2017ஆம் ஆண்டு நடப்பு அக்டோபர் மாதத்தில் அடுத்தடுத்து வெளியான மூன்று செய்திகள் தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியிருக்கின்றன.
"அக்டோபர் 3 ஆம் தேதி இராமேசுவரம் இராமநாதசுவாமி கோவிலில் அம்மனுக்கு அணிவிக்கப்படும் வைரத்தாலி, வைரப்பல்லாக்கு, வைர மூக்குத்தி, வைர கழுத்தணி, வைர நெத்திச்சுவடி, தங்கத் தாழம்பூ, மரகதத் திலகம், நீலக்கல் திலகம், வைர மார்புக்கவசம் உள்பட விலை மதிக்க முடியாத ஏராளமான வைரம், வைடூரிய நகைகளைக் காணவில்லை. மேலும், மூல ஸ்தானத்தில் இருந்த 22 கிலோ தங்கத்தாலான மணி, விலை மதிக்க முடியாத வலம்புரி சங்கு ஆகியவையும் காணவில்லை. 1972ஆம் ஆண்டு கோவில் சொத்துப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நகைகள் 1995ஆம் ஆண்டுப் பட்டியலில் இடம் பெறவில்லை.'' என பக்தர் ஒருவர் அளித்த முறையீடு குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம் இது குறித்துப் பதில் அளிக்குமாறு அறநிலையத்துறைக்கு ஆணைப் பிறப்பித்துள்ளது.
இரண்டு நாட்கள் கழித்து அக்டோபர் 6ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம், விராலி மலை அருகே அரசு பஸ்சுடன் நேருக்கு நேராக கார் ஒன்று மோதியது. இந்த காரிலிருந்த 4 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்தக் காரை காவல்துறையினர் சோதனையிட்டபோது 8 கிலோ எடையுள்ள மரகத லிங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த லிங்கம் எந்தக் கோயிலைச் சேர்ந்தது என்பதைக் குறித்து, காரில் வந்தவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சி தரும் செய்தி வெளியானது.
அதே நாளில் சிலை கடத்தல் வழக்கில் காவல் துறையில் துணைக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த காதர் பாட்சா என்பவர் பறிமுதல் செய்த சிலையை அரசிடம் ஒப்படைக்காமல் விற்பனை செய்ததாகக் கைது செய்யப் பட்ட செய்தி வெளியானது. ஆக மூன்று நாட்கள் இடைவெளியில் வெளியான இச்செய்திகள் தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள விலை மதிக்க முடியாத சிலைகள், வாகனங்கள், நகைகள், ஆபரணங்கள் ஆகியவை பத்திரமாக உள்ளதா- என்ற கேள்வியை மக்கள் மனதில் எழுப்பியுள்ளன.
தமிழ்நாட்டில் பெரிதும் சிறிதுமான 31,423 கோவில்களும் மற்றும் மடங்கள், மடங்களைச் சேர்ந்த கோவில்கள் மற்றும் அற நிலையங்கள் சுமார் 2000 உள்ளன. இந்த கோவில்களை மன்னர்களும், மன்னர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், சிற்றரசர்களும், பெரும் செல்வர்களும் கட்டியதோடு அக்கோவில்களுக்குரிய சிலைகள், நகைகள், ஆபரணங்கள் ஆகியவற்றை அளித்துள்ளார்கள். மேலும், இக்கோவில்களில் வழிபாடுகள் முறையாக நடைபெற நில மானியங்களையும் அளித்துள்ளார்கள்.
கோவிலில் வழிபாடு நடத்துபவர்களுக்கும், தேவாரங்கள், பாசுரங்கள் ஆகியவற்றைப் பாடுபவர்களுக்கும் நில மானியங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கோவில் வாகனங்கள், நகைகள், ஆபரணங்கள் ஆகியவற்றில் பழுது ஏற்பட்டால் அவற்றை பராமரிக்கும் சிற்பிகளுக்கும் நில மானியங்கள் அளிக்கப் பட்டுள்ளன. ஏறத்தாழ 5 இலட்சம் ஏக்கர் நிலங்கள் இவ்வாறு அளிக்கப் பட்டுள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமான நகைகளும், ஆபரணங்களும் ஐம்பொன் சிலைகளும் மன்னர்களாலும் மற்றவர்களாலும் அளிக்கப்பட்டுள்ளன. மன்னர்கள் தாங்கள் கட்டிய கோயில்களை நிருவகிப்பதற்கு தக்கவர்களை நியமித்து வழிபாடு, திருவிழாக்கள் முதலியவை எவ்வித தங்கு தடையுமின்றி நடைபெறவும், கோயில் சொத்துக்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் உரிய ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள்.
