகம் வைத்திருக்கிறேன்” இதுவும் முக்கியமில்லை.
”எதைப்  படித்தாய், புரிந்து கொண்டாய்/”  அது தான் முக்கியம். முக்கியமாக  மனதில் தோன்றும் எண்ணம் எத்தகையது என்பது தான் விசேஷம்.  நம் எண்ணத்தையும்  செயலையும்  தான் பகவான் பார்க்கிறான்.

வாழ்க்கையில் வசதியும், பணமும்,  ஆரோக்கியம், மன அமைதி, தராது.
பிறர் விஷயத்தில் தலையிடாமல்,  அதிகம் பேசாமல், குறை  கூறாமல், நமது அபிப்ராயத்தை மற்றவர் மேல் திணிக்கா மல்,கேட்காமலேயே உபதேசம் பண்ணாமல்,  நமது காரியத்தில் மட்டும்  முழுமனதும் செலுத்தினாலே அமைதி பெறலாம்.
பகவான் எல்லாவற்றையும், எல்லோரையும்  ஒன்றாகவே பார்க்கிறார். நாம்  பிரித்து நமது மனம் போனபடி பார்க்கிறோம்.
கடவுளிடம் வேற்றுமை இல்லை. நம்மிடம் ஒற்றுமை இல்லை. எதிலும், எல்லோரிடமும் பாரபக்ஷம் பகவானுக்கு இல்லை. நமக்கு ஆயிரம் வித்யாசங்கள்.  நமது கல்வி அறிவு, நம்மை  சீர் படுத்தத்தான். பிறர் மெச்ச அல்ல.  வெளியில் பிறர் மேல் கோபத்தை, ஆத்திரத்தை காட்டுவதை விட மனதில் அவர்கள் மேல் பகைமை உணர்ச்சி கொள்வது அதிக ஆபத்தானது.  அது நமது உள்ள, உடல் ஆரோக்யத்தை தின்றுவிடும்.  மன நிம்மதி குலைக்கும்  சம்பவங்கள், செயல்களை  உடனே மறந்து விட வேண்டும். அடிக்கடி மனதின் ஆழத்திலிருந்து தோண்டி எடுத்து நினைக்க கூடாது. மறுபடி அதே அனுபவம் பெற அவ சியமே இல்லை.   எல்லோருக்குமே  பிடித்த  நல்ல விஷயங்களை  பேசுங்கள், பாடுங்கள், கேளுங்கள். எழுதுங்கள். நான் அதைத்தான் செய்து வருகிறேன். டாக்டரை அடிக்கடி சென்று பார்க்க அவசியம் நேரவில்லை.இருக்கும் பண வசதியில்  திருப்தி கொள்வோம். மற்றவரோடு ஒப்பிட்டு பார்ப்பது நிம்மதியை குலைக்கும்.
ஒவ்வொருவர் வாழ்க்கையும் அவர் கர்ம வினைப்படி அமைகிறது. உலகில் எத்தனை உயிர்கள் இருக்கிறதோ அத்தனை வித்யாசங்கள் அதில் உண்டு.  பொறாமை எவ்வளவு தீமையோ அவ்வளவு நன்மை பொறுமைக்கு உண்டு. பொறுத்தார் பூமி ஆள்வார் . ஒரு சென்ட் நிலம் ஆண்டாலே  ஆச்சர்யம் இப்போது.  சத் சங்கம் ரொம்ப அவசியம்.  அல்ப ஸ்நேகிதம்  என்றும் பிராண சங்கடம்.  ஒவ்வொருவருக்கும் தனது  குடும்பம், பெற்றோர், உற்றோர், மற்றோர், இறைவன் என்று பலருக்கு செய்ய வேண்டிய கடமைகள் உண்டு. அதில் தவறவே கூடாது. கூட்டு பிரார்த்தனை பக்தியை வளர்க்கும்.

நேரம் பொன்னானது. ஒரு கணத்தையும்  வீணடிக்கக்கூடாது. எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் திரும்ப கிடைக்காது.
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது போதாது. மனம் சுத்தமாக இருந்தால் தான் அதில் இறைவன் குடியிருக்க வருவான்.
எந்த காரியம் எடுத்தாலும் அரைகுறையாக விடாமல்,  செய்வன திருந்த செய்யவேண்டும்.

சுயநல வாதிக்கு என்றும் சந்தோஷமோ, மன நிம்மதியோ கிடைக்காது. சின்ன உதவியாக இருந்தாலும் பிறருக்கு செய்யும் போது அதில் கிடைக்கும் சந்தோஷம், மன நிம்மதி,  வேறெதிலும் பெற முடியாது. எதைச்  செய்தாலும் அதில் வேகத்தை விட விவேகம் தான் அவசியம்.

நம்மை சுற்றி அனாவசிய  பொருள்களை, சொத்தை, சேர்த்து வைத்துக்கொண்டு அவற்றை காப்பாற்றுவதிலேயே காலம் வீணாகிறது. வேண்டாத தலைவலி. தேவைகளை குறைத்துக் கொள்பவன் மஹா யோகி.

முதலில் நம் மீதே நமக்கு நம்பிக்கை வேண்டும். அடுத்தது பகவான் மேல் பூரண  நம்பிக்கை. ஒரே கோவிலுக்கு அடிக்கடியோ, அல்லது எத்தனையோ கோவில்களுக்கு ஒரு தடவையோ செல்வதால் உள்ளம்  சீர் படுகிறது. எண்ணற்ற புண்யவான்கள், மஹான்கள் வெளிப்படுத்திய  தெய்வீக அதிர்வலைகள்  நிறைந்திருப்பதால் அவை நம் உள்ளே புகுந்து  புத்துணர்ச்சி தருகிறது. இதயம் பலம் பெறுகிறது.

நம்மை நாமே முதலில் நம்ப வேண்டும்.  நாம் நாமாகவே இருக்க வேண்டும். பொய் , பகட்டு, ஆடம்பரம், எல்லாம் ஏமாற்று வித்தை.  பிறர் மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வேண்டவே வேண்டாம். நமக்கு தகுதி இருந்தால், நிச்சயம் நாம் தேடாமலேயே நம்மை பிறர் நாடுவார்கள். நாம் எண்ணும் , செய்யும்,  ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு காரணம் உண்டு. அதற்கு தக்க விளைவும் உண்டு. அவனன்றி ஓரணுவும் அசைவதில்லை.
என்னைப்  பொறுத்தவரை, நான் இப்படி இருக்கவேண்டும், இதை எல்லாம் செய்யவேண்டும் என்பது எனது முடிவல்ல. பகவான் கிருஷ்ணனின் சங்கல்பம். அதை  நிறைவேற்றுவது என் முயற்சி. அதுவும் அவன் தந்தது… அவனருளால் அவன் தாள் வணங்கி……


Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:26:35 PMOct 24
to amrith...@googlegroups.com
பகவத் கீதை  4      நங்கநல்லூர்  J  K  SIVAN 

நம்மில் அநேகருக்கு நாக்கை  கட்டுப்படுத்த முடியவில்லை.  நமக்கு  எதெல்லாம் நிறைய  நன்றாக சாப்பிட , குடிக்க,  பிடிக்குமோ அது அத்தனையும் கிட்டவே வரக்கூடாது என்பார் டாக்டர்.  அப்படி  சொன்னவருக்கு நிறைய  காசு கொடுத்து பீஸ் ஆக  கொடுத்து விட்டு  அதிருப்தியுடன்,  அரை இல்லை கால் மனதோடு வீட்டுக்கு திரும்புவோம்.   உண்மையில் நாம் சாப்பிடும் ஆகாரம் தான் நம் உள்ளத்தையும் உடலையும் சீர்  படுத்துவது.   துறவிகள் ஸ்வயம்பாகம் என்று தாமே  சாத்வீக உணவை தயாரித்து சாப்பிடுபவர்கள்.  வெளியே  பிறர் வீட்டில் சாப்பிடமாட்டார்கள்.  எந்த  உணவுப் பொருள் எப்படி வந்ததோ, அதன் பின் என்ன தவறோ, துயரமோ, துக்கமோ, தெரியாதே, உணவாக அது நம்முள்ளே செல்லும்போது அது சம்பந்தப்பட்ட அதர்ம, தீய குணங்களும் நம்முள்ளே  வளர்ந்து விடும்.  
ஒரு  துறவி கதை சொல்லட்டுமா.அப்போது தான் மேலே சொன்னது புரியும். 
ஏதோ ஒரு சின்ன  ராஜ்யம். அதற்கு ஒரு ராஜா. அவன்  வேட்டையாட காட்டுக்கு போன போது  அங்கே ஒரு துறவியை ஒரு சின்ன ஆஸ்ரமத்தில் சந்தித்து அவரிடம்   தனக்கும் தனது குதிரைக்கும்   நீர் வாங்கி பருகி சற்று நேரம் மரத்தடியில் தங்கி, அவரிடம் பேசி அருள் மொழிகள்  கேட்டு களைப்பு நீங்கினான் . அந்த துறவி  மரத்தடியில் மூன்று கற்கள் வைத்திருந்ததை பார்த்தான். அது தான் அவர் படுக்கை.  ஒன்று  தலையணை, மற்றொன்று முதுகுக்கு  இன்னொன்று காலுக்கு. இது தான் அவர் படுக்கை.  

பிடிவாதமாக  எப்படியோ  ஒப்புகொள்ளவைத்து அந்த துறவியை  ஒரு நாள் மட்டும் அவன் அரண்மனைக்கு வந்து தூங்குகிறேன் என்று வாக்கு பெறுகிறான்.  ஒருநாள் துறவி ராஜா அரண்மனைக்கு  வருகிறார். அங்கே அவருக்கு  ஏகபோக உபச்சாரம். ஒரு வேளையாவது கொஞ்சம் உணவு அருந்த வேண்டும் என்று சம்மதிக்க வைத்து அவரை தனது சப்ரமஞ்ச கட்டிலில் படுக்க வைக்கிறான். துறவி எப்படி படுத்துக்கொண்டு சுகமாக தூங்குகிறார் என்று போய் பார்க்கும்போது அவர் ராஜாவின் சப்ரமஞ்ச கட்டில் மேல்  தான் கையோடு கொண்டு வந்திருந்த மூன்று கற்களை  வைத்து அதன் மேல் வழக்கம் போல் படுத்திருந்தார். 

 இரவு ஒரே ஒரு வேளை  சாப்பிட ஒப்புக்கொண்டு சாப்பிட்டார். மறுநாள் விடிகாலை அரசனிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டு விட்டார்.   இரவு முழுதும் அவருக்கு வயிற்றில் வலி. சாப்பிட்டதால்  ஏற்பட்ட சங்கடம், வழக்கமான தியானம்  கெட்டு விட்டது. மனம் அதில் ஏன்  ஈடுபட வில்லை?  அதைத்  தவிர அவரது ஜோல்னா பை  ஏன்  இப்போது ரொம்ப  கனமாக இருந்தது. அதில் இருப்பதை தரையில் கொட்டினார்.  ஜோல்னா பைக்குள் வெள்ளி கரண்டிகள், டம்பளர், தட்டு ஸ்பூன் எல்லாம் எப்படி வந்தது?  ஓஹோ ராத்திரி சாப்பிடும்போது உபயோகித்த வஸ்துக்கள் அல்லவா இவை?   ராஜாவிடம் நேராக சென்றார். 
''ராஜா நேற்று நான் சாப்பிட்ட உணவு எனக்கு ஏற்கவில்லை. உங்கள் சமையல் காரரை கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா. அவரிடம் நான் பேசவேண்டும்.'' 
சமையற் காரர் கையைக் கட்டிக்கொண்டு எதிரே நின்றார்.
''ஐயா,நீங்கள் சமைத்த அரிசி பருப்பு எல்லாம் எங்கிருந்து வந்தது?
''தளபதி ஐயா அனுப்பித்த மூட்டைகளிலிருந்து தான்''
தளபதியை கூப்பிட்டு  எங்கே இந்த மூட்டைகள் கிடைத்தது என கேளுங்கள் ராஜா'' 
'அரசே  ஆறுமாதத்துக்கு முன் நமக்கு கப்பம் காட்டாத பாளையக்காரர்  கிராமத்திலிருந்து. அவர்கள் சேமித்து வைத்திருந்த உணவுப்  பொருள்களை  வட்டிக்கு ஈடாக  நமது வீரர்கள்  சூறையாடி அரண்மனைக்கு கொண்டுவந்தோம்.
''ஆஹா இப்போது புரிகிறது. ஒருவர் அனுமதியில்லாமல் அவர்களது பொருள்களை கொண்டுவந்து உணவாக்கி சாப்பிட்டதால் என்னிடம் இதுவரை இல்லாத குணங்கள் என் உடலில், மனதில்,  சேர்ந்துவிட்டதால் தான் இங்கே உபயோகித்த  இந்த வெள்ளி தங்க சாமான்களை  உங்கள் அனுமதியில்லாமல் என் பைக்குள் என்னை அறியாமல் போட்டுக்கொண்டுள்ளேன். இது என் தவறல்ல. என்னுளே சென்ற  தவறான உணவால் நேர்ந்தது  'இந்தாருங்கள் உங்கள் சாமான்கள் . நான் என் காட்டுக்கு செல்கிறேன்'' என்று எல்லாவற்றையும் அங்கேயே வைத்துவிட்டு துறவி கிளம்பினார். 

இந்த கதை கீதை தத்துவத்தை சொல்கிறது.   நாம்  உண்ணும்  உணவுப்பொருள்கள் தவறான வழியில் வந்ததாக இருக்க கூடாது. சமையல் செய்யும் பாண்டங்களும் பரிசுத்தமாக இருக்கவேண்டும். சமையல் செய்பவரும்  பரிசுத்தமாக இருக்கவேண்டும். நாம் உண்ணும் உணவு  நமக்குள்ளே  இருக்கும்  வைச்வானரம் எனும் தீயினால்   ஜீரணமாகி  சக்தியை தருகிறது. அதற்கு நாம் பக்வானுக்கு படைத்த ப்ரசாதத்தையே  உணவாக தரவேண்டும்.  

எதை உண்டாலும், நீர் பருகினாலும் ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணமஸ்து என்றும் சொல்லும் வழக்கம் எங்கள் குடும்பத்தில்  நீண்டநாளாக பழக்கம். 

குணங்களை எப்படி விலக்குவது  என்பதற்கு சின்ன உதாரணம். முள்ளை  முள்ளால் எடுப்பது.  தாமச குணத்தை ராஜஸ குணத்தாலும்  ராஜஸ  குணத்தை சத்வ குணத்தாலும்  போக்கலாம்.   காலில் தைத்த முள்ளை  இன்னொரு முள்ளால் எடுத்துவிட்டு  கடைசியில்  ரெண்டு முள்ளையுமே  தூரமாக போட்டுவிடுகிறோமே அது போல் கடைசியில் குணங்கள் எதுவுமில்லாமல் பரமனைப்போல்  நிர்குண ப்ரம்மமாகிறவன் தான் யோகி.   நாம் எல்லோருமே யோகிகளாக முடியும்.

நரகத்துக்கு மூன்று வாசல்கள்  எது தெரியுமா, கோபம், பேராசை, பற்று.
பதிவு ரொம்ப நீளமாக போவதற்கு முன் நிறுத்தி அடுத்த பதிவில் இன்னும் சொல்கிறேன். 


Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:26:35 PMOct 24
to amrith...@googlegroups.com

Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:27:27 PMOct 24
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம்  – நங்கநல்லூர்  J K SIVAN 

” உனக்கு வேண்டிய  போட்டோ கிடைக்கும்.”
அனுஷம் இன்று என்றால் மஹா பெரியவாவைப் பற்றி நினைப்பது வழக்கத்தை விட அதிகமாகும். அவரைப் பற்றி ஒரு சம்பவத்தையாவது குறிப்பிட மனது துடிக்கும். நான் மஹா பெரியவா பற்றி  ”பேசும் தெய்வம்”  என்ற தலைப்பில்  எழுதுவதெல்லாம் என் மனதில் நான் படித்த, கேட்ட, ரசித்த, சம்பவங்களின் நிழல் தான். எங்கே எப்போது எப்படி படித்தேனோ, கேட்டேனோ அதன் சாயல் தான் இருக்குமே தவிர  அதை அப்படியே தர இயலாது. என் எண்ணங்களும் அதில் கலந்து  விடும். மதுரை மணி  ஐயரின்  ‘கபாலி’,  மோஹன ராக பாட்டை கேட்டு நாம் பாடும் போது  அப்படியேவா பாட முடியும்? என் எண்ண  பிரதிபலிப்பை பிடித்திருந்தால் படிக்கலாம். நான்  எழுத்தாளனில்லை , ஆகவும்  முடியாது. தகுதியில்லை. ரசிகன். அம்புட்டு தான்.
மஹா பெரியவாளுக்கு எத்தனையோ வகைப்பட்ட பக்தர்கள், ஆண்கள் பெண்கள் குழந்தைகள்.
ஒரு போட்டோகிராபர் மஹா ஸ்வாமியை தரிசிக்க காஞ்சி மடம் வந்தார்.  கர்ணனுக்கு  குண்டலம் போல் அவர் கழுத்தில் காமிரா தொங்கியது. கூட்டம் அதிகம். ஆகவே சற்று உயரமாக ஒரு இடத்தில் நின்றுகொண்டு காமிராவை அட்ஜஸ்ட் செய்தார். தூரத்தில் மஹா பெரியவா மேடையில் அமர்ந்து தியானம் பண்ணிக்கொண்டிருந்தார்.
”அடாடா, மஹா பெரியவா தியானம் பண்ணும்போது காமிராவை  க்ளிக் பண்ணினால் பிளாஷ் லைட் பளிச்சென்று அவர் மேல் விழும். த்யானம் கலையுமே”, என தக்க நேரத்துக்கு காத்திருந்தார்.
மஹா பெரியவா கண் திறந்தார்,  அவர் முக  தேஜஸ் அற்புதமாக  காமிராவில் தெரிந்தது. பட பட என்று பல படங்கள்  க்ளிக் செய்து   மஹா பெரியவா பார்வை போட்டோக்ராபர் மேல் பதிந்தபோது  அவர்  வலது கையை உயர்த்தி  விரல்கள் தெரிய அபய ஹஸ்தம் காட்டினார் .

”ஆஹா  எத்தனை அற்புதமான போட்டோக்களாக  இவை  அமையப்போகிறது.நிறைய பேரை சென்றடையும்”  என்று  மகிழ்ந்தார் போட்டோக்ராபர்.  பளிச் பளிச்  என்று பிளாஷ் போட்டு நிறைய  போட்டோக்கள் எடுத்தார். அப்போது அவரை நோக்கி மஹா பெரியவா அணுக்க தொண்டர் ஒருவர் ஓடி வந்தார். முகத்தில் கோபம்.
 ”ஏன்  பெரியவா போட்டோ எடுக்காதேங்கோன்னு சொல்லியும் போட்டோ எடுத்தீர்கள்?””பெரியவா அபய ஹஸ்தம் தானே காட்டினா”.”அபயஹஸ்தம்னு நீங்க நினைச்சது அவர் உங்களை  போட்டோ எடுக்காதேன்னு தடுத்தது, அவர் கட்டளையை மீறியும் நீங்க எடுத்ததால்  உங்க காமிராலே ஒரு படமும் இருக்காது”
”ஐயா, நான் எடுத்தது பெரியவா அபய ஹஸ்தம் காட்டுகிறார்னு  நினைச்சு தான். இது ரொம்ப விலையுயர்ந்த காமிரா நன்றாக வேலை செய்யும்.  போட்டோக்கள்  நன்றாக விழும்.  படங்கள் போட்டு எடுத்துக்கொண்டு வந்து பெரியவாளிடம் காட்டுகிறேன்.”
வீட்டுக்கு வந்த போட்டோக்ராபர்  தனது  போட்டோ ஸ்டுடியோவில்  இருட்டில் பிலிம் கழுவி பிரிண்ட்  போட்டு பார்க்கிறார் எல்லாமே  வெள்ளையாக இருக்கிறது.  ஒரு போட்டோவிலும்  மஹா பெரியவா  காணவில்லை.  அதிரிச்சையடைந்து அவற்றை எடுத்துக்கொண்டு காஞ்சிக்கு ஓடினார். மஹா பெரியவா முன் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் ‘ஸர்வேஸ்வரா,”  உங்கள்  கட்டளையை  புரிந்து  கொள்ளாமல்  அபய ஹஸ்தம் னு நினைச்சு தப்பு பண்ணிட்டேன். மன்னிக்கணும் ”என்று  அழுதார்.  மஹா பெரியவா  ”இன்னொரு நாள் வாயேன். உன் அன்பும் பக்தியும் உனக்கு வேண்டிய போட்டோவை கொடுக்கும்” என ஆசிர்வதித்தார்.


Sivan Krishnan

unread,
Oct 24, 2025, 8:27:37 PMOct 24
to amrith...@googlegroups.com

அங்க தானம்  -    நங்கநல்லூர்  J K SIVAN 

உலகத்தில் எத்தனையோ  கோடி கோடி  ஜனங்கள் வசிக்கிறார்கள். நமது தேசத்திலேயே சுமார்  15 கோடி மக்கள் வாழ்கிறார்கள். சில லக்ஷம் மக்கள் மரணமடைகிறார்கள் .  இறந்தவர்கள் அத்தனை பேருமா உடலின் பாகங்களை தானம் செய்கிறார்கள். ஏதோ ஒரு கணக்கின் படி  ஒவ்வொரு வருஷமும்  2 லக்ஷம் பேர்  ஏதாவது உடலின் உறுப்புகளை,பாகத்தை தானம் பெற காத்திருக்கிறார்கள். ஆனால் கிடைப்பதோ  3000 பேருக்கு தான் ஏதோ சில  உடல் உறுப்புகள், அவயவங்கள் தானமாக கிடைக்கிறது.  அவர்கள்  அதிர்ஷ்டம் செய்தவர்கள்.

சில நல்ல இதயங்கள், சிறுநீரகங்கள், போன்ற நல்ல  உபயோகப்படக்கூடிய உடல் பாகங்கள், உறுப்புகள்,   இறந்து போகுமுன் தானமாக அளிக்க படாததால் , எவருக்கும் உபயோகமில்லாமல் எரிக்கவோ புதைக்கவோ படுகிறது.  சொற்பமாகவே  சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சையில் ஒருவர் உடலிலிருந்து இன்னொருவர் உடலுக்கு மாற்றப்படுகிறது. கல்லீரல்  மாற்று அறுவை  அவ்வளவாக காணோம். 

 மக்களிடம்  இந்த இழிவு  நிலைமை செய்தி போய் சேரவில்லையோ  என்று தான் தோன்றுகிறது.  அரசாங்கத்தில் இருப்பவர்கள் கவனம் வேறு எதிலோ தான் போய்க் கொண்டிருக்குமோ?  மாற்று  அறுவை சிகிச்சைக்கு  காத்திருந்து எத்தனையோ இளம் உயிர்கள்   தொடர்ந்து வாழ வழியின்று  மாள்கிறது. 

பகவான் அருளால்  எழுபது வயது வரை , சர்க்கரை, ரத்த அழுத்தம்,  எய்ட்ஸ் போன்ற  தொற்று  நோய்கள் இல்லாதவர்கள் தாராளமாக தங்கள் உடல் உறுப்புகளை தானம் தர முன் வரலாம்.    நாம் இருக்கும் வரை நமக்கு உபயோகப்படும் நமது அங்கம் நமக்கு அப்புறமும்  இன்னொரு ஜீவனுக்கு வாழ்வளிக்கிறது என்பது எவ்வளவு பெருமை.  ஒரு விசேஷ செய்தி.  இன்றுவரை, உடல் உறுப்பு தானம்  தர ம் தாயாராக இருப்பவர்களில்  ஆண்களை விட பெண்கள்  மட்டுமே அதிகம்  முன் வருகிறார்கள்.  80 விழுக்காடு பெண்கள் தானமளிப்பவர்கள்.  80 விழுக்காடு  தானம் பெறுபவர்கள் ஆண்கள். போதுமா?  ஒவ்வொரு பெண் குழந்தையும்  
உலக வாழ்வு  முடியும்போது 
ஒரு பெரும் தியாகியாகவே முடிகிறாள்.  மாதா பிதா குரு  தெய்வம்  என்ற லிஸ்டில் முதலில் நிற்பவள் தாய். உலகத்தையே தாயாக ரட்சிப்பவர்கள்  தேவியர். நாம் வாழும் நாடும் தாய் நாடு எனத்தான் பெயர் பெற்றது. நாம் பேசும் மொழியும் தாய் மொழி தானே!  பெண்களை சக்தி என்று சொல்வது எவ்வளவு பொருத்தம்!


Sivan Krishnan

unread,
Oct 25, 2025, 10:40:04 PMOct 25
to amrith...@googlegroups.com
சுப்புசாமியின் குமுறல்  -- நங்கநல்லூர்  J  K  SIVAN 

நான் தான்  சுப்புசாமி.  என்னைச்  சுற்றி ஒரு சின்ன கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அது அப்போ. பத்து பன்னிரண்டு வருஷம் முன்பு. நான் பெரிய  ஆபீசர். கையில் ஐவேஜி இருந்தது. அதிகாரம் இருந்தது. கார் ட்ரைவர் எல்லாம் இருந்த காலம். அடிக்கடி உறவுகள் வந்து பல நாள் தங்கி சாப்பிட்டு விட்டு போகும்போது கையில் கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டு ஊருக்கு போகும். இப்போ. 

நான் இப்போ  பிரயோஜனம் இல்லாத  தண்டம். கிழவன். 72.   ஒரு  சீனியர்  ஹோம் வாசி.  (அனாதை விடுதிக்கு  அழகான ஆங்கில பெயர்). அம்புஜம் போய் அவ கையாலே சுசி ருசியா சாப்பிட்டு ஆறு வருஷம் ஆச்சு. எதிரே சுவற்றில் படம்.  மல்லிகைப்பூ  ஒரு முழம் பூ அது மேலே.   பிள்ளை கோபாலன் அமெரிக்காவில் இருக்கிறான்.சொத்து சுதந்திரம் எல்லாம் எழுதிக் கொடுத்த பின் ரெண்டு பெண்களும், லல்லி,  செல்லியைத் தான் சொல்கிறேன்.  திரும்பிக்  கூட பார்ப்பதில்லை. பிள்ளையும் அப்படித்தான். 

சமூகத்தில் நம் வலி, நம் துக்கம், ஏமாற்றம், கண்ணீர் எது பற்றியும் யாருக்கும் எந்த கவலையும் இல்லை ஸார்.  நம்முடைய சிறு தப்புகள்,தவறுகள் கூட மற்றவர்களுக்கு  இமயமலையாகத்தான்  கண்ணில் படும்.  

கவலையே படலே.   நம்மை  எவரும் வந்து காப்பாற்றப்போவதில்லை,  நமக்கு  நாமே தான் ராஜா.  பொறுப்பு. எழுந்திரு. உன் மேல் நம்பிக்கையோடு ஒவ்வொன்றையும் செய்.  அவமதிப்போடு வரும் எந்த  உதவியும் வேண்டாம்.   யார் சொல்லையும் நம்பாதே கொடுத்த வாக்கை எந்த நேரமும் ஏதோ காரணம் சொல்லி  மறுப்பார்கள்.   முன்னால் ஒன்று பின்னால் ரெண்டு  பேசுபவர்கள் தான்  ஜாஸ்தி. நான் சொல்லலை. அனுபவம் பேசுகிறது.  பேசும்போது உன் வார்த்தைகளில் கவனம் வை.   உன்னுடைய கவுரவம், மரியாதை எல்லாமே  நீ பேசும் விதத்தில், மற்றவர்களை நடத்தும் விதத்தில்  தான் இருக்கிறது.  புரிந்து கொண்டு விட்டேன். 

ஒவ்வொரு நாளும் படுக்கையை விட்டு எழுந்தால் அதற்கே பகவானிடம் நூறு நமஸ்காரம் பண்ணவேண்டும். பணிவோடு இரு, நீ எந்த விதத்திலும் மற்றவர்களை விட உயர்ந்தவன் இல்லை. எதுவும் நமதல்ல  எதையும் எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை.  எவ்வளவு தான்  கருணையோடு, தாராளத்தோடு நடந்து கொண்டாலும், நன்றியில்லாதவர்களை எப்போதும் திருப்திப்படுத்த முடியாது.  இதுவும் என் அனுபவம் தான் ஸார் .
மன அமைதி ஒன்று தான் உற்ற நண்பன்.   முன்பு நேரம் இல்லை, அவனை நினைக்கவில்லை .அவன் என்னை நன்றாக வாழவிட்டான். எனக்கு இப்போ நிறைய நேரம் இருக்கிறது. அவனை விட வேறு நினைவே இல்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். 

Sivan Krishnan

unread,
Oct 25, 2025, 10:40:06 PMOct 25
to amrith...@googlegroups.com
ஒரு  ப்ரம்ம ஞானியின் பயணம்.  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

1879ம் வருஷம், டிசம்பர் மாதம் 30ம் தேதி பிறந்த ஆண்  குழந்தைக்கு வெங்கட்ராமன் என்று பெயர் வைத்தவர்கள் தந்தை  வக்கீல் சுந்தரம் அய்யரும். தாயார் அழகம்மாளும். அவன் பிறந்த  ஊர் திருச்சுழி, மதுரையிலிருந்து  30 மைல் . விருதுநகரிலிருந்து 18 மைல் . அண்ணா  ரெண்டு வயது மூத்தவன். ஒரு தம்பி  தங்கை.  சுகமாக வாழ்ந்த இந்த நடுத்தர குடும்பத்துக்கு பெரிய கஷ்டம் அப்பா இறந்தது. வெங்கட்ராமனுக்கு 12 வயது.   குடும்பம் சிதறியது. வெங்கட்ராமனும் அவன் அண்ணாவும்  மதுரையில்  சித்தப்பா  சுப்பையர் வீட்டுக்கு சென்றார்கள்.    வேங்கடராமன் முதலில் ஸ்காட் நடுத்தர பள்ளியில் சேர்ந்து பின்னர்  அமெரிக்கன் மிஷன் உயர் நிலைப்பள்ளியில்  9வது வகுப்பில்  சேர்ந்தான்.  ஒருதரம் காதால் கேட்டாலே மனத்தில் பாடங்கள் பதிந்துவிடும். இயற்கையிலே  புத்திசாலி.  நல்ல பலசாலி என்பதால் படிப்பை விட  விளையாட்டுகளில் அதிக விருப்பம்.  தூக்கத்தில் கும்பகர்ணன்.  ஆழ்ந்த தூக்கம் அதிகம்.

அவன்  விழித்திருந்தால் நெருங்காத  நண்பர்கள்  தூங்கிக்கொண்டிருக்கும்போது அவனைத் தூக்கிக்கொண்டு போய் அடித்து, முகத்தில் கரி பூசி பின்னர்  கொண்டு வந்து வீட்டில் படுக்கையில் போடுவது வரை ஒன்றுமே வெங்கட்ராமனுக்கு தெரியாது.  அவர்களாக மறுநாள் நடந்ததை சொன்ன பிறகு தான் புரியும்.

16ம் வயதில், ஒருநாள்   ஒரு  உறவினர் வீட்டுக்கு வந்து, தான் தரிசித்த  அருணாசலத்தை (திருவண்ணாமலை) பற்றி விவரித்தார்.  அருணாசலம் என்ற  பெயரைக் கேட்டவுடனேயே  வெங்கட்ராமனுக்கு  மனதில் இனம் புரியாத  ஒரு ஆனந்தம்.
 
''மாமா,  நீங்க சொல்ற அருணாசலம் எங்கே இருக்கு?'  என ஆச்சர்யத்தோடு கேட்ட வெங்கட்ராமன் மனதில் ஒரு ஈர்ப்பு, அரிப்பு,  இருந்தது.  ஒரு வாரம் சென்றபின், ஒருநாள் வீட்டில்  பெரியபுராணம் பழைய புத்தகம் கண்ணில் பட்டது. அருபத்து மூன்று நாயன்மார்கள் சரித்திரம் ரொம்ப  பிடித்தது. ஆஹா  என்ன பரிபூர்ண சிவபக்தி. எவ்வளவு அதிசயங்கள்! இதெல்லாம் மனதை சந்தோஷப்படுத்தியது. அவன் மனதில் ஆன்மீக எண்ணங்கள், தாகம்  இதனால்  விஸ்வரூபம் எடுத்தது.
பதினாறரை வயசு ஆகும்போது ஒரு நாள்  அந்த அதிசயம் நிகழ்ந்தது.

''சித்தப்பா வீட்டில் மாடியில் தனியாக உட்கார்ந்திருந்தேன். திடீரென்று ஒரு மரண பயம் என்னை ஆட்கொண்டது.  எனக்கு உடம்புக்கு ஒன்றுமே இல்லை. ஆரோக்யமாகத்தான் இருந்தேன். நான் இறக்கப்போகிறேன் என்று தோன்றியது .  அடேடே மரணம் எனக்கு சம்பவிக்கப்போகிறதா? என்ன அர்த்தம்? இந்த உடம்பு தான் சாகப்போகிறது. நான் இல்லை என்ற ஒரு எண்ணம் பலம் பெற்றது. மரண நாடகம் ஆரம்பமாயிற்று. மூச்சை அடக்கினேன். உதடுகளை இருக்க மூடிக்கொண்டேன். எனக்குள்  ''இதோ என் உடம்பு சாகப்போகிறது..  ஆம். இதோ இந்த உடம்பு செத்துவிட்டது. இதை என்ன செய்வார்கள்? சுடுகாட்டுக்கு தூக்கி போவார்கள்.  எரிப்பார்கள் சாம்பலாகும்.  உடம்பு சாம்பலாகிவிட்டதே, அதனால் நான் செத்து விட்டேனா?நான் அந்த உடம்பா? அந்த உடம்பிலிருந்து  பிரிந்த  ஆவி சரீரமா,  உயிரா, அப்படியென்றால் ஆத்மாவுக்கு சாவு கிடையாதா?.'' என்று மனம் சிந்திக்க தொடங்கியது.

அதற்கப்புறமே  வெங்கட்ராமன் முற்றிலும் மாறிவிட்டான்.  பிரஞையோடு  தன்னை மறந்த நிலையில், (சமாதிநிலையில் )
 ஆழ்ந்து விடுவான். இந்த உடம்பு வேறே,   நான் என்கிற என்னுள் இருக்கும் ஆத்மா வேறே,  என்று புரிய ஆரம்பித்தது.  இந்த சம்பவத்துக்குப் பிறகு படிப்பிலோ, நண்பர்களிடமோ,, விளையாட்டிலோ எதிலும் புத்தி போகவில்லை. ஆத்ம சிந்தனை மட்டுமே எப்போதும் அவனை ஆட்கொண்டது.  முன்பெல்லாம் எதிலே நாட்டம், விருப்பம் உண்டோ, அதெல்லாம் இப்போது  காணோம்.  உணவிலும், விருப்பு வெறுப்பு அகன்றது. தட்டில் விழுந்ததை ருசியோ நாட்டமோ இன்றி விழுங்கினான்.

சித்தப்பாவும் அண்ணாவும், கூர்ந்து கவனித்தார்கள்.  இது நாடகம் என்று நினைத்தார்கள்.
1896 ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி,  பத்தாவது வகுப்பு   பொது பரிக்ஷைக்கு  படித்துக் கொண்டிருந்தான். ஆங்கில இலக்கண வாத்யார், இதை  'மூன்று தடவை எழுதிக்கொண்டு வா''  என்று  வேலை கொடுத்திருந்தார்.  ரெண்டு தடவை எழுதியவன் மூன்றாவது தடவை எழுத முயற்சிக்கும்போது  மனத்தில் ஒரு  குறுக்கு சுவர் தடை செய்தது.. ''இதனால் என்ன பயன்?  என ஒரு பலமான எண்ணம் உருவாகி  நோட்டை வீசி எறிந்தான். சப்பணம்  போட்டு உட்கார்ந்துகொண்டு கண்மூடி த்யானத்தில் ஆழ்ந்தான்.
அண்ணா இதை கவனித்துக் கொண்டிருந்தவருக்கு ரொம்ப கோபம்.
 ''என்னடா உன் மனதில் சாமியார், துறவி, பெரிய யோகி  என்ற எண்ணமா? என்று கத்தினார். யோகிக்கு  வீட்டிலே இருந்து கொண்டு சாப்பிட்டுக்கொண்டு  என்ன  வேலை ? படிப்பதாக பாவ்லா காட்டுகிறாய்? நீ  என்ன யோகியா?'

“ஆம்  அண்ணா சொல்வது சரியே. இங்கே எனக்கு இனி என்ன வேலை? மனதில் ஒரு  குரல் ஒலித்தது.  பளிச்சென்று சில மாதங்களுக்கு முன் கேட்ட அருணாசலம் பெயர்  ஞாபகம்  மனதில் படர்ந்தது. தொடர்ந்தது. கனவில் ஆக்கிரமித்த அருணாசலம்  அழைத்தது.

வீட்டை விட்டு அவ்வளவு  சுலபமாக வெளியேற முடியாதே. ஒரு சாக்கு போக்கு வேண்டும்.
''அண்ணா எனக்கு இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கு  நான் ஸ்கூலுக்கு  இப்போ போகணும். கடவுளாக பார்த்து பணத்துக்கும் ஒரு வசதி பண்ணி கொடுத்தார்.  

''சரி சரி, அப்படின்னா,  நீ ஸ்கூல் போகிற வழியில்  ஐந்து ரூபாயை சுவாமி ரூமில் இருக்கும் டப்பாவில் இருந்து எடுத்துக் கொண்டு என் காலேஜ்க்கு போய் எனக்கு பீஸ் கட்டிவிடு ''

வேங்கடராமன்  பூஜை அறையில் இருந்த டப்பாவில் இருந்து மூன்று ரூபாய் தான் எடுத்துக் கொண்டான்.  
அருணாசலம்  போக இது போதும் அதில் ஒரு துண்டு காகிதம் தமிழில் வேகமாக எழுதி  வைத்தான். 

'' அப்பா கட்டளையின் படி அவரைத்  தேடிப் போகிறேன். 'இது''ஒரு புனித பயணமாக  செல்கிறது.  யாரும் வருந்த வேண்டாம்.  தேட  பணம் செலவு செய்யவேண்டாம்.  காலேஜ் பீஸ் கட்டவில்லை.  மீதி ரெண்டு ரூபாய் டப்பாவிலேயே இருக்கிறது. இப்படிக்கு  --- ''.
 வெங்கட்ராமன் இல்லை வெறும் கோடு. இதுவரை வெங்கட்ராமனாக இருந்த பகவான் ஸ்ரீ ரமண  மகரிஷி பற்றி   மேற்கொண்டு அடுத்த பதிவில்.  

Sivan Krishnan

unread,
Oct 25, 2025, 10:40:08 PMOct 25
to amrith...@googlegroups.com

ஹர்ஷ சாம்ராஜ்யம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

எவ்வளவு  பெரிய  ராஜாவாக இருந்தாலும் விதியின் விளையாட்டிலிருந்து தப்ப முடியாது. மஹாராஜா இறந்து,  ராணி தீக்குளித்து, அண்ணன்  கொலை செய்யப்பட்டு, ஆசைத்  தங்கையின் கணவன் போரில் மாய்ந்து, தங்கை சிறைப்பட்டு உயிர் தப்பி  காட்டில் தனித்து வாடி, தற்கொலை செய்யத் துணியும் நேரத்த்ல் அவளைத்  தேடி கண்டுபிடித்து  மீட்டு, அவளோடு   ஹர்ஷன் தானேஸ்வரத்துக்கு திரும்பினான்.

நகரம் கோலாகலமாக அவர்களை வரவேற்றது. எங்கும் வாத்ய கோஷம், வாழ்த்து சப்தம், மலர்  மழை. ராஜ்ய ஸ்ரீ அரண்மனையில் மீண்டும் அமைதியாக வாழ்ந்தாள். ஆனால் ஹர்ஷன் இதயத்தில் புயல் ஓயவில்லை. வஞ்சகம், அதர்மம், அநீதிக்கு பழி தீர்க்க வேண்டாமா? காயம்  ஆறவில்லையே.  கௌட தேசம்,  மால்வா  இரண்டின் மீதும் படையெடுத்து துரோகிகளை  அழிக்கவேண்டும்.

சமயம் கை கூடியது.  வடகிழக்கில் காமரூப ராஜ்ய அரசன் பாஸ்கரவர்மன்  நட்பு கோரி பரிசுகள் அனுப்பினான்.  
“ஹர்ஷா, உனக்கு நேர்ந்த துன்பங்கள் அறிந்தேன். தைர்யமாக இரு. துரோகிகள், தீயவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். என் துணை, படை  உனக்கு  எப்போதும் உதவும். என் இதயத்தில் உன் மேல் அன்பு என்றும் உண்டு.
ஹர்ஷன் மகிழ்ந்தான்.   பாஸ்கர வர்மன் நட்பை ஏற்றான். பரிசுகள் தூதுவன் மூலம் அனுப்பினான்.

இரவு தூக்கமில்லை. உப்பரிகையில் தனியே  ஆகாயத்தை பார்த்தவாறு நின்றான். மனதில் ஆயிரம் எண்ணங்கள் தீயாக  எரித்தது. ஹர்ஷன் எதிரே தானேஸ்வரம் அவன் மேல் நம்பிக்கையோடு தாயின் அரவணைப்பில் தூங்கும் சேய் போல் உறங்கிக்  கொண்டிருந்தது.

''பகவானே என்னை ஏன் இப்படி சோதனை செய்கிறாய் ? நீதி நேர்மையைக்  காக்க  எனக்கு சக்தி தா. எனக்காக நான் பழி வாங்க விரும்பவில்லை, தர்மத்துக்காக  போராடுகிறேன். அநீதிக்கு தண்டனை நீதி தரட்டும். எல்லோரையும் இழந்து அனாதையாக நிற்கிறேன். நீயே துணை.''

நிலவின் ஒளியில்  இளைஞன் ஹர்ஷன்  முகத்தில் ஒரு வைராக்ய  தீர்மானம் திடமாக தெரிந்தது.  அவன் ஆட்சியில் தீயவர்கள் நடுங்கினார்கள். திருடர்கள் கொள்ளைக்காரர்கள் உயிர் எந்த நேரமும்  போய்விடும் என்ற பயத்தில்  இருந்தார்கள். ஏழைகள் தம் துயர் தீரும் என்று நம்பிக்கை பெற்றார்கள்.  கற்றவர்கள், பண்டிதர்கள், தமக்கு மரியாதை அந்தஸ்து காத்திருக்கிறது என உணர்ந்தார்கள்.  அரசவையில் ரஹஸ்யமாக  போர் திட்டம் விவாதிக்கப்பட்டது.  இரும்பு கொல்லர்கள் நாடெங்கும் ஆயுதங்கள் தயார் செய்வதில் இரவும் பகலும் ஈடுபட்டார்கள். யானைகளை போருக்கு  மாவுத்தர்கள் தயார் பண்ணினார்கள். தங்க ஹம்சம் தான் ஹர்ஷனின் கொடி . நிறைய  தயாராகி  எங்கும் பறந்தது. 
போருக்கு  புறப்பட  முகூர்த்த நாள் தீர்மானித்தாயிற்று. ஹர்ஷன் பட்டத்து யானை தீப்தனாகா வின் மேல்  ஆரோஹணி த்தான். அதன் தந்தங்கள் இரண்டும் தங்கத்தால் கவசம் பெற்றவை. இந்திரன் ஐராவதத்தின் மேல் பவனி வருவது போல் இருந்தது என்கிறார் பாண பட்டர் .
எண்ணற்ற  யானைகள், சக்தி வாய்ந்த இளம் குதிரைப்படை. அம்பு எய்யும் வீரர்கள் நிறைந்த தேர்கள்.  காலாட்படை வீரர்கள். கண்ணுக்கெட்டியவரை ஹர்ஷனின் மா பெரும் சேனை புறப்பட்டது.  கிழக்கே கவுட ராஜ்யம் நோக்கி நகர்ந்தது.  வழியில் எதிர்த்த ராஜ்யங்கள் முறியடிக்கப்பட்டு ஹர்ஷனின்  ஆதிக்கத்தில் வந்தன. சில ராஜ்ஜியங்கள் சரணடைந்தன. ஹர்ஷனின் வெற்றி வளர்ந்தது.  மால்வா சரணடைந்தது.  லதர்கள் தேசம்,  கூர்ஜரம்  ஆகியவை போரில் தோற்றன.  ஹர்ஷனின் வீரர்கள் இரக்க சிந்தனையாளர்கள்.  நிராயுத பாணிகளை  கொல்வதில்லை. காயமடைந்தோருக்கு மருத்துவ உதவி தந்தனர்.  எளியோரைக் காப்பாற்றினர். 

காமரூப அரசன் பாஸ்கரவர்மனுடன் நட்பு வளர்ந்தது. கங்கைக்கரையில் இரு ராஜாக்களும் சந்தித்தனர். 
சஹோதரர்கள்  போல்  ஹர்ஷனும்  பாஸ்கர வர்மனும்  மனமுவந்து  கட்டித் தழுவினார்கள். தர்மத்தை காப்போம் என  சபதமிட்டார்கள். 
இரு நாட்டு சேனைகளும் இணைந்தது. பலம் வாய்ந்த படை கௌட தேசத்தை நோக்கி நகர்ந்தது 
படைக்கு ஹர்ஷன் உத்தரவிட்டான்;
''இன்று நாம் போரிடுவது  மண், பொன்  சேகரிக்க அல்ல. சத்தியத்தை நிலை நாட்ட.   நமக்காக உயிர் துறந்த நமது  சகோதர சகோதரிகளை எண்ணிப்பாருங்கள். அவர்களுக்காக நாம் போருக்கு செல்கிறோம். ''
விஜய சங்கம் எனும்  ஹர்ஷனின் சங்கு பூம் பூம் என்று காது செவிடுபட ஒலித்து நாலா பக்கமும் எதிரொலித்தது. வேகமாக செல்லும் படை கிளப்பிய புழுதி வான் வரை திரையிட்டு கண்ணை மறைந்தது. 


Sivan Krishnan

unread,
Oct 26, 2025, 8:13:13 PMOct 26
to amrith...@googlegroups.com
அரசு வேம்பு கல்யாணம்.   -   நங்கநல்லூர்  J K  SIVAN 

இந்துக்களாகிய  நமக்கு  ஒரு தொன்று தொட்ட  புராதன  நம்பிக்கை, பழக்கம் என்ன ஞாபகம் இருக்கிறதா?   அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் கல்யாணம் பண்ணுவது. இதன் மூலம் 
 குடும்பத்தில் ஏதேனும்  சாபம்  இருந்தால் அது தீரும். கிரஹ  தோஷங்கள்  அகலும். அரசமரமும்  மரமும் தெய்வாம்சம்  பொருந்தியவை. நிறைய கோவில்களில்  இந்த  ரெண்டு மரங்களும் சேர்ந்து இணைந்து ஒரே மரமாக காணப்படும்.  சந்தன, குங்கும, மஞ்சள் மற்றும் வஸ்திரம் அணிவித்து பூஜைகள் செய்து வழிபடப்படுபவை.  சில  கிராமங்களில் கல்யாண  தடபுடலாக  நடைபெறும். எல்லோருக்கும் சாப்பாடு.

சில பெண்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் காரணமாக,   திருமணத் தடைகள் அல்லது பாதகமான விளைவுகள்  ஏற்பட நேரிடலாம். அவற்றை நீக்க, ஒரு அரச மரத்துக்கும்  வேப்ப மரத்துக்கும்  கல்யாணம் நடக்கும்.  இது "சாபம்" அல்லது "தோஷம்" நீங்க.  இந்த வழிபாட்டின் மூலம் ஒரு சரியான வாழ்க்கைத் துணையை அடைய முடியும் என்று நம்பிக்கை. இந்த ரெண்டு மரங்களின்  இணைப்பு, உறவு புனிதமாக கருதப்படுகிறது. ஒவ்வொன்றும் ஒரு தெய்வமாக கருதப்படுகிறது.  சில கிராமங்களில், இது ஒரு பெரிய விழா.  வேத  மந்திரங்கள் முழங்க, சீர் வரிசைகளுடன், மேள தாளங்களுடன் கல்யாணம் நிகழும். 
அரச மரம் பிரம்மா, விஷ்ணு மற்றும் மஹேஸ்வரன்  எனும் மும்மூர்த்தி வடிவம். வேப்ப மரம் மூலிகை, மருத்துவ சக்தி வாய்ந்தது. எத்தனையோ நோய்களைத் தடுக்கும் குணம் கொண்டது. 

Sivan Krishnan

unread,
Oct 27, 2025, 7:56:06 PMOct 27
to amrith...@googlegroups.com
சிவா தாத்தா கதைகள்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 
                         
கல்யாணத்தில் கலாட்டா  

குழந்தைகளே, உங்களுக்கு தெரியுமா ஒரு அழகான கதை சினிமா?  அதன் பெயர்  மாயா பஜார் . 1957ல் வந்த கருப்பு வெளுப்பு படம். தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று பழமொழிகளில் சக்கை போடு போட்ட படம்.  ஸ்ரீ நாகி  ரெட்டி, சக்ரபாணி கூட்டு சேர்ந்து  விஜயா ப்ரொடக்ஷன் தயாரிப்பில், K. V. ரெட்டி, டைரக்ஷனில் உருவான படம்.  சசிரேகா பரிணயம்  என்று  சமஸ்க்ரிதத்தில்  மஹாபாரதத்தின் ஒரு அங்கம். 
 
