2,730 views
Skip to first unread message

sivan jaykay

unread,
Aug 16, 2021, 8:29:37 PM8/16/21
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி -   நங்கநல்லூர்  J  K  சிவன் 
தாகூர்.  

95   தாயுமானவன் 

95.    I was not aware of the moment, when I first crossed the threshold of this life.
What was the power that made me open out into this vast mystery, 
ike a bud in the forest at midnight!
When in the morning I looked upon the light I felt in a moment,
 that I was no stranger in this world,
that the inscrutable without name and form
 had taken me in its arms in the form of my own mother.
Even so, in death the same unknown will appear as ever known to me.
And because I love this life, I know I shall love death as well.
The child cries out when from the right breast the mother takes it away,
in the very next moment to find in the left one its consolation.

கிருஷ்ணா,  என்னடா  உன்  அற்புத லீலை !
எப்போது நான்  இந்த வாழ்கையின்  வாசற்படியை  வலது கால் வைத்து தாண்டினேன் என்பது நினைவில் இல்லையடா.  எந்த பலமான  சக்தி  என்னை இந்த பூதாகாரமான  பிரபஞ்ச  ரஹஸ்ய சுரங்கத்தில்  நெட்டி தள்ளியது ?
 நள்ளிரவில், காட்டில் மலர்ந்த மொட்டுப்போல், தனித்துவமாக, எது என்னை  இயக்கியது ?. யார்  என்னை  வெளிக்கொணர்ந்தது?  நீ தானே?

பொழுது விடிந்ததும்  நான்   சூரியனின் ஒளியை அனுபவித்த போது , ''டேய் , நீ யாரோ, அந்நியன் ஒருவன் இல்லையடா, என்று தைர்யம் அளித்தது?, ஆசையும் பாசமும் மிக்க அம்மாவாக, என்னை அணைத்து  முத்தமிட்ட  அந்த  பெயரில்லா உருவமில்லா சக்தி,  தெய்வம்  நீ தானே?
அள்ளி என்னைத் தன் கைகளில்  அனைத்து  உன்னையன்றி வேறு யாராக இருக்க முடியும்?
எனக்கு நன்றாக தெரியும்டா கிருஷ்ணா,  எனது மரணாந்த காலத்திலும்  கூட,   நான் பார்க்காத  அந்தச் சக்தி எனக்கு எப்பொழுதும் தெரிந்த, நான் நன்றாக அறிந்த  ஒருவராக, என் கண் முன் தோன்றும்.  என்னை ஒருபோதும் விட்டு விடாது. 

ஆகவே தான்,  நான்  இப்போது அனுபவிக்கும் இந்த வாழ்வை விரும்புவதுபோல்  என்னை நெருங்கி வரும்  சாவையும் அதே  விருப்பத்தோடு வரவேற்பேன் என எனக்குத் தெரியும்.  

அம்மாவின்  அரவணைப்பில்  அவள் வலது மார்பில் பால் குடிக்கும்  குழந்தையை  அம்மா விலக்கும்போது  என்  தடுத்தாய் என்று வீல் வீல் என்று அழும் குழந்தை  அவள்   அடுத்த கணமே   அதை தனது  இடது மார்பகத்தில்  பால் குடிக்க வைக்கும்போது எவ்வளவு சந்தோஷம்!. சிரிக்கிறது.  கிருஷ்ணா, எனக்கு  நீ  அப்படி தான்  கருணை நிறைந்த அம்மா. 

sivan jaykay

unread,
Aug 16, 2021, 8:30:50 PM8/16/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீ மந்  நாராயணீயம் -  நங்கநல்லூர்  J K  SIVAN
32வது தசகம்.


32.   தானாக  மீனாக வந்தவனே!

पुरा हयग्रीवमहासुरेण षष्ठान्तरान्तोद्यदकाण्डकल्पे ।
निद्रोन्मुखब्रह्ममुखात् हृतेषु वेदेष्वधित्स: किल मत्स्यरूपम् ॥१॥

puraa hayagriiva mahaasureNa ShaShThaantaraantOdyadakaaNDakalpe |
nidrOnmukha brahma mukhaaddhR^iteShu vedeShvadhitsaH kila matsyaruupam || 1

புரா ஹயக்³ரீவமஹாஸுரேண ஷஷ்டா²ந்தராந்தோத்³யத³காண்ட³கல்பே |
நித்³ரோன்முக²ப்³ரஹ்மமுகா²த்³த்⁴ருதேஷு வேதே³ஷ்வதி⁴த்ஸ꞉ கில மத்ஸ்யரூபம் || 32-1 ||

குருவாயூரப்பா,  நீ  ஜனார்தனனாக  என்ன செய்தாய்  என்று ஞாபகப்படுத்தட்டுமா? யுக ஆரம்பத்தில்,  எங்கும் ஜல பிரவாஹமாக  பிரளயம் நிலவியது.   16 ஆயிரம் வருஷங்களாக தொடர்ந்து  அசுரர்களோடு யுத்தம்.  தேவர்கள் சக்தி இழந்து களைத்தார்கள் . ஆஹா  இப்போது விஷ்ணு அல்லவா நம்மைக்  காப்பாற்ற சரியானவர் என்று தேவர்கள் உன்னை வேண்டினார்கள். ஹயக்ரீவன் என்கிற சக்தி வாய்ந்த அசுரன், சரஸ்வதி நதிக்கரையில் வெகுகாலம் தவமிருந்து சக்தி பெற்றவன்.  சாகா வரம் கேட்டு அது கிடைக்காது என்று அறிந்து  ''சரி  குதிரை முகம் கொண்ட ஒரு ஜீவனால்  என்னை வெல்ல முடியட்டும்'' என்று  ஏனோ கேட்டுவிட்டான்.  குதிரை முக மனிதன் எப்போதும் கிடையாது. ஆகவே நமக்கும் சாவு கிடையாது என்ற கெட்டிக்காரத்தன எண்ணம் 
 அவனுக்கு. அப்போது தான் நீ ஹயவதனனாக  உருவெடுத்தாய்.  ஹயக்ரீவன் என்கிற  ராக்
சனைக்  கொன்றாய்.  மது கைடபர்களிடமிருந்து வேதங்களை மீட்டாய்.  கடலுக்கடியில் இருந்த வேதங்களை மீட்க  நீ எடுத்த முதல் தசாவதாரம் தானே  இந்த மத்ஸ்ய அவதாரம். அதைப் பற்றி சொல்கிறேன் கேள்.

सत्यव्रतस्य द्रमिलाधिभर्तुर्नदीजले तर्पयतस्तदानीम् ।
कराञ्जलौ सञ्ज्वलिताकृतिस्त्वमदृश्यथा: कश्चन बालमीन: ॥२॥

satyavratasya dramilaadhibharturnadiijale tarpayatastadaaniim |
karaa~njalau sanjvalitaakR^itistvamadR^ishyathaaH kashchana baalamiinaH || 2

ஸத்யவ்ரதஸ்ய த்³ரமிலாதி⁴ப⁴ர்துர்னதீ³ஜலே தர்பயதஸ்ததா³னீம் |
கராஞ்ஜலௌ ஸஞ்ஜ்வலிதாக்ருதிஸ்த்வமத்³ருஶ்யதா²꞉ கஶ்சன பா³லமீன꞉ || 32-2 ||

ஸத்யவ்ருதன்  என்று ஒரு ராஜ  ரிஷி.  காட்டில் தவம் செயது கொண்டிருந்தான்.   ஒரு நாள் சாயங்காலம்  சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தபோது அவன் முன் நீ ஒரு குட்டி மீனாக  காட்சி அளித்தாய். ஜலமின்றி தத்தளித்தாய்.

क्षिप्तं जले त्वां चकितं विलोक्य निन्येऽम्बुपात्रेण मुनि: स्वगेहम् ।
स्वल्पैरहोभि: कलशीं च कूपं वापीं सरश्चानशिषे विभो त्वम् ॥३॥

kshiptaM jale tvaaM chakitaM vilOkya ninye(a)mbu paatreNa muniH svageham |
svalpairahObhiH kalashiiM cha kuupaM vaapiiM sarashchaanashiShe vibhO
tvam || 3

க்ஷிப்தம் ஜலே த்வாம் சகிதம் விலோக்ய நின்யே(அ)ம்பு³பாத்ரேண முனி꞉ ஸ்வகே³ஹம் |
ஸ்வல்பைரஹோபி⁴꞉ கலஶீம் ச கூபம் வாபீம் ஸரஶ்சானஶிஷே விபோ⁴ த்வம் || 32-3 ||

அடாடா  இந்த சின்ன மீன் குஞ்சு தடுமாகிறதே என்று எடுத்து  ஜலத்தில் விடப்போனான். நீ  மிரள்வதைக்  கண்டு, தனது கமண்டலத்தில் இருந்த ஜலத்தில்  உன்னை விட்டு  ஆஸ்ரமத்துக்கு தூக்கிச் சென்றான்.  கொஞ்ச நாளிலேயே  நீ பெரிதாக வளர்ந்து கமண்டலத்தில்  இடம்  போதவில்லை.  ஆகவே  உன்னை ஒரு குளத்தில் விட்டான். அப்புறம் அதுவும் போதவில்லை என்று ஒரு பெரிய  ஏரியில் கொண்டு போய் விட்டான். 

योगप्रभावाद्भवदाज्ञयैव नीतस्ततस्त्वं मुनिना पयोधिम् ।
पृष्टोऽमुना कल्पदिदृक्षुमेनं सप्ताहमास्वेति वदन्नयासी: ॥४॥

yOgaprabhaavaadbhavadaaj~nayaiva niitastatastvaM muninaa payOdhim |
pR^iShTO(a)munaa kalpadidR^ikshumenaM saptaahamaasveti vadannayaasiiH || 4

யோக³ப்ரபா⁴வாத்³ப⁴வதா³ஜ்ஞயைவ நீதஸ்ததஸ்த்வம் முனினா பயோதி⁴ம் |
ப்ருஷ்டோ(அ)முனா கல்பதி³த்³ருக்ஷுமேனம் ஸப்தாஹமாஸ்வேதி வத³ன்னயாஸீ꞉ || 32-4 ||

நீயே  வளர்ந்த மீனாக,  சத்யவ்ரதனுக்கு  ''என்னைக் கொண்டு போய்  சமுத்திரத்தில் விடு '' என்று கட்டளையிட்டாய். 

''பிரளயம் வரப்போகிறதாமே,  எங்கும் ஜலமாக  இருக்குமாம். நான் அதை பார்க்க வேண்டுமே  என்று சத்யவ்ரதன் கேட்டபோது நீ என்ன சொன்னாய்?  ''இன்னும்  ஏழு நாள்  பொறுத்திரு''  என்று தான் பதில் சொல்லிவிட்டு மறைந்தாய்.''

प्राप्ते त्वदुक्तेऽहनि वारिधारापरिप्लुते भूमितले मुनीन्द्र: ।
सप्तर्षिभि: सार्धमपारवारिण्युद्घूर्णमान: शरणं ययौ त्वाम् ॥५॥

praapte tvadukte(a)hani vaaridhaaraa pariplute bhuumitale muniindraH |
saptarShibhiH saardhamapaaravaari NyudghuurNamaanaH sharaNaM yayautvaam ||

ப்ராப்தே த்வது³க்தே(அ)ஹனி வாரிதா⁴ராபரிப்லுதே பூ⁴மிதலே முனீந்த்³ர꞉ |
ஸப்தர்ஷிபி⁴꞉ ஸார்த⁴மபாரவாரிண்யுத்³கூ⁴ர்ணமான꞉ ஶரணம் யயௌ த்வாம் || 32-5 ||

கிருஷ்ணா,  அப்புறம் என்ன,  ஒரு வாரம் ஆச்சு. எதிர்பார்த்த  பிரளயம் நிகழ்ந்துவிட்டது. எங்கும் ஜலமயம். பூமியே  கண்ணுக்கு தெரியவில்லை.  சத்யவ்ரதன், சப்த ரிஷிகளோடு ஜலத்தில் தூக்கி எறியப்பட்டான். பகவானே  என்று உன்னை சரணடைந்தான். 

धरां त्वदादेशकरीमवाप्तां नौरूपिणीमारुरुहुस्तदा ते
तत्कम्पकम्प्रेषु च तेषु भूयस्त्वमम्बुधेराविरभूर्महीयान् ॥६॥

dharaantvadaadeshakariimavaaptaaM nauruupiNiimaaruruhustadaa te |
tatkampakampreShu cha teShu bhuuya stvamambudheraavirabhuurmahiiyaan || 6

த⁴ராம் த்வதா³தே³ஶகரீமவாப்தாம் நௌரூபிணீமாருருஹுஸ்ததா³ தே |
தத்கம்பகம்ப்ரேஷு ச தேஷு பூ⁴யஸ்த்வமம்பு³தே⁴ராவிரபூ⁴ர்மஹீயான் || 32-6 ||

நீ  விட்டு விடுவாயா உன் பக்தர்களை?  போய் ஒரு பெரிய படகைக்  கொண்டு வாருங்கள் என்கிறாய். அதன் உருவம் தான் பூமி. அவர்களை அதில்  ஏறச்  செய்தபிறகு , பெரிய மீனாக காட்சி அளித்த நீ, உன்னோடு சேர்த்து அந்த படகைப் பிணைக்க சொன்னாய்.  ஓ வென்ற  பேரிரைச்சல் போட்ட  ஜலத்தை கண்டு  எல்லோரும் பயந்து நடுங்கினார்கள்.  ஜம்மென்று  ஒரு பெரிய  மீனாக  லாகவமாக  நீந்திக்கொண்டு நீ அவர்கள் அருகே வந்தாயே.

झषाकृतिं योजनलक्षदीर्घां दधानमुच्चैस्तरतेजसं त्वाम् ।
निरीक्ष्य तुष्टा मुनयस्त्वदुक्त्या त्वत्तुङ्गशृङ्गे तरणिं बबन्धु: ॥७॥

jhaShaakR^itiM yOjanalakshadiirghaaM dadhaanamuchchaistara tejasaM tvaam |
niriikshya tuShTaa munayastvaduktyaa tvattungashR^inge taraNiM
babandhuH || 7

ஜ²ஷாக்ருதிம் யோஜனலக்ஷதீ³ர்கா⁴ம் த³தா⁴னமுச்சைஸ்தரதேஜஸம் த்வாம் |
நிரீக்ஷ்ய துஷ்டா முனயஸ்த்வது³க்த்யா த்வத்துங்க³ஶ்ருங்கே³ தரணிம் ப³ப³ந்து⁴꞉ || 32-7 ||

'அப்பாடா'   என்று பெருமூச்சு விட்டான்  சத்யவ்ரதன்.  மற்றவர்களும்  ஆறுதல் அடைந்தார்கள் உன்னை கண்டதும்.  நூறு  யோஜனை நீள  மீன் என்றால் சும்மாவா? பளபளவென்று  தங்க மலை போன்று அல்லவா  நீ   மின்னிக்கொண்டு காட்சி அளித்தாய்?  உன்னை  அந்த படகோடு கட்டி இணைக்க செய்தாய். இனிமேல் அவர்கள் உன் பொறுப்பில் அல்லவா?

आकृष्टनौको मुनिमण्डलाय प्रदर्शयन् विश्वजगद्विभागान् ।
संस्तूयमानो नृवरेण तेन ज्ञानं परं चोपदिशन्नचारी: ॥८॥
 
aakR^iShTa naukO munimaNDalaaya pradarshayan vishvajagadvibhaagaan |
samstuuyamaanO nR^ivareNa tena j~naanaM paraM chOpadishannachaariiH || 8

ஆக்ருஷ்டனௌகோ முனிமண்ட³லாய ப்ரத³ர்ஶயன்விஶ்வஜக³த்³விபா⁴கா³ன் |
ஸம்ஸ்தூயமானோ ந்ருவரேண தேன ஜ்ஞானம் பரம் சோபதி³ஶன்னசாரீ꞉ || 32-8 ||

பிரளய  ஜலத்தில்  அந்த  படகு  உன்னால்   நகர ஆரம்பித்தது.  சத்யவ்ரதனும் மற்ற ரிஷிகளும்  எங்கும் சுற்றிப்  பார்த்தார்கள்.  சகல லோகமும் உன் சக்தியில், பிடிப்பில்  தென்பட்டது.   ஆத்மஞானம், சக்தி என்றால் என்ன என்று உன்னால்  அறிந்துகொண்டார்கள் .

कल्पावधौ सप्तमुनीन् पुरोवत् प्रस्थाप्य सत्यव्रतभूमिपं तम् ।
वैवस्वताख्यं मनुमादधान: क्रोधाद् हयग्रीवमभिद्रुतोऽभू: ॥९॥

kalpaavadhau saptamuniin purOvat prasthaapya satyavratabhuumipaM tam |
vaivasvataakhyaM manumaadadhaanaH krOdhaaddhayagriivamabhidrutO(a)bhuuH || 9

கல்பாவதௌ⁴ ஸப்தமுனீன்புரோவத்ப்ரஸ்தா²ப்ய ஸத்யவ்ரதபூ⁴மிபம் தம் |
வைவஸ்வதாக்²யம் மனுமாத³தா⁴ன꞉ க்ரோதா⁴த்³த⁴யக்³ரீவமபி⁴த்³ருதோ(அ)பூ⁴꞉ || 32-9 ||

குருவாயூரப்பா,   உன் ஆஞையில்   பிரளயம்  ஓய்ந்தது. அந்த  சப்தரிஷிகளை எங்கு ஸ்தாபனம் செய்யவேண்டுமோ அங்கே  நிலை நிறுத்தினாய்.   சத்யவ்ரதனை  வைவஸ்வத மனுவாக  ஆக்கினாய். அப்புறம் தான் உன் கோபம்  ஹயக்ரீவாசுரன் பக்கம் திரும்பியது.  வேதத்தை திருடிச்  சென்றால்  தப்ப முடியுமா?  விட்டுவிடுவாயா  நீ  சுலபத்தில்?

स्वतुङ्गशृङ्गक्षतवक्षसं तं निपात्य दैत्यं निगमान् गृहीत्वा ।
विरिञ्चये प्रीतहृदे ददान: प्रभञ्जनागारपते प्रपाया: ॥१०॥

svatungashR^ingakshata vakshasaM taM nipaatya daityaM nigamaan
gR^ihiitvaa |
viri~nchaye priitahR^ide dadaanaH prabha~njanaagaarapate prapaayaaH ||

ஸ்வதுங்க³ஶ்ருங்க³க்ஷதவக்ஷஸம் தம் நிபாத்ய தை³த்யம் நிக³மான்க்³ருஹீத்வா |
விரிஞ்சயே ப்ரீதஹ்ருதே³ த³தா³ன꞉ ப்ரப⁴ஞ்ஜனாகா³ரபதே ப்ரபாயா꞉ || 32-10

அவனைத் தேடி கண்டுபிடித்தாய்.  உனது  முகத்தில் இருந்த  கொம்பினால் ஹயக்ரீவன் மார்பு பிளந்தது. வேதத்தை  அவனிடமிருந்து மீட்டாகி விட்டது.  இந்தா இனியாவது தொலைக்காமல் வைத்துக் கொள்  என்று  பிரம்மாவிடம் அவற்றை கொடுத்துவிட்டாய்  பிரம்மாவுக்கு  இப்படி ஒருவர் ஆபத் பாந்தவனாக  உதவினால் சந்தோஷம் இல்லையா?  என் மேலும் கருணை கொண்டு என் நோய்களை நீக்கி என்னை ரக்ஷிக்கவேண்டுமப்பா எண்டே குருவாயூரப்பா !


sivan jaykay

unread,
Aug 16, 2021, 8:30:59 PM8/16/21
to amrith...@googlegroups.com
திடீர் பக்தி.  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

25  வருஷங்களுக்கு முன் பவான்ஸ்  ஜர்னல் என்ற ஒரு அருமையான புத்தகத்தில் படித்து  ஒரு நோட்  புத்தகத்தில்  நான்  குறித்து வைத்திருந்தது இப்போது   கண்ணில் பட்டது.  அது ஒரு வழக்கு சம்பந்தமான சுவாரஸ்ய சமாச்சாரம்.  ஆஞ்சநேயர் பற்றியது.

''நூறு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்  ஜநக் சேத்  என்ற பணக்கார  ஜமீன்தார் தன்னுடைய தோட்டத்தின் மூலையில்  ஒரு சிறு வீட்டை ராம சர்மா எனும்  பிராமணருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.  ராம சர்மா  அந்த வீட்டின் முன் பகுதியை ஒரு சின்ன  ஆஞ்சநேயர் கோவிலாக மாற்றி விட்டு சிறிய  பின் பகுதியில்  வசித்தார். ஜநக் சேத்  ராமசர்மாவுக்கு  இது விஷயமாக ஒரு  ஒப்பந்த  பத்திரம்  எழுதிக் கொடுத்திருந்தார்.  

 ரெண்டு தலைமுறைக்கு  பிறகு  ஜனக் சேத் பேரன் மோகன் சேத், இப்போது  அந்த  கோவிலை இடித்து விட்டு  ஒரு பெரிய  வணிக வளாகம் கட்டவேண்டும்.  ஆகவே  இடத்தை காலி செய்யுங்கள் என்று  ராம சர்மா  பேரன்  அனந்த சர்மாவுக்கு  வக்கீல் நோட்டீஸ்  விட்டான். 

ஹனுமார் கோவில் ஒன்றும் பிரபலம் இல்லை. ஆனால்  அந்த பகுதி மக்கள் பலபேர்  ஹனுமார் 
கோவிலுக்கு  வந்து தினமும் வழிபடுவார்கள். தினமும் பூஜை, அலங்காரம், அர்ச்சனை உண்டு.  வக்கீல் நோட்டிஸ் வந்ததும்  ராம் சர்மா  பேரன்  அனந்த சர்மா  மயக்கம் அடைந்தான்.  

''ஆஞ்சநேயா  உன்னை எங்கே  கொண்டு போவேன்?  பரம  ஏழை நான் எப்படி  இன்னொரு கோவில் கட்டுவேன்?  நூறு வருஷங்களாக  நீ இருக்கும்  இடம். நானும்  இங்கேயே  உன் காலடியில்  பிறந்த இந்த இடத்தை விட்டு  எங்கே போவது?''

 அனந்த சர்மா  மோகன் சேத்துடன்  நேரில் சென்று பல முறை கெஞ்சியும்  மோகன் சேத் இம்மியும்   மசியவில்லை.   ''எனக்கு இந்த குரங்கு  மேல்  பக்தி இல்லை.   இந்த குரங்கு  கோவில் எனக்கு  வேண்டாம்.''  என்றான்

அனந்த சர்மா  ஒரு முடிவுக்கு வந்தான்.  ''ஆஞ்சநேயா, உனக்கில்லாத சக்தியா?  உனக்கு இங்கிருந்து  போக வேண்டும் என்று தோன்றினால் நீ போ.  நான் இனிமேல் அவனிடம் உனக்காக கெஞ்சப் போவதில்லை. சட்டமன்றமோ, போலீசோ, ஒரு துரும்புக்கு  சமானம் உனக்கு, உன் வீரத்திற்கு முன்பு.  நான் உன் பக்தன். என்னை ரக்ஷிப்பது உன் கடமை.   என்ன செய்வது என்பதை நீயே முடிவு செய்'' 

வழக்கு நீதி மன்றத்தில்  விசாரணைக்கு வந்து  ''மோகன் சேத், அனந்த சர்மா'' என்று டவாலி  கத்தியபோது  அனந்தசர்மா வரவில்லை.   அவரது  பெண்  சர்மாவுக்காக ஆஜரானாள் .  பள்ளி மாணவி . 

''யார் நீ.  எங்கே அனந்த சர்மா, அவன் வக்கீல் யார் ?''

''நான் அவர் பெண். ஒன்பதாவது படிக்கிறேன். அவர்  பூஜை செய்து கொண்டிருக்கிறார். வர இயலவில்லை.   நான் பள்ளியில் ஆசிரியரிடம்  அனுமதி வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன்.    நான் எங்கள் குலதெய்வம் அனுமார் சார்பாகவும், என் தந்தை சார்பாகவும்  சொல்லவேண்டியதை சொல்கிறேன். எங்களுக்கு வக்கீல் வைக்க வசதி இல்லை. அனுமதிக்க வேண்டும் ''

ரொம்ப  ஸ்பெஷல் கேஸாக நீ சொல்வதை நான் அனுமதிக்கிறேன். என்ன சொல்ல  வந்திருக் கிறாய்?

''ஜட்ஜ் அவர்களே, நாங்கள் ஏழைகள். எங்களை எதற்காக நூறுவருஷமாக இருக்கும்  இந்த இடத்திலிருந்து வெளியேற்றவேண்டும்? மாதம் தவறாமல் எப்படியோ  கஷ்டப்பட்டு கொடுக்க
வேண்டிய  வாடகையை கொடுத்து வருகிறோம்.  ஹனுமார் கோவில் சின்னது தான்.  ஆனால் அநேக பக்தர்கள் வந்து போகிறார்கள். அதை எதற்கு தடுக்க வேண்டும்?.  நாங்கள் வேண்டுமானால் எங்காவது போகலாம். ஹனுமாரை எங்கே கொண்டு பிரதிஷ்டை பண்ணுவது?  நூறு வருஷங்களாக  அவரோடு வாழ்ந்த  எங்களால்  அவரைப் பிரிந்து ஒரு கணம்  கூட வாழமுடியாது.  எங்களை அங்கேயே  ஆஞ்சநேயரோடு வாழ அனுமதிக்கவேண்டும். '' என்றாள்  அந்த சிறுமி.

''நான் வேறு இடத்தில்  ஒரு சிறு வீடு தருகிறேன்  கோவிலுக்கு சின்ன இடமும் தருகிறேன். அந்த இடத்தை  காலி செய்து கொடுக்க வேண்டும் '' என்றான் மோகன் சேத்.  வழக்கு  15 நாளுக்கு பிறகு தீர்ப்பாகும் என  ஓத்தி வைக்கப் பட்டது.

எட்டாவது நாளே  மோகன் சேத் வக்கீல் ஆஜராகி  இந்த  வழக்கை வாபஸ் பெறுகிறேன் என்கிறார்.
அனந்த சர்மாவுக்கு தான்  வேறு இடம் தருவதாகவும், அனுமாருக்கு ஒரு சிறு கோவில் கட்ட இடம் தருவதாகவும் சொல்லி அதை சர்மாவை ஒப்புக்கொள்ள வைக்கமுடியும்.   பின்  எதற்கு கேஸ் வாபஸ்?  மோகன் சேத்  ஹனுமார் பக்தி கிடையாது என்று சொன்னவர்  மாறிவிட்டாரா? திடீர் ஆஞ்ச நேய பக்தியா? என்று ஜட்ஜ் கேட்டார். 

''மோகன் சேத் மாறவில்லை. அவருக்கு  ஆஞ்சநேய பக்தியும் கிடையாது.  கடந்த ஒரு பத்து பன்னிரண்டு  நாட்களாக  மோகன் சேத்  தூக்கமில்லாமல் தவிக்கிறார்.   கண்ணை மூடினால்   ஒரு பெரிய  ஆஜானுபாகுவான குரங்கு  கையில் கதையுடன் அவரை தாக்க வருவதாக  விடாமல் சொப்பனம் காண்கிறார்.   நாலு பேரிடம் சொன்னபோது  இது நீ செய்த வேலைக்காக  ஆஞ்சநேயர் உன்மேல் கோபம் கொண்டிருக்கிறார்  என்று தெரிகிறது.  இந்த குரங்கு பயம் உன்னை  ஆட்டு விக்கிறது. கோவிலை தொந்தரவு செய்யாதே'' என்று எல்லோரும் அறிவுரை சொல்லியதால்  வழக்கை வாபஸ் பெறுகிறார். ''

அப்புறம் என்ன.  ஆஞ்சநேயர் அங்கேயே  கோவில் கொண்டு  அனந்தசர்மா வின் பூஜையை பெற்று நைவேத்யத்தை ருசிக்கிறார்.   மோகன் சேத்  ஹனுமான் பயமின்றி தூங்குகிறான்.






sivan jaykay

unread,
Aug 16, 2021, 8:31:19 PM8/16/21
to amrith...@googlegroups.com
 
Dear Friends,

PRAYER IS THE BEST WORSHIP

Let us always remember that God is both our father and mother. 
The earthly father and mother are only accidental related to us  in each and every birth separately as different persons.
To think of God  alone is our business. He knows what we  need and will certainly protect us as it is His duty.

The world of names and forms we see around us illusory.  No need therefore to run after any objects here. That is the work of discrimination.  When this discrimination has been awakened in us we could and should resort to the lotus  feet of Mahapurushas like  Maha  periyavaa and other Mahans, seek and learn from them   the  highest Knowledge, and attain  Supreme Bliss or God-realisation. If we are not able to  enjoy the Satsang of Mahapurushas, we should take to the study of scriptures  which many rishis and learned devotees of God  have provided us with.

 God descends only into a Pure Heart. 
We  should strive  to purify our heart. For this we have to first purify our thought,   purify our speech, purify our sight. purify our actions  and purifyour motives. 

Remember these five. Think only sublime thoughts. Let no evil or   vulgar,  untruthful or hurtful word escape our lips. See no evil and let  our sight be divine.  Let us do good and be good and not  be egoistic.

Let us thank the person who gives  us a chance to serve the Lord  through him.   Let us watch our motives first.  It is  the motive that really counts more than the actions themselves.

 There is nothing that the Lord’s Name cannot do for us.  His name is  more  powerful than Him . It will help  us and purify our hearts.  We can transform our own home into a Vaikunta if we sing the Lord’s Name and engage ourselves in His service. This is the simple worship. There is no unholy place, and all places are holy.   

J K SIVAN  

 

 

 

sivan jaykay

unread,
Aug 16, 2021, 8:31:19 PM8/16/21
to amrith...@googlegroups.com

ஒரு அற்புத ஞானி  --  நங்கநல்லூர்  J K  SIVAN 

காக்கும் தெய்வம் 

அதிசயங்கள்  முன் கூட்டியே  அறிவித்து விட்டு வருபவை அல்ல.  எதிர்பாராமல், எதிர் பார்க்காத நேரத்தில் நிகழ்பவை.  சிலவற்றை அவை  நிகழ்ந்த பிறகு  ஆராய்ந்து அலசும்போது தான்  அறிந்து வியக்க முடிகிறது.  இதற்குப் பின் ஒரு முக்கிய  ஆதார காரணம் இருக்கிறது. அது தான் அசையாத  பக்தியும்  நம்பிக்கையும் .

பகவான் மேல், சில  மஹான்கள் மேல் நாம் வைத்துள்ள  பக்தி  அப்படிப்பட்டவை.   மஹா  பெரியவா,  ரமணர், சாய் பாபா,  சேஷாத்ரி ஸ்வாமிகள், ராகவேந்திரர்   போன்ற  எத்தனையோ  மஹநீயர்களின்  பக்தர்கள்  தமது வாழ்வில்  அனுபவித்த  அதிசயங்களைச் சொல்லும் போது நமக்கு நம்ப முடியவில்லை.  ஏதோ கட்டுக்கதை என்று ஒரு முத்திரை குத்துபவர்களும்  உண்டு.  ஏனென்றால் தனக்குள்ளே பக்தியோ நம்பிக்கையோ  இல்லாதவர்கள், அனுபவமற்றவர்கள்.   இதோ ஒரு சேஷாத்ரி ஸ்வாமிகள் பக்தரின் அனுபவம்: 


திருவண்ணாமலையில்   ஒரு நடுத்தர  குடும்பத்தில்  பிறந்த ராஜா லாரி  ட்ரைவர். உள்ளூரிலேயே  படித்து  மணமாகி ஒரு  ஆட்டோ வியாபார கடை நடத்தி  வருபவர். அடிக்கடி  ட்ரைவர் வேலைக்கு சென்று சரக்குகள் ஏற்றி இறக்கி சம்பாத்தியம் பெறுபவர். சேஷாத்ரி  ஸ்வாமிகள் மீது அளவு கடந்த பக்தி. எப்போதும் தனது சட்டை பாக்கெட்டில்  சேஷாத்ரி ஸ்வாமிகள் படம் வைத்திருப்பவர்.

'' இவர்  என்னோடு இருக்கும்போது எனக்கு எந்த பயமும், ஆபத்தும் இல்லை '' என்று நம்பி பலரிடம் சொல்பவர்.  வாரத்தில் நான்கு நாட்களாவது தவறாமல்  திருவண்ணாமலை சேஷாத்திரி ஸ்வாமி கள் அதிஷ்டானத்தில்,  ஆஸ்ரமத்தில் அவரை பார்க்கலாம்.  ஒரு மூலையில் அமர்ந்து ஸ்வாமிகளை தியானம் செய்து கொண்டிருப்பவர்.

ஒருநாள்  திருவண்ணாமலையிலிருந்து ஆந்திராவில் ஓங்கோலுக்கு  சில சாமான்கள் லாரியில் ஏற்றி செல்லும் வேலை ராஜாவுக்கு கிடைத்தது. அவரது நண்பர் முனுசாமியும் ஒரு லாரியை ஓட்டி வந்தார்.

போகும் வழியில்  சித்தூரில்  லாரிகளை நிறுத்தி  இருவரும்  ஒரு  டீக்கடைக்கு சென்று  ஆகாரம் தேநீர் பருக சென்றபோது, ராஜா  பில் செட்டில் பண்ண பாக்கெட்டிலிருந்து  பணம் எடுத்தார்.  அப்போது ரூபாய் நோட்டு சில்லறைகளோடு  சேஷாத்திரி ஸ்வாமிகள் படமும்  வெளியே வந்ததை முனுசாமி பார்த்தார்.

''ராஜா,  யார்டா இந்த சாமியார்?
''இவர் தான் திருவண்ணாமலையில் வாழ்ந்த  சேஷாத்ரி ஸ்வாமிகள்''
''எதுக்கு இந்த ஆள்  படம் வச்சிருக்கிறே?''
''ஆளு  கீளுன்னு சொல்லாதே முனுசாமி,  இவரு என் தெய்வம்.  இவரு தான் என்னை எப்போதும் கூடவே இருந்து காப்பாத்தறவரு''.
''ராஜா,  உனக்கு வேறே வேலை இல்லை, யாரோ சொல்றதை எல்லாம் நம்பி கண்ட கண்ட  ஆசாமிங் களை,  சாமியாருங்களை  தெய்வம்னு சொல்லி நிறைய பேர் ஏமாந்து போறாங்க''. அவங்க போட்டோவை யெல்லாம்  சுமந்துக்கிட்டு  திரியறாங்க.  நீயுமா அப்படி? 

''இதோ பார்  முனுசாமி, நான் உன்னை,   யார் போட்டோவையாவது வச்சுக்கோ, வெச்சுக்காதே , நம்பு நம்பாதேன்னு ஏதாவது எப்பவாவது சொன்னேன்?. இது என் சுய நம்பிக்கை, ஆகவே  இவரு என்னோடு தான் இருப்பார். என்னை காப்பாத்துறவரு''   

பேச்சு அதோடு நின்றது.  

லாரிகள் மீண்டும்  ஓங்கோலை நோக்கி  கிளம்பின.  ஓங்கோலுக்கு   20 -30  கிலோ மீட்டர் 
முன்பாக எதோ ஒரு  கிராமத்தில்  செல்லும் போது முன்னால்  சென்று கொண்டிருந்த ஒரு லாரி பள்ளத்தில் இறங்கி  கவிழ்ந்தது. பாதை தடைப்பட்டதால்    ராஜா  முருகன் இருவரும்  தங்கள்  லாரிகளை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்று பார்த்தனர்.  

 வெகு தூரமாக  பளுவுடன் அவர்கள் ஓட்டிவந்த லாரியின்  சக்கரங்களை பார்க்கும்போது  ராஜாவுக்கு  திடுக்கிட்டது.  முகம் வெளுத்து உடல்  வியர்த்தது.  மார்பு  படபடவென்று துடித்தது.  ராஜாவின் லாரியின் முன் பக்க வலது சக்கரம் அச்சாணிகள் கழன்று சூட்டில்  உருகிக் 
கொண்டிருந்தது. எந்நேரமும் அந்த  லாரியின் சக்கரம்  கழண்டு உருண்டு ஓடி  லாரி  கவிழ்ந்து விழுந்து, ஒரு  பெரிய விபத்துக்கு ராஜா ஆளாகி ராஜா  உயிர் இழந்து  இருக்கலாம்.  நல்லவேளை  லாரியை நிறுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது பார்த்ததால்  அந்த  விபத்து தவிர்க்கப்பட்டது.  

முனுசாமியும் ட்ரைவர் அல்லவா.  இதைப் பார்த்து திகைத்து  அதிசயித்தான்.  ராஜா கண்ணை மூடிக் கொண்டு சேஷாத்ரி ஸ்வாமிகளை வேண்டிக் கொண்டிருந்தான். 

'' நீங்கள் தான் சுவாமி என்னுடன் இருந்து, வண்டியை நிறுத்த வைத்து, முன் சக்கரத்தை எதேச்சை யாக  பார்க்க வைத்தீர்கள்.  பார்க்காமல் நான்  ஓங்கோலை  நோக்கி  லாரியை ஒட்டிக் கொண்டிருந் தேனானால் இந்நேரம்    ஓங்கோல் போகும் முன்  விண்ணுலகம் போயிருப்பேன். நீங்கள் தான் என்னுயிரைக்  காப்பாற்றினீர்கள் ''  என்று  கண்ணீர் மல்க  கதறினார்.

முனுசாமிக்கும் அன்று தான் தெய்வ சக்தி என்றால் என்ன, மஹான்கள் எப்படி கண்ணுக்குத் தெரியாமல் அறிவை இயக்கி  நம்மை காப்பவர்கள் என்பதும் ,  ராஜா சொன்னது எப்படி  நூற்றுக்கு  ஆயிரம் மடங்கு வாஸ்தவமான உண்மை என்பதும் புரிந்தது.

இது போல் எண்ணற்ற  அனுபவங்களை  சேஷாத்ரி ஸ்வாமிகள் பக்தர்கள் சொல்வார்கள்.  ஆனால்  அதெல்லாம் வெளியே  பரவவில்லை.  பரவ  வைக்கவேண்டும் என்பதும் அவர்கள் விருப்பமில்லை.  பக்தி தானாக மனதில் முனுசாமிக்கு ஏற்பட்டது போல்  வளரவேண்டும்.




 



 

sivan jaykay

unread,
Aug 17, 2021, 7:57:52 PM8/17/21
to amrith...@googlegroups.com
அருட்புனல் -   நங்கநல்லூர்  J K SIVAN  ---
ராமகிருஷ்ண பரமஹம்சர் .

காசி யாத்திரை

'என்னைப்  பொறுத்தவரையில், பகவான் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் எத்தொழிலிலும் ஈடு படாத நிலையில் அவரை புருஷன், ப்ரம்மம் என்பேன். முத்தொழிலில் ஈடுபடும்போது ''சக்தி, மாயா, ப்ரக்ரிதி , இஷ்ட தெய்வம் '' என்பேன். ரெண்டுக்கும் ஒன்றும் வித்யாசம் இல்லை. பாலும் வெண்மை நிறமும் போல, வைரமும் ஒளியும் போல. ஒன்றில்லாமல் ஒன்றில்லை''  --  ராமகிருஷ்ணபரமஹம்ஸர் ..

தக்ஷிணேஸ்வரம் வந்திருந்த  யாத்ரி தோத்தாபுரி சென்று ஆறுமாதம் ஆகிவிட்டது.   ராமக்ரிஷ்ணர் மரக்கட்டையாக கிடந்தார்.  வாயில் மூக்கில் ஈ புகுந்து வெளியேறுவது கூட தெரியவில்லை. இரவா பகலா ஒன்றுமே தெரியவில்லை. மண் கலந்து தலை முடி சடையானது.

யாரோ ஒரு சந்நியாசி வந்து  அவ்வப்போது ராமகிருஷ்ணரை கவனித்துக் கொண்டார். நாள் செல்ல செல்ல நிறைய பக்தர்கள், யோகிகள், முனிவர்கள், சந்யாசிகள் , வேதாந்திகள் ராமகிருஷ்ணரைத்  தேடி தக்ஷிணேஸ்வரம் வந்தனர். அவருக்குள்ளே ஒரு அமைதி இப்போது குடிகொண்டுவிட்டது. முன்பு இருந்த தவிப்பு, திகுதிகு  வென கொதிந்தெழுந்த அக்னி உஷ்ணம் இப்போது இல்லை.

இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால்,  ராமகிருஷ்ணர் எந்த புத்தகத்தையும் தொட்டு படித்ததில்லை. சகல சாஸ்திர வேதாந்தங்கள் அவர் மனதில் எப்படி குடிபுகுந்தன?. வருவோர் போவோர் அவரிடம் சம்பாஷித்ததில் அவர்கள் மனதில் இருந்ததெல்லாம் அவரில் அடைக்கல மாயின.

பிற்காலத்தில் ஒரு சிஷ்யன் அவரை  என்ன கேட்டான்?
 '' குரு மஹாராஜ், உங்களுக்கு எப்படி இவ்வளவு ஞானம் கிடைத்தது?

''படித்து அல்ல, கேட்டு,   எண்ணற்ற மஹான்கள் ஞானிகள் இங்கே வருகிறார்களே, அவர்களது ஞானம் மாலையாக என் கழுத்தில் விழ. அதை நான் என் அன்னைக்கு காணிக்கையாக அவள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்''.

மலர்கள் மலர்ந்தால் யாரும் சொல்லாமலே வண்டுகள் தேடிவரும் அல்லவா?. 1870ல் சிறந்த சாஸ்திர நிபுணர் கௌரி வந்து தரிசித்தவர்   அடடா,  ஸ்ரீ   ராமகிருஷ்ணர் பகவானின் அவதாரம் என்றார். ஜெய்பூர் மஹாராஜா சமஸ்தானத்தில் பெரிய பதவியில் இருந்த ஹிந்து சாஸ்திரத்தில் கரைகண்ட நாராயண சாஸ்திரி தக்ஷிணேஸ்வரம் வந்து ராமகிருஷ்ணரை தரிசனம் செய்தார்.

பிற்காலத்தில் ராமகிருஷ்ணர் ''புத்தர் பேசிய பேச்சுக்கள் எல்லாமே உபநிஷதத்தில் இருக்கும் தத்துவங்கள் தானே. எனக்கு எம்மதமும் சம மதமே, சம்மதமே, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்கள் எல்லாமே  ஹிந்து மதத்தின் பிரதிபலிப்பே. நான் அவைகளைக்  கடைப்பிடித்து அனுபவித்தவன். எல்லாமே ஒரே ஊருக்கு செல்லும் வெவ்வேறு வழிகள். கையில் உள்ள பாத்திரத்தில் உள்ள தண்ணீர் ஒன்று ஆனால் அதன் பாத்திரங்கள் வேறு உருவங்கள், தவலை , சொம்பு , லோட்டா, அண்டா, குண்டா என்று வேறு பெயர்கள் கொண்டவை'' என்பார்.

1867ல் சொந்த ஊர் கமார்புக்கூர் சென்றார். பழகிய கிராம சூழ்நிலை, பழைய நண்பர்கள், எளிமை யான கிராமிய வாழ்வு மகிழ்ச்சி அளித்தது. அவரது 14 வயது மனைவி சாரதா அவரது ஆன்மீக வாழ்வை சிஷ்யையாக ஏற்று சேவை புரிந்தாள் .

1868ல் மதுர பாபு மற்றும் 125 பேர் ராமகிருஷ்ணர் உள்பட யாத்திரை சென்றார்கள். பீஹாரில் வைத்யநாத் கிராமத்தில் பஞ்சத்தில் வாடும் பரம ஏழைகளை எலும்புக் கூடுகளாக கண்டபோது ராமகிருஷ்ணர் ''இவர்களுக்கு ஆளுக்கு ஒரு துணி கொஞ்சம் உணவு காசு கொடுக்கவேண்டும்'' என்கிறார். மாதுர் பாபுவுக்கு இதனால் அதிக செலவு ஆகும் என்று   தோன்றியதால்  ஒப்புக் கொள்ளவில்லை.

''நான் இங்கேயே இவர்களோடு இருக்கிறேன் நீங்கள் காசிக்கு சென்று வாருங்கள்''என்று ராம கிருஷ்ணர் சொன்ன  போது தான் மதுர்பாபு அவர்களுக்கு உதவினார்.

இரண்டு வருஷங்களுக்குப்  பிறகு இதேபோல் ஒரு சமயம் மாதுர் பாபுவோடு அவர் ஜமீனுக்கு சென்றபோது அங்கு மகசூல் இல்லை, வறட்சி, குடியானவர்கள்  சாகுபடி பணம் தரவில்லை. ராமகிருஷ்ணர் அவர்களுடைய  கடனை  ரத்து செய்யுங்கள், உணவு, பணம் கொடுங்கள் என்றபோது மாதுர் தயங்கினார். ''நீங்கள் அன்னையின் காவலாளி, அவர்கள் அவள் பிள்ளைகள், இது அவள் நிலம், அவள் பணம். அது அவர்களுக்கு போய் சேர ஏன் தடை?'' என்கிறார். மதுர்பாபு உடனே உதவுகிறார்.

ஒரு மயிர் கூச்செரியும் சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள். 

ராமக்ருஷ்ணரும்  உடன் சென்றவர்களும்  காசிக்கு படகில் கங்கையை கடக்கிறார்கள்.  காசியின் விஸ்வநாத ஆலயம் தங்கமயமாக ராமகிருஷ்ணருக்கு ஜொலித்தது, காசியின் ஒவ்வொரு சிட்டிகை மண்ணும் அவருக்கு புனிதமாக தோன்றி தரையில் விழுந்து புரண்டார். மண்ணை உண்டார். உடலில் பூசிக் கொண்டார். மணிகர்ணிகா கட்டத்தில் மயான பூமியில் கங்காதரனை ஜடாதாரியாக வெண்ணிற சாம்பல் உடல் முழுதும் பூசியவாறு ஒவ்வொரு சிதையிலும் கண்ட உயிரற்ற சடலங்களை நெருங்கி அவற்றின் காதில் மோக்ஷ மந்திரத்தை உச்சரித்து ஓதுவதை கண்டார். கூடவே அவரோடு இருந்த உமையவள் அந்த ஜீவன்களின் கர்ம பந்தங்களை விலக்குவதையும் நேரில் கண்டார்.

காசியில் ராமகிருஷ்ணர் த்ரை லிங்க ஸ்வாமிகளைக்  கண்டார். இவரைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். மீண்டும் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.முன்னூறு வயதிற்கும் மேற்பட்ட குழந்தை முகம் கொண்டவர் .  குழந்தையானந்த ஸ்வாமிகள், காசி கணபதி என்றும்  தெலுங்கு ஸ்வாமிகளை  அழைப்பார்கள்.

ராமகிருஷ்ணர் அங்கிருந்து திரிவேணி சங்கமம் சென்றார், பிறகு அங்கிருந்து பிருந்தாவன் மதுரா போன்ற கோபியர் கொஞ்சும் ரமணன் கோபால கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட க்ஷேத்ரங்களுக்கு  சென்றார். அங்கே கங்காமாயி என்ற வயதான பெண்மணியை சந்தித்தபோது அவள் ''நீங்கள் ராதையின் அவதாரம்'' என்றவள் ராமகிருஷ்ணரை பிரிய மறுத்தாள் . பிரிந்தாவனத்திலிருந்து கை நிறைய மண்ணைக்  கொண்டு  வந்து தக்ஷிணேஸ்வரத்தில் பஞ்சவடியில் மண்ணுடன் கலந்தார். கொஞ்சம் தனது ஆஸ்ரமத்தில் தெளித்தார். ''இனி இதுவே பிருந்தாவனம்''.

1870ல் சைதந்யர் பிறந்த நாதியா கிராமம் படகில் சென்றபோது ராமகிருஷ்ணர் கண்ணில் தங்கத்தில் வார்த்தது போல் சைதன்யரும் அவர் தோழர் நித்யானந்தாவும் காட்சியளித்தனர். ''அதோ அதோ வருகிறார்கள் '' என்றவர் சமாதி நிலை அடைந்தார்.

                                     

sivan jaykay

unread,
Aug 17, 2021, 7:58:30 PM8/17/21
to amrith...@googlegroups.com

பேசும்  தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN

63.  ஆத்ம ஞான உபதேசம் 

பால் ப்ரண்டன் என்ற வெள்ளைக்காரர் புண்யம் பண்ணிய  ஒரு ஆன்மீக வாதி. உண்மையான ஒரு யோகியை நேரில் சந்திக்க வேண்டும் என்று இந்திய கண்டம் முழுதும் அலைந்து திரிந்து, தேடி, தான் கண்டவர்கள் எவருமே உண்மையான யோகி அல்ல என்று அறிந்து,  வெறுத்து, சென்னையிலிருந்து தாய் நாட்டுக்கு திரும்பும் சமயம்  நண்பர்  ஸ்ரீ  K S  வேங்கடரமணி  எனும் வக்கீல்,  அவரை காஞ்சிக்கு மஹா பெரியவரை தரிசிக்க அழைத்து சென்றார். பெரியவா பால் ப்ரண்டனிடம் சம்பாஷித்து ''உனக்கு உண்மையான ஒரு யோகியை பார்க்கும் ஆவல் இருந்தால் நேரே திருவண்ணாமலைக்கு போ'' என்று அறிவுரை தந்து, அவர் கஷ்டப்பட்டு குதிரை வண்டி, மோட்டார் வண்டி என்று புழுதியில் மண் பாதைகளில் பிரயாணம் செய்து பல மணி நேரங்களுக்குப் பிறகு பகவான் ரமணரை சந்திக்கிறார்.

ரமணர் உண்மையிலேயே ஒரு யோகியா என்று சோதிக்க, நிறைய கேள்விகளை கேட்கவேண்டும் என்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார்.

ஆஸ்ரமத்தில்  நுழைந்ததும்  ஒரு பெரிய  ஹால். நிறைய பேர் தரையில்  உட்கார்ந்திருக்கிறார்கள்.  ஒரு ஓரமாக  மகரிஷி உட்கார்ந்திருக்கிறார். கையில் மடித்த காகிதம் ஏதோ ஒன்று. மெதுவாக அதில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார். சில நிமிஷங்கள் ஓடுகிறது. நான் அருகில் வந்த சமயம்  அந்த காகிதத்தை ஒரு புத்தகத்தில் வைத்து விட்டு  ஒரு  தொண்டரைக்  கூப்பிடுகிறார். ஏதோ தமிழில் சொல்கிறார்.  அவன்  ஆங்கிலத்தில் 

 ''உங்களால்  நாங்கள் தயாரித்திருக்கும்  உணவை  சாப்பிட  இயலாதே என்று  ஸ்வாமிகள் வருந்துகிறார். இது ஒரு எளிமையான  சாத்வீகர்கள் வாழும் இடம்.  ஐரோப்பியர்கள் வசதிகளுக்கு ஈடு கொடுக்கவோ, அவர்களது வழக்கமான, விருப்பமான உணவு  எது என்றோ  அறியாத ஒரு  இடம்'' என்கிறார்.

''பரவாயில்லை, உணவு முக்கியமில்லை. இந்த  யோகியின் ஆஸ்ரமத்திற்கு வரவேண்டும் என்ற தாகம் ஒன்று தான் எனக்கு  '' என்று பால் ப்ரண்டன் பதிலளிக்கிறார்.

மகரிஷி இதை கேட்டதும் முகம் மலர்கிறார். அமைதி, எந்த  சலனமும் இல்லாத எதிலும் பட்டுக் கொள்ளாத ஒரு  தன்மையை காட்டும் முகம்.

''ரொம்ப நல்ல நோக்கம் உங்களுடையது' -  மஹரிஷியின்  பதில்.
.
"குருஜி,  நான்  மேலை நாட்டு தத்துவங்கள், விஞ்ஞானம் படித்தவன், நெருக்கமாக ஜனங்கள் வாழும் பெரிய  நகரத்தில் வசிப்பவன். அங்குள்ள மக்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள்,  விருப்பங்களை அறிந்து  
அதில் கலந்தவன்.  அதே நேரம்,  தனிமையை விரும்பி,  அமைதியை தேடி, ஆழ்ந்த சிந்தனையோடு,  எங்கெல்லாமோ  அலைந்தவன், மேலை நாட்டு  ஞானிகளோடு பழகியவன்.  விடை காணாமல் இப்போது  கீழை நாட்டை நோக்கி வந்தவன். ஞான ஒளி தேடுபவன்''

''புரிகிறது''.  ஒரு  சின்ன தலை அசைப்பு .

''பலரின்  கருத்துக்கள், கோட்பாடுகள்,  அறிவு பூர்வமான  சான்றுகள்  எல்லாம் கேட்டு, கண்டு படித்தவன்,  பல வித எண்ணங்கள் நம்பிக்கைகள்  என்னை  வந்தடைந்தன.  எனக்கு  த்ருப்தி யளிக்காமல் அவை என்னை ஆயாசப்படுத்தினது தான் மிச்சம்.  களைத்துப் போய்விட்டேன் குருநாதா,  சுய அனுபவத்தில் அவை என்னை  கவரவில்லை.  என்னை மன்னியுங்கள், நான்  ஆன்மீக வாதியோ ஆஸ்திகனோ அவ்வளவு இல்லை.  ஒரு  சாதாரண மனிதனின் உலக வாழ்க்கையை த்  தாண்டி  ஏதாவது இருக்கிறதா? இருந்தால் அதை அடைய  இயலுமா? அது என்னால்  முடியுமா?

பதில் இல்லை. உள்ளே  எண்ணங்கள் ஓடுகிறதோ?  வேறெதுவும்  பண்ண முடியாமல் என் நாக்கு எனக்குள்ளே  கொதிப்பதை  வாரித் தெளிக்கிறதோ?  மேலே பேசுகிறார் பால் ப்ரண்டன்.

''மேனாட்டு  அறிஞர்கள்,  விஞ்ஞானிகள், கெட்டிக்காரர்கள் என்று பெயர் பெற்றவர்கள். இருந்தும் உலக  வாழ்க்கையைக்  கடந்த  ஒரு சத்தியத்தின்   ஞான ஒளி பற்றி கூறமுடியாதவர்கள்.   நான் அறிந்தவரை  மேலை  நாட்டைவிட  இங்கே  ஞானிகள்  யோகிகள்  அதை  உணர்ந்தவர்கள் பலர்  உண்டு என்று புரிந்தது.  எனக்கு நீங்கள் வழிகாட்ட முடியுமா? அல்லது நான் தேடுவது ஏதோ ஒரு  கானல் நீரா? ஏதோ ஒரு உருவமற்ற,  ஆதாரமற்ற நிழலா?''

வார்த்தைகளை வீசி விட்டார் பால் ப்ரண்டன்.  பாவம்,  எவ்வளவு நாளாக  இந்த தேடல் அவருக்கு. மஹரிஷியின் பதிலுக்கு ஆவலாக காத்திருக்கிறார்.

மகரிஷியின்  பார்வை  ப்ரண்டனை  ஊடுருவியது. பத்து நிமிஷத்துக்கு மேல் அமைதி, பேச்சு இல்லை.  பிறகு மெதுவாக  ஒரு வார்த்தை வெளி வருகிறது.
  
"நான்  தேடுகிறேன், அலைகிறேன், நான்  அறிய  விரும்புகிறேன்  என்கிறாயே. அந்த  ''நான்'' யார்?
ஆங்கிலத்தில்  தெளிவாக  மகரிஷி இப்படி பேசியது  பாலப்ரண்டனுக்கு ஆச்சர்யம்.  திடுக்கிட்டார்.
''ஐயா, உங்கள் கேள்வி புரியவில்லை ''
"புரியவில்லையா,  மறுபடியும்  யோசி ''
''நான் திரும்ப திரும்ப  அவர்  கேட்டதை பற்றி சிந்திக்கிறேன். ஒரு எண்ணம் மனதில் பளிச்சிட்டது தன்னை   ஒரு விரலால் சுட்டிக் காட்டிக்கொண்டே  ''நான்  பால்  ப்ரண்டன் ''  என்கிறார்.
''உனக்கு  அவரைத் தெரியுமா?''
"இந்த நிமிஷம் வரை  என் வாழ்க்கை முழுதும் நான் அவரை அறிவேன்''  என்று சொல்லி சிரித்தார் பால் ப்ரண்டன்.
"நீங்கள் சொல்வது உங்கள் உடலை.  நான் கேட்பது அதைக் கடந்த   நீங்கள் யார் என்று?''
ப்ரண்டனுக்கு விடை தெரியவில்லை. இது என்ன? இதுவரை கேள்விப்படாத கேள்வி?''
மகரிஷியே பேசினார்:
"முதலில் உங்களுடைய உடலல்லாத அந்த ''நான்''  யார் என்று சிந்தித்தால் உண்மை தெரியும்., நீங்கள் தேடும் வினாவுக்கு விடை புலப்படும்''.
''தலை சுற்றுகிறதே . புதிராக இருக்கிறதே. அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. ஒருவேளை தான் சொன்னது சரியில்லையோ  என்று  மொழி பெயர்ப்பாளரிடம் சொல்லி  ஆங்கிலத்தில்  மறுபடியும்  விளக்கச் சொல்கிறார்.

"ஒரே ஒரு விஷயம் தான் பாக்கி  இருக்கிறது.  உன்னையே  நன்றாக  சரியான வழியில்  உற்றுப் பார்.உன் மன சஞ்சலத்துக்கு விடை அங்கே கிடைக்கும். "-  மகரிஷி.

''நான் என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள். அதற்கு முறை, வழி எது  '' -  பால் ப்ரண்டன்.
"விடாமல்  உனக்குள்ளே  தேடவேண்டும். உள்நோக்கி அலசவேண்டும். தியானமாக அது மாற வேண்டும். இருட்டிலிருந்து வெளிச்சம் கிட்டும்.''
"குருநாதா,  உண்மை, சத்யம் என்றால் என்ன என்று பலமுறை என்னையே நான் கேட்டுக் கொண்டி ருக்கிறேன்.  ஆனால் முன்னேற்றம் எதுவும் காணோம் ''
"முன்னேறவில்லை என்று உனக்கு எப்படி தெரியும்?  ஆன்மீக  தேடலில்  முன்னேற்றத்தை, வளர்ச்சியை  எளிதாக அறியமுடியாது.''
"இதற்கு ஒரு குரு வேண்டுமா ?''
"தேவைப்படலாம்''
"அந்த குரு, ஆசார்யன், நீங்கள் சொல்கிறபடியே ,  ஒருவனை தனக்குள்ளே  தன்னைத் தேடுவதற்கு  உதவ முடியுமா?
"அந்த குரு,  ஆசார்யன், அவன்  தேடலுக்கான வழிமுறைகள்  சொல்லித் தருவார். சாதகன் தானாகவே தான்  சுய அனுபவத்தில் அதை உணரமுடியும் . சைக்கிளில் உட்காரவைத்து தள்ளி விடுவார். கெட்டியாக  ஆடாமல் அசையாமல் முன்னாள் பார்த்து மிதி என்பார். நீ தான்  மிதித்து ஓட்டவேண்டும். விழவேண்டும். எழுந்திருக்கவேண்டும். மிதிக்கவேண்டும்.'' 
"ஒரு குருவின்  உதவியோடு இந்த  ஞான ஒளி பெற  எத்தனை காலம்  பிடிக்கும்?''
"அது  சாதகனின்  மன முதிர்ச்சி, இடை விடாத  முயற்சியை பொறுத்தது.  பீரங்கியை  திணிக்கும்  வெடிப் பொடி  உடனே  தீயை உண்டாக்கி  வெடிக்கிறது.  அடுப்பு  எரிய  கரித்துண்டு  நெருப்பு பிடிக்க நேரம் ஆகிறது அல்லவா?"
"மகரிஷி  நாம் வாழும்  காலம்  சோதனைகள்  நிரம்பி இருக்கிறதே.  உலகத்தின் எதிர்காலம் பற்றி  நீங்கள்  என்ன அபிப்ராயம் சொல்கிறீர்கள்?''
"எதிர்காலத்தைப் பற்றி என்ன யோசனை, எதற்கு  அதை தொந்தரவு செய்யவேண்டும்? நிகழும் காலத்தைப் பற்றியே  சரியாக உணரமுடியாமல், தெளிவில்லாமல் இருக்கும்போது  அதைப்பற்றி என்ன கவலை?  நடப்பதை எண்ணு.  எதிர்காலம் தானே  தன்னைப் பற்றி உணரும். தெளிவுறும் ."

மீண்டும் சிறு  அமைதி இடைவெளி.
ஒரு தொண்டன் வந்து  சாம்பிராணி, ஊதுவத்தி மறுபடி   ஏற்றி வைக்கிறான்.  அதன் நீல புகை  சுருள் சுருளாக  பரவுவதை கவனிக்கிறார்.  மீண்டும் புத்தகத்தில் வைத்த  காகிதத்தை கையில் எடுக்கிறார் நான் எதிரில் இருப்பதை முற்றிலும்  மறந்துவிட்டார்.  தனது சிந்தனையில் எழுதுவதில்  கவனம் சென்றுவிட்டது.  பால் ப்ரண்டனின் சந்திப்பு முடிவுக்கு வந்துவிட்டதா?

பால் ப்ரண்டன் மெதுவாக தரையிலிருந்து எழுந்திருந்து,  கரம் குவித்து  வணங்கி அங்கிருந்து  செல்கிறார்.   இந்தியாவை விட்டு செல்வதை மேலும் ஒரு வாரம் தள்ளி போடுகிறார்
மஹரிஷியின்  தனிமை சூழல், அமைதி, மௌனம் ப்ரண்டனை கவர்ந்து விட்டது.  
ஒருவாரம் ஓடியும்  இன்னும்  மகரிஷியை  நெருங்க  முடியவில்லையே.  ஏதோ  இதுவரை இல்லாத  உயர்ந்த சிந்தனைகள் கைகூடின.  ஏமாற்றங்கள் கூடவே  புரிந்தது.  ,மகரிஷியை ஏன் நெருங்கி புரிந்து கொள்ள முடியவில்லை.  ஒரு சிஷ்யனை  அணுகினார்.  

''நான்  குருஜியோடு  ஒரே ஒரு முறை மீண்டும்  சில நிமிஷங்கள் பேச முடியுமா?'' என கேட்கிறார்.
தொண்டன் உள்ளே சென்று  மகரிஷியின் பதிலை  தெரிவித்தான்.  
''சந்தோஷமாக உங்களை சந்திப்பார்''
ப்ரண்டன்  ஹாலுக்கு சென்றார்.   தரையில் உட்கார்வது கஷ்டமாக இருந்ததால் சற்று உயரமான ஒரு திண்டு போட்டிருந்தது.  மகரிஷி மெளனமாக  ஒரு புன்முறுவலுடன் வரவேற்றார்.  கொஞ்சம் மனது திடமாகியது.  கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.
''குருஜி,  ஞானம் பெற  ஒருவன்  தனித்து,  காடு, மலை தேடிப்  போகவேண்டும் என்று  யோகிகள் சொல்வதாக  அறிகிறேன்.  எங்கள்  வாழ்க்கை முறையில்   மேலை நாடுகளில் அது சாத்தியம் இல்லையே?''
''செய்யும்  தொழிலை, வேலையை, காரியத்தை விட்டு விட்டு  தனித்து எங்கோ போய் அலைய வேண்டாம். ஒவ்வொரு  நாளும்  ஒரு மணி, ரெண்டுமணி நேரம் தொடர்ந்து  ஆத்ம  விசாரம் பண்ணிக்கொண்டே வந்தால் போதும். சரியான முறையில்  தேடல்  அமைந்தால்  மனது சக்தி பெறும் , கட்டுக்குள் வரும்.  மனதும் செயலும் வேறல்ல.  மனம் தெளிவடைந்தால்  அதன் வழியில் செல்லும் செயலும்  சீராகும்.
"அதன் விளைவு  என்னஆகும், என்ன பயன்  ?''
"இப்படி  தியானம், சிந்தனையின் பயனாக  மற்றவர்களோடு  பழகுவதில் வித்யாசம் தெரியும். செயல்கள், நோக்கம்  எல்லாம் புதிதாக மாறி விட்டதை உணரமுடியும்.  தியானத்தின் விளைவை செயலில் காணலாம். "
"அப்படியென்றால்  சில  யோகிகள் சொல்வது போல்  தனிமையை தேடி எங்கோ செல்ல வேண் டாமா?
நேரடி பதில் இல்லை. மௌனம். தொடர்ந்து உபதேசம்: 

''ஒருவன்  எப்போது  சுயநல எண்ணத்தை  துறக்கிறானோ , அவனுக்கு  உலக  ஈர்ப்பு விடுபடும்.  சுயநல எண்ணம்  உண்மையை அறியாமல் தடுப்பது.  மாயை. அவனே உண்மை  எனும்  ஆத்மாவை  உணரமுடியும். ''
"உலக வாழ்வில் எப்படி ஐயா  சுயநலம் இன்றி  வாழ முடியும்?''
"உலகத்தில்  வாழ்ந்துகொண்டு  தனது கடமைகளை செய்வதற்கும்  ஞானத்திற்கும் சம்பந்தமே இல்லை.    அவை வெவ்வேறானவை.  இரண்டையும் ஒரே சமயத்தில் சேர்த்து அனுபவிக்க முடியும் "
"ஓஹோ.  உலகத்தில்  காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டே  ஞானம்  பெறமுடியுமா?''
"ஏன் முடியாது?    உலக வாழ்வில் ஈடுபடுவது இந்த உடலாகிய  ''தான் '' என்ற எண்ணம் மறைந்தால்  அதுவே படிப்படியாக அவனை  ஆத்மாவை உணரச் செய்யும் ''
"நீங்கள் சொல்வது போல் பார்த்தால்  உலக வாழ்வில்  ஈடுபட்டு காரியங்களை செய்பவனுக்கு தியானம் செய்யவே  அதிக நேரம்  கிடைக்காது போல் தோன்றுகிறதே''
இந்த கேள்வியை  மஹரிஷி லக்ஷியம் செய்யவில்லை.

'தியானத்திற்கு என்று நேரம் ஒதுக்குவது ஆரம்ப காலத்தில்  ஆன்ம நாட்டம் கொண்டவர்களுக்கு தான் தேவை.  பழகப் பழக, நாளாவட்டத்தில் தியானம் செய்வது அவனது காரியத்தோடு  கலந்துவிடும்.  சமூகத்தில் இருந்து கொண்டு  தனது கர்மாவைச்  செய்பவனின்  மனது தனிமையில் தான் இயங்கும்''
"அப்போது யோகிகள் வழியில்  நீங்கள்  அதை கற்றுத் தருவதில்லையா?
"மாடு  மேய்ப்பவன்  கையில் கம்புடன் அதை  வழி நடத்துபவது போல் தான் யோகி  மனதை செலுத்துகிறான்.  வழியில் கை  நிறைய  புல்லை வைத்துக்  காட்டிக்கொண்டே   மாட்டை  செலுத்துவதில்லையா?''
 ''அது எப்படி ஐயா சாத்தியம்?''
"அதற்கு தான்  அடிக்கடி  '' நான்  யார் ?'' என்று  வினவுவது.   இந்த  வினாவுக்கான  விடை  தான் ஆத்மாவை காட்டும். அந்த  பெரிய  சோதனையில் ஜெயித்தவனுக்கு மற்ற சோதனைகள் தூசியாக  மறையும் . "
பால் ப்ரண்டன் மகரிஷி சொன்னதை உள் வாங்கிக்கொண்டு மெளனமாக இருந்தார்.  
பகவான்  ரமண மகரிஷி மேலே தொடர்ந்தார்:
''இப்படி சொன்னால் விளங்குமா பார்?    எல்லோருக்கும்  துக்கமே இல்லாத சுகம் வேண்டும். முடிவில்லாத சுகம் தேவை.  இந்த  எண்ணம் ஞாயம்.  ஆனால்  தன்னை(இந்த உடலை)  விரும்பு கிறவர்கள்  தானே அதிகம்.''
"ஆமாம் ஐயா "
"இப்போது யோசி.  மனிதன் தன்னை, அதாவது தனது உடலை, அதன் பெயரை அதிகம்  விரும்பு பவன், சுகத்தை அடைய  குடி, ருசியான உணவு, கேளிக்கை,  மதம், இவற்றை பயன்படுத்துகிறான்.  அது தான் அவன் சுய ரூபம் என்று  நினைப்பவன். ஆனால்  இந்த இன்பம் வேறு, ஆத்மானந்தம் வேறு. அவன் இயற்கை ஸ்வரூபம் வேறு''
''ஐயா  நீங்கள் சொல்வது.......''
"மனிதன்  இயற்கையாகவே  ஆனந்தத்தின்  ஸ்வரூபம்.  அதை உணர்ந்தால்  தான் அனுபவிக்க இயலும்.   ஆத்ம  சுகானுபவம் தேடுவது அவன் தனக்குள் புதைந்து கிடைக்கும் புதையலைத் தேடுவது.  அது என்றும் நிலையானது. அழிவற்றது.  அதை அடைந்தவன்  ஆனந்தன். என்றும்  சுகவாசி.''
"உலகம்  என்பது  துன்பம் நிறைந்ததா ?
"ஆமாம் என்று  தானே  நீங்கள் சொன்னதிலிருந்து விளங்குகிறது. உண்மையை அறியாமை  
துன்பத்தை தான் தரும். தெரிந்தோ தெரியாமலோ  அநேகமாக எல்லோரும் இந்த  பொய்யான இன்பத்தை, சுகத்தை தேடுபவர்களாகத் தான் உலகமுழுதும் இருக்கிறார்கள்.''

மகரிஷி மௌனமாகிவிட்டார்.  ஹாலில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக அவரை  வணங்கிவிட்டு சென்றார்கள்.  அவரது ஆழ்ந்த கூரிய பார்வையிலிருந்து தனது கண்களை விலக்கிக் கொண்டு  பால் ப்ரண்டன்  மகரிஷியை  வணங்கிவிட்டு  செல்கிறார்.

ரெண்டு வாரங்களில்  பம்பாயிலிருந்து  ஐரோப்பா செல்வதற்கு வாங்கிய  பயணச்சீட்டை  ரத்து செய்துவிட்டு பால் ப்ரண்டன் திருவண்ணாமலையிலேயே  அடைக்கலம் ஆகிவிட்டார்.

sivan jaykay

unread,
Aug 17, 2021, 7:59:16 PM8/17/21
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K  SIVAN --
தாகூர் 


97.  நின்னை சரணடைந்தேன் ஆத்ம நாதனே.


97.  When my play was with thee I never questioned who thou wert.
I knew nor shyness , nor fear, my life was boisterous.
In the early morning thou wouldst call me from my sleep like my own comrade and 
lead me running from glade to glade.

On those days I never cared to know the meaning of songs thou sangest to me.
Only my voice took up the tunes, and my heart danced in their cadence.
Now, when the playtime is over, what is this sudden sight that is come upon me?
The world with eyes bent upon thy feet stands in awe with all its silent stars.

நான்   எதையும் மனம் விட்டு  பேசுபவனடா.  நான்  ஏமாளி, முட்டாள் என்று அதனால் பட்டம்  மாற்றிக்கொள்ள  விரும்பவில்லை.   சிங்கம், புலி, நாய், பூனை, குரங்கு  போல்  இயற்கையான என் குணத்தோடு இருந்துவிட்டு போகிறேன்.  

 ஆசாய் ஆசை  ஆசையாக நான் உன்னோடு விளையாடினபோதெல்லாம், நீ யார் என்று  கேட்டதேயில்லை.  எனக்கு  நாணம், அச்சம் எல்லாம் புத்தகத்தில்  படித்ததோடு சரி.  என் வாழ்வு ஆரவாம்,   கும்மாள, கொந்தளிப்போடு தான் ஆனந்தமாக  இருந்தது.  

ஒவ்வொருநாளும்  நீ தான் அதிகாலையில் ஒரு தோழனைப் போல் என்னை தூக்கத்திலிருந்து எழுப்பி, கைப்பிடித்து  அழைத்து, காட்டின் ஒரு வெட்ட வெளியிலிருந்து, வேறு ஒரு வெட்ட வெளிக்கு அழைத்துச் செல்பவன். உன்னை மறக்க முடியுமா?.

நீ  அருமையாக   பாடுபவன்,உனக்கு  குயிலின் இனிமையைப்போல் ஒரு   அற்புத குரல் உண்டு.  நீ  பேசினாலே ஆலாபனத்தோடு  பாடுவது போல்  கேட்க சுகமாக இருக்கும் .  என்  அந்த நாட்களில் நீ என்னிடம் பாடிக்  காட்டிய  பாடல்களின் பொருளை, நான் அறிய முயலவில்லை.   ஒளரங்க சீப் நான்.  சங்கீதம் தெரியாதவன்.   ஆனால் என் குரல் உன் பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருந்ததன் மூலம்  இனிய  பண்   இசையைக் கற்றுக் கொண்டது.  என் நெஞ்சம் உன் இசையின்   உச்ச  த்வனியில்  அதன்    ராகத்தில்,  தாளத்தில் களிப்புடன் நடனம் புரிந்தது.  

 காலம் மாறிவிட்டது.  பல காலண்டர்களில் சீட்டுகள்   கிழித்தாகிவிட்டது.  இப்போது  அந்த பழைய  விளையாட்டு, அதன்  நேரம் எல்லாம்  முடிந்துவிட்டதே .    இப்போது என் கண்முன் தோன்றும் காட்சி என்ன?

 ஆம் கிருஷ்ணா,  இந்த  உலகம் தன்னுடைய அமைதியான விண்மீன்களுடன் குனிந்து, உன் காலடியைப் பயபக்தியுடன் , ஒரு வித  இனம்புரியாத  அதிசயத்தோடு நோக்குகிறது.  குனிந்து  முத்தமிட முயல்கிறது  என்று வைத்துக் கொள் .


sivan jaykay

unread,
Aug 18, 2021, 7:38:29 PM8/18/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீ மந் நாராயணீயம் -    நங்கநல்லூர் J K  SIVAN --
33வது தசகம் 

33.    துவாதசி பாரணை.

वैवस्वताख्यमनुपुत्रनभागजात-
नाभागनामकनरेन्द्रसुतोऽम्बरीष: ।
सप्तार्णवावृतमहीदयितोऽपि रेमे
त्वत्सङ्गिषु त्वयि च मग्नमनास्सदैव ॥१॥

vaivasvataakhya manuputra nabhaaga jaatanaabhaaganaamaka
narendra sutO(a)mbariiShaH |
saptaarNavaavR^ita mahiidayitO(a)pi reme
tvatsangiShu tvayi cha magnamanaassadaiva || 1

வைவஸ்வதாக்²யமனுபுத்ரனபா⁴க³ஜாத-
நாபா⁴க³னாமகனரேந்த்³ரஸுதோ(அ)ம்ப³ரீஷ꞉ |
ஸப்தார்ணவாவ்ருதமஹீத³யிதோ(அ)பி ரேமே
த்வத்ஸங்கி³ஷு த்வயி ச மக்³னமனாஸ்ஸதை³வ || 33-1 |

குருவாயூரப்பா,   நாராயணனாகிய உன் மஹிமையை ஒன்று விடாமல் சொல்லவேண்டும் என்று முயற்சித்து உனது  ஒவ்வொரு  செயலையும்,  மகிமையையும், 
 உன்  பக்தர்கள் சரித்திரத்தையும் ஏன் சேர்த்து சொல்கிறேன் தெரியுமா?  உன்னை  பூஜித்து மனமார வேண்டியவர்களுக்கு நீ எவ்வாறு அருள் வழங்குவாய், கருணை புரிவாய் என்று  எல்லோருக்கும் தெரிவதற்காக, யாவரும் அறிவதற்காக.   உன்னை உன் பக்தர்களிடமிருந்து பிரித்து எதுவும் சொல்ல வழியில்லையே. 

இந்த தசகத்தில்  அப்படி ஒரு பக்தன்  அம்பரீஷனை பற்றி  பாடுகிறார் மேல்பத்தூர்  நாராயண நம்பூதிரி. 

வைவஸ்வத மனுவின் பிள்ளை நாபாகன். அவன் புதல்வன்  நரபதி , அவன் மகன்  அம்பரீஷன்.  ஏழு கடல்கள் சூழ்ந்த பூமியை ஆண்ட  அரச குலம். அம்பரீஷன் உன்னுடைய  பக்தன், சதா உன்னையே  நினைத்து த்யானம் பண்ணும் நாராயண பக்தன்.  ஏகாதசி உபவாசம் என்றால் அம்பரீஷனை நினைக்காமல் இருக்க எவராலும் முடியாது.

त्वत्प्रीतये सकलमेव वितन्वतोऽस्य
भक्त्यैव देव नचिरादभृथा: प्रसादम् ।
येनास्य याचनमृतेऽप्यभिरक्षणार्थं
चक्रं भवान् प्रविततार सहस्रधारम् ॥२॥

tvatpriitaye sakalameva vitanvatO(a)sya
bhaktyaiva deva nachiraadabhR^itaaH prasaadam |
yenaasya yaachanamR^ite(a)pyabhirakshaNaarthaM
chakraM bhavaan pravitataara sahasradhaaram || 2

த்வத்ப்ரீதயே ஸகலமேவ விதன்வதோ(அ)ஸ்ய
ப⁴க்த்யைவ தே³வ நசிராத³ப்⁴ருதா²꞉ ப்ரஸாத³ம் |
யேனாஸ்ய யாசனம்ருதே(அ)ப்யபி⁴ரக்ஷணார்த²ம்
சக்ரம் ப⁴வான்ப்ரவிததார ஸஹஸ்ரதா⁴ரம் || 33-2 ||

உன்னை மனதார தொழும் பக்தர்களை நீ  நேசிப்பவன் அல்லவா?  அம்பரீஷனின் பக்தியை மெச்சி அவன் கேட்காமலேயே  உன்னுடைய  சுதர்ஸன சக்ரத்தை அவனுக்கு   பாதுகாப்பாக அளித்தாய். சுதர்ஸன சக்ரம்  ஆயிரம்  கூரிய  முனைகளை கொண்டது. எவராலும் வெல்ல முடியாத, தடுக்க முடியாத  சக்தி ஆயுதம். 

स द्वादशीव्रतमथो भवदर्चनार्थं
वर्षं दधौ मधुवने यमुनोपकण्ठे ।
पत्न्या समं सुमनसा महतीं वितन्वन्
पूजां द्विजेषु विसृजन् पशुषष्टिकोटिम् ॥३॥

sa dvaadashiivratamathO bhavadarchanaarthaM
varShaM dadhau madhuvane yamunOpakaNThe |
patnyaa samaM sumanasaa mahatiiM vitanvan
puujaaM dvijeShu visR^ijan pashuShaShTikOTim || 3

ஸ த்³வாத³ஶீவ்ரதமதோ² ப⁴வத³ர்சனார்த²ம்
வர்ஷம் த³தௌ⁴ மது⁴வனே யமுனோபகண்டே² |
பத்ன்யா ஸமம் ஸுமனஸா மஹதீம் விதன்வன்
பூஜாம் த்³விஜேஷு விஸ்ருஜன்பஶுஷஷ்டிகோடிம் || 33-3 ||

குருவாயூரப்பா, நீ நாராயணனாக  காட்சி அளித்து அம்பரீஷனுக்கு  சுதர்ஸன சக்ரத்தை அவன் வேண்டாமலேயே அளித்த சமயம், அம்பரீஷன்  யமுனை நதிக்கரையில் மதுவனம் எனும் பகுதியில்  தனது  மனைவியோடு  உன்னை  தியானித்த வண்ணம்  வசித்து வந்தான். 
  
ஏகாதசி விரதம்  இருப்பவன் அம்பரீஷன். துவாதசி விரதம்  என்று சொல்கிறோமே  ஒவ்வொரு  சுக்ல பக்ஷமும் கிருஷ்ண பக்ஷத்தில்  அம்மாவாசை, பௌர்ணமிக்கு பிறகு  பன்னிரண்டாவது நாள்  துவாதசி. ஏகாதசி உபவாசம் இருந்தவர்கள் துவாதசி அன்று தான்   நாராயணனை  வழிபட்டுவிட்டு அவனுக்கு பிரசாதம் அளித்த பின் உணவருந்துவார்கள். துவாதசி அன்று குறிப்பிட்ட  நேரத்துக்குள்  ஏகாதசி உபவாச விரதத்தை பாரணை மூலம் முடிக்க வேண்டும்.  அதிதி பிராமண போஜனம் செய்பவர்கள்  அப்போது இருந்தார்கள்.  இல்லையென்றால்  உபவாச பலன் கிடைக்காது.  இப்படி ஒரு துவாதசி அன்று தான் ஆதி சங்கரருக்கு ஒரு ஏழை  பெண்மணி  யாசகத்துக்கு வந்தபோது நெல்லிக்காயை  கொடுத்தாள் .  ஆகவே தான்  துவாதசி பாரணையில்  நெல்லிக்காய் அகத்திக்கீரை அவசியம் உண்டு.   அம்பரீஷன் தவாதசி அன்று  உபவாசத்தை முடித்து  ஆறு கோடி  பசுக்களை பிராமணர்களுக்கு தானம் செய்தவன்.

तत्राथ पारणदिने भवदर्चनान्ते
दुर्वाससाऽस्य मुनिना भवनं प्रपेदे ।
भोक्तुं वृतश्चस नृपेण परार्तिशीलो
मन्दं जगाम यमुनां नियमान्विधास्यन् ॥४

tatraatha paaraNadine bhavadarchanaante
durvaasasaa(a)sya muninaa bhavanaM prapede |
bhOktuM vR^itashcha sa nR^ipeNa paraarti shiilO
mandaM jagaama yamunaaM niyamaanvidhaasyan ||4

தத்ராத² பாரணதி³னே ப⁴வத³ர்சனாந்தே
து³ர்வாஸஸா(அ)ஸ்ய முனினா ப⁴வனம் ப்ரபேதே³ |
போ⁴க்தும் வ்ருதஶ்சஸ ந்ருபேண பரார்திஶீலோ
மந்த³ம் ஜகா³ம யமுனாம் நியமான்விதா⁴ஸ்யன் || 33-4 ||

ஒரு துவாதசி அன்று   விஷ்ணு  வழிபாட்டுக்கு முன்பு  பாரணை செய்யும் சமயம், துர்வாச   ரிஷி  . இந்திரனால் அனுப்பப்பட்டு அம்பரீஷனைத் தேடி  மது வனத்துக்கு வருகிறார்.  எப்படியாவது அம்பரீஷன் மீது துர்வாசர் கோபப்பட்டு சாபம் தரவேண்டும். அப்போது தான்  அம்பரீஷனால்  தனது இந்திரா பதவிக்கு  ஆபத்து வராது. அவனது ஏகாதசி துவாதசி விரதத்துக்கு பங்கம் விளைவிக்க வேண்டும்.  அப்போது தான் அம்பரீஷன் தனக்கு போட்டியாக வரமாட்டான் என்று இந்திரன் கவலையோடு திட்டமிட்டான். அம்பரீஷன் ஏதாவது சின்ன தவறு செய்தலும் துர்வாஸர்  சாபமிட்டு அவன் விரதம் பலனளிக்காமல் போகும் என்று அவரை அம்பரீஷனிடம் அனுப்பினான். 

அம்பரீஷன்   துர்வாஸ  ரிஷியை வணங்கி வரவேற்று  உபசரித்து  அதிதி போஜனம் செய்ய அழைத்தான்.   நான்  யமுனை நதிக்குச் சென்று என்னது   மாத்யான்ஹிக  நித்யானுஷ்டானங்களை முடித்து விட்டு பிறகு வருகிறேன் என்று ரிஷி யமுனைக்கு சென்றுவிட்டார். இன்னும் ரெண்டு மணி நேரம் நல்ல நேரம். அது முடிவதற்குள் உபவாசத்தை முடிக்கவேண்டும். சென்று வாருங்கள் என்று அம்பரீஷன் ரிஷியை அனுப்பி வைத்தான். 

राज्ञाऽथ पारणमुहूर्तसमाप्तिखेदा-
द्वारैव पारणमकारि भवत्परेण ।
प्राप्तो मुनिस्तदथ दिव्यदृशा विजानन्
क्षिप्यन् क्रुधोद्धृतजटो विततान कृत्याम् ॥५॥

raaj~naa(a)tha paaraNamuhuurta samaapti khedaadvaaraiva
paaraNamakaari bhavatpareNa |
praaptO munistadatha divya dR^ishaa vijaanan
kshipyan krudhOddhR^itajaTO vitataana kR^ityaam || 5

ராஜ்ஞாத² பாரணமுஹூர்தஸமாப்திகே²தா³-
த்³வாரைவ பாரணமகாரி ப⁴வத்பரேண |
ப்ராப்தோ முனிஸ்தத³த² தி³வ்யத்³ருஶா விஜானந்
க்ஷிப்யன் க்ருதோ⁴த்³த்⁴ருதஜடோ விததான க்ருத்யாம் || 33-5 ||

ரெண்டு மணி நேர காலம் முடியும் தருணம். இன்னும்  துர்வாசரிஷியைக் காணோம்.  எதற்கும்  பாரணை  முடித்துவிட்டு  பிறகு  ரிஷிக்காக  காத்திருந்து சாப்பிடுவோம் என்று  அம்பரீஷன் முடிவெடுத்தான். குறித்த காலத்தில் துர்வாசர் வராததாலும்,  உபவாசத்தை முடிக்கவேண்டிய  தருணம் நெருங்கி விட்டதாலும்  ஒரு துளி  ஜலத்தை மட்டும்  நாராயணன் பெயரில் பருகி உபவாசத்தை முடித்துவிட்டு  துர்வாசருக்காக  காத்திருந்தான்.  சற்று நேரத்தில் வந்த துர்வாசர் தனக்காக காத்திருக்காமல்  அம்பரீஷன் துவாதசி விரதத்தை ஜலம்  பருகி முடித்துவிட்டான் என்று அறிந்து கோபாவேசம் கொண்டார்.  எதற்கெடுத்தாலும் உச்சி மண்டை வரை கோபம் வெடித்து சாபம் கொடுக்கும்  முனிவர் அல்லவா அவர்? தனது தலையிலிருந்து  ஒரு  முடியைப்  பிய்த்தார். க்ரு த்யா என்ற ஒரு  ராக்ஷஸன் அதிலிருந்து உருவானான்.   அம்பரீஷனைக் கொல்ல  அவனை ஏவினார்.

कृत्यां च तामसिधरां भुवनं दहन्ती-
मग्रेऽभिवीक्ष्यनृपतिर्न पदाच्चकम्पे ।
त्वद्भक्तबाधमभिवीक्ष्य सुदर्शनं ते
कृत्यानलं शलभयन् मुनिमन्वधावीत् ॥६॥

kR^ityaaM cha taamasidharaaM bhuvanaM dahantiimagre(
a)bhiviikshya nR^ipatirna padaachchakampe |
tvadbhaktabaadhamabhiviikshya sudarshanaM te
kR^ityaanalaM shalabhayan munimanvadhaaviit || 6

க்ருத்யாம் ச தாமஸித⁴ராம் பு⁴வனம் த³ஹந்தீ-
மக்³ரே(அ)பி⁴வீக்ஷ்யன்ருபதிர்ன பதா³ச்சகம்பே |
த்வத்³ப⁴க்தபா³த⁴மபி⁴வீக்ஷ்ய ஸுத³ர்ஶனம் தே
க்ருத்யானலம் ஶலப⁴யன்முனிமன்வதா⁴வீத் || 33-6 ||

கையில் கூரிய  வாளுடன் க்ருத்யா  அம்பரீஷனை அணுகினான்.  உலகையே தீயில் வெந்து முடிந்து சாம்பலாகும் எண்ணத்தோடு வந்த  க்ருத்யாவைக் கண்டு அம்பரீஷன் துளியும்  நடுங்கவில்லை. தனது உயிருக்கு துர்வாஸரால்  முடிவு ஏற்பாட்டிலும் அதை ஏற்க  தயாராக அமைதியாக  இருந்தான். ஆனால் கிருஷ்ணா, நீ அவனுக்கு  பரிசளித்த  உனது சுதர்ஸன  சக்ரம்  இதெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாவா  இருக்கும்?  அம்பரீஷனுக்கு ஆபத்து என்று அறிந்தது.  க்ருத்யாவை நெருங்கியது அவ்வளவு தான்.  சுதர்சன சக்ரத்தின் முன்  க்ருத்யா ஒரு  விளக்கில் விழும் வீட்டில் பூச்சி அல்லவா?  முடியில் உண்டான  க்ருத்யாவின் கதை  முடிந்தது.  சுதர்ஸன  சக்ரம் அதே வேகத்தோடு  இப்போது துர்வாஸரை நோக்கி  நகர்ந்தது.  துர்வாஸர்  ஓடினார்.  அவரைத் தொடர்ந்தது.

धावन्नशेषभुवनेषु भिया स पश्यन्
विश्वत्र चक्रमपि ते गतवान् विरिञ्चम् ।
क: कालचक्रमतिलङ्घयतीत्यपास्त:
शर्वं ययौ स च भवन्तमवन्दतैव ॥७॥

dhaavannasheSha bhuvaneShu bhiyaa sa pashyan
vishvatra chakramapi te gatavaan viri~ncham |
kaH kaalachakramatilanghayatiityapaastaH
sharvaM yayau sa cha bhavantamavandataiva || 7

தா⁴வன்னஶேஷபு⁴வனேஷு பி⁴யா ஸ பஶ்யன்
விஶ்வத்ர சக்ரமபி தே க³தவான்விரிஞ்சம் |
க꞉ காலசக்ரமதிலங்க⁴யதீத்யபாஸ்த꞉
ஶர்வம் யயௌ ஸ ச ப⁴வந்தமவந்த³தைவ || 33-7 ||

என்ன வேடிக்கை உன் லீலை குட்டி கிருஷ்ணா!  துர்வாசர் சுதர்ஸன சக்ரத்திடம்  அகப்பட் டுக் கொள்ளாமல்  மூன்று லோகமும் ஓடியும் அவரை அது துரத்தியது. ''ப்ரம்மா  என்னை  காப்பாற்று?'' என்று பிரம்மலோகம் சென்றவரிடம்  ''யாரால்  இந்த  சுதர்சன சக்ரத்தை எதிர்க்க முடியும்?  என்னால் முடியவில்லையே''  என்று  ப்ரம்மா  கையைப் பிசைந்தார்.  கைலாசத்துக்கு பறந்தார்  துர்வாஸர்.   ''நமஸ்காரம்  முனிவரே,  என்னால் ஒன்றும் செய்ய முடியாதே  நான்  என்ன செய்வேன் ?'' என்று சிவனும்  அனுப்பிவிட்டார்.

भूयो भवन्निलयमेत्य मुनिं नमन्तं
प्रोचे भवानहमृषे ननु भक्तदास: ।
ज्ञानं तपश्च विनयान्वितमेव मान्यं
याह्यम्बरीषपदमेव भजेति भूमन् ॥८॥

bhuuyO bhavannilayametya muniM namantaM
prOche bhavaanahamR^iShe nanu bhaktadaasaH |
j~naanaM tapashcha vinayaanvitameva maanyaM
yaahyambariiSha padameva bhajeti bhuuman ||8

பூ⁴யோ ப⁴வன்னிலயமேத்ய முனிம் நமந்தம்
ப்ரோசே ப⁴வானஹம்ருஷே நனு ப⁴க்ததா³ஸ꞉ |
ஜ்ஞானம் தபஶ்ச வினயான்விதமேவ மான்யம்
யாஹ்யம்ப³ரீஷபத³மேவ ப⁴ஜேதி பூ⁴மன் || 33-8 ||

''மஹா  விஷ்ணு, நீ அல்லவோ காக்கும் கடவுள்,  உன்னுடைய  இந்த  சுதர்ஸன  சக்ர  ஆபத்திலிருந்து என்னை காப்பாற்ற உன்னால் தான் முடியும்  அந்த சக்ரத்தை முதலில் நிறுத்து '' என்று வைகுண்டத்தில் கெஞ்சுகிறார் துர்வாசர். நீ அப்போது என்ன சொன்னாய் என்று நினைவிருக்கிறதா  கிருஷ்ணா?

''துர்வாஸ  முனிவரே,  நான் என் பக்தர்களின் அடிமை. உங்களுக்கே  இது நன்றாக தெரியும். தவ வலிமையோ,  ஞானமோ, விரதமோ, எதுவுமே  பணிவோடு கலந்தால்  தான் விசேஷம்.  அம்பரீஷன் சிறந்த பக்திமான், எல்லோரிடத்திலும் பணிவாக  அன்பாக நடப்பவன்,  உங்களை  சுதர்ஸன  சக்கரத்திலிருந்து என்னால் காப்பாற்ற இயலாது.  அது இப்போது என் வசம் இல்லை. ஆகவே  நேராக  அம்பரீஷனிடம் செல்லுங்கள்,  அவன் காலடியில் விழுந்து  சரணடைவது ஒன்று தான் வழி.  சுதர்ஸன  சக்ர எஜமானன் அம்பரீஷன் தான்.  ஓடுங்கள் அவனிடம் உடனே. ''  என்று  நாடகமாடினாய் அல்லவா?.  கபடநாடக சூத்ரதாரி!.  இதெல்லாம் வரும் என்று முன்கூட்டியே  அறிந்தவன் அல்லவா நீ? அதற்காக அல்லவோ  சுதர்ஸன  சக்ரத்தை அம்பரீஷன் எதுவும் கேட்காமலேயே  அவனுக்கு பரிசளித்தவன்.

तावत्समेत्य मुनिना स गृहीतपादो
राजाऽपसृत्य भवदस्त्रमसावनौषीत् ।
चक्रे गते मुनिरदादखिलाशिषोऽस्मै
त्वद्भक्तिमागसि कृतेऽपि कृपां च शंसन् ॥९॥

taavatsametya muninaa sa gR^ihiitapaadO
raajaa(a)pasR^itya bhavadastramasaavanauShiit |
chakre gate muniradaadakhilaashiShO(a)smai
tvadbhaktimaagasi kR^ite(a)pi kR^ipaaM cha shamsan || 9

தாவத்ஸமேத்ய முனினா ஸ க்³ருஹீதபாதோ³
ராஜா(அ)பஸ்ருத்ய ப⁴வத³ஸ்த்ரமஸாவனௌஷீத் |
சக்ரே க³தே முனிரதா³த³கி²லாஶிஷோ(அ)ஸ்மை
த்வத்³ப⁴க்திமாக³ஸி க்ருதே(அ)பி க்ருபாம் ச ஶம்ஸன் || 33-9 ||

துர்வாஸர்   ஞானி.  தனது தவறை உணர்ந்ததால்  கர்வமோ, வெட்கமோ படவில்லை. வில்லிலிருந்து  புறப்பட்ட அம்பு போல் அம்பரீஷனிடம் ஓடினார். அவன் கால்களை பிடித்துக் கொண்டார் கண்ணை மூடி தியானத்தில் இருந்த  அம்பரீஷன் திடுக்கிட்டான். ''மகரிஷி என்ன இது,  அபச்சாரம், எழுந்திருங்கள் என்று வேகமாக அவரை தடுத்து நிறுத்தினான்.  அம்பரீஷன் அருகே  துர்வாஸர்  நின்றதைக் கண்ட  சுதர்ஸன  சக்ரம் அவரை அணுகாமல் தூர நின்றது.  அம்பரீஷனை  முனிவர் அணைப்பதை பார்த்து  இனி நமது உதவி இங்கே  தேவை இல்லை என்று  சென்று விட்டது.  ஆனந்தத்தில்  துர்வாசர்  அம்பரீஷனின்  பக்தியை மெச்சினார். வாழ்த்தினார். ஆசிர்வதித்துவிட்டு சென்றார். 

राजा प्रतीक्ष्य मुनिमेकसमामनाश्वान्
सम्भोज्य साधु तमृषिं विसृजन् प्रसन्नम् ।
भुक्त्वा स्वयं त्वयि ततोऽपि दृढं रतोऽभू-
त्सायुज्यमाप च स मां पवनेश पाया: ॥१०

raajaa pratiikshya munimekasamaa-manaashvaan
sambhOjya saadhu tamR^iShiM visR^ijan prasannam |
bhuktvaa svayaM tvayi tatO(a)pi dR^iDhaM ratO(a)bhuutsaayujyamaapa
cha sa maaM pavanesha paayaaH॥10

ராஜா ப்ரதீக்ஷ்ய முனிமேகஸமாமனாஶ்வான்
ஸம்போ⁴ஜ்ய ஸாது⁴ தம்ருஷிம் விஸ்ருஜன்ப்ரஸன்னம் |
பு⁴க்த்வா ஸ்வயம் த்வயி ததோ(அ)பி த்³ருட⁴ம் ரதோ(அ)பூ⁴-
த்ஸாயுஜ்யமாப ச ஸ மாம் பவனேஶ பாயா꞉ || 33-10

அம்பரீஷனைப் பற்றி சொல்லாமல் விட்டு விட்டேனே.  துர்வாஸருடன்  சேர்ந்து உணவு அருந்த  அல்லவா அவன் காத்திருந்தான்.  துர்வாசர் சென்றுவிட்டார்.  அவர் வருவார் என்று ஒரு வருஷம் பூரா  ஒன்றும் சாப்பிடாமல் காத்திருந்தான்.  ஜலம்  கூட பருகவில்லை. அப்புறம் ஒருநாள் துர்வாஸர்   அம்பரீஷனிடம் வந்தார். அவனே  பரிமாறினான் . உணவருந்தினார். அவரை வணங்கி வழியனுப்பினான். வாழ்த்தி விட்டு சென்றபிறகு அவன்   ஒரு வருஷ  உபவாசத்திற்கு பிறகு  அன்றுதான் காத்திருந்து  அப்புறம் சாப்பிட்டான்.  உன்னை  போற்றி  பாடினான்.  அப்பா  குருவாயூரப்பா, அம்பரீஷனை ரக்ஷித்தது போல் என் மீதும் கருணை காட்டி என் நோயை விலக்கி எனக்கும்  அருள் புரிவாய்.

sivan jaykay

unread,
Aug 18, 2021, 7:38:39 PM8/18/21
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN

64     பைரவ விஜயம் 

உங்களில் பல பேருக்கு தெரிந்திருக்கும்.  கிட்டத்தட்ட  நூறு வருஷங்களுக்கு முன்   மஹா பெரியவா தன்னுடைய  மேனா, பல்லக்கில் யாத்திரை சென்ற போதெல்லாம்,  பல்லக்கின் பின்னாலேயே  ஒரு நாய் கூடவே ஓடி வரும். மஹா பெரியவா அதை விரட்டுவதில்லை.  அதற்கும் பூர்வ  ஜென்ம புண்ய வாசனை அவருக்கு  அருகேயே  கூடவே  செல்ல  ஒரு பாக்யம், நமக்கு எல்லாம் என்றும் கிட்டாத, ஒன்று  அதற்கு  கிடைத்திருந்தது. 

1927ல்  அந்த நாய் தானாகவே  மடத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்தது.  மஹா பெரியவா  அதை பார்த்து விட்டு  தனது பிக்ஷை முடிந்தவுடன் அதற்கு  ஆகாரம் கொடுக்க சொல்வார்.   மடத்தில்  ஆகாரம் சாப்பிட  ஆரம்பித்தபின் அந்த நாய் வேறெங்கும் எந்த உணவையும்  ஏற்பதில்லை.  என்ன ஆச்சர்யம்!   தனக்கு பிக்ஷை முடிந்த பிறகு  சற்று   முன்  அதற்கு ஆகாரம்  போட்டாச்சா என்று தினமும்  மறக்காமல் கேட்பார்.

எங்கெல்லாம் முகாம் இடுகிறாரோ அங்கெல்லாம் அந்த நாய் கூடவே செல்லும்.   மற்ற நாய்கள் போல்  அது பல்லக்கு  அருகிலோ, மஹா பெரியவா  காலைத்  தூக்கியதில்லை.   எதையும்  தொட்டு முகர்ந்து பார்ப்பதில்லை.   இரவு நேரத்தில்  மடத்தில்   கோசாலை அருகே  படுத்துக்கொண்டு  காவல் காக்கும்.   மடத்து  பொருள்கள், சாமான்களை  திருடர்கள் கையாட நினைக்கவே முடியாத காவல் காரன் அது.   மடத்தில்  சிப்பந்திகள் கொடுப்பதை மட்டும் தான் உண்ணும்.   வேறு  யார்  எதை  கொடுத்தாலும்  கிட்டவே போகாது. ஏற்றுக்கொள்ளாது.  என்ன ஒரு பாக்யம்  பாருங்கள்!  மஹா பெரியவா தினமும்  ''பைரவருக்கு  ஆகாரம் கொடுத்தீர்களா?'' என்று கேட்பார் .

 பல்லக்கு செல்லும்போதெல்லாம் பல்லக்கின் அடியில்  பைரவர் நடந்து செல்வார்.  ஆங்காங்கே பல்லக்கை நிறுத்தும்போது, பெரியவா  பல்லக்கில் இருந்து இறங்கும்போது  பல்லக்கின் அடியிலிருந்து வெளியே வந்து அவரைப்பார்த்து வாலை  ஆட்டிவிட்டு  ஓடிப்போய்  கூட்டத்தை தாண்டி ஒரு மூலையில் தூரத்தில் போய் அமர்ந்து கொள்ளும்.  சில சமயம்  மடத்து யானையின்  கால்களுக்கு இடையே  நடந்து செல்லும். மடத்து காவலாளிகள் சற்று கண்ணயர்ந்தால் ,  காவல் பொறுப்பில் கவனம் செலுத்தாத நேரத்தில்  ஜாக்கிரதையாக பொறுப்பேற்று  கண்காணிக்கும். இன்னொரு முக்கியமான விஷயம்.   தினமும் அதற்கு  ஆகாரம் கொடுப்பவர் மறந்து விட்டால், கொடுக்காமல் போய்விட்டால்  கத்தி, குலைத்து  ஆர்ப்பாட்டம் பண்ணாது.  அடுத்த வேளை  ஆகாரம் கொடுக்கும் வரை  உபவாசம் தான்.   மஹா பெரியவா கவனத்தை கவர்ந்த நாய் என்றால் இதற்கு மேல் என்ன சொல்ல வேண்டும்?.

ஒருநாள்  மடத்தில் ஒரு அதிகாரி  இந்த நாய்க்கு  பைத்தியம் பிடித்துவிட்டது என்று  தீர்மானித்து  அதை எடுத்துக் கொண்டு  40 கி.மீ தூரத்தில் எங்கோ ஒரு  கிராமத்தில்  விட்டு விட்டு மடத்துக்கு திரும்பி வந்தார்.    அவர்  வந்த  சற்று நேரத்தில் அது மடத்துக்கு தானாகவே ஓடி வந்துவிட்டது. அதற்கு பிறகு அந்த நாய்  ஒரு புது வழக்கம் ஏற்படுத்திக் கொண்டு விட்டது.   மஹா பெரியவாளை  தரிசனம் செயது விட்டு தான்  ஆகாரம் சாப்பிடுவது என்று.

மஹா பெரியவா சகல உயிர்களிடத்திலும் பாசம் நேசம் மிக்கவர் அல்லவா.  1947ல்  மஹா பெரியவா சாத்தூர் மாஸ்யத்தை வசந்த கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில்  மேற்கொண்ட போது  நடந்த சம்பவத்தை பிற்பாடு சொல்லலாமென்று நினைத்தேன். ஆனால் மறந்து போவதற்கு முன் இப்போதே சொல்லிவிடுவது நல்லது.  அந்த ஊர்க்காரர்  ஸ்ரீ சத்யமூர்த்தி சமீபத்தில் என்னை நங்கநல்லூரில் வீட்டில் வந்து சந்தித்தார்.  இந்த வசந்த கிருஷ்ணா புரம்  திருக்கோவலூர்  தபோவனம் அருகே இருக்கிறது. அங்கிருந்து பார்த்தால் அருணாச்சலேஸ்வர  சிகரம் 20 கி.மீ. தூரத்தில் இருப்பது நன்றாக தெரியும் .

மஹா பெரியவா தான் தங்கி இருந்த இடத்திலிருந்து தினமும் பூஜை செய்த்துவிட்டு  அருணாச்சல சிகர தரிசனம் செய்து வணங்குவார். 

ஒரு நாள்  மஹா பெரியவா தியானம் செய்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ ஒரு நாய் ஓடிவந்து  அவர் அருகே வைத்திருந்த கமண்டலுவில் நாக்கை நுழைத்து தண்ணீர் குடித்தது . கண்மூடி த்யானம் செய்த மஹா பெரியவா அதை கவனிக்காமல் போனாலும் அருகே இருந்த பக்தர்களில் ஒருவர்  ஒய்வு பெற்ற அரசாங்க அதிகாரி கல்லை வீசி நாயை விரட்டினார் அது  கத்திக்கொண்டே  ஓடி   தூர சென்று  நின்றது.

மஹா பெரியவா கண் திறந்து என்ன சப்தம் இங்கு என்று கேட்டார். விஷயம் அறிந்தார்.  

''இங்கே அக்ரஹாரத்தில் வீடுகளில் என்ன உணவு கிடைக்குமோ  அதை எல்லாம்  சேர்த்துக்  கொண்டு வாருங்கள். பக்கெட்டுகளில் நீர் நிரப்பி எடுத்து வாருங்கள் '' என்கிறார். உணவும் தண்ணீரும் கொண்டு வர சென்றவர்களில்  கல்லால் அடித்த  அதிகாரியும் ஒருவர். 

ஆகாரம் தண்ணீர் எல்லாம் வந்தது.  மஹா பெரியவா அங்கே நின்றுகொண்டிருந்த நாயை சைகையால் அழைத்தார். அவர் அருகே ஓடிவந்து நின்றது.   அதை தொடர்ந்து  எங்கிருந்தோ ஒரு பெரிய   நாய்கள்  பட்டாளமே  அங்கே வந்துவிட்டது.  அமைதியாக  உட்கார்ந்தன.  அவைகளுக்கு எதிரே  ஒவ்வொன்றுக்கும் ஆகாரங்கள்  நீர் எல்லாம் வைக்கப்பட்டது.  சண்டை போடாமல், ஒழுங்காக, நாம் பந்தியில் சாப்பிடுவது போல் அவை  ஆகாரங்களை உண்டன.

யாத்திரையில்  ஒரு தடவை  மஹா பெரியவா  ஒரு ஊரில்  ஆற்றில்  குளித்து விட்டு கரையில் ஜபம் பண்ணிக்  கொண்டிருந்தார். அவரது தண்டம்  பக்கத்தில் ஒரு பலகை மேல் இருந்தது.  அதிக ஜன நடமாட்டம் இல்லாத இடம்.   மடத்து ஆசாமிகள்  எல்லோரும் ஏதோ வேலையாக இருந்த சமயம்.  எங்கிருந்தோ ஒரு நாய் வந்து  பலகை மேல் இருந்த  மஹா பெரியவா தண்டத்தை முகர்ந்து பார்த்ததை  யாரோ ஒருவர் பார்த்து விட்டார்.  நாய் முகர்ந்து பார்த்துவிட்டு தூர சென்றது.  என்ன செய்வது என்று  தொண்டர்களுக்கு தெரியவில்லை  கற்களை எடுத்து எல்லோரும் நாயை விரட்ட முற்பட்டபோது மஹா பெரியவா தியானம்  கலைந்து ''நிறுத்து ''  என்று  கட்டளை இட்டார்.
நாயை எதுக்கு அடிக்கணும். நம்ப தப்பு, அஸ்ரத்தை தானே காரணம்.  அது என்ன தப்பு பண்ணித்து?  எதையும் முதல்லே மோர்ந்து பார்க்கறது அதொடைய குணம்.  ரொம்பநாளா  தண்டத்தை மாத்தணும்னு நினைச்சிண்டிருந்தேன்  பைரவர்  அப்ரூவல் கொடுத்துட்டார்.

ஆதி சங்கரர்  எதிரே நடந்து வந்தபோது,   காசியிலே  விஸ்வேஸ்வரன் நாலு நாயோடு தானே  எதிர்பட்டார். நாயா அது எல்லாம்.  நாலு வேதங்கள் இல்லையா.   மடத்து சம்பிரதாயப்படி  தண்டத்தை அது ஒடிஞ்சுபோனா மாத்தணும்.  அது இப்போ  ஓடையலை, கங்கையிலே அதை முழுக்கி எடுத்தா  நாய்  முகர்ந்து பாத்த  தோஷம் போயிருக்கும்.  ஆனால்  ஏன்  பெரியவா  அதை மாத்தணும்னு நினைச்சார்? நான் அந்த இடத்தை விட்டு எழுந்து போயிருந்தா  நீங்க  அந்த நாயை கல்லால் அடிச்சு துன்புறுத்தி  இருப்பேள் .  நான்   அங்கேயே உட்கார்ந்திருந்த காரணம்  அது அடிபடக்கூடாது என்பதற்காக.  

''அந்த நாய்க்கு  இது  தான் கடைசி பிறவி. இனிமே அதற்கு  பிறப்பு இறப்பே  இல்லை.''  என்கிறார் மஹா  பெரியவா.


sivan jaykay

unread,
Aug 18, 2021, 7:39:01 PM8/18/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீ  ரமணானுபவம் --   நங்கநல்லூர்  J K  SIVAN 

ஸ்ரீ ரமண  மகரிஷி,  ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்,  தபோவனம் ஸ்ரீ ஞானான
ந்தர்  ஆகியோர்  வாழ்ந்த காலத்தில் திருவண்ணாமலை பகுதி எவ்வளவு அற்புதமான புனிதமான  ஸ்தலமாக இருந்திருக்கும் என்று கற்பனை  எழும் போது  அப்போது வாழ்ந்த பக்தர்கள் எவ்வளவு புண்யம் செய்தவர்களாக இருக்க வேண்டும் என்று மனது வியக்கிறது.  நாம்  அப்போது அங்கு இல்லாமல் போய் விட்டோமே என்று மனம் ஏங்குகிறது.  

ஒரு சம்பவம் சொல்கிறேன்.
 
ஸ்ரீ ரமண மகரிஷி  திருவண்ணாமலையின் மேல் ஸ்கந்தாஸ்ரமத்தில் வசித்த காலத்தில் ஒருநாள் ஒரு மாடு மேய்க்கும் பையன் அவரைப் பார்த்து  ஒரு கேள்வி கேட்டான்.

 '' சாமி,   நீங்க இந்த மொட்டைப் பாறை மலை  இருக்கீங்காலே,  மேலே ஒண்ணுமே  இல்லையே.  எப்படி என்னத்தை சாப்பிடுறீங்க?''

சிரித்துக்கொண்டே ரமணர் பதில் சொன்னார்.

 ''என்ன செய்யறது பையா. உன்னை  மாதிரி யாராவது ஏதாவது கொண்டுவந்து கொடுத்தால் தான் சாப்பிட முடியும். '' என்கிறார்.

''சாமி நான் ஒருத்தர் கிட்டே வேலை செய்றேன். அவரு சம்பளம் இன்னும் போடலே. குடுக்கலே. கேட்டேன். ரண்டு மூணு மாசத்தில் ஒன்னரை ரூபா சம்பளம் தரேன்னு சொல்லியிருக்காரு. அதை உங்களுக்கே தரேன்''

ஆஹா  என்ன  தாராளமான மனசு அந்த படிக்காத சிறுவனுக்கு.  நிறைய  கோடி கோடியாக பணம் உள்ளவர்களுக்கு அடுத்தவர்களும்  பாவம்  பசி தீர வாழவேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் இருக்கிறார்களே.   அப்படி ஒரு எண்ணமே மனதில் இல்லாமல் துடைத்து வைத்திருக்கிறது. எண்ணம் இருக்கும்  ஆனால் கொடுக்க மனசு வராது.   எண்ணம் வந்து கொடுக்க மனசு இருந்தாலும் கை  கொடுக்காது.  சில்லறைகளை மட்டும் வீசும். அப்படி சில்லறைகளை வீசினாலும் தடுக்க  ஆயிரம் கரங்கள்.  இது நம் உலகம்.
 
ஒரு இருளர் பிரிவு பையன். ஒருநாள் ஸ்கந்தாஸ்ரமத்தில் மகரிஷியை பார்த்து ஏனோ தெரியவில்லை 'கோ' வென்று அழ ஆரம்பித்தான்.

''ஏன் அழறே,  சொல்லு.  என்னாலே முடியுமா உனக்கு உதவ என்று பார்க்கிறேன்''
 பகவான் கேட்டவுடன்  அந்த பையனின்  அழுகை சுருதி  இன்னும்  உச்சிக்கு  எகிறியது . பெரிதாக அழுதான்.

பக்கத்தில் மகரிஷியின்  பக்தர் பழனிச்சாமி இருந்தார். அவர் கேட்டார்.

 ''அடே பயலே ஏண்டா இங்கே வந்து அழறே. வயிற்று வலி, மார்வலி, மண்டை வலி ஏதாவதா? பசியா? விஷயம் சொல்லு?''

பையன் மகரிஷியை கை நீட்டி காட்டி சொன்னான்:   
 ''அதெல்லாம் இல்லீங்கோ, இவரப் பார்த்தா, அய்யோன்னு பாவமா இருக்குதுங்க. அழுகையா பொங்கி பொங்கி வருதுங்க'' என்றான்.

பகவான் சிரித்தார்.  
''அவனுக்கு சொல்லத் தெரியவில்லை. அவன் உள்ளம் இளகி விட்டிருக்கிறது. உள்ளே அவரது கருணை பாய்ந்து புகுந்து அவனது மற்ற உணர்வுகளை விரட்டி முழுதுமாக அன்பால் நிரப்பி இருக்கிறது. அது ஆனந்தமாக வெளியே ப்ரவாஹித்திருக்கிறது.  சிலருக்கு  ரொம்ப சந்தோஷமாக இருந்தால் அழுகை பொங்கி பொங்கி வரும்.  சிலருக்கு  ஆனந்தமான நேரத்தில் அழுகை வரும். நல்ல சேதிகளை கேட்டால் பேச்சு வராமல் கண்ணீர் வடிப்பவர்களை பார்த்திருக்கிறேன்.

ஒருநாள் மகரிஷி ரமணர்  ஆஸ்ரமத்தில்  ஒரு சிஷ்யனிடம் ''எனக்கு எழுத ஒரு நோட்டு கொண்டு வந்து தருகிறாயா?'' என்று கேட்டார். சிஷ்யன் மறந்து போனான். அதற்கு பிறகு மகரிஷி நோட்டை பற்றி யாரிடமும் சொல்லவில்லை, மறுபடியும் எவரையும் கேட்கவில்லை.
மூன்று நாளுக்கு பிறகு ஒரு அந்த ஊர் ஜில்லா போர்டு இன்ஜினீயர் மகரிஷியை தரிசிக்க வந்தவர் கையில் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தோடு வந்தார். மகரிஷியிடம் பவ்யமாக வணங்கி நீட்டினார்.
''நோட்டு கேட்டீர்களே இந்தாருங்கள்'' என பவ்யமாக வணங்கிக் கொடுத்தார்.
''உன்கிட்ட நான் எப்போ நோட்டு கேட்டேன்?''
''மூணு நாள் முன்னே என் கனவிலே நீங்க வந்து என்னை கேட்டீங்க சாமி''
''நான்  உன் சொப்பனத்தில் வந்தேனா? என்ன கேட்டேன்?''
''ஒரு நோட்டு புஸ்தகம் வேணும்ன்னு''
''அவ்வளவு தானா?''
''இல்லே, அது எப்படி இருக்கணும். நீள அகலம், பக்கங்கள், என்ன மாதிரி இருக்கணும்'' என்று சொன்னீங்க. அதே மாதிரி தேடி கண்டுபிடிச்சு கிடைச்சு கொண்டு வந்திருக்கிறேன் சாமி ''

மகரிஷி மறந்து போன சிஷ்யனைக் கூப்பிட்டார்.

 ''இதோ பார் நான் உன்னைக் கேட்டா இவர் கொண்டு வந்து தந்ததை'' என்கிறார். சிஷ்யனுக்கு மறந்து போனது தேள் கொட்டியது.  அப்போது தான் அவர் நோட்டு வாங்கிண்டு வா என்று சொன்னது ஞாபகம் வந்தது. துடித்தான். 

இன்னும் சிலது கூட இருக்கிறது. அப்பப்போ  ஞாபகம் வரும்  வந்தால் சொல்கிறேன்.

sivan jaykay

unread,
Aug 18, 2021, 7:39:01 PM8/18/21
to amrith...@googlegroups.com




புனர் ஜென்மம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

என் பிரிய  சகோதர சகோதரிகளே,

சற்று முன்பு  ஒரு  நிமிஷ  வீடியோ ஒன்று பார்த்தேன். .அசந்து போனேன்.
ஒரு   நவீன  கால சிங்காரி,  வாய் உதடெல்லாம் ரத்தம் குடித்தது போல்  உதட்டு சாயம், நெற்றியில் கண்ணுக்கு தெரியாமல் ஒரு பொட்டு.   குங்குமமா  அப்படின்னா என்னாங்க ? டைப்.   ஆடி  வெள்ளியோ, வரலக்ஷ்மி நோன்போ, அதெல்லாம் தெரியாது.  பூவை செடியில் பார்ப்பவள்.  தலை விரி கோலி.  

அவள்  மொபைல்  ''மேரீ சப்னோம்   கீ  ராணி...... ''ஒலித்தது அது தான் அவள் ரிங் டோன் .  
''ஹலோ''
''ராஜி அவதூத்''   இருக்காங்களா''
''நான் தான் பேசறேன்.  யாரு நீங்க?''
'' பெங்களூர்  காண்டோன்மோன்ட் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்  பேசறேன் ''
'' என்ன விஷயம் சொல்லுங்க ?''
'  RG  அவதூத்  யாருங்க ?''
''என் கணவர்  ...   என்ன விஷயம் ?''
''சாரி மேடம் ,  அவர்   ரயில்வே வளாகத்தில்  திடீர்னு மாரடைப்பால்  இறந்துட்டார். உடல்   பெங்களூர்  கண்டோன்மெண்ட்  ரயில்வே ஹாஸ்பிடல் மார்ச்சுவரிலே வச்சிருக்கு'' வந்தீங்கன்னா  அடையாளம் காட்டிட்டு  பாடி  எடுத்துக்கிட்டு போகலாம் ''என்ன உளர்றீங்க. என் புருஷன் இப்போ என்னோடு வீட்டிலே தான் இருக்காரு''
''அம்மா  பதட்டமா பேசாதீங்க.  அவர்  பாடிலே  பாக்கெட்டிலே  இருக்கிற பர்ஸில்  இருந்து  உங்க போட்டோ,  அவர் விசிட்டிங்  கார்டு இருக்கு. அதை பார்த்துட்டு தான்  போன் போடறேன். நேரே வாங்க''
ராஜிக்கு தலையை சுற்றியது.
எங்கே அவதூத் ?  இப்போ  இங்கே இருந்தானே.   ஏன்  ரெண்டு நாள் முன்னாலேயே  ஊர்லேருந்து திரும்பிட்டேன்னு கேட்டப்போ,  வேலை முடிஞ்சுடுத்து, உன்னை பாக்க ஓடோடி வந்தேன்ன்னு சிரித்தானே .

ஓடினாள். ஹாலில், பெட்ரூமில், கிச்சனில்,  மொட்டை மாடியில் எல்லாம்  தேடினாள் ,  கீழே கராஜில், அவன் கார் நின்றுள்ளது எங்கேயும் போகவில்லையே. எங்கே  காணோம். மொட்டை மாடிக்கு ஓடினாள். அவதூத். என்று கத்தினாள்.
அவர்கள் வளர்க்கும்  கிளி கூண்டில்  அவதூத்  என்று எதிரொலித்தது.  
அவதூத்  இல்லையா. நான் கண்டது கனவா?.  
சற்று முன்பு என்னோடு பேசினானே .  
முதல்லே உன்னை பார்த்துட்டுன்னு சொல்லி முத்தம் கொடுத்துட்டு  அப்புறம் தான் பல் தேய்க்கப்போறேன்' னு  சொன்னவனை எங்கே காணோம் .
நான் கண்டது பிரமையா?  எங்கேயோ  புத்தகத்தில் படித்தேன்.  உயிர்  பிரிந்ததும் முதலில் தனக்கு பிடித்த இடத்தில் சற்று  நேரம் சுற்றுமாமே.  அது தான் அவதூத் இங்கே வந்தது போல்  நான் கொண்டதா.   போலீஸ்  அவன் பர்சில் என் போட்டோ பார்த்துள்ளதே. என் நம்பருக்கு சரியாக போன் பேசியதே.  பாடியில்  பர்ஸ் இருக்கிறது என்கிறதே......
ஹா  என்று  கத்தினாள்.  மூர்ச்சையானாள் ...
கண் விழித்தபோது  எதிரே  அவதூத் .
என்னாயிற்று உனக்கு ஏன் ஹா என்று கத்தினாய்?
உன் பர்ஸ்....  என் போட்டோ..  நீ  நீ தானே...
ஐயோ  பெண்கள் என்றாலே  இது தான்..  எப்பவும்  என் பர்ஸ் மேலேயே  கண்.. உடனே  சொல்லவேண்டாம்  கொஞ்சம்  நேரம் கழித்து  அப்புறம் சொல்லலாம்னு பார்த்தேன். அதுக்குள்ளே  அது தொலைஞ்சு போச்சு, எவனோ   பிக்கபாக்கெட் பண்ணிட்டான்னு  சொல்றதுக்குள்ளே கண்டுபிடிச்சுட்டே....
ராஜி  அப்படியே  அவனை  எலும்புகள் நொறுங்கும்படியாக  கட்டிக்கொண்டாள். கண்களில்  ஆறாக கண்ணீர்.  ''இனிமே  உன்னை திட்டமாட்டேன், கோவிச்சுக்க மாட்டேன். குறை சொல்லமாட்டேன். என்னை மன்னிச்சுடு... எனக்கு புத்தி வந்தது.. உன்னை ஒரு செகண்ட் கூட பிரிய மாட்டேன்..
''என்ன ஆச்சு உனக்கு?''
''விக்கலோடு, திக்கி திணறி  போலிஸிலிருந்து வந்த  டெலிபோன் பற்றி சொன்னாள் . 
அன்பர்களே, குடும்பத்தில்  உறவுகளை  புண்ணாக்காதீர்கள். வீணாக்காதீர்கள் .   அன்பு, பாசம், பரிவு இது ஒவ்வொருவருடனும் இருக்கட்டும்.  நேரம் பொன்னானது. எப்போது எந்த நிமிஷமும் பிரிவு எப்படியோ நேரலாம். போனால் வராது பொழுது போனால் நிக்காது.. மனித இனம் ஒன்று தான் உணர்ச்சிகளை வெளிப்படுத்த  வசதிகள் அதிகம் கொண்டது.   இறைவனுக்கு நன்றி சொல்லி ஒவ்வொரு கண த்தையும் அன்போடு ஆனந்தமாக  அனுபவிப்போம்.





sivan jaykay

unread,
Aug 18, 2021, 7:39:01 PM8/18/21
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K  SIVAN --
தாகூர் 


98.  நடக்காது என்பார்  நடந்து விடும்.


98.  I will deck thee with trophies, garlands of my defeat. It is never in my power to escape unconquered.
I surely know my pride will go to the wall, my life will burst its bonds in exceeding pain,
and my empty heart will sob out in music like a hollow reed, and the stone will melt in tears.
I surely know the hundred petals of a lotus will not remain closed for ever
and the secret recess of its honey will be bared.
From the blue sky an eye shall gaze upon me and summon me in silence.
Nothing will be left for me, nothing whatever, and utter death shall I receive at thy feet.

கிருஷ்ணா,  நான்  ஒளிவு மறைவு  இல்லாதவன்.  மனத்தில் உதிப்பதை பட்  பட்  என்று உதிர்ப்பவன்.  இதனால் எனக்கு நண்பர்களை விட   விரோதிகள்  என்று சொல்லமாட்டேன்,   என்னை நேசிக்காதவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம், அவர்கள் தான் அதிகம்.  
இந்த உலகத்தில்  பொய்  சொல்வதும்,  உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோரும் தான் வாழமுடியும்.  மற்றவர்களுக்கு  இடம் இல்லாமல் போய்க் கொண்டு வருகிறதே என்ன செய்வது?

நான் உன்னை என் தோல்வியெனும் பரிசுகளாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிப்பேன். தோல்வியைச் சந்திக்காமல் தப்பிப்பது என்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது.  என் பெருமை சுவரில் முட்டிக் கொள்ளட்டும். என் வாழ்வு அதன் பந்தங்களை எல்லைகளை மீறி பொங்கி, வெடிக்கும்.  மிகுந்த வேதனையுடன்  ஆறு கரையை உடைத்து வெளியேறுவது போல் என்  உணர்ச்சிகள்  பிரவாகமாக வெளிப்படும்.   என் வெற்று நெஞ்சம்   மூங்கில் குழலின்   துளைகளின் வழியாக பீறிட்டு ஏக்கத்துடன் ஒலிக்கும் . கல்லும் கண்ணீரில் கரையும் என்பார்களே  அது அப்போது நிகழும்.
இது  எனக்கு உறுதியாகத் தெரியும்.  தாமரை மலரின் நூறு இதழ்கள்  என்றென்றும் மூடியிருக்கப்  போவதில்லை.  அதன் ஆழத்தில்  சுரந்திருக்கும்,   மறைந்திருக்கும்   பூந்தேன்   வண்டுகளின்  கண்ணில்  படத்தான் போகிறது.   இதுவும்  எனக்குக் கண்டிப்பாகத் தெரியும்.

இனி நான் எதிர்பார்த்தது நடை பெறப்போகிறது.
நீலவானிலிருந்து ஒரு விழி என்னை நோக்கி, அமைதியாக   வா  என்று ஜாடை காட்டி அழைக்கும். அப்போது எனது, எனக்கு, என்று  எதுவுமே  இருக்காது.  உறுதியாக எதுவும் என்னுடையதில்லை என்று ஆகிவிடும்.   ஆஹா நான்  முழுமையாக மரணத்தை   வரவேற்று  உன்னிடம் வருவேன், உன் காலடியில்  அமைதி பெறுவேன்.

sivan jaykay

unread,
Aug 19, 2021, 7:42:49 PM8/19/21
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K  SIVAN --
தாகூர் 


99.   காத்திருக்கிறேன்  வா 


99.  When I give up the helm I know that the time has come for thee to take it.
What there is to do will be instantly done. Vain is this struggle.
Then take away your hands and silently put up with your defeat, my heart,
and think it your good fortune to sit perfectly still where you are placed.
These my lamps are blown out at every little puff of wind,
and trying to light them I forget all else again and again.
But I shall be wise this time and wait in the dark, spreading my mat on the floor;
and whenever it is thy pleasure, my lord, come silently and take thy seat here.



எனக்கு  புரிந்து விட்டது கிருஷ்ணா.   யாரையும்  கல்லாலே  கட்டி, சாந்தாலே  பூசி  வைக்கலே நீ. நேரம் வந்தா  என்னுடைய நிர்வாகத்தை நான் திருப்பிக் கொடுக்கும்பொழுது, நீயே   திருப்பி அதை  எடுத்துக் கொள்ளும் வேளை வந்துவிட்டது என்பதை தெரிந்து கொண்டேன்.  

செய்யவேண்டிய காரியங்கள் உடனே  மெஷின் மாதிரி செய்யப்படும்.  அதை தவிர்த்து  ஆர்ப்பாட்டம் எல்லாம்  தேவையில்லை. வீண். 

என் இதயமே,  வீணான உன் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு,    பேசாமல் ஆடாமல் அசையாமல் இருந்த இடத்திலேயே உட்கார்ந்து வருவதை  அமைதியாக  எதிர்கொள். உன் தேவையற்ற முயற்சிகள் தோல்விகளைத்  தந்ததை   இன்னுமா புரிந்து கொள்ளவில்லை?.  அது மேலிடத்து உத்தரவு.   நீ  எதையும் மீறமுடியாது.  நீ  செல்லும் வேளை வந்தாகி விட்டது.  தயாராகு. .  உன் தோல்வியைத் தாங்கிக் கொள், என் நெஞ்சமே!

இடிச்ச  புளி  போல்  அப்படியே இருக்கும் இடத்தில் அசையாமல்   உட்கார்வது  கூட நீ  செய்த அதிர்ஷ்டம். அது  எத்துணைப் பேறு என்பதை நீ எண்ணிப் பார்.  

இதோ  நான் ஏற்றும்  இந்த விளக்குகள் காற்றின் ஒவ்வொரு சிறு வீச்சுக்கும்  கூட  எதிர்த்து போரிட முடியாமல்  அணைந்து போகிறது.  அவற்றை  மறுபடி மறுபடி  ஏற்றும் முயற்சியிலேயே நான் குறியாக இருப்பதால்,   மீதி எல்லாம்  மறந்து விடுகிறேன்.  

ஆனால்,   கிருஷ்ணா, இந்த முறை நான் ரொம்ப தெளிவாக இருக்கிறேன். இதோ பார்  விளக் கில்லாத  இருளில்  கூட   கோரைப்பாயை  தரையில் விரித்துக் காத்திருப்பேன்.  என் தலைவா!  உனக்கு எப்பொழுது தோன்றுகின்றதோ, அப்பொழுது அமைதியாக வா.      வா, வந்து, உன் இதோ என் பாயில் பக்கத்தில்  உன் இருக்கையில்  உட்கார்.    சேர்ந்து போவோம்.

sivan jaykay

unread,
Aug 19, 2021, 7:42:49 PM8/19/21
to amrith...@googlegroups.com

ஸ்ரீ மந் நாராயணீயம் --  நங்கநல்லூர்  J K  SIVAN -
34வது தசகம்.

34.   அற்புத ராமாயணம் 

गीर्वाणैरर्थ्यमानो दशमुखनिधनं कोसलेष्वृश्यशृङ्गे
पुत्रीयामिष्टिमिष्ट्वा ददुषि दशरथक्ष्माभृते पायसाग्र्यम् ।
तद्भुक्त्या तत्पुरन्ध्रीष्वपि तिसृषु समं जातगर्भासु जातो
रामस्त्वं लक्ष्मणेन स्वयमथ भरतेनापि शत्रुघ्ननाम्ना ॥१॥

giirvaaNairarthyamaanO dashamukhanidhanaM kOsaleShvR^ishyashR^inge
putriiyaamiShTimiShTvaa daduShi dasharathakshmaabhR^ite paayasaagryam |
tadbhuktyaa tatpurandhriiShvapi tisR^iShu samaM jaatagarbhaasu jaatO
raamastvaM lakshmaNena svayamatha bharatenaapi shatrughna naamnaa || 1

கீ³ர்வாணைரர்த்²யமானோ த³ஶமுக²னித⁴னம் கோஸலே(அ)ஷ்வ்ருஷ்யஶ்ருங்கே³
புத்ரீயாமிஷ்டிமிஷ்ட்வா த³து³ஷி த³ஶரத²க்ஷ்மாப்⁴ருதே பாயஸாக்³ர்யம் |
தத்³பு⁴க்த்யா தத்புரந்த்⁴ரீஷ்வபி திஸ்ருஷு ஸமம் ஜாதக³ர்பா⁴ஸு ஜாதோ
ராமஸ்த்வம் லக்ஷ்மணேன ஸ்வயமத² ப⁴ரதேனாபி ஶத்ருக்⁴னனாம்னா || 34-1 ||

குருவாயூரப்பா,  உன்னைப்  பார்த்துக்கொண்டே   பாடும்போது  ஏன் மேப்பத்தூர்  நாராயண நம்பூத்ரிக்கு  தங்கு தடை இல்லாமல்  வார்த்தைகள் ஸ்லோகங்களாக கொட்டுகிறது தெரியுமா?, காரணம் வேறொன்று மில்லை.   உன் பிரதாபம், எண்ணற்ற கருணா லீலைகள்.  பக்தவத்சல மகிமைகள். நினைக்க நினைக்க சுனை நீரூற்று போல் பெருகும்  எத்தனையோ  அவதார மகிமைகள் மனக்கண் முன் தோன்றுவதால் தான்.

அறுபதினாயிரம் வருஷங்கள் ஆண்ட தசரத மகாராஜாவுக்கு  புத்ர பாக்யம் இல்லையே என்ற ஒரே ஒரு குறை தான். ரிஷிகள் அறிவுரைப்படி  ரிஷ்யஸ்ரிங்க மகரிஷியை அழைத்து வரச்செய்து  ஒரு புத்திரகாமேஷ்டி யாகம் செய்வித்தான்.  அற்புதமாக  யாகம் நிறைவேறியது.  தேவர்கள் தேவதைகள்  சந்தோஷத்தோடு  வேண்டுகோளை ஏற்று  ஒரு பொற்கிண்ணத்தில்  பாயசம் யாக குண்டத்திலிருந்து  அக்னி கையால் தரப்பட்டது.  அந்த  பாயசத்தை  தனது மூன்று ராணிகளுக்கும் அளித்து பருகச் செய்தான் தசரதன். நான்கு புத்திரர்கள் பிறந்தார்கள். குருவாயூரப்பா,  நீ தானே  முதல் புத்ரன்,  ஸ்ரீ ராமன். கோசலைக்கு பிறந்தவன்.   உன்னைப்  பின் தொடர்ந்து பிறந்தவர்கள் பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன். உன் மானுட ஜென்ம  அவதார நோக்கம்  ராவணாதி ராக்ஷஸர்களை அழிக்க..

कोदण्डी कौशिकस्य क्रतुवरमवितुं लक्ष्मणेनानुयातो
यातोऽभूस्तातवाचा मुनिकथितमनुद्वन्द्वशान्ताध्वखेद: ।
नृणां त्राणाय बाणैर्मुनिवचनबलात्ताटकां पाटयित्वा
लब्ध्वास्मादस्त्रजालं मुनिवनमगमो देव सिद्धाश्रमाख्यम् ॥२॥

kOdaNDii kaushikasya kratuvaramavituM lakshmaNenaanuyaatO
yaatO(a)bhuustaatavaachaa munikathita manudvandvashaantaadhva khedaH |
nR^INaaM traaNaaya baaNairmuni vachanabalaat taaTakaaM paaTayitvaa
labdhvaa(a)smaadastra jaalaM munivanamagamO deva siddhaashramaakhyam || 2

கோத³ண்டீ³ கௌஶிகஸ்ய க்ரதுவரமவிதும் லக்ஷ்மணேனானுயாதோ
யாதோ(அ)பூ⁴ஸ்தாதவாசா முனிகதி²தமனுத்³வந்த்³வஶாந்தாத்⁴வகே²த³꞉ |
ந்ருணாம் த்ராணாய பா³ணைர்முனிவசனப³லாத்தாடகாம் பாடயித்வா
லப்³த்⁴வாஸ்மாத³ஸ்த்ரஜாலம் முனிவனமக³மோ தே³வ ஸித்³தா⁴ஶ்ரமாக்²யம் || 34-2 ||

ஆச்சு,    16 வயதிலேயே  ராக்ஷஸர்களைகே  கொல்லும்  வேலை  தேடி வந்தது.  மனமில்லாமல் பயந்து கொண்டே  தசரதன் கோபக்கார முனிவர்  விஸ்வாமித்ரரோடு உன்னையும் லக்ஷ்மணனையும் அவரது யாகத்தை ராக்ஷஸர்களிடமிருந்து காப்பாற்ற அனுப்பினான். உன் கோதண்டத்தின் பெருமை  அது  குடித்த  ராக்ஷஸர்களைக் கேட்டால் தான் புரியும். விஸ்வாமித்ரர்  உபதேசித்த  ''பலா, அதிபலா'' மந்திரத்தால்  உனக்கு பசி தாகம், களைப்பு  எதுவுமே  இல்லையே . முதல் பலி தாடகை. உனக்கு  விஸ்வாமித்ரர்  மந்திரித்து அளித்த அஸ்திரங்கள் எத்தனையோ.

मारीचं द्रावयित्वा मखशिरसि शरैरन्यरक्षांसि निघ्नन्
कल्यां कुर्वन्नहल्यां पथि पदरजसा प्राप्य वैदेहगेहम् ।
भिन्दानश्चान्द्रचूडं धनुरवनिसुतामिन्दिरामेव लब्ध्वा
राज्यं प्रातिष्ठथास्त्वं त्रिभिरपि च समं भ्रातृवीरैस्सदारै: ॥३॥

maariichaM draavayitvaa makhashirasi sharairanyarakshaamsi nighnan
kalyaaM kurvannahalyaaM pathi padarajasaa praapya vaidehageham |
bhindaanashchaandrachuuDaM dhanuravanisutaamindiraameva labdhvaa
raajyaM praatiShThathaastvaM tribhirapi cha samaMbhraatR^iviiraissadaaraiH || 3

மாரீசம் த்³ராவயித்வா மக²ஶிரஸி ஶரைரன்யரக்ஷாம்ஸி நிக்⁴னன்
கல்யாம் குர்வன்னஹல்யாம் பதி² பத³ரஜஸா ப்ராப்ய வைதே³ஹகே³ஹம் |
பி⁴ந்தா³னஶ்சாந்த்³ரசூட³ம் த⁴னுரவனிஸுதாமிந்தி³ராமேவ லப்³த்⁴வா
ராஜ்யம் ப்ராதிஷ்ட²தா²ஸ்த்வம் த்ரிபி⁴ரபி ச ஸமம் ப்⁴ராத்ருவீரை꞉ ஸதா³ரை꞉ || 34-3 ||

ராவணனின் மாமன்  மாரீசனை உயிரோடு தப்ப விட்டாய்.  அதுவும் காரணத்தோடு தான். அப்போது தானே  உன் ராம அவதாரம் பூர்த்தியாகும். அவன் உயிர் சிலநாள் அவனிடம் இருக்கட்டுமே.   சுபாஹு வையும்  மற்ற அசுரர்களையும் நொடியில்  எமலோகம் அனுப்பினாய்.   அகலிகை உன் காலடி மண் பட்டு  கல்லிலிருந்து காரிகையானாள் .  வாழ்த்தினாள். மிதிலை சென்றாய்  வில்லை வளைத்து ஒடித்தாய், மைதிலியை மனைவியாக்கிக் கொண்டாய்.  லட்சுமி தேவி  மஹா விஷ்ணு வாகிய உன்னிடமல்லோ இருக்கவேண்டும்?. பூமியில் கண்டெடுக்கப்பட்ட பூமாதேவியாக  சீதை ஜனகனால் வளர்க்கப்பட்டாள். ராமாயணத்தில் உன் சகோதரர்களின்  மனைவிகள் பற்றிய விஷயம் அவர்கள் மணமானதிலிருந்தே  கொஞ்சூண்டு தான்.  எத்தனையோ ஆயிரம் ஸ்லோகங்களில் அவர்களுக்கு இடம் அதிகம் ஏன் வால்மீகி தரவில்லை?  எல்லோரும் மனைவிகளோடு  அயோத்யா திரும்பினீர்கள். என்ன குருவாயூரப்பா ,நான் சொல்வது சரியாக இருக்கிறதா?

आरुन्धाने रुषान्धे भृगुकुल तिलके संक्रमय्य स्वतेजो
याते यातोऽस्ययोध्यां सुखमिह निवसन् कान्तया कान्तमूर्ते ।
शत्रुघ्नेनैकदाथो गतवति भरते मातुलस्याधिवासं
तातारब्धोऽभिषेकस्तव किल विहत: केकयाधीशपुत्र्या ॥४॥

aarundhaane ruShaandhe bhR^igukulatilake sankramayya svatejO
yaate yaatO(a)syayOdhyaaM sukhamiha nivasan kaantayaa kaantamuurte |
shatrughnenaikadaa(a)thO gatavati bharate maatulasyaadhi vaasaM
taataarabdhO(a)bhiShekastava kila vihataH kekayaadhiisha putryaa ||4

ஆருந்தா⁴னே ருஷாந்தே⁴ ப்⁴ருகு³குலதிலகே ஸங்க்ரமய்ய ஸ்வதேஜோ
யாதே யாதோ(அ)ஸ்யயோத்⁴யாம் ஸுக²மிஹ நிவஸன்காந்தயா காந்தமூர்தே |
ஶத்ருக்⁴னேனைகதா³தோ² க³தவதி ப⁴ரதே மாதுலஸ்யாதி⁴வாஸம்
தாதாரப்³தோ⁴(அ)பி⁴ஷேகஸ்தவ கில விஹத꞉ கேகயாதீ⁴ஶபுத்ர்யா || 34-4 ||

பரசுராமனின்  அவதாரம் ஒரு முடிவுக்கு வரும் நேரம் வந்து விட்டது போல் இருக்கிறது. இல்லை யென்றால் உன்னோடு மோதுவானா?.  நீ தானே  அவனும்.  ஒருவன்  இருக்கும்போது இன்னொருவனுக்கு  ஏது வேலை? அவரவர்  வேலைகள் முடிந்து  மற்றவருக்கு வழி விடும்  முறையோ? கோபக்கார  பரசுராமன் ஆணவம்  அகன்றது.  பரத சத்ருக்னர்கள்  கேகய நாடு சென்ற போது  தான் தசரதனுக்கு திடீரென்று உனக்கு யுவராஜா பட்டாபிஷேகம் கட்ட  எண்ணம் எழுந்தது.  கைகேயி மனம் மாற மந்தரை  தூபம் போட்டாள்.  உன்  ராம பட்டாபிஷேகம் நின்றது.  நீ அப்போது ராஜாவாகி  பேசாமல் நாட்டை ஆள  நேர்ந்தால் ராமாயணம் ஏது ?  உனக்கு முன்னே, உனக்கு அப்புறம் இருந்த  நீளமான  ராஜாக்கள்  பெயர்கள்   லிஸ்டில் உன் பெயரும் எங்கோ  சின்னதாக இருந்துவிட்டிருக்கும்.  

तातोक्त्या यातुकामो वनमनुजवधूसंयुतश्चापधार:
पौरानारुध्य मार्गे गुहनिलयगतस्त्वं जटाचीरधारी।
नावा सन्तीर्य गङ्गामधिपदवि पुनस्तं भरद्वाजमारा-
न्नत्वा तद्वाक्यहेतोरतिसुखमवसश्चित्रकूटे गिरीन्द्रे ॥५॥

taatOktyaa yaatukaamO vanamanuja vadhuusanyutashchaapadhaaraH
pauraanaarudhya maarge guhanilayagatastvaM jaTaachiiradhaarii |
naavaa santiirya gangaamadhi padavi punastam bharadvaajamaaraannatvaa
tadvaakyahetOratisukhamavasashchitrakuuTe giriindre || 5

தாதோக்த்யா யாதுகாமோ வனமனுஜவதூ⁴ஸம்யுதஶ்சாபதா⁴ர꞉
பௌரானாருத்⁴ய மார்கே³ கு³ஹனிலயக³தஸ்த்வம் ஜடாசீரதா⁴ரீ |
நாவா ஸந்தீர்ய க³ங்கா³மதி⁴பத³வி புனஸ்தம் ப⁴ரத்³வாஜமாரா-
ந்னத்வா தத்³வாக்யஹேதோரதிஸுக²மவஸஶ்சித்ரகூடே கி³ரீந்த்³ரே || 34-5 ||

கைகேயி  தசரதரே இப்போது வரம்  கொடுங்கள் என கேட்டாள் .  எப்போதோ  தான் கொடுத்து அவள் கேட்காத இரு வரங்கள் இப்போது அவள் கேட்டபோது தசரதனுக்கு அது பேரிடி.   அவன் அளித்த வரத்தின்  படி நீ  சீதையோடும்  லக்ஷ்மணனோடும்  14 வருஷம் வனவாசம் சென்றாய்.  தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.  தந்தை சொல்  கேட்காமலிருந்தால் ராமாயண ஸ்லோகங்கள்  இருக்காதே.   கூடவே  வந்த  அயோத்தி மக்களை திருப்பி அனுப்பினாய்.  கங்கைக்கரையில் குகனை சந்தித்தாய். நால்வர் ஐவரானீர்கள்.  நீ இப்போது  மணி மகுட  பீதாம்பர  வஸ்திர ஆபரணதாரி இல்லை.  மரவுரி ஜடாதாரி.  கங்கையின்  கரை கடந்தாய்.   பாரத்வாஜ முனிவர் ஆஸ்ரமம் சென்று  வணங்கினாய்.  எல்லோருடைய ஆசியும் உன் அவதார காரியத்துக்கு அவசியமாயிற்றே.  அவர்  அறிவுரைப்படி  சித்ரகூட மலைக்கு சென்றாய். 

श्रुत्वा पुत्रार्तिखिन्नं खलु भरतमुखात् स्वर्गयातं स्वतातं
तप्तो दत्वाऽम्बु तस्मै निदधिथ भरते पादुकां मेदिनीं च
अत्रिं नत्वाऽथ गत्वा वनमतिविपुलं दण्डकं चण्डकायं
हत्वा दैत्यं विराधं सुगतिमकलयश्चारु भो: शारभङ्गीम् ॥६॥

shrutvaaputraartikhinnaM khalu bharatamukhaat svarga yaataM svataataM
taptO datvaa(a)mbu tasmai nidadhitha bharate paadukaaM mediniiM cha |
atriM natvaa(a)tha gatvaa vanamati vipulaM daNDakaM chaNDakaayaM
hatvaa daityaM viraadhaM sugatimakalayashchaaru bhOH shaarabhangiim || 6

ஶ்ருத்வா புத்ரார்திகி²ன்னம் க²லு ப⁴ரதமுகா²த்ஸ்வர்க³யாதம் ஸ்வதாதம்
தப்தோ த³த்த்வாம்பு³ தஸ்மை நித³தி⁴த² ப⁴ரதே பாது³காம் மேதி³னீம் ச |
அத்ரிம் நத்வாத² க³த்வா வனமதிவிபுலம் த³ண்ட³கம் சண்ட³காயம்
ஹத்வா தை³த்யம் விராத⁴ம் ஸுக³திமகலயஶ்சாரு போ⁴꞉ ஶாரப⁴ங்கீ³ம் || 34-6 ||

அயோத்திக்கு திரும்பிய  பரத சத்ருக்னர்கள் அயோத்தியில் நடந்த அதிர்ச்சிகளை  அறிந்தார்கள். இறந்த தந்தையின் உடலைப் பார்த்து  ஈமக்கடன்கள் முடித்த  பரதன் உன்னைத்தேடி வந்து எப்படியாவது நீ  அயோத்தி திரும்பவேண்டும் என்று  கெஞ்சினான்.  அவன் மூலம்  தந்தை இறந்த சேதி கேட்டு அவருக்கு உன் கையால் எள்ளும் நீரும் இறைத்து  உன் கடமையைச்  செய்தாய்.  உன்  பாதுகையை அளித்து பரதனை திரும்பச் செய்தாய்.  பாதுகையின்  மஹிமை  உன் ராமாயணத்தால் தான் உலகில் அறியப்பட்டு  புனிதமாக  வழிபடப்பட்டது.   அத்ரி மகரிஷியை தரிசித்தாய், பிறகு தண்டகாரண்ய அகண்ட இருண்ட  காட்டுப்பகுதிக்கு  சென்றாய். ராக்ஷஸர்கள் அழைக்கிறார்களே     ''வா  எங்கள் உயிரைப் போக்கு''   என்று .  விராதன் பலியானான். சரபங்க  ரிஷி  உனக்காக காத்திருந்தவருக்கு தரிசனமும்  மோக்ஷமும் அளித்தாய்.  

नत्वाऽगस्त्यं समस्ताशरनिकरसपत्राकृतिं तापसेभ्य:
प्रत्यश्रौषी: प्रियैषी तदनु च मुनिना वैष्णवे दिव्यचापे ।
ब्रह्मास्त्रे चापि दत्ते पथि पितृसुहृदं वीक्ष्य भूयो जटायुं
मोदात् गोदातटान्ते परिरमसि पुरा पञ्चवट्यां वधूट्या ॥७॥

natvaa(a)gastyaM samastaasharanikara sapatraakR^itiM taapasebhyaH
pratyashrauShiiH priyaiShii tadanu cha muninaa vaiShNave divyachaape |
brahmaastre chaapi datte pathi pitR^isuhR^idaM viikshya bhuuyO jaTaayuM
mOdaad gOdaataTaante pariramasi puraa pa~nchavaTyaaM vadhuuTyaa || 7

நத்வா(அ)க³ஸ்த்யம் ஸமஸ்தாஶரனிகரஸபத்ராக்ருதிம் தாபஸேப்⁴ய꞉
ப்ரத்யஶ்ரௌஷீ꞉ ப்ரியைஷீ தத³னு ச முனினா வைஷ்ணவே தி³வ்யசாபே |
ப்³ரஹ்மாஸ்த்ரே சாபி த³த்தே பதி² பித்ருஸுஹ்ருத³ம் வீக்ஷ்ய பூ⁴யோ ஜடாயும்
மோதா³த்³கோ³தா³தடாந்தே பரிரமஸி புரா பஞ்சவட்யாம் வதூ⁴ட்யா || 34-7 ||

அகஸ்தியரை  வணங்கி  அருளாசி பெற்றாய்.  அவரால் தான் நீ  ஜபித்த ஆதித்ய ஹ்ருதயம் எங்களுக்கு  கிட்டியது.  நன்றி உனக்கு ராமா.  ரிஷிகள் முனிவர்கள்  தடங்கலின்றி வாழ்ந்து  த்யானம் யாகங்கள் புரிய  ''ராக்ஷஸர்களை ஒழித்துக் கட்டுவேன்'' என்று  ஆறுதல் அளித்தாய்.   உனைக்கண்டு மகிழ்ந்த  அகஸ்தியரிடமிருந்து பிரம்மாஸ்திரம் பெற்றாய்.  வழியில் ஜடாயு,  உன் தந்தையின் நண்பன்,  கழுகரசனைச்  சந்தித்தாய்.   கோதாவரி நதிக்கரையில்  பஞ்சவடியில்  கொஞ்சநாள் சந்தோஷ வாழ்க்கை சீதையோடு வாழ்ந்தாய்.  நீ என்ன சந்தோஷமாக வாழவா  பூமிக்கு வந்தவன்?

प्राप्ताया: शूर्पणख्या मदनचलधृतेरर्थनैर्निस्सहात्मा
तां सौमित्रौ विसृज्य प्रबलतमरुषा तेन निर्लूननासाम् ।
दृष्ट्वैनां रुष्टचित्तं खरमभिपतितं दूषणं च त्रिमूर्धं
व्याहिंसीराशरानप्ययुतसमधिकांस्तत्क्षणादक्षतोष्मा ॥८॥

praaptaayaaH shuurpaNakhyaa madanachaladhR^iterarthanairnissahaatmaa
taaM saumitrau visR^ijya prabalatamaruShaa tena nirluuna naasaam |
dR^iShTvainaaM ruShTachittaM kharamabhipatitaM duuShaNaM cha trimuurdhaM
vyaahimsiiraasharaanapyayuta samadhikaaM statkshaNaadakshatOShmaa ||8

ப்ராப்தாயா꞉ ஶூர்பணக்²யா மத³னசலத்⁴ருதேரர்த²னைர்னிஸ்ஸஹாத்மா
தாம் ஸௌமித்ரௌ விஸ்ருஜ்ய ப்ரப³லதமருஷா தேன நிர்லூனநாஸாம் |
த்³ருஷ்ட்வைனாம் ருஷ்டசித்தம் க²ரமபி⁴பதிதம் து³ஷணம் ச த்ரிமூர்த⁴ம்
வ்யாஹிம்ஸீராஶரானப்யயுதஸமதி⁴காம்ஸ்தத்க்ஷணாத³க்ஷதோஷ்மா || 34-8 ||

என் குருவாயூரப்பா, நீ  ராமனாக, களைப்பறியாத, அதிக  சக்தி,  பலம் கொண்ட  மஹாவீரன் அல்லவா?  ராவணாதிகளை  அழிக்க  இதோ காரணமாக  வந்து  விட்டாளே  சூர்ப்பனகை, ராவணன் தங்கை.   உன்னிடம்  காதல் மொழிகள் பேசிய   அவளை  லக்ஷ்மணனிடம் அனுப்பிய போது  , ஆதிசேஷன் இதெல்லாம் கேட்டுக்கொண்டா இருப்பான்.  மூக்கறுத்துவிட்டான்.  ரத்தம் சொட்ட ஓடிய  சூர்ப்பனகை கர, தூஷண, த்ரிசிரஸ்  சகோதரர்களை  ஏவினாள். பல்லாயிரக் கணக்கான அந்த ராக்ஷர்களுக்கு  நீ  ''கொரோனா மரணப்பரிசு''  தந்தாய்.    சூர்ப்பனகையை   நீ  விட்டு வைத்த நோக்கம் அவள் ராவணனிடம் பறந்து போய் உன்னைப் பற்றி சொல்ல... 

सोदर्याप्रोक्तवार्ताविवशदशमुखादिष्टमारीचमाया-
सारङ्ग सारसाक्ष्या स्पृहितमनुगत: प्रावधीर्बाणघातम् ।
तन्मायाक्रन्दनिर्यापितभवदनुजां रावणस्तामहार्षी-
त्तेनार्तोऽपि त्वमन्त: किमपि मुदमधास्तद्वधोपायलाभात् ॥९॥

sOdaryaa prOktavaartaavivasha dashamukhaadiShTa maariichamaayaa
saarangaM saarasaakshyaa spR^ihitamanugataH praavadhiirbaaNaghaatam |
tanmaayaakranda niryaapita bhavadanujaaM raavaNastaamahaarShiittenaarttO(
a)pi tvamantaH kimapi mudamadhaastadvadhOpaaya laabhaat || 9

ஸோத³ர்யாப்ரோக்தவார்தாவிவஶத³ஶமுகா²தி³ஷ்டமாரீசமாயா-
ஸாரங்க³ம் ஸாரஸாக்ஷ்யா ஸ்ப்ருஹிதமனுக³த꞉ ப்ராவதீ⁴ர்பா³ணகா⁴தம் |
தன்மாயாக்ரந்த³னிர்யாபிதப⁴வத³னுஜாம் ராவணஸ்தாமஹார்ஷீ-
த்தேனார்தோ(அ)பி த்வமந்த꞉ கிமபி முத³மதா⁴ஸ்தத்³வதோ⁴பாயலாபா⁴த் || 34-9 ||

இலங்கையில்  மூக்கறுபட்ட தங்கையைக் கண்டு  பத்து   முகங்களிலும்  கோபாக்னி பொங்க   ராவணன் கொதித்தான்.  அவனைக் குளிர வைக்க  சீதையின் அழகை வர்ணித்தாள் . ராவணன் எதிரியின் பலம் தெரிந்து கொண்டு  மாமன்  மாரீசன், ஏற்கனவே  உன்னிடம்  அடி பட்டு  உன்னால் உயிர் பிழைத்தவனை , அணுகினான்.  திட்டம் தீட்டியபடியே  மாரீசன் பொன் மானானான்,  பெண்மான் சீதை மதி மயங்கி  அவனைப் பிடித்து தர உன்னை அனுப்பினாள் . நீயும் வேண்டுமென்றே அவன் பின் நடுக்காட்டுக்கு ஓடினாய். அவன் தான் முதல் மிமிக்ரி கலைஞன். உன் குரலில்  ''ஹா லக்ஷ்மணா, ஹா சீதா'' என்று குரல் கொடுத்தான்.  சீதை  உனக்கு ஆபத்து, அது உன் குரல் என  நம்பி  காவலுக்கு நீ வைத்த லக்ஷமணனை,  அவன்  எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல்  உன்னைத் தேட விரட்டினாள் .  தனித்திருந்த அவளை,  காத்திருந்த ராவண சந்நியாசி கடத்திச் சென்றான்.   ''ஏன்  சீதையை விட்டு இங்கே வந்தாய்?'' என்று  கேட்டு லக்ஷ்மணன் சொல்ல,  நீ  நடந்ததை அறிந்தாய்.  சீதையைத்   தேடுவது ஆரம்பித்தது.   ''கிருஷ்ணா,  நீ  எல்லாம் கன  கச்சிதமாக திட்டம்  போட்டு நடத்திக் காட்டுபவன்'' என்று உனது முந்தைய ராமாவதாரத்திலேயே காட்டிவிட்டாயே.  இனி ராவணனை தேடிச் சென்று  கொல்ல  வழி வகுத்தாய்.