மன்னர்கள் ஆட்சி மறைந்து, ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி ஏற்பட்டபோது மாவட்ட ஆட்சியாளர்களின் நேரடி பொறுப்பில் கோவில் நிருவாகம்
கொண்டுவரப்பட்டது. இந்துக் கோயில்களை ஆங்கிலேயர்கள் நிருவகிக்கக்கூடாது என்ற கிளர்ச்சி எழுந்தது. இதன் விளைவாக 1863ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசு ஒரு சட்டம் இயற்றி அறநிலையங்களின் சொத்துப் பராமரிப்பு பணியை அதிகார சார்பற்றவர்களைக் கொண்ட குழுக்களிடம் ஒப்படைத்தது. இச்சட்டத்தில் இருநத பல குறைகளை அகற்றும் முயற்சியில் பல சட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இயற்றப்பட்டன. 1925ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தில் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது அறநிலையங்களைப் பாதுகாக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1925ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பின் 1954ஆம் ஆண்டு வரை 10 சீர்திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
இவற்றைத் தொடர்ந்து பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் 1981ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தின்படிதான் தற்போது கோவில்கள்நி ருவகிக்கப்படுகின்றன. இவ்வளவு திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் ஆலய நிருவாகம் செம்மையாக இல்லை. அரசியல் அதிகாரம் குறுக்கிட்டு அனைத்தையும் சீரழித்துள்ளது.
ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களும் கட்டிடங்களும் இதர சொத்துக்களும், அரசியல் ரீதியாக வேண்டியவர்களுக்கு மிகக் குறைந்த குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடப்படுகின்றன. கோவில் நிலங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் குறைந்துகொண்டே போகிறது. நிலங்கள் யார் யார் பெயருக்கோ மாற்றப்படுகின்றன. இராசராசசோழன் காலத்தில் அவன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலுக்கு 18 ஆயிரம் வேலி நிலத்தை இறையிலியாக அளித்தான் என அக்கோயிலின் கல்வெட்டு கூறுகிறது. ஆனால் இப்போது ஒரு வேலி நிலம் கூட அக்கோவிலுக்குச் சொந்தமாக இல்லை. கோவில் உண்டியல்கள் உடைக்கப்படுவதும், காசுகள் திருடப்படுவதும், விலை மதிப்பற்ற சிலைகளும், நகைகளும், ஆபரணங்களும் மிக எளிதாக கொள்ளையடிக்கப்படுவதும் தொடர்கின்றன.
1981 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சட்டமன்றத்திலும் வெளியிலும் கீழ்க்கண்டவற்றை வலியுறுத்தினேன்.
"கோவில்களில் உள்ள நகைகள், ஆபரணங்கள் ஆகியவற்றின் தற்போதைய மதிப்பு என்ன- அவற்றின் பழமை மதிப்பு என்ன- என்பதைத் தக்க நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு பதிவேடுகளில் பதியப்பட வேண்டும். அத்துடன் அவைகள் அனைத்தும் பல கோணங்களில் வண்ணப்படங்களாக எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கோயில்களில் ஒரு பிரதியும், அறநிலைய ஆணையாளரிடம் ஒரு பிரதியும் அளிக்கப்பட வேண்டும். பல கோவில்களில் நகைகளும், சிலைகளும், ஆபரணங்களும் களவு போனபோது அவற்றின் மதிப்பீடுகள் சரியான முறையில் பதிவு செய்யப்படாத காரணத்தினால் திருடு போன பொருட்களை திரும்பப் பெறுவதில் பல இடையூறுகள் ஏற்பட்டன.
1980ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள ஐம்பொன் சிலைகளைப் பாதுகாப்புத் துறையின் துணையுடன் அடையாளப் பதிவு செய்யும்படி இந்திய அரசு ஆணையிட்டது. ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு முன்வரவில்லை. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான சிலைகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் களவுபோயுள்ளன.
