Skip to first unread message

sivan jaykay

unread,
Apr 12, 2023, 7:29:45 PM4/12/23
to amrith...@googlegroups.com


நான்  ஒரு  விளையாட்டு பொம்மை  -   நங்கநல்லூர்  J K SIVAN 

கண்ணனின் பரிசு 

எவ்வளவு சந்தோஷத்தோடு  கிருஷ்ணா,  என்  தாயே, நீ சொல்லும்  கதைகளைக் கேட்டு  மகிழ்வேன் தெரியுமா?
விந்தைவிந்தை யாக எனக்கே - பல  விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப்பாள் என்  கண்ணன் எனும்  தாய். எனக்கு  எத்தனை பொம்மைகள்  தருவாள்,  காட்டுவாள்  தெரியுமா,  சொல்கிறேன் கேளுங்கள்.

சந்திரனென் றொரு பொம்மை - அதில்  தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்;
மந்தை மந்தையா மேகம்  என்று ஒரு  பொம்மை,  - பல வர்ணங்கள்  கொண்டது  அந்த  ''மேக''   மெகா பொம்மை.  கருப்பு,   சிவப்பு,வெள்ளை,ஆரஞ்சு  நீல மேகங்கள். வித வித  உருவங்களில். 
''வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்''  சுகமான  மழையும் தரும்  அது. நீரின்றி  அமையாது உலகம் அல்லவா?  இன்னொரு பொம்மை  அதற்குப்  பெயர்  சூரியன்.
''முந்தஒரு சூரியனுண்டு - அதன் முகத் தொளி கூறுதற்கொர் மொழியிலை யே.''   அப்பப்பா ''  அந்த  சூரிய  பொம்மையின்  ஒளி என்னால் எப்படி  வர்ணிக்க முடியும்.?
கண்ணன் எனும்  என்  தாய்  எனக்கு  விளையாட்டு காட்டி  மகிழ்விக்கும்  மற்றும் சில பொம்மைகளின்  பெயர்  நக்ஷத்ரங்கள்.
''வானத்து மீன்களுண்டு - சிறு மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும். எவ்வளவு  ராத்திரிகள் நான்  அவற்றை முழுவதும்  கண்டு  எண்ணி முடியாது  ஏமாந்திருக்கிறேன்.  ''நான தைக் கணக்கிடவே - மனம்  நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை;
மற்றும்  சில  பொம்மைகளை  என்  தாய்  கிருஷ்ணம்மா   எனக்கு  இந்த உலகில்  விட்டு வைத்திருக்கிறாள்.  அவற்றைக் காணும்போதெல்லாம்  என்  மனம்  என்ன  வியப்படைந்திருக்கிறது.  மலர்ச்சி மனதில்  பரவி இருக்கிறது. அவைகள் மலைகள். காடுகள்,  எங்குமே  நகராது  அங்கேயே  எப்போதும்  இருந்து  மகிழ்த்துபவை. ''கானத்து மலைக ளுண்டு - எந்தக் காலமு மோரிடம்விட்டு நகர்வதில்லை;
உலகத்திலேயே   சிறந்த  மொழி  மௌனம்.  அது  விளக்குவது போல்  எந்த மொழியிலும்  கற்க  முடியாதே.  இதையும் பொம்மையாகத்தான்  என்  தாய்  நீ,  கண்ணா, எமக்கருளியிருக்கிறாய். ''  மோனத்தி லேயிருக்கும் - ஒரு மொழியுலை யாது விளை யாடவருங் காண்''
குழந்தைகள்  மகிழ்வது  பொம்மைகளில் தானே.  நான்  இந்த உலகில்  உன் குழந்தை.  நான் சொன்ன பொம்மைகளைத்  தவிர   இன்னும்  சில நீ  எனக்கு  அருமையாக தந்திருக்கிறாய் என்  கண்ணம்மா.  அவை  நதிகள். ''நல்ல நல்ல நதிகளுண்டு - அவை நாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்; மெல்ல மெல்லப் போயவை தாம்'' ---அவை  மைல்  மைலாக  நீளமாக  ஓடி  கடலில்  விழும்  கடல் இருக்கிறதே  அது  ஒரு   பெரிய அழகிய பொம்மை.---   '' விழும்  விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்; எல்லையதிற் காணுவ தில்லை; - அலை எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்;  ஒ வென்று  பெரும்  சப்தமுடன்  ஒலிக்கும்  அலைகள் ஓயாமல்  கடலில் எழும்பி கரை நோக்கி  ஓடி வந்து  மீண்டும் கடலை நாடி  ஓடும் அழகை, அந்த  இன்னிசையை,   என் சொல்வேன்.
இந்த கடல் பொம்மையை  பாரதியார்  திருவல்லிக்கேணியில்  மரினா  என்கிற  கடற்கரையில்  எத்தனை  மாலைகள், இரவுகள், காலைவேளைகளில்  கண்டு  மகிழ்ந்திருக்கிறார்.  ''ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண்.''   கடலின்  ஒ வென்ற  பெரும் சப்தம்   அவர் காதில்  ப்ரண வஸ்வரூபமாக   ''ஓம்  ஓம்  ஓம் '' என்று  விழுந்ததாம்.  மனம்  ஆனந்தத்தில்  திளைத்ததாம்.''
குழந்தைகளை  எதற்கு   பார்க்  என்று  பசுஞ்சோலைகளுக்கு  கூட்டி செல்கிறோம்?.  குழந்தைகள் கண்டு  களிக்கின்றனரே.  பாரதியாரும் இந்த உலகில்  கண்ணன் அருளால்  தோன்றி  மகிழ்விக்கும்  சோலைகள்  தோட்டங்கள்  தோப்புகள்  காய்  கனி வர்கங்கள்,  புஷ்பங்கள்  பூத்துக் குலுங்குவது  எல்லாம்  கண்டு  மகிழ்கிறார். கை கூப்பி '' கண்ணா, என் தாயே  என்னே உன் கருணை''  என  வணங்குகிறார். ''காவினங் கள் - அங்கு சூழ்தரும் பலநிற மணிமலர் கள் சாலவும் இனியன வாய் - அங்கு தருக்களில் தூங்கிடும் கனிவகை கள்  ஞாலமுற்றிலும் நிறைந் தே - மிக நயந்தரு பொம்மைகள் எனக்கென வே;

 குழந்தைகள்  கேட்குமே   ''இந்த பொம்மை எல்லாம்  எனக்கேவா ?''  என்று,  அது போல்  இது  எல்லாம்  எனக்கே  தந்திருக்கிறாயா  கண்ணா  என்  தாயே  என்று  மகிழ்கிறார். கோலமுஞ் சுவையு முற - அவள் கோடிபல கோடிகள் குவித்துவைத் தாள். ''

தின்றிடப் பண்டங்களும் - செவி தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக்க ளும், ஒன்றுறப் பழகுதற் கே - அறிவுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்; கொன்றிடு மெனஇனி தாய் - இன்பக் கொடுநெருப் பாய் அனற் சுவையமு தாய், நன்றியல் காதலுக் கே - இந்த நாரியர் தமையெனைச் சூழவைத் தாள்.''   நடுவில் ஒரு சந்தேகம்  பாரதிக்கு.   ஏண்டியம்மா  என்  கண்ணம்மா  இத்தனை  அழகாக  விளையாட்டு பொம்மைகள்  எனக்கு கொடுத்தவளே  எனக்கு  காதல்  உணர்வைக் கொடுக்க  என் புத்தியை மயக்க  அழகழகாக   எதற்கு  இந்த  பெண்களைப்  படைத்தாய்?  என்னை  ஆட்டிவைத்து   நீ  பார்த்து  மகிழவா?

சாவி  கொடுத்தால்  ஓடும்  கார்,  பட பட வென்று அடித்துக்கொண்டு நகரும்  டமாரம்,  மணியடிக்கும்  குரங்கு பொம்மை,  தலையாட்டும்  கரடி பொம்மை  அடடா  எத்தனை  பொம்மைகள்  நம் குழந்தைகளுக்கு  வாங்கிக் கொடுத்து  அவர்கள்  மகிழ்ச்சியில் நாமும் மகிழ்கிறோம்.  என்  தாய்  கண்ணம்மா  என்னை மகிழ்விக்க  கலர் கலராய்  எத்தனை வண்ண வண்ண  பரவைகளை, சிறிதும் பெரிதுமாகவும்,   வித வித நிற  உருவம் கொண்ட  மிருகங்களையும்  படைத்திருக்கிறாள்.  zoo  சென்று மகிழாத குழந்தை உண்டா?  ''இறகுடைப் பறவைக ளும் - நிலந் திரிந்திடும் விலங்குகள் ஊர்வனங்கள் அறைகடல் நிறைந்திட வே - எண்ணில் அமைத்திடற் கரியபல் வகைப்பட வே ''.  

இதெல்லாம் தரையில்  தோன்றி  மகிழ்விப்பது  ஒரு புறம்  இருக்கட்டும். தண்ணீரில்  தான்  எத்தனை வகை  உயிர்கள்  படைத்து  என்  பொம்மையாக  என்னை  மகிழ்விக்கிறாய்  கண்ணம்மா.  எண்ணிச் சொல்ல முடியுமா,  மீன்  வகைகளை,  சுராவை, ஆமைகள், திமிங்கிலங்கள்,  நீர் யானைகள்,  அம்மம்மா, போதுமடி  தாயே  என்னால்  சொல்லி  மாளவில்லை.   ''சுறவுகள் மீன்வகை கள் - எனத் தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்; நிறைவுற இன்பம்வைத் தாள்; - அதை நினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை. ''

குழந்தைகளுக்கு  பெரிய  எழுத்தில்  பொம்மை போட்ட  கதைப் புத்தகங்கள்.  ஒவ்வொருபக்கமும்  கனத்த  அட்டையோடு  மழ மழவென்று  வண்ணத்தோடு  இருக்குமே  ஆசையாக  சிறுவயதில் நண்பர்கள்  வீட்டில் சென்றுதான்  பார்த்திருக்கிறேன். என் வீட்டில் அதெல்லாம்  ஏது?  இவையெல்லாம்  குழந்தைக்கு  கல்வியறிவு ஞானம்  ஊட்டத்தானே.   எனக்கும் இந்த  உலகில்  எத்தனை எத்தனை ''சாத்திரம் கோடி வைத்தாள்; - அவை தம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத்தாள்; ஜோக்  புத்தகம் போல ''வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே கோத்தபொய் வேதங்களும் - மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்
மூத்தவர் பொய்ந்நடை யும் - இள மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்;''.  நீ  தராதது  ஒன்றுமே இல்லையடி என் தாயே. கிருஷ்ணம்மா.   ''வேண்டிய கொடுத்திடு வாள்; - அவை விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்; ஆண்டருள் புரிந்திடு வாள்; -எப்படி  அருச்சுனனைக் கண்ணும் கருத்துமாக  கவனித்து  மகிழ வைத்தாயோ  அது போல்  கிருஷ்ணம்மா   எனக்கு  வேண்டியதையெல்லாம்  பார்த்து பார்த்து  அளித்திருக்கிறாய்  இந்த  மா பெரும்  பூமியில், ஆகாயத்தில், எங்கு நோக்கினும்  அங்கே ''அண்ணன் அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்; யாண்டுமெக் காலத்தி னும் - அவள் இன்னருள் பாடுநற் றெழில்புரி வேன்; நீண்டதொர் புகழ்வாழ் வும் - பிற நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள்''
  இவ்வளவும்  நீ  எனக்குத் தந்திருக்கிறாயே  என்  கிருஷ்ணம்மா,  நான் உனக்கு  என்ன  கைம்மாறு  செய்வேன். ஒன்றுமே செயப்போவதில்லை,  பேசாமல்  இரு கை கூப்பி  என்னை என் மனதில்  நிறைத்து  ''ஹரி ஹரி ஹரி  என்று  சுருக்கமாக  உன் பெயரை நினைப்பேன், பாடுவேன், பேசுவேன், கேட்பேன்.

 

sivan jaykay

unread,
Apr 12, 2023, 7:29:54 PM4/12/23
to amrith...@googlegroups.com
ஸௌந்தர்ய லஹரி  -  48/103    நங்கநல்லூர்  J K  SIVAN 

48. இரவும் நீ  பகலும் நீ எந்நேரமும் நீ.

अहः सूते सव्यं तव नयनमर्कात्मकतया त्रियामां वामं ते सृजति रजनीनायकतया ।
तृतीया ते दृष्टिर्दरदलितहेमाम्बुजरुचिः समाधत्ते संध्यां दिवसनिशयोरन्तरचरीम् ॥ ४८॥

Ahah sute savyam tava nayanam ark'athmakathaya Triyamam vamam the srujati rajani-nayakataya;
Trithiya the drishtir dhara-dhalita-hemambuja-ruchih Samadhatte sandhyam divasa-nisayor antara-charim

அஹஃ ஸூதே ஸவ்ய தவ னயன-மர்காத்மகதயா த்ரியாமாம் வாமம் தே ஸ்றுஜதி ரஜனீனாயகதயா |
த்றுதீயா தே த்றுஷ்டி-ர்தரதலித-ஹேமாம்புஜ-ருசிஃ ஸமாதத்தே ஸன்த்யாம் திவஸர்-னிஶயோ-ரன்தரசரீம் || 48

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, உனக்கு  வலது கண் சூரியன், இடது கண் சந்திரன். அதனால்  நீ  சூரியன் ஒளியால்  பகலை அளிக்கிறாய், சந்திரனின் சக்தியால்  இரவில் நிலவைப் பொழிகிறாய், முக்கண்ணி என்பதால் இரண்டுக்கும் நடுவில் அந்தி, அதிகாலை அருணோதய ஒளியும், அக்னியையும்  தருகிறாய். அம்மா.  இன்னொரு   உள் அர்த்தத்தில் இது  மூன்று நிலைகளான விழிப்பு, தூக்கம், கனவு நிலையை குறிக்கிறது. எப்போதும் இருந்து காப்பவள் அம்பாள். 


sivan jaykay

unread,
Apr 12, 2023, 7:29:54 PM4/12/23
to amrith...@googlegroups.com
ஸௌந்தர்ய லஹரி  -  49/103    நங்கநல்லூர்  J K  SIVAN

49.  விழியே  கதை எழுது.

विशाला कल्याणी स्फुटरुचिरयोध्या कुवलयैःकृपाधाराधारा किमपि मधुराभोगवतिका ।       
अवन्ती दृष्टिस्ते बहुनगरविस्तारविजया   ध्रुवं तत्तन्नामव्यवहरणयोग्या विजयते ॥ ४९॥

Vishala kalyani sphuta-ruchir ayodhya kuvalayaih Kripa-dhara-dhara kimapi madhur'a bhogavatika;
Avanthi drishtis the bahu-nagara-vistara-vijaya Dhruvam tattan-nama-vyavaharana-yogya vijayate

விசாலா கல்யாணீ ஸ்புட-ருசி-ரயோத்யா குவலயை: க்ருபாதாராதாரா கிமபி மதுரா ஆபோகவதிகா I
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுனகர-விஸ்தார-விஜயா  த்ருவம் தத்தந்நாம-வ்யவகரண-யோக்யா விஜயதே II

அம்பிகே, உன்  விசாலமான  கண்கள்  மங்களகரமாகவும் மலர்ந்தும்  பிரகாசிப்பதாலும்   இணையற்ற கருணை நிறைந்தவை.  வர்ணிக்க முடியாத இனிமையும்  அழகும் கொண்டவை. ஆழங்காண முடியாதஅன்பும்  கருணையும் கொண்டவை.  ரக்ஷிப்பவை.  பல நகரங்கள்  உன் கண்களின்  தன்மையை பிரதிபலிப்பவை.  இதோ சில பழைய ராஜ்ய தலை நகரங்கள்: 

வைசாலி நகரம்:   உன்  மலர்ந்த விசாலமான  பார்வையை குறிப்பது.
கல்யாணீ  நகரம்:  உன்  கண்களில் தோன்றும்  ஆச்சரியத்தைக் காட்டுவது
அயோத்யா:   உன் கண்களின் உள்ள  பாசத்தை, காமத்தை உண்டாக்குவது
தாரா:   என்பது உன் ஆலஸ்யத்தைக் காட்டுவது
மதுரா:   உன் கண்களில் தோன்றும் ஸஞ்சலமானது
போகவதீ:  உன் கண்களில் தோன்றும் பிரியத்தை  குறிப்பது. 
அவந்தீ:  உன் கண்களில் காணும் மயக்கம். 
விஜயா :  உன் மூடிய  பாதி விழிகள். 

sivan jaykay

unread,
Apr 12, 2023, 7:30:16 PM4/12/23
to amrith...@googlegroups.com
பாலமுகுந்தாஷ்டகம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

உள்ளம் கொள்ளை போகுதே..

கேரளத்தில் குருவாயூரில் இன்றும் நாம் தரிசித்து மகிழும்  குட்டி கிருஷ்ணன்,  குருவாயூரப்பனின், பக்தர்களில் ஒருவர்  வில்வமங்களத்து சாமியார்.  எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிருஷ்ண பக்தர். அவர் எழுதிய சுவடிகளில் ஏதோ ஒன்று  வங்காளத்தில்  உதித்த  சைதன்ய பிரபு,  ஆந்திரா வந்தபோது கிடைத்தது. ஸமஸ்க்ரிதம்  என்பதால் அதன் ருசி உணர்ந்து சிலரை திருவனந்தபுரம் அனுப்பினார்.   அப்படி கிடைத்தது தான்  கிருஷ்ணகர்ணாம்ருதம்.

''டேய்  என்னோடு வா'' என்று  பில்வமங்கள் சாமியார் ( லீலா சுகர்  என்றும் பலருக்கு அவர் அறிமுகம்) கூப்பிட்டால் குருவாயூரப்பன் அவர் பின்னாலேயே போவான்.  இந்த சுவாமியார் எழுதியது தான் கிருஷ்ண கர்ணாம்ருதம்.  இன்றும்  பலரால் பாடப்பட்டு வரும் ஸ்லோகங்கள் அவர் இயற்றியவை.  300க்கும் மேலே. அவரது பாடல்களில்  கிருஷ்ணனை பாலக்ரிஷ்ணனாகவும்  வாலிப கிருஷ்ணனாகவும் காண்கிறோம்.  கிருஷ்ண கர்ணாம்ருதம் பாடல்களை பின்னர் அறிவோம். அதற்கு முன்  இந்த  குட்டி  எட்டு  ஸ்லோகங்கள் கொண்ட  பால முகுந்தாஷ்டகம் தெரிந்து கொள்வோம். 

करारविन्देन पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तम् ।
वटस्य पत्रस्य पुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥१॥

Kara-Aravindena Pada-Aravindam Mukha-Aravinde Vi-Niveshay-Antam |
Vattasya Patrasya Putte Shayaanam Baalam Mukundam Manasaa Smaraami ||1||

கராரவிந்தேன பதாரவிந்தம் முகாரவிந்தே விநிவேசயந்தம் |
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||

குட்டி கிருஷ்ணனை நினைத்தால் அவன் சிவந்த தாமரைப் பாதங்கள் தான் நம் முன் தோன்றுகிறது.பிஞ்சு கரங்களால் தனது கால் கட்டைவிரலை வாயில் வைத்து சுவைக்கும்  ஆலிலை கிருஷ்ணன் பார்த்திருக்கிறீர்களா? வடபத்ரசாயி என்று  ஸமஸ்க்ரிதத்தில்  ஆலிலைகிருஷ்ணனுக்கு பெயர். 

संहृत्य लोकान् वटपत्रमध्ये  शयानमाद्यन्तविहीनरूपम् ।
सर्वेश्वरं सर्वहितावतारं  बालं मुकुन्दं मनसा स्मरामि ॥२॥

Samhrtya Lokaan Vatta-Patra-Madhye Shayaanam-Aady[i]-Anta-Vihiina-Ruupam |
Sarve[a-Ii]shvaram Sarva-Hita-Avataaram Baalam Mukundam Manasaa Smaraami ||2||

ஸம்ஹ்ருத்ய லோகான் வடபத்ரமத்யே சயானமாத்யந்த விஹீனரூபம் | ஸர்வேச்வரம் ஸர்வஹிதாவதாரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||

மஹா பிரளயத்தின் பொது சர்வ ஜீவராசிகளும் மறைந்தபோது ஆலிலையில் மிதந்துவந்தவன் என்று சொல்வார்கள். உலகத்தையே மீண்டும் ஸ்ரிஷ்டித்தவன். அவன் ஆதி அந்தமில்லாதவன்.  சர்வ லோக நாயகன். எந்தனுள்ளம் கொள்ளை கொண்டவன்.

इन्दीवरश्यामलकोमलाङ्गं इन्द्रादिदेवार्चितपादपद्मम् ।
सन्तानकल्पद्रुममाश्रितानां बालं मुकुन्दं मनसा स्मरामि ॥३॥

Indiivara-Shyaamala-Komala-Anggam Indra-[A]adi-Deva-Arcita-Paada-Padmam |
Santaana-Kalpadrumam-Aashritaanaam Baalam Mukundam Manasaa Smaraami ||3||

இந்தீவரச்யாமள கோமளாங்கம் இந்த்ராதி தேவார்ச்சிதபாதபத்மம் |
ஸந்தான கல்பத்ருமமாச்ரிதானாம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||


இந்த குட்டிப்  பையன் கருப்பன், கருநீல வர்ணன்.  கார்மேகவண்ணன்.  மெத்து மெத்து என்று இருப்பவன்.  இந்திராதி தேவர்கள் சரணடைந்து பணிந்து வணங்கும் அந்த சின்னஞ்சிறு பதங்கள்  பார்க்கத்தான் சின்னவை.  மூன்று உலகத்தையும்  இரண்டு அடிகளில்  அளக்க வல்லவை. கேட்ட வரம் தருபவை.

लंबालकं लंवितहारयष्टिं शृङ्गारलीलाङ्कितदन्तपङ्क्तिम् ।
बिंबाधरं चारुविशालनेत्रं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥४॥

Lamba-Alakam Lamvita-Haara-Yassttim Shrnggaara-Liila-Angkita-Danta-Pangktim |
Bimba-Adharam Caaru-Vishaala-Netram Baalam Mukundam Manasaa Smaraami ||4||

லம்பாலகம் லம்பிதஹாரயஷ்டிம் ச்ருங்கார லீலாங்கிததந்தபங்க்திம் |
பிம்பாதரம் சாருவிசாலநேத்ரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||

உருண்டு திரண்டு, சுருண்ட  மெல்லிய   நீண்ட  கேசங்கள் கொண்டவன் அந்த அழகன்.  அழகிய வனமலர்கள் தொடுத்த மாலை அணிந்தவன்.  முத்துப்போல  பல்லழகன். கோவைக்கனி இதழ்களும் அலைபாயும்  நீலோத்பல  விழிகளும் கொண்டவன்.   இவனை  மனம் நினைக்காமல் இருக்க முடியுமா?

शिक्ये निधायाद्य पयोदधीनि बहिर्गतायां व्रजनायिकायाम् ।
भुक्त्वा यथेष्टं कपटेन सुप्तं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥५॥

Shikye Nidhaaya-Adya Payo-Dadhiini Bahir-Gataayaam Vraja-Naayikaayaam |
Bhuktvaa Yathessttam Kapattena Suptam Baalam Mukundam Manasaa Smaraami ||5||

சிக்யே நிதாயாத்யபயோததீநி பஹிர்கதாயாம் வ்ரஜநாயிகாயாம் |
புக்த்வா யதேஷ்டம் கபடேன ஸுப்தம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி II


திருடன் அவன். மனமாகிய வெண்ணை திருடி.  உறியில் சட்டியில் திருடிய வெண்ணை  நம் இதயத்தை கொள்ளை கொள்வதை குறிக்கிறதோ.  அதனால் தான் அவனை  உள்ளங்கவர் கள்வன் என்கிறோமோ? 
அவனுக்கு அவன்
 உடல் மட்டும் நிழல் அல்ல.  வ்ரஜ பூமியில் வசித்த அனைத்து  கோபியரும் தான். அவனை இணை பிரியாதவர்கள். ஆயர்பாடி மாளிகையில் தூங்குவது போல் நடிப்பவன்.

कलिन्दजान्तस्थितकालियस्य फणाग्ररङ्गे नटनप्रियन्तम् ।
तत्पुच्छहस्तं शरदिन्दुवक्त्रं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥६॥

Kalinda-Ja-Anta-Sthita-Kaaliyasya Phanna-Agrar-Angge Nattana-Priyantam |
Tat-Puccha-Hastam Sharad-Indu-vaktram Baalam Mukundam Manasaa Smaraami ||6||

களிந்தஜாந்தஸ்தித காளியஸ்ய பணாக்ரரங்கே நடனப்ரியந்தம் |
தத் புச்சஹஸ்தம் சரதிந்துவக்த்ரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||


யமுனையில்,  காளிந்தி நதி பிரதேசத்தை ஆக்கிரமித்த  கொடிய விஷம்கொண்ட  காளிங்கன் சிரத்தில் குதித்து நடமாடி, அவன்  தவறு செய்தாலும் அவனைக் கொல்லாமல்  உயிர் பிச்சை அளித்து அப்புறப்படுத்தியவன்.  சிறிய  ஒரு கையால் காளிங்கன் வால்  நுனியை பிடித்துக் கொண்டு  ஒரு கால் தூக்கி   படமெடுத்து ஆடும் காளியன் தலையில்  பால  கிருஷ்ணன் நிலவொளி வீசும்  வதனத்தில் ஆனந்த  புன்முறுவலுடன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் காட்சி காளீய  நர்த்தனம் என்று நிறைய சிலைகளாகவும், படங்களாகவும்  பார்த்ததெல்லாம் இதோ வரிசையாக கண் முன் தோன்றுகிறது.

उलुखले बद्धमुदारशौर्यं उत्तुङ्गयुग्मार्जुनमङ्गलीलम् ।
उत्फुल्लपद्मायतचारुनेत्रं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥७॥

Ulukhale Baddham-Udaara-Shauryam Uttungga-Yugma-Arjunam-Angga-Liilam |
Utphulla-Padma-[A]ayata-Caaru-Netram Baalam Mukundam Manasaa Smaraami ||7||

உலூகலே பத்தமுதாரசௌர்யம் உத்துங்க யுக்மார்ஜுன பங்கலீலம் |
உத்புல்ல பத்மாயத சாருநேத்ரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||


விஷமம் தாங்கமுடியவில்லை என்று அன்னை யசோதை  அவனை ஒரு கல் உரலோடு கயிற்றால் பிணைத்து வயிற்றில் கட்டியபோது அந்த கட்டுண்ட மாயன் கண்களில் ஜலம்  ததும்ப அன்னையிடம் கட்டுண்ட காட்சி மறக்க முடியுமா? அதையே  சாக்காக வைத்தல்லவோ  குபேரனின் புத்திரர்கள்  நளகூபன், மணிக்ரீவன் ஆகியோருக்கு  சாப விமோசனம் அருளினான்.  இரு மருதமரமாக நின்ற அவர்களுக்கிடையே  உரலோடு சென்று  மரங்களை சாய்த்து அவர்களை விடுவித்து விண்ணுலகுக்கு அனுப்பினான். அடே பாலமுகுந்தா நீ படே ஆள்.

आलोक्य मातुर्मुखमादेण  स्तन्यं पिबन्तं सरसीरुहाक्षम् ।
सच्चिन्मयं देवमनन्तरूपं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥८॥

Aalokya Maatur-Mukham-Aadenna Stanyam Pibantam Sarasii-Ruha-Akssam |
Sac[t]-Cinmayam Devam-Ananta-Ruupam Baalam Mukundam Manasaa Smaraami ||8||

ஆலோக்ய மாதுர்முகமாதரேண ஸ்தன்யம் பிபந்தம் ஸரஸீருஹாக்ஷம் | 
ஸச்சின்மயம் தேவமனந்தரூபம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி II

இதோ  ஒன்றுமறியாத பாலகனாக, தாய் மடியில் படுத்து  அவள் பாலூட்ட  சுவைத்து ருசித்து குடிப்பவனைப் பாருங்கள். தாமரைத் தடாகத்தில் மலர்போல் விழிகள். காக்கும் தெய்வமே  நின்னைச் சரணடைந்தேன்.


sivan jaykay

unread,
Apr 12, 2023, 7:30:40 PM4/12/23
to amrith...@googlegroups.com
பெற்றோருக்கும் மற்றோருக்கும்.     -   நங்கநல்லூர்   J K  SIVAN 

குழந்தைகள்  தெய்வ ஸ்வரூபங்கள்.  நல்லது எது  தீயது எது, கெட்டது  எது என்று தெரியாது. இந்த உலகத்தில் அவர்கள் வளர்ந்து வாழ  சில  விஷயங்களை அவர்கள்  தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.  பெற்றோரும் குழந்தைகளை வளர்க்கும் மற்றோரும் இதை உணர்ந்து தக்க காலத்தில் குழந்தைகளுக்கு இதை எல்லாம் உணர்த்த வேண்டியது கட்டாயமாகிறது.
பிறர் தொடுவதில் எது நல்ல தொடல் , எது தப்பான தொடல்    எது  Good touch, bad touch  என்பதை  குழந்தைகளுக்கு  சொல்லிக் கொடுங்கள்.
மேலாடையின்றியோ, ஆடையே இன்றியோ குழந்தைகள்  பெற்றோர்கள் கண்ணுக்கு  குழந்தையாய் தெரியலாம்,
உலகத்தில் நமது சமூகத்தில் சில விஷ, விஷமக்  கண்களுக்கு கொண்டவர்கள்  இருக்கிறார்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும்.   நிறைய  துர்பாக்கிய சம்பவங்கள் பத்திரிகைகள், வாட்ஸாப்ப்,  யூ ட்யூப்  மூலம் பரவி வருவதை மறக்கக் கூடாது. 
குழந்தைகளை  வெளியே  எங்கும் தனியே கடைக்கோ யார் வீட்டுக்கோ அனுப்பும் போது கவனம் ரொம்ப  தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை. ஆபத்து  எந்த நேரமும் எந்த ரூபத்திலும் நேரலாம்.  
 பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் குழந்தைகளை அனுப்பும்போது தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும்  தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட தெரியவேண்டும்.   அந்த . வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கம்  பற்றியும்  விவரங்கள் சேகரித்து வைத்திருக்க வேண்டும்.  சந்தேகமாக இருந்தால் குழந்தைகளை அவர்களோடு அனுப்பவே கூடாது. 
ஆட்டோ ரிக்ஷா மற்றும்  சில  வாகன டிரைவர்கள்  பொதி மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து வண்டியில் ஏற்றுக்கொள்வதும்,  மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத  இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கி
 றது.  பணத்துக்காக  குழந்தைகளை பலி  கொடுக்க வேண்டுமா? 
யார் கூப்பிட்டால் போக வேண்டும், தெரிந்தவரோ, தெரியாதவரோ யார்  எதைக்  கொடுத்தால் வாங்க வேண்டும்
என்று குழந்தைகளுக்கு தெளிவாக  புரியும்படி  எடுத்துச் சொல்லவேண்டும். 
குழந்தைகள் சட்டையில், பாக்கெட்டில்  வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலை பேசி எண்கள்  கட்டாயம்  வைத்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கு அதைச் சொல்ல பழக்க வேண்டும். 
இன்னொரு முக்கியமான  விஷயம் .  எந்த குழந்தையையும் மற்ற குழந்தையோடு ஒப்பிட்டு பேசக்கூடாது. வயது வித்தி யாசம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை,  ஏழை பணக்கார வித்யாசம் குழந்தை மனதில் வரக்கூடாது. 

எப்போதும் நமது விருப்பத்தை குழந்தை மேல்  திணிப்பது ரொம்ப தப்பு.  வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது,  யு ட்யூப் சேனலில் பெரிதாக,   வன்முறை, காதல், கொலை,  சண்டை  களவு  காட்சிகள் பெரிதாக சப்தமாக  போடாதீர்கள். அவற்றை குழந்தைகள் பார்க்க கூடாது.   எப்போதும் சீரியல்களில் மூழ்காமல்  குழந்தைகளுக்கு பிடித்த, அவர்கள் ரசிக்கும் காட்சிகள்  பார்க்கலாம். பொதுஅறிவு பெருகும் நிகழ்ச்சி, சம்பவங்களை காட்டலாம். 
குழந்தைகளிடம் தினமும்  நிறைய  பேச வேண்டும், ஆடவேண்டும், பாடவேண்டும். அவர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்து ரசிக்க வேண்டும். நம்மை நண்பனாக ஏற்க அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். 
குழந்தைகள் செய்யும்  தவறுகளை தன்மையுடன் கோபமில்லாமல்  சிரித்துக்கொண்டே  திருத்துங்கள், தண்டனை பயமுறுத்தல் வேண்டாம். 
பள்ளிக்கூடம் செல்லும்போதும், திரும்பி வரும்போது ஆவலுடன், ஆசையோடு சிரித்து  அவர்களோடு மகிழ வேண்டும். 
CHILDREN  ARE  MOULDED  BY PARENTS   நம்மை அட்டை காபி அடித்து தான் நம் குழந்தைகள் வளர்கிறார்கள். நாம் ஜாக்கிரதையாக நல்ல முன்மாதிரியாக நடந்துகொள்ளவேண்டும்.  பொறுமை அவசியம். 
படிப்பு என்பது அடிப்படை, ஆனால் அதை விட  ரொம்ப முக்கியம் அவர்கள் குணம், பண்பாடு, ஒழுக்கம். பக்தி அதில் கவனம் வேண்டும். அது தான் பிற்காலத்தில் குழந்தைகளின் வாழ்வை பெருமையாகும், சீராக்கும், பாராட்டுதல் பெற வைக்கவும்.
வெறும்  மொபைல், கம்பியூட்டர்   tv  games  வேண்டாம்.  குழந்தைகளின்  கண்ணையும்  புத்தியையும் கெடுத்துவிடும்.  ஓடி விளையாடு பாப்பா .அவசியம்.   பார்க், வீட்டின் மொட்டை மாடி, மற்றும் மைதானங்களில் மற்ற குழந்தைகளோடு விளையாட பழக்க வேண்டும். 
குழந்தைகள் கேள்வி  எளிதில் பதில் சொல்ல முடியாதவை. வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள். பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தப்பாக சொல்லி தராமல் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லி முதலில் நாம் பதில் தெரிந்து கொள்வோம். 
ஒருபோதும் "ச்சீ வாயை மூடு. பேசாதே"தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களை அடக்கவே கூடாது. எரிச்சல் வேண்டாம்.  ஆர்வம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விடும். 
 பசி என்று குழந்தை எப்போது சொன்னாலும்  ஏதாவது நல்ல  சத்துள்ள உணவு உடனே கொடுங்கள், அரட்டையிலோ,
சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!
ஒரு முக்கியமான  வார்த்தை. உலகில் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், நமது  கோப தாபங்களுக்கு  வடிகால்  இல்லை.  குழந்தைக்கு தவம் இருக்கும்  குடும்பங்களில்  பலர்  இன்னும் துன்பத்தில்  சோகத்தில்  இருக்கிறார்கள்.   ஞாபகம் இருக்கட்டும்.

sivan jaykay

unread,
Apr 12, 2023, 7:30:40 PM4/12/23
to amrith...@googlegroups.com

ஆத்ம வித்யா விலாசம்  16-20 -  நங்கநல்லூர்  J K  SIVAN
சதாசிவ ப்ரம்மேந்திரா

ஸதாசிவ   ப்ரம்மேந்திரா இயற்றிய  ஆத்ம வித்யா விலாச ஸ்லோகங்கள்  அறுபதுக்கும் மேலே.  அதில் 15 ஸ்லோகங்களை இதுவரை பார்த்தோம். 

சதாசிவ ப்ரம்மேந்திராவை அநேகருக்கு தெரியாமல் இருந்த நிலையில் அவரை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியவர்களில்  முதன்மையானவர்  சிருங்கேரி சாரதா பீட  மஹா சன்னிதானம் 32வது ஜகதகுரு  ஸ்ரீ நரசிம்ம பாரதி  (1817-1879) ஸ்வாமிகள் தான்.  நெரூரில்  மகானின்  சமாதியை சீர்படுத்தி பராமரிப்பு அவரால் ஆனது தான்.   33வது மஹா சன்னிதானம்  ஸ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி (1879-1912) நெரூருக்கு விஜயம் செய்வார்.  அவர் இயற்றியது தான்  சதாசிவேந்திரஸ்தவம்  சதாசிவேந்திர பிரஞ்சரத்ன ஸ்தோத்திரங்கள்.   ப்ரம்மேந்திராவை வழிகாட்டியாக கொண்டாடியவர்.   ஒவ்வொரு நாளும் ஆத்ம வித்யா விலாச ஸ்லோகங்களை கேட்டு சிந்திப்பவர்.   அதன் பின்  34வது மஹா சன்னிதானம்  ப்ரம்மேந்திராளை பின்பற்றி  அவதூதராக  விருப்பம் கொண்டவர்.  ஆத்மவித்யா விலாசத்தை  ஆழ்ந்து படித்து  உணர்ந்தவர். 
இனி அடுத்த  ஐந்து ஸ்லோகங்களை அறிவோம்: 
 
शान्त्या दृढोपगूढः शान्तसमस्तान्यवेदनोदारः । रमते रसज्ञ एको रम्ये स्वानन्दपर्यङ्के ॥ १६॥
shAntyA dR^iDhopagUDhaH shAntasamastAnyavedanodAraH |ramate rasaj~na eko ramye svAnandaparya~Nke || 16||
ஶாந்த்யா த்³ரு’டோ⁴பகூ³ட:⁴ ஶாந்தஸமஸ்தாந்யவேத³நோதா³ர: । ரமதே ரஸஜ்ஞ ஏகோ ரம்யே ஸ்வாநந்த³பர்யங்கே ॥ 16॥

16.  ப்ரம்மஞானி  தனி உலகத்தில் தனக்குள் தானே இருப்பவன். அருமையான சப்ரமஞ்ச கட்டிலில் ஆரோகணித்து அமைதியாக  உலகத்திலிருந்து விலகி பற்றற்று ஆனந்தத்தில் மூழ்குபவன். 

17. उन्मूलितविषयारिः स्वीकृतवैराग्यसर्वस्वः । स्वात्मानन्दमहिम्नि स्वाराज्येऽस्मिन् विराजते यतिराट् ॥ १७॥
unmUlitaviShayAriH svIkR^itavairAgyasarvasvaH | svAtmAnandamahimni svArAjye.asmin virAjate yatirAT || 17||
உந்மூலிதவிஷயாரி: ஸ்வீக்ரு’தவைராக்³யஸர்வஸ்வ: । ஸ்வாத்மாநந்த³மஹிம்நி ஸ்வாராஜ்யேऽஸ்மிந் விராஜதே யதிராட் ॥ 17॥ 
ப்ரம்மஞானி தனிக்காட்டு ராஜா. எதிரிகளாகிய ஐம்புலன்களை வென்றவன், ஆசைகளை அழித்தவன்,   ஆத்மஞான  பற்றற்ற செல்வத்துக்கு அதிபதி, சதானந்தத்தில் நிலைத்திருப்பவன். 

18. सवितर्यपि शीतरुचौ चन्द्रे तीक्ष्णेऽप्यधो वहत्यग्नौ । मायिकमिदमिति जानन्जीवन्मुक्तो न विस्मयी भवति ॥ १८॥
savitaryapi shItaruchau chandre tIkShNe.apyadho vahatyagnau | mAyikamidamiti jAnanjIvanmukto na vismayI bhavati || 18||
ஸவிதர்யபி ஶீதருசௌ சந்த்³ரே தீக்ஷ்ணேऽப்யதோ⁴ வஹத்யக்³நௌ । மாயிகமித³மிதி ஜாநந்ஜீவந்முக்தோ ந விஸ்மயீ ப⁴வதி ॥ 18॥
அட  இதென்ன ஆச்சர்யம், சூர்யன் கதிர்கள் குளிர்ந்து வீசுகிறதே , சந்திரனின் கிரணங்கள் நெருப்பாக கொளுத்துகிறதே, அக்னி மேலெழும்பி பரவாமல் கீழ்நோக்கி  பாய்கிறதே... இதெல்லாம் ஜீவன்முக்த  ஆத்ம ஞானியை மயக்காது .  எல்லாம் மாயையின் லீலை என்று உணர்ந்தவன் அவன். 

19. 
अज्ञानवैरिविजयी प्रज्ञामातङ्गमस्तकारूढः ।विहरति संयमिराजः समरससुखधाम्नि सर्वतो रम्ये ॥ १९॥
aj~nAnavairivijayI praj~nAmAta~NgamastakArUDhaH | viharati sa.nyamirAjaH samarasasukhadhAmni sarvato ramye || 19||
அஜ்ஞாநவைரிவிஜயீ ப்ரஜ்ஞாமாதங்க³மஸ்தகாரூட:⁴ । விஹரதி ஸம்யமிராஜ: ஸமரஸஸுக²தா⁴ம்நி ஸர்வதோ ரம்யே ॥ 19॥

ஆத்ம ஞானி, படு சமர்த்தன்.  சகல வித்யைகளும் கற்றவன்.  தன்னையே கட்டுப்பாட்டில்  வைத்திருப்பது எளிதல்ல. அதில் கை  தேர்ந்தவன். அஞ்ஞானம் எனும் எதிரியை வென்று எதிர்க்க எவருமில்லாத  சக்ரவர்த்தி.  ஞானம் எனும் யானைமேல் பவனி  வரும் ஆனந்தஸ்வரூபன். 

20.  शान्ताहंकृतिदोषः सुसमाहितमानसः कोऽपि ।पूर्णेन्दुशिशिरभावो राजत्यानन्दसत्यचिद्रसिकः ॥ २०॥
shAntAha.nkR^itidoShaH susamAhitamAnasaH ko.api | pUrNendushishirabhAvo rAjatyAnandasatyachidrasikaH || 20|
ஶாந்தாஹங்க்ரு’திதோ³ஷ: ஸுஸமாஹிதமாநஸ: கோऽபி । பூர்ணேந்து³ஶிஶிரபா⁴வோ ராஜத்யாநந்த³ஸத்யசித்³ரஸிக: ॥ 20

20.  ஆத்ம ஞானி ஒரு தனி ரகம்.  அவன் சதா  தன்னுள் இருக்கும் ஆத்மாவில்  லயித்து ஆனந்தமாக இருப்பவன். அவனை உலகத்தின் எந்த வஸ்துவும்  ஈர்க்காது . எதன் மேலும் அவனுக்குப்  பற்றுதல் கிடையாது.  கர்வம், அகம்பாவம் அவனை நெருங்காதவை. பூர்ண சந்திரனின் குளுமையோடு உள்ளவன். 


sivan jaykay

unread,
Apr 12, 2023, 7:30:57 PM4/12/23
to amrith...@googlegroups.com
  பேசும் தெய்வம். --     நங்கநல்லூர்  J K  SIVAN

காளஹஸ்தியில் ஒரு சம்பவம்.

என்  சின்ன வயது காலத்தில்  அப்பாவோடு  திருப்பதி சென்றபோது இவ்வளவு பெரிய  க்யூ கிடையாது. நேராக மலையேறி, ஒரு சில மணி நேரத்தில் தரிசனம் செய்து விட்டு ஆந்திரா பஸ்ஸில்,  பல மொட்டைத்  தலைகளோடு, கீழே  இறங்குவோம். வழியெல்லாம் வாந்தி எடுத்துக்கொண்டு வருவார்கள்.     மேலும் கீழும் திருப்பதி மலை சரிவான மலைப்பாதையில்  விர் விர்ரென்று  ஏறிவரும் பஸ், இறங்கும் பஸ்  ரெண்டுமே  ஒரே பாதையில் சென்ற காலம்.

 கீழ்  திருப்பதி வந்து சேர்ந்ததும்  அலமேலு மங்காபுரத்துக்கு குதிரை வண்டியில் தான் போவோம். அங்கும் அதிக கூட்டம் கிடையாது.  அநேகமாக  அப்போதெல்லாம் திருப்பதி போகும்போதெல்லாம்  எங்களைப் போல பலர்  காளஹஸ்திக்கும்  பஸ்ஸில்  போய்விட்டு தான்  மெட்ராஸ் வருவோம்.  

காளஹஸ்தி பஞ்ச பூத ஸ்தலங்களில் வாயு க்ஷேத்ரம். காளத்தீசர் சந்நிதியில்  தீபம் ஆடிக்கொண்டே இருக்கும் காட்சி இன்னும் மனதில் நிற்கிறது.  

மஹா பெரியவா  ஒரு தடவை காளஹஸ்தி சென்றார். சிலந்தி யானை பாம்பு வழிபட்ட ஸ்தலம் என்பார்கள்.  காளஹஸ்தியை ஒட்டி மூன்று மலைகள். ஒன்று கைலாச கிரி.  அங்கே  உள்ள பக்தர்களில் ஒருவர்  மஹா பெரியவாளை தனது இல்லத்துக்கு அழைத்து  குருவுக்கு பிக்ஷா வந்தனம் செய்ய விரும்பினார். மஹா பெரியவா ஆகட்டும் பார்க்கலாம் என்று பதிலளித்தார்.

சில நாட்கள் சென்றது. ஒருநாள் அந்த பக்தர்வழக்கம் போல  காலை பூஜையை முடித்து விட்டு  நைவேத்தியத்துக்கு வைத்திருந்த கல்கண்டு ஒரு பிடி எடுத்து வாயில் போட்டுக்கொண்டு மென்ற நேரத்தில் வாசலில் யாரோ வரும் சப்தம் கேட்டது. ஓடினார். அவர் கண்களை அவரால் நம்பமுடியவில்லை.

வாசலில் மஹா பெரியவா நிற்கிறார்.   வாய் நிறைய  கல்கண்டு. பேச  முடியவில்லை. என்ன செய்வது என்று  குழம்பி திக்கு முக்காடி நின்றார். ''வாங்கோ பெரியவா'' என்று வாய் திறந்து அழைக்க முடியாத நிலையை வாயில் கல்கண்டு
 கொடுத்து விட்டது.   மஹா பெரியவா அவர் அவஸ்தையை புரிந்து கொண்டார்.

''என்னடா இது. என்னை மடத்துலே பார்க்கும்போதெல்லாம் எங்க ஆத்துக்கு வரணும் ,வரணும் என்று பிடிங்கிண்டே இருந்தே. இப்போ வாசலில் வந்து நின்னாக்கூட  வாங்கோன்னு கூப்பிடாமல் இப்படி மழுங்குணியா  நிக்கிறியே'' என்று சிரித்தார்.

எதிரே பெரியவா  அவரைச் சுற்றி பல பக்தர்கள். மடத்து தொண்டர்கள்.
 என்ன செய்கிறோம் என்று கூட யோசிக்காமல் அந்த  பதற்றமடைந்த பக்தர்  சட்டென்று வாயில் இருந்த அத்தனை கற்கண்டையும் கீழே துப்பிவிட்டார். பெரியவா அருகில் இப்படி செய்வது அபசாரம் என்று தெரிந்தும் வேறு வழியில்லையே''  
துப்பியபிறகு  ''மஹா பெரியவா என்னை மன்னிச்சுடுங்கோ, நா அபசாரம்  பண்ணிட்டேன்''  பூஜை பண்ணிட்டு நைவேத்தியம் கல்கண்டை அத்தனையும் வாயில் போட்டுண்டுட்டேன். மஹா பெரியவா வரான்னு தெரியாம இப்படி பண்ணிட்டேன்''. கண்களில் ஜலத்தோடு  அழுதார். நமஸ்கரித்தார்.

''சரி சரி, இப்போ என்ன ஆயுடுத்துன்னு நீ பதர்றே? இது காளஹஸ்தி க்ஷேத்ரம். இங்கே  கண்ணப்ப நாயனார்  சிவ பெருமானுக்கு எப்படி பூஜை பண்ணினார்னு தெரியுமோ நோக்கு?சொல்றேன் கேளு.  

''வாயிலே ஜலம்  நிரப்பிக் கொண்டு வந்து லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணினார்.  பன்றி மாமிசத்தை வாயால் சுவைத்து விட்டு அப்புறம் நைவேத்தியம் பண்ணினார். கண்ணப்ப நாயனார் செயலை பகவான் பார்க்கலே, அவரிடமிருந்த பரிசுத்த  உள்ளார்ந்த பக்தியை மட்டுமே பகவான் ரசித்து ஏற்றுக்கொண்டார்.  கண்ணப்ப நாயனார் செயல் அதனால் அவருக்கு தப்பாகவே  படவில்லை.

சமீபத்தில்   சௌந்தர்யலஹரி  முதல் பாகமான சிவானந்த லஹரி எழுதினேன். அதில்  ஒரு ஸ்லோகம் வரும்:

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविरचना  गतिः प्रादक्षिण्यक्रमणमशनाद्याहुतिविधिः । प्रणामस्संवेशस्सुखमखिलमात्मार्पणदृशा सपर्यापर्यायस्तव भवतु यन्मे विलसितम् ॥ २७॥-...  அதில் கண்ணப்ப நாயனாரை குறிப்பதாக ஒரு வார்த்தை. வரும்.

...  நான்  எதெல்லாம்,  எப்போதெல்லாம்  குடிக்கிறேனோ, தின்கிறேனோ, அதெல்லாம் உனக்கு  மனப்பூர்வமாக படைக்கப்பட்ட நைவேத்ய அர்ப்பணமாக ஏற்றுக்கொள்''   என்ற அர்த்தத்தில் வரும்.

ஆதி சங்கரரின்  இந்த  ஸ்லோகம்  மஹா பெரியவாளுக்கு நினைவுக்கு வராமலா இருக்கும்?

 எத்தனையோ  மஹான்கள்  எல்லாம் செய்த பூஜையை விட கண்ணப்ப நாயனார்  செய்த ஆத்ம பூர்வ பூஜை அபிஷேக   நைவேத்தியம் காளஹஸ்தீஸ்வரனுக்கு பிடித்திருந்தது. அப்படிப்பட்ட  க்ஷேத்ரம் இது.  உன் செயல் எனக்கு மேலே சொன்ன  கண்ணப்ப நாயனார் பக்தியை தான் வெளிப்படுத்தியது. கவலைப்படாதே   இந்த  க்ஷேத்ரத்தில் எச்சில் தோஷம் உனக்கு கிடையாது''  என்று மஹா பெரியவா அந்த பக்தரை சமாதானப்படுத்தினார்.  

sivan jaykay

unread,
Apr 12, 2023, 7:30:57 PM4/12/23
to amrith...@googlegroups.com
ஹே  ஸ்வாமிநாதார்த்த  பந்தோ.  நங்கநல்லூர்   J K  SIVAN 

அருள்கவி  அருணகிரி நாதரின்  திருப்புகழ் பாடாத  நாவும்   கேட்காத செவியும் இருந்தென்ன பயன்?  ஆமாம். வாஸ்தவமாகவே மனதை உருக்கும் திருப்புகழில் இது மிகவும் பிரபலமான ஒரு  பாடல். ஒரு சிலநாட்களாக  கண் திறந்து  பார்க்க முடியாத நேரம்,  உடல் உட்கார்ந்து எழுத உதவாத  நேரம், செவி ஒன்றே  எனக்கு அப்போது ஆனந்தமாக  சில அற்புத பாடல்களை படுத்துக்  கொண்டே  ரசித்து ருசிக்க முடிந்து  உதவியது.. நேரத்தை அற்புதமாக அப்படி செலவழித்தேன். 
அப்படிக் கேட்ட எண்ணற்ற பாடல்களில் திருப்புகழ் பாடல்களும் பல.  அவற்றில் ஒன்று இது.

பாதி மதிநதி போது மணிசடை     நாத ரருளிய ...... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்     பாதம் வருடிய ...... மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்     மாய னரிதிரு ...... மருகோனே
கால னெனையணு காம லுனதிரு     காலில் வழிபட ...... அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல     காளும் வகையுறு ...... சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்      சூழ வரவரு ...... மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு     வாமி மலைதனி ...... லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட     வேலை விடவல ...... பெருமாளே.

பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும், கொன்றை மலரையும், அணிந்த  ஜடாதாரி,சிவபிரான் அருளிய குமரேசனே,
சர்க்கரைப் பாகும், கனிகளும் போன்ற  இனிய மொழியை உடைய மாதரசி, குறமகளாகிய வள்ளியின் பாதத்தைப் பிடித்துவிடும் மணவாளனே, பிரிக்கப்பட்ட ஒரு விழியை காகாசுரன் என்னும் காகம் அடையும்படி அருளிய
ஸ்ரீராமர் எனும்  மாய ஹரிக்கும், லக்ஷ்மிக்கும் மருமகனே, யமன் என்னை அணுகாத படி, உன் இரு பாத கமலங்களில் வழிபடும் புத்தியை எனக்கு அருள்வாயாக.
ஆதி பிரமனோடு அமரர்கள் அனைவரும்  தேவலோகத்தை ஆளும்படி சிறையினின்று அவர்களை மீட்டவனே, நடனம் ஆடும் மயில் மீது ஏறி  தேவர்கள் உன்னைச் சூழ்ந்துவர  காட்சி தருகின்ற இளையவனே, மாமரங்கள் மிகுந்து வளர்ந்த சோலைகள்
நிறைந்த சுவாமிமலையில் வீற்றிருப்பவனே, சூரனின் உடல் வீழ, கடல் வற்றிப்போக,  ஞான வேலினைச் செலுத்தவல்ல
பெருமாளே.

டாக்டர் S   ராமநாதனை  அறியாதவர்கள் சங்கீத உலகத்தில் கிடையாது. ஒவ்வொரு க்ரிதியையும்  ஆழ்ந்து அலசி ராகம் தாளம்  பாவம் தப்பாமல் அளிக்கும் வெகு சிலரில் ஒருவர். அவர் பாடிய  இந்த  திருப்புகழ் என்னை கவர்ந்தது. அறுபடை வீட்டில் ஒன்றான  சுவாமிமலை, திருவேரக , ஸ்வாமிநாதன்  மூடிய  என் கண்ணில் தெரிந்தான்.   இது தான் நான் கேட்ட  பாடலின் லிங்க்  https://youtu.be/08X4YgSIKeA

sivan jaykay

unread,
Apr 12, 2023, 7:30:57 PM4/12/23
to amrith...@googlegroups.com

ஆத்ம வித்யா விலாசம் 21-25  -  நங்கநல்லூர்   J K  SIVAN 
ஸதாசிவ ப்ரம்மேந்திரா 

21.  तिष्ठन्परत्र धाम्नि स्वीयसुखास्वादपरवशः कश्चित् । क्वापि ध्यायति कुहचिद्गायति कुत्रापि नृत्यति स्वैरम् ॥ २१॥
tiShThanparatra dhAmni svIyasukhAsvAdaparavashaH kashchit | kvApi dhyAyati kuhachidgAyati kutrApi nR^ityati svairam || 21||
திஷ்ட²ந்பரத்ர தா⁴ம்நி ஸ்வீயஸுகா²ஸ்வாத³பரவஶ: கஶ்சித் । க்வாபி த்⁴யாயதி குஹசித்³கா³யதி குத்ராபி ந்ரு’த்யதி ஸ்வரம் ॥ 21॥
ப்ரம்மானந்தத்தில்  ஆழ்ந்த  ஞானி தன்னில் தானே  லயித்துக்கொண்டிருப்பவன்.  தானே  எங்கும் சுற்றுவான், பாடுவான், ஆடுவான், மற்றவரைப் பற்றியோ,உலகைப்பற்றியிவ் சிறிதும்  நினவில்லாதவன்.  சிலநேரம் அசைவற்று தியானத்திலேயும் ஆழ்ந்து விடுவான்.  

22. अगृहीताघकलङ्कः प्रशमितसङ्कल्पविभ्रमः प्राज्ञः । न्यक्कृतकार्यकलापस्तिष्ठत्यापूर्णसीमनि क्वापि ॥ २२॥
agR^ihItAghakala~NkaH prashamitasa~NkalpavibhramaH prAj~naH | nyakkR^itakAryakalApastiShThatyApUrNasImani kvApi || 22||
அக்³ரு’ஹீதாக⁴கலங்க: ப்ரஶமிதஸங்கல்பவிப்⁴ரம: ப்ராஜ்ஞ: । ந்யக்க்ரு’தகார்யகலாபஸ்திஷ்ட²த்யாபூர்ணஸீமநி க்வாபி ॥ 22॥
ஆத்ம ஞானியின்  மனதில் எண்ணங்களே எதுவுமில்லை. மனோ நாசம் என்பார்களே  மனத்தில் எதுவுமில்லாத நிலை அதை பூரணமாக அனுபவிப்பவன். எண்ணங்களற்று ஒரு வினாடி கூட நம்மால்  வாழமுடியாது.  அவன் பிரம்மமே வடிவானவன் என்பதால் ப்ரம்மம் ஒன்றே அவன்  நினைவு. தியானம்  விஞ்ஞானம் இரண்டிற்குமே அப்பாற்பட்ட ஒரு ஸ்திதி அவனுடையது.   காட்சிக்கு சம்பந்தமில்லாத  சாக்ஷி அவன். 

23. चपलं मनकुरङ्गं चारु गृहीत्वा विमर्शवागुरया । निगमारण्यविहारश्रान्तः शेते स्वधाम्नि कोऽप्येकः ॥ २३
chapalaM manakura~NgaM chAru gR^ihItvA vimarshavAgurayA | nigamAraNyavihArashrAntaH shete svadhAmni ko.apyekaH || 23||
சபலம் மநகுரங்க³ம் சாரு க்³ரு’ஹீத்வா விமர்ஶவாகு³ரயா । நிக³மாரண்யவிஹாரஶ்ராந்த: ஶேதே ஸ்வதா⁴ம்நி கோऽப்யேக: ॥ 23॥ 
சில  மஹான்கள் மட்டுமே  கொஞ்சம் கொஞ்சமாக  மனதை வசியப்படுத்தி, கட்டுக்குள் கொண்டு வந்து, அதை ஆராய்ந்து எண்ணங்களை ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தி அதில் ப்ரம்மம் ஒன்றே  நிறைந்திருக்க செய்ய வல்லவர்கள். இது தான் அவர்கள் தவம் எனப்படுகிறது.  மனது என்பது   எங்கும் சுற்றி தாவி திரியும் ஒரு துள்ளி ஓடும் மான். அதைக்  கட்டிப்போடுவது எளிதல்ல.  அதில் முயன்று வெற்றி பெற்றவனே  ப்ரம்ம ஞானி.

24. दारुणचित्तव्याघ्रं धीरमनःखड्गधारया हत्वा । अभयारण्ये कोऽपि स्वैरविहारी जयत्येकः ॥ २४॥
dAruNachittavyAghraM dhIramanaHkhaDgadhArayA hatvA | abhayAraNye ko.api svairavihArI jayatyekaH || 24||
 தா³ருணசித்தவ்யாக்⁴ரம் தீ⁴ரமந:க²ட்³க³தா⁴ரயா ஹத்வா । அப⁴யாரண்யே கோऽபி ஸ்வைரவிஹாரீ ஜயத்யேக: ॥ 24॥

மனத்தை குரங்கு என்கிறோம், மான் என்கிறோம், இப்போது ப்ரம்மேந்திரா அதை  அடங்காத  காட்டுப்புலி  என்கிறார்.  ஞானம் எனும்  கூரிய  அம்பால் தான்  வேடனாகிய நாம்  அழிக்க முடியும்.  மனதை பரிசுத்தமாக்கிக்கொள்ள  பாப கார்யங்கள், பாப எண்ணங்கள் விலகவேண்டும். அதற்கு தியானம் தவம் தேவை. ஐம்புலன்களின் ஈர்ப்புகல் நெருங்கக் கூடாது. அப்போது தான் ஜீவன் ஆத்மாவோடு  இணைவான். பரிபூர்ண ஞானம் ஒன்றே  மனதை, அதன் எண்ணங்களை  நாசமாக்கும்.  ப்ரம்ம ஞானி பயமற்றவன்.  அபயம்  என்பதே ப்ரம்மம் தானே. பிரபஞ்சத்தில் எங்கும் சுதந்திரமாக  ப்ரம்ம ஞானி உலவுவான்.  ஜீவன் முக்தன். 

25. सज्जनहृदयसरोजोन्मीलनकरधीकरप्रसरः । एको यतिवरपूषा निर्दोषश्चरति चिद्गगने ॥ २५॥
sajjanahR^idayasarojonmIlanakaradhIkaraprasaraH |eko yativarapUShA nirdoShashcharati chidgagane || 25||
ஸஜ்ஜநஹ்ரு’த³யஸரோஜோந்மீலநகரதீ⁴கரப்ரஸர: । ஏகோ யதிவரபூஷா நிர்தோ³ஷஶ்சரதி சித்³க³க³நே ॥ 25॥

ப்ரம்ம ஞானியின் ஞானக்கதிர்கள் நல்லோரின் மேல் விழும்போது அவர்களை விழிப்புணர்வு பெறச் செயகிறது. மஹா பெரியவா ரமண மஹரிஷி போன்றோர்  தரிசனம் நமக்கு எத்தனை பாக்யம் என்று இப்போது புரிகிறதா? பகலிரவு இல்லாத  ஞான சூர்யன் அவர்கள். அவர்களை தரிசிப்பதும், அவர்கள் நடந்த பாதையில் பின் செல்வதும் எல்லோருக்கும் கிட்டுவதல்ல.  நினைத்தாலே இனிப்பவர்கள். 








sivan jaykay

unread,
Apr 12, 2023, 7:31:05 PM4/12/23
to amrith...@googlegroups.com

ஸௌந்தர்ய லஹரி  -  50/103    நங்கநல்லூர்  J K  SIVAN

50.  அமுதும் தேனும்  எதற்கு நீ அருகில் இருக்கையிலே..

कवीनां संदर्भस्तबकमकरन्दैकरसिकं  कटाक्षव्याक्षेपभ्रमरकलभौ कर्णयुगलम् ।
अमुञ्चन्तौ दृष्ट्वा तव नवरसास्वादतरला- वसूयासंसर्गादलिकनयनं किंचिदरुणम् ॥ ५०॥

Kavinam sandharbha-sthabaka-makarandh'aika-rasikam Kataksha-vyakshepa-bhramara-kalabhau-karna-yugalam;
Amunchantau drshtva tava nava-ras'asvada tharalau-Asuya-samsargadhalika-nayanam kinchid arunam.

கவீனாம் ஸன்தர்ப-ஸ்தபக-மகரன்தைக-ரஸிகம் கடாக்ஷ-வ்யாக்ஷேப-ப்ரமரகலபௌ கர்ணயுகலம் |
அமுஞ்ச்ன்தௌ த்றுஷ்ட்வா தவ னவரஸாஸ்வாத-தரலௌ அஸூயா-ஸம்ஸர்கா-தலிகனயனம் கிஞ்சிதருணம் || 50 ||

ஆதி சங்கரரின்  கற்பனையும்  மனதில் தோன்றும் அம்பாளின் உருவ  வர்ணனனிக்கும்  ஈடு சொல்லவே முடியாது.  இறைவனே கவிஞனனாக  பிறந்து  இயற்றிய ஸ்தோத்திரங்கள். 

அம்மா  லோக நாயகி, விசாலாக்ஷி, உன்னுடைய  காதுவரை  நீண்ட அழகிய   கருணை மிக்க  கண்கள், இல்லை  இல்லை,   இரு கருவண்டுகள்.    இந்த வண்டுகள் பருகும் பூந்தேன் எது தெரியுமா?  கவிகளின் எண்ணற்ற  அபூர்வ ஸ்தோத்திரங்கள். அந்த கண்கள் நெருங்கி இருக்கும்  இரு காதுகளும்  கவிகளின் ஸ்தோத்ரங்களில் உள்ள நவரஸங்களையும் அநுபவிப்பவை. . ஆகவே இந்த  இரு கருவண்டுகள் போன்ற கண்களின் அதிர்ஷ்டத்தை கவனித்து  உனது நெற்றியில் உள்ள  மூன்றாவது கண் அவற்றின் மேல் பொறாமை கொள்வதால்  சிவந்து காணப்படுகிறதோ?  
மூன்றாவது கண்   தான் இங்கே  ஆஞா சக்ரம்.  நெற்றிக்கண் தான்  காலாக்னியை வெளிப்படுத்துவது.  சிவை தான் சிவன்.
லலிதா ஸஹஸ்ரநாமத்தில்  106  நாமம்  சுதா சாரபிவர்ஷினி   सुधासारभि-वर्षिणी  - சஹஸ்ராரத்தின் மத்தியில்  சோம சக்ரம் உள்ளது.  திகு திகு வென்று  குண்டலினி இந்த  சோமசக்ரத்தை அடையும்போது  அதி உஷ்ணத்தில் சோமசக்ரத்தில் உள்ள  அம்ருதம் பொங்கி வழியும். தொண்டை வழியாக, சொட்டு சொட்டாக  நரம்புமண்டலத்தில் அம்ருதம்  ப்ரவேசிக்கும்  நாடி நரம்பெல்லாம் ஆனந்தத்தில் திளைக்கும் நிலை.

sivan jaykay

unread,
Apr 14, 2023, 7:19:33 PM4/14/23
to amrith...@googlegroups.com

ஆத்ம வித்யா விலாசம்  11-15 -  நங்கநல்லூர்  J K  SIVAN
சதாசிவ ப்ரம்மேந்திரா

சரபோஜி மஹாராஜா தஞ்சாவூரை ஆண்ட காலத்தில் (1712-1728) வாழ்ந்தவர்  ஸதாசிவ ப்ரம்மேந்திராள்.  காவிரி பாயும் நெரூரில் பிறந்தவர்.  இயற்பெயர் சிவராமன். ''மோக்ஷம்'' என்பது அவரது தெலுங்கு நியோகி  குலத்தில் எல்லோர் பெயருக்கும் சொந்தம்.  அப்பா  சோமசுந்தர அவதானி.  அம்மா  பார்வதி.  அந்த காலத்தில்  திருவிசநல்லூருக்கு  ஷஹாஜிபுரம் என பெயர்.  திருவிசநல்லூர் ஐயாவாள், போதேந்திர சரஸ்வதி  பாஷ்யம் கோபால கிருஷ்ண சாஸ்திரிகள் எல்லோரும் உற்ற நண்பர்கள்.  பரமசிவேந்திர ஸரஸ்வதி  அவர் குரு.   தனது எல்லா க்ரிதிகளிலும்  குரு வந்தனமாக  ''பரம ஹம்ஸ'' எனும்  முத்திரையை  ஸதாசிவ ப்ரம்மேந்த்ரா காட்டியுள்ளார். 

தனது குருவின் கட்டளையை நிறைவேற்ற  வாய் திறந்து பேசாமல் காட்டிலும் மேட்டிலும்  வெயிலிலும் மழையிலும் இருளிலும் பகலிலும் அவதூதராக  மௌனியாக  வாழ்ந்தவர்  ஸதாசிவ ப்ரம்மேந்திராள்.  ப்ரம்ம ஞானி. 
 எண்ணற்ற அற்புத  ஸ்தோத்திரங்கள்  ஸ்லோகங்களை படைத்தவர். மிகப்பிரபலமாக பலரால் இன்றும்  பாடப்பட்டு வரும் ராமர் மீது இயற்றப்பட்ட கிருதிகள்:
பிபரே ராமரசம்,  கேலதி மம ஹ்ருதயே,  பஜரே ரகுவீரம், சேதக  ஸ்ரீ ராமம்.  ப்ரதி வாரம் வாரம்  மானஸ 
ஸ்ரீ க்ரிஷ்ணன் மேல்  அவர் பாடிய பிரபல பாடல்கள் :
ஸ்மரவாரம் நந்தகுமாரம், காயதி  வனமாலி,  பஜரே கோபாலம் மானஸ, பஜரே  யாது நாதம் மானஸ ,க்ரீடதி வனமாலி,   ப்ருஹி முகுந்தேதி, 
பிரம்மத்தின் மேல்  :   ஸர்வம்  ப்ரம்ம மயம் ,  கேலதி  ப்ரஹ்மாண்ட பகவான்,  மானஸ சஞ்சரரே, தத்வத் ஜீவனம்.

இனி அவரது மிகச்சிறந்த  ஆத்ம வித்யா விலாச  ஸ்லோகத்தில் அடுத்து  ஐந்து ஸ்லோகங்களை (11-15)அறிவோம்:

जनिविपरीतक्रमतो बुद्ध्या प्रविलाप्य पञ्चभूतानि । परिशिष्टमात्मतत्त्वं पश्यन्नास्ते मुनिः शान्तः ॥ ११॥
janiviparItakramato buddhyA pravilApya pa~nchabhUtAni | parishiShTamAtmatattvaM pashyannAste muniH shAntaH || 11||
ஜநிவிபரீதக்ரமதோ பு³த்³த்⁴யா ப்ரவிலாப்ய பஞ்சபூ⁴தாநி । பரிஶிஷ்டமாத்மதத்த்வம் பஶ்யந்நாஸ்தே முநி: ஶாந்த: ॥ 11॥ 

11. பஞ்ச பூதங்களில்  ஆகாசம்  ஆத்மா எனும்  ப்ரஹ்மத்திலிருந்து தோன்றியது , ஆகாசத்திலிருந்து காற்று, , காற்றிலிருந்து  அக்னி, அக்னியிலிருந்து ஜலம் ,  ஜலத்திலிருந்து  நிலம்.  இதைச் சொல்வது தைத்ரிய உபநிஷத்.  காரியம்  காரணத்தில் கலக்கிறது.  நிலம்  நீரில் மூழ்கிறது . நீரின்றிஅமையாதது உலகம்.  நீர் அதன்  தாயான  அக்னி,  உஷ்ணத்தில் மறைகிறது. ஆவியாகிறது.  அக்னி, தீயை  காற்று  விரட்டுகிறது. காற்றை  ஆகாசம் விழுங்குகிறது.  எல்லாமே  பிரம்மத்தில் அடக்கம்.  ப்ரம்மம் ஒன்றே  ஆகவே  நிரந்தரம், சத்யம்  என்கிறது இந்த ஸ்லோகம்.   குருவின் அருளால்,  ஜீவனுக்கு  பரிபூர்ண  ஆனந்தம் மட்டும்  அல்ல  அசைவற்ற  ஆழ்ந்த  அமைதி  கிட்டுகிறது.   அவனது  ஹ்ருதயம்  உலகியல் சம்பந்தப்பட்ட  இன்ப துன்பங்கள் அறவே  நீங்கி சம நிலையில்  ஆத்மாவோடு ஒன்றிய  இயல்பு ஏற்படுகிறது.  ஹ்ருத்+அயம் (ஹ்ருதயம் ஆத்மாவே தான்  ஆகிய  நிலை) .என்னால்  எழுத இயலாத  முடியாத  ஆனந்த  பரவச நிலை.


12.  जगदखिलमिदमसारं मायिकमेवेति मनसि मन्वानः । पर्यटति पाटिताशः प्रगलितमदमानमत्सरः कोऽपि ॥ १२॥
jagadakhilamidamasAraM mAyikameveti manasi manvAnaH | paryaTati pATitAshaH pragalitamadamAnamatsaraH ko.api || 12||
ஜக³த³கி²லமித³மஸாரம் மாயிகமேவேதி மநஸி மந்வாந: । பர்யடதி பாடிதாஶ: ப்ரக³லிதமத³மாநமத்ஸர: கோऽபி ॥ 12

 இந்த  உலகமே  மாயத்தோற்றம், கனவு,  அழிவது.  ஸாஸ்வதம்  இல்லாதது.   அதன் ஈர்ப்புகளை, ஆசைகளை விலக்கி, செருக்கு, பொறாமை ஆகியவைகளைக்  களைந்து  ஆனந்தம் தரும்  பிரம்மத்தில் சுகித்திருக்க எல்லாராலும் முடியுமா? அப்படிப்பட்ட ஞானி  பாக்கியசாலி.  ஸதாசிவ  ப்ரம்மேந்திரா அப்படித்தான் எல்லோரையும் தம்மைப்போலவே  ப்ரம்மஸ்வரூபமாக  அனுபவித்து  எங்கும் சுற்றிவந்தவர். 

13. नात्मनि किञ्चिन्माया तत्कार्यं वाऽस्ति वस्तुतो विमले ।  इति निश्चयवानन्तः हृष्यत्यानन्दनिर्भरो योगी ॥ १३॥
nAtmani ki~nchinmAyA tatkAryaM vA.asti vastuto vimale | iti nishchayavAnantaH hR^iShyatyAnandanirbharo yogI || 13||
॥ நாத்மநி கிஞ்சிந்மாயா தத்கார்யம் வாऽஸ்தி வஸ்துதோ விமலே । இதி நிஶ்சயவாநந்த: ஹ்ரு’ஷ்யத்யாநந்த³நிர்ப⁴ரோ யோகீ³ ॥ 13॥
ஆத்மா  பரமன் வாழும்  மாசற்ற மெய்ப்பொருள்  என உணர்ந்த  ஞானி  அது மாயையினாலோ அதன் காரியங்களினாலோ எந்தவொரு பாதிப்பும் இல்லாதது  என்பதை  சந்தேகமற  நிச்சயமாகத் தெரிந்துகொண்டு,  தனக்குள் இருக்கும் அந்த ப்ரம்மானந்தத்தில் மகிழ்பவன்.  பற்றற்றவன். 

14.  त्वमहमभिमानहीनो मोदितनानाजनाचारः । विहरति बालवदेको विमलसुखाम्भोनिधौ मग्नः ॥ १४॥
tvamahamabhimAnahIno moditanAnAjanAchAraH | viharati bAlavadeko vimalasukhAmbhonidhau magnaH || 14||
 த்வமஹமபி⁴மாநஹீநோ மோதி³தநாநாஜநாசார: । விஹரதி பா³லவதே³கோ விமலஸுகா²ம்போ⁴நிதௌ⁴ மக்³ந: ॥ 14॥

பிரம்மத்தில் ஆழ்ந்த  ஞானி   நான் என்ற அபிமானமற்று,  நான்  நீ  என்ற  பேதம் எதுவும் இல்லாமல், மாசற்ற ஆனந்தத்தில்  மூழ்கி, ஜனங்கள் மேற்கொள்ளும் பலவித செயல்களை ஒரு பாலகனைப் போல ரசித்துக் கொண்டு சுற்றி உலவுகின்றார்.  

15.  अवधूतकर्मजालो जडबधिरान्धोपमः कोऽपि । आत्मारामो यतिराडटवीकोणेष्वटन्नास्ते ॥ १५॥
avadhUtakarmajAlo jaDabadhirAndhopamaH ko.api |AtmArAmo yatirADaTavIkoNeShvaTannAste || 15||
அவதூ⁴தகர்மஜாலோ ஜட³ப³தி⁴ராந்தோ⁴பம: கோऽபி । ஆத்மாராமோ யதிராட³டவீகோணேஷ்வடந்நாஸ்தே ॥ 15॥

தன் உள்ளே ஆத்மாவில்  கலந்து  மூழ்கிய  ஞானி, வெளிப்பார்வைக்கு  மற்றவர் கண்களுக்கு  முட்டாளாகவோ, பைத்தியமாகவோ, செவிடாகவோ, ஊமையாகவோ, உன்மத்தமாகவோ தான்  தெரிகிறான்.  கர்மவினையை அறவே தூற்றிவிட்டு, ஆத்மாராமராகிய (தன் ஆத்மாவொன்றிலேயே ரமிப்பவராகிய) யதிசாம்ராட், பிறர்பார்வையில் அப்படி தென்படுவது  ஆச்சர்யமில்லை.  ஆத்மாவெனும்  ஆரண்யத்தில் அவர்  மூலைமுடுக்குகளில் சுற்றித் திரிகின்றார்.    
உலகத்துக்கே சம்பந்தமில்லாத  ஒரு மனிதனாகத் தான் தெரிவார்.




sivan jaykay

unread,
Apr 14, 2023, 7:21:36 PM4/14/23
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்   J K  SIVAN 

தமிழும்  தொப்பை சாமியும் 

இன்று  தமிழ் புத்தாண்டு  விழா.  தமிழ் கூறும் நல்லுலகம் மகிழும் நாள்.  தமிழ் அமிழ்தினும் இனியது என்று நாம் அறிவோம். நம் தாய் மொழியை போற்றுவோம், வணங்குவோம், தமிழிலேயே பேசுவோம், எழுதுவோம், குழந்தைகளுக்கும் எழுத படிக்க கட்டாயம் கற்றுத்தருவோம்.
இந்த நன்னாளில்  மஹா பெரியவா  தமிழ் பற்றி சொன்னது என்ன?

''கலாசாரத்தில் பாஷை முக்யம். அதை வைத்துத்தானே ஸமய ஸம்பந்தமான நூல்கள், அறிவை வளர்த்துக்கொடுக்கும் நூல்கள், மனஸுக்கு ரஞ்ஜகமான மற்ற கதை, கவிதை, காவ்யம், எல்லாம்?
 தமிழ் பாஷைக்கு விக்நேஸ்ரரும் ரொம்ப முக்யம். எதை  எழுத ஆரம்பித்தாலும், கடைக்கு ஸாமான் லிஸ்ட் எழுதினால்கூட ஸரி, முதலில் '' உ '' என்று சுழிக்கிறோம்.? 'பிள்ளையார் சுழி' ? எடுத்த கார்யம் சுழித்துப் போகாமல் ரட்சித்துக் கொடுப்ப தற்காகதான்  எதற்கெடுத்தாலும்  முதலில் பிள்ளையார் சுழி!'

பிள்ளையார் சுழி' என்ற அர்த்தத்தில் ஸம்ஸ்கிருதம் உள்பட இந்த தேச பாஷைகளில் வேறே எதிலும் இப்படி மங்களாரம்ப ஸிம்பலாக SYMBOL  எதுவும்  இல்லை. இது தமிழ் மொழியின் பாக்யம். 'பாத்யதை' என்று சொல்லி சண்டை கிளப்பாமல் 'பாக்யம்' என்று சொல்லி நமஸ்காரம் பண்ணுவோம்.

முத்தமிழை பிள்ளையார் ஆதியிலேயே மேரு மலையில் எழுதினார் எனும் அபூர்வ தகவலைஅருணகிரிநாதர் திருப்புகழ் பாராயணம் ஆரம்பிக்கும் போது பாடும் 'கைத்தல நிறைகனி' பாட்டில் சொல்கிறார்.

''முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே'' -என்கிறார். 
அடேயப்பா. எல்லாம் ஒரே 'மு' மயமாக எதுகை மோனை வைத்து அல்லவோ பாடியிருக்கிறார். எவ்வளவோ தேடியும், விஷயம் தெரிந்த புலவர்களைக் கேட்டுங்கூட 'அல்யூஷன்' (பாடல் குறிக்கும் பூர்வ கதை) அகப்படவில்லை. ஆகக்கூடி, வ்யாஸருக்காக பாரதம் எழுதுவதற்கு முந்தியே, 'முற்பட' என்று பாட்டில் வருகிறதற்கேற்க, பிள்ளையார் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் நூல்களை எழுதினதாக ஏற்படுகிறது.

பள்ளியில் சேர்ந்து படித்த காலத்தில்  நாம் முதலில் கற்றுக் கொண்டது ஓளவைப்பாட்டி உபதேசங்களைத் தான். 
''அறம் செய விரும்பு''......அந்த ஒளவைப்  பாட்டி யார்? 
பிள்ளையாரின் பரம பக்தை. வாக்கு உண்டாவதற்கே பிள்ளையார் பாதத்தைத்  தான் கெட்டியாக பிடித்தாகணும் என்று அவள் கற்றுக் கொடுத்ததை தான் முதலில் வாத்தியார்கள்  என் சிறுவயதில் அப்போதெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள் மனப் பாடம் பண்ணுவோம். சின்ன வயசில் மனசில் ஏறியது மறக்கவே மறக்காது.

''வாக்குண்டாம், நல்ல மனம் உண்டாம், மாமலராள்
நோக்குண்டாம், மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.''

'வாக்குண்டாம்' = :வாக்கு உண்டாகும். வாக்கு மட்டுந்தானா? சும்மாவுக்காக வாக்கு - பேச்சு மட்டும் அழகாக ஜோடித்து விட்டால் போதுமா? 
நல்ல மனஸைப் பெற்று அந்த மனஸிலிருக்கிற நல்ல எண்ணங்கள், கருத்துக்கள் வாக்கில் வந்தால்தானே நமக்கும் புண்யம், பிறத்தியாருக்கும் உபகாரம்? 
அந்த நல்ல மனஸு, இன்னும் வாழ்க்கை ஸெனக்யமாக அமைவதற்குத் தேவையான லக்ஷ்மி கடாக்ஷம் எல்லாமே ஒரே குறியாக- 'தப்பாமல்' என்று போட்டிருக்கிறாள், அவள்தான் போட்டாளோ, அதுவே தான் விழுந்ததோ? 
ஒரே குறியாக - அவர் பாதத்தைப் புஷ்பார்ச்சனை பண்ணிப் பிடித்துவிட்டவர்களுக்குக் கிடைத்துவிடும் என்று அந்தப் பாட்டி நமக்குப் பாடிக் கொடுத்திருக்கிறாள்.

'மேனி நுடங்காது' = 'சரீரத்தைக் கஷ்டப்படுத்திக் காமல்.    'பிள்ளையாரை உபாஸிக்கிறதற்குப் பெரிசாக ஒன்றும் ஹடயோகம், பட்டினி உபவாஸமெல்லாம் வேண்டாம். உடம்பை சிரமப்படுத்திக்க தேவையில்லை. நாலு பூவைப் பறித்துப் போட்டுவிட்டாலே போதும்' என்கிறாள்.

'துப்பார் திருமேனி' = பவளம் மாதிரிச்  'ஜெக ஜெக'  ன்னு ஜொலிக்கும், செக்கச் செவேலென்று அவர் சரீரம் . 'பவளம் போல் மேனி யில் பால் வெண்ணீறு என்று பிள்ளையாரின் அப்பா நடராஜரை அப்பர் சொன்னது போல். அப்பனுடைய பிள்ளையும் அப்படியே ஜொலிக்கிறார் ஆனால் 'தாயைப் போலப் பிள்ளை' என்று தானே வசனம். அப்படி என்றால் அந்தத் தாயாராம் நம்முடைய காமாக்ஷியாயிருக்கிறபோது செக்கச் செவேல் தான்!''சந்தேகமே இல்லை. 

 எப்படி  மஹா பெரியவா பரமாச்சார்யாளின் சிந்தனை!!

sivan jaykay

unread,
Apr 14, 2023, 7:21:37 PM4/14/23
to amrith...@googlegroups.com
''வா  சோபக்ருது வா. நன்மை செய்''....  நங்கநல்லூர்  J K  SIVAN 

விடிந்தால்  புது வருஷம்.  14.4.2023.   புதுசு என்றால் பெரிசுகளுக்கு கூட ஒரு தனி உத்ஸாகம். பழசெல்லாம் நினைத்துப் பார்க்கும். காது கேட்காமல் பல்லில்லாமல் வாய் நிறைய சிரிக்கும்.

ஆம். நாம் எல்லோருமே புதுமை விரும்பிகள். புதுசா துணி, புஸ்தகம், படம், என்பதிலிருந்து ஆட்சிவரை புதியதைத் தேடுபவர்கள். அறுபது வருஷ ப்ரயோஜனமில்லாத அருதப் பழசுக்கு பதிலாக அஞ்சு வருஷ புதுசு தொடர்ந்து இருந்தாலே போதும் என்று புரிந்தவர்கள்.

இதில் என்ன ஒரு சந்தோஷமான விஷயம் என்றால் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள் நாம் இருக்கிறோம். அந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளில் புது வருஷம் வரும்.  

நமக்கு நாளை  சித்திரை மாச பிறப்பு.  உத்தராயணம், வசந்த ருது. மேஷ மாசம், கிருஷ்ண பக்ஷம், ப்ருகு வாஸரம்,   வெள்ளிக் கிழமை, நவமி திதி.  உத்ராஷாடா (உத்தராடம்) நக்ஷத்திரத்தில்  நமக்கு  தமிழ் புத்தாண்டு மலர்கிறது.  இந்த வருஷத்தில் பெயர்  சோபக்ருது, அதாவது  அறுபது வருஷங்களில் 37வதாக வரிசையாக திரும்ப திரும்ப வருவது.
இந்த வருஷம் எப்படி இருக்குமாம் தெரியுமா?  ஒரு வெண்பா சொல்கிறது:

சோபகிருது  தன்னில்  நெல்லுல கெல்லாம் செழிக்கும்.
கோபமகன்று  குணம் பெருகும்- சோபனங்கள்  
உண்டாகும் மாறி பொழியாமல் பெய்யுமெல்லாம் 
உண்டாகும் என்றே யுரை''     - அர்த்தம் புரியும் என்பதால் விளக்கம் தேவையில்லை.  பஞ்சாங்கம் மூலம் அறியும் ருசியான விஷயம்:
இந்த சோபகிருது  வருஷத்துக்கு ராஜா  புதன்:  மந்திரி சுக்ரன். சேனாதிபதி வியாழன். தான்யாதிபதி சனி.  மேகாதிபதி வியாழன்.  வருஷ தேவதை:  லக்ஷ்மிநாராயணன்.  பசு நாயகன்: கோபாலன்.  வடமேற்கு திக்கில் வாயு  உற்பத்தியாகி. மழைமேகம் மழை எவ்வளவு கொட்டும் என்று ஒரு அளவு சொல்கிறது: 
தேவமானத்தால்  100 யோஜனை  உயரம், 60 யோஜனை அகலம் கொண்ட  ஒரு மரக்காலால்  (நெல்லை அளக்கும் படி போன்ற உருவம்) மொத்த மழையை அளந்து   3 மரக்கால் மழை பெய்யுமாம்.   இதில் 10 பாகம் சமுத்திரத்தில், 6 பாகம் மலையில், 4 பாகம்  பூமியிலும் ஜோ என்று மழை பொழியுமாம்.
ஏப்ரல் மாதம் வெயில் கொளுத்தும் சமயம்.  தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலையிலேயே தூக்கம் விழித்து, இந்த சித்திரை மாதம் முதல் தினத்தன்று புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் உடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும் தோஷ நிவர்த்திக்காகவும்  நீராடுவது வழக்கம்.  'மருந்து  நீரில்'  அனைவரும் குளியலை மேற்கொள்ள வேண்டும்.  மருந்து நீரா? அதை எப்படி செய்வது?
ஒரு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி அதில் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, , வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற் றில் சிறிதளவை போட்டு நன்கு காய்ச்சி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இது தான் மருந்து நீர். செய்யமுடியாவிட்டால் பரவாயில்லை. குழாயில் தண்ணீர் வந்தால் அதுவே சிறந்த மருந்து.

மஞ்சள் நிறம் என்பது வளமை, தெய்வீகம் மற்றும் நன்மையை குறிக்கும் ஒரு நிறமாக நமது கலாச்சாரத்தில் போற்றப்படுகிறது. எனவே புத்தாண்டு தினத்தில் மேற்கண்ட முறையில் குளியலை முடித்த பின்பு , மஞ்சள் நிறப் பட்டாடை அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய ஆடைகளை அணிந்து கொள்வதால் பிறக்கின்ற புத்தாண்டு உங்கள் குடும்பத்தில் வளமையை கொடுக்கும் என்பது ஐதீகம்.மஞ்சள் நிற ஆடை இல்லாவிட்டாலும் புதிய ஆடையில் ஒரு சிறு பகுதியிலாவது மஞ்சள் அரைத்துப் பெற்ற கலவையை பூசி விட்டு அணிந்து நன்மை பெறுவோம்.

பூஜையறையில் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், போன்றவற்றை வைத்து, இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வ படங்களையும் தரிசித்து வணங்க வேண்டும். வயதில் மூத்தோரான தாத்தா, பாட்டி, தாய், தந்தை மற்றும் இன்ன பிற பெரியோர்களை வணங்கி, அவர்களின் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். பிறகு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும்.

மாங்காய் பச்சடி புது வருடத்தின் சிறப்பு அங்கம் என்பது நாம் அறிந்ததே. மாங்காயின் புளிப்போடு சேர்ந்த துவர்ப்பும், வெல்லத்தின் இனிப்பும், வேப்பம்பூவின் கசப்பும், மிளகாயின் காரமும் சேர்ந்த பச்சடி வாழ்வின் பல சுவைகளை நினைவுறுத்தும் வண்ணமாக அமைகிறது. இதனை உண்ணுவதன் மூலம் வாழ்வின் பலவிதமான நிகழ்ச்சிகளையும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை புது வருட ஆரம்பத்தி லிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்து. மேலும் இதோடு உவர்ப்பு சுவையும் சேரும்போது அது அறுசுவையாகி மகிழ்ச்சியளிக்கிறது.

வருடத்தின் முதல் நாள் போலவே அனைத்து நாட்களும் அறுசுவை நிரம்ப வேண்டும் என்பதற்காகவே அறுசுவை உணவு உண்டு பலவிதமான பட்சணங்களுடன் விருந்தினர்களை உபசரித்தல் புத்தாடை அணிதல், பெரியோரை வணங்கி ஆசி பெறுதல், நமது பாரம்பரிய வழக்கம்.   

அன்று எல்லோருமே மொத்தத்தில் வீடுகளை சுத்தமாக்குவார்கள். பழசு வெளியேறும். புது துணிகள் மாவிலை, தென்னை ஓலை தோரணங்கள். குடி என்றால் பொம்மை. மரப்பாச்சி யாக கூட இருக்கலாம். வீட்டு வாசலில் மூங்கில் பொம்மைகள் வேப்பிலை அலங்காரம் பண்ணி நிறைய தொங்கவிடுவார்கள். குளிக்காதவர்கள் கூட காலையிலேயே குளித்து எண்ணெய் தடவி தலை வாரி நெற்றிக்கு எது வழக்கமோ அதை பூசி நிறைய பேர் புதுவருஷ பஞ்சாங்கம் அந்தந்த பாஷையில் படிப்பதை கேட்க போய்விடுவார்கள். சாயந்திரம் கேளிக்கைகள், டான்ஸ். கூத்து கும்மாளம், சாப்பாடு.

துன்பம், கசப்பான நிகழ்ச்சிகள் போக வேப்பம்பூ வெல்ல பச்சடி. வேப்பம் பூ துயரத்தையும் வெல்லம் சந்தோஷத்தையும் சேர்த்து அனுபவித்ததை நினைவூட்ட. பச்சை மிளகாய் கோபம். உப்பு : பயம் . புளி : அருவருப்பு. அரை பழுத்த மாங்காய் : ஆச்சர்யம் இதெல்லாம் சேர்ந்தது தானே மனித வாழ்க்கை. 
இந்த சமயத்தில்  மஹா பெரியவா எனும் பேசும் தெய்வத்தை, மனம் நினைக்கிறது.....