மாயா   பஜார்  கிட்டத்தட்ட  70  முந்தி தமிழ்நாட்டையே ஒரு கலக்கு  கலக்கிக் கொண்டிருந்தது .  விஜயா   வாகினி     நாகி ரெட்டியின்  சிறந்த  பரிசு அது. இதில் அற்புதமான பாத்திரங்கள் கிருஷ்ணனும்  கடோதகஜனும் தான்.  கிருஷ்ணனாக  N T  ராமராவ் கடோத்கஜனாக  S V  ரங்காராவ்  போட்டி போட்டு நடித்த படம்.
கதை இது தான்.
 துரியோதனன்  மகன் லக்ஷ்மண குமரன். அவனுக்கு    கிருஷ்ணனின்  சகோதரன் பலராமனின் மகள்  சசிரேகாவை  கல்யாணம்  செய்து  கொள்ள கொள்ளை  ஆசை  கிருஷ்ணனுக்கோ  அவளை விரும்பும்,  அவள் விரும்பும், அர்ஜுனன் மகன் அபிமன்யுவுக்கு தான்  அவள்  சொந்தமாக  வேண்டும் ஒரு  எண்ணம்.  இந்த கல்யாணம்  லக்ஷ்மண குமரனுக்கும்  சசிரேகாவுக்கும் தான்  என்று ஒருவாறு  முடிவாகிவிட்டது. வனவாசத்தின்  போது  பாண்டவர்கள்  காட்டில் அலைந்து கொண்டிருந்த சமயம்  சகுனி  மற்றவர்களோடு சேர்ந்து  எப்படியோ பலராமன்  மனதை தங்கள்  பக்கம்  திருப்பி  அவனது மகள்  சசி ரேகாவை  லக்ஷ்மண குமரனுக்கு மணமுடிக்க சம்மதிக்க வைத்தனர். ஏற்கனவே துரியோதனன்  பலராமனின் அபிமான சிஷ்யன். கதாயுதத்தில் துரியோதனன்  பலராமனிடம் பயிற்சி  பெற்றவன்.  இந்த திருமணம் மூலம் பலராமனின் உதவி கௌரவர்களுக்கு கிடைக்குமே!!   கிருஷ்ணன்  பாண்டவர்களிடம் நேசமாக  இருப்பதால் பலராமனை கிருஷ்ணனிட மிருந்து  பிரித்து கௌரவர்கள் பக்கம் இழுக்கவே  இந்த  திட்டம் என்று கிருஷ்ணன்  கணித்து அவர்கள்  திட்டத்தை முறியடிக்க  காயை தீர்மானித்தான். 

"சுபத்ரா! நீ அபிமன்யுவோடு  இடும்பவனம் செல்கிறாயா? இடும்பி வெகுநாட்களாக  உன்னை அழைத்து கொண்டிருக் கிறாளே? இடும்பியின் மகன்   கடோத்கஜன்  தான்  இப்போது அந்த காட்டரசன்.  அபிமன்யுவுக்கு சகோதரன். உற்ற உறவினன் ரொம்ப நல்லவனும் கூட பிற்காலத்தில் துரியோதனாதிகளோடு ஒருவேளை போர் நேரிட்டால் அபிமன்யுவுக்கு  ஒத்துழைக்க கூடியவனாச்சே!  போய் சந்திக்கலாமே.  நான்  சொன்னேன் என்று சொல் அவன் உங்களுக்கு உதவ சரியானவன்." என்று  நாடகத்தை துவங்கினார்  கிருஷ்ணன்.

இடும்பவனத்தில் கெடுபிடி ஜாஸ்தி. காவல் அதிகம்.   யாரோ அந்நியன் தேரில் வந்து கொண்டிருக்கிறான் என்று அறிந்து கடோத்கஜனின்  வீரர்கள் எதிர்க்க அவர்களை அபிமன்யு  கொல்கிறான்.  பிறகு  கடோத்கஜனே  நேரில் தோன்றி போர்  புரிகிறான். வெற்றி  தோல்வியின்றி வெகுநேரம்  நடக்கும் அந்த  போரில் அபிமன்யுவின்  வீரம் அவனை  நண்பனாக் குகிறது. அவர்களை  யார்  என்று அறிந்துகொண்டு  மிக்க  மகிழ்ச்சியுடன் தனது  மாளிகைக்கு அழைத்து செல்கிறான் சுபத்ரையிடமிருந்து அபிமன்யு-சசிரேகா காதலை அறிந்து எப்படியாவது  தன்  சகோதரனின்  விருப்பம்  பூர்த்தியாக தான்  உதவ  தீர்மானித்து கிருஷ்ணனின்ன்  எண்ணமும் அதுவே என கடோத்கஜன்  அறிகிறான்.

  கிருஷ்ணனை வணங்கி  ஆசியுடன் அடுத்து  செய்ய வேண்டியவைகளையும் அறிந்து கொள்கிறான்.  திருமணத்துக்கு  முதல்  நாள் சசிரேகா   தூங்கும்போது அவளை கட்டிலோடு தூக்கிக்கொண்டு இடும்ப வனம்  வந்துவிடுகிறான்.  மாயா ஜாலங்கள்  பண்ணுவதில் கடோத்கஜனுக்கு ஈடு இணை இல்லையே.  கிருஷ்ணன்  திட்டப்படியே கடோதகஜனே 
 சசி ரேகாவாக உருவெடுத்து அவள் வீட்டில்  இருந்து கொண்டு திருமணத்தில் ஒரே  களேபரம் பண்ணுகிறான். அவனது எண்ணற்ற  மாயாஜாலங்களில் கல்யாண மாளிகை  திண்டாடுகிறது. லக்ஷ்மண குமாரன்  அவஸ்தைப்   படுகிறான். கல்யாணமும் வேண்டாம்  சசிரேகாவும் வேண்டாம் என்று ஓடுகிறான். எதற்கு அவன்  இப்படி  மாறிவிட்டான் என்று புரியாமல் விழிக்கும்போது நிச்சயித்த முகூர்த்த நேரத்தில் இடும்ப  வனத்தில்  அபிமன்யு சசிரேகா திருமணம்
வெகு விமரிசையாக நடைபெறுகிறது.  கிருஷ்ணன மெதுவாக பலராமனிடம் விஷயத்தை உடைக்க பலராமன்  கடோத்கஜனின் புத்திகூர்மை, மாயாஜாலங்களை  பாராட்டி அபிமன்யு சசிரேகா  மீண்டும் திரும்புகிறார்கள். கிருஷ்ணன்  பலராமன் ஆசியுடன் அவர்கள்  மணவாழ்க்கை  தொடர்கிறது. அந்த காலத்தில்  NTR ,  SVR   நடிப்புக்காகவும்  கண்டசாலா  பாட்டுக்காகவும்,  மார்கஸ் பார்ட்லி காமிராவின் மாயா ஜாலங்களுக்காகவும்   கருப்பு வெளுப்பான படமாக  இருந்தாலும் எல்லோர் மனத்திலும்  இடம் பிடித்த படம் மாயா பஜார்.   !சுபம் சுபம் சுபம்      

 

 

Sivan Krishnan

unread,
Oct 27, 2025, 7:56:07 PMOct 27
to amrith...@googlegroups.com
நாமதேவர் விஜயம் -   நங்கநல்லூர்  J  K  SIVAN 

ஸ்ரீமத்  பக்த விஜயம் படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் பாண்டுரங்கன் எனும் விட்டலன்  அநேக பக்தர்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய  அற்புத சம்பவங்கள் ஆச்சர்யமாக இருக்கும்.  நான்  நிறைய  தமிழிலும் ஆங்கிலத்திலும் அந்த  நிகழ்வுகளை கதைகளாக சொல்லி இருக்கிறேன். புத்தகங்களும்  வெளியாகி பலர்  பிரதிகளை பெற்றிருக்கிறார்கள். தமிழில் ''தெவிட்டாத விட்டலா', ஆங்கிலத்தில் ''VITOBA THE NECTAR''. இன்னும் சில பிரதிகள் கைவசம் உள்ளது. வேண்டுவோர் அணுக; ஜே கே சிவன் 9840279080. இதுவே  வாட்சாப் நம்பரும்.

மஹா விஷ்ணுவுக்கு உத்தவ மஹரிஷையையும் சுகப்ரம்மத்தையும்   நீங்கள்  இருவரும் பூமியில்  நாமதேவராகவும் கபீர் தாசராகவும்  ஜனிப்பீர்கள் என் பக்தர்களாக பிறவி எடுப்பீர்கள் என அனுப்பினார்.  இருவரையும்  குழந்தைகளாக
 உரு 
வெடுக்க வைத்து  பெரிய சங்குகளில் மழையோடு பூமிக்கு அனுப்பினார்.  ஒரு சங்கு பீமரதி நதியில் இறங்கியது.  நதியோடு மிதந்து  விஷ்ணுவின் நாமத்தை உச்சரித்தவாறு மிதந்தார்கள்.  கபீர் இருந்த சங்கு  ''பம் பம்' என்று சப்தத்தோடும் பீமரதி
யில் விழுந்த நாமதேவர் சங்கு  'விட்டல் விட்டல்' என்றும்  ஒலித்தது.  உத்தவர் பாண்டுரங்க பக்தரானார்.  நாமதேவர் என்ன ஆனார்?
பண்டர்பூர் என்கிற ஊரில் தாமாஜி என்ற துணி தைக்கும் டெய்லர் இருந்தார். விஷ்ணு பக்தர். தினமும் சந்திரபாகா நதியில் ஸ்னானம் செய்துவிட்டு, பாண்டுரங்கனை தரிசிப்பவர். அப்புறம் தான் சாப்பாடு. அவர் மனைவி  கோனையும்  பாண்டு ரங்க பக்தை தான்.  பாவம் அவர்களுக்கு  குழந்தை பாக்யம் இல்லை.  

''சுவாமி,  பாண்டுரங்கனை நமக்கு புத்ர பாக்யம் அளிக்க  வேண்டிக்கொள்ளுங்கள் '' என்று ஒருநாள் சொன்னாள்  கோனை.
நாம் சற்று வயதானவர்களாகி  விட்டோம். இனி எப்படி புத்ரபாக்யம் நமக்கு கிட்டும். அந்த ஆசையை விடு'' என்றார் தாமாஜி.

''சுவாமி.  பாண்டுரங்கன் அருளில் எதுவும் நடக்கும்.  ராமனாக இருந்த காலத்தில் விஷ்ணுவின் அருளால்  கற்கள் கடலில் மிதந்தனவே''
''கோனை, உன் விருப்பத்தை பாண்டுரங்கனிடம் தெரிவிக்கிறேன். நானும் வேண்டிக்கொள்கிறேன்.''
 பண்டரிநாதன் முன் நின்ற தாமாஜி மனமுடைந்து கெஞ்சினார். 
''விட்டலா, என் மனைவி கோனையின் நீண்ட கால  குறையை நீ தான் தீர்க்கவேண்டும்'' 
அன்றிரவே கனவில் பாண்டுரங்கன் வந்தான். 

''தாமாஜி, உங்கள் இருவரின் விருப்பம் நிறைவேறும். ஒரு புத்ரன் உங்களுக்கு கிடைப்பான். நாளைக் காலையில்  சூர்ய உதயத்தின் போது  பீமரதி நதிக்கு  வழக்கம் போல் ஸ்னானம் பண்ண செல்வாயல்லவா? அங்கே  உங்கள் மகன் உங்களை நோக்கி மிதந்து வருவான். வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போ. அவன் என்பெயரை கொண்டவன்.'' 

குதித்து எழுந்த தாமாஜி தூங்கும் கோனையை எழுப்பி  இந்த சந்தோஷச் செய்தியைச்  சொன்னார்.   எப்போது பொழுது விடியும் என்று காத்திருந்து பீமா நதிக்கு ஓடினார்.  நதியில் இறங்கி ஸ்னாநம்  செய்து, பாண்டுரங்கனை தியானம் பண்ணிக்கொண்டே  கண் கொட்டாமல் எதிரே ஓடிவரும் நதியில் எங்காவது குழந்தை தெரிகிறதா என்று பார்த்தார். 
''ஆஹா  அது என்ன?   ஏதோ ஒரு பெரிய வெள்ளை சங்கு மிதந்து வருகிறதே. அதில் என்னமோ தங்கநிறத்தில்  சின்னதாக ஒரு  உருவம்தெரிகிறதே......  சங்கு கிட்டே வந்தது.  நதியில் அதை எதிர்நோக்கி சென்று  அதைப் பிடித்து நிறுத்தினார். சங்கில் அழகான ஒரு ஆண் குழந்தை தாமாஜியைப் பார்த்து  சிரித்தது. 

சந்தோஷம் நொடியில் மறைந்தது. '' அடேடே  இவ்வளவு சின்ன சிசுவை எப்படி  பராமரிப்பது? பார்த்து பார்த்து அதற்கு தக்க  நேரத்தில் ஆகாரம் கொடுப்பது? குழந்தையைத்  தனது மேல் அங்கவஸ்திரத்தை மடித்து அதில் மெத்து மெத்து என்று கையில் அணைத்து வைத்துக் கொண்டு வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாக சென்றார்.
 
''கோனை, கோனை''  சீக்கிரமாக ஓடிவா. உன்னைத் தேடி  யார் வந்திருக்கிறது என்று பார்'' 

கோனை இந்த உலகத்திலேயே இல்லை. விண்ணிலே பறந்து கொண்டிருந்தாள். தெய்வ அனுக்ரஹத்தால்  அவள் மார்பகத்தில் பால் சுரந்தது. ஒரு பச்சிளம் குழந்தையை இரவும் பகலும் கண் மூடாமல் அருகில் இருந்து வளர்க்கும் சக்தி புது தெம்பு எங்கிருந்தோ வந்தது.  பாண்டுரங்கன் அருளால் கிடைத்த குழந்தையை குளிப்பாட்டி, அலங்கரித்து பாலூட்டி, இருவரும் அதற்கு '' நாமா'' என்று பேர் சூட்டினார்கள். 
நாமா வளர்வதை நாமும்  ரசிப்போம்.



Sivan Krishnan

unread,
Oct 29, 2025, 8:27:53 PMOct 29
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம் -   நங்கநல்லூர்  J K  SIVAN 

உஷ்...  பேசாதீங்கோ.  பெரியவா மெதுவா பேசறா....கேளுங்கோ;

மஹா பெரியவா வார்த்தைகள்  அக்ஷர லக்ஷம் பெறும்.  மடத்தில்  தான்  இருக்கிறார். மைக் இல்லை. சுற்றிலும் இருப்பவர்கள் அமைதியாக காதைத் நீட்டிக்  கொண்டு கேட்டார்கள்.  மஹா பெரியவா பீடத்தில் உட்கார்ந்து கொண்டு தனது  மனதில்  இருப்பதை பிரவாகமாக   உபதேசிக்கிறார். 

''நான்  வழக்கமா சொல்றது தான் இப்போவும் சொல்றேன். எதுவும் புதுசு இல்ல. 
தங்களுடைய அகம், க்ரஹம், மட்டும்  அழுக்கு இல்லாமல் இருக்கணும்னு எல்லோரும் ஆசைப்பட்டால் போதாது.  துணி அழுக்கு இல்லாமலிருந்தாலும் போதாது. உடம்பு அழுக்கு இல்லாமலிருந்தால் மட்டும் போதாது.  அதே மாதிரி  நம்முடைய 
மனமும் எந்த அழுக்கும்  இல்லாமல் ஆகவேண்டும்.    இதற்கு சாக்ஷாத் பராசக்தியும், பரமேசுவர பத்தினியுமான அம்பாளுடைய சரணாரவிந்தத் தியானம்தான் வழி. 

அம்பாளின் சரணத்தைத் தியானித்துக் கொண்டே இருந்தால் அழுக்கெல்லாம் போய், குறை எல்லாம் தீர்ந்து பூரணமாக அப்படியே நிரம்பிப் போய்விடுவோம். 

அழுக்கும் குறையும் உள்ள ஜீவர்களாக நாம் உண்டாகியிருப்பது அவள் விளையாட்டுத்தான். எனவே இதிலிருந்து நம்மை மீட்டு நிர்மலமாக, பூரணமாகப் பண்ணுவதும் அவள் காரியம் தான்.   ஆடு மாடு மாதிரி சாகாமல், சாந்தியும் ஆனந்தமும் நிரம்பி நம் உயிர் உடம்பிலிருந்து பிரிந்து மறுபடியும் உடம்பு எடுக்காமல் இருப்பதற்காகத்தான் இத்தனை மதங்களும் ஏற்பட்டுள்ளன. 
 
அம்பாளின் தியானத்தைவிட, வேறு மதம் வேண்டியதே இல்லை; சாந்தியும், ஆனந்தமும் தந்து நம்மை பூரணத்துவம் அடையச் செய்வது அதுவே.   அம்பாளைத் தியானித்து தியானித்து நம்மில் யாராவது நிரம்பிப் போய்விட்டால் நம் மதம் தானே வளரும். மதத்துக்காகப் பிரச்சாரம், வாதம் எதுவுமே புரிய வேண்டாம். நான் ஏன் இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்?

 உபந்நியாசம் செய்கிற இந்த நேரத்தில் அம்பாளைத் தியானித்துக் கொண்டிருந்தால், அது இந்த உபந்நியாசத்தை விட மிகவும் ஆத்ம க்ஷேமமும் லோக க்ஷேமமும் ஆகும். இந்தப் பேச்சு வார்த்தைகளைவிட நிறைவுக்கு உதவுவது அதுவே. ஆனாலும் எனக்கு இந்த உண்மை இப்படிப் பேச உட்கார்ந்ததால் தெரிகிறது. ஆகவே, பேசப்பேச அதுவும் என் நினைவைச் சுத்தப்படுத்துகிறது என்று தெரிகிறது. 

நம்மில் ஒரு ஆத்மாவாவது பூரணமாக உயருவதற்காகத்தான் மத விஷயங்களைப் பேசுகிறேன்.இந்த மத விஷயங்களுக் கெல்லாம் முடிவு நம் குறைகளைக் களைந்து நிறைவு பெறுவதுதான். அவரவரும் அநுஷ்டானங்களைச் செய்து தன் நிறைவை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே நம் மதம். அதற்கான புத்தியும் சக்தியும் அம்பாளிடமே வேண்டிப் பெற வேண்டும்.அம்பாளைத் தியானிக்க முயன்று அதில் ஒரு முகமாக ஈடுபட முடியாதபோது நம் குறையெல்லாம் தெரிகிறது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். ‘இந்தக் குறைகளைப் போக்கம்மா’ என்று அவளிடம் பிரார்த்தித்துக் கொள்ள முடிகிறது. 

என்னிடம் எப்போதெல்லாம் தோஷம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அம்பாளிடம் முறையிட்டு அந்த தோஷம் இனியாவது இல்லாமலிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.என்னிடம் தோஷம் இருந்தால் நான் பிறருக்கு உபதேசிப்பது வேஷம்தான். உங்களை ஏமாற்றுவதுதான். 

எனக்கு அம்பாள் அநுக்கிரகம் பூரணமாக வந்து நான் நிறைந்து போய்விட்டால், அப்புறம் உபதேசம் என்ற வாய்ப்பேச்சே தேவையில்லை. பேசாமலே அநுக்கிரஹ சக்தியானது மற்றவர்களுக்கு ஞானத்தைத் தந்துவிடும். ஆக, இரண்டு நிலையிலும் உபந்நியாசம் கூடாதுதான். இப்படி எல்லாம் நான் உபதேசம் பண்ணுகிற நேரத்தை அவளுடைய தியானத்திலேயே செலவு செய்தால் இன்னும் எத்தனையோ மடங்கு ஆத்ம சாந்தி கிடைக்கும். உபந்நியாசம் செய்கிற பொழுதை அவள் தியானத்தில் செலவிட்டால், என் தோஷங்கள் எத்தனையோ நீங்கும். இதைக் கேட்கிற பொழுதை அவளுடைய தியானத்தில் செலவிட்டால் உங்கள் தோஷங்களும் எவ்வளவோ விலகும். ஆனாலும் இப்படியெல்லாம் நான் பேசிக் கொண்டிருப்பதற்
குக் காரணம், உங்களில் யாராவது தம்மைத்தாமே இவ்வாறெல்லாம் சோதித்துப் பார்த்துக்கொண்டு, அம்பாளைத் தியானித்து பூரணத்துவம் அடைய இந்தப் பேச்சு தூண்டாதா என்ற ஆசைதான். பிரச்சாரத்தால் மதமும் ஆத்மாநுபவமும் வளராது. பிரச்சாரமும் பிரசங்கமும் தற்கால சாந்திதான்.சாந்தியே இல்லாத லோக வாழ்க்கையில் ஏதோ தாற்காலிகமாக ஒரு சாந்தி உண்டானாலும் ஒரளவுக்கு விசேஷம்தான். நான் பேசினால் உங்களுக்குத் தற்கால சாந்தியாகத் திருப்தி உண்டாகிறது என்பதால் பேசுகிறேன். நான் பேசாவிட்டால் உங்களுக்கு துக்கமாகவும், ஏமாற்றமாகவும் இருக்குமே என்பதற்காகப் பேசுகிறேன்.ஆனால் இதைவிட அவசியம் தாற்காலிகமானதைச் சாசுவதமாகப்பண்ணிக் கொள்வதுதான். அதற்கு ஒரே வழி அம்பாளின் சரணாரவிந்தத் தியானமே. எனக்கு முக்கியம் அம்பாள். லோக க்ஷேமார்த்தம் அம்பாளுடைய சரணாரவிந்தத்தைத்தான் தியானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எல்லோரும் அம்பாளைத் தியானம் பண்ண வேண்டும்.

Sivan Krishnan

unread,
Oct 29, 2025, 8:27:54 PMOct 29
to amrith...@googlegroups.com
ஸூர்தாஸ்   -  நங்கநல்லூர் J K SIVAN

நடை பிணங்கள் நிறைந்த ஊர்..

பிறவியிலிருந்தே  புறக் கண்ணில்லாத ஸூர்தாஸினால் நம்மைப்  பார்க்க முடியாது என்பதால் நாம் தான் அவரைத் தேடிப் பார்த்து நாலு வார்த்தை அற்புதமாக அவர் கிருஷ்ணனைப்  பற்றி நினைவு கூர்வதைக்  கேட்கவேண்டும்.

हरी दर्शन की प्यासी अखियाँ  अखियाँ हरी दर्शन की प्यासी ॥
देखियो चाहत कमल नैन को, निसदिन रहेत उदासी, अखियाँ हरी दर्शन की प्यासी ॥

आये उधो फिरी गए आँगन,दारी गए गर फँसी,अखियाँ हरी दर्शन की प्यासी ॥
केसर तिलक मोतीयन की माला, ब्रिन्दावन को वासी,अखियाँ हरी दर्शन की प्यासी ॥
हरी दर्शन की प्यासी अखियाँ अखियाँ हरी दर्शन की प्यासी ॥
काहू के मन की कोवु न जाने, लोगन के मन हासी, अखियाँ हरी दर्शन की प्यासी ॥
सूरदास प्रभु तुम्हारे दरस बिन, लेहो करवट कासी, अखियाँ हरी दर्शन की प्यासी ॥

हरी दर्शन की प्यासी अखियाँ
अखियाँ हरी दर्शन की प्यासी ॥

Ankhiyan hari dashan ki pyasi
Hari darshan ki pyasi akhiyaan hari darshan ki pyasi
dekhyo chahe kamal nayan ko nis din rahat udaasi
akhiyaan hari darshan ki pyasi
kesar tilak motin ki maala vrindavana ke vaasi
neh lagaai tyag gayen trin sam daal gayen gal phansi
akhiyan hari darshan ki ……
kahoo ke mana ki ko jaanat logan ke man haasi
surdas prabhu tumhare daras bin leho karvat kashi ankhiyaan
hari darshan ki pyasi hari darshan ki……..

கோகுலம்   இருண்டு விட்டது. ஒளி போய்விட்டால் இருட்டு தானே. கோபியர்கள்நடைபிணமாகிவிட்டார்கள். யாரைப் பார்த்தாலும்  அவர்கள் முகத்தில் ஒரு சோகம் தென்படுகிறது. சிரிப்பே மறந்து போய்விட்டதே.  கண்கள் குழி விழுந்து அழுது அழுது  கண்ணீர் வற்றி  ஏக்கமாக  கிருஷ்ணனைத் தேடியவாறு  இருக்கிறது. கிருஷ்ணன் அத்தனைபேரின்  செல்லக்  குழந்தையா அல்லது எஜமானனா? எப்படிச்  சொன்னாலும் பொருத்தம் தானே. அந்த தாமரைக் கண்கள் எங்கே? நீல நிற நெற்றியிலே சிவந்து காணப்படும்திலகம்எங்கே? கரு நீலகழுத்திலே நிறைந்து காணப்படும் அந்த வெண்முத்து
மாலைகள் எங்கே? பிருந்தாவன நாயகன்  எங்கே?   நம்மை  எல்லாம்  காய்ந்த சருகாக்கிவிட்டு  நம் உயிரை எல்லாம் ஒன்று சேர்த்து மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டு சென்று விட்டானோ அந்த மாய கிருஷ்ணன்?  ஒவ்வொருவள்  மனத்திலும்  ஆழ்ந்த சோகம் இருந்தாலும் வெளியே தெரிய வில்லை. ஏதோ  அன்றாட வேலைகள், பேச்சு என்று இருந்தாலும் ஏக்கம் வாட்டுகிறதே.  கிருஷ்ணன் இனி பிருந்தாவனம் திரும்பி வருவானா?  மாட்டானா , எப்போது வருவான் ? இந்த கேள்விக்கு  யாருக்கு பதில் தெரியும்?

கல கல வென்று இருக்கும்  காசியே  வெறிச்சோடிவிட்டதே என்கிறாள் ஒரு கோபி.  அவள் அனுபவம் அப்படி. நாம் என்ன சொல்ல முடியும். காசியே அப்படியானால் பிருந்தாவனத்தில் நம் கதி??  சூர்தாஸ்இந்தகேள்வியைஎழுப்புகிறார். யாராவது பதில் தெரிந்தால்  என்னிடம் சொல்லுங்களேன்!   உங்கள் பேர், படம் , போட்டு எல்லோருக்கும் தெரிவிக்கிறேன்!

Sivan Krishnan

unread,
Oct 29, 2025, 8:27:55 PMOct 29
to amrith...@googlegroups.com

பழங்கால இந்தியா  -  நங்கநல்லூர் J K  SIVAN 

இமயமலை அடிவாரத்தில் மேற்குப்பகுதி காடுகளில் ஒரு  கிராமம் இருந்தது. அதன் பெயர்  கபிலவஸ்து. நேபாளத்துக்கு தெற்கே  உள்ள ஒரு பகுதி அது. .  கிட்டத்தட்ட  2700 வருஷங்கள் முன்பு  மலையேறிகள் எனும்  குலத்தோர் சிலர்  வசித்தார்கள். அவர்களில் ஒரு  குடும்பம் சாக்கிய வம்சத்தை சேர்ந்தது.  அதற்கு  ராஜாவாக இருந்தவன் சுத்தோதனன். பாலி மொழி பேசுபவர்கள். ராணியின்  பெயர் மாயா. 

நிறை கர்ப்ப ஸ்திரீயான  மாயா ஒரு நாள் தாய் வீட்டுக்கு சென்று விட்டு கபில வஸ்துவுக்கு திரும்பி பல்லக்கில் வந்து கொண்டிருந்தாள்.  லும்பினி என்ற இடம்  வரும்போது அவளுக்கு பிரசவ வலி துவங்கிவிட்டது. எந்த நேரமும் பிரசவம் ஆகலாம்  என்ற நிலையில்  அங்கே  காணப்பட்ட ஒரு தோட்டத்திற்குள்  சென்றாள் . உடனிருந்தவர்கள் உதவினார்கள். அங்கே அந்த நந்தவனத்தில் ஒரு  சால் மரத்தடியில்  படுத்தாள். அழகான ஆண்  குழந்தையை ஈன்றாள். அதற்கு  சித்தார்த்தன்  என்று பெயர் இட்டார்கள்.  குழந்தை  பிறக்கும் முன்பு  மாயாவின் கனவில் ஒரு வெள்ளை யானை அவள் கருவில் புகுந்தது. குழந்தை பிறந்ததும்  ப்ரம்மா பூமிக்கு வந்து தங்க தாம்பாளத்தில் குழந்தையை வாங்கிக் கொண்டார் என்றெல்லாம்  கதைகள் இருக்கிறது.  குழந்தை பிறந்ததும் அருகே அங்கே ஒரு சுனை திடீரென்று உருவாகி நாகங்கள் காவல் காத்தது,  பிறந்தவுடன்   சித்தார்த்தன் 7 தப்படி நடந்தான். 7 பாடல்கள் பாடினான் என்றெல்லாம் பௌத்தர்கள் ரெண்டாயிரம்  வருஷங்களாக நம்பிக்கையோடு  சொல்கிறார்கள். 

சித்தார்த்தன் உலக துன்பங்கள் மானுட வாழ்க்கை துயரங்கள் எதுவும்  அறியாதவாறு வளர்க்கப்பட்டான். அவனுக்கு    திருமணம் நடந்து ஒரு குழந்தையும்  பிறந்தது. 
இளம்  வயதிலிருந்தே சித்தார்த்தனுக்கு  உலகில் மக்கள் படும் துயரங்களைப்  போக்குவது எப்படி  என்பதில் தான் முழுநேர கவனம். 
ஒரு  நாளிரவு  எல்லோரும்  உறங்கிக்  கொண்டிருக்க,  சித்தார்த்தன், அரண்மனையை விட்டு அவன் தோழன்  சந்தகாவுடன் தனது குதிரை  மேல் ஏறிக்கொண்டு வெளியேறி விட்டான்.  சிலகாலம்  திக்கு திசை நோக்கின்றி  அலைந்து, நண்பவனை திருப்பி அனுப்பிவிட்டு, குதிரையையும் ஓடவிட்டு, ஆடைகளை அவிழ்த்தெறிந்துவிட்டு, தனது நீண்ட கேசத்தையும் வெட்டி விட்டு  மொட்டைத்தலை துறவியாக  திரிந்தான். வடக்கு பீகாரில் உள்ள வைசாலி நகரத்தை
 சென்றடைந்தான். அங்கே  அலதகலமர் என்னும்  குருவிற்கு சீடனானான். ஹுஹும்..  ஒன்றும் பயனில்லை.  

மனதில் நிம்மதி கிடைக்காமல் அங்கிருந்து தெற்கு பீகாரில் உள்ள மகத நகரம் சென்றான்.  பிறகு கயாவுக்கு சென்று, நைரஞ்சனா நதிக்கரையில் துறவிகள் செய்யும்  அனுஷ்டானங்களை புரிந்தான்.   உபவாசங்களால் உடல் மெலிந்தது. உடலை வருத்திக் கொள்வதால் ஞானம் பெறமுடியாது என உணர்ந்தார். சற்று தூரத்தில் கண்ணில் பட்ட  பெரிய  போதி மரத்தின் அடியில்  அமர்ந்தார். மாரன்  ஆயிரம்  பிள்ளைகள்  பெண்களுடன் வந்து எவ்வளவு இடையூறுகள்  செய்து  அவர் தவத்தைக் கலைத்தாலும்,  புத்தரின் தியானம் கலையவில்லை.  போதி மரத்தடியில் அமர்ந்த சித்தார்த்தன் என்ற கௌதமன், இனி  புத்தர்.  உலகம் அப்படி தான் அவரை அடையாளம் கண்டது.

ஆசை, அறியாமை ரெண்டும் தான் மனிதனை துன்புறுத்துபவை என உபதேசித்தார்.  இவையே பல பிறவிகள்  எடுத்து தொடர்ந்து துன்பம் அனுபவிக்க  காரணம்.   இவற்றிலிருந்து விடுதலை பெற வழி என்ன? மனம் தீவிரமாக  யோசித்தது.  காசிக்கு சென்றார். அங்கே பழைய  மாணவர்கள் ஐந்து பேரை  மான் பூங்காவில் சந்தித்தார். அங்கே தான் புத்தரின் முதல் உபதேசம் துவங்கியது. தர்ம சக்ரத்தின் சுழற்சி அதுவே. புத்தருக்கு எதிராக அவரது உறவினனான தேவதத்தன் என்ற அஜாத சத்ரு (பிம்பசாரன் மகன் ) புத்தரை பழித்தான்.  இருமுறை  புத்தரை கொல்வதற்கு  ராஜகிரஹ நகரின்  தெருக்களில்  முயற்சி நடந்து தோல்வியை சந்தித்தது.

ஸ்ரவஸ்தி எனும் இடத்தில்  ஒரே சமயத்தில் பத்து இடங்களில் பத்து புத்தராக தோன்றியதால் அவரை அடையும் கண்டு கொல்ல  முடியவில்லை.  ஸ்ரவஸ்தி  அதிசயம் என்பது இது தான்.  புத்தர் திரும்பினார்.  வானத்திலிருந்து மூன்று ஏணிகள் பூமியை தொட்டன. நடு ஏணியில் புத்தர்  வானிலிருந்து இறங்கினார். அவரை ப்ரம்மாவும் இந்திரனும் உபசரித்தனர். இந்திரன் அவருக்கு குடை  பிடிக்க ப்ரம்மா சாமரம் வீசினார் .  அல்லஹாபாதில்  சாங்கிசா என்ற  ஜில்லாவில் இது நடந்ததாக ஒரு நம்பிக்கை. 

மது போதை பானங்கள்  அருந்த கூடாது. பொய் சொல்லக்கூடாது, எவ்வுயிரிடத்திலும் அஹிம்சை, பெண்ணாசை கூடாது,  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் தேவையற்றவை, வாசனை திரவியங்கள் , ஆபரணங்கள். சுகபோக படுக்கைகள்  ஆகியவை களை தவிர்க்கவேண்டும். என்பவை புத்தரின் கொள்கைகள்.

சரியான  நம்பிக்கை, சரியான பேச்சு, சரியான எண்ணம்,  நல்வழி வாழ்க்கை, சரியான உழைப்பு, சரியான  கவனம்  , சரியான த்யானம் போன்றவை அவர் உபதேசங்கள்.  புத்தரின் உபதேசங்களில் கடவுளோ ஆத்மாவோ , வேதங்களோ, இடம்பெறவில்லை. புத்தரின்  எண் பது வயது  வாழ்வில் அவர் கொள்கைகள் பாரத தேசத்தில் அவ்வளவாக எடுபடவில்லை.

புத்தர் மறைந்ததும் அவர் உடல் பிரதம சீடன்  மஹா கத்யபன் என்பவரால் தகனம் செய்யப்பட்டு அஸ்தி எட்டு பாகமாக பிரிக்கப்பட்டு  புத்தரின் வாழ்வில் சம்பந்தப்பட்ட எட்டு இடங்களில்  அஷ்ட மஹாஸ்தானம் இடங்களில் வைக்கப்பட்டது. மஹாகத்யபா அடுத்த பிரதம குருவானார்.  புத்தரின் காலத்திலேயே  விதுதபன் எனும் ப்ரஸேனஜித் ராஜாவின் மகனால் கபிலவஸ்து ராஜ்ஜியம், சாக்கியவம்சம் அழிக்கப்பட்டது.  புத்தர் பிறந்த சமயம்  நிகழ்ந்த சம்பவங்கள் ஜாதகா கதைகள் என்று இன்றும் பிரபலமானவை. புத்த மதம் அசோகர் காலத்தில் வளர்ந்தது. எங்கும் பரவியது.  சுங்க, குஷான வம்ச ராஜாக்கள் காலத்திலும்  ஹர்ஷவர்த்தனர்  தானேஸ்வரத்தை ஆண்டபோதும் ஆதரவு பெற்றது. 

Sivan Krishnan

unread,
Oct 29, 2025, 8:27:55 PMOct 29
to amrith...@googlegroups.com
ஒரு  ஜீவ யோகி.   நங்கநல்லூர்  J K SIVAN 
  
வியாசராஜர் அலங்கரித்த  பீடம்  வியாசராஜ மடம்  என்றும் அவருக்குப் பின் அந்த மடாதிபதிகளில் மிக பிரசித்தி பெற்றவர் ஸ்ரீ ராகவேந்திரர் என்பது  உலக பிரசித்தம்.  ராகவேந்திரருக்கு முற்காலத்தில் அந்த  மடம்   விபுதேந்ந்திர மடம்  என்று தான் அறியப்பட்டது.  பின்னர்  ராகவேந்திர மடம்  என ப்ரபலமாக  பக்தர்களால்  தரிசித்து வணங்கப் பட்டது.
ராகவேந்திரர் பிறந்தது 1595ல்  என்றும் 1595–1601க்கு  இடைப்பட்ட காலம் என்றும்  சொல்லப்படுகிறது.
பிறந்த இடம்: புவனகிரி, (இன்றைய தமிழ்நாடு, கடலூர் மாவட்டம்)
குலம்: ஸ்ரீ மத்வாசாரியர் வழி வந்த த்வைத சமயத்தை பின்பற்றிய துங்காரா குடும்பம்
தந்தை: திரு திண்ணப்ப ஸாஸ்த்ரி 
தாய்: கோபிகாம்பாள்
இயற்பெயர்  வேங்கடநாதன் 
சிறுவயதில் மிகுந்த அறிவாளியாகவும், வைதிக வேதங்களில் வல்லவராகவும் இருந்தார். கவி, தத்துவஞானி, வேதாந்தி, நயநவீனராக விளங்கினார்.  காஞ்சிபுரம் போன்ற புண்ய தலங்களில் கல்வி கற்றார்.
அவர் வேதங்கள், உபநிஷதங்கள், ந்யாய சாஸ்திரம், மிமாம்ஸா, த்வைத சித்தாந்தம் ஆகியவற்றில் வல்லுநர் 
ஸ்ரீ சுதீந்த்ர தீர்த்தர் என்ற குருவினிடம்  இருந்து த்வைத வேதாந்தத்தில் ஆழ்ந்த பயிற்சி பெற்றார்.
வேங்கடநாதர் திருமணம் ஆனவர். மனைவியின் பெயர் சரஸ்வதி.
திருமணத்திற்குப் பிறகும் அவர் மனம் முழுதும் பக்தி மற்றும் ஞான மார்கத்திலேயே  ஈடுபட்டது. 
குடும்ப  வாழ்க்கை கடின நிலையில் இருந்தபோதிலும், அவரின் மனம் எப்போதும் பரமாத்மாவில் ஒன்றிணைந்திருந்தது.

 ஸ்ரீ சுதீந்த்ர தீர்த்தர்  1621–1623  கால கட்டத்தில்  அவரை தமது வாரிசாக தேர்ந்தெடுத்து, ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் ஆனார்.
அதன் பிறகு அவர் மந்திரா மடம் (மஞ்சாலி / கும்பகோணம் அருகே) தலைவராக நியமிக்கப்பட்டார்.
ராகவேந்திரர் த்வைத சித்தாந்த உபதேசம்; 
“மனுஷ்யனின் கர்மம் நன்மையாக இருந்தால், தெய்வம் அவனுக்கு ஆதரவாக இருக்கும்.”
அவர் எப்போதும் “ஹரி ஸர்வோத்தமன், வாயு  ஜீவோத்தமன்” என்ற ஸ்ரீ மத்‌வாசாரியரின் தத்துவத்தை நிலைநிறுத்தினார்.
“மனுஷ்ய ஜன்மம் பெறுவது அரிது, அதனை மோகத்தில் வீணாக்க வேண்டாம்அன்பும் பக்தியும் உள்ள இடத்தில் நான் எப்போதும் இருப்பேன். என் தேக வியோகத்தின் பின் 700 ஆண்டுகள் நான் இங்கே ஜீவனாக இருப்பேன்.என்னை 
நம்பிக்கையுடன் அழைக்கும் ஒவ்வொருவருக்கும் நான் உதவி செய்வேன்.”

ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய  எண்ணற்ற அதிசயங்களில் சில; 
தினமும் பூஜையில் காணப்பட்ட பிரசாதம் தன்னால் சுவைக்கப்பட்டதுபோல் இருந்தது.

ஒரு தாய் தன் குழந்தையுடன் ராகவேந்திரரின் ஆசிரமத்திற்கு வந்தபோது  பாம்பு கடித்து குழந்தை இறந்தது. தாயார் கதறினாள்.  அமைதியாக இரு என்று  ஜாடை காட்டிய  ராகவேந்திரர் அருகே இருந்த  கமண்டலத்தில் இருந்து சிறிது ஜலத்தை எடுத்து ஜபித்து குழந்தையின் வாயில் ஊற்றினார். அடுத்த சில நிமிஷங்களில் குழந்தை உயிர் பெற்றது.
அருகே இருந்து இதை கண்ணால் கண்டவர்கள்  அதிசயித்து  “ஜய ஜய ராகவேந்திரா!” என முழங்கியது வானைத் தொட்டது. 

 ஒரு முறை ராகவேந்திரர்  ஸரஸ்வதி பூஜை செய்து கொண்டிருந்தபோது கலைமகள் அவரின் நாவைத் தொட்டதாகவும் அதன் பிறகு அவர் எதையும் ஒருமுறை கேட்டாலே மனத்தில் பதிந்துவிடும் திறனைக் பெற்றார். 'ஏக சந்த க்ரஹி '.

பூர்வாஸ்ரமத்தில்  வேங்கட நாதனாக வாழ்ந்தபோது பரம ஏழை. ஆனாலும்  தினமும் விருந்தினர்களுக்கு அன்னதானம் செய்வார்.  ஒருநாள் அவரது மனைவி, “இன்று வீட்டில் மணி அரிசி கூட  இல்லை” என்று கூறினாள்.
கவலையே வேண்டாம். இருப்பதை முதலில் விருந்தினருக்கு அளிப்போம். நமக்கு தேவையானதை அப்புறம் ஸ்ரீ ஹரி தருவார்.” இப்படி சொல்லும்போதே  அங்கிருந்த த்வாரகேஸ்வரர் (கிருஷ்ணர்) ஒரு வித்தகரான விருந்தாளியாக வந்து, இருப்பதை கேட்டு சாப்பிட்டு விட்டு சென்றார். அடுத்த கணமே வற்றாமல்  பானையில் அரிசி நிறைந்தது.

ஒருமுறை அவருடைய மடத்தில் யாகம் நடந்தது. அந்த யாகம் முடிந்த பின் நாலு நாளான பின்பும்  அக்னியின் தீயின் ஒளி மாறவில்லை. ராகவேந்திரரின்  'தபஸின் சக்தி”.

 அந்த பிரதேசத்து  குறுநிலஅரசன் வெங்கட பாண்டியராயர் தன் பிள்ளை வியாதியின் உச்சி கட்டத்தில்  உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும்   நிலையில்   துயரத்தில் ராகவேந்திரரை வேண்டினார். 
 “மன்னா, அவன் பாவம் முடிந்தது, ஆனால் நான் பிரார்த்திக்கிறேன்” என்று கூறி, தீபாராதனை செய்தார். சில மணி நேரங்களில் ராஜாவின்  பிள்ளை  தூக்கத்தில் இருந்து எழுந்திருப்பது போல்   உட்கார்ந்தான். ராஜாவுக்கு எப்படி இருக்கும்? ஒரு பட்டயம் எழுதினான்.  “மந்திராலய  மடத்திற்கு எந்நாளும் வரி விலக்கு” 

பாவனாஸுரன் என்ற அசுரன் ராகவேந்திரரை அவமதிக்க முயன்றான். அவரோ அமைதி, அருள், சக்தியோடு அவனை
வரவேற்றார். அவன் உள்ளும் புறமும் உடனே மாறிவிட்டான்.  மன்னிப்பு கேட்டு அழுதான். 
நல்ல வழியில் செல்லும் சக்தியை அவனுக்கு மஹான் அளித்தார்.

 1671ல்   சீடர்களிடம்   ''நான் இப்போது தியான நிலையில் நுழைகிறேன்.  என் மேல் சந்தனம் பூசி, தாமிர படுக்களால் மூடுங்கள்.  நான் இன்னும்  700 ஆண்டுகள் இங்கு ஜீவனாக இருப்பேன்.” என்றதும்  தியானத்தில் இருந்த  அவர் மேல்  சந்நிதானம் கட்டப்பட்டது.

மந்திராலயத்தில் ராகவேந்திரரின் பிரயோக நாள் முதல் தொடர்ந்து ஒரு தீபம் அணையாமல் எரிகிறது. “ஜீவனாக உள்ள ராகவேந்திரரின் சின்னம்” என அது  கருதப்படுகிறது.

ஒரு நாள் சில பக்தர்கள் ஸ்வாமியின் சந்நிதானம் அருகே பஜனை செய்தனர்.அவர்கள் ஒரு பாணம் (அழகான நாதம்) கேட்டு அதிசயித்தனர்.அது ராகவேந்திரரின் தெய்வீக அனுக்ரஹம் அதே ஒலி, எங்கும்  திவ்ய கந்தம் வீசுவதை வாசனையை அனுபவித்ததாகக் கூறினர்.

“மந்திராலயத்தில் சந்நிதியிலோ  அல்லது அவர்  வீட்டிலோ வேண்டினால், சில நாட்களில் வேண்டுதல் நிறைவேறுகிறது.”
உண்மையுடன், நம்பிக்கையுடன் அவரின் மந்திரத்தை ஜபிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் அருள்புரிவதாக பலர் அனுபவித்துள்ளனர்.

ஒரு நாள் ராகவேந்திரர் தனது சீடர்களுடன் வெகு தூரம்  வெகுநேரம் பயணம் சென்றபோது பசி, எங்கும் உணவு கிடைக்க வழியில்லை.  ராகவேந்திரர் ஜெபித்தார்.  அவர்கள் கொண்டு  வந்திருந்தபாத்திரங்களில் சூடாக  ஆகாரம் பொங்கி வழிந்தது. “பக்தருக்கு பசி வருவது எனக்கு பாவம்.” என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டும் அவரிடமிருந்து மெதுவாக வந்தது. 

நல்லவர் ஒருவர் இருந்தால் அவர் மேல் அநேக தீயவர்களுக்கு கட்டாயம்  பொறாமை இருந்தே தீரும் அல்லவா? ராகவேந்திரர் ஒரு போதும், எவரிடமும் கோபித்ததோ, வெறுப்படைந்ததோ கிடையாது. பாரபக்ஷம் இல்லாமல் எல்லோரையும் அன்போது அரவணைப்பவர். “நீங்கள் நலமாக இருங்கள்” என்று மனமார வாழ்த்துபவர்.  எத்தனையோ பேர் திருந்தி இருக்கிறார்கள். 

ராகவேந்திரர் சந்நிதானத்தில்   இயற்கையாகவே   மல்லிகை, சந்தனம் போன்ற நறுமணம்  கமகமக்கிறது என்று  அனுபவித்து சொல்கிறார்கள். 
.
“ஓம் ஸ்ரீ ராகவேந்தாய நம:” என்ற மந்திரத்தை ஜபித்து மந்திராலயத்தில் நமஸ்காரம் செய்தபின், எத்தனையோ குடும்பங்களில் புத்ர பாக்யம் கிடைத்திருக்கிறது கண்கூடான ரஹஸ்யம். எத்தனையோ பேருக்கு  ஆஸ்பத்திரியில் குணமாகாத  நோய்கள் விரைவில் மந்திராலயம் வந்தபிறகு குணமாகி சந்தோஷமாக வாழ்ந்தவர்கள். 
ராகவேந்திரரின் ஜீவசமாதி 1671 இல் மந்திராலயா  க்ஷேத்திரத்தில் நடந்தது.  பிரயோக  சன்னிதானம் கர்நாடகாவில்,,ரெய்ச்சூர்  மாவட்டம் அருகே உள்ளது.

பாலேந்து பூஷித முகம், பவ பீத ஹாரம் |  ஸ்ரீ ராகவேந்திர யதீந்த்ரமஹம் நமாமி || யதிராஜ ராகவேந்திரம், வந்தே ஹம் ஸததம் முநிம் | காமதாம் கல்யாண தாம், கலே திகாமதம் ||  என்ற மந்த்ர ஜபம் போதும் அவரை அடைவதற்கு. அவர் அருள் பெற.

ராகவேந்திரர்  இயற்றிய நூல்கள்;  
நியாய முக்தாவளி, தத்வ மஞ்சரி, பட்ட ஸங்கிரஹா, தந்த்ர தீபிகா, த்வாதச ஸ்தோத்ர வ்யாக்யானம், கீதா விவ்ருதி, உபநிஷத் பாஷ்யம்,   ப்ரபஞ்ச மித்யாத்வ அனுமான காண்டன.  எல்லாமே  த்வைத வேதாந்த தத்துவத்தின் சாரம். இன்று வரை எத்தனையோ கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையின் மூலமாக  மந்த்ராலய க்ஷேத்ரம்  விளங்குகிறது.
Poojyaaya Raaghavendraay, satya Dharma Rathaayacha,Bhajathaam Kalpa Vrikshaaya  Namathaam Kaamadhenuvey
பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்திராய, ஸத்ய தர்ம ரசாயதா, பஜதாம் கல்ப வரிகஷாய, நமதாம்  காமதேனுவே.  என்கிற ரெண்டு வரி ஸ்லோகம் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்போம். 

Sivan Krishnan

unread,
Oct 29, 2025, 8:27:58 PMOct 29
to amrith...@googlegroups.com
ரெண்டாம் உலக மஹா யுத்தம்.     -   நங்கநல்லூர்  J  K  SIVAN 

எனக்கு ஐந்து வயதாக இருந்த  போது   இப்படி ஒரு பெரிய உலக மஹா யுத்தம் நடப்பது தெரியாதே.  என்னோடு பாண்டி விளையாடிய  ரங்கநாதம் பிள்ளை  மகள்  நவநீதத் துக்கும்  தெரியாது போல் இருக்கிறதே.  அவளுக்கு தெரிந்த யுத்தம் என்னோடு போடுவது ஒன்றே.   தெரிந்தால் என்னிடம் சொல்வாளே.  முதல் நாள் ராத்திரி சாப்பிட்ட தோசை பற்றி சொல்பவள் இதைச்  சொல்ல மாட்டாளா?

1944க்கு  ஐந்து வருஷங்களுக்கு முன்பு நான்  பிறக்கும்போதே ரெண்டாம் உலக மகாயுத்தமும் பிறந்துவிட்டது. நான் கோடம்பாக்கம் வடபழனி ஆண்டவன் கோயில் அருகே  பிள்ளைமார் தெருவில் இருந்தேன். யுத்தம் எங்கோ எனக்கு தெரியாத ஐரோப்பாவில் நடந்திருக்கிறது. யுத்தத்தின் வேகம், அதன் போக்கு  மேற்கே அட்லாண்டிக் சமுத்திரத்தை தாண்டி கனடா, அமேரிக்கா வரை சென்றிருக்கிறது.  தெற்கே ஜப்பான், கிழக்கே ரஷ்யா எல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறதே.

