771 views
Skip to first unread message

sivan jaykay

unread,
Jul 12, 2020, 8:02:11 PM7/12/20
to amrith...@googlegroups.com

                                                                                     
                 குருபக்தியும்  தக்ஷிணையும்  J K  SIVAN 


துரோணருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  

''ஆஹா எவ்வளவு கெட்டிக்காரச்  சிறுவன் இந்த  அர்ஜுனன். நான் கற்றுக்கொடுக்கும்  தனுர் வித்தைகளை எவ்வளவு சிரத்தையாக கற்றுக்கொள்கிறான். எவ்வளவு விசுவாசமாக மரியாதையோடு என்னை தெய்வமாக மதிக்கிறான். இப்படி ஒரு சிறந்த  மாணவனை  உலகில்  எங்கும் காணமுடியாது. நான் தன்யன் .  இவனை மாணவனாகப் பெற அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன் ''  என்று மனம் திறந்து சொன்னார்  துரோணர். 

''த்ரோணா,  நீ சொல்வது சரி. நானும் கவனித்தேன். அவன் குருவை மிஞ்சும் சிஷ்யனாக வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. ''  என்கிறார்  கிருபாச்சாரியார்.

அர்ஜுனன் ஓடிவந்தான். தான்  புதிதாக  கற்றுக்கொண்ட  சில வித்தைகளை குருமார்கள் எதிரே செய்து  காட்டினான்.

''அடே அர்ஜுனா, அதற்குள் நான் கற்றுக்கொடுத்த வித்தையை  பழகிக்கொண்டாயா. பலே பலே.  இதோ பார் அர்ஜுனா, இன்னும் சில வித்தைகள் தான் பாக்கி இருக்கிறது. அப்புறம் நீயாக புதிதாக கண்டுபிடித்துக் கொள்ளவேண்டியது தான். என்னுடைய சகல தனுர் வித்தைகளையும் உனக்கு கற்பித்து விட்டேன்.  என் மாணவர்களில்  உன்னை மிஞ்சுபவன்  வெல்பவன்  இந்த உலகில் இல்லை. ''

 அர்ஜுனன் வணங்கிச்  சென்றான். 

ஒருநாள் துரோணர் ஹஸ்தினாபுரம் அருகே உள்ள ஒரு ஊருக்கு சென்றார். அங்கே  ஒரு சிறுவன் அவரைப் பார்த்து விட்டு ஓடி வந்தான்.    மான் தோலை இடையில் அணிந்து, தலையில்  பட்சிகளின் சிறகுகளை  அணிகலனாக  தலைப்பாகையில் செருகி,  காணப்பட்ட அவன் ஒரு   காட்டு வாசி,  வேடுவ சிறுவன் என்று புரிந்தது.   துரோணரை  கீழே விழுந்து வணங்கினான்.

''யாரப்பா நீ  எதற்கு என்னைக்  காண வந்தாய்?''

''குருவே,  நீங்கள் பாண்டவர்கள் கௌரவர்களுக்கு  தனுர் வித்தை கற்பிக்கும் ஆசான் என்று எனக்கு தெரியும். 
தனுர் சாஸ்திரத்தில்  தீராத தாகம் கொண்ட நான்  அதில்  மிகச்சிறந்த உங்களை  ஆர்வமிகுதியால் காண வெகுநாள் காத்திருந்தேன். இந்த ஊருக்கு  நீங்கள் வந்திருப்பதை கேள்விப்பட்டு ஓடோடி வந்தேன். 

''நீ யார்  ?''

''குருநாதா, என்று  நா தழுதழுக்க கைகளை கட்டிக்கொண்டு அந்த சிறுவன்  ''நான் ஏகலைவன்,  இந்த காட்டின் தலைவன்  நிஷாதன் ஹிரண தனு வின் மகன். என் தந்தை மகத மன்னன் ஜராசந்தனின்  படை தளபதி.  என்னை உங்கள்  மாணவனாக  ஏற்றுக்கொண்டு  எனக்கும்  தனுர் வித்தைகள் கற்றுத்தர வேண்டுகிறேன்''.

''மிக்க மகிழ்ச்சி  ஏகலைவா.   என்னால்  பாண்டவர்கள் கௌரவர்களைத் தவிர வேறு யாருக்கும்  கற்றுத்தர முடியாத  நிலையில் உள்ளேன்.  உன்னை சிஷ்யனாக  மாணவனாக   அடைய வாய்ப்பில்லை அப்பா. நீ சென்று வா''

உடைந்த மனதோடு ஏகலைவன் திரும்பினான்.   துரோணர் மீது அளவுகடந்த மதிப்பு, மரியாதை, பக்தி கொண்ட ஏகலைவன்  துரோணாச்சார்யார் மாதிரி ஒரு  களிமண் பொம்மை செய்தான். அதை  தனது தெய்வமாக,  குருவாக ஏற்று தொழுது இரவு பகலாக அர்ச்சித்து  வணங்கினான்.   நீங்கள் எனக்கு சொல்லிக்கொடுங்கள் என்று அவர் எதிரில் தானே  அவர் கற்றுக்கொடுப்பது போல  பாவித்து வில்வித்தை பழகினான்.  இப்படியே சில வருஷங்கள் ஓடியது.  வில்வித்தையில் தலைசிறந்தவனாகி விட்டான். துரோணரின் தனுர் சாஸ்த்ர ஞானம் பூரா கற்றுக்கொண்டான். 

ஓர்நாள் பாண்டவர்களும் கௌரவர்களும்  வேட்டையாட அந்த காட்டுக்கு வந்தார்கள்.  பாண்டவர்கள் உற்சாகமாக  வேட்டையாடினார்கள் . அவர்களது வேட்டை நாய்  அவர்களோடு  வேட்டையில் பங்கேற்றது.   காட்டில் சுற்றி ஓடிய  நாய்  நடுக்காட்டில் ஏகலைவன் துரோணர்  பொம்மை முன்  அஸ்திர வித்தை பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது  யாரிவன் புதிதாக இந்த காட்டில் என்று உரக்க  குலைத்தது.   குருவை  வணங்கிக்  கொண்டிருந்த ஏகலைவன்  ஒரு அம்பை விட்டு அது ஏழு அம்புகளாக  அந்த நாய் வாயில் நுழைந்து அதன் வாயை தைத்தால் போல  இறுக்கமாக  மூடிவிட்டது.  நாயால் குலைக்க முடியவில்லை.   வாயை திறக்க வழியில்லை.  பயந்து போய்  அதிர்ச்சி அடைந்த  நாய்  பாண்டவர்களிடம் ஓடிவந்தது.  ஒரு அஸ்திரத்தால்  நாய் வாயின் அம்புகளை விடுவிக்கிறான்  அ ர்ஜுனன் 

''யார்  இவ்வளவு  சிறப்பாக  ஊசிகளால்  தைத்த மாதிரி நமது நாயின் வாயை   மூடிய  அஸ்திரவித்தை கற்ற  நிபுணன்  யார்?    எனக்கு மட்டும் தானே  இந்த வித்தையை கற்பித்தார்  துரோணர்?  என்று அதிசயிக்கிறான்  அர்ஜுனன்.   பாண்டவர்கள்  காட்டினுள்  சென்று தேடி ஏகலைவனை சந்திக்கிறார்கள். 

''நீ யாரப்பா?

''நான்  ஏகலைவன்,   நிஷாத  ராஜா ஹிரணதனு வின் மகன்.       

'' உன்னை பாராட்டுகிறோம்..  இவ்வளவு அற்புதமாக  வில் வித்தை உனக்கு யார் கற்றுக்கொடுத்தது? மிகச்சிறந்த ஆசான்  துரோணரிடம்   கற்றால் மட்டுமே  இவ்வளவு துல்லியமாக அம்புகளை விடமுடியும்'' யார் உனது குரு ?''

''ஆஹா  என் குரு  தனக்கு நிகரில்லாத  தனுர் வித்தை ஆசார்யன்  துரோணர். ஆம்   மிகப்பெருமை அடைகிறேன், அவரிடமிருந்து எல்லா வித்தைகளையும் கற்றுக்கொண்டுவிட்டேன்'' வாருங்கள் என் குருவை காட்டுகிறேன் என்று  பாண்டவர்களை அழைத்து சென்று தான் வழிபடும் துரோணரின் களிமண் பொம்மையை காட்டுகிறான்''

அதிர்ச்சியும் ,ஆச்சர்யமும் பொங்க  பாண்டவர்கள்  துரோணரிடம் சென்று      நடந்த விவரங்களைக்
 கூறுகிறார்கள்.  

தயங்கி தயங்கி  அர்ஜுனன்,  ''குருநாதா  எனக்கு மட்டும்  தானே  சில  விசேஷ வித்தைகளை கற்பித்திருக்கிறேன். வேறு யாருக்கும் கற்றுக் கொடுக்க வில்லை என்றீர்கள். எப்படி    ஏகலைவனுக்கு இதெல்லாம்   சொல்லிக் கொடுத்தீர்கள்.  என்னுடைய  மாணவர்களில்  உன்னை மிஞ்சுபவன், உன்னை வேலவன் எவனுமில்லை என்பீர்களே.  என்னை விட சிறந்தவனாக அவன்  வில்வித்தையில் அவன் இருப்பது எப்படி? 

 துரோணர் திடுக்கிடுகிறார்.  ஏகலைவன் என்று ஒருவனை சந்தித்த நினைவே  அவருக்கு இல்லையே . எப்படி அவன் இந்த வித்தையெல்லாம்   நான்  கற்றுக்கொடுக்காமலேயே  தெரிந்துகொண்டான்? 

''வா உடனே போகலாம். அவனைக் காண்பி எனக்கு ''  என்று அர்ஜுனனோடு அந்த காட்டுக்கு சென்ற  துரோணர்   ஏகலைவன் தன்னைப்போலவே   ஒரு களிமண்  பிரதிமையை வைத்து பிரதிஷ்டை செயது உபாசிப்பதையும், அதன் எதிரே  வில்வித்தை தானாகவே  பயில்வதையும் காண்கிறார். அவன் நிச்சயம்  அர்ஜுனனை விட சிறந்தவனாக தன்னிடமிருந்து தனுர் சாஸ்திரம் அனைத்தும்  தெரிந்துகொண்டிருப்பது புரிகிறது.   அவருக்கு  அதிர்ச்சியும்  ஆச்சர்யமும் பெருகி  அடுத்து என்ன செய்யவேண்டும் என்று மனதில் பட்டு விட்டது. உலகில் அர்ஜுனனைத்   தவிர வேறு எந்த வில்லாளியும் இருக்க கூடாது. தனது வாக்கு பொய்க்கக்கூடாது. 

''ஏகலைவா,   உன்  வில்வித்தை எனக்கு  மகிழ்ச்சி  அளிக்கிறது.  உன் திறமையை மெச்சுகிறேன்.   எவ்வளவு காலமாக நீ இப்படி என்னிடமிருந்து  இதெல்லாம்  கற்றுக்கொள்கிறாய்?'' 

கையைக்கட்டிக்கொண்டு  குருபக்தியோடு  துரோணர் காலில் விழுந்து எழுந்த ஏகலைவன் ''குருநாதா  உங்களை சந்தித்த நாள் முதல் நான் உங்கள் மாணவன்'' என்று பழைய சம்பவத்தை நினைவூட்டுகிறான்.

ஏகலைவனைப் போல் ஒரு மாணவன் கிடைத்ததற்கு  ரொம்ப சந்தோஷம் அடைந்த  துரோணருக்கு  அதே சமயம் தான் நேரடியாக  கற்றுக்கொடுத்து  ''அர்ஜுனா  உன்னைப்போல் வேறு எவரும் சிறந்த வில்லாளி இனி உலகில்  கிடையாது'' என்று சொன்ன வார்த்தை  பொய்யாக விருப்ப மில்லை . 

''ஏகலைவா,   உன் குருபக்தியை, ஞானத்தை உண்மையாக மெச்சுகிறேன்.  நீ  என்  மாணவன் என்று நினைத்தால், நம்பினால், என்னிடமிருந்து எல்லா வித்தைகளையும் பூரணமாக கற்றவன் என்பது உண்மையானால்  எனக்கு நீ  ஆச்சார்ய  சம்பாவனை, குரு தக்ஷிணை கொடுக்கவேண்டாமா?   குரு தக்ஷிணை கொடுக்காமல் கற்ற கல்வி  பாபத்தை தருமல்லவா. உனக்கு தெரியாதா?''

''குருநாதா, நான் உங்களையே  நேரில் கண்டு உங்கள் ஆசிர்வாதம் பெற்றதில் தன்யனானேன்.  குருதக்ஷிணையாக என்ன வேண்டுமோ கேளுங்கள் உடனே தருகிறேன் '' என்றான் ஏகலைவன்.  

அர்ஜுனன் இதெல்லாம் சிலையாக பார்த்துக்கொண்டு நிற்கிறான். அவன் முகத்தில்  ஏக்கம், ஏமாற்றம் தெரிகிறது. 

அதைக்    கவனித்த  துரோணர் ஒரு க்ஷணத்தில் முடிவெடுத்தார்.  வில்வித்தைக்கு முக்கியம்  கட்டை  விரல் . நாண்   ஏற்றி   இழுத்து அம்பு பொருத்தி,   குறி தவறாமல் அஸ்திரம் தொடுக்க  அது அத்தியாவசியம்.  

''ஏகலைவா,   எனக்கு நீ அளிக்கும் குரு தக்ஷிணை  உனது வலது கட்டைவிரல்''

மறுகணமே  ஏகலைவன் தனது இடுப்பில் செருகி இருந்த வாளை  எடுத்து இடது கரத்தால் வலது கட்டை விரலை துண்டித்து ரத்தம் சொட்ட சொட்ட  குருவின் காலடியில் வைத்து நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்து வணங்குகிறான். அவன் கண்களில் ஆனந்தக்கண்ணீர்.  

மிகவும் மனம் உடைந்தவராக துரோணர் அவனை உள்ளூர பாராட்டினாலும்  அவருக்கு   தான் அர்ஜுனனுக்கு துரோகம் செய்யவில்லை, அவனுக்கு தான் கொடுத்த வாக்கு  பொய்க்காது இனிமேல் என்ற திருப்தியும் ஏற்பட்டது.  கண்களில் நீரோடு ஏகலைவனை அணைக்கிறார்.  இனி ஏகலைவன்  கற்ற வில்வித்தை அவனுக்கு  பயன்படாது  என்றாலும் அவன் குருவின் அணைப்பில் பெருமிதம் அடைந்தான். மஹாபாரதத்தில் அப்புறம் ஏகலைவன்பற்றிய செய்தி எதுவுமில்லை. 

sivan jaykay

unread,
Jul 12, 2020, 8:02:11 PM7/12/20
to amrith...@googlegroups.com

                                                      விஸ்வரூப  சிவன்      J K  SIVAN 


சிவனை நினைந்தவர்  எவர்  தாழ்ந்தார்?  சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார்?   இது ஒரு பாடலில்  அருமையான  சிவன் பற்றிய வாக்கியம்.  வாக்கியம் எனும்போது  சிவ வாக்கியர் நினைவுக்கு வருகிறார். அவரது அற்புதமான பாடல் ஒன்று  சொல்கிறேன்: 

ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னைநீ மதிமயக்க லாகுமோ
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.

ஹே  பரமசிவா,   வேங்கை வரிப்புலியை பிடிக்க என்ன உபாயம் செய்கிறார்கள்?   கண்ணுக்கு தெரியாத வலையை விரித்து,  அதன் மேல் ஒரு ஆட்டை கட்டி வைக்கிறார்கள்  புலி நடமாடும் இடத்தில் இந்த ஆடு கத்துவதை கேட்டு புலி வரும்.  அட  நமது உணவு தயாராக நிற்கிறதே என்று பாய்ந்து ஆட்டை கவ்வும். கால் வலையில் மாட்டிக்கொண்டு  புலி வலையில் சிக்கும். பிடித்து கொண்டு போவார்கள்.  என்னை அப்படித்தானே  உன் மாட்டை , நந்தி வாகனத்தை, ரிஷபத்தை அழகாக கம்பீரமாக காட்டி  என் மனதை மயக்கி விட்டாய்.   மாடு  என்றால் செல்வம்  என்றும் பொருள்.   உலக செல்வங்களை காட்டி  மாயையில் சிக்கி  மூழ்க  வைத்து விட்டாய்.  அப்பனே,  நீ   பெரிய  பலமிக்க  தந்தத்தை நீட்டிக்கொண்டு  உன்னை தாக்க வந்த  கஜமுகாசுரனை கொன்று  அவன் தோலை உறித்து   ஆடையாக  அணிந்தவன். எனக்கு  வீட்டை   (மோக்ஷ த்தை வீடு பேறு  என்று சொல்வோம்)  .  முக்தி பெற , மோக்ஷம் அடைய செய்யமாட்டாயா? என்கிறார்  சிவவாக்கியர்.  

இந்த சிவன்  மிகப்பெரிய  உருவமாக நம் முன்  இப்போது நிற்கிறான். 

அவனை  விஸ்வநாதா  என்று  அழைக்கிறோம். விஸ்வம் என்றால் அகிலம். எங்கும் நிறைந்தவன். அதே சம்யஹம் அணுவுக்குள் அணுவாகவும் இருப்பவன்.  சிறியதைக் காட்டிலும் பெரிது தான்  எப்போதுமே  கண் முன் தோன்றி வியக்க வைக்கிறது.  அதனால் தானோ என்னவோ  உலகிலேயே மிகப்பெரிய  சிவன் உருவம் எடுக்கிறான்.  ராஜஸ்தானில்  சிவ மூர்த்தி  351 அடி  உயரம்.  அந்த இடத்தின் பெயர்  நாத்  துவாரா. கட்டி முடிக்கவில்லை இன்னும்.  திறப்பு விழா நடந்தால் நமக்கு தெரியாமல் போகாதே.   சிலை  முடியும்   தருவாயில் இருக்கிறது.

திரிசூலத்தை ஊன்றிக்கொண்டு  கம்பீரமாக அமர்ந்திருக்கும்  சிவன்.   ஹிந்து சமய மூர்த்திகளில்  இந்த சிவன் முதலாம் இடத்தில் மிகப்பெரிய  சிலையாக  காட்சி தருவார்.  மிராஜ் குரூப்  என்பவர்கள்   750-800  தொழிலாளர்கள் உதவியோடு கட்டுகிறார்களாம். சிமெண்ட், கான்க்ரீட் சிலை.

இதற்கு அடுத்ததாக உள்ளது   நேபாளத்தில் உள்ள  கைலாசநாத மஹாதேவர்.  சங்கா எனும் ஊரில்  பக்தபூர்  ஜில்லா எல்லையில் உள்ளது.  தலைநகர் காட்மாண்டு விலிருந்து 20 கி.மீ.   இந்த சிலை  143 அடி  உயர  நிற்கும் சிவன். இது  தாமிரம், ஈயம், சிமெண்ட் கான்க்ரீட்  இரும்பு  கலவையில் உருவான சிவன் சிலை.

வெளிநாட்டில் உள்ள சிவன் சிலைகளில் முக்கியமானவர்  மாரிஷியஸ் தீவில் உள்ள சிவன்.  108 அடி  உயர நிற்கும் சிவன். 2007ல் கட்டி முடிக்கப்பட்டது.   அழகான பெயர் கொண்டவர்.  மங்கள மஹாதேவர்.  நமது குஜராத் மாநில  வதோதரா ஊரில் சூர்சாகர்  ஏரி யில் காணும்  சிவனின் உருவம் அப்படியே  பெரிய அளவில் மாரிஷியஸில் என்று சொல்லலாம்.

sivan jaykay

unread,
Jul 12, 2020, 8:02:11 PM7/12/20
to amrith...@googlegroups.com

கீதாஞ்சலி 12       J   K    SIVAN   
தாகூர்   
                    
                                                 12    ''இதோ  இருக்கிறேனே''

12. The time that my journey takes is long and the way of it long.
I came out on the chariot of the first gleam of light, and pursued my voyage
through the wildernesses of worlds leaving my track on many a star and planet.
It is the most distant course that comes nearest to thyself,
and that training is the most intricate which leads to the utter simplicity of a tune.
The traveller has to knock at every alien door to come to his own,
and one has to wander through all the outer worlds to reach the innermost shrine at the end.
My eyes strayed far and wide before I shut them and said `Here art thou!'
The question and the cry `Oh, where?' melt into tears of a thousand streams and deluge the world
with the flood of the assurance `I am!'

ரவீந்திரநாத் தாகூரின் அற்புதமான கீதாஞ்சலி பாடல்களில் இது ஒன்று. அடிக்கடி படித்து ரசிப்பேன்.

''நான்  ஒரு  வழிப்போக்கன்.     பயணித்துக் கொண்டிருக்கிறேன். என் எதிரே வெகு நீண்ட பாதை, வளைந்து வளைந்து  முடிவில்லாமல்  எங்கோ செல்கிறது. அதை அடையும் நேரமோ கணக்கில் வராத அளவு நீண்டது.  கடிகார முள்  பன்னிரெண்டை பல முறை சுற்றவேண்டி இருக்கும்.  நான்  போய்  சேரும்  இடமும்  வெகு வெகு  வெகு தூரம்.  நான் விண்வெளியில் என் தேரில் ஜம்மென்று உட்கார்ந்துகொண்டு செல்கிறேன். 

பொழுது விடிந்து  சூரியனின்  பொன் கிரணங்கள்  இருளை நீக்கி,  என்னை வழி செலுத்துகிறது. நான் சந்தித்த முதல் சூரிய கிரணமே நான் பயணிக்க துவங்கிய தேர். என்னை நீண்ட பயணத்தில் செலுத்தும் தேர்.என் பாதையில்  என்னை சுற்றிலும் என்னென்னவோ உலகங்கள்,   விண்வெளி  மண்டலங்கள், நக்ஷத்திரங்கள்,  கிரஹங்கள்,  எங்கும்  நிசப்தம். குளிர்காற்று, இதமாக இளம் சூரியன் உதயமாவதை   அறிவிக்கும் சிவந்த கீழ்வானம். உலகமெனும் காடும் மேடும் என் வழியில் இருந்தால் தான் என்ன? நக்ஷத்திரங்கள் சந்திரன் காட்டும் ஒளியில் நிழல் ஏது? பயணம் தொடர்கிறேன். 

கிருஷ்ணா,  இந்த   நீண்ட   பாதையில்   என் தொலை தூர பயணம்  வெகு தூரம் என்னை  இட்டு சென்றாலும்   உன்னருகே தான்  கடைசியில்  கொண்டு சேர்க்கும்.    இந்த என் பிரயாண பயிற்சி கடினமானது, உன்னை நெருங்க நெருங்க உன் குழலோசை கொஞ்சம் கொஞ்சமாக என் செவியில் இன்பமாக பெருகுகிறதே. கடைசியில் உன்  எளிய இனிய புல்லாங்குழல் ஒலி உன்னை அடையாளம் காட்டுமே..மனதில் நம்பிக்கை ஊட்டும் . 

இது உன்னை நோக்கி செல்லும் பாதை. உன்னருகில் கொண்டு செல்லும் முன்பு எத்தனையோ இடையூறுகள் இருக்கத்தானே செய்யும்.  அவற்றை கடந்து தான்  செல்லவேண்டும்.  பணிவும், பொறுமையும், விடா முயற்சியும் தேவைதான்.

உன்னைத் தேடிவர நான் பல பேரிடம் யோசனை அறிவுரை, உபதேசம் கேட்டவன்.  வழி கேட்டவன்.
எங்கெங்கோ சுற்றி அலைந்து எத்தனையோ கதவுகளை தட்டி வழி கேட்ட பின்னால்  தானே   நான்  செல்லவேண்டிய   இடம்  தெரியவரும். என் கண்கள் உன்னை எங்கெங்கோ தேடின. காணவில்லை.    தேடிக்கொண்டே தான் இருந்தேன். கடைசியில் கண்மூடி இங்கு தான் இருப்பாய் என்று அறிந்தேன், ஆமாம் கண்ணா என்னுள் நீ என்றும் இருக்கிறாய் என மெதுவாக உணர்ந்தேன்.    வெளி உலகெங்கும் எதையெல்லாமோ  தேடி அலைந்து தான்  உள்  உலகில் நீ இருப்பது புரிகிறது. அது தெரியும் வரை ''கிருஷ்ணா, நீ எங்கே எங்கே'' என்றுஉரக்க கத்தினேன் அழுதேன்.  என் கண்ணீர்  பல நதிகளாகி ப்ரவாஹமாக பெருகி  ஒரு  பிரளயமாக  மாறி     ''இதோ இங்கேயே இருக்கிறேனே. பார்க்க மாட்டேன் என்கிறாயே ...'' என்ற உன் நம்பிக்கை தரும் குரல் எல்லோரும் கேட்க காற்றாக, புயலாக, கடலலையாக, விண்ணின் மின்னலாக, இடியாக, ப்ரளயமாக, சுனாமியாக, எண்ணற்ற தாரகைகளாக, தேவதைகளாக, கிருஷ்ணா, நீ எனக்கு உறுதியளித்ததில் என்னை மறந்தேன். என்னுள் நீ நிறைந்திருப்பதை உணர்ந்தேன். இனி வார்த்தைகள் தேவை இல்லை.    எங்கும் நிறைந்த நீ என்னுள்ளும் இருப்பதை  உணர்ந்துவிட்டேன். .



 

sivan jaykay

unread,
Jul 12, 2020, 8:02:11 PM7/12/20
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி  11
தாகூர் 

                                                                         11.    அவன்  இங்கே  இருக்கிறானே 

பள்ளிக்கூடத்தில் இதை பாடமாக வைத்து எத்தனையோ  பேர்  மனப்பாடம் பண்ணி ஒப்பித்து இருக்கிறோம். அப்போது தாகூரைப் புரிந்து கொள்ள முடியாத வயது.  உபாத்யாயர்களும் மனதில் உறையும்படியாக சொல்லித் தரவில்லை என்பது வருத்தம்.  ஒருவேளை அந்த வயதுக்கு  இது அவசியமில்லை என்று விட்டுவிட்டார்களோ?  உலகப் பிரசித்தி வாய்ந்த  கீதாஞ்சலி பாடல் இது: 

11   Leave this chanting  and singing and telling of beads.
Whom dost thou worship in this lonely dark corner of a temple with doors all shut?
Open thine eyes and see thy God is not before thee.
He is there where the tiller is tilling the hard ground
And where  the path maker is breaking the stones
He is with them  In sun and in shower, and his garment is covered with dust
Put off thy holy mantle and  even like him come down on  the dusty soil
Deliverance? Where is this deliverance to be found?
Our Master himself has joyfully taken upon him the bonds of creation;  
he is bound with us all for ever.
Come out of thy meditations and leave aside thy flowers and incense!  
What harm is there if thy clothes become tattered and stained?
Meet him and stand by him  in toil and in sweat of thy brow.


எனக்கு அப்போது  15 வயது.  சென்னை  தியாகராயநகர்  உயர்  நிலைப்பள்ளி மாணவன்.  ஆங்கிலப்பாடம்  நடத்துபவர்  ஸ்ரீ  T .N . சுந்தரம். பள்ளி தலைமை ஆசிரியர்.  LEO''S    என்று ஆங்கிலத்தில் SSLC   பாட த்திற்கு  நோட்ஸ் போடுவார். ரொம்ப பிரபலம்.   தமிழில்  கோனார் நோட்ஸ்  போல.     இந்த  ரெண்டு  நோட்ஸ் இல்லாத SSLC  படிக்கும்  மாணவர்களை அப்போதெல்லாம் பார்க்க முடியாது.  TNS  பஞ்சகச்சம், வெள்ளை முழுக்கை சட்டை. மேலே அங்கவஸ்திரம். வெள்ளையும் கருப்புமாக சிறிது முடி,  இடது பக்க வகிடு , எடுத்து வாரிய தலை. தேன்  கலர்  பிரேம்  போட்ட  கண்ணாடி.  அதிலிருந்து பார்க்கும் கூர்மையான கண்கள், சிவந்த மேனி. நெற்றியில் விபூதி.   வெள்ளி மாதிரி  முன் பற்கள் தெரிய சிரிக்கும் முகம்,  அடிக்கடி   இடதுகை மணிக்கட்டு பக்கம்  சட்டையை விலக்கி வெள்ளை நிற  ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்  ஸ்ட்ராப்  போட  கருப்பு   கைக் கடிகாரத்தில்  மணி பார்க்கும் பழக்கம்.  அவர் சொல்லிக்கொடுத்த  ரெண்டு ஆங்கில  கவிதைகள் இன்றும் நினைவிருக்கிறது.  ஒன்று  ரபீந்திர நாத் தாகூரின்  11 வது கீதாஞ்சலி பாடல். அதை தான்  மேலே   கொடுத்திருக்கிறேன்.  மற்றொன்று  LEAD KINDLY  LIGHT  என்ற ஹென்றி நியூமன் எழுதிய பாடல்.  அதை அப்புறம் எழுதுகிறேன்.இப்போது தாகூர்:  


''எங்கோ ஒரு மூலையில்   சுவரோரம்  கண்ணை மூடிக்கொண்டு  அமர்ந்திருக்கிறாய்.  இருட்டு உனக்கு  சௌகர்யம்.  கோவிலில் நீ  இல்லையென்றால் உன் வீட்டின் பூஜை  அறை   கதவை சார்த்தி க்கொண்டு உள்ளே  கண்ணை மூடிக்கொண்டு இருப்பாய்.    உன்  கையில்  ஒரு ஜெபமாலை. ஸ்படிக மணிகள் உருளும்.   ஒரு நாமத்திற்கு  ஒன்று  என்று ஜபித்து   ஒவ்வொரு மணியையும் உருட்டுகிறாய்.  கைதட்டி  பாடுகிறாய்.   ஆமாம் இதெல்லாம்  யாரை எதிர்பார்த்து, வேண்டி,  நீ தொழுகிறாய்?  கொஞ்சம் கண்ணை திறந்து சுற்றிலும் பார். நீ தேடிய கடவுள் கண்ணுக்கு தெரிகிறாரா? இல்லை அல்லவா?  சரி.    அவரைப் பார்க்கவேண்டுமா. எழுந்திரு . வா என்னோடு  வாசல் பக்கம்.  வந்தாயா?   இதோ  வெளியே  பார் .  தெருவில்  என்ன பார்க்கிறாய்?

 கோடை வெயில் கொளுத்த,  உச்சி வெயிலில் காலில் கோணியை சுற்றிக்கொண்டு தலையை கிழிசல் துணியால் மறைத்துக் கொண்டு,  கொதிக்கும் தார் பக்கெட்   தூக்கிக்கொண்டு ஒருவன்  மற்றவர்கள் சீராக  பாவிய கருங்கல் மேல் ஊற்றுகிறானே. கருப்பு  குழம்பாக  அது பரவுகிறது கொஞ்சம் உன் மேல் பட்டாலே போதும். அடுத்த ஜென்மம் வரை வடு மறையாது உங்கள் மண் தெரு  தார் போட்ட மழமழ  ரோடு  ஆகவேண்டாமா?    அதற்காக கருங்கல்களை ஒரு பக்கம் சிறிதாக உடைத்துக்   கொண்டு இருக்கும்   சிறிதும் பெரிதுமாக  முக்காடிட்ட பெண்கள் தெரிகிறார்களா?  அவர்களோடு  சிறு குழந்தைகளும் கல் உடைப்பதை பார்த்தாயா இல்லையா?  ஊர் ரெண்டு பக்கமும் சத்தம் கேட்கிறதா?  

ஹை ஹை என்று மாட்டை விரட்டிக்கொண்டு கோவணத்தோடு  வயலில் ஏர் உழுபவன், நாற்று நடும்  பெண்கள், வரப்பு ஓரத்தில் அமர்ந்திருக்கும்  எண்ணெய்  காணாத சிக்கு பிடித்த தலை முடியோடு உடையற்ற குழந்தைகள்----- இவர்களும் தெரிகிறார்களா?  

இவர்கள் அத்தனைபேரும்  வெயில் மழை என்று பார்க்காமல்  வெயிலில் வாடியும், மழையில் நனைந்தும் குளிரில் நடுங்கியும்  வேலை செய்பவர்கள். உடலெல்லாம் மண், தூசி, காயம். அங்கே தான் நீ தேடிய கண்ணன் இருக்கிறான். அவர்களில் ஒருவனோ, அத்தனைபேருமோ அவன் தான்.

சரி, ஒரு சின்ன  அறிவுரை.   உன்  தூய வழி பாடு போதும்.  நீ  எவனை நாடி உன் வேண்டுதலை எல்லாம் தனிமையில், சௌகர்யமாக  வீட்டிலோ கோவிலிலோ சொகுசாக தேடினாயோ, அவன் சொகுசு இல்லாமல், வெயில் மழை, குளிர் பாராமல், ஏழைகளோடு ஏழையாக கிழிஸல் கந்தை உடுத்து, மண்ணிலும்  சேற்றிலும்  உழன்று அழுக்காக அல்லவோ காட்சி தருகிறான். நீயும் அவனை அங்கே  தேடிச்சென்று தரிசிக்கலாமே .  

முக்தியாமே?  அதை எங்கே  அடைவது? பிறப்பு இறப்பு இல்லாமல் தானே முக்தி கிடைக்கும். ஆனால் முக்தி கொடுப்பவன் சந்தோஷமாக  அன்பையும் பாசப்பிணைப்பையும்  ஏழ்மையையும் விரும்பித் தேடி  அங்கே இந்த  ஏழைத் தொழிலாளிகளோடு காண்கிறானே. அங்கு மட்டும் இல்லை, எங்குமே, நம்மோடு  இணைந்து எதிலும்  காண்கிறானே .  

 கொஞ்சம் உன் மந்திர தந்திரத்தை நிறுத்தி மூட்டை கட்டி வைத்துவிட்டு வா. நீ அவனுக்காக கொண்டுவந்து  சேர்த்த ஊதுபத்தி, சாம்பிராணி, வாசனை   திரவியங்கள் அங்கேயே   அப்படியே இருக்கட்டுமே.   வெயிலில் காட்டில் மேட்டில், கழனியில்,  சேறாகி , கிழிந்து உன் ஆடை கொஞ்சம் வீணானால் என்னப்பா?  இறைவனை  நாடி,  தேடி செல்லும்போது இது தானா முக்கியம்?  அதோ பார்   அவனை.  எப்படி நெற்றி வியர்க்க, அழுக்காக, வேலை செயகிறான். தனக்காக அல்ல, பிறருக்காக, அவனருகே  செல்,   நில், தோளோடு  தோள் கொடு. அந்த சேவையின் இனிமையில் பங்கு கொள்.   உன்  நெற்றியில்  வியர்வை முத்துக்கள், உன் ஆடைகள் கிழிந்து, மண்ணில் கலந்து, கரை படிந்து..........கவனித்தாயா,  நீ  இப்போது,    பல நாட்களாக  தேடிக்கொண்டிருந்த கண்ணனோடு அல்லவா நிற்கிறாய்!!

sivan jaykay

unread,
Jul 12, 2020, 8:02:28 PM7/12/20
to amrith...@googlegroups.com
 
                                   
                                                        நிமிர்ந்த நன்னடை   J K  SIVAN 


அதுவரை  பெய்து கொண்டிருந்த மழை  கிருஷ்ணன் வருவதை பார்த்து நின்று விட்டது. கூடவே  ராதையுமல்லவா வருகிறாள்.  அன்று பகலில்  காய்ந்த வெயில்  விட்டுப்போயிருந்த  உஷ்ணத்தை  இந்த திடீர் மழை போக்கி விட்டது.  கூடவே  மெல்லிய   இன்பமான  தென்றல் இடைவெளியில்லாமல் வீசியது. 

அஸ்தமனம் ஆகி வெகுநேரம் ஆகவில்லை. பறவைகள்  கூடுகளுக்கு திரும்பும் நேரம். கறவைப் பசு க்கள் பழக்க தோஷத்தால்  தானாகவே  வீடு திரும்ப மெதுவாக நடந்தன. கன்றுக்குட்டிகள் அவற்றை ஒட்டி ஆடிக்கொண்டே  ஓடின.  நேரம் ஓடியது.  எங்கும் இருள் சூழ ஆரம்பித்தது.  

இருளை போக்க  வானில் பூரணச்சந்திரன்  பால் ஒளியை  வாரி வழங்க  அமைதியான  அந்த  வனத்தில்  கிருஷ்ணன்  இடையிலிருந்து  புல்லாங்குழலை  எடுத்தான். எங்கும் நிசப்தமான  சூழ்நிலையில்  அவன் குழல்   தேனிசையை   தென்றலில் கலந்து கொண்டிருக்க   ராதை ரசித்து  தலையசைத்தாள்.  அவள் கால்கள் தாமாகவே  நடனம் ஆடின.   அவர்கள் அருகே  வெள்ளி  நிறமாக  ஓடிக் கொண்டிருந்த  யமுனை   நதியும்   கண்ணன் குழலோசைக்கேற்ப   தனது  திவலைகளை வீசியது.   கிருஷ்ணன் கண்கள்  யாரையோ  தேடியது. அதோ அவர் வந்துவிட்டார். 

ஒரு வினோதமான மனிதர்  வந்து கண்ணனை வணங்கினார். கண்ணன் இசை நின்றது.  அவரோடு ஏதோ பேசினான்.  பிறகு அவர்  சென்றுவிட்டார்.  கிருஷ்ணன்  அவர் போவதையே  பார்த்துக்கொண்டிருந்தான்.   நேரம் நழுவியது. 

 "இப்போது  வந்தாரே அவர்  யார்?"   என்றாள்  ராதா.  அவளுக்கு  சிரிப்பு அடங்கவில்லை இன்னும். 

 "எனக்கு உன்  மீது  வருத்தம்  ராதா?" 

 "ஏன், ஏன்"  என்று  திடுக்கிட்டு  நின்றாள்  ராதா.

"அவர் எப்படிப்பட்ட  உன்னதமான  தவ  ஸ்ரேஷ்டர் என்பதை   அறியாமல் நீ அவரைக் கண்டதும் கேலியாக சிரித்தது தவறு?” 

“எனக்கு அவரைக்  கேலி செய்யும்  எண்ணம்  எதுவுமில்லை.  அவர்  உடல் வளைவுகள்  வேடிக்கையாக இருந்து,  என்னை அறியாமல் சிரிக்க வைத்தது தவறு தான்.  யார் அவர்?

 “எனக்கு  விருப்பமான  அஷ்டாவக்ரர்.  அவர்  கதை  ஒரு சோக கதை.”

“எனக்கு  சொல்லலாமா கிருஷ்ணா  அதை” 

“தாராளமாக. வாட்ட சாட்டமாக  பெண்கள் மயங்கும்  வடிவில்  ஆணழகனாக  ஒரு  பிராமணர்  கங்கை
கரையில் வசித்து யாகங்கள் ஹோமங்கள் ஜப தபங்களோடு  நாராயணனை  வழிபட்டு வந்தார்.  அவர்  மனைவி  அவருக்கு நேர் மாறானவள்.   அதனால் அவர் இல்லற  வாழ்க்கை வெறுத்து போய்  வனங்களில்  தவம் புரிந்தார்.  இனி  பெண்களை  ஏறெடுத்தும்  பாரேன்” என்று   விரதம் பூண்டார்.   இந்திரனின்  சபையிலிருந்து  ரம்பை  ஒருநாள்  தோழியரோடு அந்த  வனத்தில்  வந்த போது   இந்த  பிராமண  முனியின் தேஜஸ்  கம்பீரம்  அழகு அவளை கவர்ந்தது.   

''இந்த  முனிவரை உன்னால் மயக்க முடியுமா  ரம்பா?''  அவர்  பெண்களை ஏறெடுத்தும்  பார்க்காதவர் ''  
என்றனர்  தோழிகள்.  

எனைக்கண்டு  மயங்காத பேர்களுண்டோ என்று பாடினாள்  ரம்பா. சிரித்துக்கொண்டே   அவரை  அணுகி  வணங்கி வேண்டினாள்.
கண் விழித்த பிராமணர்   ''என்ன  ?'' என்று ஜாடையாக கேட்டார்.
 “எனக்கு ஒரு எண்ணம்  நிறைவேற அருள்வீர்களா”  
 “என்னால் முடிந்தால் அப்படியே ஆகட்டும்” 
“நான் உங்களை மணக்க விரும்புகிறேன்” என்றாள் ரம்பை.  
“அது  முடியாது”
“ஏன்?”
 "நான்   எந்த  பெண்ணையும் நினைத்து கூட பார்ப்பதில்லை.  இது என்  விரதம்"

ரம்பை கிடைக்கமாட்டாளா  என்று மூவுலகும்  ஏங்க , உம்மைத்தேடி வந்து கெஞ்சியும் என்னை   ஏமாற்றம் அடையச் செய்த,  என்னை அவமதித்த  எனக்கு   கிடைக்காத  உங்களுடைய  அழகிய  உருவம்  இன்று முதல்  எவருமே பார்த்தால்  அருவருக்கத்  தக்க,  எந்த பெண்ணும்  வெறுத்து  கேலி  செய்யும்படியான உடலாகக்  கடவது”  என்று ரம்பை  சாபமிட்டாள்.  

எட்டு  வித கோணலாக அந்த  வேத பிராமணர்  உடல்  வளைந்தது.  அவர்   பெயரே மறந்து போய்   அது முதல் அவர்  அஷ்டாவக்ரர்  (எட்டு கோணல் ஆசாமி) என்று   எல்லோராலும் அழைக்கப்  படுகிறார்''  என்றான் கிருஷ்ணன்.
 
 "இதற்கு அவர்  கடவுளிடம் முறையிடவில்லையா?".
"முறையிட்டாரே "
"எப்போது அவருக்கு  கடவுள் கிருபை செய்வார்  அவர்  உடல் மீண்டும் எப்போது  பழைய  நிலைக்கு திரும்பும்"
"கண்ணன்  சிரித்தான்.
''கடவுள் கிருபை அவருக்கு  கிடைத்து விட்டதே '' 
"எப்போது "
"சற்று  நேரம் முன் அவர் இங்கு  பேசிக்கொண்டிருந்துவிட்டு சென்றபோது "  என்றான் கண்ணன்.

ராதை எதிரே பார்த்தாள் .  தொலை தூரத்தில் பால் வெண்ணிலாவின் ஒளியில்  நெடிது உயர்ந்த  ஒரு  சந்நியாசி நேராக  நிமிர்ந்து   நடந்து சென்றுகொண்டிருந்தார்.  அவர் உடலில் எந்த வளைவும்  இல்லை.


sivan jaykay

unread,
Jul 12, 2020, 8:02:28 PM7/12/20
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்   J K  SIVAN 

                                 
                                                               அதிசயத்தின்  மறு பெயர்  மஹா பெரியவா .

''என்ன  வாய் ஓயாமல் இருமுகிறீர்களே. உடம்பை தூக்கி தூக்கி போடுகிறதே''  என்று என் மேல் தரிசனமாக கேட்டவர்  கல்யாணராமன்.  புதுக்கோட்டை பக்கம்.  பிசிக்ஸ் ப்ரொபஸர்.  ரிடையர் ஆகி  ஏழெட்டு மாசம். 

இந்த இருமல் பற்றி அவர் கேட்டது இப்போது கொரோனா சமயத்தில் இல்லை.  இப்பவாக இருந்தால்  ஒரேயடியாக வீட்டை அடைத்துவிட்டு  என்னை தூக்கிக்கொண்டு போயிருப்பார்கள்.  இது  சில மாதங்கள் முன்பு.

''கல்யாணம்,  வயசானாலே இதெல்லாம் கூடவே வளருகின்ற விஷயம் தான்.  சாதாரண சுளுக்கு கூட எலும்பு முறிவாகிவிடும்.  வியாதிக்கு காரணமா வேண்டும்?  எல்லாமே எதுவுமே ஒரு காரணம் தான்.  கொஞ்சம் கொஞ்சமாக  ஆளை  விழுங்குகிற  விவகாரம் தான் நோய். அதைப்பற்றி அதிகம் கவலையோ லட்சியமோ பண்ணாமல் இருப்பது தான் விவேகம்.
 
இன்னிக்கு ஒரு பெரியவா பற்றிய பழைய சம்பவம் ஒன்றை நீங்கள் எழுதியதை  உங்கள் பேரன் கொண்டு வந்து காட்டினான்.  படித்தேன். ஆச்சர்யமாக இருந்தது

எதைப்  பற்றி?

மகா பெரியவாளின் ஞான திருஷ்டி பற்றி.

'' ஓ   அதிசயத்துக்கு  டிக்ஷனரி மீனிங் என்ன தெரியுமா உங்களுக்கு? .  மஹா பெரியவா.  அடடா,   அவர் சம்பந்தப்பட்ட  விஷயங்கள் ஒன்றா,   இரண்டா?    கடல் அளவு இருக்கிறதே. எத்தனையோ பக்தர்கள் அனுபவிச்சு சொன்னதே  பத்து புஸ்தம் தலைகாணி தலைகாணியா  எழுதற அளவுக்கு இருக்கே கல்யாணம் ' என்றேன்.

கை நீட்டி அவர் கொடுத்த அந்த XEROX   காப்பி வாங்கி படித்தேன்.  ஆமாம்    ஒரு அனுஷத்துக்கு என்னிடம் வந்து   ஒரு நண்பர்  கேட்டு நான் படித்ததை எழுதிக் கொடுத்த சம்பவம்.  கல்யாணம் படித்ததை  நண்பர்களே உங்களுக்கும் மீண்டும் தருகிறேன்.  மகா பெரியவா விஷயம்  எவ்வளவு படித்தாலும் திகட்டுமா என்ன?

++

இது பல வருஷங்களுக்கு முன் நடந்த சம்பவம்.  ஒருநாள் காஞ்சி  மடத்தில் ஒரு வயசான தம்பதிகள்  பெரியவாளை தர்சனம் பண்ண "கியூ"வில் நின்றிருந்தனர். நகர்ந்துமுன்னேறி  பெரியவா  அருகே வந்ததும், நமஸ்கரித்தனர்.

பெரியவா அருகே வந்ததும் வெளியூரிலிருந்து வந்த  அந்த மனிதர்   நாலு பக்கமும் அமர்த்தலாக பார்த்தார். மிடுக்கும் கர்வம் கொப்புளித்து.  செல்வ செழிப்பு கழுத்தில் சங்கிலி, காதில் வைர பளிச் கடுக்கன், .  தங்கம் போர்த்திய  ருத்ராக்ஷம் தங்க கம்பியில் கோர்த்து. உயர்ந்த ஜாதி ஜரிகை வேஷ்டி. கையில் விலையுயர்ந்த கடிகாரம்.  விரல்களில் வைர  நவரத்ன மோதிரங்கள்... பட்டு அங்கவஸ்திரம் இடுப்பில்.  கையில் ஒரு தட்டில் பழங்கள் கல்கண்டு முந்திரி பருப்பு.  பெரியவாளின்   எக்ஸ்ரே பார்வை அவர் மேல் பட்டது. அந்த மனிதர் பேசினார்:

"பெரியவா...........நான் ஸர்வீஸ்லேர்ந்து.  ரிடையர் ஆய்ட்டேன்.........கொழந்தைகள்......னு    யாரும் கெடையாது. அதுனால, மடத்ல வந்து கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அனுக்ரகம் பண்ணணும்"

பேச்சில் உருக்கம், பணிவு. பக்கத்தில் வயஸான மனைவி.

''ஏன் இந்த முடிவு உனக்கு?''

''எதிலுமே பிடிப்பு இல்லை பெரியவா''

" என்ன சொல்றே  நீ.   உன் வாழ்க்கையிலே  ஒனக்கு பிடிப்பு எதுவும் இல்லேன்னுதானே கவலைப்படறே?"

"ஆமா........."

"எதாவது கார்யம் குடுத்தா பண்ணுவியா?"

"உத்தரவிடுங்கோ பெரியவா! காத்துண்டிருக்கேன்"

''உம்.'   பெரியவா அவரை ஏற  இறங்க பார்த்துவிட்டு  மற்றவர்களை கவனிக்கலானார். '
ஜாடை காட்டியதில் பக்கத்தில் இருந்த மடத்து சிப்பந்தி இந்த தம்பதியரை ஒரு ஓரமாகச் சென்று நிற்க வைத்தனர். 

அவரை அப்படியே கொஞ்சம் பக்கமாக நகர்ந்து  நிற்க வைத்து விட்டு  ஒரு மணி நேரம்    பெரியவா  யார் யாரோ வந்தவர்களை எல்லாம் பார்த்து  கவனித்து அனுப்பினார்.

வரிசையில் இன்னொரு தம்பதியிடம் பெரியவா  குசலப்ரஸ்னம் பண்ண ஆரம்பித்தார். அவர்களும் வயசானவர்கள்தான். கூட அவர்களுடைய  பெண்ணும் வந்திருந்தாள்.

"இவ எங்களோட ஒரே பொண்ணு. இவளுக்கு கல்யாணம் பண்ணணும். பெரியவாதான் ஆசீர்வாதம் பண்ணணும்..........."

கையை உயர்த்தி ஆசி கூறினார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த  '' பிடிப்பு இல்லாத "  வெளியூர்  மாமா  நெளிந்து கொண்டே நின்று கொண்டு இதையெல்லாம் இத்தனைநேரம்  பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது பெரியவா "பிடிப்பு" பக்கம் திரும்பி,

"நீ தானே  ''எனக்கு பிடிப்பு இல்லை  ...வேணும்...னியே! இதோ........இந்த பொண்ணுக்கு நீயே ஜாம்ஜாம்னு ஒன் சொந்த செலவுல கல்யாணம் பண்ணி வை! நீதான் கன்யாதானம் பண்ணணும். செய்வியா "

"செஞ்சுடறேன்.    செஞ்சுடறேன்"   என்று  ''பிடிப்பு''    கீழே விழுந்து மகா பெரியவாளை  வணங்கினார்.

 திடீரென்று பெரியவா அவரைப்  பார்த்து ரெண்டு  விரலைக் காட்டி, அவர் மனைவியை பார்த்தார்.  ''பிடிப்புக்கு'' புரிந்தது........

"ஆமா,பெரியவா.   இவ என் ரெண்டாவது சம்ஸாரம்.   மூத்தவ காலகதி அடைஞ்சதும் இவளை கல்யாணம் பண்ணிண்டேன்". பெரியவா முகத்தில் இப்போது ஒரு தீவிரமான மாறுதல்!

"சரி........ஒனக்கு மூத்த தாரத்தோட பொண் கொழந்தை இருந்துதே! அது என்னாச்சு?............."

"இடி"    தாக்கியது போல் அதிர்ந்தார் "பிடிப்பு".  பெரியவாளுக்கு எப்டி  ''அது''  தெரியும்?

ரொம்ப கூனிக்குறுகி, "இவ சித்தியாக  வந்ததும், அந்தக் கொழந்தையை படாதபாடு படுத்தினதால, அந்தக் குழந்தை சின்ன வயஸ்லேயே ஆத்தை விட்டு போய்ட்டா......நானும் தேடாத எடமில்லே! போனவ போனவதான்.............."

''பிடிப்பு''க்கு   துக்கத்தால் குரல் அடைத்தது.

"ம்ம்ம்ம்...   பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ? இதோ.  இந்த பொண்ணுதான் ...ஒன்னோட காணாமப் போன   சொந்த மூத்தாளுக்கு பிறந்த பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போய் நல்லபடியா கல்யாணம் பண்ணிவை........." அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால், இன்பமான அதிர்ச்சி!

''என்னது? இது சத்யம்... சத்யம்!  அந்த பெண்ணின் கூட வந்த தம்பதிகளும் வாயை பிளந்தார்கள்!  அதிசயம்  ஆனால்  உண்மைதான்!  பல வருஷங்களுக்கு முன் ஏதோ ஒரு  ரயில்வே ஸ்டே ஷனில் இந்தக் குழந்தை அழுது கொண்டு நின்றதாகவும்,விவரம் எதுவும் சொல்லத் தெரியாததால் அவளை தாங்களே அழைத்துச் சென்று  வளர்த்து வருவதாக கூறினார்கள்.

மஹா பெரியவா  என்ற  தெய்வத்தின் சக்தியால்  அனுக்கிரஹம் பெற்ற  அந்த  பெற்றோர், வளர்த்தோர்  ரெண்டு தம்பதிகளும்  சந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள். 

 இது நடந்ததா, இப்படி நடக்குமா,  கதையில் தானே இப்படியெல்லாம் வரும் என்று நமது  கொசு மூளையை கசக்கிக் கொள்ளவேண்டாம்.   தெய்வத்தின்  மனித அவதாரத்துக்கு தெரியாமல் எதுவும் இருக்க முடியாது.  ஆச்சர்யங்கள் அதிசயங்கள் எல்லாம்  கூட  எங்கோ யார் வாழ்விலோ நடந்தவை தான். இது ஒண்ணுமட்டும் இல்லை  கல்யாணராமன்.  இது ஆயிரம் லக்ஷத்திலே ஒண்ணு.''     நிறைய   பேர்  தங்கள்குடும்பத்தில் நடந்த  மஹா  பெரியவா அனுபவத்தை வெளியிலே சொல்றதில்லை.



sivan jaykay

unread,
Jul 12, 2020, 8:02:28 PM7/12/20
to amrith...@googlegroups.com
                                                                   நிழல் சிவலிங்க ஸ்தாணு     J K  SIVAN  

நான்   சிறுவயதில் சூளைமேட்டிலிருந்து  கோடம்பாக்கம் ரயில் தண்டவாளம் கடந்து வடக்கு தியாகராயநகர் சென்று பனகல் பார்க்கில் விளையாட செல்வேன்.  அங்கு சாயந்திரத்தில்  வெள்ளை சீருடை அணிந்து மேலே சிகப்பு நீலம்  பச்சை என்று  கலர் கலராக  பட்டையாக  இடுப்பில் பெல்ட் மாதிரி கட்டிக்கொண்டு தலைப்பாகை அல்லது தொப்பி அணிந்து நிறைய  வாத்தியங்களோடு  15 -20  பேர்  ரவுண்டாக நின்றுகொண்டு ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம்  வாசிப்பார்கள்.  அவர்களுக்கு  கார்பொரேஷன் பேண்ட் BAND   என்று பெயர்.   பெரிய   BAND   ஒன்றை சுமந்து  துணி பந்து மாதிரி சுற்றிய முனையோடு ஒருவர் அதை   தொம்  தொம்  என்று அடிக்கும்போது  நாமும் அடிக்க மாட்டோமா என்று ஏக்கமாக இருக்கும்.   இரு பனகல் பார்க்கில்  ரேடியோ சாயந்திர வேளைகளில்  பாடும்.  பெரிய பார்க். எங்கு வேண்டுமானாலும் கேட்கும்.    நிறைய  முதியோர்கள் இவற்றை கேட்க வருவார்கள்.  வாய்  வேர்க்கடலை கொரித்துக்கொண்டிருக்கும்.  சுவாரஸ்யமாக ஊர் வம்பு பேசுவார்கள். 

எனக்கு   கார்பொரேஷன்  BAND  ஆட்கள் வாசிக்கும் பாட்டு புரியாவிட்டாலும் அவர்கள் யூனிபாரம்  தலை தொப்பி,  வாத்தியங்கள் அதிலிருந்து வரும் சப்தம் எல்லாம் ஆர்வமாக கேட்க பிடிக்கும்.    சுற்றி நின்று    கொண்டோ  அல்லது அங்கே உள்ள  சிமெண்ட்  பெஞ்சுகளில் பல முதியோர்களை, பெண்களை போல் உட்கார்ந்து கொண்டோ அல்ல,  மரங்களை செடிகளை சுற்றி பிடிக்கிற விளையாட்டு ஆடிக்கொண்டு ஓடிக்கொண்டு.  பார்க் நடுவே  பனகல் மஹாராஜா சிலை நின்று கொண்டு இந்த வாத்தியகோஷத்தை அசையாமல் கேட்கும்.  பனகல் ராஜா  வெள்ளையன் ஆட்சியின்  போது  மெட்ராஸ் முதல் அமைச்சராக இருந்தவர்.  வெள்ளைக்காரன் இந்த  ராஜாவை திவான் பகதூர் ஆக்கி  1923-26  கால கட்டத்தில்  மெட்ராஸ் ப்ரெசிடென்சி  முதலமைச்சர். 

ஏன் பனகல் பார்க், மஹாராஜா எல்லாம் இப்போது  நினைவுக்கு வந்தது என்றால்  பனகல் என்ற ஊரை பற்றி  இன்று
படித்தேன். ஆந்த்ரப்ரதேசத்தில்   நால்கொண்டா ஜில்லாவில்  பனகல் கிராமம் இருக்கிறது.  அங்கே  11-12ம் நூற்றாண்டு  இக்ஷ்வாகு வம்ச ராஜா கட்டிய  சிவாலயம் ஒன்று அற்புதமானது மட்டுமல்ல அதிசயமானதும் கூட இன்னும் இருக்கிறது.   சிவன்  சாயா சோமேஸ்வரஸ்வாமி.  

சாயா என்றால் நிழல் என்று தெரியுமல்லவா?  அந்த கோவிலில்  தினமும் ஒரு  பெரிய நிழல் ஸ்தம்பம் காணப்படுகிறது. எந்த தூணின்  நிழல் சுவற்றில்  அப்படி விழுகிறது என்று எவராலும் கண்டுபிடிக்கப்படவில்லை.  அடிமுடி காணாத ஸ்தாணு.
சோழர்கள் கட்டியது என்கிறார்கள். த்ரிகூடஆலயம் என்று பெயர்.  அற்புதமான  கற்சிலைகள், வேலைப்பாடுகள் நிறைந்த கோவில். ஆ வென்று தாராளமாக  பார்த்து வாயைப் பிளக்கலாம்.  கிழக்கு பார்த்த ஒரு கர்ப்பகிரகத்தில் தான் இந்த  நிழல் தூண் காட் சி  தருகிறது. 

ஹைதராபதிலிருந்து 104 கி.மீ.  நால் கொண்டா  பஸ் நிலையத்திலிருந்து 4 கி.மீ.  பனகல்  பஸ் நிலையத்திலிருந்து 1.4 கி.மீ.  கர்பகிரஹ ம் எதிரே இருக்கும் நான்கு தூண்களின் ஒட்டு மொத்த நிழல் என்று சொல்கிறார்கள்.   நாள் முழுதும் இந்த நிழல் ஸ்தாணு காட்சி தருகிறது.  

நமது ஊரைப்போல்  இல்லை.  இந்த கோவில் பற்றிய  அதிக விவரங்கள் அங்கெல்லாம் இல்லை.  தெலுங்கில் இருந்து நமக்கு தெரியவில்லையோ என்னவோ?

 கோவில் தூண்களில்  ராமாயண பாரத சம்பவங்கள்  செதுக்கி இருக்கிறான் சிற்பி.   நிறைய  யாத்ரீகர்கள் தெலுங்கு ஹிந்தி பேசிக்கொண்டு வருகிறார்கள்.    தமிழ் என்றோ எப்போதோ காதில் விழும்போல் இருக்கிறது.  இந்த கோவிலை நேரில் சென்று பார்க்காதவர்களுக்கு  இத்துடன் ஒரு  தெலுங்கு  வீடியோ இணைத்திருக்கிறேன்.  நிழல் சிவலிங்கத்தை தரிசியுங்கள். யூட்யூப் கிளிப்பிங்  https://youtu.be/9JLtDDIMR2k



sivan jaykay

unread,
Jul 13, 2020, 9:02:22 PM7/13/20
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி   13       J K  SIVAN                  
தாகூர் 

                                                                                               13  எப்போ வருவாரோ  எந்தன் கலிதீர 


 The song that I came to sing remains unsung to this day.
I have spent my days in stringing and in unstringing my instrument.
The time has not come true, the words have not been rightly set; 
only there is the agony of wishing in my heart.
The blossom has not opened; only the wind is sighing by.
I have not seen his face, nor have I listened to his voice; 
only I have heard his gentle footsteps from the road before my house.
The livelong day has passed in spreading his seat on the floor;
 but the lamp has not been lit and I cannot ask him into my house.
I live in the hope of meeting with him; but this meeting is not yet.

நான் ஒரு விசித்திர பிறவியோ?
என்னை மாதிரி யாரையாவது பார்க்க முடியுமா? 
 எனக்கு  நெஞ்சிலே ஒரு ராகம்.  அதில்  ஒரு பாட்டு பாட  வேண்டும் என்ற ஒரு தாகம்.  ஆம்.  வெகுகாலமாக.ஆசை.   அதைப்பாட வில்லை நான்  இதுவரை  ஏன்?  எனக்கு வீணை மீட்டவும்  தெரியும்.  வீணை  மீட்டி  பாடவேண்டும்  என்று தீராத ஆசை....  ஏன் அதை என்னால் இன்னும்  வெளியே கொண்டு வந்து நீ  கேட்கும்படியாக  பாடமுடியவில்லை.  எனக்கு நல்ல  குரல் வளம் உண்டு. இருந்தும் பாட்டு வெளியே வரவில்லை. நெஞ்சிலே உறைந்து கிடக்கிறது.  வீணையை மீட்டுகிறேன்.  பாடவேண்டும் என்று முயல்கிறேன். எத்தனை நேரம் மீட்டினேன் எப்போது நிறுத்தினேன் என்றே புரியவில்லை. ஹுஹும்  பாட்டை மட்டும்  வெளியே  கொண்டு  வரமுடியவில்லை.
 
ஓஹோ,  என்னுள்  உறைந்த பாடல் இன்னும் சரியான வார்த்தை உருவம் பெறவில்லையோ?  வார்த்தைகள் இன்னும் அழகாக பொருத்தமாக அமைய வில்லையா? ஏன் இன்னும் பாடவில்லை .உடனே பாடவேண்டும் என்ற ஆர்வம் தாகம், வேகம், தவிப்பு இது மட்டும் தான் மிச்சம். ஆத்ம ராகம் பாட  தணியாத தாகம். ஆமாம் ஆமாம் இன்னும் மலர் மொட்டுஅவிழவில்லை என்று புரிகிறது.  என் ராகத்தை  எங்கும் தூக்கிச் செல்ல,  மொட்டவிழ்ந்து மலரின் நறுமணத்தை பரப்ப  காத்திருந்து பெருமூச்சு விடும் காற்று தெரிகிறது.  காத்திருந்து பொருமும் காற்றின் உஷ்ண ஸ்வாசம் என் மேல் அனலாக சுடுகிறது.    என் தாபம் உள்ளும் வெளியுமா? 
 
கிருஷ்ணா ,  ஏன் உன்  முகம் இன்னும் கண்ணில் தெரியவில்லை?  
அற்புத சங்கீத ஞானி அவன்.  நான்  காதை மடக்கி கழுத்தை சாய்த்து   உன்னிப்பாக கேட்கிறேன்.  ஆனால்  என்னால்  அவன் குரல், குழல்  ஒலியை  இசையை நேரடியாக  இதுவரை கேட்க இயல வில்லையே.   வேறு யார் குரலோ, பாட்டெல்லாம்  தான்  கேட்கிறது. அவன் எங்குமிருப்பவன் என்பது இருக்கட்டும். இதோ என் வீட்டு வாசல் வரை அவன் நடக்கும் காலடி சப்தம் மட்டுமே சலங் சலங் என்று அவன் கால் தண்டை ஒலியோடு  நன்றாக என் காதில் கேட்கிறது.   ஆனால்  அவன் கண்ணில்  தென் படவில்லையே.   

 'வாடா கண்ணா வா  வந்து உட்கார்' என்று அவனுக்கு அருமையான ஆசனம் இட்டு நாள் முழுக்க தினந் தோறும் காத்திருக்கிறேன்.  நாளெல்லாம் , ஆமாம் நாளெல்லாம்,  காலமெல்லாம்  காத்திருக்கிறேன். 
விளக்கு தயாராக  இருக்கிறது.  தீபத்தை  இன்னும் ஏற்றவில்லை.அதன் சுடர் ஒளிவிடவில்லை.  அவனை க்கண்டவுடன்  அவன் வந்தவுடன் தீபம் ஏற்றி  ஹாரத்தி   இட  வேண்டாமா.   

''வா  கண்ணா, என் இல்லத்தில்,  வா  என் உள்ளத்தில்''  என்று  கூப்பிட நான் இன்னும்  தயாராக வில்லையோ?  அது   எப்போது? எப்போ வருவாயோ  எந்தன் கலிதீர?   

கண்ணா.........!!!  

 நிச்சயம் அவனை  நான் சந்திப்பேன்,  அது எப்போது?  , எப்போது கண்ணா நாம் சந்திக்கப்போகிறோம். நான் காத்திருக்கிறேன்.. பாடலோடு. தீபத்தோடு.....!

sivan jaykay

unread,
Jul 13, 2020, 9:02:22 PM7/13/20
to amrith...@googlegroups.com
                                                                                 குதிரை வீரன்    J K  SIVAN 

சிவாஜி   போஸ்லே  என்றால் யாருக்கும் தெரியாது. சிவாஜி மஹாராஜா என்றால் குழந்தைக்கு கூட தெரியும். நாம் செய்த புண்யத்தால்  பாரதத்தாய் பெற்ற  இணையற்ற வீர மகன்.  ஒரு மராத்திய வீர புருஷன். சிவாஜி ஹிந்து வெறியன் அல்ல. அவருடைய ஒன்றரை லக்ஷம் வீரர்கள் படையில் பாதிக்கு மேல் முஸ்லிம்கள்!. சிவநேரி என்ற கோட்டையில் பிறந்ததாலும், குலதெய்வம் சிவை என்பதாலும்  அவருடைய  தாய்  ஜீஜாபாய்  அவருக்கு  சிவாஜி என்று பெயர் வைத்தாள் . 

தனது மராத்திய சாம்ராஜ்யத்தை பாதுகாக்க சிவாஜி மேற்கொண்ட  தந்திரம், சாமர்த்யம், திட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இளம் வயதிலேயே, பாலகனாக இருந்தபோதே சிவாஜி ஒரு கோட்டையை கைப்பற்றினார்.  நன்றாக செயல்படும், அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொண்ட படை எவ்வளவு அவசியம் என்று தெரிந்து, தனது வீரர்களை பழக்கி அனுபவங்கள் கொடுத்து ஒரு சக்தி வாய்ந்த படையைக் கொண்டவராக இருந்தார்.    தனது எதிரியாக இருந்தாலும் ஒளரங்க சீப்புக்கு உதவ முன்வந்தவர்.

பலம் வாய்ந்த எதிரி அப்ஸல் கானை புலி நகங்கள் அணிந்து அவன் துரோகமாக தன்னைக் கொல்லும் முன்பு தனி ஒருவனாக அவனை தீர்த்து கட்டிய தைரியசாலி. முள்ளை முள்ளாலே தானே எடுக்கமுடியும். கடலை ஒட்டி கோட்டைகள் கட்டி இயற்கை அரணை உபயோகித்துக் கொண்ட புத்திசாலி.  அவரது வீரம் புத்தி கூர்மை முகலாய அரசர்களை யும், அடில் ஷா வம்சத்தினரையும், நவாப், சுல்தான் களையும் வெற்றி கொள்ள செய்தது.     எல்லோரிடமும் அன்பும் பண்பும் கொண்ட அவரது குணம் அவருடைய வெற்றிக்கு அவரோடு கூட இருந்தவர்களின் ஒத்துழைப்பை கொடுத்தது.

அனைவருடனும் சேர்ந்து இருக்கும் குணம் எல்லோரையும் அவரோடு இணைத்தது. தர்ம தானங்கள் நிறைய செயது எல்லோர் மனதையும் கவர்ந்தார். புராதன சின்னங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் எதையும் அவர் எதிரிகள் அழிக்க விடாமல் காப்பாற்றியவர்.அவர்களை நெருங்க விட வில்லை.

சிவாஜி பெண்களை மதித்தவர். இஸ்லாமிய, பிறமத பெண்களை சிறைபிடிக்கவோ துன்புறுத்தவோ இல்லை. அவர்களை பாதுகாத்தவர். அவரவர் மதத்தை அவரவர் பின்பற்ற தடை விதிக்கவில்லை. ஹிந்து மதத்தை அழிக்கவோ, ஆலயங்கள், விக்ரஹங்களை சிதைக்கவோ துணிந்தால் அவரது வாள் பேசும்.  அதில் துளியும் இரக்கம் காட்டாதவர்.  தைர்யம், உதார குணம், கருணை உள்ளம் எல்லாம் அவரது தாய் ஜீஜா பாயிடமிருந்து தான் அவருடைய  குணங்களாகியது.   அந்த சிவாஜி  பாண்டுரங்க பக்தன்.  சமர்த்தராமதாஸ் சீடன்.   எழுந்து நின்று ஒருமுறை சிவாஜியை மனதார  நினைத்து வணங்குவோம்.  

''உனக்கு   துக்காராம் தெரியுமா?''  என்று குருநாதர் கேட்டபோது  ''தெரியாதே  குருநாதா'' என்கிறார் சிவாஜி.  '

'தேஹு என்கிற கிராமத்திற்கு போ  அவரை தரிசித்து விட்டு வா. அப்புறம் அவரைப் பற்றி என்னிடம் சொல்லு''  

ஒருநாள் காலை  குதிரை மீது  நீண்ட பயணம் கொண்ட சிவாஜி தேஹு கிராமத்தை மாலை அடைகிறார்.  ஒரு பழைய  ஓலைக்கொட்டகை. அது தான் ஆஸ்ரமம். உள்ளே  நுழைகிறார்.  துக்காராம்  பாண்டுரங்கன் பஜனையில்  ஈடுபட்டிருக்கிறார். எதிரே சில பக்தர்கள்  அமர்ந்திருக்கிறார்கள். 

தலைகள்  ஆனந்த பக்தி பரவசத்தில்   ஆடின.  சிறிய அந்த  கூடத்தில் விட்டலன்  இடுப்பில்  கையோடு துக்காராமின் அபங்கத்தில்  திளைத்துக்  கொண்டிருந்தான். முகலாய சாம்ரஜ்யத்திற்கே  சிம்ம சொப்பனமாக  இருந்த  மகாவீரன் சத்ரபதி  சிவாஜி மகாராஜாவும்  அந்த  கூட்டத்தில்  தன்னை மறந்து அவர்களோடு  சேர்ந்து  பாடிக்கொண்டு  விட்டல்  நாம சங்கீர்த்தனத்தில்  மூழ்கிகொண்டிருந்த போது அவருடன் வந்த   ஒரு ஒற்றன் , மெதுவாக  கூட்டத்தில்  இடித்து முன்னேறி  சிவாஜி அருகில்  அவர்  காதில்  ஒரு சேதி சொன்னான்.  முகலாயர்  படை  வந்துகொண்டிருக்கிறது.  நீங்கள்  இங்கிருப்பதை   எப்படியோ   தெரிந்து   வந்து கொண்டிருக்கிறார்கள். 

சிவாஜி  சற்று யோசித்துவிட்டு  எழுந்து மெதுவாக  துக்காராம் அருகே செல்கிறார். கைகட்டி மெதுவாக பேசுகிறார். 

"துக்காராம்  சுவாமிஜி,   இந்த  இடத்தின்  தூய்மையும்  அமைதியும்  கெட  விரும்பவில்லை.  நான்  உடனே  புறப்படுகிறேன்."

"மகாராஜ்,   விடோபாவின்  அபங்கத்தில்  பாதியில் நிறுத்தி  வெளியேற கூடாது.  முடியும்  வரை  சற்று காத்திருக்கலாமே."  

தன்னுடைய  உயிருக்கு வந்த  ஆபத்தை எப்படி அந்த நேரம்  துக்காராம் ஸ்வாமிகளுக்கு தெரியப்படுத்துவது.  பக்தியில் திளைத்துக்கொண்டிருக்கிறாரே?. 

''  கேவலம் என் உயிர் ஒரு முக்கியமான விஷயமா அவர் அமைதியை பக்தியைக்  கெடுக்க ?''

"அவ்வாறே  சுவாமிஜி"  என்றார்  சிவாஜி. 

 விட்டல் அபங்கத்தில்  ருசியும்,  தன்னுயிர் போகும்போது  இறைவன்  நாமத்திலே போகட்டுமே  என்ற எண்ணம் தான்  சிவாஜிக்கு. எந்த எதிர்ப்பும்  இல்லாமல்  முகலாயர் படையிடம்  தன்னை ஒப்புவித்தால்  மற்ற பக்தர்களுக்கு  எந்த  இடையூறும்  இருக்காதல்லவா."   சிவாஜி  மீண்டும்  அபங்க  பஜனையில்  கவலையின்றி  ஈடுபட்டார்.

தேஹு  ஊர்  எல்லையில் என்ன நடந்தது?   
முகலாய படைத் தலைவன்  குதிரைப் படையுடன் 2000  ஆயுதம் தாங்கிய  வீரர்களோடு   ஊருக்குள்   நுழைந்தான்.  வெகுகாலமாக  பிடிக்க  முடியாத  சிவாஜி   தேஹூவில்   இன்று  வசமாக சிக்கிக்கொண்டான்.   இன்று  கட்டாயம்  உயிரோடோ  அல்லது  பிணமாகவோ   அவனைப் பிடிப்பது நிச்சயம்.    

ஆனால்   ஊர்  எல்லையிலேயே தக்க  தருணத்தில்  சிவாஜியின்  படை  அவர்களை  எதிர் பார்த்து  காத்திருந்தது.  அவர்கள் நடுவே  ஒரு  குதிரையின்  மேல்  சிவாஜி  உருவிய  வாளுடன் கண்கள் கோபத்தில் சிவக்க   அவர்களை  மோதி  மின்னல் வேகத்தில் தாக்கி  அழிப்பதை கண்டு  அனைத்து  முகலாய  படைகளும்  சிவாஜியின்  குதிரையை மட்டுமே  குறி வைத்தன.   விரைவில்  தனி ஒருவனாக  அவர்களை  எதிர்ப்பது  அறிவின்மை  என்று  உணர்ந்த  சிவாஜி தன்  படை வீரர்களை  காப்பாற்ற,  அவர்களிட மிருந்து  விலகி    மலைகள் நிரம்பிய  காட்டுப்பாதையில்  குதிரையை  விரட்டவே  அவரைப்   தொடர்ந்து  முகலாய வீரர்கள் சென்றனர் . 

மின்னல்  வேகத்தில்  செல்லும்  சிவாஜியை  எவ்வளளோ  முயன்றும்  சுல்தான்  படை  நெருங்க முடியவில்லை. நேரம்  நழுவியது.  சூரியன் அஸ்தமனம்  ஆகும்  சமயம்.  

சிவாஜிக்கு  மலை எலி  என்று  பெயர்.  அந்த  பகுதியின் அனைத்து  மலைதொடர்களும்  அத்துபடி. அதன்  கணவாய்கள்,  குகைகள்  அனைத்தும்  அறிந்த  சிவாஜி  எங்கு  சென்றார்  எப்படி மாயமாக  மறைந்தார்  என்று  தெரியாமல்  ஏமாற்றத்தோடு  படை வீரர்கள்  திரும்பி சுல்தான் முன்  தலையை  தொங்க போட்டுகொண்டு நிற்க

" வெட்கமாயில்லை! நீங்கள் எல்லாம்  வீரர்களா? 2000  பேர்  சிறந்த  குதிரை படை  வீரர்கள்  என்று  சொல்லிக் கொள்கிறீர்கள்,  ஒரு தனி மனிதனைப்   பிடிக்க  யோக்யதை இல்லை   அவமான சின்னங்களா"   என்று  திட்டினான்  சுல்தான் தளபதி. 

தேஹு  துக்காராம் ஸ்வாமிகள் ஆஸ்ரமத்தில்  அபங்கம்  முடிந்து  அனைவரும்  பிரசாதம்  பெற்று சந்தோஷமாக  அந்த  பஜனை கூடத்திலிருந்து  வெளியேறினர்.  சிவாஜி  துக்காராம்  காலில்  விழுந்து வணங்கி எழுந்தபோது  முன்பு வந்த  அதே  ஒற்றன்  ஓடோடி வந்து சிவாஜி எதிரில் அவரை  ஏற  இறங்க பார்த்தான்.  

''மகாராஜ்,   உங்கள் வீரத்தின் முன்  முகலாய படை சுருண்டு ஓடி  எங்கோ  மலைப்பாதையில்  சென்று விட்டது.  உங்கள்  குதிரையை  அவர்களால் பிடிக்க முடியவில்லை. எப்படி அதற்குள்  இங்கு  வந்துவிட்டீர்கள்.  நீங்கள்  மின்னலைக்   காட்டிலும்  வேகமான தலைவர்”  என்று  புகழ்ந்தான். 

 சிவாஜி  திகைத்தார்.   '' நான் முகலாயர் படையோடு  எதிர் நின்று  அவர்களை விரட்டினேனா?''   சிறந்த புத்திசாலியான சிவாஜிக்கு நடந்தது புரிந்துவிட்டது. 

அவரது  இரு கரங்களும்  விட்டலனை  வணங்கின.  கண்களில்  கண்ணீர்  பெருக்கு  நன்றி பெருக்காக வழிந்தது.    

விட்டலன்  இடுப்பில்  கைகளை ஊன்றி அவரைப் பார்த்து   சிரித்தான்.  அவனைத்தான்  சிவாஜி ரூபத்தில் குதிரை வீரர்கள் இன்னமும்  மலைகளுக் கிடையில்    தேடிக் கொண்டி ருக்கிறார்களே!  .    
நம்பினார்  கெடுவதில்லை.  (எனது  ''தெவிட்டாத விட்டலா''  என்ற  100 பாண்டுரங்கன் கதைகள் கொண்ட புத்தகத்தில் இதை முதல் கதையாக எழுதினேன். அதுவே  ஆங்கிலத்தில் ''VITOBA THE  NECTAR '' என்று ஆங்கில புத்தகமாகவும் வெளி வந்தது.)

sivan jaykay

unread,
Jul 13, 2020, 9:02:22 PM7/13/20
to amrith...@googlegroups.com
ஒரு அற்புத ஞானி   J  K  SIVAN 

                                                                             சாம்பார் பாத்திரம் உருண்டது..

ஒரு மஹா  அற்புத ஞானி யார் என்று என்னை நல்ல தூக்கத்திலிருந்து எழுப்பி கேட்டாலும் யோசிக்காமல்  கண்ணை திறக்காமலே  திரும்பி படுத்துக்கொண்டு  ''சேஷாத்திரி ஸ்வாமிகள்'' என்று சொல்வேன்.

அவர் மற்ற ஞானிகள், சித்தர்களிலிருந்து வேறு பட்டவர். சிஷ்யர்கள் கிடையாது. குரு கிடையாது. நிரம்ப கற்றவர். சங்கீத ஞானம் ரத்தத்தில் ஊறியது. காமாக்ஷி உபாசகர்  வேத வித்து. பறவைகள் விலங்குகள் மனிதர்கள் என்ற வித்யாசமே தெரியாதவர். பக்ஷி மிருக பாஷை அறிந்தவர். அன்பே உருவம்.  உலக வாழ்க்கையில் தாமரை இலை தண்ணீராக தெளிவோடு கலவாமல் இருந்தவர். மூவாசைகளும் நெருங்காதவர்.  பகவான் ரமணரிஷியை   திருவாண்ணாமலையில்  காத்து உலகுக்கு அளித்தவர்.  எவர் மனத்திலும் இருப்பதை உணர்பவர்.  தேடிவந்து நன்மை செய்பவர்,  இன்றும்  பல  பக்தர்கள் வாழ்வில் தோன்றா துணையாக  அருள்பவர்

 இன்னும்  சொல்லிக்கொண்டே போகலாம். எழுதி கை தான் வலிக்கும். அவர் மஹிமை சொல்லி எழுதி மாளாது.   எவரும் அழையாமலே திடீரென்று ஒரு இடத்தில் தோன்றுவார். அழைத்தாலும்  அடிக்க வருவார். பசித்தபோது எங்கு எது எவர் கொடுத்தாலும்  சிறிது உண்பவர்.
 
ஒரு அற்புத சம்பவம் சொல்கிறேன்.

திருவண்ணாமலை யில் எங்கோ ஒரு பெரியமனிதர் வீட்டு கல்யாணம்.  தனவந்தர்  அவர்.  நல்ல தாராளமான மனசு. ஒரே பெண் கல்யாணம்.    நாலு நாளுக்கு குறையாமல் மூன்று வேளை   சாப்பாடு.  அப்போதெல்
 லாம்   வீட்டிலேயே  கொட்டகை போட்டு பந்தல் அமைத்து    கல்யாணம் செய்வார்கள்.   

தனவந்தருக்கு பெரிய  தோட்டத்தின் நடுவே  வீடு.   பின்னால் தோட்டத்தில்  ஒரு இடத்தில் தட்டி கட்டி   சமையல் செய்ய ஏற்பாடு.    நிறைய கூட்டம். தனவந்தர் நிறைய பேரை கூப்பிட்டு அன்று  அன்னதானம் செய் கிறார்  என்ற சேதி பரவி  ஊரே திரண்டு வந்தது. சிறந்த சமையல்காரர்கள் கூட்டம்   தோட்டத்தில்  தட்டி மறைவில்  அடுப்பு மூட்டி  சமையல் தயாராகிறது.  கோட்டை அடுப்புகள்    மூன்று  கண கணவென்று   வாய் திறந்து  கட்டைகளை வாங்கி விழுங்கி சூடு கிளப்பி மேலே  ஒரு அடுப்பில்   வாயகன்ற  பெரிய பாத்திரத்தில் சாம்பார் கொதிக்கிறது.

ஒரே சமயத்தில் இரு  நூற்றுக்கு மேற் பட்டவர்கள் சாப்பிட போதுமான அளவு சாம்பார் அந்த  வாயகன்ற பாத்திரத்தில் தளதளவென்று கொதிக்கிறது.    வீட்டில்  பந்தலில்  தரையில்  உட்காருவதற்கு  நான்காய்  மடித்த ஜமுக்காளம்  நீளமாக  விரித்தாகிவிட்டது.    இலை  போட்டாயிற்று.   சாதம் கரண்டி கரண்டியாக  இலையில் வைத்துவிட்டு அடுத்து  சிறிய  பக்கெட்டுகளில்  சாம்பாரை கொண்டு வந்து சாதத்தின் மேல் ஊற்ற காத்திருக்கும் நேரம்.  

புயல் மாதிரி அங்கே வந்துவிட்டார்  சேஷாத்திரி ஸ்வாமிகள்.  பிச்சைக்காரன் மாதிரி தோற்றம். அழுக்கு உடை, தாடி மீசை.  இவரை யார் இங்கே கூப்பிட்டது? 

நேரே  சமையல் செய்யும் இடம் சென்றார்.  எல்லாவற்றையும்  சுற்றி பார்த்தார்.  என்ன தோன்றியதோ?   காலால்  அடுப்பின் மேல் இருந்த  சாம்பார் பாத்திரத்தை   வேகமாக ஓங்கி உதைத்தார்.   பாத்திரம் அடுப்பின் மேல் இருந்து கவிழ்ந்தது.   என்ன பலமோ அவர் கால்களுக்கு?  அப்படியே சுடச்சுட  சாம்பார்  தரையில் ஆறாக ஓடியது. 

சாம்பார் கொட்டிவிட்டது. வேண்டுமென்றே அதை கவிழ்த்து கொட்டியவர்  சேஷாத்திரி ஸ்வாமிகள் என்று விஷயம் சமையல் காரர் மூலம்  தனவந்தர் காதுக்கு எட்டி    அவருக்கு  ஆத்திரம் அதிர்ச்சி.  ஒரு பக்கம் கோபம்.   எதற்கு ஸ்வாமிகள் திடீரென்று இங்கே வந்தார் ஏன்  பைத்தியம் மாதிரி நடந்து கொண்டார்.  சாம்பாரை தரையில்  கொட்டினார் என்ற ஆச்சர்யம் கலந்த  அதிர்ச்சி.  என்ன கோபம் என்மேல் அவருக்கு?

தனவந்தருக்கு சேஷாத்திரி ஸ்வாமிகளை நன்றாக பழக்கமுண்டு. தினமும் கோவிலில் அல்லது சடைச்சி வீட்டு திண்ணை,  அல்லது தெருவில்,  குளத்தருகே,  எங்காவது  கண்ணில் கண்டால்  பார்த்து  வணங்குவார்.

சேஷாத்திரி ஸ்வாமிகள் சமையல் செய்யுமிடத்தில் இடுப்பில் கை  வைத்து நின்று கொண்டிருந்தார்.  பார்வை எங்கோ இருந்தது.  அவரைப்பார்த்து பயபக்தியுடன்  தனவந்தர் வணங்கினார்.  ஏன் இப்படி செய்துவிட்டீர்கள்? . நான் எப்படி அங்கே உட்கார்ந்திருக்கும்  மக்களுக்கு அன்னமிடுவேன்??என்ற  கெஞ்சல் கண்ணில் தெரிந்தது.   

சேஷாத்திரி ஸ்வாமிகள் அவரை ஏற இறங்க பார்த்தார்.   அருகே திகைத்து நின்ற வெளியூர் சமையல் காரரை பார்த்தார். வெடுக்கென்று  அவர் கையில் இருந்த  சாம்பார்  கரண்டியை பிடுங்கினார்.    சாம்பார்  ஓடிய இடத்தில் இருந்து ஒரு வஸ்துவை எடுத்தார்.  வெந்து போயிருந்த ஒரு நீளமான  கரு நாகம்.  எப்படியோ  சமையல் செய்யும் இடத்தில் வந்து பாத்திரத்தில் இறங்கியிருக்கிறது.  கொடிய விஷம் கொண்ட சாம்பாரில் வெந்து இறந்த  நீளமான  பாம்பு.   அந்த சாம்பாரை சாப்பிட்டால் எத்தனை உயிர்களை பறித்திருக்கும் அந்த சாம்பார்.  கரண்டி காம்பினால் அந்த நாகத்தை எடுத்து நீட்டினார் சமையல் காரர் முன்னால் .  

தனவந்தர் க்ஷண நேரத்தில்  அங்கு நேர இருந்த பேராபத்தை உணர்ந்து கொண்டார். சமையல் காரருக்கும் தனது தவறு புரிந்தது.  தேய்த்து வைத்திருந்த பாத்திரத்தில் தோட்டத்தில் வாழ்ந்து  வந்த  ஒரு கருநாகம் நுழைந்து அடியில் படுத்திருந்ததை கவனிக்காமல் அடுப்பின் மேல் வைத்து நீரை ஊற்றி கொதிக்க வைத்திருக்கிறார். விடியற் காலை இருட்டில் கருப்பு நாகம்  கிழ சமையல்காரர் கண்ணுக்கு தெரியவில்லை. அஜாக்கிரதை.  வெளியே வரமுடியாமல்  கருநாகம் உயிரை விட்டு இருக்கிறது. உயிர் விடுமுன் கொடிய விஷத்தை சாம்பாரில் கக்கி இருக்கிறது.  

எங்கேயோ இருந்த சேஷாத்திரி ஸ்வாமிகளுக்கு  ஒரு பேராபத்து நாகராஜன் மூலம் நேரப்போவது நன்றாக தெரிந்து  அதை தக்க சமயத்தில் தவிர்க்க  ஓடோடி வந்திருக்கிறார்.   

விஷயம் தெரிந்த எல்லோரும்  இலையின் முன் இருந்து எழுந்து ஓடி வந்தனர்.  உயிர் காத்த  சேஷாத்திரி ஸ்வாமிகள் முன் விழுந்து வணங்கினர். கும்பல் சேர ஆரம்பித்தவுடன்  அது பிடிக்காத  சேஷாத்திரி ஸ்வாமிகள் சிட்டாக அங்கிருந்து ஓடிவிட்டார்.   அடுத்து எங்கே யாருக்கு என்ன உதவி செய்யவேண்டுமோ.  அது அவருக்கல்லவா தெரியும்?



sivan jaykay

unread,
Jul 13, 2020, 9:02:49 PM7/13/20
to amrith...@googlegroups.com
நமசிவாய பதிகம்   J  K  SIVAN  

                                                                          ஓம்  நமசிவாய: 

சைவ சமய குரவர்கள்  நால்வரில் மூத்தவரான   திருநாவுக்கரசர் அப்பர் என அழைக்கப்படுபவர். அவரது வாழ்க்கை சரித்திரம் ஏற்கனவே எழுதி உங்களுக்கு அளித்திருக்கிறேன். அவர் எழுதிய  நமசிவாய பதிகம் 10 பாடல்கள்  அற்புதமானவை.  எளிது அர்த்தம் புரியும். படியுங்கள். சகல வினைகளும் தீரும். மனம் நிம்மதி பெறும் 

பாடல் 1:
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே.

பரமேஸ்வரா,  நீ  நான்கு வேதங்களுக்கும்  உட்பொருள்.  அக்னி, ஜோதி வடிவானவன். அதைத்தான்  பிழம்பதோர் மேனியாகி என்று படுகிறோம்.   பொன்னார் மேனியனே, உன் திருவடிகளை மனதில் இருத்தி, நிறுத்தி,  சிரம் மேல் கரம்கொண்டு ஹரஹர மஹா தேவா என்று அடிவயிற்றிலிருந்து  அன்போடு அழைக்கிறோம் .   ஓம் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை கெட்டியாக நாவில் பதித்து உச்சரித்தால்  பாறைக்கல்லோடு கட்டி கடலில் தள்ளினாலும்  உயிர்காக்கும் என்றும்  பெரும் நல்ல  துணையாக  பாதுகாக்கும்  என்று அனுபவ பூர்வமாக சொல்கிறார்  திருநாவுக்கரசர். 

பாடல் 2:
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.

பூக்களில் சிறந்தது தாமரை, வெண்தாமரை, செந்தாமரை என்ற அவ்விரு தாமரைகளுக்குமே அழகுக்கு அழகாக சிறப்பு தருவது  வெண் தாமரைக்கு  கலைமகளும், செந்தாமரைக்கு  திருமகளும்.   சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வித்து நைவேத்யமாக அளிக்கும்  பஞ்சகவ்யம் பசுவிற்கு  சிறப்பை தருகிறது. பசும் கோமியம் அதில் முக்கிய பொருள்  அல்லவா   நீதி வழுவாது செங்கோல் ஒச்சுவது  ஒரு நாட்டின் ராஜாவுக்கு சிறப்பை தருவது.  இதெல்லாம் உதாரணங்கள், நமது நாவிற்கு  நல்ல சிறப்பை தருவது  ஓம்  நமசிவாய எனும் பஞ்சாக்ஷர ஐந்தெழுத்து மந்திரம். 

பாடல் 3:
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் இவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.

மேகத்தை முட்டும் அளவிற்கு அடுக்கி அடுக்கி விறகு கட்டைகள் வைத்தாலும்  ஒரு சிறு தீப்பொறி போதும், அத்தனையும் சாம்பலாகிவிடும்.  அது போல  எத்தனையோ ஜென்மங்கள் எடுத்து கோடிக்கணக்கான பிறவி எடுத்து புரிந்த பாபங்கள் கர்மவினைகள் எல்லாமே  வேரோடு அழிக்க உதவுவது ஓம் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம். 

பாடல் 4:
இடுக்கண் பட்டு இருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோம் அல்லோம்
அடுக்கற் கீழ்க் கிடக்கினும் அருளினால் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே.

எனக்கு நிறைய  கஷ்டங்கள்  துன்பங்கள் இருக்கிறதே, தீர்த்து வை  என்று யாரையாவது கேட்டு பலனுண்டா?  கேட்க எண்ணம் தோன்றுமா?   சாமகானம் பாடும்போது   கைலாயமலையை தூக்க முயற்சித்து  அதன்கீழ் மூச்சுவிடமுடியாமல் நசுங்கிய ராவணனை   ஞாபகம் இருக்கிறதா? அப்படி கர்மவினைகள் நம்மை நசுக்கினாலும் நம்மை அத்தகைய  துன்பத்திலிருந்து விடுவிப்பது ஓம் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் ஒன்றே. 

பாடல் 5
வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கு எலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழு நீண்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சி வாயவே.

நீயே  கதி என்று  சிவனை வணங்கி விரதம் இருக்கும்  சிவனடியார்கள் சிவப்பழமாக துலங்க ஒளியுடன் அழகூட்டுவது   நெற்றியிலும் உடலிலும் அவர்கள் பூசும் பால் வெண்ணீறு.   திருமறை கற்ற  அந்தணர்க்கு  அழகு  அவர்கள் ஓதும்  வேத ஒலி.   அவன் ஒலிக்கும் ஷடங்கம் ,
 ஆறு அங்கங்கள் :சிக்ஷ (எழுத்திலக்கணம்) , வியாகரணம் (சொல்லிலக்கணம்), நிருக்தம் (நிகண்டு), கல்பம் (கர்மாநுஷ்டான முறை), சந்தஸ் (பாவிலக்கணம்), ஜ்யோதிஷம் (சோதிடம்) என்பவை.பிராம்மணன் வேதங்களையும் இந்த ஆறு அங்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் வேதாத்யயனம் செய்யவேண்டும். அந்த வேதத்திற்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் பொருட்டு, இந்த ஆறு அங்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  அதுவே  அவனுக்கு அழகூட்டும்.   சிவபெருமானின் திருமுடிக்கு அணியாய்த் திகழ்வது பிறைச் சந்திரன். சிவனடியார்களுக்கு  அடியவர்க்கு அழகூட்டுவது,  ஓம் நமசிவாய  எனும் ஐந்தெழுத்து.

பாடல் 6:
சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
நலமிலன் நாடொறு நல்குவான் அலன்
குலமிலராகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே.

பரமேஸ்வரன்  எல்லோருக்கும் பொதுவானவன்.  அனைவர்க்கும் அருள் புரிபவன்.  அவனது தாளை ச் சரணடைந்தவனுக்கு  முக்திஅளிப்பவன். . ஆகம விதிப்படி ஆச்சாரம் - ஒழுக்கம் இவைகளைக் கொண்டு வாழ்பவர்க்கும், அவற்றில் இருந்து நீங்கி நிற்பவர்க்கும், அவரவர் தன்மைக்கு ஏற்ப திருவருளைப் பெற்றுத் தருவது ஓம் நமசிவாய எனும்  ஐந்தெழுத்து. 

பாடல் 7:
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச்சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே.

எனக்கு  சிவனைப் பிடிக்கும் அவனது அடியார்களை காணும்போது அவனைவிட அவர்களை ரொம்ப பிடிக்கும். அதிலும்   அவர்கள் ஓதும்  ருத்ரம் சமகம் ஒலி  எங்கோ கலசத்துக்கு கொண்டு செல்லும்.  நான் பல சிவாலயங்களில் மணிக்கணக்காக  ருத்ரம் சமகம் சொல்லி மகிழ்ந்தவன்.  தேவாரம் திருவாசகம் ஓதும் ஓதுவார்களை ஆவலோடு பக்தியோடு கேட்பது பிடிக்கும்.  ஓம் நமசிவாய என்று சொல்வது எல்லாவற்றையும் விட  அதிகமாக  பிடிக்கும்.  காந்தம் போல்  நாடிச்செல்ல  தேடி ஓட  வைக்கும் தன்மையது ஐந்தெழுத்து. அவ்வளவு  பெருமை வாய்ந்தது. .

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.

நமது இல்லங்களில் இருளைப்போக்குவது  விளக்கு. ஒளி. தீபம்.  புற  இருளை நீக்க இந்த ஒளி.    அக்னி, ஜோதி ஸ்வரூபம்  சிவன்.  திருவண்ணாமலை ஜோதி, சபரி மலை ஜோதி எவ்வளவு மனதுக்கு இனிமை தருகிறது. ஹரஹரமஹாதேவா, ஸ்வாமியே ஐயப்பா என்று எல்லாம் சொல்லவைத்து இன்பம் தருவது.  எந்த வித ரூபத்தில் ஒளி இருந்தாலும்  மனதுக்கு சந்தோஷம் தருகிறது. தீபாலங்காரம்  பார்க்க பரவசம் தருவது அல்லவா. அதுபோல்  அக  இருளைபோக்குவது   அஞ்ஞானத்தை அழிப்பது ஓம் நமசிவாய எனும் பஞ்சாக்ஷர மந்திரம். ஐந்தெழுத்து.

பாடல் 9:
முன்னெறியாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரணாதல் திண்ணமே
அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கெலாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே.

மௌன குருவாக, தட்சிணாமூர்த்தியாக,  அசையாமல் நன்னெறி  காட்டி  அருள்பவர் மூல முதல்வனான முக்கண் மூர்த்தியான  பரமேஸ்வரன். ஞானமார்கத்தில் முன்னேற சிவபெருமானின் திருவடிகளை அடைய முனையும் அனபர்களுக்கு அரும் துணையாய் விளங்கி உய்விப்பது ஓம் நமசிவாய எனும்  ஐந்தெழுத்து மந்திரம். 

பாடல் 10:
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே.

இந்த பத்தாம் பதிகம்   பலஸ்ருதியாக விளங்குகிறது. மான்  மழு  ஏந்திய உமையொரு பாகனின் திருவடிகளை உள்ளம் பொருந்துமாறு தொழுவதற்கு, ஓம் நமசிவாய  என்று நா மணக்க  மனதினிக்க இந்த பதிக பாடல்களை  பாடும், ஓதும்  அன்பர்களை, சிவனடியார்களை  எந்த துன்பமுஜம், தீங்கும், தீமையும் அணுகாது என்கிறார்  திருநாவுக்கரசர். 


sivan jaykay

unread,
Jul 13, 2020, 9:02:49 PM7/13/20
to amrith...@googlegroups.com
                                                          கொஞ்சூண்டு  யோசிப்போமா?    J K  SIVAN 

மாதக்  கணக்காக   கொரோனாவுக்கு பயந்து    அனைவரும்  வீட்டில் பதுங்கி இருக்கும் வேளையில்  நிறைய  நல்ல விஷயங்கள் சொல்லி இருக்கிறேன்  என்ற  சந்தோஷம் எனக்கு இருக்கிறது.    கோரோனோ  பீதி சீக்கிரமே  விலகும்.  பழையபடி வாழ்க்கை திரும்பும்.   ஆனால்  இந்த நாலு மாத பழக்கங்கள் சிலவும்  கட்டாயம் தொடரவேண்டும். 

யாரையும்  தொடக்கூடாது. சற்று தூர நின்று  கைகூப்பி வணங்கினால் போதும். வாயை,  மூக்கை மூடும் பழக்கம் நல்லது.  வெளியே சென்று வந்ததும் கைகால்களை கழுவிவிட்டு உள்ளே வரவேண்டும். பழைய சட்டை துணிகளை நனைக்கவேண்டும். குளிக்க வேண்டும். வெளியே  உணவு பண்டங்கள் சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். 

கட்டாயம்  கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை  பழக்குங்கள். எதற்கு  கோவில் செல்லவேண்டும் என்று கேட்போருக்கு  சில காரணங்களை விளக்கலாம்: 

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்களை  பழையகாலத்தில் கட்டி இருக்கிறார்கள். 

பாசிட்டிவ்  சக்தி என்கிறோமே  அந்த சக்தி,  ENERGY  போன்ற மின்காந்த சக்தி அங்கே உண்டு.  அப்படிப்பட்ட சக்தி   நிரம்பிய   இடம் தான் கோவிலில்   கர்ப்பகிரகம்  எனும்  மூலவர் சந்நிதி . கோவிலால்  தான் அந்த சுற்று வட்டாரமே  காந்த சக்தி,  ஆகர்ஷண சக்தி பெறுகிறது.  

 மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட இடத்தில்  அடியில்  கீழே சில செப்பு தகடுகள்  மூலிகைகள் பதிக்கப்  பட்டிருக்கும் அது தான்  அந்த எனர்ஜியை  மின்காந்த சக்தியை,  பன்மடங்காக்கி வெளிக் கொணரும். கற்பகிரஹத்தில் ஜன்னல்கள் கிடையாது.  ஆகவே  அந்த  சக்தி வெளியே தப்பி  செல்ல இடமிருக்காது.  ஒரே வழி  கற்பகிரஹ வாசல். அதனால் சந்நிதிக்கு வெளியே அது வேகமாக வெளியேறும் இடத்தில் நாம் நிற்கிறோம். நமக்கு அந்த பலன் கிடைக்கிறது.  கர்பகிரஹம் என்றாலே தாயின் வயிற்றில் கரு வளரும் இடம் போல்  ஜன்னல், வெண்டிலேட்டர் எதுவுமில்லாதது.    மூல ஸ்தானம்   ஒரே ஒரு சிறிய குனிந்து வெளியேவரும்  வாசல் மட்டும் தான் கொண்டது. ஒருவர் இருவர் மட்டுமே உள்ளே செல்ல இடம்  உள்ளது.   

 கோயில்  ப்ராஹாரத்தை  ப்ரதக்ஷிணமாக,   இடமிருந்து வலமாக   ஏன் சுற்றி வருகிறோம்? மூலவர் கருவறையிலிருந்து வெளிவரும் எனர்ஜியின்  சுற்று பாதை  அது.  அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே  அந்த எனர்ஜி சுற்று ம்  பாதை யோடு  நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே நம் தேகத்தில் சேரும்.  அது   உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில்   மின் விளக்கு உபயோகிப்பதில்லை.  எண்ணெய், நெய்   தீபம்  கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்.  விக்கிரகத்திற்குப்   பின் ஒரு விளக்கு இருக்கும்    அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும். அது அந்த  மின்காந்த சக்தியை, எனர்ஜியை அப்படியே  பிரதிபலித்து  சுவற்றிலடித்த பந்துபோல்   வெளியே   தள்ளும். 

 மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும்  அபிஷேகம் செய்வதால்  அந்த சக்தி  கூடுகிறது. அபிஷேக  நீரில் சக்தி கலக்கிறது.  அதை தான் ஒளஷதம் என்று நமக்கு தாமிரப்பாத்திரத்தில் கொண்டுவந்து தருகிறார்கள்.   தாமிரப்பத்திரத்தில் உள்ள அந்த நீரில் என்னவெல்லாம் கலந்திருக்கிறது என்று தெரியுமா?
பூக்கள்,  கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) ஆகவே  தாமிர செம்பில் விநியோகம் செய்யும்  அபிஷேக  தீர்த்தம்  ஒரு ஆன்டிபயாட்டிக்.

 ''அகால ம்ருத்யு   ஹரணம்  சர்வ ,வியாதி நிவாரணம், ஸமஸ்த பாப  க்ஷயகரம்  ஸ்ரீ  விஷ்ணு/வைத்யநாத  பாதோதகம் சுபம்....''   அகால மரணமோ, சகல நோய்நொடிகளும் வராமலோ, வந்தால் உடனே குணமாகவோ, எல்லா பாபங்களும் அழியவோ, என்று இந்த மூன்று  காரணங்களுக்காக மூன்று முறை  தீர்த்தம் அர்ச்சகர்/ பட்டாச்சாரியார் அளிக்கிறார். அது  சிவனோ/விஷ்ணுவோ  பாதத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட நீர் சுபத்தை அளிக்கவல்லது என்று மந்திரத்தின் அர்த்தம். 

அதனால் தான்  மூன்று தடவை கொடுக்கும் அந்த அபிஷேக தீர்த்தத்தை,  ஒன்று தலையில் தெளித்துக் கொள்ள, ஒன்று  கண்ணில்  ஒற்றிக்கொள்ள, உடலில் தெளித்துக்கொள்ள, மூன்றாவது  உள்ளே கொஞ்சம் விழுங்க. உள்ளும் புறமும் சுத்தமாகிறது. புண்ணியம்  உள்ளே சேரட்டும் என்பதற்காக. 
மந்திர ஒளஷதமாகிறது  இந்த அபிஷேக நீர். வாய் நாற்றம், பல்,   இரத்தத்தை  சுத்தப்  படுத்தும் ஒரு அபரிதமான கலவை இந்த நீர்.   

நம் முன்னோர்கள்  தினமும்  காலை மாலை  தவறாமல்  கோயிலுக்குச்  சென்றார்கள், நோயற்று, நீண்ட காலம் வாழ்ந்தார்கள். 

கோயிலுக்குள்  சட்டை  அணியாமல் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு.   மேலே சொன்ன சக்தி, எனர்ஜி,  மார்பு கூட்டின் வழியே புகுந்து  தேகத்தில் செல்ல வசதியாக இருக்கும். 

பெண்களுக்கு ஆண்களை    விட இதய நோய் வருவது  குறைவாக   இருக்கும்  ஒரு காரணம்   தாலியில் இருக்கும்  தங்கம்.    செம்பு கலந்த தங்கம்  நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை உள்வாங்கி, கொழுப்பை  கரைக்கும் சக்தி கொண்டதாம். 

பல மைல்கள்  பிரயாணம் செய்து, பலமணிகள்  நின்று  மூலவரின் சந்நிதி அருகே  ஒரு சில நிமிஷங்கள் நின்றாலும்  அந்த  குறைந்த நேரத்தில் உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பு, நிம்மதி,   திருப்தி, சந்தோஷம் ஏற்பட காரணம், கோயிலின் மூலஸ்தானத்தில் இருந்து வெளிவரும் ஆகர்ஷண சக்தி. பாசிட்டிவ்  எனர்ஜி.

ஏன்  கோயிலில் கொடிமரம்? எதற்கு அங்கே நமஸ்கரிக்கிறோம்?  கொடிமரம் மூலஸ்தானத்திற்கு நேர் எதிரே இருக்கும். இரண்டிற்கும் ஒரு நேரடி WIRELESS   கம்பியில்லா தொடர்பு  உண்டு. கோயில்  கோபுரத்தின் மேல் இருக்கும் கலசம்  இடிதாங்கிகளாக  மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும்  மின் காந்த   அலைகள்  அந்த  உலோக கலசங்களை  வானில் இருந்து  தாக்கும் இடியை  எதிர்கொண்டு  மின் கடத்தியாக  செயல்பட்டு  இரிடியமாக  இடியின்  மின் சக்தியை திறன் இழக்க செய்கிறது. .

கோவிலுக்கு செல்வதால்  உடல் மட்டுமல்ல மனதும் மூளையும்  நல்ல எண்ணங்கள் கொண்டதாக  
சுத்தமாகும்.  

மேலே சொன்னதெல்லாம் அறிவியல் என்று எடுத்துக்கொண்டாலும்  அதற்கும் மேலே   மனதில்   பக்தி என்ற ஒரு விளக்கவொண்ணாத ஒரு அரிய  சக்தி சேருகிறது.  இறைவன் பாதுகாப்பான் என்ற நம்பிக்கை உற்சாகத்தை, தன்னம்பிக்கையை வளர்க்கிறது. 

sivan jaykay

unread,
Jul 13, 2020, 9:02:57 PM7/13/20
to amrith...@googlegroups.com
உங்களுக்கு தெரியுமா?     J  K  SIVAN   

நாம்  யோசிக்காத விஷயங்களை யார் யாரோ யோசித்து என்னென்னவோ விசித்திரமாக சொல்கிறார்கள். இதற்காக பல வருஷங்கள் ஆராய்ச்சி நடத்த நேரம் பணம் செலவு பண்ணுகிறார்கள்.  அவர்கள் சொல்லும்  விஷயங்கள் வேடிக்கையாகவும் ஆச்சர்ய மாகவும் கூட  இருக்கிறதே.  உண்மை யாக இருக்கும் என்றும்  தோன்று கிறது. உலகளவில்  ஆராய்ச்சி  நடத்திய வர்கள்  சொல்லும்  அந்த விஷயங்களில் ஒரு சிலது இன்று சொல் கிறேன்.  

1.  நாம் எங்காவது யாரையாவது சந்திக்க சென்றால்  நம்மைப்பற்றி முதலில்  அவர்கள்  எடை போடுவது  நமது காலில் அணிந்திருக்கும் செருப்பை  வைத்து தான்.  ரப்பர்  வார் செருப்பா,  பாடாவா,  bata  சுத்தமாக துடைத்து இருக்கிறதா,  பிய்ந்துபோய்  சுருங்கி  வளைந்து  தேய்ந்த செருப்பா?? முக்கியமாக  வெள்ளைக்காரர்கள்  நாம் அணிவது என்ன ஷூ  , எப்படி இருக்கிறது அதன் நிலைமை , என்பதை  வைத்து தான்  நம்மை எடை போடுவார்கள். 

2. 11 மணி நேரம் ஒருவன்  ஒருநாள் உட்கார்ந்து வேலை செய்தால்  அவன்  3  வருஷங்களுக்குள்  காணாமல் போகலாம். நூற்றில் ஐம்பது சதவிகிதம்  என்று பயமுறுத்துகிறார்கள்.
3.  உலகத்தில்  நம்மைப்போலவே அச்சாக  ஆறுபேர்  நிச்சயம் இருப்பார்களாம். அவர்களில் ஒருவரை நீங்கள் வாழ்க்கையில் ஒரு தரமாவது  சந்திக்கலாம் ''என்னடா  என்  உடன்பிறவா  உருவமே '' என்று பேசலாமாம்.

