”ஸ்ரீஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே!” -5

62 views
Skip to first unread message

Sundararajan

unread,
Jan 3, 2015, 9:20:53 PM1/3/15
to amrith...@googlegroups.com
குரு என்ற தனிப் பெருமை
இதற்கெல்லாம் மேலே இன்னம் அவர் என்ன? தீக்ஷிதர் ஒவ்வொரு க்ருதியிலேயும் என்ன முத்ரை வைத்திருக்கிறார்? ‘குரு குஹ’.
குரு – அதுதான் ஸுப்ரஹ்மண்யருடைய எல்லாப் பெருமைகளுக்கும் மேலான மஹா பெருமை. குருவாக உபதேசித்து மோக்ஷத்தை அநுக்ரஹிக்கிற பேரருளைச் செய்கிறவர் அவர். “குருவாய் அரர்க்கும் உபதேசம் வைத்த” என்று அருணகிரிநாதர் சொல்கிறபடி, பரம ஞான மூர்த்தியான அப்பாவுக்கும் உபதேசம் செய்த தகப்பன் ஸ்வாமி, ஸ்வாமிநாத ஸ்வாமி அவர். “ஞான பண்டித ஸ்வாமி”. அழகு, அருள், வீர தீர சக்தி எல்லாம் சொன்னபின் தீக்ஷிதர் இதற்கு வருகிறார்:
தாப-த்ரய ஹரணநிபுண தத்வோபதேச கர்த்ரே”:
தாபத்ரயம் என்பதாக ஜீவாத்மாவுக்கு மூன்று தினுஸுத் தாபம். மூன்று ஸமாசாரங்கள் அதை தஹித்து வேக வைக்கின்றன. ஆத்யாத்மிகம், ஆதி பௌதிகம், ஆதி தைவிகம் என்ற மூன்று. இவை மநுஷ்யரைத் தபிக்க வைக்கின்றன. ஆத்யாத்மிகம் என்பது தன் ஆத்மாவாலேயே தன்னை வருத்திக் கொள்வது. அதாவது நம்முடைய மனஸின் பலவிதமான சஞ்சலிப்பு, கொந்தளிப்பினாலேயே நம்மை வறுத்தெடுத்துக் கொள்வது. ஆதிபௌதிகம் என்பது பூதர்களால் அதாவது உயிர்களால், நம்மைத் தவிர பிற மநுஷ்யர்களாலும் மற்ற ஜீவராசிகளாலும் உண்டாகிறது. ஆதிதைவிகம் என்ற இடத்தில் தைவம் என்றால் விதி. நம்முடைய வினையே விதியாக வந்து வருத்துவது ஒரு தாபம். அல்லது மநுஷ்ய சக்திக்கு அப்பாற்பட்டதாக ‘இயற்கை உற்பாதம்’ என்கின்ற, ஆனால் உண்மையில் தேவ சக்திகளின் கோபத்தைக் காட்டுவதான புயல், பூகம்பம், எரிமலை வெடிப்பது முதலியவற்றால் ஏற்படுவது ஆதிதைவிகமான தாபம். ஆதிபௌதிகத்தாலும், ஆதிதைவிகத்தாலும் விபத்து, வியாதி இத்யாதி ஏற்படலாம். ஆனால் அதை நமக்குத் தாபமாக மாற்றி வருத்தம் தருவது, வறுத்து எடுப்பது மனஸ்தான். மனஸ் என்ற ஒன்று இல்லாவிட்டால் எந்தத் தாபமும் தெரியாதுதானே? ‘மனம் இறக்கக் கற்றுவிட்டால்’ தாபமேயில்லை. ஆத்மாராமர்களாக, ஆனந்தமயமாக ஆகி விடலாம். அப்படி ஆகக் கற்றுக் கொடுப்பதுதான் தத்வோபதேசம். தாபத்ரயங்களைப் போக்குவதில் மிகவும் வல்லமை வாய்ந்த தத்வ உபதேசத்தைச் செய்பவர் ஸுப்ரஹ்மண்யர்: “தாபத்ரய ஹரண நிபுண தத்வோபதேச கர்த்தா.”
ஸ்கந்த மூர்த்தியாகி அவர் பிதாவான ஈச்வரனுக்கு ப்ரணவ உபதேசம் பண்ணினது மட்டுமில்லை. ஸநத்குமாரர் என்று ஒரு ப்ரஹ்மநிஷ்டர். ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் ப்ரம்மாவிடமிருந்து முதலில் தோன்றிய நாலு பேர் யாரென்றால், தாங்களும் புனர் ஜன்ம ஸ்ருஷ்டியிலிருந்து தப்பிய ஞானிகளாக இருந்தவர்கள்; தங்களாலும் ப்ரஜா ஸ்ருஷ்டி ஏற்படாமல் ப்ரம்மச்சாரி, ஸந்நியாஸி இரண்டுமாக, எல்லா ஆச்ரமங்களுக்கும் மேலே போன அதிவர்ணாச்ரமிகளாக இருந்தவர்கள். ஸநகர், ஸநந்தனர், ஸநாதனர், ஸநத்குமாரர் என்று அவர்களுக்குப் பேர். அவர்களில் ஸநத்குமாரரைக் ‘குமாரர்’ என்றே சொல்வது. ஸநத் என்பது ப்ரம்மாவின் பேர். அவருடைய புத்ரர் ஸநத்குமாரர். அவர் நாரதருக்கே தத்வோபதேசம் செய்திருக்கிறார். அந்த உபதேசமும் அதைப் பற்றிய கதையும் சாந்தோக்யோபநிஷத்தில் வருகிறது. ஸநத்குமாரர் நாரதருக்கு இருட்டைத் தாண்டிய நிலையைக் காட்டினார் என்று உபநிஷத்து முடிக்கிற இடத்தில், அந்தக் குமாரரே தான் குமார சப்தத்தை ப்ரஸித்த நாமாவாகக் கொண்ட ஸ்கந்தமூர்த்தி என்று இரண்டு தரம் சொல்லியிருக்கிறது.
அஞ்ஞான இருட்டுக்கு அப்பால் இருக்கிற ஞான ஜ்யோதிஸ்தான் ஸுப்ரஹ்மண்யர். அக்னி ஸ்வரூபமென்றால் அது ஞானாக்னிதான். அவர் கையிலே தகதகவென்று இருக்கிற சக்த்யாயுதமும் ஞானவேல்தான். பாஹுபல பராக்ரமத்தைக் காட்டும் சக்தி; கோடி கோடி மன்மத லாவண்யம்; தீன ரக்ஷணத்தில் முதல்வராக இருக்கும் காருண்யம் எல்லாமும் கடைசியில் அந்த ஞானத்தில் பிறந்தவையே; அந்த ஞானத்தோடு பிரிக்க முடியாமல் ஸம்பந்தப்பட்டவையே. ஞானத்தை மற்றவருக்கும் வழங்கும் குருநாதனாக இருப்பதே ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் உயிரான லக்ஷணம் – ‘தத்வோபதேச கர்த்ரே; வீரநுத குருகுஹாயாஜ்ஞான-த்வாந்த-ஸவித்ரே.
 