எங்கள்  கோடம்பாக்கம்  வடபழனியில்,  யுத்தத்தின்  சாயல்  என்ன தெரியுமா?  தினமும் ஒரு மோட்டார் கார்  MKT  பாகவதர் பாட்டு பாடிக்கொண்டு நடுநடுவே யாரும்  வெளியே வரவேண்டாம். விளக்குகளை ஆறுமணிக்கு மேல்  சின்னதாக போட்டுக்கொண்டு வீட்டுக்குளேயே இருங்கள்.'' என்று சொல்லிக்கொண்டே போகும்.  சண்டையில் மிகவும் பீதி அடைந்து  ஜெர்மனியைக் கண்டு நடுங்கிய இங்கிலாந்து தான் இவ்வளவு பெரிய நம்முடைய தேசத்தை ஆண்டு  கொண்டிருந்த
காலம்.  அதுவும் எனக்கு தெரியாதே.  

ஹிட்லர்  என்ற பெயர்  உலகமே  பயப்பட வைத்தது.  என் தாய் வழி தாத்தா கண் தெரியாமலே என்னை தடவிப் பார்த்து  செல்லமாக ஹிட்லர் ஹிட்லர்  என்று கொஞ்சுவாறே.  ஹிட்லர் பற்றி ஆறுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. மஹா வீரன், பெரிய  சாமர்த்யக்காரன் என்று தான் உலகமே நம்பிக் கொண்டிருந்தது. அவன் பண்ணிய அக்கிரமங்கள் அப்புறம் தானே வெளி வந்தது.  அவன் கோழை தற்கொலை பண்ணி கொள்ளப்போகிறான் என்று தாத் தாவுக்கு எப்படி தெரியும்?

ஹிட்லர் எப்போது என்ன செய்வான் என்ற ரஹஸ்யம் அவனுக்கே கூட தெரியாது.  எப்படியும்  வெளி நாடுகள் இந்த  போரில் ஈடுபடும்  என்று அவனுக்கு தெரியும்.   ஆனால்  எந்த பக்கம் ,  எங்கிருந்து ஜெர்மனியை நோக்கி வரும் என்று அவனால்  கணிக்க  முடியாத இடத்திலிருந்து அது நுழைந்தது தான் ஆச்சர்யம்.  

ஆமாம்  6.6. 1944  நார்மண்டி என்ற  பிரான்ஸ் நாட்டின்  சின்ன  கடற்கரை ஊரிலிருந்து தான் ஆபத்து ஹிட்லருக்கு.  நார்மண்டி ஹிட்லர் ஆதிக்கத்தில் இருதாலும் அங்கே பெரும்படை திடீரென்று வந்து  குதிக்கும் எதிர்க்கும்  என்று எதிர்பார்க்காததால்  அதை எதிர்க்க  போதிய  பாதுகாப்பு அங்கே இல்லை. 

நூற்று முப்பது முதல்  நூற்று ஐம்பத்தாறாயிரம்  வீரர்கள் கொண்ட  அமெரிக்க, மற்ற  கனடா,  பிரான்ஸ்,  போலந்து,   பெல்ஜியம்,செகோஸ்லாவியா,  கிரீஸ்,   நார்வே,  நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற  நாடுகளின் கூட்டமைப்பு  வீரர்கள் கொண்ட படை நார்மண்டி  கடற்கரையில்  இறங்கியது.    ஹிட்லரின்   நாஜிக்கள் ஆளுமை நிறைந்த  ஐரோப்பாவில் இப்படி ஒரு ஓட்டையா?  அமெரிக்கனின் கால் அங்கே பதியும் என்று  ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் எதிர்பார்க்கவே இல்லையே.   தரையில், தண்ணீரில், வானில் மூன்று  பிரிவுகளாக  எதிரிக  நுழைந்து விட்டனர். 

அடுத்த சில வாரங்கள் கடல் வெள்ளம் போல்  கூட்டமைப்பு படைகள் இங்கிலாந்து இத்தாலி, பிரான்ஸ் ஜெர்மனி என பரவலாக  அடித்து நொறுக்கிக்கொண்டே  முன்னேறினார்கள். இரண்டாம் உலக மஹா யுத்தம்  முடிவை நெருங்கியது. ஒன்றும் தெரியாமல்  நான்  கோடம்பாக்கத்தில் விளையாடிக்  கொண்டிருந்தேன். 

NARMANDY 7. jpg.jpg
NORMANDY 2.Jpeg
NORMANDY 6..jpg
NORMANDY 2.Jpeg
NORMANDY. 1.jpeg
NARMANDY 7. jpg.jpg
NORMANDY 6..jpg

Sivan Krishnan

unread,
Oct 30, 2025, 7:51:10 PMOct 30
to amrith...@googlegroups.com
@சிவா தாத்தா  கதைகள்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

உயிர்த்  தியாகம்  

குழந்தைகளே,  சில  கதைகள் உங்களை மறக்க முடியாமல் செய்து விடுகிறதல்லவா? அப்படிப்பட்ட  உப கதைகள் அநேகம் கொண்டவை தான் நமது ரெண்டு இதி ஹாஸங்கள்,  ராமாயணமும் மஹா  பாரதமும்.

உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்?  மஹா பாரத போரில்  மிக முக்யமானவன்  யார் பீமனா, அர்ஜுனனனா, பீஷ்மனா, கர்ணனா?   
 நிறையபேர்  உடனே   கை தூக்குகிறீர்கள்,   எங்கே  ஒவ்வொருவராக ஒரு சின்ன துண்டு காகிதத்தில் டில் உங்கள் விடையை  எழுதிக் கொண்டு வந்து காட்டுங்கள். யார் பேர் அதிகம் இருக்கிறது என்று சொல்கிறேன்.  

''அட   என்னைப்போலவே  எல்லோரும்  ஒரே பெயரை சொல்லி இருக்கிறீர்களே.  “கிருஷ்ணன்” . பாண்டவ கௌரவ  யுத்தம் என்று  பெயர் பெற்றாலும் ஆயுதம்  எடுக்காமலேயே  அதில் பெரும்   பங்கேற்றவன் அதன் சூத்ரதாரி  க்ருஷ்ணன் ஒருவனே.  

கடோத்கஜன் பீமனின் மகன். ஹிடும்பனுக்கு  பிறகு தன் தாய் ஹிடும்பியுடன் காட்டில் அரசாட்சி புரிந்து கொண்டு வந்தவன்.  பாரத போரில் முக்ய பங்கு கொண்டவன். பீமன் நினைத்த மாத்திரத்தில் உடனே தோன்றி   உதவுபவன் கடோத்கஜன்.  மாய வித்தைகளில், அதிரடி போரில், நிபுணன்.  கிருஷ்ணன் அவனைத்  தக்க  சமயத்தில் உபயோகிக்க ஏற்கனவே  முடிவெடுத்து விட்டார்.   தந்தை  பீமனைப்போலவே கதாயுதத்தை   உபயோகிப்பதில்  கடோதகஜன் வல்லவன்.

 ஜயத்ரதன் கொல்லப்பட்ட பிறகு இரவெல்லாம் யுத்தம் தொடரும் சமயம் கடோத்கஜனின்  பங்கு அபாரம்!!  ஹிடும்பன் மறைவிற்கு பிறகு இந்த்ரபிரஸ்தம்  வந்தான் கடோத்கஜன். பாண்டவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. தர்மருக்கு தம்பி பீமன் மகனை ரொம்ப பிடிச்சு போச்சு!!

  “கிருஷ்ணா, நாம் இவனுக்கு ஒருநல்ல பெண்ணாக பார்த்து கல்யாணம் பண்ணிவைக்கவேண்டாமா?” என்றபோது   தகுதியான பெண் யாரென்று  கிருஷ்ணன்  முடிவெடுத்தான்.  தான் வதம் செய்த முரன் என்ற அசுரனின் மகள் காமகடாங்கதா தான் பொருத்தமானவள். முரனுடன்  யுத்தம் நடந்தபோது அவள்  மிக்க பலத்துடன் கிருஷ்ணனின் சரங்களை தடுத்ததுடன்  கருடனை தன் வாளினால்  தாக்கி நிலைகுலைய  மயங்கி விழ  செய்தவள். அவளைக் கொல்ல கிருஷ்ணன்  சுதர்சன சக்ரத்தை எடுக்கும்போது சக்தி தேவதை குறுக்கிட்டு “கிருஷ்ணா,  நிறுத்து,  நான்  இவளுக்கு வரமளித்த வாள் அவள் உபயோகிக்கும்போது அவளை எவராலும் வெல்லமுடியாது. அவளைக்   கொல்வது சக்தி ஆயுதங்களை அவமதிப்பதாகும். அவளைக்  கொல்லவேண்டாம்” என கேட்டுக்கொண்டாள். அதே சமயம்  சக்தி தேவதை  காமகடாங்கதா முன் தோன்றி   பெண்ணே, கிருஷ்ணன், உன்  எதிர்கால மாமனார் முறை. அவர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறு” என்றாள். அந்த  பெண்ணைப் பொருத்தவரை  தன்னை  போரிட்டு ஜெயிக்கிறவன் தான் தனது  கணவன்”  என்று  ஒரு பிடிவாதம்!.  நிறைய பேரை அவள்  யுத்தம் செய்து கொன்றிருக்கிறாள். பீமன் மகன் கடோத்கஜன் அவளை போரிட்டு வென்று மணக்க தயாராகி கிருஷ்ணனை வணங்கும்போது "கடோத்கஜா,  போ,  அவளை ஜெயித்து மனைவியாக  அழைத்து வா. அவளோடு போரிடும்போது என்னை நினைத்துக்கொள், வெற்றி  உனக்கே"  என்ரூ ஆசிர்வதித்தார். 

அவ்வாறே   கடோதகஜன் அவளை வென்று மணந்தான். அவர்களுக்கு பிறந்தவன் தான் பார்பரீகன். தன் மகனோடு  கடோத்கஜன் கிருஷ்ணனை துவாரகையில் சென்று  தரிசித்தான். கிருஷ்ணன் அவன் மகனை  ஆசிர்வதித்து  “சுஹ்ரிதயா”- நல்ல  இதயம்  கொண்டவன்)  என்று பெயரிட்டான்.  பர்பரீகன் காடு மலை எல்லாம்  சென்று  எங்கெங்கெல்லாம்  துர்க்கை சிவன் பூஜை செய்யமுடியுமோ அவற்றை எல்லாம்  முடித்து நிறைய வரங்கள் பெற்றான்.  பாண்டவர்கள் வனவாசத்தில் தீர்த்தயாத்ரை சென்றபோது சண்டிகா கோவில்  இருந்த ஊரில்  பார்பரீகனை கண்டு ஆசிர்வதித்தனர் .அவனது தெய்வ பலம்  பின்னர் பாண்டவர்களுக்கு யுத்தத்தில் பேருதவி செய்தது.

மீண்டும் பாரத யுத்தத்துக்கு வருவோம் ஜெயத்ரதன் கொல்லப்பட்ட அன்று  வெகுநேரம் இருட்டில் கூட யுத்தம் தொடர்ந்தது. கடோத்கஜனின்  மாயாஜாலங்கள், வீராவேசமான  யுத்தம்  கௌரவர்களை  நிலைகுலைய செய்ததால்  துரியோதனன்  கர்ணனிடம்  ஓடிவந்து “எப்படியாவது கடோத்கஜனை  தடுத்து நிறுத்து” என்றான். கர்ணனின் அஸ்த்ரங்கள் கூட  வெகு  லாகவமாக  கடோத்கஜனால்  முறியடிக்கப்பட்டு வேறு  வழியின்றி இந்திரன் கொடுத்த  சக்தி ஆயுதத்தை  கையில்  எடுத்தான் கர்ணன்.  ஒரே முறை  தான்  அதை  பிரயோகிக்கலாம் பிறகு அது  இந்த்ரனிடம்  போய்ச்   சேர்ந்துவிடும் என்று தெரிந்தும்,  அதை  அர்ஜூனன் மேல் ஏவவே கர்ணன்  பிரத்யேகமாக  அதை  கர்ணன்  வைத்திருந்தான்.  இப்போது கோபத்தில் அதை   கடோத்கஜன் மேல் ஏவி அவனைக்  கொன்றான். கௌரவர்கள்  குதூகலித்தனர் ஆனால் பாண்டவர்கள் சோகத்திலும் அதிர்ச்சியிலும் சிலையாயினர். பீமன் நிலை குலைந்தான். அர்ஜுனன் அசந்து போனான். யுதிஷ்டிரர் முகம்  கவிழ்ந்தார். கிருஷ்ணன்  முகத்தில் மட்டும் கவலை நீங்கி  புத்துணர்ச்சி தோன்றியது.

கிருஷ்ணனுக்கு தெரியும் கர்ணன் பலம்,  அவனது  அஸ்த்ர ரகசியங்கள். சக்தி  ஆயுதம்  அவனிடம்  இருந்தவரை அர்ஜுனனால்  அவனை  நெருங்கமுடியாது.  அர்ஜுனன் உயிர் தப்பினால் அதுவே  பெரிய  வெற்றி. பாண்டவர்களின் வெற்றி வெறும்  கனவாகிவிடும்.  கர்ணன்  அர்ஜுனன்  நெருங்காது  ரொம்ப சாமர்த்தியமாகவே இதுவரை  கண்ணன் தேரை செலுத்தி வந்தான். இனி அர்ஜுனன் உயிருக்கோ  பாண்டவர்கள்  வெற்றிக்கோ சந்தேகம் இல்லை. பாவம் கடோத்கஜன்!!  இதற்காக  தன் உயிரை பணயம் வைக்க வேண்டியிருந்தது, தன உயிரைக்கொடுத்து  அர்ஜுனன் உயிரைக் காப்பற்றினான் என்று  கிருஷ்ணன் மட்டுமே  அறிவார் ஆதலால்  கடோதகஜன் மறைவின் போது கிருஷ்ணனன்  நிம்மதி யாக ஒரு பெருமூச்சு  விட்டார் .!!

 

Sivan Krishnan

unread,
Oct 30, 2025, 7:51:10 PMOct 30
to amrith...@googlegroups.com
குரு சிஷ்ய  சம்வாதம்  - நங்கநல்லூர்  J K  SIVAN 

கல்கத்தாவில்  காளி  பவதாரிணி ஆலயத்தில்  ராமகிருஷ்ணர் அமைதியாக அவளை மனதில் நிரப்பிக்கொண்டு அமர்ந்திருந்தார்.   எதிரே   நுங்கும்  நுரையுமாக கங்கை கண்ணுக்கு தெரிந்தாள் .சலசலவென்று  ஓயாமல் சுறுசுறுப்பாக  பலர்  பாவம் தீர்க்க ஓடிக் கொண்டிருந்தாள் .   ''கங்கா மாதா, என் தாய் அல்லவோ நீ. உன் கருணைக்கு எது அளவு?  என்று  அவளை கை  கூப்பி வணங்கினார்.
மாலை நேரம். தென்றல் கங்கைக் குளிர்ச்சியோடு வெளியே எங்கும் இருந்த  மரங்களின்  நறுமண மலர்களின் வாசத்தை சேமித்துக்கொண்டு வீசியது. அப்போது தான்   படிக்கட்டில் அந்த அற்புத வாலிபன் ஏறி வந்தான்.  

என்னவோ ராமகிருஷ்ணர் மனதில் இன்று குதூகலம்.  இன்று அவன் வருவான் என்று உள்ளுணர்வு சொல்லியது.அப்படியே அவனும் வந்துவிட்டானே .  அவனைப் பார்க்கும்  போதெல்லாம் ராமகிருஷ்ணருக்கு தெய்வத்தையே பார்ப்பது போலிருக்கும். அவனோடு பேச பிடிக்கும். அவன் எப்போதும் தன்னுடனேயே இருக்கவேண்டும் என்று தோன்றும்.
சிறிது காலமாக  அவன் எத்தனையோ ஜோலிகளுக்கு இடையே   முடிந்த போதெல்லாம் அவன் ராமகிருஷ்ணரை பார்க்க வந்து கொண்டிருக்கிறான். என்ன அறிவு, என்ன உயர்ந்த சிந்தனை இந்த சின்ன வயதிலேயே.  சரஸ்வதி கடாக்ஷம் பொங்கியவன்!  பவதாரிணி செலெக்க்ஷன் அவன்.இல்லையென்றால் எனக்கு எப்படி கிடைப்பான்?

அவன் ராமகிருஷ்ணரை சாஷ்டாங்கமாக வணங்கினான் எதிரே அமர்ந்தான்.  கை கட்டியபடி  அவரையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். மனதில் ஆயிரம் சிந்தனைகள் ரேஸ் குதிரை வேகத்தில் ஓடியது.  

''என்னப்பா  கொஞ்ச நாளாக  உன்னைப்  பார்க்கவே  முடியவில்லையே?''

''குருநாதா, நேரமே இல்லை.வாழ்க்கையில் ஓட்டமும்  அவசரமும் தான் என்னை  இழுத்துச் செல்கிறது''

''புரிந்து கொள் தம்பி. நீ  சிக்கிக்கொண்டு  ஈடுபடும்  உன்  செயல்பாடுகள்  தான் உன் நேரத்தைச்  சாப்பிடுகிறது. ஆனால்  நீ என்ன செய்யவேண்டுமோ அது நிதானமாக காத்திருக்கிறது. ''

''குருநாதா,  ஏன் வாழ்க்கை இப்படி  சிக்கலாக  இருக்கிறது?''

''அதற்கு மதிப்பும் நேரமும் கொடுத்து ஏன்  அலசுகிறாய்? அதனால் தான் அது சிக்கலாகிறது. நடப்பது நடக்கட்டுமென்று விட்டு விடு. ''

''குருவே  எதனால்  எல்லோரும் சந்தோஷமே இல்லாமல் வாழ்கிறார்கள்?''

''கவலைப்படுவது என்ற வேண்டாததை தலையில் சுமந்தால்  அதன் விளைவு தான் அது .ஏனோ  அதுவே பழக்கமாக போய்விட்டது எல்லோருக்கும்.

''கஷ்டம் ஏன் தொடர்ந்து கொண்டே  இருக்கிறது ?''

''நம்மை பரிசுத்தமாக்க.  வைரம்  ஜொலிக்க  வேண்டுமானால் அதை விடாமல் தேய்த்துக் கொண்டே,செதுக்கிக் கொண்டே  இருக்கவேண்டும்,இல்லையா?' தங்கத்தை நெருப்பில் வாட்டி ,இரும்பினால் அடித்த பிறகு தானே வளையல்,சங்கிலி நகைகள் கண்ணைப் பறிக்கிறது. ஞானிகள் மஹான்கள் இதைப் புரிந்தவர்கள், இடுக்கண் வருங்கால்,நகுக என்று அதை பெரிது பண்ணாமல் ஏற்றுக் கொள்பவர்கள்.   அனுபவம் தான் வாத்தியார்.  முதலில் பரிக்ஷை வைத்து விட்டு அப்புறம் பாடம் சொல்லித்தருபவர்.    
வெளியே பார்க்கிறாய், நாலா பக்கம் பாதைகள்.  நீ எங்கே செல்கிறாய் என்பதைப் பொறுத்து அங்கே ஏதோ உனக்காக காத்திருக்கும்.  கண்  தான்  வழியை கண்டுபிடிக்கிறது.  இதயம் அந்த  வழியில் நடக்க விடுகிறது. 

''குருநாதா,  சரியான வழி நடக்கும்  கால் வலியை  விட  தோல்வி அதிக மன  வலியை  தருகிறதா?''

 'அப்பனே,   வெற்றி தோல்வி  என்பது மற்றவர் உன் செயலை கணித்து அளந்து சொல்வது. திருப்தி என்பது உன் மனதில் தானாகவே நீ முடிவு செய்வது. 

''கஷ்டமான  காலங்களில்  எப்படி ஊக்கம் பெறுவது?''

''நீ எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறாய் என்று திரும்பிப் பார்.   அப்போது தான்  இன்னும்  எவ்வளவு  தூரம்  இருக்கிறது என்பது கொஞ்சமாக தெரியும்..உனக்கு கிடைத்த  ஆசி, அனுக்ஹத்தால்  தான் இவ்வளவு தூரம் முன்னேறி வந்திருக்கிறாய்  என உணர்ந்து மகிழ்.  எது கிடைக்கவில்லை என்று தேடவோ,  யோசிக்கவோ  வேண்டாம். '' 

''குருவே  மக்களிடம் எதைக்  கண்டு நீங்கள்  ஆச்சர்யப்படுகிறீர்கள் ?''

''நல்ல கேள்வி கேட்டாயடா மகனே,  சாதாரண மக்கள் எப்போதும் கஷ்டம் வந்தால் மட்டும் ''பகவானே, ஏன் எனக்கு மட்டும்  இந்த கஷ்டம்  கொடுத்தாய்?' என புலம்புகிறார்கள்.  சுகம் அதிர்ஷ்டம் வந்தால் ஏன் அதே கேள்வியை கேட்பதில்லை?''  இது தான் என் ஆச்சர்யம். 

''குருநாதா, வாழ்க்கையில் எப்படி  அருமையானதை பெறுவேன்?''

''கடந்ததில் நடந்த எதையும் பற்றி வருந்தாதே, நிகழ்வதில் தன்னம்பிக்கை இருக்கவேண்டும் மனமார ஏற்றுக் கொள்ள வேண்டும்.  வரப்போவதில்  எதைப் பற்றியும்  பயமே வேண்டாம்..  இதுதான் வாழ்வில் அருமையான பாடம் '' 

''குருநாதா, என் சந்தேகங்களுக்கெல்லாம் பட் பட்டென்று  உடனே பதில் சொன்னீர்கள்.  நன்றி. ஒரே ஒரு கடைசி கேள்வி.'
'என்னுடைய  பிரார்த்தனைகள் பகவான் காதில் விழவில்லை என்று ஏன் சில சமயம் எனக்கு தோன்றுகிறது?''

''பகவான் செவி மந்தம் இல்லை. எல்லோருடைய பிரார்த்தனைகளும் கோரிக்கைகளும், வேண்டுதல்களும்  நிச்சயம்  பகவான் கேட்டு தக்க பதில் அளிக்கிறார்.  நம்பிக்கை  தொடரட்டும்.  பயம். சந்தேகத்தை விடு. வாழ்க்கை ஒரு புதிர். விடை தேடு. வாழ்க்கை ஒரு சங்கடம் ,பிரச்னை அல்ல, தீர்வு காண்பதற்கு.   என்னை நம்பு தம்பி.  வாழ்க்கை எப்படி வாழ வேண்டுமென்று  உனக்கு தெரிந்தால்  அது எவ்வளவு அதிசயமானது என்று உணர்ந்து  நீ  மகிழ்வாய்.''

சிறிய தூற்றலாக இருந்த மழை பெரிதாக  வலுத்தது.   காற்று வீசி தொடர்ந்தது.கதவுகள் படார் படார் என காற்றில் ஆடி மூடிக் கொண்டன. வாசலில் குதிரை வண்டி வந்து நிற்க  நரேந்திரன் என்ற பிற்கால விவேகானந்தர் வேகமாக வாசலுக்கு ஓடி வண்டியில் தாவி உட்கார்ந்து கொண்டார். இரு கரமும்  சிரம் மேல் குவித்து  ஆலய வாசலில் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ராமகிருஷ்ண பரமஹம்சரை  வணங்கினார். குதிரை ஓட ஆரம்பித்தது. 
 

Sivan Krishnan

unread,
Nov 1, 2025, 7:28:21 PM (12 days ago) Nov 1
to amrith...@googlegroups.com

நிர்வாண மஞ்சரி. ஆதி சங்கரர்.    --நங்கநல்லூர்  J K SIVAN      

 என்னை யாரென்று எண்ணி நீ பார்க்கிறாய்?

ஆதி சங்கரரின் அற்புத படைப்புகளில்  அருமையான ஒன்று  நிர்வாண மஞ்சரி, பன்னிரண்டு ஸ்லோகங்கள்கொண்டது.  பெயரைப் பார்த்து  நெளியவேண்டாம். மஞ்சள் சமாச்சாரம் இல்லை இது. நிர்வாணம் என்றால் நமது புத்தியில் ஆடையற்ற ஒரு உருவம் தெரிகிறதே அது தப்பு.  நிர்வாணம் என்றால் ஒன்றுமில்லாத, அதாவது பற்றற்ற நிலை.  மோக்ஷத்துக்கு ஏற்ற மனோநிலை. அது சம்பந்தமாக குட்டி குட்டி  ஸ்லோகங்கள் .
 
1. अहं न अमरो नैव मार्त्यो न दैत्यो,   न गन्धर्व यक्ष पिशाच प्रभेदः।   पुमान् नैव न स्त्री नैव शण्ड,   प्रकृष्ट प्रकाश स्वरूप शिवोऽहम्। 1  

Aham na amaro naiva marthyo na daithyo, Na Gandharva Yaksha, pisacha prabhedha, Pumanniva na sthree naiva shanda, Prakrushta prakasa swaroopa Shivoham

அஹம் நாமரோ நைவ மர்த்யோ ந தை3த்யோ    ந க3ந்த4ர்வ க்ஷ: பிசாச ப்ரபே4த3: | புமான் நைவ ந ஸ்த்ரீ  நைவ ஷண்ட3:  ப்ரக்ருஷ்ட ப்ரகாச ஸ்வரூப: சிவோ(அ)ஹம் ||                           1

நான்  யாரென்று எண்ணி  எண்ணி நீ பார்க்கிறாய்?  நான்  ஒரு தேவன்  என்றா?  நான் தேவன் அல்ல, மனிதனும் அல்ல, அஸுரனும் அல்ல, கந்தர்வன், ராக்ஷஸன், பிசாசம் என்கிற வகுப்பில் சேர்ந்தவனும் அல்ல, ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல,  அலியும் அல்ல. உத்தமமான ஞானத்தையே ஸ்வரூபமாயுடைய சிவ (மங்கள) ஸ்வரூபியான பரப்பிரஹ்மமே நான்.
எனக்கு  உருவம் உண்டென்றால் உண்டு, இல்லையென்றால் அது இல்லை.  
 என்னை சிவன் என்பார்கள். 

2  अहं नैव बालो युव नैव वृद्धो,  न वर्णी न ब्रह्मचारी न गृहस्थः।  वन्सधोभी नाहं संशुद्य धर्म,   जगज्जन्म नैसैकहेतु शिवोऽहम्। 2  

Aham naiva balo, yuva naïva vrudho, Na varni , na brahmachari na Grahastha, Vansdhobhi naham sansrudhya a yasa dharma, Jaga jjanma nasaika hethu Shivoham.    2

 அஹம் நைவ பா2லோ யுவா நைவ வ்ருத்3தோ4   ந வர்ணீ ந ச ப்3ரஹ்மசா  ந  க்2ருஹஸ்த2: | வநஸ்தோ3(அ)பி நாஹம் ந சங்சருத்ய  த4ர்மா  ஜகஜ்ஜந்ம நாசைக ஹேது: சிவோ(அ)ஹம் ||  2

அப்படியென்றால்  நீ  ஒரு சிறுவனா என்றால் இல்லை ;நான் பாலனும் அல்ல. யுவனும்  அல்ல. கிழவனும் அல்ல, (பிராஹ்மண க்ஷத்திரிய வைசிய சூத்திரர் என்கிற நான்கு) வர்ணங்களில் எதையும்  சேர்ந்தவனுமல்ல, (பிரஹ்மசாரீ, கிருஹஸ்தன். வானப்பிரஸ்தன் ஸன்னியாஸி என்கிற நான்கு ஆசிரமங்களில்)  எதுவும் இல்லாதவன்.  எல்லாக் கர்மாக்களையும் விட்ட யோகியும்  அல்ல. பிரபஞ்சத்தின்   சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், அது தான் , ஆக்கல் காத்தல்  அழித்தல் மூன்றுக்கும் ஒரே காரணமாயிருக்கிற மங்கள ரூபியான பரப் பிரஹ்மம்  என்று ஒருவனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?  நான் தான் ஐயா அது.   என்னை சிவன் என்பார்கள். 

अहं नैव मेयस्थिरो भूता माया,  तद्वैक्षितुम माम् प्रक्रिया स्थुपय।  समस्लीष्टको तार्यो अप्याध्वितीया,  सदा अथिन्द्रिय सर्व रूप शिवोऽहम्। 3  

Aham naïvameyasthiro bhoota maya, Thadaivekshithum maam pradhangaasthupaya, Samaslishta kayo thரே yo apyaadhwitheeya,
Sada athindriya sarva roopa shivoham.  3

அஹம் நைவ மேயஸ் – தி2ரோபூ4த - மாயா,  ததை2வேக்ஷிதும் மாம் ப்ருத2ங் - நாஸ்த்யுபாய்: | ஸமாச்லிஷ்ட - காய - த்ரயோ(அ)ப்யத்3விதீய:   ஸதா3(அ)தீந்த்3ரிய: ஸர்வரூப: சிவோ(அ)ஹம் ||     3

நான் வேத சாஸ்த்ர  பிரமாணங்களினால் அறியக்கூடியவன் அல்ல, மாயையினால் மறைக்கப்பட்டவனும் இல்லை. என்னை அறிவதற்கு வேறு தனியாக உபாயம் கிடையாது. ஸ்தூலம், ஸூக்ஷ்மம், காரணம் என்கிற மூன்று சரீரங்களால் நன்கு சூழப்பட்டவனாயிருந்தபோதிலும், இரண்டாவதென்பது இல்லாததாய் எப்பொழுதும் இந்திரியங்களுக்கு எட்டாததாய் எல்லா வஸ்து ஸ்வரூபமாக இருக்கும் மங்கள ஸ்வரூபியான பரப்பிரஹ்மமே நான். புரிகிறதா. இல்லையென்றால் திரும்ப திரும்ப படித்து யோசி. நான் யாரென்று புரிகிறதா? 
 என்னை சிவன் என்பார்கள். 

अहं नैव मन्तः न गन्ता न वक्ता,  न कर्ता न भोक्ता न मुक्ता आश्रमस्थाः।   यदाहं मनो वृत्ति भेद स्वरूप,  स्थधा सर्ववृत्ति प्रदीपा शिवोऽहम्। 4  

Aham naiva mantha na gantha na vaktha, Na kartha , na bhoktha, na muktha asramastha,Yadaaham mano vruthi bheda swaroopa,
Sthadha sarva vuthi pradheepa, shivoham.  4

அஹம் நைவ மந்தா ந க3ந்தா ந வக்தா   ந கர்தா ந போ4க்தா ந முக்தாச்ரமஸ்த2: |யதா2(அ)ஹம் மநோவ்ருத்தி பே4த2 ஸ்வரூப:   ஸ்யதா  ஸர்வவ்ருத்தி ப்ரதீ3ப: சிவோ(அ)ஹம் ||                            4

நான் (மனஸினால்) யோசிப்பவன் இல்லை,  எங்கும் காலால் அலைந்து திரிபவனும் இல்லை.  பொட்டுக்கூடை  பேச்சு எவரிடமும் பேசுபவன் கிடையாது. ஐம்புலன்களால்  காரியம் செய்பவன் இல்லை.  உலகம் அளிக்கும் சுக போகங்களை அனுபவிப்பவனும் கிடையாது . நான் ஸ்வதந்திரன், எனக்கு எந்த சொந்த பந்தம், , ஒட்டு உறவு  பற்று பாசம் எதுவும் இல்லாத ஒருவன்.   அதை தான் ஸம்ஸார பந்தத்திலிருந்து  விடுபட்டவன் என்று சொல்வது. அந்த நிலையில் உள்ளவன் நான். ம் அல்ல, எப்படி நான் மனஸினுடைய விருத்திகளின் பிரதிபலிப்பாக காட்சி யளிப்பவன்  என்றாலும்  எல்லா விருத்திகளையும்  என் கட்டுப்பாட்டால் பிரகாசிக்கும்படிச் செய்யும் வெளிச்சமாயுள்ள மங்கள ஸ்வரூபமான பரப்பிரஹ்ம மாகவும் அறியப்படுபவன். என்னை சிவன் என்பார்கள். 

न मेय लोक यत्र प्रवाहा प्रवृत्ति,  र्‌णमेय बन्धबुद्धा दूरीहा निवृत्ति।  प्रवृत्ति निवृत्तस्य चित्तस्य वृत्ति,  र्यथास्थान्वहम् तथ स्वरूप शिवोऽहम्। 5  

Na mey loka yathra pravaha pravruthy, Rna mey bandhabhuddha dureeha nivurthy, Pravuthy nivurthasya chithasya vruthy, Ryathasthanvaham thathswaroopa shivoham.  5

மே லோக யாத்ரா ப்ரவாஹ ப்ரவ்ருத்தி:  ந மே ப3ந்த4 – பு3த்2த்4யா து3ரீஹா நிவ்ருத்தி: | ப்ரவ்ருத்திர் நிவ்ருத்த்யா(அ)ஸ்ய சித்தஸ்ய வ்ருத்திர்   யதஸ்த்வந்வஹம் தத்ஸ்வரூப: சிவோ(அ)ஹம் ||    5

 எனக்கு உலகங்கள் சகலத்தையும் இணைக்கும் காரியமோ, எண்ணமோ இல்லை. அவசியமும் எதுவும் இல்லை. என் சிந்தனையை, மனதை ஆக்கிரமிக்க  காத்திருக்கும்  தீய  எண்ணங்களோ, சுயநல  சிந்தனைகளோ எதுவும் இல்லை. கிட்டவே நெருங்காது.  என் மனம் எதில்  என்றால் காரிய காரணங்களுக்கு அப்பால், ஆதி அந்தம், தோற்றம் முடிவு  எல்லாவற்றையும்  கடந்த  சர்வ வியாபி.  அரூபமாக சாஸ்வதமாக  உள்ள  மங்கள ஸ்வரூபியான பரப்பிரஹ்மம்.
 என்னை சிவன் என்பார்கள். 

निधानं यदा ज्ञान कर्मस्वस्य कार्य,   विन यस्य सात् व स्वतो नैव भूति। यध्यान्तमध्यम् अन्तरालान्तरा,  प्रकाशात्मकम् स्यात् देवहं अस्मि। 6  

Nidhanam yada jnana karyasya karya,  Vina yasya sathvam swatho naiva bhathi, Yadhyantha madhya antharalantharala,
Prakasathmakam syatha devaham asmi.    6

நிதா3நம் யத3ஜ்ஞாந - கார்யஸ்ய கார்யம்  விநா யஸ்ய ஸத்த்வம் ஸ்வதோ நைவ பா4தி | யதா3த்4யந்த மத்4யாந்தராளாந்தராள   ப்ரகாசாத்மகம் ஸ்யாத் ததே3வாஹமஸ்மி ||    6

நம்மடைய  அறியாமையால், அஞ்ஞானத்தால், அவதிப்படுகிறோம். எளிதில் புலன்களின் ஆதிக்கத்துக்கும் உலக மாயைக்கும் அடிமையாகிறோம்.  இப்படி  எந்த உபாதையும் இல்லாமல் இருக்க முடியுமானால் ஞான மார்க்கத்தில் புக வேண்டும்.  இடது இதெல்லாம் கடந்ததோ, எதை  மாயையோ, ஈர்ப்போ  நெருங்காதோ,  எது காரிய  காரணங்களை கடந்ததோ,  எது எல்லாம் தானாகவே  காண்கிறதோ, அந்த ப்ரம்ம ஸ்வருபத்தை புரிந்து கொண்டால் அது நான் தான். எது ஞான ப்ரகாசமோ அது நான் ப்ரம்மம். 
 என்னை சிவன் என்பார்கள். 

यथोहम् न बुद्धिर् न मेय कार्यसिद्धि,   यथोनामङ्कम् न मेय लिङ्गभंगम्।  हृद् आकास वर्ति गाथाङ्ग त्रयार्थि,  सदा चिदानन्द मूर्॒ति शिवोऽहम्। 7  

Yathoham na budhir na mey karya sidhi, Yatho nahamangam na mey  linga bhangam, Hrudhakasa varthi , gathanga thrayarthi,
Sada Sachidananda murthy Shivoham.   7

யதோ(அ)ஹம் ந பு2த்2தி4ர் ந மே கார்ய ஸித்3தி4: யதோ நாஹமங்க3ம் ந மே லிங்க3 ப4ங்க2: | 
ஹ்ருதா3காசவர்தீ க3தாங்க3த்ரயார்தி:    ஸதா3 ஸச்சிதாநந்த மூர்தி: சிவோ(அ)ஹம் ||     

நான்  அறிவோ,  புத்தியோ  இல்லை.   எனக்கு என்று எந்த கர்மம், காரியமும் இல்லை.  நான் சரீரமல்லவாதலால்   பூத  ஸூக்ஷ்ம சரீரத்திற்கு ஏற்படும் கெடுதல்  அவஸ்தை எதுவும்  எனக்கு இல்லை. ஹ்ருதயாகாசத்தில் எப்பொழுதும் இருப்பதாய் (ஸ்தூலம் ஸூக்ஷ்மம் காரணம் என்ற) மூன்று சரீரங்களினுடைய துன்பத்திலிருந்து விலகினதாய் ஸச்சிதானந்த ஸ்வ ரூபமாக இருக்கும் என்னை,  மங்கள ரூபியான பரப் பிரஹ்மம் என்பார்கள்.  மேலும் என்னை சதானந்தமான  சிவன் என்பார்கள். 

यदासीद्विलसाद् विकारम् जगद्ध,   द्विकाराश्रयम् न द्वैत्यथ्स्यथ।  मन बुद्धिः चित्ताहमकर मूर्॒ति,  प्रवृत्तिर्यथास्याथ देवहं अस्मि। 8  

Yadaaseedvilasad vikaram jagadha, Dwikarasrayam naa dwithyathwath syath, Mano budhi chithahamakara murthy,
Pravruthiryatha syatha devaham asmi.           

யதா3ஸீத்3 விலாஸாத்3 - விகாரோ ஜக3த்3- யத்3 விகாராச்ரயோ நாத்3விதீயத்வத: ஸ்யாத் | 
மநோ பு2த்தி4 சித்தாஹமாகார வ்ருத்தி   ப்ரவ்ருத்திர் யத: ஸ்யாத் ததே3வாஹமஸ்மி ||   8

எது விஸிக்கும் போது (மலர்வதினால்) பிரபஞ்சமென்ற மாறுதலாக மாறியதோ,   அதே சமயம் எது தனக்கு இரண்டாவதாக எதுவும் இல்லாததோ,  மாற்றம் ஒன்றும் அடையாததோ, எதனால் மனஸ் புத்தி சித்தம் அஹங்காரம் என்று பிரிவுபட்டுள்ள அந்தக்கரண விருத்திகளுக்கு சம்பந்தமில்லாத  பற்றற்றதோ, அதுவே நான்.  ப்ரம்மஸ்வரூபம். 
என்னை சிவன் என்பார்கள்  

यदन्तरबहिर्व्यापकं नित्य शुद्धम्,  यदेकं सदा चिदानन्द काँदम्।  यथास्थूला सुष्क्रम् प्रपञ्चस्य भानम्,  यथास्थः प्रसूथिष्ठ देवहँ अस्मि। 9  

Yadantharbahirvyapakam nithya shudham,Yadekam sada sachidananda kandam, Yatha sthoola sukshma prapanchasya bhanam,
Yathasthat prasoothistha devahamasmi.  
  
யத3ந்தர் – ப3ஹிர் வ்யாபகம் நித்ய சுத்3த4ம்  யதே3கம் ஸதா4 ஸச்சிதாநந்த3 கந்த3ம் | யத: ஸ்தூ2ல ஸூக்ஷ்ம ப்ரபஞ்சஸ்ய பா4நம்  யதஸ்தத் ப்ரஸூதிஸ் – ததே3வாஹமஸ்மி ||                            9

ஸ்படிகம் தன்னுளே துவுமில்லாதது  எதையும் அப்படியே பிரதிபலிக்கும்  உள்ளேயும் வெளியேயும்,அதாவது அகமும்  புறமும் பரிசுத்தமாக தளிவாகஇருப்பது.  நான் எப்போதும்  எல்லோரிடத்தும்,எதனிடத்தும்  ஒன்றாகவே,அதனுள் இருப்பவன். சத்தாகவும்,  சித்தாகவும், ஆனந்தமாயுமுளளதாலும் ,எதனிடத்திலிருந்து  பிரபஞ்சம்  உருவானதோ  அந்த  சதானந்த பரப்பிரம்மம்.  என்னை சிவன் என்பார்கள்.

यदर्केन्दु विध्वत् प्रभा जाल माला,  विलासपदं यथ्स्व भेदाधि शून्यम्।  समस्तं जगद्यस्य पदाथ्‍मकम् स्य,ध्याथा शक्ति भानम् तदेवहँ अस्मि। 10 

Yadarkendu vidhwat  prabha jala maala, Vilasapadam yathswa bhedhadhi soonyam, Samastham jagdyasya padathmakam sya,
Dhyatha shakthi bhanam thadevahamasmi.  10

யத3ர்கேந்து3 வித்3யுத் ப்ரபா4 ஜால மாலா   விலாஸாஸ்பத3ம் யத் ஸ்வபே4தா3தி3 சூந்யம் | 
ஸமஸ்தம் ஜகத் யஸ்ய பாதா3த்மகம் ஸ்யாத்   யத: சக்திபா4நம் ததே3வாஹமஸ்மி ||  10

 எது ஸூர்யன் சந்திரன் மின்னல் போன்ற  ஒளிக்கு காரணமோ,  எது எதனிடத்திலும்  பேதம் இன்றி,அபேதமாக உள்ளதோ, எது தன்னுள் சகலத்தையும்  அடக்கமாக கொண்டதோ,  எது  எதனிடத்திலும்  சம்பந்தமில்லாமல் தனித்து காண்கிறதோ, அந்த  பரப்பிரம்மம் தான்  நான். என்னை சிவன் என்பார்கள்.
 
यथा काल मूर्तिर्भिभेति प्रकाशम्,  यथाऽश्चित बुद्धिन्द्रियाणां विलासः।  हरिब्रह्म रुद्रेन्द्र चन्द्राधीनाम्,  प्रकाशो यथा स्यात् देवहँ अस्मि। 11  

Yatha kala moorthir bhibhethi  prakamam,  Yathaschitha budhindriyanam vilasa, Hari brahma rudrendra chandradheenaam,
Prakaso yatha syatha devahamasmi.   11

யத: கால ம்ருத்யுர் பி3பே4தி ப்ரகாமம்  யதச்சித்த பு3த்3தீ4ந்த்ரியாணாம் விலாஸ: |  ஹரி ப்4ரஹ்ம ருத்3ரேந்த்ர சந்த்3ராதி3 நாம  ப்ரகாசோ யத: ஸ்யாத் ததே3வாஹமஸ்மி ||  11

எதனிடம் காலமிருத்யு   கூட அஞ்சுகிறதோ , எதனால் சித்தம் புத்தி இந்திரியங்கள் பிரகாசம் பெறுகிறதோ, எதனால்  விஷ்ணு பிரஹ்மா, ருத்ரன் இந்திரன் சந்திரன் முதலானவர்களும்  ஞானப்பிரகாசம்  பெறுகிறார்களோ, அந்த  பிராமம் நான் தான். என்னை சிவன் என்பார்கள். 

यदाकाशाद् सर्वगं शान्त रूपम्,  परम ज्योतिरेकाकार शून्यम् वरेण्यम्।  यदन्तः शून्यम् परम् शङ्कराख्यम्,  यदन्तर विभavyं तदेवहं अस्मि। 12

Yad akasavad sarvagam, Shantha roopam, Parama jyothiraakara soonyam varenyam, Yadad antha soonyam param, Shankarakhyam,
Yadanthar vibhavyam, tadhevaha masmi.    
    
யதா3காசவத் ஸர்வக3ம் சாந்த ரூபம் பரம் ஜ்யோதிராகார சூந்யம் வரேண்யம் | யதா3த்3யந்த சூந்யம் பரம் சங்கராக்3யம்
யத3ந்தர் விபா4வ்யம் ததேவாஹமஸ்மி ||    12

எது ஆகாசம் போல எல்லாவற்றிலும் வியாபித்துக்கொண்ட ஸ்வரூபமோ, பரஞ்சோதியோ,  போற்றத்தக்கதாகவுள்ளதோ, எது ஆதி அந்தம் ஆற்றதோ, ப்ரபஞ்சத்துக்கே  க்ஷேமத்தைத் தருகிறதோ,.அந்த  சர்வ ப்ரம்மம் நான் தான்.  என்னை சிவன் என்பார்கள். 

Sivan Krishnan

unread,
Nov 1, 2025, 7:28:22 PM (12 days ago) Nov 1
to amrith...@googlegroups.com
வரதக்ஷணை பிசாசு.     நங்கநல்லூர்  J K  SIVAN  

நாம் இப்போது 21ம்  நூற்றாண்டில் இருக்கிறோம். ஆண்  பெண் இருவருமே சமம், ஒருத்தருக்கு மற்றவர்  தாழ்வில் லை என்பதை விட  பெண்களுக்கு தான்  அதிக  டிமாண்ட் உள்ள காலத்தில் வாழ்கிறோம். நூறு இருநூறு வருஷங்களுக்கு முன்பு  நிலைமை இப்படி இல்லை ஸார்.  

''பொம்மனாட்டிக்கு  படிப்பு எதுக்கு? 
பத்து பாத்திரம் தேய்ச்சு,. வீட்டிலே  அடங்கி ஒடுங்கி  எல்லோரையும் அரவனைச்சுண்டு பாந்தமா சமையல் வேலை சப் ஜாடா  தெரிஞ்சாலே போறும். பாடவும்  வேண் டாம் ஆடவும் வேண்டாம். கையெழுத்து போடக்கூட தெரிய வேண்டாம். கையிலே மசி வச்சு  ஒத்தடம் போட்டுக்குவா.'' 

ஒன்பது வயசிலேயே கல்யாணம் பண்ணவில்லை என்றாலே  ''அய்யய்யோ   என்ன இது. பொண்ணுக்கு வயசாகி  குதுரு மாறி,   ரெண்டு மூணு  வீட்டிலே  நிக்கிறதே, .எவன் கையிலேயாவது  பிடிச்சு கொடுக்க வேண்டாமோ?'' என்பார்கள்.  

முப்பது நாற்பது  வயசு வித்யாச  கிழடுகளுக்கு  ரெண்டாம் தாரம், மூன்றாம் தாரமாக  எத்தனையோ   சிறு குழந்தைகளை கல்யாணம் பண்ணி வைத்தார் கள். 

கூட்டுக் குடும்பத்தில்  இருபதுக்கு குறையாமல் உருப்படி களுக்கு  மூன்று வேளை  ஆகாரம். இட்டிலி, தோசை,, வடை,உப்மா, பொங்கல், பலகாரங்கள்,  பக்ஷணங்கள்  எல்லாமே  பண்ணத்  தெரிந்திருக்கவேண்டும் என்பது கட்டாயம். 

 வீட்டில்  ஊறுகாய்,வத்தல், அப்பளம், எல்லாம் அம்மி, கல்லுரல், நெல்லு குத்தும் உரல்,  மாவரைக்கும்  கல் இயந்திரம், இதுலே தான் சமையல் பண்ணனும். 
  
ஆத்தங்கரையில் குளிச்சுட்டு, துணி துவைச்சு பிழிந்து தோள்லே  போட்டுண்டு  ஈரப்புடவையோடு,  இடுப்பிலே  குடத்திலே குடிக்க  ஜலம் எடுத்துண்டு  விடிகாலம்பற  சீக்கிரம் வேலையை முடிக்கணும். 

புகை மலிந்த  மூன்று குமிழ்  களிமண் அடுப்பில், விறகு எரித்து,  ஊதாங் குழலில்  ஊதி அடுப்பெரித்து, பெரிய  பெரிய  தவலை அண்டா குண்டாக்களில் சாதம் வேக வைத்து உலை முடிந்து  தட்டால் மூடி  துணியைப் பிடித்து  சாய்த்து  கஞ்சி வடிக்கவேண்டும். காலில் கொட்டிக் கொண்டால் வைத்தியம் கிடையாது.

''சாதம் வடிக்கக் கூட தெரியாதா? மூதேவி''  என்று துடைப் பத்தால் மாமியார் அத்தை  அடிப்பதையும் வேறு  வாங்கி கொள்ளவேண்டும். 

கொல்லைப்புறம் புதர் காடு, அதில்  போய்  காய்கறிகள் பறித்து வரவேண்டும்.   பசு கன்னுக்குட்டிக்கு  வேளா வேளை   ஆகாரம் கொடுத்து, பால் கறந்து பால்  காய்ச்சி தயிர் ,அதைக் கடைந்து  வெண்ணை, அதைக் காய்ச்சி நெய் ... இப்படி   வாழ்ந்தவர்கள் நமது முன் னோர்கள் பாட்டிகள்.  

நிறைய பேர் சுமங்கலியாக போய்விட்டார்கள்.. எப்படி? கணவன்,மாமியார், மைத்துனன், நாத்தனார்  அடித்து  எலும்பு  முறிந்து,வெள்ளைக்காரன்  ஆஸ்பத்திரியில் என்ன ஆச்சு? என்று கேட்டால்  ''கால் தடுக்கி விழுந்து விட்டேன், பரண் மேல் இருந்து  இரும்பு இலுப்ப சட்டி, வெங்கலப்பானை ,  தலையில் விழுந்துட்டுது.  தெரியாம எரியற கொள்ளிக்கட்டை புடவை மேலே பட்டுடுத்து  என்று  எல்லாம்  பொய்  சொல்லி, மரண  வாக்குமூலம்   போலீசுக்கும் டாக்டருக்கும்கொடுத்து  மறைந்தவர்கள் .  தீர்க்க சுமங்கலிகள். 