4   தலைகாணி இல்லாமல் படுத்தாள் முதுகு வலி குறையும். முதுகெலும்பு  வலு பெறும்

5.  நீ எவ்வளவு உயரம் என்பதை அப்பாவின் உயரம் முடிவு செய்வதைப்போல  நீ  எவ்வளவு குண்டு, எடை, என்பதை   உன் அம்மாவின் எடை நிர்ணயிக்கிறது என்கிறார்கள்.

6  நாம்  தூங்குவதைப் போல  நாம் விழித்துக் கொண்டிருக்கும்போது நமது உடலின் ஏதாவது ஒருல் பாகம் கூட   தூங்குமாம். அதை எழுப்ப  தலையை ஆட்டினால் போதுமாம் .7. நமது மூளை  முக்கியமாக  மூன்று விஷயங்களை  கவனிக்க தவறுவதில்லை.   எங்காவது கண்ணில் படும்  ஆகாரம். அழகான  மனிதர் கள்/மனிதைகள், எதிரே தோன்றும் ஆபத்து. 
8. வலது கைக்காரர்கள்  சாப்பிடும்போது  வலது பக்கம் தான்  கடித்து மெல்லுகிறார்களாம்.

9.  இன்ஸ்டன்ட்  டீயை   என்று  பேப்பர் பாக்கெட்டில் வரும்  தேயிலையை  பேப்பரோடு  காலனியில் ஷூக்குள் வைத்தல்  துர்நாற் றத்தை  போக்கிவிடுமாம்.

10. மேனாட்டு விஞ்ஞானி  ஆல்பர்ட் ஐன்ஸ்டின்   சொன்னது நடக்குமானால்   தேனீக்கள் உலகத்தில் இருந்து மறைந்துவிட்டால் மனித குலம்  அத்தனையும்  நாலே வருஷத்தில் மறைந்துபோகும்.

11 ஆப்பிளில்  நிறைய  ஜாதி இருக்கிறதாம்.  ஒரு நாளைக்கு ஒன்று என்று  ஒவ்வொரு வகையாக சாப்பிட  இருபது வருஷத்துக்கு மேல் ஆகலா மாம் .

12.  வாரக்கணக்கில் சாப்பிடாமல் இருக்கலாம். ஆனால்  11 நாள் தூக்கமில்லாவிட்டால்  ஆள் காலி.

13. சிரிப்பவர்கள்  நீண்டகாலம்  உடல்நலத் தோடு இருப்பார்களாம்.  மற்றவர்களைப் பற்றி என்ன பேச்சு.?

14. சோம்பேறிகள் ,  ஒருவேலையுமில்லாமல்  காலாட்டிக்கொண்டு உட்காருபவர்கள்  சிகரெட் பீடியினால் மறைபவர்கள் போல் இறந்து  போவார்களாம். 

15. நமது தேகத்தில்  அரைமணி நேரத்தில்  உண்டாகும் சூடு  1.5 லிட்டர் தண்ணீரை  கொதிக்கவைக்க  போதுமானது என்றால் ஆச்சர்யமாக இல்லை. 

16. நமது வயிற்றில்  இருக்கும்  ஹைட்ரொ  க்ளோரிக்  அமிலம் முக க்ஷவரம் செய்யும் பிளேடுகள் blades  முழுங்கினால்  கூட  கரைத்துவிடுமாம்.

17. குறைந்தது   கால் மணி  - அரைமணி நேரமாவது தினமும் நட.  சிரி.    மனா சோர்வை (depression) போக்கிவிடும்.

sivan jaykay

unread,
Jul 14, 2020, 9:41:37 PM7/14/20
to amrith...@googlegroups.com
                                                               
                           சென்னைக்கருகே  சந்திரன் கோவில்  J K  SIVAN 


இன்று  தொண்டைமண்டலத்து  (சென்னையை சுற்றியுள்ள)  நவகிரஹ க்ஷேத்திரங்களுள்  சந்திரன் க்ஷேத்ரமான  சோமங்கலம்  சோமநாதர் ஆலயம் பற்றி சொல்கிறேன்.  ஆயிரம் வருஷ கோவில் இது. 

சோமங்கலம்  சென்னையிலிருந்து 35 கி.மீ.  தாம்பரம் கிஷ்கிந்தா வழியாக  செல்லலாம்.  குன்றத்தூர் வழி செல்வது  சிரமமில்லாதது.குன்றத்தூரிலிருந்து கிட்டத்தட்ட ஒரு 10 கி.மீ . சோமநாதேஸ்வரர் அமைதியாக யார் தொந்தரவும் இல்லாமல் அங்கே நிசப்தமாக குடி கொண்டிருக்கிறார்.  சில ஸ்லோகங்கள், பாட்டுகள் பாடினேன் என்பதை விட சொன்னேன்  என்பது சரியான வார்த்தை.   இது தொண்டை மண்டல (சென்னையை ஒட்டிய ) நவகிரஹ ஸ்தலங்களில்   சோமங்கலம்  சந்திரன் ஸ்தலம். அதனால் தான் சோமன் பெயர் லிங்கத்திற்கு.   அம்பாள்  எயர் காமாக்ஷி.   மூலவர் எதிரே  நந்தி  பின்பக்கமாக ஏன் திரும்பி இருக்கிறார்?

எதிரி ராஜா படையெடுத்து வந்தபோது  அந்த பிரதேசத்தை ஆண்ட   சோழ ராஜா  சோமகாந்தன். ஒரு  சிவபக்த ராஜா,  சோமநாதேஸ்வரர் ஆலயத்தை கட்டிக் கொண்டிருந்தான்.  திடீர் என்று எதிரி படை வந்த விஷயம்  கேள்விப்பட்ட ராஜா  பதட்டமடைந்து  ''சோமநாதா  இது என்ன சோதனை, படை திரட்டக் கூட  நேரமில்லையே,எப்படி இந்த  ஊரை காப்பாற்றுவேன் ? என  வருந்தினான்.    சிவன் சும்மா இருப்பாரா?  

''நந்திகேஸ்வரா எதிரி படையில் எவனும் இங்கே நெருங்காமல் நீ பார்த்துக் கொள்'' என்று ஆணையிட, நந்தி வாசலைப் பார்த்தவாறு  திரும்பி நின்றார். அவரைப் பார்த்ததுமே, அவருடைய மூச்சுக்கு காற்றின் சப்தத்திலேயே எதிரிப்படை காணாமல் போய் விட்டதாம். எனவே தான்  இங்கே நந்தி சிவனைப் பார்க்காமல் வாசலைப் பார்த்து நிற்கிறார்.

இந்த கோவிலில் ஒரு அருமையான சதுர தாண்டவ நடராஜா இருக்கிறார். எங்கேயுமே பார்க்க முடியாதவர். ''சதுர' என்றால் '' சதிர்'' என்று ஒரு பெயரும் சதுரமான என்று ஒரு அர்த்தமும் உண்டு. சிவனின் தாண்டவங்கள், அஜபா நடனம், ஊர்த்வ தாண்டவம், ஆனந்த தாண்டவம் என்று எல்லாம் இருப்பது போல் ''சதுர' தாண்டவ மூர்த்தியாக சோமங்கலத்தில் காட்சி தருகிறார். இரு கால்களும் பின்னிக் கொண்டு கால்கள் தரையில் பாவியவாறு, சதிர் ஆடும் நிலையில் நிற்கும் தாண்டவ மூர்த்தி. அரிதானவர். சோமங்கலத்தில்  மற்ற சில  கோவில்களில் காண்பதைப்  போல நம்மால் படிக்கமுடியாத, எவரும் பராமரிக்காத (?) கல்வெட்டுகள் பரிதாபகரமாக இருந்தது.  

புராண கதை ஒன்று இருக்கிறது.  தக்ஷனுக்கு 27 பெண்கள். எல்லோரும் சந்திரன் மனைவிகள். ஆனால்  சந்திரன் மனதை கவர்ந்தவள்  ரேவதி.  இதனால் மற்ற 26 பெரும்  தக்ஷனிடம்  குறை யைச்சொல்ல, தக்ஷன் சந்திரனுக்கு அறிவுரை சொல்ல, சந்திரன் மாமனாரை உதாசீனம் செய்ய  தக்ஷன்  ''சந்திரா, உன் அழகால் தானே உனக்கு மமதை. ஒவ்வொருநாளும் உன் அழகை இழப்பாய்'' என  சபிக்க  தனது 16 கலைகளை, சோபையை  இழந்து   இங்கே வந்து  தவமிருந்து பழைய நிலை அடைகிறான்.  தேய்பிறை வளர்பிறையாக  மீண்டும்  அவன் அழகும் சோபையும் வளர்கிறது.  சந்திரன் தவத்தை மெச்சி  சிவன்  அவனை பிறைச்சந்திரனாக தலையில் சூடிக்கொள்கிறார்.   சந்திரன்   சாபம் தீர்த்தத்தால்  சோமநாதர் என்று சிவனுக்கு பெயர்.     நவகிரஹ சந்திரதோஷ பரிஹார ஸ்தலம்.   சந்திரனுக்கு தனி  மேற்குபார்த்த சந்நிதி. 

குலோத்துங்க சோழன் 1073ல் கட்டிய ஆலயம்.   கல்வெட்டில்  சோமங்கலத்தை   ''ஜெயங்கொண்ட சோழமண்டலத்து செங்காட்டுக்கோட்டத்து மாகனூர் நாட்டு சோமங்கலமான ராஜசிகாமணிச் சதுர்வேதிமங்கலம்''   என்று  மூச்சுவிடாமல் சொல்லமுடியாத நீண்ட பெயராக சொல்லி இருக்கிறது.  நான்கு  வேதங்களை  ஓதும்  அந்தணர்களுக்கு  ராஜாவால்  தானமாக வழங்கப்பட்ட  மானிய நிலங்கள்  சதுர்வேதி மங்கலம்  எனப்படும்.   இங்குள்ள  ஏரி  ஒன்று உடைந்து சேதமானதை ரிப்பேர் செய்ததை , ஆலய தீப கைங்கர்ய  வருமானத்துக்காக  பசுக்களை தானம் வழங்கியது பற்றி  கல்வெட்டு சொல்கிறது.  கோவில் விமானம்  கஜப்பிரஷ்ட ரகம்.  தூங்கானை மாடம் என்பார்கள்.   ஸ்தல விருக்ஷம் சரக்கொன்றை மரம். அதனடியில்  சிறிய லிங்கம். விருக்ஷலிங்கம். 

பிரஹாரத்தில்  சுவரில் சிற்பங்கள். சப்தமாதாக்களோடு  மஹாலக்ஷ்மியின் மூத்த சகோதரி....  ஜ்யேஷ்டா  தேவி  காணப்படுகிறாள்.  பாற்கடலில் இவளும் தோன்றியவள்..


sivan jaykay

unread,
Jul 15, 2020, 9:30:05 PM7/15/20
to amrith...@googlegroups.com
பட்டினத்தார்                          J K  SIVAN   

                                                       ஞாபகத்தில்  வைக்க.....

பட்டினத்தார் பற்றி எழுதினால்  படிக்க  உங்களுக்கு பிடிப்பது போல  எழுத எனக்கு  ரொம்ப பிடிக்கும்.  அவரைப்பற்றி நிறைய எழுதலாம்.   ஒரு ஆபத்து என்னவென்றால்  நிறைய  அவரையே சிந்தனையில் தேக்கி  எழுத,   படிக்க ஆரம்பித்தால் நாமும்  வேட்டியை கிழித்து கோவணமாக தரித்து,   வீட்டை விட்டு கிளம்பிவிடுவோம்...  அந்த அளவுக்கு  உலக வாழ்க்கையின் மாயையை புட்டு புட்டு வைப்பவர்.  நல்லவேளை கொரோனா விடுமுறை காலம் என்பதாலும்,  வீட்டை விட்டு வெளியே போகமுடியாது, போலீஸ் விடாது என்பதாலும்  பட்டினத்தாரைப் பற்றி ,  பற்றின்மையை, பற்றி  தொடர்வோம்.  

பட்டினத்தார் என்கிற  திருவெண்காடர்,  ஒரு பெரிய வேதாந்தி. மிகப்பெரிய பணக்காரன், கப்பல் வியாபாரம் செயது காவி ரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த வணிகன்.  காதறு ந்த ஊசியும் கடை வழி வாராது காண்  என்று  மகன் மருதவாணன் (திருவெண்காட்டு ஆலய சிவனே மகனாக  வந்தவர்) எழுதிய ஓலை நறுக்கு அவரை முற்றிலும் புரட்டிப்போட்டது.  ( காவிரிப்பூம்) பட்டினத்தார் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். நமது சென்னையில் திருவொற்றியூரில் சமாதி அடைந்தவர். இன்றும் அங்கே அவர் சமாதி கோவில் இருக்கிறது.  அவரைப் பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன். 

பட்டினத்தார் பாடல்களுக்கு தனியாக விளக்கம் தேவை இல்லை. எளிதில் புரிகிற தமிழ். அர்த்தம் ஆழமானது. எளிய தமிழ்ச் சொற்கள். இன்று சிலவற்றை ரசிப்போம்.
                             
நினைமின் மனனே ! நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே !
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க !

தம்பி  நினைவு கொள் , சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார்?  சிவனை நினைத்தவர் எவர் தாழ்ந்தார்? இந்த உடம்பை  நினைத்து நாளைப்  போக்குகிறாயே. இது பேய்த்தேர். கண்மூடி கண் திறப்பதற்குள் காணாமல் போகக் கூடியது. இதுவா சாஸ்வதம்?  வயிற்றைப் பற்றி நினைக்காமல் வைத்யநாதனை நினை.  உடம்பை பற்றிய எண்ணமே வேண்டாம். எண்ணத்தில்  உமாமகேஸ்வரன் நிரம்பட்டும். 
        
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;

இந்த உலகத்தில் வாழும் எல்லா உயிர்களுக்கும் ஒரே  ரூல் தான்.  பிறப்பு  X பிறப்பு,      தோற்றம்  X மறைவு,   பெரிசு   X சிறிசு, நினைவு  X  மறதி,  சேர்வது  X பிரிவது,   இன்பம்  x துன்பம்,   இதெல்லாம் மாறி மாறி  வந்தே தீரும். ஒன்றுக்கு மகிழ்வது இன்னொன்றுக்கு அழுவது  வேண்டாம்.  ரெண்டையும் சமமாக மதிக்கும்  ''மதி'' வேண்டும்.

அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்;
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், அனைத்து நினைக்கொன்றன.

ஐயாமார்களே ,  கவனம் வையுங்கள்.  இன்று  சாப்பிட்ட  பாதாம் அல்வா  நாளை  காலை ????  FLUSH  OUT  பண்ணாமல்
  அந்த பக்கமே போகமுடியாது.  இன்று எது பிடிக்குமோ மறு நாள் அது பிடிக்காமல் போகிறது. அப்படியும் திரும்பி திரும்பி பல பிறவிகளில் நாம் மாறாமல் செய்ததையே செய்கிறோமே. நாம் ரொம்ப  பிடித்து செய்தது, சொன்னது,  தின்றது, எல்லாமே திரும்ப சிலகாலம் கழித்து  சர்க்கரையாக,  புற்று நோயாக நமக்குள் வளர்ந்து  நமக்கு  வேட்டு வைத்து கொல்கிறது இல்லையா?

 தின்றனை அனைத்தும், அனைத்து நினைக் கொன்றன;
பெற்றனை அனைத்தும், அனைத்து நினைப் பெற்றன;
ஓம்பினை அனைத்தும், அனைத்து நினை ஓம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை;
சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை;

இனிப்பு நிறைய சாப்பிட்டாயே , இப்போது இனிப்பு உன்னை தின்கிறதே!   முற்பகல் நீ செய்தது உன்னை பிற்பகலில் ஆட்டுவிக்கிறதே. பார்க்கிறோமே நிறைய பேர் தவிப்பதை.   எதை நீ தேடி சென்றாயோ, அது உன்னை தேடி விஸ்வரூபத்தில் வந்து வாட்டுகிறதே. செல்வந்தனாக இருந்தாய். அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் போனாய்.  படமெடுத்தவன்,  கிண்டியில் குதிரை வாலில் பணம் கட்டியவன், சீட்டாட்டத்தில்   வீடு தோட்டம் எல்லாம் துறந்தவன்,   லாட்டரி சீட்டில் கோட்டை விட்டவர் எனக்கு தெரிந்து பலபேர்.    ஸ்வர்கத்தில் உனக்கு ஈடு இணை எவரும் இல்லை என்று கொடிகட்டி பறந்தாய். இதோ இப்போது எங்கே இருகிக்கிறாய்? இது நரகம் இல்லையென்றால் வேறு எது  தம்பி சொல் ?

''இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை;
ஒன்றொன்று ஒழியாது உற்றனை; அன்றியும்,
புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்
என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாகக் கருதினை; இதனுள்

பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி;
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி;
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி;

சலமும் சீயும் சரியும் ஒருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை''.

இதை எழுதுவதற்கே கொஞ்சம் அருவறுப்பாகவும் பயமாகவும்  இருக்கிறதே. படிக்கும்போது உங்களுக்கு அப்படி இருக்காதா? அதனால் அதிகமாக விளக்கி ஓடிவிடும்படியாக செய்யவில்லை.  

பன்னீரில் குளித்து, ஜவ்வாது சென்ட்  உடலில் பூசிக்கொண்டு பட்டு சட்டை வேஷ்டி ...பாதம் ஹல்வா,  பாதாம் கீர்,...  தங்கத்தட்டில்  சாப்பிட்டு   உடம்பை வளர்த்தாயே, இப்போது நன்றிமறந்து அது உனக்கு  என்ன செய்கிறது பார்தாயா?     சீழும் ரத்தமும், பீளை, மலம், சளி, இருமல், வியாதி பிண்டமாக இருக்கிறாய். அருகே வரமுடியாமல் நாற்றமெடுத்து அசைய முடியாமல் கிடக்கிறாய். நீ வளர்த்த உடம்பு சுடுவதற்கு தயாராகி விட்டது. எலும்பு மட்டுமே கொஞ்சூண்டு .  மற்றது எல்லாமே  சாம்பல். இப்போது புரிந்து கொள்கிறாயா எதற்கு முக்யத்வம் கொடுக்கவேண்டும் என்று.  சாம்பலை பூசி சன்மார்க்க ஞானம் தரும் சம்புவை பிடித்துக்கொள்.


பட்டினத்தாரை ரொம்ப  பிடிக்கிறது  இல்லையா? . இப்படி  சுலபமாக தமிழில் எழுத நமக்கு வருமா?

sivan jaykay

unread,
Jul 15, 2020, 9:30:06 PM7/15/20
to amrith...@googlegroups.com
 
கீதாஞ்சலி  14    J.  K.   SIVAN 
தாகூர் 

                                                         14. ஆசை அறுமின்கள்....

14   My desires are many and my cry is pitiful,
but ever didst thou save me by hard refusals;
and this strong mercy has been wrought into my life through and through.
Day by day thou art making me worthy of the simple,great gifts that thou gavest to me unasked---
this sky and the light, this body and the life and the mind---
saving me from perils of overmuch desire.

There are times when I languidly linger and times
 when I awaken and hurry in search of my goal;
 but cruelly thou hidest thyself from before me.
Day by day thou art making me worthy of
thy full acceptance by refusing me ever and anon,
saving me from perils of weak, uncertain desire.

இதுவரை ரவீந்திர நாத் தாகூர் எழுதிய  உலகப்புகழ் வாய்ந்த  நோபல் பரிசு பெற்ற  கீதாஞ்சலி  13பாடல்கள் என் வழியில் எழுதி வந்துள்ளேன்.   

நான்  நன்றாக புரிந்து கொள்ளும்படியாக எழுதுகிறேனா என்பது  சந்தேகம்.   நீங்கள் தான் தெரிவிக்க வேண்டும்.  ஏனென்றால் ஏற்கனவே தாகூரை  புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்.   தாகூரை  அடையாளம் கண்டுகொள்ள ரொம்ப பொறுமை வேண்டும். நெஞ்சில் அமைதி வேண்டும். தாகூர்  எழுத்து வன்மை இணையற்றது., ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்.  எதையும்  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நம்மைப்போல  நேரடியாக சொல்லமாட்டார். அழகிய  இலை  மறைவு காய் மறைவு  உவமைகளில்  உண்மையை சொல்வதில் மன்னன்.    ஆழ்ந்த சிந்தனையின்அழகிய  அழுத்தமான  பொருத்தமான    எழுத்துகள் .   அதனால்  தான் நோபல்பரிசு! அவரே வங்காள மொழியில் எழுதி  அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து  தந்தது.அடுத்த  14வது  கீத  அஞ்சலி  இன்றைக்கு. 

++  
ஆசை என்பதே  அலைபோல தான்.  நாம்  எல்லோரும் அதன்மேலே  ஓடம்போல  ஆடி அலைக்கழிக்கப் படுப
வர்கள்
. வாஸ்தவம். ஆசை நிறைவேற வேண்டும் என்ற தாகம், வேகம், அது நிறைவேற தாமதமானாலும் நடக்காவிட்டாலும் சோகம்......எவ்வளவோ அழுதுவிட்டேன்.. கிருஷ்ணா, கண்ணீர் வற்றிப்  போய்விட்டது.   என் ஆசை நிறை வேறவில்லை, நீ தயை  புரிவது தெரியாமல் நீ கல்நெஞ்சக்காரன் என்று ஏங்கி நொந்தேனே.  தேவையற்ற  என் ஆசைகள்  நிறைவேறாமல் நீ காத்து அருளியிருக்கிறாய் என்று அப்புறம் தானே புரிகிறது.  குழந்தையின் நல்வாழ்வுக்கு உடல் நன்மைக்கு உதவாது என்றறிந்து  அது  இனிப்பு கேட்டால் மனோ திடத்தோடு  மனஉறுதியோடு   தாய் கண்டிப்பாக  கொடுப்பதில்லையே. என் மீது உன் எல்லையற்ற கருணை நீ பொழிவதை  அறியாத  அஞ்ஞானி நான். 

''கிடையாது போ. நடக்காது ''  என்று பலமுறை நீயும்  என் தாயாக  என் ஆசை வெள்ளங்களுக்கு அணைபோட்டவன். கடின இதயம் உனக்கு இந்த விஷயத்தில்.     நீ   எனக்கு நல்லது தான் செய்திருக்கிறாய்.   இந்த உறுதியான உன் கருணையை  நான்  என்வாழ்க்கையில் பல முறை அநுபவித்தவன் 

கண்ணம்மா,  என் மனம் நீ அறிவாய்.  மேலே பார்க்கிறேன்  கருமையான  யானை யானையாக  மேக கூட்டங்கள் மெதுவாக அசைந்து ஒன்று மேல் ஒன்று ஏறி விளையாடுகிறது.  வானத்தை மறைத்து கருமை படர்கிறது. பெரிய மழை ஒன்று நிச்சயம் காத்திருக்கிறது.  என்னை ஏன்  உன் வாசலிலேயே நிற்க வைத்து காத்திருக்க செயகிறாய். என்னை ஏன் உள்ளே சேர்த்துக்கொள்ளவில்லை. கண்ணம்மா, காத்திருக்கிறேனே தெரியவில்லையா?

என்னைப்பற்றி தெரியுமே.  பகலெல்லாம் எங்கெல்லாமோ அலைந்து திரிந்து எவரிடமோ பழகி என் வேலையாக இருந்து விட்டேன். இதோ இரவு நெருங்கும்போது  அவர்கள் யாரும் என் கண்ணுக்கு தெரியவில்லை. எங்கும் இருள் சூழ்கிறது.  நீ மட்டுமே தெரிகிறாய். என் புகலிடம் நீ மட்டும் தானே. என் நம்பிக்கை நக்ஷத்ரம்.

கண்ணம்மா, நீ உன் முகம்காட்டி  தலை அசைத்து புன்னகைக்காவிட்டால் நான் என்ன செய்வேன். பாராமுகம் ஏனம்மா? முழுசாக நான் ஒருவன் நிற்பது கண்ணில் படவில்லையா?ஜோ வென்று மழை கொட்டும்போதும்  நான் தொப்பலாக உன்னை தேடி எதிர்பார்த்து தான்  நிற்பேன்.எனக்கு வேறு எதுவும் தெரியாதே.  வானத்தை நோக்கி  கண்ணிமைக்காமல் பார்த்து நிற்கும் என் மனம் அலை பாய்கிறதே.  என்  இதயத்திலிருந்து  ''உன்னைக் காணாத நெஞ்சம்..... என்று சோகமாக ஒரு மெல்லிய கீதம் புறப்படுகிறதே உன் காதில் விழுகிறதா?காற்றோடு கலந்து என்னை விட்டு சென்றதே.

 கிருஷ்ணா,  நீ  ஒவ்வொரு நாளும் நான் கேட்காமலேயே எத்தனை அருமையான பரிசுகள் தருகிறாய். இதோ மேலே பார்த்து மயங்குகிறேனே இந்த பரந்த நீல நிற அளவற்ற ஆகாயம், அதில்  சூரிய சந்திர  நக்ஷத்ர ஒளி ஒன்று விட்டு ஒன்று. இதோ இந்த அற்புதமான விந்தை பல கொண்ட உடம்பு, தேகம், அதற்குள் உன் அம்சமாக ஒரு உயிர், இதற்காக உன்னை நன்றியுடன் நினைக்க ஒரு மனம், ஒரு அன்பு நிறைந்த இதயம்.  ஆமாம்  தந்திருக்கிறாய் .....ஆசையில் இருந்து விலக எத்தனையோ வழிகள்..  உன்னிடமின்றி நான் எங்கே இதை எல்லாம்  பெறுவேன் ?  எப்படி நன்றி செலுத்துவேன்.
 
 ''ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
 ஈசனோடாயினும்  ஆசை அறுமின்கள்  
ஆசை படப்பட ஆய் வரும் துன்பம்
ஆசை விட விட  ஆனந்தமாமே .....''

ஆமாம்,  நான்  நிறைய  திருமூலர் படிப்பேன். படிப்பதோடு சரி. உள்ளே விஷயம்  போனதில்லை, போனாலும் அதே வேகத்தில் எங்கோ வெளியேறிவிட்டது. மனதில் நின்றால் தானே பலன்?
 
நிறைய  தடவை அப்பப்பா,  உன் மேல் எவ்வளவு கோபம் பட்டிருக்கிறேன். நீ மட்டும் என் கையில் அப்போது  கிடைத்தி ருந்தால்.......அப்போது ,தேடியது எதற்கோ.  இப்போது உன்னை தேடுவது வேறு எதற்கோ....
பாதி தூக்கத்தில் கூட எழுந்து உட்கார்ந்து என் லக்ஷியம் எது என்று புரியாமலேயே அதை தேடுபவன் நான்.   கிருஷ்ணா,   நான் எவ்வளவு குட்டிக்கரணம் போட்டு தேடினாலும் நீ  எட்டாதவன், கிட்டாதவன் என்னிடம் மாட்டாதவன். கடின நெஞ்சம் கொண்டவன்.  நான் முட்டாள் கிருஷ்ணா, அப்புறம் தான் நிதானமாக புரிந்தது. நீ எப்படி கொஞ்சம் கொஞ்சமாக என் உலக ஆசைகளை எப்படியோ நிறைவேறாமல்  தடுத்து, விலக்கி   நிதானமாக, கொஞ்சம் கொஞ்சமாக  என்னை   உன் பால்  இழுத்து என் பலஹீனங்களை புரிந்து கொண்டு, என்  உபயோகமற்ற  எண்ணங்களை  நிறைவேறாமல், அழிய, உதவியவன். இல்லை கிருஷ்ணா, நீ    அவைகளிலிருந்து என்னை காப்பாற்றியவன், காப்பாற்றுகிறவன்,  என்றும் காப்பாற்றுபவன்.  உன்னை நன்றியோடு வணங்குகிறேன்.

.

sivan jaykay

unread,
Jul 15, 2020, 9:30:27 PM7/15/20
to amrith...@googlegroups.com
                                                                               தெய்வத்தின்  பாதுகாவல்   J K  SIVAN  

இந்தியா பாகிஸ்தான் எல்லை  இந்தியாவின் வடமேற்கே, ராஜஸ்தான்  ஜெய்சல்மேர்  பக்கம் லோங்காவலா என்கிற ஊர் பக்கம் இருக்கிறது.  

அந்த எல்லைப்பகுதியில்   ஒரு அம்மன் கோவில். தானொத் மாதா என்று அந்த சக்தி தேவிக்கு  பெயர்.  51  சக்தி பீடங்களில் ஒன்றை சார்ந்தது  அந்த ஆலயம்.  ஜெய்சால்மீர்  120 கி.மீ. தூரம்.    அங்கு தான்  தீவிரமாக  இந்தியா  பாகிஸ்தான் யுத்தம்  1971ல் நடந்தது.  பாலைவன  பகுதியில் உள்ள இந்த  ஆலயம் தெய்வீக சக்தி வாய்ந்தது என்றும்  அதிசயங்கள் நடந்தது .   1965ல்  பாகிஸ்தான் தாக்குதல்  புது  தானோத் மாதா  ஆலயம் அருகே  8   இந்தியவீரர்கள்  தான் காவல் இருந்தனர்.  பாக் ராணுவம் 3000 பேருடன் மோதியது.  எட்டுபேரும்  மாதாவின் ஆலயத்தில் வேண்டி நின்றனர்.  அவர்களுக்கு அப்போது மாத தோன்றி  இங்கேயே இருங்கள் வெளியே போகவேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாளாம். பாக் ராணுவம்  3000 குண்டுகளை வீசியது. ஒரு குண்டும் வெடிக்கவில்லை.  ஒரு குண்டு வெடித்தால் கூட அந்த பகுதியே  சின்னாபின்னமாகி இருக்கும்.  அது தான் மாதாவின் சக்தி.  இந்திய வீரர்கள்  பாகிஸ்தான்  ராணுவத்தை விரட்டிவிட்டார்கள்.  1971ல்  இந்த பகுதியில்  அம்பாள் சக்தியால் ஜெயிக்கமுடியவில்லை என்று பாக்  ராணுவம்  அருகே இருந்த  லோங்கோவால்  பகுதியில் தாக்கியது.   தானொத் சக்திமாதா ஆலயம் அருகே   தானே  லோங்கோவால். அங்கும்  பாகிஸ்தானால் வெல்ல முடியவில்லை.   அந்த கோவிலில் பூஜை செய்பவர்கள்  எல்லை ராணுவ வீரர்கள் மட்டுமே. உலகில் எங்காவது இந்த  அற்புதம் நிகழ்ந்ததுண்டா?.  

எதோ தெய்வ சக்தி பாரதத்தை காக்கிறது.  பாக் ராணுவ தளபதி   ஷாநவாஸ் கான் இந்திய பகுதி அனுமதியுடன்  தானொத் அம்மனை தரிசிக்க வந்து இந்த அதிசயத்தை கண்டு  அந்த அம்மன் ஆலயத்துக்கு வெள்ளி கூரை வழங்கினார் என்று செய்தி.   ஏராளமானவர்கள் 2500 ரூபாய் கொடுத்து டாக்ஸி பிடித்து  அம்மனை தரிசித்து செல்கிறார்கள்  என்று  ஒரு சிறிய  வீடியோ கிளிப்பிங்கில் படித்தேன். அதை இணைத்திருக்கிறேன். https://youtu.be/oqM8y1Lrlkk 


பாரதத்தை  தர்மம் நியாயம், நீதி நேர்மை காக்கிறது. எண்ணற்ற  சித்தர்கள் ஞானிகள் மஹான்கள் வாழ்ந்த பூமி.  ஒரு சில புல்லுருவிகளால் இதை அழிக்க முடியாது. 

sivan jaykay

unread,
Jul 15, 2020, 9:30:27 PM7/15/20
to amrith...@googlegroups.com
  தெவிட்டாத விட்டலா   J K  SIVAN 

                                                                                          லக்ஷ்மி கடாக்ஷம்

பாண்டுரங்கன் பக்தர்களில் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் ஒருவர் உண்டு என்றால் அது துக்காராம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.  மிகவும்  எளியவர். பணத்தாசை இல்லாதவர். குடும்பம் வறுமையில் தத்தளித்தபோதும் பணத்தை அவர் தேடவில்லை.  அவருக்கு கிடைத்த பணத்தை, பொருள்களை  யாரேனும்  ஏழைகள், பாண்டுரங்க பக்தர்களைக் கண்டால் கொடுத்துவிடும்  தாராளமனம் . அவர் மனது பூரா  பாண்டுரங்கன் மேல் பக்தி ஒன்றே நிரம்பியிருந்தது. அவரது அபங்கங்கள்  கேட்க  இனிமையானவை. பக்தி ரசம் சொட்டுபவை.  

வழக்கம் போல் ஒருநாள் பாண்டுரங்கன் ஆலயத்தில்  வெகுநேரம் இருந்து பஜனையில்  பங்கேற்று ரசித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார் துக்காராம்.  வழக்கத்துக்கு  மாறாக  அவர் மனைவி ஏதோ பூஜை செய்துகொண்டிருக்கிறாள்.

"இன்னிக்கு  வீட்டில்  என்ன விசேஷம்?  ஏதோ  பூஜை எல்லாம்  பண்றே?

"லக்ஷ்மி  கடாக்ஷம் வேணும் என்று ருக்மணிக்கு  லக்ஷ்மி பூஜை செய்யறேன் ''

"புரியல்லை,  எதுக்காக திடீர்னு இப்படி  ஒரு  பூஜை?

"நீங்க  கிருஷ்ணனை, பாண்டுரங்கனை  எப்பவும்  பாடுகிறீர்கள்,  ஆடுகிறீர்கள்.   அதுபோல தான் இதுவும்"

 "பூஜை பண்றது  நல்லது தான். ஆனால்  காம்யார்த்தமா  எதையாவது கிடைக்கணுனு வேண்டிக்கறது  சரியில்லை. நமக்கு  எது தேவை என்று  விட்டலனுக்கு தெரியும்.   தானே  அதை  நமக்கு  கொடுத்து கொண்டு தானே  இருக்கான். நமது வாழ்க்கை அவ்வாறு தானே  ஓடிக்கொண்டிருக்கிறது?''

கொஞ்சநாள் கழித்து  வீட்டில்  துக்காராம் மனைவி ஜீஜாவுக்கு  எப்படியோ  கொஞ்சம்  பணம்  கிடைத்தது. புதிய  துணிமணிகள்  எல்லாம் தனக்கும்  குழந்தைகளுக்கும்  வாங்கினாள். அடகு வைத்திருந்த  நகைகளை மீட்டு  அணிந்து கொண்டிருந்தாள்.

அன்று வீட்டுக்கு சாப்பிட வந்த  துக்காராம் கண்ணில் இது பட்டது.    சாப்பிட  உட்காரும்போது தான்  கவனித்தார்.  ஜீஜா  குழந்தைகள்  எல்லாம்  புது  துணிமணிகளை  அணித்திருக்கிறார்களே. 

''ஜீஜா.  ஏது இதெல்லாம்  எப்படி வந்தது ?"

"ருக்மணிக்கு  லக்ஷ்மி பூஜை பண்ணியதாலே  வீட்டிலே  இப்போ  கொஞ்சம்  சுபிக்ஷம்"  

அவள்  உள்ளே  சென்று  அவருக்கு  உணவு கொண்டு  வருவதற்குள்  அவர் சாப்பிடாமலேயே  எழுந்து  வெளியே சென்று விட்டார்.

சரி  அந்த மனுஷனுக்கு  எதோ கோபம்.  தானே  திரும்பி வருவார்  என்று   ஜீஜா காத்திருந்தாள்.  

ஒருநாள்,  இரண்டுநாள்,  மூன்றுநாள். துக்காராம்  வீட்டுக்கு  வரவே இல்லை.  வழக்கமாக  அவர் செல்லும்  பாண்டுரங்க  பக்தர்கள் நண்பர்கள் கடைத்தெரு எங்கு தேடியும்  "அவர் இங்கு வரவே இல்லையே"  என்ற  சேதி  தான்.  ஒருக்கால்  அடிக்கடி சொல்வாரே  பந்தர்பூர் போகவேண்டும் என்று, அங்கே போயிருக்கலாம் என்று தோன்றியதால் பந்தர்பூர் சென்று விசாரித்தாள். விவரம் கிடைக்கவில்லை. விட்டலன் முன்  நின்று  ஜீஜா அழுது கொண்டு   " பாண்டுரங்கா, நீ தான்  எனக்கு   என் துக்காராமை  திரும்ப தரவேண்டும்" என்று  பிரார்த்தித்தாள். அவள்  மனத்தில் யாரோ உன் வீட்டுக்கு அருகே இருக்கும்  ஒரு  சிறு  குன்றில் சென்று பார் என்று சொல்வது போல் இருக்கவே  உடனே  தனது ஊரான  தேஹூவுக்கு  திரும்பிச்சென்று  ஊருக்கு கடைசியில் உள்ள ஒரு சிறு  குன்றில் சென்று பார்த்தபோது  இளைத்து வாடி  விட்டலன்  மேல் அபங்கங்கள் பாடிக்   கொண்டு துக்காராம் அமர்ந்திருப்பதை கண்டாள். வீட்டை விட்டு  கிளம்பியவர்  அன்ன ஆகாரமே மூன்று நாட்களாக உட்கொள்ளவில்லை.

கண்ணை திறந்து பார்த்த  துக்காராம்  " ஜீஜா,  இங்கு எதற்கு  வந்தாய்?  நான்  இங்கு  சுகமாக  என் விட்டலன் மேல் அபங்கங்கள் பாடிக்கொண்டு  இருக்கிறேனே?"  என்றார்.   
 
"நீங்கள்  இல்லாமல்  நானும்  குழந்தைகளும்  எப்படி வாழ்வது?"

"அம்மா,  நீ தான் லக்ஷ்மி பூஜை செய்து  குடும்பம்  நடக்க  தேவையான  பொருள் பண்டம்  எல்லாம் பெற்றுக் கொண்டு இருக்கும்போது  நான்  எதற்கு? தேவை இல்லையே"

"இல்லை,  நீங்கள்  தான்  எனக்கு  வேண்டும்"

"சரி, அப்படியே ஆகட்டும்,  தயவு செய்து  அந்த  நகை நட்டு  எல்லாம் கழற்றி ஏழைகளுக்கு  தானம் செய்து விடேன். பழையபடியே இருப்போம்"

அவ்வாறே செய்தாள் ஜீஜா.  அவரோடு  சேர்ந்து  தானும்  விட்டலன் ஸ்மரணையில்  ஆழ்ந்தாள்.   
 
விட்டலன் புன்முறுவலுடன்  தன் ஆசைக்   குழந்தைகளை  ரசித்தான் என்று  முடிக்கட்டுமா, ரக்ஷித்தான் என்று சொல்லட்டுமா?



sivan jaykay

unread,
Jul 15, 2020, 9:30:28 PM7/15/20
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்  J K  SIVAN  
                                                                                            ''சங்கரனாவது கிங்கரனாவது''
                                          
மஹா பெரியவா பற்றி ஒரு சின்ன விஷயம்.    பெரியவா சம்பந்தமாக  ஒரே  சமாச்சாரத்தை  பல பக்தர்கள் பல மீடியாக்களில், பத்திரிகைகளில் வாட்சப்பில், முகநூலில்  பரப்பும்போது நாம் ஒன்றையே பல முறை படிக்க, பார்க்க,  கேட்க நேரிடும். அதில் எந்த தப்புமில்லை.  எல்லாம் இன்பமயம்.  அவரைப்  பற்றி யார் எவ்வளவு, எப்படி,  சொன்னாலும் கேட்க  அலுக்காது.   சொல்லும் விதம் வேறு வேறாக இருப்பதால் பாதம்  ஹல்வாவை பல இலைகளில்,  வித விதமான கலர்  தட்டுகளில், வேறு வேறு அளவில்  யார் யார் கையாலோ அன்பாக அளிக்கப்பட்டு  ரசித்து உண்ணும் சுகம்  கிடைக்கும் . 

இந்த விஷயம் அப்படிப்பட்ட ஓர்  பாதம் ஹல்வா அல்ல, அதை   விட  மேன்மையான இனிய அம்ருதம்.

மஹா பெரியவாவின் எண்ணற்ற பக்தர்களில் சதாசிவம் என்று ஒருவர்  கும்பகோணத்துக்காரர்.  எந்த அனுஷமும் அவரிடமிருந்து தப்ப முடியாது.    ரெண்டு மூன்று நாள் முன்பே  பெரியவா எங்கிருக்கிறார் என்று கேட்டு அறிந்துகொண்டு கட்டாயம் அன்று பெரியவா தரிசனம்.  ரொம்ப தூரத்தில் பெரியவா இருந்தால் போகமுடியாதபோது மனதால் அன்று முழுதும்  பூசலார் மாதிரி மனதர்சனம் .

ஒரு அனுஷம் அன்று கும்பகோணத்திலிருந்து   காஞ்சிக்கு போக  முதல் நாளை சாயங்காலம் பழம், கல்கண்டு, பூ வாங்க சென்ற போது என்ன ஆச்சர்யமாக இருக்கிறது ஒரு கடை கூட  ஏன் இன்று திறக்கவில்லை.  அப்போதெல்லாம் கொரோனா இல்லையே?

மூடப்பட்ட ஒரு கடையின்  வாசலில் கடைக்காரர் ஒருவரிடம்  ''ஏன் இன்னிக்கு கடை திறக்கலை?''

''மெட்றாஸ்லே  ஏதோ பெரிய  பிரச்னையாம்.  கும்பலா  கட்சிக்காரங்க கொடியோடு வந்து   எல்லா கடைகளும் மூடச்சொல்லிட்டாங்க.  வண்டி காடி கூட எங்கும் போகாது. எங்கேயும் போவாதே ''

"அட ஈஸ்வரா  அப்போ  காஞ்சிபுரம்  போக  பஸ்  இருக்காதோ ?''

''இன்னா சாமி இப்படி கேட்கறே,  கடையே மூட சொல்றவங்க  பஸ் போக விடுவாங்களா ? கட்சி காரங்க கல்லால அடிச்சு, எரிச்சுட மாட்டாங்களா ?'   சதாசிவம்  வீடு திரும்பினார். 

"ஏன் கவலையா திரும்பி வெறுங்கையோடு, பையோடு, வரேள் ?''

''ஜானகி, என்ன பண்றதுன்னு தெரியல.  தெருவெல்லாம் வெறிச்சுனு இருக்கு. கடையெல்லாம் மூடிட்டா, நாம இனிமே  காஞ்சிபுரம் போகமுடியாது போல இருக்கு. பஸ் ஓடாதாம்''  நாளைய  அனுஷம்..... ஆத்திலே தான் போல் இருக்கு. பிராப்தம் இருந்தா காஞ்சி புரம் போகலாம் '

வாசலில் நின்று சதாசிவம்  யோசித்துக்கொண்டே  சில மணிகள் ஓடியபின்  திடீரென்று ஒரு வெள்ளை நிற அம்பாஸடர் கார் அவர் வீட்டு வாசலில் வந்து நின்றது.  அதிலிருந்து  வெள்ளை வெளேரென்று  ஜிப்பாவுடன், பஞ்சகச்சம் கட்டிய, ரெட்டைநாடி மனிதர் இறங்கினர். நெற்றி முன் கைகளில் பட்டையாக கண்ணைப் பறிக்கும் வெள்ளை விபூதி.   அங்கு மிங்கும் தயங்கி தயங்கி பார்த்த அவர்  கண்ணில் சதாசிவம் பட்டு விடவே அவரிடம் வந்தார்.   கைகள் கூப்பின .  புன்சிரிப்பு.    சதாசிவமும்  யாரென்று தெரியாமல் பதிலுக்கு கைகூப்பினார்.


"சார்,   நமஸ்காரம்.  நான்  தஞ்சாவூர்.  சங்கரன்.  கார்லே  அம்புஜம். என் மனைவி.   உடம்பு திடீர்னு சரி யில்லாம போயிடுத்து. பொறுக்க முடியாத  ஒத்தை தலைவலியாலே  துடிக்கிறா.  வர வழியிலே ஹோட்டல் எதுவும் கண்லே  பட லே.     அவளுக்கு  ஒரு பழக்கம்.   கொஞ்சம் சூடா  காப்பி குடிச்சா தலைவலி பட்டுனு நின்னுடும்.   என்ன செயறது . வெட்கத்தை விட்டு கேக்கறேன்.  உங்க வீட்லே  கொஞ்சம்  சூடா   காப்பி, இருந்தா பில்டர் காப்பி  கிடைக்குமா.  உங்களுக்கு சிரமம் இல்லேன்னா  எனக்கும் சேர்த்தே ரெண்டு பேருக்கும் காப்பி கொடுப்பேளா?''

''என்ன சங்கரன் சார் இப்படி கேக்கறேள்?  மாமியை அழைச்சுண்டு உள்ளே வாங்கோ. சித்தே  உட்காரச் சொல்லுங்கோ. சூடா காப்பி போடச் சொல்றேன். ரெண்டே நிமிஷம்.  இருந்து டிபன் சாப்பிட்டுட்டும்  போங்கோ  வழிலே  இன்னிக்கு எதுவும் கிடைக்காது  போல  தோண்றது''

ஜானகி காபி போடுவதில் நிபுணி.    சுடச் சுட  காப்பி ரெண்டுபேரும் சாப்பிட்ட திருப்தி முகத்தில் தெரிந்தது. 

மெதுவாக  சதாசிவம் பேச்சு கொடுத்தார். 
''எதுவரைக்கும்  கார்லே   பிரயாணம்.  எந்த பக்கமா  போறேள் ?'

"ரொம்ப நாளா  பிளான். இன்னிக்கு காஞ்சிபுரம் போய் பெரியவாளை  காமாட்சியை ஏகாம்பரேஸ்வரரை தரிசிக்கணும்னு கிளம்பினோம்.  நான்  வெளியூர்லே வேலையா இருக்கேன். சிட்னி.  ஆஸ்திரேலியா.  போனவாரம் ஒன்றரை மாசம்  லீவ்லெ  வந்தேன்.   போறது போறோம், நாளைக்கு பெரியவா நக்ஷத்ரம்   அனுஷமா இருக்கே  போவோமே  ன்னு அம்புஜம் சொன்னா. உடனே கிளம்பினேன்.  கார்லே இடம் இருக்கு .நீங்களும் வரேளா?''

இது காதில் விழுந்தபோது சதாசிவத்துக்கு எப்படி இருக்கும் என்று எழுதாமல் வாசகர்கள் உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்.

வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பும்போது சதாசிவம் தம்பதியர்  பேசிக்கொண்டது சங்கரன் காதில் விழுந்தது. 
''இப்படி பழம் பூ கல்கண்டு இல்லாமல் பெரியவாளை பாக்க  போனது இல்லை. என்ன பண்றது கடை ஒண்ணுமே இல்லையே ''  என்றாள்  ஜானகி.

''எல்லாம்  ஏகமா  நான் வாங்கிண்டு வந்திருக்கேன் உங்களுக்கும் தரேன். ''-  சங்கரன் மனைவி.

 காஞ்சிமடம் போய் சேரும்போது இரவு  11மணி ஆகிவிட்டது.   

மடத்து வாசலில் கார் நின்றது.  ரெண்டு பெரிய  ஓலை தட்டுகளில் பழம் பூ கல்கண்டு எல்லாம் நிரப்பி  சதாசிவம் தம்பதியிடம் கொடுத்து விட்டு  சங்கரன்  '' உங்களை  இங்கே  மடத்து வாசலில் விடறேன்.  கொஞ்சம் தூரத்தில்  என் நண்பன் வீட்டுக்கு வருவதாக சொல்லி இருந்தேன். அவன் வீட்டுக்கு போய்  தங்கி விட்டு நாளை காலையில் இங்கே மடத்தில் உங்களை சந்திக்கிறோம் '' கார்  சென்றது.

சதாசிவம் மடத்து வாட்ச்மன்  அனுமதியுடன்  உள்ளே சென்று  தங்கினார். . 

பொழுது விடிந்தது.  எறும்பு சாரி மாதிரி  பக்தர்கள் கூட்டம் வரிசையாக வந்தார்கள். அன்று அனுஷம் அல்லவா? . சதாசிவத்துக்கு பரம சந்தோஷம். .  கடைகள் காஞ்சியில் திறந்து இருந்தது. புதிதாக பூ, பழம் எல்லாம் வேறு  அருகாமை கடைகளில் வாங்கிக்கொண்டு  சங்கரன் கொடுத்த தட்டு  நிரம்பி ,  தயாராக பஞ்சகச்சம் மடிசார் புடவையோடு வரிசையில் நின்றார்கள்.    நேரமாக  ஆக,  சதாசிவம் கண்கள்  எல்லோரையும் துழாவியது. எங்கேயாவது சங்கரன் கண்ணில் படமாட்டாரா?  கவனம் அதிலேயே  இருந்து தலையை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தனர் காதில்  யாரோ கூப்பிடுவது விழவில்லை.  
கூப்பிட்டவர் மடத்தில் ஒரு  சிப்பந்தி.

சதாசிவம் தோளைத் தொட்டு,"மாமா...கூப்பிட்டுண்டே இருக்கேன்.. நீங்க  யாரையாவது தேடறேளா?'' பெரியவா உங்களை கூப்பிடறா.  உங்க பேர் சதாசிவம் னு எனக்கு தெரியுமே, உங்களை கூட்டிண்டுவர சொன்னா  பெரியவா . ரெண்டுபேரும் என் பின்னாலே வாங்கோ ''

மஹா பெரியவா அன்று பேசினார். மௌன விரதம் இல்லை.    சதாசிவத்தை பார்த்து  சிரித்தார்.  

"வாடா   சதாசிவம்.. கும்பகோணத்துல உனக்கு பழம் ஏதும் கிடைக்கலையோ? அதான் மடத்து வாசல்லயே வாங்கினியோ?''

ஆச்சர்யத்தில் உடம்பு நடுங்கியது. பக்தி பரவசம் மேலிட்டு  வார்த்தை குழற  "அம்மாம்   கடையிலே கும்பகோணம் திறக்கலே  என்று உளறினார் .

"அதான் சொகுசா ஒரு கார்ல நன்னா தூங்கிண்டே  மடத்துக்கு வந்து சேர்ந்துட்டியே...அப்புறம் என்ன...
இந்தா"

''ஆமாம்  பெரியவா,  சங்கரன் னு ஒருத்தர் தஞ்சாவூரிலிருந்து  கார்லே கும்பகோணம் வந்து எங்களை அழைச்சுண்டு வந்து விட்டார் ''

மடத்துக்கு இன்னி வரணும்னு  மனசிலே தீர்மானிச்சு  ஆசைப்பட்டது . நடந்தது. வந்துட்டே. இதிலே சங்கரனாவது கிங்கரனாவது '' ஹாஹா என்று சிரித்தார் பெரியவா. 

தெய்வத்தின் கை  நீண்டது.   பிரசாதம் கையில் விழுந்தது.''

காரில் சங்கரனுடன் வந்தது எப்படி பெரியவாளுக்கு தெரிந்தது.  உடல் வியர்த்தது. தெய்வம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறது......   பிரசாதத்தை வாங்கி இருவரும் கண்களில் ஒற்றிக்கொண்டார்கள். கும்பல் என்பதால் வழியைவிட்டு நகர்ந்தார்கள்.

சதாசிவத்துக்கு பெரியவா சொன்னதில், சிரித்ததில்  ஏதோ அர்த்தம் இருக்கிறது என்று மட்டும் புரிந்தது. ஆனால்ரியாதது மாதிரியும் இருந்தது.

போகும்போது  பெரியவா  அன்போடு  ஆசிர்வதித்து காதில்  ரீங்காரம் செய்தது. "பஸ் எல்லாம் ஓட ஆரம்பிச் சுடத்து...மடத்துல போஜனம் பண்ணிட்டு,ஜாக்கிரதையா ஊர் போய்ச்சேர் 

கடகடவென்று வேகமாக நடந்த  அதிசய    சம்பவ காட்சிகளின்  ஆச்சர்யத்தில் இருந்து இன்னும் மீண்டுவராத சதாசிவம் வெளியே வந்து   முதல் நாள் இரவு டூட்டியில்  இருந்த  வாட்ச்மேனை  பார்த்து  

"ஏம்ப்பா..நேத்து ராத்திரி  பதினொன்றரை  பன்னிரண்டு மணிக்கு   ஒரு வெள்ளை அம்பாஸடர் கார்ல நான் மடத்து  வாசல்ல இறங்கினபோது ஒரு பெரியவர் வண்டி ஓட்டிண்டு வந்தாரே ..அவர் திரும்ப இன்னிக்கு
வந்தாரா?" என்று கேட்டார்.

"என்ன சாமீ.....நேத்து ராத்திரியா? எனக்கு டூட்டியே  இல்லியே சாமீ...காலையில்தானே நான் வந்திருக்கேன்"
சதாசிவம் மீண்டும் அதிர்ந்தார்,"இல்லேப்பா....நேத்து   ராத்திரி உன்னைப் பார்த்தேனே....இதே இடத்து
வாசல்ல..." 

"என்னங்க நீங்க...சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க..நேத்திக்கு ராத்திரி செக்யூரிட்டி டூட்டிக்கு ஆளே இங்கு  இல்லயே ''   

சதாசிவத்தின் கண்களில் ஜலம் தளும்பியது.   நான் எப்படி இங்கே வந்தேன்?  கும்பகோணத்தில் வீட்டில் காப்பி குடித்துவிட்டு  காரில்  காஞ்சிபுர மடத்தின் வாசலில் இறக்கி விட்டுவிட்டுப்போன .... சங்கரன் யார்?

''சங்கரனாவது கிங்கரனாவது''  என்று ஹாஹா  சிரிப்பு மீண்டும்  காதில் கேட்டது.......   கண்களில் நீர்  வழிய  இரு கரம் சிரம் மேல் தூக்கி  மஹாஆஆ  பெரியவா தெய்வமே..... என்று  மண்ணில் விழுந்து மடத்தை நோக்கி நமஸ்கரித்தார் சதாசிவம். 

sivan jaykay

unread,
Jul 15, 2020, 9:30:28 PM7/15/20
to amrith...@googlegroups.com
திருக்கோளூர்  பெண் பிள்ளை ரஹஸ்யம்   J K   SIVAN    


                                     81 - துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே!

திருக்கோளூர்  மோர் விற்கும்  பெண்ணே ,

 இன்று உன்னிடமிருந்து விடைபெறும் முன்  என் மனதில் தோன்றி  உன்னை  நான்  கேட்கும் ஒரு  சின்ன கேள்வி : 

 ''நீ யார்? ''  அதுவே  திருக்கோளூர் பெண்பிள்ளை ரஹஸ்யமாகி விட்டதே.   எங்கே கற்றாய் இத்தனை விஷயங்கள்? எப்படி உன்னால் காவேரி வெள்ளம்போல்  81 உதாரண புருஷர்களை அடையாளம் காட்ட முடிந்தது, அதுவும் பொருத்தமாக.!    ஆச்சார்யார்  ஸ்ரீ ராமானுஜரே வியக்கும் வண்ணம் எப்படி பதில் சொல்ல முடிந்தது?  

நானும் என் நண்பர்கள் அனைவரும் உன்னை வணங்குகிறோம். உன் ரஹஸ்யங்கள் 81ம்  எங்களுக்கு நீ சொன்ன விதம்  ரொம்ப பிடித்திருந்தது.   நீ  எவ்வளவு உயர்ந்தவள்,  ஸ்ரீ ராமானுஜரை நேரில் சந்தித்து அவரோடு பேசி அவரையே  கேள்வி கேட்டு அதிசயிக்க வைத்ததிலிருந்து உனது ஞானம்   எங்களையும் அதிசயத்தில் சிலையாக்கிவிட்டது.

இன்று உனது  81வது உதாரண புருஷரை சந்திக்கிறோம்.

அதற்கு முன் ஒரு அருமையான வைணவ க்ஷேத்ரத்தைப் பற்றி சொல்லவேண்டி இருக்கிறது.   நான் கடலூருக்கு  கப்பல் வேலையாக   செல்லும்போதெல்லாம் அருகே  3  கி.மீ. தூரத்தில் உள்ள திருவஹீந்திரபுரம் செல்வதுண்டு. வேதாந்த தேசிகர்  வாழ்ந்த ஸ்தலம். ஹயக்ரீவர் தரிசனம் பெற்ற ஸ்தலம்.   அங்குள்ள  தேவநாதப் பெருமாள் ஆலயம் 108 திவ்யதேசங்களில் ஒன்று. .

திருவஹீந்திர புரம் இப்போது திருவந்தி புரமாக , அயிந்தையாக  பெயரளவில் சுருங்கினாலும் அதன் மஹிமை, பெருமை   வளர்ந்து கொண்டு தான் வருகிறது.  
பிரம்மாண்ட புராணம், ஸ்காந்த புராணம், பிருகன் நாரதீய புராணம் ஆகியவை இந்த ஸ்தலத்தை குறிப்பிடுகின்றன. கிழக்கு நோக்கிய  தேவநாத பெருமாள், தாயார்  வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி). 

இந்த ஊரில் ஒரு  வைணவர் ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு  இருந்தார்.  அவரை பகவர்  என்று சொல்கிறார்கள். அதிக விவரம் தெரிந்து கொள்ளமுடியாத  ஒரு  சாதாரணர் என்றாலும் திருக்கோளூர் பெண்பிள்ளையால்  உலகளவு பரவிவிட்டவர்.  அப்படி என்ன செய்தார் அவர்?

தினமும் குளிப்பார்.  இது ஒரு அதிசயமா?   இல்லை  அவர் குளித்த விதம் அதிசயம். 

குளக்கரை சென்ற போதெல்லாம்  எப்போதும் மற்றவர்கள் குளிக்கும்  படித் துறையை விட்டுவிட்டு வேறு எங்கோ  தனியாக ஒரு படித்துறைக்குச் சென்று குளிப்பார்

இதை கவனித்த ஒருவர்   ஏன் இப்படி வழக்கமாக செயகிறார் என்ற  ஆவல் அடக்கமுடியாமல் போனதால்  நேரே அவரிடம் வந்து 

''ஏன் ஐயா  பகவரே , நீர்  ஏன் நாங்கள் குளிக்கும் படித்துறையில்  கால் வைப்பதில்லை, எங்களோடு இங்கே ஸ்னானம்  செய்வதில்லை ஏதாவது விசேஷ  காரணம் இருக்கிறதா?  இருந்தால் சொல்லுமய்யா?''

''நான் என்ன சொல்வேன். நான் ஒரு  வைஷ்ணவன்.  ஸ்ரீ  ராமானுஜரை குருவாக  ஏற்று  அவர் வழி நடப்பவன். விடாமல் நித்யாநுஷ்டானங்கள் செய்து  ஸ்ரீ மஹாவிஷ்ணுவை,  நாராயணன் ஒருவனையே   மனதில் கொண்டவன்.  நான் பிராமணன் அல்ல.  உங்கள் வழிவேறு என் வழிவேறு.  இரண்டும் ஒன்று சேராத இடத்தில் ஒன்று   சேருவானேன், என்று தனியாக  வேறிடம் சென்று  ஸ்னானம் செய்பவன்''

திருக்கோளூர் பெண்பிள்ளையின் காது  ரொம்ப சூக்ஷ்மமானது. எங்கோ  திருவஹீந்திரபுரத்தில் எப்போதோ  ஒரு சாதாரண வைஷ்ணவர் மற்றொரு ப்ராமணருடன் பேசியது எப்படி இந்த பெண்ணுக்கு திருக்கோளூரில் ஸ்பஷ்டமாக கேட்டது?  இது அதிசயமா  ரஹஸ்யமா? ரெண்டும் தான்.   

அதை ராமாநுஜரிடம், அந்த பகவர் உபாசித்த  குருவிடம், அவள்  81வது உதாரணமாக  நேரில் சொல்லும்போது  சம்பந்தப்பட்ட அந்த ஆச்சார்யர் எவ்வளவு அதிசயித்திருப்பார் ?

 ''சுவாமி,    நான் என்ன  அந்த திருவஹீந்திரபுர பகவர்  என்பவர்போல்  வைணவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை, உங்களிடத்தில்  பரம பக்தி கொண்டு  மற்றவர்கள் ஸ்னானம் செய்யும் கட்டத்திலிருந்து விலகி வேறு ஒரு        துறையில்   சென்று ஸ்னானம்  செய்தவளா?  அவ்வளவு மரியாதை பக்தி வைணவ நம்பிக்கையில்  என்றாவது எப்போதாவது  கொண்டவளா? எப்படி நான் இந்த புண்ய க்ஷேத்ரத்தில் வாழ்ந்து வசிக்க அருகதை பெற்றவள்? என்று கேட்கிறாள்.

திருக்கோளூர்  பெண்ணே, 
உன்னை ஒவ்வொரு வீட்டிலும்  பார்க்க வேண்டும். உன்னை தினமும் ஒருமுறையாவது படிக்க வேண்டும் என்று புத்தகமாக்க முயல்கிறேன். என் இலவச புத்தகம் உருவாக நீயே ஏதாவது ரஹஸ்யம் என் நண்பர்கள் காதில் சொல்லி  எண்ணத்தை செயலாக்கு.

.


sivan jaykay

unread,
Jul 15, 2020, 9:30:28 PM7/15/20
to amrith...@googlegroups.com
                                                 ''யுதிஷ்டிரா இது  நிஜமா ?  J K  SIVAN  


"எனக்கென்னமோ, இன்றைக்கு உங்களுக்கு ஒரு   பெரியகண்டம்  காத்திருக்கிறது  என்று  தான்  தோன்றுகிறது  யுதிஷ்டிரா!”  என்று சொல்லிக்கொண்டிருந்தான்  கிருஷ்ணன்.   பாண்டவர்களின்  யுத்தகள  கூடாரத்தில் ஆலோசனை நடந்துகொண்டிருந்தது. எல்லோர் முகத்திலும் கவலை. 

"எப்போதும் எங்களை  ஊக்குவித்து உய்விக்கும்  நீயே  இவ்வாறு பேசுவது  ஆச்சர்யமா யிருக்கிறது  கிருஷ்ணா" என்றான்  தர்மன்.

"புரிந்து கொள்,  யுதிஷ்டிரா!,  கடந்த  5  நாளாக  உனது  சேனையை  வாட்டி  எடுக்கிறார்  த்ரோணாச்சார்யர். இன்று மாலைக்குள்  நீ  த்ரோணாசார்யாரை  வீழ்த்தா விட்டால்  பாண்டவ சேனை அழிந்து விடும். ஜாக்ரதை!.  என்னால்  இதை மட்டும் தான் உறுதியாக சொல்ல முடியும். துரோணரின்  பிரம்மாஸ்திரம் உங்கள்  சேனையில்  பாதி  பேரை விழுங்கிவிட்டது  என்பதை கவனம்  கொள்!" 

  “அர்ஜுனா   என்ன  எங்கோ சிந்தனையாக இருக்கிறாய் . நான்  சொல்வது உனக்கு புரிந்ததா?''  என்றான் கிருஷ்ணன்.
''..............................''

''என்ன   அர்ஜுனா  மௌனமாக  இருக்கிறாய். பயமா  துரோணரிடம்?''

“ஒன்று மில்லை கிருஷ்ணா.அவரிடம்  கற்ற வித்தையெல்லாம்  அவர் மேலேயே  பிரயோகிக்கிறேன்”. 

“அதெல்லாம்  போதவே  போதாது  அர்ஜுனா.  இந்த  போரில்  துரோணரை வெல்ல  ஒரு உபாயம்  தான்  எனக்கு  தோன்றுகிறது.     இதற்கு  பீமன்  சரியானவன்.  இதோ, பார்  பீமா  இன்று  உனது முக்யமான  வேலை கௌரவ சேனையில்  இருக்கும்  ஒரு  யானையை  கொல்வது தான்.  முதலில் அதை முடி  பிறகு  நான்  அடுத்த கட்டத்தை தாண்டுவது எப்படி என்று  பார்ப்போம் "   என்றான் கிருஷ்ணன் 

பீஷ்மர்  பெரிய  பொறுப்பை தனது தலையில் சுமத்திவிட்டு  இதோ யுத்தகளத்தில்  பார்த்த்துக்  கொண்டிருக் கிறார்.  நான் துரியோதனன் சுடு  சொல்  பொறுக்கமுடியாமல் ப்ராணத்யாகம்  செய்ய  தயாராகிவிட்டேன்.  மடிந்தால்  என்  பிரதம சிஷ்யன்   அர்ஜுனன் காய் அம்பால்  மரணமடைய துடிக்கிறேன்.  அதற்கு முன் அவனை அவன் சகோதரர்களோடு,  கூட இருக்கும் கிருஷ்ணனோடு சேர்த்துக் கொல்லவும்  துணிந்துவிட்டேன். வேறு வழி இல்லை எனக்கு''    என்று  தனக்குள் பேசிக்கொண்டார்  துரோணர்.

குருக்ஷேத்ரத்தில்  யுத்தம்  ஆரம்பித்து விட்டது.  பாதி சேனை இருபுறமும் அழிந்தும் இன்னும் யுத்தம் முடியவில்லை.  மேலே சூரியன் தகிக்க ஆரம்பித்துவிட்டான்.  குதிரைகள் யானைகள்  படைவீரர்கள்,  சேனைத்தளபதிகள்  உயிரைத்  திரணமாக மதித்து  இருபுறமும் மோதுகிறார்கள்.    கௌரவ சேனையின் பலம் அதிகம்.  


துரோணர்  மின்னல்  வெட்டில்  அன்று  பாண்டவர் சேனையை,  வியூகங்களை உடைத்து அழிக்க ஆரம்பித்தார். அர்ஜுனன்  பாணங்களை  வெகு லாகவமாக எதிர்த்தார்.  

சரியான  நேரத்தில் பீமன்  அந்த  யானையைக்  கொன்றான்.  பாண்டவ சேனை  வெகு  உற்சாகமாக "அஸ்வத்தாமன்  மடிந்தான்"  என்று  சப்தமிட, சங்கங்களும்  பேரிகைகளும்  முழங்க  ஒரு  கணம்  
திகைத்தார்  துரோணர்.  அஸ்வத்தாமன்,  அவர்  மகன்,  மகா வீரன், எப்படி இறந்தான் என்ற  அதிர்ச்சி அவருக்கு.  உண்மையா,  பொய்யா  என்று  தெரிந்து கொள்ள  ஒரே வழி  உண்மையையே  பேசும்  
தர்மனையே கேட்போம் என

"யுதிஷ்டிரா, நீ சொல் என் மகன் அஸ்வத்தாமன் மடிந்தது உண்மையா? “

தர்மன்  சொல்லிக் கொடுத்தபடியே  பதில் சொன்னான்.  

"ஆம்,  அஸ்வத்தாமன்  இறந்தான்" ............        
" மனிதனல்ல, யானை" . இந்த  இரண்டாவது  வார்த்தை  துரோணர்  காதில்  கேட்காதவாறு  கண்ணனும்  மற்றவர்களும்  தத்தம் சங்க நாதங்களை எழுப்ப  யுத்தகளத்தின் பேரிரைச்சலில்  "அஸ்வத்தாமன்  இறந்தான்"  என்ற தர்மனின் வாக்கு  துரோணரை வீழ்த்தியது. அப்படியே  தேர்த் தட்டில் தனது   வில்லையும்  அம்பையும்  ஒரு கணம் வைத்து  கண்களை  மூடினார்  துரோணர். 

 இந்த கணத்துக்காகவே காத்திருந்த  த்ருஷ்டத்யும்னனிடம்   "உடனே  த்ரோணரைக் கொல் ''  என்ற  கிருஷ்ணன்  கட்டளையை  துரோணரை கொல்வதற்காகவே  காத்து கிடந்த  துருபதன் மகன்  நிறை வேற்றி  துரோணரின்  சகாப்தம்  முடிந்தது.   உடைவாளால்  துரோணர் சிரத்தை கொய்து  கௌரவ சென்னையில் துரியோதனன் இருக்குமிடத்தில் வீசி எறிந்தான். 

யுத்தத்தில்  ஒரு  முக்ய  திருப்பம்  கிருஷ்ணனால் பாண்டவருக்கு  இதன் மூலம்  கிடைத்தது

sivan jaykay

unread,
Jul 15, 2020, 9:30:28 PM7/15/20
to amrith...@googlegroups.com
                                                                            சித்தர்கள் வழிபடும்  அக்னீஸ்வரர்   J K  SIVAN  

நமது தேசத்தில் முனுசாமி, கிருஷ்ணசாமி, சுப்பிரமணி,  பாலன், குமரன் கிருஷ்ணன் ராமசாமி, என்று  லக்ஷம் பேர் இருக்கிறார்கள். ஊர்களும்  ஒரே பெயரில் பல இருக்கிறது.  அப்படி ஒரு  ஊர்  நெய்வேலி.  இது பண்ருட்டி பக்கத்தில் நிலக்கரி சுரங்க ஊர் இல்லை.  சென்னைக்கருகே  திருவள்ளூர் -  ஊத்துக்கோட்டை  சாலையில் பூண்டி நேர் தேக்கத்தின் அருகே  1 கி.மீ. தூரத்தில் உள்ள அற்புத ஊர்.  கற்கால ஊர்  சமீபத்தில் நமது பார்வைக்கு பட்ட  க்ஷேத்ரம்.

சுற்றிலும்  கிராமத்தின் லக்ஷணத்திற்கேற்றாற் போல  பச்சை பசேல் வயல்கள் எப்பதுமே இருந்ததால்  இந்த    நெல்வேலி  (திருநெல்வேலி அல்ல)    நாளடைவில் நெய்வேலி ஆகிவிட்டது.  சித்த புருஷர்கள் இன்றும் நடமாடும்  அபூர்வ ஸ்தலம்.  மரங்களில் வண்டுகளாக, பறவைகளாக, பாம்புகளாக அங்கே இன்றும்  இருப்பவர்கள்.   ஒரு பெரிய  ஆலமரம். அது காளி  குடிகொண்ட இடம். அவள் வனதுர்க்கை என்கிறார்கள். 

இங்கு   ஒரு கோவில் 1300 வருஷங்கள் பழைமையான மிகவும் சிதிலமான நிலையில் ரெண்டு பக்தர்களால் பத்து பதினைந்து  வருஷங்களுக்கு முன்பு  வெளியே தெரியவந்தது.

2004ல்  ரெண்டு பக்தர்கள்   பூண்டி நீர் தேக்கம் அருகே உள்ள ஊன்றீஸ்வரர் கோவில் சென்று  தரிசனம் செய்து விட்டு வந்துகொண்டிருந்தார்கள்.  வழியில்  அந்தப்பக்கமாக வந்த அந்த   ஒரு மாட்டுக்கார சிறுவன்  

 ''ஐயா  எங்கூட வாங்க  இன்னும்  ஒரு பழைய சிவன் கோவில் காட்றேன்'' என்று அழைத்துக்கொண்டு போய் இந்த நெய்வேலி  கோவில் இருந்த இடத்தில் விட்டுவிட்டு  திடீரென்று மறைந்தான் . செடி  கொடி 
 புதர்கள் மரங்கள்  மண்டிய அந்த  காட்டை   நெருங்கவே முடியாது.   அங்கே இருந்த  பெரிய  ஆலமரம்  கல்லால மரம்  எனப்படும்.   அதற்கு மற்ற  ஆலமரங்கள் போல் விழுதுகள் இல்லை.  அந்த கல்லால மரத்தின் அடியில் தக்ஷிணாமுர்த்தி போல் மெளனமாக பல காலம் சிவன் புதையுண்டு இருந்தது தெரியவந்தது.  

அந்த மரத்தை  ஒட்டி வளர்ந்த காட்டை மெதுவாக உள்ளூர் மக்கள் ஆதரவுடன் ஒத்துழைப்புடன் அழித்து,  மண்மேட்டை  கரைத்து,   மண்ணை தோண்டி சிதைந்த கோவில் சுவர்களுக்கு இடையே இருந்த   ஒரு பெரிய லிங்கத்தை  வெளியே  எடுத்தார்கள்.  லிங்கத்தை வெளியே  எடுக்கும்போது மரத்தில் இருந்த வண்டுகள்  படையாக  அவர்களை விரட்டியது.   தினமும் பூஜை செய்யப்படும் லிங்கம்  போன்று அது புத்தம் புதிதாக இருந்தது ஆச்சர்யம் இல்லை.  ஏனெனில்  சித்தர்கள் தான் தினமும் அபிஷேகம் பூஜை செயகிறார்களே!!  பாதி பூஜையில்  லிங்கத்தை  வெளியே எடுத்தார்களோ? அதால் தான் வண்டினமாக துரத்துகிறார்களோ?

லிங்கம் மெதுவாக அங்கே ஒருவர் வீட்டில் கொண்டு சேர்க்கப்பட்டது.   சென்னையிலிருந்து   கேரளாவில் இருந்து என்று நம்பூதிரிகள் அழைக்கப்பட்டு ப்ரஸ்னம் பார்த்ததில்  அது சித்தர்கள் வழிபடும் சிவன் என்று தெரிந்தது.  18 சித்தர்களில் கரூர் தேவரும்,  சதாசிவ ப்ரம்மேந்த்ரரும் சூக்ஷ்ம சரீரத்தில் வந்து தொடர்ந்து வழிபடும் அக்னி லிங்கம் என்றது ப்ரஸ்னம் . 

 அக்னீஸ்வரர் ஆலய சேவா சங்கம் ஒன்று உருவானது.  குளம் தூர் வாறப்பட்டு  அக்னி தீர்த்தமாகியது.  கோவிலின் வடகிழக்கே உள்ளது இந்த தீர்த்தம்.   நன்கொடை கொஞ்சம் கொஞ்சமாக சேர  கோவில் வளர்ந்தது.     சிவன்  அக்னீஸ்வரர், அம்பாள்  ஸ்ரீ லலிதாம்பிகை.

மலையாள  தாந்த்ரீக  ப்ரஸ்னம்  மேற்கொண்டு என்ன சொல்லிற்று?   ''கரூர் தேவர், சதாசிவ பிரம்மேந்திரர் உத்தரவு இல்லாமல் ஒரு செங்கல் கூட  அங்கே கொண்டுசெல்லக்கூடாது.   சித்தர்களின் அதிஷ்டானத்தில் வஸ்திரம் சாற்றி அங்கே அவர்கள்  பெற்றுக்கொண்ட பிறகு   அது தான் உத்தரவு. அது  கிடைத்ததும்  கோவில் புணருத்தாரண  கைங்கர்யம்  துவங்கலாம்''

ஸ்ரீ ராமமூர்த்தி  எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர். சிறந்த கோவில் கைங்கர்ய சீமான். அவரை   சேக்கிழார் கட்டிய பழைய ஒரு சிவன் கோவில் அமராபதீஸ்வரர்  (செருகளத்தூர்,  மறுபடியும்  இது சினிமா சம்மந்தப்பட்ட குண்டு  செருகளத்தூர் சாமா  ஊர் இல்லை,  சென்னை  பல்லாவரம் வழியாக குன்றத்தூர்  சென்று அங்கே மாதா இன்ஜீனீரிங் காலேஜ் தெருவில் செம்பரம்பாக்கம் போகும் வழியில் உள்ள பழைய  சிவாலயம். அதை புனருத்தாரணம் செய்யும் பணியில்  ஸ்ரீ ராமமூர்த்தி, அடையார்   ராஜு போன்ற  புண்ய புருஷர்கள் அறிமுகம் கிட்டியது.  அவரோடு இணைந்த   அணில் கைங்கர்ய பாக்யம் எனக்கு கிட்டியது)   இந்த  ஆலயம் வெளிவர வெகு முக்கிய காரணம் ஸ்ரீ ராமமூர்த்தி   ராஜு,  மற்றும்  நண்பர்கள் குழாம். 

ஸ்ரீ ராமமூர்த்தி,  ஒரு திங்கட்கிழமை அன்று அவர் நண்பர்களுடன்  சித்தர்கள் அதிஷ்டானத்தில் வஸ்திரத்தோடு சென்றார்கள்.   அந்த வஸ்திர தானம்  நாமாக செலுத்துவது அல்ல.  எவர் மூலமாகவோ பெற்றுக்கொள்ளப்பட்டு  அனுக்கிரஹம் சித்திக்கும்.   
 
ஒரு சனிக்கிழமை   கரூர்  சித்தர் அதிஷ்டானத்தில் வஸ்திரத்தோடு   காலையிலிருந்து மதியம் வரை காத்திருந்தும் எவரும் வந்து வஸ்திரம் பெற்றுக்கொள்ளவில்லை. என்ன செய்வது?  அக்னீஸ்வரா உன் திருவுள்ளம் என்ன ?  சரி சென்றுவிட்டு மறுபடியும் திங்கட்கிழமை வருவோம் என்று எழுந்த போது  கோவில் அர்ச்சகர் வெளியே வந்து இங்கே  வாங்கோ என்று கூப்பிட்டார்.  

கரூர் தேவர்  சந்நிதி க்கு அழைத்து சென்ற அர்ச்சகர் எதுவும் கேட்காமலேயே  கரூர் சித்தர் மேல் அணிவித்திருந்த வஸ்திரத்தை எடுத்து  ராமமூர்த்தி கையில் கொடுத்தார். இது நடந்தது சனிக்கிழமை 

''இப்படி  யாருக்கும் கொடுத்ததில்லை.  என்னவோ  எனக்குள் ஒரு வேகம்  யாரோ இப்படி செய் என்று வலியுறுத்தி கட்டளை இட்டது  போல் தோன்றி இயந்திரமாக நான் செயல்பட்டேன்'' என்றார்  அர்ச்சகர். 
 இது நடந்தது சனிக்கிழமை . திங்கள் காலையில் ஒரு அதிசயம்.

யாரோ ஒருவர் ராமமூர்த்தியிடம் வந்து  என் பேத்திக்கு கல்யாணம். எல்லோரிடமும் யாசகம் வாங்கி கல்யாணம் பண்ணுகிறேன்.  என் பேத்திக்கு யாரோ ஒரு புடவை அளித்தார்கள். மாப்பிள்ளைக்கு  வேஷ்டி வஸ்திரம் யாராவது கொடுக்க இயலுமா?''

ஆஹா  வஸ்திர தானம் கேட்டபோது  தான் தானம் செய்யவேண்டும்.  அதுவே  அக்னீஸ்வரர் ஆலய திருப்பணி  துவங்க  உத்தரவு என்று   ப்ரஸ்னம்  சொன்னது  நிறைவேறுகிறதா? மிக ஆச்சர்யத்தோடு சந்தோஷத்தோடு பயபக்தியோடு  கரூர் தேவர்  சதாசிவ ப்ரம்மேந்த்ரருக்கு என்று வாங்கி வைத்திருந்த  வேஷ்டி அங்கவஸ்த்ரங்களை எடுத்து அந்த பெரியவரிடம் கொடுத்தார் ராமமூர்த்தி. 

எனது அருமை நண்பர்ராஜு என்று சொன்னேனே, அவரை  நாங்கள்   கோவில் ராஜு  என்று அழைப்போம்   எண்ணற்ற கோவில்களை தரிசித்து அற்புதமாக புகைப்படங்கள் வீடியோக்கள் எடுத்து ஒரு பெரிய  கண்காட்சியை  இணைய தளத்தில் நடத்துகிறார்.  அவரது  வலையில்  https://shanthiraju.wordpress.com/  சென்று பாருங்கள். எவ்வளவு ஆலயங்களின் விபரங்கள், படங்கள் தத்ரூபமாக  காணலாம். அவர் ராமமூர்த்தியோடு நெய்வேலி ஆலயம் சென்றவர். பல கோவில்களுக்கு சென்ற புண்யம் அவரது படங்களில் பெறலாம். 
.  
ராஜேந்திரனிடம்  (ராஜு)  இந்த ஆச்சரிய அனுபவத்தை ராமமூர்த்தி பகிர்ந்து கொண்டார்.   ''ராஜு, பல வருஷங்களாக ஆலய கைங்கர்யம் செய்த எனக்கு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது இது தான் முதல் முறை'' என்றார்  ராமமூர்த்தி.   ராஜு  தனக்கு நேர்ந்த அதிசயங்களை சொல்கிறார்.  நிறைய இருக்கிறதே எப்படி ஒரு கட்டுரையில் அவ்வளவும் எழுதுவது?  ஒரு நாள் கொரோனா விட்ட பிறகு  ராஜுவோடு உட்கார்ந்து விறுவிறுப்பான விஷயங்கள் அத்தனையும் கேட்கவேண்டும்.  


sivan jaykay

unread,
Jul 16, 2020, 9:47:28 PM7/16/20
to amrith...@googlegroups.com

                                                                    ஓயாத  விஷமக்காரன்     J K   SIVAN   

நம் ஒவ்வொருவர் வீட்டிலும்   பொடிசுகள் இருக்கிறதே.  பெண்ணோ  ஆணோ. அடடா  ஒன்றைரை  ரெண்டு வயசான  அதுகள்  பண்ணுகிற   விஷமம்  தாங்க முடியாது.  அதே சமயம்  அவற்றின் விஷமம்  பார்ப்பதற்கு  ஆனந்தமாகவும் இருக்கும்.   அவர்கள் இல்லாமல் வீடு  சோபை  இழந்துவிடும். 

பெரிசுகளால்  அவற்றோடு  ஓடி  ஆடி  சமாளிக்க முடியாவிட்டாலும்  தூக்கிக் கொஞ்சுவதில் எந்த குறைவும் இருக்காது.  துறுதுறுவென்று இருக்கும்  அந்த சிறு குழந்தைகளே இப்படி என்றால்  ஐந்து  ஆறு வயது பையன்களின் விஷமம்   அதுவும்  இதே ரகத்தில் மொத்தமாக  அவர்கள் ஒன்று சேர்ந்தால்  எப்படி இருக்கும் என்று  யோசித்து பாருங்கள். உங்கள் அனுபவங்களை நினைவு கூர்ந்து  பாருங்கள்.   

கோகுலத்தில் ஒரு தாய்க்கு  இந்த  அனுபவம் ஏற்பட்டது. 

அவளால்  அந்தப்  பொடியனின்  விஷமம்  தாங்கமுடியவில்லை.  கொஞ்சம்  பெரிய  பையன்கள்  விளையாடும்போது  தானும் அவர்களோடு  இணைவான். அவர்களோ முதலில்  அவனை  லட்சியம் செய்ய வில்லை.  போகப் போக  மூர்த்தி சிறிதானாலும்  விஷம  கீர்த்தி   பெரியதாக  தென்படவே  இந்தப் பயலை  கூட்டு  சேர்த்து கொண்டார்கள். அவன் அம்மாவுக்கும்  இது சௌகர்யமாக இருந்ததே.   வெளியே  சென்றுவிடுவானே,  கொஞ்ச நேரமாகவாவது  அவன் விஷமம்  வீட்டில் இருக்காதே. கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடலாமே என்று. 

ஒருநாள்   நந்தகோபன் வீட்டு  பெரிய  தோட்டத்தில்  இருந்த எத்தனையோ மரங்களில்  ஒரு  நாவல் பழ மரம்  அந்த விஷமக்கர்  சிறுவர்களிடம்   மாட்டிக்  கொண்டது.   ஆயர்பாடி  நந்த கோபன்  வீட்டு பின்புறம்  அந்த  பெரிய  நாவல் மரத்தில்  நிறைய  பழங்களை  பார்த்து விட்டார்கள்.   பெரிய  பையன்கள்  மரம் ஏறினார்கள்.  அந்த சிறுவனும்   மரத்தில்  ஏற  முயற்சி செய்தபோது. அந்த விஷமக்கார சிறுவர்களின் தலைவன்   ஒரு கட்டளை இட்டான்.

 "டேய் ,கிருஷ்ணா,  நீ  சின்னவன்,  மரத்தில்  ஏறாதே.  நாங்கள்  மேலே  ஏறி  கிளைகளை உலுக்கும்போது கீழே  பழங்கள் நிறைய  விழும் .  நீ  அந்த பழங்களை எல்லாம்  பொருக்கி சேகரி. பிறகு  நாங்கள்  இறங்கி வந்தவுடன் அனைவரும்  பங்கு போட்டு  திங்கலாம்."

"சரி"  என்று தலையாட்டிவிட்டு  பழங்கள்  மேலேயிருந்து கீழே மண்ணில்  உதிர்ந்ததும்  ஒவ்வொன்றாக  அப்படியே  மண்ணுடன்    சேர்த்து கிருஷ்ணன்  தின்று கொண்டிருந்ததை ஒரு  பயல்  மரத்திலிருந்து  பார்த்து விட்டான். 

 "டேய்,  எல்லாரும்   அங்கே  கீழே  நடக்கிற அக்ரமத்தை பாருங்கடா.  முக்காவாசி  பழத்தை  அந்த  கிருஷ்ணன்  எடுத்து  வேகமாக  தின்று கொண்டிருக்கிறான். ''

தலைவனுக்கு கோபம் வந்தது.  

".இந்த கிருஷ்ணன் ரொம்ப  மோசம். எவ்வளவு  சாமர்த்தியம்  பார்த்தாயா. எப்போ  இவன்  நம்பளை ஏமாத்தினானோ  அவனை பத்தி அவன்  மண்ணு திங்கறான் என்று அவ அம்மாவிடம்  போய் சொல்லிடறேன். அவள்  அவனுக்கு   நல்லா  முதுகிலே டின் கட்டிடுவா" என்று  தனது  திட்டத்தை  சொன்னான் .

  மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்ததும்  மீதி பழங்களை எடுத்து தின்றார்கள்.   தலைவன் ஓடிச்சென்று  கிருஷ்ணன் வீட்டில் நுழைந்து  அவன் தாயிடம்  மரத்தடியில் நடந்ததை சொன்னான். 

 யசோதைக்கு  கோபம் வந்ததை விட   ''ஐயோ, இந்த சின்ன குழந்தை கிருஷ்ணன் மண்ணை தின்றுவிட்டானே,  உடம்பில் போய் அது என்ன கோளாறு செய்யுமோ.  அவனுக்கு ஏதாவது நோய் வந்தால் என்னால்  தாங்க முடியாதே என்ற கவலையும் வேறு சேர்ந்துவிட்டது.  வேகமாக  அவனோடு  நாவல் மரத்தடிக்கு வந்தாள் .

மரத்தடியில்  பையன்கள்  கூட்டம்.  நடுவே  தரையில்  கிருஷ்ணன்   நடுநாயகமாக   அமர்ந்திருந்தான்.  வாய்  நிறைய  பழங்கள்.   ஏற்கனவே கருப்பு பையன்.   உதடு  கன்னம், தாடையில் எல்லாம்  கருநீல  நாகப்பழ   கலர்  மண்ணோடு கலந்து  சாறு அப்பி கிடந்தது.

" கிருஷ்ணா, உன்னோடு  ஒரு நாள்  கூட  நிம்மதி கிடையாது எனக்கு  . எப்பவும்  ஏதாவது  ஏடாகூடம் பண்ணுகிறாய். .  வாய்  நிறைய  இவ்வளவு  மண்ணு  தின்றால்   உடம்பு என்னத்துக்கு  ஆகும்.  திற  வாயை'' 

'' இல்லை''  என்று  தலையாட்டினான்.  

  பேசவில்லை. பேசமுடியாதவாறு  வாய் நிறைய  நாகப்பழம்.

'' அடம்  பிடித்தால்  பிச்சுடுவேன்  பிச்சு.  மரியாதையா  வாயை த் திற.''  அவன் முகத்தருகே இரு கைகளை  அவன் கன்னங்களில் வைத்து   உட்கார்ந்து கொண்டாள்  யசோதை. '''திறடா  வாயை . சீக்கிரம் ''

 கண்கள் மலங்க மலங்க நீர் சேர ,  அவளைப்  பார்த்தன.  தலையை  மீண்டும்  முடியாது என்று அசைத்தான். 

'' பிடிவாதமா  பண்றே.  இப்ப பார்''

 யசோதா  கிருஷ்ணன்  வாயை  கையால்  அழுத்தி திறந்தாள்.  வாயை  நன்றாக  இறுக்கமாக மூடிக்கொண்டான். எதிர்ப்பு தெரிவித்தான்.  பலமாக  அவன் உதடுகளை  இருகைகளாலும் பிரித்தாள் .  வாய் மெதுவாக திறந்தது.  உள்ளே  எவ்வளவு  மண் இருக்கிறது  என்று கவலையோடு குனிந்து  பார்த்தாள் யசோதை. . 

திடீரென்று  அவளுக்கு  மார்பு  படபட என்று  அடித்துக்கொள்ள,  கண்கள் இருள கை கால்  நடுங்க தலை சுற்றியது. கிருஷ்ணன்  வாயில்  மண் அல்ல மண்ணுலகம்  வானுலகம்,  இந்த  பிரபஞ்சமே தெரிந்தது.  அனைத்தும்  சுழன்றது.  இதோ  தெரிகிறது இந்த ஊர்  யமுனை,  எங்கோ இருக்கும்  கங்கை,  ஹிமாசலம்,  இதோ  ஆயர்பாடி  கூட  தெரிகிறதே  அவள்  வீடு,  அந்த மரம், அதன் கீழே  அவள்,  எதிரே  தரையில் உட்கார்ந்து கொண்டு  கிருஷ்ணன், திறந்த  வாய்,  அந்த  திறந்த வாய்க்குள்  மீண்டும்  பிரபஞ்சம்,  திரும்ப திரும்ப  அளவில்லாத  பிரபஞ்சம்.. எல்லாம்  ஏதோ ஒரு வேகத்தில்  சுழல்கிறதே. மேலே சூரியன்  வானம் மேக மண்டலங்கள் எல்லாமே  சுற்றுகிறதே .." 

 யசோதை  கையை  அவன் வாயில் இருந்து  எடுப்பதற்குள்  அவளே  தரையில்  மயங்கி விழுந்தாள்.  அவன்  மீண்டும்   வாயை மூடிக் கொண்டு சிரித்தான்.  சற்று நேரத்தில் தானே  சுதாரித்து கொண்டு எழுந்த  யசோதா,   எதிரே  சாதுவாக உட்கார்ந்திருக்கும்  பூனை போல  அசையாமல் இருந்த  கிருஷ்ணன் மேல் பார்வை போயிற்று.  ஐந்து வயது  ஆசைமகன்  அவளைப்  பார்த்து சிரித்தான்.  

''என்  கிருஷ்ணா, நீ  யார்...? என்று   யசோதாவின்  வாய்  மெதுவாக  நடுக்கத்தோடு  தழுதழுத்தது.  பேச்சு தடுமாறியது.  கைகள் அவனை  அனைத்து...  கண்களில்  வழிந்தது  ஆனந்தக் கண்ணீராகத்தான் இருக்கவேண்டும். நிச்சயம் இவன் தெய்வம்  என்று வாய் அவளுக்குள் முணுமுணுத்தது.
நாமும் வணங்குவோம்.



sivan jaykay

unread,
Jul 16, 2020, 9:48:21 PM7/16/20
to amrith...@googlegroups.com

                                                                                                 இங்கே  நியாயமில்லை      J  K  SIVAN 


இது கதையல்ல.  ஒரு காட்சி மட்டுமே. 

துரியோதனன் கொதித்துக் கொண்டிருந்தான்.  கோபத்தில் மீசை துடித்தது. நெருப்பு மூச்சு விட்டான். கண்களில்   டிராபிக் சிகப்பு ஒளி.. எல்லோருமே அந்த ராஜ சபையில் அமைதியின்றி  இருந்தனர். திருதராஷ்ட்ரன் மகனிடம் சொன்னான்

"சுயோதனா,  கிருஷ்ணன் சொல்வதில்  ஞாயம்  இருக்கிறது.   பாண்டவர்களுக்கு பாதி ராஜ்யமாவது  கொடுத்து விடு".

"அப்பா  நீங்கள்  பேசாதீர்கள். எனக்கு தெரியும்.  ஆரம்பத்திலேயே நீங்கள்  இடம்  கொடுத்ததால் வந்த  வினை  தான் இது." 
 
"துரியோதனா,  நான்  மீண்டும்  சொல்கிறேன்.  பாண்டவர்களோடு  யுத்தம்  வேண்டாம். அதால்  அனர்த்தம்   தான் விளையும்"   என்றான் கிருஷ்ணன். 

" நேரத்தை தான்  வீணாக்குகிறாய்  கிருஷ்ணா  நீ:"     எகத்தாளத்தோடு  மீசையை முறுக்கிகொண்டவாறு  ஏளனமாக  சிரித்தான் துரியோதனன்.  சகுனி சேர்ந்து கொண்டான். 

"கிருஷ்ணா,  நீயா  ராஜதந்திரம்  பேசுகிறாய்.   உன்அனுபவம்  என்ன  என்று  மறந்துவிட்டாய்.  எங்கும் திரியும் பசுக்களும்  கன்றுகளும் தான் உனக்கு தெரியும்.  பாண்டவர்கள்   நாடோடிகள்  நீ அவர்களுக்கு  வக்காலத்து   வாங்குவது பொருத்தம்"  என்றான்  சகுனி.

"நிறுத்து  சகுனி,   அதிகமாக பேசாதே.  ஆத்திரப்   பேச்சு  அழிவில் முடியும்"  என்றாள்   காந்தாரி.

"கிருஷ்ணா,  என்னை  மீறி போகிறது  நிலைமை. என்னால்  ஒன்றும் சொல்லவோ  செய்யவோ  முடியவில்லை.   நீ  கேட்டபடி ஐந்து  ஊரோ,  வீடோ  கூட தர  மறுக்கிறான்  எனக்கு மகனாக  பிறந்த இந்த  துரியோதனன். நான் என்ன செய்யமுடியும்.?". நா தழுதழுக்க  வருந்தினான்  திருதராஷ்ட்ரன். 

"யுத்தத்தின் விளைவு    உனக்கு  சாதகமாகவே  இருக்கும் என்று  கனவு   காணாதே  துர்யோதனா"   இதுவே உனக்கு  நான்  கொடுக்கும்  கடைசி சந்தர்ப்பம்.  கெடுமதியை  விடு" என்று  கிருஷ்ணன்  கடைசியாக சொன்னான்..

"கிருஷ்ணா  உன்  தூது அர்த்தமில்லாத  கோமாளித்தனம்.   ஊசி முனை  இடம் கூட  பாண்டவர்களுக்கு  கிடையாது.  போ  திட்டவட்டமாக  நான் சொன்னதாக அவர்களிடம் சொல் "  என்றான்  துச்சாதனன்  

"துரியோதனா,  யாரிடம் பேசுகிறாய்  என்று  நினைவில்  கொண்டு  பேசு. கிருஷ்ணன்  சொல்வதைக்   கேள்"  என்றார்  பீஷ்மர் 
கர்ணன் கோபமாக  எழுந்து நின்றான். கையை பீஷ்மர் பக்கம் நீட்டி பேசினான். 

"தாத்தா  நீங்கள்  எங்களிடமே  இருந்து கொண்டு அவர்களையே  புகழும்   மாற்றமுடியாத  பிறவி  உங்கள் வார்த்தைக்கு  மதிப்பு ஏது"  என்றான்  கர்ணன் 

"கர்ணா நீ  பேசவே தகுதியற்றவன்  உன்  வாயைத்  திறக்காதே" என்றார்  பீஷ்மர்.

 "நான் தூதுவனாக  வந்ததால் நீ  தப்பினாய்  துரியோதனா.  நாம்  யுத்த  களத்தில் சந்திப்போம்"  என்று   எழுந்தான் கிருஷ்ணன்.

திருதராஷ்ட்ரன் தட்டு  தடுமாறி கிருஷ்ணன் அருகில்  வந்து  அவன்  காலை பிடித்தான்.  "உன்னை பார்க்க கூட   முடியாத பிறவி நான் கிருஷ்ணா".

"இதோ பார்  த்ரிதராஷ்டிரா"  என்று  கிருஷ்ணன் தன் முழு  உருவை  அவனுக்கு  மட்டும் தெரியும்படியாக  திவ்ய திருஷ்டி கண்கள் அளித்து  காட்சியளித்தான். 

"கிருஷ்ணா  என்  பிறவி, பயன் அடைந்துவிட்டது.  என்   குலமும்  மக்களும் அழிவை  தாங்களே தேடிகொள்கிறார்கள்.  அது அவர்கள்  வினைப்பயனே.  போதும்,   போதும்,  இந்த   பார்வை எனக்கு!.  கண்களை  பெற்று அவர்கள்  அழிவதை  நான்  பார்க்க  விரும்பவில்லை. நான் மீண்டும்  பிறவிக்குருடனாகவே இருக்கிறேன்  "  என்று  வணங்கினான் திருதராஷ்ட்ரன்.

sivan jaykay

unread,
Jul 17, 2020, 10:03:31 PM7/17/20
to amrith...@googlegroups.com
                                       ஒரு பொது கூட்டம்  J K  SIVAN 

பரமேஸ்வரர்  கைலாயத்தில் எல்லா தெய்வங்களையும் தேவதைகளையும் அழைத்து  இருந்தார்.  ஒவ்வொருவரும்  தங்களது கடமைகளை சரிவர செய் கிறார்களா என்று கேட்டு அறிந்துகொண்டிருந்தார்.     நாம் வருடம் ஒரு தரம்  வருடாந்திர பொது கூட்டம்   ANNUAL GENERAL BODY மீட்டிங்  வைக்கிறோமோ அது போல் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். 

''பூலோகத்தில் நாராயண னுக்கும்  உங்களுக்கும் தான் பெருமை  போற்றுதல் அதிகம் இருக்கிறது.'  என்றான் இந்திரன் 
''இந்திரா  நீ உன்னைப்பற்றி எவ்வளவு உயர்வாக பூலோகத்தில் பேசுகிறார்கள் என்று அறியாமல் பேசுகிறாய்.  எவரையாவது புகழ்வதானால் உன் பேரும்  சந்திரன்  பேரும்  தான்  அவர் என்ன  பெரிய  இந்திரன், சந்திரன்  என்று போற்றுகிறார்கள். 
''நாரதா  நீ என்ன சொல்கிறாய்?'
''சரியாக எவரும்  என்னைப்போல் சுற்றி பார்க்கவில்லை,   கிராமங்களுக்கு போய் பார்த்தால் தெரியும்.
''என்ன தெரியும் நாரதா?''
''அய்யனார், அம்மன் தான் வேறு வேறு பெயரில் அதிகம் ''
''ஆனால்  எல்லாம்  சிறு சிறு கோவில்களாகத்தான் இருக்கிறது. என்கிறார் பிரமன்.
''உங்களுக்கு  தான் கோயிலே இல்லையே  நீ எதற்கு இதை பற்றி பேசுகிறாய்  என்றார்  விநாயகர் 
பிரமனுக்கு கோவில் இல்லாவிட்டால் என்ன. அவனுக்கும் சேர்த்து  சரஸ்வதி படம் நிறைய  பக்தர்கள் வசம் இருக்கிறது. சரஸ்வதியை கோயில் கட்டி கொண்டாடுகிறார்கள், ஒரு நதியே அவள் பெயரில் இருந்து மீண்டும்  எங்கோ தேடிக்கண்டு பிடித்திருக்கிறார்கள்.  சரஸ்வதியை நினைக்காத பள்ளிக்கூடங்களோ, கல்விச்சாலைகளோ இல்லை தெரியுமா?.

''அண்ணாவுக்கு தான் அதிகம்  கோயில், அண்ணா இல்லாத  தெருவோ , ஆற்றங்கரையோ, அரசமரத்தடியோ கிடையாது'' என்றான் முருகன்.  அவன்  அடிக்கடி  ஏதாவது மலையிலிருந்து இறங்கி வந்து இந்த கூட்டங்களில் கலந்துகொள்வான். ஊரெங்கும் ஆறுமுகத்தோடு  பரவலாக  எல்லோருக்கும் தெரிந்தவன்  அந்த குமரன்.

''எந்த அண்ணா? என்கிறார்  நாரதர் 
''ஐயோ  தமிழகத்தில் மட்டும் இப்படி சொல்லக்கூடாது  தப்பு தப்பு  பிள்ளையார் என்ற எனது மூத்தவர்  கணேசன் என்று சொல்லவேண்டும்.
''எந்த கணேசன்?  என்று நாரதர் குழப்ப ....
''அடடா   இதுவும்  தப்பு.  தமிழ்நாட்டில்  இந்தப்பேர் வேறு எவரையோ குறிக்கும்.   விநாயகர், விக்னேஸ்வரர் என்று சொல்லி சந்தேக நிவர்த்தி செய்கிறேன். என்றான் முருகன்.  
 உடைப்பதற்கும்  அவரைத்தான் முதலில்  தேடுகிறார்கள். என்றான் இந்திரன் 
ஆமாம்  அவருக்காக  தேங்காயை தேடி உடைப்பவர்கள் எண்ணற்றவர்கள்  என்று பேச்சை மாற்றினான் முருகன்.
மொத்தத்தில்  எல்லா தெய்வங்களுக்கும்  போற்றுதல் வழிபாடு இருக்கிறது.  

நாராயணா, பரமேஸ்வரா  அதோ ரெண்டு பேர்  தலையை கவிழ்த்து கடைசியில்  ஓரமாக   உட்கார்ந்திருக்கிறார்கள்  என்ன என்று கேளுங்கள்.''

''என்ன  எமதர்மா, என்ன சனீஸ்வரா  நீங்கள் இருவரும் உங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.  என்ன விஷயம்?''.
எமதர்மன் தலையை ஆட்டினான்  அவன் முகத்தில் வருத்தம்  போகவில்லை. 

''சர்வேஸ்வரா.  தர்மராஜன் என்று பெயர் கொடுத்து  அவனுக்கு  நீங்கள் கொடுத்த வேலைக்கு  அவனுக்கு கிடைத்தது அவமதிப்பு தான்  தருகிறது என்கிறான் சனீஸ்வரன்''

''என்ன சொல்கிறாய் முருகா?
''தர்மராஜன்  அடிக்கடி  ஏதாவது காரணத்தால் ஜனத்தொகையை குறைக்கிறான். வெள்ளம், புயல், சுனாமி, இப்போது கொரோனா, ஃப்ளு FLU , புற்றுநோய்  என்று ஏதேதோ  சாக்கில்  அவரவர் காலம் முடிகிறது.. அவனிடம் போய் சேரும் மக்கள் அவனை எதற்கு குறை சொல்கிறார்கள்.?   திட்டும்போது கூட  ஒருவரை  ஒருவர்  ''எமனே''  என்கிறார்கள்.  ஒரு பாவமும் அறியாத அவன் வாகனத்தையும் சேர்த்து  ''எருமை , எருமைக்கடா''  என்று திட்டுகிறார்கள்.  அவனுக்கு வழிபாடு எங்கும் கிடையாது. எனக்கு இந்த  நீதித்துறை ,  டிபார்ட்மென்ட் வேண்டாம்  மாற்றுங்கள் என்கிறான். 

''இது அவன் மேல் அவமதிப்பு இல்லை,   மக்களுக்கு   மரணத்தில் மேல் உண்டான பயம்.  அதற்கு  அவன் எதற்கு வருந்தவேண்டும். மரணத்தை யாரும் கொண்டாட வில்லை,  அதனால் அவனுக்கு கோயில் காட்டவில்லை.  இல்லாமல் போகட்டுமே. அவனை மாற்றிவிட்டு வேறு  எவரை அந்த துறையில் போட்டாலும் அந்த பதவிக்கு இவ்வளவு தான் மரியாதை.  எல்லாம் மக்களின் பயத்தினாலேயே  தவிர அவன் மேல் அவமதிப்பால் இல்லை.  தர்மா இதுவும் ஒரு தர்மம் தான். மனதில் இதை வைக்காதே''

''அப்போது  சனீஸ்வரன் எதற்கு வருத்த படுகிறான்? ''  

''சனீஸ்வரனுக்கு என்ன குறை. நான் தான் எனக்கு உண்டான  ஈஸ்வரன்  பெயரை அவன் ஒருவனுக்கு மட்டும் தானே சூட்டியிருக்கிறேன் சனீஸ்வரன் என்று  பெருமையாக. அவனுக்கும் கோவில் இருக்கிறதே. அவன்  ராசியில்  இடம் பெயரும்போது  சனிப்பெயர்ச்சிக்கு எத்தனை கூட்டம், பூஜை அபிஷேகம், அலங்காரம். நைவேத்தியம்.... என்றார் சிவன் 

''எல்லாம் அவன்  தங்களை விட்டு  போகவேண்டும் என்று  அவர்கள் கொடுக்கும்  ரிட்டயர்மெண்ட்  பார்ட்டி  நாராயணா''   என்றான்  நாரதன்.  

சனீஸ்வரன் பெயரை யாரும் வைத்துக் கொள்வதில்லை.  போற்றுவதில்லை,  ஒருவரை  ஒருவர் திட்டுவதில் கூட   சனி  என்று அவன் பெயரும்  அடிபடுகிறது.   ''அந்த சனி வந்துடுத்து''   என்று அருவருப்பாக  பேசுவதை  என் காது பட கேட்டிருக்கிறேன் என்றான் நாரதன்.  

சனீஸ்வரரை பற்றி அவர் கோவில் பற்றி தனியாக ஒரு கட்டுரை  அடுத்ததாக  எழுதுகிறேன். நான் பார்த்த  அந்த சனீஸ்வரர் கோவில் இருக்கும் ஊர் பெயரை சொல்லி முதலில் பயமுறுத்திவிடுகிறேன்.  

''கொள்ளிக்காடு''

..


 

sivan jaykay

unread,
Jul 17, 2020, 10:03:31 PM7/17/20
to amrith...@googlegroups.com
                                                          கண்ணன்  வந்தான்.... J K SIVAN 

''ஆஹா  எவ்வளவு அழகான பொம்மை''  என்றேன்.  அருமையான  ஒரு  ராதா கிருஷ்ணன் பொம்மை.   அதை  எனக்கு கொடுத்தவர்  முகமலர்ந்து  எனைப்  பார்த்தார் . அப்போது  அந்த   
அந்த பொம்மை என்னோடு பேசியது எனக்கு மட்டும் கேட்டது.

''ஓஹோ நான்  உனக்கு வெறும் பொம்மை தானா?''

'' ராதா கிருஷ்ணா, நீயா  என்னோடு பேசுகிறாய்? ''என்று அந்த பொம்மையை கேட்டேன் ஆச்சர்யத்தோடு.

''நான் பொம்மை  கற்சிலை என்று  நினைபவர்களுக்கு   நான் அவ்வாறே தான் தெரிவேன்.  நீயுமா அப்படி?   என்னை உன்னைப்  போலவே நினை. கிருஷ்ணன் என்றே நினை. நான் மனதில் தெரிவேன்'' என்று சிரித்தான்.  

''ஆமாம்,   அவனை நான் எந்நேரமும் எங்கும் அப்படித்தான் பார்க்கிறேன். அவன் சொல்வது வாஸ்தவம்''
என்றாள்  அவனருகே அவன் தோளைத் தழுவி நின்ற  ராதை. அவள் முகத்தில்  1000 வாட்  மின்னொளி.

கிருஷ்ணன் அற்புதமாக  இடது தோள் பக்கம் முகம்  சாய்த்து  புன்சிரிப்போடு  இருந்தான்.  யாருக்கோ அவனை பீங்கானில்  வடித்து பார்க்க எண்ணம் போல் இருக்கிறது.   தன்னை வளைந்து கொடுத்தி ருக்கிறான். மஞ்சள் பீதாம்பர வஸ்திரதாரி. இடுப்பில் அதற்கேற்ப ஒரு பச்சை வஸ்திரம். கழுத்தில், காதில்,  புஜங்களில்  வெண்மைக்கு  ஏற்றதாக  புரளும் கண்ணைப்பறிக்கும் பொன்னிற  ஆபரணம்.  மேலே ஆரஞ்சு வர்ண  பொருத்தமான அங்க வஸ்திரம்.  இப்படி  பொன்னிறமயமாக அவனை நான் பார்த்ததில்லையே.    
வித்யாசமாக வெண்ணிற மேனி.  ஒளிரும்  தங்க கிரீடம் ஒன்று அவன் தலையை அலங்கரித்தது.  அதையும் தாண்டி வெளியே  படர்ந்து  விரிந்து  நிற்கும்  மயில் பீலி.வலது காலை மடக்கி இடது பாதம் தாண்டி நுனி காலில் நிற்கும்  வலது முட்டி மடங்கிய ஒரு அற்புத அவனுக்கேயான ''போஸ் '' POSE. பிருந்தாவனத்தில் எங்கோ இந்த இருவரும் இப்படித்தான்  எந்நேரமும்  நிழலும் நிஜமுமாக  சுற்றிக்   கொண்டிருப்பார்கள்.  அவர்கள் இருந்த இடத்தில் எல்லாம் ஆனந்தமும், சந்தோஷமும் பூரணமாக நிலவி இருக்கும். எண்ணற்ற  பறவைகள், விலங்குகள், கோபியர்கள், அவனது வேணுகானத்தில் மயங்கி தன்னிலை மறந்து இன்ப வெள்ளத்தில் மூழ்கி இருப்பார்கள். 

''இதற்கு நான் ஒரு முக்கிய சாட்சி'' என்றது ஒரு நீள தோகை  கொண்ட நீல மயில்.  

