தினந்தோறும் திருப்புகழ்

333 views
Skip to first unread message

Sundararajan

unread,
Sep 23, 2015, 8:56:04 PM9/23/15
to Ramakrishnan K. S' via Amritha Vahini
பாடல் எழுந்த வரிசையில், முதலாவது ‘முத்தைத்தரு பத்தித்திருநகை’யும், அகரவரிசையில் முதலாவது ‘அகத்தினைக் கொண்டு’ என்ற திருக்கழுக்குன்ற திருப்புகழும்.

ஆனால், எண் வரிசையில் முதலாவதாகக் கருதப்படுவது விநாயகர் துதியாக உள்ளது இந்தப் பிரபலமான பாடல்.
 திருப்புகழ்’ என்ற பெயர் இறைவனாலேயே சூட்டப்பட்ட ஒன்று என்பதைப் பார்த்தோம். 

யாப்பியல் வகையில், ‘விருத்தம்’ என்னும் வகையைச் சேர்ந்தது திருப்புகழ். இதை இவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது. விருத்தத்தின் பல்வேறு பிரிவுகளில் மிகவும் கடினமாகக் கருதப்படும் ‘வண்ணவிருத்தம்’ என்ற பிரிவைச் சேர்ந்தது என்று இப்போதைக்குச் சொல்லிவைப்போம். 

ஒவ்வொரு பாவினத்துக்கும் ஒவ்வொரு வகையான ஓசை என்று பிரிக்கப்பட்டிருந்தாலும், விருத்தத்தில் காணப்படும் ஓசைநயங்கள் எண்ணற்றவை. அப்படியானால், விருத்தம் என்பது என்ன என்ற கேள்வி முதலில் எழுகிறது. விருத்தம், தமிழ் மரபுக்கவிகளில் பிற்காலத்தில் ஏற்பட்ட வடிவம்.

மேலும் படிக்க ......http://www.dinamani.com/religion/dhinamthorum-thiruppugazh/
 
 
image
 
 
 
 
 
பகுதி – 2
‘திருப்புகழ்’ என்ற பெயர் இறைவனாலேயே சூட்டப்பட்ட ஒன்று என்பதைப் பார்த்தோம்.  யாப்பியல் வகையில், ‘விருத்தம்’ என்னும் ...
Preview by Yahoo
 

Every heart that beats is the dance of Siva in its soul

Sundararajan

unread,
Sep 23, 2015, 8:56:04 PM9/23/15
to Ramakrishnan K. S' via Amritha Vahini

தினந்தோறும் திருப்புகழ் என்ற இந்தப் பகுதியில், திருப்புகழுடைய யாப்பு அமைப்பு, யாப்பில் அதன் தனிப்பட்ட சிறப்பு போன்றவற்றோடு, அன்றாடம் ஒவ்வொரு திருப்புகழை எடுத்துக்கொண்டு, அதற்கு விளக்கமாக சில குறிப்புரைகளையும், அந்தப் பாடலில் அமைந்திருக்கும் பொருளையும் விளக்க இருக்கிறார் ஹரி கிருஷ்ணன்.

திருப்புகழ் குறித்து… 

திருவள்ளுவர் தான் இயற்றிய நூலுக்குத் திருக்குறள் என்ற பெயரைச் சூட்டவில்லை. அதற்கு முப்பால் என்றும் வேறு பல பெயர்களும் வழக்கில் இருந்தன. குறள் என்பது இரண்டடியில் இயற்றப்படும் குறள் வெண்பாவுக்கான பெயர். அதுவே, ‘திரு’ என்ற அடைமொழியோடு திருக்குறள் என்ற நூற்பெயராக மாறியது. சொல்லப்போனால், நூலை இயற்றியவர் பெயர் திருவள்ளுவர் என்பதே, பிற்காலத்தில் திருவள்ளுவ மாலைக்குப் பின்னால் எழுந்த பெயர். அவரை தேவர் என்றும் வேறு பல பெயர்களாலும் பழைய நூல்கள் குறிக்கின்றன.

இதைப்போலவே, கம்பன் தன் காப்பியத்துக்கு இராமாவதாரம் என்றுதான் பெயர் சூட்டினான்.

நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே

என்பது கம்பராமாயணம். காலப்போக்கில் இந்தப் பெயர் மறைந்து, இயற்றியவனுடைய பெயராலேயே ‘கம்பராமாயணம்’ என்று மக்களால் அழைக்கப்பட்டு, அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. இயற்றியவனுடைய பெயரால் வழங்கப்படும் ஒரே காப்பியம் என்று இக்காப்பியத்தைச் சொல்லலாம்.

ஆனால் திருப்புகழோ, இறைவனாலேயே சூட்டப்பட்ட பெயர். அருணகிரிநாதர் பல இடங்களில் இதைச் சொல்கிறார். எண் வரிசைப்படி, திருப்புகழில் இரண்டாவது பாடலாகக் கொள்ளப்படும் பக்கரை விசித்ரமணியில் அவர் சொல்கிறார் –

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை மறவேனே

விருப்பத்தோடு திருப்புகழைச் சொல் என்று முருகா, நீ எனக்கருளியதை மறவேன் என்கிறார். இப்படிப் பல இடங்கள் உண்டு. செப்டம்பர் 17, 2015, விநாயகர் சதுர்த்தி முதல், திருப்புகழின் அமைப்பு முதலானவற்றை ஒரு பகுதியாகவும், எண் வரிசைப்படியிலான திருப்புகழ்ப் பாக்களை ஒன்றொன்றாகவும் அல்லது பகுதி பகுதியாகவும் பொருள் காண்போம். பொருள் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், திருப்புகழைப் பாராயணமாகக் கொண்டிருக்கும் அன்பர்கள் பலர் உண்டு. பொருளையும் தெரிந்துகொள்வது இந்த அமுதின் சுவையை அறிய உதவும் என்ற கருத்தோடு இந்த முயற்சியை மேற்கொள்கிறோம்.
 
 
image
 
 
 
 
 
தினந்தோறும் திருப்புகழ் - Dinamani - Tamil Daily News
தினந்தோறும் திருப்புகழ் என்ற இந்தப் பகுதியில், திருப்புகழுடைய யாப்பு அமைப்பு, யாப்பில் அதன் தனிப்பட்ட சிறப்பு போன்றவற்றோட...
Preview by Yahoo
 

SSR

Sundararajan

unread,
Sep 24, 2015, 9:50:12 PM9/24/15
to Ramakrishnan K. S' via Amritha Vahini
coutesy Dinamani

