சிவாலயத்தில் எப்படி வழிபட வேண்டும்

1 view
Skip to first unread message

Shiva Shankar

unread,
Feb 16, 2026, 1:21:13 AM (7 days ago) Feb 16
to amrith...@googlegroups.com
                  .                                                                             சிவாலயம் எல்லாம் கடந்த மெய்க் கடவுள் ,     எல்லாமாக இருக்கும்  *பரிபூரண முழுழுமுதற்பரம்பொருள்  பரம சிவம்  அருள் மழை பொழியும் அருள் நிலையம்*.   

*பெண்ணினோடு ஆண் அலி ஆகிய  எரி அவன் உறைவிடம்* ( சம்பந்தர்)
 
என்று சிவாலயம் என்ன  என்பதை தெய்வ பாலகர் காட்டுகிறார்.

சிவாலயம்  என்பது அந்த  சுவாமி கோயில் இந்த அம்மன் கோவில் என்ற *மும்மல ஜீவ ராசி கோயில் அல்ல* .

*தூரத்தே தொழுவார் வினை தூளியே*
(அப்பர்) 

என தொலைவில் கோபுரம் கண்ணுக்குத் தெரியும் போதே  சிவ நாமம் ஓதித் தொழ  வேண்டும். 
இதனாலேயே கோபுரத்திலும் மதில் சுவர்களிலும் சிவ சிவ என்று எழுதப் படுகின்றன.

 கோபுரம் கடந்ததும் நந்தியை வணங்கி அனுமதி பெற    வேண்டும்.         

    🐂   *முந்தை நிகழ்   கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி       இந்திரன் மால் அயன்            முதலாம் இமையவர்க்கு நெறி அருளும்  நந்தி*  (சேக்கிழார்)

  என அரி பிரம்மன்  அம்மன் கணபதி முருகன்  பைரவர் உள்ளிட்ட  தெய்வங்களும்   தேவ தேவியர்களும் யாராக இருந்தாலும் *நந்தியை வணங்கி அனுமதி பெற்ற பிறகே* உள்ளே நுழைய முடியும்.  

 கொடிக் கம்பம் முன்பும் கோபுர வாசலில்  கலை அழகைக் கெடுத்து இரு புறமும் மனம் போனபடி ஆகம விரோதமாகக் கட்டப்பட்டு இருக்கும் பிள்ளையார் முருகன் சந்நிதிகளை   வழிபடுவதால் பலன் இல்லை.   நந்தி அதிகாரத்தை மறுத்த பாவமே உண்டாகும். 

*சிவாலயம் சிவ வழிபாடு செய்வதற்கு*, 
*எல்லாம் வல்ல முழுத் தூய்மையான  மாசு மலம் இல்லாத நிர்மல முழுமுதற்பரம் பொருளை மட்டுமே பூஜை செய்வதற்கு உரிய புனிதமான தூய இடம்*. 

அங்கு வந்து  நம்மைப் போல *சிவ பூஜை செய்து  வழிபட்டு அருள் பெற்றுச் சென்ற பக்தர்களான* பிரம்மன் விஷ்ணு அம்மன் விநாயகர் முருகன் பைரவர் மற்றும் பிற ஆண் தெய்வம் பெண் தெய்வம், நவகிரகம்  சப்த மாதர் , துர்கை காளி மாரி பிடாரி முதலிய  சிறு தெய்வங்கள் 
தீய சக்திகள், ஆஞ்சனேயன் ஐயப்பன்  காமாட்சி பார்வதி மீனாட்சி உள்ளிட்ட மண்ணுலக வாசி ஆகிய *மும்மல உயிரினங்களை யெல்லாம்  தொழுவதற்கு உரிய இடம் அல்ல*.                       

⚜️   *தனி நாயகன்  எம் இறை* (திருமந்திரம்)      
       
 🌺 *தனை ஒப்பாரை இல்லாத் தனியை*                                 
 
🌷   *நினைப்ப அரிய தனிப் பெரியோன்*   (திருவாசகம்)                                                                  

🕉️  *இணையிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம்  *துணையிலி   தூ மலர்ப் பாதம் ஏத்தத்    துயர் நீங்குமே*  (சம்பந்தர்)                                                                                         

⚜️  *பொது நீக்கித் தனை  நினைய வல்லோர்க்கு* என்றும் பெருந் துணையை  (அப்பர்)   
                                                                                                                            🔯  *உனக்கே ஆள் பலரையும் பணியாமே*     
                                                                              🕉️  *மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே*  
                                                                                  🌑 *மற்றுத் தேவரை நினைந்து உனை மறவேன்*  (சுந்தரர்)       
                                                                                💥 *மற்றொருவர்க்கு எஞ்ஞான்றும் ஆகாப்போம் ஆள்*  (காரைக்கால் அம்மையார்)          
                                                                                                                                   ⚜️  *தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கு ஓர் துணை என நினைவனோ சொல்லாய்* (திருவாசகம்)        
                                                                                                                                                   🕉️  *அப்பா உன் அடி அலால் அரற்றாது என் நா*    (சம்பந்தர்)       
                                                                                        என   *சிவ நினைவு நீங்காமல் பிற வழிபாடு நீக்கிப் பிற தெய்வ நினைவு நீக்கித் தனிப் பெரும் கடவுளான  சிவ பரம்பொருளை மட்டுமே வழிபட்டால்தான் பூஜைப் பலன் உண்டாகும்* .