भूयस्तन्वीं विचिन्वन्नहृत दशमुखस्त्वद्वधूं मद्वधेने-
त्युक्त्वा याते जटायौ दिवमथ सुहृद: प्रातनो: प्रेतकार्यम् ।
गृह्णानं तं कबन्धं जघनिथ शबरीं प्रेक्ष्य पम्पातटे त्वं
सम्प्राप्तो वातसूनुं भृशमुदितमना: पाहि वातालयेश ॥१०॥

bhuuyastanviiM vichinvannahR^ita dashamukhastvadvadhuuM madvadhenetyuktvaa
yaate jaTaayau divamatha suhR^idaH praatanOH pretakaaryam |
gR^ihNaanaM taM kabandhaM jaghanitha shabariiM prekshya pampaataTe tvaM
sampraaptO vaatasuunuM bhR^ishamuditamanaaH paahi vaataalayesha ||10

பூ⁴யஸ்தன்வீம் விசின்வன்னஹ்ருத த³ஶமுக²ஸ்த்வத்³வதூ⁴ம் மத்³வதே⁴னே-
த்யுக்த்வா யாதே ஜடாயௌ தி³வமத² ஸுஹ்ருத³꞉ ப்ராதனோ꞉ ப்ரேதகார்யம் |
க்³ருஹ்ணானம் தம் கப³ந்த⁴ம் ஜக⁴னித² ஶப³ரீம் ப்ரேக்ஷ்ய பம்பாதடே த்வம்
ஸம்ப்ராப்தோ வாதஸூனும் ப்⁴ருஶமுதி³தமனா꞉ பாஹி வாதாலயேஶ || 34-10 |

சீதையைத் தேடிச்  சென்ற  நீயும்  லக்ஷ்மணனும் வழியில்  குற்றுயிரோடு கிடந்த  ஜடாயுவை கண்டு, அவன் மூலம் ராவணன் சீதையை கடத்திச் சென்றதை அறிந்தீர்கள்.  சேதி சொன்னதோடு ஜடாயு வேலை முடிந்து அவன் மாண்டான்.  சீதைக்காக  ராவணனிடம் போரிட்டு மடிந்த ஜடாயுவிற்கு ஈமக்கிரியை புரிந்தாய். உன் தந்தை  தசரதனுக்குக்  கூட  உன் கரங்களால் ஈமக்கிரியை செய்யும்  பாக்யம் கிடைக்கவில்லை. அவன் நண்பன் ஜடாயுவிற்கு கிடைத்தது பார்!   வழியில் கபந்தன் குறுக்கிட்டான்.  சபரிக்கு வழிகாட்டி விட்டு  மாண்டான்.   சபரி மூலம்  சுக்ரீவன் ஹனுமான் சந்திப்பு ஏற்பட்டது. பலத்தோடு பலம் சேர்ந்தது.   வாயு புத்ரன் ஹனுமான் உன் பக்தனானான். பம்பா நதி க்ஷேத்ர ரிஷ்யமுக பர்வம் அடைந்தாய்.   எண்டே குருவாயூரப்பா  இதெல்லாம் செய்த நீ என் நோயைத் தீர்த்து என்னையும் ரக்ஷிக்கவேண்டுமப்பா.

தொடரும் 


sivan jaykay

unread,
Aug 19, 2021, 7:42:49 PM8/19/21
to amrith...@googlegroups.com
அருட்புனல்  -   நங்கநல்லூர்  J K  SIVAN --
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

 ''ப்ரம்ம ஞானோபதேசம்''

காலம் என்பது  ஓடிக்கொண்டே தான் இருக்கும்.  அது ஓடினால் தான் சரித்திரம். அதன் ஓட்டத்தின்  பாகங்கள் தான் சம்பவங்கள்  எனும்  எத்தனையோ எண்ணப் பதிவுகள்.

பிராமணிக்கு பரம சந்தோஷம்.  ''இந்த  சிஷ்யன் ராமகிருஷ்ணன் மிக அருமையாக கற்றுக் கொள்கி றானே என்று.  அவனுக்கு நம்மை விட ஒரு அபூர்வ அனுபவம் வேறு இருக்கிறதே. அவனுக்கு  தாயார்  பவதாரிணியின் கருணைப் பார்வை வேறு செல்லமாக இருக்கிறதே. நினைத்தபோது அவளை அடைய முடிகிறதே.  என்னால் முடியுமா?'' என்று வியக்கிறாள்.


1874ல்  தோதாபுரி தக்ஷிணேஸ்வரம் வந்தார். அத்வைதி.  நர்மதை நதிக்கரையில் நாற்பது வருஷங்களுக்கு மேலாக தவம் புரிந்தவர். கங்கைக்கரைக்கு வந்தவர்   அதட்டல் குரல், கடுமையான பார்வை. சிடு சிடு முகம்.  ஆஜானுபாகுவான உருவம்.  போதாததற்கு  கரு கருவென தாடி மீசை. உடம்பில் துணியில்லாத அவதூதர். ப்ரம்ம ஞானி. ப்ரம்மம் ஒன்று தான் நித்ய வஸ்து .அதற்கு காலம், நேரம், காரணம், எதுவும் இல்லை. நிரந்தரம். மாயையால் ஒன்று பலவாக காணும். தோன்றி மறைவது போல் தோற்றங்கள் ஏற்படும். மாற்றங்கள் உண்டாகும். ''இது இல்லை, இது இல்லை'' என்று ஞானம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து தெளிவு தரும். எண்ணத்தில் எல்லைக்கப்பால் ஆன்மா ஒளிர்வது தெரியும். எண்ண ஓட்டம் நிற்கும். பிறகு தான்  மோனத்தில் ஞானம் உணரமுடியும். தேகம் மறந்து விடும். ''நான்''  யார் என்று புரியும்  என்று உணர்த்துபவர். 

''சுவாமி எனக்கு வேதாந்தம்  போதியுங்கள் " என்று வேண்டிய  ராமகிருஷ்ணருக்கு வேதாந்த நாட்டம் இருப்பதை அறிந்து மகிழ்ந்தார்.   ராமகிருஷ்ணர்  நேராக பவதாரிணியிடம் சென்றார்

''அம்மா  நான் இவரிடம் வேதாந்தம் கற்றுக்கொள்ள அனுமதிப்பாயா?''  
''ஆஹா  நல்ல திட்டம்.  ஆரம்பி'' என்றாள்  அன்னை. அது அவருக்கு மட்டுமே  தானே தெரியும்.
''சந்யாசிகள் தான் அப்பா வேதாந்தம் கற்று  அப்யஸிக்க தகுந்தவர்கள். நீ சந்நியாசி ஆக முடியுமோ?'' என்கிறார் தோதாபுரி.

''எனக்கு சம்மதம்.   ஆனால் ரகசியமாக என்னை சந்நியாசி ஆக தீக்ஷை கொடுங்கள். என் வயதான அம்மா  மனைவி ஆகியோர் இது தெரிந்தால்  வருந்துவார்கள்''

ஒரு சில நாள் கழித்து  விடியற்காலை அக்னி வெளிச்சம். பஞ்சவடியில். தோதாபுரியும் ராம கிருஷ்ணரும்.  இருளில்  அக்னி  ஜ்வாலையின் ஒளி இரு முகங்களிலும் பளிச்சிட்டன.

ஒல்லியான  ராமகிருஷ்ணர், குறுந்தாடி  மீசையுமான அழகிய பரந்த  ஆழ்ந்த கருமை நிற கண்கள் எப்போதும் அரை மூடி பாதி திறந்த  நிலையில்.  புன்னகை புரியும் முகம், திறந்த வாய். வெண்மை நிற பற்கள் சில  வெளியே தெரியும்.  எதிரே சிறிய குன்று போன்ற  திண்மையான சந்நியாசி. வெயிலும் பனியும், இடியும், மின்னலும், காற்றும் மழையும் தாங்கும் தேகம். இரும்பு மனது.  தேக்கு நிற உடம்பு. இது தான் தோதாபுரி.

அக்னியில் மந்திரங்கள் உச்சரித்து உறவு, பந்தங்கள் எல்லாம் விடுபட்டது. குடுமியை 
 அறுத் 
தெறிந்தாகி  விட்டது. பூணல் அக்னியில் கலந்தது. ஜாதி, மதம், குலம் , சமூகம், எல்லாம் விலகி விட்டது.  இனி ஆசை, பாசம் எதுவும் கிடையாது. அதுவும் அக்னியில் கரைந்தது.  ஆன்மா ஒன்றே லக்ஷியம். காவி  கோவணம், அரையில் சுற்றிக்கொள்ள காவி உடை பெற்று அணிந்தாகிவிட்டது. கதாதர்  ராமகிருஷ்ண பரமஹம்சர் எனும் புதுமனிதனாகிவிட்டார்.

தியான அறையில் இருவரும்.   குருவிடமிருந்து சிஷ்யனுக்கு  ப்ரம்ம ஞானம் போதிக்கப்பட்டது. உபநிஷதுகள் வேதங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பூரண நிம்மதி, அமைதி, சாந்தம் குடிகொண்டது அந்த குடிசையில்.

''உலகத்திலிருந்து அதன் பொருள்களிடமிருந்து என் மனம் கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை பெற்று வருவதை உணர்ந்தேன்'' என்று பின்னால் இந்த அனுபவத்தை சொல்கிறார் ராமகிருஷ்ணர்.

''என்னால் ஒரே அடியாக முற்றிலும் விடுபட முடியவில்லையே குரு மஹராஜ்''

''விடுபட்டே  ஆகவேண்டும் நீ.  ஆன்மாவில் முழுதுமாக  உன் மனம் தோய வேண்டும்  ''  -- தோதாபுரி

ராமகிருஷ்ணர் முயன்றார். சமாதி நிலை எளிதில் கிட்டி மூன்று நாள் அசையாமல் நிர்விகல்ப சமாதியில்  இருந்தார்.

எங்கும் மூன்று நாளுக்கு மேல் தங்காத  தோத்தாபுரி  தக்ஷிணேஸ்வரத்தில் ராமகிருஷ்ணருடன் மூன்று மாதங்கள் தங்கினார்.

''எல்லாம் மாயை தான்'' என்கிறார் தோதாபுரி.  ''அந்த மாயையே  என் தாய் தானே''  என்று அவளையே எதிலும் கண்டார் ராமகிருஷ்ணர். அவித்யா மாயையில் பிறப்பு இறப்பு, சுக துக்கம் எல்லாம் உண்டாக்குகிறாள்.  இது கீழ் மட்டத்தில்.   வித்யா மாயையில் தான் தயை, காருண்யம், உயர் எண்ணங்கள், பணிவு பூரண அன்பு எல்லாமே கொடுக்கிறாள். அது மேல் மட்டத்தில்.

மெல்ல மெல்ல  ராமகிருஷ்ணரிடமிருந்து  குருவான தோதாபுரி மஹா காளி அம்சத்தை, சர்வ சக்தியை, புரிந்து கொள்கிறார்.

ஒருநாள் மாயை, வேதாந்தம் பற்றி இருவரும் கார சாரமாக பேசிக்கொண்டிருக்கும்போது தோட்டக் காரன் ஒருவன் உள்ளே வந்து ஹோம அக்னியில் தனது சுருட்டை பற்ற வைத்துக் கொள்கிறான். அவ்வளவு தான் தோதாபுரி அவனை பாய்ந்து கோபாவேசத்தில் அடிக்க ஓடுகிறார். அவரை தடுத்து  ராமகிருஷ்ணர் ''சுவாமி மாயையின் சக்தியை பற்றி அறிந்தவர் நீங்கள். அதை சந்திக்க புரிந்து கொள்ள  தவறுகிறீர்களே'' என்றபோது  தோதாபுரி தலை குனிந்தார் .

தோதாபுரியின் உடலில் நோய் கண்டது. விடாமல் சீத பேதி. இதன் உபாதையால் மனம் தியானத்தில் ஈடுபட தடங்கலாயிற்று. இந்த உடலை கங்கையில் தொலைத்து விடலாம் என்று கங்கையில் இரவு நேரத்தில் இறங்கினார். என்ன ஆச்சர்யம்.ஆழமான கங்கையில் அவர் ஏன் முழுகவில்லை. தண்ணீர் இல்லையா?  எப்படி அக்கரை  நடந்து சென்றார் ? திரும்பி பார்த்தால்  ஓ வென்று கங்கை பிரவாகம், எதிரே தக்ஷிணேஸ்வரம் கோவில், பஞ்சவடி, ஆஹா  இது என்ன எங்கு பார்த்தாலும் பவதாரிணி. காளி , கங்கை பூரா காளி'' அவளா  என்னை மூழ்கி சாகாமல் காப்பாற்றியவள். எங்கே என் வயிற்றுவலி? எங்கே அந்த உபாதை? எப்படி நின்றது? நானா அவதிப்பட்டவன்?  ராமகிருஷ்ணர்  உணர்ந்ததை நான் இப்போது உணர்கிறேன். அவளே எல்லாம், மாயையும் அவளே, நிஜமும் சத்தியமும் அவளே.எப்படி  மூன்று மாதம் பதினோரு மாதங்களாக அங்கே கழிந்தது என்று ஆச்சரியப்பட்டார்  தோதாபுரி.

''அப்பா மஹா பிரபு, ராமகிருஷ்ணா, இனி நீ என்னிடம் கற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லை  காளி புத்ரா'   என  வாழ்த்திவிட்டு  தன் வழியே நடந்தார் தோத்தாபுரி.

தொடரும் 

sivan jaykay

unread,
Aug 19, 2021, 7:43:20 PM8/19/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN

65     காஞ்சிபுரம்  தென்னாற்காடு  ஆலய  தர்சனம் 

1931ம் வருஷம்,  ஜனவரி மாதம் 25, மஹா பெரியவா  காஞ்சிபுரம்  வந்து சேர்ந்தார்.  தமிழ் வருஷம்  ப்ரமோதூத,  தை  மாசம்.  

காஞ்சியில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் அம்பாளுக்கு முக்கியமானது  ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோவில்.  ஏகாம்பரேஸ்வரர்  ஆலயம் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு கைப்பிடி  மண் எடுத்து  சிவலிங்கமாக பிடித்து  பூஜை செய்து தியானம் பண்ணின இடம்.  ப்ரித்வி  என்றால் மண்.    பஞ்ச பூதங்களான     நீர், நிலம், காற்று, நெருப்பு,  ஆகாசம் இதில்   மண், நிலம்,  எனும் ஐம்பூதங்களில் ஒன்றானது  காஞ்சிபுரம்.  ப்ரித்விக்ஷேத்ரம்.   நகரேஷு காஞ்சி ,  அதாவது நகரங்களில் சிறப்பானது காஞ்சிபுரம். எண்ணற்ற கோவில்கள், சைவ வைணவ வழிபாட்டு ஸ்தலங்கள் கொண்டது.  புண்ய க்ஷேத்ரம்.   

காஞ்சிபுரத்தில்  எந்த சிவன் கோவிலிலும் அம்பாள் விக்ரஹம்  சந்நிதி கிடையாது.  காமாக்ஷி எனும் தவம் செய்யும் பார்வதி கோவில் கொண்ட ஒரே ஆலயம்  காமாக்ஷி அம்மன் ஆலயம்.  இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு?   

காஞ்சியில் உள்ள  எல்லா சிவாலயங்களில் வாசல் கோபுரம் காமாக்ஷி அம்மன் ஆலயத்தை நோக்கியபடி தான் இருக்கும்.  நகரத்தின் நடுநாயக ஆலயம்.  எந்த கோவில்  உத்சவ விக்ரஹ  ஊர்வலங்கள்  வந்தாலும் அது காமாக்ஷி அம்மனை சுற்றிவரும்படியாக தான் இருக்கும்.   காமாக்ஷி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரர் ஸ்தாபித்து பிரதிஷ்டை செய்த  ஸ்ரீ சக்ரம் இருக்கிறது.  இங்கே தான் ஆதி சங்கரர் சர்வஞ பீடத்திலமர்ந்து சித்தி அடைந்தார் என்பார்கள். காமாக்ஷி அம்மன் ஆலயத்திற்குள்ளே  ஆதி சங்கரர்  சிலா ரூபத்தில் காட்சி அளிக்கிறார்.

மஹா  பெரியவா  காமகோடி பீடாதிபதியாக   காஞ்சிபுரம்   வருகை தரப்போகிறார் என்ற சேதி பரவியதும் அளவற்ற  மகிழ்ச்சியோடு  பக்தர்கள்  வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக செய்தார்கள். காஞ்சிபுரம்  ரெண்டு பிரிவு கொண்டது. பெரிய காஞ்சிபுரம் சின்ன காஞ்சிபுரம் என்று.  பெரிய காஞ்சிபுரத்தில் தான்  ஏகாம்பரேஸ்வரர்  ஆலயம்  காமாக்ஷி அம்மன் ஆலயம், காஞ்சிமடம் ஆகியவை உள்ளன.  ஒரு மாத காலத்துக்கும் மேலாக  மஹா பெரியவா   காஞ்சிபுரத்தில் வாசம் செய்தார்.  அடிக்கடி  ஏகாம்பரேஸ்வர்  வரதராஜர்  ஆலயம் எல்லாம் சென்று தரிசனம் செய்தார்.  காமாக்ஷி அம்மன் தரிசனம் நித்யம் உண்டு.

முப்பெரும் சக்திகளில்  மதுரை மீனாக்ஷி , காசி விசாலாக்ஷியோடு  காஞ்சி காமாக்ஷி முக்கியமான அம்மன். சக்தி பீடம்.   
 இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில்  காமாக்ஷி அமர்ந்திருப்பவள்.   கைகளில்  கரும்பு வில், தாமரை, கிளி  ஆகியவற்றை ஏந்தி காட்சி தருபவள்.  சதி யின்  முதுகெலும்பு  விழுந்த ஸ்தலம் காஞ்சிபுரம் காமாக்ஷி ஆலயம்.  காமாக்ஷி  ஆரம்பத்தில்   'உக்ர ஸ்வரூபிணி' யாக இருந்து,  ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில்,  இங்கே வந்து அவர்   ஸ்ரீ சக்ரம்  பிரதிஷ்டை செய்த பின்  அம்பாள்  ''உக்ரம் '' குறைந்து ''ப்ரஹ்ம ஸ்வரூபிணி'' யாக மாறி  அவரால்   சௌம்யமான காமாக்ஷி ஆக நமக்கு  அருள் பாலிக்கிறாள்.பூசைகள் செய்யப்படுகின்றன

1840ல்  அப்போதைய  காமகோடி  64வது  பீடாதிபதி  ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர ஸரஸ்வதி சுவாமிகளால் கும்பாபிஷேகம் செய்யப்பட் ட  ஆலயம் இது.   மஹா பெரியவா இந்த ஆலயத்துக்கு புனருத்தாரண  கும்பாபிஷேகம் நடைபெற  விருப்பப்பட்டார்.    துபாஷ்  தண்டலம்  ஸ்ரீ   T.S. ராமஸ்வாமி ஐயர்  என்பவர்  கும்பாபிஷேக  குழுத்தலைவராக  நியமிக்கப்பட்டார். அவர்  பெஸ்ட் அண்ட் கம்பெனி  யில் பணி புரிந்தவர்.  ஆலயத்தின்  குறைபாடுகள்,  சரி செய்யப்பட்டன.  கும்பாபிஷேகம்  திருப்திகரமாக  நிறைவேறியபின்  மஹா பெரியவா  உத்தரமேரூர்  யாத்திரை சென்றார்.  கிராம அதிகாரிகளுடைய  உதவியோடு  அங்குள்ள  செப்பேடுகள், கல்வெட்டுகளில்   காணப்பட்ட  விஷயங்களை ஆர்வத்தோடு  அறிந்தார்.  தெற்கு செங்கல்பட்டுகளுக்கு விஜயம் செய்த பின் மஹா பெரியவா அங்கிருந்து  வந்தவாசி, அச்சிறுபாக்கம், திண்டிவனம், பாலூர்,  ஆகிய  ஊர்களுக்கு சென்றார்.  தென் ஆற்காடு பகுதிகளை விஜயம் செய்தபோது  மரக்காணத்திற்கும்  சென்றார்.  இரண்டு மாத காலம் இந்த பகுதிகளில் விஜயம் செய்து  ஆலயங்களை தரிசித்தார். 

மஹா பெரியவாளின் பூர்வாஸ்ரம தந்தையார்  சுப்ரமணிய ஐயரின் மாணாக்கர்   திவான் பஹதூர்  C . அருணாசல முதலியார்  மஹா பெரியவாள்  தங்குவதற்கு வேண்டிய  வசதிகள் செய்து  கொடுத்தார். 

பின்னர் அங்கிருந்து மஹா பெரியவா ஸ்ரீ பெரும்புதூர்  சென்றார். ஸ்ரீ ராமானுஜரின் ஜென்ம ஸ்தலம் ஸ்ரீ பெரும்புதூர்.   ஆலய  தேவஸ்தான கமிட்டீ அங்கத்தினர்கள்  மஹா பெரியவா வருகை அறிந்து வரவேற்று வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தார்கள்.

ஸ்ரீ பெரும்புதூரில் மஹா பெரியவா தங்கியிருந்த போது  ஸ்ரீ யதிராஜவல்லி சமேத  ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் தரிசனம் செய்த பின்  அந்த ஊர்  மஹாத்மியத்தை  எடுத்துரைத்து  உபன்யாசம் செய்தார். 

sivan jaykay

unread,
Aug 26, 2021, 6:39:12 AM8/26/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN

66.  பாசத்தின்  மொத்த உருவம் பாட்டி 

மஹா பெரியவாளின்  செங்கல்பட்டு ஜில்லா  விஜய யாத்திரை முடிந்து  அவர்  வட ஆற்காடு ஜில்லா பகுதிகளுக்கு விஜயம் செய்து கொண்டிருந்த சமயம்.  வழியில்  எசையனுர்  என்ற ஒரு கிராமம்.
அங்கே சென்றுகொண்டிருந்தபோது    ஸ்ரீ ம
டம் மானேஜர் ''பெரியவா நாம் ஆற்காடு சீக்கிரம்
போகணும்.   நிறைய பக்தர்களுக்கு தரிசனம் ஏற்பாடு ஆகியிருக்கிறது. காத்துக் கொண்டிருப்பா'' என்றார்.

''முதல்லே போற வழியிலே இருக்கிற கிராமத்திலே எல்லாரையும் பார்த்து ஆசீர்வாதம் பண்ணிட்டு அப்புறம் ஆற்காடு போவோம்'' என்கிறார் மஹா பெரியவா.

வட ஆற்காட்டில்,  ஆற்காடு, கலவை கிராமங்களுக்கு அருகே உள்ள அமைதியான ஒரு ஊர்  எசையனுர் .  மஹா பெரியவா  செங்கல்பட்டு ஜில்லா  விஜயாத்ரை முடித்தபோது  இந்த கிராமத்தில் சில நாட்கள் தங்கி இருந்தார்.  இந்த கிராமத்தில் இருந்த ஜீவனுக்கும்  மஹா பெரியவாளுக்கு உள்ள சம்பந்தத்தை கொஞ்சம்  புரிந்து கொண்டு விட்டு    மஹாபெரியவாளுடன் யாத்திரை தொடர்வோம்.
இந்த  எசையனுரில்  ஒரு பெண்மணி வசித்திருந்தாள் .

மஹா பெரியவாவின்  நூறு  ஆண்டு  வாழ்வில் எத்தனையோ ஜீவன்கள் சம்பந்தப்பட்டவை  அவற்றில் சில நேரடியாக அவரோடு  வாழ்ந்தவை,  பேசியவை, கேள்விகள் கேட்டவை.  உரிமையோடு அவரிடம் உறவாடியவை.  அப்படி ஒரு பக்தை  ''எசையனுர் பாட்டி'' என்று எல்லோராலும்  போற்றப்பட்ட , மதிக்கப்பட்ட  ஒரு   பிராமண  வயோதிக பெண்மணி.    மஹா பெரியவாளை  பெற்றெடுத்த தாய் போல் கண்ணும் கருத்துமாக  நேசித்து சேவை செய்த ஏழை பெண்மணி.   ஸ்ரீ மஹா பெரியவாளிடம் பரம பக்தியும் பிள்ளைப் பாசமும் அபரிமிதமாக கொண்ட பெருமை ஒரு பெண்மணிக்கு உண்டு என்றால் அவள் தான் எசையனூர் கோகிலா பாட்டி.

சில  விஷயங்களை  நாம்  படிக்கும்போது அவற்றில் உள்ள  அதீத பக்தி மனதைத் தைத்து விடுகிறது.  

காஞ்சி சங்கர மடத்தையே  அடைக்கலமாக கொண்ட  சில  மஹா பெரியவாவின்  தீவிர பக்தர்களில் ஒருவள் மேலே சொன்ன  பெண்மணி.  எசையனூர் பாட்டி என்று எல்லோராலும் மரியாதையோடு அழைக்கப்பட்டவள்.   பாட்டியின்  நிஜ பெயர் கோகிலாம்பாள்.  அந்தக் காலத்தில் பால்ய விவாகம். சீக்கிரமே  கல்யாணம். கோகிலாம்பாள் பணக்கார குடும்பம் ஒன்றில் வாழ்க்கைப்பட்டு, இளமையில் கணவரையும் குழந்தைகளையும் இழந்தவள். ஞான பக்தி வைராக்யம் மட்டுமே அவளிடம் இருந்தது. காஞ்சி மட பரமாசார்யாளே கதி என்று சரணாகதி அடைந்தவள்.   காஞ்சி மட த்துக்கு பெரியவாளுக்கு  சேவை  செய்வதை தன்  மீதி வாழ்நாள் லட்சியமாக கொண்டவள்.

மடத்து சிப்பந்திகள் அனைவருமே பாட்டிக்குப் பிள்ளைகள். அவர்களுக்குப் பல வித உபகாரம் செய்வாள். ஊறுகாய், பட்சணம் என்று பணத்தால் ஆக முடியாத பல உபசாரங்களைப் பரிவோடு செய்வாள்.  மடத்தில் அனைவருக்கும்  பாட்டி மேல் ஒரு தனி மரியாதை கலந்த மதிப்பு.  கொஞ்சம் கூட வித்யாசம் இல்லாமல் எல்லோரையும்  அதட்டி, அரட்டி உருட்டி உரிமையோடு வேலை வாங்குபவள். அவர்கள் ஏன்  இதை பொறுத்துக் கொண்டார்கள் என்றால்  பாட்டி  ரொம்பவும்  அவர்கள்  மேல் பாசமும் அன்பும் கொண்டவள் என்பதும் அவர்களுக்கு தெரியும்.   பாட்டி  ஏதாவது சொன்னால் எவனும் தட்டமாட்டான்.

மஹா  பெரியவாவின் பிரதான அணுக்க தொண்டரை  பாட்டி ஒருநாள் அதிக கவலையோடு  கேட்பாள் :

''ஏண்டா ராமு,  இன்னிக்கு பெரியவா  பிக்ஷையை சரியா பண்ணினாரா?தெரியுமா உனக்கு?  எதுக்கு தான் இந்த ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் எல்லாம் ஒரேயடியா வரிசையாக  வந்து தொலையறதோ தெரியலையே! தசமி வந்தாலே பயமா  இருக்கு.  பெரியவா  இப்படி நாலு நாள் சேர்ந்தாப் போல  பட்டினியா வெயிலே போட்ட  வடாம்  மாதிரி வெறும் வயிறோடு  காயறாரே! அவா  உடம்பு என்னத்துக்காகும்?”

இது ஒரு உதாரணம்.   இப்படி  ஒரு பாட்டி  கேட்டால்  யாருக்காவது  கோபம் வருமா? அதில் உள்ள உண்மை. பெரியவா உடம்பு மேலே இருக்கிற அக்கறை அதில் முழுசா தெரியவில்லையா?

”வேலூர் மாமா! நான் சொல்றதைக் கொஞ்சம்  நீங்க  பெரியவா கிட்ட  போய் கேளுங்கோ! நீங்க சொன்னாத் தான் பெரியவா கேட்பா!  
இப்படி ஒரே திரி திரியாகக் கபம் கட்டிண்டிருக்கே! இருமக்கூட முடியாமல் தவிக்கிறாரே! வென்னீர் போட்டுக் கொடுத்து ஸ்நானம் பண்ணச் சொல்லுங்களேன். உடம்புக்கு முடியாத நேரத்தில வெந்நீர் ஸ்நானம் செய்யச் சொன்னா   என்ன ? இப்படி விடாம பச்சை தண்ணிலே முழுகி எழுந்தா  உடம்பு என்னத்துக்கு ஆகும்?”

” விசு, எதுக்கு  நீ  இப்படி  பெரியவாளைத் தூங்கவிடாம பேச்சுக் கொடுத்துண்டே இருக்கே!. போ  பேசாம போய் படு ” என்று ஒருவரை  அதட்டுவார். 

“இல்லே பாட்டி! பெரியவா தான் பேசறா. நாங்க கேட்டிண்டிருக்கோம்.”

“ஏண்டாப்பா! நெய்வேத்யக் கட்டிலே இத்தனை பேர் இருக்கேளே? பெரியவாளை ஸ்நானத்துக்குக் கூப்பிடுங்களேன். காலா காலத்திலே பூஜை செய்து பிட்சை பண்ணட்டுமே? நேரமாறுதே உடம்பு வாடுமே.''

மேலே  சொன்னது  சாம்பிள்.  கொஞ்சம் தான். இதுபோல் நிறைய  ஒவ்வொரு  நாளும்.  எசையனூர் பாட்டிக்கு  மஹா பெரியவா மேல் இருந்த 
அக்கறையுணர்வு எப்போதும்  மடத்தில் எல்லோரிடமும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

 பெரியவா  மேனா  எனும்  பெட்டி  பல்லக்கில்  பிரயாணம் செய்த காலம்.  என்ன தோன்றுமோ பாட்டிக்கு. பட்சணங்கள் செய்து ஒரு  பொட்டலமாக மூட்டை கட்டிக்கொண்டு நேரே  வாசலுக்கு ஓடுவாள்.  பெரியவாளை  பல்லக்கில் தூக்கிச் செல்லக்  காத்திருக்கும்  தொண்டர்களிடம் 

“நீங்கள் எல்லோரும் புண்யாத்மாக்கள். நன்னா இருங்கோ! இந்தாங்கோ! கொஞ்சம் பட்சணம் கொண்டு வந்திருக்கேன். எல்லாருமாச் சாப்பிடுங்கோ! (டின் நிறைய பட்சணம்) பாவம் உங்களுக்கு நேரம் காலமே கிடையாது. பெரியவா எப்ப கிளம்பராளோ? தயாரா இருக்கணும். வழியிலே ஜாக்ரதையாப் பார்த்துக் கொள்ளுங்கோ! இருட்டிலே கண்ட இடத்திலே மரத்தடியிலே படுத்துக் கிறேன்னு ஆரம்பிச்சுடுவா பெரியவா. தீவட்டியை எடுத்துண்டு சுத்திவரப் பாருங்கோ. பாம்பு, பல்லி இருக்கப் போறது. கவனமா இருங்கோடாப்பா! உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் உண்டு.” என்பாள்.“
இப்படிப்பட்ட பாட்டி மேல்  ''இவள் யார்  நம்மை அதிகாரம்  பண்ண''  என்று  கோபம் வருமா?

பழைய மேனேஜர் விஸ்வநாத அய்யர் சொல்வார்: “பெரியவா பூஜை செய்யற அம்பாளே எசைய னூர்ப்  பாட்டியாக வந்து கண்காணிக்கிறாள்''
பாட்டியிடம் அவர் '''பாட்டி , நிர்வாகத்திலே குற்றம் குறை இருந்தால் என் கிட்ட சொல்லுங்கோ!” என பவ்யமாக கேட்பார்.

“எசையனூர்ப் பாட்டி எதாவது சொல்லப் போறா. ஜாக்ரதையாக இருங்கோ!” என்று பரமாசார்யாளே தமக்கு சிசுருக்ஷை செய்பவர்களைச் சிரித்துக் கொண்டே எச்ச்சரிப்பார்களாம்.

புதுப் பெரியவர்கள் பீடத்திற்கு வந்த பிறகு பாட்டிக்கு, ஒரு அலாதித் தெம்பு. அவர்களிடம் பரமாசார் யாளைப் பற்றி, தான் படும் கவலையெல்லாம் மனம் விட்டு கொட்டுவாள். அவர்களும் அவளுடைய அளப்பரிய பக்தியை நினைத்துக் கண்ணீர் மல்கச் சிரித்துக் கொண்டே கேட்பார்கள்.

பரமாசார்யாளுடன் காசி யாத்திரை சென்றிருந்த பாட்டி, தான் கண்ட அனுபவத்தை சொன்னாள்:
“நான் சொல்றதை நன்னா கேட்டுக்கோ! பெரியவா அப்படியே தண்டத்தை தோளோடு அணைச் சுண்டு உட்கார்ந்திண்டு கண்ணை மூடிக்கிறா. திடீர்னு சந்திர கலை தெரியறது. கங்கை தெரியறாள். ஜடை தெரியறது. பளபளன்னு நெத்தி. சாந்தமாச் சிரிச்ச முகம். அப்படியே தேவேந்திரன் தங்கத் தாமரைகளாக் கொண்டு வந்து தலைலே கொட்டறான். நான் கண்ணாலே பார்த்தேன். எல்லாரும் சொல்றா, மாளவ்யா புஷ்பாபிஷேகம் பண்ணினார்னு.”

வருஷங்கள் ஓடியது.  எசையனூர்  பாட்டிக்கு முன்பு போல்  ஓடி யாடி வேலை செய்ய முடியாமல் தள்ளாமை. மனது பெரியவாளிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கும்.  ''பெரியவா  எனக்கு என்ன வேண்டும்.  பொன்னா , பொருளா,  ஒண்ணுமே இல்லை. அதெல்லாம் எதுக்கு. வேண்டவே வேண்டாம். நிம்மதியா  இத்தனை நாள்  என்னால் முடிஞ்சதை செய்தேன். உங்களை ஒண்ணு  தான் கேட்பேன்.  என்னை நிம்மதியா கண்ணை மூட வையுங்கோ''

''எங்கே பாட்டியை  காணோம். எப்படி இருக்கா? '' அவ்வப்போது பேசும் தெய்வம் அவளை பற்றி விசாரிப்பார்.   சிஷ்யர்கள் அவளைப் பற்றிய  விஷயம் சொன்னால் கூர்ந்து கேட்பார்.

1959ம் வருஷம்  ஜனவரி  9ம் தேதி  மஹா பெரியவா மயிலை ஸம்ஸ்கிருதக் கல்லூரியில் முகாம் போட்டிருந்த  சமயம்   ஒரு செய்தி வந்தது: “எசையனூர்ப் பாட்டியை மாடு முட்டி காலமானாள்.” தொடர்ந்து மூன்று நாட்கள் மஹா பெரியவா மௌனம்.
“ ஒரு அம்மா தன் பிள்ளைக்கு செய்வது போல மஹா பெரியவாளுக்கு திருஷ்டி கழிப்பா எசையனுர் பாட்டி,
பெரியவா பாட்டியிடம் “நீ இங்க கைங்கர்யம் பண்றவாளுக்கு காத்தாலே என்ன ஆஹாரம் கொடுப்பே?
''இட்லி''
‘ஒ இட்லி போட்டு காபி கொடுப்பியோ? அப்பறம் சாயங்காலம் உப்புமா கிளறி காப்பி டீ போட்டு கொடுப்பியோ?'”
''அதுக்கென்ன பண்ணிட்டா போச்சு''
மஹா பெரியவாளிடத்தில் ஒரு தாயின் கருணை எசையனூர் கோகிலா பாட்டியிடம் இருந்தது மடத்தில் அவளுக்கு ஒரு தனி கௌரவத்தை அளித்தது. எவ்வளவு சிறந்த புண்யாத்மா பாட்டி.

பெரியவா ஒரு தொண்டரை  கூப்பிட்டு, ”எசையனூர் பாட்டிக்கு இந்த துளசி தீர்த்த பிரசாதத்தைக் கொடு''   என்கிறார்.    அதுதான்  பாட்டிக்கு  கடைசி உணவு.    

'' பாட்டி பெரியவா கொடுத்தனுப்பினா''  -- குரல்  காதில் கேட்டது.    கண் மங்கியது.  மனதில் புரிந்தது. அவள்  முகம் மலர்ந்தது வாய் திறந்தது.   வந்திருந்த  காஞ்சி மடத்து தொண்டர்  பாட்டியின் வாயில் பெரியவா  கொடுத்த   துளஸி ஜல  பிரசாதத்தை சொட்டு சொட்டாக  ஊற்றினார்.  சில நிமிஷங்களில்  எசையனூர் பாட்டி இறைவனடி சேர்ந்துவிட்டார். எந்தவித மரண அவஸ்தையோ, நோயோ இல்லாமல் பாட்டி மறைந்தது எல்லோருக்கும்  ஆச்சர்யம்.
''பாட்டி போய்ட்டா  பெரியவா.''      
மஹா  பெரியவா அப்புறம்  மூன்று  நாள் தொடர்ந்து  மௌன விரதம். பாட்டி ஆசைப்பட்டு கேட்டதை  பெரியவா  கொடுத்து விட்டாரே.   ''நிம்மதியா கண்மூடணும் '' உள்ளன்போடு பெரியவாளை நினைத்தவர்களுக்கு என்றும்  பெரியவா அனுக்ரஹம் உண்டு.

sivan jaykay

unread,
Aug 26, 2021, 6:39:15 AM8/26/21
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K  SIVAN --
தாகூர் 

100.

100. dive down into the depth of the ocean of forms,
hoping to gain the perfect pearl of the formless.
No more sailing from harbour to harbour with this my weather-beaten boat.
The days are long passed when my sport was to be tossed on waves.
And now I am eager to die into the deathless.
Into the audience hall by the fathomless abyss where swells up the music of toneless strings I shall take this harp of my life.
I shall tune it to the notes of forever, and when it has sobbed out its last utterance,
lay down my silent harp at the feet of the silent.

உருவமில்லா நல்ல முத்தைப் பெற விரும்பி, நான் உருவங்கள் நிறைந்த ஆழ்ந்த கடலில் மூழ்குகின்றேன்.  இனியும் காலத்தால் பாழ்பட்ட இந்தப் படகில் இனி துறைமுகத்திலிருந்து துறைமுகத்திற்குப் பயணம் செய்ய மாட்டேன்.  அலைகளால் தூக்கி எறியப்படும் என் விளையாட்டு முடிந்து நாளாயிற்று.

இப்பொழுது நான் மரணமில்லா சாவிற்காக ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கின்றேன்.  அளவிட முடியாத ஆழத்திலுள்ள அரங்கத்திற்குள், இசையானது, சிறப்பில்லாமல் ஒலிக்கின்றது.  அங்கு நான் என் உயிரின் யாழை ஏந்திச் செல்வேன்.  நான் அதை என்றும் நிலைக்கும் சுருதியில் சேர்ப்பேன்.  அது தன் இறுதித் துன்ப இசையை வெளிப்படுத்திய பின், என் அமைதியான யாழை அமைதியின் காலடியில் வைப்பேன்.

sivan jaykay

unread,
Aug 26, 2021, 6:40:12 AM8/26/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீமந் நாராயணீயம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 
35வது தசகம் 


35.  ராவண வதம் 

नीतस्सुग्रीवमैत्रीं तदनु हनुमता दुन्दुभे: कायमुच्चै:
क्षिप्त्वाङ्गुष्ठेन भूयो लुलुविथ युगपत् पत्रिणा सप्त सालान् ।
हत्वा सुग्रीवघातोद्यतमतुलबलं बालिनं व्याजवृत्त्या
वर्षावेलामनैषीर्विरहतरलितस्त्वं मतङ्गाश्रमान्ते ॥१॥

niitassugriivamaitriiM tadanu hanumataa dundubheH kaayamuchchaiH
kshiptvaanguShThena bhuuyO luluvitha yugapatpatriNaasapta saalaan |
hatvaa sugriiva ghaatOdyata-matulabalaM vaalinaM vyaajavR^ittyaa
varShaavelaamanaiShiirviraha taralitastvaM matangaashramaante || 1

நீதஸ்ஸுக்³ரீவமைத்ரீம் தத³னு ஹனுமதா து³ந்து³பே⁴꞉ காயமுச்சை꞉
க்ஷிப்த்வாங்கு³ஷ்டே²ன பூ⁴யோ லுலுவித² யுக³பத்பத்ரிணா ஸப்த ஸாலான் |
ஹத்வா ஸுக்³ரீவகா⁴தோத்³யதமதுலப³லம் வாலினம் வ்யாஜவ்ருத்த்யா
வர்ஷாவேலாமனைஷீர்விரஹதரலிதஸ்த்வம் மதங்கா³ஶ்ரமாந்தே || 35-1 ||

குருவாயூரப்பா, மேலும் சொல்கிறேன் கேள்.  சரியில்லை என்றால் மேலே சொல்லாமல்  நிறுத்து.  சரியென்றால் கடைசியில் தலையை வழக்கம்போல் ஆட்டி  ஆமோதி.

''ராமனாக நீ ,  உன் சகோதரன் லக்ஷ்மணனுடன் ஹநுமானை சந்தித்ததில்  மிகவும் மகிழ்ந்தாய். சரியான புத்திசாலி, பலவான். நம்பகமானவன் என்று  அவனை அணைத்துக் கொண்டாய்.  உங்களை  சுக்ரீவனிடம் அழைத்துப் போனான் ஹனுமான்.  சுக்ரீவனோடு ஒரு உடன்படிக்கை நடந்தது.  உன் பலத்தை பரிசோதிக்க விரும்பிய சுக்ரீவனின் சந்தேகத்தை முதலில்    யாராலும்  அசைக்கக்  கூட முடியாத துந்துபியின்  மண்டை ஓட்டை,  கால் கட்டை  விரலால் தூர வீசிக் காட்டினாய்.   அடுத்து  ஒரே அஸ்திரத்தால் ஏழு  பிரம்மாண்டமான சால் மரங்களைத்  துளைத்துக் காட்டினாய்.  சுக்ரீவனைக் கொல்ல காத்திருந்த  விரோதியான  அவன் சகோதரன் வாலியை  மறைந்து நின்று கொன்றாய். மழைக்காலம் முழுதும்  சீதையை தேடும்  முயற்சியை தள்ளிப்போட்டு  மதங்க ரிஷியின் ஆஸ்ரமம் அருகே  காத்திருந்தாய். 

सुग्रीवेणानुजोक्त्या सभयमभियता व्यूहितां वाहिनीं ता-
मृक्षाणां वीक्ष्य दिक्षु द्रुतमथ दयितामार्गणायावनम्राम् ।
सन्देशं चाङ्गुलीयं पवनसुतकरे प्रादिशो मोदशाली
मार्गे मार्गे ममार्गे कपिभिरपि तदा त्वत्प्रिया सप्रयासै: ॥२॥

sugriiveNaanujOktyaa sabhayamabhiyataa vyuuhitaaM vaahiniiM taamR^
ikshaaNaaM viikshya dikshu drutamatha dayitaamaargaNaayaavanamraam |
sandesha~nchaanguliiyaM pavanasutakare praadishO mOdashaalii
maarge maarge mamaarge kapibhirapi tadaa tvatpriyaa saprayaasaiH || 2

ஸுக்³ரீவேணானுஜோக்த்யா ஸப⁴யமபி⁴யதா வ்யூஹிதாம் வாஹினீம் தா-
ம்ருக்ஷாணாம் வீக்ஷ்ய தி³க்ஷு த்³ருதமத² த³யிதாமார்க³ணாயாவனம்ராம் |
ஸந்தே³ஶம் சாங்கு³லீயம் பவனஸுதகரே ப்ராதி³ஶோ மோத³ஶாலீ
மார்கே³ மார்கே³ மமார்கே³ கபிபி⁴ரபி ததா³ த்வத்ப்ரியா ஸப்ரயாஸை꞉ || 35-2 ||\

மாரிக்காலம்  முடிந்தது.  கொடுத்த வாக்கை மறந்துவிட்டான் சுக்ரீவன் என்று  கோபத்தோடு  லக்ஷ்மணன் அவனைத் தண்டிக்கச் சென்றபோது  சுக்ரீவன் உடனே  தவறை  உணர்ந்து வானரப்  படைகளை திரட்டி  சீதையை நாலா திக்குகளிலும் தேட  ஆயத்தம் செய்துவிட்டான். உன் எதிரே  
வானரப்படை அணிவகுத்து நிற்பதைக் கண்டு மகிழ்ந்த நீ  அனுமனிடம் உன் முத்திரையிட்ட கணையாழியை, மோதிரத்தை அளித்து,  சீதையைக் கண்டுபிடித்து அவளிடம் சேர்ப்பிக்கச்  சொன்னாய்.  வானரங்கள் நாலாபக்கமும் சென்றன. தேடல் ஆரம்பித்தது.  

त्वद्वार्ताकर्णनोद्यद्गरुदुरुजवसम्पातिसम्पातिवाक्य-
प्रोत्तीर्णार्णोधिरन्तर्नगरि जनकजां वीक्ष्य दत्वाङ्गुलीयम् ।
प्रक्षुद्योद्यानमक्षक्षपणचणरण: सोढबन्धो दशास्यं
दृष्ट्वा प्लुष्ट्वा च लङ्कां झटिति स हनुमान् मौलिरत्नं ददौ ते ॥३॥

tvadvaartaa karNanOdyadgarudurujavasampaati sampaativaakyaprOttiirNaarNOdhirantarnagari
janakajaaM viikshya datvaanguliiyam |
prakshudyOdyaanamakshakshapaNachaNaraNaH sODhabandhO dashaasyaM
dR^iShTvaa pluShTvaa cha lankaaM jhaTiti sa hanumaanmauliratnaM dadau te || 3

த்வத்³வார்தாகர்ணனோத்³யத்³க³ருது³ருஜவஸம்பாதிஸம்பாதிவாக்ய-
ப்ரோத்தீர்ணார்ணோதி⁴ரந்தர்னக³ரி ஜனகஜாம் வீக்ஷ்ய த³த்த்வா(அ)ங்கு³லீயம் |
ப்ரக்ஷுத்³யோத்³யானமக்ஷக்ஷபணசணரண꞉ ஸோட⁴ப³ந்தோ⁴ த³ஶாஸ்யம்
த்³ருஷ்ட்வா ப்லுஷ்ட்வா ச லங்காம் ஜ²டிதி ஸ ஹனுமான்மௌலிரத்னம் த³தௌ³ தே || 35-3 ||

இறக்கையை இழந்த வயதான  ஜடாயுவின் சகோதரன் சம்பாதியை சந்தித்த  ஹனுமான் சீதை இருக்கும்  இடம் ராவணனின்  லங்காபுரி என்று அறிகிறான்.  சம்பாதிக்கு புதிதாக  இறக்கை   வளர்கிறது.  ஹனுமான் கடலைத் தாண்டினான்.  சீதா தேவியை அசோகவனத்தில் கண்டான். உன் கணையாழியை மரியாதையோடு ஜாக்கிரதையாக  அவளிடம் கொடுத்தான்.  அவளிடமிருந்து சூடாமணியை உனக்கு அளிக்க  பெற்றுக்கொண்டான்.  அசோகவனம், மற்றும் ராவணனின் மாடமாளிகைகளை  நாசமாக்கினான்.  ராவணன் மகன் அக்ஷய குமாரனை கொன்றான். இந்திரஜித் செலுத்திய ப்ரம்மாஸ்திரத்தில் வேண்டுமென்றே கட்டுண்டான். ராவணனை சந்தித்தான், தூதனாக  எச்சரித்தான், வாலில் நெருப்பு வைத்தபோது மகிழ்வோடு ஏற்றான். சீதையின் ஆசிர்வாதத்தால் அவனைத்  தீ சுடவில்லை, வாலில் நெருப்பால்  தான் அசோகா வனம் தவிர்த்து மற்ற  லங்காபுரி இடங்களை தகனம் செய்தான்.  கடலில் வாலில் இருந்த தீயை அணைத்துவிட்டு கடலைத் தாண்டி  பறந்து வந்தான். கண்டேன் சீதையை என்று உன்னிடம்  சீதா தேவி அளித்த சூடாமணியை அளித்தான்.

त्वं सुग्रीवाङ्गदादिप्रबलकपिचमूचक्रविक्रान्तभूमी-
चक्रोऽभिक्रम्य पारेजलधि निशिचरेन्द्रानुजाश्रीयमाण: ।
तत्प्रोक्तां शत्रुवार्तां रहसि निशमयन् प्रार्थनापार्थ्यरोष-
प्रास्ताग्नेयास्त्रतेजस्त्रसदुदधिगिरा लब्धवान् मध्यमार्गम् ॥४॥

tvaM sugriivaangadaadi prabala kapichamuu chakra vikraantabhuumiichakrO(
a)bhikramya paarejaladhi nishicharendraanujaa shriiyamaaNaH |
tatprOktaaM shatruvaartaaM rahasi nishamayan praarthanaapaarthya rOShapraastaagneyaastra
tejastrasadudadhigiraa labdhavaan madhyamaargam ||4

த்வம் ஸுக்³ரீவாங்க³தா³தி³ப்ரப³லகபிசமூசக்ரவிக்ராந்தபூ⁴மீ-
சக்ரோ(அ)பி⁴க்ரம்ய பாரேஜலதி⁴ நிஶிசரேந்த்³ரானுஜாஶ்ரீயமாண꞉ |
தத்ப்ரோக்தாம் ஶத்ருவார்தாம் ரஹஸி நிஶமயன்ப்ரார்த²னாபார்த்²யரோஷ-
ப்ராஸ்தாக்³னேயாஸ்த்ரதேஜஸ்த்ரஸது³த³தி⁴கி³ரா லப்³த⁴வான்மத்⁴யமார்க³ம் || 35-4 ||

வானரப்படையோடு, தலைவர்கள் சுக்ரீவன், அங்கதன் ஹநுமானோடு கடற்கரைக்கு சென்றாய்.  ராவணனின் சகோதரன் எவ்வளவு நல்ல புத்தி சொல்லியும் கேளாமல் தனது தம்பியான விபீஷணனை விரட்டினான் ராவணன்.விபீஷணன் உன்னிடம் சரணடைந்தான்.   சமுத்திரராஜன் காலம் தாழ்த்தி உனக்கு  கடல் வழிவிடாததால் வெகுண்டு ராமபாணத்தை கையில் எடுக்கவே  சமுத்திரராஜன் விரைந்து வந்து உன்னை வணங்கி  கடல் வழிவிட்டது. 

कीशैराशान्तरोपाहृतगिरिनिकरै: सेतुमाधाप्य यातो
यातून्यामर्द्य दंष्ट्रानखशिखरिशिलासालशस्त्रै: स्वसैन्यै: ।
व्याकुर्वन् सानुजस्त्वं समरभुवि परं विक्रमं शक्रजेत्रा
वेगान्नागास्त्रबद्ध: पतगपतिगरुन्मारुतैर्मोचितोऽभू: ॥५॥

kiishairaashaantarOpaahR^ita giri nikaraissetumaadhaapya yaatO
yaatuunyaamardya damShTraanakhashikharishilaa saalashastraiH svasainyaiH |
vyaakurvan saanujastvaM samarabhuvi paraM vikramaM shakrajetraa
vegaannaagaastrabaddhaH patagapatigarunmaarutairmOchitO(a)bhuuH || 5

கீஶைராஶாந்தரோபாஹ்ருதகி³ரினிகரை꞉ ஸேதுமாதா⁴ப்ய யாதோ
யாதூன்யாமர்த்³ய த³ம்ஷ்ட்ரானக²ஶிக²ரிஶிலாஸாலஶஸ்த்ரை꞉ ஸ்வஸைன்யை꞉ |
வ்யாகுர்வன்ஸானுஜஸ்த்வம் ஸமரபு⁴வி பரம் விக்ரமம் ஶக்ரஜேத்ரா
வேகா³ன்னாகா³ஸ்த்ரப³த்³த⁴꞉ பதக³பதிக³ருன்மாருதைர்மோசிதோ(அ)பூ⁴꞉ || 35-5 ||

நலன் நளன்  நீலன் ஜாம்பவான், அங்கதன் அனைவரும் ஒன்று சேர்ந்து  கடல்மேல்  பாரததேசத்தோடு இலங்கையை இணைக்கும்  சேது அணை , எனும்  பாலம்  கட்டினார்கள். இன்றும் அது காணப்படுகிறது.   வெறும்  பல், நகம், மலைக் கற்கள், மரங்கள்  மட்டுமே  ஆயுதமாக கொண்ட வானரப்படையோடு  நீ   லக்ஷ்மணனோடு, அசுரர்களை எதிர்கொண்டாய்.   இந்திரஜித் மாயமாக  மறைந்து நின்று  நாகாஸ்திரம் செலுத்தி உன்னையும் லக்ஷ்மணனையும் மூர்ச்சித்து விழச்செய்தான்.  கருடன் விரைந்து வந்து நாக பாசங்களிலிருந்து விடுவித்து  உங்களுக்கு பிராணவாயு கிடைக்க  பெரிய  இறகால் விசிறினான். 

सौमित्रिस्त्वत्र शक्तिप्रहृतिगलदसुर्वातजानीतशैल-
घ्राणात् प्राणानुपेतो व्यकृणुत कुसृतिश्लाघिनं मेघनादम् ।
मायाक्षोभेषु वैभीषणवचनहृतस्तम्भन: कुम्भकर्णं
सम्प्राप्तं कम्पितोर्वीतलमखिलचमूभक्षिणं व्यक्षिणोस्त्वम् ॥६॥

saumitristvatra shaktiprahR^itigaladasurvaatajaaniita shailaghraaNaat
praaNaanupetO vyakR^iNuta kusR^itishlaaghinaM meghanaadam |
maayaakshObheShu vaibhiiShaNa vachanahR^itastambhanaH kumbhakarNaM
sampraaptaM kampitOrviitalamakhilachamuubhakshiNaM vyakshiNOstvam || 6

ஸௌமித்ரிஸ்த்வத்ர ஶக்திப்ரஹ்ருதிக³லத³ஸுர்வாதஜானீதஶைல-
க்⁴ராணாத்ப்ராணானுபேதோ வ்யக்ருணுத குஸ்ருதிஶ்லாகி⁴னம் மேக⁴னாத³ம் |
மாயாக்ஷோபே⁴ஷு வைபீ⁴ஷணவசனஹ்ருதஸ்தம்ப⁴ன꞉ கும்ப⁴கர்ணம்
ஸம்ப்ராப்தம் கம்பிதோர்வீதலமகி²லசமூப⁴க்ஷிணம் வ்யக்ஷிணோஸ்த்வம் || 34-6 ||

இந்திரஜித்  வீசிய  சக்தி  ஆயுதத்தால் லக்ஷ்மணன் மூர்ச்சித்து  உயிர் போகும்படி விழுந்தபோது ஹனுமன் பறந்து  சென்று   உயிர்காக்கும்  சஞ்சீவினி  மூலிகைகளை  மலையோடு பெயர்த்து தூக்கிக்கொண்டு வருகிறான்.  லக்ஷ்மணன்  புத்துயிர் பெற்று அதிக பலத்தோடு போராடி  இந்திரஜித்தை  கொல்கிறான்.  மாயா வித்தைகள் மூலம்  அசுரர்கள் போராடி கலக்கம் அடைய செயகிறார்கள். விபீஷணன் அவர்களது மாயைகளை விலக்க வழி சொல்லி  ஆறுதல் அளிக்கிறான்.   கும்பகர்ணன் போரில் உயிரிழக்கிறான்.  எண்ணற்ற  அசுரர்கள்  மாண்டனர்.

गृह्णन् जम्भारिसंप्रेषितरथकवचौ रावणेनाभियुद्ध्यन्
ब्रह्मास्त्रेणास्य भिन्दन् गलततिमबलामग्निशुद्धां प्रगृह्णन् ।
देवश्रेणीवरोज्जीवितसमरमृतैरक्षतै: ऋक्षसङ्घै-
र्लङ्काभर्त्रा च साकं निजनगरमगा: सप्रिय: पुष्पकेण ॥७॥

gR^ihNan jambhaari sampreShitarathakavachau raavaNenaabhiyudhyan |
brahmaastreNaasya bhindan galatatimabalaamagnishuddhaaM pragR^ihNan |
devashreNiivarOjjiivita samaramR^itairakshatairR^ikshasanghairlaNkaabhartraa
cha saakaM nijanagaramagaaH sapriyaH puShpakeNa || 7

க்³ருஹ்ணன் ஜம்பா⁴ரிஸம்ப்ரேஷிதரத²கவசௌ ராவணேனாபி⁴யுத்⁴யன்
ப்³ரஹ்மாஸ்த்ரேணாஸ்ய பி⁴ந்த³ன் க³லததிமப³லாமக்³னிஶுத்³தா⁴ம் ப்ரக்³ருஹ்ணன் |
தே³வஶ்ரேணீவரோஜ்ஜீவிதஸமரம்ருதைரக்ஷதை꞉ ர்ருக்ஷஸங்கை⁴-
ர்லங்காப⁴ர்த்ரா ச ஸாகம் நிஜனக³ரமகா³꞉ ஸப்ரிய꞉ புஷ்பகேண || 35-7 ||

ராம  ராவண யுத்தம் உச்ச கட்டத்தை அடையும்போது தேவேந்திரன் உனக்கு  தனது தேரையும் கவசங்களையும் அளிக்கிறான்.   ராவணனின்  பத்து சிற்பங்களையும் ப்ரம்மாஸ்திரத்தால் கொய்கிறாய்.  அக்னிப்ரவேசம் செய்த பின் சீதையை ஏற்கிறாய்.   உயிரிழந்த வானரர்கள்  உயிர்ப்பிக்கப் படுகிறார்கள்.  விபீஷணன் அளித்த  புஷ்பக விமானத்தில் சீதையோடு லக்ஷ்மணனோடு விபீஷணன், சுக்ரீவன், அங்கதன், முதலானோருடன்  அயோத்யா திரும்புகிறாய். பதினாலு வருஷங்கள் முடிந்துவிட்டது.

प्रीतो दिव्याभिषेकैरयुतसमधिकान् वत्सरान् पर्यरंसी-
र्मैथिल्यां पापवाचा शिव! शिव! किल तां गर्भिणीमभ्यहासी: ।
शत्रुघ्नेनार्दयित्वा लवणनिशिचरं प्रार्दय: शूद्रपाशं
तावद्वाल्मीकिगेहे कृतवसतिरुपासूत सीता सुतौ ते ॥८॥

priitO divyaabhiShekairayutasamadhikaan vatsaraan paryaramsiirmaithilyaaM
paapavaachaa shiva shiva kila taaM garbhiNiimabhyahaasiiH |
shatrudhnenaardayitvaa lavaNanishicharaM praardayaH shuudrapaashaM
taavadvaalmiikigehe kR^itavasatirupaasuuta siitaa sutau te || 8

ப்ரீதோ தி³வ்யாபி⁴ஷேகைரயுதஸமதி⁴கான்வத்ஸரான்பர்யரம்ஸீ-
ர்மைதி²ல்யாம் பாபவாசா ஶிவ ஶிவ கில தாம் க³ர்பி⁴ணீமப்⁴யஹாஸீ꞉ |
ஶத்ருக்⁴னேனார்த³யித்வா லவணனிஶிசரம் ப்ரார்த³ய꞉ ஶூத்³ரபாஶம்
தாவத்³வால்மீகிகே³ஹே க்ருதவஸதிருபாஸூத ஸீதா ஸுதௌ தே || 35-8 ||

மீண்டும்  பதினான்கு  வருஷங்களுக்கு  முன் தடைபட்ட உனது பட்டாபிஷேகம் இப்போது கோலாகலமாக நடைபெறுகிறது.   பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ராமராஜ்யத்தை ஆண்டவன் நீ.  கர்ப்பிணியான  சீதையை  ஊரில் கேட்ட அபவாதத்தால்  கானகத்துக்கு அனுப்புகிறாய்.  சத்ருக்னன் லவணாசுரனை கொல்கிறான்.  நெறியற்ற  சம்பூகன் கொல்லப்படுகிறான்.   கானகத்தில் வால்மீகி முனிவர்  ஆஸ்ரமத்தில் அடைக்கலமான  சீதா தேவி  பிரசவித்து  இரட்டையர்கள் லவன் குசன் ஜனனம் நடைபெறுகிறது. 

वाल्मीकेस्त्वत्सुतोद्गापितमधुरकृतेराज्ञया यज्ञवाटे
सीतां त्वय्याप्तुकामे क्षितिमविशदसौ त्वं च कालार्थितोऽभू: ।
हेतो: सौमित्रिघाती स्वयमथ सरयूमग्ननिश्शेषभृत्यै:
साकं नाकं प्रयातो निजपदमगमो देव वैकुण्ठमाद्यम् ॥९॥

vaalmiikestvatsutOdgaapita madhurakR^iteraaj~nayaayaj~navaaTe
siitaaM tvayyaaptukaame kshitimavishadasau tvaM cha kaalaarthitO(a)bhuuH |
hetOH saumitrighaatii svayamatha sarayuumagnanishsheShabhR^ityaiH
saakaM naakaM prayaatO nijapadamagamO deva vaikuNThamaadyam || 9

வால்மீகேஸ்த்வத்ஸுதோத்³கா³பிதமது⁴ரக்ருதேராஜ்ஞயா யஜ்ஞவாடே
ஸீதாம் த்வய்யாப்துகாமே க்ஷிதிமவிஶத³ஸௌ த்வம் ச காலார்தி²தோ(அ)பூ⁴꞉ |
ஹேதோ꞉ ஸௌமித்ரிகா⁴தீ ஸ்வயமத² ஸரயூமக்³னனிஶ்ஶேஷப்⁴ருத்யை꞉
ஸாகம் நாகம் ப்ரயாதோ நிஜபத³மக³மோ தே³வ வைகுண்ட²மாத்³யம் || 35-9 ||

அஸ்வமேத யாகம்  செய்கிறாய். அந்த  யாகமண்டபத்தில் அனைவரும் கூடி இருக்க  அங்கே  வால்மீகி முனிவரால் வளர்க்கப்பட்ட உனது இரட்டை குழந்தைகள் லவன் குசன் இருவரும் உன் மஹிமையை, ராமாயணமாக  பாடுகிறார்கள்.  நீ  மனம் மாறுகிறாய். சீதையை மீண்டும் அழைக்கிறாய்.  அவள் உன்னை அடைந்து  உன் எதிரில் பூமிக்குள் சென்று மறைகிறாள்.  காலநேமி உன்னை  அணுகி, உன் ராம  அவதாரம் முடிந்துவிட்டது என்பதை நினைவூட்டுகிறான்.  முதலில் நீ லக்ஷ்மணனை வெளியேற்றுகிறாய். பிறகு  சரயுவில் முழுகி  வைகுண்டம்  திரும்பிவிட்டாய்.

सोऽयं मर्त्यावतारस्तव खलु नियतं मर्त्यशिक्षार्थमेवं
विश्लेषार्तिर्निरागस्त्यजनमपि भवेत् कामधर्मातिसक्त्या ।
नो चेत् स्वात्मानुभूते: क्व नु तव मनसो विक्रिया चक्रपाणे
स त्वं सत्त्वैकमूर्ते पवनपुरपते व्याधुनु व्याधितापान् ॥१०॥

sO(a)yaM martyaavataarastava khalu niyataM martyashikshaarthamevaM
vishleShaartirniraagastyajanamapi bhavet kaamadharmaati saktyaa |
nO chet svaatmaanubhuuteH kvanu tava manasO vikriyaa chakrapaaNe
sa tvaM satvaikamuurte pavanapurapate vyaadhunu vyaadhitaapaan ||10

ஸோ(அ)யம் மர்த்யாவதாரஸ்தவ க²லு நியதம் மர்த்யஶிக்ஷார்த²மேவம்
விஶ்லேஷார்திர்னிராக³ஸ்த்யஜனமபி ப⁴வேத்காமத⁴ர்மாதிஸக்த்யா |
நோ சேத்ஸ்வாத்மானுபூ⁴தே꞉ க்வனு தவ மனஸோ விக்ரியா சக்ரபாணே
ஸ த்வம் ஸத்த்வைகமூர்தே பவனபுரபதே வ்யாது⁴னு வ்யாதி⁴தாபான் || 35-10 ||

எண்டே குருவாயூரப்பா, நீ  மஹா விஷ்ணு,   ஸ்ரீமந்  நாராயணனன்,  மானிடனாக உலகில் அவதரிக்கவேண்டும் என்ற கட்டாயம் ராவணன்  பெற்ற வரத்தால் நிகழ்ந்ததால் தசரதன் மகனாக தோன்றினாய்.  அதற்கும் காரணம் உண்டு. முற்பிறவியில் தசரதன்  ஸ்வயம்புமனுவாக இருந்தவன். அப்போது அவன் கேட்ட  வரம். நீயே  அவன் மகனாக பிறக்கவேண்டும் என்பது. அதையும் இந்த பிறப்பில் தசரா குமாரனாக நிறைவேற்றிவிட்டாய்.  சத்யம், தர்மம், பித்ரு வாக்ய பரிபாலனம் துஷ்ட சங்கிரஹம்  எல்லாம் ஒரே அவதாரத்தில்  நிறைவேற்றிவிட்டாய்.  மானுட வாழ்க்கை கோபம், தாபம், துக்கம்,  பிரிவு,  எதிர்பாராத இன்னல்கள் நிறைந்தது என்று வாழ்ந்து காட்டினாய்.  
குருவாயூரப்பா,   என்னுடைய  நோயையும் நீக்கி என் குறை தவிர்த்து ரக்ஷிக்கவேண்டும் என்று உன்னை சரணடைகிறேன்.

sivan jaykay

unread,
Aug 26, 2021, 6:40:20 AM8/26/21
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K  SIVAN --
தாகூர் 

100  முடியட்டும் உயிரொலி 

இப்பொழுது நான் மரணமில்லா சாவிற்காக ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கின்றேன்.  அளவிட முடியாத ஆழத்திலுள்ள அரங்கத்திற்குள், இசையானது, சிறப்பில்லாமல் ஒலிக்கின்றது.  அங்கு நான் என் உயிரின் யாழை ஏந்திச் செல்வேன்.  நான் அதை என்றும் நிலைக்கும் சுருதியில் சேர்ப்பேன்.  அது தன் இறுதித் துன்ப இசையை வெளிப்படுத்திய பின், என் அமைதியான யாழை அமைதியின் காலடியில் வைப்பேன்.

sivan jaykay

unread,
Aug 26, 2021, 6:40:20 AM8/26/21
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K  SIVAN --
தாகூர் 


101. வருவேன் உன் மாளிகையின் வாசலுக்கே.

101. Ever in my life have I sought thee with my songs.
It was they who led me from door to door, and with them have I felt about me, searching and touching my world.
It was my songs that taught me all the lessons I ever learnt;
they showed me secret paths, they brought before my sight many a star on the horizon of my heart.
They guided me all the day long to the mysteries of the country of pleasure and pain, and, at last,
to what palace gate have they brought me in the evening at the end of my journey?

ஒருவன்  மறக்கப்படுவதும்   நினைக்கப்படுவதும்  அவனால் அல்ல. அவன் செயலால்.  அவன் செயல் எது? அவன் சிந்தனையும் எண்ணமும், நம்பிக்கையும் தானே.  அவை நல்லவையாக இருந்தால்,  பரோபகாரத்தோடு  இருந்தால், சுயநலம் கலக்கப்படாமல் இருந்தால் அவன் மனித நிலையிலிருந்து உயர்ந்த பீடத்துக்கு எடுத்துச்சென்று வைக்கப்படுகிறான்.  

கிருஷ்ணா,  நான் கவிஞன். என் எண்ணங்களை வார்த்தைகளை அழகுற அடுக்கி, பிணைத்து, வார்த்து தருபவன்.  என் மூச்சே  என் கவிதைகள் தான்.  என் வாழ்வில், என்றும் என்  கவிதைகளால் உன்னை விடாமல் தேடியவன்.  என் கவிதைகள் என்னை வழிநடத்தின . வாயில் வாயிலாக என்னை  எங்கெங்கோ  கூட்டிச் சென்றன . அவை என் சுற்றத்தை எனக்கு உணர்த்தின. என் உலகத்தைத் தேடியதும் தீண்டியதும் அவைகளால் தான்.  என் பாடல்கள் தான் எனக்குப் பாடங்கள் புகட்டியவை.  மறைவான, ரகசியப்  பாதைகளை அவை எனக்குக் காட்டின.  என் கண் முன் எத்துணையோ விண்மீன்களைக் கொணர்ந்து, அவற்றை என் நெஞ்சத்தில் அடுக்கி வைத்து  நான் கண்டு மகிழச்  செய்தன.  

 இன்பமும் துன்பமும் நிறைந்த இனம் புரியாத நாட்டிற்குள், அவை என்னை வழிகாட்டி அழைத்துச் சென்றன.  இறுதியில் மாலை நேரத்தில், பயணத்தின் எல்லையில், எந்த அரண்மனை வாயிலுக்கு அவை என்னை அழைத்துச் சென்றன. அது உன் மாளிகை வாசல் தான்.

sivan jaykay

unread,
Aug 26, 2021, 6:40:36 AM8/26/21
to amrith...@googlegroups.com
ஒரு சிரஞ்சீவியின விஜயம்     நங்கநல்லூர்  J K  SIVAN  

இன்று  2021 ஆகஸ்ட்  21,  திருவோணம் நக்ஷத்ரம்.   கோலாகலமாக  ஓணம்  பண்டிகை நாள்.   கேரளாவில் முக்யமாக கொண்டாடப்படுவதன் காரணம் தெரியுமா?  வருஷா வருஷம் இந்த தினத்தில் மஹாபலி சக்கரவர்த்தி  கேரள விஜயம் செய்கிறார். எத்தனையோ யுகம் ஆனாலும் அந்த நல்ல ராஜாவை இன்னும் நினைவில் கொண்டு ஒவ்வொரு கேரள வீட்டிலும்   வாசலில் வண்ண வண்ண கோலங்களும், பூக்கள் அலங்காரமும் விளக்கும்  ஏற்றி  அற்புதமாக  பாயசத்தோடு வரவேற்கிறார்கள்.

யார் இந்த மஹாபலி சக்கரவர்த்தி? . எனக்கு   சின்ன வயதில் என் அம்மா  வாராரா வாரம் சனிக்கிழமை எண்ணெய்  தேய்த்து குளிப்பாட்டும்போது   தொடைகளில்  ஏழு ஏழு   மிளகாய்ப்பழம் போட்டு காய்ச்சிய நல்லெண்ணய்  சொட்டு  புள்ளிகள் வைத்து சொன்ன  ஸ்லோகம் காதில் ஒலிக்கிறது.

''அஸ்வத்தாமா,  பலி ,  வ்யாஸா,  ஹநுமான்சா,  விபீஷணா,   க்ருபா,  பரசுராமா,  ஸப்ததே சிரஞ்சீவின: ''

இந்த  ஏழு பேரைப் போல  என்றும்  மரணமில்லாமல்   நானும் சிரஞ்சீவியாக இருக்கவேண்டுமாம்.  நான் மட்டுமல்ல  என் சகோதரர்கள் இருவரையும் அப்படி  இருக்க வேண்டி தான்  எண்ணெய்  தேய்த்து குளிப்பாட்டுவாள்.  அம்மா  வாக்கு  கொஞ்சம் பலித்து  நான்  83ல் இருக்கிறேன். என் மூத்த அண்ணா 89  நிச்சயம் நாங்கள் சிரஞ்சீவிகள் இல்லை.  நடுவிலவர் மறைந்துவிட்டார்.  நங்கள் சஞ்சீவி மூலிகை  சாப்பிடாதவர்கள்.  

மஹாபலி மேலே சொன்ன ஸ்லோகத்திலிருந்து  ஒரு சிரஞ்சீவி என்று தெரிகிறது. அதனால் தான் இன்னும் கூட  தொடர்ந்து வருஷா வருஷம்  கேரள விஜயம்.    சிரஞ்சீவி  என்றால்   யாரோ  தெலுங்கு நடிகர் போல இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஸமஸ்கிருதத்தில் चिर.  chira ,  சிர என்றால்  ரொம்ப நாள், பல்லாண்டு,  எனப் பொருள்   ஜீவி என்றால் வாழ்ந்து  என்று அர்த்தம்.  ஆகவே சிரஞ்ஜீவி என்பது நிலையாக நீண்ட காலம் வாழ்வது.   சாகாவரம் பெறுவது.  அப்படி  எல்லோரும் சாகாவரம் பெற்றதில்லை.  ஏழுபேர்  சிரஞ்சீவி என்று புராணம்  ஒப்புக்கொள்கிறது.  

விஷ்ணுவின் தசாவதாரத்தில்  ஐந்தாவது அவதாரம்   குள்ள  வாமனன்.   மூன்றடி மண் கேட்டு  மஹாபலி சக்ரவர்த்தியை  (கொல்லாமல் ) பாதாளத்தில் அழுத்தியவன். இந்த   மஹாபலி  பிரகலாதனின் பேரன். ரொம்ப நல்லவன். நன்றாக நாட்டை ஆண்டவன். கேரளன்.
ஓணத்தை பற்றி  மதுரைக் காஞ்சி எனும் சங்ககால நூல்  மதுரை கோவில்களில் ஓணம் விழா கொண்டாடியதைப் பற்றி சொல்வதிலிருந்து மஹாபலி சிரஞ்சீவி என்று புரிகிறது.
ஓணம்   நமது பொங்கல் போல்  அறுவடையை கொண்டாடும்  பண்டிகையாகவும் உள்ளது.  பிரஹலாதன் பேரன் மஹாபலி  சக்தி வாய்ந்த நல்ல ராக்ஷஸ ராஜா.  தேவர்களை வெற்றிகொண்டு அடிமையாக்கினான். தேவர்கள்  மஹாபலியின் அசுர வளர்ச்சியால்  பயந்து மஹா விஷ்ணுவிடம் முறையிட மகாபலியை அடக்கி ஆள  மஹாவிஷ்ணு வாமனனாக , குள்ள ப்ராம்மணச்  சிறுவனாக  அவதரிக்கிறார்.

மஹாபலி ஒரு பெரிய யாகம் நடத்துகிறான். அதில் அனைவருக்கும் அள்ளி அள்ளி  தானம் வழங்குகிறான் என்று கேள்விப்பட்டு  வாமனன் மகாபலியின் யாகசாலைக்கு  செல்கிறான்.   ''சிறுவா, உனக்கு தேவையானதைக்  கேள் தருகிறேன் '' என்று கேட்ட  மஹாபலியிடம்   ''என் காலால் மூன்றடி மண் தந்தால்  போதும்'' என்று வாமனன் யாசகம் கேட்கிறான்.  '' தானம் கேட்க கூட தெரியாதவனாக இருக்கிறாயே.   நல்லதாக, பிரயோஜனம் உள்ளதாக நிறைய வேறு ஏதாவது கேளேன்'' என்று மஹாபலி சிரிக்கிறான்?. 

''மூன்றடி மண் கேட்டதே போதும்''  என்று வாமனன் சொல்ல ஜல பாத்ரத்திலிருந்து   தாரை வார்த்து  ''இந்தா  நீ கேட்ட மூன்றடி மண் தந்தேன். அளந்து எடுத்துக் கொள் ''  என்று வாக்கு கொடுக்கிறான் மஹாபலி.

அடுத்த கணம்  வாமனன் த்ரிவிக்ரமனாக மாறுகிறான். கம்பர்  இந்த காட்சியை ஒரு பாடலில் விளக்குகிறார்:

உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ்வடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன் –
சிலை குலாம் தோளினாய்! – சிறியன் சாலவே!

பூமிக்கும் ஆகாசத்துக்குமாக  வளர்ந்த வாமனன் ஒரே அடியில் இந்த மண்ணுலகு எல்லாம் அளந்து, மண் வேறு இல்லாமல்  அடுத்த அடியில் விண்ணையெல்லாம் அளந்து, மூன்றாவது அடிக்கு, மண்ணோ, வேறு இடமோ இல்லாமல்  என்ன செய்வது சொல்? எங்கே  மூன்றாவது அடிக்கு இடம்?'' என்று  கேட்டபோது மஹாபலி தனது சிரத்தை குனித்து காட்டுகிறான்.    

''வந்தவன் வாமனன் இல்ல, மஹா விஷ்ணு என்று அசுரர் குல ஆசார்யன் சுக்ரன் எடுத்துச் சொல்லியும்,  ''மஹா விஷ்ணுவே என்னிடம் யாசகம் பெற வந்தது எனக்கு பெருமை தான்,   ஆச்சர்யம், சந்தோஷம் '' என்று சொன்ன வாக்கை  நிறைவேற்றியவன் மஹாபலி.    அவனை வாழ்த்தி பாதாளலோக  சக்ரவர்த்தி யாக்கினார்  மஹா விஷ்ணு. அவன் வருஷா வருஷம்  பூலோகம் வரலாம் என்கிறார்.   ஆகவே தான் மஹாபலியின் கேரள விஜயம் ஆவணி திருவோணம் அன்று வருஷா வருஷம் நடக்கிறது. மலையாள மாதம்  சிங்கம் தான் நமது ஆவணி. 

 இன்னொரு விஷயம்  அடுத்த  மன்வந்தரத்தில்  ''சாவர்ணி மனு, இந்திரன்''  மஹாபலி தான்.  இந்திரன் என்பது  ஒருவன்  பெயர் அல்ல. பதவியில் இருப்பவன். 

sivan jaykay

unread,
Aug 26, 2021, 6:41:06 AM8/26/21
to amrith...@googlegroups.com
யக்னோபவீதம்   நங்கநல்லூர்  J K SIVAN

21.8.2021   சனிக்கிழமை  - இன்று  ரிக்வேதிகளுக்கு  உபா கர்மா.   நாளை 22.8.2021  யஜுர்வேதிகளுக்கு  ஸ்ராவண  உபாகர்மா. தமிழில் ஆவணி அவிட்டம். பூணல் மாற்றிக்கொள்ளும்  சடங்கு. 

போன வருஷம் போலவே  இந்த வருஷமும்  ஆவணி அவிட்டம் ரொம்ப தனிமையில் தான்.   முன்பெல்லாம் நடந்தது போல  ஆற்றங்கரை, குளத்தங்கரை, கோவில்கள் என்று பொது இடத்தில் கூடி கொண்டாடப் போவதில்லை.  அவரவர்  வீட்டுக்குளேயே  உபாகர்மா.  அன்று பூணலை புதுப்பித் துக் கொள்வது. இதற்கு சில விதி முறைகள்.    பூணலை சும்மா  வாங்கி மாட்டிக் கொள்வது அல்ல. , பௌர்ணமி  அவிட்ட நக்ஷத்ரம். காயத்ரி மந்திரம், காமோகார்ஷின்  ஜபம்.  

மறுநாள்  23.8.2021  அன்று  காயத்ரி மந்த்ர  ஜபம் .  ஒரு நாளாவது முழுக்க சொல்வது.  இந்த சடங்கு  சாமவேதத்தினருக்கு வேறுநாள் வரும்.  

''மஹா விஷ்ணு  ஹயக்ரீவராக  குதிரை முகத்தோடு  ப்ரம்மதேவனிடமிருந்து  வேதங்களை திருடிக்கொண்டு சென்ற  மது கைடபர்களை வென்று  வேதங்களை மீட்ட நாள் என்பது ஐதீகம்.
பிராமண குழந்தைகளுக்கு  எட்டு வயதில் உபநயனம் செய்யும் வழக்கம் விட்டுப் போய்விட்டது. கல்யாணத்தன்றே பூணல் போட்டுக்கொள்பவர்கள் அநேகர் இப்போது.   வேத காலத்தில் அதி புத்திசாலி யாக, மஹா மேதாவி யாக ஞானம் நிறைந்த குழந்தை களுக்கு  ஐந்து  வயதில் உபநயனம் செய்வித்தார்கள். இந்த ரகம் முக்கால் வாசி ரிஷி குமாரர்கள்.

உபநயனம் என்பதில்   ரெண்டு கார்யங் கள் இருக்கிறது. ஒன்று பூணூல் தரித்த பின்  ஆசாரம், ஒழுக்கம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.  இந்த  ஸம்ஸ்காரம் ஒருவனை ஆன்மீக உயர் நிலைக்கு கொண்டு செல்கிறது.

ரெண்டாவது  உபநயனத்தில் பூணூல் போட்டுக் கொண்டவன்  ஒரு பெரியவரிடம், அப்பாவிடம், குரு  மூலம்  வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை  ஜபிக்க முற்படுவது.   அப்போதெல்லாம்  உள்ளும் புறமும் சுத்தமாயும், பவித்ரமாயும் பூணூல்  போட்டு வைத்தார்கள்.  இது தான் சார்  உபநயனம், ப்ரம்மோபதேசம் . உப நயனம்  என்ற வார்த்தை களுக்கு    காயத்ரீ  மந்திரத்தை கற்றுக் கொள்ள   குருவின் சமீபம் அழைத்துச் செல்லுதல்  என்று அர்த்தம்.    வேதம் படிப்பதற்கு  தக்ஷிணாயனம் என்றுஆறுமாச காலம் ஒதுக்கப்பட்டது.

வேதத்தை ஓதி  தர்ம சாஸ்திரங்கள் அர்த்தம் புரிந்து கொள்ள  தெரிந்து கொள்ள  உத்தராயணம் ஆறு  மாச காலம். . தை மாதத்திலிருந்து  ஆடி வரை  உத்தராயணம்.  ஆடி முதல் மார்கழி  வரை தட்சிணாயனம்.   ஆவணி மாசம் அவிட்ட நக்ஷத்ரம் ஆவணி அவிட்டம்.  ஆடி அமாவாசைக்கு பிறகு   ச்ராவண மாசம்.  ஆவணி  மாசம் என்று கணக்கு . பௌர்ணமி  அன்று ஆவணி அவிட்டம், உபாகர்மா செய்வது வழக்கம்.  

சாம வேதத்திற்கு ஆவணி ஹஸ்தம்  அன்று  உபா கர்மா.  ருக் வேதம் தான்  ஆதாரம் .அந்த ஆவணி அவிட்டத்தையே எல்லோரும்  உபாகர்மா என்று பெயர் வைத்து விட்டார்கள். வேத சாஸ்திர பாடங்களை  மேலே சொன்ன காலத்தில் ஆரம்பித்து முடிக்காமல்  போய் விட்டால்  என்ன பரிகாரம்?
அது தான்  "காமோகார்ஷீத்" ஜபம்  . 'காமோ கார்ஷீத்' ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று  ஒரு பழக்கம்  புகுந்து விட்டது. அது தப்பு.  வீட்டிலேயே வாத்தியாரை வரவழைத்து பூணூலை  மட்டும் புதிதாக மாற்றிக் கொள்கிறார்கள். மற்ற எந்த ஒரு வித வேத கர்மாவுக்கும் அப்போது இடமில்லாமல் போகிறது. பூணூல் மாற்றிக்  கொள்வது மட்டும்  உபா கர்மா ஆகாது.   வேதம் படிப்பதற்கு முன்பு புனிதமாக ஆகவேண்டும் என்பதற்காக   பூணூலை  மாற்றிக் கொள்கிறோம்.  வேத ஆரம்பம் செய்யவேண்டும். அதற்காகத்தான்   "காமோர்கார்ஷீத்" ஜபம் செய்வது .பூணூல் போட்டுக் கொண்ட மறுநாள் காயத்ரீ ஜபம் அதற்காகவே உண்டா னது.  ஆவணி அவிட்டத் தில் வேத மந்திர ஜப சித்தி இருந்தால்தான் வேதாரம்பம் ஸ்திரமாக இருக்கும். அதற்காகத் தான் காயத்ரீ ஜபத்தை மறுநாள் வைத்து  இருக்கிறார்கள்.  பூணூல் போட்ட முதல் வருஷத்தில்தான் காயத்ரீ ஜபம், காயத்ரீ ஹோமம் முதலியவைகள் பண்ண வேண்டும் என்று தவறாக எண்ணு கிறார்கள்.

வாழ்க்கை யிலேயே தினந்தோறும்  சந்தியா வந்தனம்,  காயத்ரி ஜபம் செய்து விட்டுத்தான் வேதத்தை பாராயணம் செய்யச் சொல்லி  இருக்கிறது. ஆகவே ஒவ்வொருவரும் காய்த்ரி  ஜபத்தன்று ஆயிரம் தடவை காயத்ரீ   மந்திரத்தையும் அல்லது ஹோமத்தையும் செய்ய வேண்டும்.   பஞ்சாக்ஷரீ ஜபம், அஷ்டாக்ஷரீ ஜபம் போன்ற பல மந்திர ஜபங்கள் எல்லாம் கூட இருக்கிறது.  ஈஸ்வரானுக்ரஹம் சித்திக்க வேண்டும் என்றால் கூட காயத்ரி   ஜபத்தை  நிறைய   உச்சரித்தால் தான் அது நிறைவேறும்.  மற்ற ஜபங்களும்  பலன்  அளிக்கும் ,  காயத்ரி  மந்திரம் ஒன்று தான்  வேதத்திலிருந்து பிறந்தது.   மற்றவை புராணத்திலிருந்து வந்தவை. பஞ்சாக்ஷரம் போன்ற மந்திரங் களை  ஜபிப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் சொல்லப் பட்டு   இருக்கிறது.''---   இப்படி சொல்பவர் மஹா  பெரியவா.   

காயத்ரி  மந்திரம் ஜபித்த எல்லோருக்கும்  ஒரே பலன் மனத்தூய்மை தான். மனோபலம்தான். மனோ பலத்தையும், மனத் தூய்மையும்  வைத்துக் கொண்டு உலகத்தில் எல்லா காரியங்களையும் சாதிக்க முடியும்.    இன்றைக்கு மனோ பலமும், மனோ தைரியமும் குறைந்திருப்பதற்கு காரணமே   காயத்ரி  அனுஷ்டானம் குறைந்து இருப்பதுதான். சில சமயம் ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசை கள் வருவதினால்  தோஷமாதலால் அந்த மாதத்தில் உபநயனம், கல்யாணம் போன்ற சடங்குகள் செய்ய மாட்டார்கள். ஆகையினால்தான் ஆவணி அவிட்டம் ஆடி மாதத்திலேயே  வந்து விடுகிறது. ச்ராவண சுத்தத்தில் முடிவான பௌர்ணமி அன்று வந்து விடுகிறது. 

sivan jaykay

unread,
Aug 26, 2021, 6:41:06 AM8/26/21
to amrith...@googlegroups.com

ஸ்ரீமந்  நாராயணீயம் -   நங்கநல்லூர்  
36வது தசகம் 

36.  நீயே  பரசுராமன்.

மேப்பத்தூர்  நாராயண நம்பூதிரி குருவாயூரப்பன் எதிரில் அமர்ந்து அவன் பழைய ஜாதகத்தை புரட்டுகிறார்.ஒவ்வொரு தசகத்திலும் ஒரு சரித்திரம் சொல்கிறார்.  நாராயணீயமும் ஒரு பாகவதம் தான். 
குருவாயூரப்பா,  ஒரு காலத்தில்  க்ஷத்ரியர்கள்  தங்களது  பலத்தால், சக்தியால், அதிகாரத்தால், அக்கிரமங்கள் புரிந்து எளியவர்களை, அடியவர்களை, பிராமணர்களை  அச்சத்தில் ஆழ்த்தி  கொடுமைகளை  செய்து இதற்கு ஒரு மாற்றம் அவசியம் என்ற நிலை வந்தபோது வழக்கம்போல் தேவர்கள்  ஸ்ரீமந்  நாராயணனாகிய உன்னையே  அணுகினார்கள். க்ஷத்ரியர்களை ஒடுக்க  நாராயணா, நீ எடுத்தது தான் பரசுராம அவதாரம்.  பிறந்தது ஒரு ரிஷி குடும்பத்தில்,  ஜமதக்னி மகரிஷி  ரேணுகா தேவி புதல்வனாக. உன் தந்தையைக்  கொன்ற  கார்த்தவீர்யார்ஜுனனிலிருந்து  ஆரம்பித்தாய் க்ஷத்ரியர்களை அழிக்க.  21 தலைமுறையை தொடர்ந்து  அழித்தாய்.

अत्रे: पुत्रतया पुरा त्वमनसूयायां हि दत्ताभिधो
जात: शिष्यनिबन्धतन्द्रितमना: स्वस्थश्चरन् कान्तया ।
दृष्टो भक्ततमेन हेहयमहीपालेन तस्मै वरा-
नष्टैश्वर्यमुखान् प्रदाय ददिथ स्वेनैव चान्ते वधम् ॥१॥

atreH putratayaa puraa tvamanasuuyaayaaM hi dattaabhidhO
jaataH shiShyanibandhatandritamanaaH svasthashcharan kaantayaa |
dR^iShTO bhaktatamena hehayamahiipaalena tasmai varaan
aShTaishvarya mukhaan pradaaya daditha svenaiva chaante vadham || 1

அத்ரே꞉ புத்ரதயா புரா த்வமனஸூயாயாம் ஹி த³த்தாபி⁴தோ⁴
ஜாத꞉ ஶிஷ்யனிப³ந்த⁴தந்த்³ரிதமனா꞉ ஸ்வஸ்த²ஶ்சரன்காந்தயா |
த்³ருஷ்டோ ப⁴க்ததமேன ஹேஹயமஹீபாலேன தஸ்மை வரா-
நஷ்டைஶ்வர்யமுகா²ன்ப்ரதா³ய த³தி³த² ஸ்வேனைவ சாந்தே வத⁴ம் || 36-1 ||

நீ  தத்தாத்ரேயனாக  அவதரித்தாய்,  அத்ரி அனசூயாவுக்கு மகனாக.  அவதூதனாக  வெளியே கிளம்பிவிட்டாய்.  உலகமே வெறுத்து, மறந்து போய்விட்டது உனக்கு.  ஹேஹய  ராஜா  கார்த்த வீர்யார்ஜுனன் உன்னை சந்திக்கிறான்.   உன்னை வணங்கியவனுக்கு  எட்டுமடங்கு செல்வம் பெருக  வரமளித்தாய். உன் கரத்தாலேயே  அவனுக்கு மரணம் என்ற ஒரு வரமும்  கூடவே   அளித்தாய்.  

सत्यं कर्तुमथार्जुनस्य च वरं तच्छक्तिमात्रानतं
ब्रह्मद्वेषि तदाखिलं नृपकुलं हन्तुं च भूमेर्भरम् ।
सञ्जातो जमदग्नितो भृगुकुले त्वं रेणुकायां हरे
रामो नाम तदात्मजेष्ववरज: पित्रोरधा: सम्मदम् ॥२॥

satyaM kartumathaarjunasya cha varaM tachChakti maatraanataM
brahmadveShi tadaakhilaM nR^ipakulaM hantuM cha bhuumerbharam |
sa~njaatO jamadagnitO bhR^igukule tvaM reNukaayaaM hare
raamO naama tadaatmajeShvavarajaH pitrOradhaassammadam ||2

ஸத்யம் கர்துமதா²ர்ஜுனஸ்ய ச வரம் தச்ச²க்திமாத்ரானதம்
ப்³ரஹ்மத்³வேஷி ததா³கி²லம் ந்ருபகுலம் ஹந்தும் ச பூ⁴மேர்ப⁴ரம் |
ஸஞ்ஜாதோ ஜமத³க்³னிதோ ப்⁴ருகு³குலே த்வம் ரேணுகாயாம் ஹரே
ராமோ நாம ததா³த்மஜேஷ்வவரஜ꞉ பித்ரோரதா⁴꞉ ஸம்மத³ம் || 36-2 ||

என்னப்பா, கிருஷ்ணா,  நீ  அப்புறம் என்ன செய்தாய் என்று சொல்லட்டுமா?  கார்த்த  வீர்யார்ஜுனனுக்கு கொடுத்த வரத்தை  நீ தானே  நிறைவேற்றமுடியும்? உன் கையால் தானே அவனுக்கு மரணம்?   அவனுக்கு தெரியும் நீ அவனை அழிக்க மாட்டாய், அவன் உன் பக்தன்  என்று. ஆகவே  வேத பிராமணர்களை, ரிஷிகளை, முனிவர்களை எல்லாம் கொடுமைப் படுத்தினான். இப்படிப்பட்ட அதிகார துஷ்ப்ரயோக ராஜாக்களை அழிக்க, பூமிக்கு சுமையாக இருக்கும் அவர்களை ஒழிக்க, நீ  பிருகு ரிஷி வம்சத்தில் அவதரித்தாய்.   ஜமதக்னி மஹரிஷியின் கனிஷ்ட குமாரனாக பிறந்தாய்.  உன் தாய் ரேணுகா தேவி மகிழ்ந்தாள். உனக்கு ராமன் என்று பெயரிட்டார்கள். 

लब्धाम्नायगणश्चतुर्दशवया गन्धर्वराजे मना-
गासक्तां किल मातरं प्रति पितु: क्रोधाकुलस्याज्ञया ।
ताताज्ञातिगसोदरै: सममिमां छित्वाऽथ शान्तात् पितु-
स्तेषां जीवनयोगमापिथ वरं माता च तेऽदाद्वरान् ॥३॥

லப்³தா⁴ம்னாயக³ணஶ்சதுர்த³ஶவயா க³ந்த⁴ர்வராஜே மனா-
கா³ஸக்தாம் கில மாதரம் ப்ரதி பிது꞉ க்ரோதா⁴குலஸ்யாஜ்ஞயா |
தாதாஜ்ஞாதிக³ஸோத³ரை꞉ ஸமமிமாம் சி²த்வாத² ஶாந்தாத்பிது-
ஸ்தேஷாம் ஜீவனயோக³மாபித² வரம் மாதா ச தே(அ)தா³த்³வரான் || 36-3 ||

labdhaamnaayagaNashchaturdashavayaaH gandharvaraaje manaagaasaktaaM
kila maataraM prati pituH krOdhaakulasyaaj~nayaa |
taataaj~naatigasOdaraiH samamimaaM Chitvaa(a)tha shaantaat pitusteShaaM
jiivanayOgamaapitha varaM maataa cha te(a)daadvaraan ||3

காலம் ஓடியது. நீ  வளர்ந்தாய். பதினாலு வயதாகிவிட்டது. வேதங்களை எல்லாம் கற்று தீர்த்து விட்டாய். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை அல்லவா? அப்பாவின் ஆணையில் அம்மாவை சிரச்சேதம் செய்தாய்.  உன் சகோதரர்கள் அப்பா சொல் படி நடக்காததால் அவர்களையும் கொன்றாய்.  அப்பா கோபம் தணிந்த  பின் சமயம் பார்த்து ஒரு   வரம் கேட்டாய். அதன்படி  உன் சகோதரர்கள், அம்மா எல்லோரையும் உயிர் பிழைக்க வைத்தாய்.  ரேணுகா தேவி மனமகிழ்ந்து உன்னை ஆசிர்வதித்தாள்.

पित्रा मातृमुदे स्तवाहृतवियद्धेनोर्निजादाश्रमात्
प्रस्थायाथ भृगोर्गिरा हिमगिरावाराध्य गौरीपतिम् ।
लब्ध्वा तत्परशुं तदुक्तदनुजच्छेदी महास्त्रादिकं
प्राप्तो मित्रमथाकृतव्रणमुनिं प्राप्यागम: स्वाश्रमम् ॥४॥

pitraa maatR^imude stavaahR^itaviyaddhenOrnijaadaashramaat
prasthaayaatha bhR^igOrgiraa himagiraavaaraadhya gauriipatim |
labdhvaa tatparashuM taduktadanujachChedii mahaastraadikaM
praaptO mitramathaakR^itavraNamuniM praapyaagamaH svaashramam ||4\

பித்ரா மாத்ருமுதே³ ஸ்தவாஹ்ருதவியத்³தே⁴னோர்னிஜாதா³ஶ்ரமாத்
ப்ரஸ்தா²யாத² ப்⁴ருகோ³ர்கி³ரா ஹிமகி³ராவாராத்⁴ய கௌ³ரீபதிம் |
லப்³த்⁴வா தத்பரஶும் தது³க்தத³னுஜச்சே²தீ³ மஹாஸ்த்ராதி³கம்
ப்ராப்தோ மித்ரமதா²க்ருதவ்ரணமுனிம் ப்ராப்யாக³ம꞉ ஸ்வாஶ்ரமம் || 36-4 ||

குருவாயூரப்பா,   ஜமதக்னி ஆஸ்ரமத்தில் காமதேனு  அப்போது இருந்தது  ரேணுகா தேவியை மகிழ்விக்க  ரிஷி கொண்டு வந்திருந்தார்.   ஜமதக்னி ஆஸ்ரமத்திலிருந்து  ராமனாகிய   நீ   பிருகு மகரிஷி ஆசியுடன்  புறப்பட்டு ஹிமாச்சல பர்வதம் நோக்கி சென்றாய்.   பரமேஸ்வரனை  தியானித்து வணங்கினாய்.   பரமேஸ்வரன் உனக்கு  பரசு எனும் கோடாலி போன்ற ஒரு  ஆயுதம் பரிசளித்தார்.   அது முதல் நீ பரசுராமன் என்று பேர் பெற்றாய். அசுரர்களை அழித்தாய்.  நிறைய  அஸ்திரங்கள் பரிசாக பெற்றாய்.  அக்ருதவ்ரண  முனிவரின் நட்பை பெற்றாய்.  ஆஸ்ரமத்துக்கு திரும்பி வந்தாய். 

आखेटोपगतोऽर्जुन: सुरगवीसम्प्राप्तसम्पद्गणै-
स्त्वत्पित्रा परिपूजित: पुरगतो दुर्मन्त्रिवाचा पुन: ।
गां क्रेतुं सचिवं न्ययुङ्क्त कुधिया तेनापि रुन्धन्मुनि-
प्राणक्षेपसरोषगोहतचमूचक्रेण वत्सो हृत: ॥५॥

aakheTOpagatO(a)rjunaH suragavii sampraaptasampadgaNaiH
tvatpitraa paripuujitaH puragatO durmanitra vaachaa punaH |
gaaM kretuM sachivaM nyayunkta kudhiyaa tenaapi rundhanmunipraaNakshepa
sarOSha gOhata chamuuchakreNa vatsO hR^itaH ||5

ஆகே²டோபக³தோ(அ)ர்ஜுன꞉ ஸுரக³வீஸம்ப்ராப்தஸம்பத்³க³ணை-
ஸ்த்வத்பித்ரா பரிபூஜித꞉ புரக³தோ து³ர்மந்த்ரிவாசா புன꞉ |
கா³ம் க்ரேதும் ஸசிவம் ந்யயுங்க்த குதி⁴யா தேனாபி ருந்த⁴ன்முனி-
ப்ராணக்ஷேபஸரோஷகோ³ஹதசமூசக்ரேண வத்ஸோ ஹ்ருத꞉ || 36-5 ||

கிருஷ்ணா, இந்த நேரத்தில் தான்  கார்த்தவீர்யார்ஜுனன் வனத்தில் வேட்டையாடிவிட்டு பரிவாரங்களோடு உன் தந்தை ஜமதக்னி ஆஸ்ரமத்துக்கு  களைப்பாற வந்தான். உன் தந்தை மகரிஷி ஜமதக்னி அவர்களை எல்லாம்  உபசரித்து  காமதேனு மூலம்  எல்லா சௌகர்யங்களும் ஆகாராதிகளும்  அனைவருக்கும் தாராளமாக   வழங்கிடச் செய்தார்.   கார்த்தவீர்யார்ஜுனன்  அசந்து போனான்.  அட  ஒரு பசு இவ்வளவு  செல்வங்களைத்  தருமா?  ஆச்சர்யமாக இருக்கிறதே!. 

 ''மகரிஷி உங்களுக்கு எதற்கு இந்த பசு,  இதை என்னிடம் கொடுங்கள்'' என்று  கேட்டு  மந்திரியை அனுப்பினான் . அந்த பசு  யாரிடமும் வராது என்று சொன்னதும், காமதேனுவை  பலவந்தமாக  இழுத்துப்போக முயற்சித்தார்கள்.  அதைத் தடுத்த உன் தந்தையை அங்கேயே  கொன்றார்கள்.   காமதேனுவின்  கன்றுக்  குட்டியை கடத்திச் சென்றனர்.
 
शुक्रोज्जीविततातवाक्यचलितक्रोधोऽथ सख्या समं
बिभ्रद्ध्यातमहोदरोपनिहितं चापं कुठारं शरान् ।
आरूढ: सहवाहयन्तृकरथं माहिष्मतीमाविशन्
वाग्भिर्वत्समदाशुषि क्षितिपतौ सम्प्रास्तुथा: सङ्गरम् ॥६॥

shukrOjjiivita taatavaakya chalita krOdhO(a)tha sakhyaa samaM
vibhraddhyaata mahOdarOpanihitaM chaapaM kuThaaraM sharaan |
aaruuDhassahavaahayantR^ikarathaM maahiShmatiimaavishan
vaagbhirvatsamadaashuShi kshitipatau sampraastuthaaH sangaram ||6

ஶுக்ரோஜ்ஜீவிததாதவாக்யசலிதக்ரோதோ⁴(அ)த² ஸக்²யா ஸமம்
விப்⁴ரத்³த்⁴யாதமஹோத³ரோபனிஹிதம் சாபம் குடா²ரம் ஶரான் |
ஆரூட⁴꞉ ஸஹவாஹயந்த்ருகரத²ம் மாஹிஷ்மதீமாவிஶன்
வாக்³பி⁴ர்வத்ஸமதா³ஶுஷி க்ஷிதிபதௌ ஸம்ப்ராஸ்துதா²꞉ ஸங்க³ரம் || 36-6 ||

குருவாயூரப்பா, ஆஸ்ரமத்துக்கு   நீ  பரசுராமனாக  திரும்பி வந்தபோது   உன் தந்தைக்கு நேர்ந்த கொடுமையை அறிந்தாய்.  அவர் அசுரகுரு  சுக்ராச்சார்யரால்  உயிர்பிக்கப்பட்டதை அறிந்தான்.  அக்ருதவர்ண முனிவருடன் பரமேஸ்வரனை  தியானித்தாய்.   வில், பரசு,  அம்புகள்  பரமேஸ்வ ரனிடமிருந்து மஹோதரன் என்பவனால் கொண்டுவந்து தரப்பட்டது. அவற்றுடன்  கிளம்பிவிட்டாய்.  மஹோதரன் தேர் ஒன்று கொண்டு வந்திருந்தான்.     நேராக கார்த்தவீர்யார்ஜுனனிடம் சென்று  காமதேனுவின் கன்றுக்குட்டியை திரும்பக்   கொடு என்று கேட்டாய். பலமுறை அமைதியாகக்  கேட்டும் அவன் தர இசையவில்லை.  கார்தவீர்யார்ஜுனனுடன் யுத்தம் தொடர்ந்தாய்..  

पुत्राणामयुतेन सप्तदशभिश्चाक्षौहिणीभिर्महा-
सेनानीभिरनेकमित्रनिवहैर्व्याजृम्भितायोधन: ।
सद्यस्त्वत्ककुठारबाणविदलन्निश्शेषसैन्योत्करो
भीतिप्रद्रुतनष्टशिष्टतनयस्त्वामापतत् हेहय: ॥७॥

putraaNaamayutena saptadashabhishchaakshauhiNiibhirmahaasenaaniibhiraneka
mitra nivahairvyaajR^imbhitaayOdhanaH |
sadyastvatka kuThaara baaNa vidalannishsheSha sainyOtkarO
bhiitipradrutanaShTashiShTatanaya stvaamaapatad hehayaH ||7

புத்ராணாமயுதேன ஸப்தத³ஶபி⁴ஶ்சாக்ஷௌஹிணீபி⁴ர்மஹா-
ஸேனானீபி⁴ரனேகமித்ரனிவஹைர்வ்யாஜ்ரும்பி⁴தாயோத⁴ன꞉ |
ஸத்³யஸ்த்வத்ககுடா²ரபா³ணவித³லன்னிஶ்ஶேஷஸைன்யோத்கரோ
பீ⁴திப்ரத்³ருதனஷ்டஶிஷ்டதனயஸ்த்வாமாபதத்³தே⁴ஹய꞉ || 36-7 ||

அடேயப்பா,  கார்த்தவீர்யார்ஜுனனுக்கு பத்தாயிரம் பிள்ளைகள்,  17 பிரிவு பெரிய  சேனை, 
எண்ணற்ற  சேனாபதிகள், காலாட்படை வீரர்கள்.  உன்னுடைய  வெள்ளைநிற  பரமேஸ்வரன் அளித்த பரசுவை கையில் எடுத்தாய்.   சூரிய  ஒளியில் அது  தகதகவென  மின்னியது .   அவன்படையை  நிர்மூலம் செய்தாய். உயிர்  பிழைக்க  எஞ்சிய பலர் தப்பி ஓடிவிட்டார்கள்.   மீதி   பிள்ளைகளோடு கார்த்தவீர்யார்ஜுனன் போரைத்  தொடர்ந்தான். 

लीलावारितनर्मदाजलवलल्लङ्केशगर्वापह-
श्रीमद्बाहुसहस्रमुक्तबहुशस्त्रास्त्रं निरुन्धन्नमुम् ।
चक्रे त्वय्यथ वैष्णवेऽपि विफले बुद्ध्वा हरिं त्वां मुदा
ध्यायन्तं छितसर्वदोषमवधी: सोऽगात् परं ते पदम् ॥८॥

liilaavaarita narmadaajalavalallankesha garvaapahashriimadbaahu
sahasramukta bahushastraastraM nirundhannamum |
chakre tvayyatha vaiShNave(a)pi viphale buddhvaa hariM tvaaM mudaa
dhyaayantaM ChitasarvadOShamavadhiiH sO(a)gaat paraM te padam ||8

லீலாவாரிதனர்மதா³ஜலவலல்லங்கேஶக³ர்வாபஹ-
ஶ்ரீமத்³பா³ஹுஸஹஸ்ரமுக்தப³ஹுஶஸ்த்ராஸ்த்ரம் நிருந்த⁴ன்னமும் |
சக்ரே த்வய்யத² வைஷ்ணவே(அ)பி விப²லே பு³த்³த்⁴வா ஹரிம் த்வாம் முதா³
த்⁴யாயந்தம் சி²தஸர்வதோ³ஷமவதீ⁴꞉ ஸோ(அ)கா³த்பரம் தே பத³ம் || 36-8 ||

குட்டி கிருஷ்ணா, இந்த  கார்த்தவீர்யார்ஜுனன் என்ன  செய்தவன் தெரியுமா?  ஒரு முறை,  நர்மதா  நதி பொங்கி வரும்போது  தனது ரெண்டாயிரம் கரங்களால்  அணையாக  தடுத்தவன். இது ஒரு விளையாட்டு அவனுக்கு.  ராவணன் அங்கே  தியானம் பண்ணிக்கொண்டிருந்தப்பது அவனை சீண்டி விளையாடி ராவணனின் கர்வத்தை, ஆணவத்தை அழித்தவன்.  அவனிடம் பல  தெய்வீக ஆயுதங்கள் இருந்தது.   அவை எல்லாவற்றையும்   பரசுராமனாக வந்த  உன்னைக் கொல்ல உபயோகப்படுத்தினான்.   முடியுமா?  உன் சுதர்சன சக்ரம் ஒன்றே அதற்கு பதிலளித்து  நிர்மூலமாக்கியது.  இதிலிருந்தே  இந்த பரசுராமன் வேறு யாருமில்லை மஹா விஷ்ணு தான் என்று புரிந்து கொண்டான் கார்த்த வீர்யார்ஜுனன்.  உடனே  உன்னை தியானித்தான்.   அவன் பாபங்களை விலக்கினாய் . அவனை சம்ஹரித்தாய். 

भूयोऽमर्षितहेहयात्मजगणैस्ताते हते रेणुका-
माघ्नानां हृदयं निरीक्ष्य बहुशो घोरां प्रतिज्ञां वहन् ।
ध्यानानीतरथायुधस्त्वमकृथा विप्रद्रुह: क्षत्रियान्
दिक्चक्रेषु कुठारयन् विशिखयन् नि:क्षत्रियां मेदिनीम् ॥९॥

bhuuyO(a)marShita hehayaatmajagaNaistaate hate reNukaa
maaghnaanaaM hR^idayaM niriikshya bahushO ghOraaM pratij~naaM vahan |
dhyaanaaniitarathaayudhastvamakR^ithaa vipradruhaH kshatriyaan
dikchakreShu kuThaarayan vishikhayan niHkshatriyaaM mediniim ||9

பூ⁴யோ(அ)மர்ஷிதஹேஹயாத்மஜக³ணைஸ்தாதே ஹதே ரேணுகா-
மாக்⁴னானாம் ஹ்ருத³யம் நிரீக்ஷ்ய ப³ஹுஶோ கோ⁴ராம் ப்ரதிஜ்ஞாம் வஹன் |
த்⁴யானானீதரதா²யுத⁴ஸ்த்வமக்ருதா² விப்ரத்³ருஹ꞉ க்ஷத்ரியான்
தி³க்சக்ரேஷு குடா²ரயன்விஶிக²யன் நி꞉க்ஷத்ரியாம் மேதி³னீம் || 36-9 ||

அப்புறம் என்ன  ஆயிற்று?   யாராலும் வெல்ல முடியாத  கார்த்த வீர்யார்ஜுனன் மாண்டான் என்று அறிந்த அவன் பிள்ளைகள்  உன் தந்தை ஜமதக்னி மகரிஷியை பழி வாங்கக்  கொன்றார்கள்.  ரேணுகா தேவி கதறி அழுதாள்.   அவள் கதறலைக் கேட்ட  நீ  ஒரு விரதம் பூண்டாய். தியானம் செய்தாய்.   தேவலோகத்திலிருந்து  தேர்  ஆயுதங்கள் வந்தது. இனி ஒரு க்ஷத்ரியனை விட்டு வைப்பதில்லை என்று தீர்மானித்தாய். நாலா பக்கமும் சென்றாய்.  க்ஷத்ரியர்கள் தலை உருண்டது.  பூமியில் க்ஷத்ரியர்கள் குறைந்துவிட்டனர். 

तातोज्जीवनकृन्नृपालककुलं त्रिस्सप्तकृत्वो जयन्
सन्तर्प्याथ समन्तपञ्चकमहारक्तहृदौघे पितृन्
यज्ञे क्ष्मामपि काश्यपादिषु दिशन् साल्वेन युध्यन् पुन:
कृष्णोऽमुं निहनिष्यतीति शमितो युद्धात् कुमारैर्भवान् ॥१०॥

taatOjjiivanakR^innR^ipaalakakulaM trissaptakR^itvO jayan
santarpyaatha samantapa~nchaka mahaaraktahradaughe pitR^In |
yaj~ne kshmaamapi kaashyapaadiShu dishan saalvena yudhyan punaH
kR^iShNO(a)muM nihaniShyatiiti shamitO yudbaatkumaarairbhavaan ||10

தாதோஜ்ஜீவனக்ருன்ன்ருபாலககுலம் த்ரிஸ்ஸப்தக்ருத்வோ ஜயன்
ஸந்தர்ப்யாத² ஸமந்தபஞ்சகமஹாரக்தஹ்ருதௌ³கே⁴ பித்ருன் |
யஜ்ஞே க்ஷ்மாமபி காஶ்யபாதி³ஷு தி³ஶன் ஸால்வேன யுத்⁴யன் புன꞉
க்ருஷ்ணோ(அ)மும் நிஹனிஷ்யதீதி ஶமிதோ யுத்³தா⁴த் குமாரைர்ப⁴வான் || 36-10 ||

பரசுராமனாக அவதரித்த  உண்ணி கிருஷ்ணா, அப்புறம் நீ உன் தந்தை ஜமதக்னி ரிஷியை உயிர்ப்பித்தாய். ராஜாக்கள்  அழிந்தார்கள். முன்னோர்களுக்கு  வந்தனம்  செய்தாய். சாமந்த பஞ்சகம் குளம்  ரத்தத்தால் நிறைந்தது.  நீ வென்ற ராஜ்ஜியங்கள், நிலம் அனைத்தையும்  காஸ்யப முனிவர் மற்ற ரிஷிகளுக்கு எல்லாம் அளித்தாய்.  சால்யன் எனும் ராஜா பாக்கி இருந்தான். அவனோடு மோதினாய். அப்போது தான் ஸநத்குமார ரிஷி  உன்னைத்   தடுத்தார்.  ''பரசுராமா,   அது உன் வேலை அல்ல,  சால்வனின் முடிவு  ஸ்ரீ கிருஷ்ணன் கையால்''  என்று அறிவுரை கூறினார். 

न्यस्यास्त्राणि महेन्द्रभूभृति तपस्तन्वन् पुनर्मज्जितां
गोकर्णावधि सागरेण धरणीं दृष्ट्वार्थितस्तापसै: ।
ध्यातेष्वासधृतानलास्त्रचकितं सिन्धुं स्रुवक्षेपणा-
दुत्सार्योद्धृतकेरलो भृगुपते वातेश संरक्ष माम् ॥११॥

nyasyaastraaNi mahendrabhuubhR^iti tapastanvan punarmajjitaaM
gOkarNaavadhi saagareNa dharaNiiM dR^iShTvaarthitastaapasaiH |
dhyaateShvaasadhR^itaanalaastra chakitaM sindhuM sruvakshepaNaadutsaaryOddhR^
itakeralO bhR^igupate vaatesha sanraksha maam ||11

ந்யஸ்யாஸ்த்ராணி மஹேந்த்³ரபூ⁴ப்⁴ருதி தபஸ்தன்வன்புனர்மஜ்ஜிதாம்
கோ³கர்ணாவதி⁴ ஸாக³ரேண த⁴ரணீம் த்³ருஷ்ட்வார்தி²தஸ்தாபஸை꞉ |
த்⁴யாதேஷ்வாஸத்⁴ருதானலாஸ்த்ரசகிதம் ஸிந்து⁴ம் ஸ்ருவக்ஷேபணா-
து³த்ஸார்யோத்³த்⁴ருதகேரலோ ப்⁴ருகு³பதே வாதேஶ ஸம்ரக்ஷ மாம் || 36-11


எண்டே குருவாயூரப்பா,  நீ தானடா  பரசுராமன்.  ஆயுதங்களை வீசி எறிந்தாய். மஹேந்த்ர  பர்வதத்துக்கு சென்றாய். தியானத்தில் அமர்ந்தாய்.    சமுத்திரம்  கோகர்ணத்திலிருந்து  ஆரம்பித்து பூமியை  மூழ்கடித்துவிட்டதை கவனித்தாய்.  பல  ரிஷிகளின் முனிவர்களின் பிரார்த்தனை உன் காதில் விழுந்தது.  தியானத்தால் உன் வில் உன் முன் தோன்றியது. அக்னி அஸ்திரத்தை அதில் தொடுத்து  சமுத்திரத்தின் மீது செலுத்தினாய்.  அக்னி   கடல்  நீரை வற்றச் செய்தது. கேரள  பூமி   சமுத்திரத்தில் இருந்து கடல்  மேலே வந்து உருவானது.  இன்றும் கேரளத்துக்கு பரசுராம க்ஷேத்ரம் என்று தானே பெயர்.   
அப்பனே, குருவாயூரா , எனது நோயையும் தீர்த்து என்னை ரக்ஷிக்க வேண்டுமப்பா. 
தொடரும் 

sivan jaykay

unread,
Aug 26, 2021, 6:41:39 AM8/26/21
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K  SIVAN --
தாகூர் 


102.  நான் உன்னை .அறிவேன்.


102.   I boasted among men that I had known you. They see your pictures in all works of mine.
They come and ask me, `Who is he?’ I know not how to answer them.
I say, `Indeed, I cannot tell.’  They blame me and they go away in scorn. And you sit there smiling.
I put my tales of you into lasting songs. The secret gushes out from my heart.
They come and ask me, `Tell me all your meanings.’ I know not how to answer them.
I say, `Ah, who knows what they mean!’
They smile and go away in utter scorn.  And you sit there smiling.

''கிருஷ்ணா வா, வந்து எதிரே உட்கார். பேசுவோம். 
''உன்னைப் பற்றி எல்லோரிடமும் நான் எப்போதும் என்ன சொல்கிறேன் தெரியுமா உனக்கு?''
''சொல்லேன்  கேட்கிறேன்'' 
''நான் உன்னை நன்றாக அறிந்தவன் என்று மார் தட்டிக்கொள்வேன் ''
''ஓ  நீ என்னை அப்படி அறிந்தவனா?''
''ஆமாம், உன்னைப்பற்றி எவ்வளவு விஷயம் எழுதுகிறேன், பாடுகிறேன், உன் படம் எவ்வளவு போடுகிறேன்''
''ஒவ்வொரு படத்திலும், எழுத்திலும் நீ வேறு வேறாக  காட்சி அளிப்பதால்,''இது தான்  கிருஷ்ணனா?'' என்று அவர்கள் கேட்கும்போது எனக்கு பதில் தெரியவில்லையடா. பேசாமல்  ஆமாம் ஆமாம் இது தான், இவன் தான் கிருஷ்ணன் என்று மழுப்புவேன்.  என்னை ஏளனமாக பார்த்து சிரித்துவிட்டு  போய்விடுவார்கள்..  நீ பேசாமல் என்னை பார்த்துச்  சிரித்துக்  கொண்டிருப்பாய்''
நான்  விடுபவனல்ல.  உன்னைப்பற்றி என்னவெல்லாம் தெரியுமோ, நினைக்கிறேனோ அதெல்லாம் எழுத்தில் கவிதையாய்  சித்தரிப்பேன். கதையில்  காட்சிகளாக  வைப்பேன்.''
'' உனக்கு எப்படி கிருஷ்ணனைத் தெரிகிறது வியந்து போய் கேட்பார்கள்.''
''என்னுள்ளே  ரகசியம் அவன் '' என்பேன்.
''அதெப்படி? எங்களுக்கும் சொல்?''
எல்லோருக்குள்ளும் இருக்கிற உன்னை   உங்களுக்குள்ளேயே பாருங்கள்''  என்பேன்.
''உண்மையைச் சொல், எப்படி அவனை பார்ப்பது?? '' என்று கேட்டால் என்ன சொல்வது என்று விழிக்கிறேன்.
என்னிடம் வந்து  காதோடு காது வைத்து சிலர்  “யார் அவன்? எனக்கு மட்டும் சொல்லு'' என்று வினவும்போது பதில் உரைக்க எனக்குத் தெரியவில்லை.  அவர்கள் என் மேல்  பொய்யன், என்ற  பழியைச் சுமத்தி விட்டு, ஏளனமாகச் செல்கின்றனர்.  நீயோ புன்னகையுடன் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவாறு  அமர்ந்திருக்கின்றாய்.

sivan jaykay

unread,
Aug 26, 2021, 6:41:39 AM8/26/21
to amrith...@googlegroups.com
ஓம் ஸ்ரீ காயத்ரி   --  நங்கநல்லூர்  J.K. SIVAN

நாளை திங்கட்கிழமை  23.8.2021 அன்று  காயத்ரி ஜபம் என்று வழிபாடு.  காயத்ரி ஜபம் என்றால் என்ன என்று முதலில் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

உலகில் நாம் காண்பது, கேட்பது, அறிவது எல்லாமே  விஞ்ஞானத்தில் அடக்கம் என்பது  சரியில்லை. விஞ்ஞானம் அறிவின் வளர்ச்சி. இன்னும் முழுமை அடையாத   ஒரு விஷயம்.. ''பால் வீதி, MILKY WAY  ஆகாச கங்கா என்றெல்லாம்  லக்ஷோப லக்ஷம்  நட்சத்ரங்கள்  கண்ணுக்குத் தெரியாதவை,  பார்க்கவே பல நூற்றாண்டுகள் ஆகக்  கூடியவை   உண்டு.  சூரியனையே விழுங்கும் அளவு பெரியவை. பார்ப்பதற்கு மூர்த்தி .சிறியதாக  தோன்றும்.  சந்திரன் பூமியை சுற்றுகிறான். பூமி  சந்திரனோடு சேர்ந்து சூரியனை சுற்றுகிறது என்பது நமது சூரிய மண்டலம்.   எல்லா கோளங்களும்   சூரியனைச் சுற்றுபவை.   ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன். பக்கத்தில் சுவற்றை, தூணை அல்லது யாராவது ஒரு தாத்தாவை கெட்டியாகப்  பிடித்துக் கொள்ளுங்கள்.  சூரியன் தனது எல்லா பரிவாரத்தோடும், எல்லா கிரஹங்களுடனும் நக்ஷத்ரங்களுடனும்  ஒரு  ரவுண்ட் அடிப்பதற்கு உண்டான காலம் 22.5. கோடி வருஷங்கள்!! இத்தனைக்கும்  அவை ஊர்ந்து போகும் வஸ்துக்களல்ல. கிரஹங்கள் எல்லாமே  கிட்டத்தட்ட   ஒரு நொடிக்கு   20,000 மைல் வேகம்  'ஓ' வென்ற பேரிரைச்சலோடு  நகர்வன. கண்ணைமூடி யோசித்துப் பார்த்தால்  பயத்தில் இதயம் நின்றுவிடும்.

பூமி மேல் வசிக்கும் நாமும் பூமியோடு சேர்ந்து வேகமாகத்  தான்நகர்கிறோம்.  வேகமான ரயிலில்,  ஆகாய விமானத்தில்  இருந்து  பார்க்கும்போது  வெளியே   எல்லாமே  மெதுவாக நகர்வது போல், அசையாமல் நிற்பது போல்  தோன்றுகிறதே  அது போல்  நாம்  நமது வீட்டில் அசைவற்று இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  எல்லா கிரஹங்களும் சூரியனையே தான் சுற்றுகிறது.
இது புரிந்தால்  காயத்ரி மந்திரம் புரிந்து கொள்ளலாம்.

''ஓம் பூர் புவ ஸ்வஹ:''
பூர்  என்றால் பூமி.  புவ   என்றால்  சூரிய மண்டல  கிரஹங்கள். ஸ்வஹ என்பது  இந்த  பிரபஞ்சம்:    நமது தலைக்கு மேலே லொட லொட என்ற சப்தத்தோடு சுற்றும்  பழைய  வோல்டாஸ்  மின்விசிறி சுற்றும் வேகமே  ஒரு  நிமிஷத்துக்கு  900 சுற்று  Rpm. அது போடும் சப்தமே  அடுத்த வீட்டுக்காரன் சண்டைக்கு  வரும் அளவுக்கு இருக்கிறதே. நொடிக்கு  20, 000 மைல் . கி.மீ. அல்ல என்றால் ???? அப்படி ஓடும் கிரஹங்களின் சப்தத்தை த் தான்   ''ஓம்''  என்று  இந்த காயத்ரி மந்திரம் சொல்கிறது. இதை முதலில் கேட்டறிந்தவர்  விஸ்வாமித்ரர்.  ஏன் மற்றவர்கள் செவிடா? என்று கேட்பது காதில் விழுகிறது.  ஒரு  200அடி  தூரத்தில்  யாரோ  கத்தினால் கூட நமக்கு  தெரிவதில்லை,கேட்பதில்லை.  எத்தனையோ சைபர்கள்  கொண்ட  நம்பர் மைல்களுக்கு அப்பால் அதே வேகத்தில் ஓடும் சப்தமா காதில் விழும்?
எப்படி டெலெஸ்கோப்பில் சாதாரண கண்  பார்க்கமுடியாததை  பார்க்க  முடிகிறதோ அப்படிபட்டது நுட்பமான  விஸ்வாமித்ரர் தவ வலிமை. அதனால்   அவர் அந்த  ஓம்   என்ற பெரும் சப்தத்தை தியானம் செய்து கேட்டு மற்ற ரிஷிகளுக்கு  சொன்னவர். அது  தான் கடவுளின்   பெயர் என்று ரிஷிகள்  ஒப்புக்கொண்டார்கள். கடவுளை ஒலி வடிவாக கண்டவர். கீதை கூட   ''ஓம்  இதி  ஏகாக்ஷரம் ப்ரம்மம்''  என்கிறதே.  சில  ஜீவன் முக்தர்கள் சமாதியில் எப்போதும்  ''ஓம்''சப்தம் கேட்கும். ஓம் என்பதை பிரணவம் என்போம். சக்தியின் ஒலி.                                                                    

'தத்  ஸவிதுர்  வரேண்யம்''    
தத்:  அது  (பகவான்)  ஸவிதுர் :  சூரியன் .  வரேண்யம்:  என்றால்  பூஜிக்கத்  தக்கது.   ஒருவர் உருவம் தெரிந்தால், பெயரும் தெரிந்தால் அவரை எங்கும் கண்டுபிடித்துவிடலாம் அல்லவா.    குட்டை  ஆள்   ரெட்டை நாடி,  ஒருகால்  ஊனம்  குப்புஸ்வாமி , சுண்டக்காமுத்தூர்  கோவிந்தன்   என்றால் ஒரு வழியாக  சுண்டக்காமுத்தூரில் போய் அவனைத் தேடி கண்டுபிடிக்கலாம்.

விஸ்வாமித்ரர்  பிரணவ சப்தத்தை கண்டுபிடித்து,  அந்த மந்திரத்தை , காயத்ரி மந்திரத்தை உச்சரித்து  பகவானை அடையும் வழி காட்டி விட்டார்.  சூத்ரம் தெரிந்துவிட்டால்  கணக்கை போட்டு முடிக்கலாம் அல்லவா.  சூரியன்,   பிரபஞ்சத்தை ஒளியாக காட்டிவிட்டார்.

''பர்கோ  தேவஸ்ய தீமஹி''
பர்கோ:  ஒளி. தீபம்,   தேவஸ்ய:  தெய்வங்கள், தீமஹி:  த்யானம் செய் .  
கண்ணுக்கு தெரியும்  சூரியனை பிடித்துக் கொள் . அதன் மூலம்  உருவமற்றவனை பிடி. அவனைக் கட்டும்  கயிறாக  ஓம்  என்ற மந்திரத்தை விடாமல் சொல்.  இது மட்டும் போதாது என்பது தான் ரஹஸ்யம்.  மனது என்று நமக்குள் இருக்கிறதே  அதை முதலில் கட்டி அசையாமல் பண்ண வேண்டும்.  அதை நிலை நிறுத்தி  ஓம்  என்ற த்யானத்தில்  ஈடுபட்டு மனதில் சூரியன்  மற்றும் பிரபஞ்ச ஒளியை தேடினால்  பகவானைப்  பிடித்தாகி விட்டது.

''தியோ யோ ந  ப்ரசோதயாத்''

தியோ:  புத்தி,  யோ  : யார் , எவர்?,  நா:  நாம் எல்லாரும்,   ப்ரசோதயாத்:   சரியான வழியில் அழைத்துச் செல்லப்படுவோம்.

பகவானே  என் புத்தியை நிலை நிறுத்தி சரியான வழியில் என்னை  நடத்திச்செல்.

இந்த  பூமி,    சூரிய மண்டல  கிரஹங்கள்  அண்ட பேரண்டம் எல்லாமே தலை தெறிக்கும் வேகத்தில் ஓடுகிறது.  அவற்றின் சப்தம்  ஓம்  என்று கடவுள் பெயரை சொல்கிறது.   அந்த கடவுள் தான்  எத்தனையோ சூரியன்களின்  ஒளி,   அவனே  வணங்கத்தக்கவன்.  ஆகவே  நாமெல் லோரும்   மனதை, புத்தியை  நிலைநிறுத்தி அவனையே  தியானித்து  ஒளியாக கண்டு  ஓம்  என்ற அவன் நாமத்தை விடாமல் உச்சரிக்க  அவனே  வழிகாட்ட வேண்டும்.

சுருக்கமாக  சொன்னால்  இது தான் காயத்ரி மந்த்ர உள்ளர்த்தம்.  மஹான்கள் பெரியவர்கள், யோகிகள், ரிஷிகள், பண்டிதர்கள்  வித விதமாக  அர்த்தம் சொல்வார்கள். அடியேனுக்கு தோன்றியதை நான் எப்படி புரிந்து கொண்டேனோ அப்படி சொல்லிவிட்டேன். மேற்கொண்டு காயத்ரி மந்த்ர சக்தியை பற்றி தனியாக இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

sivan jaykay

unread,
Aug 26, 2021, 6:41:50 AM8/26/21
to amrith...@googlegroups.com
காயத்ரி மந்த்ரம்   --   நங்கநல்லூர் J.K. SIVAN


நாளை 23.8.2021  திங்கட்கிழமை   காயத்ரி ஜபம். காயத்ரி மந்த்ரத்தை பற்றி நிறைய பேசியாச்சு. எழுதியாச்சு.  அந்த காயத்ரி மந்த்ர மஹிமையைப் பற்றி சொன்னால் தானே அதன் மஹத்வம் புரியும். எனவே  இப்போதே  ஒரு  குட்டிக்கதை.  நான்  ஏற்கனவே சொன்ன கதை தான். இருந்தாலும் இன்னொரு தடவை படித்தால் காயத்ரி மந்த்ர சக்தி ஞாபகத்துக்கு வருமே.
காயத்ரி மந்த்ரத்தை பற்றி அதன் மகிமை பற்றியெல்லாம் என்னதான் எழுதினாலும் ஒரு கதை மூலம் அதை வலியுறுத்தினால் கப் என்று பிடித்துக்கொள்ளும். எனவே தான் இந்த குட்டிக் கதை.

ஒரு    சுண்டைக்காய் ராஜ்ஜியம். அதற்கு ஒரு சிம்பிள் ராஜா. அவனுக்கு ஒரு அமைதியான மந்திரி. அந்த மந்திரி ஒரு வேதாந்தி. ஏதோ அர்ஜண்டாக கேட்க வேண்டு மென்று ஒரு நாள் ராஜா தன்னுடைய மந்திரி வீட்டுக்குச்  சென்றான். மந்திரி மனைவி ராஜாவை வரவேற்றாள் .

''அவர் காயத்ரி மந்த்ரம் சொல்லிக் கொண்டு தியானத்தில் இருகிறார் இதோ முடித்துவிட்டு வந்துவிடுவார் அமருங்கள்'' என்றாள் .

ராஜா ஊஞ்சலில் ஆடிக்கொண்டு  காத்திருந்த பின்  மந்திரி வந்தார். 

'' நீ  ஏதோ காயத்ரி மந்திரம் என்று ஒன்றை  சொல்லிக்கொண்டிருந்தாயாமே. அதை  எனக்கும் சொல்லிக்  கொடு'' என்றான் ராஜா.

"ராஜா, நான் காயத்ரி மந்திரத்தை  தங்களுக்கு உபதேசிக்கும் அளவுக்கு தகுதியானவனில்லையே. யாராவது குருவினிடமிருந்து உபதேசம் பெறுவது தான் முறை" என்றான்.

ராஜாவுக்கு யாரோ ஒரு குரு கிடைத்து காயத்ரி மந்திர உச்சரிப்பு தெரிந்து கொண்டான். ஒருநாள்  , மந்திரி வீட்டிற்கு வந்தபோது ''மந்திரி, நானும்  காயத்ரி மந்த்ரம் கற்றுக்கொண்டு விட்டேன். உனக்கு  சொல்லிக்  காட்டட்டுமா? என்று  பஜ்ஜி தின்று கொண்டே,  உரத்த குரலில்  ஊஞ்சலில் ஆடிக்கொண்டே ஒப்பித்தான். சரியா? என்றுகேட்டான்  ராஜா.

'' ராஜா, நீங்கள் சொன்ன உச்சரிப்பு சரி ஆனால் இப்படி மந்திரத்தை உச்சரித்தால் பயன் கிடைக்காது''
''ஏன்?'' 
மந்திரி யோசித்தான்.  ராஜாவுக்கு எப்படி புரிய வைப்பது.  ஆ!   ஒரு ஐடியா கிடைத்தது. அருகில் இருந்த தனது சேவகனை கூப்பிட்டான்.

" டேய் ! இந்த ராஜாவை உடனே ஒரு கயிறால் இந்த  தூணில்  கட்டிப் போடு'' என்றான்."
ராஜாவுக்கு ஷாக். ஆனால் சேவகன் துளியும் லட்சியம் செய்யாமல் ராஜாவையே பார்த்துகொண்டு நின்றான்.
"என்னடா நிற்கிறாய், உடனே சொன்னதை செய், ராஜாவை கம்பத்தில் கட்டு" என்று உரத்த குரலில் மந்திரி கட்டளையிட்டான்.
''உஹும் !! சேவகன் அசையவே இல்லை. ராஜாவுக்கு மந்திரி தன்னை கொன்று விட்டு ராஜ்யத்தை எடுத்துக்கொள்ள   ஏதோ  சதி செய்கிறானோ என்று மந்திரி மீது சந்தேகம் வந்தது

''அடேய் ! சேவகா, இன்னும் ஒரு நிமிடத்தில் இந்த மந்திரியை கை கால் கட்டி அரண்மனைக்கு இழுத்து வா.  இவனுக்கு  எல்லோர் முன்னிலையிலும் தக்க தண்டனை வழங்குகிறேன்" என்றான். சேவகன் புலி போல் பாய்ந்து மந்திரியைக்  கட்ட விரைந்தான். அப்போது மந்திரி சிரிக்கவே ராஜாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

'' என்ன சிரிக்கிறாய். சொல் இல்லையேல் உன் கழுத்தை இந்த வாளால் இப்போதே சீவிவிடுவேன்''
என்று  ராஜா மந்திரியிடம்  சொன்னான்.

"ராஜாவே! நான் இதைத் தான்   நான் உங்களுக்கு விளக்கிக்  கொண்டிருந்தேன். " கட்டளை ஒன்று தான். நான் சொன்னால் கேட்காத சேவகன் நீங்கள் சொன்ன அடுத்த கணம் அதை நிறைவேற்ற வில்லையா"
காயத்ரி மந்த்ரமும் வேதங்கள் சொல்லும் முறையாக உச்சரித்தால் தான் பலன் கொடுக்கும்
என்றான்.
ராஜா  மந்திரங்களை அஸ்ரத்தையுடன் சொல்வது பலனளிக்காது என்று நம்மைப்போல்  புரிந்துகொண்டான்.   

sivan jaykay

unread,
Aug 26, 2021, 6:41:58 AM8/26/21
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K  SIVAN --
தாகூர்


103.  நின் திருவடி சரணம் அப்பா 

103.  In one salutation to thee, my God,
let all my senses spread out and touch this world at thy feet.
Like a rain-cloud of July hung low with its burden of unshed showers
let all my mind bend down at thy door in one salutation to thee.
Let all my songs gather together their diverse strains into a single current
and
 கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K  SIVAN --
தாகூர்


103
 flow to a sea of silence in one salutation to thee.
Like a flock of homesick cranes flying night and day back to their mountain nests
let all my life take its voyage to its eternal home in one salutation to thee.


தாடி  தாத்தா ரவீந்திர நாத் தாகூர்  எழுதிய  கீதாஞ்சலி 103  பாடல்களையும்  படித்து ரசித்து ருசித்து விட்டோம். இந்த கடைசி பாடலில் சரணாகதி த்வனிக்கிறது.
இந்த   பாடலை எழுதும்போது  கிருஷ்ணா நான் இதை உனக்கே  அர்ப்பணிக்கிறேன்.   
இந்த ஒரே நமஸ்காரம் தான் பாக்கி.  அதில் என் புலனுணர்வுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து உன் திருவடிகளின் அடியே  காணும்  மண்ணில் என் சிரம் பணிந்து தொடட்டும்.  மாரிக்காலத்தில் மேகம் சூல் கொண்டு கன்னங்கரேல் என்று   நிறைய மழை நீரை   மடியில் தாங்கிக்கொண்டு கீழே பூமியை தொடும்படி இறங்கி வருமே  அது போல் என்னுள்ளே  உள்ள சகலத்தையும்,   நல்லது கெட்டது எல்லாவற்றையும் சுமந்து என் உடல் உன் வாசலில்  நெடுஞ்சாண்கிடையாக விழட்டும். 
இந்த ஒரு நமஸ்கரத்தில் நான் இதுவரை  எண்ணி எழுதிய  பலவித  உணர்ச்சிகள் சேர்ந்த கவிதைகள் எல்லாம் ஒன்று கலந்து மௌனக்கடலில் ஒரே சீராக  அசைந்து உன் திருவடியில் கலக்கட்டும். வானத்தில்  தொலை தூரம்  பறந்து ஒரு  நாரைக் கூட்டம்  மலைகளை கடந்து தனது கூட்டுக்கு தஞ்சம் அடைய திரும்பும் அது தான் நான். எனது ஒரே தஞ்சம் நின் திருவடி தான். 
என்  சகல உணர்வுகளும் ஒன்று கலந்து உரு விழந்து, உன்னை வணங்கி உன் திருவடிகளில் இந்த உலகத்தை தொடட்டும்.

sivan jaykay

unread,
Aug 26, 2021, 6:42:07 AM8/26/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீமந் நாராயணீயம்   -  நங்கநல்லூர்  J K  SIVAN 
37வது தசகம் 

37. கம்ஸன்  கேட்ட அசரீரி வாக்கு 

என் இனிய  வாசக சகோதர சகோதரிகளே,  நாம்  ஸ்ரீமந்  நாராயணீயத்தில் இப்போது 37வது தசகத்தில் நுழைகிறோம்.  இன்றுமுதல் 88வது தசகம் வரை  ஸ்ரீ கிருஷ்ணனின் சரித்திரம் ஒவ்வொரு  நாளும், அவனைப்போலவே வளரும்.  ஸ்ரீ குருவாயூரப்பன் சந்நிதியில்  மேப்பத்தூர்  நாராயண பட்டத்ரி  அவனுக்கு அவன்  சரித்திரத்தையே   ஆனந்தமாக ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களில் ,  பத்து பத்தாக  (தசகங்களாக) பாடுவதை  கேட்க, படிக்க, ரசிக்க  நாம்  கொடுத்து வைத்தவர்கள்.

सान्द्रानन्दतनो हरे ननु पुरा दैवासुरे सङ्गरे
त्वत्कृत्ता अपि कर्मशेषवशतो ये ते न याता गतिम् ।
तेषां भूतलजन्मनां दितिभुवां भारेण दूरार्दिता
भूमि: प्राप विरिञ्चमाश्रितपदं देवै: पुरैवागतै: ॥१॥

saandraanandatanO hare nanu puraa daivaasure sangare
tvatkR^ittaa api karmasheSha vashatO ye te na yaataa gatim |
teShaaM bhuutalajanmanaaM ditibhuvaaM bhaareNa duuraarditaa
bhuumiH praapa viri~nchamaashritapadaM devaiH puraivaagataiH ||1

ஸாந்த்³ரானந்த³தனோ ஹரே நனு புரா தை³வாஸுரே ஸங்க³ரே
த்வத்க்ருத்தா அபி கர்மஶேஷவஶதோ யே தே ந யாதா க³திம் |
தேஷாம் பூ⁴தலஜன்மனாம் தி³திபு⁴வாம் பா⁴ரேண து³ரார்தி³தா
பூ⁴மி꞉ ப்ராப விரிஞ்சமாஶ்ரிதபத³ம் தே³வை꞉ புரைவாக³தை꞉ || 37-1 ||

''என்னப்பா குட்டி கிருஷ்ணா , நீ மஹா விஷ்ணு என்று எல்லோருக்கும் தெரியும். தேவர்களுக்கும்   அசுரர்களுக்கும் எப்போதும் நடக்கும் யுத்தத்தில்  நீ பங்கேற்று பல அசுரர்களை அழித்தாய் என்பது    வாஸ்தவம் .  சிலரது  கர்மா அவரவர் நல்ல கெட்ட காரியங்களுக்கு ஏற்ப பூமியில் பிறவி எடுக்க வைக்கிறது.   அதெல்லாம்  கணக்கு தீருவதற்கு முன்பு  அவர்கள் முக்தி அடைவது என்பது  நடக்காதே.   
இப்படிப்பட்ட  அரக்கர்கள் பூமியில்  அதிகமாகி  பூமா தேவி பாரம் தாங்கமுடியாமல் திணறினாள்.   ஒருநாள்  பூமாதேவி  தேவர்களோடு சேர்ந்து பிரம்மாவிடம் முறையிட்டாள்.

हा हा दुर्जनभूरिभारमथितां पाथोनिधौ पातुका-
मेतां पालय हन्त मे विवशतां सम्पृच्छ देवानिमान् ।
इत्यादिप्रचुरप्रलापविवशामालोक्य धाता महीं
देवानां वदनानि वीक्ष्य परितो दध्यौ भवन्तं हरे ॥२॥

haa haa durjana bhuuribhaaramathitaaM paathO nidhau paatukaaM
etaaM paalaya hanta me vivashataaM sampR^ichCha devaanimaan |
ityaadi prachura pralaapa vivashaamaalOkya dhaataa mahiiM
devaanaaM vadanaani viikshya paritO dadhyau bhavantaM hare ||2

ஹா ஹா து³ர்ஜனபூ⁴ரிபா⁴ரமதி²தாம் பாதோ²னிதௌ⁴ பாதுகா-
மேதாம் பாலய ஹந்த மே விவஶதாம் ஸம்ப்ருச்ச² தே³வானிமான் |
இத்யாதி³ப்ரசுரப்ரலாபவிவஶாமாலோக்ய தா⁴தா மஹீம்
தே³வானாம் வத³னானி வீக்ஷ்ய பரிதோ த³த்⁴யௌ ப⁴வந்தம் ஹரே || 37-2 ||

''ப்ரம்மதேவா, இனியும் என்னால்  தாங்க முடியாதப்பா.  வேறு வழியில்லாமல்  உன்னிடம் வந்து இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று வேண்டுகிறேன்.  ஐயோ, இந்த அசுரர்களின் பாரம் தாங்க முடியாத நிலைக்கு என்னை தள்ளி விட்டதே என் செய்வேன். என்னை  கடலில் மூழ்கடிக்கும் நிலை வந்து விடுமோஎன்று அஞ்சுகிறேன். என்னை நம்பி வாழும் உயிர்களைக்  காப்பாற்ற வேண்டாமா?  என் துன்பம் இங்கு கூடியுள்ள  தேவர்களுக்கும் நன்றாக தெரியும். கேட்டுப்பார்.''

 பிரம்மாவுக்கு  பூமா தேவியின்  கஷ்டம் புரிந்தது. இரக்கம் வந்தது.  தேவர்களை நோட்டம் விட்டபோது அவர்கள்  செய்வதறியாது தலை குனிந்து நிற்பதை கண்டு மனம் வருந்தினார்.  பிரம்மாவுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் தீர்ப்பதற்கு உன்னைத்  தானே  தியானிப்பார்?  கிருஷ்ணா,  நாராயணனான  உனக்கு எல்லாம் தெரியும். காலம் வரட்டும் என்று காத்திருந்தாய்.

ऊचे चाम्बुजभूरमूनयि सुरा: सत्यं धरित्र्या वचो
नन्वस्या भवतां च रक्षणविधौ दक्षो हि लक्ष्मीपति: ।
सर्वे शर्वपुरस्सरा वयमितो गत्वा पयोवारिधिं
नत्वा तं स्तुमहे जवादिति ययु: साकं तवाकेतनम् ॥३॥

uuche chaambuja bhuuramuunayi suraaH satyaM dharitryaa vachO
nanvasyaa bhavataaM cha rakshaNavidhau dakshO hi lakshmiipatiH |
sarve sharvapurassaraa vayamitO gatvaa payO vaaridhiM
natvaa taM stumahe javaaditi yayussaakaM tavaaketanam ||3

ஊசே சாம்பு³ஜபூ⁴ரமூனயி ஸுரா꞉ ஸத்யம் த⁴ரித்ர்யா வசோ
நன்வஸ்யா ப⁴வதாம் ச ரக்ஷணவிதௌ⁴ த³க்ஷோ ஹி லக்ஷ்மீபதி꞉ |
ஸர்வே ஶர்வபுரஸ்ஸரா வயமிதோ க³த்வா பயோவாரிதி⁴ம்
நத்வா தம் ஸ்துமஹே ஜவாதி³தி யுய꞉ ஸாகம் தவாகேதனம் || 37-3 ||

''தேவர்களே, பூமா தேவி சொல்வது அத்தனையும்  உண்மை. இது சாதாரண விஷயம் இல்லை.  இதற்கு பரிகாரம் தேடவேண்டுமானால்  மஹா விஷ்ணு ஒருவருக்கு தான்  அந்த சக்தி உண்டு. இந்த ப்ரபஞ்சத்திற்கே காக்கும் தெய்வம் அவர் ஒருவர் தான். நாம் அனைவரும் இந்த அவசர நிலைமை யை  அவருக்கு  அறிவித்து உடனே  இதை நிவர்த்தி செய்ய  வேண்டும் என்று கோரிக்கை விடுப்போம். நாம்  பரமேஸ்வரனை முதலில் சென்று அவரிடமும்  விஷயத்தை எடுத்துச் சொல்லி அவரையும் அழைத்துக்கொண்டு  பாற்கடலுக்கு செல்வோம்.  மஹா விஷ்ணு இதற்கு மேல்  நேரம் வீணாகாமல்,  தக்க  நடவடிக்கை எடுப்பார்'' என்கிறார் ப்ரம்மா.

''நாராயணா, எல்லோரும்  தீர்மானித்தபடியே உன்னை தியானித்தவாறு பாற்கடலில்  உன்னைக் காண  வந்தார்கள். 

ते मुग्धानिलशालिदुग्धजलधेस्तीरं गता: सङ्गता
यावत्त्वत्पदचिन्तनैकमनसस्तावत् स पाथोजभू: ।
त्वद्वाचं हृदये निशम्य सकलानानन्दयन्नूचिवा-
नाख्यात: परमात्मना स्वयमहं वाक्यं तदाकर्ण्यताम् ॥४॥

te mugdhaanilashaali dugdhajaladhestiiraM gataaH sangataaH
yaavattvatpadachintanaika manasastaavatsa paathOjabhuuH |
tvadvaachaM hR^idaye nishamya sakalaan aanandayannuuchivaan
aakhyaataH paramaatmanaa svayamahaM vaakyaM tadaakarNyataam ||4

தே முக்³தா⁴னிலஶாலிது³க்³த⁴ஜலதே⁴ஸ்தீரம் க³தா꞉ ஸங்க³தா
யாவத்த்வத்பத³சிந்தனைகமனஸஸ்தாவத்ஸ பாதோ²ஜபூ⁴꞉ |
த்வத்³வாசம் ஹ்ருத³யே நிஶம்ய ஸகலானானந்த³யன்னூசிவா-
நாக்²யாத꞉ பரமாத்மனா ஸ்வயமஹம் வாக்யம் ததா³கர்ண்யதாம் || 37-4 ||

மஹா விஷ்ணுவை தியானித்து  ப்ரம்மா பூமாதேவியின்  வேண்டுகோளை தெரிவித்தார். அப்போது  பிரம்மாவிடம்  நீ என்ன சொன்னாய் என்று ஞாபகம் இருக்கிறதா. உண்ணி  கிருஷ்ணா?

जाने दीनदशामहं दिविषदां भूमेश्च भीमैर्नृपै-
स्तत्क्षेपाय भवामि यादवकुले सोऽहं समग्रात्मना ।
देवा वृष्णिकुले भवन्तु कलया देवाङ्गनाश्चावनौ
मत्सेवार्थमिति त्वदीयवचनं पाथोजभूरूचिवान् ॥५॥

jaane diinadashaamahaM diviShadaaM bhuumeshcha bhiimairnR^ipai
statkshepaayabhavaami yaadavakule sO(a)haM samagraatmanaa |
devaa vR^iShNikule bhavantu kalayaa devaanganaashchaavanau
matsevaarthamiti tvadiiya vachanaM paathOjabhuuruuchivaan ||5

ஜானே தீ³னத³ஶாமஹம் தி³விஷதா³ம் பூ⁴மேஶ்ச பீ⁴மைர்ன்ருபை-
ஸ்தத்க்ஷேபாய ப⁴வாமி யாத³வகுலே ஸோ(அ)ஹம் ஸமக்³ராத்மனா |
தே³வா வ்ருஷ்ணிகுலே ப⁴வந்து கலயா தே³வாங்க³னாஶ்சாவனௌ
மத்ஸேவார்த²மிதி த்வதீ³யவசனம் பாதோ²ஜபூ⁴ரூசிவான் || 37-5 ||

''ப்ரம்ம தேவா,  தேவர்கள்,பூமாதேவி   ஆகியோர்  கொடிய  ராக்ஷசர்களால், பூமியில் அனுபவிக்கும் துன்பங்களை நான் அறிந்து கொண்டேன்.  இது நானே  பொறுப்பேற்று நிறைவேற்ற வேண்டிய  காரியம் என்பதால்  நானே பூமியில் யாதவ குலத்தில்  அவதரிப்பேன்.  தேவர்கள் அப்ஸரஸ்கள் எல்லோரும் விருஷ்ணி குலத்தில் பிறப்பார்கள். அவர்களுடைய சக்தியை, உதவியை எனக்கு அளிப்பார்கள்.  இது விரைவில் நடந்தேறும்.  நீங்கள் நிம்மதியாக  சந்தோஷமாக  சென்று வாருங்கள்'' என்றாய் .

श्रुत्वा कर्णरसायनं तव वच: सर्वेषु निर्वापित-
स्वान्तेष्वीश गतेषु तावककृपापीयूषतृप्तात्मसु ।
विख्याते मधुरापुरे किल भवत्सान्निध्यपुण्योत्तरे
धन्यां देवकनन्दनामुदवहद्राजा स शूरात्मज: ॥६॥

shrutvaa karNarasaayanaM tava vachassarveShu nirvaapitasvaanteShviisha
gateShu taavakakR^ipaa piiyuuShatR^iptaatmasu |
vikhyaate madhuraapurekila bhavatsaannidhya puNyOttare
dhanyaaM devakanandanaamudavahadraajaa sa shuuraatmajaH ||6

ஶ்ருத்வா கர்ணரஸாயனம் தவ வச꞉ ஸர்வேஷு நிர்வாபித-
ஸ்வாந்தேஷ்வீஶ க³தேஷு தாவகக்ருபாபீயூஷத்ருப்தாத்மஸு |
விக்²யாதே மது²ராபுரே கில ப⁴வத்ஸான்னித்⁴யபுண்யோத்தரே
த⁴ன்யாம் தே³வகனந்த³னாமுத³வஹத்³ராஜா ஸ ஶூராத்மஜ꞉ || 37-6 ||

''குருவாயூரப்பா,  நாராயணனாக,  நீ  கொடுத்த  ஆறுதல் மொழி,  தேவர்களுக்கும் பூமாதேவிக்கும்  காதில் தேனாகப்  பாய்ந்தது. ப்ரம்மா மகிழ்ந்தார்.அனைவரும்  வணங்கினார்கள்.  நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.  உன் கருணையைப்  போற்றினார்கள்.  அவரவர்  இடத்துக்கு திரும்பினார்கள்.   வடக்கே மதுரா என்று ஒரு  புண்ய நகரம். அதில்  சூர சேனன் எனும் ராஜாவின் மகன்  வசுதேவன். அவனுக்கும்  தேவகன்  எனும்  மற்றொரு அரசனின் மகள்  தேவகிக்கும் திருமணம்  நிச்சயமாகி  கோலாகலமாக நடந்தேறியது. 

उद्वाहावसितौ तदीयसहज: कंसोऽथ सम्मानय-
न्नेतौ सूततया गत: पथि रथे व्योमोत्थया त्वद्गिरा ।
अस्यास्त्वामतिदुष्टमष्टमसुतो हन्तेति हन्तेरित:
सन्त्रासात् स तु हन्तुमन्तिकगतां तन्वीं कृपाणीमधात् ॥७॥

udvaahaavasitautadiiya sahajaH kamsO(a)tha sammaanayan
etau suutatayaa gataH pathi rathe vyOmOtthayaa tvadgiraa |
asyaastvaamatiduShTamaShTamasutO hanteti hanteritaH
santraasaatsa tu hantumantikagataaM tanviiM kR^ipaaNiimadhaat ||7

உத்³வாஹாவஸிதௌ ததீ³யஸஹஜ꞉ கம்ஸோ(அ)த² ஸம்மானய-
ந்னேதௌ ஸூததயா க³த꞉ பதி² ரதே² வ்யோமோத்த²யா த்வத்³கி³ரா |
அஸ்யாஸ்த்வாமதிது³ஷ்டமஷ்டமஸுதோ ஹந்தேதி ஹந்தேரித꞉
ஸந்த்ராஸாத்ஸ து ஹந்துமந்திகக³தாம் தன்வீம் க்ருபாணீமதா⁴த் || 37-7 ||

தேவகிக்கு ஒரு சகோதரன். பலிஷ்டன்.  கம்சன் என்று பெயர். மதுராவின்  அரசன்.  அவன் தனது சகோதரி திருமணத்தை தானே முன்னின்று விமரிசையாக நடத்தினான்.  திருமண ஊர்வலத்தில் தானே  தேவகி  வசுதேவர் இருவரையும்  அலங்கரித்த  தேரில்  அமர்த்தி,  தேரை ஓடிவந்தான்.   கம்சன் கொடிய அசுர ராஜன்.  தேரை அவன் ஓட்டிச்  செல்லும்போது  பாதி வழியில்  அவன் காதில் ஒரு அசரீரி  சொல்வது  கேட்டது.  அது அழுத்தமாக சொல்லியதைக்  கேட்டு ஸ்தம்பித்தான். 
'ஹே , கம்ஸா , கொடியவனே , உன் முடிவு நெருங்கிவிட்டதடா. நாளை எண்ணிக்கொள்.  உன் சகோதரி தேவகியின் வயிற்றில் பிறக்கப்போகும்  எட்டாவது மகன் தான் உனக்கு யமன். ''  கம்சனுக்கு மிகப்பெரிய  அதிர்ச்சி இது.  முகம் வியர்த்து வெளிறியது.  ''ஆஹா  அப்படியா சேதி.  என் உடன் பிறந்தவளே , உன் வயிற்றில் எட்டாவதாக பிறக்கப்போகிறவன் தானே என்னைக் கொல்பவன் அதற்கு முன்,  காத்திருக்காமல் உன்னையே கொன்றுவிடுகிறேன் என்று   தேரை நிறுத்தி உடைவாளை  உருவினான்.  

गृह्णानश्चिकुरेषु तां खलमति: शौरेश्चिरं सान्त्वनै-
र्नो मुञ्चन् पुनरात्मजार्पणगिरा प्रीतोऽथ यातो गृहान् ।
आद्यं त्वत्सहजं तथाऽर्पितमपि स्नेहेन नाहन्नसौ
दुष्टानामपि देव पुष्टकरुणा दृष्टा हि धीरेकदा ॥८॥

gR^ihNaanashchikureShu taaM khalamatiH shaureshchiraM saantvanairnO
mu~nchan punaraatmajaarpaNagiraa priitO(a)tha yaatO gR^ihaan |
aadyaM tvatsahajaM tathaarpitamapi snehena naahannasau
duShTaanaamapi deva puShTakaruNaa dR^iShTaa hi dhiirekadaa ||8

க்³ருஹ்ணானஶ்சிகுரேஷு தாம் க²லமதி꞉ ஶௌரேஶ்சிரம் ஸாந்த்வனை-
ர்னோ முஞ்சன்புனராத்மஜார்பணகி³ரா ப்ரீதோ(அ)த² யாதோ க்³ருஹான் |
ஆத்³யம் த்வத்ஸஹஜம் ததா²ர்பிதமபி ஸ்னேஹேன நாஹன்னஸௌ
து³ஷ்டானாமபி தே³வ புஷ்டகருணா த்³ருஷ்டா ஹி தீ⁴ரேகதா³ || 37-8 ||

திருமண அலங்காரத்தோடு தேரில் அமர்ந்திருந்த தேவகியின் தலை முடியைப்  பிடித்து இழுத்தான். கழுத்தை சாய்த்து  வாளால் வெட்ட கையை ஓங்கினான்.  அதிர்ந்து போன  மாப்பிள்ளை வசுதேவன் , கெஞ்சினான். ''கம்சா  கொஞ்சம் அமைதியாக இரு. பொறு. ஆத்திரம் வேண்டாம்.  எதற்கு ஒன்றும் அறியாத உன் அன்பு சகோதரியை  கொல்லவேண்டும் . உனக்கு அவளாலோ, என்னாலோ  எந்த ஆபத்தும் இல்லையே. அவள் வயிற்றில் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தை தானே தீங்கு விளைவிக்கும். நான் இதோ உன்னிடம் சத்யம் செயகிறேன். அனைவரும் அறிய  இதை ஏற்றுக்கொள். தேவகிக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளும் உன்னிடம் பிறந்தவுடனேயே கொடுக்கப்படும். நீ என்ன வேண்டுமானாலும்  அதைச் செய்து கொள்ளலாம். இனி உனக்கு என்ன கவலை?' 

நல்லவேளை,  கம்ஸன்  சமாதானமானான். அவனது நேரடிப்பார்வையில் இருக்க  வசுதேவரையும் , தேவகியையும் மதுராபுரி  அரண்மனையில் சிறையில் வைத்தான்.   முதலாவதாக  பிறந்த குழந்தையை கொல்லாமல்  விட்டான். கல்லினுள்ளும் ஈரம் இருக்கிறது. 

