![Inline image Inline image]()
ஸ்ரீராமஜெனயம்
ஒரு நாள் ஆதிசேஷன் மீது அமைதியாகப் படுத்துக் கொண்டு இருந்த விஷ்ணு பகவானிடம் சென்ற நாரத முனிவர் அவரிடம் கேட்டார் ‘ ஐயனே நீங்கள் உங்களது எட்டாவது அவதாரத்தில் பாலராமராகவும், ஒன்பதாவது அவதாரத்தில் கிருஷ்ணராகவும் பிறந்து உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் இரண்டுமே துவாபர யுகத்தில்தான் நடந்துள்ளது. உங்களால் எப்படி இரண்டு பிறப்புக்களை சம காலத்தில் எடுக்க முடிந்தது? அது சாத்தியமா? மேலும் அப்படி சம காலத்தில் எடுத்த அவதாரத்தின் தத்துவாத்தம் என்ன?
நாரதா….கவனமாகக் கேள்………. என்னால் பல அவதாரங்களை ஒரே நேரத்தில் எடுக்க முடியும். ஆனால் அனைவரினாலும் அவற்றை செய்ய முடியாது. நான் தசாவதாரம் எடுத்து சில காரியங்களை செய்ய வேண்டும் என்ற நியதி இருந்ததினால் என்னையும் படைத்த பரப்பிரும்மன் எனக்கு சில விசேஷ சக்திகளை அளித்து உள்ளார். அதில் ஒன்றுதான் பல ரூபங்களை ஒரே நேரத்தில் எடுக்கும் நிலை. நான் எந்த அவதாரத்தை எடுத்தாலும், என்னுடைய மூல அவதாரத்தை (விஷ்ணு) களங்கப் படுத்திக்கொள்ள விரும்பவில்லை. ஆகவே நான் எந்த அவதாரத்தை எடுத்தாலும், என்னுடைய மூல அவதாரத்தின் துணை எனக்குத் தேவை எனக் கருதியதினால் , என்னுடைய சக்தியில் ஒரு பாகத்தை கொண்டு ஆதிசேஷனை படைத்து அதில் என்னை வைத்துக் கொண்டு இருந்தேன். ஒவ்வொரு அவதாரத்திலும் எனக்குத் துணையாக ஆதிஷேஷனுக்குள் உள்ள என் சக்தியும் ஒரு உரு எடுத்து என்னுடன் துணையாக வர வேண்டும் என்று எண்ணியே அப்படி ஒரு ஏற்பாட்டை செய்தேன். அதில் வந்துள்ளதே பலராம அவதாரமும். அதாவது என் மாயையான ஆதிசேஷனின் மூலம் வெளிவந்த அவதாரமும்.
ராம அவதாரம் எடுத்தபோது நான் என்னுடைய விஷ்ணு அவதாரத்தை துறந்திருன்தேனா? எனக்குள் உக்ள்ள பல சக்திகளில் ஒன்றான ஒரு சக்தியின் ஆதிசேஷனே லஷ்மணராகவும், பாலராமராகவும் அவதாரங்களை எடுத்தபோது கூட விஷ்ணுவாக நான் இருந்தபோது எனக்கு படுக்கையாகவும் இருந்து வந்தார். ஆதிசேஷன் என்பது என்னால் படைக்கப்பட்ட ஒரு மாயையான உருவமே. ஆகவே ஆதிசேஷன் பாலராமராகவும், லஷ்மணராக அவதாரத்தை எடுத்ததாக சொல்லப்பட்டாலும், இருவருமே என் மாய ரூபங்களே.
