2,636 views
Skip to first unread message

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:41:43 PM8/27/23
to amrith...@googlegroups.com
தேனான  வேமனா  -  நங்கநல்லூர்  J K   SIVAN தேனான  வேமனா  -  நங்கநல்லூர்  J K   SIVAN

ஆனந்தம் தரும்  அற்புத விஷயங்கள்  எந்த மொழியில் இருந்தாலும்  அந்த மொழி நமக்கு தெரியாவிட்டாலும் ஓரளவு அந்த விஷயத்தை  ஆங்கிலம்  போன்ற  எல்லோருக்கும் தெரிந்த மொழியில்  பெயர்க்கப்பட்டு  நாம் அறிந்து, தெரிந்து, மகிழ முடிகிறது. மொழி பெயர்ப்பை பொறுத்தவரை  பாரதியாரை ஜப்பான் மொழியில் படித்தாலோ,  காளிதாசரை  சீனமொழியிலோ,  கம்பரை  பாரசீக மொழியிலோ படித்தால் ஒரிஜினல் சுவையும் மணமும்  நிச்சயம்  இருக்காது, ஆனால் அற்புதமான சிந்தனை பற்றிய விஷயம் அகப்படும்.   அதுபோல் தான்  வேமனாவை  தெலுங்கு தெரியாவிட்டாலும்  ஆங்கிலம் மூலம் அறிந்து தமிழில் கூடுமானவரை அவரை ரசிக்க வைக்க முயல்கிறேன். அப்படித்தான் உங்களுக்கு ஆதி சங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர்  தாகூர்  எழுத்தச்சன்  ஆகியோரை என்னால்  தர முடிந்தது.
 
எனது தெலுங்கு தெரிந்த நண்பர்களே, மற்றவர்களை விட உங்களுக்கு  வேமனா  பதிவுகள்  அதிக சுகமாக இருக்கும்  இல்லையா ? உங்களை விட வேறு யார் வேமனாவை  அவ்வளவு ரசிக்க முடியும். உங்கள் அபிமான தத்துவஞானியைப் பற்றி எழுதப்பட்ட இந்த பதிவுக்கு உங்கள் ஆதரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எனக்கு தெலுங்கு எழுதவோ, படிக்கவோ, அவ்வளவாக பேசவோ தெரியாது என்பதில் மிக வருத்தம்.  என்ன செய்வது.கொடுப்பினை அவ்வளவு தான்.

வேமனாவைப்பற்றி ஒரு வார்த்தை. அவர் சிவ பக்தர். பொய்மை வேஷம் கொண்ட பக்தர்களையோ சந்நியாசிகளையோ சாடுவதில் அவருக்கு நிகர் அவரே அதைப்பற்றி பாடுவதை நான் எழதுகையில் கோபம் என்மீது திரும்ப வேண்டாம்.
தெலுங்கில் உள்ள அவர் பாடல்களில் முதல் ரெண்டு  அடி அவர் கருத்தைச் சொல்லும். அடுத்தது தன்னைத் தானே "என்னடா வேமா சொல்கிறாய், சரிதானே?"  தன்னையே கேட்டுக் கொள்வது போல் அமைந்துள்ளது

నీవు నిలిచియుండు నిఖిలంబు నిలువదు నిలిచియుండు నెండు నీరువలెను
నీవు నిశ్చయంబు నిఖిలంబు మాయయౌ  విశ్వదాభిరామ వినుర వేమ!

nIvu nilici yunDu nikhilambu niluvadu nilici yunDu enDu nIru valenu
nIvu niScayambu nikhilambu mAyayau viSvadAbhi rAma vinura vEma.

இந்த உலகமே அசைவில், இயக்கத்தில் தான் ஜீவிக்கிறது. அசைவு நின்றால்.......? ''நான் அசைந்தால் அசையும் இந்த அகிலமெல்லாமே அறிவாய் மனிதா'' பாட்டு சிவாஜி கணேசன் கண்ணை இரு ஓரங்களுக்கும் அசைத்து  திரை முழுதும் பெரிதாகிய  கண்களோடு  சிரிப்பாரே... அசைவு நின்றால் பிரபஞ்சம் ஸ்தம்பிக்கும். அதனால் தான் இறைவன் நடராஜன். ஆடிய பாதன், ஆடல் வல்லான். நீரில்லாத ஏரி. நீ ஒருவன் தான் அசைவில்லாத ஸாஸ்வதன். மற்றெல்லாம் அசையும் மாயை. சரியாடா நான் சொல்வது வேமா?-  வேமனா.


హింసఁ జేయకుండుటే ముఖ్య ధర్మంబు ఆనక హింసచేసి రవనిసురులు
చావుపశువుఁ దినెడు చండాలుఁడే మేలు విశ్వదాభిరామ వినర వేమ!

himsa cEyakumDuTE mukhya dharmambu Anaka himsa cEsir avani surulu
cAvu paSuvu tineDu camDAluDE mElu viSvad abhi rAma vinura vEma.

வேமனா வாழ்ந்த காலத்திலும் யாக யஞங்கள் உண்டு. புத்தருக்கு முந்திய காலத்தில் யாகத்தில் அஸ்வம், அஜம் என்று மிருகங்களை பலியிடுவதுண்டு. புத்தர் வேத வித்தகர்கள் பிராமணர்கள் நடத்தும் யாகத்தில் இந்த ஹிம்சை வேண்டாமே. உங்களுக்கும் மிருகங்களை வெட்டி உண்பவர்க்கும் என்ன வித்யாசம். பிராணிகளை வதைப்பது வேண்டாம் என்று கண்டித்தார்.    வேத சாஸ்திரம் அறிந்தவர்கள் கடவுளுக்கு சமானம். உயிர் வதை, ஹிம்சை வேண்டாம். 'அஹிம்ஸா பரமோ தர்மா' .. உயிர்களிடம் கருணை தான் தர்மங்களில் எல்லாம் தலையாயது. இல்லையாடா வேமா? என்று  தன்னிடமே  கேட்கிறார்  வேதாந்தி வேமனா.

చంద మెరిగి మాట చక్కగా చెప్పిన ఎవ్వడైన మాట మరికేల పలుకు
చంద మెరింగి యుండు సందర్భ మెరుగుమీ విశ్వదాభిరామ వినుర వేమ.

candam erigi mATa cakkagA ceppina evvaDaina mATa mArikEla paluku
canda meringi yunDu sandarbha merugumI viSvada abhirAma vinura vEma.

யாருக்காவது ஏதாவது மனதில் உறைக்கும்படியாக  சொல்வது தான்  உபதேசம் என்பது.  எல்லோரும் உபதேசிக்க முடியாது. விஷய ஞானம், அனுபவம், ஆத்ம பலம் இருப்பவர்களிடம் பெரும் உபதேசம்  சக்தி வாய்ந்தது.  அந்த உபதேசம், அறிவுரையானது, எளிமையாக, எளிதில் புரிந்து கொள்ளும் வகையில்,  குட்டியாக இருக்கவேண்டும். அப்போது தான் அவன் ''ஆஹா நான் இதை அறிந்துகொண்டேன். அப்படியே செய்வேன்'' என்று ஏற்றுக்கொள்வான்.

இன்னொரு சமாச்சாரம். நீ யாருக்காவது அறிவுரை வழங்கும்போது அவன் அதை ஏற்றுக்கொள்ள, கேட்டுக் கொள்ளும் மன நிலையில் இருக்கிறானா, சந்தர்ப்ப சூழ்நிலைகள் உச்சிதமாக இருக்கிறதா என்று வேறு பார்க்கவேணும். அவசரமாக ஆபிஸ் லேட்டாகிவிட்டது என்று பஸ்ஸில் ஓடுபவனுக்கு கீதை ஞான யோகம் சொல்லட்டுமா என்றால்.. உபதேசிப்பவன்  விவேகம் இல்லாதவன்.   நான் சொல்வது சரிதானேடா வேமா? - வேமனா

Apadaina velanarasi bandhula joodu................ఆపదైన వేళ నరసి బంధుల జూడు
bhayamuvela joodu bantu tanamu...................భయమువేళ జూడు బంటు తనము
Pedavela joodu pendlamu gunamu...................పేదవేళ జూడు పెండ్లము గుణము
Viswadhaabhuraama, Vinura Vema................విశ్వధాభిరామ, వినుర వేమ

கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் உனக்கு வரும் வேளையில் தான் உன்மேல் உன் பந்துக்களின் அக்கறை எவ்வளவு என்பது தெரிந்துகொள்வாய் . உன் எதிரிகளின் பலத்தை நீ பயத்தில் இருக்கும்போது புரிந்துகொள்வாய். நீ எல்லாம் இழந்து பரம ஏழையாகும்போது தான் உன் மனைவி யார் என்பது சரியாக  புரியும். ''இல்லானை இல்லாளும் வேண்டாள்'' பாட்டு அர்த்தம் ''நச்'' சென்று புரியும்.

Chippalonabadda chinuku mutyambayye....................చిప్పలోనబడ్డ చినుకు ముత్యంబయ్యె
nitabadda chinuku nita galise....................................నీటబడ్డ చినుకు నీట గలిసె
Brapti galugu chota phalamela tappura......................బ్రాప్తిగలుగు చోట ఫలమేల తప్పురా
Viswadhaabhiraama, Vinura Vema........................... విశ్వధాభిరామ, వినుర వేమ

சிப்பலோனப³ட்³ட³ சினுகு முத்யம்ப³ய்யெ நீட ப³ட்³ட³ சினுகு நீட க³லிஸெ 
ப்³ராப்தி க³லுகு³ சோட ப²லமேல தப்புரா விஶ்வதா³பி⁴ராம வினுர வேம! ॥ 1௦1 ॥

மழை பெய்கிறதே அதில் எங்கோ ஒரு சொட்டு வாய் திறந்த சிப்பிக்குள் வீழ்ந்தால் முத்தாகிறது.   அதே  மழைத்துளி  சிப்பிக்குள் விழாமல்  அகண்டமான பெரிய சமுத்ரத்தில் வீழ்ந்தபோது கடல் நீரோடு கலந்து அடையாளமில்லாமல் உப்பு நீராகிறது.  புரிந்துகொள். உண்மையான பக்தி உனக்கிருந்தால் அதன் பலன் மேன்மையானதென்று.  எல்லோருக்கும்  உண்மை பக்தி  எனும் பிரசாதம்  கீரைக்காது . நான் சொல்வது சரியாடா வேமா?- வேமனா.


sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:41:55 PM8/27/23
to amrith...@googlegroups.com

ஒரு சுதந்திர தின ஞாபகம்.  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

சிட்டுக்குருவி போல்  சுறுசுறுப்பாக    பறந்து ஓடி விளையாடி கவலையின்றி  நாம் வாழ்ந்த வாழ்க்கை எது வென்றால்  ஆரம்ப பள்ளிக்கூட  காலம்.  முட்டி வலி, இன்கம்டாக்ஸ்,  வோட்டு, இலவசம், லஞ்சம், ஜாதி மத வேற்றுமை இல்லாத  ஆனந்த உலகம் அது. வாத்யார்களை தெய்வமாக  மதித்து பய பக்தியோடு, தப்பு பண்ணினால் முதுகில் அரை , காது திருகல், முட்டியில்  ஸ்கேல்  அடி ,  தோப்புக்கரணம்  இன்னும் நினைவில் இருக்கிறது. வாத்தியார்கள் மேல் கோபம் வரவில்லை. இரு கை  கூப்பி என்னை திருத்தியதற்கு நன்றி என்று சொல்ல வைக்கிறது. 

பள்ளிக்கூடத்தில்  இந்திய தேச  சுதந்திர நாட்களில் நானும் சுதந்திர தின ஸ்வீட் சாப்பிட்டிருக்கிறேன். சூளைமேட்டில் கார்பொரேஷன் பள்ளிக்கூடத்தில் நான்கு ஐந்து நாட்கள் முன்னாலேயே சுதந்திர தின கொண்டாட்டம் பற்றி பள்ளியில் டீச்சர்கள்  நாங்கள்  எப்போது வரவேண்டும், எப்படி வரவேண்டும், என்னென்ன  செய்யவேண்டும் என்று சொல்லி விடுவார்கள். பள்ளியில் மரத்தில் தொங்கும் தண்டவாளத்தில் இரும்பு குழாயால் மணி அடிக்கும் கோவிந்தசாமி எல்லா பையன்களையும் உயரம் பார்த்து நிற்க வைத்து ஒன் டூ த்ரீ என்று கை விரித்து மேலே தூக்கி ஒரு குதி குதித்து கீழ இறக்க, லெப்ட் ரைட் கவாத்து பழக்கி நடக்க சொல்வான்.  கோவிந்தசாமி  பள்ளியில்  இன்றியமையாத  ஆல் ரவுண்டர். அப்பப்போ எங்களுக்கெல்லாம் ட்ரில் மாஸ்டர்.   ஒன்பது பெயிலாகி மேலே  படிப்பு ஏறாமல் நின்றவன்.  பள்ளியில் சகல வேலைகளும் அவன் தான் செய்வான். சுவற்றில் கொடி படம் போடசொன்னார் தலைமை ஆசிரியர் சுப்ரமணிய ஐயர் . மேலே பச்சை நடுவே வெள்ளை  கீழே சிகப்பு பெயின்ட் அடித்து விட்டு  சுப்ரமணிய அய்யரிடம் திட்டு வாங்கி, அழிக்க பாடுபட்டான். அந்த கோவத்தில் எங்களை எழுந்து உட்கார, ஓடச்  சொல்லி பழி வாங்கினான்.**

**சரோஜினி டீச்சர் பெண் குழந்தைகளை ''ஆடுவோமே பள்ளு பாடுவோமே'', '' பச்சை மலை பவழ மலை எங்கள் மலை அம்மே'' பாட்டுக்கு குறத்தி டான்ஸ் நாலு நாளாக பழக்கினாள் . வீட்டிலிருந்து குறத்தி வேஷம் போட்டுக்கொண்டு  பெண்களை  கூடை சுமந்து வரச்  சொன்னாள். 

''ஆகஸ்ட் 15 காலை ஆறரை மணிக்கு நீங்கள் தோய்த்து உலர்த்திய சுத்தமான ஆடைகளை அணிந்து , தலை வாரி, நெற்றியில் பொட்டு வைத்து, பள்ளிக்கு வரவேண்டும். எல்லோரும் மறக்காமல் மூவர்ண கொடி சட்டையில் குத்திக் கொள்ள வேண்டும். வரிசையாக சுண்ணாம்பு கோட்டுக்குள் குறிப்பிட்ட இடத்தில் வகுப்பு வாரியாக நிற்க வேண்டும். யாரும் சத்தம் போட கூடாது. ஏழரை மணிக்கு புலியூரிலிருந்து வரதராஜ நாயக்கர் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வந்து விடுவார். எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர் முன்சீப்  என்று பெயர். அவருக்கு எப்படி கொடியேற்றவேண்டும் என்று பல முறை சொல்லிக் கொடுத்தாலும் தப்பு பண்ணிவிடுவார் என்பதால், கொடி மேலே ஏறி கம்பத்தின் உச்சியில் சிக்கிக்கொண்டு பிடிவாதம் பிடிக்காமல் இருக்க, கோவிந்தசாமி அருகே நிற்பான். உண்மையில் பியூன் கோவிந்தசாமி தான் கொடியேற்றுவான். நாயக்கர் அந்த கயிற்றின் ஒரு முனையை அவன் சொல்லிக் கொடுத்தபடி தொட்டுக் கொண்டிருப்பார். கொடி மேலே ஏறும். எல்லோரும் கைகளை பலமாக தட்ட, நாயக்கர் மேலே வாய் பிளந்து பார்ப்பார். கொடி அவிழ்ந்து அதன் உள்ளே சுற்றி வைத்திருந்த   ரோஜா இதழ்கள், சாமந்தி, செண்பகம், நந்தியாவட்டை செவ்வரளி பூக்கள் மேலேஇருந்து அவர் வழுக்கை மண்டையில் விழும்போது ஆனந்தம். 
''இன்று இ ஸ்கோலில் நான் தான் கொடியேற்றினேன்'' என்று எல்லோரிடமும் பஜாரில் சொல்லிக்கொள்வார்''
கொடியை மேலே ஏற்றி கயிற்றை கம்பத்தில் கட்டியதும் எல்லோரும் ''ஜெய் ஹிந்த்'' ''பாரத மாதாக்கு ஜே '' என்று உரக்க சொல்வோம். 
மீனாட்சி டீச்சர் பத்து பெண்களோடு கம்பத்தை சுற்றி நின்று கொண்டு ''தாயின் மணிக்கொடி'' என்று கீச் கீச்சென்று பாடுவாள். சுப்ரமணியஐயர் இந்தியா சுதந்திரம் பெற்று மூன்றாவது வருஷம் என்று எழுதிக்கொண்டு வந்து அதை பார்த்து பேசினார்
 ''நாயக்கர் அய்யா ரெண்டு வார்த்தை சொல்ல வேண்டும் '' என்று ஞாபகப்படுத்தினார்.**
''அதெல்லாம் வாணாமுங்கோ, எல்லாத்துக்கும் வெல்லக்  கட்டி கொணாந்திருக்கேன். வண்டிலே இருக்குது. எடுத்தாந்து தரச்  சொல்லுங்க. வாத்தியார் மார்களுக்கு எல்லாம் சாக்கலேட்  காயிதப் பொட்டலம் கூட கட்டி வச்சிருக்குது வண்டிலே ''
'அப்படி இல்லீங்க ஐயா, தலைவர் நீங்க ரெண்டு வார்த்தை பேசுங்க நாயக்கரே. குழந்தைகள் ஆசையா கேட்குது '' 
 மீனாட்சி அம்மாள் கூறியதை  தொடர்ந்து எல்லோரும் கை தட்ட,    தட்டமுடியாமல் திக்கித் திணறி பேசினார்''
மனப்பாடம் செயது கொண்டு வந்ததை நடு நடுவே  மறந்து விடுபவர்.
''நமது தேசம் இந்தியா. நாம் இன்று சுதந்திரம் அடைந்து விட்டோம். ஆகவே நாம் சுதந்திரமாக வாழுகிறோம். சுதந்திரம் என்பது அப்படியெல்லாம் சுலபமாக கிடைக்காது. ரொம்ப கஷ்டப்படவேண்டும். நம்மால் அதை வாங்க முடியாது என்பதால் தான் பெரிய பெரிய மனிதர்கள் காந்தி நேரு எல்லாம் ஒன்றாக சேர்ந்து  சண்டை போட்டு,  நமக்காக ராவும் பகலும் எங்கெல்லாமோ போய் பேசி கஷ்டப்பட்டு வாங்கிக்கொண்டு வந்து  நமக்கு தந்தார்கள். ஆகையால் தான் சுதந்திரம் வாங்குமுன் இருந்த கஷ்டத்தை விட சுதந்திரம் வாங்கிய பின் நமக்கு இருக்கும் கஷ்டம் ரொம்ப கொஞ்சம் ஆகி விட்டது. ஆகவே தான் சுதந்திரம் ரொம்ப ரொம்ப அவசியம்'' 
ஒரு வழியாக மென்று முழுங்கி, திணறி, தட்டு தடுமாறி உடம்பை எல்லாம் நெளித்து பேசி முடிப்பதற்குள் உடம்பெல்லாம் வியர்த்தது.  விழி பிதுங்கியது. தொண்டை அடைத்துக் கொண்டது.   தோளின்  மேல் போட்டிருந்த துண்டினால் முகத்தை பலமுறை துடைத்துக் கொண்டார் இப்படிப் பேச வேண்டியிருக்கும் என்று தயார் பண்ணிக்க கொண்டு வந்த பேச்சு. என்றாலும் கடைசி நிமிஷம் காலை வாறுகிறதே' 

நாயக்கர்  பேசிய  சுதந்திரம் பற்றி எங்களுக்கு ஒன்றுமே  தெரியாது. பேசியது புரியவில்லை.நின்றுகொண்டே இருந்தோம்.  அவர் பேசியதும் கண்டிப்பாக நாங்கள் எல்லோரும் கைதட்டவேண்டும் என்று கட்டளை இட்டிருந்ததால், உடனே கை தட்டினோம். யாராவது கைதட்டாமல் இருப்பதை பார்த்துவிட்டால் அடுத்த  நாள் சுப்ரமணிய ஐயர் பிரம்பு பேசும். கழுகு  மாதிரி கோவிந்தசாமி பார்த்துக்கொண்டிருப்பான். கூர்ந்து கவனிப்பான். போட்டுக்கொடுத்து விடுவான்.

'ஒருமுறைக்கு மேல் ரெண்டாவது முறை மிட்டாய் கேட்டால் கோவிந்தசாமி கொடுக்க மாட்டான். அவனுக்கு வேண்டிய பசங்களுக்கு மட்டும் ரெண்டுடன் ஒன்று சேர்த்து மூன்றாக கொடுப்பான்.

நாயக்கர் தானே குள்ள மாட்டை  வண்டியில் பூட்டி ஒட்டிக்கொண்டு  பானையில் நீர் மோருடன் சென்று மார்க்கெட்டில் ஆலமரத்தடியில் தண்ணீர்ப்பந்தலில் நீர் மோர் விநியோகம் செய்தார்.

1947ல் நாடு சுதந்திரமடைந்தபோது எனக்கு எட்டரை வயது. சுதந்திரம் என்றால் என்ன என்று தெரியவில்லை. எங்கும் கலர் கலராக வண்ண தோரணம். சுண்ணாம்பு கோடுகள், கேசவ நாயர் டீ கடையில் ரேடியோ பெரிதாக வைத்து கொரகொர சப்தத்தோடு நிறைய வாத்தியங்கள் இசைத்தன. வெள்ளை அடித்த சுவர்கள்.  ஜெ ஹிந்தி,  வந்தே மாதரம்,  நேருஜி வாழ்க காந்திஜி வாழ்க என்ற கூச்சல். தெருவில் நின்று மிட்டாய்கள் கொடுத்தார்கள். நிறைய வெள்ளைக்காரர்கள் மதராஸில் இருந்த காலம். பின்னி கம்பெனியில் வேலை செய்த ஜார்ஜ் பரூச்சி என்ற வெள்ளைக்காரன் நன்றாக் தமிழ் பேசுவான். என்னை  முதுகில் தட்டிக் கொடுத்தான். அவனைக் கண்டபோதெல்லாம் சல்யூட் அடிப்பேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்ச மாக வெள்ளையர்கள் குறைய ஆரம்பித்தார்கள். சுதந்திரம் என்றால் அப்போது விவரம் தெரியவில்லை, 

இப்போதும்  விஷயம்  புரியவில்லை. ஆனால் வருஷங்கள்  76  ஓடிவிட்டது , வயசும் ஏறி விட்டது. பெரிதாக ஒன்றும் வித்யாசம் தெரியாத அன்றாட வாழ்க்கை அப்படியே தொடர்கிறது. கஷ்டங்கள் பழகி விட்டது. 


























sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:42:05 PM8/27/23
to amrith...@googlegroups.com
ஆடி அமாவாசை  -  நங்கநல்லூர்  J K  SIVAN

இந்த  2023  வருஷம்  ஆடிமாசம்  ரெண்டு அமாவாசை. கடைசி அமாவாசை முக்கியமானது. அது இன்று.  ஆடி, 31-ம் திகதி, அதாவது   ஆகஸ்ட்  16ம் தேதி.   நேற்று மத்தியானம்.12.42 மணிக்கு தொடங்கி  இன்று  மத்தியானம்  3.07 வரை அமாவாசை திதி உள்ளது. நமது மூதாதையர்களை போற்றி  தர்ப்பணம்  என்று எள்ளும் நீரும்  மனதில் பக்தியோடு பாசத்தோடு அவர்களுக்கு அர்ப்பணித்து  அவர்களது நித்ய ஆசீர்வாதங்களைப் பெற இன்று தர்ப்பணம் என் தந்தை வழியில், என் அப்பா, என் தாத்தா, கொள்ளு தாத்தா அவர்கள் மனைவிகள், அப்புறம் என் தாய்வழியில் தாத்தா, கொள்ளுத்தாத்தா  வகையறா அவர்களுக்கு  தர்ப்பணம் செய்தேன் . 

தெய்வீக சக்திகள் நம் பிரார்த்தனைகளுக்கு  ஆசி அளிக்கும்  ஆடி மாதம் மிகவும் மங்களகரமானது. ஆடி அமாவாசை தர்ப்பணத்தால் அவர்களின் ஆன்மாக்கள் மோக்ஷம் அடைய நாம் உதவுகிறோம். அது நம் கடமை. 

அமாவாசை  சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் சந்திக்கும் நாள்.   சூரியன் தந்தையையும் ஆன்மாவையும் குறிக்கிறது; அதே சமயம் சந்திரன் தாயையும் மனதையும் குறிக்கிறது. சந்திரனின் ராசியான கடக ராசியை சூரியனும் சந்திரனும் ஆக்கிரமித்திருப்பதால் ஆடி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆடி அமாவாசை அன்று,  மறைந்தவர்களின்  ஆவிகள் பிரசாதங்களை ஏற்றுக்கொள்வதற்கு அதிக விருப்பத்துடன் இருப்பதாகவும், அவர்களின் வாரிசுகள் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது திருப்தி அடைவதாகவும் அறிகிறோம். நம்புகிறோம்.  ஆடி மாதத்தில், சூரியன் தெற்கு நோக்கி தனது இயக்கத்தைத் தொடங்குவதை தக்ஷிணாயனம் என்கிறோம். (தக்ஷிண் என்றால் தெற்கு, அயனா என்றால் பயணம்) 

மகாபாரதத்தில் ஒவ்வொரு மனித ஆன்மாவும் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூன்று முக்கியக் கடன்களுக்குக் கடன்பட்டிருக்கிறது என்று அறிகிறோம்.  அவற்றில் ஒன்று 'பித்ரு ரின்' (முன்னோருக்கு கடன்). தர்ப்பணம் செய்வதன் மூலம்  நிவர்த்தி பண்ணுகிறோம். 

ஆடி அமாவாஸ்யா  தர்ப்பணத்தை   நீர்நிலைகளில் (கடல், குளம், ஆறு அல்லது ஏரி) செய்வது எப்போதும் சிறந்தது. தர்ப்பணம் சடங்கைத் தொடங்குவதற்கு முன், புனித நீர் ஆதாரங்களில் ஸ்நானம் செய்து  அசுத்தங்களிலிருந்து  விடுபடுகிறோம்.   இன்று முக்யமாக  தென்னிந்தியாவின் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் ஏராளமானோர் கூடி தங்கள் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்துவார்கள்.  கன்னியாகுமரியில் உள்ள திரிவேணி சங்கமம் மற்றும் காவிரி ஆற்றங்கரையில் உள்ள பல்வேறு புனித ஸ்தலங்கள் பிரசித்தம். 
ஆடி அமாவாசை  தர்ப்பணம்  என்ன புண்யம் தரும்?
மறைந்த  முன்னோர்களின் ஆன்மாக்களை முக்தி பெற செய்கிறோம். அவர்கள் ஆசியால்   எதிர் 
மறை கர்மாவிலிருந்து விடுதலை பெற்று  வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் பரிசாகப்  பெறலாம். அடுத்த  தலைமுறைக்கு நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.   நான் உங்களுக்கு கருட புராணம் எழுதி வருகிறேன், அதில் எவ்வளவு விஷயங்கள் இதைப் பற்றி வருகிறது ஞாபகம் இருக்கிறதா?  திரும்ப படியுங்கள். புரியும்.  முன்னோர்களுக்கு  திலம் (எள்) மற்றும் நீர் வழங்குவது அவர்களை மகிழ்விப்பதோடு,  நமக்கு  நீண்ட ஆயுள், வெற்றி, சந்ததி, கடன் நிவாரணம் மற்றும் எதிரிகளை அழிக்கும் பலன் கிடைக்கிறத. நம் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்க்க  அவசியம் முன்னோர்களை திருப்திப்படுத்த வேண்டும். 

ஜோசியர்கள் பேசும்  பாஷையில்  சூரியனை  ''பித்ருகாரகன்''  என்றும்  சந்திரனை ''மாத்ருகாரகன்''  என்பார்கள். அமாவாசை அந்த ரெண்டு   ஒரே ராசியில்  ஒண்ணாக சேர்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் நாள். சூரியன்  சந்திரன் இருவரும் நமது  தந்தை தாய் போன்ற  அம்சம்.  எனவே  தந்தை தாய் இல்லாதவர்கள் இவர்களை தந்தை  தாயாக  வணங்குகிறோம் . அன்று  முன்னோர்களை இவர்கள் சேரும் நாளில் த்ரிப்திப் படுத்துகிறோம். ''திருப்தியதா, திருப்தியதா, திருப்தியதா'' என்று  தர்ப்பை மூலமாக அவர்களை ஆவாஹனம் செய்து மனமார,  பக்தியுடன், பாசத்தோடு   மூன்று முறை  எள்ளும் நீரும் விட்டு அவர்கள்  ஆசி பெறுகிறோம்.

சுமங்கலி பெண்கள் கண்டிப்பாக அமாவாசை விரதம் இருக்கக்கூடாது என்று  சொல்வார்கள். பெண்கள் அமாவாசை விரதம் இருப்பதில் சில விதி முறைகள் நிறைந்திருக்கிறது. முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து படைக்க வேண்டும். அவ்வாறு சமைக்கும் காய்கறிகளில்  வெங்காயம்,பூண்டு, முட்டைகோஸ், முள்ளங்கி,  நூல்கோல், போன்ற காய்கறிகளை உபயோகிப்பது வழக்கமில்லை.   ஒரு பெண் என்னிடம் நேற்று மத்தியானம்,   ''இன்னிக்கு  ஆடி அமாவாசை மத்யானமே ஆரம்பிச்சுடும். எங்க வீட்டிலே சைவம்  சாப்பிட வரீங்களா''  என்று கூப்பிட்டாள் .  நான் உபவாசம் விரதம்  பித்ரு   தர்ப்பணம் பண்ணிட்டு   பிரம்ம யஞம்  பண்ணிட்டு அப்புறம் தான்  வீட்டிலே  ஆகாரம்''  என்று சொன்னேன். 

ஜோசியர்கள் அடிக்கடி சொல்வது நினைவிருக்கிறதா?  ''ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைவாக  இருப்பவர்  சுகமாக வாழவேண்டும் என்றால்  அதற்கு உதவுவது  தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான்.   முன்னோர்களை வழிபடுவது தான்   பிதுர் தர்ப்பணம், ஸ்ராத்தம்  ஆகியவை.  தெய்வம், தேவர்களுக்கு அடுத்தபடி  பித்ருக்கள் தான்.  பித்ருலோகம் என்றே ஒன்று தனியாக  இருக்கிறது.  அமாவாசை தினம் பித்ருக்கள் நமது தர்ப்பணத்துக்காக  ஆவலுடன் காத்திருப்பவர்கள்.  நமது பெற்றோர்  பாட்டன் பாட்டி  இறந்த திதி, பக்ஷம் , மாதம்  அறிந்துகொண்டு,  ஒவ்வொரு தமிழ்வருஷமும்   அதே திதியில்  நாம்  பிண்டப்ரதானம்  செய்து  வணங்குவது தான் ஸ்ராத்தம் . இதை செய்வதால்  குடும்பத்தில்  க்ஷேமம் உண்டாகும்.   சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் .
ஒவ்வொரு அமாவாசையும்  செய்யும் தர்ப்பணம்  பித்ருக்களை  மகிழ்வித்து ஆசியை பெற்றுத் தருகிறது.  பித்ருக்களின் இறந்த திதி தெரியாதவர்கள்  ஆடி அமாவாசை அல்லது தை  அமாவாசை அன்று  ஸ்ராத்தம் செய்து  புண்ய பலன்  பெறலாம்.  
சூரியன் தெற்குநோக்கிப் பயணிப்பதை  தக்ஷிணாயன  புண்யகாலம். ஆடி அமாவாசை  ஆரம்பம்.   வட திசையில்   சூரியபயணம்   கடக ராசியில்  சூர்யா சந்திர சந்திப்பு. உத்தராயணம். அப்போது வருவது தை  அமாவாசை  மகர ராசியில்   சூரியனும் சந்திரனும் இணையும்  நாள்.

ஆடி அமாவாசையன்று   கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில்  சமுத்திர ஸ்னானம்  பித்ரு தர்ப்பணம்   சிறப்பாக  நடக்கும்.  ஸ்ராத்தம் ஏற்பாடு செய்வது பித்ருக்கள் ஆசியை பெற அனுகூலமாகும்.   காவிரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கமத்தில், வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை, திருச்சிக்கு அருகி லுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில்  ஸ்னானம் செய்து  ப்ரோஹிதர்கள் உதவியுடன்  பித்ரு தர்ப்பணம் செய்வது  பாரம்பரியம்.

அங்கெல்லாம் செல்ல இயலாதவர்கள்  அருகே உள்ள  ஆறுகள் குளங்களில் ஸ்னானம் செய்து தர்ப்பணம் செய்யலாம். தக்ஷிணாயன ஆடி அமாவாசை வாத்தியாருக்கு சம்பாவனை, தக்ஷிணை கொடுத்து , அன்னதானம் செய்து,   மாற்றுத்திறனாளிகளுக்கு  வஸ்திர தானம் செய்வது  முன்னோர்களுக்கு திருப்தி அளிக்கும்.  நமது தர்ப்பணத்தால் தான் முன்னோர்கள் பாபம் குறையும்.  நமது தர்ப்பணம் பெற  அன்று நம்மைத் தேடி வருகிறார்கள்.  ஆகவே ஸ்ரத்தையுடன் அவர்களை வரவேற்று  திருப்தி படுத்தி  வணங்கி  ஆசி பெறுகிறோம்.   சூரியனை பார்த்துக்கொண்டு கைகளில் காகத்திற்கு வைக்கும் சாதத்தை எடுத்துக்கொண்டு சூரியனைப் பார்த்து பிறகு உங்கள் கைகளில் இருக்கும் அன்னத்தை பார்த்து  கீழே உள்ள  மந்திரத்தை  சொல்லவும்      *ஓம் சர்வ பிண்ட ரட்சகம் பரிபூரண பித்ரு அனுக்கிரகம் நமோ நமஹ*….ஓம்குருவே துணை…. மனதுக்கு திருப்தியாக இருக்கும். 


sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:42:14 PM8/27/23
to amrith...@googlegroups.com
தேனான  வேமனா  -  நங்கநல்லூர்  J K   SIVAN 

பாரத தேசம்  புண்ய பூமி.     இதில் ரிஷிகள் எண்ணற்றவர், தவ முனிவர்கள் பலர், வேத சாஸ்திர விற்பன்னர்கள் அனேகர். கற்றுணர்ந்த பண்டிதர்கள் கணக்கற்றவர்கள். இதில் சேராத, இயற்கையிலேயே ஞானிகளாக உலா வந்தவர்களோ சிலர் தான்.விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள். அவருள் பலரை நாம் முழுதும் அறிந்து கொள்வதற்குள் அவர்கள் மறைந்து விட்டனர்.   அவர்களுக்கிடையே நாம் காணும் ஒரே ஒற்றுமை, அவர்கள் முறைப்படி கல்லாதவர்களோ அல்லது அன்றாட பேச்சு வழக்கிலேயே மிக உன்னத தத்துவங்களை உணர்த்தியவர்களோ, பலன் எதுவும் எதிர்பாராமல் விளம்பரம் தேடாமல், அமைதியாக நம்மில் ஒருவராக வாழ்ந்த வழி காட்டிகளோ  வாழ்ந்தவர்கள் என்பது ஒன்றே தான். அவர்கள் அனைவருமே, பல வேறு மொழிகளில் தமது ஞானத்தை, பொன்மொழிகளை, தத்துவத்தை, சிந்தனை முத்துக்களை நமக்கு ஊட்டியவர்கள்.
இப்படிப் பட்ட ஞானிகளின் வாக்குகள், வாசகங்கள் நம் வாழ்வின் இருளைப் போக்கும் தீபங்கள். இதை ஜப்பானிய மொழியிலோ,இத்தாலி பாஷையிலோ, தமிழிலோ அறிந்தாலும் உண்மை ஒன்றுதானே.. அவர் தான் பக்த வேமனா.
கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு ஆந்திரா என்ற பிரிவினை மனதில் தோன்றுமுன்பு வாழ்ந்த ரெட்டியார் வம்சத்தில் உதித்த பக்த வேமனா ஏறக்குறைய ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் புனைந்தவர் என்பது ஆச்சர்யத்தை தருகிறது

பக்த வேமனா ஒரு தெலுங்கு ரமணர், பட்டினத்தார் எனலாம். 

சந்தர்ப்பம், சூழ்நிலை, தகுதி இல்லாத இடத்தில் மகான்களைப் பற்றி பேசாதே. இத்தகைய இடத்தில் அறிமுகப்படுத் தாததால் மகான்களின் பெருமை குன்றாது. நாலே பேர் கூடினாலும் சத்சங்கம் தான் . அங்கே  நிறைய   வாய் விட்டு மனந்திறந்து  சத் விஷயங்களைப்   பேசலாமே. ஒரு பெரிய மலையைக்கூட ஒரு சிறு மொபைல் டெலிபோன் கேமரா படம் பிடிக்கிறதே. வேமனாவுக்கு மொபைல் தெரியாது. ஒரு தெலுங்கு பாடலில் சிறு கண்ணாடித்துண்டு என்றாலும் அதில் பெரிய மலையின் பிம்பம் தெரியுமே என்கிறார்.

வேமனாவைப் போல் இன்னும் இது போல் எண்ணற்ற தெய்வங்கள் எங்கிருந்தெல்லாமோ எந்தெந்த மொழிகளிலோ நமக்கு தந்ததை எல்லாம் நாம் இழந்து நிற்கிறோம். வெளியே வராதபோது எப்படி அறிந்து கொள்வது. தெரிந்து கொள்வது. புரிந்து கொள்வது. 

வேமனா வார்த்தைகள் எல்லாமே எளிய அன்றாட, கொச்சையான, புரியும்படியான தெலுங்கில், வழக்கில் உள்ளது. லட்சோப லக்ஷம் தெலுங்கர்கள், படித்தவர், படிக்காதவர் அனைவரின் அன்றாட வாழ்க்கையில் பழமொழியாக, வார்த்தைகளாக, சொல்லாக மிளிர்பவை வேமனாவின் சொல்லோவியங்கள்.ஞானஸ்தர்களும் பண்டிதர்களும் கூட கையாள விரும்புவது இவையே. இந்த சிறு சிறு நல்வழிப் பாடல்கள் மக்களைத் திருத்தி இறைவன் பால் வழிகாட்டுபவனவாக இன்றும் நடைமுறையில் உள்ளதே இவற்றின் சிறப்பு .


வேமனாவின்  தனிச்சிறப்பு என்ன தெரியுமா?  சொல்லுங்கள்  என் அருமை தெலுங்கு தெரிந்த, படிக்கத் தெரிந்த நண்பர்களே, எங்கே உங்கள் ஒருவரையும் காணோம். என்னய்யா உங்கள் தத்வ ஞானி வேமனாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட மூச்சு விட வில்லை நீங்கள், ஒன்றுமே சொல்ல மாட்டேன் என்கிறீர்களே ? வேமனா வேறு யாருக்கும் உபதேசம் செய்யவில்லை, என்னடா  வேமா, நான் சொல்வது சரிதானே? என்று ஒவ்வொரு  பாட்டிலும்  கேட்டுக் கொள்கிறார்.  


Atmasuddhi leni acharamadi ela...................ఆత్మశుద్ధి లేని అచారమది ఏల
Bhandasuddhi leni pakamadi ela...................భాండశుద్ధి లేని పాకమేల
Chittasuddi leni sivpujalelara........................చిత్తశుద్ది లేని శివ పూజలేలర
Viswadhaabhiraama, Vinura Vema................విశ్వధాభిరామ, వినుర వేమ

ஆத்மாவில் சுத்தமில்லாமல் ஆச்சாரமாக மடியாக இருந்து என்ன பயன்?  உள்ளம் பூரா  வண்டி அழுக்கை வைத்துக்கொண்டு மேலே  குழாய் நீரில்  குளித்து என்ன பயன். பாத்திரத்தை சுத்தமாக துலக்காமல் பாயசம் அதில் பண்ணி என்ன புண்ணியம்? சித்தத்தை அவன் பாலே வைக்காத சிவன் பூஜையால் யாருக்கு பலன் ?  என்னடா வேமா  நான் சொல்வது சரிதானே! -  வேமனா.

Veshabhashalerigi Kashayavastramul...................వేషభాషలెరిగి ఖాషాయవస్త్రముల్
gattagane mukti galugabodhu...............................గట్టగానె ముక్తి గలుగబోదు
talalu bodulina talapulu bodula.............................తలలు బోడులైన తలపులు బోడులా
Viswadhaabhiraama, Vinrua Vema.......................విశ్వధాభిరామ, వినుర వేమ

வேஷபாஷ லெரிகி காஷயவஸ்த்ரமுல் கட்டகானெ முக்தி கலுகபோது
தலலு போடுல்றுன தலபுலூ போடூலா விஶ்வதாபிராம வினுர வேமா 


வெறும் வேஷம் போட்டுக்கொள்வதால் நீ மதிக்கப்  படமாட்டாய். கதர் சட்டை தொப்பி ஒருவனை  நேரு  
ஆக்காது. 
கதர் வேஷ்டி காமராஜாக்கி விடாது. முண்டாசு  பாரதி ஆக்காது . பேச்சின் தோரணை மாற்றிக் கொண்டதால் நீ உயர்ந்துவிட மாட்டாய். உன் காவியுடையும், மொட்டைத்தலையோ தாடியோ, ஜடாமுடியோ, உனக்கு மோக்ஷத்தை அளிக்காது. உன் எண்ணமும் செயலும் தான் உன் மதிப்பின் எடை கல்.   நான் சொல்வது சரியாடா  வேமா?-  வேமனா.


చంద మెరిగి మాట చక్కగా చెప్పిన ఎవ్వడైన మాట మరికేల పలుకు
చంద మెరింగి యుండు సందర్భ మెరుగుమీ విశ్వదాభిరామ వినుర వేమ.

candam erigi mATa cakkagA ceppina evvaDaina mATa mArikEla paluku
canda meringi yunDu sandarbha merugumI viSvada abhirAma vinura vEma.

யாருக்காவது ஏதாவது மனதில் உறைக்கும்படியாக உபதேசம் பண்ணவேண்டு மானால் அந்த உபதேசம், அறிவுரையானது, எளிமையாக, எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் குட்டியாக இருக்கவேண்டும். அப்போது தான் அவன் ''ஆஹா நான் இதை அறிந்துகொண்டேன். அப்படியே செய்வேன்'' என்று ஏற்றுக்கொள்வான்.    இன்னொரு சமாச்சாரம். நீ யாருக்காவது அறிவுரை வழங்கும்போது அவன் அதை ஏற்றுக்கொள்ள, கேட்டுக்கொள்ளும் மன நிலையில் இருக்கிறானா, சந்தர்ப்ப சூழ்நிலைகள் உச்சிதமாக இருக்கிறதா என்று வேறு பார்க்கவேணும். அவசரமாக ஆபிஸ் லேட்டாகிவிட்டது என்று பஸ்ஸில் ஓடுபவனுக்கு கீதை ஞான யோகம் சொல்லட்டுமா என்றால்....!



sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:42:14 PM8/27/23
to amrith...@googlegroups.com
 ஆபரணதாரி-   நங்கநல்லூர்  J K SIVAN 

முன்பெல்லாம்  திடீரென்று மனதில் ஒரு எண்ணம் தோன்றும்.ஒரு  டூர்  போவோமே  என்று  ப்ளான்  போடுவோம்.  அது ஒருநாளோ,  இரு நாள், மூன்றுநாள், ஆறுநாளோ,  பஸ்ஸிலா , ரயிலிலா,  சிறிதாக  ஒரு  டூரிஸ்டரிலா என்று   யோசித்து முடிவாகி  பிறகு தான் கிளம்புவோம்.  எப்படியும் 15 பேராவது என்னுடன் வருவார்கள். 

சில வருஷங்களுக்கு அப்படி தான்  ஒரு முறை மன்னார்குடியை மையமாக  கொண்டு  அதை சுற்றி உள்ள  ஸ்தலங்களுக்கு  போவது என்று  தீர்மானித்து.  முன்னதாகவே  ரயிலில்  ரிசர்வ் செய்து  ஒரு  நண்பர்கள்  குழாம்  சென்றோம்.  அதைப் பற்றியெல்லாம்  சொல்லப் போவதில்லை.  ஒரே  ஒரு கோவில் பற்றி மட்டும் தான் இப்போது சொல்கிறேன்.

நாகபட்டினம் மாவட்டத்தில் ஆபரண தாரி எனும் ஊரில் உள்ள ஸ்ரீ அனந்த நாராயண பெருமாளை  தரிசிக்கும் பாக்யம் கிடைத்தது.  சிக்கல்  முருகனை தரிசித்து விட்டு  இங்கே  இன்னும் என்னென்ன கோவில்கள் அருகில் இருக்கிறது என்று கேட்டபோது  அர்ச்சகர் மூலம்  தெரிந்து கொண்ட ஆலயம். மிகவும் சிறப்பு வாய்ந்த பெருமாள் கோவில். இந்த கோயிலின் சிறப்பு என்ன தெரியுமா.  

பெருமாளுக்கு சிரத்திலிருந்து  சின்ன கால் விரல் வரை சர்வ ஆபரணங்களையும் அணிவித்து இருக்கிறார்கள்.  அதனால் தான் இவருக்கு  ஆபரண தாரி என்று பெயர். இந்த ஊருக்கே  அவர் பெயர் தந்தார்கள். இந்த பெருமாளின்  ஆபரணங்களை எவராலும் கவர்ந்து செல்ல  முடியாது.  கதவே தேவைஇல்லை. காரணம்  எல்லா நகைகளும் எந்த  கொள்ளைக்காரனும்  திருட முடியாதபடி  கல்லாலேயே  செதுக்கப்பட்டு  பெருமாளின்  அங்கத்தோடு  இணைந்து இருக்கிறது.  ஆபரணதாரி  என்ற  ஊரின் பெயர்  வழக்கம் போல்  காலப்போக்கில்  சுருங்கி  அர்த்தமில்லாதா ஆவராணி என்று  மாறிவிட்டது.

தலை வாயிலைக் கடந்து கோயிலுக்குள் சென்றால் மகா  மண்டபத்திற்குச் செல்லும் முன்புறம் கருடனைக் காண முடியும். சன்னதியில் எழுந்தருளி இருக்கும் இந்த கருடன் வரப்பிரசாதி ஆவார்.

அர்த்த மண்டபத்தின் வலது பக்கம் ஆஞ்சநேயர் உள்ளார். மகா  மண்டபத்தையும், அர்த்த மண்டபத்தையும் தாண்டி உள்ள கர்ப்ப கிரகத்தில் மூலவரான ஸ்ரீ அனந்த நாராயண பெருமாள் அரவணையில் துயில்கொள்ளும் மூர்த்தியாக அருளுகிறார்.

தென் திசை  கிரீடத்தை வைத்துக்கொண்டு  வடக்கு நோக்கி  பாதம் நீட்டியுள்ளார். 21 அடி நீளத்தில் 7ஏழு தலைகள்  கொண்ட  ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ளார் பெருமாள். இங்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த காட்சியை வேறெங்கும் காண முடியாது.

இந்த பெருமாள் அனைத்து ஆபரணங்களையும் அணிந்து கொண்டு இருக்கிறார். அதனால் இவருக்கு ஆபரண தாரி என்கிற பெயரும் வந்தது. அதுவே இந்த ஊரின் பெயராகி பின்னர் ஆவராணி என்று மருவியது.

சயன கோலத்தில் இருக்கும் ஸ்ரீ அனந்த நாராயண பெருமாள் தன்னுடைய ஒரு கையால் தன்னுடைய தலையைத் தாங்கு கிறார். பெருமானுடைய இன்னொரு கை முழங்கால் வரை நீண்டுள்ளது. கன்னங்கரிய வடிவத்திலே தைலக்  காப்புக்குள்ளே இருக்கிறார்.   சிரத்தின் மேல் மணிமகுடம், காதுகளில் குண்டலம், மார்பில்  தோள்களில், புஜத்தில், முன்கையில் என்று பல  மணி மாலைகள்,  ஹாரங்கள்  , உத்தரியம் அணிந்து புஜங்களிலும் தகுந்த அணிகலன்களோடு  காட்சி தருகிறார்.

ஸ்ரீ அனந்த  நாராயண பெருமாளின்  நாபிக் கமலத்திலிருந்து பிரம்மா எழுந்துள்ள கோலத்தையும் காணலாம். கோயிலின் தென் பிரகாரத்தில் தனிச்   சன்னிதியில் ஸ்ரீ அலங்கார வல்லி தாயார் எழுந்தருளியுள்ளார். பட்டாச்சாரியாருடன்  நாங்கள் எல்லோரும் சேர்ந்து திவ்ய தம்பதிகளுக்கு    வேஷ்டி புடவை எடுத்து அனுப்பாலாமா என்று கேட்டோம்.  ஆஹா திவ்யமாக  என்று சொன்னார்.   நங்கநல்லூர்  திரும்பியவுடன்  ஆவராணிக்கு  ஒரு பார்சல் பட்டாச்சாரியார் பெயருக்கு அனுப்பி வந்து சேர்ந்தது என்று அறிவித்தார். 

இக்கோயிலின் அருகிலேயே சற்று வடகிழக்கில் கோயிலுக்கான பெரிய திருக்குளம் உள்ளது. அனந்த புஷ்கரணி என்பது இக்குலத்தின் பெயர். இத்  திருக்குளத்தில் நீராடி நியமங்களை எல்லாம் முடித்துக்கொண்டு, “அச்சுதா, அனந்தா, கோவிந்தா” என்று மூன்று முறை ஜபித்தால் சகல நன்மைகளையும் பெற்று இன்பமாக வாழலாம் என்பது ஐதீகமாகும்.

இக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் சிக்கலுக்குத் தென்மேற்கில் 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:42:24 PM8/27/23
to amrith...@googlegroups.com
தேனான  வேமனா  -  நங்கநல்லூர்  J K   SIVAN 

"Annam ad`ugani atanik Annambu pet`t`ina Paara veeyu daana phalitam eemi?
Dhaniku nakun osamgu Daanambun at`u vale Vis`vada abhi raama Vinura Veema!"

" தொப்புளுக்கு மேல் கஞ்சி இருக்கும் ஆசாமிக்கு ஏன்,  எதற்கு  உனது  அன்ன தானம்?. அது வீண்? . பசித்தவனுக்கு அது சேராமல்,  அதை வெளியே கொட்டி பாழாக்கியதற்கு  அல்லவோ இது சமம் இல்லையாடா  வேமா? -  வேமனா .

Cheppulona rayi chevilona joriga...................చెప్పులోన రాయి చెవిలోన జోరీగ
kantilona nalusu kali mullu.............................కంటిలొన నలుసు కాలి ముల్లు
intilona poru intinta gadaya............................ఇంటిలోన పోరు ఇంతింత గాదయ
Viswadhaabhiraama, Vinura Vema................ విశ్వధాభిరామ, వినుర వేమ

செப்புலோனி ராயி செவிலோனி ஜோரீக³ கண்டிலோனி நலுஸு காலி முல்லு
இண்டிலோனி போரு நின்தின்த கா³த³யா விஶ்வதா³பி⁴ராம வினுர வேம! 

அன்றாட வாழ்வில் எது துன்புறுத்தும்?  செருப்புக்குள் மாட்டிக்கொண்டு காலை உறுத்தும் ஒரு துண்டு கல். காதைச் சுற்றி சுற்றி பறந்துகொண்டு கத்தும் கொசுவோ ஈயோ வேறு  படாத பாடு  படுத்தும்.    கண்ணில் நுழைந்து  நெருடி உறுத்தும் தூசி, காலுக்குள் குத்தி உள்ளே உடைந்து போன ஒரு முள்,  ரொம்ப கஷ்டப்பட்டு  SAFETY PIN  முனையால் குத்தி  வெளியே  எடுப்பதே பெரிய  ஆபரேஷன்  மாதிரி.   வீட்டில் மனைவியோடும் குழந்தைகளோடும் மற்றவரோடும் நீ போட்ட சண்டை. உன்னால் இதையே தாங்கமுடியவில்லையே,   நீ எப்படி மற்றவர்கள் துன்பத்தைத் தீர்க்கபோகிறாய் ? சொல்லடா வேமா? என்கிறார்

Tappulennuvaru Tandopatandambu...................తప్పులెన్నువారు తండోపతండంబు
Lurvi janulakella nundu tappu............................లుర్వి జనులకెల్ల నుండు తప్పు
Tappu lennuvaru tamatappu lerugaru................తప్పు లెన్నువారు తమతప్పు లెరుగరు
Viswadhaabhiraama, Vinura Vema................... విశ్వధాభిరామ, వినుర వేమ

தப்பு லென்னுவாரு தம்டோப தம்டம்பு லுர்வி ஜனுலகெல்ல னும்டு தப்பு
தப்பு லென்னுவாரு தம தப்புலெருகரு விஶ்வதாபிராம வினுர வேம! || 142


உன்னைச் சுற்றிப்பார். எங்கே எதில், எதால் தப்பு கண்டுபிடிக்கலாம் என்று அலைவோரையே தான் பார்க்கிறோம். அவர்கள்  நண்பர்களாகவோ, உறவாகவோ, இருந்தால்  என்ன?    தப்பில்லாதவன் யாரேனும் ஒருவன் உண்டா? மற்றவன் தப்பை எண்ணுகிறவன் தன்னிடம் உள்ள கூடை தப்புகளை ஏன் முதலில்  எண்ணிப்பார்ப்பதில்லை?  ஆஹா இது என்ன வேடிக்கை! யோசித்து பாரடா வேமா என்று தன்னை கேட்டுக்கொள்கிறார் வேமனா..

Inumu virigeneni irumaaru mummaaru...................ఇనుము విరిగెనేని ఇరుమారు ముమ్మారు
kaachi yatakavachu kramamu gaanu......................కాచి యతకవచ్చు క్రమము గాను
manasu virigeneni mari chercharaadaya.................మనసు విరిగెనేని మరి చేర్చరాదయ
Viswadaabhiraama, Vinura Vema.......................... విశ్వధాభిరామ, వినుర వేమ

கனமான பலமுள்ள இரும்பை ரெண்டாக மூன்றாக உடைத்தாய்.   பிறகு அதை நெருப்பிலிட்டு காய்ச்சி ஒன்று சேர்த்து  மீண்டும் ஓட்டவைத்தாய். அட, பழையபடி அது ஒன்றாக பலமாக சேர்ந்துகொண்டதே. ஆனால் ஒரு மனிதனின் மென்மையான மனத்தை உடைத்தாயே, உன்னால் எவ்வளவு முயன்றும் அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடிந்ததா?ஓட்ட முடிந்ததா?  ஒட்டாமல் அவன் வேறே திசை நோக்கி செல்கிறான்..  வேமா இதை முதலில் புரிந்து கொள்ளடா?

Medi pandu chooda melimaiyundu...................మేడి పండు చూడ మేలిమైయుండు
Potta vippi chooda purugulundu......................పొట్ట విప్పి చూడ పురుగులుండు
Pirikivani madibinkamilagura..........................పిరికి వాని మదిని బింకమీలాగురా
Viswadhaabhirama vinura Vema..................... విశ్వధాభిరామ, వినుర వేమ

ஒரு சில பழங்களை உனக்குத்  தெரியும். பார்க்க அழகாக பள பளவென்று நாக்கில் ஜலம் ஊறும் . தின்பதற்கு ஆசையாக இருக்குமே உள்ளே பிரித்துப் பார்த்தால் கூடைப் புழு நெளியுமே. அதைத் தூக்கித்தான் எறியவேண்டும். நீ பார்க்கும் மனிதர்களும் அப்படித்தான். வீரனாக காட்டிக் கொள்பவன் உள்ளே அவன் கோழையாக இருக்கலாம். . தர்மிஷ்டனாக தெரிவான். ஆனால் சொந்தக் காசு ஒரு தம்படி கூட தர  மாட்டான். படு கஞ்சன். பக்திமான் வேஷத்தில் இருந்தும் உள்ளே அவன் ஒரு கிராதகன். வெளிப்பகட்டில் மயங்காதேடா வேமா.  நான் சொல்வது சரிதானே வேமா? -  வேமனா 

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:42:24 PM8/27/23
to amrith...@googlegroups.com

ஸூர்தாஸ்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

கிருஷ்ணா  என்ன சொல்வேன் எப்படி சொல்வேன் ..  

கிருஷ்ணன் கோபியர்கள் கண்ணீர்  வெள்ளத்தில் மிதந்து கொண்டு தான்  மதுராவுக்கு சென்றான்.  எங்கும் சோகம். துயரம்.
நிம்மதியின்மை.  கண்ணன்  மதுராவிற்கு சென்ற நிமிஷத்திலிருந்து  எத்தனையோ புதிய அனுபவங்களை   சந்திக்க நேர்ந்தது. அவன் இனி புதிய கிருஷ்ணன். ஆயர்பாடி, பிருந்தாவன கோகுல கிருஷ்ணன் இல்லை.  கொடிய கம்சனை அழிக்க வந்த  காலன். கம்சன் அவனைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அழிக்கப் பட்டார்கள்.  சிறையிலிருந்த  கம்சனின் தந்தை பழைய ராஜா, வசுதேவர் தேவகி ஆகியோர்  மீட்கப்பட்டார்கள்.  கம்சனின்  ஆதரவாளர்களை, உறவினர்களை எதிர்த்து  வெல்ல, கொல்ல  வேண்டியிருந்தது. அடுத்ததாக  மதுராபுரி அரசனாக முடி சூட்டிக்கொள்ள வேண்டும். அதற்கிடையில் பழைய ராஜாவையே மீண்டும்  அரசனாக்கி  கிருஷ்ணன்  பலராமன் கல்வி கற்க சென்றுவிட்டார்கள்.  அதுவும் முடிந்து மீண்டும் துவாரகைக்கு ராஜ்ய அரண்மனையை மாற்றினார்கள்.  இதற்கெல்லாம் நடுவே  கிருஷ்ணனுக்கு பிருந்தாவன நினைவும்  இருந்தது. தனது உறவினனும் சீடனுமான உத்தவ ரிஷியை  அழைத்து விவரமாக  அவர்  எப்படி  பிரிந்தா வனத்துக்குப்  போகவேண்டும், யார்  யாரை எல்லாம் சந்தித்து கோபியர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி  கிருஷ்ணன் எவ்வளவு முக்கியமான ராஜ்ய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான், இருந்தாலும் உங்கள் யாரையும் அவன் மறக்கவில்லை, மறக்கவே முடியாது, மீண்டும் ஒருநாள் அவர்களை வந்து நேரில் சந்திப்பான். கண்ணன் சௌகர்யமாக இருக்கிறான், சந்தோஷமாக இருக்கிறான், உங்களோடு  சேர்ந்திருக்க இயலாமை ஒன்று தான் அவனுக்கு பெரிய வருத்தம் என்று சொல்லுங்கள்'' என்று  ஆறுதல் சொல்லுமாறு கூறி அனுப்பினான். உத்தவர் பிருந்தாவனம் சென்றார். ராதை, யசோதை, நந்தகோபன், மற்றும் கண்ணன் நண்பர்கள், கோப கோபியர்கள் அனைவரையும் சந்தித்து கண்ணன் சொல்லியவாறே அவர்களுக்கு  ஆறுதல் சொல்லி கண்ணன் சொன்ன சேதியையும் கூறினார்.

ஒட்டுமொத்தமாக  கோபியர் அனைவரும் கண்ணன் கல்நெஞ்சன் என்று கருதினார்கள், தங்களது அன்பையும் பாசத்தையும் நேசத்தையும் அறவே  மறந்துவிட்டான், என்று வருந்தினார்கள்.  எங்களையும்  எங்கள் நலத்தையும் எப்போதும் மனதில்கொண்டவன் என்று நினைத்தோம். ஏமாந்தோம், இரும்புக்கு  தங்க போலிஷ் போட்டால் அது அழுத்தி தேய்த்தல் இரும்பு தன்னுடைய  கருப்பு கலரை காட்டுமோ அது போல் நடந்து கொண்டான்.  கிருஷ்ணன் பிரிந்தாவனத்தையே  தனது இதயத்திலிருந்து அகற்றி விட்டான்.  எங்கள் நினைவே, பிருந்தாவன நினைவே இல்லாமல் போகிவிட்டது அவனுக்கு. வஞ்சகன் கண்ணன். யாதவ குலத்தவன் அல்லவா, பாலைக்  கறந்து தானே  பழக்கம்.  எங்கள் அன்பை எங்களிடமிருந்து பறித்துக் கொண்டவன், திருப்பிக் கொடுப்பானா?  ராதை இவ்வாறு பித்து பிடித்தவள் போல் கதறினாள். கைகளை உதறினாள். ஆனால் கண்ணனை  நாங்கள்  விடவில்லை   எங்கும் இங்கே கண்ணனை காண்கிறோம், அவனோடு  ஆனந்தமாக இருக்கிறோம் என்று சொல் அவனிடம்.  அவன் வரவேண்டாம். அவன் தான் இங்கிருந்தே போகவில்லையே, எப்படி வரமுடியும்?  என்கிறார்கள் கோபியர்கள்.

உத்தவருக்கு பிருந்தாவன விஜயம் ஒரு பாடம் கற்பித்தது. எப்படி ஒரு மனிதன் அனைவரின் இதயத்திலும் இடம் பெற முடியும் என்று புரிந்தது. எப்படி அளவற்ற பாசம் நேசம் எல்லாம் ஒரு ஊரே திரண்டு ஒருவன் மேல் வைத்தது என்று அடிநெஹார். வயது வித்தியாசமில்லாமல் அனைவருக்கும்  அவரவர்கள் விரும்பிய வகையில் எப்படி கண்ணனால்   சந்தோஷப்படுத்த முடிந்தது என்று புரியாத புதிராக இருந்தது.  

''ப்ரபோ, மாதவா,  உங்கள் சொற்படி பிருந்தாவனம் சென்றேன்.அனைவரையும் பார்த்தேன், உங்கள் சேதி சொன்னேன். 
என்ன  சொல்வேன், எப்படி சொல்வேன், எனக்கு இப்படி ஒரு அருமையான அனுபவத்தை உபதேசத்தை அருளிய கிருஷ்ணா  உன்னடிமை நான் என்றும். உன்னிடம் உபதேசம் வேண்டும் என்று கேட்டபோது நீ முதலில் பிருந்தாவன் சென்று வா என்று சொன்னாயே அதுவே எனக்கு உபதேசம் பெறவே  என்று இப்போது தான் உணர்கிறேன்.பரம  திருப்தி எனக்கு. 
கோபர்களும் கோபியர்களும்  கிருஷ்ணா  எனக்கு சொல்லிக்கொடுத்தார்களே  அது தான் சிறந்த வேதாந்த உபதேசம். 
தெய்வத்தோடு வாழ்ந்தவர்கள் தெய்வத்தை பூஜித்தவர்கள் எப்படி நேசம் கொண்டவர்கள் பாசம் கொண்டவர்கள் என்று உணர்ந்தேன். உன்பிரிவாற்றாமை  அவர்களை எப்படி   வாடச்  செய்கிறது என்ற  உண்மை அறிந்தேன். சகல புராணங்களையும் அவர்கள் எனக்கு கற்பித்தார்கள் என்று தான் தோன்றுகிறது.  நீ அகலவில்லை அவர்களை விட்டு அங்கேயே அப்போதும் அவர்களுடன் வாழ்வதாக தான் அவர்கள் மனதை தேற்றிக்கொண்டு அந்த சந்தோஷத்தில் வாழ்கிறார்கள்.. நீ அமரன் கிருஷ்ணா, எங்கும் இருப்பவன், சர்வ வியாபி''

ஸூர்தாஸ் இந்த கவிதையில் நேரில் இருந்து பார்த்தது போல் இந்த காட்சியை எளிய வார்த்தைகளில் சொல்கிறார். அவர் முடிக்கும்போது  இப்படி  உத்தவ ரிஷி சொன்ன வார்த்தைகளைக் கண்ணன்   குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தான். அவனையறியாமல் அவன் கண்களிலிருந்து ஆனந்த பாஷ்பம் விழியோரங்களில் வழிந்தது என்று அற்புதமாக பாடலை நிறைவு செய்கிறார்.  ஒரிஜினல் ஹிந்தி பாடல் கிடைக்கவில்லை, யாரோ எழுதியிருந்த  ஆங்கில வார்த்தைகளை பின்னலிட்டேன். 

Look, look at the love of Madhu’s Foe
Like rubbed off golden polish
his deception becomes apparent.
We thought Hari had
our welfare in his heart.
The real truth was something else.
Completely forgetting the memory of
Braj.
How cruelly, how heartlessly does he tarry.
He is really a milksellerby caste
Can he know how to love?
The woman, separated from Hari
deranged in mind
Laments, wringing her hands.

0 Madhava, I am satiated.
You contrived to send me to Braj
with your message.
Pardon my words.
1 do entreat you,
to hear about gopxs’ condition
the essence of Vedas and Puranas
they told me, in easy graspable words.
Neither Shruti, nor Shesh, nor Shiva or Creator
of the Universe: Brahma,
has sung the way as the gopis sang about you.
Sur says, hearing this, Shyam’s beautiful eyes
overflowed with tears.

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:42:24 PM8/27/23
to amrith...@googlegroups.com

ஸ்ரீ  லலிதாம்பா  தியான ஸ்லோகம்.


இன்று  ஆவணி  வெள்ளிக்கிழமை  முதல் நாள்.   அம்பாளை ஒரு சில  நிமிஷங்கள் மனதில் நினைப்போம்.


ஸ்ரீலலிதாம்பிகையை  ஸஹஸ்ர  நாமங்களால்  ஸ்தோத்ரிக்கும் முன்னால் அவளை மனதில் நிறுத்தி த்யானம் பண்ணவேண்டும்   ஒரு நாலு அற்புதமான ஸ்லோகங்கள் அதற்காக  இருக்கிறதே. அதைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.

  

 
सिन्दूरारुण विग्रहां त्रिनयनां माणिक्यमौलि स्फुरत्  तारा नायक शेखरां स्मितमुखी मापीन वक्षोरुहाम् ।वक्षोरुहाम्
पाणिभ्यामलिपूर्ण रत्न चषकं रक्तोत्पलं बिभ्रतीं सौम्यां रत्न घटस्थ रक्तचरणां ध्यायेत् परामम्बिकाम् ध्यायेत् ॥परामम्बिकाम्

Sindhuraruna vigraham trinayanam manikya mouli spurath  Thara Nayaga sekaram smitha mukhi mapina vakshoruham,
Panibhayam alipoorna ratna chashakam rakthothpalam vibhrathim, Soumyam ratna gatastha raktha charanam, dhyayeth paramambikam.

ஸிந்தூராருணவிக்ரஹாம் த்ரிநயனாம் மாணிக்யமௌலிஸ்புரத் தாராநாயக ஷேகராம் ஸ்மிதமுகீமாபீனவக்ஷோருஹாம் |
பாணிப்யா மலிபூர்ணரத்னசஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம் ஸௌம்யாம் ரத்னகடஸ்த ரக்தசரணாம் த்யாயேத் பராமம்பிகாம் ||

தேவர்கள் பண்டாசுரனின் கொடுமைகளால் அவதியுற்று பார்வதி  தேவியிடம் சென்று வேண்டுகிறார்கள்.   எவ்வளவு தான் அப்பா சக்தி உள்ளவராக இருந்தாலும், துன்பத்திலோ இன்பத்திலோ  நாம் உச்சரிக்கும் முதல் வார்த்தை ''அம்மா ''  தானே.  அவள் இந்த லோக நாயகி.  அவளிடம் அல்லவோ நம் குறைகளை சொல்லவேண்டும். குழந்தைகள் தாயிடம் தானே முறையிடும்..

அவள் அக்னியில் உதயமாகி   அணிமா ,மஹிமா முதலான சக்திகள் உருவம் பெற்று,   ப்ராஹ்மி,கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, மஹேந்திரி ,சாமுண்டி, மஹாலக்ஷ்மி என பலவாகிறாள். தேவர்கள் குறை தவிர்க்கிறாள்.  பண்டாசுரன் பாசுபதாஸ்திரத்தால் வதம் செய்யப்படுகிறான் என்கிறது புராணம்.  ஸ்ரீ ,மஹா திரிபுரசுந்தரி, உனது ஸ்ரீ  லலிதா யந்த்ரம் எனும் சக்ரமஹிமை தியானம் செய்பவர்களுக்கு உலகறிந்த உண்மை  ஆதி சங்கரர்  சௌந்தர்ய லஹரியில்  எல்லையில்லாமல் இதை விவரிக்கிறார். லலிதா த்ரிசதி எனும் முன்னூறு நாமங்களும் ,லலிதா சஹஸ்ரநாமம் எனும் ஆயிர நாமங்களை  ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு  எடுத்துச் சொல்வது போல் அமைந்தவை. 


     
अरुणां करुणातरङ्गिताक्षीं धृतपाशाङ्कुशपुष्पबाणचापाम् । अणिमादिभिरावृतां मयुखैः अहमित्येव विभावये भवानीम्

Arunam Karuna Tarangitaksim Dhrta Pasankusa Puspa banacapam Animadibhiravrtam Mayukhairahamityeva Vibhavaye bhavanim

அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம் த்ருதபாஷாங்குஷ புஷ்பபாணசாபாம்அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை: அஹமித்யேவ விபாவயே பவாநீம் ||

உன்னை நினைக்கையில்  அம்பா,  பவானி  , உன் உருவம்  உதய சூரியனின் தக தக வென ஜொலிக்கும் பொன் வண்ணமாக அல்லவோ தோன்றுகிறது.    உனது நேத்ரங்கள், கண்களா  கருணை நிறைந்த கடலா? காருண்ய சாகரம் என்பதை இதைத்தானோ? அடடா,   உன் வில் உன்னைப்போல்  கரும்பால் ஆன  'இனிய'  தண்டனை வழங்கும் ஆயுதமா? மலர்கள்  தான் கூரான அம்புகளா?  பாச அங்குசம் தரித்தவளே . புண்ய புருஷர்கள் பக்தர்களாக புடை சூழ அருள்பவளே  ''எல்லாம்  நான் '' என்பது நீ தானோ?.


ध्यायेत्पद्मासनस्थां विकसितवदनां पद्मपत्रायताक्षीं, हेमाभां पीतवस्त्रां करकलितलसद्धेमपद्मां वराङ्गीम् । सर्वालङ्कारयुक्तां सततमभयदां भक्तनम्रां भवानीं,  श्रीविद्यां शान्तमूर्तिं सकलसुरनुतां सर्वसम्पत्प्रदात्रीम्

 Dhyayet Padmasanastham vikasitavadanam Padmapatrayataksheem Hemabhaam peetavastram Karakalitalasaddhemapadmam varangeem.
   