तावत्त्वन्मनसैव नारदमुनि: प्रोचे स भोजेश्वरं
यूयं नन्वसुरा: सुराश्च यदवो जानासि किं न प्रभो ।
मायावी स हरिर्भवद्वधकृते भावी सुरप्रार्थना-
दित्याकर्ण्य यदूनदूधुनदसौ शौरेश्च सूनूनहन् ॥९॥

taavattvanmanasaiva naaradamuniH prOche sa bhOjeshvaraM
yuuyaM nanvasuraaH suraashcha yadavO jaanaasi kiM na prabhO |
maayaavii sa harirbhavadvadhakR^itebhaavii surapraarthanaadityaakarNya
yaduunaduudhunadasau shaureshcha suunuunahan ||9

தாவத்த்வன்மனஸைவ நாரத³முனி꞉ ப்ரோசே ஸ போ⁴ஜேஶ்வரம்
யூயம் நன்வஸுரா꞉ ஸுராஶ்ச யத³வோ ஜானாஸி கிம் ந ப்ரபோ⁴ |
மாயாவீ ஸ ஹரிர்ப⁴வத்³வத⁴க்ருதே பா⁴வீ ஸுரப்ரார்த²னா-
தி³த்யாகர்ண்ய யதூ³னதூ³து⁴னத³ஸௌ ஶௌரேஶ்ச ஸூனூனஹன் || 37-9 ||

அப்போது தான்  உன்  நாடகம் நிறைவேறியது.  நாரதர்,  நீ  அறிவுறுத்தியபடியே,  கம்சனை சந்திக்கிறார்.  '' கம்ஸா, நீங்கள் எல்லோரும் அசுரர் குலத்தை சேர்ந்தவர்கள். யாதவர்கள் தேவர்கள் வம்சம்.   மஹாராஜா,  உனக்கு தெரியுமா?  அந்த மஹா விஷ்ணு , தேவர்கள் முறையிட்டபடியால்,  பூமியில் பிறந்து உன்னைக் கொல்லப்போகிறார்''  இதைக் கேட்ட  கம்ஸன்  வெகுண்டான். அந்த மனதில் இருந்த அன்பு மறைந்தது.  வசுதேவர் தேவகிக்கு பிறந்த எல்லா குழந்தைகளையும்  கொல்ல  ஆரம்பித்தான்.  

प्राप्ते सप्तमगर्भतामहिपतौ त्वत्प्रेरणान्मायया
नीते माधव रोहिणीं त्वमपि भो:सच्चित्सुखैकात्मक: ।
देवक्या जठरं विवेशिथ विभो संस्तूयमान: सुरै:
स त्वं कृष्ण विधूय रोगपटलीं भक्तिं परां देहि मे ॥१०॥

praapte saptamagarbhataamahipatau tvatpreraNaanmaayayaa
niite maadhava rOhiNiiM tvamapi bhOH sachchitsukhaikaatmakaH |
devakyaa jaTharaM viveshitha vibhO samstuuyamaanaH suraiH
sa tvaM kR^iShNa vidhuuya rOgapaTaliiM bhaktiM paraaM dehi me ||10

ப்ராப்தே ஸப்தமக³ர்ப⁴தாமஹிபதௌ த்வத்ப்ரேரணான்மாயயா
நீதே மாத⁴வ ரோஹிணீம் த்வமபி போ⁴꞉ ஸச்சித்ஸுகை²காத்மக꞉ |
தே³வக்யா ஜட²ரம் விவேஶித² விபோ⁴ ஸம்ஸ்தூயமான꞉ ஸுரை꞉
ஸ த்வம் க்ருஷ்ண விதூ⁴ய ரோக³படலீம் ப⁴க்திம் பராம் தே³ஹி மே || 37-10 |

தேவகியின் வயிற்றில்  ஏழாவது குழந்தையாக  ஆதிசேஷனை  கருவுற்றாள். மாதவா, உன் அறிவுரைப்படி, யோக மாயா தேவி , கருவை  தேவகியின் வயிற்றிலிருந்து  கோகுலத்திலிருந்த ரோஹிணியின்  வயிற்றுக்கு மாற்றிவிட்டாள் . தேவகியின் கருவில்  யோகமாயா குடிபுகுந்தாள் .  அற்புதங்கள்  நிகழ்த்தியவனே, பரந்தாமா,  என் நோயை நீக்கி என்னையும் நீ ரக்ஷிக்க வேண்டும் என  உன்மீதுள்ள அளவுகடந்த  பக்தியோடு வேண்டுகிறேன். 

sivan jaykay

unread,
Aug 26, 2021, 6:42:42 AM8/26/21
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN

67   சித்தூர்,  வேலூர்  விஜய யாத்திரை. 

மஹா பெரியவா சித்தூர் வருகிறார் என்கிற சேதி அந்த பகுதி வாழ் பக்தர்களுக்கு  ஆனந்தத்தை அளித்தது.  ஆந்திராவில் சந்திரகிரி மண்டலத்தை சேர்ந்த இந்த  ஊர் மூன்று  ஆறுகள்  சங்கமமாகும் ஸ்தலம். ஸ்வர்ணமுகி, கல்யாணி, பீமா என்பவை அவை.தொண்டவடா   என்ற அந்த ஸ்தலத்தில்  அகஸ்தீஸ்வர சுவாமி ஆலயம் ரொம்ப புராதனமானது.  திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து  பொடி நடையாக  15 நிமிஷத்தில் அடைந்துவிடலாம்.  அகஸ்தியரால் ஸ்தாபிக்கப்பட்டு  பூஜிக்கப்பட்ட சிவாலயம்.  மூன்று வாசல்கள். துவாரபாலகர்கள் அழகாக  செதுக்கப்பட்ட சிலைகள். ரெண்டாவது பிரகாரத்தில் பார்வதி அம்மன் சந்நிதி.  அம்பாளுக்கு  வள்ளி மாதா என்ற பெயர்.  ஆலய எதிரில்  ஆழமான  ஆறு. அதன் மத்தியில் நீராழி மண்டபம். ,மண்டபத்தில்  பாலாஜி, ஐயப்பன் , கணேசர் விக்ரஹங்கள்.

ஸ்ரீ அகத்திய பெருமானால் பூஜிக்கப்பட்டு நிறுவப்பட்ட லிங்கங்களுள் ஒன்று அகஸ்தீஸ்வரர் ஆலய லிங்கம். .விஷ்ணுபகவானின் பாத தரிசனமும் பகவானின் சிலையும் முன்னே இருக்க சிவபெருமான் லிங்கமாக பின்னே இருக்கிறார்..

 மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீனிவாசப் பெருமாள் லக்ஷ்மியின் அவதாரமான பத்மாவதித் தாயாரை நாராயண வனம் என்கிற இடத்தில் திருமணம் முடித்து,  ஸ்ரீனிவாச மங்காபுரம் அருகில்  உள்ள இந்த தொண்டவடா கிராமத்தில் பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் உள்ளது.   இந்த சிவாலயம் திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து 11.8 கி.மீ., தூரத்தில் உள்ளது.  சந்திரகிரி அரண்மனை போகும் முன்னே தொண்டவடா ஊர் போக சாலை சந்திப்பு வரும் சந்திப்பில் இருந்து 2km தூரத்தில் கோவில் உள்ளது.

சித்தூரில் மஹா பெரியவா தங்குவதற்கு  வியாச மண்டபம் தயாரானது.  அகஸ்தீஸ்வரன் ஆலயம் எதிரே அது உருவாயிற்று. வியாச பூஜைக்கு முதல் நாள்  மஹா பெரியவா வந்துவிட்டார்.  கோலாகலமான வரவேற்பு. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஜயம்.   பல்லக்கில்  நகர்வலம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.   சித்தூரை சேர்ந்த  அந்தகூர்  சுப்பிரமணிய  சாஸ்திரிகள், மடத்துக்கு பிரதம நிர்வாகி, வக்கீல் C . வெங்கட்ராம ஐயர், ஸ்வாமிகளை பூர்ண கும்பத்துடன் வரவேற்று வியாச ,மண்டபம் அழைத்துச் சென்றார்கள்.  பூஜை விமரிசையாக நடந்தது.  வியாச அக்ஷதை, பிரசாதம் அனைவருக்கும் அளிக்கப்பட்டது.

சாயந்திரம் வேதாந்த  மாநாடு நடந்தது.  அதில் மைலாப்பூர்   ஸம்ஸ்க்ரித கல்லூரி  தலைவர்  வேதாந்த விபூஷணம் கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகள் தலைமை வகித்தார். வேதாந்த தர்க்கத்தில் பங்கு கொண்ட மற்றும் சிலர் பெயர்கள்:  சாஸ்த்ர  ரத்நாகர திருவையாறு விஸ்வநாத சாஸ்திரிகள்,  புளகம் ராம சாஸ்திரிகள், வரகூர்  வெங்கட்ராம  சாஸ்திரிகள்,  பக்ஷி தீர்த்தம்   T  A  வெங்கடேச தீக்ஷிதர், மதுரை  K V  சுப்ரமணிய சாஸ்திரிகள்  மடத்து ஆஸ்தான வித்வான்  லக்ஷ்மி  நாராயண சாஸ்திரிகள்,  ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  ப்ரம்ம ஸ்ரீ  வெங்கடேச தீக்ஷிதர் மஹா பெரியவா மீது தான்  இயற்றிய  15 ஸ்லோகங்களை வாசித்தார். சபையில் அனைவருக்கும் ஸமஸ்க்ரிதம்  தெரியாது அல்லவா? ஆகவே  அர்த்தத்தை விளக்கினார்.  
கோவில்களி  லிருந்தெல்லாம்  அர்ச்சகர்கள் ப்ரசாதத்துடன்  மஹா பெரியவா  தரிசனம் பெற வந்தார்கள்.  சித்தூர் முழுதும் ஆனந்த  பரவசத்தில் இருந்தது என்பது வாஸ்தவம்.  

மஹா பெரியவா சித்தூரில் ரெண்டு மாச காலம் தங்கி இருந்து அனைவருக்கும்  தரிசனம் கொடுத்து எல்லோருடனும் பேசினார். சாதுர்மாஸ்ய விரதம் பூர்த்தியாயிற்று.  

1931ம் வருஷம்  செப்டம்பர் மாதம் 26ம் தேதி  சாதுர்மாஸ்யம் முடிந்து  மஹா பெரியவா பரிவாரத்தோடு    முருக்கம்பட்டு  கிராமம் சென்றார். இது   எங்கிருக்கிறது என்று  என்னால் தேட முடியவில்லை.  சந்திர கிரஹணம்  என்பதால் அங்கே  ஸ்நானம் செய்ய சென்றார்.  மறுநாள் காலை விஸ்வரூப யாத்ரா துவங்கிற்று.  

''மஹா பெரியவா,  நீங்க  இங்கே  நவராத்திரிக்கும்  இருக்கணும்''  என்று பக்தர்கள் வேண்டிக் கொண்டார்கள்.  

''ஆஹா  வருகிறேன்''  என்று   அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி  மஹா பெரியவா அக்டோபர்  1931, 12ம் தேதி சித்தூரில்   நவராத்ரி  வைபவத்தை  கொண்டாட  அக்டோபர் மாதம் பூரா அங்கே இருந்தார்.

பிறகு தான் அங்கிருந்து  குடியாத்தம், வைத்தியநாத குப்பம், காட்பாடி, வழியாக சென்று  வேலூர் விஜயம் நடைபெற்றது.   டிசம்பர்  மாதம் 22தேதி வரை  மஹா பெரியவா வேலூரில் இருந்தார் . அவர்  வாசம் செய்த  இடம்  தோட்டப்பாளையம் ஸ்ரீதாரகேஸ்வரர் கோயில். 

இந்த  ஆலயம் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்தது என்கிறார்கள்.   தோட்டப்பாளையம் ஸ்ரீஅபயாம்பிகை சமேத தாரகேஸ்வரர் கோயிலின் நூற்றாண்டு பழமை வாய்ந்த தேர் பழுதடைந்து கவனிப்பாரின்றி சிதிலமடைந்து போனதால் கடந்த 20 ஆண்டுகளாக தேர்த்  திருவிழாவே நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்து சமய அற  நிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தாரகேஸ்வரர் கோயிலுக்கு ஏராளமான சொத்துக்கள் மூலம் வருவாய் இருந்தும் புதிய திருத்தேரை உருவாக்குவதில் இந்து சமய அறநிலையத்துறை மெத்தனம் காட்டியது. நன்கொடையாளர்கள் முன்வந்து திருத்தேரை உருவாக்குவதாக கூறியும் தேர் செய்வதற்கான நடவடிக்கைகள் மெத்தனமாக நடந்து வந்தது. இது வழக்கமாக  நடப்பதால் எல்லோரும் மறந்து போய்விட்டோம்.  இப்போது  கவலைப்படவேண்டிய  அறநிலையத்துறையோ,  பொதுமக்களோ கவலைப்படாத  ஒரு கோயிலாகத்தான்  அநேகம் உள்ளன. அதில் ஒன்றோ  என்னவோ இந்த  தோட்டப்பாளையம்   தாரகேஸ்வரர்  ஆலயம். வேலூர் காரர்கள் யாராவது இந்த ஆலயம் பற்றி எனக்கு சொல்லுங்களேன்.

மஹா பெரியவா  வேலூர்  விஜயத்திற்கு பெரிதும்  உதவி ஏற்பாடுகள் செய்தவர்  வக்கீல்  கங்காதர சாஸ்திரிகள். மஹா பெரியவா வழக்கம்போல் ஒவ்வொரு  சாயங்காலமும்  பிரசங்கம் செய்து ஆயிரக்கணக்கான  பக்தர்கள் பயனுற்றனர்.  

தொடரும் 

sivan jaykay

unread,
Aug 26, 2021, 6:42:53 AM8/26/21
to amrith...@googlegroups.com
தசரத புத்ரன்  -   நங்கநல்லூர் J K  SIVAN 

கோஸ்வாமி துளசிதாசர் தசரதரை பற்றி ஒரு ரசமான செய்தி கூறுகிறார். தசரதருடைய முற்பிறவியில் அவர்  தான்  ப்ரம்மாவின் புத்ரர்களில் ஒருவரான  ஸ்வயம்பு மனு.    இந்த ஸ்வயம்பு மனு தான் பின்னர்  திரேதாயுகத்தில் தசரத மஹா சக்கரவர்த்தி.   ஸ்ரீமந்  நாராயணன்  ஸ்வயம்பு மனுவுக்கு ஒரு தரம் அவர்  வேண்டியபடி ஒரு வரம் கொடுத்தார். அது என்ன தெரியுமா?
''ஸ்வயம்பு மனு,  உன்னுடைய  பூலோக பிறவி ஒன்றில் நான் நீ விரும்பியபடியே உனக்கு மகனாக பிறப்பேன் ''   ஆகவே தான்  ஸ்ரீமந்  நாராயணன்  ஸ்ரீ ராமனாக  தசரதர் மகனாக  அவதரித்தார்.  ஒவ்வொரு நிகழ்வு பின்னாலும் ஏதோ ஒரு சரித்திரம்  இருக்கிறது நமது  புராண நூல்களில்,  இதிகாசங்களில் எல்லாம்.  
நாரயணன் தனக்கு பிள்ளையாக  பிறக்க வாக்களித்ததில் ஸ்வயம்பு மனுவுக்கு பரம சந்தோஷம். அப்போது ஒரு வரம் கேட்டார். அது என்ன?
“சுவாமி! என்னை யாராவது பைத்தியக்காரன் என்று சொன்னால் சொல்லட்டும். ஆனாலும் தாங்கள் எனக்கு பிள்ளையாக பிறக்கும் போது ஒரு தகப்பனுக்கு ஒரு பிள்ளையிடம் எந்த அளவுக்கு  பாசம், அன்பு,  இருக்க வேண்டுமோ, அது  மட்டும் இருக்கட்டும்.” 
“ஆஹா, நீ விரும்பியபடியே  ஆகட்டும் ''என்று நாராயணனும் அருள் புரிந்தார். ராமனைப் புத்திரனாகப் பெற்ற தசரதர் அவரிடம் எவ்வளவு பிள்ளை பாசம் கொண்டார். பிள்ளையின் பிரிவு தாங்காமல் எப்படி பிராணனை விட்டார் என்பது நாம் ராமாயணத்தில் அறிகிறோமே .

sivan jaykay

unread,
Aug 30, 2021, 7:45:17 PM8/30/21
to amrith...@googlegroups.com

ஸ்ரீ மந்  நாராயணீயம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
38வது தசகம் 

38. எல்லாம் மாயை தானா?

நான்  எந்த  பிளானும்  PLAN பண்ணவில்லை.  எல்லாமே தானாகவே நடக்கிறது. இதுவும் என்னை ஆட்டிவைக்கும் கிருஷ்ணனின்  லீலை தான். சந்தேகமே இல்லை.  நாராயணீயம் எழுத ஆரம்பித்து 40 நாளுக்கு மேல் ஆகி இருக்கும்.  இன்று 38 வது தசகம். இன்னும் ரெண்டு நாளில் கிருஷ்ண ஜெயந்தி. இந்த நேரத்திலா  நாராயணீயத்தில்  கிருஷ்ண ஜனனம் தசகம் எழுத நேரிடவேண்டும்?!!! நான் அப்படி ஒரு திட்டம் மனதில் வகுக்கவே இல்லையே. 38வது தசகத்தில் என்ன வரப்போகிறது என்று கூட எனக்கு தெரியாதே.  புதிதாக  அப்பப்போ படித்து விட்டு அல்லவோ ஒவ்வொரு  நாளும் எழுதுகிறேன். இதற்கு முன்  படித்ததில்லையே. 

இதோ இன்னும்  48 மணி நேரத்தில்  கிருஷ்ணன்  பிறக்கப்போகிறான். ஆவணி மாதம்  ரோகிணி  நக்ஷத்ரம்  அன்று கிருஷ்ண ஜெயந்தி என்று  அவன் கம்சன் அரண்மனையில் சிறையில் வாடும் வசுதேவர் தேவகியின்  எட்டாவது மகனாக பிறந்ததை வருஷா வருஷம்  செய்வதைப்  போல்  ஆனந்தமாக கொண்டாடப் போகிறோம்.   கருப்பனான  ஸ்ரீ கிருஷ்ணன்  சிறையில் பிறந்தாலும் வளர்ந்தது கோகுலத்தில். 

आनन्दरूप भगवन्नयि तेऽवतारे
प्राप्ते प्रदीप्तभवदङ्गनिरीयमाणै: ।
कान्तिव्रजैरिव घनाघनमण्डलैर्द्या-
मावृण्वती विरुरुचे किल वर्षवेला ॥१॥

aananda ruupa bhagavannayi te(a)vataare
praapte pradiipta bhavadanganiriiyamaaNaiH |
kaantivrajairiva ghanaaghanamaNDalairdyaamaavR^
iNvatii viruruche kila varShavelaa ||1

ஆனந்த³ரூப ப⁴க³வன்னயி தே(அ)வதாரே
ப்ராப்தே ப்ரதீ³ப்தப⁴வத³ங்க³னிரீயமாணை꞉ |
காந்திவ்ரஜைரிவ க⁴னாக⁴னமண்ட³லைர்த்³யா-
மாவ்ருண்வதீ விருருசே கில வர்ஷவேலா || 38-1 ||

குருவாயூரில்  உண்ணி கிருஷ்ணன் தனியாக  நிற்கிறான். அவன் எதிரே  சற்று தூரத்தில் அவன் பார்வையில் அமர்ந்திருப்பவர் மேப்பத்தூர் நாராயண நம்பூதிரி.  வேறு யாருமே இல்லை.  இருவர் முகத்திலும் ஆனந்தம்.  ஏன்?   உண்ணி  கிருஷ்ணனுக்கு  தன்னுடைய  பிறப்பை பற்றி  நம்பூதிரி பாடுவதைக்  கேட்பதிலும்  நம்பூத்ரிக்கு  கிருஷ்ணனின் பிறப்பை பற்றி  தான் பாடுவதை அவனே ரசிப்பதிலும்  ஆனந்தம்.  

 ''கிருஷ்ணா நீ  அவதரிப்பதாக  வாக்கு கொடுத்த நேரம் வந்துவிட்டது. எங்கேயும்  வானில் இருண்ட  கரு மேகங்கள்.    எந்நேரமும் வானம் பொத்துக்கொண்டு ஜோ மழை பெய்யப்போகிறது.  விடாது எவ்வளவு நேரம் பெய்யுமோ? அந்த மேகங்கள் ஒன்றை ஒன்று இடித்துக்கொண்டபோது பளிச்சிட்டு  எழுந்த மின்னல்கள் உன் ஒளியா ? உன்னிடமிருந்து வெளிவந்த  சத்ய ஜோதியா?

आशासु शीतलतरासु पयोदतोयै-
राशासिताप्तिविवशेषु च सज्जनेषु ।
नैशाकरोदयविधौ निशि मध्यमायां
क्लेशापहस्त्रिजगतां त्वमिहाविरासी: ॥२॥

aashaasu shiitalataraasu payOda tOyairaashaasitaapti
vivasheShu cha sajjaneShu |
naishaakarOdayavidhau nishi madhyamaayaaM
kleshaapahasitrajagataaM tvamihaaviraasiiH ||2

ஆஶாஸு ஶீதலதராஸு பயோத³தோயை-
ராஶாஸிதாப்திவிவஶேஷு ச ஸஜ்ஜனேஷு |
நைஶாகரோத³யவிதௌ⁴ நிஶி மத்⁴யமாயாம்
க்லேஶாபஹஸ்த்ரிஜக³தாம் த்வமிஹா(அ)விராஸீ꞉ || 38-2 ||

வானம் வயிறு திறந்தது. ஹோ வென்று   அடை மழை.  எங்கும்  குளுமை.  நல்லோர்   இதயங்களும் அப்படித்தான்  குளிர்ந்திருந்தது.  அவர்கள்  ஆசை, விருப்பம் நிறைவேறப்போகிறதே.  இருள் மெதுவாக நகர்ந்து நள்ளிரவாயிற்று.  நீ உதித்தாய்.  அப்பாடா , இனி மூவுலகிலும் கஷ்டங்கள் நிவர்த்தியாகப்போகிறது. 

बाल्यस्पृशाऽपि वपुषा दधुषा विभूती-
रुद्यत्किरीटकटकाङ्गदहारभासा ।
शङ्खारिवारिजगदापरिभासितेन
मेघासितेन परिलेसिथ सूतिगेहे ॥३॥

baalyaspR^ishaa(a)pi vapuShaa dadhuShaa vibhuutii
rudyatkiriiTa kaTakaangada haarabhaasaa |
shankhaarivaarijagadaa paribhaasitena
meghaasitena parilesitha suutigehe ||3

பா³ல்யஸ்ப்ருஶாபி வபுஷா த³து⁴ஷா விபூ⁴தீ-
ருத்³யத்கிரீடகடகாங்க³த³ஹாரபா⁴ஸா |
ஶங்கா²ரிவாரிஜக³தா³பரிபா⁴ஸிதேன
மேகா⁴ஸிதேன பரிலேஸித² ஸூதிகே³ஹே || 38-3 ||

புதையல்  என்பது கருப்பாக  மண்ணோடு மண்ணாக  பூமியில் கலந்திருக்கும். எடுத்து சுத்தம் செய்தபின் தான் தங்கமா வைரமா என்று தெரியும்.  நீ கருப்பாக  இருட்டில், நடு ராத்திரியில் அதிக வெளிச்சமில்லாத சிறைச்சாலை அறையில்  மழலைச் செல்வமாகப்  பிறந்தாய்.   அஷ்ட ஐஸ்வர்ய  செல்வராணியின் கணவன்.  கருமேகம் போன்ற நிறம்.   ஆனால் உன் க்ரீடமோ,  கழுத்து, கைகளில் இருந்த ஆபரணங்களோ கண்ணைக்  கூசும்படியாக மின்னுகிறது.  உன் கரங்களில் இது தவிர்த்து பளிச்சிடும் சுதர்சன சக்ரம், வெண்ணிற  பாஞ்சஜன்யம்,  கௌமோதகி, நந்தக  வாள், செந்தாமரை,  எல்லாமே  படு ஜோராக ஒளிவீசுகின்றன. விதவிதமான கலர்கள் . 

वक्ष:स्थलीसुखनिलीनविलासिलक्ष्मी-
मन्दाक्षलक्षितकटाक्षविमोक्षभेदै: ।
तन्मन्दिरस्य खलकंसकृतामलक्ष्मी-
मुन्मार्जयन्निव विरेजिथ वासुदेव ॥४॥

vakshaHsthalii sukhaniliina vilaasi lakshmiimandaaksha
lakshita kaTaaksha vimOksha bhedaiH |
tanmandirasya khala kamsakR^itaamalakshmiimunmaarjayanniva
virejitha vaasudeva ||4

வக்ஷ꞉ஸ்த²லீஸுக²னிலீனவிலாஸிலக்ஷ்மீ-
மந்தா³க்ஷலக்ஷிதகடாக்ஷவிமோக்ஷபே⁴தை³꞉ |
தன்மந்தி³ரஸ்ய க²லகம்ஸக்ருதாமலக்ஷ்மீ-
முன்மார்ஜயன்னிவ விரேஜித² வாஸுதே³வ || 38-4 ||

அப்பா,   குருவாயூர் கிருஷ்ணா,  ப்ரபோ, நீ வசுதேவன் மகன் வாசுதேவன்.  உன் கண்கள் தயக்கத் தோடு, வெட்கத்தோடு  சிறை அறையை நோட்டம் விட்டது. உன் மார்பில் உறையும்  லட்சுமி தேவியின் வெட்கமோ,  இருண்ட  அந்த அறை  இனி இருட்டாகவா இருக்கும்?  கம்சனின் தீமைகள், கெடுதிகள், தீயவை எல்லாம்  தப்பித்தோம் பிழைத்தோம் என்று  ஒரே ஓட்டம் பிடிக்காதா?

शौरिस्तु धीरमुनिमण्डलचेतसोऽपि
दूरस्थितं वपुरुदीक्ष्य निजेक्षणाभ्याम् ॥
आनन्दवाष्पपुलकोद्गमगद्गदार्द्र-
स्तुष्टाव दृष्टिमकरन्दरसं भवन्तम् ॥५॥

shauristu dhiiramunimaNDala chetasO(a)pi
duurasthitaM vapurudiikshya nijekshaNaabhyaam |
aanandabaaShpa pulakOdgamagadgadaardrastuShTaava
dR^iShTimakarandarasaM bhavantam.5

ஶௌரிஸ்து தீ⁴ரமுனிமண்ட³லசேதஸோ(அ)பி
தூ³ரஸ்தி²தம் வபுருதீ³க்ஷ்ய நிஜேக்ஷணாப்⁴யாம் |
ஆனந்த³பா³ஷ்பபுலகோத்³க³மக³த்³க³தா³ர்த்³ர-
ஸ்துஷ்டாவ த்³ருஷ்டிமகரந்த³ரஸம் ப⁴வந்தம் || 38-5 ||

அப்பா,  கிருஷ்ணா,  உன் தரிசனம் கிடைக்காதா  என்று கல்பகோடி  காலம் தவம் இருக்கும் முனிவர்கள், ரிஷிகள் மஹான்கள் மூக்கு மேல் கை வைக்கும்படியாக, கொஞ்சமும் உன்னை எதிர்பாராத வசுதேவன் , தேவகி முன் நீ  தானாக வந்து பச்சிளங்குழந்தையாக சிரிக்கிறாய்.  கிடைக்குமா இந்த அதிர்ஷ்டம் உன்னைக்  கையிலெடுத்து கொஞ்சி முத்தமிட??  கண்களை  ஆனந்தக்  கண்ணீர்  மறைக்க,  வார்த்தை குளற , நெஞ்சம்   தடைபட, இருவரும்  புளகாங்கித மடைந்தனர். கடகடவென்று கடல் மடை திறந்தாற்போல  உன்னை  ஸ்தோத்ரங்களில்  போற்றி  வழிபட்டனர். 

देव प्रसीद परपूरुष तापवल्ली-
निर्लूनदात्रसमनेत्रकलाविलासिन् ।
खेदानपाकुरु कृपागुरुभि: कटाक्षै-
रित्यादि तेन मुदितेन चिरं नुतोऽभू: ॥६॥

deva prasiida parapuuruSha taapa valliinirluunadaatra
samanetra kalaavilaasin |
khedaanapaakuru kR^ipaagurubhiH kaTaakshairityaadi
tena muditena chiraM nutO(a)bhuuH ||6

தே³வ ப்ரஸீத³ பரபூருஷ தாபவல்லீ-
நிர்லூனதா³த்ர ஸமனேத்ர கலாவிலாஸின் |
கே²தா³னபாகுரு க்ருபாகு³ருபி⁴꞉ கடாக்ஷை-
ரித்யாதி³ தேன முதி³தேன சிரம் நுதோ(அ)பூ⁴꞉ || 38-6 ||

சந்தோஷம்  எல்லையற்றுப் போக  ஆனந்த  பரவசத்தில் வசுதேவர் கூத்தாடினார்.  ''என்  தெய்வமே, “ என்மேல்  என்ன  கருணை உனக்கு, துன்பத்தை வேரறுக்கும் கூரான கத்தியல்லவோ நீ. எனக்கு இருக்கும் சோகம், துக்கம், துன்பத்தைப் போல் வேறு யாருக்காவது உண்டா? அதை எல்லாம் நொடியில் போக்குவதற்கு அல்லவோ  நீ வந்திருக்கிறாய்?  உன்  கருணைக்  கடைவிழிப்பார்வை ஒன்றே போதுமே, அனைத்தையும் அகற்ற'' என்கிறார் வசுதேவர். 

मात्रा च नेत्रसलिलास्तृतगात्रवल्या
स्तोत्रैरभिष्टुतगुण: करुणालयस्त्वम् ।
प्राचीनजन्मयुगलं प्रतिबोध्य ताभ्यां
मातुर्गिरा दधिथ मानुषबालवेषम् ॥७॥

maatraa cha netra salilaastR^ita gaatravalyaa
stOtrairabhiShTuta guNaH karuNaalayastvam |
praachiinajanmayugalaM pratibOdhya taabhyaaM
maaturgiraa dadhitha maanuShabaalaveSham ||7

மாத்ரா ச நேத்ரஸலிலாஸ்த்ருதகா³த்ரவல்ல்யா
ஸ்தோத்ரைரபி⁴ஷ்டுதகு³ண꞉ கருணாலயஸ்த்வம் |
ப்ராசீனஜன்மயுக³லம் ப்ரதிபோ³த்⁴ய தாப்⁴யாம்
மாதுர்கி³ரா த³தி⁴த² மானுஷபா³லவேஷம் || 38-7 ||

கிருஷ்ணா,  குருவாயூரப்பா,  அப்போது உன் தாய்  தேவகியின்  முகத்தை நீ கவனித்தாயா? என்ன சந்தோஷம்!  , இருகரம் கூப்பி உன்னை எவ்வளவோ  பக்தியுடன் கண்ணீர்மல்க வேண்டுகிறாள்!  அப்போது தான் நீ வசுதேவர் தேவகி இருவரிடமும்  அவர்கள் அறியாத ஒரு ரஹஸ்யத்தைச்  சொன்னாய்.  அவர்களது இரு முன்பிறவி சம்பவங்கள் அவை.  அவர்கள் வேண்டியபடி புத்திரனாக அவதரித்ததை நினைவூட்டினாய். அப்போது அவர்கள்   ''கிருஷ்ணா  நீ  சங்கு சக்ர கதாதாரியாக ,  தெய்வமாக  காட்சியளிப்பதற்கு பதிலாக  சாதாரண யாதவ குழந்தையாக  காட்சியளிக்க வேண்டுகிறோம் ''என்று கேட்டுக்  கொண்டார்கள். ஆஹா என்று உன்னை மாற்றிக்கொண்டாய். 

त्वत्प्रेरितस्तदनु नन्दतनूजया ते
व्यत्यासमारचयितुं स हि शूरसूनु: ।
त्वां हस्तयोरधृत चित्तविधार्यमार्यै-
रम्भोरुहस्थकलहंसकिशोररम्यम् ॥८॥

tvatpreritastadanu nanda tanuujayaa te
vyatyaasamaarachayituM sa hi shuurasuunuH |
tvaaM hastayOradhR^ita chittavidhaaryamaarya
irambhOruhasthakalahamsa kishOra ramyam ||8

த்வத்ப்ரேரிதஸ்தத³னு நந்த³தனூஜயா தே
வ்யத்யாஸமாரசயிதும் ஸ ஹி ஶூரஸூனு꞉ |
த்வாம் ஹஸ்தயோரத்⁴ருத சித்தவிதா⁴ர்யமார்யை-
ரம்போ⁴ருஹஸ்த²கலஹம்ஸகிஶோரரம்யம் || 38-8 ||

நேரம்  ஓடிக்கொண்டிருக்கிறது. சிறைச்சாலையில்  அதிக நேரம் இதற்கெல்லாம் கிடையாதே.  நீ உடனே  சூரசேன மகாராஜாவின் மகனான வசுதேவரிடம் ஒரு யோசனை சொன்னாயே நினைவி ருக்கிறதா ?  ''உடனே  என்னை தூக்கிக்கொண்டு போங்கள் .  யமுனையைக் கடந்து அக்கரையில் கோகுலம் கிராமத்தில் நந்தகோபன் என்ற  யாதவ குல  தலைவன் வீட்டில்  ஒரு பெண்  குழந்தை தொட்டிலில் உங்களுக்காக காத்திருக்கும், என்னை அங்கே போட்டுவிட்டு அந்த  பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்துவிடுங்கள் ''   என்கிறாய்.  உலகத்திலேயே  முதலில் பிள்ளை பிடித்தவன்  வசுதேவர் தான்.   இயந்திரம் மாதிரி செயல்பட்டார் வசுதேவன் , கண் இமைக்கும் நேரத்தில் தயாரானார். உன்னை தூக்கிக்கொண்டார்.   மனதில் உன்னை தூக்கி  இருத்தி வைத்துக்கொள்ள துடிக்கும்  ரிஷிகள், முனிவர்கள் தேவர்கள் எல்லோரும்  அதிசயிக்க உன்னைத்  தூக்கி வைத்துக் கொண்டார் வசுதேவர்.  ரோஜா மலர்களிடையே  சுருண்டு இருக்கும்  கருப்பு வாத்துக்குட்டி மாதிரி அவர் கரங்களுக்கிடையே  நீ. யோசித்துப்  பார்த்தாலே எவ்வளவு மனம் மகிழ்கிறது! 

जाता तदा पशुपसद्मनि योगनिद्रा ।
निद्राविमुद्रितमथाकृत पौरलोकम् ।
त्वत्प्रेरणात् किमिव चित्रमचेतनैर्यद्-
द्वारै: स्वयं व्यघटि सङ्घटितै: सुगाढम् ॥९॥

jaataa tadaa pashupasadmani yOganidraa
nidraavimudritamathaakR^ita pauralOkam |
tvatpreraNaatkimiva chitramachetanairyaddvaaraiH
svayaM vyaghaTi sanghaTitaissugaaDham || 9

ஜாதா ததா³ பஶுபஸத்³மனி யோக³னித்³ரா
நித்³ராவிமுத்³ரிதமதா²க்ருத பௌரலோகம் |
த்வத்ப்ரேரணாத்கிமிவ சித்ரமசேதனைர்ய-
த்³த்³வாரை꞉ ஸ்வயம் வ்யக⁴டி ஸங்க⁴டிதை꞉ ஸுகா³ட⁴ம் || 38-9 ||

கிருஷ்ணா, உன்னிலிருந்து பிறந்தது  மாயை.  நீ மாய கிருஷ்ணன். யோகமாயாவை தயாராக  கோகுலத்தில் தொட்டிலில் விட்டு வைத்தவன். அவள் வரப்போகிறாள் சிறைக்கு. அவள் சக்தியால் நீ அங்கே போகும் வரை, அவள் இங்கே வரும் வரை,  ஊர் உலகமெல்லாம்  ஆழ்ந்த நித்திரையில் மரக்கட்டைகளாக உறங்க செய்துவிட்டாள்.  கோகுலத்தில்  நீ வந்து அவளை மாற்றியதும்  எவரும் அறியாத ஆனந்த நித்திரை.  தானாக  பூட்டு திறந்து, சங்கிலிகள் விலகி  உனக்கு வழிவிட்டவை தானாகவே  யோகமாயா வந்து சிறைச்சாலையில் தேவகி மடியில் படுக்கும் வரை  நிசப்தம், தூக்க்க்க்க்க்க்கம்.

शेषेण भूरिफणवारितवारिणाऽथ
स्वैरं प्रदर्शितपथो मणिदीपितेन ।
त्वां धारयन् स खलु धन्यतम: प्रतस्थे
सोऽयं त्वमीश मम नाशय रोगवेगान् ॥१०॥

sheSheNa bhuuriphaNavaarita vaariNaa(a)tha
svairaM pradarshitapathO maNidiipitena |
tvaaM dhaarayan sa khalu dhanyatamaH pratasthe
sO(a)yaM tvamiisha mama naashaya rOgavegaan ||

ஶேஷேண பூ⁴ரிப²ணவாரிதவாரிணா(அ)த²
ஸ்வைரம் ப்ரத³ர்ஶிதபதோ² மணிதீ³பிதேன |
த்வாம் தா⁴ரயன் ஸ க²லு த⁴ன்யதம꞉ ப்ரதஸ்தே²
ஸோ(அ)யம் த்வமீஶ மம நாஶய ரோக³வேகா³ன் || 38-10 ||

வழியில் என்ன நடந்தது என்றும் சொல்கிறேன் கேள்  எண்டே குருவாயூரப்பா.  தானாகவே விலகிய சங்கிலிகளை தூர தள்ளிவிட்டு, தானாகவே திறந்துகொண்டு பூட்டுகள் விலக, 
கதவுகள் திறக்க, காவலாளிகள்  தூங்க,  உன்னை தூக்கிக்கொண்டு வசுதேவர் விடுவிடுவென்று நடந்தார்.  ஆதிசேஷன் வழி காட்டினான்.  குடையாக உன்னை  கொட்டும் மழையில் நனையாமல் பாதுகாத்தான்.  நாகங்களின் உச்சி சிரத்தில் ஒளிவீசும் மாணிக்கங்கள் உண்டு.  ஐந்து தலை,  ஆயிரம் தலை  கொண்ட  ஆதிசேஷனின் தலைகளில் எத்தனை ஒளிவீசும் மாணிக்கங்கள் பளிச்சென்று லைட் LIGHT  போட்டு ஒளிவீசி  கோகுலத்துக்கு போக  வழிகாட்டும்.  எவ்வளவு சக்தி வாய்ந்தவன் குருவாயூரப்பா நீ, என் நோய் தீர்த்து என்னை விடுவிக்கமாட்டாயா? 

தொடரும் 

sivan jaykay

unread,
Aug 30, 2021, 7:45:26 PM8/30/21
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN

68.  மஹா பெரியவாளின்  மஹாசிவராத்திரி விஜயம் 

 1931ல்  மஹா பெரியவா  எசையனுர் என்ற  ஊருக்கு  சென்றபோது ஆருத்ரா தரிசனம் விசேஷம்.  
அங்கிருந்து  ஜூலை 28தேதி  அன்று  சித்தூர் சென்றார்.  சித்தூர்  ஞாபகம் இருக்கிறதா? முருகன் வள்ளியை மணந்தானே, அந்த வள்ளியின் தகப்பனார்   வேடராஜா,  நம்பிராஜன், முருகனின் மாமனார்  வாழ்ந்த இடம்.  அங்கே ஒரு சிறு குன்று இருக்கிறது.  அதற்கு வள்ளிமலை என்று பெயர்  குகே ஒரு  சிற்றாறு. நீ வா என்று அதற்கு பெயர்.   ஒரு குட்டி சிவன் கோவில்.  அந்த சிவன் கோவிலிலிருந்து ரொம்ப தூரத்தில்  அந்த  ஆறு ஓடிக்கொண்டிருந்தது.  அர்ச்சகர் தினமும் ரொம்ப தூரம் நடந்து போய் அந்த ஆற்று நீரை கொண்டு வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். வழியில் ஒரு  ராக்ஷஸன் வேறு  பயங்கரமானவன் இருந்தான்.   அந்த வயோதிக  அர்ச்சகர் அவனிடமிருந்து தப்பி சென்று அபிஷேகஜலம் கொண்டுவர வேண்டும்.  சிவன் சும்மா இருப்பாரா?  ''அர்ச்சகர் உன்னிடம் வரவேண்டாம், நீ வா '' என்று ஆற்றுக்கு  கட்டளையிட்டார்.  ஆறு நகர்ந்து கோவில் கிட்டேயே வந்துவிட்டது.அதுமுதல் அந்த ஆற்றுக்கு நீவா என்று பெயர் இன்றும் உள்ளது. 

மஹா பெரியவாளின்  யாத்திரை இசையனூரிலிருந்து  ஆரணி வழியாக  காஞ்சிபுரம் விஜய யாத்திரை தொடர்ந்தது.   பெரியவா ஆரணி வருவது அறிந்த  இருநூறுக்கும் மேற்பட்ட  காங்கிரஸ் கட்சி சேவகர்கள்  அவரை தரிசனம் செய்ய  குழுமி இருந்தனர்.  அப்போது சுதந்திர வேட்கை  தீவிரமாக  இருந்த காலம்.   பிரிட்டிஷ்  அரசாங்கம்  காங்கிரஸ் காரர்களை வேட்டையாடி வந்தது.  பொதுமக்கள் காங்கிரஸ் காரர்களுக்கு  ஆதரவு கொடுத்தால்  கடுந்தண்டனை கொடுத்தார்கள்.  ஆகவே   காஞ்சி மடத்தை சேர்ந்தவர்கள் மனதில்  கிலேசம்,  கவலை. என்னசெய்வது என்று  தயக்கத்தோடு இருந்தார்கள்.   மஹா பெரியவாளிடம் விஷயத்தை மெதுவாக  போட்டு உடைத் 
''அவள் உள்ளே  அனுப்புங்கோ, வரட்டும் தாராளமா''  என்று உத்தரவிட்டுவிட்டார்  மஹா பெரியவா. எல்லோரும்  சந்தோஷமாக  மஹா பெரியவாளின்  சந்த்ரமௌளீஸ்வரர்  திரிபுரசுந்தரி அம்பாள்   பூஜையை கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார்கள்.  பூஜை முடிந்ததும்  மஹா பெரியவா  ஒவ்வொரு  காங்கிரஸ் காரரையும்   விசாரித்தார். யார்,   என்ன உத்யோகம், குடும்பம்  பற்றி எல்லாம்  ஆர்வமாக கேட்டார். எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி வாழ்த்தினார் . எல்லோருக்கும்  உணவளிக்கப்பட்டது.  இந்த விஷயங்கள் எல்லாம் பிரிட்டிஷ்  அதிகாரிகளுக்கு உடனே  தெரிவிக்கப்பட்டாலும் அவர்கள் ஒருவித நடவடிக்கையும்  எடுக்கவில்லை.  மடத்துக்கு எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை.  

1932ம் வருஷம்  மார்ச் மாதம்  5ம் தேதி  மஹா பெரியவா  ஆந்திராவில் இருக்கும் காளஹஸ்தி க்ஷேத்ரம் சென்றார்கள். மஹா சிவராத்திரி  சமயம்.    காஞ்சிபுரத்திலிருந்து கிளம்பி  திருப்பாற் கடல், வேப்பூர், வழியாக  சித்தூருக்கு  பெப்ரவரி மாசம் கடைசியில் வந்தார்கள். அங்கிருந்து பக்கலா  என்கிற  கிராமம் வழியாக  திருப்பதி வந்தார். அங்கே ஒருநாள்  முகாம்.  பிறகு அங்கிருந்து தான் காளஹஸ்திக்கு விஜயம் செய்தார்.  

காளஹஸ்தி பஞ்ச பூத  ஸ்தலங்களுக்குள்  வாயு ஸ்தலம்.  ராகு கேது க்ஷேத்ரமும் கூட. புராதனமான சிவாலயம்.

காளஹஸ்தியை 'காளாஸ்திரி' என்றும்  தக்ஷிண கைலாசம் என்றும்  சொல்வதுண்டு. 
திருப்பதியிலிருந்து 40 கி.மீ.    சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் உள்ள ஸ்தலம்.  ஆறு வடக்கு நோக்கி  ஓடுகிறது. ஆகவே  உத்தரவாஹினி -  கண்ணப்ப நாயனார் சரித்திரம் எல்லோருக்கும் தெரியும்.  ஆகவே அது பற்றி சொல்லப்போவதில்லை.  தனது கண்களை காலத்தீசனுக்கு கொடுத்து கண்ணப்பன் என்ற பெயர் பெற்று திண்ணன் எனும் அந்த வேடன்  முக்தி அடைந்த க்ஷேத்ரம்.  ''அஷ்டமாசித்திகள் அணைதரு காளத்தி'' என சிறப்பு மிக்கது.    நக்கீரர் 'கயிலை பாதி காளத்தி பாதி'   என்று பாடியது.   முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார் முதலியோர் வழிபட்ட சிவாலயம். 
சிலந்தி - பாம்பு - யானை - ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம்.  காளஹஸ்தி மலைக்கு  கைலாசகிரி என்று பெயர்,   12ம் நூற்றாண்டு பிரதான கோபுரமாக  ''பிக்ஷசாலா கோபுரம்'  வீரநரசிம்ம யாதவ  ராயரால் கட்டப்பட்டது. 
பொன்முகலி ஆற்றின் படிக்கட்டுகள்  மற்றும்  கோயில்  புனருத்தாரணம் திருப்பணிகளை  தேவகோட்டை மெ.அரு.தா. இராமநாதன் செட்டியார் 1912 ல்  ஒன்பது  லட்சம் ரூபாய் செலவு செய்து மஹா கும்பாபிஷேகம் செய்வித்த புண்யவான்.   கைகூப்பி வணங்கத்தக்க இவர், கைகூப்பி வணக்கம் சொல்லும்  உருவத்தில் அவருக்கு ஒரு சிலை ஆலயத்தில் உள்ளது.   கோயில்கள் தானம் தர்மம் என்றால் நிச்சயம் யாராவது ஒரு நகரத்தார் கைங்கர்யம் நிச்சயம் உண்டு.
கோபுரம் எதிரில்   நாலு கால்  மண்டபம், அதை ஒட்டி  'அஷ்டோத்ரலிங்க' சந்நிதி உள்ளது. கோபுரத்தின் பக்கத்தில் 'பஞ்சசந்தி விநயாகர்' சந்நிதி.  அப்புறம் ஒரு  பெரிய நூற்றுக்கால்   மண்டபம். 1516ல் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது.   பக்கத்தில் உள்ள  பதினாறுகால் மண்டபம் அச்சுதராயர் கைங்கர்யம்.   கோயில் வாசலில்  ரெண்டு   கொடிமரங்கள். ஒன்று கவசத்துடன், இன்னொன்று 60 அடி  உயரம். ஒரே  கல்லால் ஆனது.  பலிபீடமும் நந்தியும் உள்ளன.
பிரதான  'தட்சிண கோபுரம்' 11- ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன்  காலத்தியது. தெற்கு பார்த்த இந்த  இக்கோபுர வாயில்  வழியாக  உள்ளே வந்தால் முதலில்  தட்சிணாமூர்த்தி தரிசனம். மற்றும்  'சங்கல்ப கணபதி,  நால்வர் சந்நிதி.  வலது பக்கமாக வந்ததால் தரையில்  அடையாளம் காட்டி இருக்கும் அங்கே நின்று பார்த்தால்  கைலாசகிரி,  காலஸ்தீஸ்வரர்  விமானம்  தரிசிக்கலாம். 
இங்குள்ள  'சரஸ்வதி தீர்த்தம்'  கொடுத்தால்  பேசவராத குழந்தைகளுக்கு  பேச்சு வரும் என்று ஐதீகம். அப்பர், சுந்தரர்,  சம்பந்தர்  பாடல் பெற்ற  ஸ்தலம்.   சிவபெருமானுக்கு இங்கே   ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர் என்று பெயர்  அம்பாளுக்கு  ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை என்றும் பெயர்.  மகிழமரம் ஸ்தல விருக்ஷம்.  காஸ்தீஸ்வரருக்கு   தங்கக் கவசம் (பார்ப்பதற்கு பட்டைகளாகத் தெரியுமே அது ), இக்கவசத்தைச் சார்த்தும்போதும் எடுக்கும்போது கூட சுவாமி மீது   கை விரல்கள் கூட  படக்கூடாது. தீண்டாத்  திருமேனி.  கவசம் மேல் 27 நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.  உயரமான  சிவலிங்கம்.   அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இருதந்தங்களும்,மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும்   பார்க்கலாம்.   சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் மாதிரி இருக்கும். . மேற்கு பார்த்த  சந்நிதி - சதுரமான  ஆவுடையார்.  
சந்நிதியில்  விபூதி தருவதில்லை. , பச்சைக் கற்பூரத்தைப் பன்னீர் விட்டு அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக் கொண்டு தரிசிப்போர்க்கு தீர்த்தப்  பிரசாதம் தருவார்கள்.  காளத்தீஸ்வரர் மேல்  கங்கை நீரைத் தவிர வேறெதுவும் படக் கூடாது .  அபிஷேகங்கள் ஆவுடையாருக்கு மட்டும்.  சுவாமி மேல்  தாரா பாத்திரம்.
இங்கே காணும்   பெரிய  ஸ்படிகலிங்கம்  ஆதி சங்கரர்  பிரதிஷ்டை செய்தது.   இந்த ஆலயத்துக்கு வந்தாலே  முக்தி என்று அர்த்தம்  உள்ள  "ஸ்ரீ காளத்தி பிரவேச முத்தி" என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு உண்டு. 
பட்டையாக  உள்ள  காலஸ்தீஸ்வரர்  நாலு பக்கமும்  முகங்கள், மேலே லிங்கம். இது ஐந்தும் சேர்த்து ஈஸ்வரனை  ''பஞ்சமுகேஸ்வரர்'' என்று  எல்லோருக்கும் உணர்த்தியவர் நமது மஹா பெரியவா. 
மஹா சிவராத்ரி  10 நாளும்  பெரிய  விழா நடக்கும்.  வயதானவர்களை  ஆதரித்து பாதுகாக்க மஹா பெரியவா 'விருத்தாசிரமம்'  என்ற  ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார். இந்நற்பணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் தம்முடைய இடத்தை தந்து உதவியுள்ளது.

உந்துமா முகலியின் கரையினில் உமையடும்
மந்தமார் பொழில்வளர் மல்கு வண்காளத்தி
எந்தையார் இணையடி என்மனத் துள்ளவே
வானவர்கள் தானவர்கள் வாதைபட
வந்ததொரு மாகடல்விடம்
தானமுது செய்தருள் புரிந்தசிவன்
மேவுமலை தன்னைவினவில்
ஏனமிள மானினொடு கிள்ளிதினை
கொள்ளவெழிலார் கவணினால்
கானவர்த மாமகளிர் கனகமணி
விலகு காளத்திமலையே.
(சம்பந்தர்)

"உண்ணாவரு நஞ்சம் உண்டான்கண்

ஊழித்தீ யன்னான்காண் உகப்பர்காணப்
பண்ணாரப் பல்லியும் பாடினான்காண்
பயின்றநால் வேதத்தின் பண்பினான்காண்
அண்ணாமலை யான்காண் அடியார் ஈட்டம்
அடியிணைகள் தொழுதேத்த அருளுவான்காண்
கண்ணாரக்காண் பார்க்கோர் காட்சியான்காண்
காளத்தியான் அவன் என்கண்ணுளானே"
(அப்பர்)
செண்டாடும் விடையாய் சிவனே என்செழுஞ்சுடரே
வண்டாருங் குழலாள் உமைபாக மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்கும் கணநாதன் எங்காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே"
(சுந்தர்)

பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள்போல் விளங்க
செருப்புற்ற சீரடிவாய் கலசம் ஊனமுதம்
விருப்புற்ற வேடனார் சேடரிய மெய்குளிர்ந்தங்கு
அருட்பெற்று நின்றவா தோணோக்க மாடாமோ.
(திருவாசகம்)

 1932ல்  மஹா பெரியவா இங்கு வந்தபோது ஸ்வர்ணமுகி, ஆற்றில்  ஸ்னானம் செய்தபிறகு  ஒரு பெரிய  மாமரத்தின் அடியில்   வந்து உட்காருவார்.  ஆஹா  பார்ப்பதற்கு கல்லாலமரத்தின் அடியில் அமர்ந்த  தக்ஷிணாமூர்த்தி தான் கண்ணுக்கு  தோன்றுவார்.  அப்போது வாழ்ந்து அவரை தரிசித்த  காளஹஸ்தி பக்தர்கள்  பாக்யம் செய்தவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.  மஹா பெரியவா தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் மளமளவென்று செய்து முடித்தார்கள்.   பெரியவா காளஹஸ்தி வருகிறார் என்ற விஷயம்  திடீரென்று முடிவானது.  காளஹஸ்தி ராஜா  பெரிய  பந்தல் ஒன்றை  ஸ்வர்ணமுகி ஆற்றங்கரையில் அமைத்தார்.  அந்த ஆற்றங்கரையில் தான் பெரியவா ஸ்னானம் செய்வார்.   ராஜா அவருடைய மந்திரிகள்,  ஆலய  தேவஸ்தான நிர்வாகிகள் அனைவரும் ஒரு சேர  எல்லா ஏற்பாடுகள்,  பெரியவாளின்  நகர்வலம்  அனைத்தும்  தீர்மானித்து ஆவன  செய்தார்கள்.  அன்று இரவு  மஹா சிவராத்திரி.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமினர்.  பெரியவா நகர்வலம்  மிகச் சிறப்பாக  நடைபெற்றது.   அங்கே இருந்த கற்பக சத்திரத்தில் பெரியவா தங்க ஏற்பாடு செயதிருந்தார்கள்.  ஒரு வார காலம்  பெரியவா அங்கே  தங்கி இருந்து தரிசனம் கொடுத்தார்.

sivan jaykay

unread,
Aug 30, 2021, 7:45:37 PM8/30/21
to amrith...@googlegroups.com

 

உள்ளது நாற்பது --   நங்கநல்லூர்   J K   SIVAN 
பகவான் ரமண மகரிஷி 

1. உள்ளதை உள்ளபடி உள்ளல் .

ஆத்மா,  ஆத்மாவை  விசாரம் செய்வது, தேடுவது,  உள்ளே  நோக்குவது  என்பது எல்லாம்  நமக்கு சம்மந்தமில்லாத ஏதோ ரொம்ப பெரிய விஷயம் என்று தான் நானும் உங்களைப்போல் நினைத்தவன்.  ஸ்ரீ ரமணர்  என்பவர்  புரியாத ஒரு பெரியவர்  என்று தூர நின்று வணங்குபவனாக இருந்தேன்.  அப்புறம்  கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிய பிறகு தான் அவர் ரொம்ப சுலபமாக புரிபவர். அவர் சொல்லும்  ஆத்மா, ஆத்மவிசாரம் விஷயங்களெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்தும் நாம் லக்ஷியம் செய்யாதவை என்று அப்புறம் தான் புரிந்தது.  சமீபத்தில்  தனியாக  சில மணிநேரங்கள்  மூன்று நாட்களில் செலவழிக்க வாய்ப்பு கிடைத்தபோது பொறுமையாக  ஒரு ஸ்ரீ ரமண மஹரிஷியின்  ''உள்ளது நாற்பது'' என்ற பாடல்களை ரொம்ப  கவனத்தோடு மெதுவாக  வார்த்தை வார்த்தையாக படித்து  ஸ்ரீ நொச்சூர் வெங்கட்ராமன் கொடுத்த  விளக்கத்தோடு யோசித்தேன். புரிந்தது.  இனி  ஒவ்வொன்றாக நாற்பது நாட்கள் சொல்லப்போகிறேன்.

உள்ளது அலது  உள்ள உணர்வு,  உள்ளதோ, உள்ள பொருள் 
உள்ளல்  அற,  உள்ளத்தே,  உள்ளதால் –  உள்ளம் எனும் 
உள்ள பொருள்  உள்ளல் எவன்?  உள்ளத்தே,  உள்ளபடி
உ ள்ளதே  உள்ளல்  உணர்வாயே – உள்ளே 

''நான்  '' என்று நாம் சொல்லும்போது  எல்லோருமே  நமது உடம்பை மனதில் உருவமாக கொண்டு பேசுகிறோம், சொல்கிறோம். அதில்லாமல் வேறு  ஒன்று எப்போதும் உள்ளே இருக்கிறது. அதை நினைக்காததால் அது   உள்ளது என்றே நாம் உணர்வதில்லை.  அது அனுபவத்தால்  உணரப்படுவது.  புலன்களால் அல்ல.  இதயம் என்பது மையம்.   ''ஹ்ருதி அயம்  தஸ்மாத்'   என்றால்   ஹ்ருத் என்றால் மையம்.  அயம்  இருப்பது.  'இது  + அயம் (நான்)   இதயம்  என்பது தான்  அந்த நான்.  ப்ரம்மஸ்வரூபம். 

டாக்டர்கள்  ஆபரேஷன் செய்யும் இதயம் இல்லை அது.   கண்ணுக்கு புலப்படாதது.  அதை ப்ரம்மம், பகவான், ஆத்மா (பரமாத்மா) என்று  ஞானிகள், ரிஷிகள், யோகிகள் அறிந்து சொல்கிறார்கள்.   ரொம்ப  இருட்டில் நான் உட்கார்ந்திருக்கிறேன்.  நான் இருக்கிறேன்  என்று சொல்லும்போது என் உடம்பு எனக்கே தெரியவில்லை.  நான் உடம்பை பார்க்காமல் நான் இருக்கிறேன் என்று சொல்கிறேன். நான் இருக்க பயமேன் என்று பகவான் சொல்கிறார். நமக்கு தைர்யம் வருகிறது. பகவானை பார்க்கமுடியாவிட்டாலும் அவர் இருக்கிறார்  என்ற  ஞானம் போதும் அல்லவா? மஹா பெரியவா அபய ஹஸ்தம் காட்டுகிறார்.  கவலைப்படாதே எல்லாம் சரியாகும் என்று சொல்வது போல் தோன்றுகிறது. அவர் இல்லை, எதிரே நான் கண்டது அவர் படம், எவனோ எடுத்தது, வரைந்தது, எழுதியது.  ஆனால்  அந்த எழுத்து, படம், உருவம் தாண்டி ஏதோ ஒரு சக்தி என்னை தைர்யம் கொள்ள செயகிறது. நாம் சந்தோஷமடைகிறேன். அது நான் எனும் ப்ரம்மம்,  பரமாத்மா,  பகவான்.  சூரியன்  என்றாலே  அங்கே  இருட்டு கிடையாது. அதுபோல்  ஆத்மாவில் மனதுக்கு இடம் இல்லை . மனம்  புலன்கள் வசம் மாட்டிக் கொள்வது. ஆத்மா அதை விட்டு விலகி நிற்பது. உள்ளே அவன் அப்படி இருப்பதால் தான் அது  ''உள்ளம்''  அவன் இருப்பது  உள்ளல் , அது உள்ளது.  ஆகாயத்திலே மேலே  பார்க்கிறோம், வண்ண வண்ண  மேகங்கள் உருவம் மாறி மாறி ஓடிக்கொண்டே இருப்பது போல  மனதில் எண்ண  அலைகள் ஓடட்டும். அதற்கும்   ஹ்ருதயத்துக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. மனதின்  ஆட்டங்களுக்கு இடம் கொடுக்காவிட்டால் வெளி விஷயங்கள் நம்மை நெருங்காது அல்லவா?  புலன்களை  அடக்கி,  அதாவது கண்ணை மூடி,  சப்தமின்றி, அண்ணா ஆகாரத்தில் புத்தி போகாமல்  உள்ளே இருக்கும் ஹ்ருதயத்தை அலச முயன்றால்,  ஏதோ ஒன்று இருப்பது புலனாகும். அது தான் ஆத்மா. அது என்ன? என்பது தான் ஆத்ம விசாரம். மனதின் விகாரங்களை இடம் கொடுக்காமல் அதை நாடுவது தான் சமாதி நிலை. கவனத்தால் நிகழ்வது. 

ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி என்ற மூன்று நிலைகள், விழிப்பு, தூக்கம், கனவு  என்று  இந்த மூன்றிலும் மாற்றமின்றி ஒரே அனுபவமாக உள்ளது தான்  ஆத்மா. உதாரணமாக  விழிப்பு நிலையில் தேகம் உண்டு,  மனம் உண்டு,  நான் உண்டு.   ஸ்வப்னம் காணும்போது உடல் இல்லை, மனம் உண்டு, நான் உண்டு.  ஆழ்ந்த உறக்க  நிலையான  சுஷுப்தியில் உடல் இல்லை, மனம் இல்லை, ஆனால்  நான் உண்டு.   அந்த நான் தான் மூன்றிலும் மாறுதல் இல்லாத  ஆத்மா.  புரிகிறதா?   இந்த  ''நானை '' எப்படி உணர்வது?   விழிப்பு நிலையில், என் தலை, என் உடல், என் பெயர்  என்று  ரெண்டாக பண்ணிக்கொண்டு நான் வேறு மாதிரியாகவும், என்னுடையது வேறுமாதிரியாகவும் உணர்கிறோம். ஆகவே  நான் ஆத்மா  மற்றதெல்லாம் ''என்னுடையது''.  கனவில்  நான்  என் அறையில் நங்கநல்லூரில் படுத்திருக்கிறேன். அனால்  எங்கோ  ஜெர்மனியில் மலைத்தொடர்களில் உதவுகிறேன்.  அது யார்,  இங்கே படுத்திருப்பது யார்?  ரெண்டும் ஒன்றா. விழித்தல் ஒன்று தானே இருப்பது தெரிகிறது?   தூங்கும்போது கவனத்தோடு உறங்குபவன்  எழுந்ததும்   இத்தனை நேரம்  நான் எங்கே   போனேன், எங்கே இருந்தேன் ? என்று வினவுகிறான்.  மெதுவாக இதுபோன்ற விசாரங்கள் ஆத்மாவை நெருங்க வைக்கும்.  இது போதும்.  இருப்பதை இல்லாததாக நாம் உணர்பவர்கள் , இல்லாததை இருப்பதாக உணர்பவர்கள்.  கானல் நீர், கயிற்றில் பாம்பு,  மரத்தை பிசாசு என்று உணர்ந்து நடுங்குபவர்கள்.   உள்ளத்தில்  உள்ளதை உள்ளபடி உணர்ந்தால்  அது தான் சஹஜ நிர்விகல்பம்.   இது போதும்.




sivan jaykay

unread,
Aug 30, 2021, 7:45:46 PM8/30/21
to amrith...@googlegroups.com

உள்ளது நாற்பது --   நங்கநல்லூர்   J K   SIVAN 
பகவான் ரமண மகரிஷி 

2.   பவ  பயம் வீண். 

2  '' உள்ளே  மரணபயம்    மிக்கு  உள   அம் மக்கள்   அ ணாக
மரணபவ மில்லா  மகேசன் – சரணமே
சார்வர்  தம் சார்வொடு தாம்  சாவுற்றார் சாவு  எண்ணம் 
சார்வரோ சாவாதவர்  நித்தர் 

நம்முடைய மனசு பூரா  என்ன எண்ணம் ஓடுகிறது?  ஐயோ  சாவு வந்துவிடுமோ? எப்போது வருமோ? எப்படி வருமோ? அதிலிருந்து தப்பித்துக்கொண்டு  நீண்ட நாள் இங்கேயே வாழ்வது எப்படி? என்ற பயம் தான்.  உலகத்தில் எதுவும் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியாது.  மகேஸ்வரனை சரணடைவது ஒன்று தான் வழி. பற்றுக்களை, பிடிப்புகளை அகற்றி,  அகந்தையை அழித்து ஜெயித்தவன் தான் மரணம் பற்றி  துளியும்  கவலைப்  படமாட்டான்.  சாவின் மறுபெயர் தான் சரீரம் எனும் நம் உடல்.  உடல் நினைவு ஒழிந்தால் மரணபயம் நெருங்காது. ரமணர் சொன்னது காதில் 
விழுகிறதா?

''16 வயதில்  என் சித்தப்பா வீட்டு  மாடியில் தனியாக இருந்தபோது ஏனோ திடீரென்று மரணபயம் தோன்றியது. எப்படி இந்த உணர்வு வந்தது?  இதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?  யாரிடமும் சொல்லாமல் நானே கண்டுபிடிக்க முயன்றேன். உள்  நோக்கி  பயணம் செய்தால்  தான் அது முடியும்.  மரணம் என்றால் என்ன? இந்த உடல் இறப்பதை மனதில் யோசித்து பார்த்தேன். கை கால் நீட்டி படுத்தேன்.  மூச்சை அடக்கினேன்.  கண் முன் காட்சி தொடர்ந்தது. என் உடல் இறந்து விட்டது.  உடலை  எடுத்துப் போய் எரித்தார்கள்.  உடல் போனதும் நான் இல்லையா?  உடலுக்கு அப்பால் ஏதோ ஒன்று இருக்கிறது. அது சாவதில்லை. அது தான் ஆத்மா.   அதுதான் உண்மையில் நான். இந்த உடம்பு இல்லை. இதை உணர்ந்ததும் மரண பயம் நீங்கிவிட்டது.

என்னன்னவோ ராகங்கள்  ஸ்வரங்கள்,  ஆலாபனைகள், பாடினாலும் ஆதார சுருதி ஒன்று தானே. அது தான் எண்ணங்கள் நிறைந்த மனமும்  ஆத்மாவும்.  என் உடல்  எண்ணம் யாவும் எந்த  காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும் என் உணர்வு அந்தராத்மா வாகிய  ''நான் '' என்பதன்  மேலே தான்.   சட்டி சுட்டால்  பிடி விடுகிறது போல  ஆசைகள் நீங்கினால் துன்பம், கஷ்டம், பயம் எல்லாம் நீங்கும்.  பற்றுதல் விட்டால் வைராக்கியம் கூடும்.  

ஒரு கப்பலில் நடுக்கடலில்  அதை நம்பிப்  பயணம் செய்யும்போது, அதுஓட்டை, எந்த நேரமும்  முழுகும் என்றால்  ப்ராண பயம் உண்டாவது போல் இந்த  உடலை நம்பி உலகில் வாழ்வது.  கப்பல் ஓட்டை என்று தெரிந்து அதில் ஏறியவனுக்கு   மரண பயம் இல்லை.  எப்போதும் கடலில் குதித்து அதைத்  தாண்டும் நம்பிக்கை இருக்கிறது. அது தான் வாழ்க்கையில் வைராக்கியம். 

ஒரு பக்தன்  ரமணரின் பாதங்களை பிடித்துக்கொண்டு  ''குரு சரணம்''   என்றான். அப்பா, குரு சரணம்  என் காலில் இல்லை.  உன் உள்ளேயே இருக்கிறது.  பிரகாசித்துக்  கொண்டிருக்கும் அதை எண்ணத்திரைகள்  மறைத்திருக்கிறது. அதை விலக்கி,   பிடித்துக் கொள்'' என்றார்  பகவான்.

ஏழு நாளில் சாகப்போகும் பரீக்ஷித் சுகப்பிரம்ம ரிஷி எதிரே அமர்ந்து  பாகவதம் கேட்கிறான். ''ராஜா,  இறந்து போவேன் என்று நீங்கள் சொல்வது உங்கள் தேகத்தின் மேல் உள்ள அபிமானத் தால்''.  சலனமற்ற, நிரந்தர ஆகாசத்தில்  ஒதுங்கி இருக்கும் மண் குடம் தான் உடல்.  இருந்தாலும் உடைந்தாலும்  அதால்  ஆகாசத்துக்கு என்ன? ஆத்மா நிரந்தரம் அவ்வாறு.   அழியும்  இந்த சரீரத்தில் சரீரமற்ற அசரீரி தான் ஆத்மா.  கானல் நீரில் நீர் இருப்பது போல் தோன்றினாலும் நீர் இல்லை.  தேஹத்தோடு    சேர்ந்திருப்பது போல் தோன்றினாலும்  ஆத்மா  தனி,  விதேஹி.    கண்ணாடி  எதிரே  நான்  நல்ல உடை, நிறைய ஆபரணங்களோடு நின்றால்  கண்ணாடியில் நான் தெரிந்தாலும், கண்ணாடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது போல் தான் ஆத்மா-  தேஹ  உறவு.   ஆதி அந்தமில்லா மஹேசன் தான் பாதுகாக்கும் கோட்டை.   அண்ணாமலை, அருணாசலம் எனும்   மகேஸ்வரனை ரமணர் அவ்வாறு பிடித்துக் கொண்டார். 

sivan jaykay

unread,
Aug 30, 2021, 7:45:47 PM8/30/21
to amrith...@googlegroups.com

ஸ்ரீ மந்  நாராயணீயம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN
39வது தசகம்

39.  கண்ணன் பிறந்தான், எங்கள் கண்ணன் பிறந்தான்.

வசுதேவர் கிருஷ்ணனுடன்  நுழைந்தவுடன்  கோகுல  கிராமத்திலிருந்த  நந்தகோபன் வீட்டின் கதவுகள் தானாகவே  திறந்து வழிவிட்டன.  ஆதிசேஷன் தான் வழி நடத்துகிறானே ! ரொம்ப வருஷமாக பழக்கப்பட்டவர் போல நந்தகோபன் வீட்டில் ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தது மாதிரி  கண்ணை மூடிக்கொண்டிருந்த  யசோதையின்  அருகே  கிருஷ்ணனை விட்டு,  அங்கே படுத்திருந்த  யோகமாயாவைத்  தூக்கிக்கொண்டு  வந்தவழியே திரும்பினார். 

மறுநாள் காலை  சூர்ய உதயம்  ஆகியபின்  செய்தி அவசர அவசரமாக   கம்ஸனுக்கு போய்விட்டது. தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறந்துவிட்டது.   அதால்  தான்  தனக்கு மரணம் என்பதால் இந்தக் குழந்தைக்காகத்தான்  கம்ஸன் காத்திருந்தான்.  வாளோடு வந்தான்.  சிரித்தான். அட,  இது ஒரு பெண் குழந்தை, பிள்ளை என்று அல்லவா அசரீரி சொல்லியது. எல்லாம் பொய்  என்று சிரித்தான்.  இருந்தாலும் இதை உயிரோடு விடக்கூடாது  என்று  துணி தோய்ப்பது போல் அதை கல்லின் மேல் வீசி கொல்ல  தூக்கி எறிந்தான்.  அவன் கையிலிருந்து நழுவி அந்த பெண் குழந்தை மேலே சென்றது. சிரித்துக்கொண்டே, ''முட்டாள் கம்ஸா , உன்னுடைய யமன் இங்கில்லை,  வேறெங்கோ இருக்கிறான்''  என்று  சொல்லி மறைந்தது.   கம்சன் உறைந்து போகிறான்.   கோகுலத்தில்  யாதவர்கள் கோலாகலமாக  அடுத்த  யாதவ குல ராஜா பிறந்து விட்டதை  கொண்டாடுகிறார்கள். 

भवन्तमयमुद्वहन् यदुकुलोद्वहो निस्सरन्
ददर्श गगनोच्चलज्जलभरां कलिन्दात्मजाम् ।
अहो सलिलसञ्चय: स पुनरैन्द्रजालोदितो
जलौघ इव तत्क्षणात् प्रपदमेयतामाययौ ॥१॥

bhavantamayamudvahan yadukulOdvahO nissaran
dadarsha gaganOchchalajjalabharaaM kalindaatmajaam |
ahO salilasa~nchayassa punaraindrajaalOditO
jalaugha iva tatkshaNaat prapadameyataamaayayau || 1

ப⁴வந்தமயமுத்³வஹன் யது³குலோத்³வஹோ நிஸ்ஸரன்
த³த³ர்ஶ க³க³னோச்சலஜ்ஜலப⁴ராம் கலிந்தா³த்மஜாம் |
அஹோ ஸலிலஸஞ்சய꞉ ஸ புனரைந்த்³ரஜாலோதி³தோ
ஜலௌக⁴ இவ தத்க்ஷணாத்ப்ரபத³மேயதாமாயயௌ || 39-1 ||

குருவாயூரப்பா,  சொல்லிக்கொண்டே வரும்போது சில விஷயங்கள் முன்னுக்கு பின்னாக வரும். பழைய விஷயங்கள் நினைத்துப்பார்க்கும்போது இப்படி தான் தொடர்ச்சியாக வராமல் விட்டு விட்டு வரும் . உன் அப்பா, வசுதேவர் உன்னைத் தூக்கிக்கொண்டு சிறைச்சாலையிலிருந்து  வெளியே நடந்தார் அல்லவா. வேகமாக  நடந்தவர் யமுனைக்கரை அடைந்ததும் தான் கொட்டும் மழையில்  யமுனை வெள்ளமாக  கரை புரண்டு ஓடுவதைப் பார்த்தார்.  எப்படி இந்த பிரவாகத்தை கடப்பது, அதுவும் நள்ளிரவில், இருட்டில், அதுவும் நீந்தமுடியாத நிலையில், உன்னை வேறு தூக்கிக்கொண்டு? 
நீ யார் என்பதை  பாவம் அவர் மறந்து விட்டார்!  நீ சிரித்தாய், ஒரு கணத்தில்  உன்னைக் கண்டதும் யமுனை தலை வணங்கினாள் . வெள்ளம் குறைந்து, கரைந்து, வடிந்து,  காணாமல் போய்விட்டது.  முழங்கால் அளவு ஜலம் தான் ஆற்றில்.  ஆற்றில் இறங்கியதும் அது கணுக்கால்  அளவு ஜலமாக  குறைந்தது. ஆகவே  வசுதேவர் நீரில் இறங்கி நடந்து அக்கரைக்கு சென்றார், உன்னைத் தூக்கிக் கொண்டு.

प्रसुप्तपशुपालिकां निभृतमारुदद्बालिका-
मपावृतकवाटिकां पशुपवाटिकामाविशन् ।
भवन्तमयमर्पयन् प्रसवतल्पके तत्पदा-
द्वहन् कपटकन्यकां स्वपुरमागतो वेगत: ॥२॥
 
prasuptapashupaalikaaM nibhR^itamaarudadbaalikaamapaavR^
itakavaaTikaaM pashupavaaTikaamaavishan |
bhavantamayamarpayan prasavatalpake tatpadaa
dvahan kapaTakanyakaaM svapuramaagatO vegataH || 2

ப்ரஸுப்தபஶுபாலிகாம் நிப்⁴ருதமாருத³த்³பா³லிகா-
மபாவ்ருதகவாடிகாம் பஶுபவாடிகாமாவிஶன் |
ப⁴வந்தமயமர்பயன் ப்ரஸவதல்பகே தத்பதா³-
த்³வஹன் கபடகன்யகாம் ஸ்வபுரமாக³தோ வேக³த꞉ || 39-2 ||

வேக வேகமாக நடந்த வசுதேவர் நந்தகோபன் வீட்டுக்கு சென்றார்.  பசுக்களை பராமரிக்கும்  யாதவ குல  ராஜா.  பெண்கள் எல்லோரும்  அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். எல்லா கதவுகளும் திறந்து இருந்தது.  உள்ளே  ஒரு குட்டிப் பெண்   மெல்லிதாக  வசுதேவர்  காதில் மட்டும் விழும்படியாக  அழுது கொண்டு தான் இருக்கும் இடத்தை தெரிவித்துக் கொண்டாள்.  நீ  இட்ட கட்டளை வசுதேவரும் நன்றாக  வார்த்தைக்கு வார்த்தை  நினைவில் இருந்தது. நீ சொல்லியபடியே உன்னை நந்தகோபன் மனைவி யசோதையின் அருகே  விட்டுவிட்டு அவள் பக்கத்திலிருந்த பெண் குழந்தை யோக மாயா வை  கையில் ஏந்திக்கொண்டு திரும்பி நடந்தார்.   வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல்  வசுதேவர் செயல்பட்டு  சீக்கிரமே  வந்த வழியே திரும்பி  மதுரா வந்து,  அரண்மனை சிறைச்சாலைக்குள் நுழைந்து விட்டார். 

ततस्त्वदनुजारवक्षपितनिद्रवेगद्रवद्-
भटोत्करनिवेदितप्रसववार्तयैवार्तिमान् ।
विमुक्तचिकुरोत्करस्त्वरितमापतन् भोजरा-
डतुष्ट इव दृष्टवान् भगिनिकाकरे कन्यकाम् ॥३॥

tatastvadanujaaravakshapitanidravegadravadbhaT
Otkaraniveditaprasavavaartayaivaartimaan|
vimuktachikurOtkarastvaritamaapatan bhOjaraa-
DatuShTa iva dR^iShTavaan bhaginikaakare kanyakaam || 3

ததஸ்த்வத³னுஜாரவக்ஷபிதனித்³ரவேக³த்³ரவ-
த்³ப⁴டோத்கரனிவேதி³தப்ரஸவவார்தயைவார்திமான் |
விமுக்தசிகுரோத்கரஸ்த்வரிதமாபதன் போ⁴ஜரா-
ட³துஷ்ட இவ த்³ருஷ்டவான் ப⁴கி³னிகாகரே கன்யகாம் || 39-3 ||

கதவுகள்  ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் தானாகவே மூடிக்கொண்டு  தாள் போட்டுக்  கொண்டன. பூட்டுகள் தொங்கின. வசுதேவர் தேவகி உடம்பில் பழையபடி சங்கிலி.  பெண்குழந்தை யோக மாயாவின் அழு குரல் கேட்டது.   காவலாளிகளை  எழுப்பியது.  ஓஹோ  தேவகிக்கு குழந்தை பிறந்து அழுகிறதே,  உடனே  ராஜா கம்ஸனிடம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தலை தப்பாது.   காவலாளிகள்  கம்ஸனைத் தேடி ஓடினார்கள்.  கம்ஸன் அவசரமாக ஓடிவந்தான் சிறைச் சாலைக்கு.  ஆஹா, என்னைக் கொல்லப் பிறந்தவன் ரெடி.  நம் கையால் கொல்லப் படப்போகிறான்  என்று  வாளோடு வந்தவன்  தன் சகோதரி  தேவகியின் கையில்  பெண்குழந்தையைப்  பார்த்தான்.   ,

ध्रुवं कपटशालिनो मधुहरस्य माया भवे-
दसाविति किशोरिकां भगिनिकाकरालिङ्गिताम् ।
द्विपो नलिनिकान्तरादिव मृणालिकामाक्षिप-
न्नयं त्वदनुजामजामुपलपट्टके पिष्टवान् ॥४॥

dhruvaM kapaTa shaalinO madhuharasya maayaa bhavedasaaviti
kishOrikaaM bhaginikaakaraalingitaam |
dvipO nalinikaantaraadiva mR^iNaalikaamaakshipa
nnayaM tvadanujaamajaamupalapaTTake piShTavaan ||4

த்⁴ருவம் கபடஶாலினோ மது⁴ஹரஸ்ய மாயா ப⁴வே-
த³ஸாவிதி கிஶோரிகாம் ப⁴கி³னிகாகராலிங்கி³தாம் |
த்³விபோ நலினிகாந்தராதி³வ ம்ருணாலிகாமாக்ஷிப-
ந்னயம் த்வத³னுஜாமஜாமுபலபட்டகே பிஷ்டவான் || 39-4 ||

மஹா விஷ்ணுவை நம்பக்கூடாது. கபட நாடகன்  அவன்.  ஏதோ தந்திரம் நடந்திருக்கிறது.  விடக் கூடாது இந்த  குழந்தையை.    வெடுக்கென்று  தேவகியின் கையில் இருந்த பெண் குழந்தையைப் பிடுங்கினான்  கம்ஸன்.   குளத்தில்  கண்ணில் பட்ட தாமரைப் பூவை பெரிய  யானை தனது தும்பிக்கையால் சுற்றி பறிப்பதைப் போல் இருந்தது அவன் செய்கை.  அதே வேகத்தில் அந்த  பெண் குழந்தையை  அருகே  இருந்த கல்லின் மேல் பலத்தோடு  தூக்கி  வீசினான். யோக மாயா பிறப்பு இறப்பு இல்லாதவள் என்று அவன் எப்படி அறிவான்?

तत: भवदुपासको झटिति मृत्युपाशादिव
प्रमुच्य तरसैव सा समधिरूढरूपान्तरा ।
अधस्तलमजग्मुषी विकसदष्टबाहुस्फुर-
न्महायुधमहो गता किल विहायसा दिद्युते ॥५॥

tatO bhavadupaasakO jhaTiti mR^ityupaashaadiva
pramuchya tarasaiva saa samadhiruuDharuupaantaraa |
adhastalamajagmuShii vikasadaShTabaahusphura
nmahaayudhamahO gataa kila vihaayasaa didyute || 5

ததோ ப⁴வது³பாஸகோ ஜ²டிதி ம்ருத்யுபாஶாதி³வ
ப்ரமுச்ய தரஸைவ ஸா ஸமதி⁴ரூட⁴ரூபாந்தரா |
அத⁴ஸ்தலமஜக்³முஷீ விகஸத³ஷ்டபா³ஹுஸ்பு²ர-
ந்மஹாயுத⁴மஹோ க³தா கில விஹாயஸா தி³த்³யுதே || 39-5 ||

அவளை மேலே  தூக்கி வீசும்போதே  கம்ஸனின்  கைகளிலிருந்து  நைஸாக  வழுக்கி வெளியேறி னால் யோகமாயா.  குருவாயூரப்பா,  உன் பக்தன் எப்படி  யமனின் பாசக் கயிற்றிலிருந்து தப்பிப் பானோ அப்படி  இருந்தது அவள் செயல்.   யோகமாயா  கம்ஸனின்  கரங்களிலிருந்து விலகியதும் வேறு உருவம் கொண்டாள் .  ஆகாயத்தில் தெரிந்தாள் .  அவளது அஷ்ட  புஜங்களிலும் விதவிதமான  ஆயுதங்கள் பளபளவென்று  மின்னின.  

नृशंसतर कंस ते किमु मया विनिष्पिष्टया
बभूव भवदन्तक: क्वचन चिन्त्यतां ते हितम् ।
इति त्वदनुजा विभो खलमुदीर्य तं जग्मुषी
मरुद्गणपणायिता भुवि च मन्दिराण्येयुषी ॥६॥

nR^ishamsatara kamsa te kimu mayaa viniShpiShTayaa
babhuuva bhavadantakaH kvachana chintyataaM te hitam |
iti tvadanujaa vibhO khalamudiirya taM jagmuShii
marudgaNapaNaayitaa bhuvi cha mandiraaNyeyuShii || 6

ந்ருஶம்ஸதர கம்ஸ தே கிமு மயா வினிஷ்பிஷ்டயா
ப³பூ⁴வ ப⁴வத³ந்தக꞉ க்வசன சிந்த்யதாம் தே ஹிதம் |
இதி த்வத³னுஜா விபோ⁴ க²லமுதீ³ர்ய தம் ஜக்³முஷீ
மருத்³க³ணபணாயிதா பு⁴வி ச மந்தி³ராண்யேயுஷீ || 39-6 ||

கிருஷ்ணா, உன் அருமைச் சகோதரி யோக மாயா அப்போது  கம்ஸனிடம் என்ன சொன்னாள் நினைவிருக்கிறதா உனக்கு?   சொல்கிறேன் கேள்.  ''அடே, கொடியவனே , கம்ஸா, என்னைக் கொல்வதால்  உனக்கு என்னடா  பிரயோஜனம்?   உன்னுடைய எமன்  ஏற்கனவே எங்கோ   பிறந்தாயிற்று. உன்  ஆயுசை, நாட்களை,  இனி எண்ணிக்கொள். கவலைப்படு ''.  யோகமாயா மறைந்தாள்.  விண்ணில் தேவர்கள்  மகிழ்ந்தார்கள். உன்னையும்  அவளையும் போற்றினார்கள்.  பல கோவில்களில் அவள்  தெய்வமாக  குடிகொண்டு  வணங்கப்படுகிறாள். 

प्रगे पुनरगात्मजावचनमीरिता भूभुजा
प्रलम्बबकपूतनाप्रमुखदानवा मानिन: ।
भवन्निधनकाम्यया जगति बभ्रमुर्निर्भया:
कुमारकविमारका: किमिव दुष्करं निष्कृपै: ॥७॥

pragepunaragaatmajaavachanamiiritaa bhuubhujaa
pralamba baka puutanaa pramukha daanavaa maaninaH |
bhavannidhanakaamyayaa jagati babhramurnirbhayaaH
kumaaraka vimaarakaaH kimiva duShkaraM niShkR^ipaiH || 7

ப்ரகே³ புனரகா³த்மஜாவசனமீரிதா பூ⁴பு⁴ஜா
ப்ரலம்ப³ப³கபூதனாப்ரமுக²தா³னவா மானின꞉ |
ப⁴வன்னித⁴னகாம்யயா ஜக³தி ப³ப்⁴ரமுர்னிர்ப⁴யா꞉
குமாரகவிமாரகா꞉ கிமிவ து³ஷ்கரம் நிஷ்க்ருபை꞉ || 39-7 ||

கம்ஸனுக்கு நடந்த  அனுபவம் மறுநாள் காலை  அவனது அரண்மனையில்  அவனோடு கூடி இருக்கும் ராக்ஷஸர்களுக்கு தெரிந்தது.  மமதையும் கர்வமும்  ஆணவமும் கொண்ட  ப்ரலம்ப, பகன் , பூதனா , கம்ஸனுக்கு யோகமாயா எச்சரிக்கை விடுத்ததை பற்றி  விவாதித்தார்கள்.   கிருஷ்ணா, கம்ஸனுக்கு  இனி அடுத்த வேலை, உன்னைத் தேடி கண்டுபிடித்து கொல்வது  ஒன்று தான். எல்லா இடங்களுக்கும்  ஆட்கள் தேட புறப்பட்டார்கள். எதற்கு  வம்பு,  எல்லா குழந்தைகளையும் கொன்றுவிட்டால்  எதனால் தனக்கு தீங்கு விளையும்?  அராஜகமும் அக்ரமமும், அதிகார பலமும் கொண்ட அரக்கர்கள் என்ன வேண்டுமானாலும் இரக்கமின்றி  செய்வார்கள் அல்லவா?

तत: पशुपमन्दिरे त्वयि मुकुन्द नन्दप्रिया-
प्रसूतिशयनेशये रुदति किञ्चिदञ्चत्पदे ।
विबुध्य वनिताजनैस्तनयसम्भवे घोषिते
मुदा किमु वदाम्यहो सकलमाकुलं गोकुलम् ॥८॥

tataH pashupamandire tvayi mukunda nandapriyaaprasuuti
shayane shaye rudati ki~nchida~nchatpade |
vibudhya vanitaajanai stanayasambhave ghOShite
mudaa kimu vadaamyahO sakalamaakulaM gOkulam || 8

தத꞉ பஶுபமந்தி³ரே த்வயி முகுந்த³ நந்த³ப்ரியா-
ப்ரஸூதிஶயனேஶயே ருத³தி கிஞ்சித³ஞ்சத்பதே³ |
விபு³த்⁴ய வனிதாஜனைஸ்தனயஸம்ப⁴வே கோ⁴ஷிதே
முதா³ கிமு வதா³ம்யஹோ ஸகலமாகுலம் கோ³குலம் || 39-8 ||

என்னப்பனே , பிரபு , முகுந்தா,  யசோதையின் அருகே  படுத்திருந்த நீ , கை  கால்களை உதைத்துக்  கொண்டு  விசும்பினாய்.  இதனால் அருகில் உறங்கிக்கொண்டிருந்த யசோதை விழித்துக் கொண்டால், மற்ற   சேடியர்கள், தோழிகள்  யாவரும்  விழித்துக்கொண்டார்கள்,  நந்தகோப மகாராஜா வுக்கு  பிள்ளைக் குழந்தை  பிறந்ததாக  எல்லோருக்கும் செய்தி  போய்விட்டது.  கோகுலம் முழுதுமே  சில வினாடிகளில் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்தது.  எங்குமே  ஆனந்தம். 

अहो खलु यशोदया नवकलायचेतोहरं
भवन्तमलमन्तिके प्रथममापिबन्त्या दृशा ।
पुन: स्तनभरं निजं सपदि पाययन्त्या मुदा
मनोहरतनुस्पृशा जगति पुण्यवन्तो जिता: ॥९॥

ahO khalu yashOdayaa navakalaaya chetOharaM
bhavantamalamantike prathamamaapibantyaa dR^ishaa |
punaH stanabharaM nijaM sapadi paayayantyaa mudaa
manOharatanuspR^ishaa jagati puNyavantO jitaaH || 9

அஹோ க²லு யஶோத³யா நவகலாயசேதோஹரம்
ப⁴வந்தமலமந்திகே ப்ரத²மமாபிப³ந்த்யா த்³ருஶா |
புன꞉ ஸ்தனப⁴ரம் நிஜம் ஸபதி³ பாயயந்த்யா முதா³
மனோஹரதனுஸ்ப்ருஶா ஜக³தி புண்யவந்தோ ஜிதா꞉ || 39-9 ||

குருவயூரப்பா,    இந்த யசோதை  என்ன தவம் செய்தனள்?  மூவுலகிலும்  யாருக்கும் கிட்டாத பாக்ய சாலி.  உன்னை  ஆசையோடு  விழிகள் விரிந்து பார்க்கிறாள்.  ஆஹா  எத்தனை அழகு இந்த சிங்கக்குட்டி.  நீலத்தாமரை.  அவள் எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆனந்தமாக  ஆகாயத்தில்  பறந்துகொண்டிருந்தாள் .  உன் கண்கள் சொல்லும் காவியத்தை பருகினாள். உனக்கு பாலூட்டிக்கொண்டே  உன் உடம்பெல்லாம் மலரை தொடுவதுபோல் மெதுவாக  தடவினாள். அந்த ம்ருதுவில்  உள்ளம் கொள்ளைபோயிற்று. 

 भवत्कुशलकाम्यया स खलु नन्दगोपस्तदा
प्रमोदभरसङ्कुलो द्विजकुलाय किन्नाददात् ।
तथैव पशुपालका: किमु न मङ्गलं तेनिरे
जगत्त्रितयमङ्गल त्वमिह पाहि मामामयात् ॥१०॥

bhavatkushala kaamyayaa sa khalu nandagOpastadaa
pramOdabharasankulO dvijakulaaya kinnaadadaat |
tathaiva pashupaalakaaH kimu na mangalaM tenire
jagat tritayamangala tvamiha paahi maamaamayaat ||10

ப⁴வத்குஶலகாம்யயா ஸ க²லு நந்த³கோ³பஸ்ததா³
ப்ரமோத³ப⁴ரஸங்குலோ த்³விஜகுலாய கிம் நாத³தா³த் |
ததை²வ பஶுபாலகா꞉ கிமு ந மங்க³லம் தேனிரே
ஜக³த்ரிதயமங்க³ல த்வமிஹ பாஹி மாமாமயாத் || 39-10 ||

அப்பாவாகிவிட்ட  நந்தகோபன் ஓடிவந்தான். கால்கள் தரையில் பாவவில்லை.  ஆனந்தக்கடலில் நீந்தினான்.  வாரி  வாரி தனம் , தானியங்கள், வஸ்திரங்கள் எல்லாம்  அனைவருக்கும் வழங்கி னான். போதும் போதும் என்று கதறும் வரை  அனைவர் கைகளிலும் திணித்தான். பிராமணர்கள்  திருப்தியாக மந்திரங்கள் ஓதி வாழ்த்தினார்கள். யாதவர்கள்  கோலாகலமாக  கோகுலம் எங்கும் மட்டற்ற மகிழ்ச்சியில்  கொண்டாடினார்கள்.  எண்டே குருவாயூரப்பா, மூவுலகையும்   ரக்ஷித்து,  நன்மை புரிபவனே , என் வியாதியை குணப்படுத்தி  என்னையும் காக்கவேண்டுமப்பா. 


தொடரும் 

sivan jaykay

unread,
Aug 30, 2021, 7:46:15 PM8/30/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீமந்  நாராயணீயம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 
40வது தசகம் 

40.  உயிரைக் குடித்த சிசு 

இந்த தசகத்தில்  பூதனை எனும்  கம்ஸனால்  ஏவப்பட்ட  அரக்கி  குழந்தை கிருஷ்ணனை விஷம் தடவிய முலைப்பால் கொடுத்துக் கொல்ல  கோகுலம் வந்து, முயற்சியில் தோற்று, கிருஷ்ணனால் கொல்லப் பட்டு மோக்ஷம் அடைவது பற்றி பாடுகிறார்  மேப்பத்தூர்  நாராயண பட்டத்ரி. 

तदनु नन्दममन्दशुभास्पदं नृपपुरीं करदानकृते गतम्।
समवलोक्य जगाद भवत्पिता विदितकंससहायजनोद्यम: ॥१॥

tadanu nandamamandashubhaaspadaM nR^ipapuriiM karadaanakR^ite gatam |
samavalOkya jagaada bhavatpitaa viditakamsasahaayajanOdyamaH || 1

தத³னு நந்த³மமந்த³ஶுபா⁴ஸ்பத³ம் ந்ருபபுரீம் கரதா³னக்ருதே க³தம் |
ஸமவலோக்ய ஜகா³த³ ப⁴வத்பிதா விதி³தகம்ஸஸஹாயஜனோத்³யம꞉ || 40-1 ||

குருவாயூரப்பா, எப்படியெல்லாம்  நீ  காயை  நகர்த்துபவன் என்றறியும்போது  ஆச்சர்யமாக இருக்கிறது. 

 நந்தகோபன்  ஒரு சிற்றரசன், குறுநில  அதிகாரி.  மதுராபுரி  ராஜ்யத்தை சேர்ந்ததால், மன்னன்  கம்ஸனுக்கு  கப்பம் செலுத்த வேண்டியவன்.  ஆகவே  அவ்வப்போது கப்பம் கட்ட மதுராபுரி வருவதால் நீ பிறந்த சமயம் ஒரு தரம்  அங்கே  வருகிறான்.   அரண்மனையில் அப்போது உன் தந்தை  வசுதேவர் நந்தகோபனை பார்க்க நேரிடுகிறது.  நந்தகோபன்  நற்குணங்கள் நிரம்பியவன் .  மதுராபுரியில் உள்ள   அவனது  நண்பர்கள் மூலம் அவர்  கம்ஸனால்   வஞ்சிக்கப்பட்டவர்,  தமது குழந்தைகளை பிறந்த மறுகணமே கம்ஸன்  வாளுக்கு  பலி  கொடுத்தவர் என்று அறிந்து வருந்துகிறான்.  ஆகவே  வசுதேவருடன் மனதில் இரக்கத்துடன் பேசுகிறான்.

अयि सखे तव बालकजन्म मां सुखयतेऽद्य निजात्मजजन्मवत् ।
इति भवत्पितृतां व्रजनायके समधिरोप्य शशंस तमादरात् ॥२॥

ayi sakhe tava baalaka janma maaM sukhayate(a)dya nijaatmaja janmavat |
iti bhavatpitR^itaaM vrajanaayake samadhirOpya shashamsa tamaadaraat || 2

அயி ஸகே² தவ பா³லகஜன்ம மாம் ஸுக²யதே(அ)த்³ய நிஜாத்மஜஜன்மவத் |
இதி ப⁴வத்பித்ருதாம் வ்ரஜனாயகே ஸமதி⁴ரோப்ய ஶஶம்ஸ தமாத³ராத் || 40-2 ||

“நண்பரே, உங்களைப் பற்றி, உங்கள் பிள்ளைகளின்  இழப்பு  பற்றி கேள்விப்பட்டேன்.  உங்கள் சோகம் எனக்கு புரிகிறது.  எனக்கும் ஒரு பிள்ளை பிறந்திருக்கிறான். அந்த மகிழ்ச்சி எவ்வளவு ஆனந்தம் தருவது என்று எனக்கு தெரியும்''
''ஆம்  நந்தகோபரே , உங்கள் மகன் மிகவும்  பாக்கியசாலி. அவனைப் பெற  நீங்கள்  புண்யம் செய்தவர்'' என்கிறார்  வசுதேவர்.

इह च सन्त्यनिमित्तशतानि ते कटकसीम्नि ततो लघु गम्यताम् ।
इति च तद्वचसा व्रजनायको भवदपायभिया द्रुतमाययौ ॥३॥

iha cha santyanimitta shataani te kaTakasiimni tatO laghu gamyataam |
iti cha tadvachasaa vrajanaayakO bhavadapaayabhiyaa druta maayayau || 3

இஹ ச ஸந்த்யனிமித்தஶதானி தே கடகஸீம்னி ததோ லகு⁴ க³ம்யதாம் |
இதி ச தத்³வசஸா வ்ரஜனாயகோ ப⁴வத³பாயபி⁴யா த்³ருதமாயயௌ || 40-3 ||

பேச்சு வாக்கில்  வசுதேவர் சொல்கிறார்: 
''நந்தகோபரே,  இப்போது நிலைமை  சரியில்லை. இங்கும் அங்கும்  எங்குமே  ஆபத்து சூழ்ந்துள்ளது. கெட்ட சகுனங்கள் தோன்றுகிறது. நீங்கள்  ஜாக்கிரதையாக   சீக்கிரமே கோகுலம் போய் சேருங்கள். என் மனதில் பட்டதைச் சொன்னேன்'' என்கிறார்  வசுதேவர்.  இதைக் கேட்ட நந்தகோபன்  மனக்கிலேசத்துடன் உடனே  கோகுலம் திரும்புகிறார்.  அருமையான பிள்ளையாக பிறந்த உனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற கவலை அவரை நடுங்க வைக்கிறது. ஓடோடி கோகுலம் வருகிறார்.

अवसरे खलु तत्र च काचन व्रजपदे मधुराकृतिरङ्गना ।
तरलषट्पदलालितकुन्तला कपटपोतक ते निकटं गता ॥४॥

avasare khalu tatra cha kaachana vrajapade madhuraakR^itiranganaa |
taralaShaTpada laalita kuntalaa kapaTapOtaka te nikaTaM gataa || 4

அவஸரே க²லு தத்ர ச காசன வ்ரஜபதே³ மது⁴ராக்ருதிரங்க³னா |
தரலஷட்பத³லாலிதகுந்தலா கபடபோதக தே நிகடம் க³தா || 40-4 ||

வசுதேவர் மனதில் பட்டது நிஜமாகி விட்டது.  ஏனென்றால்  மதுராவில் இவர்கள் இப்படி  பேசிக்கொண்டே இருக்கும்போது கோகுலத்தில்  வ்ரஜபூமியில், யாரோ  ஒரு புதியவள்,   அழகான இளம் பெண் வந்து  சேருகிறாள். நந்தகோபன் வீட்டுக்குள் வந்துவிட்டாள். யசோதையை சந்தித்து,   நைச்சியமாக பேசிவிட்டு, உன்னைப் பற்றி அறிந்து கொண்டு உன்னைக்  காணும் ஆவலோடு உன்னருகே வந்து விட்டாள். கபட நாடக சூத்ரதாரியாகிய நீ  ஒன்றும் அறியா பச்சிளம் குழந்தையாக  அவளைப்  பார்த்து  பொக்கை வாயோடு சிரித்தாய். 

सपदि सा हृतबालकचेतना निशिचरान्वयजा किल पूतना ।
व्रजवधूष्विह केयमिति क्षणं विमृशतीषु भवन्तमुपाददे ॥५॥

sapadi saa hR^itabaalaka chetanaa nishicharaanvayajaa kila puutanaa |
vrajavadhuuShviha keyamiti kshaNaM vimR^ishatiiShu bhavantamupaadade || 5

ஸபதி³ ஸா ஹ்ருதபா³லகசேதனா நிஶிசரான்வயஜா கில பூதனா |
வ்ரஜவதூ⁴ஷ்விஹ கேயமிதி க்ஷணம் விம்ருஶதீஷு ப⁴வந்தமுபாத³தே³ || 40-5 ||

உண்மையில் அந்த பெண், மானிடப்பெண் அல்ல. கம்ஸனால் அனுப்பப்பட்ட அரக்கி. பல குழந்தைகளின் உயிரைப் பறித்தவள். பூதனை  என்ற பெயர் கொண்டவள்.  அழகிய இளம் பெண்ணாக  உருவெடுத்து வந்தவள்.  ''இந்த  அழகான  குழந்தையை கையில் எடுத்து வைத்துக்கொள்கிறேன்''  என்று உன்னை வாரி எடுத்து கரங்களில் வைத்துக்கொண்டாள் .  உனக்கு தான் அவள் யாரென்று தெரியுமே!

 ललितभावविलासहृतात्मभिर्युवतिभि: प्रतिरोद्धुमपारिता ।
स्तनमसौ भवनान्तनिषेदुषी प्रददुषी भवते कपटात्मने ॥५॥

lalita bhaavavilaasahR^itaatmabhi-ryuvatibhiH pratirOddhumapaaritaa |
stanamasau bhavanaantaniSheduShii pradaduShii bhavate kapaTaatmane || 6

லலிதபா⁴வவிலாஸஹ்ருதாத்மபி⁴ர்யுவதிபி⁴꞉ ப்ரதிரோத்³து⁴மபாரிதா |
ஸ்தனமஸௌ ப⁴வனாந்தனிஷேது³ஷீ ப்ரத³து³ஷீ ப⁴வதே கபடாத்மனே || 40-6 ||

''ஆஹா, பாவம்  இந்த  அழகிய  இளம் பெண்ணுக்கு எத்தனை ஆசை  நமது கண்ணன் மேல்''  என்று மற்ற கோபியர் மெச்சி அவளை உன்னை நெருங்கி தூக்கி கையில் எடுத்து மடியில் வைத்துக் கொள்ள அனுமதித்தனர். நீ  சிணுங்கினாய். பால்  வேண்டும்போது அழுவாயே  அந்த குரலில் ஒலித்தாய் .

 '' நானும் ஒரு இளம் தாய்.  எனக்கும் வீட்டில் இவனைப் போல் ஒரு குழந்தை இருக்கிறது. நான் இவனுக்கு பால் ஊட்டட்டுமா. ஆசையாக இருக்கிறது' என்று  மற்றவர் மனதை எப்படியோ மயக்கி  அனுமதி பெற்று விட்டாள்  பூதனை. 

समधिरुह्य तदङ्कमशङ्कितस्त्वमथ बालकलोपनरोषित: ।
महदिवाम्रफलं कुचमण्डलं प्रतिचुचूषिथ दुर्विषदूषितम् ॥७॥

samadhiruhya tadankamashankitastvamatha baalakalOpana rOShitaH |
mahadivaamraphalaM kuchamaNDalaM pratichuchuuShitha durviShaduuShitam || 7

ஸமதி⁴ருஹ்ய தத³ங்கமஶங்கிதஸ்த்வமத² பா³லகலோபனரோஷித꞉ |
மஹதி³வாம்ரப²லம் குசமண்ட³லம் ப்ரதிசுசூஷித² து³ர்விஷதூ³ஷிதம் || 40-7 ||

''கிருஷ்ணா, நீ சர்வமும் அறிந்தவன் அறிபவன். எத்தனை குழந்தைகளை இந்த பாதகி பூதனை  கொன்றிருக்கிறாள் என்று அவளைக் கண்டதுமே உனக்கு கடும் கோபம் வந்தது.  பழி வாங்க இதுவே தக்க தருணம் என்று  உன் நாடகத்தை ஆரம்பித்து விட்டாய்.  பூதனை மடியில் ஜம்மென்று ஏறி அமர்ந்து கொண்டாய்.  அவள்  மார்பகத்தில் உன் வாயை பொருத்தி உனக்கு  பூதனை  தாய்ப் பாலூட்ட  அனுமதித்தாய்.   பூதனை கொடிய விஷத்தை மார்பகம் மேல்  பூசிக்கொண்டு  திட்டமோடு  வந்திருப்பவள்.  , உனது வாய் பட்ட அடுத்த சில வினாடிகளில் நீ மரணமடைய ஏற்பாடுடன்  வந்தவள். பாவம் மற்றவர்கள் யாருக்கும் இது தெரியாதே.   மாம்பழத்தை  உறிஞ்சி சாப்பிடுவது போல் அவள் மார்பகத்தை நீ  வாய் திறந்து உறிஞ்சினாய்.

असुभिरेव समं धयति त्वयि स्तनमसौ स्तनितोपमनिस्वना ।
निरपतद्भयदायि निजं वपु: प्रतिगता प्रविसार्य भुजावुभौ ॥८॥

asubhireva samaM dhayati tvayi stanamasau stanitOpama nisvanaa |
nirapatad bhayadaayi nijaM vapuH pratigataa pravisaarya bhujaavubhau || 8

அஸுபி⁴ரேவ ஸமம் த⁴யதி த்வயி ஸ்தனமஸௌ ஸ்தனிதோபமனிஸ்வனா |
நிரபதத்³ப⁴யதா³யி நிஜம் வபு꞉ ப்ரதிக³தா ப்ரவிஸார்ய பு⁴ஜாவுபௌ⁴ || 40-8 ||

''குருவாயூரப்பா, என்ன அப்படி சிரித்துக்கொண்டே என்னை பார்க்கிறாய் மாயக்காரா?  அப்புறம் நடந்ததைச்  சொல்கிறேன் கேள்' என்று மேலே பாடுகிறார்  மேப்பத்தூர் நாராயண பட்டத்ரி. 

''தனது தந்திரம் பலனளித்தது. வந்த காரியம் வெற்றி'' என்று  பூதனை மகிழ்ந்தாள். எளிதில் உன்னைக் கொல்ல  முடிந்தது என்று திருப்தி பட்டாள் . ஆனால் நடந்தது வேறு.   ''வா  உனக்காக தான் காத்திருக்கிறேன். நீ தான்  எனது முதல் பிள்ளையார் சுழி ''  என்று நீ அவள்  முலைப் பாலையா உண்டாய்? அவள் உயிரையும் அல்லவோ சேர்த்து ஒரேயடியாக  உறிஞ்சிவிட்டாய்.  சற்றும் இதை எதிர்பார்க்காததால் ,   தாங்கமுடியாத மரண வலியோடு  ''ஹா''  என்று  செவிடு பொடிபட  இடி இடிப்பது போல் பெரும் கூச்சவிட்டால் பூதனை.  மரணம் அவள் வேஷத்தைக்  கலைத்தது.  கொடிய  பயங்கர  ராக்ஷஸி  பூதனை அங்கே  கிடந்தாள்.  திறந்த மார்புடன், இரு கரங்களையும் நீட்டி   பரப்பியபடி   மலைபோல் ஒரு பெரிய  உருவம் கொண்ட ராக்ஷஸி தரையில்  கிடந்தாள். அவள் மார்பகத்தில் நீ பால் குடித்தபடி குழந்தையாக இருந்தாய்.. 

भयदघोषणभीषणविग्रहश्रवणदर्शनमोहितवल्लवे ।
व्रजपदे तदुर:स्थलखेलनं ननु भवन्तमगृह्णत गोपिका: ।।९॥

bhayadaghOShaNabhiiShaNa vigraha shravaNadarshana mOhita vallave |
vrajapade taduraHsthanakhelanaM nanu bhavantamagR^ihNata gOpikaaH || 9

ப⁴யத³கோ⁴ஷணபீ⁴ஷணவிக்³ரஹஶ்ரவணத³ர்ஶனமோஹிதவல்லவே |
வ்ரஜபதே³ தது³ர꞉ஸ்த²லகே²லனம் நனு ப⁴வந்தமக்³ருஹ்ணத கோ³பிகா꞉ || 40-9 ||

அவள் போட்ட  சத்தத்தில்  வ்ரஜ  பூமியில் இருந்த அத்தனை மக்களும்   என்னவோ ஏதோ  ஆபத்து என்று  நந்தகோபன் வீட்டுக்கு தலை தெறிக்க ஓடி வந்துவிட்டார்கள்.  வீடே கொள்ளாதபடி  ஒரு மாபெரும் ராக்ஷஸி தரையில் பயங்கர உருவத்தோடு தரையில் விழுந்து கிடப்பதை பார்த்து திகைத்தார்கள். நடுங்கினார்கள்.  ஏதுமறியாத பச்சிளம் குழந்தையாக   இறந்துகிடந்த அந்த ராக்ஷஸி  பூதனையின் மார்பில் நீ  விளையாடிக்கொண்டிருந்தாய்.  ''பகவானே நீ தான் இந்த சிசுவைக்  காப்பாற்றினாய்'' என்று உன்னை எங்கோ தேடி வேண்டிக்கொண்டார்கள் அனைவரும்.

भुवनमङ्गलनामभिरेव ते युवतिभिर्बहुधा कृतरक्षण: ।
त्वमयि वातनिकेतननाथ मामगदयन् कुरु तावकसेवकम् ॥१०॥

bhuvana mangala naamabhireva te yuvatibhirbahudhaa kR^itarakshaNaH |
tvamayi vaataniketananaatha maamagadayan kuru taavaka sevakam ||10

பு⁴வனமங்க³லனாமபி⁴ரேவ தே யுவதிபி⁴ர்ப³ஹுதா⁴ க்ருதரக்ஷண꞉ |
த்வமயி வாதனிகேதனநாத² மாமக³த³யம் குரு தாவகஸேவகம் || 40-10 ||

''எண்டே குருவாயூரப்பா, நீ  மூவுலகும் காத்து அருள் புரிபவன். இதை அறியாத அந்த  கோபியர்கள் உன்னை பாதுகாப்பவர்களாக  நினைத்துக் கொண்டிருப்பவர்களைக்  கண்டு ரசித்தாய்.  உன்னை வாயார போற்றிப்  பாடுகிறேன் என் மேலும்  கருணைகொண்டு அடிமையாக ஏற்று,   என் நோய் நீக்கி ரக்ஷிக்க வேண்டுமப்பா''  என்று இந்த தசகத்தை நாராயண பட்டத்ரி முடிக்கிறார்.
 
தொடரும் 

sivan jaykay

unread,
Aug 30, 2021, 7:47:28 PM8/30/21
to amrith...@googlegroups.com
ஸ்வாகதம் கிருஷ்ணா  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

இன்று  கிருஷ்ண ஜெயந்தி. ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்தநாள்.  உலகமெங்கும் தெரிந்தவன் கிருஷ்ணன்.  முழு முதற் கடவுள். 
கிருஷ்ணன் அபூர்வன்.   இந்த பெரிய  உலகத்திலே பிறந்ததும்  கொல்லப்படுவதற்காக  தயாரான  ஒரே குழந்தை அவன் தான்.  பிறப்பதற்கு முன்பே,  அவனது தாயும் தந்தையும்   அவன்  பிறந்ததும்  கொல்வதற்கு கொடுத்துவிடுவதாக வாக்கு  தந்துவிட்டார்கள்.   கொலைகாரன் வேறு யாருமில்லை அவன் மாமன் தான்.  உலகத்தில்  தனக்கு குழந்தை பிறந்ததும்  அது சாகப்போகிறது என்று தெரிந்த  ஒரே தாய் தேவகி தான்.    அப்படி அவன் பிறக்கப்போவதும் சிறையிலே தான்  என்பது போனஸ் செய்தி.   ஆனால்  அப்படி அதிசயமாக பிறந்த  கிருஷ்ணன்  தான்  பிறந்தவுடன்  இறந்தவனாகக்   கூடாது, சிறந்தவனாக திகழவேண்டும் என்று திட்டமிட்டவன். ஆகவே பிறந்தவுடன்  தன்னை  இடப்பெயர்ச்சி  செய்ய சொன்னவனும் அந்த  மாய கிருஷ்ணன் தான். 

ஆகவே பிறந்தான்,  நடுநிசியில், ஆற்றைக் கடந்து கொட்டும் மழையில் அக்கரையில் ஒரு ஆயர்  வீட்டில் வளர்ந்தான்.  அவன் வளரும்போது ஒவ்வொரு  நாளும்  அவனைக் கொல்வதற்கு  அனுப்பப் பட்ட ஆபத்துகளை, அரக்கர்களை சந்தித்து  தான் உயிர் தப்பி அவர்கள் உயிரை போக்கினான்.   ஒவ் வொரு  நாளும் மரணத்தை  எதிர்பார்த்து 125 வயது வாழ கிருஷ்ணனால் மட்டுமே  முடியும்.   இதற்கு காரணம் கிருஷ்ணன்  நம்மைப்  போல்  சாதாரணன்  அல்ல.  இப்படி தான்  அவதரிக்க வேண்டும் என்று முன்னேற்பாடுடன் பிறந்தவன்.  கவலைகளை மறந்து  எதிர்ப்புகளை துறந்து சந்தோஷமாக வாழ்வது எப்படி என்று  கீதையாக  நமக்கு சொல்லித் தந்த  உதாரண புருஷன். 

பூமியின்  பாரம் குறைக்க , ராக்ஷச ர்களின்  கொடுமையை  ஒடுக்க, நல்லவர்களைக் காக்க  ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி  அன்று  ரோஹிணி  நக்ஷத்திரத்தில்   உதித்த ஸ்ரீ கிருஷ்ணனின்  ஜனனம் தான் நம்மால்  ஜன்மாஷ்டமி  என்று  உலகமுழுதும் ஹிந்துக்களால்  பல பெயர்களில் , அதாவது, கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி  கிருஷ்ணஜெயந்தி,  என்றெல்லாம்  கொண்டாடப்படுகிறது.    தஹி அண்டி,  தயிர் சட்டி,  என்று வடக்கே அவன் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள்.  குஜராத்தில் வெண்ணை சட்டி விழா. நம் ஊரில் மாட்டு பொங்கலின் போது  மாடுகளுக்கு கொம்பில் வர்ணம், அலங்காரம் செய்வோமே அதுபோல்  நிறைய பசுக்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு மாலைகள் அணிந்து ஊர்வலம் ஜம்மென்று வரும்.நம் ஊர்களில் வெண்ணைத் தாழி  உற்சவம்.


இஸ்கான் கோவில்களில் வெகு வெகு விமரிசையாக இந்த ஜென்மாஷ்டமி விழாக்கள் நடைபெறும்.
வ்ரஜ பூமி என்று கிருஷ்ணன் பிறந்த இடத்தையும், அவன் வளர்ந்த பிரிந்தாவனத்தையும் அவன் கம்சனை தேடிச்சென்று அவனைக் கொன்ற மதுராவையும் தரிசிக்க  இந்தியாவின் பல பாகங்களி லிருந்து பக்தர்கள் வருவார்கள்.  எங்கும் ஜெகஜோதியாக விளக்கொளிகள், வண்ண வண்ண தோரணங்கள், சந்தோஷம். கோலாகலம்,  பக்தர்களின் பரவசம்  எல்லாம் பற்றி எழுத முடியாது.  நினைத்து பார்த்து ரசிக்க வேண்டியது தான் ஒரே வழி.

வடக்கே ஜன்மாஷ்டமி சமயம்  பருவக்காற்று காலம் தீர்ந்து  பயிர்கள் வளர்ந்து அறுவடை காலமாக இருக்கும். எனவே விவசாயிகள், விளை நிலங்களில் அதிக வேலையின்றி கேளிக்கைகளில் ஈடுபட நேரம் கிடைக்குமே. ராஸலீலா வைபவத்திற்கு கேட்கவா வேண்டும். கோவர்தன கிரி நன்றி இன்னும் நம்  ரத்தத்தில் ஓடுகிறதே.

ஜென்மாஷ்டமி அன்று  ஜம்மு காஷ்மீரில்  காற்றாடி விடுகிறார்கள். ஒவ்வொரு வீட்டு மொட்டை மாடியிலிருந்தும்  பட்டம் பறக்கும்.  இந்த  வருஷமும்  இனி  வரும் காலத்திலும்  கேட்கவே வேண்டாம்.  இதுவல்லவோ  சிறப்பு  அந்தஸ்து.!  மணிப்பூரில் அஸ்ஸாமில்  ராஸ் லீலா கேளிக்கைகள் பிரபலம்.

  கோகுலாஷ்டமி தினத்தன்று ஒவ்வொரு வீட்டிலும் கண்ணனை வரவேற்பது வழக்கம். வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், பாதச்சுவடுகளை மாக்கோலமாக இடுவர். பாத சுவடு கோலமிடுவதில்  தான் எத்தனை ரகம். குழந்தைகளின்  கால்களை மாவில் தோய்த்து  ரப்பர் ஸ்டாம்பாக   rubber stamp ஆக  சில வீடுகளில்.   பெரிய முன்பாகம், சின்ன பின்பாதம்,   விரல்களுக்கு மேல், அல்லது குறைவாக, பாதங்களும் ஒன்றன் பின் மற்றொன்றாக,  சேர்ந்து, 8 வரைந்து மேலே குச்சி குச்சிகளாக விரல்களை  நீட்டி  எத்தனையோ வீடுகளில் வேடிக்கையாக  பார்க்கலாம்.  குழந்தைகளை பாலகிருஷ்ணர்களாவும், ராதைகளாகவும் கோபியர்களாகவும் அலங்கரித்து அவர்களை கண் குளிர,  பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  நம்  குழந்தைகளுக்கு கண்ணன் போல் வேடமிட்டும் அவர்களின் பாதச்சுவடுகளை மாக்கோலமாக வரையும்  பழக்கத்தை வளர்ந்துவரும்  நாகரிகம்   இதுவரை  மாற்றவில்லை. இப்படி பாதம் வரைவதற்கு அருமையான ஆன்மிக காரணம் இருக்கிறது. கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் பார்க்க வேண்டியது இறைவனின் திருவடியைத் தான்.  ஆச்சார்யனின் பாதத்தை  கண்ணனின் திருவடியோடு சேர்த்து  நாம்  வழிபடுபவர்கள்.  நம் வீட்டிலும் பாதச்சுவடுகளை வரைந்து வைத்தால் குழந்தைக்கண்ணன் தன் பிஞ்சு பாதங்களை ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நம் வீட்டுக்கு வருவதைப் போல ஒரு தோற்றத்தைத் தரும்.

தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும்  குட்டி குட்டியாக  கிருஷ்ணன் பாதங்கள் அரிசி மாவில் வரைந்து கண்ணை பறிக்கும். உப்பு சீடை, வெல்ல சீடைக்கு ஒரு தனி ருசி. இரவெல்லாம் பஜனை. ஹரே கிருஷ்ணா நாம சங்கீர்த்தனம். வடக்கே கீத கோவிந்தம் படிப்பார்கள், பாடுவார்கள். 

கண்ணனுக்கு பட்சணங்கள் என்றால் கொள்ளை பிரியம். அவல், பொரி, சுகியன், அப்பம்,தட்டை, வெல்லச் சீடை,உப்புச் சீடை,முறுக்கு, அதிரசம் ஆகியவைகளை படையல் இட்டு வணங்கி குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கின்றனர். 

போன வருஷமும்  கொண்டாட முடியாமல்  கொரோனா  தடுத்தது. இந்தவருஷமும் அதே கதை.   அதற்கு முந்தைய வருஷங்களில்  குட்டி குட்டியாக குழந்தைகளோடு -- இல்லை  பிஞ்சு ராதைகள்   குட்டி  கிருஷ்ணன்களோடு குலாவினேன். இந்த வருஷம் உடல் நலம் வெளியே  போக அனுமதியில்லை.  பாகிஸ்தான்  பங்களா தேஷ் தேசங்களிலும் கிருஷ்ணனை இவ்வாறு கொண்டாடினார்கள், அரசியல்,   
பிரிவினை என்பவை அவற்றை அழித்து விட்டது. எனினும் அங்கங்கே  வெளியே அதிகம் அரசல் புரசல் இல்லாமல் ஸ்ரீ ஜெயந்தி கொண்டாடி தான் வருகிறார் கள் சில பக்தர்கள். மனம் வேறு மதம் வேறு.

இஸ்கான்  பக்தர்கள்  அமெரிக்காவிலும் மற்ற சில வெள்ளைக்கார தேசங்களிலும் கிருஷ்ண ஜெயந்தியை ஊர்வலமாக, ஆடல் பாடலோடு மேள  தாளங்களோடு  நெற்றியில் நாமம், தலையில் முழு, அரை, சிண்டு,   குடுமிகளோடு,  பஞ்சகச்சம், கோலத்தோடு பெண்களும் புடவையோடு தெருவெல்லாம்  ஆடிப்பாடிக் கொண்டு, கோலாட்டம், கைத்தாளங்களுடன்  நெற்றியில் கோபி சந்தனமிட்ட  வண்ண வண்ண குழந்தைகளோடு கொண்டாடுவதைக்  காண  நிச்சயம் ரெண்டு கண்கள் போதாது.

கோகுலாஷ்டமி விழாவை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வர  கேட்கவா வேண்டும்.  மனிதர்களுக்கு பிறந்தநாள் என்றாலே வீடுகளை அலங்கரித்து தோரணங்கள் கட்டி உற்சாகமாக கொண்டாடுவார்கள். கோகுலாஷ்டமி,  அதுவும் எல்லோருக்கும் பிடித்த  பகவான் கண்ணன் அவதரித்த நாள் என்றால் உற்சாகத்துக்கு என்ன குறைவு?  இந்த  கடவுள் தானே  மனிதராக அவதரித்து அழியாக கீதையை  நமக்கு பரிசளித்ததற்காகவே  நாம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடவேண்டும்.கண்ணன் பிறந்த ஆலயங்களில் அலங்காரம்,தோரணங்கள் எங்கும் கண்ணை பறித்து  களைகட்டும் .

எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் பூமியில் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் நான் தோன்றுவேன். கொடியவர்களை அழித்து பக்தர்களைக் காப்பதற்காகவும், தர்மத்தை நிலை நாட்டு வதற்காகவும் யுகம்தோறும் அவதரிப்பேன், என்பது கீதைநாயகன் கிருஷ்ணரின் அருள்வாக்கு. தர்மநெறி தவறி நடந்த கொடிய அரசர்களிடம் இருந்து உலகைக் காப்பதற்காக குருசேக்ஷத்திர யுத்தத்தை நடத்தினார். 

கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை இன்றும் உள்ளது.நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில், விரதம் இருக்க வேண்டும். நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம் அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம். தஹிகலா என்றால், பல திண்பண்டங்களுடன் தயிர் சேர்த்தல், பாலையும் வெண்ணையையும் கலப்பது என்பர்.
வரஜபூமியில் கோபியர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டுசாதத்தோடு தன்னுடையதையும் சேர்த்து உண்பான். இந்த பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் 
விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன. மக்கள் அன்று முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து நடு இரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தையோ அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணை பால் போன்ற பலவிதமான பண்டங்களை உண்ணுவார்கள்.

பசுக்களையும், கன்றுகளையும் மேய்க்கும் வ்ரஜபூமியில் ஸ்ரீகிருஷ்ணன் தனது உணவுடன் தன் சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் ஒன்றாகக் கலந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இதைத்தான் நம் ஊரில் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்

கிருஷ்ணன் தனது லீலைகளின் மூலம் எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டவன். தனது பிறப்பு முதல் வாழ்நாள் முழுவதும் லீலைகள் புரிந்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டி யவன்.  இந்து மக்களால் வழிபாடு செய்யப்படும் கடவுள்களில் கிருஷ்ணனின் குழந்தைப் பருவமே எல்லோராலும் முதன்மை யானதாக நினைவு கூறப்படுகிறது.

ஆயர் பாடியில் கோபியர்களையும், இடையர்களையும் துன்பங்களில் இருந்து பாதுகாத்ததால் கிருஷ்ணனின்  பிறப்பானது எளியோர்களாலும் கொண்டாடப்படுகிறது.  அன்றைய தினம் பகல் முழுவதும் விரதம் இருக்கின்றனர்.  மாலை நேரத்தில் வீடுகள் அலங்கரிக்கப்படுகின்றன. வீட்டின் வாயிற்படி முதல் வழிபாட்டிடம் வரையிலும் மாவினைக் கொண்டு குழந்தையின் காலடித்தடங்கள் வரையப்படுகின்றன.

ஆயர்பாடியில் கண்ணன் குழந்தையாக இருந்த போது உயரத்தில் கட்டப்பட்டிருந்த பானைகளில் உள்ள வெண்ணையை எடுத்து யாரும் அறியாத வண்ணம் உண்ணும் போது சிதறிய வெண்ணை யில் கால் வைத்து நடந்ததால் உண்டான காலடித் தடங்களை நினைவு கூறும் வகையில் வீடுகளில் குழந்தைக் கண்ணனின் காலடித் தடங்கள் வரையப்படுகின்றன.  இவ்வாறு செய்வதால் குழந்தைக் கண்ணன் வாயிற்படி வழியே வந்து வழிபாட்டு அறையினுள் நுழைந்து தங்களின் வழிபாட்டை ஏற்றுக் கொள்வதாகவும் நம்பப்படுகிறது.

வழிபாட்டு அறையில் கிருஷ்ணருடைய உருவப்படமோ, சிலையோ இடம் பெறுகின்றது. குழந்தை கிருஷ்ணருக்குப் பிரியமான தட்டை, உப்பு சீடை, இனிப்பு சீடை, அதிரசம், தேன்குழல், இனிப்பு வகைகள், பால், வெண்ணெய், திரட்டுப்பால் போன்றவை படைக்கப்படுகின்றன.

கிருஷ்ணர் முல்லை, மல்லிகை, துளசி ஆகியவை கொண்டு அலங்கரிக்கப்படுகிறார். விளக்கு ஏற்றப்பட்டு தீபதூபங்கள் காண்பிக்கப்படுகின்றன. பகவத்கீதை, கிருஷ்ணர் பற்றிய பாடல்கள் பாடப்படுகின்றன. பின் அருகிலிருப்போர் மற்றும் உறவினர்களுக்கு பிரசாத விநியோகம்.   வீட்டில் வழிபாடு முடிந்தபின் அருகிலிருக்கும் கிருஷ்ணர் கோவிலுக்கு வழிபாடு செய்யச் செல்கின்றனர். கோவில்களில் நடு இரவு சிறப்பு வழிபாடுகள். கிருஷ்ணர் நள்ளிரவு பிறந்ததால் அதனை நினைவு கூறும் விதமாக நள்ளிரவு வழிபாடு நடைபெறுகிறது. அதன்பின்னரே விரதம் இருப்போர் உணவு உண்டு விரதத்தினை முடிக்கின்றனர். குழந்தைகள் கண்ணன் மற்றும் ராதை வேடங்கள் இட்டு வழிபாடுகளில் கலந்து கொள்கின்றனர்.

இவ்விரத முறையைப் பின்பற்றவதால் குழந்தை இல்லாதவர்களுக்கு அழகான, புத்திகூர்மையான குழந்தை பாக்கியம் கிட்டும் என்றும், குழந்தைகள் உள்ளவர்களுக்கு குழந்தைகளின் அறிவு மேம்படு வதோடு நற்சிந்தனையும் கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.

 மராத்தி தேச   தெருக்களில் உயரமான இடங்களில் பானைகளில் தயிர் நிரப்பப்பட்டு கட்டப்படுகிறது. இதனுடன் பணமுடிப்பும் கட்டப்படுகிறது.   இப்போட்டியில் கலந்து கொள்பவர்களை  ''கோவிந்தாக்கள்'' என்று  கூப்பிடுவார்கள்.  இவர்கள் பிரமிடுகள் அமைத்து மேலேறி தயிர் கலசத்தை உடைத்து பணமுடிப்பினைப் பெறுகின்றனர். கோவிந்தாக்கள் குழுக்களை அமைத்து இரண்டு, மூன்று தஹி அண்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதுண்டு. 
மஹாராஷ்டிரா 
வில் ஒட்டு மொத்தமாக  ஜென்மாஷ்டமி விழாவன்று உறியடி கோலாகலமாக நடக்கிறது. எண்ணற்ற பெண்களும் ஆண்களும் இதில் குழந்தைகளோடு பங்கேற்கிறார்கள். உறியடி களில் பானைகளை உடைத்தவர்களுக்கு தாராளமாக பணப் பரிசு புதையலாக கிடைக்கிறது.     ஆயர்பாடியில் கண்ணன் தனது நண்பர்களோடு சேர்ந்து   அவர்களையே மனித பிரமிடு  ஆக்கி   அவர்கள் மேல் ஏறி  உயரே  கட்டப்பட்டு இருந்த பானைகளில் உள்ள தயிர் மற்றும் வெண்ணெயை எடுத்தார் என்பதால்  இந்த கொண்டாட்டம்.

 ராசலீலா என்பது கண்ணன் கோகுலத்தில் கோபியர்களுடன் இணைந்து விளையாடிய லீலைகளை நடனமாடி நடிப்பதாகும். இந்நிகழ்வு வடமாநிலங்களில் நிகழ்த்தப்படுகிறது.  ஜெயதேவர்  கீத கோவிந்தத்தில் எத்தனை பாட்டுகள்  அஷ்டபதியாக  பாடி த் தள்ளி இருக்கிறார்.  நிறைய அதெல்லாம் .எழுதி இருக்கிறேனே

தமிழ்நாட்டிலும் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் குழந்தைகளுக்கு கண்ணன், ராதா மற்றும் மகாபாரத கதா பாத்திரங்கள் மாறுவேடமிட்டு போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன.  இவ்விழாவின் போது உறியடி நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள்  வேறு. கோவில்களில் தேரோட்டம்  விசேஷம். கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் இவ்விழாவின் போது லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.   

கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலையில்  வாசல் தெளித்து,வாசற்படியிலிருந்து பூஜை அறை வரைக்கும் கண்ணனின்  பிஞ்சுக் கால்களை மாக்கோலங்களாக இடவேண்டும்.கிருஷ்ணன் தனது மென்பாதங்களை பதித்து ஒவ்வொருவருடைய வீடுகளிலும் எழுந்தருளிகிறார் என்பது ஐதீகம்.

கிருஷ்ணன்  வருகையால் ஆயர்பாடியில்  செல்வமும்   வளமும் பெருகியது போல், ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக கிருஷ்ணரது பாதத்தை அரிசி மாவினால் போடுகிறார்கள்.    அரிசி மாவினால் கோலம் போடுவது ஏன்?  கோ குலத்தில் கண்ணன் தந்து தோழர்களுடன் கோபியர் இல்லம்தோறும் சென்று வெண்ணெயைத் திருடி தின்னும்போது,வீடு முழுவதும் வெண்ணெய் இறைபடும்.அவனது கமல மலர்ப்பாதங்கள் அந்த வெண்ணெயிலே பதிந்து அந்த வீடு முழுவதும் கண்ணனின் பாதசுவடுகள் நிறைந்திருக்கும்.பண்டைகாலத்தில்  மக்கள்  கிருஷ்ண ஜெயந்தி அன்று வெண்ணையினால் பாதங்கள் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.அதன்  ஞாபகமாக தற்போது  மாக்கோலம்..

 கிருஷ்ணரது சிலையை  வைத்து முதலில் நெய்,பால்,தேன்,தயிர்,கடைசியாக  சுத்த   தண்ணீரால்  அபிஷேகம் செய்ய வேண்டும்.சுவாமிக்கு சந்தனம் குங்குமம் இட்டு,புஷ்பங்களால் அலங்கரிக்க வேண்டும்.வஸ்திரம் சாத்துவது விசேஷம். கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல்,வெண்ணெய் நாவற்பழம் ,சீடை,முறுக்கு,அப்பம் ,பாலால் செய்த பலகாரங்கள் போன்றவற்றை  நிவேத்தியமாக வைத்து,கிருஷ்ணாஷ்டகம்,ஸ்ரீமத் பாகவதம்,கிருஷ்ணன் கதைகள் சொல்லி கற்பூர ஆர்த்தி காட்ட வேண்டும்.

கிருஷ்ண  ஜெயந்தி விரதத்தை   கணவனும்,மனைவியும் சேர்ந்து அனுஷ்டிப்பது  மிகவும் உத்தமமாகும்.பகற் பொழுது உபவாஸம் இருந்து இரவில்,கண்ணனது திருநாமத்தை உச்சரித்து வழிபட வேண்டும். கோகுலாஷ்டமி அன்று இருக்கும் விரதமானது, பல்லாயிரம் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதற்கு சமம்.

நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாசாரம், பண்பாட்டை பேணிகாக்கும் வகையில் பல உற்சவங்கள், பண்டிகைகள், விரதங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நம்மை வாழ வைக்கும் இறைவனுக்கும், இயற்கை சக்திகளுக்கும் நன்றியையும் பிரார்த்தனையையும் சமர்ப்பிக்கிறோம் 

sivan jaykay

unread,
Aug 31, 2021, 8:15:25 PM8/31/21
to amrith...@googlegroups.com
 ஸ்ரீமந்  நாராயணீயம் -  நங்கநல்லூர்  J K  SIVAN  --
41வது தசகம்.

41.    ஸ்வர்க பூமி வாசிகள்.  

என்னைப்  பொறுத்தவரை,  ராக்ஷஸர்களிலேயே  மிகவும் மரியாதை, மதிப்பும்  பெற்று , முதலிடம் வகிப்பவள், ஒரே இடம் அடைந்தவள்,  பூதனை தான்.  எத்தனையோ  தாய்மார்கள்  ராக்ஷஸிகளாக  பெற்ற  குழந்தைகளை வதைத்து, கொல்கிறார்கள்.  நேற்று கூட  பேப்பரில்  விடியோவில்  பார்த்தேன்.  இத்தனைபேர்  நடுவிலே ஒரு ராக்ஷஸியே  தாயாக வந்து  தான் பெறாத கண்ணனுக்கு பால் ஊட்ட வந்தாளே  என்பதால், அவள் ஊட்ட விரும்பியது பால் என்கிற போர்வையில்  விஷமாக  இருந்தாலும் அவனை வாரி மடியில் வைத்து அணைத்து, முத்தமிட்ட ராக்ஷஸ ஜென்மம்  அவள் ஒருவள் தான். 

व्रजेश्वरै: शौरिवचो निशम्य समाव्रजन्नध्वनि भीतचेता: ।
निष्पिष्टनिश्शेषतरुं निरीक्ष्य कञ्चित्पदार्थं शरणं गतस्वाम् ॥१॥

vrajeshvaraH shaurivachO nishamya samaavrajannadhvani bhiitachetaaH |
niShpiShTa nishsheShataruM niriikshya ka~nchitpadaarthaM sharaNaM
gatastvaam || 1

வ்ரஜேஶ்வர꞉ ஶௌரிவசோ நிஶம்ய ஸமாவ்ரஜன்னத்⁴வனி பீ⁴தசேதா꞉ |
நிஷ்பிஷ்டனிஶ்ஶேஷதரும் நிரீக்ஷ்ய கஞ்சித்பதா³ர்த²ம் ஶரணம் க³தஸ்த்வாம் || 41-1 ||

கோகுலமே  ஆச்சரியத்திலும்  அதிர்ச்சியிலும்  திகைத்தது.  நந்தகோபன் வேகமாக மதுராவிலிருந்து கோகுலம் திரும்பி வந்து கொண்டிருந்த  போது வசுதேவர் சொல்லியது அவன் காதுகளில் ரீங்கார மிட்டுக் கொண்டே இருந்தது.  பயத்தில், கவலையில் அவன் முகம் வெளிறியது. கை கால்கள் சக்தி இழந்து நடக்கத் 
 தடுமாறினான்.  அவன் பயம் அதிகரித்தது. வழியில் பெரிய பெரிய மரங்கள் எல்லாம்  வேரோடு  சாய்ந்து கிடந்தன?  ஏன்? என்ன  உற்பாதம் நடந்தது இங்கே?  அவன் மனம்  ''பகவானே என்னவோ நடக்கிறதே, நீ தான் என் குழந்தையை காப்பாற்றவேண்டும்'' என்று  ''உனக்காக  உன்னையே ''வேண்டிக்  கொண்டே இருந்தது.

 निशम्य गोपीवचनादुदन्तं सर्वेऽपि गोपा भयविस्मयान्धा: ।
त्वत्पातितं घोरपिशाचदेहं देहुर्विदूरेऽथ कुठारकृत्तम् ॥२॥

nishamya gOpiivachanaadudantaM sarve(a)pi gOpaa bhayavismayaandhaaH |
tvatpaatitaM ghOrapishaacha dehaM dehurviduure(a)tha kuThaarakR^ittam || 2

நிஶம்ய கோ³பீவசனாது³த³ந்தம் ஸர்வே(அ)பி கோ³பா ப⁴யவிஸ்மயாந்தா⁴꞉ |
த்வத்பாதிதம் கோ⁴ரபிஶாசதே³ஹம் தே³ஹுர்விதூ³ரே(அ)த² குடா²ரக்ருத்தம் || 41-2 ||

எல்லா கோபிகளுக்கும் கிருஷ்ணன் செல்லம் என்பதால்  அனைவருமே  யசோதை வீட்டில் இருந்த தால், அங்கு நடந்த கோர சம்பவத்தை  வீட்டுக்கு வந்து தத்தம் கணவன்மார்களிடம் இன்னும் அதிகமாக  சுவாரஸ்யம் ஊட்டி  கண்ணும் காதும் வைத்து  விவரித்துச்  சொன்னபோது  கோபர்களும் திடுக்கிட்டார்கள்.  இதென்ன அக்ரமம்,  இதுவரை கேள்விப்படாததாக இருக்கிறதே!  சிலரால் பேசவே முடியாமல் இடிந்து போய் உட்கார்ந்து விட்டார்கள்.  பல  கோபர்கள் ஒன்று சேர்ந்து  பயத்தை  அடக்கிக்  கொண்டு  உன்னால்  கொல்லப்பட்ட  அந்த பிரம்மாண்ட ராக்ஷஸி போதனையின் உடலை பல துண்டுகளாக  வெட்டி தூக்கிக்கொண்டு போய்   தூரமாக  யமுனை நதிக்கரையில்  ஒரு இடத்தில்  எரித்தார்கள். 

 त्वत्पीतपूतस्तनतच्छरीरात् समुच्चलन्नुच्चतरो हि धूम: ।
शङ्कामधादागरव: किमेष किं चान्दनो गौल्गुलवोऽथवेति ॥३॥

tvatpiita puutastana tachChariiraat samuchchalannuchchatarO hi dhuumaH |
shankaamadhaadaagaravaH kimeShaH kiM chaandanO gaulgulavO(a)thaveti || 3

த்வத்பீதபூதஸ்தனதச்ச²ரீரா-த்ஸமுச்சலன்னுச்சதரோ ஹி தூ⁴ம꞉ |
ஶங்காமதா⁴தா³க³ரவ꞉ கிமேஷ கிம் சாந்த³னோ கௌ³ல்கு³லவோ(அ)த²வேதி || 41-3 ||

அந்த  ராக்ஷஸியின் உடல் உன் வாய் பட்டு  பால்  அருந்தியதால்,  உன் ஸ்பரிஸம்  பட்டதால் புனித மாகி கொழுந்து விட்டு  எரிந்து   புகை  உயரமாக  ஆகாயத்தை தொடுவது போல்  எழும்பியது. உன் தொடர்பால்  அவள் உடல்  சந்தனம், அகில், சாம்பிராணி புகை நறுமணத்துடன் சாம்பலாகியது.  

मदङ्गसङ्गस्य फलं न दूरे क्षणेन तावत् भवतामपि स्यात् ।
इत्युल्लपन् वल्लवतल्लजेभ्य: त्वं पूतनामातनुथा: सुगन्धिम् ॥४॥

madangasangasya phalaM na duure kshaNena taavad bhavataamapi syaat |
ityullapanvallavatallajebhya-stvaM puutanaamaatanuthaassugandhim || 4

மத³ங்க³ஸங்க³ஸ்ய ப²லம் ந தூ³ரே க்ஷணேன தாவத்³ப⁴வதாமபி ஸ்யாத் |
இத்யுல்லபன்வல்லவதல்லஜேப்⁴யஸ்த்வம் பூதனாமாதனுதா²ஸ்ஸுக³ந்தி⁴ம் || 41-4 ||

குருவாயூரப்பா,   இதுவும் உன் கருணை தானே . உன்னைக் கொல்ல  வந்தவளுக்கு இத்தனை மரியாதையா?   ராக்ஷஸி பூதனை உடலுக்கு இத்தனை  மேன்மையா !   ''கோபர்களே பார்த்தீர்களா, என்னை தொட்டதாலேயே  அந்த  ராக்ஷஸிக்கு  கிடைத்த  மஹிமையை. உங்கள் எல்லோருக்கும் இன்னும் அதிக  பாக்யம் இனி என்னோடு  உறவாடுவதால்  கிடைக்கப்போகிறது. அது வெகு தூரத்தில் இல்லை ''  என்று நீ சொல்வது போல் இருந்தது. 

चित्रं पिशाच्या न हत: कुमार: चित्रं पुरैवाकथि शौरिणेदम् ।
इति प्रशंसन् किल गोपलोको भवन्मुखालोकरसे न्यमाङ्क्षीत् ॥५॥

chitraM pishaachyaa na hataH kumaara-shchitraM puraivaakathi shauriNedam |
iti prashamsan kila gOpalOkO bhavanmukhaalOkarase nyamaankshiit || 5

சித்ரம் பிஶாச்யா ந ஹத꞉ குமாரஶ்சித்ரம் புரைவாகதி² ஶௌரிணேத³ம் |
இதி ப்ரஶம்ஸன்கில கோ³பலோகோ ப⁴வன்முகா²லோகரஸே ந்யமாங்க்ஷீத் || 41-5 ||

''இவனா, இந்த குட்டிப்  பயலா  இவ்வளவு பெரிய  காரியத்தைச்  செய்தவன். எவர் உதவியும் இல்லாமல், பயமே துளியும் இல்லாமல் அவளைப்  பார்த்து சிரித்துக்கொண்டே  உயிரை உறிஞ்சி விட்டானே. அதிசயப்பயல் இவன் !   ஒன்றுமறி யாதவனாக நீ விளையாடிக்  கொண்டிருக்கும் போது உன் முகத்தை பார்த்து அதிசயித்தார்கள். எல்லையற்ற சந்தோஷம் அடைந்தார்கள்.  ஒவ்வொருவரும்  மற்றவரோடு  பேசியது  உன்னைப் பற்றியே தான். 

 ''நல்லவேளை அந்த ராக்ஷஸி பாவம் குட்டி கிருஷ்ணனை கொள்ளவில்லை. பகவான் கருணை தான் இது '' எப்படியோ தப்பித்தான் கிருஷ்ணன்.  ஏதோ திடீரென்று மாரடைப்பால் அந்த ராக்ஷஸி உடனே கீழே விழுந்து இறந்துவிட்டாள். தெய்வாதீனம் தான் இது. ஐயோ நினைத்துக் கூட பார்க்க முடியவில்லையே. கிருஷ்ணனை நம் கண்ணெதிரிலேயே கொன்றிருப்பாளே. ஆச்சர்யத்திலேயே அதிக ஆச்சர்யம் இது தான்.  நந்தகோபன் வந்தது சேதி அறிந்தான். தலை சுற்றியது,  கண் இருண்டது .  வசுதேவர் சொன்னது  எவ்வளவு உண்மை. மஹான் அவர். எவ்வளவு கவலையோடு நம் பிள்ளையைப் பற்றி சொன்னார் '' என்று நினைத்தான். அவர் பிள்ளை  அவன்  என்று  நந்த கோபனுக்கு  எப்படி தெரியும்?

दिनेदिनेऽथ प्रतिवृद्धलक्ष्मीरक्षीणमाङ्गल्यशतो व्रजोऽयम् ।
भवन्निवासादयि वासुदेव प्रमोदसान्द्र: परितो विरेजे ॥६॥

dine dine(a)tha prativR^iddhalakshmii-rakshiiNa maangalya shatO vrajOyam |
bhavannivaasaadayi vaasudeva pramOdasaandraH paritO vireje || 6

தி³னே தி³னே(அ)த² ப்ரதிவ்ருத்³த⁴லக்ஷ்மீரக்ஷீணமாங்க³ல்யஶதோ வ்ரஜோ(அ)யம் |
ப⁴வன்னிவாஸாத³யி வாஸுதே³வ ப்ரமோத³ஸாந்த்³ர꞉ பரிதோ விரேஜே || 41-6 ||

பலநாட்கள் வேகமாக ஓடின, குருவாயூரப்பா, நீ தானே  அந்த வசுதேவன்  மகன் வாசுதேவன்.  நீ இருப்பதால் அந்த வஜ்ரபூமியே   செழிக்கத்தொடங்கியது.  எங்கும்  லக்ஷ்மிகடாக்ஷம். குறையொன்று மில்லாத  கோபர்களை கோபிகளை எங்கும் பார்க்க முடிந்தது கோபாலா. எங்குமே ஆனந்தம்.  எவர் முகத்திலும்  மகிழ்ச்சி ஒளி வீசியது.  பல சூரியன்கள் கீழே, ஒரே ஒரு சூரியன் மேலே. 

गृहेषु ते कोमलरूपहासमिथ:कथासङ्कुलिता: कमन्य: ।
वृत्तेषु कृत्येषु भवन्निरीक्षासमागता: प्रत्यहमत्यनन्दन् ॥७॥

gR^iheShu te kOmalaruupahaasa-mithaH kathaa sankulitaaHkamanyaH
vR^itteShu kR^ityeShu bhavanniriikshaa samaagataaH pratyahamatyanandan || 7

க்³ருஹேஷு தே கோமலரூபஹாஸமித²꞉ கதா²ஸங்குலிதா꞉ கமன்ய꞉ |
வ்ருத்தேஷு க்ருத்யேஷு ப⁴வன்னிரீக்ஷாஸமாக³தா꞉ ப்ரத்யஹமத்யனந்த³ன் || 41-7 ||

கிருஷ்ணா,  வஜ்ர பூமியில் வசித்த கோபிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம்.   தினமும் ஏதாவது பேச  விஷயம் அகப்படும். இந்த  பூதனை விஷயம் பல நாள் பேசும் சமாசாரமாகி விட்டது.  உன் அழகு, வசீகரம், காந்த புன்னகை தான்  தலைப்பு செய்தி.  வேக வேகமாக தங்களது அன்றாட ஜோலிகளை முடித்துக்கொண்டு எல்லோரும்  யசோதை வீட்டிலேயே பழியாக கிடப்பார்கள். போட்டி போட்டுக் கொண்டு உன்னோடு விளையாடுவார்கள்.  சொல்ல முடியாத அளவு  சந்தோஷம் உன்னைப் பார்த்தாலேயே அவர்களுக்கு. 

अहो कुमारो मयि दत्तदृष्टि: स्मितं कृतं मां प्रति वत्सकेन ।
एह्येहि मामित्युपसार्य पाणी त्वयीश किं किं न कृतं वधूभि: ॥८॥

ahO kumaarO mayi dattadR^iShTiH smitaM kR^itaM maaM prati vatsakena |
ehyehi maamittyupasaarya paaNii tvayiisha kiM kiM na kR^itaM vadhuubhiH || 8

அஹோ குமாரோ மயி த³த்தத்³ருஷ்டி꞉ ஸ்மிதம் க்ருதம் மாம் ப்ரதி வத்ஸகேன |
ஏஹ்யேஹி மாமித்யுபஸார்ய பாணிம் த்வயீஶ கிம் கிம் ந க்ருதம் வதூ⁴பி⁴꞉ || 41-8 ||

''என் தெய்வமே,  கைகளை  ஆசையோடு  விரித்துக் கொண்டு  உன்னைத்  தூக்கிக் கொள்ள  ஓடிவரும் கோபிகளை நினைத்துப் பார்க்கிறேன்.  

''அழகு செல்லமே, நீ என்னை மட்டும் தானே பார்க்கிறே. என்கிட்டே மட்டும் தானே வருவே '' என்று  கொஞ்சிக்கொண்டே  ஒவ்வொருவரும் உன்னை நெருங்கினார்கள்.

 ''இதோ பாத்தியாடி, இவன் என்னை மட்டும் பார்த்துண்டே இருக்கான், சிரிக்கிறான்'' 
  
'' இல்லேடி, என்கிட்டே தான் வரணும்னு தாவுகிறான் '', \

 'அவா  யாரும் வேண்டாம்டா, கண்ணப்பா, நீ என்கிட்டே மட்டும் வாடா ''

என்று பெருமையாக  ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டார்கள். 

भवद्वपु:स्पर्शनकौतुकेन करात्करं गोपवधूजनेन ।
नीतस्त्वमाताम्रसरोजमालाव्यालम्बिलोलम्बतुलामलासी: ॥९॥

bhavadvapusparshana kautukena karaatkaraM gOpavadhuujanena |
niitastvamaataamra sarOjamaalaa vyaalambilOlambatulaamalaasiiH || 9

ப⁴வத்³வபு꞉ஸ்பர்ஶனகௌதுகேன கராத்கரம் கோ³பவதூ⁴ஜனேன |
நீதஸ்த்வமாதாம்ரஸரோஜமாலா-வ்யாலம்பி³லோலம்ப³துலாமலாஸீ꞉ || 41-9 ||

''ஆஹா   குருவாயூரப்பா, இந்த காட்சியை மனக்கண்ணால் உன் முன் அமர்ந்து காண்கிறேன் எனக்கு நீ அப்படி தோண்றுகிறாய் தெரியுமா?  நிறைய பூக்காடாக  சூழ்ந்திருக்கும் செந்தாமரை மலர்களிடையே, சுற்றிக்கொண்டு ஒவ்வொரு பூவுக்குள்ளும்  அவசரம் அவசரமாக புகுந்து தேன்  குடிக்க புறப்படும்  தேன் வண்டு  தான் அத்தனை கோபிகளிடமும்  நீ கொஞ்சி குலாவியதை  நினைவூட்டு  கிறது. இதில் ஒரே ஒரு  வித்யாசம் என்ன தெரியுமா?  அங்கே பல  வண்டுகள் ஒரே ஒரு மலராகிய உன்னைத்தேடி சுற்றி சுற்றி வந்தன என்பது தான் சரி.  உன்னைப் பார்ப்பதே  தேன்  குடிப்பது போல் தானே.   பந்து விளையாடும் போது  அது  வேகமாக ஒவ்வொரு கையாக மாறுமே, அது போல்  உன்னை ஒவ்வொருவரும்  மாற்றி மாற்றி  ஏந்திக்கொண்டு கொஞ்சி விளையாடி னார்கள். 

निपाययन्ती स्तनमङ्कगं त्वां विलोकयन्ती वदनं हसन्ती ।
दशां यशोदा कतमां न भेजे स तादृश: पाहि हरे गदान्माम् ॥१०॥

nipaayayantii stanamankagaM tvaaM vilOkayantii vadanaM hasantii |
dashaaM yashOdaa katamaaM na bheje sa taadR^ishaH paahi hare gadaanmaam ||10

நிபாயயந்தீ ஸ்தனமங்கக³ம் த்வாம் விலோகயந்தீ வத³னம் ஹஸந்தீ |
த³ஶாம் யஶோதா³ கதமான்ன பே⁴ஜே ஸ தாத்³ருஶ꞉ பாஹி ஹரே க³தா³ன்மாம் || 41-10 ||

உன்னை மடியில் ஏந்தி, கைகளால்  ஆசையோடு, பாசத்தோடு  அணைத்து , முத்தமிட்டு, உனக்கு  பாலூட்டினாளே  அந்த யசோதை  ஆஹா என்ன  தவம்  செய்தவள். அவள் சந்தோஷத்தை என் அல்ப வார்த்தை களால் எழுத முடியுமா கண்ணா?   உன் அழகில் அவள் மூழ்கி வெகு நேரமாகி விட்டதே.  உன் சிரித்த முகம்  அத்தனை   பேரையும்  அங்கே கொள்ளை கொண்டு போய் வெகுநாளாயிற்றே. எண்டே குருவாயூரப்பா,  ஹரி,  எனது நோயை நீக்கி என்னையும் ரக்ஷிக்க வேண்டுமப்பா.

தொடரும் 

sivan jaykay

unread,
Sep 1, 2021, 7:35:14 PM9/1/21
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம்:    நங்கநல்லூர்  J K  SIVAN  -

69.    கோவிந்தராஜ  வெங்கடேச  பெருமாள் தரிசனம் 

மஹா பெரியவா காளஹஸ்தியில் இருந்த  ஒருவார காலம் முழுதும் தினமும் காளஹஸ்தீஸ்வரர், ஞானகுசம்பாள்  சந்நிதியில் தியானம் செய்ய தவறவேயில்லை.  தியானம்  பல மணிநேரங்கள் கூட ஆகும். யாரும் கிட்டே வரமாட்டார்கள். அவராக தியானம் கலைந்து எழுந்திருப்பார்.  நாள் தவறாமல், பாரத்வாஜ தீர்த்தம், மயூர தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பனசகோணா , சஹஸ்ரலிங்கேஸ்வர கோணா  என்று பல   புண்ய தீர்த்தங்களில்  விடாமல்  ஸ்னானம். 

மஹா சிவராத்திரி  அமாவாசை அன்று  கைலாசகிரி போகவேண்டும் என்று முடிவு செய்தார். பலருக்கு பெரியவாளை எப்படி தடுப்பது என்று கவலையும்  சங்கடமும்.  அந்த காட்டுப்பாதை, கரடுமுரடானது,  முப்பது மைல்  நடக்கவேண்டும். கொடிய  வனவிலங்குகள் மலிந்த இடம். இருட்டு. மஹா பெரியவா துணிந்துவிட்டார் என்றால் எந்த சக்தியும் அவரை தடுக்க முடியாது.   கைலாச கிரி ப்ரதக்ஷணத்துக்கு   நடக்க கிளம்பிவிட்டார்.  பெரிய கிரி பிரதக்ஷணம்,    பல  மைல்கள் நீளமானது. 

மஹா  பெரியவா காலை 9மணிக்கே  தீர்மானித்தபடி  கிளம்பிவிட்டார். கொளுத்தும் வெயிலை லக்ஷியம் பண்ணவில்லை. கிரி பிரதக்ஷணம்   ராத்திரி நள்ளிரவு தான் முடிந்தது. அங்கிருந்து  மடத்துக்கு நடந்து வந்தார். மஹா பெரியவா நடப்பதை பார்த்திருக்கிறீர்களா?  ஓட்டமும் நடையு மாக இருக்கும். அவரோடு சேர்ந்து நடக்க முடியாது.  கூட வந்த இருபது பேர் களைத்துவிட்டார்கள். மேல் மூச்சு  கீழ்மூச்சு வாங்கியது. கண்களில் ஆயாசம்.  நொந்து போய்விட்டார்கள்.  மஹா பெரியவா எந்த ஸ்ரமத்தையும்  காட்டவில்லை.  மஹா பெரியவா காலில் நிறைய கொப்புளங்கள்  வெயிலினால்,  காட்டுப்பாதையில்  நீண்ட நடை காரணமாக  இந்த  கொப்புளங்கள்.  அப்படியும் அவர்  அதைப் பற்றிய  கவனம் சிறிதும் இல்லாமல் இருந்தார். 

மறுநாள் காலை  காளஹஸ்தி ராஜா வந்துவிட்டார்.  பாத பூஜை செய்ய அனுமதி கேட்டு ஏற்பாடுகள் நடந்தது.  காளஹஸ்தி அரண்மனையில் ஒரு பழைய  ஸிம்ஹாஸனம் இருந்தது..  பல  ராஜாக்கள் முன்னோர்கள் அமர்ந்து ஆட்சி செய்தது. அதில்  மஹா பெரியவாளை அமர்த்தினார். அதில் யாரும் அமராமல்  பூஜிக்கப்பட்டு வந்த ஸிம்ஹாஸனம்  அது.  இன்னொரு விஷயம் சொல்கிறேன்  கேளுங்கள். ஆச்சரியப்படுவீர்கள். மஹா பெரியவா அமர்ந்த அந்த சிம்மாசனத்தில் அதற்கு முன்  யார் எப்போது அமர்ந்தார் தெரியுமா?  1887ம் வருஷம்,  முந்தைய  காமகோடி பீட 65வது ஜகத்குரு   ஸ்ரீ மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தான் கடைசியாக அதில் அமர்ந்தவர்.   இது கப்ஸா இல்லை.  காளஹஸ்தி ராஜா சமஸ்தானத்து தஸ்தாவேஜிகள், ஆவணங்கள்   சொல்லிய  ஆதார பூர்வ  விஷயம்.

காளஹஸ்தி முகாமுக்கு பிறகு  மஹா பெரியவா  திருப்பதிக்கு  விஜயம் செய்தார்.  1932ம் வருஷம் மார்ச் மாதம் 13ம் தேதி திருப்பதிக்கு விஜயம் செய்தார்.  திருமலை   ஏறும் முன்பு கீழே  திருப்பதியில் 
அநேக பக்தர்கள்,  திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள், பணியாளர்கள்,  இதர மற்ற  இடத்திலிருந்து வந்தவர்கள் என்று பெரிய கூட்டம் சேர்ந்து விட்டது.   திருப்பதிக்குத் தெற்கு எல்லையில் அங்காளம்மன் ஆலயம் உள்ளது. அங்கே  எல்லோரும் ஒன்றுகூடி  பெரியவா வருகைக்கு காத்திருந்தார்கள்.