''மஹா பெரியவா, எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஒரு தமிழ் புத்தாண்டு அன்று உங்களை தரிசித்தபோது எனக்கு உங்களோடு பேசும் பாக்யம் கிடைத்தது. நான் யார் என் பூர்வோத்தரம், என் தாய் வழி பாட்டனார் உங்களிடம் ''புராண சாகரம் '' என்ற   விருது பெற்றது எல்லாம் சொன்னேன்.
''அவரை ஞாபகம் இருக்கு, புரசவாக்கம் வசிஷ்டபாரதி பேரனா நீ ? ராமாயணம் புராணங்களில் அசாத்திய ஞானம் '' தமிழ்க் கடல் அவர். ''

பெரியவா எனக்கு பிரசாதம் தந்தபோது நான் அடைந்த சந்தோஷம் எழுத முடியாதது. தமிழ் தந்த பாக்யம். அருணாசல கவிராயரின் ராம நாடக கீர்த்தனைகளை பாடி வளர்ந்தது எங்கள் தாத்தா  குடும்பம். வடமொழியிலும் தேர்ச்சி. குடும்பத்தில் எல்லோருக்கும் ராமன் பெயர்.... அந்த தமிழ் எனக்கும் பெருமை சேர்த்தது. நிறைய எழுத வைத்தது. அது தொடர்கிறது....

sivan jaykay

unread,
Apr 14, 2023, 7:21:46 PM4/14/23
to amrith...@googlegroups.com

ஆத்ம வித்யா விலாசம் 26-30  -  நங்கநல்லூர்   J K  SIVAN 
ஸதாசிவ ப்ரம்மேந்திரா 

 कुवलयविकासकारणमज्ञानध्वान्तकौमुदीप्रज्ञः । शुद्धो मुनीन्द्रचन्द्रः सुरसेव्ये लसति विष्णुपदे ॥ २६॥
kuvalayavikAsakAraNamaj~nAnadhvAntakaumudIpraj~naH |shuddho munIndrachandraH surasevye lasati viShNupade || 26||
குவலயவிகாஸகாரணமஜ்ஞாநத்⁴வாந்தகௌமுதீ³ப்ரஜ்ஞ: । ஶுத்³தோ⁴ முநீந்த்³ரசந்த்³ர: ஸுரஸேவ்யே லஸதி விஷ்ணுபதே³ ॥ 26॥

புரியும்படியாக  சொல்வதானால், அத்வைத சித்தி என்றால்  இயல்பாக தியானத்தில் ஈடுபடுவது. ஸஹஜ சமாதி எனப்படும்  முக்தி நிலை இயல்பான  தேஹ நிலையைக் கடந்தது.  கைவல்யம்  எனப்படுவது  ஆனந்த நிலையில் ப்ரம்மத்தோடு ஒன்றிணைவது. இப்படிப்பட்ட  பக்தன்  சாதகன் அறியாமையை விலக்கியவன். தேவாதி தேவரெல்லாம் வணங்குபவன். வைகுண்டவாசி கைலாசவாசி என போற்றப்படுபவன். 

 स्वानन्दामृतसेकैरान्तरसंतापसंततिं शमयन् । चित्रमचञ्चलवृत्तिश्चिद्व्योमनि भाति योगिवर्यघनः ॥ २७॥
svAnandAmR^itasekairAntarasa.ntApasa.ntatiM shamayan | chitramacha~nchalavR^ittishchidvyomani bhAti yogivaryaghanaH || 27||
ஸ்வாநந்தா³ம்ரு’தஸேகைராந்தரஸந்தாபஸந்ததிம் ஶமயந் । சித்ரமசஞ்சலவ்ரு’த்திஶ்சித்³வ்யோமநி பா⁴தி யோகி³வர்யக⁴ந: ॥27

இப்படிப்பட்ட  ப்ரம்மஞானி விரல் பட்டால் கூட  ஞானம் மற்றவனுக்கு கிட்டும். பாபம்  அகலும். பார்வை பட்டாலே  அஞ்ஞானம் அழியும். 


सुमनःसौरभमञ्जुलसञ्चारनिवारिताखिलश्रान्तिः । संयमिचारुसमीरो विहरत्यानन्दसंविदारामे ॥ २८॥
sumanaHsaurabhama~njulasa~nchAranivAritAkhilashrAntiH | sa.nyamichArusamIro viharatyAnandasa.nvidArAme || 28||
 ஸுமந:ஸௌரப⁴மஞ்ஜுளஸஞ்சாரநிவாரிதாகி²லஶ்ராந்தி: । ஸம்யமிசாருஸமீரோ விஹரத்யாநந்த³ஸம்விதா³ராமே ॥ 28॥

ஏதாவதொரு விஷயத்தில் மனம் ஆழ்ந்து ஈடுபட்டால், அதனால் அதற்கு அளவற்ற  இன்பமும் துன்பமும் நிகழும். இப்படி ஈடுபடும்போது அது உலக ஈர்ப்புகளின் சம்பந்தமாக இருந்தால் அவன் அடையும் இன்பம் நிரந்தரமல்ல. பொய்யான சுகம். ப்ரம்ம ஞானியின் வருகையால், அவனது இருக்கையால், ஞான ஒளி எங்கும் பரவி தீய ஈர்ப்பு சக்திகள் ஓடிவிடும்.  ஆத்ம வெளியில் நந்தவனத்தில்  உலவும் ப்ரம்ம ஞானியின்  தோற்றமே அவனைச் சுற்றியுள்ள  படுதிகளில் சுகந்தத்தை அளிக்கிறது.  நறுமணம் வீசும் தென்றலில்  ஞானி ஆனந்தமாக ஒளிவீசி நடக்கிறான். 


 निःश्रेयससरसफले निर्मलविज्ञानपल्लवमनोज्ञे । वीतभये विपिनतले यतिशितिकण्ठो विभाति कोऽप्येकः ॥ २९॥
niHshreyasasarasaphale nirmalavij~nAnapallavamanoj~ne | vItabhaye vipinatale yatishitikaNTho vibhAti ko.apyekaH || 29||
 நி:ஶ்ரேயஸஸரஸப²லே நிர்மலவிஜ்ஞாநபல்லவமநோஜ்ஞே । வீதப⁴யே விபிநதலே யதிஶிதிகண்டோ² விபா⁴தி கோऽப்யேக: ॥ 29॥

பயம் எனும் உணர்ச்சி தான் ஒருவன்  மனதில் அவனைத் தவிர மற்ற எல்லா எண்ணங்களையும் நிரப்புகிறது. ஆத்ம ஞானம் தான் உண்மையான விஞ்ஞானம்.  அங்கே  ஆத்மாவாகிய அவனைத் தவிர  வேறு எந்த ஜீவனுமில்லை. அந்த ஆனந்தமய நந்தவனத்தில்  வண்ணமயில்கள் ஆடி உலவும். பயம் என்பதே என்ன என்று தெரியாமல் போகும்.  ஞானிக்கோ அவனை அணுகியவனுக்கோ பயம் என்பதே  நெருங்காது. நீலகண்டன் போல் அவன் நிரந்தரமானவன்.  ஞான ஆரண்யத்தில் முக்தி பழம் நிரம்பி ஆனந்த  மலர்கள் வரவேற்கும்போது  நீலமயில்கள் ஏன் அங்கே ஆடாது?.

 निःसारभुवनमरुतलमुत्सार्यानन्दसाररसपूर्णे । वरसरसि चिन्मयेऽस्मिन्परहंसः कोऽपि दीव्यति स्वैरम् ॥ ३० 
niHsArabhuvanamarutalamutsAryAnandasArarasapUrNe |varasarasi chinmaye.asminparaha.nsaH ko.api dIvyati svairam || 30 
 நி:ஸாரபு⁴வநமருதலமுத்ஸார்யாநந்த³ஸாரரஸபூர்ணே । வரஸரஸி சிந்மயேऽஸ்மிந்பரஹம்ஸ: கோऽபி தீ³வ்யதி ஸ்வைரம் ॥ 30

கானல் நீர் நம்மை மாயையில் எதிரே  நீர் ஓடுவதைப் போல  திகைக்க வைக்கிறது.  ஞானியை இந்த மாயை அணுகாது.ப்ரம்ம ஞான  அம்ருதத்தைப்  பருகுவனுக்கு கானல் நீர் எதற்கு?  உலகே பாலைவனம் என்று உணர்ந்தவன் ஞான ஏரியில் நீந்துகிறான். ஸம்ஸார சாகரத்தில் நம்மைப் போல் சிக்கிக்கொள்ளாத சுகவாசி. 

sivan jaykay

unread,
Apr 14, 2023, 7:21:55 PM4/14/23
to amrith...@googlegroups.com

ஹயக்ரீவர்  -  நங்கநல்லுர்  J K   SIVAN 

கோடை வெயில் கொளுத்தும் சமயம் இது.   பள்ளிக்கூடங்களில்  ஒருவருஷ  பிரயாசைக்குப் பிறகு குழந்தைகள் பரீக்ஷையில் தேர்வு பெற்று அடுத்த வகுப்புக்கு  செல்லும் நேரம்.  படிப்பு  என்றாலே   ஹயக்ரீவர் நினைவு வருகிறது.  குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக  வரவேண்டும், நிறைய மார்க்   வாங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு  ஹயக்ரீவர் கோவில்களுக்கு சென்று  அவர் சந்நிதியில் பேனா, பென்சில், நோட் புத்தகங்கள், புத்தகங்கள்  வைத்து ஆசி வேண்டுவார்கள்.
 பரிக்ஷையில் நிறைய மார்க் வாங்கி வேலையோ, காலேஜ் அட்மிஷனோ கிடைக்கவேண்டும் என்றோ வேண்டிக்கொண்டு  பரிக்ஷைக்கு எழுதிய  நம்பரை எங்கு பார்த்தாலும்  சரஸ்வதி கோவிலும் ஹயக்ரீவர் கோயில் சுவற்றில் காணலாம். பார்த்திருக்கிறேன்.  கூத்தனுர்  சரஸ்வதி கோவிலிலும் நிறைய  நம்பர்கள் எங்கே பார்த்தாலும்.   சரஸ்வதி எனும் கலை மகளுக்கு  கலைகளை உபதேசித்தவர்  ஹயக்ரீவர் என்று அநேகர்  அறியாதவர்கள். 
கடலூருக்கு கப்பல்  உத்யோகமாக நான்  சென்றபோது அங்கிருந்து 7 கி.மீ தூரத்தில் திருவஹீந்திரபுரம்  எனும் திருவந்திபுரத்துக்கு செல்லும்  பாக்கியம் பல வருஷங்களுக்கு முன் முதல் முதலாக கிடைத்து பிறகு பலமுறை  ஹயக்ரீவரை அங்கே  தரிசித்திருக்கிறேன்.
ஹயக்ரீவரை துதித்து தான் இன்றும் வித்யாரம்பம்  நடைபெறுகிறது.  நான் வசிக்கும் நங்கநல்லூரில் ஹயக்ரீவர்  ஆலயம் மிக பெருமை வாய்ந்தது. 
ஹயக்ரீவர்  மஹா விஷ்ணு அம்சம்.  தசாவதாரம் எடுக்கும் முன்பே  தோன்றியவர்  ஹயக்ரீவர். 
ஹயம் என்றால் அஸ்வம், குதிரை.  க்ரீவர்  என்றால் கழுத்தை உடையவர். ஹயவதனம் என்றாலும்  குதிரை முகம் என்றும் அறிவோம். சகல வித்தைகளும் ஆதாரம்  ஹயக்ரீவரே  என்று ஸ்லோகமே  உண்டு. 
 ''ஆதாரம் சர்வ வித்யானாம். ஹயக்ரீவம் உபாஸ்மஹே'. முக்யமாக  வடகலை வைணவர்கள்  சிறப்பாக  தரிசிக்கும்  தெய்வம்  திருவஹீந்திரபுரம் ஹயக்ரீவர்.  நிகமாந்த தேசிகர் எனப்படும்  ஸ்ரீ வேதாந்த தேசிகருக்கு  காட்சி தந்து அருளிய ஸ்தலம்.
ஹயக்ரீவர்  வேதங்களை பிரம்மாவுக்கு மீட்டு தந்தவர்.  வேதங்களை கடத்திச் சென்ற  மது கைடபர்களை ஒடுக்கியவர் .
மஹா விஷ்ணு  வெள்ளை  அஸ்வமாக அவதரித்தது தான்  ஹயக்ரீவர். அவதார நாள்:  ஆவணி (ஸ்ராவணி )மாதம், ஸ்ராவண நக்ஷத்ரம், பௌணர்மி திதி. நீண்ட மூக்குடனான  அஸ்வ சிரஸ் , விண்ணுலாம் மண்ணுலகம் ரெண்டும்  ரெண்டு காதுகள்.  சூர்ய கிரணங்கள் பிடரி மயிர்.  பூமி தான் நெற்றி.  கங்கை ஸரஸ்வதி  இருவரும் இரு புருவங்கள். சந்திர சூரியர்கள் இரு நேத்ரங்கள். சந்தியா தேவதை   நாசித்ரவாரங்கள்.  பித்ரு தேவதைகள் பற்கள்.  கோலோகம் பிரம்மலோகம்  ரெண்டுமே   மேலுதடு, கீழுதடு . காலராத்ரி தான் நீண்ட கழுத்து.  

இப்படிப்பட்ட ஒரு  வெள்ளை குதிரை  பாதாளத்தை நோக்கி பாய்ந்தது.  சாமவேத ஸ்வரத்தில்  உத்கீதம் ஒலித்தது. . அண்டபகிரண்டம் எங்கும் அது எதிரொலிக்க மதுகைடபர்கள் நடுங்கினார்கள்.  வேதத்தை குழந்தைகளாக உரு மாற்றி ஒளி த்து வைத்தார்கள். அவற்றை ஜாக்கிரதையாக  பிரம்மாவிடம் ஒப்படைத்தார் ஹயக்ரீவர். திரும்பி வந்த  மதுகைடபர்கள் வேதத்தை காணோமே என்று  தேடினார்கள். ஏமாந்தனர் . பிரம்மாவிடம் வந்தார்கள்,  ப்ரம்மா ஹயக்ரீவரை நாட, அவர்கள்  ஹயக்ரீவரிடம் உயிரிழந்தனர்  என்று ஒரு புராண விஷயம். 

sivan jaykay

unread,
Apr 16, 2023, 6:52:50 AM4/16/23
to amrith...@googlegroups.com

திருமறைக்காட்டீஸ்வரர் -    நங்கநல்லூர்  J K  SIVAN

ஒரு பழைய ஞாபகம்.   சில வருஷங்களுக்கு முன் நண்பர்  ஸ்ரீ  அரும்பாக்கம்  ஸ்ரீனிவாசனோடு  சப்த விடங்க தியாகராஜர்களை தரிசிக்க  அவர் காரில் பிரயாணம் செய்தோம். நாங்கள் சென்ற புனித பயணத்தில் முதல் இரண்டு விடங்கர்களை திருநள்ளாற்றிலும் நாகப்பட்டினத்திலும்  தரிசித்த பின்  மூன்றாவது விடங்கரை வேதாரண்யத்தில் தரிசித்தோம். வேதாரண்யம் என்ற சமஸ்க்ரித வார்த்தை தமிழில் திருமறைக்காடு. வேதாசலம் என்ற அறிஞர் மறைமலை அடிகள் ஆன மாதிரி. நாகபட்டினத்திலிருந்து வேளாங்கண்ணி வழியாக நல்ல சாலை செல்கிறது. அதில் 48 கி.மீ. பிரயாணம் செய்தால் அதிகபட்சம் ஒன்றரை மணி நேரத்தில் வேதாரண்யம் அடையலாம்.

தேவார பாடல் பெற்ற இந்த ஸ்தலம். 7ம் நூற்றாண்டை சேர்ந்தது. கிழக்கு பார்த்த ஐந்து நிலை கோபுரம். ஆதித்த சோழன்  
(கி.பி 871-907) திருப்புறம்பியம் யுத்தத்தில் வெற்றி பெற்றதற்கு ஞாபகமாக கட்டிய கோவில். வேதாரண்யேஸ்வரர் ஸ்வயம்பு லிங்கம். வேதவனேசர், மறைக்காட்டீசர், வேதாரண்யேஸ்வரர், வேதாரண்ய நாதர் என்றெல்லாம் பெயர் கொண்ட சிவன். அம்பாள் வேத நாயகி. யாழினும் இனிய மொழியாள் என்ற அற்புதமான பெயரும் கொண்டவள். 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. இங்கே அம்பாள் காட்சி தருவது சுந்தரி பீடத்தில்.  காவிரி ஆற்றங்கரையில் கட்டப்பட்ட கோயில்களின் வரிசையில் வேதாரண்யேஸ்வரர் கோயில் முக்கியமானது.  இங்கே  சோழர் காலத்தைச் சேர்ந்த பல கல்வெட்டுகள் உள்ளன . கோயிலில் காலை 5:30 மணி முதல் இரவு 8 மணி வரை பல்வேறு நேரங்களில் ஆறு தினசரி சடங்குகள் மற்றும் அதன் காலண்டரில் மூன்று ஆண்டு விழாக்கள் உள்ளன. வருடாந்திர பிரம்மோத்ஸவம்(பிரதம திருவிழா) தொலைதூர மற்றும் அருகாமையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்

சிவாஜி கணேசன் அப்பர் திருநாவுக்கரசராக நடித்த திருவருட்செல்வர் படத்தில் ''தாள் திறவாய்'' என்ற பதிகத்தை பாடினாரே ஞாபகம் இருக்கிறதா? அது இந்த கோவில் பற்றிய சிறப்பு செய்தி. திருஞான சம்பந்தரும் அப்பரும் இந்த ஆலயத்தில் சந்தித்தபோது நிகழ்ந்த அதிசயம். அப்பர் பத்து பதிகம் பாடி திறந்த கதவு திருஞான சம்பந்தர் ஒரே பதிகம் பாடியவுடன் மீண்டும் மூடியது.  அதற்கு முன் இந்த வாசல் வழியாக எவரும் உள்ளே செல்ல இயலவில்லை. அப்பர் சம்பந்தர் விஜயத்திற்கு பின் கதவு திறந்து மூடிய பின் எல்லோரும் இந்த வாசல் வழியாகவே வந்து சிவ தர்சனம் பெறுகிறார்கள்.

வேதம் உருவான இடம் என்று பெயர் பெற்ற ஸ்தலம் வேதங்கள் உருவாகி சிவனை வழிபட்டது இங்கேதான் இங்கே ஸரஸ்வதி  கையில் வீணை இல்லை. வேதங்கள் நிரம்பிய ஓலைச்சுவடி மட்டுமே ஏந்தி நிற்கிறாள்.

உப்பு சத்யாகிரஹம் நடந்த சமயம் வடக்கே மஹாத்மா காந்தி குஜராத்தில் தண்டி யாத்திரை சென்றார். இங்கே சர்தார் வேதரத்னம் ராஜாஜி ஆகியோர் ஆங்கில ஆட்சியை எதிர்த்து  வேதாரண்யம்  கடற் கரையில் உப்பெடுத்து சத்யாகிரஹம் செயது சிறைப்பட்டனர்.     ராமர் ராவணனைக் கொன்ற ப்ரம்மஹத்தி தோஷம் நீங்க சிவனை வந்து வழிபட்ட இடம் இதுவும் ராமேஸ்வரமும் என்பதால் இந்த ஊருக்கு அருகே ராமர் பாதம் என்ற ஒரு புனித ஸ்தலம் உண்டு.

இங்கே மரகத லிங்கமான விடங்க தியாகராஜனை தரிசித்ததில் பெரு மகிழ்ச்சி. காவல் பாதுகாப்பு ஏற்பாடுகளோடு மரகத லிங்கத்தை கொண்டுவந்து அபிஷேகம் ஆனவுடன் உடனேயே ஜாக்கிரதையாக எடுத்துச் சென்று பாதுகாக்கிறார்கள். விடங்கரின் பெயர் புவனி விடங்கர். இங்கு சிவன் ஆடிய நடனம் ஹம்ச பாத நடனம். பொறுத்திருந்து அபிஷேகம் பார்த்து விட்டு சென்றேன். தல விருட்சம் புன்னை மரமும் வன்னி மரமும்.

ஒரு விஷயம் சொல்லட்டுமா. இந்த ஊரில் மற்ற எல்லா கிணற்று நீரும் உப்பு கரித்தாலும் இந்த ஆலய கிணற்று நீர் மட்டுமே குடிக்க ருசிக்கிறது.

இன்னொரு ஆச்சர்யமும் சொல்லிவிடுகிறேன். விடங்க க்ஷேத்திரங்களில் நந்தி நின்று கொண்டு இருப்பதை கவனித்தேன்.
வேதாரண்யத்தில் அழகான  நந்தி வேஷ்டி கட்டிக்கொண்டு நிற்கிறது. 

வேதாரண்யேஸ்வரர் 7 ஆம் நூற்றாண்டின் தமிழ் சைவ நியதிப் படைப்பான தேவாரத்தில் போற்றப்படுகிறார் . ஏழு திருமுறைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே கோயில்  வேதாரண்யம் சிவாலயம்.  அப்பர் மற்றும் சம்பந்தர் ஆகியோருக்கு இடையே யான புராணக்கதைக்காக இந்த கோயில் புகழ் பெற்றது .

ராமர் , விஷ்ணுவின் ஏழாவது அவதாரம், இலங்கேஸ்வரன் ராவணனுக்கு எதிரான போரில் செய்த பாவங்களைப் போக்க வேதாரண்யம் சென்றதாக ஐதீகம். 
வேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் வரலாறு விவரங்கள்   காணப்படுகிறது. கல்வெட்டுகள் 1904 இல் சென்னை கல்வெட்டுத் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 88 பதிவு செய்யப்பட்ட கல்வெட்டுகள் 1904 இன் 415 முதல் 1904 இன் 503 வரை பெயரிடப்பட்டுள்ளன.  கல்வெட்டுகள் ஆதித்த சோழன் (871-907 CE), இராஜராஜரின் ஆட்சி காலத்தைச் சேர்ந்தவை. ராஜராஜ சோழன்I (985–1014 CE), ராஜேந்திர சோழன் I (1012–1044 CE) மற்றும் குலோத்துங்க சோழன் I (1070–1120 CE) ஆகியோர் கோயிலுக்கு பல்வேறு மானியங்களைக் குறிப்பிடுகின்றனர். [2] [9] திருவிளையாடல் புராணம் என்ற நூலை எழுதிய 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரஞ்சோதி முனிவர் வேதாரண்யத்தில் பிறந்தார். பராந்தக சோழன் வற்றாத தீபத்தை பராமரிப்பதற்காக 90 ஆடுகளை ஒரு வணிகர் கோயிலுக்கு பரிசாக அளித்ததை கல்வெட்டு சொல்கிறது. 

வேதாரண்யம் சோழப் பேரரசின் ஒரு பகுதியாக தொடர்ந்து இருந்தது.   சோழ மண்டலம் குலோத்துங்க சோழன் I (1070-1120 CE) ஆட்சியின் போது சைவத்தின் மையமாக  இருந்தது.  கிபி 13 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜேந்திர சோழனின் ஆட்சியின் போது சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு , முந்தைய சோழ மண்டலம் பாண்டியர்களுக்கும் ஹொய்சாலர் களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில் சிக்குண்டது. .நாயக்க மன்னர்களின் ஆதரவு கோவிலுக்கு தொடர்ந்தது. நாகப்பட்டினம்  1759 ல் லாலி (1702-66 CE) தலைமையிலான பிரெஞ்சு துருப்புக்களால் கைப்பற்றப்பட்டது. தஞ்சை மாவட்டத்தை   பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றத் தவறியதால் ஆங்கிலேயர்களால் இணைக்கப்பட்டது. 

கோவில் வளாகத்தின் உள்ளே மேற்கு நுழைவாயிலில் மணிகர்ணிகா என்ற பெயரில் ஒரு தொட்டி உள்ளது.  மத்திய சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது மற்றும் வேதாரண்யேஸ்வரர் (சிவன்) உருவம் கிரானைட் லிங்க வடிவில் உள்ளது. விநாயகர் (சிவனின் மகன் மற்றும் ஞானத்தின் கடவுள்), முருகன் (சிவனின் மகன் மற்றும் போர்க் கடவுள்), நந்தி ஆகிய தெய்வங்களின் கிரானைட் படங்கள்(சிவனின் காளை மற்றும் வாகனம்) மற்றும் நவகிரகம் (ஒன்பது கிரக தெய்வங்கள்) கருவறைக்கு செல்லும் மண்டபத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மற்ற சிவாலயங்களைப் போலவே, வேதாரண்யேஸ்வரரின் கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிரகாரம் அல்லது சுவர்களில் தட்சிணாமூர்த்தி (சிவன் ஆசிரியர்), துர்க்கை (வீரர்-தெய்வம்) மற்றும் சண்டிகேஸ்வரர் (ஒரு துறவி மற்றும் சிவன் பக்தர்) ஆகியோரின் உருவங்கள் உள்ளன. இரண்டாவது வளாகம் கிரானைட் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. உள் கருவறையில் 63 நாயனார்களின் உருவம் காணலாம்.  ராமநாத லிங்கம், சண்முகர், ஜ்வரதேவர், சரஸ்வதி, சனிஸ்வரர், அன்னபூரணி, துர்க்கை, நடராஜர், பைரவர், சூரியன் மற்றும் சந்திரன் சந்நிதிகள் உள்ளன.   இங்கே ஒரு விசேஷம்.  நவக்கிரகங்கள் வரிசையாக உள்ளன.  துர்கா மற்றும் வனதுர்கா   விகிரஹங்கள் தனித்துவமானவை. 

 திருவாரூர் தியாகராஜர் கோயில் அஜப தானத்திற்கு (கோஷமில்லா நடனம்) புகழ் பெற்றது . புராணத்தின் படி, முசுகுந்தன்  என்ற திருவாரூர்  சோழ மன்னன் இந்திரனிடம் (ஒரு வான தெய்வம்) வரம் பெற்று , சாய்ந்திருக்கும் விஷ்ணுவின் மார்பில் அமர்ந்திருக்கும் தியாகராஜ ஸ்வாமியின் (கோயிலில் உள்ள சிவன்)  விக்ரஹத்தை  வேண்டினான். இந்திரன் முசுகுந்தனை தவறாக வழிநடத்த முயன்றான்.  ஆகவே  மேலும் ஆறு  உருவங்களை ஒரே மாதிரியாக  தோற்றுவித்தாலும் ராஜா சரியான  தியாகராஜர்  உருவத்தை  திருவாரூரில் தேர்ந்தெடுத்தார். மற்ற ஆறு  விக்ரஹங்கள் திருக்குவளை, நாகப்பட்டினம், திருக்கரையில், திருக்கோழி, திருக்குவளை மற்றும்  வேதாரண்யம் எனும் திருமறைக்காடு ஆகிய இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டன.  மொத்தமாக   ஏழு இடங்களும் காவேரி ஆற்றில் அமைந்துள்ள கிராமங்களில்  உள்ளவை.  ஏழு தியாகராஜர் உருவங்களும் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படும்போது நடனமாடுவதாகக் கூறப்படுகிறது நடராஜாவை தூக்கிச்செல்பவர்கள்  வித விதமான  நடன பாணிகளைக் கொண்ட கோயில்கள்.  ஆகவே  சப்த விடங்கம் (ஏழு நடன அசைவுகள்) என்று பெயர் பெற்றவை. விடங்கம் என்றால் உளியால் செதுக்காத ஸ்வயம்பு  லிங்கம் என்றும் அர்த்தம்.


sivan jaykay

unread,
Apr 16, 2023, 6:52:50 AM4/16/23
to amrith...@googlegroups.com

கொள்ளுத்  தாத்தாவின் கதை  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

விஞ்ஞான முன்னேற்றம்  காணாத  பழங்கால  விஷயங்களை  வாய் வழியாக யாரோ சொல்லி, எங்கோ சிலர்  எழுதி வைத்ததன் மூலம்  அறிய வேண்டிய நிர்பந்தம் நமக்குள்ளது.  அதில் எத்தனை உண்மையென்பதும் சந்தேகம் தான். ஒரே விஷயத்தை பலர் பலவிதமாக சொல்லும் வழக்கம் எப்போதும் உண்டே. 

என் தாய் வழி தாத்தா  பிரம்மஸ்ரீ புராணசாகரம் புரசைவாக்கம் வசிஷ்ட பாரதிகள். அவருடைய அப்பா  வைத்யநாத பாரதி. என் கொள்ளு தாத்தா. அவருக்கு தர்ப்பணம் பண்ணிக்கொண்டு வருகிறேன் தவிர அவர் எப்படி இருப்பார் என்ற விவரம் கூட இல்லை. ஒரு  சுவாரஸ்யமான மனிதர்.     

எள்ளு தாத்தா ரெட்டை பல்லவி சீதாராமய்யர் நாற்பது வருஷ காலமே வாழ்ந்தவர். அவர் மரணம் அடையும் சமயம் அவர் மனைவி ஜானகி என்ற செல்லத்தம்மாளுக்கு வயது 28. அவர்கள்  பெண் அம்மணிக்கு 10 வயது. பிள்ளை வெங்கட்ராமனுக்கு 7 வயது. வயதான தாய் லக்ஷ்மி அம்மாள் 80 வயதினள். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காதவர்கள். இறைவன் மீது நம்பிக்கையோடு வாழ்ந்தவர்கள்.

இதற்கிடையில் தோடி சீதாராமய்யர் தாய்மாமன் ராமஸ்வாமி பாரதிக்கு ஐந்து பிள்ளைகள் ஒரு பெண். நான்காவது பிள்ளை தான் வைத்யநாத பாரதி. அவரைப் பற்றிமட்டும் ஏன் சொல்கிறேன் என்றால் அவரே எனது தாய் வழி பாட்டனார் வசிஷ்ட பாரதிகளின் தந்தை.    வைத்யநாத பாரதி, அந்த காலத்தில் செப்பிடு வித்தை, கண்கட்டு வித்தை ஆகிய மனோவசிய சாஸ்திரத்தில் கை தேர்ந்த ஒரு வித்தகராக இருந்தார். இந்த கலைக்கு பீதாம்பர வித்தை, இந்திர ஜால வித்தை என்று பெயர். .இப்போது நாம் சொல்கிறோமே மாஜிக் (magicshow ) அது மாதிரி நிறைய மனோவசிய வித்தைகளை கற்று பிரபலமாக்கியவர்களில் ஒரு முக்கியமானவர் என் கொள்ளு தாத்தா வைத்யநாத பாரதி என்ற பீதாம்பர ஐயர். பீதாம்பர வித்தைக்கு ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் தெரிந்திருக்கவேண்டும். இதை தான் மனோவசியம் என்று சொன்னேன்.

இப்போதெல்லாம் மாஜிக் ஷோ செயகிறவர்கள், தலைப்பாகை, நீண்ட அங்கி, கலர் கலராக மேலே வஸ்திரங்கள், மீசை, பளபள ஜிலுஜிலு ஆபரணங்களுடன் காணப்படுகிறார்கள் அல்லவா? மந்திரவாதி மாஜிக் நிபுணர்கள்  P .C .சர்க்கார் போன்றவர்கள் படம் பார்த்திருப்பீர்கள். அந்த காலத்தில் இப்படி மாஜிக் ஷோ செய்த வைத்யநாத ஐயரை மக்கள் பீதாம்பர ஐயர் என்று அழைத்தார்கள். இந்த பீதாம்பரையர் எப்படி இருப்பார் என்று என் தாத்தா எழுதி வைத்த குறிப்பிலிருந்து விவரிக்கிறேன்.

ஆஜானுபாகுவாக பரங்கிப்பழம் போல் சிவப்பு நிறம். தலையில் ஜரிகை தலைப்பாகை. கழுத்தில் விலையுர்ந்த ஜரிகை மற்றும் வண்ண வண்ண கொட்டடி போட்ட அங்கவஸ்திரம். உடலில் முழங்கால் வரை நீண்ட ஒரு அங்கி. இடுப்பில் இரு பெல்ட் மாதிரி அங்கவஸ்த்ரம் அதை பிணைத்திருக்கும். பத்து முழம் ஜரிகை வேஷ்டியை பஞ்சகச்சமாக கட்டி இருப்பார். அந்த அங்கியின் மேலே பீதாம்பரம் வஸ்திரம் சால்வை மாதிரி. கை விரல்களில் மோதிரங்கள் ஜிலுஜிலுக்கும். காதில் தோடு. தங்க அரைஞாண் தரித்தவர்.

ஒரு ஊரில் இவரது பீதாம்பர வித்தை நிகழ்ச்சி நடக்கிறது என்றால் முன்பாகவே ரெண்டு மூன்று பேரை அனுப்புவார். அவர்கள் தெருவெல்லாம் இவரது பிரதாபம் பற்றி சொல்லிக்கொண்டே போவார்கள். ஜனங்களை நிறுத்தி நிகழ்ச்சி எங்கே எப்போது என்று அனைவரையும் கூப்பிடுவார்கள். பாடுவார்கள். அதுதான் ADVERTISEMENT, அதே போல் நிகழ்ச்சிக்கு அய்யர் வரும் முன்பே சிலர் கட்டியம் கூறுவார்கள். ''பீதாம்பர ஐயர் வருகிறார்.  கல்வி களஞ்சியம், கற்பனை பொக்கிஷம், பில்லி சூனியத்துக்கு எமன். அனைவரும் வாருங்கள்.   பீதாம்பர வித்தையில் மகிழுங்கள்.'' என்று மேள தாளங்களோடு அறிவிப்பார்கள். ஒருவன் குடை பிடித்துக் கொண்டு வருவான். சிலர் வாத்யம் வாசிப்பார்கள். பீதாம்பர ஐயர்  குதிரைமேல் சவாரி  வருவார். ரெண்டு ஆள் குதிரையின்  சேணத்தை பிடித்துக்  கொண்டு பக்கத்தில் நடப்பார்கள். எல்லோருமே  ஐயரின் சிஷ்ய கோடிகள் தான்.   அந்தக்  காலத்தில் மோட்டார் கார், வண்டிகள் வசதி இல்லை. மாட்டு வண்டி, பீடன்,  கோச் குதிரை வண்டி, பல்லக்கு தான் பிரயாணத்துக்கு உபயோகமாகியது. சிலர் தனிப்பட்ட சௌகர்யங்களுக்கு குதிரை மீது ஏறி சென்றார்கள்.
தனி மனிதர்கள், வசதியுள்ளவர்கள் குதிரைகளில் பிரயாணம் செய்த காலம். ரொம்ப வசதி கொண்ட மேல் மட்ட வகுப்பு பீடன் கோச் வண்டி, ஜட்கா, மோட்டார் சைக்கிள், ரிக்ஷா, தள்ளு வண்டி, மாட்டு வண்டி ஆகிய சாதனங்களை, வாகனங்களை, உபயோகப்படுத்தினர்.
அதிக உயரமில்லாத ''மட்ட'' (cheap, என்று அர்த்தம் இல்லை, ) குதிரைகளை  பிரயாணத்துக்கு உபயோகித்தார்கள். சேணம், கடிவாளம் பிணைத்து அந்த குதிரைகள் எஜமானன் விருப்பப்படி ஓடும். குதிரையின் இரு பக்கங்களிலும் பைகள் பெரிதாக தொங்கும். அதில் தான் தனக்கு போகும் இடத்தில்  தேவையான சமையல் சாமான்கள், பண்டங்கள், புத்தகங்கள், துணி மணிஆடைகள் எல்லாம் இருக்கும். இந்த பெரிய கித்தான் பைகளுக்கு ''கண்டாளம் '' என்று பெயர். இந்த குதிரைகள் உயர்ந்த ஜாதி ரகம் அல்ல. இந்த குதிரைகள் ஆயிரம் ரெண்டாயிரம் ரூபாய் விலையுமல்ல. வெட்டவெளியில் புல்லை மேய்ந்து கொண்டு திரியும். கிடைத்த இடத்தில் தண்ணீர் குடிக்கும். மரத்தடியில் வைக்கோல் போட்டு கட்டி போட்டிருப் பார்கள். தூங்கும். அந்த காலத்தில் இப்படிப்பட்ட நாலடி, நாலரை அடி உயர குதிரைகள் பத்து இருபது ரூபாய்க்கு கிடைத்தது. இப்போது போல்  கிராம  தெருக்களில்  நெரிசல் வீடுகள் இல்லை. ஊரில் சில வீடுகள் மட்டுமே, மற்றவை அங்கங்கு குடிசைகள்.

வைத்யநாத பாரதி என்ற பீதாம்பர அய்யர் ஊர்வலத்தில் இப்படி ஒவ்வொரு கிராமத்திற்கும்  வரும்போது அந்தந்த ஊர் மணியக்காரர், மிராசு, பண்ணையார்கள், பட்டாமணியம், கர்ணம் , கணக்குப்  பிள்ளைகள் ஊர் எல்லையிலேயே நின்று வரவேற்பார்கள்.   யார்  வீட்டிலாவது ஒரு பெரிய திண்ணை ஏற்பாடு செய்திருப்பார்கள். அங்கே ஆயத்தமாக, ரத்ன கம்பளம் விரித்து வைத்து தங்க வசதி.   அருகில்  மர நிழல்களில் தரையில் ஜமக்காளத்தில்  ரசிகர்கள் உட்காருவார்கள்.

நிகழ்ச்சிகள் பொதுவாக, கோவில் மண்டபங்கள், சத்திரங்கள், பொது அம்பல சாவடிகள், பெரியமனிதர் வீட்டு திண்ணைகளில் நடக்கும். தாரை தப்பட்டை அடித்து தெருவெல்லாம் செய்திகள் சொல்வார்கள்.   பீதாம்பர ஐயர் உட்கார திண்டு, சாய்ந்து   கொள்ள தலையணை, தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு தாம்பூலம், கூஜாவில் நீர்.
தட்டு தட்டாக பழங்கள்.

வைத்யநாத பாரதிக்கு இளம் வயதிலேயே இந்த பீதாம்பர வித்தையில் மனம் பூரணமாக லயித்துவிட்டது. 15  வயதில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். நேராக லால்குடி சென்றார். அவரிடம் ஒரு முக வசீகரம், சாதுர்யம், அதீத ஞாபக சக்தி, புத்தி கூர்மை இருந்ததால் எல்லோருக்கும் அவரை பிடிக்கும். லால்குடியில் வைத்யநாத பாரதியின் உறவினர் பிச்சு அய்யர் இந்த வித்தையில் பிரபலமாக வாழ்ந்திருந்த காலம். வைத்தியநாத பாரதி அவர் வீட்டுக்கு சென்று அவருடைய சிஷ்யனானார். குருவுக்கும் சிஷ்யனை ரொம்ப பிடித்து விட்டது. வெகு விரைவில் அநேக பீதாம்பர வித்தைகளையும் குரு பிச்சு ஐயரி
டமி
 ருந்து கற்று கொண்டார்.

வைத்யநாத பாரதி வெளியூர்களான மதுரை திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சிகள் நடத்தினார். சென்ற இடமெல்லாம் பேரும் புகழும், விருதுகளும் குவிந்தன.    குரு பீதாம்பர பிச்சு ஐயர்  லால்குடியில் கொடிகட்டி பறந்தவர். ஐந்து தலைமுறையாக இந்த பீதாம்பர வித்தையில் புகழ் பெற்ற  வம்சம். அவர்கள் வம்சம் இன்னும் எங்காவது இருக்கலாம். பீதாம்பரம் முத்தண்ணா என்று திருச்சியில் ஒருவர் இருந்தார். பிற்பாடு வந்த வித்தைக்காரர்கள் பலர் பீதாம்பரம் பிச்சு அய்யர், வெங்கு ஐயர் என்ற பெயரைச் சொல்லியே காலம் தள்ளினார்கள் என்று தெரிகிறது. நிறைய பேரை உறவில் இருப்பவர்களை  இன்றுவரை  எனக்கு  தெரியவே இல்லை.

நமக்கெல்லாம்  மந்திர, தந்திரம், மேஜிக்  எல்லாம்  பிடிக்கும்.   இதை ரசிக்கவோ, பார்த்து கைதட்டவோ,  வயசு  வித்தியாசம் எதுவும்  கிடையாது. சிறுவர் முதல் தாத்தாக்கள் வரை ஆர்வமாக  பார்த்து மகிழ்வார்கள்.  நானும் நிறைய ''மேஜிக் ஷோ''  பார்த்திருக்கிறேன்.  இப்போதும் கூட  அவ்வப்போது  சில ஆச்சர்ய மான  நிகழ்ச்சிகளை  யூ ட்யூபில் பார்க்கிறேன். அதிசயிக்கிறேன்.

வித்தை காட்டுவது எந்த காலத்திலும்  இருந்தது தான்.    அந்த காலத்தில் பீதாம்பர வித்தையின் முக்ய அம்சம் என்னவென்றால்,    அந்த மேஜிக் வித்தகருக்கு தமிழ், ஸமஸ்க்ரிதம் ,படிப்பு கண்டிப்பாக இருக்கவேண்டும். ஆசு கவிகளாக இருப்பது  அத்யாவசியம். சங்கீத ஞானம் இருக்கவேண்டும், பாடக்  கூடியவராகவும் பிரசங்கம் செய்யக் கூடியவராகவும் வேறு இருக்கவேண்டும். இவற்றுக்கு மூலாதாரமாக தெய்வ பக்தி, சத்யமான பேச்சு, நடவடிக்கை, குணமாக அமைய வேண்டும். வாக் சாதுர்யம் மிக இன்றியமையாதது. எனவே  அக்காலத்தில் ஒருவரைப் புகழ்ந்தோ இகழ்ந்தோ பாடினால், பேசினால் அது பலிதமாகியது. பலித்துவிடும் என்று ஜனங்கள் மனப்பூர்வமாக நம்பினார்கள்.  குறளி என்கிற குட்டிச் சாத்தான் ஏவல் என்ற மந்திர வித்தை  நம்பிக்கையோடு பழக்கத்தில் இருந்த காலம். சிலர்  தந்திர வித்தைகளும் நிகழ்த்தினார்கள். திடீரென்று வைக்கோல் போர், கீத்து கொட்டகை, எல்லோர் கண் எதிரே பற்றி எரியும்.  

இன்றும் சில வீடுகளில் கொடியில் உணர்த்தி யிருக்கும் ஈர புடவை  வேஷ்டி  திகு திகு வென்று  தீப்பற்றி எரிகிறது என்று சொல்கிறார்கள்.  ஒருவர் கையில் ஒரு பொருளைக் கொடுத்து அதைக்  காணாமல் போக்குவது.   மீண்டும்  அதை திரும்பி வரச் செய்வது.. ஒரு பிடி மண்ணை ஒருவர் கையில் கொடுத்து அதிலிருந்து பழங்கள், புத்தகம். சர்க்கரை, வெல்லக்கட்டி, போன்ற பல வேறு வஸ்துகளை வரவழைத்தல், பழுக்கக் காய்ச்சிய இரும்புத்  துண்டை,  கண்ணாடிச் சில்லுகளை,  வாயில் கடித்து  மெல்லுதல், கிணற்றுக்குள் இறங்கி சுடச்சுட சமைத்து  உணவை  வெளியே கொணர்தல், பச்சைத் தண்ணீரில் அரிசி முடிந்து நனைத்து அதை ஆவி பொங்க சாதமாக மாற்றுதல், ஹிப்னாடிச மெஸ்மெரிஸ (தேக வசியம், மனோ வசியம்) வித்தைகளில் ஒருவனை தூங்கப்  பண்ணி அவன் பலர் கேள்விகளுக்கு பதில் சரியாகச்  சொல்வது. பாடத் தெரியாதவனை ஸ்வரம்  போட்டு பாடவைத்தல் , ஆடத் தெரியாதவன் நடனம் செய்தல், இப்படி  யெல்லாம் பிறர் மனத்தையும் உடலையும் தனது ஸ்வாதீனத்தில் வசியம் செய்வது போன்ற கலையில் என்  கொள்ளு தாத்தா  வைத்யநாத பாரதி தேர்ச்சி பெற்ற பிறகு தான் ''பீதாம்பர'' அய்யர் என்ற பிரக்யாதி பெற்றவர். முப்பது வயதில் மதுரையில் அவர் சில காலம் வசித்தார்.

ஒரு சம்பவம்  சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.    காஞ்சிபுரம் சென்று  மஹா பெரியவா முன்னால் பீதாம்பர ஐயர் தனது வித்தையை ஒரு சமயம் காட்டி இருக்கிறார்.  பஞ்ச கச்சம் மேலே அங்கவஸ்திரம் நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி.   ஒரு  இரும்பு குண்டு பந்துபோல் ஒரு கிலோ  எடை  உள்ளதை   தலைக்கு மேலே  தூக்கி வீசினார்.  அந்தரத்தில்  அது ஐந்து நிமிஷங்கள் கீழே விழாமல் நின்றது.   ''கீழே  வா''  என்று கட்டளையிட்டார் ஐயர்.  நல்லபிள்ளையாக  அது கீழே அவர் கையில் விழுந்தது.     அப்புறம்  காலாமில்லா காலத்தில் மாம்பழம், பலாப்பழம்  வரவழைப்பார்.   மண்டபத்தில் நடுவே  இது  நிகழ்ந்தது.

sivan jaykay

unread,
Apr 16, 2023, 6:53:01 AM4/16/23
to amrith...@googlegroups.com
ஸௌந்தர்ய  லஹரி  51/103   -   நங்கநல்லூர்  J K  SIVAN

शिवे श‍ृङ्गारार्द्रा तदितरजने कुत्सनपरा सरोषा गङ्गायां गिरिशचरिते विस्मयवती ।
हराहिभ्यो भीता सरसिरुहसौभाग्यजयिनी सखीषु स्मेरा ते मयि जननी दृष्टिः सकरुणा ॥ ५१॥

Shive sringarardhra tad-ithara-jane kutsana-paraa Sarosha Gangayam Girisa-charite'vismayavathi;
Har'ahibhyo bhita sarasi-ruha-saubhagya-janani Sakhishu smera the mayi janani dristih sakaruna

ஶிவே ஶங்காரார்த்ரா ததிதரஜனே குத்ஸனபரா ஸரோஷா கங்காயாம் கிரிஶசரிதே விஸ்மயவதீ |
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ ஸௌபாக்ய-ஜனனீ ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜனனி த்றுஷ்டிஃ ஸகருணா || 51 ||

''அம்பிகே, உன் பார்வையில் தான் எத்தனை உணர்ச்சிகள்.  மகாதேவனை நீ பார்க்கும் போது அதில் பூர்ண அன்பு, நேசம் தெரிகிறது.  மற்றவைகளின்  மேல் உன் பார்வை படும்போது அதில்  அதிக கூர்மையான கவனம்,  கடமை உணர்ச்சி, பாரபக்ஷமற்ற கவனிப்பு.  கங்கையின்மேல் உன் பார்வை படும்போது அதில் கோபம் தெரிகிறது.  காரணம் எனக்கு தெரியுமம்மா.  மஹேஸ்வரனின் லீலைகளை திருவிளையாடல்களை செவி மடுக்கும்போது உன் கண்களில் ஆச்சர்யம், ஆர்வம்  ததும்பி வழிகிறது.  கொடிய  விஷ  நாகங்கள் சிவனின் கழுத்திலும்  சிரசிலும் உடலிலும் சுற்றி வளைத்திருப்பதை காணும்போது உன் கண்களில்  அச்சம்,  பயம் தெரிகிறதம்மா. செந்தாமரையாக  உன் வதனம் சிவக்கிறது.  உன் பக்தர்களை,  நண்பர்களைப்  பார்க்கும் பார்வையில் தான் எத்தனை நேசம்,  விழியோர புன்னகை!.  அம்மா,  என்னை நீ பார்க்கும்போது அதில் அளவற்ற கருணையை நான் அனுபவிக்கிறேன்''  என்கிறார்  ஆதிசங்கரர். அவர் மாதிரி எழுத  கற்பனை செய்ய இன்னொருவர் பிறக்க வேண்டும். 

சுத்த பிரம்மமாக இருந்தாலும்  அம்பாள்  த்ரிகுணங்களை வெளிப்படுத்துபவள் என்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்கிறது.  ஒரு நாமம் அவளுக்கு ''த்ரிகுணா''. 


sivan jaykay

unread,
Apr 16, 2023, 6:53:27 AM4/16/23
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

இதோ ஒரு சுலப வழி. 

நாம்   மனதாலோ  செயலாலோ  உடலாலோ பாபம் செய்யாத  நாளே கிடையாது. பாபம் செயகிறோம் என்ற நினைவோ, உணர்வோ கூட நமக்கு இல்லாமல் தொடர்ந்து  பாபங்களை செய்து கொண்டே இருக்கிறோம்.  இதிலிருந்து நமக்கு விமோசனம், விடுதலை உண்டு  என்று மஹா பெரியவா நம்மை திசை திருப்புகிறார்: 

''இந்த உலகில் நாம் எவருமே பாபியாக இருக்க விரும்பவில்லை. ஆனால் பாப காரியமே  அதிகம் தொடர்ந்து  செய்கிறோம். நாம் எல்லோருமே புண்ணிய பயன் பெறத்தான் விரும்புகிறோம்.ஆனால் புண்ய காரியங்களைச்  செய்வதில்லை.
''பாபம் செய்ய யாருமே விரும்பவில்லை. ஆனாலும், கிருஷ்ணா! அவனை எதுவோ  பாபத்திலேயே பலாத் காரமாகத் தூண்டிக்  கொண்டிருக்கிறதே. அது என்ன?” என்றுஅர்ஜுனன் பகவானைக் கேட்டான்.  
“அது தாண்டா  அர்ஜுனா,  ஆசை, ஆசை என்பது”  என்றான் கிருஷ்ணன். 

ஆசையினால் ஒன்றை அடைய  முயல்கிறோம். எப்படியாவது அதை அடைந்துவிட வேண்டும் என்பதால் தர்ம அதர்மங்களைப் புறக்கணித்து விடுகிறோம்.அந்த ஆசை நிறைவேறி விட்டால் அதோடு திருப்தி உண்டாகிறதா?  என்றால் நிச்சயம் இல்லை. அக்னியில்நெய்யை விட்டால் அது அணைந்தா போகிறது?  மேலும் பெரிதாக வளர்கிறது. அப்படியே ஒர் ஆசை பூர்த்தியான மனஸில் இன்னோர் ஆசை  கடல் அலை போல் பெரிதாக மூளுகிறது.

சரி, அப்படியானால் ஆசை நிறைவேறா விட்டாலே நல்லது என்று  சொல்லலாமா?  அப்படியும் இல்லை. ஆசை நிறை வேறா விட்டால் நமக்கு ஆத்திரம் உண்டாகிறது. சுவரில் எறிந்த ரப்பர் பந்து திரும்பி அதே வேகத்தோடு நம் முகத்தில் திருப்பி  அடிப்பதைப் போல் நிறைவேறாத ஆசை  கோபமாகத் திருப்பி வந்து நம்மை   மேலும்  பாபம் செய்யத்  தூண்டுகிறது  ஆகவே   ஆசைக்கு அடுத்த படி இந்தக் குரோதத்தைத்  தான் பகவான் கீதையில்  'ஆசையின் விளைவு'  என்கிறார் .

அப்படியானால் பாபம் செய்யாமல்  இருப்பதற்கு  ஒரே வழி ஆசைகளை அழிப்பது தானோ?  இதை எப்படிச் செய்வது? எப்படி முடியும்?
 
நாம்  ஏதாவதொரு காரியம் செய்யாமல் இருக்கவே முடியாது. உடம்பு காரியம் பண்ணாத போது கூட  நம்  மனசு  ஏதாவது காரியம் பண்ணிக் கொண்டே தான் இருக்கும்.  மனம்  எதையாவது ஒன்றை  எண்ணிக் கொண்டே யிருக்கும்.  இது அதன் குணம்.  உடம்பு, மனசு வாக்கு  ஆகியவற்றால்  நாம் செய்கிற அத்தனை காரியங்களும் இப்போது நம்முடைய சொந்த ஆசை அபிலாஷைகளையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது..
இதனாலேயே அவை நம்மை மேலும் மேலும்  பாபத்திலே கொண்டு போய்த் தள்ளிக் கொண்டே இருக்கிறது. அப்படியானால் இனி காரியம்  எதுவுமே  செய்யாமல் சும்மா யிருந்துவிடலாமா?   ஊஹூம், மநுஷ்ய ஸ்வாபாவம் நம்மை அப்படி யிருக்க விடமாட்டேன் என்கிறது.

சிந்தையை அடக்கி சும்மாயிருக்கின்ற திறம் அரிது என்று தாயுமான  ஸ்வாமிகள் சொன்னார்.உடம்பின் காரியத்தைக் கொஞ்சம் நிறுத்தினால் கூட சித்தத்தின் காரியம்  நிற்கவே நிற்காது. தான் காரியம்  செய்வதோடு உடம்பையும்  அந்த  காரியத்தில் ஏவி விடுகிறது.
ஆசையை நேராக நிறுத்த முடியவில்லை.காரியத்தையும் நிறுத்த முடியவில்லையே,  நமக்கு கதி மோக்ஷமே இல்லையா? இந்தப் பிரச்சனைக்கு (Problem) தீர்வே (Solution)இல்லையா?. 
 
நிச்சயம்  வழி இருக்கிறது. அதாவது இப்போது நாம் இருக்கிற நிலைமையில் காரியத்தை அடியோடு நிறுத்தி விட அவசியமில்லை. ஆனால் நாம் சொந்த ஆக்ஞைக்காகவே  விருப்பத்திற்காகவே  காரியம் செய்து கொள்கிறோம் என்ற நிலைமையை மாற்றி,நமக்கு லௌகிகமாக லாபம் தராத காரியங்களில் ஈடுபட வேண்டும்.  லோகோபகாரமாகவும் ப்ரோபகாரமாகவும் ஆத்மார்த்தமாகப் பலன் தரும் காரியங்களில் இறங்க வேண்டும். இப்படிப்பட்ட காரியங்களில்  ருசியை உண்டாக்கிக் கொண்டு மேலும்  மேலும் ஈடுபடுகிறபோது, ஆசைகளும்  குறைந்து கொண்டே வரும். பாபம் குறையும் . புண்ணியம்   அதிகரிக்கும். எனவே இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் லோகார்த்தமாக  பிருக்கு உபயோகப்படும்படியாக  காரியம் செய்யப் பழக வேண்டும். ஆசையில்லாமல்  செய்வதுதான் புண்ய காரியம். பரோபகாரம் இதம் சரீரம். இந்த உடம்பு கொடுக்கப்பட்டிருப்பதே பிறருக்கு உதவி செய்ய. 

நாம் செய்யும் பாபம்  நாலு வகை .   உடம்பால் பல கெட்ட காரியம், .வாயால் புரளி பேசும் அசத்தியமும், மனத்தினால் கெட்ட நினைவுகள்,   பணத்தினால் செய்கிற பாபம்.  அதைப் பற்றி சொல்லவே வேண்டாம். 
இப்படி  எந்த  நான்கினால் பாபம் செய்தோமோ, அந்த நான்காலுமே புண்யமும் செய்ய முடியும். உடம்பைப் பரோபகாரம், பகவானைப் பிரதக்ஷிணம் செய்து, நமஸ்கரிப்பது இவற்றில்  ஈடுபடுத்திப் புண்யம் பெறலாம். வாயால் பகவத் நாமாவைத் சொல்லிப் புண்யம்  பெறலாம்.  பணம் சம்பாதிப்பதிலேயே  பொழுதெல்லாம் போய் விடுகிறது. இதற்கு நேரமோ  அவகாசமோ  இல்லையே என்று சொல்லலாம்.  சம்பாதிப்பது கிருஹஸ்தர்களுக்கு அவசியம் தான். ஆனால் யோசித்துப் பார்த்தால் அதற்கே பொழுது முழுதும் போய் விடவில்லை என்று புரியும் தெரியும்.   ஒவ்வொருநாளும் எத்தனை  வீண் பேச்சு, பரிகாசம்,  வேடிக்கை,  நியூஸ் பேப்பர், யூட்யூப், டிவி  இவற்றில்  நிறைய  பொழுது வீணாகிறது.  அதற்கெல்லாம் நேரம் இருக்கிறதே. அதையெல்லாம் பகவான் நாம ஸ்மரணையில் செலவிடலாமே. இதற்கென்று தனியே  நேரம் ஒதுக்க வேண்டாமே.  நடுநடுவே  நேரம் இருக்கும்போது   ஆபிஸ்  வேலையாக  பஸ்ஸிலோ, ரயிலிலோ போகும்போது பகவத் நாமாவை ஜபித்துக் கொண்டே போகலாமே. ஒடி  ஒடி  சம்பாதிப்பதில் ஒரு பைசா கூட பின்னால்  நம்மோடு  கூட வராதே. மறு உலகத்தில் செலவழிக்க  தேவை பகவான்  நாமா ஒன்று தானே.   மனசு பகவானின் இருப்பிடம்.  அதைக் குப்பைத் தொட்டியாக்குகிறோம்.

மனசை சுத்தப்படுத்தி மெழுகி,  அதில்  பகவானை அமரவைத்து, நாமும் அமைதியாக இருந்து விட வேண்டும். தினமும்  ஐந்து நிமிஷமாவது  இப்படி தியானம் செய்யணும்.   லோகமே மூழ்கிப் போனாலும் நிற்காமல் நடக்க வேண்டிய காரியம் இது.  ஏனெனில் லோகம் மூழ்கும்போது நமக்குக்  கை கொடுப்பது இதுதான்.
பணம் இருந்தால் பகவானுக்காகவும் ஏழைகளுக்காகவும் பலவிதங்களில் தர்மம் செய்து புண்யம் பெறலாம். பாபத்துக்கு இரண்டு சக்தி உண்டு.  ஒன்று  இப்போது நம்மைத் தவறு  செய்ய வைப்பது. இரண்டாவது, நாளைக்கும் நாம்  இந்த தப்பையே தொடர்ந்து  செய்ய தூண்டுவது.  ஒருவன்  சிகரெட் , பொடி , குடி,  பழக்கம் கொண்டவன் என்றால்  அது  இன்று ஒரு நாளோடு நிற்காதே. 
 நாளைக்கும், அப்புறமும்  கூட  அதைச்  செய்ய  தூண்டும். பழக்க வாசனை  இது தான்.  இந்த வாசனையை மங்க  வைத்து, புண்யம்  பெற  புண்ய வாசனையைப்  பெற வேண்டும். 
 
ஒரு விஷயம்.  இதற்கு கொஞ்சமும் பயம் வேண்டாம். நம்மைப் போல்  பாபம் செய்தவர்கள், செய்பவர்கள் கூட பக்தர்களாகவும், ஞானிகளாகவும் ஆகியிருப்பது நமக்கு தெரியும். பாபிகளை ரக்ஷிக்காவிட்டால் ஈஸ்வரனுக்கு என்ன பெருமை? நம்மை  பாபத்திலிருந்து மீட்பதால் தான் அவனுக்குப்  'பதித பாவனன்'  என்ற நாமம். 

“என்னைச்  சரணடைந்து விடு. நான் உன்னை எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன். ' ஸர்வ பாபேப்யோ மோக்ஷமிஷ்யாமி மாசுச. பயப்படாதே” என்று தீர்மானமாக  கீதையில் அபய வாக்குத் தருகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

ஆகவே  தைரியமாக இருப்போம். எத்தனை சுற்றுச் சுற்றுகிறோமோ அத்தனை  சுற்றுகள் திருப்பிச் சுற்றினால் தான் கயிற்றின் கட்டு அவிழும்.  கயிறு கழலும். பாப வாசனை அவ்வளவும் தீர அத்தனை புண்ய வாசனை தேவை. அப்படிச் செய்தால் பாபக் கயிற்றின் முடிச்சு அவிழும். பொறுமையாக பகவானை நம்பி நம்முடைய தர்மத்தைச் செய்தால் நிச்சயம் பகவான் நமக்குக்  கை  கொடுப்பான்.

மனம் வாக்கு காயம் மூன்றையும்  கொஞ்சம் கொஞ்சமாக இந்திரிய வியவகாரதிலிருந்து திருப்பி, பகவானிடம் செலுத்தி பழகுவதற்காகத் தான் இத்தனை மதங்களும் உள்ளன.   ஒவ்வொரு ஜீவனும் 
இந்திரிய சுகங்களுக்காகச் செய்கிற பாபங்களிலிருந்து அவனை மீட்பதற்காகத்தான் ஒவ்வொரு  மஹானும்  பல மதங்களில் அவ்வப்போது தோன்றுகிறார். . பாபத்தால், இந்திரிய   சுகத்தினால் பெறும்  ஆனந்தம் ரொம்பவும்  அற்பமானது, தற்காலிக மானது. பரமாத்மாவோடு   சேர்வது தானப்பா நிரந்தர ஆனந்தம் என்று சொல்லி, சம்ஸாரத்திலிருந்து  நம்மை  விடுவித்து பகவானிடத்தில் சேர்ப்பதுதான் ஒவ்வொரு மதத்தின் லக்ஷியமாகும் .
 

sivan jaykay

unread,
Apr 16, 2023, 6:53:28 AM4/16/23
to amrith...@googlegroups.com

கிஷ்ண சாமி நீயே துணை.  நங்கநல்லூர்  J K  SIVAN 

குடிகார கணவன் வீட்டை விட்டு எங்கோ போய்  வருஷம் ஏழு எட்டு  ஆகிவிட்டது.  ஆந்திராவில் நாகார்ஜுன சாகர் அருகே ஒரு கிராமத்தில் ருக்மணி குழந்தை முரளியோடு குடியேறி  அவனை வளர்த்து பக்கத்து நகரத்தில் படிக்கிறான். பள்ளியில் முரளியின் பெயர்  “பார்த்தசாரதி”   இந்த பெயர்  பின்னால் ஒரு குட்டி கதை இருக்கிறதே அதை முதலில் சொல்கிறேன். 

ஏகாம்பரம் குதிரை ரேஸ் பைத்தியம். அதென்னவோ அவன் எந்த குதிரையின் மீது பணம் கட்டினாலும் அது அவசரமே படாமல்  ஜாக்ரதையாக கடைசியில் மெதுவாக நடந்து வந்தது.  அவன் பெண் ருக்மணியை  திருவல்லிக்கேணியில் வீட்டுக்கு  அடுத்த தெருவில் இருந்த பார்த்த சாரதி கோவிலில்  எப்போதும் பார்க்கலாம். பார்த்த சாரதியின் புன்முறுவல் நிறைந்த முகம் எப்போதும் அவள் நெஞ்சிலே. அவள் அவனை நினைக்காத நேரமே இல்லை. “கிஷ்ண சாமி, நீயே துணை” என்பது அவளுக்கு தெரிந்த ஒரே மந்திரம். பார்த்தசாரதியை நினைத்தாலே அவள் கவலைகள் பறந்து விடும். குடிகார, குதிரை ரேஸ் பைத்திய அப்பன் தினமும் அம்மாவோடு சண்டையிட்டு அவளையும் ருக்குவையும் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் போதெல்லாம் "கிஷ்ண சாமி நீயே துணை" தான் சொல்வாள். அப்பன் கண்ணை மூடினான் அவனது கை வண்டியில் ருக்கு காய்கறி வியாபாரம் செய்து பிழைத்தாள் . வயிறு கழுவ 4வது படிக்கும்போதே படிப்பை நிறுத்தி வீட்டு வேலை செய்து பாத்திரம் கழுவியது பழங்கதை. கணவனும் அப்பன் மாதிரியே . அது தான் பழங்கதை. 
பள்ளிக்கூடம் போகும்  முரளி தினமும் ஒரு மைல்  குறுக்கு வழியில் ஒரு அடர்ந்த காட்டு பாதையில் செல்ல வேண்டும். பஸ் டவுன் வழியே செல்லும். ஆனால் பஸ்ஸில்
 போக முரளிக்கு ஆசை இருந்தும் வசதியில்லை.
“அம்மா என்னை பஸ்ஸிலே ஸ்கூலுக்கு அனுப்பு” 
ருக்கு அழுதாள்
“ ஏன்மா  அழுவுறே”
“நாம்ப ஏழை கண்ணு,  என்கிட்டே காசு இல்லப்பா. நீ குறுக்கு வழியாகவே காட்டுப்பாதையில் நடந்து போப்பா”
“ தனியா காட்டுப்பாதையில் போக பயமா இருக்கு மா”.
“கிஷ்ண சாமி, நீயே துணை என்று சொல்லுடா. கிருஷ்ணன் காப்பாத்துவார். பயமா இருக்கும்போது கிஷ்ணா, கிஷ்ணான்னு கூப்பிட்டுக்  கிட்டே போ. காப்பாத்துவான். எனக்கு வேறே வழி தெரியலை கண்ணு.”
காட்டுப் பாதையில் ஒரு மாதமாக முரளி '' கிஷ்ணா கிஷ்ணா'' என்று கூப்பிட்டு கொண்டே ஸ்கூலுக்கு நடக்கிறான். மனதுக்கு அது தெம்பாக இருந்தது.  போகும்போதும் வரும்போதும் யாரோ கூடவே துணைக்கு வருவது போல் இருந்தது.
ஒருநாள் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியருக்கு ஒய்வு பெற்றதால்  பிரிவு உபசார விருந்து. ''எல்லா பசங்களும்  ஹெட்மாஸ்டருக்கு எதாவது பரிசு கொண்டு வந்து கொடுக்கணும்'' என்று தாமு வாத்தியார் ஆர்டர் போட்டார்.
'' அம்மா ஹெட்மாஸ்டருக்கு நான்  என்ன பரிசு கொடுப்பேன் ? ஏதாவது குடு'' 
வழக்கம் போல் அம்மா பஞ்சப்பாட்டு பாடினாள்.
“நமக்கு யார்டா இருக்க உதவ. உனக்கு துணை வரானே கிஷ்ணன், அவனையே ஏதாவது தரச்சொல்லு '' மனமுருகி ருக்கு முரளியிடம் சொன்னாள்.
“கிஷ்ணா கிஷ்ணா” என்று முரளி காட்டுப்பாதையில் கூப்பிட்டான்.
“என்ன முரளி, சொல்லு” என்று ஒரு  குரல் அன்போடு  கேட்டது
“எங்க க்ளாஸ் தாமு வாத்தியார் ஹெட்மாஸ்டருக்கு 
பரிசு கொண்டா” ன்கிறார். அம்மா உன்னை கேக்க சொல்றா. நீ தான்  ஏதாவது பரிசு கொடுக்கணும். தரியா?”
 ' ஓ, 'தரேனே . அதோ உன் எதிரே தெரியுது பார்  ஒரு பெரிய  ஆலமரம்.அதன்  அடியில் ஒரு செம்பு நிறைய பால் வச்சிருக்கேன்.  அதைக்  கொண்டு போய் கொடு. நான் பசு மாடு மேய்க்கறவன். என் கிட்டே பால் தானே இருக்கும்”.
எல்லா பிள்ளைகளும் வித விதமான பரிசு கொடுக்க முரளியின் பால் செம்பு சீந்தப்பட வில்லை. தாமு அவனை கேவலமாக பார்த்தார். அன்று மதிய வேளையில் தாமு வீட்டில் மனைவியிடம்:
“என் கிளாஸ்லே ஒரு பையன் செம்பு நிறைய பால் கொண்டு வந்தான். அதை எப்படி ஹெட்மாஸ்டருக்கு கொடுக்கிறது. அந்த செம்பு பாலை காய்ச்சி நாம ரெண்டு பேரும் குடிக்கலாம். இந்தா”
தாமுவின் மனைவி அடுப்பில் பாத்திரத்தில் பால் செம்பை கவிழ்த்தாள். அட இது என்ன அதிசயம்?  செம்பு மீண்டும் பாலால் நிரம்பியது. மறுபடியும் கொட்ட மீண்டும் நிரம்பியது.  அவள்   பயந்து ஓடிப்போய் போய் தாமுவிடம் விஷயம் சொல்ல, தாமு பள்ளிக்கூடத்தில் முரளியைப்  பிடித்தார்.
“ஏலே, உனக்கு யார்டா பால் செம்பு கொடுத்தது?”
''என் நண்பன் கிஷ்ணன்''.
 முரளி விஷயம் சொல்ல, தாமுவும் மற்ற பிள்ளைகளும் கொல்லென்று சிரித்தனர்
“கிஷ்ணனாவது, 
 ராமனாவது என்னடா இது உளறல்?. கதை உடுறே. யாரோ மாஜிக் காரன் கிட்டே செம்பு வாங்கி வந்து ஏமாத்தறே”
“ இல்லே சார் கிஷ்ணன் தான் கொடுத்தான்”.
“ டேய் , எனக்கு பைத்தியம் பிடிச்சுடும். திருப்பி திருப்பி கிஷ்ணன் தினமும் கூப்பிட்டா பேசுவான், துணை வருவான், பால் செம்பு தந்தான் என்று அதையே திரும்ப திரும்ப  சொல்லாதே. கிஷ்ணன் ராமன் எல்லாம் எந்த காலமோ. இப்போ எங்கடா இருக்காங்க? கோவில்ல தான் சிலையாக, படமாக பாக்கலாம். புராணத்திலே தான் பேசியிருக்காங்க”
“இல்லீங்க ஸார்,  கிஷ்ணன் தினமும் என் கூட பேசுவான் சார், அவன் தான் சார் இந்த சொம்பை நிறைய பாலோடு கொடுத்தான்.  உங்க கிட்ட குடுக்க சொன்னான்”
“டேய் பார்த்தசாரதி, மேலே பேசாதே, கோபம் அதிகமாச்சுன்னா உன் தோலை  உரிச்சுடுவேன். கொம்பால் விளாசிடுவேன். வா இப்பவே என்னோடு. எங்கே இருக்கான் உன் கிஷ்ணன். எனக்கு காட்றியாடா?”
“சரிங்க சார்” என்றான் முரளி
காட்டுப்பாதையில் தாமு அருகில் நிற்க '' கிஷ்ணா கிஷ்ணா'' என்று முரளி பலமுறை கூப்பிட்டும் பதிலே இல்லை.
முரளி அழுதான். 
”கிஷ்ணா,  எங்க வாத்தியார் வந்திருக்கார் நீ  என் கூட இருக்கிறதை,  பேசறதை,  சொன்னா நம்ப மாட்டேன்றார் உன்னை பார்க்கணுமாம் கொஞ்சம் இங்கே வரியா.”
தீர்க்கமாக ஒரு குரல் அவர்கள் இரண்டு பேருக்கும் கேட்டது.
“முரளி, நான் எப்படி அப்பா வர முடியும். உங்க வாத்யார் தான் நான் இல்லவே இல்லை என்று சொல்லிட் டாரே. என்னை நம்பாதவர் முன் நான் எதற்கு வரணும் ?''
தாமு கண்ணில் நீர் வடிந்தது. நடுங்கினார்
“கிஷ்ணா என்னை மன்னிச்சுடு நான் தப்பு பண்ணிட்டேன்”
முரளியின் காலை பிடித்து கொண்டார்  தாமு வாத்யார். 
“கிஷ்ண சாமி, நீயே துணை'' என்றார் தாமு வாத்யார். முரளி தான் எப்போதும் சொல்பவனாச்சே. 

sivan jaykay

unread,
Apr 16, 2023, 7:00:56 PM4/16/23
to amrith...@googlegroups.com
 ஸௌந்தர்ய லஹரி  52/103    நங்கநல்லூர்  J K  SIVAN 

52   அம்பாள் நயன ப்ரபாவம் 

गते कर्णाभ्यर्णं गरुत इव पक्ष्माणि दधती पुरां भेत्तुश्चित्तप्रशमरसविद्रावणफले ।
इमे नेत्रे गोत्राधरपतिकुलोत्तंसकलिकेतवाकर्णाकृष्टस्मरशरविलासं कलयतः ॥ ५२॥

Gathe karnabhyarnam garutha iva pakshmani dhadhati Puraam bhetthus chitta-prasama-rasa-vidhravana-phale;
Ime nethre gothra-dhara-pathi-kulottamsa-kalike Tav'akarn'akrishta-smara-sara-vilasam kalayathah.

கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி தததீ புராம் பேத்து-ஶ்சித்தப்ரஶம-ரஸ-வித்ராவண பலே |
இமே னேத்ரே கோத்ராதரபதி-குலோத்தம்ஸ-கலிகே தவாகர்ணாக்றுஷ்ட ஸ்மரஶர-விலாஸம் கலயதஃ|| 52 ||

தாயே,  பராசக்தி,  ஹைமவதி , ஹிமவான்  மகளே,  உன்   இரு கண்கள் விசாலமாக  காது வரை நீண்டவை என்பதே  கண்ணுக்கு  ஒரு தனி அழகு.  அவற்றைப் பார்க்கும்போது  கூரான அம்பு ஒரு முனையிலும் அதன் இன்னொரு முனையில் இறகுகள் கட்டியிருப்பதும்   போல  உன்  கூர்மையான கண்களின் இன்னொரு முனையில்  அழகிய உன் இமைகளும் அதில் வரிசையாக இருக்கும்  நுண்ணிய மயிரிழைகளும் இறகுபோல  காட்சி யளிக்கிறது.  இந்த கண்கள் தானே  திரிபுரமும் எரித்த சிவபெருமானுடைய மனத்தின் சாந்தி ரஸத்தைக் கலைப்பதை நோக்கமாகக் கொண்டவை. அதில் ஜெயித்தவை.  மன்மதனின்  பாணத்தை  விட அதிக  காந்த சக்தி  வாய்ந்தவை.  அம்மா, உன் கண்ணழகைத் தியானம் செய்வதால் ஹ்ருதயத்தில் உள்ள காமச் சிக்கல்  எல்லாம் அறுபட்டு ஒழியும் என்பது ஸர்வ  நிச்சயம். 

குரு  சிஷ்யனுக்கு அருள் பாலிப்பதில் நயன தீக்ஷை என்று ஒரு வகை. கண்ணால் பார்வை மூலமே  குரு அனைத்து சக்தி களையும் ஞானத்தையும் சிஷ்யனுக்கு அளிப்பது.  அம்பாளின்  நயனங்கள் பக்தனின்  பாபங்களை விரட்டி அவனுக்கு  மோக்ஷம் தர வல்லவை. 

sivan jaykay

unread,
Apr 17, 2023, 7:18:48 PM4/17/23
to amrith...@googlegroups.com
ஆனி  மஹ  அதிசயம் ஒன்று...    நங்கநல்லூர் J K SIVAN 

சிதம்பரத்தில் ஒரு ஆனி மாதம். அன்று ஆயில்ய நக்ஷத்திரம்.  மணிவாசகர்  கண்ணை மூடி  சிவனை தியானித்துக் கொண்டு மனதில் திருவாசகம் உருவாக  ஆனந்தமாக  அதை வாய் பாடுகிறது.  அவர் இருந்தது ஒரு மடம் . அமைதியான அந்த மடத்தில்  எதிரே  விளக்கேற்றி  இறைவனை நினைத்துக்கொண்டு கண்மூடி  அமர்ந்திருக்கிறார்  மாணிக்கவாசகர்.    திருவாசகத்தை மணிவாசகர்  உருகி உருகிப்  பாட  அது தெருவில் எதிரொலிக்கிறது.  வாசலில் யாரோ ஒரு முதிய பிராமணர் கொம்பை ஊன்றிக்கொண்டு அதைக் கேட்டு விட்டு வெகு நேரம் நிற்கிறார். பிறகு மெதுவாக உள்ளே மடத்திற்குள் வருகிறார்.
''ஐயா  தாங்கள் தான் திருவாத ஊரரோ?  இந்த மடத்தில் இருப்பதாக சொன்னார்கள். நீங்கள் தான்  இப்போது பாடினதோ?''
''ஆமாம் சுவாமி.  அதற்கு திருவாசகம் என்று பெயர்.  அமருங்கள்''
''ஆஹா  அற்புதம் அற்புதம்.  எனக்கு உதவி செய்வீர்களா?'' என்கிறார் முதியவர்.
''ஆஹா  என்னால் முடிந்ததை சிவனருளால் செய்கிறேனே''
''நீங்கள் ஆரம்பம்  முதல் மறுபடியும் திருவாசகத்தைப்  பாடுங்கள், நான் ஓலையில் எழுதிக் கொள்கிறேன்;;
''தங்கள் சித்தம் என் பாக்யம்''
மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்லச்  சொல்ல, முதியவர்  எழுதிக் கொண்டார்.  
பெரியவர்  எழுதி முடித்து  ஓலைச் சுவடிகளோடு சென்றுவிட்டார். 

மறுநாள்.  ஆனி  மஹம். சிதம்பரம் நடராஜர்  விக்ரஹத்தின்  முன்னால்  அர்ச்சக தீக்ஷிதர்  ஒரு சில ஓலைச்சுவடிகள் இருப்பதை பார்த்து அதிசயித்து அனைவரையும் அழைத்து காட்டினார். 
''என்ன அதிசயம் இது? யார் இதை இங்கே வைத்தது. இதில் என்ன எழுதியிருக்கிறது?''
 பண்டிதர்கள் ஓலைச்  சுவடியை பிரித்து படித்தார்கள் திருவாசக பதிகங்கள்.  முடிவில்  '' மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது''  என  கையொப்பம் இடப் பட்டிருந்தது.
 
தீக்ஷிதர்கள்,  கூட இருந்தவர்கள் அனைவரும் இதைக் கண்டு  திகைத்துப்  போய்   ''ஆஹா  ஓஹோ என்று  உணர்ச்சிவசப்பட்டு  திக்கு முக்காடினார்கள். மாணிக்கவாசகர் தங்கி இருந்த  மடத்துக்கு எல்லோரும் ஓடினார்கள்.  
''ஐயா  திருவதை ஊரரே .  இந்த அதிசயத்தை கேளும்'. எங்களோடு சந்நிதிக்கு வாரும். உங்களை மணிவாசகர் என்று இதில் பரமேஸ்வரனே பட்டமளித்திருக்கிறார் '  என்று  நடந்தவற்றை கூறி அவரை அழைத்துக்கொண்டு வந்தார்கள்.   மணிவாசகர்  ஒவ்வொரு  ஓலைச்சுவடியாக படித்துக்கொண்டே   வந்தவர்  தான் பாடியது சரியாக இருப்பதைக் கண்டவர், கடைசி ஓலையில்   காணப்பட்ட   சிவபெருமானின் ஒப்பத்தையும் கண்டு பிரமித்துப்  போனார். 
" ஹாஹா, இது அடியேன் சொல்லச் சொல்ல  ஒரு முதிய அந்தணரால் நேற்று  எழுதப் பட்டது தான். வந்த அந்தணர்  நடராஜப்பெருமான் தானா?  என்னே  என்  பாக்யம் '' என்று நா  தழு தழுக்கச்  சொல்லி  ஆனந்தக் கண்ணீர் மல்கினார். 
 ''ஐயா மணிவாசகரே  உம்முடைய  திருவாசகத்துக்கு  அர்த்தம்  நீங்கள் எங்களுக்கு சொல்லவேண்டும் என்று தீக்ஷிதர்கள் வேண்டினார்கள்.
'' அவனருளால்  தோன்றிய  இந்த வாசகத்துக்கு  நான் என்ன அர்த்தம் சொல்லமுடியும்.  இதோ எதிரே  நடனமாடிக் கொண்டு நிற்கிறாரே  இந்த   பாடல்கள் அனைத்துக்கும் இந்த  ஆடலரசர் தான் அர்த்தம்'' என்றார் மாணிக்கவாசகர்.

எல்லோரும்  உணர்ச்சி வசப்பட்டு வாய் பிளந்து பேச்சு வராமல் நின்ற  போது இன்னொரு அதிசயம் நிகழ்ந்தது. 

தில்லை நடராஜன் விக்ரஹத்தில் இருந்து கண்ணைப்பறிக்கும் ஒரு ஒளி மயம்  தோன்றியது. அதனால் காந்தம் போல் கவரப்பட்டு மாணிக்கவாசகர் அதை தொடர்ந்து சந்நிதிக்குள் சென்றார்.  அப்புறம் என்ன  மாணிக்கவாசர் மஹேஸ்வரன் இருவரும் ஒருவரானார்கள் .

sivan jaykay

unread,
Apr 17, 2023, 7:18:48 PM4/17/23
to amrith...@googlegroups.com
அப்பண்ணாச்சார்யார்.   -  நங்கநல்லூர்  J K  SIVAN 

தெய்வ ஸ்வரூபமான  மஹான்களை  நினைக்கும்போது அவர்களது சிஷ்யர்களும்  நம் கண் முன் தோன்றுகிறார்கள்.  ஆதி சங்கரர் படம் பார்க்கும்  போதெல்லாம்  அவர் எதிரே அமர்ந்திருக்கும் சிஷ்யர்கள் உருவம் நமக்கு பழக்கமானது.  தக்ஷிணா மூர்த்தி சிலை, விக்ரஹம்,  படம் தரிசிக்கும்  போதெல்லாம் சனகாதி முனிவர்கlளையும் பார்த்து வணங்குகிறோம்.     ராமகிருஷ்ணர் என்றால் விவேகானந்தர் தோன்றுகிறார்.  ஞானாநந்தர் என்றால்  ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள், அப்படித் தான்  ஸ்ரீ ராகவேந்திரர் என்றால் நமக்கு உடனே ஞாபகம் வருவது அப்பண்ணாச்சாரியார்.

ரஜினி காந்த் என்ற நடிகனை பல படங்களில் மிடுக்காக, கெட்டவனாக, நல்லவனாக,  விதவிதமாக பார்த்தாலும்  ஸ்ரீ ராகவேந்திரராக பார்த்தது மட்டுமே  என் மனதில் நிலையாக நிற்கிறது. அதிலும் டெல்லி கணேஷ் அப்பண்ணாவாக தோன்றிய சில காட்சிகள், கடைசி நேரங்கள் மனதில் திரும்ப திரும்ப அலைமோதுகிறது. அது பாத்திர விசேஷம்;  அதன்  மஹிமை.  குரு ராகவேந்திரரின்  ப்ரபாவத்தை பரப்பிய பெருமை அப்பண்ணாவுக்கு  நிறைய உண்டு.  பிச்சாலி (பிக்ஷாலயா  தான் இப்படி உருமாறி விட்டது)  ஆஸ்ரமத்தில், குருகுலத்தில்,  எண்ணற்ற  சிஷ்யர்களுக்கு குருவின் மஹிமையை உணர்த்தியவர் அப்பண்ணா. பிச்சாலியில்   ஜெபடே கெட்டே  என்ற  கல்மேடை இன்னும்  உள்ளது. இந்த மேடையின் மேல்  குரு ராகவேந்திரர் அமர்ந்திருக்க   அப்பண்ணா அவருக்கு  சேவை செய்வார். பன்னிரண்டு வருஷம் இங்கே குருநாதர்  இருந்து உபதேசம் செய்திருக்கிறார். 
 
மந்த்ராலயத்த்தில் குரு ராகவேந்திரர் இன்னும் சில  கணங்களில்  பிருந்தாவனத்தில்  ஜீவன்முக்தராக ஜீவ சமாதி அடையப்போகிறார் என்ற சேதி காதில் விழுந்ததும்  எங்கோ  துங்கபத்திரை நதியின் அக்கரையில் இருந்த  அப்பண்ணா  துங்கபத்ரையில் இறங்கி  நீந்தி  நடந்து ஓடி வருகிறார். அப்போது அவர் சொல்லிக்கொண்டே வரும்  ஸ்தோத்ரம் தான்  ''பூர்ணபோத ஸ்தோத்ரம்'' .  என் கையில் இருக்கும் ஜபமாலை எப்போது நகராமல் நிற்கிறதோ அப்போது இந்த பிருந்தா வனத்தை மேலே கடைசி கல்லை வைத்து மூடிவிடுங்கள் என்று குரு ராகவேந்திரர் சொல்லி ஒவ்வொரு கல்லாக அடுக்கிக் கொண்டே வந்தார்கள் சிஷ்யர்கள்.  அப்பண்ணா பூர்ண போத  ஸ்தோத்ரம்  சொல்லிக்கொண்டே ஓடி வருகிறார். 32 ஸ்லோகங்கள் கொண்ட ஸ்தோத்ரம்.    ஸ்லோகத்தின் கடைசி அடியை சொல்லும்போது ஜபமாலை அசையாமல் நிற்க கடைசி கல்லை வைத்து  மற்ற பக்தர்களால்  குரு ராகவேந்திரரின் ஜீவன் முக்த பிருந்தாவனம் மூடப்படுகிறது.  இந்த காட்சி ராகவேந்திரர்  சினிமாவில் பலர் மனங்களை  நெகிழ வைத்து தொட்டு விட்டு,  இன்னமும் என்  மனதில் நிற்கிறது.

''எனக்கு அப்புறம் நீ தான் மடாதிபதி என்று குரு ராகவேந்திரர் கூறியபோதும் அதற்கு நான் அறுகதையற்றவன் என்று மரியாதையாக மறுத்தவர் அப்பண்ணா. புகையிலை போடும் வழக்கம் கொண்டவர் அப்பண்ணா. இதையே காரணம் காட்டி மடாதிபதியாக தகுதியில்லை என்றவர்.  குருவை விட ரெண்டு வயது பெரியவர் அப்பண்ணா என்றாலும் பரம சிஷ்யர். குருவுக்கு அன்றாடம் மடியாக  பிக்ஷை சமைத்தவர்.  சிறந்த கல்விமான்.   பிச்சாலி ஆஸ்ரமத்தில்  இன்னும்  அப்பண்ணா வம்சத்தவர்கள் பூஜை செய்து கொண்டு வருகிறார்கள்.  

பல வருஷங்களுக்கு முன்பு எனக்கு  மந்த்ராலய தரிசனம் செய்யும் பாக்யம் கிட்டியது. ராகவேந்திரரை தரிசனம் செய்து விட்டு, பின்னர் மந்திராலயத்தில் நடைபெறும் அன்னதானத்தில் மதியம் பிரசாதம் சுவீகரித்தது  நினைவுக்கு வருகிறது. 
ழுதுகிறேன். அங்கிருந்து பிச்சாலிக்கும் பஞ்சமுகிக்கும் சென்றேன். இரண்டுமே   துங்கபத்ரையின் மறு கரையில்  கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளன.  பிச்சாலி மந்திராலயம் ரோட்டிலிருந்து 15 கி.மீ தூரத்தில்  துங்கபத்ரை நதிக்கரையில் அமைந்துள்ளது. மந்திராலயத்திலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது.   மந்திராலயத்திலிருந்து துங்கபத்ரா பாலம் வழியாக செல்வதென்றால், முதல் மாதவரம் சென்று அங்கிருந்து வலப்பக்கம் திரும்பி, ரெய்ச்சூர் செல்லும் வழியில் துங்கபத்ரா பாலத்தை கடந்து கில்லேசுகர் முகாம் வந்து அங்கிருந்து இடப்பக்கம் திரும்பினால் பிச்சாலியை வந்தடையலாம். நதியில்  பரிசல் வழியாக பிச்சாலி  செல்லவும் வசதி உண்டு. 

ஸ்ரீ பூர்ண போத ஸ்தோத்ரத்தில்  33வது  ஸ்லோகம் தான் இது:   
பூஜ்யாய ராகவேந்திராய ஸத்யதர்மரதாய ச  பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே  || (33) முழு  பூர்ண போத  ஸ்தோத்ரம் அர்த்தமும் அப்புறம் எழுதுகிறேன்.


sivan jaykay

unread,
Apr 17, 2023, 7:20:41 PM4/17/23
to amrith...@googlegroups.com
 
திருவாதவூரனும் திருவாசகமும்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

பாண்டிய நாட்டில் வாதவூர் என்ற ஊரில் ஒரு பிராமண சிறுவன்   வாதவூரன்.   அதி புத்திசாலியாக விளங்கிய  அவனைப் பற்றி அறிந்த ராஜா அரிமர்த்தன பாண்டியன்  வாதவூரனை தனது முதன்  மந்திரியாக்கி   தென்னவன் பரமராயன்  என்ற பட்டமும் அளித்தான்.

வாதவூரானுக்கு உலக வாழ்க்கையில் பிடிப்பு இல்லை.  சிறந்த சிவபக்தன். அவன் மனம்  சிவனடியார்களை தேடிச்சென்று அவர்கள் அடிமையானான். தகுந்த குருவைத்  தேடினான்.  பாண்டிய ராஜா  வாதவூரனின் அறிவை உணர்ந்தவன்  ஆதலால்  நல்ல குதிரைகளை தனது படைக்கு தேர்வு  செய்து வாங்கி வர நிறைய  பொற்காசுகள் கொடுத்து அனுப்பினான்.  
''ஆஹா இது ஒரு அற்புத சந்தர்ப்பம். குதிரை தேடும்போது குருவையும் தேடலாம்'' என்று வாதவூரனும்  கிளம்பினான்.
பரமேஸ்வரனுக்கு தனது  சிறந்த பக்தன் யாரென்று தெரியாமலா போகும்?  விட்டுவைப்பானா?

திருப்பெருந்துறை வந்து சேர்ந்த வாதவூரன்  அங்கே ஒரு பழைய சிவன் கோவில் வளாகத்தில் ஒரு குருந்த மரத்தடியில் கையில் சிவஞான போதம் ஓலைச்சுவடியுடன் இருந்த வயதான  அந்தணரைக்  கண்டதும் அவரையே  தான் தேடிய குருவாக ஏற்றான்.  விழிகளில் நீர் சோர, கோவிலை வலம் வந்து அந்த முதியவர் காலடியில் வீழ்ந்தான்.

 ''என்னை உங்கள் அடிமையாக ஏற்று அருள்புரியவேண்டும்'' என்று விழுந்த வாதவூரனை   இதற்காகவே காத்திருந்த  பெருந்துறை ஈசன்  ஆத்மநாதர்  முதியவர் உருவில் அணைத்து  ஆட்கொண்டு   சிவஞானம் போதித்தார். வாதவூரன் இனி சந்நியாசி உடலெல்லாம் வெண்ணீறு பூசிய  சிவத்யானத்தில் ஆழ்ந்த  சிவனடியார்.   கடல் மடையென சிவன் பாமாலைகள் வாதவூரன் நாவில் தோன்றி  பரமேஸ்வரனிடம்  நீ  பாடுவது திருவாசகம், நீ மாணிக்க வாசகன் என்ற பெயர் பெற்றார் வாதவூரர். இனி அவரை மணிவாசகர் என்று அறிவோம். 

''பரிகளை வாங்கப்போன மந்திரி என்னவானான்? என்று ஆட்களை அனுப்பிய பாண்டியனின் ஆட்களிடம் இன்னும் ஒரு மாத  காலத்தில் குதிரைகள் வந்து சேரும் என்று பதிலளித்தார்  மணிவாசகர். குதிரைகளை மறந்தே போனார். கையில் இருந்த பொற்காசுகளை செலவழித்து   பெருந்துறை ஈசன் ஆத்மநாதர் கோவிலை புதுப்பித்தார்.  
 
கெடு சொன்ன ஒரு மாதம் முடிந்தும் குதிரைகள் வந்து சேராததால் போன பாண்டியன் மணிவாசகரை மதுரைக்கு அழைத்து வர செய்தான்.  