மேற்கு நாடுகளில் உள்ள அரசு அருங்காட்சி அலுவலகங்களிலும், தனியார் அருங்காட்சி அலுவலகங்களிலும் தமிழகத்தைச் சேர்ந்த கற்சிலைகளும், ஐம்பொன் சிலைகளும் கணக்கில்லாமல் காட்சி தருகின்றன. இவை எப்படி அங்கு சென்றன- கிராமப்புறங்களில் உள்ள பாதுகாப்பற்ற கோயில்களில் இவைகளைத் திருடுவது எளிதாகிறது. அறங்காவலர்கள், அதிகாரிகள் ஆகியோருக்குத் தெரியாமல் இந்த திருட்டு நடைபெற்றிருக்க முடியாது.
இந்து அறநிலையச் சட்டத்தின் 33ஆவது பிரிவு 3ன் படி கோவில்களுக்குச் சொந்தமான பணமோ, நகைகளோ, சிலைகளோ திருடப்பட்டிருந்தால் தொடர்பான
அறங்காவலர்களிடமிருந்து அவற்றைத் தண்டும் அதிகாரம் ஆணையாளருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை எந்த அறங்காவலரின் மீதும் எவ்வித
நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
கோவில்கள் உள்பட இந்து அறநிலையங்கள் நிருவகிக்கப்படும் முறை குறித்து ஆராய்வதற்காக 1960ஆம் ஆண்டு இந்திய அரசு சி.பி. இராமசாமி ஐயர் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. திருச்செந்தூர் கோயில் தணிக்கை அதிகாரி படுகொலை செய்யப்பட்ட போது தமிழக அரசினால் அமைக்கப்பட்ட நீதியரசர் பால் ஆணையம், கோவில் நகைகள் ஆபரணங்கள் சிலைகள் ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார் ஆணையம் ஆகிய ஆணையங்கள் கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பது குறித்து மிக விரிவாகவும் தெளிவாகவும் பல பரிந்துரைகளை அளித்துள்ளன. ஆனால் இவற்றில் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.
களவுபோன கோயில் சிலைகளை மீட்கும் பணியில் திறமையுடன் செயல்பட்டு பல சிலைகளை மீட்ட காவல் துறையின் உயர் அதிகாரி பொன். மாணிக்கவேல் அவர்களைப் பாராட்டுவதற்குப் பதில் திடீரென மாற்றப்பட்டதும், பின்னர் உயர்நீதிமன்றம் தலையிட்டு சிலை மீட்புப் பணியை அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என ஆணைப் பிறப்பித்ததும் தமிழகக் கோவில்களின் நிருவாகத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தோலுரித்துக் காட்டியுள்ளன.
தமிழ்நாட்டுக் கோயில்கள் வழிபடும் தலங்கள் மட்டுமல்ல கோயில்களும், சிற்பங்களும், சிலைகளும், நகைகளும், ஆபரணங் களும், வாகனங்களும் தமிழ்ம க்களுக்கேயுரிய விலை மதிப்பற்ற கலைக் கருவூலங்களாகும். நம்முடைய முன்னோர்கள் அவற்றைப் பத்திரமாகப் பாதுகாத்து நம்மிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நாம் அவற்றைப் பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது. இதை உணர்ந்து மக்கள் செயல்பட முன்வந்தால் ஒழிய கோவில் கொள்ளைகள் தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது.
----- பழ. நெடுமாறன் (தினமணி) 10-10-17
The biggest communication problem is do not listen to understand- we listen to reply
"The degree of freedom from unwanted thoughts and the degree of concentration on a single thought are the measures to gauge spiritual progress."
மணி வாசகரைப் பற்றி சில வாசகங்கள் 5 J.K. SIVAN
பிட்டளித்த வந்தியும் பெருவெள்ளமும்
மாணிக்க
வாசகரை சுடுமணலில் நிறுத்தி வைத்து காவல் காத்த அரசனின் சேவகர்கள் ஒரே
ஓட்டமாக ஓடிவிட்டார்கள் ஆளுயரத்திற்கு ஓ வென்று பேரிரைச்சலுடன் தூரத்தில்
வைகையில் வெள்ளம் வந்துகொண்டிருந்ததே. வாதவூரரும் ''பெருந்துறை ஈஸா
இதுவும் உன் விளையாட்டா?'' என அதிசயித்து மதுரை சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்
அவனைத் தேடிச் சென்றார். மக்கள் பீதி அடைந்தார்கள். எங்கும் கலவரம்.