By - ஹரி கிருஷ்ணன்

ஏதோ ஒரு தாளக்கட்டை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படும் விருத்தப் பாவுக்கு, ஆசிரிய விருத்தம், சந்த விருத்தம், வண்ண விருத்தம் என்று மூன்று பெரும் பிரிவுகள் உண்டு. பெரும் பிரிவு என்று சொன்னாலே, ஒவ்வொன்றுக்கும் உள்ளே, வாய்க்கால்கள்போல பற்பல சிறுசிறு பிரிவுகள் உண்டு என்பதைச் சொல்லத் தேவையில்லை.
மற்ற எந்தப் பாவினத்தையும்விட, மிக விரிவானதாகிய விருத்தப்பாவுக்கென்று யாப்பியல் முறைகளை வரையறுத்து எந்த நூலும் செய்யப்படவில்லை. அதாவது, 1885-ல் ‘விருத்தப்பாவியல்’ என்ற பெயரில் வீரபத்திர முதலியார், ஒவ்வொரு வகை விருத்தப்பாவுக்கும் அந்தந்த பாவுக்கான யாப்பிலேயே சூத்திரங்களை அமைத்து அருமையான ஒரு நூலை வெளியிடும் வரையில். இந்த நூல், 1938-ல் இரண்டாம் பதிப்பாக வெளியானது. அதற்குப் பிறகு பதிப்பே காணாமல் போய்விட்டது. இப்போது, எண்ணிம வடிவில் (Digital form) இந்த நூலை இ-புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
நான்கு சீர்கள் வரையில் செய்யப்படுவது கலிவிருத்தமென்றும், இதற்குள்ளும் பல பிரிவுகள் உள்ளன என்றும் பார்த்தோம். ஐந்து சீர்கள் இருந்தால் அது ஐஞ்சீர் விருத்தம். ஆறும் அதற்கு மேலும் இருந்தால், அதைக் ‘கழிநெடிலடி’ என்பார்கள். ‘கழிநெடில் அடி’ என்றால், கணக்கைத் தாண்டி நீண்டிருக்கும் அடி என்று பொருள். இப்படி அறுசீர் விருத்தத்தை, அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம் என்றும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்றும் சொல்வார்கள். இப்படியே எழுசீர், எண்சீர், பன்னிரு சீர், பதினான்கு சீர் எல்லாவற்றுக்கும் கழிநெடிலடி என்று ஒட்டவைத்துக்கொள்ளலாம். 
இந்த வகைப்பாடுகளில், மிகவும் எளியது என்று கருதப்படும் அறுசீர்க் கழிநெடிலடிக்கு, வீரபத்திர முதலியார் ஏழு வகைகளை இனங்கண்டு பிரித்து சூத்திரம் இயற்றியிருக்கிறார். விருத்தத்தின் இயல்பு கணக்கிலடங்காதது. வீரபத்திரர் சூத்திரம் செய்துள்ள வகைகளுக்குள் அடங்காத விருத்த வகைகளும் இருக்கலாம். இருக்கும். ஒவ்வொரு சூத்திரத்தையும் அந்தந்தப் பாவகைக்கான சந்தத்திலேயே செய்திருக்கிறார் என்றோம். மாதிரிக்கு, அறுசீர் விருத்தத்தில் முதல் வகைக்கான சூத்திரத்தைப் பார்ப்போம் - 

இருமா காய்ச்சீ ரரையடிக்கா
யிவையே மற்றை யரையடிக்கும்
வருமா றுணர்க வாரணியுங்
கொங்கை பொலியு மடக்கொடியே!
இது, இந்தப் பிரிவில் அடங்கும் அறுசீர்க் கழிநெடிலடியின் சந்தத்திலேயே இயற்றப்பட்டிருக்கிறது.
பற்றற் றோர்சேர் பழம்பதியைப்
பாசூர் நிலாய பவளத்தைச்
சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத்
தீண்டற் கரிய திருவுருவை
வெற்றி யூரில் விரிசுடரை
விமலர் கோனைத் திரைசூழ்ந்த
ஒற்றி யூரெம் முத்தமனை
உள்ளத் துள்ளே வைத்தேனே.
என்ற அப்பர் சுவாமிகளின் பாபநாசப் பதிகத்தையும், திருவாசகத்தில் வரும் குழைத்த பத்தும், இந்தச் சந்த அமைப்பைக் கொண்டவை.
உதாரணத்துக்காக ஒன்று சொன்னேன். வீரபத்திர முதலியாருடைய தொகுப்பில் அடங்குபவையும், அடங்காது, ஓசை நயத்தால் பொருந்துபவையும் விருத்தங்களே. அவ்வளவு ஏன் -
அதோஅந்த பறவைபோல வாழவேண்டும்
இதோஇந்த அலைகள்போல ஆடவேண்டும்
என்ற திரைப்படப் பாடலும் அறுசீர்க் கழிநெடிலடியே. எதுகை அமைப்பில் சற்று ஏறுமாறாக இருந்தாலும், இவற்றையும் விருத்தப் பாக்களாகக் கொள்ளமுடியும்.
இதைப் போலவே எழுசீர், எண்சீர் என்று ஒவ்வொரு வகையும் அவற்றின் உட்பிரிவும் விரியும்.
இதுவரையில், நாம் எளிய வகை எனப்படும் விருத்தங்களையும், ஆசிரிய விருத்தங்களையும், சந்த விருத்தங்களையும் மேற்போக்காகப் பார்த்திருக்கிறோம்.
மேலும் தொடர்வோம்.

Sundararajan

unread,
Sep 27, 2015, 8:51:02 PM9/27/15
to Ramakrishnan K. S' via Amritha Vahini
 


By -ஹரி கிருஷ்ணன்

இப்போது, திருப்புகழின் எண் வரிசையில் இரண்டாம் பாடலான, ‘பக்கரை விசித்ரமணி’ பாடலின் பொருளைப் பார்ப்போம்.
இதுவும் விநாயகர் துதிதான். முதலில் முருகனைத் துதித்துவிட்டு, பிறகு விநாயகரைத் துதிக்கிறது இப்பாடல்.
பக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை
பட்சி எனும் உக்ர துரகமும்
மிக அரிய குறிப்புகளைத் தருகிறது இந்தப் பாடல்.
குதிரைச் சவாரி செய்பவர்கள், இரண்டு பக்கத்திலும் காலை நுழைத்து வைத்துக்கொள்வதற்காக, உலோகத்தால் ஆன ஒன்றைப் பயன்படுத்துவார்கள். கீழே உள்ள படத்தைப் பார்த்தால் தெரியும்.
 
இதற்குத்தான் தமிழில் பக்கரை என்று பெயர். இந்தப் பாகங்களுக்கெல்லாம் தமிழில் என்ன கலைச்சொல்லைச் சொல்வது என்று தேடுபவர்களுடைய கவனத்துக்கு இதை வைக்கிறேன். இதை அங்கவடி என்றும் சொல்வார்கள்.
பக்கரை விசித்ரமணி என்றால், விசித்ரமான அழகுடைய (சித்ரம் என்றால் அழகான, வி-சித்ரம் என்றால் அழகை மீறிய, ஓவியத்தில் எழுத முடியாத) மணிகளால் செய்யப்பட்ட பக்கரை.
அடுத்ததாக, பொற்கலணை என்கிறார். கலணை என்றால் சேணம் (saddle). பொன்னாலாகிய சேணம். பக்கரை விசித்ரமணியையும் பொற்கலணையையும் இட்டு நடப்பதால், ‘பொற்கலணை இட்ட நடை’. இதென்ன, குதிரைக்குப் போடும் பாகங்களின் பெயர் வரிசையாக இருக்கிறதே என்று தோன்றலாம். ஆமாம். குதிரையைத்தான் சொல்கிறார். ஒரேயொரு வித்தியாசம். இது நடக்கும் குதிரையன்று; பறக்கும் குதிரை. பட்சியெனும் உக்ரதுரகமும்… என்றால், இந்த stirrup. Saddle எல்லாம் அணிந்த பறவையாகிய, உக்ரம் நிறைந்த மயிலென்னும் துரகம். குதிரை.
அப்ப அங்க கமுநீப என்றிருப்பது? பட்சியெனும் உக்ரதுரகமும், நீப என்று பிரித்துக்கொள்ள வேண்டும். நீப என்றால் கடம்பு, கடப்ப மலர். கந்தர் அலங்காரத்தில் சொல்கிறாரே -
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே
இந்தக் கடம்புதான் நீபம். முருகனுக்குப் பிரியமான மலர். ‘தாதவிழ் கடப்பந் தாரான் தான்இரு நுதலைக் காக்க’ என்று சண்முக கவசத்தில், பாம்பன் ஸ்வாமிகள் பாடுகிறாரே, அதே கடம்புதான் இது. கடப்பம். இந்த நீப-த்தை அடுத்த அடியில் வரும் பக்குவ மலர்த் தொடையும் என்பதோடு கூட்டிக்கொள்ள வேண்டும். பட்சி எனும் உக்ர துரகத்தில் ஏறி, கடப்ப மாலையை அணிந்துகொண்டு,

அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேலும்
குவடு என்றால் மலை. அக்குவடு என்பது அந்தக் கிரெளஞ்ச மலையைத் தூளாக்கும்படி முருகன் வீசியதான, அவன் அருட்கரத்தில் உள்ளதாகிய வேல். மயிலைச் சொன்னார். இப்ப வேலைச் சொன்னார். (கிரெளஞ்ச பர்வதத்தைத் தூளடித்த வரலாற்றை, இப்போது செய்துகொண்டிருக்கும் யாப்பியல் விளக்கம் முடிந்த பிறகு பார்ப்போம்).
திக்கு அது மதிக்க வரு குக்குடமும்
திக்கு மதிக்க வருகின்ற குக்குடம். அதாவது சேவல். இப்ப இந்த மதி-த்தல் என்பதிலுள்ள இரண்டாம் எழுத்தாகிய தி என்பதன் உச்சரிப்பு dhi இல்லை, thi. மthiத்தல் என்றால் கடைதல் என்று பொருள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை மதித்தனர் என்றால், ஏதோ மரியாதை செய்தார்கள் என்று பொருளில்லை, கடைந்தார்கள் என்று பொருள். அப்படி, இந்தச் சேவல் இருக்கிறதே, அது திசைகளையெல்லாம் கடையும்படியாகத் தன் சிறகுகளை வீசி அடித்துக்கொள்கிறதாம். மயிலாச்சு, வேலாச்சு, சேவலும் ஆச்சு. அடுத்தது?
ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்
ரக்ஷை அல்லது ரட்சை. இரட்சிக்கும். காக்கும். இரட்சிப்பைத் தருவதாகிய சின்ன அடிகள். குழந்தை முருகனுடை அடிகள் சின்ன அடிகள்தானே?
அடுத்ததாக, முற்றிய பன்னிரு தோளும் என்றார்.
மாதர்களுடைய தோளை இளந்தோள் என்றால், மாலோன் மருகனுடைய தோளை முற்றிய தோள் எனலாமோ? அதுவுந்தான். முற்றுகையிட்டனர் என்கிறோமே, அப்படியென்றால் என்ன? எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்துகொண்டனர் என்பதுதானே? முற்றிய தோள் என்றால், முருகனுடைய திருவுருத்தை எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்துள்ளனவாகிய பன்னிரண்டு தோள்கள் என்பது இன்னமும் பொருத்தமாக இருக்கும்.
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு
என எனக்கு அருள்கை மறவேனே...
செய் என்றால் வயல்.  
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து, இனிது அரசு செய்கின்றான்.
என்று தசரதன் தன் நாட்டைப் பாதுகாத்த விதத்தைப் பாடுகிறான் கம்பன். ஏழையொருவன் தன் வயலை எப்படிக் கண்ணுங்கருத்துமாகப் பாதுகாப்பானோ அப்படி, ‘வறிஞன் ஓம்பும் ஓர் செய் என’ தசரதன் நாட்டைக் காத்தானாம்.
செய்ப்பதி என்றால்? செய் என்றால் வயல், பதி என்றால் ஊர். வயலூர். திருவண்ணாமலையில் ‘முத்தைத்தரு’ என்று அடியெடுத்துக் கொடுத்த பெருமான், அருணகிரி குருநாதரின் கனவில் தோன்றி, ‘வயலூருக்கு வா’ என்று சொன்னாராம். வயலூரையும் வைத்து (அங்கே) திருப்புகழை விருப்பமொடு செப்பு என்று அவருக்கு உத்தரவிட்டாராம். இப்படி எனக்கு திருப்புகழைச் சொல் என்று அருளியதை என்றும் மறவேன் என்கிறார் குருநாதர். 
அடுத்ததாக, விநாயகர் புகழ் விரிகிறது.
இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்எட்பொரிஅவல் துவரைஇளநீர்வண்டெச்சில்பயறு அப்பவகை பச்சரிசி பிட்டு,வெள்ளரிப் பழம்இடிப்பல் வகைதனிமூலம்மிக்க அடிசில்கடலை பட்சணம் எனக் கொள் ஒரு….
பட்டியல் பெரிசா இருக்கிறதா? விநாயகர் பட்சணம் (பக்ஷிப்பது, உண்பது) எதையெல்லாம் என்றால்,
இக்கு (கரும்பு), அவரை, நல்ல கனிகள், சர்க்கரை, பலவகையான பருப்புகள், நெய், எள் பொரி, அவல், துவரை, இளநீர், வண்டுஎச்சில், பயறு, வகைவகையான அப்பங்கள், பச்சரிசி பிட்டு, வெள்ளரிக்காய் அல்லது பழம், (தேங்காயைத் தேங்காயென்றும் சொல்லலாம், தெங்கம்பழமென்றும் சொல்லலாம். அதுபோல), பயறு, இடிப்பல் வகையென்றால், இடித்து உண்டாக்கும் மாவுவகைப் பண்டங்கள். தனி மூலம் என்பது வேர், கிழங்கு ஆகியவற்றைக் குறிக்கும். இவற்றோடு கடலை…
வண்டுஎச்சில் என்றால்? வேற என்ன? தேன்தான்!
மாறுபட்ட மணிதுலக்கி வண்டினெச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீது ஊற்றுகின்ற மூடர்காள்
என்றாரே சிவவாக்கியர். அவர் சொல்லும் வண்டெச்சிலும் தேன்தான். தேனுக்கு இப்படியொரு பெயர் உண்டு. அது, வண்டின் எச்சிலோடு சேர்ந்ததுதானே.
இப்படி எல்லாவற்றையும் பட்சிக்கும் (உண்ணும்)
விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழிவெற்ப
விக்கினங்களை அழிப்பவர் என்றும் சொல்லலாம். நினைப்பவர்களுக்கு நிர்விக்கினம், நினையாதவர்களுக்கு விக்கினம் என்று (சிவனுடைய தேர் அச்சை முறித்ததுபோல) மாற்றி மாற்றிச் செய்யவல்ல சமர்த்தன் என்றால் பொருந்தும். அருளாழி, கருணைக்கடல். வெற்பு என்றால் மலை. அருளின் கடலே, கருணை மலையே.
குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக
குடிலம் என்றால் வளைந்த, சடிலம் என்றால் சடாபார, வளைந்த சடாபாரத்தை உள்ள, (பினாகம் என்னும்) வில்லை ஏந்திய அப்பர் — சிவர் — அருளியவனான வித்தகனே! விநாயகனே!
மருப்புடைய பெருமாளே
மருப்பு என்பது கொம்பு, தந்தம். ஒற்றைக் கொம்புடைய பெருமாளே.
இது பொருள்.

rajan



Sundararajan

unread,
Sep 28, 2015, 9:42:25 PM9/28/15
to Ramakrishnan K. S' via Amritha Vahini
By -ஹரி கிருஷ்ணன்

எழுத்து, உரைநடையென்றால் எல்லையின்றி விரியலாம். ஆனால் பாட்டு, கவிதை என்றால், அதற்கொரு எல்லை தேவைப்படுகிறது. சொல்லவரும் செய்தி, அதைச் சொல்ல நினைக்கின்ற விதம் இவையிரண்டும் சேர்ந்து எல்லையைத் தீர்மானிக்கின்றன.

பழைய மரபில், சுருக்கமாகப் பாடுவதற்கு வெண்பாவும், ஓரளவுக்கு விரிவாகவோ அல்லது விரிந்த விரிவாகவோ பாட ஆசிரியப்பாவும் கைகொடுத்தன. அவ்வப்போது மற்ற வடிவங்களும் தலைகாட்டின. விருத்தம் என்ற வடிவம் எப்போது தோன்றியது என்பது கேள்விக்குறிதான். பக்தி இலக்கிய காலத்தில், ஆழ்வார்களும் நாயன்மார்களும் இந்த வடிவத்தைக் கையாண்டிருக்கிறார்கள்.