அரை அடி  உயரத்தில் இருந்தாலும் என்  நெஞ்சில் ஆழத்தில் புதைந்துவிட்ட இந்த ராதா கிருஷ்ணனை நேற்று எனக்கு பரிசளித்தவர்  நமது முகநூல் நண்பர் சகோதரி  ஸ்ரீமதி ரஞ்சனி வெங்கட்ராமன். மதுரைக்காரர்.  தமிழக அரசு நிறுவனத்தில் உயர்பதவியில் பணியாற்றி ஒய்வு பெற்ற அதிகாரி . சென்னை வந்தது குடும்ப விஷயமாக.   அதில் நேற்று நங்கநல்லூர்  விஜயத்தையும் சேர்த்துக்கொண்டு ஆஞ்சநேயரோடு  என்னையும் கண்டு  சந்தித்து மகிழ்வித்தார்.   மேலே  விவரித்த ராதாகிருஷ்ணனை என்னிடம் சேர்பித்தார்.

பிருந்தாவனத்தில் நடப்பதை இதையெல்லாம்  ஒடிஸ்ஸாவில் பூரியில்  இருந்த இடத்திலிருந்தே ஒருவர்  கண்கொட்டாமல் பார்ப்பவர். அவர் விசித்ரமானவர். கண் கண்டதை ஸ்லோகமாக உடனே ஸமஸ்க்ரிதத்தில்  வடிப்பவர்.   அவர் தான் ஜெயதேவர். அவரது கற்பனையில் இதோ ஒரு காட்சி:

yA ramitA vanamAlina sakhi
anila taraLa kuvalaya nayanEna 
tapati na sA kisalaya shayanEna
vikasita sarasija lalita mukhEna 
sphuTati na sa manasija vishikhEna  --  யாரமிதா 

amrta madhura mrdutara vacanEna j
valati na sA malayaja pavanEna
sthala jalaruha rucikara caranena 
luthati na sa hima kiranikarEna  - யாரமிதா 

sajala jalada samudaya rucirena 
dalati na sa hrdi viraha bharEna
shri jayadEva bhaNita vacanEna 
praviSatu harirapi hridaya manEna

'' என் அன்பு தோழியே,  நான் சொல்வதை கேள்.  அங்கே  அந்த கிருஷ்ணனுடன் விளையாடுபவளைப்  பார். 
அவளுக்கு என்  துன்பம் ஏக்கம் தெரியுமா?  சொல். அவன்  கண்களைப்   பார்த்தால் அன்றலர்ந்த தாமரை மொட்டு  மெல்லிய பச்சை நிற  வழவழவென்ற  ஈரமான  தண்டின் மேல்  படுத்து   தென்றல் காற்றில் தலை அசைப்பது போல்  இல்லையா? 

கண்ணனுடன் விளையாடி,  பேசும்போது மட்டும் எப்படி கோபியருக்கு குரலில்  தேன்  சொட்டுகிறது? மலய மாருதம் வீசும்  இனிய தென்றலின் வேலையா இது?  

கண்ணனுடன்  ஓடி விளையாடும் கோபியரின் பாதங்கள்,   தாமரை மலர்கள் காற்றில் பறப்பது போல் அல்லவா  வேகமாக அசைகின்றன.   சந்திரனின் கிரணங்களில் கண்ணைப்பறிக்கும்   அவற்றின் ஒளி  இனிய ஒலியோடு  மனதை கவர்கிறது.

என் பிரிய சகி, இதைக் கேளடி. கண்ணன் கார்மேக வண்ணன்.  தாங்கமுடியாத பளுவோடு  மழையை தன்னுள் தாங்கி அசையும்  மேகங்கள் போல் அவனை காண்கிறேனே. அவனை  ஒரு கணமும்  பிரிவது என்பது   எனக்கு தாங்கமுடியாத வேதனை, சோகம்.  இப்படிப்பட்ட கார்  வண்ணனை ஜொலிக்கும் தங்க நிற உடையில், ஆபரணத்தில் காணும்போது.....??!!    வார்த்தை வரவில்லையே சொல்ல, எழுத. புஸ்  என்று இயலாமை மட்டும்  பெருமூச்சாக வருகிறது  என்று  இந்த ஜெயதேவன் வருந்துகிறேன்''  என்கிறார் ஜெயதேவர்..

கண்ணன் ஒருவருக்கு மட்டும் சொந்தமானவன் இல்லை, ஊருக்கே, உலகுக்கே தன்னை கொடுத்தவன்.. அப்படி நினைத்தால்  பிரிவு அதனால் விளையும் சோகம், ஏக்கம் எங்கிருந்து வரும்? 

மேலே சொன்னது ஜெயதேவரின் ஒரு அஷ்டபதி.  அதை பாலமுரளி கிருஷ்ணா    சாருகேசி ராக  சாயலில் அற்புதமாக பாடி இருக்கிறார். நானும் பாடிப் பார்த்தேன் . https://youtu.be/2Cqnfw5_l0E

sivan jaykay

unread,
Jul 17, 2020, 10:03:31 PM7/17/20
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி 15    J K   SIVAN  
தாகூர் 
                                                                                15.   கூப்பிடு  நான்  பாடுகிறேன் !

                                                                             
15. I am here to sing thee songs.
In this hall of thine I have a corner seat.
In thy world I have no work to do;
my useless life can only break out in tunes without a purpose.
When the hour strikes for thy silent worship
at the dark temple of midnight,
command me, my master, to stand before thee to sing.
When in the morning air the golden harp is tuned,
honour me, commanding my presence.

நான்  மனம் குளிர்ந்து இருக்கிறேன் கிருஷ்ணா.  எப்போது எல்லாம் என் மனம் குளிர்கிறதோ அப்போதெல் லாம் நீ என்னுள்ளே இருக்கிறாய் என  புரிந்து கொண்டேன். சந்தோஷமாக  மகிழ்ச்சியாக இருந்தால் அல்லவோ  பாட்டு தானாக வரும்?  . குளிக்கும் போது நாம் சந்தோஷமாக இருக்கிறோம் என்பதால் தான் குளியலறையில்  அபாரமாக அபஸ்வர ஆலாபனை பண்ணுகிறோம் ?  எப்போதோ கேட்டதில்  அரை பாட்டு கால் பாட்டு  எல்லாம் ஞாபகம் வருகிறதல்லவா ?  கொஞ்சம்  குளிர்ந்த தண்ணீர் உடல் மேலே பட்டாலே, உறவு கொண்டாலே, இப்படி ஆனந்த சங்கீதம் என்றால் குளிர்ச்சி உள்ளே சென்று மனம்  பூரா  நிரம்பிவிட்டால்??
அதுவும் கிருஷ்ணா,    நீ தான் அந்த குளிர்ச்சி என்று புரியும்போது! . அதனால் தான் நான் உனைப் பாட வந்தேன்.  இந்த பிரபஞ்சமே உன்னுடைய தர்பார் ஹால். உன் அத்தாணி மண்டபம். அதில் எங்கோ ஒரு மூலையில் நான் உட்கார சிறிது இடமுண்டு.  நீ தான்  சகல தொழில்களும் புரிபவன். புரியப்பண்ணுகிறவன். எனக்கு என்ன வேலை இருக்கிறது.  தினமும் பணிவேன் உன் காலைப்   பிடிக்க. அது   ஒன்றே எனக்கு வேலை.
பாடுவேன் எனக்கு தெரிந்த   விதமாக.  நான் எதை  பாடுகிறேனோ எப்படிப்பாடுகிறேனோ அது தான் எனக்கு ராகம். 

நடு நிசி தான் மௌனமாக நான் உன்னைப் பணியும் நேரம். எங்கும் நிசப்தத்தில் என் மனம் முழுதும் உன் மேல் இருக்கும்போது நீ என்ன செய்யவேண்டும் தெரியுமா, என் எஜமானே?   

''வாடா,   வா, வந்து  என் எதிரே நில், பாடு '' என்று எனக்கு கட்டளை இட  வேண்டும்.  ஜம்மென்று  உரக்க  என்   இஷ்டத்துக்கு காச் மூச்  என்று பாடுவேன். 

காலை பொன் வெயில் வானில் உலவ வரும்போது, பக்ஷிகள் பாடுமே அந்த நேரம் எனக்கு பிடிக்கும். எனக்கும் அப்போது பாடத்  தோன்றுமே.  அப்போது என்னையும் நீ கௌரவிக்க வேண்டும். எப்படி?

''வாடா  பையா வா, எங்கே நழுவுகிறாய், என் முன்னே வா..  வந்து என்னைப்  பாடு '' என்று  அழைக்க வேண்டும்.  எப்படி  இந்த   ஐடியா..  சரியா கிருஷ்ணா? கூப்பிடு. காத்திருக்கிறேன். 

sivan jaykay

unread,
Jul 17, 2020, 10:04:53 PM7/17/20
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி    J K  SIVAN  
தாகூர்                                                                      

                                                  6   அம்மாவின் தீனமான பார்வை ....

 6 The rain has held back for days and days, my God, in my arid heart.
The horizon is fiercely naked---
not the thinnest cover of a soft cloud,
not the vaguest hint of a distant cool shower.
Send thy angry storm,
dark with death, if it is thy wish, and
with lashes of lightning startle the sky from end to end.
But call back, my lord,
call back this pervading silent heat,
still and keen and cruel, burning the heart with dire despair.
Let the cloud of grace bend low from above
like the tearful look of the mother
on the day of the father's wrath.

 ''சென்னையில்  ஜோ  என்று  விடாத  பெரிய  மழை...''   இது   மே- ஜூன்   மாத  செய்தி அல்ல.  மழை வராதா  மறுபடியும்.  நின்று போய்விட்டதே  என்ற நினைப்பு,  ஒரு இனிமையான கனவு .  தூக்கத்திலாவது சில்லென்று காற்று வரட்டுமே.   மேலே  மின் விசிறி  அதிக சப்தம் போடுகிறதே தவிர காற்றை விரட்டுகிறது.   துரோகி.  வானத்தை அண்ணாந்து பார்த்தால்  வெறிச்சென்று வெளிச்சமாக கண்ணை கூசுகிறது. கருப்பு மேகம் வராதா?  

இப்போது தாகூரோடு கல்கத்தா  செல்வோம்:  
இது மழையா தூத்தலா?   சை .. விடாது நசநச என்று நாளெல்லாம் பெய்கிறதே என்று  முன்பு சொல்வேன்.  இப்போது  மழையே  நீ வேண்டும். ஏன் ரொம்ப நாளாகவே  உன்னைக்  காணோம்?  என் தெய்வமே  கிருஷ்ணா, நீ மழையாக வா. என் இதயம்  பாளம் பாளமாக  விரிசல் விட்ட  மழைகாணாத  வறண்ட  நிலமாகி விட்டதே.    வானத்தை உற்று நோக்குகிறேன். எங்குமே  கருமை கண்ணில் படவில்லை. தொடுவானம் வரை எட்டியவரை பார்த்துவிட்டேன். மலட்டு வானம். மேக  ஆடை இல்லாத நிர்வாண வானம்.  கொஞ்சமாவது ஒரு குட்டி  கருப்பு  மேகம்..    ஹுஹும்..   எங்காவது  மண் வாசனையை கிளப்பி விட  கொஞ்சம் தூத்தல்..
.ஹுஹும்.  

கிருஷ்ணா. உன் கோபமான  சூறைக்   காற்றை கிளப்பி விடு.  உடனே  ஓ வென்ற சப்தத்தோடு  மரங்களை முறித்து வீசும் அளவுக்கு  அனுப்பு.  இருண்ட  கரு நிறத்தோடு  மரண ஓலத்தோடு, உயிர்களை பலி வாங்க வரட்டுமே. அப்படி உன் விருப்பம் இருக்குமா? மின்னல் சாட்டையால் பளீர் பளீர் என்று வலிக்க வலிக்க  தாக்குவாயா? ஆகாசத்துக்கும் பூமிக்குமாக  நீண்ட சாட்டை அடியா?  எதையோ செய்.  ஆனால் இந்த அமைதியான ,  நீரற்ற நிலத்தில் வீசும்  காற்றிலும் தெரியும் உஷ்ணத்தை நீக்கு.   இந்த வெறுமை  கொல்கிறது . உன்னிடமே இந்த வறட்சியை திரும்பப்  பெற்றுக்கொள்.  யார் கேட்டார்கள் இதை?   எங்களுக்கு வேண்டாம்.  அசையாமல் எல்லாம் வெப்பத்தில்  வாடும் இந்த அவஸ்தை போதும். இது கொடிய செயல்.  இதயத்தை ஏமாற்றத்தால்  எரிந்து  துயரால் வாடி துடிக்கச்  செய்யாதே.  இனி தாங்க முடியாதப்பா இந்த  அக்கிரமத்தை.

உன் கருணை மேகம் மேலே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக  பூமியை நோக்கி இறங்கட்டும்.  என் மனதில் தோன்றும்  ஒரு காட்சியைச்  சொல்கிறேன் கேள்.

 அப்பா  கொடியவராக கோபத்தோடு  எடுத்ததற்கெல்லாம் கோபித்து,  அடித்து , திட்டி,  சித்ரவதை பண்ணும்போது அம்மா பாவம் பேசாமல் நிர்க்கதியாக , கதவோரம், சுவற்றோரம், தலை குனிந்து  நின்று அத்தனையும் வாங்கிக்கொண்டு கண்களில் நீர் ததும்பி  தரையில் சொட்ட சொட்ட  பிறகு  வாய் பேசாமல் தீனமாக  வேறு வழியின்றி பார்ப்பாளே............  அந்த பார்வை தான் என் பார்வை இப்போது,   உன் வருகைக்காக, மழை ரூபமாக, கருணை உருவமாக நீ வரவேண்டும். வா வா மேகநாதா,  கண்ணா வா...

sivan jaykay

unread,
Jul 17, 2020, 10:04:54 PM7/17/20
to amrith...@googlegroups.com

                                                                                       சமுத்திர மந்தனம்   J K   SIVAN 


தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று   தாய்லந்து.

தாய்லாந்தில்   இருக்கும்  ஹந்து மதத்தினரை   மொத்த ஜனத்தொகையில்  0.03%  எனலாம்.  நூற்றுக்கு ஒருவர் கூட இல்லை . முழுதும்  பௌத்தமதத்தை  சார்ந்த மக்கள் வாழும் தேசம்.  இருந்த போதிலும் ஹிந்து மதம் தாய்லாந்து மக்கள் வாழ்வில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.  அங்கே  ராமாயணம் உண்டு.   அவர்கள் விரும்பும்  ராமாகியன்  நமது ராமாயணத்தின்  சிதைந்த உருவம்.  தாய்லாந்தின் மன்னர்கள்  பின்பற்றும்  ராஜ்ய தேசிய சின்னம்  கருடன். விஷ்ணுவின் வாஹனம்.   14வது நூற்றாண்டு விஷ்ணு  சிலை  அங்கே இருக்கிறது.

தலைநகர் பாங்காக்  அருகே  ஒரு  நகரம் உள்ளதே அதன் பெயர் அயுத்தயா . அயோத்யாவின் மழுங்கிய
 பெயர். வழிபாட்டின்  போது  விகிரஹங்களுக்கு  சங்கில் அபிஷேகம் செயகிறார்கள்.  ஹிந்து விகிரஹங்களை வழிபடுகிறார்கள்.   இரவன் எனும் ஊரில் உள்ள  கோவிலில் ப்ரம்மா இருக்கிறார்.  இந்திரன், சிவன், பிள்ளையார்  கருடன் உருவங்கள் உண்டு.   சூரின்  என்கிற ஊர்  அருகே  உள்ள 12ம் நூற்றாண்டு கோவில் பிரசத் சிகோரபும்  சுவர்களில்  தாண்டவமாடும் சிவன், பார்வதி, ப்ரம்மா கணேசன் உருவங்கள் இருக்கிறது.

1784ல்  முதலாம் ராமா  என்கிற ராஜா கட்டிய  தேவசதன்  கோவில் இருக்கிறது. அரசு குடும்பம் பிராமணர்களை நியமித்து  பராமரிக்கும் ஆலயம் . பூஜைகள்  அவர்கள் வழிபாட்டு முறையில் இன்னும் நடக்கிறது.

1935 வரை   தாய்லந்தில்  ஒரு பெரிய  ஊஞ்சல் விழா நடந்தது . அதன் பெயர்  வேடிக்கையாக  இருக்கிறது.   த்ரியம்பவை த்ரிபவை   (நமது திருவெம்பாவை  திருப்பாவையின்  கை  கால் ஒடிந்த வடிவம் )   தெ .போ. மீனாட்சிசுந்தரம் எனும் தமிழ் வித்தகர்,    இந்த விழாவை  தாய்லந்து ஹிந்துக்கள்  கொண்டாடும் போது  திருப்பாவை திருவெம்பாவை   பாசுரங்கள்  பாடல்களை  பாடினார்கள்  என்கிறார்.
நம்மூரில் இன்னும் நிறைய பேருக்கு திருப்பாவை திருவெம்பாவை என்றால் என்னவென்றே தெரியாதே.

தாய்லந்து  விவசாய தேசம்.  பிராமணர்களை வைத்து  ஏர் உழும் பண்டிகைகள்  பூஜையோடு துவங்கும் பழக்கம் உண்டு.  அறுவடைக்கு அதே போல் பூஜையோடு விழா. ராஜ பிராமணர்கள் என்று ஒரு வகுப்பு இதற்காகவே  உருவாகி இருக்கிறது.

இப்போதும்  லக்ஷக்கணக்கான ஹிந்துக்கள் வாழும்  தேசமாக தாய்லந்து விளங்குகிறது.  நமது சாஸ்திரங்கள்  சம்பிரதாயங்கள் அவ்வளவும் தெரியாவிட்டாலும் ஏதோ கொஞ்சம் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

1879ல்  வைத்தி படையாச்சி  என்ற தமிழர்  ஒருவர் பாங்காக்கில்  மாரியம்மன் கோவில் காட்டியிருக்கிறார்.

தாய்லந்து  தலைநகர்  பாங்காக்  விமான நிலையத்தில் ஒரு அற்புத கண் காட்சியே  காத்திருக்கிறது.  பாற்கடலை கடைந்து தேவர்கள் ஒருபுறம், அசுரர்கள் மறுபுறம்,  அம்ருதம் தேடுகிறார்கள்.  மஹா விஷ்ணு பெரிய  கூர்மமாக (ஆமையாக) பாற்கடல் அடியில் படுத்து முதுகில் மந்திர மலையை சுமக்கிறார். அது தான் மத்து  பாற்கடலை கடைவதற்கு.  மத்தை கடைவதற்கு கயிறு வேண்டுமே?   சாதாரண கயிறு எல்லாம் தாங்காது.  வாசுகி எனும்  நீண்ட  சர்ப்பம்  கயிறாக பணி புரிய சம்மதித்தது. அதை மந்திரமலையில் சுற்றி  அதன் தலை பக்கம்  அசுரர்கள் வால் பக்கம் தேவர்கள்  இழுத்து கடைகிறார்கள்.  

இப்படி ஒரு அற்புதமான ஹிந்து சநதனமாத   பாகவத புராண காட்சியை  காட்சியை எவ்வளவு அழகாக நவீன உபகரணங்களை உபயோகித்து  படைத்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு நமது வந்தனம்.  ஏன் நமது பொது இடங்களில் இது போன்ற காட்சிகளை காணோம்.   0.03% ஹிந்துக்கள் வாழும் இடத்திலேயே இது முடியும் எனும்போது  70%க்கு மேல் உள்ள நமது தேசத்தில்  ஏன் கருடனோ  பாற்கடலோ  தோன்றவில்லை.  காரணம் மனம்...... மனித மனம். அது பொல்லாதது....செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டு  கெட்டுப்போன  குழந்தைகளோ நாம் ?  ஒன்றுபடாத மனங்களோ?  குட்டி குட்டி ராஜ்யங்களாக இருந்த நமது பாரத தேசத்தை ஒன்றாக இணைத்த  union ஆக பண்ண பாடுபட்ட  சர்தார் படேல் சிலை பொதுமக்கள் ஆதரவில் நன்கொடையில் நிர்மாணிக்கப்பட்டதற்கே  கூச்சல் போடுபவர்கள் நாம். 


sivan jaykay

unread,
Jul 17, 2020, 10:04:54 PM7/17/20
to amrith...@googlegroups.com
தெவிட்டாத விட்டலா  J K SIVAN

லக்ஷ்மி கடாக்ஷம்

பாண்டுரங்கன் பக்தர்களில் எல்லோர்  மனதையும் கவர்ந்தவர் ஒருவர் உண்டு என்றால் அது துக்காராம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.  மிகவும்  எளியவர். பணத்தாசை இல்லாதவர். குடும்பம் வறுமையில் தத்தளித்தபோதும் பணத்தை அவர் தேடவில்லை.  அவருக்கு கிடைத்த பணத்தை, பொருள்களை  யாரேனும்  ஏழைகள், பாண்டுரங்க பக்தர்களைக் கண்டால்  கொடுத்து விடும்  தாராளமனம் . அவர் மனது பூரா  பாண்டுரங்கன் மேல் பக்தி ஒன்றே  நிரம்பியிருந்தது. அவரது அபங்கங்கள்  கேட்க  இனிமையானவை. பக்தி ரசம் சொட்டுபவை.
வழக்கம் போல் ஒருநாள் பாண்டுரங்கன் ஆலயத்தில்  வெகுநேரம் இருந்து பஜனையில்  பங்கேற்று ரசித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார் துக்காராம்.  வழக்கத்துக்கு  மாறாக  அவர் மனைவி ஏதோ பூஜை செய்து கொண்டிருக் கிறாள்.
"இன்னிக்கு  வீட்டில்  என்ன விசேஷம்?  ஏதோ  பூஜை எல்லாம்  பண்றே?
"லக்ஷ்மி  கடாக்ஷம் வேணும் என்று ருக்மணிக்கு  லக்ஷ்மி பூஜை செய்யறேன் ''
"புரியல்லை,  எதுக்காக திடீர்னு இப்படி  ஒரு  பூஜை?
"நீங்க  கிருஷ்ணனை, பாண்டுரங்கனை  எப்பவும்  பாடுகிறீர்கள்,  ஆடுகிறீர்கள்.   அதுபோல தான் இதுவும்"
"பூஜை பண்றது  நல்லது தான். ஆனால்  காம்யார்த்தமா  எதையாவது கிடைக்கணுனு வேண்டிக்கறது  சரியில்லை. நமக்கு  எது தேவை என்று  விட்டலனுக்கு தெரியும்.   தானே  அதை  நமக்கு  கொடுத்து கொண்டு தானே  இருக்கான். நமது வாழ்க்கை அவ்வாறு தானே  ஓடிக்கொண்டிருக்கிறது?''
கொஞ்சநாள் கழித்து  வீட்டில்  துக்காராம் மனைவி ஜீஜாவுக்கு  எப்படியோ  கொஞ்சம்  பணம்  கிடைத்தது. புதிய  துணிமணிகள்  எல்லாம் தனக்கும்  குழந்தைகளுக்கும்  வாங்கினாள். அடகு வைத்திருந்த  நகைகளை மீட்டு  அணிந்து கொண்டிருந்தாள்.
அன்று வீட்டுக்கு சாப்பிட வந்த  துக்காராம் கண்ணில் இது பட்டது.    சாப்பிட  உட்காரும் போது தான்  கவனித்தார்.  ஜீஜா  குழந்தைகள்  எல்லாம்  புது  துணிமணிகளை  அணித்திருக் கிறார்களே.
''ஜீஜா.  ஏது இதெல்லாம்  எப்படி வந்தது ?"
"ருக்மணிக்கு  லக்ஷ்மி பூஜை பண்ணியதாலே  வீட்டிலே  இப்போ  கொஞ்சம்  சுபிக்ஷம்"
அவள்  உள்ளே  சென்று  அவருக்கு  உணவு கொண்டு  வருவதற்குள்  அவர் சாப்பிடாம லேயே  எழுந்து  வெளியே சென்று விட்டார்.
சரி  அந்த மனுஷனுக்கு  எதோ கோபம்.  தானே  திரும்பி வருவார்  என்று   ஜீஜா காத்திருந்தாள்.
ஒருநாள்,  இரண்டுநாள்,  மூன்றுநாள். துக்கா ராம்  வீட்டுக்கு  வரவே இல்லை.  வழக்கமாக  அவர் செல்லும்  பாண்டுரங்க  பக்தர்கள் நண்பர்கள் கடைத்தெரு எங்கு தேடியும்  "அவர் இங்கு வரவே இல்லையே"  என்ற  சேதி  தான்.  ஒருக்கால்  அடிக்கடி சொல்வாரே  பந்தர்பூர் போகவேண்டும் என்று, அங்கே போயிருக் கலாம் என்று தோன்றியதால் பந்தர்பூர் சென்று விசாரித்தாள். விவரம் கிடைக்கவில்லை.
விட்டலன் முன்  நின்று  ஜீஜா அழுது கொண்டு   " பாண்டுரங்கா, நீ தான்  எனக்கு   என் துக்கா ராமை  திரும்ப தரவேண்டும்" என்று  பிரார்த்தித்தாள். அவள்  மனத்தில் யாரோ உன் வீட்டுக்கு அருகே இருக்கும்  ஒரு  சிறு  குன்றில் சென்று பார் என்று சொல்வது போல் இருக்கவே  உடனே  தனது ஊரான  தேஹூவுக்கு  திரும்பிச் சென்று  ஊருக்கு கடைசியில் உள்ள ஒரு சிறு  குன்றில் சென்று பார்த்தபோது  இளைத்து வாடி  விட்டலன்  மேல் அபங்கங்கள் பாடிக்   கொண்டு துக்காராம் அமர்ந்திருப்பதை கண்டாள். வீட்டை விட்டு  கிளம்பியவர்  அன்ன ஆகாரமே மூன்று நாட்களாக  உட்கொள்ள வில்லை.
கண்ணை திறந்து பார்த்த  துக்காராம்  " ஜீஜா,  இங்கு எதற்கு  வந்தாய்?  நான்  இங்கு  சுகமாக  என் விட்டலன் மேல் அபங்கங்கள் பாடிக் கொண்டு  இருக்கிறேனே?"  என்றார்.
"நீங்கள்  இல்லாமல்  நானும்  குழந்தைகளும்  எப்படி வாழ்வது?"
"அம்மா,  நீ தான் லக்ஷ்மி பூஜை செய்து  குடும்பம்  நடக்க  தேவையான  பொருள் பண்டம்  எல்லாம் பெற்றுக் கொண்டு இருக்கும்போது  நான்  எதற்கு? தேவை இல்லையே"
"இல்லை,  நீங்கள்  தான்  எனக்கு  வேண்டும்"
"சரி, அப்படியே ஆகட்டும்,  தயவு செய்து  அந்த  நகை நட்டு  எல்லாம் கழற்றி ஏழைகளுக்கு  தானம் செய்து விடேன். பழையபடியே இருப்போம்"
அவ்வாறே செய்தாள் ஜீஜா.  அவரோடு  சேர்ந்து  தானும்  விட்டலன் ஸ்மரணையில்  ஆழ்ந்தாள்.
விட்டலன் புன்முறுவலுடன்  தன் ஆசைக்   குழந்தை க ளை  ரசித்தான் என்று  முடிக்கட் டுமா, ரக்ஷித்தான் என்று சொல்லட்டுமா?

sivan jaykay

unread,
Jul 17, 2020, 10:05:11 PM7/17/20
to amrith...@googlegroups.com
                                                            விதி  விட்ட  வழி     J K   SIVAN   

ஒவ்வொரு மனிதன் மனத்திலும் எண்ணற்ற ஆசைகள்.  அவை அத்தனையும் நிறைவேற வேண்டும் என்பது அதற்கெல்லாம் மேலான பேராசை.  அப்படி நடந்து விட்டால்  உலகத்தில் அனர்த்தம் விளையும்.  கூடாத ஆசைகள்  மனதை விட்டு அகலவேண்டுமே தவிர நிஜமாகக்கூடாது. இதில் இறைவன் கவனமாக இருக்கிறான்.  அடிக்கடி நான் கேட்கும் பாட்டு ஒன்று அர்த்தம் நிறைந்தது.  இதை விளக்குவது:   ''நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்  தெய்வம் ஏதுமில்லை'' 

"அண்ணா,  என் வயிற்றில் ஒரு மாவீரன் வளர்கிறான்  உனக்கு  தெரியுமா?"  என்று ஆர்வத்தோடு  சொன்னாள்   சுபத்ரை கிருஷ்ணனிடம்.

"ஆஹா, அப்படியென்றால் இனி  உன் வீட்டில்  ரெண்டு  அர்ஜுனர்கள்!!!  அடே யப்பா,  பாண்டவ குலத்துக்கு  தான்  எவ்வளவு பெருமை"     ஒரு  அர்ஜுனன்  இருக்கும்போதே  பாண்டவர்களை  எவரும்  வெல்ல முடியாது அப்பறம்  ரெண்டு  அர்ஜுனர்கள்  என்றால்  கேட்கவே வேண்டாம்...'   என்று  சிரித்தான் கிருஷ்ணன்.
அப்போது அங்கே  அர்ஜுனன் வந்தான். 
 
"வா, அர்ஜுனா  தக்க  சமயத்தில்  வந்தாய்.  நாங்கள்  உன்  வீர  வாரிசை  பற்றி தான்  பேசிக் கொண்டிருந்தோம்" என்று  அர்ஜுனனை  வரவேற்றான்  கிருஷ்ணன்.

"கிருஷ்ணா,  கௌரவர்களோடு  யுத்தம் நிச்சயம் ஒருநாள் யுத்தம் வரத்தான் போகிறது.  அதில்  கௌரவ சேனையின்  தூண்களான  பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமன், கர்ணன்  ஆகியோர் எங்களை எதிர்த்து போரிடப்போகிறார்கள்.   அதற்கு முன்பு  யுத்தரங்கத்தில் வெற்றி தரக்கூடிய  அம்சங்களை பற்றி யோசித்தேன். 
  
சக்ர வியுஹம்  அமைக்கும் எதிரியின்  சேனையை  அழிப்பது  பற்றி சிந்தித்தேன்.  சரி உன்னிடம் அது பற்றி சில  விஷயங்களை பேசுவோம் என்று  தோன்றியதால் உன்னை பார்க்க வந்தேன். இருந்தோமல்லவா.  அது  பற்றி  நன்றாக  யோசித்தேன். ஒரு  யுத்தத்தில் எதிரிப்படை  சக்ர வியுஹம் அமைத்தால்  அதை நாம்  எந்த  வியுஹம்  அமைத்து  எதிர் கொள்வது, எப்படி  முன்னேற வழி என்பதை உன்னோடு  கலந்து பேசத்தான்  வந்தேன்" .

கிருஷ்ணன் சக்ர வியுஹத்தை  உடைத்து  முன்னேறுவதில்  எத்தனை  முன்னெச்சரிக்கை தேவை. யார்  யார் அதன்  ஒவ்வொரு  முனைப்பிலும்  தாக்க கூடும்,  எந்த இடத்தில் முதலில்  தாக்கி வியூஹத்தை  உடைக்க முடியும்  என்று  விலாவாரியாக  கிருஷ்ணன் அர்ஜுனனிடம்  எடுத்து சொல்லிக்கொண்டிருந்தது  அத்தனையும்  சுபத்ரா வெகு ஆர்வமாக  கேட்டுகொண்டிருந்தாள்.  

அவள் மட்டுமா  கேட்டாள்?  அவள் வயிற்றில் இருந்து கொண்டு  வீர  அபிமன்யுவும்  ஆர்வமாக  கேட்டு கொண்டிருந்தான் ?
இதை கிருஷ்ணன் கவனிக்க தவறவில்லை. 

"உனக்கு  தூக்கம்  வருகிறது சுபத்ரா,  இது  எங்கள் பாடு, பாவம், நீ  ஏன்  மெனக்கெடுகிறாய்.  உள்ளே  போய்  படுத்து தூங்கு"  என்று  சுபத்ரையை  உள்ளே அனுப்பிவிட்டான்  கிருஷ்ணன். 

பிறகு  அர்ஜுனனும்  கிருஷ்ணனும்  அந்த  சக்ர வடிவ  வியுஹத்தை  எப்படி உடைத்து  உள்ளே யிருந்து வெளிவருவது  என்பது பற்றியும்  விவாதித்தனர்.

பல வருஷங்கள்  கழித்து  அர்ஜுனன் ஒருநாள் வரும் என்று எதிர்பார்த்த யுத்தம் வந்துவிட்டது. 

மகாபாரத  யுத்தத்தில் 13ம்  நாள்  யுத்தத்தில் அபிமன்யு   வீராவேசமாக துரோணரின்  சக்ர வியுகத்தை  தாக்கிக்  கொண்டிருந்தான்.  அர்ஜுனன் எங்கோ ஒரு புறம்  த்ரிகர்த்தர்களை துரத்திச்சென்று  அவர்களோடு  போர்  புரிய  அர்ஜுனன் மகன் அபிமன்யு  குருக்ஷேத்ரத்தில்   யுதிஷ்டிரருடன் சேர்ந்து  கௌரவ சேனையின்  சக்ர வியூஹத்தை உடைத்து  உள்ளே  முன்னேறிவிட்டான்.  

 "அபிமன்யு  உள்ளே  செல்லாதே,  அர்ஜுனன் வந்த பிறகு  உள்ளே போகலாம்”  என்று யுதிஷ்டிரன் சொன்னதை அபிமன்யு,  காதில் போட்டுக் கொள்ளவே யில்லை"
பாவம்,  அந்த  சிறுவன்  வெளியே  வர  வழி தெரியாமல்  மாண்டான். 

கிருஷ்ணனிடம்  பிற்காலத்தில்  இது பற்றி கேட்டவுடன்  தான்  கிருஷ்ணன் வருத்தத்தோடு சொன்னான்.

“அர்ஜுனன் மகன் அபிமன்யு  சந்திரனின்  அம்சம்.  முனிவர்  கர்கரால்   சாபம் பெற்றவன் அவனுக்கு  16 வயதில்  மரணம் என்பது முடிவான விஷயம்.  சக்ர வியுஹத்தில் அவன்  உள்ளேறிய  அன்று  அவன்  பதினாறு வயதை பூர்த்தி செய்து விட்டான். அவனை  யாரும்  காப்பாற்ற முடியாது. இதற்காகவே, அவன்  சுபத்ரை வயதில் இருந்தபோதே  அவன்  சக்ர வியூஹத்தில்  இருந்து வெளியேறும்  வழியை  கேட்டு  தெரிந்து கொள்ளாமல்  இருக்க  சுபத்ரையை  தூங்கச்  செய்தேன். அவனுக்கு  உன் உதவியோ  என் உதவியோ  கிடைக்காதவாறு  நாம்  அவனை  தனியே  விட்டு விட்டு சென்று விட்டோம்.  இது  விதி.   வருவதை  எதிர்கொள்ள  தயங்க கூடாது" என்றான் கிருஷ்ணன்

sivan jaykay

unread,
Jul 17, 2020, 10:05:22 PM7/17/20
to amrith...@googlegroups.com
 தெவிட்டாத விட்டலா          J K  SIVAN   


                                                               பாப மூட்டை !!

மனித  ஸ்வபாவத்தில்  பொறாமை முக்கியபங்கு கொண்டது.   பிறரது அழகு, சந்தோஷம், செல்வம், அந்தஸ்து, தாராள மனப்பான்மை, சாமர்த்தியம்  எதைக் கண்டாலும் நம்மிடம் அது இல்லையே  என்ற எண்ணம் பொறாமைத்தீயாக வளர்கிறது.   தீ  எப்போதுமே  அருகிலே உள்ளதை தான் அழிக்கும் எரித்து சாம்பலாக்கும். இந்த பொறாமைத்தீ அப்படி யல்ல. பொறாமைப்படுபவனை அப்பளம்  மாதிரி வாட்டி வதைக்கும், துன்புறுத்தும், நிம்மதியில்லாமல் கோபப்  பெருமூச்சு  விட வைக்கிறது.  அப்படி ஒரு ஆசாமியை இந்த கதையில் இன்று பார்ப்போம். 

தேஹு  கிராமத்தில்  நாளுக்கு நாள்  பக்தர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே வந்தது.  அவரது பக்தியைக்கண்டு வியந்து,  துக்காராமின் அபங்க பஜனையில் தனை மறந்து  ஆனந்த கண்ணீர் பெருக  பக்தியில்  மூழ்காதவர்களே கிடையாது.    எங்கிருந்து எல்லாமோ  வெளியூர்களிலிருந்து கேள்விப்பட்டு   சாதுக்களும்  பாகவதர்களும்  கூட  அவரிட மிருந்து  அபங்கம்  பாட கற்றுக் கொள்ள பெருகி விட்டனர்.

ஆனால்  அதே  தேஹு  கிராமத்தில்  வாழ்ந்த  ராமேஸ்வர  பட்  என்கிறபிராமணருக்கு  இந்த துக்காராம் விஷயங்கள் கொஞ்சமும்  பிடிக்க வில்லை.  அவருக்கு வடமொழி தெரியும். பிரசங்கங்கள் பண்ணுவார் .  தன்னுடைய பிரசங்கங்களுக்கு   கிராமத்து  ஆட்களே  வருவதில்லை,  துக்காராமின்  பஜனைக்கு மட்டும்  எத்தனையோ பேர் வருவது அவருக்கு  பொறுக்க வில்லை.  

துக்காராம் ஒரு படிக்காதவர்,  வைஸ்யர், ஸம்ஸ்க்ரிதமே  தெரியாதவர்,  மராத்தியில்  தானாகவே  இட்டு கட்டி  பாடுபவர், தன்னுடைய  அபங்கத்தால்  ஊரையே  கெடுக்கிறாரே!  என்று  புலம்பினார். இது  பரவலாக  துக்கா ராமின்  காதிலும்  விழ,  அவர்  ஓடி சென்று ராமேஸ்வர் பட் காலில்  விழுந்து  வணங்கினார்

"நான்  ஏதாவது  தப்பு செய்து விட்டேனா சுவாமி?"  

"தப்பைத்  தவிர வேறொன்றுமே செய்ய வில்லையே  ஐயா  நீ.     உனக்கு  கொஞ்சமாவது சாஸ்திரம் தெரியுமா?  புராணம்  தெரியுமா?, சொந்தமாக ஏதாவது கற்பனையாக  மற்றவர்க்கு  பிரசங்கம்  செய்வது  பெரும்  பாபம்.  இதை  கேட்பவர்க்கும் அந்த பாபம் போய்ச் சேருகிறதே? இதை உணர்ந்தாயா?''  கத்தினார் பட் 

"அப்படியா. இது எனக்கு தெரியவில்லையே. நான்  அறிவிலி,  நீங்கள்  நன்றாக படித்த மகான்.  தயவு செய்து  என் தவறுகளை மன்னித்து  நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்" என்று கண்ணீர் மல்க  கேட்டார் துக்காராம்.

"இனிமேல் நீங்கள்  ஒரு  அபங்கமும்  எழுதவோ  பாடவோ வேண்டாம். இதுவரை எழுதியதை எல்லாம்  தூக்கி நீரில் எறியுங்கள்"

"விட்டலா,  பாண்டுரங்கா,  நான்   அறியாமல்செய்த  பிழையை  பொறுத்துக் கொண்டு  என்னை  க்ஷமிப்பாயா?    இனி  நன்றாக கற்ற  பண்டிதர்  ராமேஸ்வர் பட்    சொன்னது போலவே  நடக்கிறேன்.   எனக்கு  
உன் நாமத்தை  தவிர  வேறு  எதுவும்  தெரியாதே.   அதைத்  தானே  எனக்கு தெரிந்த  மராத்தியில் மனம்  போன  போக்கில் இத்தனை நாட்களாக   பாடிக்கொண்டு  எனை மறந்திருந்தேன்.  அந்த பெரியவர்  எப்போது  நான்  செய்வது  பாபம்  என்று  உணர்த்தி விட்டாரோ  இனியும்  அதை பண்ண மாட்டேன்"  என்று  அழுது கொண்டே  தன்னுடைய  ஒரே  செல்வமான, கண்ணின் மணியான,  அபங்கங்களை எல்லாம்  எடுத்து மூட்டை கட்டி  இந்த்ராயணி  ஆற்றில் எறிந்துவிட்டார்.   
ஆற்றங்கரையில்  சோகமாக  அமர்ந்தார். 

"வெகுநேரமாக உங்களை  காணோமே, இங்கே  அழுதுகொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். வாருங்கள், வீட்டுக்கு" என்று  மனைவி  ஜீஜா  தேடிக்கொண்டு வந்து அவரை  வீட்டுக்கு  அழைத்துப்  போனாள். சிறகொடிந்த  பறவையாக  வாய்  மட்டும்  "பாண்டுரங்கா, விட்டலா" என்று  ஸ்மரணை செய்து கொண்டே  தூங்கிப்  போனார்  துக்காராம்.  இரவு கழிந்தது. பொழுது விடிந்தது.   சில மணிநேரங்களில் யாரோ  வந்து கதவை தட்டினார்கள். 

"யார்?

"துக்காராம், துக்காராம்,   இங்கே வாருங்கள்"  என்று  உணர்ச்சி வசத்தோடு  பாண்டுரங்கன் ஆலய  
பிரதம அர்ச்சகர்  வாசலில் நின்றார்.  ஒரு கையில்  துக்காராம் ஆற்றில் எறிந்த அபங்க  மூட்டை!  

"இது என்ன?   ஏன்,  நான் செய்த  பாபங்களை  ஆற்றிலிருந்து  எடுத்து  கொண்டுவந்தீர்கள்?   என்று  அதிர்ச்சியோடு கேட்டார்  துக்காராம்.

"சுவாமி,  நாம் யாருமே   எந்த  ஆற்றிலிருந்து  எதையும்  எடுத்து வரவில்லை. பாண்டுரங்கன்  தானே போய்  ஆற்றில் இறங்கி  இந்த மூட்டையை  எடுத்து வந்து  தன்  தலையில் சுமந்து  ஈரம் சொட்ட சொட்ட  நின்று கொண்டிருந்தார்.   இன்று காலை  வழக்கம்போல்  கதவை திறந்து  சுப்ரபாதம் சேவை செய்ய  நுழைந்த போது  இதை  பார்த்து  திகைத்தேன்.  என்ன  மூட்டை  பாண்டுரங்கன் தலை மேல்  என்று   அதை எடுத்து  பார்த்த போது தான்  தெரிந்தது  நீங்கள் எழுதிய  அபங்கங்கள்  என்று. ஏதோ தவறு நடந்திருக்கிறது  என்று  எடுத்துக்கொண்டு  ஓடோடி வந்தேன்.  நீங்கள்  ஈடற்ற பாண்டுரங்க  பக்தர்  என்று எனக்கு தெரியுமே  என்கிறார் கோவில் அர்ச்சகர்.

"விட்டலா,  எனை  மன்னித்து விட்டாயா. உன் கருணையே  கருணை!!". துக்காராம் ஆனந்த கண்ணீர் வடித்தார் 

ஊர் முழுதும்  இந்த  அதிசயம்  காட்டுத் தீ போல்  பரவி  ராமேஸ்வர் பட் காதிலும் விழ அடித்து பிடித்து கொண்டு அவர்  துக்காராமிடம்  வந்து  கண்ணீர் பெருக காலி விழுந்தார். 

 "நீங்கள்  எவ்வளவு  பெரிய  மகாத்மா,  பாண்டு ரங்கனின்  அபிமானம்  நிறைந்த பக்தர்  அவரே  உங்கள்  அபங்கங்களை  ஆற்றி லிருந்து மீட்டு  தன் தலையில் சுமந்து நின்றார்  என்ற போது  என்  அறியாமையை உணர்ந்தேன்.  நானே  மகா பாபி.  என்னை மன்னிக்க வேண்டும்"  என்று கதறினார்  

"நீங்கள்  சாஸ்த்ரங்கள் உணர்ந்த  பண்டிதர்.  பிராமணர். அறிவிலி  என் காலில்  விழுவது அபசாரம்".  பாண்டுரங்கா,   விட்டலா"  என்று  கண்களில்  நீர் பெருக  அவனை  நன்றியோடு வணங்கினார் துக்காராம்.

sivan jaykay

unread,
Jul 18, 2020, 10:36:11 PM7/18/20
to amrith...@googlegroups.com
அந்தகக் கவி  வீரராகவர்      J K   SIVAN  

                                                                               '' பெரிய'' பரிசு 


காஞ்சிபுரத்தில்  பூதூர் எனும் ஊரில்  வடுகநாதர் என்பவருக்கு  வீரராகவன் என்ற  ஒரு  பிள்ளை பிறவியிலேயே கண் பார்வை இன்றி பிறந்தது. வீரராகவன்  பெரும் கவிஞனாக தனது சொந்த முயற்சியால்  உருவானார்.   முதுகில் பாடம் எழுத சொல்லி அதை உணர்வினால் கற்று அறிந்தவர்.  அந்தகக்கவி என்று பெயர் பெற்றவர். தமிழ் உள்ள வரை அவரை மறக்க முடியாது. ராமாயணம், பல  ஆலயங்கள் பற்றியும் கோவைகள், உலாக்கள் ,பிள்ளைத் தமிழ்  பல  இயற்றிய  கவிஞர்.  பொன்விளைந்த களத்தூரில் வாழ்ந்தவர். இவர் இசையிலும் பயிற்சி உள்ள கவிஞர்..சிற்றரசர்கள் சமஸ்தான அதிபதிகள் மேல் பாடல் இயற்றி  பரிசு பொருள் பெற்று வாழ்ந்தவர். 

 இலங்கையை இவர் காலத்தில்  பர ராஜ சேகரன் என்ற மன்னன்  ஆண்டுவந்தான்.அவன் தமிழை ஆதரித்து புலவர்களுக்கு நிறைய  பரிசுகள் கொடுப்பவன் என அறிந்து அவனிடம் தனது சீடன் ஒருவன் உதவியுடன் கப்பல் ஏறி சென்று  சந்தித்து அவன் அவர் தமிழாற்றல் கண்டு வியந்து ஒரு யானையை  பரிசாக அளித்தான். 

இந்த  சம்பவத்தை ஒரு பாணன்-பாணி தம்பதியர் கவிதையில் அற்புதமாக இயற்றியவர்  அந்தகக்கவி வீரராகவ கவிராயர். 

’இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணா?’ என்றாள் பாணி,
’வம்பதாம் களபம்’ என்றேன், ‘பூசும்’ என்றாள்.
‘மாதங்கம்’ என்றேன், ‘யாம் வாழ்ந்தேம்’ என்றாள்.
’பம்பு சீர் வேழம்’ என்றேன். ‘தின்னும்’ என்றாள்.
‘பகடு’ என்றேன், ‘உழும்’ என்றாள், பழனம் தன்னை
‘கம்ப மா’ என்றேன், ‘நல் களியாம்’ என்றாள்.
‘கைம்மா’ என்றேன், சும்மா கலங்கினாளே!

பாணன்  சொல்வதும்  பாணி புரிந்துகொண்டு பதில் சொல்வதுமாக அமைந்த அற்புத கவிதை இந்த தனிப்பாடல். எவ்வளவு தமிழ் ஞானம், கற்பனை பாருங்கள்   அ.க .வீரராகவருக்கு.

இது தான் பாடலின் சாராம்சம் : 

ஒரு பாணன் பாடல்கள் பாடுவதை தவிர  கவிகள் இயற்றுபவன்.  அவன் மனைவி தமிழறிவு படைத்த பாணி . வறுமையில் வாடும்  குடும்பம்.   அந்த ஊரில் பெரும்   பணக்காரன் ஒருவன். பெயர்  ராமன்.  அவனைச்  சந்தித்து அவனைப் புகழ்ந்து பாடி பரிசு பெற பாணன் சென்றான்.   ராமனுக்கு பாணனின் கவிதை ரொம்ப பிடித்து போய்விட்டதால் தனது பட்டத்து யானையையே  பரிசாக கொடுத்துவிட்டான். 

அடுத்தவேளை சோற்றுக்கு வழியில்லாத பாணன், யானையை வைத்து எவ்வாறு வறுமையை சமாளிப்பான். யானையை வேண்டாம் என்று சொல்லவோ மனமில்லை. பரிசாக வந்தது.   வீட்டுக்கு யானையோடு வந்தான். உள்ளே  குடிசையில்  அடுப்பங்கரையில்   பாணி  வீட்டில்  இருக்கும் கம்பு கேழ்வரகு ஏதெல்லாமோ சேர்த்து கூழ் காய்ச்சுகிறாள். வாசலில் யானையை நிறுத்திவிட்டு அங்கிருந்தே குரல் கொடுக்கிறான் பாணன். 

''அட, அதற்குள் வந்துவிட்டீர்களா?  ராமன் என்ன பரிசு கொடுத்தான்? ''  என உள்ளிருந்துகொண்டே  வெளியே வராமல்   கேட்கிறாள்  பாணி. 

''''வம்பதாம் களபம் ''  கயிற்றில் கட்டப்பட்ட கயிறோடு  ஒரு யானை.'' என்கிறார். களபம்  என்றால் யானை, சந்தனம்  ரெண்டையும் குறிக்கும் அல்லவா. பாணி அதை சந்தனம் என்று எடுத்துக் கொண்டு   

''ஓஹோ,  நல்ல  வாசனையோடு கூடிய  சந்தனமா கொடுத்தான்.   நிறைய  நீரே உடம்பு பூரா  பூசிக் கொள்ளும்  ''

'' சந்தனம் இல்லை, பாணி  ''மாதங்கம்''   (யானைக்கு இப்படி ஒரு பெயர் )

''மா  தங்கம் ''  என்பதை விலை உயர்ந்த  தங்கம் என்று பாணி எடுத்துக் கொண்டதால்  '' ஓஹோ  தங்கம் கொடுத்தானா ,  எவ்வளவு  தாராளமான மனசு அவனுக்கு.   அப்பாடா, இனிமேல்  நமக்கு வறுமை துன்பம் தீரும்''  என்கிறாள்.

'' தங்கம் இல்லை, பாணி, '' பம்பு சீர் வேழம்'' (  எல்லோராலும்  புகழப்படும்  யானை.  வேழம் என்றால் யானை ளென்றும் கரும்பு என்றும் பொருள் )  கணவன் கரும்பைத்   தான்  பரிசாக கொண்டு வந்தான் என புரிந்து கொண்டு   ''அப்படின்னா, ரொம்ப நாளாச்சு கரும்பு கடித்து, கொண்டுவாரும்  உள்ளே, சாப்பிடலாம்'' என்கிறாள் 

''நான்  கரும்பை கொண்டு  வரவில்லை பெண்ணே,   ''பகடு''  என்கிறான் பாணன்.  பகடு ( யானை  எருமைக்கடா ரெண்டையும் குறிக்கும் சொல் )  

''என்ன சொல்கிறீர். ராமன்  உமது கவிதைக்கு பரிசாக   உமக்கு ஒரு  எருமைக்கடாவையா  கொடுத்தார்.  பரவாயில்லை, இனிமேல் வயலை உழுவதற்கு அதை பயன் படுத்துவோம்'' என்கிறாள். 

ஓய்ந்து போன  பாணன்  ''எருமையும் இல்லை, அருமையும் இல்லை,   பாணி,   ராமன் கொடுத்தது   ''கம்ப மா'' என்கிறான்.  அசைகின்ற  ஒரு யானை என்று பொருள்.

இதையும்  சாதாரணமான பொருளில் கம்பு அரைத்து இடிக்கப்பட்ட  மாவு என்று பாணி எடுத்துக்கொண்டு விட்டதால்,  ''ஏதோ  ராமனுக்கு அதையாவது கொடுக்க தோன்றியதே.  சிறிது நாட்கள் கம்பங்களி  சமைத்து பசியாறுவோம்.'' என்று பெருமூச்சு விடுகிறாள். 

பாணன் '' கம்புமில்லை சொம்புமில்லை.  '' கைம்மா'' கையை உடைய  மிருகம்'' என்கிறான். 

தும்பிக்கை உடைய ஒரே மிருகம்  யானை என்பதை அறிந்த பாணி சற்று வெளியே வந்து   வாசலில் தூர நிற்கும்  யானையைப்  பார்த்து விடுகிறாள்.  தலை சுற்றி கீழே விழுமுன் அவள்  கேட்ட கேள்வி  

''ஏனய்யா, இப்படி செய்துவிட்டீர்,  மூளை இருக்கிறதா உமக்கு?  நமக்கே சோற்றுக்கு வழியில்லை, இந்த யானையை   வேறு வாங்கி வந்து நிற்கிறீரே, அதை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வது?  எப்படி அதற்கு ஆகாரம் கொடுப்பது?'' 




sivan jaykay

unread,
Jul 18, 2020, 10:36:11 PM7/18/20
to amrith...@googlegroups.com

                                         போட்டியும்  முடிவும்    J K  SIVAN  

ஏதோ கொஞ்சம்  விஷயம் தெரிந்துகொண்டதும்  தலை கனம் ஏறிவிடுகிறது.  ''என்னைப்போல்  படித்தவன் இல்லை, எவனுக்கும் எதுவுமே  தெரியவில்லை''  என்று பேசுகிறவர்கள் அதை நம்புகிறவர்கள் நம்மிடையே  அநேகர் இல்லையா?  

எல்லா அஸ்திர வித்தைகளும் துரோணரிடம் கற்ற அர்ஜுனனுக்கு  தலை கனம், கர்வம் இருந்தால் என்ன அதிசயம்.  அது பற்றி ஒரு குட்டிக்கதை.  ஏற்கனவே பல முறை சொல்லி இருந்தாலும்  அடிக்கடி சொல்லவேண்டிய ஒன்று.

அர்ஜுனன்  தீர்த்த யாத்திரை தெற்கு நோக்கி  சென்றபோது  தான். ராமேஸ்வரம்  சேதுக்கரை வந்துவிட்டான். அங்கே   ராமருக்காக  வானர சைன்யம் கட்டிய    சேது  பாலத்தை  பார்த்ததும் அவனுக்கு சிரிப்பு வந்தது. 

 ஸ்ரீ  ராமன் சிறந்த வில்லாளி அவனால்  தனது அம்புகளைக்  கொண்டே   சிறந்த பாலம்  அமைக்க  முடியுமே?   ஏன்  வானர சைன்யத்தின்  உதவி நாடினான்?  என்னாலேயே  இத்தகைய  பாலத்தை   சரங்களால் அமைக்க  முடியுமே?. ஒருவேளை   ராமனுக்கு   தன்னளவு  வில்வித்தையில்  நம்பிக்கை குறைவோ?    இதற்கு யார் பதில் சொல்வார்கள்?  அர்ஜுனன் யோசித்துக் கொண்டே  நடந்தான்
  
 ராமேஸ்வரம்  வரை  நடந்து சென்றவன்  ஒரு  காட்டில்   எங்கிருந்தோ  ''ஜெய் ராம்  சீதா ராம் '' என்று விடாமல்  ராம நாம   ஜபம் ஒலிப்பதை  கேட்கிறான்.   காட்டில் எவரும் தென்படவில்லை. சத்தம் எங்கிருந்து வருகிறது.   காட்டில் தேடுகிறான்.  ஒரு  சிறு  ஆலயம்.  அதனுள்ளே இருந்து வருகிறது இந்த நாம ஜபம். உள்ளே நுழைகிறான். 

என்ன  ஆச்சர்யம்!.  அவனுக்காகவே  அங்கு  காத்திருந்தது போல  ஆஞ்சநேயர்    ராமர்  விக்ரஹம்  முன்னாள்  அமர்ந்துகொண்டு   ராம நாம ஜபம்  செய்து கொண்டிருந்தார்.     கண்ணை மூடிக்கொண்டு நாம ஜபம் செய்யும் அவர் எதிரே நிற்கிறான். சற்று நேரத்தில்  கண்ணை விழிக்கிறார் ஹனுமான். 

''யார் நீ? என்ன வேண்டும்? எதற்கு இங்கே வந்தாய்?''

''சுவாமி நான்  அர்ஜுனன்,  பாண்டவன்,  உங்களைப் பார்த்தால்  ஸ்ரீ ராம பக்த தூதன்  ஹநுமானைப் போல இருக்கிறது என்பதால்  உங்களை  தரிசித்து  ஆசி பெற வந்தேன். அதோடு ஒரு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்துகொள்ள விருப்பம்.'' 

''நல்லது . என்ன சந்தேகம் உனக்கு கேள். ?''  

''என்னிடம் காண்டீபம் உள்ளது போல் ஸ்ரீ  ராமனிடம் சர்வ சக்தி வாய்ந்த கோதண்டம் இருந்தபோதும், ஏன் அவர் இங்கே காணும் சேது பாலத்தை தனது  அம்புகளைக்  கொண்டே  நொடியில்  அமைக்க வில்லை? . என்னாலேயே  இத்தகைய  பாலத்தை   சரங்களால் அமைக்கமுடியுமே?.

ஆஞ்சநேயன்   சிரித்துக்கொண்டே “ அர்ஜுனா  ஏன்  ராமர் அம்பு பாலம்  கட்டவில்லை என்று  கேட்டாயே அது வானர சைன்யங்களின்  பலத்தை  தாங்க கூடியதில்லை!!.  யாராலும் அப்படி ஒரு அம்பு பாலம் கட்ட  இயலாது.''

“ஆஞ்சநேயா,   நான் கட்டும்  அம்பு பாலம்  எந்த  பாரத்தையும்  தாங்கக்கூடியது.  எத்தனை வானர சைன்யங்களும்  அதன் மீது  செல்லலாம்''  .     சற்று கோபத்தோடு சொன்னான் அர்ஜுனன். தனது காண்டீபத்தை குறைத்து மதிப்பீடு செய்தால் அவன் தாங்கமாட்டான்.

“ நீ சொல்வதை நான்  நம்பவில்லை, அர்ஜுனா!”.

“என்ன  போட்டி  உங்களுக்கும்  எனக்கும். இப்போதே  நான் ஒரு அம்பு பாலம் அமைக்கிறேன்.   நான் கட்டிய அம்பு பாலம்  நொறுங்கினால்  நான்  உடனே  தீ  மூட்டி  அதில் மாள்கிறேன்.   அது நொறுங்காமல்  நீங்கள்   தோற்றால்   உங்களுக்கும் அதே முடிவு.  அதே  விதி.  ஒப்புக்கொள்கிறீர்களா?''

சவால்  விட்டான்  அர்ஜுனன். ஆஞ்சநேயர் ஒப்புக்கொண்டார். இருவரும்  கடற்கரை சென்றார்கள். 

 அர்ஜுனன்   வில்லை எடுத்தான். சரங்களை தொடுத்து  விரைவில்  ஒரு  பாலம்  அமைத்தான்..'''ம்ம்   எப்படி?''
என்றான். 

  “அர்ஜுனா  நீ   கட்டிய   சீட்டு கட்டு  பாலம்  என்   ஒருவனையே  தாங்காதே,   எப்படி  ராமரின் வானர சைன்யத்தை  தாங்க முடியும்?  இதோ பார்'' . 

“ஜெய் ஸ்ரீ ராம்” என்று   ஆஞ்சநேயன் தன் வாலால்  அந்த  பாலத்தை  ஒரு  தட்டு தட்ட  அது  பொடிப் பொடியாய்  நொறுங்கியது.  தோல்வியை  ஒப்புக்கொண்ட  அர்ஜுனன்  தீ மூட்ட தொடங்கினான். அவன் மனமும் நொறுங்கியது. தனது ஆருயிர் நண்பன் கிருஷ்ணனை நினைத்துக் கொண்டான். கடைசியில் அவனிடம் விடைபெற்று தீயில் மறைய முடிவெடுத்தான். 

“கிருஷ்ணா, நான்  முதல் முறையாக  தோல்வியடைந்து  உன்னை  இனி பார்க்க எனக்கு  முகமே  இல்லை. முடிந்தால் அடுத்த ஜென்மத்தில் சந்திக்கிறேன்.''

அர்ஜுனன்   தீயில்  குதிக்கு முன்  அந்த பக்கமாக ஒரு  முதிய துறவி  வந்துகொண்டிருந்தார்.  

'  நில்.....'யாரப்பா நீ,  எதற்கு தீமூட்டி அதில் விழ முயற்சிக்கிறாய்.?'  என்று கேட்டார். அருகே நின்ற  ஆஞ்சநேயரிடம் 

'' என்ன  நடக்கிறது இங்கே? நீயாவது சொல் ” என்கிறார்.   ஹனுமான் போட்டி நிபந்தனையை சொல்லி அர்ஜுனன் தோற்றதைச்  சொல்ல. அந்த துறவி  அதை ஏற்கவில்லை.

“இந்த போட்டி  தவறாக நடந்திருக்கிறது.   உங்கள்  போட்டிக்கு  யார்  சாட்சி?”
  “ஒருவருமில்லை”  
“சாட்சியில்லாத  போட்டி  செல்லாது. நீங்கள்  மீண்டும்  போட்டி போடுங்கள்  நானே  வேண்டுமானால்  சாட்சியாக இருக்கிறேன்”  நெருப்பு அப்படியே எரியட்டும் . இந்த முறை தோற்றவர்  தீக்குளிக்கலாம்''
“ஆஹா  அப்படியே;;  
அர்ஜுனனின்  ஆஞ்சநேயனும்  ஒப்புக்கொண்டு அர்ஜுனன்  மீண்டும் அம்பு பாலம்  அமைக்க ரெடி! 
 அவன்  உள் மனதில் சிறிது பயம். ஒருவேளை இம்முறையும்  தோல்வி  நிச்சயமோ.?கிருஷ்ணனை வேண்டினான் 

“ஹரே,  கிருஷ்ணா உன்னை  வணங்கி  இம்முறை   அம்பு பாலம் கட்டுகிறேன். தோற்றால்,  அடுத்த  ஜன்மத் தில் சந்திப்போம்” 

அர்ஜுனன்   சரங்களால் பாலம்  கட்டிவிட்டான்.  ஆஞ்சநேயன்  சிரித்து கொண்டே அதன் மீது தன் வாலால் தட்டினான்.  அசையவில்லை.  காலால்  உதைத்தான். கால் தான் வலித்தது. அதன் மீது   ஏறி முழு  பலத்துடன் குதித்தான். பாலம்  இம்மியும்  அசையவில்லை.  ஆஞ்சநேயன்  ஆச்சர்யமுடனும்  அதிர்ச்சியுடனும்  முகம் கவிழ்ந்து  யோசித்தான். என்ன  ஆயிற்று?.   துறவி  முடிவைக்  கூறி விட்டார்: 

“அர்ஜுனனால் முதலில்  கட்டிய  பாலத்தை  ஆஞ்சநேயனால் நொறுக்க முடிந்ததற்கு  காரணம்  அர்ஜுனன்  தன்  வில் வித்தை கர்வத்தால்  தான்  ராமனை மிஞ்சியவன் என்ற  மமதை. கர்வம். அதை  ஆஞ்சநேயன் ''ஜெய்  ஸ்ரீ ராம்  '' என்று சொல்லி உடைக்க முயன்றதால்   அவன் அதை தனது  வாலால்  அடித்து  நொறுக்க முடிந்தது. 

இம்முறை  அர்ஜுனன்  ஸ்ரீ கிருஷ்ணனை முழுதும் நம்பியே  தனது பாலத்தை கட்டியபோது  ஆஞ்சநேயன்  தன் பலத்தின் மீது  இருந்த  கர்வத்தால்   வாலால்  அடித்தபோது  அதை அசைக்கக்  கூட  முடியவில்லை. உங்கள்  இருவருக்கும் இது புரிந்ததா?'' 

இருவரும்  முதிய துறவியின் கூற்றை ஏற்று, அவர்  காலில் விழுந்து வணங்கி  எழுந்தபோது  அங்கே அவரைக் காணோம்.  அர்ஜுனன்  எதிரே   கிருஷ்ணன் நின்றான்.  ஹனுமான் கண்ணுக்கு  ராமனாக காட்சி அளித்தான். 

''என் இரு கண்கள்  நீங்கள் அகம்பாவம்  வேண்டாம் உங்களுக்கு” என்று  அருளினான். 

கிருஷ்ணனின் அறிவுரை  ஆஞ்சநேயன்  அர்ஜுனன் இருவருக்கும் மட்டும் அல்ல.  நமக்காக அவர்களை  சாக்கிட்டு சொன்னது என்று புரிந்தால்  இந்த கதை எழுதியதற்கு நல்ல பலன் கிடைக்கும் . 

sivan jaykay

unread,
Jul 18, 2020, 10:36:11 PM7/18/20
to amrith...@googlegroups.com
                           
                                                கல்யாண சமையல் சாதம்.... J K SIVAN 

நான்கு மாதங்களுக்கு மேல்  எல்லோருக்கும்  வீட்டு சமையல்  நன்றாக இருக்கிறதோ இல்லையோ, வேறு கிடையாது. வெளியில் ஹோட்டல்கள் மூடி இருக்கிறது. இருந்தாலும் அங்கே போய் சாப்பிடமுடியாது. பொட்டலம் தான். அதுவும்  கொரோனா பயத்தோடு வாங்கி வரவேண்டும், வரவழைக்க வேண்டும்.. எங்கும் கல்யாணங்கள்,  பண்டிகைகள், விழாக்கள் எதுவும் கிடையாது, விருந்து சாப்பிடும் அதனால் வெறும் கனவு தான்.  


இந்த நேரத்தில் இன்று எனது கோயம்பத்தூர் நண்பர்  ஸ்ரீ  V.S . கிருஷ்ணன்  என் எழுத்து ரகத்தை, பல வகையான பாலக்காடு சமையல் அயிட்டங்களோடு ஒப்பிட்டு எழுதியதை படித்ததும், கண்களிலும் நாக்கிலும் நீர் சுரந்தது. நாக்கில் சுரந்தது ருசிக்காக, கண்களில் சுரந்தது , ஒன்று கண்ணாடி மாற்றவேண்டும் என்பதற்காகவோ அல்லது  இதெல்லாம் என்று சாப்பிடப்போகிறாம் என்ற ஏக்கத்தாலோ?

அப்படி என்ன எழுதிவிட்டார் கிருஷ்ணன்: 

If you restrict your topic to one or two, it will be read only by those who are interested in that topic. 
You are a very rare personality who has acquired knowledge on wide spectrum of subjects and therefore it will be appropriate if you continue to write on subjects on which you have fair knowledge. 
Modern readers want to gain not necessarily on one or two subjects but all subjects like religion, social aspects, men of extra ordinary vision like Sri Ramana Maharshi, Sri Ram Surat kumar, Pamban Swamigal etc.

Personally speaking, after reading your posting, most of the time I have felt as if I enjoyed Palakkad Noorni Saastha preeti feast. 

For your information, apart from many dishes like kaalan, Avial, plan koottu etc. there will be five vatsities of Payasam and five varities of pickle. "Five varities of Payasam ok but why 5 pickles? " you will ask. After taking five round of Payasam, you want to take more but you cannot. Take the pickle now, you are ready for another round. Sorry, I deviated from my subject. To conclude, please continue your posting in the same way, without denying any part.  

சமீபத்தில்  யாரோ ஒருவரின்   பாலக்காட்டு பிராமண ஐயர் குரலில் ஒரு கல்யாண சமையல் லிஸ்ட் கேட்டேன். அதை ரொம்ப காதல் கேட்டு ருசித்தேன். அது நினைவுக்காய் வந்தது. அதை இணைத்திருக்கிறேன்  

மனப்பால் குடிப்பது என்பார்களே அதுபோல்  காதால்  இந்த சமையலை  அருந்துங்கள், இல்லை விருந்தை அனுபவியுங்கள்.  https://soundcloud.com/natarajan-krishnan-1/palakkad-mama-talking-about-marriage-cooking-menu


sivan jaykay

unread,
Jul 18, 2020, 10:36:11 PM7/18/20
to amrith...@googlegroups.com
                                                                         ''கட்டுப் பட்டவன் ''   J K   SIVAN          

வளரும்  குழந்தைகள் விஷமம் பண்ணவேண்டும் அப்போது தான் அவர்கள்  நன்றாக  நார்மலாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.  சோர்ந்து வாயில் விரல் போட்டுக் கொண்டு  மூலையில் உட்கார்ந்தால்   'சம்திங் ராங்'' .  உடனே வைத்தியரிடம் போகவேண்டும்.  ஏதோ கோளாறு என்று  புரிகிறது. 

சில குழந்தைகளை  ஹைபர்  ஆக்டிவ்  HYPER ACTIVE   என்கிறோம்.  துறு துறு வென்று  ஏதாவது விடாமல் விஷமம்  பண்ணிக்கொண்டே இருக்கும்.  கூடவே  ஒரு ஆள்  கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது ஏடாகூடமாகிவிடும். 

கண்ணன் பிருந்தாவனத்தில்  அதி அதி ஹைப்பர் ஆக்டிவ்  பையன்.   விஷமம்  என்றால்  கொஞ்ச நஞ்சமல்ல.  சரியான  முள்ளு அந்த பையன்.

“இவனை எப்படி டீ, யசோதா  நீ  கட்டி  மேய்க்கறே?  என்று பக்கத்து வீடு  கோகிலா   கேட்டபோது தான்  அந்த   கேள்வியிலேயே ஒரு  விடை  இருப்பதை   யசோதை  உணர்ந்தாள். 

 சேர்ந்தாற்போல்  இது  இரண்டாவது  வாரம்.  ஒவ்வொரு நாளும்  பிருந்தாவனத்தில்   எந்த வீட்டிலாவது  வெண்ணை சட்டி  உடைந்திருக்கும்  ஆனால்  வெண்ணை  மட்டும்  காணாமல்  போயிருக்கும்.  காரணம் யார்?  என்பதோ  வெட்ட வெளிச்சம். 

ஆகவே யசோதை  அதட்டி பார்த்தாள்.  உருட்டி  விழித்தாள்,  கையை  ஓங்கினாள். அடிக்க  மனசு வரவில்லை. சிரித்தே  அல்லவா  மயக்கி விடுகிறான்.  சரி,  இவனை எப்படி  திருத்துவது?????? மேலே  சொன்னேனே
அடுத்த வீட்டு  கோகிலாவின்  கேள்வியிலேயே   என்ன பதிலிருந்தது.?  யசோதை திரும்ப திரும்ப
யோசித்தாள் .

"இவனை எப்படி கட்டி மேய்க்கறே"  .ஆஹா, இது முன்னாலேயே   தோன்றாமல் போய்விட்டதே!!''   விடு விடுவென்று கண்ணனை இழுத்துக்  கொண்டு வீட்டின் பின்புறம்  சென்றாள் . 

 தோட்டத்தில் ஒரு பெரிய  நெல் இடிக்கும்  உரல் இருக்கிறதே.  அதன்  அருகில்  கன்றுக்குட்டியைக் கட்டும்  ஒரு  சிறிய  தாம்புக்கயிறும்  வசமாக  கண்ணில்  பட்டது.  அப்புறம் என்ன ?  அந்த   கயிறு  கண்ணனுக்கும் உரலுக்கும்   ''இறுக்கமான நெருங்கிய''   உறவாகி விட்டது.  அவன் வயிற்றில் ஒரு முனை. மற்றொன்று  அந்த  கல் உரலின்  வயிற்றில்.   கண்ணன் ''கட்டு'' பட்டான்.  அவளை  தீனமாக  கெஞ்சியவாறு பார்த்தான் .  கண்ணன் கண்களில்  கண்ணீர்   குளமாக  தேம்பி எப்போது  நீர்   சொட்டாக விழுமோ என்று தளும்பி நின்றதை  பார்த்தால்  அந்த   கல் உரலும் உருகிவிடும்.!!  பேந்த பேந்த  அம்மாவை விழித்து பார்த்தான்.

யசோதைக்கு அவனைப் பார்த்தபோது அவள் கண்களிலும் கண்ணீர் தளும்பியது.  இருந்தாலும்  வேறு வழியில்லை. தண்டனை கொடுத்தால்  தான் திருந்துவான் என்று  மனதை திடப்படுத்திக் கொண்டாள் .
அவனைக்  கட்டிப்  போட்ட  வருத்ததோடு

 "போக்கிரி  கிருஷ்ணா,  இது உனக்கு சரியான தண்டனை. இனிமேல் ஒவ்வொரு  தடவையும்
  நீ செய்யும் விஷமத்துக்கும் இது போலவே  உன்னை  கட்டிபோடபோகிறேன்" என்று அவனுக்கு வார்னிங் கொடுத்துவிட்டு மத்யானம் வரை இங்கே கிட, பிறகு தான்  உனக்கு விடுதலை” என்று  சொல்லி யவாறு உள்ளே போனாள்  யசோதை..

அவள் சென்ற சில  கணங்களில்  கண்ணன்  சிரித்துக்கொண்டே  சுற்றுமுற்றும்  பார்த்தான்.  சற்று  தூரத்தில் இரு  நெடிய  பெரிதாக வளர்ந்த  பழையகால   மருத  மரங்கள் ஜோடியாக  இணைந்து நெருக்கமாக வளர்ந்து  குறைந்த  இடைவெளியுடன் நிற்பது கண்ணில் பட்டது.   என்ன பழைய  ஞாபகமோ அந்த மாயக் கண்ண
னுக்கு?

கண்ணன்  உரலோடு மெதுவாக நகர்ந்தான் அவ்விரு நெடிய  மரங்களின் இடையில் நுழைந்து மறுபக்கம் சென்றுவிட்டான்.  அவன் மறுபக்கம் சென்றாலும்  கயிற்றின்  ஒரு  முனையில் இருந்த உரல் மரங்களுக்கு இடையில் சிக்கி  அவனை  மரத்தை தாண்டி  அந்தப்பக்கம்  செல்ல முடியவில்லையே. அதனால்  மரங்களால் தடுக்கப்பட்டு  அந்தப்பக்கம்  மேலே செல்ல முடியாமல் நிறுத்தியது.  சிரித்து கொண்டே கண்ணன் ஒரு இழுப்பு இழுத்தான் . அவனது பலம் அவனுக்கு மட்டுமே அல்லவா தெரியும். 

என்ன ஆச்சர்யம்!  அவனது சங்கல்பத்தால்  அந்த  சிறிய மெல்லிய  தாம்புக்கயிறு, அதோடு கட்டப்பட்ட  உரல்  இரண்டுமே அசுர பலம் பெற்றன.  அவன்  கயிறை  இழுக்க, அது   உரலை இழுக்க,  உரல்  மரங்களை இடிக்க,   பெரிய நெடிதுயர்ந்த இரு  மரங்களும்   உரல் இடித்த  வேகத்தில், பலத்தில் , வேரோடு மடாரென்று  சாய்ந்தன.   அவை விழுந்தபோது பெரிய சப்தம் கேட்டது.   யசோதை உள்ளே இருந்து வேகமாக   வீட்டுப்  பின்னாலே  என்ன சத்தம் என்று பயந்து ஓடிவந்தாள்.  அவள்  வருவதற்குள்  நான்  ஒரு பழங்கதை சொல்ல வேண்டிய  அவசியம் வந்து விட்டதே. 

குபேரனுக்கு  இரு மகன்கள்.   நளகூபரன்,  மணிக்ரீவன்.  ஏதோ தப்பு பண்ணி  அவர்கள் நாரதரால் ஒரு காலத்தில் சபிக்கப்பட்டு  நந்தகோபன் வீட்டு தோட்டத்தில்  வெகுகாலமாக  ஜோடியாக மருத  மரங்களாக  நின்றார்கள்.   ''கிருஷ்ணனால் ஒரு காலத்தில்  சாப விமோசனம் பெற்று  தேவலோகம் திரும்புவீர்கள்'' என்று சொல்லி விட்டார்  நாரதர். அந்த நேரம் வந்து விட்டது இப்போது.  கண்ணன் உரலை இழுத்து மரங்களை சாய்த்து விட்டானே.   குட்டி கிருஷ்ணன் மூலம் இப்போது  குபேரன் பிள்ளைகள்  இருவரும்  சாப விமோசனம் பெற்று மீண்டும் கந்தர்வர்களாகி  அவனை வணங்கி ஆசி பெற்று மேலே  பறந்தனர். 

 ''என்ன சத்தம்?''  என அலறி அடித்துக்கொண்டு தோட்டத்துக்கு வந்த  யசோதை  இரு பெரிய  மருத மரங்கள் வேரோடு தரையில் சாய்ந்து கிடக்க  குட்டி கிருஷ்ணன்  உரலில் கட்டிய கயிறோடு அவற்றின் நடுவே  அமர்ந்திருப்பதை பார்க்கிறாள். தலை சுற்றி  கண் மயங்கி, ஹா  என்ற கூக்குரலோடு   தரையில் விழுகிறாள்.   கண்ணன் அவளை நோக்கினான்.  கண் விழித்தாள்.

''என் கண்ணே  கிருஷ்ணா,  இந்த பாவியால்  எவ்வளவு பெரிய  ஆபத்து  உனக்கு வந்திருக்கிறதே. ஏதோ நான் எப்போதோ செய்த புண்யத்தால்   கடவுள்    கிருபையால்   மரங்கள்  குழந்தை மேல்  விழவில்லை. ஐயோ  நினைக்கக்  கூட மனம் இடம் கொடுக்க வில்லையே. அந்த மரங்களில் ஏதாவது ஒன்று என் குழந்தை மீது விழுந்திருந்தால்  என்ன ஆயிருக்கும்? அதைப்பார்த்து நான்  உயிரோடு இருப்பேனா ?''     இரு கரம் கூப்பி யசோதை மேலே   எங்கோ பார்த்தவாறு     ''பகவானே  நீ  என்னை காப்பாற்றினாய்'' என்று கடவுளை மனமார வேண்டிக்கொண்டபோது கண்ணன்  புன்னகையோடு அவளது வேண்டுதலை வெளிகாட்டி கொள்ளாமல் ஏற்றான் !!  அவன் ''கிருபையால்'' தானே  குபேரன் பிள்ளைகள்  சாபவிமோசனம் பெற்றார்கள். அது அவன் கடமை இல்லையா. .... பாவம்  யசோதை இதை அறிவாளா?

இறைவன் உள்ளன்பினால் மட்டுமே பாசக்  "கட்டு"   படுபவன்.

sivan jaykay

unread,
Jul 18, 2020, 10:36:12 PM7/18/20
to amrith...@googlegroups.com
 கீதாஞ்சலி  17       J K   SIVAN  
தாகூர்   

                                                                           17  உன்னிடத்தில் என்னைக்  கொடுத்தேன்....
 
17.  I am only waiting for love to give myself up at last into his hands.
That is why it is so late and why I have been guilty of such omissions.
They come with their laws and their codes to bind me fast; 
but I evade them ever, for I am only waiting for love to give myself up at last into his hands.
People blame me and call me heedless; 
I doubt not they are right in their blame.
The market day is over and work is all done for the busy.
Those who came to call me in vain have gone back in anger.
 I am only waiting for love to give myself up at last into his hands.

கிருஷ்ணனுக்கு தெரியாதா  என்ன  நான் என்னையே  அவனுக்கு அர்ப்பணிக்க காத்திருக்கிறேன் என்று.
 கண்ணா, கருமை நிற வண்ணா, நின்னையே சரணடைய   எவ்வளவு  காலம்  காத்திருந்தேன்  என்பது எனக்கும்  உனக்கும் தான் தெரியும்  என்  நந்தலாலா.

 என் காதல் பாசம் அனைத்தும் உன்னிடமே அல்லவா?  உனக்காக கடைசி வரை காத்திருப்பவர்களில்  நான் முதல்வன். அதனால் தான் நான் ரொம்ப லேட் பேர்வழி. நிறைய தவறுகள் செய்தவன் அல்லவா?.  என் தவறுகள் சும்மா விடுமா?

ஒவ்வொருவரும்  அவரவர்க்கு  தெரிந்த நெறிமுறைகள், வழிகள், சட்டம் நியாயம், தர்மம் எனக்கூறி என்னென்னவோ  தண்டனை கொடுக்க என்னென்ன வழியோ  காட்டி   என்னைத் தம்மோடு  சேர்க்க  என்னை அணுக முயலும் போது நான் அகப்படுவேனா?   அவர்கள்  அத்தனை பேருக்கும்  ' டிமிக்கி'    கொடுத்துவிட்டு  உன்னிடம் அல்லவோ ஓடிவந்து  ''கண்ணா,  நீ என்னை காத்திடுவாய். என்னை திருத்திடுவாய்'' என்று கெஞ்சுவேன்.  என் முழு மனம், அன்பு, பாசம், நேசம் உன்னிடம் மட்டும் என்று எனக்கும் உனக்கும் மட்டுமே  தெரியும்.  இது தெரியாத, அறியாத மற்றவர்கள் என்னை கோபிப்பதில், என் மீது ஆத்திரப்படுவதில் என்ன தவறு?  அவர்களைப்  பொறுத்தவரை  அது சரி. 

உன்னை அடைந்தவனின் தவறுகள் உனதாகி விடுகிறதே.  சேய் செய்த பிழை தாய் பொறுப்பவள் ஆயிற்றே. 
ஆகவே என் தவறுகள் பற்றியும்  நான் சிந்திக்கவில்லை. 

''இவன் மதி கெட்டவன், சொன்னதைக்  கேட்கமாட்டான்'' என்று நிறைய பேர்  எனக்கு பட்டம் சூட்டுவதும் எனக்கு தெரியும்.  கேட்டு கேட்டு  எனக்கு  காது  புளித்துப்போய்   விட்டது கிருஷ்ணா. அவர்கள்  என்னை குறை கூறுவது நியாயம் தானே.  என் மனம் உன் மீது தானே  முழுதும் இருக்கிறது.  ஆகவே  அவர்கள்
சரியாகத் தான் சொல்கிறார்கள்.     எனக்கு துளியும் சந்தேகம் இல்லை. நான் தான்  எப்போதோ 
என்னை உணர்ந்து உன்னிடம் ஓடி வந்துவிட்டேனே.   அவரவர் வழியில் அவரவர்கள் செல்லட்டும்.

கடைத்தெருவில்   வியாபாரங்கள் முடிந்து  எல்லோரும்   கதவை மூடியாகி விட்டது.  அவரவர் அன்று சம்பாதித்த  காசு எண்ணு கிறார்கள். என்னை தேடி வந்தவர்கள் என்னை அடையமுடியாத  கோபத்தோடு திரும்புவது  நான்  அறிவேன்.  நான் என்ன செய்வது? நான் தான்  என்னை  உன்னிடம் தந்து விட்டேனே. அவர்களிடம் எப்படி   சிக்குவேன். அவர்கள் வழி நான் எப்படி போகமுடியும்? 
 

sivan jaykay

unread,
Jul 18, 2020, 10:36:12 PM7/18/20
to amrith...@googlegroups.com
                                                           
                                                                 நல்லது  செய்யும்  சனீஸ்வரன்  J K  SIVAN 
                               

ஒரு சமீபத்திய கட்டுரையில் சனீஸ்வர பகவான் கோவில் ஒன்று பற்றி எழுதுவதாக சொன்னேனே  அது தான் இது. 

நண்பர்  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனோடு அற்புதமான  கோவில்கள் எத்தனையோ சென்ற பாக்யம் கிடைத்தது
 பூர்வஜென்ம பலன் எனலாம். 
 
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர்  திருக்கோயிலுக்கு   நாங்கள்  சென்ற  பொது உச்சி வெயில் நேரம் சுள்ளென்று சூரியன் கொதிக்கும் கிரணங்களை கொள்ளிக்கட்டைகளை போல  மேலே  தெறித்த நேரம். காலில் செருப் பின்றி  கோவிலை நோக்கி நடந்தபோது தலையிலிருந்து கால் வரை சூடு என்றால் என்ன என்று புரிந்தது.  கொள்ளிக்காடு  சிவனுக்கு பொருத்தமான பெயர்  தீ வண்ணநாதர் . அவரை  இப்படி அதி பொருத்தமாக   சூடாக சென்று தரிசனம் செய்தவன்   நானும்  சிவன்.  நெருப்போடு  பஞ்சு  அம்பாள்.  அவள்  அற்புதமான பெயர் கொண்டவள்  பஞ்சின் மெல்லடியம்மை, '' ம்ருது பாத நாயகி''.  ஸ்தல விருக்ஷம்  வன்னி, கொன்றை, ஊமத்தை.   பூஜைகள் காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் 

சனி பகவான் தன்னைக் கண்டு மனிதர்களும் தேவர்களும் பயப்படுவதை அறிந்து மிகவும் மனம் வருந்தி னார். ஈசனை நோக்கி இந்த  ஸ்தலத்தில் வந்து தங்கி தவம் புரிந்தார். சிவபெருமானும் அக்னி வடிவில் தோன்றி

' அப்பனே,  'நவகிரஹ நாயகர்களில் உன் ஒருவனுக்கு தான் சனீஸ்வரன் என்று என்னைப்போல்  ஈஸ்வரன்   பட்டம்  கொடுக்கப்பட்டிருக்கிறது.   நீ  உன் கடமையை தானே செய்கிறாய்.  உன்னை எல்லோரும் வெறுக்கிறார்கள் என்ற  கவலையை விடு. இந்த க்ஷேத்திரத்தில் இனி நீ எல்லோருக்கும் நல்லதே செய்வாய். நீ வெறுப்பதாக சொன்ன  மக்கள்  எல்லோரும்  இங்கே  ஓடி வந்து உன்னை வேண்டி வழிபடுவார்கள். போதுமா? இனி நீ பொங்கு சனி. மங்களம் புரிகிறவன்,   மக்களை நீ  அணுகும் காலம்  பொங்கு சனி காலம் எனப்படும். அந்த நேரம்  நீ அவர்களை பிடித்த  போது  அவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும், நினைத்ததெல்லாம் நடக்கும், கொட்டோ கொட்டு என்று சுபிக்ஷம் கொட்டும்  போதுமா ? என்று அருள்புரிகிறார் பரமேஸ்வரன். அக்னீஸ்வரர்  சனி பகவானை பொங்கு சனியாக மாற்றிய  ஸ்தலம் இது. 

 இத்தலத்தில் சிவனையும், சனியையும் வணங்குபவர்களது சனிதோஷம் விலகும். இத்தலத்தில் சனீஸ்வரன் குபேர மூலையில் இருந்து அனைவர்க்கும் செல்வ   வளங்களை வாரி வழங்குவதாக தலவரலாறு கூறுகிறது. நளனும் திருநள்ளாற்றில் அவரைக் கண்டு வணங்கிய பிறகு இத்தலத்திற்கு வந்து வணங்கி இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலம். கொள்ளிக்காடர் என்று பதிகத்தில் இறைவனை சம்பந்தர் அழைக்கிறார். தீவண்ணநாதரரை  அக்னீஸ்வரர்  என்று வடமொழியில் நாமம்.   ஒரு  ஏக்கரா நில விஸ்தீரணத்தில் கோவில் அமைந்துள்ளது.

திருத்துறைப்பூண்டியிலிருந்து  15 கி.மீ. தூரத்தில்  திருக்கொள்ளிக்காடு    ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்து.  நளனோடு தொடர்புடையது.   இவ்வாலயத்தில்  முருகன் கையில் வில்லுடன் காட்சியளிப்பது அதிசயம்.   வேல் முருகன் வில்முருகன் இங்கே.  இது தவிர  இங்கே  நவக்கிரகங்கள் ஒன்றையொன்று பார்த்தபடி  நிற்கிறது. 

நவக்கிரகங்கள் பொதுவாக வக்கிரகதியில் ஒன்றை ஒன்று பாராமல் இருப்பார்கள் அல்லவா. ஆனால் இங்கே வேறுவிதம். "ப" வடிவில் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். நமது இங்கே சனீஸ்வரன் அக்னீஸ்வரர்  பாபங்களை  அழித்து விடுகிறார். அதனால் எந்த நவகிரஹத்துக்கும் வேலையில்லை. லீவ் தான்.

தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில்  திருக்கொள்ளிக்காடு உள்ள 115ஆவது சிவஸ்தலம்.  திருவாரூர்  ஜில்லா,  திருத்துறை பூண்டி  தாலுக்கா.

மறுபடியும் சொல்கிறேன்.  கேளுங்கள்: 

சனீஸ்வரனுக்கு ரெண்டு முகம். பொங்கு சனி ,  மங்கு சனி என்று. ரெண்டாவதாக சொன்னவரிடம் மாட்டிக் கொண்டால் அவ்வளவு தான். துன்பத்தின் மேல் துன்பமாக வாட்டி வதைத்து விடுவார். ஒரு ஏழரை ஆண்டு காலம் அவர் ஒரு ராசிக்காரரை வாட்டி விட்டு அடுத்த ராசிக்கு போவதை தான் ஏழரை நாட்டான் என்பது. மற்ற கிரஹங்கள் போல் அல்லாமல் மிகவும் மெதுவாக நகர்பவர். ஏழரை வருஷம் என்பது மெதுவாக நகரும் சனி கிரகம் செல்வதை குறிக்கும் காலம். அதனால் தான் சனைஸ்சரன் (மெதுவாக செல்பவன்) என்று வடமொழியில் அர்த்தம். சனீஸ்வரன் அல்ல. 

அதே நேரம் பொங்கு சனி என்பது அந்த ஏழரைஆண்டுகள் ஒரு ராசிக்காரனுக்கு சகல நன்மைகளும் வாரி வழங்குவது. அது சனீஸ்வரன் அருள்வதால் அவரை பொங்கு சனி, மங்கள சனீஸ்வரர் என்பார்கள்.
அப்படிப்பட்ட பொங்கு சனி கிரகத்தை வேண்டுபவர்கள் செல்லும் ஒரு ஊர்தான் இந்த   திருக்கொள்ளிக்காடு. அக்னீஸ்வரம். கொள்ளி என்றால் நெருப்பு. அக்னி. 

 நான் சென்ற  போது   போகும்  வழி சனி பகவான் தொல்லையோடு  தூக்கி தூக்கி போட்டவாறு குதித்துக்கொண்டே சென்றேன். ஆனால்  ரெண்டு பக்கத்திலும் உள்ள கால்வாய்கள் மண் தூர் வாரப் பட்டு அருகே வயல்களில் நல்ல மண் எருவாக குமிக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நல்ல காரியம் தமிழ் நாட்டில் புதுச்சேரியில் கண்டபோது மனம் குளிர்ந்தது.

கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் ஆலயம் மிகவும் சின்ன கோவில். ராஜ ராஜ சோழன் காலத்தியது. நிறைய கல்வெட்டுகள் உள்ளன. படிக்கமுடியாத தமிழ். ராஜகோபுரம் காணோம். மேற்கு பார்த்த வாசல். உள்ளே நுழைந்தவுடன் மேற்கு வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம்,நந்தி. அதைத் தாண்டி உள் வாயில் வழியாக சென்றால் அக்னீஸ்வரர் மேற்கு பார்த்து காட்சி தருகிறார். அக்னிதேவன் வழிபட்ட ஸ்தலமாதலால் திருகொள்ளிக்காடு என்று பெயர். மூலவர் அக்னீஸ்வரர் என்பதால்  சிவலிங்கத்தின் மேல் கொஞ்சம் சிவப்பாக நிறம் தெரிகிறது. சந்நிதியின் இடப்பக்கத்தில் அம்பாள் 'ம்ருது பாத நாயகி'', பஞ்சினும் மெல்லடியம்மை என்கிற பேர்  ரொம்ப பிடித்திருக்கிறது. .

மூலவர் கருவறையின் கோஷ்டங்களில் பிரம்மா, அண்ணாமலையார், தட்சிணா மூர்த்தி, விநாயகர், துர்க்கை ஆகியோர் அருள் பாலிக்கிறார்கள்.

மேற்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கிய சனி பகவான் சந்நிதி. அவருக்கு தனி விமானம், தனி மண்டபம். திருநள்ளாருக்கு அடுத்த படியாக சனீஸ்வரனுக்கு இத்தலத்தில் தான் வெகு விசேஷம்.

எங்கும் வறண்டு கிடந்த வயல் சூழ் கிராமங்களை, மரங்களை, செடி கொடி புதர்களை தாண்டி அதிகம் வீடே பார்க்காமல் வந்த நான் இந்த கோவில் கண்ணில் பட்ட திலிருந்து எண்ணற்ற வண்டிகள், ஜன நடமாட்டம், கார்கள், வேன்கள், பஸ் என்று நிறைய வண்டிகளை பார்த்தேன்.

புரூரவஸ் என்ற மகாராஜாவுக்கு சனி தோஷத்தை நீக்கியருளிய மூர்த்தி இங்குள்ள சனி பகவான். சனி பகவான் இங்கே துன்பம் தராத அனுக்கிரக மூர்த்தி,.

sivan jaykay

unread,
Jul 18, 2020, 10:36:25 PM7/18/20
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம். J K   SIVAN  

                                                                                             ''அவரை பாட சொல்லு ''

'' விநாயகனே, வினை தீர்த்தவனே.....  அற்புதமாக  கணீரென்று  வெண்கலக்குரல் என்னை  வாரி விழுங்கி முழுங்கியது.  அதை ரசித்து முடிப்பதற்குள்  இன்னொன்று....

''கண்ணன் வந்தான் அங்கே ... ஆஹா  அதே  பக்தி தோய்ந்த  கணீர்  குரலா ?  

ஆஹா  எப்படி கடவுள் இப்படி   இவ்வளவு   ஸ்பஷ்டமாக அக்ஷரங்களை உச்சரிக்கும் மாயக்குரலில் மயங்கவைக்கும் மனிதனை படைத்தான்..?    சீர்காழி கோவிந்த ராஜன் குரல் எப்போது கேட்டாலும் ஒரு புத்துணர்ச்சியை எனக்கு அளிக்க தவறியதில்லை.

நான் மட்டுமா  சீர்காழி குரல் கேட்டு மகிழ்ந்தவன்? .  மகா பாக்கியசாலி அந்த  சீ .கோ.    காஞ்சிபுரத்தில் மஹா பெரியவா ளுக்கும் அல்லவோ  அந்த குரல் பிடித்திருந்தது.   ஆமாம்  அப்படி ஒரு சம்பவம் படித்தேன். 

காஞ்சி மஹா பெரியவா  தியானம் செய்வதற்காக காஞ்சி அருகிலுள்ள தேனம்பாக்கம் செல்வது வழக்கம்.. அப்படி ஒருமுறை மஹா பெரியவா அங்கு  சென்றிருந்தபோது   அவரது தரிசனம் பெற அங்கு பக்தர்கள் ஏராளமாகக் கூடியிருந்தனர்.

டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன், தன் நண்பர் கவிஞர் நெமிலி எழில் மணியுடன் அங்கு வந்தார். தான் அங்கு வருவது தெரிந்தால் கூட்டம் கூடி விடக்கூடாது என்பதால் யாருக்கும் முன்கூட்டியே தகவல் சொல்லாமல் வந்து விட்டார். தனது உதவியாளரிடம் கூட காஞ்சிபுரம் செல்வது பற்றி அவர் சொல்லவில்லை. தான் பாடிய  புதிய பாடல் அடங்கிய இசைத்தட்டுகளை பெரியவரிடம் கொடுத்து ஆசி பெற வேண்டும் என்பது அவரது  எண்ணம். .

சீர்காழி கோவிந்தராஜன்  வந்தபோது  மஹா பெரியவா  பூஜையில் ஈடுபட்டிருந்ததால் திரை போடப்பட்டிருந்தது. ஒரு சில பக்தர்களே பெரியவரைக் காணக் காத்திருந்தனர். அவர்கள் வரிசையில் சீர்காழியும் சேர்ந்து கொண்டார்.   சற்று நேரம் கழிந்தது. 

திடீரென்று  கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அனைவரும் பெரியவர் தரிசனம் தர வெளியே வருகிறார் என எண்ணித் தயாராக நின்றபோது     மடத்து  சிப்பந்தி ஒருவர்,  பெரியவா தொண்டர்,   ஒருவர் மட்டுமே  கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்தார்.
கூட்டத்தினரை நோக்கி உரக்க பேசினார் 

 “இங்கே சீர்காழி கோவிந்தராஜன் வந்திருக்கிறாரா?” 

 பரபரப்புடன் சீர்காழி, “இதோ இருக்கிறேன்” என்று பதிலளித்த படி அவர் முன் வந்தார்.

“உங்களை மஹாபெரியவா பாடச் சொன்னா” என்று சொல்லி விட்டு உள்ளே போய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டார். 

மெய் சிலிர்த்துப் போய் விட்டார் சீர்காழி. தான் தேனம்பாக்கம் வந்து ஒரு சில நிமிடங்கள் ஆகாத நிலையில் உள்ளே பூஜை செய்யும் பெரியவருக்கு எப்படித் தெரிந்தது?” என்று பரவசப் பட்டார். தான் பாடுவதற்கு பெரியவர் உத்தரவிட்டதை எண்ணி மகிழ்ந்தார்.

“ஹிமாத்ரி சுதே பாஹிமாம்” என்ற  கல்யாணி ராக பாடலைப் பாடத் தொடங்கினார். தொடர்ந்து பெரியவர் மீது, தான் பாடிய பாடல்களையும் பாடினார். சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. 

அதுவரை, சீர்காழியின் இசைமழையில் நனைந்து, இதயம் குளிர்ந்த மஹா பெரியவா , பூஜை முடித்து, காவியுடையில் வெளியே வந்தார். சீர்காழி கோவிந்தராஜன் அவரருகே சென்று, இசைத்தட்டைக் கொடுத்தார்.

மிகவும் மகிழ்ச்சி புன்முறுவலாக  முகத்தில் ஜொலிக்க,  மஹா பெரியவா தட்டில் இருந்து ஒரு  பெரிய  மாம்பழத்தை எடுத்து ஒரு  ரோஜா புஷ்பத்தோடு சேர்த்து   அவர் கரங்களில்  விழும்படியாக  அளித்தார்.  புதிய  இசைத்தட்டுகள் மீது புஷ்பங்கள் நிறைய  மழையாக பொழிந்து இசை மழை அன்றுமுதல் எங்கும்   ஒலித்துக்கொண்டிருக்கிறது. 

அபய ஹஸ்தம்  உயர்ந்தது.   ஆனந்தக் கண்ணீருடன்  வணங்கி சீர்காழி கோவிந்தராஜன் உத்தரவு பெற்று திரும்பினார். .

சீர்காழி கோவிந்தராஜனின் மகன் டாக்டர் சிவசிதம்பரம் இந்த சம்பவத்தை இசை மேடைகளில் அடிக்கடி சொல்வாராம். 

சீர்காழியைப் பாடச் சொல்லி உத்தரவிட்ட காஞ்சி  மஹா பெரியவா  எப்படி  உள்ளே இருந்தபடியே  அவர் வந்திருந்ததை உணர்ந்தார். 

தனது ஞானசக்தியால்  அனைத்தையும் அறியும் திறமை பெற்றவர்  மஹா பெரியவா. 

sivan jaykay

unread,
Jul 18, 2020, 10:36:25 PM7/18/20
to amrith...@googlegroups.com

அறுபத்து மூவர்   J K  SIVAN 
பெருமிழலை குறும்ப நாயனார் 

                                                                                          கைலாயம் ஏகியவர் 

எங்கும்  தோப்பு,  துரவாக,  பச்சை வண்ணம் போர்த்திய  செழிப்பான  வயல்களைக்  கொண்டது  பெரு மிழலை கிராமம். . வாழையும் கமுகும்  எங்கு நோக்கினும்  கண்ணில் பட்ட  வளமான பூமி.    கிராமத்தில் எல்லோருமே வசதி படைத்தவர்கள்.   வறுமை தெரியாதவர்கள்.  சிவனடியார்கள் விரும்பி வந்த பிரதேசம். ஏனென்றால்  அந்த ஊரில் குறும்பர் எனும்  விவசாய வகுப்பை  சேர்ந்த ஒரு நல்லிதயம் கொண்ட  சிவனடியார் இருந்தார்.    சிவனடியார்கள்   யாராக இருந்தாலும்  அவர்களை தேடிச்சென்று  அவர்களுக்கு  உணவு, உடை  தங்குவதற்கு  இடம்,  போன்ற வசதிகளை செய்து தருபவர்.  அவர்களை தெய்வத்தை விட மேலாக வணங்கித் தொழுபவர்.    விபூதி அணிந்து கண்ணில் பட்டவர் எவருக்கும் இவ்வளவு ராஜ மரியாதை. அந்த ஊர் 
 தலைவர். 

சதா சர்வ காலமும் சிவனைப்பாடி  ஐந்தெழுத்து  உச்சரித்தவர்.  அவனை  ஆலயத்தில் வணங்கி  மகிழ்பவர்.  பெருமிழலை கிராமம் இப்போது  புதுக்கோட்டை   ஜில்லாவில் பெருமாநல்லூர், தேவர்மலை  என்று அறியப்படும்  ஊர். தேவாரப்பாடல்களில்  ஒரு  வைப்பு  ஸ்தலம். 

இவர்  சுந்தரமூர்த்தி நாயனார்  காலத்தவர். சுந்தரர் மீது  சிவனைப்பார்த்த சந்தோஷம். மதிப்பும் மரியாதையும் கொண்டவர்.  சுந்தரர் அருளால்  இந்த  பெருமிழலைக் குரும்பருக்கு  அஷ்ட மா சித்திகளும்   கிடைத்தது. அவரையே   ப்ரத்யக்ஷ தெய்வமாக  பின்பற்றினார். 

சுந்தரர்  சேரமான் பெருமாள் நாயனாரோடு நட்பு கொண்டு அவன் ஆண்ட  ஊருக்கு சென்று  திருவஞ்சைக்களம்  எனும்  க்ஷேத்ரத்தில் இருக்கிறார் என்று அறிந்த பெருமிழலைக் கிழார்  அங்கே தானும்  செல்ல இயலாமைக்கு வருந்தினார்.  அங்கு நடக்கும் சம்பவங்களை  ஞானத்தால்  உணர்ந்தார்.

சுந்தரரின் பூமி  யாத்திரை முடியும் காலம் வந்துவிட்டது.  ஒரு வெள்ளை யானை மேல் கைலாய யாத்திரை செல்லப்போகிறதை அறிகிறார். 

சுந்தரமூர்த்திநாயனார் உத்தர கைலாசத்தை நாளைக்கு அடைய நான் அவரைப்  பிரிந்து  இனிமேல்  இங்கே வாழ மாட்டேன்" என்று மனதில்  எண்ணம் தோன்றியது.  

சுந்தரர்  கைலாயம் புறப்பட்ட தினத்தன்றே  தானும்   "இன்றைக்கு  சுந்தரர் கொடுத்த  தவ யோகத்தினாலே சிவபிரானுடைய திருவடியை அடைவேன்" என்று  துணிந்து விட்டார்.   விடாது தனது  யோகமுயற்சியினாலே பிரமரந்திரம்  உச்சி மண்டையில் திறக்கச் செய்கிறார்.  இதைத்தான் கபால மோக்ஷம் என்கிறோம்.   அந்த பிளவின் வழியாக   ஜீவன்   தேஹத்திலிருந்து  பிரிந்து, திருக்கைலாசத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானு டைய திருவடியை அடைந்தார்  இந்த  பெருமிழலைக் குறும்பர். 

"சிவனே சிவஞானி யாதலாற் சுத்த -
சிவனே யெனவடி சேரவல் லார்க்கு - 
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும் - 
பவமான தின்றிப் பரலோக மாமே; 

தெளிவு குருவின்  திரு மேனி காண்ட ல் -
தெளிவு  குருவின் திரு வார்த்தை கேட்டல் 
தெளிவு குருவின்   திரு நாமம்  செப்பல் 
தெளிவு குரு  ரூபம்  சிந்தித்தல்  தானே  

பெருமிழலைக் குறும்பர்  திருமூலரின் மேலே சொன்ன  பாடல் காட்டும் வழியில்  வாழ்ந்தவர் அல்லவா ? இப்படி  தவ வலிமையால், மகிமையால்  சுந்தரர்  கைலாயம் சென்றடையும் முன்னர்  தானும் கைலாயம் செல்கிறார். சிவனடி நிழலில் தூத்து மகிழ்ந்து வாழ்கிறார் என்று பெரியபுராணம் சொல்கிறது.
அறுபத்து மூன்று  சிவனடியார்கள்  நாயன்மார்கள் எனப்படுவர் அவர்களில் இந்த மிழலைக் குறும்பரும்  ஒருவர் என்பதால்  கோவில்களில் விளக்கேற்றி    மற்ற  62பேருடன் வரிசையுமாக நிற்கும் இவரையும்   சிவாலய பிராஹாரத்தில் வணங்குகிறோம்.



sivan jaykay

unread,
Jul 19, 2020, 9:50:04 PM7/19/20
to amrith...@googlegroups.com
                                          
                                                           எல்லோரும்  நல்லவரே   J K   SIVAN  

1970 களில்    நங்கநல்லூர்  ஒரு  குக்கிராமமாக தான் இருந்தது. அருகே இருந்த பெரிய  பட்டணம் ஆலந்தூர். எல்லா சாமான்களும் அங்கிருந்து தான் வாங்கிக்கொள்வோம்.  கொஞ்சம் கொஞ்சமாக வீடுகள் எழும்ப ஆரம்பித்தது.  எங்கள்  கன்னிகா  காலனியில்  ஏழெட்டு வீடுகள்  தான்.   அதை அடுத்த   வோல்டாஸ்  காலனியில் ஒரு பத்து வீடுகள்.  எல்லோரும்  ஒருவரை  ஒருவர்  அறிமுகம் செய்து  கொண்டு  ஒரே குடும்பம் போல் வாழ்ந்த காலம். தீபாவளி, பொங்கல் மற்றும் நவராத்ரி பண்டிகைகள்  எங்களை ஒன்றிணைத்து  பக்ஷண பரிமாற்றம் நிறைய நிகழும்.  டிவி  அப்போது வீடுகளையும்  மக்களையும்  பிரிக்கவில்லை. எங்கும்  சைக்கிளில் தான் சவாரி. ரெண்டு மூணு பேர் ஒரு சைக்கிளில்.  ரோடுகள் நம்பமுடியாதவை. எங்களுக்கு வெளியுலக வழிகாட்டிகள்  ஒன்று மீனம்பாக்கம் ரயில் நிலையம், அல்லது பரங்கிமலை ரயில்நிலையம். அங்கே சைக்கிளை வைத்துவிட்டு ஆபிஸ் போவோம். பழவந்தாங்கல் ரயில் நிலையமோ, பாதாள வழிகளோ  SUBWAY  பிறக்காத காலம்.

எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில்  கஸ்டம்ஸ்  அதிகாரி  கே.வி. வாசுதேவன் குடும்பம்.   வாசுதேவன்  என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு  நண்பர்.  நங்கநல்லூரில்  அப்போது  டெலிபோன் வசதிகள் குறைவு. அவர் வீட்டில் சென்று வெளி உலகோடு தொடர்பு கொள்வோம்.  பாதி பேச்சு  ஹல்லோ ஹல்லோ  விலேயே  துண்டிக்கப்படும்.    காலையில்  எட்டு மணி அளவில்   வாயுதேவன்  குடும்பம் முழுதும்   குருவாயூரப்பன் விக்ரஹம் முன் நின்று அவர் பூஜை முடிந்து ஹாரத்தி காட்டும்போது    ''பிச்சி மந்தாரம்  துளசி''  பாடுவது இன்றும் காதில் ஒலிக்கிறது.  பட்டை பட்டையாக  விபூதி காவி துண்டுடன் அவர் வெளியே வந்து என்னை கூப்பிட்டு என் குழந்தைகளுக்கு  பிரசாதம் தருவது கண் முன் நிற்கிறது.

எங்கள்  காலனியில் நாங்கள் ஒரு கோவில் எழுப்பினோம்.  ஒன்றரை  கி.மீ. தூரத்துக்கு கோவில் எதுவும் அப்போது  இல்லாததால்   சைவ வைணவர்கள் இரு பாலாரும்  வணங்க  திருமால் மருகன் கோவிலை 
 உருவாக்க முயற்சி எடுத்தோம்.   வாசுதேவன் கஸ்டம்ஸ் அதிகாரி. மற்ற சில  வீடுகளும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் வீடுகள் தான்.  சபாபதி எனும்  உதவி கலெக்டர் வீட்டில்  திருமால் மருகன் கோவில் என்ற பெயர் சூட்டப்பட்டது.  திருமலாக  ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள்,  நடுவில் வலம்புரி விநாயகர் அவரை அடுத்து  திருமால் மருகனான சுப்ரமணிய சுவாமி. என்று மூன்று சந்நிதிகள் ஆரம்பகாலத்தில்  தோற்றுவிக்க ப்ரம்ம பிரயத்தனம்.  கோவிலுக்கு இடம் ஒரு  கிரவுண்ட் எங்களுக்கு  காலனியில் நிலம்  விற்ற   கே.ஜி.  துரைசாமி என்ற  பவர்  ஏஜென்ட்  அளித்தார்.  பிறகு  வாசுதேவன்,  சபாபதி, மற்றும்  அனைவரின்   கடும் உழைப்பால் கோவில்  எழும்பியது. நான்  தான்  கோவில் கமிட்டியில்,  எங்கள் பகுதி மக்கள் நல  சங்க முதல் பொருளாளர் .

