புதுவிதமான மாணவர் யூனியன்-
மாணவர் யூனியன் என்று தற்போது வைத்துக் கொண்டு உரிமைப் போராட்டம் நடத்துகிறார்களோல்லியோ? அதற்குப் பதிலோ,… கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் சொல்கிறேன்…. அதோடு கூடவோ, தாங்கள் ஸஜ்ஜனங்களாக, அதாவது நன்மக்கள்-மேன்மக்கள் என்பவர்களாக உருவாகிற உண்மையான உரிமைக்காக ஒரு யூனியன் அவர்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு ஏழெட்டு நல்ல பசங்கள், நல்ல செயலூக்கமும் விட்டுக் கொடுக்காத மனோபலமும் கொண்டவர்களாக இதற்காகச் சேர்ந்துவிட்டால் போதும். அவர்களே மற்றவர்களையும் தட்டியெழுப்பி இப்படி ஒரு யூனியனை ஏற்படுத்திவிட முடியும்.
அதம்பிக் கொண்டு, ‘தான்’ என்று புறப்படுகிற பிராயத்தில், தானும் அடங்கி விநயமாக ஆகி, மற்றவர்களையும் ஆக்குவதற்கே அதம்பிக்கொண்டு அங்கங்கே ஏழெட்டுப் பசங்கள் புறப்பட்டுவிட்டால் ‘ஸீன்’ அப்படியே மாறிவிடும். இரும்புக் காலமாக, கரிக்கட்டைக் காலமாக இருக்கிற தற்காலம் பொற்காலமாகிவிடும்.!
கல்வியும் பணிவும்
உணர்ச்சி வேகங்களின் பிரவாஹம் வியாதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிற போது கல்விதான் அதற்கு மருந்து. மூளை வளர்ச்சி மட்டுமின்றி முழு மநுஷ்ய வளர்ச்சிக்கான கல்வியாக அது இருக்க வேண்டும்.
மருந்து சாப்பிடும்போது பத்தியம் வைக்காமலிருக்க மாட்டார்கள். மருந்தைவிடக் கூடப் பத்தியமே வியாதி தீர்ப்பதில் அதிக உபகாரம் செய்வதும் உண்டு.
அப்படி, ‘வித்யை’ என்கிற கல்வி மருந்தோடு சேரும் பத்தியமாக ‘விநயம்’ என்ற கட்டுப்பாடு, எளிமையை ஆன்றோர் வைத்திருக்கிறார்கள். வித்யையும், விநயமும் யுவப் பிராயத்தினருக்கு இரண்டு கண்கள் மாதிரி.
இப்போது விநயத்தில் அடங்கி, தாழ்ந்து இருந்தால் பிற்பாடு உச்ச நிலைக்கு உயரலாம். கால்தூசியை உதாரணம் காட்டுவார்கள். அது நம்முடைய காலுக்கு அடியில் பொடியூண்டாக எழும்புகிறது. ஆனால் சட்டென்று காற்றிலே அந்த பொடி உயர்ந்து நம் தலைக்கு மேல் போய்விடுகிறதல்லவா? அப்படி, கல்வி கற்கும் நாளில் அடிநிலையில் அடங்கியிருந்தால் பிற்பாடு வாழ்க்கைக்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளும் நாளில் உயர்ந்த ஸ்தானம் பெறலாம்.
இந்த உண்மை நம்முடைய மஹத்தான நாகரிகத்துக்கும் கலாசாரத்துக்கும் வார்ஸாக உள்ள யுவர்களின் உள்ளத்தில் பதிய வேண்டும். பகவான் அதற்கு க்ருபை பண்ண வேண்டும்.
WITH PRANAMS
N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536