வெண்பா என்றால், இரண்டே அடிகளுக்கு குறள், மூன்று என்றால் சிந்தியல், நான்கு என்றால் நேரிசை, இன்னிசை, ஐந்து முதல் பன்னிரண்டுவரை பஃறொடை அதற்கு மேல் எவ்வளவு போனாலும் கலிவெண்பா. இதில், இன்னிசைக் கலியும் உண்டு, நேரிசைக் கலியும் உண்டு. ஆசிரியப்பா என்றால், குறைந்தது மூன்றடிகள். எவ்வளவு நீளமாய் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த வசதியால்தான், பழைய இலக்கியங்களில் நீளமானவையெல்லாம் ஆசிரியப் பாவில் அமைந்திருக்கின்றன. கதை சொல்ல வந்த சிலம்பு, மணிமேகலை எல்லாம், பெரும்பாலும் இந்த வடிவத்திலேயே நடக்கின்றன. 

வெண்பா விரியவும் விரியும்; சுருங்கவும் சுருங்கும். ஆசிரியமும் அப்படியே. விருத்தத்துக்கோ ஒரே ஒரு அளவுதான் உண்டு. நான்கடிகள். நான்கேயடிகள். குறையாது, கூடவும் செய்யாது. இந்த வடிவம், சின்னச் சின்ன செய்திகளைச் சொல்ல மட்டுமே பயன்பட்டது. ஒரு பத்துப் பாடல்களாக ஒரே தொனியில், பொருளில் சொன்னால் பதிகம். இப்படித்தான் இருந்தது. அடுத்த அடுத்த நான்கடிப் பாக்களில் ஒரு கதையைச் சொல்லிக்கொண்டே போகலாம் என்ற பொறி முதலில் யாருக்குத் தட்டியதோ தெரியவில்லை.

இப்படித்தான் தொடர்நிலைச் செய்யுள் என்ற பகாசுர வடிவம் தோன்றியது. நான்கடி வெண்பாவில் நளவெண்பா தோன்றியது; நான்கடி விருத்தத்தில் ராமாயணம், சீவகசிந்தாமணி, பெரிய புராணம் எல்லாம் தோன்றின. ராமாயணமா சிந்தாமணியா எது முந்தி என்று பெரிய விவாதங்களெல்லாம் உண்டு. நமக்கு அது தேவையில்லை. யார் செய்திருந்தாலும், நம் முன்னோர்கள் யாரோதான் செய்திருக்கிறார்கள். எப்படியும் இருக்கட்டும். நான்கடி நான்கடியாக மெல்ல மெல்ல விரிந்து, மூவாயிரம் நாலாயிரம் பாடல்களில். மற்றவர்கள் செய்ததை, பத்தாயிரத்து சொச்சம் பாடல்களாக விரித்து இராமயணத்தைப் படைத்தது, கம்பனுடைய அசுர சாதனை. 

இந்த நான்கடி விருத்தத்திலேயே, கம்பன் பாடியிருப்பது பெரும்பாலும் நான்கு, ஐந்து ஆறு சீர்கள்தான் அதிகம். எண்சீர் விருத்தம் ஏதோ ஒன்றிரண்டு இடத்தில் தட்டுப்படுகிறது. ஒரே இடம்தான் என்று நினைவு. ஆனால், அந்த நான்கடிகளை அப்படியே வைத்துக்கொண்டு, அதன் சீர்களின் அளவை நீட்டி நீட்டிப் பெருக்கியது, அருணகிரியாரின் கைவண்ணம். இவருடைய பிரமிக்கவைக்கும் வேலைகளையெல்லாம் திருப்புகழ் நெடுகிலும், திருவகுப்பிலும் காணலாம். திருவகுப்பு என்பது, திருப்புகழ் மதாணியில் ஒரு பகுதி. மதாணியை பற்றிச் சொல்கிறேன் என்றது நினைவிருக்கிறது. சொல்கிறேன். அதற்கு முன்னால், பொருள் சொல்ல வேண்டிய நேற்றைய பாடலைப் பார்ப்போம்.
மிக எளிய பாடல்.  எளிய பாடல்தானா என்று யோசிக்கவைக்கும் பாடல்.  பொருளைப் பார்ப்போம்.

உம்பர்தரு - உம்பர் என்றால் தேவலோகம். தரு என்பது பெயர்ச்சொல். மரம். தேவலோகத்து மரமான கற்பக விருட்சம்.

தேநுமணி - தேனு. தேநு.  காமதேனுவும் சிந்தாமணியும். கற்பக விருட்சமும், காமதேனுவும் சிந்தாமணியும் வேண்டியவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பதுபோல, எனக்குள் ஈகை உணர்வு

கசிவாகி - கசிய வேண்டும்.

ஒண்கடலிற் தேனமுதத்து உணர்வு - ஒளியை உடையதாகிய பாற்கடலிலே அமுதம் உண்டானது போல என்னுள்றே உணர்வு ஊற, ஊற்றெடுக்க வேண்டும்.

ஒன்றைக் கவனியுங்கள். கற்பக விருட்சம், காமதேனு, சிந்தாமணி எல்லாம் கேட்டார்க்கு கேட்டதைக் கொடுப்பவை என்றாலும், அவற்றுக்கும் ஒன்று தேவைப்படுகிறது. ‘எனக்கு வேண்டும்’ என்று கேட்பதற்கு ஒருத்தர் வேணுமில்லியா? இவற்றுக்கெல்லாம் கொடுக்கும் காருண்யம் எப்படிக் கசிந்து பெருகுகிறதோ, அப்படி என்னிடம் வருபவர்களுக்கு என் மனம் கசியவும் எனக்கு உன் அருள் வேண்டும்.

அடுத்தது, பாற்கடலில் அமுதம் வந்ததைப்போல, உணர்வு ஊற வேண்டுமாம். அமுதம் தானாக வரவில்லை. அதற்காக தேவர்கள் ஒருபக்கம், அசுரர்கள் ஒருபக்கம் நின்றுகொண்டு, வாசுகிப் பாம்பையும் மந்தர மலையையும் கொண்டு கடல்வண்ணன் பண்டொருநாள் கடல் வயிறு கலக்கினயே என்பதைப்போல, கலக்கிக் கடைந்தால் அமுது ஊறும்.

மனமே பாற்கடலும் மலையும் பாம்பும். மனத்துக்குள்ளேயே தேவசக்திகளும் அசுர சக்திகளும். இவையெல்லாம் ஒன்று திரண்டு இந்த மனத்தைப் போட்டுக் கடைந்தால், அமுதம்தான் வரும் என்று என்ன உத்தரவாதம்? தேவசக்திகளும்தான் உள்ளே இருக்கின்றன; அசுரசக்திகளும் அதியசுரத்தனமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த மனத்தை இப்படிப் போட்டுக் கடைந்தால் அமுதம்தான் உண்டாகும் என்று எப்படிச் சொல்வது? அங்கே ஆலகால விஷமல்லவா முந்திக்கொண்டு கிளம்பியது?

அப்படித்தானே இந்த மனத்தைப் போட்டுக் கடைந்தால் அமுதும் ஊறும், ஆலகால விஷமும் கிளம்பும்? ஒண்கடலில் தேன் அமுதத்து உணர்வு ஊறி. அந்த விஷம் கிளம்பும்போது, அதைக் குடிப்பதற்கு ஆளெல்லாம் ஏற்பாடு செய்தாயிற்று. கணபதியே, இந்த மனத்தில் ஊறும் உணர்வு அமுதமாக இருக்க நீ அருள்.  அப்படி உண்டாகிற இன்பரசமாகிற ஞானத்தை நான் பருக, நீ அருள வேண்டும். எப்படி?

பலகாலும் - நீண்டகாலத்துக்கு இந்தச் சுவை நீடிக்க வேண்டும்.

அடுத்த இரண்டடிகள் எளியவை. 

தம்பி தனக்காக வனத்து அணைவோனே - தம்பிக்காக வள்ளியின் முன்னால் தினைப்புனத்தில் வந்து தோன்றியவனே

தந்தை வலத்தால் அருள் கைக் கனியோனே - தந்தையை வலம்வந்த அருள்ஞானக் கனியைப் பெற்றவனே

அன்பர் தமக்கு ஆன நிலைப் பொருளோனே - அன்பர்களுக்கான நிலைத்த பொருளாக இருப்பவேனே

ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமாளே - நான்கு கரங்களுடன் துதிக்கையையும் சேர்த்து ஐந்து கரங்களும் யானை முகமுமாய் இருக்கும் பெருமாளான கணபதியே.

