Whom to follow in this world? - HH Sri Bharati Teertha Mahaswamigal

4 views
Skip to first unread message

K.N.RAMESH

unread,
Nov 12, 2025, 4:38:51 AM (yesterday) Nov 12
to
*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*  

உலகத்திலே மனிதனாக பிறப்பது மிகவும் துர்லபம்.. அப்பேற்பட்ட துர்லபமான பிறவி நமக்குக் கிடைத்துள்ளது..  இதில் ஆஸ்திகம் இல்லை  தர்மாசரணங்கள் இல்லை என்று சொன்னால் அப்போது இந்த மனிதப் பிறவிக்கு அர்த்தமேயில்லை..  ஆனால், பவித்ரமான இந்த பாரதத்திலே இந்த மாதிரியான பவித்ரமான ஜென்மத்தை எடுத்துள்ளோமென்று சொன்னால் நாம் இதை ஸார்த்தகமாக்கிக்கொள்ள வேண்டும்.. மனிதனுடைய ஸ்வபாவம் என்னவென்றால் தான் யாருடைய சகவாஸத்திலே இருப்பானோ,  அவர்களுடைய ஸ்வபாவமே இவனுக்கும் வரும்..  தான் துஷ்டர்களுடைய சகவாஸத்திலே இருந்தால் அந்த துஷ்டர்களுடைய ஸ்வபாவமே இவனுக்கும் வரும்.. அதானலே,  “நான் எப்பொழுதும் ஸத்புருஷர்களோடுதான் இருக்க வேண்டும் என்கிற ஒரு பாவனையை வைத்துக்கொள்ள வேண்டும்.. இப்படி இருந்தால் நீ செளக்கியமாக இருக்கலாம்”  என்று பகவத்பாதாள் நமக்கு உபதேசித்தார்..  இப்பேற்பட்ட தர்ம மார்க்கத்திலே நாம் இருந்தால்தான் இந்த பவித்ரமான பாரதத்தில் ஜென்மம் அடைந்ததற்கு, இந்த ஸநாதன தர்ம பரம்பரையில் பிறந்ததற்கு அர்த்தம் வரும்.. இல்லாவிட்டால், நான் அப்போது சொன்ன மாதிரி பிராணிகளுக்கு சமானம் ஆகிவிடும்..  அப்படி ஆகக் கூடாது..  இந்த ஜென்மம் ஸார்த்தகமாக வேண்டும்.. இந்த தர்மத்தை ஆசாரணம் பண்ணுகிற விஷயத்திலே யார் மஹான்களோ அவர்களைத்தான் நாம் எப்பொழுதும் ஆதர்சமாக வைத்துக்கொள்ள வேண்டும்..
Reply all
Reply to author
Forward
0 new messages