வீரர்கள் தொழும் ஞானி!
வீரநுத”:
ஞானி வேறே, வீரன் வேறே என்பது விஷயம் தெரியாத நிலையில்! நிஜமான ஞானி எதுவாகவும் இருப்பான் – அவன் எல்லாமாக இருப்பதால்! உள்ளுக்குள்ளே ஆத்மா ஒன்றைத் தவிர எதுவாகவுமில்லாமல், வெளிக் கார்யத்தில் அந்த ஆத்மாதான் ஸகலமும் ஆனதால் எதுவாக வேண்டுமானாலும் – கத்தியை எடுத்துச் சுற்றுகிற மஹா வீரனாகக்கூட – இருப்பான். கீதை என்று ஞானோபதேசம் செய்யும் போது, “காண்டீவத்தை எடுடா! அம்பைத் தொடுடா!” என்று பகவான் சொல்லியிருக்கிறாரில்லையா? ஸுப்ரஹ்மண்யர் ஞான வீரர். தேவ ஸேனைக்கெல்லாம் கமாண்டர்-இன் – சீஃப். அதனால் வீரர்களால் தொழப்படுபவர். அதுதான் ‘வீர நுத’. ‘நுத’ – தொழப்படுகிற. அவருடைய முக்யமான பரிவாரம் நவ வீரர்கள் என்ற ஒன்பது பேரைக் கொண்டது. வீரபாஹூ, வீரகேஸரி, வீர மஹேந்திரர் என்று ‘வீர’ என்றே பேர் ஆரம்பிக்கிற ஒன்பது மஹாவீரர்கள் அவருடைய அஸிஸ்டெண்டுகள். அதனாலும் ‘வீரநுத’.
இதய குகையில் இலகும் குரு, அஞ்ஞான இருள் நீக்கும் ஸுரியன்
குருகுஹாய; அஜ்ஞான த்வாந்த ஸவித்ரே”:
வீரத்தைச் சொன்னவுடனே ஞானம்! குருகுஹனாக ஸ்வாமி இருப்பது! மலைகள் அவருக்கு முக்யவாஸம். குறிஞ்சிக் கடவுள் என்றே போற்றுகிறோம். மலைக் குஹைகளில் வஸிப்பதால் குஹன். தத்வார்த்தமாகச் சொன்னால் ஹ்ருதய குஹையிலிருக்கும் ஆத்ம ஸ்வரூபம். அதுவே குருவாக வந்து உபதேசிக்கிறபோது குருகுஹன். ஸ்வாநுபவத்தினால் தீக்ஷிதருடைய ஹ்ருதயத்திலிருந்து பீறிக் கொண்டு வந்து அவருடைய முத்ரையாவே ஆகி விட்ட நாமா, குருகுஹன் என்பது.
“குருகுஹாய; அஜ்ஞான – த்வாந்த – ஸவித்ரே.”
‘த்வாந்தம்’ இருட்டு. ஸவித்ரு, ஸவிதா என்றால் ஸுர்யன். இருட்டை இருந்த இடம் தெரியாமல் ஸுர்யன் விரட்டி அழித்து விடுகிற மாதிரி அஜ்ஞான இருட்டை த்வம்ஸம் பண்ணும் ஞான ஸுர்யன். ஸநத்குமாரர் இருட்டுக்கு அந்தண்டைக்கு வழிகாட்டினார் என்கிற ஸமாசாரம்.