த்யாயேத் பத்மாஸநஸ்தாம் விகஸித வதநாம் பத்ம பத்ராயதாக்ஷீம் ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலிதலஸத்தேம பத்மாம் வராங்கீம் |
ஸர்வாலங்கார - யுக்தாம் ஸததமபய தாம் பக்தநம்ராம் பவாநீம் ஸ்ரீ வித்யாம் சாந்தமூர்த்திம் ஸகலஸுரநுதாம் ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ||

அம்பா என்று சொல்லட்டுமா, அம்மா  என்று சொல்லட்டுமா? அம்மா என்று சொன்னாலே  நாவுக்கு இனிமையாக இருக்கிறது. அப்படியே சொல்கிறேன்.    உன்னை  நான்  தெய்வமாக தியானிக்க  நீ உகந்தவள்.  தாமரை மலர்மேல் அமர்ந்தவள்.  உன் கண்களும் தாமரை இதழ்கள் என்பதால் தாமரை மலர் தான் உட்கார்ந்திருக்கிறதோ என்று  தோன்றுகிறது.  பொன்மயமான ஒளி வீசுபவள்.  கையில் தாமரை மலர்கள் .. நீ செந்தாமரை..  உன்னை சரணடைந்தால்   மனதில் தோன்றும் பயம் அகற்றுகிறாய்.  அமைதியின் உருவமான நீ  அறிவின் சிகரமாகவும் திகழ்கிறாயே. ஞானாம்பிகை. அதனால் அல்லவோ தேவாதி தேவர்கள் உன் திருவடி சரணம் என்று வணங்குகிறார்கள். வேண்டும் வரம் அளிப்பவள் நீ.


அம்மா ஸ்புடம் போட்ட பொன் போல ஜொலிக்கும் ஸ்ரீ வித்யாவாகிய, லலிதாம்பிகே, சிவந்த உடை உடுத்த, அமைதி தவழும் புன்னகை பூத்த திவ்ய முகத்தாளே , தாமரை ஆசனத்தில் அமர்ந்த மாதா, தாமரை போல் மலர்ந்த உருண்ட கருணை விழி கொண்ட ஜகன்மாதா, தங்கத்தாமரை கரத்திலேந்தியவளே, பக்தர் விரும்புவதெல்லாம் அருளும் பவானி, சகல லோக ரக்ஷகி, பக்தர்களை கனிவோடு காப்பவளே, சர்வ தேவாதி தேவர்களும் தொழும் தாயே, தயாளு, செல்வங்களை  வளங்களை,  வாரி வழங்கும் உன்னை மனதார பிரார்த்திக்கிறேன், தியானிக்கிறேன்


सकुङ्कुमविलेपनामलिकचुम्बिकस्तूरिकां, समन्दहसितेक्षणां सशरचापपाशाङ्कुशाम् । अशेषजनमोहिनीमरुणमाल्यभूषाम्बरां, जपाकुसुमभासुरां जपविधौ स्मरेदम्बिकाम्

 Sakumkuma vilepanam malikachumbikastoorikam Samandahasitekshanam sasharachapa pashankusham.
Ashesha jana mohineem arunamalya bhooshambaram Japakusumabhasuram japavidhou smaredambikam.
     
ஸகுங்குமவிலேபநா - மளிகசும்பி - கஸ்தூரிகாம் ஸமந்த - ஹஸிதேக்ஷணாம் ஸசரசாப பாஸாங்குஸாம் | அசேஷஜநமோஹிநீ - மருணமால்ய பூஷாம்பராம் ஜபாகுஸும - பாஸுராம் ஜபவிதௌ ஸ்மரேதம்பிகாம் ||

 

நாம் யாரை விடாமல் தொழவேண்டும் தெரியுமா? யார் தனது தேகத்தில் குங்குமத்தை குழைத்து பூசியிருப்பவளோ, வண்டுகள் சுற்றி வாசம் பெரும் கஸ்தூரியை கமகமவென தரித்திருப்பவளோ, எல்லாவற்றையும் மிஞ்சும் காந்த புன்னகை கொண்டவளோ, கரும்பு வில்லை, மலரம்புகளையும், பாசாங்குசமும் ஏந்தியவளோ, சகல ஜீவன்களையும் கவர்ந்தவளோ, செம்மலர்மாலை அணிந்தவளோ, ஈடிணையற்ற ஆபரணதாரியோ, செவ்விதழ் மலரை ஒத்த நிறத்தவளோ,அம்மா, லலிதாம்பிகே உன்னை சரணடைந்து அருள் வேண்டி பிரார்த்திக்கிறேன்.


''
யோகிகள், முனிவர்கள் ரிஷிகள்  ஏன்  காவி வஸ்திரம் அணிகிறார்கள்?  அது  ஸ்ரீ லலிதாம்பி கையின் மேனியின் நிறம்.  சர்வ சக்தி வாய்ந்ததல்லவா?  சிவனோடு ஐக்யமானவள் முக்கண்ணியாக காட்சியளிப்பதில் என்ன ஆச்சர்யம்?  நவரத்ன மகுடம் தரித்தவள்.  பிறைச் சந்திரன் சூடியவள். சிவை அல்லவா? சதாகாலமும் அனைத்து உள்ளங்களையும்  காந்தமென கவரும் புன்னகை முகத்தாள் . பெண்மையின் இலக்கணம். சிவந்த மலர்களை ஏந்திய கரமுடையாள்.  சாந்த ஸ்வரூபி;  கருணைக்கடல். சிவந்த பாதங்களை  நவரத்ன பீடத்தில் இருத்தி தரிசனம் தருபவள்.  ஸ்ரீ லலிதா உனக்கு நமஸ்காரம் தேவி.


பராசக்தி எவ்வளவு அழகாக  குங்குமம் தரித்துக் கொண்டிருக்கிறாள்.  நெற்றிக்கு கும்குமம்  ஒரு தனி அழகு.    எத்தனையோ குங்கும நெற்றிகள் என் மனக்கண்ணில் தோன்றுகிறதுநெற்றியில் பெரிய விக்டோரியா ராணி கால வெள்ளி ரூபாய் மாதிரி குங்கும பொட்டு ,மஞ்சள் பூசிய முகம், வகிட்டில் குங்குமம் தொங்க தொங்க தாலி, மடிசார், மூக்குத்தி, காதில் ரெண்டுபக்கமும் பெரிய தோடு வயதான சுமங்கலி மாமிகள்  நிறைய பேரை பார்த்து வணங்கி இருக்கிறேன். அவர்கள் கையால்  சாப்பிட்டிருக்கிறேன்அந்த உணவுக்கே ஒரு தெய்வீக ருசி.   லலிதாம்பிகை  அப்படித்தான் நெற்றியில் பளிச்சென்று குங்குமம் தரித்தவள். இனிய முகத்திற்கு எடுப்பான சிவப்புஅதற்கு அழகு மெருகேற்றும்  புன்சிரிப்பு. நெற்றி புருவத்தில் வளைந்த அழகிய வில், கையிலும் கரும்பு வில் புஷ்ப அஸ்திரங்கள்செந்நிற மலர் மாலைகள்  மாணிக்கம் ஒளிவீசும்  ஆபரணங்கள்அவள் ஒரு அழகிய செவ்வந்திப்பூ. கண்டாலே கண்மூடி ஜபம் செய்ய தூண்டுபவள். ஜபத்தால் கண்முன் நிறைபவள்.

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:42:35 PM8/27/23
to amrith...@googlegroups.com
 

பூஜ்ய ஸ்ரீ ராம் சுரத் குமார்  -    நங்கநல்லூர்   J  K SIVAN

ஒரு எளிய ஞானி

நமது பாரத தேசம் புண்ய பூமி என்பதற்கு ஒரே உதாரணம் இங்கு தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை கிழக்கே வங்காளத்திலிருந்து மேற்கே குஜராத் வரை எண்ணற்ற யோகிகள், மஹான்கள், ரிஷிகள், முனிவர்கள், தவசிகள்,  விடாமல் ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலும் கூட  ஆங்காங்கே அவதரித்து  மக்களை நல்வழிப்படுத்துகிறார்கள். இதற்கு தான் எத்தனை  இடையூறுகள், இடைஞ்சல்கள்!  அது அத்தனையும் தூசு போல் தட்டிவிட்டு ஹிந்து  சனாதன தர்மம் வளர்ந்து கொண்டு தான் வருகிறது. எதாலும் அதை அழிக்க முடியாது.  

1918 டிசம்பர் 1ம் தேதிஅவதரித்து,  2001, பெப்ரவரி மாதம் 20ம் நாள் சமாதி அடைந்த  விசிறி சாமியாருக்கு உலகமுழுதும் பக்தர்கள்  இருக்கிறார்கள். இந்த  மஹான் வாழ்ந்த காலம்  82-83 வருஷங்கள்.    பிறந்தது வடக்கே காசி அருகே  நார்தாரா  லால்கஞ்ஜ் எனும் ஊரில்.மறைந்தது திருவண்ணாமலையில்.

கையில் விசிறி,  வெண்தாடி, பச்சை தலைப்பாகை, கண்களில் ஆனந்தமான  கருணை.  உள்ளத்தில் உள்ள  உறுதியை  பற்றற்ற நிலையைப்  பாங்காக காட்டும் நீண்ட  நாசி.  அதன் அடியில் ஒரு ராஜா  மீசை. அதிகம் பேசாத உதடுகள். கழுத்தில் மணி  மலர்  மாலைகள், ருத்ராக்ஷம்.  நீண்ட  சுருக்கமான  அங்கி, அதன் மேல் யோக வேஷ்டி.. வெறும் கால், காலணி  இல்லாமல் இருக்கும்  படம் ஒன்று பார்த்தேன்.  அற்புதமான மஹான். 

ஊரும் உலகமும் அவரை அன்பின்   இருப்பிடமாக, ஆதரவு தரும்  அடைக்கலமாக அடையாளம் கண்டுகொண்டது விசிறி சாமியார் என்ற பெயரில் தான்.  இந்திய  கண்டம் முழுதும்  1952 லிருந்து  1959 வரை  நடந்தே   விஜயம் செய்தவர். கடைசியில் திருவண்ணாமலை ஒன்றே  சிறந்த உன்னத யோகிகள் தவம் செய்யும் க்ஷேத்ரமாக கொண்டு  வாழ்ந்தவர்.  உடை,உணவு, இருக்க இடம்  தேடாமல்  மரத்தடி, குளக்கரை, கோவில் கடைகள் வாசல் ரயில்வே பிளேட்பார்ம் என்று  வாழ்ந்தவர்.  கிடைத்தபோது கிடைத்ததை  உண்டவர். அருணாச்சலேஸ்வரர் ஆலய கிரிவலம் செய்பவர். தன்னை பிச்சைக்காரன் என்று எப்போதும் அறிமுகப்படுத்திக் கொள்பவர். 

அவருடைய ஒரே  நண்பன்  ''சாய் பாபா'' என்று அவர் பெயர் வைத்த  ஒரு நாய்.  1977ல் ஒரு  பக்தர் ஒரு வீட்டை   அருணாச
லேஸ்வரர்  கோவில் அருகே,  சன்னதி தெருவில் ஏற்பாடு பண்ணி கொடுத்தார். அங்கே வந்து  பக்தர்கள் அவரை தரிசித் தனர்.  பகவானை எந்த ரூபத்தில், நாமத்திலும் வணங்கு அது தான் முக்கியம் என்பவர்.  மழை பெய்யும்போது நாம் வேலை செய்யாமலா இருக்கிறோம். குடை பிடித்துக்  கொண்டு வேலை செயகிறோம், அதுபோல் வாழ்க்கையில் சோதனைகள், கஷ்டங்கள் விடாமல் இருந்து கொண்டு தான் இருக்கும். பகவான் நாமா ஒன்று தான் ந மக்கு குடை.  இந்த பிச்சைக்காரன் அதை தான் உங்களுக்கு விடாமல் சொல்பவன்.    

''அப்பா, இங்கு வந்துள்ள  அனைவரையும் காப்பாற்று. க்ஷேமமாக  வை'' என்று முறையிடுபவன்.  அருணாசலேஸ்வரர் தான் ந மக்கு அப்பா. அவனை வேண்டு. கைவிட மாட்டான்  கனகசபேசன்.  விசிறி சாமியார் என்ற பக்தர்கள் அழைத்த பெயர் நிலைத்து,  ராம் சுரத் குமார் என்ற இயற்  பெயர்  மங்கிவிட்டது. சமாதி அடையும் வரை   திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து மக்களுக்கு பக்தி நெறியும், ஞான யோகத்தையும் ஊட்டியவர். அரவிந்தர், ரமண மகரிஷி,  காஞ்சி மஹா பெரியவா ஆகியவர்களை குருவாக கொண்டவர்.

 சின்ன வயசிலேயே யோகிகளையும், துறவிகளையும் சந்திப்பதில் மிகுந்த ஆவல் கொண்டவர். காசியில் ஓடும் கங்கை ஆற்றங்கரையில் உலாவுவதும், அங்கு குடிசையில் வாழும் யோகிகள், துறவிகள் மற்றும் சந்நியாசிகளிடம் நட்புடன் பழகுவதுமாக காலம் கழித்தவர்.   வளர்ந்த பின்பு இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும் ஆன்மிகப் பசியுடன் குருவைத் தேடியலைந்து, ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், ரமண மகரிஷியின் ஆசிரமத்திற்கும் அடிக்கடி சென்று அம்மகான்களை தரிசித்து ஞான யோகத்தையும் தவத்தையும் கற்றார். பின்னர் கேரளாவில் உள்ள சுவாமி இராமதாசரின் ஆசிரமத்திற்கு சென்று பக்தி யோகத்தை கற்றார்.

ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து ஞானத்தையும், ரமண மகரிஷியிடமிருந்து தவத்தையும், சுவாமி இராம தாசரிடமிருந்து பக்தி நெறியையும் கேட்டுத் தெளிந்தார். குரு இராமதாசரிடமிருந்து “ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்” எனும் மந்திர தீட்சை பெற்றார். யோகி ராம்சுரத்குமார் இறக்கும் வரை இந்த மந்திர ஜபம் ஒன்றே தான்.  

எப்போதும் கவலையே இல்லாத சிரித்த முகம்.  யார் இதைக் கொடுத்தாலும்  தன்னிடம் உள்ள   கொட்டாங்கச்சி கப்பரையில்  பெற்றுக் கொள்வார்.  ஆங்கிலம், தமிழ் எல்லா மொழிகளும் பேசுவார். 

மஹா பெரியவா விசிறி சாமியார் பற்றி  சொன்னது:

''பச்சை தலப்பா,  தாடி, கையில் விசிறி, -- ரமண பக்தரான இந்த யோகி ஒரு உயர்ந்த மஹான், ரமணரின் கருத்துகள், சித்தாந்தத்தை ஆத்ம ஞானத்தை தொடர்ந்து மக்களிடையே ரமணருக்குப் பிறகு பரப்ப தோன்றியவர்''

 விசிறி சாமியார்   மஹா பெரியவா பற்றி பேசும் போதெல்லாம்  சொன்னது:

 'இந்த உலகமே அந்த மஹா பெரியவருக்கு கடமை பட்டிருக்கு'. நமது வேதங்கள், பண்பாடு, சாஸ்திரங்கள் பக்தி உணர்வு இதெல்லாம் பாதுகாத்து தறுவதற்காகவே பிறந்தவர் '

\யோகி  ராம்சுரத் குமார் எனும் விசிறி சாமியாரின்  திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில் அவர் அனுமதித்த முதல் படம் மஹா பெரியவா  காஞ்சி  பரமாச்சார்யருடையது. அவர் படத்தின் முன்பு ஏற்றப்பட்ட விளக்கும் என்றும் எரிந்துகொண்டே இருக்கவேண்டும் என்பார். இன்றும் அவ்வாறே அந்த தீபம் ஒளி தந்து கொண்டிருக்கிறது.  

ஒரு ஸ்வாரஸ்ய சம்பவம் சொல்கிறேன்:
காஞ்சி மடத்தில் இருந்த ஸ்ரீ சந்த்ரமௌளி என்பவர் ஒரு தடவை மஹா பெரியவாளிடம் ' எனக்கு திருவண்ணாமலை சென்று யோகியை தரிசனம் செய்து வர பெரியவா அனுமதி தர வேண்டுகிறேன் '' என்கிறார்
''இப்போ வேண்டாம் ''
மறுநாள் யோகிக்கு ஜென்ம தினம். அன்று காலை ஏகாம்பரேஸ்வரருக்கு விசேஷ பூஜை அபிஷேகம் ஹோமம் எல்லாம் ஏற்பாடு பெரியவா பண்ணி இருந்தார்.சந்திரமௌளி யை கூப்பிட்டார்:  

 '' நீ  இப்போ கிளம்பு, திருவண்ணாமலைக்கு போய் யோகி  ராம்சுரத்குமார்  கிட்ட ஏகாம்பரேஸ்வரர் விசேஷ பூஜை, அபிஷேக பிரசாதம்  என்று சொல்லி இதைக் கொடு''   என்று  அபிஷேக பிரசாதம் கொடுத்தனுப்பினார். 
இந்த சம்பவத்தை ஞாபகம் வைத்துக்கொண்டு  விசிறி சாமியார் '' இந்த பிச்சைக்காரன் மேல் பரமாச்சார்யாவுக்கு எவ்வளவு காருண்யம், தயை'' என்பார்.

ஒரு தடவை  மஹா பெரியவா,   ''சந்திரமௌளி , ஐநூறு ரூபாயை மடத்தில் ஆபிஸ் லே கேட்டு வாங்கிண்டு திருவண் ணாமலைக்குப்  போ. யோகியை அங்கிருந்து ஒரு டாக்சியில் அழைச்சுண்டு கோவிந்தபுரம் ஸ்ரீ போதேந்திரா அதிஷ்டானம் போ. அங்கே யோகியை சில மணி நேரம் நான் தியானம் பண்ண சொன்னேன்னு சொல்லு . அப்புறம் அவரை திருவண்ணாமலையில் கொண்டு விட்டுட்டு வா ''.

சந்திரமௌளி திருவண்ணாமலை சென்றபோது யோகியின்  ஆஸ்ரமத்தில் யாரோ ஒரு டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜ் அவர் மகளோடு அங்கே யோகியை தரிசிக்க வந்திருந்தார். யோகி எப்போதும் ''எனக்கு தெரிந்தது ஒண்ணே ஒண்ணு தான். '' ராம் ராம்'' அது தான் எல்லாமே. விடாமல் நாள் முழுதும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். என் குரு எனக்கு அதை தான் உபதேசித் தார். '' என்பார். சில பேருக்கு வேண்டுமானால் இதில் இதில் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் பலர் இதை அனுபவித்தி ருக்கிறார்கள். கோவிந்தபுரத்தில் போதேந்திர ஸரஸ்வதி அதிஷ்டானத்தில் ராம நாமம் இரவு பகலாக3 எப்போதும் ஒலித் துக்கொண்டே இருக்கும்.

''அப்பா அப்பா என்று குருவை, கடவுளை தியானிப்பவர் யோகி. கண்ணை மூடி தியானித்தார். தான் கோவிந்தபுரம் போவதா வேண்டாமா என்று உத்தரவு தியானம் மூலம் அப்பாவிடம் கேட்டார்.

''என் அப்பா சிவபெருமான் ஒரு பிக்ஷாடனர். கபாலம் ஏந்துபவர், எப்போதும் இருப்பவர். நான் காஞ்சிபுரம் போய் பரமாச்சார்யாவை பார்ப்பதா அல்லது கோவிந்தபுரம் போவதா?. ரெண்டும் ஒன்று தான் எனக்கு '' என்றவர் நேராக காஞ்சி புரத்துக்கு சந்திர மௌளியோடு கிளம்பிவிட்டார்.    அவர்கள் காஞ்சிபுரம் வந்தடைந்த நேரம், பெரியவா நித்ய பூஜா அனுஷ்டானங்கள் முடிந்து தனது அறைக்கு ஓய்வுக்கு சென்றுவிட்டார். அறைக்கதவு சார்த்தியாகி விட்டது.

''பெரியவா கிட்டே நான் வந்திருக்கேன்னு சொல்லுங்கோ'' என்று சந்த்ரமௌளியிடம் யோகி சொல்கிறார். சந்த்ர மௌளிக்கோ கலக்கம்.

பெரியவா ''என்னடா நா சொன்னது ஓண்ணு நீ செஞ்சது ஒண்ணு'' என்று கோபிப்பாரோ? என்ன செய்வது?  யோகி
 கொடுத்த தைரியத்தில், மெதுவாக பெரியவா அறைக் கதவை மெல்லிதாக தட்டினார் . அந்த   திரிகால ஞானிக்கு நடந்தது எல்லாம் தெரியாமலா இருக்கும்?. அவரே வந்து யோகிக்கு தரிசனம் தருவார்'' என்று தோன்றியது சந்திரமௌளிக்கு . நடுக்கம் குறைந்தது. உண்மையில் காஞ்சிபுரம் கோவிந்தபுரம் ரெண்டுமே ஒன்று தான். கோவிந்தபுர அதிஷ்டானத்தில் இருக்கும் போதேந்திர ஸரஸ்வதியின்  வழித்  தோன்றல் தானே காஞ்சிமஹா பெரியவா .

''விசிறி சாமியார் வந்திருக்கிறார்''  என்று அறிவித்த பொது மஹா பெரியவா வெளியே வந்தார்.

' நான் மஹா பெரியவாளை சந்தித்தேன்.  இந்த பிச்சைக்காரன் சாஷ்டாங்கமாக மகா பெரியவா காலில் விழுந்தேன். அவர் இவன் மேல் பெரும் கருணை கொண்டு ஆசிர்வதித்தார். நீ சூர்ய வம்சமா? என்று கேட்டார் . இந்த பிச்சைக்காரனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை''

ரெண்டு யோகீஸ்வரர்களும் நேருக்கு நேராக சில நிமிஷங்கள் பார்த்துக்கொண்டே இருந் தார்கள். நயன பாஷை அங்கே நடந்து கொண்டிருக்கும்போது வாய் பேச்சுக்கு ஏது இடம்? நேரம் நழுவிக்கொண்டே இருந்தது. யோகி திரும்புகிற நேரம் வந்துவிட்டது. காமாக்ஷி பிரசாதம் கை நிறைய தன்னுடைய ப்ரசாதத்தோடு சேர்த்து அளித்தார் யோகிக்கு. யோகிக்கு பரமானந்தம். மிகுந்த சந்தோஷத் தோடு பிரசாதத்தை திருவண்ணாமலைக்கு எடுத்து சென்றார்.

'அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களுக்கு இந்த பிச்சைக்காரன் அந்த தெய்வத் தின் ப்ரசாதத்தை அளித்து பாக்யம் பெற வைத்தான். இந்த பிச்சைக்காரன் மேல் தான் அந்த பரமாச்சார்யாருக்கு எவ்வளவு பாசம், கருணை அன்பு ''

இத்துடன்  மஹாபெரியவாளை   விசிறி சாமியாராகும் முன் சந்தித்த அபூர்வ போட்டோ ஒன்று கிடைத்தது. இணைத்திருக்கிறேன்.

 

 
mahaperiyava-yogi-suratkumar.webp

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:42:47 PM8/27/23
to amrith...@googlegroups.com
விவேக  சூடாமணி -  நங்கநல்லூர்   J K  SIVAN 
ஆதி சங்கரர்  

ஸ்லோகங்கள்  141-155
 महामोहग्राहग्रसनगलितात्मावगमनो  धियो नानावस्थां स्वयमभिनयंस्तद्गुणतया । नानावस्थाः अपारेसंसारे विषयविषपूरेजलनिधौ निमज्योन्मज्यायं भ्रमति कुमतिः कुत्सितगतिः ॥ १४१॥

mahāmōhagrāhagrasanagalitātmāvagamanō dhiyō nānāvasthāṃ svayamabhinayaṃstadguṇatayā । (pāṭhabhēdaḥ - nānāvasthāḥ)
apārē saṃsārē viṣayaviṣapūrē jalanidhau nimajyōnmajyāyaṃ bhramati kumatiḥ kutsitagatiḥ ॥ 141॥

மஹாமோஹக்³ராஹக்³ரஸநக³லிதாத்மாவக³மநோ தி⁴யோ நாநாவஸ்தா²ம் ஸ்வயமபி⁴நயம்ஸ்தத்³கு³ணதயா । நாநாவஸ்தா:² அபாரே ஸம்ஸாரே விஷயவிஷபூரே ஜலநிதௌ⁴ நிமஜ்யோந்மஜ்யாயம் ப்⁴ரமதி குமதி: குத்ஸிதக³தி: ॥ 141॥

மோகத்தில் மூழ்கியவன்,  புத்தியை  புலன்களுக்கு அடகு வைத்தவன் ஞான சூன்யம், தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை உள்ளவன் ஆத்மாவை கிள்ளுக்கீரையாக நினைத்து, உடம்பு தான் அது என்ற அறியாமையில் துள்ளுகிறான். அவனது புத்தி அறிவு  எல்லாமே   அறியாமை எனும் சுறாமீனால் விழுங்கப்படுகிறது. அதன் விளைவாக  சம்சார சாகரத்தில் திக்கு முக்காடி  மேலும் கீழுமாக தூக்கி எறியப்படுகிறான். புலன்களின்  ஆக்கிரமிப்பு  விஷத்தை விட கொடியது. 

 भानुप्रभासञ्जनिताभ्रपङ्क्तिः भानुंतिरोधाय विजृम्भतेयथा । आत्मोदिताहङ्कृतिरात्मतत्त्वं तथा तिरोधाय विजृम्भतेस्वयम्॥ १४२॥

bhānuprabhāsañjanitābhrapaṅktiḥ  bhānuṃ tirōdhāya vijṛmbhatē yathā ।
ātmōditāhaṅkṛtirātmatattvaṃ tathā tirōdhāya vijṛmbhatē svayam ॥ 142॥

 பா⁴நுப்ரபா⁴ஸஞ்ஜநிதாப்⁴ரபங்க்தி: பா⁴நும் திரோதா⁴ய விஜ்ரு’ம்ப⁴தே யதா² । ஆத்மோதி³தாஹங்க்ரு’திராத்மதத்த்வம் ததா² திரோதா⁴ய விஜ்ரு’ம்ப⁴தே ஸ்வயம் ॥ 142॥ 

மேகங்கள் எங்கிருந்து உண்டாகிறது?  சூரியனின் வெப்பத்தால்  கடல் நீர் ஆவியாகி மேகமாகிறது. ஆனால் அது பறந்து திவலையாக  சூரியனையே மேகம் மறைக்கிறது.  அது போலவே   ஆத்மாவினால், பிரம்மத்தல் சிருஷ்டிக்கப்பட்ட அஹம்பாவம்  ஆத்மாவையே  திரையாக  மூடுகிறது.  அதனால்  ஆத்மா ஒளியை இழக்கவில்லை. வெளியே தெரியவில்லை அவ்வளவே. 

 कवलितदिननाथेदुर्दिने सान्द्रमेघैः व्यथयति हिमझञ्झावायुरुग्रो यथैतान्। अविरततमसाऽऽत्मन्यावृतेमूढबुद्धिं क्षपयति बहुदुःखैस्तीव्रविक्षेपशक्तिः ॥ १४३॥

kavalitadinanāthē durdinē sāndramēghaiḥ  vyathayati himajhañjhāvāyurugrō yathaitān ।
aviratatamasā''tmanyāvṛtē mūḍhabuddhiṃ kṣapayati bahuduḥkhaistīvravikṣēpaśaktiḥ ॥ 143॥

 கவலிததி³நநாதே² து³ர்தி³நே ஸாந்த்³ரமேகை:⁴ வ்யத²யதி ஹிமஜ²ஞ்ஜா²வாயுருக்³ரோ யதை²தாந் । அவிரததமஸாऽऽத்மந்யாவ்ரு’தே மூட⁴பு³த்³தி⁴ம் க்ஷபயதி ப³ஹுது:³கை²ஸ்தீவ்ரவிக்ஷேபஶக்தி: ॥ 143॥

மேக மூட்டம்  கூடிய  நாளன்று  சூரியனை மேகங்கள் முழுதுமாக மறைத்து  எங்கும் ஒளியின்றி  இருள் சூழ வைக்கிறது. அதன் விளைவாக  காற்று குளிர்ச்சி பெற்று  குளிர் வாடைக் காற்று தோலைத் துளைக்கிறது.  அது போலவே  ஆத்மாவை  அஞ்ஞானம், அறியாமை எனும் மேகங்கள் மூடிக்கொண்டு  விக்ஷேப சக்தி குளிர் காற்று போல் முட்டாள் மனிதனை  பல துன்பங்களுக்கு ஆளாக்குகிறது. 

एताभ्यामेव शक्तिभ्यां बन्धः पुंसः समागतः । याभ्यां विमोहितो देहं मत्वाऽऽत्मानं भ्रमत्ययम्॥ १४४॥
ētābhyāmēva śaktibhyāṃ bandhaḥ puṃsaḥ samāgataḥ । yābhyāṃ vimōhitō dēhaṃ matvā''tmānaṃ bhramatyayam ॥ 144॥

ஏதாப்⁴யாமேவ ஶக்திப்⁴யாம் ப³ந்த:⁴ பும்ஸ: ஸமாக³த: । யாப்⁴யாம் விமோஹிதோ தே³ஹம் மத்வாऽऽத்மாநம் ப்⁴ரமத்யயம் ॥ 144॥ 
 அஞ்ஞானம் மேலிட்டு  அப்பாவி மனிதன்  உடம்பை ஆத்மா என்று தவறாக  எண்ணுகிறான்.  சம்சார சாகரத்தில்  ஆழ்ந்து விடுகிறான்.  பல தேகங்கள் எடுக்க வேண்டி இருக்கிறது. அத்தனையும் அவன் துன்பங்களை சந்திக்கவே என்று அறியாத மூடன். 

 बीजं संसृतिभूमिजस्य तुतमो देहात्मधीरङ्कुरो रागः पल्लवमम्बुकर्मतुवपुः स्कन्धोऽसवः शाखिकाः । अग्राणीन्द्रियसंहतिश्च विषयाः पुष्पाणि दुःखं फलं नानाकर्मसमुद्भवं बहुविधं भोक्तात्र जीवः खगः ॥ १४५॥

bījaṃ saṃsṛtibhūmijasya tu tamō dēhātmadhīraṅkurō rāgaḥ pallavamambu karma tu vapuḥ skandhō'savaḥ śākhikāḥ ।
agrāṇīndriyasaṃhatiścha viṣayāḥ puṣpāṇi duḥkhaṃ phalaṃ nānākarmasamudbhavaṃ bahuvidhaṃ bhōktātra jīvaḥ khagaḥ ॥ 145॥

பீ³ஜம் ஸம்ஸ்ரு’திபூ⁴மிஜஸ்ய து தமோ தே³ஹாத்மதீ⁴ரங்குரோ ராக:³ பல்லவமம்பு³ கர்ம து வபு: ஸ்கந்தோ⁴ऽஸவ: ஶாகி²கா: । அக்³ராணீந்த்³ரியஸம்ஹதிஶ்ச விஷயா: புஷ்பாணி து:³க²ம் ப²லம் நாநாகர்மஸமுத்³ப⁴வம் ப³ஹுவித⁴ம் போ⁴க்தாத்ர ஜீவ: க²க:³ ॥ 145॥ 
சம்சாரத்தை   ஒரு விருக்ஷமாக  உருவாகப் படுத்தினால் அதன் விதை அஞ்ஞானம்.  தேகத்தை ஆத்மா என்று அறியும் புத்தி தான்  விருக்ஷத்தின் தண்டு, எண்ணற்ற பற்றுக்கள் ஆசைகள் தான் இலைகள், அவன் அதில் ஈடுபட்டு செய்யும்  கர்மா தான் அந்த விருக்ஷம் வளர தேவையான நீர், உடம்பு தான்  அடிமரத்தண்டு, ஐம்புலன்களின்  பல்வேறு சேஷ்டைகள் தான் தந்துகிகள்.  புலன் துய்ப்பன எல்லாம்  மலர்கள், அவன் அதனால் பெரும் பல்வேறு துன்பங்கள் அந்த விருக்ஷத்தின் காய்  கனிகள். ஆத்மா அந்த மரத்தின் மேல் அமர்ந்து இதெல்லாம் வேடிக்கை பார்க்கும்  பறவை.   ஆதி சங்கரரின் கற்பனை உதாரணம் அபாரமாக இருக்கிறது அல்லவா?

अज्ञानमूलोऽयमनात्मबन्धो नैसर्गिकोऽनादिरनन्त ईरितः । जन्माप्ययव्याधिजरादिदुःख प्रवाहपातं जनयत्यमुष्य ॥ १४६॥ ajñānamūlō'yamanātmabandhō naisargikō'nādirananta īritaḥ । janmāpyayavyādhijarādiduḥkha- pravāhapātaṃ janayatyamuṣya ॥ 146॥

அஜ்ஞாநமூலோऽயமநாத்மப³ந்தோ⁴ நைஸர்கி³கோऽநாதி³ரநந்த ஈரித: । ஜந்மாப்யயவ்யாதி⁴ஜராதி³து:³க²ப்ரவாஹபாதம் ஜநயத்யமுஷ்ய ॥ 146॥

வாழ்க்கையில் ஒருவன் அனுபவிக்கும் பந்தம், கட்டு, அஞ்ஞானத்தால்  அவனை பிணைக்கிறது. அவனே  உண்டாக்கிக் கொள்வது. அதன் விளைவாக  அவன்  எண்ணற்ற  பிறவிகள் எடுத்து உழல வேண்டி இருக்கிறது, வியாதி, ஜனன  மரண  சோக  துயரங்களை  அனுபவிக்கிறான். 

नास्त्रैर्नशस्त्रैरनिलेन वह्निना छेत्तुं न शक्यो न च कर्मकोटिभिः । विवेकविज्ञानमहासिना विना धातुः प्रसादेन शितेन मञ्जुना ॥ १४७॥

nāstrairna śastrairanilēna vahninā Chēttuṃ na śakyō na cha karmakōṭibhiḥ । vivēkavijñānamahāsinā vinā dhātuḥ prasādēna śitēna mañjunā ॥ 147॥
 நாஸ்த்ரைர்ந ஶஸ்த்ரைரநிலேந வஹ்நிநா சே²த்தும் ந ஶக்யோ ந ச கர்மகோடிபி:⁴ । விவேகவிஜ்ஞாநமஹாஸிநா விநா தா⁴து: ப்ரஸாதே³ந ஶிதேந மஞ்ஜுநா ॥ 147॥ 

சம்சார பந்தத்தை எந்த  ஆயுதத்தாலும்  அழிக்கமுடியாது,  காற்று  ஜலம் அக்னி எதுவும் அதை அகற்றாது. ஞானம் என்ற கூறிய வாளால் மட்டுமே அதை துண்டிக்கமுடியும். அதற்கு பகவான் அருள் அவனுக்கு வேண்டும். 

श्रुतिप्रमाणैकमतेः स्वधर्म निष्ठा तयैवात्मविशुद्धिरस्य । विशुद्धबुद्धेः परमात्मवेदनं तेनैव संसारसमूलनाशः ॥ १४८॥ 

śrutipramāṇaikamatēḥ svadharma niṣṭhā tayaivātmaviśuddhirasya ।
viśuddhabuddhēḥ paramātmavēdanaṃ tēnaiva saṃsārasamūlanāśaḥ ॥ 148॥

ஶ்ருதிப்ரமாணைகமதே: ஸ்வத⁴ர்ம நிஷ்டா² தயைவாத்மவிஶுத்³தி⁴ரஸ்ய । விஶுத்³த⁴பு³த்³தே:⁴ பரமாத்மவேத³நம் தேநைவ ஸம்ஸாரஸமூலநாஶ: ॥ 148॥

148. எவனொருவன் வேத நூல்களில் சொல்லப்பட்டவற்றை அனுசரித்து அப்பியாசத்தில்  கடைப்பிடிக்கிறானோ அவன் சுயதர்மத்தில்  நிலையாக நிற்பவன். அவனது வைராக்கியம் புலன்களின்  ஈர்ப்பு பற்றுக்களில் இருந்து அவனை  தடுத்துக் காக்கிறது.  அப்படிப்பட்ட பரிசுத்த மனத்தினன்  பரமாத்மாவின் அனுக்கிரஹம்  பெறுகிறான். ஞானியாகி  சம்சார  பந்தத்தை   வேரோடு சுட்டெரிக்கிறான். 

कोशैरन्नमयाद्यैः पञ्चभिरात्मा न संवृतो भाति । निजशक्तिसमुत्पन्नैः शैवालपटलैरिवाम्बुवापीस्थम्॥ १४९॥
kōśairannamayādyaiḥ pañchabhirātmā na saṃvṛtō bhāti । nijaśaktisamutpannaiḥ śaivālapaṭalairivāmbu vāpīstham ॥ 149॥
கோஶைரந்நமயாத்³யை: பஞ்சபி⁴ராத்மா ந ஸம்வ்ரு’தோ பா⁴தி । நிஜஶக்திஸமுத்பந்நை: ஶைவாலபடலைரிவாம்பு³ வாபீஸ்த²ம் ॥ 149॥

149.ஆத்மாவை  பஞ்ச கோசங்கள்  எனும் திரைகள் ஒன்றன் மேல் ஒன்றாக  மூடி  மறைக்கிறது.  எல்லாமே ஆத்மாவிலிருந்து ;உருவானவை தான்.  இதனால்  திரைகளால் மறைக்கப்பட்ட  ஆத்மா  எதைப்  போல் இருக்கிறதென்றால்  ஒரு  நீர் தொட்டி யில் உள்ள நீர்  அந்த தொட்டியில் பூரா  படர்ந்திருக்கும் பச்சை பசேலென்ற பாசியின் நிறத்தை தானும் பெற்று அழுக்கு நீர் போல் காணப்படுவதைப்  போல் என்கிறார்  ஆதி சங்கரர்  

 तच्छैवालापनयेसम्यक् सलिलं प्रतीयतेशुद्धम्। तृष्णासन्तापहरं सद्यः सौख्यप्रदं परं पुंसः ॥ १५०॥
 tachChaivālāpanayē samyak salilaṃ pratīyatē śuddham । tṛṣṇāsantāpaharaṃ sadyaḥ saukhyapradaṃ paraṃ puṃsaḥ ॥ 150॥
தச்சை²வாலாபநயே ஸம்யக் ஸலிலம் ப்ரதீயதே ஶுத்³த⁴ம் । த்ரு’ஷ்ணாஸந்தாபஹரம் ஸத்³ய: ஸௌக்²யப்ரத³ம் பரம் பும்ஸ: ॥ 150॥ 

பாசி பூண்டுகளை  அகற்றினால் தொட்டியில் உள்ள,  குளத்தில் உள்ள நீர்  சுத்தமாகி  குடிக்க, தாகம் தீர்க்க  மனதுக்கு மகிழ்ச்சி  ஊட்டுவது போல் என்கிறார்   சங்கரர் 

मपि कोशानामपवादे विभात्ययं शुद्धः । नित्यानन्दैकरसः प्रत्यग्रूपः परः स्वयञ्ज्योतिः ॥ १५१॥
pañchānāmapi kōśānāmapavādē vibhātyayaṃ śuddhaḥ । nityānandaikarasaḥ pratyagrūpaḥ paraḥ svayañjyōtiḥ ॥ 151॥
பஞ்சாநாமபி கோஶாநாமபவாதே³ விபா⁴த்யயம் ஶுத்³த:⁴ । நித்யாநந்தை³கரஸ: ப்ரத்யக்³ரூப: பர: ஸ்வயஞ்ஜ்யோதி: ॥ 151॥ 

பஞ்ச கோசம் அகற்றப்பட்டால்,  திரை விலகினால் ஆத்ம  ஜோதி  பரிசுத்தமாக பளிச்சிடுகிறது.  அஞ்ஞானத்திரை அகன்றால் ஒருவன்  யோகி, ஞானியாகிறான். பிரம்மத்தை  துய்க்கிறான். 

आत्मानात्मविवेकः कर्तव्यो बन्धमुक्तयेविदुषा । तेनैवानन्दी भवति स्वं विज्ञाय सच्चिदानन्दम्॥ १५२॥
ஆத்மாநாத்மவிவேக: கர்தவ்யோ ப³ந்த⁴முக்தயே விது³ஷா । தேநைவாநந்தீ³ ப⁴வதி ஸ்வம் விஜ்ஞாய ஸச்சிதா³நந்த³ம் ॥ 152॥

152. சம்சார  பந்தம் விலக, முடிச்சு அவிழ,   ஒருவன்  ஆத்மா எது தேகம் எது, ரெண்டையும் எது செலுத்துகிறது என்ற ஆத்ம ஞான விசாரத்தில் ஈடுபட வேண்டும். எது சாஸ்வதம், எது அழிவது என்ற  பேதம் வெளிப்படும்.  பற்றுகளை அகற்றி  அவன்  ஆத்ம ஒளி பெறுகிறான்  ஆனந்தத்தில்  மூழ்குகிறான். 

 मुञ्जादिषीकामिव दृश्यवर्गात् प्रत्यञ्चमात्मानमसङ्गमक्रियम्। विविच्य तत्र प्रविलाप्य सर्वं तदात्मना तिष्ठति यः स मुक्तः ॥ १५३॥
muñjādiṣīkāmiva dṛśyavargāt pratyañchamātmānamasaṅgamakriyam ।vivichya tatra pravilāpya sarvaṃ tadātmanā tiṣṭhati yaḥ sa muktaḥ ॥ 153॥
முஞ்ஜாதி³ஷீகாமிவ த்³ரு’ஶ்யவர்கா³த் ப்ரத்யஞ்சமாத்மாநமஸங்க³மக்ரியம் । விவிச்ய தத்ர ப்ரவிலாப்ய ஸர்வம் ததா³த்மநா திஷ்ட²தி ய: ஸ முக்த: ॥ 153॥

153.  புலன் உணர்வுகள்  தான்  ஒருவன் புத்தியை பேதலிக்க செயகிறது. அவனை வசமாக  அடிமைப் படுத்துகிறது. ஆட்டி வைக்கிறது. அதை ஆராய்ந்து  அவற்றுக்கு  இடம் கொடுக்கக்கூடாது என்ற  பேதம் அபேதம்  தெரிந்தவன்  புத்திசாலி.  அவனது புத்தி விவேகத்தால்  தெளிவாக  பற்றுகளை அறவே  ஒதுக்குகிறான்.  பூமிக்குயில் இருந்து  ஒரு கீரைத்தண்டை பிடுங்குபவன் அதன் வேர்களிலிருந்து தண்டு வரை கீரை வரை உள்ள  மண்ணை, தூசியை எல்லாம்  அகற்றி சுத்தமாக  கழுவி அதை  உபயோகிக்க  சுலபமாக்குவது  போல என்கிறார்  ஆதி சங்கரர் 

154,  देहोऽयमन्नभवनोऽन्नमयस्तु कोश- var कोशो श्चान्नेन जीवति विनश्यति तद्विहीनः । ह्यन्नेन त्वक्चर्ममांसरुधिरास्थिपुरीषराशिर्नायं स्वयं भवितुमर्हति नित्यशुद्धः ॥ १५४॥
dēhō'yamannabhavanō'nnamayastu kōśa- (pāṭhabhēdaḥ - kōśō) śchānnēna jīvati vinaśyati tadvihīnaḥ । (pāṭhabhēdaḥ - hyannēna)
tvakcharmamāṃsarudhirāsthipurīṣarāśi- rnāyaṃ svayaṃ bhavitumarhati nityaśuddhaḥ ॥ 154॥
தே³ஹோऽயமந்நப⁴வநோऽந்நமயஸ்து கோஶ- var கோஶோ ஶ்சாந்நேந ஜீவதி விநஶ்யதி தத்³விஹீந: । ஹ்யந்நேந த்வக்சர்மமாம்ஸருதி⁴ராஸ்தி²புரீஷராஶிர்நாயம் ஸ்வயம் ப⁴விதுமர்ஹதி நித்யஶுத்³த:⁴ ॥ 154॥ 

 பஞ்சகோசத்தில்   அன்னமய கோசம் என்பது முதலாவது திரை.  உணவினால் ஜீவிப்பது.  அது தான் தோல்  சதை, ரத்தம், எலும்பு  மலஜலம் என்பன.  ஆத்மாவை  அதால் நெருங்கவே முடியாது.  மறைப்பது மாயை.

 पूर्वंजनेरधिमृतेरपि नायमस्ति var जनेरपिमृतेरथ जातक्षणः क्षणगुणोऽनियतस्वभावः । नैको जडश्च घटवत्परिदृश्यमानः स्वात्मा कथं भवति भावविकारवेत्ता ॥ १५५॥

pūrvaṃ janēradhimṛtērapi nāyamasti (pāṭhabhēdaḥ - janērapimṛtēratha) jātakṣaṇaḥ kṣaṇaguṇō'niyatasvabhāvaḥ ।
naikō jaḍaścha ghaṭavatparidṛśyamānaḥ svātmā kathaṃ bhavati bhāvavikāravēttā ॥ 155

பூர்வம் ஜநேரதி⁴ம்ரு’தேரபி நாயமஸ்தி var ஜநேரபிம்ரு’தேரத² ஜாதக்ஷண: க்ஷணகு³ணோऽநியதஸ்வபா⁴வ: । நைகோ 
ஜட³ஶ்ச க⁴டவத்பரித்³ரு’ஶ்யமாந: ஸ்வாத்மா கத²ம் ப⁴வதி பா⁴வவிகாரவேத்தா ॥ 155॥

155. இந்த அஞ்ஞானத்திரை  இருக்கிறதே  அது  ஆரம்பத்தில் இல்லை,  முடிவிலும்  கிடையாது. நடுவே தோன்றி மறைவது. மாறுவது அதன் குணம். அதன் மாறுதல்கள் எண்ணற்றவை கணக்கற்றவை,  அது தான் அதன் இயற்கை  நிலை. மண் குடம் போன்றது. சாஸ்வதமற்றது.அது ஆத்மாவாகவே முடியாது. அது எவ்வாறு உள்ளே  எல்லாவற்றுக்கும் சாக்ஷி பூதமாக  நிற்கும்?



sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:45:30 PM8/27/23
to amrith...@googlegroups.com

சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம்.  --   நங்கநல்லூர்  J K  SIVAN 
ஆதி சங்கரர்  

15.  आयुर्नश्यति पश्यतां प्रतिदिनं याति क्षयं यौवनं प्रत्यायान्ति गताः पुनर्न दिवसाः कालो जगद्भक्षकः ।
लक्ष्मीस्तोयतरङ्गभङ्गचपला विद्युच्चलं जीवितं तस्मात्त्वां शरणागतं शरणद त्वं रक्ष रक्षाधुना ॥ १५॥ तस्मान्मां

Aayur-nashyati pashyataam, prati-dinam, yaati kshayam yauvanam,
Pratyaayaanti gataah, punar na divasaah, kaalo jagadbhakshakah,
Lakshmii-stoya-taranga-bhanga-chapalaa, vidyuchchalam jiivitam,
Tasmaan maam, sharana-agatam sharanada, tvam raksha raksha-adhunaa., 15

॥    ஆயுர் நச்யதி பச்யதாம் ப்ரதிதினம் யாதிக்ஷயம் யௌவனம் ப்ரத்யாயாந்தி கதா:புனர் ந த்வஸா:காலோ ஜகத்பக்ஷக:!
லக்ஷ்மீஸ்தோய தரங்க பங்கசபலா வித்யுத்சலம் ஜீவிதம் தஸ்மான்மாம் சரணாகதம் ரக்ஷ ரக்ஷதுநா!!

கண்ணாடியில் நேற்று பார்த்து மகிழ்ந்த  முகம் இன்று கிழம்.  காலம் வெகு வேகமாக ஓடும்போது  அதன் சீற்றத்தில் மனித உடல் மாறுகிறது.  முடிவை நோக்கி ஓடுகிறது.  ஆகவே தான் பார்த்துக்கொண்டே இருக்கும்போது ஆயுள் கரைந்து விடுகிறது. தினந்தோறும் இளமை அழிகிறது. சென்ற நாட்கள் திரும்புவதில்லை. காலம் உலகை மூழுங்கிவிடும். நீரலை போல் கையில் உள்ள இருப்பும்,  அதாவது  காசு லக்ஷ்மியும் தோன்றி மறைவாள். வாழ்க்கை மின்னலெனமாயும். ஆகவே, புகலெனப்புகுந்த என்னை கருணையுடன் காப்பாயாக!  நான் செய்த  அபராதங்களை மன்னித்து அருள்வாய சம்போ மகாதேவா, தீன  ரக்ஷகா.


sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:45:30 PM8/27/23
to amrith...@googlegroups.com
அலமேலு மங்கா......    நங்கநல்லூர்  J K   SIVAN 

சனிக்கிழமை வேங்கடேசனைப்  போற்றி வணங்கும், தரிசிக்கும் நாள் என்றாலும் தனியாக  திருமலை மேல் நிற்பவனை  மட்டும்   தரிசிப்பதால்  வேங்கடேச தரிசனம் பூர்த்தியாகாது.   வழக்கமாக   மலையேறி திருமலை செல்லும் முன் முறைப்படி திருச்சானூர் சென்று, அலமேலு மங்கை எனப்படும் பத்மாவதி தாயாரைத் தரிசித்த பிறகே, வெங்கடாசலபதியை தரிசிக்க செல்ல வேண்டும்  என்பது தான் வழிபாட்டு முறை.   திருச்சானூர்  எனும் சிறிய   கிராமம்  திருப்பதியிலிருந்து    5  கி.மீ.  தூரம்.  நடந்து போவோர்  உண்டு.  அந்த காலத்தில் குதிரை வண்டியில் போவோம். இப்போது நிறைய பஸ்  ஓடுகிறது. அது தவிர  ஆட்டோ வசதியும் இந்த  ஸ்தலத்தில்   புஷ்கரணி எனும் தீர்த்தக்குளத்தில்  தாமரை மலராக  அலர்மேல் மங்காதேவி அவதரித்தாள். பத்மாவதி என்று பெயர். பத்மம் என்றால் தாமரை.   ஆயிரம் வருஷ கோவில். 
ஸ்ரீ பத்மாவதி தேவிக்கு  ராஜா தொண்டைமான்  காலத்தில் கட்டப்பட்ட  ஆலயம். 

தொண்டமண்டல ஆகாச ராஜா  தரணி தேவி  தம்பதிக்கு  புத்ரியாக பிறந்து ஸ்ரீனிவாசனை மணந்தவள் .  தாயார் என்று வார்த்தை சொன்னாலே  முதலில் கண்முன், நினைவில் நிற்பவள் பத்மாவதி தாயார். செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமியே, பத்மாவதியாக பூலோகத்தில் அவதாரம் செய்தாள்.   கலியுகத்தில்  பாபச்சுமையை  குறைக்க  இறைவன் பூமியில் அவதாரம் எடுக்க வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில், முனிவர்கள் யாகம் தொடங்கினர்.
யாகத்தை காண வந்த நாரதர், "யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்?' என்று முனிவர்களைக் கேட்டார்.
''இவ்வுலகிலேயே சாந்தமான தெய்வம் யாரோ, அவருக்கு யாக பலனைத் தருவதென்று ' முடிவு செய்தனர்.

சாந்தமானவரைத்  தேடி, பிருகு முனிவர் முதலில் சத்தியலோகம் சென்றார்.  அங்கே  அங்கு சரஸ்வதியும் பிரம்மாவும்   முனிவருக்கு தக்க வரவேற்பு தரவில்லை என்று கைலாஸம் சென்றார்.  அங்கும்  பரமேஸ்வரன் பார்வதியின்  அனுமதி இல்லை. அங்கிருந்து  நேராக வைகுண்டம்  சென்றார்.  மஹாவிஷ்ணு  மஹாலக்ஷ்மி மடியில் படுத்திருந்து முனிவரை உபசரித்து வரவேற்கவில்லை என்று காலால் அவர் மார்பில் உதைத்தார் ப்ருகு  முனிவர். ஸ்ரீமந்  நாராயணன் முனிவர்   மார்பில் உதைத்ததற்கு வருந்தவில்லை.  உதைத்த  பாதத்தை தடவி கொடுத்தார். பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே, யாக பலனைத் தருவதென முனிவர்கள் முடிவெடுத்தனர்.  

மஹா விஷ்ணுவின் மார்பில் உறையும்  லக்ஷ்மி  மார்பில் உதைத்த  முனிவரை மஹாவிஷ்ணு  தண்டிக்காததால், வெகுண்டு  பூலோகம் சென்று தவம் இருந்தாள் . திருச்சானூர்  வந்து விட்டாள் .  அவளைத் தேடி  மஹாவிஷ்ணு கடைசியில்  வேங்கட மலையில் வந்து ஒரு புற்றுக்குள் அமர்ந்து பசியோடு தியானம் செய்தார். கணவர் மீது கோபமிருந்தாலும், அவர் தனித்து  எங்கோ  பசியுடன் இருப்பது குறித்து  மஹாலக்ஷ்மி  வருந்தினாள் .   பரம சிவனும்  பிரம்மாவும் பசுவாகவும், கன்றாகவும் மாற, லக்ஷ்மி  தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்பகுதியை ஆட்சி செய்த மன்னனிடம் பசுவை விற்கச் சென்றாள்.  மன்னன் வாங்கிய பசு, மேய்ச்சலுக்குச் செல்லும்போது, சீனிவாசன் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது. அதைக் குடித்து சீனிவாசன் பசியாறினார்.  பசுவை மேய்த்த இடையன், பசுவின் பின்னால் சென்று, புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் பசுவை அடிக்க முயன்றான். கோடரி தவறி, புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு, ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள், ஆசிரமம் ஒன்றைக் கண்டார். அது வராஹ மூர்த்தி என்பவரின் ஆசிரமம். அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன், பாசத்தில் மூழ்கினாள். திருமாலும், அன்புடன் வகுளாதேவியை, "அம்மா' என்று அழைத்தார்.  திருமலை மடப்பள்ளி அருகே தனி சன்னதியில் இருக்கிறார் லகுளாதேவி.
வகுளாதேவி தன் பிள்ளைக்கு, "ஸ்ரீனிவாசன்' (செல்வம் பொருந்தியவன்) என்று பெயரிட்டாள்.  

சந்திரகிரி ராஜா ஆகாசராஜன், பிள்ளை வரம் வேண்டி, தன் குலகுரு சுக முனிவரின் ஆலோசனைப்படி, புத்திர காமேஷ்டி யாகம் செய்ய, நாள் குறித்தான். யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை இருந்தது. எனவே, குழந்தைக்கு, "பத்மாவதி' என்று பெயரிட்டான்.  
முற்பிறப்பில் வேதவதி என்னும் பெயரில் பிறந்திருந்தாள் பத்மாவதி தாயார். அழகில் சிறந்த அவள், ஒரு தபஸ்வினியாகி காட்டில் தவமிருந்தாள்.  ஒருமுறை, அவள் ராமபிரானைச் சந்தித்தாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டாள். “இப்பிறவியில் நான் ஏகபத்தினி விரதன். கலியுகத்தில், நான் திருமலையில் சீனிவாசன் என்ற பெயரில் தங்குவேன். நீ, அந்த மலையை ஆளும் ஆகாசராஜன்- தரணிதேவி தம்பதியருக்கு புதல்வியாகப் பிறப்பாய். அப்போது, உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்'  என்று வாக்களித்தார் ராமபிரான்.   ஆகவே  திருமலைக்கு சீனிவாசன் வர, பத்மாவதியைச் சந்தித்தார். தன் முற்பிறவி வரலாறை மறந்துவிட்ட பத்மாவதி, அவரைக் கண்டு அஞ்சினாள். பத்மாவதியின் தோழிகள் அவர் மீது கல்லெறிந்து துரத்தினர். காயமடைந்த சீனிவாசன், தன்னை வளர்த்து ஆளாக்கிய வகுளாதேவியிடம் தன் விருப்பத்தை தெரிவித்தார்.  சீனிவாசனுக்காக ஆகாசராஜனிடம் தூது சென்றாள் வகுளாதேவி. தன் மகன் சீனிவாசன், நாராயணனின் அம்சம் என்பதை மன்னனிடம் தெரிவிக்க  ஆனந்தமடைந்த ராஜா, சீனிவாசனுக்கும், பத்மாவதிக்கும்  விமரிசையாக  திருமணம் செய்வித்தார். ஸ்ரீனிவாசன்  திருமணச்செலவுக்காக குபேரனிடம் கடன் வாங்கினார்.  கடன் பெற என்ன நிபந்தனை தெரியுமா?

“குபேரா! என்னை வணங்குவதற்கு இந்த திருத்தலத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அவர்களின் பாவக் கணக்குக்கு ஏற்ப அவர்களிடம் நான் செல்வத்தை வசூலித்து விடுவேன். அதை உனக்கு வட்டியாகத் தருவேன்! கலியுகம் முடியும் போது அசலை முழுமையாகத் தந்துவிடுவேன்…’ என்று எழுதிக் கொடுத்தார்.  கலியுக வரதனின்  திருப்பதி உண்டியல் வசூல் காணிக்கை ஏன் உலகிலேயே அதிகம் என்று இப்போது புரிகிறதா?

சீனிவாசன்- பத்மாவதி திருமணம் இனிதே முடிந்தது. நாராயணன், இன்னொரு திருமணம் பண்ணிக்கொண்டு விட்டார்  என்ற தகவலை மகாலட்சுமியிடம்  போய்  காதில் போட்டார் நாரதர். கோபமடைந்த மஹா லக்ஷ்மி  சீனிவாசனிடம் வந்து நியாயம் கேட்டு அழுதாள். அவளைச் சமாதானம் செய்து விளக்கமளித்தார் சீனிவாசன்.

“லக்ஷ்மி ! முற்பிறவியில் நீ சீதையாக பிறந்த போது ராவணன் உன்னைக் கடத்த வந்தான். அப்போது அக்னியின் பாதுகாப்பில் இருந்த மாயசீதையான இவள், உனக்குப் பதிலாக ராவணனுடன் சென்றாள். உண்மையில் இவள் உன்னைக் காப்பாற்றியவள்…’ என்றார். சமாதானமடைந்த லக்ஷ்மி,  பத்மாவதியைத் தன் தங்கையாக ஏற்றாள்.  லக்ஷ்மியிடம்  
 “நீ என் மார்பில் அமர்ந்துகொள். என் மார்பில் வலப்பக்கம் பத்மாவதி இருப்பாள். அவளது மற்றொரு வடிவத்தை பத்மசரோவர தீர்த்தக்கரையில் அமையும் வகையில் ஏற்பாடு செய். நீங்கள் இருவரும் இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப அருள் வழங்குங்கள்…’ என்றார் சீனிவாசன்.   பத்மாவதி அமர்ந்த இடமே அலமேலுமங்காபுரம் எனப்படுகிறது. பிற்காலத்தில் திருச்சானூர் என்ற பெயர் சூட்டப்பட்டது. சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்து தங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம். ஆரம்ப காலத்தில் வேங்கடேஸ்வரனுக்கு இங்கு தான் கோவில் இருந்தது.   இட வசதி நெருக்கடியால் ஸ்ரீனிவாசன்  திருமலையில்  கோயில் கொண்டு நிற்கிறார்.  

இப்படி பெருமை பெற்ற  அலமேலு மங்கா தாயாரைப் பற்றிய ஒரு அற்புத  பாடல் சுநாத வினோதினி எனும் ராகத்தில்  டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா பாடியதைக் கேட்டு எனக்கும் அதைப் பாட வேண்டும் என்று தோன்றி அதை இத்துடன் இணைத்திருக்கிறேன்  https://youtu.be/pgiG-wGkZtY

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:46:23 PM8/27/23
to amrith...@googlegroups.com
பார் போற்றும் பரமஹம்ஸர்  -  நங்கநல்லூர்   J K  SIVAN 

சிஷ்யன் உருவாகிறான்

தக்ஷிணேஸ்வரத்தில் அடிக்கடி ராமகிருஷ்ணரை சந்திக்க  நரேந்திரனுக்கு மனசில் ஒரு விருப்பம்  வளர்ந்தது. ஒவ்வொரு தடவை அவரை சந்திக்கும்போதும் மனதில்  ஒரு  புது உற்சாகம்.  '' ஆஹா,  நமது  மதத்தின் அற்புத மனிதர் அவர்.  அவரது ஒரு பார்வை, ஒரு தடவை நம்மைத் தொட்டால் போதும்.  இந்த வாழ்க்கை முழுதுமாக மாறிவிடும்''

அடாடா.  இதுவரை நான் கேட்காத ஒரு வார்த்தை அல்லவா இவர் சொல்கிறார்.'' நான் கடவுளை பார்த்திருக்கிறேன். அனுபவிச்சிருக்கேன்'' 
இது என்ன வெறும் புருடாவா?  நான் தான் கடவுள்,  என்னைப்பார், வணங்கு, காசை கீழே வை என்று சொல்கிறார்களே சில காவிகள், அது போலவா இது? 

ராமகிருஷ்ணர்  சொன்னது வெறும் வார்த்தை இல்லை. ஆழமான மனதிலிருந்து ஊற்றாக வந்தவை. முற்றிலும் மாறிய மனத்தோடு, புதிரோடு, நரேந்திரன் கல்கத்தா திரும்பினான்.

எத்தனையோ இடையூறு. வேலைகள், ஈடுபாடுகள். மனது மட்டும் தக்ஷிணேஸ்வரம் போகவேண்டும். ராமகிருஷ்ணரைப்  பார்க்கவேண்டும் என்று நினைக்கும்.  ஒரு நாள் அவரை ரெண்டாவது முறையாக பார்க்க போனான்.

அப்போது ஒரு அதிசயம் நடந்தது. வெகுநேரம் அவர் அவனோடு பேசிக்கொண்டிருந்தவர்  திடீரென்று தனது வலது காலை நரேந்திரன் மார்பில் வைத்தார்.  அடுத்த கணமே அவன் மூர்ச்சையானான். அவனைச் சுற்றிலும்   இருந்த  அவன் இருந்த அந்த அறை ,  மரங்கள், செடிகள்,  கட்டிடம், கோவில், ராமகிருஷ்ணர், வானம், பூமி எல்லாமே தலைகீழாக வேகமாக சுற்றியது. கொஞ்சம் கொஞ்சமாக  படு வேகமாக  அதிகரித்தது.  உடம்பு வியர்த்தது. மூச்சு விடமுடியவில்லை. ஏதோ நெஞ்சை  அடைத்துப்  பிடித்து அழுத்தியது.  ஓ வென்று அலறினான். ''என்ன செய்கிறீர்கள் என்னை?  என்னை விடுங்கள். விட்டு விடுங்கள்,  எனக்கு அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள் எல்லாம் இருக்கிறார்கள் ''

ராமகிருஷ்ணர்  கலகலவென்று சிரிப்பது கேட்டது.  அவர் கால் அவன் உடலிலிருந்து விலகியது.  '' நரேந்திரா, உனக்கு  ஒன்றும் ஆக வில்லையப்பா.  எல்லாம் காலக்கிரமத்தில் சரியாகவே  ஆகும்''

நரேந்திரனுக்கு திகைப்பு தீரவில்லை.  ' இவர்  ஏதோ  ஹிப்னாடிசம் வித்தை கற்றவரோ. என்னை மாற்றுகிறாரோ'  . அவனுக்கு ராமகிருஷ்ணர்  மேல்  வெறுப்பு கூட வந்தது. ஆனால் அதோடு அவரை அடிக்கடி சென்று சந்திக்கவேண்டும் என்ற  ஆர்வமும் வளர்ந்தது.

மூன்றாவது முறை நரேந்திரன் ராமகிருஷ்ணரை சந்திக்கும்போது  உள்ளூர பழைய அனுபவத்தின்  உதறல். பயம்.  
''வா  நரேந்திரா உனக்காக தான்  நான் காத்திருக்கிறேன்''
'' இந்தமுறையும்  இவர்  ஏதாவது ஹிப்னாடிசம் வித்தை காட்டினால் உஷாராக இருக்கவேண்டும் என்று தன்னைத்  தயார் படுத்திக்  கொண்டான் நரேந்திரன்.  

பேசிக்கொண்டே  இருவரும் காளிகோவில் நந்தவனம் சென்றார்கள். ராமகிருஷ்ணரின் கரம் நரேந்திரனின் மேல் பட்டது.  என்ன ஆயிற்று?  மீண்டும் பழையபடி மூர்ச்சை ஆனான். அவன் மன உறுதி சுக்கு நூறாக உடைந்தது.

''நரேந்திரன் மயக்க நிலையில் இருந்தபோது ''நீ இதுவரை என்ன செய்தாய், இனி  என்ன பண்ணப்போகிறாய்? என்று கேட்டேன். பதில் சொன்னான்.  திருப்தியாக இருந்தது''  என்று  பின்னர் ராமக்ரிஷ்ணரே சொல்லி இருக்கிறார்.  நரேந்திரன்  பழைய பிறவியில் மாசற்றவன், பரிசுத்தன் என அறிந்தேன்'' என்று பரமஹம்ஸர்  மற்ற சிஷ்யர்களிடம் கூறி இருக்கிறார்.






sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:46:23 PM8/27/23
to amrith...@googlegroups.com
தேனான வேமனா     -  நங்கநல்லூர் J K SIVAN

அட,   நாம்   அறிமுகப்படுத்தின   இந்த தெலுங்கு பட்டினத்தார் வேமனாவை நம் வாசகர்களுக்கு பிடிக்கிறதே.  அவரது  தெலுங்கு  தத்துவங்கள் வேதாந்தங்கள் எல்லாம்  தமிழில், ரசிக்கிறார்களே .    தெலுங்கு வாசகர்களுக்காக  தெலுங்கிலும் தருகிறேன்.    ஓஹோ  நாம் நல்ல காரியம் தான் செய்திருக்கிறோம் என்று  எனக்கு  ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. 
கவனித்தீர்களா, கொஞ்சம்  புதுமாதிரியான, இதுவரை  நாம்  கண்டிராத வகையில்  வேமனா தன்னுடைய பாடல்களில், தத்துவங்களை தனக்கே சொல்லிக்கொள்வது போல் அமைந்திருக்கிறது. என்னடா வேமா, புரிகிறதா,தெரிந்துகொள்ளடா? என்கிற டைப்பில் பாடி இருக்கிறார்.

Alpudeppudu palku adamburamu ganu..............ఆల్పుడెపుడు పల్కు ఆడంబురము గాను
Sajjanundu palku challaganu....................................సజ్జనుండు పల్కు చల్లగాను
Kanchu moginatlu kanakammu mroguna...................కంచు మోగినట్లు కనకమ్ము మ్రోగునా
Viswadhaabhiraama, Vinura Vema............................విశ్వధాభిరామ, వినుర వేమ

அல்புடெ³ப்புடு³ பலுகு நாட³ம்ப³ரமுகா³னு  ஸஜ்ஜனுண்டு³ பலுகு சல்லகா³னு கஞ்சு மோகி³னட்லு கனகம்பு³ மோகு³னா
விஶ்வதா³பி⁴ராம வினுர வேம!


அடே வேமா,  ஒரு  வெங்கல   பாத்திரத்தை தட்டினால் வரும் 'டங்  டங் '' என்கிற  சத்தம் , தங்க   பாத்திரத்தை சுண்டினாலும் வருமா?   பெருத்த   ஓசையா  வரும்?  ஏதோ ஒரு அற்புதமான வினோத ஒலி வருமல்லவா ?   அந்த   உலகமே தனி அல்லவா? நன்றாக கற்றுணர்ந்த பண்டிதன் அமரிக்கையாக அமைதியாக தானே இருப்பான். ஆழ்ந்த ஞானஸ்தன்  எவனாவது   அரைவேக்காடு மாதிரியா   தன்னை வெளியே  காட்டிக் கொள்வான்?.   வேமா  நான் சொல்வது சரி தானேடா சொல்லுடா?

Anuvu gani chota Nadhikulamanaradu...................అనువు గాని చోట అధికులమనరాదు
Kochmayina nadiyu kodava gadu..........................కొంచమైన నదియు కొదవ గాదు
konda addamandu knochami undada...................కొండ అద్దమందు కొంచమై ఉండదా
Viswadhaabhiraama, Vinura Vema........................విశ్వధాభిరామ, వినుర వేమ

 அனுவு காணி சோட  நதிக்குள மனராது  கொஞ்சமாயின நதியு கொதுவகாது.  கொண்ட யத்தமந்து கொஞ்சமை உண்டதா
விச்வதாபி ராம வினுர வேமா !

சந்தர்ப்பம் சூழ்நிலை,  தகுதி  இல்லாத இடத்தில்  மகான்களைப் பற்றி  பேசாதே.   இத்தகைய  இடத்தில் அறிமுகப் படுத்தாததால் மகான்களின்  பெருமை  ஒருநாளும்  குன்றாது. நாலே  பேர்  கூடினாலும்  சத்சங்கம்  தான் சரியான  இடம்.  அங்கே  பேசலாமே.  ஒரு  பெரிய  மலையைக்கூட ஒரு  சிறு  மொபைல் டெலிபோன்  கேமரா  படம் பிடிக்கிறதே.  வேமனாவுக்கு  மொபைல் தெரியாது.  சிறு  கண்ணாடித்துண்டு  என்பதால்   கண்ணாடிச் சில்லில்   மலையின்  பிம்பம் தெரியுமே  என்கிறார்.  
ஏண்டா, வேமா, நேரம் இடம் சரியில்லை என்றால் வெற்றி எப்படிடா  கிட்டும்? நிம்மதியேதுடா ? அதனால் உன்னுடைய திறமை சக்தியெல்லாம் மட்டமாகி விடுமா? சின்னக் கண்ணாடியிலே பார்க்கும் போது பெரிய மலை கூட குட்டியாகத் தான் தெரியும். ஞாபகம் வைத்துக்கொள்ளடா''

Tappulennuvaru Tandopatandambu...................తప్పులెన్నువారు తండోపతండంబు
Lurvi janulakella nundu tappu............................లుర్వి జనులకెల్ల నుండు తప్పు
Tappu lennuvaru tamatappu lerugaru................తప్పు లెన్నువారు తమతప్పు లెరుగరు
Viswadhaabhiraama, Vinura Vema................... విశ్వధాభిరామ, వినుర వేమ

தப்பு லென்னுவாரு தண்டோ³ப தண்ட³ம்பு³ லுர்வி ஜனுலகெல்ல நுண்டு³ தப்பு
தப்பு லென்னுவாரு தம தப்புலெருக³ரு விஶ்வதா³பி⁴ராம வினுர வேம! 


உன்னைச் சுற்றிப்பார். மனிதர்கள்  எது விஷயமாக  மும்முரமாக இருக்கிறார்கள்? எங்கே,  எதில், எதால் ,  தப்பு கண்டு பிடிக்கலாம் என்று அலைவோர் தான் கண்ணில் படுகிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது. தப்பு செய்யாதவன் யாரேனும் ஒருவன் உலகில் உண்டா? மற்றவன் தப்பை எண்ணுகிறவன், செயலில் குற்றம் கண்டுபிடிக்கிறவன், ஏன் தன்னுடைய தப்புகளை  முதலில்  எண்ணிப் பார்ப்பதில்லை?. தன்னுடைய தவறுகளை உணர்ந்து ஏன் அதை  திருத்திக் கொள்வதில்லை   சரியாடா  வேமா, சொல்லுடா?