எத்தனை குழந்தைகள்  அம்மாவை இளம் வயதிலேயே இழந்து வளர்ந்தவர்கள்.  மாற்றாந்தாய் கஷ்டத்தில் வளர்ந்தவர்கள்.    இப்படி எனக்கு தெரிந்தவர்கள் அநேகர்

  ''உங்கப்பன் என்ன பெரிசா   பண்ணி கிழிச்சுட்டான்?''    உனக்கு  மூணு வேளையும்  கொட்டிக்க மட்டும் கத்துக்  கொடுத்திருக்கா?  ஒரு வேலை தெரியலே  உனக்கு''  என்று  வாய்க்கு வாய்  நிர்க்கதியான 12-15 வயதுக்குள் ளான  மாட்டுப்  பெண்களை  அடித்து, மனதை உடைத் து,  துன்புறுத்தி, அவள் பெற்றோரிடமும் சொல்ல முடியா மல்,கணவன் ஆதரவும் இல்லாமல் ஆற்றில், கிணற்றில் மாண்டவர்கள். சுமங்கலிகள்!

ராஜாராம்  மோகன்ராய்  கர்சன் பிரபு  பிறந்தார்களோ இல்லையோ, அதற் கு முன்பு, அவர்கள் பதவிக்கு வந்து அதிகாரம் செலுத்தும் காலம் வரும் வரையிலும், சட்டம் அமுலுக்கு வரும் வரையும், அதற்கு அப்புறமும்  கணவன் இறந்தவுடன் அவன் உடலோடு   இளம் பெண் மனைவியையும் கட்டிப்போட்டு  எரித்தார்கள். .... தீர்க்க சுமங்கலிகள் . 

எங்கள் குடும்பத்தில் உடன் கட்டை ஏறியவர்களை  இன்னமும்  சுமங்கலிப் பெண்டுகள் பூஜையில் பேர் சொல்லி வணங்குகிறோம். புடவை அளிக்கி றோம்'',

புகுந்த வீட்டில் துன்பம் தாளாமல் மறைந்தவர்களை
 தவிர  பிறந்த வீட்டிலேயே  தன்னால் தங்கள்  பெற்றோர் களுக்கு  வரதட்சிணை பாரம் என்று  உணர்ந்த எத்த னை இளம் பெண்கள் உயிரை மாய்த்துக் கொண்டதும்  சரித்திரம். வீடு கடனில் முழுகுகிறது  நிலத்தின் மேல் கடன்,என்று  பண உதவி செய்த பலர்  அதற்கு பதிலாக  பெண்ணை சுவீகரித்து கடத்திச் சென்றும் இருக்கிறார் கள்... இதெல்லாம் சொல்லப்போனால் கண்ணீர் ஒன்று தான்  மிஞ்சும். 

''காமாட்சியை எப்போது கொண்டு விடட்டும் என்று  சம்பந்தி லெட்டர் போட்டுருக்கார்?''

''போஸ்ட் கார்டுலே பதில் எழுதிடு. காமாக்ஷி வந்தா மட்டும் போறாது.  பதினெட்டு  சவரன்  ரெட்டை வட சங்கிலி, ரெண்டு ஜோடி வளையல்,  போடறேன்னு   எங்களை ஏமாத்திட்டா விடமாட்டோம். அது முதல்லே  வந்தப்புறம் காமாக்ஷி இங்கே வரட்டும்''

''சுப்ரமணியா, உன் மாமனார் மாமியார் கிட்டே கறாரா சொல்லிட்டேன்.  இந்த தைக் குள்ளே  லட்சுமியை  நகை யோடு,நிலத்தோடு கொண்டு விடல்லேன்னா,  உனக்கு வேறே இடத்திலே  பொண்ணு நிச்யயமாகும் போல  இருக்கு.  லட்சுமி அம்மாவாத்திலேயே  இருக்கட்டும்'' 

.இப்படியும் நிகழ்ந்திருக்கிறது. வாழா வெட்டிகள் என்ற பெயரில்  எத்தனை  ஒரு பாவமும் அறியா இளம் பெண் கள்  அழுது அழுது மூலையில் அமர்ந்து மறைந்தி ருக்கி றார்கள் நமது சமுதாயத்தில்.

கணவனைச் சரியாக புரிந்து கொள்ளும் முன்பே, தெரிந்து கொள்ளும் முன்பே விதவையாக, தலை மொட்டையடிக்கப்பட்டு,  பழுப்பு, காவி, வெள்ளை  ஒற்றைப்புடவையோடு  ''ஆம்படையானை  முழுங்கியவள்'' என்று   பட்டப்பெயர் சுமந்து, சமூகத்தில் ஒரு அபசகுனமாக கருதப்பட்டு  வீட்டில் வேலை மட்டும் செய்வதற் கென்றே பல இளம்பெண்கள் வாழ்ந்து  உயிர்த் தியாகம் செய்தவர்கள். எத்தனையோ அத்தை கள்,பாட்டிகள் நான் இப்படி பார்த்திருக்கிறேன்.  

இப்படி  வரதக்ஷிணை  என்கிற  பேய் பிசாசைப் பற்றி  நிறைய  எழுதலாம் போலிருக்கிறது. நல்ல  வேளை ,ஒருவனுக்கு ஒருத்தி தான் தாரம்.. வரதட்சிணை வாங்கி னால் தண்டனை,பெண்களுக்கு படிப்பு,உத்யோகம், சம உரிமை,கிரிக்கெட்டில் கூட  உலக சாம்பியன்கள். பெரிய  டாக்டர்கள், ஜட்ஜ்கள், ப்ரொபஸர்கள், கம்பெனி முதலிகள், வக்கீல்கள் என்று சமூக நீதி அங்கீகாரம்   பெற்று வாழும் அனைத்து பெண்களுக்கும்  என் நமஸ் காரம்.  எல்லா பெண்களும் தெய்வங்கள். சந்தேகம் எனக்கு துளியும் இல்லை. நாம் அவர்களுக்கு   ரொம்பவே  நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.  

Sivan Krishnan

unread,
Nov 1, 2025, 7:28:23 PM (12 days ago) Nov 1
to amrith...@googlegroups.com

வேங்கடேச  மஹாத்மியம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

இன்னிக்கு  சனிக்கிழமை, அதோடு  ஏகாதசி வேறே.  பச்சைத் தண்ணி பல் மேலே  படக்கூடாது  என்று நிர்ஜல  ஏகாதசி விரதம் இருக்க ஆசை. பாழாய்ப்போன  உடம்பு  ஒத்துழைக்க வில்லையே  என் செய்வேன்  ஸ்ரீநிவாஸா. எல்லாம் உன் திருவிளையாடல் ,நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீ நினைத்தால் நான் மாறிவிட முடியுமா அப்பா நீயே  சொல்.''
அவன் குரல் நெஞ்சுக்குள் ஒலித்தது.

'' சிவா,நான்  ஏதோ அதிசயம் நிகழ்த்துபவன் என்றா  சொல்கிறாய். இல்லவே இல்லை.  என் மேல் பக்தி கொண்ட,நம்பிக்கை வைக்கும்  உங்களுக்கெல்லாம்  நான்  ஏதாவது செய்ய வேண்டாமா?, அது என் கடமை இல்லையா? தனது  கடமையை ஒருவன் செய்வது எப்படி அதிசயமாகும்?. செய்யாமல் இருந்தால் தான் அது அதிசயம்...

ஆம்  நூற்றுக்கு ஆயிரம்  மடங்கு  வேங்கடேசன் சொல்வது நியாயம். அவன் பெருமைக்கு,  புகழுக்கு, நாலு பேர் கைதட்ட காரியம் செய்பவன் அல்ல. வலது கை  செய்வது இடது கைக்கு கூட தெரியாதே அவன் காரியங்கள். இதோ ஒரு அற்புத விஷயம்.   இதை அதிசயம் என்று கூட  நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். அவன் மஹிமை, வெங்கடேச மஹாத்மியம் என்கிறேன்  இதை. படியுங்கள். 

எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு டாக்டர்  பாலாஜி, அவர் பெயரும் அவன் பெயர் தான். திருப்பதியில்  அரசாங்க ஆஸ்பத்திரியில் ஒரு நல்ல டாக்டர்.  திருப்பதியிலேயே இருந்தாலும் மலை ஏறி  அவன் கோவிலுக்கு  செல்லாதவர். மெய்ஞ்ஞானத்தை விட  விஞ்ஞானத்தின்  மனித சாமர்த்தியத்தின் நம்பிக்கை.   விரதம், உபவாசம்,  பக்தி  அருள், எல்லாம் கட்டுக்கதை, வீண்,  என நம்புபவர்.

ஒரு நாள் ஒரு கிழவி  6வயது பேரனை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரியில்  சேர்த்தாள் . பையன் மயக்க நிலையில்.  உடம்பு நெருப்பாக சுட்டது. மரணத்தின் வாசலில்  நிற்பவன்  டாக்டர் அவன்  இருந்த கட்டில் அருகே வந்து. அவனை கவனமாகப்  பரிசோதித்தார்.   எவ்வளவோ மருந்து ஊசி  போட்டும்  நான்கு ஐந்து மணி நேரம் ஆகியும்  ஜுரம் நிற்கவில்லை. பையன் பினாத்தினான்.  சாயந்திரம் ஐந்து  மணி  ஆச்சு.  பாட்டி அழுதுகொண்டு இருக்கிறாள்.  நீண்ட பெருமூச்சு விட்டு  தலையை அசைத்தார்   டாக்டர் பாலாஜி .

''பாட்டி  இனிமே ஒன்னும் பண்ண முடியாது. இன்னிக்கி  ராத்திரி இங்கே  இருக்கட்டும்.  நாளைக்கு  காலையில் டிஸ்சார்ஜ் பண்றேன்.  வீட்டுக்கு தூக்கிக் கொண்டு போயிடு.என்னாலே  முடிஞ்சதை செய்துட்டேன்'

பாட்டி  ஹோ வென்று கதறினாள். என் ஒரே பேரன். அவனை குடுக்க மாட்டேன். இதோ நேரே ஏழு மலையான் 
கிட்டேயே  போறேன் .அவனைக் கெஞ்சறேன். அவன் தான் காப்பாத்த முடியும் ''

டாக்டருக்கு எரிச்சல், ''பைத்தியம் மாதிரி உளறாதே பாட்டி, மருந்து விஞ்ஞானம் எல்லாம் பலன் கொடுக்கலேன்னா  வேறே எதுவும் பயன் தராது. பேசாமே டக்கிறது நடக்கட்டும்னு விட்டுடு. அவ்வளவு தான். மலைக்கு போறது கெஞ்சறது எல்லாம் பேத்தல் , கவைக்கு  உதவாத கதை. போ''

பாட்டி  பையனை ஆஸ்பத்திரியில்  ஜுரத்தோடு விட்டு விட்டு  நேரே ஓடி   ஒரு  பஸ்ஸில் மலை மேல்  சென்றாள் . ''கோவிந்தா கோவிந்தா''  என்று அவனை வழி முழுதும்  பிரார்த்தித்தாள் .

அப்போதெல்லாம் கூட்டம் கிடையாது,.நேரே சந்நிதிக்கு  முன்  நின்றாள்.எதிரே  கரிய  நெடுமால் சங்கு சக்ரத்தோடு  பட்டை நாமத்தோடு புன்முறுவலித்தான்.

'' நீ தானே என் பேரனை எனக்கு  கொடுத்தே, எதுக்கு  என்கிட்டேருந்து  என் பேரனை  பறிக்கிறே?. நான் என்ன தப்பு பண்ணினேன். அவனை எனக்கு கொடு பெருமாளே, வேங்கடேசா நீயே கதி ''  விழுந்து வணங்கினாள். வெகு நேரம் கண்ணீ ரோடு  வனை  பிரார்த்தித்தாள் . ஆஸ்பத்திரிக்கு  திரும்பி வந்தாள் . பையன் உடம்பு நெருப்பை விட சூடாக கொதித்தது. துவண்டு கிடந்தான். அங்கேயே  இரவு பையனோடு தங்கினாள் .

கீழே,  டாக்டர் பாலாஜி வழக்கம்போல் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் முன்  அறையில்  ,மறுநாள்  ஆபரேஷன்,வேறு  சில  பேஷண்ட்களுக்கு செய்ய வேண்டிய  மருத்துவம் பற்றி  சம்பந்தப்பட்ட குறிப்புகளை மறக்காமல்   ஒரு நோட் புக்கில்  எழுதிக் கொண்டிருந்தார்.  அவர் மனதில்  காலையில்  சாகப்போகிற பேரனோடு வந்த பாட்டி  ஞாபகம் வந்தது.

''பாவம் சின்ன பையன்.  என்ன செய்வது. சாகவேண்டிய  நேரம் வந்து  விட்டது. நான் என்னால் முடிந்ததை  செய்து விட்டேன் ''.... ஒரு பெரு மூச்சு..
'டப் டப்' கதவை தட்டும் சப்தம்.
'' யார் இந்த நேரம் இரவு பத்து மணிக்கு வந்து ஆஸ்பத்திரில என் அறைக் கதவை தட்டுவது?
 திறந்தார்.   எதிரே...
கருப்பாக,கம்பீரமாக, பரந்த விரிந்த கண்களில் கருணையோடு,  முகத்தில் புன்சிரிப்போடு, ஒரு சாதாரண வஸ்திரம் தோளில் தரித்து,   இருட்டில், கருப்பு முகத்தில் ,நெற்றியில், வெள்ளை பட்டை நாமத்தோடு,  சரியான நாட்டுப்புறம்.,.,.,  யார் இது...?
''டாக்டர்  எதுக்கு கவலைப்படறீங்க. பையன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே. ''
''யார் நீங்க, எப்படி  நான் அந்த பையனைப்  பத்தி நினைச்சது உங்களுக்கு தெரிஞ்சுது? பையனுக்கு உறவா?''
''டாக்டர்  நான் எல்லாருக்குமே உறவு.  மருந்து பலனளிக்காதபோது  நம்பிக்கை  உயிர் கொடுக்கும். .நீங்களே போய் பாருங்க''
டாக்டருக்கு  பேச்சு வரவில்லை.  வாய் திக்கியது. ஏதோ சொல்ல விழைந்தார். அதற்கு  இருளில் அந்த  மனிதர்  திரும்பி போய் விட்டார்.காணோம்.
டாக்டருக்கு இதுவரை இல்லாத  ஒரு படபடப்பு. இரவு பதினோரு மணி .  வீட்டுக்கு போகு முன்பு  மீண்டும்  ஆஸ்பத்திரியில்  அந்த  பையன் இருந்த  வார்டுக்கு அவனைப் பார் சென்றார்.  அந்த  பையன் இந்நேரம் செத்திருப்பானோ?  யார் அந்த உயரமான  பெரிய பெரும்  ஆள்? பையன் இருந்த கட்டிலுக்கு அருகே சென்றபோது அவருக்கு அதிர்ச்சி.  பையன் கட்டிலில் எழுது உட்கார்ந்திருந்தான். பாட்டி  இட்லி கொடுக்க அதை சாப்பிட்டு விட்டு   ''தண்ணி குடு பாட்டி ''  என  கேட்டுக்  கொண்டிருந்தான்.  டாக்டரைப் பார்த்து சிரித்தான்.  கிழவி கண்ணில்  ஆனந்தக் கண்ணீர். பெருமாள் வந்தார்  பையன் கண் திறந்தான் என்றாள் .
 
ஒன்றுமே புரியாமல்  நடுங்கிக்கொண்டு  டாக்டர் பாலாஜி  பையனை ஸ்டெதஸ் கோப்  வைத்து பரிசோத்தித்தார்.  உடம்பில் ஜூரமே காணோம். நாடி துடிப்பு சீராக  இருந்தது.  ஆஸ்பத்திரிக்கு வெளியே  ஓடினார்.  எங்கேயாவது அந்த கருப்பு  மனிதன் தென்படுவானோ? வாசலில் கேட்  காவல் காரன் ''டாக்டர் எதுக்கு ஓடிவரீங்க  என்ன வேணும்?''என்று கேட்டான். t
கருப்பா உயரமாக  நாமத்தோடு  இங்கே  யாராவது வந்தாங்களா?  இப்போ எங்கே?''
'யாருமே வரலீங்களே''
டாக்டர் பாலாஜி கண் நாலாபுறமும் சுழன்றது. ஆஸ்பத்திரி வாசலில்  ஒரு  பிறையில், உள்ளே  எப்போதும் இருக்கும்  கருப்பு  வெங்கடேச பெருமாள் சிலை தான் இருந்தது.  அதே புன்னகை, நாமம், ....  டாக்டரின் கைகள் சிரம் மேல்  உயர்ந்தன.  கண்களில் தானாகவே  கண்ணீர் பெருகியது..   மறுநாள்  சனிக்கிழமை.  நெற்றியில் நாமத்தோடு  கோவிந்தா கோவிந்தா என்று உரக்க சொல்லிக்கொண்டே  மஞ்சள் வேஷ்டியோடு ஒருவர் மலை ஏறிக்கொண்டிருந்தார்.  அட நம்ம டாக்டர் பாலாஜியா???

BALAJI.jpg

Sivan Krishnan

unread,
Nov 1, 2025, 7:28:23 PM (12 days ago) Nov 1
to amrith...@googlegroups.com
நாமதேவர்  - நங்கநல்லூர்  J K   SIVAN 

பாண்டுரங்கனை அறியாதவனுக்கு  பக்த விஜயம்  தெரியாது.   நாமதேவர்,துக்காராம், ஜனா, ஞானதேவர், போன்ற  பெயர்கள் ஏதோ  குமுதம்  ஆனந்த விகடன்  சிறு  கதைகளில் வரும் பாத்திரங்களாக தெரியும்.  

நாமதேவர் வளர்ந்தார், சிறந்த  விட்டல பக்தனாகவே திகழ்ந்தார்.  துணி  தைத்து விற்கும் அப்பா அம்மா அவருக்கு ஒரு நல்ல குடும்ப ஸ்திரீயை கல்யாணம் பண்ணி வைத்தார்கள்..அவருக்கு  ஒரு    ஆண் குழந்தையும் பிறந்தது.  குழந்தை பிறந்த  பன்னிரெண்டாம் நாள்  அவர்கள் குடும்ப வழக்கப்படி  பேர் சூட்டும்  விழா.  விட்டலனே நாமதேவர் குழந்தைக்கு ஒரு பரிசுடன்  வந்தான்.

நாமதேவர் அம்மா  கோனை, பாண்டுரங்கனோடு பலகாலம்  பழகியவன் அல்லவா. அந்த குடும்பமே  விட்டல பக்தர்கள் குடும்பம் அல்லவா? ஆகவே தான் கேட்டாள் . 

''விட்டலா, உன் பக்தன் நாமதேவன் இப்போது ஒரு சிசுவுக்கு அப்பா.  அதற்கு என்ன பெயர் வைப்பது என்று நீயே  சொல்லு?''

''என்ன யோசனை  உனக்கு ?  நாராயணன் என்ற என் பெயரையே  அந்த பிள்ளைக்கு சூட்டு.சந்தோஷமாக அவனைக் கொஞ்சி விளையாடு.'' என்றான்  விட்டலன்.

கோனைக்கு,  நாமதேவர் மனைவிக்கு  புடவை,  தாமாஜிக்கு,  நாமதேவருக்கு   வேஷ்டி,  துண்டு,குழந்தைக்கு  சொக்காய், தலைக்கு குல்லா எல்லாம் விட்டலன் பரிசு கொண்டுவந்து தந்தான்.

புண்யாஹவாசனம் சாஸ்த்ரோக்தமாக நடந்தது. பிராமணர்களுக்கு போஜனம்  தக்ஷிணை எல்லாம் அளித்தார்கள்.
கோனை  நாமதேவரைக் கூப்பிட்டு   '' நாமா,எங்களுக்கு  வயதாகி விட்டது. நீயோ  எப்போதும்  விட்டலனையே  ஸ்மரித்துக் கொண்டு  அவன் கோவிலிலேயே  பழியாக கிடக்கிறாய். உன்னைப்பற்றியோ, குடும்பத்தைப் பற்றியோ நினைப்பதே இல்லையே.   எவ்வளவுக்கெவ்வளவு பண்டரிநாதனை நீ நினைக்கிறாயோ, அவ்வளவுக்கவ்வளவு  ஏழ்மை, கஷ்ட ஜீவனம் இங்கே தொடர்கிறது. குடும்பம் நடக்கவேண்டாமா?  எதிலும் பட்டுக்கொள்ளாமல் இருக்கிறாயே,? மற்றவர்களை பார், குடும்பத்திலும் ஈடுபட்டு நாலு காசு சம்பாதித்து குடும்பமும் க்ஷேமமாக நடக்கிறது.  இங்கே குடும்பமே  அன்னம், ஆடைக்கு தடுமாறுகிறதே அப்பா, நீ ஏதாவது வேலை செயது  அன்றாட  ஜீவனத்துக்கு பணம் சம்பாதித்துக் கொண்டு வா'' என்று அனுப்பினாள் .

நாமதேவருக்கு ஒன்றுமே புரியவில்லை.  நேராக  பண்டரிபுர விட்டலன் எதிரே  போய் நின்றார்.

''விட்டலா  என் அம்மா சொன்னதை எல்லாம் உன்னிடம் சொல்கிறேன். என்னை ஏன் இப்படி  சம்சார சாகரத்தில் மூழ்கி துன்பப்பட வைக்கிறாய்.எங்கள் துயர் தீர்க்க மாட்டாயா? ஏன்  என்னை கைவிடுகிறாய்?

''நாமா, யார்  உன்னை கஷ்டப்படுத்துவது என்னிடம் சொல்?'' என்றான் பாண்டுரங்கன்  .நாமதேவரை கட்டி  அணைத்து  அவர் கண்ணீரை  துடைத்தான்.
''வேறு யார்? என் அம்மா தான். எனக்கு  உன் திருவடியைத் தவிர வேறு எதிலும் புத்தி போகவில்லையே. என் மீது கருணை வை. 
''நாமா நீ  என்னோடு இரு. நீயும் நானும் இணை  பிரியாதவர்கள். விளக்கும் ஒளியும் போல.  சர்க்கரையும் இனிப்பும்போல.''
என்னிடம்  உன்  நிலையை  சொல்லிவிட்டாயே,  இனி எனக்கு தானே  பொறுப்பு''

''விட்டலா, உன்  பேச்சும் சர்க்கரை போல் தான்  இனிக்கிறது. உன் நாமம்  என் நாவில் இருக்கும்  போது  எனக்கு வேறு  உலக    சிந்தனை  எதுவுமே இல்லையப்பா.  உன்னைப்பார்த்துக் கொண்டே இருந்தால் அதுவே போதும் எனக்கு'' என்கிறார்  நாமதேவர். 

பாண்டுரங்கன்  ருக்மணியிடம்,  பார்த்தாயா  ருக்மணி,  இந்த நாமா என்னை  உருவத்தோடு தான்  பார்க்கவேண்டுமாம். 
அவனுக்கு  வேதாந்தம் எல்லாம் சொன்னால் ஏறவில்லை.  திருப்தி இல்லையாம்.   நாம தேவரைக்  கட்டித் தழுவிக்கொண்டு  தனது இதயத்தோடு இணைத்துக் கொண்டான்  விட்டலன். 

''உன் வீட்டு நிலையை நீ சொல் நாமா?''

''விட்டலா  நீ  வைகுண்ட வாசி, நான் ஏழை. குடிசை  வாசி. உன் வீட்டில் அஷ்ட மா சித்தியும் உன் அடிமை.என் வீட்டி லோ எலிகள் தான் என்னோடு வாசம் செய்பவை.  நீ பட்டு பீதாம்பரம் தரிப்பவன்.  என் குழந்தைகள் கிழிசல் துணி யை சுற்றிக்கொண்டிருப்பவை.  நீ பார்க்கடலில் பாம்பணை மேல் படுப்பவன்.  என் வீட்டில்  கோரைப்  பாய்க்கே பஞ்சம்.  நீ தங்க தாம்பாளத்தில்  சாப்பிடுபவன் என்றால்  நான் இலைக் கிழிசலில் உண்பவன். உனக்கு  வைர வைடூர்ய கோமேதகம்   எல்லாம் சர்வ சாதாரணம்.. எனக்கோ உன் நாமம் ஒன்று தான் ஆபரணம்.நகைகள்.''

பாவம் .  நாம தேவரின் மனைவி  பரம சாது.   மாமியார்  கோனையிடம்  '' அம்மா ,ஒரு சத்புத்ரனைப்  பெற்று என்னிடம் தந்தீர்கள்.  இருக்கும் ஓரிரண்டு பழம் புடவைகளும்  நைந்து போய் கிழிந்து விட்டன.   பாதிநாள் பட்டினி. உங்களை எல்லாம் பணிந்து வணங்கி இங்கே வந்து ஏழ்மையில்  நாமெல்லாம் வாடுகிறோம் . இந்த குடும்பத்தில்  இனி சுபிக்ஷம் என்பது  கிடைக்காத ஒன்றாக இருக்கிறதே. என்ன செய்வது என்று வழியே தெரியவில்லையே '' என  அழுதாள்.  கிழவி கோனையும்  அழுதாள். 
அது பாண்டுரங்கனுக்கு தெரியாமல் போகுமா?  என்ன நடந்தது என்று அடுத்த பதிவில் அறிவோம்.

Sivan Krishnan

unread,
Nov 2, 2025, 7:06:19 PM (11 days ago) Nov 2
to amrith...@googlegroups.com

SWAMI VIVEKANANDA   ON  GITA  –   simplified by J K  Sivan
Swami Vivekananda  was at Ramakrishna Mutt,  at Alambazar, in  Calcutta in 1897.  Swamiji was training  many young men joining  the Mutt, taking vow to observe  Brahmacharya and Sannyâsa. He  took classes to teach them meditation and Yoga . What he explained to them about Gita is presented below ;

Gita is  a part of Mahâbhârata. There were more than one  Vyasa in vedhik period.  Bâdarâyana Vyasa or Dvaipâyana Vyasa  both  had the  title  ‘vyasa”,  any one who composed a new purana  was  entitled to be called Vyasa. Adhi Sankara wrote his commentaries known as bhashya, which made Gita popular.  Prior to that, there was a commentary by  Rishi Bodhâyana  which is not traceable.  There is a school of thought that  Adhi Shankara  was the author of Gita, who foisted it into the Mahabharatha. Again it is something unprovable.
As for Klrishna,  the Chhândogya Upanishad metions him as the son of Devaki, who received spiritual instructions from one Ghora, a Yogi. Mahabharatha says Krishna was the king of Dwârakâ; and in the Vishnu Purâna we find a description of Krishna playing with the Gopis. Again, in the Bhâgavata, the account of his Râsalilâ is detailed at length. In very ancient times in our country there was in vogue an Utsava called Madanotsava (celebration in honour of Cupid). That very thing was transformed into Dola and thrust upon the shoulders of Krishna. Who can be so bold as to assert that the Rasalila and other things connected with him were not similarly fastened upon him? I
n ancient times there was very little tendency in our country to find out truths by historical research. So any one could say what he thought best without substantiating it with proper facts and evidence. Another thing: in those ancient times there was very little hankering after name and fame in men. So it often happened that one man composed a book and made it pass current in the name of his Guru or of someone else. In such cases it is very hazardous for the investigator of historical facts to get at the truth. In ancient times they had no knowledge whatever of geography; so,  imagination ran riot. And so we meet with such fantastic creations of the brain as sweet-ocean, milk-ocean, clarified-butter-ocean, curd-ocean, etc! In the Puranas, we find one living ten thousand years, another a hundred thousand years! But the Vedas say, शतायुर्वै पुरुषः — “Man lives a hundred years.” Whom shall we follow here? So, to reach a correct conclusion in the case of Krishna is well-nigh impossible.

It is human nature to build round the real character of a great man all sorts of imaginary superhuman attributes. As regards Krishna the same must have happened, but it seems quite probable that he was a king. Quite probable I say, because in ancient times in our country it was chiefly the kings who exerted themselves most in the preaching of Brahma-Jnâna. Another point to be especially noted here is that whoever might have been the author of the Gita, we find its teachings the same as those in the whole of the Mahabharata. From this we can safely infer that in the age of the Mahabharata some great man arose and preached the Brahma-Jnâna in this new garb to the then existing society. Another fact comes to the fore that in the olden days, as one sect after another arose, there also came into existence and use among them one new scripture or another. It happened, too, that in the lapse of time both the sect and its scripture died out, or the sect ceased to exist but its scripture remained. Similarly, it was quite probable that the Gita was the scripture of such a sect which had embodied its high and noble ideas in this sacred book.

Now to the next point, bearing on the subject of the Kurukshetra War, no special evidence in support of it can be adduced.There of course was  a war fought between the Kurus and the Pandavas.  It is surprising that  there was a discussion about Jnâna, Bhakti, and Yoga on the battle-field of Kurukshethra,  where the huge army stood in battle array ready to fight, just waiting for the last signal to commence fighting. In such a circumstance, how can there be a written record of every word spoken between Krishna and Arjuna, in the din and turmoil of the battle-field?
There appears to be a thinking  that  the Kurukshetra War is only an allegory. it means the war which is constantly going on within man between the tendencies of good and evil  the  Kurukshethra war.
There is  enough ground of doubt as regards the historicity of Arjuna and others, and it is this: Shatapatha Brâhmana is a very ancient book. In it are mentioned somewhere all the names of those who were the performers of the Ashvamedha Yajna: but in those places there is not only no mention, but no hint even of the names of Arjuna and others, though it speaks of Janamejaya, the son of Parikshit who was a grandson of Arjuna. Yet in the Mahabharata and other books it is stated that Yudhishthira, Arjuna, and others celebrated the Ashvamedha sacrifice.In fact there is  no connection between these historical researches and our real aim, which is the knowledge that leads to the acquirement of Dharma. Even if the historicity of the whole thing is proved to be absolutely false today, it will not in the least be any loss to us. Then what is the use of so much historical research, you may ask. It has its use, because we have to get at the truth; it will not do for us to remain bound by wrong ideas born of ignorance. In this country people think very little of the importance of such inquiries. Many of the sects believe that in order to preach a good thing which may be beneficial to many, there is no harm in telling an untruth, if that helps such preaching, or in other words, the end justifies the means. Hence we find many of our Tantras beginning with, “Mahâdeva said to Pârvati”. But our duty should be to convince ourselves of the truth, to believe in truth only. Such is the power of superstition, or faith in old traditions without inquiry into its truth, that it keeps men bound hand and foot. . You have to keep your eye always fixed on truth only and shun all superstitions completely.

What is  there  in the Gita? If we study the Upanishads we notice, in wandering through the mazes of many irrelevant subjects, the sudden introduction of the discussion of a great truth, just as in the midst of a huge wilderness a traveller unexpectedly comes across here and there an exquisitely beautiful rose, with its leaves, thorns, roots, all entangled. Compared with that, the Gita is like these truths beautifully arranged together in their proper places — like a fine garland or a bouquet of the choicest flowers. The Upanishads deal elaborately with Shraddhâ in many places, but hardly mention Bhakti. In the Gita, on the other hand, the subject of Bhakti is not only again and again dealt with, but in it, the innate spirit of Bhakti has attained its culmination.

The main points discussed in the Gita.  distinguishes it from all preceding scriptures.  Though before its advent, Yoga, Jnana, Bhakti, etc. had each its strong adherents, they all quarrelled among themselves, each claiming superiority for his own chosen path; no one ever tried to seek for reconciliation among these different paths. It was the author of the Gita who for the first time tried to harmonise these. He took the best from what all the sects then existing had to offer and threaded them in the Gita. But even where Krishna failed to show a complete reconciliation (Samanvaya) among these warring sects, it was fully accomplished by Ramakrishna Paramahamsa in this nineteenth century.
Nishkâma Karma means work without desire or attachment. People nowadays understand what is meant by this in various ways. Some say what is implied by being unattached is to become purposeless. If that were its real meaning, then heartless brutes and the walls would be the best exponents of the performance of Nishkama Karma. Many others, again, give the example of Janaka, and wish themselves to be equally recognised as past masters in the practice of Nishkama Karma!  The true Nishkama Karmi (performer of work without desire) is neither to be like a brute, nor to be inert, nor heartless. He is not Tâmasika but of pure Sattva. His heart is so full of love and sympathy that he can embrace the whole world with his love. The world at large cannot generally comprehend his all-embracing love and sympathy.
The reconciliation of the different paths of Dharma, and work without desire or attachment — these are the two special characteristics of the Gita.


Sivan Krishnan

unread,
Nov 2, 2025, 7:06:19 PM (11 days ago) Nov 2
to amrith...@googlegroups.com
          
ஸூர்தாஸ்  -  நங்கநல்லூர் J K  SIVAN

பவ சாகர படகோட்டி

ஸூர்தாசருக்கு ஒரு சௌகர்யம்.  சுற்றியுள்ள மனிதர்களோ, உலகமோ கண்ணில் பட்டு தொந்தரவு செய்யாது.   தியானத்தை,  மனத்தை  கலைக்காது.இருண்ட வெளியுலகு என்றாலும் வெளிச்சமான உள்ளுலகம். அங்கு எல்லாமே
கண்ணைப் பறிக்கும் எழில்,  வளமை . அங்கே  எதுவும்  எல்லாமுமே பிருந்தாவனமாக காட்சி அளிக்கிறது. அங்கே விளையாடிக் கொண்டு அந்த கண்ணன் பயல் வேறு இருக்கிறானே! வேறு என்ன சுகம் வேண்டும்.? இப்படி ஊனக்கண்ணின்றி ஞானக்கண்ணோடு ஆனந்தமாக வாழ்ந்த ஸூர்தாஸரின் ஒரு பாடலை  இன்று ரசிப்போம்.

''கிருஷ்ணா,உன்னிடம்   ஒரே ஒரு வேண்டுகோள். நான் சுத்தமானவன் இல்லை. என் மனதில் எத்தனையோ கோணல் மாணல் எண்ணங்கள். விபரீதங்கள் உள்ளன.  நான் எவ்வளவோ தடுக்க முயற்சித்தும் எப்படியோ அவை  உள்ளே புகுந்து என்னை குடை கின்றன. உன்னிடம் அதை மறைக்க முடியாதே.  நீ தான் எதிலும் எங்கும் எப்போதும் நிறைந்தவனாயிற்றே. எதுவும்  என்னுள்ளேயே இருப்பவனாச்சே.  ஆகவே தான் உன்னை கெஞ்சிக் கேட்கிறேன்.  தயவு செய்து அதை எல்லாம் லக்ஷியம் பண்ணாதே.
உன்னை சமதர்ஸி என்பார்களே. நல்லது கெட்டது எல்லாம் ஒன்றே தானே உனக்கு. அப்படியே என்னையும் பார்த்துவிடு.
சாக்கடை கங்கை நீர் எல்லாமே ஒன்றாக கடலில் கலந்த பின் கங்கை எது, கழிவு நீர் எது? எல்லாம் சாகரம். நீ அப்படிப்பட்ட கருணா சாகரமல்லவா? நீ குடி புகுந்த பின் என் மனத்தில் கெட்டது எது? எல்லாமே நீயான  பின் எல்லாம் நல்லதாக மட்டுமே தானே இருக்க முடியும்!.

இரும்பு எல்லாமே ஒன்று தான். ஒன்று நம் வீட்டில் பூஜை அறையில் தொங்கும் விளக்கு சங்கிலி. இன்னொன்று ஆடு மாடு களை வெட்டும் கத்தி. ரெண்டையும் கொண்டு வந்து தங்கமாக்கும் மந்திரக் கல்லில் தேய்த்தால் ரெண்டுமே தங்கமாகி  விடுகிறது அல்லவா?. அதே போல் தான் அப்பா ,   என் மனதில் உள்ள அநேக தீய எண்ணங்களும் ஒரு சில நல்ல எண்ணங்களும்.    நீ வந்து குடி புகுந்த பின் எல்லாமே தங்க மயம். எல்லாமே உயர்ந்த உன் மீதான எண்ணம் ஆகிடுமே..

ஆகவே என் குறைகளை மன்னித்து என்னை உன் திருவடி நிழலில் எந்நேரமும் இருக்க அருள்புரிவாய். இன்னொன்றும்  கட்டாயம் உன்னைக் கேட்டு தான் ஆகவேண்டும். அது நிறைவேறும் வரை நான் உன்னை விடமாட்டேன்.

இதோ பார் என் ஆணவத்தால் என்னால் இந்த சம்சார சாகரத்தை கடக்க இயலாது. இந்த பவ சாகரத்தை நீல மேக சியாமளா நீ தான் நான் கடக்க உதவ வேண்டும். உன்னைத்  தவிர வேறு படகோட்டி யாரப்பா? நீ தேரையும்  ஓட்டுவாய் பாரையும் ஓட்டுவாய். படகு மட்டும் ஓட்டமாட்டாயா என்ன?. நான் தான் கேள்விப் பட்டேனே கண்டசாலா பாடி. ''ஆஹா இன்ப நிலாவினிலே...''. எத்தனை அழகாக படகோட்டினவனல்லவா நீ!

அந்த அற்புத சூர் தாஸ் பாடல் இது தான்:

प्रभु मेरे अवगुण चित ना धरो |
समदर्शी प्रभु नाम तिहारो, चाहो तो पार करो ||

एक लोहा पूजा मे राखत, एक घर बधिक परो |
सो दुविधा पारस नहीं देखत, कंचन करत खरो ||

एक नदिया एक नाल कहावत, मैलो नीर भरो |
जब मिलिके दोऊ एक बरन भये, सुरसरी नाम परो ||

एक माया एक ब्रह्म कहावत, सुर श्याम झगरो |
अबकी बेर मोही पार उतारो, नहि पन जात तरो |

Prabhu more avagun chit na dharo
samdarshi hai naam tiharo chahe to paar karo
ek nadiya ek naar kahave mailo neer bharo
jab dou mil ke ek baran bhaye sursari naam paryo
ek loha pooja mein raakhat ek ghar badhik paryo
paaras gun avagun nahi chitvat Kanchan karat kharo
ek maya  ek brahma kahave Sur Shyam jhagaro
abki ber mohi paar utaaro nahi pan jaat taryo

 

 

Sivan Krishnan

unread,
Nov 3, 2025, 11:54:49 PM (10 days ago) Nov 3
to amrith...@googlegroups.com
சிவா  தாத்தா கதைகள்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

ஆபத் சகாயன் 

குழந்தைகளே,  உங்களுக்கு  பஞ்ச பாண்டவர்களைப்  பற்றி நிறைய  சொல்லி இருக்கிறேன். திரௌபதி யார் என்று உங்களுக்குத்  தெரியும். பாண்டவர்கள் எப்படி சத்தியத்துக்கு கட்டுப்பட்டு  பன்னிரண்டு வருஷங்கள் வனவாசம் மேற்கொண்டு கஷ்டங்களை  எதிர் கொண்டார்கள் என்றும் தெரியும். அது சம்பந்தமாக ஒரு சின்ன கதை சொல்கிறேன். 

திரௌபதி பஞ்ச மகா கன்னிகைகளில் ஒருவள். அவளுக்கும்   கிருஷ்ணனுக்கும்  உண்டான  உறவு  பகவானுக்கும் ஒரு  பக்தைக்குமான பரிசுத்தமான ஒன்று ஆகும். அவள்   சாதாரணமாக நம்  போல் பிறந்தவள் அல்ல  யாகத்தீயில்  சகோதரன்  த்ருஷ்டத்யும்னனோடு அவதரித்தவள். துருபத ராஜா ,அவள்   கல்வி, கேள்விகளிலும் ஒழுக்கம், குடும்ப பாங்கு ஆகியவை அனைத்திலும்  தேர்ச்சி பெற உதவினான். 

த்ரோபதியின்  பக்தி பூரா  கிருஷ்ணனிடமே இருந்தது.  அவளை கிருஷ்ணனுக்கு  திருமணம் செய்து வைக்க துருபதனுக்கு எண்ணம்.  கிருஷ்ணன்  "திரௌபதி  என்றும் என்னுடைய  பிரியமான சகி. அவளை நான் மனைவியாக நினைத்துக்  கூட  பார்க்ககூட முடியாதே”  என்று  மறுத்து விட்டான்.

கிருஷ்ணனின் யோசனைப்படியே துருபதன் சுயம்வரம் நடத்தி அதில்  அர்ஜுனன் வெற்றிபெற்று  அவள் பாண்டவர்கள் மனைவியான விஷயம் பிற்பாடு ஒரு  கதை யாக எடுத்துகொள்ளலாம். திருதராஷ்ட்ரனுக்கு கண் இருந்தால்  ஒரு கண் வெண்ணை  ஒரு கண்  சுண்ணாம்பு  என்று சொல்லாம். 

பாண்டவர்களுக்கு  என்று ராஜ்யத்தை   பிரித்தபோது  ஹஸ்தினாபுரத்தை துரியோதனனுக்கும்  ஒன்றுமே  விளையாத வறண்ட பூமியான காண்டவ ப்ரஸ்தத்தை பாண்டவர்களுக்கும் பிரித்து கொடுத்தான். கிருஷ்ணனுக்கு  துரியோதனனின்  பங்கு இதில் உண்டு என்று தெரியும்.    ஆகவே தேவ  சிற்பி  மயனை  அனுப்பி  காண்டவப்ரஸ்தத்தை அழகிய  சோலை வனம் மிக்க  பச்சை பசேலென்ற வளமிக்க  இந்திர பிரஸ்தமாக மாற்றி அமைத்தான். எல்லாம்  திரௌபதியின் மேல் இருந்த
பாசத்தால்  தான்.  

ஒரு தடவை சுதர்சன சக்ரம் கிருஷ்ணனின்  ஒரு விரலை காயப்படுத்தி அதிலிருந்து  ரத்தம் வடிந்ததை கவனித்த திரௌபதி ஓடோடி வந்து  தன் புடவையைக்  கிழித்து கட்டு போட்டதாக கூட ஒரு சம்பவம் உண்டு. அதிலிருந்து தான் ராகி  எனும் சகோதர பாச நாள் உருவானது என்பார்கள். எதற்காக இதை  சொல்கிறேன் என்றால் அவளது பாசத்தையும் நேசத்தையும் விளக்கவே!!. 

பாண்டவர்களின் வளர்ச்சி புகழ் அனைத்தும் துரியோதனனை பொறாமை  தீயில் வாட்டியதன் காரணமாகத்தான் அவன் சகுனி மாமாவின் யோசனைப்படி பாண்டவர்களை சூதாட்டத்துக்கு அழைத்தது.  கிருஷ்ணனுக்கு சகுனியால் தான் கௌரவ வம்சமே அழியப்போவது  நன்றாக தெரியும்.  அவன்  மூலமே மகாபாரத போர் மூளப்போகிறது  என்பது மட்டுமல்ல. சகுனியின் தந்தையின்  கால் எலும்பினால்  செய்யப்பட்ட தாயக்கட்டை தான் அவன்  கேட்கும்  எண்களை தரப்போகிறது,   இதனால் தர்மன் தோல்வி நிச்சயம்  என்றும்  தெரியும். கவுரவர்  அழிவுக்கும் பாண்டவர் வெற்றிக்கும் முக்ய காரணம்  சகுனி  என்பதால்  கண்ணன் பொறுமையோடு  காத்திருந்தான்..

துரியோதன வெற்றியில்  மமதையோடு, வெறியாட்டத்தில் துச்சாதனனை அனுப்பி  தோல்வியுற்ற பாண்டவர்கள் மனைவி
திரௌபதியை  அலங்கோலமாக எல்லோரும் நிறைந்த  சபைக்கு  இழுத்து மானபங்கப்படுத்த செய்த  முயற்சி  தோற்றதற்கும் கிருஷ்ணனுக்கு திரௌபதி மேல் இருந்த  அளவற்ற  பாசத்தால் மட்டுமல்ல  அவளுக்கு கண்ணனிடம் இருந்த  பக்தியாலும் தான்.

அவளது பக்தியை  மெச்சிய திருதராஷ்ட்ரன்  "திரௌபதி, உனது பக்தியும் கணவன்மார் மீது  உள்ள பதிவ்ரதமும் எனக்கு  மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது உனக்கு இரண்டு வரம் தர வேண்டும்  என்று தோன்றுகிறது. கேளேன்!”  என்றான். என் கணவர்களது மேல் அங்கவஸ்தரத்தை  திருப்பிகொடு,  அவர்களது மகுடங்களை திருப்பிகொடு”  என்று  மட்டுமே கேட்டாள் த்ரௌபதி.  

வெந்த புண்ணில் வேலைப்  பாய்ச்சுவது  துரியோதனனிட மிருந்து வந்த வித்தை போல் இருக்கிறது. பாண்டவர்களிடம் அக்ஷய பாத்ரம் இருந்து அதன் மூலம் அன்றாடம் அவர்களும்  வனத்திலிருந்த அனைத்து மக்களுக்கும்  உணவு கிடைக்கிறது  என்று தெரிந்து, அனைவரும் உண்டு அந்த பாத்ரம் கழுவி வைக்கப்பட்டால் அவ்வளவு தான் அன்று உணவு என்றும் தெரிந்து,   கோபம் கொண்டு  சாபமிடும்  துர்வாசரை தன்னுடைய 60000 சிஷ்யர்களோடு பாண்டவர்களைப்  போய்  மதியத்துக்கு மேல் போஜனம் அளிக்குமாறு  கேட்க வைத்தான்.  அவனுடைய துரதிர்ஷ்டம் அன்று கிருஷ்ணனுடைய  பிறந்தநாள். கிருஷ்ணன் பாண்டவர்களை அன்று  சந்திப்பது வழக்கம். துர்வாசர் தனது 60000 சிஷ்யர்களோடு ஸ்நானம் செய்து போஜனம் அருந்த வருவதற்குள்  கிருஷ்ணன்  அக்ஷய பாத்ரத்தில் ஒட்டிகொண்டிருந்த ஒருதுண்டு கீரையின்  மூலம் தன் பசியாறி துர்வாசரும் அவர் சிஷ்யர்களும் பசியறியாதபடி  பண்ணினது   ஏற்கனவே சொன்ன கதை தான்.  
இதெல்லாம் திரௌபதிக்காக கிருஷ்ணன் செய்த ஆபத்சகாயம் தானே!!      

 

Sivan Krishnan

unread,
Nov 3, 2025, 11:54:49 PM (10 days ago) Nov 3
to amrith...@googlegroups.com
SWAMI VIVEKANANDA   ON  GITA  -   simplified by J K  Sivan  

Sivan Krishnan

unread,
Nov 4, 2025, 11:49:45 PM (9 days ago) Nov 4
to amrith...@googlegroups.com

விமர்சனம் -   நங்கநல்லூர்  J K  SIVAN 

இந்த  உலகத்தில்  எல்லோரையும்  திருப்தி படுத்துவது என்பது  நாய் வாலை நிமிர்த்தும் முயற்சி. எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையைச்  சொல்லி ஆரம்பிக்கிறேன். 

ஒரு வயதான  அப்பா  ஒரு சின்ன  பையன் ஒரு கழுதை.  மூவரும் நடந்து போகிறார்கள். பார்ப்பவர்களில்   சிலர்  ''இப்படி முட்டாள்களை எங்காவது பார்க்க முடியுமா?. நல்ல கழுதை இருக்கும்போது இருவரும் நடந்து போகிறார்களே. அதன் மீது ஏறி செல்லலாமே? இது கூடவா தெரியாது?''  என்று சிரித்தார்கள். ஆகவே  ரெண்டு பேரும்  கழுதை மேல் ஏறிக்கொண்டு சென்றார்கள்.  வழியில் இதைப் பார்த்த சிலர்  'சே  என்ன  க்ராதக  இரக்கமுள்ள  பாவிகள்.  பாவம் அந்த வாயில்லா பிராணி மேல் ரெண்டு  பேரும்  ஏறி செல்வதை விட  ஒருவர்  இறங்கி நடக்கலாமே  அதற்கும்கொஞ்சம் மூச்சு விட சௌகர்யமாக
இருக்கும்'' என்று ஏசினார்கள்.  

சரி  என்று  இருவரும்  அந்த கழுதையை  சுமந்து கொண்டு போனார்கள். 
தெருவில் இதைப் பார்த்தவர்கள்  சிரித்தார்கள்.  எவ்வளவு முட்டாள்கள் இந்த  ரெண்டு பேரும் , ''ஒரு நல்ல கழுதை இருக்கும்போது அதன் மேல் உட்கார்ந்து போகாமல் அதை இவர்கள் சுமந்து போகிறார்களே '' என்று   சொன்னார்கள்.  

