ஶ்ரீ தர்ம சாஸ்தா பக்தர்களுக்கு அடியேன் பணிவான நமஸ்காரங்கள்.
ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏
மயிலாடுதுறை தரங்கம்பாடி வழியில் மயிலாடுதுறையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புனிதமான ஆறுபாதி கிராமத்தில் அருள்பாலித்து வரும்
ஸ்ரீ பூர்ண புஷ்கலாம்பா ஸமேத ஸ்ரீ ஹரிஹர புத்ர ஸ்வாமி ஸ்ரீ தர்ம சாஸ்தா திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம்,
இறையருளால் வரும் ஜூன் 7ஆம் தேதி நடைபெற நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மஹோற்சவத்தை முன்னிட்டு
யாகசாலை ஹோம திரவியங்கள், ஶ்ரீ சிவாச்சாரியாாள் சம்பாவனை மற்றும் பக்தர்களுக்கான அன்னதான கைங்கர்யம் ஆகியவை நடைபெற உள்ளன.
இத்தகைய தெய்வீக பணிகளில் பங்கேற்பது அரிய புண்ணியமாகும்.
“அன்னதானம் பரமோதானம்” என்றும்,
“சாஸ்தா கைங்கர்யம் செய்திடுவோர்க்கு அவன் அருள் துணை நிற்கும்” என்றும் பெரியோர் கூறியுள்ளனர்.
இந்த கோவிலின் யாகசாலை பொருட்களுக்கான செலவு ரூ.22300/- மட்டுமே என்று பேசப்பட்டிருக்கிறது .
மேலும் அன்னதானமும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதால், பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு உதவி செய்து, ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் அருட்கடாட்சத்தை பெற அன்புடன் வேண்டுகிறோம்.
“ஆறுபாதி” — பலருக்கும் புதிதாய் கேட்கும் பெயர் அல்ல. அங்கிருக்கும் ஸ்ரீ ஐயனார் நம்மைத் தாமே அழைக்கிறார் என்பதே உண்மை.
அவரது திருவுளமின்றி ஒரு இலை கூட அசையாது.
ஆகையால், “ஸ்வாமி நமக்கு இந்த வாய்ப்பை அருளியிருக்கிறார்” என்ற ஆனந்த உணர்வுடன்,
உங்களால் இயன்ற தொகையை — அது ரூ.1/- ஆக இருந்தாலும் கூட — பக்தியுடன் சமர்ப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு:
Dr. சுந்தரம்
📞 9480173760
ஸ்ரீ தர்மசாஸ்த்ரே நமः 🙏
ஸ்வாமியே சரணம் ஐயப்பா