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:46:32 PM8/27/23
to amrith...@googlegroups.com
சரியாக  சொன்ன  சுக ப்ரம்மம் . --   நங்கநல்லூர்  J K  SIVAN
கலியுகம் 1

காலம் கெட்டுவிட்டது. எல்லாம் தலைகீழ்.  இப்போது இருப்பது  அக்ரமத்தின் உச்ச கட்டம். இதன் பெயர்  கலிகாலம்.  இது 5000 வருஷங்களுக்கு முன் துவங்கியது.  கிருஷ்ணன் மறைவுக்குப்  பிறகு  வளர்ந்து தலைவிரித்தாடுகிறது.  இன்னும் பல லக்ஷங்கள் வருஷம் தொடரப்போகிறது.  இப்போது காளிகாலத்தில் என்ன நடக்கும்  வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அப்போதே  அதே  5000 வருஷங்கள்  முன்பு சுகப்பிரம்ம ரிஷி நன்றாக கணித்து சொல்லிவிட்டார்.  உண்மையை சொன்னால் கேட்பதற்கோ படிப்பதற்கோ கஷ்டமாகத்தான் இருக்கும். 
 ''ஸார்,  நீங்கள்  எங்கே இருக்கிறீர்கள் ? 
''நங்கநல்லூரில் ''   இப்படி சொன்னால்  புரியும், அதில் ஆச்சர்யம் இல்லை.    ''நான் கலியுகத்தில் இருக்கிறேன் '' என்றால் பதில் சொன்னவரை ஒரு தடவை உச்சி முதல் உள்ளங்கால் வரை கொஞ்சம் கோணலாக அவரைப்  பார்த்து விட்டு  ''ஐயோ பாவம்,சின்ன வயசிலேயே  புத்தி ஸ்வாதீனம் இல்லை....'' என்று நகர்வோம்.  ஸ்ரீ மத் பாகவதத்தில்   சுகப்பிரம்ம ரிஷி சொன்ன விஷ யங்களை  வரிசைப்படுத்தி  'ஆஹா''  என்று பிரமித்துப்  போக  உங்களை அழைக்கிறேன்..
துவாபர யுகத்தில்,  கிருஷ்ணன் காலத்தில்  பரிக்ஷித்துக்கு  சுக ப்ரம்மம்  சொன்னது.....
யார்  இந்த பரீக்ஷித்?  
அர்ஜுனன் பேரன், அபிமன்யு பிள்ளை.   ''தக்ஷன் என்ற பாம்பு   கடித்து இன்னும்   ஏழு நாளில்   நீ  சாகப் போகிறாய்  என்று  மரண நோட்டீஸ் கொடுக்கப்பட்டவன்.    நம்மைப் போல   வீடு வாசல், பணம், பெண்டாட்டி, குழந்தைகளைக்   கட்டிக் கொண்டு    ''ஐயோ, நான் உங்களை விட்டு போகப்போகிறேனே''  என்று அழாமல்  சுகப்பிரம்ம மகரிஷியை அழைத்து  துளைத்து எடுத்து  என்னென்னவோ  நிறைய நல்ல  விஷயங்கள் இரவும் பகலுமாக கேட்டுத்  தெரிந்து கொண்டவன்.   

பரீக்ஷித்  நல்ல  ராஜா. அவனால் நாம்  எத்தனையோ ஞானம் பெறுகிறோம். இனி பரீக்ஷித்   சுகர் சம்பாஷணையை கேட்போம்.
 ''மகரிஷி, அடுத்ததாக  ஏதோ ஒரு யுகம் வருமாமே. அது என்ன?''
'' கலியுகம்.''
''பேரே நன்றாக இல்லையே. சரி, அதில் என்ன நடக்கப்போகிறது மகரிஷி ? சொல்ல முடியுமா?''
ஆஹா  சாஸ்திரங்கள்  அதைப்  புட்டு புட்டு வைத்திருக்கிறதே. கேள். அரசனே ''

ततश्चानुदिनं धर्म: सत्यं शौचं क्षमा दया । कालेन बलिना राजन् नङ्‌क्ष्यत्यायुर्बलं स्मृति: ॥ १ ॥
tatas canu-dinam dharmah satyam saucam ksama daya kalena balina rajan nanksyaty ayur balam smrtih  .12.2.1.

''ஒவ்வொருநாளும்  கொஞ்சம் கொஞ்சமாக  மதம், சத்யம், உண்மை, நாணயம்  ( காசு இல்லை நேர்மை) சுத்தம்,  மன்னிக்கும் குணம், தயை, கருணை, ஆயுள், உடல் வலிமை ஞாபகம் எல்லாமே குறைந்து கொண்டே வரும். காலம் இதை தீர்மானிக்கும்.   (நாமே   இப்போதுள்ள நிலையில் இதெல்லாம் அனுபவிக்கிறோம். இன்னும்  வேறு நிறைய பாக்கி  இருக்கிறதோ?)

ஆரம்பத்தில்  சத்ய யுகம் 18,00,000 வருஷ காலம். மனிதனின் வயது அப்போது பத்து லக்ஷம் வருஷம்.  யமனுக்கு சுத்தமாக வேலையே இல்லை.  எத்தனை பிள்ளை, குட்டி, பேரன் பேத்தி, கணக்கு கம்ப்யூட்டரில் கூட போடமுடியாது.

அப்புறம்  த்ரேதா யுகம்  - ராமர் காலம் - 12,00,000 வருஷ காலம். அப்போது சராசரி ஒவ்வொரு மனிதனுக்கும் பத்தாயிரம் வருஷம் வயசு.   LIC  கிடையாது.   அட  சத்ய  யுகத்தைவிட  பத்து மடங்கு வயது குறைந்து விட்டதே.

அடுத்தது துவாபர யுகம்  -   800,000  வருஷ காலம்.   மனிதன் வயது  அப்போது சராசரி ஆயிரம் வருஷங்கள்.    ஐயோ  இதென்ன அக்கிரமம். வயஸு  இன்னும்   பத்து மடங்கு குறைந்து விட்டதே.

 இப்போது கலியுகம்   நடக்கிறது.  இதில் நமக்கு அதிக பக்ஷ வயஸு 100.   இன்னும்  பத்து மடங்கு குறைந்து விட்டது.  நூறு வயதே ஜாஸ்தி.   சராசரி  70 தாண்டினாலே அப்புறம் ஒவ்வொரு  நாளும்  போனஸ்.  

இன்னும் போகப்போக 20 வயது 30 வயது  ஆகிவிட்டாலேயே  அவன் தொண்டு கிழவன். தாத்தா  பட்டம் கட்டி விடப்போகிறார்கள்.

எப்படி இருக்கு?  இப்போதே  அங்கும் இங்குமாக ஒரு சில  30-35 வயது ஹார்ட் அட்டாக் மரணங்கள் . படிக்கவோ கேட்கவோ ஷாக்  அடிக்கிறது.   ஞாபக சக்தி குறைந்து போய்விட்டது.   கேட்க கேட்க , படிக்க படிக்க  எதுவுமே   மறந்து கொண்டே போகிறது.  நமது தாத்தா  கொள்ளு தாத்தா, காவேரியில் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டார், பனை மரம் ஏறி நுங்கு பறித்தார், தேங்காயை பல்லால் கடித்து உறித்தார்.  தோட்டத்தில் கரும்பு கண்ணில் பட்டால் ரெண்டு மூன்று கரும்பை கடித்தே நின்றார்..  இதெல்லாம் ஆச்சர்யமான விஷயங்கலாக வாயைப் பிளந்து கேட்கிறோம்.  ஆஞ்சநேயர் கோவில் மிளகு வடையை கூட  நம்மால் கடிக்க முடியவில்லை. பல் அவ்வளவு வீக். WEAK.
கலியுகத்தில் மதம்,  பக்தி, மரியாதை, பதவிசு, எல்லாம் குறைந்து விடும்.
இப்போதே  மதம்  என்று எவனாவது பேசி  எசகு பிசகு  பண்ணினால்,  சொன்னால்,  உடனே  பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள்......மதச் சார்பற்ற.... இதற்கு என்ன அர்த்தம் என்றே எனக்கு  இன்னும்  புரியவில்லை.  கோவில்கள் சிலரது  வாழ்க்கைக்கு  சௌகரியங்களை தேடித்தரும்  சுலப வழியாகி விட்டதே.  கிராமங்களில் கோவில்களில் ஆளே இல்லை. சில கோவில்களில் சாமியே  காணோம். அமெரிக்காவுக்கோ எங்கோ சென்று விடுகிறது.   கோவில் நிலங்கள் பிளாட் ஆகி விட்டன.  அன்னதானம் நிச்சயம் என்று தெரிந்த சில கோவில்களில்  பிச்சைக்காரர்கள்,  உழைக்காமல் பிழைப்பவர்கள் தான் சாப்பாட்டு நேரத்தில் கண்ணில் படுகி றார்கள். பக்தர்களுக்கு  இலவச உணவு சுத்தமாக  கிடைக்குமோ?.  

கருணையாவது, காருண்யமாவது, தயையாவது.   ஒரு ரூபாய்க்கு குழந்தையை விற்கிறார்கள்.  அசந்தால் அறுபதுக்கு மேலே கிழவிகள் தங்கச் சங்கிலி தங்கள் உயிர் இரண்டையும் கோட்டை விடுகிறார்கள்.  மூன்று வயது பெண் குழந்தையை பாலின வன்மையில் கொல்கிறார்கள்.  பத்திரிகை  டிவி  எல்லாமே   நிமிஷத்துக்கு நூறு கொலை கொள்ளை பற்றி தான் செய்தியும் படமும் போடுகிறது.  நல்ல  விஷயம் எதையும் சொல்ல பிடிக்கவில்லையா?  சொல்வதற்கு எதுவும் இல்லையா? நடப்பது இப்படி இருந்தால் அதைத்  தானே  காட்ட, சொல்ல முடியும். 

ஆமாம் நமது காலம் கலிகாலம் என்பதை மேற்படி ஸ்லோகத்திலிருந்து உணர்கிறோம். எப்படி இவ்வளவு துல்லியமாக  சுகர்  சொல்ல முடிந்தது  அதுவும்  5000 வருஷங்களுக்கு முன்னால் .....!

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:46:41 PM8/27/23
to amrith...@googlegroups.com
RAJA THATHA , THE GIFT  TO MANKIND..   --  J K SIVAN  

It is very rare to come across  in life, giants and great men., especially  a  person  blessed and recognized by Maha Periyava  for  translating  sanskrit sthothras and slokas.  Such books  authored by PRR were published  at  most economic and  comfortable price  to reach many people with the aim of spreading knowledge and discipline in life. 

i have been lucky in that respect to know and learn about Sri PUDUCCODE  RAMA IYER  RAMACHANDER though we have not met yet.  PRR  is an embodiment of  love &  affection towards  his friends,  a tower house of  deep and sound knowledge , Master of  many languages and an epitome of  humility and simplicity.  He may be younger  than me  by a few months in age but is  ages and aeons beyond me  in knowledge of all vedhas, sasthras, and scripts in many languages.  I wish I achieve  1/10000000000th of his knowledge which will make me a  complete human.  Here  are  some  facts about this human wonder. 

born on 10-1-1940, in Chelakkaara, Trichur District  to  a Kerala Iyer,  Sri P.R.Rama Iyer  popularly known in the village as  Kunju Rama Iyer, hailing from Puduccode village PRR  is  Master 
degree holder  in Mathematics, and holds  a post doctoral diploma in agricultural statistics,  He was  Head of department of Statistics in several ICAR Institutes and after 36 years of service, he retired and published  more than 150 papers and 4 books and was recognised as one of the  Scientists of the millennium in England by an International Scientific institution.. 

PRR  has no time to waste even a second and if he has any  spare time it is devoted to  Astrology, matching of horoscopes over internet, Historical studies, Writing English poems, Translating Sthothrams in to english  which made me  know him and admire him for ever.  He  is Master of  languages such as English, Tamil , Malayalam, Hindi and Sanskrit  besides  Telugu and Kannada.  He lives in Bengaluru now. 

PRR  can be internationally  enjoyed by browsing  http://www.ibiblio.org/sripedia/ebooks/ramachander/
Here are some further links to read PRR 
I.Varnashrama Dharma Prakarana(Dharma for different Varnas) https://brahminrituals.blogspot.com/…/varnashrama-dharma-pr…
II. Aahneeka Dharma Prakarana(Dharma of activities of day to day life) https://brahminrituals.blogspot.com/…/aahneeka-dharma-praka…
III. AAsoucha Dharma Prakarana (Dharma for upholding cleanliness) https://brahminrituals.blogspot.com/…/aasoucha-dharma-praka…
IV.Sradha Dharma Prakarana (Dharma towards the Pithrus( manes)) https://brahminrituals.blogspot.com/…/sradha-dharma-prakara…
V.Thidhi nirnaya Dharma Prakaranam (dharma towards fixing time ) https://brahminrituals.blogspot.com/…/thidhi-nirnaya-dharma…
VI.Prayachitha Dharma Prakarana,(Dharma of redemptive acts) https://brahminrituals.blogspot.com/…/prayaschitha-dharma-p…
SAmkshepa Dharma sasthra Samkeerna Vishaya.(Miscellaneous important aspects ) https://brahminrituals.blogspot.com/…/samkshepa-dharma-shas…

PRR, incidentally  did  the   marathon translation activity by writing three magnum opus “Ramayanas” of great writers Valmiki,  Kamba  and  translation of Vedha Vyasa 's  Adhyathma Ramayana. Being an erudite scholar  it  is easy for him only, to undertake such tasks of  translating  21 Upanishads, Bhagavad Gita, Devi  Mahatmyam, Narayaneeyam,  Jnanapana, Krishna  Karnamrutham, 21  Vedic Sukthas,  including Chamakam, Rudram and 65 out of 80 known Stotra  compositions of Adhi Sankara.  His contribution to the music world  includes  translation of 1950 Kritis, which include devotional  krithis of  Thyagaraja, about 100 Kritis each of Purandaradasa , Oothukadu Venkatasubba Iyer and many others. 
PRR  is a best  story teller  in the garb of RAJA THATHA, for children and even adults like me.    

What I have written about PRR above is  only a small  sample,  and a  spoonful  from the treasure trove he has  contributed to the society. 

May KRISHNA'S BLESSINGS  BE WITH PRR FOR ALL HAPPINESS, PEACE, LONG & HEALTHY LIFE TO CONTRIBUTE MORE AND MORE FOR US ALL.


prr jpg.webp

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:46:49 PM8/27/23
to amrith...@googlegroups.com

கேள்வி பதில் ரத்னமாலை - நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா

கேள்வி பதில் ரத்னமாலை  261-275


261.  எவை ரம்யமான   அழகிய வார்த்தைகள் ?
பொய்  கலக்காத  உண்மை, சத்ய வார்த்தைகள். 

262. எப்போது செல்வந்தனை  போற்றுவார்கள்?
செல்வம் பரம்பரை  வம்சாவழியாக சேர்த்து வைத்திருப்பதால் பெருமை இல்லை.  அதில் ஒரு பங்காவது  இல்லாதவர் களுக்கு, எளியோர்க்கு தானம் செய்பவன் போற்றப்படுகிறான். 

263. எவன் கெட்டிக்காரன் எனப்படுபவன்?
பண்பும் எளிமையும் கொண்டவன் .

264. எவனை  திருமகள் விரும்புவாள்? 
நேர்மை நியாயம் கொண்ட மனதோடு  ஒழுக்கமாக வாழும்,  பிறர்க்குதவும், நற்குணவானை மஹா லக்ஷ்மிக்கு  பிடிக்கும். வாரிக் கொடுப்பாள்.

265. ஒவ்வொருவனும்  எதைப்  பெற பாடுபடவேண்டும்?
ஞானம், தைர்யம், பரோபகாரம்  இருந்தால்  அதுவே  புகழ், புண்யம் எல்லாம் கொண்டுவந்து தருமே. 

266.எதைக்  கண்டு  அஞ்சவேண்டும்?
பணத்தைக் கண்டு. 

267. ஒருவனின் சந்தோஷமான வாழ்க்கைக்கு எது காரணம்?
அவன் செய்த பூர்வ ஜென்ம புண்யம். 

268. நாம்  அனுபவிக்கும் கஷ்டங்கள் துன்பங்களுக்கு எது காரணம்?
வேறேது. எல்லாம் நாம்  முன்பே செய்த பாபா காரியங்களின் பலன் தான். 

269.  உண்மையான செல்வத்தை எவன் பெறுகிறான்? 
பகவானை  முழு மனதோடு நம்பி வழிபடும் பக்தன் முக்தி பெறுகிறான் அதல்லவோ  நிறைந்த செல்வம்.

270. எவன் முன்னேறுபவன்.?
மனதில் தெய்வ பக்தியோடு உண்மையாக தனக்கும் பிறர்க்கும் பயனுள்ள காரியங்கள் செய்பவன். 

271. எப்போது பொய்  பாபா கார்யமாகாது?
தர்மத்தை பாதுகாக்க  சொல்லப்படும் பொய் .

272.  நல்லோர்க்கு பலம் எதுவாக இருக்கிறது?
தெய்வ நம்பிக்கை. 

273. எதைத்  தெய்வம் என்று சொல்லலாம்?
ஒருவர்  செய்யும் நல்ல பலன் தரும் காரியங்கள். 

274. எவன் நற்பணிகள் செய்பவன்?
நல்லோர்களால் போற்றப்படுபவன் 

275. எவன் அதிர்ஷ்டக்காரன்?
சர்வ சங்க பரித்யாகிய  பற்றற்ற  சந்நியாசி. மஹா பெரியவர் போல் இன்னொருவரைப்   பார்க்க முடியுமா?

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:47:50 PM8/27/23
to amrith...@googlegroups.com
அறுபத்து மூவர்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 
சேரமான்  பெருமாள் நாயனார்

எப்படிப்பட்ட  மஹான்கள்  புண்ய புருஷர்கள்  வாழ்ந்த,  இன்னும்  சிலர் இப்போதும்  வாழும்  புண்ய  தேசம்  நமது பாரதம் என்று நாம்  முழுதும் உணராதது நமது துரதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.  தமிழகத்தைப் பொறுத்தவரை,  அதுவும் சைவ சமயத்தை பொறுத்தவரை, சேக்கிழார் பெருமான்  சுந்தரரின்  திருத்தொண்ட தொகையை மூலமாக  வைத்து 63  சிவ பக்தர்கள், நாயன்மார்கள் எனப்படுபவரகளைப் பற்றி  புராணம் எழுதியிருக்கிறார். அதை தான் நாம்  பெரிய புராணம் என்கிறோம். எல்லோரும் ஒரு முறையாவது படிக்கவேண்டிய  அற்புத நூல்.  அந்த அறுபத்து மூவரில் ஒருவரைப் பற்றி இன்று அறிவோம். அவர் பெயர்  சேரமான் பெருமாள் நாயனார்..

சேரமான்  கேரள ராஜா,  மகோதயபுரத்தை ஆண்ட பிற்காலச் சேர அரசர்களில் முதலாவது அல்லது கடைசி அரசனாக இருக்கலாம். இவர்  ஆண்ட காலம் 12 ஆண்டுகள் என்கிறார்கள்.  

பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த   பன்னிரு  ஆசிரியர்களில்  ஒருவர்  சேரமான் பெருமாள் நாயனார்.  மற்றவர்கள்  திருவாலவாயுடையார்  (மதுரை ஈசன் சொக்கநாதர்) , காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்,  நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகியோர்.

சேர ராஜாக்கள் வம்சத்தில்   திருவஞ்சைக் களத்தில்  பூர்வ ஜென்ம புண்ணிய பலனாய்த் தோன்றியவர் சேரமான் பெருமாள் நாயனார்.  திருவஞ்சைக் களத்து  சிவபெருமானிடம் ரொம்ப பக்தி.   ராஜாவாக  இருந்தாலும்  அவர்  தினமும்  விடிகாலையில் எழுந்து ஆலயத்தைத்  திருஅலகிட்டும், மெழுக்கிட்டும் பூமாலை புனைந்தும் தொண்டுகள் செய்து இறைவனை வழிபட்டு வந்தார்.   சில  உயிர் வாழும் ஜந்துக்கள் பேசும்  பாஷை அவருக்கு தெரியும்  என்பதால்  கழறிற்றறிவார் என்ற சிறப்புப் பெயர் இவர்க்கு   உண்டு. 

ஒரு தடவை  யாரோ ஒரு வண்ணான்  மூட்டையை தூக்கிக்கொண்டு நடந்து வந்தான். மூட்டை நிறைய  துணி துவைக்கும்  உவர்மண் . வெள்ளையாக  இருக்கும்.   மழை திடீர் என்று பெய்து   மூட்டையில் இருந்த வெள்ளை உவர்மண்  கரைந்து உடல் முழுதும் அந்த வண்ணன் மீது படர்ந்து வெயிலில் காய்ந்து உடல்முழுதும்  விபூதி பூசியவர் போல் காட்சியளித்தான்.  இதை கவனித்த சேரமான்  ராஜா பட்டத்து யானை மேலிருந்து கீழே இறங்கி அந்த வண்ணானை  சிவனடியாராக கருதி ஸாஷ்டாங்கமாக  நமஸ்கரித்து உபசாரங்கள் செய்து தனது  பட்டத்து யானை  மேல்  அந்த வண்ணானை  ஏற்றி அமரச்  செய்து தான் நடந்து அரண்மனை சென்றார்.  இது பற்றி நம்பியாண்டார்  பாடியது  திருத்தொண்டர் திருஅந்தாதி யில்  வருகிறது: 

மன்னர் பிரான்எதிர் வண்ணான் உடல்உவர் ஊறி நீறார்
தன்னர் பிரான்தமர் போலவருதலும் தான் வணங்க
என்னர் பிரான்அடி வண்ணான் எனஅடிச் சேரன்எனும்
தென்னர் பிரான்கழறிற்றறி வான்எனும் சேரலானே.(44)

ஒவ்வொருநாளும்  சேரமான்  சிதம்பரம் நடராஜனை  மனதில் நினைத்து உபச்சாரம் பூஜைகளை  செய்வார். இதை ஏற்றுக்கொண்டதற்கு  அடையாளமாக  நடராஜா,  பூசையின்  முடிவில்  தனது  பாதத்தின்  சிலம்பொலியை  எழுப்பி  சேரமான் கேட்டு மகிழ வைத்தார் என்று புராணம் சொல்கிறது.   ஒருநாள்  பூசை முடிந்ததும்  வழக்கமாக கேட்கும் நடராஜனின் பாத சிலம்பொலி லேட்டாக  கேட்டது.  என்ன காரணம்?  என் பூசையில் ஏதோ பிழையோ என்று சேரமான்  கலங்கினார். அப்போது நடராஜர்   ''சேரா,  சிதம்பரத்தில்  சுந்தரர்  வந்திருக்கிறார்   என் மீது   பாடல்களை பாடுகிறார். அதைக் கேட்டுக்  கொண்டிருந்ததால் உனக்கு என் பாத சிலம்பொலி லேட்டாக  கேட்டது ''என்கிறார்.

உடனே  சுந்தரரைக் காண  சிதம்பரம் ஓடுகிறார்  சேரமான்.  அங்கிருந்து சுந்தரர்  திருவாரூர் சென்றுவிட்டார் என அறிந்து அங்கே செல்கிறார் சேரமான்.  தரிசிக்கிறார். இருவரும் நெருக்கமான  நண்பர்களாகிறார்கள்.  சேரமான் திருமும்மணிக் கோவை என்னும் பிரபந்தம் பாடி  சிவனைப் போற்றினார். சுந்தரரோடு  சில காலம்  சேர்ந்திருந்து பல சிவாலயங்கள் இருவருமாக சேர்ந்து   சென்றார்கள்.  

 பாண்டிநாடு சென்று திருஆலவாய் முதலான தலங்களைத் தரிசிக்க விரும்பி  மதுரை யாத்திரை மேற்கொண்டனர்.   பாண்டிய மன்னனும்  சோழ மன்னனும்  இந்த சேரராஜாவோடு  சேர்ந்து மூவேந்தர்களாக  சுந்தரரை வணங்கி உபசரித்தனர். பாண்டியநாட்டு  சிவஸ்தலங்களுக்கு  சேரமானோடு  சுந்தரர் சென்று  திருவாரூர்  இருவரும் திரும்பினார்கள். சிலகாலம் தங்கி சேரமான் சுந்தரரை அழைப்பை ஏற்று சுந்தரரும்  சேரமான் தலைநகரான   கொடுங்கோளூர் சென்றார்கள்.  சுந்தரரைச் சேரமான் தம் அரியணையில் அமர்த்தி உபசரித்தார். நாள்தோறும் பக்தி பரவசமாக  ஆடல் பாடல் முதலிய நிகழ்ச்சிகளால் அவரை மகிழ்வித்தார்  சேரமான்.

ஒருநாள் சேரமான் திருமஞ்சனசாலையில் திருமஞ்சனமாடிக் கொண்டிருந்தபோது சுந்தரர் திருவஞ்சைக்களம் சென்று இறைவரை வணங்கி, `தலைக்குத் தலைமாலை` என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார்.   மிகவும் சந்தோஷமுற்ற  பரமேஸ்வரன் இந்திரன் முதலிய தேவ கணங்களையும் வெள்ளை யானையையும் அனுப்பிச் சுந்தரரைத் கயிலைக்கு அழைத்து சென்றார். . 

சுந்தரர் திருக்கயிலாயம் செல்வதைத்  தனது  ஞான திருஷ்டியில் அறிந்த   சேரமான் தன் அருகில் நின்றிருந்த குதிரை மீது ஏறித் திருவஞ்சைக்களம்  விரைந்து  சென்று சுந்தரர் தேவகணங்களுடன் திருக்கயிலை செல்வதைக் கண்டு  களித்துத் தாமும் அவருடன் கயிலை செல்லும் குறிப்போடு குதிரையின் காதில் 'ஓம்  நமசிவாய; '  என்று உச்சரித்து ' நீயும்  சுந்தரரின் வெள்ளை  யானையை தொடர்ந்து கைலாசம் ஓடு''  என்று சொல்கிறார்.   குதிரை தலை தெறிக்க ஓடியதால் சுந்தரர் செல்லும் வெள்ளை யானையை வலம் வந்து அதன் முன்னே  சேரமான் சென்றார். இருவரும் தெற்கு வாயில் வழியாக   சிவபெருமானின் வாஸஸ்தலமாகிய  கைலாசத்தை அடைந்தார்கள். சுந்தரர்  உள்ளே சென்று   அம்பாளையும் சிவனையும் வணங்கினார்.  கூடவே வந்த  சேரமானைப் பார்த்து சிவபிரான் `இங்கு நாம் அழையாமல்  நீ வந்தது ஏன்?` எனக் கேட்கிறார். ஈசனின்   திருவருள் வெள்ளம் சுந்தரருடன் என்னையும் ஈர்த்து இங்கே  கொணர்ந்து நிறுத்தியது; அடியேன் தேவரீரைப் பாட்டுடைத் தலைவராக வைத்து திருஉலாப் புறம் ஒன்று பாடியுள்ளேன் அதனைத் திருச்செவி சார்த்தியருள் வேண்டுமென வேண்டினார். பெருமான் அதனைச் சொல்லுக எனக்கேட்கத் திருக்கயிலாய ஞான உலாவைத் திருக் கயிலையில்  சிவ பெருமான்  முன்  அரங்கேற்றினார்.  

சிவபிரான்  சுந்தரரோடு சேரமானையும் சிவகணங்களுக்கு தலைவனாக  சேரமானையும்  நியமித்து  கயிலையில் சிவத்தொண்டாற்றினார் என்கிறது புராணம். 


sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:47:50 PM8/27/23
to amrith...@googlegroups.com
ஒப்புக்கொள்  உண்மையை    -    நங்கநல்லூர்  J K  SIVAN 

இது எல்லாருக்கும் தெரிஞ்ச கதையாகத்தான் இருக்கும். வேறு  ரூபத்தில்  இருந்திருக்கலாம்.   தெரிந்ததாக  இருந்தாலும், தினமும் சாப்பிடறோமே  சாப்பாடு அடுத்த  வேளைக்கு அலுத்தா போகிறது?  சாப்பிட நாக்கும் வயிறும் அலைகிறதே. அதுபோலவே, இறைவனைப்  பற்றியோ, மகான்களைப்  பற்றியோ பேசவோ, எழுதவோ, நினைக்கவோ அலுத்து போவதே இல்லை!!!  இது  இன்றுவரை எனது அனுபவம்.   இதை 
 ஒரு அருமையான கதை என்று படித்தபிறகு ஆடமடிக்காக automatic  தலையை ஆட்டுவீர்கள்.. இன்று எனக்கு என்னவோ இதை  எழுதவேண்டும் என்று தோன்றியது.

ஒரு பக்தன், ஏன்,  "கிருஷ்ண ப்ரியன்"   என்ற பெயரையே வைத்துகொள்வோமே!!.   தன் வாழ்நாள் பூரா பகவத் சிந்தனையிலும்  நாமஸ்மரணையிலும் இருந்துகொண்டே தன் உலகவாழ்க்கையில் உழன்றுகொண்டு இருந்தபோது அவனுக்கும்  கிருஷ்ணனுக்கும்  ஒரு உடன்பாடு.

"கிருஷ்ணா, எனக்கு ஒன்றுமே வேண்டாம். என்னோடு ஒருகணமும்   நீ பிரியாது இருந்தாயானால் அதைக்காட்டிலும் மேலான பரிசு எனக்கேது?"

"அவ்வளவுதானேடா, கவலைபடாதே, நான் எப்போதும் உன்னுடனேயே இருப்பேன். திருப்தியா?" என்றான் கிருஷ்ணன்.

பக்தனின் பூலோக வாழ்க்கை ஒருநாள் முடிந்தது. நேரே பகவானையே அடைந்தான். சந்தோஷமாக இறைவனை நிழலாக தொடர்ந்தான். அளவளாவினான். ஒருநாள் அவர்கள் பேச்சு அவன் பூலோக வாழ்க்கை பற்றியதாக இருந்தபோது திடீரென்று  கிருஷ்ணப்ரியனுக்கு ஒரு சந்தேகம். யோசித்தான்.

"என்ன திடீரென்று மௌனம்? என்ன சிந்திக்கிறாய் “--  கிருஷ்ணன் 
 “என்னிடம்  ஒப்புக்கொண்டபடி   எனது பூலோக வாழ்க்கையில் நீ எப்போதுமே என்னோடு இருந்தாயா?”
“ஏன் சந்தேகம்? இதோ பார் உன் வாழ்க்கை பாதையை.”” 
க்ரிஷ்ணப்ரியனின்  உலக வாழ்க்கை பாதையை காட்டபட்டது.  ஆரம்பமுதல் இறுதிவரை இரு ஜோடி கால் தடங்கள் தென்பட்டன. 
''இதோ பார்த்தாயா இந்த  ரெண்டு ஜோடி காலடிகள். ஒரு ஜோடி  உனது, ஒரு ஜோடி எனது.''

நன்றாக உற்று பார்த்த கிருஷ்ணப்ரியன்.விஷ்ணுப்ரியன்    “ ஜாலக்கார  கிருஷ்ணா,  என் சந்தேகம் ஊர்ஜிதமாகிவிட்டது. என் கால்சுவடுகளுக்கு பின்னால் பல இடங்களில் ஒரு ஜோடி கால் சுவடுகளைத் தொடர்ந்து காணோமே.  இதிலிருந்தே புரியவில்லையா?   நீ எப்போதும் என் பின்னே உறுதுணையாக இல்லை என்று கண்டுபிடித்து விட்டேன்''  என்றான் கிருஷ்ணப்ரியன்.
கிருஷ்ணன்  வாய் கொள்ளாமல் சிரித்தான்.
'கிருஷ்ணா,  மாட்டிக்கொண்டு விட்டு,  பதில் சொல்ல தெரியாமல்  சிரித்து மழுப்பாதே உண்மையை ஒப்புக்கொள்”  
 "அடே அசடே, முன்னால் இருப்பது பின்னால் இருப்பது  இரு ஜோடிகளும் உனதும் எனதும் தான். எங்கெங்கெல்லாம் ஒரே  ஒரு  ஜோடி மட்டும் காண்கிறதோ, அதெல்லாம் வாழ்க்கையில் நீ துன்பமுற்ற காலங்கள்.   அப்போது நான்  உன்னை சுமந்து நடந்த போது பதிந்த என்னுடைய காலடி சுவடுகள்.  இப்போது புரிகிறதா?”   எ

க்ரிஷ்ணப்ரியன் இதை எதிர்பார்க்கவில்லையே.  அப்படியே கண்ணீர் மல்க   கிருஷ்ணனின்  பாதங்களில் சிரம் வைத்து  நன்றி கண்ணீறால்   கிருஷ்ணன்  திருவடிகளுக்கு  அபிஷேகம் செய்தான்.

ஒரு பழைய  பொன்மொழி ஞாபகம் வருகிறதா?  கடவுளை நம்பினோர் கை விடப்படார்.
 

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:48:07 PM8/27/23
to amrith...@googlegroups.com
கலியுக விஷயம்  -   நங்கநல்லூர்   J K   SIVAN 

ப்ரம்மாவின் ஒரு நாள்.

நாம்  இப்போது வசிக்கும் வாழும்  கலியுகம் பற்றி நாம் முழுதாக தெரிந்து கொள்ளவில்லை.  ரொம்ப ரொம்ப கஷ்டமான ஒரு கால கட்டத்தில் நாம்  ஜீவிக்கிறோம் என்று மட்டும் தெரிகிறது.  யாருமே  சுகமாக  இருப்பதாக  சொல்வதில்லையே  ஏன்?  கலியுகம் என்றால் இப்படித்தானா?

கலியுகத்தைப் பற்றி கொஞ்சம்  அதிகம்  தெரிந்துகொள்ள  சில புள்ளிவிவரங்கள் முதலில் அறிந்து கொள்வோம்.இனி 
 எழுதப் போவதை  நிதானமாக புரிந்து கொண்டு  படிக்கவும்.

நம்மைப்  படைக்கும்  ப்ரம்மாவுக்கு   ஒரு  நாள்   என்பது ....ப்ளீஸ்....  கால்குலேட்டரைத்  தேடவேண்டாம். அதால் கணக்கு போட முடியாது.... பக்கத்தில் கம்பம், தூண் இருந்தால் கெட்டியாக பிடித்துக்கொண்டால்  விழாமல் இருக்கலாம். 

 நமது  வீட்டில்  ஏதாவது விசேஷம்  நடக்கும்போது  வலது தொடை மீது  இடது  உள்ளங்கை வைத்து  அதன் மீது  வலது உள்ளங்கை  மூடி  சங்கல்பம்  செய்கிறோமே.  அந்த  மந்திரத்தை  கொஞ்சம் ஞாபகத்துக்கு  கொண்டு (மனப்பாடமாக இருந்தால்) இல்லாவிட்டால்  கவலையே  இல்லை.  அடுத்த  முறை  வாத்யார்  சொல்லும்போது   காதாலாவது கேட்கலாம்.

"...ஆத்ய  பிரம்மணே , த்வீதிய  பரார்த்தே, ஸ்வேத வராஹ  கல்பே,   வைவஸ்தவ மன்வந்தரே, கலியுகே,  ப்ரதமே பாதே..''
 இது  என்ன சொல்கிறது?   பிரம்மாவிற்கு  ரெண்டு  காலவரையறை.   
ஒரு  பரார்த்தம்  50  வருஷங்கள் கொண்டது.  ரெண்டு  பரார்த்தம்  தான் அவர்  பதவி காலம்.  
இப்போது  பிரம்மாவிற்கு  ரெண்டாவது  பரார்த்தம்   அதாவது  51லிருந்து  100வது வருஷ   பீரியட் .  51 வது  வருஷ  சர்வீஸ்  இப்போது நடக்கிறது..இங்கு ''வருஷத்தில்''  தான்  சூட்சுமம்  இருக்கிறது.
 நமது  வருஷம் போல்  12 மாதம்,  X 30  நாள்  சமாசாரம்  இல்லை   பிரம்மாவுக்கு.
ஒவ்வொரு  நாளும்  ஒரு  ''கல்பம்''.   மொத்தம்  30  கல்பம்  முப்பது நாள்.  (உதாரணம்:  ஸ்வேத  வராஹ கல்பம், நீல லோஹித கல்பம்,   வாம  தேவ  கல்பம்  இத்யாதி.....) ஆச்சா.  
''கல்பம்''  என்றால் என்ன என்று தெரிய வேண்டாமா?
ஒரு கல்பம்  14  மன்வந்திரம்  கொண்டது.
என்னய்யா புதுசு புதுசா அடுக்குறீர்.  ''மன்வந்த்ரம்'' ன்னா  என்னது?
மன்வந்தரம்  என்பது  நமது  கணக்குப்படி, 17.28 லக்ஷ  வருஷங்கள்  இடைவெளி  கொண்ட காலம் . 
அப்படியென்றால்  பிரம்மாவுக்கு நடுவிலே  ரெஸ்ட்.  படைப்பு  தொழிலுக்கு   ஹாலிடேயா? நிச்சயம்  அப்படி   இல்லை.
ஒவ்வொரு  மன்வந்தரமும்   71    மஹா யுகங்களை  கொண்டது.  
ஒரு  மஹா   யுகம்  என்பது    நாலு  யுகங்களை  உடைய  க்ரூப்.  ( சத்ய ,  த்ரேதா, த்வாபர,  கலியுகங்கள்)  இவற்றிற்கு  முறையே  4, 3, 2, 1  பாதங்கள்  உண்டு.   கணக்கு இன்னும் முடியலை.  கொஞ்சம் பொறுமையா இருங்கோ.   இன்னும் இருக்கிறது.  கவலை  வேண்டாம்.  
 ஒரு  பாதம்  என்பது நமது  கணக்குப்படி   4,32,000 வருஷங்கள்.   போதுமா?
நாம்  இப்போது  உள்ளது    7வது  மன்வந்தரத்தில்  28வது  கலியுகத்தில்.
ஒவ்வொரு  மன்வந்தரத்திற்கும்  ஒரு  தலைவன்.   அவன் பேர்  தான்  மனு.  ஆசாமி பேர் இல்லை. பதவிக்கு பேர். கவர்னர்  மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். 
 இந்த  மனு  பதவிக்கு  நியமனம்  பெற்றவர்கள் 14  பேர்.   (1. ஸ்வயம்புவ, 2.  ச்வரோசிஷா,  3உத்தம,  4.தாமச, 5.ரைவத,  6 சக்ஷுசன்,  7   வைவஸ்வதன் --  இவர்தான்  இப்போதைய  மனு  அதிகாரி. .(சூரியனின்  பிள்ளை)  8. சூர்ய சவ்மி ,, 9 தக்ஷ சவ்மி , 10. பிரம்ம சவ்மி . 11. தர்ம  சவ்மி , 12. ருத்ர சவ்மி , 13.தேவ சவ்மி 14  இந்திர  சவ்மி .
ஒவ்வோர்  மன்வந்திரத்திலும்  ஒரு  இந்திரன்  உண்டு.  அவன் தான்  தேவலோக ராஜா.  அது வகிக்கும் பதவியின் பேர். அவன் சொந்த பேர் இல்லை. 
இந்திரனுக்கு  கீழே  புரந்தரர்கள் என்று சில பேர்  இருக்கிறார்கள். .
 ஒவ்வொரு  புரந்தரருக்கும்  உதவியாக   7  ( சப்த)  ரிஷிகள்  இருக்கிறார்கள். 
இப்போதுள்ள  சப்த  ரிஷிகள்  யார் தெரியுமா உங்களுக்கு ?
அத்ரி,  வசிஷ்டர் ,  காச்யபர், கௌதமர் , பரத்வாஜர்,  விஸ்வாமித்ரர்,  ஜமதக்னி.
அடுத்த  இந்திர பதவிக்கு  காத்துக்கொண்டிருப்பது யார் தெரியுமா? 
மஹாபலி.

மஹாபலி   அடுத்த இந்திரன் ஆனால் அவனுக்கு உதவ  சப்த ரிஷிகள் ரெடியாகி  விட்டார்கள்: அவர்கள் யார்? 
 பரசுராமர்,  தீப்திமதர், காலவ ரிஷி, கிருபர் , அஸ்வத்தாமா,  வியாசர்,  ரிஷ்ய ஸ்ரிங்கர்

 இப்போது  நடக்கும்  கலியுகம்  28 வது சுற்று.  நமது  இந்த  28வது  கலியுகம்  ஆரம்பித்தது  3102 B.C (கிருஷ்ணன்  இருந்த  காலத்தில் கடைசியில்)  ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்னால் .

 அடுத்து  வரப் போகும்  மனு  :    சூர்ய  சவ்மி (விவஸ்வான் பிள்ளை,சூரியனின்  பேரன்--  அங்கும்  வாரிசு  ஆட்சி தானோ?)
 சாஸ்திரங்கள்  என்ன  சொல்கிறது தெரியுமா?.  
இந்த  மஹா  காலத்தைப்  பற்றிய  விவரங்களை  அறிந்து கொண்டாலே  ஒருவன்  தனது  பாபங்களில்  இருந்து  விடுபடுகிறான்  என்று  சொல்கிறது. ஆகவே இதை தெரிந்துகொண்டாலே  நமக்கு நல்லது தான் போல இருக்கிறது..  

 இதையெல்லாம் படித்தாகிவிட்டது. நான் இப்போது  ஒரு கேள்வி கேட்கிறேன். 
  உங்கள்  பெயர்  என்ன??????? 
மேலே  படித்ததில்  தலை சுற்றி உங்கள் பேரே  மறந்து போய்   விட்டதா?   
 இது தான் பிரம்மாவின்  ஒரு  நாள்  .....

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:48:07 PM8/27/23
to amrith...@googlegroups.com
ஞானிகளும்   ஆத்ம  பலமும்   -   நங்கநல்லூர்     J K  SIVAN 

''ரமணர் ஒரு பெரிய  மகரிஷி என்பது  சரியா?''
 அண்ணாமலை சாமி என்ற   ரமண பக்தரை  ஆஸ்ரமத்தில் ஒரு வெள்ளைக்காரர் இப்படி கேட்டார்.

அண்ணாமலை சாமி:    ''ஒரு பெரிய  தீபம் எரிகிறது.   பல பேரிடம்  அகல் விளக்கு  எண்ணெய்  திரி இருந்தும்  வெளிச்சம்  இல்லை. தீபம் எரியவேண்டும் என்றால் எப்படி?  ஒரு   பெரிய தீபம்  சுடர்  விட்டு  எரிகிறதே. அதிலிருந்து  தான் மற்ற  அகல் விளக்குகளின் திரிகள்  ஒளி பெறுகிறது.   எவ்வளவு  தான்  அகல் தீபங்கள் எரிந்தாலும்  பெரிய தீபத்தின் ஒளி இருக்கிறவரை  சின்ன அகல் விளக்கின் ஒளி   எடுபடாது.  தேவையும்  இல்லை. பெரிய  விளக்கிலிருந்து வெகு   தூரம்  போனதும்  கையிலே இருக்கிற  அகல் விளக்கின் ஒளியில் நான்  காலடி எடுத்து வைத்து  மெதுவாக போகிறேன்.  அடுத்தவர்களுக்கு ஒளி காட்ட  அது போதாது.  என்னை  முதலில் சரியாக  வழி நடத்த உதவினாலே  நான்  அதிர்ஷ் டசாலி.சிலருக்கு  அவர்களின் கையில் இருக்கும்   அகல் ஒளி  அவர்களுக்கு வழிகாட்டவே  போதவில்லையே. 

 எத்தனையோ ஞானிகள் இருக்கிறார்கள். ஆத்ம ஞானம் பெற்று அமர்கிறார்கள், சிலர் மற்றவருக்கு கொஞ்சம் எடுத்து சொல்கிறார்கள். சிலர் ஒன்றுமே சொல்லாமல் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் நடுவே    அண்ணாமலை  தீபம்  போன்ற  பெரிய  ஞான  தீபம்  ரமண மகரிஷி.

தண்ணீர்  கிணற்றிலும் இருக்கிறது பெரிய ஏரியிலும்  இருக்கிறது.  அநேக  பிராணிகளின் தாகத்தை ஏரி  நீர் தான் தீர்க்கும்.  சின்ன விளக்கு  ஒரு சின்ன அறைக்கு மட்டுமே  முணுக் முணுக் னு வெளிச்சம் தரும்.  மகரிஷி  ரமணர்   சூரிய ஒளி மாதிரி. எல்லாவற்றுக்கும், எல்லோருக்கும்  எப்போதும்  பார்பக்ஷமின்றி ஞானம் தருபவர்.

வெள்ளைக்காரர்:   ''சில  ஞானிகள் பெரிய விளக்குகள் , மற்றும்  சிலர்  முணுக் முணுக் விளக்குகளா ? சின்ன விளக்குகள் பெரிதாகாதா? எப்போதுமே அப்படித்தான் இருக்குமா?

அண்ணாமலைசாமி:   ''விளக்கு எல்லாம் ஒண்ணு  தான்.   சில ஞானிகளால் தான்  நிறைய பேரை  ஞானம் பெற செய்ய முடியும்.  ஞானத்தை  தான் மட்டும்  பெறுவது வேறு.  மற்றவர்களை பெறச் செய்வது வேறு  ஸார். எல்லோராலும் மற்றவரை ஞானம் பெற செய்ய முடியாது.''

வெ.கா:  ''நான்  பகவான்  ரமண மஹரிஷி சொன்னதாக  எங்கோ படிச்சேன்.    ''ஞானிகளால்   ஜீவனின் மனதை  பரமாத் மாவின் மனதோடு  கலக்க செய்ய முடியும் '' னு  சொல்லி இருக்கார். 

அ .சா:  ''ஆமாம்   பெரிய  கப்பல்லே  பல பேரை  அக்கரைக்கு  கொண்டு போய் சேரலாம். குட்டி படகுலே  சிலரை மட்டும் தான் கொண்டு சேர்க்கலாம்''

வெ .கா:  ''சில ஞானிகளால் யாரையுமே அக்கரை  கொண்டு சேர்க்க முடியாதா?

அ .சா:    ''சில  ஞானிகள் சிஷ்யர்கள்  இல்லாதவர்கள்.  அல்லது சிஷ்யர்களைத்  தேடாதவர்கள். தனித்திருப்பவர்கள். அவர்கள் எவரையும் கரை சேர்ப்பதில்  கவனம் செலுத்துவதில்லை.   ஈடுபடுவதில்லை.  அவர்கள்  ஞான சக்தி குறிப்பாக சிஷ்யர்கள் என்று இல்லாமல் எல்லோருக்கும் பொதுவாக  லோக க்ஷேமத்துக்காக  ஏதாவது உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.   சிலர்  சமாதியில் கரைந்து விடுபவர்கள். மற்றவரோடு  நேரடி  சம்பந்தமில்லாதவர்கள்.  பகவான் ரமணரோடு   ஆஸ்ரமத்தில்   லக்ஷ்மி  என்ற  ஒரு பசு இருந்தது. பூர்வ ஜென்ம  புண்யம் செய்த ஞானி அது  என்பார்  ரமணர்.  பகவானின் தாயார் அழகம்மாள் அப்படித்தான்.  தான்  தியானம் செய்து கரை ஏறியவள் . அவளுக்கும் சேர்த்து தான் ரமணர்  உலகில்  அநேகரை கரை ஏற்றி விட்டார்.  இன்னும் ஏற்றுகிறாரே'' . 

எல்லா ஞானிகளும்  சமம் தான்.   சிலர்  அதிக  சிஷ்யர்கள் கொண்டவர்கள்  என்பதால்  உயர்ந்த ஞானம் கொண்டவர்கள்  என்றோ  சிஷ்யர்களை அருகிலேயே   சேர்க்காத  சேஷாத்ரி ஸ்வாமிகள் போன்றோர்  குறைந்த ஞானம் கொண்டவர்கள்  என்றோ  ஒரு போதும்  தப்பாக  மதிப்பிடக்கூடாது. ராமணரையே உலகுக்கு அளித்தவர் சேஷாத்ரி ஸ்வாமிகள்.    பகவான் ரமண மகரிஷி ஒருபோதும்  ஞானிகளை  ஒப்பிட்டதில்லை.   ஆத்ம ஞானம் அடைந்த ஞானி என்பதற்கு மேல் உயர்ந்த ஸ்தானம் எதுவுமில்லை.  இதில்  இவர் உயர்ந்தஞானி,   அவர் ஞானம் சற்று குறைந்தவர்  என்பதே தவறான  ஒப்பீடு.

ஒரு டம்ளரில்  நீர் இருந்தால் ஒருவர் தாகம் தீரும். ஒரு பெரிய  அண்டாவில் நீர் இருந்தால் பலரின் தாகம் தீருமல்லவா?  கிணற்றில்  நீர்  இருந்தால்  ஊருக்கே  தாகம் தீரும்.   மூன்றிலும்  உள்ள  நீர் ஒன்று தானே. அதுபோல் சில ஞானிகள் ஒதுங்கி தனித்து வாழ்வார்கள். சிலர்  பல லக்ஷம் சிஷ்யர்களோடு, வெளி உலகில் காண்பார்கள். உள்ளுலகில் இருவரும் சமம்.  சில ஞானிகள் தபஸ் இருந்து உலகில் பலரின் துன்பம் போக்குபவர்கள்.  காஞ்சி மகா பெரியவர்கள் போல் உள்ளவர்கள். சிஷ்யர்களை தேடுபவர்கள் அல்ல. வந்த  பக்தர்களை வெறுப்பதில்லை.  அனைவருக்கும் முடிந்தவரை உதவுபவர். 

தானாக  தனியே அமர்ந்து ஞானத்தை தேடி ஆத்ம விசாரத்தின் மூலம்  ஞானம் பெற்றவர்கள் சக்தி கொண்டவர்கள். எவ்வளவு தனித்து த்யானத்தில்  ஈடுபடுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு  ஆத்ம பலம்  பெருகும்.  இந்த சக்தி மூலம் தான் குருமார்கள் சிஷ்யர்களுக்கு போதிக்கிறார்கள்.  எல்லோராலும் தனித்து அமர்ந்து த்யானம் செய்ய இயலாது. அது பூர்வ ஜென்ம  சுக்ருதம். ’

பகவான் ரமணர்  முதல் பத்து வருஷங்கள் போல  திருவண்ணாமலையில்  குகையில் அமர்ந்து தனித்து மௌனமாக  ஆத்ம  ஞானம் தேடி பலம் அடைந்தவர்.  தேகத்தை   புலன்களை வென்றவர். தேகபலத்தை வைத்துக்கொண்டு வாழ்வது ஒரு யானை சிறிய  குடிசைக்குள் புகுந்த கதை.  பகவான்  ரமணர்  தலையை ஆட்டிக்கொண்டோ,  கைகளை கால்களை ஆட்டிக்கொண்டு  ஆடிக்கொண்டு  கொம்பை ஊன்றிக்கொண்டு  நடந்ததோ அவருக்கு எந்த  நரம்பு, வியாதியும் இல்லை.    ஆத்ம பலம்  கொந்தளிக்கும்போது அதை  தேகம்  தாங்காமல்  நடுங்குவது. இதுவும் ஒரு விதத்தில்  யானை தொத்தல் குடிசைக்குள் புகுந்த கதை தான். 

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:48:15 PM8/27/23
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்.  நங்கநல்லூர்   J K  SIVAN 

நானும் மனுஷன் தானேடா.

இது எத்தனை பேருக்கு தெரியும் என்று  என்னால்  சொல்ல முடியாது?  எனக்கே  இது படிக்க கிடைத்திருக்கும்போது  மஹா பெரியவா பக்தர்கள் அநேகருக்கு  கண்டிப்பாக  நிச்சயமாக  தெரிந்திருக்கலாம்  அல்லவா?

மஹா பெரியவா தெய்வம்  இல்லையா சுவாமி,  நீங்கள் அவரை பேசும் தெய்வம் என்று  தானே எப்போதும் எழுதுகிறீர்கள் என்று ஒருவர்  கேட்டார். 

மஹா பெரியவா தன்னை தெய்வமாக  ஒருநாளும் ஒருபோதும் நினைத்ததும் இல்லை, எவரிடமும் சொல்லிக்கொண்டதும்  இல்லை.   நானும்  ஒரு மனுஷன்  தான்  என்று தான் சிரித்துக்கொண்டே  சொல்வார். 
ஆனால் நமக்குத் தெரியும் அவர்  நடமாடும் பேசும் தெய்வம் என்று. 
 
ஒரு சம்பவம் கேளுங்கள்:

மேற்கு மாம்பலம் சங்கர மடத்தின் பின்புறம். சாயங்காலம்  அஸ்தமனத்துக்கு சற்று முன்னால் .  மஹா பெரியவாளுக்கு தாங்க முடியாத வயிற்று  வலி.  யாரிடமும்  சொல்லவில்லை,  வலியோடு சுருண்டு சுருண்டு படுத்து, கைகளால் அடி வயிற்றைப் பிசைந்து பிசைந்து மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். சுற்றி நின்றிருந்த அத்தனை பேரும் துடிதுடித்துப் போயினர். சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

 ‘மஹா பெரியவா,  உங்களுக்கு  கூடவா இப்படியெல்லாம் வரும்! எங்களாலே தாங்க முடியலையே’ ''  பக்தர்கள் சிலர்  ஓவென்று அழுது கொண்டே  சொன்னார்கள் 

 ''நானும் மனுஷன் தானே. கர்மாவாலே தான் இந்த உடம்பு வந்திருக்கு. அதக்குண்டானதை இந்தச் சரீரம் அனுபவிச்சுத் தானே ஆகணும்''   பெரியவா பதில் இது .  கொஞ்சநேரம்  ஆயிற்று.  கொஞ்சம் கொஞ்சமாக வலி நீங்கப் பெற்று சாதாரணமாகி விட்டார்.
அப்போது மடத்து யானை காமாட்சி, தீப நமஸ்காரம் முடிந்து மஹா பெரியவாளிடம் வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட வந்தது. மஹா பெரியவா ஒரு குடிலில் அமர்ந்திருந்தார். பழத்தை கையில் வைத்துக் கொண்டு யானையை உள்ளே அழைத்தார். ஆனால், அந்த மடத்தின்  சிறு வாசலில் அத்தனை பெரிய சரீரம் எப்படி நுழைய முடியும். யானைப் பாகனும் யோசித்தபடி நின்றிருந்தார்.

மஹா பெரியவா  விடவில்லை. 

 ‘காமாட்சி, உள்ளே வந்து வாங்கிக்கோ’
மீண்டும் அழைத்தார். அடுத்த கணம் நம்பமுடியாத அதிசயம் நிகழ்ந்தது. அந்தப் பெரிய யானை தன் உடலை மிகவும் அழகாகச் சுருக்கிக் கொண்டு அந்தக் குறுகிய வாசற்படியில் நுழைந்து, மஹா பெரியவாளிடம் பழத்தைப் பெற்றுக் கொண்டு, பின்னால் நகர்ந்த படியே வெளியே வந்தது.

மஹா ‘பெரியவாளும் மனுஷா தானே’ என்று மஹா பெரியவா கூறின அடுத்த கணம் இந்த அதிசயம்!  இதை என்ன என்று சொல்வது?

வேறென்ன தெரியும் நமக்கு!  ''நானும் மனுஷன் தானே என்று அவர் தன்னை  சொல்லிக்கொண்டாலும்  பரம உத்தம  உலகம் மதித்த ஒரு பரிசுத்த  ஜீவன்.    என்னைப் பொறுத்தவரை   மஹா பெரியவா  மனுஷன் என்று நான் ஒப்புக்கொள்ளவே மாட்ட்ட்டேன் .. எனக்கு மட்டும் அல்ல எத்தனையோ கோடி பக்தர்களுக்கு அவர்  உண்மையிலேயே நடமாடும்   பேசும் தெய்வம் தான்
 

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:48:31 PM8/27/23
to amrith...@googlegroups.com
ஸூர் தாஸ் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

கண்ணன் சாப்பிடுகிறான்    

சமீபத்தில் ஒரு கல்யாணத்தில்  ஒரு   ஐந்து ஆறு வயது வெள்ளைக்கார பையன் ரெண்டு கைகளிலும்  சாதத்தை ஒருவாறு சமாளித்து  கொஞ்சம் கொஞ்சமாக  பத்து விரல்களாலும்   எடுத்து  முகமெல்லாம்  பூசிக்கொண்டு  சந்தோஷமாக  சாப்பிட முயல்வதை பார்த்தேன்.  ஒரு அப்பளத்தை முழுதுமாக உடைக்காமல் தின்பதற்கு எவ்வளவோ முயன்று அது பல துண்டுகளாக  ஒடிந்ததும்   அவன் முகம் வாடியது.  அப்புறம் ஒவ்வொரு துண்டு அப்பளத்தால்  சாதத்தை ஸ்பூன் போல எடுத்து சாப்பிட அந்த முயற்சியும் தோற்றது. ஸ்பூன் போல்  அப்பளத்துண்டு  ஸ்ட்ராங்காக இல்லாமல்  சாதத்தின் மேல் பட்டதும்  இன்னும் நொறுங்கிய  தால் பத்து விரல்கள்  மீண்டும்  சாப்பிடுவதில் ஈடுபட்டன. ஒருவாறு முழு அப்பளத்தையும்  காலி பண்ணிவிட்டு இன்னொன்று கேட்டான்.   எதிரே உட்கார்ந்து இதை ரசித்தவாறு நான் சாப்பிட்டேன். 

கண்ணன்  மூன்று நான்கு வயதில் கோகுலத்தில் சாப்பிடும் அழகு இதைவிட  அருமை.  அம்மா யசோதையின் மடியில் உட்கார்ந்திருந்தான். அப்போது டேபிள் சேர்கள்  இல்லையே.   யசோதையின் ஒரு கையிலே  தங்கக்கிண்ணம்,  வானத்தில் முழு  நிலவைக்  காட்டி  ஊட்டவேண்டும்.  அரண்மனை முற்றம் சலவைக்கல்லில் வழவழவென்று தரையில் வண்ணச் சித்திர   கோலங்களோடு காற்று வீசிக்கொண்டு கண்ணைப் பறிக்கிறது. கூடவே  நந்தகோபன், தோழிமார்கள், கோபர்கள்  சூழ்ந்து உட்கார்ந்து கொண்டு கண்ணன் சாப்பிடும் அழகைப் பார்க்கிறார்கள்.  துளியாவது   கண்ணன் வாய்க்குள் போக  வேண்டுமே  என்று யசோதை படாத பாடு படுகிறாள். ஆடவேண்டும், பாடவேண்டும்,  அவனை எப்படியாவது தாஜா பண்ணி சாப்பிட வைக்கவேண்டும்.. சில பருக்கைகளை விழுங்குவான், பலதை துப்புவான், யசோதையின்  புடவையெல்லாம் சாத அபிஷேகம்.  திடீரென்று கையை நீட்டி  பிசைந்த சாதத்தை வாங்கிக்  கொள்வான்,அதை அப்படியே  நந்தகோபன் வாயைத்  திறக்கச் சொல்லி உள்ளே  போடுவான். சிரிப்பான்.  சிலது   ''உனக்கு கொடுக்கமாட்டேன் எனக்கு தான்''   என்று ஏமாற்றி தானே  சாப்பிடுவான். கூட இருக்கும் கோபர்களை தலையசைத்து வா என்று அருகே அழைத்து அவர்கள் கையில் கொடுப்பான்.  ''அம்மா  உனக்கு இந்தா''   என்று திரும்பி யசோதையின் வாயில்  சின்னக் கையால் கொஞ்சம் சாதம்  போடுவான்.  யசோதை மூன்று உலகையும் வென்ற சந்தோஷத்தில்  ஆனந்தமாக  ரசித்து   உண்டு  சிரிப்பாள்.  அவன் உடம்பெல்லாம் அன்னாபிஷேகம். வெண்ணை பால் தயிர் எல்லாம் எப்போதும் அவன் உடலிலும் ஆடையிலும் கமகமவென்று மணக்கும். குறைந்தது   ஒன்றரை ரெண்டு  மணி  நேரமாவது  சிறிது உணவு அவன் வயிற்றுக்குள் போக   பிரயாசைப்  படவேண்டும்.  இதை நேர இருந்து பார்த்தது போல்  விவரிக்கும் ஸூர்  தாஸ்  இந்த பாடலை முடிக்கும்போது அபூர்வமாக ஒரு வரி சேர்த்திருக்கிறார்.

''கண்ணா, நீ உண்டது போக, மற்றவர்களுக்கு தந்தது போக,  கையலம்புவதற்கு முன்  கொஞ்சூண்டு மீதி இருந்தால் இதோ இந்த கிழவன் ஸூர் தாசுக்கும் கொடேண்டா. எத்தனையோ ஜென்ம  பாபங்கள் என்னைவிட்டு அகலுமே  கிருஷ்ணா.''.. என்கிறார். 

Kanha eats in Yasoda's lap.
some he eats, some he drops,
as the ladies of Nandgaon watch,
some he eats and some he puts
in Nanda's mouth,
this joy is beyound recount.
some he eats, some gives to gopas,
butter in his hands, curd in doniyas.
The joy of Yasoda
the three worlds cannot account.
the meal is over, Kanha washes,
for Sur the left-overs count.

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:48:42 PM8/27/23
to amrith...@googlegroups.com


திருப்புளிங்குடி  காய்சினவேந்தன்  கோயில்  -   நங்கநல்லூர்  J K  SIVAN

ஒரு சமயம்  வழக்கம்போல் எனக்கும் என்  கம்ப்யூட்டருக்கும்  தகராறு. வேலை செய்யவில்லை. காரணம் ஏதாவது வராதா என்று தேடவேண்டாம்.  'வரதா '  புயல் ஒன்றே காரணம். இணைய தளம் செல்ல வழியில்லை.  மரங்களில் கட்டியிருந்த  மின் வலை  கம்பிகள் அறுந்தது. ஒருவழியாக மரங்களை அப்புறப்படுத்தியவுடன் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. ஒளி வந்தது. மின்னலை வரவில்லை. இன்னும் அதே நிலை தான். கொஞ்சம் இம்ப்ரூவ்மென்ட். BSNL தர்காலிக ஏற்பாடு ஒன்று வசதி செய்து தந்தான் என் மகன். அப்போது  தான்  நான் சென்று வந்த நவ திருப்பதி க்ஷேத்ரங்களைப்  பற்றி எழுத முற்பட்டேன்.  திருப்புளிங்குடி.

வரகுண மங்கையிலிருந்து புறப்பட்ட எங்களை ஸ்ரீ சடகோப ராமானுஜ சுவாமி என்ற  நண்பர்  அழைத்து சென்ற அடுத்த க்ஷேத்ரம் வடகிழக்காக தாமிரபரணி ஆற்றின் வடகரை பகுதியில் இருந்தது. வரகுண மங்கையிலிருந்து எங்களுக்கு ஒரு கி..மீ. தூரம் தான். அந்த ஊர் பெயர் திருப்புளிங்குடி . நவ திருப்பதியில் முக்கியமான ஒன்று. அமைதியான கிராமம். நாங்கள் சென்றபோது வெயில் உச்சிக்கு வந்து விட்டது.   ஆயிரத்துக்கு மேல் வருஷங்கள் வயது கொண்ட ஒரு பழைய பெருமாள் கோவில் கோவில் .

மூலவர் பூமி பாலகப் பெருமாள். புஜங்க சயனம். அதாவது ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கிறார். அருகே தாயார் மலர் மகள் நாச்சியார், பூ மகள் நாச்சியார் என்ற தாயார் திரு உருவங்கள் பெரியதாக இருக்கின்றன புளியங்குடி  வல்லி என்பது உற்வச தாயார். பெருமாளின் பாதங்களை வெளிப்பிரகாரத்தில் இருந்து ஒரு ஜன்னல் வழியாக பார்க்க வைக்கிறார்கள். இது ஒரு தோஷம் நீக்கும் தலம். இங்கு தான் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கினதாம்.

பக்தர்களை சோதிப்பதில் பகவானுக்கு கொள்ளை  ஆசை. பூமாதேவியையும்   பெருமாள்  விட்டு வைக்கவில்லை. தன்னை வேண்டும்  ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும்  சாபமிடும் சக்தியை கொடுத்துவிட்டு அதே சமயம்  பக்தர்கள் இப்படி சாபம் பெற்று பரிகாரம்,  அவர்கள் பிரார்த்தித்து சாப விமோச்சனம் தேடும்போது அவர்களுக்கு அருள்வதும்  பெருமாள் வேலை.

 ஸ்ரீவைகுண்டம்  எனும் க்ஷேத்ரத்தில் இருந்து வடகிழக்காக தாமிரபரணி ஆற்றின் வடகரை பகுதியில் திருப்புளிங்குடி எனும்  வைணவ திவ்ய தேச ஸ்தலம் உள்ளது. சுமார் 3 ஏக்கர்  நிலப்பரப்பில் இரண்டு பிரகாரங்கள் . பெருமாள் பெயர்  பூமி பாலகன்.  புஜங்க சயனம்.  ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கிறார்.  உற்சவர்  பெயர்  காய்சின வேந்தன்.  பூமிதேவி திருமகளுடன் காட்சி.  தாயார் பெயர்  மலர்மகள் நாச்சியார்,  பூ மகள் நாச்சியார்.  தீர்த்தம் வருண தீர்த்தம்.  விமானம் வேதசார விமானம்.  நம்மாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலம்.

இந்த ஸ்தல புராணம் என்ன சொல்கிறது?  ஸ்ரீமந்  நாராயணன்  மஹா லக்ஷ்மியோடு  மட்டும்  உற்சாகமாக உலா வருவதைக் கண்டு வெகு காலம் காத்திருந்து பொறுமை இழந்து பூமாதேவி கோபப்பட்டு பூமிக்குள் பாதாள லோகத்தில் சென்றுவிட்டாள்.  நிலைமையை உணர்ந்த   நாராயணன்  பூமாதேவியை தேடி பாதாள லோகம் சென்று சமாதானப்படுத்தி மேலே அழைத்து வந்தார்.  இதற்குப் பிறகு பூமாதேவியும் லக்ஷ்மியும் ஒன்றாக  பெருமாளோடு  இந்த  திருப்புளிங்குடியில் நமக்கு காட்சி தருகிறார்கள்.

 வசிஷ்டரின்  மகனான சக்தி முனிவரை யக்ஞசர்மா என்பவர் சரியான மரியாதை கொடுக்காமல்  போனதால்  சக்தி முனிவர்  அவரை அரக்கனாக மாற சாபமிட்டார்.  பிறகு  இந்த  சாப  விமோசனம் நீங்க ஒரு வழியும் சொன்னார்.'  இந்திரன் இந்த இடத்தில் ஒரு யாகம் செய்வதற்கு வருவான்.  அப்போது அதை நீ  கெடுக்க  முற்படுவாய்.  அப்போது திருமால் தன் கதையினால் உனக்கு சாப விமோசனம் தருவார்'  என்றார் சக்தி முனிவர்.  அப்படியே  நடந்தது.  இந்திரன்  இங்கே யாகம் செய்ய வரும்போது  அரக்கனாக இருந்த யஞ சர்மா அதை ஹா ஹூ என்று கத்திக்கொண்டு கெடுக்க முற்பட அப்போது அங்கு தோன்றிய  மஹா விஷ்ணு தன் கதையால் அரக்கனை  அடிக்க  அரக்கன் இறந்தான்,  யக்ஞசர்மா சாப விமோச்சனம் பெற்றார்.

மூலவர்  பெருமாள் 12 அடி நீளம்.  பிரம்மாண்டமாக  சயனக்கோலம்.   திருப்புளிங்குடி  என்பது புதன் ஸ்தலம். புதன் நவகிரகங்கள் வரிசையில் நான்காவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் மூன்றாவதாகவும் விளங்கும் கோவில் "திருப்புளிங்குடி".

ஒருசமயம் மகாவிஷ்ணு,  மஹா லக்ஷ்மியோடு  பூலோகத்தில் கருட வாகனத்தில்  வந்து கொண்டிருந்தபோது   இயற்கை எழில் கொஞ்சும் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மணல்மேடான இடங்களை பார்த்து அங்கே  கொஞ்ச நேரம்  அமர்ந்து லக்ஷ்மியோடு  ரசித்து பேசிக்  கொண்டிருந்தார். நாரதர் இதைப்  பார்த்துவிட்டார். சும்மா இருப்பாரா?  நேராக  பூமா தேவியிடம் சென்றார்

''நீ இவ்வளவு அசடாக  இருக்கிறாயே. நீயும் தானே  பெருமாள் பத்னி. அங்கே போய் பார்  லக்ஷ்மியோடு என்ன கோலாகலமாக  தாமிரபரணி கரையில்  உல்லாசம்'' பூமாதேவி சென்று பார்த்து  வெகுண்டாள்.  அப்படியே  பாதாள லோகத்துக்கு  சென்று  மறைந்து விட்டாள். பூமாதேவியின் கோபத்தால் உலகனைத்தும் நீரின்றி வறண்டது. குடிக்கக்கூட தண்ணீரின்றி உயிர்கள் தத்தளித்தன.  சகல தேவாதி தேவர்களும்   இந்த நிலைமையைக் கண்டு  பயந்து  பெருமாளிடம் வந்து  முறையிட்டார்கள்.

பெருமாளுக்கு தெரியாமல் ஏதாவது நடக்க முடியுமா? விஷயம் புரிந்து கொண்ட திருமால்  பூமாதேவியிடம் சென்று சமாதானப்படுத்தி   ''எனக்கு நீயும் லக்ஷ்மியும் ஒன்று தான்  சமமானவர்கள்.  சமாதானமடைந்த பூமாதேவி  மீண்டும் வைகுண்டம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் பூவுலைகையும் வளம் கொழிக்க செய்தாள். இவ்வாறு பூமிதேவியின் சினத்தை தணித்ததால் இங்கே பெருமாளுக்கு  'பூமிபாலகர் என்றும் காய்சினிவேந்தர் '  என்றும் பெயர். இப்போது புரிகிறதா இந்த பெயர்  காரணம்?

திருப்புளிங்குடி என்பது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று.  தூத்துக்குடி மாவட்டத்தில் வரகுணமங்கையிலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல்.  பிரம்மாண்ட புராணத்திலும், தாமிரபரணி தல புராணத்திலும்  இந்த ஸ்தலம்  சொல்லப்பட்டிருக்கிறது.
 இங்கே ஒரு அதிசய  கல் ஓவியம். வேறு கோயில்களில் காண முடியாதது.  பெருமாளின்  நாபி யிலிருந்து
 செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்கிற மாதிரி  ஒரு சிற்பம்.