நான் சொல்ல வந்தது எதற்காக என்றால்  வாசுதேவன் வீட்டுக்கு  நிறைய பேர் வருவார்கள், அவர்களில் ஒருவர்  கல்லிடைக்குறிச்சி  M .A  மஜீத் என்பவர்.  பட்டையாக  விபூதி,  இடுப்பில் சுருக்கு பையில் விபூதி.  எல்லோருக்கும்  விநியோகம் செய்வார். அற்புதமான  குரல்  திருப்புகழ், முருகன்  பாட்டுகள் அனைத்தும்  பாடுவார். கணீரென்று இருக்கும் குரல்  திருத்தணி 365 படிகளிலும்  டிசம்பர்  31ம்  அன்று இரவு   ஒவ்வொரு திருப்புகழ் பாடுவார்.  நான் நேரில் சென்று வாசுதேவனுடன் அதை கண்ணால் கண்டு காதால் ரசித்திருக்கிறேன். எங்கள் வீட்டுக்கும்  வந்து  மஜீத் பாடினது  ஞாபகம் இருக்கிறது.

பிற மதங்கள் சேர்ந்தவர்கள் ஹிந்து சனாதன தர்மத்தை எதிர்க்கவில்லை. அதை மதித்து  போற்றினார்கள். இப்போது ஜேசுதாஸ் அவர்களின்  பாடல்கள்  முக்கியமாக  ஹரிவராசனம் கேட்காத பூஜை அறை இல்லையே.  ஷேக் சின்னமௌலானா நாதஸ்வரம்  நமது வீட்டு விழாக்களில்,  கோவில்கள் உற்சவங்களில் கேட்கவில்லையா?  நமக்கு தெரியாத எத்தனையோ பேர் இதுபோல்  பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். .
அவர்கள் எல்லோருக்கும் நமது மனமார்ந்த வணக்கங்கள்.

ஒரு முஸ்லீம் கவிஞர் ஞாபகத்துக்கு வருகிறார். உங்களுக்கு அவரைத் தெரியுமா?
ஹிந்துக்களும் முஸ்லிம்களும் மற்ற மதத்தினரும்  சகோதர சகோதரிகளாக  ஒற்றுமையோடு அவரவர் மத நம்பிக்கைகளை பின்பற்றி  அரசியல் பண்ணாத வெள்ளைக்காரன் காலத்தில் வாழ்ந்தவர்  குணங்குடி மஸ்தான் சாஹிப் (1788-1835)ஒரு  கவிஞர்.  இராமநாதபுரம் மாவட்டம் , குணங்குடி  கிராமத்தை சேர்ந்தவர்.
குணங்கள்  குடிகொண்டவர்  இருந்த ஊரின் பெயர் பொருத்தமாக  அமைந்துவிட்டது.
அரபியிலும் தமிழிலும் புலமை பெற்றவர்.  17-ம் வயதில் குடும்பத்தை துறந்தார். திருச்சி  ஆலிம்  மௌல்வி வி ஷாம் சாகிபுவிடம் தீட்சைபெற்றுக் கொண்டு தொண்டியில் நான்கு மாதங்கள் கல்வத்து இருந்தார். தொண்டி மரைக்காயர் தோப்பில் யோக நிஷ்டையிலும் ஆழ்ந்தார். சிக்கந்தர் மலைக்குகையில் தலை  மேல் கால் கீழான சிராசனம் இருந்தார். பல ஊர்களுக்கு நாடோடியாக அலைந்தார். இறுதிக்கால 12 ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்தார். தொண்டியூர்க்காரரான இவர் வாழ்ந்த இடம்தான் தொண்டியார் பேட்டை. இதுவே பிற்காலத்தில் தண்டையார் பேட்டையானது. இராயபுரத்தில் இவரது அடக்கவிடம் உள்ளது.

குணங்குடி மஸ்தான்  சுஃபி  sufi  சந்நியாசி.   அவரது  சீடர்கள்   ஹிந்து சமயத்தை சார்ந்தவர்கள் . . ஐயாசாமி முதலியார் (குணங்குடி நாதர் பதிற்றுப் பத்தந்தாதி) எழுதியவர்) மகாவித்துவான் திருத்தணிகை சரவணப்பெருமாளையர் (நான்மணிமாலை) வெங்கட்ராயப்பிள்ளை கவிராயர், கோவளம் அருணாசலம் முதலியார் மகன் சபாபதி (தோத்திரப் பாடல்கள்) காயற்பட்டினம் ஷெய்கப்துல் காதிர் நயினார் லெப்பை (வாயுறைவாழ்த்து) ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள்.

குணங்குடி மஸ்தான்  மறைந்து  ஓன்றரை நூற்றாண்டிற்கு பிறகு (144 ஆண்டுகள்) முதன் முதலாக 1979 களில்தான் திருத்தணி என்.ஏ. ரஷீத் என்ற ஒரு முஸ்லிம் இலக்கியச் செல்வரின் உரை விரிவாக்கத்தோடு ஞானவள்ளல் குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்தொகுப்பும் உரையும் வெளிவந்தது.  இந்த  ஞானியின் ஒரு சில பாடல் வரிகளை தருகிறேன்.  சாம்பிள் தான் இது.

சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
சூட்சுமக் கயிற்றினைப் பாரடா!
அதிசூட்சும கயிற்றினைப் பாரடா !!

நேத்திரம் இரண்டிலும் நேரில் இலங்கிய
நீடொளி போன்றது தேட அரிதாகி
காத்திரம் உள்ளது யாவும் பொதிந்தது
கையிலும் காலிலும் எட்டப்படாதது

சாத்திர வேதம் சதகோடி கற்றாலும்
சமயநெறிகளினால் ஆச்சாரம் பெற்றாலும்
பாத்திரம் ஏந்தி புறத்தில் அலைந்தாலும்
பாவனையால் உடல் உள்ளம் உலைந்தாலும்
மாத்திரை நேரம் எமன் வரும் அப்போது
மற்றொன்றும் உதவாது உதவாது

சூத்திரமாகிய தோணி கவிழும் முன்
சுக்கானை நேர்படுத்துஇக்கணமே சொன்னேன்

உற்ற உறவின்முறையார் சூழ்ந்திருந்தென்ன
ஊருடன் சனங்களெல்லாம் பணிந்து இருந்தென்ன
பெற்றோரும் பெண்டீரும் பிள்ளை இருந்தென்ன
பேணும் பெருஞ்செல்வம் ஆணவத்தால் என்ன

கத்தன் பிரிந்திடின் செத்த சவமாச்சு
காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு
எத்தனைபேர் நின்று கூக்குரல் இட்டாலும்
எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ — இந்த

மாயாப்பிறவி வலையை அடைத்திட
மாறாத் தியானமனத்தினில் இணைத்திட
காயாபுரிக் கோட்டை கைக்குள் அகப்பட
காணும் மணிச்சுடர் தானே விளங்கிட

ஆயும் அறிவுடன் யோகத்தினால் எழும்
ஆனந்தத் தேனை உண்டு அன்புடனே தொழும்
தாயாய் உலகத்தை ஈன்ற குணங்குடி
தற்பரனைக் கண்டு உவப்புடனே சென்று

சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
சூட்சுமக் கயிற்றினை பாரடா
அதிசூட்சும கயிற்றினை பாரடா !!//

குணங்குடியாரின் இப்பாடல் சொல்லும்   இரண்டு விதமான தத்துவம்.   ஒன்று வாழ்க்கை என்பது பொம்மலாட்டம் என்ற கருத்து, மற்றொன்று வாழ்க்கை என்பது ஒரு தோணியைப் போன்றது..

சூத்திரமாகிய தோணி கவிழும் முன்
சுக்கானை நேர்படுத்துஇக்கணமே சொன்னேன்/

சுருக்கமாக சொன்னால்  குணங்குடியாரின்  வரிகள்  கருத்துகளை  ஒட்டி  சற்று மாற்றி  கண்ணதாசன் கருணாநிதி  எழுதிய  சினிமா பாடல்கள் பிரபலமானவை. அவற்றுக்குள் இதற்கு மேல் நுழைய நான் விரும்பவில்லை.


sivan jaykay

unread,
Jul 19, 2020, 9:50:34 PM7/19/20
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி 8                  J  K  SIVAN 
தாகூர் 

                                                                          
                                                                           8    வேஷம் வேண்டாம்.


நண்பர்களே,    ஒரு வார்த்தை. 

ஆமை முயல் ஓட்டப்போட்டி கதை  தெரியுமல்லவா?  முயல் வேகமாக ஓடி அங்கங்கே நின்று கர்வத்தால் தோற்றது. ஆமை கருமமே கண்ணாயினார் ரகம் . மெதுவாக விடாமல் நடந்து வெற்றி பெற்றது. நான்  ஒரு கிழ ஆமை. வெற்றி பெறுவேனோ மாட்டேனோ தெரியாது. மெதுவாக ஒவ்வொன்றாக எனக்கு கண்ணில் பட்ட, விருப்பமான அனைத்து ஆன்மீக விஷயங்களையும் தொட்டு ஒவ்வொன்றாக எழுதும் தீராத தாகம் என்னை செலுத்துகிறது. கீதாஞ்சலி நூற்றுக்கும் மேலானது. ஒவ்வொன்றாக அனுபவித்து இன்று எட்டாவது கீதாஞ்சலி பாடல் படித்து ரசித்து எழுதுகிறேன்.  அடிக்கடி சொல்வது போல்  இது ஜுனூன் வசனமல்ல. வார்த்தைக்கு வார்த்தை  மொழிபெயர்க்கும் ஆள்  அல்ல. என் எழுத்தில் எனக்கு தெரியமாலேயே கிருஷ்ணன் உள்ளே தலை நீட்டுவான்.  தாகூர்  கிருஷ்ணனை  வாய் திறந்து ஒருமுறை கூட கூப்பிடவில்லை. பேர் மட்டும் கீதாஞ்சலி.  

 The child who is decked with prince's robes and who has jewelled chains round his neck loses all pleasure in his play;
his dress hampers him at every step.
In fear that it may be frayed, or stained with dust he keeps himself from the world, and is afraid even to move.
Mother, it is no gain, thy bondage of finery,
if it keep one shut off from the healthful dust of the earth,
if it robs one of the right of entrance to the great fair of common human life.
 
கிருஷ்ணா,  நீ  கன்றுக்குட்டிகளோடு   மண்ணில் புரண்டு விளையாடியவன்.  உன் மேனி முழுதும் மண். ஆபரணங்கள் எதுவும் இல்லாதவன். அரையில் ஒரு மஞ்சள் ஆடை, தலையில் ஒரு மயிலிறகு.கையில் ஒரு மூங்கில் குழல்

மண்ணில் பிறந்தவன் மண்ணோடு பழகி மண்ணிலே தானே மறையவேண்டும்.!!  
மண்ணின் வாசனையில் திளைத்து விளையாடி மகிழாமல்  இந்த  நாடக மேடை வேஷ வினோத அலங்காரம்..ஏன்? எல்லோருடனும் சேர்ந்து சுகமாக இயற்கையாக வாழாமல் இது என்ன மனித வாழ்க்கை!.
என்ன மனித வாழ்க்கை. மண் வாசனை என்று எழுதுகிறோமே, பேசுகிறோமே , சொல்கிறோமே,  படிக்கிறோமே   அது என்னவாம்?

எனக்கு மட்டும் அல்ல, எல்லோருக்குமே தெரியும், கிருஷ்ணா, நீ  வளர்ந்த  கோகுலம் பிருந்தாவனத்தில் மண்ணில் படுக்கும் பசுக்கள், கன்றுகள் வாழும் இடம் தான்  எங்கும்.   நடுத்தர  கீழ்த்தட்டு  மக்கள் அதிகம் வாழும் பகுதி. அநேகமாக சிறுவர்கள் சிறுமிகள் முழு ஆடை இன்றி, சந்தோஷமாக மண்ணில் புரண்டு விளையாடுபவர்கள். கிருஷ்ணா, உன் மேனி முழுதும் மண். ஆபரணங்கள் எதுவும் இல்லாதவன். அரையில் ஒரு ஆடை, தலையில் ஒரு மயிலிறகு.கையில் ஒரு மூங்கில் குழல். உன்னைப்போன்று அந்த குழந்தைகள் விளையாடுகிறார்கள். ஏழை பணக்காரன் வித்யாசம் தெரியாத தெய்வங்கள்.

ஒரு குழந்தையை பிடித்து குளிப்பாட்டி, எண்ணெய் தடவி தலை சீவி, முடிந்து, கிரீடம் வைத்து, உடல் முழுதும் சந்தனாதி வாசனை திரவியங்களை தடவி, பளபளவென்று புத்தாடை உயர்ந்த பாட்டில் அணிவித்து, காலில் கையில் அணிகலன்கள், காலுறை, மிதியடி எல்லாம் மாட்டி இளவரசனாக நடக்கச் செய்கிறாள் ஒரு தாய்.

 ''ஜாக்கிரதையாக நட. நகைகள் எதுவும் கீழே விழுந்து விடப்போகிறது'' கண் மண் தெரியாமல் ஓடி ஆடிய குழந்தை இப்போது அப்படி உற்சாகமாக சந்தோஷமாக நகர முடியுமா?

கிருஷ்ணா  எங்கள் ஊருக்கு வந்து இப்போது பார்  தெரியும்.   எங்கள் ஊரில்  தாய்மார்களைப்பார்.  கொளுத்தும் வெயிலிலும் குழந்தைக்கு   மஹாராஜா வேஷம் போட்டு, தலைப்பாகை வைத்து, பட்டு சட்டை, காலில் சாக்ஸ், காலணி, அதற்குள் காலில் நிறைய தண்டை கொலுசு, மோதிரம், கழுத்து வலிக்க தங்க வைர நகைகள், தலையில் தொப்பி, கீழே இறக்கி விட்டால் விலை உயர்ந்த ஆடை அழுக்கு படும், கசங்கிவிடும்    என குழந்தையை விளையாட தரையில் விடாமல்  எதையும்  தானே குடிக்காமல், சாப்பிடாமல்  ( மேலே சட்டையில் அழுக்கு படுமே, கரை படுமே)   கைக்குள்ளேயே   சிறை...குழந்தை அழாமல் என்ன செய்யும்?.  கோபத்தில் குழந்தையை புரிந்துகொள்ளாமல்  திட்டும் அடிக்கும் தாய்களும் உண்டு. 

மேலே கதையில் சொன்ன குழந்தை தனது ஆடை, ஆபரணத்தை ரசிப்பானா? நடக்கவே பயப்படுவான். ஆடை அழுக்கு பட்டால்? ஆபரணம் ஏதாவது கழன்று கீழே விழுந்தால் ? அம்மா திட்டுவாள், அடிப்பாள். 

''அம்மா, போதும் நீ செய்து விட்ட அலங்காரம்! எனக்கு இதெல்லாம் வேண்டாமே! என் சுதந்திரத்தை இது பறித்து விட்டதே. சந்தோஷத்தை தின்றுவிட்டதே. என் இயற்கையான வாழ்வின் சுகம் கொள்ளை போய்விட்டதே'' என்று குழந்தையின் மனம் கதறி இருக்குமோ? அது தான் அழுகையாக  கண்களில் நீராக பேசி இருக்குமோ?

தாகூர் தாத்தா அற்புதம் நீங்கள்!

sivan jaykay

unread,
Jul 19, 2020, 9:50:34 PM7/19/20
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி 7   J K  SIVAN  
தாகூர் 
                                                               7   எளிமை இதோ இதோ.

My song has put off her adornments.
She has no pride of dress and decoration.
Ornaments would mar our union; 
they would come between thee and me; 
their jingling would drown thy whispers.

My poet's vanity dies in shame before thy sight.
O master poet, I have sat down at thy feet.
Only let me make my life simple and straight,
like a flute of reed for thee to fill with music.

இதெல்லாம்  எழுதும் அந்த தாடித் தாத்தா பெயர் ரவீந்திரநாத் தாகூர். அவருக்கு பளபள, ஜிலுஜிலு நகைகள், ஆபரணங்கள் எதுவுமே பிடிக்காது. அவரைப்போலவே அவர் எழுத்துகளும். 

சிலர் ரொம்ப கடினமான வார்த்தைகளை எங்கிருந்தோ தேடி பிடித்து உபயோகித்து கவிதை எழுதுவார்கள் அப்படி எழுதினால் தனக்கு  மதிப்பு, பெருமை, தனது ஞானம்  உயர்வாக கருதப்படும் என்ற நினைப்பு.  
 அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு அவர் வார்த்தைகளை தெரிந்து வைத்திருப்பவன் தான் அதை படிப்பான். மற்றவன்  அப்படியே கீழே வைத்துவிட்டு கை  அலம்பிக்கொண்டு  இட்லி சாப்பிட போய்விடுவான்.
யாருக்கும்  எளிதில் புரியாமல்  இப்படி  கஷ்டப்பட்டு எழுதுவோர்  எழுத்துக்கள் பரண் மேல் செல்லரித்து போவது எனக்கு தெரியும்.   உண்மையை சொல்லவேண்டுமானால் நான் இன்னும் பரிமேலழகர் உரை படிக்க
வில்லை. படிக்க முயற்சித்தபோது புரியாமல் ஓரம் கட்டிவிட்டேன். திருக்குறளுக்கு மு.வ. எழுதிய ஒரு ரூபாய் புத்தகம் தான் எனக்கு புரியும்படியாக விளக்கம் தந்தது.

 மேலே கண்ட கீதாஞ்சலி 7வது பாடலில் தாகூர் எவ்வளவு அழகாக சொல்கிறார பாருங்கள்: '

'என் பாட்டுகளை துகிலுரித்து விட்டேன். பகட்டு ஆடம்பரம், ஜிலுஜிலுப்பு, பளபளப்பு கலகல சத்தம்  எல்லாம் நீக்கி விட்டேன். இந்த அழகு சாதனங்கள், ஆபரணங்கள் என் பாடல்களுக்கு வேண்டாம். எளிமை ஒன்றே போதும். என்னைப் போலவே என் பாடல்களுக்கு அவை பிடிக்காது. 

ஆமாம், கிருஷ்ணா, எனக்கும் உனக்கும் இடையே அதெல்லாம் வேண்டாம். அந்த ஆபரணங்கள் நம்மை பிரித்து விடும். நிறைய ஆபரணங்கள் நான் அவற்றில் சேர்த்திருந்தால் அடேயப்பா கேட்கவே வேண்டாம் அவற்றின் ''சலங் சலங்'' ஒலி  நாராசம்  உன் மெல்லிய, காதோடு நீ பேசும் ரகசிய கீதத்தை கேட்க விடாமல் பண்ணி விடும்.

நான் பெரிய கவிஞனாம். மற்றவர்கள் கை  தட்டுகிறார்கள்,  என் காது பட சொல்கிறார்கள். சில சமயம் எனக்கே பெருமையாக இருக்கும்.  ஆனால்  நான் நன்றாகவே ,அறிவேன் கிருஷ்ணா, உன் முன்னே நான் ஒரு சிறு பொடி கொசு. நீ பிரபஞ்ச கவிஞன். உன்னைப் பார்க்கும் கணத்திலேயே என் அகந்தை அழிந்தது. என் கர்வம் சிதைந்தது.     நான் வெட்கி தலை குனிகிறேன். சகல லோகங்களும் போற்றும் மஹா கவிஞனே, உன் திருவடிகளில் அருகே அவற்றை கெட்டியாக பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டேன்.

என் ஒரே ஆசையைச்  சொல்கிறேன். உன் கையிலே இருக்கிறதே நீளமான சாதாரண எளிய நாணல் குழல். கிருஷ்ணா, என் வாழ்வும் அதைப் போலவே, எளிமையாக, நெளிவு வளைவு இன்றி நேராக, இருந்து என்னுள்ளிருந்தும் உன் ஆத்ம கீதம் நிரம்ப, விடாமல்,  ஒலிக்கவேண்டும்''

sivan jaykay

unread,
Jul 19, 2020, 9:51:18 PM7/19/20
to amrith...@googlegroups.com
திருக்கோளூர்  பெண் பிள்ளை வார்த்தைகள்    J K  SIVAN  
 
                                         80 .தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே!

 ஸ்ரீரங்கத்தையும்  திருச்சியையும்  பிரித்துப்  பார்க்க முடியாதபடி ஒன்றோடொன்று ஆன்மீகத்தால்  இணைந்தவை.    காவேரி  அதன் உபநதி கொள்ளிடத்தோடு சேர்ந்து  இவற்றை பிரிக்கவில்லை, இணைக்கிறது என்று தான் சொல்லவேண்டும். 

திருச்சி பக்கம் அழகான கண்கவர்  மலைக்கோட்டை, உச்சியில் பிள்ளையார் கோவில் எங்கிருந்து பார்த்தா லும் தெரியும்.  காவிரியின் பாலத்தின் மீது டடங்  டடங்  என்று ரயிலில் போகும்போது கீழே அகண்ட காவிரி, மேலே  உச்சி பிள்ளையார் கோயில் இன்னொரு பக்கம் சோலைகள் மிகுந்த  ஸ்ரீரங்கம் ஆலய கோபுரம், மற்றொரு பக்கம் திருவானைக்கா  சிவாலய கோபுரம் ..  என்று   பார்க்காத ரயில் பிரயாணி இருக்கமுடியாது. 

ஒருபக்கம்  திருவானைக்கோவில் என்ற பழம்பெரும்  சிவாலயம். இன்னொருபக்கம் ஸ்ரீரங்கம். ரெண்டும் அருகருகே தான்.

ஸ்ரீரங்கம் கோவில் உற்சவாதிகள் பக்தர்களை மகிழ்த்துபவை,  எம்பெருமான் பல்லக்கில்  அற்புதமான திருவாசி, மேலே குடை, இருபக்கமும்  கவரி வீசுபவர்கள்,  நான்கு பிரதான வீதிகளில் அவர் காட்சி தந்துகொண்டு வரும்போது தான் எத்தனை விதமான  அலங்காரங்கள், தீப ஒளி,   பழங்காலத்தில் தீவட்டிகள் எண்ணெய்  ஊற்றப்பட்டு  தீவட்டிக்குக்கு எண்ணெய்  ஊற்றுவதற்கென்றே  ஒருவன்  எண்ணெய்  சட்டி,  கரண்டியோடு கூடவே  வருவான்.     மூங்கில், அல்லது   கனமான  மரத் தடியிலான  தீவட்டி  முனையில்  பிரகாசமாக  தீ எரியும்.   நாதஸ்வர  தவில் சத்தம் எம்பெருமான் எங்கோ வரும்போதே இங்கே கேட்கும். சத்தம் கேட்டு  தெருவின் இருமருங்கிலும் வீட்டிலிருந்து எல்லோரும் வெளியே வந்து, முன்னேற்பாடாக  வாசலில் நீர் தெளித்து கோலம் போட்டு வைத்திருப்பார்கள். தயாராக கையில் வெற்றிலை பாக்கு தேங்கயோடு 
 அர்ச்சனைக்கு  காத்திருப்பார்கள்.  

வேதகோஷம் ஒரு புறம் இருந்தாலும், கணீரென்று  திவ்ய பிரபந்தம் தான் செவிக்கினிமையாக கேட்கும்.  பெண்கள் சேர்ந்து பாடிக்கொண்டு வருவார்கள், சிலர் கோலாட்டம் ஆடிக்கொண்டு முன் செல்வார்கள்.  ஸ்வாமி பல்லக்கை  தாங்கும்  பாதம் தாங்கிகள்  பல்லக்கின்  இருபுற  கனமான மூங்கில் தடியை  தோளில்  துணிமேல் வைத்து தூக்கிக்கொண்டு,   நடக்கமாட்டார்கள், ஆடுவார்கள்,  ஒருவர் கையை மற்றொருவர்  கோர்த்துக் கொண்டு, தோளில்  கை  போட்டுக் கொண்டு பல்லக்கை   வையாளி இசைக்கேற்ப  அசைந்து  ஆடிக்கொண்டே வருவார்கள், பெருமான் நடனமாடி வருவது போல்  அசைவு கொடுப்பார்கள்.  மணிகள் ஒலிக்கும், கற்பூர  தீபாராதனை ஒவ்வொரு வீட்டின் முன்னே நடக்கும்,  பெண்கள் ஆண்கள் சேர்ந்து  தெருவில்  பல்லக்கின் முன் விழுந்து நமஸ்கரிப்பார்கள்.  ரங்கா  ரங்கா என்று குரல் ஒலி எங்கும் கேட்கும்.  

ஓரிருவர்  பெரிய சவுக்கை வீசிக்கொண்டே  பாதம் தாங்கிகள் முன்னால் தரையில் சோடெர் சொடேர்  என்று வீசி  அடிப்பார்.   துணி துவைப்பது போல் இருக்கும் அது. 

ஒரு முறை ஸ்ரீரங்க வீதி உலாவில் இப்படி வீசப்பட்ட சவுக்கு  அருகே இருந்த பராசர பட்டர் தோள் மீது விழுந்தது. நல்ல அடி .  சவுக்கை வீசியவன் பதறிப்போனான் .  

''ஐயோ சுவாமி இந்த மஹா பாவி இப்படி பண்ணிவிட்டேனே. என்னை மன்னித்துவிடுங்கள்'' என்று காலில் விழுந்தான்.

பட்டர் துளியும் அந்த சம்பவத்தை  தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.கோபப்படவில்லை. 

''அப்பனே, நீ  ஒரு தவறும் செய்யாதபோது ஏன் கலங்குகிறாய்?   நீ செய்தது எம்பெருமானுக்கு கைங்கர்யம். அப்படி நீ வழக்கமாக செய்யும்  கைங்கர்யத்தில் எனக்கு  ஒரு  தோளில் பரிசாக கிடைத்தது.  மற்றொரு தோளிலும்  விழவில்லையே  என்று தான் வருத்தம். இந்த  பாதம் தாங்கிகள் அனைவரின் தோள்களையும் பார்  எப்படி தடித்து, காய்த்து போய் இருக்கிறது. ஒரு தோள்  மாற்றி இன்னொரு தோள்  என்று அவர்கள் எம்பெருமானை சுமக்கும் கைங்கர்யம் தந்த பரிசு அல்லவா அது. வைகுண்ட வாசல் அவர்களுக்காக எப்போதும் திறந்தே இருக்குமே''  என்கிறார்.

இந்த சம்பவத்தை நமது திருக்கோளூர்  மோர் தயிர் வியாபாரம் செய்யும்  பெண்பிள்ளை    பார்த்தாளோ , தெரிந்து வைத்திருக்கிறாளோ என்னவோ  அறியமுடியவில்லை.  அதனால் தான்  ராமாநுஜரிடம்  தான்  ஏன்  இந்த  எல்லோரும் ''புகும்'' ஊர்  திருக்கோளூரில் வசிக்க அருகதை இல்லாதவள் என்று விளக்கும்போது  80வது  உதாரணமாக  இந்த  சவுக்கடி சம்பவத்தை நினைவுகூர்ந்து  நான் என்ன பராசர பட்டர் போல் ஒரு தோளில்  சவுக்கடி விழுந்தும்  இதோ இன்னொரு தோள்''   என்று சந்தோஷமாக  மற்றொரு  தோளைக் காட்டிக்கொண்டு வந்தவளா? எப்போது எந்த கைங்கர்யம் செய்திருக்கிறேன் இந்த புண்ய பூமியில் வாழ்வதற்கு?  என்கிறாள். 

அன்பர்களே, அடுத்த  பதிவு  81வது உதாரணத்தோடு நாம் திருக்கோளூர் பெண்பிள்ளையிடமிருந்து விடை பெறுகிறோம். இத்தனை நாட்கள் அன்றாடம் ஒரு பிரதியாக வந்தவள் இனி புத்தகமாக வரும் கைங்கர்யத்தில்  பங்கு பெற விரும்புவோர்கள்  உத்தேசமாக ஒரு பிரதிக்கு நூறு ரூபாய்  RS  100் என்று   (கூடவே ஆகும் 200 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளிவரும்போது )  எத்தனை பிரதிகள் வேண்டுமோ உங்களுக்கு அவ்வளவு பிரதிகளுக்கு பணம் செலுத்தி  முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.  குழந்தைகளுக்கு,  நூல் நிலையங்களுக்கு,  படிக்க விரும்புவோர்க்கு  இலவசமாக கொடுங்கள். நாங்கள் அப்படி தான் செயகிறோம்.  புத்தகம் அச்சேறி வெளிவந்தவுடன் தேவைப்பட்ட புத்தகங்கள் உங்களை அடையும்.  ஆயிரம் பிரதிகள் அச்சிட எண்ணம் கொண்டிருக்கிறேன்.  புத்தகத்துக்கு விலை கிடையாது. விற்பனைக்கு எங்கும் கிடைக்காது. ஆயிரம் பிரதிகளும் முன் பதிவு செய்தவர்களுக்கு எத்தனை பிரதி தேவையோ அத்தனை பிரதிகள் விநியோகம் செய்யப்படும்.   நன்கொடை அளிப்பவர்கள் வங்கியில் செலுத்திவிட்டு 9840279080ல் எனக்கு  விவரம் விலாசத்தோடு அனுப்பவும். குறித்து வைத்துக் கொள்கிறேன்.  நன்கொடைக்கு ரசீது உண்டு.  வருமானவரி விலக்கும்  80G  பிரிவில் உண்டு.   இப்படி கிடைக்கும் நன்கொடை அடுத்த புத்த வெளியீட்டுக்கு உதவும்.  Bank Account :  SREE KRISHNARPANAM SEVA TRUST,   CURRENT ACCT NO.510909010114902 , CITY UNION BANK,  NANGANALLUR BRANCH.  IFSCODE  CIUB0000104


sivan jaykay

unread,
Jul 20, 2020, 9:49:00 PM7/20/20
to amrith...@googlegroups.com

                                                                                  நாம ஸ்மரணை  J K  SIVAN 

என்   இளவயதில்  சினிமா  ரொம்ப  பார்த்ததில்லை.  ரொம்ப   ரொம்ப  அபூர்வம்.  சினிமா பார்த்து ரசிக்க தெரியாத பிராயத்தில் என் அப்பா அம்மாவோடு   MKT  பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம் அழைத்துக்கொண்டு போனபோது என் சந்தோஷம்  நாற்காலிகள் அடியில் நுழைந்து நகர்வதில் என்று அறிந்தேன்.   பாகவதரை ரசிக்கும் வயதா அது?  பிறகு  வடபழனி தெருவில் பயாஸ்கோப் என்று ஒருவன் கொண்டுவந்து  அரையணா ஒரு அணாவுக்கு  சில ரீல்களை பார்க்க வைப்பான். அது பேசாது. அவன் பாடுவான்.  அதில் அடைந்த கொள்ளை இன்பம் இப்போது எங்கே போயிற்று?   அப்போது நான் கண்ட காட்சி அதெல்லாம்.

இப்போது  தினமும்  ஏதாவது ஒரு இதிகாச,  புராண, காவிய  காட்சி காட்டுகிறேன், எழுத்து மூலம், நிறைய நண்பர்கள் இது பிடிக்கிறது என்பதால்  உற்சாகம் தலைக்கேறிவிட்டது.  

இதோ ஒரு காட்சி. மனத்திரையில் கண் மூடி பாருங்கள். 
                       
துருபதன் மாளிகை  கோலாகலமாக காட்சி யளிக்கிறது.   ஊரெங்கும்  ரதங்கள்  வந்து குவிந்த வண்ணம்.   வாத்திய கோஷங்கள்  வானைப்  பிளக்கிறது.  அட இதென்ன, தின்பண்டங்கள் இனிப்புகள்  எங்கும்  நிறைந்து  உண்ண  ஆளின்றி  காத்திருக்கிறதே.  பெண்களும்  ஆடவரும்  துருபத ராஜாவின்  மாளிகையை அடுத்த மைதானத்தில்  திரண்டிருக்கிறார்கள்.  என்ன விசேஷம் இங்கே ?

எத்தனையோ  ராஜாக்கள் துருபதன் மகள்  திரௌபதி  ஸ்வயம்வரத்தில்  பங்கேற்க போகின்றனர்  இன்று.  நடு நாயகமாக  மத்ஸ்யேந்திரம் நிலை நாட்டப்பட் டிருக்கிறதே,. யார்  அதை  வீழ்த்தி திரௌபதியை  கை பிடிக்கபோகிறாரோ ?.

சபை நிறைந்திருக்கிறது.   அங்கே பாருங்கள்.  கிருஷ்ணனும்  பலராமனும்  கூட  வீற்றிருக்கிரார்களே.  ஏன்  கிருஷ்ணனின்  கண்கள்  அலை பாய்கிறது?.  யாரைத்  தேடுகிறான்  கிருஷ்ணன்?. பலராமன்  ஏதோ  கேட்க  அதில்  கிருஷ்ணனின் கவனமில்லை  என்று பலராமனும்  புரிந்து கொள்கிறாரே. போட்டி  ஆரம்பித்தாகி விட்டது.

சற்றுதாமதமாக  ஒரு  பிராமணர்கள் கூட்டம்  உள்ளே  நுழைகிறதே!  இங்கென்ன  வேலை  அவர்களுக்கு? நெருக்கி, முண்டி யடித்துக் கொண்டு எப்படியோ  முன்னாலே  இரண்டாம் வரிசையில்  இடம் பிடித்து விட்டார்கள்  அந்த  பிராமணர்கள். மேல்  அங்கவஸ்திரம்,   கட்டு குடுமி, பஞ்சகச்சம்  நெற்றி நிறைய  பளபள வென்று  விபூதி.  வேத விற்பன்னர்கள் போலிருக்கிறதே.  கிருஷ்ணன்  அவர்களைக்  கவனித்து விட்டான்  புருவம் சுருங்கி விரிந்தது.  எப்போதும் போல   இதழோரத்தில்  புன்னகை  வழக்கம்போல படிந்தது.  கிருஷ்ணன்  பெருமூச்சு  விட்டான். அதில்  திருப்தி  இருந்தது.  

போட்டி நடக்கிறது.   ஜெயிக்கமுடியாமல்  அநேக  ராஜாக்கள்  தலை குனிந்துசென்றனர்.  துரியோதனன்  கர்ணனின்  தோல்வியை  தாள முடியாமல்  துடித்தான்.  சிசுபாலனும்  ஏமாந்தான்.   என்ன இது   யாருமே இல்லையா,  இங்கு  வீரத்தையும்  திறமையும்  காட்ட? . என் பெண்   காத்திருக்கிறாளே!” என்று  துருபதனுக்கு  வியர்த்தது.  பிராமணர்களில் ஒருவன்  கொஞ்சம்  வயதில் பெரியவரின் முகத்தை  பார்த்தான்.  அவர்  தலை அசைக்கவே  எழுந்து நின்றான்.

“யார் நீ  என்ன வேண்டும் உனக்கு?”   
திரௌபதியின் சகோதரன்  திருஷ்டத்யும்னன், இளவரசன்  வினவ,  அந்த  இளம்  பிராமணன் 

“நான்  போட்டியில்  கலந்து கொள்ள  ஆசைபடுகிறேன்”  என்றான்.  
எல்லோரும்  அவனைபார்த்து  “நல்ல  ஜோக்கர்”  என்று  சிரித்தனர்.  திருஷ்டத்யும்னன்  கிருஷ்ணனை  கண்ணால்  பார்க்க  கிருஷ்ணன்  துருபதனிடம் தலை அசைக்க, துருபதன் அந்த பிராமணனை  “சரி  போட்டிக்கு வரச்சொல்லு”  என்றான் .  எல்லோரும்  கை கொட்டி  சிரிக்க   அந்த பிராமண  வாலிபன்  எதையுமே  லட்சியம் செய்யாமல்  நேரே  மத்ஸ்யேந்த்ரம் அருகில்  சென்றான்.  கீழே  இருந்த  வில்லை நமஸ்கரித்தான்.  வலம் வந்தான்.  மனதில்  யாரையோ  ஸ்மரித்தான்,     கிருஷ்ணனின்  ஹஸ்தம் உயர்ந்தது.   வாலிபன்  அலட்சியமாக வில்லை  தூக்கினான்.  நாண் ஏற்றினான்.   மேலே   சுழன்றுகொண்டிருந்த மத்ஸ்ய இயந்திரத்தின்  அசைவை  சரியாக தெளிந்த  நீரில்  கீழே  கணித்தான்.    சரியான தருணத்தில்  நாணிலிருந்து  சரம் மேல் நோக்கி  பறந்தது. அடுத்த  கணம்  மத்ஸ்யம் கீழே  அறுந்து  விழ  சபையோர் வாயடைத்து  மௌனமாய்  நின்றனர்.  துருபதன்  வாலிபனை  நோக்கி  ஓடிச்சென்று  அணைத்து கொண்டான். அவனது  நீண்ட  கால கனவு  நிறைவேறி  விட்டதல்லவா .திரௌபதி  அங்கேயே  அந்த  வாலிபனை  கண்ணால் விழுங்கினாள்.

துரியோதனன்  அருகில்  கிருஷ்ணன்  நெருங்கி நின்றுகொண்டான். 

 “ கிருஷ்ணா,  எனக்கு   இந்த வாலிபன் ஒருவேளை  அர்ஜுனனோ என சந்தேகம்”  என்றான்´துரியோதனன். பாண்டவர்கள்   எல்லாமிழந்து  நாடோடிகளாக  வனவாசத்திலிருந்த காலம் அல்லவா?


“துரியோதனா  சந்தேகம் உன் பிறவி குணம்.  எதற்கெடுத்தாலும்  சந்தேகம். பாண்டவர்கள்  என்றால் எப்போதும் ஐவரும்  சேர்ந்து இருப்பார்களே.   அங்கு பார் இரண்டு பேர்  தான்  இருக்கிறார்கள்” என்றான் கிருஷ்ணன்.  அர்ஜுனனுக்கு  உதவி  தேவைப்பட்டால்  உதவ  பீமன் அருகில் சகதேவனுடன்   பிராமணனாக அமர்திருந்தான்.  

கிருஷ்ணன் துரியோதனனை  மேலே  பேசவிடாமல்    “வா  நாம்  செல்வோம்.  யாரோ  வீர  பிராமணன்  ஜெயித்தால்  அதைப் போற்றவேண்டுமே  தவிர  பாவம் எவ்வளவு பாடுபட்டு  அஸ்திர வித்தை  கற்று கொண்டானோ.  அதிர்ஷ்டம்  கூட  சிலருக்கு  தக்க  சமயத்தில்  உதவும்.  உன்  கர்ணன்  போன்றவர்க்கு உதவாமலும்  போகும். விட்டுத்  தள்ளு.  விருந்துக்கு போவோம்  வா” என்று கூட்டி சென்றான்.  பலராமனுக்கு  சந்தேகம் வலுக்க  கிருஷ்ணன்  கண்ணால் ஜாடை காட்டி  ''அப்புறம்  பேசலாம்'' என்றான்.

அர்ஜுனன்   வில்லைத்தொடும் முன்னே யாரை  மனஸார  ஸ்மரித்தானோ அந்த  கிருஷ்ணன்  நாம்  ஸ்மரித்தாலும்  உதவுவானே.  விடாமல் ஸ்மரிப்போமா? 

sivan jaykay

unread,
Jul 20, 2020, 9:49:00 PM7/20/20
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி 16    J K   SIVAN  
தாகூர்                                                


                                                   16    மௌனமே வார்த்தையாகி ....

                             
எனக்கே தெரியும்  நான்  கீதாஞ்சலியை   வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பவன்  அல்ல. அமரகவி  ரவீந்திரநாத் தாகூரின் எண்ண அழகையும், எழுத்து வன்மையும், உள்ளே பொதிந்த சேவை மனப்பான் மையும் ரசித்து, கிருஷ்ணனை உள்ளே  செலுத்தி பக்தனின் ஆர்வத்துக்கு  உயிரூட்டி இருக்கிறேன். அவ்வளவு தான். இது வரை 15 கீதாஞ்சலி பாடல்களை தொட்டிருக்கிறேனே. எத்தனை பேருக்கு பிடித்திருக்கிறது? சொல்லவேண்டாமா?     இப்படியே  போனால் இன்னும்  89-90 பாடல்கள்  இருக்கிறதே. - சிவன் )

16. I have had my invitation to this world's festival,
and thus my life has been blessed. 
My eyes have seen and my ears have heard.
It was my part at this feast to play upon my instrument,
and I have done all I could.
Now, I ask, has the time come at last when I may go in
and see thy face and offer thee my silent salutation?

இந்த உலகம் ஒரு விசித்திர  விழா மண்டபம். நிறைய நிகழ்ச்சிகள் வினாடிதோறும் நடந்தேறி வருகிறது.. எனக்கும்  ஒரு அழைப்பு வந்து தானே என் ஆட்டம் பாட்டம் எல்லாம் காட்ட  நான் பிறந்திருக்கிறேன், வாழ்கிறேன், அனுபவிக்கிறேன்.  கிருஷ்ணா, உன் அருளால்  இதைப் பெற  நான் பாக்கியசாலி தானே.

என் கண்கள் நிறைய காட்சிகளை பார்த்தாகி விட்டது. நிறைய ரசிக்கிறது. கண்ணே கொள்ளாது போல் இருக்கிறது. அப்பப்பா, இந்த  மா பெரும் உலகம்  எவ்வாறு  ஒவ்வொரு கணமும்  ஏதேனும்  மாற்றத்தை  உண்டு பண்ணியவாறு தனது காந்த சக்தியை நம் மேல் பாய்ச்சி  தனது பக்கம்  நம்மை  இழுத்து  அடிமையாக்கிறது.. 

காது நிறையவே என்னென்னவோ  செயதிகள், பாட்டுகள் பேச்சுகள் எல்லாம் கேட்கிறது.  ஒரு குறையும் குறைவும் இல்லை.

எல்லோரையும் போல் எனக்கும் இந்த வாழ்க்கை  விருந்து நாடகத்தில் ஒரு வேஷம் கொடுத்து விட்டாய் கண்ணா.  உனக்கு நன்றி  தெரிவிக்க  நான் என் வாத்யத்தை எடுத்துக்கொண்டு வந்து பாடட்டுமா, வாசிக்கட்டுமா?     என்னால் முடிந்ததை எல்லாம் குறைவின்றி  செய்கிறேனே, செய்தேனே-- ஒன்றா இராண்டா, எண்பது வருஷம் அல்லவா  ஓடிவிட்டது   அடேயப்பா......!!... .

ஒன்று மட்டும் உறுதியாக கேட்கிறேன். நீயும் பதில் சொல்கிறாயா கிருஷ்ணா?

எனது  பிரயாண  நேரம் வந்துவிட்டதா, நான் வரட்டுமா.... உன் தாமரை முகம் தரிசிக்கமுடியுமா?,

என்ன சொல்வது.   உன்னை பார்த்தால், என்ன பேசுவது?   ஒன்றும்  தெரியவில்லையே. வார்த்தையே  இல்லாமல்  ஒரு மௌனமாக விழுந்து வணங்கட்டுமா, வாழ்த்தட்டுமா, சின்னதாக ஒரு மௌன  அஞ்சலி கண்களில் நீர்  பொங்க  நன்றியோடு  செலுத்தட்டுமா?

 (குறிப்பு:  ஒரு நண்பர்  நான் எழுதும் கீதாஞ்சலி கட்டுரைகளில் போடும்  ரபீந்திரநாத் தாகூர் படத்தை  பார்த்துவிட்டு  நான் என் கட்டுரைகளில் பெரியார்  படம் போடுவது  அவர் பற்றி எழுதுவது தனக்கு ரொம்ப  பிடிக்கிறது என்று சொன்னபோது தான் நான் செய்த பாவங்கள் இன்னும் என்னை விட்டு விலகவில்லை என்று புரிந்தது.  தாடிகளில்  எத்தனையோ  வேறுபாடுகள் உண்டே ?  அதற்குப்பிறகு  தாகூருக்கு பதிலாக  கிருஷ்ணன் படம் மட்டும் போடுகிறேன்.)

 

sivan jaykay

unread,
Jul 20, 2020, 9:49:01 PM7/20/20
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி     J K   SIVAN   
தாகூர் 
                                                                          
                                                      18   கொட்டும் மழையில் கிருஷ்ணா  உனக்காக....

நமது ஞாபக சக்தியை நாம் தான் மெச்சிக்கொள்ளவேண்டும். இன்று காலை என்ன டிபன், என்ன சமையல் வீட்டில் என்பது சமைத்தவர்களுக்கே  ஞாபகம் இல்லை என்றபோது சாப்பிட்டவன் தலையைத் தான் சொறிந்துகொள்ளவேண்டும்.  இந்த நிலையில் என்றோ வாழ்ந்த மகான்களை தெரியுமா? ஞாபகம் உண்டா என்றால்?

தாடிக்காரர்களில் எல்லோரும்  அருமையானவர்களும் என்று எப்படி  சொல்வது?   பறவைகளில் கிளி காக்கை இல்லையா அது போல் வித்தியாசமானவர்கள் இருக்கலாமே.   நான் சொல்லும்  ஒரு தாடிக்காரர் வசதியானவர். எதையும் அறுக்க, வெட்ட , உடைக்க சொல்லாதவர். அமர காவியங்களைப்  படைத்தவர். உலகம் புகழ்ந்த காவியக் கவி  யோகி ரவீந்த்ரநாத் தாகூர் (1861-1941). வெள்ளைக்காரன் காலத்தில் நோபல் பரிசு வாங்கியவர். 80 வயதில் அவர் சாதித்தது எத்தனையோ யுகங்களில் நம்மால் முடியாது. குருதேவ் என்று காந்திஜியால் போற்றப்பட்டவர். சிறந்த தத்துவ ஞானி. நமது முண்டாசு கவிஞனுக்கு அவரைப் பிடிக்கும். ரெண்டு பேருமே  கவிஞர்கள், புலவர்கள் இல்லையா?  தாகூர் எழுதிய கீதாஞ்சலி அற்புதமான ஒரு காவியம். ஆஹா அதை ரசித்து இதுவரை 17 பாடல்களை விளக்கினேன்.

இது தவிர அவர் எழுதிய காபூல் காரன், ராய் சரண், சுபா, போஸ்ட்மாஸ்டர், போன்ற மனதைப் பிழியும் கதைகளை உங்களுக்கு ஏற்கனவே தமிழ்க்கதைகளாக சுருக்கி தந்திருக்கிறேன். மீண்டும் அதை படிக்க ஆசியானால் இந்த என் முக நூல் குரூப்பில் (J.K. SIVAN / J K SIVAN'S FRIENDS GROUP/ SREE KRISHNARPANAM SEVA TRUST FB GROUPS)ல்  இருப்பவர்கள் தேடிப்  பிடிக்கலாம்,  படிக்கலாம். அவசியமா ? 

பிஞ்சிலே பழுத்தவர் என்று தாகூரை சொல்லலாம். முதல் வங்காள மொழி கவிதைத் தொகுப்பு 17 ஆவது வயதில் வெளி வந்தது.  தாகூர் குடும்பத்தில் பல கலைஞர்கள் கவிஞர்கள் போல் இருக்கிறது. கோகோந் த்ரநாத், அபனீந்திரநாத், தேவேந்திரநாத், த்விஜேந்திரநாத் தாகூர்கள்.பலே பலே. கீதாஞ்சலியை தாகூரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பதைத்  தான்  இப்போது ரசித்துக்கொண்டிருக்கிறோம். 
இன்று தாகூரின் 18வது கீதாஞ்சலி :

18.  Clouds heap upon clouds and it darkens.
 Ah, love, why dost thou let me wait outside at the door all alone?
In the busy moments of the noontide work I am with the crowd,
but on this dark lonely day it is only for thee that I hope.
If thou showest me not thy face, if thou leavest me wholly aside,
 I know not how I am to pass these long, rainy hours.
I keep gazing on the far-away gloom of the sky,
 and my heart wanders wailing with the restless wind.
 
கண்ணம்மா,  என் மனம் நீ அறிவாய்.  மேலே பார்க்கிறேன்  கருப்பாக    யானை யானையாக  மேக கூட்டங்கள் மெதுவாக அசைந்து ஒன்று மேல் ஒன்று ஏறி விளையாடுகிறது. உருவம்  மாறிக்கொண்டே இருக்கிறது.  
மழைகாலம் வந்துவிட்டால்  மேலே கரு மேகங்கள்  மலைபோல,  யானையாகி,  திமிங்கிலமாக  என்னென்னவோ உருவெடுக்குமே . சூரியனை போர்வை போர்த்தி மறைத்து இருளை எங்கும் தரும்.     

எதிர்பார்த்த மழை வேகமாகவே நிறைய கீழே இறங்கிவிட்டது. குளிர் எடுத்துவிட்டது.   இந்த  ஜோ மழையில் நான் எங்கே போவேன். யாரை அணுகுவேன்.  என் கண்ணில் படுவதெல்லாம் மங்கலான பரந்த கருமை கலையும் சாம்பல் நிற  ஆகாசம்...... விர்ரென்று  எலும்பை  பிளந்து ஊடுருவும் காற்றில் உஸ்ஸ்ஸ்  என்ற சப்தத்தோடு கலந்து என் இதயம் ஊசலாடுகிறதடீ கிருஷ்ணம்மா. 
அதிருக்கட்டும் இதற்கு பதில் சொல்லு?

 என்னை ஏன்   தன்னந்தனியாக உன் வாசலிலேயே நிற்க வைத்து காத்திருக்க வைக்கிறாய் ?. என்னை ஏன் உள்ளே சேர்த்துக்கொள்ளவில்லை. கண்ணம்மா, காத்திருப்பது  தெரியாதா?

என்னைப்பற்றி தெரியுமே.  பகலெல்லாம் பிழைப்பைத் தேடி   எங்கெல்லாமோ அலைந்து திரிந்து எவரிடமோ பழகி எதேதொ  வேலையாக கும்பலில் கலந்துவிட்டேன்.  இதோ  வானம் கருத்து   இருந்த பகல் வேளையில்  என் புகலிடம் நீ மட்டும் தானே.   நீ ஒருவளே என் நம்பிக்கை நக்ஷத்ரம்.  நீ  நம்பியவர்களை கைவிடாத வளாயிற்றே,

கண்ணம்மா, நீ உன் முகம்காட்டி  தலை அசைத்து புன்னகைக்காவிட்டால் நான் என்ன செய்வேன்.  எங்கு செல்வேன்?  பாராமுகம் ஏனம்மா? முழுசாக நான் ஒருவன் நிற்பது கண்ணில் படவில்லையா?   ஜோ வென்று மழை கொட்டும்போதும்  நான் தொப்பலாக  நனைந்த போதும்  உன்னை தேடி எதிர்பார்த்து தான்  வந்து  நிற்பேன். எனக்கு வேறு எதுவும்,  எவரும்,  தெரியாதே.   என்னை  புறக்கணிக்காதே. தாங்க மாட்டேன்.   உன்னைத் தேடியவாறு  வானத்தை நோக்கி  கண்ணிமைக்காமல் பார்த்து நிற்கும் என் மனம் அலை பாய்கிறதே.  என்  இதயத்திலிருந்து  ''உன்னைக் காணாத நெஞ்சம்..... என்று சோகமாக ஒரு மெல்லிய கீதம் புறப்படுகிறதே உன் காதில் விழுகிறதா?   அது   அலைபாயும்  காற்றோடு கலந்து எங்கெல்லாம்  எதிரொலிக்கிறதோ? அதில்  என்  விம்மல், ஏக்கத்தின்  பிரதிபலிப்பு  கேட்கிறதா  உனக்கு?

sivan jaykay

unread,
Jul 21, 2020, 8:20:48 PM7/21/20
to amrith...@googlegroups.com


                                  ஒரு முக்கிய வேண்டுகோள்.    J K  SIVAN  

இந்த வருஷம்,   ஆகஸ்ட்  22,  2020 அன்று சனிக்கிழமை  விநாயக சதுர்த்தி  வருகிறது.  கோலாகலமாக மன திருப்தியோடு  கஜமுகன்  பிறந்தநாளை கொண்டாடப்போகிறோம்.

ஒரே ஒரு விண்ணப்பம். எல்லோரிடமும்  நீங்களும் சொல்லுங்கள், அதாவது நான் சொல்வது சரியாக இருந்தால் .
 
எல்லா தெருக்களிலும்  பெரிய  பொம்மையாக  POP   PLASTER  OF  PARIS  அல்ல காகித பொம்மை 
 வண்ணத்தோடு  காட்சியளிப்பார். பிறகு ஒருநாள் அவரை லாரிகளில் ட்ராக்டர்களில் எடுத்து  கடலில் அல்லது எங்கோ நீர்நிலையில் தூக்கி எறிகிறார்கள்.  இதுவா பக்தி, இதுவா நமது பண்பாடு?   பிள்ளையாரை வேண்டுமென்றே உடைப்பவர்களுக்கும் நமக்கும்  வழிபடும் நமக்கும் என்ன வித்யாசம்,? இது தான்  பிள்ளையாரை வழிபடும்  லக்ஷணமா? சில காட்சிகளை இணைத்துள்ளேன்.  விநாயக பக்தர்களில் கண்ணீர் வழியாவிட்டால் நல்ல கண்டாக்டரை உடனே பார்ப்பது அவசியம். 

வேண்டாம். இப்படி ஒரு வழிபாடு நமக்கு வேண்டாம்.  களிமண்ணில் பிள்ளையார் பொம்மை வாங்கி பூஜையில் வைத்து  அதை கிணற்றில், ஆறுகளில் போடுவது வழக்கம். இப்போது கிணறோ, ஆறோ  கிடையாது, அசுத்தமான நீர்நிலைகளில் போடக்கூடாது. ஆகவே  ஒரு பக்கெட்டில்  நீரில் கரைத்தது  தென்னை மரம், ஏதாவது மரத்துக்கு வேரில் அந்த கரைந்த நீரை கால் படாமல் ஊற்றுங்கள். அது போதும். சிலர்  கோவில்களில் கொண்டுபோய் வைக்கிறார்கள், கோவில்காரர்கள் எங்கே போவார்கள் அத்தனை பொம்மையும் கரைக்க. அவர்களுக்கும் கிணறு, ஆறு பிரச்னை சென்னை போன்ற பெரிய பட்டணங்களில் பொது தானே. 

கோவிலில் இருக்கும்  பிள்ளையாரை சென்று வணங்கினால் போதும். தெருக்களில் POP  தரிசனம் வேண்டாம். பின்னர் சின்னாபின்னமாக்க வேண்டாமே.   வீட்டில் கும்பிடுவோம்  கோயிலில் சென்று பிள்ளையாரை வணங்குவோம் அது போதுமே  சமீப காலமாகத்தான் இப்படியெல்லாம்  புது பழக்கங்கள் வந்தது பழைய காலங்களில் இது இல்லையே.  எதற்கு இந்த விபரீதம்?  மனம் புண்படுகிறது.   இப்படி பொம்மை செய்பவர்கள் தயவு செய்து  இதெல்லாம் தயாராக்கி  வியாபாரம் வேண்டாம். வரும்படியும்  ஒட்டாது.






VC 1.JPG
VC 4.jpg
VC.2.JPG
VC.5.jpg
VC 3 JPG.jpg
VC.6.JPG

sivan jaykay

unread,
Jul 21, 2020, 8:20:48 PM7/21/20
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி 19                         J K.  SIVAN  
தாகூர் 

                                             பூக்காட்டின்  சுநாதம்

19. If thou speakest not,  I will fill my heart with thy silence and endure it.
I will keep still and wait like the night with starry vigil 
and its head bent low with patience. 
The morning will surely come, the darkness will vanish,
and thy voice pour down in golden streams breaking through the sky. 
Then thy words will take wing in songs from every one of my birds' nests,
and thy melodies will break forth in flowers in all my forest groves.

''கிருஷ்ணா, நான் பொறுத்து பொறுத்து காத்திருந்து பழக்கப்பட்டவன். உன் குரல் கேட்கவேண்டும், உன்னை நேரில் பார்க்கவேண்டும். அவ்வளவு தான்  என்  வேண்டுகோள்.   இது எனது கட்டுக்கடங்காத ஆவல்.
நீ என்னோடு பேசாவிட்டால் என்ன? எனக்கு என்று ஒரு இதயம் நீ கொடுத்திருக்கிறாயே அது எதற்கு?
அதில் உன்னுடைய மௌனத்தை நிரப்பிக்கொள்கிறேன். அதை அமைதியாக சுமக்கிறேன். அதன் இனிமையில் மகிழ்கிறேன். வேறே என்ன செய்யமுடியும்?  நீ செய்யும் எதுவும் எனக்கு  பிடிக்கும் 
ஒரு நாளோ, வாரமோ, மாதமோ, வருஷமோ எவ்வளவு காலாமானால்  தான் எனக்கென்ன ?
நான் இலவு காத்த கிளி. பேசாமல் உனக்காக, உன் குரலுக்காக , வருகைக்காக காத்திருக்கிறேன். எனக்கு இது புதிதா?

அதோ மேலே தெரிகிறதே நீல வானம், அமைதியாக இருந்தது இப்போது கருமையாக இருண்டு தங்கப் பொட்டு களாக நக்ஷத்ரங்களோடு ஜொலித்துக் கொண்டு அமைதியாக கீழ்நோக்கி குனிந்தவாறு, கிழக்கே பார்த்து பொறுமையாக காத்திருக்கவில்லையா?  நானும்  அப்படி இருக்கமாட்டேனா?

நேரம் ஓட ஓட  இந்த  நீண்ட  இரவு மறையும். கிழக்கு வெளுக்கும். கட்டாயம் இருள் மறையும். அப்புறம் ....
உன் குரல் தங்க ஒளிக்கதிர்களாக  பொன்மழையாக எங்கும் வியாபிக்கும். அப்போது கருப்பு வானம் எங்கே?   வானம் எப்படி யாரைக் கேட்டு பொன்மயமாகும் ?

ஆம் கிருஷ்ணா உன் குரலும் கேட்பேன். உன் வார்த்தைகள் அமுத நாதமாக சிறகடித்து ஒவ்வொரு பறவைக் கூட்டிலிருந்து வெளிப்படும்.

 ஆஹா உன் குரலின் இனிமை, உணர்வு, காந்த சக்தியோடு, ஒவ்வொரு மலரிலிருந்தும் வண்டுகள் மூலமாக கூட அழகாக'அவற்றின்  சுநாத  ரீங்காரமாக  ஒரே சுருதியில்  ரோய்ங்க்   எங்கும் கேட்கும். ஒரு மலரா ஒரு செடியா,   ஒரு பெரிய பூக்காடு எல்லை யில் லாமல் படர்ந்து இருக்கிறதே.  எவ்வளவு சிறிதும் பெரிதுமாக  பறவைகள், வண்டினங்கள், சூரியன் ஒளிக்காக  தினமும்  அதிகாலையில் காத்திருந்து  உனக்கு பள்ளியெழுச்சி பாடுகிறது.    
எத்தனை வித வித மலர்களின்  வண்ண உருவங்கள், அசைவுகள்  நர்த்தனமாக  காற்றில் ஆடி  உன் குரலை அசைவிலே காட்டும். எனக்கு புரியாதா?    அவை பாடும் உன் கீதங்கள், வண்டுகளின் ரீங்காரம் என்னை இன்பவெள்ளத்தில் ஆழ்த்தும்.......சுகமோ சுகம்....



 

sivan jaykay

unread,
Jul 21, 2020, 8:21:12 PM7/21/20
to amrith...@googlegroups.com
**அப்பைய தீக்ஷிதர்              J K SIVAN

                                                                                                       மார்க்க பந்து ஸ்தோத்ரம்**

வழித்துணைவா உன்னை நமஸ்கரிக் கிறேன்**

இது அப்பய்ய தீக்ஷிதர் எழுதியது. அப்பய்ய தீக்ஷிதரும் ஒரு சிறந்த சிவபக்தர். ஸமஸ்க்ரிதத்தில் பாண்டித்யம் மிகவும் உள்ளவர். அவர் சிவபெருமானை எனக்கு துணைக்கு வா என்று பயணம் மேற்கொள்ளும்போது வழியில் எந்த ஆபத்தும் வராமல் காக்கவேண்டும் என்று கேட்பது அற்புதமாக புரிகிறாற் போல் உள்ளது:**

என் தகப்பனார் வீட்டை விட்டு எங்கு சென்றாலும் இந்த ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டே நடப்பார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நொண்டிச்சிந்து  ராகத்தில்  ''நந்தவனத்தில் ஓர் ஆண்டி'' மெட்டில் பாடிப் பாருங்கள் .உற்சாகமாக இருக்கும்.**

**शिव शम्भो महादेव देव शिव शम्भोशम्भो महादेव देव ..
 சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ,     தேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ

மகாதேவா நீயே வாழ்வளிப்பவன், சாந்தி அருள்பவன், சகல சௌபாக்கியங்களும் அள்ளி தருபவன். உன்னை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறேன்.**

फालावनम्रत् किरीटं.   भालनेत्रार्चिषा दग्धपंचेषुकीटम्  शूलाहतारातिकूटं
शुद्धमर्धेन्दुचूडं भजे मार्गबंधुम् .. शम्भो
 பாலாவநம் ரத்ந கிரீடம் பாலநேத்ராச்சிஷா தக்த பஞ்சேஷுகீடம்
சூலா ஹதாராதிகூடம் சுத்தமர்த் தேந்து சூடம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

என்னை வழிகாட்டி நடத்திச் செல்லும் என் உற்ற நண்பன் சாம்பசிவன் தலையில் பளபளவென்று மின்னும் கிரீடம் அணிந்தவன், கையில் தரித்த சூலாயுதத்தால் எதிரிகளை த்வம்சம் செய்பவன். குளிர்ச்சியோடு கண்ணைப் பறிக்கும் அமிர்தம் சொட்டும் இளம்பிறையை சிரத்தில் சூடியவன், அதே சமயம் நெற்றிக்கண் அக்னியால் மன்மதன், திரிபுரத்தையும் அழித்தவன், பரமேஸ்வரா, நீயே எனக்கு வழித்துணைவனாக மார்கபந்துவாக வந்து ரக்ஷிக்க வேண்டும்.**

अंगे विराजद् भुजंगं    भ्र गंगा तरंगाभि रामोत्तमांगम्  ॐकारवाटी कुरंगं**
सिद्ध संसेवितांघ्रिं भजे मार्गबंधुम् .. शम्भो..
 அங்கே விராஜத் புஜங்கம் அம்பரகங்கா தரங்காபி ராமோத்த மாங்கம்
ஓங்கார வாடீ குரங்கம் ஸித்தஸம்ஸேவி தாங்க்ரிம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)  

சர்ப்பம் சங்கரனின் ஆபரணம். அவன் உடலில் கழுத்தில், சிரத்தில் நாகம் குடிகொண்டிருக்கும். இன்றும் எத்தனையோ சிவாலயங்களில் நாகம் வசிக்கிறது. அம்புலியோடு அழகிய கங்கையையும் சிரத்தில் சூடியவனே, பிரணவம் எனும் ஒம்கார நந்தவனத்தில் மான் போல் துள்ளி விளையாடுபவராக காணும் ஆனந்த நடேஸா , சகல ரிஷிகளும் சித்தர்களும் யோகிகளும், ஞானிகளும் பூஜிக்கும் திருவடியை உடையவனே, வா வந்து வழிகாட்டு வழித்துணைவா, மார்க்க பந்துவே உன்னை நமஸ்கரிக்கிறேன் என்னை ரக்ஷித்தருள்.**

नित्यं चिदानंदरूपं   निह्नुताशेष लोकेश वैरिप्रतापम्  कार्तस्वरार्गेद्र चापं
कृतिवासं भजे दिव्य मार्गबंधुम् .. शम्भो..
நித்யம் சிதானந்த ரூபம் நின் ஹுதா சேஷலோகேச வைரி ப்ரதாபம்
கார்த்த ஸ்வரா கேந்த்ர சாபம் க்ருத்தி வாஸம் பஜே திவ்ய ஸன்மார்க்க பந்தும் (சம்போ)

பரமேஸ்வரா, நீ சத்யன், நித்யன், பரம்பொருள், சிதானந்த ரூபன், சாதுக்களை இம்சிக்கும் ராக்ஷஸர்களை, கொடூரர்களை உடனே அழிக்கும் சக்தி ஸ்வரூபா, களிற்றின் தோலில் ஆடை அணிந்தவா, தங்க மேரு போன்ற வில்லை யுடையவரும், சத்யஸ்வ ரூபனுமான சாஸ்வதமானவருமான, மார்கபந்து, வழிகாட்டியருளும் தெய்வமே, உன்னை சரணடைந்தேன். நிர்பயமாக நான் பயணத்தை மேற்கொள்ள கூடவே வந்து வழித்துணை வனாக காத்தருள்வாய்.**

कंदर्प दर्पघ्नमीचं   कालकण्ठं महेशं महाव्योमकेशम् *कुन्दाभदन्तं सुरेशं
कोटिसूर्यप्रकाशं भजे मार्गबंधुम् .. शम्भो..
 கந்தர்ப்ப தர்ப்பக்ன மீசம் காலகண்டம் மஹேசம் மாஹ வ்யோ மஹேசம்
குந்தாபதந்தம் ஹுரேசம் கோடி சூர்ய ப்ரகாசம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

மன்மதனுடைய கர்வத்தை,  தலைக் கனத்தை அடக்கி அவனை அழித்தவரும், ஆலஹால விஷத்தை விழுங்கிய நீலகண்டரும், பரந்த ஆகாகாசத்தை விரிந்த சடையாக கொண்டவரும், வெண்ணிற மல்லிகைப்பூக்களை, அரும்புகளை போல் பற்களை கொண்டவரும், பொன்னார் மேனியர், கோடி சூர்ய பிரகாசத்தை தனது ஒளியாக கொண்டவருமான பரமேஸ்வரன் மார்கபந்துவாக என்னோடு கூட பிரயாணம் செயது என் வழித்துணை வனாக வந்து என்னை ரக்ஷிக்க வேண்டும் .**


मंदारभूतेरुदारं मंथरागेन्द्रसारं महागौर्यदूरम् सिंदूर दूर प्रचारं
सिंधुराजातिधीरं भजे मार्गबंधुम् .. शम्भो..
மந்தார பூதேருதாரம் மந்தார கேந்த்ர ஸாரம் மஹா கௌர்ய தூரம்
ஸிந்தூர தூரப்ராசரம் ஸிந்து ராஜாதி தீரம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

மந்தார புஷ்பம் சிவனுக்கு ரொம்ப  பிடிக்கும். மந்தாரம் ஒரு கற்பக விருக்ஷம். கேட்பதெல்லாம் அ ளிக்கும், சிவனின் உடலோ மந்தரமலையை விட உறுதியானது. பலமிக்கது. கௌரியை இணைபிரியா அர்த்தநாரிஸ்வரா, தாம்ரவர்ணா , ரிஷபாரூடராக எங்கும் காட்சி தருபவரே, தைரியத்தில்,  தீரத்தில், சமுத்ரராஜனை மிஞ்சியவனே, என்னோடு சேர்ந்து கூடவே வழித் துணைவனாக வா, மார்க்க பந்து, வழித்துணை நண்பா உன்னை போற்றி வணங்குகிறேன்.**

अप्पय्ययज्वेन्द्रगीतं स्तोत्रराजं  पठेद्यस्तु भक्त्या प्रयाणे  तस्यार्थसिद्दिं विधत्ते
मार्गमध्येऽभयं चाशुतोषी महेशः ||
அப்பய்ய யஜ்வேந்த்ர கீதம் ஸ்தோத்ர ராஜம் படேத்யஸ்து பக்த்யா ப்ரயாணே
தஸ்யார்த்த ஸித்திம் விதத்தே மார்க மத்யே பயம் சாசு தோஸோ மஹேச; (சம்போ)

இது பலச்ருதி. யாரெல்லாம் பிரயாணம் மேற்கொள்கிறார்களோ, வழியில் எந்த இடையூறும், தடங்கலும் இல்லாமல் இனிய பயணமாக நிறைவு பெற இந்த மார்க்க பந்து ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்துவிட்டு பிரயாணம் துவங்கினால் சகல காரியமும் சித்தியாகும், சந்தோஷம் அபரிமிதமாக கிடைக்கும், இந்த அப்பய்ய தீக்ஷிதர் ஸ்லோகங்கள் பழையகாலத்தில் வழிப்போக் கர்கள் விடாமல் சொல்லும் மந்திரமாக இருந்தன. அப்போது மின்சாரம் இல்லை, துஷ்ட மிருகங் கள், கள்வர்கள் பயம், இருட்டு, விஷ ஜந்துக் கள் இவற்றிடமிருந்து பாது காக்க உதவியாக இருந்தது. இன்று  கொரோனா  போன்ற வேறுவிதமாக பயம் பிரயாணத்திலும்  இருக்கிறது என்பதால் இந்த ஸ்லோகம் இன்றும் மிக்க பயனுள்ளது. பயத்தை போக்குவது. சிவன், சம்பு , கூடவே வழித்துணைவனாக, மார்க்க பந்துவாக வருவான் . தேவை. 

sivan jaykay

unread,
Jul 21, 2020, 8:21:12 PM7/21/20
to amrith...@googlegroups.com
                                                      குருக்ஷேத்திர  தத்வம்   J K   SIVAN 

எதிரே   கண்ணுக்கெட்டியவரை  பரந்த  அளவற்ற  யுத்த பூமி.  அதன் பெயர் தான் குருக்ஷேத்ரம்.  பதினெட்டு நாட்கள்  உலகம் இது வரை  காணாத யுத்தம் நடந்த இடமா  இது ?  
பதினெட்டு அக்ஷரோணி  சைன்யங்கள் இருபக்கமும் சேர்த்து  துளி இடம் விடாமல் அடைத்து க்கொண்டு  மோதிய  பூமியா.இது?
கணக்கிட்டு சொல்லமுடியாத   நிறைய   நிறைய சைபர்  போட்ட  இலக்கங்கள்  கோடிக்கு அப்புறம் என்னென்னவோ  பேரில்  உள்ள அளவாக எண்ணப்பட்ட  யானைகள், குதிரைகள், காலாட்படைகள், தேர்கள், வீராதி வீரர்கள், சூரர்கள் .....எங்கே எல்லாம்?

''ஓ..   இது தான்  மயான அமைதியோ?  ஒரே நிசப்தமான  அசையாத  பிணக்குவியல்கள். அத்தனை பிணங்களும்  என்னவெல்லாம்  பேசியவை?   எவ்வளவு வீரமான சொற்கள்? கோப, ஆவேச அதிகார, மனதை  வதைக்கும்   வசைச் சொற்கள், பச்சை பொய்கள்,,,,,,,  பாரத  தேசத்தின் பல பகுதி, பாகங்களில் இருந்து வந்த  வீரர்கள், சேனைகள்,  படைகள், பலசாலிகள்.    இதோ காக்கை,  நாய் ,  கழுகு ஓநாய் தான்  அவற்றைச்  சுற்றி.   வீராதி வீரர்கள்,  பணியாட்கள், நாடு நகரம், யானை குதிரை  எங்கே அவை எல்லாம்?

சஞ்சயன் சுற்றிலும் பார்த்தான்.  18 நாள் யுத்தம்முழுதும் ஒரு சம்பவம் விடாமல்  பார்த்து திருதராஷ்டிரனுக்கு சொன்னவன். எல்லாம்  முடிந்த இடம்.  குருக்ஷேத்திர பூமி   எல்லா உயிர்களையும் குடித்து விட்டு மிஞ்சிய ரத்தத்தை வெளியே ஆறாக ஓட விட்டிருந்தது.
 
இங்கே தான் கிருஷ்ணன்  உதவ அர்ஜுனனும்  பீமனும்  தோட்டத்தில் மாங்காய்  பறிப்பது போல்  எல்லா உயிர்களையும்  சூறையாடினார்களோ. எறும்பு கூட்டத்தின் மேல்  நடந்து காலால்  நசுக்கிய  யானையாக பீமன் கௌரவ சேனையை அழித்தானோ.

''உனக்கு அதெல்லாம் புரியாதடா'' -      யார்  பேசுவது ?.
 திரும்பிப்பார்தான் சஞ்சயன். எதிரே  ஒரு காவி உடுத்த  கிழவன்
''என்ன சொல்கிறீர்கள்?''
'உண்மையிலேயே யுத்தம் என்றால் எது  தெரியுமா?  அது  புரிந்தால் தான் குருக்ஷேத்திர யுத்தம் அர்த்தம் விளங்கும்''
'' சுவாமி நீங்கள்   நீங்கள்  யாரோ  ஒரு மஹான் என்று புரிகிறது.  நீங்கள்  என்ன சொல்கிறீர்கள்? -- சஞ்சயன்.

'' மஹா பாரதம்  ஒரு கதையல்ல,  ஒரு தத்துவம்.  சொல்கிறேன் கேள்''  
 எல்லாம் உனக்குள்ளே நடப்பது தான் பெரிதாக இங்கே குருக்ஷேத்திர  வெள்ளித்திரையில் படமாக ஓடியது....  பாண்டவர் யார்? 
 உன்னுள்ளே  இருக்கும் ஐந்து புலன்கள் . 
கௌரவர்கள் யார்?
 “உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் நூறு   தவறுகள்.   நாள் தோறும் உன்  ஐந்து புலன்கள்அவற்றோடு  போராடுகிறது.  அது தான் யுத்தம். 
 உன் மனோ ரதத்தில் கிருஷ்ணன் குதிரைகளை ஓட்டுகிறான்.  அவன் தான் உன் அந்தர்யாமி.  ஆத்மன். உள்ளிருந்து குரல் கொடுப்பவன்.  வழி காட்டி.  அவன் உன்னை செலுத்தும்போது உன் வாழ்க்கை குதிரை ஜோராக ஓடும்.  துளி கூட கவலையே வேண்டாம்.''

''சுவாமி  சற்று  எனக்கு விளக்குங்கள்:   கெட்டவர்கள் என்று தெரிந்தும் ஏன்  பீஷ்மாச்சார்யார், த்ரோணர்  போன்றவர்கள் கௌரவர்களுக்கு உதவி யுத்தம் செய்தார்கள்?''

'வயது, படிப்பு, அந்தஸ்து,  மட்டும் ஒருவனை பெரியவனாக்காது.  தவறு செய்வது எல்லோர்க்கும் சகஜம்.  தெரிந்து செய்வது குற்றம்.  யாராயிருந்தாலும்  அதற்கு தண்டனை உண்டு.  ஆகவே அதைப் பெற்றார்கள்.  பாண்டவர்கள்  அவர்களையும் போரிட்டு அழிக்கத்தான் வேண்டியிருந்தது.  அதை  புரிந்து கொள்ளத்தான்  கிருஷ்ணன் கீதை உபதேசித்தான்.”

''சுவாமி  பாண்டவர்கள்  கௌரவர்கள் பற்றி சொன்னீர்கள். அப்படியானால் ...  கர்ணன் யார்?
''ஆஹா.  கர்ணன் என்பது உனது புலன்களோடு ஒட்டிய உறவு. சகோதரன் மாதிரி. அதன் பெயர்  ''ஆசை'' . அதனால் தான் சகல துன்பங்களும் விளையும். 

திருமூலர் சொல்வாரே ....'' ஆசை படப்பட  ஆகி வரும் துன்பங்கள். ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்'' என.
கௌரவர்கள் செய்த  தவருக்கெல்லாம் பக்க பலம் கர்ணன்.    தவறுக்கு   ஆசை போல..''

 சஞ்சயன்  நீண்ட நேரம் தனியே  நின்று கொண்டு யோசித்தான்.  நிறைய எண்ணங்கள் மனதில் ஓடின. குருக்ஷேத்திர பூமியை மீண்டும்  முழுதாக   கண்ணால் பார்த்தான்.   

ஓ.. ஆசையினால், பேராசையால் விளைந்த  பெரு நஷ்டமா  நிகழ்ந்தது இங்கு?  முகம் வியர்த்தது. மனம் பட பட வென்று அடித்துக்  கொண்டது. உண்மை புலப்பட்டது.  அந்த  துறவியிடம்  ஏதோ கேட்க  திரும்பியபோது  அவரில்லை.  தூரத்தில்  கிருஷ்ணன் போவது போல்  தோன்றியது.

sivan jaykay

unread,
Jul 21, 2020, 8:21:12 PM7/21/20
to amrith...@googlegroups.com
                                                                மார்க்க பந்து  J K  SIVAN  

1833ல்   கார்டினல்  ஜான்  ஹென்றி நியூமன்  என்ற இளம்  பாதிரி, ஒருவர்  ஒரு பாட்டை எழுதினார் .  இதை எத்தனையோ  பேர்  ஸ்தோத்ர பாடலாக பாடினார்கள். பகவானை வேண்டினார்கள்.  இன்றும் எங்கும் அது பாடப்பட்டு வருகிறது. 

இத்தாலிக்கு சென்ற  நியூமன்  பாலெர்மோவில்  திடீர்  ஜுரத்தில்  உடல் நலம் குன்றி  படுக்கையில் இருந்த சமயம்  ஒருநாள்  படுக்கையில் எழுந்து  உட்கார கூட முடியவில்லை. மெதுவாக சுதாரித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தார்.   அழுகை வந்தது.   ஒரு  பெண் வேலையாள் அவரை கவனித்துக் கொள்பவள்  ''எதற்காக ஐயா அழுகிறீர்கள்?'' என்று  கேட்டாள் .

''அம்மா  எனக்கு  இங்கிலாந்தில் ஒரு முக்கிய வேலை இருக்கிறது. எங்கோ வந்த இடத்தில் இப்படி நோய்வாய் பட்டு தவிக்கிறேன்.  எப்படியாவது என் வீட்டுக்கு போகவேண்டும்.. இங்கிருந்து இங்கிலாந்து செல்லும்  கப்பல்  இன்னும் 3 வாரங்கள் கழித்து தான் வருமாம்.  என்ன செய்வேன்.    அருகிலே ஒரு  தேவாலயம்  இருக்கிறது அங்கே சென்று தொழுகிறேன்.  வேண்டிக்கொள்கிறேன்.  கொஞ்சம்   மன  நிம்மதியாக இருக்கிறது.  அங்கே யார் பேச்சையும் பிரசாங்கத்தையும் நான் கேட்பதில்லை. போவேன் வேண்டுவேன் வருவேன். அவ்வளவுதான்.  என்கிறார்.  நாட்கள் ஓடியது.

அப்பாடா  ஒரு நாள் ஒரு ஆரஞ்சு நிற சிறிய  கப்பல்  வந்தது.   பிரான்ஸ்  நாட்டில்  மார்ஸெல்ஸ் நகரம்  போய் சேர்ந்தார்.   போகும் வழியில்  சார்டினியாவுக்கும்   கார்சிகாவுக்கும்  இடையே   போனிபாஸியோ  STRAITS OF BONIFACIO  எனும் ஜலமார்கத்தில்   கப்பல் பிரான்ஸ் நோக்கி போகும்போது ல் நியூமன்   எழுதிய  அந்த பாட்டு உலக பிரசித்தி பெற்றுவிட்டது. 

இங்கிலாந்தில் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நிறைய பேர்  அடியில்  புதையுண்டு, பிராணவாயு இன்றி  இறந்தனர். எப்படியோ தெய்வாதீனமாக ஒரு சிலர் மட்டும்  மீட்பு பணியாளர்கள் வந்து காப்பாற்றும் வரை  உயிர் வாழ்ந்தனர். அப்போது அவர்கள்  எங்கோ ஒரு மூலையில் பாறைகளுக்கு இடையில்   அமர்ந்து இந்த பாடலை மனமுருகி பாடி இறைவனை வேண்டினார்கள். மீட்கப்பட்டார்கள்.

டிட்டானிக்  எனும்  புது   கப்பல் முதல் பிரயாணத்தில்  அமெரிக்காவை நோக்கி செல்லும்போது மூழ்கியது. கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிய சமயம் சிலர் இந்த பாடலை கடைசியாக பாடியவாறு இறந்தனர். இன்னும் எத்தனை எத்தனை சந்தர்ப்பங்களில் நமக்கு தெரியாமல் திக்கற்ற நிலையில் வெள்ளையர்கள் இந்த பாடலை பாடி இருக்கிறார்களோ?  .  அதை தெய்வ பக்தி என்று நாம் எடுத்துக்கொண்டு  அந்த பாட்டை படிப்போமா?

இந்த பாட்டு எனக்கு ஞாபகம் வரக்காரணம், இது எனக்கு ஆங்கில பாடத்தில் ஒன்று.  இதை என்னை  11 ம் வகுப்பில் மனப்பாடம் செய்ய வைத்தவர்  எங்கள் ஆங்கில  வாத்தியார்  ஸ்ரீ   T N .சுந்தரம்.   லியோ'  ஸ்   ஆங்கில  நோட்ஸ் போடுவார்.  தமிழில் கோனார் நோட்ஸ்  மாதிரி அது. நல்ல டிமாண்ட். 

Lead, Kindly Light, amidst th'encircling gloom,
Lead Thou me on!
The night is dark, and I am far from home,
Lead Thou me on!
Keep Thou my feet; I do not ask to see
The distant scene; one step enough for me.

ஐயா  எனக்கு  வழிகாட்டுவீர், இருளில் ஒளிப்பாதை  காட்டுங்கள். எங்கும் இருள் அப்பி பயமாக இருக்கிறது.  என்னை வழிநடத்துங்கள்.  இவ்வளவு இருட்டாக இருக்கிறதே. நான் செல்லவேண்டிய  என் வீடு எங்கோ வெகு தூரத்தில் உள்ளதே.  எனக்கு கொஞ்சம் வழி காட்டுங்களேன்.   அடி யொற்றி  நடக்கிறேன். உங்கள் பாதத்தை காட்டுங்கள் அதை பின் பற்றி நடக்கிறேன். காரிருளில் ஒன்றுமே தெரியவில்லை.  வழி முழுக்க  எனக்கு வெளிச்சம் வேண்டவே வேண்டாம். அடுத்த காலடிக்கு வெளிச்சம் காட்டினாலே போதும் ஐயா.

I was not ever thus, nor prayed that Thou
Shouldst lead me on;
I loved to choose and see my path; but now
Lead Thou me on!
I loved the garish day, and, spite of fears,
Pride ruled my will. Remember not past years!

நான் இப்படி கெஞ்ச  சந்தர்ப்பம் ஏற்பட்டதில்லையே ஐயா. உங்களை  வழிகாட்ட  அழைத்ததும் இல்லையே  ஐயா.  ஆனால்  இப்போது நீங்கள் உதவேண்டும். உங்களால் தான் நான் கொஞ்சம் ஒளிபெற்று நடக்க முடியும். வழிகாட்டுங்கள்.  எனக்கு  பட்டப்பகல் பளிச்சென்று சூரிய ஒளி ரொம்ப பிடிக்கும்.  அப்போது  பயம் தலை காட்டவில்லை.   ஆனால்   இப்போது  நிலைமை வேறு ?  நடுங்குகிறேன்.  என் கர்வம்  ஆணவம்  என்னை வழிநடத்தியது அப்போது.  இப்போது அதை நினைக்கவே பிடிக்கவில்லை. மறக்க முயல்கிறேன்.
   

So long Thy power hath blest me, sure it still
Will lead me on.
O'er moor and fen, o'er crag and torrent, till
The night is gone,
And with the morn those angel faces smile,
Which I have loved long since, and lost awhile!

ஐயா, இந்த கணம் வரை  உன் சக்தியால் நான் மூச்சு விடுகிறேன். உங்கள் ஆசி என்னை வாழ வைக்கிறது. என்னை நீங்கள் கட்டாயம் வழி நடத்தி செல்வீர்கள் என்ற உணர்வு, நம்பிக்கை மனது பூரா இருக்கிறது.  வழி பூரா  மேடு பள்ளம்,  காடு  மேடு  முள், சூடு மணல்  சேறு சகதி,  எப்படியாவது இந்த கும்மிருட்டில் இருந்து பொழுது விடிந்து  தெய்வங்கள் இனித்த பளிச் முகத்துடன் புன்னகைத்து  என்னை வரவேற்கட்டும். விழி திறக்குமா  எனக்கு வழி கிடைக்குமா என்று பாடுகிறேன்.  அது நிச்சயம் என்பதால்  இந்த  தடுமாற்றம் அதிக நேரம் நீடிக்காது.....

Meantime, along the narrow rugged path,
Thyself hast trod,
Lead, Saviour, lead me home in childlike faith,
Home to my God.
To rest forever after earthly strife
In the calm light of everlasting life. 
 

ஐயா  உன் நிழல் மாதிரி உன் காலடியை ஒட்டி உன் பின்னாலே  குறுகிய  சந்து பொந்துகளில் எல்லாம் தொடர்ந்து வருகிறேன். வழி நடத்தி செல்லுங்கள்,  என் வீட்டை காட்டுங்கள், குழந்தைமாதிரி வழி தெரியாமல் நிற்கிறேன்  பகவானே, எனக்கு  வீடு பேறு  கிடைக்க வழி காட்டுங்கள். இந்த  துன்பத்தை தொடர்ந்து இனி அமைதியான  என்றும் ஒளிமயமான வாழ்வை தரவேண்டி தொழுகிறேன்.

வாழ்க்கை  ஒரு சம்சார சாகரம். இதில் கரை சேர, பல  பிறவிப்பிணிகள், துயர்கள் தீர,  ஜென்ம வினை தீர  பகவானை வணங்குகிறோம்.   மேலே  பாடலில் சொன்னதை  வாழ்க்கை துன்பமாக எடுத்துக் கொண்டு படித்தால் அர்த்தம் அற்புதமாக த்வனிக்கும்.   எத்தனையோ இடையூறுகள் வாழ்க்கையிலும் உண்டு. அதெல்லாம்  தாண்டி கரை சேர வேண்டும். அதற்கு பகவான் துணை இன்றி முடியாது.  அவன் வழித்துணைவன்.  வழி காட்டுபவன், அதனால் தான் ஹிந்துக்கள்  நாம்  அவனை  ''மார்க்கபந்து''  மார்க்க சகாயம், வழித்துணை  இறைவன்,  என்போம்.  

ஆதி சங்கரர் எழுதிய  ''மார்க்க பந்து ஸ்தோத்ரம்''  எழுதியிருந்தேனே  பிடிக்கவில்லையா,  படிக்கவில்லையா?. இன்னொரு தரம்  அதை  போஸ்ட் பண்ணட்டுமா?


sivan jaykay

unread,
Jul 22, 2020, 8:16:49 PM7/22/20
to amrith...@googlegroups.com
பேசும்  தெய்வம்     J K  SIVAN 

                                                                           ''ஸார்  விஜயம்''  

மஹா  பெரியவாளைப்  பொறுத்தவரை,  படித்தவர், பண்டிதர், பாமரர், பாட்டாளி, பெண்கள், குழந்தைகள், எல்லோரும்  சமம்.  எல்லோரும்  ஈஸ்வர ஸ்வரூபம் என்று நினைப்பவர்.  அவரிடம் வருவோரை  அவர்கள்  அறிமுகப் படுத்திக் கொள்ளும் முன்பே,  அக்கு வேறு ஆணி வேறாக  ஒரு பார்வையிலேயே   கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களைப் பற்றி சகலமும்   தெரிந்து கொள்ளும்  திரிகால ஞானி.   அவரை ஒரு சாதாரண பள்ளிக்கூட சிறுவன் சந்தித்த இந்த காட்சி பல பேர் பலவிதமாக எழுதி படித்திருக்கிறேன்.  

இது நடந்தது 1857-58 களில்  சென்னையில்,  ஆழ்வார்பேட்டை, மைலாப்பூர்  சந்திக்கும்  இடத்தில்  ராயப்பேட்டை  நெடுஞ்சாலையில் இருக்கும்  ஸமஸ்க்ரித கல்லூரி வளாகத்தில்  மஹா பெரியவா  சாதுர் மாஸ்ய விரதம், பூஜைகளில் ஈடுபட்டிருந்த போது /   

 இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து எல்லாம் பெரியவா  தரிசனத்துக்கு  பக்தர்கள் வந்தவண்ணம்  இருந்தனர். அப்போதெல்லாம்  தினமும்   சாயங்காலத்தில்  பெரியவா பிரசங்கம் செய்வதை கேட்பதற்கென்றே  கூட்டம் அலைமோதும்.  

 பிரதி தினமும்  பெரியவா வீதி வலம்  வருவார்.  பக்தர்கள் அவரை  தங்கள் இல்லங்களுக்கு  பூரண கும்பத்தோடு வரவழைத்து  பாத பூஜை செய்வதும் உண்டு.    வீடு தேடி வந்த பெரியவா  ஆஸிர்வாதம் பெற்ற  குடும்பங்கள் பாக்யம் செய்தவை.

அதே மாதிரி,  மைலாப்பூர், நுங்கம்பாக்கம்,   அடையார் என்று அவரை எங்கெல்லாமோ அழைப்பார்கள்.  

ஒரு நாள் நுங்கம்பாக்கத்தில் வீதி வலம் வந்துகொண்டிருந்தார்.   நுங்கம்பாக்கத்தில் இப்படி மஹா பெரியவா பல வீடுகளுக்கு சென்று  அவர்கள் அழைப்பை ஏற்று ஆசிர்வாதம் செய்வதை  ஒரு தெருவில்   யாரோ ஒரு குட்டி பயல்  பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறான்.  மேள  தாளங்களோடு யாரோ ஒரு தாத்தா, தன்னுடைய வீட்டு தெருவிற்கு வந்து சில வீடுகளில் நுழைவது அவனுக்கு வேடிக்கையாக இருந்ததால் கூட்டத்தை  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 

பெரியவா  சிலர் வீட்டுக்குள்  போவதையும்  அந்த வீட்டுக்காரர்கள்  சந்தோஷத்தோடு  சில  நிமிஷங்களில் அவரை  நமஸ்கரித்து வழி அனுப்புவதையும்  பார்த்தவனுக்கு  ஒரு ஆர்வம்.   ஏழெட்டு, மிஞ்சினால் அதிக பக்ஷம் பத்து  வயது தாண்டாத சிறுவன்  அவன்.    அவன் வீட்டில் பெரியவாளை  பூர்ண கும்பத்தோடு  வரவேற்று ஆசி   பெற  வசதி இல்லை. அது அவனுக்கு தெரியுமா?    தெருவில்  சில வீடுகளில்  நடப்பதை   உன்னிப்பாக  கவனித்தான்.  வறுமை  ,தெரியாத வயசு. வசதிகள் இல்லை என்று அறியாத பருவம்.   அவன்  ஒரு கிழிந்த காக்கி  நிஜார் மட்டும் போட்டுக்  கொண்டு   ஒரு உயரமான  வீட்டு திண்ணையில் ஏறி கூட்டத்தில் இப்படி நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டி ருந்தான். 

மஹா பெரியவா  உருவம், உடை,  அவருக்கு எல்லோரும்  செய்யும்  மரியாதை.  அவர்  புன்னகையோடு  அவற்றை பெறுவது, அவர்களை ஆசிர்வதிப்பது   அவரை நோக்கி எல்லோரும்   ஜெய ஜெய சங்கர  ஹர ஹரசங்கர என்று கோஷிப்பது  எல்லாமே  அந்த குழந்தையின் மனதில்  அவரிடம்  ஒரு ஈர்ப்பை உண்டாக்கி 
விட்டது.

அவனைப் பொறுத்தவரை  ஒரு    எண்ணம் ஸ்ட்ராங்காக  பதிந்துவிட்டது.  இவரை கூப்பிட்டால் எல்லோர் வீட்டுக்கும் வருவார் போல் இருக்கிறது.  அவனுக்கு அவர்  தன்னுடைய வீட்டுக்குள்ளும் வரவேண்டும் , தானும்  அவரை  தன்னுடைய வீட்டுக்கு  அழைக்கவேண்டும் என்று தோன்றிவிட்டது.   அவ்வளவு தான்.  இளங்கன்று பயமறியாது அல்லவா.

அவர்  ஜகத்குரு, காஞ்சி காமகோடி மடாதிபதி, ஞானி என்றெல்லாம் ஒன்றும்  அவனுக்குத்  தெரியாது.  அவரை  பூர்ணகும்பத்தோடு வேதகோஷத்தோடு  எப்படி முறைப்படி  அழைக்கவேண்டும் என்றும்  தெரியாது. 
அவனுக்கு  தெரிந்த முறையில், மற்ற பெரியவர்களை எப்படி அழைக்கும் வழக்கமோ  அப்படியே  மஹா பெரியவாளையும் அழைப்பது என்று தீர்மானித்து விட்டான். 

அவன்   நான்காம்  வகுப்பு மாணவன்,  மைலாப்பூரில் தான் படிக்கும்  பள்ளிக்கூடத்தில்  உபாத்யாயரை எப்படி அ ழைப்பான்?  '' ஸார்   ஸார்''    என்று தானே. 

பெரியவா  அருகில் வீட்டில்  நுழைந்து ஆசிர்வதித்துவிட்டு வெளியே  வரும்போது  ஒரே பாய்ச்சலாக சென்று அவர்   இருக்குமிடம்  அருகே  சென்றுவிட்டான்.   மகா பெரியவாளை சூழ்ந்து கொண்டு  மடத்து  சிப்பந்திகள், உள்ளூர் பெரியவர்கள், பக்தர்கள்  சிலர்  இருந்தார்கள்.   அவன் உரத்த குரலில் அழைத்தான்:  

 “ஸார், எங்காத்துக்கும்  வாங்கோ !  இங்கே தான்  கடைசி வீடு சந்து முடிவிலே...   ஸார்,   நீங்க  எங்காத்துக்கும் வரணும்.    உள்ளே அம்மா இருக்கா.  வாங்கோ!  ஸார்   ..”

அவனை முதலில் யாரும் லக்ஷியம் செய்யவில்லை.    அவன் விடாக்கண்டன். உரக்க   நிமிஷத்துக்கொருதரம்  மேலே சொன்னதையே  திருப்பி  சொல்லிக்கொண்டிருந்தான்.    பெரியவா தனது வீட்டுக்கு வரவேண்டும்  என்ற  ஒரே பிடிவாத  ஆசை.    பையன் முண்டியடித்துக்கொண்டு அவர் முன்னே செல்ல முயற்சித்தான். 

“டேய்!  போடா அந்தண்ட ஓடு  இங்கே நிற்காதே .” என்று விரட்டினார்கள்.  சிலர் அவனைப்  பிடித்து தள்ளினார்கள்.   அவன்  விடாப்பிடியாக  வெறிவந்தவன் போல் உரக்க கத்தினான்.  யாரோ பிடித்து தள்ளியதில் பெரியவா இருக்கும் பக்கம்  நெருங்கி விட்டான். 

“ஸார்…ஸார்…..எங்காத்துக்கும் நீங்க  வரணும் ஸார் .....

 மஹா பெரியவாளை அழைத்துக்கொண்டு அடுத்த எங்கோ ஒரு வீட்டுக்கு  பக்தர்கள் கூட்டம் சென்று   கொண்டிருந்தது.   பையன் கத்திக்கொண்டே அவர் தன்னுடைய வீட்டை தாண்டி போய்விடப்போகிறாரே என்ற  ஆதங்கத்தில் மீண்டும் உரக்க கத்தினான். 

 பெரியவாளை அவன் “ஸார்….ஸார்” போயிடாதீங்கோ ஸார் . இதோ   இங்கே தான் எங்க வீடு.  உள்ளே   வாங்கோ ஸார்'.  

அவன் குரல்  கேட்பவர்களுக்கு வேண்டுமானால்  வேடிக்கையாக இருக்கலாம். சிலருக்கு மரியாதைக் குறைவாக, துஷ்டப்பையன் என்ற கோபமாகவும்  இருந்திருக்கலாம். . 

ஆச்சு! இதோ….அவனுடைய வீடு இருக்கும் தெரு  முனை வந்துவிட்டது.!   அவன் வீட்டை தாண்டினால் ஒரு குறுகலான   சந்து வலப்புறம் திரும்பும்.  ஒருவேளை இந்த ஸார்  அந்த பக்கம் போய்விட்டாள் மறுபடியும் இங்கே வரமாட்டார்.  நிச்சயம்  அவரை விடக்கூடாது  என்று தீர்மானித்தான். 

அந்த அவஸ்தை,  பரிதவிப்பு அவனுக்கு.  இந்த  பத்து வருஷங்களில் அவன் வாழ்க்கையில் இப்படி ஒருவர் அவன் வீட்டுப்பக்கம் வந்ததே இல்லை. அவரை விடக்கூடாது என்ற துடிப்பு  அவனிடம். 

 “ஸார்…….ஸார்….அந்தப் பக்கம்  இல்லே சார்.  இங்கே தான் கடைசி வீடு  இதோ பாருங்கோ.. ஸார். ….இந்த பக்கமா வாங்கோ……எங்காத்துக்கும் வந்துட்டு போங்கோ…ஸார்”  பெரியவாவின் காதில் இந்த சத்தம் விழுந்துவிட்டது.  அவர் பார்வை பையன் மேல் பட்டது.  அவன் சொல்வது கேட்டது. புரிந்தது.  கூட்டத்தை விலக்கினார் . அவனைப்  பார்த்தார்.  இப்போது அவன் அவர் அருகில். 

''என்னடா குழந்தை  உனக்கு வேணும்?''
''இதோ தெருமுனையில் எங்க ஆம்  இருக்கு ஸார் . நீங்க கட்டாயம் எங்க வீட்டுக்குள்ளேயும் வரணும் ஸார்''  

 கண்ணீரோடு கெஞ்சினான்.   தெய்வம் புன்முறுவலித்தது.  அதை இப்படி  யாரும் ஸ்தோத்ரம் பண்ணியதே இல்லையே .  அருகிலே இருந்த  அணுக்க தொண்டர்  கண்ணனிடம் சொன்னார்: 

“கண்ணா…..நான்  ''ஸார்''   ஆம்  டா  இவனுக்கு.    சரி   இவன் வீடு எங்க இருக்குன்னு பார்  கேளு. அங்கே போ.   இதை கேட்ட  பையனுக்கு படு குஷி.  எல்லோருக்கும் முன்னால்  ஓடினான். 

“இதோ! இந்தப் பக்கந்தான்!…இப்டி வாங்கோ…ஸார்…”

 முன்னால் வழி காட்டிக் கொண்டு, ஓடினான். அந்த குழந்தையின் வீடு  அந்த  தெரு முனையில் தான் இருந்தது. ஒரு சிறிய  ஒட்டு வீடு. 

வீடு வந்ததும், “விர்”ரென்று உள்ளே ஓடினான்…..>

 “அம்மா!…யார் வந்திருக்கா பாரு! ஸார் வந்திருக்கார்..மா!…”

 பாண்டுரங்கன் கதையில்  பக்தன்  புண்டலீகனுக்காக  விட்டலன்  அவன் வீட்டு வாசலில் அவன் வெளியே எறிந்த  “செங்கல் “லை  ஆசனமாகக் கொண்டு இரு கைகளையும் இடுப்பு மேல் வைத்துக்கொண்டு  புண்டலீ கன்  வெளியே வர காத்துக்கொண்டிருந்தது  போல்  மஹா பெரியவா  அந்த பையன் வீட்டு  வாசலில் நின்றார். 

 பெரியவா அந்த குட்டி சந்துக்குள் நுழைந்ததைப் பார்த்ததும்,   அண்டை அசல் வீடுகளில் இருந்தவர்கள் எல்லோரும் ஓடிவந்து அந்த பையன் வீட்டு வாசலில் நின்ற மகா பெரியவா  காலடியில் விழுந்து வணங்க,  பையனின் அம்மாவும் வெளியே ஓடி வந்தாள்! பூர்ணகும்பம் குடுத்து அழைக்கக் கூட வஸதியில்லாததால்   இரு கை  கூப்பி  வணங்கி நின்றாள்.  கண்களில் தாரை   தாரையாக  கண்ணீர். அந்த ஏழைக் குழந்தையின் அன்புக்  கட்டளையை ஏற்று  ஆஹா  இந்த   பேசும் தெய்வம்  வந்து நிற்கிறதே. .  

‘ஸார் நிற்கிறார்! காஷாயமும், தண்டமும், பாதக் குறடும், பக்தர் குழாமுமாக!  பையன்  ஆனந்தத்தில் பெருமையோடு  அம்மாவைப்  பார்த்தான்.  அவன் வீட்டுக்கும்  எல்லோர் வீடு போல் ஸார்  வந்துவிட்டார். அது ஒன்று தான் அவனுக்கு  திருப்தி.

அந்த   ஏழைத் தாய்  எதிர்பாராத  இந்த  அபூர்வ தரிசனத்தில் தன்னை இழந்து நடுங்கி நின்றாள்.  இப்படியொரு பாக்யம்  தனக்கு கிடைத்ததை அவளால் நம்பமுடியவில்லை.    எவ்வளவு எளிமையான  உத்தமர்.  

அவளுக்கும்   குழந்தைக்கும்  பிரசாதம் தந்து விட்டு  தெய்வம் நகர்ந்தது. ஊர்வலம்  தொடர்ந்தது.


sivan jaykay

unread,
Jul 23, 2020, 9:59:49 PM7/23/20
to amrith...@googlegroups.com
டாக்டர்  ரங்காச்சாரி     J K   SIVAN   
                                                                            
                                                        வைத்யநாத சுவாமி...
                                 
பலரால் தெய்வமாக கொண்டாடப்படும்  டாக்டர்கள் அபூர்வமானவர்கள்.   சமீபத்தில்   மறைந்த     ஆரம்பத்தில் ரெண்டு ரூபா , பின்னர் பல வருஷங்களுக்கு பின்   விலைவாசி உயர்வினால்,  இருபது   ரூபா மட்டு மே  வாங்கிக்கொண்டு உதவிய   கோயம்பத்தூர் டாக்டர் பால சுப்ரமணியத்தை
நாடே புகழ்ந்தது. தன்னலம் கருதாது மக்கள் சேவையையே கடமையாகக் கருதி பணிபுரிந்த பல மகத்தான மருத்துவர்கள் சென்னையில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.

மறக்கமுடியாத பொன்னேட்டில் பொறித்த சில  அமர டாக்டர்கள் பெயர் மட்டும் சொல்கிறேன். எழுத  அவகாசமில்லை.  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, , டாக்டர்  சருக்கை  ரங்காச்சாரி, டாக்டர் குருசாமி முதலியார், ,  டாக்டர் லட்சுமணஸ்வாமி முதலியார், டாக்டர் கே.எஸ்.சஞ்சீவி,  டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், டாக்டர் என். ரங்கபாஷ்யம், டாக்டர் ஏ.எஸ்.தம்பையா,   சென்னையில் சேவையாற்றிய  இந்த  மருத்துவர்களின் பட்டியல் நீள்கிறது.  நீண்டுகொண்டே போகவேண்டும்..  இவர்களில் சிலர்  சிலையாக,  தெருக்கள் பெயராக  இன்றும்  நமது மனதில் இடம்பெற காரணம்,  தன்னலமற்ற சேவை,  விலை பேசாத சேவை.

நான்  மேலே குறிப்பிட்ட  டாக்டர்கள்  தொழில்நுட்பங்கள்  விஞ்ஞான, கணினி சேவை வளராத காலம்.  மெடிக்கல் இன்சூரன்ஸ்  இல்லாத காலம். அநேகர்  அடித்தட்டு, நடுத்தர மக்களே. ஆகவே  இது போன்ற   ஏழை, எளிய மக்களுக்கு  இந்த டாக்டர்கள் செய்த  சேவை  அவர்களை நினைவில் பீடமிட்டு அமர்த்தியிருக்கிறது. 
தியாகிகள் என்று சொன்னால் தப்பே இல்லை . 

சென்னையில் மருத்துவ வளர்ச்சியை தொடங்கி  வைத்தவர் டாக்டர் முத்துலட்சுமி  ரெட்டி. நாட்டின் முதல் பெண்  டாக்டர். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கியவர். ஆதரவற்ற பெண்களுக்கான அவ்வை இல்லத்தை நிறுவியவர். சமூக சேவகி.   பெண்கள்  கல்வி பெறாத காலத்தில்  கற்று வளர்ந்தவர்.

அடுத்து எனது  கந்த கட்டுரை கதாநாயகன்  கும்பகோணத்தில்  பாபநாசம் அருகே சருக்கை  கிராமத்தில்  1882-ம் ஆண்டு பிறந்த    வைணவர் டாக்டர் சருக்கை  ரங்காச்சாரி.    அப்பா  கிருஷ்ணமாச்சாரி நேப்பியர் பாலம்,  சென்ட்ரல்  எதிரே உள்ள  அரசு பொது மருத்துவ  மனை கட்டியவர். அப்பா  கட்டிய  மருத்துவ மனை வாசலில் கையை பின்னால்  கட்டிய  டாக்டர் ரங்காச்சாரி சிலையாக நிற்கிறார்.  அந்த சிலையில் காக்கை எச்சத்தை கழுவ கூட  யாருக்கும் நேரமோ, அக்கறையோ இல்லை. 

டாக்டர் ரங்காச்சாரி 1917ல் எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் டெபுடி சுப்பரின்டென்டென்ட்.  வெள்ளையன் நிர்வாக செயல்பாடுகள் பிடிக்காததால் 1922ல்  அரசசுப்பணியிலிருந்து விலகி பூந்தமல்லி நெடுஞ்சாலையில்   கென்சிங்டன்  நர்ஸிங்ஹோம்  எனும்  மருத்துவமனையை   ஆரம்பித்தார்.  மருத்துவ சிகிச்சை வாய்க்காத எளிய மக்களைத் தேடிச்சென்று சிகிச்சையளித்தார்.  1939-ம் ஆண்டு  அவர் மறைவுக்கு பிறகு  சென்னை அரசு பொதுமருத்துவமனை வாசலில் இவருக்கு சிலை அமைத்தார்கள்.  இவரது சேவைக்கு அளிக்கப்பட்ட கௌரவம் அது.  

டாக்டர் சருக்கை ரங்காச்சாரி  சிறந்த அறுவை மருத்துவர், சர்ஜன்,  பிரபல  மகப்பேறு மருத்துவர். என் அம்மா  இவர் சாகசங்களை கதை கதையாக சொல்வாள்.  ஒருமுறை ஒரு பெண்ணுக்கு  பிரசவ வலி எடுத்துவிட்டது. அவளால் சிசுவை வெளியே தள்ள  சக்தி இல்லை. குழந்தை அவசரம் வெளியே  வந்தாகவேண்டும்.  அறுவைக்கு  அவள்  தகுதி பெறவில்லை.  டாக்டர் ரங்காச்சாரி என்ன செய்தார் தெரியுமா,  ஒரு  பூதம் மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு திடீர் என்று அவள் முன் வந்து குதித்தார். பயத்தில் கத்திய அந்த பெண் முக்கி குழந்தையை வெளியே தள்ளினாள், அடுத்து ஆகவேண்டிய  காரியங்களை டாக்டர் வேஷம்  கலைத்து  விட்டு  கவனித்தார். இரு உயிர்களும் க்ஷேமமாக வாழ்ந்தன. 

டாக்டர் ரங்காச்சாரிக்கு  பறக்கும் டாக்டர் என்று பெயர்.அந்தக் காலத்தில் ரோல்ஸ்ராய்ஸ் ROLLSROYCE PHANTOM   கார்  வைத்திருந்தவர்.   சொந்தமாக ஒரு பிளேன்  PUSS MOTH  AIRPLANE வைத்திருந்து பறந்து பல ஊர்களுக்கு சென்று சேவை புரிந்தவர்.  அவசரத்துக்கு  மருந்து பெட்டியை பின்னால்  வைத்து கட்டிக்கொண்டு சைக்கிள்   மிதித்து  சென்றும்  கூட  நோயாளிகளை கவனித்திருக்கிறார்.  

எத்தனையோ  ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவை செய்தவர்.   ஒரு  மீன் விற்கும்  பெண்ணுக்கு  பிள்ளைப்பேறு இலவசமாக பார்த்து  குழந்தையின் பராமரிப்புக்கு  நூறு ரூபாய்  தனது சொந்தப்பணம் (இப்போது லக்ஷத்துக்கு சமம்) கொடுத்த டாக்டர். போதுமா?  சில  நோயாளிகளுக்கு தினமும்  சிகிச்சைக்கு வர  தினமும் வந்தால் ஒரு வெள்ளி  ரூபாய் கொடுப்பர். அதற்காகவே தவறாமல் வந்து மருந்து இலவசமாக பெற்று செல்வார்கள், நோயும் குணமாகும்.   விடிகாலை  4 மணி முதல்  11மணி வரை  நோயாளிகளை  கவனிப்பார்.  பிறகு  நோயாளிகள் வீடுகளுக்கு செல்வார்.   பசித்தால் காரிலேயே உண்பார். சேவை தொடரும். 