''ஆத்மநாதா  நீயே கதி. என்னை இக்கட்டிலிருந்து விடுபட்டு உன்னை நினைக்கச் செய்'' என்று வேண்டிய மணிவாசகருக்கு ஆத்மநாதர் ஆறுதலளித்தார். ''மணிவாசகா நீ மதுரை செல், யாம் குதிரைகளோடு வருவோம்''
மந்திரியாக மீண்ட மணிவாசகர்  பெருந்துறை ஈசன் அளித்த  பெருந்துறை ஈசன் பரிசளித்த வைரக்கல்லை பாண்டியனிடம் அளித்து  ''பரிகளை வாங்கியாகிவிட்டது. 

''நல்ல நாளான ஆவணி மூலம் அன்று பரிகள் வந்து சேரும்'' என்று ஈசன் சொற்படியே கிளிப்பிள்ளையாக  மணிவாசகர் சொல்கிறார்.  
''அரசே, என் மனம்  இறைவனிடம் சென்றுவிட்டது.  இனி அதிலிருந்து மீளாது. உலக வாழ்வில் எனக்கு இனி  பங்கில்லை.  ஊரார், உற்றார், சொந்தம் பந்தம் எல்லாம் இனி சிவனே. அவன் திருவடியே கதி.திருநீறே ஆபரணம். அவன் ருத்ராக்ஷம் ஒன்றே  துணை'' என்று சொன்னார்  மணிவாசகர்.

ஆவணி மூலம் நெருங்கி விட்டது. குதிரை பற்றிய சேதி இல்லையே. வாதவூரன் பொய்யன், குதிரை வாங்க கொடுத்த  செல்வத்தை திருப்பெருந்துறையில் கோவில் கட்ட செலவழித்து குதிரை வாங்கியதாக பொய்யுரைத்ததால் அவனை சிறைபிடித்து தண்டனை வழங்கினான்.  அரசன் கட்டளையிட்ட கடும் தண்டனைகளை மணிவாசகர் பொறுமையோடு ஏற்றார். மனம் சிவனையே நாடியது. பக்தனின்  துயரம் கண்ட பரமன் காட்டில் இருந்த நரிகளை பரிகளாக்கி  தன்னோடு  அழைத்துக் கொண்டு பாண்டியனை  குதிரை வியாபாரியாக அடைந்தான்.  இரவோடு இரவாக பரிகள் நரியாகின. பாண்டியன் கொடும்  கோபத்தோடு  வைகை சுடுமணலில் வாதவூரரை  நிற்க வைத்து தண்டித்தான்.  அதிசயமாக அப்போது நீரற்ற வைகையில் வெள்ளம் கரை புரண்டு  ஓடிவந்தது. அதிசயித்த பாண்டியன்  மதுரை மூழ்கிவிடும் நிலையில் வைகையின் கரையைப்  பலப்படுத்த  பாண்டியன் மக்களை  பணிக்கு அழைத்தான்.  வீட்டுக்கொரு ஆளாக எல்லோரும் பங்கேற்க  கட்டளையிட்டான்.  வந்தி என்ற ஒரு பிள்ளையில்லாத கிழவியின் சார்பாக எவர் செல்வார்?  வந்தி  மதுரை சொக்கனின் பக்தை.  ஆகவே  அவனையே வேண்டினாள்.   பரமேஸ்வரனே  ஒரு  பணியாளனாக வந்தியிடம்  வந்தான். ''பாட்டி நீ சுடும்  பிட்டு எனக்கு ஒன்று கொடு அது போதும் உனக்காக நான்  ராஜாவின்  மண் கொட்டும் வேலைக்கு செல்கிறேன்'' என்று வைகைக் கரை பலப்படுத்தும்  பணியில் ஈடுபட்டான். மேற்பார்வை யிட்டு வந்த பாண்டியன் வந்தியின்  பணியாள்  ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவன் முதுகில் பிரம்பால் அடித்தான். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. முதுகில் பிரம்படி பட்ட பரமேஸ்வரன்  கையில் இருந்த மண்ணை வைகையில் கொட்ட அடுத்த கணமே வெள்ளம் வடிந்தது. அதே சமயம்  மன்னன் உட்பட   மதுரையில் அனைவரின் முதுகிலும்  மன்னன் அடித்த  பிரம்படி வலியைத் தந்தது. 

அரிமர்த்தன பாண்டியனும் சிவபக்தன்  ஆயிற்றே. அடுத்த கணமே தனது தவறை உணர்ந்தான். அனைத்தும் வாதவூரர் மூலம்  மதுரை சுந்தரேஸ்வரர் நிகழ்த்திய  திருவிளையாடல் என்பதை உணர்ந்தான்.  ஓடிச்சென்று வாதவூரரின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்க வேண்டினான். வந்தியைத் தேடி ஓடினான். வந்தியை  சிவகணங்கள் வானரதத்தில் ஏற்றி கைலாசம் செல்வதைக் கண்டான். 

''வாத வூரரே என்னை மன்னித்து பாண்டிநாட்டை நீங்களே ஆளவேண்டும்'' என்று கதறினான்.  மணிவாசகர் அவனைத் தேற்றி அவனிடமிருந்து விடைபெற்று மதுரைச் சொக்கனை வணங்கிவிட்டு  திருப்பெருந்துறை அடைந்தார்.  ''ஆத்ம நாதா, என் அந்தண குருவாக மீண்டும் காட்சி தரவேண்டும் என்று வேண்டினார்.  சிதம்பரம்  செல்லும் வழியில் பல சிவாலயங்கள் சென்றார்.  உத்தரகோசமங்கை  நடராஜன் தரிசனம் பெற்றார்.  சிதம்பரத்தில் நடராஜன் மணிவாசகரின் திருவாசகம் கேட்க  விரும்பி அதை ஓலைச்சுவடிகளில் எழுதி நமக்கு  திருவாசகம் கிடைத்தது.

ஈழ நாட்டரசன் தனது ஊமைப்பெண்ணுடன்  சிதம்பரம் வந்தான்.  அவனது பௌத்த குரு மாணிக்கவாசகரை வென்று  பாண்டிய சோழ மக்களை  பௌத்தராக்குவேன் என்று சூளுரைக்க,  பௌத்த குருவை வாதத்தில் மாணிக்கவாசகர் வென்று ஈழமன்னனின் ஊமைப்பெண்ணை  பேசவைத்தார்.  பௌத்தனான ஈழ மன்னனும் ஈழ நாட்டு மக்களும் சைவர் களானார் கள்.   இது தான்சுருக்கமாக  மணிவாசகர் சரித்திரம். 

sivan jaykay

unread,
Apr 17, 2023, 7:20:41 PM4/17/23
to amrith...@googlegroups.com
மணித்வீபம்   -    நங்கநல்லூர்   J K  SIVAN 

சிவனுக்குக் கைலாசம், விஷ்ணுவுக்கு வைகுண்டம் மாதிரி லலிதாம்பாளுக்கும் தனி லோகம் உண்டு. மற்றவர்களுக்கு ஒன்று  என்றால் அம்பாளுக்கு  ரெண்டு வாச ஸ்தலங்கள். ஒன்று பிரம்மாண்டம்.  அதில் தான் எல்லா  க்ரஹங்களும் தன்னைச் சுற்றி வரும்படி,  மத்தியிலிருக்கும் மேரு சிகரத்தில் இருப்பது.  ரெண்டாவது த ப்ரஹ்மாண்டத்தில்  உட்படாத  தனி லோகம். அதைத் தானே ஸ்ரிஷ்டி செய்து, அதற்குள் ஒரு தீவு அமைத்து  அதில் வசிப்பவள் . ”ஸுதா ஸாகர மத்யஸ்தா, காமாக்ஷீ, காமதாயிநீ” என்று  ஸஹஸ்ரநாமத்தில்  இந்த அம்ருத சாகர இருப்பிடத்தைக்  குறிப்பிட்டிருக்கிறது.  காமாக்ஷி இருக்கும் இடம் அது.   அந்த தீவின் பெயர் 'மணித்வீபம்'  ஆச்சார்யாள் இதை வர்ணித்துள்ளார்.  

மேரு மத்தியானாலும் சரி, அம்ருத ஸாகரமானாலும் சரி.  அவள் தனது  தீவுக்குப்  போய் விட்டால் அங்கே ஒன்றும் வித்தியாசமில்லை. வெளிக் கோட்டையிலிருந்து ஆரம்பித்து அரண்மனையில் அவள் கொலுவிருக்கும் இடம் வரையில் இரண்டிலும் ஒரே மாதிரியான  ப்ராஹாரங்கள், வனங்கள், தடாகங்கள், பரிவாரங்கள்தான்.  இருபத்தைந்து கோட்டைகளும் ப்ரஹாரங்களும் சூழ்ந்தது. முதலில் இரும்பு, அப்புறம் கடைசியில் ஸ்வர்ணம் வரை ஒவ்வொரு  உலோகத்தாலும்  ஒவ்வொரு கோட்டை.  அப்புறம் நவரத்தினங்கள் ஒவ்வொன்றாலும்  செங்கல் மாதிரி இணைத்துக் கட்டப்பட்ட கோட்டை. இப்படியே ஸூக்ஷ்மமாகப் போய் மனத்தாலேயே ஆன கோட்டை,  புத்தியாலேயே ஆன கோட்டை, அஹங்காரத்தாலான கோட்டை எல்லாம் கூட உண்டு. கடைசியில் சூர்ய தேஜஸ், சந்திர தேஜஸ், மன்மத தேஜஸ் இவற்றைக் கொண்டே ஒவ்வொரு கோட்டை.
இப்படிப்பட்ட  கோட்டைகளுக்கு நடுவே திவ்ய வ்ருக்ஷங்கள் உள்ள பல ஆரண்யங்கள், காடுகள்,  பல நீர்  ஓடைகள்.   இதை எல்லாம்  தாண்டிப் போனால் இருபத்தைந்தாவது ஆவரணத்தில் (சுற்றில், அதாவது  ப்ரஹாரத்தில்)  மஹா பத்மவனம் என்று ஒரே தாமரை மயமாய்ப் பூத்த தடாகம்  வரும். அது அகழி மாதிரி. அதற்குள்ளே செங்கலுக்குப் பதில் சிந்தாமணிக் கற்களையே வைத்துக் கட்டப்பட்ட  அம்பாளின் அரண்மனை தெரியும். அம்பாளின் வீட்டுக்குப் பெயர்  'சிந்தாமணி க்ரஹம்'.

ஸௌந்தர்ய லஹரி முதல் பாகமான  சிவானந்த லஹரியில் 8வது ஸ்லோகம் ஏற்கனவே உங்களுக்கு அளித்திருக்கிறேன். மீண்டும் அதை எழுதுகிறேன்.  

8.  சிந்தாமணி க்ரஹம்
सुधासिन्धोर्मध्ये सुरविटपिवाटीपरिवृते मणिद्वीपे नीपोपवनवति चिन्तामणिगृहे ।
शिवाकारे मञ्चे परमशिवपर्यङ्कनिलयां भजन्ति त्वां धन्याः कतिचन चिदानन्दलहरीम् ॥8॥

sudhāsindhōrmadhyē suraviṭapivāṭīparivṛtē maṇidvīpē nīpōpavanavati chintāmaṇigṛhē ।
śivākārē mañchē paramaśivaparyaṅkanilayāṃ bhajanti tvāṃ dhanyāḥ katichana chidānandalaharīm ॥ 8 ॥

ஸுதா ஸிந்த்தோர் மத்த்யே ஸுரவிடபி வடீ பரிவ்ருதே மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே
ஶிவாகாரே மஞ்சே பரமஶிவ பாயாங்க நிலயாம் பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்த லஹரீம்.

பகவானுடைய அனுக்ரஹம் இல்லாமல் நம்மால் மனஸை அடக்கவோ, ஞானமார்கத்தில் செல்லவோ முடியாது என்பது வாஸ்தவம். அதை அடைந்தவனுக்கு எல்லாம் ஒன்றே. அது அவனே. வித்யாசமே எதிலும் கிடையாது. அதைதான் அத்வைத வாஸனா என்பது. மாயை தான் ஒவ்வொருவரையும் தன் வழியில் நம்மை இழுத்துச் செல்வது. அதை உணர்ந்து அதன் பிடியில் சிக்காதவன் ஞானி. சர்வ சக்தியாக எல்லாமும் தானேயானவள் அம்பாள் மஹா த்ரிபுர சுந்தரி என்று ஞானி அறிந்தவன், 
ஸர்வ வியாபியான பரமேஸ்வரியின் இருப்பிடம், அமிர்தக் கடலின் நடுவில் கல்பகவிருக்ஷங்கள் நிறைய சூழ்ந்து இருக்கும் ரத்ன மயத் தீவில் கதம்ப மரங்கள் நிறைந்த உத்தியான நந்தவனத்தில் தோன்றும் சிந்தாமணி க்ரஹத்தில். அங்கே அவள் பரம மங்கல வடிவமான சிம்மாஸனத்தில் பரமசிவனுடைய மடியில் வீற்றிருக்கிறாள். அவள் ஞானானந்தக் கடலின் அலை போன்றவள் . ஆனந்த லஹரி எவ்வளவு அழகாக வர்ணிக்கப்படுகிறது! அம்மா தாயே, உன்னை புண்ணியவான்களான சிலரே வழிபடுகிறார்கள் ஏனென்றால் அவர் பாக்யம் பண்ணியவர்கள். புண்யசாலிகள்.
நமக்கு எல்லாம் வீடு இருப்பது போல் இந்த ஸ்லோகத்தில் அம்பாளின் க்ரஹத்தை அழகாக காட்டி யிருக்கிறது. அம்பிகையின் வாசஸ்தானமான சிந்தாமணி க்ருஹம் ஸகல அண்ட ப்ரம்மாண் டங்களுக்கும் அப்பால் அமிருதஸாகரத்தின் மத்தியில் ரத்தினத்தீவில் இருக்கிறது என்கிறார். அதன் வெளி ப்ரஹாரங்கள் ஒன்று ரெண்டல்ல. இருபத்தைந்து: அவை எதனால் ஆனது தெரியுமா? (1) இரும்பு (2) எஃகு (3) செம்பு (4) வெள்ளீயம் (5) பித்தளை (6) பஞ்சலோகம் (7) வெள்ளி (8) தங்கம் (9) புஷ்பராகம் (10) பத்மராகம் (11) கோமேதகம் (12) வஜ்ரம் (13) வைடூரியம் (14) இந்திரநீலம் (15) முத்து (16) மரகதம் (17) பவழம் (18) நவரத்தினம் (19) நானாரத்தினம் . இதோடு கூடம் நமது (20) மனம் (21) புத்தி (22) அஹங்காரம் (23) சூரியனின் தேஜஸ் (24) சந்திரனின் தேஜஸ் (25) மன்மதனின் தேஜஸ் . போதுமா?
இந்த 25 ப்ரஹாரங்களில் எட்டாவது தான் மேலே சொன்ன கதம்பவனம் –இதில் யார் காணப்படுகிறார்? லலிதாம்பிகையின் மந்திரிணியான ஸ்யாமளாதேவி வசிக்கும் ஸ்தலம்.
பதினைந்தாவது ப்ரஹாரத்தில் அஷ்ட்திக்பாலர்கள் இருக்கிறார்கள். பதினாறாவது ப்ரஹாரத்தில் ஸேனா நாயகி தண்டினி, இன்னொரு பெயர் வாராஹி இருக்கிறாள். இங்கேயும் ஸ்யாமளாதேவி காணப்படுகிறாள்.
பதினேழாவதில் முழுக்க முழுக்க யோகினிகள். பதினெட்டில் மஹாவிஷ்ணு; பத்தொன்பதில் ஈசானன். இருபதில் தாரா தேவி, இருபத்தொன்றில் வாருணி. இருபத்திரண்டாவது ப்ரஹாரம் அஹங்காரக் கோட்டை. அதில் வசிப்பவள் குருகுல்லா தேவி. இருபத்துமூன்றாவது சூரிய ப்ரஹாரம் அதில் இருப்பவர் தான் மார்த்தாண்ட பைரவர். இருபத்துநான்காவது ப்ரஹாரம் சந்திரன் இருக்கும் ஸ்தலம். கடைசியாக 25வது ஸ்ருங்கார வனம். அழகு மிகுந்தது. அதில் இருப்பவன் தான் மன்மதன்.
இதற்குள் மஹாபத்ம வனமும் கற்பகவிருக்ஷத் தோப்பும், அதன் நடுவில் சிந்தாமணிக்கிருஹமும் இருக்கிறதும். அம்பாளின் சிந்தாமணி க்ரஹம் எப்படி இருக்கிறது! வாஸ்து மாதிரி அந்த சிந்தா மணி க்ருஹத்தின் அக்னிமூலையில் சிதக்கினி குண்டமும், கிழக்குத் துவாரத்தின் இருபுறமும் மந்த்ரிணி, தண்டினி தேவிகளின் கிருஹங்கள் உள்ளன. நான்கு துவாரங்களிலும் சதுராம்னாய தேவதைகள் காவல் இருப்பர். இது தான் அவள் கோட்டை, அதன் செக்யூரிட்டி ஏற்பாடுகள். இதை தான் நவாவரணம் அழகாக சொல்ழும் ஸ்ரீசக்கரம். இந்த ஸ்ரீசக்ரத்தின் நடுவில் ஸர்வானந்தமயம் என்னும் பிந்துபீடத்தில் பஞ்சப் பிரம்மாஸனத்தில் ஸதாசிவனுடைய மடியில் மஹாத்ரிபுரஸுந்தரி எழுந்தருளியிருப்பாள்.

பஞ்சப் பிரம்மாஸனம் என்பது என்ன? பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் ஆகிய நாலு பேரும் நாலு சிம்மாசன கால்கள். அதன் பீடம் ஸதாசிவனுடைய மடி, எனும் மேல் பலகை கொண்ட கட்டில் . இதுவே “ அ-உ-ம-அர்த்த, AUM எனும் ஓங்காரம். பிந்து” வடிவான ஓங்கார மஞ்சம்.

தேவர்களுக்கெல்லாம் மேலே ராஜ தர்பார் நடத்துகிற ராணிஅம்பாள்.  அம்ருத சாகர மத்தியிலே உத்தமமான சாதகர்களுக்குக் காமேஸ்வர பதிவ்ரதையான   தாயாகவும்  காட்சி தருகிறாள்.   அப்படிப்பட்ட அம்பாளுடைய வாசத்தைத்தான் அம்ருத சாகரத்திலிருந்து ஆரம்பித்துக் காமேஸ்வரனுடைய மடி வரையில் சுருக்கமாக ஆசார்யாள் வர்ணித்திருக்கிறார்.
நீபம் என்ற மரங்களைக் கொண்ட உபவனத்திலே – (கதம்பத்தின் இன்னொரு பெயர் நீபம் ) ஆனந்தமாக அம்பாள் சஞ்சாரம் பண்ணுபவள்.  மதுரையில் கதம்ப வனம், மணித்வீபத்தில்  இப்படி ஒரு உபவனம்.  ஒரு குட்டி  ஆரண்யம். காடு

ஆதி சங்கரர்  செளந்தரிய லஹரியில் ஒரு ஸ்லோகத்தில்  அம்பாளின்  தாடங்க மஹிமையை  வர்ணிக்கிறார். உன்னால் ஹாலஹால  விஷத்தை உண்டும் சிவபெருமான் அழிவில்லாதவராக, நீலகண்டனாக  என்றும்  இருக்கிறார் என்று அந்த ஸ்லோகம் சொல்லும். கைலாசபதியாகிய பரமேசுவரனத் தன் பதியாகப் பெற்ற அம்பிகை எப்போதும் கணங்குழையை அணிந்தவளாக, நித்திய மங்கலமுடையவளாக, விளங்குகிருள்.   அம்பாளுக்கு  'ஸுமங்கலி' என்று ஒரு பெயர்.
சிந்தாமணி க்ரஹத்தைச் சுற்றிக் கதம்பவனம். அது  இருக்கும் இடம் மணித்வீபம்.சுற்றிலும்  கற்பகக் காடு/  எல்லாமே  அம்ருத சமுத்திரத்தின் நடுவில் அமைந்தவை.

தொடரும் 

sivan jaykay

unread,
Apr 17, 2023, 7:20:51 PM4/17/23
to amrith...@googlegroups.com

ஆத்ம வித்யா விலாசம் 31-35  -  நங்கநல்லூர்   J K  SIVAN 
ஸதாசிவ ப்ரம்மேந்திரா 

निखिलागमपल्लविते निगमशिरस्तन्त्रशीतलोद्याने । मधुरतरमञ्जुवाचः कूजन्नास्ते यतीद्रकलकण्ठः ॥ ३१॥ 
nikhilAgamapallavite nigamashirastantrashItalodyAne |madhuratarama~njuvAchaH kUjannAste yatIdrakalakaNThaH || 31|
நிகி²லாக³மபல்லவிதே நிக³மஶிரஸ்தந்த்ரஶீதலோத்³யாநே । மது⁴ரதரமஞ்ஜுவாச: கூஜந்நாஸ்தே யதீத்³ரகலகண்ட:² ॥ 31॥

31.  ஒரு  ப்ரம்ம ஞானி எவ்வளவு ஆனந்தம் நிறைந்தவன், சுதந்திரமாக உதவுபவன் என்பதை சதாசிவ ப்ரம்மேந்த்ர  படம் பிடித்துக் காட்டுகிறார்.  அவர் அவ்வாறு வாழ்ந்ததன் அனுபவ விஷயம் அது.  
சகலவித ஆகமங்களும் துளிர்க்கும் வேதத்திற்கு  தலைமையான, சிரமான, உபநிஷத மரங்கள் நிறைந்த குளிர்ந்த சோலையில், அழகிய [நற்கதி தரும் சொற்களை] மதுரமான, யதீந்திரர் [யதிகளில் தலையாயவர்]   மஹான்  குயிலாய்க் கூவிப் பாடிக்கொண்டே இருக்கின்றார்.  பரம ஹம்ஸர்  எனப்படுபவர்அவர். 

दारितमोहमदेभो दूरीकृतसकलदुरितशार्दूलः । विबुधोत्तमसिंहवरो विहरत्यानन्दविततकान्तारे ॥ ३२॥ 
dAritamohamadebho dUrIkR^itasakaladuritashArdUlaH |vibudhottamasi.nhavaro viharatyAnandavitatakAntAre || 32||
தா³ரிதமோஹமதே³போ⁴ தூ³ரீக்ரு’தஸகலது³ரிதஶார்தூ³ல: । விபு³தோ⁴த்தமஸிம்ஹவரோ விஹரத்யாநந்த³விததகாந்தாரே ॥

32. மெய்யனுபூதியுற்றவர் சிறந்த சிம்மராஜனாய், மோகமும் செருக்குமுடைய மதயானையை நார்நாராக கிழித்தெறிந்து விட்டு, சகல துர்விஷயங்களுக்கு உறைவிடமான புலியை விரட்டிவிட்டு, பரந்து  விரிந்த ஆனந்த கானகத்தில் வீறுநடை போட்டுச்  சிம்மமாக சுற்றிவருகிறார்.  மனிதரில் சிறந்த ப்ரம்ம ஞானி அப்படிப்பட்ட கம்பீரம் கொண்டவன்.  சுகம் துக்கம், இன்பம் துன்பம், நல்லது  கெட்டது  எதுவுமே அற்றவன் அல்லவா?  ப்ரம்மானந்தன்.

33, अज्ञानमृगवरोज्झितविज्ञानोत्तुङ्गश‍ृङ्गशिखरितले । मतिसलिलशीतलाङ्गो यतिमदकलभो विराजते विहरन् ॥ ३३॥ 
aj~nAnamR^igavarojjhitavij~nAnottu~NgashR^i~Ngashikharitale |matisalilashItalA~Ngo yatimadakalabho virAjate viharan || 33||
 ॥ அஜ்ஞாநம்ரு’க³வரோஜ்ஜி²தவிஜ்ஞாநோத்துங்க³ஶ்ரு’ங்க³ஶிக²ரிதலே । மதிஸலிலஶீதலாங்கோ³ யதிமத³கலபோ⁴ விராஜதே விஹரந் ॥

33. அஞ்ஞான  மிருகங்களை  நன்றாக  மிதித்துக் கொன்றுவிட்டு, தன் சரீரம் மனம்  ரெண்டையும்  தண்மையான நீராய்க் குளிர்வித்துக் கொண்டு, யதி  எனப்படும்  ப்ரம்ம ஞானி,  துடிப்பான இளம் யானையாய், மெய் ஞானம் எனும்  உயர்ந்த, அழகே உருவான சிகர பீடத்தில்   ஏறி அமர்ந்து சுற்றிக்  கொண்டு ஜொலிக்கின்றார் என்று சொல்கிறது இந்த ஸ்லோகம். 
யானை கம்பீரமானது. சக்தியும் மிக்கது.  ப்ரம்மஞானி அப்படிப்பட்டவன்.  ஐம்புலன்களையும் வென்ற  மா வீரன். 


34,  नासाञ्चलनिहिताक्षो नामादिभ्यो निवर्तितस्वान्तः । तटिनीतटेषु तत्त्वं ध्यायन्नास्ते यतिः कोऽपि ॥ ३४॥ 
nAsA~nchalanihitAkSho nAmAdibhyo nivartitasvAntaH | taTinItaTeShu tattvaM dhyAyannAste yatiH ko.api || 34||
॥ நாஸாஞ்சலநிஹிதாக்ஷோ நாமாதி³ப்⁴யோ நிவர்திதஸ்வாந்த: । தடிநீதடேஷு தத்த்வம் த்⁴யாயந்நாஸ்தே யதி: கோऽபி ॥ 34

34. கண்களை மூக்கின் மேல்பாக நுனியில் [புருவ மத்தியில்] அசையாமல் நிறுத்திக் கொண்டு, நாமரூபங்களாலான அனைத்திலிருந்தும் தனது மனதை முழுவதுமாக விலக்கிக் கொண்டு, அரிதாக எவரோ யதி எனப்படும் ப்ரம்ம ஞானி ஓருவர் ஆற்றங்கரை யொன்றில் மீதமர்ந்து உண்மைத் தத்துவத்தைத் தியானித்து கொண்டிருக்கிறார்  என்று வர்ணிக்கிறது இந்த ஸ்லோகம்.   இந்த உலகமே  நாம  ரூபங்களால் ஆனது அல்லவா?

35.  आशावसनो मौनी नैराश्यालङ्कृतः शान्तः । करतलभिक्षापात्रस्तरुतलनिलयो मुनिर्जयति ॥ ३५॥ 
AshAvasano maunI nairAshyAla~NkR^itaH shAntaH | karatalabhikShApAtrastarutalanilayo munirjayati || 35||
॥ ஆஶாவஸநோ மௌநீ நைராஶ்யாலங்க்ரு’த: ஶாந்த: । கரதலபி⁴க்ஷாபாத்ரஸ்தருதலநிலயோ முநிர்ஜயதி ॥ 35॥ 

35.  எட்டு திசைகளும் தான்  ஞானிக்கு ஆடை  ஆபரணம்.   அவற்றை அணிந்துகொண்டு [அதாவது, எங்கும் நிறைந்த  தன்மைபெற்று], அமைதியாய், நிராசையை அலங்காரமாகத் தரித்துக்கொண்டு சாந்தமாய்  காணப்படும்  ப்ரம்ம ஞானி  அரிதானவன். தன் இரு உள்ளங்கைகளையும் குவித்து  அதையே பிக்ஷா பாத்திரமாக  பிறர் அளிப்பதை ஏற்பவன்.  மரத்தடி நிழலை வாசஸ்தலமாக கொண்ட ராஜா.  எதிலும் வெற்றி கொண்டவன்.  ஞான ஒளியோடு   ப்ரகாசிக்கின்றவன் . எல்லாமே  சதாசிவ ப்ரம்மேந்திராவின் வாழ்க்கையை ப்ரதிபலிப்பவை .


sivan jaykay

unread,
Apr 17, 2023, 7:20:59 PM4/17/23
to amrith...@googlegroups.com
நமசிவாய பதிகம்   நங்கநல்லூர் J  K  SIVAN  
                                                                     
ஓம்  நமசிவாய:  என்ற  வார்த்தையைச் சொல்லவே  பாக்யம் செயதிடுக்கவேண்டும். எல்லோராலும் எப்போதும் இந்த ஐந்தெழுத்து மந்திரம் சொல்லப்படுவதில்லையே.  காரணம்  செய்வினை, பாபம் தடுப்பதால் தான்.  இனியாகிலும்  அதை விடாமல் தினமும் சொல்லி மூன்று விரல்களால்  திருநீற்றை நெற்றியில் அணிந்து கொள்வோம்.  சிவனருள் பெறுவோம்.

சைவ சமய குரவர்கள்  நால்வரில் மூத்தவர்  திருநாவுக்கரசர் எனும் நம்  அப்பரது வாழ்க்கை சரித்திரம்  ஏற்கனவே எழுதி உங்களுக்கு அளித்திருக்கிறேன். அவர் எழுதிய  நமசிவாய பதிகம் 10 பாடல்கள்  அற்புதமானவை.  எளிது அர்த்தம் புரியும். படியுங்கள். சகல வினைகளும் தீரும். மனம் நிம்மதி பெறும்

பாடல் 1:
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே.

பரமேஸ்வரா,  நீ  நான்கு வேதங்களுக்கும்  உட்பொருள்.  அக்னி, ஜோதி வடிவானவன். அதைத்தான்  ''பிழம்பதோர் மேனியாகி'' என்று வாயினிக்க  பாடுகிறோம்.  பொன்னார் மேனியனே, உன் திருவடிகளை மனதில் இருத்தி, நிறுத்தி,  சிரம் மேல் கரம்கொண்டு  'ஹர ஹர மஹா தேவா'  என்று அடிவயிற்றிலிருந்து  அன்போடு  உன்னை அழைக்கிறோம் .   ஓம் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை  கெட்டியாக  நாவில் பதித்து உச்சரித்தால்  கருங்கல் பாறையோடு கட்டி கடலில் தள்ளினாலும்  உயிர்காக்கும். நல்ல  துணையாக  பாதுகாக்கும்'' -- அனுபவ பூர்வமாக சொல்கிறார்  திருநாவுக்கரசர்.

பாடல் 2:
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.

பூக்களில் சிறந்தது தாமரை, வெண்தாமரை, செந்தாமரை  எனும்   இரு வண்ணத்  தாமரைகளுக்குமே அழகுக்கு அழகாக சிறப்பு தருவது  வெண் தாமரைக்கு  கலைமகளும், செந்தாமரைக்கு  திருமகளும்.   சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வித்து நைவேத்யமாக அளிக்கும்  பஞ்சகவ்யம் பசுவிற்கு  சிறப்பை தருகிறது. பசும் கோமியம் அதில் முக்ய பொருள்.   நீதி வழுவாது செங்கோல் ஒச்சுவது  ஒரு நாட்டின் ராஜாவுக்கு சிறப்பை தருவது.  இதெல்லாம் உதாரணங்கள், நமது நாவிற்கு  நல்ல சிறப்பை தருவது  'ஓம்  நமசிவாய' எனும் பஞ்சாக்ஷர ஐந்தெழுத்து மந்திரம்.

பாடல் 3:
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் இவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.

மேகத்தை முட்டும் அளவிற்கு அடுக்கி அடுக்கி விறகு கட்டைகள் வைத்தாலும்  ஒரு சிறு தீப்பொறி போதும், அத்தனையும் சாம்பலாகிவிடும்.  அது போல  எத்தனையோ ஜென்மங்கள் எடுத்து கோடிக்கணக்கான பிறவி எடுத்து புரிந்த பாபங்கள் கர்ம  வினைகள் எல்லாமே  வேரோடு அழிக்க உதவுவது  'ஓம் நமசிவாய' எனும் ஐந்தெழுத்து மந்திரம்.

பாடல் 4:
இடுக்கண் பட்டு இருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோம் அல்லோம்
அடுக்கற் கீழ்க் கிடக்கினும் அருளினால் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே.

'எனக்கு நிறைய  கஷ்டங்கள்,  துன்பங்கள், இருக்கிறதே, தீர்த்து வையேன்'  என்று யாரைக் கேட்டு  எவர் உதவமுடியும்? சிவனே என்று அவனிடம்  கேட்க எண்ணம் தோன்ற  வேண்டாமா?  சாமகானம் பாடும்போது   கைலாயமலையை தூக்க முயற்சித்து  அதன் கீழ் மூச்சு விட முடியாமல் நசுங்கிய ராவணனை   ஞாபகம் இருக்கிறதா? அப்படி கர்மவினைகள் நம்மை நசுக்கினாலும் நம்மை அத்தகைய  துன்பத்திலிருந்து விடுவிப்பது 'ஓம் நமசிவாய' எனும் ஐந்தெழுத்து மந்திரம் ஒன்றே.

பாடல் 5
வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கு எலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழு நீண்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சி வாயவே.

நீயே  கதி என்று  சிவனை வணங்கி விரதம் இருக்கும்  சிவனடியார்கள் சிவப்பழமாக துலங்க ஒளியுடன் அழகூட்டுவது   நெற்றியிலும் உடலிலும் அவர்கள் பூசும் பால் வெண்ணீறு.   திருமறை கற்ற  அந்தணர்க்கு  அழகு  அவர்கள் ஓதும்  வேத ஒலி.  அவன் ஒலிக்கும் ஷடங்கம் , ஆறு அங்கங்கள் :சிக்ஷா  (எழுத்திலக்கணம்) , வியாகரணம் (சொல்லிலக்கணம்), நிருக்தம் (நிகண்டு), கல்பம் (கர்மாநுஷ்டான முறை), சந்தஸ் (பாவிலக்கணம்), ஜ்யோதிஷம் (சோதிடம்) என்பவை.  பிராம்மணன் என்பவன்  வேதங்களையும் இந்த ஆறு அங்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் வேதாத்யயனம் செய்யவேண்டும்.  முடியாத நாம் பிறப்பால் மட்டுமே  பிராமணன் என்று சொல்லிக்கொள்கிறோம். அந்த வேதத்திற்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் பொருட்டு, இந்த ஆறு அங்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  அதுவே  அவனுக்கு அழகூட்டும்.   சிவபெருமானின் திருமுடிக்கு அணியாய்த் திகழ்வது பிறைச் சந்திரன். சிவனடியார்களுக்கு  அடியவர்க்கு அழகூட்டுவது,  'ஓம் நமசிவாய'  எனும் ஐந்தெழுத்து.

பாடல் 6:
சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
நலமிலன் நாடொறு நல்குவான் அலன்
குலமிலராகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே.

பரமேஸ்வரன்  எல்லோருக்கும் பொதுவானவன்.  அனைவர்க்கும் அருள் புரிபவன்.  அவனது தாளைச் சரணடைந்தவனுக்கு முக்திஅளிப்பவன்.  ஆகம விதிப்படி ஆசாரம் - ஒழுக்கம் இவைகளைக் கொண்டு வாழ்பவர்க்கும், அவற்றில் இருந்து நீங்கி நிற்பவர்க்கும், அவரவர் தன்மைக்கு ஏற்ப திருவருளைப் பெற்றுத் தருவது  'ஓம் நமசிவாய' எனும் பஞ்சாக்ஷரம். 

பாடல் 7:
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச்சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே.

எனக்கு  சிவனைப் பிடிக்கும் அவனது அடியார்களைக்  காணும்போது அவனைவிட அவர்களை ரொம்ப பிடிக்கும். அதிலும்   அவர்கள் ஓதும்  ருத்ரம் சமகம் ஒலி  எங்கோ கைலாசத்துக்கு கொண்டு செல்லும்.  நான் பல சிவாலயங்களில் மணிக் கணக்காக  ருத்ரம் சமகம் சொல்லி மகிழ்ந்தவன்.  தேவாரம் திருவாசகம் ஓதும் ஓதுவார்களை ஆவலோடு பக்தியோடு கேட்பது பிடிக்கும்.  'ஓம் நமசிவாய' என்று சொல்வது எல்லாவற்றையும் விட  அதிகமாக  பிடிக்கும்.  காந்தம் போல்  நாடிச் செல்ல  தேடி ஓட  வைக்கும்  தன்மையது ஐந்தெழுத்து. அவ்வளவு  பெருமை வாய்ந்தது. .

பாடல் 8
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.

நமது இல்லங்களில் இருளைப் போக்குவது  விளக்கு. ஒளி. தீபம்.  புற  இருளை நீக்க இந்த ஒளி.  அக்னி, ஜோதி ஸ்வரூபம் சிவன்.   திருவண்ணாமலை ஜோதி, சபரி மலை ஜோதி எவ்வளவு மனதுக்கு இனிமை தருகிறது. ஹர ஹர மஹாதேவா, ஸ்வாமியே ஐயப்பா என்று எல்லாம் சொல்ல வைத்து இன்பம் தருவது.  எந்த வித ரூபத்தில் ஒளி இருந்தாலும்  மனதுக்கு சந்தோஷம் தருகிறது. தீபாலங்காரம்  பார்க்க பரவசம் தருவது அல்லவா. தீபாவளி  கார்த்திகை பண்டிகைகளே  அதனால் தானே  சிறப்பு பெற்றது. அதுபோல்  அக  இருளைபோக்குவது   அஞ்ஞானத்தை அழிப்பது ஓம் நமசிவாய எனும் பஞ்சாக்ஷர மந்திரம். ஐந்தெழுத்து.

பாடல் 9:
முன்னெறியாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரணாதல் திண்ணமே
அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கெலாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே.

மௌன குருவாக, தக்ஷிணாமூர்த்தியாக ,  அசையாமல் நன்னெறி  காட்டி  அருள்பவர் மூல முதல்வனான முக்கட் பரம மூர்த்தியான  பரமேஸ்வரன். ஞானமார்கத்தில் முன்னேற சிவபெருமானின் திருவடிகளை அடைய முனையும் அன் பர்களுக்கு அரும் துணையாய் விளங்கி உய்விப்பது ஓம் நமசிவாய எனும்  ஐந்தெழுத்து மந்திரம்.

பாடல் 10:
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே.

இந்த பத்தாம் பதிகம்   பலஸ்ருதியாக விளங்குகிறது. மான்  மழு  ஏந்திய உமையொரு பாகனின் திருவடிகளை உள்ளம் பொருந்து மாறு தொழுவதற்கு, 'ஓம் நமசிவாய'  என்று நா மணக்க  மனதினிக்க இந்த பதிக பாடல்களை  பாடும், ஓதும் 
அன்பர்களை, சிவனடியார்களை  எந்த துன்பமுஜம், தீங்கும், தீமையும் அணுகாது என்கிறார்  திருநாவுக்கரசர்.
குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். அடுத்த தலைமுறையாவது முறையாக நம் பண்பாட்டினை உணர வாய்ப்பளிப்போம். 


 

sivan jaykay

unread,
Apr 19, 2023, 8:46:44 PM4/19/23
to amrith...@googlegroups.com

காசி விஸ்வநாதாஷ்டகம் -   நங்கநல்லூர்  J K  SIVAN
ஆதி சங்கரர்.

காசிக்குப் போகிறவன் சந்நியாசி மட்டும் இல்லை. ஒவ்வொரு  ஹிந்துவும்  தனது வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க விரும்புவது காசி க்ஷேத்ரம்.  அங்கே மரணத்தைத்  தழுவ எண்ணற்றோர் சென்று காத்திருக்கிறார்கள். காசியில் மரணம் நேராக மோக்ஷத்தை தரும் என்ற நம்பிக்கை.  காசி  விஸ்வநாதன்  மோக்ஷ காரகன்.  இந்த எட்டு ஸ்லோகங்களும் ஆதிசங்கரரின் அற்புதமான  எத்தனையோ  ஸ்தோத்ரங்களில்  சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது.  வருணா,  அஸி என்ற  இரு கங்கை உபநதிகளின் சங்கமமாக உள்ள  காசி க்ஷேத்ரம் வாரணாசி என்ற பெயரை சமஸ்க்ரிதத்திலும் பெனாரஸ்  benares  என்ற  வெள்ளைக்காரன் வாயில் நுழையாத பெயரோடும் பிரபலமானது. 

1.  गङ्गा तरङ्ग रमणीय जटा कलापं गौरी निरन्तर विभूषित वाम भागम् ।
नारायण प्रियमनङ्ग मदापहारं वाराणसी पुरपतिं भज विश्वनाथम् ॥१॥

gaṅgā taraṅga ramaṇīya jaṭā kalāpaṃ gaurī nirantara vibhūṣita vāma bhāgam .
nārāyaṇa priyamanaṅga madāpahāraṃ vārāṇasī purapatiṃ bhaja viśvanātham ..1..

கங்கா தரங்க  ரமணீய ஜடா கலாபம் கௌரீ னிரம்தர விபூஷித வாம பாகம்
நாராயண ப்ரியமனம்க மதாபஹாரம் வாராணஸீ புரபதிம் பஜ விஶ்வனாதம் || 1 ||

ஹே,  மனமே  விஸ்வநாதனைப் பாடு.  வாரணாசியில்  கங்கையின் குளிர்ந்த  நீரில் நனைந்த   விரித்த செஞ்சடை யாட நிற்கும் பிரபஞ்ச நாயகன், கௌரியை தனது இடது பாகத்தில் அர்த்தநாரியாக கொண்டவன்,  நாராயணனின் ப்ரேமைக்கு பாத்ரமானவன்  மன்மதனின் கர்வத்தை அழித்தவனான  விஸ்வநாதனை நினை. 

2.  वाचामगोचरमनेक गुण स्वरूपं वागीश विष्णु सुर सेवित पाद पीठम् ।
वामेन विग्रहवरेण कलत्रवन्तं वाराणसी पुरपतिं भज विश्वनाथम् ॥२॥

vācāmagocaramaneka guṇa svarūpaṃ vāgīśa viṣṇu sura sevita pāda pīṭham .
vāmena vigrahavareṇa kalatravantaṃ vārāṇasī purapatiṃ bhaja viśvanātham ..2..

வாசாமகோசரமனேக குண ஸ்வரூபம்  வாகீஶ விஷ்ணு ஸுர ஸேவித பாத பத்மம்
வாமேண விக்ரஹ வரேன கலத்ரவம்தம் வாராணஸீ புரபதிம் பஜ விஶ்வனாதம் || 2 ||

வாரணாசி க்ஷேத்ர நாயகன்  விஸ்வநாதன்  நற்குணங்களின் இருப்பிடம். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவன்.  ப்ரம்மா  விஷ்ணு இந்திராதி தேவர்கள் பூஜிக்கும் திருவடிகளைக் கொண்டவன். இடது பாகத்தில்  உமையை அர்த்த நாரியாக அழகிய கோலம் கொண்டவன்,  விஸ்வநாதனை வணங்கு மனமே.

3.  भूताधिपं भुजग भूषण भूषिताङ्गं व्याघ्राजिनाम्बरधरं जटिलं त्रिनेत्रम् ।
पाशाङ्कुशाभय वरप्रद शूलपाणिं वाराणसी पुरपतिं भज विश्वनाथम् ॥३॥

bhūtādhipaṃ bhujaga bhūṣaṇa bhūṣitāṅgaṃ vyāghrājināmbaradharaṃ jaṭilaṃ trinetram .
pāśāṅkuśābhaya varaprada śūlapāṇiṃ vārāṇasī purapatiṃ bhaja viśvanātham ..3..

பூதாதிபம் புஜக பூஷண பூஷிதாம்கம் வ்யாக்ராம்ஜினாம் பரதரம், ஜடிலம், த்ரினேத்ரம்
பாஶாம்குஶாபய வரப்ரத ஶூலபாணிம் வாராணஸீ புரபதிம் பஜ விஶ்வனாதம் || 3 ||

வாரணாசி உறை  விஸ்வநாதன்  லோகநாதன்,  நாகங்களை ஆபரணமாக கொண்டவன்.  புலித்தோலை அரைக் கசைத்தவன்  ருத்ராக்ஷ ஜடா முடி தாரி,  த்ரிநேத்ரன்,  சூலாயுதன் , பாசாங்குசன்,  கேட்கும் வரம் தருபவன்.  உன்னை நமஸ்கரிக்கிறேன் விஸ்வநாதா. 

4. शीतांशु शोभित किरीट विराजमानं भालेक्षणानल विशोषित पञ्चबाणम् ।
नागाधिपा रचित भासुर कर्णपुरं वाराणसी पुरपतिं भज विश्वनाथम् ॥४॥

śītāṃśu śobhita kirīṭa virājamānaṃ bhālekṣaṇānala viśoṣita pañcabāṇam .
nāgādhipā racita bhāsura karṇapuraṃ  vārāṇasī purapatiṃ bhaja viśvanātham ..4..

4. ஸீதாம்ஶு ஶோபித கிரீட விராஜமானம் பாலேக்ஷணாதல விஶோஷித பம்சபாணம்
னாகாதிபா ரசித பாஸுர கர்ண பூரம் வாராணஸீ புரபதிம் பஜ விஶ்வனாதம் || 4 ||

வாரணாசி நாயகன்  விஸ்வநாதன் , ஸர்வ லோக ரக்ஷகன்,  பிறைச் சந்திரனை சிரத்தில் அழகாக அணிந்த சந்திரசேகரன், நெற்றிக் கண்ணால் மன்மதனை தீக்கிரையாக்கியவன்.  சர்ப்பங்களை காதணியாக , குண்டலமாகக்  கொண்டவன்.  விஸ்வநாதா. உன்னை என் மனம் நாடுகிறது. நமஸ்கரிக்கிறேன். 

5.  पञ्चाननं दुरित मत्त मतङ्गजानां  नागान्तकं दनुज पुङ्गव पन्नगानाम् ।
दावानलं मरण शोक जराटवीनां वाराणसी पुरपतिं भज विश्वनाथम् ॥५॥

pañcānanaṃ durita matta mataṅgajānāṃ nāgāntakaṃ danuja puṅgava pannagānām .
dāvānalaṃ maraṇa śoka jarāṭavīnāṃ vārāṇasī purapatiṃ bhaja viśvanātham ..5

5. பஞ்சானனம் துரித மத்த மதம்கஜானாம் னாகாம்தகம் தனுஜ பும்கவ பன்னாகானாம்
தாவானலம் மரண ஶோக ஜராடவீனாம் வாராணஸீ புரபதிம் பஜ விஶ்வனாதம் || 5 ||

நமக்குள்ளே  உருவாகும்  புலன் உணர்ச்சிகள் எனும்  பாப ஜந்துக்கள், பெரிய  பாப  யானைகளையெல்லாம் அடக்கி ஆளும் சிம்ம ராஜா, வாரணாசி வேந்தன்  விஸ்வநாதன்,  நம்முள்  தோன்றும்  தீய சக்திகள் எனும்  ராக்ஷஸ சர்ப்பங்களை வேட்டையாடிக்  கொல்லும்  கருடன் விஸ்வநாதன்.  முதுமை,  துக்கம்,  பயம்,   மரணமெனும்  அடர்ந்த வனத்தை  கொளுத்திப்  பொசுக்கும் காட்டுத் தீ  தான் விஸ்வநாதன்.  காசிவிஸ்வநாதா  உனக்கு அநேக கோடி நமஸ்காரம். 

6. तेजोमयं सगुण निर्गुणमद्वितीयम्_आनन्द कन्दमपराजित मप्रमेयम्
नागात्मकं सकल निष्कलमात्म रूपं । वाराणसी पुरपतिं भज विश्वनाथम् ॥६॥

tejomayaṃ saguṇa nirguṇamadvitīyam_ ānanda kandamaparājita maprameyam
nāgātmakaṃ sakala niṣkalamātma rūpaṃ vārāṇasī purapatiṃ bhaja viśvanātham ..6..

6. தேஜோமயம் ஸகுண னிர்குணமத்விதீயம் ஆனம்த கம்தமபராஜித மப்ரமேயம்
னாகாத்மகம் ஸகல னிஷ்களமாத்ம ரூபம் வாராணஸீ புரபதிம் பஜ விஶ்வனாதம் || 6 ||

ஆஹா,   என்ன ஒரு ஆனந்தமான ஒளிமயம்,   ஞானப்பிரகாசம், சகல நற்குணங்களின் களஞ்சியம்,  எல்லாம் ஒன்றேயான அத்வைத சாகரம், கருணை வெள்ளம்,  எல்லையற்ற  பேரன்பு கொண்ட  பாசம், ஆத்ம ஸ்வரூபம்,  சிதானந்த  பேரொளி, உன்னை வணங்குகிறேன்  காசி விஸ்வநாத ப்ரபு .

7आशां विहाय परिहृत्य परस्य निन्दां पापे रतिं च सुनिवार्य मनः समाधौ ।
आदाय हृत्कमल मध्य गतं परेशं वाराणसी पुरपतिं भज विश्वनाथम् ॥8॥

āśāṃ vihāya parihṛtya parasya nindāṃ pāpe ratiṃ ca sunivārya manaḥ samādhau .
ādāya hṛtkamala madhya gataṃ pareśaṃ vārāṇasī purapatiṃ bhaja viśvanātham .7

7.ஆஶாம் விஹாய பரிஹ்றுத்ய பரஶ்ய னிந்தாம் பாபே ரதிம் ச ஸுனிவார்ய மனஸ்ஸமாதௌ
ஆதாய ஹ்றுத்-கமல மத்ய கதம் பரேஶம் வாராணஸீ புரபதிம் பஜ விஶ்வனாதம் || 7 ||

எவ்வுயிரிடத்தும்  குறை காணாது பேரருள் தரும் பரமா, ஆசா பாசங்களை வேரறுக்கும் சக்தி ஸ்வரூபா, தீமையால், 
தீங்கினால் விளையும் சுகத்தை, இன்பத்தை  விரும்பச் செய்யாதவனே, மனதை தியானத்தில் முழுமையாக  ஈடுபடுத்த அருள்புரியும்  ஆத்ம நாதா, அழகிய  செந்தாமரை  ஹ்ருதயம் படைத்தவனே, உன்னை மனதார நமஸ்கரிக்கிறேன்.

8. रागादिदोषरहितं स्वजनानुरागं वैराग्यशान्तिनिलयं गिरिजासहायम् ।
माधुर्यधैर्यसुभगं गरलाभिरामं वाराणसीपुरपतिं भज विश्वनाथम् ॥७॥

Raaga-[A]adi-Dossa-Rahitam Svajana-Anuraagam Vairaagya-Shaanti-Nilayam Girijaa-Sahaayam |
Maadhurya-Dhairya-Subhagam Garala-Abhiraamam Vaaraannasii-Pura-Patim Bhaja Vishvanaatham |8

ராகாதிதோஷரஹிதம் ஸ்வஜநாநுராகவைராக்யசாந்திநிலயம் கிரிஜாஸஹாயம் |
மாதுர்யதைர்யஸுபகம் கரளாபிராமம் வாராணஸீபுரபதிம் பஜ விஸ்வநாதம் ||௮||

உலகில் மாந்தரை அலைக்கழிக்கும்  ராக த்வேஷங்களுக்கு அப்பாற்பட்ட  பேரானந்தமே , பக்த வத்சலா,  வைராக்யத்தின் மூல காரணமே, சக்தியே துணையான பரமேஸ்வரா,  சாந்தஸ்வரூபி, கடுமையான  ஹாலஹால  நஞ்சை நெஞ்சில் நிறுத்தி நிலையாக  வைத்துக் கொண்டிருக்கும் நீலகண்டா , காசி விஸ்வநாதா, உனக்கு அநேக கோடி ஸாஷ்டாங்க  நமஸ் காரங்கள். 

9  वाराणसी पुरपतेः स्तवनं शिवस्य व्याख्यातमष्टकमिदं पठते मनुष्यः
विद्यां श्रियं विपुल सौख्यमनन्त कीर्तिं सम्प्राप्य देहविलये लभते च मोक्षम् ॥९॥

vārāṇasī purapateḥ stavanaṃ śivasya vyākhyātamaṣṭakamidaṃ paṭhate manuṣyaḥ
vidyāṃ śriyaṃ vipula saukhyamananta kīrtiṃ samprāpya dehavilaye labhate ca mokṣam ..8

வாராணஸீ புர பதே ஸ்தவனம் ஶிவஸ்ய வ்யாக்யாதம் அஷ்டகமிதம் படதே மனுஷ்ய
வித்யாம் ஶ்ரியம் விபுல ஸௌக்யமனம்த கீர்திம் ஸம்ப்ராப்ய தேவ னிலயே லபதே ச மோக்ஷம் ||

வாரணாசியில் உலகோர்க்கு முக்திதரும்  ஈஸா, விஸ்வநாதா, உன்னைத்  துதிக்கிறேன். இந்த எட்டு  ஸ்லோகங்களால் உன்னை பஜிக்கும் பக்தர்களுக்கு  ஞானம், அறிவு, புத்தி தெளிவு, வளமை,  சதானந்தம், பேர், புகழ், சகலமும் கிடைக்கும் என்ற  பலஸ்ருதியோடு இந்த காசி விஸ்வநாதாஷ்டகம் நிறைவு பெறுகிறது. 

sivan jaykay

unread,
Apr 19, 2023, 8:47:06 PM4/19/23
to amrith...@googlegroups.com

சிவலிங்கம். -  நங்கநல்லூர்  J K  SIVAN 

பரமேஸ்வரனை  சிவாலயங்களில் நாம்  எப்படி  தரிசிக்கிறோம்?  கோளமுமில்லாமல், சதுரமுமில்லாமல், வழ வழவென்ற கருமையான கல்லாலான, முகமில்லாத  லிங்க வடிவில் தானே. ஏன்? 
 லிங்க புராணம் என்ன சொல்கிறது?
லிங்கம் என்பது ஒரு குறி, அடையாளம்.  நிறம், வாசனை, ருசி, சப்தம்  எதுவும் இல்லாத இயற்கையின் ஸாஸ்வதம். லிங்கம் ஸமஸ்க்ரித  வார்த்தை.
கோழி முதலா, முட்டை முதலா  என்ற வினாவிற்கு இன்று காலை வரை  விடையில்லை. ஆதி அந்தமில்ல  பழமனாதி  பரமேஸ்வரனுக்கு கோழி முட்டை வடிவ லிங்கம் அமைத்த  மஹான்கள், ரிஷிகளை எப்படி பாராட்டுவது?
ஆற்றில் நதியில் வெள்ளம் என்றால் மனதில் தோன்றுவது எங்கோ நிறைய மழை பெய்ததால் ஆறு நிரம்பியிருக்கிறது.
நிறைய புகை மூட்டம் இருந்தால்,  ஓஹோ எங்கோ  தீப்பற்றி இருந்திருக்கிறது என்று உணர்கிறோம்.
லிங்கத்தை பார்க்கும்போது?  ஓஹோ எண்ணற்ற  பல  உருவங்களின் கலவையோ இது?  லிங்கத்தில் ஒரு புரிபடாத அதீத சக்தி இருக்கிறது. பார்க்கும்போதே மனதை ஆட்டி அசைகிறது. இல்லையென்றால் பல யுகங்கங்களாக  ரிஷிகள்  மஹான்கள் சிவனை லிங்கமாக   ஏற்று,  தரிசித்து, வணங்கி இருப்பார்களா? சிவாலயங்களில்  மூலவராக இருப்பாரா?
தனக்கென்று எதுவுமில்லாத மற்றதை ப்ரதிபலிக்கும் ஸ்படிக லிங்கத்தை மனதார வணங்குகிறோம். லிங்கம் சைதன்ய ஸ்வரூபம். பார்க்கும்போதே  கண்களில் ஆனந்த கண்ணீர். மனம் உருகி கண்ணீர், பேசுகிறோம், பாடுகிறோம், எண்ணுகிறோம்.  இதயத்தை தொடுகிறது சிவலிங்கம். அளவிடமுடியாத சக்தி புரிகிறது.  பஞ்ச பூதங்களின் சேர்க்கை.
உயிர்வாழ இன்றியமையாத ஒளி.  ஜோதிர் லிங்கங்கள்  12  இந்தியாவில் துவாதச லிங்கங்கங்களாக  வழிபடப்படுகிறது.
பஞ்ச பூத லிங்க  ஆலயங்கள் காஞ்சி, காளஹஸ்தி, திருவானைக்காவல், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆலயங்களில் சிவலிங்கமாக வழிபடப்படுகிறதே.  நவகிரஹங்களின் உருவம் சிவன்.  எல்லா  நவகிரஹங்களும்,  நவகிரஹ ஆலயங்களும் சிவன் கோவில்கள் தானே.  உலகத்தில் பல  இடங்களில் சிவலிங்கங்கள் காணப்படுகிறது. 

சர்வேஸ்வரி  காமாக்ஷி  காஞ்சியில் மண்ணில் லிங்கம் அமைத்து வணங்கினாள். பரமாத்மா விஷ்ணு ராமனாக அவதரித்து ராமேஸ்வரத்தில் மண்ணால்  சிவலிங்கம் பிடித்து உபாஸித்து  பாபத்தை போக்கிக் கொண்டார். இன்னும் என்ன சொல்வதற்கு இருக்கிறது?  சொல்ல வார்த்தையில்லை திணறுகிறேன்.திருமூலர் சொல்லும் நாலு வரிகள் தான் ஞாபகம் வருகிறது.  சிவோஹம். அன்பு தான் சிவம், சிவமாக நாம் இருக்கிறோம்.
 
''மானிடராக்கை வடிவு சிவலிங்கம்  -   
மானிடராக்கை வடிவு சிதம்பரம்
மானிடராக்கை வடிவு சதாசிவம்
மானிடராக்கை வடிவு திருகூத்தே ''

மனிதனின் உடம்பு  ஒன்றைப்போல் மற்றொன்று இல்லை, எண்ணற்ற உருவம், வடிவம் கொண்ட, தனி ஒரு உருவமில்லாத சிவலிங்கம். அது எல்லையற்ற வெட்டவெளி. பரவெளி. அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமான ஒளி மயம். பஞ்ச பூதங்களால் ஆன உடம்பு தான் சிவலிங்க கோட்பாடு.  அதன் அசைவு தான் ஆனந்த நடனம். 

sivan jaykay

unread,
Apr 19, 2023, 8:47:06 PM4/19/23
to amrith...@googlegroups.com
ஸௌந்தர்ய லஹரி 53/103   -  நங்கநல்லூர்  J K  SIVAN 

53. विभक्तत्रैवर्ण्यं व्यतिकरितलीलाञ्जनतयाविभाति त्वन्नेत्रत्रितयमिदमीशानदयिते ।
पुनः स्रष्टुं देवान् द्रुहिणहरिरुद्रानुपरतान्  रजः सत्त्वं बिभ्रत्तम इति गुणानां त्रयमिव ॥ ५३॥

Vibhaktha-traivarnyam vyatikaritha-lila'njanathaya Vibhati tvan-netra-trithayam idam Isana-dayite;
Punah strashtum devan Druhina-Hari-Rudran uparatan Rajah sattvam vibhrat thama ithi gunanam trayam iva

விபக்த த்ரைவர்ண்யம் வ்யதிகரித லீலாஞ்ஜனதயா விபாதி த்வந்நேத்ர த்ரிதய மித மீஶானதயிதே
புன: ஸ்ரஷ்டும் தேவான் த்ருஹிண ஹரி ருத்ரானு ப்ரதான் ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ                                 
பரமேஸ்வர ப்ரியையான தேவி பராசக்தி,  அவரைப்போலவே முக்கண் படைத்தவளே, மூன்றும் மூ வர்ணங்கள் கொண்டவையா?  மையிட்டதும் அம்மூன்று கண்களின்  வர்ணங்கள்  முக்குணங்கள் போல அல்லவா தோன்றுகிறது.  அவை தான் சத்வ,  ரஜோ, தமோ குணங்களா?  இம்மூன்றும்  ப்ரம்மா  விஷ்ணு  ருத்ரர்களாக  மாறப்போகின்றதா? தேவியின் கண்கள் சிவந்து காணப்படுவது கோபத்தால் அல்ல.  ஜீவர்களின் மேல் உள்ள இரக்கத்தால், கருணையால். சிந்தூரம் என்பது குங்குமம்.  அம்பாளின் கண்கள் சிந்தூர வர்ணமானவை.  sindūrāruṇa-vigrahāṃ tri-nayanāṃ māṇikya mauli sphurat. முக்கண்களையும்  சூர்ய சந்திர அக்னி  நயனம் என்று சொல்வதும் உண்டே. அம்பாள் த்ரிகுணாத்மிகா.


sivan jaykay

unread,
Apr 19, 2023, 8:47:06 PM4/19/23
to amrith...@googlegroups.com
வராஹ புராணம். -    நங்கநல்லூர் J K  SIVAN 

ஸ்வேத வராஹ புராணத்தை சுருக்கமாக தந்தால்  என்ன என்று தோன்றி அதில் சில  முக்கியமான பகுதிகளை தேர்ந்தெடுக்கும்போது  திருப்பதி திருமலை விவரங்கள், ஸ்ரீனிவாசன் பத்மாவதி கல்யாண ஸ்வாரஸ்ய  விஷயங்கள்  இனித்தது. அதுவே இது.

ரிஷிகளுக்கு பிடித்த இடம்  காசி, கங்கை. தவம் செய்ய  புனித இடம் என்று பல யுகங்களாக  கருதப்பட்டு வருகிறது. 
ஒரு காலத்தில்  சில ரிஷிகள்  காஸ்யப ரிஷி தலைமையில்  கங்கைக்கரையில்  ஒரு ஆஸ்ரமத்தில்  ஒரு பெரிய  யாகம்  செய்ய  தீர்மானித்தார்கள். அப்போது   நாரதர் அங்கு வந்தார்.  ''ரிஷிகளே  யாரை  பிரதான தெய்வமாக திருப்திப்படுத்த இந்த யாகம்  நடக்கப்  போகிறது?  என்று கேட்டார். ரிஷிகளால் இதற்கு சரியாக  பதில் சொல்ல முடியவில்லை.  ரிஷிகளில் முக்கியமானவரான  ப்ருகு  மும்மூர்த்திகளைக் கண்டு ஆலோசித்து  அவர்களில் யாரைத்  த்ரிப்திப் படுத்த இந்த யாகம் செய்யலாம் என அறிந்து வருகிறேன் என்று விண்ணுலகம்  சென்றார். 

ப்ருகு  சத்யலோகம் சென்று ப்ரம்மாவைப் பார்த்தார். அங்கே  நாராயணனைப்  பிரார்த்தனைசெய்து கொண்டு நான்கு தலைகளினாலும் நான்கு வேதங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார் ப்ரம்மா.  சரஸ்வதி தேவி அவருக்கு  சேவை செய்து  கொண்டிருந்தாள். இருவருமே   ப்ருகுவை  லக்ஷியம் பண்ணவில்லை என்று ரிஷிக்கு கோபம்.  கோபத்தோடு விர்ரென்று நேராக கைலாசம் சென்றார்.  

கைலாசத்தில் பரமேஸ்வரன் பார்வதியிடம் எதையோ ஆர்வமாக பேசிக் கொண்டிருந்ததால் ரிஷியை வரவேற்க வில்லை. சிவனை சபித்து விட்டு  ரிஷி வைகுண்டம் சென்றார்.  

திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருந்த நாராயணனின் கால்களை லக்ஷ்மி தேவி பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள்.  தன்னை வா என்று கூட கூறாமல் விஷ்ணு அவமதித்தார் என்று  கோபமடைந்த ப்ருகு   பள்ளி கொண்டிருந்த   நாராயணனின் மார்பில் காலால் உதைத்தார். மார்பில்  மஹாலக்ஷ்மி உறைகிறாள் அல்லவா?
 மஹாவிஷ்ணு பிருகுவை அப்போது தான் கவனித்தார். 

 ''அடாடா ப்ருகு  ரிஷியா. வாருங்கள். என்னை உதைத்ததால்  உங்கள் கால் நோகுமே  என்று ரிஷியின் கால்களை பிடித்து விட்டு சமாதானம் செய்தார்  விஷ்ணு. பிருகுவின் கால்களில் உள்ள கண் தான் சகல தேவர்களையும் வெல்லும் சக்தியை ரிஷிக்கு கொடுத்திருந்தது. அந்தக்  கண்ணை மெதுவாக  மஹாவிஷ்ணு பிருகுவின் காலைப்  பிடித்து விடும்போது அகற்றி விட்டார்.  மஹா விஷ்ணுவின்  இனிய  குணத்தில், தன்மையில்,  மகிழ்ந்த  ப்ருகு  ரிஷி கங்கைக்கரைக்கு திரும்பி வந்து  மஹா விஷ்ணு ஒருவரையே யாகத்தில் பிரதான தெய்வமாக  வழிபட்டு  வேண்டிக்கொண்டு  திருப்தி படுத்தலாம் என்று அறிவித்தார். 
ஸ்வேத வராஹ கல்பம் துவங்கிய சமயம்  பிரளயத்தில்  பிரபஞ்சம் முழுதும்  ஜலம். மஹா விஷ்ணு ஒரு வெள்ளை நிற காட்டுப்  பன்றியாக உருவெடுத்து  கடலில் மூழ்கி  ஹிரண்யாக்ஷனை  வதம்  செய்து விட்டு அவன் ஒளித்து வைத்திருந்த பூமியை  மீட்டுக் கொண்டு  வந்தார்.  ப்ரஹ்மாதி தேவர்கள்   பூவராஹனைப்  போற்றி  மலர்களால்  அர்ச்சித்தார்கள்.  பூமியில் சில காலம் வெள்ளைப் பன்றியாக ஸ்வேத  வராஹனாக சில காலம்  விஷ்ணு இருந்தார்.  மேலே சொன்னபடி  வராஹ  கல்பம்அப்போது தான்  துவங்கியது. 

இதற்கிடையில், ப்ருகு  விஷ்ணுவின்  மார்பில் உதைத்தும்  மார்பில் இருந்த தன்னை உதாசீனப்படுத்தி, உதைத்தும் ரிஷியை உபசரித்த விஷ்ணுவிடமிருந்து  விலகி  மஹா லக்ஷ்மி பூமிக்குச்  சென்றுவிட்டாள்.  அவளைத் தேடிக்கொண்டு  மஹாவிஷ்ணு பூலோகத்தில் வேங்கடமலைக்கு வந்து  அங்கே ஒரு  புஷ்கரணி  அருகே இருந்த  புளியமரத்தடியில் புற்றில்  உறைந்தார். 
அவர் மேல்  அன்பும் பாசமும் கொண்ட  ப்ரம்மா மகேஸ்வரன் இருவரும் பசுவும் கன்றுமாக உருவெடுத்து புற்றின் மேல் பால் சொரிந்து சேவித்தனர்.  சூரியன்  இந்த சேதியை  மஹா லக்ஷ்மிக்கு தெரிவித்து ''அம்மா நீ  ஒரு  கோபியாக சென்று அந்த பசுவையும் கன்றையும்  சோழ ராஜாவிடம் ஒப்படைத்து விடு'' என்றான்.  அவ்வாறே சோழனை அடைந்த பசுவும் கன்றும்  வேங்கடமலையில் மேய்சல்களில் ஈடுபட்டு  அங்கே  புற்றில் விஷ்ணு இருப்பதை அறிந்த பசு தினமும்  தனது மடியில் சுரந்த பாலை முழுதும் அந்த புற்றின் மேல்  சொரிந்தது. சோழ ராணி   பசுக்களை மேய்ப்பவனிடம்   ''ஏன் இந்த பசு பாலே தருவதில்லை'' என்று கேட்க  அவன்  காரணம் அறிய  அதைப்  பின் தொடர்ந்தான். பசு வழக்கம்போல் புற்றின் மேல் பால் முழுதும் சொரிவதைப் பார்த்தான்.   கோபத்தால்   கையில் இருந்த கோடாலியால் பசுவின் தலையைத் தாக்கினான். பசுவைக் காப்பாற்ற  புற்றிலிருந்து விஷ்ணு தோன்றி  அவன் அடித்ததை தனது தலையில் வாங்கிக்கொண்டு ரத்தம் கொட்டுவதைக்  கண்ட மாடு மேய்ப்பவன் அங்கேயே  அதிர்ச்சியில் கீழே விழுந்து மாண்டான்.  மேய்ப்பவன் இறந்தாலும்  பசு வழக்கம் போல் சோழனின்  மாட்டுத் தொழுவம் திரும்பியது. அதன் உடலில் ரத்தக்  கறையைக்   கண்ட சோழன்  பசுவோடு  வேங்கட மலைக்கு சென்றான்.  மாடு மேய்ப்பவன் இறந்து கிடப்பதையும்  அருகே கோடாலி ரத்தக்கரையோடு  கிடப்பதையும் பார்த்தபோது புற்றிலிருந்து  விஷ்ணு எழுந்து ராஜாவின் வேலையாள் செய்த தவறுக்காக  ராஜாவை வனை தண்டிக்க அவன் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று மன்னிக்க வேண்டியபோது , ''சரி  ஆகாசராஜாவால் உன் தலையில் கிரீடம் ஏறும், பத்மாவதியை மணம் புரியும் நேரத்தில் உன் சாபம் விலகும்'' என்று வரமளித்தார். சோழன் ஸ்ரீனிவாசனாக பிறந்து  வராஹ க்ஷேத்ரத்தில் வசித்து வராஹனை பூஜித்தான்.  இன்றும் ஸ்ரீனிவாசனை திருமலையில் தரிசிக்க வருபவர்கள் முதலில் அருகே உள்ள புஷ்கரணியில் ஸ்னானம் செய்து வராஹஸ்வாமியை முதலில் தரிசித்து வணங்கிய பிறகே வேங்கடாத்ரியில் ஸ்ரீனிவாசனை தரிசிக்கவேண்டும் என்பது முறையாயிற்று.   

த்வாபர யுகத்தில் வ்ரஜபூமியில் தேவகி மகனாக பிறந்த ஸ்ரீ கிருஷ்ணன் யசோதையிடம் வளர்ந்தான்.  ''உனக்கும் ருக்மணிக்
கும்  நிகழ்ந்த கல்யாணத்தை நான் பார்க்கவில்லையே. உன் தாய் நான் உனக்கு கல்யாணம் பண்ணி கண்ணால் கண்டு மகிழ இயலாதவளாகிவிட்டேனே'' என வருந்தி  கிருஷ்ணனிடம்  அழுதாள். ''வருந்தாதே அம்மா, அடுத்த பிறவியில் நீ வகுளாதேவியாகவும் , நான் உன் வளர்ப்பு  மகன் ஸ்ரீனிவாசனாகவும்  தோன்றி  எனக்கு நீயே திருமணம் செய்விப்பாய்'' என கிருஷ்ணன் வாக்களித்தார்.  

ஆகவே  வராஹஸ்வாமி அருளால் வகுளா தேவி  வேங்கடமலையில் ஸ்ரீனிவாசனை மகனாக வளர்த்தாள். சில காலத்தில் தொண்டை மண்டலத்துக்கு ஆகாசராஜன் அரசனானான். புத்ரப்ராப்தி இல்லாத ஆகாசராஜன்  யாகம் செய்தான்.  யாகம் செய்யப்போகும் இடத்தை  உழுதான். அப்போது ஒரு தாமரை தோன்றியது. அருகே சென்று பார்த்தபோது தாமரையில் ஒரு  அழகிய பெண் குழந்தை.  ஆசையோடு எடுத்துச் சென்று  தனது ராணியிடம் கொடுத்தான்.  அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ''ஆகாச ராஜா, இந்த பெண்ணை உன் மகளாக வளர்ப்பாய். பெரும் செல்வம் உன்னை வந்தடையும்''  தாமரையில் தோன்றிய அந்தப்  பெண் ''பத்மாவதி'' யாக வளர்ந்தாள் .  யுவதி பத்மாவதி நந்தவனத்தில் விளையாடும்போது ஒருநாள்  நாரதர் தோன்றி  அவளை வாழ்த்தி ''உன் ஜாதகப்படி உனக்கு மகாவிஷ்ணுவே கணவனாக வருவார்'' என்கிறார். 

பத்மாவதி அரண்மனை நந்தவனத்தில் ஒருநாள்  காட்டு யானை ஒன்று நுழைய ,  யானையைக்  கண்டு பத்மாவதியும் தோழியரும் பயந்து ஓட ,யானையைத் துரத்தி குதிரை மேல் வந்த ஸ்ரீனிவாசன் அவர்களை யானையிடமிருந்து காப்பாற்றி அவள் மனம் கவர்ந்தான்.  ஸ்ரீனிவாசனும் தன்  மனதை  பத்மாவதியிடம் இழந்தான்.    வகுளாதேவிக்கு தனது மகன் ஸ்ரீனிவாசன் மனம் இப்போது காதல் வயப்பட்டுள்ளான். அன்ன ஆகாரம் ஏன் பிடிக்கவில்லை  என்று ஊகித்து  அவனிட மிருந்து விஷயம் அறிகிறாள். 

காட்டில்  முன்னொரு காலத்தில்  மஹாலக்ஷ்மி  வேதவதியாக ஒரு ரிஷி ஆஸ்ரமத்தில் இருந்தாள். அவளைக் கண்ட லங்கேசன் ராவணன் அவளை கவர முயலும்போது  அவளால் தான் அவனுக்கு மரணம் நிகழும் என்று சபிக்கிறாள் . 
பின்னர்  ராவணன்  மாய  சீதையை  பஞ்சவடியில் கடத்திச் செல்கிறான். வேதவதி தான் சீதையாக பிறந்தவள்.  சீதை தான் பத்மாவதியாக பிறந்து ஆகாசராஜன் மகளாக வளர்ந்தவள்.  

ஆகாச ராஜனும் அவன் மனைவி ராணியும்  பத்மாவதியின் விருப்பத்தை அறிகிறார்கள்.  வகுளாதேவி ஆகாசராஜனிடம் பெண் கேட்க போகிறாள். இதற்கிடையில் ஸ்ரீனிவாசன் ஒரு குறி சொல்லும் பெண்ணாக  தானே  பத்மாவதி அரண்மனைக் குள் செல்கிறான். தோழிகள் குறி சொல்பவளை பத்மாவதியிடம் அழைத்துப் போக,  குறி சொல்பவள்  பத்மாவதியை மனக்கப்போகும் ஸ்ரீனிவாசன் மஹா விஷ்ணு அவதாரம், அவளை பெண்கேற்க  ஸ்ரீனிவாசனின் தாய்  வகுளா தேவி எந்த நேரமும் அரண்மனைக்கு வருவாள் உடனே  திருமணம் செயது வையுங்கள் என்று சொல்கிறாள். சிறிது நேரத்தில் இதை அறியாத  வகுளாதேவி ஆகாச ராஜன் அரண்மனைக்கு வருகிறாள். ஸ்ரீனிவாசனுக்கு பெண் கேட்கிறாள். ஆகாச ராஜன்  ப்ருஹஸ்பதி அறிவுறை கேட்கிறான்.    சுக மகாமுனி தூது செல்கிறார். தேவாதி தேவர்கள் வாழ்த்த  சுபமுகூர்த்ததில்
 குபேரன் நிதி உதவி செய்ய ஸ்ரீனிவாசன் பத்மாவதி கல்யாணம் நிறைவேறுகிறது.  குபேரன் கொடுத்த கடன் பணம் இன்னும் திருப்பி தரவில்லை. வட்டி செலுத்தவே வருமானம் போதவில்லை... பக்தர்கள் கோடி கோடியாக காணிக்கை செலுத்துகிறார்கள். ஸ்ரீனிவாசன் உதவி செய்த அவர்களுக்கு கருணையை வாரி வழங்கும் கலியுக வரதனாக ஏழு மலை உச்சியில்நிற்கிறான்.

ஒரு முறை ஆதிசேஷனுக்கும்  வாயு தேவனுக்கும்  பலபரிக்ஷை நடந்து ஆதிசேஷனை  பிரம்மாதி தேவர்கள்  வாயுவுக்கு விட்டுக்கொடு என்று சொல்லி, வாயு வெற்றிபெற்று, ஆனந்த மலை காற்றில் தூக்கிச்செல்லப்பட்டு ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் விழுகிறது. ஆதிசேஷன்  தலை பாகம்  ஆனந்தகிரியை வெங்கடாத்ரியுடன் இணைந்த  வெங்கடாத்திரி மலையாகி சேஷாத்ரி ஆகிறான். ஆதிசேஷனின் நடுப்பாகம் அஹோபிலமாகி, வால் பாகம்  ஸ்ரீசைலமாகிறது. இது முடிந்து பல யுகங்கள் கடந்துவிட்டது.  ஆதி வராஹன்  சதுர்புஜங்களோடு, வெண்மையான முகத்தோடு  பூதேவியுடன் திருமலையில் வெங்கடேசன் ஆலயம் செல்லும் பக்தர்களுக்கு வழி காட்டியாக  முதலில் தரிசனம் பெறுபவராக  காக்கும் ரக்ஷகனாக 
 நிற்கிறார். 

sivan jaykay

unread,
Apr 20, 2023, 8:10:27 PM4/20/23
to amrith...@googlegroups.com
 பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

 ''என்ன சொல்றேள்.   பெரியவா உங்களோடு பேசினாரா, பேசுவாரா?''
'இல்லே  கோபி, எங்கிட்ட மட்டும் இல்ல, உங்ககிட்டேயும், ஏன், எல்லார் கிட்டேயும் பேசுவார்?
''எப்படி சொல்றேள்?''
''பேசறதுன்னா  வாயாலே  கத்தி சத்தம் போடறதில்லே சுவாமி''
''பின்னே?
''அவர் கொள்ளை பேச்சு பேசி இருக்கார். நூறு வருஷம்... ஒண்ணு  இல்லே ரெண்டு இல்லே.  எவ்வளவு பேசியிருக்கார் என்கிறது  முக்கியம் இல்லே,  எப்படி, என்ன,  பேசி இருக்கார்னு  அச்சிலே பிரிண்ட் போட்டுருக்கே.   யு ட்யூப்லெ  அவர் குரலிலேயே நிறைய இருக்கே. அதை படிச்சோ, கேட்டோ கண்ணை மூடி நினைச்சா உங்க காதிலே, மனதிலே, அவர் பேசறது உங்க கிட்டேயே பேசற மாதிரி இருக்காதா?  அதை தான் நான் சொல்லிண்டே வரேன். புரியறதா?  இதோ கேளுங்கோ அவர் பேசறதை''

'' நாம் எதை நினைக்கிறோமோ அது மயமாக ஆகி விடுகிறோம். சுத்த ஸ்படிகமாக விளங்குகிற பரமேச்வரனை நினைத்தால் நம் மனசு சுத்தஸ்படிகமாக ஆகும். அவர் தான் எப்போதும் துக்கமென்பதே இல்லாதவராக ஆனந்த ஸ்வரூபியாக இருக்கிறார். ஆகவே விபூதி ருத்ராக்ஷ தாரணம், பஞ்சாக்ஷர ஜபம், மனதுக்குள்ளே சுத்த  ஸ்படிக சங்காச ரூபியாகிய பரமேச்வரனுடைய தியானம், வில்வார்ச்சனை இவற்றை எப்போதும் நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

''ஸ்ரீஅப்பய்ய தீக்ஷிதர் என்று ஒரு மஹான்  இருந்தார். இன்றைக்கு நாம் விபூதி ருத்ராக்ஷம் தரித்திருப்பது அவர்களுடைய ப்ரயத்தனத்தின் ப்ரயோஜனம். அவர்கள் 104 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார். விஷ்ணு த்வேஷத்தினால் அப்படிச் செய்யவில்லை. விஷ்ணு பக்தி என்று பேர் வைத்துக்கொண்டு சிவ பக்தியை நாசம் பண்ணி சிவ  த்வேஷத்தை வளர்ப்பதை அவர் வெறுத்தார். ‘சிவ  த்வேஷத்தை சகிக்க மாட்டேன்’ என்று சொல்லிச் சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்''

‘வேதத்தில் ஸ்வாமியைப் பற்றிச் சொல்லும்போது’ ஒண்ணு  புரியும். அதாவது,  எதற்கு மேல ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. எதற்குக் கீழே ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. மிகப் பெரியனவற்றுக் கெல்லாம் பெரியது ஸ்வாமி மிகச்  சிறிய அணுவுக்கெல்லாம் அணுவானது ஸ்வாமி என்று வருகிறது.    ஸ்வாமி என்பவர் மிகச் சிறியனவற்றுக் கெல்லாம் சிறியதாய் இருப்பவர் என்றால் என்ன அர்த்தம்? அவர் தான்  எல்லாமாய் இருக்கிறார். அதனால் அவரைத் தவிர வேறு ஒன்றுமே  இல்லாத நிலை வந்துவிடுகிறது. சின்னதும் அவர்தான், பெரியதும் அவர்  தான், சின்னதைக் காட்டிலும் சின்னதாக, பெரியதைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறவர் பட்ட  கட்டையாக,  ஸ்தாணுவாக,   இருக்கிறார். அப்படி உட்கார்ந்திருப்பவர் காரியமே இல்லாமல் சாந்தமாக உட்கார்ந்திருக்கும்போது,  ஆனந்தமாக உட்கார்ந்திருக்கும்போது அவர் பேர்  தக்ஷிணாமூர்த்தி''.

''சிவன் கோயிலுக்குப் போனால் மஹாலிங்கம் கிழக்கே பார்த்துக் கொண்டிருப்பார். அவருக்கு ஈசான்ய (வடகிழக்கு) திக்கில் நடராஜா தெற்கே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு காலை வேறு தூக்கிக்கொண்டு நிற்பார். அவரை எப்பொழுதும் நாம்   ஹ்ருதயத்தில்  தியானம் பண்ணிப்  பண்ணி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை நினைத்து, அந்த ஆனந்த தாண்டவ மூர்த்தியின் ஸ்வரூபம் மனத்தில் ஸ்புரிக்கும்படி ஆகிவிட்டால் அதைத் தான்  ''சித்தி'' ஆகிறது என்று சொல்வார்கள். 

''ஆனந்தத்திலே இரண்டு வகை இருக்கு. பொங்குகிற ஆனந்தம் ஒன்று, அடங்கி அனுபவிக்கின்ற நிலை இன்னொண்ணு . பொங்குகிற ஆனந்த தாண்டவ மூர்த்தியை  நடராஜா  என்கிறோம்.  அவன்  சடையைப் பார்த்தாலே இது தெரியும். இப்படி இரண்டு பக்கமும் ‘கிர்ர்’ என்று அவன்  சுற்றுகிற வேகத்தில் சடை தூக்கிக் கொண்டு நிற்கிறது. ‘விரித்த செஞ்சடையான்’ ஆகி  விடுகிறான். அப்போது அவன் கையில் இருக்கும் உடுக்கையிலிருந்து ‘அ இ உண், ருலுக்’ என்பதான பதினாறு ஸூ த்ரங்கள், சப்தங்கள், வருகிறது. ஆனந்த தாண்டவ மூர்த்தியின் கையிலிருந்து வரும்படியான அந்தப் பதினாலு ஸூ த்
ரங்களுந் தாம் அதிலிருந்து விரிந்த மஹா பாஷ்ய புத்தகத்தில் அடங்கி இருக்கின்றன. கூத்தாடும்போது பொங்கி வந்த சப்தங்கள் புத்தகத்தில் அடங்கி இருக்கின்றன.
ஆனந்தக் கூத்தின் சப்தங்கள் அடங்கியிருக்கும் படியான புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு சாந்தமாக அமைந் திருக்கும் படியான ஆனந்தத்தோடு உட்கார்ந்திருக்கும் படியான மூர்த்தி தான்  தக்ஷிணாமூர்த்தி. இவரும் தெற்குப் பக்கம் பார்த்துக் கொண்டு தான் ஈச்வரனுடைய தென்னண்டைப் பிரகாரத்தில் உட்கார்ந்திருக்கிறார். நடராஜரின் கோலத்தில் சடைகள் நான்கு பக்கமும் விரிந்து கிடக்கின்றன. தக்ஷிணாமூர்த்தி   கோலத்தில் அவை அமைந்த ஜடா மண்டலமாகத் தொங்கிக்   கொண்டிருக்கின்றன. அங்கே சந்திரன் தெறித்துக்  கொண்டிருக்கிறது. இங்கே ஆனந்தமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஒருகால் பூமியிலிருக்க இன்னொரு காலைத் தூக்கிக் கொண்டு அங்கே கூத்தாடிக் கொண்டிருக்கிறார். ஒரு காலின் மேல் இன்னொரு காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அங்கே ஆனந்தமூர்த்தி, இங்கே ஞானமூர்த்தி.''

இன்னும்  அப்புறம் சொல்கிறேன். 

sivan jaykay

unread,
Apr 20, 2023, 8:10:56 PM4/20/23
to amrith...@googlegroups.com
வராஹ புராணம். -    நங்கநல்லூர் J K  SIVAN 

ஸ்வேத வராஹ புராணத்தை சுருக்கமாக தந்தால்  என்ன என்று தோன்றி அதில் சில  முக்கியமான பகுதிகளை தேர்ந்தெடுக்கும்போது  திருப்பதி திருமலை விவரங்கள், ஸ்ரீனிவாசன் பத்மாவதி கல்யாண ஸ்வாரஸ்ய  விஷயங்கள்  இனித்தது. அதுவே இது.

ரிஷிகளுக்கு பிடித்த இடம்  காசி, கங்கை. தவம் செய்ய  புனித இடம் என்று பல யுகங்களாக  கருதப்பட்டு வருகிறது. 
ஒரு காலத்தில்  சில ரிஷிகள்  காஸ்யப ரிஷி தலைமையில்  கங்கைக்கரையில்  ஒரு ஆஸ்ரமத்தில்  ஒரு பெரிய  யாகம்  செய்ய  தீர்மானித்தார்கள். அப்போது   நாரதர் அங்கு வந்தார்.  ''ரிஷிகளே  யாரை  பிரதான தெய்வமாக திருப்திப்படுத்த இந்த யாகம்  நடக்கப்  போகிறது?  என்று கேட்டார். ரிஷிகளால் இதற்கு சரியாக  பதில் சொல்ல முடியவில்லை.  ரிஷிகளில் முக்கியமானவரான  ப்ருகு  மும்மூர்த்திகளைக் கண்டு ஆலோசித்து  அவர்களில் யாரைத்  த்ரிப்திப் படுத்த இந்த யாகம் செய்யலாம் என அறிந்து வருகிறேன் என்று விண்ணுலகம்  சென்றார். 

sivan jaykay

unread,
Apr 21, 2023, 7:53:26 PM4/21/23
to amrith...@googlegroups.com
அறுபத்து மூவர்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
திருக்குறிப்புத் தொண்ட  நாயனார் 

தமிழ் வளர காரணமானவர்கள்  மூவேந்தர்களில்  சோழர்களும் பாண்டிய ராஜாக்களும் தான் அதிகம். சேர ராஜாக்கள்    பெயர் அந்த அளவுக்கு  எடுபட வில்லை.   மூவேந்தர்களில் கணக்கில் வராத பல்லவ ராஜாக்கள்  பாதி  பௌத்தமும் பாதி சிவ பக்தர்களாகவும்  இருந்ததுடன் அநேக  சிவாலயங்களை எழுப்பியுள்ளார்கள் .

காஞ்சிபுரம்  வடக்கே  நாளந்தா  பல்கலைக்கழகம் மாதிரி. அநேக பண்டிதர்களின் உறைவிடமாக இருந்தது.  வடமொழியும் தென்மொழியும் அங்கே ஏராளமாக  மணம்  வீசியது.  வடக்கே காசியில் எப்படி ஸமஸ்க்ரித பண்டிதர்கள்  கூடினார்களோ
அது மாதிரியே  காஞ்சியில்   எல்லோரும்  ஒன்று சேர்ந்து   கூடி  தமிழ் வளர்த்தார்கள்.     

அப்படிப்  புகழ் வாய்ந்த காஞ்சிபுரத்தில்ஒரு   துணி வெளுக்கும் வண்ணார்  வகுப்பை சேர்ந்த ஒருவர் வாழ்ந்தார். அவர் மனம்,  அவர் வெளுக்கும் துணியைப் போல் மாசற்ற  பக்தி எண்ணங்கள் கொண்டது.   மாசிலா மணியான சிவனையே நினைத்து போற்றியது. சிறந்த சிவபக்தர்.  மனம் வாக்கு காயம் மூன்றிலும் சிவனே அவரிடம் நிரம்பியிருந்தான்.
அந்த பக்தருக்கு  'தொண்டன்'   என்று பெயர்.  சிவ பக்தர்களை எளிதில் அறிந்து கொள்ளும் தன்மை, எல்லோரையும் பக்தியில் திளைக்க வைக்க அவர்கள் முகம் பார்த்தவுடனே தெரிந்து கொள்ளும்  குறிப்புணர்ச்சி தொண்டனிடம் இருந்ததால் நாளடைவில் அவர் பெயர்  'திருக்குறிப்பு தொண்டன்'  என்றே ஆகி விட்டது.  தன்னிடம்  ஆடைகளை வெளுக்க கொடுத்தவர்களுக்கு  அன்போடு குறித்த நேரத்தில் சொன்னபடியே குறிப்பு தொண்டர்  சுத்தமான ஆடைகளை வழங்கினார். அதுவும்  சிவபக்தர்கள், சிவனடியார்கள் துணிகளை  இலவசமாக வெளுத்துக்  கொடுப்பதை  வாழ்நாளின்  லக்ஷியமாகக் கொண்டவர். 

பரமேஸ்வரனுக்கு இந்த  திருகுறிப்புத் தொண்டன் மேல் ரொம்ப  வாத்சல்யம்.  இந்த பக்தனின் அரும் குணம், பெருமை எல்லாம் உலகறிய  வேண்டும் என்று எண்ணம் கொண்டு ஒரு  திருவிளையாடல் புரிய திட்டமிட்டான். 

ஓம் நமசிவாய என்று சிவன் நாமத்தைச்  சொல்லிக்  கொண்டே,பாடிக்கொண்டே  தினமும் திருக்குறிப்பு தொண்டன்  எல்லா  அழுக்கு ஆடைகளையும் எடுத்துக்கொண்டு ஆற்றுக்குச் சென்று  நன்றாக துவைத்து வெளுத்து வெயிலில் காயப்போட்டு மடித்து சாயங்காலம் எடுத்துக் கொண்டு வருவார்.  அவற்றை அழகாக மடித்து துணிகளின் சொந்தக்காரர்களிடம் கொடுப்பார். சிலர் அளிக்கும் அன்பளிப்பில்  அவர் குடும்பம் வாழ்ந்தது. சிவனடியார்களுக்கு அவர் சேவை  மனப்பூர்வமாக  இலவசம். 

ஒருநாள்  ஒரு  சிவனடியார் அந்த ஊருக்கு வந்தார்.  வயதானவர். உடல் முழுதும் வெள்ளை வெளேர் என்று திருநீறு  அணிந்தவர். அவர் உடையில்  மண்ணும் புழுதியும் படிந்து மழையில் நனைந்த  ஆடை.  அவர்  திருக்குறிப்பு தொண்டன் வீட்டருகே வரும்போது அவரைத்  தொண்டர் பார்த்து விட்டு,  ஓடோடிச்  சென்று அவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறார்.   களைத்திருந்த சிவனடியார் திருவடிகளில் விழுந்து வணங்கி தொண்டர் அவரை வீட்டுக்குள் அழைத்து அமர்த்தி,  உபசாரம் செய்கிறார்.   அவருக்கு  தன்னிடமிருந்த  சுத்தமான  துவைத்த ஆடைகளை அளித்து அவரது அழுக்கு ஆடைகளை வாங்கி  நான் இதை உடனே  துவைத்து வெளுத்து தருகிறேன் என்று பெறுகிறார்.  