3684.  
பண்டைநாளாலே நின்திருஅருளும்*  பங்கயத்தாள் திருஅருளும்
கொண்டு* நின்கோயில் சீய்த்து பல்படிகால்*  குடிகுடிவழிவந்து ஆட்செய்யும்*
தொண்டரோர்க்குஅருளி சோதிவாய்திறந்து*  உன்தாமரைக்கண்களால் நோக்காய்*
தெண்திரைப் பொருநல் தண்பணைசூழ்ந்த*  திருப்புளிங்குடிக் கிடந்தானே!  (2)  
3685.  
குடிக்கிடந்து ஆக்கம்செய்து*  நின்தீர்த்த அடிமைக் குற்றேவல்செய்து*  உன்பொன்
அடிக்கடவாதே வழிவருகின்ற*  அடியரோர்க்கு அருளி*  நீஒருநாள்
படிக்குஅளவாக நிமிர்த்த*  நின்பாத பங்கயமே தலைக்குஅணியாய்*
கொடிக்கொள் பொன்மதிள்சூழ் குளிர்வயல்சோலை*  திருப்புளிங் குடிக்கிடந்தானே.  
3686.  
கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்கிடத்தி*  உன்திருஉடம்புஅசைய*  
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல்அடிமை வழிவரும்*  தொண்டரோர்க்கு அருளி*
தடம்கொள் தாமரைக்கண்விழித்து*  நீஎழுந்து உன்தாமரை மங்கையும்நீயும்*
இடம்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்*  திருப்புளிங்குடிக்கிடந்தானே!
3688.  
பவளம்போல் கனிவாய்சிவப்ப நீகாணவந்து*  நின்பல்நிலா முத்தம்*
தவழ்கதிர்முறுவல்செய்து*  நின்திருக்கண் தாமரைதயங்க நின்றருளாய்,*
பவளநன்படர்க்கீழ் சங்குஉறைபொருநல்*  தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*
கவளமாகளிற்றின் இடர்கெடத்தடத்துக்*  காய்சினப்பறவைஊர்ந்தானே!  

3689.  
காய் சினப் பறவை ஊர்ந்து பொன் மலையின் மீமிசைக் கார் முகில் போல
மா சின மாலி மாலிமான் என்று அங்கு அவர் படக் கனன்று முன் நின்ற
காய் சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப்புளிங்குடியாய்
காய் சின ஆழி சங்கு வாள் வில் தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே (6)  


3690.  
எம்இடர்கடிந்து இங்கு என்னைஆள்வானே!*  இமையவர்தமக்கும் ஆங்குஅனையாய்*
செம்மடல்மலருந் தாமரைப்பழனத்*  தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*
நம்முடைஅடியர் கவ்வைகண்டுஉகந்து*  நாம்களித்து உளம்நலம்கூர*
இம்மடஉலகர்காண நீஒருநாள்*  இருந்திடாய் எங்கள்கண் முகப்பே.
3691.  
எங்கள்கண்முகப்பே உலகர்கள்எல்லாம்*  இணைஅடி தொழுதுஎழுதுஇறைஞ்சி*
தங்கள்அன்புஆர தமதுசொல்வலத்தால்*  தலைத்தலைச் சிறந்துபூசிப்ப*
திங்கள்சேர்மாடத் திருப்புளிங்குடியாய்!*  திருவைகுந்தத்துள்ளாய்! தேவா*
இங்கண் மாஞாலத்துஇதனுளும் ஒருநாள்*  இருந்திடாய் வீற்றுஇடம்கொண்டே.
3692.  
வீற்றுஇடம்கொண்டு வியன்கொள்மாஞாலத்து*  இதனுளும் இருந்திடாய்*  அடியோம்
போற்றி ஓவாதே கண்இணை குளிர*  புதுமலர்ஆகத்தைப்பருக*
சேற்றுஇளவாளை செந்நெலூடுஉகளும்*  செழும்பனைத் திருப்புளிங்குடியாய்*
கூற்றமாய்அசுரர் குலமுதல்அரிந்த*  கொடுவினைப்படைகள் வல்லானே!
3693.  
கொடுவினைப்படைகள் வல்லையாய்*  அமரர்க்குஇடர்கெட, அசுரர்கட்குஇடர்செய்*
கடுவினைநஞ்சே! என்னுடைஅமுதே*   கலிவயல் திருப்புளிங்குடியாய்*
வடிவுஇணைஇல்லா மலர்மகள்*  மற்றைநிலமகள் பிடிக்கும்மெல்அடியைக்*
கொடுவினையேனும் பிடிக்கநீஒருநாள்*   கூவுதல்வருதல் செய்யாயே.    
3694.  
'கூவுதல்வருதல் செய்திடாய்'என்று*  குரைகடல் கடைந்தவன் தன்னை*
மேவிநன்குஅமர்ந்த வியன்புனல்பொருநல்*  வழுதிநாடன் சடகோபன்*
நாஇயல்பாடல்ஆயிரத்துள்ளும்*  இவையும்ஓர் பத்தும் வல்லார்கள்*
ஓவுதல்இன்றிஉலகம் மூன்றுஅளந்தான்*  அடிஇணை உள்ளத்துஓர்வாரே  (2)

நம்மாழ்வார் என்ன சொல்கிறார் இந்த பத்து பாசுரங்களில் ?

எங்கும் சுற்றி ப்பார்க்கும்போது நீண்ட பச்சை பசேல் வயல்கள். கடல் மாதிரி நீர். பக்தர்கள் இங்கு பரம்பரை  பரம்பரையாக ஏன் வருகிறார்கள்.?   செந்தாமரைச் செல்வி யோடு நீ தரிசனம் கொடுக்கிறாய் அதற்காக.  திருவாய் மலர்ந்து எனக்கருள்புரி.. தாமரைக் கண் திறந்து அனுக்கிரஹம் பண்ணு .

உன் பொற்றாமரை பாதங்களை சரணடைந்தோர்க்கு  அருள் புரிபவனே .காலம் காலமாக  நாங்கள் உன் அடிமைகள். மூவுலகும் அளந்த உன் திருவடிகளே தஞ்சம். திருப்புளிங்குடி நாதனே.   

திருப்புளிங்குடி நாயகனே,  நீ எவ்வளவு காலம்  பாற்கடலில்  சயனத்தில் இருப்பாய்?  படுத்துக்கொண்டே இருந்தால் உடம்பு வலிக்காதா? எழுந்திரு   லக்ஷ்மி தாயாரோடு உன் அடியார்கள்   எங்களுக்கு  தரிசனமளித்து எங்களுக்கு அருள்புரிவாய்.

நீ இங்கே  திருப்புளிங்குடியில் சாயனக்கோலத்தில் உள்ளாய். அருகே வரகுணமங்கையில் வீற்றிருந்த கோலம்.  ஸ்ரீவைகுண்டத்தில்  நின்ற திருக்கோலம் தரிசனம் தந்தாய் .  இதோ என் இதயம். வா அதில் வந்து உட்கார். கோவைப்பழம் போல் சிவந்த வாயனே, உன்னை போற்றி நாங்கள் எப்படிஉரக்க பாடுகிறோம் பார். கேள். எப்படி ஆடுகிறோம் பார். மூவுலகும் மகிழ்ந்து எங்களை வேடிக்கை பார்க்கிறதே. 

திருப்புளிங்குடி சயன கோல  பெருமாளே,  சங்கம் ஒலிக்கிறது. தாமரை விழிகளை எங்கள் பக்கம் திருப்பி அருள் புரிவாய். மெல்லிய புன்னகை பூத்தால்  நிலவைப் போல் வெள்ளை பற்கள் தெரிகிறது.  எங்கோ ஒரு முதலை  கஜேந்திரன் எனும் யானையின் காலை பிடித்து நீரில்  இழுத்து  யானை தவித்து ஆதிமூலமே என்று குரல் கொடுத்தபோது ஓடிவந்தாயே, உன் சக்ரம்  கஜேந்திரனை காப்பாற்றியதே எங்களையும்  கொஞ்சம்  காப்பாற்றுவாய். 

கருட வாகனா, மாலி மாலியவான்  ஆகியோரை ஸம்ஹரித்தவனே ,  தங்கமலையில் கருமேகம் உட்கார்ந்தது போல்  கருட வாகன காட்சி தந்தவனே,  பொற்கிரீடம் அணிந்த  திருப்புளிங்குடி நாயகா,  எங்கள் துன்பம் தவிர்ப்பாய்.

திருப்புளிங்குடி தேவாதிதேவா,  நீ  தீன  ரக்ஷகன் ஆயிற்றே. ஒருநாள் எங்களுக்கும் உன் திவ்ய தரிசனம் தருவாயா? எங்கள் இதயம்  நன்றியோடு நனைய வேண்டாமா?

எங்கும் நிலவின் ஒளி பால்வண்ணமாக  எல்லாவற்றையும் மாற்றும் திருப்புளிங்குடி நாதனே,  உலகமே உன் திருவடியை போற்றி  பாடுகிறதே.  உன்னை மனதார வணங்குகிறதே,   வைகுண்ட வாசனே , இங்கே வா எங்களுக்கும் உன் தரிசனம் கிடைக்கட்டும். 
வயலில் வாலை  மீன் ஈர மண்ணில்  துள்ளிக் குதிக்கிறது. அசுரர் குல காலனே , நீ  பூவுலகத்திலும் பக்தர்களுக்கு  உன் தரிசனம் வழங்கு,  நாங்கள் போற்றி பாடுவதை கேட்டு மகிழவேண்டும். 

விண்ணவர் குறை தீர்த்த  திருப்புளிங்குடி நாதனே, அசுரர்களுக்கு விஷம் போன்றவனே,  எங்களுக்கு அம்ருதமானவனே, திருநிறைச் செல்வி மார்பில் உறையும் ஸ்ரீநிவாஸா, உன் திருவடியை பிடித்துவிடும் பாக்யத்தை எமக்கருள்வாயா?

பரிசுத்த நீர்  எங்கும் நிறைந்திருக்கும்  திருப்புளிங்குடி நாதனே, ஆயிரக்கணக்கான  இசை மணக்கும் பாசுரங்களை பாடுகிறோம்.   பாற்கடலில் அம்ருதத்தை கடைந்தெடுக்க அருள் புரிந்தவனே உன் மேல் இந்த பத்து பாசுரங்களை ப்படும் அடியேனை  வா என்று உன்னிடம் அழைத்திடு, அல்லது நீயே என்னிடம் வந்துவிடு.   உன்னை வணங்கி தொழும் எம் இதயம் நிறைய மூவுலகம் அளந்த உன் திருவடிகளை நிரப்பி இருக்கிறோம். ''

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:48:43 PM8/27/23
to amrith...@googlegroups.com
'லக்ஷ்மி வீட்டுக்குள்  வாம்மா, வரம் கொடும்மா  ''-    நங்கநல்லூர்_J_K_SIVAN

இந்த வருஷம் வெள்ளிகிழமை வரலட்சுமி விரதம் 25. 08.2023 அன்று  அநேக இந்துக்களால்  கொண்டாடப்படும்.மஹா லக்ஷ்மி 
யை நினைத்து விரத மிருந்து  வரம்  பெரும் பண்டிகை வரலக்ஷ்மி விரதம்.  செல்வம், வீரம், வெற்றி, குழந்தைப்பேறு, தானியங்கள், வேலைவாய்ப்பு, கல்வி, தைரியம் ஆகிய வரங்கள்  பெற  வேண்டும் வழிபாடு.  ஆவணி மாதப் பௌர்ணமியைப் பொறுத்தே இவ்விரதம் ஆடி மாதத்திலோ அல்லது ஆவணி மாதத்திலோ  வரும். 
சுமங்கலிகள் குடும்ப நன்மை, குழந்தைகளின் நலம், ஆரோக்கியம், கல்வி, கணவரின் ஆயுள், தொழில் விருத்தி ஆகியவற்றிற்காகவும், கன்னிப்பெண்கள் நல்ல கணவன் மற்றும் வளமான குடும்ப வாழ்வு வேண்டியும் வரலக்ஷ்மியை  வேண்டுகிறார்கள். 

வரலக்ஷ்மி நோன்பு அனுஷ்டிக்கும் வீடுகளில் வரலக்ஷ்மி விரத பூஜைக்கு என்று ஒரு கலசம் (சொம்பு ) உண்டு. வெள்ளி, தாமிர, பித்தளை என்று அவரவர் வசதிக்கேற்ப தனியாக வைத்திருப்பார்கள் அந்த சொம்பில் வரலக்ஷ்மி முகம் ஒரு கொக்கியில் தொங்கவிட்டு, கலசத்தின் மேல் தேங்காய் வைத்து, அலங்கரித்து, நகைகள் அணிவித்து  பார்ப்பதற்கு  ரொம்ப அழகாக  இருக்கும்.
ஆந்திரா , மகாராஷ்டிரா, குஜராத், ஒரிசா, தமிழ்நாடு என்று பல மாநிலங்களிலும்  வெளிநாடுகளில் உள்ள  ஹிந்துக்களும்   வருஷா வருஷம் கொண்டாடும் பண்டிகை.  மஞ்சள் சாமந்தி ப்பூ  ஒரு 
 முழம்  அறுபது எழுபது ரூபாய்???  வெற்றிலை தங்கம் விலைக்கு உயர்ந்து விடும். கண்ணுக்கு தெரியாத  மஞ்சள் வாழைப்பழம் ஒன்று பத்து ரூபாயைக் கூட தொடும்.

காலை ராகு காலத்துக்கு முன்போ அல்லது அன்று மாலையோ, ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலக்ஷ்மியை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பாடத்தெரிந்தால் பாடி, தெரியா விட்டால் , ''லக்ஷ்மி மா இண்டிகி ரா வம்மா '' என்ற ஒரு அடியை யாவது மனப்பூர்வமாக லக்ஷ்மி வாம்மா, என் வீட்டுக்குள் வா '' என்று பக்தியுடன் அழைக்கலாம். குரலைக் கேட்டு லக்ஷ்மி பயப்பட மாட்டாள். அவளுக்கு தெரியும். தாராளமாக காதைப் பொத்திக் கொண்டு உள்ளே வருவாள்.

 முதலில் பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும். அஷ்ட லட்சுமிகளுக்கு பிடித்தமான அருகம் புல் தூவி பூஜை செய்யலாம். பிள்ளையார் பிடிக்க மஞ்சள் பொடி, நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தாம்பாளம் , பஞ்சபாத்திரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு எல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
புதிய வஸ்திரம் சாற்றி, நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் முக பிம்பத்தை வைத்து, பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும். விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களை நீக்கும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்குகிறோம். .

அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலக்ஷ்மி பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலக்ஷ்மியை வேண்டிக் கொண்டு, ஆவாஹனம் செய்கிறோம்.  கலசத்தில் வரலக்ஷ்மி அம்மன் வந்து இருப்பதாக ஐதீகம் . மங்களகரமான ஸ்தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாடி தேவியை வழிபடுகிறோம். 
 சிலர் அபிராமி அந்தாதி படிப்பார்கள், சிலர் மஹா லக்ஷ்மி ஸ்தோத்ரம், அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்ரம், கனக தாரா ஸ்தோத்ரம் கூட சொல்வார்கள். லலிதா சஹஸ்ரநாமம் கூட சொல்வதுண்டு. 
பூஜை அறையில், கிழக்கே, / தென் கிழக்கில் சந்தனத்தால் அம்மன் முகம் அமைக்க வேண்டும். சுவராக இருந்தால் குத்துவிளக்கு நடுவே மஹாலக்ஷ்மி முகம் வரைய வேண்டும். சில வீடுகளில் சுவற்றில் நான் பார்த்திருக்கிறேன். என் இள வயதில் என் வீட்டு சுவற்றில் லக்ஷ்மி உருவம் வரைந்து கொடுத்திருக்கிறேன். நிறைய பேர் அதைப் பார்த்து பயந்திருக் கிறார்கள். பூசணிக்காய் உடைக்க மஞ்சள் சிவப்பில் பெயிண்ட் அடித்து உருவம் இருக்குமே அதன் தத்ரூபம் என் கை வண்ண ஓவியம்.
வெள்ளி முகம் வைத்திருப்பவர்கள் வெள்ளி, தாமிர, பித்தளை சொம்பை சந்தன குங்குமம் இட்டு, புனித ஜலம் கொஞ்சம் நிரப்பி, மாவிலை, தேங்காய், முகம் செருகி, கோலம்போட்ட பலகை மேல் வைத்து, தாழம்பூ மற்றும் புஷ்பமாலைகளால் அலங்கரித்து பூஜை செய்வார்கள். பலகை இல்லாவிட்டால் வாழை இலை மேல் பச்சரிசி பரப்பி, மாவிலை, தேங்காய், எலுமிச்சை, பொன், பழங்களோடு வைப்பது வழக்கம். ஐந்து வகையான ஆரத்தி தட்டு வைத்து பூஜை செய்வார்கள். அரிசி பரப்பி மஹாலக்ஷ்மி கலசம் வைப்பது அன்னபூரணியாக அவள் அருளை வேண்டுவதாகும்.
வீட்டிற்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம் கொடுப்பார்கள். நெய்வேத்தியமாக வெல்ல கொழுக் கட்டை பண்ணுவார்கள். பொங்கல், பாயசம், அப்பம், வடை, ல ட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

இப்படியெல்லாம் செய்ய முடியவில்லை என்றாலும் பிழையில்லை. மனதை நல்லெண்ணங்கள் மட்டும் நிறைந்ததாக வைத்துக்கொண்டால் போதும். உண்மையில் அது தான் இறைவன் அம்பாள், லக்ஷ்மி குடியிருக்கும் இடம். ஸ்ரீ நிவாஸம். இதய சுத்தியுடன் ஈடுபாட்டோடு, மகாலக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடைக் கையில் கட்டிக் கொள்ளலாம். வீட்டில் உள்ள வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி, நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, இந்த விரத பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

வரலக்ஷ்மி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சுமங்கலி பெண்கள் இந்த பூஜையின் போது மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.
வரலக்ஷ்மி விரதம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதற்காக  ரெண்டு கதை சொல்கிறேன்.

சௌராஷ்டிர தேசத்தில் பத்ரஸ்ரவா என்று ஒரு ராஜா. ரொம்ப நல்ல ராஜா. கசந்திரிகா அவன் மனைவி. அவனுக்கேற்ற நல்ல மனைவி. மிருதுவாக, நல்ல வார்த்தைகளையே பேசுபவள். அவர்களுக்கு ஒரு அழகிய பெண். சியாமா. கசந்திரிகா மஹாலக்ஷ்மி பக்தை. நாள் தவறாமல் லக்ஷ்மிக்கு பூஜை செய்யாமல் சாப்பிடமாட்டாள். கணவன், மாமனார், மாமியார் உறவினர் எல்லோரிடமும் அன்பு, மரியாதை ஜாஸ்தி. மஹா லக்ஷ்மிக்கு கசந்திரிகாவை பிடித்துவிட்டது. 
ஒரு ஆடி வெள்ளிக்கிழமை வயதான சுமங்கலி ஒருத்தி அரண்மனைக்கு வந்தாள். ராஜா ராணி எல்லோரும் பூஜை முடித்து, சாப்பிட்டு தாம்பூலம் தரித்த சமயம்.
''வாங்கோம்மா '' என்று அந்த வயதான சுமங்கலியை கசந்திரிகா வரவேற்று உபசரித்தாள். வெற்றிலை, பாக்கு, குங்குமம், மஞ்சள் முதலிய மங்கலப் பொருட்களைக் கொடுத்தாள்.
“தாயே, நீங்க யார்? என்ன விஷயமாக வந்தீர்கள்?
“அதை அப்புறம் சொல்கிறேன். என் கேள்விக்கு நீ முதலில் பதில் சொல்லு ராணியம்மா. லக்ஷ்மி தேவி அவதார தினமாச்சே இன்று , யாராவது ஒரு அதிதி க்கு போஜனம் இல்லாமல் நீ இப்படி வயிறார சாப்பிட்டு தாம்பூலம் தரித்துக் கொண்டது நியாயமா?” என்றாள் முதியவள். கோபமே வராத கசந்திரிகாவுக்கு ஏனோ ஆத்திரம் வந்து விட்டது
“நீ யாரோ ஒரு பிச்சைக்காரக் கிழவி, எனக்கு புத்தி சொல்வதா?” என்று கேட்டு கிழவியை கன்னத்தில் அறைந்தாள் . கிழவி கண்கள் அழுது சிவக்க வெளியேறும் போது இளவரசி சியாமா எதிரே வந்தாள் .
“யாரம்மா நீ ? ஏன் கண்கள் சிவந்திருக்கிறது . அழுகிறாய்? என்று கேட்டாள் .
“சியாமா, உன் அம்மாவுக்கு எப்படி லக்ஷ்மி பூஜை பண்ணனும்னு சொன்னேன். அடித்து அனுப்பினாள்''
” மன்னிக்கவேண்டும் எனக்கு அந்தப் பூஜை பண்ணும் முறை சொல்லி தாருங்கள்.முறைப்படி செய்கிறேன்” என்றது சியாமாவுக்கு முதியவள் பூஜை முறைகளை அருளிச் செய்தாள். வருஷாவருஷம் வரலக்ஷ்மி வ்ரதம் அனுஷ்டித்து பூஜை செய்தாள்.
முதியவளாக வந்த மகாலக்ஷ்மியை அடித்து விரட்டியதால் பத்ரஸ்ரவாவின் செல்வங்கள் வேகமாக குறைய ஆரம்பித்தன. பரம ஏழையாகு முன் மகள் ஸ்யாமாவுக்கு கல்யாணம் செய்துவைத்தான். சியாமா வருடந்தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்த பலனால் அவளை போற்றிப் பாதுகாக்கும் கணவனாக மாலாதரன் என்ற ராஜா வாய்த்தான். சியாமா கணவன் வீடு சென்றாள்.
பத்ரஸ்ரவாவின் எதிரிகள் அவனையும், அவனது மனைவியையும் நாட்டை விட்டுத் துரத்தி விட்டு சிம்மாசனத்தைப் பிடித்துக் கொண்டனர். ஒரு பிடி சோற்றுக்குக் கூட வழியின்றி காட்டில் அலைந்தனர் இருவரும்.
பெற்றோரின் இந்த அவல நிலையில் சியாமா வருந்தினாள். தன் நாட்டுக்கு அழைத்து உணவிட்டு பாதுகாத்தாள் . ஒரு குடம் நிறைய பொற்காசுகளைப் போட்டு ' 'இதை வைத்து பிழைத்துக் கொள்ளுங் கள்'' என தாய் கசந்திரிகாவிடம் கொடுத்தாள் . கசந்திரிகா தெட்டதும் பானையில் இருந்த பொற்காசுகள் எல்லாம் கரித் துண்டுகளாகி விட்டது.
''அம்மா நீ அடித்து விரட்டிய கிழவி தான் மஹாலக்ஷ்மி'' என்று உணர்த்தினாள் மகள். தனது தவறை உணர்ந்த கசந்திரிகாவும் அப்போதிலிருந்து வரலக்ஷ்மி பூஜை முறையை தனக்குக் கற்பிக்குமாறு மக்கள் ஸ்யாமாவிடம் கேட்டு அறிந்து நித்ய மகாலக்ஷ்மி பூஜை செய்தாள் . பலன் கைமேல் தெரிந்தது. பத்ரஸ்வரா மீண்டும் படை வீரர்களை சேர்த்துக் கொண்டு தனது நாட்டை ஆக்கிரமித்த எதிரி மன்னனை வீழ்த்தி மீண்டும் ராஜாவானான். இழந்த செல்வங்கள் வைபவங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றாள் கசந்திரிகா.
இதை சொல்வது எதற்காக வென்றால் வரலக்ஷ்மி விரத பூஜை எனும் மஹா லக்ஷ்மி பூஜை மஹாத்மியம் புரிய. யாரையும் அடிக்கணுமா வேண்டாமா என்பது அவரவர் சௌகர்யம்.

இன்னொரு  கதையில் சாருமதி  ஹீரோயின்.
மகத தேசத்தில் குண்டினபுரம் என்னும் ஊர்க்காரி சாருமதி, கற்புக்கரசி. தன் கணவன், மாமனார், மாமியாருக்கு குழந்தைகளுக்கு என்று வேண்டிய நற்பணிகளை, சேவையைச் செய்வதையே வாழ்நாள் பாக்கியமாகக் கொண்டவள். சாதாரண குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, மணந்த ஒரு பெண். அவள் பக்தியை மெச்சி மகாலக்ஷ்மி ஒருநாள் சாருமதி கனவில் வந்து வரலக்ஷ்மி விரதத்தைப் பற்றி எடுத்துக் கூறினாள். மறுநாள் எழுந்த சாருமதி தான் கண்ட கனவைப் பற்றிக் கூற அதைக் கேள்விப்பட்ட பலரும் அந்தப் பூஜையை செய்தனர். அதனால் நன்மக்கட் பேறுடன் என்றும் சுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெற்றனர். சாருமதி மேற்கொண்ட விரதமே வரலக்ஷ்மி விரதம். அதன் பயனாக பதினாறு செல்வங்களையும் பெற்றாள் சாருமதி.
சித்திரநேமி என்றொரு தேவகுலப் பெண் நடுநிலை தவறாதவள் என்று பெயரெடுத்தவள். அதனால் தேவர்களிடையே எழும் சில சச்சரவுகளுக்கு அவளே நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குவாள்.
ஒருமுறை அவள் நடுநிலை தவறி தீர்ப்பு சொல்லி விட்டாள். அதனால் அவளுக்கு தொழு நோய் பீடிக்கும்படி சாபம் கொடுத்தாள் அன்னை உமையவள். தன்னை மன்னிக்கும்படி வேண்டி கேட்டுக் கொள்ள, மனமிரங்கிய தேவி கங்கை நதிக்கரையில் வரலக்ஷ்மி விரதத்தை அனுஷ்டி. உன் தொழு நோய் நீங்கும்'' என்றாள் .
சித்ரநேமியும் அவ்வாறே கங்கைக் கரை வந்து வரலக்ஷ்மி பூஜை செய்து நோய் நீங்கி நல்லுருவம் பெற்றாள். “என்னைப் போல புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சிந்து, காவிரி, தாமிபரணி முதலிய நதிகளில் நீராடி இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு எல்லாம் நல்ல பலன் பல மடங்கு கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டாள். வரலக்ஷ்மியும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தாள் அதனால் இந்த பூஜையை நதிகளில் நீராடிய பின் செய்வது மிகவும் சிறப்பு என்பது ஐதீகம்.

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:48:57 PM8/27/23
to amrith...@googlegroups.com

கண்டும் காணாத  கிருஷ்ணன்     நங்கநல்லூர்  J  K  SIVAN 

துவாரகையில்  அரண்மனையில் எப்போதும் கிருஷ்ணனைச் சுற்றி அருகிலே  யாராவது இருந்து கொண்டே ருப்பார்கள்.  அன்று கிருஷ்ணன்  தனிமையில் வெகுநேரம்   சிந்தனையில் ஈடுபட்டு  அமர்ந்திருக்கிறான்.  கண்கள் எங்கோ தூரத்தில் எதன்மேலோ  நிலைத்து நிற்கிறது.  துவாபர யுகம் முடிந்து கலியுகம் ஆரம்பித்துவிட்டது.  எந்த காரணத்துக்காக  தான் அவதரித்தானோ அது முடிந்துவிட்டதே. மதுராவில் கம்சன் அரண்மனையில் வசுதேவர் தேவகி சிறையில் அடைபட்டுக்கிடந்த போது  தான் தோன்றியது முதல்... கோகுலம், பிருந்தாவனம், மீண்டும் மதுரை, துவாரகை.... 125 வருஷங்கள் ஓடிவிட்டதே..   இனி நடக்கவேண்டியது என்ன பாக்கி இருக்கிறது என்று கிருஷ்ணன் தீர்மானித்துவிட்டான். அதன் படி தான்  எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது,  ஒரு நீண்ட பெருமூச்சு  உஷ்ணமாக  கண்ணனிடமிருந்து வெளிப்பட்டது...தூரத்தில் கண்ணன் தீர்மானித்தபடியே  கடைசி  நாடகம் ஆரம்பமாகி விட்டதே. நடக்கும் காட்சிகள் கண்முன் தோன்றுகிறது
                                 
கலியுகம் அனர்த்தங்களை கொண்டு வரப்போகிறது என்று உணர்ந்து  அதன்  தீவிர   செயல்களை சற்று கட்டுப்படுத்த, பக்தி பெருக, சில யாகங்களை   செய்ய கிருஷ்ணன் அறிவுறுத்தியவாறு   துவாரகையில் கண்ணன் மாளிகையில்  மஹரிஷிகள்  விஸ்வாமித்ரர், அசிதர், கண்வர் ,துர்வாசர், பிருகு ,அங்கிரஸ், காஷ்யபர், வாமதேவர், அத்ரி, வசிஷ்டர், நாரதர் எல்லோரும் சேர்ந்து  அவற்றை செயது முடித்து விட்டார்கள்.  எல்லோரும்  தவம் செய்ய   பிண்டாரகம்  செல்லலாம் என கிருஷ்ணன் சொல்லியாகிவிட்டது.   :

அங்கே  யதுகுல  இளைஞர்கள்  சிலர் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் கண்களில்   கிருஷ்ணன் அனுப்பிய  ரிஷிகள் பட்டுவிட்டனர்.  
''அடே  எவ்வளவு கற்றுணர்ந்த ஞானிகள்  இவர்கள்'' என்று ஒருவன் சொல்ல,  கிருஷ்ணன் மகன் சாம்பன்  குறுக்கிட்டான்.
''என்னடா அப்படி உசத்தி இவர்கள்?   எல்லாம் அறிந்த  ஞானிகள்  என்கிறாயே,    இவர்களை நாம்  எளிதில் ஏமாற்றமுடியுமே''  என்கிறான் சாம்பன்.
'' சாம்பா, எப்படி  சொல்கிறாய்   இதை  நீ?
இப்போது  பாருங்கள் ஒரு  வேடிக்கையை என்று  குசுகுசு என்று ஒரு திட்டம்  தீட்டுகிறான்  சாம்பன்.  அதன்படி,அவன் பெண்வேடம் பூண்டு, வயிற்றில்   நிறைய வஸ்திரங்கள்  சுருட்டி வைத்து மூடி,  ஒரு கர்ப்பிணி   போல அந்த ரிஷிகள் முன் அந்த இளைஞர்கள்  வருகிறார்கள். ஒருவன்  சாம்பனை நடக்கமுடியாமல் திண்டாடுபவள் போல்  அணைத்து  மெதுவாக அழைத்து  வருகிறான். அனைவரும்  ரிஷிகளை  வணங்குகிறார்கள்.
இந்த  சிறுவர்கள் வந்து  வணங்கும்போதே  அதில் பக்தி, மரியாதை  இல்லை  என்பதை ரிஷிகள் சுலபமாக  அறிகிறார்கள்.
ஒருவன் நாரதரிடம் சென்றான்.
 ''மகரிஷி இந்த  கரிய விழி பெண்ணுக்கு உங்களை  ஒரு கேள்வி கேட்க விருப்பமாக இருக்கிறதாம்? தயவு செய்து  அருளவேண்டும்'' என்று நடிக்கிறான்.
''என்ன கேட்கவேண்டுமோ  கேட்கட்டும்''
''மஹரிஷி  முக்காலமும் உணர்ந்த மஹரிஷிகள் நீங்கள்.  ஞானிகள், உங்களிடம் பேச  வெட்கமும்  பயமுமாக  இருக்கிறதாம்  இந்த பெண்ணுக்கு,  நானே கேட்கலாமா அவள் சார்பில்''
'' கேள் ''
''இவளுக்கு  வயிற்றில் கருவுற்றிருக்கும்  சிசு ஆணாக இருக்க வேண்டும் என்று ஆசை. அது நிறைவேறுமா?''
ரிஷிகளுக்கு  எதிரில் நிற்பது பெண் அல்ல, ஆண் . வயிற்றில் இருப்பது சிசுவும் அல்ல,  கர்ப்ப வேஷம்  என்று துல்லியமாக தெரிந்தது. தம்மை  ஏமாற்ற,   அவமதிக்க திட்டம் என்றும் புரிந்தது.  ஆகவே  நிதானமாக   பதில் அளிக்கிறார்.

''அடாடா,  இந்த  பெண் வயிற்றில்  ஒரு  இரும்பு உலக்கை அல்லவோ பிறக்கப்போகிறது. அதால் தான் உங்கள்  யதுகுலமே முற்றிலும் அழியப்போகிறது''  என்று சாபமிடுகிறார் ரிஷி.

பயந்து போன  இளைஞர்கள் அவசர அவசரமாக  வேஷம்  கலைக்கும்போது  சாம்பன் வயிற்றோடு ஒரு பெரிய  இரும்பு தடி இணைந்திருக்கிறதை கண்டதும் நடுங்குகிறார்கள்.
 ''ஐயோ  இப்படி  செய்த்துவிட்டோமே இனி என்ன ஆகுமோ, என்று  ஓடி அந்த  இரும்பு உலக்கையை ராஜா  உக்ரசேனன் அரசவைக்கு  கொண்டு சென்று  அழுதுகொண்டே  நடந்ததை சொல்கிறார்கள்.   நடந்ததை கேட்டு அனைத்து யாதவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
உக்கிரசேனன் மந்திரிகளை கலந்தாலோசித்து  இந்த இரும்பு தடியை  உடைத்து  பொடி செய்து அந்த பொடியை  கடலில் கரைத்து விடுவிங்கள்''என்கிறான்.
இரும்பு தடியை முழுதும் பொடியாக்க  முடியாமல், சிறு தூள்களாக, துண்டுகளாக்கி கடலில் எரிந்து   விட்டார்கள்.கடலில் ஒரு மீன் ஒரு பெரிய துண்டை  விழுங்கி விட்டது. கடலின்  அலைகள் பொடிகளையும்  துகள்களையும்  கரையெல்லாம் கொண்டு சென்று ஒதுக்கி விட்டன.அந்த துகள்கள் கடற்கரை பிரதேசம் முழுதும்  கூறிய இரும்பு  ஈட்டிகளாக,அம்புகளாக  வளர்ந்து விட்டன.
 ஒருநாள்  ஜரா என்கிற  வேடுவன்   செம்படவன் ஒருவனிடம்  இருந்து அவன் கடலில் பிடித்த  ஒரு மீனைப்  பெறுகிறான். அதன் வயிற்றில் சற்று  நீண்ட  அம்பு, ஈட்டி  முனைக்கு  பொருத்தமான இரும்பு துண்டு  இருப்பதை பார்த்து,  அதிசயித்து,  அதை கூறாக்கி ஒரு கம்பின் முனையில் செருகி  அம்போ, கையில் இருந்து எறியும்   ஈட்டி முனையாகவோ மாற்றிவிட்டான். நடந்தது அனைத்தும்  நன்றாகவே  கிருஷ்ணனுக்கு  தெரிந்தும்,  நடக்கப்போகும் எந்த ஒரு செயலும்  எண்ணமும் தடைபடாமல் நடக்கும்படி  விட்டு விட்டான். இனி தனது முடிவு ஒன்றே  தான் பாக்கி  என்று தெரிந்து அதற்கும் தயாராகி விட்டான் கிருஷ்ணன்.

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:49:06 PM8/27/23
to amrith...@googlegroups.com
பார் போற்றும் பரமஹம்ஸர்     --  நங்கநல்லூர்   J K  SIVAN 

நல்லோர் நட்பு 

ராமகிருஷ்ணர் மாதிரி கதைகள் சொல்பவர்கள் கிடையாது எனலாம். நிறைய  கதைகள்  எல்லாம் நீதி நிரம்பியவை. இதோ ஒரு கதை சொல்கிறார் கேளுங்கள்.

ஒரு ஊரில் ஒரு காடு. அதில் ஒரு ரிஷி.  அவருக்கு சில சிஷ்யர்கள்.  ஒருநாள்  ''சிஷ்யர்களே,  எவற்றிலும் எவரிலும்   கடவுளைத் தான் நீங்கள் பார்க்கவேண்டும். விழுந்து வணங்கவேண்டும் '' என்று உபதேசித்தார்.

ஒருநாள் சிஷ்யர்கள் காட்டுக்குள்   விறகு சுள்ளி  ஹோமத்துக்கு  எடுத்துக்கொண்டு வரப்  போனபோது  ஒரு குரல் கேட்டது. 
  
''தூர ஓடிப்போங்க,  மதம் பிடிச்ச யானை வருது''. 
ஒருத்தனைத் தவிர எல்லோரும் ஓடிப்போய் ஒளிந்துகொண்டார்கள். ஒரு சிஷ்யன் குரு சொன்னதை நினைத்துக்கொண்டு  குரு சொன்னபடி இந்த யானையும்  கடவுள் தானே, என்று ஓடாமல் நின்று வணங்கினான். யானை தூக்கி எறிந்தது அவனை.  இதில் என்ன நீதி என்றால் கடவுள் எல்லாவற்றிலும் எல்லோரிலும் இருக்கிறார் என்பது வாஸ்தவம். ஆனால்  கெட்டவர்கள் துஷ்டர்களோடு சகவாசம் வைத்துக் கொள்ளக்கூடாது. புலியும் கடவுள் என்று அதை நெருங்கி கட்டிக் கொண்டால் தலையைத் தின்றுவிடும். மேலே சொன்ன கதையில்  யானை மேல் இருந்த மாவுத்தன்  ''தூர ஓடுங்கள் மதம் பிடித்த யானை வருது'' என்று சொன்னானே அவனும் கடவுள் தானே. அவன் சொன்னதை ஏன் லக்ஷியம் பண்ணவில்லை? 

ஜலம்  கடவுள்.  அதை குடிக்கலாம், அதில் ஸ்னானம் பண்ணலாம்.  துணி துவைக்கலாம். ஆனால் அதில் ஆழத்தில் நீந்தத்  தெரியாமல் இறங்கினால் உயிரையும் எடுத்துவிடும்.  கடவுள் நல்லவர்கள் உள்ளும் கெட்டவர்கள் உள்ளும் இருக்கிறார் என்பதால் நல்லவர்களையே நாம் நாடுவது தான் சத்சங்கம். 

இன்னொரு கதையில்  சில  மாடு மேய்க்கும் பையன்கள்  காட்டில் ஒரு  கொடிய  விஷ நாகத்தை பார்க்கிறார்கள். பயந்து ஓடுகிறார்கள். அந்த காட்டுப்பகுதியில் ஒரு நாள் ஒரு முனிவர்  வந்த போது  மாடு மேய்க்கும்  சிறுவர்கள்  ''சாமி அங்கே போகாதீங்க, ஒரு விஷ  பாம்பு  இருக்குது''  என்று  எச்சரித்தார்கள். 
''பரவாயில்லே, அது பாட்டுக்கு இருந்துட்டு போகட்டும்.எனக்கு பயம் இல்லை. பாம்பை  அடக்கும்  மந்திரம் தெரியும், ''  என்று முனிவர் நடந்தார். 
பாம்பு எதிரே நீளமாக வந்து படமெடுத்து புஸ் என்றது.  முனிவர் ஒரு மந்திரம் சொன்னார். பாம்பு  தலையை குனிந்து அவர் எதிரே  படுத்தது. 
'ஹே  நாகமே, நீ எதற்கு  பாவம் அந்த மாட்டுக்கார பையன்களை துன்புறுத்துகிறாய். எல்லோருக்கும் கெடுதல் செய்கிறாய்?நான் உனக்கு ஒரு புனித ஜபம்   உபதேசம் பண்ணுகிறேன். கேள். அதை விடாமல் ஜெபி.  யாருக்கும் தீங்கு பண்ணாதே.  முனிவர் பாம்புக்கு பகவான் நாமாவை உபதேசித்தார்.  இதை விடாமல் சொல்லு.  உனக்கு கடவுள் அருள் கிடைக்கும். பாபம் நீங்கி  நீ நற்கதி அடையலாம்''  என்றார்.  அது உண்மையிலேயே நல்ல பாம்பு. ஆகவே  முனிவர் உபதேசித்த மந்திரத்தை ஜபம் பண்ண ஆரம்பித்தது.  நான் உன்னை மறுபடியும் இந்த பக்கம் வரும்போது பார்க்கிறேன்''  என்று சொல்லி விட்டு முனிவர் நடந்தார். 

சில நாட்கள்  ஓடியது.   மாட்டுக்கார பையன்கள் பாம்பை மறுபடியும் பார்த்தபோது அது சாதுவாக இருந்தது. யாரையும் கடிக்க வில்லை. புழு மாதிரி நடந்து கொண்டது. ஜெபத்தை விடாமல் சொல்லிக்கொண்டிருந்தது.  தைரியம் அடைந்த பையன்கள் கல்லாலும் கட்டையாலும்  அந்த பாம்பை  ஓட ஓட அடித்து துன்புறுத்தினார்கள். அப்படியும் அது கோபம் கொள்ளாமல் கடிக்காமல் பேசாமல் ஓடியது.  ஒருவன் தைரியமாக அதன் வாலைப் பிடித்து  சுழற்றி தரையில் அடித்தான்.  குற்றுயிரும் குலையுயிருமாக  பாம்பு எலும்புகள் நொறுங்கி  மயங்கி ரத்தம் கக்கி விழுந்தது.  அது இறந்துவிட்டதாக  பையன்கள் போய்விட்டார்கள். 

பாம்பால் நகர முடியவில்லை, இரை  எதுவும் கிடைக்காமல் பசியில்  வலி வேதனையோடு இருந்தாலும் ஜெபத்தை விடாமல் சொல்லிக்கொண்டிருந்தது.  எங்கோ ஒரு பொந்தில் நகரமுடியாமல் ஊர்ந்து சென்று தங்கியது.  இரவில் மட்டும்  மெதுவாக வெளியே ஊர்ந்து  வந்து கிடைக்கும் ஆகாரத்தை உண்டு கொஞ்சம் உயிரை தக்க  வைத்துக் கொண்டது.  சில நாட்கள் சென்றது.  நாட்கள் மாதங்களாகியது.

ஒருநாள் அந்த முனிவர் மீண்டும் காட்டுக்குள் வந்தார்.   பையன்களிடம்  பாம்பு எங்கே எப்படியிருக்கிறது என்று கேட்டார். ''அது செத்து போச்சு''  என்று அவர்கள் சொன்னதை அவர் நம்பவில்லை.  பாம்பைத்  தேடிச்  சென்றார்.  சாகும் தருவாயில் பாம்பை பார்த்தார்.

''நண்பா நீ எப்படி இருக்கிறாய்?  என்று பாம்பை கேட்டார். 
''நான் நன்றாக இருக்கிறேன்  குருநாதா  நீங்கள் உபதேசித்த மந்திர ஜபம்  விடாமல் சொல்கிறேன்''  பாம்பு அழுதது.
ஏன் இப்படி துரும்பாக இளைத்துவிட்டாய் ராஜநாகமே? என்ன ஆயிற்று உனக்கு?
''நான் யாருக்கும் கெடுதல்,தீங்கு செய்வதில்லை ஆனாலும் என்னை பையன்கள் அடித்து என் எலும்பெல்லாம் நொறுங்கி நகர  முடியவில்லை''
''ஆகாரம் இல்லாததால் உன் உடல் நலிந்து போகவில்லை. வேறே  என்ன காரணம் என்று எனக்கு  தெரிந்து விட்டது. சிறுவர்களுக்கு நீ  ஏன் மாறிவிட்டாய், ஏன் கடிக்கமாட்டாய், என்று  தெரியாவிட்டாலும்   நீ  கடிக்கமாட்டாய் உன்னால்  துன்பமில்லை என்று  தெரிந்துவிட்டதால் உன்னைத்  துன்புறுத்தினார்கள். கிட்டத்தட்ட கொன்றே விட்டார்கள்.  நீ இவ்வளவு முட்டாளாக இருப்பாய் என்று நான் நினைக்கவே இல்லை. உன்னைக் காப்பாற்றிக்கொள்ளக் கூட  தெரியாத  முட்டாள்.  நான் உன்னைக்  காப்பாற்றிக்கொள்ள  '' உஸ்ஸ்''  என்று அவர்களை பயமுறுத்தி   சீறக்  கூடவா கூடாது என்று சொன்னேன். யாரையும் கடிக்காதே,  கொல்லாதே , துன்புறுத்தாதே என்று தானே சொன்னேன்.  சீறி, உன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஏன்  தவறினாய்?''   கெட்டவர்களைக் கண்டால் சீறலாமே. பயமுறுத்தி  உனக்கு ஆபத்தில்லாமல் செய்து கொண்டிருக்கலாமே ''. 

கடவுள் மனிதன், மிருகம், பறவை, ஊர்வன, மரங்கள், செடிகள் கொடிகள் என்று அநேக ஜீவராசிகளை படைத்திருக்கிறார். சிலது நல்லவை சிலது கூடியவை. தீங்கு செய்யக்கூடியவை.  மனிதர்களிலும் அவ்வாறு கெட்டவர்கள் உண்டு  அவர்களோடு உறவு வைப்பதோ நட்பு கொள்வதோ தப்பு. கெடுதல்.  ஸத்ஸங்கம்  என்றால் என்ன என்று புரிகிறதா?

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:49:27 PM8/27/23
to amrith...@googlegroups.com

கேள்வி பதில் ரத்னமாலை - நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்   -  ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா

கேள்வி பதில் ரத்னமாலை  276-290

276. தேகத்துக்கு பெரிய  அதிர்ஷ்டம் எது?
வியாதிகள் இல்லாத  ஆரோக்கியம்.

277.எவன் பலன் அடைகிறான்?
வேறு யார். உழைப்பவன் தான்.

278. யாரைப் பாபம்  நெருங்காது?
பகவான் நாமாவை விடாமல் எப்போதும் சொல்பவனை.

279. எது மனிதனால் முடியாத காரியம் ?
மனதை ஓடாமல்  சிதறாமல்  கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது.

280. எது  மாயா  ஜாலம்.?
உலகமும்  அதில்  தோன்றுபவை எல்லாமும்.

281. கனவுக்கு சமமானது எது?
கனவு கண்ட பிறகு  கண் விழித்து  எழுந்ததும் காண்பதெல்லாமுமே  கனவுக்கு சமம் தானே.

282.  கடவுளை வழிபடுவதால் என்ன பயன் கிடைக்கும்?
அவனை எல்லாவற்றிலும் எங்கும் காண்பதே சிறந்த பயன்.

283. உண்மையில் முக்தி, மோக்ஷம் என்பது எது?
அஞ்ஞானத்தின், அறியாமையின் மரணம் தான்  மோக்ஷம்.

284. செவிக்கின்பம், அமுது எது?
நல்லோர் அறிவுரைகள்

285. எது விலைமதிக்க முடியாதது?
காலத்தில் ஒருவர் செய்த உதவி

286.  மரணம் வரை ஈட்டிபோல்  வேதனையும் துன்பமும் தருவது எது?
ரகசியமாக ஒருவன் செய்த  பாப கார்யம்.

287.எதை ஒருவன் கடைபிடிக்க வேண்டும்?
சரியான நல்வழியை, அதில்  தெரிந்த  தெரியாத  லாபங்கள் அவன் அடையமுடியும்.

288. ஒருவனுக்கு  எது அழகூட்டும் சிறந்த ஆபரணம்.?
அவனது நன்னடத்தை, நற்குணம்.

289. எதை ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும்?
ஒருவன் பெற்ற நற்பெயரை  அவனது நேர்மையை, நாணயத்தை.

290.  மூத்தோர்  என்று யாரை சொல்கிறோம் y ?
கடமையை உணர்ந்து தவறாது அதை உண்மையோடு, நேர்மையோடு, நீதியோடு சத்யத்தோடு கடைபிடிப்பவர்களை.

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:49:27 PM8/27/23
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்   J K  SIVAN 

அம்பாள்  தரிசனம். 

இன்று வரலக்ஷ்மி விரதம்.  அம்பாள் பல ரூபங்களில்  ஒளிர்பவள், அருள்பவள். அவளே  சரஸ்வதி அவளே  மஹா லட்சுமி. எல்லாம் ஒன்றே என்ற தத்துவத்தில் ஒன்றானவள்.  அவளே  காமாக்ஷி.  காமாக்ஷி என்றால் அவளே மஹா பெரியவா ஸ்வரூபம்.    அம்பாளை வரம் தருபவளாக  வரலக்ஷ்மியாக வழிபடும் நாளில்  வரமாக நாம்  பெற்ற மஹா பெரியவா சம்பவம் ஒன்று சொல்வது ரொம்ப பொருத்தம் என்று   தோன்றியது.

ஸ்ரீ த்யாகராஜ பண்டிதர் என்பவர் பெரிய வேத வித்து. தஞ்சாவூரை சேர்ந்த இவர் நம்முடைய பெரியவாளுக்கு பல வருஷங்கள்  நிழலாக  கூடவே இருந்து கைங்கர்யம்  பண்ணிய  பாக்கியவான்.  பெரியவாளுடைய அத்தனை தேவைகளையும் பெரியவாளுடைய ஒரு சின்னக் குறிப்பு கூட இல்லாமல் தானாகவே அறிந்து செய்து வந்த புண்யவான்.   பெரியவா எப்போதுமே தன்னோடு வைத்துக் கொண்டிருக்கும் காமாக்ஷிக்கு பூஜை பண்ணும்போது த்யாகராஜ பண்டிதர் ஒரு பெரிய துணியை தன் இரு கைகளாலும் அகலமாக ஸ்க்ரீன் மாதிரி பிடித்துக் கொண்டு நிற்பார். பெரியவா உள்ளே என்ன பண்ணுகிறார் என்பது துளி கூட வெளியே தெரியாதபடி பிடித்துக் கொண்டு நிற்பார். அவர் நல்ல உயரமாக இருந்ததால் நிஜமாக பெரிய திரை போட்டதுபோல் பிடித்துக் கொண்டு நிற்பதில் எந்த ஸ்ரமமும் அவருக்கு இல்லை. 

''தியாகு,  நா   ஒரு சின்ன குறிப்பு கூட  .குடுக்க வேண்டிய அவஸ்யம் இல்லாதபடி இப்டி பாத்துப் பாத்து பண்றியே…பதிலுக்கு நா…ஒனக்கு ஏதாவது  பண்ண வேணாமா?     ''  மஹா பெரியவா, கலியுக   பேசும் தெய்வம்  இப்படி நினைத்திருப்பாரோ என்னவோ?

ஒரு நாள் திரைக்கு அந்தப்பக்கம் தன்னுடைய காமாக்ஷிக்கு பெரியவா பூஜை பண்ணிக் கொண்டிருந்தார். த்யாகராஜ பண்டிதர் வழக்கம் போல் திரையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அன்றைக்கு என்னவோ பூஜை ரொம்ப நேரம் நடப்பது போல் தோன்றியது. அவருடைய எண்ணம் நிஜந்தான் என்பது போல் அவருக்கு கைகள் வலிக்க ஆரம்பித்தன.

''என்னாச்சு? பெரியவா இன்னிக்கு ரொம்ப நேரமா வழக்கத்துக்கு  மாறா  ரொம்ப  நாழி  பூஜை பண்றாளே? ரத்த ஓட்டம் குறைந்ததால்  பண்டிதருக்கு   கை மரத்துக் கொண்டிருந்தது.   கை வலித்தது.    இந்த யோஜனையோடு சேர்ந்ததும் லேஸாக வலது  கைப்பக்கம் பிடித்துக் கொண்டிருந்த திரை சற்று தாழ்ந்தது…

ஒரே ஒரு க்ஷணம்! பண்டிதரின் பார்வை உள்ளே பெரியவா பக்கம் விழுகிறது…ஜகத்குருவானவர் தன்னுடைய பாரிஷதருக்கு இந்தா! பிடி! என்னுடைய அபரிமிதமான அனுக்ரஹத்தை! என்று ரொம்ப ஸஹஜமாக வாரித் தெளித்தார்!
திரைக்குப் பின்னால்  அங்கே  என்ன நடந்துகொண்டிருந்தது?

சின்னச்சிறு குழந்தை வடிவில் ஸர்வாலங்கார பூஷிதையாக ‘தகதக’வென கோடிஸூர்ய ப்ரகாஶத்தோடு ஸாக்ஷாத் அம்பிகை காமாக்ஷி அமர்ந்திருந்தாள் ! 

''ஶ்ருதி ஸீமந்த ஸிந்தூரிக்ருதபாதாப்ஜ தூளிகா''   என்று லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒரு மஹா ஸௌந்தர்யமான வர்ணனை வரும். அதாவது வேத மாதா   தன்னுடைய ஶிரஸை அம்பாளின் பாதங்களில் பதியும் படி நமஸ்காரம் செய்யும்போது அவளுடைய ஸீமந்தத்தில் [நெற்றியின் உச்சி] பூசியிருக்கும் ஸிந்தூரமானது அம்பாளுடைய சிவந்த தாமரை பாதங்களில் படுவதால் அவை மேலும் சிவந்திருக்குமாம் !  என்ன ஒரு அற்புத  கவிதைநயம். 

அதோடு தங்க கொலுஸுகளும் மணிகளும் கொஞ்சிட ரத்னம் போல் ஜ்வலித்துக் கொண்டிருக்கும் அப்பேர்ப்பட்ட அந்த லலிதா  திரிபுர சுந்தரி தேவியின் திருப்பாதங்களை கோடிகோடியாய் ஸுகந்த புஷ்பங்களாலும் மஞ்சள் குங்குமத்தாலும் அர்ச்சனை செய்து கொண்டிருக்கும் தன் திருக்கரங்களால் பற்றிக் கொண்டு விம்மிக் கொண்டிருந்தார் நம்முடைய பெரியவா! ஆஹா! எப்பேர்ப்பட்ட தர்ஶனத்தை தந்து விட்டார் நம் மஹா பெரியவா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார் தியாக ராஜா  பண்டிதர்.  இதெல்லாம் யாருக்கு கிடைக்கும். அவர் வாழ்ந்த காலத்தில்  அந்த மண்ணில் நாமும் நடக்கிறோம்  அதற்கே பல பிறவிகளில்  புண்யம் நாம் செய்த்திருக்கிறோம்.!

 

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:49:42 PM8/27/23
to amrith...@googlegroups.com

SWAMI  VIVEKANANDA  SPEAKS.  -    NANGNALLUR  J.K. SIVAN 

"Men may be divided into four classes: those bound by the fetters of the world, the seekers after liberation, the liberated, and the ever-free.
"Among the ever-free we may count sages like Narada.  They live in the world for the good of others, to teach men spiritual truth.
"Those in bondage are sunk in worldliness and forgetful of God.  Not even by mistake do they think of God.
"The seekers after liberation want to free themselves from attachment to the world.  Some of them succeed and others do not.
"The liberated souls, such as the sadhus and mahatmas, are not entangled in the world, in 'woman and gold'.  Their minds are free from worldliness.  Besides, they always meditate on the Lotus Feet of God.

"Suppose a net has been cast into a lake to catch fish.  Some fish are so clever that they are never caught in the net.  They are like the ever-free.  But most of the fish are entangled in the net.  Some of them try to free themselves from it, and they are like those who seek liberation.  But not all the fish that struggle succeed.  A very few do jump out of the net, making a big splash in the water.  Then the fishermen shout, 'Look! There goes a big one!' But most of the fish caught in the net cannot escape, nor do they make any effort to get out.  On the contrary, they burrow into the mud with the net in their mouths and lie there quietly, thinking, 'We need not fear any more; we are quite safe here.' But the poor things do not know that the fishermen will drag them out with the net.  These are like the men bound to the world.

"The bound souls are tied to the world by the fetters of 'woman and gold'.  They are bound hand and foot.  Thinking that 'woman and gold' will make them happy and give them security, they do not realize that it will lead them to annihilation.  When a man thus bound to the world is about to die, his wife asks, 'You are about to go; but what have you done for me?' Again, such is his attachment to the things of the world that, when he sees the lamp burning brightly, he says: 'Dim the light.  Too much oil is being used.' And he is on his death-bed!

"The bound souls never think of God.  If they get any leisure they indulge in idle gossip and foolish talk, or they engage in fruitless work.  If you ask one of them the reason, he answers, 'Oh, I cannot keep still; so I am making a hedge.' When time hangs heavy on their hands they perhaps start playing cards."
        

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:49:43 PM8/27/23
to amrith...@googlegroups.com

ஸ்ரீ மத் பாகவதம் -  நங்கநல்லூர்  J K  SIVAN

''கலி காலம்,கலியுகம், எப்படி இருக்கும்?-  சுக ரிஷி கணிப்பு''

கலியுகத்தில் சில நல்ல சேதிகளும்  காதுக்கும்  கண்ணுக்கும் கிடைக்கிறது.  நமது பூமியை நாம்  பூகோள புத்தகத்தில் கோடுகளாக பார்த்திருக்கிறோம், வரைபடங்கள் எனும் MAP  இது தான் இந்தியா, ரஷ்யா அமேரிக்கா ஆஸ்திரேலிய கண்டங்கள் என்று வர்ணம் அடித்து காட்டுவது தெரியும்.  பூமி உருண்டை  என்பதை சொல்லிக்  கேட்டிருக்கிறோம். பூமியில் இருந்து  கொண்டே பூமி உருண்டையாக நீளமாக ஆகாசத்தில் தெரிவதை நாம் பார்த்ததுண்டா? இதோ இப்போது  சந்திராயண விண்கலம் நமக்கு எவ்வளவு துல்லியமாக காட்டி இருக்கிறது. நிறைய  தங்கப்பாறைகள் இருக்கிறதாம். GRT  அங்கே போய்  தங்க நகை கடை வைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை போலிருக்கிறது. நாமும் இன்ஸ்டால்மென்டில் தங்கம் வாங்கலாம்.  இப்படிப்பட்ட கலிகாலத்தை  நன்றாக  யோசித்து  சுகப்பிரம்ம ரிஷி  பரீக்ஷித் மகாராஜாவுக்கு சொல்வதை தான் நாம் ஸ்ரீமத் பாகவதத்தில் படிக்கிறோம். 

श्रीशुक उवाच  ततश्चानुदिनं धर्म: सत्यं शौचं क्षमा दया । कालेन बलिना राजन् नङ्‌क्ष्यत्यायुर्बलं स्मृति: ॥12.2.1 ॥
śrī-śuka uvāca tataś cānu-dinaṁ dharmaḥ  satyaṁ śaucaṁ kṣamā dayā kālena balinā rājan naṅkṣyaty āyur balaṁ smṛtiḥ

பரீக்ஷித் ராஜாவுக்கு  அவனது வாழ்வின் கடைசி ஏழு நாட்களில் எத்தனையோ விஷயங்களை சொல்கிறார் சுக ப்ரம்மம். அதில் அவர் அவனுக்கு பிறகு  இந்த உலகம் கலியுகத்தில்  எவ்வாறு இருக்கும் என்று  தனது ஞான த்ரிஷ்டியால் கவனித்து சொல்வது நமது இன்றைய நிலைமையை தான்.  ஆஹா  எப்படித்தான்  இவ்வளவு  கன  கச்சிதமாக  சுக ப்ரம்ம ரிஷி முன்கூட்டியே  ஆணி அடித்தது மா திரி சொல்கிறார்!   இந்த ருசிகரமான தகவலை  தெரிந்துகொள்ளவேண்டாமா?  ஸ்ரீமத் பாகவதத்தில்  12வது காண்டம் 2வது அத்தியாயத்தில்  இதெல்லாம் அப்பட்டமாக இருக்கிறது.

''பரீக்ஷித்,  மதம், சத்யம், சுத்தம், பொறுமை, கருணை, இரக்கம், வாழ்வின்  அளவு, தேக பலம், , ஞாபக சக்தி எல்லாமே  கலியுகத்தில் குறைந்து போகும்.  அது கலி  புருஷனின் சக்தி.

वित्तमेव कलौ नृणां जन्माचारगुणोदय: ।धर्मन्यायव्यवस्थायां कारणं बलमेव हि ॥ २ ॥ 12.2.2
vittam eva kalau nṝṇāṁ  janmācāra-guṇodayaḥ dharma-nyāya-vyavasthāyāṁ kāraṇaṁ balam eva hi

கலியுகத்தில்  எல்லோரும் பணம் ஒன்றை தான் மதிப்பார்கள். பணம் உள்ளவன் தான் சிறந்த குலத்தில் உதித்தவன், காசே தான் கடவுளடா பாட்டு எங்கும் கேட்கலாம்.  காசுள்ளவன் தான்  நல்லவன், அருமையான குணம் படைத்தவன்.  நேர்மை,  நீதி, நாணயம் எல்லாம்  அவன் பக்கம் தான் பேசும்.   நீதி அவன் பக்கம் பேசுவதை தான் இப்போது கண்கூடாக  பார்த்து, படித்து  அதிசயிக்கிறோம். 

दाम्पत्येऽभिरुचिर्हेतुर्मायैव व्यावहारिके ।स्त्रीत्वे पुंस्त्वे च हि रतिर्विप्रत्वे सूत्रमेव हि ॥ ३ ॥12.2.3
dāmpatye ’bhirucir hetur māyaiva vyāvahārike  strītve puṁstve ca hi ratir vipratve sūtram eva hi

தேகத்தின்  மேல் உள்ள  ஆசை தான் ஆண்  பெண்ணை  தம்பதியாக்கும்.  ஏமாற்றுவது தான் சிறந்த  புத்திசாலித்தனம் என்று  வியாபாரம் நடக்கும்.  ஆணும் பெண்ணும்  உடல் கவர்ச்சியால் தான்  மதிக்கப்படுவார்கள்.  வெறும் பூணல் கயிறை, நூலை மாட்டிக்கொண்டவன் பிராமணன் என்று  அறியப்படுவான்.

लिङ्गमेवाश्रमख्यातावन्योन्यापत्तिकारणम् । अवृत्त्या न्यायदौर्बल्यं पाण्डित्ये चापलं वच: ॥12.2.4
liṅgam evāśrama-khyātāv anyonyāpatti-kāraṇam  avṛttyā nyāya-daurbalyaṁ pāṇḍitye cāpalaṁ vacaḥ

கலிகாலம்   மனிதனின்  மனம் குரங்கு என்பதை நிரூபிக்கும். பக்தி  ஊசலாடும்.  ஒருவனின்  பக்தி அவன் மனநிலையை, நம்பிக்கையைப்  பொறுத்தது.  அது ஒருநாள்  சிவன்  உலகிலேயே உயர்ந்த தெய்வமாக வழிபட  வேண்டியவர்  என்று நினைக்கும்.  பத்து நாள் கழித்து வேறே  ஒருவர்  விஷ்ணு மஹாத்ம்யம் சொன்னதை கேட்டு இனிமேல்  நமக்கு ஒரே  தெய்வம்  மஹா விஷ்ணுவே, இந்த சுடுகாட்டு சாம்பல்   சிவன்இல்லை என்று  சிவ வழிபாட்டை நிறுத்த  வைக்கும்.  ரெண்டு நாள் தான் இது. யாரோ  ஒரு சிலர் சாமர்த்தியமாக   பேசுவதைக் கேட்டு  அம்பாள் சக்தி தான் சிறந்த தெய்வம் என்று பேசும்.  அப்புறம் கிருஷ்ணன் தான் பெஸ்ட்  BEST என்று சொல்லும்.  அவ்வளவு தான் ஒரு வாரம் கூட  ஆகியிருக்காது. யாரோ சொல்வார் கிருஷ்ணன் புல்லாங்குழல் படம் வீட்டில் இருக்கக்கூடாது. நரசிம்மர் வேண்டாம்  என்றெல்லாம். இதெல்லாம்  மனதில் தோன்றும்   சாதக பாதக சமாச்சாரங்கள். இதற்கு முக்கியம் வேண்டாம்.  
உனக்கு எந்த உருவத்தில் நம்பிக்கையோ அதில் நான் இருப்பேன் என்கிறான் கிருஷ்ணன்.  சரியாக நமது மகோன்னதமான கோட்பாடுகளை புரிந்து  கொள்ளாததால்  வேறு மதங்களில் ஈர்ப்பு உண்டாகிறது.   யாரும்   சரியாக  நமது சனாதன தர்மத்தை  அறியாமலும்  யாரிடமும் கேட்டு ஞானம் பெறாததாலும் இந்த சங்கடம்.  அடிக்கடி நமது    மேன்மையான  கோட்பாடுகளை உணர்த்திக் கொண்டே இருக்கவேண்டும். அதற்காக தான் திரும்ப  திரும்ப சொன்னதையே  நானும் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டே இருப்பது. பலபேர் பலமுறை படிக்கட்டும்,  அல்லது  சிலர் ஒருமுறையாவது படிக்கட்டும்.. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். தெரிந்தவர்கள் மறக்காமலிருக்கட்டும் என்பதற்காக.

சுக ப்ரம்ம ரிஷி  தீர்க்க தரிசி.   கலியுகத்தில் எப்படி மக்கள் இருப்பார்கள், வாழ்க்கை எவ்வாறு  நடக்கும் என்று நன்றாக  அறிந்தவர.  இன்னும் எழுநாளில் சாகப்போகும்   பரிக்ஷித்துக்கு கலிகாலம் எப்படி இருக்கும் என்று  எதற்கு தேவை?   இருந்தாலும் அவர் அவனுக்கு சொல்வது நமக்காக  சொல்லப்பட்ட  சமாச்சாரம்.  

கலியுகத்தில் வார்த்தை ஜாலங்கள், பொய்யில் கோட்டை கட்டுபவன்,  சிறந்த கல்விமானாக   அறிஞனாக, கலைஞனாக, கவிஞனாக கெட்டிக்காரனாக  மதிக்கப்பட்டு, மரியாதை பெற்று,  கை தட்டப்படுவான்.  வெறும் வேஷதாரி, ஞானியாக,  பக்திமானாக காட்சி  அளிப்பான்.  காசு பண்ணுவான்.  

 எவ்வளவு தான் யோக்கியனாக, நாணயமாக, நேர்மையாக இருந்தாலும் காசில்லாதவன் நிராகரிக்கப்படுவான். அவனுக்கு சமூகத்தில் அந்தஸ்து பெருமை  இருக்காது.  இதனால் தான்  வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்ற பழமொழி  உருவானதோ?  என்ரூ தோன்றுகிறது  மேலே  உள்ள  சுகப்ரம்மரின் ஸ்லோகம் படிக்கும்போது.

வெறும்  வேஷத்தில் தான் ஒருவனை ஆன்மீக வாதி, என்று மதிப்பார்கள். ஒவ்வொருவனும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வேஷம் போட்டு வாழ்வான்.  பணத்தை வைத்து தான் ஒவ்வொருவனையும் எடை போடுவார்கள்.  வார்த்தை ஜாலத்தால் ஆகாசத்தில் பந்தல் போடுபவர்கள் தான் புத்திசாலிகளாக, சிறந்த அறிஞனாக  கருதப்படுவார்கள். அடேயப்பா  எவ்வளவு துல்லியமாக சுகப்பிரம்ம ரிஷி 5000 வருஷங்களுக்கு முன்பே இப்போதுள்ள நிலையை அற்புதமாக  விவரிக்கிறார்.  சரியான ப்ரம்ம ஞானி!.

अनाढ्यतैवासाधुत्वे साधुत्वे दम्भ एव तु । स्वीकार एव चोद्वाहे स्न‍ानमेव प्रसाधनम् ॥ ५ ॥12.2.5
anāḍhyataivāsādhutve sādhutve dambha eva tu  svīkāra eva codvāhe snānam eva prasādhanam

பணமில்லாதவன் அசுத்தமானவன் என்பார்கள்.  ஏமாற்று வித்தை  நயவஞ்சகம்  போன்றவை ஒருவனின் சிறந்த குணமாக ஏற்கப்படும். கல்யாணம் என்பது பேச்சு சாமர்த்தியத்தால் நிச்சயிக்கப்படும்.  ஒரு பக்கெட்  தண்ணியோ, ஐந்தாறு சொம்பு தண்ணீரோ  மேலே ஊற்றிக்கொண்டாலே  ஒருவன் சமூகத்தில் சுத்தமானவனாக அங்கீகாரம் பெறுவான்.

என்ன நடக்கிறது  இங்கே என்பதை  சுகர் சொல்கிறார் கேளுங்கள்: 
பரீக்ஷித் மஹாராஜா,    கலியுகம் என்பது எப்படி இருக்கும்,  மக்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் தெரியுமா?ஸ்ரீமத் பாகவதம்  12.2. 6  ஸ்லோகம் இது தான்  

दूरे वार्ययनं तीर्थं लावण्यं केशधारणम् । उदरंभरता स्वार्थ: सत्यत्वे धार्ष्ट्यमेव हि । दाक्ष्यं कुटुम्बभरणं यशोऽर्थे धर्मसेवनम् ॥ ६ ॥
dūre vāry-ayanaṁ tīrthaṁ lāvaṇyaṁ keśa-dhāraṇam udaraṁ-bharatā svārthaḥ satyatve dhārṣṭyam eva hi
dākṣyaṁ kuṭumba-bharaṇaṁ yaśo ’rthe dharma-sevanam

ஊரைக்கூட்டுற அளவு  மூக்கைத் துளைக்கிற  சென்ட்,  பளபள  ஜிலுஜிலு  பட்டு சட்டை வேஷ்டி, புடவை நகைகள், இதனால்  அலங்காரம் செய்தவர்கள் எல்லாம், அழகானவர்களாக அறியப்படுவார்கள்.   இயற்கையான  இன்றெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க தோன்றும்  சுதந்திர  அழகு புறக்கணிக்கப்படும்.    முரட்டுத்  தனமான  பொய் நிறைய கலந்த அடாவடி பேச்சு, உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும்.  பணத்துக்காக   மதம் மாறும் . வெறித்தனமாக  மேலே மேலே  எல்லோரையும் பிடித்து காசு கொடுத்து  ஆட்களை மதம் மாற்றி  தமது மதத்தாராக சேர்த்துக் கொள்வதையும், பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லக்ஷ்யமாக  இருக்கும். 
இப்போது  இது அன்றாட சர்வ சாதாரண  நிகழ்வு  என்பதை நாம் கண்கூடாக இப்போது பார்க்கிறோம். ஆனால் சுகப்ரம்மம் அப்போதே  இதை அறிந்திருக்கிறாரே !  (12.2.6)

க்ஷேத்ரம்  என்றால்  பகவான் அவதரித்த ஸ்தலம், புண்ய காரியங்கள் நடந்த இடம்,  பல மஹான்கள் சஞ்சரித்த, அவதரித்த,  வாழ்ந்த  இடம், சில  நல்ல பலன்களை கொடுக்கும் ஸ்தலம்  என்பதெல்லாம் ஏனோ  கலிகாலத்தில்  நமக்கெல்லாம்  மறந்து விடும், எல்லாம்  போகப்போக   மறைந்தும்  விடும்.  எங்கோ  ஒரு  இடத்தில்  பூமியில் பள்ளத்தில் சற்று நீர் நிறைந்திருந்தால் அந்த குட்டை  தான்  புனித ஸ்தலம், க்ஷேத்ரம்  என்று கலியுகத்தில் மக்கள்  நம்பி  மகிழ்வார்கள்.  இது அவர்கள் தப்பில்லை.  இப்படி  கொஞ்சம் கொஞ்சமாகி  அழிவை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதன் ஆதாரம்.