ஒரு நாள்  நள்ளிரவு  காரில் எங்கோ  போய் கொண்டிருக்கிறார் டாக்டர்.  ஒரு குடிசையின் வாசலில் கூட்டம். அங்குமிங்கும்  அலைந்துகொண்டிருக்கிறார்கள். என்ன என்று ட்ரைவரை விசாரிக்க சொல்கிறார்.  ட்ரைவர் மூலம் காரில் இருப்பது பிரசவ டாக்டர்  ரங்காச்சாரி என்று தெரிந்து அந்த தெலுங்கு காரர்கள் ஓடிவருகிறார்கள். அந்த வீட்டில் ஒரு பெண் நிராதரவாக  பிரசவ வேதனையில் ரத்தப்போக்கோடு தவிக்கிறாள்.  உள்ளே நுழைந்த டாக்டர் அந்த பெண் ஒருத்தியின்  உதவியோடு  வெந்நீர் கொதிக்க வைக்க சொல்லி தன்னுடைய கருவிகளை காரிலிருந்து கொண்டுவந்து அவற்றையும்  அந்த அறையையும் முதலில் சுத்தப்படுத்த சொல்கிறார். அது தான் ஆபரேஷன் தியேட்டர்.  நிபுணனான  டாக்டர்  சிறிய  சில அறுவை மூலம் அந்த பெண் ஒரு நல்ல  ஆண்குழந்தையை பெற உதவுகிறார்.  அந்த வீட்டிற்கு தேவையான சாமான்களுக்கு தன்னிடமிருந்து கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு இலவச பிரசவம் பார்த்துவிட்டு செல்கிறார்.   சில நாள் கழித்து  அந்த பெண், அவள் கணவன் தந்தையுடன்  ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழங்களுடன்  நாலு  ஒரு அணா  நாணயத்தோடு  அவரை  பூந்தமல்லி ஆஸ்பத்திரியில் வந்து பார்க்கிறாள்.   அவளையும்  குழந்தையும் பார்த்து மேற்கொண்டு அவர்களுக்கு மருந்து அளித்து  விட்டு அவள் நீட்டிய  தட்டை பார்க்கிறார்.  நாலு அணா  காசு, பழங்கள் எல்லாம் சரி, அவள் கழுத்தில்  பிரசவத்தின்  போது  பார்த்த  சிறிய தங்க சங்கிலி எங்கே??  எங்கே அது என்று கேட்கிறார்.  டாக்டருக்கு   சீர் கொண்டுவருவதற்காக அதை அடமானம் வைத்திருக்கிறான் கணவன்.   உண்மை தெரிந்ததும்  அந்த காசோடு  மேலும்  ஒரு  ரூபாயை வைத்து  முதலில் அந்த நகையை மீது அவளுக்கு கொடு என்று அறிவுரை கொடுக்கிறார் டாக்டர் ரங்காச்சாரி. 
அவருக்கு   சிலை வைப்பதில் என தவறு? 

 பெர்ஹாம்பூரில்,  ஒரு பெண் பூரண கர்ப்பிணி,  அடிவயிற்றில் ஏதோ புண். அதன் வழியாக வெளியே  ஒரு சிறுவிரல் சிசுவுடையது சற்று நீட்டிக்கொண்டிருக்கிறது. டாக்டர் உதவியாளரை அழைத்து என்னவென்று கவனி என்கிறார்.   சிசுவின் விரலை உள்ளே தள்ளி  தையல் போடவேண்டும்.  ஆபரேஷன் பண்ணி சிசுவை வெளியே எடுக்க  இன்னும்  நேரம் கூடவில்லை. சில நாட்களாகும் .  டாக்டருக்கு  வாசலில் சுருட்டு புகைத்துக் கொண்டிருந்த கணவன் மேல்  பார்வை  விழுகிறது.  சட்டென்று  வெளியே போய் அவன் சுருட்டை வாங்கி உள்ளே சென்று  ஒரு கணம்  அந்த சிறிய விரலை சட்டென்று தொட  அது விரலை உள்ளே இழுத்துக் கொண்டது.  வயிற்று  புண் ஆறுவதற்கு மருத்துவம் செயது,  வயிறு கிழிந்த இடத்தை மூடி தையல் போட்டுவிட்டு,  சில நாட்களில்  சுகப்பிரசவமாக அந்த குழந்தையை வெளியே எடுத்து தருகிறார். 
அவருக்கு மக்கள் பணத்தில் சிலை வைத்ததில் என்ன தவறு?   டாக்டர்   பட்டம் கேட்டோ வாங்கியோ  போட்டுக்கொண்டு சிலையாக  தெருவுக்கு  தெரு  நிற்பவரா  அவர்.   இப்படி ஒரு டாக்டர் சிலை இருப்பது  நமக்கு  பெருமையும்  கௌரவமும்  தருகிறது. வெள்ளைக்கார அரசாங்கம் திவான் பகதூர் பட்டம் கொடுத்து கௌரவித்தது. 


sivan jaykay

unread,
Jul 23, 2020, 10:00:19 PM7/23/20
to amrith...@googlegroups.com
சங்கீத ஜாம்பவான்கள்.    J K  SIVAN 

                                                                      புல்லாங்குழல்  சரப சாஸ்திரி

நான்  சின்ன வயதிலே  கேள்விப்பட்ட  ஒரு புல்லாங்குழல் மஹா வித்வான்  பெயர்  சரப சாஸ்திரிகள்.  என் தந்தை சொல்லி `தான்  இந்த பெயர்  எனக்கு  அறிமுகமானது.  புல்லாங்குழல் என்றால் கிருஷ்ணன், அவனுக்கு அடுத்தபடி  சரப சாஸ்திரிகள் என்று சொல்லலாம்.  அவரை  எத்தனை பேருக்கு தெரியும்??? 

அவர் வாழ்ந்த காலம்  1872-1904.  அதென்னவோ  40 தாண்டாமல்  வாழ்ந்தவர்கள் உலக ப்ரஸித்தியாகி உள்ளார்கள்.  ஆதி சங்கரர்,  விவேகானந்தர், கணித மேதை ராமானுஜம்., அலெக்சாண்டர், சரப சாஸ்திரி..... போதுமா  உதாரணம்.

முப்பது வருஷங்களுக்குள்  அமரத்துவம்  என்பது  அதிசயிக்கத்தக்கது.  நமது துர்பாக்கியம்  சரப சாஸ்திரி  வாசித்ததை கேட்க  ஒரு  உபகரணமும்   இல்லை.  எப்படி இருந்தார்  என்று அறிய  ஒரு  போட்டோவும்  கிடைக்கவில்லை.  

நேரில் கேட்டு ஆனந்தித்த  நமது முன்னோர்கள் பாக்கியவான்கள்.  சரப சாஸ்திரி காலத்துக்கு முன்பு  புல்லாங்குழல் ஒரு பக்க வாத்யமாகதான் இருந்தது.   ஒரு சின்ன  மூங்கில் குழாயை சபையில் நடுநாயக முக்யத்வம்  பெற வைத்தவர்  சரபஸாஸ்த்ரி. எங்கள் அஷ்டஸஹஸ்ரம் வகுப்பினர். கும்பகோணத்துக்காரர்.   இளம் வயதிலேயே கண்பார்வை இழந்தவர்.  தோட்டத்து மூங்கில் ஒன்றை வெட்டி, துளை போட்டு  அவருக்கு கொடுத்த அவர் அப்பா  சங்கீத உலகுக்கு மகத்தான  சொத்தை வழங்கி விட்டு  போயிருக்கிறார். 
 புல்லாங்குழல்  துளைகளில்   தானே  விரல் களை  பலவகையில்  அழுத்தம் கொடுத்து, மூடி திறந்து  சப்தத்தை  பல கோணங்களில் வெளிப்படுத்திக்  கற்றுக்  கொள்ள ஆரம்பித்த சாஸ்திரிகளுக்கு  ஆரம்பத்தில்  குரு யாரும் இல்லை.  விடா  முயற்சியால்   கீர்த்தனைகளை எல்லாம்   வாசிக்க ஆரம்பித்துவிட்டார்.  மடமடவென்று  கச்சேரிகளில்   வாசிக்க கூப்பிட்டார்கள்.   சமஸ்க்ரிதமும்  நன்றாக கற்றுக்கொண்டார். நல்ல குரல் வளம். பாடவும் முடிந்தது, சமஸ்க்ரிதத்தில் கீர்த்தனைகள் சாஹித்யம் செய்திருக்கிறார். தவிர  தமிழ், தெலுங்கு, மராட்டி  மொழிகள் வேறு நன்றாக தெரியும்.  வயலின் மிருதங்கம் கச்சேரிகளில் வாசித்திருக்கிறார்.  இன்னும் என்ன பாக்கி இருக்கிறது?    ஸ்வர  ஜாதி  கால  தாள  பேத  பிரமாண   இலக்கண  சுத்தமாக சங்கீத ஞானம்.  சங்கீதம் கற்றுக்கொண்டது தஞ்சாவூர்  மானாம்பு  சாவடி வேங்கட சுப்பையரிடம். 

 புல்லாங்குழலில் துளைகளில் விரல்கள் அழுத்தம், பிடிகள் , விரல் நுனிகள் நடனம்   எல்லாம்  அபாரம். வேணுகானம் சரப சாஸ்திரி என்ற பட்டம் எளிதில் பெற்றார். 

மனுஷன்   கச்சேரிகளில்  நகுமோமு  என்று  புல்லாங்குழலில் ஆபேரியை உதிர்க்கும்போது,  குருவிகள் ஆகாயத்தில் சின்ன ரெக்கை அடித்து பறப்பது போல் ஒரு பிரமை ஏற்படுமாம். சுகமான  ராகம் காற்றில் மிதந்து வரும்போது  ப்ரம்மாவின்  அம்சம் பறப்பதுபோல் இருக்குமாம்.   அவர் காலத்தில் அருமையான  ஜாம்பவான்களின் பக்க வாத்யம் அமைந்து  ஈஸ்வர சங்கல்பம்.   இவரது   தோடி  ராகத்தை கேட்ட  வித்துவான் 
திருமருகல் நடேசன்   “ ஹா ஹா   இதல்லவோ  தோடி, நான் வாசிப்பது இதில் ஒரு கோடி” என்றாராம். 

சரப சாஸ்திரிகள் காலத்தில்  இருந்த   பிற சங்கீத வித்வான்களில் சிலர் பெயர்களை  சொல்கிறேன். அசந்து போவீர்கள்.  பழனி  கிருஷ்ணய்யர்,   கடம், ,   கஞ்சிரா மாமுண்டியா பிள்ளை,  மிருதங்கம்  தக்ஷிணாமூர்த்தி பிள்ளை,  சங்கீத வித்துவான்   பட்டணம் சுப்ரமணிய ஐயர்.   வயலின் அப்போது பிடில்  என்று தான் சொல்வது வழக்கம்.  பிடில்  திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர்.  திருமருகல் நடேச பிள்ளை நாயனம்,  நடேச பிள்ளை தவில், எட்டயபுரம் ராமச்சந்திர பாகவதர்.  எல்லோரும்  போற்றிய மகத்தான வித்துவான்  வேணுகானம் சரப சாஸ்திரிகள்.  தாள கட்டு  ஞானம் அபாரம்.  கல்பனா ஸ்வரங்கள்  அப்படியே  மத்தாப்பூ வாக  பளிச் பளிச்சென்று  வெளிப்படும்.   ப்ளூட் வாசிக்கும்போது  தாளம்  போடுவது கஷ்டம்.  இரு கைகளும் குழலில் இருப்பதால்  தாளம் போடுவது காலால் தான்.   புது புது  கற்பனையில்  உதித்து  தங்கு தடையின்றி  தவறு ஒன்றுமில்லாமல் வந்தது அதிசயம்.   க்ரிதிகளின்  பாவத்தை (BHAVA )உணர்ந்து அதற்கு தேவையான காலப்ரமாணங்களை அளவோடு தந்து வாசிப்பார்.  குறித்த நேரத்தில்  கச்சேரிக்கு வருவார். ஒப்புக்கொண்ட  பணத்துக்கு மேல் ஒரு ரூபாய் கொடுத்தாலும் வாங்க மாட்டார். கச்சேரிகளுக்கு என்று   தனியாக  சாதகம் ரிஹர்சல்  எதுவுமே கிடையாது. 

 காலக்ஷேபங்களுக்கு என்று  63 நாயன்மார்கள் மேல் கீர்த்தனைகள் எழுதி தந்திருக்கிறார்  மராத்தியில் இவர் கீர்த்தனைகள் உண்டு. 500க்கு மேல்  மனுஷன்  கண் இல்லாமலேயே  இயற்றியிருக்கிறார். 
சரப சாஸ்திரிகளை க்ரிஷ்ணாவதாரம் என்பார்கள்.  

இன்னொரு விசேஷ  சேதி:   சரப சாஸ்திரிகள் வாசிக்கும் கச்சேரிகளில்  அடிக்கடி  சர்ப்பம், நாகம் வரும்.  காவேரி நதிக்கரையில்  நாகங்கள் ஜாஸ்தி.  

ஒரு கல்யாணம்  தடபுடலாக  ஒரு  தனவந்தர் மகளுக்கு நடந்தது.  ஆறு ஏழு நாள் கல்யாணம் தினம் யாரேனும் ஒரு பிரபலம் கச்சேரி,. சரப சாஸ்திரி ஒருநாள் வந்தார்.  அவர் வருகிறார் என்று  கேள்விப்பட்டு என்றுமில்லாமல் அதிக கும்பல். அருகில் இருந்த ஊர்களில் இருந்தெல்லாம் ரெட்டை மாட்டு வண்டி, ஒற்றை மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில்  என்று நிறைய  ரசிகர்கள் கூடி விட்டனர் . விடிய விடிய  வாசிப்பாரே .  

இவருக்கென்ன இவ்வளவு கூட்டம் என்று கல்யாணப்பெண் கேலி செய்தாள்.  அவர் உருவம், சிறிய மூங்கில் குழாய் வாத்யம், இதற்கா இத்தனை பீத்தல் என்று அவர் காது கேட்கவே சொல்லிவிட்டாள் . அவர்  ஒன்றுமே  கோபிக்கவில்லை. கச்சேரி ஆரம்பித்தது. ராகங்கள் பிரவாகமாக ஓடின.   காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது.  எங்கிருந்தோ ஒரு நீண்ட சர்ப்ப நாகமும்  மேடைக்கு வந்துவிட்டது. அவர் எதிரே  படமெடுத்து ஆடியது. அவருக்கு கண் தெரியாதே. அருகில் இருந்தவர்கள் சொன்னார்கள்.   அடுத்த பாடல்  புன்னாக வராளி பாடி அதை ஆட வைத்தார்.   பாட்டு  முடிந்ததும் அது தலை குனிந்து அவரை வாழ்த்தி விட்டு  அங்கிருந்து மறைந்தது.   கல்யாண பெண் தனவந்தர் எல்லோரும்  சரப சாஸ்திரிகள் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டார்கள்.

சரப சாஸ்திரிகள் சிஷ்யர்கள்.   வேணுகான சிரோமணி பல்லடம் சஞ்சீவ ராவ்.   அஷ்டபுத்ர வெங்கட்ராம சாஸ்திரி.

ஒரு கச்சேரி.  அதில் திருக்கோடிக்காவல்  கிருஷ்ணய்யர் வயலின், மாமுண்டியா பிள்ளை கஞ்சிரா, அழகநம்பி  மிருதங்கம்,  பல்லவி  ஆலாபனையில்  சாஸ்திரிகளும்   கிருஷ்ணய்யரும்  வெகு நேரம்  ரசிகர்களை மயங்கினர்.  மாமுண்டியாபிள்ளை  இதை பார்த்துவிட்டு   சாஸ்திரிகள்  உங்களைப்போல்  தாள ஞானம் கொண்டவர் எவரையும் நான் பார்த்ததில்லை'' என்றார்.


சரப சாஸ்திரி தனது 32ஆவது வயதில் காலமானபோது  தான் உபயோகித்த  புல்லாங்குழலை சிஷ்யன்  பல்லடம் சஞ்சீவ ராவிடம் கொடுத்தார்.   இன்னொரு விஷயம்.  சாஸ்திரி உபயோகித்த ஒரு  புல்லாங்குழல்  ஸ்ரீ ராம பஜனை ஸபா என்ற  அவர் வசித்த ஒரு வீட்டில் 110 சோலையப்பன் தெரு, கும்பகோணத்தில், 100 வருஷங்களுக்கு மேலாக இன்னும் வைத்து பூஜித்து வருகிறார்களாம்.


sivan jaykay

unread,
Jul 23, 2020, 10:00:19 PM7/23/20
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி  20                J K   SIVAN  
தாகூர் 

                                          20     மணமும்  மனமும்
                                             
20. On the day when the lotus bloomed,
alas my mind was straying, and I knew it not.
My basket was empty and the flower remained unheeded.
Only now and again a sadness fell upon me, and
I started up from my dream and felt
a sweet trace of a strange fragrance in the south wind.
That vague sweetness made my heart ache with longing  
and it seemed to me that is was the eager breath of
the summer seeking for its completion.
I knew not then that it was so near, that it was mine, and
that this perfect sweetness had blossomed in the depth of my own heart.

 கவிஞனின் எண்ணங்கள் அவனிடம் இருப்பதில்லை.  சுததிரமானவை அவை.   எங்கோ வானில், விண்ணில்  திசை  நோக்காமல்  எங்கோ  பறந்துகொண்டிருக்கும்.  அன்று காலை என் கண்ணைப் பறித்தது  என் வீட்டின் அருகே உள்ள ஒரு குளத்தில்  பூத்திருந்த புத்தம்  புது  தாமரை.

மொட்டவிழ்ந்த  சில நிமிஷங்களுக்கு முன்பு பிறந்த  புது தாமரை மலர்.  சூரியனைத் தேடும் அதன் அழகில் என் மனம் எங்கோ பறந்து திரிந்து கொண்டிருந்ததை அறியேன்.

சிலையாக தோட்டத்தில்  நின்ற என் கையில் காலி பூக்குடலை.  சுற்றிலும் எங்கும் வண்ணவண்ணமாக மயக்கும்   சிரிக்கும் மலர்கள்   '' ஏனடா ரவீந்திரா , ''என்னை ஏன் பார்க்கவில்லை  பறிக்கவில்லை''  என்று கூப்பிட்டதும்,  கேட்டதும், என் காதில் விழுந்தால்  தானே!   நான்  கனவு காண்பவன்,  எப்போதும்  ஏதோ ஒரு கனவுலகில்  சஞ்சரிப்பவன்.  விட்டு விட்டு  சிக்கலாக என்னென்னவோ  சோகத்திரைகள் என் மனதில்.  நிறைவேறாத ஆசைகள், நடக்காத கனவுகள், அது தந்த துக்கம் என்னை தளர்வடையச் செய்யும். எண்ணச்  சிக்கலில் என் கனவின்  ஆரம்ப நுனியை தேடுகிறேன். 

என் நிலைமை புரிந்து என்னை புதுப்பிக்க, கனவுலகிலிருந்து மீட்டு இந்த அற்புத ஆனந்த  அமைதிநிலைய  தழுவிட    என்  நெஞ்சை, உடலை, இதயத்தை,  மிருதுவாக மயிலிறகால்  தடவிக் கொடுப்பது போல் இளங்குளிர் தென்றல் காற்று இனிமையான மலர்களின் நறுமணத்தைச் சுமந்து என் மீது வீசுகிறது. 

 மருந்து  வியாதியை நீக்காமல்  கிளப்பி விட்டுவிட்டதே..  இந்த நறுமண தென்றல்   ''அடேடே  என் இதயத்தின் வலியை அது அதிகப்படுத்தி விட்டதே. என் இதயம் இனம் புரியாத எதையோ இழந்து தேடுகிறதே.

 உஷ்ணப்பெருமூச்சு என்பது  வேனில் காலம் விடைபெறும் போது  விடும்  பிரிவு மூச்சோ  இந்த பூமியை சிறிது காலம்  விட்டு நழுவுகிறதோ? அதன் ஏக்கப்  பெரு  மூச்சு தான் என் பாதிப்போ?

கிருஷ்ணா,  இதுவரையில்   நீ  என்  அருகிலேயே இருந்ததை நான் உணரவில்லையா, என்னோடு இணைந்திருந்ததை  என் இதயத்திலேயே  குடியிருந்ததை  கவனிக்காமல்  விட்டு விட்டேனா?

 ''நீ என்னை மறந்தாலும் நான் உன்னை விடுவதில்லை என்று என் இதயத்தில் ஒரு பாகத்தில் குடிகொண்ட  நீ   என்பதை  உணர்த்த  தான்  இந்த  இனிய சுகந்த  
நறுமணமிக்க எண்ணமோ?  ஓஹோ என் இதய ஆழத்தில் எங்கோ அது மலர்ந்து மொட்டவிழ்கிறதோ?  அது தான் வெளியே குளத்திலுமா  ? என் இதயத்தில் மலர்ந்த  தாமரை  தான் என் கண்ணுக்கு குளத்தில் மொட்டவிழ்ந்து  காண்கிறதா?\


sivan jaykay

unread,
Jul 25, 2020, 2:36:46 AM7/25/20
to amrith...@googlegroups.com
                                                             இதை  படிக்காமல் விடவே  கூடாது.   J K  SIVAN 

யாரும்  சுப்பண்ணாவை  பின்பற்றாதீர்கள்.   நூறு வயது வாழ்வது எப்படி என்று புத்தகம் வாங்கி  பிரவுன் அட்டை போட்டு குங்குமம் சந்தனம் தடவி அலமாரியில் வைத்திருந்தான். அதில்  ஒரு பக்கம் கூட இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை..  அதற்க்குள்  அவசரமாக  தானாகவே  வைகுண்டமோ, கைலாசமோ, நரகமோ சென்றுவிட்டான்.  52 வயது அடுத்த மாதம் முடிகிறது.

ஏன் சுப்பண்ணா  மறைந்தான்?  ஒன்றா இரண்டா எத்தனையோ தப்புகள் பண்ணுவான்.  ஒரு சில சொல்கிறேன். கவனமாக  அதை செய்யாதீர்கள்.

நிறைய டாக்டர்களிடம் ஒரே சமயம் போவான். அது தப்பு.  ஒரு நோய்க்குத் தரப்படும் மருந்தின் பக்க விளைவுகளே சிலவேளை இன்னொரு நோயாக வெளிப்படலாம். இருமலுக்குத் தரப்படும் சில மருந்துகள் தூக்கத்தை தூண்டும். சில மருந்துகள், சோர்வு, அசதி, மயக்கம், வயிற்றுப்புண், மூட்டுவலி உண்டாக்கும்.

சுண்டுவிரலில்  சுளுக்கு என்றாலும்  பெயின் கில்லர், வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி விழுங்குவான்.  அது குடல் புண்ணுக்கு விருந்து வைக்கும்.

தனக்கு என்ன நோய், அதற்கு எது மருந்து, அதன் தன்மை என்ன, பக்க விளைவு உண்டா, என்று கூகிள் மாமாவை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

சொந்தமாகவே  நண்பன் பார்மசியில்  மாத்திரை வாங்கி விழுங்குவான். டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் எந்த மருந்தும் சாப்பிடவோ, குடிக்கவோ  கூடாது.  உயிரைக் குடித்துவிடும்.  

சிலருக்கு  சில மருந்துகள் கொடுக்க கூடாது.  கூட சிலதை சேர்த்து கொடுக்கவேண்டும்.  மருந்தின் அளவு  வயது எடைக்கு தக்கபடி மாறும்.  அம்மா சாப்பிட்டாள்  என்று அத்தைக்கு அதே அளவு கொடுக்க கூடாது. கட்டை நீட்டிவிடுவாள்.

ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை அரை குறையாக சாப்பிட்டு நிறுத்தக் கூடாது. நோய் கிருமிகள் அதிக பலம் பெற்றுவிடும்.  அதேசமயம்  எதற்கெடுத்தாலும்   ஆன்டி பயாடிக் மாத்திரைகள் குழந்தைகளுக்கு கொடுப்பதால்  பிறகு தேவைப்படும் நேரம் அந்த மருந்து செயல் படாதவாறு நோய் கிருமிகள் அந்த மருந்தை எதிர்த்து நிற்கும் திறன் பெற்று விடுகின்றன.

மருந்துகள் டானிக் ஊட்டச்சத்து அல்ல. தேவையின்றி உடலில் ஏற்றிக் கொள்ளக் கூடாது.

இங்கிலிஷ் மருந்து அலோபதி மருத்துவர் எழுதித்தரும் மருந்துகளுக்கு நிகரான ஆயுர்வேத மருந்துகளை நீங்களாக சாப்பிடாதீர்கள்.

நோயாளிக்கு  தெரிந்தது நோய்க் குறி மட்டும்  தான்.   அதை வைத்து ருந்தை தீர்மானிக்கக் கூடாது. ஒரு மருத்துவர் சரியாக ஆராய்ந்து, சில பரிசோதனைகள், செய்து நோயை தீர்மானித்து அப்புறம் அதற்கான மருந்து சாப்பிடவேண்டும்.

 காலாவதியான மருந்துக்களை தூக்கி எறிந்து விடுங்கள். ஒரு முறை  ஓபன் பண்ணிய, திறந்த குப்பி மருந்துகளை நீண்ட நாள் உபயோகிக்ககூடாது. குளிர் பதன பெட்டியில் வைத்தால் கூட இரு வாரங்களில் செயல் திறன் இழக்கும் .

மருந்து கொடுக்க சமையல் கரண்டிகள்  வேண்டாம்.  அளவு மாறிவிடும். . ஒருவர் உபயோகித்த மருந்தை இன்னொருவருக்குக் கொடுக்க கூடாது.   வரட்டு இருமலுக்கு கொடுத்த மருந்தை சளி இருமலுக்கு கொடுக்க கூடாது. சளியை வெளி்யேற்ற வேறு மருந்து உண்டு.

எப்போதோ  ஜுரம் வந்து   உபயோகித்த ஆன்டி-பயாடிக் மாத்திரைகளை அடுத்த தடவை ஜுரம் வந்தால்  கொடுக்காதீர்கள்.  சில மருந்துகளின் பலன் உடனே தெரிவதில்லை. நோய் சீக்கிரம் குணமாக வேண்டி அதிக அளவு மருந்து கொடுப்பது ஆபத்தில் முடியும். குடல் புண்ணாகி விடும்

அனேக ஆன்டிபயாடிக் மருந்துகள் சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரம் முன் அல்லது பின்  தான்  சாப்பிட வேண்டும்.

மருந்தை மற்ற உணவுகளுடன் கலந்து சாப்பிடாமல் தண்ணீருடன் மட்டுமே சாப்பிடவும்.

மருந்துக்கள் குழநதைகள்  கை எட்டும்படி வைக்க வேண்டாம். மற்றவர்களின் மருந்துகளுடன் சேர்த்து வைக்க கூடாது.

ஏற்கனவே எதாவது மருந்து சாப்பிட்டுக்கொண்டு வந்தாலோ, கர்ப்பிணியாக இருந்தாலோ, வயிற்றுப்புண், சர்க்கரை, இரத்தஅழுத்தம் இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தவறாமல் கூறிவிடுங்கள் . அதற்கேற்றபடி  மருந்துகள் தருவார்.

ஒரே சமயம்  பல  மருத்துவர்களிடம் சிகிட்சை பெறாதீர்கள்.  பல்வலிக்கு பல் டாக்டர் ஒரு வலி நிவாரணி எழுதி தந்து அதை சாப்பிட்டு வரும்போது, மூட்டு வலி  டாக்டரின் போனால்  அவர் கொடுக்கும் வலி நிவாரணி மருந்தும் ஒரே சமயம் வாங்கி  சாப்பிட்டால்  உடம்பில் மருந்து ஓவர் டோஸ் ஆகிவிடும்.  அப்புறம் சுப்பண்ணா தான்.

டாக்டர்  கொடுக்கும் மருந்தை  அதே  அளவில் அதே நேரத்தில் சாப்பிடவும். கொஞ்சம் நோய்  குணம் என்று கருதி  பாதியில் மருந்துக்களை நிறுத்தக் கூடாது.  

டாக்டர்  உப்பு குறை, கத்திரிக்காய், முருங்கைக்காய் வேண்டாம், ஆரஞ்சு தக்காளி  சாப்பிடு என்றால் அதை நல்ல பிள்ளையாக கேட்கவேண்டும். வெறுமே தலை மட்டும் ஆட்டிவிட்டு ஆறு  அடை சாப்பிடுவது ஆபத்தில் முடியும். .

கூடுமானவரை  ஊசி வழியாக  உள்ளே செலுத்துவதை விட வாய் வழி மருந்து விழுங்குவது தான் பாதுகாப்பு.

டாக்டர்  எழுதிய மருந்தை வாங்கி அவரிடம் ஒருமுறை காட்டிவிட்டு  சாப்பிடுவது நல்லது. போலி மருந்துகள் நிறைய மார்க்கெட்டில் உள்ளன.ஜாக்கிரதை. .

விலையுர்ந்த சில கம்பனி மருந்துக்களை டாக்டர் எழுதித்தந்தால் அதற்கு நிகரான ஜெனெரிக் மருந்துகள் உண்டா? என்று கேளுங்கள். ஜெனெரிக் மருந்துகள் பொதுவாக மிகவும் விலை குறைவாக கிடைக்கும். இரண்டிலும் ஒரே மருந்து தான் இருக்கும். உதாரணமாக "பனடால்” என்ற காய்ச்சல், வலி நிவாரண மாத்திரைக்கு நிகரான ஜெனெரிக் மாத்திரை "பேராசிட்டமால்". பனடாலில் இருப்பது பேராசிட்டமால் தான். இது பெரும் பணத்தை மிச்சப்படுத்தும்.

 மூன்று வேளை மாத்திரை சாப்பிடச் சொன்னால் செலவு  மிச்சம் பிடிக்க  ரெண்டு வேளை மாத்திரை போதும் என்று  தானாக  முடிவெடுப்பது ஆபத்து.

இரத்தக்கொதிப்பு போன்ற நோய்களுக்கு தொடர்ந்து நீங்கள் மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் மருத்துவரிடம் கேளாமல் திடீரெனெ நிறுத்துவது ரொம்ப  தப்பு.  ஆபத்து. .

மூன்று வேளை  மருந்தில் ஒரு வேளை  சாப்பிட தவறிவிட்டால், அடுத்தவேளை சேர்த்து  சாப்பிடக்கூடாது.

இதற்கெல்லாம் மேலே  டாக்டர் கிருஷ்ணனை வேண்டிக்கொள்ளுங்கள், எனக்கு வியாதி வரவேண்டாம். வெளியே எதையும் சாப்பிடமாட்டேன்,  மாதத்தில் ஒருநாள் உபவாசம், ஏகாதசி, கிருத்திகை, சஷ்டி,பின்பற்றுவேன்.  ஒவ்வொருவேளையும்   குறைத்தே சாப்பிடுவேன் அதிகம்  உணவு மேல் பாசம்  ஆசை வைக்கமாட்டேன்.  உண்பதை விரும்பி, உடம்புக்கு ஏற்றதாக, ருசியை பார்க்காமல் சாப்பிடுவேன் என்று உறுதி கொண்டால்  நல்லது.  பசித்தால் மட்டுமே சாப்பாடு நல்லது.

sivan jaykay

unread,
Jul 26, 2020, 8:17:59 PM7/26/20
to amrith...@googlegroups.com
                                                                               பாரம்பரியம்   J K  SIVAN 

நான்  சின்ன வயதில்  பத்திரிகைகளில் மற்றும்,    கலர் கலர்  துண்டு  பிரச்சார  நோட்டிஸ்கள், விநியோக   காகிதங்களில் சில பெயர்களை பார்த்தது நினைவுக்கு வருகிறது.   சென்னை கோட்டை  ரயில் நிலையம் அருகே     MUC  மைதானத்தில் கூடாரம் போட்டு  அங்கே  மல்யுத்தம் நடைபெறும்.  வருஷா வருஷம்  ''ரோஷமான'' குத்துச்சண்டை என்று சில வீரர்களின்  படம் போட்டு  துண்டு காகிதம்  நிறைய சேர்த்து வைப்பேன்.  

அப்போது துண்டு பிரச்சார காகிதங்களை நோட்டீஸ்களை   சேகரிக்க  என்னைப்போல  பல  சிறுவர்கள் ஆவலாக அலைவார்கள்.  ஒரு  நிகழ்ச்சிக்கும்  போகமாட்டோம்.    காகிதம் சேர்ப்பதோடு சரி. 

அதில் மேற்கண்ட  குத்துச்சண்டை வீரர்கள் படம் பெயர்கள் எல்லாம் வரும். நினைவிலிருப்பதை மட்டும் சொல்கிறேன்.

''சர்தார்  இடியப்ப நாயக்கர்  பரம்பரை,  சார்பட்டா பரம்பரை.. எல்லப்ப  செட்டியார் பரம்பரை, .  மாமிசமலை கிங் காங்,  தாரா சிங், செந்தேள்.. கருந்தேள்..  ஸ்பைடர்  சிலந்தி வீரன் ......''. .

வட சென்னை தான்  வீரம் விளைந்த மண். இந்தப் பகுதியில்தான் இடியப்ப நாயக்கர் பரம்பரை, சார்பட்டா பரம்பரை என்ற பெயர்களில் அமைந்த இரண்டு குழுக்களிலிருந்து புறப்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மோதியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி என தமிழர்கள் கொண்டாடிய மாபெரும் மனிதர்களே ரசிகர்கள் போல உட்கார்ந்து இந்தக் குத்துச்சண்டையை ரசித்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய விஷயம்!

மைதானத்தின் நாற்புறமும் தட்டிகள் கட்டி, நடுவில் வீரர்கள் மோதுவதற்கான மேடை அமைத்து, மேடையின் நாலு பக்கமும் கயிறுகள் கட்டப்பட்டு, பரபரப்பான கலவர சூழ் நிலையில் நடந்த போட்டி ஒவ்வொன் றும் திருவிழா.   

குத்துச்சண்டை, மல்யுத்த  நாயகன்  கிங்  காங். அவன் யாரென்றால்  Emile Czaja (July 15, 1909 – 16 May 1970),   ஆஸ்திரேலிய -இந்திய  மல்யுத்த வீரன். பிறந்தது  ஹங்கேரியில்.   ஜப்பான், சிங்கப்பூர், ஐரோப்பா, நியூசீலாந்து, ஆஸ்திரேலியா  இந்தியாவில் எல்லாம் சென்று வென்றவன்.   6 அடி  உயரம். 208 கிலோ  எடை.  அவன் எவ்வளவு முட்டை சாப்பிடுகிறான், எத்தனை பால் குடிக்கிறான் என்றெல்லாம்  ஆச்சர்யமான விஷயங்கள் எழுதுவார்கள்.  உண்மையிலேயே  அவன்  ஒரு மாமிச மலை....

 ஒரு போட்டியில் கிங் காங்  ஜெயித்தால், அடுத்த போட்டியில் தாராசிங்  ஜெயிப்பார்.  அதற்கு மேல் என்னை கேட்கவேண்டாம்.   

 நான் இப்போதெல்லாம் கிங்காங், மல்யுத்த ரசிகன் அல்ல. சிறுவயசு கோளாறு. பத்து-பதினைந்து வயதுக்குள்  என்னைப்போல் பலர் இப்படி தான்  எல்லாவற்றையும் நம்பும் சிறுவர்கள்.  தினத்தந்தியில் முதல் நாள் நடந்த போட்டி  விவரங்கள், படங்கள் எல்லாம் வரும்.   கேசவ நாயர்   டீ  கடையில்  கூட்டமாக  படிப்பார்கள்.
 
அதென்ன  பரம்பரை??

  ''அவர்கள் பரம்பரை. இவர்கள் பரம்பரை, எங்கள் பரம்பரை''  .....என்கிறோமே  அதற்கு வழி வழியாக,  அதாவது  தலைமுறை தலைமுறையாக  என்று அர்த்தம்.   பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்   பிரித்து படித்தால்  பரன் + பரை = பரம்பரை

 நமக்கு அடுத்த தலைமுறைகள்  வரிசையாக பாரத்தால்,   

நாம்,  நமது மகன், மகள்,  அவர்கள் புத்ர, புத்திரிகள் நமக்கு பெயரன் பெயர்த்திகள்,  
அதற்கடுத்தது கொள்ளுப்பேரன் கொள்ளுப்பெயர்த்தி, இவர்கள் யார் என்றால் பேரனின் புதல்வன் புதல்விகள் அதற்கும் அடுத்தது   எள்ளுப்பேரன், பேத்தி,  அதாவது கொள்ளுப்பேரனின்  குழந்தைகள். 

இங்கிலீஷில்  தலைமுறையை ஜெனரேஷன்  என்போம்.  சராசரியாக  50-60 வருஷங்கள்.  

ஒரு தலைமுறை - சராசரியாக 60  பிறந்த வருஷங்கள் என்று கொண்டாடினாலும்  அநேகர்  22- 35 வருஷங்கள் தான் ஒரு தலைமுறை என்று கணக்கிடுகிறார்கள். அதற்குள் போகவேண்டாம். ,

நமது   உத்தேசப்படி  ஏழெட்டு  தலைமுறை  என்றால்  480 -500 வருஷங்கள்
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்.. அடேயப்பா  கிட்டத்தட்ட  ஆயிரம் வருஷங்களா?
ஹிந்துக்களை தவிர வேறெவரும் இப்படி தலைமுறை கணக்கு பார்ப்பதில்லை என்று தோன்றுகிறது.

பரம்பரையிலிருந்து வருவது  பாரம்பரியம்  என்ற சொல்.  முன்னோர்களிடமிருந்து  நமக்கு கிடைத்த சொத்து  பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறையினருக்கு கொடுக்கப்படுகிறது.   அதை நாமும் அடுத்த  சந்ததியினருக்குக் கொடுக்க வேண்டும்...  இதை மரபு எனும் பழக்க வழக்கமாக, பண்பாடாக, நம்பிக்கையாக,  ஏற்றுக் கொள்வோம். நல்ல விஷயங்கள், பழக்கங்கள் இப்படி தான் கை  மாறவேண்டும்.

காலத்திற்கேற்ப  நிறைய  மாறுதல்கள் வழக்கத்தில், பழக்கத்தில்  வந்து விடுவதால் பாரம்பரியம் கெடுகிறது.  உரு மாறுகிறது.  பழமை புதுமையோடு கலந்து வேறாக மாறுகிறது. அது  பழமையை அழிக்காமல்
 நல்லதாகவே இருக்கட்டும் என்று கிருஷ்ணனை வேண்டுகிறேன்.
வெளி கலாச்சாரம், விஞ்ஞானம் இவற்றின் உந்துதலால்  பாரம்பரியம் சிதையாமல் பாதுகாப்போம். 

sivan jaykay

unread,
Jul 26, 2020, 8:17:59 PM7/26/20
to amrith...@googlegroups.com
 
                                   கதிர்காம கந்தன் புனித ஆலய   ஆடி திரு விழா      J K    SIVAN 

This  I am  writing with some parts in English. That is how we speak in our day today life. There is a mixture of  more than one language in our conversation. Hence it would be hopefully understood.     ''மாமா,    உங்காத்து   பன்னீர்  ரோஜா  ரசம்  FANTASTIC . ஜெயம்  IS  A  GREAT COOK   என்று  எங்காத்து  சரோஜா USED TO  TELL   என்று  ஆங்கிலத்திலும்  தமிழிலும் நாம் பேசவில்லையா?

I received our revered great friend Sri V.S.Krishnan's article on Murugan.  VSK  is a staunch Muruga baktha with thousands of Thirppugazh by heart and his English writings are free flowing and studded with apt and appropriate words in his command.  He is a devotee of Bagavan Ramana as well besides being an exponent in Advaitha Sidhantha.   இன்னும் நேரில் பார்க்கவில்லை. ஆனாலும் அவர்  மேல் எனக்கு  மதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. 

அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக் கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரெண்டும் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய'' - so says  Kandhapuranam about Lord Subramanya's avatar.  It is a great work of Kachiyappa Sivacharyar.

"He who is with form and without form, who has no beginning or end, who manifests as one and as many, who is the reflection of Brahman, the eternal reality, who originated as powerful flame of fire, whose six sacred faces full of grace and compassion whose twelve arms ever extending blessings, who manifested as the brilliant rays of the rising sun, He is Murugan, the Lord whom I worship."

VSK  writes in his chase english article about Muruga at Kadhirkamam, Srilanka.    I visited this holy temple decades ago and my aunty's name is Kadhirkama Lakshmi as she is a devotee of Lord Muruga and it so happened that my uncle, her husband's name is SUBRAMANIAN, a pious Muruga baktha, who is now 100+ living without vision in his eyes at the same old ancient house at Purasawalkam where he was born.

கச்சியப்பர்  தான்  ''முருகா, நீ தானடா அருவமான  ப்ரம்மம்,  எங்களுக்காக அல்லவோ  அழகிய குமாரனாக உருவம் கொண்டவன்''ல்.    உருவாய், அருவாய்,  உளதாய், இலதாய்..... காண்பவன் முருகன். 
தந்தைக்கு உபதேசம் செய்த  ஞான பண்டிதன்.  அருணகிரியை கேட்டுப்பாருங்கள், கொள்ளை கொள்ளையாக சொல்கிறாரே.   அடேயப்பா  எத்தனை மலைகள், வயல்கள் ,  கடற்கரையில்,  அமைதியான கிராமங்களில் குடிகொண்ட  குமரன்.  ஒரு பாட்டியை  சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு திணறடித்தவன்.....   பக்தர்களை  மகிழ்விக்க  காக்க,  தேவசேனாபதி அல்லவா,  ஒரு முகம் போதாது என்று ஆறு முகங்கள்,  அருள் புரிய  இருகரம் போதாது என்று பன்னிரண்டு கரங்கள்....... போதுமா?

Names of ancient sacred places hold great significance and Kathirkāmam is no exception. The name kathir-kāmam consists of two words kathir (‘a ray’) plus kāma denoting longing and desire, often with a sexual connotation. Kathir-kāmam thus means ‘(the place of) illumination and earthly love’.

Even today, Sri Lanka preserves in Kathirkāmam many archaic beliefs and practices that have long been lost throughout India. These traditions come broadly under the pre-Buddhist royal cult of maintaining justice and timely rains and fertility throughout the blessed island of Lankā. For instance, the tradition survives of a weekly offering to the Kataragama god of cooked venison or deer flesh, the Vedda folk's choicest offering, an ancient practice found nowhere in South India today.

Stranger still, the Kataragama god is widely considered by Sri Lankans of all faiths to be a rogue and a trickster who likes to play pranks with believers and unbelievers alike. Among his staunch devotees are many unsavory characters, including criminals and politicians. This association of Skanda with rogues and criminals may be traced back to the Arthava Veda where in the Skanda Yāga section he is worshipped by thieves as their guru and is explicitly called dhūrta, which can only mean 'a rogue', associations which have survived solely in Sri Lanka for well over two thousand years. And yet, in spite of this, he is widely understood to be a loving and beneficent god who will grant anyone's wish or vow--so long as both parties keep their end of the bargain!

Despite its far-reaching fame, the Kathirkamam temple is a remarkably humble structure that was until relatively recently situated in the midst of forbidding dry jungle. The main temple, or Ruhunu Mahā Kataragama Devālaya as it is known locally, is dedicated to Kathirkama Kanthan, the Lord of infinite beauty, power and compassion. 

Within this same small building complex one finds small temples for Ganesa, Visnu and also for Teyvanai and other minor deities. Eight hundred meters to the north is the ancient Buddhist stupa Kiri Vehera which is counted as one of the sixteen places in Sri Lanka visited by Lord Buddha.

Two hundred meters south of the main temple complex, there is also the Muslim mosque and shrine immediately beside Valli Amman Kovil, which indicates how Kathirkamam is the confluence (sangamam) of all faiths. So important is the mosque that the festival cannot begin or end without the ceremonies of hosting (kotiyetrum) and lowering an Islamic flag. Islamic tradition holds that there is an invisible spring on that very spot associated both with al-Khiḍr, (the 'Green Man') and with Valli, who is similarly green and associated with plant life.

Mount Kailāsa in western Tibet and Kataragama in the far south of Sri Lanka form a near-perfect analog to the axis mundi or susumna nadi of yogic lore.  Greek mariners of the early Christian era regularly ventured as far as the fabled island of Taprobane (Lanka) — and knew its coastal features well.

Detail of Ptolemy's Taprobane: Greek mariners reported the existence of a 'Town of Bacchus' (Bachi oppidum)--undoubtedly the precursor of present-day Kataragama. Click on map to view full article.
The Kataragama shrine (background) and its traditions originated among the ancestors of Sri Lanka's Wanniya-lætto or 'Veddas' (foreground).

Another unique feature of the temple is its link with Mount Kailāsa in western Tibet. A North-South meridian line drawn on the map from Mount Kailasa meets Kathirkamam in the far South. This same North-South axis is also an analogue to the Lord’s Vel as well as to the sushumna nadi of yogic lore, which also explains Kathirkama's designation as Dakshiṇa Kailāsa, the Southern Kailāsa, so important is this sacred forest in yogic lore since long before maps even existed.

No account of Kathirkamam would be complete without mention of its well-deserved reputation for mystery and secrecy. Mysteries within mysteries surround Kathirkamam and its traditions. Devotees from far off places eagerly come here to seek His grace, but when they stand before the sanctum sanctorum, they see only seven tirai or curtains painted with the image of Skanda flanked by Valli and Teyvanai.

The screens prompt the devotee to turn within so that his attention is fixed upon his own Self as the reflection of Murugan. The presiding kapurāla-priests, Sinhalese Buddhists who openly admit that their paramparā has come down to them from the indigenous Veddas before them, take the offering of the devotees, go inside, offer worship on behalf of the devotee and come back with the Lord’s prasādam.

The worship is offered to the deity, whose Presence is widely believed to reside in a yantra or magical diagram etched upon a metal plate with the Omkara mantra inscribed on it. It is never displayed—nor is its existence either confirmed or denied. Even though the devotee finds no image of the deity, he experiences the presence of Murugan within and returns with a great sense of fulfilment and illumination.

திருப்பதி போல்  கதிர்காமத்தில்  ஏழுமலைகள்..  வேடர்களின் சாமி  கண்டே யாகா ,  வெகுகாலம் வசித்த இடமாம். முருகன்  வேடர்களோடு சம்பந்தப்பட்டவர்.   வள்ளி  யார்?    வாரியாரின் பதில்    அவன் வள்ளல், அவள் வள்ளி....  இப்போ  கொஞ்சம் VSK  யின் இங்கிலிஷ்.:

Greek mariners of the early Christian era sailed annually from Alexandria to the fabled island of Taprobane (Lanka) — and knew its coastal features well. The sea off of Kataragama was known to Alexandrian mariners as Dionysi Mare (Latin: 'The Sea of Dionysus'). The same Greeks mariner-informants called its town Dionysi seu Bacchi Oppidum—'The Town of Dionysus or Bacchus', the Greek name of the god of ritual theatre and ecstatic abandon—two enduring key features of Kataragama. Among those mariners were almost certainly some who were initiates into the Dionysian mysteries that were alive and popular in their times, making their identification of Kataragama with Dionysus entirely natural. Cultural anthropologist Agehananda Bharati observed in 1973 that Kataragama Skanda is a "Dionysian god"--so little has changed in 2,000 years.

Both Sinhala and Tamil traditions agree that the Kataragama god first landed by sea in a stone boat at various places including Okanda, alone or with His associates, and walked to Kathirkāmam always keeping near to the the east coast. This is the origin of the Kathirkāma Karai Yāthirai or annual coastal foot pilgrimage.

VSK   ஆராய்ச்சி செய்பவர்.   என்னைப்போல்  நுனிப்புல் மேய்பவன் அல்ல.  அவரிடம் எனக்கு பயம் கலந்த மரியாதை.

Most all versions agree on the purpose of His one-way journey to Kathirkāmam. It was His affection for Valli, the adopted adolescent daughter of the chief of the local Vedda tribe of hunters. As a mere girl she had sworn to marry no man, but only the Veddas’ hunter-god himself and to allow no mortal man to come near her. Her girfriends teased her, but she was adamant.

Valli, who was alone guarding a crop of millet growing in a jungle clearing, had been aspiring to marry Murugan ever since had heard of Him. Lord Murugan had also learned from sage Narada both the benign qualities of Valli and her whereabouts.

Presenting the outward appearance of a handsome Vedda youth, the god boldly approached Valli and straightaway proposed to marry her. The girl, not recognizing who was standing before her, threatened to stone Him with her handy sling if He came any closer, so He had to withdraw and try another guise. So begins the timeless tale of the soul’s yearning to be united with her Lord.   வேடனாக முருகன்  வள்ளியை தேடிய இடம் வள்ளி அம்மா கோவில்  ஒகண்டாவில் இருக்கிறது என்கிறார்.   பலே ஜோராக  தேவானை  சுப்பிரமணியன் கல்யாணம் நடந்ததற்கு நேர் மாறாக   வள்ளி கல்யாணம்  
 was rustic and simple. Strange it may appear that Murugan, the Supreme Lord, who even acted as guru (Swaminātha) to his father Lord Siva, appeared to be infatuated by the poor innocent tribal girl, soliciting her favour and seeking her hand in marriage. Ancient Tamil Cankam poetry tells us that Lord Murugan suffered intense pangs of separation whenever He felt even the shortest separation from His beloved Valli!

முருகனை யார்  அடையமுடியும்?  VSK  சொல்கிறார் கேளுங்கள்:   It is only one whose heart is full of devotion, whose thoughts are directed toward no one else but Murugan and whose simple quiet and austere life qualifies them for Murugan’s grace. The path adopted by Valli is regarded by pundits as Valli Sanmargam. Valli symbolized the qualities of detachment, dispassion, humility and love. She transcended her own individuality without entertaining the notion of a separate ‘I’.

வள்ளி  முருகனோடு  கடவுளாகி அருள் பாலிக்கிறாள். அவள் இல்லாத  சிவன் கோவில்களே கிடையாது.   வள்ளி sweet and innocent tribal girl. And yet, she was also brilliant, possessing far more than a pretty face and figure. For from a very early age her attraction for the Veddas' hunter God of the Mountain prompted her to think outside the box, vowing to 'do the impossible' that no one had ever before even considered--and kept that 'impossible' vow. This is undoubtedly the origin of Kathirkāma Kanthan's reputation for granting 'impossible' wishes to those who keep their vows to Him.

கந்தர் அலங்காரத்தில்  அருணகிரி,  கிண்ணம் குறித்து, என்பதில்  “Murugā! You have advised me that whoever worships Me without a sense of “I” (ego) becomes one with Me. Since Valli has lived the life that you advised for all, you went all out in search of her and after playing many divine sports, married her.”  என்கிறார்  VSK

வள்ளி திருமணம் என்பது என்ன ?  வள்ளி சன்மார்க்கம்  என்பது ஒரு   path of selflessness and purity followed by Valli. Whether the original encounter and marriage actually took place at Kathirkamam or in South India may continue to remain as a question. What is relevant and important is its message that when the individuality or the ‘I’ notion ceases, the Jivātma is merged in Paramātma.''

கதிர்காம  முருகன் கோவில் தோன்றியது   சிங்கள  ராஜா  துதுகமுனு  காலத்தில்    161-137  கி.மு  வில்.  அந்நிய படையொடுவந்த எதிரிகளிடமிருந்து தனது நாட்டை மீட்க  கந்தன் அருள் புரிந்தான் என்று ராஜா நம்பிய  ராஜா  நன்றியோடு இந்த கோவிலை எழுப்பினான். renovated the temple and its traditions that had already existed long before his time. He did this as a mark of gratitude to Murugan for the blessing he received in restoring his kingdom back from invaders.

கதிர்காமத்தில்  பல கோவில்களில் வேலை  முருகனாக  பணிகிறார்கள். the Vel (lance) alone worshiped as the predominant form of His worship. Rather than an icon of Murugan, it is the Vel, an aniconic representation of Skanda-Murugan, that is venerated and worshipped.  Vel worship constitutes one of the unique features of temples in Sri Lanka, especially in Eastern and northern regions where Tamils live in large number. The root word vel comes from velluthal which means victory and Vel symbolizes victory over evil forces. The Vel held by Murugan is also known as Kathir Vel as it radiates brilliant rays of insight (jñānam).  அருணகிரி நாதர்  வேல் வகுப்பு என்று  தனியாக ஒரு  பகுதியை வழங்கியிருக்கிறார்.  Vel Vakuppu describes the power of Murugan’s Vel thus: “I worship the Vel which broke the strong chain by which Soorapadman bound Indra, the Vel that rescued sage Nakkeerar from the evil spirit Karkimukhi and the Vel which helped the saints to ward off the ill-effects arising out of karma. (Surarkku Muni ..Vel Vakuppu 5).

: Mounted upon a tusker, Swāmi emerges from His temple compound to visit Valli Amma each evening of the festival. By tradition, only male devotees who had walked from Jaffna at least once were allowed to help to carry the immense and rather heavy solid aluminium kudai which had been donated by Jaffna devotees. Some years, there were barely enough such men that they were asking author Patrick Harrigan's help to complement the 12-man team. The kudai and its tradition have since been retired.

கதிர்காமத்தில்  ஈசல  பெரஹரா   என்று  இந்த விழாவை கொண்டாடுவார்கள்.  ஊர்வலத்தில் ..... the slow but stately pace of the tusker that bears Lord Murugan accompanied by his royal retinue who all remain silent. Except for musical instruments, the entire Perahera is conducted in total silence as onlookers sing and pray.  Devotees by the tens of thousands—mostly Buddhists and Hindus but also Muslims and even Christians—strain their eyes to view the invisible Lord of Kathirkamam as he passes by at a leisurely pace upon a magnificent tusker.

நிறைய  தமிழ் பக்தர்கள்  கதிர்காமத்திற்கு    யாழ்ப்பாணத்திலிருந்து  பாதயாத்திரை நடக்கும்போது முருகன் புகழ் பாடுகிறார்கள்.  அருணகிரிநாதரும் நடந்திருக்கிறார்  என்றால் நூற்றுக்கணக்கான வருஷங்களாக இந்த  கதிர்காம கந்தன் மேல் பக்தி பயணம் உண்டு என தெரிகிறது.  ஆடி த்திருவிழாவின்  போது  கதிர்காமர்  கந்தன் கோவில்  எள் போட்டால் எண்ணெயாகும் அளவு கும்பல் இருக்கும்.  கிட்டத்தட்ட ரெண்டு மாசம் முன்பே  யாழ்ப்பாணத்திலிருந்து  முருகனுக்கு அரோஹரா  சப்தம் முழங்க  நடக்க ஆரம்பிப்பார்கள்.


Among the many saints and sages who undertook Pāda Yātrā, special mention should be made of Muttukumar Vel Swami who walked over fifty times until the late 20th Century and Mrs. P. Maheswary of Trincomalee, or Bebi Amma as she was widely known, who first walked with her family as a teenager in the 1950’s and eventually walked the Yātrā nearly forty times. Both these earnest pilgrims and others as well helped to preserve countless oral and performative traditions, including local folk lore and sometimes vital information, like knowing one’s way through the dry thorny jungle labyrinth--always barefoot.

இந்த கதிர்காம கோவில் நிர்வாகம் யார் நடத்துகிறார்கள் என்று VSKL  சொல்கிறார் படியுங்கள்: 
Sri Kalyana Giri was succeeded by Swami Bāla Giri who functioned as the head of the temple administration (Devasthānam). He was succeeded by Swami Jayasingha Giri. It is believed that many saints are still continuing their penance here in their astral bodies and there are devotees who have experienced the invisible presence of these saints here.   Normally in South India, as one approaches a great temple, one encounters a gōpuram or tower gate depicting episodes from mythology in colourful images. Kathirkamam, however, appears different. Here one finds a small arch that leads the devotees to the humble temple within. There are several important temples for Murugan at Sri Lanka, including Kathirkāmam, Selva Sannidhi, Maviddapuram, Maṇḍur, Siddhāṇḍi, Verugal, Thanthāmalai, Tirukkovil, Ukanthai Malai, Sivasubramania Swami Kovil (Colombo-2) and Sri Sivasubramaniya Swami Kovil Gintupitiya, among other places.

அருணகிரிநாதர்   யாழ்ப்பாணத்தை  கிரிமலை  என்பார்,   கதிர்காம  கோவில் பிரயாணம் திருகோணமலை வழியாக.   VSK  எழுதுகிறார்: 
Sri Aruṇagirināthar, the 15th Century saint-poet, who expressed advice intuited directly from Swamināthan, is one of an uncounted multitude of sincere souls who walked from Kirimalai (Jaffna) via Tiru Konamalai to Kathirkamam and composed songs on the glory of the Lord. Though Arunagirinathar composed many songs including from Kathirkamam temple, some from Kirimalai (Jaffna) and Tirukonamalai, only fourteen songs survive.   In his song Udukka Thukil Vendum, Arunaginathar says that this is the land where Rāmāyana events relating to Yudha Kandam took place. By addressing Lord Murugan as Malon Marugan (son-in-law of Visnu), he relates Murugan to Lord Rama.

In another song the poet says: “Oh Lord, who has his abode at Kathirkāmam, give me the kind of devotion that has no equal, the determination to meditate, the state where thoughts dissolve in the ocean! Oh Lord, whose shoulders are like the golden peak of Mount Meru, grant Thy grace to me!” (Ethirillatha bhakti thanai).

“Oh Muruga! You are privileged to be the nephew of Maha Visnu who is embraced by Maha Lakshmi. You reign supreme both in the earthly world and in the celestial world. You are the one who manifested as Jñānasambandar, the highly venerated saint. You are the one who resides in the heart of devotees. You are the one who moves on your beautiful peacock. You are the one who has his abode at Kathirkāmam where waters flow like gems and pearls. Oh Muruga! I worship you with a heart overflowing with devotion!

sivan jaykay

unread,
Jul 26, 2020, 8:17:59 PM7/26/20
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி  22       J K  SIVAN 
தாகூர்  


                                                                     22  கனவாய்  மறையாதே   கண்ணா!!

 
22.  In the deep shadows of the rainy July, with secret steps,
thou walkest, silent as night, eluding all watchers.
Today the morning has closed its eyes,
heedless of the insistent calls of the loud east wind,
and a thick veil has been drawn over the ever-wakeful blue sky.
The woodlands have hushed their songs, and
doors are all shut at every house.
Thou art the solitary wayfarer in this deserted street.
Oh my only friend, my best beloved,
the gates are open in my house---do not pass by like a dream.


பருவக்காற்று  சீசன் மழை அறிகுறி   ஜூலை  மாதம்  நன்றாகவே  தெரிந்துவிடும். கிருஷ்ணா,  வாடைக் காற்று உடலை ஊடுருவிச்  செல்லும்.  நீயோ  எதிலும் சம்பந்தம் இல்லாதவன். ரஹஸ்யமாக  எவர் காதிலும் கேட்காதபடி அடிமேல் அடிவைத்து, சப்தமற்ற காலடி தடங்கள் பதிப்பவன்.  இரவைப் போலவே  நிசப்தமானவன்.  அமைதியின் உரு. .  

யார் பார்த்தால் என்ன,  பார்க்காவிட்டால்  என்ன? எவர் கண்ணிலும் நீ படாதவன். படப்போவதும் இல்லை. 
உன்னை நினைப்பவனுக்கு மட்டும்   நீ  மனதில் தோன்றுபவன்.

இன்று என்னவோ  காலை வேளையே ஒளி குன்றி  இருக்கிறது.  கண்ணை மூடி  இன்னுமா தூங்குகிறது? கிழக்கே இருந்து தொடர்ச்சியாக பலமான காற்று  வீசுகிறது கூட  தெரியாதோ?.  புழுதி தரையிலிருந்து மேலே எழும்பி காற்றில் புகை மண்டலம் போடுகிறது.  நீலவானமே   கிடையாதோ என்ற அளவுக்கு  கருமேகங்கள் வானம் பூரா  மறைத்திருக்கிறதே. 

எப்போதும் பளிச்சென்று  விழித்துக் கொண்டு இருக்கும்  நீல வானத்துக்கே  கனமான கருப்பு போர்வை போர்த்தி தூங்கப் பண்ணியாகி விட்டதோ?.

 எங்கும் அடர்ந்து  காணும்  காடுகளில் இருந்து மூங்கில்கள் உராய்ந்து காற்றில்  தோன்றும் மரங்களின் அசைவு  காற்றில்  ஓ   வென்று  விடாமல் ஒலிக்குமே  அதுவும் அடங்கி கிடக்கிறதே.   அதனால் இயற்கையாகவே  கேட்கும் உன்  சுநாத வேணுகான இசையோ,  மூங்கில்  ஓசையோ, எதையுமே   கேட்க முடியவில்லையப்பா !.

குளிருக்கும் மழைக்கும் பேய்க் காற்றுக்கும்  பயந்து காற்று   கிராமமே   கதவுகளை   காற்று  பிய்த்துக்  கொண்டு பறக்காமல்   எல்லா  வீடுகளும்  தீப்பெட்டிகள்  போல்  மூடிக்கொண்டுவிட்டனவே.    கதவுகள் ஜன்னல்கள் மூடப்பட்டு   எங்கும்  காரிருள் . 

நான் மட்டும் தான்  விழித்துக்கொண்டு இருக்கிறேன்.  ஏன் தெரியுமா  கிருஷ்ணா.  எனக்கு உன்னை தெரியும்?

 நீ இருண்ட இந்த ஆளில்லாத பாதையில்   திசை தெரியாத  ஒரு ஒற்றையாளாக  தனித்த  வழிப்போக்கன்  போல் நடந்து வருவாய் என்று நம்பிக்கை உண்டு.  உனக்காக   காத்துக் கொண்டிருக்கிறேன்.  

கிருஷ்ணா,   ஜன நடமாட்டம் இல்லாவிட்டால் என்ன. நான் உன் உன் ஒரே உயிர் நண்பன் அல்லவா.

கிருஷ்ணா, என் வீட்டின் கதவுகளை  மற்றவர்கள் போல்  நான்  மூடி வைக்கவில்லை. திறந்தே வைத்திருக் கிறேன். வா  கிருஷ்ணா  வா, என் நெஞ்சக் கதவும் என் வீட்டு வாசலைப்  போலவே  நீ  வருவாய் என  உனக்காக திறந்தே இருக்கிறது. நீ   நிச்சயம் வருவாய் என்று தெரியும். கட்டாயம்  வா.  கண் சிமிட்டும்  நேரத்தில் தோன்றி  மறையும்  கனவாக  கரைந்து மறையாதே . காணாமல் போகாதே. 


       

sivan jaykay

unread,
Jul 26, 2020, 8:17:59 PM7/26/20
to amrith...@googlegroups.com

                                         தந்தையின்  125 வயசு நினைவு...   j k  sivan 


42 வருஷங்களுக்கு முன்னால்   சேத்பட் அருகே  பூந்தமல்லி  கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில்  என் தந்தை  இந்த நாளில்  ஜூலை  26 1978  அன்று , காலமானார்.   அவருக்கு அப்போது வயது  83.  என் அண்ணா ரத்னமய்யர்  வீட்டில் தான் காரியங்கள் நடந்தது. எங்கோ தஞ்சாவூரில் பிறந்தவர் கடைசியில்  உள்ளகரம் மயான த்தில் அமைதி கொண்டார்.  அவரை நினைத்துப் பார்க்கிறேன்.

';ஏம்பா, உனக்கு உங்கப்பாவை  ஞாபகம் இருக்கா?''
''இல்லேடா, என்னுடைய  சின்ன வயசிலேயே போய்ட்டார்''
''என்னவா  இருந்தார்?''
'' வெள்ளைக்காரன் கால  காட்டிலாகா அதிகாரி.''

அப்பாவே  சரியாகி பார்த்திராதபோது நான் எப்படி  தாத்தாவை அறிவேன்.   என் ஞாபகத்தில்  அவர் ஒரு பழைய சாம்பல் நிற கலர் கண்ணாடியில்லாத அட்டையில் ஒட்டிய கொஞ்சம் செல்லரித்த கருப்பு வெளுப்பு பட   தாத்தா .  புசு புசுவென்று   மீசை, தாடி.  தலையில்  காதை  பாதி மறைத்த  தலைப்பாகை.  கம்பீர  நாசி,  அடர்ந்த புருவங்களின் கீழ்  ஆழ்ந்த பார்வை கொண்ட தீர்க்கமான  கண்கள்.   கழுத்தை மறைத்த கோட்டு. அதில் வரிசையாக பெரிய பொத்தான்கள். இது தான் தாத்தா ஜம்புநாதய்யர்.
அவர் பெயர் முதல் எழுத்து ''J '' ஜே  என் பெயரோடு ஒட்டிக் கொண்டு விட்டதில் எனக்கு பெருமை தான். என் மகன் ஒருவன் ஜம்புநாதன்   அவர்  பெயரன்.

என் அப்பா   ஜே . கிருஷ்ணய்யர் மூன்று மொழிகளில் வல்லுநர். ஆங்கிலம், தமிழ், ஸமஸ்க்ரிதம் . பள்ளி தலைமை ஆசிரியர்,  நுங்கம்பாக்கம்   லெக் ஏரியாவில் இன்றும்  இருக்கும்   கார்பொரேஷன் ஹை ஸ்கூலில் ரிட்டையர் ஆனவர்.   அவருடைய சரித்திர ஆங்கில வகுப்புகளில் மெய்ம்மறந்து அவரை கேட்க எனக்கு பாக்யம் இல்லை. நமது முகநூல்  குழுவில் கூட   இன்னும் அவரிடம் படித்தவர்கள் என்னோடு பேசி, அவரைப் பற்றி பெருமையாக சொல்லும்போது ''அப்பா '' என்று ஒருவார்த்தை நன்றியோடு உள்ளே எங்கிருந்தோ நாக்கு நுனி வரை வருகிறது. நான் SSLC படிக்கும்போது அவரிடம் சந்தேகங்கள் கேட்டு ஆங்கில பாடம் சொல்லி கொடுத்தது ஞாபகம் இருக்கிறது. 

எங்கள் குடும்பம் சங்கீதம் தெரிந்தவர்கள் கூட்டம்.   அப்பாவுக்கு  சைக்கிள் விட தெரியாது. எங்கும்  கடைசிவரை  நடை.  கடைசி  சில வருஷங்கள் மட்டும்  கைத்தடி.   

தலைப்பாகை, பஞ்சகச்சம், ஜிப்பா, மூக்கு பொடி , அங்கவஸ்திரம். வடபழனி, அப்புறம் சூளைமேட்டிலிருந்து நுங்கம்பாக்கம் வரை வழியெல்லாம் ஸ்லோகங்கள் சொல்லிக்கொண்டே நடப்பவர் பின்னால் ஓடிக்  கொண்டே பள்ளிக்கூடம்  நடப்போம். அவர் வேகமாக நடப்பவர். 83 வயது வரை நடந்தவர். அவரைக் கண்டால் எங்கள் கன்னிகா காலனி குழந்தைகள் எல்லோருமே ஓடிவருவார்கள். இடுப்பில் வேஷ்டியில் கடலை மிட்டாய், சின்ன சின்ன கலர் கலர் மிட்டாய்கள். பொறி, வேர்க்கடலை ஏதாவது எல்லோருக்கும் எடுத்து கொடுப்பார். என் வீட்டு வாசலில் கிழக்கு மூலை வேப்ப மரத்தடியில் ஈஸி சேரில் EASYCHAIR ல் அமர்ந்து ஹிந்து பேப்பர் படிப்பார். எழுதுவார். பழைய டயரி பேனா கொடுத்தால் போதும் அடித்தல் திருத்தல் இல்லாத இல்லாத பரிசுத்த ஆங்கிலத்தில் சொற்கள் நர்த்தனம் புரியும்.  அவரிடம்  அறிவுரை, கதைகள்,  இங்கிலிஷ் சமஸ்க்ரித அர்த்தங்கள்,  தமிழில்  பாடல்கள்  கேட்க  வருபவர்கள் நிறையபேர்.  

சந்தோஷ நேரங்களில் வாய் விட்டு  பல கீர்த்தனைகள் பாடுவார் குரல் கணீரென்று இருக்கும்  ஆங்கில கையெழுத்து  அழகாக  நடுக்கமின்றி கடைசிவரை இருந்தது.  எழுத்துக்கள் அடித்தல் திருத்தலின்றி எண்ணங்கள்    சீ ராக  எழுத்து வடிவாகும். தமிழிலும்  அழகாக எழுதுவார்.  ஆங்கிலமும்  தமிழும் தங்கு தடையின்றி பிரவாகமாக சிந்திக்கவைக்கும் பேச்சு. 

1975ல்  அவருடைய  அப்பா அம்மாவின் சதாபிஷேகம்  நங்கநல்லூரில் எங்களால் முடிந்தவரை விமரிசையாக கொண்டாடினோம் என்ற சந்தோஷம் மனதை நிறைக்கிறது.  நாங்கள்  நான்கு சகோதர்கள்  அவரவர் மனைவியரோடு உறவினரோடு பேரக்குழந்தைகளோடு சேர்ந்து கொண்டாடினோம் அல்லவா. 

அப்பாவுக்கும் எனக்கும்   44 வருஷங்கள் வித்யாசம் என்பதால் அப்பாவை  அதிகம் அருகில் அனுபவிக்க அவருக்கும் எனக்கும்  நேரம் போதவில்லை,  என் ஒரு ஆசை, அப்பா  நீ அடுத்த ஜென்மத்திலும் எனக்கு அப்பாவாக வா.  உன்  சின்னவயசிலேயே பிறக்கணும். உன்னோடு விளையாடணும் . உன் பெயர்  JK வை என் பெயரோடு சேர்த்து எழுதும் பெருமை தந்ததற்கு நன்றி அப்பா.

sivan jaykay

unread,
Jul 26, 2020, 8:18:18 PM7/26/20
to amrith...@googlegroups.com
செம்மங்குடி                    J K  SIVAN 
ஆதிகேது ஸ்தலம்

                                                                                                    
                                                                                                                ஏன்  இப்படி ?


கண்ணில் ரத்தம் வழிய என்று சொல்வோமே. அதை அனுபவித்ததுண்டா என்று கேட்டால் அதை முற்றிலும் அனுபவித்தேன் என்று நான் தைரியமாக சொல்ல ஒரு சந்தர்ப்பம்   2018  செப்டம்பர்  4ம்  தேதி  அன்று சீர்காழி அருகே ஒரு கிராமத்தில் கிடைத்தது.     சிறிய  கிராமம். ஒன்று இரண்டு பஸ் ஓடுகிறது. நிறைய மரம் அடர்ந்த குறுகிய கிராம சாலைகள்.  ஒரு பெரிய சக்தி வாய்ந்த பிடாரி கோவில்.    அது தவிர இன்னொரு அம்மன் கோவிலும்  இருக்கிறது.     அதன் அருகே ஒரு பஞ்சாயத்து நிர்வாக பள்ளிக்கூடம்.   

பிரவுன் கலர் பாவாடை, அரை நிக்கர்,   காவி கலர் மேல் சட்டை அணிந்த சிறுமிகள்,  சிறுவர்கள் பையை முதுகில் சுமந்தவாறு தெரு வெல்லாம் விளையாடிக்கொண்டு காலை எட்டரை மணிக்கே காணப் படுகிறார்கள்.     நிறைய குழந்தைகள் வெறும் காலோடு நடக்கின்றனர். 

செம்மங்குடி  என்று அந்த அந்த ஊர் பெயர் அறிந்ததும்   ஒரு பிரபல கர்நாடக வித்துவான் சம்பந்தப்பட்ட ஊரோ என்று எதிர்பார்த்த பின் ஏமாந்தேன்   . ஏனென்றால்  அந்த  செம்மங்குடி   வேறு.   அது கும்பகோணம் பக்கம் இருக்கும்  வித்துவான் பிறந்த ஊர். 

இந்த செம்மங்குடி சீர்காழி அருகே நான்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் வயல்களுக்கு இடையே ஒளி ந்து
கொண்டிருக்கிற அமைதியான ஊர்.

இந்த ஊருக்கு மிகப்பெரிய சொத்து நாகநாத சுவாமி ஆலயம். கேது பகவான் க்ஷேத்ரம். கேது யார்? திருப்பாற் கடலில் அம்ருதம் உண்டானபோது தேவர்கள் அதை மஹாவிஷ்ணுவிடமிருந்து பெற்றபோது ஒரு ராக்ஷஸன் தேவர்கள் போல உருவம் கொண்டு அதை உட்கொள்வதை சூரிய சந்திரர்கள் கண்டுபிடித்து , அம்ருதம் உட்கொண்ட அந்த ராக்ஷஸன் சிவனால் தலை துண்டிக்கப்பட்டு அவன் தலை விழுந்த இடத்தில் ஒரு பாம்பின் உடலோடு, உடல் விழுந்த இடத்தில் பாம்பின் தலையோடும் ராகு கேதுவாகிறான்.   தன்னை காட்டிக் கொடுத்த சந்திரன் சூரியனை அவன் பழிவாங்குவது தான் கிரஹணம் என்று ஐதீகம்.  சயன்ஸ் வேறு ஏதாவது சொல்வதை பற்றி அக்கறை இல்லை.  
 பாம்பின் தலையோடு மனித உடலோடு இருப்பது கேது. 
மனித தலையோடு பாம்பின் உடல் கொண்டது ராகு.

செம்மங்குடியில் கீரநல்லூர் சாலையில் இந்த கேது ஆலயம் உள்ளது. செம்மங்குடியில் மனித உடல் விழுந்து பாம்பின் தலையோடு கேது உருவான இடம் ஆதி கேதுஸ்தலம்.  எந்த நவகிரஹ  க்ஷேத்ரமானாலும் அது ஒரு சிவன்  ஆலயமாகத் தான் இருக்கும்.   செம்மங்குடியில் சிவன் பெயர் நாகநாத சுவாமி. அம்பாள் கற்பூரவல்லி . புராதன ஆலயம். செம் பாம்பு குடி தான் செம்மங்குடி ஆயிற்று என்கிறார்கள்.

சீர்காழியில் சிரபுரம் என்ற பகுதியில், ராகுஸ்தலமும் உள்ளது. அங்கு  அம்பாள் பெயர் பொன் நாகவள்ளி சிவன்  நாகேஸ்வரமுடையார்.  அந்த கோவிலை பற்றி அப்புறம் எழுதுகிறேன்.

கண்ணில் ரத்தம் விஷயம் இனி துவங்குகிறது. செம்மங்குடி நாகநாதசுவாமி கோவிலுக்கு உள்ளூர்க்  காரர்களே வருவதில்லை என்று நம்பகமான தகவல் அந்த கோவிலை பராமரிக்கும் ஒரு பால்காரர் வீட்டு பெண்கள் கூறியபோது வருத்தமாக இருந்தது.   கோவில்களை புறக்கணிப்பது நமக்கு நாமே  செய்து கொள்ளும் துரோகம்.  

அந்த   பாமர  இன்னசன்ட்  பெண்கள் சொன்னது பொய்யல்ல என்பதை  அந்த கோவிலை சுற்றி பிரகாரத்தில் உள்ள பிள்ளையார் சந்நிதி, தக்ஷிணாமூர்த்தி கோஷ்டம், நாகநாதர் சிவன். கற்பூரவல்லி அம்பாள் சந்நிதிகளுக்கு  செல்ல முடியாதபடி பாதங்களை துளையாக்கிய  படர்ந்த   நெருஞ்சி முள் குடும்பம்
 புரியவைத்தது .  உழவாரப்பணியார்களே இந்தப்பக்கம் கொஞ்சம்   வாருங்களேன். அடிக்கடி பக்தர்கள் வந்து நடந்தால் நெருஞ்சிமுள் எங்கிருந்து வரும்? எத்தனையோ உழவாரப்பணி அன்பர்கள் ஊர் ஊராக சென்று சேவை செயகிறவர்கள் இந்த ஆலயத்துக்கும் அவசியம் செல்லவேண்டும். பிரகாரத்தில் நடக்க வழி ஏற்படவேண்டும்.

நான் அங்கு தென்பட்ட ஒரு சில வயதானவர்களை கெஞ்சி கேட்டுக்கொண்டேன். அந்த ஆலயத்திற்கு அடிக்கடி பக்தர்கள் வரும்படியாக விளக்கேற்றி குழந்தைகளை வைத்து தேவாரம் திருவாசகம், திருவருட்பா மாலையில் சொல்லி தாருங்கள், சுண்டல் அவல் பழங்கள் போன்ற தின்பண்டங்களை நைவேத்தியம் செயது பிரசாதமாக கொடுங்கள் என்றேன்.

செவ்வாய்கிழமை என்பதால் நாங்களே விளக்கேற்றி வழிபட்டோம். நாகநாதர், அம்பாளுக்கு விளக்கு ஆரத்தி காட்டி சில அகல்விளக்குகள் ஏற்றி, ஸ்லோகங்கள் சொல்லி நிறைய அங்கே கிடைத்த புஷ்பங்களை சாற்றினோம். நாகநாதர் கற்பூரவல்லி அம்பாள் படம் இத்துடன் இணைத்துள்ளேன்.

அம்பாள் சந்நிதி சிறியது. குனிந்து உள்ளே தலை நீட்டி அபிஷேகம், அர்ச்சனை செய்யவேண்டும். ஒரு மின்சார பல்பு தொட்டாலே மின்கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலையில் இருப்பதை அந்த ''தர்மகர்த்தா'' பெண் சொல்லியபோது அதிர்ச்சியாக இருந்தது. இதை உடனே யாராவது கவனிக்க கூடாதா?

கண்ணில் தென்பட்ட பெரியவர் ஒருவரிடம் விண்ணப்பித்தேன். அவ்வளவு பெரிய கிராமத்தில் ஒரு மின்சார தொழிலாளர் இல்லாமலா போய்விடுவார்?  சீர்காழி மிகப்பெரிய பிரபல நகரம் அங்கிருந்து நான்கு ஐந்து கி.மீ. தூரத்தில் தானே இருக்கிறது. அங்கிருந்து வருவது கூடவா கடினம்? யாரோ ஒரு அர்ச்சகர் வருவதாக சொன்னார்கள்  அந்த குடும்பத்தார்.

சாவி அந்த பால்காரர் வீட்டில் இருந்ததால் எங்களைக் கண்டதும் அந்த பெண் கதவை திறந்து விட்டாள். அந்த கோவிலின்    தன்னாக்கத்தொண்டு   'தர்மகர்த்தாவாக'' நான் அவளை வணங்கினேன். புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அவள் உதவாவிட்டால்  ஆதி கேது க்ஷேத்ரம் தரிசிக்கும் பாக்யம் எனக்கு கிட்டியிருக்காது. மறுபடியும் நான் எப்போது அங்கே செல்வேனோ?  ஒருவேளை  அடுத்த ஜென்மத்தில் பாக்யம் கிடைத்தால்!

சீர்காழி பக்கம் செல்பவர்கள் அவசியம் செம்மங்குடி சென்று கேது பகவானை தரிசித்து வாருங்கள்.
எல்லோருக்கும் சொல்லுங்கள். இன்னொரு அற்புதமான கோவிலை வெகு சீக்கிரம் மற்றவர்களுக்கு இழக்கவேண்டாம் என்று நெஞ்சில் ஒரு அச்சம் எழுகிறது..

 (இது  நான் இந்த கோவிலை பார்த்து விட்டு  ரெண்டு வருஷங்களுக்கு முன்பு எழுதியது.  யாராவது இப்போது  சென்று பார்த்துவிட்டு,  அருகே சீர்காழியில் இருப்பவர்களுக்கு  முடிந்தால்  போய் பார்த்து விட்டு  தற்போதைய நிலைமை பற்றி சொல்வீர்களா?)

sivan jaykay

unread,
Jul 26, 2020, 8:18:18 PM7/26/20
to amrith...@googlegroups.com
                                                             குழலின்  தத்துவம்   J K  SIVAN   

நான்  எது எழுதினாலும்  அதில் கண்ணனோ, அவன் குழலோ இடம் பெறாமல் இருந்ததில்லை. எங்கோ எப்படியோ அவை இடம் பெற்றுவிடுகிறது.  அது எனக்கு அவன் தந்த அனுக்கிரஹம் என்று எடுத்துக் கொள்கிறேன். 

கிருஷ்ணன்   யமுனையில்   ஆயர்பாடி  சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்தான்.  கண்ணன் விளையாடி பொழுது போக்கவா அவதாரம் எடுத்தான். இல்லை.  அவன் தீராத விளையாட்டுப் பிள்ளையாக காட்சி அளித்ததன் காரணம் எதையும் அவன் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளாமலேயே  கச்சிதமாக  காரியத்தை முடித்துவிடுவான்.  நாரதன் கலகத்தின் பின்னால் ஏதேனும் ஒரு நன்மை இருக்கும். அதுபோல் கிருஷ்ணனின்  சிறு செயல்களிலும்  ஒரு தத்துவம் ஒளிந்து கொண்டிருக்கும். 

இதோ யமுனைக்கரையில்  ஒரு கூட்டம்.   யமுனையில் குதித்து  கண்ணன்  தனது நண்பர்களோடு நீந்தி விளையாடுகிறான்.    கரையில்    அவனுடைய   வஸ்திரங்கள்,   புல்லாங்குழல்,  அவன்அணியும்  மணி மாலைகள்   அவன்  நதியிலிருந்து அவன் வர காத்திருந்தபோது  தான் இது  நிகழ்ந்தது.

“நம்  அனைவரிலும் யார்  விலையுயர்ந்தவர்கள்,   யாருக்கு  மதிப்பு  ஜாஸ்தி?”  இந்த கேள்வியை எழுப்பியது  விடை தெரிந்த அவனுடைய  பீதாம்பரம்.    தான்  விலை யுயர்ந்தவன்  தனக்கே மதிப்பு  அதிகம்  என்ற   கர்வம்  அதன்  கேள்வியிலேயே  தெரிந்தது. 

 இதைக் கேட்ட  அவனது நவரத்ன மணிமாலை சும்மா இருக்குமா?  “ ஏன் உனக்கு தெரியாதா பீதாம்பரமே,  என்னை  ஆயர்பாடி  கோபியர்கள் எங்கிருந்தெல்லாமோ  சேகரித்து  கோர்த்து கிருஷ்ணனுக்காக செய்தது. ஆகவே  உன்னைப்போல  எளிதில் என்னை  மதிப்பிட முடியாது. எனக்கு  என்ன  விலை  என்பதே  எவருக்கும் தெரியாது....”
  
புல்லாங்குழல்  பேசாமலேயே  இருந்தது.   இரண்டின் பார்வையும்  அதன் மேல் சென்றது. வம்புக்கு
புல்லாங்குழலை இழுக்க தயாரானது. 

“இந்த  மூங்கில்  குழாய்க்கு  என்ன மதிப்பு போடலாம்?” என்று  கண்ணனின்  வஸ்திரம் மணிமாலையை  கேட்டது.

“எதாவது இருந்தால்  தானே  போடுவதற்கு”  என்று  அது பதிலளிக்க   இரண்டும்  கேலியாக  சிரித்தன.

அருகில்  மரத்தடியில்   ஒரு  முனிவர்  தவம் செய்து கொண்டிருந்தவருக்கு  இந்த  சம்பாஷணை காதில் விழுந்தது.  அவர் அங்கிருந்தே  வஸ்திரம், மணிமாலை ரெண்டையும் நோக்கி  பேசினார்:

''மதிப்பு  பற்றி பேசும்  மதியிலிகளே  இதை கேளுங்கள்:

நீங்கள்  நினைப்பது போல்  இந்த  மூங்கில் குழாயான  கண்ணனின் புல்லாங்குழல்  அற்பமானதல்ல.
கண்ணன் குழல்  இசைக்காத போதும்,மற்ற  பிள்ளைகளோடு  விளையாடும்போதும்,  ஆவினங்களிடம்  கோபியர்களுடனும் அவன்  சல்லாபிக்கும்போதும்  அவன்   இடுப்பில்  அது  ஏன்  எப்போதும்  அவனை விட்டுப் பிரியாமல் 
குடிகொண்டிருக்கிறது ?  யோசித்தீர்களா? 

 அவன்  அதை ஏன்  தனக்கு  பிடித்த  பொருளாக உபயோகிக்கிறான் என்றாவது உங்களுக்கு  தெரியுமா?”

''அவன்  கையிலிருக்கும்  இந்த  குழல்  தான்  உலகில் அனைவரும்.   இந்த குழலில்  எட்டு  துளைகள் இருக்கிறதே,  அதுவே  நம் 8  உறுப்புகள் -  கண்கள், காதுகள்  மூக்கு,  நாக்கு, சருமம், புத்தி, மனம், அஹங்காரம் ( இது தான் நான்  மற்றவனை காட்டிலும் வேறானவன் என்று  நினைக்க வைக்கிறது) 

 கிருஷ்ணன் வாசிக்காதபோது  வெறும்  காற்று   தான்  உள்ளே  நுழைகிறது.    அது குழலிலிருந்து
தானாக  வெளியேறினால்  ஏதோ ஒரு சப்தம் தான் வரும்  இசை வராது.  மூங்கில் காடுகளில் சுநாதமா வெளிவருகிறது ? 

 நம்மை  கண்ணனுக்கு  அர்ப்பணம் செய்து  அவனே  நமது  வழிகாட்டி  என  உணர்ந்தால்  நம்மில்  அபூர்வ நாதங்கள்  தோன்றும். அதுவே  அவன்  வாசிக்கும்  இசை.  நாம்  அவன் மூலம், இயங்கினால்  நம்முடைய, கோபம், தாபம், நேர்மையின்மை, வெறுப்பு, அசூயை, எல்லாம்  காலியாகி, அவன்  நம்மை  உபயோகித்து இசைக்கும்  “தெய்வீகம்”  நமது  வாழ்க்கை ஆகிறது.   இதுவே புல்லாங்குழல் தத்துவம்.   

மஹா  பெரிய ஞானிகளும் முனிவர்களும்  ரிஷிகளும்  இத்தகைய  புல்லாங்குழல்கள்.  அவர்கள்  மூலமே   நாம் ஞானம் பெறுகிறோம்.  மேன்மையுருகிறோம். பரமானந்தம்  பெறுகிறோம்.  

இதைகேட்ட  புல்லாங்குழல் கர்வத்தோடு  சிரிக்கவில்லை.  அப்போதும்  அமைதியாக கண்ணனின்  வரவுக்காக  காத்திருந்தது.

இனியாவது  நாமும்   நம்மை  அவனது  புல்லாங்குழலாக மாற்றிக்  கொள்ளமுடியும் 

sivan jaykay

unread,
Jul 26, 2020, 8:19:16 PM7/26/20
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி  21                       J K   SIVAN 
தாகூர் 


                                                              21  ''சப்த'' ஸ்வரம்

 21  I must launch out my boat. The languid hours pass by on the shore---Alas for me!
The spring has done its flowering and taken leave.
And now with the burden of faded futile flowers I wait and linger.
The waves have become clamorous, and upon the bank
in the shady lane the yellow leaves flutter and fall.
What emptiness do you gaze upon!
Do you not feel a thrill passing through the air
with the notes of the far-away song floating from the other shore?

கிருஷ்ணா, உனக்கு தெரியுமே,  அரை நூற்றாண்டுகளுக்கு மேல் எனக்கு கப்பல்களோடு இணைந்த  வாழ்க்கை. ஆமாம்  என்  எண்பது  வருஷத்தில் அது  பெரும்பகுதி.  கடலும்  அதன் மேல் மிதக்கும் கப்பலும் எனக்கும் என் குடும்பத்துக்கும்  சோறு போட்டது.  நிச்சயம் நெருங்கிய உறவு.  உப்புக்கரிக்காத இந்தஉறவில்  நீயும்  இனிப்பவன் . அப்பப்போ  கிருஷ்ணா என் மனதில்  நீ  வந்து போன காலம் அது. வாய். இப்போது  முழு நேரமும் நீயே.....
''உஸ்,  அப்பாடா.... வசந்தகால தென்றலே வா  வா... ஜிலு ஜிலுவென்று  குளிர்ச்சியாக என் மேல்  படரு. 

''வசந்தமே   உன் காலம்  முடிந்துவிட்டதா.?  எங்கும் பூத்துக் குலுங்கச் செய்துவிட்டு  மரங்களை செடிகளை உலுக்கி  காய்ந்த மலர்களை  என்னருகே  உதிர்த்துவிட்டு போய்விட்டாயா?.  நான் இனி  மலை போல் சேர்ந்துவிட்ட  இந்த   உலர்ந்த, வாடிய மலர்களை,  வாடிய இதழ்களை  பெருக்கி  அள்ளி  தூர வீசவேண்டிய வேலையை வைத்தாயா? 

''ஆஹா  வாடி வதங்கிய  அருமை  மலர்களே,  மலர்ந்து  சில மணிகள் தான் உங்கள்  குறுகிய வாழ்க்கை  சரித்திரமா?

''கிருஷ்ணா  எனக்கு  நேரமாகிவிட்டதடா.  வெகுநேரம் வெயிலில்  சுடு மணலில்  படகை சுத்தம்செய்து சோர்வாகிவிட்டது.  கரையில்  படுத்துக் கிடப்பது சோம்பேறியாக்கி விட்டதடா. படகை இழுத்து  கடலுக்குள் தள்ளி  ரொம்ப  தூரம் செல்லவேண்டும்  
என் படகை  இழுத்து நீரில் இறக்குவதே சிரமம்.    இன்று காற்று  பலமாக  வீசுகிறது. மழை வரபோகிறது.  வரட்டுமே. இது என்ன புதிய அனுபவமா? கரையில் துவண்டதெல்லாம் அங்கேயே இருக்கட்டும். 

ஒய்வு ஒழிவு இல்லாத நிம்மதியற்ற, அமைதி அறியாத அலைகள்  ஓவென்று கூச்சலிட்டு எதிரே  கொந்தளிக் கிறது.  கொப்புளிக்கிறது   இனம் புரியாத ஒரு இரைச்சல். நான்  கடலில் காற்றின் உதவியில் நீண்ட தூரம் சென்று விட்டாலும்  கரையைத் திரும்பிப்  பார்க்கிறேன்.   தூரத்தில்  இருந்து பார்க்கும்போது எல்லாம் எப்படி சிறிதாக மாறியது? .  எங்கோ வெகுதூரத்தில் நிற்கும் அந்த வயதான பூவரச பூமரம் காற்றில் கிளைகளை தலை   விரித்தாடுவது போல்  ஆட்டி  காய்ந்துபோன மஞ்சளாக மாறிய இலைகளையும்  வாடிய பூக்களையும் பாவாடை விரித்திருப்பது  கண்ணில் படுகிறது.  

என்னைச்  சுற்றி  அலையின் சப்தமும் இல்லை, எல்லையற்ற  நீர்.  எல்லையில்லாத அமானுஷ்யம்.  எதை நான் வெறித்துப்  பார்க்கிறேன்? நடு முதுகெலும்பு தண்டுக்குள்  ஊசி ஏற்றுவது போல் சில்லென்ற  குளிர் பாய்கிறது
.கிருஷ்ணா,  உனக்கில்லாத  அனுபவமா.  அகண்ட கடல் போல் யமுனையில் பிறந்து வளர்ந்து ஆடியவனா
யிற்றே. காற்றில் இப்படி அலைகளின்  ஓயாத   சப்தத்தை  சப்தஸ்வரமாக்கி  காற்றின் ஒலியை  தாளமாக வைத்து  உன் குழலோசை  இசைக்கும்  சுநாதம் எங்கோ  எதிர்க்கரையில்  மரங்களிடமிருந்து மிதந்து  வந்து மெல்லிதாக என் காதில் விழுகிறது.  ஓஹோ  நீ  அங்கே இருக்கிறாயா? '' 

sivan jaykay

unread,
Jul 27, 2020, 8:31:09 PM7/27/20
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்    J K  SIVAN  

                                                                      பாட்டி  பெற்ற தரிசனம் 

மஹா  பெரியவாளை   பக்தர்களிடையே பரப்பிய  பெருமை  ஸ்ரீ  ரா.  கணபதிக்கு  தான்  உண்டு.  பெரியவா செயல், சொல்  இரண்டையும்   எழுத்திலே படமாக்கி  ஸ்புடம் போட்டு கொடுத்த  பெருமைக்கு வேறு யாரும்   எளிதில் சொந்தம் கொண்டாடமுடியாது.

அடேயப்பா!     உலகெங்கும்  அந்த  ''தெய்வத்தின் குரல்''  ஒலிக்க  செய்தவர் கணபதி. பெரியவரின் ஞானத்தை
 புரிந்துகொள்வது எல்லோராலும் முடியாது. அதை தவறில்லாமல் வெளிக்  கொணர்வது அதனிலும் கஷ்டம்.   ஏழு பாகங்களை கொண்ட  தெய்வத்தின் குரலை  எத்தனை தரம் படித்தாலும்   ஞான தாகம் தீராது.

நான் சொல்லும் இந்த சம்பவம் எப்போது எங்கு நடந்தது?    காஞ்சி ஸ்ரீமடத்திலா?   ஒருவேளை  திருச்சி   நேஷனல் காலேஜ்  ஹை ஸ்கூல் வளாகத்திலோ?  அல்லது   ஒரு வேளை   மஹா பெரியவா மதுரைக்கு சென்றபோது அங்கே  சேதுபதி ஹை ஸ்கூலிலோ?  சரியாக   ரா.  கணபதிக்கு கவனமில்லை என்றாலும் சம்பவம் கச்சிதமாக ஞாபகம் இருக்கிறதே.  அதைத்தான்  இன்று தொடுகிறேன். 

எங்கே பெரியவா இருந்தாலும், சென்றாலும், அங்கே   பக்தர்கள் எறும்பு சாரி மாதிரி  வரிசையாக நிற்பார்கள்.   நான் சொல்லும் சம்பவத்தன்று  அப்படி நீளமாக நின்ற  பக்தர்கள் வரிசையை   மேற்கொண்டு நகராமல்  திடீரென்று  அணுக்க தொண்டர்கள் நிறுத்திவிட்டார்கள்.  மஹா பெரியவா தரிசனம் இன்னும்  ஆரம்பிக்கவில்லை,  உள்ளே  ஏதோ  முக்கிய காரியம்.  ஆகவே   இன்னும்  பெரியவா வெளியே வரவில்லை.    ஆகவே  இன்னும் அரைமணி நேரமாவது  காத்திருக்க வேண்டும். பெரியவா தரிசனம் என்பது அவ்வளவு  எளிதல்ல, சுலபமில்லை.

வரிசையில் முன்னால்  ஒரு வயதான  குடுகுடு பாட்டி  நின்று கொண்டிருந்தாள்.   வயசான  என்று அழுத்தமாகவே சொல்கிறேன்.  நூறு வயதுக்கு மேல் இருக்கும் போல் இருக்கிறது. வயதானவர்களுக்கு எல்லாம் வயதானவள் . ''ட ''  கவிழ்த்து போட்ட மாதிரி முதுகு உடம்பிலிருந்து வளைந்திருந்தது.   கையில் ஒரு கம்பு, அது கிடுகிடுவென்று  ஆடுகிறது.  கால்  தள்ளாடுகிறது. கண் சரியாக தெரியவில்லை..வலதுகையை   உயர்த்தி இரு புருவங்களை மூடியவாறு உற்று பார்க்கிறாள்.   கண்களில்  தாரை தாரையாக  கண்ணீர்.  

''சங்கரா சங்கரா''  என்று  அவள் குரல் அமைதியாக  பக்தர்கள் நின்ற அந்த வரிசையில்  ஸ்பஷ்டமாக கேட்கிறது.  நீங்களும் கேளுங்கள்: 

''சங்கரா,  என் சங்கரா,    உன்னை பார்க்கமுடியாமல் போயிடுமோ என்று கவலைப்பட்டேண்டா. பார்க்காமலே போயிடு வேனோ என்கிற  பயம் டா  எனக்கு .      என்னப்பா  அதை புரிஞ்சுண்டு  நீயே   நான் இருக்கிற இந்த ஊருக்கு   வந்துட்டியே. சந்தோஷம் டா. உன்னைப் பார்க்க தாண்டா முடியாம ஓடிவந்தேன் . ஏண்டா,    சங்கரா  இப்படி வந்தவளை   உன்னை பார்க்கமுடியாம  நிறுத்தி வைச்சுட்டியேடா?''    அவள் குரல் எல்லோரையும்  திக்கு முக்காட வைத்தது. அவ்வளவு உரிமையா பெரியவா மேல்?     மரியாதையில்லாமல்  ஏக வசனத்தில் பேசுகிறாளே!! 

அப்போது ஸ்ரீ சாம்பமூர்த்தி சாஸ்திரிகள்  உள்ளே பெரியவாளை பார்க்க போய்க்கொண்டிருந்தார்.  சாம்பமூர்த்தி சாஸ்திரிகள்  மஹாபெரியவாளின் பூர்வாஸ்ரம  தம்பி.   ரொம்ப  தங்கமானவர், தாராள மனசு.  கிழவியின் குரல்  காதில் விழுந்ததும்  திகைத்தார்.   விறுவிறுவென்று உள்ளே  சென்றார்.  

உள்ளே  யாருடனோ மகா பெரியவா பேசிக்கொண்டிருக்கிறார்.   சாம்பமூர்த்தி எதிரே வந்து கைகட்டி நின்றதும்  பார்வையினால்  தலையசைத்து  என்ன விஷயம் என்று கேட்கிறார் 

''வெளியே ரொம்ப வயசான  ஒரு பாட்டி,   நூறு  நூற்றிஇருபது வயசு இருக்கும் போல இருக்கு.    பெரியவா தரிசனத்துக்கு  காத்திண்டு  அழுதுண்டு இருக்கா''   ......   சாம்பமூர்த்தி சொல்லி முடிக்கவில்லை.   மகா பெரியவா விருட்டென்று எழுந்தார். 
வெளியே  வந்துவிட்டார். 

'' ஏண்டா சங்கரா ,  என்னை நிறுத்தி நிக்க வெச்சுட்டே...... ''பாட்டி விடாமல்  இந்த கேள்வியை கேட்டுக்கொண்டே இருந்தாள் .  யாரும் அவளை வாயை மூடு என்றோ அப்படி எல்லாம் பேசாதே என்று சொல்ல முயலவில்லை.  அவள் உருவம் வயது அதை அனுமதித்தது...

இந்த  கூக்குரலை கேட்டுக்கொண்டே  பெரியவா அவளை நெருங்கினார். 

''பாட்டி ,  சங்கரன் இதோ வந்துட்டேன் உன்கிட்டே.  நன்னா  பார்.  நீ வந்திருக்கேன்னு தெரியாது எனக்கு. உள்ளே  ஏதோ முக்கியமான வேலையா இருந்துட்டேன்.  நீ வந்துருக்கேன்னு இப்போ தான் தெரிஞ்சுது. உடனே உன்கிட்டே  ஓடி வந்துட்டேன். ''
பாட்டி காது கொஞ்சம் மந்தம்னு எப்படி தான் பெரியவாளுக்கு தெரியுமோ, கொஞ்சம் உரக்கவே  பேசினார். 

அவர் குரலை கேட்டதும்   பரமானந்தம் பாட்டிக்கு . அவர் குரல்  காதில் மதுரமாக  பாய்ந்தது . 

''வந்துட்டியா சங்கரா.... வெறும் எலும்புக்கூடாக இருந்த   இரு  கைகள் நீண்டது... மஹா பெரியவா கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டது..... யாரும் பெரியவாளை  நெருங்கி தைரியமாக அப்படி  தொட்டதில்லை...

பெரியவாளுக்கு  ஒரு கணம்  தனது அம்மா மஹாலக்ஷ்மி கைகள் தன்  கரங்களை பிடித்துக்கொண்டது போல் இருந்தது.  அவளுக்குப்   பிறகு யாரும் அவரை தொட்டதில்லையே.  அடேயப்பா  55 வருஷங்களாகிவிட்டதே அந்த ஸ்பரிசம் பட்டு.

தலையை உயர்த்தி , கிட்டே வந்து,   பெரியவா முகத்தை பார்த்தாள்  பாட்டி.   

''வ்ருத்தாம்பிகா'' (வயதான  தாயே)..........         பெரியவா வாய் முணுமுணுத்தது..

''அப்பா  நீ  எனக்காக ஓடிவந்தாயா.  என்னை பார்க்க வந்தாயா,  உன்னை   சரியா பாக்கமுடியலேடா சங்கரா. என் கண் பொட்டயாயிடுத்தேடா... என்னப்பா.....      உன்னை பார்க்க, தரிசிக்க,  எனக்கு கொஞ்சம் த்ரிஷ்டி , (கண் பார்வை)   தருவியா?

அப்போ  சுள்ளுனு  உச்சி வெயில் நேரம்...   பக்தர்கள் வரிசை   இரு சுவர்களுக்கு இடையே  நின்றது..   கொஞ்சம் வெளிச்சம் இல்லாத இடம்.   மேலே  தென்னை ஓலை பந்தல் வேறே..   நிழல் கட்டி இருட்டாக இருந்தது.  வரிசையாக நிற்பவர்கள் மேல் வெயில் துன்பம் இல்ல்லாமல்  இருக்க  இந்த ஏற்பாடு செயதிருந்தது.

பெரியவா இதை கவனித்துவிட்டு  கொஞ்சம்  விலகி  வெளியே  சூரிய வெளிச்சம் தன்  முகத்தின்  மேல் படும்படி  நகர்ந்து வெறும் காலோடு சுடும்  உச்சி வெயிலில் நின்றார். 

''பாட்டி இப்போ  பார்  என் முகம் தெரியறதா உனக்கு  பாரு  ?''

" இப்போ  உன் முகம் என் கண்ணுக்கு தெரியறதுடா கண்ணா,   திவ்யமா உன்னை தரிசிக்கிறேன்''   இரு கரங்களால் தனது ஒட்டிய எலும்பு கன்னக்குழிகளில்  பட்  பட்டென்று  அறைந்து கொண்டாள் .  அவ்வளவு பக்தி .

சூரிய வெளிச்சம் தனது முகம், தலை, கண், காது, மார்பு வயிறு , திரும்பி நின்று  முதுகு, என்று உடல் முழுதும்  சூரிய வெளிச்சம் பட்டு அந்த பாட்டியின் கண்ணுக்கு  தெரியும்படியாக நின்று  குனிந்து வளைந்து எல்லாம் தரிசனம் கொடுத்தார். 
மஹா பெரியவா. 

ஆனந்தமாக  பாட்டி என்னவோ சொல்ல அவள்  மனமெல்லாம் இனித்தது.  அவள் ஆனந்த பரவசத்தில் இருந்தாள் .  மஹா பெரியவா அவளிடம் கேட்டார்: 

''பாட்டி,    நீ  என்னை பார்க்க விரும்பினே.   பார்த்துவிட்டாயா,  நான்  கொஞ்சம் முக்கியமான வேலையாக  உள்ளே போகட்டுமா?''

''ஆஹா  நான்  கண்ணார உன்னை  பாத்துண்டேண்டாப்பா,  என்னை மாதிரி ஒரு அனாமதேயத்து   மேலே கூட   கருணை வெச்சு  உன் தரிசனம் தந்தாயே  என் அப்பா,  இந்த உசிரை கையிலே பிடிச்சுண்டு இத்தனை நாள் இருந்ததே  இந்த சில  நிமிஷங்களுக்காக தான் பா.  இனிமே என்னை எடுத்துக்கோ, இனிமே  இந்த ஜன்மா  போறும்''  என்னை எடுத்துக்கோ. '' இரு கைகளை கூப்பி  பாட்டி  கதறினாள்''

''அதுக்கு நேரம் வரலை.   அதுவரை  பகவான்  நாம  ஸ்மரணை   பண்ணிண்டு இரு.  இப்போ  உன்னை ஜாக்கிரதையாக  கொண்டு போய் உன் வீட்டிலே விட சொல்றேன்.   அவசரப்பட்டுண்டு இது மாதிரி என்னை பார்க்கறேன்னு  ஓடி வராதே. நான் தான் எப்போவும் உன்னோடேயே இருப்பேனே. ஒரு க்ஷணம் கூட  அந்தண்டை இந்தண்டை போகமாட்டேன்.   போய்ட்டுவா பாட்டி '' என்று  அவளை அனுப்பி வைத்தார்  பெரியவா.   

மஹா பெரியவாளின்  காருண்யத்தை இந்த நிகழ்ச்சி ஒன்றே  விளக்குமே  மேலே என்ன சொல்ல இருக்கிறது?


sivan jaykay

unread,
Jul 27, 2020, 8:31:09 PM7/27/20
to amrith...@googlegroups.com
                                                             இது ஒரு அதிசயத்தின் கதை    J K   SIVAN 


உடுப்பி,  ஸ்ரீ மத்வாச்சார்யர்,  ஸ்ரீ கிருஷ்ணன்  இந்த மூன்றுமே  ஒன்றானவை.  ஒன்றை விட்டு இன்னொன்றை பிரிக்க முடியாது. நிறைய  விஷயங்கள் இவை சம்பந்தமாக  இருக்கிறது. எல்லாவற்றையும் நம்மால் ஒன்று சேர்த்து சொல்ல முடியாது. கண்கள் போதாது பார்க்க, செவிகள் தாங்காது கேட்க, பக்கங்கள் போதாது எழுத... ஆகவே அவ்வப்போது ஒவ்வொன்றாக  சில விஷயங்களை வெளியிடுகிறேன்.  சமீபத்தில் உடுப்பி ஆலயம் பற்றி எழுதியது  வாசகர்களுக்கு பிடித்தது என்று அறிய ரொம்ப மகிழ்ச்சி. இன்று ருசிகரமான ஒரு  கதை. உங்களில் அநேர்கருக்கு தெரிந்திருக்கலாம். அதனால்  என்ன. நல்ல விஷயம் எவ்வளவு வேண்டுமானாலும் 
திரும்ப திரும்ப ரசிக்கலாம். 

பீரே  கவுடாவுக்கும்  பீச்சம்மாவுக்கும்  பிறந்தவன் திம்மப்பா.   திம்மப்பாவுக்கு  கிருஷ்ணகுமாரியின் மீது  மோகம். அவளை  எப்படியாவது அடையவேண்டும்.  ஆனால்,  வேறொருவன்  குறுக்கே  போட்டிக்கு இருந்தானே!.  இருவருக்கும்  கொலை  சண்டை.  திம்மப்பாவுக்கு  கிருஷ்ணகுமாரியிடம் இல்லாமல்  கிருஷ்ணனிடமும்  எல்லையில்லாத பிரேமை.    

''திம்மப்பா,  கிருஷ்ணகுமாரி வேண்டாம்டா உனக்கு.  வேண்டாம் சண்டை.  விட்டுக் கொடு அவளை"  என்றான் கிருஷ்ணன். 

''சரிதான்  போடா,   கிருஷ்ணகுமாரி மீது எனக்கு இருக்கும் ஆசை உனக்கென்ன தெரியும்?''  என்று திம்மப்பா கிருஷ்ணனின் அறிவுரையை  நிராகரித்தான் .  கிருஷ்ணகுமாரியை தன்னுடையவளாக்க மற்றவனுடன் சண்டை தொடர்ந்தது.  பலன்?  திம்மப்பா  சண்டையில் தோற்று  உயிர்  தப்பியதே  கிருஷ்ணன் அருளால் தான்.     நன்றாக உடல் முழுதும் அடியும்  காயமுமாக  கீழே கிடந்த போது  தான்  ''சே  அப்போவே  கிருஷ்ணன் சொன்னானே கேட்காமல் போனோமே''   என்ற  தாபம் திம்மப்பாவை  அடியோடு மாற்றியது.

அதிர்ஷ்டவசமாக கிருஷ்ணபக்தர்  வ்யாசராஜர்  அவன் இருந்த  ஊருக்கு  அப்போது விஜயம் செய்தார்.   பஞ்சு  நெருப்போடு இணைந்துவிட்டது . திம்மப்பா  இப்போது கனகதாசா ஆகிவிட்டார்.  கிருஷ்ண ஸ்மரணையில் திளைத்தார். எண்ணற்ற  கிருதிகளை கண்ணன்  மேல் இயற்றினார், பாடினார், சமூக சீர்திருத்த சேவை, வேதாந்தம் ஆகியவற்றிலும்  ஈடுபட்டார்  சிறந்த  கிருஷ்ண பக்த துறவியானார்.

உடுப்பியை பற்றி நிறைய  கேள்விப்பட்டு, எப்படியாவது அங்கே சென்று  கிருஷ்ணனை  தரிசனம்  செய்ய  அவரது   ஆவல் அவரை சுண்டியிழுக்க உடுப்பி சென்றார். கிருஷ்ணன்  கோவிலுக்குள் செல்ல அனுமதி யில்லை.  ஏன்?  
பிறவியில்  அவர்  தாழ்குலம்  என்ற தடுப்புச்  சுவர்.

'' கிருஷ்ணா  என்   மனத்தில் உள்ள  உன்னை  வெளியே  இங்கு  கோவிலில்  கட்டாயம் பார்த்தே  ஆகவேண்டும்  என்று பிரயாசை பட்டார்.   உள்ளே செல்ல  முடியாது.  எப்படியோ  மெதுவாக  உள்ளே  நகர்ந்துவிட்டார்.  யாரோ பார்த்து  முறையிட   ஆலய  நிர்வாகத்தார்  குற்றம்   செய்ததற்காக அவர்  விழிகளை குருடாக்க கட்டளையிட்டனர்.  ஆனால்   அவரது தேனினுமினிய  பாடல்களை கேட்டு தண்டனையின்றி அவரை கோவிலை விட்டு வெளியேற்றினார்கள்.