ஆகவே  அப்பா  இறங்கி நடந்தான்.பையன் கழுதைமேல்.  ப்ரயாணம்தொடர்ந்தது. இதைப் பார்த்த சிலர்  ''சே  அந்த பையன் எவ்வளவு சுயநலமி, மஹா பாபி.  வயதான கிழவனை நடக்க விட்டு ஜம்மென்று    கழுதை மேல் சவாரி ஒரு கேடா அவனுக்கு?''என்று பையனை திட்டினார்கள்.  ஆகவே  பையன்  கீழே இறங்கி விட்டு கிழவனை கழுதையின் மேல் உட்கார்த்தி வைத்து விட்டு அவன் கூடவே நடந்தான்.  வெயில் சுள்ளென்று உரைத்தது.களைப்பு. அதோடு அவர்கள் பிரயாணம் தொடர்ந்தது.இதைப் பார்த்த சிலர்  ''அடேடே இது என்ன அக்கிரமம்.  இந்த சாகப்போகிற  கிழவனுக்கு உல்லாசம் அவசியமோ?  அந்த  இளைஞனை நடக்க விட்டு இவனுக்கு  என்ன  கழுதை சவாரி?'' கிழவன் குமரன் இருவரும் கழுதையோடு நடந்தார்கள்.ஒரு ஆற்றின்  மேல் பாலத்தில் செல்லும்போது இருவருக்கும்  ஒரு  யோசனை.  'சே  இந்த கழுதையால்  அல்லவோ நம் இருவருக்கும் இப்படி அபவாத பேச்சுகள்'  என்று கழுதையை உருட்டி  ஆற்றில் தள்ளி விட்டார்கள்...
உலகத்தில் எவரையும் திருப்திப்படுத்த  முடியவே முடியாது. பிறரது அபிப்ராயங்களை கேளுங்கள் அதை உள்வாங்கி யோசியுங்கள். அப்படியே  சத்யா பிரமாணமாக  எடுத்துக்கொண்டு  பின் பற்றவேண்டாம். ஒருமனிதன் சற்று குண்டாக இருந்தால் அவன் வியாதி பற்றி தெரியாமல் அதிகமாக  நன்றாக சாப்பிட்டு கொழுத்தவன்  என்பார்கள்.  ஒல்லியாக இருத்தால் பாவம்  வியாதிக்காரன்  என்ற பெயர்..நன்றாக ஆடை உடுத்தால்,  படாடோபம், டம்பம்  பீற்றிக்கொள்கிறான் என பெயர். படாடோபம் ஆடம்பரம் இல்லாம சாதாரண உடை அணிந்தால்  பாவம் பணமில்லை, நல்ல ஆடை வாங்க கூட வசதியில்லை போலிருக்கிறது  என்பார்கள்.  மனம் திறந்து பேசினால், என்ன கர்வம் பார், மனதை உடைக்கிற மாதிரி  தூக்கியெறிந்து பேசுகிறது.. அகம்பாவம். அதிகம்  வாயை திறக்காமல் பேசாமல் இருந்தால்  பயந்தான்கொள்ளி,  பேசக்  கூட பயப்படுகிறது. நாம்  நமது செயலில் வெற்றி பெற்றதை சொன்னால்,  திமிர்,  தனக்கு தான் எல்லாம் முடியும் என்று  தலைக்கனம். சுய தம்பட்டம்.  நமது முயற்சிகள் தோல்வி அடைந்தால்   இது ஒரு தோசி,  சோம்பேறி உருப்படாதவன்  எதை தொட்டாலும் விளங்காது.  சத்தியமாக உண்மையாக நடந்து கொண்டால் 'அப்பாவி, பிழைக்க தெரியாதவன்'' பட்டம். 

நாம்  எதைச் செய்தாலும், சொன்னாலும், நாலு வார்த்தை அதைப் பற்றி  விமர்சிக்க  என்றும் சிலர்  இருக்கிறார்கள். ஆகவே தான் திருப்ப சொல்கிறேன். நமது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் எது சரி என்று மனதில் படுகிறதோ, எது நமக்கு சந்தோஷம் தருமோ,  அதை தைரியமாக சொல்வோம்,செய்வோம்.  நமது கனவை நினைவாக்குவோம்.  மற்றவர் அபிப்ராயத்தை லக்ஷியமே  பண்ண வேண்டாம். பகவான் மேல் நம்பிக்கையோடு நல்லதையே  நினைத்து நல்லதையே செய்வோம். 

Sivan Krishnan

unread,
Nov 4, 2025, 11:49:46 PM (9 days ago) Nov 4
to amrith...@googlegroups.com

நாமதேவர்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

வறுமையின் உச்சிக்கு  போய்  வாடி வதங்கியது  நாமதேவர் குடும்பம்.  வயதான தாய் தந்தை.  பாண்டுரங்கன் நினைவின்றி வேறு  சிந்தனையுமில்லாத  குடும்பத்தோடு  ஒட்டாத  கணவன்.   அழுது கொண்டிருக்கும்  சிறு குழந்தைகள்.  அன்றாட உணவுக்கு வழியில்லை. மாற்று துணி இல்லாதவர்கள் உள்ள  குடும்பம். தொத்தல் குடிசை எப்போது விழுமோ என்ற பயம்.  இந்த நிர்க்கதியான நிலையில் நாமதேவர் மனைவி  ராஜாயி ,  மாமியார்  கோனையிடம்  வீட்டில்  பசி பட்டினி  வறுமை நிலைமையைக் கூறி கதறி தீர்த்து விட்டாள் .  
இவ்வாறு  நாமதேவர்  குடிசைக்குள்  அவர் மனைவி   கதறுவது  பண்டரி நாதன் ஆலயத்தில்  அவன் எதிரே நின்ற  நாமதேவர் காதில் மட்டும் விழவே இல்லை. 

இது இப்படி இருக்க, உச்சி வெய்யில் வேளையில்,   ஒரு  குதிரையின் மேல்  யாரோ  ஒரு   வியாபாரி  வெளியூரிலிருந்து  பந்தர்பூர் நோக்கி வந்து  கொண்டிருந்தான். அவன் மேல்  வெகு நேர  பிரயாண புழுதி  ,முகத்தில் களைப்பு,  வெய்யி லில் தாகத்தால் நா வறட்சி.   அவன் கண்ணில்  முதலில் பட்டது  நாமதேவர்  குடிசை.  அங்கே குதிரையை  நிறுத்தி,இறங்கி  வாசலில் வந்து அம்மா என்று கூப்பிட்டான்.  நாமதேவர் மனைவி  ராஜாயி வெளியே வந்தாள் . கண்களில் இன்னும்  கண்ணீர் மறையவில்லை.

''யார்  நீங்கள்  என்ன வேண்டும். உட்காருங்கள்'' என்று வாசலில் ஒரு  பாயைப் போட்டாள்.
வியாபாரி கேட்காமலேயே  ஒரு சொம்பு நிறைய குளிர்ந்த ஜலம்  கொண்டு வந்து தந்தாள். 'மடக் மடக்'  என்று அத்தனையும் தாகம் தீர குடித்தான். ஒரு ஆஸ்வாச பெருமூச்சு விட்டு அவளை வணங்கினான்.

''அம்மா  என் பெயர் கேசவ் சேத்.  நான் பண்டரிநாத பக்தர்  நாமதேவரை  மானசீக குருவாக ஏற்றவன்.  அவர் இந்த ஊரில்   எங்கே  வசிக்கிறார்?  அவர் பெரிய தர்மிஷ்டர்  எல்லோருக்கும் உதவுபவர்  என்கிறார்களே.  அவர்  வீட்டுக்கு போனால் அவரோடு பேசி  பண்டரிநாதன் மகிமைகளை கேட்டு ஏதாவது  பசிக்கும்   உணவு  கிடைக்குமா என்று தேடுகிறேன்.அவர் வீட்டு விலாசம் சொல்லி எங்கே  இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

''ஐயா,  நாம  தேவர்  என் கணவர். பாண்டுரங்கன் கோயிலுக்கு சென்றிருக்கிறார். வரும் நேரம். இங்கேயே  இருங்கள் சற்று நேரத்தில் வந்து விடுவார்.  இங்கே  அடிக்கடி  நிறைய  சாதுக்கள் விட்டல பக்தர்கள் வருவார்கள்.  சற்று நேரம் இருந்தால் ஏதாவது உணவு தயார் செய்து  உங்களுக்கு  அளிக்கிறேன்''

உள்ளே போக திரும்பினாள்  ராஜாயி  கண்கலங்கியது . ஒரு பருக்கை சாதமும் இல்லாத வீட்டில் விருந்தாளியா. பகவானே பாண்டுரங்கா  என்ன சோதனை இது? இப்போது நான் என்ன செய்வேன்?  எப்படி  இந்த  பக்தருக்கு உணவளிப்பேன் ?''
அதற்குள் அந்த வியாபாரி கூப்பிட்டான்.

''அம்மா  அம்மா  கொஞ்சம் இருங்கள்.... இந்த  ஊர் வரும்போது  பலர் பேசிக்  கொண்டிருந்தது காதில் விழுந்தது. நாமதேவர் ரொம்ப வறுமையில் வாடுகிறாராமே. வீட்டில்  உணவுக்கே  பஞ்சமாமே.. இது தான் நாமதேவர்  வீடு என்பதும் உங்கள்  நிலைமையும் உங்களை பார்க்கும்போதே அது  சரி என்று புரிகிறது.   இந்த  நிலையில்  பாவம் எப்படி  என்போன்ற  அதிதிகளுக்கும்  உணவளிப்பார்? . மனது இருந்தாலும் வசதி இருக்க வேண்டாமா?  நான்  ஒரு தங்க வைர ஆபரண வியாபாரி.  இதோ இந்த சாக்கு மூட்டையில்  நாமதேவருக்கு அன்பளிப்பாக  நான் கொண்டுவந்த தங்க காசுகள் இருக்கிறது.  ஒரு  மஹானைப் பார்க்க போகும் போது நான் எப்படி வெறும் கையனாக போக முடியும்? சொந்தக்காரர்கள், கல்யாணம், ஏதாவது  விழா  என்றாலும்  பழமாவது பரிசாவது எடுத்து செல்கிறோம். கோவிலுக்கு போனாலும் ஒரு முழம் பூவாவது வாங்கி செல்கிறோம் இல்லையா?நமது பண் பாடு அப்படி தானே.  ஆகவே  தயக்கம்  எதுவும் இல்லாமல் இந்த  சாக்கு மூட்டையை வீட்டுக்குள் சென்று ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள் அம்மா.  நாமதேவரிடம் எனது நமஸ்கரத்தோடு அதை சேர்ப்பியுங்கள். 

எனக்கு  இன்னொரு அவசரமான ஜோலி இருப்பதால் திரும்பி இந்த ஊர் வழியாக  மீண்டும்  வரும்போது கட்டாயம் 
 நாமதேவரைக்   கண்டு வணங்கி செல்கிறேன்''    
கேசவ் சேத்  குதிரை மேல் ஏறி சென்றுவிட்டான்.

உள்ளே  கனமான தங்க காசுகள் நிறைந்த சாக்கு மூட்டையை இழுத்து சென்ற ராஜாயி  ''பாண்டுரங்கா என்னே உன் கருணை. என் கணவர் சதா சர்வ காலமும் உன்னையே  நினைவில் கொண்ட பக்தர் என்பதால் எங்கள் வறுமையை தீர்க்க  நீ செய்த  ஏற்பாடா இது?''

ராஜாயி   முட்டையிலிருந்து  சில தங்கக்காசுகளை எடுத்துக்கொண்டு  பஜாருக்கு ஓடினாள்.  வீட்டுக்கு தேவையான  உணவுப் பொருள்களை  நிறைய வாங்கினாள் .  எல்லோருக்கும்  ஆடைகள் வாங்கினாள் .

இது நடந்த போது கோனை என்ற  கிழவி வீட்டில் இல்லை.  கோபமாக  விட்டலனுடன் சண்டை போட்டு  நாம தேவரை கோயிலிலிருந்து வீட்டுக்கு அழைத்து வர சென்றிருந்தாள்

கோவிலில்  என்ன நடந்தது என்று  அடுத்த பதிவில் அறிவோமா?

Sivan Krishnan

unread,
Nov 4, 2025, 11:49:46 PM (9 days ago) Nov 4
to amrith...@googlegroups.com
நாம தேவர்  -  நங்கநல்லூர்  J K  SIVAN

கடவுளோடு  பேச முடியுமா? கடவுளைப்  பார்க்க முடியுமா? இந்த கேள்வி ஆதி காலம் முதல் இன்று மாலை வரை கேட்கப்பட்டாலும் இதற்கு விடை.  'ஓ' முடியுமே'  என்பது தான்.  நீ பார்த்திருக்கிறாயா? என்று கேட்டால். ''பார்த்திருக்கிறேன்  என்று  பொய்  தான் சொல்ல வேண்டும். ஆனால்  கடவுளை நேரில் பார்த்து பேசிய பலர்  இருக்கிறார்கள். இருந்தார்கள். 

கோனை கோபமாக  பண்டரிநாதன் கோவிலுக்குள் சென்று அவன் எதிரில் நின்றாள்.  அவள் கோபமாக  தன்னோடு சண்டை போட வருகிறாள் என்று பாண்டுரங்கனுக்கு நன்றாக தெரியுமே.  

தன்னோடு இருந்த  நாமதேவரிடம்  '' நாமா  நீ என் பின்னால்  போய் நின்று கொள் '' என்று உத்தரவிட்டான் விட்டலன்.

''விட்டலா, என்ன  செய்கிறாய் நீ?   என்னைப்  பார்த்து பதில் சொல்.  என் மகன்  நாமா,   உன்மேல் எவ்வளவு கடலளவு பாசமும் பக்தியும்  கொண்டவன். வேறு ஒன்றுமே  அறியாதவன். அதனால் எங்கள் குடும்பம் படும்  கஷ்டத்தை கொஞ்சமாவது  நீ  உணர்கிறாயா?  குடும்ப நினைவே இல்லாமல்  உன்னையே நினைத்து இங்கே உன்னோடு அவன் 
 பழியாக கிடைப்பதால் அங்கே  நாங்கள் எல்லோரும்  பசி பட்டினியால் வாடுகிறோம். குடும்பம்  தத்தளிக்கிறது. அவனும் ஒரு சுகமும் அறியாதவனாக பரம தரித்ரனாக தானே  இருக்கிறான்? ஏன்?  உன்னைத் தவிர  வேறு எந்த சிந்தனையும் மனதில் இல்லாததால் தானே?
விட்டலா  நாமா, உன் காலையே கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறான்.  ஊரில் எல்லோரும் எங்களை பார்த்து நாமா உதவாக்கரை, என்று  சிரிக்கிறார்கள்.
''ஏன் அவன் மனதை அப்படி மாற்றினாய்?  அதனால் அவதிப்படுவது குடும்பத்தில் எல்லோருமே அல்லவா? நான் அறிந்தவரை உன்னைத்  தஞ்சம் அடைந்தவர்கள் எவருமே  குடும்பத்தை,  உலகத்தை,  தியாகம் பண்ணியவர்களாகவே  இருக்கிறார்கள். என் வீட்டில் நாமா மனைவி, குழந்தைகளைப் போய்ப்  பார். உடலில் உயிர்  ஒன்று தான் இன்னும் போகாமல் ஊசலாடிக்  கொண்டிருக்கிறது.  என் மகன் நாமாவை நீ பிடித்து வைத்திருப்பதால் நாங்கள் அனைவரும் பஞ்ச பரதேசிகளாகி விட்டோம் விட்டலா.  பத்து மாசம் சுமந்து பெற்ற  என் நாமாவை  என்னிடமிருந்து பிரித்து விட்டாயே. ஏன் இந்த பாரபக்ஷம் உனக்கு?.  சுதாமா  என்ற குசேலன் எங்களைப்  போன்ற நிலையில் இருந்தவன் உன்னைப்   பார்க்க துவாரகை  நடந்து வந்தவன் ஒரே ஒரு பிடி அவலை  மட்டுமே  கொண்டு  வந்தான். வேறு அவனிடம் எதுவும் இல்லை. அதற்கு பரிசாக அவனுக்கு நீ என்ன வெல்லாம்  அளித்தாய்?.  தங்க மாளிகை, வைர வைடூர்ய ஆபரணங்கள், எதேஷ்டமாக  ஆடை அணிகலன்கள், உணவுப் பொருள்கள் ...

ராமனாக இருந்தபோது  விபீஷணனுக்கு அருள் புரிந்தாய். திரௌபதிக்கு தக்க சமயத்தில் ஒரே ஒரு கீரையை  உண்டுவிட்டு  துர்வாசர், அவருடைய ஆயிரக்கணக்கான  சிஷ்யர்கள் எல்லோர் வயிற்றையும் நிரப்பினாய். ஆனால்  எங்கள் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கூட  உன் கருணையில்லாத மனம் தான் தெரிகிறது...''

விட்டலன் சிரித்தான்.  ''அம்மா நீ ஏன் என் மேல்  தேவையில்லாமல், காரணமில்லாமல் கோபம் கொள்கிறாய்.  உன் பிள்ளை நாமதேவன் தனக்கு எதுவும் வேண்டாம் என்று வெறுத்து என்னைப்   பிடித்துக் கொண்டிருக்கிறான். நாங்கள் நல்ல நண்பர்கள்.  நீ  நாமாவை உன் பிள்ளையாக மட்டுமே பார்க்கிறாய். எங்களை பிரிக்க எண்ணுகிறாய். சரி உன் பிள்ளையை கூட்டிக் கொண்டு போ. செடியில் ஒரு  கொடியில் ஒரு காய் கனிந்து பழமாகிறது.எங்கோ வீசும் ஒரு  பலமான காற்று பழத்தை செடியின்  கொடியிலிருந்து பிரித்து கீழே தள்ளுகிறது. நீ அப்படி தான் நாமாவை என்னிடமிருந்து பிரிக்கிறாய்''.

''விட்டலா, நான் கோபப்  படவில்லை. விவசாயி பாடுபட்டு  நிலத்தில் உழுது அமோகமாக  பயிரிட்டால்  ராஜா வந்து அதெல்லாம் எடுத்துக் கொண்டு போனதுமல்லாமல்  வரியும் போடுவது போல் இருக்கிறது உன் செயல்.''

''அம்மா, உனது புண்ய கர்மாவினால் உனக்கு நாமதேவ் பிறந்தான் . என் பக்தனானான்.  அஞ்சனைக்கு  பிறந்த  மாருதி, வானரமாக இருந்தாலும்  சிறந்த ராம பக்தனானான். நாமாவும் அப்படித்தான்''. 

நாமதேவர்  உலக வாழ்க்கையில் ஈடுபட்டு எல்லோரும்  போல்  பணம் சம்பாதித்து குடும்பம் நடத்தவேண்டும் என்று அம்மா  ஆசைப்படுகிறாள்....

கோனை பார்த்தாள் . விட்டலன் மசிய  மாட்டான் என்று புரிந்து  சத்யபாமாவிடமும் ருக்மணியிடமும் தன்னுடைய குறையைச் சொல்லி அழுதாள். ''

 ''தேவிகளே , இன்று  வரை  உங்கள் கணவர்  விட்டலன் மேல் எனக்கு மரியாதையும் பக்தியும் இருந்தது, அது இப்போது போய்விட்டது.என் பிள்ளையை மீட்டுக்கொடுங்கள். அவன் எல்லோரையும் போல் உலகில் வாழட்டும்.''

பிறகு  நாமதேவர் விட்டலன் பின்னால் நிற்பதைப்  பார்த்தவள்  அவருக்கு கட்டளையிட்டாள் .
''நாமா இங்கே என்ன வேலை உனக்கு? எழுந்து என்னோடு வா. இந்த விட்டலன் மாயா ஜாலக்காரன். திருடன். அவன் செங்கல் மேல் நின்றாலும் எல்லோர்  வாழ்விலும்  துன்பம் தான் தருகிறான்.  நீ என்னோடு வா. நீ வராமல் நான்  இங்கிருந்து திருமப மாட்டேன்.'' 

விட்டலன்  அமைதியாக  பதிலளித்தான்.

 ''அம்மா,  நீ தாராளமாக நாமாவை  அவன் கையைப் பிடித்துக்கொண்டு   என்னிடமிருந்து அழைத்துப்  போ. வீணாக என் மேல் பழி போடவேண்டாம்''.

நாமா பேசாமல்  அம்மா கோனையோடு  வீட்டுக்கு நடந்தார். வழியெல்லாம்  கோனை புலம்பிக்கொண்டே வந்தாள் . 
நாமா, என் கண்ணே,  நீ  செய்ததை நினைத்துப் பார்.   விட்டலன் மேல் மனதை வைத்து  நமது குடும்ப  வியாபாரத்தை கவனிக்காமல் விட்டாய்.  அதில் கவனமில்லாமல்கஷ்டப்பட்டு வாங்கியும்  பொருள்களை  எல்லாம் கோட்டை விட்டாய். பெருத்த நஷ்டம் அடைந்தோம்.  இப்போது நடுத்தெருவில்   பரிதாப நிலையில் பிச்சைக்காரர்களை விட கேவலமாக உள்ளோம்.  ...  நாமதேவர் கண்களில் நீர் வடிந்தது. 

நாமதேவர் வீட்டில்  ராஜாயி  தனித்து இருந்தபோது என்ன நடந்தது என்று இருவருக்குமே தெரியாதே.  கேசவ் சேத்  வந்து போனது அவர்களுக்கு எப்படி தெரியும்.விட்டலன் லீலைகளை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியுமா?
கோனை  தனது வீட்டு அடையாளம் தெரியாமல் திகைத்தாள்.
நாம தேவர் வீடு  மாறி இருந்தது. அடையாளமே தெரியவில்லை..  உள்ளே  பலவித  வகை உணவு பதார்த்தங்கள் நிரம்பி இருந்தது.  நறுமணம்  தெருவெல்லாம்  வீசியது. ராஜாயி  பரம சந்தோஷமாக இருந்தாள் . எல்லாம்  பண்டரிநாதன் அருள் என்று வாயார போற்றினாள் . நாமதேவருக்கு இது துளியும் பிடிக்கவில்லை.   கள்ளம் கபடமற்ற ஒரு நல்ல மான் யாரோ விரித்த  வலையில் இருந்த  ஆகாரங்களை  தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என நம்பி அகப்பட்டுக்கொண்டதைப் போல  தவித்தார்.  பலத்த காற்று  அமைதியான ஒளி வீசும்  தீபத்தை  அணைத்தது போல்  வருந்தினார். கிரஹணம் பிடித்து  சூரியன் ஒளியிழந்தது போல் வாடினார். 

''அம்மா   என்ன இதெல்லாம்?, எங்கே இருந்து திடீரென்று இப்படி வசதிகள் வந்தது. எப்படி  பணம் கிடைத்து  ராஜாயி  இதெல்லாம் செய்திருக்கிறாள்?

''நாம தேவா,   எனக்கெப்படி அப்பா  தெரியும். நானும்  உன்னோடு  தானே  விட்டலனோடு இருந்தேன்.?

ராஜாயி  குறுக்கிட்டாள் . வெகு நேரமாகிவிட்டதே. இருவரும் முதலில் சாப்பிட வாருங்கள்....

மற்றவை அடுத்த பதிவில்.

Sivan Krishnan

unread,
Nov 5, 2025, 6:50:57 PM (8 days ago) Nov 5
to amrith...@googlegroups.com

சப்தேஸ்வரர்  தரிசனம்  -    நங்கநல்லூர்  J K  SIVAN 

பரமேஸ்வரன், சதா சிவன், அபிஷேகப்ரியன்.   அப்பர்  மனதில் கண்டு மகிழ்ந்த  உருவம் இது;  அப்பர்  தேவாரம் 
அற்புத வரிகள்; 

''குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே''

மஹா தேவன்  ஹிமாசலத்தில்  உச்சியில் சில்லென்ற  காற்று  வீச, சூரிய ஒளியில் தங்கமாக கண்ணைப் பறிக்கும் கைலாச பர்வதத்தில் சிலையென அமர்ந்து தவம் செய்கிறான்.  அவன்  தேகம் தவத்தில் தியானத்தில் சதா ஈடுபட்டு பொன்னிறம் பெற்று பவளமாக  ஜொலிக்கிறது.  அழகுக்கு அழகு செய்வது போல் அந்த பவளமேனியில் பால் போன்ற வெண்மையான விபூதி பட்டைகள் நெற்றியில்,கழுத்தில்,மார்பில்,கைகளில் காணப்படுகிறது. சலனமற்ற முகத்தில் கண்கள் அரை மூடி தியானத்தில் ஈடுபட்டுள்ளன.நெற்றியில் முக்கண் மூடி இருக்கிறது.  அழகிய வில்லை ஒத்த புருவங்கள்.  சிவந்த  உதடுகள், இதழ்கள். அது வாய் மூடி  புன்னகைக்கிறது.  சிவனின் தலையில் முடி ஜடை யாக  அதோடு நாகங்களும் இனைந்து   சுற்றிக்கொண்டிருக்கிறதுசிரத்தில் சில்லென்று ஆகாச கங்கையும்  பிறைச்சந்திரனும். 
 நிறச் செவ்விதழ்களில் தெரியும் புன்னகையும்.கழுத்து கைகளில் ருத்திராக்ஷ மாலைகள்.
இப்படிப்பட்ட சிவனுருவை ஒரு தடவை மனதில் கண்டாலே போதுமே.  இந்த மனிதப்பிறவி எடுத்த முழுப்பயனும்  கிட்டும். அதைக்கணவாவது இந்த மானுடப்பிறப்பு கட்டாயம் வேண்டும்'.

ஸ்ரீ  மஹா ருத்ரம்  நாங்கள் கோவிலில் சிவ  சந்நிதியில் அமர்ந்து  குறைந்தது 121 பேராவது சேர்ந்து சொல்வோம்.   எத்தனை கோவில்களுக்கு பஸ் ட்ரெயினில்  சென்று காலை 6.30யிலிருந்து பகல் 1- 2  மணிவரை ஜபம் செய்துவிட்டு அபிஷேகங்கள், அர்ச்சனைகள் முடித்து பிரசாதம் சாப்பிட்டுவிட்டு  திரும்புவோம்.   முன்னூறு கோவில்களுக்கு மேல் இவ்வாறு சென்று தரையில்  உட்காரமுடியாமல் அது எனக்கு நின்று போய்விட்டது.   வீட்டில் மனதளவில் தினமும் எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டிருக்கிறேன். 

மஹா ருத்ரத்தில் 8வது அநுவாகம் மிகச்  சிறப்பான ஸ்தோத்ரம். 

नमः सोमाय च रुद्राय च नमस्ताम्राय चारुणाय च
नमः शङ्गाय च पशुपतये च नम उग्राय च भीमाय च
नमो अग्रेवधाय च दूरेवधाय च
नमो हन्त्रे च हनीयसे च नमो वृक्षेभ्यो हरिकेशेभ्यो
नमस्ताराय नमः शम्भवे च मयोभवे च
नमः शंकराय च मयस्कराय च
नमः शिवाय  च शिवतराय च ॥ ८.१॥
नमस्तीर्थ्याय च कूल्याय च
नमः पार्याय चावार्याय च
नमः प्रतरणाय चोत्तरणाय च
नम आतार्याय चालाद्याय च
नमः शष्प्याय च फेन्याय च नमः
सिकत्याय च प्रवाह्याय च ॥ ८.२॥

அர்த்தநாரீஸ்வரனாக, உமாசமேத  சோமா, துக்கம் துயர் அகற்றுபவனே,  விடியற்காலை  சுயோதய  சிவந்த, தாமிர வர்ணனே, மனதில் சந்தோஷம்  தருபவனே லோக ஸம்ரக்ஷகனே, தவறு செய்பவர்களுக்கு கோபாக்னியாக  சீற்றம் கொள்பவனே, தீயவர்களை மாய்ப்பவனே,  தூரத்திலிருந்தே அசரீரியாக அனுக்ரஹம் பண்ணுபவனே, தீயவற்றை அழிப்பவனே, ஸம்ஹார  மூர்த்தியே,  தவத்தைமெச்சி  மனமுவந்து கேட்போர் வரங்களை வாரி,அள்ளித் தருபவனே, பசுமை மரம் எப்படி பசுந் தளிர்களோடு  காட்சி தருமோ அப்படி  கண்ணுக்கு குளுமையானவனே,  ஓம் எனும் பிரணவ மந்த்ர ஞான ஒளி பிரகாச நக்ஷத்ரமே  இக  பர  சுகம் அனைத்தும் அருள்பவனே, ஞானிகளுக்கு முக்தி அளிப்பவனே,எங்கும் நல்லவையாகவே திகழ்பவனே, புனித தீர்த்த அபிஷேக ரூபமாக உள்ளவனே, சம்சார சாகரத்திலிருந்து விடுவிப்பவனே,  கர்ம பலன் நல்லதாகவே இருக்க  வழி வகுப்பவனே,  ஆற்றங்கரை நாணல் புல் தரப்பையும் நீ, நுங்கும் நுரையுமாக  ஆற்றுவெள்ளமும் நீ, சமுத்திரமும்,நீல ஆகாசமும் மீ, காற்றும் நீ ஒளியும் நீ. உன்னை சாஷ்டாங்கமாக  நமஸ்கரிக்கிறேன். 

சிவனை  நினைக்கும்போதே ஒரு படம்  கம்பியூட்டரில் பார்த்தேன்.  குஜராத்தில் சபர் காந்தா  ஜில்லாவில், சமர்மதி  நதிக்கரையில் சப்தேஸ்வர் என்று சிவன் குகைக்கோவில் கிட்டத்தட்ட  3500 வருஷங்களாக இயற்கையாகவே  அங்கே  ஒரு வற்றாத ஒரு காட்டாறு சிவலிங்கத்திற்கு  ஆயிரக்கணக்கான வருஷங்களாக விடாமல் தொடர்ந்து   சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து கொண்டிருக்கிறது. ஏழு சப்தரிஷிகளால் பூஜை செய்யப்பட, புண்ய நதிகளின் பளிங்கு நீர்  பரிசுத்தமாக   ஒன்றாக கலந்து அபிஷகமாக விழுவதால்  சிவன்  சப்தேஸ்வர் என்ற  பெயர் கொண்டவர்.  நான் சபர்மதி சென்றபோது எனக்கு யாரும் சொல்ல வில்லையே... அருமையான ஒரு சந்தர்ப்பத்தை இழந்து விட்டேனே..அஹமதா பாத்திலிருந்து 90  கி.மீ. 

Sivan Krishnan

unread,
Nov 5, 2025, 7:05:14 PM (8 days ago) Nov 5
to amrith...@googlegroups.com

முருக தரிசனம் -   நங்கநல்லூர்  J K SIVAN 

அறுபடை வீடுகளில்  ஒன்று  திருத்தணி (தணிகை மலை) — சென்னையிலிருந்து  ரெண்டு மூன்று மணி நேரத்தில் அடைய முடிந்த அற்புத படைவீடு. தனித்த  பெருமையுடையது தணிகை மலை .  365 படிகளில் ( வருஷத்துக்கு  365 நாட்கள் அல்லவா? அதுவும் விசேஷம்).   ஒவ்வொரு  படிக்கும் ஒரு திருப்புகழ் பாடிக்கொண்டு மலையேறுவது ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் 31 ம் தேதி அன்று பக்தர்களுக்கு  வழக்கம்.  மஜீத் என்ற  கல்லிடைக்குறிச்சி  அன்பர்  என் நண்பர்  அற்புதமாக  முருகன் பாடல்களைப்  பாடுபவர் . வேஷ்டியில் இடுப்பில்  விபூதிப்  பை  இருக்கும். எனக்கு அதை எடுத்து  முருகா என்று சொல்ல நெற்றி நிறைய பூசியதெல்லாம் ஞாபகம் வருகிறது. அவர்  படி உத்ஸவம் நடத்தி இருக்கிறார். திருச்செந்தூரில்  சூரனை வதம் செய்து கோபம் தணிவதற்காக அமர்ந்த மலை திருத்தணிகை. குறவள்ளியைக் குமரன்  கைப்பிடித்த  தலம்.

அப்போதைய  மதராஸ்  என்ற  நமது சென்னையில் வள்ளலார் மண்ணடி  ஏழுகிணறு  பகுதியில்  வசித்த காலத்தில் நடந்தே  திருத்தணிகை மலைக்கு வருவார் முருகன் மேல் பாடுவார். ஒரு அற்புத பாட்டு. திருவருட்பாவில் உள்ளது.

''சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே''

''என்னப்பனே  முருகா,   ஒரு முகமே  என்றும் பார்த்து பார்த்து மகிழ வைக்கும் அழகுள்ளது  எனும்போது  உனக்கு  ஆறு  அழகிய முகங்கள் என்றால் நான் விடுவேனா?. ஆறு முகங்களோடு  நறுமணம் கமகமவென வீசும் கடம்ப மலர் மாலைகள் அணிந்த  பன்னிரண்டு தோள்கள் வேறு! ), பக்தர்கள் விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும்  தாமரைத் திருவடிகள்,  தாமரை மலர் போன்ற திருவடிகளும். கூர் வேல் ஆயுதம் தரித்த கரமும், வண்ண மயில் வாகனமும். சூரனே விரும்பி வேண்டி புகழ் படைத்து பட்டொளி வீசும்  சேவற்கொடியும், கொண்ட நீ  சரியான இடமாக இந்த திருத்தணிகையை தேர்ந்தெடுத்திருக்கிறாய்.  உன் அழகுக்கு அழகூட்டும் திருத்தணிகை மலை தரிசனம் கண் கொள்ளா காட்சி தருவது.''

உங்களுக்கு ஒரு அதிசயம் தெரியுமா? தெரிந்தவர்களுக்கு இது மீண்டும் ஞாபகமூட்டும். தெரியாதவர்களுக்கு இது ஒரு ஆனந்த அற்புத விஷயமாக  அமையட்டும்.

அப்போது ராமலிங்க அடிகளுக்கு ஒன்பது வயது. (1832ல் ). அண்ணி  ராமலிங்கத்துக்கு படிக்க ஒரு தனி அறையை தனது வீட்டில் கொடுத்திருந்தாள் . இரவில்  படிக்க ஒரு எண்ணெய்  தீபம். ராமலிங்கத்துக்கு முருகன் மேல் பக்தி பாசம் அதிகம். அடிக்கடி அல்ல தினமுமே  கந்த கோட்டத்துக்கு நடந்து வந்து கந்தசாமியை தரிசனம் செய்பவர்.  அவர் அறையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது.  ராமலிங்கம் அந்த கண்ணாடியில் தீபத்தின் ஒளியை பிரதிபலிக்க செய்தார். கண்ணாடி  தீபத்தை தானே அதில் காட்டவேண்டும்? நமக்கெல்லாம் கண்ணாடி அப்படித்தான் காட்டும். ஆனால்  ராமலிங்க வள்ளலார்  அந்த  கண்ணாடியில்  தோன்றிய   தீப ஒளி தனக்கு  தியானம் செய்ய அருளவேண்டும் என்று வேண்டியதால்  தீப ஒளி திருத்தணி  ஆறுமுகன் அழகிய முகமாக மாறி  ஆறுமுகனாக  தரிசனம் தந்தது. இதுவே  வள்ளலாருக்கு முருகனின் முதல் தரிசனம்.

Sivan Krishnan

unread,
Nov 5, 2025, 7:05:14 PM (8 days ago) Nov 5
to amrith...@googlegroups.com
தூரம் கிடையாது. -   நங்கநல்லூர்  J K  SIVAN 

ரமணாஸ்ரமத்தில்  எண்ணற்ற  பக்தர்கள்  பகவான் தரிசனத்துக்கு  காத்திருப்பார்கள்.  சங்கர்லால் பேங்கர்  என்ற  மஹாத்மா காந்தியின் நண்பர்  ஒருவர் 1934 ல் ஒரு  ஜெர்மன் விமானப்படை அதிகாரியை சந்தித்தார். அவரோடு பேசிக் கொண்டிருந்த போது  அந்த  ஜெர்மன் அதிகாரி  சங்கர்லாளிடம் ''உங்கள் தேசத்தில் ரமண மஹரிஷி என்று ஒரு ஞானி இருக்கிறாராமே, அவரைப் பார்த்திருக்கிறீர்களா? அதிசயமான மனிதராமே?'' என கேட்டார்.   சங்கர்லாலுக்கு  ரமணரைப் பற்றி அதிகம் தெரியாது. ஆகவே  ''இல்லை அவரை நான் சந்தித்ததில்லை, கூடிய சீக்கிரம் அவரை தரிசிக்க எண்ணம் '' என்று பதில் சொன்னார்.
1935ல் சங்கர்லால் சென்னை வந்தபோது அவர் நண்பர்  சண்டே டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர்   M. S. காமத்தை  சந்தித்தார். காமத்  ரமண  பக்தர்.
''வாருங்கள் நாம் இருவருமே ரமணரைப் போய்  தரிசிக்கலாம்''  என்று அழைக்க இருவரும் திருவண்ணாமலை சென்றார்கள். ஆசிரமம் ரொம்ப  சாதாரணமாக  ஆடம்பரம்  எதுவுமின்றி அமைதியாக இருந்தது.  உள்ளே விசாலமான   கூடம். அதில் பக்தர்கள் அநேகர் தரையில்  அமர்ந்து கொண்டிருந்தார்கள்.  கோவணம் தரித்த ஒருவர்  ஒரு சோபாவில் சாய்ந்தவாறு, பேசாமல் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.  சங்கர்லாலுக்கு  ஷாக் அடித்தாற்போல  ஒரு  அனுபவம். அவர்  தேகம்  ஏனோ தானாகவே நடுங்கியது.  நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. 
'இவரா  ரமணர்?  அவரிடம் என்னென்னவோ கேட்க   மனதில் எண்ணம் இருந்தது. ஆனால் எதையும் இப்போது காணோமே. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நான்  பரிசுரித்தமடைந்தது போல் எனக்குள் தோன்றியது.  ஓஹோ  நான் தான்  ப்ரம்மமா?  'சிவோஹம்  சிவோஹம் ' என்று இத்தனை நாள் சொல்லாத ஒரு  வார்த்தை  ஏன் மனதில் திரும்ப திரும்ப எழுகிறது?  எல்லாம் இந்த  அபூர்வ சூழ்நிலையாலா?'' என்று எண்ணினார்  சங்கர்லால்.  அவர்  பூஜை  தியானம் எல்லாம் பண்ணுகிற  ஆன்மீக வாதி இல்லையே.

சங்கர்லால் தனக்குள் ஒரு அசாத்திய  தன்னம்பிக்கை  உண்டானதை  அனுபவித்தார்.  ஒரு மணி நேரத்துக்கு பிறகு  அங்கிருந்து விடைபெற்று செல்லும்போது சங்கர்லால் ஒரு புது மனிதராகி இருந்தார். 
டில்லியில்  மஹாத்மா  காந்தியை சந்தித்து தனது ரமணாச்ரம அனுபவத்தைச்  சொன்னார்.

''ஷங்கர், மகரிஷியை சந்தித்தது பற்றி எனக்கு ரொம்ப சந்தோஷம்.   அடுத்த தடவை ஆஸ்ரமத்துக்கு போனால் அதிக நேரம் அங்கே தங்குங்கள்'  என்றார் காந்தி.

1936ல்  மீண்டும் சங்கர்லால் திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் சென்றார்.  மஹரிஷியை சந்தித்தார். பேசினார்.
''சுவாமி  நான்  எனது ஆன்மீக  முன்னேற்றத்துக்கு என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும் ?
''புத்தகமா? எதற்கு புத்தகம்?  உன் இதயத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால்  வெளிச்சம் காண்பாய்''
இதற்கு மேல் மஹரிஷி பேசவில்லை.  மகரிஷி சொன்ன வார்த்தைகள் திரும்ப திரும்ப  சங்கர்லால் மனதில்  நாள் முழுதும்  தோன்றிக் கொண்டே இருந்தது.   ஒரு பகல் ஒரு இரவு ஆஸ்ரமத்தில் தங்கி விட்டு ரயிலில்  மெட்ராஸுக்கு  கிளம்பினார்.

''இன்று காலை நாலு மணிக்கு  விழிப்பு வந்தது.  படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டேன்.  கண் எதிரே  மஹரி ஷியின் தோற்றம். கண்ணை நன்றாக துடைத்துக் கொண்டேன்.   அட என்ன  ஆச்சர்யம்  என் எதிரே தத்ரூபமாக  பகவான் நிற்பது போல் அல்லவோ ஒரு ஆச்சர்யம் அனுபவம் !'' அன்று முழுதுமே மனதில் சொல்ல இயலாத ஒரு ஆனந்தம்.''என்கிறார்  சங்கர்லால்.    இதை  அப்படியே  டில்லி திரும்பியபோது  மஹாத்மா காந்தியிடமும் சொன்னார்.

''ஷங்கர், நீ  அடிக்கடி  திருவண்ணாமலை போய் அந்த ரிஷியை தரிசிக்க வேண்டும். உன் ரமணானுபவத்தை  நான்  ராஜன் பாபு, ஜம்னாலால் பஜாஜ் ரெண்டு பேரிடமும் கூறி, அவர்களையும்  திருவண்ணாமலை போகச்  சொன்னேன் ''என்றார்  காந்தி.
1937ல்  மீண்டும் சங்கர்லால்  திருவண்ணாமலை சென்றார். திருப்பூரில் பஞ்சத்தால்  வாடும் ஏழை மக்கள் தன்னோடு  போட்டோக்களை எடுத்து சென்றார். 
கூடத்தில் பக்தர்களோடு  சங்கர்லாலும் அமர்ந்து பகவான்  ஆத்ம விசாரம்,ஆத்ம ஞானம் ,ஆத்மானந்தம் பற்றி பேசுவதை கேட்டார்.அவர்  நண்பர்  டாக்டர் சயீத்  அருகில் உட்கார்ந்திருந்தார்  அவரிடம்   ''ஸயீத்.   நான் பஞ்சத்தால் பசியால் வாடும் அநேகரை திருப்பூரில்  பார்த்தேன்.எப்படி  அந்த நிலையில் ஒருவர் எப்படி  ஆத்ம சிந்தனை,ஆத்மானந்தம் பெற  முடியும் என்று எனக்கு சந்தேகமாக  இருக்கிறது ''  என்றார் .

ஸயீத்  என்ன செய்தார் தெரியுமா? சங்கர்லால்  காட்டிய  திருப்பூர்  பஞ்ச பட்டினி மக்கள் போட்டோவை எடுத்துக் கொண்டு போய் மகரிஷி  அருகில்  வைத்து ''என் நண்பர்  எப்படி இந்த  மன நிலையில் ஒருவர்  அமைதியாக   ஆத்மா பற்றி சிந்திக்க முடியும், ஆனந்தமாக இருக்க முடியும்?' என்று கேட்கிறார்'' என சொல்லிவிட்டார்.

பகவான் அமைதியாக ''மற்றவர்கள் கஷ்டத்திலிருக்கும்போது உதவுவது நமது கடமை.அப்படி உதவுவதற்கு தனிப்  பெருமை கொண்டாடக்கூடாது. பகவான் தான் எல்லோரையும் ரக்ஷிப்பவர். எனக்கு தெரிந்து  ரெண்டு மூன்று நாள் கூட சாப்பிடாதவர்கள், பல ரிஷிகள் பல மாதங்கள்கூட எதுவும்  உண்ணாமல் ஆனந்தமாக  ஆத்ம சிந்தனையில்  ஈடுபட்டு ஆனந்தம் அடைந்தவர்கள். உள்ளே  அனுபவிக்கும்  அமைதி தான் காரணம்.  இந்தா  உன் போட்டோக்கள் ''  ரமணர்  சங்கர்லாளிடம் போட்டோக்களை தந்தார். 

அப்போது தான் ஒரு ஆச்சர்யம்  நிகழ்ந்தது. சங்கர்லால் அந்த போட்டோக்களை மீண்டும் பார்த்தார். இதென்ன அதிசயம்? இதுவரை கண்ணில் படாதது கண்ணில் பட்டது. அந்த போட்டோக்களில்   கல்லுடைத்துக் கொண்டிருந்த  அநேக  பஞ்ச பட்டினி மக்கள் அநேகர் முகத்தில் சிரிப்பு.ஆனந்தம். ஏன் இதை நான் கவனிக்க வில்லை? 

அடுத்த நாள் மஹரிஷியை  சந்தித்தார். அவரை வணங்கினார்.மனதுள் ஒரு எண்ணம்..  
''ஆஹா இந்த  ரிஷியை  நமது மஹாத்மா காந்தி சந்தித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவர் எங்கோ டில்லியில்
 அல்லவோ இருக்கிறார்''
மகரிஷி அர்த்த புஷ்டியோடு  சங்கர்லாலை  பார்த்தவர்  புன்னகைத்தார்.  பிறகு  தானாகவே  ''தூரம்  இடைவெளி  என்பதே  கிடையாது. அது ஒரு பிரமை''  என்றார் .

சங்கர்லால்  குஜராத்தில் வார்தா சென்றபோது  காந்தியைப் பார்த்தார்.  இதை அவரிடம் சொன்னபோது ''அட, இது உனக்கு புரியவில்லையா?   இடைவெளி , தூரம் என்பது  நாம் நினைப்பது போலவே இல்லை. மூன்று நாள் முன்பு நான்  இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேனே '' என்றார்.  காந்தி அந்த பத்திரிகையை கொண்டுவரச்  சொல்லி படித்துக் காட்டினார். மூன்று நாள் முன்பு தான் தெற்கே  திருவண்ணாமலையில் இதைப் பற்றி  மஹரிஷியும்  சொன்னது சங்கர்லாலுக்கு    உடனே  நினைவுக்கு வந்தது.  

ஆம்  தூரம்,இடைவெளி என்பது மனதுக்கு கிடையாது.எங்கோ அமெரிக்காவில் இருந்தாலும்  மனதில் ஒருவரை  சந்தோஷமாகப் பார்க்கமுடியும்  பேச முடியும்.. 

Sivan Krishnan

unread,
Nov 5, 2025, 7:05:14 PM (8 days ago) Nov 5
to amrith...@googlegroups.com
அன்னாபிஷேகம்  -   நங்கநல்லூர் J  K SIVAN

5.11.2025    இன்று ஐப்பசி பௌர்ணமி  ஒரு  அற்புதநாள். முக்யமாக ஸ்வயம்பு லிங்க  ஆலயங்களில்  அன்னாபிஷேகம் நடக்கும்.  சந்த்ரன்  கார்த்திகை நக்ஷத்திரத்தோடு சேர்ந்த நாள் என்பதால்  ஐயப்ப பக்தர்களுக்கும் குதூகலம்.

ஒருமுறை   பின்னிரவில்  கங்கை கொண்ட சோழபுரத்தில்  பிரகதீஸ்வரரை   அன்னாபிஷேகத்தில்  தரிசித்தேன்.  பெரிய  சிவலிங்கம் முழுதும்  வடித்த சூடான  வெண்ணிற சாதத்தால்  மூடி காணும் காட்சி. எதற்கு?   ஐப்பசி பௌர்ணமி அன்று தான்  திருப்பாற்கடலில் ஆலஹால விஷம் தோன்றி அதை பரமேஸ்வரன் விழுங்கிய நாள்.  அன்று  அவருக்கு அன்னாபிஷேகம் செய்து எல்லோரும் சுபிக்ஷமுடன் வாழ இப்படி ஒரு பண்டிகை பல நூற்றாண்டுகளாக  நடைபெற்று வருகிறது. 
'அன்னம்  ப்ரம்மம்' என்றாலே  இந்த பிரபஞ்சமே  அன்னத்தால் தான்  உயிர்வாழ்கிறது. எங்கும் நிறைந்த ப்ரம்மம்  ஜீவனாக  உயிர்களில் பரிமளிக்கிறது.  சிவன் ப்ரம்மஸ்வரூபம். ஆகவே  அன்னத்தால்  சிவலிங்கத்தை முழுதாக மூடுவது  பிரபஞ்சம் முழுதும் உணவு எனும்  உயிர் நாடியோடு சுபிக்ஷமாக  திகழவேண்டும் என்ற  வேண்டுகோளை பிரதிபலிக்கிறது. அந்த உணவே சிவம் என்ற அர்த்தம் தருகிறது.
ஸ்வயம்பு லிங்க  சிவாலயங்களில் பிரதானமானவை  திருவிடைமருதூர் மஹாலிங்கேஸ்வரர், தஞ்சாவூர் பெருவுடையார் (பிரகதீஸ்வரர்), சிதம்பரம்  நடராஜர்,   வடக்கே  காசி விஸ்வநாதர்,  காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்  போன்றவை. அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம்  ஆன பின்  அனைத்து  பக்தர்களுக்கும்  அன்னாபிஷேக  பிரசாதம் அளிக்கப்படும்.
எத்தனையோ  அதனிசயங்களும் நிகழ்ந்திருக்கிறது.  தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் ஒரு முறை எத்தனை கிலோ சாதம் வேக வைத்தார்களோ அத்தனை சாதமும் ஒரு பருக்கை பாக்கி இல்லாமல் பெருவுடையார் மீது வைத்துப்பின் தான் லிங்கம் மூட முடிந்தது.  திருவிடை மருதூர்  மஹாலிங்கம்  கோவிலில் ஒரு ஏழை விவசாயி குழந்தை பாக்யம் இல்லாமல்  தன்னுடைய  அறுவடையை நெல்லை  அரிசியாக்கி  அர்ப்பணித்து அந்த வருஷம் அன்னாபிஷேகத்தில்  அது அலங்கரிக்கப்பட்டு அந்த வருஷமே அவர்கள் வீட்டில் குவா குவா சப்தம் கேட்டது.   சிதம்பரம் நடராஜர்  சந்நிதியில் அன்னாபிஷேகத்தின் போது  பளிச்சென்று ஒரு ஒளிக்கதிர்  இரவில் மின்னியது.   வயிற்று வலியால் தவித்த ஒரு கிழவிக்கு  அன்னாபிஷேக பிரசாதம் உண்டபின்  வயிற்று வலியை காணோம். இது போல் பக்தர்கள்  எண்ணற்ற அதிசய அனுபவங்களை சொல்கிறார்கள். 

Sivan Krishnan

unread,
Nov 6, 2025, 7:23:02 PM (7 days ago) Nov 6
to amrith...@googlegroups.com
ஸூர்தாஸ்  - நங்கநல்லூர்  J K   SIVAN

அன்புக்கு நான் அடிமை

எதெல்லாம் உண்மையில்  உலகில் உயர்ந்தது என்று பல நாள் யோசித்தேன். புனிதமான இதயத்தில் நிரம்பிய அன்பு, பிரேமை, யாரிடம் வைக்கிறோமோ அது மட்டுமே மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று உணர்ந்தேன். கண்ணா, அதை உன்னிடமே வைத்தேன். அது ஒன்றே உன்னையும் என்னையும் கெட்டியாக பிணைத்துள்ளது.
நீ இதை யாரிடமெல்லாம் கண்டு உன் மனதை பறிகொடுத்தாய் என்றும் எனக்கு தெரியும். ஞாபகப் படுத்தட்டுமா கிருஷ்ணா?

சமாதான தூது சென்றாயே அப்போது யார் வீட்டில் தங்கினாய், உணவு உண்டாய்?
விலையுர்ந்த சுவையான அபூர்வ பழங்கள், உணவுகள் உனக்கு அளிக்க துரியோதனன் முன் வந்தானே, ஒரு கணமும் யோசிக்காமல் ''நன்றி துரியோதனா, வேண்டாம்.  நான் விதுரன் குடிசைக்கு செல்கிறேன். அவருடன் பேசி நாளாயிற்று'' என்று பதிலளித்து விதுரன் அளித்த பழங்களின் தோலை மட்டுமே உண்டாய்.

