
நாம் கூற வந்தது, எல்லா மதஸ்தரும் தமது மத நால்களைப் பதிப்பித்தப் பரப்புவதற்கும், சமயப் பேச்சாளர்கள் மூலம் மக்களக்கு மத விஷயங்களை எடுத்துச் சொல்வதற்கும் இவற்றிலும் முக்கியமாகத் தத்தமது ஆலயங்களைப் பழுதுபார்த்துப் புதப்பித்துக் கொள்வதற்கும், தேவையான இடங்களில் சர்ச்சைக்கும் இடமில்லாமல் புதிய ஆலயங்கள் எழுப்பிக் கொள்வதற்கும், இன்னோரன்ன பல வகைகளுக்கும் அரசாங்கம் ஆதரவைத் தந்து, பெரும் பங்கோ, சிறு பங்கோ மானியமாக வழங்குதல் வேண்டும். புதிய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய செக்யூலரிஸம் இவற்றக்கு உதவுவதாக இருத்தல் வேண்டும்.
மத விஷயங்களில் மக்கள் ஆதரவே மூலதனம்மேற்சொன்னபடி மதத்தை வளர்ப்பதற்கான பணிகளின் செலவில் ஒரு பங்கைத்தான் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென விரும்புகிறோமேயன்றி முற்றிலும் அரசாங்கமே செலவழிக்கவேண்டும் என்று நாம் கூறவில்லை. அப்படிச் செய்தால் அப்போது இப் பணிகளுக்காக மக்கள் செலவிடுவதென்பது நின்றுவிடும். அது கூடாது. ஏனெனில் மத விஷயங்களில் மக்களின் ஆதரவே மூலதனம். உடலுழைப்பாக மட்டுமின்றி, திரவியத் தியாகமாகவும் அவ்வாதரவை அவர்கள் தர வேண்டும். அரசாங்கம் மட்டுமே செலவிடுவது என்றால் அப்போது மக்களின் அக்கறையும் ஈடுபாடும் குறைந்து அவர்களுக்கு மெத்தனம் ஏற்பட்டுவிடும். எனவே அரசாங்கம், மக்கள் ஆகிய இரு சாராரும் பங்கு கொண்டே மதாபிவிருத்திக்கான பணிகள் நடைபெறவேண்டும்.
WITH PRANAMS
N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536