அதற்குள் வானம் பொத்துக் கொண்டது.   ஜோ என்று மழை விடாமல் பெய்ய ஆரம்பித்தது. மழைக்காலம், வானம் முழுதும்  இருண்ட  சூல்  கொண்ட கருமேகங்கள். நிச்சயம் நீண்ட நேரம், தொடர்ந்து சில நாட்கள் மழை தொடரலாம்.

''ஐயா தொண்டரே, உம்மைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஆஹா என்ன அற்புதமான சேவை நீங்கள் செய்கிறீர்கள்?  அது இருக்கட்டும், என்னிடம் இருக்கும்  அந்த ஒரே ஆடையை உடனே நீங்கள் துவைத்து வெளுத்து தரவேண்டும். இரவு போர்த்திக் கொள்ள எனக்கு அவை வேண்டும்'' என்கிறார் முதிய சிவனடியார்.. 

தொண்டர் மறுக்கவில்லை. ''குருநாதா, உங்கள் ஆடையை உடனே துவைத்து எப்படியாவது உலர்த்தி தந்து விடுகிறேன்'' என்று எடுத்துக் கொண்டு ஓடுகிறார்.  

''ஐயா தொண்டரே,  நான் சொன்னது நினைவிருக்கட்டும். எனக்கு  கட்டாயம் சாயந்திரத்திற்குள் என் ஆடைகள் வேண்டும அது இல்லாவிட்டால்   என் உடம்பு ரொம்ப பாதிக்கப்படும். அந்த பாபம் உமக்கு வேண்டாம். தவறாமல் சாயந்திரத்துக்குள்  என் உடையை   எடுத்து வாரும்' என்றார் முதிய சிவனடியார்.

நல்லவேளை கொஞ்சநேரம் மழை  நடுவே  நின்று சுள்ளென்று வானில் சூரியன். வேகமாக  அடியார் ஆடைகளை அழுக்கு நீங்க துவைத்தார் தொண்டர்.  வெயிலில் காய வைக்க வழியில்லாமல்  மீண்டும்  திடீரென்று  கன மழை பிடித்துக் கொண்டது.  சாயந்திரம் நெருங்கிக்கொண்டிருந்தது. துணியோ காய வில்லை. 

 ''அடாடா  எவ்வளவு  பெரிய அபச்சாரம் பண்ணிவிட்டேன் நான். சிவனடியார் ஆடை இன்னும் ஈரமாக இருக்கிறதே. எப்படி  அவர் இதை உபயோகிக்க முடியும்.'' 

மழையோ நிற்கவில்லை. சாயந்திரம் வந்துவிட்டது. எங்கும் இருள் சூழ்ந்து கொண்டது.  அடியார்  உடல் வெட வெட  என  நடுங்க  கையால் உடலைப் போர்த்திக்கொண்டு தனது ஆடைக்காக காத்திருந்தார்.  

திருக்குறிப்புத்  தொண்டருக்கு தான் சொன்ன வாக்கு தப்பிவிட்டோம், சிவனடியாருக்கு தம்மால் உதவ முடியாது என்று தெரிந்ததும்  அவரால் உயிரோடு இருக்க பிடிக்கவில்லை. 

''சொன்ன  வார்த்தை தவறி உயிரோடிருப்பவன் மனிதனா? அதுவும் சிவனடியாரை அவரது ஆடையைத்  திரும்பத்  தராமல்  உடல் வருந்தச் செய்த மஹா பாவி  நான் இருந்தென்ன பயன்?''      

திருக் குறிப்புத்  தொண்டர் நிர்க்கதியாக சுற்றிலும் நோக்கினார். அவர் வழக்கமாக  துணி துவைக்கும் பெரிய  கற்பாறை கண்ணில் பட்டது. தனது தலையை  ணங்  ணங் என்று அதன் மேல் மோதிக் கொண்டார். ரத்தம் பீறிட்டது.  மண்டை பிளந்தது.  சில வினாடிகளில் உயிர் பிரியப்போகிறது.    அப்போது ஒரு  அதிசயம் நிகழ்ந்தது. 

திடீரென்று வளைக்கரங்கள் ரெண்டு அவர் தலையைப் பிடித்து இழுத்தன. தடுத்தன.  மழை நின்றது.  மலர் மழை அங்கே  பொழிந்தது. விரித்த செஞ்சடையான்  பரமேஸ்வரனின் ஜடாமுடி  முகம் தோன்றியது. கம கம வென்று மல்லிகை கொன்றை தும்பை. எருக்கு , வன்னி, வில்வம், மற்றும் அநேக சாதி மலர்கள்  விபூதி  நறுமணம் மூக்கைத் துளைத்தது.  பார்வதி சமேதராக  ரிஷபாரூடராக  சிவன் எதிரே தோன்றியபோது  ஒரு கணம்   அந்த முகம்  வீட்டில்  ஆடைக்காக காத்திருக்கும்  சிவனடியார் முகமாக மாறியதைக்  கண்ட திருக்குறிப்புநாயனார்  பரவசமானார்.   ஓம் நமச்சிவாய, என்ற ஒரே வார்த்தை திரும்ப திரும்ப  நாவில் எழுந்தது.  கைலாயத்துக்கு  பரமேஸ்வரனின் சிறப்பு விருந்தினராக  திருக்குறிப்பு தொண்டர்  ரிஷபாடூரரோடு ஏகினார். 

திருத்தொண்டத்தொகை  சொல்லும்  ஒரு வார்த்தையை விஸ்தாரமாக பெரிய புராணம் பாடுகிறது. திருக்குறிப்பு தொண்டர் அறுபத்து மூவரில் பத்தொன்பதாவது  நாயனார். 


sivan jaykay

unread,
Apr 21, 2023, 7:53:40 PM4/21/23
to amrith...@googlegroups.com

தன்னொப்பர் இல்லப்பன்  ஒப்பிலி எனும் உப்பிலி. -  நங்கநல்லூர்  J K  SIVAN  
 
இலையில் பரிமாறும்போது, சாம்பார், ரசம், கூட்டு, கறியில்  கொஞ்சம்  உப்பு  கம்மியாக இருந்தாலோ, கூட இருந்தாலோ  குப்புசாமி அய்யர் ருத்ரனாக மாறி விடுவார்.  தட்டு டம்பளர்  மாமி தலைக்கு மேல் பௌன்ஸர்  BOUNCER ஆக பறக்கும். வாயில் காளிதாசன் போல் வார்த்தைகள் வெள்ளமாக  வரும். ஆனால்  அவ்வளவும் கோபமான திட்டு, வசவு தான்.  ராஜம் மாமி நடுங்கிவிடுவாள். கதவிடுக்கு தான்  அடைக்கலம்.

'உப்பில்லா பண்டம் குப்பையிலே'  என்பது ஒரு காலத்து பழமொழி.  'உப்பு போட்டு தானே  சாப்பிடறே. சொரணை யில்லையா?'  என்பது பழைய வாக்கியம். இப்போது  எல்லா டாக்டர்களும் காசு வாங்கிக்கொண்டு உப்பைக் குறை என்கிறார்கள்  சர்க்கரை போல் உப்பும் கூடாது என்றால் என்ன வாழ்க்கை இது? சே.   அல்வாவில் கூட ஒரு கல் உப்பு இருந்தால் தான் தூக்கலாக இருக்கும்.
நம்மை விடுங்கள். ஸ்வாமிக்கே  கூட உப்பு கிடையாது ஒரு கோவிலில்.  ரெண்டாயிரம் வருஷ கோவில்.  கும்பகோணம் போகும்போதெல்லாம்  உப்பிலியப்பனை பார்க்காமல் வந்ததே இல்லை. அவர் உப்பிலியப்பனா, ஒப்பிலியப்பனா என்று தான் இப்போது என் யோசனை.
இந்த க்ஷேத்ரத்தின் முற்கால பெயர்  விஷ்ணுக்ரஹம்  (தமிழில் விண்ணகரம்)பெருமாள்  ஒப்பிலியப்பன், திருவிண் ணகரப்பன்  என்று  ஆஜானுபாகுவாக நிற்பவர்.  தாயார் பூமா தேவி   மேலே சொன்ன ராஜம் மாமி மாதிரி பொறுமை யானவள்.  உப்பிலியப்பன் கோவில் இருக்கும்   முற்கால திரு விண்ணகரம் தான் இப்போது  கும்பகோணத்தில் திருநாகேஸ்வரம். அழகிய ஒரு புஷ்கரணி.அதற்கு பெயர் அஹோராத்ர புஷ்கரணி . முக்கியமான  வைணவ 108 திவ்ய தேசங்களில் விண்ணகரமும்  ஒன்று. 
பூமாதேவிக்கு தானும்  மஹா விஷ்ணுவின்  மார்பில் மஹா லட்சுமி போல் வாசம் பண்ண ஆசை. பெருமாளை வேண்டி னாள்.
''பூலோகத்தில் மகரிஷி ஒருவருக்கு துளசி (திருத்துழாய் )என்கிற பெயரில் மகளாக  நீ ஒரு சமயத்தில் வளர்வாய். அப்போது என் மார்பில்  உனக்கும் இடம் உண்டு'' என்றார்  பெருமாள்.
 மார்கண்டேய மகரிஷி  ஒரு நாள் துளசி வனத்தில் மஹாலக்ஷ்மியின் அம்சங்களுடன் ஒரு  குழந்தை  இருப்பதை கண்டு வியந்து  அதற்கு துளசி என்று பெயர் சூட்டி  வளர்த்தார்.   கல்யாண வயசு  வந்தபோது ஒரு பிராமணர்  மார்கண்டேயரிடம் வந்து 'உமது மகள் துளசியை எனக்கு விவாஹம் பண்ணி வையுங்கள்'  என்று கேட்டார். 
''ஆஹா  ப்ராமணரே   ஆனால், என் பெண் ரொம்ப  சின்னக்  குட்டி. உணவில் சரியான பதத்தில் உப்பு சேர்த்து சமைக்கும் பக்குவம் கூட அறியாதவள்  ஆயிற்றே, அவளை எப்படி உங்களுக்கு மணமுடித்து தருவது?'' என்று பதில் சொன்னார் மார்க்கண்டேயர்.
''சுவாமி அதைப்பற்றி நீர் கவலைப்படாதேயும்.  நான் துளசி பண்ணும்  உப்பில்லாத உணவை அம்ருதமாக கருதி  சாப்பிடத்  தயார்'' என்று பதில் சொன்னார் பிராமணர்.
மார்கண்டேயருக்கு  வந்த பிராமணர்  பெருமாள் என்று  தவ மகிமையால் தெரிந்துவிட்டது.  துளசிக்கும் பெருமாளுக்கும் டும்  டும்  டும்  நடந்தது.  அன்றிலிருந்து  இன்றுவரை பெருமாளுக்கு   இந்த கோவிலில் உப்பில்லா சாப்பாடு நைவேத்தியம்.  இப்பேர்ப்பட்ட  'தன்னொப்பர் இல்லப்பன் ஒப்பிலியப்பனாகவும்  உப்பிலி அப்பனாகவும் மாறிவிட்டான்.  பூமாதேவி,  தான் விரும்பியபடி பெருமாளின் மார்பில் துளசிமாலையாக இடம் பெற்றாள். இப்போது புரிகிறதா ஏன் பெருமாள்  கோவிலுக்கு துளசி எடுத்துக்கொண்டு செல்கிறோம் என்று?
நம்மாழ்வார் 'ஒப்பில்லாமல் உயர்ந்திருப்பவர் என மங்களாசாசனம் செய்துள்ள ஆலயம். பெருமாள்  திருவிண்ணகரப்பன், பொன்னப்பன், மணியப்பன், என்னப்பன், முத்தப்பன் ஆகிய ஐந்து கோலங்களில் காட்சி தந்தருள்பவர். 
இங்கே  கோயிலில்  அனைத்து உணவுகளிலும் உப்பு  கிடையகாது. அருமையான    ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு பார்த்து நிற்கிறது.  தாயாருக்கு  பூமிதேவி, பூதேவி, பூமிநாச்சியார், தரணிதேவி, வசுந்தரை என்ற திருநாமங்கள். 
பூமாதேவி பெருமாளை  துளசியாக ஐப்பசி மாதத்தில் திருவோணத்தன்று மணந்து கொண்டதால் வருஷா வருஷம் ஐப்பசி திருவோணத்தில் திருக்கல்யாண உற்சவம் 12 நாள் கோலாகலமான உத்ஸவம் :   ஸ்ரீவைகானஸ ஆகம முறைப்படி  பூஜைகளும், விசேஷ உற்சவங்கள்  நடைபெறுகிறது.  ஒவ்வொருநாளும் ஆறுகால பூஜை : 
விஸ்வரூப பூஜை05:40 AM to 06:00 AM
திருவானந்தல் பூஜை07:00 AM to 07:30 AM
திருவாராதனம் பூஜை (மலர்)08:00 AM to 08:15 AM
உச்சிக்கால பூஜை12:00 PM to 12:15 PM
சாயரட்சை பூஜை07:30 PM to 08:00 PM
திருவாராதனம் (இரவு பூஜை)08:00 PM to 08:15 PM
அர்த்தஜாம பூஜை09:00 PM to 09:15 PM    புரட்டாசி, ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்ஸவம்.
பரகேசரி   ராஜராஜன், ராஜேந்திர சோழன் கால கோவில்.
பொன்னியின் செல்வன் கதையில் அழகாக இந்த கோவில் பற்றி கல்கி எழுதியிருக்கிறார். 


sivan jaykay

unread,
Apr 21, 2023, 7:54:07 PM4/21/23
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்     -  நங்கநல்லூர்  J K SIVAN 

மெட்ராஸ்லே  திடீர் மழை !

ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது.  சைவ வைஷ்ணவ பேதம் அறியாதவர் என்பது மட்டும் இல்லை . எம்பார்  மஹா பெரியவாளுடைய மஹா மஹா பக்தர்! தன்னுடைய ப்ரசங்கங்களில்  மஹா பெரியவாளைப் பற்றி குறிப்பிடாமல் இருந்ததே இல்லை. முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார மாதிரி!

எம்பார்  மெட்ராஸில் ஒரு சமயம் ப்ரவசனம் பண்ணிக் கொண்டிருந்த போது, பெரியவாளுடைய கருணையைப் பற்றி பேசுகையில், பல வருஷங்களாக ஒரு துளி கூட மழையே இல்லாத பல இடங்களில், பெரியவாளுடைய கருணையால், மழை பெய்து சுபிக்ஷமான, விஷயங்களைப்  பற்றி நிறைய  சொல்லிக் கொண்டிருந்தார். எல்லா இடத்திலும் விதண்டாவாதம் பண்ணும் ஆஸாமிகள் இருக்கத்தானே செய்வார்கள்? அந்த  பிரசங்கம் நடக்கும்போதும் சபையில்  ஒருவர் திடீரென்று எழுந்தார். 

" ஐயா,  நீங்க  சொல்ற அந்த மஹா ஸ்வாமிகள் மழையை பெய்ய வெச்சார்....ன்னு சொல்லறீங்களே! அது நெஜம்னாக்கா 
.இன்னிக்கு இங்கே மெட்ராஸ்ல மழையை வரவழைக்க உங்க பெரியவங்களால் முடியுமா?"

கேள்வியில் நையாண்டி, சவால், எகத்தாளம் எல்லாம் தொனித்தது. சில  விஷமிகள் கை  கொட்டி சிரித்தனர். 

பெரியவாளுடைய கருணை உள்ளத்தைப் பற்றிப் பேசும்  போதும், கேட்கும் போதும் மனஸ் நிரம்பி, கண்களில் நீர் தளும்பும் ஒரு சுகந்தமான பரவஸ நிலை, சாதாரணமான பக்தர்களுக்கே உண்டு என்றால், எம்பார் போன்ற மஹா மஹா பக்தர்கள் எப்பேர்பட்ட நிலையில் இருந்து அதை அனுபவித்திருப்பார்கள் ! உள்ளிருந்து பேச வைப்பதும் 'அவர்' தானே
கூட்டத்தில் எழுந்து நின்று கேட்ட அந்த ஆசாமிக்கு எம்பார்  பதிலளித்தார்: 
"ஏன் பெய்யாது? பெரியவாளோட அனுக்ரஹத்தால இன்னிக்கு நிச்சயமா மெட்ராஸ்ல மழை பெய்யும்!" எம்பார்   அழுத்தந்திருத்தமாக, அடித்துச் சொல்லிவிட்டார். அப்போது ஒரு உத்வேகத்தில் அப்படி சொல்லிவிட்டாரோ? ஒரு வேளை மழை பெய்ய லேன்னா?...அப்போ  மஹா பெரியவாளோட பேருக்கு அல்லவோ  ஒரு களங்கம் வந்துடும்! ஹே  நாராயணா! அனாவஸ்யமா இப்படி ஒரு விதண்டாவாதத்தை நான் கெளப்பி இருக்க வேண்டாமோ? எனக்கு ஏன் இப்படி புத்தி போச்சு?  உள்ளூர ஒரே கவலை எம்பாருக்கு!

ப்ரசங்கம் முடிந்தும் கூட அந்த விதண்டாவாதி அங்கேயே அமர்ந்திருந்தார். மழை வருகிறதா? என்று பார்க்க!

பக்தனை பரிதவிக்க விடுவானா பகவான்? 
அந்த நேரத்தில் காஞ்சிபுரத்தில் மஹா பெரியவா சுமார் ஒரு மணி  நேரம் ஜபத்தில் இருந்தார். மெதுவாக கண்களைத் திறந்து அருகில் இருந்தவர்களிடம் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டார்............
"ஏண்டா?இப்போ மெட்ராஸ்ல மழை பெய்யறதா?"
சுற்றி இருந்தவர்கள் மலங்க மலங்க முழிப்பதைத் தவிர ஒன்றும் பண்ணத் தெரியாமல் இருந்தனர்! 
ஆம். மெட்றாஸ் முழுக்க அப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது! 
மஹா பக்தரான எம்பாரின் கண்களிலும் நன்றிக் கண்ணீர்! ஆனந்தக் கண்ணீர் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது!
அந்த விதண்டாவாதி, ஒன்று .மழையில் தொப்பலாக நனைந்து கொண்டே வீடு போய் சேர்ந்திருப்பார். அல்லது, மழை நிற்க காத்திருந்து லேட்டாக வீட்டுக்கு போய் வீட்டுகார அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்! யார் கண்டது?
இது எத்தனை கணக்கற்ற மஹா பெரியவா  அதிசயங்களில் சாதாரணமான ஒன்று என்று வேண்டுமானால் காரண்டீயாக நான் சொல்வேன்.  

sivan jaykay

unread,
Apr 22, 2023, 8:12:53 PM4/22/23
to amrith...@googlegroups.com
திரு வீழி மிழலை.  - நங்கநல்லூர்  J K SIVAN 
                                                             
அப்பர்  எனும் திருநாவுக்கரசர் காலடி பட்ட இடம் எல்லாம் சிவபக்தி பயிர்  விளைந்தது. உழவாரப்பணி  அவர் சென்ற
இட மெல்லாம்  சிறப்பாக நடந்தது.  சமீபத்தில் பாலாற்றங்கரை அரசர் கோவில் என்னும் க்ஷேத்ரம் சென்றபோது  தரையில் கால் வைக்க முடியவில்லை. அத்தனை நெருஞ்சி முள்.  நமது உழவாரப்பணி நண்பர்கள்  இத்தகைய நிலையில் உள்ள பல கோவில்களிலும் பக்தர்கள் சௌகர்யமாக நடக்க ''வழி'' செய்யவேண்டும் என்று தோன்றியது.

அப்பர்  நிறைய சிவஸ்தலங்களை அடைந்து பதிகங்கள் பாடினார்.  திருப்புகலூர் சென்றார்.  அங்கே  ஞானசம்பந்
தரும்  வந்திருந்தார்.  என்ன அபூர்வமான சந்திப்பு.   தாத்தாவும்  பேரனும்  போல  ஞானப்பழங்கள். இருவரும் முருக நாயனார் திருமடத்தில்  சில நாட்கள்  சிவபக்தியில் திளைத்து  அளவளாவி மகிழ்ந்தார்கள்.  பிறகு சிறுத்தொண்டர், நீலநக்கர், முருக நாயனார் ஆகியோரிடம் விடைபெற்றுப் புறப்பட்டுத் திருக்கடவூர் வந்தனர். குங்குலியக்கலய நாயனார் திருமடத்தில் உபசரிக்கப் பெற்றுத் தங்கி, அம்ருத கடேசரை வணங்கி இன்புற்று ஆக்கூர் முதலிய தலங்களைப் பணிந்து திரு வீழிமிழலைக்கு வந்தனர். விண்ணிழி விமானத்தில் இருக்கும் இறைவனைப் பணிந்து பரவினர். பிறகு இருவேறு திருமடங்களில் திரு வீழிமிழலையில் தங்கினார்கள்.

அப்போதும் மழையில்லாமல் வருந்தும் காலம் உண்டு. ஆற்று நீர் சுருங்கியும், வறண்டும் விட்ட நிலையால்  உணவுப்  பஞ்சம்.  ' இறைவா, எப்படி பக்தர்களுக்கு  அன்ன தானம் செய்ய முடியும்?  பல உயிர்கள் பசியால் துன்புறுகிறதே, வீழி நாதரே, கொஞ்சம் காசு தரக்கூடாதா'' என்று ஞானசம்பந்தர் பாடுகிறார், அப்பரும் வேண்டுகிறார்.

''வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏச லில்லையே.
இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.
செய்ய மேனியீர் மெய்கொண் மிழலையீர்
பைகொ ளரவினீர் உய்ய நல்குமே.
நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறு மருளுமே.
காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.
பிணிகொள் சடையினீர் மணிகொண் மிடறினீர்
அணிகொண் மிழலையீர் பணிகொண் டருளுமே.
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.
அரக்க னெரிதர இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே.
அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனு மருளுமே.
பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே.
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழு மொழிகளே''

பரமேஸ்வரன் ஞானசம்பந்தர் நாவுக்கரசர் இருவர் கனவிலும் தோன்றினான்.  `கால வேறுபாட்டால் துன்புற வேண்டாம். அடியவர்க்கு உணவளிக்கும் பொருட்டுப் படிக் காசு தருகின்றோம்` என ஆறுதல் அளித்தான். 
 என்ன ஆச்சர்யம்,  திருக்கோயிலில் மேற்கு கிழக்குப் பீடங்களில் நாள்தோறும் படிக்காசு தானாக தோன்றும்படி அருள் செய்தான். அக் காசுகளைப் பெற்று `சிவனடியார்கள் இரு பொழுதும் உணவு பெற்று வாழ்க''  என எல்லோருக்கும் சொல்லியவாறு  அடியார்க்கு அன்னதானம் செய்தார்கள்.  திருநாவுக்கரசர் கைத்தொண்டு புரிவதால் அவர்க்கு வாசியில்லாக் காசும் திருஞான சம்பந்தர்க்கு வாசியுள்ள காசும் கிடைத்தன. சம்பந்தர் இறைவனைப் பாடி வாசி நீங்கப் பெற்றார். சிலகாலம் கழித்து எங்கும் மழை பெய்து வளம் பெருகியது.

திருவீழிமிழலை  சென்று வீழிநாதரை தரிசித்திருக்கிறேன்.அற்புதமான பெரிய கோவில். இந்த ஊர் பற்றிய சில புராண கதைகள் ஒருவரியில். காத்யாயன ரிஷியும் அவர் பத்னியும் தவமிருந்து பார்வதி பெண்ணாக பிறந்து அவளை சிவனுக்கே மணமுடிக்க வேண்டி, சிவன் மாப்பிள்ளை கோலத்தில் இங்கே காசியாத்திரை கிளம்ப, சிவனுக்கு மாப்பிள்ளைஸ்வாமி என்று பெயரோடு, கோவிலில் பந்தக்கால் கூட இருக்கிறது. மூலவருக்குள்ள பெயர்கள், வீழிநாதர், வீழிஅழகர், நேத்ரபாணேஸ்வரர், அம்பாள் பிருஹத் சுந்தர குஜாம்பாள் , அழகிய வண் முலையம்மை , காத்யாயனி. இந்த க்ஷேத்ரம், சந்தனம்,செண்பகம், பலா, விளா ,மரங்கள் சூழ்ந்த காடாக இருந்தது . அனைத்துக்கும் வீழி என்று பெயர். 
மிழலைக் குறும்பன் என்ற சிவ பக்த வேடன் சிவனுக்கு ஒரு விளாம்பழத்தை நைவேத்தியமாக அளித்ததால் இந்த க்ஷேத்ரம் திரு வீழிமிழலை என்று பெயர் பெற்றதும் இங்கே விளாம்பழம் மூலவரின் காலின் கீழே காண்பதும் ருசிகர சமாச்சாரம்.   ஈசன் பொற்காசு படி அளந்து வழங்கிய பீடம் இன்றும் இருக்கிறது. பெரிய வௌவால்  நாற்றம் வீசும் மண்டபம் ஒன்று காணப்பட்டது.  நான் சென்றபோது  அந்தி நேரம்.  இருட்டில் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை.

sivan jaykay

unread,
Apr 22, 2023, 8:12:53 PM4/22/23
to amrith...@googlegroups.com
ஸௌந்தர்ய லஹரி 54/103  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

पवित्रीकर्तुं नः पशुपतिपराधीनहृदये दयामित्रैर्नेत्रैररुणधवलश्यामरुचिभिः ।
नदः शोणो गङ्गा तपनतनयेति ध्रुवममुं त्रयाणां तीर्थानामुपनयसि संभेदमनघम् ॥ ५४॥

Pavithrikarthum nah pasupathi-paradheena-hridhaye Daya-mithrair nethrair aruna-dhavala-syama ruchibhih;
Nadah sono ganga tapana-tanay'eti dhruvamamum Trayanam tirthanam upanayasi sambhedam anagham.

பவித்ரீ கர்த்தும் ந: பஶுபதி பராதீன ஹ்ருதய  தயாமித்ரைர் நேத்ரை ரருண தவல ஶ்யாம ருசிபி:
நத: ஶோணோ கங்கா தபன தனயேதி த்ருவமமும் த்ரயாணாம் தீர்த்தானா முபநயஸி ஸம்பேத மநகம்   54

ஸௌந்தர்ய  லஹரி படித்து   எழுதும்போது  ஒரு அலாதி சுகம்.  ஆஹா  எவ்வளவு அற்புதமான  தூய பக்தி உள்ளம் கொண்டவர்  ஆதி சங்கரர். எவ்வளவு அருமையாக  அம்பாள் தரிசனம் பெற்று அதை நமக்கு ஆனந்தாமிர்தமாக 103 ஸ்லோகங்களில்  அள்ளித்தருகிறார்  என்று உணர்ந்து அவரை சாஷ்டாங்கமாக வணங்கச் செய்கிறது. 

''அம்பே, லலிதா தேவி,  பசுபதிக்கு   ஸ்வாதீனமான  அன்பு  நிறைந்த ஹ்ருதயத்தை படைத்தவளே ! அம்மா  உனது நயனங் களை எப்படி வர்ணிப்பேன்?    அவை  தயை, கருணை நிறைந்த  அழகிய,  சிவப்பு, வெளுப்பு, கறுப்பு என்ற வர்ணங்களைக் கொண்டவையாக  இருக்கிறதே.    இது எதை நினைவூட்டுகிறது தெரியுமா?  ப்ரவாஹமாக  மேற்கு நோக்கிச் செல்வதும் சிவப்பு  நிறம் கொண்டதுமான  சோணபத்ரா  என்ற  நதியும்,  பனி உருகி வெள்ளை வெளேரென்று குளிர்ந்த சமுத்திரம் போன்ற  வெண்ணிற கங்கை நதியும், சூரிய  புத்திரியாகவும்   இயற்கையிலேயே கறுப்பு வர்ணம் கொண்ட  யமுனா நதியுமாகிய   மூன்று புண்ய புண்ணிய நதிகளும்  ஒன்று சேர்ந்த ஸங்கமமாகி  பாவத்தையெல்லாம் போக்கும் ப்ரயாகையாக காட்சி அளிக்கிறது.   ஓஹோ!   எங்கள்  பாபத்தை எல்லாம் அழித்து  புனிதமாக்குவதற்காக  அல்லவோ உன் பார்வை இருக்கவேண்டும் என்பதற்காக  நீ அமைத்துக்கொண்ட  மூன்று நிற கண்களோ  உன்னுடையவை'' 

மேலே சொன்ன மூன்று நிற கண்கள் உள்ளார்த்தமாக குண்டலினி சக்தி தியானத்தால் ஏற்படும் நன்மையை குறிக்கிறது.  குண்டலினி நாடி களான   இட, பிங்கள, சுஷும்னா  தான் மூன்று நதிகளாக சொல்லப்படுகிறது.   இந்த மூன்று நாடிகளும்  ஆஞ்ஞா சக்ரத்தில் இணைகிறது. அதை தான் சங்கமம் என்கிறார்.  அதுவே  மூன்றாவது கண். மஹான்கள், ரிஷிகள், துறவிகள் எல்லோரும் இந்த தியானத்தில்  முக்தி பெற விரும்பி அதை அனுபவிப்பவர்கள். 

sivan jaykay

unread,
Apr 22, 2023, 8:12:53 PM4/22/23
to amrith...@googlegroups.com

ஆத்ம வித்யா விலாசம் 36-40  -  நங்கநல்லூர்   J K  SIVAN

ஸதாசிவ ப்ரம்மேந்திரா

36.  विजननदीकुञ्जगृहे मञ्जुलपुलिनैकमञ्जुतरतल्पे ।  शेते कोऽपि यतीन्द्रः समरससुखबोधवस्तुनिस्तन्द्रः ॥ ३६॥

vijananadIku~njagR^ihe ma~njulapulinaikama~njutaratalpe |  shete ko.api yatIndraH samarasasukhabodhavastunistandraH || 36||

விஜநநதீ³குஞ்ஜக்³ரு’ஹே மஞ்ஜுளபுலிநைகமஞ்ஜுதரதல்பே । ஶேதே கோऽபி யதீந்த்³ர: ஸமரஸஸுக² போ³த⁴ வஸ்துநிஸ்தந்த்³ர: ॥ 36॥

ஸர்வ  ஸ்வதந்திரனான ப்ரம்ம ஞானிக்கு  மற்றவர்கள் அஞ்சும் தனியான  காட்டின் நடுவிலோ,  நதிக்கரையிலோ,  பரந்த மணல் திட்டிலோ, படுத்து   ஆனந்தமாக இருக்க முடிகிறது. அவன் தன்னை உணர்ந்தவன். தன்னில்  பரமனை அனுபவித் தவன், எங்கும் பரமனே, பரமனே பிரம்மம்  என்று  அறிந்தவன்.  ஞானி என்பதால் தான் தனித்து இல்லை. பரமனில்  இணைந்தவன் என்று புரிந்தவன். அவனுக்கு காடும் மேடும், அரண்மனையும் குடிசையும்  ஒன்றே.  யாதும்  ஊரே  யாவரும் கேளிர் என்று வாழ்பவன். 

37.  भूतलमृदुतरशय्यः शीतलवातैकचामरः शान्तः ।  राकाहिमकरदीपो राजति यतिराजशेखरः कोऽपि ॥ ३७॥

bhUtalamR^idutarashayyaH shItalavAtaikachAmaraH shAntaH |rAkAhimakaradIpo rAjati yatirAjashekharaH ko.api || 37||

 பூ⁴தலம்ரு’து³தரஶய்ய: ஶீதலவாதைகசாமர: ஶாந்த: । ராகாஹிமகரதீ³போ ராஜதி யதிராஜஶேக²ர: கோऽபி ॥ 37॥

37. துறவிகளுக்குள்  வேந்தன் ஆகிய  ப்ரம்ம ஞானிக்கு  தென்றல் தான்  aircondition,   கட்டாந்தரையே சுகமான கட்டில் , தெளிவான மனமே சுகானுபவம், சந்திரன் நக்ஷத்ரங்களின் ஒளியே  விளக்கு என்று வாழ்பவன். அவனே சிவன், அவனே  சுக புருஷன். அவனே சித்தன். 

 38.  विपुलशिलातलफलके विमलसरिद्वारिपरिवृतोदारे । मन्दं मलयजपवने वाति प्रस्वपिति कोऽपि यतिराजः ॥ ३8॥

vipulashilAtalaphalake vimalasaridvAriparivR^itodAre |mandaM malayajapavane vAti prasvapiti ko.api yatirAjaH || 38||

விபுலஶிலாதலப²லகே விமலஸரித்³வாரிபரிவ்ரு’தோதா³ரே । மந்த³ம் மலயஜபவநே வாதி ப்ரஸ்வபிதி கோऽபி யதிராஜ: ॥ 38

சத்தியத்தை, பிரம்மத்தை உணர்ந்தவனுக்கு இனி அறிந்துகொள்வதற்கு எதுவுமே கிடையாது. சத் சித் ஆனந்தத்தை ருசிப்பவன்.  உலகமே அவன் ஊர். எங்கு வேண்டுமானாலும் அலைவான், திரிவான்,  தெளிந்த நீரே அவன்  பருகும் அம்ருதம். தென்றல் காற்றே அவன் பிராணன்.  கற்பாறையே படுக்கை. முள்ளே போர்வை. 

 39. आन्तरमेकं किञ्चित्सन्ततमनुसन्दधन्महामौनी । करपुटभिक्षामश्नन्नटति हि वीथ्यां जडाकृतिः कोऽपि ॥ ३९॥

AntaramekaM ki~nchitsantatamanusandadhanmahAmaunI | karapuTabhikShAmashnannaTati hi vIthyAM jaDAkR^itiH ko.api || 39||

ஆந்தரமேகம் கிஞ்சித்ஸந்ததமநுஸந்த³த⁴ந்மஹாமௌநீ । கரபுடபி⁴க்ஷாமஶ்நந்நடதி ஹி வீத்²யாம் ஜடா³க்ரு’தி: கோऽபி ॥ 39

நாம் சிக்கிக்கொண்டு தவிர்க்க முடியாத பஞ்ச கோசங்கள் ஞானிக்கில்லை. ஸ்தூலத்தை உதறிவிட்டு  சூக்ஷ்மத்தில் வாழ்பவன்.  வெளியே இருப்பதெல்லாம் உள்ளே காண்பவன்.  கையில் விழுவதே அவனுக்கு  அடுத்த வேளை  உணவு.  உலக வாழ்க்கையில் அவன் ஒரு செத்த பிணம்.  சம்பந்தமில்லாதவன்.  ஆனந்தத்தில் அவன் உழல்வதை  மற்றவர்கள் அறிய மாட்டார்கள்.  பிறருக்கு அவன் ஒரு பைத்தியமாக தோன்றுபவன்.   சேஷாத்ரி ஸ்வாமிகள் இப்போது புரிகிறாரா?

40.  प्रविलाप्य जगदशेषं परिशिष्टाखण्डवस्तुपरतन्त्रः ।  प्राश्नाति कवलमास्ये प्राप्तं प्रारब्धकर्मणा कोऽपि ॥ ४०॥40

pravilApya jagadasheShaM parishiShTAkhaNDavastuparatantraH |  prAshnAti kavalamAsye prAptaM prArabdhakarmaNA ko.api || 40||

ப்ரவிலாப்ய ஜக³த³ஶேஷம் பரிஶிஷ்டாக²ண்ட³வஸ்துபரதந்த்ர: । ப்ராஶ்நாதி கவலமாஸ்யே ப்ராப்தம் ப்ராரப்³த⁴கர்மணா கோऽபி ॥ 40॥

நாம்  கயிறை பாம்பாகவும்,  இருளில் அசையும் மரத்தை பேயாகவும், கானல் நீரை நிஜமாகவும் நம்பி தவிப்பவர்கள். ஞானி இதைக் கடந்தவன். அறிவே வடிவானவன். பிரம்மத்தை எதிலும் காண்பவன்.  உணவுக்கு கையேந்தாதவன். அவன் கையில் எது விழுகிறதோ அதை மட்டுமே ஏற்பவன். கவலையே எதிலும் அற்றவன். பிரபஞ்சத்தில் அவன் ஒரு பொருட்டாகாமல், பிரபஞ்சமேபிரம்மத்தின் தோற்றம் என்று உணர்ந்தவன். 

sivan jaykay

unread,
Apr 22, 2023, 8:12:53 PM4/22/23
to amrith...@googlegroups.com
Visit to Vishranthi -  2013  December 25  -

Many of us want to help others and make not much efforts to achieve and fulfil the wish.  Some are born to dedicate themselves to help others as mission of their life. One such person was Mrs. Savithri Vaithi, the force behind the popular Vishranthi project in Chennai. Vishranthi, the best  home for the aged was started in 1978 as a project of Monday (Charity) Club. Vishranthi caters to destitute women over 60 years of age, who have none to care. It provides food, shelter, clothing, medicines, and over and above, compassion and honourable end.   Mrs Savithri Vaithi  founded VISHRANTHI and served un

til her last moment as its lifetime Chairperson. Through her dedication and commitment, she has transformed the lives of innumerable people. Basic comfort during life and dignity in death comprise the rights of a person. Mrs. Savithi Vaithi ensured this comfort to the inmates. She  performed the last rites for countless number of destitute inmates.
Mrs. Savithri Vaithi had the forethought and a clear vision of the future needs of old-age women into a large-scale growth of these problems, especially that of old-age destitute women. Based on her intuitive urge to address these problems, she charted a clear and systematic road-map on an on-going basis for alleviating the distress of the aged women.Vishranthi”, the first Old Age Home for Destitute Women in Chennai with one inmate initially. Today it has many hundreds of  deserving  women in “Vishranthi”at Palavakkam, Chennai.
Both  Sri Keeranur Ramamurthi, the then President of SREE KRISHNARPANAM SEVA SOCIETY joined me in visiting Vishranthi, where  the hundreds of old women enjoyed his upanyasam and I  told them stories of Krishna and presented books and pictures of Lord Krishna for being their constant companion.
I  

sivan jaykay

unread,
Apr 22, 2023, 8:13:01 PM4/22/23
to amrith...@googlegroups.com

பொறுக்கமுடியாத  துயரம்.   -  நங்கநல்லூர்  J K   SIVAN 

எவ்வளவு தான் திட மனதுடன் இருந்தாலும்,  ஜனனம் மரணம் பற்றி  தெளிவாக  புரிந்தாலும், அறிந்தாலும் சிலர் நம்மை விட்டு பிரிந்தால் அதைத்  தாங்கிக் கொள்ளும்  பலம் மனதுக்கு  இல்லாமல்  துவண்டு போய்விடுகிறது. ஹ்ருதயத்தில் உண்டான  கீறலை  ஒட்டி ஒன்று சேர்க்க முடியவில்லை. துக்கம் அவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்க என்ன  காரணம்? நம்மை விட்டு பிரிந்த மனிதர்களின் குணம், சேவை, தியாகம், பண்பு, எளிமை, பாசம் நேசம்  இது தான்.

சமீபத்தில் நான்  ஒரு சகோதரியை அவ்வாறு இழந்து விட்டேன். மதுராந்தகம் என்றாலே கண் முன் நிற்பது ரெண்டு உருவங்கள் ஒன்று   ஏரி காத்த ராமன்.  இன்னொன்று  மதுராந்தகம்  ஆன்மீக சுனாமி,  திருமால் கவிச்செல்வர், கைங்கர்ய சீமான் ஸ்ரீ உ.வே ரகுவீர பட்டாச்சாரியார்.    மூர்த்தி சிரிதானாலும் கீர்த்தி பெரிதான அற்புதமான மனிதர். நிறைய படித்த எளிய இன்னொரு  'கி.வா.ஜ'. என்று சொல்வேன்.  நூற்றுக்கணக்கான  நூல்களை எழுதியவர் . அம்ருத வாஹினியாக  உபன்யாசம் பண்ணுபவர். நேரம் போவது தெரியாமல்  சபையோரை தன்வசம் காந்தம் போல் கட்டிப்போடும்  அபூர்வர். அற்புத  நகைச்சுவையோடு சித்திக்கத் தூண்டும்  உபன்யாசகர்.  ஆங்கிலம் தமிழ் ஸம்ஸ்க்ரிதம்  மூன்றிலும் வல்லவர். 

நூறுகோடிக்கும் மேலே  ராமநாமங்களை சேர்த்து  கோவில்களில் பிரதிஷ்டை பண்ணியவர். அவரது மதுராந்தக இல்லத்தில்  சிறிய தியான மண்டபத்தில் இப்படி பல கோடி  ராமநாம பிரதிஷ்டை பண்ணப்பட்ட மேடை மேல் ஏரிகாத்த  ராமன் பாதுகையை வணங்கி இருக்கிறேன். அங்கே பல மஹான்களை  சந்தித்திருக்கிறேன்.  பேசி இருக்கிறேன். பல நூல்களை விநியோகம் செய்திருக்கிறேன்.

அந்த க்ரஹத்தின்  ஜோதியாக இருந்த  திருமதி கல்யாணி ரகுவீர  பட்டாச்சாரியார் இன்முகத்தோடு ஒவ்வொரு முறையும் என்னைப்  பார்க்கும்போதும்  உடன் பிறவா சகோதரனாக பாவித்து   உபசரிப்பவர். சாப்பிடாமல் போக விட மாட்டார்.  அவர்  தளிகையும் அற்புதமான  வித வித  ருசிகளை அள்ளித் தரும்.   

கல்யாணி மாமி   30.3.2023  அன்று  வைகுண்ட பிராப்தி அடைந்தார்  என்று   நேற்று  அறிந்தபோது  தான் மேலே சொன்ன சோகத்தில் மூழ்கினேன்.  மாலுமி இல்லாத படகாக  பட்டாச்சாரியார் சம்சார கடலில் வாடுவதை  நினைத்துப்  பார்க்க முடியவில்லை.   

''ஏரி  காத்த ராமா,  நீ தான் உன் பக்தன்  ரகுவீரனுக்கும்  துக்கத்தில் மூழ்கியிருக்கும்  அவர் குடும்பத்துக்கும் ஆறுதல் தரவேண்டும். கல்யாணி மாமியின்   ஆத்மா  நிரந்தரமாக வைகுண்டத்திலோ  கோலோகத்திலோ  உன் பாதார
விந்தங்களில் சாந்தி பெறவேண்டும், என்றும் தெய்வமாக  நின்று எங்களை வாழ்த்த வேண்டும்''
இதுவே  என் பிரார்த்தனை. 

 

 

sivan jaykay

unread,
Apr 22, 2023, 8:13:11 PM4/22/23
to amrith...@googlegroups.com
விஞ்ஞான நௌகா - 1/9  --    நங்கநல்லூர்  J K  SIVAN
ஆதி சங்கரர்

அதிகமாக அறியப்படாத ஒரு விசேஷ  ஸ்தோத்ரம் இது.  ஆதி சங்கரரின்  ப்ரம்ம தத்வ ஸ்லோகங்கள்.   அஹம்  ப்ரம்மாஸ்மி - நானே பிரம்மமாக இருக்கிறேன்-  என்ற மஹா வாக்கியத்தை அடிப்படையாகக்  கொண்டவை இந்த  எட்டு  ஸ்லோகங்கள் , அஷ்டகம் என்றால் எட்டு பாடல்கள். 

तपोयज्ञदानादिभिः शुद्धबुद्धि-    र्विरक्तो नृपादेः पदे तुच्छबुद्ध्या ।
परित्यज्य सर्वं यदाप्नोति तत्त्वं    परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ १॥

Tapo yajnadaanaadibhissudhabudhir-Virakto nripaadau pade tuchchabudhya
Parityajya Sarvam Yadaapnoti Tatvam Param Brahma nityam Tadevaaham asmi

தபோ யஜ்ஞாதநாதிபிஸ்ஸுதபுதிர்- விரக்தோ நৃபாদௌ படே துச்சবுধ்யா
பரித்யஜ்ய ஸர்வம் யதாப்நோதி தத்வம் பரம் பிரம்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி ., 1
     
மனம் எப்போது பரிசுத்தமாகும்?  தியானம் ஒன்றால் தான்.  பகவான் மீது முழு மனதும் ஈடுபட்டு  பூரணமாக தன்னை மறைந்த நிலையில் அவன்  நினைவில் ஈடுபடுவது தான் தியானம்.    தியானம், தியாகம், தானம் ஆகியவற்றால் நம் மனதைத் தூய்மைப்படுத்தி அரசர் போன்ற பதவிகளில் இருந்தபோதும்  ஜனகர் மாதிரி  தாமரை மலர் தண்ணீராக, விரக்தியடைவதன் மூலம், அனைத்தையும் தியாகம் செய்வதன் மூலம், நாமே பிரம்மம் என்ற தெய்வீக மற்றும் வற்றாத கருத்தின் கொள்கையை  அடைய முடியும்.  உலக சுகங்களில்  விருப்பின்றி, பற்றின்றி,  இருக்க எல்லோராலும் முடியாதே.  வைராக்கியம் மனதில் இருந்தால்  தான்  இது சாத்தியம் . அப்போது நாமும்  ஆதி சங்கரராகலாம். ப்ரம்மம் புரியும். 

sivan jaykay

unread,
Apr 22, 2023, 8:13:11 PM4/22/23
to amrith...@googlegroups.com
 யார்  பாபி?  -   நங்கநல்லூர்  J K  SIVAN    
    
ராமக்ரிஷ்ண பரமஹம்சரின்  குட்டிக்கதைகள்  உலகப்புகழ் வாய்ந்தவை. அவற்றை ஒன்று ஒன்றாக  உங்களுக்குத் சொல்ல எனக்கு உள்ளூர  ஒரு ஆசை உண்டு. நேரம் தான் கிடைக்க மாட்டேன் என்கிறது. 
இதோ இன்று ஒரு சின்ன, குட்டி  நீதிக்கதை.

ஒரு கிராமத்தில்  ஒரு சின்ன கோயில்.  அந்த கோயில் அருகே ஒரு பொது  சத்திரம்.  அதன் திண்ணையில் ஒரு  ஸந்யாசி வசித்து வந்தார்.  அவரது துணி மூட்டை, ஒரு சில பாத்திரங்கள் மட்டும் தான் உலகில்  அவர் சொத்து. அவருடைய சத்திரத்துக்கு எதிரே ஒரு வீடு. அந்த வீட்டில் ஒரு பொதுமகள் , விலைமகள், தாஸியின் குடும்பம் வாழ்ந்து வந்தது.   வேசியின்  வீட்டில்  சதா சர்வ காலமும் அநேக புருஷர்கள்  வருவதும் போவதுமாக   கூடியிருப்பதைக் கண்ட  அந்த ஸந்யாசிக்கு  அது ரொம்ப தப்பான காரியம். அவள் செய்வது அநாகரீகம், அதர்மம், அக்கிரமம் என்று கோபம். 
சாமியார்  ஒருநாள் தாசியை கூப்பிட்டார்: 

''நீ  மஹா பாவி.  ஏன் இப்படி செய்கிறாய்? இரவும் பகலும்  நீ  பாவம்  செய்து  கொண்டே இருக்கிறாயே,  உன்  கதி என்ன‌
ஆகும் என்று நினைத்ததுண்டா? இனிமேல் இப்படி செய்யாதே. நிறுத்து''  என்று  கண்டித்தார்.
 வேசியோ  ''சாமி, நீங்கள் சொல்வது ரொம்ப சரி.  நான் தொடர்ந்து பாவம் தான் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு அது பிழைக்கும் வழி. என்னை மன்னித்து விடுங்கள்.  வெகு காலமாக அந்த வேசி தினமும் ஈஸ்வரனை நோக்கி ''என் செயலுக்காக என்னை மன்னித்து அருளவேண்டும்'' என்று  பிரார்த்தித்தாள்.
தான் அறிவுரை செய்தும்  அதை அலக்ஷியம் பண்ணிவிட்டு தொடர்ந்து  வேசி  தன்  ஈனத்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு வருவதில் சாமியாருக்கு ரொம்ப  அருவருப்பும் கோபமும் வந்தது.  இன்று முதல்  அவள் ஆயுட்காலம் வரை எத்தனை பாபிகள் அவளிடம் வருகிறார்கள்  என்பதைக்  கவனிக்கத்  துவங்கினார். 
யாரேனும்  ஒருவர்  வேசியின் வீட்டுக்குள் நுழைநதால், உடனே அந்த ஸந்யாசி  ஒரு  கூழாங்கல்லை எடுத்து எதிரே  போடுவார்.  இப்படி அவரால் போடப்பட்ட  கூழாங்கற்கள்  பெரிய  குவியலாக‌ குவிந்தது.  ஒரு நாள்  அந்த ஸ்ந்யாசி, 
அந்தக்  கற் குவியலை தாசியைக்  கூப்பிட்டுக் காட்டினார்.

''ஹே,  பெண்ணே!  இந்தக் கூழாங்கல்  குவியலைப் பார்த்தாயா?  நான்  எந்தக் காரியத்தைச்  செய்யவேண்டாமென்று சொன்னேனோ  அந்தக் காரியத்தை  நீ  எத்தனை  தரம் செய்திருக்கிறாய் பார்த்தாயா.  ஒவ்வொரு கல்லும் ஒரு பாப  காரியம் என்று புரிகிறதா? இனிமேலும்  வீணாகக் கெட்டுப் போகாதே''  என்றார். 
தனது  பாவக் குவியலைக் கண்ட தாஸிநடுங்கினாள்.  கதறினாள்.  வீட்டுக்குப் போனவள்  அவள் வணங்கும்  கிருஷ்ணன்   படம் முன் கண்ணீரும்  கம்பலையுமாய்  அழுதுகொண்டே  கதறினாள்:

''பகவானே,  இந்த  தீய செய்கையை   நான் செய்யாமல் என் குழந்தை, குடும்பம், என் தாய் உயிர்வாழ வேறு வழியில்லையே. இனி மேலும்  இதை நான்  செய்யா  வண்ணம்  என்  உயிரைக் கொண்டு  போக மாட்டாயா! ப்ளீஸ் என்னை அழைத்துக் கொள் '' என்று வணங்கினாள்.அன்றே  அவள் உயிர்  போய்விட்டது. விஷ்ணு தூதர்கள் அவள் உயிரை  வைகுண்டத்துக்குக் கொண்டுபோனார்கள். 
அந்த  ஸ்ந்யாஸியும்  அன்றே இறந்து போனார்.  எமதூதர்கள்  சாமியாரின் உயிரை நரகத்துக்கு கூட்டிக்கொண்டு போக வந்தார்கள்.
சாமியாருக்கு கோபம் ஆச்சர்யம்.  வாழ்நாள் பூரா  தவம்  செய்த  என்னை நரகத்துக்கும், தினம் தோறும் பாவம்  செய்த தாசியை  மோக்ஷத்துக்கும்  கொண்டு  போவது  எப்படி நியாயமாகும்?''  என்று கேட்டார். 
விஷ்னு  தூதர்கள்  இதைக் கேட்டு, பதிலளித்தார்கள்:

''ஈசுவரனுடைய  ஆக்ஞை  எப்போதும் நியாயமானதாகவே  இருக்கும்.  நீ எதை நினைக்கி றாயோ  அதையே அனுபவிப்பாய்.   கெளரவத்தையும்  புகழையும்  பெறவேண்டி  நீ வீண்  படடோபத்துடன் காலம் கழித்தாய்.  ஈசுவரன்  உனக்கு  அவற்றைக் கொடுத்தான்.  உனது  மனம்  ஒரு போதும் அந்தரங்கத்துடன்  அவனை  நாடின தில்லை.  அந்த வேசியோ சரீரத்தால்  பாவம்  செய்தாள்,  என்றாலும் இரவும் பகலும் மனமார ஈசுவரனைத் துதித்து  வந்தாள் . பூலோகத்தில்  உன் சரீரமும் அவள்  சரீரமும் அடையும்  மரியாதையைப்  பார்.  நீ சரீரத்தால்  பாவம்  செய்த தில்லை. ஆகவே உனது  சரீரத்தைப்  புஷ்பங்களால்  அலங் கரித்து ஆற்றில்  விடுவதற்காக மேள தாளத்துடன் ஊர்வளம்  போகின்றனர்.  பாவம்  செய்த  இந்த வேசியின்  உடலை  காட்டில் வீசிவிட்டார்கள்.   நாயும் நரியும்  பிடுங்கித் தின்கின்றன.  அவள் சுத்தமான  மனமுடையவளாதலால்  ஸ்வர்கத்துக்கு  போகிறாள். உன் மனம் எப்போதும்  அவளுடையப்  பாவச் செய்லைப் பற்றியே  சிந்தித்திருந்த படியால் அசுத்த மாகி   நீ அசுத்தாத்மாக்கள்  இருக்கும் இடம்  போகிறாய்; வாஸ்த வத்தில் நீ தான்  பாவி. அந்த வேசி பாபியல்ல''  

sivan jaykay

unread,
Apr 23, 2023, 8:07:42 PM4/23/23
to amrith...@googlegroups.com
 பக்தியின் சக்தி  -   நங்கநல்லூர்   J K  SIVAN
           
அப்பர்  எனும்  திருநாவுக்கரசரும்  ஞான சம்பந்தரும்  சேர்நது  நடந்து ஸ்ரீ வாஞ்சியம் முதலிய ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருமறைக்காட்டை (வேதாரண்யம்)  அடைந்தார்கள்.   பழைய காலத்து பெரிய  ஆலயம்.    அதைப் ப்ரதக்ஷிணம் செய்து விட்டு  வாசலுக்கு வந்தார்கள். வெகுநாட்களாக   ஆலயத்தின் பெரிய  வாசல்  மரக்கதவுகள் திறக்கப்படாமலேயே. அசைக்க முடியாதபடி  இருந்தது.   ஆகவே  ஊர் மக்கள் வேறொரு சிறிய கதவின் வழியே உள்ளே சென்று வழிபட்டு வந்ததை அறிந்தார்கள்.

''அப்பரே, மனதுக்கு  மிகவும் வேதனையாக இருக்கிறதே,  இவ்வளவு பெரிய உயர்ந்த ஸ்தலத்தில் வாசல் வழியாக உள்ளே சென்று தரிசிக்க வழி அடைத் திருக்கிறதே. நாம் அந்த நேர் முக பழைய பெரிய வாயில் வழியே உள்ளே  செல்வோம். மறைக்காட்டுறையும் பெருமானை வழிபட வேண்டும்.  நீங்கள் தான்  இக்கதவு திறக்கும்படி  ஒரு  பதிகம் பாடிய ருள  வேண்டும். என்கிறார் சம்பந்தர். அப்பர்  சிரம் மேல் கரம் குவித்து பாடுகிறார்.

அப்பரின்  தமிழைக்  கேட்பதில் விருப்பம் கொண்டு மகிழ்ந்து அவரை  திருநாவுக்கரசரே  என்று திருவதிகை   வீரட்டானேஸ் வரன்  பட்டமளித்தது  நினைவிருக்கிறதா?  அதுபோல்  வேதாரண்யத்திலும்  ஈஸ்வரன் அவர்  செந்தமிழ்ச் சுவையைத் துய்க்க விரும்பிக் கதவை லேசில் திறக்க வைக்க வில்லை.
முதல் பாடல்:  

'பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ
மண்ணினார் வலம் செய்ம் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காண கதவினைத்
திண்ணமாகத் திறந்து அருள் செய்ம்மினே''

வேதாரண்யத்தில்  அம்பாள் பெயர் "வீணாவாத விதூஷணி" அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால்  ''யாழைப் பழித்த மொழியாள் '' என்று தமிழில் நாமம்.
 
பதிகத்தில் கடைசி பாடல்: 

அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம்-ஒன்று இலீர், எம்பெருமானிரே;
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ;
சரக்க இக்-கதவம் திறப்பிம்மினே

‘ராவணனை  வதம்  செய்த  பெருமானே   திரு மறைக்காடனே,  எங்கள் மேல் இரக்கம் சிறிதும் இல்லையோ’ என்று பாடினதும்  ''சரி திறப்போம்''  என்று  ஈஸ்வரன் வேதாரண்ய கோவிலின் பெருங்  கதவுகளை   தானே  தாள்  திறக்க வைத்தான்.  இருவரும்  உள்ளே சென்று  சிவனை தொழுதார்கள். நிறைய பதிகங்கள் பாடினார்கள்.

''ஞானசம்பந்தா  நீ  இந்த பெருங்கதவுகள் மீண்டும் மூடிக் கொள்ள ஒரு பதிகம் பாடு '' என்கிறார் அப்பர். குருநாதா அப்படியே செயகிறேன் என்று சம்பந்தர் ஒரு பாடல் பாடுகிறார்:

''சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே''

' மனதுக்கும் கண்ணுக்கும் இனிய  பூஞ்சோலைகள் நிறைந்த  வேதாரண்யம் எனப்படும்   திருமறைக்காட்டில் வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்க வீற்றிருக்கும் மஹாதேவா, உன் திருக்கோயில் கதவுகள் முன்பு இருந்தபடியே  மீண்டும்  சாற்றிக்கொண்டு கதவு மூடிக்கொள்ளட்டும்''  என்று  சம்பந்தர்  பாடியதும்   அந்த  ஆலயப் பெருங்கதவுகள் பலத்த க்ரீச் என்ற சப்தத்தோடு மீண்டும் மூடிக்கொண்டன.

sivan jaykay

unread,
Apr 23, 2023, 8:07:43 PM4/23/23
to amrith...@googlegroups.com
விஞ்ஞான நௌகா - 2/9  --    நங்கநல்லூர்  J K  SIVAN
ஆதி சங்கரர்

2.   दयालुं गुरुं ब्रह्मनिष्ठं प्रशान्तं    समाराध्य मत्या विचार्य स्वरूपम् ।
यदाप्नोति तत्त्वं निदिध्यास विद्वान्-    परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ २॥

Dayaalum Gurum Brahmanishtam Prasantham Samaraadhya Bhaktyaa vichaarya swaroopam
Yadaapnoti Tatvam Nididhyaasya vidvaan Param Brahma nityam Tadevaaham asmi    

தயாளும் குரும் பிரம்மநிஷ்டம் பிரசாந்தம் ஸமாராধ்யா ভக்த்யா விசார்ய ஸ்வரூபம் ॥
யদாப்நோதி தத்வம் நிদிধ்யஸ்ய விদ்வாந் பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 2

ஞானத்தின்  உச்ச கட்டம் பிரம்மத்தை  அறிதல்.  இதை எளிதில் எவரும் நினைத்த போது  அடையமுடியாது. நிறைய ரூபாய் கொடுத்து ஸ்பெஷல் டிக்கெட் இதற்கு கிடையாது. சரியான குரு வேண்டும். அவர்  வழிநடத்தி அதை சீராக பின்பற்றி அவர் அறிவுரைப்படி பிரம்மத்தைத் தேடும்  வைராக்கியமும்,  அமைதியும்  பொறுமையும் பக்தனுக்கு வேண்டும்.  நிறைந்த பக்தியோடு குருவை வணங்கி அவர் கருணையால் தன்னை ஆராய்ந்து,மீண்டும் மீண்டும் ஆழ்ந்த தியானத்திற்குப் பிறகு, ஒருவன் பிரம்மத்தை அறிந்து கொள்ள முடியும். பிறகு தான் அவனுக்கு  ''நாமே பிரம்மம் என்ற தெய்வீக மற்றும் வற்றாத கருத்து''  நெஞ்சில்  ஆழமாக பதிகிறது. 


यदानन्दरूपं प्रकाशस्वरूपं    निरस्तप्रपञ्चं परिच्छेदहीनम् ।
अहम्ब्रह्मवृत्त्यैकगम्यं तुरीयं    परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ३॥

Yad Aananda roopam prakasa swaroopam Nirastha prapancham parichcheda soonyam
Aham Brahmavruthyaikagamyam tureeyam Param Brahma nityam Tadevaaham asmi. 3
                               
யத் ஆநந்த ரூபம் பிரகாச ஸ்வரூபம் நிரஸ்த ப்ரபஞ்சம் பரிச்சேத சூன்யம்
அஹம் ப்3ரஹ்மவ்ருʼத்யைககாம்யம் துரீயம் பரம் பிரம்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 3

என்றென்றும் பேரின்பம் நிரம்பிய மகிழ்ச்சியின் வடிவத்தைக் கொண்டிருப்பது,
வரையறை இல்லாத நாம் காணும் உலகை துறப்பது,
நிலையான தேடலால் மட்டுமே அடையக்கூடியது மற்றும் பேரின்பம் நிறைந்த நிலை, இது
நாமே தெய்வீக மற்றும் வற்றாத கருத்து. பிரம்மம்.

Forever having the form of joy which is full of splendour, Forsaking the world that we see which does not have definition,
And Which can be attained only by constant search and a state full of bliss, Is the  divine and perennial concept that we ourselves are Brahmam.

यदज्ञानतो भाति विश्वं समस्तं    विनष्टं च सद्यो यदात्मप्रबोधे ।
मनोवागतीतं विशुद्धं विमुक्तं    परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ४॥

Yad ajnanato bhati viswam samastham Vinashtam cha sadyo yadaatma prabodha
Manovaagatheetham visudham vimuktam Param Brahma nityam tadevaaham asmi.    4  

யদ் அஜ்ஞாநதோ பதி விஸ்வம் ஸமஸ்தம் விநாஷ்டம் ச ஸদ்யோ யদாத்மா ப்ரபோধா ॥
மநோவாগதீதம் விஶுதம் விமுக்தம் பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 4

பௌதிக உலகத்தைப் பற்றிய இந்த முழுக் கருத்தையும் அறியாமையால், ஆத்ம (ஆன்மா) உணர்வின் மூலம், மனம் மற்றும் சொல்லுக்கு அப்பாற்பட்ட, மேலும் தூய்மையான மற்றும் முழுமையான சுதந்திரமான
இந்த கருத்தை இழக்க வழிவகுக்கிறது , இது தெய்வீக மற்றும் வற்றாத கருத்து. நாமே பிரம்மம் என்று.

By that ignorance  of this entire concept of the physical world, By that realization of Athma (soul)  , which leads to the loss of this concept,
Which is beyond mind and word ,and also pure and fully free,Is the  divine and perennial concept that we ourselves are Brahmam.
 
निषेधे कृते नेति नेतीति वाक्यैः    समाधिस्थितानां यदाभाति पूर्णम् ।
अवस्थात्रयातीतमद्वैतमेकं    परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ५॥

Nishedhe krute neti neteeti vakyaih Samadhisthithaanaam yadaabhaathi poornam
Avasthaathrayaatheetham advaitam ekam Param Brahma nityam tadevaaham asmi. 5

நிஷேதே க்ருதே நேதி நீதீதி வாக்யைঃ ஸமாதிஸ்থிதாநாம் யদாভாதி பூர்ணம் ॥
அவஸ்தாத்ரயாதீதம் அத்வைதம் ஏகம் பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 5

"அது இல்லை", "அது இல்லை" என்ற வார்த்தைகளின் எதிர்மறையான செயலால்,
சமாதி நிலையில் நுழைபவர்களில் முழுவதுமாக பிரகாசிப்பது, மூன்று
நிலைகளுக்கு அப்பாற்பட்டது மற்றும் இல்லாதது. இரண்டாவது, நாமே பிரம்மம் என்பது தெய்வீக மற்றும் வற்றாத கருத்து.

By the negative action of the words  “it is not it”, “It is not it”,That which shines entirely in those , who enter the state of Samadhi, That which is beyond the three states*  and which does not have any second, Is the  divine and perennial concept that we ourselves are Brahmam.
   * sleep , dream and wakefulness

यदानन्दलेशैः समानन्दि विश्वं    यदाभाति सत्त्वे तदाभाति सर्वम् ।
यदालोकने रूपमन्यत्समस्तं    परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ६॥

Yad Aanandalesaih samanandi viswam Yadaa bhaati satve sada bhati sarvam
Yadaalochite heyam anyat samastham Param Brahma nityam tadevaaham asmi. 6

யদ் ஆநந்தலேசைঃ ஸமாநந்தி விஸ்வம் யதா பதி ஸத்வே ஸதா பதி ஸர்வம்
யதாலோசிதே ஹேயம் அந்யத் ஸமஸ்தம் பரம் பிரம்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 6

அதன் பேரின்பத் துளிகளால் இந்த உலகத்தை இன்பமாக்குகிறது,
அதன் பிரகாசத்தால் இந்த உலகத்தை ஒளி நிறைந்ததாக ஆக்குகிறது,
யாருடைய எண்ணத்தால் இந்த ஜட உலகம் ஒன்றுமில்லாமல் போகிறது,
நாமே பிரம்மம் என்பது தெய்வீக மற்றும் வற்றாத கருத்து.

That due to its bits of bliss makes this world pleasant, That due to its splendour makes  this world full of light,And that by whose thought this physical world becomes nothing,Is the  divine and perennial concept that we ourselves are Brahmam.

अनन्तं विभुं निर्विकल्पं निरीहं    शिवं सङ्गहीनं यदोङ्कारगम्यम् ।
निराकारमत्युज्ज्वलं मृत्युहीनं    परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ७॥

Anandam vibhum sarvayonim nireeham Sivam sangaheenam yad omkaaragamyam
Niraakaaramathyujwalam mruthyuheenam Param Brahma nityam tadevaaham asmi. 7

ஆநந்தம் விভும் ஸர்வயோநிம் நிரீஹம் ॥ஶிவம் ஸங்গஹீநம் யদ் ஓம்காரகாம்யம்
நிராகாரமத்யுஜ்வலம் ம்ருʼத்யுஹீநம் பரம் பிரம்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 7

முடிவில்லாததும், தெய்வீகமானதும், அனைத்தையும் கட்டுப்படுத்துவதும்,
அமைதியானதும், தனித்தும், " ஓம் " மூலம் அடையக்கூடியதும்
, உருவமற்றது, பெரும் பொலிவு மற்றும் மரணம் இல்லாதது,
நாமே பிரம்மம் என்பது தெய்வீக மற்றும் வற்றாத கருத்து.

That which is endless, divine and controls everything,That which is peaceful , alone and attainable through “Om”, And that which is formless , has great luster and no death,Is the  divine and perennial concept that we ourselves are Brahmam.

यदानन्द सिन्धौ निमग्नः पुमान्स्या-   दविद्याविलासः समस्तप्रपञ्चः ।
तदा नः स्फुरत्यद्भुतं यन्निमित्तं    परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ८॥

Yad Aananda sindhau nimagnah puman sya-Dvidyavilasah samastha prapanchah
Tadaa na sphurathyatbhutam yannimitham Param Brahma nityam tadevaaham asmi.  8

யத் ஆநந்த ஸிந்தௌ நிமக்னஹ புமாந் ஸ்யா- দ்விদ்யாவிலாஸঃ ஸமஸ்தா ப்ரபஞ்சঃ
ததா ந ஸ்ফுரத்யத்ভூதம் யந்நிமிதம்பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 8

தேடுபவர் தன்னை மூழ்கடிக்கும் அந்த பேரின்பக் கடலும்,
என்றென்றும் மறைந்து போகும் அந்த அற்புதமான காரணமும்,
பௌதிக உலகம் தோன்றச் செய்யும் அறியாமையும்,
நாமே பிரம்மம் என்பது தெய்வீக மற்றும் வற்றாத கருத்து.

That sea of bliss in which the seeker drowns himself,And that wonderful cause which forever makes it disappear, The ignorance which makes the physical world appear, Is the  divine and perennial concept that we ourselves are Brahmam.

स्वरूपानुसन्धानरूपां स्तुतिं यः    पठेदादराद्भक्तिभावो मनुष्यः ।
श्रुणोतीह वा नित्यमुद्युक्तचित्तो   भवेद्विष्णुरत्रैव वेदप्रमाणात् ॥ ९॥

Swaroopaanusandhanaroopaam sthuthim yah Pathed aadaraal bhakthibhavo manushyah
Srunotheeha va nithyam udyukta chitto Param Brahma nityam tadevaaham asmi.    9

ஸ்வரூபாநுஸந்ধநரூபம் ஸ்துதிம் யঃ
பதேத் ஆதாரால் பக்திபவோ மனுஷ்யஹ்
ஶ்ருணோதீஹ வா நித்யம் உத்யுக்த சித்தோ
பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 9

சுயத்தின் வடிவத்தைத் தேடும் பாணியில் எழுதப்பட்ட இந்த பிரார்த்தனை,
மரியாதை மற்றும் பக்தி சிந்தனையுடன் ஆண்கள் படித்தால்
அல்லது கேட்டால் அவர்களை என்றென்றும் பேரின்ப சுதந்திரத்திற்கு அழைத்துச் செல்லும்,
மேலும் நாமே பிரம்மம் என்பது தெய்வீக மற்றும் வற்றாத கருத்து.

This prayer written in the style of the search of the form of the self,If read by men with respect and devotional thought,
Or if heard would lead them forever to blissful freedom,And Is the  divine and perennial concept that we ourselves are Brahmam.

इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य
श्रीमच्छङ्करभगवतः कृतौ स्वरूपानुसन्धानाष्टकम् सम्पूर्णम् ॥

         

sivan jaykay

unread,
Apr 23, 2023, 8:08:12 PM4/23/23
to amrith...@googlegroups.com
ஸௌந்தர்ய லஹரி 55/103 -  நங்கநல்லூர்  J K SIVAN

55  ப்ரளய ஸ்ரிஷ்டி காரணி  

निमेषोन्मेषाभ्यां प्रलयमुदयं याति जगती तवेत्याहुः सन्तो धरणिधरराजन्यतनये ।
त्वदुन्मेषाज्जातं जगदिदमशेषं प्रलयतः परित्रातुं शङ्के परिहृतनिमेषास्तव दृशः ॥ 55॥

Nimesh'onmeshabhyam pralayam udayam yaati jagati Tave'ty ahuh santho Dharani-dhara-raajanya-thanaye;
Tvad-unmeshaj jatham jagad idham asesham pralyatah Pari-trathum sankhe parihruta-nimeshas tava drusah.55

நிமேஷேன்மேஷாப்யாம் ப்ரளய-முதயம் யாதீ ஜகதீ தவேத்யாஹு: ஸந்தோ தரணிதர-ராஜன்யதனயே I
த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதித-மசேஷம் ப்ரளயத: பரித்ராதும் சங்கே பரிஹ்ருத-நிமேஷாஸ்-தவ த்ருச: II 55

அம்பாள்  பர்வதராஜ குமாரி,ஹிமவான்  மகள் ஹேமாவதி,  தாயே உன்னுடைய கண்கள் மூடுவதாலும் திறப்பதாலும் உலகம்  ப்ரளயத்தையும்  புணருத்தாரண ஸ்ரிஷ்டியும்  பெறுகிறது.  நீ கண் இமைகளை மூடாதவள்.   உனது கண்கள் திறந்திருப்பதால் உலகம் முழுவதும்  ப்ரளயத்தால் அழியாமல் காப்பாற்றுகிறாய்.   மதுரையை தூங்கா நகரம் என்போம். இரவு பகல் எப்போதும் எல்லோரும் விழித்துக்கொண்டு ஏதாவதொரு வேலை செய்துகொண்டே இருப்பார்கள்.  மதுரையைக் காப்பவள் மீனாக்ஷி. மீன் கண்ணை மூடுவதே இல்லை.திறந்துகொண்டு தான் தூங்கும்.  மீன்போல் திறந்த கண்களோடு மதுரையை மட்டுமல்ல மூவுலகையும் ரக்ஷிக்கிறாள் என்பதால் அவளுக்கு மீனாக்ஷி, மீன் போல் கண்கள் கொண்டவள் என்று ஒரு நாமம்.

லலிதா சஹஸ்ரநாமம் 281  அம்பாளை  ऊन्मेष-निमिषोत्पन्न-विपन्न-भुवानवली  உமேச நிமிஷோத் பன்ன விபன்ன பூவானவளி. மேலே சொன்ன அர்த்தம் தான்.  
ஜகன்மாதா   கண்களை திறப்பதாலும்  மூடுவதாலும்  சிருஷ்டி  ப்ரளய ஸம்ஹாரம்  ரெண்டும் நடைபெறுகிறது.

sivan jaykay

unread,
Apr 24, 2023, 7:38:58 PM4/24/23
to amrith...@googlegroups.com

மணித்வீபம்  2 -     நங்கநல்லூர்   J K  SIVAN 

மகோன்னதமான  பரமேஸ்வரியின்  வாசஸ்தலம் மணித்வீபம். அது எந்த கோவில்,எந்தவூரில்   என்று சிலர்  கேட்கும்போது என்னால் எப்படி மணித்வீபத்துக்கு வழி சொல்லமுடியும்?  ''எந்த ஊர்  என்றவனே  இருக்கும் ஊரை சொல்லவா?''  என்று  பாட வேண்டி இருக்கிறது.

லலிதாம்பிகை சர்வ ஜீவராசிகளின்  த்ரிகரணத்துக்கும்  ஆதாரமாக  வீற்றிருக்கிறாள். அனைத்து சக்தி பீடங்களிலும் மணித்வீபம் மிகவும் உயர்ந்தது. இந்த க்ஷேத்ரத்தை   மஹா தபஸ்விக்களும், ஆத்ம ஞானிகளும் மட்டுமே  உணரமுடியும். அறிய முடியும்.  அவர்கள்  உயர்ந்த சாயுஜ்ய பதவி பெறுபவர்கள். மணித்வீபத்தை உணர்தவர்களுக்கு வியாதியோ, கவலையோ, பசி,தாகம், மூப்போ, வயதோ கிடையாது.    நித்யமான சுகத்தை அனுபவிப் பவர்கள். சதா சர்வமும் அம்பாளின் அனுக்ரஹம் பெற்று அவளை நினைத்து தியானத்தில் மூழ்குபவர்கள்.  மணி த்வீபத்தை நினைப்பதற்கே நாம் பல ஜென்ம புண்யம்  செய்திருக்கவேண்டும்.   அம்ருதத்தின் ஒரு துளி பருகினாலே அமரத்துவம் கிடைக்கும் எனும்போது  அம்ருத கடலில் நடுவே மணித்வீபத்தில் வீற்றிருக்கும் அம்பிகையை நினைத்தால் எவ்வளவு புண்யம் என்று யோசித்தாலே அதன் மஹிமை புலப்படும்!.  

அம்பாளின் இருப்பிடமான  அம்ருத ஸாகரத்தின் நடுவில் சிந்தாமணி க்ரஹத்தில்  சகல வைபவங்களோடு ஜகன்மாதா  வீற்றிருக்கிறாள். சிந்தாமணி க்ரஹம்  பல நவரத்ன மணிகளால்  ஆன ப்ரஹாரங்களை  ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக உடையது.  அடேயப்பா,   இந்த  ப்ராஹாரங்களின் இடையில் கணக்கில்லாத  புஷ்ப ஜாதி  விருக்ஷங்கள் வாடாத நறுமணமிக்க  வண்ண வண்ண புஷ்பங்கள் பூத்துகுலுங்க நிற்கின்றன. அந்த புஷ்பங்கள் கீழே  சொரிந்து  வர்ண வர்ண  பட்டுப் பாய்களாக மிருதுவாக நடக்க உதவுகிறது.  நவரத்ன கற்கள் ஒளி கண்ணைப் பறிக்கிறது.  ஸ்படிக மணி மண்டபங்கள்  சித்ர வேலைப்பாடுகளுடன்  ஆங்காங்கே காணப்படுகிறது. வர்ணிக்க இயலாத அழகுடைய  அம்பாளின்  மணித்வீபத்தை நினைப்பதற்கே  புண்யம் செய்திருக்கவேண்டும்.  ஆயிரங் கால் மண்டபத்தைத்  தாண்டியவுடனே ,  நான்கு மண்டபங்கள்  கம்பீரமாக உயர்ந்து காணப்படுகிறது.  ஒன்று  ஸ்ருங்கார மண்டபம், ஒன்று  ஞான மண்டபம்,  மூன்றாவது முக்தி மண்டபம், அடுத்த நாலாவது  ஏகாந்த மண்டபம். ஸ்ருங்கார மண்டபத்தில் காமேஸ்வரனோடு பரமேஸ்வரி வீற்றிருக்கிறாள்.  அவளுடைய மந்த்ரிணிகளுடன் கலந்து ஞானமண்டபத்தில்  சர்வ ஜீவராசிகளின் ஞான நிலையை அருள்கிறாள். முக்தி மண்டபத்தில் ஜீவன் முக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். பரமேஸ்வரனை தியானித்தவர் ஏகாந்த மண்டபத்தில் காமேஸ்வரி தனித்திருக்கிறாள்.

சர்வ சாஸ்த்ர உபநிஷத்துக்களின்  சாரம் தான் சிந்தாமணிக்ரஹம்.அதை நினைத்தாலே  சகல பாபங்களும் அழியும். அம்பாளை ஸர்வாலங்கார  ப்ரியையாக,  சர்வ பூஷண பூஷிதையாக,  ஸருங்கார ரஸப்ராதானியாக,  ஸ்ரீ சக்ர ஸாம்ராஜ்ய அதிபதியாக, சங்கீத ஸாஸ்த்ர  ரசிகையாக, ரமாவாணி ஸேவிதையாக ஸ்ரீவித்யா மந்திரமயமாக இருக்கிறாள். 

அம்பாளை என்னவென்றெல்லாம் அழைக்கலாம்?  பாசாங்குசை,  சர்வ வேதாந்த  ஆச்ரிதை, கம்பீராம்ருத  ரூபிணி, மதுர ம்ருது  பாஷிணி,  பக்த வாத்சல்ய பரிமிதை, மாத்ருகாக்ஷர  மாலாலங்க்ரிணி,  தேவ நமஸ்க்ரித  வைபவி ,  ஸ்ரீ சக்ர மத்ய  த்ரிகோண  பிந்து சிவா ஸாமாஸ்யானந்தமயி,  ஏகாக்ஷர,  பஞ்ச, தசாக்ஷர,நவாக்ஷர,  பாலா மந்த்ர, மஹா ஷோடஸ அக்ஷர  மஹோன்னத  ஸ்ரீ சரணி, திவ்ய பரம மங்கள விக்ரஹ மூர்த்தி.

அவளைப்பற்றி எழுதவோ, சொல்லவோ,பேசவோ, பாடவோ, பல யுகங்கள் போதாது. ஆயிர முகங்கள் போதாது.  இரவு பகல் போதாது, கணக்கற்ற காலங்கள் போதாது. மனதால் முடிந்தவரை நினைத்துப் பார்ப்போம்.

அம்பாளுக்குப் பக்கத்தில் இருப்பது யார் தெரியுமா?  வாக் அதிபதி, வானோர்களால் வணங்கப்படும், வெண் தாமரை மலரில் வெண்  பட்டாடை உடுத்திய  கலைவாணி, ஸரஸ்வதி .  இன்னொரு புறம்   குபேரனுக்கே  செல்வமளிக்கும் நிதி தலைவி, செந்தாமரை மலரில் வீற்றிருக்கும்,  சிவந்த பட்டு உடுத்திய ஸ்ரீ தேவி, மஹாலக்ஷ்மி.  இருவரும் கவரி வீச நடுவே   மஹாராஞி அம்பிகை, திரிபுர லலிதாதேவி. ஸ்தோத்திரங்கள் சொல்வது எங்கும் எதிரொலிக்கிறது. 

தொடரும் 

  


sivan jaykay

unread,
Apr 24, 2023, 7:38:59 PM4/24/23
to amrith...@googlegroups.com

ஆத்ம வித்யா விலாசம் 41-45  -  நங்கநல்லூர்   J K  SIVAN
ஸதாசிவ ப்ரம்மேந்திரா

निन्दति किमपि न योगी नन्दति नैवापरं किमप्यन्तः ।चन्दनशीतलहृदयः कन्दलितानन्दमन्थरः स्वास्ते ॥ ४१॥
nindati kimapi na yogI nandati naivAparaM kimapyantaH | chandanashItalahR^idayaH kandalitAnandamantharaH svAste || 41||
நிந்த³தி கிமபி ந யோகீ³ நந்த³தி நைவாபரம் கிமப்யந்த: । சந்த³நஶீதலஹ்ரு’த³ய: கந்த³லிதாநந்த³மந்த²ர: ஸ்வாஸ்தே ॥ 41॥

ஞான மார்கத்தில் நான்கு படிகள்.  ,விழிப்பு, கனவு,  ஆழ்ந்த தூக்கம்,  துரீயம் ,   இந்தஉயர்ந்த  நான்காவது நிலையில் எப்போதும்  இருப்பவன்  .ப்ரம்ம ஞானி  யோகத்தில்  ஆழ்ந்து மூழ்கிய நிலை துரீயம்.   ப்ரம்மத்துடன் கலந்த நிலையில் எதற்கும் பிரம்மத்தை நினைக்கக்கூட  தேவையில்லை அவனுக்கு.   அவனுக்கு  எவரையும் தூற்றவோ,போற்றவோ அவசியமே இல்லை.  அவன் ஹ்ருதயம் குளிர்ந்த சந்தனம் மாதிரி.  சதானந்தன்  அவன்.  சதாசிவ ப்ரம்மேந்திரா  அப்படி வாழ்ந்தவர். 

सन्त्यज्य शास्त्रजालं संव्यवहारं च सर्वतस्त्यक्त्वा ।आश्रित्य पूर्णपदवीमास्ते निष्कम्पदीपवद्योगी ॥ ४२॥
santyajya shAstrajAlaM saMvyavahAraM cha sarvatastyaktvA | Ashritya pUrNapadavImAste niShkampadIpavadyogI || 42|
 ஸந்த்யஜ்ய ஶாஸ்த்ரஜாலம் ஸம்வ்யவஹாரம் ச ஸர்வதஸ்த்யக்த்வா । ஆஶ்ரித்ய பூர்ணபத³வீமாஸ்தே நிஷ்கம்பதீ³பவத்³யோகீ³ 42.

நதியைக்கடந்தவனுக்கு  படகின் உபயோகம் தேவையில்லை அல்லவா?  அது போலவே  ப்ரம்ம ஞானிக்கு, வேதம் சாஸ்திரம்  புராணம் நூல்கள்மூலம் பெரும் ஞானம் அவசியமில்லை.  அவை கூறுவது அனைத்தையும் அவன் அடைந்தாயிற்று.   எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் ஒளிவீசும்  தீபம் அவன். 

ङ्कचर्चिताङ्गस्तृणमिव विश्वं विलोकयन्योगी ।विहरति रहसि वनान्ते विजरामरभूम्नि विश्रान्तः ॥ 43॥
tR^iNapa~NkacharchitA~NgastR^iNamiva vishvaM vilokayanyogI |viharati rahasi vanAnte vijarAmarabhUmni vishrAntaH || 43||
த்ரு’ணபங்கசர்சிதாங்க³ஸ்த்ரு’ணமிவ விஶ்வம் விலோகயந்யோகீ³ । விஹரதி ரஹஸி வநாந்தே விஜராமரபூ⁴ம்நி விஶ்ராந்த: ॥ 43॥ ॥

ப்ரம்ம ஞானி   உடலை மறந்தவன்.மறந்தவன்.  காடு மலை பள்ளம் மேடு எல்லாம் ஒன்றே அவனுக்கு.  அவன்  மண், அழுக்கு, சிக்கு, சேறு  எதால்  நிரம்பி இருந்தாலும்  அந்த ஸ்மரணையே  இல்லாதவன்.  உலகை ஒரு புல்லாக மதிப்பவன்.  அவனுக்கு களைப்போ, விருத்தாப்பியமோ, மரண பயமோ எதுவுமில்லை.   சித்தர்கள் அப்படித்தான்  பித்தர்கள் போல் காணப்படுபவர்கள். .சேஷாத்ரி ஸ்வாமிகள் அப்படித்தான் திருவண்ணாமலையில் வாழ்ந்து  பைத்தியம் எனும் பட்டம் பெற்றவர் இப்படிப்பட்ட உன்மத்த நிலைக்கு  அபரோக்ஷ ஞானம் என்று  பெயர்.ப்ரம்ம ஞானியின் குணம். சகல ஜீவராசிகளையும் வித்தியாசமின்றி ஒன்றாக பரம அன்போடு பார்ப்பவன். 

पश्यति किमपि न रूपं न वदति न श‍ृणोति किञ्चिदपि वचनम् ।तिष्ठति निरुपमभूमनि निष्ठामवलम्ब्य काष्ठवद्योगी ॥ 44॥
pashyati kimapi na rUpaM na vadati na shR^iNoti ki~nchidapi vachanam | tiShThati nirupamabhUmani niShThAmavalambya kAShThavadyogI ||
பஶ்யதி கிமபி ந ரூபம் ந வத³தி ந ஶ்ரு’ணோதி கிஞ்சித³பி வசநம் । திஷ்ட²தி நிருபமபூ⁴மநி நிஷ்டா²மவலம்ப்³ய காஷ்ட²வத்³யோகீ³ ॥ 44॥

பரமஹம்ச ப்ரம்மஞானி  யோக சித்தன். அவன் கண்கள், காதுகள்,  வாய்,போன்ற புலன்கள் நமது புலன்கள் போல் இல்லை. அவற்றின்  உணர்வுகள், உணச்சிகளுக்கும் இடம் தராதவன். ஆத்ம ஞானிக்கு  எந்த சடங்கும்  நாளும்  கிழமையும்
கிடையாது.  பேச்சற்றவன். பேசினாலும் புரியாது.  புயலில் கலங்காத மலைப்பாறை போல்  உலகின் ஈர்ப்புகளால்  பாதிக்கப்படாதவன்.  பட்ட கட்டை அவன். 

जात्यभिमानविहीनो जन्तुषु सर्वत्र पूर्णतां पश्यन् ।गूढं चरति यतीन्द्रो मूढवदखिलागमार्थतत्त्वज्ञः ॥ 45॥
jAtyabhimAnavihIno jantuShu sarvatra pUrNatAM pashyan | gUDhaM charati yatIndro mUDhavadakhilAgamArthatattvaj~naH || 45||
ஜாத்யபி⁴மாநவிஹீநோ ஜந்துஷு ஸர்வத்ர பூர்ணதாம் பஶ்யந் । கூ³ட⁴ம் சரதி யதீந்த்³ரோ மூட⁴வத³கி²லாக³மார்த²தத்த்வஜ்ஞ: ॥ 45
ஆத்ம  ஞானிக்கு  ஜாதி, மதம், உறவு, சொந்தம்  எதுவும் அற்றவன். வீடு வாசல் மக்கள், அந்தஸ்து,   ஊர் பேர் அடையாளம் எல்லாம் விலக்கியவன்.  ப்ரம்ம நிஷ்டன்.  நேரம் காலம்,  இன்று நேற்று நாளை  எல்லாமே ஒன்றானவன். 
இதை படிக்கும்போது நமக்கு ஒன்று நிச்சயமாக  புரியும்.  நாம் செல்ல வேண்டிய பாதை ரொம்பவே நீளமானது, தூரமானது.

 

sivan jaykay

unread,
Apr 24, 2023, 7:39:11 PM4/24/23
to amrith...@googlegroups.com
விஞ்ஞான நௌகா - 3/9  --    நங்கநல்லூர்  J K  SIVAN
ஆதி சங்கரர்

यदानन्दरूपं प्रकाशस्वरूपं    निरस्तप्रपञ्चं परिच्छेदहीनम् ।
अहम्ब्रह्मवृत्त्यैकगम्यं तुरीयं    परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ३॥

Yad Aananda roopam prakasa swaroopam Nirastha prapancham parichcheda soonyam
Aham Brahmavruthyaikagamyam tureeyam Param Brahma nityam Tadevaaham asmi. 3
                               
யத் ஆநந்த ரூபம் பிரகாச ஸ்வரூபம் நிரஸ்த ப்ரபஞ்சம் பரிச்சேத சூன்யம்
அஹம் ப்3ரஹ்மவ்ருʼத்யைககாம்யம் துரீயம் பரம் பிரம்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 3

தேஜஸ்  ஓஜஸ் என்று சில  வார்த்தைகளைச்  சொல்கிறோமே. அது என்ன?   தேஜஸ்  என்பது  வெளியே  முகத்தில் காணும் ஒரு ஒளி.  எவன் உள்ளே  சுத்தமாக இருக்கிறானோ அந்த பளபளப்பு  வெளியே அவன் முகத்திலும்  பிரதிபலிக்கும். அகத்தின் அழகு முகத்தில் என்று பெரியோர்கள்  சொல்வதின் பொருள் இது தான். ஓஜஸ்  என்பது  ஆத்ம ஒளி. அதை தேஜஸ் மிகைப்படுத்திக் காட்டும். 