இதுமட்டுமா? நீயே முன் அவதாரத்தில் ராமனாக இருந்தபோது அதே போல் சபரி எனும் காட்டில் வாழ்ந்த முதியவள் அளித்த எச்சில் பழங்களை ரசித்து, ருசித்து உண்டவன் அல்லவா?.
 ''சபரி, நீ கொடுத்த பழங்கள் போல் இனிய பழங்கள் நான் சாப்பிட்டதே இல்லை '' என்றாயே நினைவிருக்கிறதா?.

''ஐயோ,  அர்ஜுனன் தவறு செய்யாமல், என் நாராயணி சேனை வேண்டாம், நீ மட்டும் என்னோடு இருந்தால் போதும் என்று  கேட்க வேண்டுமே, '' என்று நீ உள்ளூர கவலைப்பட, அவன் நீ விரும்பிய படியே,  ''கிருஷ்ணா, எனக்கு உன்  நாராயணி சேனை தேவை இல்லை, நீ மட்டுமே போதும்'' என்று துணிந்து சொன்னானே.  எல்லோராலும் மதிக்கப்பட்ட விருஷ்ணி குல பேரரசன், சர்வ சக்தி வாய்ந்தவன் நீயும் அவனுக்கு தேர்ப்பாகனாக தேரில் அவனது காலின் கீழே அமர்ந்து தேரை செலுத்தினாய். எதனால்??
மனமொப்பிய அன்பினால், பிரேமையால், நட்பின் பாசத்தால் மட்டும் அல்லவா?
நீ எங்கே? ஒன்றுமறியாத சாதாரண, கள்ளம் கபாடற்ற, அறிவில்லாத  பிருந்தாவன கோபியர் எங்கே?அவர்களோடு ஒருத்தனாய்  நீ  கை கோர்த்து விளையாடியதும் அவர்கள் உன் மேல் வைத்த பாசத்தாலும் அன்பாலும் கவரப்பட்டதால் தானே? .
அன்புக்கு அடிமையான உன்னை இந்த ஸூர்தாஸ்  எவ்வளவு கடுமையாக வார்த்தைகளால் நிந்தாஸ்துதியாக பாடுவதும் கூட உன் மேல் உள்ள அபரிமித அன்பினால் மட்டுமே தான்.     நீ எல்லா சக்திகளிலும் மிக உயர்ந்த சக்தி, என்று தெரிந்தும் உன் மேல் கொண்ட பரிவினால் தானே தீன ரக்ஷகா?

சூர்தாஸின் அந்த அற்புத பாடல் இது தான்

सबसे ऊंची प्रेम सगाई, सबसे ऊंची प्रेम सगाई ।
दुर्योधन के मेवा त्याग्यो, साग विदुर घर खाई ।  सबसे ऊंची प्रेम सगाई ।

जूठे फल शबरी के खाये,बहु विधि स्वाद बताई ।सबसे ऊंची प्रेम सगाई ।
राजसूय यज्ञ युधिष्ठिर कीन्हा,तामे जूठ उठाई । सबसे ऊंची प्रेम सगाई ।

प्रेम के बस पारथ रथ हांक्यो,भूल गये ठकुराई । सबसे ऊंची प्रेम सगाई ।
ऐसी प्रीत बढ़ी वृन्दावन, गोपियन नाच नचाई । सबसे ऊंची प्रेम सगाई ।

प्रेम के बस नृप सेवा कीन्हीं, आप बने हरि नाई ।
सबसे ऊंची प्रेम सगाई ।

सूर क्रूर एहि लायक नाहीं, केहि लगो करहुं बड़ाई ।
सबसे ऊंची प्रेम सगाई ।

Sivan Krishnan

unread,
Nov 6, 2025, 7:23:02 PM (7 days ago) Nov 6
to amrith...@googlegroups.com
 
பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

வியாழனை  குருவாரம்  என்பார்கள்.  குரு என்றால் என் கண் முன் தோன்றுபவர்  காஞ்சி பரமாச்சாரியார்  மஹா பெரியவா தான்.  நூறு வருஷங்களில்  அவர் சொல்லாக அற்புத விஷயங்கள் எதுவுமே இல்லை.  இதோ  ஒரு பத்து  உபதேசங்கள் நமக்கு தருகிறார். எதையாவது, எத்தனையை யாவது,  பின்பற்ற முடியுமா என்று முயற்சிப்போம். முன்னேறுவோம். அது தான் நம்மால் செய்ய இயன்றது. 

1. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமையும் நமக்கு அடுத்தவர்களுக்கு  உதவியும் நன்மையும்   எப்போதெல்லாம்  
செய்யக் கிடைக்குமோ  அந்த  ஒவ்வொரு  வாய்ப்பையும் தவறவிடாமல்  பயன்படுத்திக் கொள்வது அவசியம். 

ஏழையாக இருந்தாலும் ஒவ்வொருவரும் தமது   உண்மையான,  நேர்மையான, விசுவாசமான உழைப்பால்  தேசத்துக்கு மற்றவரக்ளுக்கு ஏதாவது ஒரு  தொண்டு செய்ய முடியும். 
வசதி படைத்த பணக்காரர்கள் தங்களிடம் உள்ள பணத்தினால் தாராளமாக  வசதியற்ற ஏழை மக்களுக்கு உதவ முடியும். செல்வாக்கு படைத்தவர்கள் அவர்களுடய  செல்வாக்கை, அதிகாரத்தை பயன்படுத்தி வசதி குறைந்தவர்களுக்கு  உதவி பெற்று தரமுடியும்.  

எல்லாவற்றுக்கும்  முழு முதல் காரணம் மனம் தான். அது முதலில் தொண்டு மனப்பான்மையை நிரப்பிக் கொள்ள வேண்டும்.  எது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தை, என்றோ ஒருநாள் என்று இல்லாமல் எப்போதுமாக நிலையாக இருக்க வேண்டும். 

2. மனிதனால்  ஒரு  சின்ன  புல்லைக்  கூட  உருவாக்க முடியாது.   அப்படி இருக்கும்போது இயற்கை நமக்கு வாரி அளிக்கும்  நாம் உண்ணும் உணவையோ அல்லது உடுக்கும் ஆடையையோ இறைவனுக்கு முதலில் அளிக்காமல் நாம் பயன்படுத்திக் கொண்டால் அது துரோகம் தானே? வள்ளுவர் குரல் ஒலிக்கிறது பாருங்கள்.  ''என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு''  .சிறந்ததும் உயர்ந்ததும் எதுவோ அதனையே தான் இறைவனுக்கு நாம் அளிக்க வேண்டும்.

3. அன்பு இல்லாத வாழ்க்கை வீண்.  மனித சமுதாயம், பறவைகள், விலங்குகள் என இப்படி எல்லா ஜீவராசிகளிடமும் பிரேமையையும் அன்பையும் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

4. தர்ம சிந்தனை இல்லாதவர்களிடம் உள்ள பணம்  அவர்களின் வாரிசுகளால் அழிகிறது.  ஆனால் வாரி வழங்கும்
 வள்ளல்களின் குடும்பங்கள் எப்போதும் மகிழ்ச்சியில் திளைத்து பகவானின்  அருள் நிறைந்தவையாக  இருக்கிறது..

5. பிறருக்கு  உதவியதை  பறை சாற்றி, தம்பட்டமடித்து  விளம்பரம் செய்வதால் புகழ் தேடுவதால்,   ஒருவன் தான் செய்த உதவியால் கிடைத்த பலனை இழந்து விடுகிறான். 

6. நடந்து  போனதை  நினைத்து வருந்துவது நல்லதல்ல. பிரயோஜனம் இல்லை.  நாம்  செய்தது  நல்லதா கெட்டதா என்று பகுத்து உணர்ந்து தீயதாக இருந்தால் அதை மீண்டும் செய்யாமல் பாதுகாத்துக் கொண்டால் போதுமானது. 

7. நம்முடைய வாழ்வு கொஞ்ச காலத்துக்கு தான்.  ஆகவே  எந்த  வினாடியும் நல்லதையே  செய்வோம்.  பிறர் நலனுக்காக அதை உபயோகிப்போம் . நம்முடைய சுயநல தேவைக்காக அதை  வீணடித்தால்  எந்த பயனும் இல்லை 

8. நம் ஒவ்வொருவருக்கு  நமது  நித்ய கர்மா  உள்ளது.  அன்றாட வாழ்க்கைக்கு என விதிக்கப்பட்ட கடமைகள். நாம் தவறாமல் அவற்றை  கடைபிடிப்பதோடு  பகவானுடைய  அன்புக்கு  அருளுக்கு  பாத்ரமாவோம்..

9. எவன் தன்னுடைய கடமையை சரிவர செய்து வருகிரானோ அவன்  தனது  வாழ்க்கை  லக்ஷ்யத்தை அடைவான்.

10. நம்முடைய துன்பங்களுக்கும், கஷ்டங்களுக்கும் நாம்  தான்  காரணம்.  இதற்கு தீர்வு  ஆத்ம  ஞானம் ஒன்றுதான்.

நிதானமாக படித்து, நன்றாக கவனித்தால்  மேலே சொன்ன பத்து விஷயங்களுமே  கஷ்டமே இல்லாதவை.  பார்ப்பதற்கு படிப்பதற்கு, கடைப்பிடிப்பதற்கு  ரொம்ப ரொம்ப  கஷ்டமாக முடியவே முடியாதது போல் தான் தோன்றும். உண்மையில் ரொம்ப சுலபம்  தான். முக்கியமாக  மனதை கட்டுப்படுத்தினால் ஒரு கஷ்டமும் கிடையாது. 

Sivan Krishnan

unread,
Nov 7, 2025, 6:14:18 AM (7 days ago) Nov 7
to amrith...@googlegroups.com

உள்ளங்கை நெல்லிக்கனி....     நங்கநல்லூர் J K  SIVAN 

ஆதி சங்கரர்  என்றால்  நமக்கு ஒரு  கலர் படம் நினைவுக்கு வரும்.  ஆற்றங்கரை.  அதை ஒட்டி   நதி ஓடுகிறது.  மரங்கள் சூழ்ந்த அமைதியான பிரதேசத்தில் ஒரு சிறு ஆஸ்ரமம்.  ஆற்றங்கரையில் மான் தோலில்  வாலிபர் ஒருவர். தேஜஸ் நிறைந்த முகம். கழுத்தில்  மார்பில்  ருத்ராக்ஷ மாலைகள். நெற்றியில் பளிச்சென்ற விபூதி.  கண்களில் கருணை. அவரை சுற்றி  நான்கு சந்யாசிகள். இளைஞர்கள், வயதானவர்கள் என்று கலந்து கட்டியாக. எல்லோர் கையிலும் ஓலைச்சுவடி.  எல்லோருமே தண்டம் ஏந்திய சந்யாசிகள். தலையை முண்டனம் செய்து  காவி  வஸ்த்ரத்தால் மறைத்தவர்கள். நடுநாயக வாலிபர்  தான் ஆதி சங்கர பகவத் பாதர். மற்ற நால்வர் அவரது பிரதான சிஷ்யர்கள்.  அவர்களில் ஒருவர்  ஹஸ்தாமலகர். அவரைப் பற்றி  உங்களுக்கு தெரிந்திருக்கும்.  தெரியாதவர்களுக்கு சொல்வதை மீண்டும் நீங்களும் ஒரு முறை கேளுங்களேன். 

அவர்  ஒரு பிறவி ஞானி.  ஹஸ்தாமலகர்  என்றாலே  உள்ளங்கை நெல்லிக்கனி கொண்டவர் என்று அர்த்தம். யாராவது உடனே ஒரு விஷயத்தை  சட்டென்று கிரஹித்துக் கொண்டு  அது பற்றி ஏற்கனவே அறிந்தவராக இருந்து, அதை எடுத்து விவரமாக சொல்லக்கூடியவர் என்றால்  அவரை போற்றுகிறோம்.  அவருக்கு வேதாந்த உபநிஷத விஷயங்கள் எல்லாம் அத்து படி, உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி  என்கிறோம்.  அவ்வளவு ஞானஸ்தர்  என்பதால் அந்த சிஷ்யனுக்கு  ஹஸ்தாமலகர் எனப்பெயர் (ஹஸ்தம்; உள்ளங்கை,  ஆமலகம்; நெல்லிக்கனி)  ரொம்ப பொருத்தமாக  ஆதி சங்கர் இட்டார். 

ஸ்ரீவல்லி  என்கிற கிராமத்தில்  பிரபாகரன் என்ற ஒரு   வேத சாஸ்த்ரி .பிராமணர். நன்றாக கற்றவர், செல்வந்தர் கூட  என்றாலும் நிம்மதியில்லை. பாவம் அவருடைய ஒரே மகன்  புத்தி  ,மந்தமானவன். அறிவிலி.  எதிலும் ஆர்வம் காட்டாத  சோம்பேறி மாதிரி  தோன்றுவான். பார்ப்பதற்கு நன்றாக இருப்பான். ஆனால் முட்டாள். அவனுக்கு உபநயனம் செயது வைப்பதே  கஷ்டமாக இருந்தது. அவனால் எந்த மந்திரமும் சரியாக திருப்பி சொல்ல மாட்டானே.  விளையாட வோ, பேசவோ,  கோபபபடவோ, படிக்க ஆர்வமோ கிடையாது. இப்படியே அவனுக்கு பதி மூன்று வயதாகி விட்டது. 
ஒருநாள் அந்த கிராமத்துக்கு ஆதி சங்கரர் கால்நடையாக நடந்து வந்தார். பிரபாகரச்சாரியார்  விஷயம் கேள்விப்பட்டு   முட்டாள் பையனையும் கூட்டிக்கொண்டு  சங்கரரிடம் வந்து நமஸ்கரித்தார். எப்படியாவது  பையனை சீர் படுத்த வேண்டும் என்று கெஞ்சினார். 
ஆதி சங்கரர் பையனை உச்சி முதல் உள்ளங் கால் வரை நோக்கினார். 
'' உன் பேர்  என்ன?''என்று கேட்டார்.  
அருகிலிருந்த எல்லோரும் ஆச்சரியப்பட, பையன் கடகவென்று இலக்கண சுத்த  சமஸ்க்ரிதத்தில் விஸ்தாரமாக ஆத்மாவைப் பற்றி 12  ஸ்லோகங்கள் உரக்க கூறினான். சங்கரர்  புன்னகைத்தார். பையன் தந்தையையும் , மற்றவர் களையும் சுற்றி பார்த்து விட்டு  இவன் நீங்கள் நினைப்பது போல இல்லை.  ப்ரம்ம ஞானி.  இனி என்னோடு இருக்கப் போகும்  சந்நியாசி. குடும்ப வாழ்க்கை இவருக்கு  ஒட்டாது.' என்றார். சந்யாச தீக்ஷை வழங்கினார். சத்யம் தர்மம் ப்ரம்மம் பற்றி சகல அத்வைத சாரமும் விலாவரியாக 12 ஸ்லோகங்களில்  எடுத்துரைத்த இவன் இனி ''ஹஸ்தாமலகன்'' என்று நாமகரணம் செய்வித்தார்.  அவர்  சங்கரரின் பிரதான சிஷ்யனானார். பின்னர்  சங்கரர்  ஸ்தாபித்த  நான்கு  பீடங்களில்  துவாரகா பீடத்தின் முதல்  ஜகத்குருவாக நியமிக்கப்பட்டவர்.

ஹஸ்தாமலகர் கூறிய  ஸ்லோகங்களுக்கு (ஹஸ்தாமலகியம் , ஹஸ்தாமலக ஸ்தோத்ரம்)  ஆதி சங்கரரே  உரை எழுதினார். ஆதி சங்கரரோடு ஹஸ்தாமலகர் இருந்து அவர் உபதேசங்களை பெற்றார் என்றால் அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்த விஷயங்களை ஆதிசங்கரர் உபதேசங்கள் இன்னும் தெளிவாக்கின என்றுதான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.  அந்த ப்ரம்ம ஞானிக்கு சகலமும் தெரிந்திருந்தது.  ஒருநாள்  விரைவில்   ஹஸ்தாமலக ஸ்தோத்ரம் விளக்கத்தோடு எழுதுகிறேன். 
யமுனை நதிக்கரையில்  ஒரு வேதாந்தி,  துறவி,  தியானம் செய்து கொண்டிருந்தார். அங்கே  சில  பிராமண ஸ்த்ரீகள்  ஸ்னானம் பண்ண வந்தார்கள். ஒருத்தி கையில்  ரெண்டு வயசு குழந்தை ஒன்று.  ''ஸ்வாமி , இந்த குழந்தையை கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் நான் ஸ்னானம் பண்ணிவிட்டு வந்து எடுத்துக் கொள்கிறேன் என்று துறவி அருகே குழந்தையை விட்டாள்'
துறவி  தியானத்தில்  ஆழ்ந்து சமாதி நிலையில் இருந்ததால்  குழந்தையை கவனிக்காமல் அது  தவழ்ந்து போய் ஆற்றில் இறங்கி மூழ்கி  இறந்து விட்டது. 
ஆற்றில் இருந்து ஓடிவந்த தாய்  குழந்தையை காப்பாற்றுவதற்குள் அது  நீரில் மூழ்கி இறந்துவிட்டதால் அதன் சடலத்தை  எடுத்துக் கொண்டு துறவியிடம் வந்து கதறினாள்.  நிஷ்டை  கலைந்த  துறவி வருந்தினார்.  அந்த  தாயின் மேல் இரக்கம் கொண்டு  தனது  ஆத்மா ஜீவனை அந்த குழந்தை சடலத்தில் புகுத்தினார்.

  குழந்தை கண் திறந்து பார்த்தது சிரித்தது.   அதுவே பின்னர்  ஹஸ்தாமலகர்  ஆயிற்று.  ஆதி சங்கரரின் பிரதம சீடர். இயற் பெயர்  ப்ரித்விதராசார்யர், அப்பா  பிரபாகராசார்யர். 


Sivan Krishnan

unread,
Nov 8, 2025, 12:23:50 AM (6 days ago) Nov 8
to amrith...@googlegroups.com

வட்டப்பாறை அம்மன் -  நங்கநல்லூர்  J K   SIVAN 

இன்று வெள்ளி. சென்னையில்  ஆதிபுரீசுவரர் கோயில் திருவொற்றியூரில் உள்ளது. ,மூலவர்  ஸ்வயம்பு , புற்று லிங்கம் ஆதி புரீஸ்வரர், தியாகராஜா, திருவொற்றீஸ்வரர் என்றும்  பெயர் கொண்டவர். அம்பாள் திரிபுரசுந்தரி. காளி , வட்டப்பாறை அம்மன். தொண்டை நாட்டில் முக்கியமான பாடல் பெற்ற ஸ்தலம்.  மிகப்  பழமையான  சிவாலயம்.  ராஜராஜசோழன் காலதூங்கானை மாட கோவில்.  அறுபத்து மூவரில் ஒருவரான  சிவனடியார் கலிய நாயனாரின் அவதார ஸ்தலம். இங்கே தான் சுந்தரர் சங்கிலி நாச்சியார் திருமணம் நடந்தது. பட்டினத்தார் வாழ்ந்து முக்தி அடைந்த ஸ்தலம். 
கார்த்திகை பௌர்ணமி அன்று மாலை மட்டுமே வெள்ளிக் கவசம் திறக்கப்பட்டு அதற்கடுத்த இரு நாட்கள் மட்டுமே இவரை முழுமையாகத் தரிசனம் பெறலாம்.  புனுகு சாம்பிராணி தைல அபிஷேகம் மட்டுமே.

சிவன்  இங்கே பிரளயத்தை  தடுத்து, விலக்கி ,  'ஒத்தி' வைத்ததால்  திரு'வொற்றியூர்'.  கம்பர் பகல் எல்லாம் வால்மீகி இராமாயணத்தைக் கேட்டுவிட்டு, ராத்திரி உட்கார்ந்து  ராமாயண கவிதைகள்  எழுதுவாரம்.  இரவில் எழுதினால் அதற்கு அவருக்கு வெளிச்சம் வேண்டுமே? ஆகவே  வட்டப்பாறை அம்மனை பார்த்து பாடினார்;  ''ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே!  நந்தாது எழுதுதற்கு நல்லிரவில்  பிந்தாமல் பந்தம் பிடி!'    அம்பாளும் அப்படியே  செய்தாள்.

த்ரிசக்திகளில்  இங்கே  வடிவுடையம்மன்  ஞான சக்தி தேவி. வெகுநாளாக வயிற்று வலி உபாதையோடு இருந்தவருக்கு இங்கே வந்ததும்  பூரண குணமாயிற்றாம். ஒருவருக்கு  பொருளாதார சிக்கல்  நீங்கியது. சிலருக்கு  தட்டிக்கொண்டே  போன  திருமணம் சட்டென முடிந்தது. 
வட்டப்பாறை அம்மன்:
கண்ணகி கதை தெரியுமல்லவா? நான் சொல்லவேண்டியதில்லையே? பாண்டியன் சபையில் அநீதி நடந்து கணவன் கோவலன் உயிரிழந்த பிறகு, கண்ணகி, மதுரையை எரித்துவிட்டு உக்கிரமாக நடந்தவள் திருவொற்றியூருக்கு வந்தாள் .
வள் இங்கே வந்தபோது சிவனும், அம்பிகையும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். கண்ணகியின் கோபத்தை தணிக்க சிவன், தாயக் கட்டையை உருட்டி அருகிலிருந்த கிணற்றில் விழச்செய்தார். கண்ணகி, தாயக்கட்டையை எடுக்க கிணற்றிற்குள் இறங்கினாள். சிவன், அங்கிருந்த ஒரு வட்ட வடிவ பாறையை எடுத்து அந்த கிணற்றை மூடி விட்டார். பின்பு, கண்ணகி பாறையின் வடிவிலேயே காட்சி அளித்ததால் "வட்டப்பாறையம்மன்' ஆனாள் .அங்கே அவளுக்கு உருவான சிலையை தான் நாம் இன்று ஆலயத்தில் வணங்குகிறோம். லை வடிக்கப்பட்டது. வட்டப்பாறையம்மனின் உக்கிரம் , கோபத்தை தணிக்க இங்கே ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை பண்ணி இருப்பதைக் காணலாம்.

Sivan Krishnan

unread,
Nov 10, 2025, 11:47:20 PM (3 days ago) Nov 10
to amrith...@googlegroups.com
சூர்ய  சிந்தனை --   நங்கநல்லூர்  J K  SIVAN 

இன்று  ஞாயிறு.   வேலையில்லாமல்  மெதுவாக படுக்கை விட்டு எழுந்து வீட்டில் சமைக்காமல் வெளியே போய் எங்கூரு ஹோட்டல் வாசலில் தெருவில்  பிச்சைக்காரனைப் போல் காத்திருந்து   உள்ளே இடம் கிடைத்ததும்  ஓடி, யாரோ ஒரு , நேபாளி, பிஹாரி கொண்டு வந்து தரும் பெயர் தெரியாத உணவை பலமடங்கு காசு கொடுத்து தின்கிற நாள்

அது மட்டும் அல்ல.  ஞாயிறு என்பது சூரிய பகவான் பெயரும்  ஆகும். உலகத்துக்கு  உயிர் அளிப்பது சூரிய பிரகாசம். ஜீவ ஒளி. நாள் தவறாமல் குறித்த நேரத்தில் காலம் தவறாமல் தோன்றி மறைபவன் சூர்யன்.   நவகிரஹங்களில் பிரதான மானவன். நாம் பூமியில் இருந்து கொண்டு ஒரு   வருஷத்தில்  பிரதக்ஷணம் செய்யும் பகவான். ஒவ்வொருநாளும்  சந்தியா வந்தனம் பண்ணும் போது, காயத்ரி மந்திரம் உச்சரிக்கும்போது மனதால் நினைத்து  கண்ணால் தரிசிப்பவர்.  

புராணம் சொல்லும் விபரம்:  சூரியனின் அப்பா;  காஸ்யப ரிஷி. அம்மா;  அதிதி. மனைவி;  உஷா,. பிள்ளைகள்;  யமன், சனீஸ்வரன். அஸ்வினி தேவர்கள். பெண்  யமுனா நதிதேவி.   வாகனம்;  ஏழு  குதிரைகள். ஒரே சக்ரம்.  ஏழு என்பது  ஸ்வரங்களையம்,  சூர்ய ஒளி கொண்டுள்ள ஏழு  வர்ணங்களையும் கூட குறிக்கிறது. 
தேரோட்டி;  அருணன்.   உலோகம்;  தங்கம்.  நிறம்  செம்மஞ்சள்.  கல்;  மாணிக்கம். (RUBY)

"ஓம் பூர் பூவ: ஸ்வ:  தத் சவிதுர் வரேண்யம்  பர்கோ தேவஸ்ய தீமஹி  தியோ யோ ந: ப்ரசோதயாத்"  எனும் காயத்ரி மந்த்ர அர்த்தம்; சுருக்கமாக; ஓம் பூர் புவ ஸ்வஹ:''என்பது சூரியனை நோக்கி நாம் ஜெபிக்கும் காயத்ரி மந்திரம். 

'பூர்':பூலோகம், பூமி. 'புவ'  சூரிய மண்டல கிரஹங்கள்.'ஸ்வஹ':  இந்த பிரபஞ்சம்:  நமது தலைக்கு மேலே 'லொட லொட' என்ற சப்தத்தோடு சுற்றும் பழைய வோல்டாஸ் FAN மின்விசிறி சுற்றும் வேகமே ஒரு நிமிஷத்துக்கு 900 சுற்று Rpm. அது போடும் சப்தமே அடுத்த வீட்டுக்காரன் சண்டைக்கு வரும் அளவுக்கு இருக்கிறதே. சூரியன் வேகம்; நொடிக்கு 20, 000 மைல்!! .அதன் சப்தம்; ''ஓம்''. அதை முதலில் கேட்டவர் விஸ்வாமித்ர ரிஷி. ஏன் மற்றவர்கள் செவிடா? இல்லை.  ஒரு 200 அடி தூரத்தில் யாரோ 'டேய் சிவா'' என்று கத்தினாலேகூட காதில் விழுவதில்லை. எத்தனையோ சைபர்கள் கொண்ட நம்பர் மைல்களுக்கு அப்பால் அதே வேகத்தில் ஓடும் சூர்யா பூமி  கிரஹங்களின் சப்தமா காதில் விழும்?  எப்படி டெலஸ்கோப்பில் சாதாரண கண் பார்க்கமுடியாத வஸ்துவை பார்க்க முடிகிறதோ அப்படிபட்ட நுட்பமானது விஸ்வாமித்ரரின் தவ வலிமை. அதனால் அவர் அந்த 'ஓம்' என்ற பெரும் சப்தத்தை தியானம் செய்து கேட்டு மற்ற ரிஷிகளுக்கு சொன்னவர். அது தான் பிராமம், சிவம், கடவுளின்  ஒலி வடிவம் . கீதை கூட ''ஓம் இதி ஏகாக்ஷரம் ப்ரம்மம்'' என்கிறதே. சில ஜீவன் முக்தர்கள் சமாதியில் இப்போதும் கூட  சதா  ''ஓம்'' ஒலிக்கும். . 'ஓம்' ப்ரணவம்த்: அது (பகவான்) ஸவிதுர் : சூரியன் . வரேண்யம்: என்றால் பூஜிக்கத் தக்கது. ஒருவர் உருவம் தெரிந்தால், பெயரும் தெரிந்தால் அவரை எங்கும் கண்டு பிடித்துவிடலாம் அல்லவா. குட்டை ஆள் ரெட்டை நாடி, ஒருகால் ஊனம் கொட்டையூர் குப்புஸ்வாமி, சுண்டக்காமுத்தூர் கோவிந்தன், என்றால் ஒரு வழியாக சுண்டக்காமுத்தூரில் போய் அவனைத் தேடி கண்டுபிடிக்கலாம்.

விஸ்வாமித்ரர் ப்ரணவ சப்தத்தை கண்டுபிடித்து, அந்த மந்த்ரத்தை , காயத்ரி மந்த்ரத்தை உச்சரித்து பகவானை அடையும் வழி காட்டி விட்டார். சூத்ரம் FORMULA தெரிந்துவிட்டால் கணக்கை போட்டு முடிக்கலாம் அல்லவா. சூரியன், பிரபஞ்சத்தை ஒலியாக காட்டிவிட்டார்.
''பர்கோ தேவஸ்ய தீமஹி''  பர்கோ: ஒளி. தீபம், தேவஸ்ய: தெய்வங்கள், தீமஹி: த்யானம் செய் .

கண்ணுக்கு உருவமாக தெரியும் சூரியனை முதலில் பிடித்துக் கொள் . அதன் மூலம் உருவமற்றவனைப் பிடி. அவனைக் கட்டும் கயிறாக 'ஓம்' என்ற மந்த்ரத்தை விடாமல் சொல். இது மட்டும் போதாது என்பது தான் ரஹஸ்யம். மனது என்று நமக்குள் இருக்கிறதே அதை முதலில் கட்டி அசையாமல் பண்ண வேண்டும். அதை நிலை நிறுத்தி'ஓம் என்ற த்யானத்தில் ஈடுபட்டு மனதில் சூரியன் மற்றும் பிரபஞ்ச ஒளியை தேடினால் பகவானைப் பிடித்தாகி விட்டது.''தியோ யோ ந ப்ரசோதயாத்''    தியோ: புத்தி, யோ : யார் , எவர்?, நா: நாம் எல்லாரும், ப்ரசோதயாத்: சரியான வழியில் அழைத்துச் செல்லப்படுவோம்.   சூரிய 
பகவானே என் புத்தியை நிலை நிறுத்தி சரியான வழியில் என்னை நடத்திச்செல்'.  இது தான் காயத்ரி மந்த்ர ஜெப தத்வம்.

அண்ட பேரண்டம் எல்லாமே தலை தெறிக்கும் வேகத்தில் ஓடுகிறது. அவற்றின் சப்தம் 'ஓம்' என்று கடவுள் பெயரைச் சொல்கிறது. அந்த கடவுள் தான் எத்தனையோ சூரியன்களின் ஒளி, அவனே வணங்கத்தக்கவன். ஆகவே நாமெல்லோரும் மனதை, புத்தியை நிலைநிறுத்தி அவனையே தியானித்து ஒளியாகக் கண்டு 'ஓம்' என்ற அவன் நாமத்தை விடாமல் உச்சரிக்க அவனே வழிகாட்ட வேண்டும். மஹான்கள் பெரியவர்கள், யோகிகள், ரிஷிகள், பண்டிதர்கள் வித விதமாக அழகாக அர்த்தம் சொல்வார்கள். நாயேனுக்குத் தோன்றியதை நான் எப்படி புரிந்து கொண்டேனோ அப்படி சொல்லி விட்டேன் .
பாரத தேசத்தில்  சூரியனுக்கு ஆலயங்கள் உள்ள க்ஷேத்ரங்கள்;  ஒரிஸ்ஸாவில்  கோனார்க், தெற்கே  கும்பகோணம் அருகே சூரியனார் கோவில்,  திருச்சியில்  அரசாவூரில், குஜராத்தில்  மொடேராவில்.   ஜம்மு காஷ்மீரில்  மார்த்தாண்டம், பிஹாரில் கயாவில். ராஜஸ்தானில்  ரணக் பூரில் . பாகிஸ்தானில் மூல்தானில் என்ன நிலையில் இருக்கிறது என்று யாருக்கு தெரியும்?
சூரியன் எகிப்தில்  ரா  எனப்படும் கடவுள்.  பெரு  எனும் தேசத்தில் பழங்கால நகரம் மச்சுபிச்சுவில்  ஒரு சூரியன் கோவில் உள்ளது.

நமக்கு தெரிந்த  மஹாபாரதத்தில்  சூரியன்  கர்ணனின் அப்பா. தனது கர்ண குண்டலங்களை பிறக்கும்போதே  கர்ணனுக்கு தந்தவர்  சூரியன். குந்தி பெற்ற துர்வாசர் வரத்தினால்  கர்ணனை அளித்தவர்.  சந்தர்ப்ப சூழ்நிலையால் கர்ணன் குழந்தையாக இருந்த போதே கங்கையில் விடப்பட்டு, அதிரதன்,என்ற துரியோதனனின் தேர்ப் பாகனால் 
வளர்க்கப்பட்டு அவன் மனைவி ராதையிடம் வளர்ந்ததால் ராதேயன்.   முதல் பாண்டவனாக இருந்தும் அவர்களால்  அறியப்படாத அவர்கள் எதிரி.

மஹா பாரத யுத்தத்தின் முன்பு சூரியன்  தனது கர்ணனை சந்தித்து அவனை எச்சரிக்கும் காட்சி.  குருக்ஷேத்ரத்தில் யுத்தம் நடக்க நாள் குறித்து இரு பக்க சேனைகளும் தயார்.  பாண்டவர்களைக் கொல்வதில் கௌரவர்களின் முக்கிய பலம்  
கர்ணன்  தான். 
ஒருநாள் வழக்கம் போல்  விடிகாலை கங்கைக்கரையில்  கர்ணன் சூரியனை வணங்கி தியானத்தில் இருக்கிறான்.
தியானம் முடிந்து கண்ணை திறந்தால், கண்கூசும் ஒளி மயமாக  சூர்யன் நிற்கிறான்.  கர்ணனைக் கண்டதில் மற்ற மகிழ்ச்சி  முகத்தில் தெரிகிறது. 

''சூரிய  பகவானே  உங்கள் தரிசனத்துக்கு நமஸ்காரம்.''
''கர்ணா, அப்பா என்றே என்னை கூப்பிடு, இன்னும் மகிழ்வேன் ''
''ஆஹா  அது என் பாக்யம். '' அப்பா  அப்பா'என்னை ஆசீர்வதியுங்கள்''.
''மகனே, கர்ணா, நான் இங்கு உன்னை சந்தித்ததே  உன்னை ஆசிர்வதித்து, அதோடு எச்சரிக்கை செய்யத்தான்.. உன் காதில் என் குண்டலங்களையும் உன் உடலோடு  என் கவசத்தையும் அளித்ததே  உன் மேல் கொண்ட பாசத்தால். நீ எவராலும்  அழியக் கூடாது என்பதற்காகவே. நீ  தர்மிஷ்டன். சிறந்ததான தர்ம வள்ளல் என்பதில்  எனக்கு பெருமை. உனக்கு இந்திரனை தெரியுமல்லவா?
''ஆஹா  தெரியுமே, தேவர்கள் தலைவன். வஜ்ராயுதத்தை உடையவன். அவனைப் பற்றி வேறு என்ன தெரியவேண்டும்?
''ஆமாம் ஒரு விஷயம் இருக்கிறது  நீ தெரிந்து கொள்ளவேண்டியது. இப்போது  அவன் உனக்கு எதிராக சதியில்  ஈடுபட்டிருக்கிறான். உனக்கு ஆபத்து நேரப்போகிறது''
''அப்பா  இந்திரனால் எனக்கு என்ன ஆபத்து வரும் என்கிறீர்கள். எனக்கு  எவரிடமும் எந்த பயமும் கிடையாது. உங்கள் மகன் உயிருக்கு பயந்த கோழை அல்ல. ''
''நான் உனக்கு எப்படி  தந்தையோ அப்படி இந்திரன் அர்ஜுனனுக்கு தந்தை. அர்ஜுனனை அழிக்க உன்னிடம் மட்டுமே  ஆயுதம் உள்ளது அதுவே  நான் உனக்கு அளித்த  கவச குண்டலங்கள். உன் உயிரைக்  காப்பாற்றுபவை. நீ யார் எதைக்  கேட்டாலும்  தட்டாமல் யோசிக்காமல் மனமுவந்து அளிப்பவன் என்று இந்திரனுக்கு தெரியும் என்பதால் மாறு வேஷத்தில் உன்னை  அடைந்து உன் கவச குண்டலங்களைத் தானமாக  கேட்கலாம். எக்காரணத்தை கொண்டும்  அவற்றை மட்டும்  நீ  அளித்துவிடாதே.  அவை இல்லாவிட்டால் எளிதில் அர்ஜுனனால்  உன்னைக் கொல்லமுடியும் . இதைச் சொல்லிவிட்டு உன்னை  எச்சரிக்க தான்  நான் வந்தேன். ''

'' அப்பா உங்கள் ஒளியில் நான் பிறந்தவன், ஆனால் இருளில் வளர்ந்தவன்.  ராஜ பரம்பரையில் பிறந்தாலும், தேரோட்டி மகனாக பட்டம் பெற்றவன். நான் செய்யும் தான தர்மம் உங்களால் பெருகி எனக்கு அது ஒன்றே   ஆனந்தம் தருகிறது. அதையாவது தடுக்காதீர்கள்.  வருபவன் இந்திரன் என்றாலும் தானம் என்று என்னிடம் இருப்பதை அவனே பிச்சை கேட்கும்போது  என்னால் எப்படி தராமல்  இருக்க முடியும். அதை விட பெரிய அவமானம் என்ன இருக்கிறது? தானம் கொடுத்ததால் என் உயிர் பிரிந்தால் அது எனக்கு பெருமையே.''

''என் அருமை மகனே, கர்ணா, நீ  பரிசுத்த இதயம் படைத்தவன். எனக்கு பரிபூர்ண சந்தோஷம். நான் சொன்னதை மறக்காதே. ஜாக்கிரதையாக இரு.   நன்றாக யோசித்து  முடிவெடு''
''நன்றி அப்பா, என் உயிரை விட நான் அளிக்கும் தான தர்மம் எனக்கு அதிமுக்கியம்''
''கர்ணா, நான் போகுமுன்  உன்னிடம் ஒரே ஒரு வேண்டுகோள். அப்படி இந்திரன் என்று தெரிந்தும் உன்னை அவன் மகன் அர்ஜுனன் கொல்ல  நீ உன் கவச குண்டலங்களை தியாகம் செய்யும்போது அதற்கு பரிசாக அவனிடம் உள்ள வாசவி சக்தி எனும் வஜ்ராயுதத்தையாவது கேள். அதாவது உன் உயிரைக் காப்பாற்றட்டும் ''

''ஆகட்டும் அப்பா''  சூரியனை வணங்குகிறான். சூரியன் மறைகிறார்.

மறுநாள் காலையிலேயே  இந்திரன் ஒரு  பிராமணராக மாறு வேடமிட்டு வந்து கர்ணனிடம் கவசம், குண்டலம் கேட்டான்.
கர்ணன் உடலை வெட்டி இரத்தத்துடன் அவனுக்குக் கொடுத்தான் — சிரித்த முகத்துடன்.  அதற்குப் பதிலாக இந்திரனிடமிருந்து  வாசவி சக்திஆயுதத்தை பெற்றான்.  ஒரே முறை மட்டுமே பயன்படும் தெய்வாயுதம்.

கரணனுக்கு  தெரிந்ததை விட கண்ணனுக்கு எல்லாமே இன்னும் அதிகம் தெரியுமே .   கண்ணன்  உபதேசித்த கீதையில் ''எது எப்படி நடக்கவேண்டுமோ  அப்படி  நேருவதை  தடுக்க முடியாது. அவரவர் கர்மபலனை அனுபவித்தே ஆகவேண்டும்' என்று சொல்கிறதே . 

Sivan Krishnan

unread,
Nov 10, 2025, 11:47:20 PM (3 days ago) Nov 10
to amrith...@googlegroups.com
              
''இன்னும்  ஒஸ்தி என்ன இருக்கிறது? ---  நங்கநல்லூர் J K SIVAN

 ''இன்று  ஒரு நல்ல கதை உங்களுக்கு சொல்லவேண்டும் போல் இருந்தது. இதுதான் உங்களுக்கு பிடிக்கும்  என்று மனதுக்குள் ஒரு சின்ன  பக்ஷி சொல்லியது. கதையை ஆரம்பிக்கிறேன். படித்துவிட்டு  உங்களுக்கு  பிடித்ததா  பக்ஷி சொன்னது சரியா என்று சொல்லுங்கள். பக்ஷிக்கு நன்றி சொல்கிறேன். 

காசியில் எத்தனையோ பிராமணர்கள் வசித்தாலும் நான் சொல்லும் கதை ஒரு ஏழை பிராமணனைப் பற்றி மட்டுமே.. அவனுக்கு ஒரு மகள்.   எங்கே  போவான்  பணத்துக்கு?  நிறைய சீர் செயது, நகைகள் அணிவித்து பட்டு புடவைகள் எங்கே  எப்போது, எப்படி வாங்குவது, எப்படி கல்யாணம் பண்ணுவது? "
அவனுக்கு எந்த பணக்காரனுக்கு பணம் உதவி செய்யப்போவதில்லை. அவனுக்கு தெரிந்ததெல்லாம் காசி விஸ்வநாதர் மட்டுமே. நேராக அவரிடமே  சென்றான்.

''காசி விஸ்வநாதா, என் மகள் கல்யாணத்துக்கு கொஞ்சம் பணம் கொடு ?''
“பணம் வேண்டுமா உனக்கு. நேராக பிருந்தாவனம் போ. அங்கே சனாதன கோஸ்வாமி என்று ஒரு துறவி இருப்பார் அவரைக் கேள்'' என்கிறார் காசி விஸ்வநாதர். 

பிராமணன் பிருந்தாவனத்துக்கு நடந்து சென்றான்.   சனாதன கோஸ்வாமி என்பவர் யார்? எங்கே இருக்கிறார்? என்றெல் லாம் விசாரித்து. தேடி ஒருநாள் அவரை யமுனா நதிக் கரையில் காளிங்கன் எனும் விஷ நாகம் இருந்த இடத்துக்கு அருகே மணல் மேட் டில் பஜனை பண்ணிக்கொண்டு இருந்தபோது கோவணாண்டியாக பார்க்கிறான்.   சே சே  எங்கோ  தப்பு நடந்திருக்கிறதா  காசி விஸ்வநாதன் சொன்ன அடையாளத்தில்?  வீடு வீடாக சென்று பிக்ஷை வாங்குகிற, ஒருநாளைக்கு ஒரே ஒரு சப்பாத்தி உப்பில்லாமல் சாப்பிடுகிற  இந்த  சந்நியாசி எப்படி என்  பெண்  கல்யாணத்துக்கு பணம் கொடுப்பார்? அவ்வளவு தூரம் நடந்து வந்தது வியர்த்தமா? 

கோஸ்வாமி பார்வை பிராமணன் மேல் பட்டது. அருகே அழைத்தார்.
''யாரப்பா நீ புதிதாக இருக்கிறாய் இந்த பக்கம்?''
''குருநாதா, என் பெண் கல்யாணம் எங்காவது நிச்சயம் செய்து கல்யாணம் பண்ணி ஆகவேண்டும். அதற்கு பணம் வேண்டும்.....காசி விஸ்வநாதனைக் கேட்டேன். அவர் உங்களிடம் அனுப்பினார்''
''அப்பனே, நானோ ஒரு பரதேஸி . ஒருநாளைக்கு ஒரே ஒரு தடவை பிக்ஷை எடுத்து  பிழைப்பவன். கோவணாண்டி. சொத்து சுகம், செல்வம் எதுவும் இல்லாதவன். விரும்பாதவன் . காசி விஸ்வநாதன் என் மனதில் உறைபவன். அவன் என்னிடம் அனுப்பினான் என்றால் அதில் ஏதோ அர்த்தம் இருக்கவேண்டும்.  விஸ்வநாதன் வார்த்தை பொய்க்குமா? யோசிக்கிறேன்''
கோஸ்வாமி சற்று நேரம்  கண்ணை மூடி  விஸ்வநாதனை தியானித்தார். 

''ஆஹா இப்போது ஞாபகம் வருகிறது. எப்போதோ ஒரு சித்தர் இங்கே வந்தபோது என்னிடம் ஒரு மந்திரக் கல்லை கொடுத்து '' இதனால் எதை தொட்டாலும் தங்கமாகும். வைத்துக்  கொள் '' என்று என்னிடம் கொடுத்தார். எனக்கு அது  தேவையில்லை என்பதால் அதை இங்கே தான் எங்கோ மண்ணில் வீசினேன். புதைந்து போயிருக்கும். உனக்கு வேண்டுமானால் தேடி தோண்டி  கிடைத்தால்  எடுத்துக் கொள்''  என்கிறார் கோஸ்வாமி.

ஒரு வாரத்துக்கு மேலாக   இரவும் பகலுமாக அந்த ஏழை பிராமணன் யமுனா  நதிக்கரை மணலை எல்லாம் புரட்டி சலித்து  போட்டான். யாரிடமும்  என்ன தேடுகிறான் என்கிற  ரகசியத்தை சொல்லவில்லை.    எட்டாவது நாள் சிறிதாக மஞ்சளாக ஒரு கல் கிடைத்தது. அதை எடுத்து ஒரு இரும்பு துண்டின் மேல் தேய்த்தான். அது பொன்னாக மாறியது. அவனுக்கு எப்படி இருக்கும்?? யோசியுங்கள் என்று விட்டுவிடுகிறேன். அதைப் பற்றி நான்  மேலே எழுதப்போவதில்லை. பிராமணன் காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு ஓடினான்.

''காசி விஸ்வநாதா என் பிரார்த்தனை வீண் போகவில்லை'' என்று நன்றியோடு வணங்கினான். வீட்டுக்கு திரும்பும்போது பாதிவழியில் ஒரு எண்ணம். இவ்வளவு  ஐஸ்வரியம் தரும் இந்த கல்லை ஏன் கோஸ்வாமி வேண்டாம் என்று தூர எறிந்தார்? நிறைய தங்க ஆபரணங்கள் அவரிடம் சேர்ந்திருக்குமே ' கோவணாண்டியாக  அன்றாடம் எல்லோர் வீட்டு வாசலிலும் நின்று பிக்ஷை எடுக்க வேண்டியிருக்காதே?  நேராக பிருந்தாவனம் நடந்தான். கோஸ்வாமி எதிரில் கைகட்டி நின்றான். 

''ஏனப்பா நீ இங்கே  திரும்பி வந்துவிட்டாய்?''
''யோசித்தேன் குருநாதா. இந்த 'தொட்டால் பொன்னாகும்'' மந்திரக்கல்லை நீங்கள் ஏன் வேண்டாமென்று தூக்கி எறிந்தீர்கள் ஒருவேளை இதைவிட உயர்ந்த சாதனம் ஒன்று உங்களுக்கு கிடைத்து, நீங்கள் அதை ரஹஸ்யமாக எங்காவது   வைத்திருக்கிறீர்களோ என்று ஒரு சந்தேகம்,  எண்ணம் என்  மனதில். ஆகவே  உங்களிடம் கேட்டு இதற்கு பதிலாக 
அதை  அதைப் பெற்றுக்கொள்ள விருப்பம்''''

''சரி. அப்படி என்றால் முதலில் இந்த மந்திரக் கல்லை யமுனையில் வீசி எறி'' பிராமணன் அவ்வாறே செய்தான்.

''இங்கே வா... உன் காதில் ஒரு மந்திரம் ரகசியமாக சொல்கிறேன். உலகத்தில் எல்லோரும் தேடும் சாதாரண பொன், வெள்ளி, வைர ஆபரணத்தை விட மிக மிக உயர்ந்தது. பிராமணன் அருகே அமர அவன் காதில் உபதேசித்தார்:

''ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண , கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே '' இதை நீ கெட்டியாக பிடித்துக்கொண்டால் ராதை, கிருஷ்ணன் எனும் ஈடிணையற்ற விலை மதிப்பில்லாத அபூர்வ செல்வம் உன்னை வந்தடையும். இங்கேயே இரு. உன் மகள் திருமணம் தானாகவே நடக்கும். பிராமணன்  சிறந்த  பக்தன். ஆகவே  குருநாதர் சொன்னபடியே  செய்தான். ஒரே வாரத்தில் அவன் முற்றிலும் மாறி விட்டான். சதா சர்வ  காலமும்  ஹரே கிருஷ்ணா  ஹரே ராமா   ஜபம் தான்....அதற்குள் அவன் பெண்ணை யாரோ ஒரு கோடீஸ்வர தனவந்தர் யாத்ரீகர் கோஸ்வாமியை தரிசிக்க வந்தபோது பார்த்து தனது மகனுக்கு தனது முழுச்செலவில் திருமணம் செய்து கொண்டார்.இதற்கு மேல் சொல்ல எழுத பாக்கி 
என்ன இருக்கிறது?

 

Sivan Krishnan

unread,
Nov 10, 2025, 11:47:20 PM (3 days ago) Nov 10
to amrith...@googlegroups.com
 குடுமீஸ்வரர், சிகாகிரி நாதர்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

குடுமி வைத்துக் கொள்வது அநாகரீகம் என்று  இப்போது கருதுபவர்கள் அநேகர்.  ஆனால்  தற்காலிக  வாலிபர்கள் உலகளவில் குடுமியோடு, ரிஷிமாதிரி தலையில் நாரதர் கொண்டையோடு காணப்படுகிறார்கள். பிராமணர்கள் தான் குடுமி வைத்துக் கொள்பவர்கள் என்ற எண்ணம் மறந்து போய்விட்டது.  அக்காலத்தில்  ஆண்கள் எல்லாருமே குடுமிக்காரர்கள் தான். அதை மறைத்து  தலைப்பாகை அணிந்தவர்கள் உத்யோகஸ்தர்கள், பெரிய மனிதர்கள், பஞ்சகச்சம், காலில் கருப்பு பூட்ஸ், நிறைய பட்டன்கள்  கொண்ட கோட்டு , அதன் இடது பக்க பாக்கெட்டில் சங்கிலியோடு ஒரு  கோட்டு  பட்டனை இணைத்த  பாக்கெட் கடிகாரம். அங்கவஸ்திரம், மீசை, அல்லது மழ மழ  க்ஷவர முகம், நெற்றியில் நாமம், விபூதி, சாந்து பொட்டு  இப்படி  பல பேர்  இருந்தார்கள், இன்னும் பலர் வீட்டில் இப்படிப்பட்ட பழங்கால மனிதர்கள்  கருப்பு வெளுப்பில்   உற்றுப் பார்த்துக் கொண்டு, நாற்காலியில் இரு கால்களுக்கு இடையில் ஒரு வாக்கிங் ஸ்டிக்  சாய்த்து வைத்துக் கொண்டு ஏதோ ஒரு கையை அருகே  ஒரு உயரமான  ஸ்டூல் எல் வைக்கப்பட்டிருக்கும் தடிமனான புஸ்தகத்தைத்  தொட்டுக்கொண்டு சுவற்றில் தொங்குவதை காணலாம். சிலருடன் இழுத்துப் போர்த்திய புல்லாக்கு  பெண்களும் கோபமாக சிரிக்காமல்  நின்று கொண்டு நம்மை பார்ப்பார்கள்.  ஒரு கருப்பு போர்வையால் முக்காலியில் நிற்கும் காமிராவோடு  படமெடுப்பவர்  போர்த்திக்கொண்டு  படம் எடுக்கப்படுபவர்களை அசையாமல் அரைமணி நேரம் நிற்க சொல்வார். நம் மூதாதையர் கற்சிலையாக படத்தில் காணப்படுவது இதனால்  தான். 