அவசரமாக மூட்டை முடிச்சோடு மக்கள் வெளியேறினார்கள்.
பாண்டியன்
பதற்றம் அடைந்தான். எதற்கு எப்படி அகாலத்தில் மழை காலம் இல்லாதபோது,
திடீரென்று வைகையில் வெள்ளம்? இதுவும் வாதவூரரின் மாயாஜாலமா மந்திரமா? எது
வானாலும் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகும் வெள்ளம் சேதம் விளைவிக்காமல்
அதை எப்படி கரை புரளாமல் தடுப்பது. அனைவருக்கும் அவசர கட்டளை. ஆற்று
வெள்ளம் கரைபுரளாமல் உடனே வீட்டுக்கு ஒருஆள் வந்து கரையை மண் கொட்டி பலப்படுத்தவேண்டும்.
அதேபோல்
அனைவரும் வந்துவிட்டார்கள். வைகையில் நீர் வெள்ளம். கரைகளில் ஜன
வெள்ளம். வைகைக்கரை உடையாமல் மண் கொட்டி பலப்படுத்துகிறார்கள். அரசன்
சுற்றி சுற்றி வந்து மேற்பார்வை பார்க்கிறான்.
வந்தி
எனும் ஒரு பிட்டு சுட்டு விற்கும் குழவி யாருமற்ற அனாதை. மதுரை சொக்கனிடம் பக்தி.
தினமும் முதல் பிட்டு சுட்டு அதை அவனுக்கு மனதார நைவேத்தியம் செய்பவள். அன்றும்
அதுபோல் முதல் பிட்டு சூடாக எடுத்துக்கொண்டு ''சொக்கா, இது என்ன கூத்து.
வைகை பெருக்கெடுத்துவிட்டதாம். ராஜா வீட்டுக்கு ஒரு ஆள் கண்டிப்பாக
வரவேண்டும் என்கிறான். தள்ளாத கிழவி நான் சென்று உதவ வேண்டுமே. என்
பிழைப்பில் விழுந்த மண்ணை தான் வைகையில் கொண்டு கொட்ட வேண்டும். பிள்ளையா
குட்டியா யார் இருக்கா எனக்கு? ''
என்ன செய்வது என்று கலங்கி வழக்கமாக பிட்டு சுடும் மரத்தடிக்கு
வந்து அமர்ந்தாள். எதிரே அடுப்பில் பிட்டு சூடாக ஆவியில் வேகும்போது மனம் ஆள்
தேடியது.
''ஆத்தா'' -- எதிரே ஒரு இளைஞன் கூப்பிட்டவாறு நின்றான்.
''யாருப்பா நீ ?
''ஊரிலே எல்லோரும் வைகைக்கரையிலே இருக்காங்க. நீ மட்டும் இங்கே இருக்கிறே?'''
'' நானே அடுப்பை அணைச்சுட்டு வைகைக்கரை போவணும் . ராஜா வூட்டுக்கு ஒரு ஆள் வரணும்னு கட்டளை தண்டோரா போட்டுட்டாங்களே. ''
''எதுக்கு நீ போறே, உனக்கு பதிலா உன் வீட்டு ஆளா நான் போறேன்'' என்ன கொடுப்பே?''
''என்கிட்டே காசு பணம் இல்லியேடா பையா. உனக்கு நான் என்னத்தை கொடுக்கிறது?''
''சரி ஒண்ணு செய். நீ சுட்ட பிட்டு கொஞ்சம் பொட்டலம் கட்டிக் கொடு. அது போதும். நான் உனக்கோசரம் போய் மண்ணு கொட்டறேன்''.
