தமிழில் ஓர் எழுத்து பல பொருள்
உமாபாலசுப்ரமணியன்
1 அ - எட்டு
2 ஆ - பசு
3 ஈ - கொடு
4 ஊ இறைச்சி
5 ஐ - அழகு,
தலைவன்
6 ஓ - வினா, மதகு
7 மா - பெரிய
, மரம்
8 மீ - மேலே
9 மூ - மூன்று
, மூவேந்தர்
10 மே - அன்பு , மேன்மை
11 மை - இருள், கண்ணுக்குத் தீட்டுவது
12 மோ - முகர்தல் , மோத்தல்
13 தா - கொடு
14 தீ - நெருப்பு
15 து - பிரிவு , பறவை , இறகு, கொடு , உண்
16 தூ - வெண்மை , தூய்மை
17 தே - நாயகன்
18 தை - தைத்தியர்கள் , மாதம்
19 சா - மரணம்
20 சீ - இகழ்ச்சி, சீத்தல்
21 சே - எருது
22 சோ - மதில்
23 பா - பாட்டு ,நிழல் , அழகு
24 பூ - மலர்
25 பே - மேகம் , நுரை
26 பை - பசுமை
27 போ - செல், போதல்
28 நே - அன்பு, நேயம்
29 நை - வருந்து , நைதல்
30 நொ - துன்பம்
31 நோ - நோய், வருத்தம்
32 நௌ - மரக்கலம்
33 கா - பாதுகாப்பு , சோலை
34 கூ - வெல் , பூமி, கூவுதல்
35 கை - ஒப்பனை , கரம்
36 கோ - அரசன் , இறைவன்
37 வா - வருக
38 வீ - மலர்
39 வை - கூர்மை
40 வௌ - வௌவுதல்
41 யா - கட்டுதல் , ஒரு மரம்