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட  ஒரு பல்லக்கில் மஹாபெரியவா ஆரோகணித்து அனைவருக்கும்  தரிசனம் தந்தார்.  ஊர்வலம் அங்கிருந்து  தொடர்ந்தது.   ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டார்கள்  வேத பாராயணம்  ஒலித்தது.   பஜனை குழுக்களின் ஏகோபித்த  குரல் இனிமையாக எங்கும் கேட்டது. பக்க வாத்யங்கள் இனிமை கூட்டியது.  

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ ஸ்வாமிகள் சந்நிதி, தேவஸ்தானம்  வரை ஊர்வலம்  களைகட்டியது. மஹா பெரியவா ஆலயத்தின் அருகே  பல்லக்கை விட்டு இறங்கினார்.

ஒரு விஷயம்.  திருப்பதி செல்லும் அநேகர்,  நேராக  நூல் பிடித்த மாதிரி திருமலை சென்று வெங்கடேசனை தரிசித்து லட்டு சாப்பிட்டுவிட்டு  வீடு திரும்புகிறோம் .  அநேகருக்கு   ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவில் மலையடிவாரத்தில் இருப்பதும் தெரியாது, தெரிந்தாலும் பலர்  அங்கே சென்று தரிசிப்பதில்லை.   இது காலத்தின் கோளாறு.

சிவனும்  விஷ்ணுவும் சேர்ந்து  பிரதான தெய்வங்களாக உள்ள கோவில்கள் ரொம்ப அரிதானவை.  இத்தகைய ஆலயங்களில் சைவ வைணவ சம்பிரதாயங்கள் விடாமல் கடை பிடிக்கப்படும்.  பாரத தேசத்தில் ரெண்டு  கோவில்கள் இப்படி பிரபலமானவை.  சிதம்பரம் நடராஜர் சந்நிதிக்கு அருகே  ஸ்ரீ கோவிந்தராஜ  பெருமாள் இருக்கிறார்.  வைணவர்களின் திவ்ய தேசம் அது.  திருச்சித்ர கூடம் என்று பெயர். ஆனந்தமாக  சயன கோலம்.  இந்த பக்கம் ஆனந்த   நடராஜன். .  காஞ்சிபுரத்தில் இதே  போல் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்.  அந்த ஆலயத்தில்  மூலவருக்கு அருகிலேயே  ஒரு பெருமாள் சந்நிதி உள்ளது. அதுவும் வைணவர்களின் முக்கிய திவ்யதேச ஆலயங்களில் ஒன்று. அங்கே  மஹா விஷ்ணுவுக்கு பெயர் நிலாத்திங்கள்  துண்டத்தான்.  உண்மையில்  ஹரி ஹர  வேறுபாடு கிடையாது.  வித்யாசம் எல்லாம் நமது மனதில் தான்.   சிவனின் மனைவி பார்வதி தேவி, விஷ்ணுவின் சகோதரி.   விமானம்  புருஷ சுக்தம்.பெருமாள்  நின்ற திருக்கோலம்.  தாயார் பெயர்   நேர் ஒருவரில்லா  வள்ளித்  தாயார்.  தீர்த்தம் சந்திர புஷ்கரணி.  

  திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த போது வெப்பம் மூண்டது.  ஸ்ரீ மஹா விஷ்ணுவும்  மற்ற தேவர்களும்  பிரம்மனைப்  பிரார்த்தனை செய்தார்கள்.  அமிர்த கடல் வெப்பம் நீங்க வேண்டு மானால் காஞ்சியிலுள்ள சிவ பெருமான் குடிகொண்டிருக்கும் ஏகாம்பரநாதன் திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை  வணங்கினால் போதும் என்று பிரம்மன்  வழிகாட்டியதால்  மஹா விஷ்ணு  காஞ்சிபுரம் வந்து இங்கே  தவம் செய்தார் என்று ஒரு  ஸ்தலபுராணம். 

 சிவபெருமான் தலையில் இருக்கும் சந்திர ஒளி திருமால் மீது பட்டதும்  திருமாலுக்கு வெப்பம் நீங்கியது.  இதனால் பெருமாளுக்கு நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் என்று பெயர்.

 ஒரு மாமரத்தின் கீழே பார்வதி தேவி தவம் செய்யும் பொழுது,  அவளது  ஜெபத்தை சோதிக்க சிவன் அந்த  மாமரத்தை எரித்ததாகவும் அப்பொழுது பெருமாள் தனது அம்ருத கிரகணங்களை கொண்டு எரிந்து போன மாமரத்தை தழைக்கச் செய்து குளிர்ச்சியை உண்டு  பண்ணியதாகவும் வேறொரு ஸ்தலபுராணம். பார்வதியின் அருகே வாமனர் சிலை உள்ளது.   இந்த வாமனர் தான் மாமரத்தை தொலைக்க வைத்த பெருமாள் என்று புராணச் செய்தி.  சைவ ராஜா  ரெண்டாம் குலோத்துங்க சோழன் கோவிந்தராஜ பெருமாளை சிதம்பரம் ஆலயத்திலிருந்து  எடுத்து  கடலில் எறிந்தான். 1130ல்  வைணவ பக்தர்கள்  கோவிந்தராஜ ஆலய உத்ஸவ மூர்த்திகளை  திருப்பதிக்கு எடுத்து சென்றார்கள். ஸ்ரீ ராமானுஜர் பிரதிஷ்டை செய்தார்.  1235ல்   ரெண்டாம் ராஜராஜன் காலத்தில் தான் இந்த திருப்பதி கோவிந்தராஜர் ஆலயம் பற்றி அதிகம் வெளியில் தெரிந்தது.  அதன் மஹாத்மியம் தெரிந்தது. முன்னூறு வருஷங்கள் கழித்து அப்புறம் விஜயநகர நாயக்கர்கள் காலத்தில்  ஆலயம் புனருத்தாரண  கும்பாபிஷேகம் பெற்றது.  சித்ர  வேலைப்பாடுகள் நிறைந்த  ஆலயம். 11 கலசம் கண்ட 7 நிலை ராஜகோபுரம். 

கோவிந்தராஜ பெருமாள்   திருமலை வேங்கடேச பெருமாளுக்கு மூத்தவர். வெங்கடேசன் பத்மாவதி கல்யாணத்தில் முக்கிய பங்கு வகித்தவர். கோவிந்தராஜன் தான் குபேர சம்பத்தை நிர்வகித்து பாதுகாத்தவர். அவர் தான் செல்வ நாயகன்.  ஆரம்பகாலத்தில் ஸ்ரீ பார்த்தசாரதி கோவில் என்று பெயர். கோவிந்தராஜ பெருமாள் யோகநித்ரா சயன  கோலத்தில்  உள்ளவர்.  பலராமர் தான் கோவிந்தராஜனாக அவதரித்தவர் என்று ஒரு ஐதீகம்.

மஹா பெரியவா  திருப்பதியில் தங்கி தரிசனம் செய்ய சகல ஏற்பாடுகளும் செயதிருந்தார்கள்.  ஸ்ரீ ராமஸ்வாமி ஆலயத்தின் எதிரில்  தோட்டத்தில்  பந்தல், நிர்மாணித்து  அங்கே மஹா பெரியவா முகாமிட்டார். மஹா பெரியவா அமர்ந்திருந்த பல்லக்கு  ஆலயத்தின் வாசலுக்கு வந்து மஹா பெரியவா  இறங்கினார் அல்லவா. அப்போது ப்ரம்ம ஸ்ரீ வெங்கட்கேஸ தீக்ஷிதர் ஸமஸ்க்ரிதத்தில்  அவருக்கு வரவேற்புரை  வாசித்தார்.  நாகபுடி N  குப்புசாமி அய்யர்  தெலுங்கில்  அதே   போல் வரவேற்புரை வழங்கினார்.  சாயந்திரம்  மடத்திற்கு விஜயம் செய்து  மடாதிகாரி பிரம்மஸ்ரீ வேங்கடேச  தீக்ஷிதர் ஏற்பாடு செய்த  பாதபூஜையை ஏற்றார்.  கீழ் திருப்பதியில் இவ்வாறு  1932 வருஷம்  ஏப்ரல் மாதம் 21ம் தேதி வரை  மஹா பெரியவா  தங்கி இருந்தார்.  அந்த சமயத்தில் மூன்று நாள்  திருமலைக்கு சென்று  வெங்கடேச பெருமாள் தரிசனம் செய்தார்.  அங்கே  பாதபூஜை, பிக்ஷா வந்தன ஏற்பாடுகள் சிறப்பாக நடந்தன.  தங்கப்பூண் போட்ட குடை ஒன்றும் பீதாம்பர வஸ்திரமும் பெருமாள் பிரசாதமாக  மஹா பெரியவாளுக்கு தேவஸ்தான நிர்வாகம் அளித்தது.   காஞ்சி காமகோடி மட சார்பாக  மஹா பெரியவா நவரத்ன கல் பதித்த மகரகண்டி  பதக்கம் ஒன்றையும்  பீதாம்பர வஸ்திர ஜோடி ஒன்றும்  வேங்கடாசலபதி  பெருமாளுக்கு சாத்தினார்.   அப்போது தான்  சஹஸ்ரகலச அபிஷேகம், கருடோத்சவம் நிகழ்த்தினார்.  தேவஸ்தான நிர்வாகிகள்,  பணியாளர்களுக்கு பிரசாதம்   பரிசுகள் அளித்து ஆசி வழங்கினார்.  திருமலையில் தங்கி யிருந்த மூன்று நாட்களிலும்   பாபநாசம்   ஆகாச கங்கை  நீர் வீழ்ச்சியில் ஸ்னானம்.    மலையிலிருந்து நடந்து கீழே இறங்கி வரும் வரை வழியில் அமர்ந்திருந்த அநேக  ஏழைமக்களுக்கு   வஸ்திர, ஸ்வர்ண புஷ்ப  தானம்  செய்தார்.  திருப்பதி விஜயத்தின் பொது எண்ணற்ற பக்தர்கள்  எங்கிருந்திருந் தெல்லாமோ  வந்திருந்து  தரிசனம் பெற்று மகிழ்ந்தார்கள்.  பிராமணர்கள், வைசியர்கள், வைசியர்கள், பெரி வைஸ்யர்கள் , பலிஜாக்கள், ரெட்டிகள்,  கண்டல வகுப்பினர்  அனைவரும்  பாதபூஜை பிஷவந்தன வைபவத்தில் கலந்து கொண்டார்கள். மஹா பெரியவா சரளமாக  தெலுங்கில் அவர்களுக்கு பிரசங்கம் செய்தார். , மடத்துக்கு விஜயம் செய்த  வித்வான்களுக்கு , பண்டிதர்களுக்கு எல்லாம்  காஷ்மீர் சால்வை வழங்கி  கௌரவித்தார்.  

sivan jaykay

unread,
Sep 1, 2021, 7:35:23 PM9/1/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீமந்   நாராயணீயம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN--
42வது தசகம்.

42.  சக்கரன் பொடியானான்.

ஸ்ரீமந்  நாராயணீயம்  விறுவிறுப்பான ஒரு பக்தி நூல்,  அற்புத   ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களில்  மேப்பத்தூர் நாராயண பட்டத்ரியால்  ஸ்ரீ குருவாயூரப்பன் முன்பு உட்கார்ந்து பாடப்பெற்றது.

 ரெண்டு  சந்தர்ப்பங்களில் ஸ்ரீ கிருஷ்ணன்  தன்னைப்பற்றி பக்தன் சொல்வதை விருப்பத்தோடு கேட்டான். ஒன்று  மஹா பாரதத்தில் பீஷ்ம பிதாமகர்  அம்பு படுக்கையில்  படுத்துக்கொண்டு  யுதிஷ்டிரனுக்கு ஸ்ரீ விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை விளக்கிச் சொன்னபோது  குருக்ஷேத்திர யுத்த களத்தில்  அருகே நின்று  தனது மஹிமையை விளக்குவதை கேட்டான்.  அடுத்தது குருவாயூரில் நாராயண பட்டத்ரி, தனக்கு   எதிரே  வாத நோயோடு அமர்ந்து  தனது லீலைகளை பாடுவதை நின்றுகொண்டு குட்டி கிருஷ்ணனாக கேட்டான்.  ஸ்ரீமந்  நாராயணீயம்   இந்த  ரெண்டாவது  சந்தர்ப்ப  விஷயம்.    ஆயிரம்   ஸ்லோகங்களில்  இன்று  நானுற்று இருபதாவதுக்கு ஆமைவேகத்தில் நகர்கிறோம்.
 
कदापि जन्मर्क्षदिने तव प्रभो निमन्त्रितज्ञातिवधूमहीसुरा ।
महानसस्त्वां सविधे निधाय सा महानसादौ ववृते व्रजेश्वरी ॥१॥

kadaa(a)pi janmarkshadine tava prabhO nimantritaj~naati vadhuu mahiisuraa |
mahaanasastvaaM savidhe nidhaaya saa mahaanasaadau vavR^ite vrajeshvarii || 1

கதா³பி ஜன்மர்க்ஷதி³னே தவ ப்ரபோ⁴ நிமந்த்ரிதஜ்ஞாதிவதூ⁴மஹீஸுரா |
மஹானஸஸ்த்வாம் ஸவிதே⁴ நிதா⁴ய ஸா மஹானஸாதௌ³ வவ்ருதே வ்ரஜேஶ்வரீ || 42-1 ||

கிருஷ்ணன் பிறப்பதற்கு முன்பே ,  அவன் மண்ணில் பிறந்ததும், அவனைக்  கொன்றுவிட வேண்டும் என்று  தீர்மானித்தாயிற்று.  அவனோ  125 வருஷங்கள் வாழ்ந்தவன். இன்றும்  அவனது பிறந்தநாள் வெகு விமரிசையாக  ஹிந்துக்கள்  வீடுகள் எங்கிலும்  உலகில்  குட்டி குட்டி மாக்கோல கால் சுவடு களோடு கொண்டாடப்படுகிறது.  ஸ்ரீ ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ் டமி என்று பல பெயர்களோடு விமரிசையாக  கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தினமாகிவிட்டது.    

அப்படி உன்  பிறந்த  நாள் கோகுலத்தில்  கோபியர்கள் புடைசூழ கொண்டாடப்பட்டது.  அந்த காலத்தில் சமையல் கான்ட்ராக்டர்கள் கிடையாது.   வரும் விருந்தினர்கள், அதிதிக்களுக்கு தானே சமைத்து பரிமாறும்  வழக்கம்.   ஆகவே  யசோதையும்  மற்ற  பெண்களும் விடிகாலையிலிருந்தே  சமையல் கட்டில் மும்முரமாக  வேலையில்  ஈடுபட்டிருந்தார்கள்.  குட்டி கிருஷ்ணன் தூக்கம்  கெட்டு  விடக்கூடாது  என்று அவனை சந்தடியில்லாத, அமைதியான ஒரு அறையில்  படுக்க வைத்திருந் தார்கள். அந்த அறையில் ஒரு பெரிய மர வண்டி,  உபயோகம் இல்லாமால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.  ரெண்டு பெரிய   மர  சக்ரங்களோடு அந்த வண்டி அறையில்  நின்றிருந்தது.    குட்டி கிருஷ்ணன் அந்த வண்டியின்  அடியில்  சத்தமில்லாமல் படுத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான்.  துணைக்காக  அறையில் ஒரு சில  பையன்கள்  ஓரமாக  விளையாடிக் கொண்டிருந் தார்கள். வேறு யாருமில்லை.

ततो भवत्त्राणनियुक्तबालकप्रभीतिसङ्क्रन्दनसङ्कुलारवै: ।
विमिश्रमश्रावि भवत्समीपत: परिस्फुटद्दारुचटच्चटारव: ॥२॥

tatO bhavattraaNa niyukta baalaka prabhiiti sankrandana sankulaaravaiH |
vimishramashraavi bhavatsamiipataH parisphuTaddaaru chaTachchaTaaravaH || 2

ததோ ப⁴வத்த்ராணனியுக்தபா³லக-ப்ரபீ⁴திஸங்க்ரந்த³னஸங்குலாரவை꞉ |
விமிஶ்ரமஶ்ராவி ப⁴வத்ஸமீபத꞉ பரிஸ்பு²டத்³தா³ருசடச்சடாரவ꞉ || 42-2 ||

திடீரென்று  மரங்கள் உடைந்து பொடிபடும் பெரிய சத்தம் கேட்டது.  ''ஆ, ஐயோ''  என்று பையன்கள் கூச்சலிடும் சத்தமும் கேட்டது.  

ततस्तदाकर्णनसम्भ्रमश्रमप्रकम्पिवक्षोजभरा व्रजाङ्गना: ।
भवन्तमन्तर्ददृशुस्समन्ततो विनिष्पतद्दारुणदारुमध्यगम् ॥३॥

tatastadaakarNana sambhrama shrama prakampi vakshOjabharaa vrajaanganaaH |
bhavantamantardadR^ishussamantatO viniShpataddaaruNa daarumadhyagam || 3

ததஸ்ததா³கர்ணனஸம்ப்⁴ரமஶ்ரம-ப்ரகம்பிவக்ஷோஜப⁴ரா வ்ரஜாங்க³னா꞉ |
ப⁴வந்தமந்தர்த³த்³ருஶு꞉ ஸமந்ததோ வினிஷ்பதத்³தா³ருணதா³ருமத்⁴யக³ம் || 42-3 ||

சமையல் அறையில், மற்றும்  வேறெங்கோ அந்த அரண்மனையில் இருந்த அனைத்து கோபிய ர்களும்  இந்த கூச்சல் சத்தம் கேட்டு  ஓடோடி வந்தார்கள். நந்தகோபனின் அந்த பெரிய அரண்மனையில்  வண்டிகள் நிறுத்தும் இடத்தில்  குருவாயூரப்பா, நீ  அழகாக,   உடைந்த  மரச்  சக்கரங்களின் இடையே  விளையாடிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தாய்.  எப்படி அந்த பிரம்மாண்ட சக்ரங்கள் தானாகவே  உடைந்து தூளாகியது??

शिशोरहो किं किमभूदिति द्रुतं प्रधाव्य नन्द: पशुपाश्च भूसुरा: ।
भवन्तमालोक्य यशोदया धृतं समाश्वसन्नश्रुजलार्द्रलोचना: ॥४॥

shishOrahO kiM kimabhuuditi drutaM pradhaavya nandaH pashupaashchabhuusuraaH |
bhavantamaalOkya yashOdayaa dhR^itaM samaashvasannashru jalaardralOchanaaH || 4

ஶிஶோரஹோ கிம் கிமபூ⁴தி³தி த்³ருதம் ப்ரதா⁴வ்ய நந்த³꞉ பஶுபாஶ்ச பூ⁴ஸுரா꞉ |
ப⁴வந்தமாலோக்ய யஶோத³யா த்⁴ருதம் ஸமாஶ்வஸன்னஶ்ருஜலார்த்³ரலோசனா꞉ || 42-4 ||

நந்தகோபன், யசோதை,  தோழிகள், வேலையாட்கள், பிராமணர்கள், மற்ற விருந்தாளிகள் அனைவரும்  மூச்சிரைக்க ஓடிவந்து வாயைப் பிளந்தார்கள்.

 “என்னாச்சு, என்னாச்சு குழந்தைக்கு,  எப்படி இந்த உறுதியான  பெரிய  வண்டிச்சக்கரம்  தூள் தூளாக உடைந்தது? யசோதை ஓடி  வந்து வாரி எடுத்து உன்னை  இடுப்பில் தூக்கிக் கொண்டாள். அவள்  கண்களில் இன்னொரு யமுனை ஆறு.

कस्को नु कौतस्कुत एष विस्मयो विशङ्कटं यच्छकटं विपाटितम् ।
न कारणं किञ्चिदिहेति ते स्थिता: स्वनासिकादत्तकरास्त्वदीक्षका: ॥५॥

kaskO nu kautaskuta eSha vismayO vishankaTaM yachChakaTaM vipaaTitam |
na kaaraNaM ki~nchidiheti te sthitaaH svanaasikaadattakaraasvadiikshakaaH || 5

கஸ்கோ நு கௌதஸ்குத ஏஷ விஸ்மயோ விஶங்கடம் யச்ச²கடம் விபாடிதம் |
ந காரணம் கிஞ்சிதி³ஹேதி தே ஸ்தி²தா꞉ ஸ்வனாஸிகாத³த்தகராஸ்த்வதீ³க்ஷகா꞉ || 42-5 ||

நந்தகோபன் சுற்றிலும் பார்த்தான். மூக்கின் மேல் விரல் வைத்து யோசித்தான். இவ்வளவு பெரிய  தேர் சக்கரம் போன்ற  வண்டி சக்கரம்  ஏன், எப்படி, திடீரென்று  உடைந்து சிதறி இருக்கிறது.  எப்படி  வண்டி அடியில் படுத்திருந்த கண்ணன்  ஆபத்தில் தப்பி, அந்த மரச் சிதறல்கள் மேல் ஏறி விளையாடுகிறான்.  நம்ப முடியாத ஆச்சர்யம் அதிசயம் என்றால் அது இது தான்.  வண்டி உடைந்து உருக்குலைந்த காரணம் என்ன?

कुमारकस्यास्य पयोधरार्थिन: प्ररोदने लोलपदाम्बुजाहतम् ।
मया मया दृष्टमनो विपर्यगादितीश ते पालकबालका जगु: ॥६॥

kumaarakasyaasya payOdharaarthinaH prarOdane lOlapadaambujaahatam |
mayaa mayaa dR^iShTamanO viparyagaaditiisha te paalaka baalakaa jaguH || 6

குமாரகஸ்யாஸ்ய பயோத⁴ரார்தி²ன꞉ ப்ரரோத³னே லோலபதா³ம்பு³ஜாஹதம் |
மயா மயா த்³ருஷ்டமனோ விபர்யகா³தி³தீஶ தே பாலகபா³லகா ஜகு³꞉ || 42-6 ||

அங்கே இருந்த பையன்களை விசாரித்ததில் என்ன தெரிந்தது?   உன் கூட துணை இருக்க தானே  அவர்கள் அங்கே  அனுமதிக்கப்பட்டார்கள்.  ''அம்மா யசோதையிடம்  பால் குடிக்க கண்ணன் அழுதான். கைகால்களை உதைத்து வீறிட்டு அழுதான்.  மெதுவாக நகர்ந்தான்.  அவன் கால்கள்  அந்த பெரிய  வண்டிச் சக்கரங்கள் மேல் மேல் பட்டன.  காலால் அதை உதைத்தான்.  அடுத்த கணமே  அந்த  சக்ரங்கள் பிளந்து உடைந்து தூளாயின.   கண்ணன் நகர்ந்து வெளியே வந்து அந்த குவியல் மேல் தவழ்ந்தான். இதுதான் நாங்கள் பார்த்தோம்.'' என்கிறார்கள்.

भिया तदा किञ्चिदजानतामिदं कुमारकाणामतिदुर्घटं वच: ।
भवत्प्रभावाविदुरैरितीरितं मनागिवाशङ्क्यत दृष्टपूतनै: ॥७॥

bhiyaa tadaa kinchidajaanataamidaM kumaarakaaNaaM atidurghaTaM vachaH |
bhavatprabhaavaavidurairitiiritaM manaagivaashankyata dR^iShTapuutanaiH || 7

பி⁴யா ததா³ கிஞ்சித³ஜானதாமித³ம் குமாரகாணாமதிது³ர்க⁴டம் வச꞉ |
ப⁴வத்ப்ரபா⁴வாவிது³ரைரிதீரிதம் மனாகி³வாஶங்க்யத த்³ருஷ்டபூதனை꞉ || 42-7 ||

குருவாயூரப்பா, உன் மஹிமை, பெருமை அறியாதவர்கள்  எப்படி இதை நம்புவார்கள்?  'இந்த பையன்கள் சொல்லுவது நம்பும்படியாகவே இல்லையே.  வேறு ஏதோ நடந்திருக்கிறது? ''ஆனால்  பூதனை என்ற ராக்ஷஸி விசித்திரமாக மரணமடைந்ததைக் கண்டவர்கள் இந்த  விஷயத்தை ஜீரணிக்க முடிந்தது. அதுமாதிரி இன்னொரு அதிசயம் இது என்று தலையாட்டி ஒப்புக் கொண்டார்கள்.

प्रवालताम्रं किमिदं पदं क्षतं सरोजरम्यौ नु करौ विरोजितौ।
इति प्रसर्पत्करुणातरङ्गितास्त्वदङ्गमापस्पृशुरङ्गनाजना: ॥८॥

pravaalataamraM kimidaM padaM kshataM sarOjaramyau nu karau virOjitau |
iti prasarpatkaruNaatarangitaa stvadangamaapaspR^ishuranganaajanaaH || 8

ப்ரவாலதாம்ரம் கிமித³ம் பத³ம் க்ஷதம் ஸரோஜரம்யௌ நு கரௌ விரோஜிதௌ |
இதி ப்ரஸர்பத்கருணாதரங்கி³தா-ஸ்த்வத³ங்க³மாபஸ்ப்ருஶுரங்க³னாஜனா꞉ || 42-8 ||

''எல்லா கோபியர்களும்  அதிர்ச்சியில் உறைந்து போனாலும் ஓடி வந்து கிருஷ்ணா, உன்னை உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவிப் பார்த்தார்கள். ''என் கண்ணுக்கு, கண்ணனுக்கு,  எங்காவது அடி பட்டுவிட்டதோ, காயம் ஏற்பட்டதோ என்று தடவிப்பார்த்து, தேடினார்கள். உன் மீது எல்லோருக்குமே  தாய்ப்பாசம்.

''என்னடா குழந்தே உனக்கு மாத்தி மாத்தி ஏதாவது ஒரு ஆபத்து வந்து கொண்டே  இருக்க்கிறது.  உன்னை பகவான் தான் காப்பாத்தறார். என்று பகவானிடமே  மனம் உருகி   அவர்கள் சொல்வதை நீ கேட்டுக் கொண்டே  சிரித்தாய்.

अये सुतं देहि जगत्पते: कृपातरङ्गपातात्परिपातमद्य मे ।
इति स्म सङ्गृह्य पिता त्वदङ्गकं मुहुर्मुहु: श्लिष्यति जातकण्टक: ॥९॥

aye sutaM dehi jagatpateH kR^ipaa tarangapaataatparipaatamadya me |
iti sma sangR^ihya pitaa tvadangakaM muhurmuhuH shliShyati jaatakaNTakaH || 9

அயே ஸுதம் தே³ஹி ஜக³த்பதே꞉ க்ருபாதரங்க³பாதாத்பரிபாதமத்³ய மே |
இதி ஸ்ம ஸங்க்³ருஹ்ய பிதா த்வத³ங்க³கம் முஹுர்முஹு꞉ ஶ்லிஷ்யதி ஜாதகண்டக꞉ || 42-9 ||

நந்தகோபன்  யசோதை கையிலிருந்து உன்னை வேகமாக பிடித்து தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.  அவனால் உணர்ச்சிகளைக்  கட்டுப்படுத்த முடியவில்லை. ''என் கண்மணி  கிருஷ்ணா,  பகவான் அருளால் நீ பிழைத்தாய் அப்பா.  என் செல்வத்தை என்கிட்டே கொடு '' என்று வாங்கி அனைத்து உனக்கு  விடாமல் மாறி மாறி இரு கன்னங்களிலும்   முத்தம் கொடுத்தான்.

अनोनिलीन: किल हन्तुमागत: सुरारिरेवं भवता विहिंसित: ।
रजोऽपि नो दृष्टममुष्य तत्कथं स शुद्धसत्त्वे त्वयि लीनवान् ध्रुवम् ॥१०॥

anOniliinaH kila hantumaagataH suraarirevaM bhavataa vihimsitaH |
rajO(a)pi nO dR^iShTamamuShya tatkathaM sa shuddhasattve tvayi liinavaandhruvam || 10

அனோனிலீன꞉ கில ஹந்துமாக³த꞉ ஸுராரிரேவம் ப⁴வதா விஹிம்ஸித꞉ |
ரஜோ(அ)பி நோ த்³ருஷ்டமமுஷ்ய தத்கத²ம் ஸ ஶுத்³த⁴ஸத்த்வே த்வயி லீனவாந்த்⁴ருவம் || 42-10 ||

என்ன நடந்தது என்பது உனக்குத்  தெரியும்,  கம்ஸன் அனுப்பிய  அசுரனுக்கு தெரியும். ஆனால் சொல்ல அவன் இப்போது உயிரோடு  இல்லை. கம்சன் தானாகவே அவன் திரும்பாததால் விஷயம் அறிந்து கொள்வான். நீயோ யாரிடமும் சொல்லப்  போவதும்  இல்லை.  உன்னால் எனக்கு தெரியும். நான் சொல்கிறேன். மற்றவர்களுக்கும்  தெரியவேண்டாமா?  பூதனை இறந்ததும் ஒரு மீட்டிங் போட்ட கம்ஸன்  ஆடிப் போய்  விட்டான். அடுத்தது ஒரு ராக்ஷஸன் நான் சென்று அந்த குழந்தையை கொன்று  விட்டு வருகிறேன் என்று மீசையை முறுக்கினான்.  அவனை சகடாசுரன் என்று அழைப்போம். இறந்தவன் பேர் தெரிந்து என்ன செய்யப்போகிறோம்?  அவன்  நந்தகோபன் அரண்மனைக்கு  வந்தான். உனக்குப்  பிறந்தநாள் என்பதால் பெரிய கூட்டத்தை பார்த்தான்.  சிரித்தான். உன் பிறந்த நாள்  இறந்த  நாளாகப்போகிறது அவனால்  என்று மகிழ்ந்தான்.   அவன் எந்த உருவமும் எடுக்க முடித்தவன்.  உன்னைத்  தனியாக அந்த வண்டிக்கு  ரெண்டு தேர் சக்கரங்கள்மாதிரி பெரிதாக இருந்தது அவனுக்கு கண்ணில் பட்டதும்  ஒரு எண்ணத்தை கொடுத்தது. தூக்கத்திலேயே உன்னைச் சத்தமில்லாமல் நொடியில்  கொன்றுவிட இது நல்ல சந்தர்ப்பம் என்று அந்த சக்கரங்களில் புகுந்து கொண்டு நகர ஆரம்பித்தான். வண்டியின் அடியில் நீ படுத்திருந்தது  அவனுக்கு  ரொம்ப சௌகரியமாக போய்விட்டது.  சகடம் என்றால் சக்கரம்.

அவன் வரப்போகிறான் என்று உனக்கு தெரியும், வந்தது,  சக்கரத்தில் அவன் மறைந்தது  எல்லாமும்  தெரியும், சக்கரம் வேகமாக உன்னை நசுக்கிக் கொல்லப்போகிறது என்றும் தெரியும். அதற்கு காத்திருப்பானேன், கையில் கிடைத்தவனை காலாலேயே கொன்றுவிடுவோம் என்று தீர்மானித் தாய். உன் காலால் ஒரு உதைக்கு மேல் அவனுக்கு தேவைப்படவில்லை. சக்கரம் தூளாயிற்று.  அசுரன்  அட்ரஸ் இல்லாமல் பொடியானான்.

प्रपूजितैस्तत्र ततो द्विजातिभिर्विशेषतो लम्भितमङ्गलाशिष: ।
व्रजं निजैर्बाल्यरसैर्विमोहयन् मरुत्पुराधीश रुजां जहीहि मे ॥११॥

prapuujitaistatra tatO dvijaatibhiH visheShatO lambhita mangalaashiShaH |
vrajaM nijaiH baalyarasaiH vimOhayan marutpuraadhiisha rujaaM jahiihi me || 11

ப்ரபூஜிதைஸ்தத்ர ததோ த்³விஜாதிபி⁴ர்விஶேஷதோ லம்பி⁴தமங்க³லாஶிஷ꞉ |
வ்ரஜம் நிஜைர்பா³ல்யரஸைர்விமோஹயன்மருத்புராதீ⁴ஶ ருஜாம் ஜஹீஹி மே || 42-11

''எண்டே குருவாயூரப்பா,  இதை விஷயமறியாத மற்றவர்கள் ஏதோ அதிர்ஷ்டம், நீ பகவான் கிருபையால் தப்பினாய். உள்ளே மந்திரம் சொல்கிற பிராமணர்கள் அவர்கள் மந்திரபலத்தால் தப்பினாய் என்கிறார்கள். எது எப்படி ஆனால் என்ன  நீ வந்த காரியம் ஒவ்வொன்றையும் கன கச்சிதமாக நடத்தி வருகிறாய்.  ஸ்பெஷல் பூஜை பண்ணி  உன் பிறந்த நாள்  சிறப்பாக கொண்டாடி னார்கள்.  நீடூழி வாழ வேண்டும் என்று  உன்னை ஆசிர்வதித்தார்கள். வ்ரஜ  பூமியை சந்தோஷமாக ஸ்வர்கமாக  ஆக்கி எல்லோரையும் மகிழ்வித்தவனே, கிருஷ்ணா, என் நோய் தீர்த்து என்னையும் ரக்ஷிப்பாயா?

sivan jaykay

unread,
Sep 1, 2021, 8:20:46 PM9/1/21
to amrith...@googlegroups.com

உள்ளது நாற்பது --   நங்கநல்லூர்   J K   SIVAN 
பகவான் ரமண மகரிஷி 

''நான் கெட்டவன்''  

''உலகு கர்த்தன்  உயிர் மும்முதலை யெம்மதமும்  முற்கொள்ளும்  ஓர்  முதலே, 
மும்முதலாய் நிற்கும்  என்றும்  மும்முதலும்  – மும்முதலே
என்னல்   அலங்கார இருக்கும்  மட்டே யான் கெட்டு 
தன்னிலையில்  நிற்றல்  தலையாகும். -2''

உலகத்தில் அது எந்த மாதமாக இருந்தாலும் சரி,  ஆணித்தரமாக மூன்று விஷயங்களை  ஒப்புக்கொள்ளும். தனிமனிதன், ஜீவன்;  உலகம்,  ஜகத்:   ஈஸ்வரன்   அவரவருக்குண்டான கடவுள்.
இந்த மூன்றும் வெவ்வேறு அல்ல. ஒன்றின் மாறுபட்ட தோற்றம். ஒன்றே தான் மூன்றும். 
மனிதர்களின்  புரிதல் வித்யாசப்படுவதால்,  ஒன்றையே  மூன்றாக பார்ப்பதும்,  மூன்றும்  தனியானவை, வெவ்வேறானவை என்பதும்  வாதமாகிறது. இப்படி மாறுபடுத்தி பார்ப்பது மனிதனின் புத்தியில் விளைவது. அஹங்காரம் எனும் அகந்தையால் விளைவது.  நிஷ்டையில் இருப்பவன்  கண்ணை மூடி தியானம் செய்த போதிலும்  நான் என்ற  அகந்தை உள்ள வரை  இந்த மூன்றும்  வித்தியாசமாகத்தான் தெரியும்.

ஆரம்பத்தில் ரமணர்  விரூபாக்ஷ குகையில் இருக்கும்போது அவரைப் பார்த்த ஒரு பக்தர்  பின்னர்  பல வருஷங்களுக்குப் பிறகு  ரமணாஸ்ரமத்தில்  பகவானை சந்தித்தார்.  அவர் மனதில் இருந்ததை வார்த்தையால் கொட்டி விட்டார்: 

''சுவாமி, அப்போ எல்லாம் விரூபாக்ஷ குகையில் மெளனமாக, கல்லிலும் மண்ணிலும்   இருந்த பெரிய மஹான்,   ஆகாரத்தை தேடாத  பகவான்,  இப்போது சோபாவில் உட்கார்ந்து,  எல்லா வசதிகளுடன் , எல்லோருடனும்  பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்   '' நீங்கள்  கெட்டுப்போய் விட்டீர்களே''   என்றார்.  பகவான்  சிரித்துக்கொண்டே   ஆமாம்  என்று தலையாட்டினார்.  

அப்புறம் அந்த பக்தர் போன பிறகு, மற்ற  சில பக்தர்கள்   ரமணரிடம்   ''சுவாமி, எங்களுக்கு  எல்லாம்  அதிர்ச்சி. அந்த  மனிதர்  சொன்னதை  ஆமாம் என்று ஆமோதித்தீர்களே''  என்றார்கள். 

 '' ஆமாம், அவர்  சொன்னது உண்மை தான். ''யான் கெட்டு  தன்னிலையில் நிற்றல் தலை ''   நீங்கள் கெட்டுபோய்விட்டீர்கள் என்று அவர் சொன்னது உண்மை. ''நான்'' கெட்டால் தான் ஒவ்வொருவரும் ஸ்வயமான  உண்மை ஸ்வரூபத்தில் அபேதமாக தனித்து நிற்க முடியும் '' என்றார் ஸ்ரீ ரமணர். 

அகங்காரம் உள்ளவரை,  த்ரிபுடி,  அதாவது  காண்பது, காண்பவன், காணும் செயல் மூன்றும் வேறாக தெரியும்.  இவை பிரம்ம  ஞானத்தை  மறைத்துவிடும். தேவையற்றவைகளை தேட வைக்கும். புலன்களுக்கு வேலை கொடுத்து அனுபவிக்க செய்யும்.  உண்மையான ஸ்வரூபத்திலிருந்து நம்மை மாற்றி,  கற்பனைகளுக்கு இடம் கொடுக்க வைக்கும். நான் எனும் அகந்தையை வாஸ்தவம் என்று அங்கீகரிக்கக்கூடாது.  அறியாமைக்கு  தான் அவித்யா என்று பெயர்.  குருவருள் ஒன்று தான் இதிலிருந்து மீள வழி.  

நாம்  எல்லோரும்  எப்போதுமே  ஆத்மா தான்   என்று   மறக்காமல் நினைவூட்டிக்கொண்டு வந்தால்  அகந்தை அழியும்.  தேகம் மறந்து போகும்.  ''தத் த்வம்  அஸி''  அது தான்.  ''நீ  அதுவாக இருக்கிறாய்'' ''அது''  என்பது உருவமற்ற, பேதமற்ற, கால, நிறமற்ற பூரணத்வ  ஆத்மா. சத்யம்,  ப்ரம்மம்''.

த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம்  எந்த கோட்பாடும்  அஹங்காரம்  உள்ளவரை ஞானமாகாது . காரணம் என்னவென்றால் இவை அனைத்துமே  மனத்தையும்  அதோடு ஒட்டிக்கொண்டிருக்கும்  அஹங்காரத்தோடும்  சேர்ந்தவை.  ''மனோ நாசம்''  என்று பகவான் அடிக்கடி சொல்வார்.  மனது, அஹங்காரம்  ஒழிய   ''நான் யார்''  என்ற விடாத  ஆத்ம விசாரம் அவசியம். அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக  ஆத்மா புலப்படும்.  மனமும் அதோடு சேர்ந்த  நான் எனும்  அஹங்காரமும் விலகும். அவித்யாவிலிருந்து  உயர்வோம்.   அப்புறம்  துக்கம் சுகம் எதுவும் இல்லை.  

ரமணரைப் பார்த்த  பக்தர்  ''நீங்கள் கெட்டு விட்டீர்கள்''  என்பது எவ்வளவு பெரிய  ஆசிர்வாதம்.  ''நான்'' கெட   எவ்வளவு பாடு பட்டிருக்கிறார்  பகவான்  சின்னவயது முதல்.!

தொடரும்    



sivan jaykay

unread,
Sep 1, 2021, 8:20:46 PM9/1/21
to amrith...@googlegroups.com

உள்ளது நாற்பது --   நங்கநல்லூர்   J K   SIVAN 
பகவான் ரமண மகரிஷி 

''  ஸர்வம்  ப்ரம்ம மயம் ''

''பார்வை சேர், நாம் உலகம் காண்டலால்  நானா  ஆம் சக்தி உள 
ஓர்   முதலை ஓப்பல்  ஒருதலையே – நாம  உருச்
சித்திரமும் பார்ப்பானும்  சேர் படமும்  ஆர் ஓளியும் 
அத்தனையும்  தான் ஆம்  அவன் ''

நாம்  என்னென்னவோ  வித விதமான  வஸ்துக்களை, உயிர்களை உலகில் பார்க்கிறோம். அவற்றுக்கு மூலமான, ஆதாரமான ஏதோ ஒன்று இருக்கிறது  என்ற அளவில்  நாம்  அறிகிறோம்.
இதெல்லாம்  பார்க்கிற,இல்லை,  அனுபவிக்கிற,   நாம்,  நமக்கு முன் தோன்றும்   விதவிதமான  உருவம், பெயர்களோடு கொண்ட    வஸ்துக்கள், உயிர்கள்,  அனைத்தும்,  இந்த பொருள்களை உயிர்களை எல்லாம்  நாம் அனுபவிக்க வைக்கும்  ஏதோ  ஒன்றும்  நம்மை  அவற்றை உணரவைக்கும் ஏதோ ஒரு சக்தியும்   ஒன்றே தான்.  அது தான் ப்ரம்மமாகிய ஈஸ்வரன்.

நமக்கு  கண்ணில் பட்டது, நாம்   இந்த உலகத்தில் அறிந்ததை, அனுபவித்ததை,  '' ப்ரத்யக்ஷம்'' என்கிறோம்.   நாம் அனுபவிக்க  வைத்த சக்தி  ''அபரோக்ஷம்''    நமது ஐம்புலன்கள் வழியாகத் தான் இந்த உலக அனுபவம் பெற்றோம்  அதை ''ப்ரதீதி'' என்கிறோம்.  இதிலிருந்து என்ன புரிகிறது.  கண் வழியாக பார்த்தது, காதால் கேட்டது, மெய் வாய் மூக்கு செவி இதனால் எல்லாம் அறிந்த ப்ரத்யக்ஷம் தான் நமது அனுபவமான ப்ரதீதி. ரெண்டும் ஒன்று.  ஏதோ ஒன்று  இதற்கெல்லாம் ஆதாரமானது என்று உணரவைத்ததே அது ''ஸத் ''  அதால்  தான் உலகத்தில் எல்லாம் புலனாகியது. ஆகவே  அதிலிருந்து தான் எல்லாமே  உருவாகியது.    காட்சி, காணுதல், காண்பவன் இந்த மூன்றும்   காரணமான  ''ஸத் '' தை மறைக்கும் திரை (ஆவரணம்),   மாயை.    

சாயந்திர  அரை இருட்டில்  கோபாலசாமி  ஒரு கயிறை பாம்பாக கண்டு  பயத்தில்  ஐந்தடி உயரம் தாண்டி குதித்தான்.  அந்த பயம்  பிரமை. கயிறு பாம்பு இல்லை, பாம்பாக மாறவில்லை.  கோபாலசாமி புத்தியில்  உண்மையை மறைத்து திரை போட்டது.  இந்த ஆவரணம் ஆத்மாவை கொஞ்சமும் பாதிப்பதில்லை.  புத்தியின் தோஷம்.  அருகே இருந்த ஒருவன்  டார்ச் அடித்து பார்த்தபின் கயிறு பாம்பு அல்ல என்று தெரிகிறது.  இதை தான்  அவித்யா தோஷம் என்பது.  விகல்பங்களை உண்டாக்குவது.  இல்லாதது இருப்பது போல் தோன்றுவது.   எல்லாம்  நான், நீ, அது அவன், சென்று ஏதோ ஸ்வரூபத்தில் காட்டுவது.  அனைத்தும் ஸத்தில் மறைந்துவிடும்  ஞானம் நமக்கு வேண்டும். 

எதிரே  பெரிய  கடல்.  அதில்  அலை,  நுரை, குமிழிகள், என்று பல வஸ்துக்கள்  தெரிகிறது.  உண்மையில் அத்தனையும்  நீர் ஒன்றே.  இப்படி  உணர்பவன் தான் ''ஏக த்வர்ஸி''   ஒன்றாக காண்பவன்,உணர்பவன்.  எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான்,   ஸர்வம்  ப்ரம்ம மயம்   அவனன்றி ஓர் அணுவும் அசையாது  என்பது இப்போது புரிகிறதா?
சகலமும்  ஆத்மாவின்  விகல்பம் .  

sivan jaykay

unread,
Sep 2, 2021, 8:41:44 PM9/2/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீமந்  நாராயணீயம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN --
43வது தசகம் 

43.   காற்றாக  வந்து  மூச்சு காற்று நின்றவன் 


கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு ஆட்டக்காரன்  அவுட் ஆனபின்  இன்னொருவன் உள்ளே இருந்து மட்டையை சுழற்றிக்கொண்டே மைதானத்தில் இறங்குவான்.  ஒவ்வொருவனும் அசகாய சூரன், முந்தைய  ஆட்டக்காரனை விட இவன் அதிக  சாமர்த்திய சாலி என்ற எதிர்பார்ப்பை உருவாக்குவான். அது போல் தான்  இன்னொரு ராக்ஷஸன்  கிருஷ்ணனைக் கொல்ல  கோகுலம் பிருந்தாவனம் வந்துவிட்டான்.  இவன் பெயர்  த்ரிணாவர்த்தன்.  நினைத்த வடிவம் எடுக்கும் சக்தி படைத்தவன். 

त्वामेकदा गुरुमरुत्पुरनाथ वोढुं
गाढाधिरूढगरिमाणमपारयन्ती ।
माता निधाय शयने किमिदं बतेति
ध्यायन्त्यचेष्टत गृहेषु निविष्टशङ्का ॥१॥

tvaamekadaa gurumarutpuranaatha vODhuM
gaaDhaadhiruuDha garimaaNamapaarayantii |
maataa nidhaaya shayane kimidaM bateti
dhyaayantyacheShTata gR^iheShu niviShTashankaa ||1

த்வாமேகதா³ கு³ருமருத்புரனாத² வோடு⁴ம்
கா³டா⁴தி⁴ரூட⁴க³ரிமாணமபாரயந்தீ |
மாதா நிதா⁴ய ஶயனே கிமித³ம் ப³தேதி
த்⁴யாயந்த்யசேஷ்டத க்³ருஹேஷு நிவிஷ்டஶங்கா || 43-1 ||

''ப்ரபோ, குருவாயூரப்பா, ஒருநாள்  ஒரு அதிசயம் நடந்ததே உனக்கு ஞாபகம் இருக்கிறதா? '' என்று  கேட்ட  நாராயண  பட்டத்ரி மேலே தொடர்கிறார்:
ஒரு நாள்  சாயங்காலம் வழக்கம்போல் உன்னோடு  வாசலில் விளையாடிக்கொண்டே  உன் தாய் யசோதை உன்னைத் தூக்கி  இடுப்பில் வைத்துக்கொள்ள முயன்றாள். முடியவில்லை.
''என்னடா ஆயிற்று உனக்கு, உன்னை தூக்கவே  முடியவில்லையே. எப்படி இவ்வளவு ''கன வான்''  ஆகிவிட்டாய்?''  அவளுக்கு விடை தெரியவில்லை.  அதற்குள் வேறே  வேலையில்  புத்தி போய்விட்டது. உன்னை வாசலில் விளையாட விட்டுவிட்டு உள்ளே போய்விட்டாள்.

तावद्विदूरमुपकर्णितघोरघोष-
व्याजृम्भिपांसुपटलीपरिपूरिताश: ।
वात्यावपुस्स किल दैत्यवरस्तृणाव-
र्ताख्यो जहार जनमानसहारिणं त्वाम् ॥२॥

taavadviduuramupakarNita ghOra ghOSha
vyaajR^imbhi paamsupaTalii paripuuritaashaH |
vaatyaavapuH sa kila daityavarasitraNaavartaakhyae
jahaara janamaanasahaariNaM tvaam ||  2

தாவத்³விதூ³ரமுபகர்ணிதகோ⁴ரகோ⁴ஷ-
வ்யாஜ்ரும்பி⁴பாம்ஸுபடலீபரிபூரிதாஶ꞉ |
வாத்யாவபு꞉ ஸ கில தை³த்யவரஸ்த்ருணாவ-
ர்தாக்²யோ ஜஹார ஜனமானஸஹாரிணம் த்வாம் || 43-2 ||

''அப்போது  தூரத்தில்  ஏதோ ஒரு பெரிய  சப்தம் கேட்டது.   ஆமாம்  உன்னைக் கொல்ல  அடுத்த வனை கம்ஸன்  அனுப்பியிருக்கிறானே, அவன், த்ரிணாவர்த்தன்  என்ற பெயர் கொண்ட  ராக்ஷஸன்.  பெரிய சக்தி வாய்ந்த புயல் வடிவத்தில் வந்துவிட்டான்.  நாம்  இப்படி புயல் ரூபத்தில் சென்றால் எல்லா இடத்தையும்  நமது சக்திக்குள் கொண்டுவந்து விட முடியும். அந்த கிருஷ்ணன் தப்ப முடியாது'' என்ற எண்ணம் அந்த அசுரனுக்கு.  எங்கும் காற்றில் மண்ணும் கல்லும் பறந்தது. சுற்றி சுழன்றது. மரங்கள் தலை அசைத்து விழுந்தன.  மாடு கன்றுகள்  அலறி ஒதுங்க இடம் தேடின. 
பயங்கர  சூழல் காற்றாக வந்து உன்னை அப்படியே தூக்கிக் கொண்டு போய் கம்ஸன்  எதிரே போய் ''தொப்'' என்று போட உத்தேசம் அவனுக்கு. 

उद्दामपांसुतिमिराहतदृष्टिपाते
द्रष्टुं किमप्यकुशले पशुपाललोके ।
हा बालकस्य किमिति त्वदुपान्तमाप्ता
माता भवन्तमविलोक्य भृशं रुरोद ॥३॥

uddaamapaamsu timiraahata dR^iShTipaate
draShTuM kimapyakushale pashupaala lOke |
haa baalakasya kimiti tvadupaantamaaptaa
maataa bhavantamavilOkya bhR^ishaM rurOda ||3

உத்³தா³மபாம்ஸுதிமிராஹதத்³ருஷ்டிபாதே
த்³ரஷ்டும் கிமப்யகுஶலே பஶுபாலலோகே |
ஹா பா³லகஸ்ய கிமிதி த்வது³பாந்தமாப்தா
மாதா ப⁴வந்தமவிலோக்ய ப்⁴ருஶம் ருரோத³ || 43-3 ||

''காற்றில் மண், புழுதி சத்தை, சருகு எல்லாம் நிரம்பி சுழன்று எங்கும் திரையாக கண்ணை மறைத்தது.  கோபியர்களுக்கு,   என்ன ஆயிற்று திடீரென்று இப்படி  மண்ணும் புழுதியும் காற்றில் கலந்து கண்ணை மறைக்கிறதே, நிற்க முடியாமல் தள்ளாடுகிறதே, காற்று தூக்கிக் கொண்டு போய் எங்கோ போடும் போலிருக்கிறதே'' என்று  அதிர்ச்சி  ஆச்சர்யம்.  கோபர்களுக்கு எதனால் இந்த  காற்று  என்று புரியவில்லை. இதற்கு முன்பு  வந்தது கிடையாதே .   புழுதிப்  படலம் கண்ணை மறைத்தது.  கொஞ்சம்  தெளிவானதும் யசோதை ஓடிவந்தாள்.  உன்னை அவள் விட்ட இடத்தில் நீ இல்லை கிருஷ்ணா.  எங்கே  போனாய் இந்த காற்று வெளியில்? அழ ஆரம்பித்தாள். அவள் கூக்குரல் கேட்டு மற்றவர்களும் ஒருவாறு  அவள் இருக்குமிடத்தை தேடிக்கொண்டு வந்து சேர்ந்தார்கள். 

तावत् स दानववरोऽपि च दीनमूर्ति-
र्भावत्कभारपरिधारणलूनवेग: ।
सङ्कोचमाप तदनु क्षतपांसुघोषे
घोषे व्यतायत भवज्जननीनिनाद: ॥४॥

taavatsa daanavavarO(a)pi cha diinamuurtirbhaavatka-
bhaara paridhaaraNaluuna vegaH |
sankOchamaapa tadanu kshatapaamsughOShe
ghOShe vyataayata bhavajjananii ninaadaH ||4

தாவத்ஸ தா³னவவரோ(அ)பி ச தீ³னமூர்தி-
ர்பா⁴வத்கபா⁴ரபரிதா⁴ரணலூனவேக³꞉ |
ஸங்கோசமாப தத³னு க்ஷதபாம்ஸுகோ⁴ஷே
கோ⁴ஷே வ்யதாயத ப⁴வஜ்ஜனநீனினாத³꞉ || 43-4 ||

த்ரீணாவர்த்தன் புயலின் வேகத்தை குறைத்தான்.  காரணம். உன்னைத்தூக்கிக்கொண்டு போகவேண்டும் என்ற முயற்சியில் தூக்கியவன் கழுத்தில் நீ உட்கார்ந்து கொண்டாய். உன் எடை, பளு , அவனால்  தாங்கமுடியவில்லையே, எப்படி வேகமாக  பறப்பான்? களைத்து,கண் இருட்டி, மதி மயங்கி மூச்சு விடமுடியாமல்  போயிற்று.  கோகுலம் முழுதும் தும்பு, தூசு, புழுதி, மண். கலந்த காற்று. காற்றின் பலத்த சத்தம்.  உன் தாய்  யசோதையின்  சோக  ஓலம்  எங்கும்  கேட்டது. 

रोदोपकर्णनवशादुपगम्य गेहं
क्रन्दत्सु नन्दमुखगोपकुलेषु दीन: ।
त्वां दानवस्त्वखिलमुक्तिकरं मुमुक्षु-
स्त्वय्यप्रमुञ्चति पपात वियत्प्रदेशात् ॥५॥

rOdOpakarNana vashaadupagamya gehaM
krandatsu nandamukha gOpa kuleShu diinaH |
tvaaM daanavastvakhilamuktikaraM mumukshustvayyapramu~
nchati papaata viyatpradeshaat ||

ரோதோ³பகர்ணனவஶாது³பக³ம்ய கே³ஹம்
க்ரந்த³த்ஸு நந்த³முக²கோ³பகுலேஷு தீ³ன꞉ |
த்வாம் தா³னவஸ்த்வகி²லமுக்திகரம் முமுக்ஷு-
ஸ்த்வய்யப்ரமுஞ்சதி பபாத வியத்ப்ரதே³ஶாத் || 43-5 ||

நந்தகோபன், மற்றும்  அநேக கோபர்கள், எல்லா இடங்களிலும் தேடினார்கள்.  கவலை அதிகமாயிற்று, குழந்தை கிருஷ்ணன் எங்கே காணோம்?   அந்த நேரம்  த்ரிணா வர்த்தன் , மூச்சு திணறி, உன்னை விட்டால் போதும் என்று  தீர்மானித்து  பிடியை தளர விட்டான்.  கோகுலத்தில் நீ  பொத்தென்று மேலே இருந்து கீழே விழுந்தாய்.  

रोदाकुलास्तदनु गोपगणा बहिष्ठ-
पाषाणपृष्ठभुवि देहमतिस्थविष्ठम् ।
प्रैक्षन्त हन्त निपतन्तममुष्य वक्ष-
स्यक्षीणमेव च भवन्तमलं हसन्तम् ॥६॥

rOdaakulaastadanu gOpagaNaa bahiShThapaaShaaNapR^
iShThabhuvi dehamatisthaviShTham |
praikshanta hanta nipatantamamuShya vakshasyakshiiNameva
cha bhavantamalaM hasantam ||6

ரோதா³குலாஸ்தத³னு கோ³பக³ணா ப³ஹிஷ்ட²-
பாஷாணப்ருஷ்ட²பு⁴வி தே³ஹமதிஸ்த²விஷ்ட²ம் |
ப்ரைக்ஷந்த ஹந்த நிபந்தமமுஷ்ய வக்ஷ-
ஸ்யக்ஷீணமேவ ச ப⁴வந்தமலம் ஹஸந்தம் || 43-6 ||

உன்னை விடும்போதே  த்ரீணாவர்த்தன் நீ  கழுத்தை கனமாக  இறுக்கியதால் மூச்சு நின்று  தானும் கோகுல மண்ணில் தடால் என்று   உயிறற்ற உடலாக  கீழே விழுந்தான்.  நந்தகோபன் , கோபர்கள், கோபியர்கள், யசோதை மற்றும் எல்லோருமே  ஓடிவந்தவர்கள்  அங்கே  உயிரற்ற பிரம்மாண்ட ராக்ஷஸன் ஒருவன் உடலையும் அதன் மேல்  வழக்கம்போலவே  சிரித்துக்கொண்டு விளையாடும் உன்னையும் கண்டார்கள்.  உன்  காயமோ, அடியோ , ரத்தம் ஒரு சொட்டோ  காணோம். 
''பகவானே, வயிற்றில் பாலை வார்த்தாயே''  என்று உன்னை காப்பாற்றியதாக  எங்கோ உள்ள  அனைவரும்.  

ग्रावप्रपातपरिपिष्टगरिष्ठदेह-
भ्रष्टासुदुष्टदनुजोपरि धृष्टहासम् ।
आघ्नानमम्बुजकरेण भवन्तमेत्य
गोपा दधुर्गिरिवरादिव नीलरत्नम् ॥७॥

graavaprapaata paripiShTa gariShThadehabhraShTaasu
duShTadanujOpari dhR^iShTahaasam |
aaghnaanamambujakareNa bhavantametya
gOpaa dadhurgirivaraadiva niilaratnam ||7

க்³ராவப்ரபாதபரிபிஷ்டக³ரிஷ்ட²தே³ஹ-
ப்⁴ரஷ்டாஸுது³ஷ்டத³னுஜோபரி த்⁴ருஷ்டஹாஸம் |
ஆக்⁴னானமம்பு³ஜகரேண ப⁴வந்தமேத்ய
கோ³பா த³து⁴ர்கி³ரிவராதி³வ நீலரத்னம் || 43-7 ||

நந்தகோபனும்  யசோதையும் பயப்படாமல்  அந்த ராக்ஷஸன் உடல் அருகே வந்து உன்னை வேகமாக  தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். நீ  துளியும் பளு, கனம்  இல்லாமல், சின்ன குழந்தையாக மாறிவிட்டாயே.   உன்னை த்ரிணாவர்த்தன்  உடலிலிருந்து தூக்கிக்கொண்டு போது  ஏதோ ஒரு பெரிய  மலை மீதிருந்து சிறிய  ஒளிவீசும் நீலக்கல்லை எடுப்பது போல் இருந்தது கிருஷ்ணா,  என்கிறார் நாராயண  பட்டத்ரி. விளையாட்டாக  உன் சிறு கைகளால்  அந்த  ராக்ஷஸன் உடலை அடித்துக்கொண்டிருந்தாய்.  அந்த அடியே  கூட அவனை கொன்றிருக்கும்.


एकैकमाशु परिगृह्य निकामनन्द-
न्नन्दादिगोपपरिरब्धविचुम्बिताङ्गम् ।
आदातुकामपरिशङ्कितगोपनारी-
हस्ताम्बुजप्रपतितं प्रणुमो भवन्तम् ॥८॥

ekaikamaashu parigR^ihya nikaamanandannandaadi
gOpa parirabdha vichumbitaangam |
aadaatukaama parishankita gOpanaarii
hastaambujaprapatitaM  praNumO bhavantam ||8

ஏகைகமாஶு பரிக்³ருஹ்ய நிகாமனந்த³-
ந்னந்தா³தி³கோ³பபரிரப்³த⁴விசும்பி³தாங்க³ம் |
ஆதா³துகாமபரிஶங்கிதகோ³பனாரீ-
ஹஸ்தாம்பு³ஜப்ரபதிதம் ப்ரணுமோ ப⁴வந்தம் || 43-8 ||

என் தேன்வமே,  உன்னை வணங்குகிறேன். உன்னை  எவ்வளவு  ஆசையோடு , பாசமோடு  மனதில் சந்தோஷத்தோடு,  நிம்மதியாக  அந்த கோப கோபியர்கள் மாற்றி மாற்றி தூக்கி வைத்துக் கொண்டார்கள். முத்தமாரி  பொழிந்தார்கள்.  எவ்வளவு பாக்கியசாலிகள் அந்த  ஒன்றுமறியாத சாதாரண பசுமேய்க்கும் இடையர்கள். 

भूयोऽपि किन्नु कृणुम: प्रणतार्तिहारी
गोविन्द एव परिपालयतात् सुतं न: ।
इत्यादि मातरपितृप्रमुखैस्तदानीं
सम्प्रार्थितस्त्वदवनाय विभो त्वमेव ॥९॥

bhuuyO(a)pi kiM nu kR^iNumaH praNataartihaarii
gOvinda eva paripaalayataat sutaM naH |
ityaadi maatarapitR^i pramukhaistadaaniiM
sampraarthitastvadavanaaya vibhO tvameva ||9

பூ⁴யோ(அ)பி கின்னு க்ருணும꞉ ப்ரணதார்திஹாரீ
கோ³விந்த³ ஏவ பரிபாலயதாத்ஸுதம் ந꞉ |
இத்யாதி³ மாதரபித்ருப்ரமுகை²ஸ்ததா³னீம்
ஸம்ப்ரார்தி²தஸ்த்வத³வனாய விபோ⁴ த்வமேவ || 43-9 ||

நந்தகோபனும்  யசோதையும்  மற்று   மெல்லோரும் ''இருகரம் சிரம் மேல் கூப்பி  ''கோவிந்தா,  கோவிந்தா, நாராயணா,  எத்தனையோ ஜென்மங்கள் நாங்கள்  உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். எங்கள் குழந்தையை, செல்வத்தை, காப்பாற்றிக் கொடுத்தாயே , கருணாசாகரா' என்று  உன்னை கையில் ஏந்தியவாறு  உன்னைக்   கூப்பிட்டு உன்னைக்காப்பாற்ற வேண்டி    எங்கேயோ கும்பிடுவதை  வேடிக்கை   பார்த்துக்கொண்டிருந்தபோது, உனக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது. ''

वातात्मकं दनुजमेवमयि प्रधून्वन्
वातोद्भवान् मम गदान् किमु नो धुनोषि ।
किं वा करोमि पुनरप्यनिलालयेश
निश्शेषरोगशमनं मुहुरर्थये त्वाम् ॥१०॥

vaataatmakaM danujamevamayi pradhuunvan
vaatOdbhavaanmama gadaan kimu nO dhunOShi |
kiM vaa karOmi punarapyanilaalayesha
nishsheSha rOgashamanaM muhurarthaye tvaam ||10

வாதாத்மகம் த³னுஜமேவமயி ப்ரதூ⁴ன்வன்
வாதோத்³ப⁴வான்மம க³தா³ன்கிமு நோ து⁴னோஷி |
கிம் வா கரோமி புரனப்யனிலாலயேஶ
நிஶ்ஶேஷரோக³ஶமனம் முஹுரர்த²யே த்வாம் || 43-10 ||

எண்டே  குருவாயூரப்பா,   வாயு  உருவத்தில் வந்த ராக்ஷஸனைக் கூட  உன்னை விட்டு  ஓடாமல் கெட்டியாக பிடித்து கழுத்தில்  ஏறி அமர்ந்து  அவனை மூச்சு விடமுடியாமல் நெருக்கிக்  கொன்ற உனக்கு  வாயுவினால்  அவஸ்தை படும் என் வாத நோயை தீர்ப்பது  பெரிய  வேலையா? தெய்வமே, என் மேல் கருணை கொண்டு என் வாயு உபத்ரவத்தையும்  நீக்குவாயாக. 

sivan jaykay

unread,
Sep 3, 2021, 8:01:07 PM9/3/21
to amrith...@googlegroups.com
உள்ளது நாற்பது --   நங்கநல்லூர்   J K   SIVAN 

உலகமும்  ஞானமும் 

உலகு மெய்  பொய்த் தோற்றம்  உலகு அறிவாம் அன்று என்று 
உலகு சுகம்  அன்று என்று கொன்னே உரைத்து என் – உலகு விட்டுத்
தன்னை ஓர்ந்து  ஒன்று இரண்டு தான் அற்று நான் அற்ற 
அந்நிலை  எல்லார்க்கும் ஒப்பாம்  3

ஒருத்தர்  உலகம்  நிஜம் என்கிறார், மற்றவர் பொய்  என்கிறார் சிலர்  சித்து, அறிவு மயம்  என்று சொல்லும்போது சிலர் இல்லை இல்லை அது  அறிவற்ற  ஜடம் உலகம் ஸார்  என்கிறார்கள், சிலர் உலகம் என்பது சுகம் தான் சார், சுகமயம்,  என்றும்  சிலர்  சே சே  இந்த உலகமே  துக்கமயம்,  --இந்த விவாதங்களால் என்ன பயன்?   இதற்கு செலவிடும் நேரத்தை உள்முகமாக  ஆராய்வதில் செலவிட்டால்,  ஆத்ம ஸ்வரூபத்தில்  கவனம் இருக்க செய்தல்,  எந்த வாதம், விவாதமும் இல்லை.  நான் என்பதே இல்லையே அப்புறம் தானே அதன் மூலம் விளையும் சர்வ சமாச்சாரங்களும் விளைவுகளும்.  பூரண சத்யம் ஒன்று தான் புலப்படும். அதனால் உலகமுழுதும் எல்லோருக்கும் க்ஷேமம்.  இது தான் மேலே சொன்ன  பாடலின் அர்த்தம். எவ்வளவு அற்புதமாக இயற்றியிருக்கிறார்  ஸ்ரீ ரமண பகவான். 

ஒருமுறை  ஆஸ்ரமத்தில் பகவானை ஒரு பக்தர் ஒரு கேள்வி கேட்டார்.  அத் வைதத்தை பற்றி  பகவான் சொல்லிக்கொண்டிருந்தார்.  ''சுவாமி  நீங்கள் சொல்வது,  வேதாந்தமா,  சித்தாந்தமா?''என்று கேட்டார் அவர்.

''ரெண்டும் இல்லை, இது அனுபவம்''.  என்கிறார்  மகரிஷி.  நம் எல்லோருக்குமே அடிப்படையில்  இயல்பாக உள்ள  அனுபவம்  தான் ஆத்மா.   நாம் அதை கொஞ்சம் கூட  உணர்வதில்லை.  மனம் அதை விழுங்கிவிடுகிறது. குரங்காக  அலைக்கழிக்கப்பட்டு  துன்பப்படுகிறோம்.  நமக்குள் சுயமாக இருக்கும்  ஆத்மானந்தம், புலன்களால், மனதால் தடைபட்டு, சுக துக்க சமாச்சாரங்கள் பிடியில் சிக்கி தவிக்கிறோம்.

சுபபலக்ஷ்மி என்று ஒரு பக்தர், கணவனை இழந்து மனம் வாடி, அத்வைத நூல்களில் மனதை செலுத்தினார். தீர்த்த யாத்திரை பல க்ஷேத்திரங்களுக்கு சென்றார். விரூபாக்ஷ குகையில் பகவான் ரமணர் இருந்தபோது வந்து தரிசித்தார். அப்போது ''ஸ்வாமி, ஆத்மா என்கிறோமே  அது போத மயமானதா அல்லது ஜோதி ஸ்வரூபமா? அதை எப்படி தியானம் செய்வது? '' என்று கேட்டார்.

''அம்மா,   இது தான், அதுதான்,   இப்படிதான்  அப்படிதான்   என்று எந்த  பாவனையும் செய்யாமல் இருப்பது தான்  ஆத்மஸ்வரூபம்'' என்று உபதேசித்தார் பகவான். இப்படிப்பட்ட பாவனைகள் மனோமயமானவை.  மனம் எப்போது சலனம் இல்லாமல் இருக்கிறதோ அப்போது தான் ஆத்மானுபவம் புரியும். கிடைக்கும். ''நிஸ்சல தத்வே  ஜீவன் முக்தி''என்று   ஆதி  சங்கரர் சொன்னது கவனம் வருகிறதா?

''நான் இருக்கிறேன் என்று உணர மனமோ புலன்களோ அவசியமே இல்லை .அதை புத்தியாலோ, மனதாலோ  அறிய முடியாது.  ஆத்மா  என்பது நமது மனம், புலன்கள் சகலத்தையும்  பேசாமல்  பார்த்துக்கொண்டே இருக்கிறது.  அந்த அனுபவத்தில்  ஈடுபடுவதில்லை, இதை தான் ஆத்ம   சாக்ஷாத் கார அனுபவம். வார்த்தைகளால் விளக்க இயலாதது. இதைத்தான்  ''கண்டவர்  விண்டிலர், விண்டவர் கண்டிலர்'' என்று அற்புதமாக சொன்னது. இப்போது விளங்கும். புத்தியின் வழி செல்பவனுக்கு சாந்தி கிடைக்காது. (யாரோ பெண் அல்ல,  பேரமைதி) .மனம் அடங்கியபோது தான் அதை அனுபவிக்க முடியும். அதற்கு தான்  ஓம் சாந்தி என்று சொல்வது. 

நமது சிந்தனைகளை இந்திரியங்கள் மூலமாக வெளி முகமாகும்போது  உடல், உலகம்  இவை வெளியேயும், சித்தம், நான், என்பன  உள்ளேயும் பிறக்கிறது.   சிந்தனைகள்  ஒன்றுகூடி  ஹ்ருதயத்தில் ஒடுங்கும்போது வெளியே காணப்படும் உடல், உலகம்  அதைத் தவிர   உள்ளே  காணப்படும் மனம், புத்தி,  அகங்கார சித்தம்   இவை எல்லாமே  மறைந்து போகிறது. அப்போது ''சித்'' பிரகாசிக்கிறது. அது ஒன்றே  உண்மையான வஸ்து.   இதை  சித் தரிசனம் என்பார்கள். 

சிந்தனைகளை வெளிமுகமாக  இயங்க செய்வதற்கு பெயர்  ''ப்ரவ்ருத்தி''  உள்முகமாக செலுத்துவது  ''நிவ்ருத்தி''.இதை தான் ஞான மார்க்கம் என்கிறோம். இதில் ஈடுபடுவான் தான் சந்நியாசி, ஞானி.  தாடி, மீசை, காவி  சந்யாசியோ, ஞானியோ அல்ல.  ஆத்ம ஞானமும் ஆத்ம தியானமும் தான்  சன்யாசம்.  ''ஞானம்  சன்யாச லக்ஷணம்''.  இதற்கு வரைமுறை இல்லை. ஒருவன்  எந்த விதத்தில் வாழ்ந்தால் அவனால் உலகத்தை கவனிக்காமல் ஆத்ம விசாரத்தில் மூழ்கமுடியுமோ அது தான் அவனது ஸன்யாஸம்.   அவரவர் சௌகர்யம். விடா முயற்சி நல்ல பயனைத்தரும்.  இந்த பயிற்சிக்கு ஞானம் வைராக்கியம் ஆகியவை  பறவையின் ரெண்டு ரெக்கை மாதிரி ஆத்ம அனுபவம் பெற  அவசியம். ஒரு நல்ல குரு,  சத்சங்கம் இந்த தேடலை எளிமைப் படுத்தும். 

''ஸ்வாமி  ஸ்ருஷ்டி  எப்படி உண்டாகிறது?  சிலர்  கர்மத்தால்  என்றும்  சிலர்  ஈஸ்வரனின் லீலை'' என்றும் சொல்கிறார்களே, எது சத்யம்??''  என்று  ஒரு பக்தர் கேட்டார். 

''ஸ்ருஷ்டி பற்றி  சாஸ்திரத்தில் எவ்வளவோ விவரங்கள் வர்ணனைகள் இருந்தாலும் அப்படி நடந்ததா, நடக்குமா? ஸ்ருஷ்டி என்பது நடந்தால் தானே , அது புரிந்தால் தானே  அதைப் பற்றி எப்படி என்று சொல்ல முடியும்.   நாம் இருக்கிறோம் என்பது நமக்கு நிச்சயமாக தெரிகிறது.  நான் என்பது அதற்கு சித்தமாக இருக்கிறது. நிகழ்காலம் புரிகிறது.  இதை புரிந்துகொண்டபின்  பிறகு ஸ்ருஷ்டி நடந்திருக்கிறதா என்று யோசிப்போம். 

sivan jaykay

unread,
Sep 3, 2021, 8:01:52 PM9/3/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்:    நங்கநல்லூர்  J K  SIVAN  -

70  மஹாலக்ஷ்மி  பெற்ற  மஹா பெரியவா 

இந்தியா  சுதந்திரம் அடைவதற்கு முன்பு பல நூறு ஆண்டுகள்  பல  ராஜ்யங்களாக பிரிந்து இருந்தது. அப்படி ஒன்று தான் திருப்பதி அருகே  வேங்கடகிரி ராஜ்ஜியம். அதற்கு ஒரு ராஜா  வெள்ளைக் காரர்கள் காலத்திலேயே இருந்தார்.  அந்த ராஜா மஹா பெரியவா  திருப்பதி வந்திருப்பதை அறிந்து வேங்கடகிரி வரவேண்டும் என்று  வேண்டுகோள்  விடுத்ததை  பெரியவா ஏற்றார். 1932ம் வருஷம் ஏப்ரல்  24ம் தேதி வேங்கடகிரி விஜயம்.  ஊருக்கு வெளியே பெரிய கூட்டமாக பக்தர்கள்  கூடி  வரவேற்றனர். அங்கே ஒரு சங்கரமடத்தில் பெரியவா தங்கினார். அதை கட்டியவர்   தர்ப காளஹஸ்தி சாஸ்திரிகள். ஒவ்வொரு வருஷமும் அங்கே சங்கர ஜெயந்தி விசேஷமாக கொண்டாடப்படும்.  1932  வருஷ  சங்கர ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டதற்கு காரணம் மஹா பெரியவா  விஜயம் தான்.  வேங்கடகிரி மஹாராஜா குடும்பம், சமஸ்தான சிப்பந்திகள்,பக்தர்கள் அனைவரும் பாதபூஜை,  பிக்ஷா வந்தனம் செய்து  பெரியவா  ஆசி பெற்றார்கள். கிட்டத்தட்ட மூன்று வாரம்  பெரியவா வேங்கடகிரியில்  இருந்து எல்லா பக்தர்களுக்கும் பரம திருப்தி அளித்தார். 

வேங்கடகிரியிலிருந்து  விஜயம் தொடர்ந்த மஹா பெரியவா அங்கிருந்து பூண்டி, வடமலைப் பேட்டை,பதிறேடு, ஜோகுல  மல்லாவரம், புங்கலூர்  வழியாக மீண்டும் திருப்பதி வந்து சேர்ந்தார்.   மனா நிறைவோடு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் தரிசனம் செய்தார். அன்று பௌர்ணமி.  பிறகு  மலை இறங்கி திருச்சானூர் வந்து ரெண்டு நாள்  தாங்கினார்.   அலமேலு மங்கா தாயார் தரிசனம். 22ம் தேடி  புத்தூர் விஜயம் செய்தார். புத்தூரில் 15நாள்  முகாம்.  கைலாஸ  கோனா தீர்த்தத்தில்  ஸ்னானம் .இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம். யாருக்குமே அங்கிருந்து அகல  மனம் வராது.  சிறிய  நீர்வீழ்ச்சிகளோடு இன்னும் ரெண்டு கூட அங்கிருந்தது.  சதாசிவ கோனா, அம்மவாரு  கோனா என்று அவற்றிற்கு பெயர்.  அங்கேயும்  ஸ்னானம் செய்தார். 

மஹா பெரியவா புத்தூரி இருந்த  ரெண்டு வார காலமும்  தக்க வசதியான ஏற்பாடுகள் செய்தவர்  ஆனம் குப்புஸ்வாமி நாயுடு , G.  ரெங்கையா ரெட்டி மற்றும் சில பிரமுகர்கள். அருகே உள்ள புக்கா   BUGGA என்கிற ஊருக்கு  வந்து வ்யாஸ பூஜை ஏற்கவேண்டும், சாதூர் மாஸ்ய வ்ரதம்   கழிக்க வேண் டும் என்று  என்று வேண்டினார்கள்.  

1932ம் வருஷம் ஜூன் மாதம் 4ம் தேதி  மஹா பெரியவா  கார்வேட் நகரத்துக்கு  விஜயம் செய்தார். நான்கு நாள் அங்கே  தங்கி இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.  கார்வேட் நகருக்கு ஒரு ராஜா இருந்தார். அவர் பெரியவாளை வரவேற்று  தன்னுடைய  லட்சுமி விசால  அரண்மனையில் தங்குவதற்கு சக்லயேற்பாடுகளும்  செய்தார். இந்த ஊரிலும்  ராஜ  குடும்பத்தோடு பொதுமக்களும்  பாத பூஜையில்,  பிக்ஷா வந்தனத்தில் கலந்துகொண்டார்கள்.  ராஜா  ஒரு பெரிய  வெள்ளி தாம்பாளத்தை , ஸஹஸ்ரதாரா  அபிஷேக பாத்திரத்தை  சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்கு அளித்தார்.  பெரியவா  ராஜாவுக்கு ஆசீர்வாதம்  பிரசாதம் வழங்கியபின் புறப்பட்டார்.  

சித்தூரில்  நகரி என்று ஒரு இடம். அங்கே  பெரியவா வந்து சேரும்போது   கும்பகோணம்  காமகோடி மடத்திலிருந்து ஒரு தந்தி அவருக்கு வந்து சேர்ந்தது.  மடத்து மானேஜர் அனுப்பி இருந்தார்.    அது ஒரு துயரச்  செய்தி. 

மஹா பெரியவா பூர்வாஸ்ரம  அம்மா  மஹாலட்சுமி அம்மாள் கும்பகோணத்தில் 1932 ஜூன் மாதம்  14ம் தேதி  தேஹ வியோஹம் அடைந்தார் என்று செய்தி வந்திருந்தது.  அன்று சுக்ல ஏகாதசி.  
செய்தி வந்த போது   மஹா பெரியவா சமஸ்க்ரித  பண்டிதர்களோடு  வேதாந்த  சம்பாஷணையை ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.   ஒரு ஆச்சர்யமான விஷயம் சொல்கிறேன் கேளுங்கள்:

மஹாபெரியவாளோடு  யாத்திரையில் வந்த  மடத்து அதிகாரி கையில் தந்தியை வைத்துக் கொண்டு மஹா பெரியவா இருக்கும் இடத்துக்கு தயங்கி தயங்கி  வந்தவர் அவர் கவனைத்தை ஈர்க்க முயன்றார்.  அவரைப்பார்த்த மஹா பெரியவா ''என்ன  தந்தி வந்திருக்கா?  கும்பகோணத்திலிருந்தா ? '' என்று கேட்டார். 
மானேஜர் குனிந்தவாறே  ஆமாம் என்று தலையை ஆட்டினார்.
சில வினாடிகள் மௌனம்.  பிறகு பெரியவா அவரோடு சம்பாஷித்துக் கொண்டிருந்த பண்டிதர்
களிடம்   ''ஒரு சன்யாசி  தன்னுடைய  பூர்வாஸ்ரம தாயார்  காலகதி  அடைந்துவிட்டார் என்று அறிந்ததும் என்ன செய்யவேண்டும் என்று  சாஸ்திரம் சொல்கிறது?''

மேனேஜர்  வந்து நின்றது, பெரியவா அவரோடு பேசியது  எல்லாம் கேட்ட பண்டிதர்களுக்கு விஷயம் விளங்கிவிட்டது. அவர்கள் சற்று திகைத்து இருந்தார்கள்.  அந்த நேரம்  மஹா பெரியவா எழுந்தார். விடுவிடுவென்று  நடந்தார். ரெண்டு மைல்  தூரத்தில் ஒரு  சிறு நீர்வீழ்ச்சி  அதை நோக்கி நடந்தார்.  கூடவே  பக்தர்கள்  பின் தொடர்ந்து சென்றார்கள். எங்கும் ஹரஹர சங்கர, ஜயஜய சங்கர  சப்தம் தான் ஒலித்தது.   மஹா பெரியவா அந்த நீர் வீழ்ச்சியில் ஸ்நானம் செய்த பெரியவாவின் மனத்தில் ஓடிய  எண்ணங்கள் நமக்கு அறிய வாய்ப்பில்லை. கூடச்சென்ற  மற்றவர்களும்  மெளனமாக அந்த நீர் வீழ்ச்சியில் ஸ்நானம் செய்தார்கள்.  மட அதிகாரிகள் வெள்ளி தங்க காசுகளை   வேத  பண்டிதர்களுக்கு  தானம் செய்தார்கள். 

மஹா பெரியவா மனதில் அம்மாவைப்பற்றிய  எண்ணம் எழுந்தது நமக்கு தெரியாவிட்டாலும்  அந்த பேசும் தெய்வத்தை பெற்ற  புண்யவதி மஹாலக்ஷ்மி அம்மாளை பற்றி நாம் சற்று நினைப்போம்: 

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு-கும்பகோணம்   பாதையில்  5 கி.மீ.  தூரத்தில்  அருமையான ஒரு  சிறு கிராமத்தின் பெயர்  ஈச்சங்குடி.  காவேரிக்கு வடகரையில் உள்ளது.   மிகப்பழைய  வீடுகளை சிதில நிலையில் கொண்ட இந்த ஊரில் ஒரு வீடு  பிரசித்தம்.    ஈச்சங்குடியில் அக்ரஹாரத்தில் உள்ள அந்த வீடடியில் தான்  மஹா பெரியவாளின்  தாயார்  மஹாலக்ஷ்மி அம்மாள் பிறந்தாள். நாகேஸ்வர சாஸ்திரிகளின் புத்ரி.  வேதம் அத்வைதம், உபநிஷம் எல்லாம் நன்றாக  கற்று தெரிந்த  18 வயசு  சுப்ரமணிய அய்யருக்கு  7வயது மஹாலக்ஷ்மி மனைவியானாள்.  
சுப்ரமணிய ஐயர்  மஹாலக்ஷ்மி அம்மாளின்  ரெண்டாவது பிள்ளை  தான்  சுவாமிமலை முருகனை  வேண்டி  வைத்த பெயர்  ஸ்வாமிநாதன். சரியான பெயர்.  பன்னிரண்டு வயசில்  ஸ்வாமிநாதன்  சன்யாசியாகி ஸ்ரீ  சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி  எனும்  68 வது  காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகதகுரு ஆன நமது மஹா பெரியவா.
 தந்தைக்கு உபதேசம் செய்தவன் பெயரை ஜகத்துக்கெல்லாம் உபதேசம் செய்யப் போகிறவருக்கு  வைத்தது எவ்வளவு பொருத்தம். 

 1932ல்  ஜூன்  14  அன்று  ஆந்திராவில்  நகரி என்னும்  ஊரில் மஹா பெரியவா  முகாமிட்டி 
ருந்தபோது தான் தாயார்  மஹா லட்சுமி அம்மாள்  காலமான செய்தி வந்தது.  தாய்க்கு  ஸ்நானம் செய்து விட்டு   பிராமணர்களுக்கு தானம் வழங்கினார்.  அதோடு  அந்த  சந்நியாசி தன்னைப்  பெற்ற  தாய்க்கு   ஒரு சந்நியாசியின்  கடமையை முடித்தார்.  அப்போது தான்  அவர் மனதில் ஒரு எண்ணம் உதயமாயிற்று.  தனது தாய் பிறந்த  பழைய வீட்டை  ஈச்சங்குடியில் ஒரு  வேத பாடசாலையாக்கினால் என்ன?  வேத சப்தம் ஒலிக்கட்டுமே . இந்த எண்ணம் பூர்த்தியாக   பல வருஷம்  ஆகியது.    எண்ணம்  எப்போது  செயலாகியது?

1993ல் ஒருமுறை  பெங்களூர்  ஹரி  என்ற  பக்தர்  தரிசனத்துக்கு வந்தபோது மகா பெரியவா  " நீ   ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர்  கோயிலை  புனருத்தாரணம் பண்ணப்  போறியா?

''பெரியவா அனுகிரஹத்தோடு  அப்படி ஒரு எண்ணம் இருக்கு ''

''ரொம்ப  சந்தோஷம். நிச்சயம் அது பூர்த்தியாகும்.  அங்கே தான்  நான்  சின்ன வயசிலே   அம்பாளை காருண்ய வல்லியா , கச்சபுரீஸ்வரரோடு நிறைய  தரிசனம் பண்ணி இருக்கேன்.  வேதம் எல்லாம் கத்துண்டேன். ஞாபகம் இருக்கு ''  என்று  மஹா பெரியவா சிரித்தார்.

''சீக்கிரமே  ஆரம்பிக்க  ஏற்பாடு பண்றேன். எல்லாம் பெரியவா ஆசீர்வாதம் அனுக்கிரஹம்''

''நான் உன்னை ஒண்ணு  கேட்கட்டுமா. எனக்கு உபகாரம்  பண்ணுவியா?''
''மஹா பெரியவா ஆக்ஞா எதுவா இருந்தாலும்  அதை நிறைவேற்றுவேன் பெரியவா''
''ஸ்ரீ காருண்யவல்லி சமேத கச்சபுரீஸ்வரர் அனுக்கிரஹம் உனக்கு   கிடைக்கட்டும்.  நான் என் பூர்வாஸ்ரம தாயார் பிறந்து  வளர்ந்த  ஒரு பழைய வீடு ஈச்சங்குடியிலே  இருக்கே உனக்கு தெரியுமா?  அதை  குழந்தைகளுக்கு வேதம் கத்துக்கொடுக்கிற  பாடசாலையா புனருத்தாரணம் பண்ணனும் னு மனசிலே வெகுகாலமா ஒரு எண்ணம். அங்கே  வேதம் என்னிக்கும் ஒலிக்கணும்.   நாலு பேருக்கு ஊரிலே  உபயோகமான இடமாக அதை மாத்தணும்''

ஹரி உணர்ச்சி வாசத்தோடு கண்களில் ஆனந்த கண்ணீர்  வடிய  ''மஹா பெரியவா,   இது  எனக்கு கிடைச்ச  பெரிய  பாக்கியம்!  என் பூர்வ ஜென்ம புண்யம்.  உடனே அதற்கு  செயல்படறேன்''

இத்தனை வருஷம்  எவரிடமும்  சொல்லாத  மனதில் தேக்கி வைத்திருந்த ஒரு  எண்ணத்தை  மஹா பெரியவா சொன்னதற்கு  காரணம் இருந்திருக்கிறது.  அந்த பழைய  வீட்டை  அப்போதைய உரிமையாளரிடம் பேசி வாங்க  வேண்டும், இடித்து  பாடசாலை கட்ட  ஒரு வருஷமாக ஆகும். தனது வாழ்நாளில் அங்கே வேத பாடசாலை நிறுவிய சேதி காதில் விழவேண்டும் என்பதற்காக காத்திருந்தார். 

அந்த  பழைய  வீடு  உரிமையாளரிடமிருந்து  விலை பேசி வாங்கப்பட்டு பக்தர்களின் ஒத்துழைப் போடு  விரைவில்  பாடசாலையாகியது.

1994  ஜனவரி  8  உலகம் மஹா சோகத்தில் ஆழப்போகிறது என்று அந்த காலை வேளை  ஒருவருக்கும் தெரியாது.  உடல் நலம் ஒத்துழைக்காததால் பக்தர்களுக்கு தரிசனம் தர இயலவில்லை.  தியானத்தில் ஈடுபட்டார்.  அருகே இருந்தவர்  உரக்க காதில் சொன்னார்: 

 ''பெரியவா  பெங்களூர்  ஹரி தரிசனம் பண்ண வந்திருக்கார்''
'' யாரு  பெங்களூர் ஹரியா? எங்கிருந்து?
''ஈச்சங்குடியிலிருந்து ,  பெரியவாளுடைய  அப்பா அம்மா படம், பாதுகை கொண்டு வந்திருக்கார்''
''அழைச்சுண்டு வா''
வெள்ளிப் பாதுகைகளை   காலில்  மெதுவாக அணிந்துகொண்டார். ஹரிக்கு ஆசீர்வாதம் பண்ணினார்.
 ''பெரியவா உங்க  அனுகிரஹத்தோடு  ஈச்சங்குடியிலே  அந்த  இல்லத்தில்  பாடசாலையை  ஆரம்பிக்க நாள் குறிச்சாச்சு.  பத்திரிகை  வெளியிடணும் . பெரியவா கையாலே  தொட்டு
ஆசிர்வாதத்தோடு ஆரம்பிக்கணும் 
 
புன்னகையோடு  பெரியவா அந்த  பாடசாலை ஆரம்ப விழா பத்திரிகையை வாங்கிப் படித்தவர், 
தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தைப்  பார்த்து விட்டு  கண்களில் ஒற்றிக் கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை  ஹரியிடம் கொடுத்தார். 

"இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!' என சொல்லாமல் சொல்லி, ஆசி வழங்கினார்.

ஹரி  தான்  கடைசியாக இந்த உலகத்தில்  மஹா பெரியவாளுடன்  பேசி  அவர் ஆசிபெற்ற  பக்தர்.  என்ன பாக்யம்.  இதெல்லாம் நடந்த  ரெண்டு மூணு  மணி நேரத்தில் மஹா பெரியவா சித்தி அடைந்துவிட்டார்.

sivan jaykay

unread,
Sep 3, 2021, 8:01:52 PM9/3/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீமந்  நாராயணீயம் -   நங்கநல்லூர்  J K  SIVAN --
44வது தசகம் 

44.    ''கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா...''.

இது என்ன  பேரிடியாக இருக்கிறது.  இது வரை மூன்று  ராக்ஷஸர்கள்  இங்கே படையெடுத்து விட்டார்களே என்று நந்தகோபனும் யசோதையும் தூக்கமின்றி கலங்கினார்கள்.  ஏன் நமது குழந்தைக்கு இப்படி  பேராபத்துகள் ஓன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கிறது.  குழந்தைக்கு ஒரு வயது  நிரம்ப போகிறது அதற்குள்  அவன் உயிருக்கு இப்படிப்பட்ட ஆபத்துகள் வர என்ன காரணம்.  ஏதோ தெய்வ சங்கல்பத்தால், இதுவரை அவன் உயிர் தப்பி இருக்கிறான்.  முதலில் நமது குருவை அணுகி அவரிடம் விஷயத்தை சொல்லி  ஏதாவது பரிகாரம் தேவைப்பட்டால் அதை  உடனே செய்வோம் என்று குரு கர்க  முனிவரை அணுகினார்கள்.  

''குழந்தைக்கு பேர் வைத்துவிட்டீர்களா  என்ன பெயர்?'' என்கிறார் கர்க ரிஷி.  அவருக்கு நன்றாக தெரியும்  கிருஷ்ணன் யார்  என்று.  ஆகவே  நந்தகோபன் யசோதைக்கு   ஆறுதல் அளித்தவாறு இப்படி கேட்டார். 

''இன்னும் பெயர்  வைக்கும் பண்டிகை கொண்டாடவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் நீங்கள் தான்  தான் பெயர் வைக்க உங்களை அழைக்கிறோம். ''

''கிருஷ்ணன்'' என்ற பெயரை வையுங்கள் .  ஆனந்தத்தையும் அமைதியையும் தரும்  நாமம் கிருஷ்ணன் என்பது.  கருமையையும் குறிக்கும்.  நான் இந்த குழந்தைக்கு  ஜாதகம் கணித்து தருகிறேன். அவனைப்பற்றி ஜாதகம் என்ன சொல்கிறது என்றும்  உங்களுக்கு விளக்குகிறேன்.''

கர்க ரிஷி தான்  ரோகிணி  குமாரனுக்கு  ராமன் என்று பெயர் வைத்து அவன் பலராமன்  என்று உலகம் அறியப்பட்டவன் . இது தான் இந்த தசக சுருக்கம்.   இனி  மேல்பத்தூர்  நாராயண  பட்டத்ரி என்ன சொல்கிறார் குருவாயூரப்பனுக்கு என்று  44வது தசகத்திற்குள் செல்வோம். 

गूढं वसुदेवगिरा कर्तुं ते निष्क्रियस्य संस्कारान् ।
हृद्गतहोरातत्त्वो गर्गमुनिस्त्वत् गृहं विभो गतवान् ॥१॥

 guuDhaM vasudeva giraa kartuM te niShkriyasya samskaaraan |
hR^idgatahOraa tattvO gargamunistvad gR^ihaM vibhO gatavaan ||

கூ³ட⁴ம் வஸுதே³வகி³ரா கர்தும் தே நிஷ்க்ரியஸ்ய ஸம்ஸ்காரான் |
ஹ்ருத்³க³தஹோராதத்வோ க³ர்க³முனிஸ்த்வத்³க்³ருஹம் விபோ⁴ க³தவான் || 44-1 ||

குருவாயூரப்பா,  கர்க ரிஷி,  ப்ரம்ம ஞானி.  வானசாஸ்திர புலி.   ஹோரை ஜோஸ்ய நிபுணர் என்று எல்லோராலும்  போற்றப்பட்டவர் . அவரைச் சென்று வணங்கிய  வசுதேவர்  வேண்டுகோள் படி, அவர்  நீ  வசித்த  கோகுலத்தில்   நந்தகோபனின்  இல்லத்துக்கு வந்தார்.  குழந்தைக்கு  நாமகரணம் ஜாதகர்மா எல்லாம்  பண்ண அவரை விட சிறந்த  ஸாஸ்த்ர விற்பன்னர் இல்லையே.  கர்க ரிஷி பாக்கியசாலி.   த்ரிகாலமும் உன் கட்டளைப்படி நடக்கும்போது உன் எதிர்காலத்தை  பற்றி கணிப்பதற்கு  கொடுத்து வைத்தவர். 

नन्दोऽथ नन्दितात्मा वृन्दिष्टं मानयन्नमुं यमिनाम् ।
मन्दस्मितार्द्रमूचे त्वत्संस्कारान् विधातुमुत्सुकधी: ॥२॥

nandO(a)tha nanditaatmaa bR^indiShTaM maanayannamuM yaminaam |
mandasmitaardramuuche tvatsamskaaraan vidhaatumutsukadhiiH ||2

நந்தோ³(அ)த² நந்தி³தாத்மா வ்ருந்தி³ஷ்டம் மானயன்னமும் யமினாம் |
மந்த³ஸ்மிதார்த்³ரமூசே த்வத்ஸம்ஸ்காரான் விதா⁴துமுத்ஸுகதீ⁴꞉ || 44-2 ||

நந்தகோபன் குடும்பத்தோடு  கர்க  ரிஷி காலில் விழுந்து ஆசி வேண்டினான்.  பரம சந்தோஷத் தோடு அவரை வரவேற்று ஆசனம் அளித்து சகல மரியாதைகளோடும் பக்தியோடும் உனக்கு நாமகரணம் செய்விக்க வேண்டினான்.  மிகுந்த களிப்போடு  ரிஷியும்  அவ்வாறே செய்வதற்கு ஒப்புக்கொண்டார். 

यदुवंशाचार्यत्वात् सुनिभृतमिदमार्य कार्यमिति कथयन् ।
गर्गो निर्गतपुलकश्चक्रे तव साग्रजस्य नामानि ॥३॥

yaduvamshaachaaryatvaatsunibhR^itamidamaarya kaaryamiti kathayan |
gargO nirgata pulakashchakre tava saagrajasya naamaani ||3

யது³வம்ஶாசார்யத்வாத்ஸுனிப்⁴ருதமித³மார்ய கார்யமிதி கத²யன் |
க³ர்கோ³ நிர்க³தபுலகஶ்சக்ரே தவ ஸாக்³ரஜஸ்ய நாமானி || 44-3 ||

''ஆஹா  பாக்யம் எனக்கு''  என்று புளகாங்கிதமடைந்த கர்க ரிஷி,  ''அப்பா  நந்தகோபா, நான்  யது வம்ச குரு. இந்த  நாமகரண  சடங்கு ரொம்ப  ரஹஸ்யமாக நடத்த வேண்டிய ஒன்று.   உனது வீட்டில் இருக்கும்  இன்னொரு குழந்தைக்கும் பெயர் வைத்துவிடுகிறேன் அன்று''  என்றார்.

''என் தெய்வமே,   குருவாயூரப்பா, உன்மூத்த சகோதரனுக்கும் இவ்வாறு பெயர் வைக்க  கர்க ரிஷி தீர்மானித்தார்' 

कथमस्य नाम कुर्वे सहस्रनाम्नो ह्यनन्तनाम्नो वा ।
इति नूनं गर्गमुनिश्चक्रे तव नाम नाम रहसि विभो ॥४॥

kathamasya naama kurve sahasranaamnO hyanantanaamnO vaa |
iti nuunaM gargamunishchakre tava naama naama rahasi vibhO ||4

கத²மஸ்ய நாம குர்வே ஸஹஸ்ரனாம்னோ ஹ்யனந்தனாம்னோ வா |
இதி நூனம் க³ர்க³முனிஶ்சக்ரே தவ நாம நாம ரஹஸி விபோ⁴ || 44-4 ||

''என்னப்பா, நாராயணா, உனக்கு ஏன்  கர்க முனிவர்  ரஹஸ்யமாக  பெயரிட வேண்டும் என்று சொன்னார் என்று எனக்கு ஒரு காரணம் புரிகிறது. நீ ஆயிர நாமங்கள் கொண்டவன், அது மட்டுமா, எண்ணற்ற,  கணக்கற்ற நாமங்களால் அழைக்கப்படுபவன்  என்று அவருக்கு தெரிந்திருக் கலாம்.  அப்படிப்பட்ட   உனக்கு  நான் என்ன புதிதாக ஒரு நாமம் சூட்ட முடியும் என்று தயங்கி இருக்கலாம்'' 

कृषिधातुणकाराभ्यां सत्तानन्दात्मतां किलाभिलपत् ।
जगदघकर्षित्वं वा कथयदृषि: कृष्णनाम ते व्यतनोत् ॥५॥

kR^iShidhaatuNakaaraabhyaaM sattaanandaatmataaM kilaabhilapat |
jagadaghakarShitvaM vaa kathayadR^iShiH kR^iShNa naama te vyatanOt ||5

க்ருஷிதா⁴துணகாராப்⁴யாம் ஸத்தானந்தா³த்மதாம் கிலாபி⁴லபத் |
ஜக³த³க⁴கர்ஷித்வம் வா கத²யத்³ருஷி꞉ க்ருஷ்ணனாம தே வ்யதனோத் || 44-5 ||

''ண'' என்கிற சொல்லுக்கு  முன்பும்  ''க்ரிஷ்'' எனும்  முற்சேர்க்கையை இணைத்து  ''க்ருஷ்ண'' என்ற பெயர்  உனக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும்.  இந்த வார்த்தைக்கு  ''உண்மையான  ஆனந்தம்'' என்ற அர்த்தம்.   உலகத்தின் பாபங்கள் அனைத்தையும் அழித்து ஆனந்தம் தருபவன் என்ற அர்த்தமும்  கர்க ரிஷி மனதில் தோன்றி இருக்கலாம்.  '''கிருஷ்ணன்''  என்று இந்த குழந்தைக்கு பெயர் என்று  உனக்கு நாமகரணம் செய்துவைத்தார்.

 अन्यांश्च नामभेदान् व्याकुर्वन्नग्रजे च रामादीन् ।
अतिमानुषानुभावं न्यगदत्त्वामप्रकाशयन् पित्रे ॥६॥

anyaashcha naamabhedaan vyaakurvannagraje cha raamaadiin |
atimaanuShaanubhaavaM nyagadattvaamaprakaashayan pitre ||

அன்யாம்ஶ்ச நாமபே⁴தா³ன் வ்யாகுர்வன்னக்³ரஜே ச ராமாதீ³ன் |
அதிமானுஷானுபா⁴வம் ந்யக³த³த்த்வாமப்ரகாஶயன்பித்ரே || 44-6 ||

''குருவாயூரப்பா,  அப்போது கர்க ரிஷி வேறு சில பெயர்களும் வைத்தார்.  உன்,மூத்த  சகோதரனுக்கு ராமன்  என்று பெயரிட்டார்.  இந்த பெயர்கள் என்ன அர்த்தம் கொண்டவை என்று விவரமாக  நந்த கோபனுக்கு விளக்கினார்.  நீ தான் பகவான் ஸ்ரீமந்  நாராயணன் என்று ரிஷிக்கு நன்றாக தெரியும்,  இருந்த போதிலும்  அந்த  தேவ ரஹஸ்யத்தை எவரிடமும் வெளிப்படுத்தவில்லை.   ஆனால்  ''நந்தகோபா, இந்தக்குழந்தை  தெய்வானுக்கிரஹத்தால்  தீர்காயுசோடு, சக்திமானாக  சாதாரண மான மற்ற குழந்தைகள் போல் இல்லாமல்  சிறந்த நற்குணங்கள் கொண்டவனாக விளங்கு வான்''என்று  பூடக மாக  உன்  தெய்வீக குணங்களை குறிப்பிட்டார்''. 

स्निह्यति यस्तव पुत्रे मुह्यति स न मायिकै: पुन: शोकै: ।
द्रुह्यति य: स तु नश्येदित्यवदत्ते महत्त्वमृषिवर्य: ॥७॥

snihyati yastava putre muhyati sa na maayikaiH punaH shOkaiH |
druhyati yaH sa tu nashyedityavadatte mahattvamR^iShivaryaH ||

ஸ்னிஹ்யதி யஸ்தவ புத்ரே முஹ்யதி ஸ ந மாயிகை꞉ புனஶ்ஶோகை꞉ |
த்³ருஹ்யதி யஸ்ஸ து நஶ்யேதி³த்யவத³த்தே மஹத்த்வம்ருஷிவர்ய꞉ || 44-7 ||

''என்னப்பா  கிருஷ்ணா,  அப்புறம் அந்த கர்க ரிஷி நந்தகோபனிடம்   ''ஆஹா இப்பேற்பட்ட  சிறந்த  குணாதிசயங்களைக் கொண்ட  குழந்தையிடம்   வாத்சல்யத்தோடு , அன்பு,  பாசம் செலுத்துப வனுக்கு   உலக துன்பங்கள்,  மாயையிடமிருந்து  விலக்கு  தன்னாலேயே  ஏற்பட்டுவிடும். எவர்  எதிர்த்தாலும்  அவர்களுக்கு நாசம்  உறுதி,  இந்த குழந்தையை பாசத்தோடு  நேசத்தோடு அணுகுபவர்  அப்படி  கொடுத்து  வைத்தவர்கள்''
  என்று நந்தகோபனையும்  அவனைச் சார்ந்த மற்றவர்களையும்  ஸ்லாகித்து  புகழ்ந்தார். 

जेष्यति बहुतरदैत्यान् नेष्यति निजबन्धुलोकममलपदम् ।
श्रोष्यसि सुविमलकीर्तीरस्येति भवद्विभूतिमृषिरूचे ॥८॥

jeShyati bahutaradaityaan neShyati nijabandhulOkaM amalapadam |
shrOShyati suvimalakiirtiirasyeti bhavadvibhuutiM R^iShiruuche ||

ஜேஷ்யதி ப³ஹுதரதை³த்யான் நேஷ்யதி நிஜப³ந்து⁴லோகமமலபத³ம் |
ஶ்ரோஷ்யதி ஸுவிமலகீர்தீரஸ்யேதி ப⁴வத்³விபூ⁴திம்ருஷிரூசே || 44-8 ||

''இந்த  குழந்தையைப் பற்றி நீ கவலைப்படவே வேண்டாம் நந்தகோபா,  இவன் மஹத்தானவன். எந்த  அரக்கனும் ராக்ஷஸனும் இவனை நெருங்கமுடியாது. அவனால் அவர்கள் தான் அழிவார்கள். மனதில் உங்களுக்கு எந்த கிலேசமும் வேண்டாம்.  அவனைச்சுற்றியுள்ளவர்களுக்கும்  எந்த துன்பமும் நேராது. அவனைப்பற்றி புகழ்ச்சியான  வார்த்தைகள்  தான் உன் காதில் விழும் ''  என்றார் கர்க  ரிஷி.

अमुनैव सर्वदुर्गं तरितास्थ कृतास्थमत्र तिष्ठध्वम् ।
हरिरेवेत्यनभिलपन्नित्यादि त्वामवर्णयत् स मुनि: ॥९॥

amunaiva sarvadurgaM taritaastha kR^itaasthamatra tiShThadhvam |
harirevetyanabhilapannityaadi tvaamavarNayat sa muniH || 9

அமுனைவ ஸர்வது³ர்க³ம் தரிதாஸ்த² க்ருதாஸ்த²மத்ர திஷ்ட²த்⁴வம் |
ஹரிரேவேத்யனபி⁴லபன்னித்யாதி³ த்வாமவர்ணயத்ஸ முனி꞉ || 44-9 ||

''வாதபுரீஸ்வரா, ஹரி,   நீ உண்மையில் யார் என்பதை கர்க ரிஷி எவரிடமும் அறிவுறுத்தவில்லை. 

''நந்தகோபா,  நீ பாக்கியசாலி,  உனக்கு வரும் தீங்குகள் எதுவானாலும் சூரியனைக் கண்ட பனி போல்  விலகும்.   எல்லாம் இந்த குழந்தையின் மஹிமை.   ஆகவே  நீங்கள் எல்லோரும் இந்த குழந்தையை கண் போல் பாதுகாத்து    பாசத்தோடு பக்தி ஸ்ரத்தையும்  சேர்த்து   அதனிடம் நடந்து  கொள்ளுங்கள்'' என்றார் கர்க ரிஷி.

गर्गेऽथ निर्गतेऽस्मिन् नन्दितनन्दादिनन्द्यमानस्त्वम् ।
मद्गदमुद्गतकरुणो निर्गमय श्रीमरुत्पुराधीश ॥१०॥

garge(a)tha nirgate(a)sminnandita nandaadi nandyamaanastvam |
madgatamudgatakaruNO nirgamaya shriimarutpuraadhiisha ||

க³ர்கே³(அ)த² நிர்க³தே(அ)ஸ்மின் நந்தி³தனந்தா³தி³னந்த்³யமானஸ்த்வம் |
மத்³க³த³முத்³க³தகருணோ நிர்க³மய ஶ்ரீமருத்புராதீ⁴ஶ || 44-10 |

''எண்டே குருவாயூரப்பா, அப்புறம் என்ன  கேட்கவேண்டுமா, உன்னைக்   கண்ணை இமை போல் பாதுகாத்து பெருமையோடு நந்தகோபன் குடும்பத்தாரும் மற்றவர்களும் பரம சந்தோஷத்தோடு  பாதுகாத்து வளர்த்தார்கள்  என்று நான் சொல்ல  வேண்டுமா, நான் சொல்ல வேண்டியது ஒன்று தான். என் தெய்வமே என் நோய் தீர்த்து என்னையும் ரக்ஷிக்கவேண்டும்.''

தொடரும் 


sivan jaykay

unread,
Sep 6, 2021, 8:39:27 PM9/6/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்:    நங்கநல்லூர்  J K  SIVAN  -

71.  மஹா பெரியவா மதராஸ் விஜயம்.

இந்த தொடரை படிப்பவர்களுக்கு இது என்ன புக்கா  புக்கா (BUGGA ) என்று இந்த மனிதன் எழுதுகிறானே, அப்படியென்றால் அது என்ன, எங்கே இருக்கிறது  என்று தோன்றலாம். அது ஒரு ஊர். நகருக்கு வெளிப்புறத்தில்  சித்தூர் ஜில்லாவில், ஆந்திர தேசத்தில் உள்ள அக்ராஹாரம்.  குசஸ்தல ஆற்றங்கரையில் உள்ளது. திருப்பதியிலிருந்து 56 கி.மீ. இப்போதும் உள்ளது. அங்குள்ள ஆலயத்தில் காசி விஸ்வநாதர், அன்னபூரணி, காமாக்ஷி தேவி, பிரயாகை மாதவ சுவாமி ஆகியோர் உள்ளார்கள்.
குசஸ்தல  ஆற்றங்கரையில் உள்ளது.  ஐந்து நீரூற்றுக்கள்  அங்கிருந்து உற்பத்தியாகிறது. இயற்கை கொஞ்சும் ரம்யமான இந்த இடத்தில் மஹா பெரியவா  1932ம் வருஷம்  ஜூலை 17ம் தேதி சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார்.   அந்த அக்ராஹாரத்தில் பெரியவா தங்கியிருந்தபோது அருகே ஒரு கிணறு. அதை பக்தர்கள் வ்யாஸ தீர்த்தம் என்று நாமகரணமிட்டார்கள்.  பெரியவா இங்கு தங்கியிருந்தபோது புராதனமான காசி விஸ்வநாதர் ஆலயத்தையும்,ப்ரயாக் மாதவன் ஆலயத்தையும் புனருத்தாரணம் செய்து 11.9.1932 அன்று சிறப்பாக  கும்பாபிஷேகம் நடந்தது.  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.   வெள்ளைக்கார  அரசாங்கம்    MSM   சிறப்பு ரயில்களை  விட்டு போக்குவரத்துக்கு உதவியது.  முன்பே சொன்னபடி  இந்த கும்பாபிஷேகம்  பெரியவா விஜயம், நித்ய  பாதபூஜை, பிக்ஷாவந்தனம் சகலத்துக்கும்  ஏற்பாடு செய்தவர்  ஆனால்  குப்புஸ்வாமி நாயுடு, P .மாணிக்கவேலு, குண்ட ரெட்டி, ரெங்கையா ரெட்டி, P. கிருஷ்ணஸ்வாமி ஐயர்  ஆகியோர்.  வெகுகாலமாக காத்திருந்த சென்னை பக்தர்கள் மஹா பெரியவா சென்னை விஜயம் செய்யவேண்டும் என்று திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டதால், மஹா பெரியவா புக்கா
விலிருந்து  சென்னைக்கு கிளம்பினார்.  வரும் வழியில் திருத்தணியில் சுப்ரமணிய சுவாமி தரிசனம். 

மஹா பெரியவாளுக்கு எப்போதுமே  நெரிசலான  பெரிய பட்டணங்களில் தங்குவது பிடிக்காது.  பூஜை செய்வதற்கோ, சொந்தமாக நித்யானுஷ்டங்கள் செய்யவோ தோதுப்படாது. இதன் காரணமாக  சென்ற முறை சென்னை பக்கம் விஜயம் செய்தபோது கோயம்பேடு அருகேயே  தங்கி திரும்பிவிட்டார்.  1930 டிசம்பரில் அது நடந்தது.  இந்த தடவை சென்னை மாநகரில் குறைந்தது சில மாதங்களாவது தங்கி  பிரசங்கங்கள் நடத்தவேண்டும், அருளாசி வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். 

1932 செப்டம்பர் மாதம்   வியாச பூஜை புக்கா அக்ரஹாரத்தில் முடித்து, திருத்தணி தரிசனம் செய்த்துவிட்டு  28ம் தேதி மஹா பெரியவா சென்னை வந்தார்.  அடேயப்பா  மைலாப்பூர்  லஸ்  அருகே  அவ்வளவு பக்தர்கள் கூட்டம் இதுவரை அப்படி சேர்ந்ததே இல்லை.  லஸ் சர்ச் ரோடு, மௌபிரேஸ்  ரோடு  பகுதிகளில் பூர்ண கும்பத்தோடு வரிசையாக  பக்தர்கள் நின்ற காட்சி கண்கொள்ளா அபூர்வ  நிகழ்ச்சி.   இந்த பெயர்கள் இப்போது இல்லை, எல்லாம் மாறிவிட்டது.  லஸ்  சர்ச் ரோட்டில் T R ராமச்சந்திர ஐயர்  வீட்டில்  மஹா பெரியவாளுக்கு வரவேற்பு.  மாலை 6.30க்கு  பெரியவா வந்தார்.   அங்கே  சாயங்கால  அனுஷ்டானங்களை செய்து முடித்தார்.  மேயர்  T S  ராமஸ்வாமி அய்யர்,  K  பாலசுப்பிரமணிய ஐயர்  ஆகியோர் நிறைந்த  வரவேற்பு குழு  மஹா பெரியவாளுக்கு பூர்ண கும்பம் அளித்தது.  நகர்வலம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  மஹா பெரியவாளை முதல் தடவை பார்த்த  பக்தர்கள்  ஆனந்த பரவசமானார்கள்.  பெரியவா  அமர்ந்திருந்த பல்லக்கு நகரவே இடம் இல்லை.   ஹரஹர சங்கர, ஜயஜய சங்கர கோஷம் வானைப்  பிளந்தது.  பல்லக்கை தொடர்ந்து வேத மந்த்ர கோஷம்.  அப்புறம்  இசைக்கருவிகளின்  நாத உபாசனை. பஜனை கோஷ்டிகள்  ஒலி . ஸமஸ்க்ரித கல்லூரி வரை  ஊர்வலம் தொடர்ந்தது.  அங்கே மஹா பெரியவா  தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.  பெரிய பந்தல்  காட்சி அளித்தது. அதில் கஞ்சி மட பரிவாரம் தங்கியது.   ஸமஸ்க்ரிதம் , தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் என்று பல  வரவேற்பு உபசார வார்த்தைகள் பலர் பேசினார்கள். அன்றிரவு மஹா பெரியவா  அற்புதமாக  பேசினார். சிவ பக்தி பற்றி அற்புதமான  பிரசங்கம். அதில் மைலாப்பூர்  கபாலீஸ்வரர் மஹிமை  பற்றி விளக்கினார். 

அடுத்தநாள், A.K  ரங்கநாதய்யர் எனும் பக்தர், அனைவருக்கும் அன்னதானம், வஸ்திர தானம் அனைவருக்கும் அளித்தார். ஆயிரக்கணக்கானோர்  மகிழ்ச்சியோடு அவற்றை பெற்றார்கள் .

மஹா பெரியவா  அப்போது பேசிய  பிரசங்கத்தை  ஆறு அணாவிற்கு  ஒரு புத்தககமாக வெளியிட்டிருந்தார்கள். அதன் நகலை இணைத்திருக்கிறேன். அறுபது பக்கங்களையும் இங்கே வெளியிட்டால் படிப்பதற்கு வாசகர்களுக்கு சிரமமாக இருக்கலாம். நேரம் கிடைத்தபோது கொஞ்சம் கொஞ்சமாக படித்து அனுபவிக்க இந்த இணைப்பு.  

காமகோடி கோசஸ்தானம்  அவரது நான்கு சொற்பொழிவுகளை ''நமது அநாதி மதம் '' என்கிற தலைப்பில்  புத்தகமாக்கி இருந்தது.  நான்கு தலைப்புகள் 1.நமது மதத்தின் பொதுக்  கொள்கை.  2.நமது மதம்   3.  அத்வைதம்,  4. ஜீவன் முக்தி நிலை.  https://mahaperiyavaa.blog/2019/07/26/mahaperiyavas-speech-from-1932/  மஹா பெரியவா  பேசியதை சுருக்கமாக ஒவ்வொன்றாக தர உத்தேசம்.தருகிறேன்.
ஒரு சங்கதி. மஹா பெரியவா சென்னை வருகைக்கு முன்பே  சென்னை  நகராட்சி கழகம் வெள்ளைக்காரன் ஆட்சியில் ஒரு தீர்மானம் போட்டது. அதில்  சென்னை நகர மக்கள் சார்பாக ஒரு வரவேற்பு தாம்பாளம்  கொடுக்க முடிவெடுத்திருந்தார்கள்.  அதற்காக  முன்னூறு ரூபாய் ஒதுக்கி இருந்தார்கள்,  நூறு வருஷங்களுக்கு முன்பு ரொம்ப பெரிய  மதிப்புள்ள பணம்.  இதை முன் மொழிந்தவர்  சர்  A.  ராமஸ்வாமி முதலியார்  நகராட்சி சார்பாக ஒரு மதத்தலைவருக்கு வரவேற்பு விழா நடத்துவது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டார்.   மஹா பெரியவா ஹிந்துக்களால் மட்டுமல்ல, பிற மதத்தினராலும் மரியாதையாக போற்றப்பட்ட ஒரு சிறந்த ஆன்மீக வாதி என்று வெள்ளைக்கார அரசாங்கம் நன்றாக அறியும். அவர் வித்யாசம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் கருணையோடு அன்போடு  உதவுபவர் என்பது உலகறிந்த உண்மையாயிற்றே.

மஹா பெரியவா மிகவும் பணிவோடு,  மடத்தின் சம்பிரதாயங்கள் காரணமாக  தன்னால் நகராட்சி மன்ற  அலுவலக, கட்டிடத்துக்கு வந்து அவர்கள் அளிக்கும்  பரிசைப் பெற  இயலாது என்று தெரிவித்து விட்டார். மடத்தில் சிலரை அனுப்ப இயலும் என்றும் உணர்த்தினார்.

தொடரும் 

sivan jaykay

unread,
Sep 6, 2021, 8:39:39 PM9/6/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீமந்  நாராயணீயம் -  நங்கநல்லூர்   J K  SIVAN  -
45வது தசகம் 

45.  கண்ணனும் வெண்ணையும் 

நாட்கள் தான் உலகிலேயே  அதி வேகமாக ஓடுபவை. நாள் ஓடும்போது மாற்றங்களும் கூடவே  மாறி மாறி நிகழ்வதால் உலகம் ரொம்ப சுவாரஸ்யமான  அனுபவமாகி விடுகிறது.  குழந்தையாக இருந்த கண்ணன் இப்போது ஒரு பையன்.  அது தான் இந்த தசகத்தின்  பொருள்.

अयि सबल मुरारे पाणिजानुप्रचारै:
किमपि भवनभागान् भूषयन्तौ भवन्तौ ।
चलितचरणकञ्जौ मञ्जुमञ्जीरशिञ्जा-
श्रवणकुतुकभाजौ चेरतुश्चारुवेगात् ॥१॥

ayi sabala muraare paaNijaanu prachaaraiH
kimapi bhavanabhaagaan bhuuShayantau bhavantau |
chalita charaNaka~njau ma~njuma~njiira shi~njaa
shravaNa kutuka bhaajau cheratushchaaru vegaat || 1

அயி ஸப³ல முராரே பாணிஜானுப்ரசாரை꞉
கிமபி ப⁴வனபா⁴கா³ன் பூ⁴ஷயந்தௌ ப⁴வந்தௌ |
சலிதசரணகஞ்ஜௌ மஞ்ஜுமஞ்ஜீரஶிஞ்ஜா-
ஶ்ரவணகுதுகபா⁴ஜௌ சேரதுஶ்சாரு வேகா³த் || 45-1 ||

அதோ அந்த  பெரிய  அரண்மனை தெரிகிறதே  கோகுலத்தில், அது தான்  நந்தகோபன் இல்லம் . அதில் தவழ்கிறவர்கள் தான்  பலராமனும் கிருஷ்ணனும்.  கையில்  வளையல்கள், காப்புகள், காலில் தண்டை கொலுசுகள் ஒலிக்க  எவ்வளவு ஆனந்தமாக தாங்கள் எழுப்பும் சப்தத்தை தாங்களே ரசித்து கேட்டு  மகிழ்கிறார்கள். வேக வேகமாக  கால்களை மாற்றி மாற்றி வைத்து  தவழ்கிறார்கள். 

मृदु मृदु विहसन्तावुन्मिषद्दन्तवन्तौ
वदनपतितकेशौ दृश्यपादाब्जदेशौ ।
भुजगलितकरान्तव्यालगत्कङ्कणाङ्कौ
मतिमहरतमुच्चै: पश्यतां विश्वनृणाम् ॥२॥

mR^idu mR^idu vihasantau unmiShaddantavantau
vadana patita keshau dR^ishya paadaabja deshau |
bhuja galita karaanta vyaalagat kankaNaankau
matimaharatamuchchaiH pashyataaM vishvanR^INaam ||2

ம்ருது³ ம்ருது³ விஹஸந்தாவுன்மிஷத்³த³ந்தவந்தௌ
வத³னபதிதகேஶௌ த்³ருஶ்யபாதா³ப்³ஜதே³ஶௌ |
பு⁴ஜக³லிதகராந்தவ்யாலக³த்கங்கணாங்கௌ
மதிமஹரதமுச்சை꞉ பஶ்யதாம் விஶ்வன்ரூணாம் || 45-2 ||

கண்ணப்பா,  நீ எவ்வளவு   அழகுடா!  உன் முகத்தில்  காந்த புன்னகை. அரிசி அரிசியாக வெண்ணிற பற்கள்,  கருத்த, சுருண்ட  குழல்கள் போன்ற  சிகை, முகத்தில் வந்து விழ, அதன் கருமையில்  உன் கருத்த முகம் மறைந்து போகிறது.   உன் உள்ளங்கால்கள் செந்தாமரை இதழ்கள் போல் நீ தவழும்போது செக்கச்  சிவந்து தெரிகிறதே. ஆஹா இந்த திருவடிகளை தரிசிக்க  எத்தனை யுகங்களாக  பல ரிஷிகள்,முனிவர்கள் தவம் கிடந்தவர்கள்.   உன் கையில் தான் எத்தனை வளையல்கள், காப்புகள் , நீ கையை ஊன்றி  தவழும்போது எல்லா வளையல்களும் உன் உள்ளங்கை வரை இறங்கி ஆடி அசைந்து வித வித  சப்தம் எழுப்புகிறது.   சூல்கொண்ட  பெண்கள்  கையில் கூட  இத்தனை  வளையல்கள் வளைகாப்பு அன்று அணிந்திருக்க மாட்டார்கள்.  கிருஷ்ணா,  பலராமா , நீங்கள் இருவருமே  காண்போர் மனதை  கொள்ளை கொள்கிறீர்கள்''. 

अनुसरति जनौघे कौतुकव्याकुलाक्षे
किमपि कृतनिनादं व्याहसन्तौ द्रवन्तौ ।
वलितवदनपद्मं पृष्ठतो दत्तदृष्टी
किमिव न विदधाथे कौतुकं वासुदेव ॥३॥

anusarati janaughe kautuka vyaakulaakshe
kimapi kR^ita ninaadaM vyaahasantau dravantau |
valita vadanapadmaM pR^iShThatO dattadR^iShTii
kimiva na vidadhaathe kautukaM vaasudeva ||3

அனுஸரதி ஜனௌகே⁴ கௌதுகவ்யாகுலாக்ஷே
கிமபி க்ருதனினாத³ம் வ்யாஹஸந்தௌ த்³ரவந்தௌ |
வலிதவத³னபத்³மம் ப்ருஷ்ட²தோ த³த்தத்³ருஷ்டீ
கிமிவ ந வித³தா⁴தே² கௌதுகம் வாஸுதே³வ || 45-3 ||

குருவாயூரப்பா, நீ கிருஷ்ணனாக  தவழும்போது, உன்னை  ஆசையோடு   பிடித்து, வாரி  தூக்கி  அணைத்துக்  கொள்ள  வரும்  கோபியர்களிடமிருந்து  நீங்கள் இருவரும்  கலகலவென்று என்னென்னவோ சப்தம் செய்து  கொண்டு  அவர்கள் கைகளில் அகப்படாமல்   ஓடி தப்பி நகர்ந்து அங்கிருந்து தலையைத்  திருப்பி  அவர்கள்  முகத்தை பார்க்கிறீர்கள்.  இந்த அழகை எப்படி வர்ணிப்பது? வசுதேவன் மகன் வாசுதேவா,  எவ்வளவு சந்தோஷம்  தருகிறாயடா  நீ  அனைவருக் கும்!

द्रुतगतिषु पतन्तावुत्थितौ लिप्तपङ्कौ
दिवि मुनिभिरपङ्कै: सस्मितं वन्द्यमानौ ।
द्रुतमथ जननीभ्यां सानुकम्पं गृहीतौ
मुहुरपि परिरब्धौ द्राग्युवां चुम्बितौ च ॥४॥

drutagatiShu patantau utthitau liptapankau
divi munibhirapankaiH sasmitaM vandyamaanau |
drutamatha jananiibhyaaM saanukampaM gR^ihiitau
muhurapi parirabdhau draagyuvaaM chumbitau cha || 4

த்³ருதக³திஷு பதந்தாவுத்தி²தௌ லிப்தபங்கௌ
தி³வி முனிபி⁴ரபங்கை꞉ ஸஸ்மிதம் வந்த்³யமானௌ |
த்³ருதமத² ஜனநீப்⁴யாம் ஸானுகம்பம் க்³ருஹீதௌ
முஹுரபி பரிரப்³தௌ⁴ த்³ராக்³யுவாம் சும்பி³தௌ ச || 45-4 ||

அடாடா, நீ  வேக வேகமாக  நாலு கால் பாய்ச்சலில் ஓடும்போது  சில சமயம் நிலை தவறி தடுமாறி  தொப்பென்று ஒரு பக்கம் சாய்ந்து விழுகிறாயே , எப்படி உடனே உன்னை  சமாளித்துக்கொண்டு  எழுந்து உடலில் புழுதியோடு மீண்டும் மண்ணில் தவழ்ந்து ஓடுகிறாய் . யோகிகள், மஹான்கள், ரிஷிகள், முனிவர்கள், எல்லோரும் உன்னை வணங்குகிறார்கள்,  உடலில் புழுதி இல்லாவிட்டாலும் உள்ளத்தில் புழுதி இல்லாதிருக்க  உன்னை வேண்டுகிறார்களே .  நீ சிரிக்கிறாய் கண்ணா!  அடிக்கொருதடவை, நொடிக்கொரு தடவை  உங்கள் தாய்கள்  ரோஹிணி , யசோதை இருவரும் ஓடி வந்து விடுகிறார்களே உங்களைத்  தூக்கி இடுப்பில் வைத்து கொஞ்சி முத்தமிட.

स्नुतकुचभरमङ्के धारयन्ती भवन्तं
तरलमति यशोदा स्तन्यदा धन्यधन्या ।
कपटपशुप मध्ये मुग्धहासाङ्कुरं ते
दशनमुकुलहृद्यं वीक्ष्य वक्त्रं जहर्ष ॥५॥

snuta kuchabharamanke dhaarayantii bhavantaM
taralamati yashOdaa stanyadaa dhanyadhanyaa |
kapaTapashupa madhye mugdhahaasaankuraM te
dashanamukula hR^idyaM viikshya vaktraM jaharSha ||5

ஸ்னுதகுசப⁴ரமங்கே தா⁴ரயந்தீ ப⁴வந்தம்
தரலமதி யஶோதா³ ஸ்தன்யதா³ த⁴ன்யத⁴ன்யா |
கபடபஶுப மத்⁴யே முக்³த⁴ஹாஸாங்குரம் தே
த³ஶனமுகுலஹ்ருத்³யம் வீக்ஷ்ய வக்த்ரம் ஜஹர்ஷ || 45-5 ||

மார்பில் பால் சேர்ந்து கனக்க , உன் அன்னை யசோதை உன்னை நாடி ஓடி வருகிறாள் உனக்கு பாலூட்ட. ஆசையோடு உன்னை மடியில் இட்டுக்கொண்டு  அந்த பாக்கியசாலி யசோதை சந்தோஷத்தோடு எல்லையற்ற  மகிழ்ச்சியோடு  உன்னை அணைத்துக்  கொள்கிறாள்.  நீயும் பொல்லாதவன்  வெடுக் வெடுக் என்று பால் குடிக்கும்போதே அவளை சுகமாக கடிப்பவன். யாதவ குல திலகா. உன் அரிசிப்பல்லைக்  காண்பதில் தான் அவளுக்கு எவ்வளவு ஆனந்தம். 

तदनुचरणचारी दारकैस्साकमारा-
न्निलयततिषु खेलन् बालचापल्यशाली ।
भवनशुकविडालान् वत्सकांश्चानुधावन्
कथमपि कृतहासैर्गोपकैर्वारितोऽभू: ॥६॥

tadanu charaNachaarii daarakaiH saakamaaraat
nilayatatiShu khelan baalachaapalyashaalii |
bhavana shuka biDaalaan vatsakaamshchaanudhaavan
kathamapi kR^itahaasaiH gOpakaiH vaaritO(a)bhuuH ||6

தத³னு சரணசாரீ தா³ரகை꞉ ஸாகமாரா-
ந்னிலயததிஷு கே²லன் பா³லசாபல்யஶாலீ |
ப⁴வனஶுகபி³டா³லான் வத்ஸகாம்ஶ்சானுதா⁴வன்
கத²மபி க்ருதஹாஸைர்கோ³பகைர்வாரிதோ(அ)பூ⁴꞉ || 45-6 ||

மூன்றடி மண் கேட்டு நடந்த நீ  முதன் முதலாக நடக்க ஆரம்பித்து விட்டாய் கிருஷ்ணா.  அசுரர்களை ஓட ஓட  விரட்டிக்  கொன்ற நீ  முதல்  முதலாக ஓடவும் ஆரம்பித்துவிட்டாய்.  அண்டை அசல் பையன் களோடு கால் முளைத்து விளையாட ஆரம்பித்துவிட்டாய்.  ஆஹா  இனி கோகுலத்தையே உங்கள் ஆட்டம்  பாட்டத்தில்  புரட்டிப்போடப்  போகிறீர்கள். எண்ணற்ற குறும்புகள் இனி மலரப்போகிறது.  கிளிகளை துரத்தப்போகிறீர்கள்.  பூனைகள்  கன்றுக்குட்டிகள் இனி உங்கள் வசம் தான். கோபர்கள் சிரித்துக்கொண்டே  உங்களை தடுத்து நிறுத்த முயற்சித்து தோல்வியைச் சந்திக்கிறார்கள். 

हलधरसहितस्त्वं यत्र यत्रोपयातो
विवशपतितनेत्रास्तत्र तत्रैव गोप्य: ।
विगलितगृहकृत्या विस्मृतापत्यभृत्या
मुरहर मुहुरत्यन्ताकुला नित्यमासन् ॥७॥

haladhara sahitastvaM yatra yatrOpayaatO
vivasha patita netraaH tatra tatraiva gOpyaH |
vigalita gR^ihakR^ityaa vismR^itaapatya bhR^ityaaH
murahara muhuratyantaakulaa nityamaasan || 7

ஹலத⁴ரஸஹிதஸ்த்வம் யத்ர யத்ரோபயாதோ
விவஶபதிதனேத்ராஸ்தத்ர தத்ரைவ கோ³ப்ய꞉ |
விக³லிதக்³ருஹக்ருத்யா விஸ்ம்ருதாபத்யப்⁴ருத்யா
முரஹர முஹுரத்யந்தாகுலா நித்யமாஸன் || 45-7 ||

முரனைக் கொன்ற முராரி,  என்ன மாயமடா  செய்துவிட்டாய் நீ.   நீயும் பலராமனும் எங்கு சென்றாலும் ஆயிரமாயிரம்  கோபியரின் கண்கள் உங்களையே விடாமல்  தொடர்கிறதே.   அவர்கள் கவனம் பூரா உங்கள் மேலேயே  இருக்கிறதே! அது எப்படி?  வீடு, கணவமார்கள்,  வீட்டு வேலைகள், குழந்தைகள், வீட்டில் மற்றவர்கள், பெற்றவர்கள்  எல்லோரையும் , எல்லாவற்றையும் எப்படி மறக்க முடிகிறது? வேறு வேலை எதுவும் இல்லாதது போல் உங்களையே நிழல் போல் பின் தொடர்கிறார் களே !

प्रतिनवनवनीतं गोपिकादत्तमिच्छन्
कलपदमुपगायन् कोमलं क्वापि नृत्यन् ।
सदययुवतिलोकैरर्पितं सर्पिरश्नन्
क्वचन नवविपक्वं दुग्धमप्यापिबस्त्वम् ॥८॥

pratinava navaniitaM gOpikaadattamichChan
kalapadamupagaayan kOmalaM kvaapi nR^ityan |
sadayayuvati lOkairarpitaM sarpirashnan
kvachana navavipakvaM dugdhamapyaapibastvam || 8

ப்ரதினவனவனீதம் கோ³பிகாத³த்தமிச்ச²ன்
கலபத³முபகா³யன் கோமலம் க்வாபி ந்ருத்யன் |
ஸத³யயுவதிலோகைரர்பிதம் ஸர்பிரஶ்னந்
க்வசன நவவிபக்வம் து³க்³த⁴மப்யாபிப³ஸ்த்வம் || 45-8 ||

குருவாயூரப்பா,  கிருஷ்ணனாக வந்த நீ  ஜாலக்காரன்.  உனக்கு வெண்ணெய்  பிடித்துவிட்டது. எவ்வளவு கொடுத்தாலும் போதவில்லை.  அவர்களிடமிருந்து பெறுவதற்கு நீ எவ்வளவு வேஷம் ஆட்டம் போடுகிறாய். பாடுகிறாய், ஆடுகிறாய். உள்ளம் கொள்ளை போகுதே.  பாலைக்  காய்ச்சி கொண்டுவந்து தருகிறார்கள், ஆனந்தமாக குடிக்கிறாய். 

मम खलु बलिगेहे याचनं जातमास्ता-
मिह पुनरबलानामग्रतो नैव कुर्वे ।
इति विहितमति: किं देव सन्त्यज्य याच्ञां
दधिघृतमहरस्त्वं चारुणा चोरणेन ॥९॥

mama khalu baligehe yaachanaM jaatamaastaam
iha punarabalaanaamagratO naiva kurve |
iti vihitamatiH kiM deva santyajya yaach~naaM
dadhighR^itamaharastvaM chaaruNaa chOraNena ||9

மம க²லு ப³லிகே³ஹே யாசனம் ஜாதமாஸ்தா-
மிஹ புனரப³லானாமக்³ரதோ நைவ குர்வே |
இதி விஹிதமதி꞉ கிம் தே³வ ஸந்த்யஜ்ய யாச்ஞாம்
த³தி⁴க்⁴ருதமஹரஸ்த்வம் சாருணா சோரணேன || 45-9 ||

என்னப்பா,  ஒருவேளை  நீ இப்படி சிந்தித்தாயோ?   ''நான்  மஹாபலியிடம் யாசகம் கேட்கவேண்டிய  சூழ்நிலை,  நிர்பந்தமாகிவிட்டது.  ஆனால்  இந்த கோபியரிடம் போய்  கை  நீட்டி நான் யாசிக்க போவதில்லை. அவர்களாக தரட்டும், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது வேறு வழி, எனக்கு வேண்டியதை அடைய ,    உன் வெண்ணெயதிருடும் வித்தைகள் மனதில் உருவாகி விட்டதா?

तव दधिघृतमोषे घोषयोषाजनाना-
मभजत हृदि रोषो नावकाशं न शोक: ।
हृदयमपि मुषित्वा हर्षसिन्धौ न्यधास्त्वं
स मम शमय रोगान् वातगेहाधिनाथ ॥१०॥

tava dadhighR^itamOShe ghOShayOShaajanaanaam
abhajata hR^idi rOShO naavakaashaM na shOkaH |
hR^idayamapi muShitvaa harShasindhau nyadhaastvaM
sa mama shamaya rOgaan vaatagehaadhinaatha || 10

தவ த³தி⁴க்⁴ருதமோஷே கோ⁴ஷயோஷாஜனானா-
மப⁴ஜத ஹ்ருதி³ ரோஷோ நாவகாஶம் ந ஶோக꞉ |
ஹ்ருத³யமபி முஷித்வா ஹர்ஷஸிந்தௌ⁴ ந்யதா⁴ஸ்த்வம்
ஸ மம ஶமய ரோகா³ன்வாதகே³ஹாதி⁴னாத² || 45-10 ||

எண்டே குருவாயூரப்பா,  உண்மையில்  வ்ரஜ பூமி  மக்கள்  உன் வெண்ணை திருட்டை  பெரிதாக  லக்ஷியம் செய்யவில்லை.அமோகமாக இருக்கிறது பாலும் வெண்ணையும்.  அதனால் எவரும் சோகமோ துக்கமோ அடையவில்லை. நீ அவர்கள் மனதையே, எண்ணத்தையே திருடிவிட்டாயே  ஆனந்தக் கடலில் மூழ்க வைத்தாயே , என்னையும்  நோய் நீங்கி மகிழ வைக்க உன்னால் முடியுமே.

தொடரும்  

sivan jaykay

unread,
Sep 6, 2021, 8:40:25 PM9/6/21
to amrith...@googlegroups.com
உள்ளது நாற்பது --   நங்கநல்லூர்   J K   SIVAN 

''அஞ்ஞானமும் ஸ்வரூப பக்தியும்''

''உருவந்தா னாயி னுலகுபர மற்றா
முருவந்தா னன்றே லுவற்றி – னுருவத்தைக்
கண்னுறுதல் யாவனெவன் கண்ணலாற் காட்சியுண்டோ
கண்ணதுதா னந்தமிலாக் கண்ணாமே – யெண்ணில் 4''


ஒன்று நன்றாக புரிந்து கொள்வோம்.  ''நான் '' என்று உள்ளே இருப்பது இந்த தேகம் தான் என்றால் அது சதை, தசை, எலும்பு மாமிசத்தால் ஆனது  என்றால்  அதை மனதில் உருவகப்படுத்தி நாம் காணும்  ஈஸ்வரன்,  உலகம் எல்லாமே உருவத்தால் அப்படி ஆனது மாதிரி  தோன்றும்.  

அப்படி  இல்லை, '' நான்''  உருவமற்றது என்றால்  உலகம், ஈஸ்வரன்,   எதையுமே  உருவத்தோடு காணமுடியாது.  கிடையாது.   இருப்பதாக கண்டால் அது  வெறும்  மாய தோற்றம்.   உண்மையை  அறிய வேண்டுமானால் கோடி சூர்ய  பிரகாசமான  ஆத்ம ஒளி வேண்டும்.  ஞானக் கண் இல்லாமல் அதை காணமுடியாது.  ஈஸ்வரன்,  அவன் படைத்த உலகம்,  ஜீவன் , எல்லாமே  திருஷ்டியில் பட  ஒளி படைத்த கண் வேண்டும்.  காண்கின்ற அந்த கண் இன்றி உண்மைப்  பொருளை காண முடியாது.

கண்  ஒரு கருவி. அது பார்க்கிறது என்றால் அது மனத்தின் இயக்கத்தால்,  செயலால் தான் முடியும்.  கண், காது, புலன்களை இயக்குவது மனம், புத்தி. 

ஒரு தடவை  ஸ்ரீ ரமணாஸ்ரமத்துக்குச்  சில முஸ்லிம்கள் வந்தார்கள்.  அவர்கள்  ஸ்ரீ ரமணரிடம்
பேசியதன்  குறிப்பு  இது தான்: 

''ஐயா,  நீங்கள் சொல்லும் ஈஸ்வரனுக்கு உருவம் உண்டா?''
ரமணர்: '' இருக்கு என்று  யார் சொன்னது?''
''அப்படியென்றால் உருவ  ஆராதனை தப்பில்லையா?'
''அதிருக்கட்டும்.  கேள்வி கேட்ட உங்களுக்கு உருவம் உண்டா?''
''ஓ, உண்டே, இதோ உங்கள் முன்னால்  நிற்கிறேன்''
''இந்த கரிய, உருக்கொண்ட,  ஐந்தரை அடி  உயர  தாடி மீசை ஆசாமி தான் நீங்களா?"'
''ஆமாம்''
''நீங்கள் அசந்து தூங்கும்போதும்  இந்த உருவம் தானா?''
''தூக்கத்தில் தெரியாது. தூங்கி எழுந்ததும் நான் இந்த உருவம் தான்  என்று தெரியும்''
''இந்த சரீரம் ஒருநாள்  இறந்து போகும் இல்லையா.  அப்படி இறந்த பின்னாலும் இதே உருவம் தான்  நீங்களோ''
''ஆமாம் என்று தான் சொல்வேன்''
''உடல் இறந்தால், மற்றவர்கள் தூக்கிச் செல்வார்களே , அப்போது ''நோ நோ''   அதெல்லாம் இல்லை. இது என் வீடு, என் மக்கள், என் சொத்து, நான் இங்கேயே தான் இருப்பேன். எடுத்துச் சென்று எல்லாம் புதைக்க விடமாட்டேன்'' என்று இந்த உருவம் தான் சொல்லுமோ ?''
அந்த முஸ்லிமுக்கு பொட்டில் அறைந்தது போல் இருந்தது இந்த கேள்வி.
''சாமி  நீங்கள் சொல்வது புரிகிறது.  நான் இந்த தாடி மீசை ஆசாமி இல்லை. இந்த தேகம் இல்லை.  இதற்குள் இருப்பவன். உள்ளே இருக்கும் உயிர் தான் நான் ''
''ஐயா  இதுவரை  நீங்கள்  இந்த தேகம் தான் நீங்கள் என்று நம்பிக் கொண்டிருந்தீர்கள், இது தான் அடிப்படை அஞ்ஞானம் என்பது. இது தான் தாய் அஞ்ஞானம். இதிலிருந்து தான் மற்றதெல்லாம் குட்டி குட்டியாக பிறக்கிறது.  இந்த மூல  ''அவித்யா '' நாசமாகும், அழியும் வரை,  அஞ்ஞான பரம்பரை தொடர்ந்து கொண்டே இருக்கும். அவித்யா அழிந்தால்  அஞ்ஞானம் மறைந்து ஞானம் பிறக்கும்''

தனது உருவத்தையும், மற்ற உருவங்களையும்  பற்றி எப்போதும் எண்ணிக் கொண்டிருக்கும் போது  மனதை ஈஸ்ரன் மேல் செலுத்த முயன்று, அவனது நாமத்தில் நிறுத்தி, ஒருமுகப்படுத்தினால்  ஸ்வரூப பக்தி சித்திக்கும்.  சித்தம் சுத்தமானால்  தனக்கு உருவமும்  தேகமும் இல்லை என்று தெளிவாகும். 








sivan jaykay

unread,
Sep 6, 2021, 8:40:25 PM9/6/21
to amrith...@googlegroups.com

எனது ஆச்சார்யர்களில் சிலர் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

இன்று ஆசிரியர் தினம். வருஷத்தில் ஒருநாள் மட்டும் நினைப்பதற்கு இல்லை ஆசிரியர்கள்.  அப்பா  அம்மா சோறு போட்டு வளர்த்து படிக்க வைத்தார்கள்.  பள்ளிக்கு படிக்க சென்றவர்கள் அத்தனைபேரும்  படிக்கவில்லை. முன்னேறவில்லை.  எதையும் எதிர்பார்க்காமல் குழந்தைகளுக்கு கல்வி அறிவு புகட்டவேண்டும் என்பதே தாகமாக  உழைத்த  குறைந்த சம்பள  ஏழை வாத்தியார்கள் டீச்சர்கள் பலபேர் என் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். மாதா பிதா குரு  தெய்வம்  என்று பெற்றோருக்கு அடுத்தபடி  பூஜிக்கத்தகுந்தவர்கள்  ஆசிரியர்கள்.  எழுத்தறிவித்தவன் இறைவன் என்பது ரொம்ப ரொம்ப  வாஸ்தவம்.

முதன் முதலில் எனக்கு  ஸ்லேட் எனும் பலகையில் பலபத்தால்  (எழுதும் மாவு குச்சிக்கு இப்படி ஒரு பெயர். இதன் ரிஷி மூலம், நதி மூலம் இன்னும் எனக்கு தெரியவில்லை)நான் எழுத கற்றுக் கொண்டது முட்டை வடிவ கோளங்கள் .  பூஜ்யத்தை அறிந்தவன் ப்ராஞன்  என்பது அப்புறம் பின்னால் தெரிந்துகொண்டது. என் கையை பொறுமையாக பிடித்து ஐந்து வயதில் எனக்கு  அக்ஷராப்யாசம் பண்ணி வைத்தது காவேரியம்மா என்கிற டீச்சர்.   வடபழனி  பாண்டுரங்கன் கோவில் அருகே  ஒரு கார்பொரேஷன் கூரைக்கட்டு  ஸ்கூல். தரையில் மண்ணில் தான் உட்கார வேண்டும். முக்கால் வாசி நேரம் காற்றோட்டமாக   மரத்தடியில் தான் படிப்பே ஆரம்பித்தது. 

இப்போது மாதிரி பேபி க்ளாஸ், கிண்டர் கார்ட்டன், கிட் kid  ஸ்கூல்ஸ்  கிடையாது. பால் குடித்த வாயோடு குழந்தைகள் பாடம் படிக்க வராது. ரெண்டரை வயது தாண்டாத சிசுக்களை அடைத்து வைக்கும் வழக்கம் இல்லை. தூங்க அங்கே குழந்தைகள் வருவதில்லை. ஐந்து வயதானபிறகு தான் பள்ளியிலே சேர்க்கும் வழக்கம். தமிழில் தான் பாடம். 

ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு  கிட்டதட்ட  10-11 வயதில் தான் ABCD கற்றுக்கொடுத்தார்கள்.  வீட்டில் ஆங்கிலம் பேசும் வழக்கமில்லை. ஆங்கில பாட்டுகளோ படங்களோ பரிச்சயம் கிடையாது.  நீளமாக  அப்பா யாருடனோ ஆங்கிலத்தில் பேசுவதை வாய் பிளந்து அர்த்தம் புரியாமல் கேட்ட அனுபவம் உண்டு. 

ஒரு நிழல் வடிவத்தில் காவேரியம்மாள் நினைவில் தோன்றுகிறாள். பச்சை சாயம் போன கிழிந்த புடவை. சிகப்பு தொளதொள ரவிக்கை.  காலில் செருப்பு கிடையாது.  நெற்றியில் பெரிய  காலணா குங்குமம். (காலணா என்பது  அரை அங்குல விட்டம் கொண்ட வடிவம் என்று புரிந்துகொள்ளவும்) அது தான் குறைந்த பக்ஷ காசு. நாணயம். அதற்கு   மிட்டாய், அரை  நெல்லிக்காய், கமர்கட், கலர் கலர்  ரவுண்டு மிட்டாய், வேர்க்கடலை,  பொரி  எது வேண்டுமானாலும்  வாங்க முடிந்தது.அதன் மதிப்பு  64 காலணாக்கள்  ஒரு ரூபாய். அதற்கும்  சின்ன காசு  அப்போது பழக்கத்தில் இருந்தது. அதற்கு தம்பிடி என்று பெயர். அது உருவத்தில் வாமனன்.  மூன்று தம்பிடி ஒரு காலணா. என்னிடம் வெகுகாலம் தம்பிடி காலணாக்களிருந்து  எப்படியோ காணாமல் போய்விட்டது?  

 காவேரியம்மாள் கண்களில் ஏதோ எனக்கு தெரியாத  ஒரு சோகம் புரையோடியிருத்தது எனக்கு அந்த சின்ன வயதில் எதுவும்  தெரியவில்லை. என் அம்மாவிடம் வந்து பேசுவாள். தனது சோகக் கதைகள் ஏதெல்லாமோ சொல்வாள். அம்மா ஆவலுடன் ஆறுதலாக பேசி அவளுக்கு சாப்பிட  ஏதாவது கொடுப்பாள். 

அடுத்தது நினைவில் இருப்பது  வரதராஜுலு நாய்டு. சைதா  பேட்டையிலிருந்து சின்ன குட்டி வண்டியில் ஒரு காளைகன்னுக்குட்டி  அவரை இழுத்து வரும். பாவம் அவருக்கு  யானைக்கல்கள்.  நடக்க ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டே வருவார்.  வேஷ்டியால்  கால்களை மூட முடியாது அளவு பருத்த கால்கள்.    முழு சட்டைக்கு மேல் ஒரு மேல் துண்டு. எப்போதும்  கடுகடு என்று இருப்பார். மாணவர்களை  கெட்டவார்த்தையில் திட்டுவார். கொம்பால் அடிப்பார்.  பாதி நேரம் அவருக்கு கால் வலி,உபாதையில் அவஸ்தைப்படவே நேரம் சரியாக இருந்தது. நான் அவரிடம் என்ன கற்றுக்  கொண்டேன்  இன்று இன்னமும் யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை.  

சரோஜினி டீச்சர் ஒல்லியாக கீச்சுக்குரலில் பேசுவாள். எல்லோரும் அவளை குரங்கு மூஞ்சி டீச்சேர் என்பார்கள். பாவம்,  எலும்பும் தோலுமாக  தாடை ஒட்டி முன்னால் பற்கள் நீண்டு சிரிக்காமல் இருப்பாள். ரொம்ப ஸ்ட்ரிக்ட் டீச்சர். பாட்டு பாடுவாள். கீச் கீச் என்று குரல் இருக்கும். அவள் அதிகம் பழகியது மாணவிகளிடம் தான். ஏனோ மாணவர்களிடம் அதிக சலுகை இல்லை. பிரம்பு அடிக்கடி   எங்களிடம்  பேசும்.  ''பச்சைமலை  பவழ மலை எங்கள் மலை அம்மே''  அவளிடம் தான் கற்றுக்கொண்டேன். நாங்கள் பின்னால்  நின்று கை தட்டி குதிக்கவேண்டும். மாணவிகள்  பச்சை பாவாடைகள், மேலாக்கு போட்டுக்கொண்டு சின்ன சின்ன கூடைக்குள் பச்சை துண்டு துணிகள் போட்டு டான்ஸ், ரௌண்டாக நின்று   ஆடி பாடி  கோலாட்டம்  போடுவார்கள்.  ஒவ்வொருவருஷமும்  சுதந்திர தினம்,  குடியரசு தினம் வருவதற்கு ஒரு மாதம் முன்பே சரோஜினி டீச்சர்  நிகழ்ச்சிகள்  ஆரம்பித்து விடும். 

 சூளைமேடு கார்பொரேஷன் ஸ்கூல்  கங்கை அம்மன் கோவில்  பக்கம்  சௌராஷ்டிரநகர்  அருகே இருந்தது.  பெரிய  பழைய ஷெட் ஒன்று.  பாதி கூரை. நிறைய  மரங்கள் . அநேகமாக   வேப்ப மரமும்  ,தூங்குமூஞ்சி மரங்களும்  தான் இருக்கும். அதில் ஒரு கிளையில் தான்  தண்டவாள துண்டு தொங்கும். அப்பாதுரை என்பவர் மணி அடிப்பார்.    மீதி நேரம்  மாட்டு சாணம் கொண்டு வந்து பள்ளி வெளிப்புற சுவர்களில் வறட்டி தட்டி வியாபாரம்.   நான்கு ஐந்தாம் வகுப்பு களில் ஆசிரியர்  தலைமை உபாத்தியாயர் எல்லாமே  சுப்ரமணிய ஐயர் . ஒடிசலான குள்ள ஐந்தடி பொம்மை. பாதி  வழுக்கை மண்டை காது பக்கம் சில பாலைவன சோலையை இழுத்து பின்புறம் முடிச்சு போட்ட  குடுமி. அழுக்கு கரை வேஷ்டியில் பஞ்சகச்சம்.  நெற்றி நிறைய  விபூதி குங்குமம். கதர் ஜிப்பா. பூர்வாஸ்ரமத்தில் வெள்ளையாக இருந்த வேஷ்டி ஜிப்பா.  சரஸிஜனாப சோதரி என்ற ஒரு அடியை அடிக்கடி பாடுவார்.  யாரையும் அடிக்கும் வழக்கம் இல்லை. சிரிப்பார். பற்கள் கிடையாது. ஒரு பழைய  துருப்பிடித்த  சைக்கிள் வாசலில் மரத்தில் சாத்தி வைத்திருப்பார். அதற்கு பூட்டு சாவி கிடையாது. எவரும் அதைத்  திரும்பி கூட பார்ப்பதில்லை. ஊரில் எங்கே கல்யாணம் நடந்தாலும் அழைக்காமலேயே சென்று சாப்பிடுவார். கடமை முடிந்ததும் உடனே திரும்புபவர். ஆங்கிலம் ரொம்ப தெரியாது. என் பிறந்த நாளை மாற்றி அமைத்த புண்யவான். அவரால் இன்றும் எனக்கு மூன்று  பிறந்த நாட்கள். பிறக்காத நாளில் உலகமுழுதும் நண்பர்களின் வாழ்த்துக்கள். எல்லா ஆவணங்களிலும்  அந்த தப்பான பிறந்த தேதி.  மறையும் மட்டும் அதோடு எனக்கு உறவு அவசியமாகிவிட்டது..

ஆறாம் வகுப்பு நுங்கம்பாக்கம் ஏரி பகுதி என்று சொல்வார்கள். நான் ஏரி  அங்கே பார்த்ததில்லை.  நுங்கம்பாக்கம் செல்வதற்கு  கோடம்பாக்கம் தெரு  சந்திக்கும் முக்கில்  இருந்தது அதற்கு முன்பாக இப்போது சுதந்திர தின  பார்க்  பெரிசாக இருக்கிறது.  நாகேஸ்வர ராவ் கட்டிடம் என்று  கட்டிடத்தின் முன்பாக பெரிதாக ஆங்கிலத்தில் எழுதி இருந்தது ஞாபகம் இருக்கிறது.  மூன்று வருஷம் அங்கே படித்தேன். ஆறாவது ஏழாவது எட்டாவது வரை. என் தந்தையார்  ஸ்ரீமான்   ஜே. கிருஷ்ணய்யர்  அங்கே  பெரிய வகுப்புகளுக்கு ஆங்கிலம், சரித்ர ஆசிரியர். பள்ளியின் உப தலைமை உபாத்தியாயர்.  தமிழ்  ஆங்கிலம் சமஸ்க்ரிதம் மூன்றிலும்  புலி. சரளமான நடையில் எழுதுவார் பேசுவார். அவருடைய  மாணவர்களில் சிலர் நமது  ஸ்ரீ கிருஷ்ணார்ப்பண  டிரஸ்ட் முகநூல் குழு உறுப்பினர்கள் என்று அறிந்து அவர்கள் அவரது வகுப்புகளில்  அடைந்த மகிழ்ச்சியை அறிந்து  வியந்தேன். நான் என் தந்தையார்  நடத்திய வகுப்புகளில் படிக்க பாக்யம் செய்யவில்லை.

ஆறாம்வகுப்பில்  என்னைக்  கவர்ந்தவர்  ஸ்ரீ  P S  ராகவன். வகுப்பு ஆசிரியர், பஞ்சகச்சம், துல்லியமான வெள்ளை அரைக்கை சட்டை . நெற்றியில் பட்டை விபூதி. தினமும் முகக்ஷவரம் செய்த பளிச் முகம்.  கணீரென்று குரலில் ஆங்கிலம் கற்றுத்தந்தவர். நான் மறவாத  வணங்கும் என் முதல் ஆங்கில ஆசான்.

நாராயண ஐயர்  பற்றி நிறைய எழுதி இருக்கிறேன். கணக்கு வாத்யார். முதுகில் அடிக்க ரொம்ப பிடிக்கும். தலையில் மீதி நேரம் கொட்டுவார். அவரையும்  அவர்  நடத்திய கணக்கு பாடங்களையும்  வகுப்புகளையும்  நாங்கள் விரும்பியதில்லை.    விஜயராகவன்  எப்போதும் ஒரே நிற  கருப்பு கோட்  அணிந்த சயின்ஸ் வாத்யார். பாதிநேரம் நாற்காலியில் தூங்கி வழிவார். பார்ப்பதற்கு  சினிமா நடிகர் நாகையா மாதிரி இருப்பார். 

இன்னும் எத்தனையோ ஆச்சார்யர்கள் ஆசிரியர்கள் என் வாழ்க்கையில் உண்டு. ஒரே ஒரு வாத்யார், ஆச்ச்சார்யனை  இன்றும் கெட்டியாக பிடித்து வணங்கி கற்றுக்கொண்டு வருகிறேன். வேறு யாருமில்லை, கீதாச்சார்யன் கிருஷ்ண வாத்யார் தான்.


 

sivan jaykay

unread,
Sep 6, 2021, 8:40:35 PM9/6/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீமந்  நாராயணீயம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN ---
46வது  தசகம் -

46.  அரியாதவன் வாயில் மண்ணு 

''ஹரியும் சிவன்  ஒண்ணு  அறியாதவன் வாயில் மண்ணு''  என்ற சொல் கல்லைக்  கண்டால் நாயை க் காணோம்  என்கிற மாதிரி தப்பான அர்த்தத்தை மக்களிடையே பரப்பும் ஒரு வாக்கியம். அறியாதவன் வாயில் மண்ணு என்பது  சிவனும் விஷ்ணுவும்  ஒன்று தான் என்று தெரியாதவனுக்கு வாயில் மண்ணு தான் விழும் சாப்பிட  என்கிற அர்த்தமே இல்லை.   

யசோதை இடம் சென்று கிருஷ்ணன் மண் தின்றான் என்று அவன் நண்பர்கள் கோள்  சொல்ல குழந்தைக்கு  மண்ணைத்தின்றதால்  நோய் வருமோ என்று பயந்து கவலையில்   ''கிருஷ்ணா, வாயைத்  திற''  என்கிறாள். கண்ணனோ,  நான் மண்ணையே திங்க வில்லை என்று சொல்கிறான்.   அவன் கன்னத்தில் மண் தூள்கள் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அவனைக்  கட்டாயப்படுத்தி தானே  அவன் வாயைத்திறக்கிறாள். 
யசோதை கண்ணன் வாயில் மண்ணைப் பார்த்தாளா?  ஆமாம், மண்ணை மட்டுமல்ல  விண்ணையும் பார்த்தாள் .  மயங்கினாள். விழுந்தாள்.   அரி என்கிற யாதவ குமரன் தனது  வாயில்  மண்ணாகிய  இந்த பூமி, ஆகாசம், மேலுலகம் கீழுலகம் சகலத்தையும் தான் உள்ளடக்கியவன் என்பதை வாயில் காட்சியாக  தெரிவித்தான், தெளிவித்தான்  என்பது தான் அரி யாதவன் வாயில் மண்  என்ற சொல். 

