🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🌹 🕉 🏵️ ஸ்ரீ மஹா பெரியவாளின்-நமக்கு வழிகாட்டும்-தினசரி வாக்கியங்கள் 👇👇👇👇 👇👇 👇👇 👇 இப்போது நான் சொன்ன விஷயத்தை இன்னம் கொஞ்சம் எக்ஸ்ப்ளெயின் பண்ண வேண்டும். வாழ்ந்து காட்டுவது, புஸ்தக�

4 views
Skip to first unread message

Ramakrishnan K S

unread,
Dec 30, 2025, 3:29:50 AM (11 days ago) 12/30/25
to amrith...@googlegroups.com
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🌹
🕉                                                                                                                                                                                                                                  🏵️  ஸ்ரீ மஹா பெரியவாளின்-நமக்கு வழிகாட்டும்-தினசரி வாக்கியங்கள்
👇👇👇👇
👇👇
👇👇
 👇                                                                                                                                                                                                   இப்போது நான் சொன்ன விஷயத்தை இன்னம் கொஞ்சம் எக்ஸ்ப்ளெயின் பண்ண வேண்டும். வாழ்ந்து காட்டுவது, புஸ்தகம் எழுதுவது என்று இரண்டு சொன்னேன். நம் ஆசார, அநுஷ்டானங்களுக்கு ஏகப்பட்ட சாஸ்திர புஸ்தகங்கள் இருக்கின்றன. ஆனாலும் இதிலே நன்றாகத் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த கிரந்த கர்த்தாக்கள் அந்தப் புஸ்தகங்களில் இது இது ரூல் என்று எழுதிவைத்ததற்குப் பிறகே அதைப் பார்த்து அப்படியப்படி ஜனங்கள் பண்ணினார்களா, வாழ்ந்து காட்டினார்களா என்றால் அதுதான் இல்லை. அந்த கிரந்த கர்த்தாக்களுக்கும் முன்னாலிருந்தே இந்த ஆசார அநுஷ்டானங்களை அவர்களுடைய பூர்விகர்களும் வாழ்க்கையில் அநுஸரித்துத்தான் வந்திருக்கிறார்கள். அதைத்தான் பின் ஸந்ததியாரை உத்தேசித்துப் புஸ்தகத்தில் எழுதி வைத்தார்கள். அதாவது சாஸ்திரத்தைப் பார்த்து வாழ்க்கை நடத்தவில்லை. வாழ்க்கையில் நடத்தப்பட்டதையே சாஸ்திரத்தில் எழுதினார்கள். மநுஸ்மிருதி முதலான எந்த ஸ்மிருதியைப் பார்த்தாலும் ஸரி, ஆபஸ்தம்ப-ஆச்வலாயன ஸூத்ரங்களைப் பார்த்தாலும் ஸரி, அநேக தர்ம சாஸ்திரங்களில் சிதறிக் கிடக்கும் ரூல்களைத் திரட்டிக் கொடுக்கும் நிபந்தன க்ரந்தங்களைப் பார்த்தாலும் ஸரி அந்த மநுவோ, ஆபஸ்தம்பரோ, ஆச்வலாயனரோ, நிபந்தன க்ரந்தம் பண்ணினவரோ தாங்களாக ஒரு சின்ன ‘ரூல்’ கூடப் பண்ணினதாகச் சொல்லிக் கொள்ளவில்லை; ஏற்கனவே இருக்கிற ரூல்களைத் திரும்பச் சொல்கிறதாகவே ஸ்பஷ்டமாக ஏற்படும்.
இது ஒரு பெரிய ஆச்சர்யம். “ஸநாதன தர்மம்” என்ற வார்த்தைக்கு முற்றிலும் பொருத்தமாக, புஸ்தகங்கள் தோன்றுகிறதற்கு முன்பே நம்முடைய தர்மாசார வாழ்க்கை தோன்றிவிட்டது! முதல் முதலில் யார் இப்படி பஞ்ச கச்சத்தை ஏற்படுத்தினது? நெற்றிக்கு இப்படி இப்படி இட்டுக்கொள்ள வேண்டும் என்று ‘இனாகுரேட்’ பண்ணினது யார்? எந்தக் காரியமானாலும் ஆசமனம் பண்ணுவதற்கு, நெற்றியில் குட்டிக் கொள்வதற்கு ‘ஆரம்ப விழா’ என்று என்றைக்காவது யாராவது செய்தார்களா? ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. ஆதிக்கும் ஆதிக்கும் ஆதியிலிருந்தே இப்படியெல்லாம் பண்ணியிருக்கிறார்கள். இந்த லோகத்தையெல்லாம் ஸ்ருஷ்டித்திருக்கிற ஒரு மஹாசக்தியை எப்போதும் தொட்டுக்கொண்டவர்களாக அந்த ஆதி புருஷர்கள் இருந்ததால், இந்த லோக வாழ்க்கைக்கு எது நல்லது, இதற்கும் நல்லதாக இருந்து கொண்டே இதிலிருந்து விடுவித்து நித்யானந்தத்தில் சேர்க்கக் கூடியதாக உள்ளது எது என்பதை அவர்கள் தெரிந்துகொண்டு, அப்படியே வாழ்ந்து காட்டியதுதான் நம்முடைய தர்மங்களாகவும், நீதிகளாகவும், ஆசாரங்களாகவும், அநுஷ்டானங்களாகவும் ஆகி சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றன.
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

Reply all
Reply to author
Forward
0 new messages