ஞானி என்றென்றும் பேரின்பம் நிரம்பிய மகிழ்ச்சியின் வடிவத்தைக் கொண்டிருப்பவன் . உலக ஈர்ப்புகளை ஒதுக்கி தன்னில்  தானாகிய ஆத்மாவை அனுபவிப்பவன்.  நம்மைப்போல் இல்லாமல்  வர்ணிக்க இயலாத  நாம் காணும் உலகை துறந்தவன்.   ஆத்ம ஞான தாகம் எப்போதும்  கொண்டவன்.  அதனால்  பேரின்பம் நிறைந்த நிலையில் காணப்படுபவன். ,பிரம்மத்தை துய்ப்பவன். 


sivan jaykay

unread,
Apr 24, 2023, 7:39:11 PM4/24/23
to amrith...@googlegroups.com

விமலியோடு  ஒரு  டீல். deal  --   நங்கநல்லூர்  J K  SIVAN 

பிருந்தாவனத்தில் எங்கும்  பசுக்கள், கன்றுகள்,  பால், தயிர், குடங்கள், வெண்ணெய் சட்டிகள்,  குடிசைகள் தான் அதிகம். மண் தெருக்களில் எங்கும் சுவர்களில்  பசுஞ்சாணங்களால் தயாரிக்கப்படும் விரட்டிகள் வட்ட வட்டமாக  கரும்பச்சை நிறத்தில் அழகூட்டின.   கிணறுகள் குளங்கள் சோலைகள்  வனங்கள் துளசி செடிகள் மற்ற இடத்தை நிரப்பின.
ஒருநாள்....
காலை வெயிலில்  சூரியன்  மேலே  ஏறி  உஷ்ணத்தை  பரப்பும் சமயம். ஒரு கோபி  வீட்டின்  பின்னால்  தோட்டம் அருகில்  ஒரு பள்ளத்தில்   நிறைய  பசும் சாணம், சிறு சிறு காய்ந்த சுள்ளிகள், வாசனை தரும் அகில் கட்டை,  உமி, சருகுகள், சந்தன  கட்டைகளும்   எல்லாம்  கலந்து  நிறைய சாணம் நிரப்பி இருக்கிறாள்.  அதை சற்று தூரத்தில் இருந்த  பெரிய  மாளிகையின் பக்க சுவர்களில் விரட்டி தட்ட வேண்டும். கிருஷ்ணன் அவள் வீட்டில் வாடிக்கையாக  வெண்ணை வேட்டையாடுபவன்.  அந்த நேரம் பார்த்து அவன் அங்கே வந்து நிற்கிறான். 
''அடே  கிருஷ்ணா, வாடா இங்கே, எனக்கு உதவி செய்கிறாயா?''  விமலி  என்கிற  கோபி  அவனை கேட்கிறாள்.
''சொல்லு அத்தை,  உனக்கு நான் என்ன செய்யவேண்டும்?  புல்லாங்குழலை இடுப்பு வஸ்த்ரத்தில் செருகிக்கொண்டு கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு கேட்டான் கிருஷ்ணன்.
''இந்தா,  இந்த கூடையில் சாணத்தை நிரப்பி என்னிடம் கொண்டு வந்து கொடு. நான் அதோ அந்த மாளிகை  சுவற்றின் அருகில் நின்று சுவற்றில் வட்டமாக வீசி விரட்டி தட்டவேண்டும். 
''போ போ, இதற்கெல்லாம் வேறே ஆள் பார், நான் செய்யமாட்டேன்''
''கிருஷ்ணா,  உனக்காக  நான்  ஸ்பெஷலாக புது பசு வெண்ணெய் கெட்டியாக திரட்டி பந்து பந்தாக சட்டியில் வைத்திருக்கிறேன், உனக்கு பிடிக்கும் என்று நினைத்து நிறைய  சேர்த்து வைத்திருக்கிறேன்.  அது உனக்கு வேண்டாமா? வெண்ணெய் உனக்கு  பிடிக்காதா?''
''அப்பிடியா, அதை ஏன் முன்னேயே சொல்லவில்லை, எங்கே கூடை, கொடு என்கிட்டே''
எவ்வளவு கூடை சாணி  நீ  எனக்கு நிரப்பி  கொண்டு வந்து கொடுக்கிறாயோ, அத்தனை உருண்டை வெண்ணெய் உனக்கு  ''
எவ்வளவு கூடை சாணம் நிரப்பி தூக்கிக் கொண்டு போய் கொடுத்தான் என்று கணக்கு வேண்டாமா?  கோபி படிக்காத வளானாலும் ரொம்ப கெட்டிக்காரி.  கிருஷ்ணனிடமே  வேலை வாங்குபவளாயிற்றே.   
வேக வேகமாக  கூடைகளை நிரப்பி கொண்டு போய் கொடுத்தான் கிருஷ்ணன்.
'எவ்வளவு கூடை தூக்கிக் கொண்டு வந்தேன் என்று என்னிடம் கணக்கு இல்லையே  என்ன செய்வது?' என்று கேட்டான் கிருஷ்ணன். 
''கிருஷ்ணா, நான் கணக்கு வைத்திருக்கிறேன்.  உன் நெற்றி கன்னத்தையே  கணக்கு நோட்டாக பண்ணிவிட்டேனே ,உனக்கு தெரியாதா?  ஒவ்வொரு  கூடை சாணி நீ கொண்டு வந்து கொடுக்கும்போதும், அதில் இருந்து ஒரு சிறு பொட்டு  எடுத்து உன் நெற்றி கன்னத்தில் எல்லாம்  இட்டு வைத்திருக்கிறேன்.  கடைசியில் எண்ணிப்பார்த்து அத்தனை உருண்டை வெண்ணை உனக்கு தருவேன்.''
''எவ்வளவு கெட்டிக்காரி நீ? '' என்று அதிசயித்தான் கிருஷ்ணன்.   அவன் முகம் பூரா  சாணிப்பொட்டு சாணி எல்லாம் விரட்டி தட்டியாகிவிட்டது. 
''எங்கே எனக்கு நீ தரவேண்டிய  வெண்ணை உருண்டைகள். நானும் நண்பர்களும் யமுனைக்கு ஓடிச்சென்று அங்கே விளையாடிக்  கொண்டே சாப்பிடவேண்டும்.சீக்கிரம்  கொடு.''
''வெண்ணையா? என்ன சொல்கிறாய் நீ கிருஷ்ணா?''
''நான் எத்தனை கூடை சாணி கொண்டுவந்து கொடுத்தேனோ அத்தனை உருண்டை வெண்ணெய்  நீ தரவேண்டுமே''
'வீட்டுக்குள் வா''. வரும் வழியில் கிருஷ்ணன் முகம் பூரா  சாணிப் பொட்டுகளை பார்த்த மற்ற கோபியர்கள்  கைகொட்டி  சிரித்தார்கள்.  ;;விமலா நீ  ஏண்டி  இப்படி  பண்ணியிருக்கிறாய் அழகிய  கிருஷ்ணன் முகத்தை?''
''நீங்கள் எல்லாம் ஏன் என்னைப்  பார்த்து சிரிக்கிறீர்கள்?'' என்று கேட்டான் கிருஷ்ணன்.
''போடா,   நீயே போய் கண்ணாடியில் உன் முகத்தைப் பார்'' என்றாள்  ஒரு கோபி. 
தன் முகத்தைப் பார்த்த கிருஷ்ணனுக்கு அடையாளம் தெரியாமல் சாணிப்பொட்டுகள். நீரால் முகத்தை அலம்பிக்கொண்டு வந்தான். எங்கே  நீ தரவேண்டிய  வெண்ணெய் . அதை முதலில் கொடு '' என்று கேட்டான் கோபி விமலியிடம்.
''என்னடா வெண்ணை, என்ன ஒப்பந்தம்? எதற்கு உனக்கு நான் உனக்கு வெண்ணெய்  தரவேண்டும்?''
''மறந்து போய்விட்டாயா  அதற்குள்?   நான் எத்தனை கூடை சாணி உனக்கு தூக்கிக்கொண்டு வந்து கொடுத்தேனோ  அத்தனை உருண்டைகள் நீ தரேன் என்று சொன்னாயே? என் முகத்தில் அத்தனை சாணிப்பொட்டுகள்  வைத்தாயே ''
''கிருஷ்ணா, எங்கே  அந்த பொட்டுகள்? இருந்தால் தானே எண்ணிப்பார்த்து தர முடியும்.  எங்கே உன் முகத்தில் ஒரு சாணிப்பொட்டும் இல்லையே. உனக்கு நான் வெண்ணை எதுவும் தரவேண்டியதில்லை''
சிறுவன் கிருஷ்ணன் கண்கள் கலங்கியது. என்ன செய்வதென்று தெரியவில்லை, புரியவில்லை.  நாக்கு தழு தழுத் தது.அழுகை வந்தது.
விமலை அவனை  அணைத்துக்கொண்டாள்.'' கிருஷ்ணா, அழாதேடா, உன்னோடு விளையாடினேன். வா  உள்ளே  உனக்கு வெண்ணை சட்டி இருக்கும் இடம் தான் அத்துப்படியாயிற்றே. வேண்டியதை நீயே எடுத்துக்கொள்'' 
கண்ணைத் துடைத்துக்கொண்டு  உள்ளே ஓடிய கிருஷ்ணன் நொடியில் சட்டியில் இருந்த வெண்ணை உருண்டைகளை ருசி பார்க்க ஆரம்பித்தான்.  அடுத்த கணமே  சட்டியோடு கிருஷ்ணன் யமுனை நதிக்கரைக்கு  ஓடினான். அங்கே வழக்கம்போல் அவன் நண்பர்கள் அவனுக்காக காத்திருப்பார்கள். இன்று வெண்ணெய்  வேட்டை திருடாமல் உழைத்தே சம்பாதித்த தாயிற்றே.  கிருஷ்ணன் அங்கே இருப்பான் என்று  அகாசுரன் ஓடிவந்தபோது அவனுக்கு  கிருஷ்ணன் கையால் மரணம் என்று தெரியவில்லை. ஒருவேளை கிருஷ்ணன் வெண்ணெய்  சாப்பிட்டு பலம் சேர்த்துக்கொண்டது அதற்காகவோ என்னவோ, திருடன் வெளியே எதையும் சொல்ல மாட்டானே. 

sivan jaykay

unread,
Apr 26, 2023, 9:28:21 PM4/26/23
to amrith...@googlegroups.com


விஞ்ஞான நௌகா   4/9 -   நங்கநல்லூர்   J K  SIVAN 

நான் தான் ப்ரம்மம் 

यदज्ञानतो भाति विश्वं समस्तं    विनष्टं च सद्यो यदात्मप्रबोधे ।
मनोवागतीतं विशुद्धं विमुक्तं    परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ४॥

Yad ajnanato bhati viswam samastham Vinashtam cha sadyo yadaatma prabodha
Manovaagatheetham visudham vimuktam Param Brahma nityam tadevaaham asmi.    4  

யத்  அஜ்ஞாநதோ பதி விஸ்வம் ஸமஸ்தம் விநாஷ்டம் ச ஸদ்யோ யদாத்மா ப்ரபோধா ॥
மநோவாগதீதம் விஶுதம் விமுக்தம் பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 4

நாம்  என்றாவது ஒரு நாள்  'நான்  தான்  ப்ரம்மம்' என்று சொல்கிறோமா?  ப்ரம்ம ஹத்தி என்று தான் மற்றவர்களை கூசாமல் திட்டுகிறோம்.  உண்மையில் நாம் தான் ப்ரம்மம். நாம் தான்  ஆத்மா.  இதை உணர  எத்தனை படித்தாலும், பிறர் சொல்லி கேட்டாலும்  எழுதினாலும் பாடினாலும்  போதவே போதாது.  தனிமையில் அமர்ந்து ஆத்ம விசாரம் பண்ணினால் ''நான்''  உண்மையிலேயே யார் ? என்று ஆராய்ந்தால் தான் கொஞ்சம் முன்னேறமுடியும்.  ரமணர்  தான் அனுபவத்தில் கண்டதை எவ்வளவோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

உலகம்  மாயையால் சூழப்பட்டது என்று புரிந்து கொள்ளவே பல பிறவிகளை எடுத்தும்நமக்கு இன்னும்  புரியவில்லை. அறிவு போதவில்லை.  இந்த  அஞ்ஞானம், அறியாமை நம்மை  ஆத்ம ஞானம் பெற முடியாமல் தடுக்கிறது.  மனம் வாக்கு காயம் இதையெல்லாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இதற்கு  அப்பாற்பட்ட,தூய  புலன்களுக்கு அப்பாற்பட்ட சுதந்திரத்தை  அனுபவிக்க  தடையாக இருக்கிறது.  தெய்வீகம் அடைய முடிந்தால் தான் நாம் தெய்வமாகலாம்.  மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பது  ரொம்ப ரொம்ப ஸர்வ  நிச்சயம். ஆனால்  வெறுமே  PBS  மாதிரி  பாடினால் தெய்வம்  ஆக முடியாது.   கடினமாக முயன்று  வைராக்கியத்தோடு  ஆத்ம வேட்கையில்  ஈடுபடவேண்டும். 


sivan jaykay

unread,
Apr 26, 2023, 9:28:21 PM4/26/23
to amrith...@googlegroups.com

ஒரு சந்திர வம்ச இளைஞன்.  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

அழியாத இதிகாச காவியம்  மஹா பாரதம். அதில் வரும் எண்ணற்ற கதா பாத்திரங்களில் மனதில் இடம் பிடிக்கும் ஒரு இளைஞன் அபிமன்யு. அநியாயம், அதர்மம், அக்கிரமம் இழைக்கப்பட்டு  பல  மஹா ரதர்களால் இரக்கமில்லாமல் கொல்லப்பட்ட   பல மஹாரதர்களை  ஆயுதமின்றி தனியாக எதிர்த்த  மஹா வீரன். இன்று வரை பலர் மனதில் எழும் ஒரு  கேள்வி எது?    சர்வமும் அறிந்த தெய்வாம்சம் பொருந்திய  கிருஷ்ணன்  எதற்காக அபிமன்யுவின்  உயிரை காப்பாற்ற வில்லை? இதன் பின் ஒரு  சில  ரஹஸ்யங்கள் இருக்கிறது.  மஹா பாரதத்தில்  வெளிப்படையாக தெரியாத பல ரஹஸ்யங்கள் உண்டு.

கிருஷ்ணனின்  தங்கை ஸுபத்ரா அர்ஜூனன் மனைவி.  அவள்  மகன்  அபிமன்யு. வீரத்தில்  அர்ஜுனனுக்கு சமமானவன்.
அபிமன்யு கருவில் இருக்கும் போது  ஒருநாள் கிருஷ்ணன் சுபத்திரையை பார்க்க வரும்போது  ''"அண்ணா, என் வயிற்றில் ஒரு மாவீரன் வளர்கிறான் உனக்கு தெரியுமா?" என்று ஆர்வத்தோடு கேட்டாள்  சுபத்ரை கிருஷ்ணனிடம்.
"ஆஹா, அப்படியென்றால் இனி உன் வீட்டில் ரெண்டு அர்ஜுனர்களா. பலே  பலே! அடேயப்பா, பாண்டவ குலத்துக்கு தான் எவ்வளவு பெருமை.  ஒரு அர்ஜுனன் இருக்கும்போதே பாண்டவர்களை எவரும் வெல்ல முடியாது அப்பறம் ரெண்டு அர்ஜுனர்கள் வேறு  என்றால் கேட்கவே வேண்டாம்...' என்று சிரித்தான் கிருஷ்ணன்.
அப்போது அங்கே அர்ஜுனன் வந்தான்.
"வா, அர்ஜுனா தக்க சமயத்தில் வந்தாய். நாங்கள் உன் வீர வாரிசை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம்" என்று அர்ஜுனனை வரவேற்றான் கிருஷ்ணன்.
"கிருஷ்ணா, கௌரவர்களோடு யுத்தம் நிச்சயம் ஒருநாள் யுத்தம் வரத்தான் போகிறது. அதில் கௌரவ சேனையின் தூண்களான பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமன், கர்ணன் ஆகியோர் எங்களை எதிர்த்து போரிடப் போகிறார்கள். அதற்கு முன்பு யுத்தரங்கத்தில் வெற்றி தரக்கூடிய அம்சங்களை பற்றி யோசித்தேன்.    சக்ர வியுஹம் அமைக்கும் எதிரியின் சேனை யை அழிப்பது பற்றி சிந்தித்தேன்.  ஒரு யுத்தத்தில் எதிரிப்படை சக்ர வியுஹம் அமைத்தால் அதை நாம் எந்த வியுஹம் அமைத்து எதிர் கொள்வது, எப்படி முன்னேற வழி என்பதை உன்னோடு கலந்து பேச விரும்பினேன் " .
''அர்ஜுனா, சக்ர வியுஹத்தை உடைத்து முன்னேறுவதில்  ரொம்ப முன்னெச்சரிக்கை தேவை. யார் யார் அதன் ஒவ்வொரு முனைப்பிலும் தாக்க கூடும், எந்த இடத்தில் முதலில் தாக்கி வியூஹத்தை உடைக்க முடியும் என்று விலாவாரியாக 
தீர்மானித்து அவர்களை தக்க முறையில் உபயோகிக்க வேண்டும். அவர்கள் அதற்கேற்ற சக்தி வாய்ந்த மஹா வீரர்களாக இருக்கவேண்டும்.'' 
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சக்ர வியூஹம்  அமைப்பு, அதை உடைத்து முன்னேறுவது  பற்றி விவரித்துக்  கொண்டி ருந்தது அத்தனையும் சுபத்ரா மட்டுமா  வெகு ஆர்வமாக கேட்டுகொண்டிருந்தாள்?அவள் வயிற்றில் இருந்து கொண்டு வீர அபிமன்யுவும் ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தான்.  இதை கிருஷ்ணன் கவனிக்க தவறவில்லை.

"உனக்கு தூக்கம் வருகிறது சுபத்ரா, இது எங்கள் பாடு, பாவம், நீ ஏன் மெனக்கெடுகிறாய். உள்ளே போய் படுத்து தூங்கு" என்று சுபத்ரையை உள்ளே அனுப்பிவிட்டான் கிருஷ்ணன்.  பிறகு அர்ஜுனனும் கிருஷ்ணனும்  சக்ர வடிவ வியுஹத்தை எப்படி உடைத்து உள்ளே யிருந்து வெளிவருவது என்பது பற்றியும் விவாதித்தனர்.

மகாபாரத யுத்தத்தில் 13ம் நாள் அபிமன்யு வீராவேசமாக துரோணரின் சக்ர வியூஹத்தை தாக்கிக் கொண்டிருந் தான். அர்ஜுனன் எங்கோ ஒரு புறம் த்ரிகர்த்தர்களை துரத்திச்சென்று அவர்களோடு போர் புரிய அர்ஜுனன் மகன் அபிமன்யு குருக்ஷேத்ரத்தில் யுதிஷ்டிரருடன் சேர்ந்து கௌரவ சேனையின் சக்ர வியூஹத்தை உடைத்து உள்ளே முன்னேறி விட்டான்.
"அபிமன்யு உள்ளே செல்லாதே, அர்ஜுனன் வந்த பிறகு உள்ளே போகலாம்” என்று யுதிஷ்டிரன் சொன்னதை அபிமன்யு, காதில் போட்டுக் கொள்ளவேயில்லை .  பாவம், அந்த சிறுவன் வெளியே வர வழி தெரியாமல் மாண்டான்.

அபிமன்யு யார் என்று முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.   கிருஷ்ணனே தெரியப்படுத்துகிறார்: 

“அர்ஜுனன் மகன் அபிமன்யு சந்திரன்  மகன் வர்ஷாவின்  அம்சம். முனிவர் கர்கரால் சாபம் பெற்றவன் அவனுக்கு 16 வயதில் மரணம் என்பது முடிவான விஷயம். மஹா பாரத யுத்தத்தில் 13வது நாள்  துரோணரின் சக்ர வியுஹத்தை  உடைத்து கௌரவ சென்னைக்குள் அவன் புகுந்த அன்று  அவன் பதினாறு வயதை பூர்த்தி செய்து விட்டான். அவனை யாரும் காப்பாற்ற முடியாது. இதற்காகவே, அவன் சுபத்ரை வயதில் இருந்தபோதே அவன் சக்ர வியூஹத்தில் இருந்து வெளியேறும் வழியை கேட்டு தெரிந்து கொள்ள முடியாமல்  இருக்க சுபத்ரையை தூங்கச் செய்தேன். அவனுக்கு அர்ஜுனன் உதவியோ கிருஷ்ணன் உதவியோ கிடைக்காதவாறு அவன் தனியே விடப்பட்டான்.  இது விதி. வருவதை எதிர்கொள்ள தயங்க கூடாது"

தனது தாய் சுபத்ரையை விட திரெளபதி மீது அதிக பாசம் கொண்ட அபிமன்யு, திரொபதியின் சபதத்தை நிறை வேற்று வதற்காக தனது 16 வது வயதில், திருமணம் முடிந்த கையோடு போர்களத்திற்கு புறப்பட்டான். மகாபாரத போரின் போது எத்தனையோ வீரர்கள் இருந்தாலும், தனது அசுர வேகத்தால் கெளரவர்கள் படையை நடுங்க வைத்தான் அபிமன்யு.
 அர்ஜூனன் உள்ளிட்ட பலரும் எதிர்க்க தயங்கிய பீஷ்மர், கெளரவர்களின்  சேனாபதி துரோணர்,  கௌரவ ராஜா  துரியோதனன் என அனைவரையும் கதிகலங்க வைத்தான் அபிமன்யு. அத்தகைய மாவீரன், கடைசி வரை சக்கர வியூகத்தில் இருந்து வெளியே வரும் வழியை மட்டும் கற்றுக் கொள்ளவே இல்லை. அபிமன்யுவின் மரணம், அவனது பெரியப்பாவான கர்ணன் கையாலேயே நடக்க போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்தும், காப்பாற்ற முடிந்தும், அதை  கிருஷ்ணன்  காப்பாற்றவில்லை. 

சந்திரனின் வம்சம்  அவன் மகன் போதாவுடன் பூமியில் துவங்கியது.  அந்த வம்சத்தில் வந்த சந்தனு, சத்தியவதி என்ற மீனவ பெண்ணை காதலித்து, அவளை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டான். சத்யவதிக்கு பிறகு அவளுக்கு பிறந்த வாரிசுகளே  அஸ்தினாபுரத்தை ஆட்சி செய்வார்கள் என வாக்கு கொடுத்தால் மட்டுமே தனது பெண்ணை திருமணம் செய்து வைக்க சம்மதிப்பதாக நிபந்தனை விதித்தான் சத்யவதியின் தந்தை. சந்தனுவும் இதை ஏற்றுக் கொண்டதால் சந்தனு - சத்தியவதியின் திருமணம் நடைபெற்றது. 

சந்தனுவுக்கு ஏற்கனவே திருமணமாகி  தேவ வ்ரதன்  என்ற பிஷ்மர் என்ற மகன் இருந்தான்.  சந்தனுவுக்கும், சத்யவதிக்
கும் இரண்டு மகன்கள் பிறந்தனர். பீஷ்மர் இளவரசராக இருக்கும் போது, சத்தியவதியின் மகன்களை எப்படி இளவரசர் களாக  முடியும்? பட்டம் சூட்டிக்கொள்ள முடியும்?  தந்தையின் மன வேதனையை போக்க, ''நான் எந்த சூழலிலும் அஸ்தினாபுரத்தின் ஆட்சி பொறுப்பில் உரிமை கோர மாட்டேன்'' என தந்தைக்கு வாக்களித்தார் பீஷ்மர். அதுமட்டு
 மின்றி தனக்கு பிறக்கும் பிள்ளைகளால் அஸ்தினாபுரத்தின் ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக தான் திருமணமே செய்து கொள்ள போவதில்லை என பீஷ்மர்  பிரம்மச்சாரியாக வாழ்ந்தார். 

சத்யவதிக்கு பிறந்த மகன்கள் இருவரும் இளம் வயதிலேயே உயிரிழந்தனர். இதனால் அஸ்தினாபுரத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்க ஆள் இல்லாமல் போனது. அரச குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்பதற்காக வேத வியாசர் மூலம் அம்பிகாவிற்கு திருதிராஷ்டிரரும், அம்பலிகாவிற்கு பாண்டுவும் பிறந்தனர். திருதராஷ்டிரர், அஸ்தினாபுரத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றதால் சந்திர வம்சம் முடிவடைந்தது.  சந்திரனுக்கு கொடுத்த வாக்கின் படி அவன்  வம்சம் மீண்டும் பூமியில் நிறுவப்பட வேண்டும் என்பது கிருஷ்ணன் விருப்பம். அதற்கு சந்திரனின்   மகன் பூமியில் பிறக்க வேண்டும்.  ஆனால் அவனுக்கு  ஆயுசு 16 ஆண்டுகள் மட்டுமே. இதை  சந்திரன் ஏற்றுக்கொண்டான்.  சந்திரன்  மகன் அபிமன்யுவாக 16 ஆண்டுகள் மட்டுமே பூமியில் வாழ்ந்தான்.

சக்ர வியூகத்தை அபிமன்யு முழுவதுமாக அறிந்தால் அவனை யாராலும் வீழ்த்த முடியாது. பிறகு சந்திரனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் போய் விடும் என்பதால், அர்ஜூனனை முழு சக்ர  வியூகத்தையும் சொல்ல விடாமல்  கிருஷ்ணன் தடுத்ததால்  16 வயது அபிமன்யு உயிரிழப்பதையும் யாராலும்  தடுக்க முடியாமல் போனது.

அர்ஜூனனின் ஆற்றல் முழுதாக  வெளிப்பட வேண்டுமானால் அவனது அருமை மகன் அபிமன்யு இருக்கக்கூடாது. அதுவும் ஒரு காரணம்,   அபிமன்யுவின் மரணத்தை  கிருஷ்ணன் தடுக்காமல் இருந்ததற்கு.  அதுவரை பெயரளவிலேயே போரில் பங்கேற்று வந்த அர்ஜூனன், அபிமன்யு கொல்லப்பட்ட அடுத்த நாள் முதல், மகன் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் விதமாக கெளரவ படைகளை ஆவேசமாக தாக்க துவங்கினான். கெளரவர்கள் படை அழிந்து, போரும் முடிந்தது.,பாரத போர் முடிவுக்கு  முக்கிய காரணம் அபிமன்யுவின் உயிர்த்  தியாகம் முக்யமான  திருப்புமுனை.

அபிமன்யுவின் இறுதி நாளில் அவன்  மனைவி உத்திரா கருவுற்றிருந்தாள். பாரத யுத்தத்தின் 18 வது நாளில் மற்ற பாண்டவர்களின் வாரிசுகள் அனைவரும் கொல்லப்பட்டனர். அபிமன்யு இறந்த பிறகு, அவருக்கு பிறந்த மகன் தான் பரிக்ஷித்.  பாண்டவர்கள் அரசாட்சி துவங்கியது.  பாண்டவர்கள் காலம் முடிந்ததும் பரிஷித், அஸ்தினாபுரத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றான். சந்திர வம்சம் மீண்டும் பூமியில் உதயமானது. சந்திரவம்சம் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்பதற்காகவே, தனது அருமை மருமகனான அபிமன்யுவின் மரணத்தை பற்றி அறிந்தும் கிருஷ்ணரால் தடுக்க முடியாமல் போனது. அதே சமயம்  அவன் மகன் உயிரைக் காப்பாற்றி பரீக்ஷித் ராஜாவானான்.


sivan jaykay

unread,
Apr 26, 2023, 9:28:57 PM4/26/23
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்   J K  SIVAN 

பரமேஸ்வரி 

அம்பாளை  நேரில்   தரிசிக்க நாம்  அவ்வளவு  பாக்யசாலிகள் இல்லை.   அருவமான அவள் உருவம் பல விதமாக படங்களில் பார்க்கிறோம். சிலைகளாக வணங்குகிறோம்.  எல்லாமே  அழகு நிறைந்து இருக்கிறது.  வைரத்தை  எந்த பக்கம்  பார்த்தாலும்  ''டால்'' அடிக்கிறமாதிரி. அம்பாளைப்  பற்றி  மஹா பெரியவா சொல்வது நமக்கு  ரொம்ப  சௌகர்யமாக இருக்கிறது. அவரே  காமாக்ஷி ஸ்வரூபம்.  மஹா பெரியவா  சொல்வது:

''அம்பாளுடைய ரூபம் எப்படி இருக்கும்னு   உருவகப்படுத்த ஒரு  ஐடியா.    ஒரு நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற
 ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால், அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது? அன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பார்க்காதவா  யோசனை பண்ணிப் பாருங்கோ   அந்த சந்தோஷத்தில்  அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது. சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது.  நூறு பேர்  வேண்டாம்.  முடியாது நம்மால்.  ஒரு  பத்து பேருக்காவது  போடறமா?   ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவன்  கிட்டேயே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கிறதே. மகா பாபங்களைச் செய்து,  காரியத்தில் செய்யாவிட்டாலும்  மனஸினால் மஹா பாப கார்யங்களை விடாமல் நினைத்து, ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணேசுவரியான அம்பாள்தான்.  அவள் முகம்  எப்படி  ஜீவனோட சந்தோஷத்தில்  கொப்புளிக்கும்?  ஒரு கணம் கண்மூடி  யோசித்தால்  தானாகவே  கை  சிரத்தின் மேல் ஏறி  அவளை மனப்பூர்வமாக  நன்றியோடு வணங்கும்.

 பராசக்தியின்  அன்பையும், அதில் உருவாகும் ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை  பண்ணக் கூட முடியாது அதை   எப்படி நான் விவரிக்க முடியும்?  அம்பாள் ஸெளந்தரிய ஸ்வரூபம்  ஆச்சே.   அதால்  தானே ஸெளந்தரிய   லஹரி என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் பாடியிருக்கிறார்.. இத்தனை ஸெளந்தரியம், லாவண்யம் அவளுக்கு எப்படி வந்தது?  அன்புதான் அழகாகிறது. காருண்யம்தான்  லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல. கொஞ்சம் கோபம் வந்தால், துளி ஜுரம் வந்தால், சரீர அழகு தங்குமா?,  தாங்குமா?

 அம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள். எந்த பக்தருக்கு  எந்த ரூபத்தில்
 மனசு ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் புரிய  பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள். ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, துர்க்கை, காளி என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசு.  வேறு  வேறு ரூபம். ஒவ்வொரு
 ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது.

மந்திரம் என்பது ஒரு சப்தக் கோவை. அக்ஷரங்களின் கூட்டம். பல வடிவங்களில் இருக்கிற அம்பாளே பல சப்தங்களாகவும், அக்ஷரங்களாகவும் இருக்கிறாள்.  காளிதாஸர் அவளை  ''ஸர்வ வர்ணாத்மிகே, ஸர்வ மந்த்ராத்மிகே'' என்று 'சியாமளா தண்டகத்தில்'  ஸ்துதி  செய்கிறார். வர்ணம்  என்றால்  நிறம் மட்டும்  அல்ல. ''அக்ஷரம்'' என்றும்  அர்த்தம். ஒலி வடிவான அக்ஷரங்களும், ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான். அவை ஒன்றுக் கொன்று நிரம்ப நெருக் கமான சம்பந்தம் உடையவை. ஸயன்ஸ் நிபுணர்கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள். ஜலத்தின்  அருகில்  பல விதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகளைப் (vibration) பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன. நாதத்துக்கு  ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது.

ஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன. இதை விசி     த
ரங்கம் என்பார்கள். ஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பது  போல் விழுகிற சப்தங்களை முகுளம் என்பார்கள். இப்படிப் பலவகைப்  பட்ட சப்தங்களையெல்லாம் ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்குப் பெயர் மாத்ருகா என்பது .மாத்ரு என்றால் தாயார் என்பது தெரியுமே.  சப்தமாகவும், எழுத்தாகவும் அம்பாள் இருக்கிறாள். இவற்றில் சில சப்தக் கோவைகளை விடாமல் ஜபிக்கும்போது, அவற்றுக்குறிய ரூபங்களும் பிரத்யக்ஷமாகின்றன. இப்படிப் பட்ட சப்தக் கோவைகளைத்தான் மந்திரம் என்கிறோம். அவை மிக சக்தி வாய்ந்தவை.

மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான். கை கால் முதலான அவயங்களோடு ஆயுதங்களைத் தரித்த வடிவங்களைப் போலவே எல்லா மந்திரங்களும் அவள் வடிவம்தான். அதோடுகூட, இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட சித்தத்தோடு தீவிரமாக ஜபம் செய்தால், அவளே அந்தந்த மந்திரத்துக்குரிய ரூபத்தில், சரணாகதி அவயவங்களுடனும் ஆயுதங்களுடனும் முத்திரைகள் முதலியவற்றுடனும் தரிசனம் தருவாள். இந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலம் பிரணவம்.(''ஓம்'')  அதிலிருந்து இந்த நாம ரூபப் பிரபஞ்ஜம் முழுக்க தோன்றியது.   நாத ஸ்வரூபிணியான அம்பாளே ஒங்காரமாகிய அந்தப் பிரணவமும் ஆவாள். அ,உ,ம மூன்றும் சேர்ந்து ஒம் என்று ஆகிறது.  'அ' என்பது சிருஷ்டி; ' உ' என்பது  ஸ்திதி, பரிபாலனம், 'ம'  என்றால்  சம்ஹாரம் என்பார்கள். அதனால்  படைத்தல் காத்தல்  அழித்தல்  ஆகிய முத்தொழிலும் செய்யும் மூல சக்தியே பிரணவம். இதையே அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால் வேறு உருவம் கொள்கிறது:  உ+,ம+ அ என்று கலந்து  ''உமா''  ஆகும். உபநிஷதமும் அவளை உமா ஹைமவதி என்றே போற்றுகிறது.

sivan jaykay

unread,
Apr 26, 2023, 9:28:58 PM4/26/23
to amrith...@googlegroups.com
ஆத்ம வித்யா விலாசம் 46-50  -  நங்கநல்லூர்   J K  SIVAN
ஸதாசிவ ப்ரம்மேந்திரா

 उपधाय बाहुमूलं परिधायाकाशमवनिमास्तीर्य । प्रस्वपिति विरतिवनितां परिरभ्यानन्दपरवशः कोऽपि ॥ ४६॥
upadhAya bAhumUlaM paridhAyAkAshamavanimAstIrya |prasvapiti virativanitAM parirabhyAnandaparavashaH ko.api || 46||
உபதா⁴ய பா³ஹுமூலம் பரிதா⁴யாகாஶமவநிமாஸ்தீர்ய । ப்ரஸ்வபிதி விரதிவநிதாம் பரிரப்⁴யாநந்த³பரவஶ: கோऽபி ॥ 46॥ 

வானமே கூரை, பூமியே  பாய் என்று கேள்விப்பட்டதுண்டு.  ப்ரம்ம ஞானியைப் பொறுத்தவரை  ஆகாசமே அவன் ஆடை, படுத்தால்  அதுவே  அவன் போர்வை.  பூமிதான் படுக்கை,  கை  தான் தலைகாணி.   வைராக்கியம் தான் வாழ்க்கைத் துணை.  ஆனந்தமாக தூங்குகிறான்.  பிரம்மானந்தம்  தான்  வாழ்க்கை லக்ஷியம். 

गतभेदवासनाभिः स्वप्रज्ञोदारवारनारीभिः ।रमते सह यतिराजस्त्रय्यन्तान्तःपुरे कोऽपि ॥ 47॥
gatabhedavAsanAbhiH svapraj~nodAravAranArIbhiH |ramate saha yatirAjastrayyantAntaHpure ko.api || 47||
க³தபே⁴த³வாஸநாபி:⁴ ஸ்வப்ரஜ்ஞோதா³ரவாரநாரீபி:⁴ । ரமதே ஸஹ யதிராஜஸ்த்ரய்யந்தாந்த:புரே கோऽபி ॥ 47॥ 

சதாசிவ பிரம்மேந்திரர் இந்த ஸ்லோகத்தில் துறவிகளின் ராஜாவை ஒரு குடும்பஸ்தனாக  சித்திரிக்கிறார். உபநிஷத் தான்  அந்தப்புரம்  அதில் பிரவேசித்து  சாஸ்திரங்கள் எனும்  பணிப்பெண்களின்  சேவையை பெறுகிறார்.  சத்யம் ஒன்றைத்தவிர மற்றது அறியாத பிரம்ம ஞானி  எந்த பேத வாசனைகளும் அற்றவன்.  வேத சாஸ்த்ர உபநிஷதம் எனும் அந்தப்புரத்தில் தான் மற்றவர் எனும் பேதம் இன்றி  சுகத்தை அனுபவிபவன் என்கிறார்.   நம்மை  பூர்வ ஜென்ம வாசனை என்று சொல்லப் படும்  ஸம்ஸ்காரங்கள் பல வித துன்பத்தில் ஆழ்த்துகிறது.  ப்ரம்ம ஞானி இதெல்லாம் கடந்தவன்.  அந்தப்புரத்து ராணி மாதிரி சுகவாசி என்கிறார்  சதாசிவ பிரம்மேந்திரர். 

वैराग्यविपुलमार्गं विज्ञानोद्दामदीपिकोद्दीप्तम् ।आरुह्य तत्त्वहर्म्यं मुक्त्या सह मोदते यतिराट् ॥48॥
vairAgyavipulamArgaM vij~nAnoddAmadIpikoddIptam |Aruhya tattvaharmyaM muktyA saha modate yatirAT || 48||
வைராக்³யவிபுலமார்க³ம் விஜ்ஞாநோத்³தா³மதீ³பிகோத்³தீ³ப்தம் । ஆருஹ்ய தத்த்வஹர்ம்யம் முக்த்யா ஸஹ மோத³தே யதிராட் ॥ 48॥ 

துறவிகளில்  சக்ரவர்த்தியான  ப்ரம்ம ஞானி  வைராக்கியம் எனும்  விசாலமான நீளமான  பாதையில்  ஆத்ம  ஞானம் எனும்  பிரகாசமான ஒளி தரும் விளக்குடன் பயணம் செயகிறவன்.  சத்யம் எனும்  பெரிய  மாளிகையில் வசிப்பவன்.    அரண் மனைக் குள் குடியேறி, முக்தியெனும் ராணியும்  சுகமாக  இருப்பவன். 

विजनतलोत्पलमालां वनितावैतृष्ण्यकल्पवल्लीं च ।अपमानामृतगुटिकामात्मज्ञः कोऽपि गृह्णाति ॥ 49॥.
vijanatalotpalamAlAM vanitAvaitR^iShNyakalpavallIM cha |apamAnAmR^itaguTikAmAtmaj~naH ko.api gR^ihNAti || 49||
விஜநதலோத்பலமாலாம் வநிதாவைத்ரு’ஷ்ண்யகல்பவல்லீம் ச । அபமாநாம்ரு’தகு³டிகாமாத்மஜ்ஞ: கோऽபி க்³ரு’ஹ்ணாதி ॥ 49॥

49.   ஆத்ம  ஞானி  யாருமே  இல்லாத,  அணுகாத, அமைதியான  தனிமையான இடத்தை  விரும்புபவன்.   அது தான் அவனுக்கு  நறுமண மலர் மாலை, அதுவே அவனது தியானத்துக்கு  ஏற்ற ஜபமாலை.   மண்ணாசை பெண்ணாசை, பொன்னாசை  எல்லாம் வெறுத்த அகம்பாவமில்லாத, அவன் நிலைப்பாடு  தான்  நினைத்தது தரும் கற்பகக்  கொடி, பிறர்  தன்னை இகழ்வது, வெறுப்பது, அவமதிப்பது போற்றுவது புகழ்வது  எல்லாம் அவனுக்கு  அம்ருத  ஜீவ  சஞ்சீவனி மாத்திரை.  அவன் பசி தூக்கம் தாகம்  அற்றவன். ப்ரம்மானந்தத்தில்  மூழ்கி இருப்பவன். 

न निषेधति दोषधिया गुणबुद्ध्या वा न किञ्चिदादत्ते ।आविद्यकमखिलमिति ज्ञात्वोदास्ते मुनिः कोऽपि ॥ 50॥na niShedhati doShadhiyA guNabuddhyA vA na ki~nchidAdatte |Avidyakamakhilamiti j~nAtvodAste muniH ko.api || 50||
 ந நிஷேத⁴தி தோ³ஷதி⁴யா கு³ணபு³த்³த்⁴யா வா ந கிஞ்சிதா³த³த்தே । ஆவித்³யகமகி²லமிதி ஜ்ஞாத்வோதா³ஸ்தே முநி: கோऽபி ॥ 50

50. ஆத்ம ஞானிக்கு  எல்லாம் ஒன்று.  இது தோஷம், தீங்கு இழைப்பது என்று எதையும் அவன்  தள்ளுவதில்லை, வெறுப்பதில்லை.  இது ரொம்ப நல்லது  அவசியமானது என்ற எதையும் தேடுவதில்லை.  தேவையும் எதிலும் கிடையாது.  தன்னைச் சுற்றிலும் இந்த பிரபஞ்சத்தில்  காணப்படுவது அவித்யை,  அஞ்ஞானம்  என்று  உணர்ந்தவன். ஆகவே  எதையும் அவன் லக்ஷியப்படுத்துவதில்லை . 


sivan jaykay

unread,
Apr 26, 2023, 9:29:05 PM4/26/23
to amrith...@googlegroups.com
மஹா பெரியவா மணி மொழிகள்:  -  நங்கநல்லூர் J K  SIVAN 

மஹா  பெரியவாவின்  மணி மொழிகளை அடிக்கடி  அனுபவிக்கும்  பாக்யம் நமக்கு இருக்கிறது. அதை எதற்கு கோட்டை விட வேண்டும்? என் ஆனந்தத்தை, நான் அனுபவித்த  இன்பத்தை உங்களுடன் மீண்டும் சுகமாக  ரசிக்கிறேன்:

சொல்லுங்கோ  மஹா பெரியவா?  அடிக்கடி  சத் சித்  ஆனந்தம் என்று  கேட்கிறேன், திருப்பி சொல்கிறேன். அதை கொஞ்சம் எனக்கு புரியும்படியாக  சொல்லுங்கோ என்று நமஸ்கரித்து வேண்டுகிறேன்.

'சொல்றேன் கேளுடா; 
‘சத் சித் ஆனந்தம்’ என்று  நீ சொல்கிறபடி நானும் கேட்டிருக்கிறேன். சச்சிதானந்தம் என்று சொல்லிக் கொண்டும் இருக்கிறேன்.  இதற்கு அர்த்தம் என்ன?  அநேகம் பேருக்குத் தெரியவில்லை.  தெரிந்திருந்தாலும்   ஆராய்ந்து  புரிந்து கொண்டிருப்பவர்கள் சில பேர்தான்.
 ‘சத்’ என்பது ஒரு புறம் இருக்கட்டும். ‘சித்’ என்பது தான் ஞானம்.   மௌன குரு தக்ஷிணா மூர்த்தி காட்டிக் கொண்டு இருக்கும்படியான முத்திரைக்குச் சின்முத்திரை என்று பெயர். ஆனந்தம் பொங்கி அடங்கும் போது ஞானம் பூர்ணமாக நிறைந்திருந்தால் அதுதான் சாந்தம். ஞானம் நிறைந்தவனிடம் ஆனந்தமும்  நிறைந்திருக்கிறது என்று அர்த்தம். ஞானம் நிறைந்து ஆனந்தமும் நிறைந்து, அடங்கியிருக்கும் படியான தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில்தான் அவரைப் போலவே உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பெரியோர்கள்  ஓம்  நமசிவாய என்று  பஞ்சாக்ஷர ஜபம் பண்ணுவார்கள். ஜபம் பண்ணுவது தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில் தான் எப்போதுமே.  தரிசனம் பண்ணுவது ஆனந்தக் கூத்தன் நடராஜமூர்த்தி  சந்நிதானத்தில்.
பிக்ஷாடனமூர்த்தி விக்ரஹம்  பார்த்திருக்கிறீர்களா?   அதோமுகமாக இருண்டு விரலைக் காட்டிக் கொண்டிருக்கும்படியான முத்திரையைச் சின்முத்திரை என்று சொல்லுகிறார் என்று நினைக்கிறேன். பிக்ஷாடன மூர்த்தியின் ஒரு கையில் இரண்டு கால்களையும் தூக்கிக்கொண்டு ஒரு குட்டிமான் நிற்கும்.   இவர் கையை வைத்துக் கொண்டிருக்கும்படியான முத்திரையை அது பார்த்துக் கொண்டு நிற்கிறாற்போல இருக்கும். 
‘இதோ உனக்கு ஆகாரம்இருக்கிறது பார்’ என்று ஸ்வாமி சொல்வது போல் அந்த இரண்டு விரலையும் அதனிடம் காட்டிக் கொண்டிருப்பது போல இருக்கும். ஒருபுல்லை அதற்குக் காட்டுகிற மாதிரி, ‘உனக்கு ஒரு வஸ்து இருக்கிறது’ என்று சொல்கிற மாதிரி இருக்கிறது. இப்படி அனேகம் மூர்த்திகள்.

 பாபத்தை ஒரே க்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு.  அதற்கு இரண்டு எழுத்துக்களாலான ஒரு பெயர். ''சிவ'' எனும்  நாமம். சகல வேதங்களுக்கும் மத்தியில் இருப்பது. அதுவே வேதங்களின் ஜீவரத்னம். கோயிலில் மஹாலிங்கம் போலவும், தேகத்தில் உயிர் போலவும் ''சிவ''எனும்  நாமம் வேதங்களின் மத்தியில் இருக்கிறது. அதை வாக்கினால் சொல்ல வேண்டும். யார் சொல்ல வேண்டும்? மனிதனாகப் பிறந்தவன் சொல்ல வேண்டும். ஊமையாக இல்லாத எவனும் சொல்லலாம். அதைச் சொல்லுவதற்காகத்  தான் நாக்கு இருக்கிறது. மனிதன் அதைச் செய்யாவிட்டால் ‘நாக்கினால் செய்யக் கூடியதை இவன் செய்யவில்லை. இவனுக்கு நாக்கு கொடுத்தது பிரயோஜனமில்லை’ என்று பரமேச்வரன் திரும்பி வாங்கி விடுவான். ஆகவே அதை எல்லோரும் சொல்லியாக வேண்டும். அதை ஒரு தரம் சொன்னால் போதும். வேறொரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே அது பாபத்தைப் போக்கிவிடும்.  பஞ்சாக்ஷரம் எனும் ஐந்தெழுத்து மந்திரம்  ஓம்  நமசிவாய..

sivan jaykay

unread,
Apr 26, 2023, 9:29:24 PM4/26/23
to amrith...@googlegroups.com
மணித்வீபம் 3 - நங்கநல்லூர்  J K. SIVAN 
காமாக்ஷி தாசர் ஸ்ரீ ஸ்ரீனிவாச ஸ்வாமிகள் 

இது  மனிதர் கண்களுக்குத்   தெரியாத ஒரு தீவு. அம்ருத சாகரத்தின் நடுவில்    அம்பாள் ஸ்ரீ லலிதையின்  சிந்தாமணி கிரஹம் கோபுரங்கள் கொண்ட கோட்டையாக உள்ளது. நவரத்ன கற்களால் பல ப்ரஹாரங்களுடன் கட்டப்பட்டுள்ளது   இந்த  அம்பாளின்  வாசஸ்தலம்.  பல மந்திரிணிகளும் தேவரதைகளும் சூழ ஸ்ரீ சக்ர ராஜகுமாரியாக அம்பாள் லலிதா அமர்ந்திருக்கிறாள். அவள் ஆயிரம் பெயர்களால் வணங்கப்படுகிறாள். இரக்கமும், பக்தியும், பாசமும் கொண்டவள் . தீய சக்திகளை அழிப்பவள்.   யாராலும் இவளை வர்ணிக்க முடியாத நிலையில், மூகர் , சங்கரர், காளிதாசர், துர்வாசர், வியாசர் போன்றவர்கள் பாடிய, எழுதிய ஸ்தோத்ரங்களை அனுபவித்து நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

 தாயின் மீதுள்ள குழந்தையின் அபரிமிதமான அன்பின் வெளிப்பாடே தாங்கள் எழுதியிருப்பது என்கின்றனர் மஹா கவிகள்.  பக்தியுடன் பராசக்தியை நினைத்து அவளது தாமரைப்  பாதங்களை மனதால் மட்டுமே நம்மால்  வணங்க முடியும்.
லோகமாதா காமேஸ்வரியின் சிந்தாமணி க்ரஹத்தின் சிம்ஹாசனத்தின் நான்கு கால்களாக பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் மற்றும் ஈஸ்வரன்  தாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.   சிம்மாசனத்தின் மேல் பகுதி சதாசிவன். ஸ்ரீ லலிதாம்பாள் பஞ்சப்ரேதாவாகவும், மஞ்சாதி சயனியாக  சஹஸ்ரநாம பிரசித்தி பெற்ற வைபவ கம்பீரருடன் சிம்ஹாசனத்தில் ஸ்ருங்கார ரசபிரதானியாகவும் மிக அழகாக  அருள் பாலிக்கிறாள். 

காஞ்சி காமகோடி பீடத்தின் 20வது ஜகத் குரு மூகாசார்யர் இப்படி அம்பாளை தரிசனம் செய்தவர். இவர் இயற்றிய மூக பஞ்சசதி ஒரு அற்புதமான காவியம். அவசியம் எல்லோரும் ஒரு தடவையாவது படித்து பயன் பெறவேண்டியது. வாய் பேச இயலாத  மூகர்  அம்பாள் அருளினால் பேசும் சக்தி பெற்றவர்.

எந்த ஜென்மத்திலோ  செய்த  புண்ய பலனாக நாம் ஒரு தடவையாவது அம்பாளை நினைக்க பாக்யம் செய்திருக்க 
வேண்டும்.  அம்பாள் தியானத்தில் முழு மூச்சாக  ஈடுபடுபவனுக்கு  பசி தாகம், தூக்கம், உலக இன்பம் துன்பம், எதுவுமே இல்லை. தன்னை மறந்து அம்பாளின் திருவடியிலேயே இணைந்து விடுகிறான். அவனால் மட்டுமே  மணித்வீபத்தை கற்பனை செய்து பார்க்க இயலும்.  சிந்தாமணி க்ரஹத்தில்  அம்பாளை மனக்கண்ணால்  காண  இயலும்.

அம்பாளின் ஸ்ரீ சக்ர சாம்ராஜ்யத்தில்  ஒன்பது விதமான ஆவரணங்கள். அவற்றை காக்கும் பாலகிகள், சப்த ஆகர்ஷிணி, ஸ்பரிஸ  ஆகர்ஷணி ,  ரூப  ஆகர்ஷணி , ரஸாகார்ஷிணி என்ற நான்கு  த்வார பாலகிகள் காவல் காக்கிறார்கள். தேவாதி தேவர்கள் காலம் காலமாக தவமிருந்து  அம்பாளை தரிசிக்க காத்திருக்கிறார்கள். அவர்களின் லோகமாதா ஸ்துதி எங்கும் எதிரொலிக்கிறது. அம்பாளின் தாய்க்  கருணையால்  பிரபஞ்சம் ரக்ஷிக்கப்படுகிறது. 

மணி த்வீபத்தை,  அதில் சிந்தாமணி க்ரஹத்தை, அதில் உறையும் அம்பாளை, அவள்  நவாவரண ப்ரஹார நவரத்ன மாளிகையை, அவள் சிம்ஹசானத்தை, அதில் காட்சி தரும் சிவந்த ஆடை அணிந்த அம்பாளை மனதில் நினைக்க முடிந்தால் அதுவே ஜென்ம சாபல்யம். பிறவிப்பயன். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நினைத்து மனத்தால் வணங்குவோம். அவளை நினைத்துக்கொண்டே நமது மற்ற காரியங்களைச் செய்வோம். 

சர்வ ஸக்தி பீடங்களில் ஸ்ரேஷ்டாமாக காஞ்சிபுரத்தில் காமாக்ஷியாக அம்பாள் நமக்கு அருள்பாலிக்கிறாள். ஆதி சங்கரர் முதலாக  பரமாச்சாரியார் வரை  எத்தனையோ புண்ய புருஷர்கள் தரிசித்து அருள் பெற்ற  தெய்வம் அவள்.  

காஞ்சி பரமாச்சார்யருக்கு முன்பாக  காமகோடி பீடத்தை அலங்கரித்த ஜகதகுரு 66வது பீடாதிபதிக்கு கார்வாராக இருந்த ஸ்ரீ வெங்கட்ராம அய்யருக்கு ஐம்பது வயதுக்கு மேல் பரமாச்சாரியார் அருளால் ஒரு மகன் பிறந்து ஸ்ரீனிவாசன் என்ற நாமம் பெற்று பின்னர் காமாக்ஷி அருளால், பரமாச்சார்யரின் அருளால் காமாக்ஷி தாசர் என பாராட்டு பெற்று அம்பாளின் அருள் ப்ரசாததைகள் அநேக  நூல்களை  இயல்பாக எழுதும் பாக்யம் பெற்றவர்.  அன்னாரின்  ஜெயந்தி மஹோத்சவம் நாளை 27.4.2023  காலை  7 மணி முதல் மாலை  5.30 வரை  மேற்கு மாம்பலம்  பாண்டியன்  ஹாலில் நடைபெறுகிறது.  காமாக்ஷி தாசர் மணித்வீபம்,  சிந்தாமணி க்ரஹத்தை  அம்பாள் அருளால் அனுபவிக்க கொடுத்துவைத்தவர். அவர் எழுதிய மணித்வீபம் எனும் சிறு நூலில் இருந்து தான் இதுவரை 3 சுருக்கமான கட்டுரைகள் எழுதினேன். 

எனக்கு இன்னொரு பாக்யம் என்ன தெரியுமா?
காமாக்ஷி தாஸர்  ஸ்ரீனிவாசன் என்னைவிட சில மாதங்களே மூத்தவர் என்றாலும் இதுவரை அவரைப் பற்றி அறியாதிருந்த எனக்கு அவரது சிறந்த பக்தர்களிலொருவரான  ஸ்ரீ  வி . ராதாகிருஷ்ணன், என்னை நங்கநல்லூரில் நேரில் வந்து சந்தித்து காமாக்ஷி தாஸரின் 2023 வருஷ ஜெயந்தியில் பங்கு பெற  அழைத்தது. அவர் மூலம் தான் காமாக்ஷி தாசரைப் பற்றி அறியும் பாக்யம் கிடைத்தது.   நானும்  என் மனைவியும்  இந்த  ஜெயந்தி வைபவத்தில்  தம்பதி பூஜைக்கு அழைக்கப்பட்டது எனக்கு நினைத்துக்கூட பார்க்காத ஒரு பெரும் பாக்யம். இப்போதெல்லாம்  பலர் எங்களை பார்வதி பரமேஸ்வர பூஜைக்கு அழைக்கும் போது பரமேஸ்வரனை, பரமாச்சார்யரை நினைத்து மனதால் நன்றி  கலந்த நமஸ்காரத்தை செலுத்துகிறேன்.

sivan jaykay

unread,
Apr 26, 2023, 9:29:24 PM4/26/23
to amrith...@googlegroups.com
விஞ்ஞான நௌகா -  5/9 -  நங்கநல்லூர்  J K  SIVAN 


निषेधे कृते नेति नेतीति वाक्यैः    समाधिस्थितानां यदाभाति पूर्णम् । अवस्थात्रयातीतमद्वैतमेकं    परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ५॥

Nishedhe krute neti neteeti vakyaih Samadhisthithaanaam yadaabhaathi poornam Avasthaathrayaatheetham advaitam ekam Param Brahma nityam tadevaaham asmi. 5

நிஷேதே க்ருதே நேதி நீதீதி வாக்யைঃ ஸமாதிஸ்থிதாநாம் யদாভாதி பூர்ணம் ॥ அவஸ்தாத்ரயாதீதம் அத்வைதம் ஏகம் பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 5

"அது இல்லை", "இது இல்லை" என்ற வார்த்தைகள்  தான்  நம்மிடமிருந்து அதிகப்படியாக  தினந்தோறும் வருகிறது.எதனால்?  நமக்கு எதிர்பார்ப்பு நிறைய  இருக்கிறது.அது நிறைவேறுவதும் இல்லை,  அதனால் ஏமாற்றம், மற்றவர்கள்  நமக்கு  கிடைக்காததைப்  பெறும் போது  பொறாமை,கோபம்  ஆத்திரம்  எல்லாம் வந்து நமக்கு  இன்னும்  அமைதியை கெடுக்கிறது.  ஞானிக்கு இதே வார்த்தைகள் வேறு அர்த்தத்தில்  தோன்றுகிறது.  ஒவ்வொன்றாக  விட்டு விடுபவன்.     'தான் தேடுவது அது இல்லை இது எல்லை'  என்று  விலக்குபவன். ஒவ்வொன்றாக விட்டுவிடுபவன் தியானத்தில் நன்றியோடு இறைவனை அணுகுகிறான். முக்தன்  சமாதி நிலையில் நுழைந்து முழுவதுமாக  ஞானப்ரகாசமாக திகழ்கிறான்.   விழிப்பு,கனவு,  ஆழ்ந்த   உறக்க  நிலைகளுக்கு அப்பாற்பட்ட நான்காவது  நிலையாகிய  துரீயத்தில்  இருப்பவன் ப்ரம்ம ஞானி. தானே ப்ரம்மமானவன்.  நமக்கு 
அந்த  நாளும்  வந்திடாதோ?

sivan jaykay

unread,
Apr 26, 2023, 9:29:24 PM4/26/23
to amrith...@googlegroups.com
அறுபத்து மூவர்  -   நங்கநல்லூர்  J K   SIVAN 
நமி நந்தி அடிகள்

நமி நந்தி சோழ நாட்டில் பிறந்த  ப்ராமண சிவனடியார்.   பிறந்த ஊர்  ஏமப்பேறூர்.  சிவனடியார்களுக்கு சேவை செய்வதில் பெரும் விருப்பமுடையவர்.   அருகே  பெரிய ஊரான   திருவாரூர்  ஆலயத்தில்  தியாகராஜன் மற்றும் வன்மீகநாதரை வழிபடும்  பக்தர்.  கோவிலில்  சந்நிதிகளில் அளவில்லா விளக்குகள்  ஏற்றி தீபாலங்காரம் செய்ய  எண்ணினார்.  
 
ஒருநாள்  மாலை வேளையில்  அருகிலுள்ள சமணர் வீடுகளில் சென்று  வன்மீகநாதருக்கு  தீபம்  ஏற்ற  எண்ணெய் கேட்டார்.

''நல்ல வேடிக்கை இது?   உங்கள்  கடவுள் சிவன் கையில்  அக்னி வைத்திருக்கிறார்.  அவரிடமே  தீ  இருக்கும்போது தனியாக  அவருக்கு தீபம் எதற்கு, அதற்கு எண்ணெய் வேறு வேண்டுமோ?'' என்று கேலி செய்து  ஏளனம் செய்தார்கள்.

நமிநந்தி  ஏழை. மனம் உருகி  சிவன் முன் நின்றார். கண்களில்  ஆறு.

'' தியாகராஜா  என் நிலையைப் பார்த்தாயா,  உன் கோவிலில் எல்லா சந்திதிகளிலும் தீபம் வைக்க விரும்பினேன். எவரும் உதவ மறுத்துவிட்டார்கள். என் செய்வேன்?''
அப்போது  ஒரு குரல் அவருக்கு மட்டும் கேட்டது.

' நமி நந்தி, எதற்காக  எண்ணெய்  இல்லை என்று வருந்துகிறாய்? எதிரே  பார்த்தாயா  எவ்வளவு பெரிய  கமலாலயம். சமுத்திரம் போல் காட்சி தருகிறது.  எண்ணெய்க்கு  பதிலாக  அதன் நீரை எடுத்துக்  கொண்டு போய்  உன்  விருப்பப்படி  தீபங்களை ஏற்று''

ஆச்சர்யத்தோடு நமிநந்தி குளத்து நீரை செம்புகளில் நிரப்பி எல்லா  விளக்குகளிலும் எண்ணெய்  போல் நிறைய நீரை  ஊற்றி தீபங்களையேற்றினார்.  பிரகாசமாக எல்லா தீபங்களும்  விடிய விடிய  எரிந்தது.

இன்னொரு சமயம். திருவாரூரில் வீதிவிடங்கப் பெருமான் திருவிழா  கோலாகலமாக  இரவெல்லாம்  நடந்தது.  கூட்டம் நெரிசல். பலரைத்  தொட்டதால்  இறைவன் தொண்டு செய்வதற்கு அந்த  தீட்டு தடையாக  ஆகிவிட்டதே என்று  எண்ணி  அன்று இரவு  வீட்டுக்குள் செல்லாமல் வெளியே  நின்றார். நல்ல அசதி, தூக்கம் கண்ணை சுழற்றியது.   வெளியே அமர்ந்து அப்படியே சாய்ந்து  அயர்ந்து தூங்கி விட்டார். 

கனவில் சிவபெருமான் தோன்றினார் .  ''நமி நந்தி. உன் எண்ணம் தவறு. திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்களே.  எவரைத்தொட்டாலும் உன் தூய்மை  கெடாது''என்று  கூறியது போல் இருந்தது.   நமி நந்தி சட்டென்று கண் விழித்தார்.  அடாடா  நான் என்ன தப்பு பண்ணிவிட்டேன்  என்று  விடிந்ததும்   திருவாரூருக்குச் சென்று அவ்வூரில் பிறந்தவர்களை எல்லாம் சிவகணங்களாகக் கண்டு வணங்கி, பின்னர் தம் குடும்பத்துடன் அவர் திருவாரூரில் குடிபுகுந்து சிவப்பணி செய்து முத்தி அடைந்தார்.   இது தான் நமி நந்தி சரித்திரம். 


sivan jaykay

unread,
Apr 27, 2023, 8:15:55 PM4/27/23
to amrith...@googlegroups.com

ஆத்ம வித்யா விலாசம்    51-55  -  நங்கநல்லூர்   J K  SIVAN
ஸதாசிவ ப்ரம்மேந்திரா

भूतं किमपि न मनुते भावि च किञ्चिन्न चिन्तयत्यन्तः ।पश्यति न पुरोवर्त्यपि वस्तु समस्तार्थसमरसः कोऽपि ॥ ५१॥
bhUtaM kimapi na manute bhAvi cha ki~nchinna chintayatyantaH |pashyati na purovartyapi vastu samastArthasamarasaH ko.api || 51||
 பூ⁴தம் கிமபி ந மநுதே பா⁴வி ச கிஞ்சிந்ந சிந்தயத்யந்த: । பஶ்யதி ந புரோவர்த்யபி வஸ்து ஸமஸ்தார்த²ஸமரஸ: கோऽபி ॥ 

ஆத்ம ஞானிக்கு  இறந்தகாலம், எதிர்காலம்  நிகழ் காலம்  என  எதுவும் தனியாக இல்லை, எல்லாம் ஒன்றேதான்.   அவன் காலத்தை கடந்தவன், அதனால் அவனுக்கு  பிறப்பு  இறப்பு  வாழ்க்கை என்றார் எண்ணம்  எதுவும் இல்லை.   தான் என்ற எண்ணம் இல்லாதவனுக்கு எதற்கு இதெல்லாம் தோன்றப்போகிறது.?  ப்ரம்மம் காலத்தை வென்றது. அதில்  நிலைத்திருப்பவன் அதோடு இணைந்துவிடுகிறான். 

निगृहीताखिलकरणो निर्मृष्टाशेषविषयेहः ।तृप्तिमनुत्तमसीमां प्राप्तः पर्यटति कोऽपि यतिवर्यः ॥ 52॥
nigR^ihItAkhilakaraNo nirmR^iShTAsheShaviShayehaH |tR^iptimanuttamasImAM prAptaH paryaTati ko.api yativaryaH || 52||
நிக்³ரு’ஹீதாகி²லகரணோ நிர்ம்ரு’ஷ்டாஶேஷவிஷயேஹ: । த்ரு’ப்திமநுத்தமஸீமாம் ப்ராப்த: பர்யடதி கோऽபி யதிவர்ய: ॥ 

ப்ரம்ம ஞானி  புலன்களை வென்றவன். பற்றற்றவன்.  உலகத்தோடு ஒட்டாதவன்.  ஆகவே  சுக துக்கங்களை அப்பாற்பட்டவன்.  பிரம்மானந்தம் ஒன்றே  துய்ப்பவன். சர்வ சுதந்திரமாக  உலவுபவன்.


सन्त्यजति नोपपन्नं नासम्पन्नं च वाञ्छति क्वापि ।स्वस्थः शेते यतिराडान्तरमानन्दमनुभवन्नेकः ॥ ५३॥
santyajati nopapannaM nAsampannaM cha vA~nChati kvApi |svasthaH shete yatirADAntaramAnandamanubhavannekaH || 53||
ஸந்த்யஜதி நோபபந்நம் நாஸம்பந்நம் ச வாஞ்ச²தி க்வாபி । ஸ்வஸ்த:² ஶேதே யதிராடா³ந்தரமாநந்த³மநுப⁴வந்நேக: ॥ 53॥

ஆத்ம ஞானி  தனித்திருப்பவன்.  தெளிவான சித்தம் கொண்டவன். தனக்குள்ளே  சமுத்ரமாக  இருக்கும் ஆத்ம வெள்ளத்தில் மூழ்கி ஆனந்தமாக  இருப்பவன்.  வேண்டியது வேண்டாதது என்று எதுவும் இல்லாதவன். நடந்தது நடப்பது, நடக்கப்போவது எதுவும் லக்ஷியம் இல்லாதவன்.  விருப்பு வெறுப்பற்றவன்.  துறவிகளின் ராஜா அவன்.  சாக்ஷி யாக  எல்லாவற்றையும் எந்த உறவுமின்றி பார்ப்பவன்.  பேதமற்ற பார்வை கொண்டவன். 

कामपि विमलां पदवीमासाद्यानन्दसंविदुन्निद्राम् ।आस्ते भिक्षुक एको विहरन्निर्मुक्तबन्धनः स्वैरम् ॥ ५४॥

kAmapi vimalAM padavImAsAdyAnandasaMvidunnidrAm |Aste bhikShuka eko viharannirmuktabandhanaH svairam || 54||
காமபி விமலாம் பத³வீமாஸாத்³யாநந்த³ஸம்விது³ந்நித்³ராம் । ஆஸ்தே பி⁴க்ஷுக ஏகோ விஹரந்நிர்முக்தப³ந்த⁴ந: ஸ்வைரம்

விவரிக்க  இயலாத  ஆனந்தத்தில் சதா  ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஞானி   எப்போதும் விழிப்போடு இருப்பவன்.  தனிமையை நாடுபவன். பற்று எதுவும் அற்றவன்.  உலக வாழ்க்கையோடு  ஒட்டாதவன்.  உலக மாயையில் சிக்காதவன்.   -கர்ம  பந்தங்களிலிருந்து விடுபட்டவன். 

वस्तुन्यस्तमिताखिलविश्वविहारे विलीनमनाः ।राजति परानपेक्षो राजाऽखिलवीतरागाणाम् ॥ ५५॥

vastunyastamitAkhilavishvavihAre vilInamanAH |rAjati parAnapekSho rAjA.akhilavItarAgANAm || 55||
வஸ்துந்யஸ்தமிதாகி²லவிஶ்வவிஹாரே விலீநமநா: । ராஜதி பராநபேக்ஷோ ராஜாऽகி²லவீதராகா³ணாம் ॥ 55॥

ஆத்ம  ஞானி  வைராக்ய சித்தன்.  பந்த பாசங்களை சுட்டெரித்தவன்.   பிரபஞ்சத்தின்  மாறும் தன்மையை நன்றாக   உணர்ந்தவன்.  எப்போதும்  எந்த  எதிர்பார்ப்பும்  சந்தேகமும்  இன்றி  ஒளிர்பவன். தனது  நிலையிலிருந்து சிறிதும்  மாறாதவன். 


sivan jaykay

unread,
Apr 27, 2023, 8:15:55 PM4/27/23
to amrith...@googlegroups.com
 
ஸௌந்தர்ய லஹரி 56/103  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

56  மீனைப்போல  கண்ணாளே 

तवापर्णे कर्णेजपनयनपैशुन्यचकिता निलीयन्ते तोये नियतमनिमेषाः शफरिकाः ।
इयं च श्रीर्बद्धच्छदपुटकवाटं कुवलयम् जहाति प्रत्यूषे निशि च विघटय्य प्रविशति ॥ ५६॥

Tav'aparne karne-japa-nayana-paisunya-chakita Niliyante thoye niyatham animeshah sapharikah;
Iyam cha srir baddhasc-chada-puta-kavaiam kuvalayam Jahati pratyupe nisi cha vighatayya pravisathi.

தவாபர்ணே கர்ணே ஜபநயன-பைசுன்ய-சகிதா நிலீயந்தே தோயே நியத-மனிமேஷா: சபரிகா: I
இயம் ச ஸ்ரீர்-பத்தச்சத-புடகவாடம் குவலயம் ஜஹாதி ப்ரத்யூஷே நிசி ச விகடய்ய ப்ரவிசதி II

அம்பாள் லலிதை  வாரி வழங்கும் வள்ளல். அவள் யாரிடமாவது கடன்  படுவாளா? அதனால்  அவளுக்கு   'யாருக்கும் கடன் படாதவள்'   என்ற பொருள் கொண்ட  ‘அபருணா’ எனப் பெயர்.  மீன்கள்  கண்ணை மூடுவதில்லை.  அம்பாளின்  கண்கள் காது வரை நீண்டு இருப்பதால் கண்கள் காதில் ரஹஸ்யம் பேசுவது போல் தோற்றம் அளிக்கிறது.  கண்கள் மீன்கள் போல் உள்ளதால் மற்ற மீன்கள் ' ஓஹோ நம்மைப் பற்றி ஏதோ இந்த கரு நிற மீன்கள்  கோள்  சொல்லுகிறதோ?'' என்று பயப்பட்டு கண்களை மூடாமல் நீரில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு நீந்துகின்றன என்று அற்புதமாக  ஆதி சங்கரர்  கற்பனை செயது  அம்பாளின் அழகிய  கயல்விழிகளை  வர்ணிக்கிறார். வெகு அழகான ஸ்லோகம் இது. 

 இன்னொரு விஷயமும்  சங்கரர் சொல்கிறாரே.  சூரியன் அஸ்தமித்ததும்  கரு நெய்தல்  மலர்கள் இதழ்களை மூடி கூம்புகின்றன. அப்போது  அம்பாளின் விழிகள் மூடுவது போல் தோன்றி  மறுநாள் காலை சூரியன் உதயத்தின் போது  அந்த மலர்கள்  மொட்டு அவிழும்போது அம்பாளின் கண்கள் திறந்துகொள்வது போல் உள்ளது என்கிறார். மதுரையில் அம்பாளின் பெயர்  மீனைப் போன்ற கண்ணாள் , மீனாக்ஷி என்று பெயர்.   
உங்களுக்குத் தெரியுமா?   மதுரையில் அங்கே மீனாக்ஷி கோவிலில் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் கிடையாது, அதில்  வாழ்வதில்லை. 


sivan jaykay

unread,
Apr 28, 2023, 8:10:39 PM4/28/23
to amrith...@googlegroups.com
தீயும்  ஸ்திரீயும்  -    நங்கநல்லூர்  J K  SIVAN 

தற்கொலைக்கும்  பெண்களுக்கும்  உள்ள தொடர்பு ஆண்களைவிட கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. என்ன காரணம்? தற்காப்புக்காகவா என்றால்  ஆமாம்  என்று  தலை ஆட்டவேண்டி இருக்கிறது. சரித்திரத்தில் சில பக்கங்கள் இது மானம் கௌரவம், கற்பு காரணமாகவும் என்று சொல்கிறது.

சரித்திரத்தின்  சில பக்கங்கள்  ஜீரணிக்க முடியாதவை.  ரத்தம் கண்ணீராக வடியும்  சோக சம்பவங்கள். அப்படி ஒன்று  வடக்கே ராஜபுத்திர ராணிகளின்  வாழ்வில் நடந்த கோரமான  நிகழ்ச்சிகள். ஜௌஹர்  என்றால் கூட்டாக  ஒன்று சேர்ந்து தீயில் மூழ்குவது.  நிர்க்கதியான  ராஜபுத்ர  ராணிகள், குழந்தைகளோடு  தீயைத் தழுவிய சம்பவங்கள். குடும்ப  மானம்,குல  கௌரவம், கற்பு  இவற்றை காப்பாற்றிக்கொள்ள  வேறு  பாதுகாப்போ வழியோ இல்லையே.

1303ல்  நமது பாரத தேசம்  அலாவுதீன் கில்ஜி என்றவனின்  கொடூர மத வெறி ஆட்சியில் சிக்கி தவித்தது.  மேவார் எனும்  ராஜபுத்ர  ராஜ்ஜியம்  ராவல் ரத்தன் சிங் என்ற  ராஜாவால் ஆளப்பட்டது.  மேவாரில் நிறைய  வெள்ளி, துத்தநாகம் போன்ற  உலோகங்கள் இருப்பதை கில்ஜி அறிந்தான். 28.1. 1303ல்  ஒரு பெரும்படை  மேவாரில் சித்தூரை நோக்கி நகர்ந்தது. 

மேவார் ராணாவின் படை  அளவில் சிறியது.  ஆனால் வீரத்தில் பெரியது.  சித்தூர் கோட்டையை சூழ்ந்து கொண்ட முகலாய வீரர்களோடு கடும் யுத்தம். எட்டு மாத கால முற்றுகை. கோட்டைக்குள்ளே  உணவு பஞ்சம் ஏற்பட்டது.  ராணாவின் படைகள் உயிருக்காக மட்டும் அல்ல ராஜ்யபற்றினாலும்  கடைசி மூச்சு வரை போராடினார்கள் .  ராணா கொல்லப்பட்டான். வீரர்கள் தோற்றனர்.  உள்ளே  அந்தப்புர  பெண்களுக்கு  உயிரா  மானமா  பிரச்னை.  எல்லோரும் ஒன்று சேர்ந்து மானத்தோடு மறைவோம் என்று முடிவாயிற்று.   அரண்மனைக்குள்  திறந்த வெளியில் தீ மூட்டினார்கள்.  செந்நிற  ஆடை உடுத்தி னார்கள், விருந்துண்டார்கள்,  ஒருவருக்கொருவர்  தாம்பூலம் அளித்தார்கள். திருப்தியோடு  கைகூப்பி '' இதோ உன்னிடம் வருகிறோம், அக்னி மாதா நீயே கதி''  என்று கொழுந்து  விட்டு ஆளுயர எழும்பிய தீயின் நாக்குக்கு தாங்களும்  குழந்தைகளுமாக   இறையானார்கள்.   தோட்டக்காரன் புல்  வெட்டுவது போல் 30000த்துக்கு மேல்  ஹிந்துக்கள் தலை சீவப்பட்டார்கள் என்று அமீர் குஸ்ரு எழுதுகிறார். ராணி பத்மினி கதை மறக்கமுடியாதது.

இன்னொரு ராணி  கர்ணாவதி. ராணா  ஸங்க்ராம் மனைவி.  சித்தூரில்  ஸிசோதியா வம்ச ராணி.  விக்ரம் சிங், உதய  சிங்  என்று இரு பிள்ளைகள். அந்த கால கட்டத்தில் டில்லியில் இஸ்லாமிய ஆட்சியில் லோதி வம்சம் ஆண்டு வந்தது. 1527ல்  பாபருக்கும் ராணா  சங்காவுக்கும் போர் மூண்டு படுகாயத்தோடு ராணா வீரமரணம் எய்தினான். இளவரசன் விக்ரம் சிங்  ராஜாவானான்.   இந்த சந்தர்ப்பத்தில் ராணி கர்ணாவதியை வெல்ல  குஜாரத்த் சுல்தான் குத்புதீன் பகதூர் ஷா மேவார் மேல் படையெடுத்தான்.  ராணி கர்ணாவதி மற்ற ராஜபுத்திர ராஜாக்களின் துணியை நாடினாள் . ஒற்றுமையில்லாதால்  உதவி கிடைக்கவில்லை.  இளவரசர்களை உயிர் தப்ப  அனுப்பிவிட்டு கர்ணாவதி சித்தூர் கோட்டையில் இருந்தாள் . எந்தநேரமும் முகலாயர்கள் உள்ளே வந்துவிடலாம் என்ற நிலை.  பத்மினி வழியில்  கர்ணாவதியும்  அக்னியை சரணடைந்தாள் .

1568ல் அக்பர் காலத்தில் இன்னொரு  ரத்த ஆறு.  ராணா உதய சிங்  மேவார் ராணா. அக்பர்   மேவார் ராஜ்யத்தை  ஆக்
ரமிக்கப்போகிறான் என்று ராணாவுக்கு தெரிந்துவிட்டது.  பிப்ரவரி 22 1568 இரவு  முடிவாகி விட்டது. இனி மேவார்  அக்பர் வசம் தான் என்று.  கிட்டத்தட்ட  8000  ராஜபுத்திர பெண்கள் அக்னியில் உயிர்த்தியாகம் செய்தார்கள்.  மறுநாள் போரில் அக்பர் வென்று  40000  நிராயுதபாணிகளான  ஆண்கள் வயோதிகர்கள் ஆகியோர்  கொல்லப்பட்டார்களாம்.

முகம்மதியர்  படையெடுப்பு துவங்கிய காலத்திலிருந்தே  பெண்கள் உயிர்த்தியாகம்  செய்யும்  வழக்கம்  வந்துவிட்டது. 712ல் முகமது பின் காசிம்  சிந்தி  மாகாணத்தில் காலை வைத்தபோது ராஜபுத்ர பெண்கள்  சரணடைவதை விட உயிரை விடுவது மேல் என்று முடிவெடுத்துவிட்டார்கள். 

குவாலியரில்  1232ல்  இல்டுட்மிஷ்  ராஜபுத்ரர்களை எதிர்த்தபோதும் இதே கதை தான். 

1327ல்  கம்பிளி  ராஜ்யத்தில் முஹம்மது பின் துக்ளக்  காலத்திலும்  இதே  தொடர்கதை தான். 

1634ல்  ஒளரங்கசீப் மத்திய பிரதேச பாண்டேலா ராஜ்யத்தில் நுழைந்தபோதும்  இதே கதை தான். அக்னி தேவனே கதி என்று அந்த ராஜ்ய பெண்கள்  தீக்கிரையானார்கள். 

sivan jaykay

unread,
Apr 28, 2023, 8:10:39 PM4/28/23
to amrith...@googlegroups.com
அறுபத்து மூவர் - நங்கநல்லூர்   J K  SIVAN
பெருமிழலைக் குறும்ப நாயனார்

வெள்ளைக்காரனை  ஓடச் செய்ய  ஒரே  குறுக்கு வழி.  இந்தாடா  இந்த பெயரைப் படித்து சொல்லு என்று  ஒரு காகிதத்தில்   ''பெருமிழலைக் குறும்ப நாயனார் '' திருவீழி மிழலை''  என்று சில பெயர்களை எழுதிக் கொடுப்பது தான்.  வெள்ளைக்காரன் மட்டுமல்ல. இப்போதுள்ள  சில  கொள்ளைக்காரர்களால் கூட  இதை சரியாகச் சொல்ல முடியா விட்டாலும் தமிழைக் காப்பவர்கள் என்று  பெருமை பட்டுக்கொள்பவர்கள். 

 இப்போது  பெருமிழலை என்ற ஊர்  காலப்போக்கில்  பெருமா நல்லூர்  என்று மாறி இன்னும் சுருங்கி  தேவமலை எனப்படுகிறது.   சிவன் கோவில் ரொம்ப பழசு.சிவன் பெயர்   தேவநாதர்.   அம்பாள்  தேவநாயகி.
மலைப் பாறைகளை குடைந்து  செதுக்கப்பட்ட  பழைய  அற்புதமான கோவில்   தேவமலை  ஆலயம். மலையை குடைந்து அமைக்கப்பட்ட  கோவில்கள் குடைவரைக் கோவில்கள் எனப்படுபவை. புதுக்கோட்டை ஜில்லாவில் உள்ள  ஊர். கிழக்கு பார்த்த ஆலயம்.  பிற்காலத்தில் மண்டபங்கள் உருவாயின.

இந்த   எட்டாம் நூற்றாண்டு  மலைக்கோவில்  பற்றி சொன்ன காரணம் இங்கே ஒரு சித்த புருஷர் வாழ்ந்தார் அவர் பெயர்  பெருமிழலைக் குறும்பர்.  அவர் ஜீவசமாதி உள்ளது.  மொட்டைத்தலையத்துடன்  அபயஹஸ்தம்  காட்டி ருத்திராக்ஷம் அணிந்த உருவம் தான் அந்த குறும்பர்.  தேவநாதஸ்வாமி கற்பகிரஹத்தின் இரு பக்கமும்  ரெண்டு உருவங்கள். ஒன்று  இளைஞர் இன்னொன்று ஒரு வயதானவர். இளைஞர்  புலஸ்தியர்.   வயதை தாடி ஆசாமி  அகஸ்தியர்.  இருவருக்கும் ஜடாமுடி.

குறும்பர்  சிறந்த சிவபக்தர்.  சுந்தரமூர்த்தி நாயனாரை  மானசீக்க குருவாக கொண்டவர்.  அஷ்ட மா சித்தி பெற்றவர்.  சுந்தரர்  கைலாசம்  போகிறார் என்று அறிந்து அவருக்கு முன்பே கைலாசம் போக  தாயானார்  குறும்பர்.  சோழநாட்டின் க்ராமமாகிய  பெருமிழலை என்னும் ஊரின் தலைவர்  குறும்பர்.  இப்போது  புது
க்கோட்டை மாவட்டத்தில் மல்லாங்குடி கிராமத்தில் உள்ள தேவமலை  தான் அக்கால  பெருமிழலை என்பார்கள்.  சிவனடியார்களுக்கு  திருப்பணிகளை  சேவைகளைச்  செய்வதில் அலாதி விருப்பம் கொண்டவர்.   ஓம் நமசிவாய எனும் பஞ்சகாக்ஷர மந்திரத்தை எந்நேரமும்  உச்சரிப்பவர்.  மனம் வாக்கு காயம் மூன்றாலும்  சிறந்த சிவபக்தராக வாழ்ந்தவர். 

சுந்தரரின்  சிவபக்தி, சிவனோடு தோழமை   குரும்பருக்கு மிகவும்  பிடிக்கும். ஆரூரர் பாடல்களை விரும்பி பாடுவார்.  திருத்தொண்டத்தொகையை எந்நேரமும் பாடுபவர் சிவனின் அவதாரமாக  சுந்தரரை  தெய்வமாக மனதால் வணங்குபவர்.

இப்படி  குறும்பர்  வாழ்ந்த சமயம்  சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக் களத்திற்சென்று திருப்பதிகம் பாட அவருக்குச் சிவபெருமான் அருளால் வடகயிலை அடையும் பேறு மறுநாள் கிடைக்க இருப்பதனை   குறும்பர்  பெருமிழலையில் இருந்துகொண்டே  தனது  யோகசக்தியால்  உணர்ந்தார்.  

“திருநாவலூரில் திருக்கயிலை எய்த நான் அவரைப் பிரிந்து கண்ணிற் கரியமணி கழிய வாழ்வார் போல வாழேன்” என்றெண்ணியவர்    நானும் இன்றே  என் யோகசக்தியால்  பரமசிவன்  தாளைச் சென்றடைவேன் என்று  முடிவெடுத்தார்.

ஞானியாகையால்  ப்ரம்ம நாடிகளின்  வழியாக  தனது கருத்தைச் செயலாக்க முயன்றார். தியான  ஞான யோக  சக்தியால்  குறும்பரின்  பிரம்ம கபாலம் திறந்து  அதன் வழியே  அவர்  ஆத்மா  உடலிலிருந்து பிரிந்து   கைலாசத்துக்கு சென்றது.  சிவபெருமானது திருவடி நிழலில்  குறும்பர்  அடைக்கலம்  புகுந்தார். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகும் அருளும் பெற்றார்  பெருமிழலைக் குறும்ப  நாயனார். பெருமிழலை குறும்ப நாயனார் குருபூசை ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

சேக்கிழார்   இவரைப் பற்றி  புராணத்தில் பாடியது:
கொண்டால் பனி வளர் சோலை மிழலை நாட்டுக்
கோதில் புகழ்ப் பெருமிழலைக் குறும்பனார் தீ
ரண்டர் பிரானடிய வருக் கடியராகு
மாதரவாலணுக்கவன் தொண்டர்களாய்
மண்டொழுடரு சித்தி வாய்ந்து னார்தாம்
வன்தொண்டர் வடகயிலை மருவு நாண்மு
னெண்டி கழு மறை மூல நெறி யூடேகி
யிளங்கொளி சேர் வடகயிலை எய்தினாரே

பெருமிழலை என்ற பழைய ஊர் இப்போது  தேவமலையாக  மல்லங்குடி பிரதான சாலையிலிருந்து 2 கி.மீ. தூரம்.  புதுக்கோட்டையிலிருந்து 11 கி.மீ. திருச்சியிலிருந்து 58 கி.மீ.  தஞ்சாவோரிலிருந்து  68 கி.மீ.   சென்னையிலிருந்து  386 கி.மீ. மனதில்  இருந்து செல்ல  ஒரு வினாடி கூட தேவையில்லை. 


sivan jaykay

unread,
Apr 29, 2023, 8:07:53 PM4/29/23
to amrith...@googlegroups.com

ஆத்ம வித்யா விலாசம்    56-60  -  நங்கநல்லூர்   J K  SIVAN
ஸதாசிவ ப்ரம்மேந்திரா


आचार्यापाङ्गदृशा समवाप्तापारसंविदाकारः ।प्रशमितसकलविभेदः परहंसः कश्चिदाभाति ॥ ५६॥
AchAryApA~NgadR^ishA samavAptApArasaMvidAkAraH |prashamitasakalavibhedaH parahaMsaH kashchidAbhAti || 56||
ஆசார்யாபாங்க³த்³ரு’ஶா ஸமவாப்தாபாரஸம்விதா³கார: । ப்ரஶமிதஸகலவிபே⁴த:³ பரஹம்ஸ: கஶ்சிதா³பா⁴தி ॥ 56॥
 
56. ஒருவன்  மேன்மை அடைய  எது அவசியம்  என்பதை சதாசிவ ப்ரம்மேந்திரா  இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார்.  குருவிடம் பக்தி ரொம்ப ரொம்ப  முக்கியமானது. குருவின் கடைக்கண் பார்வை ஒன்றே போதும். பக்தனை மிக உயர்ந்த நிலையில் வைத்து விடும்.  அப்படி தானே ப்ரம்மேந்திரா தனது குரு பரமஹம்சரின் அருளாசியைப்   பெற்றவர்.  ஞானி  குருவருளால் ஞானம் பெற்று பேதம் ஒழித்து, எவ்வுயிரிடத்தும்  செந்தண்மை பூண்டு ப்ரம்ம ஸ்வரூபமாக  வாழ்கிறவன்.

57.  वर्णाश्रमव्यवस्थामुत्तीर्य विधूय विद्यादीन् ।परिशिष्यते यतीन्द्रः परिपूर्णानन्दबोधमात्रेण ॥ ५७॥
varNAshramavyavasthAmuttIrya vidhUya vidyAdIn |parishiShyate yatIndraH paripUrNAnandabodhamAtreNa || 57||
வர்ணாஶ்ரமவ்யவஸ்தா²முத்தீர்ய விதூ⁴ய வித்³யாதீ³ந் । பரிஶிஷ்யதே யதீந்த்³ர: பரிபூர்ணாநந்த³போ³த⁴மாத்ரேண ॥ 57॥\

 57. முக்தி அடைந்த  ஞானிக்கு  வர்ணம் பேதம், வித்யாசம் எதுவும் எவ்வுயிரிடத்திலும் இல்லை. சம்சார நிலைகளான  பிரம்மச்சாரி, க்ரஹஸ்தன், வானப்ரஸ்தன்  சந்நியாசி என்ற  பாகுபாடு எதுவும் இல்லை. பிராமணன் க்ஷத்திரியன் வைசியன் சூத்ரன் என்ற வகுப்பு  பிரிவு, வாதமும் எதுவும் கிடையாது.  எல்லாமும், எல்லாரும்  ஒன்றே என அறிந்து உணர்ந்து நடந்து கொள்பவன்.  சகலமும் துறந்து  இச்சை விருப்பு வெறுப்பு ஆசை பாசம் எதுவும் இல்லாத  துறவி.  சதா சர்வகாலமும்  ப்ரம்மத்தையே நாடி அதில் லயித்து இருப்பவன். 

क्षयमुपनीय समस्तं कर्म प्रारब्धमुपभुज्य ।प्रविगलितदेहबन्धः प्राज्ञो ब्रह्मैव केवलं भवति ॥ 58॥
kShayamupanIya samastaM karma prArabdhamupabhujya |pravigalitadehabandhaH prAj~no brahmaiva kevalaM bhavati || 58||
 க்ஷயமுபநீய ஸமஸ்தம் கர்ம ப்ராரப்³த⁴முபபு⁴ஜ்ய । ப்ரவிக³லிததே³ஹப³ந்த:⁴ ப்ராஜ்ஞோ ப்³ரஹ்மைவ கேவலம் ப⁴வதி ॥ 58॥

58   ப்ரம்ம  ஞானிக்கு கர்மம் எதுவும் இல்லை. காற்றில் பறக்கும் பஞ்சு போல  எங்கும்  ஸ்வதந்த்ரமாக உலவுபவன் . அவனுக்கென்று எதுவுமே உலகில் கிடையாது.  இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் அதில் ஒட்டாதவன்.   தேகம் இருப்பதையே மறந்தவன். சித்தானந்தன் .

स्तिमितमनन्तमनाद्यं सन्ततमानन्दबोधघनम् । अविकल्पमाद्यमेकं सन्मात्रं विद्यते किमपि ॥ 59॥
stimitamanantamanAdyaM santatamAnandabodhaghanam |avikalpamAdyamekaM sanmAtraM vidyate kimapi || 59||
ஸ்திமிதமநந்தமநாத்³யம் ஸந்ததமாநந்த³போ³த⁴க⁴நம் । அவிகல்பமாத்³யமேகம் ஸந்மாத்ரம் வித்³யதே கிமபி ॥ 59॥

59. பாரபக்ஷமற்ற  நடுநிலையில்  என்றும் எப்போதும்  உள்ளவன் ஞானி.  விவரிக்கமுடியாத  ஆனந்தத்தை ஆத்ம விசாரத்தில் அடைந்தவன். அமைதியானவன்.  முக்காலங்களையும் (இறந்த, நிகழ், எதிர்) வென்றவன்.  ஆத்மாவை அறிந்தவன் புரிந்து கொண்டவன் இன்பத்தில்  திளைப்பதைல் என்ன ஆச்சர்யம்?  அதனால் தான் அவன் அமைதியாக,  அத்வைத  ஸ்வரூபமாக இருப்பவன். ஜனனம் மரணம் மூப்பு  வியாதி  எதைப் பற்றியும் கவலை இல்லாதவன்.  

अक्षरमजरमजातं सूक्ष्मतरापूर्वशुद्धविज्ञानम् । प्रगलितसर्वक्लेशं परतत्त्वं वर्तते किमपि ॥ 60॥
aksharamajaramajaatham sookshmatharaa poorva suththa vignanam.  prgalithasarvaklesam  parathathvam  varthathe kimapi. 60
  அக்ஷரமஜரமஜாதம் ஸூக்ஷ்மதராபூர்வஶுத்³த⁴விஜ்ஞாநம் । ப்ரக³லிதஸர்வக்லேஶம் பரதத்த்வம் வர்ததே கிமபி ॥ 60॥   

அழிவில்லாததும், மூப்பில்லாததும், பிறப்பில்லாததும், அதிசூட்சுமமானதும், முன்பறிந்திராத, காண இயலாத தூய ஆத்ம ஞானம் அறிந்தவனுக்கு  எந்தவித துன்பக் கிலேசங்களும் இல்லை.   ஸர்வம்  ப்ரம்ம மயம்  என்று உணர்ந்து இன்புறுபவன். 
நிச்சிந்தையாக  பிரம்மத்தில் தன்னை  இழந்தவன். அதுவே ஸாஸ்வதம்  என்று அறிந்தவன்.  காணும் யாவும்  மாயை என்று புரிந்தவன்.  பிரம்மத்தில் லயித்தவனுக்கு  எந்த  உணர்ச்சிவசமும் கிடையாது.  சுக துக்கங்கள், இன்ப துன்பங்கள் பற்று எதுவுமே இல்லாத  ஆனந்தமயமானவன்.

sivan jaykay

unread,
Apr 29, 2023, 8:07:53 PM4/29/23
to amrith...@googlegroups.com
கோபாலகிருஷ்ண பாரதி  -  நங்கநல்லூர்  J K  SIVAN
                                                              
தமிழில் அற்புதமாக, பக்தி தோய்ந்த, எளிய,  இனிய  சந்தம் மிகுந்த,  கேட்டாலே  தலை, கை  உடல்  ஆடவைக்கும்,  மனம் கவரும்  பாடல்களை பலர்  தந்திருக்கிறார்கள்.  அவர்களில் சிலர்  பாரதி என்ற  பெயர் கொண்டவராகில். என்னால் மறக்க முடியாத  பாரதிகள், சுப்ரமணிய பாரதி, கோபாலகிருஷ்ண பாரதி,  சுத்தானந்த பாரதி  என் தாத்தா  வசிஷ்ட பாரதி.   தாத்தா  வசிஷ்ட பாரதி பற்றி அடிக்கடி எழுதுகிறேன். அமர கவி பாரதி  என்றும் நெஞ்சில் நிறைந்து அடிக்கடி என்னை எழுத  வைப்பவர். சுத்தானந்த பாரதி பற்றி அதிகம் தெரியாது. விஷயம் தேடி எழுத வேண்டும்.   கோபாலகிருஷ்ண பாரதி அற்புதமான மனிதர்  250 வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த சிவ பக்தர். நந்தனார் சரித்திரத்தை நமக்கு  நாடகக் கவிகளாக அளித்தவர்.  பக்திக்கும்  பகவான் அருள்  கிடைக்கவும் சிறந்த   இலக்கண  ஞானம், கல்வி அறிவு  வேண்டாம். பக்தி  நெஞ்சில் ஆழப்பதிந்திருந்தால்  அது தானே வேர் விட்டு வளர்ந்து வெளிவரும், மலரும். மயக்கும்.   அப்படி ஒருவர்  தான்  சிதம்பரம் கோபாலகிருஷ்ண பாரதியார். 86 வயது வாழ்ந்தவர்  1810-1896.