अयि देव पुरा किल त्वयि स्वयमुत्तानशये स्तनन्धये ।
परिजृम्भणतो व्यपावृते वदने विश्वमचष्ट वल्लवी ॥१॥

ayi deva puraa kila tvayi svayamuttaanashaye stanandhaye |
parijR^imbhaNatO vyapaavR^ite vadane vishvamachaShTa vallavii ||

அயி தே³வ புரா கில த்வயி ஸ்வயமுத்தானஶயே ஸ்தனந்த⁴யே |
பரிஜ்ரும்ப⁴ணதோ வ்யபாவ்ருதே வத³னே விஶ்வமசஷ்ட வல்லவீ || 46-1 ||

''என்னப்பா குருவாயூரா, நீ  சின்ன குழந்தையாக  அம்மா யசோதை மடியில் படுத்து அவளிடம் பால்  குடித்தவன்,  ஒருநாள்  உன் வாயைத்திறந்தாய்  அதில் ப்ரபஞ்சத்தைப்பார்த்தாள்  உன் தாய். அது பற்றி சொல்கிறேன் கேள். கொடுத்து வைத்த  கோபி அவள்.

पुनरप्यथ बालकै: समं त्वयि लीलानिरते जगत्पते ।
फलसञ्चयवञ्चनक्रुधा तव मृद्भोजनमूचुरर्भका: ॥२॥

punarapyatha baalakaiH samaM tvayi liilaanirate jagatpate |
phalasa~nchayava~nchanakrudhaa tava mR^idbhOjanamuuchurarbhakaaH || 2

புனரப்யத² பா³லகை꞉ ஸமம் த்வயி லீலானிரதே ஜக³த்பதே |
ப²லஸஞ்சயவஞ்சனக்ருதா⁴ தவ ம்ருத்³போ⁴ஜனமூசுரர்ப⁴கா꞉ || 46-2 ||

ப்ரபஞ்ச  காரணனே, ஒருநாள்  உன் நண்பர்களோடு நீ கோகுலத்தில் விளையாடிக் கொண்டிருந் தாய், வழக்கம்போல் அவர்களை ஏமாற்றினாய், நாவல் பழங்களை அவர்கள் மரத்தில் ஏறி உதிர்த்தனர். நீ அவற்றை சேகரிக்கும் வேலையாள். ஆனால் நீயோ அவற்றை சுகமாக மண்ணிலிருந்து பொறுக்கி ஒவ்வொன்றாக விழுங்கினாய். கோபம் கொண்ட நண்பர்கள் உன் தாயிடம் உன்னைப் போட்டுக்கொடுத்தார்கள்.  '
'மாமி,  உங்க  கிருஷ்ணன் மண்ணை திங்கறான். நாங்க சொன்னா கேக்க மாட்டேங்கிறான்''

अयि ते प्रलयावधौ विभो क्षितितोयादिसमस्तभक्षिण: ।
मृदुपाशनतो रुजा भवेदिति भीता जननी चुकोप सा ॥३॥

ayi te pralayaavadhau vibhO kshiti tOyaadi samasta bhakshiNaH |
mR^idupaashanatO rujaa bhavediti bhiitaa jananii chukOpa saa || 3

அயி தே ப்ரலயாவதௌ⁴ விபோ⁴ க்ஷிதிதோயாதி³ஸமஸ்தப⁴க்ஷிண꞉ |
ம்ருது³பாஶனதோ ருஜா ப⁴வேதி³தி பீ⁴தா ஜனநீ சுகோப ஸா || 46-3 ||

''கிருஷ்ணா, நீ பிரளயத்தின் போது , மண் விண் சகலத்தையும் உனக்குள் அடக்கியவன். உன்னை அறியாத யசோதை, நீ மண் தின்றுவிட்டால் உனக்கு உடம்புக்கு ஏதாவது வந்துவிடுமோ என்று ஒரு தாய்க்குறிய  கவலையைப்  பட்டாள் .  உன் மேல் கோபமும் கொண்டாள்.

 अयि दुर्विनयात्मक त्वया किमु मृत्सा बत वत्स भक्षिता ।
इति मातृगिरं चिरं विभो वितथां त्वं प्रतिजज्ञिषे हसन् ॥४॥

ayi durvinayaatmaka tvayaa kimu mR^itsaa bata vatsa bhakshitaa |
iti maatR^igiraM chiraM vibhO vitathaaM tvaM pratijaj~niShe hasan || 4

அயி து³ர்வினயாத்மக த்வயா கிமு ம்ருத்ஸா ப³த வத்ஸ ப⁴க்ஷிதா |
இதி மாத்ருகி³ரம் சிரம் விபோ⁴ விததா²ம் த்வம் ப்ரதிஜஜ்ஞிஷே ஹஸன் || 46-4 ||

'' டேய்,  கிருஷ்ணா , வாடா இங்கே, எவ்வளவு தடவை சொல்லி இருக்கேன், கண்டதெல்லாம் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளாதே என்று.  மண்ணை வாரி வாயில் போட்டிக்கொண்டாயாமே ,  மண் தின்றாயா  சொல்?  சொல் ? '' என கேட்கிறாள். கோபமாக.  நீ அவளை மயக்க சிரித்துக்கொண்டே ''இல்லையே ''  என்று தலையாட்டினாய்.  அவள் கோபத்தை நீ துளியும் லக்ஷியம் பண்ணவில்லை.

अयि ते सकलैर्विनिश्चिते विमतिश्चेद्वदनं विदार्यताम् ।
इति मातृविभर्त्सितो मुखं विकसत्पद्मनिभं व्यदारय: ॥५॥
 
ayite sakalairvinishchite vimatishchedvadanaM vidaaryataam |
iti maatR^ivibhartsitO mukhaM vikasatpadmanibhaM vyadaarayaH || 5

அயி தே ஸகலைர்வினிஶ்சிதே விமதிஶ்சேத்³வத³னம் விதா³ர்யதாம் |
இதி மாத்ருவிப⁴ர்த்ஸிதோ முக²ம் விகஸத்பத்³மனிப⁴ம் வ்யதா³ரய꞉ || 46-5 ||

அம்மாவுக்கு ஆத்திரமும்  கவலையும் ஒன்று சேர்ந்தது. கொஞ்சம்  சமாதானமடைந்து சமரசம் பேசினாள் .  ''என் குட்டி கண்ணா, அவர்கள் சொல்வது தப்பாகவே  இருக்கட்டும். என் செல்ல ராஜா,  எங்கே  அம்மாவுக்கு உன் வாயை திறந்து காமி,    பார்த்துவிட்டு  நீ  மண் தின்னவில்லை  நீ நிஜம் தான் சொல்றே  என்று அவர்கள் கிட்டே சொல்றேன்'' .  அம்மாவின் மேல் மனம் இரங்கி நீயும் மெல்ல மெல்ல  உன் வாயைத் திறந்தாய். ஒரு செந்தாமரைப் பூ  மொட்டு அவிழ்வது போல் இருந்தது நீ மெதுவாக  வாயைத் திறந்தபோது. 

अपि मृल्लवदर्शनोत्सुकां जननीं तां बहु तर्पयन्निव ।
पृथिवीं निखिलां न केवलं भुवनान्यप्यखिलान्यदीदृश: ॥६॥

api mR^illavadarshanOtsukaaM jananiiM taaM bahu tarpayanniva |
pR^ithiviiM nikhilaaM na kevalaM bhuvanaanyapyakhilaanyadiidR^ishaH || 6

அபி ம்ருல்லவத³ர்ஶனோத்ஸுகாம் ஜனநீம் தாம் ப³ஹு தர்பயன்னிவ |
ப்ருதி²வீம் நிகி²லாம் ந கேவலம் பு⁴வனான்யப்யகி²லான்யதீ³த்³ருஶ꞉ || 46-6 ||

அம்மாவின் சந்தேகத்தைப்  போக்க, அவளைத் திருப்தி படுத்த,   நீ  அவள் நன்றாக சோதித்து பார்க்கட்டும்,  என்று வாயைத்  திறந்தாய்.  அவள் கோகுலத்தில் நந்த கோபன் வீட்டு தோட்டத்தில்  நாவல்பழ மரத்தடியில் இருந்த மண்ணையா  உன் வாயில் பார்த்தாள்?  அகில புவனம்,  அண்ட சராசரம், சப்த சமுத்திரம், வானம், சூரிய நக்ஷத்ர மண்டலங்கள் சகலமும் அங்கே தரிசனம் தந்ததே.
உன் விஸ்வ ரூப தரிசனத்தை பார்த்த முதல் பெண்மணி யசோதை தான்.

कुहचिद्वनमम्बुधि: क्वचित् क्वचिदभ्रं कुहचिद्रसातलम् ।
मनुजा दनुजा: क्वचित् सुरा ददृशे किं न तदा त्वदानने ॥७॥

kuhachidvanamambudhiH kvachitkvachidabhraM kuhachidrasaatalam |
manujaa danujaaH kvachitsuraa dadR^ishe kiM na tadaa tvadaanane || 7

குஹசித்³வனமம்பு³தி⁴꞉ க்வசித் க்வசித³ப்⁴ரம் குஹசித்³ரஸாதலம் |
மனுஜா த³னுஜா꞉ க்வசித்ஸுரா த³த்³ருஶே கிம் ந ததா³ த்வதா³னனே || 46-7 ||

''கண்ணா, உன் திறந்த வாயில்,  கடல்கள் , காடுகள், சப்த லோகங்கள்,  அண்ட சராசரங்கள்  ஈரேழு புவனங்கள், அசுரர்கள், தேவர்கள், மாந்தர்கள் சகலமும் தெரிந்தது. 

कलशाम्बुधिशायिनं पुन: परवैकुण्ठपदाधिवासिनम् ।
स्वपुरश्च निजार्भकात्मकं कतिधा त्वां न ददर्श सा मुखे ॥८॥

kalashaambudhi shaayinaM punaH paravaikuNTha padaadhivaasinam |
svapurashcha nijaarbhakaatmakaM katidhaa tvaaM na dadarsha saa mukhe || 8

கலஶாம்பு³தி⁴ஶாயினம் புன꞉ பரவைகுண்ட²பதா³தி⁴வாஸினம் |
ஸ்வபுரஶ்ச நிஜார்ப⁴காத்மகம் கதிதா⁴ த்வாம் ந த³த³ர்ஶ ஸா முகே² || 46-8 ||

நாராயணா,  யசோதை  உன்னையும் உன் வாயில் பார்த்தாள், பாற்கடலில் பள்ளிகொண்ட பரமாத்மா நீயும் தெரிந்தாய். வைகுண்ட தரிசனம் கண்டாள் . அதே சமயம்  வாயைத்திறந்து சின்ன கிருஷ்ணன் பையனாக அம்மா எதிரில் நீயும் தெரிந்தாய். யசோதை அன்று அப்போது  பார்க்காத வஸ்து ஒன்று பாக்கி இல்லை. 

विकसद्भुवने मुखोदरे ननु भूयोऽपि तथाविधानन: ।
अनया स्फुटमीक्षितो भवाननवस्थां जगतां बतातनोत् ॥९॥
 
vikasad bhuvane mukhOdare nanu bhuuyO(a)pi tathaa vidhaananaH |
anayaa sphuTamiikshitO bhavaananavasthaaM jagataaM bataatanOt || 9

விகஸத்³பு⁴வனே முகோ²த³ரே நனு பூ⁴யோ(அ)பி ததா²விதா⁴னன꞉ |
அனயா ஸ்பு²டமீக்ஷிதோ ப⁴வானநவஸ்தா²ம் ஜக³தாம் ப³தாதனோத் || 46-9 ||

''உன்  வாயில், அவள் எதிரே நீ வாயைத் திறந்து நிற்பதுவும் தெரிந்தது.   ''ஆஹா  இந்த உலகம் எல்லையற்றது என்று புரிந்தது. சாஸ்வதம் இல்லாதது. தோன்றி மறைவது என்றும் புரிந்தது.

धृततत्त्वधियं तदा क्षणं जननीं तां प्रणयेन मोहयन् ।
स्तनमम्ब दिशेत्युपासजन् भगवन्नद्भुतबाल पाहि माम् ॥१०॥

dhR^itatattvadhiyaM tadaa kshaNaM jananiiM taaM praNayena mOhayan |
stanamamba dishetyupaasajan bhagavannadbhutabaala paahi maam ||10

த்⁴ருததத்த்வதி⁴யம் ததா³ க்ஷணம் ஜனநீம் தாம் ப்ரணயேன மோஹயன் |
ஸ்தனமம்ப³ தி³ஶேத்யுபாஸஜன் ப⁴க³வன்னத்³பு⁴தபா³ல பாஹி மாம்

யசோதைக்கு நாடி நரம்பெல்லாம் தளர்ந்தது, கண் இருண்டது , மூச்சு நின்றுவிட்டதா என்றே தெரியவில்லை, மதி மயங்கி தலை சாய்ந்தாள்.  க்ஷண காலத்தில் பழைய நிலைக்கு அவள் திரும்ப நீ உதவினாய். அவள் மனதை மாற்ற , மாயையைப் போக்க  நினைத்த நீ  உன் மோகனப் புன்னகை யை உதிர்த்து அவள் கழுத்தைக்  கட்டிக்கொண்டாய். 

'' அம்மா  எனக்கு பசிக்கிறது பால் கொடு என்று பேச்சை மாற்றினாய்.   அவள் மடியில் தானாகவே போய் படுத்துக்கொண்டாய்.  அதிசயிக்க குழைந்தை யடா  நீ, எண்டே குருவாயூரப்பா,   என்னையும் நோய் தீர்த்து ரக்ஷிப்பாய்.''

sivan jaykay

unread,
Sep 6, 2021, 8:40:43 PM9/6/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம் - நங்கநல்லூர்  J K  SIVAN --

72.  இந்து மதத்தின்  பொதுவான  கொள்கை:

1932ல்  மஹா பெரியவா சென்னை மைலாப்பூர் சமஸ்க்ரித கல்லூரி வளாகத்தில் தங்கி தினமும் பிரசங்கம் செய்தார்.  செப்டம்பர்  29ம் தேதி அன்று மாலை அவர் செய்த பிரசாங்கத்தின் தலைப்பு  
நமது   அநாதி மதம்.  

நமது ஹிந்து மதத்தில்  எத்தனையோ  உட்பிரிவுகள், சைவம், வைணவம், மத்வம் ,என்று பல சித்தாந்தங்கள். ஒவ்வொன்றையும் பின் பற்றுபவர்கள் அவற்றுக்குள் இருக்கும்  வித்தியாசங்களை பற்றி  பேசுகிறார்கள் . தமது  பிரிவு உயர்ந்தது என்று சொல்கிறார்களே தவிர . பொதுவாக ஏதோ ஒன்று  எல்லா பிரிவுகளையும்  இணைக்கிறது  என்று சொல்வதில்லை.  இது பற்றி மஹா பெரியவா  ரொம்ப  யோசித்து 1932ம் வருஷம் சென்னையில்  சமஸ்க்ரித கல்லூரியில்  செய்த ஒரு அற்புத பிரசங்கத்தின் சாரம் இது. ஹிந்து மதத்தில் வித்தியாசமின்றி அனைத்து பிரிவுகளும் ஏற்றுக் கொள்ளும் பொதுவான கொள்கை பசுக்களும் பிராமணர்களும் ரக்ஷிக்க படவேண்டும் என்பது.
பல வித்யாசங்கள் பல கோட்பாடுகள், சித்தாந்தங்கள் இருந்தாலும் பொதுவாக எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு சில விஷயங்கள் இந்து மதத்தை ஒன்றாக சேர்ந்து காக்கிறது.  உதாரணமாக ஒரு   ஸ்லோகம்  

''ஸ்வஸ்தி பிரஜாப்ய: பரிபாலயந்தாம்
ந்யாய்யேன மார்க்கேண மஹீம் மஹீசா!
கோப்ராம்ணேப்ய: ஸுபமஸ்து நித்யம்
லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து!!

இதன் அர்த்தம்: உலகத்தில் ஜனங்கள் சௌக்யமாக வாழ  வேண்டும்.  பூமியை ராஜாக்கள் நியாயம் நேர்மையோடு ஆளட்டும்.  பசுக்களும் ப்ராம்மணர்களும் மங்களகரமாக வாழட்டும். எல்லோரும் சுகமாக  ஜீவிக்கட்டும்.''  

''எல்லோரும்'' என்று சொன்னால் பிராமணர்களும் அதில் உண்டே. ஏன் தனியாக சொல்லணும்? பசுக்கள் எல்லோருக்கும் பொது தானே? ஏன் அதை தனியாக சொல்லணும்?  இதில் பக்ஷபாதம் எதுவும் இல்லை. ஒரு கதை சொன்னால் இன்னும் புரியும்?

மதுரை கூன் பாண்டிய ராஜா  சைவனாக இருந்தவன்  சமணமதததுக்கு தாவி, சைவர்களை வெறுத்தான். விபூதி தரித்தவன் எதிரே கண்ணில் பட்டால் அவ்வளவு தான் அவன் கதி. இப்படி ஏன் ராஜா மாறிவிட்டான் என்று வருந்தி அவன் மனைவி மங்கையற்கரசியும், மந்திரி குலச்சிறையாரும்  சிவனை வேண்டினார்கள்.  அப்போது ஞானசம்பந்தர்  தென்னாட்டில் விஜயம் செய்தார்.  அவரைச்  சென்று வணங்கி மதுரைக்கு அழைத்து,  ராஜாவை மாற்றவேண்டும் என்று வேண்டுகிறார்கள்.  அவர் மதுரை வந்தபோது சமணர்கள்  ஞானசம்பந்தர் தங்கி  இருந்த மடத்திற்கு தீ மூட்டினார்கள்.  சம்பந்தர்  அந்த '' தீ பாண்டியனிடம் செல்லட்டும்''  என்று வேண்ட  கூன் பாண்டியனுக்கு  கடும் ஜுரம்.   தவிக்கிறான். சமணர்கள்  மந்திரம், ஒளஷதம் என்று  எதிலும்  குணப்படுத்தமுடியாமல் போக,  ராணியும் மந்திரியும் மெதுவாக  பாண்டியனிடம்  சம்பந்தர்  மதுரை வந்திருப்பதை அறிவித்து அவரால் குணப்படுத்த முடியும் என்று அவரை வரவழைக்க ராஜா அரை மனதாக ஒப்புக் கொள்கிறான்.   சம்பந்தர்  சமணர்களை நீங்கள்  நம்புவதால்   உங்கள் உடம்பில் ஒரு பாதியை  அவர்கள்  ஜூரமின்றி குணப்படுத்தட்டும்,      சிவனருளால் நான் இடது பாதி உடம்பில் ஜுரம் நீங்க வேண்டுகிறேன் என்கிறார். 

 இடது பாதி சிவனருளால் ஜுரம் நீங்கி விட்டது.  சமணர்கள் அடாவடி செய்து இடது பாதி எங்களுக்கு வலது பாதியை  நீங்கள் குணப்படுத்துங்கள் என்கிறார்கள்.அதற்கும் சம்பந்தர் ஒப்புக்கொண்டு வலது பக்க உடம்பில் ஜுரம் நீங்கி அங்கிருந்த ஜுரம்  இடது பக்கம் கடுமையாக வந்துவிட்டது. சமணர்கள் அப்போதும் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.  சம்பந்தர்  ராஜா இதற்கு  நடுவே படும் கஷ்டத்தை கவனித்து ஜுரம் முழுதும்  அவன் உடம்பை விட்டு நீங்க  மதுரை சொக்கநாதரை வேண்டி  அப்போது பாடியது தான் ''மந்திரமாவது நீறு '' என்ற 10 தேவார பதிகம்.  அதை பாடி வேண்டிக்கொண்டு ராஜாவுக்கு  விபூதி  பூசினார் .  ஜுரம் முழுதும் நீங்கியது.  அப்போதும் சமணர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.  புனல் வாதம் தயாராகியது. ராஜாவும் சமணர் பக்கம் தான். சமணர்கள்  தமது  கொள்கையை  ஒரு  ஓலையிலும்   சம்பந்தர் தேவார பதிகம் ஒன்றை  ஒரு  ஓலையிலும்  எழுதி  இரு  ஓலைகளும்  வைகையில் போடப்பட்டு,  சமணர்கள் எழுதிய ஓலை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டது. சம்பந்தர் எழுதிய ஓலை எதிர்நோக்கி வந்தது.  அப்போதும் சமணர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அடுத்து அனல்வாதம் நடந்தது.   சமணர்கள் ஓலை சம்பந்தர் ஓலை ரெண்டும்  தீயில் போடப்பட்டது.  சம்பந்தர் எழுதிய ஓலை தீ பற்றாமல் வெளிவர  சமணர்கள் ஓலை எரிந்து கருகிவிட்டது. ராஜா திருந்திவிட்டான். பழையபடி சைவமதம் திரும்பினான்.

இந்த கதை எதற்காக சொன்னேன் என்றால்   சம்பந்தர் எழுதிய  நெருப்பிலிட்ட   ஓலையில்  என்ன எழுதினார் ?

வாழ்க அந்தணர்  வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல்  வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்  லாம்அரன் நாமமே
சூழ்க வையக  முந்துயர் தீர்கவே.   என்ற பதிகம்.  10 தேவார பாடல்கள். 

மேலே சொன்ன சுலோகம் போலவே இதிலும் ப்ராமணர்கள் , பசு, தேவர்கள் சுபிக்ஷமாக இருக்க வேண்டும். ராஜா நேர்மையாக ஆளவேண்டும். ஹரன்  நாமம் எங்கும் ஒலி க்க வேண்டும். உலகில் எல்லோரும் துயரம் இன்றி சுகமாக வாழவேண்டும்.   அது சரி  இதிலும்  ஏன் பிராமணர்களும் பசுவும் முக்கியம்? சம்பந்தரும் சொல்கிறாரே.

கீதையில் ஒரு ஸ்லோகம். கிருஷ்ணன் பிராமணர்கள், தேவர்கள், பசுக்களை ரக்ஷிக்கின் றவன்.இதனால்  உலகை பாதுக்காக்கிறவன்  என்பதால் அவனை வணங்குகிறோம்.

''நமோ ப்ரம்மண்ய தேவாய கோ பிராம்மணே ஹிதாய
ஜகத் ஹிதாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம:!!.நமோ ப்ரம்மண்ய தேவாய

கீதையில்  சந்திபர்வத்தில் ஒரு ஸ்லோகமும் (46-12-2) இங்கே பொருந்தும்:
''சர்வோபநிஷதோ காவோ தோக்தா கோபால நந்தன: |
பார்த்தோ வத்ஸ: ஸுதிர்போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் ||

உபநிஷதங்கள்  எல்லாம் பசுக்கள். கிருஷ்ணன்  அவற்றை மேய்ப்பவன். அர்ஜுனன் கன்றுக்குட்டி. பசுவின் பால் அவனுக்கும் மற்ற பண்டிதர்களுக்கும்  வித்வான்களுக்கும்   ஆகாரம்..

 என்ன சொல்கிறது இந்த ஸ்லோகம்? பசு கன்றுக்குட்டி இல்லாமல் தன்னை மேய்க்கும் இடையனின்றி பால் சுரக்காது,  கறக்காது. உலகத்துக்கு  உயிரினத்துக்கு ஆகாரமாவது பால்.   கிருஷ்ணனின் கீதை உலகத்தில் எந்த  துக்கத்துக்கும் கஷ்டத்துக்கும் மருந்து.  அந்த கீதை மந்திரங்களை நன்றாக கற்ற பண்டிதர்கள் மக்களுக்கு அவற்றை எடுத்து சொல்வதற்காக  அவசியம் தேவை. உபநிஷத்துக்கள் மந்திரங்கள் சாஸ்திரங்கள் அவசியம் . ஆகவே   பசுக்களும் பிராமணர்களும் எவ்வளவு முக்கியம் என்று  இதனால் புரிகிறது.  அவர்கள் காக்கப்படவேண்டும். 

 ஒரு ஊரில் ஒரு சாமான் இல்லையென்றால் மற்றொரு ஊரிலிருந்து அதை பண்டமாற்று முறையில் பகிர்ந்து கொள்வது போல் வேத பிராமணர்கள் பல இடங்களுக்கு சென்று நீதி நேர்மை  பக்தி ஆகியவற்றை போதிக்க தேவைப்பட்டார்கள். பசுக்கள் பால் தரும். அவற்றுக்கு  தீவனம் புல் ஆகியவை வளர மழை அவசியம். மழை பெய்யும்போது  நீரை நிறைத்து வைத்துக்கொள்ள  குளம் ஏரி அவசியம். அவற்றை ராஜ்ய பரிபாலனம் செய்யும் ராஜா வெட்டி பராமரிக்க நாம் அவனுக்கு  வரி கொடுக்கிறோம். யாகங்களை வளர்த்து மந்திரங்கள் உச்சரித்து தேவர்களை திருப்தி செய்து  மழை காலா காலத்தில் பெய்தது. இதற்கும் பிராமணர்கள் தேவைப்பட்டார்கள்.  இப்படி  ஒரு அமைப்பு வழக்கத்தில் இருந்து எல்லோரும் சுபிக்ஷமாக வாழ்ந்தார்கள் என்று போதிப்பது நமது ஹிந்து மதம். 

இது ஒரு அனாதி மதம். ஆதி , ஆரம்பம் அறியமுடியாமல் வளர்ந்து வரும் மதம். அநாதி மதம் என்று அதனால் சொல்கிறோம். இதை எவராலும் அழிக்க முடியாது. இது ஒருவரால் உண்டானது இல்லையே. பலரின் நல்ல எண்ணங்களால் வளர்ந்தது.''

 

sivan jaykay

unread,
Sep 6, 2021, 8:40:43 PM9/6/21
to amrith...@googlegroups.com
உள்ளது நாற்பது --   நங்கநல்லூர்   J K   SIVAN 

தேகமும்  ஆத்மாவும். 

உடல்பஞ்ச கோச வுருவதனா லைந்து
முடலென்னுஞ் சொல்லி லொடுங்கு – முடலண்றி
யுண்டோ வுலக முடல்விட் டுலகத்தைக்
கண்டா ருளரோ கழறுவாய் – கண்ட 5

உங்களுக்கு தெரியுமா ?  மனித  உடல் பஞ்சகோசம் எனும் ஐந்து உறைகளைக்  கொண்டது.  இவையில்லாமல் மனிதன் இல்லை. அவன் உலகம் இல்லை.  அது சரி.  ''நான்'' எங்கிற  பிரமைக்கு இருப்பிடமாக இருக்கும் இந்த  தேகம் இல்லாமல் உலகம் உண்டா?  நன்றாக சிந்தியுங்கள்? உடல்  உலகம் ரெண்டுமே  ஸாஸ்வதமற்ற, மாறும்  மாயத் தோற்றம் என்பது புலப்படும்.

உடலை  மூடும் ஐந்து  கோஸங்கள்  பெயர் சொல்கிறேன்.  அன்னமயம், ப்ராண மயம் ,மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம்.  இந்த உறைகள்  தனித்தனியாக  உடலைப்  போர்த்துபவை அல்ல. 
ஒன்றில் மற்றொன்று கலந்தவாறு ஐந்தும் ஒன்று தான். அவற்றின் ஸ்வபாவங்களைக் கொண்டு நாம் அவற்றை வேறுபடுத்தி அறிகிறோம். 

அன்னமயகோசம்  இந்த சரீரம். நாம்  சாப்பிடும் உணவால்  உருவாவது.
ப்ராணமயகோசம் -  அன்னமய கோசத்திற்கும்  மனோமய கோசத்திற்கும் நடுவே  உள்ளது.  மண்டலம். 
மனோமய கோசம்:   இது   நமது சங்கல்ப விகல்பங்களால்   .ஆசைகள் எல்லாம் இங்கே உருவாகிறது.  மனம்  எப்படிப்பட்டது என்று தெரியுமல்லவா?
விஞ்ஞான மய கோசம்:  ,புத்தி, அஹங்காரம்  மற்றும்  ஞானேந்திரியங்கள் கொண்டது. கண், காது,மூக்கு, நாக்கு, தோல்.  இதன்  மூலம் தான் வெளி உலகை நாம் அனுபவிக்கிறோம்.
ஆனந்தமய கோசம்:   ஆஹா  நான்  ஆனந்தமாக தூங்கினேன் . மரக்கட்டை மாதிரி, ரெண்டு மூணு மணி ஆனதே தெரியலை.  --  இது தான் ஆனந்தமய கோசம். அஞ்ஞான நாசம் இல்லாததால், உண்மையான ஆத்மாவை அறியாததால் இது முக்தி நிலை ஆகாது.

இன்னொரு முறை சொல்கிறேன்.  அன்னமய கோசம் நாம் ஆகாரம் போட்டு வளர்க்கும் ஸ்தூலசரீரம்.  அடுத்தது  உடம்பு இல்லாத ஸூக்ஷ்ம சரீரம்.  ஆனந்தமய கோசம் என்பது  காரண சரீரம்.  உடம்பு, சூக்ஷ்ம சரீரம் தெரியாத  ஆழ்ந்தஉறக்கம்.   இதெல்லாம் ஒன்று சேர்த்து தான் தேகம் என்கிறோம்.இந்த ஐந்து  கோசங்களும் கொண்டது  மூன்று சரீரம் ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரங்கள்.  இவை  ப்ரகிருதியை சேர்ந்தவை.  மாயை எனப்படுபவை.  நமது உண்மை ஸ்வரூபம் இதுவல்ல.  இருந்து ஒளிரும்  ஸத் சித் ஆனந்தம். ஸ்வயம்பிரகாசம். ஆத்மா. 

ஸ்தூல சரீரத்தின் செயல்கள் நாம் அறிந்தவை. சூக்ஷ்ம சரீரத்தின்  பசி தாகம்  கோபம் பகுத்தறிவு  தீர்மானிப்பது  போன்ற இயல்புகள்.  காரண சரீரத்தின்  தூக்கம், அறியாமை  இவை எல்லாமே  பிரகிருதியின் வெளிப்பாடுகள், இயக்கங்கள்.  எல்லாமே  பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டவை. உபாதி எனப்படுபவை.   ஆத்மாவுக்கு மேலே சொன்னஉபாதி  ஒன்றுமே கிடையாது.  அந்த ஆத்மாவை அறிவது தான் இறைவனை அறிவது.  மேலே  சொன்ன  மூன்று சரீர நிலையிலும்  ஆத்மா தனித்து  சம்பந்தம் இல்லாமல் இருந்து கொண்டு தான் எப்போதும்  இருக்கும். 

sivan jaykay

unread,
Sep 7, 2021, 8:35:20 PM9/7/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீமந்  நாராயணீயம் -  நங்கநல்லூர்   J K  SIVAN  --
47 வது தசகம் 

47.  கட்டுண்ட மாயன் 

கண்ணன் வளர்கிறான். அவனது விஷமம் அவனை விட வேகமாக  வளர்கிறது.  எங்கும் அவனைப் பற்றிய பேச்சு. வீடுகளில் எல்லாம் அவன் மேல் வெண்ணை திருடிய குற்றச்சாட்டு. பொறுக்கமுடியாமல் அவன் அம்மா யசோதை அவனை ஒரு கல் உரலில் கட்டிப்போடுகிறாள் என்பது தான் இந்த தசகம் சொல்வது.

एकदा दधिविमाथकारिणीं मातरं समुपसेदिवान् भवान् ।
स्तन्यलोलुपतया निवारयन्नङ्कमेत्य पपिवान् पयोधरौ ॥१॥

ekadaa dadhivimaatha kaariNiiM maataraM samupasedivaan bhavaan |
stanya lOlupatayaa nivaarayannankametya papivaan payOdharau || 1

ஏகதா³ த³தி⁴விமாத²காரிணீம் மாதரம் ஸமுபஸேதி³வான் ப⁴வான் |
ஸ்தன்யலோலுபதயா நிவாரயன்னங்கமேத்ய பபிவான்பயோத⁴ரௌ || 47-1 ||

''குருவாயூரப்பா,  ஒருநாள் நீ  என்ன செய்தாய் என்று சொல்கிறேன் கேள். உன் அம்மா  யசோதை  தயிர் கடைந்து கொண்டிருக்கிறாள்.  உனக்கு அவளிடம் பால் குடிக்க வேண்டும். அவள் தயிர் கடைவதை நிறுத்துகிறாய். அவள் மடியில் ஏறி படுக்கிறாய்.  நீ  ஆனந்தமாக  அவளிடம் பால் குடிக்கிறாய். 

अर्धपीतकुचकुड्मले त्वयि स्निग्धहासमधुराननाम्बुजे ।
दुग्धमीश दहने परिस्रुतं धर्तुमाशु जननी जगाम ते ॥२॥

ardhapiita kuchakuDmale tvayi snigdhahaasa madhuraananaambuje |
dugdhamiisha dahane parisrutaM dhartumaashu jananii jagaama te ||2

அர்த⁴பீதகுசகுட்³மலே த்வயி ஸ்னிக்³த⁴ஹாஸமது⁴ரானநாம்பு³ஜே |
து³க்³த⁴மீஶ த³ஹனே பரிஸ்ருதம் த⁴ர்துமாஶு ஜனநீ ஜகா³ம தே || 47-2 ||

நீ ஆனந்தமாக உனது சாம்ராஜ்யத்தில் அவள் மடிமேல் ஏறி படுத்துக்கொண்டு பால் குடித்து முடிக்க  வில்லை. பாதியில்  உன் தாமரைச் செவ்வாயைத் திறந்து சிரிக்கிறாய்.  ''அடடா,   என்ன இப்படிப் பண்ணி விட்டேனே என்று  யசோதை வேகமாக எழுந்திருக்கிறாள். அடுப்பில் பாலைக் காய்ச்சியவள் மறந்து போனது ஞாபகம் வருகிறது. பொங்கி வழிந்திருக்குமோ? '' . எழுந்து ஓடினாள்.

सामिपीतरसभङ्गसङ्गतक्रोधभारपरिभूतचेतसा।
मन्थदण्डमुपगृह्य पाटितं हन्त देव दधिभाजनं त्वया ॥३॥

saamipiita rasabhanga sangata krOdhabhaara paribhuuta chetasaa |
mantha daNDamupagR^ihya paaTitaM hanta deva dadhi bhaajanaM tvayaa ||

ஸாமிபீதரஸப⁴ங்க³ஸங்க³த-க்ரோத⁴பா⁴ரபரிபூ⁴தசேதஸா |
மந்த²த³ண்ட³முபக்³ருஹ்ய பாடிதம் ஹந்த தே³வ த³தி⁴பா⁴ஜனம் த்வயா || 47-3 ||

''கிருஷ்ணா,  உனக்கு கோபம் வந்துவிட்டது? வராதா பின்னே?  இப்படி பாதியில்  பால் குடிக்கும் போது  கொடுப்பதை நிறுத்திவிட்டு அம்மா எழுந்து போனால்? உன் கோபத்தை எப்படி வெளிப்படுத்தினாய்?  உன் கண்ணில் அவள் தயிர் கடைந்துகொண்டிருந்த மத்து கண்ணில் பட்டது. அதை எடுத்து  அந்தப்  பெரிய  தயிர் சட்டியின் மேல்  வீசினாய்.  உன் அடியைத் தாங்குமா  தயிர் சட்டி?  மண்டையை போட்டு விட்டு  மோக்ஷம் அடைந்தது.  தயிர் வெள்ளம் எங்கும் ஓடியது. 

उच्चलद्ध्वनितमुच्चकैस्तदा सन्निशम्य जननी समाद्रुता ।
त्वद्यशोविसरवद्ददर्श सा सद्य एव दधि विस्तृतं क्षितौ ॥४॥

 uchchalad dhvanitamuchchakaistadaa sannishamya jananii samaadrutaa |
tvadyashO visaravaddadarshasaa sadya eva dadhi vistR^itaM kshitau ||4

உச்சலத்³த்⁴வனிதமுச்சகைஸ்ததா³ ஸன்னிஶம்ய ஜனநீ ஸமாத்³ருதா |
த்வத்³யஶோவிஸரவத்³த³த³ர்ஶ ஸா ஸத்³ய ஏவ த³தி⁴ விஸ்த்ருதம் க்ஷிதௌ || 46-4 ||

உள்ளே பால் கொதித்து வழியும் சமயம். நல்லவேளை  பால் பாத்திரத்தை அடுப்பில் இருந்து  இறக்கி வைக்க முயலும்போது டமால் என்று தயிர் சட்டி உடையும் சத்தம் காதில் விழுந்தது.  என்ன ஆச்சு?  யசோதை வீட்டின் முன் கட்டுக்கு ஓடி வந்தாள்.   ''அடாடா,  அவள்  கடைந்துகொண்டிருந்த  தயிர் பானை உடைந்து கிடக்கிறதே. தயிர் அத்தனையும் உருண்டு ஓடுகிறதே.''  உன் சேட்டைகளில் இதுவும் ஒன்று  என்று சொல்லவேண்டுமா? 

वेदमार्गपरिमार्गितं रुषा त्वमवीक्ष्य परिमार्गयन्त्यसौ ।
सन्ददर्श सुकृतिन्युलूखले दीयमाननवनीतमोतवे ॥५॥

vedamaarga parimaargitaM ruShaa tvaamaviikshya parimaargayantyasau |
sandadarsha sukR^itinyuluukhale diiyamaana navaniitamOtave ||5

வேத³மார்க³பரிமார்கி³தம் ருஷா த்வாமவீக்ஷ்ய பரிமார்க³யந்த்யஸௌ |
ஸந்த³த³ர்ஶ ஸுக்ருதின்யுலூக²லே தீ³யமானநவனீதமோதவே || 46-5 ||

''குருவாயூரப்பா,  நீ  அங்கே இல்லை,  குற்றம் நடந்த இடத்தில் உன்னைக் காணவில்லையே?. எங்கே அந்தப் பயல்?  வேதங்களால் தேடப்படும் உன்னை அந்த அன்னை தேடினாள் . பின்புறம்  ஒரு உரல் மேல் உட்காந்து கொண்டு ஒரு பூனைக்கு  வெண்ணெய்  ஊட்டிக்  கொண்டிருந்தாய். உன்னைப்  பார்த்த போது யசோதைக்கு அப்போது எப்படி இருந்திருக்கும்?

त्वां प्रगृह्य बत भीतिभावनाभासुराननसरोजमाशु सा ।
रोषरूषितमुखी सखीपुरो बन्धनाय रशनामुपाददे ॥६॥

tvaaM pragR^ihya bata bhiiti bhaavanaa bhaasuraanana sarOjamaashu saa|
rOSha ruuShita mukhii sakhiipurO bandhanaaya rashanaamupaadade ||6

த்வாம் ப்ரக்³ருஹ்ய ப³த பீ⁴திபா⁴வனாபா⁴ஸுரானநஸரோஜமாஶு ஸா |
ரோஷரூஷிதமுகீ² ஸகீ²புரோ ப³ந்த⁴னாய ரஶனாமுபாத³தே³ || 47-6 ||

கோபம் உச்சிக்கேறி விட்டது யசோதைக்கு. பளிச்சென்று ஒளி வீசும்  தாமரை முகத்தைஉடைய கண்ணா,உன்னை கர  கர வென்று பிடித்து இழுத்தாள்.  உன் நண்பர்கள் வேறு உன்னை சூழ்ந்து கொண்டு நீ இருக்கும் இடத்தில்  பூந்தேன் குடிக்க வட்டமிடும் வண்டுகள் போல் சுற்றிக்கொண்டு  இருந்ததை வேறு பார்த்தாள் .  நீ  பயந்தது போல் நடித்தாய்.  மாயா  ஜாலக்காரன் ஆயிற்றே நீ.   யசோதையின் கண்கள் கோபத்தோடு அங்கும் இங்கும் பார்த்தன.  அவள் கண்ணில் மணிக்
கயிறுகள்  சில   தென்பட்டன. தாம்புக்கயிறுகள் . கன்றுக்குட்டிகளை  கட்டிப்போட  உபயோகிப்
பவை.. 

बन्धुमिच्छति यमेव सज्जनस्तं भवन्तमयि बन्धुमिच्छती ।
सा नियुज्य रशनागुणान् बहून् द्व्यङ्गुलोनमखिलं किलैक्षत ॥७॥

bandhumichChati yameva sajjanastaM bhavantamayi bandhumichChatii |
saa niyujya rashanaaguNaan bahuun dvyangulOnamakhilaM kilaikshata || 7

ப³ந்து⁴மிச்ச²தி யமேவ ஸஜ்ஜனஸ்தம் ப⁴வந்தமயி ப³ந்து⁴மிச்ச²தி |
ஸா நியுஜ்ய ரஶனாகு³ணான்ப³ஹூன் த்³வ்யங்கு³லோனமகி²லம் கிலைக்ஷத || 47-7 ||
 
என் தெய்வமே, எவர்க்கும் இதுவரை தோன்றாத ஒரு எண்ணம் அந்த புண்யவதிக்கு, பாக்ய சாலிக்கு தோன்றியது. உன்னைக் கட்டிப்போட வேண்டும் என்று முடிவெடுத்தாள் .  உன்னோடு சேர  வேண்டும், உன்னோடு பிணையவேண்டும் என்று எத்தனையோ யோகிகள், மஹான்கள், ரிஷிகள் காத்திருக்கிறார்கள்.   எவர் பிடிக்கும் அகப்படாதவன்  நீ.     கயிறு நீளம்  போதவில்லை உன்னைக் கட்ட,  பல கயிறுகள் எடுத்து முயன்றாள்.  உன்னைக் கட்ட  எந்த கயிறுக்கும் நீளம் போதவில்லையே?  ஒரு சில அங்குலங்கள் குறைவாகவே இருந்தன. 

विस्मितोत्स्मितसखीजनेक्षितां स्विन्नसन्नवपुषं निरीक्ष्य ताम् ।
नित्यमुक्तवपुरप्यहो हरे बन्धमेव कृपयाऽन्वमन्यथा: ॥८॥

vismitOtismata sakhiijanekshitaaM svinnasannavapuShaM niriikshya taam |
nityamuktavapurapyahO hare bandhameva kR^ipayaa(a)nvamanyathaaH || 8

விஸ்மிதோத்ஸ்மிதஸகீ²ஜனேக்ஷிதாம் ஸ்வின்னஸன்னவபுஷம் நிரீக்ஷ்ய தாம் |
நித்யமுக்தவபுரப்யஹோ ஹரே ப³ந்த⁴மேவ க்ருபயான்வமன்யதா²꞉ || 47-8 ||

என்னப்பனே ,ஹரி,  யசோதையின் கோபி மார் தோழிகள் கூடிவிட்டனர்.   சிரித்துக்கொண்டே உன்னைக் கட்டிப்போடும் காட்சியை வேடிக்கை பார்த்தார்கள்.  கயிறுகள் ஒவ்வொன்றாய் எடுப்பதும் உன்னை சுற்றுவதும், அது போதாமல் எறிந்துவிட்டு அடுத்த கயிற்றை எடுத்து உன் இடுப்பில் சுற்றுவதுமாக  வியர்க்க  விறுவிறுக்க  யசோதை கஷ்டப்படுவதை கண்டு சிரிப்பு வந்தது.  பாவமாக  இருந்தது, உன்னைக் கட்டிப்போடுவதும்,  அவள்  கட்டிப்போட முயல்வதும்  ரெண்டுமே தான்.   உன் உருவம்   எவராலும்  கட்டிப்போட  முடியும்படி  யானதா?  பாவம் அம்மா, என்று அவள் மேல் பரிதாபத்தோடு உன்னை கட்டும் அவள் முயற்சிக்கு இடம் கொடுத்தாய். கட்டுண்ட மாயன் நீ.  எதற்கும் எவருக்கும் கட்டுப்படாதவன்  நீ   பாசத்துக்கு  கட்டுப்பட்டாய்.  பாசம்  என்றாலும் கயிறு தானே. 

स्थीयतां चिरमुलूखले खलेत्यागता भवनमेव सा यदा।
प्रागुलूखलबिलान्तरे तदा सर्पिरर्पितमदन्नवास्थिथा: ॥९॥

sthiiyataaM chiramuluukhale khaletyaagataa bhavanameva saa yadaa |
praaguluukhalabilaantare tadaa sarpirarpita madannavaasthithaaH ||

ஸ்தீ²யதாம் சிரமுலூக²லே க²லேத்யாக³தா ப⁴வனமேவ ஸா யதா³ |
ப்ராகு³லூக²லபி³லாந்தரே ததா³ ஸர்பிரர்பிதமத³ன்னவாஸ்தி²தா꞉ || 47-9 ||

''அப்பாடா, இந்த விஷமக்காரனுக்கு தக்க தண்டனை கொடுத்தாகிவிட்டது'' என்று ஒருவழியாக திருப்தி பெருமூச்சுடன் யசோதை  உன்னை அந்த கல்  உரலோடு சேர்த்து கயிற்றால் உன்  இடுப்பை கட்டிவிட்டு உள்ளே சென்றாள்.   எல்லோர் எதிரிலும் ''நீ செய்கிற விஷமத்துக்கு இது தான் தண்டனை. இங்கேயே  கொஞ்ச நேரம்  கட்டுண்டு கிட. அப்போது தான் புத்தி வரும்'' என்று சொன்னாள் . 
நீ  காதில் வாங்கவில்லை.   உரலுக்கு  உள்ளே நீ ஒளித்து  வைத்திருந்த வெண்ணையை எடுத்து ரசித்து சாப்பிட ஆரம்பித்தாய்.  

यद्यपाशसुगमो विभो भवान् संयत: किमु सपाशयाऽनया ।
एवमादि दिविजैरभिष्टुतो वातनाथ परिपाहि मां गदात् ॥१०॥

yadyapaasha sugamO vibhO bhavaan sanyataH kimu sapaashayaa(a)nayaa |
evamaadi divijai-rabhiShTutO vaatanaatha paripaahi maam gadaat || 10

யத்³யபாஶஸுக³மோ விபோ⁴ ப⁴வான் ஸம்யத꞉ கிமு ஸபாஶயா(அ)னயா |
ஏவமாதி³ தி³விஜைரபி⁴ஷ்டுதோ வாதனாத² பரிபாஹி மாம் க³தா³த் || 47-10 ||

எண்டே குருவாயூரப்பா,  ப்ரபோ,  விண்ணிலுள்ள  தேவர்கள் எல்லாம் உன்னை புகழ்ந்து பாடினார் கள்.  ஒரு கேள்வி அவர்கள் கேட்டது இன்னும் காதில் ஒலிக்கிறது.  ''ஸ்வாமி,  எந்த பாச  பந்தத்தோடும் பிணை படாமல் இருப்பவர்களுக்கு தானே நீ  தென்படுபாய்.  எந்த பிணைப்பும் அற்றவர்கள்  தானே உன்னை அடைய முடியும்?   உன்னை  இணைபிரியாத  பாசபிணைப்பில் உள்ள   அன்னை யசோதா எப்படி  உன்னைத் தனியாக  பிரிந்து இருக்க கட்டிப்போட்டாள் ?''  என்னப்பனே , என்னைப்பார், நான்  இந்த நோயின் இக்கட்டில் தவிக்கிறேன், என் நோய் தீர்த்து என்னை விடுவித்து ரக்ஷிப்பாயாக. 

நண்பர்களே,  மதுரை கவி ஆழ்வார் இயற்றிய கண்ணினுட் சிறுத்தாம்பு என்கிற பாசுரங்களுக்கு  ஸ்ரீ ராமாநுஜாசார்யார் விளக்கம் எழுதி 1879ல் ஒரு புத்தகம் வெளிவந்தது.  அந்த புத்தத்தை இத்தோடு  முகநூலில்  இணைக்க முடியவில்லை.  என்னை வாட்ஸாப்பில்  அணுகினால் தர இயலும். 
வேண்டு மென்பவர்கள் படித்து மகிழலாம். அந்த தமிழ் எனக்கு அவ்வளவாக புரியவில்லை என்பது  உண்மை. 

sivan jaykay

unread,
Sep 7, 2021, 8:35:20 PM9/7/21
to amrith...@googlegroups.com
 பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்   J  K  SIVAN --

73. மறக்கமுடியாத மதராஸ்  விஜயம்.

அப்போதைய  மதராஸ்  எனும் சென்னையில்  ஸமஸ்க்ரித  கல்லூரி வளாகத்தில் வருஷத்திற்கு ரெண்டு முறை  நவராத்ரி விழா ஜோராக நடத்துவார்கள்.   முதல் நவராத்ரி விழா  வசந்த காலத்தில், ராமநவமியை  ஒட்டி  முடியும்  அதற்கு வசந்த நவராத்ரி என்று பெயர். 

 ரெண்டாவது நவராத்ரி வழக்கம் போல்   செப்டம்பர் மாதம் வரும்.  ஸரஸ்வதி பூஜை ,  விஜய தசமி யோடு நிறைவு பெறும் . இதற்கு  சரத்  நவராத்ரி  என்று பெயர். சரத்காலத்தில் நடைபெறுவதால் இந்த பெயர். ரெண்டு நவராத்ரிகளும் மடத்தில் நடைபெறும்.  

1932 ம் வருஷம்  அக்டோபர் 1ம் தேதி சரத் நவராத்ரி மெட்ராஸில்  துவங்கியது.  நவராத்ரி ஆரம்பத்தில் இருந்தே  மஹா பெரியவா  ஒன்பது நாளும்  மௌன வ்ரதம். விஜய தசமி அன்று தான் மௌனம் கலைந்தது.  அப்போதெல்லாம்  பூஜை காலை  மாலை  இரு  வேளைகளிலும் நடந்தது.  மஹா பெரியவா தரிசனம் பெறவும் , பூஜையைக்  காண்பதற்கும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.   அவரவர் சக்திக்கேற்ப  பூஜை சாமான்கள்,  மடத்துக்கு தேவையான பொருள்களை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்துவார்கள்.

நவராத்ரி சமயம் பெண்களுக்கு விசேஷ அந்தஸ்து உண்டு.  எல்லோரும் தேவி அவதாரம் அல்லவா?   வருவோர் போவோர்   அத்தனை  ஸ்த்ரீகளுக்கும் ம் மஞ்சள்,  குங்குமம், புஷ்பம்,  வஸ்திரம், திருமாங்கல்ய கயிறு  அளிக்கப்பட்டது.   தினமும்  பெண்களுக்கு தனி பந்தி  போஜனம். அவர்கள் சாப்பிட்ட பிறகு தான் மற்றவர்களுக்கு.   தினமும் சின்ன குழந்தைகளுக்கு  கன்யா பூஜை  ரெண்டு வயசு முதல் 10வயசு வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு பூஜை  வேதோக்தமாக நடந்தது.   பக்தர்கள் இந்த கன்யா பூஜையைப் பார்க்க  ஏராளமாக காத்திருப்பார்கள். 


பத்துநாளும்  காலை  மாலை என்று  வித்வான்கள், சாஸ்திரிகள், பண்டிதர்கள் எல்லோரும் குழுவாக அமர்ந்து  தேவி பாகவதம், ராமாயணம், கீதை, ப்ரம்ம சூத்ர  பாஷ்யம்  பாராயணம் செய்வார்கள்.  தினமும் ஸ்ரீ வித்யா ஹோமம் நடக்கும்.   மடத்தில்  விசேஷமாக  சண்டி  ஹோமம் நடத்துவார்கள். இதெல்லாம் இதற்கு முன்  பக்தர்கள் மெட்றாஸில்  பார்த்ததில்லை. ஆச்சர்யம் எல்லோருக்கும். எவ்வளவு  விமரிசையாக பெரியவா நடத்துகிறார் என்று ஆயிரக்  கணக்கானோர் வந்து தரிசித்து கண் கொள்ளாக்காட்சியாக  ஆனந்தம் அடைந்தார்கள்.   மைலாப்பூர் முழுதுமே  இந்த பத்து நாட்களும்  ஸரஸ்வதி பூஜை வரை விழாக்கோலம் பூண்டிருந்தது. 

மஹா பெரியவா வருவதற்கு முன்பே  ஸமஸ்க்ரித  கல்லூரி வளாகத்தில் இருந்த கிணற்றை ஸ்ரீ  K    பால சுப்பிரமணிய ஐயர்  ஏற்பாட்டில்  அகலப்படுத்தினார்கள்.  ஒரு சிறு  தொட்டி,  குளம் மாதிரி,   மஹா பெரியவா ஸ்னானத்திற்காக  அமைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் மஹா பெரியவா ஸ்னானம் அங்கே நடந்தது.  மஹா பெரியவா நினைவாக அந்த தொட்டி, கிணறு,   ஸ்ரீ சந்திரசேகரேந் திர  ஸரஸ்வதி தீர்த்தம் என்று பெயர் பெற்றது. 

ஸமஸ்க்ரித  கல்லூரியில்  மஹா பெரியவா  தினமும்  பண்டிதர்கள், வித்வான்களை  சந்தித்து சம்பாஷணை நடத்த ஒரு மண்டபம் தயார் செய்திருந்தார்கள்.  நாட்டின் பல பாகங்களிலிருந்து ஸாஸ்த்ர விற்பன்னர்கள் வந்திருந்தார்கள். விஜய தசமி அன்று ஒரு பெரிய ஸதஸ் நடந்தது. மஹா பெரியவா  அன்று  மௌன வ்ரதம்  முடித்திருந்ததால் அவரும் கலந்து கொண்டார்.  அன்று விவாதம் தலைப்பு ''ப்ரம்ம சூத்ர  பாஷ்யம்''.   அந்த மண்டபத்திற்கு அன்றுமுதல் ''பாஷ்ய மண்டபம்'' என்ற பெயர் நிலைத்து விட்டது. 

சமஸ்க்ரித  கல்லூரியில் தங்கியிருந்தபோது  மஹா பெரியவா  அருகே இருந்த  ஸ்ரீ   ராமகிருஷ்ண மிஷன் பள்ளிக்கு ஒரு முறை சென்றார். தலைமை ஆசிரியர்  ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் பெரியவாளை பூர்ண கும்ப மரியாதையோடு பள்ளிக்கூடவளாகத்தின் வாயில் வரவேற்றார். 
பள்ளிக்கூட  வகுப்பு அறைகளைச்  சுற்றிப்  பார்த்த மஹா பெரியவாளுக்கு  மாணவர்களின் அன்றாட வழிபாட்டு முறை பற்றி விளக்கினார்.  ராமகிருஷ்ண மடத்தின் சீடர்களின்  உழைப்பை பாராட்டிய மஹா பெரியவா  அவர்கள் எப்போதும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசங்களை நினைவில் கொண்டு மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும்  எடுத்துச் சொல்ல வேண்டும் என்று  கேட்டுக்
கொண்டார். 

அன்று விசேஷமான ஒரு நிகழ்ச்சியாக  மஹா பெரியவா முன்பு  சங்கீத வித்வான்  ஸ்ரீ  G N பால சுப்பிரமணிய ஐயர்   கர்நாடக சங்கீத கச்சேரி ஏற்பாடு செய்திருந்தார்கள்.   மஹா பெரியவா  சங்கீதப்ரியர் என்பதால் நன்றாக ரசித்தார்.    

மஹா பெரியவா எல்லோருக்கும்  அக்ஷதை விபூதி பிரசாதம் வழங்கினார்.  செட்டி நாட்டிலிருந்து வந்த ஒரு மஹா பெரியவா பக்தர்,   மஹா பெரியவா விஜய நினைவாக , மஹாபெரியவாளின் பெரிய  திருவுருவப்  படம் ஒன்றை பள்ளிக்கூடத்திற்கு  அன்பளிப்பாக  கொடுத்தார்.  

1932ம் வருஷம்  செப்டம்பர் மாதம் ரெண்டாவது வாரம்  மஹாத்மா காந்தி ஒரு உண்ணாவிரதம் மேற் கொண்டார்.  உயர் ஜாதி ஹிந்துக்கள்,  தாழ்ந்த ஜாதி ஹிந்துக்கள்,  ஹரிஜன் எனப்படுவோருக்கும் சமரசம் ஏற்படவேண்டும். அதுவரை சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்திருந்தார்.  மஹாத்மா உடல்நிலை பற்றி கவலை கொண்டு பண்டிட் மதன் மோகன் மாளவியாவும் ராஜாஜியும்  பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.   உண்ணாவிரதம் துவங்கி எட்டே நாளில்  24.9.1932 அன்று பூனாவில் ஒரு தீர்மானம் நிறைவேறியது.   ஆகவே  மஹாத்மா காந்தி தனது உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தினார்.

ஹரிஜனங்களும் ஆலயத்தில் பிரவேசிக்க அனுமதிக்கப்பட  வேண்டும் என்று காந்திஜி  கேட்டுக்  கொண்டதற்கு   தீவிர  சனாதன தர்ம வாதிகள்  எதிர்ப்பு தெரிவித்தனர்.  தீர்மானத்தில் இது பற்றி ஒரு கோரிக்கையும் இல்லை.  தவிர  இது  வேத ஆகம சாஸ்த்ரத்துக்கு விரோதமானது என்றார்கள்.  சில  ஹரிஜன் மக்கள் அமைப்புகளும்  ஆலயப்  பிரவேசத்தால் தங்களுக்கு எந்த வித லாபமும் இல்லை என்று அறிவித்தார்கள்.  காந்தியின் வேண்டுகோள் நாடெங்கும் பரப்பப்பட்டது.  குருவாயூர்  கிருஷ்ணன் கோவில் இதை ஆதரிக்க வில்லை.  

மஹா பெரியவா ஆசிர்வாதத்தோடு ஒரு குழு  10.12.1932 அன்று கேரளா சென்றது.  அந்த குழுவில் பங்கேற்ற சிலர் பெயர்கள் நீங்கள் அறிந்த பிரபலங்கள் தான்.   ஸ்ரீ  T  R   ராமச்சந்திர ஐயர் , திருப்புகழ் மணி T M  கிருஷ்ணஸ்வாமி ஐயர்,  சிவராமகிருஷ்ணன், ராஜகோபால ஐயர் , S.சுப்ரமணிய ஐயர் , M K ஆச்சார்யா, V சோமதேவ சர்மா ஆகியோர்.  பாலக்காடு  முனிசிபல் தலைவர் ஸ்ரீ S K  ராமஸ்வாமி ஐயர்  இந்த குழுவை வரவேற்றார்.  டிசம்பர் 10  அன்று ஒரு பொதுக்கூட்டம்   பாலக்காட்டிலும்,   அடுத்த  நாள்  குருவாயூரிலும்  நடைபெற்றது.  குருவாயூர்  கூட்டத்திற்கு கோட்டக்கல் ராஜா தலைமை வகித்தார்.   பாலக்காடு டாக்டர்  சங்கர ஐயர், தேக்கடி கோவிந்த மேனன் ஆகியோர் பிரசங்கம் செய்தார்கள்.   ஹரிஜன  ஆலயப்  பிரவேசத்தை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  எதிர்ப்பு போராட்டத்தில் பல கேரள  பெண்கள் பங்கேற்றனர்.  காந்திஜி ஆலோசனைப்படி  பாபு ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, K  பாஷ்யம்,  வரதாச்சாரி,  ஆகியோர் மைலாப்பூர் வந்து மஹா பெரியவாளை சந்தித்தாலும்  இந்த சந்திப்பால் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. 

மஹா பெரியவா மெட்ராஸில்  இருந்த நான்கு மாத காலமும் அற்புதமாக தினமும் பிரசங்கங்கள் நிகழ்த்தினார்.  12.10.1932 அன்று  மஹா பெரியவா நிகழ்த்திய  ''நமது மதம்'' என்ற தலைப்பு  பிரசங்கத்தை படித்தேன் அற்புதமாக இருந்தது. அந்த  பிரசங்க  சாராம்சத்தை  சுருக்கமாக அடுத்த பிரதியில் அளிக்கிறேன்.


sivan jaykay

unread,
Sep 10, 2021, 7:53:31 AM9/10/21
to amrith...@googlegroups.com


ஸ்ரீமந்  நாராயணீயம் -  நங்கநல்லூர்  J K  SIVAN  ----
48வது  தசகம்  

48. மருத மரங்கள்  சாய்ந்தன.

யசோதை விஷமக்கார கண்ணனை   ஒரு  பெரிய  கல் உரலோடு இணைத்து  கயிற்றால் கட்டி போட்டு  விட்டாள் . அது அவனுக்கு அவள் தந்த தண்டனை. அதற்கு பிறகு நடந்த அதிசயத்தை இந்த தசகம் சொல்கிறது. 

मुदा सुरौघैस्त्वमुदारसम्मदै-
रुदीर्य दामोदर इत्यभिष्टुत: ।
मृदुदर: स्वैरमुलूखले लग-
न्नदूरतो द्वौ ककुभावुदैक्षथा: ॥१॥

mudaa suraughaistvamudaara sammadaiH udiirya daamOdara ityabhiShTutaH |
mR^iduudaraH svairamuluukhale lagannaduuratOdvau kakubhaavudaikshathaaH ||

முதா³ ஸுரௌகை⁴ஸ்த்வமுதா³ரஸம்மதை³-
ருதீ³ர்ய தா³மோத³ர இத்யபி⁴ஷ்டுத꞉ |
ம்ருதூ³த³ர꞉ ஸ்வைரமுலூக²லே லக³-
ந்னதூ³ரதோ த்³வௌ ககுபா⁴வுதை³க்ஷதா²꞉ || 48-1 ||

குருவாயூரப்பா,  உன்னைத்  தனியே  விட்டு விட்டு  யசோதை உள்ளே சென்றுவிட்டாள் .  கல் உரலோடு வயிறு  கயிற்றில்  கட்டப்பட்டு   வீட்டின் பின் புறம் தோட்டம் உள்ள பகுதியில் நீ கட்டுண்டவனாக  அமர்ந்திருக்கிறாய்.  இதுவும் உன் முன்னேற்பாடு என்பதை நீ  மட்டுமே  அறிவாய்.  தேவாதி தேவர்கள் புகழ்ந்து போற்றிப்பாடும் நீ யசோதையின் இந்த  தண்டனையை  காராணார்த்தமாக  ஏற்றுக்  கொண்டது  உனக்கு தெரியும், உன்னால் எனக்கும் தெரியும்.  உன் மிருதுவான வயிறு தாம்புக்கயிற்றால் இறுக்கிக்  கட்டப்பட்டிருந்ததை குனிந்து பார்த்து  புன்னகைத்தாய். ''தாமோதரன்'' என்ற பெயர் உனக்கு  நிலைத்ததன் அர்த்தம் என்ன?,  தாமம் என்றால் கயிறு, உதரம் என்றால் வயிறு,   வயிற்றில் கயிற்றால் கட்டுண்டவன்  என்று  பொருள் அல்லவா? சுற்றிலும் பார்த்தாய்.  இரு பெரிய  மருத மரங்கள் அருகருகே உயர்ந்து எதிரே சற்று தூரத்தில்  நின்றிருந்தது உன் கண்ணில் பட்டது.  

कुबेरसूनुर्नलकूबराभिध:
परो मणिग्रीव इति प्रथां गत: ।
महेशसेवाधिगतश्रियोन्मदौ
चिरं किल त्वद्विमुखावखेलताम् ॥२॥

kubera suunurnalakuubaraabhidhaH parO maNigriiva iti prathaaM gataH |
maheshasevaadhigata shriyOnmadau chiraM kila tvadvimukhaavakhelataam || 2

குபே³ரஸூனுர்னலகூப³ராபி⁴த⁴꞉
பரோ மணிக்³ரீவ இதி ப்ரதா²ம் க³த꞉ |
மஹேஶஸேவாதி⁴க³தஶ்ரியோன்மதௌ³

இங்கே  சற்று பின்னோக்கி சென்று  ஒரு சரித்திரம் சொல்லவேண்டும்.
செல்வத்துக்கு அதிபதி குபேரன். அவனுக்கு  நள கூபரன்  என்று ஒரு பிள்ளை.  மணிக்ரீவன் என்று ஒருவன்.  இருவரும்  வெகு காலம்  சிவபெருமானை நோக்கி தவமிருந்து சிவபக்தியால் உண்டான  அழகிய உருவத்தை பெற்றவர்கள். இதனால் கர்வம் உச்சந்தலைக்கு ஏறிவிட்டது.  உன்னை ஒரு பொருட்டாக  அவர்கள் மதிக்கவில்லை. தான் என்கிற அகம்பாவம் அவர்களை ஆட்கொண்டது. 

सुरापगायद्बहुयौवतावृतौ ।
विवाससौ केलिपरौ स नारदो
भवत्पदैकप्रवणो निरैक्षत ॥३॥
 
suraapagaayaaM kila tau madOtkaTau suraapagaayad bahuyauvataa vR^itau |
vivaasasau keliparau sa naaradO bhavatpadaika pravaNO niraikshata || 3

ஸுராபகா³யாம் கில தௌ மதோ³த்கடௌ
ஸுராபகா³யத்³ப³ஹுயௌவதாவ்ருதௌ |
விவாஸஸௌ கேலிபரௌ ஸ நாரதோ³
ப⁴வத்பதை³கப்ரவணோ நிரைக்ஷத || 48-3 ||

இந்த நளகூபர இளைஞர்கள்  ஒரு சமயம்  பல பெண்களோடு சேர்ந்து  மது மயக்கத்தில் கேளிக்கைகளில்  ஆட்டம் பாட்டுமாக களித்திருந்தனர். கங்கையில் இறங்கி அதன் புனிதத்துக்கு ஊறு  விளைவித்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்களது காமக்  களியாட்டம் எல்லை கடந்திருந்தது. அந்த சமயத்தில்  உனது சிறந்த பக்தரானான  நாரத முனிவர் அங்கு வர நேர்ந்தது.  தவத்திலும் பக்தியிலும் இணையற்ற உலகம் போற்றும்  மஹ ரிஷி அல்லவா அவர்?

भिया प्रियालोकमुपात्तवाससं
पुरो निरीक्ष्यापि मदान्धचेतसौ ।
इमौ भवद्भक्त्युपशान्तिसिद्धये
मुनिर्जगौ शान्तिमृते कुत: सुखम् ॥४॥
 
bhiyaa priyaalOkamupaattavaasasaM purO niriikshyaapi madaandha chetasau |
imau bhavadbhaktyupashaanti siddhaye munirjagau shaantimR^ite kutaHsukham || 4

பி⁴யா ப்ரியாலோகமுபாத்தவாஸஸம்
புரோ நிரீக்ஷ்யாபி மதா³ந்த⁴சேதஸௌ |
இமௌ ப⁴வத்³ப⁴க்த்யுபஶாந்திஸித்³த⁴யே
முனிர்ஜகௌ³ ஶாந்திம்ருதே குத꞉ ஸுக²ம் || 48-4 ||

நாரதர் அங்கு வந்ததைக் கண்ட அந்த பெண்கள், அவசரமாக  ஆடைகளை மேலே சுற்றிக்கொண்டு ஒதுங்கினார்கள்.  நளகூபர சகோதரர்கள் இதைக் கண்டார்கள். ஆனால்  அவர்கள் இறுமாப்போடு  தங்களது கேளிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.  நாரத ரிஷியை துளியும் லக்ஷியம் செய்யவில்லை. அவர்கள் அறிவை மது ஆக்கிரமித்துவிட்டது .  நாரதர் கோபம் கொள்ளவில்லை.  அவர்களுக்கு  இதமாக  சில வார்த்தைகள் கூறி உன்னை நினைத்து வழிபட அறிவுரை கூறினார். மனதை மாதவன் பக்கம் திருப்புங்கள் என்று மனதார கூறினார். தாழ்ந்த நிலையிலிருந்து உள்ளம்  உயர்வு கொள்ள வழி கூறினார். 

युवामवाप्तौ ककुभात्मतां चिरं
हरिं निरीक्ष्याथ पदं स्वमाप्नुतम् ।
इतीरेतौ तौ भवदीक्षणस्पृहां
गतौ व्रजान्ते ककुभौ बभूवतु: ॥५॥

yuvaamavaaptau kakubhaatmataaM chiraM hariM niriikshyaatha padaMsvamaapnutam |
itiiritau tau bhavadiikshaNaspR^ihaaM gatau vrajaante kakubhaubabhuuvatuH || 5

யுவாமவாப்தௌ ககுபா⁴த்மதாம் சிரம்
ஹரிம் நிரீக்ஷ்யாத² பத³ம் ஸ்வமாப்னுதம் |
இதீரிதௌ தௌ ப⁴வதீ³க்ஷணஸ்ப்ருஹாம்
க³தௌ வ்ரஜாந்தே ககுபௌ⁴ ப³பூ⁴வது꞉ || 48-5 ||

குருவாயூரப்பா, அப்புறம் நடந்தது உனக்கு தெரியும்  என்றாலும்  உன்னால் அதெல்லாம் அறிந்த நான் சொல்கிறேன் கேள்.    நாரதரின் நல்லுபதேசம்  நளகூபரர்கள் செவியில் ஏறவே இல்லை.  மது அவர்கள் மதியை மயக்கி ஆணவம் தலைக்கேறி விட்டதால் நாரத முனிவரை உதாசீனம் செய்தார்கள்.  ''நீங்கள் இருவரும்  மருத மரங்களாக  வெகுகாலம் வாழ்வீர்கள். என்றோ ஒருநாள்  ஹரியின் கருணையால் நீங்கள்  திரும்பவும் உங்கள் உருவத்தை பெற்று திரும்புவீர்கள்.'' என்று சாபமிட்டார் நாரத ரிஷி.   அப்போது தான் அவர்களுக்கு புத்தி  வந்தது. ஆஹா  இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தினாலும்  விடிவு காலத்தை நோக்கி  இரு  மருதமரங்களாகி  வ்ரஜ பூமியில்  நந்தகோபன் வீட்டு பின்புறம்  கொல்லைப்புறத்தில் நெடிதுயர்ந்து  காலம் காலமாக உன் வரவை, கருணையை எதிர்பார்த்து நின்றார்கள். 

अतन्द्रमिन्द्रद्रुयुगं तथाविधं
समेयुषा मन्थरगामिना त्वया ।
तिरायितोलूखलरोधनिर्धुतौ
चिराय जीर्णौ परिपातितौ तरू ॥६॥

atandramindradruyugaM tathaavidhaM sameyuShaa mantharagaaminaa tvayaa |
tiraayitOluukhalarOdhanirdhutau chiraaya jiirNau paripaatitau taruu ||6

அதந்த்³ரமிந்த்³ரத்³ருயுக³ம் ததா²வித⁴ம்
ஸமேயுஷா மந்த²ரகா³மினா த்வயா |
திராயிதோலூக²லரோத⁴னிர்து⁴தௌ
சிராய ஜீர்ணௌ பரிபாதிதௌ தரூ || 48-6 ||

கிருஷ்ணா, குழந்தையாக, கயிற்றால் வயிற்றில் கட்டுண்டு கல் உரலோடு நின்ற நீ  ஒரு க்ஷண நேரத்தில் எதிரே நீண்டு உயர்ந்து நின்ற இரு மருத மரங்களின் சரித்திரத்தை உணர்ந்து கொண்டாய். திரும்பி பார்த்தாய் கல் உரல் அசையாமல்கெட்டியாக  உன் வயிற்றோடு கயிற்றால் பிணைக்கப்பட்டு நின்றது.  கல்  உரலும்,  கிருஷ்ணா,    நீ யும் இப்போது இணை பிரியாத ஜோடி. கல் உரலோடு மருத மரங்களை நோக்கி  நகர்ந்தாய்.  இரு மருத மரங்களுக்கும்  இடையே கொஞ்சூண்டு இடைவெளி.    கொஞ்சமும்  தயக்கமில்லாமல், பயம் எதுவுமில்லாமல்,  பெரிய கல் உரல் பின் தொடர அந்த மரங்களின் இடையே உன் சிறிய  குழந்தை உருவத்தோடு  நீ  அந்தப்பக்கம்  நுழைந்து சென்று விட்டாய். பெரிய கல்லுரலால் உன்னைத் தொடன்று அந்த பக்கம் நுழைந்து வரமுடியவில்லையே. 

பல ஆண்டுகள் நின்று வயதான மரங்கள் அவை இரண்டும். பேரிடி போன்று  கிருஷ்ணனின் பலத்தால் இழுக்கப்பட்ட அந்த கல்லுரல்  அந்த மரங்களின் இடைவெளியில் புகமுடியாமல்  மரங்களை இடித்தது.  கல் உரல் பலமாக  இடித்து தள்ளியதால்  அந்த இரு மரங்களும் தடால் என்று  வேரோடு சாய்ந்து விழுந்தன. 

अभाजि शाखिद्वितयं यदा त्वया
तदैव तद्गर्भतलान्निरेयुषा ।
महात्विषा यक्षयुगेन तत्क्षणा-
दभाजि गोविन्द भवानपि स्तवै: ॥७॥

abhaaji shaakhidvitayaM yadaa tvayaa tadaiva tadgarbhatalaannireyuShaa |
mahaatviShaa yakshayugena tatkshaNaadabhaaji gOvinda bhavaanapi stavaiH || 7

அபா⁴ஜி ஶாகி²த்³விதயம் யதா³ த்வயா
ததை³வ தத்³க³ர்ப⁴தலான்னிரேயுஷா |
மஹாத்விஷா யக்ஷயுகே³ன தத்க்ஷணா-
த³பா⁴ஜி கோ³விந்த³ ப⁴வானபி ஸ்தவை꞉ || 48-7 ||

''அப்பா,  குருவாயூரப்பா  கோவிந்தா,  உன் பலத்தால் அந்த  இரு மருத மரங்களும்  வேருடன் விழுந்தன. அவற்றிலிருந்து  இரு  பிரகாசம் நிறைந்த  யக்ஷர்கள் வெளிப்பட்டனர்.  உன்னை தரிசித்து  வணங்கினார்கள் . வெகுகாலமாக உனக்காக காத்திருந்த அவர்கள் நன்றி யுணர்ச்சி யோடு உன்னை மனதார வேண்டி போற்றினார்கள்.

इहान्यभक्तोऽपि समेष्यति क्रमात्
भवन्तमेतौ खलु रुद्रसेवकौ ।
मुनिप्रसादाद्भव्दङ्घ्रिमागतौ
गतौ वृणानौ खलु भक्तिमुत्तमाम् ॥८॥

ihaanya bhaktO(a)pi sameShyati kramaad bhavantametau khalu rudrasevakau |
muni prasaadaad bhavadanghri maagatau gatau vR^iNaanau khalubhaktimuttamaam

இஹான்யப⁴க்தோ(அ)பி ஸமேஷ்யதி க்ரமாத்
ப⁴வந்தமேதௌ க²லு ருத்³ரஸேவகௌ |
முனிப்ரஸாதா³த்³ப⁴வத³ங்க்⁴ரிமாக³தௌ
க³தௌ வ்ருணானௌ க²லு ப⁴க்திமுத்தமாம் || 48-8 ||

சிறந்த சிவ  பக்தர்களான நளகூபரர்கள் உன் அருமை பெருமை உணர்ந்து  உனது திருவடியில் விழுந்து வணங்கினார்கள். நாரதரின் ஆசியால் உன் பக்தர்களானார்கள்.  அவருக்கு நன்றி சொன்னார்கள்.    மிக்க  மகிழ்ச்சியோடு உன் ஆசியோடு  விண்ணுலகம் திரும்பினார்கள். 

ततस्तरूद्दारणदारुणारव-
प्रकम्पिसम्पातिनि गोपमण्डले ।
विलज्जितत्वज्जननीमुखेक्षिणा
व्यमोक्षि नन्देन भवान् विमोक्षद: ॥९॥

tatastaruuddaaraNa daaruNaarava prakampi sampaatini gOpamaNDale |
vilajjita tvajjananii mukhekshiNaavyamOkshi nandena bhavaan vimOkshadaH || 9

ததஸ்தரூத்³தா³ரணதா³ருணாரவ-
ப்ரகம்பிஸம்பாதினி கோ³பமண்ட³லே |
விலஜ்ஜிதத்வஜ்ஜனநீமுகே²க்ஷிணா
வ்யமோக்ஷி நந்தே³ன ப⁴வான்விமோக்ஷத³꞉ || 48-9 ||

இது இவ்வாறிருக்க, அந்த ரெண்டு நெடிய வயதான  நீண்ட உயரமான  இரு மருதமரங்களும் வேருடன் கீழே விழுந்தபோது  நிலமே அதிரும்படியாக  தடால்  என்று சப்தம் கேட்டதால்  கோபர்கள்  கோபியர்கள் திடுக்கிட்டனர். என்ன இது   செவிடு பொடியாகும் சப்தம் என்று யசோதையோடு சேர்ந்து கொல்லைப்புறம்  அதிர்ச்சியோடு ஓடிவந்தார்கள். சிறிய குழந்தை நீ,  உனக்கு பின்னால்  கயிற்றில் கட்டப்பட்ட  கல் உரல். இரண்டுக்கும்  நடுவே  இந்தப்பக்கம் ஒன்று அந்தப்பக்கம் ஒன்றாக இரு நெடிய  பெரிய  மருத மரங்கள் விழுந்து கிடக்கிறது.  நந்தகோபன் ஓடிவந்து உன்னை கயிற்றிலிருந்து விடுவித்தான்.  முகம்  தான் செய்த காரியத்தால் குன்றிப்போக  தலை குனிந்து  யசோதை சிலையாக நின்று  கொண்டு உனைப் பார்த்தாள் .

महीरुहोर्मध्यगतो बतार्भको
हरे: प्रभावादपरिक्षतोऽधुना ।
इति ब्रुवाणैर्गमितो गृहं भवान्
मरुत्पुराधीश्वर पाहि मां गदात् ॥१०॥

mahiiruhOrmadhyagatO bataarbhakO hareH prabhaavaadaparikshatO(a)dhunaa |
iti bruvaaNairgamitO gR^ihaM bhavaan marutpuraadhiishvara paahi maamgadaat || 10

மஹீருஹோர்மத்⁴யக³தோ ப³தார்ப⁴கோ
ஹரே꞉ ப்ரபா⁴வாத³பரிக்ஷதோ(அ)து⁴னா |
இதி ப்³ருவாணைர்க³மிதோ க்³ருஹம் ப⁴வான்
மருத்புராதீ⁴ஶ்வர பாஹி மாம் க³தா³த் || 48-10 ||

''ஹா,   தெய்வமே என் செல்வத்தை காப்பாற்றினாயே, அந்த மரங்கள் இந்த குழந்தை மேல் விழுந்திருந்தால் உயிர் தப்பியிருக்குமா, கோவிந்தா, நாராயணா, ஹரி, நீதான் காப்பாற்றினாய் என்று  யசோதையோடு  சேர்ந்து அனைவரும்  உரக்க  உன்னையே  போற்றினார்கள்.  வயதான இந்த மரங்கள் தானாகவே விழும் வேளையில் உரலோடு இந்த குழந்தை அங்கே போய் சிக்கிக்கொண்டது, உயிர் தப்பியது  ஏதோ  அந்த  மஹா விஷ்ணு அனுக்ரஹத்தால், பூர்வ புண்யத்தால் என்று அதிசயித்தார்கள். கண்களில் கண்ணீரோடு  யசோதை தான் செய்த காரியத்துக்கு வருந்தி உன்னை வாரி முத்தமிட்டு இடுப்பில் உட்காரவைத்துக்கொண்டு உள்ளே சென்றாள் .

எண்டே குருவாயூரப்பா,  நளகூபரர்களுக்கு காருண்யம் வழங்கிய  நீ எனக்கும் நோய் தீர்த்து வாழ வகை செய்யப்பா''  என்று இந்த தசகத்தை மேப்பத்தூர்  நாராயண பட்டத்ரி நிறைவு செய்கிறார்.

தொடரும்  

sivan jaykay

unread,
Sep 10, 2021, 7:54:33 AM9/10/21
to amrith...@googlegroups.com
பிள்ளையாரி''      நங்கநல்லூர்   J.K. SIVAN

இப்போது எங்கும்  பிள்ளையார் பற்றிய பேச்சு  எழுதது தான் கண்ணில் படுகிறது, காதில் விழுகிறது. நல்லது  கேட்டது ரெண்டும் சேர்ந்தது தான் உலகம்.  நல்லதை பிடிக்கிறபோது  கெட்டதை நினைக்கவேண்டாம், கேட்கவேண்டாம். படிக்கவேண்டாம்,  பேசவேண்டாம். மனித ஸ்வபாவம் வேடிக்கையானது.  எதிர்மறையாக சில நேரங்களில் யோசிக்கும் பழக்கம் மனதுக்கு உண்டு. அதற்கு எப்போதும்  மாறுதல் ரொம்ப பிடிக்கும்.  ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் கற்பனை செய்து, சிங்காரித்து, பெயர் வைத்து மகிழ்வது. பெண்ணை பிள்ளையாக  ''டா'' போட்டு அழைப்பது பேசுவது இன்னும்  சில வீடுகளில் பழக்கம். அதேபோல் பிள்ளையை பெண்ணாக சிங்காரித்து அழகு பார்ப்பதும் உண்டு.

ஆண் குழந்தைகள் தலையில் பின்னலோடு, கவுன் போட்டுக்கொண்டு, கண்ணில் மை இட்டுக் கொண்டு, காலில் கொலுசு போட்டுக் கொண்டு 7-10 வயது வரை கூட பார்த்து இருக்கிறேன். என் ரெண்டு அண்ணாக்கள் பெண் வேடத்தில் இருக்கும் பழைய புகைப்படம் வெகுநாள் என்னிடம் இருக்கிறது.

பெண்ணாக கிருஷ்ணனையே பாவித்து நிறைய பாரதியார் பாடி இருக்கிறார். அத்தனையும் அற்புதங்கள். என்னுடைய  ''எந்தையே நந்தலாலா'' புத்தகத்தில் நிறைய தேடி பிடித்து எழுதி இருக்கிறேனே. வேண்டும் என்பவர்கள் பெற்றுக்கொள்ளலாம். விலை போடப்படாத புத்தகம். நன்கொடை  பெற்று அந்த வருமானத்தில் புத்தகங்கள் பிரசுரித்து விநியோகிக்கிறோம்.புத்தகங்கள் வேண்டுவோர் என்னை  வாட்ஸாப்ப் 9840279080ல் முகவரியோடு  அணுகலாம். அனுப்புகிறேன்.

ஆழ்வார்களும் பக்தி பரவசத்தில் பராங்குச நாயகி, பரகால நாயகி என்று பெயரோடு விளங்கி இருக்கிறார்கள். மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் தன்னை ஒரு பெண்ணாக கற்பனை செயது பாடிய பாடல்கள் அற்புதமானவை.

நடாதூர் அம்மாள் என்றும் ஒருவர் பெண்ணல்ல ஆண் .நாயன்மார்களில் இப்படி சிலர் உண்டு. திருவானைக்கா கோவிலில் நடுப்பகலில் சிவாச்சாரியார் புடவை தரித்துக்கொண்டு அகிலாண்டேஸ்வரி சந்நிதியில் வழிபாடு நடத்துவது அங்கே சென்று தரிசித்தவர்களுக்கு தெரியும். இது தினமும் நடைபெறுவது.  நான் பார்த்திருக்கிறேன்.  கடவுளை பெண்ணாக சேர்த்தே வழிபடுவதும் நமக்கு வழக்கம். சிவன் அர்த்தநாரி. விஷ்ணு மோஹினி, விஷ்ணு மாயா.

ஆனால் யாராவது பிள்ளையாரை  பெண்ணாக பார்த்திருக்கிறீர்களா?  நான் பார்த்திருக்கிறேன். விக்னேஸ்வரரை விக்னேஸ்வரியாக பார்த்தபோது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது.  பிள்ளையார்  சதுர்த்தி அன்று இந்த விஷயத்தை சொன்னால் கொஞ்சம் வித்யாசமாக இருக்கும் அல்லவா?

பிள்ளையாருக்கு ஒரு ஸ்வபாவம். கணேசன் அவரைச் செய்யும் களிமண் போலே எளிதில், நினைத்த படி யெல்லாம் வளைந்து கொடுக்கக் கூடிய தெய்வம். இந்த ஒரு காரணத்தாலேயே அவரைப் பணியாத பக்தர்களே கிடையாது. எல்லோருக்கும் பொதுவானவர். எந்தெந்த உருவில் எல்லாம் அவரைப் பார்த்தாலும் அதிகமாக ஒரு பெண் தெய்வமாக பிள்ளையாரைப் பார்த்ததில்லையே என்ற குறை இன்று என்னைப்போலவே உங்களிலும் பல பேருக்கு தீர்ந்து விடும்..இத்துடன் இணைத்த படங்களை பாருங்கள்.

வினாயகி, கணேசனி, கணேஸ்வரி, கஜானனி என்று பெயர்கள் அதிகம் பரிச்சயம் இல்லை அல்லவா. தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் இருக்கிறாள் இவள். அவளை சக்தியாக யோகினி தேவதையாக கொண்டாடுகிறார்கள்.

கணேசர் பிரம்மச்சாரி. ஒண்டிக்கட்டை. எங்காவது சாதுவாக அரசமரத்தடியில், வேப்ப மரத்தடியில், நாற்சந்தியில், தெரு ஓரத்தில், குளத்தங்கரை, ஆற்றங்கரையில் அவரை பார்க்கிறோம். சித்தி புத்தி என்று இருவரோடும் பார்த்ததுண்டு. ஆனால் அவரையே பெண்ணாக???

மதுரையில் வியாக்ரபாத கணபதியாக இருக்கிறார். புலியுடைய பாதங்களோடு .யானைத் தலை. மனித உரு. ஆனால் பெண் உடம்பு. வினாயகி!!

சுசீந்திரத்தில் கணேசனி தாணுமாலய ஆலயத்தில் இருக்கிறாள்.

வட தேசத்தில் நிறைய இடங்களில் கஜானனி இருக்கிறாள். பல நூற்றாண்டுகளாக இருந்து சிதைந்து போன ஒரு சிலையை படத்தில் பார்த்ததும் தான் அவளைத் தேடினேன். புராணங்கள் அவளைப் பற்றி சொல்கிறது.

ராஜஸ்தானில் சிகார் என்று ஒரு ஊரில் விக்னேஸ்வரியை ஒரு பழைய சிவன் கோவிலில் வழிபடுகிறார்கள். வேதங்களில் கூட வித்யா கணபதியை பெண்ணுருவில் தான் காட்டியிருக்கிறது. வல்லப கணேசனி என்றும் பெயர். சுசீந்திரத்தில் சுகாசன கோலத்தில் கணேசனியை காணலாம்.

ஜபல் பூரில் பேரகாட் என்ற ஊரில் 64 யோகிநிகளுக்கு ஒரு கோவில். அதில் முதல் யோகினி கணேசனி. இவளை மற்ற சௌசதா யோகினி கோவில்களில் ரிகியன், ஹிரபூர், ராணிப்பூர், ஜாரியல் ஆகிய ஊர்களில் பார்க்கலாம். வடக்கே நிறையவே இருக்கிறாள். பழைய கால சிலைகளில் சிதைந்து இவள் காண்பது இவளை பண்டைய காலத்திலேயே வழிபட்டார்கள் என்றும் புரிகிறது. திபெத்தில் கூட கஜானனி தெய்வமாக நிற்கிறாள்.

என்னவோ விக்னேஸ்வரர் அதிகமாக பெண் தெய்வமாக வணங்கப் படவில்லை. அதிக வழிபாடுகளும் பரவலாக இல்லை. வேதங்கள், புராணங்களும் கொஞ்சம் சைலென்ட் தான்.

ஒரு வேடிக்கை. வினாயகி ஒரு புத்த மத பெண் தெய்வமாக கணபதி ஹ்ரிதயா என்ற பேரில் தாந்த்ரிக வண்ண ஓவியங்களில் நேபாளத்தில் பார்த்திருக்கிறார்கள்.  பாலித் தீவிலும் கணேந்த்ரி திக் தேவதையாக உள்ளாள் . வாயுவின் திசையில் அமர்ந்திருக்கிறாள்

புத்தமதம் இவளைத் தேர்ந்தெடுத்தது. ஜைனர்கள் விரும்பினார்கள். ஐங்கிணி என்று பீடத்தில் ஜம்மென்று அமர்ந்திருக்கும் படம் கீழே கொடுத்திருக்கிறேன். முதலாவது நூற்றாண்டு ராஜஸ்தான் இவளை தந்தம் இல்லாமல் பெண்ணாக வணங்கியது. ஆதாரம் இருக்கிறது.

கணேசா நீ எப்படியெல்லாம் உருவெடுத்தாலும் எங்கள் உள்ளம் கொள்ளை போகுதே. இன்னும்  ரெண்டு மூன்று கட்டுரைகள்  விநாயகர் சம்பந்தமாக எழுதுகிறேன்.  அதற்கிடையே  ஒரு விண்ணப்பம். நாளை  விநாயக சதுர்த்தி என்பதால், நமக்கு  பூஜைக்கு களிமண் விநாயகர் முக்கியம் என்பதால் அவரவர்  வீட்டிலேயே  விநாயகர் செயது வழிபட வழி இருக்கிறது. இத்துடன் ஒரு வீடியோ அனுப்பி இருக்கிறேன். அதை நண்பர்களுக்கு அனுப்புங்கள். நமக்கு தேவை பக்தியும் களிமண்ணும் தான். அது ரெண்டு இருந்தால் வீட்டிலேயே ஐந்து நிமிஷத்தில் விநாயகர் தயாராகிவிடுவார். மற்றவை இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.     
https://youtu.be/0SU4zgdkVbM
VINAYAKI 2.jpg
VINAYAKI.jpe
VINAYAKI.jpg

sivan jaykay

unread,
Sep 10, 2021, 7:54:33 AM9/10/21
to amrith...@googlegroups.com

ஸ்ரீமந்  நாராயணீயம் -  நங்கநல்லூர்  J K SIVAN  --
49வது தசகம்

49.  பிரிந்தா வனமும் நந்தகுமாரனும்.

''போதும் போதும்  இந்த  கோகுல வாழ்க்கை''  என்று ஆகிவிட்டது நந்தகோபனுக்கும்  யசோதைக்கும்  ஒருநாளைப்போல  விடாமல் ஏதேனும்  ஒரு  ஆபத்து குழந்தை  நமது குட்டி  கிருஷ்ணனுக்கு வந்து கொண்டே இருக்கிறதே.  ராசியில்லாத இந்த இடத்தை விட்டு வேறு எங்காவது சென்றுவிடுவோம் என்று தீர்மானித்தார்கள். யமுனை நதிக்கரை அருகே  துளசி வனங்கள் நிறைந்த ஒரு தனிப்பகுதியை தேர்ந்தெடுத்தார்கள். அருகே ஒரு சிறு  குன்று கோவர்தன கிரி என்று இருந்தது. அந்த துளசிவனப்பகுதிக்கு  பிருந்தாவனம் என்று பெயர்.  அங்கே  குடியேறிவிட்டார்கள்.  ஆஹா  பிரிந்தாவனமும் நந்தகுமாரனும்  பிரிக்க முடியாத பெயர்கள் அல்லவா?  கிருஷ்ணனுக்கு பிருந்தாவனம் ரொம்ப ரொம்ப பிடித்து விட்டது. அங்கும் அவனுக்கு குறும்பு யாதவ சிறுவர்கள் கோஷ்டி சேர்ந்துவிட்டது  ரொம்ப சௌகர்யமாக போய்விட்டது.

भवत्प्रभावाविदुरा हि गोपास्तरुप्रपातादिकमत्र गोष्ठे ।
अहेतुमुत्पातगणं विशङ्क्य प्रयातुमन्यत्र मनो वितेनु: ॥१॥

bhavatprabhaavaaviduraa hi gOpaaH taruprapaataadikamatra gOShThe |
ahetumutpaatagaNaM vishankya prayaatumanyatra manO vitenuH || 1

ப⁴வத்ப்ரபா⁴வாவிது³ரா ஹி கோ³பாஸ்தருப்ரபாதாதி³கமத்ர கோ³ஷ்டே² |
அஹேதுமுத்பாதக³ணம் விஶங்க்ய ப்ரயாதுமன்யத்ர மனோ விதேனு꞉ || 49-1 ||

வ்ரஜ பூமி கோப கோபியர் எளிமையானவர்கள்.  கிருஷ்ணா, உன் ப்ரபாவத்தை அறியாதவர்கள். கோகுல வாழ்க்கை அவர்களுக்கு மன  நிம்மதி தராததற்கு காரணம் விடாமல் உனக்கு ஏதேனும் ஒரு ரூபத்தில்  ஏதாவது ஒரு ஆபத்து தொடர்ந்து வந்ததால் தான். கடைசியாக  அந்த நெடிய பெரிய  இரு மருதமரங்களில் ஒன்றாவது உன் மேல் விழுந்திருந்தால்....? போகுமிடம் வெகு தூரமில்லை. நீ வாராய் கண்ணா , இனி பிருந்தாவனத்தில் ஆனந்தமாக வாழ்வோம் என்று புறப்பட்டுவிட்டார்கள் .

तत्रोपनन्दाभिधगोपवर्यो जगौ भवत्प्रेरणयैव नूनम् ।
इत: प्रतीच्यां विपिनं मनोज्ञं वृन्दावनं नाम विराजतीति ॥२॥

tatrOpanandaabhidha gOpavaryO jagau bhavatpreraNayaiva nuunam |
itaH pratiichyaaM vipinaM manOj~naM bR^indaavanaM naama viraajatiiti || 2

தத்ரோபனந்தா³பி⁴த⁴கோ³பவர்யோ ஜகௌ³ ப⁴வத்ப்ரேரணயைவ நூனம் |
இத꞉ ப்ரதீச்யாம் விபினம் மனோஜ்ஞம் வ்ருந்தா³வனம் நாம விராஜதீதி || 49-2 ||

இந்த  பிரிந்தாவனத்துக்கு  செல்வோம் என்று  யோசனை சொன்னவன் உபநந்தன் எனும் கோபன். ''நந்தகோபா, நாம் இருக்கும் இந்த கோகுலத்துக்கு  மேற்கே, ஒரு சிறு காட்டுப்பிரதேசம் தனித்து இருக்கிறது. அதற்கு துளசிவனம் என்று பெயர், பிருந்தாவனம், அமைதியாக  எவர் தொந்தரவும் இல்லாத இடம்'' என்றான். அவனை  அப்படிப் பேச வைத்தவன்  நீ தான்  கண்ணா!

बृहद्वनं तत् खलु नन्दमुख्या विधाय गौष्ठीनमथ क्षणेन ।
त्वदन्वितत्वज्जननीनिविष्टगरिष्ठयानानुगता विचेलु: ॥३॥
 
bR^ihadvanaM tatkhalu nandamukhyaa vidhaaya gauShThiinamatha kshaNena |
tvadanvita tvajjananii niviShTa gariShTha yaanaanugataa vicheluH || 3

ப்³ருஹத்³வனம் தத்க²லு நந்த³முக்²யா விதா⁴ய கௌ³ஷ்டீ²னமத² க்ஷணேன |
த்வத³ன்விதத்வஜ்ஜனநீனிவிஷ்ட-க³ரிஷ்ட²யானானுக³தா விசேலு꞉ || 49-3 ||

இந்த  யோசனை நந்தகோபனுக்கும்  சரி என்று பட்டது . மேற்கொண்டு எந்த தாமதமும் இன்றி நந்தகோபனும் அவனது சகாக்கள்  எல்லோரும்   வண்டி கட்டிக்கொண்டு  முக்கியமான தேவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு  உன்னையும் , யசோதையையும்   ஏற்றிக்கொண்டு   காளை மாடு  ஜோடி  பூட்டிய வண்டி பிருந்தாவனம் நோக்கி ஜல் ஜல் என்று  சலங்கை ஒலியோடு  நடந்தது.

अनोमनोज्ञध्वनिधेनुपालीखुरप्रणादान्तरतो वधूभि: ।
भवद्विनोदालपिताक्षराणि प्रपीय नाज्ञायत मार्गदैर्घ्यम् ॥४॥

anO manOj~nadhvani dhenupaalii khurapraNaadaantaratO vadhuubhiH |
bhavadvinOdaalapitaaksharaaNi prapiiya naaj~naayata maarga dairghyam || 4

அனோமனோஜ்ஞத்⁴வனிதே⁴னுபாலீகு²ரப்ரணாதா³ந்தரதோ வதூ⁴பி⁴꞉ |
ப⁴வத்³வினோதா³லபிதாக்ஷராணி ப்ரபீய நாஜ்ஞாயத மார்க³தை³ர்க்⁴யம் || 49-4 ||

மேட்டிலும் பள்ளத்திலும்   ஆடி அசைந்து கொண்டு  கட கடவென்ற  சப்தத்தோடு   மாட்டு வண்டி நகர்ந்த அழகு,   பசுக்களின் பாத குளம்புகளின்  ஒலி,  கலகல வென்ற உன் சிரிப்பு,  வாய் ஓயாமல் மழலையில் நீ பேசும் சப்தம்,  இதெல்லாம்  கூட வந்தவர்களுக்கு  ஆனந்தம் தந்து,   பிரயாணம் அலுப்போ , களைப்போ ஒன்றும் தரவில்லை அப்பா.,

निरीक्ष्य वृन्दावनमीश नन्दत्प्रसूनकुन्दप्रमुखद्रुमौघम् ।
अमोदथा: शाद्वलसान्द्रलक्ष्म्या हरिन्मणीकुट्टिमपुष्टशोभम् ॥५॥

niriikshya bR^indaavanamiisha nandatprasuuna kunda pramukhadrumaugham|
amOdathaaH shaadvala saandra lakshmyaa harinmaNii kuTTimapuShTa shObham || 5

நிரீக்ஷ்ய வ்ருந்தா³வனமீஶ நந்த³த்ப்ரஸூனகுந்த³ப்ரமுக²த்³ருமௌக⁴ம் |
அமோத³தா²꞉ ஶாத்³வலஸாந்த்³ரலக்ஷ்ம்யா ஹரின்மணீகுட்டிமபுஷ்டஶோப⁴ம் || 49-5 ||

என்னப்பா குருவாயுரா, வாதபுரீசா,  பிருந்தாவனத்தை நினைத்தால் மனது எவ்வளவு சந்தோஷம் தருகிறது.  எங்கும்  நறுமணம் கமழும் பூத்துக்குலுங்கும் மரங்கள்,  கம்மென்று மூச்சு முட்டும் மல்லிகை மனோரஞ்சித மலர், மருக்கொழுந்து  வாசனை,  பச்சைப் பசேலென மிருதுவான புல்வெளி,  பிருந்தாவனம் ஒரு மரகத பூமியோ? '' உன் பார்வையிலேயே, முக மலர்ச்சியிலேயே தெரிந்து விட்டது கண்ணா, உனக்கு பிருந்தாவனம் உன் மனதை கொள்ளைகொண்டு  விட்டது என்று.

नवाकनिर्व्यूढनिवासभेदेष्वशेषगोपेषु सुखासितेषु ।
वनश्रियं गोपकिशोरपालीविमिश्रित: पर्यगलोकथास्त्वम् ॥६॥

navaaka nirvyuuDha nivaasa bhedeShvasheSha gOpeShu sukhaasiteShu |
vanashriyaM gOpakishOrapaalii vimishritaH paryagalOkathaastvam || 6

நவாகனிர்வ்யூட⁴னிவாஸபே⁴தே³-ஷ்வஶேஷகோ³பேஷு ஸுகா²ஸிதேஷு |
வனஶ்ரியம் கோ³பகிஶோரபாலீ-விமிஶ்ரித꞉ பர்யவலோகதா²ஸ்த்வம் || 49-6 ||

கோபியர்கள் ஆங்காங்கே தங்களுக்கு பிடித்த  இடத்தில் அழகாக  மண் குடிசை அமைத்துக் கொண்டார்கள். ஒரு அருமையான  கிராமம் அங்கே உருவாகி விட்டது. கோகுலத்தில் பிரதிபலிப்பா  பிருந்தாவனம்?  கோபியர் வீட்டு குழந்தைகள் எல்லாரும் உன்னோடு  ஒன்று  சேர்ந்துவிட்டார்கள்  ஓடி விளையாட.   அருகே  இருந்த வனப்பகுதி  ஒரு வரப்பிரசாதமாக போய்விட்டது. விளையாட இப்படி ஒரு இடம் கிடைக்குமா இந்த வையகத்தில்!

अरालमार्गागतनिर्मलापां मरालकूजाकृतनर्मलापाम् ।
निरन्तरस्मेरसरोजवक्त्रां कलिन्दकन्यां समलोकयस्त्वम् ॥७॥

araalamaargaagata nirmalaapaaM maraalakuujaakR^ita narmalaapaam |
nirantarasmera sarOjavaktraaM kalindakanyaaM samalOkayastvam || 7

அராலமார்கா³க³தனிர்மலாபாம் மராலகூஜாக்ருதனர்மலாபாம் |
நிரந்தரஸ்மேரஸரோஜவக்த்ராம் கலிந்த³கன்யாம் ஸமலோகயஸ்த்வம் || 49-7 ||

கிருஷ்ணா,  நீ  சிறுவர்களோடு சென்று அருகே இருந்த யமுனை நதியை முதல் முதலாக பார்த்தாய். யார்  இந்த யமுனை?  கங்கைக்கு அடுத்த நீண்ட பெரிய புண்ய நதி. கங்கையின் உபநதி.  ஹிமாசல பர்வதத்தில்  பந்தர்பூச் சிகரத்தில் 29000 அடி  உயரத்திலிருந்து யமுனோத்ரி எனும் இடத்திலிருந்து உற்பத்தியாகும் பெரிய  ஆறு.  1400  கி.மீ. தூரம் ஓடும் நதி.  முடிவில் தாய்நதி கங்கையோடு  திரிவேணி சங்கமத்தில் சேர்வது.  யமுனை சூரியன்  காளிந்தன் மகள்,  எமனின் சகோதரி என்பதால் யமி  என்று பெயர் பெற்றவள்.  வளைந்து வளைந்து அழகாக ஓடுபவள். ஆனந்தமாக பாடிக்கொண்டு  ஹம்ஸங்கள்  நீந்தும் அழகிய நதி.  கிருஷ்ணா உன் முகம் போன்ற அழகிய தாமரை மலர்கள் தன்மேல் மிதக்க  ஆடிவருபவள் யமுனை.

मयूरकेकाशतलोभनीयं मयूखमालाशबलं मणीनाम् ।
विरिञ्चलोकस्पृशमुच्चशृङ्गैर्गिरिं च गोवर्धनमैक्षथास्त्वम् ॥८॥

mayuurakekaashatalObhaniiyaM mayuukhamaalaashabalaM maNiinaam |
viri~nchalOkaspR^ishamuchchashR^iNgairgiriM chagOvardhanamaikshathaastvam || 8

மயூரகேகாஶதலோப⁴னீயம் மயூக²மாலஶப³லம் மணீனாம் |
விரிஞ்சலோகஸ்ப்ருஶமுச்சஶ்ருங்கை³-ர்கி³ரிம் ச கோ³வர்த⁴னமைக்ஷதா²ஸ்த்வம் || 49-8 ||

உனக்கு விளையாட அற்புதமாக அமைந்த இன்னொரு  விஷயம்  அங்கே இருந்த கோவர்தன மலை. அதில் தான் நூற்றுக்கணக்கான  மயில் கூட்டம் உன்னை வரவேற்றதே , மயில்  கத்துவதே ஒரு தனி அழகு, செவிக்கினிமை  என்று சொல்ல முடியாவிட்டாலும்  அடிக்கடி கேட்பதற்கு ஆசையை தூண்டும் குரல்  நவரத்தினங்களின் மினுமினுப்பை, பளபளப்பை மிஞ்சும் வண்ணங்கள் கொண்டவை. 

 समं ततो गोपकुमारकैस्त्वं समन्ततो यत्र वनान्तमागा: ।
ततस्ततस्तां कुटिलामपश्य: कलिन्दजां रागवतीमिवैकाम् ॥९॥

samaM tatO gOpakumaarakaistvam samantatO yatra vanaantamaagaaH |
tatastatastaaM kuTilaamapashyaH kalindajaaM raagavatiimivaikaam || 9

ஸமம் ததோ கோ³பகுமாரகைஸ்த்வம் ஸமந்ததோ யத்ர வனாந்தமாகா³꞉ |
ததஸ்ததஸ்தாம் க்ருடிலாமபஶ்ய꞉ கலிந்த³ஜாம் ராக³வதீமிவைகாம் || 49-9 ||

சுற்ற  ஆரம்பித்துவிட்டாய் கிருஷ்ணா நீ, உனக்கு  சகாக்கள் கூடி விட்டார்கள்.  நாலா பக்கமும் துளசிவனம்  சூழ்ந்த  பிருந்தாவன பிரதேசம் உன்னை ஈர்த்தது.   காட்டின் ஓரத்தில்   அடர்ந்த மரங்களுக்கு இடையே காளிந்தி நதி சலசலவென்று ஓடியது உன் கண்ணில் பட்டுவிட்டது.  உனக்கு மட்டற்ற மகிழ்ச்சி 
தந்தவாறு வளைந்து வளைந்து ஓடியது காளிந்தி ஆறு. 

तथाविधेऽस्मिन् विपिने पशव्ये समुत्सुको वत्सगणप्रचारे ।
चरन् सरामोऽथ कुमारकैस्त्वं समीरगेहाधिप पाहि रोगात् ॥१०॥  

tathaa vidhe(a)smin vipine pashavye samutsukO vatsagaNaprachaare |
charan saraamO(a)tha kumaarakaistvaM samiiragehaadhipa paahi rOgaat ||10

ததா²விதே⁴(அ)ஸ்மின்விபினே பஶவ்யே ஸமுத்ஸுகோ வத்ஸக³ணப்ரசாரே |
சரன்ஸராமோ(அ)த² குமாரகைஸ்த்வம் ஸமீரகே³ஹாதி⁴ப பாஹி ரோகா³த் || 49-10 ||

கன்றுக்குட்டிகள் மேய்வதற்கு சொகுசான இடம் அது. ஆகவே  நீயும் பலராமனும், மற்ற  சிறுவர்களும் இந்த இடத்துக்கு   படையெடுத்தீர்கள்.   எண்டே குருவாயூரப்பா,  உன் சந்தோஷத்துக்கு இடையில் என் கஷ்டத்தையும் சற்று கண்ணெடுத்து பார். என் தீராத இந்த வாத நோயை தீர்த்து வைத்து என்னை  ரக்ஷிப்பாய்.

தொடரும் 



sivan jaykay

unread,
Sep 10, 2021, 7:54:33 AM9/10/21
to amrith...@googlegroups.com
உள்ளது நாற்பது - நங்கநல்லூர்  J K  SIVAN  --
பகவான் ரமணர்.

உலகமும்  உடலும் ஒன்றே 

''உலகைம் புலங்க ளுருவேறன் றவ்வைம்
புலனைம் பொறிக்குப் புலனா – முலகைமன
மொன்றைம் பொறிவாயா லோர்ந்திடுத லான்மனத்தை
யன்றியுல குண்டோ வறைநேரே – நின்ற 6

நன்றாக  புரிந்து கொள்ளவேண்டும்.  பஞ்சகோச தேகத்தால்  நாம் இந்த உலகை அறிகிறோம். அப்படி நாம் காணும் உலகம் பஞ்ச இந்திரியங்கள், ஐம்புலன்கள், விஷயங்களின்  தோற்றம்.  வேறு எதுவும் இல்லை.  பஞ்சேந்திரியம் எனப்படும்  ஐம்புலன்களால் நாம்  எப்படி இந்த உலகை  அனுபவிக்கிறோம்.  உணர்கிறோம்.    காதால் சப்தம், தோலால்  ஸ்பரிசம்,   கண்ணால் ரூபம்,  நாக்கால் ருசி,  ரசம்,  மூக்கினால் கந்தம் என்று  உலகத்தை துளித்துளியாக  உணர்கிறோம்.

இந்த  ஐம்புலன்களால் தானாக  மேலே சொன்ன  அனுபவங்களை பெறமுடியாது.  தேகம்  ஐம்புலன்களின்  எடுபிடி.  புலன்கள் ஒவ்வொன்றையும் இயக்க ஒரு டைரக்டர் தேவை. அவர் தான்  மனம்.  அவர் தான் ஐம்புலன்களின் சக்தியால் நம்மை ஆட்டுவிக்கிறவர்.  உடல்  தான் உலகத்தை அனுபவிக்கிறது. உடல் இல்லையேல் உலகம் இல்லை.உலகம் உடல் ரெண்டுமே ஒன்று தான். மனதின் பிரதிபலிப்பு தான்  உலகம். 
மனம்  ஐம்புலன்களில் செல்லாவிட்டால்,உலகம் இல்லை.  மனத்தின் செயல்பாடு தான் மனோமயம். 

நாம்  கனவு காண்கிறோமே, அப்போது எங்கெங்கோ போவது போல், எதையோ ருசிப்பது போல், எதையோ கேட்பது போல், எதையோ ஸ்பர்சிப்பது போல், எதையோ முகர்வது போல் காட்சிகள் தோன்றும்போது ஐம்புலன்கள் இல்லாமலே  அல்லவா  அவை நிகழ்கிறது.  இதிலிருந்து என்ன தெரிகிறது?  ஐம்புலன்கள் மனதில் அடக்கம். மனோமயத்தில் அவை உள்ளடக்கியவை. 

ஆழ்ந்த மரக்கட்டை தூக்கத்தில் ஐம்புலன்களும் இல்லை, நான் எனும்  ஜீவன் இல்லை, மனம் இல்லை. ஆத்மா ஒன்றே  அமைதியாக உள்ளது. 

உலகம் தேஹத்தால் அறியப்படுவது.  தேகம் ஐம்புலன்களால் செலுத்தப்படுகிறது. மனம் ஐம்புலன்களை செலுத்துகிறது.  ஆகவே மனம் இன்றியேல் உடலும் இல்லை, உலகமும் இல்லை.? மனோ நாசம் செய்த ஞானிகள்,யோகிகள் சரீரத்துடன் நமக்கு தோன்றினாலும் சரீரம் உலகம் அற்றவர்கள். 

மனம் தான் அவித்யை என்பது. சகல ஸம்ஸார  பந்தத்துக்கும் அது தான் காரணம். அது அழிந்தால்  இயற்கையான ஆனந்தம் தவிர வேறு எதுவுமில்லை. 

எண்ணக்கற்றைகள் தான்  மனம். நாம் அவற்றிற்கு அடிமை. அவற்றை நீக்கி நோக்கினால், எண்ணங்கள்  ஹ்ருதயத்தில் ஒடுங்கினால் , உடலும் உலகமும் காணாமல் போகும்.  ''நான்   நான் '' எண்ணம் தோன்றும்போது, அதை கூர்ந்து கவனிப்பதால்  அதன் ஓட்டம் நின்றுவிடும். மெதுவாக மறைந்து விடும். உலகம் உடல் மறந்து போய், மறைந்து போய்  பரமாத்மா தத்வம் புரியும். 

ஒரு விஷயம் சொல்கிறேன் கவனியுங்கள்:

ரெண்டாம் உலக மஹா யுத்தம் கொடூரமாக  நடைபெறுகிறது. உச்சக் கட்டத்தில்  நடக்கிறது.  ரமணாஸ்ரமத்தில் பத்ரிகை யாராவது  கொண்டு வந்து மகரிஷிக்கு படித்து சொல்வார்கள்.   சில சமயங்களில் பகவானே  பத்திரிகையை புரட்டிப்பார்ப்பார்.   மற்றவர்கள் யுத்தம் பற்றி பேசுவார்கள்.   எங்கு பார்த்தாலும் உலகமுழுதும், ஹிட்லர், முசோலினி, என்ற பெயர்கள் அடிபடும். மகரிஷி எந்த வித சலனமும் இல்லாமல்  யுத்தம் பற்றியே  ஒரு வார்த்தையும் பேசாமல் ஒன்றுமே நடக்காதது மாதிரி அமர்ந்திருப்பார். 

தேவராஜ முதலியார் என்று ஒரு பகவானின்  அணுக்கத் தொண்டர்  ஒருவர் இதை கவனித்துவிட்டு  ''உலகமே  இந்த விஷயத்தில் மும்முரமாக பேசிக்கொண்டிருக்கும்போது எப்படி உங்களால் இந்த கடும் யுத்தம் பற்றி ஒன்றுமே நடக்காதது போல் இருக்க முடிகிறது?  என்று கேட்டார். 

மகரிஷி  ''முதலியாரே யுத்தம் எங்கே நடக்கிறது?  என்னுடைய  உலகத்தில் எதுவுமே நடக்க வில்லை. உங்கள் சித்த வ்ருத்தியால் யுத்தம் என்ற பாவனை  உங்கள் உலகத்தில்  நடக்கிறது.  சித்த வ்ருத்தி இல்லையென்றால்,  மனம் ஹ்ருதயத்தில் ஒடுங்கினால் அங்கே  இருப்பது  ஆத்ம ஞானம் ஒன்று தான். சித்த வ்ருத்தி ஒடுங்கினால் ஸ்ருஷ்டியுமில்லை, உலகமுமில்லை.  அப்புறம் நீங்கள் சொல்கிற யுத்தம் எங்கே  நிகழும்?  மனத்தை அது பிறக்கும் இடத்திலேயே  அடக்கி விட்டால், அது தான் மனோ நாசம்.   அதை அடைந்தவன்  மற்றவர் கண்ணுக்கு  சரீரத்தோடு தெரிந்தாலும்  அவன் உலகம், உடல் ஸ்மரணை  அற்ற  முக்தன்.  ஆத்மாவின் இயற்கைத்  தன்மையான ஆனந்தத்தில்  திளைப்பவன் .

அண்டம், பகிரண்டம், அகிலாண்டம், என்கிறோமே  அது எல்லாமே  தேகத்தில் அடங்கி விடுகிறது... தேஹம்  ஐம்புலன்களின் ஆதிக்கத்தில் அடக்கம்.  இந்த ஐம்புலன்களை ஓடவிட்டு வேடிக்கை  பார்ப்பது  மனம்.  அந்த மனத்தை  அது பிறக்கும் இடத்திலேயே அடங்கச்  செய்து. துறப்பவன் தான் உண்மையான சந்நியாசி, யோகி. அவனைப்  பொறுத்தவரை  அவனது ஆத்மாவுக்குள் தான் உலகமோ உடலோ ஐக்கியமான வஸ்து .  வெளியே  எதுவுமில்லை.




sivan jaykay

unread,
Sep 10, 2021, 7:54:40 AM9/10/21
to amrith...@googlegroups.com
உள்ளது நாற்பது --   நங்கநல்லூர்  J K  SIVAN --
பகவான் ஸ்ரீ ரமணர்

7.    ஆழ் உறக்கமும் அகண்ட உலகமும் 

உலகறிவு மொன்றா யுதித்தொடுங்கு மேனு
முலகறிவு தன்னா லொளிரு – முலகறிவு
தோன்றிமறை தற்கிடனாய்த் தோன்றிமறை யாதொளிரும்
பூன்றமா மஃதே பொருளாமா – லேன்றதாம் 7

நம்  கண்ணுக்கு  உலகம் புலப்படுகிறது.  அதைக் காண  அனுபவிக்க மனம்  உதவுகிறது.  உலகமும் மனமும் ரெட்டையர்கள்.   மனம்  எப்படி  காண  விழைகிறதோ அப்படி காட்சியளிப்பது உலகம்.  உலகம் தெரிவது  மனதின் வெளிச்சத்தாலேயே.    இந்த ரெண்டுமே  தோன்றாமலும் மறையாமலும் இருக்க செய்வது  ஆத்ம ஞானம்.  ஆத்ம ஸ்வரூபம். அது ஒன்று தான்  வாஸ்தவமானது. நிரந்தரமானது. அழிவற்றது.

நன்றாக  உறங்கியபோது , ஆழ்ந்த தூக்கத்தில் இந்த உலகம், மனம் ரெண்டும் எங்கே காணாமல் போனது? கண் விழித்ததும், எங்கிருந்து  திடுதிப் என்று  உலகமும் மனமும்  உயிர்த்தெழுகிறது?
தூக்கத்தில் காணாமல்  விழித்ததும் இவற்றை காண்பவன் யார்?  

உலகம் எப்படி ஸ்ருஷ்டிக்கப்பட்டது என்று கேள்வி கேட்பவர்களே,  முதலில் பதில் சொல்ளுங்கள், தூக்கத்தில் காணாத அதை  விழித்ததும் காண்பவன் யார்? 

''நான் ''என்பது ஆழ்ந்த தூக்கத்தில் தெரியவில்லை, விழித்ததும் அது தான் உலகத்தை காண்கிறது. அது தான் மனத்தை  இயக்குகிறது. ''அஹம்'' எனும்  உணர்வு அடங்கினால் நிரஹம்காரமான  ப்ரம்மம் பிரகாசிக்கும்.

விடியற்காலை  ப்ரம்ம முஹூர்த்தம் என்கிறோம். ஏன் என்றால் அந்த நேரத்தில் ஆழ்ந்த தூக்கம் மனதை அப்புறப் படுத்துகிறது.  அப்போது விழித்தவுடன்  ''சிறிது நேரம் முன்பு ''  நான் எங்கிருந் தேன்?  ஆழ்ந்த  உறக்கத்தில் என் தனித்தன்மை,   ''நான்'',  எங்கே போயிற்று?  என்னவாக  இருந்தது?  இந்த ''நான் '' மனதையும் உலகத்தையும்  சேர்த்து  என்னிடமிருந்து பிரித்ததால் தான்  சுகமான தூக்க அனுபவமா?  அது தான்  ஒருவித  சமாதி நிலை சுகமா?

ஒரு சம்பவம் சொல்கிறேன்.  சுவாமி ஸ்ரீ  ராம தீர்த்தர் (ராதா சுவாமி என்ற பெயரும் உண்டு)  பஞ்சாபி தேசத்து பிராமணர். (1873 – 1906) வேதாந்த தத்வ பேராசிரியர்.  அமெரிக்காவில் ஹிந்துமதம் பற்றி விவேகானந்தர் காலத்தில் பிரசாரம் செய்தவர்.  ராம தீர்த்தர்  அமெரிக்க ஜனாதிபதி தீயடோர் ரூஸ்வெல்ட்டை சந்திக்க நேர்ந்தது.

''நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்''  
''நான்  ராம தீர்த்தன்  எனும் சக்ரவர்த்தி''
''நீங்கள்  எந்த  சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி?  
'ஸ்ரீ ராமன் இந்த  நிரந்தர சக்ரவர்த்தி. என்றும் அழியாதது அவன் சாம்ராஜ்யம் ''

இது எதை குறிக்கிறது?  பூரண ஆத்ம  த்யானம், பகவான் மீது விடாத  சிந்தனை, உலகம் மனம் இரண்டையுமே தாண்டிய ஒரு பூர்ண ஆத்ம ஞான விசாரம். 

இந்த உலகம்  தனது  இருப்பு நிலையை  ஸ்வயமாக அறிவதில்லை.  அதற்கு  மனித மனம் தேவைப்படுகிறது. அதே போல்  ஸ்வயம் பிரகாசமான  ஆத்மாவும்  இந்த உலகத்தை உலகமாக அறிவதில்லை.  ஆகவே  ஜடத்திற்கு தனது இருப்பு  அறியமுடியாது.  சைதன்யமான ஆத்மாவுக்கு தன்னைத் தவிர வேறொன்றும் இல்லை என்ற உணர்வு உலகத்தை  இல்லாமல் போக்கிவிட்டது 
அதன் தோற்றத்தை உணரவில்லை.
தொடரும்  




 

sivan jaykay

unread,
Sep 10, 2021, 7:54:47 AM9/10/21
to amrith...@googlegroups.com

பொல்லாப்பிள்ளையார் பரிசு  --  நங்கநல்லூர்  J K SIVAN

இன்று  விநாயக சதுர்த்தி . நமக்கு பிள்ளையாரை கொள்ளை கொள்ளையாக பிடிக்கும். அவருக்கு  ரொம்ப பிடித்த ஒருவரை நாம் கட்டாயம்  இன்று  நினைக்கவேண்டும்.

திருநாறையூர்   என்கிற ஊர்  கும்பகோணத் திற்கு அருகே  உள்ள  ஒரு க்ஷேத்ரம்.  இங்கு  வாழ்ந்த ஒரு  மஹா  புண்ய புருஷரால்  தான்  சம்பந்தர், அப்பர், சுந்தரர்  இயற்றிய  தேவார  பாடல்கள்  நமக்கு  கிடைத்தன  என்ற போது நாம்   அவரைப்  பற்றி  கொஞ்சமாவது  தெரிந்து கொள்ள வேண்டாமா?. அவர்    63 நாயன்மார் களைப்  பற்றியும் சுந்தரரின் திருத் தொண்டத் தொகையில் வரும்  63  சிவ பக்த நாயன்மார் களைப் பற்றியும்   மிக அருமையாக  நமக்கு  அளித்தவர். இந்த குறிப்பை வைத்துக் கொண்டு தான்   பிற்காலத்தில் சேக்கிழார்  தமது  திருத்தொண்டர் புராணம்   இயற்றினார் என்பார்கள்.   இந்த  புண்ய  புருஷர்  இயற்றிய  பதிகங்கள்  11வது திருமுறையில்  இடம் பெற்றுள் ளன. அந்த  மேதை இளம்  வயதிலேயே  சிவன்  கோவில்களில் சிவாசார்யராக இருந்தவர்.   முறையாக வேதம்  பயின்று,  சாஸ்திரங்களில்  தேர்ச்சி பெற்றவர்.  அவர்   பெயர் தான்  நம்பி யாண்டார்  நம்பி.

 சிறுவயதில் ஒரு   பிள்ளையார்  சதுர்த்தி  அன்று  அவரது  அப்பா  வேறு ஒரு  ஊருக்கு  அவசர ஜோலியாகச்  செல்ல வேண்டியிருந்தது.  அவர் வீட்டுக்கு அருகே   சௌந்தர்யேஸ்வரர் எனும் சிவன் கோவில்.  அதில் ஒரு பிள்ளையார். பொல்லாப் பிள்ளையார் என்று பெயர் அவருக்கு. ரொம்ப நல்ல பிள்ளையார் அவர். எனோ அவருக்கு  பொல்லாப்பிள்ளையார் என்று பெயர் என்று நினைக்கவேண்டாம்.  பொள்ளாபப்பிள்ளையார் என்றால்  உளியினால்  கல்லில் உருவம் செய்யப்படாத, பொள்ளப்படாத  ( ''அம்மி கல்லுரல்  பொளியலியோ''  என்று கத்திக்கொண்டு ஒருவர்  எங்கள் தெருவில் வருவார்.   இந்த சத்தம் கேட்டு  ஐம்பது வருஷம் ஆகிவிட்டது)  பிள்ளையார்  என்றால் ஸ்வயம்பு என்று பொருள். சுற்றி வளைத்து மூக்கை தொடும் அழகு 

பொள்ளா பிள்ளையாருக்கு  தினமும்  நம்பியாண்டார் நம்பியின் அப்பா தான் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை,  பூஜை செய்து  நைவேத்யம்  அர்பணிப்பார்.    

''டேய் பயலே,  இன்னிக்கு  விநாயகசதுர்த்தி, அவன் பிறந்தநாள், நான் வெளியூர் சீக்கிரமே  கிளம்பறதாலே  நீ  பிள்ளையாருக்கு பூஜை  செய்''  

 அப்பா நம்பியிடம்  சொல்லி விட்டுப்  போய்விட்டார்.    ஆறு  ஏழு வயது  குழந்தை நம்பிக்கு  பிள்ளை யார் நைவேத்யம் உண்ண  மாட்டார்  அவருக்கு  படைத்து விட்டு  அந்த உணவை  பிரசாதமாக நாம்  தான் வீட்டுக்கு  எடுத்துச் செல்லவேண்டும் என்பது தெரியாது.  கொழுக்கட்டையை  (மோதகம்)  தட்டில் வைத்துவிட்டு  பிள்ளையார் உண்பதற்காக  வெகு நேரம்  காத்திருந்தார்  நம்பி.  நேரமாகிக் கொண்டே போனது.  பிள்ளையார்  கொழுக்கட்டையை சாப்பிட லையே?. நான் ஏதோ  தப்பு  செய்துவிட்டேனோ , கோபித்துக்கொண்டு அதனால்  பிள்ளையார்  சாப்பிட வில்லையோ  என்று பயந்து   அழ ஆரம்பித்தார்.  கோவில் சுவற்றில்   பிள்ளையார் சாப்பிடும் வரை  தலையை மோதிக்கொள் வோம்  என்று  சுவற்றில் தலையை  மோத துவங்கினான் சிறுவன் நம்பி. .

 ' நம்பி,  நீ  ஏன்  தலையை  மோத வேண்டும் . மோதகத்தை நான் உனக்காக   சாப்பிடுகி றேன்''  என்று  பிள்ளையார் வந்து   நம்பியைத் தடுத்தார்.  திருப்தியாக மோதகம்  உண்ட விநாயகர்  '' நம்பி உனக்கு   என்ன வேண்டும்  சொல்''  என்று  கேட்க,

''நான்   இன்று பள்ளிக்கூடம்  போக நேரமாகி விட்டதே.  பாடம்  போய்வி ட்டதே உன்னாலே,  ஆசிரியர்  அடிப்பாரே '  நம்பி  அழுதுகொண்டே  சொல்ல

 'அவ்வளவு தானே, ' சரி உனக்கு  நானே   பாடம்  சொல்லித்தருகிறேன்''  என்று   சகல கலா   ஞானமும்  தந்தார்  பிள்ளையார் '

 இது தினமும்  தொடர்ந்ததால்  விஷயம்   காற்றில் பரவி  அப்போதைய  சோழ  மன்னன்  ராஜ ராஜ  சோழன்  காதுக்கும் எட்டியது.  மந்திரி சேனாபதி,  ராஜாங்க பிரமுகர்கள்  புடை சூழ ஒரு   பெரிய ஊர்வலமாக    நிறைய  மா,  பலா, வாழைப்  பழங்கள், தேன்,  அவல் பொரி, இனிப்பு வகைகளுடன் பிள்ளையாருக்கு  நைவேத்யம்  பண்ண  சோழ ராஜா  வந்துவிட்டான்.  நேரே  திருநாறையூர் வந்து    நம்பியின் காலடியில்  விழுந்து வணங்கினான்.

 ''எங்கள்  தெய்வமே,  இதையெல்லாம்   உங்கள்  அருள்  மூலமாக பிள்ளையாரை  உண்ணும் படியாக செய்ய வேண்டும் ''    என  தங்கள் தாள் பணிந்து  வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்  என்று  சொன்னான்   சிறுவன்  நம்பியும்  

''பிள்ளையாரே,  வந்து  இதையெல்லாம்  வழக்கம்   போல சாப்பிட  வேண்டும்''  என்று  கேட்க,  விநாயகனும்  அத்தனை  ஆகாராதி களையும்  தும்பிக்கையின்  ஒரே வீச்சில்  எடுத்து  சுழற்றி வாயில்  போட்டுக் கொண்டான்.

கண்களில்   பக்தியும்  ஆச்சரியமும்  நீராக  வழிய  ராஜ ராஜன்  சாஷ்டா ங்கமாக நம்பியின்  காலில் விழுந்தான்.   ''என்  தெய்வமே,  எனக்கு  ஒரு  நீண்ட  கால ஆசை.   சைவ சமய  குரவர்  மூவர் எழுதிய தேவார  பதிகங்களை  முழுமையாகப்   பெற வேண்டும்.  இதுவரை  அவை  கிடைக்க வில்லையே   என்கிற குறை.  அதை  நீங்கள்  தான்  நிறைவேற்றி வைக்கவேண்டும். பிள்ளையாரப்பன் மீது  இருந்த  நம்பிக்கையில்  நம்பியும்  அவ்வாறே செய்வதாக  ஒப்புக்கொண்டார்.

''விநாயகா,   நீ  தான்  எனக்கு  இதைச்   செய்ய வேண்டும்.  எங்கே  இருக்கின்றன  அந்த  தேவார பதிகங்கள். உதவுகிறாயா,  ராஜா  எவ்வளவு  ஆசையாக  அதெல்லாம்  கேட்கிறான்?''

'' உனக்காகச்  செய்கிறேன்  நம்பி.   ராஜாவிடம் சொல்லு,  அவையெல்லாம்   சிதம்பரத்தில்  நடராஜா ஆலயத்தில்  நடராஜாவின்  பின்னால்  ஒரு  இடத்தில்   ஜாக்ரதையாக  வைக்கப்பட்டு இருக்கிறது.   அது எங்கே  என்று  ஒரு  கை  காட்டும்.  அந்த  இடத்தில்  பார்த்தால்  அத்தனை  ஓலைச்சுவடிகளும்  இருப்பது  தெரியும்.

''எத்தனை  பதிகங்கள்  அவ்வாறு  எழுதியிருக்கிறார்கள் ?''

''அதுவா,   ஞான  சம்பந்தன்  எழுதியது  16000,  திருநாவுக்கரசர் எழுதியது அதிகம்.  அவை  49000. அடுத்ததாக  சுந்தரர் இயற்றியது 39000'' என்று பிள்ளையார்  லிஸ்ட்  கொடுத்தார்.

நம்பி   இந்த விஷயத்தை  ராஜராஜனிடம்  சொல்ல  ராஜா  நம்பியாண்டார்  நம்பியை  அழைத்துக் கொண்டு சிதம்பரம் சென்று அங்கே  பிள்ளையார்   சொன்ன இடத்தில்  தேட,  அங்கு  கரையான்  தின்றது   போக ஒரு  சில  மட்டுமே  காணப்பட்டது. வருத்தத்தோடு  ராஜராஜன் கண்ணீர் விட,  நம்பியாண்டார்  நம்பி,   நடராஜரை பணிந்து  வேண்ட,  ''நம்பி,  எது வேண்டுமோ  அது  அங்கே  உள்ளது. எடுத்துச் செல்''  என  இறைவன்  அசரீரீயாக  உரைத்தான்.  ஆர்வத்தோடு  அரசன்   உடனே அந்த  ஓலைச்சுவடிகளை  படி எடுக்க  (நகல்  எடுக்க) ஏற்பாடு செய்தான்.  இன்றைய  தமிழ்  கூறும் நல்லுலகம்  இந்த  சீரிய தொண்டு  புரிந்த நம்பியாண்டார்   நம்பிக்கும் சோழன்  ராஜராஜனுக்கும்  என்றும்  தலைவணங்க  கடன் பட்டிருக்கிறது.  நமக்கு  கிடைத்திருப்பது   மொத்தத்தில் பத்தில்  ஒரு  பங்கு  கூட இல்லை.   நம்பியாண்டார்  நம்பி  இத் தேவார  பதிகங்களோடு, மணி வாசகரின்  திருவாசகம்,  திருமூலரின்  திருமந்திரம், எல்லாமும்  சேர்த்து அளித்திருக்கிறார்.   நீலகண்ட  யாழ்ப்பாணர் வம்சத்தில்  வந்த ஒரு  பெண் உதவியோடு  தேவாரப்  பண் (melody )களை  சீர் படுத்தினார்.   தான்  வணங்கும்  பொள்ளாப்பிள்ளையார் அருளால்  சுந்தரரின்  திருத்தொண்டத் திருவந்தாதி மூலம்  63 நாயன்மாரின்  சரிதம்  நமக்கு  கிடைத்திருக்கிறது.  சம்பந்தர்  வாழ்க்கை வரலாறும்  நமக்களித்தவர்  நம்பியாண்டார்  நம்பியே. நம்பியாண்டார்  நம்பியை  நன்றாக
அனுபவிக்க  படிக்க  வேண்டிய  அவர் இயற்றிய  நூல்களின்  விபரம்  :    

 திருநாரையூர் விநாயகர்   இரட்டை மணி மாலை.
கோயில் திருப் பண் இயல்விருத்தம்
திருத்தொண்டர்  திருவந்தாதி
ஆளுடைய பிள்ளையார்  திருவந்தாதி.
ஆளுடைய  பிள்ளையார்  திருச்சபை விருத்தம்
ஆளுடைய பிள்ளையார்  திருமணிக் கோவை
ஆளுடைய  பிள்ளையார்  திருவுள்ள மாலை
ஆளுடைய பிள்ளையார்  திருக்கலம்பகம்
ஆளுடைய பிள்ளையார்  திருத் தொகை
திருநாவுக்கரசு தேவர்  திரு ஏகாதச மாலை

sivan jaykay

unread,
Sep 10, 2021, 7:54:47 AM9/10/21
to amrith...@googlegroups.com
பிள்ளையார் சதுர்த்தி  - நங்கநல்லூர்  J K  SIVAN 

நாளை 10.9.2021  வெள்ளிக்கிழமை இந்த வருஷம்  விநாயக சதுர்த்தி/பிள்ளையார் சதுர்த்தி என்று நாடெங்கும் ஹிந்துக்கள் கொண்டாடுகிறார்கள். மிகவும் பிரபலமான ஹிந்து பண்டிகை. கணேசன் பிறந்தநாள். ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தி . வருஷா  வருஷம்    ஆகஸ்ட் /செப்டம்பரில் வருவது. வடக்கே பத்து நாள் கொண்டாடுவார்கள். அனந்த சதுர்தசி வரையில் கோலாகலமான பண்டிகை. சிவபெருமான் பார்வதிக்கு  மூத்த பிள்ளை கணேசன். யானைத்  தலை மனித உடம்பு, அழகிய தொந்தி, நான்கு கரங்கள், கண்ணைக் கவரும் உருவம். ஒரு  கையில் சூலம். இன்னொன்றில் அங்குசம். ஒன்றில் தாமரை, இன்னொன்றில் ருத்ராக்ஷம் சில படங்களில் அதில் மோதகம் எனும் தேங்காய் பூரண கொழுக்கட்டை இருக்கும். 

 விநாயகர் என்றாலே வினைகளை தீர்ப்பவர்,எடுத்த காரியத்தை எதிர்பார்த்த நன்மையுடன் முடித்து வைப்பவர். அவரை நினைத்து ஒரு சுழி ''உ'' மாதிரி போட்டுவிட்டு ஆரம்பிக்கும் அத்தனையும் ஜெயமாக முடியும் என்ற நம்பிக்கை அளிப்பவர்.

தனது பக்தர்கள் தன்னை கார்கில் ராணுவ வீரனாக, மத்தள, நாதஸ்வர வித் வானாக, மோட்டார் சைக்கிள் ஓட்டுபவனாக, கிரிக்கெட் வீரனாக எப்படி சித்தரித்தாலும் மகிழ்பவர், மகிழ்ச்சி  தருபவர். வேறு எந்த ஹிந்து கடவுளுடனும்  நமக்கு  இப்படி நெருக்கம் கிடையாது.

புராணத்தில் '' பார்வதி குளிக்கும் போது மஞ்சள் கலவையில் ஒரு கூம்பு வடிவத்தில் படைத்து உயிரூட்டி உருவானவர் பிள்ளையார்.

''பிள்ளையாண்டானே, நான் குளித்து விட்டு வரும் வரை இங்கே நீ வாசலில் காவல் இரு. எவரையும் உள்ளே விடாதே என்று கட்டைளை யிட்ட பார்வதியின் வாக்கை மீறாமல் காவல் காத்து நிற்க, அப்போது அங்கே பார்வதியை சந்திக்க வந்த சிவனை யார் என்று அறியாமல் விநாயகர்  தடுக்க, பார்வதியால் பிள்ளையார் தோன்றியதை அறியாத சிவனது கோபத்தால்  தனது  சிரத்தை இழந்து, பின்னர் பார்வதியின் மூலம் விஷயமறிந்த சிவன் தவறை உணர்ந்து முதலில் தோன்றிய எந்த உயிரின் தலையாவது கொண்டுவா என்று சிவகணங்களுக்கு கட்டளையிட, ஒரு யானை தலை இழந்து அதன் தலை பிள்ளையாரின் தலையாயிற்று'' என்று வரும்.   பிள்ளையார்  ஒரிஜினல் தலையோடு இருக்கும் சில கோவில்கள் பற்றி எழுதி இருக்கிறேன். படம் தந்திருக்கிறேன்  வடக்கே தலையில்லாத பிள்ளையாரையும் ஒரு கோவிலில் வழிபடுவதை பற்றியும் எழுதி இருந்தேன். அந்த கோவில் அங்குள்ள தலையில்லாத படத்தையும் இணைத்தியிருக்கிறேன்.

பிள்ளையார் சிவ கணங்களுக்கு அதிபதி, தலைவனாகி ''கணபதி'' ''கண ஈசன்'' (கணேசன்) ஆகிறார். குறைபாடுகளை விக்னங்களை, தீர்க்கும் விக்னேஸ்வரர் ஆகிறார். எல்லா வீட்டிலும், சிவ ஆலயங்களிலும் முதலில் காவல் தெய்வமாக காண்பவர் பிள்ளையார்.

சரித்திரத்தின்  பக்கங்கள், சாதவாஹன, ராஷ்டிரகூட, சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் இருந்தே விநாயக சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்  பட்டதை சொல்கிறது. சத்ரபதி சிவாஜி மஹாராஜா மராத்தி தேசத்தில் விநாயக சதுர்த்திக்கு பிரதானம் கொடுத்தார். இன்றும் அங்கே தான் முதன்மை யாக பிள்ளையார் போற்றப்படுகிறார். மராத்திய பேஷ்வாக்களுக்கு பிள்ளையார் குலதெய்வம். 1818 முதல் 1892 வரை உன்னதமாக கொண்டாடப்பட்டது

1857ல் சிப்பாய் கலகத்தின் போது வெள்ளையன் ஆதிக்கத்தை சிப்பாய்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும் தோற்றனர். அதுவே முதல் சுதந்திர போராட்டம். நெருப்பு அணைந்தாலும் புகை பரவிக்  கொண்டு தான் வந்தது. லோகமான்ய பாலகங்காதர திலகர் தலைமையில் விநாயக சதுர்த்தி விழா மூலம் போராட்டத்துக்கு ஆட்கள் ஒன்று சேர்ந்தனர். தேசிய விழாவாக மக்களை இணைக்க பிள்ளையார் உதவினார். பத்து நாள் விழாவாக பட்டி தொட்டியிலெல்லாம் பிள்ளையார் இருந்தார். இன்றும் இருக்கிறார்.  என்றும் அவ்வாறு இருந்து  ஹிந்துக்கள்  அனைவரையும் ஒன்றிணைப்பார். 

கணபதி பப்பா மோரியா, புத்சா வர்ஷி லௌகர்யா '' (பிள்ளையாரே வாழ்க, அடுத்த வருஷம் புதிதாக வா '')

பிரணவஸ்வருபம் என்பது ஓம்காரவடிவம்.
யானைமுகததான். குறையாவும் அகற்றி நம்மை காப்பவன்.
மன நிறைவையும் , இகவாழ்கைக்கு தேவையான பொருளும்
அக நிறைவுக்கு வேண்டிய அருள்நிறைவையும் அளிப்பவன்.
நம்பிக்கையோடு தும்பிக்கையானை பணிந்து சரணடைந்தால்
வேண்டியவை யாவையும் வேண்டாமலேயே வாரி வழங்கும் வள்ளலை வாயார வாழ்த்துவோம்
கொஞ்சம்   களிமண் உருட்டி  நாம் எல்லோரும் கூட  நாளைக்கு குட்டி பிள்ளையாரை உருவாக்கி வணங்கலாம். ஒரு வீடியோ இணைத்திருக்கிறேன். அது அவரை எப்படி செய்வது என்று சொல்லித்தரும்.


நாவார பாடுவோம் துதிப்போம், பலனடைவோம்.
GANESH WITHOUT HEAD.jfif
Adi Vinayaka 1.jpg

sivan jaykay

unread,
Sep 11, 2021, 9:21:19 PM9/11/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீமந்  நாராயணீயம் - நங்கநல்லூர்  J K  SIVAN 
50வது தசகம் 

50.  மரணம் தேடிய  ரெண்டு ராக்ஷஸர்கள்.

அந்த நாராயணன் கிருபை என்று தான் சொல்லவேண்டும்.  ஆயிரம் ஸ்லோகங்களில் ஐந்நூறு ஸ்லோகங்களை இன்று பூர்த்தி செய்து,   இந்த  ஸ்ரீமந்  நாராயணீயம்  உங்களில் பல பேரால் படிக்கப்படுகிறது என்று அறியும்போது ஏதோ நானும் எத்தனையோ பாபங்களுக்கிடையே  கொஞ்சூண்டு புண்யம் செய்ததாக கருதுகிறேன்.   குட்டி கிருஷ்ணன் கிருபையால் மீதி பாதி கிணறு தாண்ட அவன் அருள்வான் என்ற பக்தி  கலந்த நம்பிக்கை துளிர் விட்டிருக்கிறது. பகவானை விட அவன் பக்தர்களான பாகவதர்கள் உங்கள் வாழ்த்தும் ஆசியும் தான்,   காலம் கடந்து செயல்படும் என் முயற்சிக்கு பேருதவியாக இருக்கிறது.

பிரிந்தாவனத்துக்கு  கிருஷ்ணன்  உல்லாசம் தேடி வரவில்லை என்பது கவனிக்கத்  தக்கது. கண்ணன் கர்ம வீரன்.  கடமையைப் புரிய வந்தவன்.  இதோ பிருந்தாவனத்துக்கு  கிருஷ்ணன்  வந்ததும் வராததுமாக  அவசர அவசரமாக ரெண்டு ராக்ஷஸர்கள் அங்கே அவனைத் தேடி வந்து  தலை நீட்டி இருக்கிறார்கள்.  பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் கரங்களால் அவன் கையால் மோக்ஷம் பெற்ற  பாக்கியசாலிகள் அவர்கள்.

तरलमधुकृत् वृन्दे वृन्दावनेऽथ मनोहरे
पशुपशिशुभि: साकं वत्सानुपालनलोलुप: ।
हलधरसखो देव श्रीमन् विचेरिथ धारयन्
गवलमुरलीवेत्रं नेत्राभिरामतनुद्युति: ॥१॥

Tharala madhukR^id bR^inde bR^indaavane(a)tha μανοηαρε
pashupa shishubhiH saakaM vatsaanupaalana lOlupaH |
haladharasakhO deva shriiman vicheritha δηααραυαν
gavala muralii vetraM netraabhiraama tanu dyutiH || 1

தரலமது⁴க்ருத்³வ்ருந்தே³ வ்ருந்தா³வனே(அ)த² மனோஹரே
பஶுபஶிஶுபி⁴ஸ்ஸாகம் வத்ஸானுபாலனலோலுப꞉ |
ஹலத⁴ரஸகோ² தே³வ ஶ்ரீமன் விசேரித² தா⁴ரயன்
க³வலமுரலீவேத்ரம் நேத்ராபி⁴ராமதனுத்³யுதி꞉ || 50-1 ||

''ப்ரபோ, வாதபுரீஸ்வரா,  பிருந்தாவனத்தில்  ஆனந்தமாக  பலராமனோடும் மற்ற  சிறுவர்களோடும் சுற்ற நீ கிளம்பிவிட்டாய்.  எல்லோர் கண்களும் உன் மீதே இருக்க  என்ன தான் காந்த சக்தி உன்னிடம் இருக்கிறதோ?   

இன்றும்  என் போன்ற  எத்தனையோ  பேர் மனதை கொள்ளை கொண்டவனாக இருக்கிறாயே.  பிருந்தாவனத்தில்  தேன் பருக அலையும் வண்டுகள் ரொம்ப ஜாஸ்தி. உன் பிராண ஸ்நேகிதர் களான  பசுங்கன்றுகளுடன்  விளையாடிக்கொண்டே  ஊதல், புல்லாங்குழல், மூங்கில் குச்சி சகிதம்  அவற்றுக்கு மேய்ச்சல் காட்ட,  நீர் பருகவிட,  நீ  அருகில் இருக்கிறாய் என்ற பரம சந்தோஷம் அந்த பசுக்களுக்கும் கன்றுகளுக்கும்.   

विहितजगतीरक्षं लक्ष्मीकराम्बुजलालितं
ददति चरणद्वन्द्वं वृन्दावने त्वयि पावने ।
किमिव न बभौ सम्पत्सम्पूरितं तरुवल्लरी-
सलिलधरणीगोत्रक्षेत्रादिकं कमलापते ॥२॥

vihita jagatii rakshaM lakshmiikaraambuja λααλιταμ
dadati charaNadvandvaM bR^indaavane tvayi paavane |
kimiva na babhau sampatsampuuritaM ταρυβαλλαριη
salila dharaNii gOtra kshetraadikaM kamalaapate || 2

விஹிதஜக³தீரக்ஷம் லக்ஷ்மீகராம்பு³ஜலாலிதம்
த³த³தி சரணத்³வந்த்³வம் வ்ருந்தா³வனே த்வயி பாவனே |
கிமிவ ந ப³பௌ⁴ ஸம்பத்ஸம்பூரிதம் தருவல்லரீ-
ஸலிலத⁴ரணீகோ³த்ரக்ஷேத்ராதி³கம் கமலாபதே || 50-2 ||

''பரமாத்மா,  லக்ஷ்மிநாதா,  எப்படி சொல்வது இந்த அதிசயத்தை?  உலகளந்தது , ஸ்ரீ மஹா லக்ஷ்மியே  வருடி கண்ணில் ஒற்றிக்கொள்வது,   கோடானுகோடி பக்தர்கள் மனதில் உறைவது, அப்படிப்பட்ட உன் திருவடிகள் அந்த வறண்ட பிருந்தாவனத்தில் பட்டதும் அங்கு  இயற்கை வளம் நிறைந்து விட்டது.  எங்கும்  செழுமை.  செடிகள் வளர்ந்தன, கொடிகள் படர்ந்தன, மரங்கள் உயர்ந்தன, பூக்கள்  செறிந்தன. மலைகள் நிமிர்ந்தன, வயல்கள் பச்சைப் பசேலென கண்ணுக் கெட்டியதூரம் பசுமை காட்டின .

विलसदुलपे कान्तारान्ते समीरणशीतले
विपुलयमुनातीरे गोवर्धनाचलमूर्धसु ।
ललितमुरलीनाद: सञ्चारयन् खलु वात्सकं
क्वचन दिवसे दैत्यं वत्साकृतिं त्वमुदैक्षथा: ॥३॥

vilasadulape kaantaaraante samiiraNa σηιιταλε
vipula yamunaatiire gOvardhanaachala muurdhasu |
lalitamuraliinaadaH sanchaarayan khalu βαατσακαμ
kvachana divase daityaM vatsaakR^itiM tvamudaikshathaaH || 3

விலஸது³லபே காந்தாராந்தே ஸமீரணஶீதலே
விபுலயமுனாதீரே கோ³வர்த⁴னாசலமூர்த⁴ஸு |
லலிதமுரலீனாத³ஸ்ஸஞ்சாரயன்க²லு வாத்ஸகம்
க்வசன தி³வஸே தை³த்யம் வத்ஸாக்ருதிம் த்வமுதை³க்ஷதா²꞉ || 50-3 ||

பிருந்தாவன பூமி ஒரு அற்புத  லோகமாகவே மாறிவிட்டது.  பசும் புல் காலுக்கு மெத்தையாக எங்கும் வரவேற்றது.  யமுனை புதுப் பொலிவு பெற்றாள். குளிர்ந்த  இனிய  மெல்லிய சுகமான தென்றல் அந்த இடத்தில் எப்போதுமே  வீசிக் கொண்டிருந்தது.  கோவர்தன மலை மீது  கன்றுக்குட்டிகள் தாவி ஏறின.  அங்கே தான் நீ,   ஒரு அசுரனை, எதிர்பார்த்தபடியே,   அடையாளம் கண்டுகொண்டுவிட்டாய்.  எவ்வளவு கெட்டிக்காரன் பார் அந்த அசுரன்.  உனது கன்றுக்குட்டிகளில் ஒன்றாக உருவம் கொண்டு உன்னை ஏமாற்றி அவற்றுக்கிடையே  வந்து கலந்து கொண்டு  உலவி, மெதுவாக உன்னை நெருங்கினான். 

रभसविलसत्पुच्छं विच्छायतोऽस्य विलोकयन्
किमपि वलितस्कन्धं रन्ध्रप्रतीक्षमुदीक्षितम् ।
तमथ चरणे बिभ्रद्विभ्रामयन् मुहुरुच्चकै:
कुहचन महावृक्षे चिक्षेपिथ क्षतजीवितम् ॥४॥

rabhasa vilasatpuchChanvichChaayatO(a)sya βιλοκαυαν
kimapi valitaskandhaM randhrapratiiksha mudiikshitam |
tamatha charaNe vibhradvibhraamayan μυηυρυχχακαιη
kuhachana mahaavR^ikshe chikshepitha kshatajiivitam ||4

ரப⁴ஸவிலஸத்புச்ச²ம் விச்சா²யதோ(அ)ஸ்ய விலோகயன்
கிமபி வலிதஸ்கந்த⁴ம் ரந்த்⁴ரப்ரதீக்ஷமுதீ³க்ஷிதம் |
தமத² சரணே பி³ப்⁴ரத்³விப்⁴ராமயன்முஹுருச்சகை꞉
குஹசன மஹாவ்ருக்ஷே சிக்ஷேபித² க்ஷதஜீவிதம் || 50-4 ||

வாதபுரீசா,  மேலே சொல்கிறேன் கேள்:  
வாலை  முறுக்கிக்கொண்டு உயர்த்தினான்  அந்த அசுரன். வேகமாக அவன் வால்  அசைந்த திலிருந்தே அவன் உனது கன்றுக்குட்டிகளை சேர்ந்தவன் அல்ல, அவன் எண்ணம் என்ன  என்று நீ  புரிந்து கொண்டாய். அவன் கண் பார்வையில் ஒரு  கோபம், பழிவாங்கும்  உணர்ச்சி  தெரிந்தது. தலையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டே இருந்தான்.  ஒன்றுமறியாதவன் போல் நீ மெதுவாக அவனருகே சென்றாய். உன்னை அடையாளம் கண்டு  கொண்டுவிட்டான் அவன். நீயும் அவனை  புரிந்துகொண்டாய்.  விளையாடுவது போல்  அவன்  அருகே சென்று அவன் பின்னங்கால்கள்  இரண்டும் பிடித்து  தூக்கினாய், மேலே தூக்கி வேகமாக சுழற்றினாய்.  அவனுக்கு தலை சுற்றியது. கண் இருண்டது . நீ அவனை பலமாக  பிடித்து வேகமாக சுற்றியதில் மூச்சு முட்டியது .திணறினான் , திமிறினான். உன்னிடமிருந்து விடுபட என்னவெல்லாமோ செய்து பார்த்தான்.  எல்லாமே தோல்வியில் முடிந்து,   வசமாக ஏமாந்து போய் உன்னிடத்தில் சிக்கிவிட்டான். வேறு வழியின்றி  மாண்டு போனான். அவன் உடலை ஒரு மரத்தின் மீது வீசினாய். 

निपतति महादैत्ये जात्या दुरात्मनि तत्क्षणं
निपतनजवक्षुण्णक्षोणीरुहक्षतकानने ।
दिवि परिमिलत् वृन्दा वृन्दारका: कुसुमोत्करै:
शिरसि भवतो हर्षाद्वर्षन्ति नाम तदा हरे ॥५॥

nipatati mahaadaitye jaatyaa duraatmani τατξηαναμ
nipatanajavakshuNNa kshONiiruha kshata kaanane |
divi parimilad bR^indaa bR^indaarakaaH κυσυμοτκαραιη
shirasi bhavatO harShaadvarShanti naama tadaa hare || 5

நிபததி மஹாதை³த்யே ஜாத்யா து³ராத்மனி தத்க்ஷணம்
நிபதனஜவக்ஷுண்ணக்ஷோணீருஹக்ஷதகானநே |
தி³வி பரமிலத்³வ்ருந்தா³ வ்ருந்தா³ரகா꞉ குஸுமோத்கரை꞉
ஶிரஸி ப⁴வதோ ஹர்ஷாத்³வர்ஷந்தி நாம ததா³ ஹரே || 50-5 ||

மஹா விஷ்ணுவே,  பரந்தாமா,  கொடிய அந்த வத்ஸாசுரன்,  அது தான் நாம் அறியும்  அவன் பெயர், கன்றுக் குட்டி ராக்ஷஸன்.   அவனே போனபிறகு அவன் இயற் பெயர் தெரிந்து என்ன செய்யப் போகிறோம்? அவனது பருத்த உடல் விழுந்த மரங்கள் எல்லாம் அடியோடு  சாய்ந்தன. அழகான பிரிந்தாவனத்துக்கு திருஷ்டி போல் இந்தக்காட்சி அமைந்தது.  வானத்திலிருந்து தேவர்கள் மலர்மாரி பொழிந்து உன் மஹிமையை போற்றி வணங்கினார்கள். 

सुरभिलतमा मूर्धन्यूर्ध्वं कुत: कुसुमावली
निपतति तवेत्युक्तो बालै: सहेलमुदैरय: ।
झटिति दनुजक्षेपेणोर्ध्वं गतस्तरुमण्डलात्
कुसुमनिकर: सोऽयं नूनं समेति शनैरिति ॥६॥

surabhilatamaa muurdhanyuurdhvaM kutaH κυσυμααβαλιη
nipatati tavetyuktO baalaiH sahela mudairayaH |
jhaTiti danujakshepeNOrdhvaM γατασταρυμανδαλαατ
kusumanikaraH sO(a)yaM nuunaM sameti shanairiti || 6

ஸுரபி⁴லதமா மூர்த⁴ன்யூர்த்⁴வம் குத꞉ குஸுமாவலீ
நிபததி தவேத்யுக்தோ பா³லை꞉ ஸஹேலமுதை³ரய꞉ |
ஜ²டிதி த³னுஜக்ஷேபேணோர்த்⁴வம் க³தஸ்தருமண்ட³லாத்
குஸுமனிகரஸ்ஸோ(அ)யம் நூனம் ஸமேதி ஶனைரிதி || 50-6 ||

பாவம் , ஒன்றுமறியாச் சிறுவர்கள் உனது அந்த யாதவ குல நண்பர்கள்.  வானத்திலிருந்து மலர் மழை பொழிந்ததும் ஆச்சர்யம் மேலிட  ''டேய்  கிருஷ்ணா, எப்படிடா இவ்வளவு வாசனையாக அழகான  பெரிய பூக்கள் எல்லாம் மேலே இருந்து  உன் மேல் கொட்டுகிறது?  என்று கேட்டார்கள்.

நீ  எப்படிப்பட்ட ஜக  ஜாலன்..''அதெல்லாம் ஒன்று மில்லேடா,  அந்த  ராக்ஷஸ கன்றுக்குட்டியை தூக்க முடியாமல் தூக்கி மேலே  கடாசினேனில்லையா, அது மரத்தின் மேலே பட்டு  மரக்கிளைகளை  ஆட்டி அசைத்து அங்கிருந்து பூக்கள் கீழே  விழுந்தது. அவ்வளவு தான்''  என்று பட்டென்று பதில் சொன்னாய். 

क्वचन दिवसे भूयो भूयस्तरे परुषातपे
तपनतनयापाथ: पातुं गता भवदादय: ।
चलितगरुतं प्रेक्षामासुर्बकं खलु विस्म्रृतं
क्षितिधरगरुच्छेदे कैलासशैलमिवापरम् ॥७

kvachana divase bhuuyO bhuuyastare παρυσηααταπε
tapanatanayaapaathaH paatuM gataa bhavadaadayaH |
chalitagarutaM prekshaamaasurbakaM khalu vismR^ιταμ
kshitidhara garuchChede kailaasa shailamivaaparam || 7

க்வசன தி³வஸே பூ⁴யோ பூ⁴யஸ்தரே பருஷாதபே
தபனதனயாபாத²꞉ பாதும் க³தா ப⁴வதா³த³ய꞉ |
சலிதக³ருதம் ப்ரேக்ஷாமாஸுர்ப³கம் க²லு விஸ்ம்ருதம்
க்ஷிதித⁴ரக³ருச்சே²தே³ கைலாஸஶைலமிவாபரம் || 50-7 ||

பிருந்தாவனத்தில் நாட்கள் ஓடிக்கொண்டு தான் இருந்தன.  ஒரு நாள், கடும் வெயில், சூரியன்  சுள்ளென்று எரிந்தான். நீ  யோசித்தாய்.  நேரம் வந்து விட்டது அடுத்த வேலைக்கு  என்று தெரிந்துவிட்டது.  உன் நண்பர்களை அழைத்தாய்.  ''வாங்கோடா, எல்லோரும் காளிந்தி நதி சில்லென்று இருக்கும். அதில் தண்ணீர் குடித்துவிட்டு  விளையாடலாம் என்றாய் ''  ஆஹா ரொம்ப சுகமாக இருக்கும் என்று அவர்களும் உன்னோடு கிளம்பி விட்டார்கள்.  அங்கே  ஒரு பெரிய நாரை நின்றுகொண்டிருந்தது.   