அந்த அம்மன் இந்த பகவான் என்று பிற வழிபாடு புரிந்தால் *கடவுள் மேல் நம்பிக்கை  இல்லாமல் பரம் பொருளை அவமதித்த  பாவமே ஆகி  சிவ நிந்தனையே ஆகித் தீய பலனே உண்டாகும்* .     
                                                  
🔥 *கண்ணுதல் பாதம் நண்ணி மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என  நினைந்து எம் பெம்மான் கற்றிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே*  (திருவாசகம்)                                                                                                                                                        

🌎     *மலை அரையன் பொற்பாவை சிறுவனையும்  தேறேன் எண்ணிலி உண் பெரு வயிறன் கணபதி    ஒன்று அறியான்* (சுந்தரர்)   
        
   🌹 *சிறு தெய்வம் சேர்வோம்அல்லோம்  சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்* (அப்பர்) 
         
  🔥 *எச்சத்தார் சிறு தெய்வம் ஏத்தாதே* அச்சோ என் சித்தத்தாறு  *உய்ந்தவாறு அன்றே உன் திறம் நினைந்தே* (திருவாசகம்) 
      
   என சிவாலயத்தை அடைந்தும் *இல்லத்திலும் மடத்திலும் ஆதீனத்திலும் கோயிலிலும் *சிவ பூஜை செய்த பின்னும்  வேறு ஒரு தெய்வம் உண்டு என்று எண்ணி  சிவ மகிமை அறியாமல் இருப்பவர்* *ஆபத்தானவர்கள்* ,   *பார்க்கவும் தகுதி இல்லாத தீயவர்கள்*,

*அம்பாள் முருகன் கணபதி என அவதாரம் பிறப்பு வளர்ப்பு உள்ள ஆண் பெண் தெய்வ வழிபாடு கூடாது*, 

*கீழ்மக்கள் தீயவர் செய்யும் சிறு தெய்வ வழிபாடு  கூடாது,*

 *சிறு தெய்வ வழிபாட்டால் உய்வடைய முடியாது* என்பதை முழுமுதற்கடவுளை நேரில் கண்டு திருக் கோயிலே வாழ்க்கையாக வாழ்ந்த அருளாளர்கள் அறிவுறுத்துகின்றனர். 

*அங்கம் இல்லாத லிங்கப் பரம்பொருள்  கோயில்களில் கற்பனைப் பெயர்களுடன் உள்ள அம்பாள் சந்நிதிகள் பிள்ளையார் சந்நிதிகள் துர்கை உருவம்  யாவும் பிற்காலத்தவை,  நவகிரகச் சந்நிநி யாவும் தற்காலத்தவை. சமீப காலத்தவை*. 
     
    சிவாலயங்களில் ஓங்கார வடிவப் பரம்பொருள்  லிங்கம்,  

ஜோதி சிவம் லிங்கோற்பவர், 

ஞான சிவம் தட்சிணா மூர்த்தி,  

இயக்க நாதர் நடராஜர்,   

தாய் தந்தை குழந்தை ஆகிய மூன்று உருவில் ஒரு சேரக் காட்சி அருளும் சோமாஸ்கந்தர் எனப்படும் விடங்கர்   தியாக ராஜர், 
 
எல்லா உலகங்களுக்கும் தாயான  தாயுமானவர், 

வலம் இடம் என எந்தப் பாதியும் பெண்பாலாகும் அர்த நாரீசுவரர் எனப்படும் இருபால் அம்மை யப்பன், 

நந்தி வாகனர் மற்றும் பலப் பல சிவ வடிவங்களைப் போற்றித் துதித்துத் தொழ வேண்டும் என்றுதான் திருமுறைகள் துதித்து வழிகாட்டுகின்றன.             

⚜  நாடும் நகரமும் நல்    *திருக்கோயிலும்  தேடித் திரிந்து  *சிவபெருமான் என்று  பாடுமின் பாடிப் பணிமின்*  பணிந்த பின்   கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே (திருமந்திரம்) 
    
       என கோயில் கோயிலாய்ச் சென்று  *சிவபெருமானைப் பாடுங்கள் அதனால்  உங்கள் உள்ளம்  புனிதமான ஈசுவரன் கோயிலாகும்*  என்று திருமந்திர ஆகமம் கூறுகிறது.      
                     
 ⚜️ *காலையும் மாலையும் போய்ப்    பணிதல் கருமமே*  (சம்பந்தர்) 

என  தினமும் காலை  மாலை  இரண்டு  வேளையும் கோயில் வழிபாடு சிறப்பு.           