நாகபட்டினத்துக்கு பக்கத்தில் நரிமணம் கிராமத்தில்  இப்போது  பூமியை தோண்டி பாதாளத்திலிருந்து எரிவாயு எடுப்பதாக  அறிகிறோம்.  அங்கே கிடைத்த  ஒரு  விலை மதிப்பிடமுடியாத ஒரு புதையல்   கோபாலகிருஷ்ண பாரதி.

சிவராம பாரதியார்  சங்கீத  உபன்யாசகர்,ப்ரவசன கர்த்தா  பிழைப்புக்காக   நரிமணம் , முடிகொண்டான்,  ஆனை தாண்டவபுரம், மாயூரம் என்று பல இடங்களில் குடும்பத்தை  இடம் மாற்றி வாழ்ந்தவர்.  சிவராம பாரதியின்  மகன். கோபாலக்ரிஷ்ணன்.    தந்தையிடம்  ஐந்து வயதில் சங்கீதம் கற்றார்.  அக்கால  பிரபல சங்கீத வித்வான்களில் ஒருவர் கனம் கிருஷ்ணய்யர். (கனம்  என்றால்  குண்டான, இல்லை. அடிவயிற்றிலிருந்து ஸ்வரம் எழுப்பி உதடு அசையாமல் பாடுவது. அசுர சாதகம் செய்தால் தான் இது முடியும். இவரைப்பற்றி எழுதி இருக்கிறேன். தமிழ் தாத்தா  உ.வே.சா.வின்   உறவினர்.  கனம்  பாடுவதில்  கிருஷ்ணய்யர்  நிபுணர் என்பதால்  ''கனம்  கிருஷ்ணய்யர்''என்ற  விருது. கனம் கிருஷ்ணய்யர், மற்றும் ஹிந்துஸ்தானி உஸ்தாத் ராமதாஸ் ஆகியோரிடம்   கோபாலக்ரிஷ்ணன்  சிஷ்யனாக சேர்ந்து கர்நாடக சங்கீதம் ஹிந்துஸ்தானி எல்லாம் கற்றுக் கொண்டான் . இது தவிர மாயூரத்தில் கோவிந்த யதி என்பவரிடம் வேதங்கள்  கற்றான்.

கிராமங்களில் அப்போது இங்கிலிஷ் வந்து நம்மை குட்டிச் சுவராக்க வில்லை.  கோபாலகிருஷ்ண பாரதி  பிரம்மச்சாரி.  யோக பயிற்சி உண்டு.  அறுபத் திமூவரில்  ஒருவரான  திருநாளைப் போவார் என்ற நாயனாரின் சரித்திரத்தை  நந்தனார் சரித்திரம் என்று எழுதியது உலகப்புகழ் பெற்ற  பாடல் திரட்டு.   கோபாலகிருஷ்ண பாரதி  பரம்பரையாக  கதா காலக்ஷேப ஞானம் உடையவர் என்பதால்  தனது  நந்தனார் சரித்திர சங்கீத நாடகத்தை  ஊர் ஊரக சென்று பாடி உபன்யாசம் செய்தார்.   இன்றும்  நந்தனார் சரித்திர பாடல்கள் மேடைகளில் ஒலிக்கிறது. சுருக்கமாக நந்தனார் கதை சொல்கிறேன்.

நந்தனார் ஒரு தாழ்ந்த, தீண்டத்தகாத குலத்தவர் என சமூகம் ஒதுக்கி வைத்த காலம்.  ஏழை விவசாயி. சிதம்பர நடராஜன் மேல் உயிர். ஆனால் ஆலயப்பிரவேசம் பண்ண வாய்ப்பில்லை. தூர நின்றே வெளியே இருந்து தரிசனம் பண்ணவேண்டும்   என்ற  வாழ்க்கை  லக்ஷியம். நிறைவேறுமா?   விவசாயியின் எஜமான் பண்ணையார் ஒரு ஈவிரக்கமில்லாத வேதியர் . இது கதையில் தான்.  அறுபத்து மூன்று   நாயனார்கள் சரித்திரங்களுக்கு அதாரிட்டியான பெரிய புராணத்தில் வருகிற  திருநாளைப்போவார் சரித்திரத்தில்  பண்ணையார் என்கிற வேதியர் பாத்திரம்  இல்லை.  நாயனார் எந்த  பண்ணை யாரிடமும் சேவகம் பண்ணியதில்லை.  தத்தம் குலாச்சாரப்படி தொழில் செய்யும் எல்லா ஜாதிக்காரர்களுக்குமே அந்தக் காலத்தில் ராஜமான்யமாக நிலம் சாசனம் செய்யப்பட்டிருக்கும். நன்றாக எல்லை கட்டிய அந்த நிலத்துக்குத் ''துடவை''   என்று பெயர். அப்படிப்பட்ட பறைத் துடவையை  திருநாளைப்போவாரும்  பெற்றுத் தம் சொந்த நிலத்தில் பயிரிட்டு வந்ததாகத்தான் பெரிய புராணம்  சொல்கிறது. பிறந்தது   முதல் சிவ சிந்தனை தவிர வேறே  கிடையாது  என  சேக்கிழார் பாடுகிறார்.   க்ஷேத்திரம் க்ஷேத்திரமாகப் போய்க்கொண்டே அவர் சிவத்தொண்டு செய்து  வந்ததாகத்தான் பெரிய புராணம் சொல்கிறது.

கோபாலக்ரிஷ்ண  பாரதியின்  நந்தனார் சரித்திரம்  சற்று வேறுபட்டு அக்கால  பண்ணையார்களின்  கொடூர குணத்தை பிரதிபலிக்கிறது.  சிறந்த சிவபக்தரான கோபாலகிருஷ்ண பாரதியார் சிதம்பரம் நடராஜன் மேல் அநேக  அற்புத கீர்த்தனைகளை எழுதியவர்.  முக்கியமான  ரொம்ப பிரபலமான  சில பாடல்களின் லிஸ்ட்  தருகிறேன். 

உத்தாரந் தாரும்,  
ஐயே மெத்த கடினம். 
சற்றே விலகி இரும் பிள்ளாய்.
தில்லை அம்பலத்தில் 
பித்தம் தெளிய மருந்தொன்று 
மார்கழி மாதம் திருவாதிரை நாள்.
 ஆடிய பாதம் 
ஆடும் சிதம்பரமோ, 
ஆனந்த கூத்தாடினார். 
உனது திருவடி சரணம் 
எந்நேரமும் உந்தன்  சந்நிதி 
எப்போ வருவாரோ 
கனக சபாபதி தரிசனம் ஒருநாள்
பிறவா வரம் தாரும் 
சிவலோக நாதனைக் கண்டு 
கைவிட மாட்டான் கனகசபேசன் 
இன்னும் வரக்  காணேனே.
வருகலாமோ.
இன்னும் எத்தனையோ பொக்கிஷங்கள். கொஞ்சம் தான் மேலே மாதிரிக்கு கொடுத்திருக்கிறேன்.

sivan jaykay

unread,
Apr 29, 2023, 8:08:04 PM4/29/23
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்   J K  SIVAN 

காது ட்ரீட்மெண்ட்.

காஞ்சி மஹா பெரியவா பக்தர்களை  எண்ணவே  முடியாது.  உலகம் முழுதும்  இருப்பவர்கள்.  அவர்கள்  ஜாதி மதம் ஆண்  பெண் குழந்தைகள் என்ற  பாகுபாடு இல்லாத  ஒருமித்த  பக்தர்கள்.   அவர்களில் ஒருவரைப் பற்றி  சொல்லத்தான் இந்தப் பதிவு. 
பழையனூர் தேவராஜசர்மாவுக்கு மிகுந்த  பெரியவா பக்தி. சர்மா எப்போதும் பெரியவரை மனதில் சிந்தித்துக் கொண்டே இருப்பவர் .  1978, ஏப்ரல் 13, தமிழ்ப் புத்தாண்டு தினம். அன்று தேனாம்பாக்கத்திலுள்ள தன் வீட்டில்  வழக்கம்போல்  சர்மா  தூங்கிக்கொண்டிருந்தார். திடீர் என்று  அவர் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல  ஏதோ ஒரு வித ஷாக். சட்டென்று தூக்கம் கலைந்து  கண்  விழித்துப் பார்த்தார்.   என்ன  ஆச்சர்யம் இது?
சர்மாவுக்கு முன்னால்  விபூதி, ருத்ராட்சம்,  காஷாய வஸ்திரம் அணிந்த மஹா பெரியவாளே   காட்சி தருகிறார்.  சர்மாவுக்கு தன்னையே  நம்பமுடியவில்லை.  அதிர்ச்சியும் ஆனந்தமும் மனதில் பொங்கி எழுந்தது. 
”என்ன புண்ணியம் செய்தேனோ சத்குருதேவா” என்ற ரீதிகௌளை ராக  பாடல் நினைவுக்கு வந்தது. என்ன  ஆனந்தம். பரமாச்சார்யாரின் திவ்ய தரிசனம் சொப்பனத்தில் கிடைத்தது பெரும் பாக்யம் என்று சந்தோஷப்பட்டார்.

பொழுது விடிந்ததும்  வழக்கம் போல் . குளித்துவிட்டு  கோயிலுக்குச் செல்ல ஆயத்தமானார்.   வீட்டில் அப்போதெல்லாம் ஹரிக்கேன் விளக்கு தான். மின்சாரம் கிடையாது. காஞ்சி காமாக்ஷி கோவில் நான்கு மாடவீதியிலும் பாராயண கோஷ்டியுடன் வலம் வந்து, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தார். காமாட்சி அம்மனைத் தரிசனம் செய்தார். 
அந்த வருஷம் பூரா தேவராஜ  சர்மாவிற்கு எடுத்த காரியம் எல்லாவற்றிலும்  நினைத்ததை  விடச் சிறப்பாகவே அமைந்தன. குரு கடாக்ஷம்  பெற்றால் வாழ்வில் கோடி நன்மை உண்டாகும் என்பது சர்மாவுக்கு  தெரியுமே. 
இன்னொரு  விஷயம். 
தேவராஜ சர்மாவிற்கு ஒருமுறை காதில் கடுமையான வலி.  பரிசோதனை செய்த டாக்டர்  காதில்  ஆபரேஷன் செய்தால் ஒழிய வலி குறைய வாய்ப்பில்லை என்று  உறுதியாக  சொல்லிவிட்டார்.   தேவராஜ  சர்மாவுக்கு  நேராக  காஞ்சிபுரம் சென்று பெரியவரைத் தரிசித்து அவரிடம் உத்தரவு பெற்றால் ஒழிய ஆபரேஷன் பண்ணிக்  கொள்வதில்லை என்று தீர்மானம். 
கையில் ஆரஞ்சுப்பழங்களை எடுத்துக் கொண்டு காஞ்சிபுரம் கிளம்பினார். காது வலி பற்றி பெரியவரிடம் சொல்லி வருத்தப்பட்டார். பெரியவர் பதிலேதும் சொல்லாமல், அவர் கொடுத்த பழங்களின் தோல்களை உரித்துக் கீழே போட்டார். சர்மா தன் மனதிற்குள், பெரியவர் தன் தீவினைகளையே உரித்து எடுத்துவிட்டதாக எண்ணிக் கொண்டார். அன்று முதல் காது வலி குறைய ஆரம்பித்து விட்டது. மஹா பெரியவா மௌனமாகவே, பதில் எதுவும் சொல்லாமலே  எத்தனையோ பேருக்கு குறைகளை நிவர்த்தி செய்யும் மஹா வைத்யநாதன் அல்லவா?

மறுபடியும் காது பரிசோதிக்கும் டாக்டரிடம் சென்றார். டாக்டருக்கு அதிர்ச்சி. 
” சர்மா  சார்,  உண்மையை மறைக்காமல் சொல்லுங்கள். வேறு யாரவது டாக்டரிடம் சென்று வைத்தியம் எடுத்துக் கொண்டீர்களா? ”
"இல்லை  டாக்டர், எனக்கு உங்களைத்  தவிர வேறு எந்த  காது டாக்டரும்  தெரியாதே. யார் கிட்டேயும் போகவில்லையே''
”சர்மா, பயப்படாமல் சொல்லுங்கள். நான் அந்த மருந்தைத் தெரிந்து கொண்டால்   மற்றவர்களுக்கும் அதைக்   கொடுக்க வசதியாக இருக்கும். அதற்காக  தான் கேட்டேன் எந்த டாக்டரிடம் போனீர்கள், அவர் என்ன மருந்து கொடுத்தார், சொல்லுங்கள்?''
”டாக்டர்! நீங்கள் சொல்வது என்னவோ ஒருவிதத்தில் உண்மை தான். சில நாட்களுக்கு முன் ஒரு மஹா வைத்ய நாதரிடம் போனேன். அவர் காஞ்சிபுரத்தில் இருக்கிறார். “அருட்பிரசாதம்’ என்னும் மருந்தைக் கொடுத்து என்னைக் குணப் படுத்தி விட்டார்” என்று  மஹா பெரியவாளிடம் சென்றதை, அங்கு நடந்ததை விவரமாக சொன்னார் தேவராஜ சர்மா.
"இனி ஆபரேஷன் உங்களுக்குத் தேவைப்படாது. நீங்கள் தைரியமாக வீட்டுக்குச் செல்லலாம். காதுநோய் முற்றிலும் குணமாகிவிட்டது” என்று டாக்டர் உறுதியளித்தார். 



sivan jaykay

unread,
May 1, 2023, 7:24:01 PM5/1/23
to amrith...@googlegroups.com

ஆத்ம வித்யா விலாசம்    61-65  -  நங்கநல்லூர்   J K  SIVAN
ஸதாசிவ ப்ரம்மேந்திரா

இந்த  பதிவோடு ஸதாசிவ  ப்ரம்மேந்திராளின்  ஆத்ம வித்யா விலாசம் நிறைவு பெறுகிறது.  மொத்தம் 65 ஸ்லோகங்கள். இதை புத்தகமாக்கி இலவசமாக  விநியோகம் செய்ய விருப்பமுடையவர்கள் அணுகவும்.  ஜே கே சிவன்  9840279080


सुखतरममरमदूरं सारं संसारवारिधेस्तीरम् ।समरसमभयमपारं तत्किञ्चन विद्यते तत्त्वम् ॥ ६१॥
sukhataramamaramadUraM sAraM saMsAravAridhestIram |samarasamabhayamapAraM tatki~nchana vidyate tattvam || 61||
 ஸுக²தரமமரமதூ³ரம் ஸாரம் ஸம்ஸாரவாரிதே⁴ஸ்தீரம் । ஸமரஸமப⁴யமபாரம் தத்கிஞ்சந வித்³யதே தத்த்வம் ॥ 61॥ 

 ஆத்ம வித்யா விலாசம் ஸ்லோகங்கள்  உண்மையில் ஸதாசிவ ப்ரம்மேந்த்ரரின்  வாழ்க்கையின் பிரதி பிம்பம். அதில் வரும் ஞானியின் தன்மை குணம்  எல்லாம் அவர்  வாழ்ந்த  வாழ்க்கை.  ஆத்ம ஞானம் பெற்றவனுக்கு  ஆனந்தத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. பிறப்பு இறப்பு  முதுமை  பசி தாகம் எல்லாம் கடந்த பட்ட கட்டை அவன். சம்சார சாகரத்தை எளிதில் கடந்தவன். த்ரிகாலமும் உணர்ந்தவன். பயம் பந்தம் பாசம் பற்று அற்றவன். சத்தியத்தை ஸாஸ்வதமாக  உணர்ந்தவன். 
. சிறந்த மேலான சுகத்தை அறிந்தவன்.  தானே ஸத்யமாக  வாழ்பவன். பிரம்மத்தில்  காலத்தவன். 

अरसमगन्धमरूपं विरजस्कमसत्त्वमतमस्कम् ।निरुपमनिर्भयतत्त्वं तत्किमपि द्योतते नित्यम् ॥62॥
arasamagandhamarUpaM virajaskamasattvamatamaskam |nirupamanirbhayatattvaM tatkimapi dyotate nityam || 62||
அரஸமக³ந்த⁴மரூபம் விரஜஸ்கமஸத்த்வமதமஸ்கம் । நிருபமநிர்ப⁴யதத்த்வம் தத்கிமபி த்³யோததே நித்யம் ॥ 62॥

 ஐம்புலன்களால் உணரப்படும் சுவை, மணம், ரூபம்,  இல்லாததும், ரஜஸ், சத்வ, தமஸ் குணங்களற்றதும், ஒப்புமையற்றதும் பயம் அறியாததுமான  ஸத்யம் , நித்யம்,  எப்போதும்  ஞான ஒளியாக   பிரகாசித்துக்கொண்டே  உள்ளது. விவரிக்க இயலாதது. சத்வ ரஜோ  தமோ குணங்களுக்கு அப்பாற்பட்டது. எதனோடும் ஒப்பிடமுடியாதது.

ति गुरुकरुणापाङ्गादार्याभिर्द्व्यधिकषष्टिसङ्ख्याभिः ।निरवद्याभिरवोचं निगमशिरस्तन्त्रसारभूतार्थम् ॥ 63॥
iti gurukaruNApA~NgAdAryAbhirdvyadhikaShaShTisa~NkhyAbhiH |niravadyAbhiravochaM nigamashirastantrasArabhUtArtham || 63||
 இதி கு³ருகருணாபாங்கா³தா³ர்யாபி⁴ர்த்³வ்யதி⁴கஷஷ்டிஸங்க்²யாபி:⁴ । நிரவத்³யாபி⁴ரவோசம் நிக³மஶிரஸ்தந்த்ர ஸாரபூ⁴தார்த²ம் ॥ 63॥

 குருவின் கடைக்கண் பார்வைக்கருணையினால், வேதத்தின்  சிகரமான உபநிஷத தத்துவார்த்த சாரம்  உள்ளடங்கிய இந்த  62  ஸ்லோகங்களை  'ஆர்யா' எனும்  சந்தஸில், அதாவது செய்யுள் உருவத்தில்,  ஒரு வித குறையும் இன்றி சதாசிவ பிரம்மேந்திரர்  அளித்திருக்கிறார்.  இதை அனுபவித்து  அப்படியே  உச்சரிப்பவன்  மேன்மை பெறுபவன்.  சதாசிவ ப்ரம்மேந்த்ரர்  தான் இந்த ஸ்லோகங்களை  குரு அருளால் அவர்  கருணையால் அறிந்ததாக செப்புகிறார். 

गदितमिममात्मविद्याविलासमनुवासरं स्मरन्विबुधः ।परिणतपरात्मविद्यः प्रपद्यते सपदि परमार्थम् ॥ 64
  gaditamimamAtmavidyAvilAsamanuvAsaraM smaranvibudhaH |pariNataparAtmavidyaH prapadyate sapadi paramArtham || 64||
 க³தி³தமிமமாத்மவித்³யாவிலாஸமநுவாஸரம் ஸ்மரந்விபு³த:⁴ । பரிணதபராத்மவித்³ய: ப்ரபத்³யதே ஸபதி³ பரமார்த²ம் ॥ 64॥

இந்த ஆத்ம வித்யா விலாச  ஸ்லோகங்களை  ஞான தாகம் கொண்டவர்  தினந்தோறும் ஸ்மரணம் செய்தால், அவர் மேலான ஆத்மவித்யையில் வளர்ச்சிபெற்று, விரைவில் பரம்பொருளை அடைவார்  என்று  சதாசிவ ப்ரம்மேந்திரா உணர்த்துகிறார். 


परमशिवेन्द्रश्रीगुरुशिष्येणेत्थं सदाशिवेन्द्रेण ।रचितेयमात्मविद्याविलासनाम्नी कृतिः पूर्णा ॥ 65॥
paramashivendrashrIgurushiShyeNetthaM sadAshivendreNa |rachiteyamAtmavidyAvilAsanAmnI kR^itiH pUrNA || 65||
பரமஶிவேந்த்³ரஶ்ரீகு³ருஶிஷ்யேணேத்த²ம் ஸதா³ஶிவேந்த்³ரேண । ஆத்மவித்³யாவிலாஸ: ரசிதேயமாத்ம வித்³யாவிலாஸ நாம்நீ க்ரு’தி: பூர்ணா ॥

 ஸ்ரீ குரு பரமசிவேந்திரரின் சிஷ்யரான ஸதாசிவேந்திரரால் இயற்றப்பட்ட இந்த ஆத்மவித்யா விலாஸம் என்ற பெயர் கொண்ட  ஸ்லோகங்கள்  இத்துடன் சம்பூரணமாகின்றது, .நிறைவு பெறுகிறது. 

sivan jaykay

unread,
May 1, 2023, 7:24:01 PM5/1/23
to amrith...@googlegroups.com
விவேக சூடாமணி -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ஆதி சங்கரர் 

''உனக்கு தெரிந்த ஒரு வள்ளல் பெயரைச் சொல்லு என்றால் யோசிக்காமல் நான் முதலில் கை தூக்கி,  சொல்வது ''ஆதி சங்கரர்'' என்ற பெயரைத்தான். 
'என்னய்யா சொல்கிறீர். ஆதிசங்கரர்  ஒரு சந்நியாசி அவரைப்போய்  வள்ளல் என்கிறீரே?
''பின்னே என்ன? 32 வயதுக்குள்ளே இத்தனை அற்புத அதிசய விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை நமக்கு வாரி  தந்தவர் வள்ளல் இல்லை என்றால் வேறு யாரை வள்ளல் என்று சொல்வது? அவர் எழுதித்தள்ளிய ஸ்லோகங்கள், சாஸ்திரங்கள், நீதி நூல்கள், காவியங்கள், பெயர் சொல்லக்கூடத்தெரியாதே  நமக்கு.''
32 வயதில் மறைந்தாலும் ஆதி சங்கரருக்கு நாம் எல்லோரும் என்றும் குழந்தைகள் தான். 

நமக்கு ஏராளமான சொத்து வைத்து விட்டுப்போன முன்னோருக்கு எப்படி நன்றி சொல்வது?எங்கோ பூர்வீக சொத்து வைத்து விட்டுப்போன பாட்டன் பூட்டனை தெரியாமலேயே நிறைய பேர் ஏழையாக செத்துவிட்டார்கள். சிலர் சொத்து விவரம் தெரியாமல் விழிக்கிறார்கள். சிலர் வேறு எவரோ அந்த சொத்தை அனுபவிக்கிறார்கள் அவர்களை அப்புறப்படுத்த வழி தெரியாமல், சண்டை போட பணமோ பலமோ இல்லாமல் கண் எதிரே தனது சொத்தை மற்றவை அனுபவிப்பதை பார்த்து பொருமுகிறார்கள். சிலர் எனக்கு எவன் சொத்தும் வேண்டாம் நான் சம்பாதித்ததே போதும் எனும் ராசிக்காரர்கள்.

நாம் கேட்காமலேயே எந்த வில்லங்கமும் இல்லாமல் நிறைய சொத்து நம் எல்லோருக்குமே அள்ள அள்ள குறையாமல் நிறைய நிறைய பொதுவில் விட்டு வைத்துவிட்டுப்போன ஒரு முன்னோர் தான் ஆதி சங்கரர்.

நமது புத்தி கூர்மையால் எது நமக்கு உகந்தது, நல்லது, சிறந்தது, பின் பற்ற தக்கது, நல் வழி காட்டுவது என்று பாகுபாடு செயது அதை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொள்ள சில ஸ்லோகங்கள் உள்ளன. மொத்தம் 581 இது புரிந்தால் வேதாந்தம் நன்றாக காக்கா நரி வடை கதை மாதிரி எளிதில் புரியும். சின்மயானந்தா ஸ்வாமிகள் அற்புதமாக இதை விளக்கி சொல்வதை கேட்டிருக்கிறேன்.

கோவிந்தா நீ எப்போதும் பரமானந்த ஸ்வரூபன். வேதாந்த சித்தாந்த முடிவானவன். நீ யே நல்ல குருநாதன் எனக்கு. உன்னை வணங்கி இதை சமர்ப்பிக்கிறேன்


'' உங்களுக்கு நான் எழுதிய ஒரு அற்புதமான ஒரு தத்துவார்த்த போதனையை பரிசாக அளிக்கட்டுமா?'' என்று ஆதி சங்கரர் கேட்கிறார்.
''ஆச்சார்ய புருஷரே, ஆஹா அது எங்கள் பாக்யம், தாராளமாக வழங்குங்கள். என்ன அந்த அற்புதம் என்று சொல்வீர்களா?''
''என்னிடம் வேறு என்ன இருக்கிறது. உங்களுக்கு உதவும்படியான சில தத்துவங்கள் தான். அதற்கு நான் விவேக சூடாமணி என்ற பெயர் வைத்துள்ளேன்.''
''ஆஹா  வெகுநாளாக அதை படித்து அனுபவிக்க ஒரு அபிலாஷை. இன்று அது நிறைவேறட்டும் ஆச்சர்ய தேவா.''
''ததாஸ்து - அப்படியே ஆகட்டும்..''........
ஆகவே நண்பர்களே, இன்றுமுதல் நான் ஆச்சார்யரின் விவேக சூடாமணி உங்களோடு பகிர்கிறேன். 

ஆதி சங்கரரின் ஒரு  அற்புத மாணிக்கம் தான்  ''விவேக சூடாமணி''  அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சொல்ல ஒரு ஆசை. அவர் அருளாலே அது நிறைவேறட்டும்.  சூடாமணி என்றாலே சிரசில் அணியும் ஒரு  ஆபரணம். சிரசில் விவேகம் புகுந்தால் அதுவே ஒரு சிறந்த ஆபரணம் அல்லவா? 
அவர்  வைத்த  அழகான அர்த்தமுள்ள  பெயர் '' விவேக சூடாமணி'' 
ஆதி சங்கரரின்  விவேக சூடாமணி ஒரு அத்வைத  ரத்னம். சிறு  ரெண்டடி  ஸ்லோகங்களில்  பக்தியை,  ஞானத்தை, ஆன்மாவை,  கர்மத்தை, தர்மத்தை, குரு பக்தியை, பரோபகாரத்தை, முக்தியை  பற்றியெல்லாம்  வெகு அழகாக தனித்வத் தோடு  சொல்கிறார். அந்த ஸ்லோகங்களை  ஸம்ஸ்க்ரிதத்திலும்,  ஆங்கிலத்திலும்  தமிழிலும்  தமிழில் விளக்கத்தோடு அளிப்பதை  நான்   செய்த முன் வினைப்பயனாக  கருதி  பகவானை வேண்டுகிறேன். 
இனி ஒவ்வொரு நாளும்  ஐந்து  ஸ்லோகங்களை தினமும்  ஆதி சங்கரரின்  விவேக சூடாமணியிலிருந்து நாம்  அனுபவிக்கலாம்.என்ன இது பிடிக்குமா உங்களுக்கு? சேர்ந்து கொள்வோமா ரசித்து ருசித்து அனுபவிக்க?

sivan jaykay

unread,
May 1, 2023, 7:24:32 PM5/1/23
to amrith...@googlegroups.com
விஞ்ஞான நௌகா -  6/9  -    நங்கநல்லூர் J K  SIVAN 

यदानन्दलेशैः समानन्दि विश्वं    यदाभाति सत्त्वे तदाभाति सर्वम् ।
यदालोकने रूपमन्यत्समस्तं    परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ६॥

Yad Aanandalesaih samanandi viswam Yadaa bhaati satve sada bhati sarvam
Yadaalochite heyam anyat samastham Param Brahma nityam tadevaaham asmi. 6

யদ் ஆநந்தலேசைঃ ஸமாநந்தி விஸ்வம் யதா பதி ஸத்வே ஸதா பதி ஸர்வம்
யதாலோசிதே ஹேயம் அந்யத் ஸமஸ்தம் பரம் பிரம்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 6

இந்த  பிரபஞ்சத்தை  எது  ஆனந்த மயமாக்குகிறது என்றால் நிச்சயம் அது ப்ரம்மத்தால் விளையும் அற்புதம் தான்.  பேரின்பத்தை அது ஒன்றே. .உலகத்தில் கிடைக்கும் இன்பங்களை  பேரின்பம் என்று அவர் சொல்ல முடியும். எல்லாம் சின்ன சின்ன  விஷயங்கள் தானே.    ஞானம் ஒன்றே   சூரியனின் ஒளியை விட  அதிக பிரகாசத்தை தரக்கூடியது.  சூரியனின் ஒளி  சிறிது சிறிதாக வளர்ந்து அந்தியில் அஸ்தமனம் அடைவது.  பிரம்மத்தின் ஒளி  எப்போதும் ஒரே விதமாகத்தான்  ஒளிர்வது. 
நான் என்ற  எண்ணம்,  என்னால், எனக்கு, எனக்காக, என்னுடைய  என்ற  எண்ணங்கள் பிரம்மத்தை நெருங்கவே முடியாதே. ஆகவே  இந்த ஜட மாய உலகம் பிரம்மத்தை அணுகவே முடியாது. 
 
நான் தான் ப்ரம்மம் என்ற  உபநிஷத  மஹாவாக்யம் இதை அற்புதமாக நமக்கு ஞாபகப் படுத்துகிறது.  நாம் எல்லோருமே ப்ரம்மஸ்வரூபம் தான்.  அதை ஒரு கணமேனும் உணர்ந்தால்  நமது வாழ்வு உன்னதமாகும்.

sivan jaykay

unread,
May 1, 2023, 7:24:32 PM5/1/23
to amrith...@googlegroups.com
விவேக சூடாமணி   1-5   -  நங்கநல்லூர்  J K  SIVAN
ஆதி சங்கரர் 

सर्ववेदान्तसिद्धान्तगोचरं तमगोचरम् । गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम् ॥ 1 ॥
sarvavedāntasiddhāntagocaraṃ tamagocaram |govindaṃ paramānandaṃ sadguruṃ praṇato’smyaham || 1 ||
சர்வ வேதாந்த சித்தாந்த கோசரம் தம கோசரம் கோவிந்தம் பரமானந்தம் ஸத் குரும் ப்ரணதோஸ்ம்யஹம்

என்னப்பனே  கோவிந்தா, பரந்தாமா, ஆனந்த ஸ்வரூபனே,  உலகில் அனைவருக்கும் சதகுருவே, வேதாந்தத்தின் உட்பொருளே , மனம் வாக்கு காயத்தினால் அறியவொண்ணா அற்புதமே. உன்னை நமஸ்கரிக்கிறேன்'' என்று  ஆரம்பிக்கிறார்  ஆதி சங்கரர்,

जन्तूनां    नरजन्म दुर्लभमतः पुंस्त्वं ततो विप्रता  तस्माद्वैदिकधर्ममार्गपरता विद्वत्त्वमस्मात्परम् ।  आत्मानात्मविवेचनं स्वनुभवो ब्रह्मात्मना संस्थितिः
मुक्तिर्नो शतजन्मकोटिसुकृतैः पुण्यैर्विना लभ्यते ॥ २ ॥

jantūnāṃ narajanma durlabhamataḥ puṃstvaṃ tato vipratā tasmādvaidikadharmamārgaparatā vidvattvamasmātparam |
ātmānātmavivecanaṃ svanubhavo brahmātmanā saṃsthitiḥ muktirno śatajanmakoṭisukṛtaiḥ puṇyairvinā labhyate || 2 ||

ஐந்தூனாம் நரஜன்ம துர்லபமத: புஸ்த்வம் ததோ விப்ரதா தஸ்மாத்வைதிக தர்மம் மார்க்க பரதா வித்வத்வமஸ்மாத்பரம்
ஆத்மானாத்ம விவேசனம் ஸ்வனுபவோ ப்ரம்மாத்மனா ஸம்ஸ்திதி ; முக்தினோ சத ஜன்மகோடி சுக்ருதை ; புண்யைர் வினா லப்யதே:2

அரிது அரிது மானிடராகப் பிறத்தல்.  நாம் எப்போதோ  செய்த பாக்யத்தால்  மனிதராக பிறந்து  ஆதி சங்கரரின்  விவேக சூடாமணியைப்  படிக்கவும்  புண்யம் செய்தவர்கள். மனிதனாக பிறந்தால் மட்டும் போதாது. சாத்விக குணம் படைத்தவன் தான் உன்னத  உயர்ந்த மனிதன்.  அவனுக்கு பக்தியும் ஆன்மீக சிந்தனையும் வேறு சேர்ந்திருந்தால் வேதவழியில் நடப்பவனாக இருந்தால் அவன்  தான் நடமாடும் கடவுள். அவனுக்கு எது சாஸ்வதம் அநித்தியம் என்று தெரியும்.  புரியும். ஆன்மசக்தி உணர்வு இருப்பதால் மோக்ஷ   மார்கத்தில் செல்பவன். ஆயிரங்கோடி பிறவிகளில் கிடைக்கும் புண்யத்தை எளிதில் பெற்றவன்.  

दुर्लभं त्रयमेवैतद्देवानुग्रहहेतुकम् ।मनुष्यत्वं मुमुक्षुत्वं महापुरुषसंश्रयः ॥3 ॥
durlabhaṃ trayamevaitaddevānugrahahetukam |manuṣyatvaṃ mumukṣutvaṃ mahāpuruṣasaṃśrayaḥ || 3 ||
து³ர்லப⁴ம் த்ரயமேவைதத்³தே³வாநுக்³ரஹஹேதுகம் । மநுஷ்யத்வம் முமுக்ஷுத்வம் மஹாபுருஷஸம்ஶ்ரய: ॥ 3॥

புல்லாய், பூண்டாய், பல் பிறவியாக பிறந்தாலும் அனைத்திலும் சிறந்தது மானுட பிறவி. கிடைக்காத அபூர்வம்.துர்லபம் என்கிறார்  சங்கரர். அதிலும் ஆணாக பிறந்தவன் பிறர்க்கு உதவியாக  இருக்கவென்றே படைக்கப்பட்டவன். அதிலும்  கல்வி கேள்வியில் சிறந்த அந்தணனாக பிறப்பது அதிலும் சிறந்தது. அந்தணனாக பிறந்தாலும் வேதம் அறிந்தவன் உன்னதமானவன்.  வேதம் அறிந்தாலும் ஆத்ம ஞானம் பெற்றவன் கடவுள்.  ப்ரம்மம்.  முக்தி பெறுபவன்  என்கிறார்  ஆதி சங்கரர். .

लब्ध्वा कथंचिन्नरजन्म दुर्लभं तत्रापि पुंस्त्वं श्रुतिपारदर्शनम् । यस्त्वात्ममुक्तौ न यतेत मूढधीः स ह्यात्महा स्वं विनिहन्त्यसद्ग्रहात् ॥ 4 ॥

labdhvā kathaṃcinnarajanma durlabhaṃ tatrāpi puṃstvaṃ śrutipāradarśanam | yastvātmamuktau na yateta mūḍhadhīḥ sa hyātmahā svaṃ vinihantyasadgrahāt || 4 ||

லப்³த்⁴வா கத²ஞ்சிந்நரஜந்ம து³ர்லப⁴ம் var கத²ஞ்சிந் தத்ராபி பும்ஸ்த்வம் ஶ்ருதிபாரத³ர்ஶநம் । யஸ்த்வாத்மமுக்தௌ ந யதேத மூட⁴தீ:⁴ ஸ ஹ்யாத்மஹா ஸ்வம் விநிஹந்த்யஸத்³க்³ரஹாத் ॥ 4॥

அடே , குப்புசாமி, தற்கொலை என்பது கயிற்றில் தொங்குவதோ, விஷத்தை குடிப்பதோ, நீரில் விழுந்து மிதப்பதோ அல்லடா.  கிடைத்தற்கரிய , அதுவும் நீ கேட்காமலேயே, வேண்டாமலேயே, உனக்குத் தெரியாமலேயே  நீ  பெற்ற  அரிய மானுடப் பிறவி எடுத்தும் அதன் அருமை தெரியாமல்  மூன்று வேளை  சாப்பிட்டுவிட்டு தூங்குகிறாயே,  வேத சாஸ்திர ஞானம் இன்றி, ''தான்'' யார் என்றே தெரியாமல், நீ  உண்மையில் யார் என்றே  அறியாமல் நிழலை நிஜம் என்று தேடி ஓடி ஆடி மிருகமாக வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

इतः को न्वस्ति मूढात्मा यस्तु स्वार्थे प्रमाद्यति । दुर्लभं मानुषं देहं प्राप्य तत्रापि पौरुषम् ॥ 5 ॥
itaḥ ko nvasti mūḍhātmā yastu svārthe pramādyati |durlabhaṃ mānuṣaṃ dehaṃ prāpya tatrāpi pauruṣam || 5 ||
இத: கோ ந்வஸ்தி மூடா⁴த்மா யஸ்து ஸ்வார்தே² ப்ரமாத்³யதி । து³ர்லப⁴ம் மாநுஷம் தே³ஹம் ப்ராப்ய தத்ராபி பௌருஷம் ॥ 5॥
இப்போதாவது  விழித்துக்கொள்ளடா மனிதா. எவ்வளவு முட்டாளாக இருக்கிறாய் என்று ஒரு நாளாவது , ஒரு பொழுதாவது, ஒரு நேரத்திலாவது, ஒரு கணத்திலாவது உனக்கு புரியவேண்டாமா?  அரிதிலும் அரிதான மனித பிறவி எடுத்தவனே. சக்தி உள்ள ஆணாக பிறந்தவனே, வாழ்க்கையின்நோக்கம், லக்ஷியம் என்னவென்று புரிந்து கொள்ளடா. என்கிறார்  சங்கரர்.



sivan jaykay

unread,
May 1, 2023, 7:24:41 PM5/1/23
to amrith...@googlegroups.com
விவேக சூடாமணி   1-5     -  நங்கநல்லூர்  J K  SIVAN
ஆதி சங்கரர்

सर्ववेदान्तसिद्धान्तगोचरं तमगोचरम् ।  गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम् ॥ 1॥
sarvavedāntasiddhāntagocaraṃ tamagocaram govindaṃ paramānandaṃ sadguruṃ praṇato’smyaham || 1 ||
சர்வ வேதாந்த சித்தாந்த கோசரம் தம கோசரம் கோவிந்தம் பரமானந்தம் ஸத் குரும் ப்ரணதோஸ்ம்யஹம்

என்னப்பனே, கோவிந்தா நீ எப்போதும் பரமானந்த ஸ்வரூபன். வேதாந்த சித்தாந்த முடிவானவன். நீ யே நல்ல குருநாதன் எனக்கு. உன்னை வணங்கி இதை சமர்ப்பிக்கிறேன்.  மனம் வாக்கு காயம்  மூன்றாலும் சதா  உன்னையன்றி  நான் வேறு யாரை நினைப்பேன், தொழுவேன்.  வர்ணிக்க முடியாதவன் உன்னை நமஸ்கரித்து துவங்குகிறேன்.


जन्तूनां नरजन्म दुर्लभमतः पुंस्त्वं ततो विप्रता तस्माद्वैदिकधर्ममार्गपरता विद्वत्त्वमस्मात्परम्। आत्मानात्मविवेचनं स्वनुभवो ब्रह्मात्मना संस्थितिः
मुक्तिर्नो शतजन्मकोटि सुकृतैः पुण्यैर्विना लभ्यते ॥१॥

jantūnāṃ narajanma durlabhamataḥ puṃstvaṃ tato vipratā tasmādvaidikadharmamārgaparatā vidvattvamasmātparam |
ātmānātmavivecanaṃ svanubhavo brahmātmanā saṃsthitiḥ muktirno śatajanmakoṭisukṛtaiḥ puṇyairvinā labhyate || 2 ||
 ஐந்தூனாம் நரஜன்ம துர்லபமத: புஸ்த்வம் ததோ விப்ரதா தஸ்மாத்வைதிக தர்மம் மார்க்க பரதா வித்வத்வமஸ்மாத்பரம்
ஆத்மானாத்ம விவேசனம் ஸ்வனுபவோ ப்ரம்மாத்மனா ஸம்ஸ்திதி ; முக்தினோ சத ஜன்மகோடி சுக்ருதை ; புண்யைர் வினா லப்யதே:

அரிதான நமது இந்த மனிதப் பிறவி எடுக்க எப்போதோ நாம் பாக்கியம் செய்தவர்கள். அரிது அரிது மானுடராகப் பிறத்தல் அரிது அல்லவா?. அப்படி மனிதனாக இருந்தும் அவர்களில் சாத்விக குணம் படைத்தவன் உன்னதமானவன். இதோடு அவனுக்கு பக்தியும் ஆன்மீக சிந்தனையும் வேறு சேர்ந்திருந்தால் வேதவழியில் நடப்பவனாக இருந்தால் அவன் கடவுளே தான்.  அவனுக்கு எது சாஸ்வதம் அநித்தியம் என்று தெரியும். ஆன்மசக்தி உணர்வு வேறு இருப்பதால் மோக்ஷபாதையில் செல்பவன். ஆயிரங்கோடி பிறவிகளில் கிடைக்கும் புண்யத்தை எளிதில் பெற்றவன்.


दुर्लभं त्रयमेवैतद्देवानुग्रहहेतुकम् ।मनुष्यत्वं मुमुक्षुत्वं महापुरुषसंश्रयः ॥ 3
durlabhaṃ trayamevaitaddevānugrahahetukam |manuṣyatvaṃ mumukṣutvaṃ mahāpuruṣasaṃśrayaḥ || 3 ||
துர்லபம் த்ரயமேவைத தேவானுக்கிரஹ ஹேதுகம் மனுஷ்யத்வம் முமுக்ஷுத்வம் மஹா புருஷ ஸம்ஸ்ரயா :3

ஐயா சாமி, ஒரு மூன்று முக்கிய அரிய விஷயங்கள் இறைவனருளால் நேர்ந்ததை தெரிந்து கொள்ளுங்கள். ஒன்று இந்த மானுட பிறவி, எளிதில் கிட்டாததை நாம்  சுலபமாக நாம்  வேண்டாமலேயே, கேட்காமலேயே, நினைக்கமாலேயே அடைந்துவிட்டோம்.  இது  ரொம்ப ரொம்ப துர்லபமாச்சே  என்கிறார் சங்கரர்.   இப்படி கிடைத்த  மானுட ஜென்மத்தில் ரெண்டாவது நமக்கு  வேண்டுவது முக்தியில் நாட்டம், மூன்றாவது மகான்களை போற்றி வணங்கி சேவை செய்வது.  அது ஒரு அரும்  பாக்யம்.  இதை மறவாமல் நினைவில் கொள்வோம்.


लब्ध्वा कथंचिन्नरजन्म दुर्लभं तत्रापि पुंस्त्वं श्रुतिपारदर्शनम्। यस्त्वात्ममुक्तौ न यतेत मूढधीः स ह्यात्महा स्वं विनिहन्त्यसद्ग्रहात्॥4॥
labdhvā kathaṃcinnarajanma durlabhaṃ  tatrāpi puṃstvaṃ śrutipāradarśanam | yastvātmamuktau na yateta mūḍhadhīḥ
sa hyātmahā svaṃ vinihantyasadgrahāt || 4 

லப் த்வா கதச்சிந் நரஜன்ம துர்லபம் தத்ராபி புஸ்த்வம் ஸ்ருதி பாரதர்சனம் யஸ்த்வாத்ம முக்தோ ன யதேத மூடதி
ஸ ஹ்யாத்மஹா ஸ்வம் விநிஹந்த்ய ஸத்கிரஹாத்

தம்பி, புரிந்துகொள், உனக்கு கிடைத்த இந்த மனுஷ பிறவி அரிதான அற்புதமான அதிர்ஷ்டம். கிடைத்த்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அறிந்து  கொள்ள  வேண்டிய நல்ல விஷயங்களைத்  தேடி பிடித்து கற்றுக்கொள். உன்னையே நீ அறிவாய் என்ற சிறந்த தத்துவத்தை துளியும் லக்ஷியம் பண்ணாமல் கோட்டை விடாமல் ஆத்ம விசாரத்தில் ஈடுபடு. கோட்டை விட்டவன் வடி கட்டிய முட்டாள். நிழலை நிஜமென்று தேடி ஓடாதே.  தற்கொலை என்பது கயிற்றில் தொங்குவதோ, விஷத்தை குடிப்பதோ, நீரில் விழுந்து மிதப்பதோ அல்ல. அரிய மானுடப் பிறவி எடுத்தும் அதன் அருமை தெரியாமல், வேத சாஸ்திர ஞானம் இன்றி, ''தான்'' யார் என்றே தெரியாமல் அறியாமல் நிழலை நிஜம் என்று தேடி ஓடி ஆடி மிருகமாக வாழ்வது. நிறைய பேர் நாம் மிருக வாழ்க்கையா, மெஷின் வாழ்க்கையா எதை வாழ்கிறோம் என்றே  தெரியாதவர்கள். வேதம் சாஸ்திரம் ஞானம் இதற்கெல்லாம் அர்த்தம் கூட தெரியாத போது அதை எப்போது எப்படி அறிவது? அறியவேண்டும் என்ற எண்ணமாவது மனதில் உண்டாகுமா? அது போதுமே'' என்கிறார் சங்கரர்

इतः को न्वस्ति मूढात्मा यस्तु स्वार्थे प्रमाद्यति । दुर्लभं मानुषं देहं प्राप्य तत्रापि पौरुषम् ॥ 5 ॥
itaḥ ko nvasti mūḍhātmā yastu svārthe pramādyati | durlabhaṃ mānuṣaṃ dehaṃ prāpya tatrāpi pauruṣam || 5 ||

இத  கோ ன்வஸ்தி 
மூடாத்மா யாசித்து ஸ்வார்த்தே ப்ரமாத்யதி ; துர்லபம் மானுஷம் தேகம் ப்ராப்ய  தத்ராபி  பௌருஷம் 5
 மனிதனாக பிரததே  அதிர்ஷ்டம். அதிலும் ஆணாக பிறந்தவன் ரொம்ப கொடுத்துவைத்தவன். அதிலும்  அந்தணன் ரொம்ப விசேஷம். அதிலும் வேதம் தெரிந்தவன்  புரிந்தவன். அதுவும் போதாது என்று ஆத்ம  ஞானம் தேடுபவன்  பாக்கியசாலி.  இப்படி இல்லாமல்  கிடைத்த  மானுட தேஹத்தின்  அருமை தெரியாதவன் சர்வ முட்டாள். 

sivan jaykay

unread,
May 1, 2023, 7:24:41 PM5/1/23
to amrith...@googlegroups.com
ஸௌந்தர்ய லஹரி  57/103  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

57  பூரண நிலவொளி அம்பாளின் கருணை.

दृशा द्राघीयस्या दरदलितनीलोत्पलरुचा  दवीयांसं दीनं स्नपय कृपया मामपि शिवे।
अनेनायं धन्यो भवति न च ते हानिरियता वने वा हर्म्ये वा समकरनिपातो हिमकरः॥

Drisa draghiyasya dhara-dhalita-nilotpala-rucha Dhaviyamsam dhinam snapaya kripaya mam api Sive;
Anenayam dhanyo bhavathi na cha the hanir iyata Vane va harmye va sama-kara-nipaatho himakarah

த்ருஶா த்ராகீயஸ்வா தரதலித நீலோத்பல ருசா தவீயாம்ஸம் தீனம் ஸ்நபய க்ருபயா மாமபி ஶிவே
அநேனாயம் தன்யோ பவதி ந ச தே ஹானி-ரியதா வனே வா ஹர்ம்யே வா ஸமகர நிபாதோ ஹிமகர:  57

ஜெகதீஸ்வரி, தாயே, மங்களஸ்வரூபியே ! தீர்க்கமான பார்வை கொண்டவளே,  மொட்டவிழ்ந்த  தாமரைக்  கண்ணாளே , ன உன்  கடைக்கண் பார்வே  எங்கோ  வெகு தூரத்தில்  உன்னை வணங்கி நிற்கும்  பரம ஏழையாகிய  என் மீதும் படவேண்டு. என்னை  உன் கூட கருணையால்  ரக்ஷிக்கவேண்டும்.  அதுவே  பெரும் செல்வந்தனாக என்னை மாற்றிவிடும்.  இதனால் உனக்கு  என்னம்மா நஷ்டம்?  சந்திரனைப்  பார், அவனது பால் நிலவொளி  ஆளில்லாத காட்டிலும், அலைகள் ஓயாத பெரும் கடலிலும்  மக்கள் மலிந்த  நாட்டிலும், மாளிகைக்குள்ளும் சமமாகவே பொழிகிறதே. என்ன பாரபக்ஷம் இருக்கிறது அதில்?.  அதனால் சந்திரனுக்கு ஏதாவது நஷ்டம் உண்டா, சொல்?''  என்கிறார்  சங்கரர்.

அம்பாளைத் தேடி எங்கும் போகவேண்டாம்?  அவள் எங்கும் நிறைந்தவள்.  தாயின் கருணை என்றும் எப்போதும் உண்டு. 
பார்வையாலேயே உலகாள்பவள்.   அம்பாளை வேண்டும்போது ஏன் சங்கரர்  சந்திரனை நினைக்கிறார்?  சந்திரனிடம் உள்ள 16 கலைகளும் அம்பாளிடம் உண்டு. அவள் பிறைசூடி.  சந்திரனின்  குளுமை அம்பிகையின்  கருணைத் தன்மை.


sivan jaykay

unread,
May 1, 2023, 7:24:41 PM5/1/23
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம் -     நங்கநல்லூர்  J K  SIVAN 

மஹேந்திர மங்கலத்தில் ஒரு மாணவன் 

நாம்  சற்று பின்னோக்கி  பார்க்கும்போது  காஞ்சி  காமகோடி மடத்தின்  68 வது பீடாதிபதி, ஜகத் குருவாக  ஒரு 13 வயது பாலகன் கண்ணில் படுகிறான்.    ஒரே நாளில்  ஸ்வாமிநாதன் சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஆகிவிட்டானே  எப்படி? எல்லாம்  காமாக்ஷியின்  சங்கல்பம். 

அப்போதெல்லாம்  காமகோடிபீடம்  கும்பகோணம் மடத்தில் இருந்து செயலாற்றிக்  கொண்டிருந்தது.  புதிய  பீடாதிபதி கும்பகோணம்  மடத்துக்கு சென்றுவிட்டார்.   இந்த சின்ன  பீடாதிபதியை  பார்க்க வேண்டும் என்று அநேக பக்தர்களுக்கு  ஆர்வம். ஆசை.  பாசம்.  அப்போதெல்லாம் வீடியோ, ஆடியோ, போட்டோ  எல்லாம்  ஏது ?  பத்திரிகைகளும் அவ்வளவு இல்லை. ஆகவே  நேரில் வருவோரின் எண்னிக்கை நாளுக்கு நாள்  அதிகமாகிக் கொண்டே வந்ததால்  திடீரென்று புதிதாக  பதவியேற்ற  பெரியவாளுக்கு  சரி  வர  வேத பாடங்களைக் கற்பதற்கு நேரம் ஒதுக்கவே முடியவில்லை.  நேரம் போதவும் இல்லை.  என்ன செய்யலாம் என்று  மடத்து  அதிகாரிகள் யோசித்தனர்.   முசிறி- தொட்டியம் சாலையில், காவிரியின் வடகரையில் உள்ள மஹேந்திரமங்கலம் கிராமத்தில்  பெரியவாளுக்கு அமைதியாக  வேத  ஸாஸ்த்ர  பயிற்சி பெற  தங்க வைக்கலாம் என முடிவாகியது. 
.
10-ஆம் நூற்றாண்டில், மஹேந்திர மங்கலம் ஒரு வளமான விவசாய பூமி.  பல்லவ ராஜா மகேந்திரவர்மன், இந்தக் கிராமத்தை  சதுர்வேதி மங்கலம்  என்று பிராமணர்களுக்கு தானம் செய்தான் என்று கல்வெட்டு சொல்கிறது. ஒரு  பழைய  பெரிய  சிவாலயம், பூமிக்கடியில் புதையுண்டிருந்தது.  சிவனின் பெயர்  தில்லைநாதன்.   மகேந்திர மங்கலத்துக்கு அருகே இன்னொரு ஊர் ஸ்ரீனிவாசநல்லூர்.  அங்கேயும் ஒரு சிவாலயம்.  எல்லாம்  சோழர்  காலத்து கோவில்கள். 

மஹேந்திரமங்கலத்தில்,  மூன்று வருஷகாலம்  1911-1914  பெரியவா  வேதங்களைக் கற்றார். மற்ற மாணவர்களை போல் இல்லாமல் இங்கே  ஆசிரியர்கள் மாணவனை வணங்கினார்கள். மாணவன் ஜகத் குருவாச்சே.   

அங்கிருந்த பாடசாலை  குவளக்குடி சிங்கம் அய்யங்கார்  என்ற ஸ்ரீரங்கத்து  வைணவரால் நடத்தப்பட்டு வந்தது. 
இப்போதும்  பாடசாலை இருக்கிறது என்று தெரிகிறது. ஐயங்காரின்  வம்சாவளி தொடர்ந்து நடத்தி வருகிறது.

மாணவனாக இருந்த  பெரியவா அங்கே  அப்போது  ஒரு  துளசிச் செடி நட்டு வளர்த்தார்.  அது இன்னும் இருக்கிறது. அதை நமஸ்கரித்து பூஜை செய்து விட்டு அப்புறம் தாம்  வேத அப்யாசம் நடக்கிறது. 

பல வருஷங்கள்  மஹா பெரியவா  மஹேந்திர மங்கலம்  சென்றிருக்கிறார். அருகே ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் கோயி லுக்கும் சென்று தரிசனம் பண்ணுவார்.  மலைமேல் உள்ள கோயிலுக்கு செல்ல ஆயிரம் படிகள் . விடுவிடுவென்று  படியேறி நடப்பார்.   இன்னொரு விசேஷம்  மகேந்திர மங்கலத்துக்கு ஆதிசங்கரர் விஜயம் செய்திருக்கிறார்.அதனால்  மஹா பெரியவா சந்தியா வந்தனப் படித்துறைக்குச் செல்லும் வழியில் உள்ள மடத்தில்,    மஹா பெரியவா ஸ்ரீஆதி சங்கரர்  விக்ரஹம் ப்ரதிஷ்டை  பண்ணி இருக்கிறார்.  அங்கே இப்போது மஹா பெரியவா விக்ரஹமும் உள்ளது.
ஒவ்வொருநாளும்  ஆதிசங்கரர், மஹா பெரியவா இரண்டு பேருக்கும் பூஜைகள்  நடக்கிறது.
நாம் எல்லோரும்  ஒரு  தடவையாவது மஹேந்திர மங்கலம் சென்று  மஹா பெரியவா தரிசனம் பெறவேண்டும் என்று ஒரு விருப்பம். 

sivan jaykay

unread,
May 1, 2023, 7:24:50 PM5/1/23
to amrith...@googlegroups.com
விவேக சூடாமணி 6-10-  நங்கநல்லூர்  J K  SIVAN
ஆதி சங்கரர்

वदन्तु शास्त्राणि यजन्तु देवान् कुर्वन्तु कर्माणि भजन्तु देवताः । आत्मैक्यबोधेन विनापि मुक्तिः न सिध्यति ब्रह्मशतान्तरेऽपि ॥ 6 ॥
vadantu śāstrāṇi yajantu devān kurvantu karmāṇi bhajantu devatāḥ | ātmaikyabodhena vināpi muktiḥ na sidhyati brahmaśatāntare’pi || 6 ||
வத³ந்து ஶாஸ்த்ராணி யஜந்து தே³வாந் var பட²ந்து குர்வந்து கர்மாணி ப⁴ஜந்து தே³வதா: । ஆத்மைக்யபோ³தே⁴ந விநாபி முக்தி- var விநா விமுக்தி: ந ர்ந ஸித்⁴யதி ப்³ரஹ்மஶதாந்தரேऽபி ॥ 6॥

நமக்கு  சாஸ்திரங்கள் சொல்வது,  யாகங்கள் யஞங்கள் பண்ணுவதன் பலன்,  வழிபாட்டு முறை சடங்குகள் எல்லாம் தெரிந்திருந்தால் தான் முறையாக தொழவோ, வழிபடவோ, முடியும்.  முன்னோர்கள் அனைத்தையும்  சொல்லித் தந்திருக்கிறார்கள். எந்த தெய்வத்துக்கு என்ன ப்ரீதி, எப்படிச்  செய்யவேண்டும் என்று வழிமுறை இருக்கிறது.  ஆத்மாவை உணராதவன் முக்தியை அடையவே முடியாது.  நூறு பிரம்மாக்களின்  ஆயுசு கிடைத்தாலும்  ஆத்ம  விசாரம், ஆத்ம   ஞானம் இல்லாதவன் கரை சேர முடியாது.  ஒரு ப்ரம்மாவின்  ஒரு நாள் என்பது  நமது கணக்கில்   432 மில்லியன்  நாட்கள். நூறு ப்ரம்மா வயசு என்றால்????  எத்தனை சைபர் என்றே தெரியாது. அவ்வளவு ஆயுசு பிறவிகள் கொடுத்தான் தேறாதவனை என்ன வென்று சொல்வது?

अमृतत्वस्य नाशास्ति वित्तेनेत्येव हि श्रुतिः ।  ब्रवीति कर्मणो मुक्तेरहेतुत्वं स्फुटं यतः ॥7 ॥
amṛtatvasya nāśāsti vittenetyeva hi śrutiḥ | bravīti karmaṇo mukterahetutvaṃ sphuṭaṃ yataḥ || 7 ||
அம்ரு’தத்த்வஸ்ய நாஶாஸ்தி வித்தேநேத்யேவ ஹி ஶ்ருதி: । ப்³ரவீதி கர்மணோ முக்தேரஹேதுத்வம் ஸ்பு²டம் யத: ॥ 7॥

தன்னலம்  கொஞ்சமும் இல்லாமல்  செயகிற காரியத்தின் பலன்,   எதையும் எதிர்பார்த்து செய்யாத  காரியத்தின் பலன், அதாவது கர்மம் தான்  சித்த சுத்தத்தை தரும்.  ஜீவன் முக்தனாக வேண்டும் என்றால் த்யானம், நித்ய  அநித்திய   ஞானம், மாயப் பிரபஞ்சம் வசம் அகப்படாமல் ஒதுங்கும் பழக்கம்  வைராக்கிய  குணம்  எல்லாம் வேண்டுமே. எங்கே போவது?

अतो विमुक्त्यै प्रयतेत्विद्वान्संन्यस्तबाह्यार्थसुखस्पृहः सन् ।सन्तं महान्तं समुपेत्य देशिकं तेनोपदिष्टार्थसमाहितात्मा ॥ ८ ॥
ato vimuktyai prayatetvidvān saṃnyastabāhyārthasukhaspṛhaḥ san | santaṃ mahāntaṃ samupetya deśikaṃ  tenopadi  
ṣṭārtha 
samāhitātmā || 8 ||
॥८॥
Therefore, the learned seeker should abandon his desire for pleasures from external objects and strive to gain liberation (from the cycle of births and deaths). To this end he must approach a saintly and generous Master and must lead a life reflecting and contemplating on the words of advice given by his spiritual guru

எனவே மானுடர்காள், மாயையில் உழன்று அழியும் உலக விவகார வஸ்துகளில் மனம் செலுத்தாதீர்கள்.   பிறவிப் பெருங்கடலை கடக்க , நல்ல ஒரு குருவை அடைந்து மோக்ஷ மார்கத்தை அறிந்து  அவர் உபதேசத்தை அனுசரித்து, அதிலிருந்து  பிரழாமல்  விடாமல் எப்போதும் கடைப் பிடித்து வாழ்வீர். நல்லதும் கெட்டதும் நம் கையிலே தானே, நமது செயல்களின் பலனால்  தானே. இது நினைவிருக்கட்டும்.  அதை உணர்வது தான் ஒருவன்  கற்ற கல்விக்கழகு. 

9.  उद्धरेदात्मनात्मानं मग्नं संसारवारिधौ योगारूढत्वमासाद्य सम्यग्दर्शननिष्ठया ॥९॥
 உத்³த⁴ரேதா³த்மநாऽऽத்மாநம் மக்³நம் ஸம்ஸாரவாரிதௌ⁴ । யோகா³ரூட⁴த்வமாஸாத்³ய ஸம்யக்³த³ர்ஶநநிஷ்ட²யா ॥ 9॥

எழுந்திரு,ஓடு,நேரம் வீணாக்காதே. உன்னைப் பிடித்து இழுக்கும் சம்சார சாகரத்திலிருந்து வெளியே வா. ஐம்புலன் வசம் சிக்காமல், தன்னடக்கம் கொள். நித்ய அநித்தியம் எது என்று உணர்ந்துவிடாமல் அதன் படி நடப்பாய். யோகியாகி விடுவாயே. ஜனன மரண பாதிப்புகளிலிருந்து  விடுபடுவாய்.   எது நிஜம், எது மாயை என்று அறிந்து கொள்ள அப்போது உன்னால் முடியும்.. 
 
10.संन्यस्य सर्वकर्माणि भवबन्धविमुक्तये । यत्यतां पण्डितैर्धीरैरात्माभ्यास उपस्थितैः ॥10 ॥
saṃnyasya sarvakarmāṇi bhavabandhavimuktaye | yatyatāṃ paṇḍitairdhīrairātmābhyāsa upasthitaiḥ || 10 ||
 ஸந்ந்யஸ்ய ஸர்வகர்மாணி ப⁴வப³ந்த⁴விமுக்தயே । யத்யதாம் பண்டி³தைர்தீ⁴ரைராத்மாப்⁴யாஸ உபஸ்தி²தை: ॥ 10॥

ஐயா,  சாமி, ஒரு மூன்று முக்ய அரிய விஷயங்கள் இறைவனருளால் நேர்வதை தெரிந்து கொள்ளப்பா. ஒன்று இந்த மானுட பிறவி,   ரெண்டாவது முக்தியில் நாட்டம், மூன்றாவது மகான்களை போற்றி வணங்கி சேவை செய்தல். இதை மறவாமல் நினைவில் கொண்டாலே  உன் வாழ்வு பயனுள்ளது ஆகுமே. உனக்கு கிடைத்த இந்த மனுஷ பிறவி அரிதான அற்புதமான அதிர்ஷ்டம். கிடைத்த்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அறிந்துகொள்ளவேண்டிய நல்ல விஷயங்களை தேடி பிடித்து கற்றுக்கொள். உன்னையே நீ அறிவாய் என்ற சிறந்த தத்துவத்தை துளியும் அலக்ஷியம் பண்ணாமல் கோட்டை விடாமல் ஆத்ம விசாரத்தில் ஈடுபடு.  இதைக் கோட்டை விட்டவன் வடி கட்டிய முட்டாள்.  ஏற்கனவே இதை திரும்ப திரும்ப சொல்கிறேன். நிழலை நிஜமென்று தேடி ஓடாதே.. வேத சாஸ்திர ஞானம் இன்றி, ''தான்'' யார் என்றே தெரியாமல் அறியாமல் நிழலை நிஜம் என்று தேடி ஓடி ஆடி மிருகமாக வாழ்கிறோம்.  நாம் மிருக வாழ்க்கையா, மெஷின் வாழ்க்கையா எதை வாழ்கிறோம்? வேதம் சாஸ்திரம் ஞானம் இதற்கெல்லாம் அர்த்தம் கூட தெரியாத போது அதை எப்போது எப்படி அறிவது? அறியவேண்டும் என்ற எண்ணமாவது மனதில் உண்டாகுமா? அந்த  கேள்வி மனதில் எழுந்தால்  அதுவே  நல்ல  அறிகுறி. அது போதுமே'' என்கிறார் சங்கரர்


sivan jaykay

unread,
May 2, 2023, 7:40:26 PM5/2/23
to amrith...@googlegroups.com

கனவிது தான் நிஜமிது தான்.....   நங்கநல்லூர்  J K  SIVAN 

எல்லோருக்கும்  கனவு வரும்.  சிலர்  எனக்கு கனவே வருவதில்லை  என்கிறார்கள்.  உண்மையில் அவர்களும் கனவு காண்கிறார்கள். ஆனால் கனவு காண்பதை  நினைவில் கொள்ளாதவர்கள். மறந்து போகிறவர்கள்.   ஒன்றரை மணி யிலிருந்து 3 மணி நேரம் கனவு ஒவ்வொரு ராத்திரியும் நமக்கு  வருமாம்.    அப்படியானால்  வாழ்வில் குறைந்தது ஆறு ஏழு வருஷம் கனவில் போகிறது.  வருஷத்துக்கு உத்தேசமாக  1500 கனவுகள் ஒருவருக்கு வரும் போல் இருக்கிறது. 

விடிகாலையில் வருவது கொஞ்சம் நீண்ட கனவு. மற்றது எல்லாம் குறும்படம். நீளமான கனவு  அரை மணியிலிருந்து  முக்கால் மணி நேரம் ஓடுமாம். நூற்றுக்கு தொண்ணுறு கனவு மறந்தே போய்விடுகிறது.
கனவில் எப்போதும் தெரிந்த முகங்களே வரும்.  வாழ்வில் எத்தனை  பேரை பார்க்கிறோம், பழகுகிறோம்.
குருடர்களும் கூட கனவு காண்கிறார்களாம். 
கனவு  கலர் கலராக வருமா கருப்பு வெளுப்பா  என்றால் அநேகமாக கலரில் தான். வாழ்க்கையில்  காண்பதெல்லாம்  பல வண்ணங்களில் தானே.   நாலிலிருந்து  ஏழு கனவுகள் வரை  ஒவ்வொரு ராத்ரியும் வருகிறதாம். ஆச்சர்யமாக இருக்கிறது. 

குழந்தைகள் கனவில் மிருகங்கள் பக்ஷிகள் தான் அதிகமாக வருகிறதாம்.  நாய்கள், குதிரைகள், பாம்பு,  கரடி, சிங்கம்.  ராக்ஷஸ உருவங்கள் கனவில் வந்து கடித்து பயந்து  அழுவார்கள்..

அது சரி. மிருகங்களுக்கும் கனவு வருமாம்.  டால்பின்  dolphin  எனும் மீன்வகைக்கு கனவே வராதாம். பாதி மூளையின் சக்தியோடு தான்  டால்பின்கள்  தூங்குபவை என்பதால் தான் இது. 

இன்னொரு ஸ்வாரஸ்யமான  விஷயம்.  கருவுற்றிருக்கும் பெண்களுக்கு  கனவுகள்  எல்லாம்  நன்றாக ( ஞாபகம்  அதிகமாக) இருக்குமாம்.   கருவுற்றிருக்கும்போது ஹார்மோன் மாற்றங்கள் அதீதமாக  செயல்படுவதால் இது முடியுமாம். 

என் நண்பர்  சுப்ரமணிய மாமாவுக்கு எப்போதும் மன்னார்குடி கிராம  வீட்டில் பின் கட்டில் உக்ராண அறையில் ஓட்டைப் பிரித்துக்கொண்டு  திருடன் உள்ளே குதித்து, நெல் குதிரில்உட்கார்ந்து  இருப்பது போல் தான் அடிக்கடி வழக்கமாக  கனவு வந்து பாதி ராத்ரியில், விடிகாலையில் எல்லாம் உரக்க ஏதேதோ உளறி    திருடனைப் பிடி  என்று கட்டளையிடுவார்.  அவர் மனைவி சரஸ்வதிக்கு  பழக்கம் என்பதால்  கன்னா பின்னா என்று கத்தி அவரை எழுப்ப, அப்புறம் ஒரு டம்ப்ளர்  பானை ஜலம் குடித்துவிட்டு  விபூதியை  இட்டுக்  கொண்டு தூங்குவார். அப்புறமோ   மறுநாளோ  மீண்டும் திருடன் வரும்போது  கத்துவார். 

சிலருக்கு பயம் அடிமனதில் எப்போதும்  குடிகொண்டிருக்கும். அவர்களுக்கு ஏதாவது ஒன்றின் மேல் பயம் இருந்தால் அது அடிக்கடி அவர்களை கனவில் வந்து  வாட்டும். மாமாவுக்கு திருடனை  நினைத்தால் பயம் போலிருக்கிறது.

ஆண்களின் கனவுகள்  முக்கால் வாசி வெளியுலகு சம்பந்தமானவை. பலபேரை சந்திப்பதால் அவர்களில் யாரையாவது கனவில்ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்,  சம்பவத்தில்,  காண்பார்கள். பெண்கள் அநேகமாக வீட்டுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகள் சம்பந்தமான கனவுகள் தான் அடிக்கடி காண்பார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். 

ஆண்களின் கனவுகளில் ஆண்கள் அதிகம் தென்படுவார்கள். பெண்கள் கனவில்  வெட்டு கொலை குத்து காயம் அதிகம் இருப்பதில்லையாம்.
கனவு  குறட்டை ரெண்டும் சேர்ந்து ஒரே சமயத்தில்  வரவே வராதாம்.
கனவு  பலிக்குமா நிஜமாகுமா என்று கேட்டால்   ஆகும்  ஆகாது என்று மதில் மேல் பூனையாக பதில் வருகிறது. 

sivan jaykay

unread,
May 2, 2023, 7:40:43 PM5/2/23
to amrith...@googlegroups.com

விஞ்ஞான நௌகா -  7/9  -    நங்கநல்லூர் J K  SIVAN 

अनन्तं विभुं निर्विकल्पं निरीहं    शिवं सङ्गहीनं यदोङ्कारगम्यम् । निराकारमत्युज्ज्वलं मृत्युहीनं    परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ७॥

Anandam vibhum sarvayonim nireeham Sivam sangaheenam yad omkaaragamyam Niraakaaramathyujwalam mruthyuheenam Param Brahma nityam tadevaaham asmi. 7

ஆநந்தம் விভும் ஸர்வயோநிம் நிரீஹம் ॥ஶிவம் ஸங்গஹீநம் யদ் ஓம்காரகாம்யம் நிராகாரமத்யுஜ்வலம் ம்ருʼத்யுஹீநம் பரம் பிரம்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 7

இந்த  ஆத்ம  அனுபவம்  இருக்கிறதே  அது  அற்புதமான ஒன்று. எல்லோராலும் அனுபவிக்க முடியாதது.  முயற்சித்தால், விடாது  தேடினால் கட்டாயம் கிடைக்கக் கூடியது.  அது என்றும்  முடிவில்லாதது, தெய்வீகமானது,  பிரபஞ்சத்தையே  கட்டுக்குள் வைக்க முடிந்தது, அமைதியானது, தனித்வமானது, " ஓம் " எனும் ப்ரணவமந்த்ர  மூலம்.  அழிவற்றது, அருவமானது,  ஒரு வார்த்தையில் சொல்வதானால்  ப்ரம்மம்.  சதா ஆனந்தத்தை தருவது. .

यदानन्द सिन्धौ निमग्नः पुमान्स्या-   दविद्याविलासः समस्तप्रपञ्चः । तदा नः स्फुरत्यद्भुतं यन्निमित्तं    परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ८॥

Yad Aananda sindhau nimagnah puman sya-Dvidyavilasah samastha prapanchah Tadaa na sphurathyatbhutam yannimitham Param Brahma nityam tadevaaham asmi.  8

யத் ஆநந்த ஸிந்தௌ நிமக்னஹ புமாந் ஸ்யா- দ்விদ்யாவிலாஸঃ ஸமஸ்தா ப்ரபஞ்சঃ ததா ந ஸ்ফுரத்யத்ভூதம் யந்நிமிதம்பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 8

ஆத்மானுவத்தில்  மூழ்குபவனுக்கு  வெளியேறவே  தோன்றாது.  அதிலேயே மேலும் மேலும் இன்னும் ஆழமாக  ஈடுபடுவான். எல்லையற்ற பேரின்பக்கடல் ப்ரம்மம்.  பிரபஞ்ச காரணம் அது.   அறியாமையைப் பூக்கும் ஞான தீபம்.  ப்ரம்மம் ஈடிணையற்றது.  நானே  ப்ரம்மம் என்று  உணரவைப்பது. 

स्वरूपानुसन्धानरूपां स्तुतिं यः    पठेदादराद्भक्तिभावो मनुष्यः । श्रुणोतीह वा नित्यमुद्युक्तचित्तो   भवेद्विष्णुरत्रैव वेदप्रमाणात् ॥ ९॥

Swaroopaanusandhanaroopaam sthuthim yah Pathed aadaraal bhakthibhavo manushyah Srunotheeha va nithyam udyukta chitto Param Brahma nityam tadevaaham asmi.    9

ஸ்வரூபாநுஸந்ধநரூபம் ஸ்துதிம் யঃ பதேத் ஆதாரால் பக்திபவோ மனுஷ்யஹ் ஶ்ருணோதீஹ வா நித்யம் உத்யுக்த சித்தோ பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 9

நான்  யார்  என்ற தேடலின்  விடை தான்  பிரம்மானந்தம்.  ஆதி சங்கரர் 9 ஸ்லோகங்களில் இதை  எளிதாக  வர்ணிக்கிறார். அதை தான் விஞ்ஞான  நௌகா என்ற  சம்சார சாகரத்திலிருந்து விடுபட வைக்கும்  வழிகாட்டியாக  அறிகிறோம்.  இதை பக்தி  சிந்தனையுடன் படித்தால்  அறிந்தால், புரிந்து கொண்டால், அதன்  பரிசு   பேரின்பத்துக்கு  இலவச  டிக்கெட்.  நானே  ப்ரம்மம் என்று உணரவைக்க  ஒரு  சலுகை.  இதை எழுதிய  ஆதி சங்கரரை வாழ்த்தி வணங்குவோம். 

விஞ்ஞான நௌகா என்ற  இந்த சிறிய  9 ஸ்லோகங்கள்  இந்த பதிவோடு  நிறைவு பெருகிறது. எந்த நண்பராவது  இதை  பிரசுரித்து இலவசமாக வழங்க முன்வந்தால்,  விருப்பமிருந்தால் என்னை அணுகவும்.  ஜே கே சிவன் 9840279080

         

sivan jaykay

unread,
May 3, 2023, 8:01:43 PM5/3/23
to amrith...@googlegroups.com

ஸௌந்தர்ய லஹரி   58/103  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

58  அம்பாளின் கண்ணழகு. 

अरालं ते पालीयुगलमगराजन्यतनये  न केषामाधते  कुसुमशरकोदण्डकुतुकम्।
तिरश्चीनो यत्र श्रवणपथमुल्ल्ङ्घ्य विलासन् अपाङ्गव्यासङ्गो दिशति शरसन्धानधिषणाम्॥

arālaṁ te pālīyugalamagarājanyatanaye na keṣāmādhate  kusumaśarakodaṇḍakutukam |
tiraścīno yatra śravaṇapathamullṅghya vilāsan apāṅgavyāsaṅgo diśati śarasandhānadhiṣaṇām ||

அராளம் தே பாலீயுகல மகராஜன்யதனயே ந கேஷா மாதத்தே குஸுமஶர கோதண்ட குதுகம்
திரஶ்சீனோ யத்ர ஶ்ரவணபத முல்லங்க்ய விலஸன் அபாங்க வ்யாஸங்கோ திசதி ஶரஸந்தான திஷணாம்                       58

 பர்வதராஜகுமாரியே ! உன்னுடைய  காதின் வளைவு மட்டுமே  ஒரு காவியம்.  அந்த  வளைந்த காதுக்கும்  கண்ணுக்கும் இடையே உள்ள பிரதேசம் இரண்டும் புஷ்ப பாணனான மன்மதனுடைய வில் என்ற நம்பிக்கையை யாருக்குத்தான் உண்டாக்காது ? அந்தப் பிரதேசத்தில் குறுக்காகச் செல்லுகின்ற கடைக்கண் பார்வை காது வழியாக ஊடுருவிப் பாய்வதாய் விளங்கிக்கொண்டு பாணம் தொடுக்கப்பட்டுள்ளது என்ற தோற்றத்தை உண்டாக்குகிறது.  மன்மதனின் கரும்பு வில் பராசக்தி உமையின் புருவம்  கண்களுக்கு உவமையாகக்  காட்டப்பட்டுள்ளது. 

பராசக்தியின் கண்களின்  அழகை,  அவளது பார்வையின் சக்தியை அறிந்த  அபிராமி பட்டர்  அபிராமி அந்தாதியில் எவ்வளவு அற்புதமாக ஒரு பாடலை நமக்கு அளித்திருக்கிறார்.  அதில் அம்பாளின் கடாக்ஷம், கடைக்கண் பார்வை என்னவெல்லாம் தரும் என்று பெரிய லிஸ்ட் புரியும்படியாக போட்டிருக்கிறார் பாருங்கள்:
 
தனந்தரும் கல்வி தருமொரு நாளுந் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன வெல்லாம் தரும்அன்ப ரென்பவர்க்கே
கனம்தரும் பூங்குழ லாளபிராமி கடைக் கண்களே- அபிராமியந்தாதி 69

sivan jaykay

unread,
May 4, 2023, 10:47:26 PM5/4/23
to amrith...@googlegroups.com

கண்ணாடியில் என்ன தெரிகிறது.   -   நங்கநல்லூர்  J K  SIVAN 

நாம்  எல்லோரும் தமிழன் என்று சொல்லிக்கொள்வோம். ஆனால்  எப்பவும் எல்லோர் கிட்டேயும் இங்கிலீஷிலேயே  தமிழ் கலந்து பேசுவோம்.  
லஞ்சம்  ஒழியணும் னு கத்துவோம், பேசுவோம், எழுதுவோம், எந்த காரியம் ஆகணும் என்றாலும் எக்ஸ்ட்ரா யாருக்கோ கொடுத்தா தான் காரியம் ஆகும்னு தெரியுமே அதனால் கொடுக்க அஞ்ச மாட்டோம்.  வளர்த்துக் கொண்டே இருந்தால் கொழுத்துப் போகும் லஞ்சம் எப்போ எப்படி ஒழியும்?  
தேசப்பற்று  கொஞ்சம் கூட இல்லாமல்  அமேரிக்கா  லண்டன் ஆஸ்திரேலியா சிங்கப்பூர் என்று  வெளிநாடுகளை புகழ்ந்து அங்கேயே  வாழ  பலருக்கு  வற்றாத தாகம் இருக்கிறதே. புண்ய பூமி பாரத தேசத்தை விடவா மற்ற தேசமெல்லாம் ஸ்வர்கம்?  இங்கு சில  முள் புதர்கள் இருப்பதையெல்லாம் களைந்தால்  என்றும் இது தான் ஸ்வர்கம்.  முள்ளெல்லாம்  நாம் உருவாக்கினவர்கள் தான் என்பதையும் மறக்க கூடாது.
அருகிலே  ரயில்வே ஸ்டேஷன்,காலேஜ், ஆஸ்பத்திரி  என்றெல்லாம்  சொல்லி ஏமாற்றப்பட்டு  ஊருக்கு கடைசியில்  எங்கோ கன்யாகுமரி பக்கத்தில் மாதிரி  முன்னூறு ரூபாய்க்கு ஒரு கிரவுண்ட் வாங்கி காடு நாடாக  முப்பது நாற்பது வருஷங்கள் காத்திருந்தவர்களில் நானும் ஒருவன்.
பெரிய  பெரிய  மால், காம்ப்ளெக்சில் எல்லாம் கேக்கற விலையை பலமடங்கு அதிகமாக கொடுத்து வாங்குவோம், ஆனால் பாவம் காலில் செருப்பில்லாத  கீரைக்காரி,  வயதான வாழைப்பழ வியாபாரியின் வயிற்றலடித்து பேரம் பேசுபவர்கள் நாம்.
இன்றும்  நம்மில் பலர் வெள்ளைத்  தோல் இருந்தால் பரம புத்திசாலி, படு சாமர்த்திய சாலி,கெட்டிக்காரன், படித்தவன் என்று நினைத்து  அவனை கும்பிடுபவர்கள் இருப்பது துர்பாக்கியம்.
சுவற்றுக்கு அப்பால் இருப்பவனை தெரியாமல் வாழும் நாம் எப்படி ஒற்றுமை பற்றி வாய் கிழிய பேசுகிறோம்.
சுயநலத்துக்கு ரொம்ப  இடம் கொடுத்துவிட்டோம். 
வாக்கு எனது  பிறப்புரிமை, சுதந்திரம் என்று பேசி காசுக்கு வாக்கை விற்கும்போது  நம்மை காசுக்கு  வாங்கியவன் காப்பாற்றவா செய்வான். காசு பண்ணுவானா காப்பாற்றுவானா , இது கூட நமக்கு இன்னும் தெரியவில்லையே.
வாட்ஸாப்பில் வருவதை எல்லாம் சத்ய வாக்காக  நம்புபவர்கள். 
ஆங்கிலமோகத்தில்  அரிச்சுவடியை மறந்தவர்கள். 
நாம் அவசியம் மாறவேண்டும்.
 

 

sivan jaykay

unread,
May 4, 2023, 10:47:26 PM5/4/23
to amrith...@googlegroups.com
கோபியர்  கொஞ்சும்  ரமணா..    நங்கநல்லூர்   J K  SIVAN 

கிருஷ்ணன்  ஒரு வினோதமான தெய்வம்.  இப்படி ஒரு தெய்வம் மனிதர்களோடு சரி சமானமாக  அவர்களில் ஒன்றாக பழகி வாழ்ந்ததாக வேறெங்கும் காண முடியவில்லை.  அவன் பிரிந்தாவனத்தில்  கோகுலத்தில் கோபியர்களின்  அன்பில் ஆதரவில் வளர்ந்தவன்.   ஸூர்தாஸ்  இதைப் பற்றி  கூடை கூடையாக   நிறைய  பாடுகிறார். அவரைக் கேளுங்கள். . கோபியர்களின்  கிருஷ்ண பக்தி ஈடற்றது.   கிருஷ்ணனை நினைக்கும்போது கோபியரை நினைக்காமல் இருக்க முடியாது.  அதுவும் அவர்களில் ஒருவளான  ராதா  ராணி  கிருஷ்ணனின்  நிழல்.   ராதை தான் கிருஷ்ணனுக்கு அற்புத மான  உணவு வகைகளை விதம் விதமாக  கோகுலத்தில் பண்ணிப் போடுபவள் .  ஒருநாள்  கோபியர்கள்  சிலர் தங்கள் வீட்டில் இருந்து அவனுக்கு பிடித்த தின் பண்டங்களைப்  பண்ணி அவன் சாப்பிட எடுத்துக்கொண்டு  நந்தகோபன் அரண்மனைக்கு வந்தார்கள்.

அவர்கள் வந்த நேரம்  நந்தகோபன் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு விட்டு   ஸ்ரம பரிகாரம் பண்ணிக்  கொண்டிருந்தார்கள். கிருஷ்ணன் முகத்தில்  சந்தோஷம். நன்றாக  பிடித்த உணவை அப்போது தான் சாப்பிட்டு முடித்திருக்கிறான் அல்லவா. 
வெளியிலிருந்து வந்த கோபியர்களுக்கு  எந்த வருத்தமும் ஏற்படவில்லை.  தாங்கள் கொண்டுவந்த  உணவை கிருஷ்ணன் தொடவில்லையே, உண்ணவில்லையே  என்ற  ஏமாற்றம் எதுவும் மனதில் ஏற்படவே இல்லை.  கொண்டு வந்ததெல் லாவற் றையும்  அங்கேயே  வைத்து விட்டு ஓடி  கிருஷ்ணனிடம் வந்தார்கள்.  அவன் முகத்தில் இருந்த மலர்ச்சி தான் அவர்களுக்கு பிடித்திருந்தது.   அவனும் அவர்களோடு கை கோர்த்துக் கொண்டு அங்கே வெகுநேரம் ஆடி ஓடினான். 

எதனால்  கோபியர்கள்  வருத்தமோ ஏமாற்றமோ அடையவில்லை தெரியுமா?  ஒருவேளை அவர்கள் கொண்டு வந்த உணவை அவன் சாப்பிட்டிருந்தால்  அதனால்  அவன் இந்த அளவு சநதோஷமாக  இருந்திருக்க முடியாதோ என்ற சந்தேகம் அவர்கள் மனதில் எழுந்து விட்டது.  அவர்கள் விரும்பியது கண்ணன் முகத்தில் சந்தோஷத்தை தான்.  அதை அவர்கள் உணவால் அவன் அடைந்தால்  என்ன வேறெவர் அளித்ததால் அடைந்தால் என்ன  என்ற பரந்த  மனது அவர்களுக்கு.
இது தான் கோபியரின் பக்தி பாவம்.  இந்த ஒரு குணத்தையாவது நாம் கோபியரிடமிருந்து கற்றுக் கொள்வோமா?


sivan jaykay

unread,
May 4, 2023, 10:47:26 PM5/4/23
to amrith...@googlegroups.com

மாயா பஞ்சகம்   - நங்கநல்லூர்  J K  SIVAN 
ஆதி சங்கரர் 

ஸ்ரீ ஆதி சங்கரரின் நூல்கள்  எண்ணற்றவை. அற்புதமான ஸ்தோத்திரங்கள், ஸ்லோகங்கள் நமக்கு அவரிடமிருந்து கிடைத்த  பொக்கிஷம்.    அதில் ஒன்று தான்  இன்று நாம்  அறிந்து கொள்ளும்  மாயா பஞ்சகம்  என்ற  ஐந்து ஸ்லோகங்கள். குட்டி  ஸ்தோத்ரம்.  ஒவ்வொரு ஜீவனும் மாயையின் பிடியில் சிக்கி இருக்கிறது.   அந்த மாயை சக்தி மிகுந்தது.  முடியாத காரியங்களை நடக்கச் செய்யும் பிரம்மத்தின் சக்தி மாயை.  இல்லாதது எதுவோ  அது தான் மாயை.  ( மா = இல்லை; யா = அது). 

निरूपमणित्यनिरणशकेप्यखंडे मयि चिति सर्वकल्पनानादिशुने। घटयति जगदीशजीवभेदं त्वधात्घातनपटियासि माया॥ 1

Nirupam anithya niramaskhepya khande  Mayi chithi sarva vikalpananahi soonye, Ghatayathi Jagadheesa jeeva bhedham
Thwagathitha ghatanaa patiyasi maya.


நிருபம  அநித்ய நிரமஷ் கேபிய கண்டே மயி சிதி ஸர்வ விகல்பநானாதி ஶூந்யே  கடயதி ஜகதீச ஜீவ பேதம் 
த்வகத்தித   கடன  படியஸி  மாயா ॥   1

எது முடியாததோ அதை முடிய வைக்கும் சக்திகொண்டது மாயை. காரணம்  மனதை அது மயக்கிவிடும். அநித்யத்தை நித்யமாக்க முயலும்.  அற்பமானதை  உன்னதமாக காட்டக்கூடியது.  
மாயைக்கு   ரெண்டு  சக்திகள் உண்டு; மறைக்கும் தன்மை. ஆவரண சக்தி என்பது ஒன்று.   இன்னொன்று தக்கபடி  காட்சி தரும்  திட்ட சக்தி, விக்ஷேப சக்தி என்று இதற்கு பெயர்.   பிரம்மம்  ஈஸ்வரனாக மாயாவின் விக்ஷேப சக்தியைப் பயன்படுத்தி உலகை முன்னிறுத்துகிறார் .   மாயை  ஈஸ்வரனின் கட்டுப்பாட்டில் இருப்பது.   ஜீவன்கள்  மாயையின்  கட்டுப்பாட்டில்  மாட்டிக்கொண்டால் அது மாயையின் அடிமையாகிவிடுகிறது.  ஆத்மாவை  திரை போட்டு மறைத்து வைத்து  ஆத்மாவை ஜீவன் அறியமுடியாமல் ஒளித்து வைக்கிறது.   பிரம்மத்தை தெரியாத  குருடனாக நம்மைப்  பண்ணுகிறது.  ஜீவன் மனம் போன போக்கில் அதனால் போகிறது. பிரம்மம் தான் நான்  என்று  புரிந்து கொண்டால்,  ஜீவன்  தனது  உண்மையான ஸ்வயம்  எனும்  தூய்மையான உணர்வை பெறுகிறது.   ப்ரம்மம் தான்  நித்தியமானது, தனித்துவமானது  என்று  புரிந்தால் மாயையை  விலக்கமுடியும் . 

 श्रुतिशति निगमान्तशोदकन- पयः धनादिनीदर्शनेन सद्याः । कालूशायति चतुष्पादद्यभिन्ना- असत् घटनपटियासि माया॥ 2
Sruthi sathi nigamaantha sodhakana  paya:   dhanadini darsanena sadhya, Kalushayathi chathush padadhyabhinna, Asathu  ghatana patiyaasi  maya.  2       

ஸ்ருதி சாதி  நிகமாந்த ஷோத கன பய:  தநாதிநி தர்ஷநேன  ஸத்யா: காலுஷாயதி சதுஷ்பத: த்யாபிந்நா  அஸத் கடன படியாஸி  மாயா  2

ஆஹா   இந்த  மாயை  எவராலும்  முடியாததை முடித்துக் காட்டும் சக்தி கொண்டது. திட சித்தம், வைராக்கியம் தீவிரமாக கொண்ட ஒரு   சாதகனால் மட்டுமே அதை வெல்லமுடியும். ஆஹா,  வேதங்களிலும்  சாஸ்திரங்கள்  உபநிஷதுகள் எல்லாவற்றிலும்  தேர்ச்சி பெற்ற அறிஞர்களைக் கூட  பணம், தனம்,  செல்வத்தைக்  காட்டி மயக்கி அவர்களை  நாலு கால் மிருகங்களை விட கேவலமாக பண்ணிவிடும் இந்த மாயை. மனதை அடிமையாக்க வல்லது. அவர்களை  வெறுமே  'சாப்பிடுவது, குடிப்பது, புணர்வது மற்றும் உறங்குவது"  என்பதில் மட்டுமே மனத்தை செலவழிக்க செய்வது.

