ஜூலை -12 வியாசபூஜை
நம் பாரதத்தின் மிகப்பெரிய காவியமான மகாபாரதத்தை எழுதியவர் வியாசர். இவர்
ராமபிரானின் குலகுருவான வசிஷ்டரின் கொள்ளுப்பேரன்; பராசர முனிவரின் மகன்.
இவரின் மகனான சுகப்பிரம்ம முனிவர், (கிளிமூக்கு கொண்டவர்) தந்தைக்கும்
மேலாகப் புகழ் பெற்றவர்.
வியாசர் என்பது பதவியைக் குறிக்கும் ஒரு சொல்.
இதற்கு, 'வேதங்களைப் பிரிப்பவர்' என்று பொருள். வேதங்களை ரிக், யஜூர்,
சாமம், அதர்வணம் என, பிரித்தவர் வியாசர். 'வியாசம்' என்றால், கட்டுரை
என்றும் பொருளுண்டு. கட்டுரையில் பத்தி பிரித்து எழுதுவது போல, வேதங்களைப்
இவர் பிரித்தார்.
இவரது நிஜப்பெயர் கிருஷ்ண துவைபாயனர். 'கிருஷ்ண'
என்றால், கருப்பு. இதனால் தான், பவுர்ணமிக்கு பின், அமாவாசை வரை வரும்
பதினைந்து தேய்பிறை நாட்களை, கிருஷ்ண பட்சம் என்கின்றனர். அதாவது, இருட்டை
நோக்கி செல்லும் காலம். 'த்வைபாயனர்' என்றால், தீவில் பிறந்தவர் என்று
பொருள். வியாசர் நாற்புறமும் தண்ணீர் சூழ்ந்த ஒரு தீவில் பிறந்தவர்.
இவரது
தாய் சத்தியவதி. சேதிநாட்டு அரசனான உபரிசரவசுவின் மகள். இவள் ஒரு மீனின்
வயிற்றில் பிறந்ததால், உச்சைச்ரவஸ் என்ற மீனவ தலைவர் வீட்டில் வளர்ந்தாள்.
இவள் யமுனை நதியில், படகு ஓட்டி பிழைப்பை நடத்தி வந்த சமயத்தில், ஒரு நாள்,
பராசர முனிவர் அங்கு வந்தார். அந்த நேரம் மிக நல்ல நேரமாக இருந்ததால்,
பராசரார், 'பெண்ணே... இந்த சமயத்தில் நாம் இணைந்தால், உலகம் போற்றும் ஒரு
உத்தமக் குழந்தையைப் பெறலாம்...' என்றார். சத்தியவதி மறுத்தாள். பின்,
அவளைச் சமாதானம் செய்து, அவளுடன் இணைந்தார். அவ்வாறு பிறந்த பிள்ளையே
வியாசர். இதனால் தான், நதிமூலம், ரிஷிமூலம் பார்க்காதே என்பர்.
வழி
தவறாக இருந்தாலும், நல்லது நடக்க, சில சமயங்களில், நிர்பந்தங்களை ஏற்க
வேண்டி வருகிறது. வியாசர் பிறக்காவிட்டால், மகாபாரதம் கிடைத்திருக்காது.
இன்று கூட குழந்தை இல்லாதவர்கள், வேறு ஒருவரின் அணுவை ஏற்று, சோதனைக்குழாய்
மூலம் குழந்தை பெறுவது, தங்களுக்கு ஒரு வாரிசு வேண்டுமே என்பதற்காகத்
தான். இதை, இன்று உலகம் அங்கீகரித்து விட்டது. இதுபோல் தான், அன்றும்
நடந்துள்ளது.
விஷ்ணுவே, வியாசராக பிறந்தார் என்றும் சொல்வதுண்டு. இவர்
வேதங்களைப் பிரித்தவர் என்பதால், வேதம் ஓதுவோர் இவரை, குருவாக ஏற்றுள்ளனர்.
மடாதிபதிகள் இவரது பூஜை நாளில், சாதுர்மாஸ்ய விரதம் (நான்கு மாத தவம்)
துவங்குவர்.