    ⚜️ *பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தற்குப் பத்தராகி* (அப்பர்) 

என காலையில் குளித்துத் தூய்மை ஆகித் தூய உடையுடன்  உணவு உண்பதற்கு முன் சுத்தமாகக்  கோயிலுக்குச் செல்வது பல மடங்கு சிறப்பு. 

*அர்ச்சனை செய்வது  எந்தக் காரணத்திற்காக இருந்தாலும்   ஈசன் நாமம் சொல்லி  கேட்டு அர்ச்சனை செய்வதுதான் முறை  சிறப்பு* . 

பரமன் திருமுன் இருந்து கொண்டு  *தங்கள் பெயர் கோத்திரம் நட்சத்திரம் ராசி எல்லாம்  சொல்லிச்  சொல்ல வைப்பது கூடாது. பாவம்* . 
இது அஞ்ஞானிகள் உண்டாக்கிய தவறான தீய  பழக்கம்.

 🕉   காலைக்  கடம்பந்துறை (குளித்தலை)
 பகல் வாட்போக்கி (ஐயர் மலை) 
மாலை ஈங்கோய் மலை (திருவிங்க நாத மலை) 

என்று மூன்று கோயில்களை அடுத்தடுத்து  ஒரே நாளில் வழிபட வேண்டும் என்பது வழக்கு. 

ஆதலால் ஒரு கோயிலுக்குச் சென்ற பின் வேறு கோயிலுக்குச் செல்லக் கூடாது என்பதெல்லாம் அஞ்ஞானிகளின் அர்த்தமற்ற  பேச்சு.  

கோயிலுக்குச் சென்ற பின் வீட்டிற்கு  வரவேண்டும்.  

கடை நண்பர் இல்லம் என்று  வேறு இடத்திற்குப் போகக் கூடாது.   

*மதுரை  மீயச்சூர்  திருப்பரங்குன்றம்  பிள்ளையார் பட்டி  திருநள்ளாறு பட்டீஸ்வரம் திருவக்கரை  ஆலங்குடி*   
*திரு ஒற்றியூர் முதலிய  பலப் பல*

 *அற்புதப் பழம்பெரும் தேவாரத்  திருவாசக ஈஸ்வரன் கோயில்களை யெல்லாம்*
 அம்மன் கோயில் முருகன் கோயில் 
பிள்ளையார் கோயில் சனி பகவான் கோயில் துர்கை கோயில் காளி கோயில் குரு பரிகாரத் தலம்  நவகிரகக் கோயில் என்றெல்லாம் கூறுவது *தீராத துன்பங்களை உண்டாக்கும் மகா மகா பாவம்* .       
     
⚜️  *சைவப் பெருமைத் தனி    நாயகன் எம் இறை* (திருமூலர்)                                              

🪷.   *தாயு நீயே தந்தை நீயே சங்கரனே* 

*தாய் அவன்  உலகுக்குத் தன் ஒப்பு இலாத் தூயவன்* ----- *சேய் அவன்* (சம்பந்தர்) 

என *தாயுமான  சிவமே இறைவன் சிவமே இறைவி*. *சிவமே குழந்தை*

  *தூய சைவத் திரு நெறியில் அவதாரம் பிறப்பு இறப்பு  உள்ள மும்மல ஆண் பெண் தெய்வ வழிபாடு இல்லை*.

கயிலை மலையில் ஈசன் *உமையோடு காட்சி கொடுத்த போதும்  காரைக்கால் அம்மையார் ஈஸ்வரனை மட்டுமே வழிபட்டார் பாடினார் தொழுதார். *பெண் பிறவியான* 
*பார்வதியை வழிபடவில்லை*.  

திருவையாற்றில் *திருநாவுக்கரசர்*  உமையோடு பரமனைக் கண்ட போதும்  ஐயாறப்பரை மட்டுமே பாடி வணங்கினார்.
*கண்டேன் அவர் திருப் பாதம்* என 
 *ஈசன் திருவடிகளை மட்டுமே கண்டு* தொழுதார் 
*அம்மனை வழிபடவில்லை தொழவில்லை துதிக்கவில்லை*.

பிறப்பு உள்ளவர்களை எல்லாம் தொழுது எழுந்து  துதி பாடி மீண்டும் பிறவிக் கடலில் விழுந்து தத்தளியுங்கள் என்று எந்த மெய்ஞானியும் சொல்லவில்லை.

பெளத்தன் சமணன் துலுக்கன்  கிறிஸ்துவன்  நாஸ்திகன் அழித்ததை விட அதிகமாக வேகமாகக்  கடவுள் பக்தியை அழிப்பவர் 
   *சிவாலயத்தில் ஜீவ ராசி வழிபாடு செய்து கூட  இருந்தே குழி பறிக்கும் போலி இந்துகள்*.

 சிவப்பிரியா
Reply all
Reply to author
Forward
0 new messages