सुख्चिद्खंडविबोधमद्वितीय विद्यानला दिविनीरमिता नियोज्य। भ्रमयति भवसागरे नितन्त त्वधवद्घातनपतियासि माया ॥ 3

Sukha chidha kanda vibodhamadwitheeyam, Viya danaladhi vinirmathe niyojya, Bhramayathi bhava sagare nithantham,
Thwagathitha ghatanaa patiyasi maya.    3

சுகச் சித அகண்ட விபோதம் அத்விதீயம்  வியதா அனல திவி நிர்மிதே நியோஜ்ய ப்ரமயதி பவசாகரே நிதாந்தம் த்வத் அகாதித கடனா  படியாசி  மாயா 3


மாயை  இல்லாததை இருக்க வைக்கும். முடியாததை முடிக்கும்.   பேரின்பம், விழிப்புணர்வு மற்றும் வேறுபடுத்தப்படாத அறிவு ஆகிய ஆத்மாவை மாயை நெருங்காது. அதன் ஆதிக்கம் எல்லாம்  பூதங்களால் ஆன  உடலுடன் தான்.  மனம் அதன் அடிமையாகிவிட்டால் ஆத்மாவின் பக்கமே  போகாது. இதனால் ஜீவன் சம்சார சாகரத்தில் மூழ்கி அவஸ்தைக்குள்ளாகிறான். மாயாவின் மாயாஜால சக்திகளால்  ஜீவன் ஆத்மாவின் சக்தி, அதன் தன்மை அதன் இருப்பு அனைத்தையும் மறைக்கிறான். அவனிடமிருந்து இதை மாயை மறைத்து விடுகிறது. 

 ஒருவன் ஒரு குறிப்பிட்ட இடத்திலும் காலத்திலும் பிறந்து உடலோடும் பெயரோடும் அந்தஸ்தோடும் அடையாளமாக இருக்கும் வரை சம்சாரத்தின் சுழற்சி நிற்காது. 

अपगतगुणवर्णजतिभेदे सुखचिति विप्रविद्याहनकृति च। स्फुतयति सुतदारगेमोहम् त्वथद्घातनपटियासि मया ॥ 

Apagatha guna varna jathibhedhe, Sukhachithi vipra vidadhyahana kruthi cha, Sphutayathi sutha dara ge moham, Thwathangaathana  patiyasi maya.    

அபகத குண வர்ண ஜாதி பேதே ஸுக சிதி விப்ரா வித்யா ஹன க்ருதி ச ஸ்பூதயாதி ஸுதாধர கேஹமேஹம்
த்வதங்காதந படியாஸி மாயா ॥ 4


மாயைக்கு முன் அநேகமாக  எவருமே அடிமை தான். இதில் படித்தவன், கற்றவன், அறிவிலி, பணக்காரன், ஏழை எல்லோரும் ஒன்றே. சாஸ்திரங்களை ஊன்றி, உன்னிப்பாக கவனித்தால் புரிந்து கொண்டால் சிவனும் விஷ்ணுவும் வேறில்லை, வேறானவர்களும் இல்லை. இருவரும் ஒருவரே.  வித்யாசம் பார்ப்பவன் மனதில் தான். 
மாயை  ஜாதி, மதம் போன்ற குணங்களை  மனதில் தூண்டுவது.   நான்,  எனது  என்னுடைய  போன்ற  சுயநல எதிர்பார்ப்புகளை  ஊக்குவிக்கிறது.   ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டு ஆன்மாவின் புரிந்து கொண்டவன் தானும் ஆத்மாவும் வேறல்ல என்று அறிபவன், அவனுக்கு எந்த பேதமும்  எதனிடமும், எவரிடமும் இல்லை. 


विधिहरिहरविभेदमप्यखंडे  बत् विर्चय्या बुधनपि प्रकाशम्।  भ्रामयति हरिहरभेदभव - अनहोनी घटनाएँ माया हैं। 5.

விதி ஹரி ஹர விபேதம் அபி அகண்டே பத்  விர்ச்சய்யா   பூதநபி ப்ரகாசம்;   ப்ரமயதி ஹரி ஹர பேத பவ - அநஹோநி கதனாயெம்  மாயா  5

மாயா , சாத்தியமற்றது, ஹரி மற்றும் ஹர என்ற பல்வேறு வேறுபாடுகளை முழுவதுமாக உருவாக்குகிறது, மஹான்கள், ரிஷிகள் அறிஞர்கள் மூட  சில சமயம் மாயையிடம் தோற்று விடுகிறார்கள். மாயா நிர்குண ப்ரம்மனிடத்தின் தனது  சக்தியைக் காட்டி தோற்பது.  சைவ-வைஷ்ணவ பேதம் ஒரு மாயை மட்டுமே மற்றும் சிவன் மற்றும் விஷ்ணு இருவரும் பிரம்மனின் திரை வடிவங்கள் மட்டுமே. சமுதாயத்தில் உள்ள சாதி வேறுபாடுகளும் மாயாவின் நாடகம் மட்டுமே என்பதை ஸ்ரீசங்கரர் முந்தைய வசனத்தில் சுட்டிக் காட்டியதை இந்தச் சூழலில்  மீண்டும் நாம் நினைவு  கூறலாம்.
      

sivan jaykay

unread,
May 4, 2023, 10:47:42 PM5/4/23
to amrith...@googlegroups.com
ஸ்ரீ அபீtதி  ஸ்தவம்  1   –   நங்கநல்லூர்  J K  SIVAN
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்
.
நம்முடைய  வரலாற்றை திரும்பி பார்த்தால்  அடேயப்பா  எவ்வளவு இன்னல்கள் நமது அன்றாட  வாழ்க்கை யை புரட்டிப் போட்டிருக்கிறது. சாதுக்களை எப்படி  சக்தியுள்ள பிற  மதத்தினர், வெறியோடு, இரக்கமின்றி  வெட்டி சாய்த்து, நமது வழிபாட்டு  ஸ்தலங்களை  சிதைத்து,தெய்வச்சிலைகளை உடைத்து, பெண்களை அபகரித்து, கற்பழித்து, மதம் மாற்றி வம்சத்தையே  அழைத்திருக்கிறார்கள். இந்த உயிர்ப்பலி யை எப்படியெல்லாம் நமது முன்னோர்கள் சந்தித்தனர், என்றாலும்  தன்னம்பிக்கை, பக்தி, பகவான் மேல் நம்பிக்கை இழக்காமல் வாழ்ந்தனர் என்பது இப்போதும் உள்ள கோவில்கள் மூலம், சாத்திர,ஆன்மீக நூல்கள் மூலம்  அறிகிறோம்..

ஸ்ரீ ராமானுஜ‌ருடைய‌ கால‌த்திற்குப் பிற‌கு விசிஷ்டாத்வைத‌ ஸித்தாந்தத்திற்கு எதிர்ப்பு  பெருகிய நேரம்.  அதை  போஷித்து  நிலை  நிறுத்த‌  திருப்பதி திருமலை வெங்கடேச  பெருமாள்  தன்னுடைய  ''டாண்  டாண்''  ஆலயமணியையே  காஞ்சிக்கு அருகே  தூப்புல் கிராமத்தில் வேங்க‌ட‌ நாத‌னாக‌ அவ‌தாரம் செய்ய
வைத்தான்.  அதுவே  சுவாமி தேசிகன்.

அத‌னாலேயே தேசிகனின்  இந்த  அபீதிஸ்தவ ஒவ்வொரு ஸ்தோத்ர‌த்தின் முடிவிலும் “
 तस्य न स्याद्भयम्   'இதைப் ப‌டிப்போர் பயமே இல்லாமல்  பலம் பெறுவார்கள்'   என்று ப‌ல‌ ச்ருதியைக் கூறியிருக்கிறார்.  எல்லாம் ப‌க‌வ‌த் பிரீதியின் பொருட்டு என்று செய்வோருக்கு எல்லாப் ப‌ல‌னும் பலமும்  கிடைக்கும்.

 “அபீதிஸ்த‌வ‌ம்” என்ற‌ ஸ்தோத்ர‌த்தில் 29 ஸ்லோகங்கள்..  ஸ‌க‌ல‌ ப‌ய‌த்தையும் போக்கி ப‌க‌வான்
அனுக்ர‌ஹ‌த்தால் ஸ‌க‌ல‌ நன்மைகளையும் அளிப்பது.

ஸ்ரீதேசிக‌ன் ஸ்ரீர‌ங்க‌த்தில்  வாழ்ந்த  காலத்தில்  டெல்லியை ஆண்ட  மதவெறியன் அலாவுதீன் கில்ஜி. அவனது  தளபதி மாலிக்காபூர்  பெரும் படையோடு  தென்னகம் வந்து  பல  கோவில்களை சிதைத்தான்.. விக்ர ஹங்களை பின்னப்படுத்தி, தங்கம் வெள்ளி என்று  அவற்றை  ஆபரணங்களாக கொள்ளையடித்
துக்
கொண்டு போனான்.  ஸ்ரீரங்கம் அவன் தாக்குதலுக்கு தப்பவில்லை.  

முன்னதாகவே  மாலிக் காபூர் கொலை  கொள்ளைகளைப் பற்றி  கேள்விப்பட்ட ஸ்ரீரங்கம் ஆலய நிர்வாகிகள், சாமர்த்தியமாக   பெருமாள் சந்நிதி க‌த‌வைமூடி ஸ‌ந்நிதிக்கு முன் வேறொரு விக்ர‌ஹ‌த்தைப் பூஜிப்ப‌தாகக் காட்டினார்கள் .  ஸ்ரீர‌ங்க‌நாத‌னையும் உப‌ய‌நாச்சிமார்க‌ளையும் ப‌ல்ல‌க்கில் எழுந்த‌ருளுவித்துக்கொண்டு ஸ்ரீர‌ங்க‌த்தை விட்டு வெளியேறினார்க‌ள்.  
  உலுக் கானின்   மதவெறிப்படை  ஸ்ரீரங்கத்தை நெருங்கி  நாசமடைய செய்யலாம்  என்று  அறிந்து   ஸ்ரீரங்க  ஆலய நிர்வாகி,  சுதர்சன பட்டாச்சாரியார் தான் இயற்றிய  ஸ்ருத ப்ரகாசிகா என்ற ஸ்ரீ பாஷ்ய வ்யாக்யான  க்ரந்தத்தை, தனது இரு சிறிய  மகன்களோடு  தேசிகர் வசம் ஒப்படைத்தார்.  ''ஸ்ரீ தேசிக‌ரே,  உம்மால் ந‌ம் த‌ர்ச‌நத்திற்கு ந‌ன்மை ஏற்ப‌ட‌ப் போகிற‌து, ஆத‌லால் நீர் த‌ப்பிச் செல்லும் ” என்று கூறி அவ‌ரை அனுப்பினார்  ஸ்ரீரங்கத்தை விட்டு  தேசிகர்  உடனே வெளியேற செய்தார்.  உத்சவ மூர்த்திகளை  திருப்பதிக்கு அனுப்பினார். கிரந்தத்தோடும்  சிறு பிள்ளைகளோடும் தேசிகர்  சத்தியமங்கலம் சென்றார்.
அதன் பின்   த‌ங்க‌ள் உயிருள்ள‌வ‌ரையும்  முஸ்லீம்  விரோதிக‌ள் ஸ்ரீரங்க  ஆலயத்திற்குள் புகாமல் தடுக்கவும், பெருமாளை எடுத்துச் செல்வோரை  முஸ்லீம் வீரர்கள்  பின் தொடராமல்  இருக்கவும்    மாலிக் காபூர்  படைவீரர்களை எதிர்த்துப்  வைணவ வீரர்கள் போர் புரிந்தார்கள்.  வெற்றி பெறமுடியாது என்று தெரிந்தே ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ப‌க்த‌ர்க‌ள் உயிர் நீத்த‌ன‌ர்.

இதற்குள் ஸ்ரீ ஸ்வாமி  தேசிக‌னும் ஸ்ரீர‌ங்க‌த்தை விட்ட‌து முத‌ல் ப‌ல‌ இட‌ங்க‌ளில் த‌ங்கி, க‌டைசியாக‌ திரு
நாராய‌ண‌ புர‌ம் வ‌ந்து சேர்ந்தார்.  வ‌ந்தது  முத‌ல் ஆச்ரித‌ ர‌க்ஷ‌ண‌த்தின் பொருட்டுவ‌ந்த‌ ஸ‌ர்வேச்வ‌ர‌னான‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னுக்கும் ஸூர்ய‌னும் பார்த்த‌றியாத‌ நாச்சிமார்க‌ளுக்கும் த‌ங்க‌ள் வாஸஸ்த‌ல‌த்தை விட்டு இட‌ம் தேடித்திரிய‌ வேண்டியிருந்த‌ நிலைமையையும் ராம‌னைப் பிரிந்த‌ அயோத்யைபோல‌  ஸ்ரீரங்கம்  த‌ன் நாத‌னைப் பிரிந்து பொலிவ‌ற்று நிற்ப‌தையும்,   இப்படி  அரங்கனை வழிபட  இயலாத நிலைக்கு தள்ளப் பட்டதில் மனம் ஒடிந்தார். இஸ்லாமியர்களால்   ஸ்ரீர‌ங்க‌த்திற்கும் அர‌ங்க‌ன‌டியார்க‌ளுக்கும்   ஏற்பட்ட ப‌ய‌த்தைப் போக்கி, ம‌றுப‌டியும் த‌ன்னையும் த‌ங்க‌ளையும் ஸ்ரீர‌ங்க‌த்தில்  பயமின்றி வாழ   அப‌ய‌ம‌ளிக்க‌ வேண்டும்” என்று  சுவாமி தேசிகன்  எழுதிய ஸ்லோகங்கள் தான்  “அபீதிஸ்த‌வ‌ம்”.

இந்த‌ ஸ்தோத்ர‌த்தின் ப‌ய‌னாக‌ கொப்ப‌ணார்ய‌ன் என்னும் செஞ்சிக் கோட்டையின் த‌லைவ‌னான‌ ப‌ர‌ம‌ ப‌க்த‌ன்  இஸ்லாமிய வெறியர்களை ஸ்ரீர‌ங்க‌த்திலிருந்து விர‌ட்டி விட்டு ஸ்ரீர‌ங்க‌த்தை நிர்ப்ப‌ய‌மாக்கி ஸ்ரீர‌ங்க‌த்தை விட்ட‌துமுத‌ல் சுற்றித் திரிந்து க‌டைசியில் திருப்ப‌தியில் எழுந்த‌ருளியிருந்த‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னையும் உப‌ய‌ நாச்சிமார்க‌ளையும் த‌ன் ஊரான‌ செஞ்சியில் கொஞ்ச‌ நாள்  எழுந்த‌ருளுவித்து
 ஆராதித்து ம‌றுப‌டி
யும் ஸ்ரீர‌ங்க‌த்தில் தானே பிர‌திஷ்டை செய்வித்தான்.

மனிதர்களை  க‌வி பாடாத‌ ஸ்வாமி தேசிக‌ன் இப்படிப்பட்ட  பெரிய‌ கைங்க‌ர்ய‌ம் செய்த கொப்ப‌ணார்
ய‌னைக் கொண்டாடி எழுதின‌ சுலோக‌ங்க‌ள் இர‌ண்டும் ஸ்ரீர‌ங்க‌த்தில் விஷ்வ‌க்ஸேன‌ர் ஸ‌ந்நிதிக்கு முன்பு பெரிய‌பெருமாள் ஸ‌ந்நிதியின் கீழ்ப்புற‌த்துச் சுவ‌ரில் க‌ல்லில் வெட்ட‌ப்ப‌ட்டு இன்னும் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌.  கல்வெட்டின் காலம்  ச‌காப்த‌   வருஷம்  1293 (கி.பி. 1371.) .  கல்வெட்டு என்ன சொல்கிறது:

''ஸ்வ‌ஸ்தி ஸ்ரீ:– (முகில் வ‌ண்ண‌ன் இருப்ப‌) முகில்க‌ள் த‌வ‌ழ‌ க‌றுத்துத் தோன்றும் த‌ன் சிக‌ர‌ங்க‌ளால் உல‌க‌த்தையே ம‌கிழ்வூட்டும் அஞ்ஜ‌னாத்ரியிலிருந்து ல‌க்ஷ்மி பூமி இருவ‌ருட‌ன் கூடிய‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னை செஞ்சிக்கு எழுந்த‌ருளுவித்துக் கொண்டுவ‌ந்து அங்கு சில‌ கால‌ம் ஆராதித்து, பிற‌கு வில்லாளி
ளான‌ துருஷ்க‌ர்க‌ளை வென்று, பெருமாளையும் பிராட்டிமார்க‌ளையும் அவ‌ர்க‌ளுடைய‌ ந‌க‌ர‌மான‌ ஸ்ரீர‌ங்க‌த்திலேயே பிர‌திஷ்டை செய்து,கீர்த்திக்கோர் க‌ண்ணாடியான‌ கொப்ப‌ணார்ய‌ன் ம‌றுப‌டியும் சிற‌ப்பாக‌த் திருவாராத‌ன‌த்தைச் செய்தான்.   விருஷ‌ப‌கிரியிலிருந்து ஸ‌ர்வேச்வ‌ர‌னான‌ ஸ்ரீர‌ங்க‌ நாத‌னை த‌ன் ராஜ‌தானிக்குக் கொண்டு சென்று, க‌ர்விக‌ளான‌  துருஷ்க‌ ஸேனா வீரர்க‌ளை த‌ன் ஸைன்ய‌த்
தால்
 கொல்லுவித்து,  அத‌ன்  பின் ஸ்ரீர‌ங்க‌த்தை கிருத‌யுக‌த்தோடு கூடிய‌தாக‌ச் செய்து, ஸ்ரீ பூமிக‌ளோடுகூட‌ பெருமாளையும் அதில் ம‌றுப‌டி பிர‌திஷ்டை செய்வித்து அம்புய‌த்தோனான‌ ச‌துர்முக‌ன்போல‌ ந‌ல்லோர் கொண்டாடும் முறையில் கொப்ப‌ணார்ய‌ன் என்ற‌ பிராம‌ண‌ன் ந‌ம்பெருமாளை ஆராதித்து வ‌ருகிறான்.''

தென்னிந்தியாவில்  இஸ்லாமிய வெறியர்களின் தாக்குதல் துவங்கியது 1311ல்.  மாலிக் காபூர்  படைகள் ஸ்ரீ ரங்கத்தை நெருங்கியபோது  ஸ்வாமி தேசிகனுக்கு 43 வயது.  பன்னிரண்டு வருஷங்கள் கழித்து இன்னொரு வெறியன்  உலுக் கான்  ஆக்கிரமிப்பு நடந்தது. அப்போது 55 வயதான ஸ்வாமி  தேசிகனை எல்லோரும் நடமாடும்  பெருமாளாக கொண்டாடின சமயம் அவர் சத்தியமங்கலத்தில் வசித்தார் .

ஒரு சமயம்  கந்தாடை லக்ஷ்மணாச்சார்யர்  எனும்   வைணவர், தேசிகன்  மனம் வருந்தும்படியாக நடந்துகொண்டார். அதனாலோ என்னவோ  அவர் நோய்வாய் பட்டார்.  தனது தவறுக்கு வருந்தினார். ஸ்வாமிகளின்  ஸ்ரீ பாத தீர்த்தம் அவரை குணமடையச்செய்தது.  புத்ர பாக்கியமும் கிட்டியது.  தீர்த்த பிள்ளை என்று ஸ்வாமிதேசிகன் அவருக்கு  நாமகரணம் சூட்டினார். 

எங்கும்  பயமும் பீதியும் சூழ்ந்த நிலையில்  ஸ்வாமி  தேசிகன் இயற்றியது  பயம் வேண்டாம் என்ற பொருள் படும்  'அபீதிஸ்தவம்'  .அதில்   29 ஸ்லோகங்கள் .  அவற்றின்  அர்த்தத்தையும் இனி  சுருக்கமாக  அறிவோம்:



sivan jaykay

unread,
May 5, 2023, 11:37:06 PM5/5/23
to amrith...@googlegroups.com
 ஸ்ரீ அபீtதி  ஸ்தவம்    ஸ்லோகங்கள் 1-5    –   நங்கநல்லூர்  J K  SIVAN

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்

अभीतिरिह यज्जुषां यदवधीरितानां भयं  भयाभयविधायिनो जगति यन्निदेशे स्थिताः ।
तदेतदतिलङ्घितद्रुहिणशम्भुशक्रादिकं  रमासखमधीमहे किमपि रङ्गधुर्यं महः ॥ १॥

abhItiriha yajjuShAM yadavadhIritAnAM bhayaM  bhayAbhayavidhAyino jagati yannideshe sthitAH |
tadetadatila~NghitadruhiNashambhushakrAdikaM   ramAsakhamadhImahe kimapi ra~NgadhuryaM mahaH || 1||

1–அபிதி இஹ யத் ஜுஷாம் யத் அவதீரிதா நாம் பயம் பயம் அபய விதாயின ஜகத் யத் நிதேச ஸ்த்திதா
தத் ஏதத் அதி லங்கித த்ருஹிண சம்பு சக்ர ஆதிகம் ரமா சகம் அதீமஹே கிம் அபி ரங்க தூர்யம் மஹ-

अभीतिरिह यज्जुषां यदवधीरितानां भयं  भयाभयविधायिनो जगति यन्निदेशे स्थिताः ।
तदेतदतिलङ्घितद्रुहिणशम्भुशक्रादिकं  रमासखमधीमहे किमपि रङ्गधुर्यं महः ॥ 1

abheethir-iha yajjushAm yath avadheerithanAm bhayam bhayAbhaya vidhAyinO jagathy yannidhEsE sTithA: tath yEthath athilangitha dhruhiNa Sambhu SakrAdhikam RamAsakham adheemahE kimapi Rangadhuryam maha:

அபீதி ரிஹ யஜ்ஜூஷாம் யதவதீ ரிதா நாம் பயம்  பயாபய விதாயிநோ ஜகதி யந்நி தேச ஸ்திதா
ததே தததி லங்கித த்ருஹண சம்பு சக்ராதிகம் ரமசா கமதீ மஹே கிமபி ரங்க துர்யம் மஹ–1-

நாம்  என்னதான் ஒருவருக்கொருவர்  தைரியம் சொல்லிக்கொண்டாலும், உண்மையில் நம்முடைய  பயங்களைப்  போக்குவதோடல்லாமல்  நம்மை  உற்சாகப்படுத்தி, பலப்படுத்தி, ரக்ஷிக்க பண்ணுபவன் அந்த வைகுண்டவாசன் ஸ்ரீமன் நாராயணன் எனும்  ரங்கநாதன்  மட்டுமே  தான். அவன் காக்கும் கடவுள் அல்லவா?  அவனை  எதிர்த்து வெல்ல இன்னும் எவருமே பிறக்கவில்லையே.  அவனைச் சரணடைவோம்.   அவனன்றி ஓர் அணுவும் அசையாதே . அவனை வணங்கினால் அவனுள், அவனுடன் இருக்கும்  ரங்கநாயகியும்  நம்மைக் காத்து அருள் புரிவாள். 
 எதிர்வரும் தீய சக்திகள் அனைத்தும்  மடியுமே .  யாம் இருக்க பயமேன் என்று ''அ' பய  ஹஸ்தம் காட்டுகிறார்கள். இவ்வுலகில் மட்டும் அல்ல எவ்வுலகிலும் இனி பயம் உன்னை நெருங்காது.

दयाशिशिरिताशया मनसि मे सदा जागृयुः   श्रियाध्युषितवक्षसः श्रितमरुद्वृधा सैकताः ।
जगद्दुरितघस्मरा जलधिडिम्भडम्भस्पृहः   सकृत्प्रणतरक्षणप्रथितसंविदः संविदः ॥ 2॥

dayAshishiritAshayA manasi me sadA jAgR^iyuH  shriyAdhyuShitavakShasaH shritamarudvR^idhA saikatAH |
jagadduritaghasmarA jaladhiDimbhaDambhaspR^ihaH  sakR^itpraNatarakShaNaprathitasaMvidaH saMvidaH || 2||

2–தயா சிசிரத ஆசயா மனஸி மே சதா ஜாக்ருயு ஸ்ரியா அத்யுஷித வஷச ச்ரித ம்ருத்வ்ருதா சைகைதா
ஜகத் துரித கஸ்மரா ஜலதி டிம்ப ச்ப்ருச சக்ருத் ப்ரணத ரஷண ப்ரதித சம்வித சம்வித –

திரு மார்பில்  பெரிய பிராட்டியாரும் இருந்து கருணைக் கடலாக  நம்மை  ரக்ஷிப்பாள் .  மனதால் நினைத்தால் கண் முன்னே  பெருமாளும் பிராட்டியும் தோன்றுவார்கள். சரணாகத வத்சலன் என்பதால் நாம் முதலில் சரணடைந்தால் நம்மைக் காப்பது அவன் வேலை.   சம்சார சாகரத்தைக் கடக்க வைப்பான் அந்த படகோட்டி.  ஒரு முறை நாராயணா என்று சொல்லிப்பார்த்தால் நித்ய சந்நிதி பண்ணி அருள்பவன்  அந்த  'பெரிய'  சாமி. பெரும் ஆள்.   மறக்காதீர்கள். 

यदद्य मितबुद्धिना बहुलमोहभाजा मया    गुणग्रथितकायवाङ्मनसि वृत्तिवैचित्र्यतः ।
अतर्कितहिताहितक्रमविशेषमारभ्यते    तदप्युचितमर्चनं परिगृहाण रङ्गेश्वर ॥ 3॥

yadadya mitabuddhinA bahulamohabhAjA mayA  guNagrathitakAyavA~Nmanasi vR^ittivaichitryataH |
atarkitahitAhitakramavisheShamArabhyate  tadapyuchitamarchanaM parigR^ihANa ra~Ngeshvara || 3||


3- ய
த்ய மித புத்தி நா பஹூள மோஹா பாஜா மயா குண க்ரதித காய வாக் மனச வருத்தி வைசித்ர்யத
அதர்க்கித ஹித அஹித க்ரம விசேஷம் ஆரப்யதே தத் அபி உசிதம் அர்ச்சனம் பரிக்ருஹாண ரங்கேஸ்வர.3

ரங்கநாதா, நான் சிறியேன். என்ன செய்கிறேன் என்பதே தெரியாதவன்.  நீ  குளிர்ந்த காவேரி ஆற்றின் நடுவே படுத்திருப்பதே  குளிர்ந்த மனம் கொண்டு  உன் குளிர்ந்த பார்வையால், எங்களையெல்லாம் ரக்ஷிப்பதற்காகவே என்று புரிந்து கொண்டு  மனம் வாக்கு காயம்  மூன்றாலும்  உன்னை சரணடைகிறேன். 

मरुत्तरणिपावकत्रिदशनाथकालादयः   स्वकृत्यमधिकुर्वते त्वदपराधतो बिभ्यतः ।
महत्किमपि वज्रमुद्यतमिवेति यच्छ्रूयते   तरत्यनघ यद्भयं य इह तावकस्तावकः ॥ 4॥

maruttaraNipAvakatridashanAthakAlAdayaH  svakR^ityamadhikurvate tvadaparAdhato bibhyataH |
mahatkimapi vajramudyatamiveti yachChrUyate taratyanagha yadbhayaM ya iha tAvakastAvakaH || 4||

4-மருத் தரணி பாவக த்ரிதச நாத கால ஆதய ஸ்வ க்ருத்யம் அதி குர்வதே த்வத் அபராதத பிப்யத்
மஹத் கிம் அபி வஜ்ரம் உதயதம் இதி இவ யத் ச்ரூயதே தரதி அனக தத் பயம் இஹ தாவாக ஸ்தாவாக

பஞ்ச பூதங்களான   சக்திவாய்ந்த  வாயு,  சூரியன்,  அக்னி,  மற்றும் தேவாதி தேவன் இந்த்ரன்,  யமன்   ஆகியவர்கள் கூட தலைவனான உன்னிடம் மிகுந்த பக்தி மரியாதை மட்டும் அல்ல  பயமும் கொண்டு  அவர்களுக்கு நீ இட்ட  கடமைகளை சரிவர காலம் தாழ்த்தாது செய்து வருகிறார்கள்.  உன்னையே  தஞ்சம் என்று அடைந்துவிட்ட  என் போன்ற  எளிய பாகிதர்களுக்கு எந்த வித பயமும் இல்லை.  தாய் அணைப்பில் இருக்கும் சேய்க்கு என்ன பயம் என்ன கவலை?

भवन्तमिह यः सुधीर्नियतचेतनाचेतनं (स्वधीनियत)  पनायति नमस्यति स्मरति वक्ति पर्येति वा ।
गुणं कमपि वेत्ति वा तव गुणेश गोपायितुः कदाचन कुतश्चन क्वचन तस्य न स्याद्भयम् ॥ 5॥

bhavantamiha yaH sudhIrniyatachetanAchetanaM (svadhIniyata) panAyati namasyati smarati vakti paryeti vA |
guNaM kamapi vetti vA tava guNesha gopAyituH  kadAchana kutashchana kvachana tasya na syAdbhayam || 5|


5-பவந்தம் இஹ ய ஸ்வதீ நியத சேதன அசேதனம் பநாயதி நமாஸ்யதி ஸ்மரதி வக்தி பர்யேதி வா
குணம் கமபி வேத்தி வா தவ குணேச கோபாயிது கதாசன குதச்சன க்வசன தஸ்ய ந ஸ்யாத் பயம்

சகல கல்யாண கணங்களும் கொண்ட குணாளா, குணசீலா,   பிரபஞ்சத்தில் உள்ள  அசையும் அசையா சகல ஜீவர்களை  காத்து அருளும்  பெருமானே. உன்னை துதித்து உன் திருவடியில் தஞ்சமடைந்தவர்க்கு பயம் எங்கிருந்து வரும்?

sivan jaykay

unread,
May 5, 2023, 11:37:34 PM5/5/23
to amrith...@googlegroups.com

சப்த விடங்க க்ஷேத்திரம் . 
  - நங்கநல்லூர்  J K  SIVAN

சில வருஷங்களுக்கு முன் நண்பர்  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனோடு  தமிழகத்தில் சப்த விடங்க க்ஷேத்ரங்களை தரிசிக்க செல்லும் பாக்யம் கிடைத்தது.  அவற்றைப்  பற்றி முன்பே எழுதி இருந்தாலும்  மீண்டும் நண்பர்களின்  விருப்பத்திற்கிணங்க  பதிவு செய்ய உத்தேசம்.

சப்த விடங்க க்ஷேத்ரங்கள்  தமிழகத்தில்  சிவபக்தர்களை மகிழ்விக்கும்  ஸ்தலங்கள். முதலில் 'விடங்க' என்றால்
என்ன?
  ‘டங்கம்‘ என்றால் உளியால்  செதுக்குவது, பொளிவது.    'விடங்க'   என்றால் உளியால்  ஸ்தபதியால் செதுக்கப்படாத, பொள்ளப்படாத  சிவலிங்கம். அப்படி   என்றால்  தானாகவே  லிங்கமாக பூமியில் கிடைத்த என்று தானே பொருள்.  அப்படிக்   கிடைக்கும் லிங்கங்களை ஸ்வயம்பு, தான் தோன்றி,  என்கிறோம்.  ஏழு ஸ்தலங்களில் இப்படி ஸ்வயம்புவாக  விடங்கராக  சிவன் நமக்கு  காட்சி தருகிறார்.   அங்கெல்லாம்    ஸ்படிகத்தில்,  மரகதத்தால்  செய்யப்பட்ட சிறிய லிங்கத்திற்கு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெறுகின்றன. விடங்கர் என்ற வார்த்தைக்கு  நடராஜன், ‘பேரழகன்‘ என்றும் பக்தர்கள் பொருள் கொள்கிறார்கள். 
ஏழு விடங்க ஸ்தலங்களை  சப்த விடங்க க்ஷேத்ரம்  என்கிறோம். அவை யாவை?  சிவன் நடராஜனாக, நடன சபாபதியாக அருள்பாலிக்கும் க்ஷேத்ரங்கள்.
முதலில்  திருவாரூர்.அப்புறம்  திருநள்ளாறு, நாகபட்டினம், திருக்காராயில், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம். இந்த  ஏழு ஸ்தலங்களிலும்  மூலவரைத் தவிர  தியாகராஜர் சந்நிதிகள் ஊர்களிலுமுள்ள சிவன் கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள தியாகராஜர் சன்னிதிகளில் "விடங்க லிங்கங்கள் '' பூஜை செய்யப்படுகிறது.
இந்த  சப்த விடங்கர்களுக்கு  பெயர்கள் உண்டு. 
திருவாரூர் - வீதி விடங்கர்
திருநள்ளாறு - நாகவிடங்கர்
நாகைப் பட்டினம், (நாகைக் காரோணம்) - சுந்தரவிடங்கர்
திருக்காராயில் - ஆதிவிடங்கர்
திருக்கோளிலி (திருக்குவளை)  - அவனிவிடங்கர்
திருவாய்மூர் - நீலவிடங்கர்
வேதாரண்யம் - புவனிவிடங்கர்
இன்னொரு விஷயம்.  இந்த  சப்த விடங்க க்ஷேத்ரங்களில்  நடராஜன் ஆடும்  நடனம் தனித்தன்மை வாய்ந்தது.  ஒவ்வொரு க்ஷேத்ரத்திலும்  தியாகராஜர் ஆடும் நடனங்கள், தாண்டவங்களின், பெயர்களையும் தெரிந்து கொள்ளுங்கள்:

திருவாரூர்  -  ஸ்வாசத்தை உணர்த்தும் அஜபா நடனம்
திருநள்ளாறு - பித்தன் ஆடுவது போன்ற உன்மத்த நடனம்
நாகைக்காரோணம் - கடல் அலைகள் எழுவது போன்று உள்ள தரங்க நடனம்
திருக்காராயில் - கோழியைப் போல் ஆடும் குக்குட நடனம்
திருக்குவளை - வண்டு மலருக்கும் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று உள்ள பிருங்க நடனம்
திருவாய்மூர் - தாமரை மலர் அசைவது போன்றுள்ள கமல நடனம்
வேதாரண்யம் - அன்னப்பறவை அடியெடுத்து வைத்தாற்போலுள்ள ஹம்சபாத நடனம்

ஒவ்வொரு  விடங்க க்ஷேத்ரம் பற்றியும் தனித்தனி  பதிவு இடுகிறேன்.

sivan jaykay

unread,
May 5, 2023, 11:37:45 PM5/5/23
to amrith...@googlegroups.com
விவேக சூடாமணி 11-15-  நங்கநல்லூர்  J K  SIVAN
ஆதி சங்கரர்

चित्तस्य शुद्धये कर्म न तु वस्तूपलब्धये।वस्तुसिद्धिर्विचारेण न किंचित्कर्मकोटिभिः॥ 11 ॥
cittasya śuddhaye karma na tu vastūpalabdhaye | vastusiddhirvicāreṇa na kiṃcitkarmakoṭibhiḥ || 11 ||
சித்தஸ்ய ஶுத்³த⁴யே கர்ம ந து வஸ்தூபலப்³த⁴யே । வஸ்துஸித்³தி⁴ர்விசாரேண ந கிஞ்சித்கர்மகோடிபி:⁴ ॥ 11॥

தன்னலமின்றி செய்யும் செயல் பலன் எதிர் நோக்காமல் செய்யும் கர்மம் சித்த சுத்தி தரும். ஆனால் ஜீவன் முக்தனாக வேண்டும் என்றால் த்யானம், நித்யாநித்ய ஞானம், மாயப் பிரபஞ்சம் வசம் அகப்படாமல் ஒதுங்கும் பழக்கம் வரவேண்டுமே.நாம் ஜீவன் முக்தனாக முயற்சிக்க வேண்டாம் சார். கொஞ்சம் கொஞ்சமாக பலன் எதிர்நோக்காது பிறர்க்கு உதவுவோம். படிப்படியாகத்தானே முன்னேறவேண்டும். இருக்கவே இருக்கிறது இன்னும் எத்தனை பிறவி.!!

12.  सम्यग्विचारतः सिद्धा रज्जुतत्त्वावधारणा । भ्रान्तोदितमहासर्पभयदुःखविनाशिनी ॥ 12 ॥
samyagvicārataḥ siddhā rajjutattvāvadhāraṇā | bhrāntoditamahāsarpabhayaduḥkhavināśinī || 12 ||
 ஸம்யக்³விசாரத: ஸித்³தா⁴ ரஜ்ஜுதத்த்வாவதா⁴ரணா । ப்⁴ராந்தோதி³தமஹாஸர்பப⁴யது:³க²விநாஶிநீ ॥ 12॥

புலியைக்  காட்டிலும் கிலி தான் மனிதனை கொன்றுவிடும்.  இந்த உடலின் மேல் அளவற்ற பற்று கொண்டவர்கள் நாம்.  இந்த உலகத்தில் நாம் மட்டுமே  சகல சௌகர்யங்களோடு சுகமாக  வெகுகாலம் அழிவின்றி  வாழவேண்டும் என்ற  ஆசை தாம் நம்மை வாட்டுகிறது.  பயத்தில்  'ஐயோ பாம்பு என்று ஐந்தடி உயரம் குதித் பிறகு தானே தெரிந்தது யாரோ கட்சிக்காரன் கட்டிய தோரண பிளாஸ்டிக் தான் பளபள வென மின்னிய அந்த பாம்பு என்று!  உடலைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வளவு பற்று.  இதே  பற்று  ஆத்மாவின் மேல் அல்லவோ இருக்கவேண்டும். அதற்கு தான் ஆத்ம விசாரம், த்யானம் அவசியம். அது  ஞானம் எது உண்மை எது மாயை எது என்று  நன்றாக  சொல்லிக்கொடுக்கும்.   பழகிக் கொள்ள வேண்டாமா?

13.  अर्थस्य निश्चयो दृष्टो विचारेण हितोक्तितः । न स्नानेन न दानेन प्राणायमशतेन वा ॥ 13 ॥
arthasya niścayo dṛṣṭo vicāreṇa hitoktitaḥ | na snānena na dānena prāṇāyamaśatena vā || 13 ||
அர்த²ஸ்ய நிஶ்சயோ த்³ரு’ஷ்டோ விசாரேண ஹிதோக்தித: । ந ஸ்நாநேந ந தா³நேந ப்ராணாயாமஶதேந வா ॥ 13॥

ஆன்மாவைப் புரிந்துகொள்ள, மூன்று வேளை குளித்தாலோ, ஏழைகளுக்கு கொஞ்சூண்டு தானமோ, விடாமல் மணி பார்த்துக்கொண்டு மூக்கைப் பிடித்துக்கொண்டு காயத்ரி ஜபமோ போதாது. அதை ஞானிகளின்  வழிகாட்டல், உபதேசம், சுயசிந்தனை, மனம் குவிந்த த்யானம், ஆத்ம விசாரம் மூலம் தான் பெற முடியும். எளிமை  தனிமை இதற்கு அவசியம் தேவை.

14. अधिकारिणमाशास्तेफलसिद्धिर्विशेषतः । उपाया देशकालाद्याः सन्त्यस्मिन्सहकारिणः ॥ १४॥
adhikāriṇamāśāstē phalasiddhirviśēṣataḥ ।   upāyā dēśakālādyāḥ santyasminsahakāriṇaḥ ॥ 14॥
அதிகாரிண மாஸாஸ்தே  பலசித்திர் விசேஷசதா . உபாயா தேசகாலாத்யா  ஸந்த்யாஸ்மின் ஸஹகாரிணா.
ஆத்ம  விசாரத்தில் வெற்றி பெற  சாதகனின்  ஈடுபாடு, திட சித்தம்,  ஒன்றே  முக்கியமானது. அது தான் வெற்றி தரும்.  உட்கார்ந்து ஜெபிக்கும் இடமோ,  ஜெபிக்கும் நேரமோ, மற்ற விஷயங்களோ அவன் வெற்றிக்கு  உதவும் என்பதைத் தவிர  அது  அதி முக்கியமானதல்ல. ரெண்டாம் பக்ஷம் தான். 

15. सन्त्यस्यां अतो विचारः कर्तव्यो जिज्ञासोरात्मवस्तुनः ॥ समासाद्य दयासिन्धुंगुरुं ब्रह्मविदुत्तमम् ॥ १५॥
samāsādya atho vichaara :  karthavyo jignaaso raathma vasthuna ; samasaadhya dayāsindhuṃ guruṃ brahmaviduttamam ॥ 15॥
சந்த்யஸ்யாம்  அதோ  விசார:  கர்த்தவ்யோ  ஜிக்னாஸோ  ஆத்ம வஸ்துன:  ஸமாசாத்ய தயாசிந்து குரும்  ப்ரம்மவித்துத்தமம்   

ஆத்ம விசாரம்  பண்ணுகிறேன் என்று எதெதையோ நினைத்துக்கொண்டு கண் மூடிக்கொண்டு இருப்பதில் பயனில்லை.  மூளையை கசக்கிக்கொண்டு  வேறெதிலும் மனம் ஓடாமல்  அதை நிறுத்தி  உள்நோக்கி செலுத்தி ஆதி காரணம் எது என்று தேடுவது  அதற்கு நல்ல குருநாதன் ஒருவன் கிடைக்க வேண்டும்.  அவர் மூலம் பிரம்மத்தை அறியலாம்.  ஆத்மநாதன் கருணாசாகரன். நிச்சயம்  தயை புரிவான். 

sivan jaykay

unread,
May 6, 2023, 10:01:51 PM5/6/23
to amrith...@googlegroups.com
  பேசும் தெய்வம்    -  நங்கநல்லூர்   J K  SIVAN 

உம்மாச்சி 

நாம் எல்லோருமே  முதலில்  உம்மாச்சி என்று சொல்லி விட்டு  கன்னத்தில் போட்டுக்  கொண்டவர்கள்.  அப்புறம் தான் அந்த உம்மாச்சி பற்றிய மற்ற விவரங்கள் தெரிந்து கொண்டு ஏதோ ஒரு இஷ்ட  தேவதையாக அந்த உம்மாச்சி மாறிவிட்டார். இன்றும் இந்த தலைமுறைக்கு முதலில் கடவுள் உம்மாச்சி தான்.  அதற்குப்  பின்னாலும் சில விஷயங்களை தெரிந்து கொள்வோம்.
குழந்தைகளுக்கு  கடவுள்  என்றால் புரியாது.   உம்மாச்சி  என்று  சொன்னால் உடனே புரியும். தப்பாக சில  பெற்றோர்கள், பெரியோர்கள்  'உம்மாச்சி  நீ  என்ன  பண்றேன்னு  பார்த்துண்டே  இருக்கும்.  விஷமம், தப்பு  பண்ணா  கண்ணைக் குத்திடும் '   என்று பயமுறுத்துவது ரொம்ப தப்பு.  உம்மாச்சி கண்ணைக் கொடுக்குமே  தவிர,  பெரியவர்களாகிய   நமக்கு கண்ணைத் 'திறக்குமே'  தவிர  கண்ணைக் குத்தவே குத்தாது.  இனிமேலாவது   ' உம்மாச்சி  ரொம்ப  நல்லது  ஒண்ணுமே  பண்ணாது. உன்னை மாறி குட்டிப்  பாப்பான்னா  ரொம்ப புடிக்கும் '  என்று  சொல்லலாமே.

மஹா பெரியவாவை  அநேகருக்கு, எடத்தனையோ  குழந்தைகளுக்கு '' உம்மாச்சி  தாத்தா''  என்றால் நன்றாக தெரியும். 
ஒரு சம்பவம் சொல்கிறேன்.   இது  அவருக்கு  எதிரேயே  நடந்திருக்கிறது.   இதோ கேளுங்கள் மஹா பெரியவா சொல்வதை:
"எல்லோரும் காலையில் எழுந்ததும்நாராயண ஸ்மரணம் செய்யவேண்டும்.மாலையில் பரமேசுவரனை தியானிக்க வேண்டும்.   மஹாவிஷ்ணு. உலகைப்பரிபாலிப்பவர். காலையில் உலக  காரியங்களைத் தொடங்கும்  முன் அவரை ஸ்மரிக்க வேண்டும். பரமேசுவரனிடம் உலகமெல்லாம் லயித்து ஒடுங்குகின்றன.மாலையில் நம் வேலைகள் ஒய்கின்றன .  நாம் பார்த்துக் கொண்டிருக்கும் உலகம்  இருளுக்குள் ஒடுங்குகிறது. பக்ஷிகள்  கூட்டில்  ஒடுங்குகின்றன. ஊரெல்லாம் மேய்ந்த பசுக்கள் கொட்டிலுக்குத் திரும்பி  வந்து ஒடுங்குகின்றன.' 
அந்த பசுக்களைப்   போல   நாமும்வெளியில் திரியும் எண்ணங்களையெல்லாம் அப்போது இதயத்துக்குள் திருப்பி பரமேஸ் ரனை ஸ்மரிக்க வேண்டும்.   தோஷம் என்றால் இரவு. இரவு வருவதற்கு முன்னால் இருக்கும்  நேரம், வேளை,  'ப்ர'-தோஷம்.  பிரதோஷத்தில் பரமேஸ்வரனை நினைக்கவேண்டும்.
ஈஸ்வரனை எப்போதும் அம்பாளோடு  சேர்த்தே தியானிக்க வேண்டும். ஈசுவரன் சிவன் எனப்படுகிறார். அம்பாளுக்கு சிவா, சிவே என்று பெயர்.  வேதத்தில் ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது. பயங்கர  ரூபம் கொண்ட ருத்ரனுக்கு பரம  மங்களமான ஒரு ல்வரூபம் உண்டு. அதற்கு  சிவா என்று பெயர். அந்த சிவா தான் உலக  தாபத்துக்கெல்லாம் ஒளஷதமாக  இருக்கிறது. ருத்ரனுக்கும் ஒளஷதம் அந்த  சிவா தான்''
ருத்ரன் ஆலஹாலத்தை உண்ட பிறகும் கூட  பிழைத்திருப்பதற்குக் காரணம் இந்த சிவா  என்கிற அம்பாளான மிருத ஸஞ்சீவினி  தான். ''அம்மா, உன் தாடங்க மகிமையால்  அல்லவா பரமேஸ்வரன் விஷத்தை உண்டும் கூட அழியாமல் இருக்கிறார்?''  என்று  ஆதி சங்கரர்  ஸெளந்தரிய லஹரியில்  அழகாக அவளைக் கேட்கிறார்.
அப்படிப்பட்ட சிவனோடு சிவையை யும் சேர்த்துச் சொன்னது மட்டுமல்ல. நம்  தேசக்  குழந்தைகளும் அநாதி காலமாக  நமக்கு அப்படியே உத்தரவு  போட்டிருக்கின்றன. நம்மைப் போலக்   கல்மிஷங்கள் இல்லாமல், நம்மைப் போல  பாபங்கள் இல்லாமல் இருக்கிற  குழந்தைகளின் வாக்கியமும் நமக்கு  ஆக்ஞைதான்.கட்டளை தான். 
குழந்தைகள் நமக்கு என்ன  கட்டளை இடுகிறது ?  
குழந்தைகள் ஸ்வாமியை ''உம்மாச்சி'' என்றே சொல்லும். குழந்தைகளின் பரம்பரையில் சில தனி வார்த்தைகள்உண்டு. இவை ஆயிரக்  கணக்கான  வருஷங்களாக  பழக்கத்தில், புழக்கத்தில் இருக்கிறது.  பெரியவர்கள்  சொல்லும்  வார்த்தை களும், அவற்றின் அர்த்தங்களும் மாறும். ஆனால் குழந்தையின்  மொழி  மாறுவதில்லை. உம்மாச்சி என்ற குழந்தை மொழிக்கு ஸ்வாமி என்று அர்த்தம்.
என்னிடம் குழந்தைகளை அழைத்து  வருகிறவர்கள்  கூட, 'உம்மாச்சி தாத்தாவுக்கு நமஸ்காரம் பண்ணு ' என்று சொல்கிறார்கள். இதென்ன உம்மாச்சி?  இதன் சரியான மூலம்என்ன?  என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

திருச்சி மலைக்கோட்டைக்குப்போயிருந்தேன். அங்கே உள்ள கோயில் ஸ்ரீபாதந்தாங்கிகளில் திரு நல்லத்திலி ருந்து(கோனேரிராஜபுரம்) வந்திருக்கிறவர்களும்இருந்தார்கள். அவர்களில்  சிலர்  தங்களை   உம்மாச்சி
 என்று கூப்பிடுவதைக் கேட்டேன்.  திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர்  உமா மகேஸ்வரன் என்பது. எனக்கு உடனே விஷயம் பளிச்சென்று புரிந்தது. உம்மாச்சு ,உம்மாச்சி எல்லாம் உமா  மகேசனைக் குறிக்கும்  வார்த்தைகள் என்று தெரிந்து  கொண்டேன்.  ஆகவே குழந்தைகளின் பாஷை  யிலிருந்தே  அவர்கள் மிகப் பழங் காலத்திலிருந்து உமா தேவியுடன் சேர்ந்த  மகேஸ் வரனைத்தான் ஸ்வாமியாக  நினைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

குழந்தைகளால் சொல்லப்படுகிற ஒருவிஷயத்துக்குப் பெருமை அதிகம்.குழந்தைகளிடம் காமமும் குரோதமும் என்றும் கிடையாது. இந்த விநாடி ஆசைப்பட்டு வாங்கிய பொருளை அடுத்த  வினாடி கீழே போட்டு  விட்டு ஓடிவிடும்.  இந்த விநாடி கோபித்துக்  கொண்ட  ஒருவரிடம் அடுத்த விநாடியே ஆசையோடு  ஒடி வந்து கட்டிக்கொள்ளும், ஒட்டிக் கொள்ளும். குழந்தைக்கு மோச  எண்ணம் இல்லை. கபடம் இல்லை.இதனால்  தான் உபநிஷத்துக்களும் நம்மைக்  குழந்தையாக இரு என்று  உபதேசிக்கின்றன.  குழந்தையே தெய்வம் என்றால்  உமா மகேசுவரன் என்று  சொல்கிறதென்றால், அந்தக் கட்டளையை  நாம் ஏற்கவேண்டும். வேத்ததின் பாஷையும்  குழந்தையின் பாஷையும் ஒன்றாகச் சொல்வதுபோல், எல்லோரும்  சாயங்காலத்தில் பிரதோஷ நேரத்தில் அம்பிகை ஸஹிதனான   ஈசுவரனை  தியானிப்போமாக!
நம:பார்வதீ பதயே:ஹர ஹர மஹாதேவா! "

 

 

sivan jaykay

unread,
May 6, 2023, 10:02:02 PM5/6/23
to amrith...@googlegroups.com

சப்த விடங்க க்ஷேத்ரம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 
திருவாரூர்  -  வீதி விடங்கர்

சப்த விடங்க க்ஷேத்ரங்களில் பிரதானமானது  திருவாரூர்  வீதி விடங்கர்  ஆலயம்.  நாங்கள்  திருக்கார வாசல் என்ற ஊரில் இருந்தோம். அங்கிருந்து திருவாரூர் கிளம்பின மறுநாள் ஆடி அமாவாசை.  திருவாரூர் கமலாலயத்தில்  நிறைய வாத்தியார்கள்  இருக்கிறார்கள்.  ஆகவே  அமாவாசை  தர்ப்பண அனுஷ்டானங்களை கமலாலயக் கரையில் முடித்துக் கொள்வதற்காக  முதல்நாள் இரவே  திருவாரூர் வந்து விட்டோம்.   தியாகேசன் ஆலய தரிசனம் செய்தபிறகு  ஒரு இடம் தேடி  தங்குவோம் என்று எண்ணம்.  கோவில் வாசலில்  வேங்கடசுப்ரமணியன் என்ற    மின்சார இலாகாவில் பணி புரிந்து ஒய்வு பெற்றவர் தென்பட்டார். அவரிடம் எங்களை  அறிமுகப்படுத்திக்கொண்டு என் கையிலிருந்த மஹா  பெரியவா பற்றி நான் எழுதிய ''பேசும் தெய்வம்''  புத்தகத்தைக்   கொடுத்தேன். தங்க இடம், மறுநாள் காலை தர்ப்பண வசதி சாப்பாடு ஆகியவை பற்றி விசாரித்தேன். பரம சந்தோஷம் அவருக்கு. எங்கோ சென்றார் பத்தே நிமிஷத்தில் நாங்கள் தங்க ஒரு நல்ல விடுதியை கோவில் எதிரிலேயே  பிடித்துக் கொடுத்தார். அடுத்தநாள் ஆடி அமாவாசை தர்ப்பணம் பண்ண ஒரு வாத்யாரையும் ஏற்பாடு பண்ணி காலை 7 மணிக்கு கமலாலயம் குளக்கரைக்கு வரச் சொன்னார்.  எங்கள் சாப்பாட்டிற்கு வடை பாயசத்தோடு வீட்டு சமையல் ஒன்றும் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தார். வெகுநாள் பழகியவர் போல் அவர் குடும்பம் எங்கள் மேல் பாசத்தை கொட்டியது.  93  வயது வேங்கடசுப்ரமணியன் அம்மா  உபசரித்து  வரவேற்றாள்.  கிடுகிடுவென்று அங்குமிங்கும் நடந்து தனது வேலைகளை யார் உதவியும் இன்று  தானாகவே  மடியாக  செய்து கொள்கிறாள்.  அவளை நமஸ்கரித்தோம்.  சந்தோஷமாக  ஆசிர்வதித்தாள். என் புத்தகங்கள் ரொம்ப பிடித்ததாம். 

ஆலயம்  கதவு சாத்துவதற்கு முன்பு சீக்கிரம் சென்று தரிசனம் பாருங்கள் என்று  வேங்கடசுப்ரமணியன் எங்களை அழைத்துச் சென்றார்.  ஓடினோம். சப்த விடங்க க்ஷேத்ரத்தில் அதி முக்கியமான திருவாரூர் மரகத  லிங்க வீதி விடங்கரின் அபிஷேகமும்  முதல் நாள் இரவு 7.30மணிக்கு காத்திருந்து அற்புதமாக பார்க்க முடிந்தது. கொடுத்து வைத்தவர்கள் நாங்கள்.  இல்லையென்றால் இதெல்லாம் நடக்குமா கிடைக்குமா? இரவே தியாகராஜரை தரிசித்தோம். நாங்கள் தங்கிய விடுதிக்  கருகிலேயே வெறும் இட்டலி சட்னி மட்டும் சூடாக ஒருவர் தயாரித்து விற்கிறார். எனவே இரவு ஆகாரமும் இனிது முடிந்தது.

திருவாரூர் தியாகராஜர்  ஆலயம் ரெண்டாயிரம் வருஷ மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் கூட. நாயன்மார்கள் பாடல் பெற்ற ஸ்தலம். பஞ்ச பூத ஸ்தலத்தில் ப்ரித்வி ஸ்தலம். பிரம்மாண்ட ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். காவிரி தென்கரை பாடல்பெற்ற சிவ ஸ்தலங்களில் இது 87ஆவது. பிரதான சப்த விடங்க க்ஷேத்ரம். நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம். திருவாரூர் பற்றிய சில அற்புத  விஷயங்கள் சொல்கிறேன். 

எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் திருத்தலம் .
சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று  பரவையைப் பெண் கேட்ட திருத்தலம்.
நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.
நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .
பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.
திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவு கொண்டதாகும்.   9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பு.    24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட  பெரிய சிவஸ்தலம் திருவாரூர். 
 சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள்.   ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப்  பெற்றவர். பிறகு அவரால் இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கர வர்த்திக்கும் அளிக்கப் பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிஷ்டை செய்யப்பெற்றவர்.

திருவாரூரில் பிறந்தாலே  முக்தி காரண்டீ என்று பெருமை கொண்ட க்ஷேத்ரம்.  தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் திருத்தொண்டுகள் பரிமளித்த சிவாலயம்.  கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே.

திருவாரூர்  தேர்  திருவிழா, திருக்கோவில்,  கமலாலயம் திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேர் அழகு  ரொம்ப  நேர்த்தி.  கீழ்க்கோபுரம் 118 அடி உயரம் கொண்டது; இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது.
கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.

திருவாரூரில்  நான்கு தீர்த்தங்கள் . 1. கமலாலயம் - இது 5-வேலிப் பரப்புடையது; தேவதீர்த்தம் எனப்படுகிறது. 2. சங்கு தீர்த்தம் - இது ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது; அமுததீர்த்தம் என்றும் பெயர். 3. கயா தீர்த்தம் - இது ஊருக்கு அப்பால் கேக்கரை என்று வழங்கும் இடத்தில் உள்ளது. 4. வாணி தீர்த்தம் - (சரஸ்வதி தீர்த்தம்) மேற்குப் பெரிய பிரகாரத்தில் சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது. இதைத் தவிர  
"செங்கழுநீர்ஓடை" என   ஒரு   நீரோடை கோயிலுக்கு அப்பால் 1-கி.மீ. தொலைவில் உள்ளது.

தியாகராஜர் இங்கே  அற்புதமான அஜபா நடன மூர்த்தி.    சுந்தரர், "திருத்தொண்டத் தொகை"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய  க்ஷேத்ரம் திருவாரூர். முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர்   செம்மையாக  ஆண்ட  ஊர். தண்டியடிகள் அவதரித்து முக்தியடைந்த  ஸ்தலம். 
கோயில் வளாக மூன்றாவது சுற்றில் மூலாதார கணபதிக்கு அருகில் தண்டியடிகள் நாயனாரின்  சிலை உள்ளது.
நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலமும்  திருவாரூர் தான். .
சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர ராயர்கள் கல்வெட்டுகள்  65 உள்ளன என்று அறிந்தேன். அம்பாள் பெயர்கள்   நீலோத்பலாம்பாள். கமலாம்பாள்.   கமலாம்பாள்  சந்நிதி  சக்தி பீடங்களில் ஒன்று.  சந்நிதியில் இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய்  கமலாம்பாள்  வீற்றிருக்கிறாள்.  முத்துஸ்வாமி தீக்ஷிதர் அன்னை கமலாம்பாள்  மேல்   நவாவர்ணக் கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார்.

ஆடி  அமாவாசை  பித்ரு தர்ப்பணம்  கமலாலயக் கரையில் வேங்கடசுப்ரமணியன் அழைத்து வந்த  வாத்யார்  உதவியோடு  படித்துறையில்  நிறைவேறியது. குளக்கரை யோரத்தில் ''மாற்றுரைத்த பிள்ளையார்'' இருக்கிறார். அவரைப் பற்றிய கதை அழகானது. 

சுந்தரர் இறைவன் கொடுத்த பொற்காசு உண்மையிலேயே தங்கமா என்று சந்தேகப்பட,  அருகே இருந்த இந்த பிள்ளையார் வட்டிக்கடை மார்வாடி போல் தங்கத்தை உரைத்துப்  பார்த்து மாற்று  குறைவில்லை என்று சொன்ன இடம். திருவாரூரைப் பற்றியே நூற்றுக்கணக்கான கதைகள் எழுத விஷயம் இருக்கும்போல இருக்கிறது.  தர்ப்பணம்  முடிந்து வேங்கடசுப்ரமணியன்  ஏற்பாடு பண்ணி இருந்த  கணபதி அய்யர் மெஸ்ஸில்  சுடச்சுட வீட்டு சாப்பாடு.   சிரம பரிகாரம் சற்று எடுத்துக் கொண்டு  அடுத்த விடங்க க்ஷேத்ரத்துக்கு புறப்பட்டோம். 



sivan jaykay

unread,
May 7, 2023, 7:37:21 PM5/7/23
to amrith...@googlegroups.com
  ஸ்ரீ அபீtதி  ஸ்தவம்    ஸ்லோகங்கள்  6-10    –   நங்கநல்லூர்  J K  SIVAN

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்


स्थिते मनसि विग्रहे गुणिनि धातुसाम्ये सति  स्मरेदखिलदेहिनं य इह जातुचित्त्वामजम् ।
तयैव खलु सन्धया तमथ दीर्घनिद्रावशं   स्वयं विहितसंस्मृतिर्नयसि धाम नैःश्रेयसम् ॥ 6॥
|
sthithe manasi vigrahe guNini dhAtusAmye sati   smaredakhiladehinaM ya iha jAtuchittvAmajam |
tayaiva khalu sandhayA tamatha dIrghanidrAvashaM      svayaM vihitasaMsmR^itirnayasi dhAma naiHshreyasam || 6||

ஸ்திதே மனஸி விக்ரஹே குணிநி தாது சாம்யே சதி ஸ்மரேத் அகில தேகிநம் ய இஹ ஜாதுசித் த்வாம் அஜம் தயைவ கலு சந்த்யா தம் அத தீர்க்க நித்ரா வசம்ஸ்வயம் விஹித சம்ஸ்ருதி நயசி தாம நைஸ்ரேயசம்

பயமா  அப்படின்னா  என்ன?  கேளு  இப்படி தான்  நீ கேக்கணும்.  நீ தான் அந்த மாதவனை, ரங்கநாதனை சரணடைந்து விட்டாயே. பின்னால் கண் பஞ்சடைமுன்னே, கடைவாயில் பால் வழியுமுன்னே, காதே கேலாமுன்னே, நினைவு தப்பும் முன்னே,  வாய்  பேசாமல் போகுமுன்னே, இப்போதே  வாய் நிறைய , நா மணக்க  நாராயணாய, ரங்கநாத  என்று சொல்லிவிடு. அப்போதைக்கு இப்போதே சொன்னால் அந்திம காலத்தில்  நம்மால் எதுவும் முடியாதபோது அந்த அரங்கன் நாம் இப்போது சொல்வதை நினைவுகொண்டு நம்மை ரக்ஷித்து மோக்ஷம் அளிப்பான். அப்புறம் என்ன பயம்?


रमादयित रङ्गभूरमण कृष्ण विष्णो हरे  त्रिविक्रम जनार्दन त्रियुगनाथ नारायण ।
इतीव शुभदानि यः पठति नामधेयानि ते  न तस्य यमवश्यता नरकपातभीतिः कुतः ॥ 7॥

ramAdayita ra~NgabhUramaNa kR^iShNa viShNo hare   trivikrama janArdana triyuganAtha nArAyaNa |
itIva shubhadAni yaH paThati nAmadheyAni te   na tasya yamavashyatA narakapAtabhItiH kutaH || 7||

ரமா தயித ரங்க பூ ரமண கிருஷ்ண விஷ்ணோ ஹரே த்ரிவிக்ரம ஜனார்த்தன த்ரியுக நாத நாராயண
இதி இவ சுப தாநி ய படதி நாமதே யாநி தே ந தஸ்ய யம வஸ்யதா நரக பாத பீதி குத

ஸ்ரீரங்கம் பூலோக  வைகுண்டம் என்று ஒருவரா இருவரா , அடேயப்பா எத்தனை ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், பக்தர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.  ஸ்ரீரங்கத்தை மனதில் விரும்பி அவன் சந்நிதிக்கு சென்று கரம் குவித்து வணங்கி நமஸ்கரித்து பயனடைவோம். அவன் நாம சங்கீர்த்தனம் செய்வோம். அப்புறம் யமனுக்கு இங்கே என்ன வேலை. ஒரே ஓட்டம் ஓடிவிடுவானே.

कदाचिदपि रङ्गभूरसिक यत्र देशे वशी  त्वदेकनियताशयस्त्रिदशवन्दितो वर्तते ।
तदक्षततपोवनं तव च राजधानी स्थिरा  सुखस्य सुखमास्पदं सुचरितस्य दुर्गं महत् ॥ 8॥

kadAchidapi ra~NgabhUrasika yatra deshe vashI  tvadekaniyatAshayastridashavandito vartate |
tadakShatatapovanaM tava cha rAjadhAnI sthirA   sukhasya sukhamAspadaM sucharitasya durgaM mahat || 8||

கதாசித் அபி ரங்க பூ ரசிக யத்ர தேசே வசீ த்வத் ஏக நியத ஆசய த்ரிதச வந்தித வர்த்ததே
தத் அஷத தப வனம் தவ ச ராஜதாநீ ஸ்திதா ஸூ கஸ்ய ஸூ கம் ஆஸ்பதம் ஸீசரிதஸ்ய துர்க்கம் மஹத்

ஐம் புலன்களை அடக்கி மனதை அரங்கனிடம் வைத்தவனை  சகல தேவர்களும் வணங்குவார்களே.  அப்படிப்பட்ட பக்தன் இருக்கும் இடம் சிறந்த தவம் செய்ய தகுந்த இடம்.  ஸ்ரீ   ஸ்ரீனிவாசன் இருவருமே நித்ய வாசம் செய்யும் ஸ்தலமாகவும் ஆகும் . சகல வைபோகங்களும் அவனைச் சேரும். அப்புறம் என்ன பயம்?

त्रिवर्गपथवर्तिनां त्रिगुणलङ्घनोद्योगिनां  द्विषत्प्रमथनार्थिनामपि च रङ्गदृश्योदयाः ।
स्खलत्समयकातरीहरणजागरूकाः प्रभो  करग्रहणदीक्षिताः क इह तेन दिव्या गुणाः ॥9 ॥

trivargapathavartinAM triguNala~NghanodyoginAM  dviShatpramathanArthinAmapi cha ra~NgadR^ishyodayAH |
skhalatsamayakAtarIharaNajAgarUkAH prabho  karagrahaNadIkShitAH ka iha tena divyA guNAH || 9|| (ka iva)

த்ரிவர்க்க பத வர்த்தி நாம் த்ரிகுண சங்கந உத்யோகி நாம் த்விஷத் ப்ரமதந அறத்திநாம் அபி ச ரெங்க த்ருச்ய உதயா ஸ்க்கலத் சமய காதரீ ஹரண ஜாகரூகா பிரபோ கர க்ரஹண தீஷிதா க இவ தே ந திவ்ய குணா

ஸ்ரீயப்பதே , ரங்கநாதா,  ஆஹா உன்னுடைய  ஒவ்வொரு  திருக்   கல்யாண  குணங்களும், ஆயிரமாயிர நாமங்களை நினைக்க நினைக்க  மனம்  ஆனந்தத்தில் மூழ்குகிறது.  தர்மம் அர்த்தம் காமம் எல்லாம்  உதறிவிட்டு  சொந்த பந்த உற்றார்  தாயாதி பங்காளி, சகல விரோதிகளிடமிருந்தும்  எம்மை  நீக்கி  எக்காலத்திலும் ரஷிக்க வல்லதல்லவோ  அந்த மஹிமை.  அப்புறம்  எங்கிருந்து பயம் எம்மை அணுகும்?–


बिभेति भवभृत्प्रभो त्वदुपदेशतीव्रौषधात्- कदध्वरसदुर्विषे बडिशभक्ष्यवत्प्रीयते । (बलिश)
अपथ्यपरिहारधीविमुखमित्थमाकस्मिकी  तमप्यवसरे क्रमादवति वत्सला त्वद्दया ॥ 10॥

bibheti bhavabhR^itprabho tvadupadeshatIvrauShadhAt\-  kadadhvarasadurviShe baDishabhakShyavatprIyate | (balisha)
apathyaparihAradhIvimukhamitthamAkasmikI  tamapyavasare kramAdavati vatsalA tvaddayA || 10||


பிபேதி பவப்ருத் பிரபோ தவத் உபதேச தீவ்ர ஔஷதாத் கதத்வ ரச துர்விஷே பளிச பஷவத் ப்ரீயதே
அபத்த்ய பரிகாரதி விமுகம் இத்தம் ஆகஸ்மிகீ தம அபி அவசரே க்ரமா தவதி வத்சலா த்வத் தயா

மீளாத  எல்லையற்ற  ஸம்சார  துக்க சாகரத்தில் உழன்று விஷயாந்தரங்களில் சிக்கி உள்ள அனைவரையும் அரங்கா உனது  தயை மிக்க  காருண்ய  
 குணம் மீட்டு  என்றும் உன்னை சரணடைய  ரக்ஷிக்க வல்லது. 



sivan jaykay

unread,
May 8, 2023, 8:00:49 PM5/8/23
to amrith...@googlegroups.com
விவேக சூடாமணி 16-20-  நங்கநல்லூர்  J K  SIVAN
ஆதி சங்கரர்

मेधावी पुरुषो विद्वानूहापोहविचक्षणः । अधिकार्यात्मविद्यायामुक्तलक्षणलक्षितः ॥ १६॥
medhāvī puruṣo vidvānuhāpohavicakṣaṇaḥ | adhikāryātmavidyāyāmuktalakṣaṇalakṣitaḥ || 16
 மேதா⁴வீ புருஷோ வித்³வாநூஹாபோஹவிசக்ஷண: । அதி⁴கார்யாத்மவித்³யாயாமுக்தலக்ஷணலக்ஷித: ॥ 16॥

ஆத்மாவைப் பற்றி சிந்தித்து  ஆத்ம விசாரம் செய்பவன்  சாஸ்திரங்கள், வேதங்கள் சொல்வது சரியானது, நியாயமானது என்பதை உணர்ந்து அதை ஆதரிப்பவன். புத்தி கூர்மையானவன்.  அதை  ஆதாரமில்லாமல் கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களை சாடுபவன்.

विवेकिनो विरक्तस्य शमादिगुणशालिनः । मुमुक्षोरेव हि ब्रह्मजिज्ञासायोग्यता मता ॥ १७॥
vivekino viraktasya śamādiguṇaśālinaḥ |mumukṣoreva hi brahmajijñāsāyogyatā matā || 17 ||
விவேகிநோ விரக்தஸ்ய ஶமாதி³கு³ணஶாலிந: । முமுக்ஷோரேவ ஹி ப்³ரஹ்மஜிஜ்ஞாஸாயோக்³யதா மதா ॥ 17॥
ப்ரம்மம்  என்பது நிரந்தரமான  ஸாஸ்வதமான சத்யம் என்று உணர்ந்தவன், எது  நிஜம், எது மாயை என்று அறிந்தவன், அமைதியாக, உணர்ச்சிகளின் வசப்படாதவன் முக்தியாய்  நாடுபவன், பிரம்மத்தை அறிந்துகொள்ள  ப்ரம்மத்தைஅனுபவிக்க  தகுதி உடையவன்.

साधनान्यत्र चत्वारि कथितानि मनीषिभिः ।येषुसत्स्वेव सन्निष्ठा यदभावे न सिध्यति ॥ १८॥
sādhanānyatra chatvāri kathitāni manīṣibhiḥ ।yēṣu satsvēva sanniṣṭhā yadabhāvē na sidhyati ॥ 18॥
ஸாத⁴நாந்யத்ர சத்வாரி கதி²தாநி மநீஷிபி:⁴ । யேஷு ஸத்ஸ்வேவ ஸந்நிஷ்டா² யத³பா⁴வே ந ஸித்⁴யதி ॥ 18॥

மனிதனை பல வழிகளில் புத்தி, மனம், புலன்களின்  சக்தியால்  ஈர்க்கிறது. அதற்கு அடிமையானவர்கள் தான் ஏராளம்.  இது மாயை என்று உண்டர்ந்து அதனின்றும் விலகி சத்யம் எது, சாஸ்வதம் எது என்று அறிந்து கொண்டு திட மனதோடு ஆத்மாவைத் தேடுபவன் தான் வெற்றிபெறுகிறான். பிரம்மத்தை அனுபவிக்கிறான்.

19. आदौ नित्यानित्यवस्तुविवेकः परिगण्यते। इहामुत्रफलभोगविरागस्तदनन्तरम्। शमादिषट्कसम्पत्तिर्मुमुक्षुत्वमिति स्फुटम् ॥ १९॥
ādau nityānityavastuvivēkaḥ parigaṇyatē ।ihāmutraphalabhōgavirāgastadanantaram ।
śamādiṣaṭkasampattirmumukṣutvamiti sphuṭam ॥ 19॥

ஆதௌ³ நித்யாநித்யவஸ்துவிவேக: பரிக³ண்யதே । இஹாமுத்ரப²லபோ⁴க³விராக³ஸ்தத³நந்தரம் । ஶமாதி³ஷட்கஸம்பத்திர்முமுக்ஷுத்வமிதி ஸ்பு²டம் ॥ 19॥

ஒவ்வொரு கணமும் நம் வாழ்வில்  பொய்  நிஜமாக தோன்றி  அநித்தியம் நிஜமாக, நித்தியமாக  காட்சி தந்து நம்மை  அடிமையாக்குகிறது. அதை புரிந்து கொள்ள முதலில் கவனம் வைப்போம்.  இதல்ல   அதல்ல  என்று  ஒதுக்குவதிலேயே வாழ்க்கை முடிந்துவிடும்.  கர்ம  பலன்களை  அனுபவிப்பதில் பல ஜன்மங்கள் தீர்ந்து விடுகிறது.  அமைதியான  வாழ்க்கை  தனிமையில் த்யானம் ஆகியவை,  பெரிதும் முக்தியைத் தேடுவதற்கு உதவும்.

20. ब्रह्म सत्यं जगन्मिथ्येत्येवंरूपो विनिश्चयः । सोऽयं नित्यानित्यवस्तुविवेकः समुदाहृतः ॥ २०॥
brahma satyaṃ jaganmithyētyēvaṃrūpō viniśchayaḥ ।sō'yaṃ nityānityavastuvivēkaḥ samudāhṛtaḥ ॥ 20॥
ப்³ரஹ்ம ஸத்யம் ஜக³ந்மித்²யேத்யேவம்ரூபோ விநிஶ்சய: । ஸோऽயம் நித்யாநித்யவஸ்துவிவேக: ஸமுதா³ஹ்ரு’த: ॥ 20॥

20.எப்போது மனதில்  நிச்சயமாக  ப்ரம்மம் ஒன்றே  சாஸ்வதம், பிரபஞ்சம்  வெறும்  நிழல் காட்சி,  என்று பதிவாகிவிட்டதோ, அது தான்  பண்பட்ட  மனது. பொய்க்கும் நிஜத்துக்கும் வித்யாசம் அறிந்த மனது.  சாதகன் அப்போது தான் ஆத்ம ஞானம் புரிந்து கொள்வான். ப்ரம்மம் அர்த்தமாகும். 


sivan jaykay

unread,
May 8, 2023, 8:00:49 PM5/8/23
to amrith...@googlegroups.com
அறுபத்து மூவர்  - நங்கநல்லூர்  J K SIVAN 
தண்டியடிகள்.

நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை

தண்டி   அடிகள்  என்ற பெயர்  கேள்விப்பட்டிருக்கிறேன்.  யார்  அவர் என்று தெரியாது என்பவர்களுக்கு நடுவே  சிலர்  அவர்  வேறு யாருமில்லை  காந்தி அடிகள் என்கிறவர்களும் இருக்கிறார்கள். 
''எப்படி சொல்கிறீர்கள்? காந்தி அடிகளுக்கு  அப்படியும்  ஒரு பேரா?
''ஆமாம்,  அவர்  தண்டி எனும் இடத்துக்கு சென்றது தெரியுமல்லவா? 
'ஓஹோ, அப்படியா,  எதற்கு அங்கே போனார்"'
''வெள்ளைக்காரனை எதிர்த்து  கடற்கரையில்  உப்பு எடுத்து எதிர்ப்பு காட்ட?
''ஓஹோ,  அது தான் உப்பு சத்யாகிரஹமா?''
''அங்கே  தண்டி எனும் கடற்கரையில்  வெள்ளைக்காரனின் போலீஸ்  தடியால் அடித்தது. அதனால்  அவற்றை தண்டி அடிகள்,  தடி அடிகள், என்பார்கள். காந்தி தான் தண்டியடிகள்'' என்கிறார் ஒருவர்.
''ஐயா, சரித்திரத்தையே மாற்றுகிறீரே.  தண்டியடிகள் வேறு. அவர் உப்போ. பருப்போ, சத்யாக்ரஹம்  பண்ணாதவர். சிவனடியார். சிவ  பக்தர்களை அடியார்கள், அடிகள் என்று சொல்வதுண்டு. தண்டியடிகள்  அப்படி ஒருவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அவரைப்பற்றி சொல்கிறேன் கேளுங்கள்.

திருவாரூரில் பிறந்தவர் இந்த அடிகள். பிறவிக்குருடர். அகக்கண்ணால் முக்கண்ணனை வணங்கி வழிபட்டவர். கொம்பைப் பிடித்துக் கொண்டு, சிவாலயத்தைச் சுற்றி சுற்றி  'ஓம் நமசிவாய' எனும் பஞ்சாக்ஷர மந்த்ரத்தை உச்சரித்துக்  கொண்டே வருபவர்.  அவர்  சுற்றும் ஆலயத்தின் குளம் ரொம்ப சிதிலமாகி வறண்டிருந்தது.  அதை எப்படி சுத்தம் செய்யலாம் என்று யோசித்தார்.  குளக்கரையில் ஒரு கொம்பு, குளத்தின் நடுவே ஒரு கொம்பு கட்டி  அதில் கயிற்றை பலமாக  பிணைத்து அதைப் பிடித்துக் கொண்டே
குளத்தில்  இறங்கினார்.   ஒரு கூடையைத் தோளில்  சுமந்து குளத்தில் இருக்கும் மண், சேறு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக  வெளியே  கொண்டுவந்து குளக்கரையில் கொட்டினார்.  இவ்வாறு தூறு வாரியதும் , காய்ந்து போயிருந்த குளத்தில் நீர் சுரந்தது. 
அடிகள் மேல் பொறாமை கொண்ட அங்கு வாழ்ந்த  சில சைவ விரோதி சமணர்கள்  ''உன் வேலையை நிறுத்து '' என்று சத்தம் போட்டார்கள். 
‘ ஐயன் மீர், இது சிவனுக்கு நான் செய்யும்  சேவை. திருப்பணி.. நிறுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை’ என்றார். 
 ‘ நீயோ  குருடன், உனக்கு கண் இல்லை என்றால், காதும் கேட்கவில்லையா? நாங்கள் சொல்வதை கேட்டு இங்கிருந்து போய்விடு. மண்ணைத் தோண்டாதே,  அதில் வாழும் சிறிய  உயிர்கள் இறந்துவிடும், நிறுத்து' என்கிறார்கள். 
‘சிவத்  தொண்டின்  மஹிமை  பெருமையை அறியாதவர்களே. இது எப்படி உங்களுக்கு புரியும்?'' என்கிறார் 
தண்டியடிகள். 
சமணர், ‘உனக்கு கண் தான் குருடு, காதுமா  செவிடு  என்று சிரித்தார்கள். 
அப்போது தான் தண்டியடிகள்  என் சிவனருளால் நான் கண் பெற்று நீங்கள் குருடானால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். 
எங்கே  உன் தெய்வத்தின் சக்தியைக்  காட்டு,  நீ கண் பெற்றால் நாங்கள் இந்த ஊரை விட்டே போய் விடுகி றோம் என்றார்கள்.
''ஆரூரா , எனக்கு வந்த சோதனையை நீ பார்த்தாயா, கேட்டாயா என்று வருந்தி பாடுகிறார். சமணர்களால் என் திருக் குளத்தில் தூறு வாறும்  சேவை தடைப்பட்டதே என்று அழுகிறார். 

அன்று கனவில் ஆரூர் தியாகராஜன் தோன்றி  உனக்கு கண் பார்வை அளித்தேன்.உன் வாக்கின் படி   சமணர்கள்  கண்  பார்வை இழப்பார்கள் என்றான்.   அதே நேரத்தில்  திருவாரூர்  தியாகராஜன் சோழ ராஜா கனவிலும் தோன்றினான்.    
‘தண்டி என்ற  என் பக்தன் திருவாரூரில் ஒரு குளம் தோண்டி தூறு  வாருவதற்கு  சில சமணர்கள்  தடை செயகிறார்கள். நீ  தண்டியின்  கைங்கர்யம் தடை படாமல் இருக்க உடனே ஏற்பாடு செய் '' என்று கட்டளை இட்டான். 
ஆச்சரியத்தோடு ராஜா கண் விழித்தான். மறுநாள் காலை  திருவாரூர் சென்றான். தண்டியடிகளை சந்தித்து  அவரை  குளத்தருகே அழைத்துச் சென்றான்.  
''அரசே, சிவனருளால் நான் குளத்தில் ஸ்னானம் செய்து ஐந்தெழுத்து மந்திரம் ஓதி கண் பார்வை பெறுவேன். சிவனுக்கு கைங்கர்யம் செய்வதைத் தடுத்த சமணர்கள் கண் பார்வை இழப்பார்கள்.இது தியாகேசன் அருள் '' என்று குளத்தில் மூழ்கி எழுந்தார்.  கண் பார்வை ஒளி  கிடைத்தது. அதே நேரத்தில் சமணர்கள் பார்வை இழந்தார்கள்.  அரசனின் காவலாளிகள் அவர்களை திருவாரூரிலிருந்து  வெளியேற்றினர்.  குளம் ராஜாவின் ஆணையில் முழுதும் தூறு வாரப்பட்டு , சுத்தமாகி கரைகள்  புதுப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு  சந்தோஷ மளித்தது.

sivan jaykay

unread,
May 9, 2023, 7:37:49 PM5/9/23
to amrith...@googlegroups.com

ஸௌந்தர்ய லஹரி 59 -61 /103 - நங்கநல்லூர் J K SIVAN

59.  स्फुरद्गण्डाभोगप्रतिफलितताटङ्कयुगलं  चतुश्चक्रं मन्ये तव मुखमिदं मन्मथरथम्।
यमारुह्या द्रुह्यत्यवनिरथमर्केन्दुचरणंमहावीरो मारः प्रमथपतये सज्जितवते॥

59, sphuradgaṇḍābhogapratiphalitatāṭaṅkayugalaṁ catuścakraṁ manye tava mukhamidaṁ manmatharatham |
yamāruhyā druhyatyavanirathamarkenducaraṇaṁ mahāvīro māraḥ pramathapataye sajjitavate ||

59, ஸ்புரத் கண்டாபோக ப்ரதிபலித- தாடங்க-யுகளம் சதுச்ச்க்ரம் மன்யே தவமுகமுதம் மன்மதரதம் I
யமாருஹ்ய த்ருஹ்யத் யவனிரத-மர்க்கேந்து-சரணம் மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே II

அம்மா, உன் கன்னம்  கண்ணாடி கிண்ணம். அதில் எது  கண்ணைக்கூசும்  ப்ரகாசத்தோடு பிரதிபலிக்கிறது தெரியுமா? உன் காதில் ஜொலிக்கும் தாடங்கங்கள் .  இப்படிப்பட்ட அழகோடு நீ பவனி வரும்போது மன்மதன்  நாலு சக்கர தேரில் அமர்ந்து  சிவனை எதிர்த்து யுத்தத்துக்கு  வருவது போல் உள்ளது.  சிவனின் தேர்  பூமி, சூரிய சந்திரர்கள்  அந்த தேரின் சக்ரங்கள்.   மன்மதன்  என்பது நமது மனதில் எழும் எண்ணங்கள். அதன்  ஆத்மாவை கட்டுப்படுத்த முயல்வது தான் யுத்தம். அதில் மாயை எனும் எண்ணங்கள்  எரிக்கப்படுகிறது. சிவன் யோகி என்பது இங்கே  ப்ரம்மஞானி.  ஞானப் பிரகாசம். 
 
 60. 
सरस्वत्याः सूक्तीरमृतलहरीकौशलहरीःपिबन्त्याः शर्वाणि श्रवणचुलुकाभ्यामविरलम् ।
चमत्कारश्लाघाचलितशिरसः कुण्डलगणो झणत्कारैस्तारैः प्रतिवचनमाचष्ट इव ते ॥ ६०॥

60. Sarasvatyah sukthir amrutha-lahari-kaushala-harihPibanthyah Sarvani Sravana-chuluk abhyam aviralam;
Chamathkara-slagha-chalita-sirasah kundala-gano  Jhanatkarais taraih prati-vachanam achashta iva te.

60. ஸரஸ்வத்யா: ஸூக்தீ ரம்ருத லஹரீ கௌஶலஹரீபிபந்த்யா: ஶர்வாணி ஶ்ரவண சுலுகாப்யா மவிரலம்
சமத்கார ஶ்லாகாசலித ஶிரஸ: குண்டலகணோ ஜணத்காரைஸ் தாரை: ப்ரதிவசன மாசஷ்ட இவதே                           
பரமசிவபத்தினியே ! பச்சைப் பெண்ணே பார்வதியே,  அம்ருத வெள்ளத்தின்  இன்பத்தை, இனிமையை  உன்னுடையதாக்கிக் கொண்டவளே. உன் வாக்கு, சொற்கள், பேச்சு  எவ்வளவு  இன்பத்தேனாக  காதில் பாயும் என  அதைப் பருகுகின்ற  ப்ரம்மஞானிகள்  பாக்யசாலிகள் . அதைச் செவி  குளிர கேட்டு  ஆஹா  அற்புதம் என்று  ஸரஸ்வதீ  தேவி  சிரத்தை அசைக்கும்போது அவளது  காதணிகள் ‘ஜணக்’ ‘ஜணக்’ என்ற  இன்னிசை  ஒலியால் ‘ஆம், ஆம்’ என்று ஆமோதிப்போது போல்  அல்லவோ  தோன்றுகிறது  என்கிறார்  ஆதி சங்கரர். 

61. असौ नासावंशस्तुहिनगिरिवंशध्वजपटि त्वदीयो नेदीयः फलतु फलमस्माकमुचितम् ।
वहन्नन्तर्मुक्ताः शिशिरतरनिश्वासगलितं समृद्ध्या यत्तासां बहिरपि च मुक्तामणिधरः ॥ 61॥

61.Asau naasa-vamsas tuhina-girivamsa-dhvajapati Thvadhiyo nedhiyah phalatu phalam asmakam uchitam;
Vahathy anthar muktah sisira-kara-nisvasa galitham Samruddhya yat tasam bahir api cha mukta-mani-dharah

61. அஸௌ நாஸாவம்ஶஸ் துஹிநகிரிவம்ச த்வஜபடித்வதீயோ நேதீய பலது பல மஸ்மாக முசிதம் பஹத்யந்தர் முக்தா: ஶிஶிரகர நிஶ்வாஸ கலிதம் ஸம்ருத்த்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர:                   
ஹிமவான்  குலக்கொழுந்தே, கொடி மரத்தில் பட்டொளி வீசி பறக்கும் கொடியே. உன் மூக்குக்கு எதை அடையாளமாகச் சொல்லலாம் என்று  தோன்றி  எனக்கென்னவோ அதற்கு மூங்கில் தண்டு தான் பொருத்தம் என்று மனதில் பட்டது.  உன் அருள் விரைவில்  கிடைக்க அனுக்ரஹம் பண்ணு  தாயே.  உனது  நாசியாகிய   மூங்கில் தண்டுக்குள்ளே  முத்துக்கள்  நிறைய  இருக்கிறதோ? முத்துக்கள் நிறைந்தி ருப்பதால்தான் மூக்குக்கு வெளியே  சந்திரநாடி பாயும் இடதுநாசியின் வழியே வெளிவரும் மூச்சுக் காற்றினால் கொண்டுவரப்பட்ட சிறந்த முத்தை  நாசி  அணிந்துகொண்டிருக்கிறதோ?  இப்படி எல்லாம் எப்படி எனக்கு தோன்றுகிறது?  அதுவும் உன் அருள் தானோ?
.
 

sivan jaykay

unread,
May 10, 2023, 7:55:02 PM5/10/23
to amrith...@googlegroups.com

 சப்த விடங்க க்ஷேத்திரம்  3 -   
 நங்கநல்லூர்  J K  SIVAN
திருநள்ளாறு 

 நளன் பூஜித்து சனியின் துன்பம் விலகியதால்  நள்ளாறு எனப்படுகிறது. ஞானசம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை அனலில் இட, அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சைவத்தை நிலைநாட்டியது.

முசுகுந்தச் சக்கரவர்த்தி ஸ்தாபித்த சப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்று.  இங்கு  விடங்க தியாகராஜருக்கு நகவிடங்கர் என பெயர்.  சிவன் ஆடிய நடனம் -உன்மத்த நடனம்).

சனிக்கிழமை, மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்கள் பொங்கி வழிகிறார்கள். தங்க இடங்கள் இருக்கிறது.  சனி தோஷம் நீங்கும் சிறப்புடைய தலம்.  தர்பாரண்யேஸ்வரரை வழிபட்ட பின்னரே சனிபகவான் சன்னிதிக்குச் செல்ல வேண்டும். போகமார்த்த பூண்முலையாள் என்ற சம்பந்தரின் தேவார பதிகத்தைப் பாடி சிவபெருமானை வழிபடுவோருக்கு சனி தோஷம் விலகும்.

நான் சென்ற அன்று பிரதோஷம்.  நந்திகேஸ்வரருக்கு அற்புத அபிஷேகம் அலங்காரம். சிவனுக்கு பிறகு தியாகேசனுக்கு மரகத லிங்க உருவில் அருகில் நின்று அபிஷேகம் பார்த்தேன். மரகத  லிங்கம் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அபிஷேகம் பூஜை நேரம் மட்டும் வெளியே கொண்டுவரப்பட்டு உடனே திருமம்ப பாதுகாப்பு பெட்டகம் செல்கிறது.  தரும புர ஆதீனம் செய்துவரும் எண்ணற்ற நற் காரியங்களில் இந்த ஆலய பரா மரிப்பும் ஒன்று.   சோழர்காலக் கல்வெட்டுகள் இரண்டு உள்ளது.  அங்கொன்றும் இங்கொன்றும் சில தமிழ் வார்த்தைகள் படிக்க முடிகிறது. மற்றபடி முயற்சி வீண்.  இதையெல்லாம் யாராவது ஏற்கனவே  தற்கால தமிழ் படுத்தி   போற்றி பாதுகாத்து நகல் எடுத்து வைத்திருக்கிறார்களா என்று ஒருவரும் சொல்வதில்லையே, ஏன்?  அக்கறை அவ்வளவு தானா?  இருந்தால் கல்வெட்டு அருகே  தற்கால தமிழில் அதன் மொழிபெயர்ப்பும் இருந்தால் எல்லோரும் புரிந்துகொள்ளலாமே . இல்லாவிட்டால் அங்கே கல்வெட்டு எதற்கு?
 
இங்கு வருபவர்கள் முக்கியமாக  சனிபகவான் சன்னதிக்கே பரிகாரம் தேடி வருகிறார்கள்..
ஒரு சின்ன கதை.   
இது நளனைத்  தெரியாதவர்களுக்கு.  நிடத நாட்டு  ராஜா  நளன் சேதி நாட்டு  ராஜகுமாரி  தமயந்தியின்  ஸ்வயம்வரத்துக்கு சென்றான்.  அவளை  தேவர்களும் மணக்க விரும்பி வந்திருந்து அவர்கள்  தோற்று  நளன் மேல் பொறாமை கொண்டு, சனீஸ்வரனை நாடி ஏழரை ஆண்டுகள்  சனியின் பிடியில் நளன்  அல்லல் படுகிறான். சனீஸ்வரன் பிடியில் சிக்கினால் அவ்வளவு தான் என்று தெரியுமல்லவா?   நாடு, செல்வம், மனைவி, மக்களை இழந்து, இடுப்பில் துணியும்  மிஞ்சாமல் கூட எல்லாம் இழந்து  நளன் அவஸ்தைப் படுகிறான்.

ஒரு கட்டத்தில் திருநள்ளாறு வந்த நளன்  தர்ப்பாரண்யேஸ்வரரை  வணங்கினான். அப்போது சனி அவனை விட்டு நீங்கியது.  

'எனக்கு துன்பம் தீர்த்தது போல் உன் பக்தர்களுக்கும் சனி கஷ்டங்கள் நீங்கவேண்டும் என்று வேண்டுகிறான்.  இங்கே  கிழக்கு நோக்கி அமர்ந்து "சனீஸ்வரன்' அவ்வாறே அவன் வேண்டுகோளை நிறைவேற்ற இன்றும்  அருள் பாலிக்கிறார்.  கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும், சிவனருள் பெற்றவர் என்பதாலும், இவரை வழிபட்டு, சனியால்  ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெறலாம். நள  சரிதம் படித்தவர்களும் சனித் தொல்லை நீங்கப் பெற்று, வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவர். 

