அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..

35 views
Skip to first unread message

Jambunathan Iyer

unread,
Apr 9, 2017, 9:01:44 PM4/9/17
to amrith...@googlegroups.com, CVB B. Hari, Jk Sivan Ji, k_n_ andco
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..

மங்களம்_தரும்_பங்குனி_உத்திரம்யாகிய இன்று கந்தப்பெருமானைத் துதித்து சகலதடைகளையும் நீக்கி தங்கள் வாழ்வில் வெற்றியையும் .. வசந்தத்தையும் .. நல்லாரோக்கியத்தையும் தந்தருளும்படி பிரார்த்திக்கின்றேன் ..

கந்தவேளைப் பிரார்த்தித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாகவும் .. இன்னல்கள் நீங்கி ஆரோக்கியத்துடன் திகழவும் வாழ்த்தி வணங்குகின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வரபுத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமணய ப்ரசோதயாத் !!

சஷ்டி என்றால் ஆறு .. ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும் .. கந்தனின் நாமங்கள் முக்தி அளிப்பவை .. அறம் .. பொருள் .. இன்பம் .. வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் வழங்குபவை .. என்கிறார் சிவபெருமான் ..

1 - கந்தன் - ஸ்கந்தன் - -

‘ ஸ்கந்த ‘ என்னும் வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் வெளிப்படுவது என்று அர்த்தம் .. மேகத்திலிருந்து மின்னல் வெளிப்படுவது போல .. சிவஜோதியிலிருந்து ஆறுபொறிகளாக வெளிப்பட்டுத் தெறித்ததால் .. “ஸ்கந்தன் “ என்ற பெயர் உண்டாயிற்று .. பின்பு “ கந்தன்”
என மருவியுள்ளது ..

2 - முருகன் - -

’முருகன் ’ என்றால் அழகுடையவன் என்று பொருள் .. சிவபெருமானின் நெற்றிக்கண் பொறிகள் பார்வதியின் சரீரமான சரவணப்பொய்கையில் சேர்ந்தவுடன் முருகன் தோன்றியதால் சிவபெருமானின் என்றும் மாறா இளமையையும் ..தேவியின் அழகையும் சேர்த்துப் பெற்றார் முருகப்பெருமான் .. ஆக்கல் .. காத்தல் .. அழித்தல் என முத்தொழிலை முறையே புரியும் பிரம்மா .. விஷ்ணு மற்றும் சிவனின் அம்சமாகக் கருதப்பட்டு “ முருகன் “ என அழைக்கப்படுவதாக நம்பப்படுகிறது .. அதாவது முருகாவிலுள்ள - மு - முகுந்தனையும் .. (விஷ்ணு)
ரு - ருத்ரனையும் .. ( சிவன் )
க - கமலனையும் .. ( பிரம்மா ) குறிப்பதாக ஒரு கருத்து உள்ளது ..

3 - கார்த்திகேயன் - -

பரமேசுவரனின் கண்களிலிருந்து ஆறுபொறிகள் வெளிவந்து அவை சரவணப்பொய்கையில் தங்கி ஆறுமுகனாக உருக்கொண்டன .. அப்போது கார்த்திகைப்பெண்கள் ( கிருத்திகை நட்சத்திரத்தின் அதிதேவதைகள் ) என்னும் அறுவர் அவரைப் பாலூட்டி வளர்த்ததால் “ கார்த்திகேயன் “ என்று பெயர் வந்தது ..

4 - ஆறுமுகன் -- ஷண்முகன் --

சிவபெருமானின் கண்களிலிருந்து வெளிவந்து ஆறுபொறிகள் ஆறுமுகங்களாக மாறியதால்
“ ஆறுமுகன் “ எனப்பெயர் பெற்றார் .. முதல் ஐந்து முகங்கள் பஞ்சபூதங்களைக் குறிக்கின்றன .. ஆறாவது முகம் உயிருள்ள அனைத்து ஜீவன்களுக்குள் இருக்கும் ஆன்மாவைக் குறிக்கிறது .. முருகன் அம்மையும் அப்பனுமாக இருப்பவன் .. ஆகையால் அம்மையின் ஒருமுகமும் .. அப்பனின் ஐந்துமுகமும் சேர்த்து ஆறுமுகமானார் என்று ஒரு விளக்கம் உண்டு ..

5 - குகன் - குஹன் --

மலைக்குகைக்குள் வசிப்பவன் குகன் என்று அழைக்கப்படுவான் .. முருகப்பெருமான் .. பக்தர்களின் இதயகுகைக்குள் என்றும் வசிப்பதால் ‘ குகன் ‘ என்று அழைக்கப்படுகிறார் .. பக்தர்களின் இதயத்தில் வசித்து எண்ணங்களை மேம்படுத்தி பக்தர்களை நல்வழியில் நடத்தி வைப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது ..

6 - காங்கேயன் ..

சிவபெருமானின் கண்களிருந்து ஆறுபொறிகள் கங்கையிலுள்ள சரவணப்பொய்கையைச் சேர்ந்த பிறகே முருகனாக தோன்றியதால் முருகனுக்கு கங்கை
நேர்தாயார் ஆகிறாள் .. அதனால் முருகன் ”காங்கேயன்”
என்று அழைக்கப்படுகிறார் ..மேலே விவரித்துள்ள பெயர்களைத்தவிர முருகனுக்கு ‘ சுப்ரமணியர் ‘ .. தண்டாயுதபாணி .. சரவணபவ .. சுவாமிநாதன் .. குமாரஸ்வாமி ஞானஸ்கந்தன் .. என இன்னும் பல பெயர்கள் உண்டு ..

பக்தர்களின் ஆசைகளைப் பூர்த்திசெய்ய ஒருமுகம் .. பக்தர்களின் அறியாமைய ஒழித்து அறிவை நிலைநிறுத்த ஒருமுகம் ..

பக்தர்களின் ஆழ்மனதில் புதைந்துள்ள எண்ணங்களை வெளிக்கொண்டுவர ஒருமுகம் ..
யாக வேள்விகளைச் செய்யத்துணைபுரிய ஒருமுகம் ..
நல்லவர்களைக் காத்துத் தீயவர்களைத் தண்டிக்க ஒருமுகம் ..

மற்றும் பக்தர்களிடம் அன்பு என்ற சுடரை ஏற்றி இன்பத்தை நிலைநிறுத்த ஒருமுகம் .. என ஆறுமுகங்களுக்கும் தனித்தனியான முக்கியத்துவம் உள்ளன ..

கந்தனைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெற்றிடுவோம் !

ஓம் ஸௌம் சரவணபவ ! ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் ஸௌம் நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


N Jambunathan (Ex: REVL & IMPAL)
Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004

Reply all
Reply to author
Forward
0 new messages