அழகு  என்பது சாமுத்திரிகா லக்ஷணம்  இல்லை.  ஒருவன் தலைமுடி ஸ்டைல் எப்படி  இருக்கிறதோ  அது தான் அழகு என்ற நிலை வந்துவிடும்.  இப்போது  MKT  பாகவதர்  கிராப்  யாராவது அழகு என்று ஒப்புக் கொள்வார்களா?  யாராவது  கிருஷ் ணன், ராமன்  மாதிரி  நீளமாக தலைமுடி வளர்த்துக் கொண்டு  மயில் இராகு செருகிக் கொள்வோமா?  ஒரு காலத்தில் கை  ரிக்ஷா இழுத்துக்கொண்டு போகிறவன், குதிரை வண்டி ஓட்டுபவன் கூட  MKT   பாகவதர்  மாதிரி  தலை முடி வளர்த்து   ''மன்மத லீலையை'' பாடிக்கொண்டு  போவதை  நானே சிறுவபதில் கோடம்பாக்கத்தில் பார்த்திருக்கிறேன். இப்போது யாரிடமாவது  பாகவதர் படம் வீட்டில்  இருக்கிறதா? எவனாவது அவர் பாட்டை பாடுகிறானா? அவர்போல் ஜில்பா, கடுக்கன், அங்கவஸ்திரம், ஜவ்வாது பொட்டுடன்  திரிவானா? ஊரே அவனைக் கேலியாக  பார்க்காதா??  இது தான் கலி முற்றிக்கொண்டே வருவதன் அடையாளம்.

அமெரிக்காவில் புதுப்  புது  HAIR ஸ்டைல்.  ஏன்  நாம்  பார்க்கும்  IPL  விளையாட்டுகளில், ஒலிம்பிக் விளையாட்டுகளில்  பங்கேற்கும் சில  வீரர்கள், வீராங்கனைகள் தலைகாலை சிகை அலங்காரத்தை பார்க்கும்போதே   பொட்டுக்கூடை  தகவல் அது சொல்ல வில்லையா?  அதற்கென்றே  நிறைய  பணம் செலவு  செய்து  நம் வீட்டு பிள்ளைகள் தலையை அப்படி  அலங்கரித்துக் கொண்டு வந்து,  வீட்டில் தாத்தா  பாட்டிகளிடம்  சாபம்  வாங்குவது தெரியாதா?   சமீபத்தில் கரோனா சமயத்தில் பலர் தலைகள்  முகங்கள்  எல்லாமே   ரிஷிகள் தலைகளாக  காணபட்டாலும் இன்னும்  அப்படியே இருக்கிறார்களே. தாடி குடுமி இல்லாத பையனை பார்க்கமுடிகிறதா? அப்படியே  ஒருவேளை நிலைத்துவிடுமோ? அப்படித்தான்  தோன்றுகிறது. அட கலிகாலமே !

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:49:59 PM8/27/23
to amrith...@googlegroups.com
ஸ்ரீமத்  பாகவதம்  - கிருஷ்ண சரித்திரம்  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒரு  ''பழ''ங் கதை   

 யாரைப் புகழ்வது என்பதே  தெரியாமல் போகிறது.  கிருஷ்ணன் சரித்திரத்தை  ஸ்ரீமத் பாகவதத்தில் எழுதிய  வேத வியாசரையா, அதை  எப்படியோ நமக்கு எழுத்தில் ஆங்கிலத்தில், தமிழில்   மற்ற மொழிகளில் தந்த மஹான்களையா, பரிக்ஷித்துக்கு  எல்லா விவரமும் எடுத்துச் சொன்ன  சுகப்பிரம்ம ரீஷையையா, அல்லது  இந்த  எழுதுக்கெல்லாம் நாயகனான  ஸ்ரீ க்ரிஷ்ணனையா .  எல்லோருக்கும்  நமது நன்றி கலந்த நமஸ்காரங்கள் முதலில் சொல்லிவிட்டு கண்ணன் எப்படி  கோகுலத்தில் வளர்ந்தான் என்று பார்ப்போம்.

விஷமம் தாங்கமுடியாமல் போக, அவனை சமாளிக்க முடியாமல் யசோதை கிருஷ்ணநாய்  ஒரு மாற உரலோடு தம்புக் கயிற்றால் கட்டிப்போட்டபோது  கட்டுண்ட மாயன் கிருஷ்ணன் அந்த சந்தர்ப்பத்தை  மணிக்ரீவன்,  நள கூபன்  எனும் இரு குபேர புத்திரர்களை சாப விமோச்சனம் பெற வைக்க உபயோகப்படுத்திக் கொண்டான்.  மரமாக நின்றவர்களை மீண்டும் விண்ணுலகம் செல்ல வைத்தாலும் மற்றவர்களுக்கு ஒரே பயம் ஆச்சர்யம். எப்படி  குழந்தை கிருஷ்ணன் உயிர் தப்பினான். ரெண்டு பெரிய  மருத மரங்கள் வேரோடு சாய்ந்து கிடைக்க நடுவே குழந்தை உரலில் கட்டுப்பட்டு நல்லவேளை உயிர் தப்பினான் என்று கடவுளை வேண்டினார்கள்.!\

இன்னொரு அதிசயத்தை சூட்டோடு சூடாக  இப்போதே சொல்லிவிடுகிறேன்.
ஒருநாள் என்ன நடந்தது தெரியுமா?
 பிருந்தாவனமும்  கோகுலமும் அடுத்தடுத்த ஊர் என்பதால்  பிருந்தாவனத்தில் வசித்த  ஒரு   குடு குடு   கிழவி  பழங்களை விற்பவள் இந்த ரெண்டு ஊர்களுக்கும் அடிக்கடி வருவாள். அவள் வீட்டிலும் அந்த ஊர் காட்டிலும் நிறைய பழ மரங்கள்  உண்டு.அவற்றிலிருந்து தூக்க முடிந்த அளவுக்கு ஒரு கூடையில் பழங்களை நிரப்பிக்கொண்டுவந்து  விற்பாள்.  அவள் பாடும்  பாட்டுக்காகவே நிறைய  பழங்கள்  விற்றுப்   போகும்.சில நேரம்  குழந்தைகளின் விளையாட்டில் மெய்மறந்து நிறைய  பழங்களை சும்மாவே கொடுத்துவிடுவது அவளுக்கு  வழக்கம். குழந்தைகள் என்றால்  கொள்ளை  ஆசை  அந்த பழம் பாட்டிக்கு. கோகுலத்தில் கிருஷ்ணன் பலராமன் என்ற குழந்தைகளின் அதிசய விஷயங்களைக்   கேட்ட  அந்த பாட்டி ஒருநாள்  கோகுலம் சென்றாள். நந்தகோபன்  வீடு எது என்று கேட்டு  தெரிந்து கொண்டு வாசலீல் வந்து உட்கார்ந்தாள். அரிஷ்டன்,  பூதகி  சகடாசுரன்,  போன்ற  மாறுவேஷ அரக்கர்கள் கிருஷ்ணனைக்  கொல்ல வந்து கொண்டே இருப்பதால் தேவகியும் ரோஹிணியும்  குழந்தைகளை  வெளியே  அனுப்புவதில்லை. வெளியாட்களையும் உள்ளே  அனுமதிப்பதில்லை. அனாவசியமாக யாருடனும்  பேச்சு கூட  கிடையாது. யாருமே  கதவை  திறக்கவோ வெளியே வந்து பேசவோ இல்லையா தலால் வெகுநேரம் காத்திருந்துவிட்டு  கிழவி  திரும்பிச்  சென்றுவிட்டாள். மறுநாளும்  வந்தாள். அன்றும்  குழந்தைகளை  பார்க்க முடியவில்லை. மற்ற குழந்தைகளுக் கெல்லாம்  பழங்களை வாரி வழங்கினாள். இரண்டுநாள் அவள்  வரவில்லை.   மூன்றுநாள்  கழித்து  ஒருநாள்  கோகுலம் வந்தாள் . அன்று  நிறைய மாதுளை செக்க செவேலென்று பெரியதாக இருந்த வற்றை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள்.
வழக்கம் போல்  நந்தகோபன் வீடு  கதவு தாள் போட்டிருந்தது.  வாயிற் காப்போன் வாசலில்  கூர்  வேலோடு நின்றிருந்தான்.
"என்ன பாட்டி  தினமும்  வரே? என்ன வேண்டும் உனக்கு" என்றான்  வாயிற் காப்போன்
'எனக்கென்னப்பா இனி வேண்டும்.  ரெண்டு  அழகான  குழந்தைங்க இந்த வீட்டிலே  இருக்காமே அதுங்களை  பார்க்க  தான்  வந்தேன்"
"குழந்தைகளை  எல்லாம்  பார்க்க முடியாதும்மா நீ போ.
"இந்த  பழங்களையாவது அவங்களுக்கு  குடுக்கிறாயா?"
"பழமெல்லாம் வேண்டாம்  நீ முதல்லே  இடத்தை காலி பண்ணு"
"கிருஷ்ணன் யாருப்பா,  பெரியவனா,  சின்னவனா"?
" யாரங்கே குழந்தைகளை பத்தியெல்லாம்  பேசறது"  என்று  யசோதை  கிருஷ்ணனைத்  தூக்கிக்  கொண்டு  வாசலுக்கு    வந்துவிட்டாள்.வயதான  பழப்  பாட்டியை  யசோதைக்கு நன்றாக  தெரியுமே வெகுகாலமாக  பிருந்தாவனத்தில் வசிப்ப  வளாயிற்றே அவளிடமிருந்து  நிறைய  பழங்கள்  வாங்கியிருக் கிறாளே.
"அட, பழக்கார பாட்டியா.  எங்கே  ரொம்ப நாளுக்கப்புறம் இந்த பக்கம்  என்று கேட்டாள்   யசோதை.  
"தினமும் தான் இங்கே வந்து காத்திருக்கிறேன். உன் பசங்களை பார்க்க.  உன் பையனா இவன். குறு குறுன்னு  அழகா இருக்கானே. இவனுக்கென்ன  பேரு வச்சிருக்கே"
"கிருஷ்ணன்"
'அட இவன் தான் கிருஷ்ணனா?''  கிழவி குழந்தையிடம் கையை நீட்டி  தாவினாள் .
"கிருஷ்ணா,  கிருஷ்ணா,  உன்னைத்தாண்டா  பாக்க  வந்தேன்"  

இதற்குள்  கிருஷ்ணன்  யசோதையின்  இடுப்பிலிருந்து  நழுவி  கீழே   இறங்கி நின்றான்.  மெதுவாக தன்  கையால்  கிழவியின் பழக் கூடையிலிருந்து ஒரு   சிகப்பான  மாதுளம் பழத்தை  எடுக்க  முயற்சித்தான். "டேய்   திருடா  பழம் சும்மா கொடுப்பேனா.  போடா, போய் ஏதாவது  கொண்டு வந்து கொடு.   பழம் தரேன்”  என்று   சொல்லி சிரித்தாள் பாட்டி.

பாட்டியும் யசோதையும்  ஊர்க் கதை பேசிக்கொண்டிருக்கும்போது  கிருஷ்ணன் உள்ளே  மெதுவாக  சென்றான்.  தன் சிறு கையால் அரிசி பானையிலிருந்து  ஒரு பிடி  அரிசி கொண்டு வந்தான்.  மெதுவாக  தத்தி  தத்தி  அவன் நடந்து வருவதற்குள்  வழியெல்லாம்  அவன்  கொண்டுவந்த சிறு  கை  பிடி அரிசி   அவனுடைய  சின்னக் கையிலிருந்து பாதிக்கு மேல் கீழே சிந்திவிட்டது.  கிழவியிடம் வந்து  கையை  நீட்டும்போது  ஒரு சில அரிசி மணிகளே இருந்தது. அவற்றை கூடையில்  போட்டான்.   

 பொக்கை வாய்  திறந்து  கிழவி  சிரித்து  அவனை  வாரி  மடியில் இருத்திக்  கொண்டாள்.  "உனக்கு  வேண்டிய பழத்தை  நீயே  எடுத்துகோடா"  என்றாள்.  கிருஷ்ணன்  ஒரு  பழத்தை எடுத்து கொண்டான்.  யசோதை  குழந்தையோடு  உள்ளே சென்று விட்டாள். கிழவி   பாடிக்கொண்டே திரும்பி சென்றாள்.  போகும் வழியெல்லாம்  அவள் நினைவு  கிருஷ்ணன் மேலேயே  இருந்ததால்  கூடையின்  கனம்  தெரியவில்லை. வீ டு திரும்பியபோது தான்  ஏன் கூடை கனமாக இருக்கிறது என்று  இறக்கி  வைத்து  பார்த்தாள்.  கிருஷ்ணன்  போட்டிருந்த  அரிசி  மணிகள் முத்து,  பவழம், வைரம், வைடூர்யமாக கூடையில்  நிரம்பி  இருந்தன.

”கிருஷ்ணா” என்று  உள்ளத்தின் உள்ளேயிருந்து  கிழவியின்  குரல் கேட்டதே  தவிர  அவளுக்கு பேச்சு வரவில்லை. எனக்கும் மேலே என்ன எழுதுவதென்று  தோணவில்லை

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:50:24 PM8/27/23
to amrith...@googlegroups.com
THE  RARE  SANYASI   -      J K  SIVAN 

Swami Vivekananda

Vivekananda was the first  Indian  philosopher, who bridged the west and east. The Western world was awe struck by the golden tenets of Hinduism and its supreme wisdom because of the Swamiji who woke them up to this reality thus making it known that Hinduism is a  major World religion. Swamiji never failed to declare that  he owes it all  to his guru Sri  Ramakrishna Paramahansa.  Here  are  some  golden thoughts of  Swamiji.

1.  Love Is The Law Of Life.      All love is expansion, all selfishness is contraction.  He who loves lives, he who is selfish is dying. Therefore, love for love’s sake just as you breathe to live.

2  Outlook alone Matters.  Our mental attitude makes our world.  If our thoughts are beautiful so are the things we perceive. The world therefore is in our mind only.  Learn to see things in the proper light.

3. Life Is Beautiful.  Develop the belief that there everything has a reason and meaning behind it.  There is nothing bad in this world, as all are god-made, and so holy and beautiful. If something is viewed as evil, it is because of your not understanding its meaning and reason.

4. Everything is presented the way you feel..    Feel like Krishna, you will be Him.  Feeling is the life, the strength, the vitality, without which no amount of intellectual activity can reach God.

5. Set Yourself Free.   The moment  you realize God in the temple of your own body, the moment therefore you respect and have reverence before every human being  and see God in him – that moment you are free from bondage, everything that binds vanishes, and  you are free.

6.  Condemn none:  Extend a helping hand, if you can. If you cannot, fold your hands, bless your brothers, and let them go their own way.

7.Help Others.  If money helps  to do good to others, it has some value;  if not, it is a mass of evil, and the sooner it is got rid of, the better.

8. Uphold Your Ideals.  Our duty is to encourage every one in his struggle to live up to his own highest idea and strive at the same time to make the ideal as near as possible to the Truth.

9. Listen To Your Soul.  You have to grow from the inside out. None can teach you, none can make you spiritual. There is no other teacher but your own soul.

10. Be Yourself.  The greatest religion is to be true to your own nature. Have faith in yourselves!

sivan jaykay

unread,
Aug 27, 2023, 7:50:24 PM8/27/23
to amrith...@googlegroups.com
தேனான வேமனா-   நங்கநல்லூர் J K SIVAN

எங்கே  யாருமே  இன்னும் ஒண்ணும்  சொல்லவேயில்லையே?  கம் ஆன்.   தெலுங்கு பட்டினத்தார்  வேமனாவை  உங்களில் எத்தனை பேருக்கு  பிடிக்கிறது.  நன்றாக  ஆணியடித்தால் போல  சொல்கிறாரா? இல்லை வழவழா கொழகொழாவா?
எப்போதும் , அள்ளி வீச ,  நீதி வாக்யங்கள்  கைவசம் தயாராக வைத்துள்ளாரே.  இன்றைக்கு  அவரிடமிருந்து  கிடைத்தவை  தான்  கீழே எனக்குத் தெரிந்த  தமிழில்  எளிமையாக்கி(?)  கொடுத்துள்ளேன்

Medi pandu chooda melimaiyundu...................మేడి పండు చూడ మేలిమైయుండు
Potta vippi chooda purugulundu......................పొట్ట విప్పి చూడ పురుగులుండు
Pirikivani madibinkamilagura..........................పిరికి వాని మదిని బింకమీలాగురా
Viswadhaabhirama vinura Vema..................... విశ్వధాభిరామ, వినుర వేమ

எத்தனையோ  பழங்களை  உனக்கு தெரியும் அல்லவா. அவற்றில் சிலது   பார்க்க அழகாக பள  பளவென்று   உடனே கடித்துத்  திங்கணும் என்று உனக்கு  ஆசையாக இருக்குமே.  ஆனால்   உள்ளே  பிரித்துப் பார்த்தால் கூடைப்  புழு நெளியுமே.  தூக்கித் தான் எறியவேண்டும். பழங்கள் விஷயத்தில் ஜாக்கிரதை தேவை. 

நீ   பார்க்கும்   மனிதர்களும் அப்படித்தான்.  வீரனாக வெளியே  காட்டிக்கொள்வான். உள்ளே அவன்  ரொம்ப ரொம்ப  பயந்தான்கொள்ளி.  கோழை.  தர்மிஷ்டனாக  வெளியே  பேசுவான் காட்டிக் கொள்வான்.  ஆனால்  உண்மையில் உள்ளே அவன் படு கஞ்சன். பக்திமான் வேஷத்தில்   அப்படிதான்  சில  ஆசாமிகள்  காணப்படுவார்கள்.  உண்மையில் தோலுரித்துப் பார்த்தால் அயோக்கியசிகாமணிகள். கிராதகர்கள்.  என்னடா  வேமா புரிந்து கொண்டாயா? 


Inumu virigeneni irumaaru mummaaru...................ఇనుము విరిగెనేని ఇరుమారు ముమ్మారు
kaachi yatakavachu kramamu gaanu......................కాచి యతకవచ్చు క్రమము గాను
manasu virigeneni mari chercharaadaya.................మనసు విరిగెనేని మరి చేర్చరాదయ
Viswadaabhiraama, Vinura Vema.......................... విశ్వధాభిరామ, వినుర వేమ

கனமான  பலமுள்ள   இரும்பை  ரெண்டாக  மூன்றாக உடைத்தாய்.  அதை  மீண்டும் ஓட்டவைத்தாய்.   அட, பழையபடி அது ஒன்றாக  பலமாக  சேர்ந்துகொண்டதே. ஆனால்   ஒரு  மனிதனின்  மென்மையான  மனத்தை  உடைத்தாயே,  உன்னால்  எவ்வளவு முயன்றும்  அதை  மீண்டும்  பழைய  நிலைக்கு கொண்டு வர முடிந்ததா?

Kaligi dharmam iiyan Kaanani vaaru nu Kaligi tinaka caala Kraagu vaaru  Kalimin ecat`a cuud`an Kaanaka ced`uduru Vis`vada abhi raama Vinura Veema!
கலிகி  தர்மம் லியன் காணனி  வாறு  னு  களிக்க  தினக  சாலை  கிராகு  வாறு  கலீமின்    எக்கட்ட  சூடான  காணக   சேடுரு விஸ்வாதாபி ராம  வினுரா  வேமா.

கடவுள் அருளால் நிறைய செல்வம் இருந்தும் அதை  எப்படி தர்மம் செய்ய வேண்டும் என்று  தெரியவும் மில்லை, அறியவும்  இல்லை. செல்வம் எதற்காக  தரப்பட்டுள்ளது?  நாம் அதை  எப்படி  உபயோகிக்க வேண்டும்  என்றும்  எவரும்  இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. இப்படிப்பட்டவனிடம் செல்வம் இருந்து  என்ன  பயன்.? அவனுக்கே அது   பயனில்லை.  அது அவனை  விட்டு  வெகு  சீக்கிரம் நீங்கிவிடும் என்றும்  அவன் அறியமாட்டான்.பாவம் ஏதோ கனவில் இருக்கட்டுமே. என்ன டா சொல்கிறாய்  வேமா, சரிதானே.?

Taamu gad`ana seeyu Dhanamu tamadi ani  Nammi umd`u verri Narulu bhuvi ni Taamu okarik iccu Dhanam imtiyee kaaka
Kad`amadi tana keela Kalugu Veema!

தாமு கடனதமது சீயு தனமு தமதி  அணி நம்மி  உண்டுவெர்ரி  நருலு புவி  நீ  தாமு  ஒக்கரிக்கிச்சு  தானம்  இமடியே காக  
கடமடி   தான  கீழ  கலுகு  வேமா.\

"அடே முட்டாளே ,  நன்றாக புரிந்துகொள். உன்னிடம் நிறைய பணம் இருக்கிறது.   அதை  நீ சம்பாதித்தது என்று மனப்பால் குடிக்காதே.  வந்த வழியே அது செல்வதால் தான் அதற்கு ""செல்""வம் என்று பெயர். கடைசியில் உன்னிடம் மிஞ்சப்போவது நீ செய்த  ( எந்த ஜென்மத்திலாவது கொஞ்சம் செய்திருந்தால்!!)   அந்த தர்மத்தின் பலன் மட்டுமே. புரிகிறதாடா வேமா நான் சொல்வது?

Aakal anna vaanik Annambu pet`t`ina  Harunak arpitamu gan Aaaragimcu
Dhara vihiinunakunu Daanamu at`u vale Vis`vada abhi raama vinura Veema!

"பசி  காதடைக்க  வயிறு ஒட்டி கண் பஞ்சடைந்து நிற்கிறானே  அவனுக்கு  சோறு  போடு.  அவன் சந்தோஷமாக  சாப்பிடுவதைப்பார். உற்றுப்பார்த்தால்  நீ  அந்த  பரம சிவனுக்கே  அன்னமிட்டதை  உணர்வாய். அதன் இணையற்ற  பலனும் உன்னைச்சேரும்.

Taanu tinaka at`ula Dharmamu seeyaka Kod`ukulak ani dhanam Kuud`a pet`t`I
Teliya ceppa leeka Tiiri pooyina venka Sommu parula namdu Cuud`u Veema!

ராவும்  பகலுமாக  பணத்தைத் தேடி  அலைவான்.  பணத்துக்காக  எதையும்  செய்வான்.  நிறைய  பணம் சேர்ந்துவிட்டதே! தானமும் இல்லை  தர்மமும் இல்லை.  எங்கோ  திருடனுக்கும்  ராஜாவுக்கும்  வரிக்கும்  பயந்து  சேமித்து புதைத்து வைத்திருப்பான்.  தனது  பிள்ளை குட்டிக்கு  என்று.   அந்த பிள்ளை குட்டிக்கு  அவன்  தனது செல்வம் எங்கிருக்கிறது என்று சொல்வதற்குள்  திடீர்  என்று  செத்தும் போவான்.  கடைசியில்  யாருக்கோ  ஒருவனுக்கு  அது  புதையலாக  கிடைக்கும்! அப்படித்தானேடா  வேமா?

Daana dharmamulunu Daya yu satyamu niiti Vinaya dhairya s`aurya Vitaran`amulu
Raaju paalit`iki ivi Raaja yogamulu Vis`vada abhi raama Vinura Veema.

ராஜா என்று  பேருக்கோ  அல்லது  ராஜா என்ற  பேரோடோ  பணத்தை சுருட்டிக்கொண்டு ஒருவன்  இருந்தால் எத்தகைய  ராஜா அவன்?.   ஒரு  ராஜா  எப்படியிருக்க வேண்டும்  என்றால்   வினயத்தோடு, தர்ம  சிந்தனையோடு, தயையோடு, தானத்தில் ஈடுபட்டுக்கொண்டு, வீரத்தோடு, தைர்யத்தொடு, விதரணையோடு  இருந்தானானால் அவனுக்கும்  அவனால்  அந்த  ஊருக்கே  பெரும் புகழ் சேரும். இல்லையாடா  வேமா, நீ என்ன சொல்கிறாய்?

kallu kumd`ak enni ghana bhooshan`amu lid`d`a amdulooni kampu cimdul id`ade?
tulava padavi konna toli gun`ameemagu? Vis`wadaabhi raama vinura Veema.

வீச்சம் என்றோ  துர்கந்தம்  என்றோ  நாம்  அடையாளம்  காணும்  ஒரு  மொந்தை  புளித்த  கள்ளை  அழகான தங்கக் குடுவையில்  வைத்து  மூடி  அதன் மீது  விலையுயர்ந்த  ஆபரணங்களை போர்த்தி வைத்தாலும்,  அதிலிருந்து  ஒரு துளி   கள் எங்காவது வெளியே சிந்தினால்  அதன்  குணத்தைக்காட்டிவிடாதா?   முழு முட்டாள், கொடியவன் மிக உயர்ந்த  பெரிய  பதவியில் இருந்தால்  அவன் குணம் என்ன  என்பது  அவன்  ஒரு செய்கையிலே, அவன் பேச்சிலேயே   புரிந்துவிடுமே! நம் தான் தினமும் யூட்யூபில்  பார்க்கிறோமே.     சரியாத  வேமா ?

Kooti pat`t`i tecci krotta put`t`amu kat`t`i  komd`a mruccul ella kolicin at`lu
niiti hiinun odda nirbhaagyul umduru Vis`wadaabhi raama vinura Veema.
 
சிங்கவால்  கருப்பு  வாய்  குரங்கு கூட்டம்  ஒரு  ராஜா  இல்லையே  என்று  வேறு சாதாரண குரங்கை பிடித்து சாயம் பூசி  துணி சுத்தி  ராஜாவாக பண்ணினால்  ராஜாவின் யோக்யதாம்சம் வந்துவிடுமா.  பெரிய  பொறுப்பில் அமர்ந்துகொண்ட  தகுதியற்றவன் என்ன  சாதிக்க முடியும்? நாம் தான் கண் கூடாக  பார்க்கிறோமே  உலகில் நடப்பதை எல்லாம். நீ என்னடா சொல்கிறாய்  வேமா?

emta seeva ceesi yee paat`u pad`inanu  raaca mooka nammaraadur anna
paamu tood`i pomdu padi veelak ainanu Vis`wadaabhi raama vinura Veema.

இந்தா பத்தாயிரம் பொற்காசு.  இதோ இருக்கிறதே  இந்த  கரு நாகம்.  அதோ  டு நட்பு கொண்டு  வாழ் என்றால்  யார்  ஒப்புக்கொள்வான். சர்வாதிகாரியான  ஒரு  ராஜாவுடன்  சிநேகமும்  அவ்வாறே. நம்பமுடியாது எப்போது  கழுத்துக்கு  கத்தி  என்று.

Gaali leeni diipa Kal`ika camdambunan Alalu sul`l`u leeni Jaladhi riiti
Nischala aatma unna Nirvikaarambuna Mukti amd`ru daani Mogini Veema!

காற்றின் அசைவு இன்றி தான்  தீபம்  ஒளிரும்.  அலையின்  கொந்தளிப்பு  இன்றிதான்  கடலின்  அமைதி  காணப்படும்.   எண்ணங்களின்  பிரதிபலிப்பு  இன்றி  தான்  மனம்  ஒருமைப்பட்டு  இறைவனை அறியும்  முக்தி  கிடைக்கும். புரிகிறதா வேமா?

அரய  நாஸ்தியனக யட்டு   மாடாடக தட்டுவடக மதிநி தன்னுகோக
தனதி   காதனுகொநி  தா பெட்டுநனதேபெட்டு   விஸ்வதாபி  ராம வினுர வேமா ''

பார்க்கும்போதே  தெரிகிறதே  யாரோ  ஒரு  வயதான  அதிதி  பசியுடன் நம்பிக்கையுடன்  நம்மை  நோக்கி வருகிறார்  என்று.  அவர்  வருவதற்குள்ளேயே  போய்   அவர்  வாசலுக்குள் நுழையுமுன்னேயே '' ஒண்ணுமில்லை  போ  போ '' என்று  விரட்டாமல்  ஏதோ  தம்மாலான  ஒரு சிறு பொருளாவது யாசிப்பவனுக்கு  அளிப்பது தான்  உண்மையான  தானம்.  காசு  உணவு  எதுவுமே  கொடுக்காமல்  வந்தவர்  மனதை நோகடிப்பதால்  என்ன பயன்? இத்தகைய பணக்காரன்  விரைவில்  ஒட்டாண்டியாவான்  என்கிறார் வேமனா.

sivan jaykay

unread,
Aug 28, 2023, 8:32:29 PM8/28/23
to amrith...@googlegroups.com

ஸ்ரீ மத் பாகவதம் - நங்கநல்லூர் J K SIVAN
''கலி காலம்,கலியுகம், எப்படி இருக்கும்?- சுக ரிஷி கணிப்பு''

ஏழு நாட்களில் சாகப்போகும் பரீக்ஷித் மகாராஜாவுக்கு  சுக ப்ரம்ம ரிஷி கலிகாலம் எப்படி இருக்கும், அதில் மனிதர்களின் நடத்தை எவ்வாறு இருக்கும் என்று தனது  ஞான திருஷ்டியால் கணித்து சொல்கிறார். ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது அவர் கணிப்பு. அப்பட்டமான  உண்மை என்று நாம் இப்போது நாம் தெரிந்து கொள்கிறோம்.

दूरे वार्ययनं तीर्थं लावण्यं केशधारणम् । उदरंभरता स्वार्थ: सत्यत्वे धार्ष्ट्यमेव हि ।  दाक्ष्यं कुटुम्बभरणं यशोऽर्थे धर्मसेवनम् ॥ ६ ॥ 12.2.6

dūre vāry-ayanaṁ tīrthaṁ  lāvaṇyaṁ keśa-dhāraṇam  udaraṁ-bharatā svārthaḥ satyatve dhārṣṭyam eva hi dākṣyaṁ kuṭumba-bharaṇaṁ
yaśo ’rthe dharma-sevanam

எங்கேயாவது ஒரு குட்டையில் தண்ணீர் தேங்கி நின்றாலே போதும். அது ஒரு புண்ய க்ஷேத்ரம்  என்பார்கள்.  தலையை கன்னா பின்னா என்று மனம் போனபடி சிரைத்துக் கொள்வது தான் அழகு, நாகரீகம் என்று கருதப்படும்.  வயிற்றை நிரப்புவது ஒன்று தான் வாழ்வின் லக்ஷ்யமாகும்.  அடாவடித்தனம் தான் தலைவனாவதற்கு தகுதி. அதை யே  அவசியம் நியாயம் என நம்புவார்கள்.  குடும்பம் நடத்துவதே ரொம்ப கெட்டிக்காரத்தனம்  ஆகிவிடும்.  ஊருக்காகவும்  பேருக்காகவும் தான்  ஆன்மிகம், தெய்வீகம் என்று ஆகிவிடும்..  இது தான் கலிகால பண்பு, என்று இன்று நடப்பதை, அன்றே,  சுகர்  சொல்லியிருக்கிறார்.

एवं प्रजाभिर्दुष्टाभिराकीर्णे क्षितिमण्डले । ब्रह्मविट्‍क्षत्रशूद्राणां यो बली भविता नृप: ॥ ७ ॥12. 2.7
evaṁ prajābhir duṣṭābhir ākīrṇe kṣiti-maṇḍale brahma-viṭ-kṣatra-śūdrāṇāṁ yo balī bhavitā nṛpaḥ

லஞ்சம், ஊழல், கொள்ளை, களவு, இதெல்லாம் மலிந்த  சமூகம்,   ஜனங்கள்,  தான் எங்கும் இருப்பார்கள். இதில் அதிக திறமை படைத்தவன்  தான்  மற்றவர்களை அரசியலில் வெற்றிபெற்றவனாக மற்றவர்களை  ஆள்வான்.  அடக்கடவுளே,  சுகர்  நிச்சயம்  இப்போது எங்கோ மறைந்து வாழ்கிறார். இல்லாவிட்டால்  இப்போதைய நிலைமை எப்படி 5000 வருஷங்களுக்கு முன்பே தெரியும்? எனக்கென்னவோ  நம்மைப்போல்  வாட்ஸாப்ப்  யூட்யூப்  ''சற்று முன் கிடைத்த செய்தி'' கேட்கிறார்,   படிக்கிறார் என்று தோன்றுகிறது. 

प्रजा हि लुब्धै राजन्यैर्निर्घृणैर्दस्युधर्मभि: । आच्छिन्नदारद्रविणा यास्यन्ति गिरिकाननम् ॥ ८ ॥12.2.8
prajā hi lubdhai rājanyair nirghṛṇair dasyu-dharmabhiḥ ācchinna-dāra-draviṇā yāsyanti giri-kānanam

நல்லவர்கள்  இந்த மாதிரி  ராஜ்யத்தில் வாழமாட்டார்கள்.  மனைவி மக்களை சொத்தை எல்லாம் இழக்க நேரிடும். கொடுமையான  பேராசை பிடித்த,  மனசாட்சியற்ற  கொடியவர்களிடமிருந்து தப்பி வேறெங்கோ  ஓடிவிடுவார்கள்.  அடேயப்பா  அமெரிக்கா ஐரோப்பா என்று நம்மவர்கள்  ஓடுவது பற்றி  சுகர்  தெரிந்து வைத்திருக்கிறாரே .

शाकमूलामिषक्षौद्रफलपुष्पाष्टिभोजना: । अनावृष्टय‍ा विनङ्‌क्ष्यन्ति दुर्भिक्षकरपीडिता: ॥ 12.2.9
śāka-mūlāmiṣa-kṣaudra- phala-puṣpāṣṭi-bhojanāḥ anāvṛṣṭyā vinaṅkṣyanti durbhikṣa-kara-pīḍitāḥ

மக்கள்  பஞ்சத்தாலும்,  அதிக  வரி சுமையாலும் துடிப்பார்கள். கிழங்கு, இலை  காய் பூ, பட்டை, விதை என்று எதையாவது சாப்பிட்டு உயிர்வாழ்வார்கள்.

शीतवातातपप्रावृड्‌‌हिमैरन्योन्यत: प्रजा: ।क्षुत्तृड्भ्यां व्याधिभिश्चैव सन्तप्स्यन्ते च चिन्तया ॥ १० ॥ 12.2.10
śīta-vātātapa-prāvṛḍ- himair anyonyataḥ prajāḥ kṣut-tṛḍbhyāṁ vyādhibhiś caiva santapsyante ca cintayā

எங்கும்  வியாதி பரவி அவதிப்படுவார்கள்,  அநேகமாக   எல்லோருமே குளிர், பனி, வாயு, உஷ்ணம், மழை, ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள்.  சண்டைகள், பசி, தாகம், வியாதி, மனதில் சங்கடம், பயம் என்று பலவித துன்பங்களில் தவிப்பார்கள்.

त्रिंशद्विंशतिवर्षाणि परमायु: कलौ नृणाम् ॥ ११ ॥ 12.2.11
triṁśad viṁśati varṣāṇi paramāyuḥ kalau nṛṇām

நாம் ஒருவரை ஒருவர்  ''நூறாண்டு வாழ்க'' என்று வாழ்த்துகிறோம். ரொம்ப சரி.இப்போதைக்கு இது முடியலாம். இன்னும் காலம் செல்லச் செல்ல, கலியுகத்தில் அதிக பக்ஷம் ஒவ்வொருவருக்கும் வயது ஐம்பது தானாம் . ரொம்ப  போனால் நாம்  ஐம்பது வயது வாழ்வதே  பேப்பரில் நம் படம் வரும் அளவுக்கு ஒரு அதிசயமாகிவிடும்.  சுகர் சொன்னால் அது பொய்யாகாது.  நாளுக்கு நாள் மோசமாக தான் கலிகாலம் செல்லும். அப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. நாமே அனுபவிக்கிறோம். 


क्षीयमाणेषु देहेषु देहिनां कलिदोषत: । वर्णाश्रमवतां धर्मे नष्टे वेदपथे नृणाम् ॥ १२ ॥
पाषण्डप्रचुरे धर्मे दस्युप्रायेषु राजसु । चौर्यानृतवृथाहिंसानानावृत्तिषु वै नृषु ॥ १३ ॥
शूद्रप्रायेषु वर्णेषुच्छागप्रायासु धेनुषु । गृहप्रायेष्वाश्रमेषु यौनप्रायेषु बन्धुषु ॥ १४ ॥
अणुप्रायास्वोषधीषु शमीप्रायेषु स्थास्नुषु । विद्युत्प्रायेषु मेघेषु शून्यप्रायेषु सद्मसु ॥ १५ ॥
इत्थं कलौ गतप्राये जनेषु खरधर्मिषु । धर्मत्राणाय सत्त्वेन भगवानवतरिष्यति ॥ १६ ॥  12.2.12-2.16.
चराचरगुरोर्विष्णोरीश्वरस्याखिलात्मन: । धर्मत्राणाय साधूनां जन्म कर्मापनुत्तये ॥ 12.2.17 ॥

kṣīyamāṇeṣu deheṣu dehināṁ kali-doṣataḥ  varṇāśramavatāṁ dharme naṣṭe veda-pathe nṛṇām pāṣaṇḍa-pracure dharme  dasyu-prāyeṣu rājasu
cauryānṛta-vṛthā-hiṁsā-nānā-vṛttiṣu vai nṛṣu  śūdra-prāyeṣu varṇeṣu  cchāga-prāyāsu dhenuṣu  gṛha-prāyeṣv āśrameṣu yauna-prāyeṣu bandhuṣu aṇu-prāyāsv oṣadhīṣu śamī-prāyeṣu sthāsnuṣu vidyut-prāyeṣu megheṣu  śūnya-prāyeṣu sadmasu itthaṁ kalau gata-prāye
janeṣu khara-dharmiṣu dharma-trāṇāya sattvena  avatariṣyati
carācara-guror viṣṇor īśvarasyākhilātmanaḥ dharma-trāṇāya sādhūnāṁ janma karmāpanuttaye

''பரீக்ஷித், சொல்கிறேன் கேள்.  தக்க நேரம் வந்தால்,கலி  முற்றினால்,  துஷ்டர்களை அழிக்க, சிஷ்டர்களை பராமரிக்க  தாவர ஜங்கம ஜீவன்கள் அனைத்தையும் பாதுகாக்கும்  பரந்தாமன், கலிகாலத்தில் அவதரிப்பார்.. ஒவ்வொரு யுகத்திலும் நிகழ்வது இது''

शम्भलग्राममुख्यस्य ब्राह्मणस्य महात्मन: । भवने विष्णुयशस: कल्कि: प्रादुर्भविष्यति ॥ १८ ॥  12.2.18
śambhala-grāma-mukhyasya brāhmaṇasya mahātmanaḥ bhavane viṣṇuyaśasaḥ kalkiḥ prādurbhaviṣyati

ஸம்பள  எனும் கிராமத்தில் (இது எங்கே இருக்கிறதோ, நமக்கு தெரியவில்லை ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு சுகர் துல்லியமாக கணிக்கிறார்.)  ஒரு முக்கிய  வைஷ்ணவ ப்ராமண குடும்பத்தில் கல்கி என்ற நாமதேயத்தோடு  நாம் எதிர்பார்க்கும் மஹா விஷ்ணு    இதோ வருகிறார் கலியுகத்தில் கல்கி பகவானாக.   இது தசாவதாரத்தில் 10வது அவதாரம்.  லோக சம்ரக்ஷணத்துக்காக  மஹா விஷ்ணுவின்  இந்த அவதாரம்  விநோதமானானது.   அவர் பிறக்கப்போவது  எங்கே என்று கூட  ஏற்கனவே  ஸ்ரீமத் பாகவத்தத்தில்  சொல்லப்பட்டிருக்கிறதே.  ஒரு  பிராமணர் . அவர் பெயர்  விஷ்ணுயாஸர் , அவர் வசிக்குமிடம்  சம்பாலா கிராமம்.   அது எங்கே  என்று என்னை கேட்காதீர்கள்.  தெரிந்தால் சொல்லி இருப்பேனே. 

19-20:  अश्वमाशुगमारुह्य देवदत्तं जगत्पति: ।  असिनासाधुदमनमष्टैश्वर्यगुणान्वित: ॥ 12.2.19 ॥
विचरन्नाशुना क्षौण्यां हयेनाप्रतिमद्युति: ।  नृपलिङ्गच्छदो दस्यून्कोटिशो निहनिष्यति ॥ 12.2.20 ॥

aśvam āśu-gam āruhya devadattaṁ jagat-patiḥ asināsādhu-damanam aṣṭaiśvarya-guṇānvitaḥ
vicarann āśunā kṣauṇyāṁ hayenāpratima-dyutiḥ  nṛpa-liṅga-cchado dasyūn koṭiśo nihaniṣyathi 

கலியுகம்  முடியும் சமயம்,  எல்லா ஜீவராசிகளின் உடம்பும்  ரொம்பவே குறுகி, சிறுத்து காணப்படும்.  பாரம்பரிய தெய்வ, மதநம்பிக்கை, கோட்பாடுகள், எல்லாம் சிதறிவிடும்.  வேதங்கள்  புறக்கணிக்கப்படும். வேதம் காட்டும்  வழி  காற்றில் பறக்கும்.  நாஸ்திகம் தலை தூக்கி  எங்கும் நாஸ்திகர்கள் தான் காணப்படுவார்கள்.  ராஜாக்கள்,  அரசாங்க தலைவர்கள் எல்லாம் திருடர்களாக மாறலாம். எங்கும் அராஜகம்  தலை தூக்கும்.  பணமில்லாதவன் தான் தாழ் குலத்தான்.  பசுக்கள் ஆடு அளவுக்கு சுருங்கிவிடும். வேத  ஆசிரமங்கள் வெறும் வீடுகளாகும். குடும்பம் சுருங்கி ரெண்டு பேர் தான்  அதிகம் என்று ஆகிவிடும்.  தாவரங்களும் அளவில் சிறிதாகிவிடும்.  மேகங்கள்  வெறுமே  பளிச்பளிச் எனும்  மின்னலாக மாறும். பக்தி  காணாமல் போகும்.  மக்கள் கழுதைகளாவார்கள் என்று  சொல்கிறார்  சுக ப்ரம்ம ரிஷி.  இப்படி நிலை ரொம்ப மோசமாக புகும் சமயம் தான் மீண்டும் விஷ்ணு அவதரிப்பார்.   கல்கி  பகவான் தேவதத்தம்  எனும் வேகமாக  ஓடும் குதிரை மேல் ஏறிக்கொண்டு வருவார்.  கையி கூரிய  வாள் . ராஜாவென்று  வேஷத்தை போட்டுக்கொண்டு மக்களை கொள்ளையடிப்பவர்கள் அத்தனைபேரையும் காலி பண்ணி விடுவார்.ராஜா  தான் இல்லையே  என்று கவலைப்படவேண்டாம்.  அதிகாரத்தில் இருப்பவர்கள்  என்று எடுத்துகொள்வோம்.  கலியுகத்தின்  முடிவில் தான் வருவாரோ?    கலியுகத்தில் முதல் பாதத்தில் தான் இப்போது இவ்வளவு அக்கிரமங்களை சகித்துக்கொண்டு வாழ்கிறோம். இன்னும் மூன்று பாகங்கள் இருக்கிறது. அதுபற்றி நமக்கு கவலை வேண்டாம். நிச்சயம் அத்தனை லக்ஷம் வருஷங்கள் நாம் இருக்கப்போவதில்லையே. 
   


sivan jaykay

unread,
Aug 30, 2023, 8:03:00 PM8/30/23
to amrith...@googlegroups.com


கவான்  ரமண  மஹரிஷி   -   நங்கநல்லூர்  J.K. SIVAN 

''ஜாடி கேட்டியே, இந்தா''

சாந்தம்மா   பகவான் ரமண  மஹரிஷியை  ஒரு  குருவாகவோ மஹா ஞானி யாகவோ பார்க்கவே இல்லை. அவளுக்கு  அவர் அப்பா. அவ்வளவுதான். ஒருநாள் அவரிடம் சென்று ''அப்பா  எனக்கு ஏதோ கனவிலே பகவான் உருவம் வந்துதுப்பா .அதுக்கு என்ன அர்த்தம்?''  என்று கேட்டாள் .

மனதின் எண்ணங்களின் பிரதிபலிப்பு தான் நாம்  விழித்துக்  கொண்டிருக்கும் போது பார்ப்பதும், புரிந்து கொள்வதும், கனவில் காணும் காட்சிகளும். ரெண்டும் ஒன்றே தான். மனது விடாமல் நம்மை ஏதாவது வேலை வாங்கிக்கொண்டு தான் இருக்கும். அதன் குணம் அது. நீ எப்படி இருக்கிறாய் என்று   கண்ணாடி முன்னால்  நின்று கொண்டு பார்த்து தெரிந்து கொள்கிறாய். அதில் கண்டது  நீ என்று நம்புகிறாய்.  புலன்களாலும்  மனதாலும் அறியப்படுவது உண்மையே இல்லை.  மனதின் வெளிப்பாடு அது.  அதை நம்பினால் நீ முன்னேற முடியாது.  யாருக்கு இந்த காட்சியெல்லாம், உருவமெல்லாம் தெரிகிறது என்று ஆராய்ந்து பார். கொஞ்சம் கொஞ்சமாக திரை விலகும். யார் இதற்கெல்லாம் சாக்ஷி? iஎன்று புரியும். எண்ணங்களே இல்லாத நிலை தான்  உண்மையான ஆனந்த நிலை. 

சாந்தம்மா  மஹரிஷியுடன்  பேசிக்கொண்டிருக்கும் நேரம் யாரோ ஒரு பக்தர் வந்தார். மகரிஷியை வணங்கினார்.

 ''சுவாமி, நான்  தொலைதூரம்  உள்ள  ஊருக்குப் போகவேண்டும்.  என்னை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.. நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் மறுபடியும் இந்த ஆஸ்ரமத்துக்கு வருவேனா   என்பது சந்தேகம்''  என்று முடித்தார். 

பகவான் புன்சிரிப்போடு பதிலளித்தார். 

''என்னை மனதில் ஞாபகம் வைத்துக் கொள்  என்கிறாயே, எனக்கு மனமே  இல்லையே. மனமில்லாமல் எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது?  நீ எங்கோ போகிறாய் . உன்  வேண்டுகோளை  அருணாசலேஸ்வரனிடம் செலுத்தி  விடுகிறேன்.  அவன் தானே  எல்லோரையும் பார்த்துக் கொள்பவன்.  ஞாபகம் வைத்துக்கொள்பவன், அது அவன் வேலை''. 

ஞானி ஒருவனை பக்தர்கள் சூழ்ந்து கொள்வது  ஏதாவது ஒரு லாபம் கிடைக்குமா என்று தான்.  பாரபக்ஷமாக நடந்து கொண்டால் ஞானி எப்படி குருவாக  முடியும்?   பக்தர்களின்  புகழில், சிஷ்ருஷையில் மயங்கும் முட்டாள் அல்ல  ஞானி. அவனுக்கு தொலை தூரமோ,  அருகிலோ,  ரெண்டும் ஒன்று தான்.   எவன் தன்னைப்  பூரணமாக  அர்ப்பணித்து  ஆத்மாவில் லயிக்கிறானோ அவனிடம் ஆனந்தத்தை  காண்கிறார் குரு.  அஹம்பாவம் , கர்வம்,  தான்,  என்ற எண்ணமில்லாத  போ பொது தான் தன்னை அர்ப்பணிக்க முடியும். அப்படிப்பட்டவன் எங்கிருந்தாலும்  அவனுக்கு குரு  கடாக்ஷம் உண்டு.  பகவானே அவனுக்கு துணையாக இருக்கும்போது வேறு யார் வேண்டும்? குளத்தில் பார்  ஒரு தவளை வெகுகாலமாக  தாமரை கோடி அருகிலேயே வாழ்கிறது. மலரின் அடியில் இருக்கிறது. வண்டு  தவளையை லக்ஷியம் செய்யாமல் தாமரைப் புஷ்பத்தை தான் நாடி தேன்  பெறுகிறது.  தவளையிடம் என்ன பெற முடியும்?

சாந்தமாமாவுக்கு  சமையல் கட்டில் தான் வேலை.  அத்தனை பேருக்கும் சமைக்கும்  அன்னபூரணி அவள். அவள் சமைக்கும்போது சில சமயம் மஹரிஷி  அங்கே வருவார்.  அவள் சமைத்ததை ருசி பார்ப்பார்.  எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சொல்லுங்கள் என்று கேட்பாள். சொல்வார்.    ஒருசமயம் '' சாந்தா ,உனக்கு தெரியுமா, பெரிய  மகாராஜாக்கள்  அரண்மனையில் ராஜாவுக்கு சமையல் பண்ணும்போது  அதை சரியாக இருக்கிறதா என்று ருசி பார்த்து சொல்வதற்காக  சில  அனுபவசாலிகளை வேலைக்கு வைத்திருப்பார்கள். அவர்களுக்கு  நிறைய சம்பளம் அந்தஸ்து, வசதிகள் தருவார்கள்.  நான் உனக்கு ருசி பார்த்து சொல்கிறேனே, எனக்கு என்ன சம்பளம்? 

''அப்பா,  நானே  ஒரு பிச்சைக்காரி, நான் உங்களுக்கு என்ன சம்பளம் தர முடியும். என் உயிரையே தருகிறேன். அது தான் என்னிடம் இருப்பது என்றாள்  சாந்தம்மா''   மகரிஷி அவள் தலையை  அன்போடு  தடவி ஆசிர்வதித்து  விட்டு  போய்விட்டார். 

அப்போது  ஆஸ்ரமத்தில்  மளிகை  சாமான்கள்  எல்லாம் வைக்க   பெரிய ஜாடிகள் டப்பாக்கள்  கிடையாது. சிறிய  தகர குவளைகள், சட்டிகள் இதில் தான் வைத்திருப்பாள் சாந்தம்மா.  சிலது  ஒழுகும்.  தரை யில் வழிந்து ஓடும். அதனால்  தரை வழுக்கும்.  எப்போ  மகரிஷி வருவார் என்று தெரியாதே. வழுக்கி விழுந்து விட்டால் என்ன செய்வது?  அதற்காக சாந்தாம்மா அடிக்கடி  துணியால் அடிக்கடி துடைத்து, பெருக்கி  சமையல் அறை  தரையை  ஜாக்கிரதையாக வைத்திருப்பாள்.  ஒருநாள் அப்படி  எங்கும் பெருக்கி துடைப்பதை பார்த்த மகரிஷி.  ''சாந்தா, நீ சமையல் அறையை ரொம்ப நீட்டாக வைத்திருக் கிறாய்.  சந்தோஷம். 

''என்ன ப்ரயோஜனம் அப்பா,  நிறைய பேர் வந்து   போய்க்கொண்டு இருக்கிறார்கள், சிலர்  தரையில் எதையாவது சிந்தி, கொட்டி,   மாவைக் கொட்டி,  எண்ணெய்  பிசுக்கு சேர்கிறது.  மறுபடியும்  அசுத்தமானவுடன் பெருக்கணும். துடைக்கணும். 
 பெரிய  ஜாடிகள்  டப்பாக்கள் வேணும்.'' 

பத்து நாள் கழித்து  மகரிஷி சாந்தம்மாவை அழைத்தார்.  ஹாலில் சிலர்  மரப்பெட்டிகளை திறந்து கொண்டிருந்தார்கள். யாழில் அழகான  பெரிய  ஊறுகாய்,  எண்ணெய்  நெய் , ஜாடிகள் புதுசாக இருந்தன.   நீ ஜாடி கேட்டியே, இதெல்லாம் எடுத்துண்டு போ.   யார் இதை அனுப்பியது?  மகரிஷி எவரிடமும் இதை சொல்லவில்லை,   எங்கோ ஒரு ரயில் ஸ்டேஷன் மாஸ்டர்   ஆஸ்ரம விலாசத்துக்கு  இந்த  ஜாடிகள்  இருந்த பெட்டிகளை யாரோ அனுப்பியிருப்பதால்  வந்து சேர்ந்தது என்று சொன்னார்.  எந்த பக்தன் மனதில் என்ன எண்ணம் எப்படி எழுந்ததோ?  பகவானுக்கு தான் வெளிச்சம். 

sivan jaykay

unread,
Aug 30, 2023, 8:03:15 PM8/30/23
to amrith...@googlegroups.com
ஒரு குள்ளமூர்த்தி விஷயம்   -   நங்கநல்லூர்  J K  SIVAN  

ஹிந்துக்கள்  கொடுத்து வைத்த பிறவிகள்.  அதுவும்  பாரத தேசத்தில்  ஒவ்வொரு   நாளும் ஒரு பண்டிகை, எங்கும் கோலாகலம், மகிழ்ச்சி, ஆனந்தம். எவ்வளவு தான் தக்காளி விலை ஏறினாலும், அன்றாடம் ஏதாவது ஒரு புது வரிச்சுமை முதுகை மேலும் வளைத்தாலும்  நாம்  பாக்கியசாலிகள், சந்திரனில் கூட காலை வைக்கக்கூடியவர்கள்.  கால் வைப்பது என்று எழுதும்போது மூன்று அடி  வைத்த பரமன் நினைவுக்கு வருகிறான். இன்று ஒரு அற்புத நாள், ஓணம் அல்லது ஆவணி மாசம்  திருவோண நக்ஷத்ரம்.  முக்கியமாக கேரள மாநிலத்தில், மலையாளிகள் இருக்கும் இடங்களில் சிறப்பாக  கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா . விஷ்ணு வாமனனாக  பிறந்த விஷயம் எல்லோருக்கும் தெரியும்.  அப்போது ஒரு  மஹா சக்தி வாய்ந்த ராக்ஷஸ அரசன் மஹாபலி சக்கரவர்த்தி  பூமியை ஆண்டு மூன்று உலகங்களையும் தனது  ஆளுகைக்கு உட்படுத்தியவன். அவனது அதீத சக்தியில் பயந்த தேவர்களும் விண்ணோர்களும்    நாராயணனிடம் முறையிட்ட   ஒரு சிறு வாமனனாக - குள்ள  பிராமண  பிரம்மச்சாரியாக  வடிவெடுத்து மஹாபலியி  நடத்திய யாகம் முடிந்து எல்லோருக்கும்  தானம் கொடுக்கும் சமயம் தானும் யாசகம் பெற செல்கிறான். இந்த  வேடிக்கை உருவ  குள்ளபிராமணனை  மஹாபலி கேட்கிறான்:

''யாரப்பா நீ விசித்திரமாக இருக்கிறாய்?''
''ஆமாம் அரசே நான் விசித்ரமானவன் என்று எனக்கே அடிக்கடி தோன்றுவதுண்டு' என்று சிரித்தான் வாமனன்.
''இங்கே எதற்கு வந்தாய், மற்ற பிராமணர்கள் போல் நீயும் ஏதாவது யாசகம் கேட்க உத்தேசமா?''
''நீங்கள் தான் என்னை விசித்ரமானவன் என்கிறீர்களே, நான் விசித்திரமாக அல்லவோ உங்களிடம் யாசகம் கேட்க வேண்டும். கேட்கட்டுமா?''
''ஆஹா ,  நான் இல்லையென்று  சொல்லி,  இன்று யாருமே எதுவுமே பெறாமல் இங்கிருந்து போக முடியாது வாமனா. தாராளமாக நீ விரும்பியதை கேளப்பா''.
''நான் கேட்பதெல்லாம் வேறொன்றுமில்லை. என் சிறிய காலடி நீள அகலத்துக்கு உண்டான மண் மட்டுமே. மூன்றே மூன்று  காலடி  மண் மட்டும் தந்தால் அது ஒன்றே போதும். ''
'' பைத்தியமாக இருக்கிறாயே,  வெறும் மூன்றடி மண் கேட்கிறாயே,  வேறு நல்லதாக  பிரயோஜனமாக ஏதாவது கேள்  தாராளமாக தருகிறேன்.''
''இல்லை மஹாராஜா, உங்கள்  தாராள  மனதைப்  போற்றுகிறேன் எனக்கு  மூன்றடி மண் தந்தாலே போதும்.''
எங்கே  ஜல பாத்திரம்?. கொண்டுவாருங்கள், இவருக்கு மூன்றடி மண் தாரை வார்த்து கொடுக்கிறேன்.

அசுர குரு சுக்ராச்சாரியார் அந்த நேரத்தில் தடுக்கிறார்.
''மஹாபலி,   அவசரமாக வாக்கு கொடுக்காதே.  வந்திருப்பவன் வாமனன் அல்ல, மஹா விஷ்ணு, வேண்டாம் இந்த விஷ பரிக்ஷை .  தானம் தராதே.   அவன் உன்னை அழித்திடுவான்''
''குருநாதா, இந்த மஹாபலி ஒரு தரம் வாக்களித்தால் மீறமாட்டான்''

ஜலபாத்ரத்தில் இருந்து நீர் தாரை வார்க்கமுடியாமல் சுக்ராச்சாரியார் ஒரு சிறு வண்டாக மாறி தடை செய்ததை   வாமன விஷ்ணு அறிந்து ஒரு தர்ப்பை நுனியால் அந்த பாத்திரத்தில் ஜலம் சொட்டும் இடத்தில் செருக அது வண்டாக இருந்து உள்ளே அடைத்து கொண்டிருந்த சுக்ராச்சாரியாரின் ஒரு கண்ணுக்குள் பட்டு அவர் ஒரு கண் பார்வை இழந்தார் என்று ஒரு கதை உண்டு.
மூன்றடி மண் வரம் பெற்ற வாமனன் அடுத்த கணமே திருவிக்ரமனாய் உருவெடுத்து முதலடியால் மண்ணுலகம் ,ரெண்டாம்  அடியால் விண்ணுலகம்  என மூவுலகும் அளந்து மூன்றாம் அடிக்கு இடமெங்கே என, மகாபலியின் சிரமே  அதுவாக, மகாபலியை  கீழே அழுத்தியதால் மஹாபலி பாதாளத்தில் மறைந்தான்.

கிருஷ்ணன்  காக்கும் கடவுள்.  மனிதர்கள், தேவர்களை ,மட்டுமா காப்பாற்றினான்?. விஷ்ணுவாக கருடன் மேல் பறந்து வந்து கஜேந்திரனை முதலையிடமிருந்து காப்பாற்றியது நினைவிருக்க வேண்டாமா? ''ஆதிமூலமே''என்ற ஒரு குரல் போதுமே அவனுக்கு ஓடி வந்து உதவ.  வேதங்களும் புராணங்களும் கடலளவு சொல்கிறதே அவன் மஹிமையை.

திடீர்னு  ஒரு ஸ்லோகம் நினைவுக்கு வந்தது.  வாரா வாரம்  சனிக்கிழமை எண்ணெய்  தேய்த்து குளிப்பாட்டும்போது  அம்மா எங்கள்  தொடைகளில்  ஏழு ஏழு   ,மிளகாய்ப்பழம் போட்டு காய்ச்சிய எண்ணெய்  சொட்டு  புள்ளிகள் வைத்து சொல்லும் ஸ்லோகம் காதில் ஒலிக்கிறது.
''அஸ்வத்தாமா,  பலி ,  வ்யாஸா,  ஹநுமாஞ்சா,  விபீஷணா,   க்ருபா,  பரசுராமா,  ஸப்ததே சிரஞ்சீவின: ''
இந்த  ஏழு பேரைப் போல  என்றும்  மரணமில்லாமல்   நானும் சிரஞ்சீவியாக இருக்கவேண்டுமாம்.  நான் மட்டுமல்ல  என் சகோதரர்கள் இருவரையும் அப்படி  இருக்க வேண்டி தான்  எண்ணெய்  தேய்த்து குளிப்பாட்டுவாள்.  அம்மா  வாக்கு  கொஞ்சம் பலித்து  நான்  84+ல் இருக்கிறேன். என் மூத்த அண்ணா  90+ .   நிச்சயம் நாங்கள் சிரஞ்சீவிகள் இல்லை.  சஞ்சீவி மூலீகை அம்மா கை  சாப்பாடுதான். மஹாபலி ஒரு சிரஞ்சீவி. மரணமற்றவன்.
ஸமஸ்கிருதத்தில் चिर.  chira ,  சிர என்றால்  ரொம்ப நாள், பல்லாண்டு,  எனப் பொருள்..ஆகவே சிரஞ்சீவி என்பது நிலையாக நீண்ட காலம் வாழ்வது.   சாகாவரம் பெறுவது.  அப்படி  எல்லோரும் சாகாவரம் பெற்றதில்லை.  

ஓணம் திருவிழா அறுவடைத் திருவிழாவாகவும் கேரளாவில் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படும் திருவிழா ஓணம் பண்டிகை.

வருஷா வருஷம் இந்த தினத்தில் மஹாபலி சக்கரவர்த்தி கேரள விஜயம் செய்கிறார். எத்தனையோ யுகம் ஆனாலும் அந்த நல்ல ராஜாவை இன்னும் நினைவில் கொண்டு ஒவ்வொரு கேரள வீட்டிலும் வாசலில் வண்ண வண்ண கோலங்களும், பூக்கள் அலங்காரமும் விளக்கும் ஏற்றி அற்புதமாக வாழையிலையில் பல  கேரள உணவு பண்டங்கள்,  பாயசத்தோடு வரவேற்கிறார்கள்.   கம்பர்  ராமாயணத்தில்  வாமன மூர்த்தியை எவ்வளவு அழகாக பாடுகிறார் பாருங்கள்.

''உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ்வடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன் –
சிலை குலாம் தோளினாய்! – சிறியன் சாலவே!''

பூமிக்கும் ஆகாசத்துக்குமாக வளர்ந்த வாமனன் ஒரே அடியில் இந்த மண்ணுலகு எல்லாம் அளந்து, மண் வேறு இல்லாமல் அடுத்த அடியில் விண்ணையெல்லாம் அளந்து, மூன்றாவது அடிக்கு, மண்ணோ, வேறு இடமோ இல்லாமல் என்ன செய்வது சொல்? எங்கே மூன்றாவது அடிக்கு இடம்?'' என்று கேட்டபோது மஹாபலி தனது சிரத்தை குனித்து காட்டுகிறான்.

''வந்தவன் வாமனன் இல்ல, மஹா விஷ்ணு என்று அசுரர் குல ஆசார்யன் சுக்ரன் எடுத்துச் சொல்லியும், ''மஹா விஷ்ணுவே என்னிடம் யாசகம் பெற வந்தது எனக்கு பெருமை தான், ஆச்சர்யம், சந்தோஷம் '' என்று சொன்ன வாக்கை நிறைவேற் றியவன் மஹாபலி. அவனை வாழ்த்தி பாதாளலோக சக்ரவர்த்தி யாக்கினார் மஹா விஷ்ணு. அவன் வருஷா வருஷம் பூலோகம் வரலாம் என்கிறார். ஆகவே தான் மஹாபலியின் கேரள விஜயம் ஆவணி திருவோணம் அன்று வருஷா வருஷம் நடக்கிறது. மலையாள மாதம் சிங்கம் தான் நமது ஆவணி.

sivan jaykay

unread,
Aug 30, 2023, 8:03:24 PM8/30/23
to amrith...@googlegroups.com
யஜுர்  உபாகர்மா -- நங்கநல்லூர் J K SIVAN
ஆவணி அவிட்டம்.

எனக்கு  வேதத்தில் சொல்லியபடி ஐந்து வயதிலோ ஏழு வதிலோ யக்னோபவீதம்  நடக்கவில்லை. லேட்டாகத்தான்.
நாளை  30.8.2023  யஜுர்வேதக்காரர்களுக்கு  ஸ்ராவண உபா கர்மா.  தமிழில் ஆவணி அவிட்டம். பூணல் மாற்றிக்கொள்ளும்  சடங்கு.  முன்பெல்லாம் நடந்தது போல  ஆற்றங்கரை, குளத்தங்கரை, கோவில்கள் என்று பொது இடத்தில் கூடி  உபா கர்மா  நடப்பது குறைந்து போய்,  அவரவர்  வீட்டுக்குளேயே  உபாகர்மா தான் இப்போதைய  வழக்கமாகி விட்டது. சிலர்  வாத்தியார் உதவியுடன், சிலர்  ஆன்லைன் வாத்யார்  உதவியோடு, சிலர்  மொபைல் பார்த்துக் கொண்டே.  ஆன்லைன்  உபாகர்மா  கொரோனாவுக்குப் பிறகு  ரொம்ப கொடி கட்டி பறக்கிறது.  

உபாகர்மா அன்று பூணலை புதுப்பித்துக் கொள்வதற்கு   சில விதி முறைகள் தாத்பர்யம்  இருக்கிறது.  பூணலை சும்மா வாங்கி மாட்டிக் கொள்வது அல்ல. , பௌர்ணமி  அவிட்ட நக்ஷத்ரம். காயத்ரி மந்திரம், காமோகார்ஷின்  ஜபம்  இதெல்லாம் ரொம்ப  அர்த்தமுள்ளவை. இன்னும் ஒரு  சில பதிவுகள்  இதைப் பற்றியே எழுதப் போகிறேன்.  

நாளைக்கு மறுநாள்  31.8.2023    அன்று  காயத்ரி மந்த்ர  ஜபம் .  ஒரு நாளாவது முழுக்க சொல்வது.  இந்த சடங்கு  சாம வேதத்தினருக்கு வேறுநாள் வரும்.  

''மஹா விஷ்ணு  ஹயக்ரீவராக  குதிரை முகத்தோடு  ப்ரம்மதேவனிடமிருந்து  வேதங்களை திருடிக்கொண்டு சென்ற  மது கைடபர்களை வென்று  வேதங்களை மீட்ட நாள் என்பது ஐதீகம்.   
 இதனால் ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் பெயர் உண்டு   பிராமண குழந்தைகளுக்கு  எட்டு வயதில் உபநயனம் செய்யும் வழக்கம் விட்டுப் போய்விட்டது. கல்யாணத்தன்றே பூணல் போட்டுக்கொள்பவர்கள் அநேகர் இப்போது.   வேத காலத்தில் அதி புத்திசாலியாக, மஹா மேதாவி யாக ஞானம் நிறைந்த குழந்தை களுக்கு  ஐந்து  வயதில் உபநயனம் செய்வித்தார்கள். இந்த ரகம் முக்கால் வாசி ரிஷி குமாரர்களைதான்  குறிப்பிடும். 

உபநயனம் என்பதில்   ரெண்டு கார்யங்கள் இருக்கிறது. ஒன்று பூணூல் தரித்த பின்  ஆசாரம், ஒழுக்கம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது.   இந்த  ஸம்ஸ்காரம் ஒருவனை ஆன்மீக உயர் நிலைக்கு கொண்டு செல்கிறது.

ரெண்டாவது  உபநயனத்தில் பூணூல் போட்டுக் கொண்டவன்  ஒரு பெரியவரிடம், அப்பாவிடம், குரு  மூலம்  வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை  ஜபிக்க முற்படுவது.   அப்போதெல்லாம்  உள்ளும் புறமும் சுத்தமாயும், பவித்ரமாயும் பூணூல்  போட்டு வைத்தார்கள்.  இது தான் சார்  உபநயனம், ப்ரம்மோபதேசம் . 

உப நயனம்  என்ற வார்த்தை களுக்கு    காயத்ரீ  மந்திரத்தை கற்றுக் கொள்ள   குருவின் சமீபம் அழைத்துச் செல்லுதல்  என்று அர்த்தம்.   வேதம் படிப்பதற்கு  தக்ஷிணாயனம் என்று  ஆறுமாச காலம் ஒதுக்கப்பட்டது.

வேதத்தை ஓதி  தர்ம சாஸ்திரங்கள் அர்த்தம் புரிந்து கொள்ள  தெரிந்து கொள்ள  உத்தராயணம் ஆறு  மாச காலம். . தை மாதத்திலிருந்து  ஆடி வரை  உத்தராயணம்.  ஆடி முதல் மார்கழி  வரை தட்சிணாயனம்.   ஆவணி மாசம் அவிட்ட நக்ஷத்ரம் ஆவணி அவிட்டம்.  ஆடி அமாவாசைக்கு பிறகு   ச்ராவண மாசம்.  ஆவணி  மாசம் என்று கணக்கு . பௌர்ணமி  அன்று ஆவணி அவிட்டம், உபாகர்மா செய்வது வழக்கம்.  

சாம வேதத்திற்கு ஆவணி ஹஸ்தம்  அன்று  உபா கர்மா.  ருக் வேதம் தான்  ஆதாரம் .அந்த ஆவணி அவிட்டத்தையே எல்லோரும்  உபாகர்மா என்று பெயர் வைத்து விட்டார்கள். வேத சாஸ்திர பாடங்களை  மேலே சொன்ன காலத்தில் ஆரம்பித்து முடிக்காமல்  போய் விட்டால்  என்ன பரிகாரம்?

அது தான்  "காமோகார்ஷீத்" ஜபம். 'காமோ கார்ஷீத்' ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று  ஒரு பழக்கம் புகுந்து விட்டது. அது தப்பு.  பூணூல் மாற்றிக்  கொள்வது மட்டும்  உபா கர்மா ஆகாது.   வேதம் படிப்பதற்கு முன்பு புனிதமாக ஆகவேண்டும் என்பதற்காக   பூணூலை  மாற்றிக் கொள்கிறோம்.  வேத ஆரம்பம் செய்யவேண்டும். அதற்காகத்தான்   "காமோர்கார்ஷீத்" ஜபம் செய்வது .பூணூல் போட்டுக் கொண்ட மறுநாள் காயத்ரீ ஜபம் அதற்காகவே உண்டானது.  ஆவணி அவிட்டத் தில் வேத மந்திர ஜப சித்தி இருந்தால்தான் வேதாரம்பம் ஸ்திரமாக இருக்கும். அதற்காகத் தான் காயத்ரீ ஜபத்தை மறுநாள் வைத்து  இருக்கிறார்கள்.  பூணூல் போட்ட முதல் வருஷத்தில்  தான் காயத்ரீ ஜபம், காயத்ரீ ஹோமம் முதலிய வைகள் பண்ண வேண்டும் என்று தவறாக எண்ணு கிறார்கள்.

தினந்தோறுமே  சந்தியா வந்தனம்,  காயத்ரி ஜபம் செய்து விட்டுத்தான் வேதத்தை பாராயணம் செய்யச் சொல்லி  இருக்கிறது. ஆகவே ஒவ்வொருவரும் காய்த்ரி  ஜபத்தன்றாவது ஆயிரம் தடவை காயத்ரீ   மந்திரத்தையும் அல்லது ஹோமத்தையும் செய்யலாம். 
  பஞ்சாக்ஷரீ ஜபம், அஷ்டாக்ஷரீ ஜபம் போன்ற பல மந்திர ஜபங்கள் எல்லாம் கூட இருக்கிறது.  ஈஸ்வரானுக்ரஹம் சித்திக்க வேண்டும் என்றால் கூட காயத்ரி   ஜபத்தை  நிறைய   உச்சரித்தால் தான் அது நிறைவேறும்.  மற்ற ஜபங்களும் பலன்  அளிக்கும்,  

காயத்ரி  மந்திரம் ஒன்று தான்  வேதத்திலிருந்து பிறந்தது.   மற்றவை புராணத்திலிருந்து வந்தவை.  ஓம் நமசிவாய எனும் பஞ்சாக்ஷரம் போன்ற மந்திரங்களை  ஜபிப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் சொல்லப் பட்டு   இருக்கிறது.''---   இப்படி சொல்வது நானல்ல,  நமது மஹா  பெரியவா.  