குடுமிக்கு சிகை என்று பெயர். எப்படி  ஹிந்துக்கள் முன்பெல்லாம் சிகையில்லாமல் இருந்ததில்லையோ அவர்கள் நமது நாட்டை  வெள்ளைக்காரர்கள் ஆளும் காலத்தில்  கொஞ்சம்  கொஞ்சமாக அவர்களால் மாற்றப்பட்டார்கள். சிகையை, குடுமியை கிராப் தலை  மாற்றி விட்டது. பஞ்சகச்சத்தை  முழுக்கால்  நிஜார், பேண்ட், தின்று விட்டது.  பழங்கால  குடுமிகளான  முழுக்குடுமி, அரைக் குடுமி,  அப்பளாக் குடுமி, பின் குடுமி, முன் குடுமி, துளியூண்டு கிராப்புக்கு பின்னால் தொங்கும் சிண்டு  எனப்படும் பட்  குடுமி, ஜீட்  குடுமி எல்லாம்  மறைய ஆரம்பித்து விட்டது.  குடுமி இருந்தால்  அதன் அடர்த்தியும் சுருங்கிவிட்டது.  மனிதர்களே இப்படி குடுமியோடு இருந்த காலத்தில்  பகவானும் குடுமி இல்லாமலா
 இருப்பார்.

இக்காலத்திலும்  ஒரு சில கோவில்களில் சிவ பெருமானும் குடுமியோடு இருக்கிறார். செங்கல்பட்டு அருகில்  பொன் விளைந்த களத்தூரில்  முன்குடுமீஸ்வரர்  ஆலயம் சென்றிருந்தேன்.  இன்னொரு  பிரபல குடுமி நாதர்  சிகாகிரி  நாதர்.
 'குடுமியான்' என்றால்  ''நல்ல குணம் உடையவன்''  என்றும் அர்த்தம்.   குடுமி என்றால் சிறு மலை. ஒரு மலைக் கோவிலில் உள்ளதால் இந்த கோவிலில் உள்ள சிவனுக்கு குடிமியான் என்ற பெயர்.
ஒரு கதை இருக்கிறது கேளுங்கள்;

சிவன்  கோவில் அர்ச்சகர்  ஒருவருக்கு ஒரு சினேகிதி.  அவள் தினமும் கோவிலுக்கு வந்து சிவனை சந்திக்காவிட்டாலும் சிவாச்சாரியாரை தரிசித்து ஒருநாள் இருவரும் சந்தோஷமாக கோவிலில் பேசிக்கொண்டிருப்பார்கள்.

 சிவ பக்தனான  அந்த ராஜாவுக்கு தினமும்  சுவாமி மேல் சாத்திய புஷ்பமாலையை  அர்ச்சகர்  அனுப்பி அதை ஏற்றுக்கொண்டு   ராணிக்கு தந்து விட்டு  சிவப் பிரசாதம் இட்டுக்கொண்டு பிறகு தான் ராஜா தினமும் சாப்பிடுவான்.
ஒருநாள் இப்படி  அர்ச்சகரும் ஸ்நேகிதியும் கோவிலில் இருந்த போது  ராஜாவுக்கு மாலை அனுப்பு முன் ஸ்நேகிதிக்கு அதை அணிவித்தார் அர்ச்சகர். பிறகு அவளிடமிருந்து அதைப் பெற்று ராஜாவுக்கு அனுப்ப  நேரமாகி விட்டது.  

ராஜாவழக்கம் போல் மாலையை கண்ணில் ஒற்றிக்கொண்டு  பார்த்தபோது அதில்   சில  நீண்ட  கேசங்கள் இருந்ததைக்  கண்டு  அதிர்ச்சி அடைந்தான். உடனே  ஆட்களை அனுப்பி அர்ச்சகரை வரவழைத்தான்.  அர்ச்சகர் அரசன் எதிரில் கை கட்டிநின்றார் .

' எப்படி ஐயா  இன்று இந்த மாலையில் சில கேசங்கள்  காணப்படுகிறது?  என்ன காரணம் சொல்லும் உடனே ? '' என்று கேட்டான்.
அர்ச்சகர் நடுங்கினார். உயிருக்கு பயந்து, ''மகாதேவா நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டு  அரசே, ஒருவேளை  மஹாதேவரின்  குடுமியில் இருந்து  சில  கேசங்கள் மாலையில்  கலந்திருக்கலாம்''
என்று உளறி விட்டார்.  

''என்ன சொல்கிறீர் நீர்?  சிவலிங்கத்திற்கு குடுமியா? ஆஹா ஆச்சர்யமாக இருக்கிறது. நாளைக்  காலை ஆலயத்துக்கு வருகிறேன். மஹாதேவன் குடுமியை தரிசிக்க வேண்டும். '' என்றான் ராஜா.

''பரமேஸ்வரா என் உயிரைக் காப்பாற்று'' என்று கதறினார் அர்ச்சகர். மறுநாள் காலையில் அரசன் ராணியோடு வந்து தரிசனம் செய்தபோது அவன் கண்களுக்கு லிங்கத்தின் உச்சியில்  ஒரு   குடுமி தெரிந்தது.  அரசன் மிகவும் மகிழ்ந்து  அர்ச்சகருக்கு பரிசுகள் கொடுத்தான்.  அர்ச்சகர் அந்த நேரம்  பரமேஸ்வரா  நீ  என் உயிரைக் காப்பாற்றினாய்  என்று நன்றி யோடு கதறிய வார்த்தைகளை என்னால் எழுத முடியவில்லையே.  ஆனால்  பரமேஸ்வரன் அருளால்  அர்ச்சகர் அந்த பெண்ணை மணந்து  தம்பதியாக  வெகு காலம் சந்ததியோடு சிவனுக்கு தொண்டு செய்தார்கள் என்பது சொன்னாலே போதும்.

குடுமியான் மலை குகைக் கோவில் புதுக்கோட்டையில் மேற்கே 20 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. . பழம் பெயர் திருநல குன்றம். 2000 வருஷத்திய கோவில். சிவனுக்கு இங்கே குடிமியான் என்றர்த்தம் கொண்ட சிகாகிரி நாதர், நிகேதாச
லேஸ்வரர், ஜெயந்தவனேஸ்வரர் என்று பெயர்கள் உண்டு. ராமரால் பூஜிக்கப்பட்ட க்ஷேத்ரம். அம்பாள் அகிலாண்டேஸ்வரி. ச்வேதகேது, நளன்  , மீனத்வஜன், காங்கேயன், சுந்தர பாண்டியன், மற்றும் பல்லவ அரசர்களால் அவ்வப்போது நிர்மாணிக்கப்பட்ட கோவில்.   சிவலிங்கம் கல்லால் செதுக்கிய குகை உள் வடிவில் உள்ள சிகாகிரீஸ்வரர்” 
8-ஆம் நூற்றாண்டு முதல் 10-ஆம் நூற்றாண்டு வரை தொடங்கி, பின்னர் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர நாயக்க மன்னர்களால்  புனரமைக்கப்பட்ட  பழம் பெரும்  குகைக்கோயில். 
“பரிவாதினி” என்ற ஏழு கீற்று இசையகருவிக்கான இசை குறியீடுகள்   இங்கே  கல்லில்  தீட்டப்பட்டுள்ளது. 
அழகான குகை  சிற்பங்களை  இங்கே  காணமுடியும். 

மகா சிவராத்திரி வருஷம் வருஷமாக கோலாகலமாக   இங்கே கொண்டாடப்படும். சனி பகவான் தொல்லை க்கு  பரிகார க்ஷேத்ரம். 

 63 நாயன்மார்கள் இந்த கோவிலில் விசித்ரமாக மலை உச்சியில் உள்ளார்கள். வழக்கமாக கோவில் பிராகரத்தில் வரிசையாக நின்று கடைசியில் ஒரு பிள்ளையாரும் இருப்பார். ரிஷபா ரூடரக சிவன் இருக்க இரு புறமும் நாயன்மார்கள் இந்த கோவிலில் புது மாதிரியாக காட்சி தரும் ஒரே கோவில் தமிழ் நாட்டில் இது தான்.

எண்ணற்ற சிற்பங்கள் நிறைந்த குகைக் கோவில். புதை பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையில் இருக்கும் இந்த சிவன் கோவில் பார்க்க வேண்டிய ஒன்று. சில சிலைகளைக் கண்டு பயப்படும்படியாக இருக்கிறது. சில இன்றெல் லாம் பார்த்துக்கொண்டே இருக்க வைக்கிறது. உதாரணம்: உலகளந்த பெருமாள் சிலை, ரதி -மன்மதன், அகோர வீரபத்ரன், பத்து தலை ராவணன், விஷ்ணு மோகினியாக, மற்றும் வினை தீர்க்கும் விநாயகர் சிலிக அபூர்வம். சிவன் கோவில் ஆனாலும் தூணில் தசாவதாரம்.

முதியவன், பையன், குதிரை கதை தெரியுமே - அதில் வரும் ஒரு முதியவன், பாலகன் குதிரை சிலைகள் அழகே அழகு. இதை கல்கி அவதாரம் என்றும் சொல்கிறார்கள். கண்ணிருக்கும்போது பார்க்கவேண்டிய சிற்ப அற்புதங்கள். சொல்லாமலே தெரிந்து கொள்ளவேண்டியது. பல்லவ கால குகைக் கோவில், சிற்பங்கள். நிறைய நம்மால் படிக்கமுடியாத எழுத்தில் (க்ரந்தம்?) சங்கீதம் பற்றி எழுதியிருக்கிறதாம். நமக்கு தான் சங்கீதமும் தெரியாதே.இந்த சங்கீத தேனில் மயங்கி அனேக தேனீக்கள். கிட்டே போய் தொட்டு கொட்டு வாங்கவேண்டாம். கிழக்கே பார்த்து இரு த்வார பாலகர்கள், ஒருவர் கோபமாக விழிக்க, இன்னொருவர் மந்தஹாசமாக சிரிக்கிறார். ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயரில் 644 கால் தான் (தூண்கள்) இந்த 9ம் நூற்றாண்டு கோவிலில் பார்க்க முடியும்  

Sivan Krishnan

unread,
Nov 10, 2025, 11:47:20 PM (3 days ago) Nov 10
to amrith...@googlegroups.com
ஈடற்ற பக்தி     --   நங்கநல்லூர்  J K  SIVAN 

பாரத தேசத்தில் உதித்த  எண்ணற்ற  பக்தர்களில் சிவபக்தர்கள் பலர். அதிலும் பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று பக்தர்களை, நாயன்மார்கள் எள்று பெயரிட்டு பாடல்களாக  சேக்கிழார் பெருமான் அளித்திருக்கிறார். அதில் கண்ணப்பர் கதை ரொம்ப பிரபலம். எல்லோரும் அறிந்த கதை என்றாலும் இன்று அதை  உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். 
பக்தர்கள் அனைவரும் பிராமணர்கள் அல்ல. அப்படி அவசியமும் இல்லை. யார் மனதில் பக்தி மிகுந்து இருக்கிறதோ அவர் இறைவனோடு ஒட்டி உறவாடுபவர்.   ஆழ்வார்கள் நாயன்மார்களில் அநேகர்  பிராமணர்கள் இல்லை.  பல குலங்களில் பிறந்து தெய்வீக தன்மை பெற்று  நம்மால் வழிபடப்படும்  மஹான்கள். உன்னதர்கள் அவர்கள்,  நமது புராணங்களில்  பக்ஷிகள், விலங்குகள் கூட பக்தியால் மேம்பட்டு வழிபடப் படுன. ஜடாயு, ஹனுமான், ஜாம்பவான், கருடன், நந்தி, மயில்,   யானை,சிம்மம்,  கஜேந்திரன்,ஆதிசேஷன் எல்லாமே மனிதர்கள் இல்லையே,

பொதப்பி என்ற   ஆந்திர தேசத்தில் ஒரு ஊர்வேடுவர்கள் குடும்பங்கள் வாழ்ந்த இடம். அவர்களுக்கு நாகன் என்ற வேடன் தலைவன். அவன் மனைவி தத்தை. இருவருமே முருக பக்தர்கள். முருகனின் வள்ளியே  வேடுவ குலத்தவள் தானே. முருகன் அருளால் நாகன் மனைவி தத்தை  ஒரு ஆண் குழந்தையைப்  பெற்று   திடகாத்திரமான அந்த குண்டு பையனுக்கு  'திண்ணன்''  என்று பெயர். பதினாறு வயது வாலிபன் ஆகி  அப்பா நாகனுக்கு பதிலாக வேடுவர் குல தலைவனானான். நண்பர்களோடு  காட்டுக்குச் சென்று வேட்டையாடுவது வழக்கம். 

ஒருநாள் ,  வேட்டை நாய்கள் சகிதம் ஆயுதங்களோடு புறப்பட்ட  திண்ணன் காட்டை வளைத்து அட்டகாகசமாக உள்ளே புகுந்து மிருகங்க ளை துரத்தினான். கரடி, புலி, மான் என பலவற்றை உயிரோடும் பிணமாகவும் பிடித்தான். அவன் கண்ணில் அப்போது ஒரு கொழுத்த காட்டுப் பன்றி தென்பட்டது. திண்ணன் அதைத் துரத்த அவனை அந்த மாய பன்றி எங்கெங்கோ இழுத்துக் கொண்டு ஓடியது. நாணன், காடன் இருவரும் களைத்துப்   போய்   மரநிழலில் அமர்ந்தார்கள். திண்ணன் களைப்பை பொருட்படுத்தாமல் மலையில் ஓடினான். பன்றி பிடிபட்டது. கொன்றான். அதை சுட்டு உண்ண தயாராயினர். ''தண்ணீர் வேண்டுமே குடிக்க. ரொம்ப தாகமாக இருக்கிறதே'' என்றான் திண்ணன்.

நாணன் மலை அருகே நின்ற ஒரு உயரமான தேக்குமரத்தை காட்டினான். ''திண்ணா , அந்த மரம் பக்கத்தில் ஒரு ஆறு ஓடுகிறது. அதில் நல்ல குடிநீர் கிடைக்கும். பன்றியைத்  தூக்கிக்கொண்டு ஆற்றை நோக்கி நடந்தார்கள்.
 எதிரே திருக்காளத்தி மலை திண்ணன் கண்ணில் பட்டது..

''நண்பர்களே அதோ பார்த்தீர்களா ஒரு மலை. அதன் மீது ஏதோ ஒரு கோவில் தெரிகிறதே வாருங்கள் அங்கே செல்வோம்.'' என்றான் திண்ணன்

''திண்ணா,அங்கே குடுமி நாதர் என்று சிவலிங்கம் இருக்கிறது. அழகான சின்ன கோவில். வா  போகலாம். கும்பிடலாம்'' என்றான் நாணன். மலையை நெருங்கி மேலே செல்வதில் ஏனோ ஒரு உற்சாகம், மனதில் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி திண்ணனுக்கு ஏற்பட்டது. ஏன்? அது தான் தெய்வ சங்கல்பம்.

பொன்முகலி ஆறு வந்தது. ''காடா, நீ   இங்கே தீ மூட்டு பன்றியை சுடு. அதற்குள் நான் மலை மேல்  நாணனோடு சென்று குடுமி தேவரை பார்த்து கும்பிட்டு விட்டு வருகிறேன்'' என்றான் திண்ணன்.

அப்போது  உச்சி காலம். தேவர்கள் வந்து காளத்தீஸ்வரனை வழிபடும் நேரம். அவர்கள் துந்துபி போன்ற தேவ வாத்தியங் கள் முழக்கிய சப்தம் திண்ணன் காதில் மட்டும்  ஒலித்தது. ஒரு வேலை  திண்ணன் முற்பிறப்பில் அர்ஜுனன் என்று  காளஹஸ்தி புராணம் சொல்கிறது. 
''நாணா , அது என்ன சப்தம்?' என கேட்டான் திண்ணன்.'
நாணன் காதில் சப்தம் எதுவும்  விழவில்லை. ''ஏதோ காட்டில் மரங்கள், மிருகங்கள்எழுப்பும்  ஓசையை நீ கேட்டிருப்பாய் திண்ணா''

திண்ணன்  மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத குதூகலம்.  திண்ணன் மலையேறினான். மலையில் ஒரு கோவில். அதனுள் தீபம் எரிகிறது. பெரிய  சிவலிங்கம்.  காற்றில் தீபம் அசைகிறது. கருவறைக்கு  கதவே இல்லை. காற்றின் அசைவில் மணி டாண்  டாண்  என ஒலித்தது திண்ணன் செவிக்கு இன்பமாக '' வா திண்ணா , உனக்காக தான் காத்திருக்கிறேன்'' என்று சொல்வது போல் மனதில் அடிநாதமாக கேட்டது. தாயைக் கண்ட சேய் போல வேகமாக ஓடி அப்படியே குடுமித்தேவரை ஆலிங்கனம் செய்தான் திண்ணன்.

குடுமித் தேவர் தலையில், சிவலிங்கத்தில் பச்சிலை பூக்கள் தெரிந்தது. ''அடடா நான் இதுவெல்லாம் கொண்டுவர வேண்டும்'' என்று அறியவில்லையே?

நாணன் சொன்னான். ''திண்ணா நான் உன் தந்தையோடு ஒரு முறை முன்பு இங்கே வந்திருக்கிறேன். அப்போது ஒரு பார்ப்பனர் இங்கே வந்து இந்த சிவலிங்கத்துக்கு தண்ணீர் நிறைய தலையில் கொட்டினார். பிறகு இலைகளை போட்டார், பூக்களை பறித்து  வந்து மேலே போட்டார். அது இந்த சாமிக்கு பிடிக்கும் போல் இருக்கிறது. இவரைக் கும்பிட வேண்டுமென் றால் நாமும் நாமும் அதெல்லாம் செய்யவேண்டுமடா?'''என்றான்

விட்டகுறை தொட்டகுறையோ? அன்று முதல்  திண்ணன் கால்கள் தானாக   அடிக்கடி காளத்தி மலைமேல் அவனை இழுத்து சென்றன. வாயில் நீர்சுமந்து வந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வான். தலையில் நிறைய புத்தம் புது மலர்களை சுமந்து வருவான். இலைகளால் அவனுக்குத் தெரிந்த அர்ச்சனை செய்வான். சிவனுக்கு பசிக்குமே என்று தான் வழக்கமாக உண்ணும் பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை சிவனுக்கு மனமுவந்து படைப்பான்.

இதுவரை குடுமி நாதனை  தரிசிக்க  திண்ணன்  வரும் நேரமும் வழக்கமாக பூஜை பண்ணும்  சிவாச்சாரியார் வரும் நேரமும்  வெவ்வேறாக இருந்தது.  தனித்தனியாக தான் குடுமி நாதருக்கு அவரவர் வழியில் வழிபாடு நடந்தது.
முதல் முதலாக திண்ணன் இவ்வாறு காளத்திநாதரை தனது வழியில் பூஜித்து ''மாமிச நைவேத்தியம்'' அளித்த அன்று மாலை காளத்தி நாதரை அர்ச்சித்து பூஜை செய்யும் சிவகோசரியார் எனும் சிவாச்சாரியார் பூஜா  திரவியங்களுடன் வந்தார். சாஸ்த்ர பிரகாரம் சிவலிங்கத்திற்கு ஆகமவிதிப்படி பசும் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்கும் மணங்கமழும் வண்ணம் வாசனை திரவியமிட்டு, நேரந் தவறாமற் பூசை செய்பவராக சிவனுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.  ஆகவே  அன்று மாலை வந்த சிவாச்சாரியார்க்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது
வயதான காலத்திலும் சிவாச்சாரியார் கொம்பு ஊன்றிக் கொண்டு  வந்து மூச்சிரைக்க மலை ஏறி தான் கொண்டுவந்த நைவேத்திய பொருள்கள், அபிஷேக சாமான்கள், துவைத்து உலர்த்திய வஸ்திரம், எல்லாம் தலையில் மூட்டையாக சுமந்து காளத்தி நாதனை அடைவார்.  

இன்று அவர் மனம் கொதித்தது.  ''யாரோ ஒரு மஹா பாவி  இப்படி காளத்தீஸ்வரன் முன்பு  இறைச்சி, எலும்பு  எல்லாம் கொண்டு வந்து போட்டு  இந்த பகவான் சந்நிதியை  புனிதமற்றதாக செயகிறானே,  ஏன் எதற்காக?  என்ன கோவம் இந்த சிவன் மேல்?  இதையெல்லாம் நீ எப்படி சகித்துக்கொண்டு இருக்கிறாய்  சிவனே?  என்று வருந்தினார் . மூன்று
கால பூசை வில்வத்தோடு பூசை  செய்யவேண்டியவன் இந்த ரத்த வாடை நெடி அடிக்கும் மாமிசங்களை அப்புறப்படுத்தும்  துர்பாக்கியம் எனக்கு இந்த வயதில் ஏன்?  ஏதோ நான்   எப்போதோ செய்த பாவத்திற்கு தண்டனையா பரமசிவா?  என்னாலேயே தாங்கமுடியவில்லையே, நீ எப்படி இதை பொறுத்துக் கொண்டி ருக்கிறாய்? இங்கே வேடுவர்கள் நடமாட்டம் அதிகம். அவர்களில் யாரோ ஒரு துஷ்டன் தான் இதைச்  செய்திருக்கிறான். அவனுக்கு தக்க தண்டனை கொடு ஈஸ்வரா .''

திண்ணனுக்கோ  சிவன் மேல் ஒவ்வொரு கணமும் அன்பும் பாசமும் பக்தியாக பரிமளித்தது. ''இந்த காட்டில் தனித்து மலைமேல் இருக்கிறானே இந்த பரமசிவன் இவனுக்கு நானும் குளித்து விட்டு சாப்பிட ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டாமா?. ஒரு கையில் வில் அம்புகள், இன்னொரு கையில் நன்றாக நெருப்பில் வாட்டி சமைத்த பன்றி மாமிசம். அதை அங்கங்கு கொஞ்சம் கடித்து சுவைத்து நன்றாக  வெந்து இனிக்கும்  பாகத்தை சிவனுக்கு என் மனமுவந்து ஆகாரமாக கொடுப்பேன். அவனைக்  குளிப்பாட்ட நீர் எப்படி எதில்  கொண்டுவருவேன்?  ஆஹா,அதற்கு தான் வாய் இருக்கிறதே. நிறைய அதில் நீர் நிரப்பிக் கொண்டு   வருகிறேன்.''  வாயில் இருக்கும் நீரை  காளத்திநாதன் மேல் உமிழ்ந்து தான் கொண்டுவந்த பச்சிலைகளை பூக்களை சிவலிங்கத்தின் மேல் போட்டு, உணவாக  தான் கொண்டுவந்த இறைச்சியை   சிவ லிங்கத்தின் முன் இலை மேல் வைத்து உபசரிப்பான். பேசுவான். பிறகு செல்வான்.  இப்படி தான் அவன் பூஜை நடந்து கொண்டிருந்தது.

திண்ணன் பாபியல்ல. துஷ்ட வேடன் அல்ல.  உண்மையான அன்பும் பக்தியும்  கொண்டவன். அவனுக்கு தெரிந்த வகையில் மனமுவந்து சிவனுக்கு  தனது வழிப்பாட்டை செய்தவன்.    சிவாச்சார்யாருக்கு திண்ணனின் தூய பக்தியை  தெரிவிக்க வேண்டாமா?  அலகிலா விளையாட்டுடையவர்  பரமேஸ்வரன் ஒரு திட்டம் வகுத்தார். .

''சிவாச்சாரியாரே, உமது வருத்தம் அர்த்தமற்றது.  எனக்கு இப்படி விசேஷமாக பூஜை செய்பவன் இந்த காட்டை சேர்ந்த வேடர் குல தலைவன் நாகன் மகன் திண்ணன். இப்போதைய  வேடர் தலைவன். நாளை  சாயங்காலம்   இங்கே அவன் வரும்போது அவன் கண்ணில் படாமல் ஒளிந்திருந்து  என்ன நடக்கிறது என பாருங்கள். புரியும்''  என்று  அவர் கனவில் காளத்தீஸ்வரர் உரைத்தார்.  சிவாச்சாரியார் திடுக்கிட்டு எழுந்தார். என்ன கனவு இது?. ஈஸ்வரன் கட்டளைப்படி செய்கிறேன் '' என்று மறுநாள் சீக்கிரமே போய் மலைமேல்  காளத்தி நாதன் கோவில் அருகே ஒரு மரத்தின் பின்  ஒளிந்து கொண்டு  கவனித்தார்.  நெஞ்சு திக் திக் என்று அடித்துக்கொண்டது. என்ன நடக்கப்போகிறது?  பகவானே!

அன்று காலையிலிருந்தே  திண்ணனுக்கு ஏதோ நெஞ்சில் இனம் புரியாத ஒரு சஞ்சலம் உருத்தியது. சிவனுக்கு இன்று நல்ல உணவாகவே அளிப்போம் என்று சில புதிய மிருகங்களை கொன்று நெருப்பில் வாட்டி  காட்டுத்தேன்  நிறைய அதன் மேல் ஊற்றி, சிறிது சுவை பார்த்து. ''நன்றாக இருக்கிறது.  இது சிறந்தது என்று தேர்ந்தெடுத்து ஒரு இலையில் சுற்றி எடுத்துக் கொண்டான். வாய் நிறைய  நீர் வழக்கம்போல் நிரப்பிக்கொண்டு மலையேறினான்.  இதுவரை ஐந்து பகல், ஐந்து இரவு சிவனோடு தொடர்ந்த பாசமாக இப்படி  அபிஷேகம் அர்ச்சனை  நைவேத்யம் நீடித்தது.

காளத்தீஸ்வரர்  முன் நின்ற திண்ணன் வாயினில் இருந்து நீர் உமிழ்ந்து சிவனை அபிஷேகித்தான்.  இலைகள் மலர்களை லிங்கத்தின் மேல் போட்டான். அப்போது தான் ஒரு அதிர்ச்சி. ஐயோ என்ன  இது என்  சிவனின் இடது  ஒரு கண்ணிலிருந்து  ரத்தம் பீறிட்டது   'தெய்வமே, என்ன ஆயிற்று உனக்கு? ஏன் ஒரு கண்ணில் ரத்தம் வடிகிறது? அவசரமாக   தனது இடையில் உடுத்திய  துணியை கிழித்து  துடைத்தும் மேலும் மேலும் கண்ணிலிருந்து ஆறாக ரத்தம் பெருகியது.  திண்ணனுக்கு தலை சுற்றியது. கை  நடுங்கியது. கொண்டுவந்த இறைச்சி சிதறியது.  துடித்தான்.

''என்ன செய்வேன்?   துடைக்க துடைக்க ரத்தம் பெருகியதே தவிர நிற்கவில்லை.   தனக்கு தெரிந்த பச்சிலை மருத்துவம் செய்தான்.  ரத்தப்பெருக்கு நிற்கவில்லையே.

திடீரென்று திண்ணனுக்கு  ஒரு யோசனை.  சிவனுக்கு இனி கண் குணமாகாது.  எனக்கு தான்  ரெண்டு  கண் இருக்கிறதே. ஒன்றை கொடுத்தால் என்ன?   மறுகணமே துளியும் தயங்காமல்  கூரான அம்பினால் தனது இடது கண்ணை அகழ்ந்து   ரத்தம் பெருகும்  சிவனின் கண்ணில் மேல் வைத்து அப்பினான். அப்பப்பா  சிவனின்  கண்ணில் பெருகிய ரத்தம் நின்று விட்டது. திண்ணனின் கண் அங்கே சரியாக பொருந்தியது.

மிகவும் சந்தோஷம் திண்ணனுக்கு.   ஆனால்  அவன் அது  நீடிக்கவில்லை.  சிவனின் மறு  கண்ணில் இப்போது ரத்தம் பீரிடத் துவங்கியது. ''அடாடா  இது என்ன  கஷ்டம்?  சிவனே உனது துன்பத்தைப் போக்கினேன் என்றல்லவா சந்தோஷப் பட்டேன். இப்போது  உன்  இடக்கண்ணில்  அதே  துன்பம் நேரிட்டதே. பரவாயில்லை எனக்கு தான் வைத்தியம் தெரியுமே.  என் னுடைய  ரெண்டாவது கண்ணும் உனக்கு தான். அது சரி,  எனக்கு இப்போது இருப்பதோ ஒரே ஒரு கண். அதையும் எடுத்து விட்டால் எப்படி  உன்னை பார்ப்பேன்?  அதை எடுத்து விட்டால் எப்படி   குருடனாக  சரியாக உனது  இடது கண்ணில் அதை பொருத்துவேன். அட  இது ஒரு பெரிய பிரச்னையா? உன் இடது கண் இருக்கும் இடம் தெரியவேண்டும்  அவ்வளவு தானே.  என்  கால் எதற்கு இருக்கிறது?. இதற்கு உபயோகப்படட்டுமே.   தனது ஒரு  காலை  சிவன் இடக்கண் மேல் அடையாளம் தெரிய  வைத்துக்கொண்டு  அம்பால்   தனது இரண்டாவது கண்ணையும் அகழ ஆரம்பித்தான் திண்ணன்.

''திண்ணா  நிறுத்து உன் செயலை ''  
சிவனின் கட்டளை திண்ணன் காதில் கேட்டது. அதை லக்ஷியம் பண்ணவில்லை  திண்ணன். அம்பால் தனது கண்ணை அகழ்வதில் கவனம். 
''நிறுத்தடா திண்ணா ''....  மூன்று முறை சிவன் கட்டளை அவனை  கண்ணைத் தோண்டாமல்  தடுத்து நிறுத்தியது.   காளத்தீஸ்வரர்  திண்ணன் முன் ப்ரத்யக்ஷமானார். சிவன் அருளால் திண்ணன் இழந்த கண்ணைப் பெற்றான்.  

திண்ணன் மஹேஸ்வரனுக்கு தன்  கண்களைக் கொடுக்க துணிந்ததால்  உலகுக்கு இனி என்றும் அவன்  கண்ணப்பன். அறுபத்து நாயன்மாரில் ஒருவராக சிவன் ஆலயங்கள் அனைத்திலும்  பக்தர்களால் கண்ணப்ப நாயனார்  வணங்கப் படுகிறார். இது  சிவாச்சாரியார் கண் முன் நடந்த அதிசயம்.

ஆதிசங்கரர்  சிவானந்தலஹரி யில்  63 வது சுலோகத்தில்  பகவான் மேல் பக்தன் கொள்ளும் பக்தி பற்றுக்கு உதாரணமாக கண்ணப்ப நாயனார் பற்றி கூறுகிறார்.

मार्गावर्तितपादुका पशुपतेरङ्गस्य कूर्चायते,  गण्डूषाम्बुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।किञ्चिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते    भक्तिः किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ॥ ६३॥
Marga varthitha paduka pasupathe rangasya koorchayuthe, Gandoo shampoo nishechanam pura ripo divyabhishekaa yathe, Kinchid bhakshitha maams sesha kabalam navyopaharayathe, Bhakthi kim karoth yaho vana charo bhaktha vatam sayathe. 

வழி மறித்து கொள்ளையடிக்கும்  சண்டாளர்கள் கூட பசுபதீஸ்வரனின் சிரத்தை  அலங்கரிக்கும்  கூர்ச்சம்,  வில்வ  தளமாகிறார்கள்.   அவர்கள்  வாயால் உமிழும் எச்சில்  ஜலம்  கூட  பரமேஸ்வரா உனக்கு  கங்காபிஷேக தீர்த்தமாகிறது. த்ரிபுராந்தகா, உனக்கு அவர்கள் அளிக்கும்  மாமிச துண்டு கூட நைவேத்தியமாகிறது. மனதில் நீ மட்டுமே  குடி கொண்ட  வேடநும் கூட  உன் பக்தர்களில்  ராஜாவாக  முதன்மை ஸ்தானம் பெறுவது  ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். பக்திக்கு நீ அளிக்கும் பரிசு எல்லையற்றதல்லவா?  

சென்னையிலிருந்து  ரெண்டு மூன்று மணிநேரத்தில்  காளஹஸ்தி சென்றுவிடலாம். காளத்தீஸ்வரன் ஆலயம், பஞ்சபூதங்களின் ஆலயத்தில்  வாயு க்ஷேத்திரம். விளக்கில் தீபம் ஆடிக்கொண்டே இருப்பதை காணலாம். மலைமேல் கண்ணப்பர்  ஆலயம் இருக்கிறது. பொன்முகலி ஆறு பாதி நாள்  தண்ணீரில்லாமல் ஓடுகிறது.


Sivan Krishnan

unread,
Nov 10, 2025, 11:47:20 PM (3 days ago) Nov 10
to amrith...@googlegroups.com
   
ஸூர்தாஸ்  -  நங்கநல்லூர்  J K  SIVAN
                 
 23. ஹரி தர்சனம்

பாலும் கசந்ததடி, பஞ்சணை உறுத்துதடி, தூக்கம் மறந்ததடி, கண்ணீர் பார்வையை  மறைத்ததடி, நெஞ்சம் பிளந்ததடி, இதயம் வெடித்ததடி, வாழ்க்கை வெறுத்ததடி, இன்னும் இது போன்ற எத்தனையோ ''தடி''  க்களில் வருத்தங்கள். யாருக்கு?   ஒருவராக இருந்தால் அடையாளம்,  பெயர் சொல்லலாம். ஊரே இப்படி ''தடி' யால்  வருந்தும்போது?  ஆம், பிருந்தாவனத் திலிருந்த அனைத்து கோபியர் நிலையும் இதே தான்   என்றபோது எப்படி சொல்வது? ஏன் என்ன காரணம், எதனால்? என்ற திகைகிறீர்களா?   ஏன் என்ற கேள்விக்கு வேண்டுமானால் பதில் சொல்கிறேன்.

அந்த ஊரின் ஜோதி வெளியேறுகிறது . மனதில் குடியிருக்கும்  மகிழ்ச்சி மதுராபுரி  நகருக்கு குடி பெயர்கிறது.... ஆனந்தன் அடுத்த ஊருக்குப்  போகிறானே.  கண்கள் குளமாகி  ஆறாகி, நீராகி வெள்ளமாகி, வற்றியும் விட்டதே.

கோகுலத்தை விட்டு  பிருந்தாவனத்தை விட்டு, மதுராவுக்கு  கண்ணன் செல்கிறானே . தேர் வந்து விட்டதே அவனை தூக்கிச் செல்ல.   கண்களே, இன்னுமொரு முறை அவனைக்  கண்டு ஆனந்தியுங்கள். அவன் இதோ இன்னும் சற்று நேரத்தில்  கண்ணிலிருந்து  மறைந்து விடுவான்.  கருத்தில் மட்டும்  நிற்பான்.   அவன் தாமரைக் கண்களை கண்டு மகிழ்ந்த எங்கள் கண்கள்  இனி பனித்து , துயரத்தை தான் ஒவ்வொருநாளும் வெளிப்படுத்தும்.

எங்கே அவன்? அழகிய கரு நீல நெற்றியில் சிவந்த சிந்தூரத்திலகன். கண் முன்னாலேயே நிற்கிறதே அவன் கருநீல கழுத்தில் ஜொலிக்கும் வெண்ணிற முத்து மாலைகள்.     அவன் பேசும்போதெல்லாம் எவ்வளவு அழகாக அவை அசையும்!   இத்தனை நாள் எங்களை மகிழ்வித்த அந்த தெய்வத்தை இனி பிருந்தாவனத்தில் எங்கே பார்க்கமுடியும்?  பிரிந்தாவனத்துக்கு சொந்தக்காரன் ஏன் இதை விட்டு போகவேண்டும்?

எங்கள் அனைவரையும் அன்பினாலே பிணைத்து இன்பமூட்டிய அவன் எங்கள் கழுத்தில் சுறுக்கை மாட்டி விட்டதை போல் அல்லவா இருக்கிறது இப்போது?

உள்ளே இத்தனை உணர்ச்சிகளை கழுத்து வரைக்கும் கொண்டுள்ள கோபியர் வெளியே துன்பத்தை,  துயரத்தை,   காட்டிக்  கொள்ளாமல் அன்றாட வேலைகளைச் செய்து கொண்டு பேசாமல் இருக்கிறார்களே, அடடா,   இது என்ன நிலைமை? என்கிறார் சூர்தாஸ்.
அவர்கள் சிரித்து சாதாரணமாக இருப்பதாக காட்டிக்  கொண்டாலும் உள்ளே ஒரு தாங்கமுடியாத எரிமலையை அல்லவோ விழுங்கி  உள்ளே  சுமக்கிறார்கள்!

கிருஷ்ணா, நீ இன்றி காசியே கூட அல்லவோ அமைதி இழந்து விட்டதாம்.  அப்படி இருக்க  பிருந்தாவனத்தில் எங்கள் நிலையைச்  சொல்லவா வேண்டும்?''என்று கோபியர்கள் கூறுவதை கேட்டுவிட்டு சொல்கிறார் சூர் தாஸ்  கவிதையாக.

हरी दर्शन की प्यासी,
अखियाँ हरी दर्शन की प्यासी,
देखयो चाहत कमाल नयन को,
निसदीन रहेत उदासी|
अखियाँ हरी दर्शन की प्यासी|

केसर तिलक मोतिन की माला,
वृंदावन के वासी,
नेह लगाए त्याग गये त्रिन्सम,
डाल गये गाल फाँसी|
अखियाँ हरी दर्शन की प्यासी|

काहु के मान की को जानत,
लोगन के मन हासी,
सूरदास प्रभु तुम्हरे दरस बिन,
लेहो करवट काशी|
अखियाँ हरी दर्शन की प्यासी|

Hari darshan ki pyaasi,
akhiyan hari darshan ki pyaasi,
dekhyo chaahat kamal nayan ko,
nisdin rehet udaasi.
akhiyan hari darshan ki pyaasi.

Kesar tilak motin ki mala,
vrindavan ke vaasi,
neh lagaaye tyaag gaye trinsam,
daal gye gal phaansi.
akhiyan hari darshan ki pyaasi.

Kaahu ke man ki ko jaanat,
logan ke man haasi,
surdas prabhu tumhre daras bin,
leho karwat kashi.
akhiyan hari darshan ki pyaasi.


 

 

Sivan Krishnan

unread,
Nov 10, 2025, 11:47:20 PM (3 days ago) Nov 10
to amrith...@googlegroups.com
இரு வீரர்கள் சந்திப்பு.   -   நங்கநல்லூர் J K  SIVAN 

எனக்கு  அப்போது  12-13 வயது.  நுங்கம்பாக்கம்  கார்பொரேஷன் ஸ்கூலில்  ஏழாவது வகுப்பு மாணவன். சுந்தரவேலு முதலியார் வாத்யாரை ரொம்ப பிடிக்கும். யாரையும் கோபிக்க மாட்டார். சிரித்த முகம்.. மேல்வரிசையில் மூன்று பல் கிடையாது. இடைவெளியில் அவர் பேசும்போது ஸ் ஸ் என்று காற்று தான் வரும். அப்படையென்றாலும் அவர் சொல்லும் அற்புத கதைகள் இன்னும் மனதில் நிற்கிறது. 

முதலியார் சரித்திர வாத்யார். ஐந்தரை அடிக்கு கீழே, ரெட்டை நாடி தேகம், சட்டைக்கு மேல்  வேஷ்டி கட்டி அதை ஒரு தோல் பட்டை பெல்ட் கெட்டியாக  இடுப்பில் நிறுத்தி வைத்திருக்கும். பிரவுன் கலர் கோட் பட்டன் போடாமல் திறந்து இருக்கும். சட்டையில் மேலே பட்டன் இல்லாமல் பிரவுன் கலர் கழுத்து  அதில் உள்ள ருத்ராக்க்ஷம்  தெரியும்.  முக க்ஷவர கவனம் அதிகம் இல்லை என்பதால் முகம்  அக்ஷதை எள்ளு ஸ்வரூபமாக இருக்கும்.  கண்ணாடியை நெற்றி யில் தூக்கி விட்டுக்கொண்டு புஸ்தகத்தை படித்து  என்ன சொல்ல வேண்டுமோ அது கதையாக வெளியே வரும்.  ஒரு சம்பவம் நினைவு கூர்ந்து என் வழியில் சொல்கிறேன்.

ஜீல நதியில் வெள்ளம்.  கீழக்கரையில்  பௌரவ ராஜ்ஜியம்.  புருஷோத்தமன்  தான் ராஜா. அதற்கு கிழக்கே  தக்ஷசீலம்.  நதியின் மேற்கு கரையில்  கிரேக்க  மா வீரன்  அலெக்சாண்டர்  பெரும்  படையுடன்  வந்து முகாம்  இட்டிருக்கிறான். அதற்கு வடக்கே  காந்தாரம். வடக்கே   காஷ்மீரம் அங்கே இருந்து தான்  ஜீலம் நதி ஓடிவருகிறது. மாசிடோனியாவில் இருந்து புறப்பட்ட  அலெக்சாண்டர்  வழியில் இருந்த  ராஜ்யங்களை எளிதில் வேண்டு விட்டான். எதிரே ஜீலம் நதி.வெள்ளத்திற்கான அறிகுறி தெரிகிறது.  நதியை கடந்து படை செல்லவேண்டும்.   எங்கு  ஆழம்  கம்மியோ, நதி குறுகளோ அங்கே  மண்மூட்டைகள் தடுப்பு போட்டு  படை நதியை கடக்க  வீரர்கள்  முயல்கிறார்கள். பாதி படைவீரர்கள்  நதியை கடந்து கீழக்கரை பிரதேசம் நோக்கி  வேகமாக  ஆயுதங்களோடு சென்று விட்டார்கள். பௌரவ ராஜ்ய மன்னன் புருஷோத்தமன் மஹா வீரன், புத்திசாலி, தைர்யவான்.  அந்நிய படைகள் வருகிறது என்ற காற்று வாக்கு செயதி கிடைத்து படையை பலப்படுத்திவிட்டான்.  ஆகவே  முதலாக  நதியை கடந்த வீரர்களை அவன் போர் வீரர்கள் சமாளித்து விட்டார்கள்.  நதியில் நீரோட்டத்தை பல மணி  நேரங்களில் அடுத்த பெரும்படையுடன்  அலெக்சாண்டருக்கு வந்து விட்டபோது தான் புருஷோத் தமனின் தன்னுடைய  படை பலம் போதாது என்று உணர்ந்தான்.  ஒற்றர்கள்  தக்ஷசீலம்  காஷ்மீர  ராஜாக்களின்  உதவி கேட்டு படை  வந்து கொண்டிருந்தது. அதற்குள்  அலெக்சாண்டரின் முழு படையும்  நெருங்கி சூழ்ந்து கொண்டதால் புருஷோத்தம
னின் படை தோற்றது.   பாஞ்சால  வீரன் புருஷோத்தமன்  பிடிபட்டு  கைகள் கட்டப்பட்டு  ஆயுதமின்றி  அலெக்சாண்டர் முன் நிறுத்தப்பட்டான்.  ரெண்டாயிரத்து முன்னூறு வருஷங்கள் முன்பு நடந்த சம்பவம் இது.

மாசிடோனியாவில் இருந்த போதே  புருஷோத்தமன் பற்றிய விவரங்கள் அலெக்சாண்டருக்கு  வந்து விட்டது. அலெக் சாண்டர்  இளைஞன்.  வெளுப்பு இன்றி  மாநிறம் கொஞ்சம் கலந்த  தாமிர  நிறம். சுரண்ட முடி. ஆழமான நீல நிற கண்கள். நீண்ட நாசி, விரிந்த உதடுகளில் புன்சிரிப்பு.  ஆஜானு பாகு மனிதன். இடுப்பில் உடைவாள். மார்பில் கவசம்.  பழையகால சரித்திரங்கள் அவனை  இஸ்கந்தர் என்கிறது.

எதிரே  ஏழு அடி  உயரமான தங்க நிற மனிதன் நிற்கிறான். திடகாத்ரன். மீசையும் தாடியும் அவன் கம்பீரத்துக்கு மெருகேற்றியது. பயம் தெரியாத கண்கள்.  அடர்த்தியான கம்பளிப்பூச்சி  புருவங்கள். உடலில் விழுப்புண்கள். தலையில்  கிரீடம். கழுத்தில்  தங்க வைர மாலைகள்.  யானை மீதிருந்து தனித்து  போரிட்டவனை  கிரேக்க படைவீரர்கள் சூழ்ந்து  பிடித்துவிட்டார்கள்.  அவனைக்  கொல்லக்கூடாது  என்பது தளபதிக்கு அலெக்சாண்டர் இட்ட கண்டிப்பான கட்டளை.  எதிரே நிற்பவன் உருவத்திலேயே அவன் ஆளப்பிறந்தவன் என தெரிந்தது.

புருஷோத்தமன் சிறந்த கல்விமான். சகல சாஸ்திரங்களும்  அறிந்த நீதி மான். சமஸ்க்ரிதம், ப்ராக்ருத பாஷைகளில் சரளமாக பேசுபவன்.  சிவபக்தன்.  அவனிடம் இருந்த படையில்   இருபதினாயிரம்  காலாட்படை வீரர்கள். அம்பு வில் ஏந்தியவர்கள். 2000  குதிரை வீரர்கள். அதிக பக்ஷம் 200 யானைகள். திடீரென்று எதிர்பாராத நேரத்தில்   தாக்கிய அலெக்சாண்டர் படையை எதிகொள்ள இது போதவில்லை.
எல்லோரும்  அமைதியாக என்ன நடப்போகிறதோ என்று அதிர்ச்சியோடு காத்திருந்தார்கள்.  எதிரே நிற்கும் எதிரி புருஷோத்தமனை  அலெக்சாண்டரே தன்னுடைய  வாளினால்  சிரச்சேதம் பண்ணப்போகிறானோ?  வேறுயாராவது தலையை வீசி எரியப்போகிறார்களோ  தெரியவில்லை... அலெக்சாண்டர் எந்த நேரம் என்ன கட்டளையிடுவான், சொல்வான், செய்வான் என்று எவருக்குமே தெரியாதே. 

எதிரே  களைத்து, உடலில்  ரத்தம் சொட்ட,  நின்ற புருஷோத்தமனை  அலெக்சாண்டர்  கண்ணால்  ஊடுருவி பார்த்து எடை போட்டான்.  

''ஆமாம், இவன் நான் கேள்விப்பட்டபடி  மஹா வீரன். இல்லை  யென்றால் என் படை இவனைப் பிடிக்க, வெல்ல இவ்வளவு
சிரமப்பட்டிருக்காது.  என்ன தைர்யம் அவன் முகத்தில்,   நான் தான் அவன் எமன் என்று தெரிந்தும், சிறிதும் அவன் என்னைக் கண்டு  இவன் கலங்கவில்லையே!''.
''ஓஹோ நீ தான் புருஷோத்தமனா?'
''சாதாரண புருஷோத்தமன் இல்லை, பௌரவ  ராஜ்ய மன்னன்''
''அது முன்பு. இப்போது நீ ஒரு கைதி. நான் உன்னை எப்படி நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்?''  அலெக்சாண்டர் விவேகி. அரிஸ்டாட்டில் என்கிற  ஞானியின் சீடன்..அறிவாளி.  
”நீ கேட்பது விசித்திரமாக அல்லவா இருக்கிறது. ஒரு ராஜா உன் முன் நின்றால் அவனை ராஜாவாக தானே நீ நடத்த வேண்டும் அது தானே மரியாதை, சம்ப்ரதாயம், நீதி, நேர்மை.''
”ம்ம்.  சம்ப்ரதாயம், மரியாதை, அதெல்லாம் தேவையோ?''
''நிச்சயம் . நான் உன் ஆசனத்தில் அமர்ந்து, நீ என் எதிரே நின்று கொண்டிருந்தால் நான் அப்படி தான் நடத்துவேன். அது தான் எங்கள் பண்பாடு. யுத்தத்தில் ஒருவர் ஒரு சமயம் தோற்பது அடுத்த முறை வெல்வது சர்வ சாதாரணம். அது ஒருவன் வீரத்தை கட்டுப்படுத்தாது''
 ''புருஷோத்தமா, நீ உண்மையில் ஒரு நேர்மையான ராஜா வாகவே பேசுகிறாய். அப்படியே  ஆகட்டும்''
''இவர் கட்டுகளை அவிழ்த்து விடுங்கள், எதிரே  இன்னொரு ஸிம்மாஸனம்  தயாராகட்டும். அதில் அவர் அமரட்டும்''
'  அலெக்சாண்டர் மஹா வீரரே, உம்மை சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி, உமது வீரத்தைப் பற்றி ஒற்றர்கள் கூறி கேள்விப்பட்டது எல்லாம் உண்மை என தெரிகிறது'

அலெக்சாண்டர்  எழுந்தான்  புருஷோத்தமன் அருகே  வந்தான். தனது கழுத்தில் இருந்த ஒரு மாலையை புருஷோத் தமனுக்கு சாற்றினான். அவனை தோளோடு தோளாக அணைத்து  முதுகில் அன்போடு தட்டிக்  கொடுத்தான். 

''புரு...  நீ  என் நண்பன். நன்றாக  ராஜ்யத்தை நடத்துகிறாய் என்று  அறிகிறேன்.  நீ இந்த பிரதேச அதிபதி. உன்  ராஜ்யத் தோடு  அருகே உள்ள  ரெண்டு  ராஜ்யங்களையும் சேர்த்து,  என் பரிசாக உனக்கு அளிக்கிறேன்.  நமது நட்பு தொடரட்டும்....''