பணக்காரனுக்கும் ஏழை எளியவரைப் போலவே வாழ்வில் துன்பங்கள்
உண்டாகின்றன. ஏழை பணத்திற்காக அலைகிறான்; பணக்காரன் நிம்மதி தேடி அலைகிறான்
என்பது போன்ற அற்புதக் கருத்துகளை உதிர்த்தவர் வியாசர். அவர் எழுதிய
மகாபாரதத்தை படிப்போம். அதிலுள்ள சிறந்த தர்மநெறிகளைக் கடைபிடித்து
வாழ்வோம்.
தி.செல்லப்பா
Vyasa Puja
Bhagavan Sri Vedavyasa
In the course of this Puja, worship is offered to three groups of
Acharyas, each group consisting of five Acharyas. These three groups are
mentioned below separately. The “Yati Dharma Sangraha” of Visweshwara
Saraswati, otherwise known as “Visweshwara Samhita” gives in detail the
procedure to be adopted for the Puja.
व्यूहः पुनस्त्रय एव कृष्णव्यासभाष्यकाराणामेव समाचरेत् ।
व्यूहत्वं च तत्परिवारयोगात् ।
परिवारश्च पुराणादिषु दृष्टः ।
तत्र कृष्णस्य सनत्कुमारसनकसनन्दनसनत्सुजाताः ।
व्यासस्य सुमन्तुजैमिनिवैशंपायनपैलाः ।
भाष्यकारस्य पद्मपादविश्वरूपतोटकहस्तामलकाचार्याः ।
तत्र मध्ये कृष्णपञ्चकम् ।
तस्य दक्षिणतो व्यासपञ्चकम् ।
वामतं आचार्यपञ्चकमिति ।
न्यायादाचाराच्च गुरुपरमगुरुपरमेष्ठिगुरुपरात्परगुरवोऽन्ये च ब्रह्मविदाचार्या यथासंनिवेशं भगवतः पुरतः पूज्याः ।
Krishna Panchakam
Sri Krishna and four others, namely Sanatkumara, Sanaka, Sanandana
and Sanatsujata consist of Krishna Panchakam. Sri Krishna is placed in
the centre and others to the east, south, west and north of Lord Sri
Krishna. The Lord is worshipped with Sri Krishna Asthottara Satanama
Archana. For each Panchaka, after the Puja, Arati is waved after Special
Naivedya.
Vyasa Panchakam
Veda Vyasa Bhagavan is placed in the centre. His four disciples
namely Sumanthu, Jaimin, Vaisampayana and Paila are placed in the four
quarters to the east, south, west and north of Vyasa respectively.
Shankaracharya Panchakam
Sri Shankara Bhagavatpada is placed in the middle and His four
shishyas, namely, Padmapadacharya, Sureswaracharya, Totakacharya and
Hastamalakacharya are placed in the four directions.
Separate Pujas and Arati are offered by His Holiness to the three
sets of Panchakams mentioned above. After the Pujas, the Sringeri
Jagadguru Parampara Stotra is recited and worship is offered to
Sadasiva, Shankaracharya and to the illustrious Acharyas who gracefully
adorned the Sringeri Sri Sharada Peetham up to Jagadguru Sri Sri
Abhinava Vidya Tirtha Mahaswamiji.
The Chaturmasya Sankalpa is then performed by the Acharya of the Peetham, Jagadguru Sri Sri Bharati Tirtha Mahaswamiji.
प्रायेण प्रावृषि प्राणिसङ्कुलं वर्त्म दृश्यते
अतस्तेषामहिंसार्थं पक्षा वै श्रुतिचोदनात् ।
स्थास्यामश्चतुरो मासानत्रैवासति बाधके ॥
Stating that according to the Vedic dictum “पक्षा वै मासाः”
the Vrata is observed for two months according to tradition (three
months in case of Adhika maasa), staying at one place to avoid injury to
moving insects during rainy season. To this, the disciples pray in
chorus —
निवसन्तु सुखेनात्र गमिष्यामः कृतार्थताम् ।
यथाविहितशुश्रूषां करिष्यामो वयं मुदा ॥
— promising the Guru, that to the best of their ability, they will
serve the Guru and requesting Him to stay comfortably at the location of
Chaturmasya. On their part, the disciples rest contented having
accomplished the object, namely, the Jagadguru’s Gracious Blessings.