காயத்ரி  மந்திரம் ஜபித்த எல்லோருக்கும்  ஒரே பலன்,  மனத்தூய்மை தான். மனோபலம்  தான். மனோ பலத்தையும், மனத் தூய்மையும்  வைத்துக் கொண்டு உலகத்தில் எல்லா காரியங்களையும் சாதிக்க முடியும்.    இன்றைக்கு மனோ பலமும், மனோ தைரியமும் குறைந்திருப்பதற்கு காரணமே   காயத்ரி  அனுஷ்டானம் குறைந்து இருப்பதுதான். சில சமயம் ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதினால்  தோஷமாதலால் அந்த மாதத்தில் உபநயனம், கல்யாணம் போன்ற சடங்குகள் செய்ய மாட்டார்கள். ஆகையினால்தான் ஆவணி அவிட்டம் ஆடி மாதத்திலேயே  வந்து விடுகிறது. ச்ராவண சுத்தத்தில் முடிவான பௌர்ணமி அன்று வந்து விடுகிறது

வேதமே  தெரியாமல் நாம்   ஒருவருக்கொருவர்  நீங்க  என்ன வேதம் என்று கேட்கிறோம், அவரும் நாங்கள்  சாம வேத காரர்கள்,  நாங்க  ரிக் வேதம், யஜுர்வேதம் என்று பதில் சொல்கிறார்கள்.   அந்த வேதம் என்ன என்பது பற்றி தெரியாது. அறிந்து கொள்ளவும் விருப்பமோ, நேரமோ இல்லை என்பது பரிதாபமான விஷயம்.

உபாகர்மா  என்றால் வருஷா வருஷம்  ''ஆரம்பிப்பது''என்று அர்த்தம். எதை?   வேதங்கள் கற்பதை. அன்று பூணலை
 புதுப்பித்துக் கொள்கிறோம்.  இதற்கு சில விதி முறைகள்.    ஆவணி அவிட்டம் எனும் உபா கர்மாவை  யஜுர்வேதக் காரர்கள்    ஆடி, பௌர்ணமி  என்று  கொண்டாடுகிறார்கள். அதாவது ஆவணி  பிறப்பதற்கு முன்பே  ஆவணி அவிட்டம் என்று பெயர் அதற்கு.  ரிக் வேதக்காரர்கள்  அவிட்ட நக்ஷத்ரம் என்றைக்கோ  அன்று கொண்டாடுகிறார்கள். சாம வேதக்காரர்கள்  அப்புறம் கிருஷ்ண பக்ஷ  ஹஸ்த நக்ஷத்ரத்தன்று என்று வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

sivan jaykay

unread,
Aug 30, 2023, 8:03:24 PM8/30/23
to amrith...@googlegroups.com
THE  RARE  SANYASI   -      J K  SIVAN 
SWAMI  VIVEKANANDA 


Hope you enjoyed the first  post  coantaining  10  thoughts of the rare Swamiji. Here are some more.

1. Nothing Is Impossible. Never think there is anything impossible for the soul. It is the greatest heresy to think so. If there is sin, this is the only sin – to say that you are weak, or others are weak.

12. You Have The Power.   All the powers in the universe are already ours. It is we who have put our hands before our eyes and cry that it is dark.

13.Learn Every Day.  The goal of mankind is knowledge… now this knowledge is inherent in man. No knowledge comes from outside: it is all inside.   When a man says  I ‘know’,  it  means  in   strict  psychological language,  what he ‘discovers’ or ‘unveils’; what man ‘learns’ is really what he discovers by taking the cover off his own soul, which is a mine of infinite knowledge.

14. Be Truthful.  Everything can be sacrificed for truth, but truth cannot be sacrificed for anything.

15.Think Differently. All differences in this world are of degree, and not of kind, because oneness is the secret of everything. 

16.  We are all egoocentric and to a great extent arrogant in one way or another without exception. We think we are big, we know everything and are superior to others. We have no idea of the broad noble thoughts which govern the life of many in this world. 
 A frog lived in a well. It had lived there for a long time. It was born there and brought up there, and yet was a little, small frog. Of course the evolutionists were not there then to tell us whether the frog lost its eyes or not, but, for our story's sake, we must take it for granted that it had its eyes, and that it every day cleansed the water of all the worms and bacilli that lived in it with an energy that would do credit to our modern bacteriologists. In this way it went on and became a little sleek and fat. Well, one day another frog that lived in the sea came and fell into the well.
Both the frogs  then exchanged conversation.

"Where are you from?"  asked the frog in the well.
"I am from the sea."
"The sea! How big is that? Is it as big as my well?"
'' No. it is bigger than this well''
''The sea! How big is that? Is it as big as my well?" and he took a leap from one side of the well to the other.
"My friend," said the frog of the sea, "how do you compare the sea with your little well?”
Then the frog took another leap and asked, "Is your sea so big?"
"What nonsense you speak, to compare the sea with your well!"
"Well, then," said the frog of the well, "nothing can be bigger than my well; there can be nothing bigger than this; this fellow is a liar, so turn him out."
That has been the difficulty all the while.
I am a Hindu. I am sitting in my own little well and thinking that the whole world is my little well. The Christian sits in his little well and thinks the whole world is his well. The Mohammedan sits in his little well and thinks that is the whole world. I have to thank you of America for the great attempt you are making to break down the barriers of this little world of ours, and hope that, in the future, the Lord will help you to accomplish your purpose.  

In our country,  a teacher is a most highly venerated  person, he is regarded as God Himself. We have not even the same respect for our father
and mother. Father and mother give us our body, but the teacher shows us the way to salvation. We are his children, we are born in the spiritual line of the teacher. All Hindus come to pay respect to an extraordinary teacher, they crowd around him. And here was such a teacher, but the
teacher had no thought whether he was to be respected or not, he had not the least idea that he was a great teacher, he thought that it was Mother who was doing everything and not he. He always said: " If any good comes from my lips, it is the Mother who speaks; what have I to do with it?''

sivan jaykay

unread,
Aug 30, 2023, 8:03:35 PM8/30/23
to amrith...@googlegroups.com
யஜுர்  உபாகர்மா -- நங்கநல்லூர் J K SIVAN
ஆவணி அவிட்டம்.

ஒரு பழைய ஞாபகம்.   

 அசுர வேகத்தில் வளர்ந்து விட்ட  சென்னை பட்டணமும் ஒரு காலத்தில் கிராமம் தான்.  
நங்கநல்லூரில் பெரிய  துறவு கிணறுகளில் இறங்கி குளிப்பவர்களும் உண்டு,   கிணறு கைப்பம்பு மூலம்   குளித்தவர்களும் இருந்தோம்.   மேலே இருந்து கிணற்றுக்குள் தொப் தொப் என்று குதிக்கும் தைரியம் கொண்ட சிறுவர்கள் நீரில் குதித்து  விளையாடுவார்கள். அவர்கள் தைர்யம் என்னை அசர வைத்த்து. (இது தோட்டக்காரர்  இல்லாத போது).

பொதுவாக நாங்கள் விரும்புவது மோட்டார்  பம்ப்செட்  மூலம்  'தப தப'  என்று மேலிருந்து கொட்டும்  நீரில்  குளிப்பது.   அந்த நீர்  கத்திரிக்காய், வெண்டை, கீரைகள்  பயிர்களுக்கு  பாத்திகள் மூலம் செல்லும். பெரிய தொட்டியில் நிரம்பும்.  தோட்டக்காரர் சோப்பு தேய்த்து குளிக்க அனுமதி தரமாட்டார்.   துண்டு கட்டிக்கொண்டு தான் குளிக்க வேண்டும். அரை ஆடை, கால் ஆடைக்காரர்களை கிட்டே சேர்க்க மாட்டார்.குளித்த  பிறகு   கையில் கொண்டு சென்ற  பின்னல் கூடைகளில், அல்லது பைகளில்  நிறைய  தோட்டத்து காய்கறிகள், கீரைகள் தோட்டக்காரரிடம்  வாங்கிக்  கொள்வோம்.  உத்தேச அளவில் கொடுப்பார். பிடித்திருந்தால்  நம்மைப் பிடித்திருந்தால்  அளவே  கிடையாது.   நிறையவே கொடுப்பார். கோபமான  மூடில் இருந்தால் கொஞ்சம் குறையும்.  எல்லாம் சேர்த்து  ஒரு ரூபாய்  அல்லது  ஒன்னரை ரூபாய்  காசு தான்.  அதற்கு மேல் கிடையாது.   கையில் இருக்கும் காய்கறிகள் நிச்சயம் மூன்று கிலோ வாவது இருக்கும். அல்லது கொண்டு செல்லும் பையின் கொள்ளளவை பொறுத்தது.

நங்கநல்லூரில் ஆறு கிடையாது.  தெற்கே  கிராமங்களில் ஆற்றில் குளிப்பது சுகம்.   குளத்தில் குளிப்பது ஒரு வித சுகம்.  ஆழமான குளத்தில்  படிக்கட்டுகளில்  கனமான பாசி படிந்து வழுக்கிவிடும்.  நீச்சல் தெரியாமல் ஆற்றிலோ குளத்திலோ இறங்குவது ஆபத்து. வழுக்கும் படியை பிடித்துக்கொண்டு மேலே ஏறவும் முடியாது.

ஆற்று  நீர்  படுகைகளுக்கு,  குளத்துக்கு செல்ல  கால்வாய்கள் உண்டு.   ஆற்றங்கரையில் குளத்தங்கரையில் அடர்ந்த மரங்கள் இருக்கும். அரசமரம், புளியமரம் வேப்ப மரம்  நிச்சயம் இருக்கும். அரசமரத்தடியில் பிள்ளையார் இருப்பார். குளத்தங்கரையிலும் பிள்ளையார் உண்டு.  பெண்கள் குளிக்க தனி இடம். அங்கே ஆண்கள் செல்ல மாட்டார்கள்.   குளித்து விட்டு பெண்கள் பலர்  அரசடி பிள்ளையாரை நமஸ்கரித்து மரத்தை  பிரதக்ஷணம் செய்வார்கள்.  108 முறை சுற்று வோர்களும் உண்டு. வாய் ஏதேனும் ஒரு ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டே இருக்கும்.  அரசமரத்தடி, வேப்ப மரத்தடியில்   சாணி தெளித்து  மெழுகி பெருக்கி கோலம் போட்டு வைத்திருப்பார்கள், பார்க்கவும் நடக்கவும் சுகம். வேப்ப மரம் பக்கம் கம் என்று ஒரு தனி வித  வாசனை மூக்கை துளைக்கும். 

அரசடியில்  சில இடங்களில் நாவிதர்கள்  சின்ன  பித்தளை  அலுமினிய  கிண்ணத்தில் தண்ணீர்,  ஒரு பலகை, தகர பெட்டியோடு முண்டாசு கட்டிக்கொண்டு பீடி பிடித்துக்கொண்டு காத்திருப்பார்கள்.  கிராம மக்களின்  சலூன் அது தான். open air ஹேர் ட்ரெஸ்ஸிங் சலூன்.   எல்லோர் தலைக்கும் ஒரே வித கட்டிங்  தான்.    எப்போதும்  ஆத்தங்கரை ஓரமாக  மயான பூமி, ருத்ர பூமி உண்டு. கத்திரிக்கோல்,  கத்தி தவிர  ஒரு  கட்டிங் பிளேயர்  மாதிரி ஒரு மெஷின்.  அது தலையில்  ரோவர் மாதிரி  மேயும்போது  வெட்டுவதை விடை பிடுங்குவது ஜாஸ்தி. வலிக்கும்.  தண்ணீரை  தலையில் தெளித்து மீண்டும் மேய விடுவார். 

அருகே ஒன்றிரண்டு குடிசைகளில்  பிணங்களை புதைக்கும் எரிக்கும் குடும்பங்கள் வாழ்ந்தது. , மற்றபடி கிராமத்துக்கே அடையாளமான  பச்சை பசேல் வயல்கள்,  ,தென்னந்தோப்பு, மாந்தோப்பு, பனைமர சோல்ஜர்கள்.  கிராமத்திலிருந்து  வெளியே ஊர்களுக்கு செல்ல   மண்  ஒத்தையடிப்பாதை,  கண்மாய்கள்,  கோவில்கள், அக்ராஹாரம்,  பசுக்கள், காளைமாடுகள்,   குட்டைகளில் எருமைகள்,  வண்டிகள்,  வைக்கோல் போர்கள்,   கலப்பைகள்  இத்யாதி இத்யாதி  இருக்கும்.  கிராமப்  பெயர்கள்  வேடிக்கையாக இருக்கும்.   பொட்டச்சி புரம் , காத்தாயி குளம்,  கம்புளி,  வழுக்கையான்  தோட்டம்.  வெள்ளை நாயக்கர் கடை.    உசேன் பீடி கடை.   துணி நெய்பவர்கள்  வெளியே  நூல் பாவுவார்கள்.

சர்க்காருக்கு   நிலச்சுவான்தாரர்கள் அவர்கள் சொத்துக்கு  தக்கபடி ஒரு குறிப்பிட அளவு நெல்லை   கொடுக்க வேண்டும்.  சர்க்கார் நிர்ணயித்த விலைப்படி அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள்.

வீடுகள் பல அடுக்குகள், கட்டுகள் கொண்டது. முக்கால் வாசி ஒட்டு வீடுகள், கூரை வேய்ந்தவை. ஒன்றோடொன்று இணைந்த வீடுகள்.  மங்களூர்  ஓடு கண்ணில் படாது. நாட்டு  ஓடு, செருகு ஓடுகள் தான் எல்லா வீடுகளுக்கும். தேள், பூரான், பள்ளி குடியிருப்பு அவை.  தொப் தொப் என்று தேள்  அடிக்கடி வீட்டுக்குள் விழும்.  தேள்கடி சர்வ சாதாரணம். 

அமாவாசைகளில் வாத்தியார்கள் ஊரிலே இருப்பவர்களோ அண்டை ஊர்க்காரர்களோ  ஆற்றங்கரைக்கு வந்து  தர்ப்பணம் பண்ணி வைப்பார்கள்.  ஆவணி அவிட்டம் அன்று  குளத்தங்கரை  அரசமரத்தடியில்  நிறைய பேரை உட்கார்த்தி வைத்து  பூணல் போட்டு விடுவார்கள்.  பிள்ளையார் கோவிலில் ஹோமம் பிரசாதம் எல்லாம் உண்டு. எல்லோருக்கும்  வாழை இல்லை தொன்னையில்  பிரசாதம் கொஞ்சம்  வெண்பொங்கல், தயிர் சாதம் தரும் வழக்கம் இருந்தது. 

வடக்கு தெரு  பெருமாள் கோவிலில் கும்பம் வைத்து ஆவாஹனம் பண்ணி  வ்யாஸ ஹோமம் வளர்த்து தலை ஆவணி அவிட்ட குழந்தைகளுக்கு ஆஹுதியும் காண்டரிஷி ஹோமமும்  நடக்கும்.  

பெருமாள் கோவில்  சிவன் கோவில், அல்லது பிள்ளையார் கோவில் நிச்சயம் இருக்கும்.  விசேஷ காலங்களில் சுவாமி புறப்பாடு ஊர்வலம் வரும்,  அப்போதெல்லாம்  எல்லா ஊர்களிலும்  நாவிதர் குடும்பத்திலேயே  நாதஸ்வர தவில் வித் வான்களும் இருந்தனர்.    ஒரே ஒரு   பெரிய  சாலை.  அதில் பஸ் வரும். போகும். ஊருக்கு  எந்தெந்த  பஸ்  எத்தனை மணிக்கு எங்கிருந்து வரும்  எவ்வளவு நிமிஷம் நிற்கும்  என்று எல்லோருக்கும் தெரியும். முன்பாகவே சென்று காத்திருப்பார்கள், அல்லது வருபவர்களுக்காக காத்திருந்து அழைத்து வருவார்கள்.

கல்யாணங்கள் பண்டிகைகள் வந்துவிட்டால், தெருவில்  பந்தல் போட்டு  ஜோராக எல்லாருக்கும்  சாப்பாடு கமகமவென்று  வாசனையாக கிடைக்கும்.    எங்கள் ஊரில் பாலு செட்டியார் ஒருவர்  பள்ளிக்கூடம் கட்டி இலவசமாக பாடம் கற்றுக்கொடுத்தது ஞாபகம் இருக்கிறது. அவர் பிள்ளை ஷண்முகம் தான் ஹெட்மாஸ்டர்.  ஆங்கிலத்தில் பேச ஆசை. ஆனால் அவனுக்கு  சுத்தமாக  இங்கிலிஷ் தெரியாது. 

எள்ளு புண்ணாக்கு  செக்கு  எண்ணெய்  திக்கு கண்ணாடி  திவாகரன் கடையில் சுத்தமாக  கொடுப்பார்கள்.  திவாகரன்  பாதிநேரம்  வயலில் இருப்பான், மீதி நேரம் செக்கு. அவன் தம்பி  பாலு சாமி  ஒரு மாவு மெஷின் வைத்திருந்தான்,  ஒரே ஒரு மாவு, மிளகாய் அரைக்கும் மெஷின் மட்டுமே  இருக்கும். சீயக்காய் அரைக்கும் மெஷினை விற்று விட்டான்.  அதற்கு காரணம்,   ரங்கநாதன் பலசரக்கு கடை. அங்கே  சீயக்காய் தூள்  ஒரு பாக்கெட் வாங்கினால் ஒரு நீல கலர் பலூன் தருவான் என்பதால்  சீயக்காய் பொட்டலங்கள்  சீக்கிரம்  விற்கமுடிந்தது. அது தவிர  அவன் பிள்ளையை  ஆற்றங்கரையில்  ஒரு துணியை தரையில் விரித்து  அதில் சீயக்காய் துணி துவைக்கும் சவுக்காரம், காசி துண்டு  விற்பனை படுஜோராக நடந்தது. 

sivan jaykay

unread,
Aug 30, 2023, 8:03:44 PM8/30/23
to amrith...@googlegroups.com
ஒரு அற்புத ஞானி    ---     நங்கநல்லூர்  J K  SIVAN
சேஷாத்ரி ஸ்வாமிகள்
                                                                                 
 ''பறவை பறந்தது''

இன்று  ஆவணி அவிட்டம்.  யஜுர்  உபாகர்மம்.  காமோ கார்ஷித் ஜபம் பண்ணும்போது என்னையும் அறியாமல்  சேஷாத்திரி ஸ்வாமிகள்  உருவம் கண் முன்   நின்றது.   அவரைப் போல  ஒரு தெய்வ திவ்ய ஸ்வரூப ஞானியைக் காண்பது அரிது.                                  
சில வருஷங்களுக்கு முன் ஒரு நாள்  நண்பர்   ஊரப்பாக்கம் ஸ்ரீ மோகன் தம்பதியர் என்னை நேரில் கண்டு அவர்கள் வீட்டில்  சுனாமியின் போது வீடே பாதி முழுகிய நேரம்  சேதமடைந்த ஒரு பழைய  புத்தகம் ஒன்றை கொண்டு வந்து கொடுத்தார்.  அது  ஸ்ரீ குழுமணி நாராயண ஸ்வாமி சாஸ்திரிகள் நூறு வருஷங்களுக்கு முன்பு சேஷாத்ரி ஸ்வாமிகள் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை குறிப்பெடுத்து  எழுதிய  பக்தி நூல்.  ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிஸ்வாமிகள் சரித்திரம்.  எதற்கு இதை  ஊரப்பாக்கத்திலிருந்து நங்கநல்லூர் வந்து நேரில் தரவேண்டும்?  என்னை எப்படி தெரியும்?. அவர்களை எனக்கு முன்பின் தெரியாதே?  எல்லாம் முக நூலில் நான் இடும் ஆன்மீக பதிவுகளால் கிடைத்த நட்போ?  அது   முழு ரஹஸ்யம் இல்லை.  இது பகவத் ஸங்கல்பம் . சேஷாத்ரி ஸ்வாமிகள் கட்டளை. அதை நான் நிறைவேற்றவேண்டும். அது எனக்கு கிடைத்த  பாக்யம். 

''நான் இதை உங்க கிட்டே கொண்டு வந்து கொடுத்தது நீங்க இதை மறுபடியும் இதை எழுதவேண்டும் என்பதற்காக.  ஏதோ தண்ணீரில் ஊறிவிட்டாலும் பக்கம் பக்கமாக திருப்ப முடிகிற அளவு  ''ஒக்கப்''  WORKUP  பண்ணி கொண்டு வந்திருக்கோம்.  ரெண்டு தலைமுறையா பூஜைலே இருக்கிற புஸ்தகம்.''

நான் சேஷாத்ரி ஸ்வாமிகளை   ஒரு சின்ன  அட்டையில் எங்கள்  வீட்டு பூஜை அறையில்  வைத்து, என் சின்ன  வயதில் என் அப்பா வழிபட்டதை  பார்த்திருக்கிறேன் என்பதைத்   தவிர  அவரைப் பற்றி அதிகம்  தெரிந்து கொள்ள முயலவில்லை. அதைப் போக்க  அவரே என்னிடம்  நேரில் வந்ததாக இந்த சந்தர்ப்பத்தை  எடுத்துக் கொண்டேன்.  கஷ்டப்பட்டு  மோகன் தம்பதியர்  கொடுத்த புத்தகத்தின் பக்கங்கள் சொன்னதை புரிந்து கொண்டு என் வழியில் தமிழில் எழுதி '' ஒரு அற்புத ஞானி''   புத்தகமாக்கினேன். அது புத்தகமாகும் செலவில் ஒரு பங்கை ஏற்றுக்கொண்டவர்கள்  மோகன் தம்பதியினர்.    உலகில் பட இடங்களில் உள்ள பக்தர்கள்  சிலரை  சேஷாத்ரி ஸ்வாமிகள் இப்புத்தகமாக  சென்றடைந்து  அருளாசி வழங்கி  வருகிறார் என்பது ஈஸ்வர சங்கல்பம் மட்டும் அல்ல, ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் சித்தமும் ஆகும்.  எனக்கு இதில் ஒரு பொறுப்பை வழங்கியதும் அவர் என் மேல் கொண்ட கருணை, மோகன் தம்பதியர் மூலமாக என்று தான் கூறவேண்டும்.
' ஒரு அற்புத  ஞானி''  புத்தகத்திலிருந்து ஒரு சில  எழுத்துக்கள் :  

 '' நான் சொல்லிக்கொண்டு வருவது  இருநூறு  வருஷங்
களுக்கு முன்பான செயதிகள். அப்போதைய வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள்  இப்போது முற்றிலும் மாறு பட்டவை . எனவே  அக்கால நிலவரத்தை மனதில் கொண்டு  வாசகர்கள் இந்த கட்டுரைகளை அணுகினால் அப்போது  அக்காலத்தவர்களோடு நாமும் இருப்பதை போன்ற சுகானுபவம் பெறலாம். எல்லாம் மனசு பண்ணும்  காரியம். .
''நீ என்னடா ஜபம் பண்ணிண்டு இருக்கே எப்போவும்?''  என ஒருநாள்  வங்கீபுரம் ஸ்ரீனிவாச அய்யங்கார் கேட்டார் சேஷாத்ரியை.
''அம்பஸ்ய பாரே''  என்கிற  நாராயண உபநிஷத்திலிருந்து,   'காமோகார்ஷித்  மன்யுர கார்ஷீத்,  காம க்ருதி நாஹம் கரோமி ''  என்னும் சில  வேத மந்த்ரங்கள் மாமா''  
(ஆசை அறவே அகல வேண்டும். கோபம் கிட்ட வரக்கூடாது  என்று உறுதி பெற சொல்லும் மந்திரங்கள் இவை.  இதை தான் ஆவணி அவிட்ட  உபா கர்மத்தில்  சொல்கிறோம்.)
''எவ்வளவோ சொல்லுவே?''
''ஆயிட்டுது . லக்ஷத்துக்கு மேலே  ஆவர்த்தி. இன்னும் ஒரு  லக்ஷம் சொல்லணும்'' -
''எதுக்கு?
''கர்மம் ஒழியாம எப்படி மோக்ஷம் அடையறது?  உங்களுக்கு மோக்ஷம் வேண்டாமா?  நீங்களும் பண்ணுங்கோ. ''  
பேசிக்கொண்டே அந்த பையன்  சேஷாத்ரி நகர்ந்து விட்டான்.  அவருக்கு கிடைத்த பட்டம்  ''பாவம் சின்ன வயசிலேயே  ஞானப் பைத்தியம்''

கோவில்களில்  மணிக்கணக்காக உட்கார்ந்து ஜபம் செய்வதால்  வீட்டில்  தொந்தரவு, உபத்திரவம்.   வீட்டிலும்  செய்ய வழியில்லை.   என்ன செய்யலாம்?  நிம்மதியாக எப்படி  மனதை ஜெபத்தில் செலுத்த உபாயம்?    ராத்திரி  எல்லோரும் தூங்கும் போது  மட்டும் செய்யலாமா?  ஆஹா,  இந்த இடம் மறந்து போச்சே.    வேகவதி ஆற்றங்கரையில் சதுர்த்தர்கள்  ஸ்மசானம்  ஒருவரும் இல்லாத இடமாயிற்றே.  அங்கே? .  எனவே  சாயந்திரம் சந்தியாவந்தனம் செய்து விட்டு  அங்கேயே  ஓரமாக மயானத்தில் இரவெல்லாம் ஜெபம். மறுநாள் காலை வீட்டுக்கு திரும்புவார் சேஷாத்ரி.

பத்துநாள் வரை ஒருவரும் இதை கவனிக்கவில்லை.  அப்புறம் தான் கிளம்பிற்று எதிர்ப்பு வீட்டில்.  சுனாமியாக வெடித்தது.    சேஷாத்ரியின்  சித்தப்பா ஜோசியர்  ராமசாமி , அத்தான்  வெங்கட்ரமண  சாஸ்திரி,  எல்லோரும் பிலுபிலு என்று பிடித்துக் கொண்டார்கள்.

'''என்னடா  காரியம்   இது?, அசுத்தமான, அசுப,  இடத்துலே  எல்லாம் போய் ராவோடு ராவா ஜெபம் பண்ற வழக்கம்?  முன் போல கோவிலிலேயோ,  இல்லை  வீட்டிலேயோ பண்ணாமல் இது என்ன வக்ர புத்தி உனக்கு ?  

'' வக்ரம்  ஒண்ணும் இல்ல.  அது ருத்ர பூமி.  மீதி இடத்திலே ஆயிரம் ஜபம் பண்றது , அங்கே ஒரு ஜெபம் பண்றதுக்கு சமம் னு உங்களுக்கு தெரியாதா?''  -  சேஷாத்ரியின்  பதில்.  .

அதற்குப்பிறகு  சேஷாத்ரி  இரவில் வெளியே போகவிடாமல்   இரவு வீட்டின் கதவைப்  பூட்டினார்கள். சேஷாத்திரி மூன்று நாலு நாள் வீட்டுக்குள்ளேயே  கதவைத்  தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு அறையிலேயே  அன்ன ஆகாரம் இன்றி ஜெபத்தில்  இருந்தார்.

 ''ஐயய்யோ,   இவன்  உயிருக்கே ஆபத்து வந்துடுமோ?'' என்று பயம் வந்துவிட்டது மற்றவர்களுக்கு. கெஞ்சிக்   கூத்தாடி   ''கதவை திறடா   சேஷாத்ரி'' என்று கதறினார்கள்.  வீட்டில் அடக்குமுறை அதிகரித்தது.  இருந்தாலும்   சேஷாத்ரியின்  மயான ஜபம்  நடந்துகொண்டிருந்தது.   இப்போதெல்லாம்  சேஷாத்ரி முகத்தில்  ஒரு புது  தேஜஸ்.   கண்களில் ஒரு ஒளி பிரகாசித்தது.
ஒருநாள். அன்று சனிக்கிழமை  என்பதால்  வீட்டில் எல்லோரும்  அப்யங்க ஸ்நானம் (நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது) பண்ணுவது வழக்கம். 'சனி நீராடு'   பழக்கம் இன்னும் பல வீடுகளில் தொடர்கிறது.  பழைய சம்பிரதாயங்கள் முற்றிலும் சாகவில்லை.
காலை பத்து மணிக்கு தான் சேஷாத்ரி வீடு திரும்பினார் . ''எனக்கு எண்ணெய் குளியல் வேண்டாம்'' என்கிறான் .  

சேஷாத்ரி  தான்  சித்தப்பாவுக்கு எண்ணெய் தேய்த்து விடுவது வழக்கம்.   வஸ்திரங்களை துவைத்து கொடுப்பார்.
எல்லோருடனும் சிரித்து பேசுவார்.   ''''சித்தி,  சித்தப்பா எங்கே. எண்ணெய் தேய்த்துவிடறேன்''.
''சேஷா,  சித்தப்பாவுக்கு இன்னிக்கு எண்ணெய் ஸ்நானம் வேண்டாமாம்'' என்றாள்  சித்தி கல்யாணி.
''ஏனாம்?''
''உன்னைப்பத்தி தான் கவலை''
'என்னைப்  பத்தி என்ன கவலை. நான் ஒரு வழி. மத்தவா அவா அவா  வழி.''  
சித்தப்பாவுக்கு  காத்திருந்து   சேஷாத்ரி  ஒருவழியாக  சித்தப்பாவுக்கு எண்ணெய்  தேய்த்து விட்டார். அப்போதெல்லாம் மிளகாய் வற்றலை,  பெருங்காய  கட்டியை  நல்லெண்ணையில்  பொறித்து  காய்ச்சி தலையில் தேய்ப்பார்கள். போட்டு பொட்டென்று சூடு பறக்க  எண்ணெயை  பொருக்கிற  சூட்டில்  தலையில் வைத்து ரெண்டு கையாலும்  படபடவென்று   தட்டுவார்கள்.முக்காவாசி  வீடுகளில் சுண்டக்கா வற்றல்  குழம்பு, மிளகு ஜீரக ரசம். பருப்பு துவையல், சுட்ட அப்பளம் தான் மெனு அன்று.
 சித்தப்பாவுக்கு  பாதி  எண்ணெய்  தேய்த்துக்கொண்டிருந்த சேஷாத்ரி நிறுத்தி விட்டு வாசலுக்கு  ஓடிச்  சென்று பார்த்தார். ரெண்டு நிமிஷத்தில் திரும்பி வந்தார்.
''என்னடா அங்கே போய் பார்த்தே?''
''ஆகாசத்தில் பாட்டு சத்தம் கேட்டுது.  தேவதைகள்  பாடிண்டு போறா. போய்  பார்த்தேன்''
சித்தப்பாவுக்கு  இது பைத்தியம் என்று கேலி.    ஆஹா  என்று  வாய்விட்டு சிரித்தார்.  ''ஓஹோ  தேவதைகள்  மட்டும் தானா.  ஏன்  கந்தர்வர்கள் கூடவே  போய் பாடலியா?''
''ஓ,   இருந்தாளே. ரெக்கை இருக்கே. அவாளும் போறா''
''என்ன ராகம் பாடினான்னு உனக்கு தெரிஞ்சுதா?''
''ஓ.தெரிஞ்சுதே,   பிலஹரி''
''ஏண்டா இப்படி பைத்தியமா இருக்கே. அவா உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிவாளா. எனக்கு தெரியலியே ''
''கர்மிகள் கண்ணுக்குத்தெரியமாட்டா சித்தப்பா.  அவா நிலையிலேயே நாமும் இருந்தா தான் தெரிவா''
'' சரி சரி உனக்கு பைத்தியம் முத்திவிட்டது''.

சித்தப்பாவுக்கு ''தன்னாலே  தான்  காகினியோடு  சேஷாத்திரியின்   கல்யாணம் நின்னு போச்சு. இன்னொரு இடத்திலே சீக்கிரம் ஒரு  பொண்ணை பார்த்தா ஒருவேளை சேஷாத்திரி சரியாயிடுவானோ? என்று தோன்றியது.
விஷயம்  சேஷாத்ரி காதுக்கு எட்டியது. ஓரு நாள்  தனியே சித்தப்பாவை பிடித்து விட்டார்.
 ''சித்தப்பா  எனக்கு கல்யாணம் எதுவுமே வேண்டாம். என்னை இப்படியே நிம்மதியா விட்டுடுங்கோ. கல்யாணம்  பேச்சு எடுத்தால் அப்புறம்   இந்த ஊரிலேயே இருக்கமாட்டேன்''
''ஐயோ, அப்படியெல்லாம் பண்ணாதேப்பா. எங்களுக்கு உன்னை விட்டா யாரு இருக்கா. இனிமே உன் ஜோலிக்கே  வரலே. நீ உன் மனம்போல் இரு'' என்று கல்யாணி சித்தியும் அழுதாள்.  மயான நள்ளிரவு ஜெபங்கள் தொடர்ந்தது.  மாதங்கள் ஓடியது.  ஒருநாள்  தாமல்  ஊரிலிருந்து பரசுராம சாஸ்திரி வீட்டுக்கு வந்தார்.
''கேள்விப்பட்டேன். சேஷாத்ரியை திருத்தணும்னு  தான் வந்தேன்.  எங்கே அவன்?''
 ''எங்கேயோ சுத்தறான்.''
சேஷாத்ரி வீடு வந்ததும் . ''இதோ பார்டா  இனிமே நீ ஸ்மசானத்துக்கு போகப்படாது. அது தப்பு''

சேஷாத்ரி  சாஸ்திரங்களை மேற்கோள் காட்டி  அது எவ்வளவு உயர்ந்தது என்று விளக்கியும் பயனில்லை.  மூணு மணி நேர விவாதம். கடைசியில் சேஷாத்ரி பொறுமையாக  சாஸ்திரிகளுக்கு பதில் சொன்னார்:

 ''இதோ பாருங்கோ,  நான் நைஷ்டிக பிரம்மச்சாரி. உபாசகன்.  எனக்கு கால தேச நியமம் எல்லாம் கிடையாது '' என்று  சொன்னபோது தான் பிரம்மாஸ்திரம் போட்டார் சாஸ்திரி.  
''சுடுகாட்டுக்கு போய்விட்டு,  வாழற குடும்பம் இருக்கிற  வீட்டுக்குள்ளே நுழையக்கூடாது. அது தெரியுமாடா  உனக்கு? ''
''சரி''  என்கிறார்  சேஷாத்ரி.
''ஆஹா ! கூண்டிலிருந்து பறவை விரைந்தோடுதே ..
இனி சேஷாத்திரி  மரத்தடியில், கோவில்களில் பொது குளக்கரையில் சந்தோஷத்தோடு  சுதந்திரமாக  காணப்பட்டார். வீட்டுக்கு வருவது நின்று போனது.  கடைசி மூச்சு வரை சேஷாத்திரி ஸ்வாமிகளுக்கு தனக்கென்று ஒரு இடம்  வைத்துக் கொள்ளவில்லை.  ஆனால்  எல்லா பக்தர்கள் மனத்திலும் இடம் பிடித்துவிட்டார்.. கண்கண்ட  கலியுக ஞானி  அல்லவா?  மஹா பெரியவாள்  போற்றிய மஹா ப்ரம்ம  ஞானி இல்லையா?  
IMG-20200728-WA0123.jpg

sivan jaykay

unread,
Aug 30, 2023, 8:03:44 PM8/30/23
to amrith...@googlegroups.com
ராகி எனும் ரக்ஷா  பந்தன்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

பாசமலர்  படம்  ஞாபகம் இருக்கிறதா?   அண்ணன்  தங்கை  பாசத்தை அதற்கு மேல்  சொல்லவோ, காட்டவோ இதுவரை ஒரு படம்  பார்த்ததில்லை.  எத்தனையோ குடும்பங்களில் அக்காள், தம்பி, அண்ணன் தங்கை பாசம் பொங்கி வழிவதைப் பார்த்திருக்கிறேன். வார்த்தைக்கு வார்த்தை அண்ணன்  தங்கைகளையோ, தங்கைகள் அண்ணனையோ, அக்காள்கள் தம்பியை,தம்பிகளையோ புகழ்வது நிறைய கேட்டிருக்கிறேன்.  நமக்கு  ராகி, ரக்ஷா பந்தன் பண்டிகை பழக்கமில்லை.  ஆடி, கார்த்திகை யின் போது  அண்ணன் தங்கை சீர்கள் தெரியும். அவ்வளவு தான்.  வடக்கே ஒரு அற்புதமான பண்டிகை  ராகி என்னும் ரக்ஷா பந்தன்.   ஆவணி பௌர்ணமி அன்று இது சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  ரக்ஷை என்றால் பாதுகாப்பு, பந்தன் என்றால் பிணைப்பு.  கூடப்பிறந்தவர்களின்  ஒற்றுமையை அறிவிக்கும், தெரிவிக்கும்  பண்டிகை. 

கூடப்பிறந்தால் தான்  நட்பு பாசம் என்று இல்லை,  பார்க்கும்  பழகும் ஆண்கள் எல்லோரும்  உள்ளன்போடு  பாசம் கொண்ட  சகோதர்கள், பெண்கள் சகோதரிகள் என்ற எண்ணம் மனதில்   நிலைத்தால் அதற்கு அடையாளம் தான் ராகி, ரக்ஷா பந்தன் காப்பு.  இது நேரே கையில் கட்டிக்கொள்வதோடு  மெயில், வாட்சப், முகநூலில் எனக்கு நிறைய  கிடைக்கிறது.
நான் கொடுத்து வைத்தவன்.  கிருஷ்ணா உனக்கு நன்றிடா.  ராகி யார் யாருக்கு வேண்டுமானாலும்  அன்போடு தெரிவிக்கலாம்.

மஹாபலி கதையோடு சம்பந்தப்பட்டது ரக்ஷா பந்தன்.   பவிஷ்ய புராணம் சொல்லுகிறது.  ஒருகாலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் சண்டை.  இந்திரன் அம்பு மழை பொழிகிறான். எதிரே ராக்ஷஸர்கள்  சார்பில்  மஹாபலி  வாணவேடிக்கை காட்டுகிறான். இந்திரனின் மனைவி  சசி, மஹா விஷ்ணுவிடம் சென்று இந்திரன் வெற்றிபெற  வேண்டுகிறாள். நாராயணன் அவள் கையில் ஒரு பட்டுக்கயிறு கட்டி  கையில் ஒன்று கொடுத்து சந்தோஷமாகப்   போ என்று அனுப்புகிறார்.சசி அந்த  கயிற்றை  இந்திரன் கையில் கட்டி  அனுப்ப,  அதற்கப்புறம் ,தொடர்ந்த சண்டையில் மஹாபலியை  இந்திரன் வெளுத்து வாங்கிவிட்டு  அமராவதி நகரத்தை மீண்டும் கைப்பற்றினான். எல்லாம்  ராகியின் மஹிமை. பெண்களின்  பிரார்த்தனையின் பலன். சகோதர சகோதரி பாசத்தின் பலம்.  வாமனனாக  வந்து மஹாபலியிடமிருந்து  மூன்று லோகங்களையும் மூன்றடி மண்ணாக கேட்டு அடைந்து மஹாபலியோடு நட்பு தொடர்ந்தது. 

வாடா மஹாபலி எங்கள் வைகுண்டத்துக்கு என்று மஹா லக்ஷ்மி  மகாபலியின் கைகளில்   ராகி கட்டினாள். போதுமா நட்புக்கும் பாசத்துக்கும் உண்டான பிணைப்பு .

இன்னொரு ராகி விஷயம். சந்தோஷி மா  பற்றியது.  மஹாகணபதிக்கு ரெண்டு பிள்ளைகளாம் . சுபம், லாபம், என்று  அடடா, நமக்கு ஒரு சகோதரி இல்லையா என்று வருந்தினார்களாம்.  விக்னேஸ்வரர்  சந்தோஷி மாவை தோற்றுவித்து மகிழ்ச்சியை அளித்தார். பேரே  சந்தோஷ அம்மா தானே.   இரு சகோதரர்களும் அவளுக்கு கையில் ராகி கட்டினார்களாம்.
கிருஷ்ணன் திரௌபதிக்கு  ராகி கட்டினான். குந்தி அபிமன்யுவுக்கு  கையில் ரக்ஷை கட்டி போருக்கு அனுப்பினாள் . 

யமனுக்கு அதே போல் சகோதரி யமுனா மீது கொள்ளை பாசம்.  யமுனைக்கு அடிக்கடி  அண்ணாவை பார்க்க ஆசை.  ''வருஷாவருஷம்  வடக்கே  "Bhai Dooj,  பை தூஜ்"  என்று  அண்ணா தங்கை உறவு பற்றி பெருமையாக கொண்டாடுகிறார்கள். 

எனக்கு சகோதரி  யாரும்  இப்போது  இல்லை, பிறந்த சிலரும் உடனே சிறுவயதில் மறந்து விட்டார்கள்.  ஆகவே    முகநூல்  வாட்ஸாப்ப்  சகோதரிகளே,  உங்கள் அனைவருக்கும் என் மானசீகமான,  மிகவும் சந்தோஷமான,  ரக்ஷா  பந்தன்  வாழ்த்துக்கள்.  நமது,  நட்புறவு,  பாசம், பொங்கி மேலும் மேலும் பெருகவேண்டும்,உங்களுக்காக நான் இன்னும் நிறைய  எழுத வேண்டும் என்ற பிரார்த்தனையோடு  நீங்கள் என் கையில் கட்டிய பாசப்  பட்டுக்கயிறு கட்டியதை , அந்த  முடிச்சை நானும் பெருமையோடு, அன்போடு , பெருமிதத்தோடு  தொட்டுப்  பார்க்கிறேன். . 

sivan jaykay

unread,
Aug 31, 2023, 8:06:57 PM8/31/23
to amrith...@googlegroups.com

காயத்ரி மந்திரம் - நங்கநல்லூர் J K SIVAN

2023ம்  வருஷம்  இன்று    31.8.2023  வியாழக்கிழமை  காயத்ரி ஜபம். காயத்ரி மந்த்ரத்தை பற்றி நிறைய பேசியாச்சு. எழுதியாச்சு.  ஆனாலும் அடிக்கடி  சொல்லிக்கொன்டே இருக்க வேண்டும். மனதில் மந்திரம் பதியும் வரை விடாமல் இரும்பை  நெருப்பில் காய்ச்சி சம்மட்டியால்  அடித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்போது  தான் இரும்பு சொன்னபடி வளையும். நெளியும்.   காயத்ரி மந்த்ர மஹிமையைப் பற்றி சொன்னால் தானே அதன் மஹத்வம் புரியும். எனவே  இப்போதே  ஒரு  குட்டிக்கதை.  நான்  ஏற்கனவே சொன்ன கதை தான். இருந்தாலும் இன்னொரு தடவை படித்தால் காயத்ரி மந்த்ர சக்தி ஞாபகத்துக்கு வருமே.    காயத்ரி மந்த்ரத்தை பற்றி அதன் மகிமை பற்றியெல்லாம் எவ்வளவு தான்  சொன்னாலும்  எழுதினாலும் ஒரு கதை மூலம் அதை வலியுறுத்தினால் கப் என்று பிடித்துக்கொள்ளும். எனவே தான் இந்த குட்டிக் கதை.

ஒரு    சுண்டைக்காய் ராஜ்ஜியம்.   அதற்கு ஒரு சிம்பிள் ராஜா. அவனுக்கு ஒரு அமைதியான மந்திரி. அந்த மந்திரி ஒரு வேதாந்தி. ஏதோ அர்ஜண்டாக கேட்க வேண்டு மென்று ஒரு நாள் ராஜா தன்னுடைய மந்திரி வீட்டுக்குச்  சென்றான். மந்திரி மனைவி ராஜாவை வரவேற்றாள் .

''அவர் காயத்ரி மந்த்ரம் சொல்லிக் கொண்டு தியானத்தில் இருகிறார் இதோ முடித்துவிட்டு வந்துவிடுவார். உட்காருங்கோ  ராஜா''' என்றாள் .   
ராஜா ஊஞ்சலில் ஆடிக்கொண்டு  காத்திருந்த பின்  மந்திரி வந்தார். 

'' நீ  ஏதோ காயத்ரி மந்திரம் என்று ஒன்றை  சொல்லிக்கொண்டிருந்தாயாமே. அதை  எனக்கும் சொல்லிக்  கொடு'' என்றான் ராஜா.

"ராஜா, நான் காயத்ரி மந்திரத்தை  தங்களுக்கு உபதேசிக்கும் அளவுக்கு தகுதியானவனில்லையே. யாராவது  ஒரு நல்ல குரு வினி டமிருந்து உபதேசம் பெறுவது தான் முறை" என்றான்.

ராஜாவுக்கு யாரோ ஒரு குரு கிடைத்து காயத்ரி மந்திர உச்சரிப்பு தெரிந்து கொண்டான். ஒருநாள்  , மந்திரி வீட்டிற்கு வந்தபோது ''மந்திரி, நானும்  காயத்ரி மந்த்ரம் கற்றுக்கொண்டு விட்டேன். உனக்கு  சொல்லிக்  காட்டட்டுமா? என்று  பஜ்ஜி தின்று கொண்டே,  உரத்த குரலில்  ஊஞ்சலில் ஆடிக்கொண்டே ஒப்பித்தான். சரியா? என்றுகேட்டான்  ராஜா.

'' ராஜா, நீங்கள் சொன்ன உச்சரிப்பு சரி ஆனால் இப்படி மந்திரத்தை உச்சரித்தால் பயன் கிடைக்காது''
''ஏன்?'' 
மந்திரி யோசித்தான்.  ராஜாவுக்கு எப்படி புரிய வைப்பது.  ஆ!   ஒரு ஐடியா கிடைத்தது. அருகில் இருந்த தனது சேவகனை கூப்பிட்டான்.
" டேய் ! இந்த ராஜாவை உடனே ஒரு கயிறால் இந்த  தூணில்  கட்டிப் போடு'' என்றான்."
ராஜாவுக்கு ஷாக். ஆனால் சேவகன் துளியும் லட்சியம் செய்யாமல் ராஜாவையே பார்த்துகொண்டு நின்றான்.
"என்னடா நிற்கிறாய், உடனே சொன்னதை செய், ராஜாவை கம்பத்தில் கட்டு" என்று உரத்த குரலில் மந்திரி கட்டளையிட்டான்.
''உஹும் !! சேவகன் அசையவே இல்லை. ராஜாவுக்கு ஷாக்.  பயம். கோபம்.  இந்த  கொடியவன்  மந்திரி நம்மைக் 
 கொன்று விட்டு ராஜ்யத்தை எடுத்துக்கொள்ள   ஏதோ  சதி செய்கிறானோ என்று மந்திரி மீது சந்தேகம் வந்தது
''அடேய் ! சேவகா, இன்னும் ஒரு நிமிடத்தில் இந்த மந்திரியை கை கால் கட்டி அரண்மனைக்கு இழுத்து வா.  இவனுக்கு  எல்லோர் முன்னிலையிலும் தக்க தண்டனை வழங்குகிறேன்" என்றான்  ராஜா.   சேவகன் புலி போல் பாய்ந்து மந்திரியைக்  கட்ட விரைந்தான். அப்போது மந்திரி சிரிக்கவே ராஜாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

'' என்ன சிரிக்கிறாய். சொல் இல்லையேல் உன் கழுத்தை இந்த வாளால் இப்போதே சீவிவிடுவேன்''
என்று  ராஜா மந்திரியிடம்  சொன்னான்.

"ராஜாவே! நான் இதைத் தான்   நான் உங்களுக்கு விளக்கிக்  கொண்டிருந்தேன். " கட்டளை ஒன்று தான். நான் சொன்னால் கேட்காத சேவகன் நீங்கள் சொன்ன அடுத்த கணம் அதை நிறைவேற்ற வில்லையா.
காயத்ரி மந்த்ரமும் வேதங்கள் சொல்லும் முறையாக உச்சரித்தால் தான் பலன் கொடுக்கும்''   என்றான்  மந்திரி.   ராஜா  மந்திரங்களை அஸ்ரத்தையுடன் சொல்வது பலனளிக்காது என்று நம்மைப்போல்  புரிந்துகொண்டான்.   

உலகில் நாம் காண்பது, கேட்பது, அறிவது எல்லாமே  விஞ்ஞானத்தில் அடக்கம் என்பது  சரியில்லை. விஞ்ஞானம் அறிவின் வளர்ச்சி. இன்னும் முழுமை அடையாத   ஒரு விஷயம்.. ''பால் வீதி, MILKY WAY  ஆகாச கங்கா என்றெல்லாம்  லக்ஷோப லக்ஷம்  நட்சத்ரங்கள்  கண்ணுக்குத் தெரியாதவை,  பார்க்கவே பல நூற்றாண்டுகள் ஆகக்  கூடியவை   உண்டு.  சூரியனையே விழுங்கும் அளவு பெரியவை. பார்ப்பதற்கு மூர்த்தி சிறியதாக  தோன்றும்.  சந்திரன் பூமியை சுற்றுகிறான். பூமி  சந்திரனோடு சேர்ந்து சூரியனை சுற்றுகிறது என்பது நமது சூரிய மண்டலம்.   எல்லா கோளங்களும்   சூரியனைச் சுற்றுபவை.   
ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன். பக்கத்தில் சுவற்றை, தூணை அல்லது யாராவது ஒரு தாத்தாவை கெட்டியாகப்  பிடித்துக் கொள்ளுங்கள்.  சூரியன் தனது எல்லா பரிவாரத்தோடும், எல்லா கிரஹங்களுடனும் நக்ஷத்ரங்களுடனும்  ஒரு  ரவுண்ட் அடிப்பதற்கு உண்டான காலம் 22.5. கோடி வருஷங்கள்!! இத்தனைக்கும்  அவை ஊர்ந்து போகும் வஸ்துக்களல்ல. கிரஹங்கள் எல்லாமே  கிட்டத்தட்ட   ஒரு நொடிக்கு   20,000 மைல் வேகம்  'ஓ' வென்ற பேரிரைச்சலோடு  நகர்வன. கண்ணைமூடி யோசித்துப் பார்த்தால்  பயத்தில் இதயம் நின்றுவிடும்.

பூமி மேல் வசிக்கும் நாமும் பூமியோடு சேர்ந்து வேகமாகத்  தான்  நகர்ந்து கொண்டிருக்கிறோம்.  வேகமான ரயிலிலிருந்தோ,  ஆகாய விமானத்தில்  இருந்தோ   பார்க்கும்போது  வெளியே   எல்லாமே  மெதுவாக நகர்வது போல், அசையாமல் நிற்பது போல்  தோன்றுகிறதே  அது போல்  நாம்  நமது வீட்டில் அசைவற்று இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  எல்லா கிரஹங்களும் சூரியனையே தான் சுற்றுகிறது. இது புரிந்தால்  காயத்ரி மந்திரம் புரிந்து கொள்ளலாம்.
''ஓம் பூர் புவ ஸ்வஹ:''
'பூர்''  என்றால் பூலோகம்,  பூமி.  'புவ' என்றால்  சூரிய மண்டல  கிரஹங்கள்.'ஸ்வஹ' என்பது  இந்த  பிரபஞ்சம்:    நமது தலைக்கு மேலே 'லொட லொட' என்ற சப்தத்தோடு சுற்றும்  பழைய  வோல்டாஸ்  மின்விசிறி சுற்றும் வேகமே  ஒரு  நிமிஷத்துக்கு  900 சுற்று  Rpm. அது போடும் சப்தமே  அடுத்த வீட்டுக்காரன் சண்டைக்கு  வரும் அளவுக்கு இருக்கிறதே. நொடிக்கு  20, 000 மைல் . கி.மீ. அல்ல என்றால் ?? அப்படி ஓடும் கிரஹங்களின் சப்தத்தை த் தான்   ''ஓம்''  என்று  இந்த காயத்ரி மந்திரம் சொல்கிறது. இதை முதலில் கேட்டறிந்தவர்  விஸ்வாமித்ரர்.  ஏன் மற்றவர்கள் செவிடா? என்று கேட்பது காதில் விழுகிறது.  ஒரு  200 அடி  தூரத்தில்  யாரோ  'டேய் சிவா'' என்று  கத்தினால் கூட காதில்  விழுவதில்லை.    எத்தனையோ சைபர்கள்  கொண்ட  நம்பர் மைல்களுக்கு அப்பால் அதே வேகத்தில் ஓடும் சப்தமா காதில் விழும்?
எப்படி டெலெஸ்கோப்பில் சாதாரண கண்  பார்க்கமுடியாததை  பார்க்க  முடிகிறதோ அப்படிபட்டது நுட்பமானது   விஸ்வாமித்ரரின்  தவ வலிமை. அதனால்   அவர் அந்த  'ஓம்'    என்ற பெரும் சப்தத்தை தியானம் செய்து கேட்டு மற்ற ரிஷிகளுக்கு  சொன்னவர். அது  தான் கடவுளின்   பெயர் என்று ரிஷிகள்  ஒப்புக்கொண்டார்கள். கடவுளை ஒலி வடிவாக கண்டவர் விஸ்வாமித்ரர்.. கீதை கூட   ''ஓம்  இதி  ஏகாக்ஷரம் ப்ரம்மம்''  என்கிறதே.  சில  ஜீவன் முக்தர்கள் சமாதியில் எப்போதும்  ''ஓம்''சப்தம் கேட்கும். 'ஓம்'   என்பதை ப்ரணவம் என்போம். சக்தியின் ஒலி.                                                                    

'தத்  ஸவிதுர்  வரேண்யம்''    
தத்:  அது  (பகவான்)  ஸவிதுர் :  சூரியன் .  வரேண்யம்:  என்றால்  பூஜிக்கத்  தக்கது.   ஒருவர் உருவம் தெரிந்தால், பெயரும் தெரிந்தால் அவரை எங்கும் கண்டுபிடித்துவிடலாம் அல்லவா.    குட்டை  ஆள்   ரெட்டை நாடி,  ஒருகால்  ஊனம் கொட்டையூர்  குப்புஸ்வாமி,  சுண்டக்காமுத்தூர்  கோவிந்தன்,  என்றால் ஒரு வழியாக  சுண்டக்காமுத்தூரில் போய் அவனைத் தேடி கண்டுபிடிக்கலாம்.
விஸ்வாமித்ரர்  ப்ரணவ சப்தத்தை கண்டுபிடித்து,  அந்த மந்த்ரத்தை , காயத்ரி மந்த்ரத்தை உச்சரித்து  பகவானை அடையும் வழி காட்டி விட்டார்.  சூத்ரம் தெரிந்துவிட்டால்  கணக்கை போட்டு முடிக்கலாம் அல்லவா.  சூரியன்,   பிரபஞ்சத்தை ஒளியாக காட்டிவிட்டார்.
''பர்கோ  தேவஸ்ய தீமஹி''
பர்கோ:  ஒளி. தீபம்,   தேவஸ்ய:  தெய்வங்கள், தீமஹி:  த்யானம் செய் .  
கண்ணுக்கு தெரியும்  சூரியனைப்  பிடித்துக் கொள் . அதன் மூலம்  உருவமற்றவனைப்  பிடி. அவனைக் கட்டும்  கயிறாக  'ஓம்'   என்ற மந்த்
ரத்தை விடாமல் சொல்.  இது மட்டும் போதாது என்பது தான் ரஹஸ்யம்.  மனது என்று நமக்குள் இருக்கிறதே  அதை முதலில் கட்டி அசையாமல் பண்ண வேண்டும்.  அதை நிலை நிறுத்தி  ஓம்  என்ற த்யானத்தில்  ஈடுபட்டு மனதில் சூரியன்  மற்றும் பிரபஞ்ச ஒளியை தேடினால்  பகவானைப்  பிடித்தாகி விட்டது.
''தியோ யோ ந  ப்ரசோதயாத்''
தியோ:  புத்தி,  யோ  : யார் , எவர்?,  நா:  நாம் எல்லாரும்,   ப்ரசோதயாத்:   சரியான வழியில் அழைத்துச் செல்லப்படுவோம்.
'பகவானே  என் புத்தியை நிலை நிறுத்தி சரியான வழியில் என்னை  நடத்திச்செல்'.

இந்த  பூமி,    சூரிய மண்டல  கிரஹங்கள்  அண்ட பேரண்டம் எல்லாமே தலை தெறிக்கும் வேகத்தில் ஓடுகிறது.  அவற்றின் சப்தம்  'ஓம்' என்று கடவுள் பெயரைச்  சொல்கிறது.   அந்த கடவுள் தான்  எத்தனையோ சூரியன்களின்  ஒளி,   அவனே  வணங்கத்தக்கவன்.  ஆகவே  நாமெல்லோரும்   மனதை, புத்தியை  நிலைநிறுத்தி அவனையே  தியானித்து  ஒளியாகக்  கண்டு  'ஓம்'  என்ற அவன் நாமத்தை விடாமல் உச்சரிக்க  அவனே  வழிகாட்ட வேண்டும்.

சுருக்கமாக  சொன்னால்  இது தான் காயத்ரி மந்த்ர உள்ளர்த்தம்.  மஹான்கள் பெரியவர்கள், யோகிகள், ரிஷிகள், பண்டிதர்கள்  வித விதமாக  அர்த்தம் சொல்வார்கள். அடியேனுக்கு தோன்றியதை நான் எப்படி புரிந்து கொண்டேனோ அப்படி சொல்லிவிட்டேன். மேற்கொண்டு காயத்ரி மந்த்ர சக்தியை பற்றி தனியாக இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

sivan jaykay

unread,
Sep 3, 2023, 8:22:49 PM9/3/23
to amrith...@googlegroups.com

உலகத்திலேயே  பழைய  சிவன்.  -     நங்கநல்லூர்  J K  SIVAN 

நமது தேசம் ஒன்றில் தான் உலகத்தில் மற்ற இடங்களில் இருப்பதை விட  அதிகமான  கோவில்கள்  அதுவும்  பெரும்பாலானவை தமிழகத்தில், முக்கியமாக  தென்னிந்தியாவில் உள்ள கோவில்களில்  அதிகம் காணப்படுவது நமது தமிழகத்தில் தான். என்ன பிரயோஜனம்,   எத்தனையோ புண்ய புருஷர்கள் மகாராஜாக்கள்  பிரபுக்கள் கட்டிய  இந்த ஆலயங்கள்  கண்ணில் ரத்தம் வரும் அளவுக்கு , பாதிக்கு மேல்  கவனிப்பாரற்று கிடக்கும் நிலைக்கு நாம்  தான் காரணம்.  இதற்கு நாம் தான் பொறுப்பு.  பொறுப்பற்றவர் கையில்   பொறுப்பை  ஒப்படைக்கலாமா?

மூன்று சிவலிங்கங்கள்  கற்சிலை  சிற்ப வரலாற்றில் காலத்தால்   பழமையானவை.  இவற்றுள் ஒன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம்,  ரேணிகுண்டா – பாப்பாநாயுடுபேட் அருகே  உள்ள  குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவிலின் கருவறையில் நிற்கும்  சிவன்-சிவலிங்கம்.  சாதவாகனர் காலத்தைச் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச்) சேர்ந்த  விக்ரஹம்.  
 சிகப்பு  ப்ரொவ்ன்  கலந்த   வழு வழுப்பான  வினோத   மணல்-கல்லில் செதுக்கப்பட்டது.   இந்தியாவிலேயே ரொம்ப  ரொம்ப பழைய  சிவாலயம் இது.   இன்று வரை வழிபாட்டில் இருந்துவரும் பழங்கால சிவலிங்கமும் இது தான். மற்ற இரண்டு சிவலிங்கங்களும்  குஷானர் காலத்தைச் (கி.பி. முதலாம் நூற்றாண்டைச்) சேர்ந்தனவாகும். வேறெங்கோ இருப்பவை.     இது சிவப்புக் கல்லால் ஆனது.

ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், எர்பேடு மண்டலத்தில் உள்ள இந்த  குடிமல்லம் (గుడిమల్లం) ஓர்  விசேஷமான  கிராமம்.  இராயலசீமா பகுதியில் அமைந்துள்ளது.  பாப்பாநாயுடு பேட்டை யிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், ஏர்பேடு கிராமத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலும், ரேணிகுண்டாவிலிருந்து 8.3 கி.மீ. தொலைவிலும், புத்தூரிலிருந்து 17.8 கி.மீ. தொலைவிலும், திருச்சானூர் 18.9 கி.மீ. தொலைவிலும், நாரயணவனத்திலிருந்து 20.1 கி.மீ. தொலைவிலும், திருப்பதியிலிருந்து 20.8 கி.மீ. தொலைவிலும், காளஹஸ்தியிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும், திருத்தணியிலிருந்து 54.4 கி.மீ. தொலைவிலும், சித்தூரிலிருந்து 77 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 137 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

திருப்பதியிலிருந்து எப்போதாவது இவ்வூருக்குப் பஸ்கள் ஓடுகிறது. ரேணிகுண்டா இரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ ரிக்ஷா அமர்த்திக் கொள்ளலாம். சுவர்ணமுகி நதியின் கரைவழியாக வளைந்து நெளிந்து செல்லும் மண் சாலை வழியே பயணம் செய்தால் வரண்ட சுவர்ணமுகி நதிப் படுகை, பசுமை நிறைந்த வயல்கள், சிறிய வீடுகள் அடங்கிய கிராமங்கள் வழியே சென்றால் குடிமல்லம் கிராமத்தை அடையலாம். இக்கோவில் வயல்வெளிகளின் நடுவே அமைந்துள்ளது. கோவில் நுழைவாயில் மொட்டைக் கோபுரமாகக் காணப்படுகிறது. எப்போதாவது வரும் பக்தர்களைத் தவிர கோவில் ஆளரவமற்றுக் காணப்படுகிறது.

பழங்காலத்துக் கோவிலான பரமேஸ்வரர் (சிவன்) கோவில் குடிமல்லத்தில் அமைந்துள்ளதால், இவ்வூர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராக விளங்குகிறது. 1954 ஆம் ஆண்டு முதல் இக்கோவில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் பராமரிப்பில் உள்ளது.  இக்கோவிலின் மூலவரான பரசுராமேஸ்வரர் உலகிலேயே தொடர்ந்து வழிபடப்பட்டுவரும்  சிவலிங்கம் என்றும் பரசுரமேஸ்வரர் கோவில் 2200 ஆண்டுகள் பழையானது என்றும் கற்றறிந்த வரலாற்று அறிஞர்கள், சில சான்றுகளின் அடிப்படையில், கருதுகிறார்கள்.  
 1903ல்   கண்டுபிடித்து புனருத்தாரணம் பண்ணியவர்  புதை பொருளாராய்ச்சி நிபுணர்  ஸ்ரீ  T A கோபிநாத். பீடத்தில் நிற்கும் இந்த லிங்கம்  உலகத்திலேயே  ரெண்டாவது பழமையான லிங்கம் என்கிறார்கள்.  லிங்கத்தை வழிபட்டவர்  பரசுராமர்  என்பதால் அவர் பெயரோடு கலந்த ஈஸ்வரன்.  நிற்கும் சிவன்  ஒரு  வேடனைப் போல் உள்ளார்.  கையில்   மான், மழு,. கமண்டலம்.   ஒரு கையில்  கோடாலி.  பரசு என்று சமஸ்க்ரிதத்தில்  சொல்வார்களே  அது.  அதனால் தான்  அதை  ஆயுதமாக கொண்ட  ஒரு அவதார ரிஷிக்கு  பரசுராமன் என்று பெயர்.   

எப்போது தோன்றிய லிங்கம் என்று இன்னும் விவரம் கிடையாது.  சதுர  ஆவுடையார், பிண்டிக எனப்படுவது. லிங்கம்  ஏழு பட்டை கொண்ட பாண லிங்கம்.  நிற்கும் சிவன்  செதுக்கப்பட்டுள்ளது. முயலகன் மேல் நிற்பது போன்ற  அமைப்பு.  ஒருவேளை இது பல்லவர்களின் கை பட்ட  சிறந்த வேலைப்பாடாக இருக்குமோ என்று ஒரு  எண்ணம்.  இந்த லிங்கத்தை சுற்றி கட்டப்பட்டுள்ள கோவில் அப்புறம் வந்தது.  முதலில் வெறும் சிவலிங்கம் மட்டும் வெட்டவெளியில்  மேலே குறையில்லாமல்  நின்று கொண்டிருந்ததாம்.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள மூலவர் விமானம் தூங்கானை மாடம் என்னும் கஜபிருஷ்ட / ஹஸ்திபிருஷ்ட விமான வகையைச் சேர்ந்தது. கஜபிருஷ்டம், ஹஸ்திபிருஷ்டம் ஆகிய இரண்டு சம்ஸ்கிருதச் சொற்களும் யானையின் பின்புறம் போன்ற அமைப்பினைக் குறிக்கின்றன. அதாவது விமானத்தின் பின்புறம் அரைவட்ட வடிவில் அமைந்துள்ளது. இந்த விமானச் சுவற்றின் நடுவில் வெற்றிடம் உள்ளது.

பல நூறு ஆண்டுகள் பழைமையான இந்த விமானத்தின் பிரஸ்தாரம், சிகரம், கிரீவம் (கண்டம்) மற்றும் ஸ்தூபி ஆகிய மேல்கட்டுமான (organs of super-structure) உறுப்புகள் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டுச் சுதை உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விமானம் அதிஷ்டானத்திலிருந்து பிரஸ்தாரம் வரை கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது .  பிரதிவரிபந்த வகையைச் சார்ந்த இந்த விமானத்தின் தளத்தை உபானம், ஜகதி, உருள் குமுதம் ஆகிய   ஆகம  உறுப்புகள் கொண்டவை.  விமானத்தின் வெளிப்புறச் சுவர்களை அரைத் தூண்களின் உதவி கொண்டு பத்தி பத்தியாக  பிரித்திருக்கிறது .சுவரின் பத்திகளின் தெற்கு, மேற்கு, வடக்குத் திசைகளில் அமைக்கப்பட்ட 

இரு கால்களையும் பரப்பிக் கால்களைப் பலமாக ஊன்றியவாறு நின்ற நிலையில் (sthanaka posture) காணப்படும்  சிவன் விக்ரஹம் ஒரு  வேடன் மாதிரி காணப்படும். யையும் பரப்புகிறது. பாதங்கள்   ஒரு  குள்ள யட்சன், முயலகனோ?  அவன்  தோள்களை  அழுத்துகிறது. சாந்தமான  சலனமற்ற   பரசுராமேஸ்வரன் முகம். றது.  ரெண்டு கைகள்  கீழே  தொங்குகிறது. 
காதில் பெரிய குண்டலங்கள். கழுத்தில்  ஆபரணம். கைகளில்  ஐந்து கங்கணம்.  ஆபரணங்கள் செதுக்கப்பட்டுள்ளது.  இடையில் வஸ்திரம். அதன் மீ  வஸ்திர மேகலா.  நாம் பெல்ட் BELT   போட்டுக்கொள்வது  மாதிரி.    தலையில் தலைப்பாகை  மாதிரி ஜடாமுடி  சுற்றி மீதி நீண்ட சுருள் சுருளான சிகை, முடி பின்னால் தொங்குகிறதா?  சிற்பி என்ன அழகாக கற்பனையில்  பண்ணி இருக்கிறான்?  தடித்த உதடுகள் ஒரு தனி அழகு.  கழுத்தில் சரபளி (sarapali),  விலாவில் உதரபந்தம் (udarabandha), தோள்களில் தோள்வளை (tholvalai), மேற்கைகளில் கேயூரம் (keyura), முழங்கையில் கங்கணம் (kangana),  மணிக்கட்டில் கடக வளை (kataka valai), வளையல்கள்,   இடுப்பைச் சுற்றி மடிப்புகளுடன் (fleets) கூடிய மெல்லிய இடுப்பு ஆடை, இடுப்பில் ஆடையை இறுக்கிக் கட்டும் கடிபந்தம் (katibandha) ஆகிய அணிகலன்களுடன் காட்சி தருகிறார். வேடனாக இருப்பதால்  பரசுராமேஸ்வரனுக்கு  பூணலைக் காணோம்.   அகழ்வாராய்ச்சியில்   இங்கே   2- 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கருப்பு மற்றும் சிவப்பு நிறப் பானை ஓடுகள், பெரிய  செங்கற்கள் (42 x 21 x 6 cm)  கிடைத்தது.  இது  இந்தியாவின் மிகப் பழமையான சிவலிங்கம் என்று  முடிவு. கோவிலைச் சுற்றி மதிற்சுவர்கள்.  ராஜ கோபுரம் இல்லை.  அம்பாள்  ஆனந்தவல்லி (அம்மாவரு) க்கு  தனிச் சன்னதி கோவிலில் வடமேற்கு மூலையில்  உள்ளது..  வள்ளி தேவானை சமேத சுப்பிரமணியன்,  சூர்யநாராயணன் ஆகியாருக்கு தனி சந்நிதிகள். 

 பரசுராமர்  அப்பா  ஜமதக்னி முனிவர்  கட்டளைப்படி  அம்மா ரேணுகாவின்  தலையை  கோடாலியால் வெட்டிய வெட்டிய பாபத்துக்கு   பிராயச்சித்தமாக  இந்த  குடிமல்லம் வந்து சிவலிங்கத்தைத் தேடிக் கண்டுபிடித்து  நமஸ்கரித்து அர்ச்சனைகள் ல்பண்ணி, தவம் இருந்ததாக ஐதீகம். கோவில் அருகே  பரசுராமர் வெட்டிய குளம் இருக்கிறது.   தினமும் புனிதமான ஒற்றை மலர்  குளத்தில் மலர்ந்தது. அதைப்  பறித்துக் குடிமல்லம் சிவலிங்கத்தின் பாதத்தில் வைப்பார். 

ஒரு விசேஷம்.   அறுபது வருஷத்துக்கு ஒரு தடவை   கர்பகிரஹத்தில் வெள்ளம் பீரிட்டு வருமாம்.  நீர்மட்டம் உயர்ந்து  பாண  லிங்கம் மறைந்துவிடும்.  வெள்ளம்சீக்கிரம் வடியும். கடைசியாக   2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  4 ஆம் தேதி  வெள்ளம் லிங்கத்தை  சில  நிமிஷங்கள் மூடியது. அதற்கு முன்னால் 1945ல்  வெள்ளம் லிங்கத்தை  மூடியபோது பார்த்தவர்கள் ஊரில்  இன்னும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.  இந்த வெள்ளம்  காசி கங்கைஜலம் என்கிறார்கள். 

 ஜூன் 20 அல்லது 21 (உத்தராயணம்); டிசம்பர் 21 அல்லது 22 (தட்சிணாயணம்) ஆகிய தேதிகளில் மட்டும் மீண்டும் மீண்டும் நடக்கும் ஒரு  விசேஷம்  என்ன தெரியுமா? சூரிய உதயத்தின் போது சூரியனின் ஒளிக்கதிர்கள்  கர்பகிரஹம் எதிரே உள்ள சாளரம்  வழியாகப் புகுந்து சிவலிங்கத்தின் நெற்றியின் மீது விழுகிறது. 
கோவிலில்  25  கல்வெட்டுகள் உள்ளன.  பல்லவர்கள், கங்கப் பல்லவர்கள், பாணர்கள், மற்றும் சோழ மன்னர்கள் அளித்த சாசுவதமான  தானம் தர்மம் பற்றி சொல்கிறது.  சிவனை இந்த கல்வெட்டுகள் பரசிராமேசுரமுடைய நாயனார் என்றும் திருவேங்கடக் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவிற்பெரும்பெட்டு ஆளுடையார் ஸ்ரீ பரமேசுரமுடையர்    என்றும் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பெரும்பாணப்பாடி திருவேங்கடக் கோட்டத்து திருவிற்பெரும்பெட்டு மகாதேவர் பரசுராமேசுரமுடையர் என்று நீளமாக  சொல்கிறது.  திருப்பி சொன்னாள் வாய் வலிக்கும். குடிமல்லம் என்ற  பேரைக் காணோம்.  விப்ரபீடம் (பிராமண அக்ராகரம்) என்று  தான் சொல்கிறது. 


sivan jaykay

unread,
Sep 3, 2023, 8:22:57 PM9/3/23
to amrith...@googlegroups.com
ஸூர் ஸாகரம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

கண்ணா  நீ  ஒரு ரஸவாதி. 