ஆஹா   அதோ பாருங்கடா  எவ்வளவு பெரிய  நாரை  ஒன்று மலைமாதிரி நிற்கிறது. எங்கிருந்து இது வந்தது. இது வரை இவ்வளவு பெரிசு பார்த்ததில்லையே'' என்றான் ஒருவன். பெரிய இறகுகளை விரித்தது.   அதன் ரெண்டு இறக்கைகளையும்  அது அசைத்தது மனதில் பயத்தை வேறு உண்டாக்கியது. வாயைப் பிளந்து சிறுவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

पिबति स लिलं गोपव्राते भवन्तमभिद्रुत:
स किल निगिलन्नग्निप्रख्यं पुनर्द्रुतमुद्वमन् ।
दलयितुमगात्त्रोट्या: कोट्या तदाऽऽशु भवान् विभो
खलजनभिदाचुञ्चुश्चञ्चू प्रगृह्य ददार तम् ॥८॥

pibati salilaM gOpavraate βηαβανταμαβηιδρυταη
sa kila nigilannagni prakhyaM punardrutamudvaman |
dalayitumagaattrOTyaaH kOTyaa tadaa(a)(a)shubhavaan βιβχο
khalajana bhidaa chunchushchanchuu pragR^ihya dadaara tam || 8

பிப³தி ஸலிலம் கோ³பவ்ராதே ப⁴வந்தமபி⁴த்³ருத꞉
ஸ கில நிகி³லன்னக்³னிப்ரக்²யம் புனர்த்³ருதமுத்³வமன் |
த³லயிதுமகா³த்த்ரோட்யா꞉ கோட்யா ததா³ து ப⁴வான்விபோ⁴
க²லஜனபி⁴தா³ சுஞ்சுஶ்சஞ்சூ ப்ரக்³ருஹ்ய த³தா³ர தம் || 50-8 ||

அதன் அருகில் சென்று தொந்தரவு செய்து அதன் கோபத்தை கிளறினால்   கூரிய  வாள்  போன்ற அலகினால் நிச்சயம் கொன்றுவிடும்.  ஆகவே  வெகு தூரம் சென்று காளிந்தியில் இறங்கி நீர் பருகினார்கள்.  அவர்கள்  எல்லோரும் கிருஷ்ணன் உள்பட  நதியில் இறங்கி நீர் குடிப்பதை நாரை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டு வேகமாக  கிருஷ்ணா, உன்னை குறிவைத்து  ஓடிவந்தது.  கண்மூடி கண் திறக்கும் நொடி நேரத்தில் கிருஷ்ணா  உன்னை அப்படியே  பெரிய வாயை திறந்து விழுங்கிவிட்டது. 

நீ என்ன மாயம் செய்தாயோ கிருஷ்ணா, அடுத்த வினாடியே  உன்னை கக்கி வெளியே துப்பியது.  நெருப்பை விழுங்கியது போல் நீ அதன் வாயை   சுட்டெரித்துவிட்டாயோ?   அளவற்ற கோபத்தோடு அந்த நாரை தனது கூரிய  அலகுகளை விரித்து உன்னை ஈட்டியால் குத்தி பிளப்பது போல் தாக்கியது.  அதை எதிர்ப்பார்த்தவன் அல்லவா நீ.  உன் பலம் அதற்கு தெரியுமா?  திறந்த வாயோடு உன்னை நெருங்கிய அந்த நாரையின் வாயின் மேல் பகுதி கீழ் பகுதி ரெண்டையும் இரு கைகளால் பலமாக  பிடித்துக் கொண்டாய். வேகமாக அதன வாயை  அளவுக்கு மீறி  அகட்டினாய்.  வாய் பிளந்தது. சக்தி அனைத்தும் இழந்தது. தாங்க முடியாத வலியோடு  அந்த  நாரை சுருண்டு விழுந்தது. உயிர் பிரிந்தது. 

सपदि सहजां सन्द्रष्टुं वा मृतां खलु पूतना-
मनुजमघमप्यग्रे गत्वा प्रतीक्षितुमेव वा ।
शमननिलयं याते तस्मिन् बके सुमनोगणे
किरति सुमनोवृन्दं वृन्दावनात् गृहमैयथा: ॥९॥

sapadi sahajaaM sandraShTuM vaa mR^itaaM khalu πυυταναα
manujamaghamapyagre gatvaa pratiikshitumeva vaa |
shamana nilayaM yaate tasmin bake sumanO γάνε
kirati sumanObR^indaM bR^indaavanaad gR^ihamaiyathaaH || 9

ஸபதி³ ஸஹஜாம் ஸந்த்³ரஷ்டும் வா ம்ருதாம் க²லு பூதனா-
மனுஜமக⁴மப்யக்³ரே க³த்வா ப்ரதீக்ஷிதுமேவ வா |
ஶமனநிலயம் யாதே தஸ்மின்ப³கே ஸுமனோக³ணே
கிரதி ஸுமனோவ்ருந்த³ம் வ்ருந்தா³வனாத்³க்³ருஹமையதா²꞉ || 50-9 ||

அந்த நாரை வேறு யாருமில்லை, கம்சன் ராஜ்யத்தில் அவனால் அனுப்பட்ட ஒரு கொடிய ராக்ஷஸன். அவன் சகோதரி தான் முதலில் உன்னிடம் பலியான  பூதனை.  அவளை நீ கொன்றதை பழிவாங்க தான் இந்த ராக்ஷஸன்  பகன் (மஹா பாரதத்தில் வரும் பீமனால் கொல்லப்பட்ட பகாசுரன் அல்ல )  bakan.  அக்காவைத் தேடி  எமனுலகம் போய்ச் சேர்ந்தான்.  அப்புறம் என்ன?  வழக்கம் போலவே  தேவர்கள் விண்ணிலிருந்து மலர் மழை பொழிந்தார்கள்.   நீ ஒன்றும் நடக்காதது போல் மற்ற  சிறுவர்களோடு மாலை வீடு திரும்பினாய். 

ललितमुरलीनादं दूरान्निशम्य वधूजनै-
स्त्वरितमुपगम्यारादारूढमोदमुदीक्षित: ।
जनितजननीनन्दानन्द: समीरणमन्दिर-
प्रथितवसते शौरे दूरीकुरुष्व ममामयान् ॥१०॥

lalita muraliinaadaM δυυρααννισηαμυ vadhuujanaiH
tvaritamupagamyaaraadaaruuDhamOdamudiikshitaH |
janitajananiinandaanandaH samiiraNamandiraprathitavasate
shaure duuriikuruShva mamaamayaan ||10

லலிதமுரலீனாத³ம் தூ³ரான்னிஶம்ய வதூ⁴ஜனை-
ஸ்த்வரிதமுபக³ம்யாராதா³ரூட⁴மோத³முதீ³க்ஷித꞉ |
ஜனிதஜனநீனந்தா³னந்த³ஸ்ஸமீரணமந்தி³ர-
ப்ரதி²தவஸதே ஶௌரே தூ³ரீகுருஷ்வ மமாமயான் || 50-10 ||

விஷயம்  எப்போதும் எங்கும்  எவ்வளவு சீக்கிரம் கசிகிறது!.  யாதவ சிறுவர்கள் மூச்சு விடாமல் அதிசயத்தோடு அன்றாடம் நீ நிகழ்த்தும் சாகசங்களை ஒன்று விடாமல்  வீட்டில் போய் சொல்லாமலா இருப்பார்கள்? சின்ன ஊரான  பிருந்தாவனத்தில் அந்த செய்திகள் கண்ணும் காதும் அதிகம் கொண்டு பரவாதா?  நந்தகோபன் யசோதையும் வாய் பிளந்து தமது செல்வக்குமரன்  கிருஷ்ணனின் பிரதாபங்களை ஆனந்தமாகக்  கேட்டார்கள். ஏதோ ஒரு தெய்வ சக்தி உன்னை எப்போதும் தொடர்ந்து   உன் கூடவே இருந்து கொண்டு காத்து வருகிறது என்று மட்டும் அவர்களுக்கு நம்பிக்கை.  நீ யாரென்று அவர்களுக்கு தெரியாதே.
 
இப்போதெல்லாம் நீ  ஒரு புல்லாங்குழல் வித்வானாகி விட்டாய். காட்டிலிருந்து ஒரு மூங்கிலைத்  தேர்வு செய்து வெட்டி, அதில் துளை போட்டு  அழகாக வாசிக்கிறாய். என்னென்னவோ சொல்லத்  தெரியாத ஆனந்த ராகங்கள், செவிக்கு அமிர்தமாக  பொழிந்து தள்ளுகிறாய். கேட்கும் பசுக்கள், கன்றுகள், மயில்கள் , பறவைகள், மரங்கள் செடி கொடிகள் கூட  தலை  சாய்த்து தம்மை மறந்து ஆடுகிறதே. நீ  தெற்கே வந்து இந்த குருவாயூரில் ஆனந்தமாக குடிகொண்டுவிட்டாயே.  என் கஷ்டங்களையும் போக்கி என்னை வாழவிடு எண்டே குருவாயூரப்பா.''

எவ்வளவு நேர்த்தியாக பாடுகிறார்  மேப்பத்தூர் நாராயண பட்டத்ரி.  வாழ்வில் ஒருமுறையாவது முழுக்க முழுக்க  நாராயணீயம் படித்து இன்புறவேண்டும்.  இந்த  வாய்ப்பை இழப்பவர்கள் துரதிர்ஷ்ட சாலிகள் என்பதில் துளியும் எனக்கு சந்தேகமே இல்லை.  நானே  லேட் பேர்வழி தான். 


sivan jaykay

unread,
Sep 13, 2021, 7:54:44 PM9/13/21
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர் J K  SIVAN  -


75  ''மந்த்ர  மஹிமை''

மஹா பெரியவா  ஒரு முறை அற்புதமாக  ஒரு  பிரசங்கம் செய்திருக்கிறார்.  அது  மந்த்ரங்
கள் என்றால் என்ன?  யார் அவற்றை உருவாக்கியது? . அவற்றின் சக்தி என்ன?   இது போன்ற  நமக்கு  தெரியாத விஷயங்கள் பற்றி நன்றாக யோசித்திருக்கிறார்.   ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது படிப்பதற்கு.  அதன் சாராம்சம் தருகிறேன்.

எவ்வளவு  கஷ்டங்கள், சிரமத்தோடு இந்த பிரபஞ்சம் இயங்கி  வருகிறதே. இதையெல்லாம்  உருவாக்கி, நிர்வகிப்பது யார்? அந்த பரமாத்மா விடமிருந்து தான் நாம்  காணும் அனைத்தும், நாம் கேட்கும் சப்தம், நாம் அனுபவிக்கும் சகலமும் உருவாகியது.

நாம் கண்ணால் காண்கிறோமே, காதால்  கேட்கிறோமே, அதற்கு  முன்னால்  அவை  எல்லாம் ஆகாசத்தில் உண்டாகிறது. அங்கிருந்து தான் நமக்கு வருகிறது. பிரபஞ்சமே அப்படி உருவானது தான். பிரபஞ்சத்தில் இருக்கும் பஞ்ச பூதங்களும் மனிதனின் உடம்பிலும் உள்ளது.  வெளியே காணும் ஆகாசம்  நமது ஹ்ருதயத்தில் உள்ளது. ஹ்ருதயாகாசம் என்று அதற்கு பெயர்.  சமாதி நிலையில் யோகிகளால் அதை   அனுபவிக்க முடிகிறது. சாதாரணர்கள் நம்மால் அறிய முடியவில்லை.   அப்படி உணரும்போது வெளி, உள்ளே என்று இல்லாமல் எல்லாம் ஒன்றாக கலந்துவிடுகிறது.   அந்த  நிலையில் யோகிகளால், ரிஷிகளால்  ஆகாசத்தில் உருவாகும் சப்தத்தை கேட்க முடிகிறது.  அந்த சப்தங்களை அவர்கள்  கிரஹித்து நமக்கு  சொல் வடிவத்தில் சப்தங்களாக தந்தது தான் வேத மந்திரம்.  எங்கோ யாரோ  பாடுவது காற்றில் செலுத்தப்பட்டு காரிலிருந்து   ரேடியோ  ஆன்டென்னா  ரஹித்து நாம்  சிற்றலைகளில்  கேட்கிறோமே  அது போல்  நமக்கு தந்தது. ரேடியோக்கள் தான் ரிஷிகள்.

எந்த யோகியும், எந்த ரிஷியும் மந்திரங்களை உருவாக்க வில்லை.  ''கண்டு பிடித்தார்கள்'' .  ஆகாசத்தில் இருப்பதை  கிரஹித்தார்கள். அவை  ஆதி அந்தமில்லாத, அநாதி.  ''மந்த்ர த்ரஷ்டா'' என்றால் மந்திரங்களைக்  கண்டுபிடித்தவர்கள் என்று அர்த்தம். அவர்களை ''ரிஷி'' என்கிறோம்.  அவர்கள் , ''மந்த்ர கர்த்தா'' என்று செய்தவர்களோ,  உருவாக்கியவர்களோ  இல்லை.  வேத மந்த்ரங்கள்  அனைத்தும்  பரமாத்மாவின் மூச்சு. 

இந்த வேத மந்திரங்களின் அர்த்தம் முக்கியம் இல்லை.  சப்தம் தான் ரொம்ப முக்கியம்.  உச்சரிப்பு. உச்சாடனம் தான் அதி முக்கியம். அது தான் மந்த்ர சக்தி. மந்த்ர அக்ஷரங்களை சரியான அளவில் ஸ்வரத்தோடு  உச்சரிக்கவேண்டும். 

எனக்கு தெரிந்து  மாயவரம் பக்கம் ஒரு தேள் கொட்டு, கடிக்கு, மந்திரிப்பவர் ஒருவர் இருந்தார். அவர் சொல்லும் மந்திரத்தை தப்பில்லாமல் உச்சரித்தால் கடி விஷம், கொட்டு வலி உடனே நீங்கியதை பலரிடம் அறிந்திருக்கிறேன்.   பலரால் சொல்ல முடியாது என்பதால்  அவர்களுக்காக அவரே  உச்சரிப்பார்.   அந்த மந்த்ரத்தின்  அர்த்தம் கேட்டால், தெரியாது என்பார்.

பில்லி சூனியம், போன்ற கெட்டவை  செய்யும்  மாந்த்ரீக, மந்திரங்களும் அப்படித்தான்.  சரியான உச்சரிப்பில், உச்சாடனத்தில் தான் அதன் சக்தி.  அந்த காலத்தில் இப்படி பலருக்கு கெடுதல் செய்யும் மாந்த்ரீகர்களின் வாயில்  பல்லை தட்டிவிடுவார்கள், அது தான் தண்டனை. ''பல் போனால் சொல் போச்சு''.  சரியாக உச்சரிக்கமுடியாது. மந்திரம் பலனளிக்காது. 

காயத்ரி மந்திரம், பித்ரு ஸ்ரார்த்த மந்திரம், கல்யாண மந்திரம் எல்லாம் சரியாக,  அளவோடு, ஸ்வரத்தோடு,  சொல்லும் வாத்தியார்கள்  மூலம் அறிந்து  சொன்னால் தான் பலன்.  இக பர நன்மைகள் தருபவை இந்த வேத மந்த்ரங்கள்.

''அதெப்படி சார்  நமக்கு கேட்காமல் ரிஷிகளுக்கு மட்டும் ஆகாசத்திலிருந்து தனியாக  இந்த மந்திரங்கள் காது கேட்கும்?''

அங்கு தான் நமக்கும்  யோகிகள், ரிஷிகளுக்கும் உள்ள வித்யாசம் இருக்கிறது.  நம்மால் காண முடியாததை , கேட்க  முடியாததை, கிரஹிக்க  முடியாததை, உணரமுடியாததை அவர்கள் பல வருஷங்கள் தவமிருந்து பெற்ற சக்தி அது. அவர்களால் தான் நாம்,  நம்மால்  அறிய முடியாததை
அறிகிறோம், பலன் பெறுகிறோம். அந்த  நன்றி கலந்த பக்தி இருந்தால் போதும். நமது சக்திக்கு, புத்திக்கு எட்டாத அவற்றை அறிந்து எளிதாக வேத மந்திரமாக  சப்தமாக  அக்ஷரமாக அவர்கள் தந்திருக்கிறார்கள். 

ரஷ்யா  அமெரிக்கா  ஜப்பான் ஊர்களில் நடப்பதை நாம்  நேரில் பார்க்கிறோமா, கேட்கிறோமா?, பத்திரிகை காணொளி மூலமாக  தெரிந்து கொள்வது போல் ரிஷிகளின் மந்த்ரங்கள் நமக்கு அறிவூட்டுகிறது. 

sivan jaykay

unread,
Sep 13, 2021, 7:55:04 PM9/13/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீமந்  நாராயணீயம் -  நங்கநல்லூர்  J K  SIVAN --
51வது தசகம் 

51  திறந்த வாய் மூடி இறந்தவன் 

கம்சனும் அவனது ராக்ஷஸ சகாக்களும்  கிருஷ்ணனைக்  கொல்லாமல்  விடுவதில்லை என்று தீர்மானித்துவிட்டு ஒவ்வொருவராக வரிசையாக வந்து உயிரைத்  தான் விடுகிறார்கள். இதோ  இன்று  அகாசுரன் வந்துவிட்டான். ஒவ்வொரு ராக்ஷஸனும் ஒவ்வொரு டைப்.  மேப்பத்தூர்  நாராயண பட்டத்ரி,  கிருஷ்ணனுக்கு அவனது பால்ய லீலைகளை ஒவ்வொன்றாக ஒவ்வொரு தசகத்திலும்  ஞாபகமூட்டி மகிழ்விக்கிறார்.

कदाचन व्रजशिशुभि: समं भवान्
वनाशने विहितमति: प्रगेतराम् ।
समावृतो बहुतरवत्समण्डलै:
सतेमनैर्निरगमदीश जेमनै: ॥१॥

kadaachana vrajashishubhiH samaM bhavaan
vanaashane vihitamatiH pragetaraam |
samaavR^itO bahutara vatsamaNDalaiH
satemanairniragama diishajemanaiH || 1

கதா³சன வ்ரஜஶிஶுபி⁴꞉ ஸமம் ப⁴வான்
வனாஶனே விஹிதமதி꞉ ப்ரகே³தராம் |
ஸமாவ்ருதோ ப³ஹுதரவத்ஸமண்ட³லை꞉
ஸதேமனைர்னிரக³மதீ³ஶ ஜேமனை꞉ || 51-1 ||

வ்ரஜ  பூமியில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமே இல்லை.  ஏன்?  கிருஷ்ணன் இருக்கிறானே போதாதா? சிறுவர்கள்  ஆனந்தமாக  அவனோடு விளையாடி மகிழ்ந்தார்கள்.  இதோ இன்று ஒரு திட்டம்  அமுலுக்கு வந்து விட்டது. காட்டில்  எல்லோரும்  இனிப்புகள் சிற்றுண்டிகள் எடுத்துச்சென்று உண்டு, விளையாடி மகிழப்போகிறார்கள்.  கிருஷ்ணனை சிறுசுகள் எல்லாமே  சூழ்ந்து வட்டமிட்டன.  வித விதமான ருசிகளோடு உணவுப்பண்டங்கள்  சேர்ந்துவிட்டன.  அவற்றோடு காலையிலேயே  பிருந்தாவன காட்டுக்கு கிளம்பிவிட்டார்கள்.

विनिर्यतस्तव चरणाम्बुजद्वया-
दुदञ्चितं त्रिभुवनपावनं रज: ।
महर्षय: पुलकधरै: कलेबरै-
रुदूहिरे धृतभवदीक्षणोत्सवा: ॥२॥

viniryatastava charaNaambuja dvayaat
uda~nchitaM tribhuvana paavanaM rajaH |
maharShayaH pulakadharaiH kalevaraiH
uduuhire dhR^itabhavadiikshaNOtsavaaH || 2

வினிர்யதஸ்தவ சரணாம்பு³ஜத்³வயா-
து³த³ஞ்சிதம் த்ரிபு⁴வனபாவனம் ரஜ꞉ |
மஹர்ஷய꞉ புலகத⁴ரை꞉ கலேப³ரை-
ருதூ³ஹிரே த்⁴ருதப⁴வதீ³க்ஷணோத்ஸவா꞉ || 51-2 ||

சிறுவர்கள் சேர்ந்து  விட்டால், ஓட்டத்திற்கும் ஆட்டத்திற்கும் குறைவுண்டா?.  மண் புழுதிகளை வாரி தெளித்தவாறு  காலால்  மிதித்து தூவினார்கள் .   கண்ணா   உன்   பாதங்களிலிருந்து பறந்த அந்த  புழுதி, பாத தூளி  வானம் வரை மேலே காற்றில் பறந்தது.   மூவுலகத்தையும் புனிதமாக்கும் அதை தேவர்கள், விண்ணவர்கள் பரம சந்தோஷத்தோடு  விரும்பி எடுத்து வணங்கி  அணிந்தனர்.   

प्रचारयत्यविरलशाद्वले तले
पशून् विभो भवति समं कुमारकै: ।
अघासुरो न्यरुणदघाय वर्तनी
भयानक: सपदि शयानकाकृति: ॥३॥

prachaarayatyavirala shaadvale tale
pashuun vibhO bhavati samaM kumaarakaiH |
aghaasurO nyaruNadaghaaya vartaniiM
bhayaanakaH sapadi shayaanakaakR^itiH || 3

ப்ரசாரயத்யவிரலஶாத்³வலே தலே
பஶூன்விபோ⁴ ப⁴வதி ஸமம் குமாரகை꞉ |
அகா⁴ஸுரோ ந்யருணத³கா⁴ய வர்தனீம்
ப⁴யானக꞉ ஸபதி³ ஶயானகாக்ருதி꞉ || 51-3 ||

காடு, புல்வெளி,  செடி  கொடிகள், அடர்ந்த மரங்கள் என்றால் ஜனநடமாட்டம் இல்லாத  அவ்விட ங்களில் நிறைய  கொடிய  விலங்குகளும், பாம்புகளும் இருப்பதில் என்ன ஆச்சர்யம்.  அகாசுரன் இப்படித் தான்  ரொம்ப சமயோசிதமாக   அதி புத்த்திசாலியாக செயல்படுவதாக நினைத்து ஒரு பெரிய மலைப்பாம்பாக உருவெடுத்து ஒரு மரத்தில் சுற்றிக்கொண்டு  கிருஷ்ணனைப் பிடிக்க காத்திருந்தான்.

महाचलप्रतिमतनोर्गुहानिभ-
प्रसारितप्रथितमुखस्य कानने ।
मुखोदरं विहरणकौतुकाद्गता:
कुमारका: किमपि विदूरगे त्वयि ॥४॥

mahaachala pratimatanOrguhaanibha
prasaarita prathita mukhasya kaanane |
mukhOdaraM viharaNa kautukaadgataaH
kumaarakaaH kimapi viduurage tvayi ||4

மஹாசலப்ரதிமதனோர்கு³ஹானிப⁴-
ப்ரஸாரிதப்ரதி²தமுக²ஸ்ய கானநே |
முகோ²த³ரம் விஹரணகௌதுகாத்³க³தா꞉
குமாரகா꞉ கிமபி விதூ³ரகே³ த்வயி || 51-4 ||

கிருஷ்ணா,  அகாசுரன்  வானத்திற்கும் பூமிக்குமாக  ஒரு பெரிய  மலைக்குகை போல்  வாயைப் பிளந்து மலையோடு மலையாக  அசையாமல் காத்திருந்தான்.  உன்னோடு விளையாடும் சிறுவர்கள் அவனது அகண்ட வாயைப்   பார்த்து  அதிசயித்து ''அடேடே  இப்படி ஒரு மலையும்  குகையும் இதுவரை பார்க்கவே இல்லையே. உள்ளே சென்று விளையாடுவோம் என்று அகாசுரனின்  திறந்த வாய்க்குள் சென்று விட்டனர். அவன் அசையவே இல்லை.  அவன்  உனக்காக அல்லவோ  காத்திருந்தான். நீ சற்று தூரத்தில் பசுக்களோடும் கன்றுகளோடும்  நீர் பருக சென்றுவிட்டாயே .

प्रमादत: प्रविशति पन्नगोदरं
क्वथत्तनौ पशुपकुले सवात्सके ।
विदन्निदं त्वमपि विवेशिथ प्रभो
सुहृज्जनं विशरणमाशु रक्षितुम् ॥५॥

pramaadataH pravishati pannagOdaraM
kvathattanau pashupakule savaatsake |
vidannidaM tvamapi viveshitha prabhO
suhR^ijjanaM visharaNamaashu rakshitum || 5

ப்ரமாத³த꞉ ப்ரவிஶதி பன்னகோ³த³ரம்
க்வத²த்தனௌ பஶுபகுலே ஸவாத்ஸகே |
வித³ன்னித³ம் த்வமபி விவேஶித² ப்ரபோ⁴
ஸுஹ்ருஜ்ஜனம் விஶரணமாஶு ரக்ஷிதும் || 51-5 ||

கிருஷ்ணா, குருவாயூரப்பா,  அப்புறம் என்ன நடந்தது என்று சொல்லட்டுமா. கேள்.  அந்த யாதவ  சிறுவர்கள், கன்றுகளோடும் , பசுக்களோடும்   திறந்திருந்த  அகாசுரன் வாய்க்குள் அது ஏதோ குகை என்று எண்ணி உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க நுழைந்துவிட்டனர்.  அசூரன்   உடலில்  சூடு கிளம்பியது.  நீ  அந்த நேரம் பார்த்து வந்துவிட்டாய். புதிதாக இருக்கும் மலையும் அதன் குகை வாசலும் உனக்கு அது ஏதோ மாயம் என்று தெரிந்துவிட்டது. அடுத்த ஆபத்து இந்த மலைக்குகை ரூபத்திலா என்று வியந்தாய்.  நீயும் உன் நண்பர்களைத் தேடி அந்த  அசுரனின் திறந்த வாய்க்குள் சென்றுவிட்டாய். இந்த  ஒரு  சந்தர்பத்துக்காகத்தானே   அகாசுரன் மலைபோல் காத்திருந்தான்.   மற்ற  சிறுவர்களைக்  காப்பாற்றி வெளியே கொண்டுவரவேண்டும், பசுக்களை மீட்கவேண்டும் என்பதல்லவோ உன்  கவலை .  அகாசுரன் வாய் நீ  உள்ளே  நுழைந்ததும் மூடிக்கொண்டது. எல்லோரையும் விழுங்கி விட்டான் அவன்.  அவன் உடலின் சூடு நெருப்பு போல்  கொதித்தது. எங்கும் இருள் மயம்.
 
गलोदरे विपुलितवर्ष्मणा त्वया
महोरगे लुठति निरुद्धमारुते ।
द्रुतं भवान् विदलितकण्ठमण्डलो
विमोचयन् पशुपपशून् विनिर्ययौ ॥६॥

galOdare vipulita varShmaNaa tvayaa
mahOrage luThati niruddha maarute |
drutaM bhavaan vidalita kaNTha maNDalO
vimOchayan pashupa pashuunviniryayau || 6

க³லோத³ரே விபுலிதவர்ஷ்மணா த்வயா
மஹோரகே³ லுட²தி நிருத்³த⁴மாருதே |
த்³ருதம் ப⁴வான்வித³லிதகண்ட²மண்ட³லோ
விமோசயன்பஶுபபஶூன் வினிர்யயௌ || 51-6 ||

என்ன செய்யவேண்டும் அடுத்தது என்று நீ தீர்மானித்துவிட்டாய் குருவாயூரப்பா.  ''ஓஹோ  உன் வாயை அல்லவோ நீ  பெரிதாக, குகையின்  வாயிலைப் போல்  அகலமாக வைத்து க்கொண்டிருந்தாய், இதோ பார் என்னை. என்று மிகப்பெரிய உருவத்தை அவன் வாய்க்குள்  இருந்தவாறே  எடுத்தாய்.  அகாசுரன்  மூச்சு விட திணறினான்.  மூச்சு முட்டச் செய்தாய், திணறினான்,   புரண்டான், திமிறினான்.  உன்னை கக்கி வெளியே  தள்ள முயற்சித்தான்.  நீ இன்னும் பெரிய உருவமாக  எடுத்துக் கொண்டு விட்டாய்.  அகாசுரன்  தடுமாறினான். விழி பிதுங்கினான்.  அவன் கழுத்தைப்  பிளந்தாய். இன்னொரு குகை வாயில் போல் அது திறந்தது.  கோபர்களையும் , பசுக்களையும், கன்றுகளையும் அதன் வழியே வெளியேற்றினாய் . 

क्षणं दिवि त्वदुपगमार्थमास्थितं
महासुरप्रभवमहो महो महत् ।
विनिर्गते त्वयि तु निलीनमञ्जसा
नभ:स्थले ननृतुरथो जगु: सुरा: ॥७॥

kshaNaM divi tvadupagamaarthamaasthitaM
mahaasuraprabhava mahO mahO mahat |
vinirgate tvayi tu niliinama~njasaa
nabhaH sthale nanR^iturathO jaguH suraaH || 7

க்ஷணம் தி³வி த்வது³பக³மார்த²மாஸ்தி²தம்
மஹாஸுரப்ரப⁴வமஹோ மஹோ மஹத் |
வினிர்க³தே த்வயி து நிலீனமஞ்ஜஸா
நப⁴꞉ஸ்த²லே நன்ருதுரதோ² ஜகு³ஸ்ஸுரா꞉ || 51-7 ||

இனி முடியாது,  மரணிக்கும் தருணம் வாய்த்துவிட்டது என்று அகாசுரன் புரிந்துகொண்டான். உன்னைத் சரணடைவது தவிர அவனுக்கு வேறு ஒன்றும் வழியே இல்லை.  ஒரு பெரிய ஒளி அவனிடமிருந்து வெளிப்பட்டது.  அது அவன் உயிரின் கடைசி ஒளி வடிவம்.  அது  வானில் மிதந்துசென்று நிலையாக நின்றது. உன்னோடு கலக்க காத்திருந்தது...அகாசுரன் கதை முடிந்துவிட்டதோ? நீ  அகாசுரன் உடலிலிருந்து எல்லோரையும் வெளியேற்றிவிட்டு  கடைசியாக  வெளியே வந்தாய்.  நீ  வெளியே  வந்த  அடுத்த கணமே அகாசுரன் உயிரின் ஒளி  உன்னில் கலந்து மறைந்தது.    அகாசுரன் என்ற கொடிய  ராக்ஷஸனின் கதை முடிந்ததில் தேவர்கள் விண்ணவர்கள் மகிழ்ந்து உனக்கு மலர்கள் தூவினார்.  சந்தோஷமாக ஆடிப்பாடினார்கள். வெற்றியோடு அகாசுரன் வருவான் என்று மதுராவில் கம்சன் காத்திருந்தான். 

सविस्मयै: कमलभवादिभि: सुरै-
रनुद्रुतस्तदनु गत: कुमारकै: ।
दिने पुनस्तरुणदशामुपेयुषि
स्वकैर्भवानतनुत भोजनोत्सवम् ॥८॥

sa vismayaiH kamala bhavaadibhiH suraiH
anudrutastadanu gataH kumaarakaiH |
dine punastaruNa dashaamupeyuShii
svakairbhavaanatanuta bhOjanOtsavam ||8

ஸவிஸ்மயை꞉ கமலப⁴வாதி³பி⁴꞉ ஸுரை-
ரனுத்³ருதஸ்தத³னு க³த꞉ குமாரகை꞉ |
தி³னே புனஸ்தருணத³ஶாமுபேயுஷி
ஸ்வகைர்ப⁴வானதனுத போ⁴ஜனோத்ஸவம் || 51-8 ||

அன்று  எல்லோரும்  ஒன்றாக  அமர்ந்து   அவரவர் வீட்டிலிருந்து  கொண்டு வந்த விதவிதமான உணவு பதார்த்தங்களை பரிமாறிக்  கொண்டு கூட்டாஞ் சோறு உண்பதாகத்  தானே  திட்டம்.  காலையில் அப்படி தானே  எல்லோரும் கிளம்பினீர்கள்.  இந்த அகாசுரன்  வதம் ஒரு  சந்தோஷமான நிகழ்வு அல்லவா  அதையும் சேர்த்து கொண்டாடுவது போல் அந்த மதிய நேரத்தில்  எல்லோரும்  மரநிழலில் அமர்ந்தீர்கள்.  நாம் நுழைந்தது மலையல்ல. ஒரு பெரிய  மலைப்பாம்பின் திறந்த வாய்  அதனுள்ளிருந்து நம்மை கிருஷ்ணன் அல்லவோ    உயிரோடு மீட்டான் என்ற நன்றியோடு, மகிழ்வோடு  அனைவரும் அவனோடு  உணவருந்தி
னார்கள். 

विषाणिकामपि मुरलीं नितम्बके
निवेशयन् कबलधर: कराम्बुजे ।
प्रहासयन् कलवचनै: कुमारकान्
बुभोजिथ त्रिदशगणैर्मुदा नुत: ॥९॥

viShaaNikaamapi muraliiM nitambake
niveshayan kabaladharaH karaambuje |
prahaasayan kalavachanaiH kumaarakaan
bubhOjita tridashagaNairmudaa nutaH || 9

விஷாணிகாமபி முரலீம் நிதம்ப³கே
நிவேஶயன்கப³லத⁴ர꞉ கராம்பு³ஜே |
ப்ரஹாஸயன்கலவசனை꞉ குமாரகான்
பு³போ⁴ஜித² த்ரித³ஶக³ணைர்முதா³ நுத꞉ || 51-9 ||

வாதபுரீசா,  இப்போதெல்லாம் நீ எங்கு சென்றாலும் உன் இடையில் பீதாம்பர வஸ்த்ரத்தில் செருகப்பட்டு ஒரு புல்லாங்குழல் காட்சி தருகிறது.  எல்லோருடனும்  சேர்ந்து விளையாடி, மகிழ்ந்து அவர்கள் தந்த  எல்லாம் கலந்த ஒரு பிடி உணவை வாய் நிறைய நீ  உண்ட  அந்த அழகை எப்படி வர்ணிப்பேன்?  எப்படி உன்னால்  ஒன்றுமே  நடக்காதது போல்  அகாசுரனை வதம் செய்து  எமனுலகுக்கு அனுப்பிவிட்டு  விளையாடி நண்பர்களோடு சேர்ந்து சநதோஷமாக உணவருந்த முடிந்தது?

सुखाशनं त्विह तव गोपमण्डले
मखाशनात् प्रियमिव देवमण्डले ।
इति स्तुतस्त्रिदशवरैर्जगत्पते
मरुत्पुरीनिलय गदात् प्रपाहि माम् ॥१०॥

ஸுகா²ஶனம் த்விஹ தவ கோ³பமண்ட³லே
மகா²ஶனாத்ப்ரியமிவ தே³வமண்ட³லே |
இதி ஸ்துதஸ்த்ரித³ஶவரைர்ஜக³த்பதே
மருத்புரீனிலய க³தா³த்ப்ரபாஹி மாம் || 51-10 ||

sukhaashanaM tviha tava gOpamaNDale
makhaashanaat priyamiva devamaNDale |
iti stuta sitradashavarairjagatpate
marutpuriinilaya gadaatprapaahi maam ||10

எண்டே குருவாயூரப்பா,  நீ  வட்டமாக  அட்கார்ந்திருந்த அந்த கோப சிறுவர்கள்  மத்தியில்  அமர்ந்து கொண்டு  சிரித்து மகிழ்ந்து '' வாடா  கிருஷ்ணா  நாம் விதவிதமான  பக்ஷணங்களை உண்டு மகிழ்வோம்'' என்று   அவர்கள்  ஆசையாக  அழைக்க  அவர்களோடு சேர்ந்து  உணவருந்தும் அந்த காட்சி  விண்ணவர்களோடு  சேர்ந்து அவர்கள் உன்னை புகழ்ந்து பாடி உனக்கு உணவு நைவேத்யம் செய்வதை விட ஆனந்தமான ஒரு காட்சியாக  இருந்ததப்பா.  நீ  என்னையும் மகிழ்வுறச் செய்ய என் நோய் நீக்கி வினை தீர்த்தருள்வாய் வினோதா'' என்று இந்த தசகத்தை முடிக்கிறார்  பட்டத்ரி.


sivan jaykay

unread,
Sep 13, 2021, 7:55:47 PM9/13/21
to amrith...@googlegroups.com

''காலா.  வா,  உன்னைக் காலால்  உதைக்கிறேன்'' 
நங்கநல்லூர்   J.K. SIVAN

ரெண்டு  நாளாக இந்த இனிய  கம்ப்யூட்டரை விட்டு விலகி  அசோக் நகரில் என் மகள் வீட்டில் இருந்தேன்.   பாரதியாரின் மறைவு நாள் செப்டம்பர் 12, 1921  என்று அவரது இறப்பு சான்றிதழ் சொல்கிறது. நிறையபேர்  நேரில் பார்த்தவர்கள்  செப்டம்பர் 11 என்கிறார்கள்.   செப்டம்பர்  நள்ளிரவில் இறந்த பாரதியின் தேதி 12.9.1921.  பாரதி தான் சாகவில்லையே. என்றும், தமிழ் இருக்கிற வரை,  பாரதியும்  வாழ்பவன்.  அவன்  அமரகவி  என்று அழைக்கப்பட்டவன்.  நேற்று எழுதினால் என்ன, இன்று எழுதினால் என்ன. அவன் தான் நெஞ்சை விட்டு நீங்காதவனாயிற்றே.

நானும்  ஒரு தமிழன் தான். ஆரம்ப கல்வியே கூரைக்கட்டூ ,  மண் தரை பள்ளிக்கூடத்தில் தான். தெரிந்த பேசும் எழுதும் தமிழ் வேறு,  நான் புத்தகத்தில் கற்ற தமிழ் வேறு. மெட்ராஸ் பாஷை தமிழ் கம்பனுக்கோ, வள்ளுவனுக்கோ, இளங்கோவுக்கோ தெரியாது.   ஆகவே  தான்  என்னைப் போல  பலரால்  தமிழ் மூலம்  அவர்களை அணுக முடியவில்லை.  நல்ல விஷயங்கள் தெரியாமலேயே வாழ்க்கை பெரும்பாலும் முற்றுப்புள்ளி வரை வந்து விட்டது.  இதில் ஒரு ஆறுதல் என்ன தெரியுமா?    பாரதி தமிழ்  அவ்வளவு கடினம் இல்லை. எளியது. அவன் எண்ணம்  தெளிவாக புரிகிறது. என்னை கவர்ந்தது.   செப்டம்பர் 11  அவன் இறுதி நாள். அதைப்  பற்றி நினைக்கும்போது என்னையறியாமலே கண்களில் பனிப்படலம். 

ஒவ்வொரு வருஷமும் செப்டம்பர் 11 பாரதியின் நினைவும் வரும் காலண்டர் நாட்காட்டியை  கிழித்ததும்  சிறு காகித துண்டாக மறந்து, மறைந்து போகும் என்பது  என்  மனதில்  இல்லை.
செப்டம்பர் 11  1921  மஹா கவியின் கடைசி நாள். அன்றைய சம்பவத்தை நினைத்தால் நெஞ்சு கனக்கும். குற்ற உணர்வு  நெஞ்சைப் பிழியும் சோகம் கண்ணீராக வரும்.

''ஆஹா,  என்ன ஒரு அற்புத மஹா கவி, அமர கவி, தேசீய கவி, அவனை வறுமையில் வாழவிட்டு மதிக்காத நாம் தமிழர்களா? இறந்தபின் அவன் அருமை தெரிந்து அதனால் அவனுக்கென்ன? ஒரு வேளை சந்தோஷமாக அவன் குடும்பம் சாப்பிட அனுமதித்தோமா? செல்லம்மாவோடு வறுமை யையும் சேர்த்தல்லவோ அவன் மணந்தான்.   39 வருஷமே வாழ்ந்த  குறுகிய   கால அவகாசத்தில்  அவன் சாதித்தது முன்னூறு வருஷமானாலும் எவனாலும் முடியாதது.

திருவல்லிக்கேணியில் அவனை அறியாதவர்கள், மதிக்காதவர்கள் நிறைய பேர் இருந்தார்களோ? இன்று உலகமே அறிகிறதே அவன் வாழ்ந்த வீடு என்ற அந்த திருவல்லிக்கேணி வீட்டை. நான் சென்று அமைதியாக அமர்ந்து தியானிப்பேனே.  அந்த வீட்டின் சுவர்களில் எத்தனை பாரதி திருவுருவங்கள். எத்தனை எழுத்துக்கள். தமிழிலும், சமஸ்க்ரிதத்திலும், ஆங்கிலத்திலும் நிபுணன் அந்த காவிய  நாயகன். சரஸ்வதிக்கு பிடித்த அவனை ஏன் லக்ஷ்மிக்கு பிடிக்கவில்லை?

வாய் திறவாமல் அவனை வளைய வந்த ஒன்பது கஜ ஒல்லி பெண்மணி செல்லம்மா. பாரதி மனைவி என்ற புகழால் தமிழ் நெஞ்சங்களின் மனதில் செல்லம்மாவின் பெயர் என்றும் கவிதையாக நிலைத்து விட்டதே. அவளுக்கு நீ கொடுத்த அந்தஸ்து ஆபரணம் இது தானா பாரதி? நீ ஒருவேளை தங்கம் மட்டும் கொடுத்திருந்தால் அது மறைந்திருக்கும்.    அதனால்  இல்லாத தங்கத்தில் பெண்ணுக்கு பெயராக வைத்து  தங்கம்மா  என்ற பெண் மூலம் உன் பாரதி வம்சம் வளர்ந்துவிட்டது.
பிராமண சமூகமே அவனை அவமதித்த காரணம் அவன் ''காக்கை குருவி எங்கள் ஜாதி'' என்றதாலா? நீங்கள் இல்லாவிட்டால் எனக்கென்ன ''கடலும் மலையும் எங்கள் கூட்டம்'' என்றதாலா? அவன் ராஜாவாகவே வாழ்ந்தான், மைசூர் மஹாராஜாவுக்கு மட்டுமா முண்டாசு? அவனுக்கும் தான் அற்புதமாக இருந்து எத்தனை படத்தில் முறுக்கு மீசையோடு பார்க்கிறேன்.

முண்டாசு கவிஞன் என்று பெயர் பெற்றவன் பாரதி. இலை முன்னால் சாப்பிடும் விதம் ஒரு ராஜா மாதிரி கம்பீரமாக இருந்து என்ன பயன். இலையில் அவனுக்கு மாதம் பத்து நாள் மட்டும் தான் ஏதாவது காய்கறி வாங்க வசதி அவனுக்கு . மற்ற  நாள் வெறும் சீரக  ரசமும் சுட்டப்பளமும் தான் அந்த அமர கவிக்கு சாப்பிட முடிந்தது.  
 ''தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தையே அழித்துவிடுவேன்'' என்ற அந்த பொது நல தியாகிக்கு அவ்வளவு தான் கொடுப்பினை.

பாரதிக்கு மனதில் தான் உறுதி. உடல் தளர்ந்தவர். பாதி நாள் வெள்ளையன் அரசாங்கத்தின் பிடியிலிருந்து தப்பவே நேரம் சரியாக இருந்தது. சிறை வாசம்.

1921 ஜூலை மாதம் பார்த்தசாரதி கோவில் யானைக்கு ஏன் பாரதியை பிடிக்கவில்லை? வாழைப் பழம் தேங்காய் கொடுத்த பாரதியை, ''போ உனக்கே உணவில்லை எனக்கு  ஏன் கொண்டு வந்தாய்''? என்று அன்பாக தள்ளி விட்டதோ?  அதுவே ஆபத்தாகி விட்டதா? கஜேந்திரன் பலம் எங்கே பட்டினிக் கவிஞன் உடலின் சக்தி எங்கே? அந்த அதிர்ச்சி, எலும்பு முறிவு, தொடர்ந்து காய்ச்சல், வயிற்றுப் போக்கு... தக்க மருத்துவ வசதிக்கு வழி இல்லை. அதோடு ஜீவனத்துக்கு உழைப்பு வேறு. ரெண்டு மூன்று மாதம் வாட்டி எடுத்தது.

பாரதி வாழைப்பழம் தேங்காய் எடுத்துக் கொண்டு பார்த்தசாரதி கோவில் யானையை நெருங்கிய  போது அருகில்  யாரோ  ''யானை கிட்டே போகாதேங்கோ'' என  எச்சரித்தும் பிடிவாதக்கார பாரதி கேட்கவில்லை. யானை அமைதியாகவே இருந்தது. ஆனால் துதிக்கையால் தேங்காய் பழத்தைப் பற்றாமல் பாரதியின் இடுப்புக்கு மேலே சுற்றி தன் நான்கு கால்களுக்கும் நடுவே அவரை தூக்கி வீசி  கண்ணிமைக்கும் நேரத்தில் குவளைக்  கண்ணன் என்ற பாரதியின் சிநேகிதன் ஒரு புண்ணிய ஆத்மா தன் உயிரையும் பொருட்படுத்தாது யானையின் கால்களுக்கு நடுவே புகுந்து குனிந்து பாரதியை அகற்றி தன் தோளில் போட்டுக் கொண்டார். வெளியே தப்பினார்கள்.  யானை நினைத்திருந்தால் தன் கால்களுக்கு நடுவே இருக்கும் இருவரையும் அக்கணமே நசுக்கி சட்னி செய்திருக்க முடியும். கஜேந்திரன் தான் தாக்கியது சாதாரணன் இல்லை கிருஷ்ணனின் பக்தன் என்று உணர்ந்தானோ என்னவோ. அதற்குப்  பிறகு அவரையும் குவளைக் கண்ணனையும் தாக்க வில்லை. யானையிடம் எந்த சலனமும் இல்லை.    கீழே பாரதி விழுந்த போது முண்டாசு இருந்ததால் பின்புற மண்டை தப்பியது ஆனால் கட்டாந் தரையில் முகம் மூக்கு தோள்பட்டை முழங்கை மற்றும் முழங்கால்களில் பலத்த ரத்தக் காயத்தோடு பாரதி மயங்கினார்.

காயம்பட்ட கவிஞனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில்  நண்பர் சீனுவாசாச்சாரியார்  கொண்டு போய்ச் சேர்த்தார். பகைவனுக்கும் அருளச் சொன்ன பாரதி தன்னைப் பழுதாக்கிய யானையைப் பழித்தாரா? இல்லவே இல்லை. கொஞ்சம் நினைவு வந்ததும் '' ஹா ஹா '' என்று வழக்கமான அட்டகாசமான சிரிப்பு.
''யானை முகவரி தெரியாமல் என்னிடம் மோதி விட்டது.என்ன இருந்தாலும் என்னிடம் இரக்கம் அதிகம் தான் இல்லையென்றால் என்னை உயிரோடு விட்டிருக்குமா ?''

உடல் காயம் மாறத்தொடங்கியது. அன்றாட உணவுக்கு உத்யோகம் அவசியமாகியது. உடலுக்கு ஒய்வு போதவில்லை. எழுத்துப்  பசி சுதேசமித்திரன் ஆபீஸூக்கு ஐந்தாறு மாதங்கள் சிரமத்தோடு செல்ல வைத்தது. காயம் ஆறினாலும் யானை தந்த அதிர்ச்சி சில அவசர வியாதிகளை கிளப்பி விட்டது. சீதபேதி பாரதியின் உடலைச் சிதைக்கத் தொடங்கியது. மீண்டும் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில். செப்டம்பர் 12 
 1921. அதிகாலை இரண்டு மணி. மஹா கவி பாரதியாரின் உடலைவிட்டு உயிர் பிரிய முடிவெடுத்து விட்டது. 

''போதும் பாரதி  நான் உன்னோடு இந்த உலகத்தில், இந்த நன்றிகெட்ட சமூகத்தில் இருந்தது'' என்று அதற்கு மேலும் அவரோடு இருக்க உயிருக்குப்  பிடிக்க வில்லை. வெளியேறத் துடித்து   பாரதியின்  உடலை உதைத்துக் கொண்டிருக்கிறது. வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை.  சில நிமிடங்களில் துடிப்பு அடங்கியது.     39 வருஷ   உடல் - உயிர் தாம்பத்யம் முடிவு பெற்றது. எழுத்துக்கு உயிர் அளித்த அந்த கவிஞனின் உடல் உயிரை இழந்தாலும்  தனது அற்புத  தமிழை உலகுக்கு விட்டு சென்றது. ஒரு எரிமலை குளிர்ந்து போனது. இனி எங்கே பொங்கும்? அக்னிக் குஞ்சொன்று வெந்து தணிந்தது. அந்த ஞானக்கடல்  வங்காள விரிகுடா  உப்புக்  கடல் அருகே வாழ்ந்து கரைந்து மறைந்து போனது.
குவளைக்  கண்ணன், லக்ஷ்மண ஐயர், ஹரிஹர சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா பரசு நெல்லையப்பர் -- இந்த ஐவரின் தோள்களும் அந்த ஞான சூரியனின் சடலத்தைச் சுமந்து கிருஷ்ணாம் பேட்டை மயானம் நோக்கி நடந்தன. இன்று பாரதி என்றால் அகில உலகமும் போற்றும் அந்த கலைஞன், கவிஞனின் இறுதி ஊர்வலத்தில் அவன் பூத உடலைத் தூக்கிய நால்வரையும் சேர்த்து மொத்தமே பத்தோ பதினொன்றோ ஆசாமிகள் தான். அவர் உடலில் மொய்த்த ஈக்கள் கூட எண்ணிக்கையில் அதிகமாகவே இருந்தது. இது தான் நமது சமுதாயம் ஒரு மாபெரும் தமிழ் கவிஞனுக்கு நாம் அளித்த கடைசி மரியாதை.

கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் சுரேந்திரநாத் ஆர்யா மஹாகவி பாரதியின் பெருமையை சொல்லி முடித்ததும் ஹரிஹர சர்மா சிதைக்குத் தீ மூட்டுகிறார்.

''தமிழ் உலகமே நீங்கள் கொடுக்காத வரவேற்பை அமர கவி பாரதிக்கு நான் கொடுக்கிறேன்'' என்று அக்னி பகவான் அன்போடு அவர் உடலை ஆரத்தழுவினான் அந்த கவிஞனின் உடலை. நம் எண்ணத்தில் சாகா வரம் பெற்ற சுப்ரமணிய பாரதியார் மண்ணில் பிடி சாம்பலானார்.

 BHARATHI SKETCH DRAWN BY ME - J K SIVAN
BHARATHI BY JKS.jpg
barathi death cert.jpg

sivan jaykay

unread,
Sep 14, 2021, 7:48:53 PM9/14/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீமந்  நாராயணீயம்  - நங்கநல்லூர்  J K SIVAN --
52வது தசகம்.

52. எல்லாம் உன் மாயையே.

திரிமூர்த்திகள் என்று ஹிந்துக்கள் வணங்குவது சிருஷ்டி, ஸ்திதி, லயம்  எனும் படைத்தல், காத்தல் , அழித்தல் ஆகிய மூன்று தொழில்களை விடாமல் செய்து வரும்  ப்ரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மூவர்  மட்டுமே.  இதில் ப்ரம்மா  அப்பப்போது கொஞ்சம்  தவறுகள் செயது தண்டிக்கப்படுபவர்.   அதனால் அவருக்கு  என்று  தனியாக ஒரு கோவில் கூட  ஹிந்துக்கள்  தொழுவதற்கு இல்லை. சிவன்  கோவில்களில் கோஷ்டத்தில்  கோவில் ப்ராஹாரத்தில்  ஒரு குட்டி சந்நிதியோடு மட்டும் பிரம்மாவை காண்கிறோம்.   இந்த ப்ரம்மா  பிருந்தாவனத்தில் வளரும் கண்ணனின்  வளரும் புகழை, பெருமையைப்  பற்றி கேள்விப்பட்டு,  யார் இந்த  யாதவ சிறுவன் கிருஷ்ணன்,  இவ்வளவு வல்லமை கொண்டவன். அவனது சக்தியை  சோதிப்போம் என்று தீர்மானித்தார். ஒருநாள்  கிருஷ்ணன் மற்ற  யாதவ சிறுவர்களோடு பசுக்கள், கன்றுகளை மேய்க்க பிருந்தாவனம் சென்றபோது பசுக்கள், கன்றுக்குட்டிகள், யாதவ சிறுவர்கள் அனைவரையும்,  கிருஷ்ணனைத்   தவிர, கடத்தி விண்ணுலகத்தில் ஒளித்து  வைத்துவிட்டார்.  அவர்களை மீட்க ஒரு வருஷகாலம்  ஓடிவிட்டது.  பிருந்தாவனத்தில்  அப்போது நடந்ததைத் தான் இந்த  தசகத்தில் நாராயண பட்டத்ரி குருவாயூரில் கிருஷ்ணன் எதிரே அமர்ந்து அவனுக்கு பாடிக்காட்டி  பழைய ஞாபகத்தை ஆனந்தமாக கிருஷ்ணன் ரசிக்கச்  செய்கிறார். 

अन्यावतारनिकरेष्वनिरीक्षितं ते
भूमातिरेकमभिवीक्ष्य तदाघमोक्षे ।
ब्रह्मा परीक्षितुमना: स परोक्षभावं
निन्येऽथ वत्सकगणान् प्रवितत्य मायाम् ॥१॥

anyaavataaranikareShvaniriikshitaM te
bhuumaatirekamabhiviikshya tadaaghamOkshe |
brahmaa pariikshitumanaaH sa parOkshabhaavaM
ninye(a)tha vatsakagaNaan pravitatya maayaam || 1

அன்யாவதாரனிகரேஷ்வனிரீக்ஷிதம் தே
பூ⁴மாதிரேகமபி⁴வீக்ஷ்ய ததா³க⁴மோக்ஷே |
ப்³ரஹ்மா பரீக்ஷிதுமனா꞉ ஸ பரோக்ஷபா⁴வம்
நின்யே(அ)த² வத்ஸகக³ணான்ப்ரவிதத்ய மாயாம் || 52-1 ||

அகாசுரன்  மாண்டான், அவன் கடைசி நேரத்தில் தவறை உணர்ந்து கிருஷ்ணனை சரணடைகிறான்  அவன் கிருஷ்ணனால்  முக்தி அடைகிறான். கிருஷ்ணா,  உனது இந்த  கிருஷ்ணாவதாரத்தில் தான் நீ  உனது பராக்கிரமத்தை, சக்தியை,  அதிகமாக வெளிப்படுத்தியிருக்கிறாய்.  ப்ரம்ம தேவன் இதைக்  கண்டு அதிசயித்தார். உன்  சக்தியை பரிசோதிக்க வேண்டும் என்று மனதில்  எண்ணம்  கொண்டார். பிரம்மனுக்கும் மாயாசக்தி ஞானம் உண்டே. அதை பிரயோகித்து   ஒருநாள்  பிருந்தாவனத்தில், உன் நண்பர்கள், எல்லா பசுக்கள், கன்றுகள் என்று ஒன்று விடாமல் அனைத்தையும் மறைந்து போகச் செய்துவிட்டார்.   அனைவரையும், அனைத்தையும் சத்யலோகத்திற்குக்  கொண்டு சென்று  ஒளித்து  வைத்துவிட்டார்.  நீ என்ன செய்கிறாய் பார்ப்போம்?

वत्सानवीक्ष्य विवशे पशुपोत्करे ता-
नानेतुकाम इव धातृमतानुवर्ती ।
त्वं सामिभुक्तकबलो गतवांस्तदानीं
भुक्तांस्तिरोऽधित सरोजभव: कुमारान् ॥२॥

vatsaanaviikshya vivashe pashupOtkaretaan
aanetukaama iva dhaatR^imataanuvartii |
tvaM saamibhukta kabalO gatavaamstadaaniiM
bhuktaamstirOdhita sarOjabhavaH kumaaraan || 2

வத்ஸானவீக்ஷ்ய விவஶே பஶுபோத்கரே தா-
நானேதுகாம இவ தா⁴த்ருமதானுவர்தீ |
த்வம் ஸாமிபு⁴க்தகப³லோ க³தவாம்ஸ்ததா³னீம்
பு⁴க்தாம்ஸ்திரோதி⁴த ஸரோஜப⁴வ꞉ குமாரான் || 52-2 ||

யாதவ கோப சிறுவர்களையோ,   பசுக்களையோ,  கன்றுகளையோ,  எங்குமே எதுவுமே   திடீரென்று காணோமே, என்ன மாயமிது?  வேறு யாரோ ஒரு ராக்ஷஸன் வந்து அவன் கைங்கர்யமா இது? என்று கிலேசத்தை  கிருஷ்ணா  நீ உணர்ந்தாய். யோசித்தாய்.  

वत्सायितस्तदनु गोपगणायितस्त्वं
शिक्यादिभाण्डमुरलीगवलादिरूप: ।
प्राग्वद्विहृत्य विपिनेषु चिराय सायं
त्वं माययाऽथ बहुधा व्रजमाययाथ ॥३॥

vatsaayita stadanu gOpagaNaayitastvaM
shikyaadi bhaaNDa muralii gavalaadiruupaH |
praagvadvihR^itya vipineShu chiraaya saayaM
tvaM maayayaa(a)tha bahudhaa vrajamaayayaatha || 3

வத்ஸாயிதஸ்தத³னு கோ³பக³ணாயிதஸ்த்வம்
ஶிக்யாதி³பா⁴ண்ட³முரலீக³வலாதி³ரூப꞉ |
ப்ராக்³வத்³விஹ்ருத்ய விபினேஷு சிராய ஸாயம்
த்வம் மாயயாத² ப³ஹுதா⁴ வ்ரஜமாயயாத² || 52-3 ||

எனகெல்லாம் தேடிப்பார்த்தும் உனக்கு  எப்படி  எங்கே  உன் தோழர்கள், எல்லா பசுக்கள் கன்றுக ளோடு மறைந்தன என்று ஆச்சர்யமும் திகைப்பும்  இருந்தது.  ஆனால்  ஒன்று புரிந்தது.  இதற்கு காரணம் யாராவது ஒரு ராக்ஷசனாக நிச்சயம்  இருக்க முடியாது.   ராக்ஷஸனாக இருந்தால் அவன் உன்னையல்லாவோ முதலில் தேடுவான்? பசுக்களோ  கன்றுகளோ, உன் தோழர்களோ ஒருவருமே பயத்தில் குரல் எழுப்பவில்லை. ஆபத்துக்கான  அறிகுறி எங்குமே  தென்படவே இல்லையே?  இது வேறு யாரோ சக்தி வாய்ந்த ஒருவரின் வேலை. அதை கண்டுபிடித்து எல்லோரையும் மீட்கும் வரை  கிருஷ்ணா  நீயே  உன் தோழர்களாகவும்  உருவெடுத்து, நீயே  அனைத்து பசுக்களாகவும் கன்றுகளாகவும் உருவெடுத்து அவரவர் வீட்டுக்கு  சென்றாய்.  உன் வீட்டிலும் இருந்தாய்.  வருஷம் ஒன்று ஓடிவிட்டதே.  உனது 
இந்த அவதாரம் உன் பக்தர்கள் நிறைய பேருக்கு தெரிந்திருக்காது.  

त्वामेव शिक्यगवलादिमयं दधानो
भूयस्त्वमेव पशुवत्सकबालरूप: ।
गोरूपिणीभिरपि गोपवधूमयीभि-
रासादितोऽसि जननीभिरतिप्रहर्षात् ॥४॥

tvaameva shikya gavalaadimayaM dadhaanO
bhuuyastvameva pashuvatsaka baalaruupaH |
gOruupiNiibhirapi gOpavadhuumayiibhiH
aasaaditO(a)si jananiibhiratipraharShaat ||4

த்வாமேவ ஶிக்யக³வலாதி³மயம் த³தா⁴னோ
பூ⁴யஸ்த்வமேவ பஶுவத்ஸகபா³லரூப꞉ |
கோ³ரூபிணீபி⁴ரபி கோ³பவதூ⁴மயீபி⁴-
ராஸாதி³தோ(அ)ஸி ஜனநீபி⁴ரதிப்ரஹர்ஷாத் || 52-4 ||

பிருந்தாவனத்தில்  யாருக்குமே   நடந்தது  எதுவும் தெரியாது. அவரவர் வீட்டில் கோபர்கள் கோபியர்கள் தமது பிள்ளைகள், பசுக்கள், கன்றுகள், வழக்கம் போல்  தினமும்  வெளியே சென்று  மாலையில் வீடு திரும்புவதை தான் அறிந்தார்கள்.  எல்லாம்  நீ தான் என்று உன் ஒருவனுக்கு தான் தெரியும்.  வழக்கம்போல்  கூத்தும் பாட்டும், கும்மாளமும், வீட்டில் சந்தோஷமும் எங்கும் நிலவியது.
  
जीवं हि कञ्चिदभिमानवशात्स्वकीयं
मत्वा तनूज इति रागभरं वहन्त्य: ।
आत्मानमेव तु भवन्तमवाप्य सूनुं
प्रीतिं ययुर्न कियतीं वनिताश्च गाव: ॥५॥

jiivaM hi ka~nchidabhimaana vashaatsvakiiyaM
matvaa tanuuja iti raagabharaM vahantyaH |
aatmaanameva tu bhavantamavaapya suunuM
priitiM yayurnakiyatiiM vanitaashcha gaavaH || 5

ஜீவம் ஹி கஞ்சித³பி⁴மானவஶாத்ஸ்வகீயம்
மத்வா தனூஜ இதி ராக³ப⁴ரம் வஹந்த்ய꞉ |
ஆத்மானமேவ து ப⁴வந்தமவாப்ய ஸூனும்
ப்ரீதிம் யயுர்ன கியதீம் வனிதாஶ்ச கா³வ꞉ || 52-5 ||

அதற்கு முன்  எல்லோரும் தத்தம்  சுயநலத்தால்  தமது குழந்தைகள், பசுக்கள், கன்றுகள் என்ற வித்த்யாசத்தோடு வாழ்ந்திருந்தனர். நீயே  எல்லாமாக  மாறியதும்  அவர்கள் மனதில் காரணமில்லாமல் அன்பும், பாசமும் அளவற்ற சந்தோஷமும்  உண்டாயிற்று.  காரணம் தெரியாமல்  அளவற்ற  மகிழ்ச்சியை அனுபவித்தார்கள். 

एवं प्रतिक्षणविजृम्भितहर्षभार-
निश्शेषगोपगणलालितभूरिमूर्तिम् ।
त्वामग्रजोऽपि बुबुधे किल वत्सरान्ते
ब्रह्मात्मनोरपि महान् युवयोर्विशेष: ॥६॥

evaM pratikshaNa vijR^imbhita harShabhaara
niHsheSha gOpagaNa laalita bhuuri muurtim |
tvaamagrajO(a)pi bubudhe kila vatsaraante
brahmaatmanOrapi mahaan yuvayOrvisheShaH || 6

ஏவம் ப்ரதிக்ஷணவிஜ்ரும்பி⁴தஹர்ஷபா⁴ர-
நிஶ்ஶேஷகோ³பக³ணலாலிதபூ⁴ரிமூர்திம் |
த்வாமக்³ரஜோ(அ)பி பு³பு³தே⁴ கில வத்ஸராந்தே
ப்³ரஹ்மாத்மனோரபி மஹான்யுவயோர்விஶேஷ꞉ || 52-6 ||

பலராமனுக்கும் கூட  இந்த ரஹஸ்யம் ஒரு வருஷத்துக்கு பிறகு தான் தெரிந்தது. எல்லோரும், எல்லா பசுக்களும் கன்றுகளும் உன்னையே  தேடுவது ஏன் என்று புரிந்தது.  பலராமனும்  நீயும் ஒருவரே தான் என்றாலும் கிருஷ்ணா  நீ  வித்யாசமானவனாக தான் அறியப்பட்டாய். 

वर्षावधौ नवपुरातनवत्सपालान्
दृष्ट्वा विवेकमसृणे द्रुहिणे विमूढे ।
प्रादीदृश: प्रतिनवान् मकुटाङ्गदादि
भूषांश्चतुर्भुजयुज: सजलाम्बुदाभान् ॥७॥

varShaavadhau nava puraatana vatsa paalaan
dR^iShTvaa vivekamasR^iNe druhiNe vimuuDhe |
praadiidR^ishaH pratinavaan makuTaangadaadi
bhuuShaamshchaturbhuja yujaH sajalaambudaabhaan || 7

வர்ஷாவதௌ⁴ நவபுராதனவத்ஸபாலான்
த்³ருஷ்ட்வா விவேகமஸ்ருணே த்³ருஹிணே விமூடே⁴ |
ப்ராதீ³த்³ருஶ꞉ ப்ரதினவான்மகுடாங்க³தா³தி³
பூ⁴ஷாம்ஶ்சதுர்பு⁴ஜயுஜ꞉ ஸஜலாம்பு³தா³பா⁴ன் || 52-7 ||

ஒரு வருஷம் கழித்து  பிரம்மா  பசுக்களையும், கன்றுகளையும், கோப சிறுவர்களையும்  திரும்ப கொண்டு வந்து பிருந்தாவனத்தில் விட்டு விட்டார்.   நாம்  கடத்திச் சென்ற  அனைவரும், அனைத்தும் எப்படி இங்கு ஏற்கனவே  இருக்கிறது.  வித்தயாசமே தெரியாத  இன்னொரு ஜோடி எப்படி எங்கே இருந்து வந்தது என்று வியந்தார். பிரம்மாவுக்கு  நீ யார் என்று காட்ட  உனது சதுர்புஜங்களோடும் கிரீடம், உன் நீல நிற சரீரத்தோடும்  தரிசனம் கொடுத்தாய்.    அந்த ஒருகணத்தில்  ப்ரம்மா திடுக்கிட்டு,  திகைத்தார்.  ஏனென்றால்  அனைத்து பசுக்கள், கன்றுகள், கோப சிறுவர்கள்  எல்லாமே  மஹா விஷ்ணுவாக  அவருக்கு காட்சி தந்ததே.  அதிசயித்தார். உன் பெருமையை மஹிமையை உணர்ந்தார். வணங்கினார். 

प्रत्येकमेव कमलापरिलालिताङ्गान्
भोगीन्द्रभोगशयनान् नयनाभिरामान् ।
लीलानिमीलितदृश: सनकादियोगि-
व्यासेवितान् कमलभूर्भवतो ददर्श ॥८॥

pratyekameva kamalaa parilaalitaangaan
bhOgiindra bhOgashayanaan nayanaabhiraamaan |
liilaa nimiilitadR^ishaH sanakaadi yOgi
vyaasevitaan kamalabhuurbhavatO dadarsha || 8

ப்ரத்யேகமேவ கமலாபரிலாலிதாங்கா³ன்
போ⁴கீ³ந்த்³ரபோ⁴க³ஶயனான்னயனாபி⁴ராமான் |
லீலானிமீலிதத்³ருஶ꞉ ஸனகாதி³யோகி³-
வ்யாஸேவிதான்கமலபூ⁴ர்ப⁴வதோ த³த³ர்ஶ || 52-8 ||

உன்பரிணாமம் எங்கும்  பசுக்களாக, கன்றுகளாக, யாதவ சிறுவர்களாக  தோன்றியது.  மஹாலக்ஷ்மி தேவி  உன் திருவடிகளை வருடிக் கொண்டிருந்தாள் .   அங்கும் சிலர் காணப்பட்டார்கள்.  எங்கும்  ஆதிசேஷன் பாய்போல் விரிந்து உன்னை ஏந்திக்கொண்டிருந்தான். அங்கும் சில காணப்பட்டன. சில  உன்னோடு  அறைக்கண்  மூடி  யோகநித்ரையில் ஆழ்ந்திருந்தன. சனகர், சனத் குமாரர்ரிஷிகள் உன்னை சிரமேற்கரத்தோடு  வணங்கும்போது   சிலர்  தாங்களும்  அவர்களோடு  சேர்ந்து  உன்னை  வணங்கினார்கள். 

नारायणाकृतिमसंख्यतमां निरीक्ष्य
सर्वत्र सेवकमपि स्वमवेक्ष्य धाता ।
मायानिमग्नहृदयो विमुमोह याव-
देको बभूविथ तदा कबलार्धपाणि: ॥९॥

naaraayaNaakR^itiM asankhyatamaaM niriikshya
sarvatra sevakamapi svamavekshya dhaataa |
maayaa nimagna hR^idayO vimumOha yaavat
ekO babhuuvitha tadaa kabalaardhapaaNiH || 9

நாராயணாக்ருதிமஸங்க்²யதமாம் நிரீக்ஷ்ய
ஸர்வத்ர ஸேவகமபி ஸ்வமவேக்ஷ்ய தா⁴தா |
மாயானிமக்³னஹ்ருத³யோ விமுமோஹ யாவ-
தே³கோ ப³பூ⁴வித² ததா³ கப³லார்த⁴பாணி꞉ || 52-9 ||

ப்ரம்மா சுற்று முற்றும் பார்த்தார்  எங்கும் மஹா விஷ்ணுவாக  நீயே தெரிந்தாய்.  உன்னைச் சூழ்ந்து அவர் கவர்ந்து சென்ற  யாதவ சிறுவர்கள்,  பசுக்கள், கன்றுகள்,  ஏன் பிரம்மாவே  கை  கூப்பி வணங்கி நின்றதும் தெரிந்தது. உன் மாயையில் ப்ரம்மா மதி மயங்கி நின்றார்.  கலங்கினார் . அப்போது நீ மீண்டும் யாதவ சிறுவனாக  புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணனாக  ப்ரம்மாவின் முன்பாக தோன்றினாய்.   கையில் ஒரு கவளம் உணவு, அதில் பாதி சாப்பிட்டுக்கொண்டு  இருந்தாய்..

नश्यन्मदे तदनु विश्वपतिं मुहुस्त्वां
नत्वा च नूतवति धातरि धाम याते ।
पोतै: समं प्रमुदितै: प्रविशन् निकेतं
वातालयाधिप विभो परिपाहि रोगात् ॥१०॥

nashyanmade tadanu vishvapatimmuhustvaaM
natvaa cha nuutavati dhaatari dhaama yaate |
pOtaiH samaM pramuditaiH pravishanniketaM
vaataalayaadhipa vibhO paripaahi rOgaat ||10

நஶ்யன்மதே³ தத³னு விஶ்வபதிம் முஹுஸ்த்வாம்
நத்வா ச நூதவதி தா⁴தரி தா⁴ம யாதே |
போதை꞉ ஸமம் ப்ரமுதி³தை꞉ ப்ரவிஶன்னிகேதம்
வாதாலயாதி⁴ப விபோ⁴ பரிபாஹி ரோகா³த் || 52-10 |

எண்டே குருவாயூரப்பா,  ஒன்றும் பேசமாலேயே  இப்படி பிரம்மாவை ஒரு வழிக்கு கொண்டுவந்து விட்டாய். அவரது  அகந்தை ஒழிந்தது.  உன்னைத்  திரும்ப திரும்ப பணிவோடு  நமஸ்கரித்தார்.  மன நிறைவோடு அவர் சத்யலோகத்துக்கு திரும்ப செய்தாய்.  காதும் காதும் வைத்தாற்  போல்   ஒருவருஷம்  பசுக்களோ, யாதவ சிறுவர்களோ, கன்றுக்குட்டிகளோ காணாமல் போனதும், திரும்பி வந்ததும் யாருக்கும் தெரியாமல் காரியத்தை கச்சிதமாய் முடித்து பிரமனின் அகந்தையையும் ஒடுக்க உன் ஒருவனால் மட்டுமே முடிந்தது.     நீ என் வியாதியையும்  நீக்கி என்னையும் ஸம்ரக்ஷிக்கவேண்டும்  கிருஷ்ணா.

sivan jaykay

unread,
Sep 14, 2021, 7:50:13 PM9/14/21
to amrith...@googlegroups.com
எங்கள்   200 + வயசு குடும்ப பிள்ளையார்  -  
நங்கநல்லூர்  J.K. SIVAN

''எத்தனை தடவை டா  நீ இந்த பிள்ளையாரைப் பற்றியே எழுதுவே?''
''எத்தனை தடவை முடியறதோ அத்தனை தடவை''
''ஏன், அலுக்கவில்லையா உனக்கு,  படிப்பவர்களுக்கு அலுக்காதா?''
''இதுக்கு பதில் ஒரே ஒரு விஷயம்  சொல்றேன் அதை மட்டும் கேட்டுக்கோ?''
இது வரை எத்தனையோ  வருஷமாக திருப்பதி லட்டு சாப்பிட்டியே, யாராவது இந்தா  திருப்பதி லட்டு என்று கொடுத்தால்   ''ஹுஹும், எத்தனை தடவை இதையே சாப்பிடறது ?'' என்று சொல்வாயா.  படிப்பவர்களுக்கு அலுக்காதான்னு கேட்டியே.  நாம் என்ன ஆப்கனிஸ்தான் போன்ற இடத்திலேயா இருக்கிறோம். கத்தி முனையிலே யாரையாவது பிள்ளையாரை பற்றி படின்னு  சொல்றோமா?  வேண்டும் என்றால் பிடித்தால் படிக்கப்போகிறார்கள். பிடிக்காதவர்களை, படிக்காதவர்களைப்  பற்றி ஏன் கவலை, அக்கறை? எண்பது வருஷமாக  தினமும் ரெண்டு மூன்று முறை தேடும் காப்பி நாளை முதல் வேண்டாம் என்றுவிடுவேனா? பல வருஷங்களாக  பாத்தி கட்டி சாப்பிட்ட சாம்பார் சாதம் தான் இனி பிடிக்காமல் போகுமா?

நான்  சொல்கிற எங்கள் வீட்டு அந்த பிள்ளையாரை நான் என் கடைசி மூச்சு உள்ளவரை மறக்க முடியாது. அந்த அளவு என் மனதில் ஆழப் பதிந்தவர். இமய மலைக் கல்லில் செதுக்கப்பட்டவர் என்பார்கள். நான்கு தலைமுறையாக எங்கள் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டவர். 200 வயசுக்கு மேலே இருக்கும் அவருக்கு.
நான் எப்போதிலிருந்து அவரை அறிந்தேன்?
எனக்கு நினைவு தெரிந்தது முதல் எங்கள் வீட்டில் தான் இருந்தார்

சரித்திர புத்தகம் என்ன சொல்கிறது? 22.9.1914 ராத்திரி,  SMS Emden  எம்டன் என்கிற  ஜெர்மன்  நீர்மூழ்கி கப்பல்   சென்னை கடற்கரை கிட்டே வந்து  கடற்கரை ஓரமாக இருந்த  பர்மா ஷெல் எண்ணெய் கிணறுகளை நோக்கி வெடிகுண்டு வீசியது.  ஐந்து  கிணறுகள் பற்றிக்கொண்டது.  சென்னை தீயின் வெளிச்சத்தில் சிவந்தது. 346,000 காலன்  gallons எரிவாயு  எண்ணெய்  தீபம். 
இதற்கு அப்புறம் நிறைய குடும்பங்கள்  சென்னையை விட்டு  தெற்கே  கிராமங்களுக்கு சென்றது. வடக்கே சென்றது.  இது மறுபடியும் நிகழுமோ என்கிற எண்ணம்  இரண்டாம் உலக மகாயுத்தம் போதும்  பயத்தை கிளப்பி விட  1940களில்   மேலும்  சில குடும்பங்கள்  கடற்கரை பகுதியை விட்டு வேறெங்கெல்லாமோ குடியேறின.  

1942-44 களில் நாங்கள் திருவல்லிக்கேணியில்- குடியிருந்தபோது  ஜப்பான்  விமானங்கள்  சென்னை மீது  குண்டு வீச முயன்றன.  அப்போது  எனக்கு ஒன்றும் தெரிந்து கொள்ளும் வயதில்லை.   இன்னும் மெரினா கடற்கரை சாலையில் உயர்நீதி மன்ற வளாக பாதுகாப்பு சுவற்றில் ஞாபகார்த்த சின்னமாக ஒரு கல்வெட்டுடன் எம்டன் விஜயத்தை பற்றிய செய்தியை படிக்கலாம். பார்க்கலாம். இரண்டாம் உலக மஹா யுத்த காலத்தில் ஜப்பானிய விமானங்கள் தாக்கும் என்ற பயம் சென்னையில் இருந்தது. சிங்கப்பூர் விழுந்து விட்டது. அந்தமான் தாக்கப்பட்டது.. எந்த நேரமும் ஜப்பானியன் நம்மை எல்லாம் அழிக்க வருகிறான். திருவல்லிக்கேணி அடையார் மைலாப்பூர் எல்லாம் ஜப்பான்காரன் குண்டினால் அழியும் என்று ஒரு புரளி, பீதி, மக்கள் மனதில் விழுந்து பல குடும்பங்கள் இந்த பகுதியை விட்டு வெளியேறின. வெள்ளைக்காரன் ஆட்சியில் மிக கடுமையான சோதனை காலம். ARP (AIR RAID PRECAUTION) என்று முன்னெச்சரிக்கை விளம்பரங்கள் ஒலிபெருக்கி வழியாக தெருத்தெருவாக என்ன செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டே போகும். கும்பலுக்கு ஆள் சேர்க்க எம். கே. தியாகராஜரின் சினிமா பாடல்கள் பாடிக்கொண்டே போகும். எங்கள் குடும்ப மும் அதில் ஒன்று. என் தாய் படிக்காதவள் ''நாங்கள் ஏவாகேஷன்'' (evacuation தான் அவளால் சொல்லப்பட்ட ஆங்கில வார்த்தை) போது கட்டின துணியோடு வடபழனி முருகனிடம் வந்து விட்டோம்'' என்பாள்
.
வடபழனி கோவில் அருகே ஒரு அக்ரஹாரம் போல ஒரு பிள்ளைமார் தெரு  கோவில் குளத்தை ஒட்டி இருந்தது. மண் தெரு. எல்லா வீட்டிலேயும் ஓடு வேய்ந்து இருக்கும். திண்ணைகள் உண்டு. அதில் சாயந்திரங்களில் சாய்ந்து உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார்கள். தெருவில் நாங்கள் விளையாடு வோம். பெரிய பெரிய நில சுவான்தார்கள், கர்ணம் , முன்சீப், போன்ற உத்யோகங்கள் வகித்த பணக்கார சைவ பிள்ளைமார்கள் சொந்தக்காரர்களோடு வாழ்ந்த இடம். ரெங்கநாதம் பிள்ளை வீட்டில் எங்களுக்கு இடம் கிடைத்தது. வாசலில் பெரிய மகிழ மரம் விளையாட வரப்பிரசாதமாக இருத்தது. அதன் நிழலில் பகலில் நிறைய விளையாடியிருக்கிறேன். எதிர்த்த வீட்டில் பத்மநாப பிள்ளை, முன்சீப். அவர்களுக்கு புத்ர பாக்யம் இல்லை என்பதால் எனக்கு கொஞ்சம் அவர்கள் வீட்டில் சலுகை. நிறைய தின்பண்டங்கள் கொடுப்பார்கள் . எனக்கு சற்றே மூத்தவன் அண்ணா ஜம்புநாதன். என் தாத்தா பெயர் கொண்டவன். பள்ளிக்கூடத்தில் ஜம்புலிங்கமானவன். அவனுடன் தான் எனக்கு எப்போதும் சண்டை விளையாட்டு ரெண்டுமே. ஜெயிப்பது எப்போதும் அவன் தான். விளையாடும் இடம் வடபழனி கோவில். கூரை வேய்ந்த கோவில். கோவணாண்டி வடபழனி முருகனும் நாங்களும் தான் வேறு யாரும் இல்லாத காலம். சுந்தர குருக்கள் வீடு அருகிலேயே இருந்தது.  அவரும் அவர் அப்பாவும் தான் பூஜை செய்யும் அர்ச்சர்கர்கள். சுந்தர குருக்கள் குரல் அற்புதமாக கணீரென்று இருக்கும். கோவில் நந்தவனம் மரங்கள் சூழ்ந்து இருக்கும். கோவிலுக்கு கதவு கிடையாது. அது நாங்கள் ஓடியாடி விளையாடும் ஒரு அழகான இடம்.

என் தாத்தா ஜம்புநாத சாஸ்திரி, பாட்டி சீதாலட்சுமி இருவரையும் நான் பார்த்ததில்லை. படத்தில் எப்போதோ சிறுவயதில் பார்த்தது. மீசை தாடியோடு பாரதியாரை பார்க்கும்போது தாத்தா ஜம்புநாத சாஸ்திரி ஞாபகம் வரும். பாரதி நெற்றியில் குங்குமத்தில் பெரிய நாமம் தரித்திருப்பார். தாத்தா விபூதி பட்டை. இன்னும் பெரிய தாடி, முறுக்கி விட்ட மீசை, கன்னங்களில் முனைகளில் புஸ் என்று பந்தாக சுருண்டு கம்பீரமாக இருப்பார். தலையில் முண்டாசு.   முகத்தில் தெரிவது பரந்த நெற்றி, அதில் கீர் சந்தனம் விபூதி கீற்று, குங்குமம். தீர்க்கமான மூக்கு மீசைக்கு மேலே தனித்து நிற்கும். அடர்ந்த கம்பளி பூச்சி புருவங்களின் நிழலில் ஆழமான பார்வை. கூர்மையான கண்கள். காதை மறைந்த முண்டாசு. கழுத்தை மறைத்த கருப்புகோட்டு அதில் வரிசையாக நிறைய பெரிய பெரிய இரும்பு பொத்தான்கள். இப்படி ஒரு பழுப்பேறிய கருப்பு வெள்ளைப்படம் ஒன்று தான் என் தாத்தாவை எனக்கு காட்டியது. அதுவும் எப்போதோ எப்படியோ காணாமல் போனது. வீட்டில் ஒரு ''பாணா'' தடி , பழுக்கா தடி என்பார்கள்.  ஆறு அடி நீளத்துக்கு போல் சுவற்றில் சாற்றி வைத்திரு ந்தது நினைவிருக்கிறது. ஒரு பாத ரோட்டு கட்டை. மரத்தில் குமிழ் வைத்து அதை கால் கட்டைவிரல் ரெண்டாவது விறல் இடையில் செருகி மரச்செருப்பின் இடையே ஒரு தோல் நடுவில் குறுக்காக பட்டையாக செல்லும்.  கிட்டத்தட்ட  பாதுகை மாதிரி இருக்கும்.  அது தான் பாதம் அந்த மரக்கட்டை காலணி நழுவாமல் பிடித்துக் கொள்ளும்.

எங்கள் வீட்டு பிள்ளையார் தாத்தாவின் அப்பா, என் கொள்ளுத்தாத்தா வின் அப்பா மிருத்யுஞ்சய அய்யர் காலத்தில் இருந்து இருக்கிறார். எங்கள் தாத்தா  என் பெயரில் உள்ள J  அவர் தான். ஜம்புநாத சாஸ்திரி  காலத்திற்குப்  பிறகு என் தந்தை J K   அய்யர்  என்கிற  J கிருஷ்ண ஐயரிடம்  வந்தது, தற்போது என் தமையன்  உள்ளகரம்  ரத்னம் ஐயர் பூஜை செய்துகொண்டு வருகிறார். இந்த பிள்ளையாரிடம் என் பயத்தை எல்லாம் சொல்லி போக்க வேண்டி இருக்கிறேன். எல்லாம் நிவர்த்தி செய்தவர்.   அவரை  வணங்கி நான் எழுதிய அனைத்து பரிக்ஷைகளிலும் வெற்றி.   அற்புத விநாயகர். எனக்கு வேண்டியதை எல்லாம் கேட்டவுடன்  தறுகின்றவர். மனதில் நிறைந்தவர்.   

சிவந்த பரங்கிப்பழம் போல் என் அப்பா பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு  உட்கார்ந்து எதிரே ஒரு தாம்பாளத்தில்  இந்த பிள்ளையாரை வைத்து மந்திரங்கள் சொல்லிக்கொண்டு அபிஷேகம்  அர்ச்சனை எத்தனையோ ஆயிரம் முறை  செய்து இருக்கிறார்.   

ஒரு சின்ன பிள்ளையார் துண்டு, சிவப்புபார்டர் கரை யுடன், பூணல், சந்தனம், குங்குமம், விபூதி தரித்த அற்புத விநாயகர். ஒரு வெள்ளி கிரீடமும் சம்பாதித்துக்கொண்டவர்  இன்றும் பூஜித்து கொண்டாடப்பட்டவர் பல பிள்ளையார் சதுர்த்திக்கு பார்த்தவர். இன்றும் பார்க்கிறார். 

எங்கள் குடும்ப கஷ்டம் நஷ்டம், நல்லது கெட்டது அனைத்தும் தெரிந்தவர். எங்களை இன்னும் வாழ்விக்கும் வள்ளல்.   அவரைப் பற்றி  நினைத்தால்  ஊற்றுபோல் பழைய விஷயங்கள் நிறைய தோன்றுகிறது. 

sivan jaykay

unread,
Sep 14, 2021, 7:50:13 PM9/14/21
to amrith...@googlegroups.com

டிராம் ஞாபகம் இருக்கிறதா? -  நங்கநல்லூர்  J K  SIVAN 


சென்னையில்  டிராம்  வண்டி தெருக்களில் ஓடும்  போது எனக்கு அதில் அடிக்கடி பிரயாணம் பண்ணும் வயது இல்லை.  ரசிக்கும் அனுபவம் கிட்டவில்லை.  டிராம் வண்டிகள் நின்று விட்டன. நான் சைக்கிளில்  மவுண்ட் ரோடு, பாரிஸ் சென்றபோது,  ட்ராம்கள் ஓடிய  தண்டவாளங்களை பெயர்த்துவிட்டு  தார்  பூசிக்கொண்டிருந்தார்கள்.  டிராம் மெதுவாக ஓடும். அதில் ஓடும்போதே ஏறிக் கொள்ளலாம், இறங்கி கொள்ளலாம்.  காசு கொடுத்து டிக்கெட் வாங்காமல் பிரயாணம் பண்ணியவர்கள் தான் ஜாஸ்தி.   இதுவே அதன் அழிவுக்கு காரணம்.

வெள்ளைக்காரன் முதலில் டிராம் ஒட்டியது  1873ம் வருஷம் பிப்ரவரி மாதம் 24ம் தேதி.  குதிரை தான் அதை இழுத்துக் கொண்டு போயிற்று.  கல்கத்தாவில்  சீயல்டா,  -  அர்மீனியன் காட்  மார்க்கம் தான் முதல் டிராம்  ஓடிய இடம்.  இந்த சர்விஸ் வெகுகாலம் ஓடவில்லை. நின்று போயிற்று.  

கல்கத்தா  டிராம் கம்பெனி பிறகு   லண்டனில் பதிவு செய்து கொண்டு  டிராம் ஒட்டியது 1880ம் வருஷம். .புது இருப்புப்  பாதைகள் போடப்பட்டு,  பௌ பஜார், டல்ஹவுசி ஸ்குயர்,  ஸ்ட்ராண்ட் ரோடு, பகுதிகளில் டிராம் ஓடியது.  குதிரை தான் அப்போதும் இழுத்துக்கொண்டு ஓடியது.  

ரெண்டு வருஷம் கழித்து, குதிரைக்கு பதிலாக  நீராவி இன்ஜின்  ஜிக் புக் என்று இழுத்துக்கொண்டு போனது. எங்கும் புகை மண்டலம்.  ஒரு காலத்தில் 166  டிராம் வண்டிகள், 1000 குதிரைகள், 7 ஜிகு புகு இஞ்ஜின்கள்   19 மைல் தூரத்துக்கு பிரயாண வசதியை தந்தன. 

1902ல்   எஸ்பிளனேட் லிருந்து  கித்தர்பூர்  வரை இன்ஜின் ட்ராமை  இழுத்துக்கொண்டு  ஓடியது.  அப்புறம் எஸ்பிளனேடிலிருந்து  காளிகாட்  வரை.   1943 வாக்கில்  கல்கத்தா  ஹௌராவுக்கு அடிக்கடி டிராம்   மின்சார கம்பியால் ஓடியது.  1951ல்  வங்காள அரசாங்கமே   டிராம் கம்பெனியோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு டிராம் ஒட்டியது. 1967ல் டிராம் சர்வீஸ்  தேசியமயமாக்கப்பட்டது. 

1990ல்  மூடுவிழா ஆரம்பித்து  ஏதோ சாஸ்திரத்துக்கு  ஆட்டு ஏழு டிராம் லைன்கள் மட்டும் ஓடுகிறது.

பம்பாயில் 1873ல்   இப்படித்தான் குதிரை இழுத்த  டிராம் வண்டிகள்  கொலாபாவிலிருந்து
கிராபோர்ட மார்க்கெட்,  கல்பாதேவி,போரி பந்தர் வழியாக,  பைதோனி  வரை ஓடியது.  .மின்சார ரயில் வந்ததும் டிராம் சகாப்தம் முடிந்தது. கூட்டம் நெரிசலுக்காக  டபுள் டெக்கர்  டிராம் கூட  ஓடியது.

1895ல்  சென்னையில், அப்போதைய  மெட்ராஸில்,  டிராம்  ஓடியது. மவுண்ட் ரோடு, பாரிஸ் முனை, பூந்தமல்லி ரோடு,  ரிப்பன் கட்டிடம், வரை ஓடியது.  டிராம் கம்பெனிகள் வருமானம் கட்டு படியாகாமல்  திவாலாகி டிராம் ஓடுவது நின்றுபோனது.

சின்ன வயதில் அப்பாவோடு  நான் ட்ராமில்  பாரிஸ் முனையில் பிரயாணம் செய்திருக்கிறேன்.  டாங் டாங் என்று மணி அடித்துக்கொண்டு மெதுவாக ஓடும்.   திறந்த ஜன்னல்கள் , இரும்பு பெஞ்சுகள் போட்டிருந்த ஞாபகம். பஸ் மாதிரி ஆடாது.   தரையிலிருந்து  அரை அடி  உயரத்தில்  கடைசி படிக்கட்டு. அதிலிருந்து ஓடும் ட்ராமில்  ஏறுவது, இறங்குவது  வழக்கம்.  சிலர் டிக்கெட் கேட்டால் இறங்கி விடுவதும் உண்டு. நின்று கொண்டு பயணம் செய்பவர் ஜாஸ்தி. இப்போது பஸ் , ட்ரைனில்   நிற்பவர்கள் பிடித்துக் கொள்ள மேலே  கம்பி இருப்பது போல் அப்போது இருந்தது. நான் கம்பியை பிடித்து நிற்கும் உயரமில்லாத சின்னப்பையன் என்பதால் அப்பாவின் இடுப்பை பிடித்துக்கொண்டு நின்றவன். 
 

sivan jaykay

unread,
Sep 14, 2021, 7:50:14 PM9/14/21
to amrith...@googlegroups.com

உள்ளது நாற்பது -  நங்கநல்லூர்  J K  SIVAN 
பகவான் ஸ்ரீ ரமணர். 

8   முயற்சி   திருவினையாக்கும் 

எப்பெயரிட் டெவ்வுருவி லேத்தினுமார் பேருருவி
லப்போருளைக் காண்வழிய தாயினுமம் – மெய்ப்பொருளி
னுண்மையிற்ற னுண்மையினை யோர்ந்தொடுங்கி யொன்றுதலே
யுண்மையிற் காண லுணர்ந்திடுக – விண்மை 8


காண முடியாததை, கேட்க முடியாததை, ஐம்புலன்களால் உணரமுடியாத அவனை, நாம் ஏதோ ஒரு உருவம் கொடுத்து, பெயரிட்டு, கண்டு  வணங்கி மகிழ்ந்து வாழ்கிறோம்.   இப்படித்தான் அரூபமான அவனைக் காண, வணங்க,  நம்மால் முடியும்.  அவன் மட்டுமல்ல  நாமும் அப்படித்தான். இயற்கையாக ஆத்மாவுக்கு உருவமோ, பெயரோ இல்லை. அதை இந்த உடலாக மதித்து நம்பி, ஏற்று, பெயரிட்டு, அந்த உடல் சுகத்தில் வாழ்பவர்கள் நாம்.  இதனால் உண்மையான ஆத்மாவை, வாஸ்தவமான, அழிவற்ற,  அதை உணர்வதில்லை.

ஞானிகள்  அதனால் மனதை உள்ளே செலுத்தி ஹ்ருதயத்தில் உறையும்  ஆத்மாவை தேடி உண்மை அறிகிறார்கள். ஆனந்த நிலை பெறுகிறார்கள்.  நாம் என்ன செய்யலாம்?  நாம ரூபத்தோடு இறைவனை வணங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அதோடு உள்ளே பிரவேசிக்கவும் முயன்று, நான் உண்மையில் யார் என்று விசாரம் செய்துகொண்டே  முன்னேறலாம்.  ஒரு ஞானம் நிறைந்த குரு நமக்கு இதற்கு வழிகாட்டுவார். வேதாந்த விஷயங்களை கற்றறிந்து தனக்குள் தானே  பரிக்ஷித்துக் கொண்டு படிப்படியாக  ஆன்மாவை உணர கண்டிப்பாக முடியும்.  ஐம்புலங்கள், உலக ஈர்ப்புகளிலிருந்து முதலில் நம்மை விடுவித்துக்கொள்ளவேண்டும். நம்மை ஏதாவது பிடித்து பின்னுக்கு இழுத்துக் கொண்டே இருந்தால் முன்னுக்கு போவது எப்படி? தூய சித்தத்தில் தான் ஆத்ம ஞானம்  புரியும், விளங்கும். தியானம் மனதை ஒருமுகப்படுத்தும். 

நமது சரீரம் இருக்கிறதே அது தான் கர்மத்தின்  நாடகமேடை.  மனம் ஆத்ம உபாசனையின் 
அரங்கம். நமது முயற்சியில் வெற்றி நமது ஆர்வத்தை பொறுத்தது.  ஒரு காரியத்தை, சரியாகவோ, தப்பாகவோ, அல்லது எதுவும்  செய்யாமலோ கூட நம்மால்  இருக்க முடிகிறது அல்லவா? ஞானம் என்பது அனுஷ்டிப்பதால் வருவதல்ல,  அறிவதால், அறிவினால் பெறுவது. 

ஒரு உருவத்தை நாம் வழிபடுகிறோம் அல்லவா? உருவத்தில் இறைவனை அறிவதோடு நில்லாமல் மனதை நம் உள்ளே திருப்பி  நமது ஆன்ம ரூபத்தையும் தேடுவதில் செலுத்தி வெற்றி பெற 
வேண்டும்.   ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள்: 

ஒரு சாதகர்  வடக்கே பஞ்சாபில் கிருஷ்ண தர்சனத்துக்காக தீவிரமாக முயன்றார். காணும் சாதுக்களை எல்லாம் அழைத்து வணங்கி  வீட்டிற்கு அழைத்து உபசரித்தார். ஒரு வைஷ்ணவ சாது ''ஹரே ராம  ஹரே ராம ராம ராம  ஹரே ஹரே.''எனும் மந்திரத்தை உபதேசித்து இதை விடாமல் சொல் .கிருஷ்ண தர்சனம் கிடைக்கும் என்றார்.  வெகுநாளாகியும் இதனால் பலனில்லை. ஒரு நாள் ஒரு சாது தெற்கே இருந்து வந்தவர்  ''நீ ரமணாஸ்ரமம்'' போ  என்றார். பக்தரும் திருவண்ணாமலை வந்து ரமண  மஹரிஷியைப் பார்த்தார்.  வடனே  அவருக்கு  கோபம் வந்துவிட்டது. ''இந்த ஆசாமி தான் பஞ்சாபில் என் வீட்டுக்கு வந்து திருவண்ணாமலை வந்து தன்னை தரிசிக்க பிரசாரம் செய்தவர். ஏமாற்று பேர்வழி''  என்று  ஆஸ்ரமத்தில் சிலரிடம் முறையிட்டார்.  அவர்கள் அவரைப்பார்த்து சிரித்தார்கள். 
''என்னய்யா  உளறுகிறீர்?  பகவான் ஐம்பது வருஷங்களாக திருவண்ணாமலையை விட்டுஎங்குமே சென்றதில்லையே' என்ற பிறகும்  ரமணர் மேல்அந்த பக்தர்குக்கு    மரியாதையோ, பக்தியோ  உண்டாகவில்லை. திருவண்ணாமலையில் தங்கி  கிருஷ்ண ஜெபத்தில் ஈடுபட்டு  கிருஷ்ண தர்சனம் கிடைத்தது. தற்பெருமை தலை தூக்கியது.    ஒருநாள் ரமணரிடம் சென்று ' நீங்கள்  எதற்கு நேரத்தை வீணடித்து இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள், நீங்களும் கிருஷ்ண ஜபம் செய்து என்னைப்போல் பலன் பெறலாமே'' என்று அறிவுரை சொல்லவேண்டும் என தோன்றியது. ரமணாஸ்ரமம் சென்றார். பல முறை முயன்றும் அவரால் சொல்லவந்ததை சொல்ல இயலவில்லை.  பக்தர் மனதில் ''நான் யார்'' நான் யார் ''என்ற தேடலே தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ரமண  மகரிஷி சைகையால் அவரை அழைத்து பேசினார்:
''இவ்வளவு நாள் எங்கே இருந்தாயப்பா?''
''நான் மலையடிவாரத்தில் தவம் செய்துகொண்டிருந்தேன்''
''ஓஹோ  அதனால் பலன் அடைந்தாயா?''
''கிருஷ்ண தரிசனம் பெற்றேன்''
''விடாமல் எப்போதுமேவா?''
''இல்லை சுவாமி, விட்டு விட்டு, எப்போதாவது.''
''தோன்றி மறைவது எதுவும்  ஸத்யம்  இல்லையே. சாஸ்வதமாக அனைத்தும் அறியும் சக்தி தந்து அருள்வது, ஒளிர்வது,  எதுவோ அதைக் கவனி, அது தான் உன் ஆத்மஸ்வரூபம்''

பேச்சு நின்றது. பகவானின் கண் பார்வை பக்தரை ஊடுருவியது.  பக்தர் மனதில் நான் யார் எனும் ஆத்மவிசாரம்  அப்போது முதல் உருவாகியது. கிருஷ்ண தரிசனம் அவரை சத்குருவிடம் அழைத்து சென்று  ஆத்ம ஞானம் பெற வைத்தது. 
நாம ஜபம், ரூப தியானமும் ஒரு பக்தனை படிப்படியாக  ஆத்ம ஞானத்துக்கு இட்டுச் செல்லும். பகவான் ராமகிருஷ்ணர் ஒரு சிறந்த உதாரணம். பகவான் ரமணர் வெளியே குரு உதவி இன்றி  சித்தம்  ஸ்வரூபத்தில் ஒடுங்கியவர்.  ரொம்ப அதிசயமானவர் . 

நாம ஜபம்,  ரூப உபாசனை, தியானத்தில், இவற்றோடு  நிற்காமல் மனத்தை  ஆத்ம விசாரத்தில் கொண்டு சென்றால் தான் முழு பயன். 

ரமணாஸ்ரமத்தில்  பக்தர்களுக்கு, நாம ஜபம், ரூப ஆராதனை, த்யானத்தோடு பகவான்  ஆத்ம விசாரத்திலும் ஈடுபட வைத்து உபதேசித்தார். 

நடேச முதலியார் என்ற ஒருவர்  ரமண மஹரிஷியின் உபதேசம் பெற ரொம்ப  முயன்றார். அவர் கனவில் ரமணர் தோன்றி ''முதலில் ரிஷபாரூடனான  பரமேஸ்வரனை தியானி'' என்று உபதேசித்தார்.  அவ்வாறே செய்து முதலியார்  ரமணரிடம்  வந்தார். 
''சுவாமி , எனக்கு நீங்கள் அருளவேண்டும் ''
'' அப்பா, அருளை வேண்டுவது யார்? உன்னிலிருக்கும் ஆத்மாவா, உன் தேகமா, நீ  இதில் யார்?''
''தெரியவில்லை சுவாமி ''
''தேஹத்தால் அதைக்  கேட்க முடியாது.  ஏன் என்றால் அது ஆத்மாவை அறியாது.   கேட்பது  ஆத்மா என்றால் அதற்கு கேட்கவேண்டிய அவசியமே இல்லையே, அதுவே  அருள் ஸ்வரூபம்  தானே . எப்போது ஆத்மா தான் தேகம் இல்லை என்று உணர்கிறதோ அப்போதே அதற்கு அருள் சம்பவித்துவிட்டது''

ரமணரின் இளவயதில் பள்ளிக்கூடத்தில்   சக மாணவன்  விளாச்சேரி மணி.   அவனை எல்லோரும் போக்கிரி மணி  என்று அழைப்பார்கள். அவன் ஒருநாள்  அவன் தாயாரோடு  திருப்பதி சென்று  திரும்பும் வழியில் அவன் அம்மா ரமணரை தரிசிக்கவேண்டும் என்று   விரும்பியதால் தாயோடு திருவண்ணாமலை சென்றான். தனது பால்ய  நண்பன்  வெங்கட்ராமனுக்கு என்ன ஆயிற்று என்று அறிய ஆவலோடு வந்தான். ராமணரிடம் அவனுக்கு பக்தி இல்லை. விரூபாக்ஷ குகையில் ரமணரைப்  பார்த்த போது  அவன் கண்ணுக்கு  ''கடவுளே மனித ரூபத்தில் தீயில் ஸ்புடம் போட்ட தங்கம் போல்  அமர்ந்திருப்பது மட்டுமே  தெரிந்தது,  கண்கள் அசைவற்று அகண்ட  ஏரி  போல் தோன்றியது. உடல் நடுங்க அப்படியே தன்னை மறந்த நிலையில் மணி கீழே விழுந்து வணங்கினான். ரமணர் பாதங்களை கெட்டியாகப்  பற்றிக்கொண்டு ''பகவானே என்னை காப்பாற்றுங்கள்'' என்று உரக்க கத்தினான் 

''சே,  சே,   என்ன மணி இது. என் கால்களை விட்டு விட்டு  ''சிவ சிவா '' என்று சும்மா இரு''  என உபதேசித்தார். அவரது பாத ஸ்பரிசம் பட்டது முதல் மனதில் விடாமல்  '' ஓம் நமசிவாய'' என்ற மந்திரம் இதயத்துடிப்பில், ரத்த ஓட்டத்தில்  மணிக்கு கலந்துவிட்டது.  அவனது வாழ்வு இப்படியே நடந்து அமைதியாக  சிவனடி சேர்ந்தான். 

நமக்கு எது சுலபமாக  தோன்றுகிறதோ அதைச் செய்வதிலிருந்து தான் கடினமானவற்றை துவங்க வேண்டும்.


sitaramen varadharajan

unread,
Sep 14, 2021, 7:50:14 PM9/14/21
to sivan jaykay, amrith...@googlegroups.com
EXCELLENT J.K.SIVAN  SIR......YOU ARE GREAT IN ANALYSING, ASSESSING THIS UNEQUIVOCAL NATIONAL POET......IT IS THE FATE OF TAMILNADU...BZ OF THE DK, DMK, AND Ks,  DUE RECOGNITION IS NOT ABLE TO GIVEN TO BHARATHI....   YOU ARE DOING IT AT YOUR LEVEL......YOU DESERVES ALL PRAISE.  WE PRAY GOD.......JKS SHOULD BE BLESSED A VERY LONG LIFE, WITH PERFECT HEALTH,  DESIRED WEALTH, PROSPERITY, AND ALL MULTI DISCIPLINARY SOURCES TO ENCOURAGE YOUR MISSION ....AT THE PEAK WITH SKY AS THE LIMIT.

PRANAMS...

VSITARAMEN
DIRECTOR 
ITHIHASAMAYAM /  HINDUISM on 4G

--
Kindly visit http://amrithavarshini.proboards.com/ for reading more articles.
 
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
தாயுமானவர் [பராபரக்கண்ணி – 221]
---
You received this message because you are subscribed to the Google Groups "Amritha Vahini" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to amrithavahin...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/amrithavahini/CAGpuz-KkHCAXuTesN5yD4HWdMR7OwBPa6c5dADt70wNPMKNmog%40mail.gmail.com.

sivan jaykay

unread,
Sep 15, 2021, 7:46:13 PM9/15/21
to amrith...@googlegroups.com
 பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்   J  K  SIVAN --

76     ''ஜீவன் முக்தி நிலை.''

1932ல்  மஹா பெரியவா சென்னை  சமஸ்க்ரித கல்லூரி வளாகத்தில் நான்கு மாதங்கள் தங்கிய போது தினமும் மாலையில் அவருடைய பிரசங்கத்தை கேட்க  ஆயிரக்கணக்கானோர் கூடினார்கள்.  சாயந்திரம் பூஜை முடிந்ததும்,  சிம்மாசனத்தில் அமர்வார்.  அற்புதமான  சொற்பொழிவு அப்புறம் நடைபெறும்.  ஆஹா,   அதெல்லாம் கேட்கும் பாக்யம்  பெற்ற நமது முன்னோர்களுக்கு மறுபிறப்பே இல்லை எனலாம்.  

கற்றறிந்த பெரியோர்கள், பாமரர்கள்,பண்டிதர்கள் அனைவருமே மஹா பெரியவா  உபன்  யாசத்தைக்  கேட்க காத்திருந்தார்கள்.  ஒரு சில பிரபல பெயர்கள் மட்டும் சொல்கிறேன்.   ஸ்ரீ  T.R. வெங்கட்ராம சாஸ்திரிகள், ஜட்ஜ் வெங்கட்ராமன் சாஸ்திரிகள்,  ஜட்ஜ் குமாரசுவாமி சாஸ்திரிகள்., ஸர்  P.S.  சிவஸ்வாமி ஐயர் , ஆகியோர்  வழக்கமாக தினமும்  கேட்க வருபவர்கள். எவ்வளவு கும்பலாக இருந்தாலும் ஒரு குண்டூசி கீழே விழுந்தால்  கூட  கணீர் என்று சப்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக, சப்தமின்றி  பிரசங்கத்தை கேட்பார்கள். எல்லோர் கண்களும்  காந்தத்தால் கவரப்பட்ட இரும்பு போல் மஹா பெரியவாவின் ஆன்மீக ஒளி மிகுந்த,  கருணா சாகர  முகத்தையே கூர்ந்து சிலைபோல் அசையாமல் பார்த்துக்கொண்டு  அவரது உபன்யாசத்தை கிரஹித்துக் கொண்டார்கள்.

உபன்யாசம் ஆரம்பிக்கும் முன்பு மஹா பெரியவா சில நிமிஷங்கள் மௌனமாக இருப்பார். அப்புறம் தான் பேச ஆரம்பிப்பார்.  அன்று என்ன பேசப்போகிறார் என்று எவருக்கும் தெரியாதே.  மஹா பேச ஆரம்பித்த சில  நிமிஷங்களிலேயே  அனைவரையும் கட்டிப்போடும் ஆகர்ஷண சக்தி அவர் பேச்சுக்கு உண்டு.  தினமும்  ஹிந்து, ஸ்வதேசமித்ரன் பத்ரிகை நிருபர்கள் தயாராக வந்துவிடுவார்கள்.  மஹா பெரியவா பேச்சு அன்றிரவே  பிரசுரத்துக்கு சென்றுவிடும்.  முதல் நாள் ராத்திரி  மஹா பெரியவா என்ன பேசினார் என்று படிக்க அடுத்த நாள்  விடிகாலை  பேப்பருக்காக   ஆவலாக  ஆயிரமாயிரம் வாசகர்கள் காத்திருப்பார்கள். என் தந்தையாரும் அதில் ஒருவர்.

ஒரு அற்புத  செய்தி  மைலாப்பூர்  லா  ஜர்னல் என்ற ஒரு  புத்தக  பிரசுர கர்த்தா  ஸ்ரீ  R.  நாராயணஸ்வாமி அய்யர்   மஹா பெரியவா  1932ல் நிகழ்த்திய உபன்யாசங்களை தொகுத்து  650  பக்கங்களில்  ''சங்கர விஜயம் உபன்யாசம்''  என்ற தலைப்பில்  வெளியிட்டிருக்கிறாராம் . யாரிடமாவது இருந்தால் எனக்கு கடனாக கொடுத்தால்  அதை படித்து  சில  உபன்யாசங்களை தமிழில்  ஒவ்வொன்றாக  எல்லோருக்கும் சுருக்கி எழுதலாம் என்ற ஒரு ஆசை.  நிறைவேறுவது பரமாச்சார்யாள் கருணை.
 
ஒரு சிறு புத்தகம் எனக்கு  இணைய தளத்தில் கிடைத்து அதிலிருந்து இது வரை ரெண்டு உபன்யாசங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன். இன்னொன்று   கீழே  தருகிறேன். அதன் தலைப்பு ''ஜீவன் முக்தி நிலை ''  30.9.1932 அன்று பேசியது: 

''ஆதி சங்கரர் எல்லோரும்  கடைத்தேற தான் அத்வைத சித்தாந்தம் போதித்தார். அதை  சங்கரர் பேரை வைத்துக்கொண்ட சன்யாசிகளாகிய நாங்கள் எல்லா இடத்திலும் கொண்டு சேர்க்கிறோம். எங்களுக்கு ஆச்சார்யாள் இட்ட கட்டளை என்ன தெரியுமா? சந்திரமௌளீஸ்வரர்  பூஜை செய்து கொண்டு, எல்லா இடமும் போய் நமது ஹிந்து சனாதன தர்மம் பற்றிய விஷயங்களை எடுத்துச் சொல்லவேண்டும்.

எல்லா ஜீவன்களும் பிறப்பு இறப்பு அனுபவித்தே தீரவேண்டும். இப்படி செத்து செத்து பிறப்பவர்களுக்கிடையே, சில  ஜீவன் முக்தர்களும்  இருக்கிறார்கள். இருந்தார்கள். ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் அப்படிப்பட்டவர். இன்னும் சிலரும் இப்போதும் வெளியே அறியப்படாமல் இருக்கலாம்.  மரணமெனும் வியாதிக்கு மருந்தை நாம் தான் முயற்சித்து  மஹான்கள்  மூலம் பெற முடியும். இதை வாழும்போதே பெறவேண்டும். செத்த பிறகு  மருந்தால்  பிரயோஜனம் இல்லை.
ஜனனம் மரணம் என்பது  நமது புத்திக்கெட்டாத காலத்திலிருந்தே தொடர்கிறது.

நமக்கு உடம்பு என்று ஒன்றை கொடுத்திருக்கிறது. அது உள்ளவரை பசி தாகம் போன்றவை  நம்மை பல வஸ்துக்களை தேட வைக்கிறது. பல விஷயங்களில் ஆசை உண்டாகிறது. அது கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காத போது, கோபம், பொறாமை, த்வேஷம் எல்லாம் சேர்கிறது. மற்ற வியாதிகளுக்கு மருந்து உண்டு. இதற்கு மருந்தே இல்லை. உடம்பு உள்ளவரை இதுவும் உண்டு. பசியே இல்லாத  படி செய்ய மருந்தே இல்லை.  

சமீபத்தில் ஆந்திராவில் புக்கா  எனும் இடத்தில் தங்கியிருந்தேன். இயற்கையில் ரம்யமான இடம். சதாசிவ கோனை, கைலாச கோனை என்று தீர்த்தங்கள்.  ''கோனா'' என்றால்  தெலுங்கில் மலை யருவி. நீர் வீழ்ச்சி என்று அர்த்தம்.  அருகே சிவாலயம்.  அங்கேயே  இருந்து விடலாமா  என்று மனம் நினைக்கும்.  பசி தாகம் இருக்கிறதே. திரும்பி விட வைக்கிறது.  

தேக சம்பந்தம் ஏற்படுவதை  ஜென்மம் என்கிறோம்.  அந்த சம்பந்தம் நீங்கிவிடுவது தான் மரணம். உடம்பு இருக்கிற வரை பசி தாகம், தேவைகள் இருந்து கொண்டே இருக்கும். தேகத்தை  துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதத்தால் போக்கிக்கொள்வது .  தற்கொலையால்  சரீர சம்பந்தத்தை நீக்கிக் கொள்ள வழியில்லை. இந்த ஸ்தூல சரீரம் தவிர  வேறொரு விதமான சரீரம் இருக்கிறதே. அதோடு சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான். பிறவித் துன்பம் தொடரும்.  ஆத்ம ஹத்தி எனும்    உயிரைப்  போக்கிக் கொள்வது பெரிய  பாபம்.  வேறே  ஏதேதோ பாபங்களை செய்து தவிக்கிறோம்,  ஆத்மஹத்தி பாபம்  வேறு சேர்ந்து விட்டால்  படும்  கஷ்டத்துக்கு கேட்கவே வேண்டாம். ஜென்மம் தொடரும்.

ஒருவனைக்  கொலை செய்தால்   நீதிமன்றம்  மரண தண்டனை  தருவதால்  அவன் பாபம் தீராது. அவன் உயிரோடு இருந்தால் மற்றவர்களுக்கும்  அவனால் ஆபத்து தொடரும் என்பதற்காக தான் அந்த மரண தண்டனை.  

சாகாமலிருப்பதற்கு என்ன வழி?  எல்லா  ஆச்சார்யர்களும் சில வழிகள் சொல்லி இருந்தாலும்
 எல்லாம்  தற்காலிகமாக வியாதியை குணப்படுத்தும் மருந்துகள் போல் நிவாரணம் அளிப்பவை யாக இருக்கிறதே.   ஜுரம் வந்தால்  கொய்னா மாத்திரை விழுங்கினாள்  அப்போதைக்கு ஜுரம் நிற்பது போல.  ஜனன மரண வியாதியின் ஆதாரம்,  மூலம்,   அப்படியே  தங்கி  விடுகிறதே.     ஆதி சங்கரர் யோசித்தார்.  ஆத்ம ஸ்வரூபத்தை அடைந்தவன் இந்த ஜென்மத்திலேயே  மரணமில்லாத நிலையை அடைந்தவன் ஆகிறான். இதை தவிர  வேறு மார்க்கம் கிடையாது என்று அறிகிறார். அம்ருதம் என்றால் மோக்ஷம். ஜனனம் மரணம் இல்லாத நிலை.  

உடம்பு என்றால் வியாதி இணை பிரியாதது.  ஆகவே  தக்க மருந்து சாப்பிட்டு இந்த வியாதியிலி ருந்து குணமடைந்தவர்களை அணுகவேண்டும். அவர்கள் அனுபவத்தை  அறியவேண்டும். பயனடை யவேண்டும்.   வேதம்  அநாதியானது. ஒருவரால்  எழுதப்பட்டதல்ல. பல ரிஷிகளின் அனுபவம். உணர்வு.  எந்நாளும் நமக்கு கிடைக்கும் உபதேசம்.  

புருஷ ஸூக்தத்தில் ஒரு இடத்தில் இப்படி சொல்லி இருக்கிறது. :
வேதா॒3ஹமே॒தஂ புரு॑ஷஂ ம॒ஹான்தம்᳚ । ஆ॒தி॒3த்யவ॑ர்ணம்॒ தம॑ஸ:॒ பர॑ஸ்தாத் ।
தமே॒வஂ-விഁ॒த்3வான॒ம்ருத॑ இ॒ஹ ப॑4வதி । நான்ய: பன்தா॑2 வித்3ய॒தேய॑னாய ॥

''இஹ என்றால் இந்த ஜென்மத்திலேயே என்று அர்த்தம்.  ஆஹா  இந்த  ஜென்மத்திலேயே  ஆத்ம ஞானம் பெற்றவன்  ஜனன மரண பந்தத்திலிருந்து விடுதலை பெறுகிறான்.  மரண மற்றவனா
கிறான் என்று சொல்கிறதே.  இந்த சரீரம் இருக்கும்போதே  இனி சரீரம், ஜனனம், மரணம் இல்லாத நிலை கிடைக்கிறதே!  இந்த சரீரம் இருக்கிறவரை  வியாதியும் உண்டு என்று சொன்னேன்.  அதன் தேவைகள் நம்மை ஆட்டி படைக்கிறது.  குடும்பம், சொத்து, சுகம், ஆஸ்தி பாஸ்தி என்று பல வஸ்துக்களை தேடி அலைகிறோம், அல்லல் படுகிறோம்.   நம்முடைய   ஆத்மாவானது அழிவற்றது. துன்பமற்றது.  தேகத்தை ஆத்மா  என்று  தப்பாக  புரிந்து கொண்டு அஞ்ஞானத்தில் வாடுவதால் இந்த துன்பங்கள் நம்மை அணுகுகிறது.  இந்த உடம்பு நானல்ல, என்னுடையதல்ல என்ற ஞானம் வந்து அதை தூர தள்ளி போட்டுவிட்டால் அதோடு சகல வித பந்தம் என்கிற  வியாதிகளும் விலகுகிறதே.

அதனால்  தான் ஆதிசங்கர பகவத் பாதாள்  இந்த சரீர சம்பந்தத்தை அது இருக்கும்போதே  தள்ளி வைத்து விடு என்கிறார். ஜீவன் இருக்கும்போதே  முக்தி அடைய வழி. இதோ இவர்கள் என் உறவு, நண்பர்கள் என்று  சரீரத்தோடு சம்பந்தம் செய்துகொண்டால்  அவர்களது நல்லது பொல்லாதது நம்மையும் சேர்த்துக் கொள்கிறது.  அதோ இருக்கிறானே அவன் என் எதிரி என்றால் அவனது நல்லது பொல்லாதது நம்மை அணுகவில்லை. சம்பந்தமே இல்லை. அது போல் இருக்கலாமே என்கிறார்.

இதோ இந்த பந்தல் வாசலில் வாழை  மரத்தை கட்டி வைத்திருக்கிறார்கள். அது வாடுகிறது. அதால் நான் வாடுகிறேனா? அதைக்  காட்டிலும் நெருக்கமாக இதோ என் உடம்பு என்கிற மாம்ச மூட்டை இருக்கிறது. அது வாடினால் நான் அவஸ்தைப்  படுகிறேன்.  அதை  அந்த வாழைமரம் போல்  தள்ளி தூர வைத்துவிட்டால் எனக்கு வாட்டம்ஏது ?  நாம்  நமது என்ற அபிமானம் தான் உடம்பை நாமாக்கு கிறது. காம க்ரோத, பசி  தாகம்   சமாச்சாரங்கள்   உடம்பை சேர்ந்தவை. நம்மை ஆட்டிப்படைக் கிறது.  இது என்னுடையதல்ல, நான் அல்ல என்று அடிக்கடி  எண்ணம் வந்தால் கொஞ்சம் கொஞ்ச மாக விலகும். ஆத்மா  பசி தாகமற்ற ஆனந்த ஸ்வரூபம் நித்யம் என்று புரியும்.  அது தான் ஈஸ்வரன்.  ஆத்மா தான் நாம் என்றால் நாமே ஈஸ்வரன் என்று புரிகிறதா?

 கடோபநிஷதத்தில்  '' taṁ svāc cha̍rīrāt pra̱vṛhe̍n muñjā̍d iveṣīkāṁ dhairye̱ṇa |     தம்  ஸ்வாசரீராத் ப்ரவ் ர்ஹென்  முஞ்சாத்  இவேஷிகாம்  தைர்யேண''.    பயிரிலிருந்து  இவேஷிகா என்கிற  கதிரை பிரித்து எடுப்பது போல, உரித்து எடுப்பது போல, சரீரத்திலிருந்து  ஆத்மாவை பிரித்து எடுக்கவேண்டும்.  அப்போது தான் அது பரிசுத்தமாகிறது, புனிதமாகிறது.  ஒரு வஸ்துவை நாம் பார்க்கும்போது, பார்ப்பது, பார்க்கிறவன், பார்க்கப்படுவது என்ற வித்யாசங்கள் இருக்கிறது. ஆத்மா தானே  எல்லாமாக  இருப்பது.  

கேனோபநிஷதத்தில் ஒரு வாக்யம்  வரும்:  அவிஞ்ஞாதம்  விஜயநதாம்  விஞ்ஞாதம்  அவிஜானதாம் 
இதற்கு என்ன அர்த்தம்  தெரியுமா? தெரியும் என்பவர்களுக்கு தெரியாதது,  தெரியாது என்பவர்களுக்கு தெரிந்தது  என பொருள்.'' உடம்பு என்கிற  வியாதி ஒழிந்தால்  தான் முக்தி.  ஈஸ்வரன் அருவன்.  உடம்பு இல்லாதவன்.   ஈஸ்வரனே நான்  என்பது தான் ''ஸோஹம் ''

(உட்காரும்போது, படுக்கும்போது, எழுந்திருக்கும்போது, சாப்பிடும் முன்  சாப்பிட்ட பின்  தூங்கும் முன்  ''ஸோ ஹம்'' என்று என் தந்தை சொல்லி கேட்டிருக்கிறேன். இப்போது தான்  இந்த  ''ஸோஹம்'' இருந்தால்  சோகம் வராது என்று எனக்கு தெரிகிறது.)

உடம்பு நாம் இல்லை என்று எண்ணுவது சுலபமில்லை.  எல்லா உடம்புகளும்  நம் உடம்பு தான் என்று எண்ண தோன்றினால் கொஞ்சம் கொஞ்சமாக நம் உடம்பு  என்கிற தனித்வம்  மறையும்.  பிறர் கஷ்டம் நமது கஷ்டம் போல் உணர, உதவி  செய்ய மனம் தயாராகும், செய்யும்.  பிறர்  சுகம், இன்பம் நமதாக என்னும்போது சுயநலம், பொறாமை அழியும்.  எல்லா காரியமும் ஈஸ்வரார்ப்பணம் என்று செய்ய தோன்றும்.   ''நம:  பார்வதி பதயே'' என்று  நான் அடிக்கடி சொல்கிறேன்.   நீங்களும் சொல்லுங்கள். அதை சொல்லும்போது  எல்லாம் அவன் என்கிற  எண்ணம் நினைவில் இருந்து கொண்டே இருக்கும்.   சரீரம் இருக்கும்போதே  ஜீவனை  முக்தியடைய செய்யும். உடல் மறந்து போகும். 

ப்ரஹதாரண்யக உபநிஷத்  ''அசரீரம் வாவ சந்தம், ந  ப்ரியாப்ரியே 'ஸ்ப்ருஷாத் 'என்கிறது. அதற்கு என்ன அர்த்தம்?   சரீரம் இல்லாமல் வாழும் புருஷன் தான் சுகவாசி. ஒரு போதும் துக்கம்   அவனை அணுகாது''  என அர்த்தம். 

ஆதி சங்கரர்  ஆத்மாவை மூன்றாக பிரித்து  கௌணாத்மா, மித்யாத்மா, முக்யாத்மா  என்பார். புத்ர,மித்ரர்கள் நாம் தான்.  அவர்கள் சுகதுக்கம் நமதே என எண்ணுவது தான் கௌணாத்மா. சரீரத்தின் மேல் ஆத்மா  அபிமானம் கொண்டால் அது மித்யாத்மா.

 சரீரத்திலிருந்து  ஆத்மா பிரிந்தபோது அது பரிசுத்தமான, புனித  முக்கியாத்மா. ஆத்மாவிலிருந்து முதலில் சொல்லிய   கௌணாத்மா, மித்யாத்மா  ரெண்டையும்  விலக்கிவிட்டால், பிரித்து விட்டால்,  எஞ்சி நிற்கும் முக்யாத்மா எந்த பந்தமுமில்லாமல் ஈஸ்வராத்மாவாக மாறி, ஜீவன் இருக்கும்போதே  ஜீவன் முக்தனாக  ப்ரம்மஸ் வரூப மாகலாம்.   இது தான்  சங்கர பகவத்பாதாள் சொல்லும் ஜனனமரண வியாதிக்கு மருந்து.இதை விடாமல் பயிற்சி செய்து வந்தால், ஸ்ரீ  சந்திர மௌளீஸ்வரர் அனுகிரஹமும்  கிடைக்கும். ''


sivan jaykay

unread,
Sep 15, 2021, 7:46:22 PM9/15/21
to amrith...@googlegroups.com

ஒரு அற்புத அஷ்டமி    நங்கநல்லூர்  J K SIVAN 



நேற்று  ராதாஷ்டமி.   ராதையைப் பற்றி எழுதவேண்டும் என்று மனதில் எண்ணம்  கை  என்னவோ டிராம் பற்றி எழுதியது. ஒருவேளை ராதையைப் பற்றி முதலில் நன்றாக நினைவு படுத்திக் கொண்டு அப்புறம் எழுது என்று டிராம் மெதுவாக ஊர்ந்து கொண்டு சென்றே அறிவுறுத்தியதோ?  
 
வருஷாவருஷம்   ஆகஸ்ட்  செப்டம்பர் மாத சமயத்தில்  ஒரு அஷ்டமி வரும்.  அதை  நாம்  எப்படி கிருஷ் ணாஷ்டமி கொண்டாடுகிறோமோ  எந்த விதத்திலும் அதற்கு குறையில்லாமல் கொண்டாட வேண்டிய ஒரு புனித நாள். இந்த அஷ்டமிக்கு பெயர்   ராதாஷ்டமி .  ஏன்  முக்கியம்  என்றால்,  ராதா இல்லாமல் கிருஷ்ணன் இல்லை. ஏற்கனவே பலமுறை ரசித்து சொல்லியிருக்கிறேனே. ராதா கிருஷ்ணா என்கிற ஆங்கில வார்த்தையில் 
R-ADHAKRISHNA -- முதல் எழுத்து R ஐ எடுத்து விட்டால் கிருஷ்ணனே ADHA (பாதி) யாகத்தான் ADHAA KRISHNAN ஆக குறைந்து போகிறான் இல்லையா?

RADHAவை உருது மாதிரி வலது-இடமாக படித்தால் AADHAR ஆகிவிடுகிறது. ராதா தான் கிருஷ்ணனுக்கே ஆதாரம். லோகநாயகனையே சுழல வைக்கும் ஆதார சக்தி ராதா. அவளைப் பற்றி கொள்ளை கொள்ளையாக சொல்லலாம். எழுதலாம்.

ராதாவும்  கிருஷ்ணனும் ஒன்று என்பதால் தானோ ரெண்டு பேருக்குமே அஷ்டமி பிறந்ததினம். சத்தியத்தின் ஆணுருவம் கிருஷ்ணன் என்றால் நேசத்தின், பாசத்தின் ப்ரேமையின் பெண் உருவம் ராதா. கிருஷ்ணனின் பிரதம பரம பக்தை. கிருஷ்ணனின் சர்வ சக்தி.

புராணம் என்ன சொல்கிறது?   ஸ்ரீ லக்ஷ்மியும் ராதாவும் நாராயணனின் வலது இடது பக்கத்திலிருந்து உருவாகி லட்சுமி நான்கு கரம் கொண்ட விஷ்ணுவை கணவனாக வேண்டி பெற்றாள். ராதா ரெண்டு கை கொண்டவனை வேண்டி கிருஷ்ணனை அடைந்தாள். விஷ்ணு வைகுண்டத்தில் லக்ஷ்மியோடு இருக்கும்போது கிருஷ்ணன் கோலோகத்தில் ராதாவோடு.

லக்ஷ்மி செல்வத்திற்கு அதிபதி. ராதை பேரன்புக்கும் ப்ரேமைக்கும் புனித பக்திக்கும் அதிபதி. கௌடிய வைஷ்ண வர்கள் இன்று அரை நாள் உபவாசம். பலர் முழுநாள் ஏகாதசி விரதம் போல அனுஷ்டிக் கிறார்கள்.சிலர் நிர்ஜல ஏகாதசி விரதம். தண்ணீர் கிட்டே வரக்கூடாது.

ராதா பிறந்தது துவாபர யுகத்தில் என்றாலும் என்றும் அவளை நினைப்போம். சில அஷ்டபதிகள் பாடுவோம். கிருஷ்ணனை நினைப்போம். அஷ்டபதி தான் பாடவேண்டும் என்றில்லை. கண்ணதாசனின் ''ராதையின் மோகனம்'' கூட பாடலாம். ராதாவைப்  பற்றி அநேக எண்ணற்ற சுவையான பாடல்கள் உள்ளனவே. ஊத்துக்காடு எங்கே போனார்? . அவரின் பாடல்கள் காலத்தால் அழியாதவை. முண்டாசு பாரதியாரும் கண்ணதாசனும் கூட கொள்ளை கொள்ளையாக தந்திருக்கிறார்களே . இந்த பாடல்களில் ராதை கிருஷ்ணன் நிழலாக கலந்திருக் கிறாளே .

ராதாவை நினைப்பதே கிருஷ்ணனை நினப்பதாகும்.   உலகமுழுதும் ISKCON கோவில்கள் இந்த நன்னாளைக் கொண்டாடுகிறது. . இன்று ராதாவின் தாமரைப் பாதங்களை எண்ணற்ற கிருஷ்ண பக்தர்கள் கண்டு தரிசித்து மகிழ்கிறார்கள். இன்று ஒரு நாள் மட்டுமே.    மற்ற நாட்களில் அந்த பொற்பாதங்களை மறைத்து வைக்கிறார்கள்.

ராதாவும் கிருஷ்ணனும் எப்படி பழகினார்கள் என்று ஒரு கற்பனை.நான் ஏற்கனவே எழுதியது தான். இன்று அதை மீண்டும் எழுதுகிறேன்: 

பிருந்தாவனத்தில் சிலு சிலு வென்று யமுனையின் குளிர்ந்த காற்று வீசி தென்றலை இடைவிடாது தெளித்துக் கொண்டிருந்தது. அந்த காற்று சும்மா வரவில்லை. வரும் வழியில் மனோரஞ்சிதம் மலர்களின் ஊடே பாய்ந்து அவற்றின் நறுமணத்தை நிரப்பிக் கொண்டு தாழைப்புதரில் இருந்து வந்த தாழம்பூ வாசனையை அதோடு கலந்து, மல்லிகைப் பந்தல் கோபித்துக் கொள்ளப் போகிறதே என்று பயந்து அதன் மொட்டுகளில் இருந்து வாசனையையும் கலந்து அந்த மகிழமரத்தின் அடியில் இருந்த இருவர் மீது அபிஷேகம் செய்தது.

' ஹே  காற்றே,  நில்.   என் விருந்தாளிகளாக இவர்கள் என் நிழலில் அமர்ந்திருக்கும்போது என்ன தைரியம் இருந்தால்   நீ  மற்ற மலர்களின் மணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இவர்களை அபிஷேகிக்க வந்தாய். இந்தா,  கொஞ்சம் என் மகிழம்பூ மலரையும்  எடுத்துக்கொள்.  அதையும் கலந்து அவர்கள் மேல் வீசு'' என்றது. 

''நன்றி மகிழா, என்று காற்று மகிழம்பூ மனத்தையும் கலந்து அந்த இருவர் மேல் அபிஷேகம் செய்தது.  
ஆனால் அந்த இருவரோ ஒருவரை ஒருவர் பாராமல் திரும்பி அமர்ந்து கொண்டிருந்தனர்.பேச்சு மட்டும் வந்தது.வழக்கம்போல் என்னவோ  அவர்கள் இருவருக்குள் ஏதோ  ஒரு பிணக்கு.
''நீ ஏன் நான் கூப்பிட்டு வரவில்லை?-  அவன்.
''நீ கூப்பிடும்போது எல்லாம் நான் ஓடி உன்னிடம் வரவேண்டுமா?''- அவள்.
''ஆமாம், அது தான் எனக்கு பிடிக்கும்''
'' எனக்கும் தான் பிடிக்கும். ஆனால் எனக்கு வேலை இருந்ததே''
'' என்ன வேலை அப்படி?''
'' எத்தனையோ வேலை, உனக்கு தான் என்னை கூப்பிடுவதைத் தவிர வேறு வேலையே யில்லை?''
'' உனக்கு என்னிடம் வர மனமில்லை என்று சொல்லேன். ஏன் சுற்றி வளைக்கிறாய்?''
''போ போ,  உனக்கு பதில் சொல்ல எனக்கு சக்தியில்லை. நீ எதையும் புரிந்து கொள்பவன் அல்ல.''
''எனக்கு நீ வேண்டுமே?''
''எனக்கும் தான். அதற்காக?''
'' நான் கூப்பிட்டபோது வரவில்லை என்றால் நீ என்னை மதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்?''
'' கிருஷ்ணா, உன்னை நினைத்துத் தானே நான் உருகுகிறேன். என் கடமை என்னை கட்டிப்போட்டிருக்கிறதே என்ன செய்ய?''
''இதோ பார் ராதா, உன்னைத் தவிர நான் வேறு யாரிடமாவது இப்படி உரிமை கொண்டாடி இருக்கிறேனா? அது எதைக் காட்டுகிறது?''
''புரிகிறது கிருஷ்ணா. உன் பிரேமை என் பிரேமைக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல.''
'' அதனால் தான் எனக்கு உன்னிடம் பிரேமை உண்டானதே.''
'' நாம் பழகுவதற்கு முன்னால் என்னிடம் பேசியிருக்கிறாயா?''
'' பார்க்கும்போது எல்லாம் பேசியிருக்கிறேனே?''
'' எப்போதெல்லாம் என்னை பார்த்தாய்?''
'' இது என்ன கேள்வி கிருஷ்ணா.  நீ என்னை சந்தித்த போதெல்லாம் தான். உன் பிரேமை உன்னிடம், என் பிரேமை என்னிடம், என்றா நாம் இருந்தோம்  'கிருஷ்ணா, இந்த ராதை எப்போது தன் கிருஷ்ணனை சந்திக்க வேண்டும் எப்போது பேசவேண்டும் என்று தனக்கே தெரியாதவள் , ஏனெனில் எப்போதும் அவள்  நினைவிலேயே அவன் தான் குடிகொண்டிருக்கிறானே''
''ஒ, அது எனக்கு தெரியுமே ராதா ''
''ஆமாம், கிருஷ்ணா, உனக்கு தான் எல்லாமே தெரியுமே . நான் பம்பரம். நீ தானே என்னைச்  சுற்றி விட்டு ஆடவைக்கிறாய்.. இந்தா,   நான் ஆசை ஆசையாக உனக்காக அவசர அவசரமாக செய்த இந்த பக்ஷணத்தை சீக்கிரம் சாப்பிடு''
'' நான் கேட்டு தானே நீ கொண்டு வந்தாய்.''
'' நான் எதைச் செய்யும்போதும் சாப்பிடும்போதும் அதை எப்போதும் உன்னை நினைத்து தானே, தயாரிக்கிறேன். தனியாக எதற்கு கொண்டுவரவேண்டும்.?''
'' கொண்டுவந்ததால் தானே நீ செய்த பக்ஷணத்தின் ருசி அனுபவிக்க முடியும் '' கிருஷ்ணன் ராதை கொண்டுவந்த இனிப்பை தின்றுகொண்டே பேசினவன் சட்டென்று
' இந்தா  ராதா,  எல்லாவற்றையும் நானே சாப்பிட்டுகொண்டிருக்கிறேனே. நீயும் கொஞ்சம் இதைச்  சாப்பிடு நீ சாப்பிட்டால் நான் சாப்பிட்ட மாதிரி இல்லையா. ''
ராதா தான் செய்த தின்பண்டத்தைத் தனது வாயில் போட்டுக்கொண்டவள் உடனே வெளியே உமிழ்ந்தாள். கலகலவென்று சிரித்தாள்.
''ஏன் சிரிக்கிறாய் ராதா?''
' கிருஷ்ணா உனக்கு சீக்கிரம் கொண்டுவந்து தரவேண்டும் என்று அவசரம் அவசரமாக உன் நினைவிலேயே இதைச்  செய்தேனா, சர்க்கரைக்கு பதில் நிறைய உப்பை மாற்றி போட்டுவிட்டேன் கண்ணா. என் மனம் என் வயம் இல்லை. அதுசரி நீ எப்படி இத்தனை நேரம் இதை ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாய் ?' பாதிக்கு மேல் சாப்பிட்டிருக்கிறாயே !'
'' என் பழக்கம் அது ராதா, யார் எனக்கு எதை அளித்தாலும் கொடுத்தவர்களின் மனத்தை தான் பார்க்கிறேன். மணத்தையோ, ருசியையோ  நான் பார்ப்பதில்லையே. உன் மனத்தின் இனிமை நீ போட மறந்த சர்க்கரை
யின் இனிப்பைவிட ருசித்ததே.''
''ராதா, ஒ ராதா.... சொந்தம் என நீ நினைத்தால் நான் எப்போதோ உன் சொந்தம் ஆகிவிட்டேன் என்பதை உணர்வாய். . இதில் நேரம் காலம், குலம், வயது எதற்குமே இடமில்லை. மனம் ஒன்று பட்டால் மற்றதொன்றும் இல்லை என்று நீ அடிக்கடி சொல்வாயே. நீயே மறந்து விட்டாயா?

ராதாகிருஷ்ணன் படம் முன்பு ஒரு சிறு தீபமாக ஏற்றி  வைத்து கண்ணை மூடி ராதா கிருஷ்ணனை
 நினையுங்கள்  இருவரும்  உங்கள் முன்பு தோன்றுவார்கள். மனம் நிம்மதி பெரும். இது அனுபவம் பேசும் வார்த்தை.

sivan jaykay

unread,
Sep 17, 2021, 8:03:50 PM9/17/21
to amrith...@googlegroups.com

ஸ்ரீமந்  நாராயணீயம் -  நங்கநல்லூர்  J K  SIVAN  --
53வது  தசகம் 

53.  பலராமன் கொன்ற தேனுகாசுரன் 

 நாட்கள் வளர்ந்தன.  கண்ணனும் வளர்ந்தான்.  இப்போது  கண்ணன் கொஞ்சம் பெரிய பையன். குழந்தை இல்லை கிருஷ்ணன்.  பசுக்களை மேய்க்கும்  ஒரு கோபன்.  கன்றுக்குட்டி  மேய்ப்பவனுக்கு ப்ரொமோஷன்.   பிருந்தாவன காடுகளில் ஒரு தனிப்பகுதி எவரும் செல்லாத  அடர்ந்த வனம் .. அங்கே  தான் கிருஷ்ணனை எதிர் நோக்கி காத்திருந்தான்  தேனுகாசுரன்.  கழுதை வடிவத்தில் வந்தவன்.  அவனைக்  கொல்ல   பலராமனே  போதும் என்று விட்டுவிட்டான் கிருஷ்ணன்.  அந்த கழுதை  ரூப அசுரன் மாண்ட  கதை தான் இந்த 53வது தசகம்.

अतीत्य बाल्यं जगतां पते त्वमुपेत्य पौगण्डवयो मनोज्ञं ।
उपेक्ष्य वत्सावनमुत्सवेन प्रावर्तथा गोगणपालनायाम् ॥१॥

atiitya baalyaM jagataaM pate tvamupetya paugaNDavayO manOj~nam |
upekshya vatsaavanamutsavena praavartathaa gOgaNapaalanaayaam || 1

அதீத்ய பா³ல்யம் ஜக³தாம் பதே த்வமுபேத்ய பௌக³ண்ட³வயோ மனோஜ்ஞம் |
உபேக்ஷ்ய வத்ஸாவனமுத்ஸவேன ப்ராவர்ததா² கோ³க³ணபாலனாயாம் || 53-1 ||

''என்னப்பா  கிருஷ்ணா, இந்த பிரபஞ்ச நாயகனே,  குழந்தைப் பருவம் கடந்து நீ இப்போது  ஒரு  அழகிய பாலகன்,   பெரிய பையன்.  இனி நீ கன்றுக்குட்டி மட்டும்  மேய்க்கும் சிறுவனல்ல.  இனி எல்லா கோபர்களையும் போல்  பெரிய பசுக்களை  மேய்க்கும்  இடையன்.  ஆமாம்  உண்மையிலேயே நீ இடையவன் தானே,  இடை என்றால் நடுவில் என்று அர்த்தம்.  படைத்தல், காத்தல், அழித்தல் எனும்  முத்தொழில் புரியும்  த்ரிமூர்த்திகளில் நீ நடுவன், விஷ்ணு,  எந்தப்பக்கமும் சேராத நடு நிலையாளன்.   கடந்த, நிகழ், எதிர் காலங்களில்  நிகழும்  அவசிய அவசர காலத்தில் ஒவ்வொரு கணமும்  எம்மை ரக்ஷிப்பவன்.

उपक्रमस्यानुगुणैव सेयं मरुत्पुराधीश तव प्रवृत्ति: ।
गोत्रापरित्राणकृतेऽवतीर्णस्तदेव देवाऽऽरभथास्तदा यत् ॥२॥

upakramasyaanuguNaiva seyaM marutpuraadhiisha tava pravR^ittiH |
gOtraaparitraaNakR^ite(a)vatiirNaH tadeva devaa(a)(a)rabhathaastadaa yat || 2

உபக்ரமஸ்யானுகு³ணைவ ஸேயம் மருத்புராதீ⁴ஶ தவ ப்ரவ்ருத்தி꞉ |
கோ³த்ராபரித்ராணக்ருதே(அ)வதீர்ணஸ்ததே³வ தே³வாரப⁴தா²ஸ்ததா³ யத் || 53-2 ||

குருவாயூரப்பா,  இந்த உத்யோக மாற்றம்  உனக்குரொம்ப  பொருத்தம்.   கோ  என்றால்  பசு,  பூமி, என்று பொருள்படும். ஆகவே  நீ  பசுக்களை பராமரிக்கும்  கோபாலனாகவும்  பூமியை காக்கும் பூபாலனாகவும்  பொறுப்பேற்றவன். 

कदापि रामेण समं वनान्ते वनश्रियं वीक्ष्य चरन् सुखेन ।
श्रीदामनाम्न: स्वसखस्य वाचा मोदादगा धेनुककाननं त्वम् ॥३॥

kadaa(a)pi raameNa samaM vanaante vanashriyaM viikshya charan sukhena |
shriidaamanaamnaH svasakhasya vaachaa mOdaadagaa dhenukakaananaM tvam || 3

கதா³பி ராமேண ஸமம் வனாந்தே வனஶ்ரியம் வீக்ஷ்ய சரன்ஸுகே²ன |
ஶ்ரீதா³மனாம்ன꞉ ஸ்வஸக²ஸ்ய வாசா மோதா³த³கா³ தே⁴னுககானநம் த்வம் || 53-3 ||

ஒரு நாள்   வழக்கம் போல்  காட்டிற்கு நீயும்  பலராமனும் பசுக்களோடு சென்றபோது  காட்டின் உட்பகுதிக்குள் அதன் அழகை ரசித்தவாறே  சென்றுவிட்டீர்கள்.   ''டேய்  கிருஷ்ணா  அதோ இன்னும் அடர்த்தியாக  ஒரு  இடம் இருக்கிறது பார்த்தாயா  வா அதுவரை சென்று சுற்றிவிட்டு வருவோம்'' என்றான்  கூடவே வந்த நண்பன்   ஸ்ரீ தாமன்.  அங்கு தான்  தேனுகாசுரன்  வசித்தான் .

उत्तालतालीनिवहे त्वदुक्त्या बलेन धूतेऽथ बलेन दोर्भ्याम् ।
मृदु: खरश्चाभ्यपतत्पुरस्तात् फलोत्करो धेनुकदानवोऽपि ॥४॥

uttaalataaliinivahe tvaduktyaa balena dhuute(a)thabalena dOrbhyaam |
mR^iduH kharashchaabhyapatatpurastaat phalOtkarO dhenuka daanavO(a)pi || 4

உத்தாலதாலீனிவஹே த்வது³க்த்யா ப³லேன தூ⁴தே(அ)த² ப³லேன தோ³ர்ப்⁴யாம் |
ம்ருது³꞉ க²ரஶ்சாப்⁴யபதத்புரஸ்தாத் ப²லோத்கரோ தே⁴னுகதா³னவோ(அ)பி || 53-4 ||

அங்கு பழங்கள் நிறைந்த உயர்ந்த  பனை  மரங்கள் நிற்பதை பார்த்த  பலராமன்  ''கிருஷ்ணா, மரங்களை உலுக்கி  பழங்கள் உதிர வைக்கலாமா.   இன்றைக்கு நமக்கு நல்ல வேட்டை '' என்றதும் நீயும் அவனும்  மரங்களை பலமாக  உலுக்கினீர்கள்.  பலராமன்  பெயருக்கேற்ற  நல்ல பலம் உடையவன் அல்லவா?  நிறைய  பழங்கள் உதிர்ந்தன.   அந்த பனங்காட்டில் தான் தேனுகாசுரன் பதுங்கி இருந்தான்.   ஒரு கழுதை உருவத்தில் இருந்த அந்த  அசுரன் வெளிப்பட்டான். 

समुद्यतो धैनुकपालनेऽहं कथं वधं धैनुकमद्य कुर्वे ।
इतीव मत्वा ध्रुवमग्रजेन सुरौघयोद्धारमजीघनस्त्वम् ॥५॥

samudyatO dhainukapaalane(a)haM kathaM vadhaM dhainukamadya kurve |
itiiva matvaa dhruvamagrajena suraugha yOddhaaramajiighanastvam || 5

ஸமுத்³யதோ தை⁴னுகபாலனே(அ)ஹம் கத²ம் வத⁴ம் தை⁴னுகமத்³ய குர்வே |
இதீவ மத்வா த்⁴ருவமக்³ரஜேன ஸுரௌக⁴யோத்³தா⁴ரமஜீக⁴னஸ்த்வம் || 53-5 ||

பசுக்கள்  அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தன.  அவற்றை  திரட்டி  ஒரே இடத்தில்  மேய வைக்க உன் மனதில் எண்ணம்  உதித்ததால், தேனுகாசுரனைக்  கொல்வதில்  உன் மனம் நாட்டம் கொள்ளவில்லை.  அப்படி அந்த அசுரனை மாய்க்கவேண்டும் என்ற நிர்பந்தம் வந்தால்  பலராமன் பார்த்துக் கொள்ளட்டும் அந்த வேலையை  என்று நீ  அவனிடம் விட்டுவிட்டாயோ?  தேனுகா என்றால்  பசுக்கள் என்று ஒரு அர்த்தம் என்பதால்  அந்த அசுரன் உன்னிடமிருந்து தப்பினானோ?  தேவர்களை படாத பாடு படுத்தியவன் அல்லவோ  அவன்?

तदीयभृत्यानपि जम्बुकत्वेनोपागतानग्रजसंयुतस्त्वम् ।
जम्बूफलानीव तदा निरास्थस्तालेषु खेलन् भगवन् निरास्थ: ॥६॥

tadiiya bhR^ityaanapi jambukatvenOpaagataa nagrajasanyutastvam |
jambuuphalaaniiva tadaa niraasthastaaleShukhelan bhagavanniraasthaH || 6

ததீ³யப்⁴ருத்யானபி ஜம்பு³கத்வேனோபாக³தானக்³ரஜஸம்யுதஸ்த்வம் |
ஜம்பூ³ப²லானீவ ததா³ நிராஸ்த²ஸ்தாலேஷு கே²லன்ப⁴க³வன் நிராஸ்த²꞉ || 53-6 ||

தேனுகாசுரன் தனியாக அங்கே வசிக்கவில்லை,  நரிகள் உருவில் அவன் வீரர்கள்  இருந்தார்கள்.  நரிகள்  அவனைச் சூழ்ந்துகொண்டதும் பலராமனுக்கு வேடிக்கையாக இருந்தது. அவனைத் தாக்க வந்த நரிக்கூட்டத்தைப்  பிடித்து பந்தாடினான்.  மரங்களின் மேல் வீசினான்   மாண்டன.  குருவாயூரப்பா,  உன்னிடம் நெருங்கியவற்றை நாவல் பழம் வீசுவதைப் போல் நீயும்  தூக்கி எறிந்தாய்.

विनिघ्नति त्वय्यथ जम्बुकौघं सनामकत्वाद्वरुणस्तदानीम् ।
भयाकुलो जम्बुकनामधेयं श्रुतिप्रसिद्धं व्यधितेति मन्ये ॥७॥

vinighnati tvayyatha jambukaughaM sanaamakatvaadvaruNastadaaniim
bhayaakulO jambukanaamadheyaM shruti prasiddhaM vyadhiteti manye || 7

வினிக்⁴னதி த்வய்யத² ஜம்பு³கௌக⁴ம் ஸனாமகத்வாத்³வருணஸ்ததா³னீம் |
ப⁴யாகுலோ ஜம்பு³கனாமதே⁴யம் ஶ்ருதிப்ரஸித்³த⁴ம் வ்யதி⁴தேதி மன்யே || 53-7 ||

வந்த  சுவடு இல்லாமல் அனைத்து நரிகள்  உருவத்தில் வந்த  தேனுகாசுரன் வீரர்களும் எமலோகம்  சென்றார்கள்.  வருணனுக்கு  ஜம்புகன்  என்று பெயர்.    நரிப்பெயர்  நமக்கு வேண்டாமப்பா என்று அந்த பெயரை மறைத்துக் கொண்டுவிட்டான்.  அந்த பெயரால் வருணனை அழைக்கும் பழக்கம் இல்லை.  

तवावतारस्य फलं मुरारे सञ्जातमद्येति सुरैर्नुतस्त्वम् ।
सत्यं फलं जातमिहेति हासी बालै: समं तालफलान्यभुङ्क्था: ॥८॥

tavaavataarasya phalaM muraare sanjaatamadyeti surairnutastvam |
satyaM phalaM jaatamiheti haasii baalaiH samaM taalaphalaanyabhunkthaaH || 8

தவாவதாரஸ்ய ப²லம் முராரே ஸஞ்ஜாதமத்³யேதி ஸுரைர்னுதஸ்த்வம் |
ஸத்யம் ப²லம் ஜாதமிஹேதி ஹாஸீ பா³லை꞉ ஸமம் தாலப²லான்யபு⁴ங்க்தா²꞉ || 53-8 ||

என்னப்பா குருவாயூரா , முராரி,  அசுரர்களை அழிக்க அவதரித்தவனே, தேவர்கள் விண்ணவர் அனைவரும் உன்னைப்  போற்றி புகழ்ந்தனர்.  உன் அவதார மஹிமையைப் பாடினார்கள்.  ''வாங்கடா,  பழங்கள்  சாப்பிடுவோம்'' என்று  எல்லா நண்பர்களுமாக சேர்ந்து உதிர்ந்த பழங்களை ருசித்து உண்டீர்கள். 

मधुद्रवस्रुन्ति बृहन्ति तानि फलानि मेदोभरभृन्ति भुक्त्वा ।
तृप्तैश्च दृप्तैर्भवनं फलौघं वहद्भिरागा: खलु बालकैस्त्वम् ॥९॥

madhudravasrunti bR^ihanti taani phalaani medObharabhR^inti bhuktvaa |
tR^iptaishcha dR^iptairbhavanaM phalaughaM vahadbhiraagaaH khalubaalakaistvam || 9

மது⁴த்³ரவஸ்ருந்தி ப்³ருஹந்தி தானி ப²லானி மேதோ³ப⁴ரப்⁴ருந்தி பு⁴க்த்வா |
த்ருப்தைஶ்ச த்³ருப்தைர்ப⁴வனம் ப²லௌக⁴ம் வஹத்³பி⁴ராகா³꞉ க²லு பா³லகைஸ்த்வம் || 53-9 ||

எல்லோரும்  வயிறு நிறைந்து வீடு திரும்பினீர்கள்.  தேன்  சொட்டும் சுவையோடு இருந்த பழங்கள் ருசிக்கும், பசிக்கும்  விருந்தாயின.  நிறைய  பழங்களை மூட்டை கட்டிக்கொண்டு வீட்டில் அனைவருக்கும் அளித்தீர்கள். 

हतो हतो धेनुक इत्युपेत्य फलान्यदद्भिर्मधुराणि लोकै: ।
जयेति जीवेति नुतो विभो त्वं मरुत्पुराधीश्वर पाहि रोगात् ॥१०॥

hatO hatO dhenuka ityupetya phalaanyadadbhirmadhuraaNi lOkaiH |
jayeti jiiveti nutO vibhO tvaM marutpuraadhiishvara paahi rOgaat ||10

ஹதோ ஹதோ தே⁴னுக இத்யுபேத்ய ப²லான்யத³த்³பி⁴ர்மது⁴ராணி லோகை꞉ |
ஜயேதி ஜீவேதி நுதோ விபோ⁴ த்வம் மருத்புராதீ⁴ஶ்வர பாஹி ரோகா³த் || 53-10 ||

நீயும்   உன் நண்பர்களும் பழங்களை புசித்துக்கொண்டிருக்கும்போது உன் நண்பர்கள் சிலர் நேரில் கண்ட  காட்சியை விளக்கிச் சொன்னார்கள் .  பலராமன்  தேனுகாசுரனை எப்படி காலைப்பிடித்து தூக்கி உயரே சுற்றி மரங்களின் மேல் வீசிக்  கொன்றான் என்று அறிந்து நீயும் மகிழ்ந்தாய்.  வாயில் பழங்களின் ருசியோடு இந்த  அசுரன் அழிந்த செய்தியும்  இனித்தது.  எண்டே குருவாயூரப்பா  ஜெயவிஜயீபவா, ஜெயதி  ஜெயதி  என்று உன்னை எல்லோரும்  பெருமையோடு  போற்றினார்கள்.  நானும் அவ்வாறே  வாய் நிறைய உன்னை போற்றுகிறேன்.  என்னையும்  நோய் தீர்த்து இனிது வாழ வை என்னப்பனே''   என்று தேனுகாசுர வத  தசகத்தை நிறைவு செயகிறார்  நாராயண பட்டத்ரி.
தொடரும் 



sivan jaykay

unread,
Sep 17, 2021, 8:03:50 PM9/17/21
to amrith...@googlegroups.com


உள்ளது நாற்பது -  நங்கநல்லூர்   J K  SIVAN 
பகவான் ஸ்ரீ ரமணர் 

9.  யோகிகளும்  போகிகளும்.

இரட்டைகண் முப்புடிக ளென்றுமொன்று பற்றி
யிருப்பவா மவ்வொன்றே தென்று – கருத்தினுட்
கண்டாற் கழலுமவை கண்டவ ரேயுண்மை
கண்டார் கலங்காரே கானிருள்போன் – மண்டும் 9

ஆகாயத்திற்கு நிறம் கிடையாது.  கீழே கடலின் நிறத்தை கடன் வாங்கி காட்சி அளிக்கிறதோ?
அது போல தான்  இந்த உலகத்தில் நம்மை வாட்டும்  ரெட்டைகள் -- இந்த ரெட்டையர்கள் இல்லாமல் எவரும் வாழ முடியவில்லையே--   சுகம்X துக்கம் , இன்பம் X  துன்பம், நன்மை X தீமை,  கெட்டதுX நல்லது,   இறப்பு X பிறப்பு,  இவை எல்லாமே  அஹங்காரம் எனும் நிறத்தை கொண்டவை.   எது இந்த அஹங்காரம், எதனால் விளைகிறது என்று ஆராய்ந்து உள்  நோக்கினால்  காணாமல் போய்விடும். இப்படி அதைக் கண்டுபிடித்து அகற்றியவர்கள் தான் ஞானிகள் , தத்வ தர்ஸிகள் .  இவர்கள் மேலே சொன்ன ரெட்டையால் அவஸ்தைப்படாதவர்கள்.  

கோழி முதலா, முட்டை முதலா?  போன்ற  ரெட்டைகள் நம்மை இன்னும்  மாயையில் இந்த கேள்விக்கு விடை காணமுடியாமல் வைப்பவை.  இது போல் அநேகம்  நம்  மனதை ஆக்கிரமிப்பவை . கோழி , முட்டை ரெண்டுமே  ஆதாரத்தில் மண் தான். மண் அழிந்தால் எதுவுமே  இல்லையே!  சுகம்  துக்கம்  நன்மை தீமை, நல்லது  கெட்டது , எதையுமே துறந்தால் ஆனந்தம் ஒன்றே மிச்சம்.  ஆழ்ந்த தூக்க  நிலையில் மனதில் இதெல்லாம் கிடையாதே. மனமே அப்போது இல்லையே. 

எல்லாவற்றுக்கும் காரணம்  வில்லன் நம்பியார் மனம்  தான். அதை இயக்குவது  ''நான்''  எனும் அகந்தை, அகம்பாவம். எல்லாம்  கானல் நீர் போல் மாயை, இல்லாதது இருப்பது போல் காட்டுவது  என்று உணர்ந்தவன் ஞானி.

மிகவும்  சூக்ஷ்மமான  ஆத்மாவை அஹங்காரத்தோடு  அறியமுடியாது.  ஞான விசாரத்துக்கு மனம் காலியாக இருக்கவேண்டும். அதில் ஒன்றும் இடம் பிடிக்க கூடாது.  இது தான் மனோநாசம்.  அயம் அஹமஸ்மி     ''இவனே  நான் ''  என்று ஆத்மாவை கெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும். இதில் நிலையாக நிற்பது தான் ஸமாதி  நிலை.