சுற்றி
சுற்றி வந்து மேற்பார்வை பார்த்த பாண்டியன் ஒரு இளைஞன் வேலை செய்யாமல்
அமர்ந்துகொண்டு
பிட்டு தின்பாதை பார்த்தான். அரசனைப் பார்த்த அவன் ஏதோ கொஞ்சம் மண்ணை
கொண்டு கொட்ட கிளம்புவதை கவனித்ததும் கடும் கோபம் கொண்டான். அவன் நின்ற
இடம் ஆறு
எந்த நேரமும் கரையை உடைந்துவிடும் போல் இருக்கவே
''என்னடா நீ வேலை செய்யாமல் நிற்கிறாய் என்று கையில் வைத்திருந்த பிரம்பினால் ''பளீர்'' என்று அந்த இளைஞன் முதுகில் சாத்தினான்.
''ஆ ''. அந்த இளைஞன் தனது பங்குக்கு போட்ட கூடை மண்ணால் வைகை பெருக்கு முற்றிலும் நின்றது.
அதே
நேரம் அனைவரும் முதுகில் பாண்டியனின் பிரம்படி கொடுத்த ''சுளீர்''வலியில்
துடித்தனர். சகல ஜீவராசிகளும் வலியில் கத்தும் சப்தம் ஏகோபித்து கேட்டது.
பாண்டியனும் கூட கத்தினான். சொக்கனின் முன்னே நின்று பிரார்த்தித்த
மாணிக்கவாசகர் முதுகிலும் அடி.! ''சர்வேசா சம்போ மஹாதேவா'' என்று உரக்க
கூவினார்.
சிவபக்தனான பாண்டியனுக்கு முதுகில் அடிபோலவே மனத்திலும்
''சொரேர்'' என்று உண்மை புரிந்தது. வாதவூரர்க்கு தான் இட்ட தண்டனையே
வைகை வெள்ளத்துக்கு காரணம். அந்த மாயக்கார இளைஞனும் ஒருவேளை மதுரை
சுந்தரேஸ்வரரோ?
அவன் காதில் ஒரு குரல் தெளிவாக அசரீரியாய்
கேட்டது.
'பாண்டியா, நீ கொடுத்த பொற்காசுகள் பெருந்துறையில் எமது பக்தர்கள் வழிபடும் ஆலயத்திற்காக செலவழிந்து உனக்கு ஒரு பெரும்பெயர் புகழ் ஈட்டித்தந்த வாதவூரரை போற்றுவதற்கு பதிலாக குற்றம் சாட்டி வதைத்தாய். உனக்கு புரியவைக்கவே தான் குதிரைகள் நரிகளாயின. வைகை வெள்ளமும் அப்படியே. நீ இன்னுமா அறியவில்லை என் பக்தன் வாதவூரனை? உன் ஆணையை மதித்து என் பக்தை வந்திக்காக நானே மண் சுமக்க வந்தேன்.
பாண்டியன் வந்தியின் குடிசைக்கு ஓடினான். ஒரு விண்ணுலக விமானம் அவளை கைலாயம் அழைத்து சென்றதை அறிந்தான். மணிவாசகரைத் தேடி சொக்கனின் ஆலயத்துக்கு ஓடினான். கண்களில் நீர். கூப்பிய கரங்கள்.. சொக்கா சொக்கா சொக்கா என்று இடைவிடாத அலறல் பாண்டியனின் வாயிலிருந்து விடாமல் ஒலித்தது.
வாதவூரர் காலில் விழுந்து ''என்னை மன்னியுங்கள் ப்ரபோ. மீண்டும் அரசவையில் பொறுப்பேற்று என்னை வழி நடத்துங்கள்'' என்று கெஞ்சினான்''
''அரசே எல்லாம் சிவமயம். அவன் ஆணை என்னை அழைக்கிறது நான் பெருந்துறை செல்கிறேன்.
பெருந்துறையில் மீண்டும் முன்பு அவர் சந்தித்த அதே ''ஆத்மநாத முதியவர்'' வாதவூரரை புன்னைகையோடு வரவேற்றார்.
தொடரும்
சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் -- J.K. SIVAN
என் சிறுவயதில் நான் பார்த்து பிரமித்த ஒருவர் ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர். அவரது குரல் கம்மலாக தான் இருந்தது என்றாலும், அவர் ஒவ்வொருவார்த்தையாக விட்டு விட்டு உ ச்சரித்து, கதை சொல்லும் தோரணை என்னை மயக்கிற்று. ராமாயண மஹாபாரத இதிகாசங்களை புரிந்து கொள்ளும் வயதில்லை அப்போது எனக்கு.