திருநள்ளார்ஸ்தலம்   பேரளம் - காரைக்கால் ரயில் பாதையில் உள்ளது. காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. தொடர்பு : 04368-236530 / 236504

sivan jaykay

unread,
May 10, 2023, 7:55:02 PM5/10/23
to amrith...@googlegroups.com
விவேக சூடாமணி - ஸ்லோகங்கள்  21-25    -     நங்கநல்லூர்  J K SIVAN 
ஆதி சங்கரர் 

 तद्वैराग्यं जिहासा या दर्शनश्रवणादिभिः । जुगुप्सा या देहादिब्रह्मपर्यन्ते ह्यनित्येभोगवस्तुनि ॥ २१॥
 tadvairāgyaṃ jihāsā yā darśanaśravaṇādibhiḥ । (pāṭhabhēdaḥ - jugupsā yā) dēhādibrahmaparyantē hyanityē bhōgavastuni ॥ 21॥
தத்³வைராக்³யம் ஜிஹாஸா யா த³ர்ஶநஶ்ரவணாதி³பி:⁴ । ஜுகு³ப்ஸா யா தே³ஹாதி³ப்³ரஹ்மபர்யந்தே ஹ்யநித்யே போ⁴க³வஸ்துநி ॥ 21॥ 

21  மனிதன்  மிருகமாக  வாழ்வதிலிருந்து தப்ப  உலகவாழ்க்கையின்  இந்த துன்பங்களிலிருந்து  விடுபட வேண்டும்.  அதற்கு  தேவையானது  அவற்றை திரஸ்காரம், தியாகம் பண்ணும்  திட சித்தம்.  அதே நேரம்  பிரம்மத்தில் நாட்டம்.  மனது எதையாவது ஒன்றை பிடித்துக் கொள்ளவேண்டும். குரங்கு கிளைக்கு கிளை தானே தாவும்.  மனம்  பிரம்மத்தை, ஆத்மாவைத் தேட  விருப்பம் கொண்டு  அதை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும். இதற்கு  குருவின்  வழிகாட்டல் அவசியம்.

 भोग्यवस्तुनि विरज्य विषयव्राताद्दोषदृष्ट्या मुहुर्मुहुः । स्वलक्ष्येनियतावस्था मनसः शम उच्यते॥ २२॥ भोग्यवस्तुनि विरज्य विषयव्राताद्दोषदृष्ट्या मुहुर्मुहुः । स्वलक्ष्येनियतावस्था मनसः शम उच्यते॥22 ॥

bhōgyavastuni,  virajya viṣayavrātāddōṣadṛṣṭyā muhurmuhuḥ । svalakṣyē niyatāvasthā manasaḥ śama uchyatē ॥ 22॥

போ⁴க்³யவஸ்துநி  விரஜ்ய விஷயவ்ராதாத்³தோ³ஷத்³ரு’ஷ்ட்யா முஹுர்முஹு: । ஸ்வலக்ஷ்யே நியதாவஸ்தா² மநஸ: ஶம உச்யதே ॥ 22॥ 

22. இப்படி  மனது  பாகத்திலிருந்து  யோகத்துக்கு  தாவ பிரம்மத்தை நாட,  அது முதலில்  புலன்களின் பிடியிலிருந்து  விடுபடவேண்டும்.  ப்ரம்மம்  ஆத்ம ஞானம் ஒன்றே லக்ஷியம் என்ற நோக்கம்  எப்போதும் வேண்டும். இதற்கு  ஷமா,   .அலைபாயாத  மன அமைதி  என்று பெயர்.

23. विषयेभ्यः परावर्त्य स्थापनं स्वस्वगोलके । उभयेषामिन्द्रियाणां स दमः परिकीर्तितः । बाह्यानालम्बनं वृत्तेरेषोपरतिरुत्तमा ॥ 23॥

viṣayēbhyaḥ parāvartya sthāpanaṃ svasvagōlakē । ubhayēṣāmindriyāṇāṃ sa damaḥ parikīrtitaḥ ।
bāhyānālambanaṃ vṛttērēṣōparatiruttamā ॥ 23॥

விஷயேப்⁴ய: பராவர்த்ய ஸ்தா²பநம் ஸ்வஸ்வகோ³லகே । உப⁴யேஷாமிந்த்³ரியாணாம் ஸ த³ம: பரிகீர்தித: । பா³ஹ்யாநாலம்ப³நம் வ்ரு’த்தேரேஷோபரதிருத்தமா ॥ 23॥ 

23. இன்னொரு விஷயம்.    மனதை கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள்  ரெண்டிலிருந்தும் பிரித்து சுய  கட்டுப்பாட்டுக்குள்  வைப்பதற்கு  தமம்  என்று பெயர். யோகத்தில் இது ஒரு முக்கியமான பயிற்சி. மனதை  எந்த  வகையிலும்  வேறே எதிலும் நாட விடாமல்  கெட்டியாக பிடித்து கட்டிப்போட்டு வைப்பது.(உபரதி என்று இதை யோகிகள் சொல்வார்கள்)

सहनं सर्वदुःखानामप्रतीकारपूर्वकम् । चिन्ताविलापरहितं सा तितिक्षा निगद्यते॥ 24॥
sahanaṃ sarvaduḥkhānāmapratīkārapūrvakam । chintāvilāparahitaṃ sā titikṣā nigadyatē ॥ 24॥
ஸஹநம் ஸர்வது:³கா²நாமப்ரதீகாரபூர்வகம் । சிந்தாவிலாபரஹிதம் ஸா திதிக்ஷா நிக³த்³யதே ॥ 24॥

24.பிறரின்  எந்த  செயலாலும், சொல்லாலும்  பாதிப்பின்றி எப்போதும்  நிரந்தரமனாக அமைதி, பொறுமை இன்முகத்துடன் காப்பது  எல்லோராலும் முடியாத காரியம். அப்படி மனத்தை செம்மையாக வைப்பது திதிக்ஷா எனப்படுவது.  எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும்  பக்குவம்  யோகிகளுள்ளே உரித்தானது. 

 शास्त्रस्य गुरुवाक्यस्य सत्यबुद्ध्यवधारणम्। सत्यबुद्ध्यावधारणा सा श्रद्धा कथिता सद्भिर्यया वस्तूपलभ्यते॥ 25॥

śāstrasya guruvākyasya satyabuddhyavadhāraṇam । (pāṭhabhēdaḥ - satyabuddhyāvadhāraṇā)
sā śraddhā kathitā sadbhiryayā vastūpalabhyatē ॥ 25॥


 ஶாஸ்த்ரஸ்ய கு³ருவாக்யஸ்ய ஸத்யபு³த்³த்⁴யவதா⁴ரணம் । ஸத்யபு³த்³த்⁴யாவதா⁴ரணா ஸா ஶ்ரத்³தா⁴ கதி²தா ஸத்³பி⁴ர்யயா வஸ்தூபலப்⁴யதே ॥ 25॥

25. குருவின் சொல் தட்டாது,  அதே சமயம்  குருட்டுத்தனமாக நம்பாமல், ஆராய்ந்து சிந்தித்து,  குருவின் சொல் உணர்த்தும் சத்யம், சாஸ்வதம் எதுவோ அதை புரிந்துகொண்டு அதை விட்டு மீறாமல்  திட சித்ததோடு பின்பற்றுவது தான் ஸ்ரத்தை எனப்படுவது.  மிகவும் கடினமான  ஒரு கட்டுப்பட்டு இதற்கு அவசியம். யோகிகள், மஹான்கள் இதை  அனுஷ்டிக்கிறார்கள்.   
ஆறுவிதமான மேலே சொன்ன குணங்களையும் தான் ஷட் ஸம்பத் , எனும் ஆறுவித செல்வங்கள் என்பது. அவை, சம, தம, திதிக்ஷா, உபரதி , ஸ்ரத்தா, சமாதானம் எனப்படும்.  

sivan jaykay

unread,
May 10, 2023, 7:55:38 PM5/10/23
to amrith...@googlegroups.com

ஒரு பழைய நினைவு    -   நங்கநல்லூர்  J K SIVAN 

சில மாதங்களுக்கு முன்  ஒரு நாள் எனது  நீண்டகால நண்பன்  ராஜகோபாலனோடு  (88+) காஞ்சி சங்கரமடத்துக்கு சென்றேன்.  அவன் அப்போது தான் முதன் முறையாக மடத்துக்கு தரிசனம் செய்ய வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான். 

 உள்ளே நுழைந்ததும்  வலது கைப்பக்கம்  சுவற்றில் நிறைய  பீடாதிபதிகள் படங்கள். அதில் ஒரு சிறு வயது பீடாதிபதி படத்தைப் பார்த்து விட்டு இது யார் என்று கேட்டான். விவரம் சொன்னேன்.  அப்போது தான் தோன்றியது ஒரு எண்ணம்.  ஏழே நாட்கள் பீடாதிபதியாக  சரித்ரம் படைத்த  மஹா  தேவேந்திர சரஸ்வதியைப் பற்றி என்ன சொல்வது, யாருக்கெல்லாம் இவரைத் தெரியும். இவர் படமாவது அநேகர்  தரிசிக்கட்டுமே என்று எண்ணினேன். அது இன்று நினைவுக்கு வந்தது.   உடனே  இதை எழுத தோன்றியது. 

மஹா பெரியவா  காஞ்சி காமகோடி பீடத்தின்  68வது  பீடாதிபதி.  ஜகத்குரு.   நூறு வருஷங்கள் அநேகமாக வாழ்ந்த மஹான்.  பேசும் தெய்வம் என்று அவரைப்பற்றி நிறைய  நினைக்கிறேன்,  பேசுகிறேன், எழுதுகிறேன்,  பாடுகிறேன்.  
அவருக்கு முன்னால்?  
67வது பீடாதிபதி  யார்?
அவர்   5வது  மஹா  தேவேந்த்ர சரஸ்வதி. 1889ல்  நரசிம்ம சாஸ்திரிகள் - லக்ஷ்மி அம்மாளுக்கு லக்ஷ்மிகாந்தன் என்ற  புதல்வராக  திருவிசநல்லூரில்   பிறந்தவர்.  அப்பா அம்மா பேரை சேர்ந்து லக்ஷ்மிநரசிம்மன் என்றும்  பெயர் உண்டு.   66வது பீடாதிபதிக்கு சேவை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட  இளைஞர்.
குருநாதரால்  1907ல்   18வது வயதில்  67வது பீடாதிபதி   மஹா தேவேந்திர சரஸ்வதியாக  தீக்ஷை பெற்றார். அவர்  பீடாதிபதியாக இருந்தது 7 நாட்கள் மட்டும் தான்.   இந்த பீடாதிபதி  மஹா பெரியவாவின் உறவினர். சித்தப்பா பெரியப்பா பிள்ளை என்ற நெருங்கிய உறவு.  மஹா பெரியவாவின் பெயர் அப்போது ஸ்வாமிநாதன். 13 வயது. 

லக்ஷ்மி காந்தனும்  ஸ்வாமிநாதனும் பூர்வாஸ்ரமத்தில்  ஒன்றாக விளையாடியவர்கள். 

66வது பீடாதிபதி  6வது  சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  1891ல் இருந்து பீடாதிபதியாக இருந்தவர்.   1907ல்  கலவையில் சித்தியானவர்.  லக்ஷ்மிகாந்தனுக்கு  பீடாதிபதியாவதில் விருப்பமில்லை.  குருநாதர்  66வது பீடாதிபதிக்கு சேவை செய்து கொண்டு இருப்பதில் மட்டுமே ஆர்வம்.  

''என்  ஒன்றுவிட்ட சகோதரன் ஸ்வாமிநாதன் இதற்கு பொருத்தமானவன்'' என்று சொன்னார் 
''எனக்கு  ஸ்வாமிநாதனை நன்றாக தெரியும்.அவனையே  அடுத்த பீடாதிபதியாக  நியமிக்க எண்ணம். அதுவரை, அவன் வரும் வரை, நீ பொறுப்பேற்றுக் கொள் என்று குருநாதரின் கட்டளைக்கு பணிந்து பொறுப்பேற்றவர்.

மடத்து அதிகாரிகள், மற்றும்  பெரியோர்கள் ஒன்று கூடி  67வது பீடாதிபதியின்  விருப்பத்தின் படி ஆலோசித்து சுவாமிநாதனை  அடுத்த பீடாதிபதியாக நியமிக்க தீர்மானம் ஆயிற்று. 

 66வது  67வது பீடாதிபதிகள் இருவருமே ஒரே சமயம் நோயால்  பீடிக்கப்பட்டாலும்  67வது பீடாதிபதி  மஹா தேவேந்திர சரஸ்வதி 7 நாட்கள்  பீடாதிபதியாக இருந்து  சமாதியானார்.  மறைவதற்கு முன்  67வது பீடாதிபதி சுவாமிநாதனை அடுத்த பீடாதிபதியாக நியமிக்க ஏற்பாடு செய்ய கூறினார். 
66வது  67வது பீடாதிபதிகள்  சமாதி,  அதிஷ்டானத்தை கலவைக்கு செல்லும்போது தரிசிக்கலாம். 

மஹா பெரியவா கலவையில் வெகு காலம் தங்கி தியானம் செய்தது இவ்விரு குருக்களையும்  வணங்கி தியானத்தில் ஈடுபடவே. 

உடனே  செய்தி சொல்லப்பட்டு,  ஸ்வாமிநாதன் காஞ்சிபுரம் வரவழைக்கப்பட்டார். அவர் தாயோடு காஞ்சி  வந்தபோது அவர் வயது 13.  அப்புறம் 100 வயது மஹா பெரியவாளாக வாழ்ந்ததைப்  பற்றி  நிறைய  எழுதி இருக்கிறேனே. உங்களுக்கும்  தெரியுமே. 


sivan jaykay

unread,
May 12, 2023, 7:16:40 PM5/12/23
to amrith...@googlegroups.com
 ஸ்ரீ அபீtதி  ஸ்தவம்    ஸ்லோகங்கள் 11-15    –   நங்கநல்லூர்  J K  SIVAN

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்


11.  अपार्थ इति निश्चितः प्रहरणादियोगस्तव  स्वयं वदसि निर्भयस्तदपि रङ्ग पृथ्वीपते । (वहसि)
स्वरक्षणमिवाभवत्प्रणतरक्षणं तावकं   यदात्थ परमार्थविन्नियतमन्तरात्मेति ते ॥ 11॥

apArtha iti nishchitaH praharaNAdiyogastava  svayaM vadasi nirbhayastadapi ra~Nga pR^ithvIpate | (vahasi)
svarakShaNamivAbhavatpraNatarakShaNaM tAvakaM  yadAttha paramArthavinniyatamantarAtmeti te || 11||

11-அபார்த்த இதி நிச்சித ப்ரஹரணாதி யோக தவ ஸ்வயம் வஹசி நிர்பய தத் அபி ரங்க ப்ருத்த்வீ தர
ஸ்வ ரஷணம் இவ அபவத் ப்ரணத ரஷணம் தாவகம் யத் ஆத்த பரமார்த்த வித் நியதம் அந்தராத்மா இதி தே

ரங்கநாதா, நீ  சிஷ்ட பரிபாலனன்,  துஷ்ட நிக்ரஹன்,  காக்கும் கடவுள் அல்லவா?   ஆகவே  அடியார்களை , பெற்ற  தாயினும் ஆயின செய்து, பாதுகாக்க,   பலம் மிக்க  ஆயுதங்களை தரித்தவனாக  எந்நேரமும் தயார் நிலையில் இருப்பவன். அந்த ஆயுதங்களே  உனக்குத்  திவ்ய சர்வாலங்கார  ஆபரணமாக ஜொலிக்கிறது. 


12. लघिष्ठसुखसङ्गतैः स्वकृतकर्मनिर्वर्तितैः (सङ्गदैः)  कलत्रसुतसोदरानुचरबन्धुसम्बन्धिभिः ।
धनप्रभृतिकैरपि प्रचुरभीतिभेदोत्तरै-   र्न बिभ्रति धृतिं बिभो त्वदनुभूतिभोगार्थिनः ॥ 12॥ (प्रभो)

laghiShThasukhasa~NgataiH svakR^itakarmanirvartitaiH (sa~NgadaiH)  kalatrasutasodarAnucharabandhusambandhibhiH |
dhanaprabhR^itikairapi prachurabhItibhedottarai\- rna bibhrati dhR^itiM bibho tvadanubhUtibhogArthinaH || 12|| (prabho)

12-லகிஷ்ட ஸூ க சங்கதை ஸ்வ க்ருத கர்ம நிவர்த்திதை களத்ர ஸூத சோதர அனுசர பந்து சம்பந்திபி
தன ப்ரபருதிகை அபி பிரசுர பீத பேத உத்தரை ந பிப்ரதி த்ருதம் பிரபோ த்வத் அநுபூதி போக அர்த்திந

கர்ம பலனை நாம்  அனுபவிக்காமல்  தப்பவே முடியாது.  நாம்  புலன்களின் அடிமை. அவை இழுக்கும் பக்கம் எல்லாம் எளிதில் சிக்கி சென்று, அர்த்தமற்ற, அநித்ய மான  சுக போகங்களில் திளைத்து மகிழ்பவர்கள்.  ஞானிகள்  அப்படி அல்ல.   இத்தகைய சுகங்கள், போகங்களை வெறுத்து ஒதுக்கி,  சம்சார பந்த  சாகரத்தில் இருந்து  வெளியேறி, சாசுவதமான  அரங்கா,உன்னையே  சதா சர்வகாலமும்  பஜித்து போற்றி சரணடைந்து  பயன்  பெறுபவர்கள்.  

13.  न वक्तुमपि शक्यते नरकगर्भवासादिकं   वपुश्च बहुधातुकं निपुणचिन्तने तादृशम् ।
त्रिविष्टपमुखं तथा तव पदस्य देदीप्यतः (तथा दिवि)   किमत्र न भयास्पदं भवति रङ्गपृथ्वीपते ॥ 13॥

na vaktumapi shakyate narakagarbhavAsAdikaM  vapushcha bahudhAtukaM nipuNachintane tAdR^isham |
triviShTapamukhaM tathA tava padasya dedIpyataH (tathA divi)  kimatra na bhayAspadaM bhavati ra~NgapR^ithvIpate || 13||

13-    ந வக்தும் அபி சக்யதே நரகே கர்ப்ப வாச அதிகம் வபு ச பஹூ தாதுகம் நிபுண சிந்தநே தாத்ருசம்
த்ரிவிஷ்டப முகம் ததா தவ பதஸ்ய தேதீ பத கிம் அத்ர ந பய ஆஸ்பதம் பவதி ரெங்க ப்ருத்த்வீ பதே –

 பிறந்தது முதல்  இறக்கும் வரை  நாம்  பயத்திலேயே  வாழ்கிறோம். சே   வாழ்க்கையா இது.  எப்போதும்  நரகவாசம், கர்ப்ப வாசம்   உலக வாழ்க்கை,  இது பற்றியே  எண்ணம். எதை தொட்டாலும் அதில் நிறைந்திருப்பது பயம் தான்.  பகவானைப் பற்றி நினைப்பது ஒன்றே  பயமே  இல்லாதது.

14.  भवन्ति मुखभेदतो भयनिदानमेव प्रभो   शुभाशुभविकल्पिता जगति देशकालादयः ।
इति प्रचुरसाध्वसे मयि दयिष्यसे त्वं न चे-    त्क इत्थमनुकम्पिता त्वदनुकम्पनीयश्च कः ॥ 14॥

bhavanti mukhabhedato bhayanidAnameva prabho  shubhAshubhavikalpitA jagati deshakAlAdayaH |
iti prachurasAdhvase mayi dayiShyase tvaM na che\- tka itthamanukampitA tvadanukampanIyashcha kaH || 14||
|
14-பவந்தி முக பேதத பய நிதானம் ஏவ பிரபோ சுப அசுப விகல்பிதா ஜகதி தேச காலாதய
இதி பிரசுர சாத்வசே மயி தயிஷ்யசே த்வம் ந சேத் க இத்தம் அனுகம்பிதா த்வத் அனுகம்பநீய ச க

பகவானே,  எங்கு நோக்கினும்  வெளியேயும் உள்ளேயும் பயம்  தான் நிறைந்திருக்கிறது.  நீ  ஒருவனே  பயம்  எனும் இருட்டிலிருந்து ஒளி காட்டி  மீட்பவன்.உன் அருளை வேண்டுகிறேன். உன்னைவிட்டால் வேறு எவரும் எனக்கு இல்லை. நீயும் பக்தர்களையே  விரும்பும் பக்தவத்சலன் இல்லையா?

सकृत्प्रपदनस्पृशामभयदाननित्यव्रती   न च द्विरभिभाषसे त्वमिति विश्रुतः स्वोक्तितः ।
यथोक्तकरणं विदुस्तव तु यातुधानादयः  कथं वितथमस्तु तत्कृपणसार्वभौमे मयि ॥ 15॥

15.  sakR^itprapadanaspR^ishAmabhayadAnanityavratI  na cha dvirabhibhAShase tvamiti vishrutaH svoktitaH |
yathoktakaraNaM vidustava tu yAtudhAnAdayaH  kathaM vitathamastu tatkR^ipaNasArvabhaume mayi || 15|


15-   சக்ருத் பிரபதன ஸ்ப்ருசாம் அபய தான நித்ய வ்ரதீ ந ச தவி அபி பாஷசே த்வம் இதி விஸ்ருத ஸ்வ உக்தித
யத் உக்த கரணம் விது தவ து யாதுதான ஆதய கதம் விததம் அஸ்து தத் க்ருபண சார்வ பௌமே மயி

அப்பனே, நீ  ஒரே   சொல்,ஒரே பாணம்  என்று ஸ்ரீ ராமனாக  அவதரித்து ரக்ஷித்தவன். சரணடைந்தார்க்கு ஒரே  அடைக்கலம். அடியேன் விஷயத்திலும்  நீ கருணை கூர்ந்து என்னை அடிமையாக ஏற்று  காப்பாற்றவேண்டும் . பயம் போக்க  வேண்டும். 

sivan jaykay

unread,
May 12, 2023, 7:17:19 PM5/12/23
to amrith...@googlegroups.com
ஸௌந்தர்ய லஹரி  62-65/103  -    நங்கநல்லூர்   J K  SIVAN

प्रकृत्या रक्तायास्तव सुदति दन्तच्छदरुचेः प्रवक्ष्ये सादृश्यं जनयतु फलं विद्रुमलता ।
न बिम्बं तद्बिम्बप्रतिफलनरागादरुणितं तुलामध्यारोढुं कथमिव विलज्जेत कलया ॥ 62॥

Prakrithya'rakthayas thava sudhati dantha-cchada-ruchaih Pravakshye saadrisyam janayathu phalam vidhruma-latha; Na bimbam tad-bimba-prathiphalana-raagad arunitham Thulam adhya'rodhum katham iva bhilajjetha kalaya.62

ப்ரக்ருத்யா ஆரக்தாயாஸ்-தவ ஸுததி தந்தச்சதருசேப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜனயது பலம் வித்ருமலதா Iந பிம்பம் தத்பிம்ப-ப்ரதிபலன-ராகா-தருணிதம் துலா-மத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேதகலயா II

62  தாயே, ஜெகதீஸ்வரி,  வெண்மையான  முத்துக்களை போன்ற அழகிய பற்களைக் கொண்டவளே ! எப்போதுமே   இயற்கையாகவே  செக்கச் செவேலென்று சிவந்திருக்கிற உன்னுடைய உதடுகளின் அழகுக்கு ஒரு  உபமானம் சொல்லட்டுமா?   அவற்றைப் பார்க்கும் போது எனக்கு  பவழக்கொடி பழமோ என்று தோன்றும்.  ஒரு வேளை இது கோவைப் பழமோ?  இந்த பழங்கள் வெட்கத்தால்  நாணி, உன்  அதரத்தின் சிவந்த நிறத்தைத்   தம்மிடம்  பிரதிபலிக்கச் செய்து கொண்டதால் சிவப்பாக இருக்கின்றதோ?

63.  स्मितज्योत्स्नाजालं तव वदनचन्द्रस्य पिबतां चकोराणामासीदतिरसतया चञ्चुजडिमा ।
अतस्ते शीतांशोरमृतलहरीमम्लरुचयः पिबन्ति स्वच्छन्दं निशि निशि भृशं काञ्जिकधिया ॥ 63॥

Smitha-jyothsna-jalam thava vadana-chandrasya pibatham Chakoranam asid athi-rasataya chanchu-jadima;
Athas the sithamsor amrtha-laharim amla-ruchayah Pibanthi svacchhandam nisi nisi bhrusam kaanjika-dhiya.

63. ஸ்மித ஜ்யோத்ஸ்னா ஜாலம் தவ வத்ஹன-சந்த்ரச்ய பிபதாம்சகோரணா-மாஸீ-ததிரஸதயா சஞ்சு-ஜடிமா I
அதஸ்தே சீதாம்சோ-ரம்ருதலஹரீ-மாம்லருசய:பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி ப்ருசம் காஞ்சிகதியா II

63 . அம்மா,  உன்  அழகிய வதனம். சந்திரபிம்பம்.  அதில் புன் சிரிப்புக்கு  எதை ஈடு சொல்வேன்?  அம்ருதம் போல குளுமையான கிரணங்களை பொழியும்   நிலவு, சந்திரனி லிருந்து  சொட்டும் அம்ருதத்தைப்  
பருகும் சகோரபக்ஷிகளுக்கு அந்த  அம்ருதத்தின்  அதிகமான இனிப்புத் சுவையால்,  தித்திப்பால், அதைப் பருகிய  நாக்கு  உணர்ச்சி இழந்ததாக ஆகிவிட்டது. மரத்துப் போயிற்று.  அளவுக்கு மிஞ்சினால் அம்ருதமும்  திகட்டுமே. ஆகவே  அந்த சகோர பக்ஷிகள்  புளிப்பாக எதையாவது சாப்பிடவேண்டும் என்று ஆசைகொண்டு குளிர்ந்த கிரணம் கொண்ட சந்திரனின் நிலவாகிய அமுதப்பெருக்கை புளித்துப்போன  கஞ்சி என்றெண்ணி வயிறு முட்ட  ஒவ்வொரு ராத்திரியும் நிறைய பருகுகின்றன.

64. अविश्रान्तं पत्युर्गुणगणकथाम्रेडनजपा जपापुष्पच्छाया तव जननि जिह्वा जयति सा ।
यदग्रासीनायाः स्फटिकदृषदच्छच्छविमयी सरस्वत्या मूर्तिः परिणमति माणिक्यवपुषा ॥ 64॥

Avishrantam pathyur guna-gana-katha'mridana-japa Japa-pushpasc-chaya thava janani jihva jayathi saa;
Yad-agrasinayah sphatika-drishad-acchac-chavi mayi Sarasvathya murthih parinamati manikya-vapusha.

64. அவிச்ராந்தம் பத்யுர்குணகண-கதாம்ரேடனஜபா ஜபாபுஷ்பச்சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா I
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருச-தச்சச்சவி-மயீ ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா II

64  அம்பா, சாம்பவி,  உன்னுடைய பிரசித்தமான நாக்கு இடைவிடாமல் உன் மனங்கவர்  நாதன்  பரமசிவனுடைய பல குணங்களை விளக்கும் கதைகளைப் பேசுவதையே ஜபமாகக் கொண்டு செம்பருத்திப் புஷ்பம் போல் சிவந்து சிறப்புடன் காணப்படுகிறது.   அந்த  நாக்கின் நுனியில் வசிக்கும்  ஸரஸ்வதி தேவியின்    ஸ்படிகம் போன்ற தெளிவான காந்தியுடன் கூடிய வடிவம்   செக்கச் செவேலென்று கண்ணைப்பறிக்கும்  மாணிக்கம் போல்  மாறிவிடுகிறது. 

रणे जित्वा दैत्यानपहृतशिरस्त्रैः कवचिभिर्- निवृत्तैश्चण्डांशत्रिपुरहरनिर्माल्यविमुखैः ।
विशाखेन्द्रोपेन्द्रैः शशिविशदकर्पूरशकला विलीयन्ते मातस्तव वदनताम्बूलकबलाः ॥ 65॥
 
Rane jithva'daithyan apahrutha-sirastraih kavachibhir Nivrittais Chandamsa-Tripurahara-nirmalva-vimukhaih;
Visakh'endr'opendraih sasi-visadha-karpura-sakala Viliyanthe maatas tava vadana-tambula-kabalah.

65.ரணே ஜித்வா தைத்யா-னபஹ்ருத-சிரஸ்த்ரை: கவசிபி: நிவ்ருத்தைச்-சண்டாம்ச-த்ரிபுரஹர-நிர்மால்யா-விமுகை:I
விசாகேந்த்ரோபேந்த்ரை: சசிவிசத-கர்பூரசகலா விலீயந்தே மாதஸ்தவ வதன-தாம்பூல-கபலா:II

65   தாயே !  தேவர்களுக்கும்  அசுரர்களுக்கும்  நடந்த கடும் போரில், தேவாசுர யுத்தத்தில்,  அசுரர்களை வென்று வெற்றி வீரர்களாக  திரும்பியவ இந்திராதி தேவர்கள்  உன்னை அடைந்து  அளவற்ற மரியாதை, பக்தியால்  தலைப்பாகையை நீக்கியவர்களாக,  கவசம் பூண்டதைக்கூட  கழற்றாமல் கைகூப்பி  நிற்கின்றார்கள். வெற்றிச் செய்தி சொன்ன  
தேவஸேனாபதியான ஸுப்ரஹ்மண்யர், தேவர்களின் அரசனான இந்திரன், உபேந்திர னாகிய விஷ்ணு ஆகியோர் எல்லோருக்கும் சந்திரனைப் போல் வெண்மையான பச்சைக் கற்பூரத்தூளுடன் கூடிய உன்னுடைய வாயில் மெல்லப்பட்ட தாம்பூலக் கவளங்கள் பிரசாதமாக, வெற்றிப்பரிசாக  வழங்கிய  தாயே,  உன்னைச்  சரணடைகிறேன்.  

sivan jaykay

unread,
May 12, 2023, 7:17:19 PM5/12/23
to amrith...@googlegroups.com
ஒரு ஐயரின்  கதை. -   நங்கநல்லூர்  J K  SIVAN 

பார்ப்பனன்  ஆரியன்  என்றெல்லாம்  என்னென்னவோ தெரியாத  கட்டுக்கதை விஷயங்களையெல்லாம்  திணித்து சிலரை வேறுபடுத்துவது அநாகரீகம்.  முன்பெல்லாம்  முஸ்லீம்கள் பாரதத்திற்குள் கொள்ளைக்காரர்களாக பிரவேசித்து,  மதவெறியோடு  எண்ணற்ற  ஹிந்து ஆலயங்களை சிதைத்து, விகிரஹங்களை உடைத்து கோவிலில் இருந்த  பொன்  வெள்ளி  தாமிர உலோகங்களையெல்லாம் கொள்ளை அடித்து  ஆயிரக்கணக்கான  ஹிந்துக்களை கொன்று  ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டு, பெண்களை கடத்தி, கற்பழித்து, மதமாற்றி  என்னென்னவோ செய்தார்கள் என்று சரித்திர பக்கங்கள் சொல்கிறதே,  அதற்காக  இப்போது நாம் நம்முடைய அத்தனை முஸ்லீம்,   இஸ்லாமிய சகோதரர்களிடம்  வெறுப்பா கொள்கிறோம்? வேறு படுத்துகிறோமா? த்வேஷம் பாராட்டுகிறோமா?  இல்லையே. என்றோ எப்போதோ எங்கோ  சிலர் தவறு செய்திருக்கலாம்.  தவறு செய்யாதவர் எவராவது உண்டா?   அதற்காக  ஒட்டுமொத்தமாக  அந்த  வகுப்பை சேர்ந்தவர்கள் அத்தனை பேரையும்   ஒதுக்குவது அழகல்ல.  அற்புதமான சிலரை இத்தகைய  தவறான நோக்கில் மறந்து போவது  அருவருப்பானது.  வருத்த மளிப்பது.  அப்படி ஒரு அற்புதமனிதர்  நம்மால் அதிகம் அறியப்படாமல் இருப்பவர்களில் ஒருவர்  உ.வே.சாமிநாத ஐயர் . 


ஐயர்  என்ற பெயர்  தமிழுலகில் ஒருவருக்கு உண்டென்றால் அது தமிழ்த்தாத்தா  உ.வே.சா. ஒருவருக்கு தான்.  ஆஹா எவ்வளவு வருஷங்கள்  அலைந்து, தேடி, பாடுபட்டு தமிழுக்கு அவர்  அளித்த காணிக்கை  எல்லை யற்றது.  நாம் நன்றிக்கடன் தீர்க்கவே  முடியாது.  

 கும்பகோணம் பக்கம்  உத்தமதானபுரத்தில் வேங்கடசுப்பையர் என்ற  சங்கீத  வித்வான் குடும்பம் எளிமையானது. ஏழ்மையின் பிடியில் சிக்கியது.அவர் மகன் ஸ்வாமிநாதனுக்கும்  சங்கீதத்தில் பயிற்சி அளித்து தன்னைப்போல்   சங்கீத விதவானாக்க தான் தந்தை எண்ணினார்.  தமிழ்த்தாயின் எண்ணம் வேறாக  இருந்ததே.   

பிற்காலத்தில் வெள்ளைக்கார அரசாங்கம் மஹா மஹோபாத்யாய என்ற விருது, பாரத  தர்ம மண்டலி யின்  த்ராவிட வித்யா பூஷணம் விருது, மற்றும்  மஹா பெரியவாளிடம் தக்ஷிணாத்யா கலாநிதி விருது பெறப்போகிறவர் ஆயிற்றே. தமிழுலகத்துக்கு,  ஐம்பெரும் காப்பியங்களை மற்றும் எண்ணற்ற  தமிழ் ஆராய்ச்சி நூல்களை தந்தவர் உ.வே.சா. இப்போது  நாம் மறந்து  விட்டவர்களில்  ஒருவர். 

ஐயர்  பிறந்த உத்தம தானபுரம்  கிராமம் பற்றிய ஒரு விவரம் தெரியுமா?
 தஞ்சாவூர்  ராஜா தனது ராஜ்யத்தில்  அடிக்கடி  பல இடங்களுக்கு  பிரயாணம் செய்வார்.  ஆங்காங்கே  கிராமங்களில் தங்குவார். ஒருமுறை ஏதோ ஒரு கிராமத்தில் தங்கும்போது  உணவருந்தி தாம்பூலம் தரித்து சிரம பரிகாரம் பண்ணிக்  கொண்டிருந்தபோது   யாரோ சொல்லி ராஜாவுக்கு அன்று ஏகாதசி என்று தெரிந்தது. ராஜா கொஞ்சம்  சாஸ்திர ப்ரகாரம் நடப்பவர் விரதம் அனுஷ்டிப்பவர். சுத்த புத்தம்  பார்ப்பவர்.  பகவான் மேல் பக்தி உண்டு.  ஏகாதசி  விரதம் இருப்பவர்.  'அடாடா. இப்படி பண்ணிவிட்டேனே . தஞ்சாவூர் அரண்மனையில் இருந்தால்  வழக்கமாக தினமும் வரும்  ஜோசியர் அன்றன்று பஞ்சாங்கம் படித்து என்ன செய்யவேண்டும் என்று  சொல்வாரே.  ஏதோ ஒரு கிராமத்தில் அவர் இல்லாமல் வந்து  மாட்டிக் கொண்டு இப்படி ஏகாதசி அன்று   வயிறு முட்ட சாப்பிட்டு  விட்டு தாம்பூலமும் தரித்துக் கொண்டுவிட்டேனே'  என்று வருந்தினார். 

 ஊரில் உள்ள  சாஸ்திரம் தெரிந்த  பெரியோர்களை அழைத்து என்ன பரிகாரம் செய்யலாம்? என்று விசாரித்தார்.
ஒரு முதியவர் ' இதற்கு  பரிகாரமாக  பிராமணர்களுக்கு ஒரு கிராமம்  ''அக்ரஹார  ப்ரதிஷ்டையாக'  தானம் அளித்து வீடு  கட்டிக்  கொடுங்கள். அவர்கள் வேதம் உச்சரித்து வாழ்த்தினால், அந்த ஒலி கேட்கும் வரை எந்த பாபமும்  எவரையும் அண்டாது. இது  தான் உத்தமம் ''என்கிறார்.
.  
''அவ்வளவு தானே, இதோ ஏற்பாடு செய்கிறேன்'' என்று ராஜா  தான் இருந்த  ஊருக்கு அருகேயே இருந்த  ஒரு  கிராமத்தில்   வரிசையாக  48 வீடுகள் கட்டி, அக்ரஹாரமாக்கி  ரெண்டு வீட்டுக்கு ஒரு கிணறு என்று அமைத்து பல வேதம் ஓதும்  48  பிராமண குடும்பங்களை  அங்கே  வசிக்க வைத்தான்.  ஒவ்வொரு குடும்பத்துக்கும்  12 மா  நஞ்சை நிலம் தானமாக அளித்தான்.  அப்படி உத்தமமாக  தானமாக அமைந்தது தான் உத்தமதான புரம் .

அக்ரஹாரம்  என்பது  ஒரு காலத்தில் அகரம் என்று  பேர் கொண்டது.  இன்றும்  தமிழகத்தில் எத்தனையோ அகரங்கள் இருக்கிறதே. அநேகமாக  அக்ரஹாரங்கள்  எதிரும் புதிருமாக  வீடுகள் கொண்டது.   அதிகபக்ஷம்  ரெண்டு தெருக்களாக,  கிழக்கு மேற்காகவோ  அதன்  ஒரு முனையில் வடக்கு தெற்காக ஒரு தெருவோ இருக்கும்.  தெருக்களின் முனைகளில்,  சிறகுகளில், சிவன் கோவில், பெருமாள் கோவில்,  மற்றும் ஒரு   பிள்ளையார் கோவிலோ இருக்கும்.  உத்தம  தான புரத்தில்   கைலாச நாதர் கோவிலும்  லக்ஷ்மிநாராயண பெருமாள் கோவிலும் உண்டு.  குளம் ஒன்று  சிவன் கோவில் சந்நிதியை ஒட்டி இருந்தது. அம்பாள் பெயர் ஆனந்தவல்லி.  பெருமாள் கோவிலை ஒட்டி இருந்தது. 

அக்காலத்தில் ரயில் இல்லை,  ரோடு இல்லை, வண்டிகள் ஓடாது. மாட்டு வண்டி, குதிரை வண்டி தான் அதிக பக்ஷம். தெருக்களில்  மின்சார விளக்கு கிடையாது. மண் ரோடு, மரங்கள் இருபக்கமும் நிழல் தரும். வரப்புகளில் நடந்து நடந்து வெள்ளியாக பாதை இருட்டில் கூட தெரியும். சூரிய ஒளியும் சந்திரஒளியும்  தான் 
விளக்குகள். வீடுகளில் எண்ணெய்  தீபங்கள்.  முக்கியமாக  எங்கும் லக்ஷ்மிகரம் இருந்தது.  மக்கள் திருப்தியாக வாழ்ந்தது அவர்கள் முகத்தின் சந்தோஷ புன்னகையில் தெரிந்தது. திண்ணைகள் உள்ள வீடுகளில் உட்கார்ந்து நிறைய  பேசுவார்கள்  பாடுவார்கள், விவாதிப்பார்கள். 

சென்னைப்பட்டணம் போன்ற பெரிய நகரங்களில் காணும் கவலை, பயம், வேகம்  அங்கே அப்போது இல்லை, விவேகம் இருந்தது, வளமை இருந்தது, காசு வங்கி  புழக்கம் இல்லாவிட்டாலும் யாரும் காசு இல்லாமலே சந்தோஷத்தோடு வாழ்ந்தார்கள், தனம் பால்,  தானியம் ரூபத்தில் எல்லோரிடமும் இருந்தது. டாக்டர்கள் இல்லாவிட்டாலும் எல்லோரும்  பழையது, மோர்,  தயிர், பால் என்று சாப்பிட்டு  அதிகநேரம் உழைத்து, வெகு தூரம் நடந்து  நல்ல காற்றோட்டத்தில் பிராண வாயுவை சுவாசித்து நோய்நொடியற்று நீண்டகாலம் வாழ்ந்தார்கள். பக்தி அவர்களுக்கு கவசமாக இருந்தது.  

வைதிக பிராமண குடும்பங்கள், கோவில்  அர்ச்சர்கள், ஜோசியர்கள், சங்கீத வித்துவான்கள் என்று பல விதமாக ஏதேதோ தொழில் புரிந்து, பல வூர்களுக்கு சென்று சம்பாதித்து சுகமாக வாழ்ந்தார்கள். அநேகமாக எல்லோருமே சட்டை இல்லாதவர்கள், காலில்  மரக்கட்டை பாதரக்ஷை அணிந்தவர்கள்,  மேல் துண்டை தலையில்  போட்டுகொண்டு குடுமித்தலையை முடித்துக்கொண்டு, நெற்றி நிறைய விபூதி,  மார்பு நிறைய சந்தனம் பூசிக்கொண்டு  கழுத்தில்  கௌடி  சரடு, ருத்ராக்ஷத்தோடு,மார்பில் வெள்ளிக்கம்பியாக  தாங்களே  நூலில் தக்கிளியில் நூற்ற  பூணலை அணிந்து கொண்டு பஞ்ச  கச்சத்தோடு அலைபவர்கள்.  ஆங்கிலம் அறியவேண்டும் என்ற  ஆர்வமோ அவசியமோ இல்லாத அவர்களுக்கு தமிழ்  தெலுங்கு, சமஸ் க்ரித
மொழிகள் தெரியும், நிறைய  ஸ்லோகங்களை,தமிழ் பாடல்களை மனப்பாடம் செய்து படித்தவர்கள்  ஓலைச்சுவடிகளில் எழுதி படித்த கல்வி.  திண்ணைப்பள்ளிக்கூடங்கள்  ஆசிரியர்களின் வீட்டில் தான் நடந்தன. ஆசிரியருக்கு சம்பளம் கிடையாது. மாணவர்கள் கொண்டு தரும்  காய்கறி, பழங்கள், கீரைகள், பருப்பு  புலி  தானிய வகைகள், பண்டிகை நாட்களில் வேஷ்டி துண்டுகள்.  ஆசிரியர் மனைவிக்கு  புடவை தான்.நகைகளுக்கு டிமாண்ட் இல்லை. வெளியூர்  செல்பவர்கள் திரும்பி வரும்போது கொண்டுவரும் செய்திகள் தான்   டிவி  வீடியோ வாட்ஸாப்ப்  அக்காலத்தில்.  
வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலம். கலெக்டர்கள் பெரிய  அதிகாரிகள்.  பாபநாசத்தில் கலெக்டர்  ஒருநாள்  கேம்ப்  போட்டிருந்தபோது   ஜோசியர்  அண்ணா அய்யர்  காம்போதி ராகத்தை முணுமுணுத்துக்கொண்டு அந்த பக்கமாக  நடந்து கொண்டிருந்தார். ஆஜானுபாகு வான  சிவப்பு  மேனி.  கட்டுத்தளராத உடம்பு, கட்டுக்  குடுமியில் மல்லிகைப்பூ, காதில் கடுக்கன், நெற்றி மார்புகளில் விபூதி சநதனம், பெரிய தொப்பையை வளைத்து  பஞ்சகச்சம்,அதற்கு மேல் ஒரு காவி  வஸ்திரம்,மேலே  தோளில்  ஒரு மஞ்சள் அங்கவஸ்திரம், கையில் ஒரு மஞ்சள்பை. கலெக்டருக்கு அண்ணாவையரைப் பிடித்துவிட்டது.  
சிரஸ்தார் கோபாலனுக்கு தமிழைத் தவிர  ஆங்கிலம் தெரியும். அவரைக் கூப்பிட்டு  அண்ணாவையரை நிறுத்தி சில கேள்விகள் கேட்கப்பட்டன. 
''உங்களுக்கு  எழுத படிக்கத்  தெரியுமா?'
''தெரியும்''
''கணக்கு பார்க்க தெரியுமா?
''தெரியும். ஜோசியத்தில் கனக்குப் போட தெரிந்திருக்கவேண்டுமே ''
''கிராமக்கணக்கு பார்க்கச்சொன்னால் முடியுமா? பார்க்கிறீர்களா?''
''ஓ.  நில  அளவு கணக்கு நன்றாக தெரியும்'
கலெக்டருக்கு  அண்ணாவையரைபிடித்து விட்டது.  உக்கடை கிராம கர்ணம்  கணக்கு வழக்குகளில் குளறுபடி பண்ணி அவரை மாற்றவேண்டும் என்று கலெக்டர் அப்போது ஆள் தேடிக்கொண்டிருந்த சமயம்  அண்ணாவையரின் ஆக்ரிதி , ஆளுமை, கணக்கு வழக்கு ஞானம்  அவரை செலெக்ட் பண்ணி காரணம் உத்யோகம் கிடைத்தது. 
இப்படி தான் பல  வேலைகள் பலருக்கு கிடைத்தது. இது தான்   இன்டர்வியூ, குவாலிஃபிகேஷன்,  செலெக்ஷன்  அப்பாயிண்ட்மெண்ட்.

sivan jaykay

unread,
May 12, 2023, 7:17:19 PM5/12/23
to amrith...@googlegroups.com
ஸ்ரீ அபீtதி  ஸ்தவம்    ஸ்லோகங்கள் 16-20    –   நங்கநல்லூர்  J K  SIVAN

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்

अनुक्षणसमुत्थिते दुरितवारिधौ दुस्तरे  यदि क्वचन निष्कृतिर्भवति सापि दोषाविला ।
तदित्थमगतौ मयि प्रतिविधानमाधीयतां   स्वबुद्धिपरिकल्पितं किमपि रङ्गधुर्य त्वया ॥ 16॥

anukShaNasamutthite duritavAridhau dustare  yadi kvachana niShkR^itirbhavati sApi doShAvilA |
taditthamagatau mayi pratividhAnamAdhIyatAM  svabuddhiparikalpitaM kimapi ra~Ngadhurya tvayA || 16||

16. அனுஷண சமுத்திதே துரித வாரிதௌ துஸ்தரே யதி க்வசன நிஷ்க்ருதி பவதி சா அபி தோஷ ஆவிலா
தத் இத்தம் அகதௌ மயி பிரதிவிதாநம் ஆதீயதாம் ஸ்வ புத்தி பரிகல்பிதம் கிம் அபி ரங்க துர்ய த்வயா

இறைவனின்  சக்திக்கு முன்  எந்த சக்தியும் கொசு.    ஒவ்வொரு  வினாடியும் பெரிய  கூட்டமாக  வருகின்ற  பாபங்கள் அத்தனையிலிருந்தும்  தப்பிக்க, 
 அரங்கா,ஆதி சேஷன் மேல்  சயனித்த வாறே, நீ  உனது சங்கல்பத்தாலே   பரிகாரம் பெறச்செய்.   அது  உன் ஒருவனால்  தான் முடியும்.

विषादबहुलादहं विषयवर्गतो दुर्जया-  द्बिभेमि वृजिनोत्तरस्त्वदनुभूतिविच्छेदतः ।
मया नियतनाथवानयमिति त्वमर्थापयन्  दयाधन जगत्पते दयित रङ्ग संरक्ष माम् ॥ 17॥

viShAdabahulAdahaM viShayavargato durjayA\-  dbibhemi vR^ijinottarastvadanubhUtivichChedataH |
mayA niyatanAthavAnayamiti tvamarthApayan  dayAdhana jagatpate dayita ra~Nga saMrakSha mAm || 17||

17-விஷாத பஹூ ளாத் அஹம் விஷய வர்க்கத துர்ஜயாத் பிபேமி வ்ருஜிந உத்தர த்வத் அநுபூதி விச்சேதத
மயா நியத நாதவான் அயம் இதி த்வம் அர்த்தா பயன் தயா தன ஜகத்பதே தயித ரங்க சம்ரஷ மாம்

பெருமாளே,  நான்  உன்னெதிரே நிற்கும்  ஒரு பொய்  மூட்டை.  மதிப்பற்ற ஜடம்.  அஞ்ஞானத்தில் மூழ்கி இருக்கும்  ஜென்மம்.  புழு பூச்சி மலிந்த  துர்கந்தமான  அழுக்கு உடம்பு கொண்டவன்.  இருந்தாலும்  என் மனத்தைப் பார். அது உன்னையே  நிரந்தரம் நினைக்க  நீ தான் அருளவேண்டும். 

सर्गनिरनिष्टता तव निरंहसः श्रूयते   ततस्त्रियुगसृष्टिवद्भवति संहृतिः क्रीडितम् ।
तथापि शरणागतप्रणयभङ्गभीतो भवान्  मदिष्टमिह यद्भवेत्किमपि मा स्म तज्जीहपत् ॥ 18॥

nisarganiraniShTatA tava nira.nhasaH shrUyate   tatastriyugasR^iShTivadbhavati saMhR^itiH krIDitam |
tathApi sharaNAgatapraNayabha~NgabhIto bhavAn madiShTamiha yadbhavetkimapi mA sma tajjIhapat || 18||

18. -நிசர்க்க நிரதிஷ்டதா தவ நிரம்ஹச ச்ரூயதே தத் த்ரியுக ஸ்ருஷ்டிவத் பவதி சம்ஹ்ருதி க்ரீடிதம்
ததா அபி சரணா கத ப்ரணய பங்க பீத பவான் மத் இஷ்டம் இஹ யத் பவேத் கிம் அபி மாச்ம தத் ஜீஹபத்

ஞானமே, தர்மமே  உருவான பரம்பொருளே,  நீ ஈடற்ற கல்யாண குணங்களை கொண்ட  புருஷோத்தமன். குணசாலி. மாயை அடக்கி ஆண்டு  நீ புரிந்த  லீலா நிமித்தமாக  எண்ணற்ற ஸ்ருஷ்டிகளை படைத்தவனே,  வேத வேதாந்த உட்பொருளே, எனக்கு ஞானம் பெற,  உலகத்தில் வாழும் வரை பிறர்க்குதவ தேவையான  ஐஸ்வர்த்தை மட்டும்  வழங்கி படிப் படியாக   உன்னையும் உன் ஸ்ரிஷ்டிகளையும்  ப்ரீதி  பண்ணும் நித்ய  கைங்கர்யம்  செய்யும்  வாய்ப்பை அருளவேண்டும். 

कयाधुसुतवायसद्विरदपुङ्गवद्रौपदी- विभीषणभुजङ्गमव्रजगणाम्बरीषादयः ।
भवत्पदसमाश्रिता भयविमुक्तिमापुर्यथा  लभेमहि तथा वयं सपदि रङ्गधुर्य त्वया ॥ 19॥

kayAdhusutavAyasadviradapu~NgavadraupadI\-  vibhIShaNabhuja~NgamavrajagaNAmbarIShAdayaH |
bhavatpadasamAshritA bhayavimuktimApuryathA   labhemahi tathA vayaM sapadi ra~Ngadhurya tvayA || 19|| (ra~NganAtha tvayA)

19-கயாது ஸூத வாயஸ த்விரத புங்கவ த்ரௌபதீ விபீஷண புஜங்கம வ்ரஜ கண அம்பரீஷ ஆதய
பவத் பத சமாஸ்ரிதா பய விமுக்தம் ஆபு யதா லபே மஹி ததா வயம் சபதி ரங்க நாத த்வயா –

நீ எப்படிப்பட்ட  கருணாசாகரன் என்று அறிவோம்.  கயாதுவின் புத்ரன்  ப்ரஹ்லாதன் போன்றவர்கள் போலே உன்னைச் சரண் அடைந்த நொடியிலியே சகலருக்கும்  பயம்  நீங்கச் செய்பவனே, உன்னை நமஸ்கரிக் கிறேன். 

भयं शमय रङ्गधाम्न्यनितराभिलाषस्पृशां  श्रियं बहुलय प्रभो श्रितविपक्षमुन्मूलय ।
स्वयं समुदितं वपुस्तव निशामयन्तः सदा   वयं त्रिदशनिर्वृतिं भुवि मुकुन्द विन्देमहि ॥ २०॥

bhayaM shamaya ra~NgadhAmnyanitarAbhilAShaspR^ishAM  shriyaM bahulaya prabho shritavipakShamunmUlaya |
svayaM samuditaM vapustava nishAmayantaH sadA  vayaM tridashanirvR^itiM bhuvi mukunda vindemahi || 20||


20-பயம் சமய ரங்க தாம்நி அநிதர அபிலாஷா ஸ்ப்ருசாம் ச்ரியம் பஹூ ளய பிரபோ ச்ரித விபுஷம் உன்மூல்ய ஸ்வயம் சமுதிதம் வபு தவ நிசா மயந்த சதா வயம் த்ரிதச நிர்வ்ருதிம் புவி முகுந்த விந்தேமஹி –

அரங்கா  உனக்குத் தெரியாததா,  உன் வாசஸ்தலம்  ஸ்ரீரங்கத்தை மிலேச்சர்கள் போன்ற  கொடிய, தீய சக்திகள் அணுகாமல் உன் பக்தர்களது பயம்  நீக்கி , அடியவர்களைக் காத்தருளவேண்டும். ஸ்ரீ ரங்கத்தின் புனிதம் மாசு படக்கூடாது என்று  பிரார்த்திக்கிறேன். 
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை மேன்மேலும் வளர்க்க அருள் புரிய வேணும் -உடையவர் மீண்டும்  நீ குடிகொண்டிருக்கும்  ஸ்ரீ ரங்க க்ஷேத்ரத்துக்கு திரும்பிவந்து   உனக்கு  கைங்கர்யங்
 களை  சரிவர நடைபெற நிர்வகிக்க அருள வேணும்.துஷ்ட நிக்ரஹம் பண்ணி அருளவேண்டும். 
 

sivan jaykay

unread,
May 12, 2023, 7:17:40 PM5/12/23
to amrith...@googlegroups.com
சப்த விடங்க க்ஷேத்ரம் -   நங்கநல்லூர்   J K  SIVAN 
சுந்தர விடங்கர்  .  நாகப்பட்டினம்:

முசுகுந்த சோழ சக்கரவர்த்தி  திருவாரூரை தலைநகராக கொண்டு ஆண்டபோது , தேவாசுர யுத்தம் கடுமையாக  நடந்தது.  தேவர்களுக்கு உதவ  முசுகுந்தன்  படையோடு சென்றான். முசுகுந்தனின்  வீரத்தால்,  யுத்த  சாமர்த்யத்தால்  இந்திரன்  ஜெயித்தான். 
''முசுகுந்தா, உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் தருகிறேன்''  என்றான்  இந்திரன் ''  நான் சிவபக்தன், இந்த்ரதேவா , நீ பூஜை செய்யும் சிவலிங்கத்தை எனக்கு கொடுத்தால் அதுவே பெரிய மகிழ்ச்சி அளிக்கும்''  என்றான் சோழராஜா. இந்திரன் அதிர்ச்சியடைந்தான். அது அவன் தவறாமல் நித்ய  பூஜை செய்யும் சிவலிங்கமாயிற்றே, அதை எப்படி சோழனிடம் தர முடியும்.  ஆனால் வாக்கு தந்து விட்டானே. என்ன செய்வது? .
தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவிடம்  ''என்னிடம் இருப்பது போல் ஒரு சிவலிங்கம் சீக்கிரம் செய்து கொடு '' என்றான் இந்திரன். முசுகுந்தனுக்கு  அது டூப்ளிகேட் என்று தெரியாது.  அவன் கனவில் சிவபெருமானே வந்து அது உண்மைச் சிலை இல்லை என்று சொல்லிவிட்டார்.   இ
ந்திரனிடம்   சென்ற முசுகுந்தன், கொடுத்த வாக்கை நிறைவேற்று என்று வாதாடினான். ழன்.   ஆறுமுறை ஏமாற்றிய பிறகு ஏழாம் முறை தன்னிடம் உள்ள சிவலிங்கத்தை  இந்திரன்  சோழராஜாவுக்கு கொடுத்தான். 
இந்திரன் பூஜை  செய்த விக்ரஹத்தைத் திருவாரூரிலும் மற்ற  ஆறு  லிங்க மூர்த்திகளை சுற்றியுள்ள ஆறு ஊர்களிலும்  முசுகுந்தன்  பிரதிஷ்டை செய்தான்.
“டங்கம்” என்றால் பொன், வெள்ளி உலோகச் சிற்பங்களைச் செதுக்கும் உளி என்றும் பெயர்.  தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட இந்த லிங்க சொரூபங்கள் உளியால்(டங்கம்) செய்யப்படாமல் அவருடைய மனோசக்தியினால் செய்யப்பட்டவை என்று நம்பிக்கை உண்டு. இதனால்   மேலே சொன்ன  ஏழு  லிங்கங்களும்  சப்த விடங்க மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு தலத்திலும் இறைவனின் திருநடனம் பல்வேறு வகையில் பிரசித்தி பெற்றது. கீழ்க்கண்ட ஏழு மூர்த்திகளின் பெயர்களும் நடனங்களும் வெவ்வேறாக இருந்தாலும், பொதுவாக அனைத்து சுவாமிகளும் ‘தியாகராஜா’ என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகிறார்கள்.
திருவாரூர் - வீதி விடங்கர் - அஜபா நடனம் (சுவாச ரூபம்)
நாகப்பட்டினம் - சுந்தர விடங்கர் - பாராவார தரங்க நடனம் (கடல் அலை நடனம்)
திருக்காறாயில் - ஆதி விடங்கர் - குக்குட நடனம் (கோழி நடனம்)
திருக்குவளை - அவனிவிடங்கர் - பிருங்க நடனம் (வண்டு நடனம்)
திருவாய்மூர் - நீலவிடங்கர் - தாமரை நடனம்
திருநள்ளாறு - நாக விடங்கர் - உன்மத்த நடனம்
திருமறைக்காடு - புவனி விடங்கர் - ஹம்சபாத நடன
 நாகைக்காரோணம் என்கின்ற நாகப்பட்டினம் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்கே அம்பாள்   ஸ்ரீ நீலாயதாக்ஷி . சிவன் ஸ்ரீ காயாரோகணேஸ்வரர்.  அம்பாள் பெயரில் நீலாயதாக்ஷி அம்மன் கோவில் என்றுதான் நாகப்பட்டினத்தில் இந்த கோவில் அறியப்படுகிறது. 
அம்பாள் சந்நிதியில்  நந்தி சிலை  அற்புதமாக  அழகாக,  கம்பீரமாக திருப்பி  சிவனைப்  பார்க்கிறது.   ஒரு கண்ணால் அம்மாவையும்  இன்னொரு கண்ணால் அப்பாவையும் பார்ப்பதால் இந்த நந்திகேஸ்வரனின் பெயர்  *இரட்டைப் பார்வை நந்தி.நாகப்பட்டினம் ரொம்ப அற்புதமான க்ஷேத்ரம். என் மனதில் அடிக்கடி  பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் ஸ்தலம். 

sivan jaykay

unread,
May 13, 2023, 10:01:01 PM5/13/23
to amrith...@googlegroups.com

அப்பா அம்மா தான் வேணும். -   நங்கநல்லூர்  J K  SIVAN 

அநேக பெற்றோர்கள்  இந்த அனுபவத்தை  உணர்ந்தவர்கள்.  ஆமாம்,  கூட்டங்களில்  கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் குழந்தை காணாமல் போவது  ஒரு கஷ்டமான  அனுபவம்.   சில  நான்கு ஐந்து வயது குழந்தைகள் துறுதுறுவென்று  இருப்பவை  தானாக எங்காவது நழுவி விடும்.  அவர்களுக்கு  அட்ரஸ்  சொல்ல தெரியாது. அந்தக்காலத்தில் மொபைல் கிடையாது.  குழந்தை பிடிக்கும்  ஆசாமிகள் எங்கும் இந்தமாதிரி கும்பல்களில் வேட்டையாட வருவார்கள்.  
ஒரு குழந்தை காணாமல் போய் அதை மீண்டும்  கண்டுபிடித்து  சேர்த்துக்கொள்ளும்  வரை ஒருவன் கஷ்டப்படும் அனுபவம் சொல்லில் அடங்காது.  எனக்கு  ரெண்டு முறை இந்த அனுபவம் என் ரெண்டாவது பெண் குழந்தை மூலம்  ஏற்பட்டதை என்றும் மறக்க மாட்டேன். அப்புறம் சொல்கிறேன் அந்த கதையை.

முல்க் ராஜ் ஆனந்த் ஒரு அற்புத  வடமொழி எழுத்தாளர்.  அவர் எழுதிய  ஒரு கதையின் சாராம்சம் இது.

கல்கத்தாவில் வசந்த கால பெருவிழா  எக்சிபிஷன் எனும் கண்காட்சி  மரங்கள் வயல்கள் சூழ்ந்த  ஒரு  கிராமத்தில் நடந்தது.    கிராமமே காலி.  எல்லோரும்   ஜே ஜே என்று கூட்டமாய் கண்காட்சிக்கு வந்துவிட்டார்கள்.  நெரிசல். நிறைய கடைகள் போட்டிருந்தார்கள்.இடைவெளி குறைவு.  ஆங்காங்கே   சின்ன சின்ன சந்துகள் அமைத்து  எல்லா இடத்தையும்  பூரா வளைத்து போட்டு  கடைகள். வியாபாரிகளின் கூட்டங்கள்.  சின்ன வளைந்த தெருக்களில்  சிலர் குதிரைகள்  மீது, சிலர் நடந்து, கட்டை வண்டி, மாட்டு வண்டி, கை  ரிக்ஷாக்கள் என்று தனியாகவும் குடும்பத்தோடும் நிறைய பேர் கூடிவிட்டார்கள்.

ஒரு ஐந்து வயது பயல் அப்பாவின் கால்களுக்கியிடையே  கையைப் பிடித்தவாறு பரம சந்தோஷத்தோடு இந்த உலகையே மறந்து  கண்காட்சி பொருள்களை  பார்த்துக்கொண்டு  எங்கோ உலகத்தில் இருக்கிறான்.  அங்கங்கே வாயைப் பிளந்து ரசித்துக்கொண்டு நின்று விடுகிறான் மேலே நகர மறுக்கும் அவனை ''வா  வா ''  என கையைப் பிடித்து தர தர வென்று இழுக்கும் அப்பா அம்மா.  அவன் மனதைக்  கொள்ளை கொள்ளும்  டமாரம் அடிக்கும் குரங்கு, தாவும் கன்றுக்குட்டி பொம்மைகள். ரயில் தண்டவாளத்தில் ஓடுகிறது.   கண்ணை கவரும் நாய்,   யானை,  குரங்கு,  அணில் பொம்மைகள். எல்லாமே  காந்தம் போல் அவன் கண்களை கவர்கிறது.   ஒவ்வொரு  கடை, ஸ்டால்  ஐ விட்டு கால்  மேலே நகர  மறுக்கிறது. . கடை நிறைய எண்ணற்ற தின்பண்டங்கள். கலர் கலராக பச்சை சிகப்பு, நீலம், மஞ்சள் எத்தனையோ வண்ண உருவத்தில் பலூன்கள். சின்னதும் பெரிதுமாக. கோலாகலமாக இருந்தது அவனுக்கு.

 ''எனக்கு அது வேணும் '' அவன்  கை  ஒரு பொம்மையை காட்டினான் .  அப்பா பொம்மை  வாங்கித் தரும்  ஜாதி இல்லை.    அவனுக்கும்  தெரியு
ம். இருந்தாலும் நப்பாசை.
சிவந்த கண்களோடு ''ஹூஹூம் ..வா இங்கே. கண்டதெல்லாம் வாங்க கூடாது.''
அம்மாவுக்கு குழந்தையின் ஆசை புரிந்தாலும்  ராக்ஷஸ அப்பாவிடம் எப்படி ரெகமெண்ட்  RECOMMEND பண்ணுவாள்? காசு அவன் தானே கொடுக்கவேண்டும். குழந்தையின்  கவனத்தை வேறுபக்கம்  ஈர்த்தாள் .
''கண்ணா  அதோ பார் அங்கே என்னன்னு?''   
 எதிரே  பச்சை பசேல் என்று தோட்டம். கடுகுச் செடிகள்  கொள்ளையாக பூத்திருந்தன. தங்க நிறம் கண்ணுக்கெட்டியவரை. அப்பப்பா  எவ்வளவு பட்டாம்பூச்சி, வண்ணாத்தி, தட்டான் பூச்சிகள், பொன் வண்டுகள். தும்பிகள். குட்டி குட்டியாக  அழகிய இறக்கைகளுடன் ரீங்காரம் செயது கொண்டு நிறைய பறந்ததை பார்த்தன்.  பையன் ஆகாயத்தில்  பறந்தான். அவற்றை துரத்திக் கொண்டு ஓடினான். கையில் பிடி படுவது போல் பாவலா காட்டி ஒரு வண்ணாத்தி பூச்சி அவனை ஏமாற்றியது.  குட்டியான வண்ண வண்ண ரெக்கை யை அடித்துக்கொண்டு அங்கும் இங்கும் பறந்தது.

''கோகுல், அங்கும் இங்கும் வயலுக்குள்  ஓடாதே  வா. போகலாம். '' அம்மா  அழைத்தாள் .பெரிய வயலில்  அவற்றை துரத்திக்  கொண்டு ஓடினான்.  வயல் நடுவே ஒரு பெரிய  திறந்த  கிணறு . கைப்பிடி இல்லை.  கிணற்றில் பூச்சிகள் ஓடி ஒளிந்தன . கிணற்றை சுற்றி சுற்றி வந்தான்.
''கோகுல்  வா  வா வா'
தூரத்தில் வரப்பில் இருந்து  அம்மா கூப்பிட்டாள்.  அப்பா ஒரு மர நிழலில் .
கிணற்றுக்கு அப்பால் ஒரு பெரிய பூந்தோட்டம். உயர உயர சாமந்திப்பூ  செடிகள்., .சூரியகாந்தி பூ, ரோஜா  மல்லிகை செடிகள். பையன் கவனம் இப்போது  சூரியகாந்தி பூவின்  மேல்.   அவன் மேல் நிறைய மலர்கள் அபிஷேகம் செய்தன. பூவின் நறுமணம் அவனுக்கு பிடித்தது.  எங்கிருந்தோ ஒரு மரத்திலிருந்து வெள்ளையாக புறாக்கூட்டம்   பறந்து அவனருகே அவன் தலையை தொடுவது போல் பறந்தபோது  அவற்றை துரத்தினான்.  
''அம்மா  அதோ பார் புறா''  .
'வாடா  கோகுல்  வா போகலாம் ''
 அம்மாவின் குரல் கேட்டபோது எதிரே  பார்த்த  பெரிய  ஆலமரத்தை நோக்கி ஓடினான்.
அவனை ஓடிப் பிடித்து அம்மா கையால் அணைத்தாள்.   கடுகுச் செடி வயல் கடந்து கண்காட்சி கடைத்த தெருக்களில்  சென்றார்கள்.  நிறைய வளைந்து வளைந்து செல்லும் சந்துகள் எல்லாம் அந்த பொருட்காட்சி சாலையை சுற்றி இருந்தன. அம்மாவின் கையை உதறிவிட்டு ஒரு சந்தில் ஓடினான்.  அங்கே ஒரு பக்ஷணம் விற்பவன் நிறைய குலாப் ஜாமூன் ரசகுல்லா, பர்பி, ஜிலேபி எல்லாம் பரப்பி நடுவில் அமர்ந்திருந்தான். கூட்டம் நெரிசல்.கோகுல்  சந்தோஷமாக  அந்த கடைக்குள்  ஓடினான். வாயில் எச்சில் ஊறியது  
' எனக்கு அந்த பர்பி வேண்டும்'' வாய் முணுமுணுத்தது. அப்பா வாங்கி தரமாட்டான் என்றும் புரிந்தது. எனவே மேலே வளைந்து நகர்ந்தான். மற்றும் ஒரு குறுகிய சந்து வந்தது அதில்  நிறைய அழகான கூடை கூடையாக மலர்கள் ஒரு இடத்தில், '' குல்மோஹர் வேண்டுமா''  என்று பூக்காரன் கத்தி விற்றுக் கொண்டிருந்தான்.  
கோகுல் கூடைகள் அருகே சென்றான். பூக்காரன் அவனிடம் ஒன்றை கொடுத்தான்.  ஆசையாக வாங்கி கொண்டு மேலே வேறு ஒரு வளைவில் சென்றான். ஒரு கிழவி நிறைய  ரோஜா  திண்டு மாலைகள் தொடுத்து எங்கும் தோரணமாக தொங்க விட்டிருந்தாள்.  எனக்கு ஒரு மாலை?   அவன் சின்ன குரல் அந்த கிழவிக்கு கேட்டது. சிரித்து கொண்டே  அங்கு  நுழைந்த கோகுல் கழுத்தில் ஒரு சின்ன மாலையை  போட்டாள் . மெத்த மகிழ்ச்சி அவனுக்கு. மாலையை  தரித்துக் கொண்டு ஆடினான்.
ஒரு கும்பல் எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அவன் அவர்களை முண்டியடித்து உள்ளே சென்று பார்த்தால்.. அங்கே  ஒருவன் ஒரு பெரிய கொம்பின் மேல்  நிறைய  பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம் , ஊதா, வெள்ளை, பழுப்பு நிற பலூன்களை ஊதி கட்டி பறக்க வீட்டுக் கொண்டிருந்தான்.  கோகுல் எதிரே நின்றதும் ஒரு பலூனை கையில் எடுத்து அதை தேய்த்ததும்  அதில் இருந்து சப்தம் வந்தது.  சிரித்தான்.  வானவில் கலரில் அந்த பலூன்கள் அவன் மனதை கொள்ளை கொண்டன.
அப்பா வாங்கி தர மாட்டார்.. ஏக்கம் மனதில் வழக்கம் போல் சூழ்ந்தது. அவனை அறியாமல் கால்கள் மேலே  நகர்ந்தன. இன்னும் ரெண்டு வளைவுகள் தாண்டினான்.
ஒரு  மரத்தடியில்  வட்டமாக எல்லோரும் நின்று பார்த்துக் கொண்டிருக்க, நடுவே  ஒரு பாம்பாட்டி.
எதிரே ஒரு திறந்து வைத்திருந்த கூடையில்  ஒரு பாம்பு ஆடிக்கொண்டிருந்தது.  ''ஆ  ஆ   எவ்வளவு பெரிய பாம்பு''  பாம்பாட்டி  குழல் போல் ஒன்றை வாயில் வைத்து ஊதிக் கொண்டிருந்தான்.  கூடையை இன்னொரு கையால் ஆட்ட அதன் உள்ளே இருந்து இன்னொரு பெரிய கருப்பும் மஞ்சளுமாக ஒரு பாம்பு மெதுவாக தலையை தூக்கி  வெளியே வந்தது.
வெகுநேரம் அதை பார்த்துக் கொண்டிருந்த கோகுல் இன்னொரு இடத்தில் ஒரு கூட்டம் நிற்பதை பார்த்துவிட்டு அங்கே ஓடினான்.
அதில் நடுவே  ஒரு பெரிய ஒரு மெஷின் அதை நான்குபேர்  பக்கத்துக்கு ரெண்டு பேராக  ஒரு இரும்பு கைப்பிடியை  சுற்றிக் கொண்டிருந்தார்கள்.  மரத்தின் அடிப்பாகம் போல் இருந்த அதின் கிளைகள் போல் நிறைய  இரும்பு தூண்கள் அதிலிருந்து அநேக  ஆசனங்கள், தொட்டில், குதிரை,  யானை  என்று ஒவ்வொரு கம்பியிலும்  இணைத்திருந்த இந்த குதிரை யானை, நாற்காலி தொட்டில்களில் குழந்தைகள் அமர்ந்து வட்டம் வட்டமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஊஞ்சல்.  ரங்க ராட்டினம்.
இது தான் கைலாசம், வைகுண்டம்.  நான்  நீ என்று போட்டி போட்டுக்கொண்டு குழந்தைகள் உட்கார ஆசைப்பட   பெற்றோர்கள் பணம் கொடுத்து  அவர்களை அமர்த்தின போது குழந்தைகள்  உற்சாகமாக  சிரித்து, சப்தம் போட்டனர்.  
ரங்க ராட்டினத்தில் வேகமாக  சுழன்றார்கள். 
''நான் இந்த குதிரை ஊஞ்சலில் உட்காரணும் ''    கோகுல் பிடிவாதம் பிடித்து  கத்தினான்.
அப்பாவின் பதில் காணோம்.
கோகுல் நினைவுலகத்துக்கு வந்தான்.
 '' அப்பா  அப்பா''   அவன் குரல் உயர்ந்தது. திரும்பி அங்கும் இங்கும் பார்த்த போது எங்கே அம்மாவையும் அப்பாவையும்  காணோம்.
''அப்பா எங்கே,  அம்மா எங்கே?  
கோகுலுக்கு தொண்டையை அடைத்தது.  கும்பலில் எத்தனையோ முகங்கள்,  ஆனால்   அவனைச்சுற்றி இருந்த கூட்டத்தில் அப்பாவையோ அம்மாவையோ காணோமே.   கோகுல் கண்களில் அழுகை  கண்ணீர்  கொப்புளித்து.  உடம்பு குலுங்கியது. அங்கும் இங்கும்  ஓடினான் எதிரே பிறகு திரும்பி இன்னொரு வளைவில் சந்தில்  ஓடினான் 
''அப்பா  அம்மா''   அவன் குரல் பெரிதாக அழுகையுடன் கலந்து  கண்ணீர் வெள்ளத்தோடு  எதிரே இன்னொரு சந்தில்  ஒலித்தது.
கோகுலை  பயம்  முழுமையாக  விழுங்க,  தலை சுற்றியது. வெந்நீராக  கண்ணீர் அவன் மார்பில் சிந்தியது.
கண்ணில் பட்ட  சந்துகளில் எல்லாம் ஓடினான்  தேடினான்
 ''அப்பா   அம்மா''  கதறினான். .  அவன் தலையில் அணிந்திருந்த தொப்பி கீழே விழுந்ததை பற்றி கவலை இல்லை.  ''அப்பா  அம்மா'' . 
 அவன் குரலுக்கு பதிலே இல்லையே. ஓவென்று அழுதான்.தேம்பி தேம்பி அழுது களைத்தான். எதிரே நீண்ட வயல், தங்க நிற கடுகு செடி இப்போது அவனைக் கவரவில்லை.  பலூனோ பாம்போ, குரங்கு பொம்மையோ,  பர்பி  குலாப் ஜாமூனோ,  புறாக்கள் கூட்டமோ,  அவனைக் கவரவில்லை.  ரங்கராட்டின குதிரை பிடிக்கவில்லை. . அம்மா அப்பாவை போல்  அவன்  ஆசைகளும்  காணாமல் போனது.  ஓடினான். கண்ணில்  அழுகை திரையிட்டது. ஆண்களும்  பெண்களுமாக அநேகர் அவன் ஓடுவதை பார்த்தார்கள். தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.  மஞ்சள் புடைவை அம்மாவை தேடினான்.  சிகப்பு சட்டை அப்பாவையும் காணோமே.   இடது பக்கம் ஓடினான்.  அங்கே தான் மிட்டாய் பக்ஷணக்காரன் இருந்தான். அந்த கும்பலில் தேடியதும் அம்மா  அப்பா என்று குரல் கொடுத்தும்  அவர்கள் இல்லையே .  மிட்டாய், பர்பி லட்டு எல்லாம் ஏதோ கசப்பு பக்ஷணங்களாக வே தோன்றின. பிடிக்கவே இல்லை.  
அம்மா  அப்பா  எங்கே  ?
ஒரு கோவில் வந்தது அதன் வாசலில் நின்று தேடினான்.  கும்பலில் காணோம்.ஒருவரை ஒருவர் இடித்து க்கொண்டு உள்ளே போக முயன்று கொண்டிருந்தார்கள். அவர்கள் காலுக்கு இடையே புகுந்து உள்ளே சென்று பார்த்தான்.எங்கும் அப்பா அம்மாவைக் காணோம். நிறைய பேரின் உதைகள் தான் மிஞ்சின.  கீழே தடுமாறி விழுந்தவனை அநேகர் மிதித்தார்கள். மெதுவாக சமாளித்து எழுந்தான். 
''அம்மா  அப்பா ''
யாரோ அவனை தூக்கினார்கள்.
''யாரடா குழந்தை நீ.  எப்படி இங்கே வந்தாய்?
''அப்பா வேணும். அம்மா வேணும்.''  
அந்த ஆள் தூக்கிக் கொண்டபோது அவன் தோளிலிருந்து  கத்தினான்.
''அதோ அந்த குதிரை மீது உட்காருகிறாயா,  உனக்கு  மிட்டாய் வாங்கி கொடுக்கட்டுமா,  பூக்கள் தரட்டுமா
வண்ணாத்தி  பூச்சிகள் காட்டட்டுமா, பாம்பு பார்க்கிறாயா? ஒரு பெண் குட்டி பாடுகிறதே ஆடுகிறதே பார்.' அவன் வாங்கி கொடுத்த பலூனை வீசி எறிந்தான் ''
அவனை தூக்கிக் கொண்டிருந்த ஆள்  அழுகையை நிறுத்த  எவ்வளவோ வழிகளை தேடினான்.
தலையை வேகமாக ஆட்டினான்  கோகுல்  
''ஹூஹூம்  எனக்கு அம்மா தான் வேணும். அப்பா கிட்டே போகணும்''
கோகுலைப் பொறுத்தவரை   எதெல்லாம் வாழ்க்கையின் லக்ஷியமாக இருந்ததோ அவை வெறுத்துவிட்டன. 
 ''அம்மா  அப்பா'' மட்டும் தான் வேணும்.
அவனுக்கு  இப்போது அத்தியாவசியமாக  ஒண்ணுமே வாங்கித்தராத அப்பா இப்போதே வேணும்.
முல்க் ராஜ் ஆனந்த  கதையை சுபம் சுபம் சுபம் என்று முடிக்கவில்லை... கோகுலின்  கதறலோடு நிறுத்திவிட்டார். 
கோகுல் அப்பா அம்மாவை  அடைந்தானா? 
அப்பா அம்மா  அவனைத் தேடி வந்து மீட்டார்களா  இல்லையா?  
 ''THE  LOST CHILD ''  என்கிற  இந்த கதையின்  முடிவை  வாசகர் கற்பனைக்கு விட்டு விடுகிறார் முல்க்  ராஜ்  ஆனந்த்

 

 

 

 

 

sivan jaykay

unread,
May 13, 2023, 10:01:01 PM5/13/23
to amrith...@googlegroups.com
விவேக சூடாமணி - ஸ்லோகங்கள்  26-30    -     நங்கநல்லூர்  J K SIVAN
ஆதி சங்கரர்

सर्वदा स्थापनं बुद्धेः शुद्धेब्रह्मणि सर्वदा । सम्यगास्थापनं तत्समाधानमित्युक्तं न तुचित्तस्य लालनम्॥ २6॥ ॥
sarvadā sthāpanaṃ buddhēḥ śuddhē brahmaṇi sarvadā । (pāṭhabhēdaḥ - samyagāsthāpanaṃ)
tatsamādhānamityuktaṃ na tu chittasya lālanam ॥ 26॥

ஸர்வதா³ ஸ்தா²பநம் பு³த்³தே:⁴ ஶுத்³தே⁴ ப்³ரஹ்மணி ஸர்வதா³ । ஸம்யகா³ஸ்தா²பநம் தத்ஸமாதா⁴நமித்யுக்தம் ந து சித்தஸ்ய லாலநம் ॥ 26॥

ஷட்  சம்பத் எனும்  ஆறுவித  செல்வங்களில் ஆறாவது சமாதானம்.  யாரோ   ரெண்டு பேரின் சண்டைக்கு நடுவே  மத்தியஸ்தம் செய்து  சமாதானம் இல்லை இது.  உலகமே  இடிந்து விழுந்தாலும் சிறிதும் கலங்காத அலட்டிக்கொள்ளாத அமைதியான  சாந்த குணம்.  பதற்றம் அற்ற நிலை. எதிலோ ஒன்றில் மனம்  ஆழப் பதிந்து மற்றெதிலும்  மனம் செல்லாத  ஒரே நிலைப்பாடு.  எப்போதும் திருப்தியான மனப்பான்மை.  ப்ரம்மத்தையே நாடும் மனம்.  அது தான் சமாதானம். இதை  சிறந்த ஆத்ம ஞானி கொண்டவன்.

 27.अहङ्कारादिदेहान्तान् बन्धानज्ञानकल्पितान्। स्वस्वरूपावबोधेन मोक्तुमिच्छा मुमुक्षुता ॥ २7॥
ahaṅkārādidēhāntān bandhānajñānakalpitān । svasvarūpāvabōdhēna mōktumichChā mumukṣutā ॥ 27॥
அஹங்காராதி³தே³ஹாந்தாந் ப³ந்தா⁴நஜ்ஞாநகல்பிதாந் । ஸ்வஸ்வரூபாவபோ³தே⁴ந மோக்துமிச்சா² முமுக்ஷுதா ॥ 27॥

வெளிப்பசி அடங்கினால் தான் உள்பசி தீராத  தாகமாக, பசியாக  ஆன்மாவை நாடும். பற்று,பந்தம் பாசம்  இதெல்லாம் நீங்கினால் தான் உலகில் மோக்ஷத்தை  ஒருவன் நாடுகிறான் என்று அர்த்தம்.  இந்த தேடலை முமுக்ஷுத்வம் என்கிறோம்.  அஹங்காரம் அறவே  நீங்கி, அமைதி மனதில் குடிகொண்டாள் அறியாமை, அஞ்ஞானம் விலகும்.   

 28, मन्दमध्यमरूपापि वैराग्येण शमादिना । प्रसादेन गुरोः सेयं प्रवृद्धा सूयतेफलम्॥ २8॥
mandamadhyamarūpāpi vairāgyēṇa śamādinā ।prasādēna gurōḥ sēyaṃ pravṛddhā sūyatē phalam ॥ 28॥
மந்த³மத்⁴யமரூபாபி வைராக்³யேண ஶமாதி³நா । ப்ரஸாதே³ந கு³ரோ: ஸேயம் ப்ரவ்ரு’த்³தா⁴ ஸூயதே ப²லம் ॥ 28॥
  
சாதகன் முதலில் நான் எதை விடவேண்டும், எதை பிடிக்க வேண்டும் என்று  அறிந்து கொள்ளவேண்டும்.  அவனுக்கு குருவின்  சகாயம் இருந்தால் இது எளிதாகும்.  பற்று பாசம், பந்தம்  சொந்தம்  எல்லாம்  விலகி  ஆன்மத்தை நாடும்  பாதையில்  ஆழ்ந்து உள்நோக்கி  களம்  இறங்குவான்.   

वैराग्यं च मुमुक्षुत्वं तीव्रं यस्य तुविद्यते। तस्मिन्नेवार्थवन्तः स्युः फलवन्तः शमादयः ॥ 29॥
vairāgyaṃ cha mumukṣutvaṃ tīvraṃ yasya tu vidyatē ।tasminnēvārthavantaḥ syuḥ phalavantaḥ śamādayaḥ ॥ 29॥
வைராக்³யம் ச முமுக்ஷுத்வம் தீவ்ரம் யஸ்ய து வித்³யதே । தஸ்மிந்நேவார்த²வந்த: ஸ்யு: ப²லவந்த: ஶமாத³ய: ॥ 29॥
எண்ண  அலைகள் ஒடுங்கி, மனம்  தெளிவாக  அமைதியை நோக்கி  சென்றால், அதன் பலன் நல்ல்லதாகவே  சாதகனுக்கு  கிடைக்கும்.   

एतयोर्मन्दता यत्र विरक्तत्वमुमुक्षयोः । मरौ सलिलवत्तत्र शमादेर्भानमात्रता ॥ 30
ētayōrmandatā yatra viraktatvamumukṣayōḥ ।marau salilavattatra śamādērbhānamātratā ॥ 30॥
ஏதயோர்மந்த³தா யத்ர விரக்தத்வமுமுக்ஷயோ: । மரௌ ஸலிலவத்தத்ர ஶமாதே³ர்பா⁴நமாத்ரதா ॥ 30

உறுதி  இல்லாத,  வைராக்கியம் அற்ற,  மனது   எளிதில் புலன்களின் கைப்பாவையாக அடிமைப்பட்டுவிடும். அதிலிருந்து வெளிவருவது  துர்லபம். நாம் அப்படித்தான்  பற்பல  பிறவிகளை மாறி மாறி எடுத்துக் கொண்டு வருகிறோம்.  திட சித்தன்  முமுக்ஷுத்வத்தை  நாடி  விடாப்பிடியாக மனதை வேறெங்கும்  அசையாமல் ஒரே நோக்கோடு  ஆத்ம விசாரத்தில் ஈடுபடுபவன். புண்யசாலி.  

sivan jaykay

unread,
May 13, 2023, 10:01:28 PM5/13/23
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒரு  அதிசய ஆராய்ச்சி 

மஹா பெரியவா வாழ்ந்த  ஒவ்வொரு கணமும் சரித்திர பெருமை வாய்ந்தது. பேசும் தெய்வத்தின் ஒவ்வொரு  சொல்லும் செயலும் மேன்மையானவை அல்லவா?
காஞ்சிபுரத்தில்  மடத்தில் நிகழ்நத ஒரு சம்பவம்.  
பாரத தேசத்தின் முன்னாள்  ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன்  காஞ்சிபுரத்தில் ஸ்ரீ மடத்தில்   மஹா பெரியவா தரிசனம் செய்து விட்டு   பெரியவவளின் ஆசி பெற்று  திரும்பிவிட்டார்.  பகல் வெகு நேரமாகிவிட்டது.   மஹா பெரியவா தனது அறைக்குச் சென்று  ஒய்வு  எடுத்துக்கொண்டார்.  
சாயந்திரம்  நாலு மணிக்கு  தொண்டர்  ஒருவர்  பெரியவாளிடம் சென்றார்.
 “பாண்டிச்சேரி  யூனிவர்சிட்டி  யிலிருந்து  சில  பிரெஞ்சு  ப்ரொபஸர்கள்  யாரோ  இப்போ தரிசனத்துக்கு வரப்போறாளாம்  என்றார்.
பெரியவா ஒன்றும் சொல்லவில்லை. தலையாட்டினார்.
அரைமணிக்  குள்ளாகவே   பிரான்ஸ் நாட்டு ப்ரொபஸர்கள் வந்தார்கள்.   மஹா பெரியவாளிடம் விஷயம் சொல்லப் பட்டது.  
''வரச்சொல்லு''
 மஹா பெரியவா  எப்போதும்  போல்  எளிமையின் ஸ்வரூபமாக  தரையில் அமர்ந்திருந்தார். ஐந்து பிரஞ்சுக்  கார  ப்ரொபஸர்கள் வணங்கினார்கள்.  எதிரே  கைகாட்டி, 
 ''SIT  DOWN , உட்காருங்கோ' என்கிறார்.   
அவர்கள் பேசுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சொல்கிறார்  ஒரு பக்தர்.  
 
ஐந்து  பிரெஞ்சுக்காரர்களில்  3 பேர்  பெண்கள். 2 பேர்  ஆண்கள். 
ஒருவர் , அவர்களுக்குள் தலைவராக  இருப்பவர் போல இருக்கிறது. அவர்  வணங்கி விட்டு பேசினார்.  
''நான் இங்கே   இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்  வந்திருக்கேன்''  என்றார். 
வந்திருந்தவர்கள் தங்கள்   பெயர்களை சொல்லி அறிமுகம் செய்து கொண்டார்கள்.
;யார்  எந்த டிபார்ட்மென்ட், எதில் ப்ரொபஸர் என்று கேட்டு தெரிந்து கொண்டார். 
சொன்னார்கள். 
ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்த பெரியவா ஒரு பெண்ணிடம் 
“நீங்கள் இத்தாலிக்காரரா ?''என்று கேட்டார்.
''நான்  பிரான்ஸ் தேசத்தில்  பாரிசில் வசிக்கிறேன். அங்கே  ப்ரொபஸர். ....ஆனால்  என் முன்னோர்கள்  இத்தாலிக்கார்கள்  தான்.'' 
'' ஓஹோ.  அவர்கள்  பாரிஸுக்கு வடக்கே லக்ஸ்ம்பர்க் என்ற நகருக்குத் தெற்கில் வாழ்ந்தவர்களா? என்கிறார்  மஹா பெரியவா .
 அந்த பெண்மணிக்கு  ரொம்ப  ஆச்சரியம். 
“ஆமாம் ஆமாம் ” 
''நாங்கள்  யாரும்   இதுவரைக்கும்  இந்தியா வந்ததேயில்லையே . எப்படி  எங்கள் முன்னோர் பற்றி இந்த  பெரியவருக்கு தெரிந்திருக்கிறது !   இந்த  கிராமத்தில் உட்கார்ந்துகொண்டு எப்படி இவர்  பிரான்சு ஜெர்மனி நாடுகளின் அமைப்பையும், லக்ஸம்பர்க் பகுதி பற்றி வரையறுத்துக் கூறுகிறார்?   என்று  தனக்குள் அதிசயித்தாள்  அந்த பிரெஞ்சுக்காரி. எல்லோருமே  அதிசயித்து வாய் பிளந்து நின்றனர்.
எல்லோர்  முக  பாவங்களையும்  கவனித்த  மஹா பெரியவா  விவரம் சொல்ல தொடங்கினார்.

 “இத்தாலிக்கும்  பாரிஸுக்கும் வடக்கே லக்ஸ்ம்பர்கிற்குத் தெற்கில்  உள்ளவர்களுக்கும் பெரும்பாலும் தலைக் கேசம் கருப்பாயிருக்கும். இத்தாலியர்களின்  பேசும்  லத்தீன் மொழியின் உச்சரிப்பும்  ஒருவிதமாக இருக்கும்” என்று ஒரு குண்டைத் தூக்கி போட்டார்  பெரியவா.
 அந்த பெண்மணி, “ஆமாம்! ஆமாம்! வாஸ்தவம் ” என்று வேகமாகத் தலையாட்டினாள் ..

காஞ்சிபுரத்தில் ஏதோ  எளிய பகுதியில்  வாழும்  மஹா பெரியவா உலகில் எங்கிருந்து யார் வந்தாலும், எம்மொழி பேசினாலும், அவர்  எந்த  பகுதியிலிருந்து வந்தவர்,  எந்த  மொழி பின்னணி கொண்டவர் என்று தெரிந்து வைத்துக் கொண்டு அவர்கள் தேசம், மொழி, பண்பாடு, வாழ்க்கை முறை பற்றி எல்லாம்  விளக்கும்  அழகைப் பார்க்கும்போது  வேத காலத்தில் அனைத்தையும் அறிந்த மகரிஷிகள் எல்லாம் ஒருங்கே இணைந்து இதோ இந்த  மஹா பெரியவா உருவத்தில்  ஒரு ஒப்பற்ற பரம ஞானியாக அமர்ந்திருக்கும்   அற்புதத்தை அனைவரும் ரசித்து வணங்கினார்கள். 

It is loading more messages.
0 new messages