அலெக்சாண்டர் வெற்றி வீரனாக தான் திரும்பினான்.  புருஷோத்தமனும்  மனதில் மகிழ்ச்சியோடு தனது யானை மேல் ஏறி  அரண்மனை திரும்பினான்..

Sivan Krishnan

unread,
Nov 12, 2025, 4:38:48 AM (yesterday) Nov 12
to amrith...@googlegroups.com
சிவா தாத்தா  கதைகள்  -   நங்கநல்லூர்  J K  SIVAN


காலயவன் பெற்ற  பரிசு 

குழந்தைகளே, நான் சொல்லும் கதைகள் அநேகம் கிருஷ்ணன் ராமன் சம்பந்தமாகவே   இருக்கிறது என்பதால்  தான் நீங்களும் ஆர்வமாக  கேட்கிறீர்கள். அவர்கள் இதிகாச புருஷர்கள்   ஏழாயிரம் வருஷமானாலும் அலுக்காதவர்கள். நமக்கு அப்புறமும்  நமது சந்ததிகள்  அவர்களை தேடுவார்கள்.  ஏனென்றால்   மஹா பாரதத்தில் வரும் கதைகளை எத்தனை முறை கேட்டாலும் சொன்னாலும் படித்தாலும்  யாருக்காவது  'சே வேண்டாம்' என்று வெறுக்க தோன்றுவதில்லை.  ஏன் அப்படி?  அதில் இழையோடும்  உயிரோட்டம், நிதர்சனம், நமது பண்பாடு, முன்னோர்களின் திறமை,  வாழ்க்கை முறை,  குணாதி சயங்கள், அற்புத கற்பனை இதெல்லாம் வேறே எங்கே  ஒரே இடத்தில் கிடைக்கும்  அவை யாவுமே மேலே சொன்ன இருவரில் வாழ்க்கை சம்பவங்களாக இருக்கிறதே.?

நல்லது  செய்பவர்களுக்கு,  நல்லவர்களுக்கு, துன்பமும், கஷ்டமும்  சோதனையாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.   நமக்கு இறைவனை நினைக்க, அவன் அருள் பெற ,  துன்பம் அவசியமாகிறது.   குந்தி,  '' கிருஷ்ணா எனக்கு மேலே மேலே துன்பத்தையே கொடு அப்போது தான் அழுது உன்னை நினைப்பேன் நீ வருவாய்... என்றாள் ''

கடவுளே  மனிதனாக வந்து பிறந்த போதும் இந்த சோதனை கிருஷ்ணனுக்கும் பிறந்த கணம் முதல் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.   குழந்தையாக இருந்த திலிருந்தே   அவனை ராக்ஷஸர்கள் அவன் வாழ்க்கையை முடிக்க முயற்சித்தார்கள். இல்லை, தப்பு தப்பு.  அவனை  அணுகி தங்கள் மரணத்தை வரவழைத்துக் கொண்டார்கள்.
 ராக்ஷஸர்களுக்கு, தீயவர்களுக்கு, பிறந்தது முதல் மரணத்தை தந்து கொண்டே  இருந்தான் கண்ணன். அவன் அவர்கள் அளித்த  இன்னல்களை ஏற்று,   அந்த தீயவர்களுக்கே, அவர்கள்   தனக்குத் தர விரும்பிய, மரணத்தை கொடுத்து  அழித்தான்.

கிருஷ்ணன் மதுராபுரி  ராஜ்யத்தை அரசாளும்போது  நாலா  பக்கத்திலும் எதிரிகள்  பெருகி, வலுக்கவே, ராஜ்யத்தை மேற்கே துவாரகைக்கு மாற்றினான்.  கிருஷ்ணன் எதிரிகளைக்  கண்டு அஞ்சி, பயந்து மதுரையிலிருந்து ஓடவில்லை. யாதவர்களைக் காப்பாற்றவே இந்த மாற்றம். அங்கே கடற்கரையில் ஒரு நகரம் உருவாகியது. ஆகவே தான் துவாரகை க்ஷேத்ரம் நமக்கு கிடைத்தது.

கர்க மஹரிஷி புத்திரன்  மகன் காலயவன் மூலம் யாதவர்களுக்கு ஆபத்து  என்று கண்ணனுக்கு  நன்றாக தெரியும். . யாதவர்களால் காலயவனைக் கொல்ல முடியாது என்பது சிவன் கொடுத்த வரம்.  ஆகவே  யாதவர்கள்  துவாரகைக்கு குடியேறினார்கள்.

ஜராசந்தன் கிருஷ்ணனை வெல்லவோ, கொல்லவோ,  முடியாமல்,  சிசு பாலன்  மூலம் சால்வனின் நண்பனாகி  அவனோடு இருந்த காலயவன் மூலம்  யாதவ குலத்தையும்  கிருஷ்ணனையும் அழிக்க திட்டம் தீட்டினான்.

மதுராவிலிருந்து காலயவன் துவாரகைக்கு  வந்துவிட்டான்.  அவனை எப்படி முடிப்பது என்று கிருஷ்ணன்  ஏற்கனவே தீர்மானித்து விட்டு  அந்த திட்டம் நிறைவேறக்  காத்திருந்தான்.

காலயவனை  யாதவ குல  கிருஷ்ணன்  கொல்ல முடியாது.  ஆகவே  காலயவனிடமி ருந்து தப்பி ஓடுவது போல் கிருஷ்ணன் நடித்து  உயிர் தப்ப ஓடுவது போல்  ஓ   காலயவன் அவனைப்  பின்  தொடர்ந்தான் .  கிருஷ்ணன்  வேண்டுமென்றே  காலயவனைப் பின்தொடரச்  செய்து,  ஒரு மலைக் குகை அருகே சென்றான்.  அந்த குகையில் பல  யுகங்களாக முசுகுந்தன் தூங்கிக் கொண்டு இருந்தான். அவன் தூக்கத்தை யாராவது  கெடுத்தால்  தூக்கம் கலைந்து கண் விழித்துப் பார்த்த அக்கணமே அவனை  எழுப்பியவன் மரணமடைவான் என்று இந்திரனிடம் வரம் பெற்றவன் முசுகுந்தன். இது கிருஷ்ணனுக்
குத்  தெரியாதா?  காலயவன் தன்னைத்   துரத்திக்கொண்டு வந்த   போது  பயந்தவன் போல்  கிருஷ்ணன் நடித்து முசுகுந்தன் இருந்த குகைக்குள் ஓடி இருட்டில் ஒளிந்து கொண்டு தனது பீதாம்பரத்தை தூங்கிக் கொண்டிருந்த  முசுகுந்தன் மேல் போர்த்தி  விட்டான்.  கிருஷ்ணனைத் துரத்திக் கொண்டே  பின்னாலே ஓடிவந்த காலயவன்,  இருண்ட குகையில் கிருஷ்ணன் நுழைந்ததைப் பார்த்து  ''அகப்பட்டான்  கிருஷ்ணன்'' என்று மகிழ்ந்து குகைக்குள் பிரவேசித்தான்.  கிருஷ்ணன் தனது  மஞ்சள் அங்க  வஸ்திரத்தை தூங்கிக் க்போண்டிருந்த முசுகுந்தன் மேல்  போர்த்திவிட்டு  இருளில் பதுங்கிக் கொண்டான்.  காலயவன்  கிருஷ்ணன் தான் தன்னிடமிருந்துதப்ப  குகைக்குள்  போர்த்திக் கொண்டு படுத்திருக்கிறான்  என  நினைத்தான்.

''பேடிப்  பயலே , கிருஷ்ணா, இங்கேயா வந்து தூங்குபவன் போல் பாசாங்கு பண்ணுகிறாய். உன்னை என் கையால் கொல்லும்  முன்  அச்சாரமாக முதலில் பலமாக  ஒரு உதை வாங்கிக் கொள், இந்தா '' என்று காலால் பலமாக , தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தனை உதைத்தான்.

முசுகுந்தன் துவாபர யுகத்தில் கிருஷ்ணனின்  வருகைக்காக காத்திருந்து  அவனை சதுர் புஜனாக தரிசித்துவிட்டு விண்ணு லகம் போக காத்திருந்தவன்.   அது வரை எவர் தொந்தரவும் இல்லாமல் இந்த குகையில் தூங்கிக் கொண்டிருந்தான்.

காலயவன்  தன்னை பலமாக  காலால் உதைத்ததும்  முசுகுந்தனுடைய  உறக்கம் கலைந்தது.  கடுங்கோபமாக,  ''யாரது என்னை உதைத்து அவமதித்து எழுப்பியது?''   என்று காலயவனை உற்றுப் பார்த்தான். இந்திரன் கொடுத்த  வரம் அந் கணமே பலித்தது.  

ஒரு பெருந் தீ  முசுகுந்தன் கண்ணில் இருந்து புறப்பட்டு காலயவனை விழுங்கி அவன் எரிந்து  அந்த ஸ்தலத்திலேயே சாம்பலானான்.  

தீயின் ஒளியில்  முசுகுந்தன் அந்த குகையில் இன்னொருவன் இருப்பதைப்  பார்த்தபோது அங்கே  சதுர்புஜ நாரயணன் தரிசனம் அவனுக்கு கிடைத்து மகிழ்ந்தான்.  சந்தோஷமாக கிருஷ்ணனை வணங்கி விண்ணுலகம் திரும்பினான்

பிரபு  இந்த சமயத்துக்காக தானே  யுகமாக காத்திருந்தேன் ''என்றான் முசுகுந்தன்.
அதற்கு தானே  காலயவனையும் உன்னால்  முடிக்க இங்கே கூட்டிக்கொண்டு  ஓடி வந்தேன்''  என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தான் கண்ணன். 


 

 

Sivan Krishnan

unread,
Nov 12, 2025, 4:38:51 AM (yesterday) Nov 12
to amrith...@googlegroups.com

நிழல் தான் நிஜமா?   - நங்கநல்லூர்  J K  SIVAN 

இப்போ நான் ஒரு கதை சொல்றேன்.   நான் இட்டுக்கட்டி, சொந்தமாக யோசித்து  சொல்ற  கதை இல்லை.ஏழாயிரம் வருஷ பழங்கதை.  ராமருக்கு  அவர் குரு  வசிஷ்டர் சொன்ன கதை.   வசிஷ்டர்  ராமருக்கு சொன்ன விஷயம் எல்லாம் ''யோக வாசிஷ்டம்''  அதில் வரும் சம்பவங்கள்  நமக்கு  பழசாக ,  புரியாத  விஷயமாக  இருக்கலாம். ஆகவே    யாரும் அதிகம் இதெல்லாம்  படிப்பதில்லை,  பேசுவதில்லை.  

கதி ஒரு நல்ல சாது பிராமணன். கோசல ராஜ்யத்தில் வாழ்ந்தவன். வாழ்க்கை வெறுத்து போய் குடும்பத்தை விட்டு காட்டுக்கு போய்விட்டான். அங்கே ஒரு காட்டாறு.  அதில் கழுத்தளவு நீரில் நின்று எட்டு மாதம் தவம் செய்தான். அந்த காலத்தில் கடும் தவம் செய்தால் கடவுள்  நேரே  வந்து வரம் தருவார் என்ற நம்பிக்கை.வீண் போனதில்லை. ஆகவே  மஹா விஷ்ணு நேரில் வந்தார். 

''அப்பா,  கதி, எதற்கு  இப்படி கஷ்டப்பட்டு என்னை வேண்டிக்கொண்டு தவம் செய்கிறாய்?''
கதி தண்ணீரிலிருந்து வெளியே வந்து மஹாவிஷ்ணு காலில் விழுந்தான்.

''பரமாத்மா, மஹாவிஷ்ணு, நீங்கள் இந்த லோகத்தை, மாயையை, படைத்து, , எல்லோரும் அதில் சிக்கி தவித்து ஜனன மரண துன்பம் அடைய செய்துவி ட்டீர்கள்.   எனக்கு  ப்ரம்மத்தோடு  ஐக்கியமாகி மோக்ஷம் பெற அருளவேண்டும்.  அதற்கு தடங்கலாக இருக்கும் மாயையை நான் அறிந்து, புரிந்து கொள்ளவும் அதை வெல்லவும்  அருளவேண்டும்''

'பக்தா, நீ விரும்பியபடியே,  மாயையை  அறிந்து, உணர்ந்து அதன் பிடியிலிருந்து தப்பும் அனுபவம் சீக்கிரமே  உண்டாகும்''
வரமளித்து விட்டு மஹா விஷ்ணு மறைந்து விட்டார். 

''ஆஹா  நான் கேட்டதை  மஹா விஷ்ணு அருளிவிட்டார்'  என்ற பேரானந்தத்தோடு கதி ஆற்றில் மறுநாள் காலை வழக்கம் போல் நீராடபோனான். மனதில் மஹா விஷ்ணு சொன்ன வார்த்தைகளே திரும்ப திரும்ப  ஒலித்ததால் அவன் மனது நித்ய கர்மாநுஷ்டானத்தில்  ஈடுபடவில்லை.   தலையைக் கவிழ்த்து தண்ணீரில் முங்கினான் .

மனதில் சினிமா காட்சி ஓடியது.  .....அவன் வீட்டில் அவன் ஏதோ வியாதி வந்து செத்து கிடக்கிறான். அவன் மனைவி கதறுகிறாள். சொந்தம் பந்தம் எல்லாம் வந்து வருந்துகிறது. கூட்டமாக  நிற்கிறது. அவன் அம்மா அவன் உடல் மேல் புரண்டு புரண்டு அழுகிறாள். வாத்தியார்கள்  வந்தாயிற்று சுடுகாட்டில் கட்டைகள் அடுக்கி அவனை வைத்து எரித்து சாம்பலையும் கரைத்து அவனை எல்லோரும் மறந்து கூட போயாச்சு. 
(இது அத்தனையும்  கதி,  தலையை தண்ணீருக்குள்  முக்கி எடுப்பதற்குள் தோன்றிய காட்சிகள்.  இன்னும் தொடர்கிறது)
 கதி இப்போது அடுத்த பிறவி எடுக்கிறான். யாரோ ஒரு அழுக்கு காட்டுவாசி பெண் கருவில் உருவாகிறான். அந்த காலத்தில் வழக்கத்தில் இருந்த தாழ்ந்த வகுப்பு'' பெண் ஒருத்தி கருவில் பிறந்து வளர்ந்து அதே வகுப்பு பெண்ணை மணந்து குழந்தைகள் பெற்று சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறான். சில காலம்  அவனைத் தவிர  எல்லோரும் மரணம் அடைந்தார்கள். அவன் சோகமாக தனிமனிதனாகி, மனம் கலங்கி  வாடி எங்கெல்லாமோ அலைகிறான். கீரா என்கிற ராஜ்ஜியம் வருகிறான். அவன் அங்கே வந்த சமயம்   கீரா ராஜ்ய மன்னன் மரணமடைந்து  விட்டான்.  வாரிசு இல்லை என்பதால் மந்திரி பிரதானிகள்   அடுத்த  ராஜாவை  தேர்ந்தெடுக்க ஏற்பாடு நடக்கிறது. கதி தாழ்ந்த குலத்தவனாக
தெருவில் நடக்கிறான்.  எதிரே  தும்பிக்கையில்  மாலையோடு  வந்த பட்டத்து யானை கதியின் கழுத்தில் மாலையிட்டு ராஜாவாகிறான்.  மந்திரி பிரதானிகள் அவனை அலங்கரித்து மரியாதையோடு சிம்மாசனத்தில் அமர்த்தி அவன்  நேர்மையோடு ஆளாகிறான். எட்டு வருஷம் ஓடியது. 

ஒரு நாள் அரண்மனையிலிருந்து தெருவை பார்க்கிறான்.  அவன் சாதிக்காரர்கள்  ஏற்கனவே தெரிந்தவர்கள், நாய் மாமிசம் உண்பவர்கள் தெருவில் கூட்டமாக செல்கிறார்கள். அவன் அவர்களை நோக்கி ஓடுகிறான். ராஜ உடை, நகை கிரீடம் எல்லாம் எறிந்து விட்டு தனது கூட்டத்தாரோடு சேர்கிறான். அவர்களும் அவனை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அவனை அணைத்து  முடித்தமிடுகிறார்கள். அவனுக்கும் அவர்களைக்   கண்டதில் பரம சந்தோஷம். 

இதெல்லாம்  அரண்மனை உப்பரிகையிலிருந்து பார்த்த  ராஜகுல  பெண்மணிகள்  அதிர்ச்சி அடைந்து '' ஒரு நீசனா , தாழ்ந்தவனா, நமக்கு ராஜா? அதற்குப் பிறகு  எவரும் ராஜா அருகில் போகவில்லை . இப்படி ஒரு தவறு  யானையால் நிகழ்ந்ததற்கு  நாமெல்லோரும் பரிகாரமாக  தீக்குளிப்போம் என்று  மந்திரி பிரதானிகள் ராஜ வம்சத்து  ராணிகள் தீக்குளித்து விட்டார்கள். ராஜா அழுது கொண்டு தானும் நெருப்பில் விழுந்து சாம்பலானான்.
''அட,  அட , அட,  என்ன  விசித்திரம்  கதி  ஆற்றில் தண்ணீருக்குள்ளிருந்து தலையை வெளியே எடுத்து மலங்க மலங்க  சுற்று முற்றும் பார்த்தான். தன்  உடம்பையே வெறித்துப் பார்த்தான்.  இது வா  எரிந்தது? நானா சண்டாளன்? நானா ராஜா?சில நாழிகைகளில்  எது மாயை, நிஜம்போல் நம்மை வாட்டுகிறது என்று புரிந்து போயிற்று கதி என்ற அந்த துறவிக்கு.
மஹா விஷ்ணு  மாயையின்  சக்தியை  புரிய வைத்துவிட்டார். மாயை எவ்வளவு வலிமை கொண்டது?.'' 
கதி காட்டில்  சிலநாட்கள்  மீண்டும் தவம் புரிந்தான். 
ஒருநாள் அவன் குடிசைக்கு ஒரு துறவி வந்தார். அவரை உபசரித்து, தேன் , கிழங்குகள், பழங்கள்  கொடுத்தான். அப்போது சாயம் சந்தியா காலம். பொன்னிற சூரியன் எல்லாவற்றையும் தங்க நிறமாக்கி இருந்தான்.  சந்தியா வந்தனம் பண்ணி விட்டு இருவரும்  அவன் ஆஸ்ரமத்துக்கு திரும்பினார்கள்.  ஆத்ம விசாரம், வேதாந்த விஷயங்கள்  எல்லாம்  பேசினார்கள்.  கதி அந்த துறவியிடம் அப்போது கேட்டான்;

''சுவாமி உங்கள் தேகம் ஏன் இப்படி எலும்பும் தோலுமாக  வற்றி, வாடி இளைத்து காண்கிறது?''
''அதை ஏன் கேட்கிறீர்கள்.  கீரா என்கிற தேசத்துக்கு போனேன். அந்த ஊரில் ஒரு நல்ல ராஜா பட்டத்து யானையால் தேர்ந்தெடுக் கப்பட்டு  நேர்மையாக  எட்டு வருஷம் ஆண்டானாம். ஒருநாள்  தாழ் குலத்தவன்  காட்டு வாசி என்று ஊர்மக்களுக்கு, தெரிந்து அனைவரும்  பாபம் தீர அக்னி பிரவேசம் பண்ணிவிட்டார்களாம். அந்த ராஜாவும் தீயில் இறங்கி சாம்பலானானாம். அந்த ஊரில் சென்ற பாபத்துக்காக நான் பிரயாகை சென்று த்ரிவேணியில் ஸ்னானம் பண்ணி விட்டு அதுவரை எதுவும் ஆகாரம் சாப்பிடவில்லை. 

'கதி ஆச்சரியப்பட்டான்.  ஆஹா இந்த துறவி என் கதையை அல்லவா சொல்கிறார்?. அப்படியென்றால் நடந்தது எல்லாம்  நிஜம் தானா?  மனதின்  கற்பனையில்லையா? மாயை நிஜமா? அப்படித்தான் எல்லோரும் நம்புகிறோமா?.

 கதி தானும்  கீரா  ராஜ்ஜியம் சென்றான்  விசாரித்தான்.  தான் பிறந்த இடம்,  தாழ் குலத்தோர், யானை வந்து மாலை அணிவித்து. ராஜாவானது,   நீச  உறவுகளை சந்தித்தது,  அக்னி பிரவேசம் .... எல்லாமே அந்த ஊர் மக்கள் சொல்வது  நிஜம்  என அறிந்தான்.  இருந்தாலும் தான்  நீச  குலத்தவன்  இல்லையே,  துறவியாக  இருப்பதும்  மஹா விஷ்ணு அளித்த  வரத்தால் அவனுக்கு மாயை தான்  அதெல்லாம் என புலப்பட்டது.   கதி  மீண்டும் தவத்தில் ஈடுபட்டான்.  மறுபடியும் மஹா விஷ்ணு தரிசனம் கிட்டியது. அவரிடம் கேட்டான்.

''பரமாத்மா, உங்கள் அருளால் மாயை புரிந்து கொண்டேன்.  எப்படி அது நிஜமாகவே உருவமெடுக்கிறது. நம்பாமல் இருக்க முடியவில்லையே. எப்படி ஏன்?''

''அன்பா, கதி, சொல்கிறேன் கேள். இந்த பிரபஞ்சம், உலகம், அதில் காணும், நிகழும், சர்வமும்  உண்மையல்ல, இருப்பவை அல்ல,  இல்லாதவை. மனத்தால்  உருவாகுபவை.  மனது செயலழிந்தவனுக்கு  உலகம் பிரபஞ்சம், மக்கள் எதுவும் எவரும் கிடையாது.   மனம் செயல் படாதவனை, எதிலும் நிலைக்காதவனை  பித்தன்,  பைத்யம் என்கிறோம்.  அலையும் மனதில் தான் உலகம் பிரபஞ்சம்  திகழ்கிறது.  நிகழ்கிறது. அதுவே  உன்னை மரணமடைய வைத்தது, நீசனாக்கியது, ராஜா வாக் கியது,  தீக்குளிக்க வைத்தது, மீண்டும் நீ  கதி எனும் துறவி என்றும் புரியவைத்தது. உன் மனதில்  என்னைப் பதிய வைத்துக் கொண்டால் மற்ற  காட்சிகள்  மறையும்.  உன்னிடமிருந்து  நீ  அனுபவித்த மாயக்  காட்சிகள் உன்னை சந்திக்க வந்த துறவிக்கும் ஒட்டிக்கொண்டு அவரும் அதை நிஜமென நம்பினார்.   காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை இது.  உன்னால் துறவி  மட்டும் அல்ல உன்  அனுபவத்தை பங்கேற்ற   எல்லோருமே அந்த அனுபவம் அடைந்தவர்களாக காணப்பட்டார்கள்.  கனவு ஒன்று நிஜமாக காணப்பட்டது. 

உண்மையில், நிஜமாக, எல்லாமே  நான், என்னில்  அனைத்தும், அனைத்துமே  நான்  என உனக்கு புரிந்தால்  மற்ற காட்சிகளுக்கு மனதில் இடம்  ஏது?  நீ யார் என்பதை புரிந்து கொள்ளாமல்  மற்றவைகள் எல்லாம் நீ என்றும் மற்றவை என்றும் பிரித்து பார்த்து அவஸ்தை பட்டாய்.''


மோகம் என்னும் மாய சக்ரத்தின் அச்சாணி தான்  மனம்.  மனம் வெறுமையானால் அதில் எதுவும் உருவாகாது.  அதை தான் மனோநாசம் DESTRUCTION  OF  MIND.  புரிந்து கொண்டாயா? எழுந்திரு மீண்டும் பத்து வருஷம் மலைக்குகையில் அமர்ந்து தவம் செய்து மனதை அடக்கு.  ஆத்ம ஞானம் பிறக்கும். ''

மஹா விஷ்ணு மறைந்தார். கதி மீண்டும்  தவம் செய்ய புறப்பட்டான். பத்து வருஷம் ஆனது.  ப்ரம்ம ஞானியாக  மௌனி யாக வெளி வந்தான்.பேரானந்தத்தில் திளைத்தான். அவன் மனத்தில் பௌர்ணமி போல் ஞான ஒளி. ஜீவன் முக்தன்.
யோக வாசிஷ்டத்தில்  ஒரு கதை இது. எப்படி இருக்கிறது. இன்னும் சொல்லட்டுமா?

Sivan Krishnan

unread,
Nov 12, 2025, 4:38:51 AM (yesterday) Nov 12
to amrith...@googlegroups.com
அப்பாவின் அறிவுரை.  ---   நங்கநல்லூர்  J K  SIVAN 

அனுராதாவுக்கு  ஆயிரம்  எண்ணங்கள் மனதில்.  எல்லாமே கவலை தான். கணவன், மாமியார், மாமனார்,  நாத்தனார்,  , ஆபிஸ், நண்பர்கள்,  பிள்ளை,  ஒவ்வொருவரும் ஏதோ குறை என்னிடம், என்னைப்பற்றியே சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே,  சே என்ன  வாழ்க்கை இது?  முப்பது வயதுக்குள்  என் வாழ்க்கை முடிந்து விடாதா என்று ஏன் தோன்றுகிறது. அழுதாள். அவளுக்கு  எப்போதும் அப்பா தான் ஆதரவு.  நங்கநல்லூர்  ஓடிவந்தாள்.  ரெண்டு நாள் லீவு தான்.  அப்பா  மேகநாதன்   மிலிட்டரியில் ஒய்வு பெற்ற  ராணுவ வீரர்.  தனியாக  ஒரு வீட்டில்  இருக்கிறார். எப்போதும்  வேதாந்த சிந்தனை. புத்தகம் தியானம், தூக்கம். சாப்பாடு ரெண்டு வேளை  ஒரு மாமி வந்து கொடுத்துவிடுவாள். மாடியில் ஒரு பெரிய அறை . காற்றோட்டமாக, மகிழ மரம் அருகே இருந்ததால் ஜம்மென்று  காற்றும், கம்மென்று  அதில்  மணமும்  சேர்ந்து வரும். எதிரே  கிருஷ்ணன் படம். 

மறுநாள் கிளம்பவேண்டும் என்பதால் அன்று காலையே  இருவரும் சம்பாஷித்தனர்.

''என்ன அனு திடீரென்று ரெண்டு நாள் லீவில் வந்திருக்கே''
''ஒரு சேஞ்ஜ்  தேவைப்பட்டது உங்களையும் பார்த்து ஒரு மாசமாகி விட்டதே'
''இல்லை ஏதோ உன்னை தின்கிறது. என்னிடம் மறைக்கிறாய்?''
இது போதும்  அகண்ட ஏரிக்கு. கரைபுரண்ட வெள்ளம் கரையை உடைத்து ஹோ என்று ப்ரவாஹமாக  வெளிப்பட்டது.
அனு  அழுது முடிக்கும் வரை  மேகநாதன் பேசாமல் கற்சிலை.
அவள் குறைகள் சொல்லி முடித்தாள். 

நான் உனக்கு  உபதேசம் செய்யவோ  ஆறுதல் சொல்லவோ முடிந்தால் அது உனக்கு பயன் படாது. சில விஷயங்களை
வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு அதற்கு தகுந்தபடி உன்னை நீ மாற்றிக் கொண்டு அவற்றை மன  தையத்தோடு சந்திக்க,  எதிர்கொள்ளவேண்டும். என்னுடன் வா.'

சமையல் அறையில் ஒரு அடுப்பு, அப்பா எதிரே  ஒரு உருளைக்கிழங்கு, முட்டை, காப்பி கொட்டை .மூன்று ஒரே அளவு பாத்திரங்களில் ஒன்றில் முட்டை, ஒன்றில் உருளை, ஒன்றில் காப்பி,  இருபது  நிமிஷம் தளதள வென்று நீரில் கொதித்ததும் 
பாத்திரங்களில் இருந்து  அவற்றை எடுத்து  காற்றில்  சூடாறின.'

''அப்பா  என்ன இது? என்ன பண்ணுகிறீர்கள்?''
''அநு  நீ சொல். இது எல்லாம் என்ன?
''முட்டை, உருளைக்கிழங்கு, காப்பி''
'தொட்டு  முகர்ந்து பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல்''
எனக்கு தெரியவில்லை நீங்களே சொல்லுங்கள் 
இந்த மூன்றுமே  ஒரே நேரத்தில் ஒரே அளவில் நீரையும்  உஷ்ணத்தையும்  சந்தித்தவை. ஆனால் இந்த மூன்றும் எப்படி அதை எதிர்நோக்கின என்று உணர்ந்தாயா?

முட்டை முதலில் கெட்டியான  ஒட்டோடு உள்ளே  திரவ பதார்த்தமாக இருந்தது. நீரும் உஷ்ணமும்  அது உள் வாங்கியது. அதன்  ஓட்டை ம்ருதுவாக்கினதே தவிர உள்ளே  கெட்டியாக ஆகிவிட்டது.  உருளைக்கிகிழங்கு  முதலில் கெட்டியாக இருந்தது. நீரையும்  உஷ்ணத்தையும் ஏற்றுக்கொண்டது மிருதுவானது. காப்பிக் கொட்டை  கெட்டியாக உறுதியாக  உஷ்ணத்தையும் நீரையும் எதிர்கொண்டாலும்  அது தன்னிடமிருந்த நறுமணத்தை அவற்றுக்கு கொடுத்து விட்டது. 
வாழ்வில் நீ எதுவாக இருக்க விரும்புகிறாய்? சிக்கல்  பிரச்னைகள் இல்லாத மனிதர்களோ, குடும்பமோ இல்லை. நீ எப்படி அவற்றை ஏற்று உன் வாழ்க்கையை அமைதியாக சந்தோஷமாக நடத்துகிறாய் என்பதில் தான் உனது வெற்றி இருக்கிறது. இடிந்து போகாதே, துவளாதே. உருகாதே. உன்னில் இருக்க  ஆத்ம பலத்தை கெட்டியாக பிடித்துக்கொள் . எல்லாமே கடந்து போகும் என்று விடு.   மனதில் அவற்றை தேக்கிக்கொள்ளாதே. உன்னால் மற்றவர்கள் மாறுவார்கள். சந்தோஷமாக வீட்டுக்குப்  போ. 

வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சந்தோஷமாக வாழ தான் கொடுக்கப்பட்டுள்ளது. வீணாக்காதே.  மரணம் ஒரு தீர்வு அல்லவே அல்ல. அது ஒரு நிகழ்வு எப்படி பிறப்பு நம்மைக் கேட்டு நம் விருப்பப்படி நேரவில்லையோ அப்படியே தான்
 இறப்பும். அதை நினைப்பதால், தேடுவதால் ஒரு பயனும் இல்லை. தடுக்கவும் முடியாது. நேரிடும்போது நேரட்டுமே. நம் கையில் இல்லாததைப் பற்றி நமக்கென்ன கவலை.'  என்று அனுப்பி வைத்தார் மேகநாதன்.  

 

Sivan Krishnan

unread,
Nov 12, 2025, 4:38:51 AM (yesterday) Nov 12
to amrith...@googlegroups.com
மஹா பாரத  வெள்ளம்  -           நங்கநல்லூர்  J K  SIVAN

''ஓம்''  என்ற  பிரணவ   சப்தத்தோடு   பகவானை வேண்டிக்கொண்டு அனைத்து மஹநீயர்களுக்கும்  சாஷ்டாங்க  நமஸ்காரத்துடன் தான் மஹா பாரத காவ்யத்தை  தொட்டு தமிழில்  ''ஐந்தாம்  வேதமாக'' ஆயிரம் பக்கங்களில்  ரெண்டு பாகமாக, ஐந்து வர்ண  படங்களுடன் எழுதி  வெளியிட்டேன். (புத்தகம் வேண்டுவோர் என்னை அணுகலாம் 9840279080)

அதில் சில காட்சிகளை விவரிக்க மனம் விழைகிறது. அப்பப்போ  கொஞ்சம் கொஞ்சமாக முடிந்த போதெல்லாம்   சொல்லுகிறேன்.  

நான்  வ்யாசனல்ல . பாரதத்தை  தமிழில்  பொழிந்த  வில்லிப்புத்தூராரும்  இல்லை.  ஒரு சாதாரணன். குழந்தைகளுக்கு  புரியும்படியாக  கதை சொல்ல  விழைபவன். அதற்காகத்  தெரிந்தவரை, முடிந்தவரை,  முயற்சிப்பவன். யார்  எழுதிய  பாரதத்தையும்  முழுமையாக எழுதும்  உத்தேசமும்  இல்லை. சிறந்த விஷயங்களை   எங்கிருந்தாலும் சேர்த்து  தொடுத்து கதை  களாக  வடித்து  ,சுவையாக அளிக்க,  மட்டுமே இதில் என்  முயற்சி  காணப்படும்.  பெரியோர்  அறவோரின் வழி காட்டவே எண்ணம்.   ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு தரமாவது  விரும்பி ரசித்து ருசித்து மகிழவேண்டியவை தான்  ராமாயணமும்  மகாபாரதமும்.   இனிப்பு நிறைய வாங்குமுன்   சிறிது  ''சுவைக்க''  (சாம்பிள்) தருவார்களே (எங்கள் காலத்தில் தருவார்கள்,  இப்போது ??) .  அதுவே  இது.
++
நைமிசாரண்ய வனத்துக்கு   உக்ரஸ்ரவர் எனும்  சுத மஹரிஷி வருகிறார்.  அங்கே  தவம் செய்யும்  எல்லா ரிஷிகளும் சூழ்ந்து  உபசரித்து ஆசனமளித்து அவரிடம் கேட்கிறார்கள் ;

''குருவே  எங்கிருந்து வருகிறீர்கள்?''

'  ஜனமேஜய மஹாராஜா நடத்திய சர்ப்ப யாகத்துக்கு சென்றேன். அங்கே  'பரீக்ஷித் மஹாராஜா  சுக ப்ரம்மரிஷி யிடம் கேட்டதையும்  ஜனமேஜயனுக்கு  வைசம்பாயனர்  வேதவியாசரிடம் கேட்ட விஷயங்களை சொன்னார். நானும் அங்கே தான் மஹா பாரதம் பற்றி  வைசம்பாயனர் சொல்லக் கேட்டேன். மஹா பாரத யுத்தம் நடந்த சமந்த பஞ்சகம் எனும் குருக்ஷேத்ரத் துக்கு சென்றேன்.  பிறகு இங்கே வந்து ரிஷிகள் உங்களை எல்லாம்  தரிசிக்க வந்தேன்.

''மகரிஷி  சுதரே , நீங்கள்  எங்களுக்கு வைசம்பாயன ரிஷியிடம் கேட்ட மஹா பாரதத்தை உபன்யாஸம் செய்யவேண்டும்.
சுதர் சொல்கிறார்;

''முதல்  யுகம் ஆரம்பத்தில்  எங்கும் காரிருள். அப்போது ஒரு மஹா திவ்யமான ஒரு பொன்னிற முட்டை யிலிருந்து ப்ரம்மா, எனும் பிரஜாபதி  உதயமானார். பின்னர் அவரிடமிருந்து  மேலும் 21 ப்ரஜாபதிகள். மனு, வசிஷ்டர், பரமேஷ்டி, ப்ரசேதஸ் , தக்ஷன். அவன் 7 பிள்ளைகள், விஸ்வே தேவர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், அஸ்வினி தேவதைகள், யக்ஷர்கள், சாத்யார், பைசாசங்கள், இன்னும் பலர் உருவானார்கள். அவர்களிலிருந்து தான் ப்ரம்ம ரிஷிகள், ராஜரிஷிகள் எல்லோரும் தோன்றினார்கள். முதல் யுகத்தில் இவ்வாறு பஞ்ச பூதங்களும் உருவாயின. பருவம், காலம், பக்ஷம் இரவு பகல் சகலமும் தோன்றியது. மனித இனம் பெருகியது.   தேவர்கள்  33,333 பேர் தோன்றினார்கள்.

அனைவருக்கும்  தெரியும்.  வியாசர்  சகலத்தையும்  கரைத்து குடித்தவர். அதை  உலகிற்கு எடுத்து சொல்ல, எழுத்தில் நிலை நாட்ட  வேண்டும். இது பற்றி தான்  பேச்சு  நடந்தது  அங்கு.  பிறகு வந்தவர்கள் பேர்களை சொன்னால் தலை சுத்தும்.  உதாரணத்துக்கு கொஞ்சம்.

 திவி மகன் ப்ரஹத்பானு, சக்ஷுஸ், ஆத்ம விபாவசு, சவிதா, ருசிக்க, அரக்கன், பானு,அஸவகன் ரவி.விவஸ்வான்  தேவ
 விரதன், ஸுவ்ரதன், தச ஜோதி சத  ஜோதி, சஹஸ்ர ஜோதி என ஆயிரக்கணக்கானோர்.  இதிலிருந்து வந்த வம்சங்கள், குரு , யது , பரத , யயாதி,  இக்ஷ்வாகு.   பராசரருக்கு  சத்யவதி மூலம்  பிறந்தவர் கிருஷ்ண த்வை பாயானர் எனும் வேத வியாசர்.

ஹிரண்யகர்பன் எனப்படும்  பிரம்மா. நிறைய  ரிஷிகள்  சூழ  ஆசனத்தில்  அமர்ந்திருந்தார்.  அவர்  எதிரே  த்வைபாயனர் எனப்படும் வியாசர் உள்ளார்.   பிரம்மாவிடம்  வியாசர் வேண்டுகிறார்.

''பரமேஷ்டி ப்ரம்மா, வேதங்களை ஆராய்ந்து பகுத்து  மனதில் விளக்கமாக வைத்த்துள்ளேன். முக்காலமும் கூடிய விஷயம் அது. சகல பர்வதங்கள், நதிகள், க்ஷேத்ரங்கள் எல்லாம் கூடியது  இதை சுவடியில் வடிக்க எவரும்  பூமியில் இல்லையே என்று ஏக்கமாக இருக்கிறது.''

''பிரணவ ஸ்வரூபன்  கணேசனை மனதில் நினையுங்கள் காரியம் கைகூடும். துவங்குங்கள் அவர்  வழிகாட்டுவார் '' என்ற தால்  வியாசர்  விநாயகனை  பிரார்த்தித்தார்.  ''கணேசா,  கணநாதா,  என்  மனத்தில் ஓடும்  எண்ணங்களை  ஸ்லோகமாகச்  சொல்லத் துடிக்கிறேன்.  நீ அதை  எழுத்தில் வடித்தால்  சகலருக்கும்  பயனுண்டே. செய்வாயா? ''

கணேசன் சிரிக்க, ஏன்  என்று வியாசர் கேட்க,  வியாச ரிஷியே,, நான்  எழுதும்  வேகத்திற்கு உங்களால்  ஸ்லோகங்களை விடாமல் நிறுத்தாமல் சொல்ல முடியுமோ?'' என்று யோசித்தேன். சிரிப்பு வந்தது  என்றார்.

''அப்படியா, நீ  சிறுவனாச்சே, வேகமாகச் சொன்னால் எழுதத்  தடுமாறுவாயோ  ஒருவேளை மெதுவாகச்  சொல்ல வேண்டுமோ  என்று  ஒரு  தயக்கம்  இருந்தது.  பரவாயில்லையே.    நான் சொல்லிக்கொண்டே  வருகிறேன், உனக்குப் புரிபடாவிட்டால்  அந்த இடத்தில்  நிறுத்தினால் மட்டும்  போதும்,  நடுவில்  எந்த  தடையும்  குறுக்கிடாது'' என்றார் வியாசர்.

''ஓம்'' என்ற  ஆரம்ப  பிரணவ சப்தத்துடன்  கணேசர் எழுத ஆரம்பித்தார். எதில்  எப்படி  எழுத ஆரம்பித்தார்? 

 ஓலைச் சுவடியில்  தனது ஒரு  தந்தத்தை  உடைத்து எழுத்தாணியாக்கி!  அதனால் தான்  விநாயகருக்கு ஒற்றைக்கொம்பன், ஏக தந்தன், என்று ஒரு பெயர்.  வியாசரின் வேதம்  ஸ்லோக மாரி யாக பிரவாகித்தது. பல்லாயிரம்  ஸ்லோகங்கள்  மஹா பாரதமாக உருவாயின. ரெண்டு பேர்  இதை முழுமையாக  கேட்டு அனுபவித்து  எடுத்து சொன்னவர்கள். ஒருவர்  சுகர் பரிக்ஷித்துக்கு  சொன்னவர்.  மற்றவர்  சஞ்சயன்  கண் தெரியாத  திரிதராஷ்டிரனுக்கு எடுத்து  சொன்னவர்.

Sivan Krishnan

unread,
Nov 12, 2025, 4:38:52 AM (yesterday) Nov 12
to amrith...@googlegroups.com
மறந்து விட்டாயா? ஏன் லேட்?

நாராயணா,  உன்னைத் தவிர  எந்த தெய்வம் கையில் சக்ரம் வைத்துக்கொண்டிருக்கிறது?. ஹுஹும்.  நீ   ஒருவனே சுதர்சன தாரி.   ஒருவேளை,  யாரோ வேறு ஒருவர் சக்கரம் வைத்துக்கொண்டு  பெரிய கருடன் மீது சௌகரியமாக பறப்பவர்  எங்காவது இருந்து விட்டாரென்றால்? அப்போது இந்த பிரம்மாஸ்திரம் அவசியமாகிறது.

அப்படிப்பட்டவர் நந்தகோபன் யசோதை தம்பதியின் செல்ல மகனா?  கிருஷ்ணா?  நீதானே அதுவும்?
''ஆம்,  நான் தான்  அது  என்று நீ  ஒருவன்   மட்டுமே பதில் சொல்லமுடியும்.   கிருஷ்ணா,   நீயே   அந்த   ''உலகெலாமுணர்ந்து ஓதுதற்கரியவர், நிலஉலாவிய நீர் மலி மேனியர், அலகிலா விளையாட்டுடையார், எமது ஈடற்ற தலைவர்'' .  என் மனக்கலத்தை நீக்கி, சிந்தை தெளியவைத்து, ஆனந்தனுபவம் பெற வைப்பவர் அந்த கிருஷ்ணன் ஒருவனே.

கிருஷ்ணா எத்தனை பேர் துன்பம், துயரம், கஷ்டம் எல்லாம்  இதுவரை தீர்த்திருக்கிறாய்? கணக்கிலடங்காதே!
உனக்கு  ஞாபகம் இருக்கிறதா? நந்தகோபன் அரண்மனை தோட்டத்தில் .....யம்லாக், அர்ஜுன் என்ற இருமரங்கள்...... மரங்களா அவை? பல யுகங்கள் சாபம் அடைந்து காத்திருந்து, உன்னால் சாப விமோசன விடுதலை பெற்று விண்ணுலகம் திரும்பக் காத்திருந்த குபேரனின் புதல்வர்கள் .  அதற்காக தானே நீ  நாடகமாடினவன்?   வெண்ணை திருடி அகப்பட்டு, , உரலில் உன்னை  கட்ட வைத்துக் கொண்டு,  அந்த உரலாலேயே குபேரன் புதல்வர்களுக்கு விடுதலை அளித்தாய்.  கபட நாடக சூத்ரதாரி....

இது  மட்டுமா..இன்னும் நீ  செய்ததெல்லாம் நான் அறிவேன். எனக்கு  நினைவிருக்கிறது சொல்கிறேன் கேள்.   கஜேந்திரன் நீர் அருந்தி தாமரை பறித்து உனக்கு சாற்றுவதற்கு நீரில் இறங்கப்போய் அவன் உயிரே போகும் நிலை....கஜேந்திரன் நீர் குடிக்கும் முன்பு அவன் அவனது உயிரைக்  குடிக்கக்  காத்திருந்த பெரிய முதலை ஒன்று....எவ்வளவோ போராடி தோற்று, முடியாமல், தான் முடியு முன்பு, உன்னை ஆதிமூலமே என்று கதறி அந்த யானை கண்ணீர் மல்க அழைக்க அந்த குரலுக் காகவே  காத்திருந்தவன் போல் நீ  உடனே உன்   கருடன் மீதேறி உன் சுதர்சன சக்கரத்தால் முதலையை முடித்து கஜேந்திரனை காப்பாற்றினாயே..

இன்னொன்றும் கூட  சொல்ல ட்டுமா?.  யமுனை நதி அழகாக ஓடுகிறது.. அதன் நீர் அனைவரையும் ''வா வந்து குளி ,  எனது குளிர்ந்த நீரில் விளையாடு'' என்று அழைத்தும் நெருங்க முடியாமல்   ஒரு  கொடிய   ராக்ஷஸன்  காளீயன் கடும் விஷத் தோடு யமுனையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போது  ஆயர்பாடி சிறுவர்களுக்கு யமுனையில்  மூழ்கி ஆட கொள்ளை ஆசை.  ஆனால் முடியவில்லையே.    சிறுவனாக இருந்தும் கிருஷ்ணா,  அப்போது  உன்னால் எப்படியப்பா யமுனையில் பாய்ந்து குதித்து  காளீயன் சிரத்திலேறி, நர்த்தனமாடி யே அவனை அடி பணியச் செய்து உயிர்ப் பிச்சை அளித்து அங்கிருந்து அகற்ற முடிந்தது?  என்ன கருணை உனக்கு?  கொல்ல முடிந்த போதும் , கொல்லாமல்  உயிர்ப்பிிச்சை அளிப்பதில் வல்லவன் நீ ஒருவனே! உன்னை இகழ்வார்க்கும்  அருள்பவன்.

'அடாடா, அந்த வானவர் தலைவன் இந்திரன் இருக்கிறானே, ஒரு சமயம்  அவன்   உன் மீதும், உன் மக்கள் பிருந்தாவன வாசிகள் மீதும் கோபம் கொண்டு வருணனை அனுப்பி ஒரு சுனாமி காட்சி நடத்ததே,  அப்போது நீ  என்ன செய்தாய்?  உனக்கு ஞாபகம் இல்லை யென் றால் நான் சொல்கிறேன் கேள்.

இந்திரனின் சீற்றம்,  வருணனின் விடாத ஆக்கிரமிப்பு...  கோப கோபியர்கள் கலங்கி உன்னிடம்  ஓடிவந்து  தங்களது கஷ்டத்தை சொல்கிறார்கள்.  இன்னும் கொஞ்ச நேரத்தில்  பிரிந்தாவனமே  யமுனைக்குள்ளே  போய்விடும் போல் இருக்கிறது.  காப்பிட்டு  காப்பாற்று என்று எல்லோரும்  பயந்து வேண்டுகிறார்கள்.

'' ஓஹோ, அப்படியா சேதி, இதோ பார் என்று எந்த விதமான பரபரப்பும் இன்றி இடது சுண்டுவிரலால் உங்கள்  ஊர்   கோவர்தன மலையை தூக்கி குடையாக பிடித்து , ஓர் நிமிஷமா, மணியா,  ஒரு  நாளா,  அப்பப்பா,   ஏழு நாட்கள்  தாங்கி,   மக்கள்,மாக்கள், பசு, கன்றுகள்  அனைத்துமே இந்திரனின் சீற்றத்திலிருந்து காத்து அவனை அடிபணிய செய்தவனாயி
ற்றே...

அடடா,  இதைச் சொல்ல மறந்துவிட்டேன் பார்.  ஹஸ்தினாபுரத்தில், அனைவரும் இருந்த சபையில், அபலை திரௌபதியை மான பங்கப்படுத்த துரியோதனன் ஆணையிட, கர்ணன் மற்றோர்  அதை ஆதரிக்க,  பீஷ்மர்  முதலானோர்  எவ்வளவு கெஞ்சியும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க, துச்சாதனன் துகிலுரிய அந்த நேரத்தில், அல்ல, தக்க , சரியான  நேரத்தில் அவள் மானம் காத்தது யார்?,  முடிவில்லாத,  நீளளளளள.... .. 'ஸாரி SARI ' புடவை,  வஸ்திரம், எங்கிருந்து அவளது உடலைச் சுற்றி வந்துகொண்டே இருந்தது.   இடுப்பிலிருந்து புடவையை உருவிக் கொண்டிருந்த துச்சாதனன் கை வலிக்க, துவண்டு விழுந்தானே தவிர  திரௌபதி வஸ்திரத்தோடு  தானே  நின்றாள்... ''ஹரே கிருஷ்ணா, ஆபத்பாந்தவா'' என்ற ஒரே குரல் போதுமே உனக்கு...யாருக்கு வேண்டுமானாலும் அபயமளிக்க .

உண்மையிலேயே நீ ஒருவன் தான்  காக்கும் கடவுள். கிருஷ்ணா.  எல்லோருக்கும் ஓடி ஓடி வந்து கருணை காட்டும்   நீ, நாளெல்லாம் உன்னையே  பாடி நினைத்து வாடிக் கொண்டிருக்கும் இந்த ஸூர்தாஸ் மேல் மட்டும் இன்னும் கருணை காட்டாதது எதனாலப்பா ? என்ன காரணம் கிருஷ்ணா? சொல் , நானும் உன் பக்தன் தானே.   ஏன் லேட்??

Chakra ke dharanhaar  Garun ke aswaar  nand kumar mero sankat niwaro  Yamlaak arjun taryo
gaj ke ubaryo  naag naathanhaar   mero to sambharo
girivar kar pe dharyo  indra garv daryo  vraj ke rakshanhaar
deenan vicharo  drupad suta ki ber nikana ki aber
ab kyun aber sur sevak tiharo  Krishna daras so atki gwalin
Listen to Krishna daras so atki gwalin Chakra ke dharanhaar
Garun ke aswaar  nand kumar mero sankat niwaro
Yamlaak arjun taryo gaj ke ubaryo  naag naathanhaar
mero to sambharo girivar kar pe dharyo  indra garv daryo
vraj ke rakshanhaar deenan vicharo  drupad suta ki ber
nikana ki aber  ab kyun aber sur sevak tiharo
Krishna daras so atki gwalin
Listen to Krishna daras so atki gwalin
Reply all
Reply to author
Forward
0 new messages