அப்பா அண்ணாக்களோடு நடந்து போவேன். கோடம்பாக்கம் சூளைமேடு, ஆற்காட் ரோட்டிலிருந்து ரயில்வே லைனை கடந்து, தெற்கே பசுல்லா ரோடு கடந்து லைன் ஓரமாக சென்றால் கிரிஃபித் ரோடு வரும். அதில் சாரதா வித்யாலயா பெண்கள் உயர்நிலைப் பள்ளி மைதானம் வரும். அங்கு இல்லாவிட்டால் உஸ்மான் ரோட்டில் இப்போது தி.நகர் பேருந்து நிலையம் அருகே, சற்று முன்னாடி, சிவ விஷ்ணு ஆலயத்திலோ அவரது உபன்யாசம் நடந்து பலமுறை, பல சாயந்திரங்களில் கேட்டிருக்கிறேன். இரவு ஒன்பதுக்கு முடியும். பசியோடு நடந்து சூளைமேடு திரும்புவேன்.
ராஜாஜி வந்து உட்கார்ந்திருக்கிறார். வி.வி. கிரி, ராவல் கிருஷ்ணய்யர், ஜி.என்.பி., ஆனந்தவிகடன் தேவன், கல்கி சதாசிவம், எம்.எஸ். எஸ். அம்மா தம்பதியர் எல்லோரையும் அங்கே பார்த்த ஞாபகம் வருகிறது.
எல்லோரும் தரையில் தான் உட்காருவோம். ஜமுக்காளம் முழுதும் பரவி இருக்காது. துளி கூட அந்த கோவில் மண்டபத்தில் இடம் கிடைக்காது.அவ்வளவு கும்பல். கட்டை குட்டையாக தீக்ஷிதர், பட்டை பட்டையாக விபூதி, உருத்ராக்ஷமாலைகளோடு, குடுமியோடு இருப்பார். சமஸ்க்ரித ஸ்லோகங்கள் வெள்ளமாக அவர் வாயிலிருந்து புறப்பட்டு எல்லோரையும் ஆனந்த பக்தி சாகரத்தில் மூழ்கடிக்கும். அர்த்தங்களை ஜம்மென்று சொல்வார். காட்சிகளை கண்முன்னே கொண்டு நிறுத்துவார். நேரம்போவதே தெரியாது.
இனி அவரைப் பற்றி சில விவரங்கள்.
1903ல் தஞ்சாவூரில் சேங்காலிபுரம் கிராமத்தில் பிறந்தவர். ஸ்ரௌதி.உபன்யாச சக்ரவர்த்தி. அப்பா சுப்ரமணிய தீக்ஷிதரிடம் வேதம் கற்றவர். அக்ஷராப்யாசம் பருத்தியூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரியிடம். மாமனார் கடலங்குடி நடேச சாஸ்திரிகள். வேதங்கள் சாஸ்திரங்கள் தெரிந்துகொண்டது விஷ்ணுபுரம் சுவாமிநாத சாஸ்திரிகள். இவர்தான் பரமாச்சார்யாளுக்கும் குருவாக போதித்தவர்.
தீக்ஷிதரிடம் நான் மயங்கினது நாராயணீயம் உபன்யாசத்தில் தான். கிருஷ்ணனை இளம் வயதில் என் நெஞ்சில் புகுத்திய ஒரு முக்கிய மனிதர் தீக்ஷிதர். இன்றும் கூட தீக்ஷிதரின் நாராயணீய, குருவாயூரப்ப ஸ்லோகங்கள் உலகத்தில் பலராலும் விரும்பிக் கேட்கப்படுகிறதே. அவருக்கென்றே ஒரு தனி குரல், ராகம். காந்தமென கவரும் பக்தி ரசம்.
அனந்தராம தீக்ஷிதர் நிறைய ஸ்லோகங்கள் இயற்றியிருக்கிறார். ''குருவாதபுருஷ பஞ்சரத்னம்.''
