பெரியவாளுக்கு விளாம்பழத்தின் மீது தனி ஆசை ஏதும் இல்லை. சுமார் நூறு விளாம்பழங்களைக் கொண்டு வந்து சமர்ப்பித்த பக்தரின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டுமே? என்ற கரிசனம். பழங்கள் காணாமல் போய்விட்டன. நல்ல காலமாக, நாலு ஓடுகளாவது இருந்தனவே! விளாம்பழ ஓட்டுச் சுவை சேர்ந்த ரசத்தைச் சாப்பிட்டதால் பக்தரின் பிரார்த்தனைப்படி, 'குக்ஷியில் கொஞ்சம்' சேர்ந்துவிட்டது. பக்தர்களிடம் அத்த�

16 views
Skip to first unread message

Ramakrishnan K S

unread,
Nov 5, 2021, 7:48:38 PM11/5/21
to Abridged Recipients

மெலட்டூர் ராமசாமி அய்யர் என்பவர் ஸ்ரீமடத்தின் பக்தர்.

ஒரு தடவை தரிசனத்துக்கு வந்தபோது நன்றாகப் பழுத்த உயர்ந்த ரக விளாம்பழங்கள் வாங்கி வந்து பெரியவா முன் வைத்து, "பெரியவா குக்ஷியில் (வயிற்றில்) இவை சேரணும்" என்று பிரார்த்தித்தார். பெரியவா மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

விளாம்பழக் கூடை உட்புறம் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அரை மணி கழித்துப் பார்த்தால், கூடை காலி!

ஒரே ஒரு பழம் கூட இல்லை.

பூஜைக் கட்டில் பணி செய்யும் இருவர், சுவையான உட்பகுதியைத் தின்று விட்டு,விளாம்பழ ஓடுகள் நான்கை ஜன்னலில் வைத்திருந்தார்கள்.

பெரியவா பிக்ஷைக்கு வந்தார்கள்.

"விளாம்பழத்தை என்ன செய்தே?"

எல்லோருக்கும் தேள் கொட்டின மாதிரி சுரீரென்றது. பெரியவா இப்படியெல்லாம் குறிப்பாகக் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிற வழக்கமில்லையே?......

இறுக்கமான மௌனம்.பெரியவாளுக்குப் புரிந்து விட்டது. கண்களை அங்குமிங்கும் சுழல விட்டார்கள்-பெரியவா.

"அந்த நாலு ஓட்டையும் (விளாம்பழ) ரசத்திலே போடு, கொஞ்ச நேரம் ஊறட்டும்."

அந்த ரசத்தை உணவில் சேர்த்துக்கொண்டு சுவைத்தார்கள்.

பெரியவாளுக்கு விளாம்பழத்தின் மீது தனி ஆசை ஏதும் இல்லை. சுமார் நூறு விளாம்பழங்களைக் கொண்டு வந்து சமர்ப்பித்த பக்தரின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டுமே? என்ற கரிசனம்.

பழங்கள் காணாமல் போய்விட்டன. நல்ல காலமாக, நாலு ஓடுகளாவது இருந்தனவே! விளாம்பழ ஓட்டுச் சுவை சேர்ந்த ரசத்தைச் சாப்பிட்டதால் பக்தரின் பிரார்த்தனைப்படி, 'குக்ஷியில் கொஞ்சம்' சேர்ந்துவிட்டது.

பக்தர்களிடம் அத்தனை பரிவு

Ramakrishnan K S

unread,
Mar 30, 2026, 1:14:59 AMMar 30
to Abridged Recipients

Ramakrishnan K S

unread,
Mar 30, 2026, 1:15:00 AMMar 30
to Abridged Recipients
_*நான்... நான்... நான்...*_
*நான்* சம்பாதித்தேன், 
*நான்* காப்பாற்றினேன், 
*நான்* தான் வீடு கட்டினேன், 
*நான்* தான் உதவி  செய்தேன், 
*நான்* உதவி  செய்யலனா? அவர்  என்ன ஆகுறது!!!!!
*நான்*  பெரியவன்,
*நான்*  தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன், *நான்  நான்  நான்  நான்*  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!...
*நான்*தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?
*நான்*  தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா?
*நான்*  தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?
*நான்*  தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா??
*நான்*  தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா ?
*நான்*  தான்  காய்களை பழமாக மாற்றுகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா ?
*நான்* தான் கடலில்  மீன்  பிடிக்கிறவனுடைய வலையில்  மீனை சிக்க  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா? 
இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று  சொல்வதற்கு அதிகாரமும்  உரிமையும்  உண்டு..
ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருங்கள்.
*அன்பே* அனைத்து துன்பப் பூட்டையும் திறக்கும் திறவுகோல்.
ஆகையால் நாம் *அன்பை பரிமாறிக் கொள்வோம்*
                         *அன்புடன்*
                              *நான்* அல்ல


Ramakrishnan K S

unread,
May 27, 2026, 12:36:48 AM (9 days ago) May 27
to Abridged Recipients
Reply all
Reply to author
Forward
0 new messages