நாளைக்குக் காணப்போகும் கணபதிப் பாடல், நல்ல சந்த நயத்தோடு கூடியது. பார்ப்போம்.

Rajans


By -ஹரி கிருஷ்ணன்
ஆசைதரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ
என்றான் பாரதி, குயில் பாட்டில். குயில் பாட்டு வெண்டளையில் அமைந்திருந்தாலும், இதில் ஒருவகையான ஓசை ஒழுங்கு அமைந்திருக்கிறது. 
ஒவ்வொரு வகைப் பாடலுக்கும் ஒவ்வொரு வகை ஓசை என்று வகுத்தார்கள். வெண்பாவில் பயில்வது செப்பலோசையும், ஆசிரியப் பாவில் அகவலோசையும், கலிப்பாவில் துள்ளலோசையும், வஞ்சிப்பாவில் தூங்கலோசையும் என்றெல்லாம் வழக்கங்கள் உண்டு. மறுபடியும், இவை ஒவ்வொன்றுக்குள்ளும் உட்பிரிவுகள் உண்டு. கொஞ்சம் பயமுறுத்துவதுபோல இருந்தாலும், உண்மையில் ஓசையை மட்டும் கவனித்து இயங்கினால் போதும். இவற்றில் ஏதாவது ஒரு சட்டகத்துக்குள் தானாகப் பொருந்தும் என்பதுதான் சூட்சுமம். இந்த வித்தை கைவந்துவிட்டால், எதை வேண்டுமானாலும் ஊதித் தள்ளிவிடலாம். 
ஆனால், ஓசையின் ஒழுங்குக்குள் உட்காருவது என்பது சற்றே கவனித்து சரிசெய்துகொள்ள வேண்டிய வித்தை. இந்த வித்தை கைவரப் பெறுவதற்காகத்தான் இத்தனை கணக்குகள், இத்தனை வகைப்பாடுகள், இத்தனை mappings. 
தாளலயத்தை ஒழுங்காகக் கையாளத் தெரிந்துவிட்டால், நேரசையில் தொடங்கினால் அடிக்கு (ஒற்றொழித்து) பதினாறு எழுத்து, நிரையசையில் தொடங்கினால் அடிக்குப் பதினேழு எழுத்து என்று பயமுறுத்தும் கட்டளைக் கலித்துறையைக்கூட எழுத்தெண்ணாமல் பாட முடியும். அனுபவத்தில் சொல்கிறேன். வெறும் உபசார வழக்கில்லை. 
மற்ற எந்த மொழிகளைக் காட்டிலும், தமிழில் எழுத்தெண்ணிக்கை தவறாமல் பாடுவது சுலபமான ஒன்று. தான தனந்தன தான தனத்தன தானன என்ற தாளக்கட்டுக்குள் எழுதினால், அடிக்கு எவ்வளவு எழுத்து வரும்? அந்தத் தாள அமைப்பிலேயே எண்ணிப் பாருங்கள். பதினைந்து எழுத்துகள். அவ்வளவேதான்! இந்தத் தாளம் பிசிறாமல் எழுதிப் பாருங்கள். அடிக்குப் பதினைந்து பதினைந்து எழுத்துகள் வரும். உத்தரவாதம். 
நம்முடைய மொழி அமைப்பு அப்படி. எல்லா சொற்களையும் (அல்லது சீர்களையும்) இரண்டே வகை அசைகளாகப் பிரித்துவிடலாம். இந்த அசை என்பது ஆங்கிலத்தில் syllable என்கிறார்களே, அதற்கு இணையானது. நேர் என்பது ஒன்று. நிரை என்பது மற்றொன்று. நேர் என்றால், தனிக்குறில் (ஒற்றுடன்/ஒற்றில்லாமல்), தனி நெடில் (ஒற்றுடன்/ஒற்றில்லாமல்); நிரையென்றால் குறில்-குறில், குறில்-நெடில் (ஒற்றுடன்/ஒற்றில்லாமல்). அப்படியானால், நேரசையில் ஒரே ஒரு எழுத்துதான் கணக்குக்கு வரும். நிரை என்றால் இரண்டே எழுத்துகள்தாம் கணக்கில் வரும். அப்ப, நாம மேல அமைச்சிருக்கோமே தாளக்கட்டு (சினிமா பாணியில் சொல்வதானால், தத்தகாரம், சந்தம் சொல்றது — எல்லாம் ஒண்ணுதான்), அதுக்கு நேர்நிரை போட்டா, நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நிரைநிரை நேர்நிரை. இப்ப இதுலயும் எழுத்தெண்ணிப் பாருங்கள். பதினஞ்சுதான் வரும். இந்த நேர் நிரையின் வேறுவேறு permutation combinationதான் தத்தகாரம், சந்தம், தாளக்கட்டு எட்செட்ரா. தமிழில் அமைவதுபோல் எழுத்தமைப்பு — ஸ்பெல்லிங் — மற்ற மொழிகளில் அமைவதில்லை என்பதால், தமிழில் ஓசையைப் பின்பற்றுவது எளிதாகிறது. 
ஆசிரிய விருத்தம், சந்த விருத்தம் என்பதில் ஓசை ஒத்து வரும். இதைத் தாளத்தால் அளவொத்து வருவது என்பார்கள். அறுசீர் விருத்தத்தில், ஒரு வகைக்கு வீரபத்திர முதலியார் கொடுத்திருந்த சூத்திரத்தைப் பார்த்தோம்.
இருமா காய்ச்சீ ரரையடிக்கா
            யிவையே மற்றை யரையடிக்கும்
வருமா றுணர்க வாரணியுங்
                கொங்கை பொலியு மடக்கொடியே!
இதைச் சுருக்கமாக, மா மா காய், மா மா காய் என்பார்கள். எந்த மாமாவுடனும் காய்விட வேண்டாம்! தேமா தேமா கூவிளங்காய், தேமா புளிமா கருவிளங்காய் என்று இஷ்டப்படி மாற்றிப் போட்டுக்கொள்ளலாம். தத்தகாரத்தில் சொன்னால்,
 தானா தனனா தானனனா, தன்னா னானா தானேனா என்று விதவிதமாக மாற்றிப் போட்டுக்கொள்ளலாம். எப்படிப் போட்டாலும், மா மா காய். சின்ன எச்சரிக்கை. இதை இன்னமும் முழுமையாக விளக்கவில்லை. 
திருப்புகழின் சிக்கலான அமைப்புக்குள் இப்போதுதான் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். குருநாதருடைய வரலாற்றை, ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணம் என்ற பெயரில் குகஸ்ரீ திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இயற்றியிருக்கிறார்.விருத்த தொடர்நிலைச் செய்யுளால் அமைந்திருக்கும் இந்தப் புராணத்தை, அவருடைய 18-19 வயதில் செய்திருக்கிறார். குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. எல்லா சரவண பவன் உணவு விடுதிகளிலும் கிடைக்கும். புத்தகக் கடைகளிலும் கட்டாயம் கிடைக்கும்!
இந்தப் புராணப்படி, அருணகிரிநாதருக்கு முறையான கல்வி இருந்திருக்குமா என்பது ஐயமே.  இவர்தான் தமிழையும் வடமொழியையும் அநாயாசமாகக் கலந்து, இத்தனை சிக்கலான அமைப்புகளில் பல பாடல்களை இயற்றியிருக்கிறார். இதை இறையருள் என்னாமல் வேறு எப்படிச் சொல்வது.
இப்போது நாம் சொல்லியிருப்பதில் தொடர்நிலைச் செய்யுள் என்பதைச் சற்று விளக்க வேண்டும். இது விருத்தத்திலும் அமையும்; வெண்பாவிலும் அமையும். என்ன என்பதை அடுத்ததாகப் பார்ப்போம்.
இப்போது இன்றைய பாடல்.  இதுவும் விநாயகர் துதிதான்.
 