அவர்  கோயிலின்  பின்னே  சென்று சுவற்றின்  பின்  நின்று  “ஹே. கிருஷ்ணா! “நான்  உன்  பக்தனல்லவா?  எனக்கு  உன்  தரிசனம் கிடைக்கவில்லையே.  பிறவிப்பயன்   என்னை உன் தரிசனம் கிட்டாமல்  செய்கிறதே!”  என  குமுறினார்.

இங்கு  தான்  இப்போது தான்,  அந்த அதிசயம்  நிகழ்ந்தது.  கிருஷ்ணன்  கர்பக்ரஹத்தில் கிழக்கே  வாசலை பார்த்து நிற்பவன்.  அப்படித்தான்  மத்வாச்சார்யார்  அவனை  ஸ்தாபித்தார்.  ஆனால்  அன்று  கிருஷ்ணன்   மேற்கு பக்கமாக  திரும்பி சுவற்றை  பார்த்து  நின்று கொண்டான்..  கர்பக்ரஹ  பின் சுவர்  பிளந்தது.  பிளவின் வழியே  சுவற்றுக்கு  பின்னால்  விரட்டப்பட்டு  நின்று கொண்டிருந்த  கனக தாசரை பார்த்தவாறு  கிருஷ்ணன்  மேற்கு நோக்கி  நின்று கொண்டான்.  கனகதாசருக்கு   திவ்ய தரிசனம் கிட்டியது.  பிளந்த  சுவர் ஒரு  ஜன்னலாக  மாற்றப்பட்டு (கனகன கிண்டி என்று பெயர்) .  அன்றுமுதல்  இன்று வரை  கிருஷ்ணனை  உடுப்பியில்  அந்த  ஜன்னல் வழியாகவே  தரிசனம்  செய்கிறோம்.  

தவறு செய்த  அனைவரும் கனகதாசர்  காலடியில்  விழுந்தனர்  என்பது எல்லா கதைகளிலும்  வரும்  ஒரு   வழக்கமான வாக்கியம். ஆனால்  அன்று முதல்  நினைத்த  போதெல்லாம்  கிருஷ்ணன்  கனகதாசர் முன் தோன்றினான்.  நாம்  எப்படி ஒருவரை யொருவர்  பார்த்துக் கொள்கிறோமோ  அப்படி   கிருஷ்ணனும் கனகதாசரும் சந்திப்பது  வழக்கமாயிற்று.  அவரது  பாடல்களில் நாம்  அவரையும்  கிருஷ்ணனையும் காண்கிறோமே.   இறைவன்  பக்தனின் சேவகனல்லவா!!    அருமையான  பாடகி  எம். எல்.  வசந்தகுமாரியின் குரலில் கிருஷ்ணனை கனகதாசரோடு சேர்ந்து  பாடுவோம்  கேட்போம். கிளிக் லிங்க் https://youtu.be/eeO9xcORgEY

sivan jaykay

unread,
Jul 27, 2020, 8:31:09 PM7/27/20
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி  23     J K   SIVAN  
தாகூர்

                                                          23.      நண்பனே  ஆருயிர் நண்பனே !
                                                                                                                                                                    
 23 Art thou abroad on this  stormy night on thy journey of love, my friend? 
The sky groans like one in despair.
I have no sleep tonight. Ever and again I open my door and look out on the darkness, my friend!
I can see nothing before me. I wonder where lies thy path!
By what dim shore of the ink-black river, by what far edge of the frowning forest, 
through what mazy depth of gloom art thou threading thy course to come to me, my friend?                                                        

இது  கல்கத்தா  இரவு.   மழை காலம்.   எங்கும் அட்டை கருப்பாக  இருள் சூழ்ந்து இருக்கிறது.   ''ஊ'' வென்று   உடல் நடுங்க வைக்கும்  குளிரை வாரி வீசும்  புயல் காற்றுல்.   உடலை ஊசி துளைப்பது போல் துளைக்கிறது.  

கிருஷ்ணா,  என்  ஆருயிர் நண்பா,   நான் உன்னை நினைக்கிறேன். நீ  எங்கே இந்த நேரத்தில்  இருக்கிறாய்?  எங்கேயாவது  தூர தேசத்திலா? இல்லை  இந்த நாட்டிலேயே  எங்காவதா  மூலை  முடுக்கிலா ? 

மேலே பார்த்தால்  வானம்  நிர்கதியாக வலி  தாங்கமுடியாத  வியாதியஸ்தன் போல்   உறுமுகிறது.  முனகுகிறது.  எப்போது வெடிக்குமோ?   எந்நேரமும்  வானம்  பிளந்து   ஜோ   மழை கொட்டலாம்.

இன்று இரவு எனக்கு தூக்கம் போய்விட்டது.  யாருக்காக ?   நான் ஏன் அடிக்கடி எழுந்து போய் கதவை திறந்து திறந்து பார்க்கிறேன்?  ஒரு வேளை நீ  வாசலில் வந்து நிற்கிறாயோ?   நீயாக  அது  இருக்கலாமோ? என்ற நப்பாசை.  இருளில் உற்று உற்று பார்க்கிறேன்.

காற்று தான் கதவை படபடவென்று இடிக்கிறது.   நீயோ  யாரோ  தட்டவில்லை..
இந்த இருளில் யார் உன்னைத் தவிர   என்னைத் தேடி வரப்போகிறார்கள்? என் எதிரே தோன்றுவது எல்லையற்ற  வெறுமை,.சூன்யம் தான்.  அது சரி,  உன் பிரயாணத்தில் எந்தப்பக்கம்  நீ நடந்துகொண்டிருக்கிறாய்?  உன்  பாதை  எந்த பக்கம்?   என் ஆசை தீர  இந்த பக்கம்  உண்டா?

கிருஷ்ணா, என் ஆருயிர் நண்பா,  இந்த இருளில்  கன்னங் கரேல் என்று  கருப்பு மை  தடவியது போல் அதோ தெரிகிறதே அந்த நதியின் கரையிலா  நிற்கிறாய் ? நீயே கருப்பு.  அகண்ட   இருள் சூழ்ந்த  காட்டின்  எந்த  மூலையிலிருந்து நீ  தோன்றப்போகிறாய்?   தேடுகிறேன்.  

எண்ணற்ற  சிக்கல்கள் கொண்ட  வலை பின்னி   நகர முடியாமல்  இருப்பதுபோல்  என் எண்ணங்கள், மனதில் குழப்பம் தரும் அமைதியின்மை, ஏக்கம், துயரம்  இதிலிருந்து  பளிச்சென்று  சிறிய  ஒளிக்கம்பியாக   ஒரு வழி  உருவாக்கிக்  கொண்டு என்னிடம்  வருவாயா கண்ணா   , உனக்காக தானே  நான் காத்திருக்கிறேன் என் ஆருயிர் நண்பா!  காதில் விழுகிறதா  என் ஓலம்?

 

sivan jaykay

unread,
Jul 27, 2020, 8:31:09 PM7/27/20
to amrith...@googlegroups.com
                                          இந்த  ஏழால்  என்ன பயன்?   J K  SIVAN 

ஏற்கனவே  பெண்களை  நம்பாதே  என்று  ஒரு பெண்களை  தாழ்த்தி  எழுதியிருந்த  பேர் தெரியா கவிஞரின்  ''விவேக சிந்தாமணி''   நூலிலிருந்து சில பாடல்களை எழுதி இருந்தேனே ஞாபகம் இருக்கிறதா?  மறுபடியும்  உரக்க சொல்கிறேன்.  விவேக சூடாமணி வேறு விவேக சிந்தாமணி வேறு.  விவேக சூடாமணி ஆதி சங்கரர் எழுதிய அற்புத வேதாந்த, நூல்.  இந்த விவேக சிந்தாமணி  அழகாக எழுதப்பட்டிருக்கிறது.  ஆனால்  எப்போது  யார் எழுதிய நூல் இது என  தெரியவில்லை.   சமீப காலத்தில் இல்லை. எப்படியும்  ஒரு நூற்றாண்டு ஆகியிருக்கும்  என்று  மட்டும் தோன்றுகிறது  எனது ஹேஷ்யத்தில்.  எழுத்து வாசனை அப்படி  மதிப்பிட வைக்கிறது. 

இந்த ஆசிரியர்  ஒரு  ஏழு விஷயங்களை  சொல்லி  இதெல்லாம் நமக்கு பிரயோஜனமில்லை என்று  எளிய  தமிழில் சொல்கிறார்.  

''அன்புள்ள கோபு, இப்பவும் நீ அங்கே சௌக்கியமா? இங்கே  உன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.  தோட்டத்தில்  கன்னுக்குட்டிக்கு   குளிப்பாட்டிக் கொண்டிருக்கும்போது வழுக்கி விழுந்து இடுப்பு எலும்பு முறிவு .  பச்சிலை வைத்தியம் கொடுத்து  கோபாலசாமி நாயக்கர் சூரணம் கொடுத்தார். அது பேதியில் வேறு கொண்டுவிட்டது. ஆகவே  இதை தந்தி போல் பாவித்து பணம் அனுப்பு.-- உன் அப்பா  சோமசுந்தரம்'' 

பையன் கடிதத்தைத்  தூக்கி குப்பை தொட்டியில் போட்டுவிட்டான். அடுத்து ஆறு கடிதங்கள், ஒன்றிரண்டு டெலிபோன்..     கொர கொர  சத்தத்தை காரணம் காட்டி  தொடர்பை அறுத்தான்....   இப்படிப்பட்ட பையன்கள்,  ஆபத்துக்குதவா பிள்ளைகள் .   இருந்தும் இல்லாதவர்கள் என்கிறார் புலவர்.

 அடுத்து  நல்ல பசிவேளைக்கு பழையது கூட கிடைக்கவில்லை. அப்புறம் பாதம் ஹல்வா கிடைத்து என்ன பிரயோஜனம்.அரும்பசிக்கு உதவா அன்னம்.  

காட்டுப்பாதை,  மலைப்பாதை, சுள்ளென்று கொதிக்கும் மணல். வெகுநேரம் நடந்து நெஞ்சை வறள்கிறது தாகம் ,  ஒரு சொட்டு  நீர் கிடைக்கவில்லை.    அப்புறம்  இன்னொரு  நாள் சில்லென்று ஜூஸ்  கிடைத்து குடித்து என்ன பிரயோஜனம்.  தாகத்தை தீர்க்காத நீர். 

புருஷன் நூறு ரூபாய் சம்பாதித்தால்  நானுறு ரூபா செலவு செய்து அவனுக்கு கடன் வைக்கும் மனைவி. அவளை வீட்டின் தரித்திரம் அறியாத பெண் என்கிறார்.

  ராஜா என்றால் பொறுமை, விவேகம்  சாந்தம்  வேண்டும்.   கோபம் எதற்கெடுத்தாலும் வந்து எங்கே வாள்  இவனை  உடனே  சிரச்சேதம் செய்கிறேன்   என்று கோபிப்பவனால் நீதி  நேர்மை நியாயம்  கிடைக்குமா?

 எவ்வளவு அருமையாக  ஆசிரியர் சொல்லிக் கொடுக்கிறார். குற்றால குறவஞ்சி வர்ணனைகள் சொல்கிறார்.    திரிகூட ராசப்ப கவிராயர் பின்னால் போகாமல் மனதில் ''ஆத்தா,  ஆத்தோரமா ..''  என்று  ஏதோ சினிமா பாட்டை முனகிக்கொண்டு உட்கார்ந்திருக்கும்  மாணவன்... இதுபோல்  குருமொழி கொள்ளாத சீடர்களால் நாட்டுக்கே  ஆபத்து. 

கடைசியாக  ஒரு விஷயம் சொல்கிறார். 

 நாம்  கோவில்களுக்கு சென்றபோது, அங்கே புஷ்கரணிகளில்தீர்த்தங்களில்  ஸ்னானம் செயகிறோமே. அது எதற்காக.  நம்மைப்பிடித்த   பாபங்கள் விலக. அவற்றுக்கு தலை முழுக.   அப்படி நமது பாபங்களை  விலக்காத  குளங்களில்  குளித்து  என்ன பயன்  என்று கேட்கிறார்.   

ஆகவே  மேலே சொன்ன  ஏழு  விஷயங்கள் எதிர்பார்த்த பலனை  அளிக்காவிட்டால்  நமக்கு அதால்  என்ன பிரயோஜனம்...??  என்கிறார்  அந்த  பெயர் தெரியாத  புலவர்   ''விவேக  சிந்தாமணி'' யில்.   அந்த பாடல் இதோ: 

''ஆபத்துக்கு உதவாப் பிள்ளை
அரும் பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர்
தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குரு மொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம்
பயன் இல்லை ஏழும்தானே''

இன்னொரு பாடல் அப்புறம் சொல்கிறேன்.



சமயத்திற்கு உதவாத எட்டு விஷயங்கள்
தன்னுடன் பிறவாத் தம்பி
தனைப் பெறாத் தாயார், தந்தை
அன்னியர் இடத்துச் செல்வம்
அரும்பொருள், வேசி ஆசை
மன்னிய ஏட்டின் கல்வி
மறுமனையாட்டி வாழ்க்கை
இன்னவால் கருமம் எட்டும்
இடுக்கத்துக்கு உதவா அன்றே!

Hopeless 8

Following eight won’t help when you are in trouble: step brother (who is not born to the same mother),step mother, wealth invested with another person, greediness, visiting brothels, book knowledge and living with another man’s wife— these eight are hopeless things.

பயனற்ற உடல் உறுப்புகள்
திருப்பதி மிதியாப் பாதம்
சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க்கீயாக் கைகள்
இனிய சொல் கேளாக் காது
புரப்பவர் தங்கள் கண்ணீர்
பொழிதரச் சாகாத் தேகம்
இருப்பினும் பயன் என்? காட்டில்
எரிப்பினும் இல்லை தானே!


Step motherly treatment!

Useless Body Parts

The Feet that never step into a temple, the Head that never bows to God, the Hands that never help others, the Ears that never hears good words, the eyes that never care for the tears of parents or guardians—these body parts are useless. What is the use of keeping them? They deserve burning.

sivan jaykay

unread,
Jul 27, 2020, 8:32:13 PM7/27/20
to amrith...@googlegroups.com
                                                                     

                                                         அஸ்வத்தாமனின்   ஆசை   J K  SIVAN  

 ஒரு  குருவுக்கு,  ஆச்சார்யனுக்கு,   எது சந்தோஷம்  தரும் ?  
 தன் சிஷ்யன்  தன்னை  மிஞ்சும்  அளவுக்கு  தேறி  விட்டான் என்பதே.   
 
"நான்  கற்றுக்கொண்ட அஸ்த்ர  வித்தையில் தலை  சிறந்தது பிரம்மாஸ்திரம்.   நேரம் வந்து  விட்டது  அதை  
உனக்கு கற்பிக்க .   அர்ஜுனா!   நீயே தகுதியானவன் அதை என்னிடம் கற்றுக்கொள்ள . வா இங்கே''. 

 துரோணர்  ஆனந்தமாக  அர்ஜுனனை  அணைத்தார்.  இதை சற்று தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டு இருந்த ஒருவன் கோபத்தில்  பல்லைக்கடித்தான்.  பற்றி  எறிந்தது அவனுக்கு.    அவன் வேறு யாருமில்லை.   துரோணரின் செல்ல  மகன் அஸ்வத்தாமன் தான். 

''பெற்றமகன்  நானிருக்க  வேரெவனுக்கோவா  இந்த  வித்தையை கற்றுத்தருவது?   அப்பா  நீங்கள்  எனக்கும்  கூட  ப்ரம்மாஸ்திர  மந்திரம்   கற்றுத்தரவேண்டும்  என்று  அவரை  விடாமல் அரித்தான்  அஸ்வத்தாமன்.   
வேறு  வழியின்றி அதை அவனுக்கும்  கற்றுத்தர   துணிந்த  துரோணர்  அவனிடம்  ஒரு  கண்டிஷன் போட்டார்.

"அஸ்வத்தாமா, உனக்கும்   தான்  நான்  தனுர் வேத சாஸ்திரம்  கற்றுத் தந்தேன்.  ஆனால்  பிரம்மாஸ்திரத்தை பொறுத்தவரை இது  எக்காலத்திலும்  என்ன காரண மானாலும்  என்ன   தவறு  செய்தாலும் மானுடர்கள்  மீது பிரயோகப்படாது"  

 மனிதர்களைத்தவிர  வேறு  யார் இருக்கிறார்கள்.  தேவர்கள்,  ராக்ஷஸர்கள்.  இந்த இருவரோடும் என்றும்  அஸ்வத்தாமன் யுத்தம் புரிய போவதில்லை.  அவன் க்ஷத்ரியனோ, ராஜாவோ இல்லை. அவனுக்கு என்று தனிப்பட்ட எதிரிகள்  யாருமே இல்லையே.  ஆகவே   பிரம்மாஸ்திரத்தை கற்றுக்கொண்ட அஸ்வத்தாமனுக்கு அதை பிரயோகிக்க சந்தர்ப்பமே வரவில்லை.   அவன் மனதில் ஒரு விசித்திர  எண்ணம்  உருவாகியது.  சமயம் பார்த்து கொண்டிருந்தான்  அஸ்வத்தாமன் .  அந்த சமயம் வந்தது. 

 பாண்டவர்கள்  வனவாசம் சென்றிருந்த போது  கிருஷ்ணனைப்   பார்க்க  த்வாரகை போனான்.  கிருஷ்ணன் கடற்கரையில்  உலாவ சென்றிருந்தான்.   கிருஷ்ணனை  தனியாக  பார்த்து பேசுவது  முடியாதே.  அவனைப்  பிடிப்பதே வெகு துர்லபம்.   கடற்கரை சென்று கிருஷ்ணனை பிடித்துவிட்டான் அஸ்வத்தாமன்.

"அட,  அஸ்வத்தாமா!   எங்கே இந்த  பக்கம்  வந்தாய்?".
"கிருஷ்ணா,  உன்னை காணத்தான் வந்தேன். நீ  இங்கு இருப்பாய்  என்று சொன்னார்கள்.  நல்லவேளை  உன்னை சந்தித்தேன்."
"என்ன விஷயம்  சொல் அஸ்வத்தாமா?".
"எனக்கு  உன்னிடம் வெகு நாட்களாக மனம் விட்டு  ஒரு விஷயம்  பேச  ஆவல். இன்று  அது  நிறைவேறும்  என்றும் தோன்றுகிறது".
"பீடிகை  வேண்டாம்.   விஷயத்துக்கு  வாயேன் அஸ்வத்தாமா"

"என்னிடம்  பிரம்மாஸ்திரம்  இருப்பது  அனைவருக்கும்  தெரிந்ததே அல்லவா. அதை  உன்னிடம்  கொடுத்துவிட்டு  உன்னிடம்  உள்ள  சுதர்சன சக்ரத்தை  பெற ரொம்ப  ஆசை".

"அஸ்வத்தாமா,   என்னிடம்  உள்ள வில்,  அம்பு, கதை,  சக்ரம்  எதை வேண்டுமானாலும்  நீ  பெறலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை.  ஆனால்  அவற்றுக்கு  உன்னிடம்  வர ஆட்சேபணை இருக்குமா  என்று  நீ  அவற்றை  தான்  கேட்கவேண்டும். எனக்கு  உன்  பிரம்மாஸ்திரத்தை  நீ  தரவேண்டாம். எனக்கு  அது  வேண்டாம்.  தேவையுமில்லை.   உனக்கு தேவையானதை  நீயே  எடுத்துக்கொள்".   
கிருஷ்ணன் தன்னிடமிருந்த  சங்கு சக்ரம், கதை, வில், வாள்  அனைத்தையும்   அவன் எதிரே  நீட்டினான். . 

சுதர்சன  சக்ரத்தின் மீதே  கண்ணாக  இருந்த  அஸ்வத்தாமன்  அதையே  எடுக்க  முயற்சித்தான். இடது கையால்  எடுக்க முயன்று  முடியாமல் போனதும்   வலது கையாலும்  பிறகு  இரண்டு கைகளாலும் முயன்று முடியாமல்  முழுபலத்துடன்  கிருஷ்ணன்  கையினின்றும்  அதை  அகற்ற  பிரயாசை பட்டான்  வெகு நேரம் முயன்றும்  எடுக்கமுடியாமல்  களைத்துப்  போய் கிஷ்ணன் காலடியிலே  விழுந்தான். 

"அஸ்வத்தாமா,   நல்ல  வேடிக்கை இது   என்  சிறந்த  நண்பன்  அர்ஜுனனோ,  என்  மகன்  பிரத்யும்னனோ, சாம்பனோ, என் சகோதரன்  பலராமனோ  கூட   இதுவரை  கேட்காததை  நீ  என்னிடம் கேட்டாய்.  அது போகட்டும்.    நான்  உனக்கு தர விருப்பப்பட்டால்  அவற்றுக்கு உன்னிடம்  வர விருப்பமில்லை என்று தெரிகிறது.  அது சரி  உனக்கு  எதற்கு  அதிக சக்தி வாய்ந்த எனது  சுதர்சன சக்ரம்? உனக்கு யார் எதிரி?  எவர்  மீது  பிரயோகிக்க   அதை  கேட்டாய் .  அதை  முதலில்  சொல்?"  என்று கேட்டான் கிருஷ்ணன்.
 
"உண்மையைச்  சொல்கிறேன். உன் மீதே  அதை  பிரயோகித்து  உன்னை கொன்றால்  பிறகு  என்னை  எவராலும் இந்த உலகில்  வெல்ல முடியாதே  என்ற   தீய எண்ணம்  என் மனதில்  இருந்தது  கிருஷ்ணா.  இப்போது  புரிந்து கொண்டேன்.  உன்னைத்  தவிர  எவராலும்  உன்  ஆயுதங்களை  அசைக்கக்  கூட  முடியாது  என்பதை  தெரிந்து கொண்டேன்." 
 
கிருஷ்ணனை வணங்கிவிட்டு  வந்தவழியே திரும்பி நடந்தான் அஸ்வத்தாமன். அவன் வெகுதூரம் சென்று ஒரு புள்ளியாய் மாறும் வரை பார்த்துக்கொண்டிருந்த  கிருஷ்ணன்  சிரித்தான் .  பெருமூச்சும்  விட்டான்.  

''ஆசார்யர்  துரோணருக்கு தப்பாமல்  பிறந்தவன் என நினைத்தேன்  அஸ்வத்தாமன்  தப்பாக பிறந்தவன் என்று  நிரூபித்துவிட்டானே''  

sivan jaykay

unread,
Jul 28, 2020, 7:58:02 PM7/28/20
to amrith...@googlegroups.com

                                                  பிருந்தாவனத்தில் சில நிமிஷங்கள்   J K  SIVAN 

நாம்  இப்போது  பிருந்தாவனத்தில்  இருக்கிறோம்.  சந்தோஷமாக இருந்தால்  சைதாப்பேட்டை கூட  பிரிந்தாவனமாகும் . 

கோடை வெயிலில் எங்காவது குளிர்ச்சியாக  இருக்கும் இடம் தேடும்போது  உடலுக்கு மட்டும்  குளிர்ச்சி போதாதே.   கொடைக்கானல், ஊட்டிக்கு போகிறவர்கள்  உடல் குளிர்ச்சியை தான் அனுபவிக்கிறார்கள். 

 உள்ளத்துக்கு  குளிர்ச்சி தரும்  இடம்  எது என்று  சில  இடங்களைத்  தேடும்போது ஆயர்பாடி ''இதோ  நான் இருக்கிறேனே   என்னை உனக்குத் தெரியவில்லையா?''  என்று  கேட்டது. எனவே நான் உங்களையும் அங்கே அழைத்துச் செல்கிறேன்.  நம்முடைய அதிர்ஷ்டம்  நாம்   இப்போது  கிருஷ்ணன்  இருந்த காலத்திலேயே  ஆயர்பாடியில்  இருக்கிறோமே!!   

இங்கு வரும் வரை   சென்னை  போக்குவரத்து  நெரிசல்,   டீசல்,  பெட்ரோல் நாற்றம், புழுதி, குப்பை , டிவி,  கட்சி கொடிகள், ஊர்வலம், பொதுக்கூட்டம்,  '' ஒழிக, வாழ்க''   சத்தம் கேட்டோம், அதெல்லாம் இங்கே காணோமே. 
அது தான் பிருந்தாவனம். 

இங்கே   அன்றாடம்  நடப்பது.    ஆயர்பாடி  சிறுவர்கள்  சேர்ந்தே  போவர் வருவர் எங்குமே.  யாருக்கும் சட்டை கிடையாது. அதை சட்டை செய்யாதவர்கள்.   மேல் துண்டு,  இடையிலே ஒரு துண்டு,  காலில் செருப்பெல்லாம் கிடையாது.  எப்போதும் உற்சாகமாக இருக்கும்  அவர்களை  பார்த்து  ஆயர்பாடி  மக்கள்  அனைவரும்  பெருமிதம்  அடைவார்கள்.   இத்தனை  மகிழ்ச்சி  ஆரவாரம்  எல்லாம்.அவர்களுக்கு  எங்கிருந்து  வருகிறது ?  என்பதன் ரகசியம்  அனைவரும்  அறிந்ததே.  

கிருஷ்ணன்  என்கிற  சிறுவன்  தான்  அவர்களை  இவ்வாறெல்லாம்   ஆட்டி  படைக்கிறவன்.  அந்த  சிறுவனே அவர்களுக்கு  தலைவன்.  பசுக்களும்  கன்றுகளும்  கூட   மறக்காமல்  அன்றாடம் ஒருமுறை  கூட்டத்தில்  மற்ற சிறுவர்களிடையே  கண்ணன்  இருக்கிறானா  என்று  முதலில் பார்த்துக் கொண்டு  தான்  சந்தோஷமாக இரை தேட  செல்லும்.   கன்றுகள்  தாவித்   தாவி   குதித்து  ஓட  தாய்ப்   பசுக்கள்  பெருமிதமாக மிதந்து செல்லும். கண்ணன்  ஏதாவதொரு பசுவின் அருகில் தான்  நிற்பான்.    கூடவே அதன்  கழுத்தைக்  கட்டிக்கொண்டு  நடப்பான்.  அவன்  இடையில்  இருக்கும்  சிறு  மூங்கில் குழல்  பகல் பூரா சில சமயம் அந்த  காட்டு பிரதேசத்தில்  அவனது வேணு கானத்தைப் பரப்பும்.  சில  சமயங்களில்  சிறுவர்கள் யமுனை நதியில்  குதித்து  நீச்சல் அடிப்பார்கள் விளையாடுவார்கள் . சில சமயங்கள்  ஒன்று கூடி பேசி பாடி ஆடுவார்கள்.  கண்ணன் வேணுகான நேரங்களில்  பசுக்கள்   எல்லாம் வயிறு   நிரம்ப உண்டு ஒன்றாக  கூடி  அவனருகே   மர  நிழல்க  ளில்   கூட்டமாக அமர்ந்து   அசை போட்டுக்கொண்டு  கண்மூடி தலையாட்டி கண்ணனின்  குழலிசையை  கேட்கும்.

ஒரு  கன்று  குட்டி  தாயைக்  கேட்டது. அது பிறந்து முழுக்க  ஆறு நாள்  ஆகவில்லை. 

 " அம்மா  உனக்கு  என்னை பிடிக்குமா  கண்ணனின்  குழல் இசை பிடிக்குமா?

"   ஏன்  இரண்டுமே பிடிக்கும்.!  

"   ரெண்டுலே  எது  ரொம்ப  பிடிக்கும்?

".  உன்னைப்   பார்த்துக்   கொண்டே இருக்க  ரொம்ப  பிடிக்கும் ;"  கண்ணன்  குழலிசையைக் கேட்டுக்  கொண்டே  இருக்க ரொம்ப பிடிக்கும் "   என்று  பசு  சொன்னது.

ஒரு  கன்றுக்குட்டி  மற்றொரு  ஆயர்பாடி  சிறுவன்   ஊதிய குழலை  கேட்டது.  "ஏன்  உன்னிடம்  கண்ணன்  ஊதும்  குழலின்  ஓசை  வரவில்லை?   அதற்கு  அந்த மூங்கில் புல்லாங்குழல் பதில்   சொன்னது:  

 " நானும்  கண்ணன்  கையில்  இருக்கும்  மூங்கில்  குழலும்  ஒரே  மரத்தில்  இருந்து பிறந்தவர்கள்,  வந்தவர்கள் தான். என்னை இந்த   ஆயர்பாடிச் சிறுவன்,      கண்ணன் ஊதுகிறதைப்போல   உபயோகிக்கவில்லையே. அதற்கு  நான்  என்ன செய்ய முடியும்?''

இதை கேட்ட  அந்த  சிறுவன்  தனது   குழலை  கண்ணனிடம்  கொடுத்து   '' கிருஷ்ணா,  என்னுடைய   புல்லாங்குழலில் நீ   வாசி நான்  உனதில்  வாசிக்கிறேன்'' என்றான்    அவன்    கண்ணனுடைய புல்லாங் குழலை  வாங்கி  ஊதினான்.   அப்போதும் அவன் வாசித்த  ஓசையில்   எந்த  மாற்றமும்  இல்லை

.அப்போது  கண்ணனின்  குழல் சொல்லியது:  
 
" ஏ, சிறுவா, நான்  மாற்றமே  இல்லாத மரத்துண்டு  தான். நீ ஊதினால்  நான்  அதுவாகவே  இருக்கிறேன். கண்ணன்  என் மீது அவன்  காற்றை  செலுத்தும்போது  எனக்கு   ஜீவன்  கிடைத்து  அவன்  அருளால்  அவனின் ஒரு  பகுதியாகவே  மாறிவிடுகிறேன்.ஆகவே  தான்  கண்ணன்  ஊதும்போது நான்  அவன்  ஜீவ நாதமாகி  காற்றில்  கலக் கிறேன்".

ஆயர்பாடி  பூலோக  சுவர்க்க பூமியாக  திகழ்ந்ததில்  என்ன  ஆச்சரியம்?  நாமும்  சென்னை  வெயிலுக்கே  திரும்புவோம்.  இப்போது கரோனா என்ற பரிசு வேறு நமக்கு...



 

sivan jaykay

unread,
Jul 28, 2020, 7:58:02 PM7/28/20
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி   24                           J K  SIVAN  
தாகூர்

                                                                     24.     எனது  நீண்ட  பிரயாணத்தில்........


24  If the day is done, if birds sing no more,
if the wind has flagged tired, then draw the veil of darkness thick upon me,
 even as thou hast wrapt the earth with the coverlet of sleep
and tenderly closed the petals of the drooping lotus at dusk.

From the traveller, whose sack of provisions is empty before the voyage is ended,
whose garment is torn and dustladen, whose strength is exhausted,
remove shame and poverty, and renew his life
like a flower under the cover of thy kindly night.

ஒவ்வொருநாளும் காலை கிழிக்கும்   தினசரி காலண்டர் ஷீட்டுக்கு  ஏன்  ''நாட்காட்டி"" என்று வெகு பொருத்தமான பெயர். அதை விட சிறந்த பெயர் யோசிக்க முடியவில்லையே .  

'' டேய்  ஒரு நாள்  போய்விட்டதடா. நீ  கிழித்துவிட்டாய் ஒரு நாளை உன் வாழ்வில். இதோ அடுத்தது இன்று காலை உனக்காக கிழிபட  காத்திருக்கிறது.  யாரும்  உன்னை இன்று என்ன  பெரிசாக செய்து கிழித்தாய்?''  என்று கேட்பதற்கு முன் நீயே  அதை  கேட்டுக்கொள். நல்லபடியாக இந்த நாளை உபயோகப்படுத்து.  இது போனால் வராது  பொழுதுபோனால் நிக்காது. 24 மணி நேரம் தான் உனக்கு கொடுக்கப்பட்ட நேரம். ஜாக்கிரதை, கெட்டிக்காரனாக அதை நல்ல வழியில் உபயோகி என்று அல்லவோ சொல்கிறது அந்த குட்டி காகிதம்.
 
 இந்த  நாட் காட்டி. தெளிவாக  சொல்லாமல்  சொல்கிறது. ''அடே உன்னிடம் இருக்கும் மீதி நாட்களை இனி எண்ணமுடியும், அது தான் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறதே. இருப்பதை அருமையாக உபயோகி. இந்தா இன்று உனக்கு ஒரு முழு புது நாள்''.... என்று புதிய தேதியை காட்டுகிறது...

இன்று ஒரு சீட்டு கிழித்ததில்  ஒரு நாள் குறைந்து போனது புரிகிறது. அதற்குள் இந்த புது நாள் வந்து விட்டதே.

காலையில் துவங்கிய  நாளை  அந்தி நெருங்கி முடிந்து இருள் எல்லாவற்றையும் மெதுவாக நிதானமாக சொகுசாக விழுங்குகிறது. காலதேவா,  காலையில் கிளுகிளு  என்று  சந்தோஷத்தோடு சப்தித்த   பறவை கூட்டம்  இதோ அந்தி  கருக்கலில்  இனி பறக்காது,  பாடாது. கூடு தேடி ஒதுங்குகிறது.  பகல் தேய்ந்து இரவு படர்கிறது.

காற்று வீசி வீசி ஓய்ந்து போய்விட்டது.
கிருஷ்ணா,  நீ படைத்த  உலகை  இருட்டாக்கி,   அதை   தூக்கம்  எனும் போர்வையால்   போர்த்தி விடுகிறாய்.
உறக்கம் எல்லாவற்றையும் கண்ணை மூட வைக்கிறது.   நானும் இருளில்   கண்மூடி  உறங்கட்டுமா?

கிருஷ்ணா, நீ    உறக்கத்தால் ஓய்வில்லாது அசையும் உலகத்தை கொஞ்சம்   ரெஸ்ட் எடுத்துக்கொண்டு மறுபடி இயங்கு  என்று  ஒரு இரவு  கண் மூட வைப்பவன்.   இதோ  அந்தியில் தாமரை மலர்கள் இதழ்களை சுருக்கிக்கொண்டு  கூம்பி  அவற்றின் மடல் கண் இமைபோல்  மூடுகிறது.  உறக்கம்.....

காலதேவா, ஒரு காட்சி கண் முன்னே   காண்கிறேன்.   நான்  தான்  அதில் வரும் வயது முதிர்ந்த பிரயாணி. லொங்கு லொங்கு என்று வெகு தூரம் நீண்ட பாதையில் நடந்து விட்டேன்..  பிரயாண ஆரம்பத்தில்  என் முதுகில் சுமந்த   உணவுப் பொருள் மூட்டை   போகும் வழியில்  என்னால்  உண்ணப்பட்டு  என்  உணவு மூட்டையும்  என்னைப்போல்  இளைத்து விட்டது.    இதோ வெகு சீக்கிரம் அது காலி கோணிப்பையாகபோகிறது.   ஓஹோ அது முடியும்போது என் பிரயாணமும் முடிவுக்கு வருகிறதோ?  என் ய ஆடையை பார்த்தாயா, எத்தனை பழையது. கல்லில், முள்ளில், காற்றில்,வெயிலில், மழையில், அதன் வனப்பு இழந்து, கிழிந்து, கசங்கி, மண் புழுதிபடலமாக கரை படிந்து தொங்குகிறது.
இனி என்னை மூடிக் கொள்ளும் சக்தி கூட குறைந்து விட்டது.
மானமாவது மண்ணாங்கட்டியாவது. எதையும்  மறைக்க  என்னிடம்  சக்தியோ தகுதியோ கூட இல்லை. இதிலிருந்து மீள முடியாதோ? இதெல்லாம் விலகுமோ? அது உன்னால் மட்டுமே  முடியும்.  

ஆஹா, கிருஷ்ணா, உன் அளவற்ற கருணையால், புத்துணர்ச்சி, புது வாழ்வு கொடுக்கமுடியும். அதோ அந்தியில் சாம்பி கூம்பிய அந்த தாமரை மொட்டு மீண்டும் காலை புத்தம் புதிதாக கண்ணைப்பறிக்க ல் மடல் விரிக்குமே . வண்டுகளை  அழைக்குமே  மலருமே , அதற்கு செய்யும் தயவை எனக்கும் காட்டு. இனி நானும் வாழ்வில் உன் கருணையால் அமைதியாக   ஒரு  புது நாளை  தொடங்குகிறேன். உன் நினைவால், அது மலரட்டும்.   என்  வாழ்வில் ஒரு புதிய பக்கம் திருப்புகிறேன்.

 
>
>    

sivan jaykay

unread,
Jul 28, 2020, 7:58:30 PM7/28/20
to amrith...@googlegroups.com
அன்பு நண்பர்களே,   j k  sivan  

                                                என்னுடைய  முதிய  வாசகி ....96+

புகழ் பெற்றவன் என்றுயெல்லாம் நான் பெரிய   எழுத்தாளன், பரம்பரை எழுத்தாளன், அறிஞன், கவிஞன்  புகழ் பெற்றவன்   என்று  ஒரு மண்ணாங்கட்டியும் எனக்கு  இல்லை.    ஒரு சர்வ சாதாரணன்.  நூறோடு ஒன்று நூற்றி ஒன்று.    என்னுடைய  75 வது வயதில் எழுத தூண்டப்பட்டேன். எனது நெருங்கிய நண்பரும் உறவினருமான ஸ்ரீ  சுந்தரம் ராமச்சந்திரன் ஒரு  தீவிர கிருஷ்ண பக்தர்.     தனக்கு கிருஷ்ணன் பற்றிய கட்டுரை ஒன்று அவரது இணையதளத்துக்கு எழுதி தரச்  சொன்னார்.   ரொம்ப தயங்கினேன்.   கப்பல் சம்பந்த விஷயம் நிறைய  எழுதி இருக்கிறேன். ஆன்மீக  கட்டுரை கதைகள் எதுவும் எழுதி பழக்கம் இல்லை என்றேன்.  அவர்  விடுவதாக இல்லை.     உங்களால் முடியும்  தாராளமாக   எழுதுங்கள் என்று  உற்சாகமூட்டினார்.  நிறைய நேரம் எடுத்துக் கொண்டு  ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை  எழுதினேன்.  நன்றாக இருக்கிறது தமிழிலும்.  எழுதுங்கள் என்று உற்சாகப்படுத்தினார்.  ஆங்கிலத்தை விட தமிழில் எழுதுவது  எனக்கு பிடித்தது.    சௌகர்யமாக இருந்தது.  நிறைய  வாசகர்கள் எளிய தமிழைத்தான் படிக்க விரும்புகிறார்கள் என்றும் அறிந்து கொண்டேன்.  கிருஷ்ணன் பற்றி  எனக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி  எழுதினேன்.  அழகாக நன்றாக இருக்கிறது,  கிருஷ்ணன் வாழ்க்கையை கதையாக எழுதுங்கள் என்று    மேலும்  ஊக்குவித்தார்.   முதலில் நண்பர்களுக்கு மின்னஞ்சலில் மட்டும் எழுதினேன். அப்புறம் மின்னஞ்சலோடு,    வலைதளத்திலும்  எழுதினேன், முகநூலில் எழுதினேன்,  வாட்சப்பில் எழுதினேன், சில ஆன்மீக பத்திரிகைகள் கேட்டன. அவற்றுக்கும் எழுதினேன், எவரிடமிருந்தும் பணம் பெற விருப்பமில்லை.  

ஆர்வத்தோடு இதுவரை 3000+ கதை கட்டுரைகள்  50+புத்தகங்கள் எழுதி அதில் 32-33 புத்தகங்கள் வெளியாகி விலையில்லாமல் விநியோகமாகின.   என்னுடைய  மிகச் சிறந்த புத்தகமாக  மஹாபாரதம் லக்ஷக்கணக்கான  சமஸ்க்ரித ஸ்லோகங்களை கதையாக தமிழில்  ''ஐந்தாம் வேதம்'' என்று  ரெண்டு  பாகங்களாக வெளியிட்டது. அதற்கும் விலையில்லை .ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில்  விஷ்ணு சஹஸ்ரநாமம், பகவத் கீதை, யக்ஷ ப்ரச்னம்  எல்லாம் முழுமையாக  விளக்கி இருக்கிறேன்.  இதை எழுத  கிட்டத்தட்ட  ரெண்டே முக்கால் வருஷம் ஆகியது.  ஒவ்வொரு நாளும்  18-20மணி நேர  வேலை. 

இதில் உள்ள  கதைகளை இலவசமாக  முகநூலில் வெளியிட்டேன். என்னுடைய  blog ல்  வெளியிட்டேன். சிறந்த வரவேற்பு உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் பலரிடமிருந்து பாராட்டோடு வந்தது என்  உழைப்பிற்கு பரிசாக, ஊதியமாக  ஏற்றுக்கொண்டேன். 

  இன்று  ஒரு முகநூல் நண்பர்  அந்த புத்தகத்தை என்னிடமிருந்து பெற்றவர்  அதை  நன்றாக இருக்கிறது என்று அவருடைய தாய்க்கு சொல்ல அந்த  முதிய  பெண்மணி தானும் படித்துவிட்டு  மிக நன்றாக எழுதியிருக்கிறார் ஜே.கே. சிவன் என்று சொன்னாராம். இதில் முக்கியமான விஷயம் ஆச்சர்யம் என்னவென்றால்  அந்த முதிய பெண்மணிக்கு வயது 96.  அவர் கையில் எனது  ஐந்தாம் வேத புத்தகத்தோடு  அந்த வாசக நண்பர்,  முதிய பெண்மணியின் புதல்வி திருமதி   ரஞ்சனி  வெங்கட்ராமன், மதுரையிலிருந்து இன்று போட்டோகளை  அனுப்பினார். மிக்க மகிழ்ச்சியுடன் அதை பெற்று அந்த முதிய சகோதரிக்கு என் நமஸ்காரங்களை தெரிவிக்க சொன்னேன். 

இன்னொருவர்  ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அவருக்கும்  90+ 


sivan jaykay

unread,
Jul 28, 2020, 7:58:52 PM7/28/20
to amrith...@googlegroups.com
                                         அருணாசல  கவிராயரின் அற்புத ராம நாடக கீர்த்தனைகள்    J K  SIVAN 

தமிழில் எண்ணற்ற பக்தி கீர்த்தனங்களை பாடிய  கவிஞர்கள்  ஏராளம்.   அன்றும் இன்றும்.   நான் கவனித்த வரையில்  வடமொழியில், தெலுங்கில், கன்னட, மலையாள மொழிகளில் பாடிய கவிஞர்கள் புலவர்களை நன்றாக  ஞாபகம் வைத்து பேசும் நாம்,   நமது தமிழில் பாடிய கவிஞர்களை ஏன் மறந்துவிடுகிறோம். யாரவது முத்து தாண்டவர், அருணாச்சலாகவிராயர், அண்ணாமலை ரெட்டியார்,  மாரிமுத்தா பிள்ளை , கவி குஞ்சர பாரதியை  ஞாபகம்  வைத்திருந்து அவர் பாடல்களை பற்றி என்றாவது  பேசுகிறோமா?

அருணாசலக் கவிராயர் (1711-1779) அற்புதமான கவிஞர்.    என்  தாய் வழி முன்னோர்கள் வாழ்ந்ததே இந்த அருணாச்சல கவிராயரின் ராமநாடக கீர்த்தனைகளை பாடியும் நாடகம் நடித்தும் தான். நான் அவரைப்பற்றி சொல்ல கடன், அல்ல, கடமைப் பட்டிருக்கிறேன்.

பிறந்தது சீர்காழியில் 1711 ல். தில்லையாடி என்னும் ஊரில். கார்காத்த வேளாளர் குலம். இளமையிலேயே
கவிபாடும் புலமையும், இசையுடன் பாடும் ஆற்றலும் இருந்ததால் தருமபுர ஆதீனத் தலைவர் ஆதரவு கிடைத்தது. சீர்காழியில் குடும்பம் வசதியாக தங்க ஆதீனம் உதவியது.  கர்நாடக இசையில் அற்புத பாட்டுகள் மெட்டமைத்தவர். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராச சுவாமிகள், முத்துசுவாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் காலத்துக்கும் முந்தியவர். முதலில் இருந்தவர் முத்து தாண்டவர். (1525-1625) . அப்புறமாகதான் அருணாச்சலாகவிராயர் மற்றும் அவரது சம காலத்தவரான மாரிமுத்துப் பிள்ளை (1717-1787). அருமையான முத்தான தமிழ் கீர்த்தனைகள் படைத்தவர்கள் இந்த மூவரும். இன்றும் பாடப்பட்டு வருகிறது.

இராம நாடகக் கீர்த்தனை (சங்கீத ராமாயணம்) 258 இசைப்பாடல்களை நாடக வடிவில் கொண்டது. இந்த கீர்த்தனைகளை தோடி, மோகனம், பைரவி, ஆனந்தபைரவி, சங்கராபரணம் ஆகிய பல பிரசித்த ராகங்களில் அமைத்தார். மங்களகைசிகம், சைந்தவி, துவிஜாவந்தி ஆகிய அபூர்வ இராகங்களிலும் இராமநாடகக் கீர்த்தனைகள் பாடுகிறார்கள்.

நெய்வேலி சந்தான கோபாலன் அவர்கள் பாடிய ''ராமனுக்கு மன்னன் முடி.." இந்தோள ராக பாட்டை கேட்டு ரசித்ததுடன் கண்களில் நீரைத் துடைத்துக் கொண்டேன். மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய ''ஏன் பள்ளிக்கு கொண்டீரய்யா'' என்ற மோஹன ராக பாடலை எத்தனை முறை இதுவரை கேட்டிருக்கிறேன் என்று கணக்கே இல்லை.

கவிராயரை  இதிகாச கதையை கீர்த்தனைமூலமாக மக்களிடம் பரப்பிய முதல் கவிஞர் எனலாம். 'இராமநாடகக் கீர்த்தனை'     திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் அரங்கேறியது. என்ற நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது. கி.பி. 1779 இல் தமது 67வது வயதில் மறைந்தார்.

ஒரு அல்ப சந்தோஷம். நாம் மறந்துவிட்டாலும் அருணாசலக் கவிராயருடைய கீர்த்தனைகளை எம். எஸ். சுப்புலட்சுமி, டி. கே. பட்டம்மாள், மகாராஜபுரம், அரியக்குடி, போன்ற மஹா வித்துவான்களும் திரைநடிகையும் பாடகியுமான பானுமதி, என். சி. வசந்தகோகிலம் ஆகியோர் பாடி எத்தனை லக்ஷம் ரசிகர்கள் செவிகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்திருக்கிறதோ!

கவிராயரை   ஆரம்பத்தில்  காசுக்கடை என்ற நகை அடமானம் வைத்து கடன் கொடுக்கும் கடை வைத்து பிழைக்க வைத்தார்கள். மனம் அதில் செல்லவில்லை. ஒரு அதிசயம் நடந்தது.

புதுச்சேரிக்கு வியாபாரத்துக்காக தங்கம் வாங்க நடந்தார். ரெண்டு மஹா வித்வான்களை வழியில் சந்திக்கும் பாக்யம் கிடைத்தது. வெங்கட்டராம ஐயர், கோதண்டராம ஐயர் என்ற அந்த ரெண்டு சங்கீத வித்வான்களும்  
சீர்காழியை அடுத்த சட்ட நாதபுரத்தைச் சேர்ந்தவர்கள்.    அருணாச்சல கவிராய ர்   சீர்காழியில்   தருமபுர மடத்துக் கிளையில் தங்க நேர்ந்தது.    அப்போது அந்த சீர்காழி மடத்தில் தலைவராக இருந்தவர் முன்பு அருணாசல கவிராயருடன் படித்த சிதம்பரம் பிள்ளை என்பவர். அவர் "கட்டளை மாலை" என்ற பாமாலையை இயற்றியிருந்தார். அவருக்குத் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சீர்காழி குறித்த ஒரு பாடலை இயற்றி  அதில்   சேர்க்க வேண்டும் என்று விருப்பம். ஆனால் வேலை பளுவின் காரணமாக எழுத நேரமில்லை. பாட்டில் தொடக்க அடி மட்டும்தான் எழுதியிருந்தார், மேற்கொண்டு எழுத நேரமில்லை. அந்த நேரம் பார்த்து அருணாசல கவிராயர் சீர்காழி வந்தபடியால்,

''அருணாசலம், நான் ஆரம்பித்தேன். அப்புறம் எழுத நேரமே இல்லை. நீ இந்த பாமாலையை பூர்த்தி செயகிறாயா? என்றார் சிதம்பரம்பிள்ளை.

''சரி நான் எடுத்துக் கொண்டு போகிறேன். புதுச்சேரியில் தங்கம் வாங்கும் வேலை இருக்கிறது. முடிந்தால் அங்கேயே எழுதுகிறேன். வரும்போது தருகிறேன்'' என்கிறார் கவிராயர்.

புதுச்சேரியில் ஒரே இரவில் அந்த பாமாலை பூர்த்தி ஆகியது. ஒரு ஆள் மூலம் சீர்காழியில் உள்ள சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

சிதம்பரம் பிள்ளைக்கு ஒரே ஆச்சரியம். ''ஆஹா எத்தனை சிறப்பாக எழுதியிருக்கிறார் என்று அவர் புலமையை வியந்தார். மனதில் ஒரு எண்ணம் உதித்தது. எப்படியாவது அருணாசலத்தை தன்னுடன் சீர்காழியில் தங்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து தில்லையாடியிலிருந்து அவரது குடும்பத்தை சீர்காழிக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்துவிட்டார்.

புதுச்சேரியிலிருந்து தங்கம் வாங்கிக்கொண்டு திரும்பிய கவிராயர் வழியில் சீர்காழி வந்தபோது நண்பர் சிதம்பரம் பிள்ளை தனது குடும்பத்தையே தில்லையாடியிலிருந்து சீர்காழியில் கொண்டு வந்து குடியமர்த்தி யது ஆச்சரியமாக இருந்தது. சரி இனிமேல் நமக்கு சீர்காழி தான் என்று அங்கேயே தங்கிவிட்டார். அது முதல் சீர்காழி அருணாசல கவிராயர் என்றழைக்கப்பட்டார்.

புதுச்சேரியில் பழக்கமாகி சந்தித்த இரு சங்கீத வித்வான்களான வெங்கட்டராம ஐயரும், கோதண்டராம ஐயரும் சீர்காழியில் மீண்டும் அருணாசல கவிராயரை சந்தித்து கம்பராமாயணத்தில் சில சந்தேகங்களைக் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வதற்காக வந்தனர்.

''கவிராயரே, எங்கள் சந்தேகங்களை அற்புதமாக கம்பராமாயணத்திலிருந்து விளக்கி தெளிவாக சொன்னீர் கள். எங்களுக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. இவ்வளவு அற்புதமாக நீங்கள்  கண்முன் தோன்றுவது போல் சொல்கிறீர்களே, நீங்கள் ஏன் கம்பராமாயணத்தை ஒரு நாட்டிய இசை நாடகமாக நிறைய பாடல்கள் எழுதி ஆக்கக்கூடாது. கவிதைகளை நீங்கள் இயற்றுங்கள், நாங்கள் அவற்றுக்கு ராகம், தாளம் இவற்றை அமைத்து இசை நாடகமாக ஆக்க உதவி செய்கிறோம்" என்றனர்.

''வித்வான்களே, இது மிக பிரமாதமான யோசனையாக அல்லவோ இருக்கிறது. எனக்கு தோன்றவே இல்லையே. என்கிறார் கவிராயர்.

அருணாசல கவிராயர்  கம்பனுடைய காப்பியச் சுவையில் திளைத்தவர். அதை மேலும் படித்து அனுபவிக்க இப்படி ஒரு சந்தர்ப்பமா? கம்பனின் கவி நயமிக்க பாடல்களும், பால பாரதியின் சந்த விருத்தங்களும் அவர் மனதில் ஒரு தாக்கம் விளைவிக்க இராம நாடக கீர்த்தனைகள் உருவாயின. பண்டிதரும் பாமரரும் பாடி மகிழ்ந்து, நாடகமாக நடிக்கப் பட்டது. அவர் கையாண்ட சிறந்த உத்தி என்னவென்றால் சாதாரணமான அன்றாட புழக்கத்திலுள்ள சொற்களைப் போட்டு, பழக்கத்திலிருக்கும் பழமொழி களைச் சேர்த்த எளிமையான பாட்டுக்கள் நல்ல இசையோடு சேர்ந்து, கேட்போர் அனைவர் நெஞ்சங்களையும் கவர்ந்தது .

"இராம நாடக கீர்த்தனைகள்" பூர்த்தியானபின் முன்பு கம்ப நாட்டாழ்வார் தனது கம்ப ராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றியது போல அங்கேயே கொண்டு சென்று அரங்கேற்றினார்.

"ஏன் பள்ளிகொண்டீர் ஐயா, ஸ்ரீ ரங்கநாதா" எனும் மோகன ராக கீர்த்தனை எண்ணற்ற பரத நாட்டியக் கலைஞர்களால் அபிநயம் பிடித்து பிரபலமானது. இன்றும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறது.

அவர் காலத்தில் தஞ்சையை துளஜாஜி என்ற மராட்டிய மகாராஜா ஆண்டார். குடும்ப சூழ்நிலை சரியில்லா மலிருந்த காரணத்தால், இந்த நாடகத்தின் அரங்கேற்றம் துளஜாஜி ராஜா முன்னிலையில் நடத்த முடியாமல் போனது. கவிராயர் புதுச்சேரி துபாஷாக இருந்த ஆனந்தரங்கம் பிள்ளையைச் சந்தித்துப் பேசினார். அவர் சென்னையில் அப்போது இருந்த வள்ளலும், கலை ஆர்வலருமான மணலி முத்துகிருஷ்ண முதலியாருக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினார்.

மணலி முத்துகிருஷ்ண முதலியார் நல்ல கலா ரசிகர். அருணாசல கவிராயரின் சில பாட்டுக்களை வித்வான்கள் பாடக் கேட்டிருக்கிறார். அவருக்கு அவை மிகவும் பிடித்திருந்தது. அப்படிப்பட்ட சூழ் நிலையில் இப்போது அந்த பாடல்களை இயற்றிய ஆசிரியரே நேரில் வந்திருக்கிறார், அதிலும் இராமாயண நாட்டிய நாடகத்துக்கான எல்லா பாடல்களோடும் வந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

பிறகு தஞ்சையில் துளஜா ராஜா நிலை சரியானபின்பு அருணாசல கவிராயரின் இராம நாடகத்தை அரண்மனையில் நிகழ்த்தினார். புதுவை சென்று ஆனந்தரங்கம் பிள்ளையின் முன்னிலையிலும் நடத்தினார். அப்போது பிள்ளையுடன் வேறு பல செல்வந்தர்களும் இருந்து ரசித்துப் பார்த்தார்கள். அவர்கள் அனைவரும் அருணாசல கவிராயருக்கு அரும் பெரும் விலைமதிப்பற்ற பரிசுப் பொருட்களை அளித்து கெளரவித்தனர்.

முடிப்பதற்கு முன் ஒரு பாடல் பற்றி சொல்கிறேன்

''ஆஞ்சநேயருக்கு மிகவும் சந்தோஷம். இலங்கை வந்த ராம காரியம் முடிந்தது. சீதையை உயிரோடு கண்டு அவளுக்கு ராமர் பற்றிய செய்தி சொல்லியாகிவிட்டது. அவளிடமிருந்து ராமருக்கு பதில் செய்தியும் தக்க அடையாளத்தோடு வாங்கிக் கொண்டாயிற்று. சீக்கிரம் திரும்பிப் போய்விட வேண்டியது தான். நான் ராம தூதன். தூதனுக்கு லக்ஷணம் திருட்டுத் தனமாக வந்து தப்பி ஓடுவதல்ல. இந்த ராவணனுக்கு அவன் யாரோடு மோதுகிறான் என்று தெரிய வேண்டாமா? எச்சரிக்கை கொடுக்க வேண்டாமா? அப்படிச் செய்யாமல் திருட்டுத் தனமாக வந்து செல்வது என்போன்ற வீரனுக்கு அழகா?தேவையா?

எதிரி எப்படிப்பட்டவன் அவன் பலம் என்ன என்று அறிவுறுத்த, ராவணனுக்கு சில கஷ்ட நஷ்டங்கள் உண்டாக்கியாகி விட்டது. இனி அவனைச் சந்தித்து புத்திமதி சொல்ல வேண்டியது ஒன்று தான் பாக்கி இருக்கிறது. நல்ல வேளை. அந்தச் சந்தர்ப்பத்தை அவன் மகனே உண்டாக்கிக் கொடுத்திருக்கிறானே. நான் தேடிப்போவதற்கு பதிலாக அவனே என்னை தருவிக்கிறான். நல்லது '' என்று தன்னைக் ''கட்டு'' ப் படுத்திக்கொண்டார்.   எனவே பயந்தவராக பிடிபட்டவராக தன்னைக் காட்டிக்கொண்டு, கட்டுப்பட்டு ராவணன் மாளிகைக்கு இழுத்துச் செல்லப்பட்டபோது கோபமாக இருந்த இலங்கை வாசிகள் அவரைத் தாக்கினார்கள். பிரம்மாஸ்திரம் அவரை தொட்டுவிட்டு விலகியது. இந்திரஜித்துக்கு பெருமிதம். ஒரு பலசாலியை அடக்கி கட்டி இழுத்துக் கொண்டு வந்துவிட்டோம் என்று.

''இவன் சாதாரண வானரன் இல்லை. எண்ணற்ற நமது வீரர்களை தனியொருவனாகக் கொன்றவன். சேதம் விளைவித்தவன். என் திறமையால் பிரம்மாஸ்திரம் உபயோகித்து இவனைக் கட்டிக் கொணர்ந்தேன். இனி இவனுக்கு தக்க தண்டனை கிடைக்கும். '' என்று அனைவரும் கேட்க மேகநாதன் முழங்கினான்.

ராவணன் முன் நின்ற ஹனுமனை ராவணன் கேட்கச் சொன்னதால் ப்ரஹஸ்தன் என்ற ராக்ஷச அதிகாரி கேட்கிறான்:
''ஏ, வானரா, நீ யார், யாரால் அனுப்பப்பட்டவன்? பயப்படாமல் உண்மையைச் சொல், உன்னை விடுவிக்கிறேன்.'

இது தான் அந்த பாடல்:
செஞ்சுருட்டி : ஆதி தாளம்
'' ஆரடா குரங்கே - இங்கே வந்த நீ - ஆரடா குரங்கே''
வார் சிங்காசனம் போல், - வால் இட்டென்னிலும் மேல் இட்டிருகிறாய் ''
கம்பத்தின் மேலே காலனைப் போலே
செம்புமாலியையும் சேனாதிபரையும் கொன்றொருக்காலெ
சிட்சை செய்வேன் என்று கட்சி உடனே வந்த
அட்சதனைக் கூட பட்சணம் செய்த நீ.... ஆரடா குரங்கே.....

(ராவணன் எதிரில் தனது வாலைச்சுற்றி உயரமான ஆசனம் அமைத்து ராவணனை விட மேலே உயரமாக அனுமன் அமர்ந்திருக்கிறானாம்) ( செஞ்சுருட்டி ராகத்தில் ஆதி தாளத்தில் -- ராவணன் கேட்பது )

அதற்கு அனுமார் பதில்: மோகனம்: ஆதி தாளம்

''ராமசாமியின் தூதன் நான் அடா -- அடடா ராவணா
நான் அடா என் பேர் அனுமான் அடா ( ராவணன் ஒரு அடா போட்டால் அனுமன் பல அடா போடுகிறான்!!)
கொடுத்த வரமும் தனமும் கனமும் வீணிலேன் போக்குகிறாய்
குடிக்கும் பாலை அய்யோ கமர் வெடிக் குளேன் வார்க்கிறாய்
துடுக்குடன் பரஸ்த்ரி செனங்களை தொடர்ந்தேன் பழி ஏற்கிறாய்
தூக்கி ஏறவிட்டேணியை வாங்கும் துர்த்தர் வார்த்தையைக் கேட்கிறாய் ...( . ராம )


கவிராயரின் இன்னும் சில பாடல்களை பற்றி ஒவ்வொன்றாக எழுத விருப்பம் இருக்கிறது. நேரம் கிடைக்கட்டும். என் அம்மா  இந்த  பாடல்களில் நிறைய மனப்பாடம் செய்து பாடுவாள். 


sivan jaykay

unread,
Jul 28, 2020, 7:59:14 PM7/28/20
to amrith...@googlegroups.com
                                           
                                                     “சாமி,   நீயே   துணை    J K   SIVAN  
 
            
மனைவி குழந்தைகளை  நிர்க்கதியாக, நிராதரவாக விட்டுவிட்டு  எவளுடனோ  ஓடும்  கணவன்கள்  பற்றி நாம்  அறிவோம்.   இருவது வருஷம்  ஆயிட்டுது  ருக்குவை  மாதவன்  கைக்குழந்தை முரளியோடு விட்டுச் சென்று!!.

நாகர்ஜுன சாகர்   அருகே  ஒரு கிராமத்தில்  ருக்கு   குழந்தை முரளியோடு  குடியேறி  வளர்த்து  அவனை பக்கத்து  நகரத்தில்  படிக்கவும்  வைத்தாள்.  பள்ளியில்  முரளியின்   பெயர்  “பார்த்தசாரதி”   இதன் பின்னால்  ஒரு குட்டி கதை  ஒளிந்துகொண்டிருப்பதை  வெளியே எடுத்து தருகிறேன்.  சுருக்கமாக  அது  இதுதான் :

***
 ஏகாம்பரம்  கிண்டியிலேயே பழியாக கிடப்பான்    குதிரை  ரேஸ் செல்பவன்.  எந்த  குதிரையின்  மீது  பணம்  கட்டினாலும்  அது   அடிபடாமல்  ஜாக்ரதையாக கடைசியில்  தான்  வந்தது.  அவன் பெண்  தான்  ருக்மணி   என்கிற ருக்கு.  அவர்கள்  ஆந்த்ராவில்  ஒரு கிராமத்தில்   வசித்தபோது  எதிர்  தெருவில்   இருந்த பார்த்தசாரதி கோவில்  தான்  ருக்குவுக்கு  போக்கிடம்.  பார்த்த சாரதியின்  புன்முறுவல் நிறைந்த  முகம்   நெஞ்சிலே எப்போதும்  நிற்க அவள் தினமும் சொன்ன வார்த்தை   “சாமி,  நீயே துணை”.    இதுவே அவளுக்கு  தெரிந்த  எல்லா மந்திரமும்.   பார்த்தசாரதியை  நினைத்தாலே அவள்  கவலைகள் பறக்கும்.   அப்பன் தினமும் குடி போதையில்   இரவில் அம்மாவோடு சண்டையிட்டு  அவளையும்  ருக்குவையும்  தனி ஆவர்த்தனம்  வாசிக்கும் போதெல்லாம்   "சாமி நீயே  துணை".    அப்பன்   ஒருநாள்  திடீரென்று மாரடைப்பால் கண்ணை மூடினான்  அவனது  கை  வண்டியில் ருக்கு காய்கறி  வியாபாரம் செய்து பிழைத்தாள் . வயிறு கழுவ  4வது   படிக்கும் போதே  பள்ளிப் படிப்பை  நிறுத்தி  வீட்டு வேலை செய்து  பாத்திரம் கழுவியது  அவளது பழங்கதை.
***
நாகர்ஜுன சாகர்  பக்கம்  முரளி தினமும்  ஒரு  மைல்  நடந்து தான் குறுக்கு வழியில்  ஒரு  அடர்ந்த காட்டு  பாதையில்   பள்ளி செல்ல வேண்டும்.  பஸ்  டவுன் வழியே  செல்லும்  அதில்   போக முரளிக்கு ஆசை.  

“அம்மா  என்னை  பஸ்ஸிலே  அனுப்பு”  
“ ஏன்   அழுவுறே” 
“நாம்ப ஏழை கண்ணு   என்கிட்டே காசு இல்லப்பா.   நீ  குறுக்கு வழியாகவே  நடந்து போப்பா”  என்றாள்.
“ பயமா இருக்கு மா”.
“சாமி, நீயே  துணை''  என்று சொல்லுடா.  கிருஷ்ணன்  காப்பாத்துவார்.  பயமா  இருக்கும்போது  கிருஷ்ணா
கிருஷ்ணா என்று கூப்பிட்டு கிட்டே  போ.  வேறே வழி தெரியலை கண்ணு.” 

காட்டு பாதையில்  கிட்டத்தட்ட  ஒரு  மாதமாக  பத்து வயது முரளி,    கிருஷ்ணா கிருஷ்ணா என்று கூப்பிட்டு கொண்டே  போனான்.  அவன்  மனதுக்கு  அது தெம்பாக  இருந்தது.  யாரோ  கூடவே  துணைக்கு  வருவது போல்  இருந்ததால் மனதில் பயம்  விலகியது.

 அன்று பள்ளியில்  தலைமை ஆசிரியருக்கு  பிரிவு உபசார விருந்து என்பதால்   எல்லா மாணவர்களும்  எதாவது பரிசு கொடுக்கவேண்டும் என்று  அவன் வகுப்பு வாத்தியார்   தாமோதரன்   ஆர்டர் போட்டார்.

''அம்மா  எங்க வாத்யார்   ஹெட்மாஸ்டருக்கு  பரிசு கொடுக்க ஏதாவது  கண்டிப்பாக  கொண்டு வரணும் 
னுட்டார். நீ என்னம்மா  தருவே?''

 “நான் கூலி வேலை செய்றேன். நமக்கு  யார்டா   இருக்க உதவ.  உனக்கு  வழியிலே துணைக்கு  வருவானே  கிருஷ்ணன், அவனையே  ஏதாவது தரச்சொல்லி  கேளு ''  என்று ஏழை அம்மா  கண்ணீர்விட்டு   மனமுருகி
 சொன்னாள்.

“கிருஷ்ணா கிருஷ்ணா”  என்று  வழக்கம்போல்  முரளி   கூப்பிட்டபோது  “என்ன முரளி  சொல்லு”  என்று   காட்டுப்பாதையில் அவனுக்கு பழக்கமான குரல்  கேட்டது 

 “எங்க வாத்தியார்  தாமு ஸார் ,  ஹெட்மாஸ்டருக்கு  என்னை ஏதாவது   பரிசு  கொண்டான்னு  சொல்றார். அம்மாவை கேட்டா  உன்னை  கேக்க  சொல்றா.  நீ  ஏதாவது எங்க ஹெட்மாஸ்டருக்கு  பரிசு  கொடுக்கிறியா”.  

''அதுக்கென்னடா,   அதோ  உன்  எதிரே  தெரியுது பார்  ஆலமரம் அதன்  அடியில்  ஒரு  செம்பு  நிறைய   பால்  வச்சிருக்கேன்  அதை கொண்டு போய்  கொடு.   மாட்டுக் காரன் கிட்ட  பால்  தானே  இருக்கும்”.  

எல்லா  பிள்ளைகளும் வித  விதமான பரிசு  கொடுக்க  முரளியின்  பால் செம்பு  சீந்தப்படாமல்  இருந்தது.  தாமு  அவனை   கேவலமாக பார்த்தார்.  

மதியம்  தாமு  தனது  வீட்டில் மனைவியிடம்  “அந்த முட்டாள் பையன் கொடுத்த  செம்பு  பாலை காய்ச்சி கொடு  நாம்பளாவது  குடிக்கலாம்”   என்றதும்  அடுப்பில்  பாத்திரத்தில்  பால்  செம்பை   கவிழ்க்க “என்ன  அதிசயம்!  பால்  செம்பு   மீண்டும் நிரம்பியது.  ஆச்சர்யத்தோடு  மறுபடியும்  பாத்திரத்தில் பாலைக்  கொட்டினாள்.   செம்பு  மீண்டும் பாலோடு தானாகவே   நிரம்பியது.  பயந்து போய்  அவள்  இதை  தாமுவிடம் சொல்ல,   அவர்  பள்ளிக்கூடத்துக்கு  ஓடி  முரளியைப்   பிடித்து  

“ஏலே, உனக்கு  யார்டா பால் செம்பு கொடுத்தது?”  
அவன்  பூரா விஷயம்  சொல்ல,   தாமுவும்   மற்ற பிள்ளைகளும்   கொல்லென்று சிரித்தனர்  
“கிருஷ்ணனாவது,  ராமனாவது,   என்னடா இது  உளறல்? . யாரோ  மாஜிக்  காரன் கிட்டே  செம்பு  வாங்கி  வந்து  ஏமாத்தறே”
“ இல்லே சார்,   கிருஷ்ணன்  தான்  கொடுத்தான்”.  
“ டே,   எனக்கு பைத்தியம் பிடிச்சுடும்  திருப்பி  திருப்பி  கிருஷ்ணன்  தினமும்  கூப்பிட்டா  பேசுவான்,  துணை வருவான், பால்  செம்பு  தந்தான்  என்று   அதையே சொன்னாக்க . முட்டாளே,   கிருஷ்ணன்  ராமன்   எல்லாம் இப்போ எங்கடா இருக்காங்க?  கோவில்ல தான்   சிலையாக,  படமாக இருக்காங்க   புராணத்திலே தான்  பேசியிருக்காங்க” 

“இல்லே சார்  தினமும்   என் கூட கிருஷ்ணன்  பேசுவான்  சார், அவன்  தான் சார் இதை  உங்க கிட்டே  கொடுக்க சொன்னான்”.

“டேய் ,   மேலே  பேசாதே,   ரொம்ப கோவமாயிருக்கேன்.   பிரம்பு  பொளந்துடும்.  இப்போவே  உன் கூட வரேன்  அந்த  கிருஷ்ணனை  காட்றியாடா?”
“சரிங்க சார்”  
காட்டில்  தாமு  அருகில் நிற்க   முரளி உரக்க     ''கிருஷ்ணா  கிருஷ்ணா''  என்று  பலமுறை  கூப்பிட்டும்  பதிலே இல்லை.
முரளி  அழுதுகொண்டே  ”:கிருஷ்ணா  எங்க  வாத்தியார்  வந்திருக்கார்  நான் சொல்றதை   நம்ப மாட்டேன்கிறார்.    உன்னை பார்க்கணுமாம்   கொஞ்சம் வரியா.”  

அப்போது   தீர்க்கமாக ஒரு  குரல்  அவர்கள் இரண்டு பேருக்கும்  கேட்டது.
“முரளி,   நான்  எப்படி அப்பா  வர முடியும்   அவர்  தான்  நான் இப்போது  இல்லவே  இல்லை . வெறும் கட்டுக்கதை  என்று  சொல்லிட்டாரே  நம்பாதவர்  முன்  நான்  எதற்கு  வரணும்''

தாமு  கண்ணில்  நீர் வடிய  “கிருஷ்ணா  என்னை  மன்னிச்சுடு  நான்  தப்பு பண்ணிட்டேன்” என்று  குரல் வந்த திசையில் வணங்கினார். 

முரளியின்  காலை  பிடித்து கொண்டு  “சாமி,   நீயே  எனக்கு  துணை  வழிகாட்டு”  என்றார். .    

sivan jaykay

unread,
Jul 30, 2020, 8:08:17 PM7/30/20
to amrith...@googlegroups.com

விவேக சிந்தாமணி   2.    ஜே கே  சிவன்  

                                                        ரெண்டு மணியான பாடல்கள் 

விவேக  சிந்தாமணி எனும் பழைய தமிழ் நூலைப்  படிக்க நேர்ந்தது. அதில் ஒன்றிரண்டு பாடல்களை உங்களுக்கு  எழுதியிருந்தேன்.  பலருக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லும்போது மேலும் சில பாடல்களை தரவேண்டும் என்று ஆவல் மேலிட்டு இன்றும்  ரெண்டு பாடல்களை விளக்கிச்  சொல்லத் தோன்றியது. 

இதை எழுதியவர் எந்த மஹானோ?  பெயர், விலாசம்,  காலம்,   ஒன்றும் தெரியவில்லை.   தமிழ் சினிமா கவிஞர்கள் பொல்லாத பேர்வழிகள். எப்படியோ இது போன்ற அனாதை பாடல்களை பிடித்து  கொஞ்சம் அங்கேயும் இங்கேயும் மட்டும் மாற்றி அவர்கள் எழுதியது போல்  பெரும் புகழும், கூடவே  அதிகம்  பணமும் சம்பாதிக்கிறார்கள்.  பிழைத்து விட்டுப்  போகட்டும் நமக்கு என்ன நஷ்டம். காசைக்  கொடுத்து சினிமா பார்ப்பவனுக்கு நல்ல பாடல்களாவது கிடைத்தால் சந்தோஷம் தான். 

குடும்பத்தில்  அப்பா அம்மாவுக்கு   பிறந்த  குழந்தை  ஆண்  என்று தெரிந்தால் ரெட்டிப்பு சந்தோஷம். குழந்தை வளர்ந்தான். கோலி பம்பரம்  விளையாடினான்.  பள்ளிக்கு போனான், படித்தான். சண்டை போட்டான். சட்டை  கிழிந்தது. காலேஜுக்கோ வேலைக்கோ போனான்.  கல்யாணம் ஆகியது. அவனுக்கு இப்போது ரெண்டு குழந்தைகள். அப்பா அம்மா  தாத்தா  பாட்டி.  வயோதிகர்கள்,  அமெரிக்காவில் இருப்பவன் அவர்களை லக்ஷியம் செய்வதில்லை. அப்பா பேச்சு  கொஞ்சமும் பிடிக்காது. போடா உனக்கென்ன தெரியும் ? என்கிறான். அப்பா  சொல்வதையா கேட்கப்போகிறான்?

மனைவி மட்டும் என்ன ஒசத்தி.  ஒருகாலத்தில் கல்யாணமான புதிதில் கட்டுப்பெட்டி. அப்புறம் குழந்தை குட்டி பெற்றாள் . அதிகாரம் தூள் பறக்கிறது. எது சொன்னாலும் எதிர் பேச்சு பேசுகிறாள். எங்கிருந்து கற்றாள்  இதெல்லாம்.?  

 கல்வி கற்பது  பற்றி  பேசும்போது இன்னொரு விஷயம்  ஞாபகம் வருகிறது.  சீடன்   ''அனா  ஆவன்னா '' தெரியாமல் வந்தவன் எல்லாம்  கற்றுக்கொண்டு அப்புறம்   குருவுடனேயே  தர்க்கம் வாதம் செய்கிறான்.  அவருக்கென்ன தெரியும்  என்கிறான்?  அவனுக்கிப்போது குரு  உதவாக்கரை.. 

உதவாக்கரை என்கிறபோது  ராமசுப்பு பண்டிதர் ஞாபகத்துக்கு வருகிறார்.  நல்ல மருத்துவர். எல்லா நோய்க்கும் ஒரே கலர் மாத்திரை,  கஷாயம்,    பிரவுன் கலர்  சூரணம் தேனில் கலந்து நாக்கில் தடவி  வியாதி குணமாகி விட்டது.  முன்பெல்லாம் ஏதாவது வியாதி இருந்தபோது  பண்டிதர் தேவைப்பட்டார். இப்போது அவர் வேண்டாம்.   அவர் பாட்டுக்கு வந்து திண்ணையில் உட்கார்ந்துவிட்டு  நீர் மோர் குடித்த்துவிட்டு  ரெண்டு வாழைக்காயையும் அரைப்படி அரிசியும் வாங்கிக்கொண்டு போகிறார். அவர் வைத்தியம் தேவையில்லை.  

இதெல்லாம் ஏதோ சிலர் வீட்டில் மட்டும் நடக்கிற விஷயம் இல்லை ஸார் .  இது தான்  பொதுவாக  எல்லா இடங்களிலும் நாட்டு நடப்பு. ஜனங்கள் குணம் அப்படித்தான் என்கிறது இந்த  விவேகசிந்தாமணி பாடல். படியுங்கள் மேலே சொன்ன அர்த்தம் புரியும். 

''பிள்ளை தான் வயதில் மூத்தால் பிதாவின்  சொல் புத்தி கேளான்
கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் போராளி
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உளன்  நோய் பிணிகள் தீர்ந்தா  லுலகனார்பண் டிதரைத் தேடார்''

இன்னொரு சுகமான பாடலோடு நிறுத்திக்   கொள்கிறேன் 

டாமி,   ஜிம்மி, டைகர்,  மணி  என்று  நாய்களுக்கு  பெயர் வைத்து   கொஞ்சுகிறோம்.  ஒரே படுக்கையில்  படுக்கிறது.   . சரிதான்.   அடுத்த வீட்டுக்காரன்  புனுகுப்  பூனை கூண்டில் வைத்து வளர்க்கிறான்.  புனுகு  நல்ல விலைக்கு விற்கிறான். நல்ல சம்பாத்தியம். நமது டைகர், டாமியையும்  அப்படி வளர்த்தால் என்ன? 
 டாமியைப்  பிடித்து ஒரு கூண்டினில் வைத்து, வேளா  வேளைக்கு  புஷ்டியாக ஆகாராதிகள் கொடுத்து,  அதற்கு மஞ்சள்  பூசி குளிக்க வைத்து   சாம்பிராணி புகை பிடித்து, குங்குமம் தடவினால்  அது புனுகுப்பூனை  ஆகுமா?.  நாய் நாய் தான். பெரிய  பணக்கார  அரசியல் தலைவன்  வீட்டில்  ராஜா வீட்டில் வளர்பவனும் அவ்வாறே. அவன் பிறவி குணம் மாறாது என்கிறார்  பேர் தெரியா புலவர். 

''குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணஞ் செயதாலும் தான்
அக்குலம் வேற தாமோ வதனிடம் புனுகுண் டாமோ
குக்கலே குக்க லல்லாற் குலந்தனில் பெரியதாமோ''. 

இன்னும்  சொல்லட்டுமா?

sivan jaykay

unread,
Jul 30, 2020, 8:08:43 PM7/30/20
to amrith...@googlegroups.com
 கீதாஞ்சலி 25        J K  SIVAN 
தாகூர்
     
                                                                     25     ஓய்வு தா-   மிகவும் அவசியம்..

25.   In the night of weariness let me give myself up to
sleep without struggle, resting my trust upon thee.
Let me not force my flagging spirit into
a poor preparation for thy worship.
It is thou who drawest the veil of night upon
the tired eyes of the day to renew its sight
in a fresher gladness of awakening.

கிருஷ்ணா,  நீ படைத்த  இந்த  பிரபஞ்சத்தின்  ஜாலங்களை என்னவென்று சொல்லுவேன்?

பொன்னிற போர்வை போர்த்திய மாலை மங்கி எங்கும் மலைப்பாம்பு இரை கவ்வுவதைப்போல இருள் சர்வத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு வருகிறது. காரிருள் ஆக இன்னும் சற்று நேரம் ஆகலாம். நானும் களைத்து விட்டேன் கிருஷ்ணா. கொஞ்சமும் எதிர்ப்பு  காட்டாமல்,   ஒன்றும் பேசாமல்  தூக்கத்தின் வசம் என்னை தந்துவிடுகிறேன். என் நம்பிக்கை, ஊக்கம், நோக்கம் எல்லாம் உன் மீது தான் எப்போதும் வைத்தி ருப்பேனே.   அலைபாயும் என் மனத்தை திடப்படுத்திக் கொள்கிறேன். உன்னை வழிபட துதிக்க என் முழு உணர்வையும்  முடிந்தவரை செலுத்துகிறேன். ரொம்ப களைத்து  ஓய்ந்து விட்ட  என் அங்கங்களை புனர்ப்பித்து உன்னை வழிபட வைக்கிறேன். 

பகல் நிறைய உழைக்கிறது. எப்போது சூரியன் தலையை தூக்குகிறானோ கிழக்கில் அப்போது முதல் ஓயாமல் உழைக்கும் பகலுக்கு ஒய்வு தர, மீண்டும் புத்துணர்ச்சி பெற, மறுபடியும் தனது ஓய்தல் இல்லாத கடமையை செய்ய அதற்கு சக்தி வேண்டாமா?   அதற்காகத்தானே கிருஷ்ணா, நீ மெதுவாக இருளை அதன் மீது மெல்லிதாக   போர்வையாகப் போர்த்தி உறங்கப்பண்ணுகிறாய்!    இந்த ஒய்வு  என்னைப்போல  பகலுக்கும் அவசியம். அப்போது தான் மறுநாள் காலை  புத்துணர்ச்சி பெறும் .

 உனக்கு தெரியாதது என்ன இருக்கிறது  கிருஷ்ணா. யாருக்கு எப்போது எதை, எந்தவிதத்தில் எவ்வளவு, எப்படி செய்யவேண்டும் .... ஆஹா!   நீ ஒருவனே அதை உணர்ந்தவன்.

 

sivan jaykay

unread,
Jul 30, 2020, 8:08:58 PM7/30/20
to amrith...@googlegroups.com

                                                நான்  யாரு  சொல்லுங்கோ?   ஜே கே  சிவன் 

  விடாமல்  என் ஆபிஸ் போன் அலறியது. காலை   10மணி ஆகப்போகிறது.  இன்னிக்கு நிறைய வேலை இருக்கு.
'' ஹலோ  யாரு?''

''தெரியலையா? ....    (யாருன்னு கேட்டாலே  தெரியலைன்னு தானே அர்த்தம்  எதுக்கு இப்படி ஒரு கேள்வி?)

'' கோபாலரத்னம் ஸாரா ....(உத்தேசமா ஏதோ ஒரு  பேர்  சொன்னாதானே  யாருன்னு சொல்வார்..அதுக்காக...)

''இல்லே... சரியா திங்க்  பண்ணுங்கோ....( இப்படி யாரு ஒரு கழுத்தறுப்பு....)

'' மைலாப்பூரிலிருந்தா?   ( ஒரு ஹேஷ்யம்.  ப்ரஹதீஸ்வரன் குரல் மாதிரி இருக்கே.... அவரோடு நிறைய  பேசணுமே .)

''சரியா  கண்டுபிடிச்சிட்டேளே ... மைலாப்பூருக்கு அடுத்த  ராயப்பேட்டாவிலிருந்து பேசறேன்..... (அப்போ கூட பேர் சொல்லாத மனுஷன்... யாருன்னே தெரியலியே..)

'ரொம்ப கேட்ட குரலா இருக்கே''

''உங்க ப்ரதரோட ஒர்க் பண்ணின  சுப்பராமன் ..''   (சத்தியமா  இந்த  ஆள்  யாருன்னே  தெரியல)

''ஓ ஓ.....     சௌக்கியமா?   (  இது ரொம்ப  சாதாரணமாக  தப்பிக்கும்  பதில். எனக்கு  நாலு  பிரதர்ஸ். எந்த பிரதரோட ஒர்க் பண்ணவர் ? )

''உலகமே  கொரானா லே  தவிக்கிறது  நமக்கு என்ன  சௌக்கியம்...? (  மறுபடியும்  குழப்பம்)

''ஆமாம்  சார்   சொல்லுங்கோ....  (சீக்கிரம் விஷயம் சொல்லமாட்டாரா?)

''உங்க  ஊர்  பிள்ளையார்  கோவில்  புனருத்தாரணத்துக்கு  2 ஜோடி வேஷ்டி வாங்கி கொடுத்தேனே  இப்ப   ஞாபகமிருக்கா?    (எந்த கல்யாணத்துக்கு,  எந்த  விழாவுக்கு  என்ன கொடுத்தோம் என்றா ஞாபகம் இருக்கும். நாம் தான்  கர்ண பரம்பரை ஆச்சே. வலது கை  கொடுத்தது இடது கைக்கே தெரியாது)  யார் இவர்?  காலம்பற இவர் கிட்டே  மாட்டிக்கொண்டேன்...)

''அப்படியா... வயசாயிடுத்து  சரியா எதுவும்    ஞாபகம் இருக்க மாட்டேங்கிறது..''   (சமாளித்தேன்).

''அப்படி சொல்லாதேங்கோ.. வயசு  மனசுலே கிடையாது. நாமா  நினைச்சுக்கிறது.... (என்ன அர்த்தம் இதுக்கு ?)

''நான் எதுக்கு  போன் பண்ணினேன்னு கேட்டா ....     இருமல்  விடாமல் ஒலித்தது..

''ரொம்ப இருமறது . கொஞ்சம்  ரெஸ்ட் எடுத்துண்டு அப்புறமா பேசுங்களேன்......  (தப்பிக்க முயற்சித்தேன். தோற்றேன்)
'அது கழுதை  வரும்  போகும்..  லட்சியமே பண்ணக்கூடாது. இந்த உடம்பு இருக்கே........ (வேதாந்தியாக மாறிவிட்டார் தவிர  இன்னும் இவர்   யார் என்றே  புரியவில்லை.)
மறுபடியும் இருமல்.   ...... நான் என்ன சொன்னேன்?''

'உங்க  உடம்பை பத்தி சொல்லிண்டிருந்தீர்கள்.''

''ஆமாம்    காமாட்சி கிட்டே கூட  அடிக்கடி சொல்வேன்.....  ( இவரே யார் என்று இன்னும் தெரியவில்லை. இது யார் நடுவில் காமாட்சி?)

''ஓ.  மாமி கிட்டேயா....  (பொத்தாம் பொதுவா  நடுவிலே  இப்படி  ஒரு பதில் விட்டேன்....  மாட்டிக்கொண்டேன்)

''மாமி இல்லே சார்... சிரிப்பு.  என்னை ஏதாவது  இக்கட்டிலே  மாட்டிவிட பாக்கறேளா....( கெக்கெக்கே    சிரிப்பு . வேறு.)
ஓ  மாமி இல்லியா?  ( நான் கேட்டது காமாட்சி மாமி இல்லையா என்று தானே. அதற்கு என்ன பதில் பாருங்கள்)

''மாமி இல்லை . மாமி   அடுத்த தெருவிலே  ரேஷன் கடைக்கு போயிருக்கா?  (ரெண்டாயிரம் கொடுக்கற கூட்டத்தில் நிக்கறா)

''அடேடே    ஜாக்கிரதை.ஸார்   .. இப்போ எல்லாம் கூட்டத்திலே  சேரக்கூடாது....   ( ஜெனரல் அட்வைஸ் கொடுத்தேன். பிடித்துக் கொண்டார் )

''யார்  சொன்னா கேட்கறா?   நானும் இதே தான் சொன்னேன்.  போகாதேன்னு....  ..போய்யா  நீரும் சம்பாதிக்க மாட்டீர். வரத்தையும்  வேணான்னு தடுப்பீர்..  என்கிறா. சரி   மூணு கஜம் தள்ளி நின்னு வாய்ண்டு வான்னு சொன்னேன்... இப்போ  நான் எதுக்கு போன் பன்றேன்னு சொல்லலியே?''

''நீங்க  சொன்னா தானே  தெரியும். சொல்லுங்கோ...
''நான் என்ன சொல்றது.  நீங்க சொன்னது  ஞாபகம் இல்லியா?
''நான் என்ன சொன்னேன் எப்போ சொன்னேன், எதுக்கு சொன்னேன்னு  மறக்கிறது  சார். 
''குளத்தங்கரை சீனு கிட்டே நான்  வீடு கேட்டேனே ஞாபகம் இருக்கா?    (ஐயோ  யார்  இது குளத்தங்கரை சீனு?.  எனக்கு எந்த குளமும் தெரியாதே.  நீச்சல் தெரியாது என்பதால் தண்ணீரில் கால் வைக்கும் வழக்கமே இல்லையே.  பேசாமலே  இருந்தேன்  )
''.........''
ஹலோ ..  என்ன  பதிலே  பேசலே.  அதான்  சீனு.  அவன் நேத்திக்கு பார்த்துட்டு  நீங்க  இன்னும்  கொடுக்க வேண்டியதை கொடுக்கலேன்னு சொன்னான். 

''யார் சீனுன்னு தெரியலே சார். நான் என்ன கொடுக்கணும் அவருக்கு. எனக்கு தெரிஞ்சு நான் எதுவும்  தரேன்னு யாரு கிட்டேயும் சொன்னதில்லையே சார். யாருக்கும் எதுவும் பாக்கி இல்லேயே...

பார்த்தேளா  பார்த்தேளா.. இதான் அவனும் சொன்னான்.   அவர் அப்படி தான் ஜோக்கா  பேசுவார் எப்போவும் னு சொன்னான்''

''சார். சத்தியமா சொல்றேன். எனக்கு எந்த குளத்தங்கரை சீனுவையும் தெரியாது. சீனுவாசன்னு ஒரு ரிட்டயர்டு ஹெட் கிளார்க் ரயில்வே லே  ஒர்க் பண்ணினவர் அடுத்த வீட்டிலே இருந்தபோது தெரியும். அவருக்கும் எனக்கு கொடுக்கல் வாங்கல் எதுவும் இல்லையே சார். ''

உண்மையா சொல்லுங்கோ சீனுவை தெரியவே தெரியாது?

''உண்மையா இப்போ சொல்றேன் சார்.    கேளுங்கோ.   நீங்க சொல்ற சீனுவை தெரியறது இருக்கட்டும்  . நீங்க யாருன்னே முதல்லே  எனக்கு  தெரியலே...''

''ஆஹா  வழிக்கு வந்துட்டேளா.. இதை தான் எதிர்பார்த்தேன்.  உங்களுக்கு ஐநூறு ரூபா போனவாரம் கொடுத்த    கிருஷ்ணமாச்சாரி. .மறந்துட்டேளா அதுக்குள்ளே....

''சார். நீங்க  தப்பா என்கிட்டே பேசறேள். உங்களை எனக்கு தெரியலே. நான் யார் கிட்டேயும் கடன் வாங்கற வழக்கம் இல்லை.. சாரி...   வச்சுடறேன்....

ஆமாம்  ...சாரி தாண்டா.  கோபு , நான்  கிருஷ்ணமாச்சாரி தான். சாரின்னு  தானே என்னை கூப்பிடுவே. 

''சார்.  நான் போனை வைக்கிறேன். நீங்க யாருன்னே தெரியலே. நான்  அனந்தராமன், அட்வோகேட்  .. கோபாலபுரம்.  யாரோ க்ளையண்ட்  பேசறா  அடையாளம் தெரியலேன்னு  இத்தனை நேரம் சமாளிச்சேன் உங்களை. உங்களுக்கு யாரோட பேசணும்.''

''அடேடே   நீ  முத்துகிருஷ்ணன் இல்லையா...  நங்கநல்லூர்....

''இல்லே ஸார்  தயவு செய்து  சரியான நம்பரை தேடி போன் பண்ணுங்கோ.  என்னை பேசவே நடுவிலே  பேசவே  விடலே... நான்  வக்கீல்  இப்படி கேள்வி கேட்டதே இல்லை..''...

''அடாடா  அந்த கடன்காரன்  சீனு   ராங் நம்பர் கொடுத்துட்டானே.   இதோ  குளத்தங்கரை சீனுவை மறுபடியும் பிடிச்சு  சரியான  நம்பர் வாங்கறேன்''......
டெலிபோன் ஓய்ந்தது...
இன்டர்நேஷனல் நண்பர்கள் தினம் இன்று.   இப்படி நண்பர்கள் நமக்கு நிறைய இருக்கிறார்களே. எங்கிருந்தாலும் வாழ்க  வளமுடன்....

.


sivan jaykay

unread,
Jul 30, 2020, 8:08:58 PM7/30/20
to amrith...@googlegroups.com

                                                                          ஒரு  வீர  தாத்தா   J K SIVAN 

மஹா  பாரத  யுத்தம்  விவரிக்க முடியாதபடி  அவ்வளவு பெரியது.  உலகமே  ரெண்டு பாதியாக பிரிந்து ஒரு பாதி இன்னொரு பாதியோடு  மோதினால் எப்படி இருக்கும்.  அது போல்  இருபக்கமும்  சைன்யங்கள்..   பதினெட்டு நாள் நடந்த போர்.  முதல் பத்துநாள் யுத்தத்தில்  கௌரவ   சேனையின் தளபதி பீஷ்மர். அவரின் வீரத்துக்கும்  சக்திக்கும்  சரியான ஜோடி   எதிர்  பக்கம்  இல்லை எனலாம்.

 பத்தாம்  நாள்   யுத்தம்  முடியும் தருவாயில்  பேரிடி  காத்திருந்தது  கௌரவ சைன்யத்துக்கு.   பிதாமகர்  பீஷ்மர்  பாண்டவர்களை   வறுவலாக  ஒன்பது நாளாக வாட்டி எடுத்தார்.    எப்படியோ  தாக்கு பிடித்தனர்  பாண்டவர்கள்.  கிருஷ்ணன் தான்  காரணம் இதற்கு.  

 “அர்ஜுனா,  உன் வீரம்  பீஷ்மன்  முன்  செல்லாது.   வீணாக பிரயாசை படாதே.  நான்  பார்த்து கொண்டு தானே  இருக்கிறேன்.   தர்மனை  வரச்சொல் உடனே”  என்றான்  கிருஷ்ணன்.  ஓடி வந்தான்  தர்மன் 

“யுதிஷ்டிரா,  பீஷ்மனை பூமியில் எவராலும்  வெல்ல முடியாது.  எனக்கு  தெரிந்து ஒரு வழி தான்  உண்டு.  பீஷ்மன்   பெண்களை எதிர்த்தோ  அல்லது  ஆணல்லாதவருக்கு  எதிராகவோ  ஆயுதம்  தொட மாட்டான்.  துருபதனிடம்  ஒருமுறை  நான்  பேசிக்கொண்டிருந்தபோது  அம்பை  என்ற பெண்  பீஷ்மனை  கொல்ல வென்றே  தவமிருந்து  ஆணாக மாறியவள்  அவனது  அரண்மனையில் வளர்கிறாள்  என்று சொன்னான்.
 அவள்  இந்த  போரில்  உனக்கு   உதவ வந்திருக்கிறாள். அவள்  பீஷ்மனை பழி வாங்க வென்றே  நீலத்  தாமரை மாலை சூடிக்கொண்டவள்.   ஆணாக  மாறியவள்.   சிகண்டி என்று பெயரோடு இப்போது  உன் சேனையில்  அங்கம் வகிக்கிறாள்  என்பது உனக்கு தெரியும்.   உடனே சிகண்டியை  வரவழை.  

இதோ பார்  அர்ஜுனா,  உன் மீது  பீஷ்மன்  எய்த கொடிய  சக்தி வாய்ந்த பாணங்கள் முழுதும்  நான் ஏற்று  அவை என்னை  சல்லடைக்   கண்ணாக்கி விட்டன. அவ்வளவும்  அர்ஜுனனை  நோக்கி  வந்தவை.  எனது பொறுமை எல்லை மீறி  ஒரு  கணம்  நானே பீஷ்மனை   கொன்றுவிட தேரிலிருந்து இறங்கி விட்டேன்.  பிறகு அமைதியானதற்கு  காரணம்  என்னை எப்படியாவது  ஆயுதம் எடுக்க  வைக்கிறேன் என்று  பீஷ்மன்  சபதமிட்டது நினைவு வந்ததால் .  எல்லாம்  உங்களுக்காக  நான்  தாங்கிக்கொண்டேன்.  பொறுத்து கொண்டேன்

''அர்ஜுனா  நான் சொல்வதை கவனமாகக் கேள்.  
இன்று  யுத்தம்  ஆரம்பிக்கும்போது  சிகண்டியை   உனக்கு  கவசமாக  முன்னிறுத்திக்   கொள்  எனக்கு  இனி  பீஷ்மனின்  சித்ரவதை  தாங்க முடியாது”  என்று  சிரித்து கொண்டே  சொன்னான்  கிருஷ்ணன். 

 பத்தாம் நாள்  யுத்தம்  துவங்கும்போது  பீஷ்மன்  ஆக்ரோஷத்தோடு  பாண்டவ சைன்யத்தை  நிர்மூலம் செய்ய வந்துவிட்டான்.  இன்றே கடைசிநாள்  அர்ஜுனனையும்   பாண்டவர்களையும்  வென்று  இந்த  யுத்தத்தை இன்றோடு  முடிக்கிறேன் '' என்று முடிவெடுத்தான்.

அர்ஜுனன்  முன்னால்  சிகண்டி நீல  தாமரை   மாலையுடன்  போரிட  வந்ததை  கவனித்த  பீஷ்மன்  சிந்தித்தான்.   ஓஹோ   இது நிச்சயம்   கிருஷ்ணனின்   திட்டம் போல் இருக்கிறது   என  சட்டென்று புரிந்து கொண்டான். சிகண்டி சரமாரியாக   பொழிந்த அம்புகளை  எதிர் கொண்டான்.  திருப்பி  தாக்காமல் அவற்றை ஏற்றுகொண்டான்.   பீஷ்மன்   சிகண்டியின்  சரங்களை  தாக்காமல்  இருந்த நேரத்தில்  அர்ஜுனனி ன் கடும்  தாக்குதல்கள்  பீஷ்மனை துன்புறுத்தின. கடைசியில்  வேறு  வழியின்றி பீஷ்மன்  குற்றுயிரும் குலையுயிருமாய்  யுத்த களத்தில் சாய்ந்தான்.

 பெரிய  ஆபத்திலிருந்து  பாண்டவர்களையும்   அவர்கள் சேனையையும்  கண்ணன் இவ்வாறு  மீட்டான்.  

“யுதிஷ்டிரா, அதோ பார்   பீஷ்மன் குற்றுயிராக  மடிந்து கொண்டிருக்கிறான். நீ   உடனே  செல். அவனுக்கு பணிவிடை செய்''   என்றான் கிருஷ்ணன்.

''அர்ஜுனா,  ஒரு  தாத்தாவுக்கு  பேரனிடம்  யுத்தம்  செய்து  தோற்பதில்  என்ன  ஆனந்தம்  இருக்கும் என்று  புரியும்   வயதில்லை உனக்கு.   இங்கே வா.  எனக்கு மரணம்  அடுத்த அயனத்தில்  தான்.  43  நாள்  காத்திருக்க  வேண்டும் நான்.  அதுவரை எனக்கு  ஒரு நல்ல  அம்பு  படுக்கை விரித்துக்  கொடு” என்றான் பீஷ்மன்.  அவ்வாறே  செய்தான் அர்ஜுனன்.  

“யுதிஷ்டிரா  இங்கே  வா. உனக்கு  நாராயணனின்  ஆயிர  நாமங்களை  சொல்கிறேன்  எழுதிக்கொள்  இதையே  ஸ்ரத்தையாக   யுதிஷ்டிரன் வியாசரிடம்   சொல்ல அவர்  நமக்கு  விஷ்ணு சஹஸ்ரநாமம்  தந்திருக்கிறார். படித்தால் மட்டும் போதாது,  காதில் சுகமாக அது விழுந்தால்  தான் மனதில் பதியும்  என்று கிருஷ்ணன்  M .S . சுப்புலக்ஷ்மி  என்ற ஒரு மனித தெய்வத்தை படைத்து  நீ இதைப் பாடு என்று கட்டளையிட்டு அவரும் அற்புதமாக பாடி  என்றென்றும் எல்லா வீடுகளிலும்  அது ஒலித்துக் கொண்டு  கோடிக்கணக்கானவர் மனதில் பதிந்து விட்டது.   ஸர்வம் விஷ்ணு மயம்  ஜகத்

sivan jaykay

unread,
Jul 30, 2020, 8:10:47 PM7/30/20
to amrith...@googlegroups.com

                                                         லக்ஷ்மி  வா,  வரம் கொடு   J  K  SIVAN  

''  வரலக்ஷ்மி விரதம்'' என்றால் என்ன ஸார் ?   என்று  எல்லாம் தனக்கு தெரியும் என்று பீற்றிக்கொள்ளும்  சாமா விடம் நண்பன் கேட்டான். 

''அது  ஒரு பண்டிகை''  இது தெரியாதா?

''வரலக்ஷ்மி''   யார் 'தெரியுமா?

''ஓ , எங்கள் வீட்டில் வரலக்ஷ்மி என்று ஒரு அத்தை பல வருஷங்களுக்கு முன்பு இருந்தாள். அவளைக்  கொஞ்சம்  தெரியும்.  சின்ன வயசில்  தமிழ் சினிமாவில்  ஜி. வரலக்ஷ்மி   எஸ் வரலக்ஷ்மி என்ற ரெண்டு பேரை  பார்த்திருக்கிறேனே.     இவர்களை தவிர  நீங்கள் எந்த வரலக்ஷ்மியை சொல்கிறீர்கள்?.   இப்படி கேட்பவர்கள் எல்லோருக்கும் இந்த  விவரம் உபயோகமாகும்: 

ஒவ்வொரு வீட்டிலும்  வரலக்ஷ்மி விரத  பூஜைக்கு என்று ஒரு கலசம் (சொம்பு ) உண்டு.  வெள்ளி, தாமிர, பித்தளை என்று அவரவர் வசதிக்கேற்ப  தனியாக வைத்திருப்பார்கள்  அந்த சொம்பில் வரலக்ஷ்மி முகம் ஒரு கொக்கியில் தொங்கவிட்டு, கலசத்தின் மேல் தேங்காய் வைத்து, அலங்கரித்து, நகைகள் சாற்றி பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும்.   சில வீட்டில் இந்த விரதம் விடாமல் செய்வார்கள். சிலர் அனுஷ்டிப்பதில்லை.  

இந்த வருஷம்  வரலக்ஷ்மி விரத  பூஜை 31.ல்.2020 அன்று. வெள்ளிக்கிழமை லன்று வருகிறது.  
வரலக்ஷ்மி  என்பது  ஸ்ரீ  மஹாலக்ஷ்மியை  வணங்கி பூஜை செய்து வரம் பெறுவது''

நமது தேசம் முழுக்க,  ஹிந்துக்கள்,  கர்நாடகா, ஆந்திரா , மகாராஷ்டிரா, குஜராத், ஒரிசா, தமிழ்நாடு என்று  பல  மாநிலங்களில்  வருஷா வருஷம் கொண்டாடப்படுவது.     ஆடி   மாதம்  ரெண்டாம் வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி விரதம் நாள். ஜூலை  ஆகஸ்ட் மாதங்களில் தான் வரும். இந்தவருஷம்   31.7.20 அன்று.  

வழக்கத்துக்கு  விரோதமாக   இந்த வருஷம்   எல்லோரும் வெளியே போகாமல்  யாரையும் கூப்பிடாமல்,  வீட்டுக்குள்  தமக்குத்  தாமே   வரலக்ஷ்மி விரதம் செய்யும்படியாக  கரோனா தேவி  கட்டளை விட்டுவிட்டாள் . ஆகவே  குடும்பத்தினர் யாவர்க்கும் தவிர  இந்தவருஷம் உலகத்தில் எல்லோருமே  எந்த  வைரஸ் ப்ராப்ளமும்  இல்லாமல் சீக்கிரமே பழைய நிலைக்கு சந்தோஷமாக வர சுமங்கலிகள் ப்ரார்த்திக்கவேண்டிய  பொது  நலம் வேண்டும்  பண்டிகையாக  வரலக்ஷ்மி பூஜை  அமைந்துவிட்டது. 

விரதம் இருக்கும் வெள்ளிக்கிழமை அன்று காலை ராகு காலத்துக்கு முன்போ அல்லது அன்று மாலையோ, ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலக்ஷ்மியை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து,    பாடத்தெரிந்தால் பாடி,    தெரியா விட்டால் , ''லக்ஷ்மி  மா  இண்டிகி  ரா வம்மா ''  என்ற  ஒரு அடியையாவது  மனப்பூர்வமாக  லக்ஷ்மி  வாம்மா, என் வீட்டுக்குள் வா '' என்று பக்தியுடன்  அழைக்கலாம்.   குரலைக் கேட்டு  லக்ஷ்மி  பயப்பட மாட்டாள். அவளுக்கு தெரியும். தாராளமாக  காதைப் பொத்திக் கொண்டு உள்ளே வருவாள்.   

 எப்போதும் போல்,   முதலில்  பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும். அஷ்ட லட்சுமிகளுக்கு பிடித்தமான அருகம் புல் தூவி பூஜை செய்யலாம்.  பிள்ளையார் பிடிக்க மஞ்சள் பொடி, நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தாம்பாளம் , பஞ்சபாத்திரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு எல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். 

புதிய வஸ்திரம் சாற்றி,  நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் முக பிம்பத்தை வைத்து, பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும். விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களை நீக்கும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.

அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி   பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹனம் செய்ய வேண்டும். இந்த கலசத்தில் வரலட்சுமி அம்மன் வந்து இருப்பதாக ஐதீகம் .  மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாடி தேவியை வழிபட வேண்டும். சிலர்  அபிராமி அந்தாதி படிப்பார்கள், சிலர்  மஹா லக்ஷ்மி  ஸ்தோத்ரம்,  அஷ்ட லட்சுமி ஸ்தோத்ரம்,   கனக தாரா ஸ்தோத்ரம்  கூட சொல்வார்கள்.  லலிதா சஹஸ்ரநாமம் சொன்னாலும்  தப்பில்லை. 

பூஜை அறையில்,   கிழக்கே, / தென் கிழக்கில்  சந்தனத்தால் அம்மன் முகம்  அமைக்க வேண்டும்.  சுவராக இருந்தால்  குத்துவிளக்கு  நடுவே  மஹாலக்ஷ்மி முகம் வரைய வேண்டும். சில வீடுகளில் சுவற்றில் நான் பார்த்திருக்கிறேன்.  என் இள வயதில்  என் வீட்டு சுவற்றில்  லக்ஷ்மி  உருவம் வரைந்து கொடுத்திருக்கிறேன்.  வெள்ளி முகம்  வைத்திருப்பவர்கள்  வெள்ளி, தாமிர,  பித்தளை சொம்பை  சந்தன குங்குமம் இட்டு,   புனித ஜலம்  கொஞ்சம் நிரப்பி, மாவிலை,   தேங்காய், முகம்  செருகி,    கோலம்போட்ட பலகை மேல் வைத்து,  தாழம்பூ  மற்றும் புஷ்பமாலைகளால்  அலங்கரித்து பூஜை செய்வார்கள். பலகை இல்லாவிட்டால்  வாழை இலை மேல் பச்சரிசி பரப்பி, மாவிலை, தேங்காய், எலுமிச்சை, பொன், பழங்களோடு  வைப்பது வழக்கம்.   ஐந்து வகையான ஆரத்தி தட்டு வைத்து பூஜை  செய்வார்கள்.  அரிசி பரப்பி மஹாலக்ஷ்மி கலசம் வைப்பது அன்னபூரணியாக அவள் அருளை வேண்டுவதாகும். 

கரோனா இல்லாத காலத்தில்   வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம் கொடுப்பார்கள்.  நெய்வேத்தியமாக  வெல்ல  கொழுகட்டை பண்ணுவார்கள். பொங்கல், பாயசம், அப்பம், வடை,  ல ட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

இப்படியெல்லாம் செய்ய முடியவில்லை என்றாலும் பிழையில்லை. மனதை நல்லெண்ணங்கள் மட்டும்  நிறைந்ததாக  வைத்துக்கொண்டால் போதும்.   உண்மையில் அது தான் இறைவன்  அம்பாள், லக்ஷ்மி  குடியிருக்கும் இடம். ஸ்ரீ  நிவாஸம்.   இதய சுத்தியுடன் ஈடுபாட்டோடு, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடைக் கையில் கட்டிக் கொள்ளலாம். வீட்டில் உள்ள வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி, நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, இந்த விரத பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.  செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சுமங்கலி பெண்கள் இந்த பூஜையின் போது மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.  
++++++

 வரலக்ஷ்மி விரதம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதற்கு ஒரு கதை கட்டாயம் சொல்லவேண்டும். 

சௌராஷ்டிர தேசத்தில் பத்ரஸ்ரவா என்று ஒரு ராஜா.  ரொம்ப  நல்ல ராஜா. கசந்திரிகா அவன் மனைவி. அவனுக்கேற்ற நல்ல மனைவி.    மிருதுவாக, நல்ல வார்த்தைகளையே பேசுபவள்.  அவர்களுக்கு  ஒரு  அழகிய பெண். சியாமா.     கசந்திரிகா  மஹாலக்ஷ்மி பக்தை.  நாள் தவறாமல்  லக்ஷ்மிக்கு பூஜை செய்யாமல் சாப்பிடமாட்டாள். கணவன், மாமனார், மாமியார்  உறவினர் எல்லோரிடமும்  அன்பு,  மரியாதை ஜாஸ்தி.   மஹா லக்ஷ்மிக்கு  கசந்திரிகாவை பிடித்துவிட்டது.  

ஒரு  ஆடி வெள்ளிக்கிழமை வயதான சுமங்கலி  ஒருத்தி  அரண்மனைக்கு வந்தாள்.   ராஜா ராணி எல்லோரும்  பூஜை முடித்து,  சாப்பிட்டு தாம்பூலம் தரித்த சமயம்.   

''வாங்கோம்மா ''  என்றுஅந்த  வயதான  சுமங்கலியை  கசந்திரிகா வரவேற்று  உபசரித்தாள். வெற்றிலை, பாக்கு, குங்குமம், மஞ்சள் முதலிய மங்கலப் பொருட்களைக் கொடுத்தாள்.

 “தாயே,  நீங்க  யார்?  என்ன விஷயமாக  வந்தீர்கள்?

