விரோதிகளிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள, நெருப்புக் கோழிகள், தலையை மணலில் புதைத்து கொள்கின்றன, என்று, கூறப்படுவது தவறு.
தென்னாப்பிரிக்காவில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நெருப்புக் கோழிகளை வளர்க்கும் பண்ணை அதிபர் கூறுகிறார்:
நெருப்புக் கோழி, மணலில் தலையை புதைத்து, நான் பார்த்ததில்லை. ஏதாவது சத்தம் வருகிறதா என்பதை கேட்பதற்காகவே, நெருப்புக் கோழிகள், நிலத்தின் மிக அருகில் தங்கள் தலையை வைத்துக் கொள்வதுண்டு. சில சமயம், கழுத்து தசைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காகவும் அப்படி செய்யும்.
ஆனால், வெளியுலகத்தினர் சொல்வது போல், நெருப்புக் கோழி, மணலில் தலையை புதைத்துக் கொண்டால், மூச்சு முட்டி இறந்து விடும், என்கிறார்.