கிருஷ்ணா,  நீ  எல்லை இல்லாதவன், உருவமில்லாதவன், உன்னை பல வித உருவத்தில் கண்டு மகிழவும் செய்கிறாய்.
குணங்கள் இல்லாதவன், நற்குணத்தின் பிறப்பிடம் என்று மாற்றி மாற்றி சொல்கிறோமே.  அடையமுடியாதவன், என்றும்  எளிதில் அன்பெனும் மலையாக என் கையில்  அகப்படுபவனாகவும் உள்ளவனே. உன்னை, உன் லீலைகளைப்   பாடுவதை விட்டு இந்த ஸூர் தாஸூக்கு  வேறென்ன வேலை?  என் தவறுகளை, குறைகளைப்  பார்க்காதே, கண்டு கொள்ளாதே, சமதர்ஷிணி  என்ற பெயர் உனக்கு உண்டல்லவா?  என் குறைகளிலும்  நிறைவைப் பார்த்து என்னை உய்விக்க வேண்டுகிறேன். 

இதோ பார்  ரெண்டு துண்டு  உலோகங்கள். ஒன்றைப்  பூஜை அறையில் தெய்வமாகவும், இன்னொன்றை   கசாப்புக்கு கடையில்  அரிவாளாக , எலும்பு தசையை வெட்டும் கருவியாகவும்  பயன்படுகிறது.   ரசவாதக் கல்  ரெண்டின் மேலேயும் பட்டால் ரெண்டு உலோகங்களும்  தங்கமாக மாறுகிறதே . இது உசத்தி, இது மட்டம் என்று பேதம் பார்க்கவில்லையே அந்த ரசவாதக் கல். ஆடுவெட்டும்  கத்தியும்  பஞ்சலோக  விகிரஹமும் ரெண்டுமே  சொக்கத்  தங்கமாக  வில்லையா?

அதோ  ஒரு புனித  கங்கை நதி... இங்கே பார்  ஒரு சாக்கடை நீர்.   ஒன்று புனித தீர்த்தம். இன்னொன்று அருவருப்பான  ஜலம் ரெண்டுமே  ஓடி எங்கோ  சமுத்திரத்தில் கலக்கிறது.  சமுத்திரம்  ரெண்டையும் ஒன்றாகவே ஏற்று  அவற்றின் பழைய அடையாளத்தை மாற்றி ரெண்டுமே  இப்போது சமுத்திரம் என்ற ஒரே பெயரோடு ஒன்றாகி  விடவில்லையா? ஆகவே  நீ ப்ரம்மம், நான் மாயா.  இந்த ஸூர் தாஸ்   தானும் கெட்டு , பிறரையும் கெடுப்பவனாக இருந்தாலும் அவனைக் காப்பாற்றுவது, அவனை சீராக்குவது உன் வேலையல்லவா? நீ  அப்படி செய்யவில்லை என்றால் உனக்கு தீன ரக்ஷகன், கருணாசாகரன் என்ற பெயர் எப்படி பொருந்தும், சொல் கிருஷ்ணா?



The one without an outline,
without any attributes, or characteristics.
In every way,considering it,inaccessible.
Sur decides to sing of Incarnate God (Had)

And his various lilas.O my Master,
please do not take into consideration
my faults and deficiencies. Equal Eyed is your name,
So please save me.
One piece of iron is kept  in the house of worship, the other
is found at the butcher’s.
The paras stone does not differentiate changing both into gold, absolutely pure.
One is called a river,the other, filled with dirty water
is a gutter.When they both flow outand meet Ganga, they assume
the same name, the same colour.
You are Brahman   and the body is maya.  
Surdas has polluted his own, thoroughly.
Either you save him,
or you lose your vow of always helping your devotees.

sivan jaykay

unread,
Sep 3, 2023, 8:22:58 PM9/3/23
to amrith...@googlegroups.com
ஸ்ரீமத் பாகவதம்  -  நங்கநல்லூர்   J K   SIVAN 

அகாசுரன் தலை வெடித்தது.  

''பரீக்ஷித்,   உனக்கு  ஸ்ரீ கிருஷ்ணன் பால்ய லீலைகளை சொல்லும்போது எனக்கு எவ்வளவு உற்சாகமாக  இருக்கிறது தெரியுமா. நானே  அங்கே மீண்டும் க்ரிஷ்ணனோடு  சேர்ந்து விளையாடியது போல் இருக்கிறது. ஒருவேளை கோகுலத்தில்,  பிருந்தாவனத்தில்,  கிருஷ்ணனின்   கோப குல  நண்பர்களில் நானும் ஒருவனாக  இருந்திருப்பேனோ, அதனால் தான் அந்த அனுபவத்தை  ருசி கண்டதினால் மீண்டும் மீண்டும் மனது அதைப் பெற  விழைகிறதோ?'' என்று தோன்றுகிறது. 

'சுவாமி,   எனக்கும் ரெட்டிப்பு சந்தோஷம். முதலில் கிருஷ்ணன் சரித்திரத்தின்  சுகம். ரெண்டாவது அதை உங்கள் வாயால் ஸ்வானுபவத்தோடு  சேர்த்து கேட்கும்போது கிடைக்கிற  சுகம்.  உங்கள் பெயரே  சுகாசார்யர் அல்லவா?''

''பரீக்ஷித்,  கேள்  சொல்கிறேன்.   கிருஷ்ணன்  இப்போது  கொஞ்சம் வளர்ந்து விட்டான். நந்தகோபனுக்கு துணையாக  ஒத்தாசையாக  அவனும்  கன்றுக்   குட்டிகளை வயல்களுக்கு கூட்டிக்கொண்டு போய்  மேயவிட்டு, குளிப்பாட்டி,  அவற்றோடு விளையாடிவிட்டு சாயந்திரம் வீடு திரும்புவான். அவனுடைய நண்பர்களும் கூடவே  இருப்பார்கள்.  வீட்டிலிருந்து ஒவ்வொருவரும் இனிய சுவையான  உணவை பொட்டலங்கள் கொண்டுவருவார்கள்,  ஏக குஷியோடு எல்லோரும் அதை  யெல்லாம்  கலந்து ஒருவருடையதை இன்னொருவர் சுவை பார்த்து  சேர்ந்து உண்பார்கள்.  எல்லார் வீட்டிலுமே  அற்புதமான  தின்பண்டங்கள், உணவு வகைகளை செய்து கொடுப்பார்கள். காரணம். கிருஷ்ணன் அதையெல்லாம் தானும் கொஞ்சம் உண்பான் என்பதால். 

ஒருநாள் வழக்கம்போல  காலையிலேயே  மேய்ச்சல் காட்டுக்கு கன்றுக்குட்டிகளோடு   கிருஷ்ணனும் நண்பர்களும் சென்றுவிட்டார்கள்.  

வழக்கம் போல  கிருஷ்ணன் ஒரு சங்கை ஊதினான். அது அந்த கிராமத்தில் எல்லா வீட்டுக்கும் கேட்கும்.  அதாவது ' கிருஷ்ணன் ரெடி, கிளம்பி விட்டான்' என்று அர்த்தம். நண்பர்கள் உடனே  கிளம்பிவிடுவார்கள். அந்த சப்தத் துக்காக கன்றுக்குட்டிகள் எல்லார் வீட்டிலும்  ஆவலாக   கேட்க  காத்திருக்கும். துள்ளிக்  குதித்துக்கொண்டு கிளம்பிவிடும்.  வ்ரஜபூமியில் ஆயிரக்கணக்கான  கோப  சிறுவர்கள். கணக்கற்ற  பசுக்கள், கன்றுக்குட்டிகள். ஒவ்வொருவர் தோளிலும்  ஒரு பெரிய சோற்று மூட்டை தொங்கும்.     புல்லாங்குழல்,  ஊதல்கள் , சங்குகள், வாத்தியங்கள், டமாரங்கள் மாடு பேய்க்கும் கொம்புகள் எல்லாம் வாசிப்பார்கள்.  எல்லோருமே அழகான சிறுவர்கள்.  நந்தகோப  மஹாராஜா வீட்டில் எல்லோரைக்  காட்டிலும் அதிக கணக்கற்ற  செல்வம். எல்லாம் பசுக்கள் கன்றுக்குட்டிகள்.  கிருஷ்ணன்  எல்லோருக்கும் செல்லம்.  மஹா  அழகன். விளையாட்டுப்  பிள்ளைகள்  க்ரிஷ்ணனைப் போலவே துரு துருவென்று ஓடுவார்கள், ஆடுவார்கள்,    ஒருவர்  சாப்பாட்டு மூட்டையை இன்னொருவர்  நைசாக  திருடி  உள்ளே இருப்பதைத் திருடி   சாப்பிட்டுவிடுவார்கள் . விஷமக்காரர்கள். 

 கிருஷ்ணன் புதுப் புது விளையாட்டுகளை சொல்லிக் கொடுப்பவன்.   ' அலகிலா விளையாட்டுடையான்'  அல்லவா?  கிருஷ்ணன் வேகமாக ஓடுவான். மற்றவர்கள் அவனை ஓடிச் சென்று தொடவேண்டும்.    யார் முதலில் தொடுவது என்று போட்டி.  இந்த பையன்களில்  சிலர்  புல்லாங்குழல், சிலர்  ஊதல்கள் , சிலர்  காச் மூச் என்று கத்துபவர்கள்,  சிலர்  பறவைகள் போல் ஓசை எழுப்புபவர்கள் சிலர்  பறவைகளின் நிழலை பிடிக்கிறேன் என்று ஓடுபவர்கள்,  சிலர்  தாவியும் குதித்தும்  வேடிக்கை காட்டுபவர்கள்.  தவளை மாதிரி தத்தி தத்தி நகர்பவர்கள்,  குரங்கு மாதிரி மரங்களில் தாவி ஏறி அந்தர்பல்டி அடிப்பவர்கள். மொத்தத்தில் சந்தோஷமான ஒரு கூட்டம். மாடுகளை, கன்றுகளை மேயவிட்டு இவர்கள் அடிக்கும்  கும்மாளம் சொல்லி முடியாது. ஒருவன் கிருஷ்ணனின் தோள்  மீது இரு கால்களை போட்டுக்கொண்டு ஜம்மென்று வட்கார்ந்து கொண்டு   ''என்னைத்  தூக்கிக்கொண்டு ஓடு கிருஷ்ணா''    என்று கட்டளையிட்டான். கிருஷ்ணன் ஓடினான்.  என்ன பாக்யம் செய்த சிறுவன் அந்த பையன்!

கிருஷ்ணனின் எண்ணம் வேறு. அவன் இன்று எதிர்பார்த்தது வேறு. அது நிறைவேறப்போகிறது. வேறு யாருக்கும் அது தெரியாது. ஒவ்வொரு நாளும் யாராவது ஒரு  கொடிய அரக்கன் கிருஷ்ணனைக் கொல்ல  கம்சனால் அனுப்பப்பட்டு  விளக்கில் வந்து விழும்  விட்டிலாக  அப்படிப்பட்ட அரக்கன் மாய்வது வழக்கமாகிவிட்டது.

முதலில் கம்சனால் அனுப்பப்பட்டு ஒரு தாயாக வந்த கொடிய பேய் பூதனை.  அவளது கோர  மறைவுக்குப் பிறகு அவள் சகோதரன் பகாசுரன் கொல்லப்பட்டான்.  ஆகவே  மற்றொரு சகோதரன் அகாசுரன்   எப்படியாவது கிருஷ்ணனைக்  கொன்று பழி தீர்க்க முயன்றான். ஆகவே  பிருந்தாவனத்தில்  கிருஷ்ணன் நண்பர்களோடு விளையாடும் இந்த  நேரம் சரியானது என்று முடிவெடுத்து வந்துவிட்டான்.   பல இரவுகள் யோசித்து  ஒரு பெரிய  மலைப்பாம்பு உருவம் எடுத்து பிருந்தாவனத்தில் அகாசுரன் காத்திருந்தான். ஆவென்று  வாய் திறந்து ஒரு  மலைக்குகை போல்  அசையாது நின்றான். 

கீழ் உதடு  மண்ணைத்  தொட, மேலுதடு விண்ணைத்தொட  அகண்ட வாயோடு நின்றான் அகாசுரன். மூச்சு அனலாக  வீசியது. 

''டேய்  இதோ பாருங்கடா,  ஒரு புது  மலைக் குகை. நாம் இதுவரை பார்த்ததே இல்லையே இதை'' அருகில்  சென்றார்கள்  பையன்கள். 
''குகை இல்லை, இது ஒரு பெரிய  பாம்பு'' என்றான் ஒருவன்.
''இங்கே  பாம்பு எதுவும் இல்லை, பாம்பு மாதிரி தோன்றும் கல் குகை தான்.'' வாருங்கள் உள்ளே சென்று பார்ப்போம்''  சில  பையன்கள் அருகில் வந்துவிட்டார்கள். 

''கிருஷ்ணா,  இது நிஜமா பொம்மையா, நம்மை விழுங்கவா இங்கே இருக்கிறது? நீ பார்த்து சொல்?''
''வாங்கடா  இந்த குகை உள்ளே போய் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்...ஏதாவது ஆபத்து என்றால் கிருஷ்ணன் பார்த்துக் கொள்வான்''  என்கிறார்கள் சிலர். கிருஷ்ணன் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் சில  பையன்கள் கிடுகிடுவென்று அகாசுரனின் திறந்த வாய்க்குள் சென்று விட்டார்கள். 

அகாசுரன் மற்ற பையன்களை விழுங்குவதில் அக்கறை கொள்ளவில்லை. அவன் இலக்கு கிருஷ்ணன்.  ஆகவே  காத்திருந்தான். 

எல்லோரும்  அகாசுரன் வாய்க்குள் நுழைந்தாகிவிட்டது. இனியும் தன்னுடைய  நண்பர்களை பிரித்திருப்பது சரியில்லை என்று கிருஷ்ணனும் அகாசுரன் வாய்க்குள் நுழைந்தான்.   கிருஷ்ணன்  அனந்த  வீர்ய சர்வஞன்... அவனால் முடியாதது எதுவுமில்லை. கிருஷ்ணன்  வாய்க்குள்  நுழைந்த மறு  வினாடியே  அகாசுரன்  வாயை மூடிக்கொண்டான். எங்கும் அந்தகாரம். கிருஷ்ணன் தன்னையும் நண்பர்களையும் காக்கும் நேரம், அதாவது அகாசுரனை  அழிக்கும் நேரம் வந்து விட்டது என்பதை  உணர்ந்து,  தன்னை பலமடங்கு  பெரிய  பலமுள்ள  உருவமாக  மாற்றிக்கொண்டான். அகாசுரன் தனது தொண்டைக்குள் இப்படி ஒரு  மலை அடைத்துக் கொண்டு மூச்சு விடுவதை தடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மூச்சு திணறியது அவனுக்கு.  அகாசுரன் மாயாஜாலக்காரன். தானும் உருவத்தை பெரிதாக்கிக் கொண்டான்.  ஆனாலும் கிருஷ்ணன்  அளவுக்கு உருவத்தை அவனால் எடுக்க முடியாமல் திணறினான்.  கண்கள்  இருந்தன.  ஸ்வாசம்  தடை பட்டது.  கிருஷ்ணன் இன்னும் பெரிய  உருவெடுத்ததால்  அகாசுரன் தலை வெடித்தது.  அவன் உயிரும் வெளியே பறந்தது.  அகாசுரன் உடலுக்குள்ளே  மயங்கி கிடந்த அத்தனை  ஆயர்பாடி  சிறுவர்களையும் மீண்டும் நினைவு பெறச்செய் தான் கிருஷ்ணன். வெளியே  அவர்களோடு வந்தான் கிருஷ்ணன்.  கிருஷ்ணன் அகாசுரன் வாய்க்குள் நுழைந்ததைக் கண்டு  வெளியே பயந்து நடுங்கி நின்றுகொண்டிருந்த  கன்றுகள், பசுக்கள்  கிருஷ்ணன் அருகே ஓடிவந்தன.  அகாசுரன் கிருஷ்ணனால்  மோக்ஷம் அடைந்தான்.  தேவர்களும்  விண்ணவர்களும்  கிருஷ்ணனின்  சாகசத்தில் மயங்கி  அகாசுரனை அவன்  மாய்த்ததில்  மகிழ்ந்தனர். 

சுக மஹரிஷி இதை விவரித்ததில் பரீக்ஷித் ஆனந்தமடைந்தான். ஆஹா  என்னே என் பாக்கியம், உங்கள் வர்ணனை என்னை நேரில் சென்று கண்டதைப் போல  சந்தோஷம் அடையச் செய்கிறது என்று போற்றினான். 

sivan jaykay

unread,
Sep 3, 2023, 8:22:58 PM9/3/23
to amrith...@googlegroups.com
 
ஆதிசங்கரர்  -   நங்கநல்லூர்   J K  SIVAN 

குருபக்தி 

எங்கும் ஒரே காடு.  சூரிய  ஒளியைத் தவிர  வெளிச்சமில்லாத  காலம்.   தெருக்கள், பாதைகள் கிடையாது.  துஷ்ட மிருகங்கள், ஜந்துக்கள் சஞ்சரிக்கும்.  கொள்ளைக்கார்கள் வழி மறித்து  சூறையாடுவார்கள்.   எழுவயது சிறுவன்  சங்கரன் வடக்கே  நர்மதையை நோக்கி நடந்தவன், அங்கே வெற்றிகரமாக சென்று தனது குரு கோவிந்த பாதரை சந்தித்து  ஞானம் பெற்று அவரோடு குருவின் குரு  கௌடபாதரையும்  தரிசித்து வணங்கி  பாஷ்யங்கள் எல்லாம் கற்று  2700 வருஷங்களுக்கு முன்  காலடி திரும்பினான்.  அப்போது வயது  16. அம்மா  ஆர்யாம்பா  சாகும் தருவாயில் மரணப்படுக்கையில் இருந்தாள் . 
சொன்ன வார்த்தை தவறாமல் அவளுடைய கடைசி காலத்தில், தக்க நேரத்தில்  அருகே இருந்து அவளை கரையேற்றினார் சங்கரர்.  ஈமக்கிரியைகள் முடித்தார்.   காலடியிலேயே  ஒரு  ஆஸ்ரமம் அமைத்து தங்கினார்.   அப்போது  குரு  கோவிந்தபாதரிடமிருந்து ஒரு  செய்தியோடு  விஷ்ணு சர்மன் என்கிற சீடன் வந்தான்.   விஷ்ணு சர்மன்  சங்கரரின் பால்ய சிநேகிதன். சங்கரர்  அவனுக்கு தீக்ஷை அளித்து  சந்நியாசியாக  சித் சுகாசார்யன் என்ற நாமகரணம் பெற்றார். பின்னால்  'சங்கர விஜயம்'   எழுதியவர்.   துவாரகா மடத்தின் அதிபதியாக  பிற்காலத்தில் அலங்கரித்தவர். 

''உடனே  வா இங்கே''  என்ற  சேதியோடு  விஷ்ணு சர்மா குரு  கோவிந்தபாதரிடமிருந்து  கேரளாவில் காலடி யில்  சங்கரருக்கு  குருவின் கட்டளையை  கொண்டு வந்தார்.  நர்மதா நதி தீரத்தில் ஓங்கார க்ஷேத்ரத்தில்  குரு  கோவிந்தபாதர்  ஜீவன் முத்தி அடைவதற்கு முன்  சங்கரருக்காக காத்திருந்தார்.  சிற்சுகச்சார்யார் எனும்  விஷ்ணு சர்மனோடு சங்கரர்  நர்மதா தீரத்துக்கு நடந்தார். சங்கரரைப் பார்த்த  கோவிந்த பகவத் பாதர்  படுக்கையை விட்டு எழுந்திரு, சங்கரரை ஆலிங்கனம் செய்து விட்டு,  தன்னுடைய  கடைசி  விருப்பங்களை சொல்கிறார். அது என்ன என்று  இன்றுவரை அவர்கள் இருவரைத்தவிர  வேறெவருக்கும் தெரியாது. மற்றவர்களிடம்  அதற்குப் பிறகு  ''இனி சங்கரரின்  உபதேசங்களை விடாமல் பின் பற்றுங்கள்'' என்று கட்டளையிட்ட  கோவிந்தபாதர்  பிரம்மத்தோடு  ஐக்யமாகிறார்.

கோவிந்த பாதர்  என்ன தெரிவித்தார்  சங்கரரிடம் என்று தெரியாமல்  போனாலும் அதற்குப் பிறகு சங்கரரின்  செயல்கள் நமக்கு சூசகமாக அதை அறிவிக்கிறது. 

சங்கரர்  நேராக  துவாரகை சென்று  துவாரகா மடத்தை  ஸ்தாபிக்கிறார்.  பிறகு  அங்கிருந்து பத்ரிகாச்ரமம் செல்கிறார். அங்கே  ஜோதிர் மடத்தை  ஸ்தாபிக்கிறார்.  கிழக்கே செல்கிறார்.  கோவர்தன பீட மடத்தை ஸ்தாபிக்கிறார்.  தென்மேற்கே நடக்கிறார். அங்கே   சாரதா பீட  சிருங்கேரி மடம் உருவாகிறது.  அங்கிருந்து காஞ்சி செல்கிறார்.   காமகோடி பீடம்  ஸ்தாபிக்கப்படுகிறது.  அங்கேயே  சில காலம் தங்குகிறார்.   அங்கே தான் ஆதி சங்கரர்  விதேக  முக்தி அடைகிறார். 

''சங்கரா உன்னால் தான்  நாடு முழுதும்  பல  திசைகளில் அத்வைதம் பரவ வேண்டும். அதற்காக    நீ  மடங்களை ஸ்தாபித்து தக்க ஜகத் குரு   ஆச்சார்யர்களை   நியமிக்க வேண்டும்''  என்பது கோவிந்த பாதரின்  கடைசி விருப்பமாக இருக்கலாம் அல்லவா? சங்கரரும் பகவத்பாதர் என்று  அழைக்கப்படுகிறார்.   காலப்போக்கில்  இந்த மடங்களின்  சக்திகள் அரசியல் மற்றும் பல  விஷயங்களில்  கவரப்பட்டு  விட்டன  என்பது காலத்தின் கோளாறு.  சில  பௌத்த  மத கோட்பாடுகளோடு கலந்து விட்டது. சிருங்கேரி, பத்ரிநாத், பூரி,காஞ்சி என்று  நான்கு ஸ்திரமான  மடங்கள் தற்போதைய பாரம்பர்ய  ஆச்சார்யர்கள் மூலம் இயங்கி வருவதை நாம் அறிவோம்.  ஆதி சங்கரரின் தீர்க்க தரிசனத்தால் உருவானவை அவை. 

ஓன்பதாம் நூற்றாண்டு முதல்,  16ம் நூற்றாண்டு வரை சங்கரரின்  கோட்பாடுகள்  சிறப்பாக  பின் பற்றப்பட்டு  வந்தன என்று சரித்திரம் வாயிலாக அறிகிறோம். 

பூர்வ மீம்சக ஆசார்யர்  குமாரில பட்டர் மூலம், ஆதி சங்கரரின்   பிறப்பு  788ம் ஆண்டு என அறிகிறோம்.  அதன் பிறகு 32 ஆண்டுகள் வாழ்ந்து  820ம் வருஷம்  விதேக முக்தி அடைந்தார் என்றும் அறிய முடிகிறது.  குமாரில பட்டர்  ஆதி சங்கரரின் சிஷ்யனாகியவர்.    ஆதி சங்கரரின்  சிவபுஜங்க ஸ்தோத்திரம்   13ல் , சிவானந்த லஹரியில்   கண்ணப்பர்,  சிறுத் தொண்டர்  பற்றிய கோடி காட்டப்படுவதால்   சங்கரர் 12ம் நூற்றாண்டில் வாழ்திருக்கலாம் என்று  சம்சயம். ஆனால்  குமாரில பட்டர்  7-8ம் நூற்றாண்டு மனிதராயிற்றே, அவர் காலத்தில் சங்கரர் வாழ்திருக்கிறாரே  என்ற போது அவரது பிறப்பு  அந்த கால கட்டத்தில்  ஊர்ஜிதமாகிறது. 

sivan jaykay

unread,
Sep 3, 2023, 8:23:06 PM9/3/23
to amrith...@googlegroups.com

கேள்வி பதில் ரத்னமாலை   -  நங்கநல்லூர்  J K  SIVAN
ஆதி சங்கரர்  

பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா   291-310

291.  எவன் அழிவது உறுதி?
பிறரை ஏமாற்றுபவன் 

292.  எவனது செயல்கள்  பயனளிப்பவை?
நற்குணமும்  இரக்க குணமும்  அன்பும் உடையவன் செயல்கள்.

293,  எவன்  தற்கொலை செய்து கொள்பவன்?
தனது ஸ்வதர்மத்தை மறந்து, கடமைகளிலிருந்து தவறுபவன், 

294.  உழைப்பின் பலனைக் கண்டு மகிழ்பவன் யார்?
உழவன் 

295.  எவராலும் முடியாதது என்ன?
எப்போதும்  மனதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது. 

296. எவன் ராஜா?
எல்லோரையும் சந்தோஷப்படுத்துபவன் 

297. உண்டா  இல்லையா என்று கண்டுபிடிக்க முடியாதது எது?
மனதை மயக்கும் மாயை.

298.  குடும்பம் அழிவதற்கு காரணம் எது?
பெரியோர் நல்லோர்  மனதை புண்படுத்தும் செயல்கள் 

299. மனிதனின் முதல் எதிரி யார்?
சோம்பேறித்தனம். 

300. எது சுகமான உன்னதமான  வாழ்க்கை?
தவறுகள் இல்லாத  நேர்மையான  வாழ்க்கை 

301. எது துயரமானது?
உலகில் வாழ்பவரின்  அறியாமை, மனசாட்சிக்கு விரோதமான செயல்களை செய்து முட்டாளாக வாழ்வது.

302.  மனிதனுக்கு எது அழகூட்டும்?
அவனது பொறுமை, நற்குணம். 

303.  எது ஒருவனுக்கு  பலம் தரும்?
அவனது அசராத  கடவுள் நம்பிக்கை, பக்தி. 

304.  யார்  செல்வந்தன்?
இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்து எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்பவன்.

305. எது உண்மையில் அஞ்ஞானம்?
ஆத்மா இருப்பதையே  அறியாமல் இருப்பது.

306. எது கண்கட்டு வித்தை?
உலகம், அதில் வாழும் வாழ்க்கை.

307. பிறப்புக்கு  ஆதாரம் எது?
மேலும் மேலும் நாம் தேடும்  பற்றுக்கள்.

308. எது முக்தி, மோக்ஷம் எனப்படும்?
அஞ்ஞானத்தின் முடிவு, அழிவு.  அறியாமையின்  விலகல்.

309.எது கண்முன்னே  இரவும் பகலும்  தோன்றினாலும் நாம் உணராதது?
வாழ்க்கையின் அநித்தியம், மாற்றம்.

310. எது மனிதனை சித்ரவதை செயகிறது. தவிக்கிறான்?
எதற்கெடுத்தாலும்  அவனை வாட்டும் சந்தேகம். 

sivan jaykay

unread,
Sep 3, 2023, 8:23:06 PM9/3/23
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்.  -  நங்கநல்லூர் J K  SIVAN 

''ஆரம்ப ஸம்ஸ்காரங்கள்‌''

மஹா பெரியவா கும்பகோணத்திலிருந்த போது  ஆரம்ப  காலங்களில்  அவரது  உபதேசங்களை அற்புதமாக சில  ஓரணா  புஸ்தகங்களாக ''வேத  தர்ம சாஸ்த்ர  பரிபாலன சபை''  என்ற  நிறுவனம் மூலம்  வெளியிடச் செய்தார்.  அதில்  ஒரு பொக்கிஷம் இது. மஹா பெரியவாவின் ''ஆரம்ப ஸம்ஸ்காரங்கள்;''  என்ற  உபதேசம்   எழுத்தாக  நமக்கு என்றும்  சாஸ்வதமாக இருக்கிறது.    அந்த ஓரணா புஸ்தகத்தை முழுசாக தருகிறேன்.  பொறுமையாக படித்து புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் அனுப்புங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். எல்லோரும் பயன் பெறவேண்டாமா?

''ஸ்ரீ சந்தரமெளளீச்வராய நம:    ''ஆரம்ப ஸம்ஸ்காரங்கள்‌''  (ப்ரசுரம்‌ 5) ஆவணிபஃமீ 20௨, வெள்ளிக்கிழமை    5-9-1947
வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸ்பை, (Regd.)  கும்பகோணம்‌ (விலை அணா ஓன்று)

''ஜீவாத்மாவுக்குப்‌ பரிசுத்தி ஏற்படுவதற்காக 40 ஸம்ஸ்காரங்கள்‌ இதில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை கர்ப்பாதானம்‌, பும்ஸவனம்‌, ஸீமந்தம்‌,  ஜாதகர்மா, நாமகரணம்‌, அன்னப்பிராசனம்‌, செளளம்‌, உபநயனம்‌, பிராஜாபத்தியம்‌
முதலிய வேதவிரதம்‌ 4, ஸ்நானம்‌, விவாஹம்‌ அல்லது   ஸஹதர்மசாரிணீ  ஸம்பிரயோகம்‌, பஞ்சமஹா   யக்ஞங்கள்‌ ஆகப்‌ பத்தொன்பதும்‌, பாக  யக்ஞங்கள்‌ ஏமு, ஹவிர்யக்ஞங்கள்‌ ஏழு, ஸோம யக்ஞங்கள்‌ ஏழு ஆக  இருபத்தொன்றும்‌ மொத்தம்‌ 40 ஆகின்றன. அஷ்டகை, அன்வஷ்டகை, பார்வணம்‌,  சிராவணி, ஆகீரஹாயணி, சைதரி, ஆச்வயுஜீ என்ற ஏழும்‌ பாக யக்ஞங்கள்‌,
அக்கினியாதானம்‌, அக்கினிஹோத்திரம்‌, தர்சபூர்ணமாஸம்‌, ஆக்ரயணம்‌,  சாதுர்மாஸ்யம்‌, நிரூட பசுபந்தம்‌, ஸெளத்திராமணி என்ற ஏழும்‌ ஹவிர்‌ யக்ஞங்கள்‌.  அக்கினிஷ்டோமம்‌, அத்யக்னிஷ்டோமம்‌, உக்த்யம்‌ ஷோடசி, வாஜபேயம்‌,  அதிராத்திரம்‌, அப்தோர்யாமம்‌ என்னும்‌ ஏழும்‌ ஸோம யக்ஞங்கள்‌, இவ்வளவும்‌ சேர்ந்து 40 ஸம்ஸ்காரங்கள்‌ ஆகின்றன, இந்த ஸம்ஸ்காரங்களில்‌ தினந்தோறும்‌  பண்ணவேண்டியவை சில இருக்கின்றன. சிலசில காலங்களில்‌
பண்ணவேண்டியவை சில, ஆயுளில்‌ ஒரு தரம்‌ பண்ணவேண்டியவை சில,  இவைகளுக்குள்‌ நன்றாகத்‌ தெரிந்துக்கொண்டு செய்யவேண்டிய முக்யமான ஸம்ஸ்காரங்கள்‌ பஞ்ச மகா யக்ஞங்கள்‌, அவை தினந்தோறும்‌ செய்யவேண்டியவை.
பஞ்ச மஹா யக்ஞங்கள்‌: 
பிரம்ம யக்ஞம்‌, தேவ யக்ஞம்‌, பித்ரு யக்ஞம்‌, மனுஷ்ய யக்ஞம்‌, பூத யக்ஞம்‌ என்பவை, மற்றவைகவில்‌ அநேகம்‌, ஜன்மத்தில்‌ ஒரு தரம்‌ பண்ணவேண்‌ டியவைகளாக இருக்கும்‌, ஒளபாசனம்‌, அக்னிஹோத்திரம்‌ ஒவ்வொரு நாளும்‌ பண்ணவேண்டும்‌. தர்ச பூர்ண மாஸம்‌ பதினைந்து நாளைக்கு ஒரு தரம்‌ பண்ணவேண்டும்‌. இவைகவில்‌ ஒளபாசனம்‌ பாக யகீஞங்களைச்‌ சேர்ந்தது; மற்ற  இரண்டும்‌ ஹவிர்‌ யக்ஞங்களைச்‌ சேர்ந்தவை. பாக யக்ஞங்கள்‌ எல்லாம்‌  வருஷத்திற்கு ஒரு தரம்‌ செய்ய வேண்டும்‌. ஏழு ஸோம யஞங்களும்‌ மற்ற ஸம்ஸ்காரங்களும்‌ ஜன்மத்தில்‌ ஒரு தரம்‌ பண்ணினால்‌ போதும்‌. இவைகளை வேறு  விதமாயும்‌ வகுத்துச்சொல்லலாம்‌.

நித்தியம்‌ செய்யவேண்டியவை ஏழு; அவை பஞ்ச மகாயஞங்கள்‌, அக்னிஹோத்திரம்‌, ஒளபாசனம்‌ என்பவை. ஒரு போகம்‌ விளையும்‌ நிலங்கவில்‌  அறுப்பறுக்கிறது வருஷத்திற்கு ஒரு தரம்‌. ஜலம்‌ தினந்தோறும்‌ பாய்ச்சவேண்டும்‌.  இவைகள்‌ எல்லாம்‌ ஸம்ஸ்காரங்கள்‌ ஆனாலும்‌ அவைகளுக்குள்‌ வித்தியாஸம்‌  இருக்கிறது. அவைகளைப்‌ போன்றவைதான்‌ இந்த ஸம்ஸ்காரங்களும்‌ ,

கர்ப்பாதானம்‌ முதற்கொண்டு ஸம்ஸ்காரங்கள்‌ சொல்லப்பட்டிருக்கின்றன.  தாயார்‌ வயிற்றில்‌ தேஹம்‌ ஏற்படுகிற க்ஷணம்‌ முதல்‌ ஸமீஸ்காரங்கள்‌  ஆரம்பமாகின்றன. சரீர பிண்டமானது மந்திரபூர்வமாக உற்பத்தியாகவேண்டும்‌.   கர்ப்பாதானம்‌, பும்ஸவனம்‌, ஸீமந்தம்‌, என்பவை தாயார்‌ தேஹத்திற்கு ஏற்பட்ட  ஸமீஸ்காரமென்று நினைக்கிறார்கள்‌. அது தவறு. அவை உள்ளே இருக்கும்‌   ஜீவனை குறித்தவை. அந்த ஜீவனுடைய பரிசுத்திக்காக ஏற்பட்டவை.  கர்பத்திலுள்ள வேறொரு ஜீவனை உத்தேசித்துப்‌ பண்ணப்  படுபவைக  ளாதலினால்‌  அந்த ஸம்ஸ்கார விஷயத்தில்‌ தாயார்‌ முதலியவர்களுக்குப்‌ பொறுப்பு அதிகம்‌,   தங்களுக்காக என்றால்‌ வேண்டாமென்று எண்ணலாம்‌. வேறொரு ஜீவனுக்காக   இருப்பதால்‌ அனாதரவு பண்ணக் கூடாது.

தேஹம்‌ வெளியில்‌ வருவதற்கு முன்பு பண்ணப்படுபவை கர்ப்பாதானம்‌, பும்ஸவனம்‌, ஸீமந்தம்‌ என்ற மூன்று ஸம் ஸ்காரங்
கள்‌ . பும்ஸவனம்‌ மூன்றாவது  மாத கர்ப்பத்தில்‌ செய்யவேண்டும்‌. ஆறு அல்லது எட்டாவது மாதத்தில்‌ ஸீமந்தம்‌ பண்ண 
வேண்டும்‌. இவ்வளவு ஸம்ஸ்காரங்களையும்‌ பரமேசுவரப்‌ பிரீதிக்காகப்‌ பண்ணுகிறேன்‌ என்று ஸங்கல்பம்‌ செய்துகொண்டு பண்ணவேண்டும்‌. இவ்வளவும்‌  அவருடைய கிருபையைப்‌ பெறுவதற்காகத்தான்‌ பண்ணுவது.

 ஆதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்‌ கைலாஸத்திற்குப்‌ போகும்‌ பொழுது  சிஷ்யர்கள்‌ எல்லாம்‌ பரமேஸ்வரனு
டைய கிருபை
 யைப்‌ பெற ஸுலபமான வழி  ஒன்று  சொல்லுங்கோ என்று பிரார்த்தித்தார்கள்‌, இதுவரையிலும்‌ சொன்ன வேதாந்த
 விஷயங்களில்‌ ஒன்றும்‌ புரியவில்லை,   சுலபமாக ஒன்று சொல்லணும் னு வேண்டிக்கொண்டார்கள்‌. அப்பொழுது ஸ்ரீ ஆசார்யாள்‌  ஐந்து சுலோகங்களைச்‌ சொன்னார்கள்‌.

''வேதோ நித்யமதீயதாம்‌ ததுதிதம்‌ கர்ம ஸ்வநூஷ்டயதாம்‌ தேநேஸ்ய விதயதாம்பசிதி: காம்யே மதிஸ்த்யஜ்யதாம்‌ |
பாபெளக:பரிதூயதாம்‌ பவஸுகே தோஷோனுஸந்தயதாம்‌ ஆத்மேச்சா வ்யவஸுயதாம்‌ நிஜக்ருஷாத்‌ தூர்ணம்‌ விறிர்கம்யதாம்‌''|

'நித்தியம்‌ வேதாத்தியயனம்‌ செய்யவேண்டும்‌.  கர்மாவைத்‌ தவறாமல்‌ அனுஷ்டானம்‌ பண்ணு. அந்தக்‌ கர்மாதான்‌ ஈச்வர பூஜை.  அவர்‌ எந்தெந்தக்‌ காரியத்தை, எப்பொழுது பண்ணச்‌ சொல்லியிருக்கிறாரோ  அப்படிச்‌ செய்துவருவதுதான்‌ பூஜை! . சில பேர்‌  உத்ஸவம்‌, பூஜை, பஜனம்‌ முதலியவை பண்ணிக்  கொண்டிருக்கிறார்கள்‌. வேறு சில  பேர்‌ ஒளபாஸனம்‌, அக்னி ஹோத்திரம்‌ செய்கிறார்கள். அவர்களைப்‌ பார்த்து பூஜை பண்ணுபவர்கள்  "இவர்கள்‌ என்ன பண்ணி என்ன பிரயோஜனம்‌? கொஞ்சங்  கூடப்‌ பக்தி கிடை யாது! என்று  தூஷிக்கிறார்கள்‌. அவர்கள்‌ இவர்களைப்‌ பார்த்து, "கொஞ்சங்கூட ஆசார அனுஷ் டானங்கள்‌ இல்லை, தாளம்‌ போட்டுக் கொண்டிருக்கிறார்கள்‌.  அஹங்காரந்தான்‌ இருக்கிறது! என்று சொல்லுகிறார்கள்‌. நியாயமாகவும்‌  மத்யஸ்தமாகவும்‌ பார்த்தால்‌ கர்மானுஷ்டானம்‌ பண்ணுவதுதான்‌ பெரிய பக்தி  என்று தெரியவரும்‌. அது தான்‌ பஜனை.

ஒரு பிரபுவிடம்‌ இரண்டு வேலைக்காரர்கள்‌ இருக்கிறார்கள்‌. ஒருவன்‌  எப்பொழுதும்‌ எதிரில்‌ நின்றுக்கொண்டு பிரபுவை ஸ்தோத்திரம்‌ பண்ணுபவன்.  மற்றொருவன்‌ பேசவே மாட்டான்‌; எதிரில்‌  வரமாட்டான்‌. பிரபு எந்த காரியத்தைச்‌ செய்ய வேண்டுமென்று மனதில்‌ நினைக்கிறானோ அந்த காரியத்தைச்‌ செய்வான்‌. பொது ஜனங்கள்‌ ஸமீபத்தில்‌ இருக்கிற 
வனிடத்தில்  தான்‌ பிரபுவுக்கு பிரியம்‌ என்று  நினைத்துக்கொண்டிருப்பார்கள்‌, ஆனால்‌  பிரபுவுக்கு வேலை செய்கிற
வனிடம்தான்‌ பிரியம்‌ இருக்கும்‌. அசடாக இருந்தால்தான்‌ ஸ்தோத்திரம்‌ செய்கிறவனிடத்தில்‌ அதிகப்‌ பிரியமா  யிருப்
 பார்‌. அவனைப்போல்‌ ஈச்வரன்‌ அசட்டு ப்ரபுவாக இருந்தால்‌  வெறும்‌ ஸ்தோத்திரம்‌ செய்கிறவனிடத்தில்‌ அதிகப்‌ பிரியமாய்‌ இருப்பான்‌. அவன்‌  விதித்த கர்மானுஷ்டங்களைச்‌ செய்வதுதான்‌ பூஜை. அதனால்தான்‌ ' பரமேஸ்வர ப்ரீத்
யர்த்தம்‌! என்று ஸங்கல்பம்‌ செய்துகொண்டு கர்மாக்களைச்‌ செய்யவேண்டும்‌.  வாஸ்தவமான கர்மானுஷ்டானம்‌, பக்தியும்‌ கர்மாவும்‌ கலந்ததுதான்‌. அதனால்தான்‌  நம்முடைய ஸ்ரீ ஆசார்யள்‌ கர்மானுஷ்டானம்‌ செய்வதுதான்‌ பரமேஸ்வர பூஜை
என்று சொல்லியிருக்கிறார்‌.
இவ்வளவுக்கும்‌ அஸ்திவாரம்‌ பரமேஸ்வரனுக்கு அர்ப்பணம்‌ செய்யவேண்டுவது. எல்லா ஸம்ஸ்காரத்திற்கும்‌ தனித் தனியாக மந்திரங்களையும்‌  அர்த்தத்தையும்‌ சொல்வது என்பது முடியாத காரியம்‌. எல்லாவற்றிற்கும்‌ முதலில்‌
ஸங்கல் பமும்‌ கடைசியில்‌ அர்ப்பணமும்‌ செய்கிறோம்‌. இந்த இரண்டும்‌ இன்னவை, இன்ன அர்த்தம்‌ உடையவை என்று தெரிந்தால்‌ நல்லது.
லெளகிகர்களுக்கு ஸங்கல்பம்‌ முதலியவை களில்  நிரம்ப அசிரத்தை இருக்கிறது. ஏதோ  வாத்தியார்‌  காசு வாங்கியதற்கு என்னவோ சொல்கிறார்   என்று  நினைக்கிறார்கள்‌: அசட்டை செய்கிறார்கள்‌.  அவற்றின்‌ அர்த்தம்‌ தெரிந்துகொள்வது கஷ்டமான காரியம்‌ அல்ல,  ஸ்ரத்தையிருந்தால்‌ தெரிந்துகொள்ளலாம்‌. அமேரிக்காவில்‌ நடக்கிற பரீக்ஷைக்கு  என்ன பாடம்‌ (Syllabus) என்பதைத்‌ தெரிந்துகொள்ளுகிறார்கள்‌. எதையும்‌ ஸ்ரத்தை  இருந்தால்‌ தெரிந்துகொள்ளலாம்‌.

' யாதேவ வித்யயா கரோதி ததேவ ஸ்ரத்தயா உபறிஷதா வீர்யவத்தரம்‌ பவதி'[சாந்தோக்யோபநிஷத்‌]
யதேவ வித்யயேதி ஹி  [ப்ரும்மஸூத்ரம்‌]

ஒரு கர்மாவை அர்த்தம்‌ அறிந்து கொண்டு பண்ணினால்‌ அது வீர்ய வத் தரம்‌ஆகிறது. தரம்‌ என்பதனால்‌ அறிவில்லாமல்‌ பண்ணினால்‌ வீர்யவத்‌ ஆகிறதென்று தெரிகிறது என்று ஸ்ரீ ஆசாரியர்கள்‌ சொல்லியிருக்கிறார்கள்‌. தெரிந்துகொள்ளாமல்‌
பண்ணினால்‌ அதிகப்‌ பிரயோஜனம்‌ உண்டு ; தெரிந்தால்‌ அவ்வளவு இல்லை என்று தோன்றுகிறது. அது எப்படி?
ஒரு கலெக்டர்‌ இருக்கிறார்‌. அவருக்கு ஒருவர்‌ வக்கீலை வைத்து, மனு   எழுதுகிறார்‌. ஒரு குடியானவன்‌ யாராவது ஒருவரிடம்‌ எழுதி, கலெக்டரிடம்‌ நேரில்‌ கொடுக்கிறான்‌, அவனுக்கு ஓரெழுத்துக்கூட தெரியாது. 'எப்படியாவது நல்லது  பண்ண வேண்டும்‌! என்று மனுவைக்‌ கொடுக்கிறான்‌. கலெக்டர்‌ பார்த்தால்‌ 'பாவம்‌!  ஒன்றும்‌ தெரியாது! நம்பிக்கை மாத்திரம்‌ இருக்கி றது என்று எண்ணி நல்லது  பண்ணுவார்‌.

அதைப்‌ போன்றதுதான்‌ மந்த்ரமும்‌. மந்த்ரத்துக்கு அர்த்தம்‌  ஈஸ்வரனுக்குத்தான்‌ தெரியும்‌. நாம்‌ போக்கிரித்தனமாக இருக்கக்கூடாது. வக்கீல்‌  வைத்து தவறுதலாய்‌ பேசினால்‌ கலெக்டர்‌ கோபித்துக்கொள்வார்‌. தெரிந்து  தப்பாகப்‌ பண்ணினால்‌ அதிக கோபம்‌ உண்டாகும்‌. தெரியாமல்‌ தப்பாக இருந்தால்‌  தெரியாமல்‌ பண்ணுகிறான்‌ என்று மன்னிப்பு கிடைக்கும்.  'ஏன்‌ ஸார்‌! அர்த்தம்‌  தெரியவில்லை, அதைப்பண்ணி என்ன பிரயோஜனம்‌? ! என்று சொல்வது தப்பு.
அர்த்தம்‌ தெரியாமல்‌ பண்ணுவதுதான்‌ வீர்யவத்தரமாகத்‌ தோன்றுகிறது.  எல்லா ஸம்ஸ்காரங்களுக்கும்‌ ஆரம்பத்தில்‌ பரமேஸ்வரப்‌ பிரீதிக்காக என்ற  ஸங்கல்பமும்‌, கடைசியில்‌ 'ஜனார்த்தன பிரீயதாம்‌! என்றும் சொல்லவேண்டும்‌.
அந்த இரண்டினுடைய அர்த்தங்களையும்‌ தெரிந்துகொள்ளலாம்‌. ஸங்கல்பத்தில்‌  முதலில்‌ தேச காலக்‌ கணக்கு சொல்லப் படும்‌.
"மமோ பாக்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வரப்‌ ப்ரீத்யர்த்தம்‌! என்று சொல்கிறோம்‌.  'என்னால்‌ ஸம்பாதிக்கப்பட்ட எல்லா பாபங்களையும்‌ போக்கிப்‌ பரமேஸ்வரனுடைய பிரீதி உண்டாகும்பொருட்டு! என்று அர்த்தம்‌. இன்று வரையில்‌ நாம்‌ நிறைய பாபத்தை ஸம்பாதித்திருக்கிறோம்‌. அந்த ஸாமான்‌ கஷ்டமானது. அதைப்‌ போக்க வேண்டும்‌; அலம்பவேண்டும்‌. அதனால்‌ என்ன  பிரயோஜனம்‌? நம்முடைய ஹ்ருதயம்‌ பரமேஸ்வரனுடைய ஸ்தானம்‌, அதில்‌ குப்பை நிறைய இருக்கிறது. நாம்‌ இங்கே பூஜை செய்கிறோம்‌. அப்பொழுது அங்கே குப்பை நிறைய   இருந்தால்‌ மிகவும்‌ வருத்தமாக இருக்கும்‌, குப்பையை எடுக்கிறோம்.    நம்முடைய ஹ்ருதயத்திலுள்ள குப்பையை  அப்படி போக்கவேண்டும்‌. அப்பொழுதுதான்‌ ஸ்வருபம்‌ தெரியும்‌. இப்பொழுது பிரகாசம்‌ தெரியாமல்‌ ஆபாஸமாய்‌ இருக்கிறது.வந்து உட்கார வேண்டுமானாலும்‌ குப்பையை போக்கவேண்டும்‌. எந்த விதத்திலும்‌  குப்பைகள்‌ போகவேண்டும்‌. நமக்கோ குப்பையைச்‌ சேர்க்கிறதே தொழிலாக இருக்கிறது. துரித க்ஷயத்வாரா, அதாவது பாபம்‌ போன வழியாகப்‌ பரமேஸ்வரனுடைய பிரீதி உண்டாகும்‌. எல்லாவிதக்‌ கர்மாக்களும்‌ அதற்காகத்தான்‌ ஏற்படுகின்றன. மற்ற மந்த்ரங்களுக்கு எவ்வளவு அர்த்தம்‌ இருந்தாலும்‌ இந்த மந்த்ர அர்த்தம்‌ தெரிந்து பரமேச்வரப்‌ பிரீதியை உத்தேசித்துச்‌ சொன்னால்தான்‌ பிரயோஜனம், 
ஒரு காரியத்தில்‌ தவறிப்போனால்‌ பிராயச்சித்தம்‌ பண்ணுகிறோம்‌. அகால ஸந்தியாவந்தனத்திற்காக பிராயச்சித்த அர்க்கியம்‌ இருக்கு.. அந்த  பிராயச்சித்தத்திலும்‌ தப்பு வந்தால்‌ என்ன செய்கிறது? அதற்காக எல்லாவற்றிற்கும்‌
சேர்த்து ஒரு பிராயச் சித்தம்‌ இருக்கிறது. ஹேமாத்ரி என்று ஒரு புஸ்தகம்‌  இருக்கிறது. அது பிராயச்சித்தங்களைப்பற்றிச்‌ சொல்லுகிறது.   எல்லாப்‌ பிராயச்சித்தங்கவிலும்‌ மேலான பிராயச்சித்தம்‌ ஸ்ரீ கிருஷ்ண ஸ்மரணம்‌. முதலில்‌ பரமேஸ்வர ஸ்மரணம்‌; கடைசியில்‌ கிருஷ்ண ஸ்மரணம்‌  செய்யவேண்டும்‌. இவை சிவ விஷ்ணு அபேதத்தையும்‌ காட்டுகின்றன, இப்படி  நினைத்து உற்பத்தி முதல்‌ முடிவு வரையில்‌ பரமேஸ்வரனுடைய ஞாபகத்தோடு கர்மாக்களைச்‌ செய்யவேண்டும்‌.

ஒவ்வொரு மந்த்ரமும்‌ ஒவ்வொரு தேவதையின்‌ த்வாரா அர்ப்பணம்‌ பண்ணப்படுகிறது. நாம்‌ வரி செலுத்துகிறோம்‌. அவைகள்‌ எல்லாம்‌ ஒரே ராஜாங்கத்திற்குப்‌ போகின்றன. தொழில்‌ வரி, மோட்டார்‌ வரி, நிலவரி முதலிய பல வரிகள்‌. 
 ஒவ்வொன்றுக்கும்‌ ஒவ்வோரிடம்‌ உண்டு, ஒவ்வொரு முத்திரைக்‌ கடுதாசு உண்டு. அதுபோல்‌ ஒவ்வொரு கர்மாவுக்கும்‌ காலம்‌, மந்த்ரம்‌, தேவதை, திரவியம்‌ என்று தனித்தனியே பிரிவுண்டு. ஒவ்வொன்றுக்கும்‌ கிரமம்‌ வேறாக இருந்தாலும்‌ எல்லாவற்றிற்கும்‌ பரம தாத்பர்யம்‌ பரமேஸ்வரனுக்கு அர்ப்பணம்‌ பண்ணுவதுதான்‌. நாம்‌ செலுத்துகிற வரிகளைப் பற்றியும்‌, வரி செலுத்துகிற நம்மைப்பற்றியும்‌ ராஜாவுக்கு  நன்றாய்‌ தெரியாது.  ஆனால்‌ பரமேஸ்வரனாகிய ராஜாவுக்கு நம்  ஒவ்வொருவருடைய விஷயமும்‌ நன்றாகத்‌  தெரியும்.    ஒவ்வொரு கர்மாவுக்கும்‌ மந்த்ரம்‌, தேவதை, திரவியம்‌ என்று மூன்று  கிரமங்கள்‌ உண்டு. பிறப்பதற்கு முன்பு செய்யவேண்டிய மூன்று கர்மாக்களை  முதலில் சொன்னோம்.  பிறந்தவுடன்‌ ஜாதகர்மா செய்யவேண்டும்‌. அப்புறம்‌  பதினோறாவது நாள்‌ நாமகரணம்‌ செய்யவேண்டும்‌. ஆறாவது மாசம்‌ அன்னப் 
பிராசனம்‌ செய்யவேண்டும்‌. முதலில்‌ அன்னத்தை ஊட்டுகிற கர்மா அது.  அதுவும்‌ பரமேஸ்வரப்‌ பிரீதியாகச்‌ செய்ய வேண்டும்‌,   கர்ப்பாதானம்‌ முதல்‌ நாமகரணம்‌ பரியந்தம்‌ உள்ளவை குழந்தைக்காக பெற்றோர்கள்‌ பண்ணுபவை. தாயார்‌ மருந்து சாப்பிட்டால்‌ குழைந்தைக்கு தேஹ பரிசுத்தி ஏற்படுகிறது. அதைப்‌ போலவே தாயார்‌ தகப்பனார்‌ சத் விருத்தி எப்படி இருக்கிறதோ, அப்படியே உள்ளே இருக்கும்‌ ஜீவனுக்கும்‌ ஸாத்வீக ஸ்வபாவமோ, பாப அபிவிருத்தியோ உண்டாகும்‌. மனது சாந்தமாக இருந்து ஒரு ஸமாசாரம்‌  எழுதி அதைப்‌ படித்துப்‌ பார்த்தால்‌ நன்றாயிருக்கும்‌, கோபமாக இருக்கும் பொழுது எழுதி அப்புறம்‌ படித்துப் பார்த்தால்‌ நன்றாக  இருக்காது. சரீரத்திலும்‌ அப்படியே  குணதோஷங்கள்‌ ஏற்படுகின் றன. அவயவ ஸந்நிவேசம்‌ உண்டாகும்பொழுது தாய்‌ தகப்பனுக்கு எந்த குணம்‌ ஏற்படுகிறதோ அது உள்ளே இருக்கும்‌ ஜீவனுக்கும்‌ உண்டாகும்‌. மனோபாவனையை அனுஸரித்துக்‌ குணங்கள்‌ ஏற்படுகின்றன.    இத்தகைய கர்மாக்களைப்‌ பணக்காரர்கள்‌ உரிய காலத்தில்‌ பண்ணாமல்‌ சேர்த்துப்‌ பண்ணிவிடுகிறார்கள்‌. வைதிகர்கள்‌ கிரமமாகப்‌ பண்ணு கிறார்கள்‌;  ஆனால்‌ அவர்கள்‌ அதையே ஜீவனமாக வைத்துக்கொள்கிறார்கள்‌, மற்றவர்கள்‌ எதையும்‌ கவனிப்பதில்லை, அந்தந்தக்‌ காலத்தில்‌, அந்தந்த மந்த்ரத்தைச்‌ சொல்லி, அந்தந்த திரவியங்களைக்கொண்டு, அந்தந்த ஸம்ஸ்காரங்ககளைச்‌ செய்யவேண்டும்‌. எல்லாவற்றிற்கும்‌ பெரிய காரியம்‌ பரமேஸ்வரார்ப்பணம்‌ பண்ணிச்‌ செய்வது.  அன்னப் பிராசனத் திற்கப்புறம்‌ செளளம்‌ செய்யவேண்டும்‌. அது சிகை  வைக்கிறது. அந்தக கர்மாவும்‌ பகவானுக்கு அர்ப்பணம்‌ பண்ணப் படவேண்டும்‌,  ஸத்கர்மாவுக்கு உபயோகமாக இருக்க அது பண்ணவேண்டும்‌. சிகை எடுப்பது மந்த்ரபூர்வமாக எடுக்க வேண்டும்‌. ஸந்யாஸிகள்‌ மந்த்ரபூர்வமாகத்தான்‌  எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்‌ , மந்திர பூர்வமாக வைத்துக்கொண்ட சிகையைப்‌ பரமேஸ்வரனுக்கு முன்பு  பண்ணின பிரதிக்ஞைக்கு விரோதமாக இஷ்டப்படி எடுத்துவிடுவது தப்பு. சிகையை எடுப்பது ஒரு பெரிதா என்று கேட்கலாம்‌. பொய்‌ சொல்லுகிறது தப்பு அல்லவா? அது எவ்வளவு தப்போ அவ்வளவு தப்பு இதுவும்‌. பரமேஸ்வரப்‌ பிரீதியாக ஸங்கல்பம்‌ பண்ணிக்கொண்டு ஸம்ஸ்காரம்‌ பண்ணி வைத்துக்கொண்டதைக்‌ கிள்ளுக் கீரையாக எண்ணி மனம்‌ போனபடி  எடுக்கக்கூடாது. சிவலிங்கப்‌ பிரதிஷ்டை செய்கிறார்கள்‌. வேல்‌, ஸாளக்கிராமம்‌
வைத்துப்‌ பூஜை செய்கிறார்கள்‌. பிறகு கோபித்துக்கொண்டு எடுத்து எறிந்துவிடலாமா ? அகஸ்மாத்தாகப்‌ போனால்‌ - திருடன்‌ கொண்டுபோனால்‌ பாதகம்‌ இல்லை. நாமாக வைத்ததை, நாமாக வேண்டுமென்று மாற்றுவது பெரிய தப்பு. செளளத்தை மட்டும்‌ ஸங்கல்பத்தோடு பண்ணிக்கொண்டு அப்புறம்‌  இஷ்டப்படி பண்ணுவது தப்பு. இப்படிப்‌ பண்ணுகிற வர்கள்‌ முதலில்‌ அதைப்‌ பண்ணாமல்‌ இருக்கவேண்டும்‌. மந்திரபூர்வமாக வைத்த சிகையை இஷ்டப்படி எடுப்பது
 தப்புத்தான்‌. அதற்காகத்தான்‌ ஸன்னியாஸாசிரமத்தில்‌ அதை  எடுக்கும்பொழுது மந்திர பூர்வமாக எடுக்கிறார்கள்‌.

ஜாதகர்மா முதலியவற்றை இனிமேல்‌ பண்ணமுடியாது. புனர்‌ உபநயனம்‌ பண்ணலாம்‌. அதற்குக்‌ கீழே இருப்பவற்றைச்‌ செய்ய முடியாது. உபநயனம்‌ அறிவு வந்தபோது செய்வது. 'பிக்ஷாசர்யம்‌ சர! - அதாவது 'பிக்ஷை  எடு! என்று ஆசாரியன்‌
சொன்னால்‌ 'பாடம்‌' என்று அவன்‌ பதில்‌ சொல்லுகிறான்‌, உபநயன காலத்திற்கு  முன்பே ஸம்ஸ்கிருத ஞானம்‌ இருக்க வேண்டும்‌. அப்பொழுது உபநயன மந்திரம்‌ சொன்னால்‌ அர்த்தம்‌ தெரியும்‌. குழந்தைக்குத்‌ தெரிந்தால்‌ நிரம்ப பக்தி உண்டாகும்‌.   குழந்தை பருவத்திலேயே நமது மனதில்‌ நாஸ்திக்யம்‌ வந்துவிட்டது. அதனால்‌ அது பலமாக இருக்கிறது. ஆஸ்திகத்தை அப்படியே போதித்தால்‌ அதுவும்‌ பலமாக நிற்கும்‌.
உபநயனம்‌ முதல்‌ பண்ணப்படும்‌ ஸம்ஸ்காரங்கள்‌ அறிவு வந்த பிறகு ஏற்படுபவை. எந்த ஸம்ஸ்காரத்தையும்‌ உரிய காலத்தில்‌ பண்ணவேண்டும்‌.  அதனால்‌ பாப பரிஹாரம்‌ ஏற்படுகிறது. வேறொரு காரியம்‌ பண்ணிப்‌ பாபம்‌  சம்பாதிக் கிறோம்‌. அதை நீக்க மனோ வாக் காயங்களால்‌ ஸம்ஸ்காரம்‌ பண்ணவேண்டும்‌. நாம்‌ பாபம்‌ அந்த மூன்றினாலேயும்‌ பண்ணியிருக்கிறோம்‌.  மனதால்‌ கெட்ட எண்ணம்‌ நினைத்திருக்கிறோம்‌., வாக்கால்‌ பொய்‌ பேசியிருக்கிறோம்‌. தேகத்தால்‌ பொய்‌ பண்ணியிருக்கிறோம்‌. பொய்‌ பண்ணுவது  என்ன? பாசாங்கு பண்ணுவதுதான்‌ பொய்‌ பண்ணுவது. மனோ வாக் காயங்களால்‌ பண்ணிய பாபங்களை அவைகளாலே காரியங்களைப்‌ பண்ணிப்‌  போக்கிக்கொள்ளவேண்டும்‌,
மனதினால்‌ பரமேஸ்வரத்‌ தியானம்பண்ணி அர்ப்பணம்‌ பண்ண வேண்டும்‌. வாக்கினால்‌ மந்திரம்‌ சொல்லவேண்டும்‌. காயத்தால்‌ காரியம்‌ பண்ணவேண்டும்‌.  இந்த மூன்றினாலும்‌ ஸம்ஸ்காரம்‌ பண்ணி, மூன்றினாலும்‌ பண்ணின பாபத்தைத்‌
தீர்த்துக்கொள்ள வேண்டும்‌. எல்லாம்‌ பரமேசுவரப்‌ பிரீதிக்காக என்று எண்ணிச்‌ செய்யவேண்டும்‌. எல்லாவற்றையும்‌ பரமேஸ்வரார்ப்பணம்‌ பண்ண வேண்டும்‌. எதையும்‌ காலத்தில்‌ பண்ணவேண்டும்‌. 
ஸம்ஸ்காரங்களைச்‌ செய்து வந்தால்‌ நல்ல சந்ததி உண்டாகும்‌. வைதிக  சந்ததியார்‌ சிஷ்டர்களாய்‌ அநேகர்‌ இருக்கி றார்கள்‌. புத்தி அவர்களுக்கு அதிகமாயிருக்கிறது. அது ஸம்ஸ்காரப்‌ பிரயோஜனந்தான்‌. முன்பு இருந்தவர்கள்‌ செய்தது
 இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு அஸ்திவாரமாயிருக்கிறது. அந்த  எல்லைத்‌ தாண்டிப்‌ போனால்‌ அப்புறம்‌ கஷ்டந்தான்‌. வைதிக சந்ததியிற்‌ பிறந்த  குழந்தைகள்‌ லெளகிகத்தில்‌ பிரவேசித்தால்‌ அதிகமாகக்‌ கீழே போகிறார்கள்‌. மடை  அடைத்து வைத்ததைத்‌ திறந்துவிட்டால்‌ வெகு வேகமாக ஜலம்‌ போகிறமாதிரி  அவர்கள்தாம்‌ லெளகிகத்தில்‌ இறங்கிவிடுகிறார்கள்‌, நம்முடைய முன்னோர்கள்‌  ஸம்ஸ்காரங்கள்‌ பண்ணவில்லை, அதனால்‌ நமக்கு நன்மை உண்டாக
வில்லை என்ற  குறை இருக்கலாம்‌. அதைப்போல்‌ நம்முடைய குழந்தைகள்‌ குறை கூறாமல்‌ நாம்‌ நல்ல  ஸம்ஸ்
காரங்களைப்‌ பண்ணிவைக்க வேண்டும்‌.''
இப்படிக்கு,
வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபையோம்‌-  கும்பகோணம். 

sivan jaykay

unread,
Sep 3, 2023, 8:23:06 PM9/3/23
to amrith...@googlegroups.com
எங்கள் தாத்தாவின்  ''ஓடப்பாட்டு'' -   நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒரு புலவனுக்கு, பண்டிதனுக்கு,  அதுவும்  தமிழ் கவிஞனுக்கு,  தமிழறிவு இருந்தால் மட்டும் போதாது, ஜன ரஞ்சகமாக  விஷயங்களை எடுத்து அழகாக தெள்ளிய முறையில்  கவிதையாக வடித்து அளிக்கும் திறமை இருத்தால் அவன் புகழ் மங்காது.

எங்கள் தாத்தா  புராணசாகரம் ப்ரம்ம ஸ்ரீ வசிஷ்ட பாரதிகளுக்கு இந்த அற்புத திறமை இருந்ததால் அவர் பேச்சும், எழுத்தும், பாட்டும்  காந்தம் போல் தமிழ் ரசிகர்களை பாமரர்களை, பண்டிதர்களை கவர்ந்தது.   அவர்  வாழ்ந்த புதுக்கோட்டை ஜில்லாவில்   வெள்ளைக்கார  அரசாங்க  ராஜ  ப்ரதிநிதியாக இருந்த  திவான் சேஷய்யா சாஸ்திரிகள் நிறுவிய ஒரு  பெண்கள்  பாடசாலை ஒன்று பிரபலமாக இருந்தது.  அதில் ஒரு ஆசிரியராக இருந்தவர்   ராஜாக்கள் வகுப்பைச்   சேர்ந்த   கீழ மூணாம் வீதியில் வசித்த   பாலகிருஷ்ண ராஜா.  அவருக்கு தமிழில் கொள்ளை ஆர்வம்.  

பாடசாலையில்  பெண்களுக்கு நூதனமான பாட்டுக்கள் கற்பிக்க வேண்டும் என்ற  பால கிருஷ்ணா  ராஜாவின்  ஆர்வத்தை கவிதையாகச் செய்யும் திறமை அவருக்கு போதாது.  எங்கள்  தாத்தாவின் தமையர்  சீதாராம சாஸ்திரிகள் சங்கீத சாஹித்ய வித்வான். அவரிடத்தில்  இதைச் சொல்லி ஏதேனும்  பாட்டுக்கள் செய்து கொடுக்கவேண்டும்  என்றார் பாலகிருஷ்ணா  ராஜா.   

தாத்தாவுக்கு  இளம் வயதிலிருந்தே  பார்வை,  கண் உபாதி அதிகமாக இருந்தபடியால், படுத்துக்  கொண்டிருந்தார். அவரிடம்  சீதாராம சாஸ்திரி வந்து, '' ''வசிஷ்டா ,பாலகிருஷ்ண ராஜாவுக்கு என்ன பாட்டு  தயார் செய்து கொடுக்கலாம்?'' என்றார்.

''அவரை நாளைக்கு வரச்சொல்லுங்கோ. அதற்குள் நாம் அதற்குள் ஏதாவது ஒன்று தயார் பண்ணிடுவோம் '' என்றார்  தாத்தா. 
 பாலகிருஷ்ண ராஜா   நாளைக்கு வருகிறேன் என்று சந்தோஷமாக  சென்றுவிட்டார்.  சீதாராம சாஸ்திரிகள் தாத்தா   பக்கத்தில்  காகிதம் மைக்  கூடோடு தயாராக வந்து உட்கார்ந்தார்.

ஓடப்பாட்டு  என்பது சேர்ந்து  பலர்  சேர்ந்து பாடுவதற்கு  இனிமையாக இருக்கும்.  

''அண்ணா, நாம  புதுக்கோட்டை காலேஜைப்பற்றி ஒரு ஓடம்  பாட்டு தயார் பண்ணலாம். இது பெண்களுக்கும்  பாட  உபயோகமாகும் புதுக்கோட் டை   காலேஜின் பெருமையும் நிலமையும் விளக்க ஏதுவாகும்'' என்றார் தாத்தா.
ஏற்கனவே  கும்பகோணம் காலேஜ் ஓடம் என  ஒரு  ஓடப்பாட்டு  இருக்கு.  அது எனக்கு தெரியும்.   நிறைய  பெண்கள்  அக்காலத்தில் அதைப் பாடுவார்கள்.  ஆகவே  இந்த  புதுக்கோட்டை காலேஜ்  ஓடப் பாட்டு  கொஞ்சம் வேறே மாதிரியாக புது மோஸ்தரில்   இருக்கும்படி பாடுவோம்.''  என்றார் தாத்தா.

இதில்  புதுக்கோட்டை  டவுன் லொகேஷன்,  புதுக்கோட்டை   ராஜா,  திவான் சேஷய்யா,  பெயர் , கட்டடம் , காலேஜுக்கு  வரும் பிள்ளைகள், அவர்கள் உண்ணுமிடம்,  தங்குமிடம்,  உலவுமிடம், காலேஜில் படிக்கும்  பாடங்களின் பெயர்கள், உபாத்தியாயர்கள்  பெயர். காலேஜ் கான்டீன் தரும்  டிபன் விபரம்,  காலேஜ்  ஜிம்னாஷியம் (Drill)   வகையறாக்களை சொல்லலாம்.  தாத்தா  மனதில்  ஓடப்பாட்டு  உருவாகி விட்டது. படுத்துக்கொண்டே  சொல்லச்  சொல்ல  சீதாராம சாஸ்திரிகள் எழுதிக் கொண்டார்.

காப்புச் செய்யுள்.  விநாயகரை, சுப்ரமணியரை வணங்கி துவங்கினார். 

''பார் புகழும் புதுக்கோட்டை தனிலே (பார்த்திபன் மார்த்தாண்ட பூமன்) 
ஆர்வமுடன் தினம் துதிக்கும் பிரஹத் அம்பாள்  [அம்பிகையாள் பதம் துணையே 
பேர்  பெறு காலேஜ் ஓடம் பாடபேழை [வயிற்றான முகம் 
தார்புயனாம் சண்முகனார் பாதத்தை (சந்ததமும் பணிவோமே''.

1. பூமண்டத்தினிப் புதுக்கோட்டைச் சீரே 
புகழ்ந்துரைக்க யாவற்கு முடியா [தென் பாரே

2.[மாட மாளிகைகள்மீது வெண் [கொடிகள் மேவும் 
மதிக்கரை அகற்றுதல்போல் (வானுலாவும் 

3. லால் பாக் ஆநந்த பாக் சோலைவளம் [நீடும்  
ரஞ்சிதமாய் குயில்கொடு மயில்கள் [விளையாடும்  

4.. மான்மிளாப் பன்றியொடு குரங் (கிருக்க கூடும்  
மகிழ் கிராஸிலி பியாண்ட்  மாஸ்டர்க்கும் வீடு 

5.  குண்டு மேடைகளோடு கொடி மேடை விளங்கும் 
 கும்பந்தா குளமோடு  ஆஸ்பத்திரி துலங்கும். 