வண்ணக் குழிப்பு
தந்ததனத் தானதனத்             தனதான
     தந்ததனத் தானதனத்        தனதான
 உம்பர்தருத் தேநுமணிக்          கசிவாகி
     ஒண்கடலிற் றேனமுதத்      துணர்வூறி
 இன்பரசத் தேபருகிப்              பலகாலும்
     என்றனுயிர்க் காதரவுற்      றருள்வாயே
 தம்பிதனக் காகவனத்            தணைவோனே
     தந்தைவலத் தாலருள்கைக்  கனியோனே
 அன்பர்தமக் கானநிலைப்         பொருளோனே
     ஐந்துகரத் தானைமுகப்      பெருமாளே

திருப்புகழில் மிக எளிதான சந்த அமைப்பும், பொருளமைப்பும் கொண்ட பாடல். பொருளை நாளைக்குக் காண்போம்.

Rajans

Sundararajan

unread,
Sep 29, 2015, 9:07:33 PM9/29/15
to Ramakrishnan K. S' via Amritha Vahini, Narayanan TS
By -ஹரி கிருஷ்ணன்
First Published : 25 September 2015 12:00 AM IST
திருப்புகழில் ஒரு பகுதியான திருவகுப்பில், இருபத்தைந்து பாடல்கள் உண்டு.  இதில்,

 தனதனன தனதனன தனதனன தனதனன
    தனதனன தனதனன                      தனதான தானதன

என்ற தாள அமைப்பில், ஒரு அடிக்கு எட்டு மடக்கு; ஒரு மடக்குக்கு எட்டு சீர்கள்; ஓரடிக்கு அறுபத்து நான்கு சீர்கள்;  இப்படி நான்கடிகள். ஒவ்வொரு மடக்கிலும் முப்பத்தெட்டு எழுத்துகள்.  அப்படியானால், எட்டு மடக்குகளைக் கொண்ட ஓரடிக்கு 304 எழுத்துகள்.  மொத்த பாட்டுக்கும் (மெய்யெழுத்து சேர்க்காமல்) 1,216 உயிர், உயிர்மெய் எழுத்துகள். இத்தனை நீளமான பாடல் மொத்தமும் சேர்த்து ஒரே ஒரு வாக்கியம்தான்! ஒரே ஒரு வாக்கியத்தைதான் இத்தனை சந்தக் கட்டுகளோடும் பின்னல்களோடும் கவிதை கொண்டிருக்கிறது. சீர்பாத வகுப்பு. சீரடியே என்று முடிகிற கடைசிச் சீர்தான் எழுவாய். இதை ஒவ்வொரு அடியிலும் பயிலும் உம்மைகளோடு கொண்டு கூட்டிக்கொள்ள வேண்டும். எவ்வளவு சுலபமாக, எவ்வளவு அநாயாசமாக இந்த வேலை நடந்திருக்கிறது!

உததியிடை கடவுமர கதவருண குலதுரக
வுபலளித கனகரத        சதகோடி சூரியர்கள்
உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை
யுகமுடிவின் இருளகல        ஒருசோதி வீசுவதும்
இந்தப் பகுதிக்கு ஒரு ஒலித்துணுக்கு கொடுத்திருக்கேன்.  கேட்டுப் பாருங்க.
not included in this forward)


‘வீசுவதும்’ ம்-ல முடிஞ்சிருக்கே அதுதான் உம்மை. எண்ணும்மை. இதையெல்லாம் கொண்டுபோய், சீறடியே என்பதோடு தனித்தனியாகக் கூட்ட வேண்டும்.

திருப்புகழில் மண்டிக்கிடக்கும் ஆச்சரியங்களை உங்கள் முன்னால் மொத்தமாகவும் அமைப்புடன் கூடிய வகையிலும் எடுத்துவைக்க முடியாத இடநெருக்கடியால், இப்படி அவ்வப்போது ஒன்றொன்றாகச் சொல்லிக்கொண்டு வருகிறேன். . திருவகுப்புகளைப் பார்க்கும்போது, இதைப்பற்றி இன்னமும் விரிவாகப் பார்க்கலாம். 

 ‘வனச பரிபுத அர்ச்சனை’  என்ற தலைப்பில் வெளி வந்திருக்கும் 
கட்டுரையை  பார்க்கவும் http://thiruppugazhamirutham.shutterfly.com/.

Sundararajan

unread,
Oct 2, 2015, 8:07:13 PM10/2/15
to Ramakrishnan K. S' via Amritha Vahini
"எப்படிப் போட்டாலும் மா மா காய். சின்ன எச்சரிக்கை. இதை இன்னமும் முழுமையாக விளக்கவில்லை".

இந்த மா மா காய் என்பது தாளக்கணக்குக்கு சரியாக வரும். எழுத்துக் கணக்குக்கு சரியாக வராது. அதனால்தான் தாளத்தால் அளவொத்து வருவது விருத்தம் என்றார்கள். 

சற்று விளக்குகிறேன். மா என்றால் அது தேமா-வாகவும் இருக்கலாம். புளிமா-வாகவும் இருக்கலாம். காய் என்றால், தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் (அதாவது தானானா, தனனானா, தானனனா, தனனனனா). ஒவ்வொன்றிலும் எழுத்து வித்தியாசம் வருவதைப் பார்க்கலாம். இப்படியெல்லாம் இருந்தாலும் தாளத்தால் அளவொத்து இருக்க முடியும். தானா நான்கு மாத்திரை, தனனா அதே நான்கு மாத்திரை. ஆகவே விருத்தம், தாளத்தால் ஒத்தாலும் எழுத்தின் அளவால் ஒத்து வராமல் இருக்கும். 

இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் என்கிறீர்களா? திருப்புகழ் அமைந்திருக்கும் வண்ணவிருத்த அமைப்பில், அப்படி என்ன தனிப்பட்ட சிறப்பு என்பதைப் புரிந்துகொள்வதில் இது இரண்டாவது படி. ஏழாவது பகுதியில் ‘இப்போதுதான் அடியெடுத்து வைத்திருக்கிறோம்’ என்றோமே, அது முதற்படி. அடுத்த அடுத்த படிகளை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே வருவோம். 

இப்போது, நேற்றைய பாடலான நினது திருவடிக்குப் பொருள் பார்ப்போம்.

 

SSR

Sundararajan

unread,
Oct 4, 2015, 9:36:06 PM10/4/15
to Ramakrishnan K. S' via Amritha Vahini
By - ஹரி கிருஷ்ணன்
First Published : 28 September 2015 
இப்படி மனம்போன போக்கெல்லாம், சிற்றின்ப நுகர்ச்சியில் இழுபட்டுத் திரிந்தவர், இறுதியில் தன் செயல்களுக்காக மனம் வருந்தும் நிலைமை ஏற்பட்டது. உடலிலே பிணி படர்ந்தது. திருவண்ணாமலை ஆலயத்தில், சேர மன்னனாகிய வல்லாள ராஜன் எழுப்பிய கோபுரமான வல்லாள கோபுரத்தின் உச்சிக்கு ஏறி அங்கிருந்து குதித்தார். ‘இது காரணம், இது காரியம்’ என்று சொல்லப்படுபவனவற்றைக் கடந்த இறைவன், இவரை ஆட்கொள்ள சித்தம் கொண்டான்.