நான் ராம அவதாரத்தில் இருந்தபோது என்னை வேண்டித் துதித்த பலரும், பல நன்மைகளை அடைந்தார்கள். ஆனால் என்னுடன் எப்போதும் இருந்த, என் கால்களில் தினமும் விழுந்து வணங்கி வந்த தம்பி லக்ஷ்மணன் மட்டும் என்னுடன் சேர்ந்து பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருந்தான். ஆகவேதான் ஒரு அவதாரத்திலாவது லஷ்மணனை எனக்கு மூத்தவராக அவதரிக்கக் எண்ணினேன். அப்போதுதானே என்னுடைய நன்றிக் கடனை தீர்க்க அவருடையக் காலில் நான் விழுந்து வணங்க முடியும்? இதுவே நான் எடுத்த எட்டாவது மற்றும் ஒன்பதாவது அவதாரங்களின் பலராம- கிருஷ்ணனின்- ரகசியங்கள்” என்று கூறியதும் நாரதர் முகத்தில் வெளியாகிக் கொண்டு இருந்த இன்னொரு சந்தேகத்தை விஷ்ணு பகவான் கண்டு கொண்டார். ஆகவே மீண்டும் நாரதரிடம் அவர் என்ன தயங்குகிறார் என்று விஷ்ணு கேட்க, நாரதரும், ஒரே நேரத்தில் எப்படி பல ரூபங்களை அதாவது அவதாரங்களை விஷ்ணுவால் எடுக்க முடியும் என்பதை நேரில் பார்த்தல் ஒழிய யாரும் நம்பமாட்டார்களே என்று யோசிப்பதாகக் கூற விஷ்ணு கூறினார் ” நாரதா உன் சந்தேகம் உண்மையில் இந்த உலகத்துக்கு நன்மை பயக்கும். ஆகவே தக்க சமயத்தில் நான் யார் என்பதையும், எனக்குள் அடங்கி உள்ள ரூபங்களையும் உலகறியச் செய்வேன். அதுவரை சற்று பொறுமையாக இரு” என்று கூறி விட்டு மறைந்து விட்டார். அதன் காரணமாகவே விஷ்ணு பகவான் கிருஷ்ணராக அவதரித்தபோது, அர்ஜுனனுடைய சந்தேகத்தின் மூலம் உலகறியச் செய்யும் விதமாக விஸ்வரூபக் காட்சியைத் தந்து தனக்குள் அடங்கி இருந்த அனைத்து ரூபங்களையும் வெளிப்படுத்தினார்.
பலராம அவதாரத்தை எடுத்தபோது அவர் துரியோதனன் மற்றும், பீமனுக்கு கதையைக் கொண்டு யுத்தம் செய்யும் கலையைக் கற்றுக் கொடுத்தார். ஆனால் மகாபாரத யுத்தம் நடந்தபோது இருவருமே அவரிடம் சென்று அவருடைய துணையை நாடினார்கள். பலராமர் கூறினார் ‘ நான் உங்கள் இருவரையுமே இரண்டு கண்களாக பாவித்தே அந்தக் கலையை உங்கள் இருவருக்கும் சமனாக கற்றுக் கொடுத்தேன். உங்கள் இருவரில் நான் யாருக்குமே எந்த பேதத்தையும் காட்டவில்லை. ஆகவே நான் உங்கள் இருவரில் யாராவது ஒருவருடைய பக்கத்தில் சேர்ந்தால், அது நான் என் மனசாட்சிக்கு செய்யும் துரோகம் ஆகும்’ என்று கூறி விட்டு அவர்கள் இருவருக்கும் உதவ மறுத்து விட்டார். ஆனால் யுத்தத்தில், கிருஷ்ணரின் யோசனைப்படி துரியோதனனின் தொடையைப் பிளந்து அவனை பீமன் கொன்ற போது, தான் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த யுத்த நேர்மை என்பதை பீமன் உடைத்து விட்டான் என்று கோபமுற்ற பரசுராமர் பீமனைக் கொல்லச் சென்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்தினார் கிருஷ்ணர். பலராமனிடம் தம் இருவரின் அவதாரக் கதையையும் நினைவு கூறி, இந்த அவதாரத்தில் தனக்கு உதவியாக இருக்கவே அவரும் படைக்கப்பட்டு உள்ளதாகக் கூறிவிட்டு அவருடைய கோபத்தை தணித்து அனுப்பினார்.