காமம்,  கோபம், மோகம்,  போன்றவை மனதில் தோன்றும்போது,  இவை எல்லாம் யாருக்கு வருகிறது? என்ற  தீர்க்கமான கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால்  ''நான்''  எனும் தேஹ அபிமானம் ஓடிவிடும். 

ஸ்ரீ ரமணர் போன்ற மஹான்கள்,நம்மைப்போலவே  நடந்துகொள்வார்கள், உலக சஞ்சாரம் செய்வார்கள், ஒரே இடத்தில் இருப்பார்கள்,  எல்லோரையும் போல் தூங்குவார்கள், அன்பாக எல்லோருடனும் பழகுவார்கள், உணவு உண்பார்கள், நீர் பருகுவார்கள்,  காற்று குளிர் வெப்பம் எல்லாம் அவர்களையும் தாக்கும்.   ஆனால்  மேலே சொன்ன என்ன தாக்கமும், அவர்களை  நெருங்காமல் உடல் மட்டும் இதெல்லாம் செய்து கொண்டிருக்கும்.   யாருடனும் பேசாமல் இருக்கும் அவரது  மௌனம் நிறைய பேருக்கு  அவர் ஏதோ  ''சும்மா'' இருப்பதாக  மட்டுமே தோன்றும். நமது     ''சும்மா ''வேறே.   யோகிகள் இருப்பது நிர்விகல்ப சமாதி நிலை. பூரண சுகம் அனுபவிப்பவர்கள்.



sivan jaykay

unread,
Sep 17, 2021, 8:03:58 PM9/17/21
to amrith...@googlegroups.com

பார்க்காத ஒரு பூக்கோவில். --  நங்கநல்லூர்  J K SIVAN   

நான் திருநெல்வேலி சென்றிருக்கிறேன்.  ஆனால்  வீரவநல்லூர் போக வாய்ப்பு கிடைக்க வில்லை.  அம்பாசமுத்திரம் தாலுகாவில்  வீரவநல்லூரிலிருந்து  7 கி.மீ. தூரத்தில் ஒரு அற்புத கிராமம் இருக்கிறது. அதன் பெயர் திருப்புடை மருதூர்.    தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணம் அருகே  திருவிடை மருதூர்  மத்யார்ஜுனம் என்ற புகழ் பெற்ற  சிவாலயம் இருப்பது   எல்லோரும் அறிந்தது.  திருவிடை மருதூர் வேறு, திருப்புடை மருதூர் வேறு    இங்கே  சிவன் பெயர் நாறும்பூநாதர்.  அம்பாள் பெயர்  கோமதி அம்மன்.  1500 வருஷ பழைய சிவாலயம். 

 வடக்கே  காசிக்கு சமமாக  மூன்று    ஆலயங்கள் தெற்கே உண்டு.  ஒன்று   உத்தர காசியாகிய மல்லிகார்ஜூனம். நிறைய குரங்குகள் என்னை  துரத்தியது ஞாபகம் இருக்கிறது.  ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம்  தான் மல்லிகார்ஜுனம்.  ரெண்டாவது  மத்ய காசி எனப்படும்  திருவிடைமருதூர்.  இது தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர்.  இதற்கு மத்யார்ஜுனம் என்று பெயர். அற்புதமான கோவில். பல முறை சென்றிருக்கிறேன். 
மூன்றாவது தக்ஷிண  காசி எனப்படும் புடார்ஜூனம்  எனப்படும் திருப்புடைமருதூர்.  இன்னும் போக பாக்யமில்லை.   இந்த  மூன்று  சிவாலயங்களிலும் உள்ள   ஒரே  மகத்தான ஒற்றுமை  ஸ்தல விருக்ஷம்.  மூன்றிலும் மருத மரம் தான் புனித விருக்ஷம். 

ஆற்றின்  கிழக்கு கரையோர இந்த  சிவாலயத்தில் ராஜகோபுரம் ஐந்து நிலை,  பதினோரு கலசங்கள் கொண்டது. பாண்டிய ராஜாக்கள்,   விஜய நகர சாம்ராஜ்ய நாயக்கர்கள் கட்டி பராமரித்த ஆலயம்.  திருப்புடைமருதூருக்கு வேறே பெயர்களும்  உண்டு.   மருத புரம், சுந்தரவனம், புடார்ஜூனம் , தக்ஷிணகாசி, சுரேந்திரபுரி என்று மற்ற பெயர்கள்.   அங்கேபோனால்  இந்த பெயர்களை சொல்லி எங்கே இருக்கிறது என்று எவரையும் கேட்காதீர்கள். அந்த மாதிரி ஊர் இங்கே இல்லை என்று திருப்பி விடுவார்கள். திருப்புடை மருதூர், பூக்கோவில்,  என்றால் மட்டுமே தெரியும். 

பிரம்மாவின் பிள்ளை ஸ்வயம்பு மனு   பூலோகத்தில் பல  ஸ்வயம்பு  லிங்கங்கள் உள்ள  சிவ ஸ்தலங்களுக்கு சென்றான்.  வழியில் அகஸ்தியரைப் பார்த்தபோது 

 ''டேய் , மனு,  நீ எப்படி திருப்புடை மருதூர் போகாமல் வேறெங்கெல்லாமோ சென்றாய். என்று இங்கே வருவதற்கு வழி சொன்னார்.    மனு இங்கே அப்போது  மருத மரத்தின் அடியில் லிங்கமாய் நின்ற  நாறும்பூ நாதரைப்பார்த்தான்.  அவன் வரும்போது தூரத்திலிருந்தே  பார்வதி, லக்ஷ்மி  சிவனை வணங்குவதை பார்த்துவிட்டு ஓடிவந்தான். அதற்குள்  காட்சி மறையவே,  மனம் வருந்தி தனது சிரத்தை வெட்டிக்கொள்ள அருகில் இருந்த மருதமரத்தில் வாளை செருகி தலையை அதன் மேல் வைத்து துண்டித்துக் கொள்ள முயன்றான்.    வாள்  மருத மரத்தில் செருகப்பட்டவுடனே, மரத்திலிருந்து  ரத்தம் கசிய ஆரம்பித்துவிட்டதால் அதிர்ச்சி அடைந்தான்.   ‘நிறுத்து’ என்று அசரீரி  சப்தம் கேட்டது.  உடனே மருத மரத்தின் பொந்தில் இருந்து  சிவன் தோன்றி  ஸ்வயம்பு மனுவுக்கு  தரிசனம் தந்தார்.  

''பரமேஸ்வரா, உனக்கு கோவில் இல்லையே , இங்கே ஒரு கோவில் கட்ட  உத்தரவு தரவேண்டும் ''
''மனு,  இந்த மருத மரத்தின் கிழக்கே   சற்று தூரத்தில் ஒரு ஸ்வயம்பு லிங்கம் இருக்கிறது. அதற்கு கோவில் கட்டு ''
இங்கே  அப்போது மனு கட்டியகோயில் காணோம். 
களக்காடு ராஜ்யத்தின்  ராஜா  வீரமார்த்தாண்டன்  ஒரு சமயம் இங்கே  வேட்டைக்கு வந்தான். ஒரு மானைக்  கண்டு தனது அம்பை எய்தான். அப்போது மான் மறைந்து விட்டது. ஆனால் ராஜா எய்த அம்பு மருத மரத்தின் பொந்தில் குத்தி நிற்க, அங்கே சிவலிங்கம்  இருப்பதை  ராஜா  பார்த்துவிட்டு  உடனே  இந்த இடத்தில் பெரிய ஆலயம் எழுப்பினான்.

இது வரை  திருப்புடை மருதூர்   சிவனுக்கு ஏன்  ''நாறும்பூ நாதர்''  என்று  பெயர் என  சொல்லாமல் விட்டுவிட்டேனே.   அடிக்கடி  மறதி வந்துவிடுகிறது.  நல்லவேளை இப்போது சொல்கிறேன். 

ஒருநாள்  கருவூர் சித்தர்  பல  ஆலயங்களுக்கு சென்றுவிட்டு  நடந்தவர்    தாமிரபரணியின் வடகரை வழியாக இந்த பக்கம் வந்தார்.  அவர் கண்ணில் ஆற்றின் அக்கரையில்  இந்த சிவாலயம் பட்டது.  எப்படி ஆற்றைக் கடப்பது? பெரும் வெள்ளம் ஓடுகிறதே.   சிவனின் பெயர்  என்னவாக இருக்கும்? தெரியவில்லையே, அழைக்க முடியவில்லையே,.   காற்றில்  கம்மென்று  நறுமணம் வீசிக்கொண்டே இருந்தது.    யோசித்துக்கொண்டே நின்றார்.  தமிழ் சித்தர் அல்லவா?    சிவனே,  ‘நாறும்பூநாதா’ என சத்தம் போட்டு அழைத்தார்.   

''பரமேஸ்வரா, உன்னை காண முடியாமல் ஆற்றிலே வெள்ளம் போகிறதே, நான் சொல்வது உனக்கு கேட்கிறதா?” என்று  உரக்க கத்தினார்  சித்தர்.

அக்கரையில், சிவனின் காதில் ஆற்று  வெள்ளத்தின் ஓ   வென்ற சப்தம் பறவைகளின் சப்தஜாலம் தவிர கருவூர் சித்தர் கத்தினதும் கேட்டது.  உடம்பை இடது பக்கம் சாய்த்து, செவிமடுத்து  சித்தர் குரலைக்  கேட்டான் சிவ பெருமான். வெள்ளம்  வடியவைத்தான்.  ஆற்றில் இறங்கி அக்கரைக்கு நடந்தார் சித்தர். சிவனுக்கும்  ''நாறும்பூ நாதர் ''என்ற பெயர் நிலைத்தது. நமக்கும் ஒரு ஸ்வாரஸ்ய மான கதை கிடைத்தது.    சிவன் இன்றும்  இடது பக்கம் சாய்ந்த சிவலிங்கமாக , புடார்ஜூனனாக  காட்சி தருகிறார்.  கோமதி அம்பாள் அபூர்வமான நீலக்கல் திருமேனி கொண்டவள். அருள் ஸ்வரூபமானவள். பெண்களின் நோய்களை தீர்ப்பதில் சிறந்த  லேடி டாக்டர் என்று ஊரெல்லாம் புகழ் பெற்றவள். இன்றும்  இங்கே   பேய், பிசாசு தொந்தரவு,  கெட்ட ஆவிகள்   பிடித்த பெண்கள், மனநலம் சரியில்லாதவர்கள் அம்பாள் சன்னிதியில் இருந்து தினமும் வழிபட்டால் 21 நாட்களில் குணமாகும் என   எண்ணற்ற பக்தர்கள் வருகிறார்கள்.  நோய்கள் நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் பாயசம்  செய்து ஆற்றங்கரையில் நீராடி படித்துறையை கழுவி அதில் வைத்து சாப்பிடுவார்கள். இதை  ''படி பாயசம்'' என்று  அம்பாள் பிரசாதமாக தருகிறார்கள்.

கடைசியாக ஒரு விஷயம்.   தாமிரபரணி, கடனா நதி, ராமநதி  என்ற மற்ற ரெண்டு ஆறுகள்  சங்கமித்து வடக்கு நோக்கி உத்தரவாஹினியாக ஓடுகிறது   ரொம்ப விசேஷம்.   சிவ சக்தி ரூபிணி யான   தாமிரபரணி   பரமேஸ்வரன் பார்வதி அம்சம்.  இதை  தாமிரபரணி மகாத்மியம்  விவரிக்கிறது. திருப்புடை மருதூரை சுற்றி  தாமிரபரணியில்  பதினோரு தீர்த்தங்கள் இருப்பதாக  சொல்லப்பட்டிருக்கிறது. 

இன்னொரு  ஐதீகம்:    விஷ்ணு, ப்ரம்ம  இந்திராதி தேவர்கள்  ராக்ஷசர்களிடம் தோற்று  மறைய இடம் தேடினார்கள்.   ஈஸ்வரா,  காசிக்கு ஒப்பான ஒரு இடம் காட்டு ?  என்றபோது சிவன்  ''ப்ரம்மா, இதோ எனது தண்டம், இதை கங்கையில் இடுகிறேன், இது எங்கே நிற்கிறதோ அங்கே  சென்று   வழிபடுங்கள்'' என்கிறார்.  கங்கையில்  தண்டம் மிதந்து சென்றது.  அது எங்கே போகிறது என்று பின் தொடர்ந்து விஷ்ணு கருடன்மேல் பறந்தார்.  பிரம்மன் ஹம்சத்தின் மேல் தொடர்ந்தான். கங்கை கடலில் கலந்தது. சிவனின்   தண்டம்   கடலில் கரையோரம் மிதந்து பாரத பூமியை சுற்றியது.  தாமிரபரணி கடலில் சங்கமமாகும் இடம் வந்தது.  க நதியில் புகுந்து எதிர்திசை சென்றது.  திருப்புடை மருதூர் கோவிலுக்கு  மேற்கு புறம் வந்து நின்றது.  அந்த ப்ரம்ம தண்டம் அங்கேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு எல்லா தேவர்களும்  சிவனை வணங்கினார்கள்.  அங்கே தான் இப்போது நாறும்பூ நாதர் இருக்கிறார். போதுமா? 

திருப்புடை மருதூரை  தைப்பூச தீர்த்தவாரி உற்சவம்  சிறப்பாக நடப்பதால் தைப்பூச தீர்த்தவாரி ஊர் என்று அடையாளம் காட்டுவார்கள். நாறும்பூ நாதர் ஆலயம்,  என்பதால்   ''பூக்கோவில்'' என்றும் உள்ளூரில் பெயர். 

ஒரு காலத்தில் ஜேஜே  என்று  களை  கட்டிய  அக்ராஹாரம் இப்போது தூங்கும் சந்து ஆகிவிட்டது காலத்தின் கொடுமை. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு  மாற்றங்களால் மனம் கலங்காது தெளிந்த நீராக தாமிரபரணி ஓடிக்கொண்டு இருக்கிறாள்.

இது மாதிரி கோவில்களுக்கு  கொரோனா முடிந்தபிறகு எல்லோரும் செல்லவேண்டும்.  அர்ச்சகர் களுக்கும் உதவி செய்யவேண்டும். ஆலயத்திற்கு பூஜை தீபம் ஜெகஜோதியாக எரிய நிறைய பொருள்கள் காணிக்கையாக வழங்கவேண்டும். 

sivan jaykay

unread,
Sep 17, 2021, 8:04:08 PM9/17/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

77.    இது தான் அத்வைதம்...

1932ம் வருஷம்  அக்டோபர்  மாதம்  13ம் தேதி  மஹா பெரியவா மெட்ராஸ்  ஸமஸ்க்ரித  கல்லூரி வளாகத்தில் ஆற்றிய  ஒரு அற்புத சொற்பொழிவு,  உபன்யாசத்தை இன்று அறிவோம்.  அதன் தலைப்பு  ஆதிசங்கரரின்  ''அத்வைதம்''.  அதன்  ஆதாரம்  பிரஸ்தான த்ரயம் எனும்  கீதா பாஷ்யம், உபநிஷத் பாஷ்யம், ப்ரம்ம சூத்ர  பாஷ்யம்.   இதைத் தவிர  ஆதி சங்கரர்  எண்ணற்ற ஸ்தோத் ரங்கள், விவேகசூடாமணி போன்ற வேதாந்த நூல்கள் வேறு நமக்கு அளித்திருக்கிறார்.

ப்ரம்ம ஸூத்ர பாஷ்யம்,  வேத வியாசர் எழுதிய ஸூத்ரங்களுக்கு  ஆதி சங்கரரின் வியாக்யானம்.   அதில் பத்து உபநிஷதங்களில் சொல்லப்பட்ட விஷயங்கள்  அடக்கம்.   ஆதிசங்கரரின் சிஷ்யர் பத்மபாதர்  ஒரு வியாக்யானம் எழுதி, அதற்கு ஒரு வியாக்கியானம் விவரணாச்சார்யார் என்பவர் எழுதியிருக்கிறார்.  உத்தரதேசத்தில் வாசஸ்பதி மிஸ்ரர்   பாமதி என்ற  ஒரு வியாக்கியானம் தந்தார்.  அதற்கு கல்பதரு என்று ஒரு வியாக்கியானம் அமலானந்தர் எழுதினார் . அந்த கல்பதருவுக்கு தான் அப்பைய தீக்ஷிதர்  பரிமளம் என்று   ஒரு வியாக்கியானம் எழுதினார் .
ஸூத்ர பாஷ்யத்துக்கு ராமானந்தர் என்பவர் ரத்னப்ரபை என்ற வியாக்யானமும், ஆதி சங்கரர் சிஷ்யர் ஆனந்தகிரி,  ஆனந்தகிரியம் என்ற வியாக்யானமும் அளித்தார்.  200 வருஷங்களுக்கு முன் த்ர்யம்பக பட்டாச்சாரியார்  பாஷ்யாணுபிரபை என்ற வியாக்யானமும் எழுதினார் .
ஆதிசங்கரர் எழுதிய ''ப்ரம்ம ஸூத்ர பாஷ்யம் '' என்ற ஒரு கிரந்தத்துக்கு எத்தனை எண்ணற்ற வியாக்கியானங்கள்.

பத்து உபநிஷதுகளில்  ப்ரஹதாரண்யக உபநிஷத்துக்கும் தைத்ரீய உபநிஷதுக்கும்    ஆதிசங்கரர் சிஷ்யர்  சுரேஸ்வராச்சார்யர் வார்த்திகம் எனும் பாஷ்யம் எழுதி அவரை வார்த்திக காரர்  என்று அழைத்தார்கள்.

பகவத் கீதைக்கு  ஆதிசங்கரர் எழுதிய வ்யாக்யானத்துக்கு 10க்கு மேல் வியாக்கியானங்கள் உண்டு.  இதெல்லாம் அத்வைத சித்தாந்தம்  சம்பந்தமானவை.  

பிரம்மசூத்ரத்துக்கு ஸ்ரீ மத்வாச்சார்யர்  த்வைத சித்தாந்தமாக  ஒரு பாஷ்யம் எழுதியிருக்கிறார். அதில் அத்வைத சித்தாந்தங்களுக்கு மறுப்பு  தெரிவித்திருக்கிறார்.  இதை ஆதரித்து பத்துக்கு மேல் வியாக்கியானங்கள் உண்டு.  
ஐநூறு வருஷங்களுக்கு முன்பு சைவசித்தாந்தத்தை  மறுத்து  நியாயாம்ருதம் என்று  ஒரு வியாக்கியானம்.  அதை மறுத்து  தரங்கிணி என்ற  அத்வைத சித்தாந்தத்தை மதுசூதன் ஸரஸ்வதி  எழுதினார். அதற்கு மறுப்பாக ப்ரம்மானந்தர் என்பவர் சந்திரிகை என்ற வியாக்கியானம் எழுதினார். அதற்கு  இன்னொருபெயர் கௌடப்ரம்மாநந்தீயம். மறுபடியும் அதை எதிர்த்து த்வைத சித்தாந்தமாக வனமாலாமிஸ்ரீயம் .எழுதப்பட்டது.  அதை எதிர்த்து அத்வைதபரமாக  சித்தாந்த வைஜயந்தி எனும் வியாக்கியானம்.  

ஸ்ரீ  வைஷ்ணவம்  விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை பிரபலப்படுத்த அனந்தாழ்வார் என்பவர்  கௌட ப்ரம்மாநந்தீயத்தை மறுத்து விசிஷ்டாத்வைத தத்வ ரீதியில்   நியாய பாஸ்கரம் என வியாக்கி யானம் எழுதினார்.   இதை  மறுத்து மன்னார்குடி பெரியவா  ராஜு சாஸ்திரிகள்   நியாயேந்து சேகரம் என  ஒரு வியாக்கியானம் எழுதினர்.   இதுபோல் எத்தனையோ வியாக்யானங்கள் எழுந்தன.  எல்லாவற்றையும் அறிந்து கொள்ளவேண்டும்.  இப்படி அபிப்ராய பேதங்கள் ஏற்படுவதை எல்லாம் படித்தால் தான் தெளிவு  ஏற்படும்.  இவ்வளவு புஸ்தகங்கள் இருப்பது யாருக்காவது தெரிகிறதா? வாசிக்கிறோமா?  சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் பேசினாலாவது கேட்கிறோமா?  நமக்கு சம்பந்த மில்லாதவைகள் கட்டு கட்டாக  என்னென்னவோ படிக்கிறோம்.  நமது தேசத்தில் உள்ள  ஆத்ம வித்யையை வெளிநாட்டவர்கள் புகழ்ந்து  வியக்கிறார்கள்.  நாம் அவர்களைப்   புகழ்கிறோம். போற்றுகிறோம்.   நமது நாட்டு கௌரவத்தை நாம் முதலில் அறிந்து வ்ருத்தி பண்ணவேண்டும்.  அது தான் நமது முதல் கடமை.

இவ்வளவு  சொல்கிறேனே அந்த ''அத்வைதம்''  என்னது?அதால் என்ன பிரயோஜனம்?  
அத்வைதம் என்றால் ஒன்றே ஒன்று, ரெண்டாவது எதுவும் இல்லை என்று அர்த்தம்.   ஆயிரக் கணக்கான வஸ்துக்கள் இருக்கிறதே,  ரெண்டாவது எதுவும் இல்லை என்று அறிந்தால் நமது பிரயத்தனம் கைகூடும். நமக்கு வரும் கஷ்டம் நிவர்த்தியாகும்.  எங்கும்  பசி, வியாதி, அவமானம், கோபம்,  தரித்திரம் , மனஸ்தாபம் எல்லாம் இருக்கிறதே. அதிலிருந்து அத்வைதம் நம்மை விடுவிக்கும்.   தற்காலிக நிவாரண  மருந்து போல் இல்லாமல்,   நிரந்தர நிவாரணம் அளிக்கும். 

மேலே சொன்னதெல்லாம் உடம்பு இருக்கிற வரையில் தான். இந்த உடம்பு போனால் இன்னொன்று வருகிறது. மறுபடியும் அதே  அவஸ்தை.  உடம்பே இனி இல்லாமல், பிறப்பே இல்லாமல் செய்துவிட்டால்? நமது பாப  புண்ய பலனாக தான் உடம்பு பிறக்கிறது.'' நான்'' என்று  தேகத்தை தப்பாக நினைக்கச் செயகிறது.  நாம் இனிமேல் பாபம் எதுவும் பண்ணக்கூடாது. பாபத்தால் தான் சரீரம் மறுபடியும் கிடைக்கிறது. பிறந்து அவஸ்தைப்பட்டு தவிக்கிறது  என்று தினமும் நினைத்துக் கொள்ள வேண்டும்.  மரம் பெரிதாக வளர்ந்து இடையூறாக இருந்தால் கிளையை வெட்டி ப்ரயோஜனம் இல்லையென்று அடியோடு வெட்டுவது போல் பாபத்துக்கு காரணமானதை அடியோடு விலக்க வேண்டும். பாபம், கெட்டகாரியம் செய்ய உடம்பு தேவை. பாபம் எதனால்?  ஆசைப் படுவதால்? ப்ரயத்தனத்தால் இச்சையை உண்டாக்கலாம்.  மாற்றலாம்.  ஞானத்தை  உண்டாக்க முடியாது. பாபத்திற்கு காரணமான ஆசையை நிவர்த்தி பண்ணினால்  துக்க நிவர்த்தி.  
 இதற்கு வழி நமது வேதாந்தம் மட்டுமே சொல்கிறது.  நமக்கு அந்நியமான  வஸ்துக்களில் தான் நமக்கு  துவேஷமும் ஆசையும் உண்டாகிறது.  நம் மேல் நமக்கு ஆசையும் துவேஷமும் இல்லை.  ஆகவே  வெளியே உள்ள வேறே வஸ்துக்களை நாமாக பண்ணிவிட்டால்?  ஆசை எங்கிருந்து வரும்? ஆசை இல்லாவிட்டால்  அதை திருப்திப்படுத்த பிரயத்தனம் இல்லை, பிரயத்தனம் இல்லை என்றால்  பாபம் இல்லை. பாபம் இல்லாவிட்டால் தேகம் இல்லை.  தேகம் இல்லையென்றால் துக்கம் இல்லை, துக்கம் இல்லையென்றால் ஆனந்தம் ஒன்று தானே மிச்சம்.

நம்மைவிட வேறு ஒன்று அழகாக இருந்தால் ஆசை.  அது சக்தி உள்ளதாக இருந்தால் அதனிடம் பயம். ரெண்டாவதாக வேறு ஒன்றும் இல்லையென்றால் ஆசையோ,பயமோ, துக்கமோ எதுவுமில்லையே! தேள், பாம்பு, புலி  என்றால் பயம், நாமே அதெல்லாமாக இருந்தால் என்ன பயம். ரெண்டாவது என்று ஏதாவது இருந்தால் தானே  சகல தொந்தரவுகளும்.  இந்த ரெண்டாவதை இல்லாமல் பண்ணுவது தான் அத்வைதம்.

வேதாந்தம்  இந்த உலகத்தில் காண்பவைகள்  நிஜமில்லை, பொய்  என்கிறது. எல்லாமே ஈஸ்வர ஸ்வரூபம், வேறே நாமம் ரூபம் பேதம் இல்லை என்கிறது.  எல்லாமே  ஈஸ்வரன் என்று இருந்தால், நாம் காணும் வேறே வேறே வஸ்துக்கள் எல்லாம் பொய் என்று ஆகிவிடுகிறது அல்லவா? வேறே வேறேயாக காண்பதால் தானே அத்தனை ராக த்வேஷங்கள் உண்டாகிறது,   எல்லாமே ஈஸ்வர ஸ்வரூபம் என்றால் நாமும்  தான் அதில் சேர்க்கை. எல்லாம் ஒன்றே  என்றால்,  மனஸ் வித்யாசப் படாது. சண்டையில்லை , ஆசையில்லை, த்வேஷம் இல்லை. எங்குமே ஆனந்தம்.

அத்வைதத்துக்கு ஆக்ஷேபணை உண்டு, குயுக்தியான வாதம் இருக்கிறது. இருக்கட்டும். 
 ஸாஸ்த்ரங்கள்  அதற்கு சமாதானம் சொல்கிறது.   நாம்  விழிக்கிறோம் தூங்குகிறோம். அது போதுமே. வேலை செய்ய விழிப்பு, வேலை செய்த களைப்பு போக தூக்கம். நடுவில் கனவு எதற்கு?  பகவான்  ஆத்ம ஸ்வரூபம் அத்வைத ப்ரம்மம்.  அவர் இருப்பதை காட்டுவதற்கு தான் ஸ்வப்னம் என்று எனக்கு தோன்றுகிறது.  

பிரபஞ்ச ஸ்வப்னத்திலிருந்து  நாம் விழித்துக்கொண்டால்   கனவில் வந்தது , அதில் இருந்தது எல்லாமே மறைந்து போகிறது. எஞ்சியது இருப்பது கனவு கண்டவன் மட்டும் என்பது  அறிவு, புத்தி மட்டும். அது தான் சத்யம். அத்வைதம்.  வேதாந்தத்தால் அறியப்படுவது. த்வைதம் கண்ணினால் புலன்களால் அறியப்படுவது. சூரியன் எவ்வளவோ யோஜனை தூரத்தில்  அகண்டமாக இருப்பதை சாஸ்திரம் கூறுகிறது.  நமது சிறிய கைகளால் மறைந்து போகிறது. எது நிஜம்.? நம் கை மறைக்கும் சூரியனா?சாஸ்திரம் சொல்கிற  அகண்டஸ்வரூபமா?

மாண்டூக்யோபநிஷத்  ப்ரணவஸ்வரூபத்தை பற்றி சொல்லும்போது அத்வைத ஸ்வரூபம் என்கிறது.
ப்ரஹதாரண்யகஉபநிஷத்:  ''எப்போது எல்லாம் ஆத்மாவாக போய்விட்டதோ அப்போது அத்வைதம், வேறெவேறேயாக காணப்பட்டால் அது த்வைதம்  போல''   நான் அவனைப்  ''போல''  என்று சொன்னால்  நான் அவன் இல்லை என்று தானே அர்த்தம்.   ''ஸர்வம்  ஆத்மைவ'' . எல்லாம் ஒன்றே, ஒரே ஆத்மா தான்.   
 ஏன் ஆத்மா என சொல்வது?  பரமாத்மா என்று சொல்லவேண்டியது தானே ? பரமாத்மா என்றால் வேறே ஏதோ ஒரு அல்பாத்மா  இருக்கிறது என்று உணர்த்தும். ஆத்மா என்றால் ஒன்றே.  த்வைதத்தில் தான் பரமாத்மா, ஜீவாத்மா உண்டு.

நமக்கு பிரியமானவர்கள் இறந்தால், துக்கப்பட்டால், கஷ்டப்பட்டால் நமக்கு துக்கம்.   அவரகள்  நாமாகவே ஆகிவிட்டால் நமக்கு எங்கே எப்படி துக்கம்?  பிரியம், கோபம், ஆத்திரம், பயம் எல்லாம் நம் மீது நாம் கொள்பவை அல்ல. அதற்கு வேறொரு ஆசாமி  வேண்டும், வேறொரு வஸ்து இருக்கவேண்டும்.  ரெண்டாவது அந்நிய வஸ்துவே இல்லையென்றால் எப்படி  துக்கம்,  கோபம், மனஸ்தாபம் கஷ்டம் எல்லாம் வரும்?

நாம் இப்போது ஸ்வப்னாவஸ்தையில் இருக்கிறோம். விழித்துக் கொள்வோம்.
கேனோபநிஷத்:  यन्मनसा न मनुतॆ यॆनाहुर् मनॊ मतम् । yanmanasA na manutE yEnAhur manO matam | 6 |. 
''எனக்கு தெரியும் என்பவனுக்கு தெரியவில்லை என்று அர்த்தம். தெரியாது என்பவனுக்கு தெரிந்தது'' என்று அர்த்தம். எப்படி?   விளக்கு இருப்பதைக்  காட்ட இன்னொரு விளக்கு வேண்டாம். 

சத்யம் நிஜம் என்று ஒன்று இருக்கிறது. அது சர்வமும் ஈஸ்வரனாக இருக்கும்  சர்வேஸ்வரன். வாஸனையால்  வேறுவேறாக காணப்படுகிறது. எல்லாம் ஒன்றாக்கப்படவேண்டும். அது தான் அத்வைதம். அதற்கு உதவுவது ஈஸ்வர  உபாஸனை ''

sivan jaykay

unread,
Sep 17, 2021, 8:04:09 PM9/17/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீமந் நாராயணீயம் --  நங்கநல்லூர் J K  SIVAN  --
54வது தசகம்.

54. காளீயன்  விஷம்.

இன்று எழுதும்  தசகம் காளீயன் எனும்  விஷ நாகம் பற்றியது.  இதை எழுத உட்கார்ந்த போது 
மனதில் ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் உருவம்  தோன்றியது.  நான் சிறுவயதில் பார்த்து பிரமித்த ஒருவர் அவர் . அடேயப்பா,  அவரது குரல் கம்மலாக , ஆனால்  கம்பீர மாக,  ஜன ரஞ்சகமாக இருக்கும்.  ஒவ்வொரு வார்த்தையாக விட்டு விட்டு  ஒரு ஸ்வரத்தோடு  உச்சரித்து, கதை சொல்லும் தோரணை  பிரமாதம். எல்லோரையும் போல் என்னையம்  மயக்கியது . ராமாயண மஹாபாரத இதிகாசங்களை புரிந்து கொள்ளும் வயதில்லை அப்போது என்றாலும் அதில் ஆர்வம் ஜனித்தது. 

அப்பா அண்ணாக்களோடு நடந்து போவேன். கோடம்பாக்கம் சூளைமேடு, ஆற்காட் ரோட்டிலிருந்து ரயில்வே லைனை கடந்து, தெற்கே பசுல்லா ரோடு கடந்து லைன் ஓரமாக சென்றால் கிரிஃபித் ரோடு வரும். அதில் சாரதா வித்யாலயா பெண்கள் உயர்நிலைப் பள்ளி மைதானம் வரும். அங்கு இல்லா விட்டால் உஸ்மான் ரோட்டில் இப்போது தி.நகர் பேருந்து நிலையம் அருகே, சற்று முன்னாடி, சிவ விஷ்ணு ஆலயத்திலோ அவரது உபன்யாசம் நடந்து பலமுறை, பல சாயந்திரங்களில் கேட்டிருக் கிறேன். இரவு ஒன்பதுக்கு முடியும். பசியோடு நடந்து சூளைமேடு திரும்புவேன். அவர் உபன்யாசத்
தில் ராஜாஜி,  வி.வி. கிரி, ராவல் கிருஷ்ணய்யர், GNB,  ஆனந்தவிகடன் தேவன், கல்கி சதாசிவம், எம்.எஸ். எஸ். அம்மா தம்பதியர் எல்லோரையும் அங்கே பார்த்த ஞாபகம் வருகிறது. எல்லோரும் தரையில் தான் உட்காருவோம். ஜமுக்காளம் முழுதும் பரவி இருக்காது. துளி கூட அந்த கோவில் மண்டபத்தில் இடம் கிடைக்காது.அவ்வளவு கும்பல். 

கட்டை குட்டையாக தீக்ஷிதர்,நெற்றியில்  பட்டை பட்டையாக விபூதி,   கழுத்து தெரியாமல் நிறைய  ருத்ராக்ஷமாலைகள் , அப்பளாக் குடுமியோடு இருப்பார். சமஸ்க்ரித ஸ்லோகங்கள் வெள்ளமாக அவர் வாயிலிருந்து புறப்பட்டு எல்லோரையும் ஆனந்த பக்தி சாகரத்தில் மூழ்கடிக்கும். அர்த்தங்களை ஜம்மென்று சொல்வார். காட்சிகளை கண்முன்னே கொண்டு நிறுத்துவார். நேரம்போவதே தெரியாது. 1903ல் தஞ்சாவூரில் சேங்காலிபுரம் கிராமத்தில் பிறந்தவர். அப்பா சுப்ரமணிய தீக்ஷிதரிடம் வேதம் கற்றவர். அக்ஷராப்யாசம் பருத்தியூர் கிருஷ்ண சாஸ்த்ரியிடம். மாமனார் கடலங்குடி நடேச சாஸ்திரிகள். வேதங்கள் சாஸ்திரங்கள் தெரிந்துகொண்டது விஷ்ணுபுரம் சுவாமிநாத சாஸ்திரிகளிடம் .   இவர்தான் பரமாச்சார்யாளுக்கும் குருவாக போதித்தவர்.

தீக்ஷிதரிடம் நான் மயங்கினது நாராயணீயம் உபன்யாசத்தில் தான். கிருஷ்ணனை இளம் வயதில் என் நெஞ்சில் புகுத்திய ஒரு முக்கிய மனிதர் தீக்ஷிதர். இன்றும் கூட தீக்ஷிதரின் நாராயணீய, குருவாயூரப்ப ஸ்லோகங்கள் உலகத்தில் பலராலும் விரும்பிக் கேட்கப்படுகிறதே. அவருக்கென்றே ஒரு தனி குரல், ராகம். காந்தமென கவரும் பக்தி ரசம். நிறைய ஸ்லோகங்கள் இயற்றியிருக்கிறார். அதில் ஒன்று  ''குருவாதபுருஷ பஞ்சரத்னம்.''   பூங்குன்னம் என்ற கிராமத்தில் ஒரு மலையாள பையன். அவனுக்கு விடாமல் தலைவலி. எந்த மருந்தாலும் குணமாகவில்லை. அவன் தாத்தா அவனை குருவாயூருக்கு அழைத்து சென்றார். மூன்று நாள் அங்கே வாசம். பிரார்த்தனை. மேலே சொன்ன ஸ்லோகத்தை விடாமல் பாராயணம் செய்தபின் தலைவலி எங்கே போயிற்று?? தீக்ஷிதரின் மகிஷாசுர மர்த்தினி ஸ்லோகத்தை ''அயிகிரி NANDHINI என்று உரக்க சொல்லிக்கொண்டே தெருவில் ஓடியிருக்கிறேன். பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் 66வயதில் சன்யாசம் பெற்று சித்தியடைந்தார். அவரது அதிஷ்டானம் சின்ன திருப்பதியில் சேலம் பட்டணத்தில் இருக்கிறது. யூட்யூபில் அவர் குரல் எப்போதும் கேட்கலாம். அதைமாதிரி குரல் முன்பும் கேட்டதில்லை, இனியும் கேட்கப்போவதில்லை. அவரது நாராயணீயம் கதையை கொஞ்சம் இத்துடன் இணைத்துள்ள யூ ட்யூபில் கேளுங்கள்     https://youtu.be/6dt1XrwAo8k

காளிங்கன் என்கிற  நாகம்  கருடனை ஒருமுறை துன்புறுத்தியது.  கருடன் ஆக்ரோஷத்தோடு  காளிங்கனை துரத்த, அவன் பிருந்தாவனம் ஓடிவந்துவிட்டான். அங்கே  கருடன் நுழையமுடியாதபடி ஒரு  ரிஷி  சாபம். காளிங்கன் தனது விஷத்தை  அங்கே  காளிந்தி  நதியில் கலந்து பலர் அந்த விஷநீர் பருகி மரணமடைந்தார்கள்.  கிருஷ்ணன்  காளிங்கனை விரட்டிவிட்டு விஷத்தை போக்கி அந்த கோபர்களை உயிர்ப்பித்தான்.  இனி ஸ்லோகங்கள்:

त्वत्सेवोत्कस्सौभरिर्नाम पूर्वं
कालिन्द्यन्तर्द्वादशाब्दम् तपस्यन् ।
मीनव्राते स्नेहवान् भोगलोले
तार्क्ष्यं साक्षादैक्षताग्रे कदाचित् ॥१॥

tvatsevOtkaH saubharirnaama puurvaM
kaalindyantardvaadashaabdaM tapasyan |
miinavraate snehavaan bhOgalOle
taarkshyaM saakshaadaikshataagre kadaachit || 1

த்வத்ஸேவோத்க꞉ ஸௌப⁴ரிர்னாம பூர்வம்
காலிந்த்³யந்தர்த்³வாத³ஶாப்³த³ம் தபஸ்யன் |
மீனவ்ராதே ஸ்னேஹவான்போ⁴க³லோலே
தார்க்ஷ்யம் ஸாக்ஷாதை³க்ஷதாக்³ரே கதா³சித் || 54-1 ||

குருவாயூரப்பா,  உனக்கு ஞாபகம் இருக்கிறதா? சௌபரி என்கிற  ரிஷி உன்னை நினைத்து  தவமிருக்க இந்த காளிந்தி நதியில் 12 வருஷம் நின்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு மீன் சிநேகிதம் ஏற்பட்டது.  அப்போது மேலே  கருடன் வட்டமிட்டுக்கொண்டிருந்தான். 

त्वद्वाहं तं सक्षुधं तृक्षसूनुं
मीनं कञ्चिज्जक्षतं लक्षयन् स: ।
तप्तश्चित्ते शप्तवानत्र चेत्त्वं
जन्तून् भोक्ता जीवितं चापि मोक्ता ॥२॥

tvadvaahaM taM sakshudhaM tR^ikshasuunuM
miinaM ka~nchijjakshataM lakshayan saH |
taptashchitte shaptavaanatra chettvaM
jantuun bhOktaa jiivitaM chaapi mOktaa || 2

த்வத்³வாஹம் தம் ஸக்ஷுத⁴ம் த்ருக்ஷஸூனும்
மீனம் கஞ்சிஜ்ஜக்ஷதம் லக்ஷயன் ஸ꞉ |
தப்தஶ்சித்தே ஶப்தவானத்ர சேத்த்வம்
ஜந்தூன் போ⁴க்தா ஜீவிதம் சாபி மோக்தா || 54-2 ||

 கருடன் அருகே வந்தான். அவன் கண்ணில் பசி  தெரிந்தது.ரிஷியின் சினேகிதி  மீனைக்  கண்டதும் நாக்கில் நீர் சுரந்தது.  மீனைக்காலி செய்தவன் எல்லாமீன்களையும் ஒன்றுவிடாமல்  தின்பதற்கு துடித்தான்.   ரிஷிக்கு ரொம்ப வருத்தம்.   ''அடே  கருடா, இனிமேல் இந்த காளிந்தி நதிப்பக்கம்  வந்து  எந்த மீனையாவது தொட்டால்  அது தான் உனது கடைசி சாப்பாடு. அடுத்த கணமே உனக்கு மரணம். இது நிச்சயம்.  ஓடு, எங்காவது போய் தப்பித்துக் கொள்'' என்று சாபமிட்டார். 

तस्मिन् काले कालिय: क्ष्वेलदर्पात्
सर्पाराते: कल्पितं भागमश्नन् ।
तेन क्रोधात्त्वत्पदाम्भोजभाजा
पक्षक्षिप्तस्तद्दुरापं पयोऽगात् ॥३॥

tasmin kaale kaaliyaH kshveladarpaat
sarpaaraateH kalpitaM bhaagamashnan |
tena krOdhaat tvatpadaambhOjabhaajaa
pakshakshiptaH tadduraapaM payO(a)gaat || 3

தஸ்மின்காலே காலிய꞉ க்ஷ்வேலத³ர்பாத்
ஸர்பாராதே꞉ கல்பிதம் பா⁴க³மஶ்னந் |
தேன க்ரோதா⁴த்த்வத்பதா³ம்போ⁴ஜபா⁴ஜா
பக்ஷக்ஷிப்தஸ்தத்³து³ராபம் பயோ(அ)கா³த் || 54-3 ||

அப்போது தான்  இந்த காளிங்கன் எனும் நாகம் அங்கே வந்தான். தனது விஷத்தால் நீரை விஷமாக்கி  கருடன் எந்த மீனையும்  திங்க  முடியாமல் செய்துவிட்டான்.  உனது சேவகன் சிறந்த பக்தன் கருடனுக்கு  காளிங்கன் மேல் கோபம் வந்தது.  இறக்கையை விரித்துக்கொண்டு காளிங்கனை கொல்ல  வந்தபோது  காளிங்கன் விஷநீரின் அடிக்கு சென்று பதுங்கி கொண்டான். கருடனால் காளிந்தி நதி நீரை தொடக்கூட முடியாது. ரிஷி சாபம் நினைவுக்கு வந்தது.

घोरे तस्मिन् सूरजानीरवासे
तीरे वृक्षा विक्षता: क्ष्वेलवेगात् ।
पक्षिव्राता: पेतुरभ्रे पतन्त:
कारुण्यार्द्रं त्वन्मनस्तेन जातम् ॥४॥

ghOre tasmin suurajaaniiravaase
tiire vR^ikshaa vikshataaH kshvelavegaat |
pakshivraataaH peturabhre patantaH
kaaruNyaardraM tvanmanastena jaatam ||4

கோ⁴ரே தஸ்மின்ஸூரஜானீரவாஸே
தீரே வ்ருக்ஷா விக்ஷதா꞉ க்ஷ்வேலவேகா³த் |
பக்ஷிவ்ராதா꞉ பேதுரப்⁴ரே பதந்த꞉
காருண்யார்த்³ரம் த்வன்மனஸ்தேன ஜாதம் || 54-4 ||

காளிங்கனின்  தொந்தரவு தாங்கமுடியவில்லை.  அவனது கொடிய விஷத்தால், கரையில் இருந்த மரங்கள்  செடிகொடிகள் எல்லாம் பட்டுப்போயின. மேலே  அந்த விஷநீர்  காற்றை சுவாசித்த பறவைகள் செத்து விழுந்தன.  கிருஷ்ணா  நீ பிருந்தாவனத்தில் இருந்தபோது இந்த விஷயம் உன் காதில் விழுந்து  நீ  அந்த உயிர்களுக்காக கருணை கொண்டாய்.  

काले तस्मिन्नेकदा सीरपाणिं
मुक्त्वा याते यामुनं काननान्तम् ।
त्वय्युद्दामग्रीष्मभीष्मोष्मतप्ता
गोगोपाला व्यापिबन् क्ष्वेलतोयम् ॥५॥

kaale tasminnekadaa siirapaaNiM
muktvaayaate yaamunaM kaananaantam |
tvayyuddaama griiShma bhiiShmOShmataptaa
gO gOpaalaa vyaapiban kshvelatOyam || 5

காலே தஸ்மின்னேகதா³ ஸீரபாணிம்
முக்த்வா யாதே யாமுனம் கானநாந்தம் |
த்வய்யுத்³தா³மக்³ரீஷ்மபீ⁴ஷ்மோஷ்மதப்தா
கோ³கோ³பாலா வ்யாபிப³ன் க்ஷ்வேலதோயம் || 54-5 ||

இப்படிப்பட்ட சமயத்தில் தான் வாதபுரீஸ்வரா, நீ ஒருநாள் கிருஷ்ணன் எனும் கோபனாக  பசுக்களை மேய்த்துக்கொண்டு  பலராமனுடனும் நண்பர்களோடும்   காட்டின் அடர்ந்த பகுதிகளில் திறிந்தாய். வெயில் சுட்டெரித்தது.  கன்றுக்குட்டிகள், பசுக்கள்  நண்பர்கள் எல்லோருக்குமே  தாகம்.   குடிக்க நீர் தேடினார்கள்.  காளிந்தி நதி நீரை வயிறு முட்ட குடித்துவிட்டார்கள். 

नश्यज्जीवान् विच्युतान् क्ष्मातले तान्
विश्वान् पश्यन्नच्युत त्वं दयार्द्र: ।
प्राप्योपान्तं जीवयामासिथ द्राक्
पीयूषाम्भोवर्षिभि: श्रीकटक्षै: ॥६॥

nashyajjiivaan vichyutaan kshmaatale taan
vishvaan pashyannachyuta tvaM dayaardraH |
praapyOpaantaM jiivayaamaasitha draak
piiyuuShaambhO varShibhiH shriikaTaakshaiH || 6

நஶ்யஜ்ஜீவான் விச்யுதான் க்ஷ்மாதலே தான்
விஶ்வான் பஶ்யன்னச்யுத த்வம் த³யார்த்³ர꞉ |
ப்ராப்யோபாந்தம் ஜீவயாமாஸித² த்³ராக்
பீயூஷாம்போ⁴வர்ஷிபி⁴꞉ ஶ்ரீகடாக்ஷை꞉ || 54-6 ||

ஆஹா  இது என்ன விபரீதம்,  நண்பர்கள், பசுக்கள் கன்றுகள் எல்லாமே ஒன்று விடாமல் கரையில் இறந்து விழுந்து கிடக்க  என்ன ஆபத்து  நேர்ந்தது இங்கு?  அச்சுதா, இரக்கம் நிறைந்த உன்  மனம் கலங்கி நின்றாய் நீ.   உன் கருணைப்பார்வையை அவர்கள்மேல் செலுத்திய அடுத்த கணமே  அனைத்தும், அனைவரும் உயிர் பெற்ற அதிசயம் நிகழ்ந்தது.

किं किं जातो हर्षवर्षातिरेक:
सर्वाङ्गेष्वित्युत्थिता गोपसङ्घा: ।
दृष्ट्वाऽग्रे त्वां त्वत्कृतं तद्विदन्त-
स्त्वामालिङ्गन् दृष्टनानाप्रभावा: ॥७॥

kiM kiM jaatO harShavarShaatirekaH
sarvaangeShvityutthitaa gOpasanghaaH |
dR^iShTvaagre tvaaM tvatkR^itaM tadvidantaH
tvaamaalingan dR^iShTanaanaa prabhaavaaH || 7

கிம் கிம் ஜாதோ ஹர்ஷவர்ஷாதிரேக꞉
ஸர்வாங்கே³ஷ்வித்யுத்தி²தா கோ³பஸங்கா⁴꞉ |
த்³ருஷ்ட்வா(அ)க்³ரே த்வாம் த்வத்க்ருதம் தத்³வித³ந்த-
ஸ்த்வாமாலிங்க³ன் த்³ருஷ்டனானாப்ரபா⁴வா꞉ || 54-7 ||

 புத்துயிர்   பெற்ற  கோபர்கள், பசுக்கள் கன்றுகள் எல்லாமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.  என்ன நடந்தது நமக்கு ?  எப்படி நமது மனதில் இத்தனை சந்தோஷம்.?நமது தேஹமே  ஆனந்தத்தில் பற க்கிறதே!  உன் எதிரே  எழுந்து நின்றார்கள். நீர் குடித்து மயங்கி கண் இருந்து விஷத்தால் மாண்டது அரைகுறையாக நினைவுக்கு வந்தது. இதற்கு முன் நீ நிகழ்த்திய  அதிசயங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவில் நின்றது.   இப்போது அவர்கள் அனைவரும் பசுக்களோடு உயிர்பிழைத்தது உன்னால் தான் என்பது அறிந்தார்கள்.  உன்னை  அன்போடு பாசத்தோடு, நன்றியோடு இறுகக்கட்டி அணைத்தார்கள்.

गावश्चैवं लब्धजीवा: क्षणेन
स्फीतानन्दास्त्वां च दृष्ट्वा पुरस्तात् ।
द्रागावव्रु: सर्वतो हर्षबाष्पं
व्यामुञ्चन्त्यो मन्दमुद्यन्निनादा: ॥८॥

gaavashchaivaM labdhajiivaaH kshaNena
sphiitaanandaastvaaM cha dR^iShTvaa purastaat |
draagaavavruH sarvatO harShabaaShpaM
vyaamu~nchantyO mandamudyanninaadaaH || 8

கா³வஶ்சைவம் லப்³த⁴ஜீவா꞉ க்ஷணேன
ஸ்பீ²தானந்தா³ஸ்த்வாம் ச த்³ருஷ்ட்வா புரஸ்தாத் |
த்³ராகா³வவ்ரு꞉ ஸர்வதோ ஹர்ஷபா³ஷ்பம்
வ்யாமுஞ்சந்த்யோ மந்த³முத்³யன்னினாதா³꞉ || 54-8 ||

வாய் பேசாத பசுக்களுக்கும் நன்றி உணர்ச்சி உண்டே.  அவற்றின் கண்களில்  நண்றிக கண்ணீர் பெருகியது. உன்னிடம் அருகே வந்து முகர்ந்தன, நக்கின,  மெல்லிதாக  முனகின .உன்னைச் சுற்றி சுற்றி பிரதக்ஷணம் செய்தன.  ''அம்மா''  என்ற அவற்றின்  குரலில்  நீ தான்  இந்த உலகத்துக்கே  அம்மா என்பது  ரொம்ப ரொம்ப  அர்த்தபாவத்தோடு ஒலித்தது. 

रोमाञ्चोऽयं सर्वतो न: शरीरे
भूयस्यन्त: काचिदानन्दमूर्छा ।
आश्चर्योऽयं क्ष्वेलवेगो मुकुन्दे-
त्युक्तो गोपैर्नन्दितो वन्दितोऽभू: ॥९॥

rOmaa~nchO(a)yaM sarvatO naH shariire
bhuuyasyantaH kaachidaanandamuurchChaa |
aashcharyO(a)yaM kshvelavegO mukundetyuktO
gOpaiH nanditO vanditO(a)bhuuH || 9

ரோமாஞ்சோ(அ)யம் ஸர்வதோ ந꞉ ஶரீரே
பூ⁴யஸ்யந்த꞉ காசிதா³னந்த³மூர்சா² |
ஆஶ்சர்யோ(அ)யம் க்ஷ்வேலவேகோ³ முகுந்தே³-
த்யுக்தோ கோ³பைர்னந்தி³தோ வந்தி³தோ(அ)பூ⁴꞉ || 54-9 ||

உன்  சக கோப தோழர்கள் கிருஷ்ணா, உன்னை ஆலிங்கனம் செய்து முத்தமிட்டார்கள். மனமார நண்றியோடு வணங்கினார்கள். ''முகுந்தா,  நீ  என்ன மாயம் செய்தாயோ? எங்கள்  உடலில் எதை  பாய்ச்சினாயோ, அந்த ''விஷத்தின்'' சக்தி எங்களை புளகாங்கிதம் கொள்ள செய்கிறதப்பா. உடலெங்கும் மயிர்க்கூச்செறிகிறது. ஆனந்தம்  பீரிட்டு வருகிறது''.

एवं भक्तान् मुक्तजीवानपि त्वं
मुग्धापाङ्गैरस्तरोगांस्तनोषि ।
तादृग्भूतस्फीतकारुण्यभूमा
रोगात् पाया वायुगेहाधिवास ॥१०॥

evaM bhaktaanmuktajiivaanapi tvaM
mugdhaapaangaiH astarOgaamstanOShi |
taadR^igbhuuta sphiita kaaruNya bhuumaa
rOgaatpaayaa vaayugehaadhinaatha ||10

ஏவம் ப⁴க்தான்முக்தஜீவானபி த்வம்
முக்³தா⁴பாங்கைரஸ்தரோகா³ம்ஸ்தனோஷி |
தாத்³ருக்³பூ⁴தஸ்பீ²தகாருண்யபூ⁴மா
ரோகா³த்பாயா வாயுகே³ஹாதி⁴னாத² || 54-10

எண்டே குருவாயூரப்பா,  உன் பக்தர்கள்  மரித்தாலும் , உன் கடைக்கண் பார்வையால் புத்துயிர் தந்து  அவர்களை உயிர்ப்பிக்கிறவன். இவ்வளவு கருணை கொண்ட தெய்வத்தை எங்கே   காணமுடியும்? என் நோயையும் அவ்வாறே போக்கி ரக்ஷிப்பாய்.

sivan jaykay

unread,
Sep 17, 2021, 8:20:39 PM9/17/21
to amrith...@googlegroups.com


ஒரு  ஈர்ப்பு எழுத்தாளர்  பற்றி .  -   நங்கநல்லூர் J K SIVAN 
முனைவர்  திருமதி வசந்தி மெய்யப்பன்.  

நமது முகநூல் அன்பர்,   முனைவர், திருமதி வசந்தி மெய்யப்பன், மெய்யாலுமே, ஒரு அற்புத கவிஞர் தான். எனக்கு ரெண்டு புஸ்தகங்கள் அனுப்பி இருந்தார். ரெண்டும் ரெண்டு கண்கள் தான் . ஹிந்துக்களுக்கு  சைவமும் வைணவமும் இரு கண்களல்லவா?  

ஒரு கண்ணில் நான் கண்ணப்பனை பற்றி எழுதியிருந்ததை மிகவும் ரசித்தேன். அதில் கொஞ்சம் கீழே கொடுக்கிறேன் நீங்களும் ருசியுங்கள்:

பொன்முகலி  நீரதனை  பொன்வாயில் முகந்து
பொன்மலர்  பறித்ததனை தன்குடுமியில்  செருகி 
பக்குவமாய்  இறைச்சிதனை   தேக்கிலையில் ஏந்தி 
பக்தியுடன் அணுகிட்டான் பரமனருள் பெறவே.

இதற்கு அர்த்தமே சொல்லவேண்டாம். என்னைப்போல்  தமிழே சரியாக தெரியாத ஆசாமிகளுக்கும் இது ஒரு விருந்து.  கண்ணப்ப நாயனார் காளஹஸ்தி மலைமேல் தனியாக  பசியோடு இருக்கும் சிவனுக்கு எப்படி  அர்ச்சனை, அபிஷேகம், நைவேத்தியம் எல்லாம் எப்படி கொண்டுவந்து கொடுக்கிறார் பாருங்கள்.

''பூசித்த  மலர்களை செருப்புக்காலால்  தள்ளி 
மூடிய  வாய்நீரால்  அபிஷேகம் செய்து
சூட்டிய பூக்களால்  அலங்காரம் பண்ணி 
படைத்த இறைச்சியை வேண்டினான் உண்ண '' 

உச்ச கட்ட பக்தியில் கண்ணப்பநாயனார் உபச்சாரம் செய்து நைவேத்தியம் படைக்கும் காட்சி கண் முன்னே கொண்டுவந்துவிடுகிறார்  வசந்தி.

மறுநாள் வழக்கம்போல்  பூஜை செய்யவந்த சிவகோசரியார் எனும் அர்ச்சகர் அதிர்ச்சியில் நடுங்குகிறார். யார்  சிவனருகே இங்கே  பன்றி இறைச்சியை கொண்டு போட்ட மஹா பாவி  என்று சாபமிடுகிறார்'' .காளத்தீசன்  ''சிவகோசரி,  நாளைக்கு இங்கே வந்து நின்று மறைந்து என்ன நடக்கிறது என்று நீயே பார். இது எனக்கு செய்த அவமதிப்பு அல்ல. அற்புத மனத்தோடு அன்பன் தந்த உண்மையான பக்தி சமர்ப்பணம்'' என்று சொன்னதால் மறுநாள் காலையிலேயே வந்து  சிவன் பின்னால்  ஒளிந்து நின்று கண்ணப்பன் வருவதை கவனிக்கிறார்.   ஈசனின் திருவிளையாடல் தொடர்கிறது. கண்ணப்பனின் பக்தி வெளிப்படுகிறது.

மறுநாள்  மறைந்திருந்து மறையவன் பார்த்திருக்க 
மகேசன் திருவிளையாடல் மகிழ்வுடன் தொடங்கினார் 
தம் வலக்கண்ணில் குருதி வர வழியும் செய்த்திட்டார் 
துடிதுடித்த திண்ணன் பல பச்சிலையால் பிழிந்திட்டார்.

பின்னும் குருதி பொங்க  திகைத்தட்ட வேடன் அழ 
''ஊனுக்கு ஊன் இடல் '' முறைதனை எண்ணிட்டான் 
தயங்காது தன்கண்ணை அம்பாலே  தோண்டிட்டான் 
தீராத  பேரன்பால்  ஈசனுக்கு அப்பிட்டான் ''

புரிகிறது அல்லவா அர்த்தம்? எவ்வளவு எளிமையான எழுத்து. நறுக்கு தெறித்தாற்போல் காட்சி வெளிப்பாடு.
இது போல்  வலது கண்ணிலும் ரத்தம் போங்க, தனது  இன்னொரு கண்ணையும்  நோண்டி  இறைவனுக்கு   அப்ப துவங்கும்போது  நிறுத்து என்று காளத்தீசன்  தடுத்து கண்ணப்பனை ஆட்கொள்கிறான்.

மேலே சொன்னது 16வது கவிதை.  இது போல் 63 நாயன்மார்கள் சரித்திரமும் எளிமையாக சுகமாக படிக்கும்படி எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தின் பெயர்    ''சிவநேச செல்வர்கள் ''  நிறைய படித்தவர்கள் பண்டிதர்கள் எல்லாம் வாழ்த்துரை, அணிந்துரைகள்  எழுதியுள்ளார்கள். நான் ஒரு வாசகன் என்ற முறையில் அற்புதமான இந்தப்புத்தகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். 
80  தலைப்புகள்  160 பக்கங்களில், இரத்தின சுருக்கம் என்பார்களே அது இது தான். எல்லா நாயன்மார்களும் சைவ சமய குறவர்கள் நால்வரும்  கவிதையில் சுருங்கி   பரிமளிக்கிறார்கள். எல்லார் பற்றியும் எழுத ஆசை, நேரம் போதவில்லை.  ஒரு மாதத்துக்கு முன்பு எனக்கு அனுப்பிய இந்த புத்தகத்தை சமீபத்தில் தான் படிக்க நேர்ந்தது. இன்னொரு அற்புத நூல், மற்றொரு கண் என்றேன் அது ஸ்ரீவைஷ்ணவ பன்னிரு ஆழ்வார்கள் பற்றி. அதை படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு கட்டுரை எழுத ஆசை. அடுத்த பதிவில்.

இந்த ராசியான எழுத்தாளர் , கவிஞர், முனைவர்  திருமதி வசந்தி மெய்யப்பனை  ராசிபுரத்தில் வாட்ஸாப்ப்  நம்பர்  9486121029ல்  தொடர்பு கொள்ளலாம். புத்தகங்கள் பெறலாம்.  அவர் நூல்கள்(மேலே சொன்னவை உட்பட)  வாசகன் பதிப்பக வெளியீடுகள். 

 
 

sivan jaykay

unread,
Sep 17, 2021, 8:20:50 PM9/17/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீமந்  நாராயணீயம் -  நங்கநல்லூர்  J K  SIVAN  --
55வது தசகம்


55. காலிலே சலங்கை கொஞ்ச, கைவளை குலுங்க...

காளிங்கன்  காளிந்தி நதியில்  பதுங்கி இருந்த இடம்  கருப்பாக  ஆழமான மடு  என்று சொல்லப்பட்ட இடம்.   நண்பர்கள் பசுக்களை  உயிர்ப்பித்த   கிருஷ்ணன்   இடையில்  பீதாம்பர வஸ்திரத்தை வரிந்து கட்டிக்கொண்டு   கரையோரமாக தாழ்ந்து இருந்த ஒரு வயதான  கதம்ப  மரத்தின் மேல் ஏறி  தன் தோள்களைத் தட்டிக் கொண்டு, அந்த விஷ மடுவில் குதித்தான்.  அவனுடைய  பலமான கைகளால் தண்ணீரை அடித்து நீந்திய சப்தம் எங்கும் கேட்டது. அது மடுவில் தூங்கிக் கொண்டிருந்த அந்தக் காளிங்கனை எழுப்பியது.   யார்  தனது எல்லைக்குள் வந்தது என்று பார்த்த  காளிங்கன் ஒரு அழகிய  சிறுவன்  சிரித்த முகமும் மஞ்சள் ஆடையும்  அணிந்து பயமின்றித் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்ததைப்  பார்த்தான் . நூறு தலைகள் கொண்ட அவன் படமெடுத்து மேலே வந்தபோது  கரையிலிருந்த கோப சிறுவர்கள் பயந்துபோனார்கள். சிலர்  
வீட்டுக்கு ஒடினார்கள். சிலர்  யசோதையிடம் விஷயம் சொல்ல ஓடினார்கள். கூட்டம் திரண்டது.  மடுவில் காளிங்கன் கிருஷ்ணனைச் சுற்றி வளைத்துக் கொண்டிருப்பதையும், அவன் அசைவற்று இருப்பதையும் பார்த்தார்கள். பூனை எலியோடு விளையாடுவது போல கிருஷ்ணன்  அந்த கொடிய நாகம் தன்னைச் சுற்றி  வளைக்க விட்டான். அது  கிருஷ்ணனை அமுக்கிக் கொல்லப் பார்த்தது. உடனே கிருஷ்ணன்  உடலைப் பெரிதாக்கிக் கொள்ளவே, கிருஷ்ணனை  அதன் சுற்றி வளைக்க  இயலவில்லை. காளிங்கன் ஆத்திரத்தில்  படம் எடுத்துப்  புஸ்  என்று சீறினான்.  நாசித்துவாரங்களில்  விஷம் கக்கினான்.  நச்சுப்பற்களால் கடிக்க முயன்றான்.  கிருஷ்ணன் காளிங்கனிடமிருந்து எளிதில் விலகி  நீந்தினான். மடுவில் எல்லா இடங்களிலும்  தெரிந்தான்.  படமெடுத்து  காளிங்கன் கிருஷ்ணனைத் துரத்த ,  கிருஷ்ணன்  காளிங்கன் மீது பாய்ந்தான்.  கடிக்க முயன்ற காளிங்கன்  தலைகளை அழுத்திப் பிடித்து அவற்றின் மேல் ஏறினார். காளிங்கன் சிரத்தில் இருந்த  மாணிக்கங்கள்   கிருஷ்ணன் பாதங்களின்  ஒளியால்  மின்னின.  கிருஷ்ணனோ ஆனந்தமாக  காளிங்கன் தலைகள் மீது நடனமாடினான்.  கிருஷ்ணனை கீழே தள்ள அவனால்  முடியவில்லை.  கிருஷ்ணனின் பாதங்கள் அழுத்தியதால்  தாங்கமுடியாத வலியில்  காளிங்கன் துடித்தான்.  

இனி ஸ்லோகங்களுக்குள் போவோம்; 

अथ वारिणि घोरतरं फणिनं
प्रतिवारयितुं कृतधीर्भगवन् ।
द्रुतमारिथ तीरगनीपतरुं
विषमारुतशोषितपर्णचयम् ॥१॥

atha vaariNi ghOrataraM phaNinaM
prativaarayituM kR^itadhiirbhagavan |
drutamaaritha tiiraga niipataruM
viShamaarutashOShita parNachayam ||1

அத² வாரிணி கோ⁴ரதரம் ப²ணினம்
ப்ரதிவாரயிதும் க்ருததீ⁴ர்ப⁴க³வன் |
த்³ருதமாரித² தீரக³னீபதரும்
விஷமாருதஶோஷிதபர்ணசயம் || 55-1 ||

குருவாயூரப்பா,காளிங்கன் விஷத்தால் மாண்டவர்களுக்கு  புத்துயிர் அளித்த நீ   காளிங்கனை தண்டிக்க முடிவெடுத்தாய்.  காளிந்தி  நதிக்கரையில்   தாழ்ந்திருந்த கதம்ப மரத்த்தில் ஏறினாய்.  நீரை நெருங்கி இருந்த  கிளைக்கு தாவினாய் . அதன்  இலைகள் எல்லாம்  காளிங்கன் விஷகாற்றால் பட்டுப்போய்  உதிர்ந்து  வாடி வதங்கி இருந்தன. 

अधिरुह्य पदाम्बुरुहेण च तं
नवपल्लवतुल्यमनोज्ञरुचा ।
ह्रदवारिणि दूरतरं न्यपत:
परिघूर्णितघोरतरङ्ग्गणे ॥२॥

adhiruhya padaamburuheNa cha taM na
vapallava tulya manOj~naruchaa |
hradavaariNi duurataraM nyapataH
parighuurNita ghOratarangagaNe || 2

அதி⁴ருஹ்ய பதா³ம்பு³ருஹேண ச தம்
நவபல்லவதுல்யமனோஜ்ஞருசா |
ஹ்ரத³வாரிணி தூ³ரதரம் ந்யபத꞉
பரிகூ⁴ர்ணிதகோ⁴ரதரங்க³க³ணே || 55-2 ||

அங்கிருந்து  ஆழமான  மடுவில்  குதித்தாய்.  நீந்தியவாறு  அடியில் சென்று  மூழ்கினாய்.

भुवनत्रयभारभृतो भवतो
गुरुभारविकम्पिविजृम्भिजला ।
परिमज्जयति स्म धनुश्शतकं
तटिनी झटिति स्फुटघोषवती ॥३॥

bhuvanatraya bhaara bhR^itO bhavatO
gurubhaaravikampi vijR^imbhijalaa |
parimajjayati sma dhanushshatakaM
taTinii jhaTiti sphuTaghOShavatii || 3

பு⁴வனத்ரயபா⁴ரப்⁴ருதோ ப⁴வதோ
கு³ருபா⁴ரவிகம்பிவிஜ்ரும்பி⁴ஜலா |
பரிமஜ்ஜயதி ஸ்ம த⁴னு꞉ஶதகம்
தடினீ ஜ²டிதி ஸ்பு²டகோ⁴ஷவதீ || 55-3 ||

மூவுலகும் தாங்கும் உனது உடல் பலத்தால்  காளிந்தியில் நீர் கொந்தளித்தது. வானுக்கும் பூமிக்கும்  அலைபோல்  எகிறியது.  ஓ வென்ற சப்தம் எங்கும் எதிரொலித்தது. 

अथ दिक्षु विदिक्षु परिक्षुभित-
भ्रमितोदरवारिनिनादभरै: ।
उदकादुदगादुरगाधिपति-
स्त्वदुपान्तमशान्तरुषाऽन्धमना: ॥४॥

atha dikshuvidikshu parikshubhita
bhramitOdara vaari ninaadabharaiH |
udakaadudagaaduragaadhipati-
stvadupaantamashaantaruShaa(a)ndhamanaaH || 4

அத² தி³க்ஷு விதி³க்ஷு பரிக்ஷுபி⁴த-
ப்⁴ரமிதோத³ரவாரினினாத³ப⁴ரை꞉ |
உத³காது³த³கா³து³ரகா³தி⁴பதி-
ஸ்த்வது³பாந்தமஶாந்தருஷாந்த⁴மனா꞉ || 55-4 ||

யார் எனது எல்லைக்குள் நுழைந்தது. என்ன இந்த சப்தம் என்று கோபத்தோடு  காளிங்கன் மதுவின் அடியிலிருந்து மேலே  தலை நீட்டினான். உன்னைக் கண்டதும் அவன்  கோபம் உன் மேல் பாய்ந்தது. வேகமாக உன்னை நெருங்கினான். 

फणशृङ्गसहस्रविनिस्सृमर-
ज्वलदग्निकणोग्रविषाम्बुधरम् ।
पुरत: फणिनं समलोकयथा
बहुशृङ्गिणमञ्जनशैलमिव ॥५॥

phaNashR^ingasahasravinissR^imara
jvaladagnikaNOgraviShaambudharam |
purataH phaNinaM samalOkayathaa
bahushR^ingiNamanjana shailamiva || 5

ப²ணஶ்ருங்க³ஸஹஸ்ரவினிஸ்ஸ்ருமர-
ஜ்வலத³க்³னிகணோக்³ரவிஷாம்பு³த⁴ரம் |
புரத꞉ ப²ணினம் ஸமலோகயதா²
ப³ஹுஶ்ருங்கி³ணமஞ்ஜனஶைலமிவ || 55-5 ||

காளிங்கனை எதிரில் பார்த்த கிருஷ்ணா, நீ  அவன்  விஷம் கக்குவதை கவனித்தாய். எண்ணற்ற தலைகள் கொண்ட  காளிங்கன் அத்தனை  சிரங்களிலும் படமெடுத்தான் . பார்ப்பதற்கு பெரிய அஞ்சன மலை முகடுகள் போல்  அவை தெரிந்தன. 

ज्वलदक्षि परिक्षरदुग्रविष-
श्वसनोष्मभर: स महाभुजग: ।
परिदश्य भवन्तमनन्तबलं
समवेष्टयदस्फुटचेष्टमहो ॥६॥

jvaladakshi parikshara dugraviSha
H shvasanOShmabharaH sa mahaabhujagaH |
paridashya bhavantamanantabalaM
samaveShTayadasphuTacheShTamahO6

ஜ்வலத³க்ஷிபரிக்ஷரது³க்³ரவிஷ-
ஶ்வஸனோஷ்மப⁴ர꞉ ஸ மஹாபு⁴ஜக³꞉ |
பரித³ஶ்ய ப⁴வந்தமனந்தப³லம்
ஸமவேஷ்டயத³ஸ்பு²டசேஷ்டமஹோ || 55-6 || [** பரிவேஷ்டய **]

கிருஷ்ணா,   காளிங்கன் கோபம் உண்மையிலேயே அவன் தலைகளின் உச்சிக்கு சென்றுவிட்டது.   நெருப்போடு விஷமும் சேர்ந்தது போல்  எங்கும் விஷம் கக்கினான். கண்கள் நெருப்புத் துண்டங்கள் போல் சிவந்தது. உன்னை கடித்தான். உன்னை அவை  என்ன செய்யும்?  காளிங்கன் உன்னை பலமாக சுற்றிக்கொண்டான்.  இனி  நீ நகரமுடியாது என்று எண்ணம் அவனுக்கு. நீயோ புன்னகை மன்னனாக காட்சிஅளித்தாய்.  

अविलोक्य भवन्तमथाकुलिते
तटगामिनि बालकधेनुगणे ।
व्रजगेहतलेऽप्यनिमित्तशतं
समुदीक्ष्य गता यमुनां पशुपा: ।।७॥

avilOkya bhavantamathaakulite
taTagaamini baalakadhenugaNe |
vrajagehatale(a)pyanimittashataM
samudiikshya gataa yamunaaM pashupaaH || 7

அவிலோக்ய ப⁴வந்தமதா²குலிதே
தடகா³மினி பா³லகதே⁴னுக³ணே |
வ்ரஜகே³ஹதலே(அ)ப்யனிமித்தஶதம்
ஸமுதீ³க்ஷ்ய க³தா யமுனாம் பஶுபா꞉ || 55-7 ||

 நீரில் குதித்த உன்னைக் காணாமல்  கரையில் கோபர்கள் உன் நண்பர்கள்  வாடி வருந்தினார்கள். பயம் ஆட்கொண்டது.  சிலர்  வீடுகளுக்கும் மற்றவர்களுக்கும் விஷயம் சொல்ல ஓடினார்கள்.  எங்கும் துர்  சகுனம் கண்டார்கள்.  பேராபத்தில் உயிர் தப்பமுடியாது உன்னால் என்று கலங்கினார்கள்.  பிருந்தாவனத்தில் அனைவரும்  காளிந்தி நதிக்கரைக்கு  ஓடி வந்தாயிற்று. 

 अखिलेषु विभो भवदीय दशा-
मवलोक्य जिहासुषु जीवभरम् ।
फणिबन्धनमाशु विमुच्य जवा-
दुदगम्यत हासजुषा भवता ॥८॥

akhileShu vibhO bhavadiiyadashaa
M avalOkya jihaasuShu jiivabharam |
phaNibandhanamaashu vimuchya javaat
udagamyata haasajuShaa bhavataa || 8

அகி²லேஷு விபோ⁴ ப⁴வதீ³ய த³ஶா-
மவலோக்ய ஜிஹாஸுஷு ஜீவப⁴ரம் |
ப²ணிப³ந்த⁴னமாஶு விமுச்ய ஜவா-
து³த³க³ம்யத ஹாஸஜுஷா ப⁴வதா || 55-8 ||

குருவாயூரப்பா, நீ  காளிங்கனோடு போக்குகாட்டிக்கொண்டு விளையாடுவதை அறியாத  அவர்கள் துடித்தனர்.  உன்னை காப்பாற்ற பிரார்த்தனை செய்தார்கள்.  தங்கள் உயிரையே உனக்காக விட தயாரானார்கள்.  எப்படியாவது உன்னை காளிங்கன் பிடியிலிருந்து மீட்க  வேண்டினார்கள். 
நீ  சிரித்துக்கொண்டு நீர் பரப்பின் மேல் வந்தாய். 

अधिरुह्य तत: फणिराजफणान्
ननृते भवता मृदुपादरुचा ।
कलशिञ्जितनूपुरमञ्जुमिल-
त्करकङ्कणसङ्कुलसङ्क्वणितम् ॥९॥

adhiruhya tataH phaNiraajaphaNaan
nanR^ite bhavataa mR^idupaadaruchaa |
kalashi~njita nuupura manjumila
t karakankaNa sankula sankvaNitam || 9

அதி⁴ருஹ்ய தத꞉ ப²ணிராஜப²ணான்
நன்ருதே ப⁴வதா ம்ருது³பாத³ருசா |
கலஶிஞ்சிதனூபுரமஞ்சுமில-
த்கரகங்கணஸங்குலஸங்க்வணிதம் || 55-9 ||

சர்வ லகுவுடன் தாவி  காளிங்கன் சிரத்தில் ஏறி நின்றுகொண்டாய்.  அவன் படம்  உனக்கு பீடமாயிற்று.  உன் கமல பாதங்கள் அவன் சிரத்தின் மேல்  ஒளி வீசியது. எங்கும் பிரகாசம். உன் கால் சலங்கை ஒலிக்கு  பாந்தமாக  லாகவமாக  நர்த்தனமாடினாய்.  காலிலே சலங்கை ஒலிக்க  கைவளைகள் தாளமிட்டு,  முத்துமாலைகள்  அசைந்து ஒலியெழுப்ப, அவற்றின்  தாளத்துக்கேற்ப ஆனந்தமாக ஆடிய   உன்  நடன  நிகழ்ச்சியை  அங்கே   கண்டவர்கள்  பாக்கியசாலிகள். 

जहृषु: पशुपास्तुतुषुर्मुनयो
ववृषु: कुसुमानि सुरेन्द्रगणा: ।
त्वयि नृत्यति मारुतगेहपते
परिपाहि स मां त्वमदान्तगदात् ॥१०॥

jahR^iShuH pashupaastutuShurmunayO
vavR^iShuH kusumaani surendragaNaaH |
tvayi nR^ityati maarutagehapate
paripaahi sa maaM tvamadaanta gadaat ||10

ஜஹ்ருஷு꞉ பஶுபாஸ்துதுஷுர்முனயோ
வவ்ருஷு꞉ குஸுமானி ஸுரேந்த்³ரக³ணா꞉ |
த்வயி ந்ருத்யதி மாருதகே³ஹபதே
பரிபாஹி ஸ மாம் த்வமதா³ந்தக³தா³த் || 55-10 ||

உனக்கு எந்தவித ஆபத்துமில்லை  என்பதை கோபர்கள் அறிந்து மகிழ்ந்தார்கள்.  நீ  ஆனந்த நடமாடினாய்.  விண்ணில் இந்த அதிசயம் காண  ரிஷிகள், தேவர்கள் அனைவரும்  வணங்கி  களித்தனர். தேவர்கள் அனைவரும் மலர்மாரி பொழிந்தார்கள்.  எல்லோரையும் மகிழ்வித்த எண்டே குருவாயூரப்பா, எனது நோயையும்  அகற்றி என்னை வாழ்விப்பாய்.

தொடரும்  

sivan jaykay

unread,
Sep 20, 2021, 7:27:32 PM9/20/21
to amrith...@googlegroups.com
உள்ளது நாற்பது  -  நங்கநல்லூர்   J K  SIVAN  --
பகவான் ஸ்ரீ ரமணர்.

10.   ஞானமும் அஞ்ஞானமும் 

அறியாமை விட்டறிவின் றாமறிவு விட்டவ்
அறியாமை யின்றாகு மந்த – வறிவு
மறியா மையுமார்க்கென் றம்முதலாந் தன்னை
யறியு மறிவே யறிவா – மறிப 10

நமது ஆன்மாவைச் சுற்றி பல திரைகள் இருக்கிறது. ஆவரணம் என்று பெயர் அவற்றிற்கு.  அவித்யா எனும் அஞ்ஞானம் அதிலொன்று. இப்படி இருள், கார் மேகம்,   சூரிய ஒளியை மறைக்கிறதோ,  அப்படி நமது உண்மை ஸ்வரூபத்தை இது மறைக்கிறது.  உலக விஷய ஞானம்  தேஹம்  எனும்  பந்தம்  அந்த திரையை பலப்படுத்துகிறது.   காண்பது, காணப்படுவது, காண்பவன்  இந்த மூன்றை  யார் இதெல்லாம்  என ஆராய்பவன்,  விசாரம் செய்பவன்,  அஹம்காரம்  எனும்  ''தான், நான் ''  யார் என்பதை உணர்ந்து உண்மையான அறிவு, ஒளியைப் பெறுவான். 

ஞானம் என்பது ப்ரம்மஸ்வரூபம். அறிவு என்று தமிழில் ஞானத்தை சொல்கிறோம்.   நமது  ஒவ்வொரு  காரியமும்  மூன்று பகுதிகள் கொண்டது.    செய்பவன் , செய்கை ,  செயல்.  இதைத்  தான் ஸமஸ்க்ரிதத்தில் ,  ப்ரமாதா,  ப்ரமேயம்,  ப்ரமாணம் என்கிறோம். அஞ்ஞானத்தால்  இது மூன்றும் வேறு வேறாக தெரிகிறது.  இதை அவித்யா என்கிறோம்.   மூன்றும் ஒன்றே என்ற சத்யம் தெரிந்து விட்டால் ஞானம் பிறக்கும். ஞானமும்  அஞ்ஞானமும் ரெட்டைகள். 

ஸ்கந்தாஸ்ரமத்தில் பகவான் ரமணரை சில பண்டிதர்கள் வந்து பார்த்து பேசினார்கள்.   அவர்கள் கேட்ட விஷயங்கள், பகவான் பதிலளித்த விஷயங்கள் எதுவுமே  அப்போது அங்கு  இதையெல்லாம் பார்த்துக்கொண்டு   மகரிஷிக்கு  விசிறிக்கொண்டிருந்த ஒரு  சாதாரண பக்தருக்கு  புரியவில்லை.  வித்வான்கள், பண்டிதர்கள்  எல்லோரும்  வெகுநேரம் பேசிக்கொண்டிருந்த விட்டு  சென்றதற்கு பிறகு  மெதுவாக  பகவானிடம்  மிகவும் கூச்சத்தோடு,  அந்த பக்தர் என்ன கேட்டார்?

''மகரிஷி உங்களை ஒன்று கேட்கவேண்டும். கேட்கட்டுமா?''
''ஆஹா  தாராளமாக கேளேன் ''
''இப்போது வந்தார்களே  அவர்கள் ரொம்ப படித்த சாஸ்திரம் தெரிந்த  ஞானிகள்.  அவர்களுக்கு பகவானிடம் என்ன கேட்கவேண்டும் என்று தெரிகிறது. பகவான் சொல்வதும் அவர்களுக்கு புரிகிறது. எனக்கு இதெல்லாம் ஒன்றுமே  புரியவுமில்லை, தெரியவுமில்லை.  நான்  அஞ்ஞானியாக படிக்காத வனாக இருக்கிறேனே. எனக்கு  முக்தி கிடைக்குமா?''
''நீ அவர்களைவிட உயர்ந்தவனோ , தாழ்ந்தவனோ இல்லையே. எல்லோரும் ஒன்றாகத்  தானே எனக்கு தெரிகிறீர்கள்.  அவர்கள் படித்த, அறிவுள்ள  அஞ்ஞானிகள். நீ  படிக்காத அறிவில்லா அஞ்ஞானி.   இதில் என்ன வித்யாசம் இருக்கிறது?  நான் அஞ்ஞானி என்று சொன்னாயே,  அந்த ''நான்''  யார் என்று  யோசி.  அது என்னவென்று,  யார் என்று அறிந்தால்   நீ தான்  முதல்தர ஞானி.  அந்த பண்டிதர்கள் அதை இன்னும் அறியாமல் என்னிடம் கேள்விகள் கேட்க மட்டுமே  தெரிந்தவர்கள்.  மனத்தை துருவி ''நான்  யார்'' என்று அறிந்திருந்தால் என்னிடம் வந்திருக்கவே மாட்டார்கள்.

தன்னை அறிவது தான் அறிவு. ஞானம். தனது ஸ்வரூபத்தை அறிந்து உணர்வதே ஆத்மஞானம்.  மற்றதெல்லாம் விஷய ஞானம்.   வெளி உலகோடு சம்பந்தப்பட்டது.  வெளி உலக விஷயஞானம் 
உள்ளவனை பண்டிதன் என்பது  மாயை. அவித்யை. ஆத்மாவை பிரகாசிக்கச் செய்வது தான் அறிவு, ஞானம். வித்யை. இதை அளிப்பவளை தான் ஸ்ரீவித்யை என்று வணங்குகிறோம்.  

 திருவாசகத்தில் மணிவாசகர்  ''யானே பொய் ,என்  நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் '' என்பது  ஆத்மஞான  மஹிமையை.     தானாக இருத்தல் தான் தன்னை அறிவது.  அந்த நிலையில்  இந்த தேகம் மறந்துவிடும். அது இருப்பதையே  உணராத நிலை தான் ஸமாதி. பூரண ஸத்யம்,  சித்தானந்தம். உண்மையில் நாம் எல்லோருமே  ஞானிகள். நாம் அதை  அறியாமல், அறிவற்று, அஞ்ஞானி களாக காட்டிக்கொள்கிறோம்.  சூரியனில் இருள் நிற்குமா, அதுபோல் ஆத்மாவில் அஞ்ஞானம் ஒட்டாது. 


  

sivan jaykay

unread,
Sep 20, 2021, 7:27:49 PM9/20/21
to amrith...@googlegroups.com
ஒரு அற்புத ஞானி -  நங்கநல்லூர்  J K  SIVAN 
சேஷாத்ரி ஸ்வாமிகள் 


ப்ரம்மஞானி இவரே..


சந்நியாசி என்றால்  காஷாயம், ருத்ராக்ஷம், கமண்டலம், பட்டை பட்டையாக  விபூதி, நீண்ட தாடி, ஜடா முடி என்று என்று தான் என் மனத்திலும் வெகுகாலம்  ஒரு உருவம்  நிலைபெற்றிருந்தது. சேஷாத்ரி ஸ்வாமிகளை பற்றி  அறிந்ததும் அது மாறிவிட்டது.  அவருக்கு என்று தனியாக ஒரு அடையாளம் கிடையாது. எங்கும் இருப்பார், மறைவார். வீடு  வாசல்,  உற்றார், உறவு,  சொந்தம் பந்தம் எதுவும் கிடையாது. பசித்தால் எது கிடைக்கிறதோ அதுவே  அமிர்தம். தொட்டதெல்லாம் தங்கம்.  தந்தையை இழந்த பின் தாயும்  மறைந்தாள். வீட்டை விட்டு  வெளியேறியாகிவிட்டது. 

''வாடா என் கண்ணே'' , என்று வழி மேல் விழி வைத்து வரவேற்று அணைத்து வயிறார உணவு தருபவள் தாய்.
''ஏண்டா இப்படி இளைச்சுருக்கே உடம்பு சரியில்லையா வா உடனே என்னோடு. வைத்யர் கிட்டே அழைத்துப் போகிறேன்'' என்று சொல்பவன் தந்தை. இருவருமே இல்லை. வானமே கூரை பூமியே பாய். சேஷாத்ரிக்கு யாருமே தேவை இல்லை. உலகில் பிள்ளைகள் மேல் பெற்றோரை அன்றி வேறு யாருக்கு கவலை? .

சேஷாத்ரியை பொறுத்தவரையில் அப்படி ஒருவரும் கவலையே படாமல் இருந்தால் ரொம்ப நல்லது. என் மனம் முழுதும் அந்த அருணாச லேஸ்வரர் மேல் புதைந்து விடும் என்று எண்ணித்தானோ என்னவோ ஒரு தடவை வீட்டை விட்டு சென்றவர் வீட்டுப்பக்கம் கிட்டத்தட்ட ஐந்து ஆறு மாசங்களாக வரவேயில்லை. எங்கோ கோவில், எங்கோ சத்திரம் . பசித்தபோது எது கிடைக்கிறதோ அது. மீதி நேரம் உபவாசம். சின்ன வயதில் இப்படி ஒருவரா?

எல்லோருக்கும் அப்பா என்று ஒருவர் என்றும் இருக்கிறாரே. அவருக்கு தனது குழந்தை மீது பாசம் உண்டு அல்லவா? சும்மா பார்த்துக் கொண்டு இருப்பாரா?

காஞ்சியில் சர்வ தீர்த்தம் கரையில் இருக்கும் விஸ்வநாத சுவாமி ஆலயத்தில் ஒருநாள் யாரோ ஒரு மஹான் வந்திருந்தார் என்று கூட்டம். வடக்கே இருந்த வந்த இளம் சந்நியாசி. நெருப்பு போல் தேகம். ஒளி. ஜடாமுடி. தேங்காய் கப்பரையே கோவணமாக தரித்து அது தான் உடலில் ஆடை! அவதூத சந்நியாசி. அருகே நான்கு சிஷ்யர்கள். தக்ஷிணாமூர்த்தியே நேராக வந்துவிட்டாரோ?

கண்களில் தீர்க்கமான வைராக்கியம், ஞானம் கொப்புளித்தது. தலையிலும் கழுத்திலும் கைகளிலும் உத்திராட்ச மாலைகள். உடலெல்லாம் வெண்ணீறு.

அவரைப் பார்த்த சேஷாத்ரி தன்னையறிமாலேயே தக்ஷிணாமூர்த்தி அஷ்டக ஸ்தோத்ரத்தை தனக்குள் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு சம்பிரதாயப்படி அஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார். அந்த துறவியின் கண்களில் சேஷாத்ரியின் கண்களை சந்தித்ததும் பளிச்சிட்டன. உதட்டில் புன்முறுவல். கைகள் உயர்ந்தன

'' இங்கே வா'' என்று ஜாடை. ''மாகச: 'மாகச'' (வருத்தப் படாதே) வாய் பேசியது. தலை ஆட்டி அபயகரம் காட்டி ''உப விச :'' (உட்கார்) என்று உத்தரவு.

கரும்பு தின்னக் காசு கேட்பாரா சேஷாத்ரி.  அந்த வடநாட்டு சந்நியாசி அருகே அமர்ந்தார். அவரது இரு கரம் சிரத்தின் மேல் கூப்பியிருந்தது. அரைக்கண் மூடி த்யானம். கண் திறந்தபோது தன் கண்களையே ஒரு ஜோடி கண்கள் ஊடுருவி பார்ப்பதை உணர்ந்தார். உடல் சூடானது. மின்சாரம் தலைக்கு கிர்ரென்று ஏறியது. உடல் லேசானது. அருகிலோ எதிரிலோ எதுவும் எவருமே தெரிய வில்லை. எங்கோ விண்ணில், வெண்மையாக மேகக் கூட்டத்தில் பறந்து சென்று கொண்டிருந்தார் சேஷாத்ரி.

''அட , இது என்ன பனிமலைகள் உச்சி. அதோ கண்மூடி கழுத்தில் ஒரு பெரிய நாகம் படம் விரித்து தன்னை நோக்க, ஜிலு ஜிலு என்று பனி காற்றில் வெற்றுடம்போடு, வெண்ணீறு பளபளக்க, 'ஓ' வென்ற பேரிரைச்சலோடு கங்கை ஜடாமுடியிலிருந்து துள்ளி பூமிக்குத் தாவ பிறைச்சந்திரன் ஒளி வீசி இடுப்பு புலித்தோலின் அழகை மேலும் அழகாக காட்டினான். எல்லாம் கண நேரம் தான்.  ஏதோ குரல் கேட்டது. பூமிக்கு, காஞ்சிபுரத்துக்கு கொண்டுவந்தது..குரல் கேட்டதும் விழி திறந்தார் சேஷாத்ரி.

''இவர் பேர் பாலாஜி சுவாமி, ஹரித்வார்லேருந்து ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரை போறார். காஞ்சிபுரம் ஸ்ரீ சக்ர நாயகியை சேவிப்பதற்கு வந்தார். ஒன்றிரண்டு நாள் இங்கே இருக்கலாம்''.

தர்ம  கர்த்தா கிருஷ்ணசாமி தாத்தாச்சார் பிள்ளை பட்டண்ணா, தான் பேசினான்.   சேஷாத்ரியின்  ஆரம்ப கால பள்ளி நண்பன் அவன் தான் எல்லோருக்கும் கேட்கும்படியாக  பாலாஜி சுவாமி எனும் சந்நியாசியை அறிமுகப்படுத்தினான். ஸ்வாமிகளை பற்றி சேஷாத்ரியிடம்  அறிவித்தவன்.  பாலாஜி ஸ்வாமிகள் சேஷாத்ரியுடனும் பட்டண்ணாவுடனும் சில வார்த்தைகள் பேசினார். பட்டண்ணா வீடு சென்றார். சேஷாத்ரி அந்த சந்நியாசி அருகே ஆணி அடித்தாற்போல் உட்கார்ந்து விட்டார். ஐந்தாவது சிஷ்யனாக அங்கேயே இருந்து மஹானுக்கு சிஸ்ருஷை செய்தார். . பாதங்களை பிடித்து விட்டார்.

''ஸ்வாமி எனக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள் '   என்ற பட்டண்ணாவையும்   பாலாஜி ஸ்வாமிகள் உற்றுப்பார்த்தார். பட்டண்ணாவுக்கு  தேவி மந்த்ர உபதேசம் ஆயிற்று.

சேஷாத்ரி  ஸ்வாமிகளுக்கு  சேவை தானாகவே செய்தார்.  பனை ஓலையால் விசிறினார். உடல் பொருள் ஆவி எல்லாமே அர்ப்பணித்தாகி விட்டது. நான்குநாள் சென்றது. ஐந்தாம் நாள் வியாழன் குருவாரம். . சேஷாத்ரியின் வைராக்கியம் பாலாஜி ஸ்வாமிக்கு  பிடித்திருந்தது. அவரது சோதனைகளில் சேஷாத்ரி  வெற்றி பெற்றார். ''ஞான சன்யாசத்துக்கு இவனே ஏற்றவன்'' என தீர்மானித்து சேஷாத்ரிக்கு முறைப்படி சன்யாசம் கொடுத்து உபதேசங்கள் அளித்தார். உபநிஷதுகளின்  மஹா வாக்ய மந்த்ர உபதேசம்  செய்தார்.   சேஷாத்ரி ஸ்வாமிகள் ஜீவன் முக்தர். யோகசித்தர். ப்ரம்ம ஞானி.

தீர்த்தத்தில் மூழ்கி எழுந்த இளம் சந்நியாசி சேஷாத்ரி, எதிரே பார்த்தபோது பாலாஜி அவதூதரோ, சிஷ்யர்களோ யாரும் காணோமே, எங்கே மறைந்தார்கள்? நான் என்ன கனவு கண்டேனா? இல்லையே கண்ணால் அந்த சந்நியாசியை பார்த்தேனே. என் மனதில் குடி கொண்டாரே.
எங்கே அந்த வாடா தேசத்து   பாலாஜி ஸ்வாமியென்கிற  சந்நியாசி? 


sivan jaykay

unread,
Sep 20, 2021, 7:27:57 PM9/20/21
to amrith...@googlegroups.com

ஸ்ரீமந்  நாராயணீயம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN  --
56வது  தசகம் 

56,   காளிங்கனுக்கு உயிர்ப்பிச்சை. 

தன்னிடமிருந்த அனைத்து  விஷத்தையும் கக்கி முடித்து ரத்தமும் சிந்தின காளிங்கனை  மரணம் நெருங்கியது.  அப்போது   காளிங்கனின் நாக மனைவிகள்  கிருஷ்ணனைச்  சரணடைந்து  எங்கள் கணவன் உயிரைக் காப்பாற்றவேண்டும் என வேண்டினார்கள்.  அவர்கள் வேண்டுகோளை ஏற்று,  ''காளிங்கா,  உயிர் பிழைத்துப் போ.  உடனே  காளிந்தி நதியை விட்டு ஓடு.   இந்தப்பக்கம் கூட இனி தலை வைத்து படுக்காதே.  இல்லையேல் ஒரேயடியாக படுக்கை தான் உனக்கு ''  என  கருணையோடு கண்ணன்  கட்டளையிட்டான்.   காளிங்கனின்   விஷத்தை அகற்றி  காளிந்தி நதி நீரை மீண்டும்  புனிதமாக்கினான்.   பசுக்களும் சிறுவர்களும் அந்நீரைப் பருகுவதில் இனி எந்த  தடையும்  இல்லாமல் செய்தான்.  அது முதல்  காளிந்தியில்   யார் நீராடினாலும், ஒரு நாள் உபவாசமிருந்து அந்நீரால் மூதாதையருக்கு  ஸ்ராத்தம்  பண்ணினாலும்  பாவங்கள் எல்லாம் நீங்கும் என்பது அசையாத நம்பிக்கை  பிறந்தது. 
இனி ஸ்லோகங்களுக்குள் போவோம்; 
 
रुचिरकम्पितकुण्डलमण्डल: सुचिरमीश ननर्तिथ पन्नगे ।
अमरताडितदुन्दुभिसुन्दरं वियति गायति दैवतयौवते ॥१॥

ruchirakampita kuNDalamaNDalaH suchiramiisha nanartitha pannage |
amarataaDita dundubhisundaram viyati gaayati daivatayauvate || 1

ருசிரகம்பிதகுண்ட³லமண்ட³ல꞉
ஸுசிரமீஶ நனர்தித² பன்னகே³ |
அமரதாடி³தது³ந்து³பி⁴ஸுந்த³ரம்
வியதி கா³யதி தை³வதயௌவதே || 56-1 ||

''என்னப்பா  குருவாயூரா , சங்கீதத்தை ரசித்து கேட்கும்போது   நமது  சிரமும் கரமும்  சங்கீத வித்துவான் அங்கத்தைப் போலவே  அசைகிறது.  தாளம் போடுகிறது.  அது போல் தான்  விண்ணில்  அபசரஸ்கள் நீ  காளிங்கன் சிரத்தில் நடமாடுவதை அபிநயித்து ஆடினார்கள். உன் கால்  சிலம்பு எழுப்பிய  வாத்ய ஒலிக்கு  இசைந்து பாடினார்கள்.தேவர்களும் விண்ணவர்களும்  ரசித்து சிரக்கம்பம் , கரக்கம்பம்  செய்தார்கள்.   உனது  காதில் ஆடிய  குண்டலங்கள்  எழுப்பிய கண கண  ஒலி  செவிக்கினிமை  சேர்க்க,   விண்ணவர்களின் வாத்தியங்களும் ஜோடி சேர்ந்துகொண்டது.
காளிங்கன் தலை  ஒரு நடன அரங்கமாகி விட்டது கண்ணா, உனக்கு.

नमति यद्यदमुष्य शिरो हरे परिविहाय तदुन्नतमुन्नतम् ।
परिमथन् पदपङ्करुहा चिरं व्यहरथा: करतालमनोहरम् ॥२॥

namati yadyadamuShya shirO hare parivihaaya tadunnatamunnatam |
parimathan padapankaruhaa chiraM vyaharathaaH karataala manOharam || 2

நமதி யத்³யத³முஷ்ய ஶிரோ ஹரே
பரிவிஹாய தது³ன்னதமுன்னதம் |
பரிமத²ன்பத³பங்கருஹா சிரம்
வ்யஹரதா²꞉ கரதாலமனோஹரம் || 56-2 ||

காளிங்கனின்  எண்ணற்ற சிர ங்கள், மேலே உயர்ந்தும்  கீழே தாழ்ந்தும் உன் காலடி அசைவுக்கேற்ப இயங்கியதால் அவன் விரித்த படங்கள் மேலும் கீழுமாக  அசைந்தாடியதில் கிருஷ்ணா உன் நர்த்தனம்  அபாரமாக  வெகுநேரம் தொடர்ந்தது. 

त्वदवभग्नविभुग्नफणागणे गलितशोणितशोणितपाथसि ।
फणिपताववसीदति सन्नतास्तदबलास्तव माधव पादयो: ॥३॥

tvadavabhagna vibhugna phaNaagaNe galitashONita shONitapaathasi |
phaNipataavavasiidati sannataaH tadabalaastava maadhava paadayOH || 3

த்வத³வப⁴க்³னவிபு⁴க்³னப²ணாக³ணே
க³லிதஶோணிதஶோணிதபாத²ஸி |
ப²ணிபதாவவஸீத³தி ஸன்னதா-
ஸ்தத³ப³லாஸ்தவ மாத⁴வ பாத³யோ꞉ || 56-3 ||

ஹே ,  மாதவா,  தலை மேல் இடி இறங்கினால் சுகமாகவா இருக்கும்?  உனது நடனத்தில் , நர்த்தனத்தில் ஒவ்வொருமுறையும்   கால்களை மாற்றி மாற்றி அ
வன் தலைமேல் பதித்தபோது காளிங்கன் சிரங்கள்  நொறுங்கின.  ரத்தம் கக்கினான். காளிந்தி நதி நீரின் வண்ணம், நிலத்திலிருந்து  சிவப்பாக மாறியது.  அவன் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழக்க ஆரம்பித்தான்.  அவனது மனைவிகள் இதைக் கண்டு பதறினார்கள்.  வெடவெடவென்று பயத்தில் நடுங்கி உன் ஆளுமையைக் கண்டு  அஞ்சி, பக்தியோடு உன் திருவடியை சரணடைந்தார்கள். 

अयि पुरैव चिराय परिश्रुतत्वदनुभावविलीनहृदो हि ता: ।
मुनिभिरप्यनवाप्यपथै: स्तवैर्नुनुवुरीश भवन्तमयन्त्रितम् ॥४॥

ayi puraiva chiraaya parishruta tvadanubhaava viliina hR^idO hi taaH |
munibhirapyanavaapyapathaiH stavaiH nunuvuriisha bhavanta-mayanitratam ||

அயி புரைவ சிராய பரிஶ்ருத-
த்வத³னுபா⁴வவிலீனஹ்ருதோ³ ஹி தா꞉ |
முனிபி⁴ரப்யனவாப்யபதை²꞉ ஸ்தவை-
ர்னுனுவுரீஶ ப⁴வந்தமயந்த்ரிதம் || 56-4 ||

கண்களில் நீர் மல்க  அந்த  பெண் நாகங்கள் உன் புகழ் பாடின, உன் பராக்ரமத்தை போற்றின. கிருஷ்ணா, உன் உருவம் சிறிது உன் மஹிமை பெரிது என்று பரம ஞானிகளைப்  போல்  அந்த நாகங்களும்  உணர்ந்து உன் கருணையை  வேண்டின. பக்தியால் மனம் உருகின.

फणिवधूगणभक्तिविलोकनप्रविकसत्करुणाकुलचेतसा ।
फणिपतिर्भवताऽच्युत जीवितस्त्वयि समर्पितमूर्तिरवानमत् ॥५॥

phaNivadhuujana bhaktivilOkana pravikasat karuNaakula chetasaa |
phaNipati-rbhavataa(a)chyuta jiivitaH tvayi samarpita muurti ravaanamat || 5

ப²ணிவதூ⁴ஜனப⁴க்திவிலோகன-
ப்ரவிகஸத்கருணாகுலசேதஸா |
ப²ணிபதிர்ப⁴வதாச்யுத ஜீவித-
ஸ்த்வயி ஸமர்பிதமூர்திரவானமத் || 56-5 ||

குருவாயூரப்பா,   ஆனந்த நடனமாடிக்கொண்டிருந்த உன் கவனத்தை அந்த  பெண் நாகங்கள் ஈர்த்தன. எவ்வளவு பாக்யம் செய்திருக்கவேண்டும் அவை.!   பரமாத்மா, கருணாசாகரமே, அந்த பெண் நாகங்களின் பக்தியை மெச்சினாய். இவர்களுக்காகவாவது இந்த காளிங்கனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கவேண்டும் என்று ஒரு கருணை பிறந்தது.  அவன் மரணத்தின் எல்லைக்கே சென்றுவிட்டான். அப்படியே உன் திருவடியில் சுருண்டு விழுந்தான். 

रमणकं व्रज वारिधिमध्यगं फणिरिपुर्न करोति विरोधिताम् ।
इति भवद्वचनान्यतिमानयन् फणिपतिर्निरगादुरगै: समम् ॥६॥

ramaNakaM vraja vaaridhi madhyagaM phaNiripurna karOti virOdhitaam |
iti bhavadvachanaanyati maanayan phaNipati rniragaa duragaiH samam || 6

ரமணகம் வ்ரஜ வாரிதி⁴மத்⁴யக³ம்
ப²ணிரிபுர்ன கரோதி விரோதி⁴தாம் |
இதி ப⁴வத்³வசனான்யதிமானயன்
ப²ணிபதிர்னிரகா³து³ரகை³꞉ ஸமம் || 56-6 ||

வாதபுரீசா,  எங்கோ கடல்களினிடையே உள்ள ரமணகம் எனும்  தனித்த  தீவுக்கு  ''காலிங்கா, நீ இங்கிருந்து சென்றுவிடு, அங்கே உனக்கு  கருடனின் தொல்லை இருக்காது,  உடனே செல்''  என்று நீ கூறியதும்,  காளிங்கன் உன்னை மனமார வணங்கினான். வாழ்த்தினான்.   பகைவனுக்கும் அருளும் நெஞ்சு உனக்கு. மற்ற நாகங்கள் பின் தொடர  மெதுவாக  காளிந்தி நதியை விட்டு நகர்ந்தான். 

फणिवधूजनदत्तमणिव्रजज्वलितहारदुकूलविभूषित: ।
तटगतै: प्रमदाश्रुविमिश्रितै: समगथा: स्वजनैर्दिवसावधौ ॥७॥

phaNivadhuujana dattamaNi vraja jvalitahaara dukuula vibhuuShitaH |
taTagataiH pramadaashruvimishritaiH samagathaaH svajanai-rdivasaavadhau || 7

ப²ணிவதூ⁴ஜனத³த்தமணிவ்ரஜ-
ஜ்வலிதஹாரது³கூலவிபூ⁴ஷித꞉ |
தடக³தை꞉ ப்ரமதா³ஶ்ருவிமிஶ்ரிதை꞉
ஸமக³தா²꞉ ஸ்வஜனைர்தி³வஸாவதௌ⁴ || 56-7 ||

கண்ணா, உன்மேல் அன்பும் பாசமும் நேசமும் கொண்ட  நெஞ்சங்களில்  மனிதர்கள் மட்டுமா உண்டு?   நடப்பன, ஊர்வன, பறப்பன, மிதப்பன  போன்ற எண்ணற்ற மற்ற ஜீவராசிகளும் கூட உண்டே.  நன்றிப்பெருக்கோடு காளிங்கன் மனைவிகள் உனக்கு ஒளி வீசும் நாகமணிகளை பரிசளித்தார்கள்.  வஸ்திரங்கள் அளித்தார்கள். அன்போடு  தந்ததை  ஆவலோடு பெற்று அணிந்தாய்,  அழகுக்கு அழகு கூடியது.   காளிந்தி நதிக்கரையில் எல்லோரும் உனக்காக  காத்திருந் தார்கள். அவர்களை நெருங்கினாய்.  நீ காளிந்தி நதி நீரில் நனைந்திருந்தாய். அவர்கள் அனைவரும் ஆனந்தக்கண்ணீரில் நனைந்திருந்தார்கள். 

निशि पुनस्तमसा व्रजमन्दिरं व्रजितुमक्षम एव जनोत्करे ।
स्वपति तत्र भवच्चरणाश्रये दवकृशानुररुन्ध समन्तत: ॥८॥

nishipunastamasaa vrajamandiraM vrajitumakshama eva janOtkare |
svapiti tatra bhavachcharaNaashraye davakR^ishaanurarundha samantataH || 8

நிஶி புனஸ்தமஸா வ்ரஜமந்தி³ரம்
வ்ரஜிதுமக்ஷம ஏவ ஜனோத்கரே |
ஸ்வபதி தத்ர ப⁴வச்சரணாஶ்ரயே
த³வக்ருஶானுரருந்த⁴ ஸமந்தத꞉ || 56-8 ||

இரவு வந்தது  இருள் கவிந்தது.     வ்ரஜ  பூமியில் எவரும் வீடு செல்லவில்லை. அங்கேயே  உன் திருவடிகளில்  சரணடைந்து  ஆனந்தமாக  உறங்கினார்கள். அந்நேரம்  அந்த பிரிந்தாவன  வனப்பகுதியில்  தீப்பரவியது. அவர்களை சுற்றி நாலாபக்கமும் தீப்  பிழம்புகள்.

प्रबुधितानथ पालय पालयेत्युदयदार्तरवान् पशुपालकान् ।
अवितुमाशु पपाथ महानलं किमिह चित्रमयं खलु ते मुखम् ॥९॥

prabudhitaanatha paalaya paalayetyudayadaarta ravaan pashupaalakaan |
avitumaashu papaatha mahaanalaM kimiha chitramayaM khalu te mukham || 9

ப்ரபு³தி⁴தானத² பாலய பாலயே-
த்யுத³யதா³ர்தரவான் பஶுபாலகான் |
அவிதுமாஶு பபாத² மஹானலம்
கிமிஹ சித்ரமயம் க²லு தே முக²ம் || 56-9 ||

''பகவானே  எங்களை காப்பாற்று'' என்ற குரல் அவர்களிடமிருந்து  ஒலித்தது.  உனக்கு இது என்ன பிரமாதம்? வாயைத்திறந்து காற்றை உள்ளிழுத்தாய். அத்தனை நெருப்பும் உன் வாய்க்குள் காற்றோடு கலந்து புகுந்தது.  நீரைக்குடிப்பது போல் அக்னியைக்  குடித்தாய்.  உன் உடலே  அக்னிமயமானதுதானே கிருஷ்ணா!

शिखिनि वर्णत एव हि पीतता परिलसत्यधुना क्रिययाऽप्यसौ ।
इति नुत: पशुपैर्मुदितैर्विभो हर हरे दुरितै:सह मे गदान् ॥१०॥  

shikhini varNata eva hi piitataa parilasatyadhunaa kriyayaapyasau |
iti nutaH pashupai-rmuditai-rvibhO hara hare duritaiH saha me gadaan ||10

ஶிகி²னி வர்ணத ஏவ ஹி பீததா
பரிலஸத்யுத⁴னா க்ரியயா(அ)ப்யஸௌ |
இதி நுத꞉ பஶுபைர்முதி³தைர்விபோ⁴
ஹர ஹரே து³ரிதை꞉ ஸஹ மே க³தா³ன் || 56-10 ||

மஞ்சளுக்கும் சிவப்புக்கும் ரொம்ப நல்ல பொருத்தம். உன் பீதாம்பரத்துக்கும் அக்னிக்கும் அதே தொடர்போ?  கோபர்கள் ஆச்சர்யமடைந்து எங்கே  தீ காணாமல்  போயிற்று என்று வியந்து உன்னை புகழ்ந்தனர். வணங்கினார்கள்.  ஒருவேளை நீ தான் அக்னிப்பிழம்பாக தோன்றினாயோ? உன்னுள்ளே அக்னி சென்றதும்  நீ மேலும் பொன் வண்ணமாக  ஜொலித்தாய். எண்டே குருவாயூரப்பா, என்னே உன் பெருமை. என் நோயையும் சுட்டெரிப்பாய், என்னை ரக்ஷிப்பாய் 

sivan jaykay

unread,
Sep 20, 2021, 7:28:09 PM9/20/21
to amrith...@googlegroups.com
ஒரு அற்புத ஞானி --  நங்கநல்லூர்  J K  SIVAN 
ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் 

''அப்பா காலம் முடிந்தது...''

சேஷாத்ரி  ஸ்வாமிகளைப்பற்றி  நினைத்தாலும், பேசினாலும், எழுதினாலும் தாகம்  தீரவே இல்லை. ஆஹா எப்படிடப்பட்ட ஒரு பரிவ்ராஜ யோகி, மஹான், அவரைப் பற்றி சரியாக  எவரும் அவர் வாழ்நாளில் அறிந்துகொள்ளவில்லையே.  வைரம் மாதிரி ஜொலித்த மஹானை போற்றிப்பேண  தவறிவிட்டார்களே .  ஒருவனுக்கு  அவன் உருவமும், ஆடையும் பகட்டும் தான் கௌரவமா? இன்னும் கூட நாம் புரிந்துகொள்ளவில்லையே என்ற அங்கலாய்ப்பு மனதை அரிக்கிறது.

நாம் நிறைய விஷயங்களை கோட்டை விட்டவர்கள், விடுபவர்கள்.   இன்னமும் கூட. சேஷாத்ரி  ஸ்வாமிகள்   பால்யத்திலேயே நிறைய காமாக்ஷி தேவியை பற்றி, வரதராஜ பெருமாள் பற்றி  கவிதை, ஸ்லோகங்கள் எல்லாம் இயற்றியிருக்கிறாராமே . எல்லாமே தொலைந்து போய்விட்டதா?
ஸ்லோகங்களை ஒரு வித  முயற்சியும் இன்றி அனாயாசமாக  திடீர் திடீரென்று இயற்றுவாராமே. நமது துரதிர்ஷ்டம் ஒரு கவிதையோ, ஸ்லோகமோ கூட கிட்டாமல் போய்விட்டதோ?  யாருமே அவற்றை பாதுக்காக்க வில்லையோ? . எத்தனையோ மகான்களின்  இது போன்ற வெவ்வேறு  அருமையான பொக்கிஷங்களை இழந்து   நிற்பதில் உலகிலேயே நாம் தான்  உலகிலேயே  முதலாவதாக  கின்னஸ் ரிக்கார்டு க்கு சொந்தக்காரர்களோ? 

சேஷாத்ரிக்கு 7ம் வயதில் உபநயனம். தாத்தா காமகோடி சாஸ்திரிகள்  தானே அருகில் இருந்து ஏற்பாடுகள் பண்ணி, சந்தியாவந்தனம், காயத்ரி மந்த்ரங்கள் அனுஷ்டானம் எல்லாம் சொல்லிக் கொடுத்தார். என்ன பாக்கியம் பண்ணினவர் அவர்! ஒரு உலகம் போற்றும் ப்ரம்ம ஞானி, மஹானுக்கே ப்ரம்மோபதேசமா!

''அடே பயலே, சேஷு , இனிமே நானே உனக்கு வேதாத்யாயனம் பண்ணி வைக்கிறேன். உனக்கு தர்க்கம், வியாகரணம், பிரஸ்தான த்ரயம். மந்த்ர ரஹஸ்யங்கள் எல்லாமே சொல்லித்தரேன். எனக்கு வயாசாயிடுத்து. கொஞ்ச காலம் தான் இருப்பேன். எனக்கப்புறம் நீ தான்  அதுக்கு சரியான பாத்திரம், இதை ரக்ஷிக்கணும் '' சொல்லும்போதே காமகோடி சாஸ்திரிகளுக்கு குரல் தழு தழுத்தது. அதே சமயம் இவனே பகவானால் சிருஷ்டிக்கப்பட்ட பொருத்தமானவன் என்றும் மனதில் சந்தோஷம் நிறைந்தது.

காமகோடி சாஸ்திரி செய்வித்த வேதாத்யாயனம் தவிர வரதராஜர் கோவில் ஸ்ரீநிவாஸாச்சாரி யாரின் பாடசாலையில் கிரமமாக வேதம் கற்றுக்கொண்டான் சேஷாத்ரி. கதாதரீய பூர்வ உத்தரவாதத்தையும் , நியாய சாஸ்திரமும் வித்யாசார் என்கிற மத்வர் கற்றுக்கொடுத்தார். வியாகரண சாஸ்திரம் பாஷ்யம் வரை ராமச்சந்திரச்சார் என்கிற மத்வர் கற்பித்தார். எல்லோருக்குமே என்ன ஆச்சர்யம் என்றால் ஒருதடவை சொல்லிக்கொடுத்தாலே 'கப் ' என்று சேஷாத்ரி பிடித்துக் கொண்டான். கிரஹிக்கும் சக்தி அசாத்தியம்.

குழுமணி நாரயணஸ்வாமி சாஸ்திரி புத்தகத்தில் சேஷாத்திரியோடு கற்றுக்கொண்ட சில சக மாணவர்கள் பேர் இருக்கிறது. அவர்கள் வம்சத்தை சேர்ந்தவர்கள் யாராவது இதை படித்தால் தமது முன்னோர் பெயர் பார்த்து படித்து சந்தோஷப்படலாமே என்று அவர்கள் பெயரையும் கொடுக்கிறேன்.

தர்ம கர்த்தா, முதலகத்து பட்டண்ணா தாத்தாச்சார் - ரொம்ப வைராக்கியம் கொண்டவராம் இவர்.
ரிஷி தாத்தாச்சார் ,
முதலகம் சுந்திரராஜா தாத்தாச்சார்
பூனை வரதாச்சாரியார் குமாரர் சேஷாச்சார்யார்
கார்ப்பங்காடு அய்யங்கார்
தொட்டண்ணாவூர் சாமு குருக்கள்
ஒழப் பாக்கம் ராமானுஜாச்சாரியார்.
சாமா என்கிற வேகாத வரதாச்சாரியார்.
மேல்பாக்கம் குமார தாத்தாச்சார்
காவ்யமணி மண்டபம் சீமாச்சார்யார்
குண்டலம் கந்தாடை ரங்கசாமி அய்யங்கார்.

நூற்றைம்பது - இருநூறு வருஷங்களுக்கு முன்பு இந்த மாதிரி பெயர்கள் சகஜம். இப்போது சிரிக்கலாம். சிலகாலம் முன்பு தவக்களை ,என்னத்தே கன்னையா, தயிர்வடை தேசிகன், ஓமக்குச்சி.... என்ற பெயர்கள் பிரபலமாகவில்லையா?

நாலைந்து வருஷம் ஓடிவிட்டது. ஒரு நல்ல பழக்கம் சேஷாத்திரியிடம் இருந்தது.. காலை மாலை இருவேளையும் அப்பா அம்மாவை நமஸ்காரம் பண்ணாமல் சேஷாத்திரி ஒருநாளும் இருந் ததில்லை. -- குழந்தைகளே, பெற்றோர் இருப்பவர்களே, சற்று இந்த வாக்கியத்தை ரெண்டாம் தடவை படியுங்கள். பின் பற்றுங்கள் ----

ஒருநாள் அப்பா வரதராஜ சாஸ்திரி இப்படி நமஸ்காரம் பண்ணின பிள்ளை சேஷாத்திரியை எடுத்து மார்புற தழுவினார். இரு கண்களிலும் கண்ணீர். அம்மா மரகதம் திடுக்கிட்டாள்.

''எதுக்கு அப்பா அழறேள்? என்ன ஆச்சு உங்களுக்கு? சொல்லுங்கோ? '' என்றான் சேஷாத்
ரி.

''ஆமாம், என்ன ஆச்சு உங்களுக்கு, திடீர்னு ஏன் இப்படி மாலை மாலையா அழுது, குழந்தையை கலங்க வைக்கி றீர்கள்? எனக்கு வேதனையா, கவலையா இருக்கே '' என்று மரகதமும் கணவனைக் கேட்க
''என்னமோ தெரியலைடா சேஷாத்திரி , ஒரு ஆவேசம் போல் மனசிலே பொங்கி  வந்துடுத்து. உலகில், இந்த கலியுகத்தில் யார் அப்பா இப்படி தினமும் பெற்றோரை வணங்கி போற்றுவார்கள் உன்னைத் தவிர? அம்மாவை வணங்கினாலும் அர்த்தமுண்டு. தந்தையை விட தாய் சிறந்தவள். நூறு  மடங்கு தாய் தந்தையைவிட குணம் அதிகம் கொண்டவள் ''பிது: சத குணம் மாதா:'' என்று ஸ்லோகம் சொல்கிறதே.''
''உனக்கும் இதை சொல்றேன் கேட்டுக்கோ  மரகதம்.   கொஞ்சம் கூட கவலையே படாதே. நீ எனக்கு வாய்த்த பதி விரதா தெய்வம். சாஸ்திரம் சங்கீதம் தெரிந்தவள்.  அருமையான  சரீரம்  வரப் பிரசாதம். நம்ம பயல் சேஷாத்திரி மேன்மேலும் பெருமையாக வாழப் போகிறான். அவனைப்பத்தி நினைக்கும்போது உடம்பு  மயிர்கூச்சிரியறது.  அவன் கிட்டே  தெய்வாம்சம் இருக்கு . நம்ம குடும்பத்திலேயே இப்படி ஒருத்தர் இருந்ததில்லே, இனிமே இருக்கப்போறதும் இல்லைன்னு  மனசிலே படறது.
 என் தம்பி ராமஸ்வாமி ஜோசியருக்கு புத்ர பாக்யம் இல்லை. எனவே நமது ரெண்டாம் குமாரன் நரசிம்மனை அவனுக்கு புத்திரனாக கொடுத்து விடு. எனக்கு காமாட்சியின் உத்தரவு வந்துவிட்டது. நான் புறப்பட வேண்டும். இனிமே எனக்கு பூலோகத்திலே வேலை இல்லே, நேரமும் இல்லே. இருக்க இடமும் இல்லை. நான்  கிளம்பணும். நீ இன்னும் சில காலம் சேஷாத்ரியோடு இருப்பே .''

வரதராஜன் பேச்சைக் கேட்ட  மரகதம் அறுபட்ட வாழை போல் தரையில் வேருடன் சாய்ந்தாள்.

''ஐயோ என்ன கொடுமை இது. இத்தனை பெரிய பேரிடியை சர்வ சாதாரணமாக சொல்கிறீர்களே.''

''மரகதம், தைரியமாக இரு. சமாதானமாக இரு. வருவதை ஏற்றுக்கொள்ள திட மனசு வேண்டும். இது பகவத் சங்கல்பம். நாம ஏத்துக்கணும்''

''ஒண்ணும் அப்படியெல்லாம் நடக்காது. தைரியமா இரு '' -- எல்லோரும் மரகதத்தை தேற்றினார்கள்.

''இல்லை இல்லை, என் கணவர் ஒரு முனிவர். அவர் சொல் தட்டாது. '' என்று பயந்தாள் மரகதம்.

மறுநாள் வரதராஜர் சாஸ்த்ரிகள் வழக்கம்போல் அதிகாலையிலேயே எழுந்து நித்ய கர்மாக்களை அனுஷ்டானங்களை முடித்தார். இரவு அர்த்த ஜாமம் வரை பூஜை. ஏகாம்பரேஸ்வர் காமாக்ஷி தர்சனம். வீடு திரும்பினார். காமாக்ஷி ஜபம். உபவாசம். அதிசார நோய் (dysentery leading to dehydration) கண்டது. உடல் நீர் சத்து வற்றிப்போய் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு கடைசி நேரம் வந்து விட்டது. அந்த காலத்தில் இதற்கெல்லாம் மருந்து இல்லை. எண்ணற்றோர் இப்படி மாண்டது நாம் அறிவோம்...

'எனக்கு அதிசாரம் வந்தது ரொம்ப சந்தோஷம் மரகதம் . இதனால் நினைவு தப்பாது. கடைசிவரை பேச பகவானை நினைக்க ஞாபகம் இருக்குமே. குழந்தாய் சேஷாத்திரி, மரகதம். பயப்படாதீர்கள். யோகிகள் இந்த நோயை தான் விரும்புவார்கள். ''அதிஸா ரேது மரணம் யோகிநாம்பி துர்லபம் '' அதிசாரம் யோகிகள் விரும்பினால் கூட கிடைப்பது துர்லபம். எவ்வளவு சாஸ்திரம் கற்றாலும் அனுபவ ஞானம் முக்கியம்''

உடல் பஞ்சபூதத்தால் உருவானது. அது அந்த பஞ்சபூதத்தையே கடைசியில் அடைகிறது.

பொழுது விடிந்தது. சூரியன் ஒளி வரதராஜ சாஸ்திரி வீட்டில் புகுந்தது. அதற்குள் வரதராஜ சாஸ்திரியின் ஆத்ம ஒளி வெளியோடு கலந்தது. சேஷாத்திரி கண்களில் ஆறாக நீர். தீராத துயரம். மனதில் ஆறாத வடு.''சாஸ்த்ர ஞானம் மட்டும் போதாது. உலக அனுபவம் வேண்டும்..........'' அப்பா கடைசியாக சொன்ன இந்த வாக்கியம் மனதில் திரும்ப திரும்ப ஒலித்தது. வைராக்கியம் உருவாகும் நேரம் வந்து விட்டது.........

sivan jaykay

unread,
Sep 20, 2021, 7:28:19 PM9/20/21
to amrith...@googlegroups.com
உள்ளது நாற்பது -   நங்கநல்லூர்   J K  SIVAN  --
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி.

11. சித்தத்தை சிவன் பால் வைத்து....

முதலில் உங்களை ஒன்று கேட்கப்போகிறேன்.   நாற்பது  செய்யுளில் இதுவரை பத்து செய்யுளுக்கு அர்த்தம் சொல்லியிருக்கிறேன்.  எத்தனை  பேர்  விரும்பி படிக்கிறீர்கள்?. புரிகிறதா?  எவ்வளவோ முடிந்த வரை புரியும்படியாக தான் எளிமையாக எழுதி வருகிறேன்.  ரமணரை  புரிந்துகொள்வது நிச்சயம்  சுலபமல்ல. அவரது தத்வம் மிகவும்  ஆழமான  வேதாந்த எல்லை. ஆத்ம விசாரம் என்பது எல்லோராலும் முடியாத காரியம் என்று நினைத்தால் ரொம்ப ரொம்ப கஷ்டம் தான்.  முடியும், முடிய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால்  மலை கடுகாக தெரியும். 

''அறிவுறுந் தன்னை யறியா தயலை
யறிவ தறியாமை யன்றி – யறிவோ
வறிவயற் காதாரத் தன்னை யறிய
வறிவரி யாமை யறுமே – யறவே 11

உலகில் எல்லா விஷயங்களையும் தெரிந்து  கொண்டு  தனக்குள்ளே இருக்கும் ஆத்மாவைத் தெரிந்து  கொள்ளாத ஞானம் பயனற்றது.  நிஜத்தை அறியாமல் நிழலை அறிவது.  அது தான் அஞ்ஞானம். உலக விஷயங்கள் அனைத்தும் நாம் அறிய உதவுவது நமது ஐம்புலன்கள், மனது, அஹங்காரம், ஆகியவையே. இதெல்லாம் தாண்டி மறைந்திருக்கும், உள்ளே ஹ்ருதயத்தில் உறைந்திருக்கும் ஆத்மாவை உணரும்போது மற்றதெல்லாம்  மறைந்து விடும். இல்லாததாகி விடும். 

வெளியே  காண்பவை உணர்பவை எல்லாம் மனதில்  பதிவாகி  திரையாகி நிற்கிறது. அதனுள்ளே இருக்கும் ஸத்யமான ஆத்மாவை மறைக்கிறது. புகை  விளக்கின் ஒளியை மறைப்பது போல.

அந்தக்காலத்தில் என் சின்ன வயசிலே தினமும் சாயந்திரம் ஹரிக்கேன் விளக்கின் கண்ணாடியை வெளியே எடுத்து நன்றாக  சாம்பல் போட்டு  துடைத்து, திரியை நிமிண்டி அடி  எண்ணெய்  கிணறில்  கெரோசின்  ஊற்றி  திரியைப் பற்றவைத்து, மீண்டும் கண்ணாடியை போட்டு மூடிவிட்டு ஹரிக்கேன் விளக்கின் வெளிச்சத்தில்  மூன்று பேர் உட்கார்ந்து  படிப்போம். 

புகைமண்டலம் விளக்கின் ஒளியை மறைப்பது போல் இந்த  வெளியுலக  விஷயஞானம் ஆத்ம ஒளி யை  மறைக்கிறது.   இதை பிளந்து தன்னை அறிபவன் பிரகாசம் பெறுகிறான்.

அறிவு எனும் ஆத்மஸ்வரூபம் அவித்யையால் சூழப்பட்டு சங்கல்ப, விகல்பமாக மனம் என்று தோன்றுகிறது. மனதிலிருந்து சப்தம் ஆகாசமாக, ஸ்பர்சங்களுடன் வாயுவாக,  சப்த ஸ்பர்சம் இரண்டும் கலந்து அக்னியாக,  சப்த, ஸ்பர்ச, ரூபத்தோடு  ஜலமாக , இந்த நாலும்  கலந்து கந்தத்தோடு  பூமியாகிறது.  பிரபஞ்சமாக நாம் உணர்வது மனத்தினால் என்று புரிகிறதா?

இவை அனைத்தும் நம்மிலிருந்து தனித்த அந்நிய வஸ்துக்கள். அவித்யையிலிருந்து ஆத்மாவை பிரித்து உணரும்போது மேலே சொன்ன அந்நிய வஸ்துக்கள் இல்லாததாகிவிடும். இப்படி மனம் அந்நிய வஸ்துக்களை விஷயாகாரமாக  காட்டுவது தான் ''சித்தம்''. விகல்பம் .  

சித்தம் இதெல்லாம் தவிர்த்து நிர்மலமானால் சித் சக்தி பெறுகிறது. ஆனந்தம் நிலைக்கிறது. நிர்விகல்பம் ஆகிறது.இதை அந்தர்முகம் என்பார்கள். 

ஒரு பக்தர்  ரமணரிடம் ஒரு நோட்டு புத்தகம் பென்சில் கொடுத்து  எனக்கு  ஏதாவது ஒரு அக்ஷரமாவது எழுதிக் கொடுங்கள் என்கிறார்.  ரமணர் சிரித்துக் கொண்டே  ''ஏகமக்ஷரம் ஹ்ருதி, நிரந்தரம்  பாஸதே ஸ்வயம் லிக்யதே கதம்?''  என்று எழுதினார் ? என்ன அர்த்தம் ?

''நீ கேட்ட  அந்த அக்ஷரம், ஹ்ருதயத்தில்  இடைவிடாமல் தானாகவே ஜொலிக்கிறதே, அதை எப்படி அப்பா எழுதுவேன்?''

நள்ளிருளில் கயிறு பாம்பாக தோன்றி நாம் பயந்து, வியர்த்து, உளறி, அலறி, கடைசியில் அது கயிறு தான் பாம்பில்லை என்று அறிகிறோம்.  கயிறு பாம்பாக நிஜமாக தோன்றி கடைசியில் கயிறு தான் நிஜம் என்று தெரிகிறது.   

ஸ்வப்னத்தில், சுஷுப்தி (ஆழ்ந்த தூக்கத்தில்) நமது ஸ்வானுபவம், உண்மை ஸ்வரூபம் அறியப்பட வில்லை.  ஆத்மா உள்ளே நிற்கிறது. உணரப்படாமல்.  

திரை பலமாக, அழுத்தமாக இல்லை என்பதால் ஆத்ம சுகம்  மட்டும் அறியப்பட்டு  ஆனந்தமாக தூங்கினோம் . அப்போது  தேகம் மனம் இரண்டும் இல்லை. புத்தி ஆத்மாவை ஒட்டிக் கொண்டிருந்தது. ஆகவே  ஆத்ம சுகம் உணர்த்தியது.  அதை நினைவிலும் வைத்துக் கொண்டோம்.  மிகவும் சூக்ஷ்மமான இந்த  ''புத்தி'' எல்லோரிடமும் உள்ளது.    ஸ்ரத்தா சக்தி என்று பெயர். அதற்கு முக்யத்வம் கொடுத்து கவனித்தால் அறிவே ஸ்வரூபமான ஆத்மாவை அறிவினாலேயே அறிய முடியும்.  

மொத்தத்தில் சுருக்கமாக சொல்வதானால் நமது தேகம், மனது,  நம்மை கண்டபடியெல்லாம் அலையச்செயகிறதல்லவா. இந்த  விஷயஞானத்திலிருந்து புத்தியை திருப்பி மனதை, தேஹத்தை  கட்டுக்குள் வைத்து, மனதின் அடிவாரத்துக்கு செலுத்தினால்  ''சித்தின் '' அனுபவம் முக்தி ஸ்வரூபமாக  தெரியும் இதை தான் மணிவாசகர்  ''சித்தத்தை சிவன் பால்  வைத்து ''  என்கிறார் என்பது இப்போது விளங்கும்.  


sivan jaykay

unread,
Sep 20, 2021, 7:28:30 PM9/20/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீமந்  நாராயணீயம் -   நங்கநல்லூர்  J K  SIVAN  --
57வது தசகம் 

57. தோழனாக வந்து தோளில் எமனை சுமந்தவன் 

நாம்  இதுவரை  படித்ததில்  ரெண்டு கொடியவர்கள்  கம்சனால் கிருஷ்ணனைக் கொல்ல  அனுப்பப்படாதவர்கள். ஒருவன்  காளிங்கன். அவனை கிருஷ்ணன்  கொல்லாமல் உயிர்ப்பிச்சை அளித்து நாடு கடத்திவிட்டான்.  மற்றவன்  தேனுகாசுரன்.  பிருந்தாவனத்தின் அடர்ந்த உட்பகுதியில்  தாளவனத்தில் கழுதை ரூபத்தில் இருந்தவன்.  அவன்  பலராமன், கிருஷ்ணன்  மற்ற கோபர்களை தாக்கியதன்  காரணம் அவனது  எல்லைக்குள்  இவர்கள் நுழைந்து பழங்களை பறித்து தின்றதால் தான்.   

''அண்ணா  நீயே பலவான், பலராமன். இவனை எங்கு அனுப்பவேண்டுமோ அங்கே அனுப்பு'' என்று தேனுகாசுரன் முடிவை பலராமன் கையில் கொடுத்துவிட்டு பசுக்களை, நண்பர்களைக் காண சென்றவன் கிருஷ்ணன்.  இந்த சேதி எல்லாம் கம்சனுக்கு போய்க்கொண்டு தான் இருந்தது.  இனி அவன் என்ன செய்யப்போகிறான் என்று நாராயணனுக்கும்  நாராயண  பட்டத்ரிக்கும்  மட்டும் தெரியும். அவர் எப்படி சொல்கிறார் எங்கு இந்த தசகத்தில் பார்ப்போம்; 

रामसख: क्वापि दिने कामद भगवन् गतो भवान् विपिनम् ।
सूनुभिरपि गोपानां धेनुभिरभिसंवृतो लसद्वेष: ॥१॥

raamasakha kvaapi dine kaamada bhagavan gatO bhavaan vipinam |
suunubhirapi gOpaanaaM dhenubhirabhisanvR^itO lasadveShaH ||1.

ராமஸக²꞉ க்வாபி தி³னே காமத³ ப⁴க³வன் க³தோ ப⁴வான்விபினம் |
ஸூனுபி⁴ரபி கோ³பானாம் தே⁴னுபி⁴ரபி⁴ஸம்வ்ருதோ லஸத்³வேஷ꞉ || 57-1 ||

''ரொம்ப நாள் ஆகிவிட்டதே. கம்சன் சும்மா இருக்கமாட்டானே!   பிருந்தாவனத்திலிருந்து  காளிங்கன் வெளியேற்றப்பட்டான். தேனுகாசுரன் என்பவன் கிருஷ்ணன்  பலராமன் கூட்டத்தால் மாண்டான் என்ற சேதி வேறு  மதுராவை அடைந்ததும்  மீண்டும் யோசித்தான். அடுத்த நடவடிக்கை என்ன? ஒரு திட்டம் உருவாகியது இன்னொரு பலம் கொண்ட ராக்ஷஸன் புறப்பட்டான்.

பிருந்தாவனத்தில் வழக்கம்போல் கிருஷ்ணன் பலராமன் மற்ற யாதவ சிறுவர்கள்  பசுக்களோடும் கன்றுகளோடும் காட்டுக்கு சென்றார்கள்.  

सन्दर्शयन् बलाय स्वैरं वृन्दावनश्रियं विमलाम् ।
काण्डीरै: सह बालैर्भाण्डीरकमागमो वटं क्रीडन् ॥२॥

sandarshayan balaaya svairaM bR^indaavanashriyaM vimalaam |
kaaNDiiraiH saha baalai-rbhaaNDiirakamaagamO vaTaM kriiDan ||2

ஸந்த³ர்ஶயன்ப³லாய ஸ்வைரம் வ்ருந்தா³வனஶ்ரியம் விமலாம் |
காண்டீ³ரை꞉ ஸஹ பா³லைர்பா⁴ண்டீ³ரகமாக³மோ வடம் க்ரீட³ன் || 57-2 ||

பிருந்தாவனத்தின் அழகு கண்ணா, உன்னை எப்போதும்  கவர்ந்தது அல்லவா. அதை வர்ணித் துக்கொண்டே நண்பர்களுக்கு இயற்கை அழகை காண்பித்து ரசித்தாய் அல்லவா?  எல்லோரும்  கையில் மாடுகளை விரட்டும் குச்சிகளை வைத்து விளையாடிக்கொண்டிருப்பீர்களே.  அங்கே  ஒரு பெரிய  ஆலமரம் உண்டே.  அதன் பெயர்   கூட  பண்டீரகம்  இல்லையா கிருஷ்ணா? . அதன் வளைந்த வேர்   நீ அமரும்  சிம்மாசனம் எப்போதும்,   இல்லையா குருவாயூரப்பா?

तावत्तावकनिधनस्पृहयालुर्गोपमूर्तिरदयालु: ।
दैत्य: प्रलम्बनामा प्रलम्बबाहुं भवन्तमापेदे ॥३॥

taavattaavaka nidhanaspR^ihayaaluH gOpamuurtiradayaaluH |
daityaH pralambanaamaa pralambabaahuM bhavantamaapede ||3

தாவத்தாவகனித⁴ன-ஸ்ப்ருஹயாலுர்கோ³பமூர்திரத³யாலு꞉ |
தை³த்ய꞉ ப்ரலம்ப³னாமா ப்ரலம்ப³பா³ஹும் ப⁴வந்தமாபேதே³ || 57-3 ||

இந்த சமயத்தில் தான்  கம்சனால் அனுப்பப்பட்ட அடுத்த ராக்ஷஸன்  பிரலம்பாசுரன் பிருந்தாவனத்தில் உனக்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தான். கருணையற்ற கொடூர  ராக்ஷஸன் அவன். ரொம்ப சாமர்த்தியமாக அவன் உனது நண்பர்களின் ஒருவனைப் போலவே  உருவம் கொண்டு  உன் நண்பர்களோடு  கலந்து  விளையாட்டிலும் ஈடுபட்டான். அவன் கைகள் நீண்டு  கால் முட்டியை தொட்டது.  

जानन्नप्यविजानन्निव तेन समं निबद्धसौहार्द: ।
वटनिकटे पटुपशुपव्याबद्धं द्वन्द्वयुद्धमारब्धा: ॥४॥

jaanannapyavijaananniva tena samaM nibaddhasauhaardaH |
vaTanikaTe paTupashupavyaabaddhaM dvandvayuddhamaarabdhaaH ||4

ஜானந்னப்யவிஜானந்னிவ தேன ஸமம் நிப³த்³த⁴ஸௌஹார்த³꞉ |
வடனிகடே படுபஶுபவ்யாப³த்³த⁴ம் த்³வந்த்³வயுத்³த⁴மாரப்³தா⁴꞉ || 57-4 ||

உன் நண்பர்களை உனக்கு தெரியும் என்பதை விட கிருஷ்ணா,  நீ உலகில் எல்லாவற்றையும், எல்லோரையும் அறிந்தவன் என்பதால் ஒரு அசுரன் உன் நண்பர்களில் ஒருவனாக உன்னோடு விளையாடுவது போல் வந்து சரியான நேரத்தில் உன்னைக் கொல்ல முயற்சி செய்வது உனக்கு தெரியாமல் போகுமா?  நீ மாயாஜாலக்காரன் அல்லவா? அவனை அறிந்துகொண்டதை வெளியே காட்டிக்கொள்ளவே இல்லை.  அசுரனுக்கு தனது வேஷம் அறியப்படவில்லை என்ற சந்தோஷம்!

ஓடிப்பிடித்து ஒளிந்து கொண்டு வழக்கம்போல்  சிறுவர்கள் விளையாடினீர்கள்.   ரெண்டு கட்சியாக பிரிந்து கொண்டு  விளையாட்டாக  த்வந்த யுத்தம், மல்யுத்தம் செய்தீர்கள். 

गोपान् विभज्य तन्वन् सङ्घं बलभद्रकं भवत्कमपि ।
त्वद्बलभीरुं दैत्यं त्वद्बलगतमन्वमन्यथा भगवन् ॥५॥

gOpaan vibhajya tanvan sanghaM balabhadrakaM bhavatkamapi |
tvad balabhiitaM daityaM tvadbalagata manvamanyathaa bhagavan ||5

கோ³பான்விப⁴ஜ்ய தன்வன்ஸங்க⁴ம் ப³லப⁴த்³ரகம் ப⁴வத்கமபி |
த்வத்³ப³லபீ⁴தம் தை³த்யம் த்வத்³ப³லக³தமன்வமன்யதா² ப⁴க³வன் || 57-5 ||
[** த்வத்³ப³லபீ⁴ரும் **]

நீ எவ்வளவு சாமர்த்தியக்காரன் பார்.  இரண்டு கட்சிகளில் நீ ஒருபக்கமும்  பலராமன் மறு பக்கமும் தலைவர்கள்.  பிரலம்பாசுரனை  உன்தோழர்களில் ஒருவனாக உன் கோஷ்டியில் இணைத்துக் கொண்டாய். அவனை அருகில் வைத்துக் கொள்வது  அவனைக் கண்காணிக்க உனக்கு சௌகர்யம் அல்லவா?

कल्पितविजेतृवहने समरे परयूथगं स्वदयिततरम् ।
श्रीदामानमधत्था: पराजितो भक्तदासतां प्रथयन् ॥६॥

kalpita vijetR^ivahane samare parayuuthagaM svadayitataram |
shriidaamaanamadhatthaaH paraajitO bhaktadaasataaM prathayan ||6

கல்பிதவிஜேத்ருவஹனே ஸமரே பரயூத²க³ம் ஸ்வத³யிததரம் |
ஶ்ரீதா³மானமத⁴த்தா²꞉ பராஜிதோ ப⁴க்ததா³ஸதாம் ப்ரத²யன் || 57-6 ||

இந்த போட்டியில்  ஒரு கண்டிஷன். விதி முறை. என்னவென்றால், தோற்றவன்  ஜெயித்தவனை தோளில்  தூக்கிக் கொண்டு சுற்றி  ஓடவேண்டும்.  நீ  உன்  பக்தர்களுக்கு அவ்வாறு தானே  அடிமையாக அவர்களை சுமந்து துன்பத்திலிருந்து இன்பத்துக்கு தூக்கிச் செல்பவன்.  தோற்றுப் போன நீ  ஸ்ரீ தாமன் எனும்  ஒரு தோழனை, பலராமன் கோஷ்டியில் இருப்பவனை சுமந்துகொண்டு நீ ஓடினாய். 

एवं बहुषु विभूमन् बालेषु वहत्सु वाह्यमानेषु ।
रामविजित: प्रलम्बो जहार तं दूरतो भवद्भीत्या ॥७॥

evaM bahuShu vibhuuman baaleShu vahatsu vaahyamaaneShu |
raamavijitaH pralambO jahaara taM duuratO bhavadbhiityaa ||7

ஏவம் ப³ஹுஷு விபூ⁴மன் பா³லேஷு வஹத்ஸு வாஹ்யமானேஷு |
ராமவிஜித꞉ ப்ரலம்போ³ ஜஹார தம் தூ³ரதோ ப⁴வத்³பீ⁴த்யா || 57-7 ||

ஒவ்வொரு ஆட்டத்திலும்  ஒவ்வொருவர் தோல்வி , வெற்றி என்று மாறி மாறி  ஒருவரை ஒருவர் சுமந்துகொண்டு ஓடுவது வேடிக்கையாக இருந்து பொழுது போயிற்று.  உன் கட்சியிலிருந்த பிரலம்பாசுரனை பலராமன் தோற்கடித்ததால்   அசுரன்  பலராமனை தோளில்  சுமந்து ஓடவேண்டும்.  வெகுதூரம் ஓடினார்கள்.

त्वद्दूरं गमयन्तं तं दृष्ट्वा हलिनि विहितगरिमभरे ।
दैत्य: स्वरूपमागाद्यद्रूपात् स हि बलोऽपि चकितोऽभूत् ॥८॥

tvadduuraM gamayantaM tandR^iShTvaa halini vihita garimabhare |
daityaH svaruupamaagaadyadruupaat sa hi balO(a)pi chakitO(a)bhuut ||8

த்வத்³தூ³ரம் க³மயந்தம் தம் த்³ருஷ்ட்வா ஹலினி விஹிதக³ரிமப⁴ரே |
தை³த்ய꞉ ஸ்வரூபமாகா³த்³யத்³ரூபாத்ஸ ஹி ப³லோ(அ)பி சகிதோ(அ)பூ⁴த் || 57-8 ||

பிரலம்பாசுரன் திட்டம் வேறு.  தோற்பது போல் நடித்து பலராமனை வெகுதூரம்  உன்னிடமிருந்து பிரித்து தூக்கிக்கொண்டு போய் ஓடி  தனிமையில் யாரும்  காணாத இடத்தில் அவனைக் கொல்வது.
பிரலம்பாசுரன் பட்டியலில்  கிருஷ்ணன் பெயர் தவிர  பலராமன் பெயரும்  கொல்லப்பட வேண்டியவர்கள் என்று இருந்ததே.   பலராமனிடம்  கிருஷ்ணன்  ஏற்கனவே ரஹஸ்யமாக பிரலம்பாசுரனை அடையாளம் காட்டி உஷார் படுத்தி இருந்ததால்  பலராமன்  பிரலம்பாசுரனுடைய  கழுத்தில் உட்கார்ந்ததும்   தனது உடலின் கனத்தை அதிகமாக்கிக் கொண்டுவிட்டான்.  ''அடாடா இந்த குண்டுப்பையன்  எவ்வளவு   கனமாக இருக்கிறான்   என்று அவனைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு ஓடினான் பிரலம்பாசுரன். சற்று தூரம் போனதும் அவனது கனம் தாங்கமுடியாமல் தனது ராக்ஷஸ ஸ்வயரூபத்தை எடுத்துக்கொண்டான் பிரலம்பாசுரன்.   அசுரனின்  கோர ஸ்வருபத்தைக் கண்டு ஒரு கணம்  பலராமன் திகைத்துவிட்டான். 

उच्चतया दैत्यतनोस्त्वन्मुखमालोक्य दूरतो राम: ।
विगतभयो दृढमुष्ट्या भृशदुष्टं सपदि पिष्टवानेनम् ॥९॥

uchchatayaa daityatanOstvanmukhaM aalOkya duuratO raamaH |
vigatabhayO dR^iDhamuShTyaa bhR^ishaduShTaM sapadi piShTavaanenam ||9

உச்சதயா தை³த்யதனோஸ்த்வன்முக²மாலோக்ய தூ³ரதோ ராம꞉ |
விக³தப⁴யோ த்³ருட⁴முஷ்ட்யா ப்⁴ருஶது³ஷ்டம் ஸபதி³ பிஷ்டவானேனம் || 57-9 ||

வாதபுரீசா,  ஆகாயத்துக்கும் பூமிக்குமாக உயரமாக இருந்த பிரலம்பாசுரன் தோளில்  உட்கார்ந் திருந்த பலராமன் கண்ணுக்கு  வெகுதூரத்தில் இருந்த நீ நன்றாக தெரிந்தாய்.  உன்னைப் பார்த்ததுமே பலராமன் அச்சம் நீங்கியது.  நீ செய்த சைகை புரிந்தது.  தைர்யம் மீண்டும் நெஞ்சில்  குடிகொண்டது.  கால்களால் அவன் கழுத்தை நெருக்கி, பலமாக  அசுரனின் மண்டையை பலமாக கைகளால் அடித்து பிளந்தான். 

हत्वा दानववीरं प्राप्तं बलमालिलिङ्गिथ प्रेम्णा ।
तावन्मिलतोर्युवयो: शिरसि कृता पुष्पवृष्टिरमरगणै: ॥१०॥

hatvaa daanavaviiraM praaptaM balamaalilingitha peramNaa |
taavanmilatOryuvayOH shirasi kR^itaa puShpavR^iShTiramaragaNaiH ||10

ஹத்வா தா³னவவீரம் ப்ராப்தம் ப³லமாலிலிங்கி³த² ப்ரேம்ணா |
தாவன்மிலதோர்யுவயோ꞉ ஶிரஸி க்ருதா புஷ்பவ்ருஷ்டிரமரக³ணை꞉ || 57-10 ||

பலராமனின் வெற்றியில்  நீ மகிழ்ந்தாய்.  ஆசையாக அவனை அணைத்துக் கொண்டாய். தேவர்கள் விண்ணிலிருந்து வழக்கம்போல்  ரெடியாக  கையில் மலர்கள் வைத்துக்கொண்டு மலர்மாரி பொழிந்தார்கள். 

 आलम्बो भुवनानां प्रालम्बं निधनमेवमारचयन् ।
कालं विहाय सद्यो लोलम्बरुचे हरे हरे: क्लेशान् ॥११॥

aalambO bhuvanaanaaM praalambaM nidhanamevaM aarachayan |
kaalaM vihaaya sadyO lOlambaruche hare hareH kleshaan ||11

ஆலம்போ³ பு⁴வனானாம் ப்ராலம்ப³ம் நித⁴னமேவமாரசயன் |
காலம் விஹாய ஸத்³யோ லோலம்ப³ருசே ஹரே ஹரே꞉ க்லேஶான் || 57-11 ||

எண்டே குருவாயூரப்பா  அப்புறம் நடந்ததை  பலராமன் உன்னிடம் சொன்னதை  நானும் அறிவேன் என்பதால் உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்.   இருகால்களாலும் பிரலம்பாசுரன் கழுத்தை இறுக்கி நெரித்த பலராமன் அவன் தோளில்  உட்கார்ந்தவாறே அவன் மண்டையை பலமாக  தாக்கினான். கழுத்தை நெறுக்கியதால் மூச்சு விடமுடியாமல் திணறிய அசுரன் மண்டையில் அடியால் கண் இருண்டு , தலை சுற்றி கீழே விழுந்தபோது அவனுக்கு எப்போதோ மூச்சு நின்று போயிருந்தது.  அவன் விழுவதற்கு முன்பே பலராமன் ஜாக்கிரதையாக  தோளிலிருந்து கீழே தூர குதித்துவிட்டான்.  பாவம் உன் கையால் மோக்ஷம் பெற  ப்ரலம்பாசுரனுக்கு பாக்யம் இல்லாவிட்டாலும் நீ தானே  பலராமனும் கூட.  என் மேலும் கருணை கொண்டு என் நோய் நீக்கி என்னை ரக்ஷிப்பாய்.

sivan jaykay

unread,
Sep 20, 2021, 7:28:37 PM9/20/21
to amrith...@googlegroups.com
ஒரு அற்புத ஞானி -  நங்கநல்லூர்  J K SIVAN 
- ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்-

அம்மாவின் மூன்று தட்டுகள்...

ஒவ்வொரு  தாய்க்கும்  தந்தைக்கும் தங்கள் பிள்ளைகள் பெண்களைப்பற்றி  கலர் கலராக கனவுகள். எல்லாம் சுயநலம் அல்ல. அவர்கள் சந்தோஷமாக இருக்கவேண்டும். எல்லா கஷ்டங்களும் நம்மோடு போகட்டும் என்ற பரந்த தியாக மனப்பான்மை.

இவ்வாறு  மனித மனம் எத்தனையோ எதிர்பார்ப்புகளை அடைய முடியாமல்  வாடி வதங்குகிறது.  துன்புறுகிறது. விவேகம் அதை டாக்டர் போல் சாமாதானமடைய செய்யும் வரை இந்த துன்ப நோய், ஏமாற்றத்தால் அதிகமாகி வாட்டுகிறது. இதில் படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடே கிடையாது. ஆண் பெண் பேதமே கிடையாது. மேலும் மேலும் இந்த பாதிப்பு தொடர்ந்து கொண்டே போனால் அது மனிதனின் வாழ்க்கையையே தின்று விடுகிறது.

சொந்தத்தில் சேஷாத்ரிக்கு என்று மனதில் நினைத்திருந்த  காகினிக்கு  வேறொரு பையனோடு கல்யாணம் நிச்சயமாகி விட்டது. காரணம்,   சேஷாத்திரியின் ஜாதக பலன்.  அவன் கிரஹஸ்தன் ஆகமாட்டான், சன்யாசியாவான் என்ற கணிப்பு.  காமினியின்  கல்யாணத்துக்கு  அழைப்பு வந்தது, சேஷாத்ரியின் அம்மா மரகதம் கல்யாணத்துக்கு  சென்று பெண்ணை வாழ்த்தி விட்டு  வந்தாள். அதன் பின்  மரகதம் முற்றிலும் துறந்த சன்யாசினியானாள்.   தேகத்தை லக்ஷியம் செய்யவில்லை. மெலிந்தாள் . உணவை வெறுத்தாள். உபவாசங்களால் இளைத்தாள் . ''மரணமே வா'' என்று வரவேற்றாள். நோய் வலுத்தது. அவள் சகோதரன் நரசிம்ம சாஸ்திரி காலமானார் என்ற சேதி வந்தது. அது எரியும் தீயில் எண்ணையை வார்த்தது. நாட்கள் மரகதத்துக்கு வேகமாகவே நகர்ந்தன. கார்த்திகை மாதம் வந்தது. சுக்ல பக்ஷ தசமியும் நெருங்கியது.

ஒரு நாள்  அன்ன ஆகாரம் இல்லாமல்  வெறும் கற்சிலையாக  எங்கோ வெட்டவெளியைப் பார்த்தபடி   விரக்தியாக மரகதம் அமர்ந்திருந்த  போது வெளியே சென்றிருந்த  சேஷாத்ரி வீடு திரும்பினான். 
''சேஷு இங்கே வாடா ''
''அம்மா! கூப்டியா. இதோ இருக்கிறேன் அம்மா. சொல். என்னம்மா  வேணும் '' - தெய்வம் கேட்டது.
''நீ தாண்டா கண்ணே வேணும். எனக்கு  வேறெதுவும் வேண்டாம். நாளை சாயங்காலம் நான் இருக்க மாட்டேன். அதுவரை எங்கும் வெளியே போகாமல் என்னோடேயே இருக்கிறாயா?''
''சரிம்மா''
மறுநாள் ஏகாதசி. மரகதம் எழுந்து உட்கார்ந்தாள். மெதுவாக நகர்ந்தாள் விளக்கேற்றினாள் . கண்களை மூடினாள்.
''சத் சங்கத்வே நிஸ்ஸங்கத்வம். நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம், நீர்மோஹத்வே நிஸ்சல தத்வம், நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி:'' 

ஆதி சங்கரரின் ஸ்லோகத்தை மெதுவாக முடியாமல் முனகினாள். எவ்வளவு சிறந்த பாடகி. கந்தர்வ கானம் பண்ணி பெயரெடுத்தவள்.  அற்புதமான சாரீரம் படைத்தவள்,  இப்போது எல்லாம் அடங்கி ஒடுங்கி விட்டதால்  முனகலாகிவிட்டது. 

''தர்சன தப்ரஸ்தஸி ஜனநாத் கமலாலயே, காச்யாந்து மரணான் முக்தி ஸ்மரணாத் அருணாச்சலே ''
அருணாசலத்தை நினைத்தாலே, ஸ்மரணம் பண்ணினாலேயே, முக்தி. 

இந்த ரெண்டு ஸ்லோகங்களையும் ரெண்டு மூணு தடவை திருப்பி திருப்பி சொன்னாள் . அருகே இருந்த சேஷாத்திரி மார்பில் தனது குச்சி போன்ற கைகளால் தட்டி தட்டி சொன்னாள். மூன்று தடவை அடித்து சொன்னாள் .

''சேஷா, நீ அந்த ''அம்பா சிவே'' என்ற கீர்த்தனத்தை ஒரு தடவை பாடேன். முடிஞ்சா நானும் சேர்ந்து உன்னோடு பாடறேண்டா''

சேஷாத்ரி அர்த்தம் உணர்ந்து அழகாக பாடினான். முக்கி முனகி தானும் சேஷாத்ரியோடு சேர்ந்து மரகதமும் பாடியது அந்த ஏழைக் குடிசையில் நான்கு மண் சுவர்களையும் தாண்டி எல்லா லோகங்களையும் தரிசித்து விண்ணில் எதிரொலித்தது. சிவன் பார்வதி காதிலும் விழுந்தது. மகிழ்ந்தார்கள்.

பாட்டு முடிந்தது. மெதுவாக ஈனஸ்வரத்தில் மரகதம் ''அருணாசலா . அருணாசலா, அருணாசலா என்று மூன்று தடவை உச்சரித்தாள் . நாபியிலிருந்து ப்ராணவாயுவுடன் கலந்து வார்த்தை வெளியே தெறித்தது. சேஷாத்திரியின் மடியில் இருந்த தலை சாய்ந்தது. சேஷாத்ரியின் கண்களில் கண்ணீர் பெருகி அவள் முகத்தில் சூடான வெந்நீர் போல் விழுந்தது. சூடோ குளிர்ச்சியோ  இனி அவளுக்கு இல்லை. எல்லாம் ஒன்றே.   சேஷாத்ரியின் தலையும் பின்னால் சாய்ந்தது. தாய் மரணத்தை தழுவ மகன் மூர்ச்சை அடைய இரு உடல்களும் அசைவற்று சிறிது நேரம் அந்த சிறு குடிசையில் இருந்ததை எவரும் அறியவில்லை.  உலகம் தன்னுடைய  காரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

சூரியன் பயணித்துக் கொண்டிருந்தான். சேஷாத்ரி மூர்ச்சை தெளிந்தான். முகத்தில் என்ன உணர்ச்சி என்று சொல்லவே முடியாத உறைந்த முகமாக இப்போது நாம் சொல்கிறோமே அந்த ''ரோபோ'' மாதிரி ஆனான். அண்டை அசல் தெரிந்தவர் தெரியாதவர் எல்லாருக்கும் விஷயம் பரவியது. கூடவே தம்பியும் வந்து சேர்ந்தான். ரெண்டு பேருமாக மற்றவர் உதவியோடு அம்மா மரகதத்தை, இனி அவள் உடல் தானே, அதை அக்னியிடம் சேர்ப்பித்தனர்.

சேஷாத்ரியின் மனம் வெறுப்பு கோபம், நிர்க்கதி, போன்ற நெருப்புகளால் எரிந்தது. ஞானம், சாந்தம் என்ற இரு தீயணைக்கும் கருவிகளால் அதை சமனப் படுத்தினார். ஆம் இனி நாம் சேஷாத்ரியை அவன் இவன் என்று சொல்லமாட்டோம்.  சொல்லக்கூடாது. அந்த  ஸ்டேஜ் தாண்டியாச்சு.  அந்த நிலை கடந்த மஹான்  அவர். தாயின் சடங்குகள் முடிந்தன.

சித்தப்பா ராமஸ்வாமி ஜோசியர் வீட்டுக்கு சேஷாத்ரி அழைக்கப் பட்டார். பூர்வீக நில புலன் கொஞ்சம். அதோடு ஜோசிய வருமானம் போதும் என்கிற அளவுக்கு இருந்தது.குடும்பத்தில் வசதியோ வறுமையோ தலை தூக்கும் பிரச்சனையாக இல்லை.

