தேவாரம் : மாதர் பிறை கண்ணியானை - Thevaram : Mathar Pirai kanniyanai
திருச்சிற்றம்பலம் :
"அவன் அருளாலே "திருவிடைமருதூரில் ஓதுவா மூர்த்தி அனந்த நாராயணனுடன் உரையாடும் பாக்யம் பெற்றோம். ஓதுவார் ஸ்ரீ தயானந்த சரஸ்வதியின் சீடர் , ரிஷிகேஷ் ஆசிரமத்தில் முப்பது வருடங்கள் இருந்தவர். விஷமிகளால் தன்னுடைய கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டும் குரலுக்கு குறையில்லாமல் அருளியிருக்கிறான் எம்பிரான். திருமுறைகள் முழுதும் அத்துபடி.. கர்நாடக சங்கீதம் முறைப்படி பயிலாவிடினும், இசை ஞானம் கூறுதற்கு இணங்கா.. திருமுறை பற்பல ராகங்களில் ஓதி மலைக்க வைத்தார் . மகா பெரியவாளி...ன் ஆசியுடம் நடந்தேறிய ஜட பராயணத்திலும் , ஸ்ரீ மகாலிங்க சுவாமி தைபூச திருத்தேர் உற்சவத்திலும் திருமுறைகள் ஓதி அடியவர்களை மகிழ்வூட்டினார்
அவருடன் சிறிது நேரம் உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது .. அருமையான துவக்கம் அளித்து ஓதுவா மூர்த்தியை உற்சாகப்படுத்திய விதூஷி காயத்ரி வெங்கடராகவன் அவர்களுக்கும் நன்றி.
இவரை தொடர்பு கொள்ள விருப்பமுடையவர்கள் திருவிடைமருதூரில் கோவில் அலுவலகத்தில் தொடர்புகொண்டால் கண்டு உரையாடலாம்
மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்!
யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்!
கண்டேன் அவர் திருப்பாதம்!
கண்டறியாதன கண்டேன்!!