“அதை அப்புறம் சொல்கிறேன். என் கேள்விக்கு நீ முதலில் பதில் சொல்லு  ராணியம்மா.   லக்ஷ்மி  தேவி அவதார தினமாச்சே  இன்று  , யாராவது ஒரு  அதிதி க்கு போஜனம் இல்லாமல்  நீ  இப்படி வயிறார சாப்பிட்டு தாம்பூலம் தரித்துக் கொண்டது நியாயமா?”   என்றாள்  முதியவள்.     கோபமே வராத கசந்திரிகாவுக்கு  ஏனோ  ஆத்திரம் வந்து விட்டது

“நீ யாரோ ஒரு பிச்சைக்காரக் கிழவி, எனக்கு புத்தி சொல்வதா?” என்று கேட்டு   கிழவியை  கன்னத்தில்  அறைந்தாள் .  கிழவி கண்கள் அழுது  சிவக்க  வெளியேறும்போது   இளவரசி சியாமா  எதிரே வந்தாள் . 

“யாரம்மா நீ  ? ஏன் கண்கள் சிவந்திருக்கிறது .  அழுகிறாய்?  என்று கேட்டாள் .

 “சியாமா, உன் அம்மாமாவுக்கு  எப்படி  லக்ஷ்மி பூஜை  பண்ணனும்னு சொன்னேன்.   அடித்து அனுப்பினாள்''

” மன்னிக்கவேண்டும்   எனக்கு அந்தப் பூஜை பண்ணும் முறை சொல்லி தாருங்கள்.முறைப்படி செய்கிறேன்” என்றது சியாமாவுக்கு  முதியவள் பூஜை முறைகளை அருளிச் செய்தாள்.  வருஷாவருஷம்  வரலக்ஷ்மி வ்ரதம் அனுஷ்டித்து பூஜை செய்தாள். 

முதியவளாக  வந்த  மகாலக்ஷ்மியை அடித்து விரட்டியதால் பத்ரஸ்ரவாவின்  செல்வங்கள்  வேகமாக குறைய ஆரம்பித்தன.    பரம ஏழையாகுமுன்    மகள் ஸ்யாமாவுக்கு  கல்யாணம் செயதுவைத்தான். சியாமா வருடந்தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்த பலனால்  அவளை போற்றிப் பாதுகாக்கும் கணவனாக மாலாதரன் என்ற  ராஜா வாய்த்தான். சியாமா கணவன் வீடு சென்றாள்.

 பத்ரஸ்ரவாவின் எதிரிகள் அவனையும், அவனது மனைவியையும் நாட்டை விட்டுத் துரத்தி விட்டு சிம்மாசனத்தைப் பிடித்துக் கொண்டனர். ஒரு பிடி சோற்றுக்குக் கூட வழியின்றி காட்டில் அலைந்தனர் இருவரும்.

பெற்றோரின் இந்த  அவல நிலையில்  சியாமா வருந்தினாள்.   தன் நாட்டுக்கு அழைத்து  உணவிட்டு பாதுகாத்தாள் . ஒரு குடம் நிறைய பொற்காசுகளைப் போட்டு  ''இதை வைத்து பிழைத்துக் கொள்ளுங் கள்''   என  தாய்   கசந்திரிகாவிடம் கொடுத்தாள் . கசந்திரிகா தெட்டதும் பானையில் இருந்த  பொற்காசுகள் லாம் கரித் துண்டுகளாகி விட்டது. 

தாயிடம்  அவள் அடித்து விரட்டியது  மஹாலக்ஷ்மியை என்று உணர்த்தினாள்  மகள்.   தனது  தவறை உணர்ந்த கசந்திரிகாவும்   அப்போதிலிருந்து வரலட்சுமி பூஜை முறையை தனக்குக் கற்பிக்குமாறு  மக்கள் ஸ்யாமாவிடம் கேட்டு அறிந்து  நித்ய மகாலக்ஷ்மி பூஜை செய்தாள் .  பலன் கைமேல் தெரிந்தது.  பத்ரஸ்வரா   மீண்டும்  படை வீரர்களை சேர்த்துக் கொண்டு  தனது  நாட்டை ஆக்கிரமித்த எதிரி மன்னனை வீழ்த்தி மீண்டும் ராஜாவானான்.  இழந்த  செல்வங்கள் வைபவங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றாள் கசந்திரிகா.
இதை சொல்வது எதற்காக வென்றால்  வரலக்ஷ்மி  விரத பூஜை எனும் மஹா லக்ஷ்மி பூஜை மஹாத்மியம் புரிய. 

 மேலே சொன்ன கதை ஒன்று கேட்டால் இன்னொன்று கொசுறு என்கிற முறையில்  சாருமதி  கதை
  தருகிறேன்.   

மகத தேசத்தில் குண்டினபுரம் என்னும் நகரில் பிறந்து வாழ்ந்து வந்தாள் சாருமதி. கற்பில் சிறந்தவள். தன் கணவன், மாமனார், மாமியாருக்கு  குழந்தைகளுக்கு என்று  வேண்டிய நற்பணிகளைச் செய்வதையே வாழ்நாள் பாக்கியமாகக் கொண்டவள்.  சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, மணந்த ஒரு பெண். அவள் பக்தியை மெச்சி  மகாலட்சுமி   ஒருநாள்  சாருமதி  கனவில் வந்து வரலட்சுமி விரதத்தைப் பற்றி எடுத்துக் கூறினாள். மறுநாள் எழுந்த சாருமதி  தான் கண்ட   கனவைப் பற்றிக் கூற அதைக் கேள்விப்பட்ட பலரும் அந்தப் பூஜையை செய்தனர். அதனால் நன்மக்கட் பேறுடன் என்றும் சுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெற்றனர்.
 சாருமதி மேற்கொண்ட விரதமே வரலட்சுமி விரதம். அதன் பயனாக பதினாறு செல்வங்களையும் பெற்றாள் சாருமதி. 

சித்திரநேமி என்றொரு தேவகுலப் பெண்  நடுநிலை தவறாதவள் என்று பெயரெடுத்தவள். அதனால் தேவர்களிடையே எழும் சில சச்சரவுகளுக்கு அவளே நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குவாள்.
ஒருமுறை அவள் நடுநிலை தவறி தீர்ப்பு சொல்லி விட்டாள். அதனால் அவளுக்கு தொழு நோய் பீடிக்கும்படி சாபம் கொடுத்தாள் அன்னை உமையவள். தன்னை மன்னிக்கும்படி வேண்டி கேட்டுக் கொள்ள, மனமிரங்கிய தேவி கங்கை நதிக்கரையில் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்தால் அவளுக்கு உள்ள நோய் நீங்கும் என்று சொன்னாள்.

சித்திரநேமியும் அவ்வாறே கங்கைக் கரை வந்து வரலட்சுமி பூஜையைச் செய்ய அவளது நோய் நீங்கி நல்லுருவம் பெற்றாள். அவள் “என்னைப் போல புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சிந்து, காவிரி, தாமிபரணி முதலிய நதிகளில் நீராடி இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு பலன் பல மடங்கு கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டாள். லட்சுமியும் அவ்வாறே செய்வதாக கூறினாள். அதனால் இந்த பூஜையை நதிகளில் நீராடிய பின் செய்வது மிகவும் சிறப்பு என்பது ஐதீகம். ATTACHED IS  VARALAKSHMI VRADHAPOOJA  SIMPLE PROCEDURE   
https://youtu.be/YH7Jr_GoyBg



sivan jaykay

unread,
Aug 1, 2020, 9:23:01 PM8/1/20
to amrith...@googlegroups.com

                                                              நமது கடமை   J K  SIVAN 

நமது பாரத  தேசம்  உலகில் எங்கும் இல்லாத  புண்ய பூமி.    என்ன இல்லை இந்த வளநாட்டில்,, எதற்கு ஏந்தவேண்டும்  கையை வெளி நாட்டில் --   பாடினால் மட்டும் போதாது. 

வடக்கே இமயம், தெற்கே ராமேஸ்வரம், கிழக்கே புரி, மேற்கே துவாரகை  இதற்கிடையே  எத்தனை புண்ய நதிகள். அவற்றின் தலைவி கங்கை ஓடும் கரையில் உள்ளது காசி. ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்நாளில் ஒரு தரமாவது சென்று முழுகி எழுந்து காசி விஸ்வநாதனை நமஸ்கரிக்க வேண்டும்... காசியை விட உசந்த க்ஷேத்ரம் இல்லை.    காசி தான் ஷேத்ர ராஜா.  கங்கையின் துல்லியத்தை கெடுப்பது  துரோகம்.  இப்போது அதை சுத்தம் செய்ய வென்றே ஒரு இலாகா வேலை செய்கிறது.  வடக்கே காசி, தெற்கே ராமேஸ்வரம்  இரண்டிற்கும்   நடையாக நடந்த வர்கள், நடப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

''பாவலரும் நாவலரும் பண் மலரக் கண்மலரும்
காவலரும் ஏடவிழ்க்கும் காசியே – தீ வளரும்
கஞ்சக் கரத்தான் கலைமறைக்கு நாயகமாம்
அஞ்சக் கரத்தான் அகம் - என்கிறார்  குமர குருபரர்   காசிக்கலம்பகத்தில்.  

 இதில் ஏடவிழ்க்கும்   என்பது   இதழ் விரியும் பூக்களையும்,  ஓலைச்சுவடிகளை அவிழ்க்கும்  புலவர்களையும்  குறிக்கிறது.    காசிக்கு  வடக்கிலிருந்து  ''வருணா''  நதி நதியும், தெற்கிலிருந்து “அசி” நதியும் கங்கையில் கலக்கிறது.  அதனால் தான் காசிக்கு  “வாரணாசி” என்றும் பேர்.   காசிக்கு செல்லாத  மஹான்கள்,  ரிஷிகள், ஞானிகள், யோகிகள் கிடையாது. 

காசி   காஞ்சி இருநகரங்களும் நமது ஆன்மீக வளர்ச்சி பேருதவி செய்தவை , செய்பவை.  

நாம்  காசி யாத்திரை என்றால் பஞ்சகச்சம், கையில் தடி, விசிறி, கீதை புத்தகம் (வைத்துக் கொள்ள மட்டும்) என்று கல்யாணத்தன்று   மைத்துனன்  குடைபிடிக்க சில நிமிஷங்கள் கல்யாண மண்டபத்தில் வீடியோவில் வருவதாக வைத்து கொண்டிருக்கிறோம். 

ஹிந்துக்களின்  ஆன்மீக வளர்ச்சியை,  பண்பாட்டை,  பக்தியை   சீர் குலைக்க  நம்மில் சிலரை  சில நாத்திக வாதிகள் பயன்படுத்துகிறார்கள்.  சாதாரணமானவர் சொன்னால் யாரும் லக்ஷியம் செய்ய மாட்டார்கள்.  நமக்கு   துரோகம் செய்பவர்களை  பொறுக்கி எடுத்து   நம்மை ஆளவைத்து  அரசை,  பதவியை  கொடுத்து,  அதர்ம வழிகளில்  சம்பாதிக்க வழிவிட்டு,  அவர்கள் நமது  பண்பாட்டுக்கு விரோதமாக  செயல்படு ம்  போது   குறை கூறுவது கங்கையில் குளித்தாலும் தீராத பாபம்.  தாய்க்கு செய்யும் த்ரோகத்தை விட  இது   மோசமானது.    இத்தகையவர்கள்   நம் உடலில் நாமே வளர்த்துக்   கொள்ளும் கான்சர்  எனும் புற்று நோயைவிட கொடூரமானவர்கள் .

வெள்ளையன்  இந்த நாட்டை விட்டு போகுமுன்  நம்மை பிரிக்கும் சூழ்ச்சிகளை செய்துவிட்டே போனான். தமிழகத்தின் எல்லை தாண்டினால் தமிழனுக்கு மதிப்பில்லை, ஸம்ஸ்க்ருத விரோதம், இந்தி எதிர்ப்பு,  மொழிவாரி மாநிலங்கள் எல்லாமே  நமது   உள்,  வெளி  வளர்ச்சிக்கு எதிராக அமைந்துவிட்டன.   நமது பாரம்பரியமும், கலாசாரமும், மகத்துவமும், விசேஷங்களும்  துண்டு பட்டு விட்டன.    பெரும்பாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன. ரெண்டு மூன்று தலைமுறைக்கு  நமது பெருமைக்குரிய  விஷயங்கள் ஒன்றுமே தெரியவில்லை.. 

நமது சகோதர சகோதரிகளை,  குழந்தைகளை, அடுத்த தலைமுறையை, நல்ல வழியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி நடத்திச் செல்லும்  முக்கிய பொறுப்பு நமக்கு இப்போது வந்துவிட்டது.  இதற்கு பெரிதும் உதவ வேண்டிய  ஊடகங்கள்,   பத்திரிகைகளை  ஏனோ   காண முடியவில்லை. 

நமக்கு தலையாய கடமை, தேசப்பற்றும்,  நாம் அனைவரும் முதலில் இந்தியர் என்ற எண்ணம் ம் தான்.    சமூகப் பொறுப்புணர்ச்சியுள்ள  ஊடகங்கள், பத்திரிகைகளை  மட்டுமே நாம் மனதில் உறுதியுடன் ஆதரிக்க வேண்டும்.   இதை பின்பற்றினால் மற்றவை மாற்றமடையும்.  நமக்கு நன்மை செய்யாததை புறக்கணிக்கவேண்டும்..மக்கள் ஆதரவு இல்லாமல்  எதுவும் வளறாதே . 

டிவி    யூட்யூப்  பேப்பர்  எல்லாம் அருவருப்பு நிறைந்த சங்கதிகளை தான் காட்டுகிறது, சொல்கிறது.  நாளுக்கு நாள்  நிலைமை மோசமாக ஆகி வருகிறதே.  நமது கலாசாரத்திற்கு எதிராக   செயல்படும் இவை நமக்கு தேவையா ?  பழைய காலத்தில் இவை இல்லையே. 

கங்கை பிணத்தை   வீசி  எறிவதற்கு அல்ல.   ஊடகங்கள் சொல்வது போல்  காசிக்கு செல்வது மரணம் அடைய அல்ல. அது சுடுகாடு அல்ல.   புண்ய நதிகளில் இறந்தவன் சாம்பலை தெளிப்பது அவன் செய்த பாபங்கள் விலகி அவன் நற்கதியை அடைய என்ற நம்பிக்கையால் என்று புரியவேண்டும்.  அது நமது பண்பாடு.  காசி சிறந்த புண்ய க்ஷேத்ரம் என்பதால் அங்கே அதிகம் இது.   இறந்தவர்களுக்கு  பித்ரு   காரியங்கள்  செய்வதையோ, யாத்ரீகர்கள் கங்கா மாதாவிற்குச் செய்யும் பூஜைகளையோ, தினமும் அந்தி சாயும் நேரத்தில் அற்புதமாக நடக்கும் ஆரத்தி வழிபாட்டையோ பெருமையாக நினைக்காமல்  எதிர்மறை எண்ணத்தோடு துஷ்  ப்ரச்சாரம் செய்வது தவறு. அநீதி. அநியாயம்.

மேலே பறக்கும்  கழுகுக்கு  கீழே காசி விஸ்வநாதர்  ஆலயம் பிடிக்குமா,  அல்லது  எங்கோ அழுக்கிக் கிடக்கும்  நாய்  பூனை, எலி உடல் பிடிக்குமா?  அது போல் நமது எதிர்மறை ஊடகங்கள், பத்திரிகைகள் செயல்பட விடக்கூடாது.  அதை நடத்தும் வசதி படைத்த  கலாசார விரோத மனத்தினர்  ஊடகங்களை  தவறான முறையில்  பயன் படுத்தி எளியமக்களிடமே  காசு வாங்கி அவர்கள் மனதில் அருவருப்பை  விதைக்கிறார்கள்.   பிரசித்தி பெற்ற  ஆலயங்களில் நடக்கும் நல்ல விஷயங்களை காட்டலாமே.  கங்கையில் நடக்கும்  கங்கா மாதா  பூஜை வழிபாடுகளை அடிக்கடி  காட்டலாம். காசி நகரத்தின்  சிறந்த கல்விச்சாலைகளை  பற்றி சொல்லலாம்.  பாரதத்தின் ஆன்மீகம், கலாசாரம், பாரம்பரியம் ஆகியவை சிறக்க காசியை ஆண்ட மன்னர்கள் எவ்வளவு சேவைகள் செய்துள்ளார்கள் என்பதை  காட்சிகளாக காட்டலாம் எழுதலாம். நம் தமிழக  நாட்டுக்கோட்டை செட்டியார்கள்,  நகரத்தார்களால்  பக்தியோடு, தார்மீக மனத்தோடு  அருமையாக நிர்வாகம் செய்யும்  ஆலய  தரிசன  ஸ்தாபனங்களை  பற்றி  நிறைய சொல்லலாம்.   பிற மதத்தால் காசி அல்லலுற்ற துன்பங்களை காட்ட ஏன் வெட்கம். சரித்திரம் தானே அது.  காசி  விஸ்வநாதர் ஆலயம் போன்ற ஏராளமான ஆலயங்களை அவர்கள் எவ்வாறு அழித்தார்கள். பார்த்தாலே கண்ணில் ரத்தம் வருமே.  அதை காட்சிகளாக காட்ட வில்லை விஸ்வநாதர் ஆலயத்தின் நந்தி மசூதியைப் பார்த்தவண்ணம் நிற்பதே அங்கே  ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கி மசூதியைக் கட்டியுள்ளார்கள் என்பதற்குச் சரியான சாட்சி. இதை சொல்லவில்லை. நந்தி  மசூதியை பார்த்து நிற்காதே . அங்கே கோவில் சந்நிதி ஏதோ இருந்திருக்கிறது.  எப்படி காணாமல் ல்போய்  மசூதி நிற்கிறது ?   உஸ்தாத் பிஸ்மில்லாகான் இஸ்லாமியராக இருந்தாலும் கங்கை நதியையும், விஸ்வநாதர் ஆலயத்தையும் எவ்வாறு போற்றினார் என்கிற மத நல்லிணக்கத்துக்கு உதாரணமான உண்மையைச் சொல்லலாமே.  இது மத  நல்லிணக்கம் தானே.  

கங்கைக் கரையில் கிளை அலுவலகம் அமைத்து “மிஷநரீஸ் ஆஃப் சாரிடி” அங்கு வாழும் ஓடக்காரர்கள்  கிறுத்துவர்களாக  மாறி வருகிறார்கள் என்று சொருகி சேதி.  இந்துக்கள் தங்கள் பித்ருக்களுக்கு கங்கையின் ஐந்து கட்டங்களிலும் ஓடத்தில் சென்று தான் காரியங்கள் செய்ய வேண்டும். மேலும் கங்கைக் கரையிலும் நீரிலும் இந்துக்கள் தங்கள் காரியங்களைச் செய்வதற்கு ஓடக்காரர்களின் உதவி  அவசியம். அவர்களை மதம் மாற்றிவிட்டால்??  ஆஹா என்ன அற்புதமான திட்டம். 

அன்பர்களே, ஒரு நல்ல விஷயம் அனைவரையும் சென்றடைய வேண்டும் நமக்கு முன்னோர்கள் வெறும் தாய்ப்பால், புட்டிப்பால் கொடுத்து வளர்க்கவில்லை, அதனுள் தெய்வீகம், ஆன்மிகம், பக்தி இவற்றையும் சேர்த்து தான் வளர்த்தார்கள், நமது கடமையும் அவ்வாறே தொடரவேண்டும் அதற்கு உங்களாலான  ஒத்துழைப்பை கொடுத்து  குழந்தைகளுக்கு ஒவ்வொரு வீட்டிலும் நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை, இந்த கொரோனா விடுமுறை சமயத்தை  நன்றாக பயன்படுத்தி  குழந்தைகளை, அடுத்த தலைமுறையை  நமது, நம்பிக்கை,  கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக உணரும்படி கற்றுக்கொடுங்கள்,   முதலில் நீங்கள் சரியாக அறிந்துகொள்ளுங்கள். குழந்தைகளுக்கு தப்பாக கற்றுக்கொடுக்கக்கூடாது.  நல்லதையே நினைப்போம் செய்வோம்.   நம்மாலான சேவையை நமது தாய் நாட்டிற்கு அதன் பெருமை முன்புபோல்  தழைத்தோங்க  உதவி புரிவது ஆகும்.  ஒரு  லட்சிய சேவையாக  இதை பல னெதிர் நோக்காது  புரிவோம்.  

sivan jaykay

unread,
Aug 1, 2020, 9:23:01 PM8/1/20
to amrith...@googlegroups.com
                       பலே  ஜாதகன்-   ராசி பலன்    J K  SIVAN  

ஒரு சில  வீடுகளில்  ரத்தக்கண்ணீர்  வடிக்கிறார்கள். குழந்தை இல்லையே என்று.  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று தெரியும்.  குழந்தை பிறந்ததும் சொல் வந்து கொல் கிறேன்  என்று  ராஜா ஆணை  இட்டு,  அந்த அப்பா அம்மா ஏழு குழந்தைகளை பெற்ற  அடுத்த கணமே  அவர்கள் கண்ணெழுதிரே  அந்த குழந்தைகள்  கொல்லப்படுவதை பார்த்தவர்கள்.  இதை எப்படி எழுத முடியும்?  அந்த துயரம், துன்பம்  நிர்கதி எழுத்தில்  பிடிபடுமா?   இந்த நிலையில் தான் எட்டாவது குழந்தையும்  பிறந்து நல்ல வேளை  உயிர் பிழைத்தது. ஏனென்றால் அது உலகத்தின் அனைத்து உயிர்களையும்  பிழைக்க வைப்பது ஆயிற்றே.

எந்த தாயாவது  குழந்தையை பிறந்ததும்  இழக்க  சம்மதிப்பாளா?அப்புறம் அது எங்கே சென்றது, வளர்ந்தது, என்ன ஆயிற்று என்று அறியமுடியாத நிலை அவளுக்கு..... அந்த குழந்தையை பற்றி தான் இப்போது சொல்லப்போகிறேன்.

குழந்தை பிறந்த சேதி  கேட்டு எல்லா உறவினர்களும் நண்பர்களும்  பரிசோடு வருவார்களே. கொஞ்சுவார்களே.......அந்த குழந்தை பிறந்தபோது,  அதை கொஞ்ச யாரும்  வரவில்லை. இரவோடு  இரவாக அதை  தாயிடமிருந்து பிரித்தாகிவிட்டது. பிறந்ததே  வெளியே  தெரியாத போது  பிறந்த தை  யார்  கொண்டாட முடியும்?.  வளர்ந்ததும் எங்கோ! . அதற்கு  ஜாதகம் பார்த்தார் களா?  நல்ல  நாள்  பார்த்து  பேர்  வைத்தார்களா?   கன்னங்கரேல் என்று இருக்கும் அந்த கருப்பழகன்  ஊரில்   யாராலும்  கிருஷ்ணன்  என்றே  அழைக்கபட்டான்.   கிருஷ்ணன் என்றால் கருப்பன் என்று அர்த்தம்.

அதெல்லாம்  சரி,    இதற்காக  அவனுக்கு  ஜாதகம்  என்று  ஒன்று  இல்லாமலா போய் விடும்?.
 ஒருவன் பிறந்த நாள், நேரம்  எல்லாம்   சரியாக  தெரிந்ததால்  அதை வைத்து கொண்டு  பல   ஜோசியர்கள்   ஜாதகம் கணித்து  குணாதிசயம், எதிர்காலம் எல்லாம் சொல்கிறார்களே. நாம் இலவசமாகவும், காசு கொடுத்தான்  ஜாதகம் பெருகிறோமே .

அந்த பயல் ஜாதகத்தை  அப்போது யாரும் கண்டிக்கவில்லை.  பல  ஆயிரம் வருஷம் கழித்து எத்தனையோ ஜோசியர்கள் அவன் ஜாதகத்தை கணித்து, பலன் சொல்கிறார்கள்.... ஆச்சர்யமாக இருக்கிறது.  

அவர்கள் கணிப்பு அந்த கருப்பனின்  வாழ்க்கையை  அப்படியே  படம்  பிடித்து காட்டுகிறதே. அவன்  ஏன்  மற்றவர்களை  விட  வித்யாசமாக   இருந்தான்??அவன்  ஏன்  ஒரு  காந்த சக்தியாக  இருந்தான்?   கண்ணற்ற சூர்தாசை கேட்டால்  அவர்  கவிதை ரூபமாகவே  அவன் ஜாதகத்தை  பாடிவிடுகிறார்!அவர் அப்படி என்ன சொன்னார்?   அவன்  அதி  புத்திசாலி, பேரழகன்,  பெரிய செல்வந்தன், மாணிக்கம், மரகதம், வைரங்கள் ஜொலிக்கும் ஆபரணதாரி....  16000  பெண்கள்  அவனை நம்பி,  அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனி பெரிய  மாளிகைகளாம் .சொன்னது எல்லாமே  அவன் செல்வத்தின்  அளவில்  துக்குணியூண்டு  என்றால்  பார்த்துகொள்ளுங்கள் .  நவ கிரஹங்களும் அவன் சொற்படியே கேட்கும்.   அவன் ஒரு தியாக செம்மல்.  அவன்  ஒரு தனிப்பிறவி. இறைவனின்  மானுடஉரு என்று சுருக்கமாக சொல்வது தான் சரி.

அன்பை  தருவதிலும்,   தானே  அதுவாகவும்  ஆனவன் அவன்.   ஒரு பிரபல ஜோசியர் தொடையைத் தட்டி உரக்க சொல்கிறாரே காதில் விழுகிறதா?

''அவன்  ரிஷப ராசிக் காரன்யா!! . லக்னாதிபதி சுக்ரன்!  கேக்கணுமா?”  ரோஹிணி  நக்ஷத்ரம் வேறே! .  சந்திரன்,  சனி, அங்காரகன் எல்லாம் உச்சத்திலே இருக்கா.   அவா அவா   கிரஹ த்திலே சூரியன், குரு,  புதன்  எல்லாரும்  சௌகர்யமா உக்காந்திருக்கா. ரிஷப ராசியிலே லக்னத்தில்  சந்திரன் அக்கடான்னு  இருந்தா  ஜாதகன்,  அழகனா, பேரும்  புகழுமா  ஆள் மயக்கியா, செல்வத்திலே புரளாம என்ன பண்ணுவான்?

ஒண்ணாம் மடத்திலே  கேது ங்கிறதாலே  கொஞ்சம்  அதிகமாவே கேளிக்கை உண்டு. அபவா தங்களும் கூடதான்  அவன் மேலே  இருக்கும் !.  

3ம்  வீட்டிலே  செவ்வாய்   நீச்ச பங்கனா இருக்கான் என்கிறதாலே   ஆசாமி  யுத்தத்திலே படு
தைர்யசாலி!  ரோகிணி அழகி,   சந்திரனை  ஆக்ரமித்தவள். எனவே சந்திரனும் ரோஹிணி
யும்  சேர்ந்த  ஜாதகன்  அழகனாக ஆள் மயக்கியாக  இருந்ததில்  என்ன அதிசயம்?.  ரிஷபத்துக்கு  பசு  நேசம்  உண்டே!!  இந்த ராசிக்காரன் பசுக்களிடையே பிரபலமானவன்  இதனால் தானோ?? 

6ல்  புதன்,  10ல் சனி  பிரதானமாக  இருந்து  ஜாதகன்  தர்ம ஞாயத்தில்  ஸ்ட்ராங்காக  இருக்க  உதவியிருக்கிறான்.  அங்காரகன்  ராஹுவுடன்  சேர்க்கையால்  ஜாதகன்  ராஜதந்திரி.  

இதை கேளுய்யா!!  ரெண்டுலே உடைமையானவன்  புதன்; படு  ஜோரா  5ல்  இருக்கான்.  அதனா லே  வாய்லேருந்து  வர வார்த்தை எல்லாம் முத்துன்னா முத்து தான். பேச்சிலே மயங்காதவா  புத்திசாலித்தனத்தால் அடிமையாகாதவா  கிடையாது. இதை பாரு.  சூரியன்  தன்னுடைய  வீட்டிலே  குருவோட  ஸ்வஸ்தமா  இருக்கான். அதனாலே என்னவா?    ஹு ம்ம்  .. எதிரிகள்  பொடிப் பொடி!!  ஆசாமியை  அசைக்க முடியாது.  

இது  என்ன வேடிக்கை.  7ம் வீட்டுக்கு  சொந்தக்காரன்  அங்காரகனோடு   களத்ர 
காரகன் 
சுக்ரன் சேர்ந்துட்டதாலே  மனைவிகள்  கொஞ்சம்   ஜாஸ்தி  தான்.அதனாலே என்ன  நாமா சோறு போடப் போறோம்? இல்லே  சண்டை போடப்போறோம்.     பரவாயில்லை!!   ஏன்னா, ராகு  பக்கத்திலேயே இருக்கான். தெய்வீக  உறவு தான். 

9லே, அதான்,  சனியோட இடத்திலே,  கேது இருக்கான்.   யோககாரகனா சனி  7ல் இருந்துண்டு  வெற்றி மேலே  வெற்றியா தரான். யுத்தத்திலே  ஜாதகனை  அடிச்சிக்க  ஆளு  கிடையாது. புரியறதா??.   சனி தான்   ஆயுள் காரகன், வர்கோத்தமன்  ஆச்சே. ஆசாமிக்கு  பூரண  வயசு
 கிருஷ்ணன்  தான்  125 வயசு இருந்தானே.  

 எல்லாத்துக்கும்  காரணமான தெய்வத்தின் ஜாதகத்தில்  எல்லாமே  சரியாக இருப்பதில் என்ன ஆச்சர்யம் என்று தான் எனக்கு தோன்றுகிறது. 

sivan jaykay

unread,
Aug 1, 2020, 9:23:01 PM8/1/20
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி     26.         J K   SIVAN   
தாகூர்   


                        26      காணாத  கண்ணன் 

26 He came and sat by my side but I woke not.
What a cursed sleep it was, O miserable me!
He came when the night was still; he had his harp in his hands
and my dreams became resonant with its melodies.
Alas, why are my nights all thus lost?
Ah, why do I ever miss his sight
whose breath touches my sleep?

காரிருள். கும்மிருட்டு. நள்ளிரவை தாண்டிவிட்டது.  நான் தன்னந்தனியாக படுத்திருந்தேன்.
யாரோ அருகில் வந்து அமர்வது போல் தோன்றியது.   கனவு காண்கிறேனா?  மெதுவாக வந்து என் பக்கத்தில் உட்கார்ந்த அந்த  உருவம்   என்னையே  பார்த்துக் கொண்டிருக்கிறதா ?
யாராக   இருக்கும்?   என்னை யார் லக்ஷியம் செய்வார்கள்?  வேறு யார் ?  என் கிருஷ்ணனாகத்தான் இருக்கவேண்டும். 
நான் கண்ணை  திறக்கவே இல்லை அசையாமல் படுத்து கிடக்கிறேன்.  சே என்ன  தூக்கம் இது?
பாழாய்ப்போன தூக்கம்   சட்டென்று விழித்து அவனைக் காணக்கூட முடியாமல்?
எனக்கு கண் திறந்திருந்தாலும் மூடினாலும்  ஏன்  என்னை  அவன் எழுப்பவில்லை?
சே என்ன தூக்கமிது. மரணத்தை நினைவூட்டும் அன்றாட வெள்ளோட்டம்.
இருளில் சிறிய  மங்கிய  அகல் விளக்கொளியில்,  கிருஷ்ணன் கருப்பாக என் அருகில் வந்திருப்பதை ஏன்   நான் உணரவில்லை.
அவன் கையில் வழக்கம்போல் குழலோ?.வீணையோ? ஏதோ ஒரு வாத்யம்.
எதுவாக இருந்தால் என்ன. அதிலிருந்து வரும் சுநாதம் என்னை மயக்கமுறச் செய்கிறதே.
மயக்கத்தை தருவது புல்லாங்குழலோ, வீணையோ, எதுவானால் என்ன?
ஓஹோ என் கனவுக்காட்சிகளுக்கு அது  திரையிசையோ,பின்னணி சங்கீதமோ?  குறட்டைக்கு  பக்கவாத்யமோ? 
ஆஹா அந்தரங்கத்தில்  அவனது ராகங்கள் மனதிலேயே ஆழத்தில் பதிந்து  இருக்கிறது  ஆனால் எனக்கு பாட வரவில்லையே. திருப்பி  இசைக்க முடியவில்லையே?
அவனை அனுபவியாமல் என் வாழ்வில் தான்   எத்தனை இரவுகள் இப்படியே  சென்று விட்டன.  நிறையவே இழந்துவிட்டேனே .
மீண்டும் திரும்ப பெறமுடியாத இரவுகள். ஏன் அவற்றை கோட்டை விட்டேன்?
''உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல'' என்று பாட தோன்றுகிறது.
அவன் மூச்சு என் ஸ்வாசத்தோடு கலக்கவேண்டும் என்று  ஒரு அசுர தாகம்.  ஆர்வம்.
அப்படியே அவன் மீதே உறங்கவேண்டும்...விழிப்பில் காணமுடியாத உன்னை, உறக்கத்திலாவது அணைத்து உன்னோடு இருக்கிறேன் கிருஷ்ணா  ....

sivan jaykay

unread,
Aug 1, 2020, 9:23:27 PM8/1/20
to amrith...@googlegroups.com
                                                        யமுனா    நீ உயர்ந்தவள்?  J K  SIVAN 
                                           
ஒரு எண்பது வயது  கிழவி .   அவள் பெயர் வரலக்ஷ்மி.   ஆனால்  எல்லோரும் கூப்பிடுவது கோதாவரி பாட்டி.  யாரும்  இல்லாத  தனிக்கட்டை.  அவளுக்கு ஒரு வீடு இருந்து அதில் இருந்து வெளியே வந்து எத்தனையோ வருஷங்கள் ஆகிவிட்டது.  அவள்  வாழ்க்கையின்  பெரும்பகுதி  கோதாவரி நதிக்கரையிலேயே கழிந்து விட்டது.  இரவோ பகலோ  அவளுக்கு  உற்ற  சினேகிதி  கோதாவரி மட்டும் தான். அதோடு பேசுவாள். பாடுவாள், சிரிப்பாள், ரசிப்பாள், கண்கொட்டாமல் அதன் அழகை பார்த்துக்  கொண்டிருப்பாள்.  ஆகாரம் கிடைக்காத நாளில்  கோதாவரியின் தண்ணீரே அவளுக்கு ஆகாரமாக இருந்தது. கோதாவரி காற்றில்
அசையும் சத்தம் அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.  

கோதாவரி நதியை விட்டு பிரிய  மனம் கொடுக்காவிட்டாலும், வயது அதிகமான காரணத்தால், மற்ற புண்ய நதிகளையும்  முடிந்தவரை  ஒவ்வொன்றாக பார்க்க ஆசை வந்தது.

''அம்மா கோதாவரி நான் போய்  வருகிறேன் என்று சொல்லமாட்டேன். போகிறேன் அம்மா?''

''ஏய் , கோதாவரி,  உன் பெயரும் என் பெயர் தானேடி,  ஏன் என்னை விட்டு போக எண்ணம் வந்தது என் மேல் கோபமா?  நான் ஏதாவது தப்பு பண்ணி இருந்தால்  என்னை  மன்னித்து  விடடி.  என்னிடமே இரேன்.''

''அம்மா பெரிய கோதாவரி   நீ என் தாய்.  நீ  வயதற்றவள். நான் வயதானவள். எனக்கு கங்கை, யமுனை
  நதிகளையும்  பார்க்கவேண்டும், உன்னைப்போல அவர்களும் அழகா என்று தெரிந்து  கொள்ள வேண்டும்.  முக்கியமாக  கங்கையை  விட எனக்கு பிடித்த கிருஷ்ணன் விளையாடிய  யமுனையை நான் முடியும் முன் ஒரு  தடவை பார்த்துவிட வேண்டும்.  அவளை  மனதார  அணைத்துக்  கொள்ளவேண்டும் என்று கொள்ளை ஆசை.  இப்போதிலிருந்து மெதுவாக நடக்கிறேன்.  திரும்பி வருவேனா என்று தெரியாது. அதனால் தான் உன்னை மனதில்  இருத்திக்கொண்டு போகிறேன்....''

கோதாவரி அவளுக்கு விடை கொடுத்தாள் . கோதாவரி கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கங்கையை அடைந்தாள். அடேயப்பா   நான் நினைத்தது போல் இல்லையே  இவள்.   

''கங்காமாதா, உண்மையிலேயே நீ  தெய்வநதியடி. பாபம் நீக்கி புண்யம் தருபவள்... உன் சகோதரி கோதாவரி நான்''       சந்தோஷமாக கங்கைக்கரையில் சில நாட்கள் இருந்தபின் திருப்தியாக விடை பெற்றாள் .

''கோதாவரி  உன்னோடு சிலகாலம் தான் இருந்தேன். உன்னை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அதற்குள்  என்னை விட்டு போகிறேன் என்கிறாயே''   என்றாள் கங்கை.

''கங்கம்மா,  எனக்கு யமுனையோடும் சில நாள், அல்லது சிலமணி நேரமாவது இருக்கவேண்டும் என்று ஆசையம்மா. முடிந்தால் உன்னை மீண்டும் சந்திக்கிறேன் தாயே ''

கோதாவரி  யமுனைக்கு வந்துவிட்டாள் .
பரந்த நீண்ட   வளைந்து வளைந்து செல்லும் யமுனையின் அழகில் பிரமித்தாள் .  கரையில் விழுந்து புரண்டாள்.
சிரிப்பொலி கேட்டது. 
 ''யார் இங்கே  சிரிப்பது ?"'  சுற்று முற்றும் பார்த்தாள் .
''நான்  தானடி  கோதாவரி. உன் பிரியமான  யமுனா.  
''ஓ நீயா... அக்கா,   உன்னை பார்க்கத்  தானே  நான் அவ்வளவு தூரத்திலிருந்து  வந்தேன். '' 
''ஏன் என் கரையில் புரண்டாய்?''
''இங்கு தானே அம்மா என் கண்ணன் உன்னோடு விளையாடி நடந்தான். என்னால் குனிந்து நமஸ்காரம் பண்ணமுடியவில்லை. முடிந்தவரையில் எல்லா இடத்திலும் மண்ணில் உருண்டால்  அவன் பாதம் பட்ட இடத்தை நமஸ்கரித்தமாதிரி  ஆகாதா? என்று தோன்றியது .

கரையில்   நடந்த  சிலர் ஏன் இந்த கிழவி  யமுனை நதிக்கரையில் தனியாக அமர்ந்திருக்கிறாள் என்று யோசித்துவிட்டு போய்விட்டார்கள். 
 
யாரும் இல்லை நதிக்கரையில். யமுனையை ரசித்துக்கொண்டு  நிறைய  கிருஷ்ணனோடு யமுனைக்கு உண்டான  உறவை அனுபவங்களைக்  கேட்டாள் . யமுனை சந்தோஷத்துடன்  ''கோதாவரி  உன்னைப்போல்  யாரும் என்னிடம்  கிருஷ்ணனை பற்றி பேசவே இல்லையடி...உனக்கு சொல்ல நிறைய  விஷயம் இருக்கிறது. நீ என்னோடு  இரு உனக்கு எல்லாம் சொல்கிறேன். ஒரு வாழ்  நாள்  போதாது.''

''யமுனா  நான் பார்த்தவர்களில்  நீ தானடி அழகு?   எவ்வளவு அழகாக இருக்கிறாய்  நீ!    நுங்கும் நுரையும்  மலர்களும் நறுமணமும் வீச  ஒரு  இளம் பெண்ணாகவே கங்கையை விட  அழகானவளாகவே  எனக்கு காட்சியளிக்கிறாய்  யமுனா".

“ கோதாவரி,  நீயும்  ஒருகாலத்தில் இளம் பெண் தானே. என்னை விட  அழகானவளாகவே இருந்திருப்பாய்  என்று இப்போது உன்னைப் பார்த்தாலேயே  தெரிகிறது''

"நான்  எப்படி இருந்தேன்  என்றே  எனக்கு தெரியாது யமுனா.  நான் வயதுக்கு வரும்  முன்பே  எனக்கு   கணவனாக  இருந்தவன் கோதாவரியில்  நீந்தி  மூழ்கிப்  போனான்.   அன்றிலிருந்து  நான் அவன்   திரும்ப வருவான் என்று கோதாவரிக் கரையிலேயே  வெகு காலம்  பார்த்து கொண்டே   காத்துக் கொண்டிருந்தேன். காலம் கடந்துவிட்டது.  அவனை மறந்து கோதாவரியின்  அன்பில்   அழகில் வாழ்ந்தவள்". உங்கள் இருவரை விட இப்போது தான் சில நாள் முன்பு கங்கையை சந்தித்தேன். அடேயப்பா  கம்பீரமானவள் கங்கை...''
"கோதாவரி,   நீ  சொல்வது சரியே.  கங்கை மிக பெரியவள்.  பெரிய இடத்தைச்  சேர்ந்தவள் .எங்களுக் கெல்லாம்  தலைவி. புண்ய நதி. அவளுக்கு  நான்  ஈடாக முடியுமா? நான்  சாதாரணமானவள் கோதாவரி".  

"அம்மா , யமுனா  நீ  ரொம்ப அடக்கமானவள்  என்றுமே.    கங்கைக்கு  கோபமும் சீற்றமும் அடிக்கடி  வரும். உன்  பெருமை நான்  அறிவேன்.  என்  வாழ்வு முடியும் முன்பு  உன்னை  அடையவேண்டும்  உன்னிலே
 கலந்து  என் மூச்சை விடவேண்டும்   என்பதற்காகவே வந்தவள்"

"கோதாவரி,  நீ  எனக்கு  மகிழ்ச்சியூட்ட  இப்படியெல்லாம்  சொல்கிறாய்.  நான்  கங்கையின்  முன்பு  ஒரு சிறு ஓடை. அவ்வளவே." 

"யமுனாதேவி,  என்னைப்  பொறுத்தவரையில்  நீயும்  கங்கையும்  ஒன்றே அல்ல   நீ உயர்ந்தவள்.  . உன் பெருமை  நான்  உணர்ந்தவரை  சொல்கிறேன் கேள். கங்கையை நூறு மடங்கு புனிதப்படுத்தினால்  கிடைப்பவள் நீ.  விஷ்ணு   என்கிற  நாராயணனின்   ஆயிரம்  நாமத்தை விட ராமா என்கிற பெயர் உசத்தி. அப்படிப்பட்ட  ராமனின்  மூன்று நாமங்களுக்கு  ஈடு கிருஷ்ணன்  என்கிற  ஒரு  நாமம்.  இது  பாகவதத்தில் இருக்கு. யமுனையில்  நீராடினால் ஒருவன் செய்த பாபத்தின்  விளைவுகள்  அவனை விட்டு விலகும் அம்மா  யமுனா,  நீ  ரொம்ப  புண்யம்  செய்தவள்.  புண்யம்  தருபவள்.  உன்னில்  ஒருமுறை  ஸ்நானம்  செய்தவன்  குளித்து எழும்போது மனம் பூரா கிருஷ்ணனின்  நினைவுகளோடு  தான்  கரையேறுகிறான்.  சைதன்யர்  சொன்னதம்மா இது. 

யமுனா, உனக்கு தெரியுமா?  பிருந்தாவனத்தில்  வசித்து  அன்றாடம் உன்னிடம் ஸ்நானத்துக்கு வருபவர்களால்   இந்த  உலகமே சுத்தமாகிறது.  நீ மறந்துவிட்டாயா? எத்தனை ஆயிரம் முறை  உன்னில்  மூழ்கி  விளையாடியிருக்கிறான்  கிருஷ்ணன் நண்பர்களுடனும்  கோபியர்களுடனும்!!  அவன்  பாதத்தை எவ்வளவு ஆயிரம் தடவை  நீ  தொட்டு புனிதமடைந்தவள். யாருக்கு  கிடைக்கும்  இந்த பாக்கியம்???  உன்னோடு இருந்தால் தான் கிருஷ்ணனைப்  பற்றி முழுதும் உனக்கு சொல்ல முடியும் என்றாயே  அக்கா,  இனி உன்னை விடமாட்டேன், இதோ வந்துவிட்டேன் ....சொல்லு  ஆர்வமாக இருக்கிறது கேட்க....''


கோதாவரி  கிழவி  யமுனையில்  இறங்கினாள்  யமுனையில்  கரைந்து  கிருஷ்ணனோடு  கலந்தாள் .
-

sivan jaykay

unread,
Aug 1, 2020, 9:24:38 PM8/1/20
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்   ஜே கே  சிவன்  


                                                                           அருமையான பெயர்  ப்ரணதார்த்தி 

மஹா பெரியவா அனுபவங்கள்   ஒவ்வொன்றுமே   முத்து முத்தானவை.  ஞானம்,  பக்தி, கருணை   ரசம் ததும்புபவை.  பக்தர்கள் மனதில்   கேட்கும்போதும், படிக்கும்போதும்  தேன் சொட்டுபவை.   

ஒரு அற்புத  அனுபவத்தை  சுவாமிநாத ஆத்ரேயன் என்ற முதிய பக்தர், பெரியவாளுக்கு ரொம்ப  நெருங்கியவர்  எழுதியதைப்  படிக்க நேர்ந்தது. அதன் சாராம்சம் தருகிறேன்.  நான் பெற்ற ஆனந்த அனுபவம் இந்த ஆன்மீக உலகம் பெறட்டும்.

எந்த வருஷம் இது நடந்தது என்பது முக்கியமில்லை. நிச்சயம் ஐம்பது வருஷங்களுக்கு முன்பானது.  மஹா  பெரியவா ஜெமினி பக்கத்தில் உள்ள   கதீட்ரல் ரோட்டின் மறுமுனையில்  மியூசிக்  அகாடமி வழியாக நடந்து வருகிறார்.  நடக்கும் விதமே  தனி.  சைக்கிள் ரிக்ஷாவில் உட்காராமல்  பின்னால்  அதை பிடித்துக் கொண்டு நடக்கிறார்.  

அதில் என்ன லாபம்?    

 டிராபிக் பத்தி தான் கவலைப்படாமல், கண்ணை மூடி  ஜபம் செய்துகொண்டே  நடக்கலாம்.  ரிக்ஷா இழுப்பவர்  தானே  ட்ராபிக் பற்றி கவலைப்படுவார்.  பெரியவாளுடன்   கூடவே  நடப்பவர்கள்   பிரபல பி.ஜி. பால் கம்பனி அதிபர் நீலகண்ட ஐயர், மற்றும் ஸ்ரீமடம் சிவராம ஐயர். கண்ணன், ஸ்ரீகண்டன், ராயபுரம் பாலு அப்புறம்  ஆத்ரேய ஸ்வாமிநாதன்.   இவர்களைத்  தவிர  எண்ணற்ற பக்தர்கள் குழாம்.  ஜெய ஜெய சங்கர ஹர ஹர  சங்கர கோஷம்  தொலை தூரம் கேட்கிறது.    ரிக்ஷா   கதீட்ரல் ரோடு கோபாலபுரம் சந்திக்கும் இடம் வந்தாயிற்று.

''ஸ்வாமிநாதா, எதிர்க்க  ஒரு   வெற்றிலை பாக்கு பெட்டிக்கடை இருக்கு  அங்கே போ.  அங்கே பார் ஒரு  பயல் நிப்பான்   பீடி  புகை  புடிச்சுண்டு.  

ஸ்வாமிநாதன் திகைத்தார்.  என்ன திடீர் என்று பெரியவா இப்படி...?'   இதெல்லாம் எப்படி  அவர் கண்லே படறது. கண்ணை மூடிண்டு ஜபம் பண்ணிண்டு வரார். நம்பளை மாதிரி பராக்  பாத்துண்டு நடப்பவர் இல்லையே. 

''என்ன  பார்க்கறே . அவன் கிட்டே  போய்  பரவக்கரை  ஸ்ரௌதிகளை தெரியுமா? ன்னு கேளு.''

சுவாமிநாதன் அங்கே ஓடி   பெட்டிக்கடை  கடை ஒன்றின் வாசலில் நின்ற பீடி பிடிக்கும் பையனை
கூப்பிட்டார்.  அவன்  யார் தன்னை அழைப்பது என்று தயங்கி அருகே வந்தான். கையில் பீடி. வாயில் புகை.... அவனிடம் பெரியவா கேட்க சொன்னதை கேட்டார்.   நெருப்பை மிதித்தவன் மாதிரி அவன் பீடியை வீசி எறிந்தான். 

''யார்  நீங்க,  என்னை எதற்கு இதெல்லாம் கேக்கறீள் ?''
'' நான் கேக்கலே அப்பா, மஹா பெரியவா கேக்க சொன்னார் ''
''ஓ  மஹா பெரியவாளா,  எங்கே இருக்கா?''
அவனுக்கு கையை சுட்டி  எதிரே  தெருவின்  திருப்பத்தில்  சென்று   கொண்டிருந்த பெரியவா ஊர்வலத்தை காட்டினார் ஸ்வாமிநாதன்.  அதைப்   பார்த்தவன் உடனே  மின்னல் வேகத்தில்  பக்கத்தில்  ஒரு சந்திற்குள் ஓடி  மறைந்தான். 

ஒன்றும் புரியாத  ஸ்வாமிநாதன் பெரியவாளிடம் வந்து நடந்ததை சென்னார்.   பெரியவா ஒன்றும் பதில் பேசவில்லை. நடந்து கொண்டிருந்தார்.  வழியில் எத்தனையோ  பேருக்கு தரிசனம் தந்த பெரியவர்  தான் தங்கி இருந்த இடத்துக்கு வந்தார். 
 
சற்று நேரத்தில்  அந்த பையன்  மஹா பெரியவா எதிரே வந்து நின்றான்.   ஸ்வாமிநாதனுக்கு  கடையில் பார்த்த பையனா இவன் என்று  அடையாளமே  தெரியவில்லை.  நெற்றி, மார்பு கைகள் வயிற்றில் எல்லாம் பளீர் என்று வெண்ணிற   விபூதி பூச்சு.  சாஷ்டாங்கமாக பெரியவா எதிரே விழுந்தான். 

''நீ யாருப்பா?''  மஹா பெரியவா அவனை கேட்டார். 
''நான்  பரவக்கரை ஸ்ரௌதிகள் பேரன். ப்ரணதார்த்தி. 
''ப்ரணதார்த்தி ன்னு சொல்லாதே.  அது  பரமேஸ்வரன் பெயர்.  அர்த்தம் தெரியுமா உனக்கு.  ''தன்னை வணங்குபவர் துயர் தான் ஏற்றுக் கொள்பவன்''   சுவாமி பேர் வச்சிருக்கா  உனக்கு..  அதை   முழுக்கவே சொல்லு.  ப்ரணதார்த்தி ஹரன், இல்லேன்னா, வெறுமே  ஹரன்  ன்னு சொல்லு  இனிமே.''  யார்  எதிரே  தன்னை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கிறார்களோ அவர்களது பாபங்களை களைபவன்  தான் பிரணதார்த்தி . உனக்கு சாம  வேதம்  பாடம்  ஆயிருக்கும்  இல்லையா.  எங்கே சொல்லு?''

பையன் முதல்  ரெண்டு மூன்று லைன் வரை சுமாராக  சரியாக சொன்னான். அப்புறம்  தடுமாறினான்''
பழக்கம் விட்டுப்போயிடுத்து. 

''உன் கூடப்பொறந்தவா எத்தனை பேர் ?'
''ரெண்டு அண்ணா பெரியவா, ரெண்டு  பேரும்  சௌக்கியமா  சௌகர்யங்களோடு இருக்கா"
''நீ  என்ன பண்றே?''
''போலீசுக்கு உதவறேன்''
' என்ன சொல்றே  நீ.  போலீசுக்கு உதவறியா? எப்படி?''
''என்னை கோர்ட்ல  சாட்சியம் சொல்ல  கூட்டிண்டு போவா'  அங்கே  ஜட்ஜ் முன்னாலே சாட்சி சொல்வேன்'
பணம் கொடுப்பா'.   அவா  சொல்லித்  தரதை  சொல்லுவேன்  
''ஓஹோ    இந்த பீடி குடிக்கிற பழக்கம் எப்போலேருந்து ?'' -- மஹா பெரியவா.
''போலீஸ்  சொல்லிக் கொடுத்தது ''
''ம்ம்ம்.  கோர்ட்லே  நீ பார்த்ததை மட்டும்  தானே  சாட்சி சொல்லுவே. 
''  நான்  எதையுமே  பார்த்ததில்லை. போலீஸ்  சொல்லி கொடுக்கும்.  குற்றம் நடந்த இடத்துக்கு அழைச்சுண்டு போவா. அங்கே நான் இருந்து பார்த்ததா  அவா சொல்லிக் கொடுக்கிறதை  அப்படியே  கோர்ட்லே ஜட்ஜ் முன்னாலே  சொல்வேன்.  குறுக்கு விசாரணையிலே  அப்படியே  மாத்தாம  சொல்வேன்.  மாட்டிக்க  மாட்டேன்.   ஒண்ணு  ரெண்டு சமயங்கள் லே  கொஞ்சம் மாத்தி சொல்லியிருக்கேன்.  அதுக்காக  போலீஸ்லே அடி  செமத்தியா  வாங்கியிருக்கேன்.''

''சட்டை பேண்ட் லாம்  போட்டுண்டு கோர்ட் போவியா?''

'' இல்லே  பெரியவா.   சட்டை பேண்ட் லாம்  போட்டுக்க கூடாதுன்னு   போலீஸ் சொல்லும்.   வேஷ்டி, துண்டு,  விபூதி பட்டை யோடு  தான்  போக  சொல்லுவா. பூணலை சோப்பு போட்டு வெள்ளையா வச்சிருப்பேன்.''

''இப்படி  பொய்  சாக்ஷி சொல்றது பாவமில்லையா?''' '

''ஆமாம். தெரியும்.  வேறே வழி?  ' நான் என்ன செய்யமுடியும் பெரியவா?''

''உனக்கு  நான்  ஒரு  வேலை தரேன்.  கபாலீஸ்வரர் கோவிலுக்கு தினமும் போ.   மேல கோபுர வாசலை சுத்தம்  ஜலம்  விட்டு அலம்பி சுத்தம் பண்ணு . தினமும் பத்து ரூபா.  சாப்பாடும் உண்டு. ''

''அது எப்படி  போறும்  பெரியவா? 

''சரி.  ஒரு  சில நாள்  மடத்துலே வந்து இரு.  சந்த்ரமௌலீஸ்வரர்  பூஜை  வந்து  பாரு.  உனக்கு தங்க வசதி சாப்பாடுக்கு நான் ஏற்பாடு பண்றேன்;'

''இன்னிக்கு  இல்ல  பெரியவா.  எழும்பூர்  கோர்ட்க்கு இன்னிக்கு  சாட்சி சொல்ல போகணும்.  போகலேன்னா
போலீஸ்  முதுகு  தண்டை பின்னிடும்.  நான் உடனே கிளம்பனும்  பெரியவா ''   

அந்த பையன்  வணங்கிவிட்டு  போய்விட்டான்.  அவன் போவதையே பார்த்த்துக் கொண்டிருந்த   மஹா
பெரியவா  தன்னுடைய அறைக்கு திரும்பினார்.

சுவாமிநாதனும் நீலகண்ட அய்யரும்  கூட அறைக்குள் போனார்கள்.  நீலகண்ட அய்யர்  போலீசுக்கு பரிந்து பேசினார்.   பொது இடத்தில்  நடந்த குற்றம் என்றால்  நாலு பேர் கண்ணில் படத்தான்  செய்யும். ஆனாலும்  யாரும்  தானாகவே முன் வந்து  சாட்சியம் சொல்வதில்லை.  கோர்ட்டுக்கு போய்  சொல்ல  பயம்.  பின் விளைவு பற்றி  நடுக்கம்.  போலீசுக்கு  உண்மை  விசாரணையில்  தெரிந்தாலும்   தக்க சாக்ஷி இல்லாமல்  கோர்ட்டில்  குற்றத்தை  நிரூபிக்க முடியாதே.   அதற்காக  சாக்ஷி தயார் பண்ண வேண்டிய  நிலை.    கேஸை  முடிக்க  வேறு  என்ன செய்வார்கள்?   எல்லோரும்  போலீசை தான் திட்டுவார்கள், குறை சொல்வார்கள். 

''குற்றம் செய்வது பாபம் . அதை பார்த்துவிட்டு  சாக்ஷி சொல்லாமல் இருப்பது அதைவிட கொடிய பாபம். உண்மை வெளிப்படவேண்டும்.     பொய்  சாக்ஷி சொல்வது  தெரிந்து செய்யற  இன்னொரு பாபம்''   என்கிறார் மஹா பெரியவா.

''அது தான் நிலைமை பெரியவா.  உண்மையான  யதார்த்தம்.   அவன் சொல்றானே. வேறே வழியில்லேன்னு ''. போலிஸ் அவன் அப்படி  சாக்ஷி  சொல்லலேன்னா அவனை நொறுக்கிடும்னு.,  அவன் நிலைமையை நினைச்சா பரிதாபமா  இருக்கு பெரியவா""  என்கிறார் நீலகண்ட அய்யர். 

''பாபம் எதுவா இருந்தாலும் செய்யக்கூடாது.  நீ சொல்ற  லோக  நியாயம்  உணர்ச்சி எல்லாம்  என்னை மாதிரி சந்நியாசிக்கு  சம்பந்தமில்லை...''   என்று சொல்லிவிட்டு  மஹா பெரியவா ஸ்னானத்துக்கு புறப்பட்டார். 

மத்தியானம் 3 மணி வாக்கில்   மேலூர்  ராமச்சந்திர ஐயர் வந்தார். மடத்தில் அவருக்கு ரொம்ப  ஒழுக்கம், கண்டிப்புக்கு   பேர்  போனவர். சிப்பந்திகள் அவரைக் கண்டாலே  நடுங்குவார்கள்.  பயம் கலந்த மரியாதை. 

''ஸ்வாமிநாதா  இன்னிக்கு என்ன நடந்தது ? என்று கேட்டார். 
''ஒண்ணும்  இல்லையே''
'' இல்லே  இங்கே  ஏதோ நடந்தது ன்னு கேள்விப்பட்டேன்.  எதுக்காக இன்னிக்கு மஹா பெரியவா  பூஜை பண்ணலே''
''ஸ்வாமிநாதன்   பையன் விஷயம் பூரா சொன்னார்.   அதற்குள் மஹா  பெரியவா  வந்துவிட்டார்.

''ஸ்வாமிநாதா  மேலூர் மாமா  என்ன சொன்னார்?''

''மஹா பெரியவா, இன்னிக்கு பூஜை பண்ணலே   சாப்பிடலை'' ன்னு சொன்னேன்.  ஸ்வாமிநாதன் கண்களில் கண்ணீர்.

''சரி சரி  நீ என்ன வேணுமானாலும்  சொல்லிக்கோ.''

''பெரியவா.   எனக்கு   திருவிசநல்லூர்  ஸ்ரீதர ஐயாவாள் ஒரு ஸ்லோகத்தில்   பரமேஸ்வரனுக்கு  மெல்லிய இதயம்,  பக்தன் எவனுக்காவது கஷ்டம்னா   இளகர  மனசு,   தாங்கமுடியாது அவராலே'' ன்னு வரும்.. பெரியவா பூஜை பண்ணலே, சாப்பிடலேங்கற போது  ஐயாவாள்  பரமேஸ்வரனை பத்தி சொன்னது தான் எனக்கு தோணித்து.''

''நீலகண்டா, நீ சொல்றது  ''நம்ம  சந்த்ரமௌளீஸ்வரர்  பத்தி.  போதேந்திரா  ஸ்வாமிகள் தான் அப்போ பூஜை பண்ணிண்டு இருந்தார். .....''

ஸ்வாமிநாதன் ஏதோ சொல்ல வாயெடுத்தவர்  நிறுத்திக் கொண்டார்.  ''எப்படி  ஸ்ரீதர ஐயாவாளுக்கு  350 வருஷம் கழித்து  பரமேஸ்வரன் பூமியில் அவதாரம் பண்ணுவார். பக்தர்களுக்காக  உணர்ச்சி வசப்படுவார், தன்னை வருத்திக் கொள்வார்  என்று தெரிந்தது?''  என்று மனதில் தோன்றியது. 



sivan jaykay

unread,
Aug 3, 2020, 7:53:37 PM8/3/20
to amrith...@googlegroups.com
  ஒரு அற்புத ஞானி      J K  SIVAN  சேஷாத்திரி ஸ்வாமிகள் 

                                   மந்திரத்தின் சக்தி 

இன்று  ஆவணி அவிட்ட  யஜுர்வேத உபாகர்மா. நாம் என்ன செயகிறோம் எதற்காக செயகிறோம் என்று  புரிந்துகொண்டு  ஈடுபாடுடன்  செய்வதை திருந்த செய்வோம். நமது பண்டிகைகள், பழக்கங்கள், சடங்குகள், குறிப்பிட்ட நாட்களில் அனுஷ்டிக்கும்போது அதற்கான பக்தி, சிரத்தை இரண்டும் அவசியம் அல்லவா?
ராமேஸ்வரன் வந்து வாசலின் நின்று விட்டு  போனேன் என்று சொன்னான். 
என்னவிஷயம் என்று கேட்டேன்.
''காலையில் வந்தேன் ஏதோ பூஜை பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு தோணித்து.  பேசாம  போய்ட்டேன்.''
''இன்னிக்கு யஞஉபவீத உபாகர்மம்- இது ஒரு அற்புதமான சடங்கு''
''எப்படி சார்?
''சத்குரு சேஷாத்திரி ஸ்வாமிகள் மிகவும் உயர்வாக போற்றியது காமோகார்ஷீத் ஜபம். இன்று யஜுர்வேதம் சார்ந்தவர்கள் ஆவணி அவிட்டம் (ஷ்ரவண பூர்ணிமா) கொண்டாடினோம். சாம வேத சார்பினர் வேறொரு தினத்தில் உபாகர்மம் கொண்டாடுவார்கள்.

இதை புரிந்து கொண்டு உபாகர்மம் செய்தவர்கள் எத்தனை பேர். இன்று ஒருநாளாவது 1008 முறை காமோகார்ஷீத் மன்யூர் அகார்ஷீத் ஜபம் செயகிறோம். அதன் அற்புத அர்த்தம் என்ன தெரியுமா?

வருஷத்துக்கு ஒரு நாள் பிராயச்சித்தம் தேடுவது. வேதத்தை அதற்குண்டான காலத்தில் அறிந்து கொள்ளாததற்கும், அந்த வருஷம் பூரா செய்த பாபங்களிலிருந்து விடுபட வேண்டுகோள் மன்னிப்பு கேட்பது தான் இந்த உபாகர்மம். இந்த உலக வாழ்வில் தெரிந்தோ தெரியமாலோ எண்ணற்ற பாபங்களை புரிகிறோம். எந்த செயலுக்கும் எதிர்மறையான விளைவு உண்டு. எல்லாம் கர்ம பலன். 

காமோகார்ஷீத் என்பது செய்த எல்லா பாவங்களுக்கும்  ஒப்புதல் வாக்குமூலம். காமம் என்பது ஆசை, மன்யு என்பது கோபம். இந்த ரெண்டாலும் தான்  எல்லா தகாத செயல்களும் பாபங்களும் விளைகிறது. அடிப்படை  சத்ரு இவை.     இந்த வருஷம் பூரா நான் இந்த ரெண்டையும் சேர்த்துக் கொண்டு செய்த பாபங்களை மன்னித்து விடு என்று வேண்டுவது தான் காமோகார்ஷித் ஜபம். இந்த ஜபம் மகா நாராயண உபநிஷதத்தில் இருக்கிறது.

ஆவணி அவிட்ட உபாகர்மா செய்யும்போது இன்று குறைந்தது 1008 முறையாவது ''காமோகர்ஷீத் மன்யுரகார்ஷீத் நமோ நம:'' என்று ஜெபிக்க்கவேண்டும். . ஆசை கோபம்  இவற்றால்  நான் செய்த பாபங்கள் விலகட்டும் என்று வேண்டுவது.

காஞ்சிபுரத்தில் இளம் வயதில் சேஷாத்திரி ஸ்வாமிகள் எண்ணற்ற ஜெபங்களில் பிரார்த்த னையில் ஈடுபடுவார். அவரைப் பார்த்த பெரிய பண்டிதர்கள் வித்தகர்கள் ''அட இந்த சின்னப்பயல் ஒரு மூலையில் கோவிலில் அமர்ந்து ஏதோ உச்சரிக்கிறானே'' என்று வியந்தவர்கள் அவரை அணுகி

"ஏ பயலே, என்ன பண்றே ஏதாவது மந்திரம் ஜெபிக்கிறியோ ?
" ஆமாம், கர்மா தொலையவேண்டாமா. அதனாலே ஜபம் பண்றேன்'' என்பார்    ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் சிறிய பையனாக.

"அட . பலே  பலே .    அப்படின்னா, அதுக்கு என்ன மந்திரம்  நீ  ஜெபிக்கிறே?''

''வேறென்ன மந்திரம் இதுக்கு. காமோகார்ஷீத் நமோநம: காமோகர்ஷீத் காம கரோதி நாஹம் கரோமி. காமா கர்த்தா நாஹம் கர்த்தா; காமா காரயிதா நாஹம் காரயித: யேஷா தே காம காமாய ஸ்வாஹா:''

"Kamokarsheet namo namah: Kamokarsheet, kamah karoti naaham karomi,  kamah karta naham karta, kamah kaarayitaa naham kaarayita; Esha the kaama kaamaaya swaha:

மன்யுர கார்ஷீத் நமோ நம: மன்யு அகார்ஷீத் மன்யு காரோட்டி நாஹம் கரோமி, மன்யு கர்த்தா நாஹம் கர்த்தா; மன்யு காரயித நாஹம் காரயித : ஏஷா தே மன்யோ மன்யவே ஸ்வாஹா: ''

Manyurakaarsheet namo namah: Manyuh akaarsheet, manyuh karoti naham karomi, manyuh karta naham karta, manyuh kaarayita naham kaarayita; Esha the manyo manyave swaha:"

''நான் இதெல்லாம் ஜபிக்க வேண்டியதில் பாதி தான் முடிச்சிருக்கேன். இன்னும் மீதி இருக்கே கர்மம் தொலைய'' என்றான் சிறுவன் சேஷாத்திரி.

''ஆசை செயல் புரியவைத்தது. ஆசை தான் செயலை செய்தது. எனவே என் செயலுக்கு காரணம் ஆசை. நான் இல்லை. ஏ ஆசையே உன் சக்தியே சக்தி.   உனக்கு என் ஜபம் பதில் சொல்லட்டும் ''

அதேபோல் கோபம் தான் செயலுக்கு காரணமாக செய்வித்தது. கோபம் விளைவித்த என் செயலுக்கு அது தான் பொறுப்பே தவிர நான் பொறுப்பல்ல. செயலின் வேலைக்காரன்  கோபம். அந்த கோபம் தான் செய்பவனை ஆட்டிப் படைக்கிறது. ஏ கோபமே, என் ஜபம் உன் செயலை எதிர் கொள்ளட்டும்.''

ஒரு அதிசயத்தை நிகழ்த்தினார் சேஷாத்திரி ஸ்வாமிகள் அப்போது அந்த சின்ன வயதிலும்.

''பண்டிதர்களே, நீங்களும் இப்போவே இந்த ஜெபங்களை சொல்லுங்கோ. அது தான் உங்கள் கர்மாவைக்  கொல்லும் . கர்மாவை தொலைக்காம நீங்க எப்படி மோக்ஷம் அடைய முடியும்?'' என்றான்சிறுவன் சேஷாத்திரி   

 கோவில் தூண் மட்டும் கல் அல்ல. அத்தனை பண்டிதர்களும் அப்போது அந்த காஞ்சிபுர கோவிலின் கூடுதல் தூணாக நின்றார்கள்

sivan jaykay

unread,
Aug 3, 2020, 7:53:37 PM8/3/20
to amrith...@googlegroups.com

                                              பூணல்  ஆராய்ச்சி...  J K  SIVAN 

இன்றோ  வேறு  என்றோ பூணல் போட்டுக்கொள்பவர்களுக்கு  இது தெரிந்தால் சௌகர்யம். தெரியாவிட்டால் இதோ தெரிந்துகொள்ள ஒரு  சந்தர்ப்பம். 

பிராமணர்களுக்கு மட்டும் தான்  பூணல்  என்று  கிடையாது.  ஹிந்துக்களின் மற்ற  சில வகுப்பாருக்கும்  இந்த வழக்கம் உண்டு.   சிறுவர்கள்  வேதபாடம் கற்க அன்று  முதல்  தான்  ஆரம்பிப்பார்கள்.

கல்யாணத்துக்கு முன்னால் தான் உபநயனம்.   அதை பூணல் கல்யாணம் என்பார்கள்.  சமஸ்க்ரிதத்தில் யக்னோபவீதம்.   முப்புரி  என்பது தமிழில்  பூணலுக்கு  பெயர். அது மூன்று இழை நூலை குறிக்கிறது. ஒவ்வொரு இழையும் மூன்று சபதங்களை ஞாபகப்படுத்த. ஒன்று  ஞானத்தை மதிக்க, ரெண்டாவது  பெற்றோரை மதிக்க, மூன்றாவது அவனது சமூகத்தை மதிக்க. 

அந்தக்காலத்தில் 7 வயசில் பூணல் போடுவார்கள்.   வாழ்வின் ஒரு  சகாப்தத்திலிருந்து  இன்னொன்றுக்கு அவன் அது முதல் செல்கிறான். குழந்தைப்  பருவம் இனி இல்லை. இனி அவன் பிரம்மச்சாரி, ஆச்சாரம், ப்ரம்மம் ஆகியவற்றை நாடி செல்பவன்.  இது எது வரை?   அவனுக்கு கல்யாணம் ஆகும் வரையில் .

வடக்கே  பூணல் போடுவதற்கு முதல்  நாள்  விநாயகருக்கு என்று தனியாக   பூஜை, வழிபாடு நடக்கும். ஒரே தட்டில், இலையில்  அம்மா பிள்ளை இருவரும்  உண்பார்கள்.   வேத மந்த்ரங் களோடு அவனுக்கு உபநயனம் நடக்கும்.   அக்னியை வலம் வந்து   அவன்  ஆசார்யன், குரு, சொல்லிக் கொடுக்கும் மந்திரங்களை சொல்வான்.  வாழ்க்கை முழுதும் அவன் அப்போது எடுத்துக் கொள்ளும் சத்ய  ப்ரமாணம் தொடரவேண்டும்.  மந்த்ரங்களோடு அவன்  உதட்டில் ஒரு துளி தீர்த்தம்  அருந்தும்  ''ஆசமனம்''  என்பது அது தான்.   வாயிலிருந்து வரும் பேச்சு சுத்தமாக இருக்கவேண்டும். பேச்சாக வரும் எண்ணம் சுத்தமாக இருக்கவேண்டும்.  பேச்சு செயல்படுத்தப் பட வேண்டும் 

உபநயனத்தில்  அரசமர குச்சிகளை  அக்னியில் வைப்பது ஸமிதாதானம் .  அம்மாவிடம்  பிக்ஷை எடுப்பது ஒரு சடங்கு .   தாய்  தான் ஒருவனின்  உயிர் காக்கும் உத்தமி. அவளிடம் இருந்து தான் பிறந்து அவள்  ஊட்டி  அவன்  வளர்கிறான்.   ஆகவே  அவளிடம்  முதலில் '' பவதி  பிக்ஷாம் தேஹி''  என  பிரம்மச்சாரி பிக்ஷை எடுக்கிறான்.  பிறகு மற்றவர்களிடம்  பிக்ஷை  பெறுகிறான்.  . உலகமே அன்னமளிக்கும் அன்னதாதா, அண்ணா பூரணி மயம்  என்று கருதுகிறான்.  தான்  வாங்கி கொண்டு வந்த  பிக்ஷையை தனது குருவிடம்  சமர்ப்பிக்கிறான். இது அவனது குரு பக்தியை நிரூபிக்க.

நமது ஊரில்  உபநயனம்   ஒரு விரதம் என்கிற  சடங்கு.  இது பிள்ளை வீட்டில் நடப்பது.  கல்யாணத்துக்கு முன்னால் உண்டு.  பிரம்மச்சர்யம் முடிந்துவிட்டது. மற்றொரு புதிய  சகாப்தம் அவன் வாழ்வில்  இனி துவங்கும்.    கல்யாணம் ஆனதும் இனி  அவன் கிரஹஸ்தன்.   பூணல் போட்டுக்கொண்ட பின் தான் கல்யாணம்.  மந்திரங்கள் அப்பாவிடம்  அவர் சொல்ல  அதை பெற்று  அந்த நிலைக்கு செல்வது போல் உள்ளது.  அப்பா தான் அவனுக்கு ஆசார்யன். குரு.  அவன் அதற்கான மந்திரங்கள்  சொல்லி   பூஜை முடித்தபின் அவன் இடுப்பில்  மஞ்சளில்  தோய்த்த நூலை அணிகிறான்.  மஞ்சள் புனிதமானது.   கல்யாணப்பெண்ணுக்கும் இந்த சடங்கு அவள் வீட்டில் நடக்கும்.  தீய சக்திகளிடமிருந்து  அவனை/ அவளைக்  காப்பதற்கு  இந்த  வழிபாடு. வழக்கம். 

பூணல் என்பது வெறும் நூலல்ல.  அதற்கு  ஆழமான அர்த்தம் உண்டு.  மூன்று கடன் அவனுக்கு உள்ளதை நினைவுறுத்துபவை.

ஆச்சார்யனுக்கு செலுத்தவேண்டிய  மனுஷ்ய   ரிஷி  கடன்  .பெற்றோருக்கு மூதாதையருக்கு உண்டான கடன். பித்ருகடன்,  வழிபடும் தெய்வங்களுக்கும், காக்கும் தேவதைகளுக்கும்  உண்டானது  தேவ கடன்.

பூணலின்  மூன்று நூல்கள், முப்புரிகள்,  முறையே    ப்ரம்மா விஷ்ணு  சிவனை குறிக்கும்  என்றும்  பார்வதி, சரஸ்வதி, லக்ஷ்மியை குறிக்கும் என்றும்  விளக்குவது உண்டு.   அவனுக்கு தேவையான  சக்தியை அளிக்க  சக்தி  தேவதையான  பார்வதி,   ஞானத்துக்கு  கல்விக்  கடவுளான ஸரஸ்வதி , அவனுக்கு தேவையான செல்வத்தை   அஷ்ட ஐஸ்வரியத்தை
அளிக்கும் லக்ஷ்மி.   இந்த   மூன்றும் இல்லாவிட்டால்  ஒருவன் வாழ்க்கை  முழுமை பெறாது  ஹிந்து சனாதன தர்மம் அவனுக்கு அறிவுறுத்தியது. . 

பூணலில்  போடப்படும் முடிச்சு ப்ரம்ம முடிச்சு.  ப்ரம்மக்ரந்தி எனப்படும்.  காயத்ரி மந்திரம் சொல்லிய  பிறகு தான் அதை அணிவிப்பார்கள். தேகத்தை  புண்ய சடங்குகளால்  மூடிக்கொள்வது தான்  யக்னோபவீதம்.   யஞம் என்பது ஹோம சடங்கு.  உபவீதம்  என்பது கவசம். போர்த்திக்கொள்வது.  அது இல்லாமல் எந்த  சடங்கும், ஹோமமும், பண்ண அனுமதியில்லை. பூணலுக்கு  இன்னொரு பெயர் ப்ரம்ம சூத்ரம்.   மூன்று புரிகள் கொண்டது  ஒன்பது நூல்களை கொண்டது. 

முதல் மூன்றை போடுவது  ப்ரம்மச்சாரிக்கு, இதை ஒத்தைப் பூணல் என்கிறோம். பிரம்மச்சர்யம், பிள்ளையாருக்கு ஒத்தை பூணல் போடுவார்கள். ஒரு ஜோடிபோடுவது  கிரஹஸ்தனுக்கு , கிரஹஸ்தாஸ்ரமம் .  மூன்றாவது தகப்பனார் இல்லாதவர்களுக்கு என்று சொல்வது  ஒரு புறம் இருக்க,  மேலே அங்கவஸ்திரத்துக்கு, உத்தரீயத்துக்கு  பதிலாக என்றும் சொல்கிறார்கள்.   இதை வானப்ரஸ்த ஆஸ்ரமத்துக்கு என்று சொல்வது உண்டு. 

பூணல் போடுவதை ஒரு பெரிய விழாவாக கொண்டாடி லக்ஷக்கணக்காக செலவு செய்ய தேவையில்லை.  கோவில்களில்  வீடுகளிலேயே பூணல் போடலாம். வைதிக கர்மாக்கள் எதையும் புறக்கணிக்காமல் சாஸ்த்ர ஸம்ப்ரதாயம் குறைவில்லாமல் செய்யவேண்டியது தான் அவசியம்.   இதையெல்லாம் விட அவசியம்  பூணல் போட்டதும்  நித்யம்  சந்தியாவந்தனம் காயத்ரி ஜபம்  108 வது செய்ய வேண்டும்.  முகத்தில் தனி தேஜஸ் வருவதை பார்த்திருக்கிறேன்.  உத்தராயணத்தில் தான்  உபநயனம் செய்து வைப்பார்கள்.   

பையன்களுக்கு பள்ளி விடுமுறையில் பூணல் போட்டேன் ஸார்  என்பது  கேலி கூத்து.  7லிருந்து 11 வயது  வரை ஒத்தைப்படை வயதில் பூணல் போடுவது வழக்கம். முப்புரியின்  ஒன்பது
நூல்களுக்கும்   தேவதைகள்.

ஓங்காரம், அக்னி, நாகம், சோமன், (சந்திரன்)  பித்ருக்கள் (முன்னோர்)  பிரஜாபதி (பிரம்மன்) , வாயு,  யமன்,  விஸ்வதேவதா.  மூன்று நூலுக்கு ஒரு முடிச்சு.  ஆகா மூன்று முடிச்சுகளும்  ரிக்வேத, சாமவேத  யஜுர்வேதத்தை குறிக்கும். 

வீட்டில்  கிரஹத்தில்  வளர்க்கும்   ஹோமத்தீ   கார்ஹபத்யம் ,   தெற்கு பக்கம் நோக்கி வளர்க்கும் அக்னி  தக்ஷிணாக்னி,  ஏதாவது ஒரு காரணத்தை ஒட்டி வளர்க்கும்  தீ  ஆஹ்வனியம் . அக்னியை ஞானம், பக்தி, கர்மாவுக்காக  வளர்ப்பது  வழக்கமாக இருந்தது. 

பிரமத்தை அடைய இது முறையாக வழிபட்டது.  மொத்தம்  96 கால நேரங்கள் கணக்கில் இருந்தது.  அதாவது  15  திதிகள், வாரத்தின் 7 நாட்கள்,  27 நக்ஷத்திரங்கள்,  25 கோட்பாடுகள்,  4 வேதங்கள், 3  சத்வ ரஜோ, தாமச குணங்கள்,   3 வேளைகள் , 12 மாதங்கள்,  எல்லாம் சேர்த்தால்  96 இல்லையா,  பூனலின்  நீளம்  96 கட்டைவிரல் நீளம். அங்குலம்  என்றால் கட்டை விரல் அகலம்.
இவ்வாறு மொத்த பூணல்  முப்புரிகளின் நீளம்  96 கட்டைவிரல் அகலம் என்று  கணக்கு வைத்திருந்தார்கள். 

 பூணல் போட்டுக்கொள்ளும் மந்திரம் .
யக்னோபவீதம் பரமம் பவித்ரம் , ப்ரஜாபதேய சஹஜம் , புரஸ்தாத், ஆயுஷ்யமக்ரியம், ப் ரதி முஞ்ச சுப்ரம்  யக்னோபவீதம்  பலமஸ்து தேஜா: 

இதற்கு அர்த்தம் :   
நல்ல கார்யங்களை செய்வதற்கு  பூணல் அணிவது  இன்றியமையாதது.  பூணலை தரித்தவன்  நல்ல சிந்தனைகளை உடையவனாக,   ஆரோக்கியமான  வளமான  பரோபகாரனாக வாழ  பூணல் சக்தியும்  தேஜஸும் அளிக்கிறது. 
  
வேதகாலத்தில்  பிராமணர்களுக்கு  கடின வேலை கிடையாது.     உட்கார்ந்து  கொண்டு பூஜை செய்வது,  வேத  மந்திரம் உச்சரிப்பது,  மட்டுமே  வேலை என்பதால்  கல்லீரலுக்கு  உடற்பயிற்ச்சி இல்லை.  பூணல் போடுவது இதற்கு சற்று  உபயோகமாக இருந்திருக்கிறது.   அடிக்கடி  நமஸ்காரம் பண்ணுவது அவர்களுக்கு  அதிகமாக  சக்தியை அளித்தது.  

பூணல் இறந்தபிறகு தான்  உடலிலிருந்து  அகற்றப்படும் வழக்கம் நம்மிடையே உண்டு.   பூணல் அறுந்து போனாலோ,   ஸ்ராத்த,  மற்றும் சில  நாட்களில் மாற்றிக்கொள்வது   ஏற்புடைய தானது.   அப்போது பூணலை  தரித்துக் கொள்ளும்  மந்திரத்தை சொல்லி அதை  போட்டுக் கொள்ளலாம்.  காயத்ரி மந்த்ரத்தை சொல்லிய பிறகு தான் பூணலை அணிவது முறை. 
.மலஜலம் கழிக்க செல்லும் முன் பூணலை இடது காதில் சுற்றிக்கொள்வதிலும் ஒரு விஞ்ஞான உண்மை இருக்கிறது என்று படித்தேன்.   நமது இடது காது வழியாக ஒரு சிறு  ரத்தக்குழாய் செல்கிறதாம். அது தான் சிறுநீர் ஒழுங்காக  வெளியேற  உதவுகிறதாம். அந்த ரத்தக்குழாயை  பூணலை  இடது  காதை சுற்றி  மாட்டிக் கொள்வதால்  பலப்படுத்தமுடியுமாம். . 

வேதகாலத்தில் பெண்களுக்கும் பூணல் போடும் வழக்கம் இருந்ததாம்.  யஜுர்வேதம் பெண்களுக்கு பூணல் உண்டு என்கிறது.    கல்வி கற்பது யாகம் ஹோமம் பண்ணுவது எல்லாம் போகப்  போக பெண்களிடமிருந்து  ஆண்களின்  பொறுப்பாக மாறி விட்டது. .  கல்யாணம் ஆனவர்களுக்கு  ரெண்டு பூணல் போடுவது ஒன்று பெண்களுக்காக சேர்த்து என்று ஒரு விளக்கம் உண்டு.  

மனைவியின்   அதிகாரம் இல்லாமல்  ஹோமம் யாகம்  பண்ண முடியாது. அவள் தர்ப்பையால் வலது தோளை தொடுவதும், ஹோமாக்னி மூட்டுவதும்  இன்றும் பழக்கத்தில் உள்ளது.  அவள்    தீர்த்த பாத்ரத்தால் அர்க்கியம்   செய்யாமல்  தத்தம்  கொடுக்காமல்   தக்ஷிணை கொடுப்பது செல்லாது. பலனளிக்காது.  அவள்   ''தத்தம் ''கொடுக் காமல்,  அர்க்யம் விடாமல் உணவு  உண்ண முடியாது.  இதெல்லாம்  பெண்களுக்கு இருந்த உரிமையை நிரூபிக்கிறது.

பூணல்  இடது தோள்வழியாக வலது பக்கம் உடலில் இருப்பது எப்போதும்.  பித்ரு  கடன் செய்யும்போது வலது  தோளிலிருந்து இடது பக்கம் போட்டுக்கொள்வது வழக்கம்.  பூணலின்  நீளம்  தொப்புளுக்கு   கீழே போவது உசிதமல்ல.   தொப்புளுக்கு மேலே இருந்தால்  ஆயுள்  க்ஷீணம்.   ஆயுள் குறைவு.   கிழக்கு அல்லது வடக்கு பார்த்து தான் உட்கார்ந்து  பூணல்  போட்டுக்கொள்வது வழக்கம்.  

இதெல்லாம் மறந்துவிட்டு  பூணலால் ஒரே உபயோகம் முதுகை சொறிந்துகொள்வது  என்பது ரொம்ப தப்பு ஸார்.   































 

A Yagnopaveetham should be worn one by one with the recital of relevant Sankalpa and Yagnopaveetham dhaarana mantra by facing either East or North direction. Every time, Aachamanam should be performed and Gayathri Mantra should be recited 10 times.

Yagnopaveetham should be held with both hands with the knot being held above the right hand facing upwards.

Old ones should not be removed from above the neck. They should be removed from below the navel, without touching the feet by reciting Visarjana Mantra after 10 Gayathri Mantras and the old ones should either be dropped into a water body or a tree only.

The position of Yagnopaveetham?

On the left shoulder and under right arm(Savya position)

This is under normal circumstances, for ceremonies and sacred rituals. It is called the Upavita.

On the right shoulder and under left arm(Apasavya position)

This is done when performing sacred rituals to the forefathers (Pithru karma rituals). It is called Praachinavidhi.

Around the neck like a garland

This is during rishi tharpanam, while attending nature’s call and while carrying a corpse. It is called Nivita.

sivan jaykay

unread,
Aug 3, 2020, 7:53:37 PM8/3/20
to amrith...@googlegroups.com
                                                                      யக்னோபவீதம்     J K  SIVAN 

இந்த வருஷம் ஆவணி அவிட்டம் ரொம்ப புதுமையானது. வழக்கமாக ஆற்றங்கரை, குளத்தங்கரை, கோவில்கள் என்று பொது இடத்தில் கூடி கொண்டாடப்போவதில்லை.  அவரவர்  வீட்டுக்குளேயே .

உபாகர்மா  என்றால் வருஷா வருஷம் ஆரம்பிப்பது.  அதை ஆவணி அவிட்டம் என்கிறோம். 
அன்று பூணலை புதுப்பித்துக் கொள்வது. இதற்கு சில விதிமுறைகள்.  ஆடி, பௌர்ணமி  அவிட்ட நக்ஷத்ரம். 1008  காயத்ரி மந்த்ர  ஜபம் ஒருநாளாவது முழுக்க சொல்வது அடுத்தநாள் காயத்ரி ஜபம்  அன்று.  இந்த சடங்கு  சாமவேதத்தினருக்கு வேறுநாள் வரும்.  ஆவணி பிறப்பதற்கு முன் வரும் பௌர்ணமி அன்று தான் யஜுர்வேதக்காரர்களுக்கு  உபாகர்மா.

 மஹா விஷ்ணு  ஹயக்ரீவராக  குதிரை முகத்தோடு  ப்ரம்மதேவனிடமிருந்து  வேதங்களை திருடிக்கொண்டு சென்ற  மது கைடபர்களை வென்று  வேதங்களை மீட்ட நாள் என்பது ஐதீகம்.  
பிராமண குழந்தைகளுக்கு  எட்டு வயதில் உபநயனம் செய்யும் வழக்கம் விட்டுப்போய்விட்டது. கல்யாணத்தன்றே பூணல் போட்டுக்கொள் பவர்கள் அநேகர் இப்போது.  வேத காலத்தில் அதி  புத்திசாலியாக, மஹா மேதாவியாக ஞானம் நிறைந்த குழந்தைகளுக்கு  ஐந்து  வயதில் உபநயனம் செய்வித்தார்கள். இந்த ரகம் முக்கால்வாசி ரிஷி குமாரர்கள். 

உபநயனம் என்பதில்   ரெண்டு கார்யங்கள் இருக்கிறது. ஒன்று பூணூல் தரித்தபின்  ஆசாரம், ஒழுக்கம் கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.  இந்த  ஸம்ஸ்காரம் ஒருவனை ஆன்மீக உயர்நிலைக்கு கொண்டு செல்கிறது.    ரெண்டாவது  உபநயனத்தில் பூணூல் போட்டுக் கொண்டவன்  ஒரு பெரியவரிடம், அப்பாவிடம்,  குருவிடம் வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை  ஜபிக்க முற்படுவது.    உள்ளும் புறமும் சுத்தமாயும், பவித்ரமாயும் பூணூல்  போட்டுவைத்தார்கள்.  இது தான் சார்  உபநயனம், ப்ரம்மோபதேசம் . 

உப நயனம்  என்ற வார்த்தைகளுக்கு    காயத்ரீ மந்திரத்தை கற்றுக்கொள்ள   குருவின் சமீபம் அழைத்துச் செல்லுதல்  என்று அர்த்தம்.    வேதம் படிப்பதற்கு  தக்ஷிணாயனம் என்று  ஆறுமாச காலம் ஒதுக்கப்பட்டது.  வேதத்தை ஓதி  தர்ம சாஸ்திரங்கள் அர்த்தம் புரிந்துகொள்ள  தெரிந்துகொள்ள  உத்தராயணம் ஆறுமாச காலம். . தை மாதத்திலிருந்து  ஆனி  வரை  உத்தராயணம்.  ஆடி முதல்  மார்கழி வரை தட்சிணாயனம்.   ஆவணி மாசம் அவிட்ட நக்ஷத்ரம் ஆவணி அவிட்டம்.  ஆடி அமாவாசைக்கு பிறகு    ச்ராவண மாசம்.  ஆவணி  மாசம் என்று கணக்கு.  பௌர்ணமி அன்று ஆவணி அவிட்டம், உபாகர்மா செய்வது வழக்கம்.   சாம வேதத்திற்கு ஆவணி ஹஸ்தம்  அன்று  உபா கர்மா.  ருக் வேதம்தான்  ஆதாரம்.   அந்த ஆவணி அவிட்டத்தையே எல்லோரும் உபாகர்மா என்று பெயர் வைத்து விட்டார்கள். 

வேத சாஸ்திர பாடங்களை  மேலே சொன்ன காலத்தில் ஆரம்பித்து  முடிக்காமல்  போய்விட்டால்  என்ன பரிகாரம்?    அது தான்  "காமோகார்ஷீத்" ஜபம்  . 'காமோ கார்ஷீத்' ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று  ஒரு பழக்கம்  புகுந்து விட்டது. அது தப்பு. வீட்டிலேயே வாத்தியாரை வரவழைத்து பூணூலை  மட்டும் புதிதாக மாற்றிக் கொள்கிறார்கள். மற்ற எந்த ஒரு வித வேத கர்மாவுக்கும் அப்போது இடமில்லாமல் போகிறது. பூணூல் மாற்றிக் கொள்வது மட்டும்  உபா கர்மா ஆகாது.   வேதம் படிப்பதற்கு முன்பு புனிதமாக ஆகவேண்டும் என்பதற்காக   பூணூலை  மாற்றிக் கொள்கிறோம்.  வேத ஆரம்பம் செய்யவேண்டும். அதற்காகத்தான்   "காமோர்கார்ஷீத்" ஜபம் செய்வது.   பூணூல் போட்டுக் கொண்ட மறுநாள் காயத்ரீ ஜபம் அதற்காகவே உண்டானது.  ஆவணி அவிட்டத்தில் வேத மந்திர ஜப சித்தி இருந்தால்தான் வேதாரம்பம் ஸ்திரமாக இருக்கும். அதற்காகத்தான் காயத்ரீ ஜபத்தை மறுநாள் வைத்து இருக்கிறார்கள்.  பூணூல் போட்ட முதல் வருஷத்தில்தான் காயத்ரீ ஜபம், காயத்ரீ ஹோமம் முதலியவைகள் பண்ணவேண்டும் என்று தவறாக எண்ணுகிறார்கள்

வாழ்க்கையிலேயே தினந்தோறும்  சந்தியாவந்தனம்,  காயத்ரி ஜபம் செய்து விட்டுத்தான் வேதத்தை பாராயணம் செய்யச் சொல்லி  இருக்கிறது. ஆகவே ஒவ்வொரவரும் காய்த்ரீ ஜபத்தன்று ஆயிரம் தடவை காயத்ரீ  மந்திரத்தையும் அல்லது ஹோமத்தையும் செய்ய வேண்டும்.  பஞ்சாக்ஷரீ ஜபம், அஷ்டாக்ஷரீ ஜபம் போன்ற பல மந்திர ஜபங்கள் எல்லாம் கூட இருக்கிறது.  ஈஸ்வரானுக்ரஹம் சித்திக்க வேண்டும் என்றால் கூட காயத்ரீ  ஜபத்தை  நிறைய   உச்சரித்தால் தான் அது நிறைவேறும்.  மற்ற ஜபங்களும்  பலன் அளிக்கும்,  காயத்ரீ மந்திரம் ஒன்று தான் வேதத்திலிருந்து பிறந்தது.  மற்றவை புராணத்திலிருந்து வந்தவை. பஞ்சாக்ஷரம் போன்ற மந்திரங்களை ஜபிப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் சொல்லப்பட்டு   இருக்கிறது.

இப்படி சொல்பவர் மஹா பெரியவா.  காயத்ரீ மந்திரம் ஜபித்த எல்லோருக்கும் ஒரே பலன்
மனத்தூய்மைதான். மனோபலம்தான். மனோபலத்தையும், மனத் தூய்மையும்  வைத்துக் கொண்டு உலகத்தில் எல்லா காரியங்களையும் சாதிக்க முடியும்.  இன்றைக்கு மனோபலமும், மனோ தைரியமும் குறைந்திருப்பதற்கு காரணமே   காயத்ரீ அனுஷ்டாணம் குறைந்து இருப்பதுதான். சில சமயம் ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதினால் தோஷமாதலால் அந்த மாதத்தில் உபநயனம், கல்யாணம் போன்ற சடங்குகள்
செய்ய மாட்டார்கள். ஆகையினால்தான் ஆவணி அவிட்டம் ஆடி மாதத்திலேயே 
வந்து விடுகிறது. ச்ராவண சுத்தத்தில் முடிவான பௌர்ணமி அன்று வந்து விடுகிறது.

sivan jaykay

unread,
Aug 3, 2020, 7:53:51 PM8/3/20
to amrith...@googlegroups.com

                                          சரியான முடிவு   J K  SIVAN 

கிருஷ்ணன் துவாரகை  அரண்மனையில்  அவன் தனிமையில் வழக்கமாக அமரும்  சிறிய  குளத்தின் கரையில்  மரத்தின் வேரின் மேல் நாற்காலி போல் அமர்ந்து நீர் அசைவதையும்,  தாமரை இதழ்கள் அவனை நோக்கி  ஆடுவதையும் ரசித்தவாறு அமர்ந்திருந்தான்.    

அவனைஅறியாமல் ஒரு நீண்ட  பெருமூச்சு வந்தது. அதை அடுத்து  புன்சிரிப்பும் தொடர்ந்தது. அவனருகே வந்து நின்ற ருக்மணியை அவன் கவனிக்கவில்லை.

'' ப்ரபு, என்ன உங்களுக்கு நீங்களே  யோசனை, சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி என்ன ஒரு சம்பவம், பெருமூச்சும் அதை தொடர்ந்து புன்னகையும்.... ஏதோ விஷயம் இருக்கிறது. எனக்கும் சொல்லுங்கள்''  
                  
அதெல்லாம் ஒன்றுமில்லை  ருக்மணி, இதோ இந்த தாமரை இதழ்கள் எவ்வளவு  ஆனந்தமாக  நீரில்  மிதந்து அசைந்துகொண்டிருக்கின்றன.  நீரை ஆனந்தமாக அனுபவித்தாலும் ஒரு சொட்டு கூட  நீர் அவற்றின் இலையில் ஒட்டவில்லை  பார்த்தாயா?  வாழ்க்கையை  எந்த பற்றுமில்லாமல் ஆனந்தமாக அனுபவிக்க என்ன வழி என்று இந்த தாமரை இதழுக்கு  இலைக்கு, தெரிவது கூட மனிதர்களுக்கு தெரியவில்லையே என்று நினைக்கும்போது சிரிப்பு வந்தது. அவ்வளவு தான். 

''அது சரி  ருக்மணி,     நீ  ஒரு  உதவி செய்.  
என்றுமில்லாமல் இன்று  எனக்கு களைப்பு மிகுந்து  அதிக  தூக்கம் வருகிறது. நான் என் அறையில் தூங்கப் போகிறேன்.  யாராவது என்னை தேடி வந்தால் நான் எழுந்திருக் கும்வரை காத்திருக்க  முடியும் என்றால் காத்திருக்கட்டும் என்று சொல். ''

''ஆஹா,   அப்படியே செய்கிறேன் பிரபு '' என்று ருக்மணி  கண்ணனைத் தொடர்ந்து அரண் மனைக்குள் சென்றாள் .

துவாரகையில்  அன்று  பகலில்  வெகு  வெப்பமாயிருந்தது. காற்றிலே அனல்  வீசியது.  தெருக்களில் நடமாட்டமே இல்லை.  அரண்மனையில் கிருஷ்ணன் தனது பெரிய  அறையில் கட்டிலில் படுத்து  உறங்கிவிட்டான்.  சாயந்திரம்  வரை  வந்தவர்களை  ருக்மணி அப்புறமாக  வர சொல்லி  அனுப்பிவிட்டாள் . 

“இன்று  மாலை  கண்டிப்பாக  வாயேன்  நாம்   பேசுவோம்” என்று  கிருஷ்ணன்  ஏற்கனவே  அர்ஜுனனை வரச் சொல்லியிருந்தான்.பாரதப்போர்  நடக்கப்போவது  உறுதியாகிவிட்டது.  கௌரவர்கள்  தங்கள்  பக்கம்  யாரையெல்லாம் சேர்க்க முடியுமோ  அந்தந்த  ராஜாக்களுக்கு  ஆள்  மூலம்  செய்தி  அனுப்பி  படை  திரட்டி கொண்டிருந்தனர் என்று கிருஷ்ணன்  அறிவான்.  அவ்வாறே  யுதிஷ்டிரனும்  தன்  உறவினர்  நண்பர்கள் உதவியை  நாடி படை திரட்ட  ஆரம்பித்தான்.  இன்னும் யுத்தத்துக்கு நாள் குறிக்கவில்லை. 

துவாரகை மன்னன்  கிருஷ்ணனின்   உதவியை  இருபக்கமும்  நாடியது.  அவன்  இருவர்க்கும் வேண்டியவன்,  உறவினன் அல்லவா?  துரியோதனனும்  முன்பாகவே  செய்தி  அனுப்பி யிருந்தான் கிருஷ்ணனை  சந்திப்பதற்கு  இன்று  வருவதாக. 

“ஆஹா,  அதற்கென்ன  வாயேன்  பேசுவோம்”  என்று  கண்ணன் பதில் அனுப்பியாயிற்று. 

 சொல்லி வைத்தாற்போல்  சற்று நேரத்திற் கெல்லாம்  துரியோதனனின்  ரதம்  துவாரகையில் நுழைந்தது.  அரண்மனை வாயிலில் வந்து இறங்கிய   துரியோதனன்   ருக்மணியின் உபசரிப்பை பெற்று  உரிமையோடு  கிருஷ்ணன் அறைக்கு வந்துவிட்டான்.  கண்ணன் உறங்குவதால் அவன் தலைமாட்டில் இருந்த   ஒரு  ஆசனத்தில் அமர்ந்து கண்ணன்  துயிலெழ  காத்திருந்தான்.


 நேரம் ஓடியது.  அர்ஜுனன் தேரும்  கிருஷ்ணன் அரண்மனை வாயிலில் வந்து நின்றது. அடிக்கடி வருக்கின்ற   இடம் என்பதால்  அர்ஜுனன் கிருஷ்ணன் அறைக்குள்  நேராக  நுழைந்தவன்  அங்கே  துரியோதனன் கிருஷ்ணன் தலைமாட்டில் அமர்ந்திருப்பதைக்  கண்டான். முகம் சிவந்தது. பற்களை கடித்தான்.  கோபத்தை அடக்கிக்கொண்டு  கிருஷ்ணன்  படுக்கையில்  கால் நீட்டி படுத்திருப்பதை பார்த்து அவன் காலடியில்  இருந்த ஒரு ஆசனத்தில் அமர்ந்தான்.  அசந்து தூங்கிக்   கொண்டிருந்த கிருஷ்ணன் அழகை ரசித்து அவனை மனதால் துதித்துக் கொண்டி ருந்தான் அர்ஜுனன்.  

எப்படி  கிருஷ்ணன்  தூங்கும்போது  கூட ஒரு  தனியான  இனிய  காந்த சக்தியோடு காட்சி யளிக்கிறான்  என்று  ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருந்த  அர்ஜுனன் கண்கள் இமைக்காமல் கிருஷ்ணன் முகத்தையே  பார்த்துக்  கொண்டிருந்தன.  என்ன  வினோதம் இது.  இதை எதிர்பார்த்தமாதிரி கிருஷ்ணன் கண்களை திறந்து விழித்தான்.   கிருஷ்ணனின்  பார்வை முழுதும் அர்ஜுனன் முகத்திலேயே  இருந்ததால் அவன் துரியோதனன் அந்த அறையில் இருப்பதையோ, தனது தலை மாட்டில் அமர்ந்திருப்பதையோ காணவில்லை.

ஒரு எறும்போ  கொசுவோ  சுவற்றில்  அமர்ந்த ஈயோ, நமது  கவனத்தை  கவர்கிறதா? .  இந்த நிலையில்  தான்  துரியோதோதனனை இது வரை மதித்தான் அர்ஜுனன்.

கண் விழித்த கிருஷ்ணனின்  பார்வை  நேராக  தனது   கால்மாட்டில் அமர்ந்திருந்த  அர்ஜுனன் முகத்தில்  நிலைத்ததும்   அவன் கண்களோடு  கலந்தது.  ஒரு  புன்முறுவல்  கிருஷ்ணன் முகத்தில் தோன்றியது. 

“ அட  அர்ஜுனனா,  வா  அர்ஜுனா  வா! .  ரொம்ப  நேரமாக  தூங்கிவிட்டேன்  போல் இருக்கிறதே.  உன்னை   வெகுநேரம்  காக்க வைத்து விட்டேனோ?”.  என்றான் கிருஷ்ணன் ஆர்வத்துடன்.

துரியோதனன்  தான் இருப்பதை  உணர்த்த  தொண்டையை  கனைத்தான்.  பக்கத்தில்  திரும்பி பார்த்த கிருஷ்ணன்  “  ஓஹோ,  துரியோதனனா.  நீ  எப்போ வந்தாய்?.  எப்படி நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து என்னை பார்க்க கிளம்பினீர்கள்?  ஒற்றுமையாகிவிட்டீர்களா?
  
“ இல்லை  கிருஷ்ணா, நான்  தான்  முதலில்  உன்னை பார்க்க  ஹஸ்தினாபுரத்திலிருந்து தனியாக  வந்தவன் ''

“ நீங்கள்  இருவருமே  ஒரு சேர  இங்கு வந்தது மிக்க   மகிழ்ச்சியாக இருக்கிறது. என்ன விஷயம்  சொல்லுங்கள்?”

“கிருஷ்ணா,  உனக்கு  தான்  நன்றாக  தெரியுமே   எங்களுக்கும்  பாண்டவர்களுக்கும்  போர்  நிச்சயமாகிவிட்டது.   போரில்  கௌரவர்களுக்கு  உன் உதவியை கேட்கவே  நான் வந்தேன்”  என்றான் துரியோதனன்.  

“நீ  என்ன  விஷயமாக வந்தாய்  அர்ஜுனா?”  

“இதே  விஷயம்  தான் கிருஷ்ணா”  என்றான்  அர்ஜுனன்.  

“சுயோதனா,  இதோ  பார்  நான்  இரு பக்கத்துக்கும்  வேண்டியவன்.  எனக்கு  இது  ஒரு அக்னி பரிக்ஷை அல்லவா?. யார் வேண்டும்  யார் வேண்டாம்?   ஆகவே  நான்  என்ன  நினைக்கிறேன்  என்றால்.  எங்களது துவாரகை  ராஜ்ய  நாராயணி  சேனை, எந்த பக்கம் சேறுகிறதோ, நான்  அதிலிருந்து  விடுபட்டாக வேண்டும்.  நான் பாண்டவர்களை எதிர்த்து  கௌரவர்களுடனோ  அல்லது  கௌரவர்களை  எடுத்து பாண்டவர்களுடனோ  யுத்தம்  புரிய முடியாது.  எனவே என்னுடைய  உதவியை  நாடும்  உங்கள்  இருவருக்கும்  ஒரு  யோசனை  சொல்கிறேன்.   கேளுங்கள்.  என்னையும்  என் ராஜ்யத்தின் நாராயணி சைன்யத்தையும் உங்கள் இருவருக்கும்  அளிக்கிறேன்.  நான்  ஏற்கனவே  சொன்னபடி  ஆயுத மெடுத்து  உங்கள் எவருக்கும்  உதவியாக  யுத்தம்  புரிய போவதில்லை.  ஆகவே  ஒருபக்கம்  நான்  மட்டும்  தான்  இருப்பேன்  யுத்தம் புரியாமல்.   மற்றொரு பக்கம்  என்  நாராயணி சேனை அனுப்புகிறேன்.  யாருக்கு எது வேண்டுமோ எடுத்துக்  கொள்ளுங்கள்.  

''எங்களுக்கு எது வேண்டும் என்பதை முதலில்  நான்  சொல்கிறேன். நான் தானே  முதலில் உன்னை பார்க்க வந்தவன். '' என்றான் துரியோதனன்.

''நீ முதலில் இங்கே வந்திருக்கலாம். ஆனால் நான் முதலில் என் அறையில் பார்த்தது  அர்ஜுன னை  அல்லவா?  ஆகவே  இளவலான  அவனையே முதலில்  கேட்கிறேன்.   அப்பா,  அர்ஜுனா  உனக்கு   நான்  மட்டும்  வேண்டுமா  அல்லது  என்னுடைய  சைனியம்  மட்டும் வேண்டுமா?”.

“கிருஷ்ணா,   இதில்  நான்  யோசனை செய்ய  என்ன  இருக்கிறது. எனக்கு  எந்த  சேனையும்  தேவையில்லை. என்  சேனையே  போதும் இந்த  யுத்தத்திற்கு.  எனக்கு  வேண்டியது எல்லாம்  நீ  ஒருவன்  மட்டும்  தான்.  நீ என்னருகில் இருந்தால் போதும். யுத்தம் புரிய தேவையில்லை''
   
“இதோ  பார்  அர்ஜுனா  அவசரப்படாதே.   இது  பயங்கர   யுத்த விஷயம்.  உனக்கு எதிராக  உங்களை அழிக்க காத்திருப்பது பல அக்ரோணி பலம் மிகுந்த சைன்யங்கள்.   ஆகவே  சரியாக யோசித்து சொல்.  நான் மட்டும்  வந்தால்  உனக்கு என்னால்   எந்த  உதவியும் இல்லை.  நான்  உன்  ரதத்தை  மட்டுமே  ஒட்டி உதவ முடியும்.  ஆயுதங்கள் ஏந்தி  உதவ முடியாது என்று சொன்னே னே கவனமிருக்கிறதா?  ஆகவே  நிதானமாக  யோசித்து உன் முடிவைச்  சொல்.   என்  சேனையை   உபயோகித்தால்  பலம் உன் பக்கம்  கூடுமே!. நான் மட்டும் இருந்தால்  உனக்கு துணை மட்டும்  தான். யோசி!”.

“கொஞ்சம்  கூட  தயக்கமோ மயக்கமோ  எனக்கில்லை  கிருஷ்ணா.    யோசிக்கவே தேவையில் லை  நான்.   நீ   ஒருவனே எனக்கு போதும்”.  

“சரியப்பா,  அவ்வாறே  ஆகட்டும்.  கௌரவர்களோடு பாண்டவர்கள் புரியப்போகும்  போரில் அர்ஜுனா,  நான் உன்னோடு இருப்பேன்.  திருப்தியா.    
துரியோதனா  நீ எதுவும் கேட்கவேண்டிய அவசியமே இல்லை.  என் நாராயணி சேனையை, எனது  படைகள்  அனைத்தையும்  உனக்கு  அனுப்பி வைக்கிறேன்  உனக்கும் இதில்  திருப்தியா?” என்றான் கிருஷ்ணன்.

துரியோதனனுக்கு  மட்டற்ற  மகிழ்ச்சி.  “முட்டாள்  அர்ஜுனன். யுத்தத்திற்கு  ஒரு நிராயுத பாணியை  கேட்கிறானே.  நல்ல  வேளை அர்ஜுனனுடைய தவறான அவசரக்குடுக்கை  முடிவால்,  எனக்கு  கிருஷ்ணனின்   நாராயணி  சைன்யம்  கிடைத்ததே  என்று   மகிழ்ந்தவன்   “நன்றி  கிருஷ்ணா”   என்று  ஆனந்தத்தோடு  திரும்பினான்.  

அர்ஜுனன்  கிருஷ்ணனை  பூரண  திருப்தியோடு  நன்றி சொல்ல  வார்த்தையில்லாமல் ஆரத்தழுவி ஆனந்த கண்ணீர்  உகுத்தான்.  

கிருஷ்ணன் தனக்கு  பிடித்த  நண்பன்  அர்ஜுனனின்  பூரண  அன்பை  உணர்ந்து பேரானந்தம் கொண்டான்.  சரியாகவே  முடிவெடுத்தான்  அர்ஜுனன். எங்கே  தப்பான முடிவெடுத்து எனது படையை கேட்பானோ என்று  ஒரு கணம்  நிம்மதியற்று உள்ளூர பெருமூச்சு தொடர்ந்து இருந்தது.  