பந்து பூமியில் பட்டு எழும்புமே அது போல் தனது தாய் மரகதம் சொன்ன, இல்லை மார்பில் அடித்து, தட்டி, சொன்ன, வார்த்தைகள் மூன்று ஆசைகளையும் தட்டி வெளியே கொண்டு தள்ளி விட்டது. மண், பெண் பொன் . ஒரு மனிதனின் வாழ்விலேயே இது மூன்றும் தானே மிகப் பெரிய பிரச்னை. அதற்கு வழியும் அவளே சொல்லித் தந்தாளே . சும்மாவா? அடித்து அல்லவோ சொன்னாள் . ''அருணாசலா, அருணாசலா அருணாசலா....... சேஷாத்திரியால் குடும்பத்தில் இருக்க முடியவில்லை. வைராக்
யத்தை உள்ளிருந்து பூதாகாரமாக உருவெடுக்க வைத்தது.எங்கே இருக்கிறது அருணாசலம்? கேள்விப்பட்டதோடு சரி. இதுவரை போனதில்லை, எங்கிருக்கிறது திருவண்ணாமலை என்றே தெரியாது.

கால் போன போக்கிலே நடந்தார்.  என்ன அதிசயம் பாருங்கள்.  ஒரு அட்டை கீழே எங்கேயோ கிடந்தது. அதை கையில் எடுத்தார். ஒரு கரித்துண்டால் ஒரு மலையின் வடிவத்தை வரைந்தார். அது என்ன ஐந்து சிகரங்கள்? என்னவோ தெரியவில்லை. மனதில் தேங்கி கொப்புளித்த பக்தியாலோ வேதனையாலோ, வேறு ஏதோ என்னால் சொல்லமுடியாத சக்தியாலோ, அந்த மலை உருவம் அப்படியே திருவண்ணாமலையை நேரில் படமெடுத்தால் போல் அமைந்து விட்டது. அவர் பார்த்ததே இல்லை. எங்கே இருக்கிறதென்றே தெரியாதே!. தகடுகள் கலர் கலராக சேகரித்து அதை பூஜித்தார். அதுதான் அவர் தெய்வம்.

ராமஸ்வாமி ஜோசியர் வீட்டில் பூஜை அன்றாடம் நடக்கும். சேஷாத்ரி எங்கோ அந்த வீட்டின் ஒரு மூலையில் ஒரு சிறு அறையில். அம்மாவிடமிருந்த காமாக்ஷி படம், ஸ்ரீ ராமர் படம், தான் வரைந்த அண்ணாமலை படம் இதெற்கெல்லாம் பூஜை நைவேத்யம் பண்ணி காலை விடிந்தது முதல் பகல் பன்னிரண்டு தாண்டியும் பூஜை.கதவை சார்த்திக் கொண்டு உள்ளேயே. பாதிநாள் உபவாசம். தாத்தா காமகோடி சாஸ்திரி உபதேசித்த மஹா ஷோடசி மந்திர உச்சாடனம். அப்பப்போ ''அருணாச்சலேசா, சோணாத்ரிநாதா'' என்ற குரல் வெளியே கேட்கும். இரவு தூக்கம் இல்லை. '' 'ஜாதவேதஸே ''-- துர்கா சூக்தம் ஜபம். காலை நாலுமணிக்கே ஸ்நானம்.

''டேய் வேண்டாம்டா, சேஷு, கடுமையான ஜபம் உனக்கு எதற்குடா?'' ஜோசியர் சொல்லிக்கொண்டே இருந்தார். யார் கேட்டார்கள்?

நண்பர் குன்னப்பாக்கம் ஸ்ரீநிவாஸாச்சாரியுடன் முன்பெல்லாம் பேசுவார், தர்க்கம், சர்ச்சைகள் நடக்கும். எல்லாம் நின்று போனது. அடிக்கடி ஸ்நானம். எப்போதும் கையில் தீர்த்த பாத்திரம்.  சக்ரத்தாழ்வார் சந்நிதியில் வடக்கு நோக்கி அமர்ந்து ஜபம். யார் வேண்டுமானாலும் காலையில் இருந்து பகல் பன்னிரண்டு மணி வரை அங்கேயும், மாலை ரெண்டு மணிமுதல் காமாக்ஷி சந்நிதியிலும் அவரை பார்க்கலாம். ஜபம் ஜபம் ஜபம். ப்ரதக்ஷிணம். த்யானம். ஸ்லோகம். நமஸ்காரம். நடு ராத்ரி வீடு திரும்புவார். உபவாசம். பட்டினி. காமாக்ஷி குங்குமம் நெத்தி நிறைந்து மறைத்திருக்கும். தனக்குத் தானே ஏதோ பேச்சு. சூரிய நமஸ்காரம். யாராவது ஏதாவது கேட்டால்     ஸம்ஸ்க்ரிதத்தில் ஒன்று ரெண்டு வார்த்தை. எந்த பெண்ணை தெருவில் பார்த்தாலும் நமஸ்காரம். தெரிந்தவர் யாரானாலும்,  பெரிசோ சிறிசோ,  அவர்கள் பாதங்களை தொட்டு வணங்குவது கண்ணில் ஒற்றிக் கொள்வது. ''ப்ராமண பாதமும் பகவான் பாதமும் ஒண்ணு '' என்று  அடிக்கடி சொல்வார்.

தெருவில் பெருமாள் வீதி ஊர்வலம் வரும். ஓடிப் போய் முன்னால் இருக்கும் கல், குப்பை, எச்சில் இலை எல்லாம் அப்புறப் படுத்துவார். சில சமயம் பின்னால் வித்வத் கோஷ்டி ஸ்லோகம், பாட்டு சொல்லிக் கொண்டு வரும். அதில் கலந்து கொள்வார். தானும் சொல்வார். பாடுவார்.
காஞ்சிபுரத்தில் கங்காபாய் சத்திரம் என்று ஒரு இடம். அங்கிருந்து ஜோசியர் வீடு நாலு மைல் . இரவும் பகலும் ஏதோ ஸ்லோகம் சொல்லிக்கொண்டே நடந்து வருவார். எங்கே தங்குகிறார் என்று அவருக்கே தெரியாது. க்ஷவரம் கிடையாது. யாராவது வீட்டிலிருந்து தேடி வந்து அழைத்து போனால் வீடு திரும்புவது என்ற நிலை வந்து விட்டது.

வாங்கீபுரம் ஸ்ரீனிவாச அய்யங்கார் வீட்டுக்கு அடிக்கடி போவார். அவர்களுக்கு சேஷாத்ரி ஒரு பிள்ளை போல. தோசை, காஞ்சிபுரம் இட்லி, வடை என்று பெருமாள்  கோவிலிலிருந்து ஏதாவது அங்கே கொண்டுவந்து  வைத்திருப்பார்கள். கொடுப்பார்கள். இல்லையென்றால் கேட்டு வாங்கி சாப்பிடுவார். பாதி அதில் காக்கைக்கும் நாய்க்கும் பங்கு உண்டு. 

''எதுக்குடா சேஷு இப்படி விடாமல் எப்போ பார்த்தாலும் ஜெபம் பண்றே'' சித்தப்பா கேட்டார்.
''கர்மம் தொலையணும் '' என சேஷாத்ரியின் பதில் வந்தது .

தொடரும் 

sivan jaykay

unread,
Sep 21, 2021, 9:36:48 AM9/21/21
to amrith...@googlegroups.com
உள்ளது நாற்பது  -   நங்கநல்லூர்  J K SIVAN  --
ஸ்ரீ  பகவான்  ரமண மஹரிஷி 

 12.   இருந்து ஒளிர்வது. 

அறிவறி யாமையு மற்றதறி  வாமே 
யறியும்  துண்மையறிவாகா - தறிதற் 
கறிவித்தற்  கன்னியமின் றாய விர்வ தாற்றா 
னறிவாகும்  பாழன் றறிவாய் - 12.

அறிவு  என்பது ஆத்ம  ஸ்வரூபம் என்று திரும்ப திரும்ப  சொல்லிக்கொண்டே  இருக்கிறோம். வெளி விஷயங்களை, ப்ரக்ருதிக்கு உள்ளே  உள்ளவற்றை மட்டும் அறிவது அபரா எனப்படும்.  ஜீவன் சம்பந்தப்பட்ட  அறிவு  பரா. சம்பந்தப்பட்ட விஷயம். எனக்கு தமிழ்  தெரியும் என்றால் என்ன அர்த்தம்? தமிழ் பேசும்போது உண்டாகும் சப்தம், அவற்றால் அறியும்  உருவங்களும் கருத்துக்களும் என் மனதில் பதிந்தவை. ஆகவே  தமிழ் மொழி அறிவு  எனக்கு விக்ஷேபம்.  மனம் சார்ந்தது.  மனத்திற்கு ஒரு திரை இந்த விக்ஷேபம். இந்த அறிவு, அறியாமை ரெண்டுமே  நீங்கவேண்டும்.  புலன்கள் வழியாக  விஷயங்கங்களை அறிவது,  வெளி விஷயங்களை அறிவது  ஞானமாகாது.

தன்னைத்தவிர  வேறொரு ஒளிவீசும் வஸ்து இல்லை  என்று வேறு எதுவும் இல்லாமல் இருக்கிற ஆத்மாவை அறிவது தான்  ஆத்மஞானம். அது வெறும் விஷயங்கள் இல்லை என்று தெரிந்துகொள்வது தான் அறிவு  என்கிறார் ரமணர் இந்த பாடலில்.

ஸ்ரீ  ரமணர்  அக்ஷரமணமாலையில் ஒரு இடத்தில்  ''ராப் பகல் இல்லாத வெறு வெளி வீட்டில்  ரமித்திடுவோம் வா  அருணாசலா '' என்கிறார்.  என்ன அர்த்தம்?   உலக  வெளி விஷயங்களை  கிரஹிக்கும்  மனத்தின்  உணர்ச்சி தான்  பகல். இந்தமாதிரி  வெளி விஷயங்களை உணராமல் கிரஹிக்காமல்  மனது உறங்குவது தான்  'ரா'  என்று அவர் சொல்லும் இரவு.  இந்த இரண்டு உணர்ச்சிகளும் எதிலிருந்து உற்பத்தி ஆயிற்றோ  அது தான் 'வெறுவெளி''   வெட்டவெளி என்று சித்தர்கள் பாடுவது. அங்கே  அந்நியமான வஸ்துக்கள் இல்லை, மறுப்பதற்கும் எதுவும் இல்லை. அதை தான் ''சித் ''என்ற ஸ்வயம்பிரகாசமான, தானே ஒளிவிடும் உணர்வு என்பது.   சில  இடங்களில் ''ஞப்தி '' என்று வருகிறதே அது இது தான் . அது தான் ''நான்'' எனும் ஸ்வயம்பிரகாசம்.  இதை அறிய  மனமும் வேண்டாம், புலன்களும் வேண்டாம்.   மற்றதெல்லாம்  ''பாழ்''.  மூன்று வித  நிலைகள் அதாவது விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்க நிலைகளை தான் ஞானிகள் ''முப்பாழ்''.  கோபாலக்ரிஷ்ண பாரதியாரின் ஒரு பாடலில்   ''முப்பாழும்  தாண்டி நின்று  அப்பாலே நின்றவர்க்கு இப்பார்வை கிடையாது '' என்று வருமே ஞாபகம் இருக்கிறதா? அதே தான் இது.

காணும் எல்லா தரிசனங்களும் தோன்றி மறைபவை. ஆத்ம தர்சனம் தவிர.  தானாகவே ஜோதியாக என்றும் நித்யமாக மின்னுவது.  இதை தான் ''இருந்து ஒளிர் ''  என்கிறார்.  நான் இருக்கிறேன் என்று ஆத்மா சொல்வதை தான் பகவத் ஸ்வரூபமாக  உணர்கிறோம். எங்கும் நிறைந்த ப்ரம்மம் இது தான்.  நான் யார் என்ற விசாரத்தின் பதில் தான் இது.      

sivan jaykay

unread,
Sep 21, 2021, 9:37:27 AM9/21/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN  --

78.  டாக்டரின் அதிர்ஷ்டம்.

மைலாப்பூரில் ஒரு பிரபல டாக்டர் வாழ்ந்த காலம் அது.   அவருக்கு வெகுநாட்களாக  தனது இல்லத்துக்கு  மஹா பெரியவாளை  அழைக்கவேண்டும் என்று ஆர்வம்.  1932ல்  செப்டம்பர் அக்டோபர்  மாதங்களில் சமஸ்க்ரித கல்லூரி வளாகத்தில் பெரியவா உபன்யாசத்துக்கு தவறாமல் வருவார். தரிசனம் செய்வார். முகத்தில்  அவருக்குள்ளே இருந்த ஆசை தெரியும்.  ஆனால்  எப்படி  அது சாத்தியமாகும்?   ஆனால் அது சுலபமல்லவே.  எப்படிசாத்தியமாகும்?
தினமும்  பெரியவாளை நமஸ்காரம் பண்ணுவார். 

ஒருநாள்  அப்படி அருகே நின்று நமஸ்காரம் பண்ணும்போது பெரியவா ''உனக்கு எங்கே ஜாகை?''
''இதே மைலாப்பூரில் தான் பெரியவா''
''ஓஹோ  அப்படின்னா  இன்னும்  அரைமணி நேரத்தில் உன் கிரஹத்துக்கு  வரேன் . நீ இப்பவே போய்  அங்கே  தயார் பண்ணவேண்டியதை கவனி ''
ஒரு சந்நியாசியை வீட்டுக்கு அழைப்பதற்கு சில  வரைமுறைகளுண்டு. அதை தான் பெரியவா உணர்த்தி இருக்கிறார். 
அந்த டாக்டருக்கு அப்போது  ஏற்பட்ட உணர்ச்சிகள் என் எழுத்துக்கு அப்பாற்பட்டவை என்பதால் வாசகர்கள் கற்பனைக்கே  விட்டுவிடுகிறேன்.  டாக்டருக்கு ஒரு பக்கம் ஆனந்தம், இன்னொரு பக்கம் கவலை. ஏற்பாடுகளில் ஏதாவது தவறு நிகழ்ந்து விட்டால்?
அவர் முகத்தின் கவலை ரேகை பெரியவா கண்ணில் படாமலா போகும்?  மடத்தில் ஒருவரை கூப்பிட்டு  ''நீ இந்த டாக்டரோடு போய் அங்கே  செய்யவேண்டியதை கவனிச்சு  ஒத்தாசை பண்ணு  ''
அரைமணி நேரத்தில்  பெரியவா வரும் சேதி கேட்டு அந்த தெருவே  அதிர்ந்தது. எல்லோரும் குழுமிவிட்டார்கள். பூர்ணகும்பத்தோடு வரவேற்றார் டாக்டர்.
சில நிமிஷங்கள் அந்த வீட்டில் பெரியவா அமர்ந்தார். வீட்டில் இருந்த எல்லோரையும் குழந்தைகளையும் தனித்தனியே கூப்பிட்டு  அவர்கள் யார் என்ன செய்கிறார்கள் என்று குசலம் விசாரித்தார். விபூதி குங்கும அக்ஷதை  பிரசாதம் கொடுத்தார்.  டாக்டர் கண்களில் வெகுநாளைய ஆசை நிறைவேறியதில் ஆனந்த, நன்றிக்  கண்ணீர்.

1932ம் வருஷம் அக்டோபர் 8ம் தேதி ஸ்வதேசமித்ரன் வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு மஹா பெரியவா  ஸ்ரீமுகம் வாழ்த்து செய்தி அனுப்பினார். ஸ்வதேச மித்ரன் ஆசிரியர்   ஸ்ரீ C R  ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு ரொம்ப மகிழ்ச்சி. 

இப்போது ஒரு அற்புத சம்பவம் சொல்கிறேன். மைலாப்பூரில் மஹா பெரியவா சமஸ்க்ரித கல்லூரியில் தங்கியிருந்தபோது ஒரு தீவிர பக்தர்  ஸ்ரீ  தண்டபாணி ஐயர்  (ஸ்ரீ P T  பாணி 
என்ற பிரபல பெயருக்கு சொந்தக்காரர்)  தினமும் தரிசனம் செய்ய வருவார்.  பாணி அய்யர்  P.T. பாணி பப்ளீசிங் கம்பெனி என்ற  அச்சு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தவர்.   மஹா பெரியவா விஜய யாத்திரைக்கு  என்று   ஐந்து கலசங்கள்  பொருத்திய ஒரு பல்லக்கு  தயார் செய்து  காணிக்கை யாக்கினார்.  பாணி ஐயரின்  இந்த சேவை பலராலும் போற்றப்பட்டது.  இந்த பல்லக்கில் மஹா பெரியவா அமர்ந்து பிரயாணம் செய்வதைப் பார்க்கும் பாக்கியமும்  மற்ற பக்தர்களோடு சேர்ந்து பாணி அய்யருக்கும் கிடைத்தது.  எண்ணற்ற  சமஸ்க்ரித ஸ்தோத்திரங்களை தமிழ் படுத்தி வெளியிட்டவர் ஸ்ரீ  பாணி ஐயர்.   அவரை  முதுமையில்  அவரது  திருவல்லிக்கேணி இல்லத்தில் சென்று தரிசிக்கும் பாக்யம்  எனக்கு கிடைத்தது. காரணம் அவர் என் மனைவி மூலம் ஒரு நெருங்கிய உறவினர். 

18.9.2021  அன்று சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீ  பாணி  ஐயர்  பதிப்பகத்திலிருந்து ஒரு பழைய  விருந்தை பரிமாறினார்கள். அதை மீண்டும் வெளியிட்டது காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர்.  அந்த அற்புத புத்தகத்தின் பெயர்  ''ஸ்ரீ ஸத்குரு நித்ய தர்சனம். அது 1933ம்  ஆண்டு  மஹா பெரியவா பேசிய  அனுகிரஹ பாஷணங்கள் பதிவாகியிருக்கிறது.   இந்த வெளியீட்டு விழா  ஓரிக்கை மணிமண்டபத்தில் 18.9.2021 அன்று  நிகழ்ந்தது. எனக்கு அழைப்பு வந்தும் என்னால் உடல் நிலை காரணமாக  பங்கேற்க முடியாமல் உடல் இங்கே  இருக்கையிலும்  உள்ளம் ஓரிக்கையிலுமாக  நேரம் ஊர்ந்தது. மனம் பெரியவாளையும்  ஸ்ரீ பாணி ஐயரையும்  நினைத்தது.  நன்றாக நினைவிருக்கிறது. திருவல்லிக்கேணி இல்லத்தில்  மாடியில்  ஒரு  சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த ஒற்றைநாடி தேகம்.   மேலே  அங்கவஸ்திரம் அணிந்து  இனியமுகத்துடன் என் தந்தையைப் பற்றி  விசாரித்தார்.  நான் அப்போது சென்னையில் ஒரு கப்பல் நிறுவனத்தில் பணியில் இருந்தேன்.அதுபற்றி விசாரித்தார். இது ஒரு நிழலான புகை படிந்த  அரைநூற்றாண்டுக்கும் மேலான நினைவு.  குடத்திலிட்ட தீபமாக  வாழ்ந்து மறைந்த மா மனிதர்கள் வரிசையில் ஸ்ரீ பாணி ஐயரும்  ஒருவர். 

 உள்ளம் வேண்டுமென்பவர்கள்  அணுக:  ஸ்ரீ  சந்திரசேகர்  வாட்ஸாப்ப் நம்பர் 9884885611.  ஆக்ஷேபணை இல்லை என்றால், எனக்கு ஒரு புத்தகம் அனுப்பினால் மற்ற பக்தர்களோடு சேர்ந்து இந்த முகநூல் குழுவில் பங்கேற்க தயாராக இருக்கிறேன். 

sivan jaykay

unread,
Sep 21, 2021, 7:39:11 PM9/21/21
to amrith...@googlegroups.com

ஒரு பம்பாய் கல்யாணம். ---     நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒரு அன்பர்  பம்பாயில் வாழ்பவர் என்று ஞாபகம்.   வெகு நாட்களுக்கு முன்பு எனக்கு  ஒரு கல்யாண பத்திரிகை, கல்யாணம் நடந்த வீடு  படம்  அனுப்பி இருந்தார்.  அதைப்  பார்த்தவுடனேயே  எனக்கு ஆனந்தமாக இருந்தது.  அதை பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்று மனதில் ஒரு எண்ணம் இன்று அதைப் பார்த்தபின் தோன்றியது.   இந்த கல்யாணம்  அவர் வீட்டிலோ, அவருக்கு தெரிந்தவர் யார் வீட்டிலோ நடந்திருக்கிறது, எப்போது தெரியுமா ?

 83 வருஷங்களுக்கு முன்னே. எங்கே?  பம்பாயில்? ஆஹா? அப்போது  மும்பை இல்லை. பம்பாய். இப்போது மாதிரி  நெருப்பு பறக்கும் அவசரம் இல்லை.  எங்கும் எதிலும் இடநெருக்கடி, ஓட்டம் இல்லை. ஏதோ தஞ்சாவூர் பக்கத்தில் கிராமம் மாதிரி மாதுங்கா.   கல்யாண  விபரங்கள் சொல்ல வேண்டாமா?
மணி அய்யர்  எதனாலோ, தன்னனுடைய  மைத்துனன்  சிரஞ்சீவி சிவராமக்ரிஷ்ணனுக்கு தனது முன்னிலையில்  கல்யாணம் ஏற்பாடு செய்து அற்புதமாக அந்த கல்யாணம் நடந்தது.   சம்பந்தி வேறு யாருமில்லை, ஸ்ரீமான்   T A  ராமஸ்வாமி ஐயர்.  எங்கே உத்யோகம் இந்த ராமஸ்வாமி  ஐயருக்கு என்று பத்திரிகை சொல்கிறது.

 அந்தக்காலத்தில் ஜிகு புகு என்று  புகை மண்டலமாக, கோ வென்று கத்திக்கொண்டு மெதுவாக பெருமூச்சு விட்டுக்கொண்டு ஓடிய  ரயில்கள் கொண்ட  வெள்ளைக்காரன் அரசாங்கத்தில் இயங்கிய ஒரு ரயில்வே  கம்பனியில் . அந்த கம்பெனி பெயர் தெரியவேண்டாமா?  பம்பாய் பரோடா  அண்ட்  சென்ட்ரல் இந்தியா  ரயில்வே கம்பனியில். அவர்  இன்ஜினீயரா,  அல்லது   தலைமை இன்ஜினீயர்  ஆபிசில் ஏதோ ஒரு உத்யோகமா என்று இப்போது கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால்  கல்யாணம் நடந்த போது  நான்  பிறந்து ஒரு மாதம்  தான் ஆகி இருந்தது.  கல்யாணம். 15ம் தேதி மே  மாதம் 1939  திங்கட்கிழமை அன்று தனுர் லக்கினத்தில் முஹூர்த்தம்.  

 ராமஸ்வாமி  ஐயருக்கு சௌபாக்யவதி அலமேலு ஜேஷ்ட குமாரியா , கனிஷ்டகுமாரியா என்று சந்தேகமே வராதபடி ஒரே பெண்ணோ ?  எனது மகளுக்கு என்று தான் கல்யாண பத்திரிகை யில் போட்டிருக்கிறார். கல்யாணம் நடந்தது எங்கே என்றால் பெண் வீட்டிலேயே. இப்போது யாராவது பம்பாயில் தனது வீட்டில் கல்யாணம் நடத்த எண்ணிப்பார்க்க முடியுமா? இருக்கவே இடம் போதாதே. அந்த வீட்டின் படத்தையும்  எனக்கு நண்பர் அனுப்பியிருந்ததால் ஆனந்தமாக அதை ரசித்தேன்.  அந்த வீட்டின் பெயர்  கோஸ்லா நிவாஸ். ஒரு காலத்தில்  சென்னையில் இருந்தது போல் தனித்தனி  பிளாட்கள் அப்போது இருந்தன என்று தெரிகிறது. பழைய  PLOT டுகள் எல்லாம்  இப்போது பல அடுக்கு மாடி  FLATகள்  ஆக அல்லவோ மாறிவிட்டன. 

கல்யாணம் எங்கே என்று கேட்கிறீர்களே சொல்லாமல் இருப்பேனா?  மேற்படி கோஸ்லா நிவாஸ் இருந்த இடம்  ப்ளாட் எண். 135. தெலங் ரோடு,  மட்டுங்கா , பம்பாய்.   

இந்த  BB &CI  ரயில் கம்பெனி தோன்றுமுன்பு  இன்னொரு நிறுவனம் இருந்தது. அதற்கு  GIPR  என்று பெயர்.  Great Indian Peninsula Railway .  அதன் தலைமை அலுவலகம் போரி பந்தரில் பம்பாயில் இருந்தது.  இந்த  கல்யாணத்தில் இன்னொரு உள்ளடங்கிய முக்கியமான ரஹஸ்யம்.  தாலிகட்டிய முஹூர்த்தம்.  திங்கட்கிழமை தனுர் லக்னம்.   ராத்திரி 9.30மணிக்கு இருக்கமுடியாதே.  ஒருவேளை  அச்சில் பிழையோ?   காலையை   இரவு என்று போட்டதை எவரும் கவனிக்கவில்லையா?    ராத்திரி கல்யாணம் என்றால்  எத்தனை  பேர்  முஹூர்த்தத்துக்கு வந்திருப்பார்கள்?.  தூக்கமில்லாதவர்கள், முணுக் முணுக் என்ற  தெருவிளக்கின் ஒளியில் எப்படி எங்கிருந்தெல்லாம் வந்தார்கள்? அப்புறம் எப்போது சாப்பிட்டார்கள்?  சூரியன் உதயாதி நாழிகை காலை  5.50லிருந்தே நல்ல நேரம் அன்று. ஆகவே  இது காலை 9.30AM ஆகதன் இருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.  

இப்போது கோஸ்லா நிவாஸ் இருக்கிறதா என்று தெரியவில்லை?  1935ல் கட்டப்பட்ட பங்களா.  என்ன ஒரு கம்பீர தோரணை? அழகு.    தனி காம்பௌண்ட்.  இரும்பு க்ராதி கேட்.  உள்ளே ஓபன் ஸ்பேஸ். 

விசாலமான காற்றோட்டமாக  ''பே '' என்று பால்கனி.  கம்பி போட்டு  காபந்து பண்ணி இருக்கி றார்கள். அடுத்த கட்டிடமும் இது போல் பழசாக  தள்ளி நிற்கிறது.  நிச்சயம்  100-200 பேர்கள் கொள்ளும் போல் இருக்கிறது இந்த இடம்.  முன்னால்   பந்தல் போட இடம் இருக்கிறதே!   சம்பந்தி மணி அய்யர் உத்யோகம் போடவில்லை என்பதால்  ரெண்டு சம்பந்திகளுமே  மேலே சொன்ன ரயில் கம்பெனி ஸ்நேகிதர்களோ? பிள்ளை பெண் கொடுக்கல் வாங்கலோ?  இருக்கலாம்.  நல்ல சம்பந்தம் இப்படி  கிடைப்பது அபூர்வம்.  நாதஸ்வரம், ஜான் வாசாவுக்கு  குதிரை  GAS  லைட்க்கு  பம்பாயில்  அப்போது பஞ்சம் இருந்திருக்காது.   தெருவில்  ரொம்ப ஜன நடமாட்டம் இல்லை போல் இருக்கிறதே.  மாப்பிள்ளை  அழைப்பு ஊர்வலம்  நடந்ததா? ஓடியதா?   தரையில் பந்தி பாய் விரித்து வாழை யிலையில் கம கம வென்று ,பருப்பு, நெய் , சாம்பார், மைசூர் ரசம் , பாயசம் பச்சடி, யானையடி அப்பளம் டைப்  சாப்பாடோ?    மே மாதம் பம்பாயில் மழை பெய்யுமோ?

அதெல்லாம் சரி,  அப்போது பம்பாயில் நமது ஊர்  நாதஸ்வர, தவில் வித்வான்கள்  கிடைத்தார்களா, இறக்குமதியா?   ஒருவேளை  நாதஸ்வரத்துக்கு பதில் BAND  வாசித்தார்களா?  டேப்,  வீடியோ, கிடையாதே?.

ஒன்று நிச்சயம்,   எது எப்படியோ நமக்கு தெரியாது,  அந்த  கல்யாண பெண்ணும் பிள்ளையும் இப்போது தாத்தா பாட்டியாக பேரன் பேத்திகளுடன் சௌபாக்யமாக கொரோனா  தொந்தரவு இல்லாமல் சுகமாக  வாழ்ந்து எல்லோரையும் வாழ்த்தவேண்டும் என்று உங்கள் சார்பாக என்  கிருஷ்ணனை பிரார்த்திக்கிறேன்.
IMG-20210318-WA0064.jpg
IMG-20210318-WA0065.jpg

sivan jaykay

unread,
Sep 22, 2021, 8:40:06 PM9/22/21
to amrith...@googlegroups.com

மஹாளய பக்ஷம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒரு வருஷத்தை  ரெண்டு பாதியாக்கி    உத்தராயணம்  தக்ஷிணாயன புண்ய காலம்  என்று அனுஷ்டிக்கிறோம்.  சூரியன்  தெற்கிலிருந்து 
 வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலம் உத்தராயணம்  தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, மற்றும் ஆனி ஆகிய ஆறு மாதங்கள்,   நமது ஆறுமாதம் தேவர்களுக்கு ஒரு  பகல் பொழுது.  
தக்ஷிணம் என்ற தென் திசை.  ஆடி மாசத்திலிருந்து பங்குனி முடிய 6  மாதங்கள்.  இந்த  ஆறு மாசத்தில் 
புண்ணியம் நிறைந்தது  புரட்டாசி மாதம்  வரும்  மஹாளய பக்ஷம்  எனும் 15-16  நாட்கள்.  புரட்டாசி பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை முதல் இந்த பதினைந்து நாளும்  வாத்தியார்கள்  ஸ்கூட்டர்களில் எங்கும் வேகமாக  செல்வதை தெருக்களில் பார்க்கும்போது  நமது சாஸ்திர நம்பிக்கை,  சம்ப்ரதாயம்,  முன்னோர்களை நினைத்து வழிபடும் எண்ணம்  இன்னும்  சாகவில்லை என்று சந்தோஷமாக யிருக்கிறது. ஏனென்றால்  நமது குடும்பத்தில்  மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் இந்த வாத்தியார்கள் ரூபமாக. 

இராமேஸ்வரம், திருவெண்காடு, கோடியக்கரை, வேதாரண்யம், திருப்பூவனம் காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஸரோவர் , சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்களிலும் பவானி கூடுதுரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி(தில தர்ப்பணபுரி ) ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் மற்றும் ஸ்ராத்தங்கள் பண்ணுவது வழக்கம். 

”இறந்து போனவனுக்கும்   மறந்து போனவனுக்கும்   மாளயத்தில் கொடு”  என்று சொல்வது தெரிந்திருக்கலாம்.  இறந்து போன  பெற்றோர்கள் மட்டுமல்லாது, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமன், மாமி, சகோதரன், சகோதரி, ஆசிரியர், சிஷ்யன், நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், நாம் அறிந்தவர்களில் இறந்துபோன எல்லோரையும் திரும்ப நினைவிற்குக்  கொண்டுவந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது அனைத்து ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பக்ஷ  விரத நாட்களில் தான். இவர்களை  'காருண்ய பித்ருக்கள் என்கிறோம்

இறந்த  மூதாதையர்களை பித்ருக்கள் என்கிறோம்.  அவர்கள் இருக்குமிடம் பித்ருலோகம். அவர்களால் பூமிக்கு நினைத்த  போது  வர முடியாது.  பித்ரு பக்ஷம் எனப்படும் இந்த  15 நாட்கள் தக்ஷிணாயன புண்யகாலத்தில் புராட்டாசியில் கூட்டமாக அவரவர்கள் சந்ததிகளை பார்க்க வருவார்கள்.  மஹாளயம் என்றால் கூட்டம். பித்ருக்கள் தமது  சந்ததிகளை ஆசீவதிக்க  ஆசையாக அப்போது வருவார்கள்.  வடை பாயசம் ஹல்வா அவர்களால் சாப்பிடமுடியாது. வெறும் எள்ளும் தண்ணீரும். இதையாவது பக்தி ஸ்ரத்தையோடு நாம் கொடுக்கவேண்டாமா?

எனவே அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். பித்ரு தேவதைகளை ஸ்ரத்தையோடு  வழிபடுவது தான் ஸ்ராத்தம். இப்படி  பித்ரு கடன் செய்வதனால் அவர்களின் மனப்பூர்வ  ஆசீர்வாதம் கிடைக்கும். 

அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தறுகிறோம்.  அது தான் அவர்கள் ஆகாரம். அது தான் மாவாசை  தர்ப்பணம்.  இதை மகாளய பக்ஷம் 15 நாளும் தாராளமாக செய்யலாமே. தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட சிறப்பானது  இது. 

மற்ற மாதங்களில் அமாவாசையன்றும்  வருஷத்துக்கு ஒரு தரம் பித்ருக்கள்  மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியிலும்  தர்ப்பணம், ஸ்ராத்தம் செய்கிறோம்.  மஹாளய பக்ஷ காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை  முடிய  தினமும் தர்ப்பணம் செய்து  அவர்கள்  ஆன்மா சாந்திபெற உதவுகிறோம். அவர்கள் ஆசி பெறுகிறோம்.மஹாளய அம்மாவாசை முடிந்து நவராத்ரி துவங்கும்.  

மஹா பாரதத்தில் ஒரு சம்பவம்.  கர்ணன் மகாபாரத போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்ட பிறகு, உரிய மரியாதைகளோடு  யமலோகம் செல்கிறான்.  எம தர்மராஜன் அவனை வாசலில் நின்று காத்திருந்து வரவேற்கிறான்.

''வா  அப்பா  கர்ணா,  எவ்வளவு பெரிய தர்மிஷ்டன் நீ.  இதோ பார்  ஸ்வர்க வாசல்,  உள்ளே  போ.   சந்தோஷமாக  இரு. நீ நிறைய புண்ணியங்களை செய்ததால் சொர்கத்தை நான்றாக அனுபவி''  
கர்ணன் மகிழ்வுடன்  ஸ்வர்க போகம்  அனுபவிக்க முடியவில்லை. 
''எம தர்மா,  எனக்கு பசிக்கிறதே,  சமையல் ரூம் எங்கே இருக்கிறது இங்கே.  சாப்பாடு கிடைக்குமா இப்போது.?
அங்குள்ள  மற்ற ஸ்வர்க்க வாசிகள்  கர்ணன் பேச்சைக்கேட்டு திகைக்கிறார்கள்.  கர்ணனுக்கு பதில் சொல்கிறார்கள். 
''கர்ணா,   இங்கே  பசி என்றாலே  என்ன என்று யாருக்கும் தெரியாதே.  உணவு சமையல் ரூம்  எதுவுமே இங்கே இல்லையே''.  
அங்கே இருந்த  தேவர்களின்  குரு   ப்ரஹஸ்பதி இதை கவனித்துவிட்டு  ஆழ்ந்த தியானத்தில் எதற்காக கர்ணன் இப்படி கேட்டான் என்று கண்டுபிடிக்கிறார்.  கர்ணனிடம் வருகிறார்.
''கர்ணா  எங்கே உன் ஆட்காட்டி விரல்,   அதை வாயில் வைத்து சுவை''  
 குழந்தைகள் வாயில் விரல் போட்டுக்கொள்ளுமே  அது போல் கர்ணன் விரல் சூப்பியவுடன்   அவனது பசி  காணாமல் போகிறது . கர்ணன் ஆச்சர்யத்தோடு கேட்டான்.
''குருதேவா  என்ன மந்திரம் போட்டீர்கள். என்  பசி தீர்ந்துவிட்டதே.''
 "கர்ணா! பிறப்பால் நீ ஒரு வள்ளல். நீ யார் எதை கேட்டாலும் உடனே கொடுத்து விட்டாய். ஆனால் நீ அன்னதானம் மட்டும் செய்யவில்லை, அதனால் தான் நீ இங்கே பசியை உணர்ந்தாய்". 
''அதற்கும் இந்த  ஆள் காட்டி விரலை சூப்பியதற்கும் என்ன சம்பந்தம்?'' அதால் எப்படி பசி தீர்ந்தது.
 "கர்ணா, ஒரு முறை ஒரு ஏழை பிராமணர் உன் வீட்டிற்கு வந்து உணவு கேட்டார். நீ பொதுவாக அன்னதானம் செய்யும் வழக்கம் இல்லாததால் அதை மறுத்துவிட்டாய், ஆனால் உன் ஆட்காட்டி விரலால் அன்னதானம் நடக்கும் இடத்தை அந்த ஏழை பிராமணர்க்கு காட்டினாய். அவரும் அங்கே சென்று சாப்பிட்டு தன் பசியை ஆற்றிக்  கொண்டார். அந்த புண்ணியம் உன் ஆட்காட்டி விரலில் இருந்ததால் நீ ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டது." 
கர்ணன் கண்களில் நீர்.
''எம தர்மா,  நான் ஒரு பக்ஷம் (பதினைந்து நாள்) மனித உடலுடன் பூலோகம் செல்ல அனுமதிப்
பாயா? நான் போய் அன்னதானம் செய்து விட்டு வருகிறேன்''
''சரி  போய் வா கர்ணா''
 கர்ணன்  பூலோகம் வந்து  அன்ன தானம்  பதினைந்து நாட்கள்  செய்து முடிந்தவுடன்  மனித உடலை துறந்து விட்டுமீண்டும்  ஸ்வர்கம்   திரும்புகிறான். 
"கர்ணா,  மனிதர்கள் பூலோகத்தில் உள்ள சுகங்களை அனுபவிக்கவே மீண்டும் மீண்டும் பூலோகம் செல்ல  வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் நீயோ  செய்ய விரும்பிய  அன்ன தானத்தை
முழுமையாக  செய்து முடித்து விட்டு,  சொன்னபடி திரும்பினாய். உனக்கு ஒரு வரம் தருகிறேன் கேள்''
'' யம தர்மா, மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். அதனால் இந்த பக்ஷத்தில் முன்னோர்களுக்காக செய்யும் திதி, மற்றும் அன்னதானம் கர்மங்கள் செய்ய சந்ததி இல்லாத முன்னோர்களைக்  கூட இது சென்று அடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடையில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடய வேண்டும். இதுவே என் ஆசை''
''ஆஹா  அப்படியே ஆகட்டும் கர்ணா''

 இந்த  மஹாளய  பக்ஷத்தில்  உணவளித்தவர்கள் பாக்கியசாலிகள். கர்ணன் சூரிய புத்ரன்.  உலகுக்கே சூரியன் சொந்தம்.  ஆகவே  சூரிய புத்ரன் கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்த  மஹாளய  பக்ஷத்தில்,   முன்னோர்களை வரவேற்று எள்ளும் நீரும் இறைப்போம்.  கடைசி நாளான மஹாளய அமாவாசையன்று முன்னோருக்கு ஸ்ராத்தம்  செய்து  நம் முன்னோர்கள் உருவில் வரும்  பிராமணர்களுக்கு போஜனமளித்து ஆசி பெறுவோம்.

மஹாளய பக்ஷத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்: 
முதல்நாள் - பிரதமை - பணம் சேரும்
இரண்டாம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும். இதுவே அதிர்ஷ்டம் அல்லவா?
மூன்றாம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறும். 
நான்காம் நாள் - சதுர்த்தி (மஹா பரணி) -  எதிரிகள் பகைவர்களிடமிருந்து தப்ப உதவும் 
ஐந்தாம் நாள் - பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்க வழி பிறக்கும்.
ஆறாம் நாள் - சஷ்டி - புகழ் கிடைக்கும்.
ஏழாம் நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடையலாம். 
எட்டாம் நாள் - அஷ்டமி - மத்யாஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைக்கும்.
ஒன்பதாம் நாள் - நவமி - வியதிபாத ஸ்ரார்தம் சிறந்த வாழ்க்கைத் துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் கிடைப்பாள்.  புத்திசாலி பெண் குழந்தைகள் பிறக்கும்.     ஒவ்வொருநாளும் ஒன்பதாம்  நாளாக இருக்க கூடாதா?
பத்தாம் நாள் - தசமி - நீண்ட 0நாள் ஆசை நிறைவேறும்,
பதினோராம் நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி 
பன்னிரெண்டாம் நாள் - துவாதசி தங்கநகை சேரும் . பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில் கிடைக்கும்.
பதிமூன்றாம் நாள் - த்ரையோதசி & சதுர்தசி - (கஜச்சக்ஷ்யம்) பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை. 
பதிநான்காம் நாள் - மஹாளய அமாவாசை - மஹாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குவார்கள்.  பித்ரு காரகன்   சூரியனும், மாத்ரு காரகன்   சந்திரனும் விஷ்ணு லோகம் என்று கருதப்படும் கன்னி இராசியில் ஒன்றிணையும்அமாவாசை  தான்  மஹாளய அமாவாசை. பிற மாதங்களில் வரும் அமாவாசைகளில்  முன்னோரை  வணங்காதவர்கள், வணங்க முடியாதவர்களுக்கு இது சரியான சந்தர்ப்பம் தர்ப்பணம் செய்து புண்யம் பெற. இந்த அரிய  சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா?


sivan jaykay

unread,
Sep 23, 2021, 7:46:28 PM9/23/21
to amrith...@googlegroups.com

ஸ்ரீமந்  நாராயணீயம்  -  நங்கநல்லூர்   J K  SIVAN 
58வது தசகம் 

58 பிருந்தாவனத்தில் தட்ப வெப்பம்  

பிருந்தாவனம் அற்புதமான  அழகான ரம்யமான பிரதேசம் தான்.  நமக்கெல்லாம் நினைக்கும்போதே ஆனந்தம் தருகிறது. ஆனால் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ஆபத்து அங்கே தான் உருவாயிற்று. இதற்காக வருந்தவேண்டாம்.  இந்த ஆபத்துகள் அவனைத் தேடி வந்ததில் ஒரு வேலை மிச்சம் கிருஷ்ணனுக்கு.அவன் அவர்களைத் தேடி சென்று அழிக்க வேண்டாமே.  இந்த தசகத்தில் ஒரு காட்டுத் தீ தோன்றிய விபரம் அறிவோம். 

त्वयि विहरणलोले बालजालै: प्रलम्ब-
प्रमथनसविलम्बे धेनव: स्वैरचारा: ।
तृणकुतुकनिविष्टा दूरदूरं चरन्त्य:
किमपि विपिनमैषीकाख्यमीषांबभूवु: ॥१॥

tvayi viharaNalOle baala jaalaiH pralamba
pramathanasavilambe dhenavaH svairachaaraaH |
tR^iNa kutuka niviShTaa duura duuraM charantyaH
kimapi vipinamaiShiikaakhyamiiShaaM babhuuvuH || 1

த்வயி விஹரணலோலே பா³லஜாலை꞉ ப்ரலம்ப³-
ப்ரமத²னஸவிலம்பே³ தே⁴னவ꞉ ஸ்வைரசாரா꞉ |
த்ருணகுதுகனிவிஷ்டா தூ³ரதூ³ரம் சரந்த்ய꞉
கிமபி விபினமைஷீகாக்²யமீஷாம்ப³பூ⁴வு꞉ || 58-1 ||

கிருஷ்ணா,  பூனை  எலியைக் கொல்வதற்கு முன்பு அதோடு விளையாடுவது போல்  கொஞ்ச நேரம் பிரலம்பாசுரன் உங்களோடு  சேர்ந்து விளையாடும் அதிர்ஷ்டம் பெற்றான். இந்த ஒரு அசுரனுக்கு மட்டும் தான்  அந்த ஆனந்தம் கிடைத்தது. கன்றுக்குட்டிகள் ஆனந்தமாக  கவனிக்க ஆள்   இல்லாமல் இஷ்டத்துக்கு  திரிந்து மேய்ந்து கொண்டிருந்தன. காட்டின்  எல்லை தாண்டி  ஒரு அடர்ந்த பகுதிக்குள் சென்றன. அந்த பகுதியின்  பெயர்  இஷிகா. 

अनधिगतनिदाघक्रौर्यवृन्दावनान्तात्
बहिरिदमुपयाता: काननं धेनवस्ता: ।
तव विरहविषण्णा ऊष्मलग्रीष्मताप-
प्रसरविसरदम्भस्याकुला: स्तम्भमापु: ॥२॥

anadhigata nidaagha kraurya bR^indaavanaantaat
bahiridamupayaataaH kaananaM dhenavastaaH |
tava viraha viShaNNaa uuShmalagriiShmataapa
prasaravisaradambhasyaakulaa stambhamaapuH || 2

அனதி⁴க³தனிதா³க⁴க்ரௌர்யவ்ருந்தா³வனாந்தாத்
ப³ஹிரித³முபயாதா꞉ கானநம் தே⁴னவஸ்தா꞉ |
தவ விரஹவிஷண்ணா ஊஷ்மலக்³ரீஷ்மதாப-
ப்ரஸரவிஸரத³ம்ப⁴ஸ்யாகுலா꞉ ஸ்தம்ப⁴மாபு꞉ || 58-2 ||

பசுக்களும்  கன்றுகளும் பிருந்தாவனத்தில் உங்களோடு வளர்ந்தவை. அங்கே  குளிர்ச்சியாக , ஆனந்தமாக வாழ்ந்தவை.  இப்போது வெகுதூரம் காட்டிற்குள் சென்று பிரிந்தாவனத்தின் எல்லைப்பகுதிக்கு வந்துவிட்டன. இஷிகாவில் உஷ்ணம் அதிகம்.  எப்போதும் திடீர் திடீர் என்று காட்டில் தீப்பற்றிக்கொள்வதால் எப்போதும் வெப்பம் கூட.  பசுக்கள் கன்றுகள் களைத்துப்போய்  தாகத்தில் நாக்கு வறண்டுபோய் குடிக்க   தண்ணீர் தேடின.

तदनु सह सहायैर्दूरमन्विष्य शौरे
गलितसरणिमुञ्जारण्यसञ्जातखेदम् ।
पशुकुलमभिवीक्ष्य क्षिप्रमानेतुमारा-
त्त्वयि गतवति ही ही सर्वतोऽग्निर्जजृम्भे ॥३॥

tadanu saha sahaayairduuramanviShya shaure
galita saraNi mu~njaaraNya sa~njaata khedam |
pashukulamabhiviikshya kshipramaanetu maaraat
tvayi gatavati hii hii sarvatO(a)gnirjajR^imbhe || 3

தத³னு ஸஹ ஸஹாயைர்தூ³ரமன்விஷ்ய ஶௌரே
க³லிதஸரணிமுஞ்ஜாரண்யஸஞ்ஜாதகே²த³ம் |
பஶுகுலமபி⁴வீக்ஷ்ய க்ஷிப்ரமானேதுமாரா-
த்வயி க³தவதி ஹீ ஹீ ஸர்வதோ(அ)க்³னிர்ஜஜ்ரும்பே⁴ || 58-3 ||

குருவாயூரா,  பலராமன் பிரலம்பாசுரனுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது  நீ  பசுக்களையும் கன்றுகளையும் எங்கே காணோம் என்று தேடினாய். நீயும் சில நண்பர்களுமாக எங்கும் தேடி கடைசியில் இஷிகாவில் அவற்றை கண்டுபிடித்தீர்கள்.  அருகே சென்று  அவற்றை திருப்பி விரட்டி பிருந்தாவன பகுதிக்கு  திருப்பினீர்கள். அப்போது உங்களை எல்லாம்  திடீரென்று காட்டுத்தீ  பற்றி எரிந்து  சூழ்ந்துகொண்டது. 

सकलहरिति दीप्ते घोरभाङ्कारभीमे
शिखिनि विहतमार्गा अर्धदग्धा इवार्ता: ।
अहह भुवनबन्धो पाहि पाहीति सर्वे
शरणमुपगतास्त्वां तापहर्तारमेकम् ॥४॥

sakalahariti diipte ghOrabhaankaarabhiime
shikhini vihatamaargaa ardhadagdhaa ivaartaaH |
ahaha bhuvanabandhO paahi paahiiti sarve
sharaNamupagataastvaaM taapahartaaramekam ||4

ஸகலஹரிதி தீ³ப்தே கோ⁴ரபா⁴ங்காரபீ⁴மே
ஶிகி²னி விஹதமார்கா³ அர்த⁴த³க்³தா⁴ இவார்தா꞉ |
அஹஹ பு⁴வனப³ந்தோ⁴ பாஹி பாஹீதி ஸர்வே
ஶரணமுபக³தாஸ்த்வாம் தாபஹர்தாரமேகம் || 58-4 ||

எங்கும்  நீரின்றி, உலர்ந்த மரங்கள், ஒன்றோடொன்று உராயும் அடர்ந்த மூங்கில் காடுகள் வேறு. தீ பற்றிக்கொள்வது சகஜம். திகுதிகு வென்று  ஜ்வாலையோடு அக்னி சுற்றிலும் சூழ்ந்து கொண்டு விட்டது.  பசுக்களும் கன்றுகளும் வெப்பம் தாங்காமல் அலறின.  கிருஷ்ணா,   நீயும்  உன் நண்ப ர்களும்  பசுக்களோடு கன்றுகளோடு சேர்ந்து தீயின் உஷ்ணத்தில் வெந்து கொண்டிருந்தீர்கள்.  தீயின் நாக்குகள் உங்களை நெருங்கிக்கொண்டே வந்தன.   ''பகவானே, நெருப்பிலிருந்து, இந்த ஆபத்திலிருந்து எங்களைக் காப்பாற்று'' என்று  உன் தோழர்கள் வேண்டினார்கள்.

अलमलमतिभीत्या सर्वतो मीलयध्वं
दृशमिति तव वाचा मीलिताक्षेषु तेषु ।
क्व नु दवदहनोऽसौ कुत्र मुञ्जाटवी सा
सपदि ववृतिरे ते हन्त भाण्डीरदेशे ॥५॥

alamalamatibhiityaa sarvatO miilayadhvaM
dR^ishamiti tava vaachaa miilitaaksheShu teShu |
kvanu davadahanO(a)sau kutra mu~njaaTavii saa
sapadi vavR^itire te hanta bhaaNDiiradeshe || 5

அலமலமதிபீ⁴த்ய ஸர்வதோ மீலயத்⁴வம்
ப்⁴ருஶமிதி தவ வாசா மீலிதாக்ஷேஷு தேஷு |
க்வனு த³வத³ஹனோ(அ)ஸௌ குத்ர முஞ்ஜாடவீ ஸா
ஸபதி³ வவ்ருதிரே தே ஹந்த ப⁴ண்டீ³ரதே³ஶே || 58-5 ||

கிருஷ்ணா,  அவர்கள் நீ தான் அந்த பகவான்என்றறியாமல் மேலே பார்த்து  கரம்கூப்பி வண ங்கிய அவர்கள் பக்தியை ரசித்தாய். 

 ''டேய்  யாரும் பயப்படாதீர்கள். கண்ணை மூடிக்கொள்ளுங்கள். சீக்கிரம்  நெருப்பு அணையும். பிரிந்தாவனம் போய் சேர்வோம் ' என்று சொன்னதை அப்படியே  நம்புபவர்கள்.  கண்ணை மூடிக்கொண்டு கரம் கூப்பி  பிரார்த்தனை செய்தார்கள். உன் கண்ணையும் ஒருவன் மூடினான். கணநேரம் கூட  ஆகவில்லை, நெருப்பு தானாகவே  அணைந்து தணிந்து இருந்தது. காடு முழுதும்  எரிந்திருந்தது.  ஆஹா,  எப்படி  எல்லோரும்  மீண்டும் பண்டீர வனம்  வந்து சேர்ந்தார்கள்?  மந்திர மாய வித்தையாக இருக்கிறதே.! 

जय जय तव माया केयमीशेति तेषां
नुतिभिरुदितहासो बद्धनानाविलास: ।
पुनरपि विपिनान्ते प्राचर: पाटलादि-
प्रसवनिकरमात्रग्राह्यघर्मानुभावे ॥६॥

jaya jaya tava maayaa keyamiisheti teShaaM
nutibhirudita haasO baddhanaanaa vilaasaH |
punarapi vipinaante praacharaH paaTalaadi
prasava nikara maatra graahyagharmaanubhaave || 6

ஜய ஜய தவ மாயா கேயமீஶேதி தேஷாம்
நுதிபி⁴ருதி³தஹாஸோ ப³த்³த⁴னானாவிலாஸ꞉ |
புனரபி விபினாந்தே ப்ராசர꞉ பாடலாதி³-
ப்ரஸவனிகரமாத்ரக்³ராஹ்யக⁴ர்மானுபா⁴வே || 58-6 ||

''கண்ணா  என்ன விந்தை இது. உன் மாயாஜாலமா?   என்று ஆனந்தமாக சிரித்துக்கொண்டே  உன்னோடு விளையாடினார்கள் எல்லோரும். கன்று பசுக்களும் சந்தோஷத்தோடு உன்னை  சுற்றி சுற்றி வந்தன. கிருஷ்ணா,  நீ  ரொம்ப ''பெரிய ஆளு டா'' என்று மனதார புகழ்ந்தார்கள்.  பெரிய ஆள் என்பதால் தான் உனக்கு  ''பெரும் ஆள்''  (பெருமாள் ) என்று  நாம் இன்றும் வணங்கும் பெயர் என்று அவர்களுக்கு எப்படி தெரியும்? கோடைவெயில் காலம் என்றால் படரி மரம் பூக்கத்  துவங்குமே ஒன்றும் நடக்காதது போல் நீ  பசுக்களையும் கன்றுகளையும்  நீர் பருக வைத்து மேய்ச்சல் காட்டிக்கொண்டிருந்தாய். 

त्वयि विमुखमिवोच्चैस्तापभारं वहन्तं
तव भजनवदन्त: पङ्कमुच्छोषयन्तम् ।
तव भुजवदुदञ्चद्भूरितेज:प्रवाहं
तपसमयमनैषीर्यामुनेषु स्थलेषु ॥७॥

tvayi vimukhamivOchchaiH taapa bhaaraM vahantaM
tava bhajanavadantaH pankamuchChOShayantam |
tava bhujavaduda~nchad bhuuritejaH pravaahaM
tapasamayamanaiShiiryaamuneShu sthaleShu || 7

த்வயி விமுக²விமோச்சைஸ்தாபபா⁴ரம் வஹந்தம்
தவ ப⁴ஜனவத³ந்த꞉ பங்கமுச்சோ²ஷயந்தம் |
தவ பு⁴ஜவது³த³ஞ்சத்³பூ⁴ரிதேஜ꞉ப்ரவாஹம்
தபஸமயமனைஷீர்யாமுனேஷு ஸ்த²லேஷு || 58-7 ||

யமுனைக்கரையில் கோடைகாலம் சுகமாக  கழிந்தது. வெயிலின் தாபம்  தெரியவில்லை.  அந்த வெப்பம் உன்னை  எதிர்ப்பவர்கள், வெறுப்பவர்கள், பிடிக்காதவர்கள் விடும் பெருமூச்சு  போல் தஹித்தது  என்கிறார்  நாராயண பட்டத்ரி.  மரங்களை செடிகளை காயவைப்பது போல் பாபங்களை எரித்து சாம்பலாக்குவது.  உன் கருணா  ஹஸ்தம் போல் ஜொலிப்பது. 

तदनु जलदजालैस्त्वद्वपुस्तुल्यभाभि-
र्विकसदमलविद्युत्पीतवासोविलासै: ।
सकलभुवनभाजां हर्षदां वर्षवेलां
क्षितिधरकुहरेषु स्वैरवासी व्यनैषी: ॥८॥

tadanu jalada jaalaiH tvadvapustulya bhaabhiH
vikasadamala vidyut piitavaasO vilaasaiH |
sakalabhuvana bhaajaaM harShadaaM varShavelaaM
kshitidhara kuhareShu svairavaasii vyanaiShiiH || 8

தத³னு ஜலத³ஜாலைஸ்த்வத்³வபுஸ்துல்யபா⁴பி⁴-
ர்விகஸத³மலவித்³யுத்பீதவாஸோவிலாஸை꞉ |
ஸகலபு⁴வனபா⁴ஜாம் ஹர்ஷதா³ம் வர்ஷவேலாம்
க்ஷிதித⁴ரகுஹரேஷு ஸ்வைரவாஸீ வ்யனைஷீ꞉ || 58-8 ||

மாரிக்காலம் வந்துவிட்டது என்பதை கருமேகங்கள் அட்வான்ஸ் நோட்டீஸ் கொடுக்கும். மேலே வானம் கருப்பாக இருப்பது போல்  நீயும் கருநிற அழகன். கருப்பு தான் எனக்கும் பிடிச்ச கலர். கருமேகங்களுக்கு இடைத்யே  பளிச் பளீச் சென்று கண்ணைக் கூசும் மின்னல் ஒளிக்கீற்றுகள் போல் உன் கருப்பு உடலில் மஞ்சள் நிற  பீதாம்பர வஸ்திரம் ஜொலிக்கிறது கிருஷ்ணா.  மலைக்குகைகளில் ஓடி ஆடி ஆனந்தமாக  நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாய். 

कुहरतलनिविष्टं त्वां गरिष्ठं गिरीन्द्र:
शिखिकुलनवकेकाकाकुभि: स्तोत्रकारी ।
स्फुटकुटजकदम्बस्तोमपुष्पाञ्जलिं च
प्रविदधदनुभेजे देव गोवर्धनोऽसौ ॥९॥

kuharatala niviShTaM tvaaM gariShThaM giriindraH
shikhikula nava kekaa kaakubhiH stOtrakaarii |
sphuTakuTaja kadambastOma puShpaa~njaliM cha
pravidadhadanubheje deva gOvardhanO(a)sau || 9

குஹரதலனிவிஷ்டம் த்வாம் க³ரிஷ்ட²ம் கி³ரீந்த்³ர꞉
ஶிகி²குலனவகேகாகாகுபி⁴꞉ ஸ்தோத்ரகாரீ |
ஸ்பு²டகுடஜகத³ம்ப³ஸ்தோமபுஷ்பாஞ்ஜலிம் ச
ப்ரவித³த⁴த³னுபே⁴ஜே தே³வ கோ³வர்த⁴னோ(அ)ஸௌ || 58-9 ||

கோவர்த்தன மலை உன்  பக்தன். உன்னை வணங்கி மகிழும் அழகிய மலை.  அதில் உனக்குப் பிடித்த வண்ண வண்ண மயில் கூட்டம் எப்போதும் உண்டு.  மாரிக்காலம் என்றாலே மயிலுக்கு குஷி அல்லவா? மயில்களின் குரல் வேடிக்கையாக இருக்கும் கேட்பதற்கு.  சந்தோஷத்தில் அவை தோகை  விரித்தாடி அகவும் (கத்துகிற) அழகே  தனி.  கடம்பம், குடஜ மரங்களும் பூத்துக் குலுங்கும்.  வேப்பமரத்தை குடஜா என்று சொல்வதுண்டு.  வேப்பம்பூவுக்கு தனி மணம் . ஆஹா  வேப்பம்பூ  ரஸத்தின்  சுகமே சுகம்.

अथ शरदमुपेतां तां भवद्भक्तचेतो-
विमलसलिलपूरां मानयन् काननेषु ।
तृणममलवनान्ते चारु सञ्चारयन् गा:
पवनपुरपते त्वं देहि मे देहसौख्यम् ॥१०॥

atha sharadamupetaaM taaM bhavadbhakta chetO
vimala salila puuraaM maanayan kaananeShu |
tR^iNamamala vanaante chaaru sa~nchaarayan gaaH
pavanapurapate tvaM dehi me dehasaukhyam ||10

அத² ஶரத³முபேதாம் தாம் ப⁴வத்³ப⁴க்தசேதோ-
விமலஸலிலபூராம் மானயன்கானநேஷு |
த்ருணமமலவனாந்தே சாரு ஸஞ்சாரயன் கா³꞉
பவனபுரபதே த்வம் தே³ஹி மே தே³ஹஸௌக்²யம் || 58-10 ||


இலையுதிர் காலம்  ஒரு  தனி ரகம்.  காற்று அப்போது ஜாஸ்தி.எங்கும் நீர் நிறைந்திருக்கும்.  பக்தர்கள் மனதில் நீ  நிறைந்திருப்பது போல.  பசுக்களை கன்றுகளை மேய்க்கும்போது   அவை  வயிறார செழிப்பாக வளர்ந்த புல் வெளிகளில் வேட்டையாடும். எண்டே குருவாயூரப்பா,  அந்த பசுக்கள் கன்றுகளின் சந்தோஷம் போல் என்னையும் சந்தோஷப்படுத்த என் நோய் தீர்த்தருள்வாய்
 அப்பனே.

தொடரும் 

sivan jaykay

unread,
Sep 25, 2021, 12:25:17 AM9/25/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்: -   நங்கநல்லூர்  J K  SIVAN

மஹா பெரியவாளின்  பாட்டு விமர்சனம்.

எனக்கு  அருணாசல கவிராயர் மேல் ஒரு  தனி மதிப்பு மரியாதை, நன்றி. ஏனென்றால் அவரது ராமநாடக கவி பாடல்கள் தான் என் தாய் வழி முன்னோர்களை பல  ஜமீன்கள், மிராசுகளில், அரசர்கள் முன் பாடவைத்து,  அவர்களை  பரம்பரையாக  பட்டினியின்றி உணவளித்து கௌரவத்தோடு வாழ  வழி வகுத்தவை.  அற்புதமான கவிராயர் அவர். அவர் வாழ்க்கையை பற்றி தனி பதிவாக மறுபடியும் சொல்கிறேன். ஏற்கனவே பல முறை எழுதியாயிற்று.  அவற்றில்
ஒரு பாடல் எல்லோரும் அறிந்த மோஹன ராக  பாடல்.  
அதில் கவிராயர் ராமனைப் பார்த்து நீ ஏன் இப்படி ஸ்ரீரங்கத்தில் கால் நீட்டி படுத்துவிட்டாய்?  என்ன காரணம் இதுவா அதுவா என்று வரிசையாக அடுக்குகிறார் பாருங்கள். அதி அற்புதம்.

NC  வசந்தகோகிலம் அவர்கள் குரலில்  இதை  ராக தாள பாவத்தோடு பாடுவதை கேட்டு என்னை பலமுறை இழந்திருக்கிறேன்.  இணைத்திருக்கிறேன்  நீங்களும் கேளுங்கள் https://youtu.be/UignWsZGzWw   இதை மஹா பெரியவாளும்  கேட்டிருக்கிறார். அவர் அணுகுமுறை எப்போதும்  அலாதி அல்லவா?. அந்த பாட்டை முதலில்  எழுதி விடுகிறேன்.    பின்னர் மஹா பெரியவா அதை எப்படி விமர்சிக்கிறார் என்று பார்ப்போம்?

ஏன் பள்ளி கொண்டீர் ஐயா-ஸ்ரீரெங்கநாதரே - நீர்
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா
அனுபல்லவி
ஆம்பல் பூத்தசய பருவத மடுவிலே
அவதரித்த இரண்டாற்று நடுவிலே
சரணம்
கோசிகன் சொல் குறித்ததற்கோ-அரக்கி
குலையில் அம்பு தெரித்ததற்கோ
ஈசன்வில்லை முறித்ததற்கோ-பரசு
ராமன் உரம் பறித்ததற்கோ
-
மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன்
வழிநடந்த இளைப்போ
தூசிலாத குகன் ஓடத்திலே கங்கைத்
துறை கடந்த இளைப்போ
-
மீசுராம் சித்ரகூடச் சிகரக்கல்
மிசை கிடந்த களைப்போ
காசினிமேல் மாரீசன் ஓடிய
கதி தொடர்ந்த இளைப்போ
-
ஓடிக் களைத்தோ தேவியைத்
தேடி இளைத்தோ-மரங்கள் ஏழும்
துளைத்தோ-இலங்கை என்றும்
வளைத்தோ-கடலைக் கட்டிக்
காவல் மாநகரை இடித்த வருத்தமோ
ராவணாதிகளை அடித்த வருத்தமோ''   --

மஹா பெரியவாளின் விமர்சனம்:    ''இது   ஒரு  நிந்தா  ஸ்துதிப் பாட்டு. என் நினைவிலே இப்ப கொஞ்ச நாளாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் பாட்டு. உங்களுக்கும் தெரிவிக்க ஆசைப்படும் பாட்டு.   முன்னெல்லாம் இங்கே வருகிற ரொம்பப் பேர் பாடிக் காட்டின பாட்டுதான் அது. ஆனால் அப்படி ‘ஃபேமஸா’க   famous  ஆக இருந்தது கொஞ்ச வருஷமாகக் காதில் படவேயில்லை.   எனக்குப் பாட வராது. இருந்த தொண்டையும் போய்விட்டது. பரவாயில்லை. இப்போது ஸாஹித்யந்தான் முக்யம்; ஸங்கீதம் இல்லை.

அரங்கம் என்று ஸபை கூட்டிவிட்டு அங்கே ஸ்வாமி படுத்துக் கொண்டிருப்பது விசித்ரமாயிருக்கிறது அருணாசல கவிராயர்  அதை ‘டாபிக்’காக எடுத்துக் கொண்டு, ‘படுத்துக் கொண்டதற்குக் காரணம் இதுவா, இல்லாவிட்டால் இதுவா?’ என்று நிறையக் கேள்வி அடுக்கிக்கொண்டே போகிறார். அதிலே ஹாஸ்யம், பரிஹாஸம் எல்லாம் இருக்கும். ஆனாலும் வெடித்துக் கொண்டு வராமல், ‘ஹாஸ்ய வெடி’ என்கிற மாதிரி இல்லாமல், கொஞ்சம் ஸுக்ஷ்ம நயத்தோடே மறைமுகமாகவே இருக்கும்.

‘ஏன் பள்ளிகொண்டீர் ஐயா?’ -   முதல் கேள்வி.
‘ஏன் பள்ளி கொண்டீர் ஐயா? ஸ்ரீரங்கநாதரே! நீர் ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?’ - இது  பல்லவி.
அப்புறம் அநுபல்லவி. அதிலே நிந்தா ஸ்துதி எதுவுமில்லாமல் ஸ்ரீரங்கத்தைப் பற்றி பேர் சொல்லாமல் அழகான கவிதை பாஷையில் காவேரி வர்ணனையுடன், காவேரியின் பெயரையும் சொல்லாமல், பாடியிருக்கிறார். காவேரி இரண்டாகப் பிரிந்து ஓடுகிற இடமாகத்தானே ஸ்ரீரங்கம் இருக்கிறது? அதைச் சொல்கிறார்:

ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே – அவதரித்த இரண்(டு) ஆற்றுநடுவிலே (ஏன் பள்ளி கொண்டீரையா ?)
‘ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே’ என்றால், ‘ஆம்பல் என்கிற அல்லி ஜாதிப் புஷ்பம் பூத்து அசைந்து ஆடுகிற  மலைச் சுனையில்’ என்று அர்த்தமில்லை. ‘பூத்தசைய’ என்பது ‘பூத்து அசைய’ என்று இரண்டு வார்த்தையாகப் பிரியாது. ‘பூத்த’ ஒரு வார்த்தை; ‘சைய’ ஒரு வார்த்தை என்றே பிரியும். ‘சையம்’ என்பது ‘ஸஹ்யம்’ என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தையைக்  குறிக்கும்.  – ‘மத்யம்’ என்பது ‘மையம்’ என்று தமிழில் ஆன  மாதிரி ‘ஸஹ்யம்’ என்பது ‘சைய’மாயிருக்கிறது. ஸஹ்ய பர்வதம், ஸஹ்யாத்ரி என்று மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது. அதிலுள்ள ஒரு சுனைதான் தலைக்காவேரி என்று காவேரியின் உற்பத்தி ஸ்தானமாக இருப்பது. கொடகு  தேசத்திலுள்ள அங்கே பிறந்து முன்னே மைஸுர் ராஜ்யமாயிருந்த கன்னட தேசம் வழியாகப் பாய்ந்து, சேலம் ஜில்லாவிலே தமிழ் தேசத்துக்குள் ப்ரவேசித்து, அப்புறம் திருச்சிராப்பள்ளிக்கு வருகிற காவேரி, அங்கே காவேரி என்றும் கொள்ளிடம் என்றும் இரண்டாகப் பிரிகிற இடத்திலேயே ஸ்ரீரங்கம் இருக்கிறது. அதை இரண்டு பக்கமும் அணைத்துக் கொண்டு காவேரி பாய்கிறாள்.

கல்யாணப் பெண் வரனுக்கு மாலை போடுகிறது வழக்கம் . இங்கே  காவேரி கல்யாணப் பெண்ணாக, தானே 'மாலை'  யாகி  'திருமாலை'  இரண்டு பக்கமுமாக அணைத்துக் கொண்டி
ருக்கிறாள்! அதனால் அந்த ஸ்ரீரங்கநாதனை லக்ஷ்மீநாராயணன், ஸீதாராமன் என்கிற மாதிரி அவள் பேர் சேர்த்து – அதுவும் முன்னாடியே சேர்த்து: ‘மிஸஸ்’ஸில் பத்னி பேருக்குப் பின்னாடி புருஷன் பேர் சேர்க்கிற மாதிரியில்லாமல் இங்கே மிஸ்டர் பேருக்கு முந்தி மிஸஸ் பேர் சேர்த்து – காவேரி ரங்கன் என்று சொல்வதாயிருக்கிறது.

உபய காவேரி என்று இரண்டாகப் பிரிந்து ஏற்பட்ட இட மத்தியிலே ஸ்வாமி பள்ளி கொண்டிருப் பதைத்தான் ‘இரண்டாற்றின் நடுவிலே’ என்று பாடியிருக்கிறார்.  காவேரி ஸஹ்யாத்ரியில் உற்பத்தியாவதை, அவதாரம் பண்ணினதாகவே ‘அவதரித்து’ என்று உசத்திச் சொல்லியிருக்கிறார்.

அவதாரம் என்ற வார்த்தையைப் போட்டாரோ இல்லையோ, அவருக்கு ரங்கநாதனின் அவதாரமான ராமசந்த்ரமூர்த்தியிடமே மனஸ் போய்விட்டது! ஸந்தர்பவசாத் அவர் ரங்கநாதனைப் பாடும்படி ஏற்பட்டாலும் அவருக்குப் பிடிமானம் என்னவோ ராமனிடம், ராம கதையிடம்தான்! அதனால், ‘பல்லவி – அநுபல்லவிகளில் க்ஷேத்ர மூர்த்தியைப் பிரஸ்தாபித் தாயிற்று; அது போதும்’ என்று சரணத்தில் இஷ்ட மூர்த்தியான ராமனுக்கே, பாலகாண்டம் தொடங்கி அவன் கதைக்கே, போய்ப் பாட ஆரம்பித்து விட்டார்!

வியங்கியமான (மறைமுகமான) நிந்தா ஸ்துதியும் இங்கேயிருந்து தான் ஆரம்பம். இஷ்டமானவர் களிடந்தானே ஸ்வாதீனம் இருக்கும்.?
கோசிகன் சொல் குறித்ததற்கோ?
குசிக வம்சத்தில் பிறந்ததால் விச்வாமித்ரருக்கு கோசிகன் என்று  பெயர். ராமர் அவதார காரியமாக முதல் முதலில் பண்ணினது விச்வாமித்ரர் சொல்படி தாடகை மேலே பாணம் போட்டதுதான். ‘அப்படிப் பண்ணும்படி பெரிய மஹர்ஷி சொல்லி விட்டார். ஆனாலும் ஸ்த்ரீ ஹத்தி கூடவே கூடாது என்று சாஸ்த்ரமாச்சே!’ என்று ராமர் தயங்கத்தான் தயங்கினார். தர்ம விக்ரஹம் என்றே பெயர் வாங்கப் போகிறவரில்லையா, அதனால்! அந்தக் கோசிகரோ, “லோகத்துக்குப் பெரிய உத்பாதத்தை உண்டாக்குபவர் விஷயத்தில் ஸ்த்ரீ-புருஷ பேதமெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. போடு இவள் மேல் பாணம்!” என்றார். விநய விக்ரஹமுமான ஸ்வாமி மறுக்க முடியாமல் அப்படிப் பண்ணி விட்டார்.
ராமர்  அப்போது அப்படி பண்ணினாரே தவிர அப்புறம் மனசு ஸமாதானமாகவில்லை. ‘தர்மத்தில் ‘இப்படியா, அப்படியா?’  என சொல்லமுடியாத ஒரு இரண்டும் கெட்டான் விஷயத்தில், தர்மஸங்கடம் என்பதில், எதுவோ ஒன்றைப் பண்ணிவிட்டோம். அதுதான் ஸரி என்று அடித்துச் சொல்ல முடியாது போலிருக்கே!’ என்று ரொம்பவும் வியாகுலப்பட்டார்.

தீராத வியாகுலம் என்றால் அதைத் தீர்க்கமுடியாவிட்டாலும் ஏதாவது தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூங்கிப் போய் மறக்கவாவது செய்வோம் என்று தோன்றும் – இல்லியா?
“அப்படி ஏதோ சாப்பிட்டுவிட்டுத்தான் பள்ளி கொண்டு விட்டாயோ?” என்று கேட்கிறார். அதுதான் ‘கோசிகன் சொல் குறித்ததற்கோ?’    ‘குறித்தது’ என்றால்  consider பண்ணியது. அப்படிப்  பண்ணி வியாகுலப்பட்டது பின்னாடி. அப்போது உடனே பாணம்தான் போட்டார். அது குறி தப்பாமல் ராக்ஷஸியின் குலையிலே தைத்து அவள் ப்ராணனை விட்டு விழுந்தாள். “அந்த மாதிரி வேகமாக பாண ப்ரயோகம் பண்ணின ஆயாஸத்தில் அசந்து (அயர்ந்து) போய்த்தான் படுத்துக் கொண் டாயோ?” என்று அடுத்த கேள்வி:
அரக்கி குலையில் அம்பு தெறித்தற்கோ?
வில் நாணைத் தட்டிப் பார்த்து அதன் பிகு தெரிந்து கொண்டு பாணம் போடுவதுதான் ‘தெறிப்பது’.
ராமர் அநாயஸமாக, மலர்ந்த புஷ்பமாக இருந்து கொண்டேதான் மஹா  அஸ்திரங்களையும் போட்டது. பக்தியின் ஸ்வதந்திரத்திலும், கவிக்கு உள்ள ஸ்வதந்திரத்திலும் அவரை வேறே மாதிரியாகச் சொல்லிக் கவிராயர் சீண்டுகிறார்! அதையும் அவர் ரஸிக்கத்தான் ரஸிப்பார் என்று தெரிந்தவராகையால்!
ஒரு வேளை  நீ பள்ளி கொண்டதற்கு இது காரணமில்லையென்றால், ஈசன் வில்லை முறித்ததற்கோ?
என்று இன்னொரு ‘பாஸிபிள்’ காரணத்தை அடுத்த கேள்வியாகக் கேட்கிறார். ஸீதையை விவாஹம் செய்து கொள்ளப் பிரியப்படுபவன் தம்மிடமிருந்த ருத்ர தநுஸை நாண் பூட்டிக் காட்ட வேண்டும் என்று ஜனகர் நிபந்தனை போட்டிருந்தார் அல்லவா?. ராமருக்கு ஒன்றும் கல்யாண ஆசையில்லை; என்றாலும் விச்வாமித்ரர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அந்தப் பந்தயத்தில் கலந்து கொண்டார்.
 போனவர் ஒரு வேகம் பிறந்து, வெறுமனே நாண் பூட்டிக் காட்டாமல் அந்த தநுஸையே உடைத்து விட்டார்! ‘அத்தனை வேகம் காட்டினது தான் பிற்பாடு உன்னை tired ஆக்கித் தூக்கம் போட வைத்து விட்டதா?’ என்று கேட்கிறார்  அருணாசல  கவிராயர்.
சரி, அதுவும்  ஒரு காரணம்  இல்லையென்றால்,  பரசுராமன் உரம் பறித்ததற்கோ? என்று கேள்வி எழுப்புகிறார்.
 பரசுராமர் – க்ஷத்ரிய வம்சத்தைப் பூண்டோடு அறுப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டவர், அவர்
 ராமரிடம், “நீ உடைத்த ருத்ர தநுஸ் ஏற்கெனவே மூளியானதுதான். அந்த ஓட்டை வில்லை முறித்தது ஒன்றும் பெரிசில்லை. இதோ என்னிடம் மூளி, கீளி ஆகாத விஷ்ணு தநுஸ் இருக்கிறது. இதில் உன்னால் நாண் பூட்ட முடியுமா, பார்! பூட்டாவிட்டால் உன்னை விடமாட்டேன்!” என்று ‘சாலஞ்ஜ்’ பண்ணினார். ராமருக்கு அதுவும் ஒரு பெரிய கார்யமாக இல்லை. பரசுராமர் கொடுத்த விஷ்ணு தநுஸையும் சிரமப்படாமலே நாண் பூட்டினார். அதோடு, பரசுராமரால் நடக்கிற க்ஷத்ரிய வம்ச நாசத்துக்கு முடிவு கட்ட வேண்டுமென்று நினைத்து அவருடைய சக்தி முழுதையும் கவர்வதையே குறியாகக் கொண்டு பாணப் பிரயோகமும் பண்ணி விட்டார்! அந்த முன்னவதாரக்காரர் தம்முடைய பின்னவதாரக்காரரிடம் தம்முடைய சக்தி முழுதையும் இழந்துவிட்டுத் தம்முடைய ஸம்ஹார கார்யத்தை ஸமாப்தி பண்ணினார். இப்படி பரசுராமரின்  சக்தியை ராமர் கவர்ந்ததுதான் ‘பரசுராமர் உரம் பறித்தது’ என்று பாட்டில் வருவது.
‘சக்தி போனால் ஓய்ந்து போய்ப் படுக்கலாம். ராமருக்கோ சக்தி கூடியல்லவா இருக்கிறது? பின்னே ஏன் படுத்துக்கணும்?’ என்று  கேள்வி கிளம்புகிறது.
அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு விட்டால் அதை ஜீர்ணிப்பதிலேயே சோர்வு ஏற்பட்டுத் தூக்கம் தூக்கமாகத் தானே வருகிறது? ராமருக்கு ஏற்கனவே மஹாசக்தி. இப்போது இன்னொரு அவதாரத்
தின் பெரிய சக்தியையும் சாப்பிட்டிருக்கிறார். ‘இப்படிச் சக்திச் சாப்பாட்டில் அமிதமாகப் போனதில்தான், சோர்வு உண்டாகித் தூங்கிவிடலாம் என்று பள்ளி கொண்டீரா?’ என்றே கவிராயர் கேட்கிறார்.
ஓஹோ இதெல்லாம் காரணம் இல்லையென்றால் இன்னொரு பெரிய  ஒரு காரணம்  கேள்வியாக வருகிறது.  '' மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன்  வழிநடந்த இளைப்போ?''  ’குற்றம் குறையே இல்லாத சுத்தையான ஸீதையுடன் காட்டுக்கு நடந்து போனாயே! அதிலே ஏற்பட்ட களைப்பினால் இளைப்பாறுவதற்கே பள்ளிகொண்டாயா?’
‘இளைப்பு’ என்றால் ஒல்லியாய்ப் போவது மட்டுமில்லை. சோர்ந்து, ஓய்ந்து போவதும் இளைப்புத் தான். அதைப் போக்கிக் கொள்வதையே ‘இளைப்பாறுவது’ என்கிறோம்.
இதற்கு மேலே, வனவாஸ காலத்திலே நடந்தவை ஸம்பந்தமாக  ஒரு கேள்வி கேட்கிறார் கவிராயர்.
''தூசிலாத குஹன் ஓடத்திலே கங்கைத் துறை கடந்த இளைப்போ?''
‘வேடனாயிருந்தாலும் உடம்பிலேதான் தூசி, மனஸு தூசி படாத பரம நிர்மலம் என்று இருந்த குஹனின் ஓடத்தில் கங்கையைத் தாண்டிப் போனாயே! அப்போது ஜிலுஜிலு என்றுதான் இருந்த
தென்றாலும் ரொம்ப நாழிப் பிரயாணம், ஒரே மாதிரியான துடுப்போசையை மட்டும் கேட்பது ஆகியவற்றில் ஏற்பட்ட ’bore’-ல்தான், monotony-ல்தான் தூங்கினாயா? தொடர்ந்து இன்னொரு கேள்விக்கணை:
''மீசரம் ஆம் சித்ரகூட சிகரத்தின் மிசை கிடந்த இளைப்போ?
’மீசரம்’ என்றால் உயர்ந்தது. ‘ரொம்ப உயரமான சித்ரகூட சிகரத்துக்கு ஏறிப் போய், அந்த சிரமத்தில் அங்கே அப்படியே கிடந்தாயே, அப்போது பிடித்த தூக்கம்தான் இன்னும் விடவில்லையா?’
''காசினி மேல் மாரீசன் ஓடிய கதி தொடர்ந்த இளைப்போ?
’காசினி’ என்றால் பூமிதான். இங்கே கரடும் முரடுமான காட்டு நிலம் என்று அர்த்தம் பண்ணிக் கணும். அப்படிப்பட்ட ‘காட்டு வழியிலே மாரீச மான், மானுக்கே உரிய வேகத்தோடு ஓடினபோது அதற்கு ஈடு கொடுத்துத் தொடர்ந்து போனாயே! அந்தச் சோர்வுதான் படுக்கையில் தள்ளிற்றா?’
அதற்கப்புறம் சின்னச் சின்னதாகக் கேள்விகளை அடுக்கிக் கொண்டு போகிறார்! பாட்டு வேக வேகமாக ஓடுகிறது!
‘மாரீச மானைத் தொடர்ந்து போனது, முதலில் ஓட்டமும் நடையுமாக, அப்புறம் அந்த ‘நடை’ கூடக் கூடாதென்று ஒரே ஓட்டமாக ஓடினாய்! அதிலே ஏற்பட்ட களைப்பில்தான் தூக்கமா?’ என்று இத்தனை ஸமாசாரத்தை,ஓடிக் களைத்தோ?  என்று சின்ன வாசகமாக்கிக் கேட்கிறார்.
தேவியைத் தேடி இளைத்தோ?
அப்படி இங்கே நீ மாரீசன் பின்னே ஓட, அங்கே உன் பர்ணசாலைக்கு ராவணன் வந்து ஸீதா தேவியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டானே! நீ அவளைத் தேடு தேடு என்று தேடி அலைந்தாயே! அந்த அசர்வா (அயர்வா)?’
''மரங்கள் ஏழும் தொளைத்தோ?''
’அதற்கப்புறம் ஸுக்ரீவனுடன் ஸக்யம் பண்ணிக் கொண்டு (நட்புப் பூண்டு) அவனுக்கு சத்ருவான அண்ணன் வாலியை வதம் செய்வதாக வாக்குக் கொடுத்தாய். அந்த மஹா பலிஷ்டனை ஜயிப்பதற்கான பலம் உனக்கு இருக்குமா என்று ஸுக்ரீவன் ஸந்தேஹப் பட்ட போது அதை (நி)ரூபித்துக் காட்டுவதற்காக, பர்மா teak (தேக்குமரம்) மாதிரி பெரிய சுற்றளவுடன் வரிசையாக நின்ற ஏழு மராமரங்களையும் துளைத்துக் கொண்டு போகும்படி பாணத்தைப் போட்டுக் காட்டினாய்! அத்தனை விசையோடு நாணை வலித்தது, உனக்கே ரொம்பவும் வலித்துத்தான் படுக்கை போட்டு விட்டாயா?’
''கடலைக் கட்டி வளைத்தோ?''
”லங்கைக்குப் போவதற்காக ஸமுத்ரத்துக்கே அணை கட்டுகிற பெரிய கார்யம் பண்ணினாயே! யஜமானனாக உட்கார்ந்து கொண்டு உத்தரவு போடாமல் உன்னுடைய உத்தம் குணத்தினால் நீயும் வானரப் படையோடு சேர்ந்து கல்லு, மண்ணு தூக்கி அந்தக் கார்யத்தில் ஈடுபட்டாயே! அதில் ஏற்பட்ட சோர்வுதான் காரணமா?”
அப்புறம் பெரிய வாசகமாகவே இரண்டு கேள்வி கேட்டு – ஏகப்பட்ட கேள்விதான் கேட்டாச்சே! – அதோடு முடித்து விடுகிறார்.
இலங்கை எனும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ?
ராவணாதியரைத் தொலைத்த வருத்தமோ?
லங்கைக்குப் போனபின் ஊருக்கு வெளியிலே வானர ஸேனை ராக்ஷஸ ஸேனையோடு போர்க்
களத்தில் யுத்தம் செய்ததோடு நிற்காமல், ஊரெல்லைக்குள்ளே போய் அதன் கோட்டை கொத்தளம் முதலானவற்றை இடித்துத் தூள் பண்ணின. அப்போது பதிநாலு வருஷ வனவாஸத்திற்கு
 ஒப்பி வாக்குக் கொடுத்திருந்த ஸ்வாமி தர்ம விக்ரஹமானபடியால் தாம் நகரப் பிரவேசம் பண்ணப்படாது என்று ரணகளத்தில் பாசறையிலேயே இருந்தார். அப்போது மட்டுமில்லை. இதற்கு முந்தி அவரே வாலிவதம் பண்ணி, ஸுக்ரீவன் கிஷ்கிந்தா ராஜ்யத்திற்கு ராஜாவாகும்படிப் பண்ணியிருந்த போதிலும், தாம் அந்த ஊருக்குள் போய் அவனுக்குப் பட்டாபிஷேகம் பண்ணி வைக்காமல் காட்டிலேயே தான் இருந்தார்; லக்ஷ்மணரைத்தான் பட்டாபிஷேகம் பண்ண அனுப்பி வைத்தார். பிற்பாடு அவர் ராவண ஸம்ஹாரம் பண்ணியதாலேயே விபீஷணன் லங்கா ஸாம் ராஜ்யாதிபதியாகப் பட்டாபிஷேகம் பெற்றுக் கொண்ட போதும் அதையேதான் செய்தார். அப்படித் தம்மைத் தாமே, தர்மத்தை அலசிப் பார்த்து அவர் கட்டுப் படுத்திக் கொண்ட உசத்தியால்தான் இன்றைக்கும் அவரை லோகம் தர்மமூர்த்தி என்று கொண்டாடுகிறது….

லங்கையை வானரங்கள் இடித்தபோது அவருக்கு இரண்டு தினுஸில் வருத்தம். தாமும் அவர்களோடு உடலை வருத்தி ஸஹாயம் பண்ண முடியாமல் தர்மம் கட்டுப் படுத்துகிறதே என்பதில் அவருடைய மனசு வருத்தப் பட்டது ஒன்று. ரொம்ப அழகாகவும், பெரிசாகவும் மயன் நிர்மாணம் பண்ணிக் கொடுத்திருந்த லங்காநகரத்தையும், அந்த நகரவாஸிகள் பண்ணின தப்புக்களுக்காக யுத்தத்தின் அவசியத் தேவையை முன்னிட்டு, இடிக்கும்படி இருக்கிறதே என்ற வருத்தம் இன்னொன்று. “அதை மறக்க ‘ஸ்லீப்பிங் டோஸ்’ போட்டுக் கொண்டாயா?” என்று பழைய கேள்வியை மறுபடியும் அதே மாதிரி மறைமுகமாகப் போடுகிறார்.   அதோடு, ராமர் சரமாரியாக பாணம் போட்ட மாதிரியே தாமும் அவர் மேல் கேள்விக் கணை மாரி போட்டாயிற்று என்று கவிராயர் ‘ஃபீல்’ பண்ணினார். கடைசியாக ஒரே ஒரு கேள்வி ராம குண மேன்மையைத் தெரிவிப்பதாகக் கேட்டு முடித்து விட்டார்:
ராவணாதியரைத் தொலைத்த வருத்தமோ?
முதலில் ராவணாதிகள் பண்ணின அக்ரமத்திற்காக அழகான லங்கா பட்டணத்தை த்வம்ஸம் செய்வானேன் என்று ராமர் வருத்தப்பட்டார். அப்புறம் அவர்களையெல்லாம் ஹதாஹதம் செய்து, வீரராகவன் என்றே எல்லாரும் புகழும்படி நின்றபோதோ அவருக்கு உள்ளூர, “இந்த அக்ரமக்காரர் களைக் கூட ஏன் வதம் பண்ணியிருக்க வேண்டும்? அவர்களிலும், ராவணன் உள்பட, மஹா பலம், வீரம், யுத்த சதுரம், அஞ்சா நெஞ்சம், விட்டே கொடுக்காத உறுதி, நல்ல வேத பாண்டித்யம், ஸங்கீதத்திலே அபாரத் தேர்ச்சி – என்றிப்படி சிறப்புக்களைப் பெற்றிருந்தவர்கள் இருந்தார்களே! அவர்களுடைய மனசு திருந்தும்படிச் செய்ய முடியாமல் வதம் அல்லவா பண்ணும்படியாயிற்று?” என்று வருத்தம் ஏற்பட்டது.
பரம சத்ருவிடம் இப்படிப்பட்ட கருணையுள்ளம் படைத்த உச்சாணியில் ராமரைக் காட்டியதே அவருடைய பட்டாபிஷேகத்தைப் பாடின மாதிரி என்று அதோடு கவிராயர் முடித்து விட்டார்.இந்த பாட்டில் ராமாயண எல்லா சீன்களும் வந்ததை கவனித்தீர்களா? அது தான் பெரியவா கமெண்ட்..

sivan jaykay

unread,
Sep 25, 2021, 12:25:17 AM9/25/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீமந்  நாராயணீயம் -  நங்கநல்லூர்  J K  SIVAN --
59வது தசகம் 

59.   ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் 

இப்போது எல்லாம்  ஸ்ரீ கிருஷ்ணன் கொஞ்சம்  பெரிய பையன். அற்புதமாக புல்லாங்குழலில் கானம் செய்கிறான்.  கையிலோ இடுப்பிலோ  புல்லாங்குழல் இல்லாமல் அவனைப் பார்க்க முடிகிறதில்லை.  அவன் இசையைக் கேட்டு மயங்காத உயிர்கள் இல்லை . பிருந்தாவன உயிர்கள் அத்தனையும் அவன் அடிமையாகியதில் என்ன ஆச்சர்யம்?

त्वद्वपुर्नवकलायकोमलं प्रेमदोहनमशेषमोहनम् ।
ब्रह्म तत्त्वपरचिन्मुदात्मकं वीक्ष्य सम्मुमुहुरन्वहं स्त्रिय: ॥१॥

tvadvapurnava kalaaya kOmalaM premadOhana masheShamOhanam |
brahmatattva parachinmudaatmakaM viikshya sammumuhuranvahaM sitrayaH || 1

த்வத்³வபுர்னவகலாயகோமலம்
ப்ரேமதோ³ஹனமஶேஷமோஹனம் |
ப்³ரஹ்மதத்த்வபரசின்முதா³த்மகம்
வீக்ஷ்ய ஸம்முமுஹுரன்வஹம் ஸ்த்ரிய꞉ || 59-1 ||

ஆஹா,  குருவாயூரப்பா, கிருஷ்ணனாக நீ தரும் அந்த அற்புத தரிசனத்திற்கு தான் எத்தனை மஹிமை. அன்றலர்ந்த தாமரை என்பார்களே அது உன் முகம் தான்  அப்பா. ஒவ்வொருநாளும் உன்னைக் காணும் கண்கள் பாக்யம் பெற்றவை.  அது  பெரும் ஆனந்தத்தை சொல்ல முடியாது. சொல்லி முடியாது. இந்த ரெண்டுமே  அருமையான வாக்கியங்கள்.  சொல்லமுடியாது என்றால் சொல்ல வார்த்தைகள் இல்லை என்று அர்த்தம்,  சொல்லி முடியாது என்றால்  சொல்லிக்கொண்டே போனால் அதற்கு முடிவே இல்லை என்று அர்த்தம்.  ஒரு சின்ன கொக்கி 'ல'  மேல் போட்டால் இத்தனை அர்த்தமா? ஆஹா,  தமிழே உன் ஆழம், அர்த்த புஷ்டி என்னை மயக்குகிறது. கிருஷ்ணன் மாதிரி தான் நீயும்.  பிருந்தாவன கோபியர்கள் கண்ணனைக் கண்டு  அவனை  ஏன்  சுற்றிக் கொண்டே இருந்தார்கள் என்று இப்போது தான் புரிகிறது. அழகிய மலரை யாருக்கு தான் பிடிக்காது?

मन्मथोन्मथितमानसा: क्रमात्त्वद्विलोकनरतास्ततस्तत: ।
गोपिकास्तव न सेहिरे हरे काननोपगतिमप्यहर्मुखे ॥२॥

manmathOnmathita maanasaaH kramaattvadvilOkanarataa statastataH |
gOpikaastava na sehire hare kaananOpagati mapyaharmukhe || 2

மன்மதோ²ன்மதி²தமானஸா꞉ க்ரமா-
த்த்வத்³விலோகனரதாஸ்ததஸ்தத꞉ |
கோ³பிகாஸ்தவ ந ஸேஹிரே ஹரே
கானநோபக³திமப்யஹர்முகே² || 59-2 ||

கிருஷ்ணா,  தேன் தேடும்,  குடிக்கும்,  வண்டாக அத்தனைபேரும் உன்னை சூழ்ந்துகொண்டு உன்னை ரசித்தார்கள்.  நீ காலை  வேளைகளில் காட்டுக்கு  பசுக்களோடு போகிறாயே  மாலை வரை உன்னை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் முகத்தில் ரேகையிட்டது.

निर्गते भवति दत्तदृष्टयस्त्वद्गतेन मनसा मृगेक्षणा: ।
वेणुनादमुपकर्ण्य दूरतस्त्वद्विलासकथयाऽभिरेमिरे ॥३॥

nirgate bhavati dattadR^iShTayaH tvadgatenamanasaa mR^igekshaNaaH |
veNunaada-mupakarNya duurataH tvadvilaasa kathayaa(a)bhiremire || 3

நிர்க³தே ப⁴வதி த³த்தத்³ருஷ்டய-
ஸ்த்வத்³க³தேன மனஸா ம்ருகே³க்ஷணா꞉ |
வேணுனாத³முபகர்ண்ய தூ³ரத-
ஸ்த்வத்³விலாஸகத²யாபி⁴ரேமிரே || 59-3 ||

அமைதியான, நிசப்தமான பிருந்தாவன மேய்ச்சல் காட்டிலிருந்து நீ ஒலிக்கும் அற்புதமான வேணு  கானம் காற்றினிலே வரும் கீதமாக  அவர்கள் செவியில் வந்து விழும்போது  தன்னை மறந்த ஆனந்த நிலையில் இருந்தார்கள். மனதை  அவர்கள் தயிர் கடைவது போல் அது கடைந்தது. உன்னைக் கண்டபோதெல்லாம் கண் இமைக்காமல் தேவர்கள் போல் பார்த்துக்கொண்டே இருக்க தோன்றிற்று.

काननान्तमितवान् भवानपि स्निग्धपादपतले मनोरमे ।
व्यत्ययाकलितपादमास्थित: प्रत्यपूरयत वेणुनालिकाम् ॥४॥

kaananaanta-mitavaan bhavaanapi snigdhapaadapatale manOrame |
vyatyayaakalita paadamaasthitaH pratyapuurayata veNunaalikaam || 4

உனக்கு  என்று வழக்கம்  ஏற்படுத்திக் கொண்டாய்  கிருஷ்ணா.  பண்டீர வனத்தில்  அந்த பெரிய  ஆலமர வேர் சிம்மாசனத்தில் நீ  கையில் புல்லாங்குழலோடு ஒய்யாரமாக உட்காரும் தோரணை! .அடடா எப்படி வர்ணிப்பேன்.  அப்புறம்  வேணுகான கச்சேரி தொடருமே . கால் மேல் கால் போட்டுக் கொண்டு அடர்ந்த  மரங்களின் சுகமான நிழலில் நறுமண மலர்கள் வாசத்தோடு  கிருஷ்ண மஹாராஜாவின் தேன்  ஒழுகும்  வம்ஸி  (கிருஷ்ணனின் குழல்)  கீதம் ஒலி பரப்பாகுமே !. 

கானநாந்தமிதவான்ப⁴வானபி
ஸ்னிக்³த⁴பாத³பதலே மனோரமே |
வ்யத்யயாகலிதபாத³மாஸ்தி²த꞉
ப்ரத்யபூரயத வேணுனாலிகாம் || 59-4 ||

मारबाणधुतखेचरीकुलं निर्विकारपशुपक्षिमण्डलम् ।
द्रावणं च दृषदामपि प्रभो तावकं व्यजनि वेणुकूजितम् ॥५॥

maarabaaNadhuta khechariikulaM nirvikaara pashupakshi maNDalam |
draavaNaM cha dR^iShadaamapi prabhO taavakaM vyajani veNukuujitam || 5

மாரபா³ணது⁴தகே²சரீகுலம்
நிர்விகாரபஶுபக்ஷிமண்ட³லம் |
த்³ராவணம் ச த்³ருஷதா³மபி ப்ரபோ⁴
தாவகம் வ்யஜனி வேணுகூஜிதம் || 59-5 ||

மாரனின்,  மதனின்  அம்புகளை விட கூர்மையாக இதயத்தை துளைக்கும் சக்தி வாய்ந்தது உன்  வேணு கானம். மனிதர்களை மட்டும் அல்ல, கேட்கும் அனைத்து ஜீவராசிகளின் இதயத்தையும் கவரும் காந்த சக்தி கொண்டது. இல்லாவிட்டால் உன்னைச்  சுற்றி  பசுக்கள், கன்றுகள், மான்கள், மயில்கள் பறவைகள் என்று எத்தனையோ, ஏன், மரங்களின் மலர்கள் கூட  மகிழுமா?  கல்லும் கரையும்,கனியும்,  கீதம் என்பது இது தான்.

वेणुरन्ध्रतरलाङ्गुलीदलं तालसञ्चलितपादपल्लवम् ।
तत् स्थितं तव परोक्षमप्यहो संविचिन्त्य मुमुहुर्व्रजाङ्गना: ॥६॥

veNurandhra taralaanguliidalaM taalasanchalita paadapallavam |
tatisthataM tava parOkshamapyahO sanvichintya mumuhurvrajaanganaaH || 6

வேணுரந்த்⁴ரதரலாங்கு³லீத³லம்
தாலஸஞ்சலிதபாத³பல்லவம் |
தத்ஸ்தி²தம் தவ பரோக்ஷமப்யஹோ
ஸம்விசிந்த்ய முமுஹுர்வ்ரஜாங்க³னா꞉ || 59-6 ||

புல்லாங்குழல் வாசிக்கும்  நளினம்  பார்க்கவே அற்புதமாக இருக்கும்.  புல்லாங்குழல் வித்வான்
களை கவனியுங்கள். மூங்கில் குழலின் துளைகள் மேல் விரல்  நுனிகள் நர்த்தனம் ஆடும் அழகே  அழகு.  (என்னுடைய நெருங்கிய உறவினர், புல்லாங்குழல் வித்துவான், கலைமாமணி, ஸ்ரீ KR கணபதி அவர்கள் அருகிலே அமர்ந்து அவர் வீட்டில்  தனிமையில் வாசிக்கும்போது அவர் விரலசைவுகளில் மனதைப்  பறிகொடுத்திருக்கிறேன்.)கிருஷ்ணன் வாசிக்கும் அழகை, விரல்களின்  தாள நர்த்தனத்தை எப்படி  சொல்வது? கால்களும் ஆனந்தமாக தாளம் போடும்.  நீ காட்டில் இப்படி  வாசிப்பதை நேரில் காணமுடியாமல் வீட்டில் மனக்கண்ணால் கோபியர்கள் ரசித்து மயங்கி விழுந்தார்கள்.  நாங்கள் ஏட்டில் ரசித்து மகிழ்கிறோம்.  

 निर्विशङ्कभवदङ्गदर्शिनी: खेचरी: खगमृगान् पशूनपि ।
त्वत्पदप्रणयि काननं च ता: धन्यधन्यमिति नन्वमानयन् ॥७॥

nirvishanka bhavadanga darshiniiH khechariiH khagamR^igaan pashuunapi |
tvatpadapraNayi kaananaM cha taaH dhanyadhanyamiti nanvamaanayan || 7

நிர்விஶங்கப⁴வத³ங்க³த³ர்ஶினீ꞉
கே²சரீ꞉ க²க³ம்ருகா³ன்பஶூனபி |
த்வத்பத³ப்ரணயி கானநம் ச தா꞉
த⁴ன்யத⁴ன்யமிதி நன்வமானயன் || 59-7 ||

பிருந்தாவனத்தில் நீ வாழ்ந்த காலத்தில் வாழக் கொடுத்துவைத்திருந்த  ஈ , எறும்பு, கொசு, புழு கூட  என்னைவிட பல கோடி மடங்கு பாக்கியம், புண்ணியம் செய்திருக்கிறது கிருஷ்ணா,  அவை வாழ்ந்தது பிருந்தாவனம் எனும் வெறும் மண்ணல்ல. பூலோக வைகுண்டம், ஸ்வர்க பூமியில். எங்குமே ஆனந்தம். கடவுளோடு சேர்ந்து வாழும் அதிர்ஷ்டம்.   இப்போதாவது ஒரு முறை நீ வாழ்ந்த ''அந்த ''  பூமியை  மிதித்து வணங்க மனதில் தீராத ஒரு ஆசை. என்றோ ஒருநாள் நிறைவேறுமா?

आपिबेयमधरामृतं कदा वेणुभुक्तरसशेषमेकदा ।
दूरतो बत कृतं दुराशयेत्याकुला मुहुरिमा: समामुहन् ॥८॥

aapibeyamadharaamR^itaM kadaa veNubhuktarasasheShamekadaa |
duuratO bata kR^itaM duraashaye-tyaakulaa muhurimaaH samaamuhan || 8

ஆபிபே³யமத⁴ராம்ருதம் கதா³
வேணுபு⁴க்தரஸஶேஷமேகதா³ |
தூ³ரதோ ப³த க்ருதம் து³ராஶயே-
த்யாகுலா முஹுரிமா꞉ ஸமாமுஹன் || 59-8 ||

அதர பான ருசியை 
  'வாயில் முத்தமிட்டாண்டி''  என்று பாரதி கண்ணனைப் பற்றி  எழுதும் கண்ணம்மா பாட்டில் ரசித்து இருக்கிறோமே. அதை  உண்மையிலேயே  கண்ணனை வாயில் முத்தமிட்டு கோபியர்கள்  பிருந்தாவனத்தில் ஆனந்தானுபவம் பெற்றவர்கள்.  அந்த மூங்கில் புல்லாங்குழம் பெற்ற  பாக்யம் நாங்கள் பெறவில்லையே என்று  ஏங்கியவர்கள் எண்ணற்றவர்கள்.

 प्रत्यहं च पुनरित्थमङ्गनाश्चित्तयोनिजनितादनुग्रहात् ।
बद्धरागविवशास्त्वयि प्रभो नित्यमापुरिह कृत्यमूढताम् ॥९॥

pratyahancha punaritthamanganaaH chittayOni janitaa danugrahaat |
baddharaagavivashaaH tvayi prabhO nityamaapuriha kR^ityamuuDhataam || 9

ப்ரத்யஹம் ச புனரித்த²மங்க³னா-
ஶ்சித்தயோனிஜனிதாத³னுக்³ரஹாத் |
ப³த்³த⁴ராக³விவஶாஸ்த்வயி ப்ரபோ⁴
நித்யமாபுரிஹ க்ருத்யமூட⁴தாம் || 59-9 ||

நாளொரு வண்ணமும் பொழுதொரு அழகுமாக  வளர்ந்து வரும் உன் மேல்  பிருந்தாவன வாசிகளுக்கு  அளவு கடந்த அன்பும் பாசமும் அவ்வாறே  வளர்ந்து வந்தது. உன்னோடு கூடவே  எப்போதும் இருக்கவேண்டும் என்ற அடக்கமுடியாத ஆவல் அதிகரித்தது. 

रागस्तावज्जायते हि स्वभावा-
न्मोक्षोपायो यत्नत: स्यान्न वा स्यात् ।
तासां त्वेकं तद्द्वयं लब्धमासीत्
भाग्यं भाग्यं पाहि मां मारुतेश ॥१०॥

raagastaavajjaayate hi svabhaavaan
mOkshOpaayO yatnataH syaannavaasyaat |
taasaantvekaM taddvayaM labdhamaasiidbhaagyaM
bhaagyaM paahi vaataalayesha ||10

ராக³ஸ்தாவஜ்ஜாயதே ஹி ஸ்வபா⁴வா-
ந்மோக்ஷோபாயோ யத்னத꞉ ஸ்யான்ன வா ஸ்யாத் |
தாஸாம் த்வேகம் தத்³வயம் லப்³த⁴மாஸீத்
பா⁴க்³யம் பா⁴க்³யம் பாஹி மாம் மாருதேஶ || 59-10 ||
[** வாதாலயேஶ **]

எண்டே குருவாயூரப்பா, பிருந்தாவன வாசிகள் அனைவருமே  அதிர்ஷ்டசாலிகள், புண்ணியம் செய்த ஜீவன்கள். ஜீவன் முக்தி அடைந்தவர்கள். உன் ஒளியும், ஒலியுமே  மோக்ஷத்தை தரும் பாக்யம் பெற்றவர்கள். பல யுக தவம் செய்யவேண்டியதே இல்லையே. என்னையும்  உன் அருளால் நோய் தீர்த்து ரக்ஷிப்பாய்.

sivan jaykay

unread,
Sep 25, 2021, 12:25:17 AM9/25/21
to amrith...@googlegroups.com
உள்ளது நாற்பது -  நங்கநல்லூர் J K SIVAN---
பகவான் ஸ்ரீ ரமணமஹரிஷி.

13.  தங்கம் ஆபரணமாகிறது. 

''ஞானமாந் தானேமெய் நானாவா ஞானமஞ்
ஞானமாம் பொய்யாமஞ் ஞானமுமே – ஞானமாந்
தன்னைன்றி யின்றணிக டாம் பலவும் போய்மெய்யாம்
பொன்னையன்றி யுண்டோ புகலுடனா – னென்னுமத்'' 13

மறுக்கவே முடியாத  பேருண்மை எது வென்றால்  ஞானஸ்வரூபமாகிய  ''நான்'' எனும் ஆத்மாவாகிய ஸத்யம். மற்ற ஸ்வரூபங்கள் தோற்றங்கள் எல்லாமே மாயை. பொய்யானவை. எல்லா அஞ்ஞான வஸ்துக்களும் தோற்றங்களும்  ஆத்மாவை சுற்றியே உள்ளவை.   நவரத்ன கற்கள் ஜொலித்தாலும் , கண்ணைப்பறித்தாலும்  தங்கக்கம்பி இல்லாமல் அவை தனித்து நிற்கமுடியுமா? தங்கம் கண்ணில் படாது. பளபளக்கும் கல் தான் கண்ணில் பட்டு நம்மைக் கவரும். அது போல்  உள்  நின்று ஒளிரும் ஆத்மா நமக்கு தெரிவதில்லை. ஒவ்வொருவரும்  ''தான்''  தான் அந்த ஆத்மா வேறொன்றுமில்லை என்று தானாகி அனுபவிப்பது தான்  ஸத்யமான  தத்பாவம். ஆத்ம ஸ்வரூபம். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.

மனதால் அறியும்  வெளி உலக  விஷயம் எல்லாமே  அஞ்ஞானம் தான்.    அந்தர்முகமான ஆத்ம விசாரம் தான் உண்மை ஸத்யமான ஞானத்தை தருவது.  பொய்யை மெய்யென்று நம்புகிறோம். சூரியனை மேகம் மறைக்கிறது.  அப்படி மறைக்கும் மேகத்தை அறிய உதவுவதே சூரியனின் ஒளி தான். அதுபோல்  காணும் வெளியுலக விஷயங்களுக்கும் ஒளிந்திருப்பது ஆத்மஞானம் எனும் ப்ரம்மம் தான்.  நெக்லஸ் சங்கிலி வளையல் தோடு என்று பல ரூபத்தில்  நகைகள், ஆபரணங்கள் கண்ணுக்கு தெரிந்தாலும் அதற்கெல்லாம் ஆதாரம்  தங்கம் தான். அது தெரிவதில்லை, புரிவ தில்லை. ஆனால் இருக்கிறது என்று அறிவு சொல்லும்.   நகையை செயகிற  தட்டானுக்கும்,  நகையை திருடும்  திருடனுக்கு  ஆபரணம் கண்ணில் மனதில் கிடையாது. அதில் உள்ள தங்கம், அதன் மதிப்பில் தான் கவனம். அதுபோல் ஞானிக்கு எதிலும் உள்ள பிரம்மத்தின் மேல்  தான் ஈர்ப்பு.

ஒரு கிராம வாசி படிக்காதவன்  ரமணரை தரிசிக்க வந்தபோது ''சாமி, வாழ்க்கையிலே  ரொம்ப  கஷ்டம் துக்கம் இருக்குதுங்க''  என்று பெரிய லிஸ்டாக தனது கஷ்டம், துக்கங்களை கூறினான். எல்லாவற்றையும் கேட்ட  மகரிஷி,  ''நீ  அயர்ந்து  தூங்கும்போது உன் துக்கம் கஷ்டம், வலி எல்லாம் எங்கே போயிற்று.? அதேபோல் விழித்துக்கொண்டிருக்கும்போதும்  அந்த நிலையை எப்போதும் மனதில் நிறுத்திக் கொள்ள முயற்சி செய். துன்பம் இருக்காது.''  சிறிது நேரம் அவர் அருகே உட்கார்ந்திருந்த அந்த மனிதன் எழுந்து  சென்றான்.  இதைப்பார்த்த ஒரு  படித்த பக்தர்  ''சுவாமி உங்கள்   பிரம்மோபதேசத்தை பாமர மக்களுக்கும் சொல்கிறீர்களே அவர்கள் எதிர்பார்ப்பது உலக வாழ்வில் படும் துன்பத்துக்கு தானே வழி தேடுகிறார்கள்''  என்றார் .  அதற்கு உங்கள் பரமார்த்திக உபதேசம் உதவுமா?

இதோ பார்  அப்பா . ஒரு அறையில் ரெண்டு பேர் தூங்குகிறார்கள்.  ஒருவன் கனவில் அவன் வீட்டை கொள்ளை அடித்து திருடன் எல்லாவற்றையும் மூட்டை கட்டிக்கொண்டு ஓடுகிறான். கனவு கண்டவன் தூக்கத்தில் திருடனைப் பிடி  ஓடறான் பிடி பிடி என்று கத்துகிறான்.  மற்றொருவன் தூக்கம் கண் விழித்து ஓடினால் திருடனை பிடிக்க முடியுமா.  திருடனை பிடிக்க தூங்குபவனை  எழுப்பினால் கொள்ளையுமில்லை, திருடனும் இல்லை, அவன் ஓடவும் இல்லை, எதற்கு யாரை ஓடிப்பிடிக்கவேண்டும்?   பாமரனோ பண்டிதனோ தனது துன்பம் தீர  ஆத்ம ஞானம் நாடினால் விலகுமே.  

புத்தி எப்போதும்  தானே பிரச்னைகளை உருவாக்கி, அவைகளுக்கு தீர்வு காண கஷ்டப்படுகிறது. பிரச்னைகளுக்கு  தீர்வு தேடவேண்டாம்.  பிரச்னைகளை விட்டுவிட்டாலே போதும்.  மறைந்துவிடும்.
உலகத்தில்  வெறுப்போ, விருப்போ உள்ளதால் தான் சித்தத்தில் உணர்ச்சிகள் தோன்றுகிறது. இதற்கு பின்னால்  எப்போதும் இருப்பது சித் . தங்கம் ஆபரணமாக கதை இது தான். சமுத்திரம் நீரால் ஆனது. அதன் மேல் அலை, குமிழிகள், நீர்த்திவலை, நுரை எல்லாம்  நீரின்  வெளிப்பாடுகள். தனித்தனியாக வஸ்துகளை பார்த்து இன்ப துன்பங்களை நாம் அனுபவிக்கிறோம்.

 





sivan jaykay

unread,
Sep 25, 2021, 12:25:49 AM9/25/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN  --

79  பாபம் புண்யம் பற்றி கொஞ்சம்...

மஹா பெரியவா பக்தர்களே, வாசகர்களே,  உங்களுக்கு ஒரு அருமையான விருந்து இப்பொழுது  தரப்போகிறேனே , அது நான் தயார் செய்த  அறுசுவை விருந்து இல்லை. மஹா பெரியவா  1932ம் வருஷம் அக்டோபர் மாதம் 10ம் தேதி  அப்போதைய மெட்ராஸ்  ஸமஸ்க்ரித  கல்லூரி வளாகத்தில் நிகழ்த்திய   உபன்யாச சாரம்.  ஏராளமாக பக்தர்கள்  கூடி இருந்தார்கள். அனைவரும் தரையில் அமர்ந்திருந்தார்கள். ஒரு சின்ன சப்தம் கூட இல்லை. மெல்லிய குரலில் மஹா பெரியவா பேசுவது தேன்  துளிகளாக  எல்லோர் காதிலும் விழுந்தது.  இதைத்  தான் பாரதியார்  ''இன்பத் தேன்  வந்து பாயுது காதினிலே''  என்று பாடி இருக்கிறாரோ என்று தோன்றுகிறது. கேளுங்கள்: 

''சாப்பிட  உட்கார்ந்தால்  நாம்  வயிறு நிறைய சாப்பிடுகிறோம். அதேபோல் நமது குடும்பத்தில் மனைவி, பெற்றோர், குழந்தைகள் , பந்துக்கள், மித்ரர்கள், எல்லோரும் சுகமாக இருக்க வழி தேட சில லௌகிக காரியங்கள் செய்கிறோம். உடுக்க வஸ்திரம், இருக்க வீடு,  உண்ண  சாப்பாடு இதுபோல வசதிகள் கிடைக்க உழைக்கிறோம்,  தேடுகிறோம்.  இது இந்த லோகத்துக்கு தான் உபயோகம்.  மற்ற லோகங்களுக்கு நாம் செல்ல வேண்டுமே, அப்போது அங்கே  இப்படி நமக்கு வசதி கிடைக்க என்ன செய்யவேண்டும். அதற்கு  தான் தர்மம் செய்வது.   

''நீங்க சொல்றதெல்லாம் சரிதான். அன்றாடம் காலம் தள்ள, குடும்பத்தை கவனிக்கவே  நேரம் போத வில்லையே, அடுத்த லோகம் போனால் சௌகர்யத்துக்கு தர்மம் எல்லாம் எப்படி பண்ணறது, நேரம் எங்கே, போதாதே. சொல்றது ஈஸி'' என பதில் சொல்லலாம்.   நான் ஒரு விஷயம் சொல்றேன்.  பணம் சம்பாதிக்க நேரம் ஆகட்டும். அதையும் மீறி  உல்லாசத்துக்கு, வம்புக்கு, கேளிக்கைக்கு, வீண் பேச்சுக்கு, கேலிக்கூத்துக்கு  எல்லாம் கூட நமது நேரம் வீணாகிறது அல்லவா?  அனாவசியமாக  செலவாகிற தல்லவா? அதை தர்ம காரியத்துக்கு  திருப்பிவிடுங்களேன்'.  உதாரணமாக  ட்ரெயினில்,  ட்ராமில் , பஸ்ஸில், வண்டியில் உட்கார்ந்து போகும் நேரம்  பகவான் நாம ஜபம் பண்ணலாமே.   மனம் இருந்தால் நிச்சயம் மார்க்கம் உண்டே.  இப்போ  கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காசு அப்போது நம்மோடு  கூட வரப்போவதில்லை, அடுத்த  லோகங்களிலும் செல்லாது.  நேரமில்லை என்று  சொல்வது  பொய் . நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.''  (நான் இல்லை, மஹா பெரியவா  சொல்றார்)

பணம் இல்லை என்கிறது தப்பு.  கொஞ்சம் சம்பளம், கஷ்ட தசை என்றாலும்  ஒரு பைசா, காலணா, நிச்சயம் மிச்சம் பண்ணி  உண்டியல்லே பகவானுக்குன்னு போடுகிறேன்  என்று  திடமாக சங்கல்பம் பண்ணிக்கொள்ளலாம்.  தூக்கத்திலேயும், வம்பிலேயும் நேரம் செலவாகாமல் பகவான் சரணங் களை தியானம் செய்யலாம். இது தான் வரவு. சேமிப்பு அடுத்த லோக சௌகர்யத்துக்கு.   

நாம்  ரொம்ப பாபம் செய்தவர்கள், பாபிகள் என்று நினைக்கவே வேண்டாம். நம்மைவிட ரொம்ப ரொம்ப பாபம் பண்ணியவர்களை எல்லாம் புண்யசாலிகளாக்கி இருக்கிறான் பகவான்.  அப்படி ஆக்குவது தான் அவனுக்கு பெருமை.

''டேய் , அர்ஜுனா  நீ பாபிகளிலேயே முதல்வன் என்றால் கூட,  பாபம் என்கிற சமுத்திரத்தை ஞானம் என்கிற ஓடத்தில் ஏறி நீ கடந்துவிடலாம். கவலைப்படாதே.''  (கீதை  4.36)
''ஐயோ,  நாம  இவ்வளவு பாபம் செய்துட்டோமே என்று அழாதே. அதைர்யப்படாதே. உன்னை எல்லா பாபத்திலிருந்தும் நான் மீட்டுடறேன்''  (கீதை 18.66)''  என்கிறார் கிருஷ்ணன்.

பாபம் நாம் எப்படி பண்றோம்?   மனசிலே  கெட்ட எண்ணங்களால், வாயிலே கெட்ட , தப்பான வார்த்தைகள், புரளிகள் பேசுவதால், உடம்பாலே பண்ற பாபத்தை சொல்லவே முடியாது. அவ்வளவு ஜாஸ்தி.   பாபங்கள் பண்ணாமல் இருக்க முடியலையே ? அது   குடிகாரன் மாதிரி பழக்கமாயி டுத்தே,  பிசாசு பிடிக்கிற மாதிரி நம்மை பாபங்கள் விடாது பிடித்துக் கொள்கிறதே.  இதிலிருந்து எப்படி விடுபடறது?

முள்ளை முள்ளாலே எடுப்பது என்கிறோமே, அதே டெக்னிக்  தான். எந்த வழியிலே பாபம்
பண்ணினோமோ அதே வழியில். வாயினால் நல்ல சொற்களை, யாருக்கும்  தீங்கில்லாமல், உதவும்படியாக பேசுவோம், மனதில் எவருக்கும் தீங்கு செய்யாமல்   தப்பு என்று தோன்றும்போது அதை மதித்து கண்ட்ரோல் பண்ணிக்கொண்டு, தேகத்தை  கட்டுப்பாடோடு வைத்துக்கொண்டு பகவத் காரியங்களில் அதை ஈடுபடுத்திக் கொண்டு தர்ம காரியங்களை  முடிந்தவரை செய்வோம்.  
மஹா நாராயண உபநிஷத் இதைத்தான் ''பாபத்தை தர்மத்தால் நிவர்த்தி பண்ணு '' என்கிறது.  

எல்லாத்துக்கும் காரணம் மனசு. அதை நேர் வழியில் இழுத்து பிடித்து நிறுத்தவேண்டும். ஆசைக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்வோம். பாபத்தை பண்ண தூண்டுவது மனசு தான். புண்யம் என்று எங்கோ எதையோ தேடிப்  போய் செய்யவேண்டாம். பாபம் செய்யாமல் இருந்தாலே புண்யம் தான். புண்ய பலன் சந்தோஷமாக இருப்பது தான். சாந்தி தான் மனதுக்கு தேவையானது. அலை பாய்வது அல்ல.   பாபத்தின் பலன் தான் அத்தனை கஷ்டமும்.  மனச்சாக்ஷி சொல்லியும் தடுத்தும், அதை மீறி தப்பு செய்வது தான் பாபம். 

யாருக்குமே  பாபம் செய்யவேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஆனால் செய்வது நூற்றுக்கு எண்பது  தொண்ணூறு  பாப காரியம் தான்.    ஏன்? ஆசை, ஐம்புலன்களின் ஈர்ப்பு. பாப மூட்டை பெரிதாக போய்க்கொண்டே இருக்கிறது. அப்புறம்  ஏன் இப்படி என்று கேட்டு என்ன  பயன்?

அர்ஜுனன் புத்திசாலி. ஒரு கேள்வி கேட்டான் பாருங்கள் கிருஷ்ணனை . 
''பாபம் பண்ணனும் என்று எண்ணமோ நோக்கமோ இல்லை, ஆனால் பாபம் நிறைய செய்கிறோமே, யார் இப்படி தூண்டுவது , யார் இப்படி செய்விப்பது?(கீதை  3.36)

''நமது காரியங்கள் அத்தனையுமே மனதில் எழும் ஆசையினால், (ஆசை தான் காமம்)  பாபம், தப்பு, தவறு என்று தெரிந்தும் சுயலாபத்துக்காக,  அல்ப சுகத்துக்காக  செய்கிறோம். அது தான் முதல் சத்ரு.    அடுத்தபடியாக   அது கிடைக்காமல் போனால்  வரும்  கோபம் (க்ரோதம்). காமம் தான் க்ரோதமாகிவிட்டது.  ரெண்டும் ஒன்று தான்.   சுவற்றில் எறிந்த பந்து அதே வேகத்தோடு நம் முகத்தில் விழுவது போல். காமம்,  கோபமாக திரும்புகிறது. காமத்தை அடக்க அதன் வழி போனால்  திருப்தி அடைவதில்லை.    இன்னும் பசி  அதிகமாகும்.  நெருப்பு மாதிரி மேலே போடப்போட  இன்னும் பெரிதாக  ஜ்வாலை  எழும்புவது போல் அதிகமாகும்.    ஆகவே  நாம் செய்யும் பாப காரியங்களுக்கு காரணம் இந்த காம  க்ரோதங்கள் தான்.  யோசித்துப்பாருங்கள் உண்மை புலப்படும்.   மனம் வாக்கு காயம்  இந்த மூன்றாலும் பாபம் செயகிறோம் என்றேன் அல்லவா?. 
 அந்த மூன்றையும் முதலில்  கண்ட்ரோல் பண்ணி சுத்தப்படுத்திக் கொள்வது தான் த்ரிகரண சுத்தி. 

பகவான் மனிதனுக்கு மட்டும் வாக்கு  எனும்  வசதி கொடுத்திருக்கிறான். மனதில் நல்ல எண்ணங்களை தோற்றுவித்து அதை வெளிப்படுத்த வாக்கு அவசியம்.   நாமும் நல்ல காரியம் பண்ணி, பிறரையும் பண்ண வைக்க வாக்கு , நாக்கு, உதவட்டும் என்று தான் கொடுத்துள்ளான்.  நாம் அதை துஷ்ப்ரயோகம் பண்ணுகிறோம். நரம்பில்லாத  நாக்கு என்னவேணும் என்றாலும் பேசும் என்று நாமே சொல்கிறோம்.  பாபம்  சேர அதுவே முதல் காரணம் ஆகிறது. வேலியே பயிரை மேயும்  கதை.  புகையிலை,  மூக்குப்பொடி, சிகரெட் பீடி,   எல்லாம் முதலில் அல்ப சுகம் தந்து மீண்டும் மீண்டும்  அதை செய்ய தூண்டுகிறதே  அது போல்.   முளையிலேயே இந்த கெட்ட பழக்கத்தை விலக்கி  நல்ல ஸத் காரியம் பண்ண பழக்கப் படுத்திக் கொண்டால் மேலே சொன்னதெல்லாம்  கிட்டேயே  வராது.  

தினந்தோறும்  மனதாலும், வாக்காலும், உடம்பாலும், பணத்தாலும், கொஞ்சமாவது நல்லதே செய்து  கொண்டு வருவோம். அதுவே பழக்கமாகிவிடும். தினமும்  ஒரு சில பைசாவாவது, தர்ம காரியத்துக்கு என்று ஒதுக்கி டப்பாவில் போட்டு பின்னால்  அதை அந்த காரியத்துக்கே
 உபயோகிக்கும்போது மனசந்தோஷம் ஏற்படும்.  குழந்தைகளை தினமும் ஒரு காலணா, ஒரு பைசாவாவது வேண்டிக்கொண்டு ஸ்வாமிக்கு டப்பாவில் போடா வையுங்கள். இந்த பணம் தான்  AFTER LIFE INSURANCE.  வாக்கினால் தினமும்  ரெண்டு ஸ்லோகமாகவாவது,  பகவன் நாமாவாவது சொல்வோம். ஜபமாலை உருட்டி  108 சொல்லமுடிந்தால் அற்புதமான புண்யம் சேர்த்துக்கொள்கிறோம்.   வீட்டை சுத்தமாக பெருக்கி மெழுகி வைத்துக் கொள்கிறோம், அதுபோல் மனதை சுத்தமாக்கினால்  ஹ்ருதய பீடத்தில் பகவான் வந்து அமர்வான். தினமும்  ஐந்து நிமிஷ தியானமே போதும்.   பணம் சம்பாதிக்க எவ்வளவு நேரம், மனதையும் உடம்பையும் வீணாக நேரத்தை செலவழிக்கிறோம். ஒரு ஐந்து பத்து நிமிஷம், முடிந்தால்  அரைமணி , அதை தியானத்தில் திருப்ப முடியாதா?   

பாபம் பண்ணியிருப்பதால் தான் தர்மம் மூலம் புண்யம் தேவை.  கடன் தீர  கொஞ்சம் கொஞ்சமாக வட்டி, கொஞ்சம் அசல் திருப்பி கொடுப்பதால்  கடன் சுமை குறைவது போல் பாபம் கரைந்து  புண்யத்துக்கு இடம் கொடுக்கும். 

நமது அந்திம  காலத்தில், பிரயாண காலத்தில், மனது அசையாது.  மலைபோல் இருக்கும். பாபத்தைப் பற்றிய பயம் இருக்காது.  அதனால் கோப,க்ரோத பயமும் இல்லை.  பகவத் தியானம், மனதை அவனிடம் சேர்க்கும் . (கீதை  8.10)  நாம் பண்ணிய காரியத்துக்கு எல்லாம் பகவான் பொறுப்பேற்று நம்மை மீட்கிறான்.   அதனால் தான் அவனை கருணாசாகரன் என்று சொல்கிறோம். 

தொடரும். 

sivan jaykay

unread,
Sep 25, 2021, 12:25:49 AM9/25/21
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்-   நங்கநல்லூர்   J K SIVAN

80. லோகோபகாரி  மஹா பெரியவா.

இந்துக்களாகிய நமது வாழ்வில்  அக்னி எனும் தீ  ஒரு விசேஷ பங்கு ஏற்கிறது.  பிறந்தது முதல் இறந்தது வரை அக்னிக்கு நமது வாழ்வில் முக்கிய பங்கு உண்டு.  பிறக்கும்போது  கணபதி ஹோமம்,  நாமகரணம், ஜாதகரணம், நவகிரஹ ஹோமம், ஆயுஷ் ஹோமம்  எல்லாமே அக்னியோடு தான்.  உபநயனத்தின் போது,  ஒவ்வொரு பிறந்தநாளிலும்  வீடுகளில் அடிக்கடி  ஒரு  கணபதி ஹோமம்,   நவகிரஹ ஹோமம், மிருத்யுஞ்ஜய ஹோமம் பண்ணுகிறவர்கள் உண்டு.  சில வீடுகளில்  சுதர்ஸன  ஹோமம் பண்ண வசதியும் இருக்கலாம்.  சுபகாரியங்களிலும்   கோவில்களில் வழிபாட்டுக்கும் ஹோமம் இல்லாமல் இல்லை.   விவாஹ காலத்தில்  அக்கினியை சாக்ஷியாக வைத்துக் கொண்டு ஹோமம். வீட்டில் ஔபாசனம் ஆரம்பித்துக்கொண்டு ஆயுள்பரியந்தம்  நித்ய ஹோமம் பண்ணுகிற  அக்னி ஹோத்ரிகளும் உண்டு. 
 வருஷத்தில் ஆறு கர்மாக்கள் ஔபாசனாக்கினியால் பண்ண வேண்டும்.

ஒரு பிள்ளை பிறந்தபின் மயிர் நரைப்பதற்கு முன் அக்னிஹோத்ரம் செய்யவேண்டும். பிள்ளை பிறக்காவிட்டால் அக்னிஹோத்ரம்  இல்லை.

ஸந்யாசிக்கு சாதுர்மாஸ்யம் என்று ஒன்று உண்டு. அது ஒரே இடத்திலிருந்து பண்ண வேண்டியது. கிருஹஸ்தனுக்கு அது ஒரு யாகம். அக்கினியாதனம், அக்னிஹாத்திரம், தரிசபூர்ணமாஸம், ஆக்ரஹாயணி, சாதுர்மாஸ்யம், பசுபந்தம், சௌத்ராமணி என்னும் ஏழும் ஹவிர் யக்ஞங்கள்.

ஒவ்வொருவரும் 21 வகை யஞங்களை   செய்துவரவேண்டும். இவை பாக யஜ்ஞ, ஹவிர் யஜ்ஞ, சோம யஜ்ஞ என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பாக யஜ்ஞம் ஏழிலும், முதல் ஐந்து ஹவிர் யஞங்களும் யஞங்களிலும் உயிர்ப்பலி கிடையாது. வாஜபேய யஜ்ஞம் முதல்தான் உயிர்ப்பலி உண்டு. பிராமணர்கள் செய்யக்கூடிய பெரிய யஞமான வாஜபேய யஞத்தில் 23 பிராணிகளும், க்ஷத்ரியர்கள் செய்யும் மிகப்பெரிய யாகமான அஸ்வமேதத்தில் நூறு பிராணிகளும்  பழைய காலத்தில்  பலியிடப்பட்டன.   அப்படி யாகம் செய்தவர்கள் பெயரோடு வாஜ்பேயி என்ற பட்டம் ஒட்டிக்கொண்டது. நமது 10வது பிரதமர்  அடல் பிஹாரி வாஜ்பாய் இப்படி யாகம் செய்யவில்லை. ஆனால் அவர் முன்னோர்கள் பெயரோடு அது தொடர்ந்து வந்தது. அப்படி தான்  திரிவேதி, சதுர்வேதி  என்ற பெயர்களும்.  வேதம் என்றாலே என்ன என்று தெரியாதவர்களுக்கும் கூட அந்த குடும்ப பெயர் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதர்வ வேதம் யாகங்களை, அமைதிக்கான சாந்திகம், பலத்துக்கான பௌஷ்திகம், எதிரிகளை நாசம் செய்வதற்காண ஆபிசாரிகம் என மூன்று வகையாகப் பிரித்துள்ளது.

இராமபிரானைத் தோற்கடிக்க இந்திரஜித், நிகும்பலை யாகம் (ஆபிசார வகை) செய்ய முயன்றான்.
‘’காமதேனு போன்று யாகங்கள், மனிதனுக்கு விரும்புவதைக் கொடுப்பவை என்றும் மனிதனைப் படைத்தபோதே பிரம்மா அவர்களுக்கு யாகங்களை அளித்ததையும் பகவத் கீதை ஸ்லோகம்  சொல்கிறது.  

யாகங்கள் செய்வதன் மூன்று நோக்கங்கள்  1. எல்லா உயிரினங்களும் நலமுடன் வாழப் பிரார்த்திப்பது 2.இறந்தபின்னர் மேலுலகத்தில் சுகமாக வாழ 3. எல்லாவற்றையும் விட மேலாக, பிரதிபலன் எதிர்பார்க்காமல், உலக நலனுக்காக இதைச் செய்வது நமது கடமை என்று எண்ணிச் செய்வது.  இது தான் இப்போது கூட  மழைவேண்டி நாம் செய்யும் லோகக்ஷேம யாகங்கள் வகைப்பட்டது. 
யஜ்ஞங்கள் மூன்று தினுஸு, யஜ்ஞம் என்பது யாக.  வேதத்தில் ஏறக்குறைய 400 வகை யாகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. 
ஒவ்வொரு பிராமணனும் செய்யவேண்டிய யஞங்கள் 21. அவைகளில் பாக யஜ்ஞங்கள் ஏழு.  பாக்கி உள்ளவை 14. யாகங்களைப் பற்றிய விஷயங்கள் வேதங்களில் நிறைய சொல்லப்பட்டிருக்கின்றன.
ஸோம யாகங்கள் ஏழு. அக்னிஷ்டோமம் முதல் யாகம். அதைச் செய்தவர்கள் ஸோமயாஜி. கடைசியில் இருப்பது வாஜபேயம். அதைச் செய்தவர்கள் வாஜபேயர்கள். வாஜபேயம் பண்ணினவர்களுக்கு அவப்ருத ஸ்நான காலத்தில் அரசர்கள் சுவேதச் சத்திரம் (வெண்குடை) பிடிக்க வேண்டும். திருவாங்கூர், மைசூர் இந்த ராஜ்யங்களில் அவர்களுக்கு சுவேதச் சத்திரம் கொடுக்கிறர்கள்.

ஸோம யாகம் பண்ணும்பொழுது ஸோமலதைச் சாற்றைப் பிழிந்து ஸோமபானம் செய்வார்கள். ஸோமலதையும் கிருஷ்ணாஜினமும்( மான் தோல்) இப்பொழுது மலையாளத்தில்தான் கிடைக்கின்றன. .  மற்ற இடங்களில் இல்லை. நம்பூதிரிகளில் பத்துக் குடும்பத்தில் ஒருவராவது ஸோம யாகம் பண்ணுகிறர்ர்கள். யஜ்ஞம், தானம், தபஸ், இவைகளைச் செய்வதினால் சித்த சுத்தி உண்டாகிறது,   ஜோதிஷ்டோமம் ஜன்மாவில் ஒருதடவையாவது பண்ணவேண்டும்.
சோமயாகம் செய்பவர்களை  சோமயாஜி என்று சொல்வதுண்டு

பரமாத்மாவை அறியப் பிரயத்தனப் படுகிறவர்கள் யஜ்ஞம், உபவாசம் முதலியவைகள் எல்லாவற்றையும் பரமேசுவரப் ப்ரீதியாகப் பண்ணவேண்டும்ம். பூர்வ ஜன்மத்தில் யாகங்கள் பண்ணினவன் இந்த ஜன்மத்தில் விவேகத்தைப் பெறுகிறான். 

 திருநெல்வேலி,  அரியநாயகிபுரம் ஆர்.அனந்தகிருஷ்ண சாஸ்திரி 1936 ல் எழுதிய மகாமேரு யாத்திரையில் ஒரு இரவு முதல் நூறு இரவு வரை நடத்தப்படும் (சதராத்ர்க் க்ரது) பற்றி சிரௌத சூத்திரங்களால் தெரிந்துகொள்ளலாம் என்கிறார்.

நைமிசாரண்யம் காட்டில் நடந்த ரிஷிகள் கூட்டத்தில்  12  வருஷம் தொடர்ந்து நடத்தப்பட்ட யாகங்கள் பற்றி  புராணங்கள் சொல்கிறது.   ராஜாக்கள் நிகழ்த்திய  அஸ்வமேத யாகம், ராஜசூய யாகங்கள் பெரிய சமாச்சாரங்கள். . இதில் நூறு வகை மிருகங்கள் பலியிடப்படும். ராஜாவின்யாகக் குதிரை எங்கெல்லாம் செல்கிறதோ அவை எல்லாம் ராஜவுக்குச் சொந்தம். அதை மறுப்பவர்கள் குதிரையைப் பிடித்து கட்டிப்போடலாம். பின்னர் பெரிய யுத்தம் நேரிடும். 200 வகையான பிராணிகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் முதலியன தீயில் இடப்படும். இறுதியில் நாடு நாடாகச் சென்று திரும்பிய குதிரையும் பலியிடப்படும். குழந்தை இல்லாததால் தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் பண்ணி தான்  ராமலக்ஷ்மணர்கள் நான்கு சகோதரர்கள் பிறந்தார்கள். 

1932ல்  மஹா பெரியவா வாஜபேயம் ஸ்வாமிகள் என்பவருக்கு  வெண் பட்டுக் குடை பரிசளித்தார். இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது. யாக யஞங்கள் செய்வது குறைந்துவிட்டது.  மடத்தில் யாகங்கள் செய்யும்போது பண்டிதர்களை, வித்வான்களை  கௌரவிப்பது வழக்கம். யோகக்ஷேமத்துக்காக,  மக்கள் சுபிக்ஷத்துக்காக  யாக யஞங்கள்  பண்ணவேண்டியது அவசியம். யாக யஞங்கள் பண்ணுபவர்களை  அன்போடு அழைத்து கௌரவிப்பார். மஹா பெரியவாளுக்கு பிடித்த ஒருவர்  தண்டாங்கரை  அப்பாதுரை தீக்ஷிதர்.  25 வருஷகங்களுக்கு மேலாக  யாகங்கள் விடாமல் நடத்தியவர்.  வாஜபேய யாகங்கள் போல  பெரிய யாகங்களை சிறப்பாக நிகழ்த்தியவர். அவருக்கும்  மைலாப்பூரில்  மஹா பெரியவா  வெண் பட்டுக்குடை  பரிசளித்திருக்கிறார்.  அந்த காலத்தில் ராஜாக்கள்  யாகம் நிகழ்த்தும்   மஹரிஷிகளுக்கு  வெண்கொற்றக்குடைகள் பரிசளித்தார்கள்.  மகாராஜாவுக்கு  சமம் அந்த மஹரிஷிகள். ஏன், இன்னும் உசத்தி கூட. 

மஹா பெரியவா  மற்றும்  இருவர்களுக்கும்  இதே போல் வெண்பட்டுக் குடைகள் அளித்தார். அவர்கள் சேங்காலிபுரம் நாராயண வாஜ்பேயர் , அவர் சகோதரர்  வெங்கடேச வாஜபேயர். 

1933ம் வருஷம்  மாட்டு பொங்கல் தினத்தன்று  கோபூஜை நடந்தது.  ஸ்ரீ  A.K. ரங்கநாத ஐயர், ஒரு ஸ்லேட் தொழிற்சாலையை  சென்னை  அருகே   திருமங்கலத்தில் நடத்திவந்தார்.  தினமும் மடத்தில்  விடிகாலை சூரியோதயம்  முன்பு கோ பூஜை நடப்பது வழக்கம்.  மாட்டு பொங்கல் அன்று சாயந்திரம் ஒரு விசேஷ  கோ பூஜை. அதில்  பசுக்களோடு  எருமைகளும்  உண்டு.    மாட்டு பொங்கலன்று ஹரிஜன தலைவர்  ராவ் பகதூர்   M.C   ராஜா திருமங்கலத்துக்கு  குடும்பத்தோடு வந்து மஹா பெரியவாளை தரிசனம் செய்தார்.  மஹா பெரியவா அவரை அன்போடு வரவேற்றார்.  ஹரிஜன நலனுக்கு  என்ன ஏற்பாடுகள் திட்டங்கள் செய்யவேண்டும் என்பதை ஆர்வத்தோடு விளக்கினார்.  மடத்தின் உதவிகள்  பல வருஷங்களாக  அவர்கள் நலவாழ்வுக்கு  செய்யப்படுவதை எடுத்துரைத்தார். பொதுவாழ்வில் நேர்மை, தியாக சிந்தனை, அன்பு இருக்கவேண்டியதின் அவசியத்தை ஸ்ரீ ராஜாவுக்கு அறிவுரை கூறியதில்  ராஜாவுக்கு. மஹாபெரியவாளிடமிருந்து பிரசாதங்கள் பெற்று விடைபெறும்போது  ராஜாவின் மனைவி ஒரு ஆட்சியரமான செயலை செய்தார்.  மஹா பெரியவா நின்றிருந்த இடத்தில் இருந்து  சிறிது மண்ணை எடுத்து கண்ணில் ஒற்றிக்  கொண்டு தனது சேலையின் முந்தானையில் முடிந்து வைத்துக் கொண்டார். அவர் கண்ணில் ஆனந்தக்  கண்ணீரை  சேலைத் தலைப்பால்  துடைத்துக் கொண்டார்.   அங்கிருந்தவர்களுக்கும்  அந்த  அம்மாளின் கணவர்  ராஜாவுக்கும் இது ஆச்சர்யம், 

sivan jaykay

unread,
Sep 25, 2021, 12:25:56 AM9/25/21
to amrith...@googlegroups.com
ஸ்ரீமந் நாராயணீயம் --  நங்கநல்லூர்   J K SIVAN
60வது தசகம்

60.  கண் அவன் கணவன் 

கோபிகளின்  மனதில்  கிருஷ்ணன் ஆழ்ந்து பதிந்து விட்டான்.  ஆயர்பாடிச் சிறுமிகள் கண்ணனே என் கணவன் என ஆகவேண்டும்  என்று  காத்யாயனி விரதம் இருக்க ஆரம்பித்து விட்டார்கள்.  கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை என்பது பல காட்சிகளில் விளக்கப்படுகிறது. அதில் ஒன்று இந்த தசகம் சொல்வது.

मदनातुरचेतसोऽन्वहं भवदङ्घ्रिद्वयदास्यकाम्यया ।
यमुनातटसीम्नि सैकतीं तरलाक्ष्यो गिरिजां समार्चिचन् ॥१॥

madanaatura chetasO(a)nvahaM bhavadanghridvayadaasya kaamyayaa |
yamunaataTasiimni saikatiiM taralaakshyO girijaaM samaarchichan || 1

மத³னாதுரசேதஸோ(அ)ன்வஹம்
ப⁴வத³ங்க்⁴ரித்³வயதா³ஸ்யகாம்யயா |
யமுனாதடஸீம்னி ஸைகதீம்
தரலாக்ஷ்யோ கி³ரிஜாம் ஸமார்சிசன் || 60-1 ||

மனமெல்லாம் மாதவனிடமே  என்ற நிலை பிருந்தாவன  கோபிகளிடையே  தோன்ற ஆரம்பித்து விட்டது. அவனது அழகு, சாதுர்யம், அன்பு,  நட்பு,  வீரம்,  தயை, காருண்யம், எவரிடமும் காணமுடியாததாக விளங்கியது.   
அவன் கண் சிமிட்டுவதே  நக்ஷத்திரங்கள் வானில் பளிச்சென்று விட்டு விட்டு ஒளிர்வது போல் காந்த சக்தி கொண்டதாக  இருந்த்தது.  அவன் தாமரைத் திருவடிகள் வணங்க வென்றே கிடைத்த வரப்பிரசாதம்.  யமுனை நதிக்கரையில்  ஈர மண்ணில் காத்யாயனி பொம்மை செய்து பூஜித்து விரதமிருந்தார்கள்  கோபியர்கள்.

तव नामकथारता: समं सुदृश: प्रातरुपागता नदीम् ।
उपहारशतैरपूजयन् दयितो नन्दसुतो भवेदिति ॥२॥

tava naama kathaarataaH samaM sudR^ishaH praatarupaagataa nadiim |
upahaara shatairapuujayan dayitO nandasutO bhavediti || 2
தவ நாமகதா²ரதா꞉ ஸமம்

ஸுத்³ருஶ꞉ ப்ராதருபாக³தா நதீ³ம் |
உபஹாரஶதைரபூஜயன்
த³யிதோ நந்த³ஸுதோ ப⁴வேதி³தி || 60-2 ||

கிருஷ்ணா, அந்த அழகுப் புதுமைகள் விடிகாலையில் கூட்டமாக சேர்ந்து உன்னைப் பற்றிய பெருமைகளை, உன்  வீர பிரதாபங்களை, உன்  சக்தியை,  உன் அழகைப் புகழ்ந்து  பாடிக்கொண்டே  யமுனை நதிக்கு ஸ்னானம்  செய்யச் செல்வது கண்ணுக்கு  விருந்தன ஒரு காட்சி.  ஆண்டாள் திருப்பாவையில்  எல்லோரையும் எழுப்பிச் செல்வது இந்த காட்சியைத்   தான்.   யமுனையில் நீராடி பக்தியோடு பூக்களை பறித்து,  வாசனாதி  திரவியங்களை அர்ச்சித்து காத்யாயனி  பூஜை செய்வார்கள். நந்தகோபன் குமரன் கணவனாக வேண்டுமென பிரார்த்தித்தார்கள். 

इति मासमुपाहितव्रतास्तरलाक्षीरभिवीक्ष्य ता भवान् ।
करुणामृदुलो नदीतटं समयासीत्तदनुग्रहेच्छया ॥३॥

iti maasamupaahita vrataaH taralaakshii rabhiviikshya taa bhavaan |
karuNaa mR^idulO nadiitaTaM samayaasiittadanugrahechChayaa || 3

இதி மாஸமுபாஹிதவ்ரதா-
ஸ்தரலாக்ஷீரபி⁴வீக்ஷ்ய தா ப⁴வான் |
கருணாம்ருது³லோ நதீ³தடம்
ஸமயாஸீத்தத³னுக்³ரஹேச்ச²யா || 60-3 ||

மார்கழி மாதம்  காத்யாயனி விரத மிருப்பதை, பாவை நோன்பு நோற்பதை,  திருப்பாவை அற்புதமாக சித்திரிக்கிறது.  (என்னுடைய ''பாவையும் பரமனும்'' இந்த   அற்புதத்தை  விளக்கும் ஒரு சிறு நூலாக எழுத எனக்கு கண்ணனே உதவினான். ஒரு சில பிரதிகள் மட்டுமே  உள்ளன வேண்டுமென்பவர்கள் என்னை வாட்ஸாப்பில்  9840279080ல்  விலாசத்தோடு அணுகலாம்.)
 
கண்ணா நீ சகலமும் அறிந்தவன் அந்த கோபியர் மனத்தை அறியாமலா  இருப்பாய். அந்த ஆயர்பாடி சிறுமிகளின் மனதை கொள்ளை கொண்டவனே, அவர்களை வாழ்த்த புறப்பட்டாய். சூரியன் உதிக்கும் முன்பு  அவர்களோடு காளிந்தி நதிக்கரையை  நீயும் அடைந்தாய். 

नियमावसितौ निजाम्बरं तटसीमन्यवमुच्य तास्तदा ।
यमुनाजलखेलनाकुला: पुरतस्त्वामवलोक्य लज्जिता: ॥४॥
 
niyamaavasitau nijaambaraM taTasiimanyavamuchya taastadaa |
yamunaajala khelanaakulaaH puratastvaamavalOkya lajjitaaH || 4

நியமாவஸிதௌ நிஜாம்ப³ரம்
தடஸீமன்யவமுச்ய தாஸ்ததா³ |
யமுனாஜலகே²லனாகுலா꞉
புரதஸ்த்வாமவலோக்ய லஜ்ஜிதா꞉ || 60-4 ||

அந்த பெண்கள்  ஸ்னானம் செய்து  காத்யாயனி விரதம் துவங்குமுன் ஆடைகளை கழற்றி காளிந்தி நதிக் கரையோரமாக  ஈரம்படாமல் வைத்தார்கள். ஆண்கள் வராத ஒதுக்குப்புறமாக மரங்கள் அடர்ந்த கரையோரம்  ஒரு இடத்தை  இதற்கென கண்டுபிடித்து வைத்திருந்தார்கள். சிறுமிகள் அல்லவா?  நீரில்  வெகுநேரம் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அப்போது தான் அவர்களில்  யாரோ ஒருவள் நீயும் அங்கே இருப்பதைப்  பார்த்துவிட்டாள். எல்லோருக்கும் அதிர்ச்சி. வெட்கம். 

त्रपया नमिताननास्वथो वनितास्वम्बरजालमन्तिके ।
निहितं परिगृह्य भूरुहो विटपं त्वं तरसाऽधिरूढवान् ॥५॥

trapayaa namitaananaasvathO vanitaasvambara jaalamantike |
nihitaM parigR^ihya bhuuruhO viTapaM tvaM tarasaa(a)dhiruuDhavaan || 5

த்ரபயா நமிதானநாஸ்வதோ²
வனிதாஸ்வம்ப³ரஜாலமந்திகே |
நிஹிதம் பரிக்³ருஹ்ய பூ⁴ருஹோ
விடபம் த்வம் தரஸாதி⁴ரூட⁴வான் || 60-5 ||

தலை குனிந்து, நீரில் அமிழ்ந்து தம்மை மறைத்துக்கொண்டார்கள். அவர்களது வஸ்திரங்களை நீ ஒன்று விடாமல் சேகரித்து  எடுத்து மரத்தின் மேலேறி   ஒரு  கிளையில் வைத்துவிட்டாய். நீயும் கிளையில் அமர்ந்து கொண்டாய். 

 इह तावदुपेत्य नीयतां वसनं व: सुदृशो यथायथम् ।
इति नर्ममृदुस्मिते त्वयि ब्रुवति व्यामुमुहे वधूजनै: ॥६॥

iha taavadupetya niiyataaM vasanaM vaH sudR^ishO yathaayatham |
iti narma mR^idusmite tvayi bruvati vyaamumuhe vadhuujanaiH || 6

இஹ தாவது³பேத்ய நீயதாம்
வஸனம் வ꞉ ஸுத்³ருஶோ யதா²யத²ம் |
இதி நர்மம்ருது³ஸ்மிதே த்வயி
ப்³ருவதி வ்யாமுமுஹே வதூ⁴ஜனை꞉ || 60-6 ||

''பெண்களே, அழகிய கண்களைக் கொண்டவர்களே, உங்கள் வஸ்திரங்கள் எது என்று இங்கே வந்து தேடி எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று  நீ  சொன்னதும்,   '' அடாடா  என்ன இக்கட்டான நிலைமை இது, இவனிடம் இப்படி மாட்டிக்கொண்டோமே ''என்று அந்த சிறுமிகள் மிகவும்  தயக்கத்தோடும் கலக்கத்தோடும்  செய்வதறியாமல் திகைத்தார்கள். 

अयि जीव चिरं किशोर नस्तव दासीरवशीकरोषि किम् ।
प्रदिशाम्बरमम्बुजेक्षणेत्युदितस्त्वं स्मितमेव दत्तवान् ॥७॥

ayi jiiva chiraM kishOra nastava daasii ravashiikarOShi kim |
pradishaambara-mambujekshaNetyuditastvaM smitameva dattavaan || 7

அயி ஜீவ சிரம் கிஶோர ந-
ஸ்தவ தா³ஸீரவஶீகரோஷி கிம் |
ப்ரதி³ஶாம்ப³ரமம்பு³ஜேக்ஷணே-
த்யுதி³தஸ்த்வம் ஸ்மிதமேவ த³த்தவான் || 60-7 ||

குருவாயூரா, அப்போது அவர்கள் உன்னிடம் சொன்னது நினைவிருக்கிறதா உனக்கு?
''ஐயா  வீராதி வீரரே, தீர்க்காயுசாக இரும். உமக்கு புண்ணியமாகப் போகட்டும். எங்களை அடிமையாக்கிய எஜமானனே , எங்களை ஏன் இப்படி துன்புறுத்துகிறாய். அப்பா  தாமரைக் கண்ணா, தயவு செய்து எங்கள்  ஆடைகளை திருப்பிக் கொடுத்துவிடு' 

 அவர்கள் கெஞ்சியபோது நீ ஆடையைக் கொடுக்கவில்லை, அழகிய புன் சிரிப்பைத் தான்  கொடுத்தாய். 

अधिरुह्य तटं कृताञ्जली: परिशुद्धा: स्वगतीर्निरीक्ष्य ता: ।
वसनान्यखिलान्यनुग्रहं पुनरेवं गिरमप्यदा मुदा ॥८॥

adhiruhya taTaM kR^itaa~njaliiH parishuddhaaH svagatiiH niriikshya taaH |
vasanaanyakhilaanyanugrahaM punarevaM giramapyadaa mudaa || 8

அதி⁴ருஹ்ய தடம் க்ருதாஞ்ஜலீ꞉
பரிஶுத்³தா⁴꞉ ஸ்வக³தீர்னிரீக்ஷ்ய தா꞉ |
வஸனான்யகி²லான்யனுக்³ரஹம்
புனரேவம் கி³ரமப்யதா³ முதா³ || 60-8 ||

மெதுவாக  கூனிக் குறுக்கிக் கொண்டு  கூப்பிய கரங்களோடு அந்த சிறுமிகள், உடல் உள்ளம் இரண்டிலும் வேறெதுவும் இன்றி உன் மேல் பக்தி மட்டும் கொண்டவர்களாக கரையேறினார்கள். நீராடிவிட்டு உடல் உள்ளம் இரண்டுமே பரிசுத்தமாக  உன்னைத் சரணடைந்தார்கள்.  அவர்களை வாழ்த்தி வஸ்திரங்களை உன் கையால் தொட்டு அவர்களுக்கு அளித்தாய். இங்கு விகல்பமான எண்ணம் எதுவுமே  எவர் மனத்திலும் தோன்றவில்லை, வாசகர்களும்  நிர்விகல்பமான மனத்தோடு  அவ்வாறே  குருவாயூரில் ஒரு குழந்தை சிரிப்பதை ஏற்றுக் கொள்ளட்டும். 

विदितं ननु वो मनीषितं वदितारस्त्विह योग्यमुत्तरम् ।
यमुनापुलिने सचन्द्रिका: क्षणदा इत्यबलास्त्वमूचिवान् ॥९॥

viditaM nanu vO maniiShitaM vaditaarasitvaha yOgyamuttaram |
yamunaa puline sachandrikaaH kshaNadaa ityabalaastvamuuchivaan || 9

விதி³தம் நனு வோ மனீஷிதம்
வதி³தாரஸ்த்விஹ யோக்³யமுத்தரம் |
யமுனாபுலினே ஸசந்த்³ரிகா꞉
க்ஷணதா³ இத்யப³லாஸ்த்வமூசிவான் || 60-9 ||

'கிருஷ்ணா,  நீ  அவர்களிடம் சொன்னதை நான் திருப்பி சொல்கிறேன் கேள் . ''உங்கள் மனம் நான் அறிவேன்.  உங்கள் மனோபீஷ்டம் பூர்த்தியாகும். இரவின் இருளை  பூரண சந்திரன் தனது  ஒளியால் வெள்ளி மயமாக்கி  இருள் போக்கி  அருள் தருவான்.'' 

 उपकर्ण्य भवन्मुखच्युतं मधुनिष्यन्दि वचो मृगीदृश: ।
प्रणयादयि वीक्ष्य वीक्ष्य ते वदनाब्जं शनकैर्गृहं गता: ॥१०॥

upakarNya bhavanmukhachyutaM madhuniShyandi vachO mR^igiidR^ishaH |
praNayaadayi viikshya viikshya te vadanaabjaM shanakaigR^ihaM gataaH || 10

உபகர்ண்ய ப⁴வன்முக²ச்யுதம்
மது⁴னிஷ்யந்தி³ வசோ ம்ருகீ³த்³ருஶ꞉ |
ப்ரணயாத³யி வீக்ஷ்ய வீக்ஷ்ய தே
வத³னாப்³ஜம் ஶனகைர்க்³ருஹம் க³தா꞉ || 60-10 ||

எண்டே குருவாயூரப்பா, அந்த  ஒன்றுமறியா  மான் விழிச்  சிறுமிகள், உன் ஆசியை நேரடியாகப் பெற்ற புண்யவதிகள். உன்   தேனினுமினிய குரலை  செவி குளிரக் கேட்டவர்கள்.  கண்ணா, கண் நிறைந்த கணவன் நீயாக வேண்டுமென  உன்னை கண்ணாரக் கண்டவர்கள். கண் அவன் கண்ணன்  கணவன்  ஆகவேண்டும் என்று வேண்டியவர்கள். மனதில் நிறைந்தவனாக உன்னைக் கொண்ட சந்தோஷத்தில் வீடு திரும்பினார்கள். 

 इति नन्वनुगृह्य वल्लवीर्विपिनान्तेषु पुरेव सञ्चरन् ।
करुणाशिशिरो हरे हर त्वरया मे सकलामयावलिम् ॥११॥

iti nanvanugR^ihya vallaviiH vipinaanteShu pureva sancharan |
karuNaashishirO hare hara tvarayaa me sakalaamayaavalim ||11

இதி நன்வனுக்³ருஹ்ய வல்லவீ-
ர்விபினாந்தேஷு புரேவ ஸஞ்சரன் |
கருணாஶிஶிரோ ஹரே ஹர
த்வரயா மே ஸகலாமயாவலிம் || 60-11 |

கருணாசாகரா,   கோபியர் கொஞ்சும் ரமணா, கோபால கிருஷ்ணா,    பிறகு நீ  மீண்டும் வழக்கம் போலவே, பிருந்தாவன காட்டுக்குள் சுற்றச்  சென்றுவிட்டாய். அப்படியே  என் நோயையும் விரைவில் நீக்கிவிட்டு  என்னையும் ரக்ஷிப்பாய்.
It is loading more messages.
0 new messages