பூங்குன்னம் என்ற கிராமத்தில் ஒரு மலையாள பையன். அவனுக்கு விடாமல் தலைவலி. எந்த மருந்தாலும் குணமாகவில்லை. அவன் தாத்தா அவனை குருவாயூருக்கு அழைத்து சென்றார். மூன்று நாள் அங்கே வாசம். பிரார்த்தனை. மேலே சொன்ன ஸ்லோகத்தை விடாமல் பாராயணம் செய்தபின் தலைவலி எங்கே போயிற்று??
அனந்தராம தீக்ஷிதர் உபன்யாசங்கள், ஸ்லோகங்கள், புத்தகங்களாகவும், CD யாகவும் மலிந்து கிடைக்கிறது. அவரது ஜெயமங்கள ஸ்தோத்ரம் என்ற பூஜா விதான புஸ்தகம், இல்லாத பூஜை அறையோ, வீடோ கிடையாது.
தீக்ஷிதரின் மகிஷாசுர மர்த்தினி ஸ்லோகத்தை ''அயிகிரி NANDHINI என்று உரக்க சொல்லிக்கொண்டே தெருவில் ஓடியிருக்கிறேன்.
பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் 66வயதில் சன்யாசம் பெற்று சித்தியடைந்தார். அவரது அதிஷ்டானம் சின்ன திருப்பதியில் சேலம் பட்டணத்தில் இருக்கிறது. யூட்யூபில் அவர் குரல் எப்போதும் கேட்கலாம். அதைமாதிரி குரல் முன்பும் கேட்டதில்லை, இனியும் கேட்கப்போவதில்லை.
அவரது நாராயணீயம் கதையை கொஞ்சம் இத்துடன் இணைத்துள்ள யூ ட்யூபில் கேளுங்கள். https://youtu.be/6dt1XrwAo8k
ஆஹா மனமும் நாவும் இனிக்கும்படியான விஷயத்தை அல்லவோ சொல்ல சொல்கிறீர்கள். இதோ சொல்கிறேன்:
அதோ ஒரு ஆள் மரத்தடியில் பெரிய தாடியோடு உட்கார்ந்து இருக்கிறானே யார் தெரிகிறதா?
தாடியில் முகமே தெரியவில்லையே எப்படி தெரிந்து கொள்வது?
பேர் சொன்னால் புரியுமா?
அப்படி என்ன பிரபல பேர். குப்புசாமியா? கோபாலசாமியா?
இல்லை மிடாஸ்
குடிகாரனா?
இல்லை எதை தொட்டாலும் தங்கமாக்கியவன். அவன் சாப்பிடும் ரொட்டியை தொட்டான். பொன்னாகியது. பெண்ணை தொட்டான் பொன்னாச்சியானாள் .
பிடித்து உள்ளே போட்டுவிடுவார்களே
பரவாயிலேயே. கைகளை வெட்டிக்கொண்டான். இனிமேல் எதுவும் தங்கமாகாதே. யாராவது வருவோர் போவோர் வாயில் ஏதாவது போட்டால் அன்றைய பசிக்கு, இப்படியே காலம் ஓடுமே.
I asked Lord Krishna
to do away with my vices Krishna said:
They are not there for me to take them away. They are there for you to resist
them

I asked Lord Krishna to complete my body - Krishna
said:
Your spirit is complete, your body is only temporary
I asked Lord Krishna to give me patience - Krishna
said:
Patience is a byproduct of difficulties. It is not given but learned
I asked Lord Krishna to give me happiness
Krishna said: I give blessings. Happiness depends upon you
I asked Lord Krishna to free me of pain
Krishna Said: Suffering makes you go far away from this world and brings you nearer to me
I asked Lord Krishna to make my spirit grow
Krishna Said : You have to grow by yourself! But I will prune you to make you bear fruit
I asked Lord Krishna for the things that would make me like life
Krishna Said: I will give you life, so you can enjoy all those things
I asked Lord Krishna to help me LOVE others, like He loves me
Krishna said: .... ohhh, you finally got the idea.......
If you love Krishna, send this message to people who you love and back to the sender who loved you & It will make you feel good.
This will be your day. Don’t throw it away...
May Lord Krishna bless you
Remeber “To the world you may mean just a person, but to a person you may mean the world”