கிருஷ்ணன் ஏன் தனிமையில் சிந்தித்துக் கொண்டிருந்தபோது முதலில் பெருமூச்சு விட்டான், பிறகு புன்னகைத்தான் என்று ருக்மணி இதெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தவள் புரிந்து  கொண்டாள் .

''இறைவா, கிருஷ்ணா,   உன் மீது  வைக்கும்  நம்பிக்கையே பெரிய  பலம்''     

sivan jaykay

unread,
Aug 4, 2020, 7:52:30 PM8/4/20
to amrith...@googlegroups.com

ஒரு  அற்புத ஞானி                          J K   SIVAN   
சேஷாத்திரி ஸ்வாமிகள் 

                                                                                       இவன்  என்  பிள்ளை .


சேஷாத்திரி ஸ்வாமிகள்  திருவண்ணாமலையில் வெகுகாலம் வாழ்ந்து மறைந்தவர்.  1889ல் நடந்து அவர் திருவண்ணாமலை வந்தபோது அவர் வயது 19.  இளம் சன்யாசி.   ஏழு வருஷங்கள் எதற்காக காத்திருந்தாரோ அது நிறைவேறியது...   1896 செப்டம்பர்  1ம் தேதி  ஒரு சிறு பையன்   மார்க்கண்டேயன் போல  என்றும் நிலையான   புகழ்  கொண்டவனாக   மதுரையிலிருந்து தட்டு தடுமாறி  அருணாச்சலேஸ்வரர் ஆலயம் வந்து சேர்ந்தான்.  சேஷாத்திரி ஸ்வாமிகளை போல் அவனுக்கும்  திருவண்ணாமலை தாகம் நெஞ்சில் நிறைந்திருந்தது. 

சேஷாத்திரி ஸ்வாமிகள் முதலில் திருவண்ணாமலை வந்தபோது அவருக்கு கிடைத்த வரவேற்பு  என்ன தெரியுமா?

 ''யார்  இந்த  பைத்தியம். எங்கு பார்த்தாலும்  சுற்றிக்கொண்டிருக்கிறது?'' என்று  நினைத்தவர்கள்,  உரக்க சொன்னவர்கள்,   அருவருப்பாக பார்த்தவர்கள் தான்  ஜாஸ்தி.  அந்த பையன் வந்து  அருணாசலேஸ்வரர் கோவிலில்  அமர்ந்தபோது  இதே  பேச்சு தான்.  

'' அந்த பைத்தியம் தெருவெல்லாம் சுற்றுகிறது.  இந்த பைத்தியம்  ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறது . அதற்கு பெயர்  பெரிய சேஷாத்திரி, இதற்கு பெயர்  சின்ன சேஷாத்திரி''  என்றார்கள் .  

''ரெண்டு பைத்தியத்தையும்  ஒண்ணு  சேருங்கடா'' என்று  ரமணரை  சேஷாத்திரி இருந்த இடம் விரட்டியவர்கள் ஒரு நல்ல காரியத்தையே செய்திருக்கிறார்கள்.   இளம் யோகியின் தியானம் இதனால் தடை பட்டது.  அந்த இளம் துறவி மற்றவர்கள் கண்ணில் படாமல்  இருக்க என்ன செய்யலாம் என்று ஒரு வழி கண்டுபிடித்தான்.   அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில்  ஆயிரங்கால் மண்டபம் அருகே   பாதாள லிங்கேஸ்வரர்  சந்நிதி பூமிக்கடியே சுரங்கம் மாதிரி அமைந்திருந்தது.  கல்லும் முள்ளும், பாம்பு பல்லி தேள் பூச்சிகள் நிரம்பிய இடமாக இருந்தது. பக்தர்கள் அதிகம் அங்கே இறங்கி தரிசிப்பதில்லை.    அதில் இறங்கி  லிங்கத்தின் பின்னால்  அமர்ந்து கொண்டான்.   விஷமக்கார  சிறுவர்கள்  எங்கே அந்த சின்ன பைத்தியத்தை காணோம் என்று தேடியவர்கள் அவன் பாதாள லிங்கேஸ்வரர்  சந்நிதியில் அமர்ந்திருப்பதை பார்த்து அவனை நோக்கி  மேலே  இருந்து  கற்களை வீசினார்கள்.  இளம் துறவி எதையும் லக்ஷியம் செய்யாமல் தியானத்தில் இருந்தான்.   

அந்த கோவிலுக்கு  வெங்கடாச்சல முதலியார் என்ற பக்தர் அடிக்கடி வருவார்.   ஒருநாள்  காலை  அந்த பையன்கள்  ஏதோ கற்களை வீசுகிறார்களே  கீழே  லிங்கத்தின் பக்கம்  என்று கோபம் கொண்டு   சத்தம் போட்டு அந்த பையன்களை விரட்டினார்.  

அப்போது  தான்  சேஷாத்திரி ஸ்வாமிகள்  பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதியிலிருந்து  சுரங்கப்பாதை வழியாக   மேலே வந்துகொண்டிருந்தார்.

''இவர் எங்கே இங்கே வந்தார். பாதாள லிங்க குகை கோயிலில் என்ன வேலை இவருக்கு?  என்று முதலியார் 
யோசித்தார்.   

ஒரு  மஹான் தான் இன்னொருவரை  அறியமுடியும்.   அருணாச்சலேஸ்வரர்  ''நீ உடனே  பாதாள லிங்க குகைக்கோயிலுக்கு போ '' என்று சேஷாத்திரி ஸ்வாமிகளுக்கு   கட்டளையிட்டு அவர் அங்கே சென்றிருக்கிறார்.  அருணாசலேஸ்வரனே  அங்கே  பாலயோகியாக அமர்ந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தார்.  அவர் தியானத்தை  எவரும் கலைக்கக்கூடாது என்று எண்ணினார்.   பாலயோகியை நோக்கி  பையன்கள் எறிந்த கல்லெல்லாம் தன்  மேல் வாங்கிக்கொண்டார்.    ஓஹோ  அம்பாள் அங்கே கோவிலுக்குள்  அண்ணாமலைக்காக தவமிருக்கிறாள். இங்கே  குமாரசுவாமி  தவமிருக்கிறார்'' என்று சொல்வார்.   தாய் சேயைக் காப்பாற்ற ஓடிவரமாட்டாளா?  சேஷாத்திரி ஸ்வாமிகள்  காமாக்ஷி ஸ்வரூபம்  அல்லவா?  அதனால் தான்  பாலயோகியை காப்பாற்ற ஓடி வந்திருக்கிறார். 

சேஷாத்திரி ஸ்வாமிகளை பார்த்த முதலியார்  '' சாமி, இந்த பசங்க  வீசின கல்லெல்லாம் உங்க மேலேயா விழுந்தது?''   

சேஷாத்திரி ஸ்வாமிகள்  நேரடியாக எதற்கும் எவருக்கும் பதில் சொல்வதில்லை.   ''ஹாஹா''  என்று சிரிப்பு.  ஆமென்று  உணர்த்த  தலையை ஆட்டினார்.  

''வா என்னோடு '' என்று  முதலியாரை  மறுபடியும்  குகைக்கோயிலுக்குள் அழைத்துச்சென்று பாலயோகியை லிங்கத்தின் பின்புறம்  ''அதோ பார் ' என்று ' காட்டினார் 

''சாமி  யார்  அங்கே  லிங்கத்துக்கு பின்னால் உட்கார்ந்து இருக்கிறது?  இத்தனை நாள்  நான் பாக்கலியே?''

 ' அவன்  என் பிள்ளை.  இனிமே நீ தான் இவனை ஜாக்கிரதையாக பாதுகாக்கணும்''

வெங்கடாச்சல முதலியாருக்கு வேடிக்கையாக இருந்தது.  '' என்னா சாமி இது?  உனக்கு தான்  இன்னும் கல்யாணமே ஆவலியே. அதற்குள் இவ்வளவு பெரிய புள்ளையா?''

''உனக்கென்ன தெரியும். சொன்னதை செய் போ ''

 என்று  சொல்லி விட்டு  சேஷாத்திரி ஸ்வாமிகள்  ஓடிவிட்டார்.   முதலியார்  ஆலயத்தில் இருந்த சிலரை அழைத்துவந்து மெதுவாக அந்த பாலயோகியை வெளியே அழைத்துவந்து பாதுகாத்தனர்.  உடலெல்லாம் பூச்சிகள் கடித்து, புண்ணாகி, ரத்தமும் சீழும் வடிந்தும் அந்த துறவி கவலைப்படவில்லை.   உலகத்துக்கு  சேஷாத்திரி சுவாமிகளால்  பகவான் ரமண மஹரிஷி கிடைத்தார்.''

உலகத்தின் பார்வை  ரமண மஹர்ஷிமேல் விழுந்தது. திருவாண்ணாமலை என்றால் ரமணர் என்று இரண்டுபடுத்த முடியாமல் ஒன்றாக நிலைத்தது. இன்றும் ரமணரைத் தேடி  அங்கே பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்களே. 

சேஷாத்திரி  ஸ்வாமிகளும்  19 வயதில் அங்கே வந்தவர்   தொடர்ந்து 40 வருஷங்கள் வாழ்ந்து அங்கேயே 
அருணாச்சலேஸ்வரருடன்  ஐக்கியமானார். 



'

sivan jaykay

unread,
Aug 4, 2020, 7:52:30 PM8/4/20
to amrith...@googlegroups.com

                                                              மன்னவன் வந்தானடி   ஜே கே  சிவன் 

ராமர்  பிறந்த அயோத்தியில்  ராமருக்கு  நினைவு சின்னமாக ராமர் கோயில் இருப்பது  நியாயம் தான். உலகெங்கும் ராமர் கோயில்கள்  இருந்தாலும் அவர் பிறந்த இடத்தில் கோவில் என்றால்  மிக  விசேஷம்.

கோவில் இருந்த இடத்தில் மசூதி என்பது இந்திய சரித்திரத்தில் கண்ணீர்க்கரை படிந்த பக்கங்கள், 
ஏன் இந்தியாவில் மசூதி இருந்த இடத்தில் கோவில்கள் இல்லை, கிருஸ்தவ தேவாலயங்கள் இடிபட்டு அங்கே முருகன் விநாயகர்  சிவன்  பெருமாள்  கோவில்கள் உருவாகவில்லை?  அது தான் ஹிந்து சனாதன தர்ம சாத்வீகம். நமக்கு அது அவசியமில்லை.   ராமர் ஜென்ம பூமியில் கோவில்கள்  இருந்தது.  அவை  பல ஆயிரம் ஆண்டுகளில் பாதுகாக்கப்படாமல்  காலத்தால்  கரைந்தது.   பாஹியான்  இந்தியாவில் சுற்றியபோது அயோத்தியில் கோவில்களை பார்த்திருக்கிறான்.  விக்கிரமாதித்யன்  உஜ்ஜையினியை ஆண்டபோது  அங்கே மீண்டும்  ராமர் கோவில்களை புனருத்தாரணம் பண்ணி இருக்கிறான். 7ம் நூற்றாண்டில் ஹுவான்சுவாங் வந்தபோது  விக்ரமாதித்யன் கட்டிய கோயில்களும்  பாழடைந்துவிட்டன.  ராமர் வாழ்ந்தது 7000 ஆண்டுகளுக்கு முன் அல்லவா?  

உத்தரப்ரதேசம் எத்தனை பிற மத  ராஜாக்களை பார்த்திருக்கிறது. அவர்களது ஆட்சியில் என்னென்னவெல்லாம் அட்டூழியங்களை சஹித்திருக்கிறது?   முஸ்லீம்கள்  படையெடுத்து இந்தியாவிற்குள்  வரும் முன்பு   அயோத்தியில்  ராமர்  பிறந்த இடத்தில்  மூன்று கோவில்கள் இருந்தன என்று சரித்ரக்காரர்  FUHRER  சொல்கிறார். அவற்றின் பெயர்கள்  ராமர் பிறந்த ஜென்மஸ்தானம், ராமரின் அந்திமக்கிரியை நடந்த ஸ்வர்கத்வாரம்,  த்ரேதா கே   தாகூர் (ராமர்  நடத்திய யாக ஸ்தானம்).  FUHRER     மேற்கொண்டு என்ன சொல்கிறார் ? 1523ல்   மீர் கான்  என்பவன்  ராமரின் ஜென்மஸ்தானம் இருந்த இடத்தில் பாபரி மசூதி கட்டினான் என்கிறார்.  கோவிலின் சிற்பத்தூண்களை  மசூதி கட்ட உபயோகித்தார்கள் என்கிறார்.  கருப்பு நிற கல் தூண்கள்.  உள்ளூர்க்காரர்கள் அதை கசௌடி என்பார்கள் என்கிறார்.  மீண்டும் அந்த இடத்தில்   ஒளரங்கசீப்  அதே இடத்தில்   மசூதியை புதுப்பித்தும்,  மற்ற இரெண்டு கோவில்கள்  இருந்த இடங்களிலும் மசூதிகள் கட்டினான்.

எது எப்படியோ?  ராமன் கட்டுக்கதை அல்ல.  அவதாரங்கள் கற்பனைகளல்ல.  நாடெங்கும் உலகெங்கும் பல இடங்களில்  ராமன் வாழ்ந்தது    இருந்தது  பற்றிய ராமாயண   சம்பவ  சான்றுகள் இன்றும் போற்றப்பட்டு நினைவு கூறுகிறார்கள்.   ராமன் எத்தனையோ மனங்களில் வாழ்கின்றான்.  அவன் பிறந்த இடத்தில் நமது காலத்தில் மீண்டும் அவன் கோவில் உருவாகிறதை நாளை முதல் பார்க்கப்போகிறோம்.  நான் பாக்கியவான் என்ற சந்தோஷத்தில்  கண்ணை மூடுவேன்.

நல்ல எண்ணம் நல்ல செயகையாக  தான்  வளரும். எதிர்ப்புகள்  ராமர் காலத்திலேயே இருந்தவை.  எதிர்ப்பே இருக்கக்கூடாது என்று எவரும் சொல்லவில்லை. எதிர்ப்பினால் உண்மை மறையாது என்பது தான்  தீர்மானம். சர்க்கரை இருந்த  காலத்திலேயே  உப்பும்  கசப்பும் கூட இருந்ததால்  என்றும்  சர்க்கரை இல்லாமலா போய்விட்டது?  உப்பு கசப்பை விட  அதிகம் எல்லோரும்  விரும்புவது எது? சர்க்கரை தானே?  நம் உடம்பில் சர்க்கரை இருக்கட்டுமே . உள்ளத்திலும் ராமனாக  கிருஷ்ணனாக இதிகாசநாயகர்களாக, அவதாரங்களாக  என்றும் இனிக்கட்டுமே .   

 இந்த நன்னாளில்  தியாகராஜ ஸ்வாமிகள்  தனது வாழ்நாளில் எத்தனையோ கோடி ராம நாமங்களை ஜபித்தவரை நினைப்போம். அவரைப்பற்றி நான் எழுதிய  ''நாத ப்ரம்மம்  '' என்ற ஒரு சிறு புத்தகத்தை எல்லோருக்கும்  E BOOK ஆக இலவசமாக வழங்குகிறேன். என்னால் முடிந்தது இது தான். 
 வேண்டியவர்கள் என்னை  வாட்சப்பில் 9840279080   அணுகவும்.  பிபியில்  PDF அனுப்ப வழியில்லை.   மெயிலில் வேண்டுபவர்கள்  jaykaysivan@gmail .com    என்ற  ஈ மெயில் id யில் என்னை அணுகவும்.  



Nadha Brahmam . PDF.pdf

sivan jaykay

unread,
Aug 4, 2020, 7:52:30 PM8/4/20
to amrith...@googlegroups.com

                                                     இங்கு சரணாகதி ஒன்றே  தேவை    J K  SIVAN 


குருக்ஷேத்ரம்   குருதி க்ஷேத்ரமாகவும்   ரத்த சாகரமாகவும்  ஆகிவிட்டதே!!.  முதல்   நாள் யுத்தம் ஆரம்பித்த  அன்று  இந்த  ரெண்டு  சேனைக்கும்  யுத்தம் புரிய இந்த இடம்  போதாதோ என்று  அல்லவா தோன்றியது.  ஆயிற்று  13 நாள்  ஆக்கிரோஷமாக  இரு சேனைகளும்  மோதி  பாதிக்கு மேல் உயிர்கள் இருபக்கமும்  இழந்துவிட்டாலும்  யுத்தம்  எப்படி முடியப்போகிறது என்றே  தெரியவில்லையே?

14  நாள்   ஓடியே  போய்விட்டது  வெற்றி தோல்வியின்றி  இரு சேனைகளும்  மோதுகின்றன.  எண்ணற்றோர் மாண்டனர்.  குதிரைகள்,  யானைகள் இறந்தன. கணக்கின்றி  ரதங்கள்  பொடிபட்டு கிடக்கின்றன.  குவியல் குவியல்களாய்  இறந்த உடல்களை சூழ்ந்து கொண்டு  கழுகுகள்  வட்டமிடுகின்றன.   அஸ்வத்தாமன் களம்  இறங்கிவிட்டான்  வெறியுடன்.      தன் தந்தையைக்   கொன்ற பாண்டவர்களை  அழிக்க  வந்து விட்டான்.  இதோ  அவனது  நாராயண அஸ்தரம் கிளம்ப போகிறது. அதை  தான்  அவன்  இப்போது  பிரயோகிக்க  தீர்மானித்து விட்டான். . அதை எவராலும்  தடுக்கவோ நிறுத்தவோ  எதிர்க்கவோ   முடியாதே.  தனுர் வித்தையின்  சிகரமாக விளங்கிய  ஆச்சார்யர்  துரோணர் மகன் அவரிடமிருந்து கற்ற  அஸ்திர வித்தைகளை இன்று காட்டப்போகிறான். 

கிருஷ்ணன்  சிரித்தான்.    ''அட  என்னுடைய அம்சம் எனக்கு எதிராக செயல்படப் போகிறதா?'' நல்ல வேடிக்கை இது?
 
“அர்ஜுனா,  யாராலும்  தடுக்கமுடியாதது   நாராயணாஸ்திரம். எதிர்பட்டவரை, எதிர்த்து நிற்பதை,  எல்லாம்  அழிக்கக்கூடிய  வலிமை வாய்ந்த  பாணம்.  இதிலிருந்து தப்பிக்க   ஒரே வழி தான்  உண்டு.  சகல ஆயுதங் களையும்  கீழே போட்டு விட்டு   நாராயணா  என்று  சரணாகதி  அடைவது  ஒன்றே  வழி.  பாண்டவர் களுக்கும்  உன்  சேனைக்கும்  உடனே இதை  தெரியப்படுத்து.  நேரம்  அதிகமில்லை.  அதோ அஸ்வத்தாமன் வந்துவிட்டான்.  அவன்  நாராயண அஸ்திரத்தை எடுத்து  விட்டான். மந்திரம் ஜபித்துக் கொண்டிருக்கிறான். எந்த கணமும் அது புறப்பட்டுவிடும். சர்வ  ஜாக்கிரதையாக நீங்கள்  செயல்படவேண்டும்.  நான்  சொன்னதை  எல்லோரும்  செய்யுங்கள்.   ஜல்தி” என்றான்  கிருஷ்ணன்.   அனைவருக்கும்  செய்தி பரப்பப் பட்டது.  அனைவரும்   தத்தம்  கைவசம் உள்ள  ஆயுதங்களை  எறிந்து விட்டு  அமைதியாக  நின்றனர், ஒருவனைத் தவிர.  

பீமசேனன் “நான்  இதற்கெல்லாம்  அஞ்சுபவனல்ல.  அதை  எதிர்க்கும்  பலம்  என்னிடம் உண்டு. வரட்டும்  ஒரு கை  பார்க்கிறேன் என்றான்”.  

இதோ  வந்து விட்டது அவனை நோக்கி  நாராயண அஸ்திரம். மற்ற எவரும்  எதிர்க்காததால்   நேராக பீமனிடம்   அணுகிவிட்டது  அந்த  அஸ்திரம்.  நெருப்பு  ஜ்வாலையுடன்  அவனை சூழ்ந்துகொண்டு  துன்புறுத்தியது.  

“பீமா  உன்  ஆயுதங்களை  கீழே போடு”  என்று அலறினான்  அர்ஜுனன்.  பீமன்   காதில் இது விழவில்லை  தன்னாலியன்ற வரை போராடிக் கொண்டிருந்தான்  உடலெல்லாம்  தீ பிழம்பு  சூழ  துடித்தான் பீமன்.  

“அர்ஜுனா  வருணாஸ்திரத்தை  பிரயோகித்து  பீமனுக்கு  உதவு”  என்றான்  கிருஷ்ணன்.  

நாராயணாஸ்திரத்தை  எதிர்க்காமல்  பீமன்  மீது  வருணானஸ்திரம் பொழிந்தான் அர்ஜுனன்.

கிருஷ்ணன் புரிந்து கொண்டான். தான்  உதவ வேண்டிய  சமயம்  வந்துவிட்டதென்று.  தேரிலிருந்து குதித்து இறங்கினான்  பீமனை நோக்கி ஓடினான்  அவனை அணுகி  அவனை  அணைத்துகொண்டான்.  கிருஷ்ணன் மீது  நாராயணாஸ்திரம்  பலனற்றது.   பீமனின்  ஆயுதங்களை கிருஷ்ணன்   பிடுங்கி எறிந்தான். அஸ்திரம்  பீமனை  விட்டு சற்று  விலகியது.  

“பீமா உன் வீரம்  மெச்சத்தக்கது.  ஒரு  க்ஷத்திரியனின்  தைர்யத்தை  வெளிப்படுத்தினாய்.  ஆனால்  வீரம் தெய்வ சக்தியுடன்  மோதுவதற்கில்லை  புரிகிறதா”   என்ற  கிருஷ்ணனை  நன்றிபெருக்குடன்  வணங்கினான்  பீமன்.  

sivan jaykay

unread,
Aug 7, 2020, 8:27:49 PM8/7/20
to amrith...@googlegroups.com

                                                                                மந்த்ர சக்தி   J K  SIVAN  

சமீபத்தில் யஜுர் வேத, ரிக் வேத  உபாகர்மாவை  ஆவணி அவிட்டத்தன்று அனுஷ்டித்தோம். சாம வேதக்காரர்கள் வேறொரு நாளில் அதை அனுஷ்டிப்பார்கள்.   வேத அத்யயனம்  மாணவர்களுக்கு ஆரம்பிக்கும் நாளாக அது செயல்பட்டது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு.  பூணல் போடுவது நமது பிள்ளைகளுக்கு இப்போது யூனிபார்ம்  UNIFORM  மாதிரி கட்டாயம் அப்போது. ஆவணியிலிருந்து தை மாதம்  கற்பது வழக்கம் இல்லை.   உத் ஸர்ஜனம் என்று  கற்பதற்கு  பெயர்.  அதற்கு பிராயச்சித்தம் தான்  காமோகார்ஷித் மந்த்ர ஜபம்.  தக்ஷிணாயனத்தில்.   ...  அத்யாய உத்ஸர்ஜன  அகரண   பிராயஸ் சித்தார்
த்தம்......''    காமத்தால் உண்டாகும் விருப்பத்தை  அறவே விட்டு விடுகிறேன். கோபத்தை   அறவே ஒதுக்குகிறேன்'' என்பது தான்  காமோகர்ஷித் ஜப அர்த்தம்.

நமது பாபங்களை தன் மேல் கிருஷ்ணன் சுமக்கிறான் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.  உபாகர்மா   காமோகார்ஷித் ெபத்திற்கு பிறகு துவங்குகிறது. உபாகர்மா எதற்கு?  வேதங்களை நமக்கு அளித்த ரிஷிகளுக்கு நன்றி தெரிவிக்க.  அவர்களுக்கு '' காண்ட ரிஷிகள்'' என்று பெயர். அவர்களுக்கு  ஹோமம், தர்ப்பணம் எல்லாம்  பண்ணுகிறோம்.  ஒவ்வொரு வேதத்துக்கும் ஒரு ரிஷி உண்டு. எல்லா ரிஷிகளுக்கும் சேர்த்து தான் இந்த காண்ட ரிஷி  மந்த்ரம்.ஒவ்வொரு வேதத்துக்கும் ஒரு கிளை உண்டு ஒவ்வொரு கிளைக்கும் ஒரு ரிஷி.  நாலு வேதத்துக்கும் நாலு காண்டம். அவை என்ன தெரியுமா ?    ப்ரஜாபத்ய காண்டம்,  சௌமியகாண்டம், ஆக்னேய கண்டம், வைஸ்வதேவ காண்டம்.''  எல்லாம்  ரிஷிகளின் பெயரில் உண்டானது.   பிரஜாபதி, சோமன், அக்னி, விஸ்வதேவ ரிஷிகள் தான் அவர்கள்.  


உபநிஷத்துகளுக்கும்  பிரார்த்தனை.  சாம்ஹிதி,  யாக்ஞகி , வாருணி,  ஸ்வயம்பு,  ஸதஸஸ்பதி,  இவர்கள் மூலம் தான் யஜுர்வேதம் கிடைத்தது.  இந்த  ஹோமத்தில்  காண்ட ரிஷிகளுக்கும் பங்கு உண்டு.  நமது நித்ய கர்மாநுஷ்டானத்திலும் இந்த தர்ப்பணம் உண்டு.  தர்ப்பை மாதிரி புல்லினால்  இடுப்பில் முஞ்சி  எனும் பெல்ட் மாதிரி பிரம்மச்சாரிகள் போட்டுக்கொள்வார்கள்.   மான் தோலுக்கு ஆஜினம் என்று பெயர்.  பலாச கிளையில் ஆன தண்டம் இதெல்லாம் பூணல் போட்டுக்கொள்ளும்போது தேவையானவை.   நாலு முழ வேஷ்டி, மேல் துண்டு தான்  பூணல் போட்டுக்கொள்பவன் டிரஸ்.   காண்ட ரிஷி தர்ப்பணம் பண்ணும்போது முதலில்  தலை குளிக்கவேண்டும்,  தர்ப்பணத்தை ஈரத்துணியோடு புரிவது வழக்கம்.  பூணல் இல்லாமல் ரிஷி தர்ப்பணம் பண்ண முடியாது.   பூணலை மாலையாக போட்டுக்கொள்வது நிவிதம் .  கையில் அக்ஷதை, எள் , முதலியவற்றோடு ஜலத்தை  சுண்டுவிரல் அடிப்பாகம் வழியாக விடுதல் இந்த தர்ப்பணம்.

இதை இப்படியே விட்டு விட்டு, இப்போது  மஹா  ம்ருத்யுஞ்ஜய  ஜபம் சொல்வதை பற்றி கொஞ்சம் சொல்கிறேன். நிறையபேர்  கேட்கிறார்கள்.  நமது ஹிந்து சனாதன தர்மத்தில் அநேகருக்கு தெரிந்த சின்ன மந்திரம் இது.

''ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् ।उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्''    (ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம்  புஷ்டி வர்தனம்   உர்வாருகம் இவ   பந்தனா அம்ருத்யோர் முக்ஷீய  மாம்ருதாத் ''ǁ)

ஓம்  என்பது பிரணவ மந்த்ரம்.  அதை சொல்லாமல் எந்த மந்திரமும் இல்லை.   என்றும் இளமையான, திடகாத்ர , த்ரிநேத்ரன், முக்கண்ணன்,   உன்னை வணங்குகிறோம்,  நறுமணம் உடைய,  திடகாத்திர சக்தி கொண்டவனே,   எப்படி பழுத்த  வெள்ளரிப்பழம், கொடியிலிருந்து  தானாகவே தன்னை விடுவித்துக்  கொள்கிறதோ அது போல்,   என்னை உலக பந்த  பாசங்களிலிருந்து மீட்டு,  மரணத்திலிருந்து அமரத்வத்தை ,  மோக்ஷத்தை,  நிறைவான   அமைதியை அளிப்பாய்.  

இந்த மஹா ம்ருத்யுஞ்ஜய  மந்த்ரத்தை அளித்தவர்  மார்க்கண்டேய ரிஷி.  ஒரு தடவை சந்திரன்  தக்ஷ ப்ரஜாபதியால் சபிக்கப்பட்ட போது  மார்க்கண்டேய ரிஷி இந்த மந்திரத்தை  தக்ஷனின் பெண்ணிடம்  உபதேசிக்க அவள்  சந்திரனை அதை  ஜபிக்கச்செய்து, சந்திரன் சாப விமோச்சனம்  பெறுகிறான் என்று ஒரு கதை.  

இந்த மந்திரம்  ருத்ர மந்திரம் எனப்படும்.   மனோ உறுதி,  உடல் நலம்  மோக்ஷ  காரக சாதனம் என சக்திவாய்ந்ததாக வேதங்களால் சொல்லப்பட்டது.   காயத்ரி மந்திரம் பரிசுத்தம் அடைய உதவுவது போல், இந்த மஹா மிருத்யுஞ்ஜய  மந்த்ரம் உள்ள உடல் நிவாரணி.

sivan jaykay

unread,
Aug 7, 2020, 8:27:50 PM8/7/20
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்    J K  SIVAN  
                                                       

                                                                          காப்பு கட்டின  திரிசூலி 

இன்று  ஆடி வெள்ளிக்கிழமை.  அம்பாளுக்கு  மகாலட்சுமிக்கு  உகந்த வழிபடும் நாள்.   இந்த அபூர்வ தினத்தில்  மஹா பெரியவா அனுபவம்  பெற்ற  ஒரு ஆஸ்திக பக்தர் அனுபவம் சொன்னால் எப்படி  சந்தோஷமாக  உங்களுக்கு இருக்கும்?  அதனால் இதை எழுதுகிறேன்.

நவகிரஹங்களில்  சனீஸ்வர பகவான் பிடித்தால்   ஏழரை வருஷங்களில் விட்டுவிடுகிறார்.  ஆனால்  பஞ்ச பூதங்களில் ஒருவரான  வாயு பிடிப்பில் ரொம்ப கஷ்டம் அனுபவிக்க வேண்டி இருக்கிறது.  தூர இருந்தாலும், தென்றலாக வந்து மகிழ்வித்தாலும் நன்றி சொல்லலாம். அவர்  முழங்கால், வயிறு பகுதிகளில் குடி கொண்டால் உபத்திரவம்.   முழங்கால் வாயுவானது அனுபவிக்கும் மனிதருக்கு மட்டும் துன்பம்  தரும். வயிற்றில் கடபுடா பண்ணி  வாயு பகவான் வெளியேறினால்  பக்கத்தில் இருப்பவர்களுக்கு ரொம்ப சங்கடம்...!
கப்பென்று  மார்பில் பிடித்துக்கொண்டுவிட்டாரானால்  நாம்  பிராண வாயுவை விட்டுவிடுகிறோம். 

நான்  படித்த ஒரு விஷயம் சொல்கிறேன் கேளுங்கள்: 

 ஸ்ரீமடத்தில் அத்யாபகராக இருந்தவர்   ஸ்ரீ சந்திரமௌலி ஸ்ரௌதிகள் .  அடிக்கடி  வாயு பகவானோடு   தொடர்பு இருந்து தொல்லை தந்தது.  மடத்தில் முக்கியமான  பொறுப்பு. அதை விட்டு  விட்டு  ஊரைப்பார்க்க போகலாமென்றால்    போகமுடியாத சூழ்நிலை.  எனக்கு ஒன்றும் புரியவில்லை. பெரியவாளே  நீங்களே ஒரு வழி காட்டுங்கோ. என்று  மஹாபெரியவரை  தியானம் பண்ணி விட்டு படுத்துக் கொண்டார்.

இரவு கனவில் ஒரு சந்நியாசி வந்தார்.  கையில் தண்டமில்லை .   "என்னுடன் வா" என்று ஸ்ரௌதிகளை அழைத்துக்கொண்டு, பெரியவா சிவாஸ்தானத்தில் வழக்கமாக தங்கும் இடத்துக்கு சென்று அங்கே விட்டு விட்டு,   ஒரு இடுக்கு வழியாக போனவரை   காணவில்லை.  . உள்ளே பெரியவா வெறும் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் வேறு சில சன்யாசிகள்.

பெரியவா சந்திரமௌளியைப்  பார்த்ததும்  'இங்கே வா'' என்று  கூப்பிட்டு ஒரு யந்திரத் தகட்டை குடுத்து படிக்கச்சொன்னார்.

 ''பெரியவா  எனக்கு  இந்த பாஷை தெரியாதே பெரியவா''

 ''இப்போ  படிக்க முடிகிறதா  பாரு''     பெரியவா அந்த தகடை கையால் தடவியதும்  எழுத்து மறைந்து  சமஸ்க்ரித எழுத்துகள் தெரிந்தன. 
''இப்போ படி '' என்கிறார்
 "ஓம்  துர்காயை நமஹ"
 "இதுதான் ஒனக்கு நான் செய்யற உபதேசம். இதையே ஜபம் பண்ணு" -  பெரியவா.

ஸ்ரௌதிகள் கனவு கலைந்தது.  விழித்துக்கொண்டார்.   என்ன கனவு, இதற்கு என்ன அர்த்தம்.   உடல்  வியர்த்து   நடுங்கியது.  வார்த்தை சிறிது நேரம்  வரவில்லை.பொழுது விடிந்தது.

அன்றிலிருந்து  அந்த மந்த்ரத்தை விடாமல் ஜபம் பண்ண ஆரம்பித்து விட்டார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. சில தினங்கள் ஆயின. மறுபடி ஒரு கனவு.

இந்த தடவை கனவில் வந்தது  சன்யாசிகள், பெரியவா யாரும் இல்லை,  கையில்  திரிசூலத்தை வைத்துக் கொண்டு ஒரு லம்பாடி மாதிரி வடக்கத்தி  பெண் ஒருத்தி.   கலர் கலராக  பாவாடை மாதிரி, காதில், கையில் மூக்கில்  வளையங்கள்.  சிவந்த பெரிய  கண்கள். ஆஜானுபாஹு மாதிரி  ஆகிருதி. உயரமான பெண்.  காலில் தண்டை கொலுசு மாதிரி  ஏதேதோ  மாட்டிக்கொண்டிருக்கிறாள். பளிச்சென்று மூக்குத்தி வேறு  கை  நிறைய முழங்கை  வரை கலர்கலராக என்னென்னவோ வளையல்கள். விரித்த  செஞ்சடை.   எண்ணெய்  முதல் ஜென்மத்திற்கு பிறகு பார்க்காத தலை  மாதிரி பறக்கிறது.   அவளைப் பார்த்ததும்   ஸ்ரௌதி 
கள்  விடுவிடுவென்று  சற்று பயத்தோடு  வேகமாக   வேறு பக்கம்  திரும்பி போகிறார். அவளும் விடவில்லை. அவர் போகுமிடமெல்லாம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள்.   பயத்தில்  ஸ்ரௌதிகள்  வேகமாக  ஓட  ஆரம்பித்தார். ஹா ஹா  என்று அவள் பின்னாலே வந்துவிட்டாள் ......

ஸ்ரௌதிகள் உளறிக்கொண்டே  படுக்கையை விட்டு  எழுந்தார். என்ன பயங்கர கனவு இது ?   யார் இவள்  என்னை துரத்துகிறாள்?  இந்த கனவுக்கு  என்ன அர்த்தம்?    ஸ்ரௌதிகள் மனதில் இந்த கேள்வி அரித்துக்கொண்டிருந்தது. விடை தெரியவில்லை. 

 ஒருநாள்  கும்பகோணத்திலிருந்து தினகர சாஸ்த்ரி என்கிற  ஸ்ரீ வித்யா உபாசகர்  காஞ்சி மடத்துக்கு வந்தார்.

''ஆஹா  இவரிடம் வெகுநாளாக நமது நினைவில் இருக்கும் கனவை பற்றி சொல்லி அர்த்தம் கேட்கவேண்டும் என்று சந்தர்ப்பம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்  ஸ்ரௌதிகள்.  மறுநாளே  இதைப் பற்றி   தினகர
சாஸ்திரிகளிடம் சொல்லி அர்த்தம்  கேட்க முடிந்தது. 

"சந்திரமௌளி  நீ   பூர்வ ஜென்ம புண்யம் பண்ணவண்டா . மஹானுபவன்.  இதோ பார்  நான் எத்தனை வருஷமா  அவளை ஜபம் பண்ணியும் எனக்கு  அந்த  துர்காம்பிகையோட தரிசனம் கெடைக்கலை....ஒனக்கு சாக்ஷாத் பெரியவாளோட அனுக்ரஹத்தாலே    இந்த  ஆச்சர்யமான  தரிசனம் கிடைச்சிருக்கு.  கனவுல வந்தது அம்பாள்  டா.   அவ வேறே  யாரும் இல்லை. துர்கா தேவியேதான்!" என்றார் அம்பாள் உபாசகர் திநகர் சாஸ்திரி.  பரம சந்தோஷம்  ஸ்ரௌதிகளுக்கு 

 ஒருநாள் சாயங்காலம்  காஞ்சிபுரம் காமாக்ஷி கோவில்    த்வஜஸ்தம்பத்தின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு  வழக்கம்போல் ஸ்ரௌதிகள்   துர்க்கா மந்திரத்தை  ஜபம் பண்ணிக் கொண்டிருந்தார்.  கோவில்  அதிகாரி,  காமகோடி சாஸ்த்ரிகளுக்கு அவரை நன்றாக தெரியும்.

சந்திர மௌளி , உள்ளே வாங்கோ.  இங்கே உட்கார்ந்து பண்றதை,  அம்பாள் சன்னதில வந்து  உட்கார்ந்து
கொண்டு ஜபம் பண்ணுங்கோ " என உள்ளே  அழைத்துக் கொண்டு போனார்.  ஸ்ரௌதிகள்  அங்கே அமர்ந்து  கண்ணை மூடி ஜபித்தார்.  திடீரென்று  யாரோ   பின்னால் வந்து  எதையோ கழுத்தில் கட்டுவது  மாதிரி இருந்தது.     கண்ணைத் திறந்து  பார்த்தால்........

காமாக்ஷி கோவில் அம்பாள் அர்ச்சகர் காமகோடி சாஸ்த்ரிகள்.    தன் கையில் கட்டியிருந்த காப்புக் கயிற்றை கழட்டி, "இன்னிக்கி காப்பு கட்டு பூர்த்தி நாள் ! அம்பாள் பிரசாதம்;  நீ  துர்க்கா ஜபம்  பண்றியே.  உன் கழுத்துல கட்டி விட்டுட்டேன்'' என்கிறார். மிகவும் சந்தோஷத்தோடு  ஸ்ரௌதிகள்  திரும்பினார்.  

மறுநாள்    ஸ்ரௌதிகள்  காமாக்ஷி கோவிலில்  காமகோடி சாஸ்த்ரிகளை  பார்த்து அருகில் செல்கிறார்.   சாஸ்திரிகள் அவரை பார்த்துவிட்டு  

'' சந்த்ரமௌளி  இது என்ன...    எப்படி  உங்க கழுத்திலே ... ''என்று கேட்கிறார்.....

'' நேற்றைக்கு  நீங்கள் தானே    காமாட்சி சன்னதியில் காப்பு கவசம் கட்டினீர்கள் என்று கழுத்தில் காப்பை  காட்டுகிறார் '' காமகோடி சாஸ்திரிகள்  திகைத்தார்.  

 ''மௌளி  என்ன சொல்றேள்  நீங்க...  என்னாலே  இதை  நம்பவே முடியலே...நேத்திக்கு வந்தது யாரு? நானா?  உங்களை   த்வஜ ஸ்தம்பத்து  கிட்டே இருந்து உள்ளே சன்னதிக்கு கூட்டிண்டு போனேனா ? என் கையில இருக்கற காப்பை கழட்டி ஒன் கழுத்துல கட்டி விட்டேனா?  நான்  நேத்திக்கு கோவில்லே இல்லையே.  இல்லவே இல்லையே நேத்திக்கு.   நீங்க சொல்றது நேக்கு ஒண்ணுமே தெரியாதேப்பா!"''

ஸ்ரௌதிகள்  கழுத்தில் காப்பு இருக்கிறதே!   பொய் இல்லையே.  எப்படி  கனவாக இருக்க முடியும்?. காமகோடி திகைத்தார். வியர்த்தது.

'' அப்படீன்னா....  சந்திர மௌளி   நீங்க   சொல்றது மாதிரி நடந்திருந்தால் ......என்னை மாதிரியே   வந்து உங்கள் கழுத்தில் துர்கா காப்பு  கட்டினது  யாரு?"     காமகோடி சாஸ்த்ரிகள்   நடுங்கினார்.. 

நம் குருநாதர்  மஹா   பெரியவா  திருவாக்கிலிருந்து எது வருகிறதோ அதுவே ஸத்யம். அதுவே உபதேஸம். அது கனவோ, நனவோ ஸத்யம் ஸத்யமே!  அம்பாள் ப்ரத்யக்ஷமாக அனுக்கிரஹம் பண்ணி இருக்கிறாள். கொடுத்து  வைத்திருக்கிறீர்கள் நீங்கள்.  பெரியவா ஆசீர்வாதம் பரி  பூர்ணமாக இருக்கு. பரிசுத்த ஆத்மா.  கண்களில் ஆனந்த பாஷ்பம் .  காமகோடி  சாஸ்திரிகள் கரங்களை சிரத்துக்கு மேல் தூக்கி  ''ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர '' என்றார் .
  

sivan jaykay

unread,
Aug 7, 2020, 8:27:51 PM8/7/20
to amrith...@googlegroups.com
விவேக சிந்தாமணி   J K   SIVAN  

                                                                                     இது தான் உலகமடா 

ஒருவர் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தால் அவரை முகமலர்ச்சியோடு வரவேற்று, வீட்டில்  இருக்கும் கஞ்சியோ கூழோ மனமுவந்து அளித்தால் அது அமிர்தமாகும்.     ''ராமநாதன், நீங்கள் இட்லி சாப்பிடுவீர்களோ,  ரெண்டு போறுமா? நிறைய சாப்பிட்டா உடம்பிற்கு ஏதாவது வந்துடப்போறது ''  என்று  உபசரிக்கும் வீடுகளும் உண்டு.  
எங்கள் வீட்டில் நானும் என் மனைவியும்  3க்கு மேல் இட்லி சாப்பிடுவதில்லை.  4 இட்லீயா சாப்பிடறான். வண்டிக்காரனா ??  என்று கேலி செய்வார்கள்... என்று சொல்லிக்கொண்டே 
 ''இன்னொரு இட்டலி சாப்பிடுகிறீர்களா  என்று கேட்டால் ராமநாதன் சாப்பிட்டாலும் நான் ஒரு இட்டலி கூட சாப்பிடமாட்டேன் சார்.... என்பவரும் உண்டு.     இதை தான் விவேகசிந்தாமணி எழுதிய புலவர் அற்புதமாக சொல்கிறார்.   மனமொப்பி  முகம் மலர்ந்து  உபசரித்து  உண்மையாகவே நடிப்பில்லாமல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர் வீட்டில் உப்பு போட மறந்து விட்டாலும் கூழோ கஞ்சியோ சாப்பிட்டால் அது அமிர்தத்தை விட இனிப்பாக  இருக்கும்.      மா பலா வாழை என்று முக்கனியோடு, பால், தயிர், பருப்பு பாயசம் எல்லாமே தட்டில்  ''லொட்டு '' என்று கரண்டி இடி பட   கடு கடு முகத்துடன்  ''போதுமா?'' என்று கேட்டுக் கொண்டே பரிமாறினால் ஏற்கனவே இருந்த பசியோடு இன்னும்  கொலைவெறி பசி சேர்ந்துவிடும். 

''ஒப்புடன் முகம லர்ந்தே உபசரித் துண்மை பேசி
உப்பிலாக் கூழிட்டாலு முண்பதே யமிர் தமாகும்
முப்பழ மொடுபா லன்னம் முகங்கடுத் திடுவராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி யாகுந்தானே. (5)''


வயலில் கதிர் முற்றிய  செந்நெல் நிலம் பாளம் விட்டு  நீருக்கு வாடுகிறது. உயிர் ஊசலாடுகிறது.  மேலே வானில் கருமேகக் கூட்டம் போவதை பார்க்கிறது. அடடா இங்கே மழை பெய்தால்   நமக்கு நீர் கிடைக்குமே  என்று ஏங்குகிறது. ஆனால்   கருமேகமோ  அதை பார்த்தும் கொஞ்சமும் இரக்கமில்லாமல்,  நேரே  மேலே நகர்ந்து தூரத்தில் கடல் மேல் போய் வெகுநேரம்  பெய்யும்.  உப்புதண்ணீரோடு ஜோடி சேர்ந்து மழை நீர்  பயனில்லாமல் போகும்.    நமது உலகத்தில் வாழும் சில தனவந்தர்கள் வாடிய   முகத்தோடு  கெஞ்சும் ஏழைகள்  வறியவர்கள்  வந்து  கேட்டாலும் எந்த பண உதவியும் செய்யாமல்,  ஏற்கனவே பணம் படைத்தவனை அடிவருடி, அல்லது தனது  செலவச்  செருக்கை காட்டிக் கொள்ள பணம் தேவையில்லாதவனுக்கு கொண்டு போய் கொட்டுவார்கள்...என்கிறார் புலவர்..

''கதிர்பெறு செந்நெல் வாடக் கார்குலங் கண்டு சென்று
கொதிதிரைக் கடலிற் பெய்யும் கொள்கைபோல் குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள் வாடினோர் முகத்தைப் பாரார்
நிதிமிகப் படைத்தோர்க் கீவார் நிலையிலார்க் கீயமாட்டார்.'' (6)

அதோ தெரிகிறதே  பெரிய  ஆலமரம் அடேயப்பா, எத்தனை கிளைகள், அவற்றில்  சிவப்பாக  இனிப்பான பழங்கள், பூக்கள், காய்கள்,  இருப்பதால் தான்  பக்ஷிகள் நிறைய  வட்டமிடுகிறது. கீச் கீச் என்று சபதித்து ஆனந்தமாக வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு  பறந்து போகிறது.  வெறும் பட்ட மரமாக காய், கனி பூ இல்லாமலிருந்தால் ஒரு பறவை, குருவி கூட, சீண்டாதே.  அது போல் தான் ஸார்  மக்களும்.  நம்மிடம் ஐவேஜி இருந்தால் சுற்றுவார்கள்.  நாம் ஏகாதசி என்று தெரிந்தால் ஒரு பயல் கிட்டே வரமாட்டான்.'' என்கிறார்  விவேக சிந்தாமணி ஆசிரியர். யாரோ? பெயர் அட்ரஸ் இல்லை. 

''ஆலிலை பூவுங் காயு மினிதரு பழமு முண்டேல்
சாலவே பட்சி யெல்லாந் தன்குடி யென்றே வாழும்
வாலிபர் வந்து தேடி வந்திருப்பர் கோடா கோடி
ஆலிலையாதி போனா லங்குவந் திருப்பா ருண்டோ.'' (7)

 மீதி அப்புறம். மீண்டும் சந்திப்போம். 







sivan jaykay

unread,
Aug 7, 2020, 8:28:06 PM8/7/20
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி 28   J K  SIVAN 
தாகூர் 

                                      28    நீயின்றி  வேறில்லை கண்ணா

 28  Obstinate are the trammels, but my heart aches when I try to break them. 
Freedom is all I want, but to hope for it I feel ashamed
 I am certain that priceless wealth is in thee, and that   thou art my best friend, 
but I have not the heart to sweep away the tinsel that fills my room 
The shroud that covers me is a shroud of dust and death;
I hate it, yet hug it in love. 
My debts are large, my failures great, my shame secret are  heavy;
yet when I come to ask for my good, I quake in fear lest my prayer be granted.

நான் அடிக்கடி சொல்வேன்  இல்லையா ? ரவீந்திரநாத் தாகூரை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கலாம். அவர் ஒரு வேதாந்தி.  தளதளவென்று  கொதிக்கும் எண்ண ஊற்றுக்கள். அதில்  ஒரு ஏக்கம்,ஒரு ஏக்கம், நிராசை, வெறுமை,  எதிர்பார்ப்பு, எல்லாம் தெளிவாக தெரியும்.   அவரது இணையற்ற வளமான கற்பனை அவர் சொல்லும் கருத்துகளை மூடி மறைத்தாலும் உன்னிப்பாக கவனித்தால் அவர் சொல்ல வரும் உயர்ந்த பக்தியும் சரணாகதியும் வெளிப்படும். நேரடியாக சொல்லாமல் இலைமறைவு காய் மறைவாக சொல்பவர்.   சொல்வதை  அழுத்தமாக  வெளியிடுபவர்.  வங்காளி ஆங்கிலம் ரெண்டிலும் புலமை. அது தான் நோபல் பரிசு வாங்கித்தந்தது...

 என்னவென்று சொல்வேன், இதை எப்படி சொல்வேன்? என்னை சுற்றிலும் வலை கெட்டியாக பின்னப் பட்டிருக்கிறது. நான் எப்படி விடுதலை பெறுவேன்?  தப்ப  ஏது வழி?  என் இதயம் வெடித்து விடும் போல் இருக்கிறது. ஒவ்வொருமுறையும் இதிலிருந்து தப்ப நான் முயற்சிக்கும்போது, என் பலஹீனம் தான் மிஞ்சுகிறது.  தப்பவேண்டும்  என்ற  ஆசை.  தப்புவோமா  என்ற  எண்ணம்  என் கையாலாகாத்  தனத்தை தான் காட்டுகிறது.  சே  இப்படியா ஒரு ஜீவன்.... ஆமாம்  நான்  தோல்வியைத் தான்  விடாமல் தழுவுகிறேன். கிருஷ்ணா ஏன் எனக்கு இப்படி ஒரு அவல  நிலை? நான் என்ன கேட்கிறேன்? ஒரு சுதந்திர பறவையாக நானும் ஒரு குருவியை, புறாவை, கிளியை, ஏன் காக்கையைப்  போல் உலவ முடியாதா? அது கிடைக்கும் என்று நம்பிக்கையைக்கூட இழந்து வேதனை யும் அவமானமும் படுகிறேன்! கிருஷ்ணா நீ ப்ரபஞ்சமனைத்திற்கும்  சொந்தக்காரன்.  மஹா பிரபு.  என் உயிர் நண்பன். இருந்தாலும்  என்னைப் பார்.  இதோ என் அறையைப்  பார். எவ்வளவு உபயோக மில்லாத   பளபள  ஜிலுஜிலு அல்ப  வஸ்துக்கள். ஜரிகை, மினுக்கும், துண்டுகள்....இதில் தான்  மயங்குகிறேன்.. அதை வீசி எறிய  மனம் இல்லாமல் என்னை நானே  சிறையில் அடைத்துக் கொள்கிறேன்... எவ்வளவு  அல்ப ஜீவன்  நான். இதெல்லாம் தான்  என்னை  தலையிலிருந்து கால் வரை  போர்த்தி  மூடி கொண்டு   போகப்போகிறதோ.   இந்த புழுதியோடு  தான் என்  வாழ்வு முடியுமோ?   மரணம் இப்படித்தான்  என்னை அணுகப்போகிறதோ?  வெறுப்பு தான் எனக்கு மரணத்தின் மீது. இருந்தும் அப்படித்தான்  என்னால் வா என்று  என் மரணத்தை  அழைத்து  தழுவ முடியும் போல்  இருக்கிறது.  முழுமையற்ற வாழ்க்கை ஒன்றை தான்  வாழ்கிறேன்.
அடடா, வாழ்க்கையில்  நான் நிறைய கணக்கில்லாமல் கடன் பட்டிருக்கிறேன். நான் கண்ட தோல்விகள் மலை அளவு. நான் பட்ட அவமானங்கள் என்னுடன் ரகசியமாக மறையட்டும். அப்பப்பா, அவற்றின் சுமை, கனம், என்னால் தாங்க  முடியவில்லையே. பொறுத்து தான்  ஆகவேண்டும். வேறு வழி?

 இதெல்லாம் புடைசூழ உன்னைத்  தேடுகிறேன் கிருஷ்ணா, உன்னை வேண்டுகிறேன். எனக்கு நல்லதே செய். அமைதி கொடு. ஒருவேளை நீ எனக்கு அடைக்கலம் கொடுக்க மாட்டாயோ, என் பிரார்த்தனையை செவி மடுக்க மாட்டாயோ என்று எண்ணும்போதே என் உடல் பயத்தில் நடுநடுங்குகிறதே. உண்மையாகச்  சொல்  கிருஷ்ணா   நீ  என்னை கைவிடமாட்டாயே?

 

sivan jaykay

unread,
Aug 7, 2020, 8:28:06 PM8/7/20
to amrith...@googlegroups.com
                             
                                                     DEFEAT  THE DEFEATIST TENDENCY  -  J K  SIVAN  

கீதையில்   11 வது  அத்யாயத்தில்  கண்ணன்  அர்ஜுனனுக்கு தனது  விஸ்வரூப தர்சனம் காட்டுகிறான். 

''அர்ஜுனா,  உன்னால்  எதுவுமில்லை.  சர்வமும்  நானே, எல்லாமே  என்னில்  அடக்கம், ஆகவே  பயத்தை விடு,  தோல்வி எண்ணம் மனதில் வேண்டாம்.   சந்தேகம், விரக்தி எதாலும் துவண்டு  விழாமல்   நீ  ஒரு கருவி  உன்னை நடத்தி செல்பவன் நான் என்று புரிந்து  செயல்படு.   நானே  எல்லாம், என்னால் தான்  எதுவும்  என்று உணர்ந்து  எழுந்திரு, உன் கடமையை ச் செய்,   புதிய தெம்போடு   என்மேல் பாரத்தை போட்டு  உன் கடமையைச்செய்''    என்று தட்டி எழுப்புகிறான்.

இதை ஒரு தலைசிறந்த வேதாந்தி   ஒருவருக்கு  ஞாபகப்படுத்தினார்.  அந்த சம்பவம் இது:  

" என் வாழ்க்கையில் 1958ல் நடந்த ஒரு நிகழ்ச்சி இது.  ஒரு முக்கியமான திருப்பம் என் வாழ்வில் அது. விவரமாக சொல்கிறேன்.

என் சிறு வயதில் எனக்கு  வானில் பறக்க வேண்டும் என்று தீராத ஆசை. கனவு.   எனது பள்ளிப்பருவத்தில்  ஒரு அருமையான ஆசிரியர் அமைந்தது என் பாக்யம். சிவசுப்பிரமணிய  ஐயர் . 

''டேய் , உனக்கு  நான் வழி சொல்கிறேன் அப்படி செய்.   விண்  வெளி  பயணம் பற்றிய விஞ்ஞானம் படி.  வான சாஸ்திரம்  தெரிந்து கொள்''   என்றார் .  நான்  விண்வெளி பொறித்துறை கல்லூரி ஒன்றில் சேர்ந்தேன். 1957ல்   ஆகாய ஊர்தி  பொறித்துறையில் பட்டம் பெற்றேன்.   ஆகாய விமான ஓட்டுநராக பனி புரிய என் ஆசை அல்லவா ?   அது தானே என் கனவு.    விமானப்படை யில் சேர  விண்ணப்பித்தேன்.  என் அதிர்ஷ்டம் பாருங்கள்.   விமானப்படை  பைலட் தேர்வுக்கு   இன்டெர்வியூ வுக்கு  என்னை  அழைத்தார்கள்.   வடக்கே  டேராடூன் போகவேண்டும். நான் வாழ்ந்தது தென்கோடி தீவில்.   வீட்டிலிருந்து புறப்பட்டு சென்னை சென்று, அங்கிருந்து டெல்லிக்கு சென்று, அங்கிருந்து டேராடூன் போகவேண்டும்.  போனேன்.  ஒருவகையில் இந்தியாவில் நீண்ட பிரயாணம் அது.   இந்தியாவின்  பல இடங்கள், மக்கள்  எல்லாம் அறிந்துகொள்ள  ஒரு சந்தர்ப்பம் அந்த நீண்ட பயணம்.  எவ்வளவு வளமுள்ள, அற்புதமான செழுமை மிக்க நாடு நமது என்று புரிய வைத்தது.   

டேராடூனில்  நாலு நாள் பிழிந்து எடுத்தார்கள்.  ஓட்டம், உடல்பயிற்சி,  தனித்தனியாக, கூட்டமாக  தேர்வு கூட்டம்,  நேர்   காணல் ,   25 பேர் என்னைப்போல  விண்ணப்பித்தவர்களில்   கடைசியில்  ஒன்பது  பேரை மட்டும் தேர்வு   செய்தார்கள்.  நாலு நாள்  கடின தேர்வு பரிக்ஷைகளில்  ஒருவாறு  நான் ஒன்பதாவதாக தேர்வு செய்யப்பட்டேன்.   அவர்களுக்கு  எட்டு பேர் மட்டும் தான் தேவையாக இருந்தது.  

''தம்பி நீ வருத்தப்படாதே .  மருத்துவ பரிசோதனை கடினமாக  நடக்கும்  எட்டு பேரில் எவனாவது ஒன்றிரண்டு பேர்  தேர்வு செய்யப்படவில்லையென்றால் உனக்கு  சந்தர்ப்பம் கிடைக்கும். பொறு. என்கிறார்கள்.   கடவுள் சித்தம்  அப்படி இருக்கும்போது நான் என்ன செய்ய.   அந்த எட்டு  பேரும்  மருத்துவ சோதனையிலும் தேர்வு பெற்றுவிட்டார்கள். ஆகவே எனக்கு இப்போது இடம் இல்லை. 

மனம் ஒடிந்து விட்டது.   டெல்லிக்கு ஒரு பஸ்ஸில்  ஏறி  போகலாம்  என  நினைத்தேன்.  சில  பஸ்கள்   ரிஷிகேஷ்  ஹரித்துவார் வழியாக சென்றது.  அந்த மார்கமாக செல்வோம் என்று ஏறி உட்கார்ந்தேன். ஆஹா  என்ன அழகு கொஞ்சும்  இடம்.   விடிகாலை  பாஸ்  டேராடூனிலிருந்து  கிளம்பியது.  ரிஷி கேஷ் அடைந்தபோது  எதிரே  பளபளவென்று  கங்கை நதி.   பளிங்கு மாதிரி தண்ணீர்.  ஹிமயத்திலிருந்து பனி உருகி வெள்ளி மாதிரி ஓடிவருகிறது.    இதில் ஸ்னானம் செய்யவேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது.  நவம்பர் மாதம் குளிர்.   இருந்தாலும்  இந்த  அரிய  சந்தர்ப்பம் மறுபடியும் எப்போது கிடைக்கப்போகிறது?   ஜில்லென்று நீரில் ஆனந்தமாக குளித்தேன்.   பையில் வேஷ்டி இருந்தது.  அணிந்து கொண்டு எதிரே பார்த்தேன். அக்கரையில்  அழகான ஒரு கட்டிடம்.  ஆனந்தமாக இருந்தது. பெயரும்  ஆனந்த குடீர்.   அது சுவாமி  சிவானந்தரின் ஆஸ்ரமம். உள்ளே போனேன்.   

சுவாமி சிவானந்தா ஒரு மேடையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.  அவர் எதிரியே மௌனமாக  நூற்றுக் கணக்கான பக்தர்கள்  அமைதியாக அவரது சத்சங்க  பிரசங்கம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.   மெதுவாக நானும் கடைசி வரிசையில் அமர்ந்தேன். 

பகவத் கீதை பிரசங்கம்.  பதினொன்றாவது அத்தியாயம்.  விஸ்வரூப தர்சனம்  பற்றிய அற்புத ஸ்லோகங்களை விளக்கிக்கொண்டிருந்தார்.   எப்போதும்  பிரசங்கத்தை முடிவில்  எதிரே பக்தர்களில் யாரவது ரெண்டு பேரை  குறிப்பிட்டு அழைத்து  விசாரிப்பார்.  

அன்று பார்த்து  அவர் அழைத்த ரெண்டு பேரில் நான் ஒருவன்.  எதற்காக என்னை  அழைத்தார்?.  அவருடைய அறைக்கு  அழைத்து சென்றார். 

'' நீ  தமிழ்  நாட்டு  பையனா?''
''ஆமாம்  ஐயா ''
''உன் பெயர் என்ன ?'' என்று கேட்டதும் என் பெயரை சொன்னேன். 
''அது சரி, ஏன்  நீ சோகமாக காண்கிறாய்?
எனக்கு தூக்கி வாரி போட்டது.  எவ்வளவு கூர்மையான  பார்வை கொண்ட ஞானி.  எப்படி நான் சோகமாக இருக்கிறேன் என்று  எதிரே இருந்த நூற்றுக்கணக்கான  பேரில்  முன் பின் தெரியாத என்னிடம் கவனித்திருக்கிறார். “ 
''ஸ்வாமிஜி,   உங்களிடம் எல்லாவற்றையும் சொல்கிறேன்.  ஆகாய விமானப்படையில் சேர  இன்டெர்வியூ வுக்கு டேராடூன் வந்தேன். கைக்கெட்டிய வேலை  கை நழுவி விட்டது என்று விவரம் சொன்னேன்.  விமானியாகும்  என் ஆசை நிராசையாக போய் விட்டது. நான்  தேர்வு செய்யப்படவில்லை'' 
அந்த மஹான் என்னை  ஏற  இறங்க பார்த்தார்.  அந்த மாமனிதர் முன் நான் எவ்வளவு சிறிய கொசு.  அருகில் இருந்த ஒரு    கீதை புத்தகத்தை எடுத்து  11 வது அத்தியாயத்தை  எடுத்து கிருஷ்ணன்  அர்ஜுனனுக்கு   ஆண்ட சராசரமும் தானே என்று காட்டி  ஊக்குவித்ததை எடுத்து சொன்னார்.   தோல்வி மனப்பான்மையை  தோற்க ச்செய்'' என்று அழகாக  ஆங்கிலத்தில்  DEFEAT  THE DEFEATIST  TENDENCY '' என்று சொல்லி இதை மூன்று தரம் சொல்லு'' என்றார்.  சொன்னேன்.  அதன் உள்ளர்த்தம் புரிந்தது.  மனம் ஆனந்தமாகியது. சிரித்தேன். 
எனக்கு  20 புத்தகங்கள் பரிசாக கொடுத்தார்.  தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதியவை. 

நண்பர்களே, இது என்னால் மறக்கமுடியாத  ஒரு நிகழ்ச்சி.   சூரிய மண்டலத்தில்  சூரியன்  71 முறை  சுற்றி வந்துவிட்டான்.  வருஷத்துக்கு ஒரு சுற்று. என் வாழ்வில் இப்போது 72வது சுற்று நடக்கிறது.  71வயது எனக்கு முடிந்து விட்டது. 

ஸ்ரீ சிவானந்த ஸரஸ்வதி  உபதேசித்த அந்த மந்திரம் என்னுள் ஆழ பதிந்து விட்டது.   எப்போதும்  என் கஷ்டங்களில், முயற்சியில் தோல்வி அடைந்தபோது அது எனக்கு புத்துணர்ச்சி புது தெம்பு அளிக்கிறது. n அது என் அனுபவம். 

அடடே,  நான்  '' சுவாமி சிவானந்தா   உன் பெயர் என்ன என்று கேட்டபோது  அந்த மனிதர்   சொன்ன பெயரை  எழுதாமல் விட்டு விட்டேனே.  அவர்  ஸ்வாமிகளிடம் சொன்னது 

 என் பெயர்   APJ  அப்துல் கலாம்.  ஓ  இப்போது தெரிகிறதா  ராமேஸ்வரம் தீவில் ஒரு  எளிய   முஸ்லீம்   குடும்பத்தில் அவதரித்து படித்து முன்னேறி  இந்தியாவின் சிறந்த விண்வெளி விஞ்ஞானி ஆகி, பாரதம் பெருமைப்படும் ஜனாதிபதியாக மக்கள் மனதில் என்றும் வாழ்பவர்.  ஹிந்துக்கள் முஸ்லிம்களை வெறுப்பவர்களா?


 


 

 



ReplyReply allForward

sivan jaykay

unread,
Aug 7, 2020, 8:28:06 PM8/7/20
to amrith...@googlegroups.com
கீதாஞ்சலி     27           J K  SIVAN                               
தாகூர்  


                                                              27.  வழிமேல்  விழி வைத்தேன் கண்ணா


27  Light, oh where is the light? Kindle it with the burning fire of desire!
There is the lamp but never a flicker of a flame---is such thy fate, my heart? 
Ah, death were better by far for thee!
Misery knocks at thy door, and her message is that thy lord is wakeful, 
And he calls thee to the love-tryst through the darkness of night.
The sky is overcast with clouds and the rain is ceaseless.
I know not what this is that stirs in me---I know not its meaning.
A moment's flash of lightning drags down a deeper gloom on my sight
And my heart gropes for the path to where the music of the night calls me.
Light, oh where is the light! Kindle it with the burning fire of desire! 
It thunders and the wind rushes screaming through the void. 
The night is black as a black stone. 
Let not the hours pass by in the dark. Kindle the lamp of love with thy life.

 ஓ.   அந்த  தீபம்  எங்கே காணோம்?  அதை தேடி பிடித்து அதில் என் எண்ணங்களில்  பெருகி  சுட்டெரிக்கும்  ஆசை பாசங்களால்  அது சுடர் விட்டு    எரியட்டும்.   எரியாத விளக்கு இருந்தென்ன லாபம்?   இறந்த மனிதனுக்கு சமானம்.    என்  இதயமே,   இது தானா உன் கதி,   இந்த எரியாத விளக்கா  உன் நிலை ? நீயும் ஒரு உதவாக்கரையா?  ஓஹோ  ஒளியில்லா விளக்கே, தீபமே,  அப்படியானால் மரணம் உன்னைவிட பலமடங்கு  சிறந்தது.

துன்பங்கள் ஒன்று  மாற்றி  ஒன்றாக என் மன வாசல் கதவை டபடப என்று இடிக்கிறது. ஓஹோ  துன்பம் துயரம் இருந்தால் தான் என் கிருஷ்ணன்  இருப்பது தெரியுமா?  துன்பமும் துயரமும் தான் அவனை  எழுப்பி அழைக்க  பாடும்  சுப்ரபாதமா அழைப்பிதழா? ஓஹோ  அதனால்   தான் கிருஷ்ணனின் அத்தை குந்தி ''கிருஷ்ணா  எனக்கு மேலும் மேலும் துன்பத்தையோ கொடு, அப்போது தான் நான் உன்னை நினைப்பேன்'' என்றாளோ?   அவன் அழைப்போரைக்  காக்க  விழிப்போடு காத்துக் கொண்டிருக்
கிறானா?

''நீ ஏன்  கலங்குகிறாய்  வா என்னிடம் என்கிறானா? அதோ அங்கிருக்கிறான் வா என்று  துன்பமே  துயரமே  நீ தான் என்னை அழைக்கிறாயா? உன் மூலம் தான் நான் அவனை பெறுவேனா?  இரவே, இருளே,    நீ   இனி நீண்டு கொண்டே இரு.  அவனுடன் நான் களிக்கும்,  கழிக்கும்,  நேரம் எல்லை இல்லாமல்  இருளாகவே   இருக்கட்டுமே.

வானம் எப்போதும்போல் இருண்டு கறுத்து   மேகத்தை கரியாக பூசிக்கொண்டிருக்கிறது.   ஒரு கரிய பெரிய  ராக்ஷஸன் தான் சந்தேகமே இல்லை.  கையை தலைக்கு மேல் நீட்டினால் மேகத்தை தொடலாம் போல் இருக்கிறதே.   விடாது பெய்த மழை போதாது என்று இன்னும்  சூல் கொண்ட மேகமா?  அடாது பெய்யும் மழை விடாதோ ? என்னை ஏதோ வேகமாக அவனிடம் காந்தம் போல்  கவர்ந்து செல்கிறதே.  என்னை அவன் பால்
 நாட  செலுத்துகிறதே அது என்ன? அதன் பெயர், அர்த்தம் என்ன? ஒன்றும் தெரியாதபோதே  இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறதே.! 

காரிருளில்  நான்  செல்கிறேன்.  இருட்டில் தடுமாறி செல்லக்கூடாது என்பதற்காக ஒரு ''டார்ச்''  அடித்திருக் கிறான் கிருஷ்ணன். பளிச் என்று கண்ணைப் பறிக்கும் மின்னல், அந்த இருட்டில் அவனை நோக்கி செல்லும் பாதையை  வெள்ளிக் கம்பியாக  காட்டி விட்டது.  வெளிச்சம் ஒரு கணம் தான்  அந்த கும்பிருட்டை  நீக்கி மீண்டும்  சூழ்ச்சி செய்து விட்டதே.   அந்த  போருக்கான  மனதில் பதிந்த  திசையில்  அவன் குழல் ஓசை  வந்த திக்கை நோக்கி செல்கிறேன்.   குழலா யாழா, அது  எதுவாயினும்  அந்த சுநாத  இனிமை காற்றில்   இருள்   தந்த ஒலியாக  அதை நோக்கி  என் கால்கள்  நகர்கிறது.  என் கால்களை விட என் இதயம் அவனை அடைய வேகமாக துடிக்கிறதே.

 ஓ.   அந்த  தீபம்  எங்கே காணோம்?  அதை தேடி பிடித்து அதில் என் எண்ணங்களில்  பெருகி  சுட்டெரிக்கும்  ஆசை பாசங்களால்   அந்த எரியாத விளக்கு  சுடர் விட்டு    எரியட்டும்  
அந்த எரியாத விளக்கை  என் ஆசைகளால், அவன் பால்  உள்ள  ஆர்வத்தால்  அதை ஒளிபெற செய்கிறேன். 

காது செவிடுபட   டமால்  டுபீல் டபீல்  என   ஒரு பெரிய இடி சப்தம்.  இடிக்கட்டும் இடிக்கட்டும் நன்றாக இடிக்கட்டும். அதை இன்னும் ஒலிக்கச்  செய்ய  இந்த பலமான  காற்றும் ஒத்துழைக்கட்டும். கும்மிருட்டில்  இரண்டும்  நல்ல ஜோடி..  இரவு ஏற்கனே இருட்டு.... தொட்டால் ஒட்டிக் கொள்ளும்  அளவு  அட்டை கருப்பான இருட்டு.  கரும் பாறை சூழ்ந்தது போல்   எங்கும் இருள்.  

போதும் கிருஷ்ணா, இந்த இரவின் இருள். இப்படி நேரம்  இருண்டு  நீண்டு போக வேண்டாம். வாழ்வில் உன் அருளால் என் அன்பு தீபம் எரிந்து வழி காட்டட்டும். உன்னை அடைய அது உதவட்டும். ஆம் கிருஷ்ணா. உன்னை அடைய இருளும், இடியும், துன்பமும் துயரமுமாகி என்னை தாக்கட்டுமே. உன் அருள் பெற இந்த இருள்  தான்  வழி என்றால் அது வேண்டும் எனக்கு.

sivan jaykay

unread,
Aug 7, 2020, 8:28:06 PM8/7/20
to amrith...@googlegroups.com
                                                                                    நீ உன் கடமையைச் செய்.           J K  SIVAN                           

சென்னை நகரத்திலும் கொஞ்சம்  அமைதியான  ஒரு  சிறு  குடியிருப்பு  கண்ணனூர்,  ஏதோ, நங்கநல்லூர் பக்கத்தில் என்று வைத்துக் கொள்வோம்.  எத்தனையோ கோயில்கள் அருகே நங்கநல்லூரில் இருந்தாலும் இந்த சின்ன கிராமத்தில்  ஒரு  புராதன அழகான  அமைதியான  கிருஷ்ணன்  கோவில்.   ராமானுஜாச்சாரி வெகுநாளாக  கிருஷ்ணனுக்கு  பட்டாச்சாரியார்.  இந்த  உலகில்  அவரும்  அந்த கோயிலின் கிருஷ்ணனும்  தான்  இணைபிரியா நண்பர்கள்.   

வெகுநாளாக  ஒரு கேள்வி  ராமானுஜசாரி  மனதில்.  ஏன்  கிருஷ்ணன் யாருடனும் பேசுவதில்லை. எது சொன்னாலும், செய்தாலும் கிருஷ்ணன்  வெறும் சிலையாகவே  சிரித்து கொண்டே  பார்த்து கொண்டிருக் கிறானே இது ஏன்?    மண்டைக்குள்  கேள்வி குடைந்தது. பக்தர்கள்  நாள்தோறும் வந்து  எத்தனையோ குறைகள் சொல்லி, நன்றி சொல்லி,  சிரித்து  அழுது,  கோபித்து, வருந்தி   என்னென்னவோ உணர்சிகளை  கிருஷ்ணனிடம்  பரிமாறிக்  கொள்கிறார்கள். அனைத்தையும் சிரித்துகொண்டே, நாள் முழுதும் நின்று   கொண்டே, களைப்பை காட்டாமல்  இந்த கிருஷ்ணன்  கேட்டுக் கொண்டு   பொறுமையாக வாய் திறக்காமல் வெறுமே  பார்த்துக்  கொண்டே உணர்ச்சி காட்டாமல்  இருக்கிறாரே.  எவ்வளவு ஆயாசமாக இருக்கும்? நாற்பது வருஷங்களாக  நான்  சற்று நேரம்  நின்றுகொண்டு அவனுக்கு சேவை செய்யும்போதே  எனக்கு கால் வலிக்கிறழ்து  என் அப்பா காலத்திலிருந்து எனக்கு தெரிந்து இவன் நின்றுகொண்டே இருக்கிறானே அதற்கு முன்னால் எத்தனை வருஷமோ?
 எனவே  பட்டர்.  ஒருநாள்  வாய் திறந்து மனதில் உள்ளதை கேட்டுவிட்டார்.

"கிருஷ்ணா!, :இவ்வளவு பொறுமையோடு கால் கடுக்க தினமும் நிற்கிறாயே, உனக்கு கொஞ்சமாவது  ஒய்வு வேண்டாமா? "
"ஆமாம் அப்பா,  ஒய்வு தேவைதான்,  என்ன செய்வது.?"  
நான் வேண்டுமானால்  உனக்காக  ஒருநாள்  நிற்கட்டுமா?"
"ரொம்ப  சந்தோஷம், அப்படியே  ஆகட்டும்.    நான்  உன்னை  என் போல் சிலையாக்குகிறேன்,  ஒரு  கண்டிஷன்.   நான் உன்னைப்போல்  இங்கு வரும் பக்தர்களுக்கு சேவை செயகிறேன். திருப்தியா.
'' ரொம்ப சரி கிருஷ்ணா''  உனக்கும் ஒரு சேஞ்ச்  change  வேண்டாமா?
''பட்டரே , ஒரு  கண்டிஷன்.   எந்த காரணம் கொண்டும்  நீர்   உமது  உணர்சிகளை  காட்டவோ,  பேசவோ,  எந்த பக்தர் விஷயத்திலும்  தலையிடவோ  கூடாது.   என்னைப்போல்    புன்னகையோடு அனைவருக்கும்  பாரபட்சமின்றி  அருளும் ஆசியும்,  தர்சனமும்  வழங்கவேண்டும்.  செய்வீரா, முடியுமா உம்மால் ?"
" பேசாமல் நிற்பது ஒன்றும் கஷ்டம் இல்லை கிருஷ்ணா. அவ்வாறே செய்கிறேன்  கிருஷ்ணா. பாவம் , ஒருநாளாவது   நீ  சற்று  உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொள் ".


மறுநாள் பட்டர்  கிருஷ்ணன்  சிலையாக நின்றார், கிருஷ்ணன் பட்டாச்சாரியரானான். 

 முதலில்  அன்று  கோவிந்த ராவ், கவுன்சிலர்,  பணக்கார பில்டிங் கன்டிராக்டர்  வந்தார். கிருஷ்ணனை  வேண்டிக்கொண்டு, பெரும்  தொகையை  நன்கொடையாக  கோயிலுக்கும் வழங்கினார்.  போகும்போது தன்னுடைய  பணம் நிறைந்த தோல்  பையை  ஞாபக மறதியாக  கோவிலில்  விட்டு விட்டு சென்று விட்டார்.      கடவுளாக நின்ற  பட்டருக்கோ  ராவுக்கு அதை ஞாபகப்படுத்தவேண்டும் என்று தோன்றியது.    "  கவுன்சிலர்,உங்கள்  பணப்பை  இங்கே விட்டுட்டீளே , ஜாக்கிரதையாக எடுத்துக்  கொண்டு போங்கள் "  என்று சொல்ல  நா எழும்பியது.  ஆனால் கிருஷ்ணன் வாயே  திறக்க கூடாது  என  கட்டளையிட்டது  நினைவுக்கு வர,   பேசாமல் பார்த்து கொண்டே  நின்றார்.  

சிறிது நேரம் கழிந்து  கிராம கணக்கு   பிள்ளை கண்ணப்பன்-- நேர்மையானவர் . அப்படி இருப்பது  அபூர்வம்.  ரொம்ப  ஏழை.  கிருஷ்ணன்  முன்னால் நின்று தன்னிடமிருந்த  ஒரு  ரூபாயை  மனமார  காணிக்கையாக  செலுத்தி விட்டு பிரார்த்தனை செய்தான்.

"கிருஷ்ணா  நான் பல வருஷங்களாக உன் கோவில் வரும் பக்தன்.  என் குடும்பம்  நிர்கதியாய்  நிற்கிறது. பெண்ணுக்கு  மணம் செய்ய வழியில்லை  கடன் தொல்லை வாட்டுகிறது.  எவ்வளவு  உழைத்தாலும்  ஊதியம்  போதவில்லை. நீயே கதி. பிள்ளைவீட்டுக்காரர்கள் வந்து  நிறைய  சீர் செய்ய  சொல்கிறார்கள், பணத்துக்கு எங்கே போவேன். நீ தான் வழிகாட்டவேண்டும். ''


கண்ணப்பன்  வேண்டிக்கொண்டு கண்ணை திறந்தான்.  என்ன ஆச்சர்யம்.  விண்ணென்று பணம் நிரம்பி  ஒரு பை அவன்  எதிரில்  தென்பட்டது  “கடவுளே,  இதுவும்  உன் மாயா லீலை தானோ?  இது தான் உன் கட்டளை  என்றால்  அவ்வாறே ஆகட்டும். மகிழ்ச்சியோடும்  நன்றியோடும்  கண்ணப்பன்  பணப்பையை எடுத்து சென்றுவிட்டான்.  பட்டருக்கு படு கோபம் வந்தது. 

 "ஏலே,  அது  அந்த  கவுன்சிலர்  மறதியா விட்டு விட்டுப் போனதையா.  அங்கேயே  வைத்து விட்டு போ!!"  என  கத்தவேண்டும்போல தோன்றியது  ஆனால்  கிருஷ்ணன் கட்டளை  இட்டது நினைவுக்கு வர  வாய் கப் சிப்.  கண்ணப்பன் பணப்பையோடு மறைந்தான்.

கொஞ்ச நேரத்தில் ஒரு  துபாய் கப்பலில் மாலுமியான மணவாளன் வந்தான்.   அந்த ஊரில் பிறந்து வெளிநாட்டில் வேலை  செய்பவன்.   சிறுவயது முதல்  அந்த கோயில் கிருஷ்ணன்  குடும்ப தெய்வம். 

 "கடவுளே,  இன்று இரவு  என் கப்பலில்  வெளிநாடு சென்று  மீண்டும்  குடும்பத்தை பார்க்க வருவதற்கு   ஒரு வருடம்  ஆகுமே,  நீ தான்  என்னையும்,  என் கப்பலையும்,  அனைத்து சிப்பந்திகளையும்,  என் குடும்பத்தையும் காத்தருள வேண்டும்"   என வேண்டி நின்று கொண்டிருந்த போது அங்கு  திடீரென்று  பணம் கோட்டை விட்ட  கவுன்சிலர்  கூட ஒரு  போலீஸ்காரனுடன் வந்துவிட்டார்.  கவுன்சிலர்  முகமெல்ல்லாம்  வியர்க்க பதட்டத்துடன்   வேக வேகமாக  சந்நிதியருகில்  வந்து தன்  பணப்பையை  தேடினான்.   கிருஷ்ணன் முன்னால்  நின்று கொண்டிருந்த கப்பல்  மாலுமி மணவாளனை கண்டதும்  அவன்  சந்தேகம்  வலுத்தது.  போலீஸ் காரனிடம்

"இதோ  நிற்கிறானே  இவன் தான்  என்  பணத்தை அபேஸ் பண்ணியிருக்கிறான். இவனை கைது செய்து
 உதை  திங்க வைத்தால்  உண்மையை  கக்கி விடுவான்" என்று முறையிட்டான்.

“சார்  நீங்க  யார் என்றே தெரியாது.   நீங்கள் சொல்வது புரியவில்லை.   நான்  எந்த  பணப்பையையும்  பார்க்க வில்லையே"   என்று மாலுமி  கதற,  அவனை  போலீஸ்காரன்  அழைத்து  செல்லும்  நேரத்தில்,  கடவுளாக  நின்று காட்சியளிக்கும்  ராமானுஜாச்சாரிக்கு   கோபம் தாங்கமுடியாமல் வந்து விட்டது.  கிருஷ்ணன் இட்ட கட்டளை, கண்டிஷன் மறந்து போயிற்று.

"ஐயா  போலீஸ்காரரே,   இது அக்ரமம்  இந்த மனிதர்  திருடனில்லை.  பணப் பையை  அந்த கிழட்டு கணக்க பிள்ளை கண்ணப்பன் தான்   இங்கே  வந்தபோது  எடுத்து செனறதை   நான்  பார்த்தேன். இவரை
விட்டு விடுங்கள்"    என  திருவாய்  மலர்ந்தார்."  

கவுன்சிலர், பட்டாச்சாரி யாக நின்ற கிருஷ்ணன், மாலுமி, போலீஸ்காரன் அனைவரும் திடுக்கிட்டனர்.  ''சாமி பேசுது  '' என்று போலீஸ் காரன்  பயந்து நடுங்கினான்.    மாலுமி மணவாளனோ ஆனந்தத்தில் மிதந்தான். "கலியுகத்தில்  கண் கண்ட  தெய்வமே ,  நீயே  பேசி   உண்மையை  உணர்த்தி என்னை காப்பாற்றினாய் "  என  வணங்கினான். கவுன்சிலருக்கு  ஆச்சர்யம்.சந்தோஷம்.  ஏழை பக்தன் கண்ணப்பன்  எங்குள்ளான் என்று தேடி  அவனிடத்திலிருந்து பணத்தைப்  பெற  போலீஸ்காரன்  உதவியுடன்  ஓடினார் . 

 கடவுளே  பேசிய  அதிர்ச்சியில் ஓட்டமாய்  ஓடி  போலீஸ்காரர்  பொன்னுசாமி  கண்ணப்பனை தேடி  ஓட்டமாய்  ஓடி னார்.   அதுவரை இன்றிரவு  மாலுமியை விடுவதில்லை என்று கவுன்சிலரும் அவனை பிடித்து வைத்துக்கொண்டார்கள்  

ராமானுஜாச்சாரிக்கு தான் ஒரு  நீதிமானாக நடந்ததில்  தலை கால்  புரியாத  சந்தோஷம்.  அன்றிரவு கிருஷ்ணன்  பட்டர் முன் தோன்றினான் 

"நண்பா!  போதும்  உன் உதவி.  என்  வேலையை  நானே  பார்க்கிறேன்.  நீ உன் வேலையை மட்டும்  இனி  பார் என அதிருப்தியுடன்சொன்னான். 

"ஏன்  நான்  என்ன தப்பு செய்தேன்??

“ஒண்ணா  ரெண்டா, கேள் சொல்கிறேன்.  கவுன்சிலர்  கொடுத்த  நன்கொடையும்,  அவன்  பையில் இருந்த பணமும் அராஜக  வழியில்  பதவியால் அவன் அபகரித்தது.   கோவிலுக்கு நன்கொடை என்கிற  நல்ல  காரியத்தில்  அப்பணம் ஈடுபடும்போது  பாவத்தின்  சம்பளமாக,  விலையாக, கொஞ்சம்  பணம்  ஒரு உண்மையான  ஏழைக்கு  உதவினால் அந்த  புண்யமாவது  பணக்காரனின்  பாவத்தை  குறைக்கட்டுமே  என கான்ட்ராக்டரை  பணப்பையை மறக்கவைத்து, கண்ணப்பனிடம்  அதை  சேரச்  செய்தேன்.   உன்னாலான உதவி  அதைக்  கெடுத்தாய்.

மாலுமியை  போலீஸ் காரன் சிறை செய்து கப்பலில்  வெளிநாடு  செல்லாமல்  செய்வதற்காக  நான்  போட்ட பிளானை  நீ ரத்து செய்தாய்.   இன்றிரவு  கடலில்  பிரயாணம்  செய்யும்  அவன் கப்பல் சுனாமியில்  மூழ்கப்  போகிறது.  அவனையும்,  கப்பலில்  இருக்கும்  மற்றவரையும், மாலுமியின்   குடும்பத்தையும்  காப்பாற்ற  நான்  செய்ய நினைத்ததை  நீ மாற்றி அமைத்தாய்.

 "ஒரு நாளில்  இவ்வளவு  செய்து விட்டாயே.  பேசாமல்  பார்த்து கொண்டிருந்தால்  இது நடந்திருக்குமா?  நான் பேசாமல் ஏன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு  சைலண்டாக எல்லாம் செய்கிறேன் என்று உனக்கு புரிகிறதா? என  கிருஷ்ணன் கேட்டதும்  பட்டருக்கு வெலவெலத்தது.

இறைவனின் ஒவ்வொரு சங்கல்பமும் செயலும், அருளும்,  நம்  சிற்றறிவுக்கு எட்டாதவை  அல்லவா?

sivan jaykay

unread,
Aug 7, 2020, 8:28:06 PM8/7/20
to amrith...@googlegroups.com
                                                                  வெள்ளி வட்டிலும் விப்ர நாராயணாவும்   J K  SIVAN 

நான்  பெற்றோருடன்   சூளைமேட்டில்  கிருஷ்ணாபுரம் எனும் தெருவில் கடைசியில் பஜனை கோவில் தெருவில்  வசித்தபோது எதிர் வீட்டில்  அம்புலிமாமா பத்திரிகை  அலுவலகத்தில் வேலைபார்த்த  க்ரிஷ்ணய்யா எனும் தெலுங்கர் வசித்தார்.   விஜயா   வாஹினி  ஸ்டுடியோ  சம்பந்தப்பட்ட  அலுவலகம் என்பதால் அவருக்கு  எல்லா படங்களும்  பார்ப்பதற்கு இலவச  பாஸ் கிடைக்கும்.  அவர் வீட்டில் முக்கியமாக தெலுங்கு படங்கள் தான் பார்ப்பார்கள். அவர் மகன் நாகராஜன் எங்கள் நண்பன்.   ஆகவே  வேறு யாரும் கிடைக்காததால் என்னை ஒருநாள்  தி.நகர்  பாண்டிபஜாரில் இருந்த ராஜகுமாரி தியேட்டருக்கு அழைத்து சென்றான்.    எனக்கு எந்த படமாக இருந்தாலும் பார்க்க  சந்தர்ப்பம் கிடையாது  என்பதால் 
 பெரு மகிழ்ச்சி. போகவர  நடைதான்.  அப்போது  தான் முதல் முறையாக நாகராஜனோடு  நான்  பார்த்த முதல் தெலுங்கு படம்  ''விப்ரநாராயணா ''  அந்த படத்தில் நாகேஸ்வர ராவ் தான் விப்ரநாராயணா.  பாஷை புரியாவிட்டாலும் என் இளம்வயதில் என் மனதில் குடிகொண்டவர்  விப்ரநாராயணா எனும் தொண்டரடிப் பொடி ஆழ்வார்.  பானுமதி  தேவதேவி. இது 1954ல்.      இப்போது பின்னோக்கி பல  நூற்றாண்டுகள்  சென்றுவிட்டோம்.  

'' காவிரி சூழ் சோழநாடு சோறுடைத்து''  என்பதால் எங்கும் வளமை, சுபிட்சமாய் இருந்ததோடு தெய்வீகப் பிறவிகளும்  அவதரிக்க  காரணமாக இருந்தது தான் ஆச்சர்யம். அந்த சோழநாட்டில் ஒரு கிராமம் திரு மண்டங்குடி. நாலு வேதங்களும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்த ஊர். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று சொல்வார்களே, அந்த குடுமி சோழிய பிராமணர் வகுப்புக்கு 'விப்ரா' என்றும் ஒரு பெயர் உண்டு. அவர்கள் வைணவர்கள். நாராயணனையே தொழுது ஜீவிப்பவர்கள்.

இந்த வகுப்பு குடும்பம் ஒன்றில் வேத விசாரதர் என்று ஒரு பிராமணர். அவர் நாள் தோறும் நிறைய புஷ்பங்களை சேகரித்து மாலை கட்டி எம்பெருமானுக்கு சாற்றி மகிழும் வழக்கமும் பழக்கமும் கொண்டவர்.

எம்பெருமான் பிரதியுபகாரம் பண்ணாமலா இருப்பான்? பிராமணருக்கு பிரபவ வருஷம், மார்கழி மாதம் கிருஷ்ண சதுர்த்தி அன்று செவ்வாய் கிழமை, கேட்டை நக்ஷத்ரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சாதாரண குழந்தை அல்ல, சுவாமி! --  வேத விசாரதர்  மலர்மாலை தொடுத்து சாற்றி பெருமாளை மகிழ்வித்ததால் பெருமாள் ஸ்ரீ நாராயணனின் வைஜயந்தி வனமாலையே,  மனித குழந்தையாக பிறந்தது. குழந்தைக்கு புன்யாஹவசனம் செய்து விப்ர நாராயணன் என்று பெயர் சூட்டினார் பிராமணர்.   ஒருநாள் பெருமாளிடமி ருந்து  வந்த சேனை முதலியார் தரிசனம் கிடைத்ததில் விப்ர நாராயணன் தனது பிறவிக்கான காரணம் புரிந்து கொண்டான். இதை அறிந்தபின் விப்ரநாராயணன் எம்பெருமானிடம் இன்னும் அதிக பக்ஷ பக்தி செலுத்தினார். எம்பெருமான் எங்கெல்லாம் குடிகொண்டிருக்கிறாரோ அங்கெல்லாம் சென்று அந்த க்ஷேத்ரங்களில் அவரை தரிசிக்க ஒரு ஆவல் பிறந்தது விப்ரநாராயணருக்கு. 

ஸ்ரீரங்கம் அடைந்தவர் பாம்பணை மேல் பள்ளி கொண்ட  ரங்கநாதனைக் கண்டவுடன். ''இதுவே போதுமே, வேறெங்குமே போக அவசியமில்லையே '' என்று எண்ணமும் தோன்ற    'இனி இங்கேயே தான் நான். என் ரங்கனுக்கு அன்றாடம் அருமையான மலர்மாலைகளை தொடுத்து சூட்டுவேன்'' என முடிவெடுத்தார்.
ஒரு அழகான நந்தவனம் தயாராகி  நறுமணம் கொண்ட வெவ்வேறு ஜாதி வகை மலர்கள் பூத்துக் குலுங்கட நந்தவனத்தின் மையத்திலே ஒரு குடிசை தான் விப்ரநாராயணர் ஆஸ்ரமம். . திருமாலைத் தவிர, அவருக்கென்று தொடுக்கும் பூவைத் தவிர, பூவையர் மேல் புத்தி போகவில்லை, அதற்கு நேரமும் இல்லை.

ஊரே இந்த விப்ரநாரயாணன் என்கிற விந்தை மனிதனைக்  கவனித்த போது வைகுண்ட நாதனுக்கும் பிராட்டிக்கும் அவனைத் தெரியாமலா இருக்கும்?.

''நாதா, இந்த விப்ர நாராயணன், உங்கள் மேல் உள்ள பக்தியால், அழகிய ஆணாக இருந்தும், ஏன் பெண்கள் மேல் மனம் செலுத்தாமல் அவர்கள் மூலம் பெறும் அன்பு, பாசம், நேசம் எதுவும் அறியாமல் உள்ளானே! அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ?'' என்று நாராயணனைக் கேட்டாள் திருப் பிராட்டி. .

''என்ன ஆகும் என்றா கேட்டாய், நீதான் பார்க்கப் போகிறாயே'' என்று சிரித்தார் எம்பெருமான்.

திருக் கரம்பனூர் என்று அருகே ஒரு ஊர். அதில் அக்காலத்திய முறைப்படி இறை பணியில் தம்மை அர்ப்பணித்த இரு பெண்கள் (தேவ தாசிகள் என அழைக்கப் பட்டவர்கள் ) ராஜ சபையில் நாட்டிய மாடுபவர்களாக அரசர்கள் ஆதரவில் வாழ்ந்தவர்கள். அந்த இரு பெண்களின்  பெயர்கள் தேவி, தேவதேவி. இருவருமே மிகச் சிறந்த அழகிகள். பார்ப்போர் நெஞ்சங்களை வலை வீசி பிடித்து,   பிழிந்து அடிமையாக்கும் விழிகளைக் கொண்டவர்கள். ஆடலோடு பாடவும் தெரிந்தவர்கள். கேட்க வேண்டுமா ராஜாவின் ஆதரவுக்கு, அவர்கள் செல்வாக்குக்கு?

சோழ ராஜா உறையூரில் அரண்மனையில் வசித்தான். அரசனின் நல் ஆட்சியில் எல்லோருக்கும் எங்கும் சுபிட்சமான வாழ்க்கை. அவர்களது ஆடல் பாடலில், அழகில் மயங்கி அரசன் முத்தும் பவழமும் பொன்னும், வைரமும் வாரி இறைத்தான் அவர்களுக்கு.

''தேவி அக்கா , நாம் போகும் வழியில் ஸ்ரீ ரங்கம் சென்று ரங்கநாதனை தரிசிக்க ஆவலாக இருக்கிறது. செல்வோமா?'' என்றாள் தேவதேவி, இளையவள், பேரழகி.

பல்லக்கு ரங்கநாதனின்  கோவிலை நெருங்கியபோது வழியில் விப்ர நாராயணரின் நறுமண, மலர்கள் பூத்து குலுங்கிய நந்தவனம் கண்ணில் பட்டது.

''அமைதி சூழ்ந்த இந்த நந்தவனம் யாருடையது? இது பூலோகத்திலா, வைகுண்டத்திலா எங்கிருக்கிறது . இது போல் எங்குமே கண்டதில்லையே அக்கா ?''

''ஒ இது விப்ர நாராயணர் என்கிற ஒரு பிராமண பக்தருடைய நந்தவனம். அவர் செடி வளர்த்து மலர்கள் பறித்து தன் கையால் மாலை தொடுத்து அரங்கனுக்கு அன்றாடம் சாற்றும் ஒரு துறவி''

''அப்படியா, அவரைக் கட்டாயம் பார்த்து சேவிக்க வேண்டும் அக்கா'' என்றாள் தேவதேவி.
''அதற்கென்ன  வா  உள்ளே போய்  அவரை தரிசிப்போம்''  என்றாள்  தேவி.

அவர்கள் ஆஸ்ரமத்தில் நுழைந்தபோது நாராயணனைத் துதித்துக்கொண்டு மலர்ச்செடிகளுக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்தார் விப்ரநாராயணர். அவரது கம்பீரத்தில், அழகிய தோற்றத்தில், மனம் பறி கொடுத்து கண்டதும் காதல் கொண்டாள் தேவதேவி. தனது காதலை தெரிவித்து வணங்கினாள். ஏதோ ஒரு பூனை, நாயைப் பார்ப்பது போல் அவர்களைப் பார்த்து விட்டு அவர்  துளியும் அவர்களை லக்ஷியம் செய்யாமல்  தனது வேலையில் தொடர்ந்தார்.

''என்ன ஆணவம் இவனுக்கு?   உலகமே மயங்கும் என் அழகில் மயங்காத ஒரு ஆடவனும் உண்டா? இந்த மனிதனை என் அழகில் மயங்கச்  செய்கிறேன் பார்'' என்று வீரம் பேசிய தேவதேவி,

 ''அக்கா,  இங்கே சில நாள் நான் தங்கி இவனை மாற்றிக் காட்டுகிறேன் பார். நீ போ. நான் என் சபதத்தை முடித்துவிட்டு வருகிறேன்'' என்றதும் தேவி சென்று விட்டாள். தேவ தேவி ஸ்ரீரங்கத்தில் இடம் பிடித்து தங்கினாள் .ஆடம்பர உடை ஆபரணங்களைக்  களைந்தாள் . ரிஷிபத்னி போல காவி உடை அணிந்தாள். விப்ர நாராயணர் ஆஸ்ரமம் சென்றாள்

''யார் நீ? என்ன வேண்டும் உனக்கு?''

''சுவாமி நான் இதுவரை ஒரு நரக வாழ்க்கை அனுபவித்தவள். சொச்ச காலத்தையாவது தங்களோடு சேர்ந்து எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து மன நிம்மதி பெற விழைகிறேன்.'' நடிக்கத் தெரியாதா தேவதேவிக்கு.

'' அடடா, என்னே அந்த பெருமாளின் கருணை. தாராளமாக இங்கே தங்கி நீயும் என் அரங்கநாதனுக்கு உன்னாலான சேவைகளை புரியலாம்''

ஒரு இயந்திரம் போல் தனது காரியங்களை செயது கொண்டிருந்தார் விப்ர நாராயணன். அவளை அருகே சேர்ப்பதில்லை. அவளை ஆஸ்ரமத்தின் வெளியே தங்க அனுமதித்தார்.

ஒரு நாள் கொட்டும் மழையில் நனைந்து வெளியே நின்றிருந்த தேவதேவி  மழையில் ஒதுங்க இடம் இன்றி தவிப்பதைப் பார்த்துவிட்டு, உள்ளே பூஜை செய்து கொண்டிருந்த விப்ர நாராயணா  இரக்கம் கொண்டவராய் அவளை உள்ளே அழைத்து தனது மேல் ஆடையை கொடுத்து உதவுகிறார். அதன் பிறகு  கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு அவள் சிஸ்ருஷைகள் செய்து நெருங்க, பஞ்சும் நெருப்பும் ஒன்றாகி விட்டது. பிறகு ஒருநாள் தனது சகோதரி, மற்றும் தாயிடம் அவரை அழைத்து செல்கிறாள். விப்ர நாராயணா அவளிடம் தன்னை இழந்த நிலையில் தன்னிடமிருந்த பொருள்களை எல்லாம் அவர்களிடம் கொடுத்துவிட்டு இனி கொடுக்க ஒன்றும் இல்லை என்ற நிலையில் அவர்களால் விரட்டப் படுகிறார். சோர்ந்து மனம் உடைந்த விப்ர நாராயணர் நந்தவனம் திரும்பி களைத்து  நாராயணா  எனக்கு  தேவதேவி வேண்டுமே. அவள் வீட்டார் என்னை ஆண்ட விடவில்லையே என் செய்வேன் என்று மயங்கிய நிலையில் தேவதேவியின் தாய் வீட்டுக்கு யாரோ  ஒருவர் வருகிறார்.

''யார் நீங்கள் என்ன வேண்டும் ?''
''அம்மா,  என் குரு விப்ர நாராயணா, இதை தாங்களிடம் சேர்ப்பிக்க கொடுத்தனுப்பினார்''
ஒரு பெரிய வெள்ளிப் பாத்திரம் அவரிடமிருந்து பெற்ற தேவதேவியின்  தாய்க்கு மகிழ்ச்சி இருக்காதா?
'' நீங்கள் சென்று  விப்ர நாராயணாவை  இங்கே  வரச் சொல்லுங்கள்'' தாய் அவரை வீட்டில் அனுமதிக்கிறாள்.
இதற்குள் தேவதேவி உண்மையிலேயே அவரது தூய பக்தியால் ஈர்க்கப்பட்டு விப்ர நாராயணரின் அடிமையாகிறாள்.
வெள்ளிப் பாத்திரம் கொடுத்த சிஷ்யர் நந்தவன ஆஸ்ரமம் சென்று  சோர்ந்து கிடந்த விப்ரநாராயணாவை  எழுப்புகிறான்.
''யாரப்பா நீ ?''
''சுவாமி நான் தேவதேவி அம்மாள் வீட்டிலிருந்து வருகிறேன். அவர்கள் உங்களை உடனே வரும்படி செய்தி சொல்ல சொன்னார்கள் ''
''ஆஹா  அப்படியா,  நாராயணா  என்னே உன் கருணை !  தேவ தேவியை தேடி ஓடிச் சென்ற விப்ர நாராயணரை  அவள் அன்போடு  கட்டி அணைக்கிறாள் .

ஸ்ரீரங்கம் ஆலயத்தின் அர்ச்சகர் மறுநாள் காலை வழக்கமான பூஜை செய்யும்போது அன்றாடம் உபயோகிக்கும் பெரிய வெள்ளி வட்டில் பாத்திரம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்து, ராஜாவிடம் முறையிட, ஊரெங்கும் அது தேடப்பட்டு, தேவதேவி வீட்டில் இருப்பதை கண்டுபிடித்து அவளும் அவள் தாயும் அரசர் முன்னே நிறுத்தப் படுகிறார்கள்.

விசாரணையில் ''விப்ர நாராயணர் தான் அதை  தனது சீடன் மூலம் என் வீட்டுக்கு  கொடுத்தனுப்பினார்'' என்கிறாள் தேவதேவியின் தாய்.
விப்ரநாராயணா  அரசன் முன்னே கொண்டு வரப்பட்ட போது '' அரசே நான் இதை திருடவில்லையே, மேலும் எனக்கு யாருமே சிஷ்யர்கள் கிடையாதே'' என்கிறார். ஆனால்  கோபம் கொண்ட அரசனால்  கோவிளை சேர்ந்த பூஜா பாத்திரத்தை திருடிய குற்றத்துக்காக சிறையில் அடைக்கப் படுகிறார்.

''எம்பெருமானே, ரங்கநாதா  இதென்ன சோதனை. உன் பாத்திரத்தை நானா திருடுவேன். எனக்கு ஏன் இப்படி ஒரு அவல நிலைமையை தருகிறாய்?

பக்தன் கதறிய நேரத்தில் பகவான்  சோழ அரசன் கனவில் அவனுக்கு தானே சிஷ்யனாக வந்து அந்த பாத்திரத்தை எடுத்து தேவதேவி வீட்டில் கொடுத்ததை கூற திடுக்கிட்ட  அரசன் அவரை விடுதலை செய்கிறான். பிறகென்ன. விப்ர நாராயணர் ராஜோபசாரங்களோடு கௌரவிக்கப் பட்டு அவர் பெருமை எல்லோருக்கும் புரிய அவருக்கும் எம்பெருமான் திருவிளையாடல் புரிகிறது.

''பகவானே, பக்தர்களுக்காக நீ என்னவெல்லாம் புரிகிறாய். உன்னைவிட உன் பக்தர்களே சிறந்தவர்களாக பாவிக்கும் பக்த வத்சலா. உன் பக்தர்கள் பாத தூளி என் சிரசில் படட்டும். இன்றுமுதல் உன் தொண்டர்கள் திருவடிப் பொடியாகவே நான் உன்னை சரணாகதி அடைகிறேன் என்று நெஞ்சுருகி, கல்லும் கரையும் பாசுரங்கள் அவரிடம் இருந்து வெளிவர அவரை நாம் தொண்டரடிப் பொடி ஆழ்வாராக அறிகிறோம். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக வணங்குகிறோம்.

திருப்பள்ளி எழுச்சி, 10 பாசுரங்களை கொண்டது. திருமாலை 40-45 பாசுரங்கள் கொண்டது. ஆழ்வாரின் 'பச்சைமாமலை போல் மேனி'' பாசுரம் நான் மட்டுமல்ல உங்களில் அனைவர் மகிழ்ந்து பாடும் பாசுரம் அல்லவா?

''வைஜயந்தி வனமாலா, உன் பூலோக அவதாரம் என் விருப்பப் படியே நடந்தது''என்று விஷ்ணுவும் மகிழ்ந்தார்.  

sivan jaykay

unread,
Aug 8, 2020, 8:53:16 PM8/8/20
to amrith...@googlegroups.com
                                                                கர்ணனை மிஞ்சியவன்    J K  SIVAN 

குப்பு சாமி  பிரபல கிரிமினல் வக்கீல்.  பத்து கொலை பட்டப்பகலில்  பல பேர்  கண் எதிரில் புரிந்தாலும்] குப்பு 
சாமி கேட்கும்  பீஸ் fees  கொடுத்துவிட்டால்,  ''இவன் பச்சைக் குழந்தை, பட்டாம் பூச்சிக்கு பறப்பதால்  ரெக்கை வலிக்குமே  என்று கதறி கதறி அழுபவன்''  என்று கொலையாளியை நிரபராதியாக்கி  கோர்ட்டில் நிரூபித்து  விடுதலை வாங்கி கொடுப்பான்.   காசில் அவ்வளவு கெட்டி என்பதால்  இதயத்தை தொலைத்தவன்.

ஒருநாள்  குப்பு சாமி  தன் பெரிய காரில் ஒரு கிராமம்  கடக்கும் போது தெரு ஓரத்தில்  இருவர்  புல்லை  பிடுங்கி  தின்பதை கண்டு காரை நிறுத்தி  கேட்டான்.   
" என்ன  சாப்பிடுறீங்க  நீங்க  இங்கே ?''
''சாமி  நாங்க  பச்சை  புல்லை புடுங்கி   தின்கிறோமையா?.
''ஏன்  சோறு சாப்பிடமாட்டிங்களா?''
"பணமில்லை  உணவு வாங்க.  பல நாட்கள்  இப்படிதான்  புல்லை தின்று  உயிர் வாழ்கிறோம். பழக்கமாயிடுச்சி''
''புல்லு எல்லாம்  மழையில்லாம காஞ்சு போயிருக்கே''
''வேறே வழி இல்லீங்களே''
"அடேடே ,  அப்படியா. சரி என்னோடு காரில் வாயா  என் வீட்டில் நல்லா சாப்பிடலாம்"
"நன்றி அய்யா. அதோ அந்த மரத்தின்  பின்னால்  என் மனைவியும்  மகனும்  புல் தின்று கொண்டு இருக்கிறாங்க. சொல்லிட்டு  வாறன்  "
"அவங்களும்  புல்லு தின்கிறாங்களா.  அப்படின்னா, அவர்களையும்  உன்னோடு அழைத்து வரலாம்"
"அய்யா,   என்  தம்பி  அதோ  இருக்கிறான்யா  புளிய மரத்துக்கு பின்னாலே, அங்கே கொஞ்சம் புல்லு இருக்குதுன்னு அங்கே புல்லை   தின்னுகிட்டு இருக்கிறான் "  
" ஓஹோ.   பரவா இல்லப்பா,    நேரமாச்சு,  சரி,  அந்த ஆளையும்  காரிலே  ஏறச்  சொல்லு"  என் காரில்  அனைவருக்கும்  இடமிருக்கிறது.  என்  வீட்டுக்கு  வரலாம்"

ஏழைகள் குடும்பம் காரில்   குப்பு  சாமி பங்களாவிற்கு முன் வந்து இறங்கியது.  உள்ளே அழைத்து சென்றான்.   பிரம்மாண்டமான மாளிகையை, தோட்டம் எல்லாம் பார்த்து விட்டு வக்கீலிடம் ஏழை சொன்னான்:  

 "ஐயா,  நீங்க  கடவுள்.    தர்ம பிரபு. எங்கள் மாதிரி ஏழைங்க மேல்  எவ்வளவு கருணை,  ரொம்ப  நல்ல  மனசு உங்களுக்கு இல்லன்னா  எங்களை மாதிரி   ஏழைகள் சாப்பிடவேணும்  என்று  நினைக்க தோணுமா, கூட்டிட்டு  வர  மனசு இடம் கொடுக்குமா ?" 

கிரிமினல்  வக்கீல் குப்பு சாமி  சிம்பிளாக  பதிலளித்தான்   : 

"இதுக்கெல்லாம் எதுக்குப்பா  நன்றி  கின்றி . அதெல்லாம்  ஒண்ணு மில்லையப்பா, இதோ பாருங்க   ஆறு ஏக்கர் பங்களா, நிறைய இடம் இருக்கு.   நீங்கள்  எல்லாரும்  ரோடு ஓரத்தில்  அசுத்தமான புல்லை தின்பதை விட  என் வீடு  காம்பௌண்டில்  ஒரு  ரெண்டு அடி  உயரத்துக்கு  நல்ல  புல்லாக  வளர்ந்திருக்கிறதை பாருங்க.  நீங்க எல்லாரும்  ஆற அமர  இங்கே உக்கார்ந்து சாப்பிடலாமே  என்று தான் உங்களை எல்லாம்  கூட்டி வந்தேன். சாப்பிட்டுட்டு  அதோ அந்த கேட் வழியா  வந்த வழிய  பார்த்து நடந்து போங்க. 

ஏழை சுருண்டு விழுந்தான்... அவன் குடும்பம்  ஆ  என்று வாயை பிளந்து வேறு வழியின்றி புல்லின் மேல் பாய்ந்தது. 

தான தர்மம் செய்வதில்  கர்ணன்  வக்கீலுக்கு  ஈடாவானா???
It is loading more messages.
0 new messages