காயத்ரி உருவில் முருகனைக் காட்டும் பாடல்
’ஸவித்ரு, ஸவிதா’ என்ற பேரைப் போட்டிருப்பதில் ரொம்பவும் வைதிக விசேஷம் இருக்கிறது. ஸுர்யனுக்கு எத்தனையோ பேர் இருக்கிறது. ‘ஆதித்ய(ன்)-ஸவிதா-ஸுர்ய(ன்)-கக(ன்)-பூஷா’ இப்படியெல்லாம் பல பேர்கள் (’ஆதித்ய ஹ்ருதய’த்தில்) சொல்லியிருக்கிறது. பாஸ்கரன், பானு, மார்த்தாண்டன், திவாகரன், தினகரன், தினமணி, ரவி என்றெல்லாமும் பல பேர் இருக்கிறது. அவற்றில் ஸவிதா என்பதுதான் காயத்ரீ மந்த்ரத்திலேயே வருகிற பேர். அந்த மந்திரத்தில் பரமாத்மாவின் ஞான ஜ்யோதிஸ்ஸை ஸுர்ய மண்டலத்திற்குள் இருக்கும் தேஜஸ்ஸாக பாவித்து, ப்ரார்த்தித்து, அது நம் அறிவுச் சுடரையும் கொழுந்து விட்டெரியும்படி தூண்டிவிட வேண்டும் என்று சொல்லும்போது ஸவிதாவாகவே பேர் கொடுத்துச் சொல்லியிருக்கிறது. அந்தப் பேரின் விசேஷம் அது அழிவைச் சொல்லாமல் படைப்பைச் சொல்வது. ஸவிதா என்றால் உற்பத்தி செய்கிறவன், உண்டாக்குகிறவன். ‘ப்ரஸவம்’ என்ற வார்த்தையில் வரும் ‘ஸவ’த்தின் அடியாகப் பிறந்த வார்த்தை ஸவிதா. ஸுர்யன் இருட்டையும், சேற்றையும் சகதியையும், பூச்சிகளையும் அழிப்பது மட்டுமில்லை. அவனாலேயே மழை, தாவர வளர்ச்சி, நம் ஆரோக்ய வளர்ச்சி, ஆத்யாத்மிகமாக நம்முடைய புத்தி வளர்ச்சி எல்லாம் உண்டாகின்றன. அப்படியே ஸுப்ரஹ்மண்யரான ஞான ஸுர்யன் அஞ்ஞான இருட்டை அழிப்பது மட்டுமில்லை; அஞ்ஞானம் போனபின் எல்லாம் சூன்யமாகி விடுவதில்லை; அஞ்ஞானம் அழிந்த இடத்தில் பூர்ணாநுபவமான ஞான ப்ரகாசத்தை அவர் உண்டாக்குகிறார். ஸவிதா பத ப்ரயோகம் ரொம்பப் பொருத்தமாக விழுந்திருக்கிறது. திருமுருகாற்றுப்படையும் ஸுர்யோதயத்தை உவமை சொல்லித்தான் ஆரம்பிக்கிறது.
இந்த க்ருதியின் ஸாரமே வேத ஸாரமான காயத்ரி ஸ்வரூபமாக ஸ்வாமியைக் காட்டுவதுதான் என்று தோன்றுகிறது. ப்ரஹ்மண்யப் பேரோடுதான் பாட்டு ஆரம்பிக்கிறது? அப்புறம், அநுபல்லவியில் உச்சமான இடத்தில் (காயத்ரி மந்திரத்தில் வருகிற) ‘வரேண்ய’ சப்தம் வந்தது. அதே மாதிரி சரணத்தில் உச்சமான இடத்தில் ‘ஸவித்ரு’ சப்தத்தை வைத்திருக்கிறார். ஸாஹித்யத்திலே அந்த இடத்தில் ராக ஸஞ்சாரம் ஜிவ்வென்று மேலே போய் ‘ஸவித்ரே’ என்று பளிச்சென்று வருவது, அஞ்ஞான இருட்டு கும்மென்று பரவி நெரிக்கிற போது ஞான ஸுர்யோதயமாக, ஸ்வாமி பளிச்சென்று வந்து ரக்ஷிக்கிறது போன்ற அபிப்ராயத்தைக் கொடுக்கிறது. அப்புறம்,
 







 

ॐ ईशा वास्यमिदँ सर्वं यत्किञ्च जगत्यां जगत्
"All this- whatever exists in this changing universe, is pervaded by God" 
                                                    -Isa Upanishad




Reply all
Reply to author
Forward
0 new messages