கீழே குதித்த அருணகிரியாரைக் கரங்களில் ஏந்திக்கொண்டு தரையில் விடுத்து, காதில் உபதேசித்தான். வேலேந்திய கோலத்தோடு வந்ததாக இந்த இடத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் பின்னால், அருணகிரிநாதரின் தமக்கையான ஆதியிடத்தில், இந்த நிகழ்வைப் பார்த்தவர்கள் ‘அடியார் ஒருவர் வந்து தாங்கிக்கொண்டு, காதில் ஏதோ உபதேசித்தார்’ என்று சொல்வதாலே, இது அடியார் வடிவமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

இந்த நேரத்தில், அருணகிரியாருக்கு ‘சும்மா இரு’ என்ற மௌன மந்த்ரோபதேசந்தான் செய்யப்பட்டது. இதைத்தான் கந்தரனுபூதியிலே -

     சும்மாயிரு சொல்லற என்றதுமே
     அம்மாபொருள் ஒன்றும் அறிந்திலனே

என்று பாடுகிறார்.
 

Sundararajan

unread,
Oct 5, 2015, 9:31:53 PM10/5/15
to Ramakrishnan K. S' via Amritha Vahini
விருத்தத்தில் அமைந்த மற்றவகைப் பாக்களுக்கும் திருப்புகழ்ப் பாக்களும் என்ன வேறுபாடு என்பதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். இதுவரையில் நாம் பார்த்திருக்கும் பாடல்களே நல்ல எடுத்துக்காட்டு. இவை அடிக்கு அடி எழுத்துக் கணக்கு தவறாமல் வருபவை என்பதை எல்லாப் பாடல்களும், குறிப்பாக ‘இரட்டைப் பிள்ளையார்’ எனப்படும் ‘கைத்தல நிறைகனி’ பாடலும் காட்டின. இந்த அடிகளில் பயிலும் vertical uniformity பற்றிப் பேசினோம். இந்த வர்டிகல் யூனிஃபார்மிடியை, ‘முத்தைத்தரு’ பாடல் மூலமாக மேலும் விளங்கிக்கொள்ளலாம். இப்போது இந்தப் பாடலை எண்களுடன் அமைந்த கட்டங்களுக்குள் வைக்கிறேன்.
உதாரணத்துக்கு, ஓரடியை கட்டங்களுக்குள் அமைத்திருக்கிறேன். இந்த ஆறு மடக்குகளும் சேர்ந்து ஓரடி. இதுபோல நான்கு அடிகள். எல்லாவகைப் பாக்களுக்கும் எழுத்தெண்ணுவதாக இருந்தால், ஒற்று (புள்ளி எழுத்து) நீக்கிக் கணக்கிட வேண்டும். ஆனால், வண்ணவிருத்தத்தில் தாளச்சுழற்சிகள் விழுவதே இந்த ஒற்றுகளில்தான். ஒவ்வோரடியிலும் 2, 4, 8, 10 எண்ணிட்ட கட்டங்களை மேலிருந்து கீழாகப் பாருங்கள். எல்லாம் ஒற்றெழுத்து என்பது மட்டுமல்லாமல், எல்லாமும் வல்லின ஒற்றுகள் என்பதைப் பார்க்கலாம். ஆறாவது அடியில் (வரியில்) எட்டாவது எழுத்து வல்லெழுத்தாக இல்லாவிட்டாலும் ற்-க்கு இணையான ஒலியைக் கொண்ட இடையின ர், அதைத் தொடர்ந்து ஒரு வல்லெழுத்து என்று அமைந்து, தாளத்தை ஈடு செய்வதைக் காணலாம். எனவோதும், அடிபேண இரண்டிலும் (ஒற்று நீக்கி) நான்கெழுத்துகள்; ஒவ்வொன்றிலும் மூன்றாவது எழுத்து நெடில்.
இப்படி வல்லொற்று, இடையின ஒற்று, மெல்லொற்று நெடுக்குவாட்டில் சம இடத்தில் அமையும். இதுபோலவே நெட்டெழுத்துகளும் சீரான இடக்கணக்கில் அமையும்.
     ஆறுமுக மாறுமுக மாறுமுக மாறுமுக
     மாறுமுக மாறுமுக ...... மென்றுபூதி
     யாகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
     யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்
என்ற பழநித் திருப்புகழை உதாரணமாக எடுத்துக்கொண்டால், 5, 9, 13, 17, 21 ஆகியவை நெட்டெழுத்துகளாக அமைந்திருப்பதைக் காணலாம்.
இது அசாத்தியமான வேலைப்பாடுஇதில் எங்காகிலும் எழுத்துக் கணக்கு மாறுவதுபோலத் தோன்றினால், தற்காலத்தில் பிரித்தெழுதிப் பதிப்பிப்பதுதான் இந்த மாற்றத்துக்கு காரணம் என்பதை உணரலாம்.
இப்படி யோசித்துப் பார்த்து, புரிந்துகொள்வதற்கே இவ்வளவு தூரம் விரித்துச் சொல்லவேண்டி இருந்தால், என்ன அநாயாசமாக தாளக்கட்டு தவறாமல், எழுத்தெண்ணிக்கை பிசகாமல் பாடல்கள் அமைந்திருக்கின்றன என்பதை ஒவ்வொரு பாட்டிலும் பார்க்கலாம்.
திருப்புகழ் 1334-லும் இது அப்படியே தவறாமல் இடம்பெறும்; கந்தரலங்காரமும் கந்தரந்தாதியும் கட்டளைக் கலித்துறை; கந்தரனுபூதி கலிவிருத்தம்; திருவகுப்புப் பாடல்கள் இருபத்தைந்தும் மேலே சொல்லப்பட்டுள்ள திருப்புகழ் விருத்தங்களைப்போல பலமடங்கு சித்திரவிசித்திர தாளக்கட்டில் குதிபோடுபவை; வேல், மயில், சேவல் விருத்தங்கள் அனைத்தும் வண்ணவிருத்தங்கள். திருப்புகழில் அபூர்வமாக ‘ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்று’ போன்ற எளிய அமைப்புகள் வருவதுண்டு.
இந்தச் சிக்கலான யாப்பு அமைப்பை ஓரளவுக்கு விரிவாக விளக்கியிருக்கிறோம் என்று நம்புகிறோம். தொடர்வோம்.
இன்றைய திருப்புகழ், திருப்பரங்குன்றத் திருப்புகழில் முதலாவது. இந்தப் பாடலில் வல்லெழுத்துகளின் இடத்தில் மெல்லெழுத்துகள் வந்து, ஏதோ மிருதங்கம் வாசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதைக் காணலாம்.
 
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன தனதான
 
கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு கதியோனே
 - ro be continued
By - ஹரி கிருஷ்ணன்  http://www.dinamani.com/religion/dhinamthorum-thiruppugazh/

Sundararajan

unread,
Oct 7, 2015, 10:25:37 PM10/7/15
to Ramakrishnan K. S' via Amritha Vahini
That is this life if, full of care,

We have no time to stand and stare.

என்று தொடங்கும் ஆங்கிலக் கவிதை உண்டு. வில்லியம் ஹென்றி டேவிஸ் எழுதிய Leisure என்ற கவிதை.

நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில், கணப்போது நிற்க நேரம் கிடைத்தால், நம் எல்லோர் மனங்களிலும் கட்டாயம் நம்முடைய குழந்தைப் பருவக் காட்சிகளும், இளம் பருவமும், அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளும் அந்தந்தப் பருவத்து சம்பவங்களும் நினைவில் மின்னி மறையும். பலருக்கு, ‘சரி, இவ்வளவு காலம் வாழ்ந்து என்னதான் செஞ்சோம். எல்லாத்தையும் விட்டுட்டு ஒரு நிமிஷம் அக்கடான்னு இருக்கமாட்டோமா’ என்று தோன்றும் வாய்ப்பு அதிகம். ‘இந்தப் பிறவிக்கான பயனை அடையமாட்டோமா’ என்ற தாகம் ஒரு சிலருக்காவது எழும். இந்த எண்ண ஓட்டத்தைத்தான், இன்றைய பாடலில் படம்பிடித்துக் காட்டுகிறார் குருநாதர். ஹென்றி டேவிஸ் ஏங்கிய Leisure போலத்தான். ஆனால் இதில் தென்படும் தாகமும் ஏக்கமும் வேறானவை.

தான் பிறந்து வளர்ந்ததை (அல்லது நாம் பிறந்து வளர்ந்ததை) வாழ்ந்த வாழ்வை, அதன்பிறகு திரிந்த விதத்தை எண்ணிப் பார்த்து, உன் அருள் என்றுதான் கிட்டுமோ என்று இரண்டடிகளில் பாடுகிறார்.

அடுத்துத் தொடரும் இரண்டடிகள் முருகனைப் பற்றி. இன்னும் சரியாகச் சொன்னால், அவன் மாமன் திருமாலைப் பற்றி. அதனினும் சரியாகச் சொன்னால், அவன் எடுத்த ராமாவதாரத்தைப் பற்றி. நாம் பிறந்தவிதத்தைப் பாடிய அதே வகையில், ராமாவதாரத்தின் காரணமாக உலகில் வந்து பல உருவங்களில் தோன்றிய தேவர்களைப் பட்டியலிட்டு, இப்படியொரு அவதாரத்தை, தேவர்களும் கூடவந்து பிறக்குமாறு செய்தருளி, அசுரர்களை அழித்த மாமனுக்கு மருகோனே என்று முடிக்கிறார். மேலும் படிக்க

Sundararajan

unread,
Oct 8, 2015, 10:00:40 PM10/8/15
to Ramakrishnan K. S' via Amritha Vahini
பாடலுக்கான பொருளை இப்போது பார்ப்போம்:
கரு அடைந்து - (மிகச் சிறியதொரு திவலையாக) கருப்பையை அடைந்து 
பத்து உற்ற திங்கள் வயிறு இருந்து - தாய் வயிற்றிலே பத்து மாதங்கள் குடியிருந்துமுற்றிப் ப யின்று - (வளர்சியடைந்து, அதனால்) முதிர்ச்சியை அடைந்து 
கடையில் வந்து உதித்து - கடைசியாக, (தாய் வயிற்றிலிருந்து வெளியே) வந்து, (பூமியில்) உதித்து குழந்தை வடிவாகி - குழந்தை என்பதொரு வடிவத்தைப் பெற்று,கழுவியங்கு எ டுத்து - (அந்தக் குழந்தையைப் பிறர்) கழுவி அங்கே எடுத்து,முலை அருந்து விக்க - (தாயின்) மார்பில் சுரக்கும் பாலை ஊட்டி,கிடந்து கதறி ... (இந்தக் காலகட்டத்திலே, தரையிலும் தொட்டிலிலும்) கிடந்து, அழுது,அங்கை கொட்டித் தவழ்ந்து ... (கைகளை வீசியும்) தட்டியும், தவழ்ந்தும் நடமாடி - நடை பயின்று, அரைவடங்கள் கட்டி - இடுப்பிலே (கட்டுவதாகிய) கயிறுகள் (அரைஞாண்) கட்டிக் கொண்டும் சதங்கை இடு குதம்பை - (காலிலே) சதங்கை (ஒலிக்கவும்) காதுகளில் அணிகலன்களும், (குதம்பை என்பது காதில் இட்ட துளை பெரிதாய் வளர்வதற்காக அணியும் கனமான காதோலை எனப்படும் அணிக்குப் பெயர். இந்த அணியை அணிந்த பெண்ணைத்தான், குதம்பைச் சித்தர் ‘குதம்பாய்’ என்று அழைக்கிறார்)
பொற்சுட்டி தண்டை அவையணிந்து - (நெற்றியிலே) பொன்னாலான சுட்டியையும், (காலிலே) தண்டையை அணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி - (இந்தவிதமாக நாட்கள் கழிந்து எனக்கு அந்தந்தப் பருவத்துக்கான வயது), முற்றி (அடுத்த பருவத்துக்குக்) கிளர்ந்து, வளர்ந்து, வயது ஏறி, 
இந்த நிலையைத்தான் பழநித் திருப்புகழில்,
கருவில் உருவாகி வந்து, வயதளவிலே வளர்ந்து.. என்று பாடுகிறார். வயதுதான் வளர்ந்ததே தவிர, அறிவிலோ மனத்திலோ மற்ற வகைகளிலோ எந்த விதத்திலும் வளர்ச்சியே இல்லையே என்பது குறிப்பு.
இந்த வளர்ச்சிகள்தாம் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் வளர்ந்தது.
அரியபெண்கள் - அருமையான பெண்களின் நட்பைப்பு ணர்ந்து - நட்பைப் பூண்டு, பிணி உழன்று – நோய்வாய்ப்பட்டு சுற்றித்தி ரிந்த(து) அமையும் - நான் (புலன்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் பணிந்து எப்படியெல்லாமோ) அலைந்ததும் திரிந்ததும் அமையும். போதும். 
அதற்காக என்ன வேண்டுகிறார்? Continue reading.......
By - ஹரி கிருஷ்ணன் in Dinamani

Sundararajan

unread,
Oct 11, 2015, 9:07:46 PM10/11/15
to Ramakrishnan K. S' via Amritha Vahini
நம் வாழ்க்கையிலே, ஏதோ வெகுசிலரைத் தவிர்த்து, மற்றவருக்கு ஒரு பெரிய நோய் உண்டு. எதையும் தள்ளிப்போடுவது, ஒத்திப்போடுவது என்பதே அது. இப்படித் தள்ளிப்போடுவது அல்லது ஒத்திப்போடுவது என்பது எல்லாச் சமயங்களிலும் தவறு என்பதில்லை. ஒத்திப்போட வேண்டியவற்றை ஒத்திப்போடத்தான் வேண்டும். சிலவற்றை இன்றே, இப்போதே, இக்கணமே செய்தாக வேண்டும். வேறுசிலவற்றை அப்படிச் செய்தால், அது அவசரப்பட்டுக்கொண்டு, நிலைமையைப் புரிந்துகொள்ளாமல், உரிய சூழ்நிலை ஏற்படுவதற்கு முன்னாலேயே காரியத்தில் இறங்கி, ‘அவசரக் குடுக்கை’ என்று பெயர் வாங்கிக்கொண்டு காரியமும் கெட்டுப்போகிற நிலையும் ஏற்படுவதுண்டு. இதனால்தான் வள்ளுவர்,

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

என்றார். தூங்குக என்றால் ஒத்திப்போடுதல். ஆங்கிலத்தில் defer, delay என்பார்கள். எதையெதை இப்போது செய்யத் தேவையில்லை, செய்யக்கூடாதே அதையதை ஒத்திப்போடு. எதையெல்லாம் உடனடியாகச் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் உடனடியாகச் செய். அதுமட்டுமல்ல,

செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்

செய்யக்கூடாததைச் செய்தாலும் தவறுதான், செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டுவிட்டாலும் தவறுதான், கேடுதான் என்றும் சொல்கிறார்.

அருணகிரிப் பெருமான், நாம் அன்றாடம் செய்ய வேண்டிய, எப்போதும் எல்லா சமயத்திலும் செய்ய வேண்டிய, ஆனால் செய்யத் தவறும் சிலவற்றைத் தன்னுடைய தவறுதல்களாகப் பட்டியலிட்டு நம் சார்பில் இறைவனிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார். காலன் வரும்போது காட்சி பெற வேண்டும் என்பதே அது.

அந்தக் கடைசி நேரத்தில் இறைவனுடைய எண்ணம் மனத்திலே அழுந்த நிற்க வேண்டுமானால், அதற்காக இப்பொழுதிலிருந்தே ஒவ்வொரு கணமும் நினைத்து நினைத்துப் பழகினாலொழிய, யமபயம் வருத்தும் அந்த இடர்ப்பாடான தருணத்தில் இறைவனுடைய நினைப்பு வருவது என்பது சற்றும் முடியாத ஒன்றே. அதைத்தான் இந்தத் திருப்பரங்கிரித் திருப்புகழில் சொல்லி, இறைவனிடம் நமக்காகக் கையேந்துகிறார். எப்படி? இப்படி -
 ஹரி கிருஷ்ணன்


Reply all
Reply to author
Forward
0 new messages