6. உச்சிதமாம்  கோகர்ணம் ஊருக்கு மேற்கு, 
மச்சுவாடி தஞ்சை மார்க்கமும் வடக்கு 

7.  திருவரங்குளம்  அலங்குடிச்  சாலை கிழக்கு  
தெற்கே  திரும்பிப்பார்  தெரியுதே  ஆர்ச்சு,

8 தட்சிணாமூர்த்திக்கு  நிகழவே கோவில்,
தெரியுதே  நடுவினி ல் அரண்மனைப் பூவில் 

9. ஆயிரம் தலை கொண்ட  சேடர்க்கும் கூடா 
அமராபதியோடு  அளகை  தானிதற்கு  ஈடா.  

10. ராமச்சந்திர  மஹா ராஜாவின் பேரன்,   
ராஜாமணி வயிற்றில் பிறந்த குமாரன் 

11. ஹிஸ்  ஹைனஸ் மார்த்தாண்ட பைரவன் நாமன்   
ஐரோப்பா ஜெர்மனியில் இசை பெற்ற பூமன் 

12.விப்ரகுல சத்வகுண  மந்திரி பிரதானி  
மேலான சேஷையா சாஸ்திரி யபிதானி 

13. அஷ்ட லட்சுமிகளும் இஷ்டமாய் கூடும்  
அமரேசன் இவனென்று அகிலம் கொண்டாடும்

14. பூபதி தன பெயராலே காலேஜ் ஒன்று  
புதுக்கிடவே  ஒரு லக்ஷம் சாங்க்ஷன் என்றார் 

15. தேசங்கள் தனிலுள்ள  இன்ஜினீயர் வந்தார் 
சிறப்பாக  பலபேரும்  பழங்களை தந்தார் ''
...........
ஓடப் பாட்டு   BOATMAIL   மாதிரி  விறுவிறுவென்று போகிறது.   இதைப் படிக்கும்  வெகுகால  புதுக்கோட்டை வாசிகளே, என் கேள்விகளுக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்.

புதுக்கோட்டையில் லால் பாக்,  ஆனந்த் பாக்  எல்லாம் இப்போதும் இருக்கிறதா?
மான்  மயில், குரங்கு  எல்லாம் மகிழ்ந்து ஆடிய  சோலைவனங்கள்,  மான், மீளாப்பன்றி என்ற வகை,(?)  வெள்ளைக்காரன்  குழு ஒன்று CRAZI LY என்று ஒரு BAND  இருந்ததா? அந்த பேண்ட் மாஸ்டர் வீடு அங்கே இருந்ததா? 
கும்பந்தா குளம் இன்னும் இருக்கிறதா? 
அதன் அருகே  கவர்மெண்ட்  ஆஸ்பத்திரி இன்னும் இயங்குகிறதா? 
புதுக்கோட்டை லொகேஷன் சொல்கிறாரே தாத்தா, அது சரியா?  கோகர்ணத்துக்கு மேற்கிலா?  வடக்கே  தஞ்சாவூர்  சாலையா?    திருவரங்குளம், ஆலங்குடி சாலைகள் இன்னும்  புதுக்கோட்டை கிழக்கே இருக்கிறதா?   தெற்கே  தாத்தாவின் கண்ணுக்கு தெரிந்த ஆர்ச் இன்னும் உண்டா?  
தட்சிணா மூர்த்தி கோவில் இருந்தால் ஒருநாள் போகவேண்டும். 
புதுக்கோட்டை மார்த்தாண்ட பூபதியின் தாத்தா ராமச்சந்திர  மஹாராஜாவா? அவர் அம்மா பெயர்  ராஜாமணியா ? ஆதிசேஷையா கட்டின பெண்கள் ஸ்கூல் இன்னும் இருக்கிறதா?

 தாத்தாவின்   புதுக்கோட்டை காலேஜ்  ஓடப்பாட்டின்  அடுத்த பதிவில் இன்னும் நிறைய சுவாரஸ்யமான  விஷயங்கள் சொல்கிறேன். 

sivan jaykay

unread,
Sep 4, 2023, 7:51:53 PM9/4/23
to amrith...@googlegroups.com
வரவேற்பு  -   நங்கநல்லூர்  J K  SIVAN

கிருஷ்ணசாமி  இறந்துவிட்டதை  நிறைய  இந்தியர்கள்  நினைத்தே பார்க்கவில்லை.  பத்திரிகையில் அவனைச் சேர்ந்தோர்  அவன் படத்தை சின்னதாக போட்டு  தோற்றம்  மறைவோடு நிறுத்திக்கொண்டார். நிறைய  இடம் அடைத்தால் நிறைய காசு கொடுக்கவேண்டுமே .  மறைந்து போன  காமாக்ஷி அம்மாள் என்ற  82வயது மாமி, கரீம் பாய் என்ற  58 வயது  குழாய் பைப் செட்டுகள் விற்கும் கடை அதிபர்  மறைவை ஒட்டி ரெண்டுக்கும் நடுவே  சின்னதாய் கிருஷ்ணசாமி.  அவன் முகத்தில் இருந்த துறுதுறுப்பு,  இளமை  கருகருவென்ற மீசை, கண்களில் இருந்த வீரம்  நேர்மை என்னை காந்தம் போல் இழுத்தது. யார் இந்த கிருஷ்ணசாமி?
 
அவன் மற்றவர்கள் போல் இல்லை.  ஏதோ,  நோய்வாய்ப்பட்டு, ஆஸ்பத்திரியில்  மெல்லிய  குழாய்கள் மூக்கில் வாயில் கை கால்களில் செலுத்தப்பட்டு  இறந்தவன் இல்லை.  வயோதிகனும் இல்லை.  அனாதையும் இல்லை.  பனிமலையில் இரவும் பகலும்  கண்ணுறங்காது நாட்டின் எல்லையை பாதுகாத்து,   சீனா, பாகிஸ்தான், காஷ்மீர் பாதகர்கள், எதிரிகளை ஈவு இரக்கமின்றி தாக்கி  அவர்களால் தாக்கப்பட்டு  மார்பில் குண்டு பாய்ந்து, மண்டை வெடித்து மாண்ட இளைஞன். எங்கோ தெற்கே  ஒரு கிராமத்தில் அவன் இளம் மனைவியும்,  சிறு குழந்தைகள் இருவரும் ''அப்பா எப்போ வருவார்?''  என்று காத்திருக்கும் குடும்பம்.  அவன் திரும்பவில்லை, அவன் இறந்த சேதிதான் சென்றது.  உடம்பு   உருப்படியாக கிடைத்தால் கிடைத்தால்   உசிலம்பட்டி  போய் சேரும். 

கிருஷ்ண சாமி  விண்ணுலகம் சென்றவன்  கிருஷ்ணன் முன்  நின்றான்.
அவனது வழக்கப்படி  தன்னுடைய  காலணி  பாலிஷ்  செய்யப்பட்டு பளபளவென்று முகம் தெரிகிறதா என்று பார்த்தான். சுருங்காத சீருடை சரியாக இருக்கிறதா?   பதக்கங்கள்  பித்தளை பட்டன்கள், பளபளவென்று என்று   இருக்கிறதா  என்று சரி பார்த்துக்  கொண்டான். தலையில் தொப்பியை சரியாக  கவிழ்த்துக் கொண்டு  விறைப்பாக நின்றான்.
''வா, கிச்சா, வா''
கிருஷ்ண சாமிக்கு  எப்படி கிருஷ்ணனை வணங்கவேண்டும் என்று தோன்றவில்லை, காலை  உதைத்துவிட்டு சல்யூட்  அடித்தான். கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே  தலை அசைத்து கேட்டான்.
''தம்பி,   நீ  என்னை  நினைத்தது உண்டா?'' என்று கேட்டான்.
''எப்போதும் இல்லை சாமி, எப்போதாவது தான்''
''என் கோவிலுக்கு சென்றதுண்டா?'
''ஊருக்கு லீவ்லெ போகும்போது குடும்பத்தோடு  அய்யனார் கோவில் போய் பொங்கல் இடுவோம். பக்கத்தில் சிவன் கோவில்,  பெருமாள் கோவில் போறதுண்டு. அடிக்கடின்னு சொல்ல முடியாது.  திருப்பதிக்கு கீழ் மலை யடிவாரத்திலேருந்து நடந்து மேலே போவணும்னு ஆசை,  அடுத்த லீவில் ஊருக்கு போகும்போது போகலாம்னு பிளான் போட்டேன் சாமி. ஆனா....அதுக்குள்ளாறவே  இங்கே வந்துட்டேனே ..'
''ம்ம்  அப்புறம்''
''நான் பக்தி ,பஜனை, விரதம் எல்லாம்   செய்றவன்   இல்லே  சாமி.  செய்ய தெரியாது. யாரும் கத்துக்க குடுக்கலே.  எங்க தாத்தா  பஜனை பாட்டு   பாடுவார். சின்னைப் புள்ளேலே  சொல்லிக்கொடுத்தது அப்பப்போ ஞாபகம் வரும். பனிமலை மேலே உரக்க பாடுவேன். அவ்வளவு தான். 

 வேலேலே  இருக்கும்போது லீவ் கிடையாது.  பண்டிகை ஞாயிற்றுக்கிழமை எதுவும் இல்லை.  மேலதிகாரிங்க  கோபமாகவே பேசுவாங்க, கறாரா  கண்டிப்பா சிரிக்காம கடுகடுன்னு  தான் இருப்பாங்க.    அனாவசியமா ஒரு வார்த்தை கூட  பேசாம  இருக்கணும் சாமி. எப்போதும் உஷாரா,  கவனமா இருக்கிற வேலைங்க  எங்களுக்கு.   கரணம் தப்பினா மரணம் எங்க வேலையில்.   உலகத்திலே மத்தவங்க மாதிரி இல்லைங்க எங்க வேலை.

நான் சொந்தமா காசு சேத்ததில்லை . எப்போதுமே  ஓவர் டைம் தான் எங்களுக்கு.  வேளா  வேளைக்கு சாப்பாடு தண்ணி ன்னு கிடையாது.   எவ்வளவு குறைச்சலா தேவையோ அது பையிலே முதுகிலே இருக்கும். ருசி  பார்த்து சாப்பாடு இல்லை சாமி.  உயிர் வாழ அவசியமான சாப்பாடு மட்டும்.
வீட்டிலே  கஷ்டம் பணம் அனுப்பணும்னு எழுதுவாங்க, அனுப்ப முடியலன்னு வருத்தப்படுவேன், அழுவேன்   அப்போ.  சாமி.  அது  ஒண்ணு  தான்  என் வீக்னஸ்  சாமி'
''சாமி என்னை மன்னிச்சுடுங்க  ராணுவ  வீரர்கள் அழுவக்கூடாது.  அப்பப்போ  குடும்ப பாசம் என் மனசை இளக்கிடும்  சாமி.
அப்பாவுக்கு  இந்த தடவை லீவ்லே போய் கண் ஆபரேஷன் பண்ணி கண்ணாடி வாங்கிக்  கொடுக்க காசு சேக்கணும் னு பிளான்..முடியலே சாமி''
''கிருஷ்ண சாமி,  நீ எங்கே இருக்கறே தெரியுமா இப்போ?
''வர வழியிலே இது தான் ''வைகுண்டம் னு சொன்னாங்க,சாமி.  ரொம்ப  ரொம்ப பெரிய மஹான்கள் இருக்கிற இடம், புண்யம் பண்ணவங்க இங்கே தான் இருப்பாங்க ன்னு  பேசிக்கிட்டாங்க. எனக்கு வேறே இடமா இருக்கும் சாமி, இங்கே இருக்கறவங்க, என்னை கிட்டயே  சேக்கமாட்டாங்களே.  இங்கே  என்னை தப்பா  கூட்டிக்கிட்டு வந்துட்டாங்களோ? 
 எனக்கு இது சரிப்படாது சாமி, நரகமோ என்னவோ சொல்றாங்களே  அங்கே தான் என்னை போடுவாங்க போல இருக்கு. இருந்துட்டு போகட்டும் சாமி''
கிருஷ்ணனும்  மற்ற தேவர்களும் வைகுண்ட வாசிகளும் கிருஷ்ணசாமி சொன்னதை கேட்டுக் கொண்டு பேசாதிருந் தாரக்ள். 
கிருஷ்ணன் என்ன பதில் சொல்லப்போகிறான் என்று காத்திருந்தார்கள்.
''அப்பனே  நீ எனக்கு சாமி,  நீ  கிருஷ்ண சாமி, வா, வலது காலை எடுத்து  வைத்து,   இங்கே லெப்ட்  ரைட் வேண்டாம். உன் வரவால் இங்கு எல்லாருக்கும் பெருமை.  நான் தான்  காக்கும் கடவுள் என்று  சொல்கி றார்கள்.  நீயும்  தான் காக்கும் கடவுள் கிருஷ்ணனுக்கே சாமி  நீ  . வா. நீ ஏற்கனவே நரகத்தை அனுபவித்தவன் இது உன் ஸ்வர்கபூமி.  ஆனந்தமாக  சுற்று. எங்கே வேணுமானாலும் சந்தோஷமாக திரி.    மற்றதெல்லாம் உன் பிளான்  எல்லாம் இனிமேல்  என்னுடையது.   நான் பார்த்துக் கொள்கிறேன்''

sivan jaykay

unread,
Sep 5, 2023, 8:07:51 PM9/5/23
to amrith...@googlegroups.com

கிருஷ்ண ஜெயந்தி  - நங்கநல்லூர்  J K. SIVAN

கிருஷ்ணன் மனிதனாக  அவதரித்த  தெய்வம். அவன் அவதாரங்களிலேயே  மிகவும்  நமக்கு நெருங்கியவன்.  

கிருஷ்ணன் அபூர்வன். பூர்ணாவதாரன். பிறந்ததும் மரணம்  ரெடி  என்று தெரிந்த தாய்க்கு  ''பிறப்பு இறப்புக்கு அல்ல, சிறப்புக்கு ''  என்று  நிரூபித்தவன்.

தெய்வத்துக்கு பிறப்பு இறப்பு கர்மா  எதுவுமே இல்லை என்றாலும்  மனிதப்பிறவி எடுத்ததால்,  பிறந்ததும் மரணம் என்று முத்திரை குத்தினாலும் 125 வருஷம் வாழ்ந்து காட்டியவன்.   வருஷா வருஷம் அவன் பிறந்த நாளை ஸ்ரீ ஜெயந்தி என்றும் கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம்.   கிருஷ்ணன் அவதரித்த  ஆவணி மாதம்,  தேய்பிறை  அஷ்டமி,  ரோகிணி நக்ஷத்ர  நாள்,  கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி   என்று   நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். குறிப்பாக வடஇந்தியாவில் 10 நாட்கள் விழாவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பலவிதமான விளையாட்டு போட்டிகளும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்படும்.  இந்தவருஷம்  6.9.2023 இரவு 09.14 க்கு பிறகே அஷ்டமி திதி துவங்குகிறது. மாலை 03.25 க்கு பிறகே ரோகிணி நட்சத்திரம் துவங்குகிறது. அதோடு செப்டம்பர் 07 ம் தேதி தான் நாள் முழுவதும் அஷ்டமி திதி காணப்படுகிறது. அன்று இரவு 09.14 மணிக்கு பிறகே நவமி திதி துவங்குகிறது. அதே போல் செப்டம்பர் 07 ம் தேதி மாலை 03.59 வரை ரோகிணி நட்சத்திரம் உள்ளது. 6/9/23 ஆ  அல்லது  7/9/23  என்ற  குழப்பமே வேண்டாம்.   கிருஷ்ணர் அவதரித்தது நள்ளிரவு நேரத்தில்.  ஆகவே  கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதற்கான நாள் செப்டம்பர் 06 ம் தேதி தான். கிருஷ்ண பூஜையை செப்டம்பர் 06 ம் தேதி இரவு 11.57 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 7 ம் தேதி அதிகாலை 12.42 மணிக்கே நிறைவு செய்ய வேண்டும்.  

கிருஷ்ணன்  பொம்மையாகவோ, படமாகவோ, இல்லாத ஹிந்துக்கள் வீடே இல்லை.  நமது  பிறந்தநாள் என்றாலே வீடுகளை அலங்கரிக்கும்போது, கிருஷ்ணன் பிறந்த நாள்  அலங்காரம் பற்றி சொல்லவே வேண்டாம்.  தோரணங்கள், மாக்கோலங்கள், பஜனைகள், குழந்தைகளுக்கு ராதா கிருஷ்ணன் வேஷம். ஊர்வலம்,  என்றும் செய்யாத  வெல்லச் சீடை உப்புச்சீடை எவ்வளவு தின்றாலும் அலுக்காது.  அதற்கு என்றே ஒரு தனி ருசி.கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்  என்ற பாட்டில் சொன்ன படி அவன் பூர்ண மனிதராக அவதரித்து அழியாக கீதையை  நமக்கு பரிசளித்தவன்.
''வருஷா வருஷம் இப்படி உன்னைக் கொண்டாடுகிறோமே ,  கிருஷ்ணா  நீ மீண்டும்  எப்போது  நிஜமாகவே  இங்கே வருவாய்?''
''இதென்னடா கவலை உனக்கு?  நான் தான் ரொம்ப புரியும்படியாகவே சொல்லி இருக்கிறேனே. ஓவ்வொரு யுகத்திலும் நான்  வந்து என் கடமையைச் செய்வேன். என் கடமை என்ன என்று கேட்கிறாயா?  தீயவர்களை அழித்து, நல்லவர்களைக் காப்பது.  கலிகாலத்தில் நடக்கும் அக்கிரமங்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன், தக்க சமயத்தில் வந்து வேரோடு அவற்றைக் களைவேன்'' என்று சொல்லி இருக்கிறான்.

परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्‌ ।धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे ॥4.8॥

paritrāṇāya sādhūnāṃ vināśāya ca duṣkṛtām‌ । dharmasaṃsthāpanārthāya sambhavāmi yuge yuge ॥4.8॥
" பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே "

எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் பூமியில் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் நான் தோன்றுவேன். கொடியவர்களை அழித்து பக்தர்களைக் காப்பதற்காகவும், தர்மத்தை நிலை நாட்டு வதற்காகவும் யுகம்தோறும் அவதரிப்பேன்.  ஆகவே  இன்னும் அவன் வரும் நேரம் நமக்கு வரவில்லை.

 கிருஷ்ணர் அவதரித்த  ஆவணி மாதம்,  தேய்பிறை  அஷ்டமி,  ரோகிணி நக்ஷத்ர  நாள்,  கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி   என்று   நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். குறிப்பாக வடஇந்தியாவில் 10 நாட்கள் விழாவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பலவிதமான விளையாட்டு போட்டிகளும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்படும்.

நள்ளிரவில் கிருஷ்ணரின் சிலை அல்லது படத்திற்கு பழங்கள், மலர்கள், தேங்காய், நெய்யினால் செய்த பலவிதமான இனிப்பு பலகாரங்கள், வெண்ணெய், ஆகியவற்றை படைத்து வழிபட வேண்டும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை குழந்தையாக பாவித்து, வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து வழிபட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வ வளம், நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றுடன் கிருஷ்ணரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

ஒரு யுகம் முந்தி, துவாபர யுகத்தில் 5250 வருஷத்துக்கு முன்பு ரோஹிணி  நக்ஷத்திரத்தில்,  ஆவணி மாதம்  நள்ளிரவில், தேய்பிறை அஷ்டமி திதியில் இருட்டில் பிறந்தாலும்  அஞ்ஞான இருள் போக்க கீதை போதித்தவன்.  யது குலத்தை சேர்ந்தவன் என்றாலும் ஆநிரை மேய்த்து ஆயர்பாடியில் அனைவரையும் எளிமையோடு  அரவணைத்து  ஆனந்தத்தில்
ஆழ்த்தியவன்.
ஜன்மாஷ்டமியாக பலர் கொண்டாட  வைஷ்ணவர்கள்  ரோகினி நக்ஷத்ரத்தன்று  கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடு கிறார்கள்.  ஸ்ரீ ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, தஹி அண்டி, தயிர் ச ட்டி,  என்று பல பெயர்களில் இது கொண்டாடப்படுகிறது. குஜராத்தில் ரொம்ப விசேஷம். அன்று  நிறைய   பசுக்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு மாலைகள் அணிந்து ஊர்வலம் ஜம்மென்று வரும்.    நம் ஊர்களில் வெண்ணைத்தாழி  உற்சவம். உறியடி உத்சவம் பிரசித்தம். 

மஹாராஷ்டிராவில் ஒட்டு மொத்தமாக  ஜென்மாஷ்டமி விழாவன்று உறியடி கோலாகலமாக நடக்கிறது. எண்ணற்ற பெண்களும் ஆண்களும் இதில் குழந்தைகளோடு பங்கேற்பார்கள்.  மக்கள் ஈடுபாடு கிருஷ்ணன் பிறந்த ஜென்மாஷ்டமி விழாவில்  அதிகமானது என்பது .உலகறிந்த  உண்மை.   இஸ்கான் கோவில்களில் வெகு வெகு விமரிசையாக இந்த ஜென்மாஷ்டமி விழாக்கள் நடைபெறும். வ்ரஜ பூமி  என்று  கிருஷ்ணன் பிறந்த இடத்தையும், அவன் வளர்ந்த பிரிந்தாவனத்தையும் அவன் கம்சனை தேடிச்சென்று அவனைக் கொன்ற மதுராவையும் தரிசிக்க  இந்தியாவின் பல பாகங்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள். 

கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். தனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.கேரளாவில் ``அஷ்டமி ரோகிணி'' என்று  கொண்டாடுவார்கள்.  என்னைப்  பொறுத்தவரை  என்றுமே  எப்போதுமே  மனதில் குடிகொண்ட  கிருஷ்ணன், நினைத்தபோதெல்லாம், குழந்தையாக, ஆலிலை கிருஷ்ணனாக, ராதாகிருஷ்ணனாக, கோவர்தனகிரிதாரியாக, கீதாச்சார்யனாக  மாறி மாறி உருவெடுத்து மகிழ்விக்கிறான், என்னை ஊக்குவித்து வழி நடத்துகிறான்.  எனக்கு  ஒவ்வொரு நாளும்  கிருஷ்ணஜெயந்தி என்று  சொல்லவே, எழுதவே பெருமையாக இருக்கிறது.

KRISHNA.jpg

sivan jaykay

unread,
Sep 6, 2023, 7:55:12 PM9/6/23
to amrith...@googlegroups.com

ஸூர்  ஸாகரம்  -     நங்கநல்லூர்  J K  SIVAN 

யசோதா உனக்கு கோபம் ஆகாதேடி... 

யசோதைக்கு  இப்போதெல்லாம்  பழக்கமாகிவிட்டது. ஆரம்பத்தில் இருந்த அதிர்ச்சி மறைந்து விட்டது. என்ன செய்வது? எப்படி  அவனை திருத்துவது?  எதற்கும் பயமில்லையே அவனுக்கு,  அவன் விஷமத்தை, கொட்டத்தை  எப்படி அடக்குவது?   அவனால்  நேரும்  வெண்ணெய்  தயிர்  நெய்  கொள்ளையை  எப்படி  தடுப்பது? என்ற வழி தெரியாத கவலை ஒன்றே  அவளை ஆட்கொண்டது.  இதோ  சிலர்  வந்துவிட்டார்கள்.  மெதுவாக  அவர்களை வரவேற்று  தரையில் அவர்கள் எதிரே அமர்ந்து கொண்டாள் யசோதை. குற்றவாளி போல் அவள் வாய் பேசாமல் அவர்கள் சொல்வதை கேட்டுக்  கொள்ளத்தான் முடியும்?வேறென்ன செய்வது?

''யசோ, என்னடி இது,  ஏதாவது நல்ல புத்தி சொல்லி,இந்த பயலை திருத்த முடியாதா உன்னால்?  முதுகில் ரெண்டு சாத்து சாத்து, அப்படியாவது உன்கிட்டே கொஞ்சம் பயம் வரட்டும் அவனுக்கு? 

இப்படிச் சொல்றேனே  தவிர என்னாலேயே  அவனைப்  பார்த்தாலே   ஒவ்வொரு  நாளும்அவன் அடிக்கற லூட்டி, அவன் செய்யறவிஷமம்,  அவன் மேலே இருந்த கோபம் எல்லாமே  காணாம போயிடுறதுடீ. நீ எப்படி அவனை அடிப்பே?  சிரிச்சே மயக்குறான் அந்த கள்ளன்.  நான்  வெண்ணை எடுக்கலேங்கறான், ஆனால்  வாய் ஓரத்திலே, கன்னத்திலே எல்லாம் வெள்ளையா திட்டு திட்டா வெண்ணெய் . வெண்ணையை எடுக்கும்போது அவன் கீழே சிந்தின வெண்ணெய் .  உடம்பெல்லாம் தயிர் அபிஷேகம்.   எங்க வீட்டுப் பிள்ளைகள் கூட  அவனுக்கு  உள்  கை . ஒத்தன் மேலே ஒருத்தன்  வெண்ணை, தயிரை வாரி வீசி  விளையாட்டு.   

இந்த பொல்லாத கிருஷ்ணன்  கண்லே  படக்கூடாது ன்னு  நானும் தான்   எவ்வளவோ யோசித்து, எத்தனை தான் ரஹஸ்யமாக  வெண்ணெய், தயிர், பால், நெய்  சட்டையெல்லாம் வச்சாலும் எப்படியோ கண்டுபிடிச்சுடறான்.  யசோதா  நான் உன் புள்ள கிட்டே  தோத்துபோய்ட்டேன் டீ.   அவன்   பலே  திருடன் டீ.      ஊர்  முழுக்க  யமுனா நதிக்கரையிலே  அவனைப் பத்தி தான் பேச்சு. ஆனா ஒருத்தருக்கும்  அவனை தண்டிக்க மனசில்லே . நினைச்சாலும் அவனைப் பார்த்ததும் மறந்து போயிடறது. 

ஒருநாள் கையில் கொம்பை எடுத்து  யசோதை கண்ணனை ரெண்டு தட்டு தட்டினாள் .  அதைப் பார்த்த சில கோபிகள்  புலி போல் பாய்ந்து வந்து யசோதையின் கையில் இருந்த கொம்பை பிடுங்கி தூர போட்டுவிட்டார்கள்.  

''எவ்வளவு பச்சை குழந்தை அவன். அவனை அடிக்க எப்படி டீ யசோ, உனக்கு மனசு வந்தது. கல் நெஞ்சக்காரியா  நீ? அவன் கண்லே  ஜலத்தை பார்த்தியா? கண்ணு ரொம்பி, கன்னத்திலே வழிந்து மார்லே  இறங்கி  முத்து முத்தா  ஜொலிக்கிறது.  கருப்பு உடம்பிலே வெள்ளை முத்து மாதிரி ஜலக்குமிழிகள் பளிச்சுனு ஜொலிக்கிறது பார்.  ரெண்டு கண்ணு  விழிகளும்  மிரள மிரள  அங்கேயும் இங்கேயும் பார்க்கும்போது  ரெண்டு  பறவைகள்  வேடன் வில்லையும் அம்பையும் பார்த்துட்டு தப்பிக்கப்  பறந்து போக  முயல்வது போல் அலை பாயறது பார்'' 

ஸூர்தாஸ் எவ்வளவு அற்புதமாக  ஒவ்வொரு காட்சியையும் நமக்கு கவிதையாக கொடுக்கிறார். அவர் எழுதிய மொழியில் படிக்க, புரிந்து கொள்ள,  முடியாவிட்டாலும், யாரோ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததே இவ்வளவு ருசி யாக இருக்கிறதே!

The gopis complain
Why don’t you reprimand that boy?
What can I say? Every day it happens.
I haven’t the strength to endure:
He swallows the butter, spills milk on the floor,
smears his body with curd,
Then chases after the children left at home,
spraying them with butter-whey.
If ever I hide a thing, even in places
far-off and secret, he knows where.
What to do? Defeated, undone,
I’m driven to despair by your son.
His thefts are so clever—that wish-fulfilling jewel!—
that their tale cannot be told,
And so, to get a hold on him, says Sūr,
all of Braj is flowing,
dashing here and there.
How could you have become so angry with Kānh
That you took a stick in that harsh hand of yours
and let it touch his soft, tender frame?
Look at how those tears drip down from his eyes
and glisten as they settle on his breast,
As if a wagtail wanted to gather many pearls
in a beak too small to hold them all inside.
Those eyes shuttle back and forth in such terror—
look into his face and listen to what I say—
That it seems, says Sūr, two birds have seen the bow
of a hunter, and are desperate to fly.




sivan jaykay

unread,
Sep 6, 2023, 7:55:12 PM9/6/23
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

இன்றைய  கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்  ஸ்வீட். 

மதுரம்‌ மதுரம்‌  கிருஷ்ணன் மதுரம்‌!  மஹா பெரியவாவின்  கிருஷ்ண சரித்திர உபன்யாசம்:

“அவனைப்‌ பத்தி யார்  என்ன சொன்னாலும் அத்‌தனையுமே மதுரந்தான்‌.ஸ்வீட் தான். அவன்‌ பொறந்ததே ''மதுரத்திலே''  மதுரையிலே. மதுரான்னு பேர்.  நம்ம பாண்டிய தேசத்து மதுரை இல்லே. இங்கேயே மீனாக்ஷிஅம்பாள்  மதுர மயமாத்தான்‌
 இருக்கா.அவள்  கிட்டேயிருந்துதான்‌ சங்கீதம்‌ பிறந்தது...மாதங்கின்னும்‌ ஸ்யாமளான்னும்‌ சொல்ற  சங்கீத தேவதை
 மீனாக்ஷி.  ஸங்கீதம்னாலே மதுரம் தானே? இது தென்‌ மதுரை.  “நான்‌ சொன்னது வட மதுரைன்னு வடக்கே  யமுனா தீரத்துல இருக்கற  மதுரா''. 
ஆண்டாள்‌ ரஹஸ்ய அழகோட, சொல்லாம சொல்ற பாணியில,“மாயனை' னு ஆரம்பிச்சு தொடர்ந்தாப்பல “மாயனை, மன்னு வடமதுரை மைந்தனைன்னு!  சொல்லியிருக்காள். அதென்ன, “மன்னூன்னா, அதுக்கு “பஹு (வெகு)  காலமா நெலச்சுப்‌ புகழ்‌ பெற்ற 'ன்னு அர்த்தம்‌,  “மன்னு புகழ்‌ கோஸலை தன்‌ மணிவயிறு வாய்த்தவனேன்னு கூடப்‌  பாசுரம்‌ இருக்கு. அது ராமசந்த்ர மூர்த்தியைப்‌ பத்திக்‌ குலசேகரப்‌ பெருமாள்‌ பாடினது. தேவகிக்குப்‌ பிள்ளையாய்ப்‌ பொறந்தவனை அவளோட மைந்தன்னு சொல்லாம “வட மதுரை மைந்தன்னு சொல்லி  முதலில் அவன்  ஜன்ம க்ஷேத்ரத்தைப்‌  பெருமைப் படுத்தியிருக்கா.  ஜன்மாவைத்‌ தந்த அம்மாவும்‌, ஜன்மபூமியும்‌ ஸ்வர்க்கத்துக்கும்‌ மேலானவைன்னு சொல்வதுண்டு. 
“ஜனனீ ஜன்ம பூமிச்ச ஸ்வர்காதபி கரீயஎபி”.  இங்கே மொதல்ல   தாய்நாட்டை (பொறந்த ஊர்னும்‌ வெச்சுக்கலாம்‌) பொறந்த ஊரைச்‌ சொல்லிட்டு அப்பறம்‌ “தாயைக்‌ குடல்‌ விளக்கம்‌ செய்த தாமோதரனைன்னு அம்மாவைச்‌ சொல்றா!ஏன்னா, அந்த மதுரைக்கு அப்படியொரு மஹிமை!   என்ன மஹிமைனு கேட்டா, ஜன்மா இல்லாத ஸ்வாமி ஜன்மிச்ச அந்த க்ஷேத்ரம்தான்‌ மதுரா.  “புனரபி ஜனனீ ஜடரே சயனம்னு திரும்பத்‌ திரும்ப தாய்‌ வயத்துல பொறந்திண்டிருக்கற நமக்கெல்லாம்‌ ஜன்ம விமோசனம்‌ தருகிற மோக்ஷ புரி  மதுரா.  
ஸப்த மோக்ஷ்புரின்னு ஏழு இருக்கறதுல மொதல்ல ராமன்‌ பொறந்த அயோத்தி. ரெண்டாவது க்ருஷ்ணன்‌ பொறந்த இந்த
வடமதுரை.
“அதோட முக்ய காரணமா எனக்கு என்ன தோண்றதுன்னா, அந்த ஊரோட பேரே அங்கே அவதாரம்‌ பண்ணின ஸ்வாமிக்கு
ஸ்வபாவமாயிருந்ததுதான்‌! க்ருஷ்ணன்னா என்ன? மதுரந்தான்‌! தித்திப்புன்னா தித்திப்பு, அப்படியொரு தித்திப்பு அவன்‌"
“அந்த மாதுர்யத்துல என்ன விசேஷம்னா, மதுரமா இல்லாத   விஷயங்களாகவே அவன்‌ வெளிப்  பார்வைக்கு அநேகம்‌ பண்ணினாலும்‌  அவைகளும்‌ பக்த ஹ்ருதயத்துக்குள்ளே மதுரமாவே ஊறரது (ஊறுவது)தான்‌! ஆண்டாள்‌ மாதிரி, சுகர்‌, லீலா சுகர்‌, மீரா  மாதிரி மஹா  பக்தாள்தான்னு இல்லே! நம்ம மாதிரி ஏதோ கொஞ்சம்‌ பக்தி' ன்னு இருக்கறவாளுக்கும் கூட .
“அந்த மாதுர்யம்‌ எனக்கு இருக்காக்கும்‌, ஆகையினால, என்ன வேணா  அடாவடி, கபடம்‌, திருட்டு-புரட்டு பொய்‌ எது வேணாலும்‌ நான்  பண்ணுவேன்'' னு  அவன்‌ நடத்திக்‌ காட்டியிருக்கான்  தன்னுடைய வாழ்க்கை  பூராவுலேயும்‌. 

“என்னமா அவன்‌   சம்பந்தம் பட்டா  அமதுரங்கூட மதுரமாச்சுன்னா:  சக்கரையிலே பல தினுஸு பொம்மை பண்ணி யிருக்குன்னு  வெச்சுக்கோங்கோ, மொளகா, பாகக்கா, உப்புக்கட்டி மாதிரில்லாம்‌ கூட அந்தந்தக்‌ கலர்‌ கொடுத்துத்‌ தத்ரூபமாப்‌ பண்ணியிருக்குன்னு  வெச்சுக்கோங்கோ.  அப்ப அந்த மொளகாயும்‌, பாகக்காயும்‌, உப்புக்கட்டியுங்கூட
தித்திக்கத்தானே செய்யும்‌? ஏன்னா மொளகாயும்‌ பாகலும்‌  வெளி  வேஷந்தானே? உள்ளுக்குள்ளே அதெல்லாமும்‌ மதுர மயமான  சக்கரைதானே? அப்படித்தான்‌ இதுவும்‌.

“இனிமை - அதுதான்‌ “மதுரம்  என்றால்  தித்திக்கும்  தமிழ்‌. “தித்திப்புன்னு பேச்சு  மொழியில சொல்றோம்‌. இலக்கிய மொழி “இனிமை: செல (சில)  வார்த்தைகள்‌ தமிழ்ல அலாதி அழகு; அர்த்தத்துக்குப்‌ பொருத்தமான  சப்தமா அந்த வார்த்தைகளில்  அமைஞ்சிருக்கு. அப்படி ஒண்ணு “இனிமை. அதுல வர மூணு எழுத்துல எதுவுமே கடுமையா இல்லாம மெத்துனு இருக்கு.

“இங்கிலீஷ்ல மதுரத்தை “ஸ்விட்  SWEET ங்கிறா. “ஸ்வீன்னு இழுத்து சொல்றப்ப மதுரமாயிருந்தாலும்‌ அப்பறம்‌ முடிக்கறச்சே “ட்னு ஒரு டகாரம்‌ மொரட்டு சப்தமா ஒக்காந்திருக்கு! ஒத்தர்‌ வேடிக்கையாச்‌  சொன்னாப்பல, “குழலினிது யாழினிதூன்னு, சொல்றச்சயே மழ மழன்னு இனிமையா இருக்கறதை “ட்ரான்ஸ்லேட்‌: பண்ணி, “flute sweet   lute sweet ' னு  லொட்டு  லொட்டுன்னு சொன்னா..''.
ஸ்க்ருதத்துல “மதுரம்‌்னு சொல்றச்சே கூட அந்த “dhu ''   கொஞ்சம்  கடும்‌ சப்தமாத்தான்‌ இருக்கு. அதைவிட நைஸா
“ஸ்வாதுூ'  ன்னும்‌ இன்னொரு வார்த்தை இருக்கு. இங்கே வர “து'' மதுரத்துல வர கெட்டி “து''  இல்லே; லேசு-thu ”
“இத்தனைதான்னு இல்லாம அவன்‌ போட்ட வேஷத்திலே ஒண்ணா எப்பவாவது அவன்‌ “அபாலஜெடிக்‌:' வேஷம்‌ போட்டிருந்தா அதுவுங்கூட மதுரமாத்தான்‌ இருக்கும்‌!  இதை நெனச்சுத்தான்‌ பரம பக்தர்‌ ஒத்தர்‌, “ மதுராதிபதே: அகிலம்‌ மதுரம்‌” பாடி வெச்சுட்டுப்‌ போய்ட்டார்‌.   “மதுராஷ்டகம்‌னே எட்டு ச்லோகம்‌ கொண்ட ஸ்தோத்ரம்‌ அது.    அதுல ஒவ்வொரு ச்லோகத்துக்கும்‌ ஈற்றடி “மதுராதிபதேரகிலம்‌ மதுரம்‌. பாக்கி மூணடியில ஒவ்வொண்ணிலேயும்‌ ஸ்வாமியோட    குணம்‌, ரூபம்‌, கார்யம்‌, அல்லது அவன்‌ எம்பந்தப்பட்ட விஷயம்னு  ரெண்டு ரெண்டு ஸமாசாரம்‌ சொல்லியிருக்கும்‌. ஒவ்வொண் ணையும்‌ மதுரம்‌-னு சொல்லியிருக்கும்‌.
“எக்ஸாம்பிளுக்கு  முதல் ச்லோகம்‌ சொல்றேன்‌. அதுல மொதல்‌ அடி.  “அதரம்‌ மதுரம்‌, வதனம்‌ மதுரம்‌” “ஸ்வாமியோட ஓதடு
மதுரமாயிருக்கு; முகம்‌ மதுரமாயிருக்குன்னு ரெண்டு விஷயம்‌.   ரெண்டு மதுரம்‌ சொல்லியிருக்கு.   “உ தட்டை ஏன்‌ எடுத்தவொடனே சொன்னார்னா மதுரம்னா முக்யமா  சங்கீதத்தைத்‌ தானே சொல்றது? மதுர கானம்‌, மதுர கண்டம்‌, இனிய குரல்‌,  sweet  voice  னு எந்த பாஷையானாலும்‌ அப்படிச்‌ சொல்றது.  முன்னாலே சொன்னேனே, தென்‌ மதுரை மீனாக்ஷிகூட ஸங்கீதத்தின்‌  அதி தேவதை  தான்னு!   வட மதுரையில்‌ இருக்கற அவளோட   உடன் பிறந்தானும்‌ கானலோலன்தான்‌. அவள்  வீணா கான ப்ரியை-னா அவன்‌   வேணுகானலோலன்‌! குழல்‌, யாழ்ங்கிற மாதிரி, வேணு-வீணாங்கிற வார்த்தை
 களே
 மதுரமா ஒலிக்கிறது. 
மத்த ஸ்வாமி கையிலேல்லாம்‌ ஆயுதம்‌ இருக்கும்‌. கருணாமூர்த்தியான ராமசந்தர மூர்த்தி கையிலகூட தனுசு தான்‌.
க்ருஷ்ணன் மட்டும் தான்‌  புல்லாங்குழல்‌ வெச்சுண்டிருக்கறவன்‌.  வேணுகோபாலன்‌, முரளீகரன்‌-னே அவனுக்குப்‌ பேர்‌.
அந்த வேணுவை அவன்‌ “உதட்டு 
ல வெச்சுத்தானே ஊதரான்‌? அவனோட திவ்ய சரீரத்துக்குள்ளேயிருந்து வர பவித்ரமான காற்றை  அவன்‌ அந்தப்‌ புல்லாங்குழல்‌ வழியா வடிக்கறதுனால தானே அந்த  வேணுகானம்‌ அப்படியொரு மதுரமா, கேக்கற வர்களை யெல்லாம்‌  பித்துப்‌ பிடிச்சவாளாட்டம்‌ மயக்கியது?
“பரம ப்ரியத்தைக்‌ காட்ட முத்தம்‌ குடுக்கறது. ஸ்வாமி எப்பவும்‌  புல்லாங்குழலை  உதட்டில்   ஸ்பரிச்சிண்டு முத்தந்தான்‌
குடுக்கறான்னு அது  கிட்ட கோபிகா ஸ்த்ரீகள்லாம்‌ பொறாமை கூடப்‌  படுவாளாம்‌!
“புல்லாங்குழல்‌ வாசிச்சா  தானா? அவன்‌ பேசினாலே  சங்கீதமாத்தான்‌  பரம மதுரமாயிருக்கும்‌. இன்னொரு ச்லோகத்துல அதையும்‌ “வசனம்‌ மதுரம்‌னு சொல்லியிருக்கு.
“ஸாதாரணமா ஞானோ பதேசம்னா ஒரே போரா bore  ஆ  இருக்கும்‌! ஆனா, க்ருஷ்ணன்‌ பண்றச்சே மட்டும்‌ அதுவுங்கூட மதுர கீதமாகத்தான்‌ இருக்கும்‌! ஆமாம்‌, “கீதைன்னே அதுக்குப்‌ பேர்‌ சொல்றோமே!  கொழந்தையா புல்லாங்குழல்‌ வாசிச்சுண்டு கானம்‌ பண்ணினவன்‌  வயஸான பிறகு
 ஞானம்‌ சொன்னப்ப, அதுவும்‌ கீதமாத்தான்‌ திதிச்சுது
“இதெல்லாம்‌ உதட்டு ஸம்பந்தத்துல வந்ததுதானே? அதனாலதான்‌ “அதரம்‌ மதுரம்னு மொதலிடம்‌ குடுத்துச்‌ சொன்னார்‌. 
“இப்படி வரிக்கு ரெண்டு மதுரமா ஒவ்வொரு ச்லோகத்துலயும்‌  ஈற்றடி நீங்கலா மத்த மூணுவரியிலே மொத்தம்‌ ஆறு மதுரம்‌. எட்டு ச்லோகத்திலயும்‌ சேத்து ஆறெட்டு நாப்பத்தெட்டு மதுரத்தைச்‌ சொல்லி அத்புதமா அஷ்டகம்‌ பாடியிருக்கார்‌ வல்ல 
பாச்சார்யார்‌. பால க்ருஷ்ணனையே  முழு முதல்‌ தெய்வமா வெச்சு “சுத்தாத்வைதம்னு  philosophy பண்ணினவர்‌. அதை  follow பண்றவா இருக்கா. எல்லாரும்‌ ஸ்ந்தோஷப்பட அவர்‌ “மதுராஷ்டகம்‌' பாடியிருக்கார்‌.
“பகவானோட “அதரம்‌: “வதனம்‌, “நயனம்‌: ஹஸிதம்‌: - அதாவது சிரிப்பு அவனோட ஹ்ருதயம்‌. கமனம்‌: - அதாவது நடை. அவனோட வசனம்‌, சரிதம்‌, வஸனம்‌ - அதுதான்‌ அவன்‌ போட்டுக்கொண்டிருக்கும்  பீதாம்பரம்‌; அல்லது வஸனம்‌:னா அவர்‌ வாஸம்‌ பண்ற கோகுலம்னும்‌ சொல்லலாம்‌; இப்படி அடுக்கிண்டே போய்‌ அது  ஒண்ணொன்னும்‌ மதுரம்கிறார்‌.
இதெல்லாம்‌ மதுரமாயிருக்கிறது விசேஷமில்லை. ஸாதாரணமா  மதுர லிஸ்டில்‌ வரதுக்கில்லாத சிலதுகூட க்ருஷ்ண
ஸம்பந்தத்தாலே மதுரமாயிட்டதையும்‌ அவர்‌ சொல்றதுதான்‌ விசேஷம்‌.  இப்படி “வலிதம்‌' “ஹரணம்‌, “வயிதம்ங்கற மாதிரி சிலது சொல்றார்‌. “வலிதம்‌னா வளைச்சுண்டு கோணலா நிக்கறது.    
அது ஸாதாரணமா மதுரமாயிருக்காது.  ஆனா பகவான்‌ புல்லாங்குழல் வாசிக்கறதுல இடது பக்கம்‌ சாஞ்ச முகமாவும்‌, கழுத்துக்குக்‌ கீழே இடுப்பு வரைக்கும்‌ வலது பக்கமா ஓடிச்சுண்டும்‌, இடுப்புலேந்து கீழே மறுபடி இடது பக்கம்‌ ஓடிச்சுண்டு  வலது பாதத்தை இடது பாதத்துக்கு க்ராஸா cross  ஆ  வெச்சுண்டும்‌ மூணு கோணலா நிக்கறதையே த்ரிபங்கம்‌, த்ரிபங்கம்னு லோகமெல்லாம்‌  பேரழகா மதிச்சுக்‌ கொண்டாடறது.
“கோணை பெரிதுடைத்தே'' ன்னு ஆழ்வார்கூட சொல்லியிருக்கார்‌. அதுவும்‌ அவன்கிட்ட அழகுதான்‌. அதாவது மதுரந்தான்‌.
“மதுரம்னா வேறே என்ன? அழகு, நல்லதுன்னுதான்‌ அர்த்தம்‌. நல்லது மதுரம்‌. பகவான்கிட்ட எல்லாமே நல்லதுதான்‌. “அனந்த கல்யாண குணம்ங்கிறது. அதனால அத்தனையும்‌ மதுரம்‌:  “ஹரணம்‌ மதுரம்‌-ங்கிறார்‌. ஹரணம்னா அப ஹர ணம்தான்‌; plain னா  சொன்னா, “திருட்டு. கிருஷ்ணனுடைய திருட்டு,   வெண்ணெய்த்‌  திருட்டு, “உள்ளம்‌ கவர்‌ கள்வனா அவன்‌ பண்ற திருட்டு ! ரெண்டுமே எத்தனை மதுரம்‌?

“வமிதம்‌ மதுரம்்‌ங்கறாரே, அது என்ன? “வமிதம்‌: தான்‌ ஈணாம்னு ஆனது. “சமனம்‌: பண்றது “சாந்தி-ங்கிற மாதிரி, “வமனம்‌ பண்றதுதான்‌ “வாந்தி. ஸாதாரணமா வாந்தி பண்றதைப்‌ பார்த்தாலே, நெனச்சாலே நமக்கும்‌  குமட்டும். ஆனா க்ருஷ்ணன்‌ பண்ணினா? அதுவுங்‌ கூட மதுரந்தான்‌. அதை (நி)ரூபிக்கிறதுக்காவே அவன்‌ அப்படியும்‌ பண்ணுவான்‌ போலேயிருக்கு!    இல்லாட்டா, “வமிதம்‌னா “கொப்புளிக்கறதுங்கிற அர்த்தமும்‌  எடுத்துக்கலாம்‌. அவன்‌ திருட்டுத்தனமா வாய்‌ நிறைய  யமுனா  தீர்த்தத்தை அடக்கிண்டு எவளோ ஒரு கோபிகா ஸ்த்ரீ மூஞ்சில  அதைப்‌ 'புஸ் ' னு பீச்சிக்‌ கொப்பு ளிச்சானானா, அதுதான்‌ அவளுக்கு எத்தனை மதுரமாயிருந்திருக்கும்‌? அவன்‌ பண்ணின இந்த மாதிரி விஷம
மெல்லாம்‌ இன்னிக்கும்‌ படிக்கறச்சே, கேக்கறச்சேயே எப்படித்‌ தேனாத்‌ திதிக்கிறது?...

“புக்தம்‌ மதுரம்‌னு ரெண்டு எடத்துல வரது. அதுக்கு எடத்தைப்‌ பொறுத்து வெவ்வேறே அர்த்தம்‌ பண்ணிக்கணும்‌. மொதல்ல “பீதம்‌ மதுரம்‌, புத்தம்‌ மதுரம்‌னு வரது. “பீதம்‌னா பானம்‌ பண்றது; குடிக்கிறது. பாலக்ருஷ்ணன்‌ பாலை ருசிச்‌..சு., சீ.ப்பிக்‌ குடிக்கறது மதுரமான காட்சியாதான்‌ இருக்கும்‌. அதோட சேத்து “புக்தம்னு போட்டிருக்கறதாலே “அன்ன-பானம்‌: என்கிறபடி இங்கே “புக்தம்‌கிறது சாப்பிடறதைக் குறிக்கும்‌.

ஸமஸ்த ஜீவராசிகளுக்கும்‌ சாப்பாடு போடற தாதா, தானே சாப்பிடறது ரொம்ப மதுரந்தான்‌! ரெண்டாவதா *யுக்தம்‌ மதுரம்‌, புக்தம்‌மதுரம்‌னு வரது. போகம்‌ - போகம்னு ரெண்டு. போகம்‌, இஹலோக இன்பம்‌, யோகம்‌, ஆத்மலோக இன்பம்‌. “புக்தம்‌்னா போகம்‌ பண்றது; “யுக்தம்னா யோகம்‌ பண்றது.  இங்கே அப்படிதான்‌ அர்த்தம்‌ பண்ணிக்கணும்‌. மஹா மாயாவி, பரம
ஞானி ரெண்டுமா இருந்த ஸ்வாமி அந்த க்ருஷ்ணாவதார வாழ்க்கை பூராவும்‌ ரெண்டையுமேதான்‌  ''ஒரே சமயம், simultaneous ஸாப்‌  பண்ணிண்டிருந்தான்‌! ஆமாம்‌, அப்படித்தான்‌ பண்ணிண்டிருந்தான்‌"”

“இப்படி அநேக மதுரங்கள்‌ சொல்லிண்டு போய்‌ “தலிதம்‌ மதுரம்‌,  பலிதம்  மதுரம்‌, ! பகவான்‌ ஸ்ரீ க்ருஷ்ணர்‌ குறித்து ஸ்ரீ மஹா பெரியவா  பலிதம்‌ மதுரம்‌னு அஷ்டகத்தை முடுச்சிருக்கார்‌. “தவிதம்‌ ' னா “பொளக்கறது, “பொளந்து தள்ளிட்டான்‌!னு சொல்கிறோமே, அப்படிச்‌  சொல்லும்படியா, தான்‌ பண்ணின ஒவ்வொண்ணையும்‌ எக்ஸ்பெர்டாப்‌ பண்ணினவன்‌ அவன்‌!  நிஜமாவே பால்யத்துல  அசுரர்களை  பொளந்தும்‌ தள்ளினான்‌!  பிற்காலத்துல தன்‌ ஸங்கல்ப சக்திக்குக்‌ கருவி மாத்திரமா இருந்துண்டு அர்ஜுனாதிகள்‌ சத்ரு ஸைன்யங்களைப்‌ பொளந்து தள்ளும்படியும்‌ பண்ணினான்‌. “காலோஸ்மி: - “நான்‌ காலனாக்கும்‌்னு  சொல்லி அந்த அர்ஜுனனையே நடுங்கப்‌ பண்ணினவனாச்சே!

அந்த நடுக்கத்துக்குள்ளேயுங்கூட ஒரு மதுரத்தையும்‌ ஒளிச்சுக்‌ குடுத்திருப்பான்‌! அவன்‌ காலனா ஸம்ஹாரம்‌ பண்றதும்‌ மதுரம்‌!  ஸம்ஹரிக்கப்படுகிறவனுக்கே, மதுரம்‌! ஏன்னா அவன்‌ கையால  செத்தா மோக்ஷ ந்தானே! காலனுக்குப்‌ பெண்பால்‌ “காலி, “காளிங்கறது அதுதான்‌. “மதுரகாளின்னே திருவாச்சூர்லே இருக்கா!
“ஒடம்பைப்‌ பொளக்காம, மனஸைப்‌ பொளக்கறது ன்னும்‌ அர்த்தம்‌  பண்ணிக்கலாம்‌. விரஹ தாபத்துல அப்படித்தான்‌ கோபிகா ஸ்த்ரீகளோட மனஸைப்‌ பொளந்தான்‌.

கோபிகா ஸ்த்ரீன்னா யாரு? உள்ளன்பு- உள்ளம்‌ பூரா அப்படியே ப்ரெமை ரொம்‌..பிக்‌ கிடக்கற உள்ளன்பு இருக்கற அத்தனை
பக்தாளுந்தான்‌! அவாளுக்கு அப்படிப்‌ பொளக்கப்படறதுலேயே -“தலிதம்‌னா பொளக்கப்படூுவது தான்‌; அப்படி ஆவதிலேயே - உள்ளூர ஒரு மாதுர்யமும்‌ தெரியும்‌! ஏன்னா, சேந்து இருக்கறதை விடப்‌ பிரிவுலதான்‌ ஓத்தரைப்‌ பத்தின நெனவு ஆழமாயிருக்கும்‌! க்ருஷ்ணன்‌ நெனவு மதுரந்தானே? 

“தலிதத்துக்கு அப்பறம்‌ அதுக்கு நேர்‌ “ஆப்போஸிட்டா opposite  “பலிதம்‌. இஷ்டப்பட்ட பலனைப்‌ பெறுவது  “பலிதம்‌. அதாவது மனோரதப்‌ பூர்த்தி. பழுத்த பழமான ஸ்வாமிதானே ஸமஸ்த ஜீவராசிகளோட ஸகல கர்மாக்களுக்கும்‌ பலதாதா?
“குறிப்பா, இங்கே தலிதம்‌-பலிதம்னு வரதை விரஹம்னும்‌, அப்பறம்‌ விரஹத்துல பொளந்து போன பக்தாள்‌ ஆசை பலிச்சு அவனோட சேர்கிறதுன்னும்‌ வெச்சுக்கணும்‌.
“அவனோட சேர்க்கிறதுதான்‌ மதுரம்‌-ங்கிற தத்வம்‌ பழமாகப்‌ பழுத்துவிட்ட பூர்த்தி ஸ்தானம்‌! “விருந்து முடிவுல பழம்‌ குடுக்கற மாதிரி, இந்த அஷ்டக விருந்தை இப்படிப்‌ பழம்‌ குடுத்துப்‌ பரம மங்களமா, மதுரமா முடிச்சிருக்கார்‌.
“கடைசிக்கு முந்தி, “யஷ்டிர்‌ மதுரா, ஸ்ருஷ்டிர்‌ மதுரான்னு  சொல்லியிருக்கார்‌. “யஷ்டி'ன்னா கழி, குச்சி. “ஹேய்‌ ஹேய்னு மாடு-கன்னு ஒட்டிக்கிண்டு போறச்சே ஸ்வாமி எல்லா இடைப்‌ பிள்ளைகளையும்‌ போலக்‌ கையில குச்சி வெச்சுண்
டு இருப்
பார். ஸாக்ஷாத்‌ ஸ்ரீ வைகுண்டாதிபதி இப்படி வந்தது எத்தனை எளிமை!  எத்தனை ஸெளலப்யம்‌! த்ரிலோக தர்பார்‌ நடத்தறதுக்குச்‌ செங்கோல்‌ பிடிக்கறவனே மாடு-கன்னுக்குத்‌ தார்க்குச்சி பிடிக்கறான்னா, அந்த எளிமை எவ்வளவு மதுரமா இருக்கு?
“யஷ்டியைச்‌ சொன்ன கையோட -ஸ்ருஷ்டியைச்‌ சொல்றார்‌. இடையர் பிள்ளையா எளிமை வேஷம்‌ போட்ட பால க்ருஷ்ண னே ஒருஸந்தர்ப்பத்துல ஸ்ருஷ்டியும்‌ பண்ணினார்னு பாகவதத்துல இருக்கு. அவதார ரஹஸ்யத்தைப்‌ புரிஞ்சுக்காம ஒரு ஸமயம்‌ ப்ரம்மா க்ருஷ்ணரோட மாடு மேச்சுண்டிருந்த மத்த எல்லா இடைப்பிள்ளைகளையும்  அந்த மாடுகளையும்‌ மாயமாத்‌ தூக்கிண்டு போய்ட்டார்‌. “அப்படியா ஸமா சாரம்‌எனு அப்ப  கிருஷ்ணன் ஒரு கார்யம்‌ பண்ணினார்‌. அவர்‌ மாத்திரம்‌ நெனச்சிருந்தா ப்ரம்மா மாயமாத்‌  தூக்கிண்டு போனாப்பலவே அவரும்‌ அவாளை மறுபடி சொடக்கு போடற
 நாழில பூலோகத்துக்கு திரும்பக்‌ கொண்டு வந்திருக்கலாம்‌. மாயைக்கு மூலஸ்தானமே அவர்தானே? “மாயனைன்னு
ஆண்டாளும்‌ ஆரம்பிச்சிருக்காளே!   ஆனா அவர்‌ பிள்ளை தன்‌ கிட்டேந்து கத்துண்ட துளியூண்டு மாயையையே தாமும்‌ காப்பியடிச்சா  கெளரதைக்‌ கொறைச்சல்னு  வேறே ஒரு மாயை பண்ணினார்‌. ப்ரம்மா தூக்கிண்டு போன அத்தனை இடையர்ப்பிள்ளைகளுக்கும்‌, மாடு கன்னுகளுக்கும்‌ அச்சா  டூப்ளிகேட்‌ காப்பி ஸ்ருஷ்டி பண்ணிட்டார்‌! இங்கேதான்‌ அவதார
க்ருஷ்ணன்‌ ஸ்ருஷ்டியும்‌ பண்ணினது!
இந்த ஸ்ருஷ்டி ப்ரம்மா பண்ணினதில்லையே! மதுரமே ஒரு ஸ்வரூபமான பகவானே பண்ணினதுன்னா? அந்த மதுரந்தான்‌
வாத்ஸல்யம்கிற மதுரத்தைப்‌ பெருக்கெடுக்க வெச்சது. “ஸ்ருஷ்டிர்‌  மதுரான்னது அதுதான்‌.
“அதுக்கு முந்தினதா “யஷ்டியைச்‌ சொன்னதுல ஒரு உள்ளர்த்தம்‌  தோண்றது. மாய மந்த்ரம்‌ பண்றவா மந்த்ரக்கோல்னு ஒரு
யஷ்டிதான்‌ வெச்சுண்டிருப்பா. “சூ மந்தரகாளிரன்னு மாயாஜாலம்‌ பண்றவன்‌ அந்தக்‌ கோலை ஒரு ஆட்டு ஆட்டினா ஒடனே
ஜால வித்தை நடந்துடும்‌!   magic  wand  னு வெள்ளைக்காராளும்‌ சொல்லுவா.   “க்ருஷ்ணனோட தார்க்குச்சியையே அப்படி அவன்‌ ஒரு சொழட்டுச்‌  சொழட்டித்தான்‌ டூப்ளிகேட்‌ ஸ்ருஷ்டி பண்ணினான்னு காட்டறாப்பல பத ப்ரயோகம்‌ விழுந்திருக்கு! ஸ்வாமிக்கு ஸங்கல்பமே போதும். சிருஷ்டி நடந்துடும்.   ஆனா எதுக்கும்‌ ஒரு கருவியை லீலையாக்‌ காட்டறதுதான்‌ பகவான்‌
வழக்கம்‌. தன்னோட லீலையைத்‌ தன்னுதா காட்டாம கருவியால நடந்த மாதிரிக்‌ காட்டறதும்‌ அவனோட லீலா விநோதங்களில்‌ ஒண்ணு! அப்படிக்‌ காட்டறப்போ இப்படிப்‌ பண்ணியிருக்கலாம்‌.
“மொத்தத்துல அந்தப்‌ பெரியவர்‌ சொன்னாப்பல “மதுராதிபதேரகிலம்‌ மதுரம்‌:தான்‌! ஆண்டாள்‌ “மதுரை மைந்தன்‌னா; இவர்‌ மதுரைக்கு அதிபதிங்கறார்‌. கம்ஸனை வதம்‌ பண்ணின பிற்பாடு இந்த டைட்டில்‌  பகவானுக்கு வந்தது. வாஸ்தவத்துல க்ருஷ்ணர்‌ மதுரைல ராஜாவா  ஆதி பத்யம்‌ வஹிக்காம, கம்ஸனோட பிதா உக்ரஸேோனர்‌ கிட்டயே தான்‌ அந்தப்‌ பொறுப்பைக்‌ குடுத்தார்‌.   கொஞ்சம்‌ பிற்காலத்துல தாமே நிர்மாணம்‌ பண்ணிண்ட த்வாரகையிலே கூட அவர்‌ தமையனார்‌ பலராமரோட சேந்தும்‌, அவர்‌  பேரிலேயும் தான்‌ ராஜ்யபாரம்‌ பண்ணினார்‌. “ச்ருங்கார சேஷ்டிதங்கள்‌ உள்பட ஸகல லீலா விநோதக்‌ கூத்தும்‌ அடிச்ச ஸ்வாமிக்கு உள்ளூர அப்படியொரு ஸந்யாஸ மனு! வைராக்ய மதுரம்‌! “யுக்தம்‌ மதுரம்னு சொன்ன யோகியோட மதுரம்‌!   மதுராதிபதிங்கறது இன்னொரு அர்த்தத்துல ரொம்பவுமே பொருந்தும். 
மதுரம்‌ என்கிற தத்வத்துக்கே அவன்தானே அதிபதி? அதனால மதுராதிபதி. 
“அவனுடைய அந்த மதுரம்‌ லோகமெல்‌..லாம்‌ பரவணும்‌, நமக்குள்ளேயும்‌ துளிக்கணும்‌-''
நமக்கு ஒரு வருஷம்‌ தேவர்களுக்கு ஒரு நாள்‌.  நமக்கு உத்தராயணம்‌ அவர்களுக்கு பகல்‌.  தக்ஷிணாயணம்‌ அவர்களுக்கு ஒரு இரவு,  ஸ்ரீ கிருஷ்ணர்‌ அவதரித்த காலம்‌ தேவர்களுக்கு இரவு நேரம்‌ ஆகிறது. இம்மாதிரியே நம்முடைய ஒரு மாதம்‌ பித்ருகளுக்கு ஒரு நாள்‌ ஆகிறது.  மது சுக்ல பக்ஷம்‌ அவர்களுக்கு பகல்‌, க்ருஷ்ண பக்ஷம்‌ இரவு. ஆகையால்‌ ஸ்ரீ கிருஷ் ணர்‌ அவதரித்த கிருஷ்ண பக்ஷம்‌ பித்ருக்களுக்கு இரவாகிறது.  அஷ்டமி திதி நடூவில்‌ வருவதால்‌ அன்று அவர்களுக்கு நடூநிசி பொழுது  ஆகிறது. இதனால்‌ என்ன ஏற்படுகிறது, ஸ்ரீ கிருஷ்ணர்‌ அவதரித்த காலம்‌  தேவர்கள்‌, பித்ருக்கள்‌, மனிதர்கள்‌ எல்லோருக்கும்‌ எல்லா தினுஸிலும்‌  இருட்டு அதிகமாக இருக்கும்‌ சமயம்‌.
ஸ்ரீ கிருஷ்ணன்‌ பிறந்ததும்‌ இருட்டு நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீ கிருஷ்ணர்‌ அவதாரகாலத்தில்‌ எல்லாம்‌ இருள்‌ மயமான சூழ்நிலை. அவருடைய பெயரும்‌ கிருஷ்ணன்‌. கிருஷ்ண என்றால்‌ கருப்பு என்று பொருள்‌. அவனுடைய மேனியும்‌ கருப்பு. இப்படி ஒரே கருப்பு மயமான ஸமயத்தில்‌ தானும கருப்பாக ஆவிர்பவித்தாலும்‌ அவனே ஞானஒளி.
காளமேகங்களுக்கு இடையே மின்னல்‌ மாதிரி இத்தனை இருட்டுக்கு நடூவே தோன்றியதான ஒளி. ஞான ஒளி ஆதலால்‌ மங்காத பிரகாசமுடையதாய்‌ இன்றும்‌ என்றும்‌ ஜ்வலித்துக்கொண்டு இருக்கிறது. அஞ்ஞானத்தால்‌ இருண்டு இருக்கும்‌
உலகத்தில்தான்‌ ஞானத்தின்‌ மகிமை அதிகமாக விளங்கும்‌. உடலுக்கு ஒளி அளிப்பது கண்‌. உயிருக்கு ஒளி தருவது ஞானம்‌. உலக உயிர்களுக்கு எல்லாம்‌ ஞான ஒளி தருகிற கண்ணாக இருப்பவனே கண்ணன்‌.
தென்ணாட்டில்‌ அவன்‌ கிருஷ்ணன்‌ மாத்திரம்‌ அல்லாமல்‌ கண்ணனும்‌ ஆகிவிட்டான்‌.அகக்கண்ணையும்‌ புறக்கண்ணையும்‌ அம்ருதத்தில்‌ மூழ்கடிக்கும்‌ வடிவம்‌ அவனுடையது. அவனுடைய கீதை உலகெங்கும்‌ ஒலித்துக்‌ கொண்டு இருக்கிறது.
அவனுடைய லீலா விநோதங்ககள்‌ நிறைந்திருக்கும்‌  ஸ்ரீமத் பாகவதம்‌ புராண-ஸ்ரேஷ்டமாக விளங்குகிறது.''


sivan jaykay

unread,
Sep 6, 2023, 7:55:24 PM9/6/23
to amrith...@googlegroups.com
 
கேள்வியின் நாயகன்.
   நங்கநல்லூர்  J K  SIVAN

ஹரியானாவில் இப்போது உள்ளது  குருக்ஷேத்ரம். தர்மக்ஷேத்ரம் என்றும் பெயர். கீதைஸ்தலம். குரு  என்கிற ராஜாவின் வம்சத்தினர்  தான் கௌரவர்களும் பாண்டவர்களும்.  மஹா பாரத  யுத்த பூமி.  சரஸ்வதி நதியும் த்ரிஷத்வதி  நதியும் சங்கமிக்கும்   இந்த இடத்தை   தனது ராஜ்யமாக  தேர்ந்தெடுத்தவன் குரு என்கிற ராஜா. அங்கே  எட்டு மஹிமைகள் உண்டு. தபஸ், சத்யம், மன்னித்தல்,தயை, சுத்தம், தானம்,  பக்தி, ப்ரஹ்மசர்யம், இவை மலிந்த பிரதேசம் குருக்ஷேத்ரம் என்ற பெருமை அதற்கு உண்டு.  அதனால் மஹா விஷ்ணு குரு எனும் ராஜாவுக்கு ரெண்டு வரம் கொடுத்தார்.  ஒன்று. குருக்ஷேத்ரம் புண்ய பூமி, ரெண்டாவது அங்கு மரணமடைந்த எவரும்  விண்ணுலகம் சேர்வார்கள்.   குருக்ஷேத்ரம் எத்தனையோ ராஜாக்கள், ராஜ்யங்களை பார்த்திருக்கிறது.  எண்ணற்ற  ஹிந்துக்கள்  சென்று தரிசித்து வணங்கும் ஸ்தலம் குருக்ஷேத்ரம். எனக்கு ஒரு முறை தரிசிக்க ஆசை.   இன்னும்  அங்கே செல்லும் பாக்யம் கிட்டவில்லை. 

என் எண்ணம்  பின்னோக்கி என்னை  துவாபர யுகம் இட்டுச் சென்றது.
இதோ   நேற்றோடு  இங்கே தான்  18 நாட்களாக  மஹா பாரத யுத்தம் நடந்து முடிந்தது.  சஞ்சயன் சகல விஷயங்களும்  முதல் நாள் முதல் அங்கே நடந்ததை விரிவாக கண்டவன்.  இதோ  அவன் தனியாக  அங்கே  நிற்கிறான். அவனுள்  ஒரு கேள்வி.குருக்ஷேத்ரம்  ஒரு பெரிய  யுத்த பூமியா,  இல்லை துவாபர யுகத்தில் மிகப்பெரிய  மயான பூமியா?    எங்கும் ரத்த வெள்ளம், உயிரற்ற உடல்கள், சேதமான ஆயுதங்கள், தேர்கள், ......  18 நாள் யுத்தம் பல உயிர்களைக்  குடித்து விட்டதே. எங்கும்  அரைகுறை உயிர்களின்  ஈனஸ்வரங்கள் ஓய்ந்து போய்விட்டன. காக்கை, கழுகு, பிணந்தின்னி மிருகங்களின்  அசைவைத்   தவிர  வேறெந்த நடமாட்டமும் இல்லை.  இந்த அமைதி தான் மயான அமைதியோ?  அத்தனை பிணங்களும்  சில நாட்களுக்கு முன்பு எவ்வளவு,  அகம்பாவத்தோடு பேசிய பேச்சாளிகள்? எவ்வளவு வீரமான சொற்கள். படைகள் கொண்ட  பலசாலி ராஜாக்கள்?  இதோ  இப்போது காக்கை நரி கழுகு ஓநாய் தான் அவற்றை சுற்றி.   மற்ற உறவினர்கள் வீராதி வீர பணியாட்கள், நாடு நகரம், யானை குதிரை  எங்கே அவை எல்லாம்?
சஞ்சயன் சுற்றிலும் பார்த்தான்.   அவனுக்கு தெரிந்த உலகத்தில் இருந்த எல்லோருமே  காணாமல் போன இடமல்லவா இந்த  குருக்ஷேத்ரம். இங்கே தான் கிருஷ்ணன் தேர் ஓட்ட  அர்ஜுனனும், பீமனும்  வாழைக்காய் சீவுவது போல் எண்ணற்ற   உயிர் களை சூறையாடி னார்களோ?   எறும்பு புற்றை  மிதித்து நசுக்கிய  யானையாக பீமன் கௌரவ சேனையை அழித்தானோ?   ஓஹோ , இது தான் 'உலகே  மாயம்  வாழ்வே மாயம் '' பாடவேண்டிய இடமோ?  வேறு யாரோ  அவனோடு அங்கே இருப்பது போல் தோன்றியது சஞ்சயனுக்கு. 
''சஞ்சயா  என்ன புரிந்து கொண்டாய்?என்றது ஒரு குரல்.
''யார்  பேசுவது?  என்று திரும்பிப்  பார்த்த  சஞ்சயன் முன் ஒரு காவி அணிந்த  முதியவன்.
''ஐயா நீங்கள் யார்?  என்ன செய்கிறீர்கள் இங்கே?- சஞ்சயன் கேட்டான்.
''நீ என்ன செய்கிறாய் நினைக்கிறாய்  அதைச் சொல். ....உனக்கு உண்மையிலேயே  இங்கே நடந்தது   என்ன என்று புரிந்ததா  அப்போது தான் குருக்ஷேத்ர அர்த்தம் புரியும் ''
'' சுவாமி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?.  எனக்கு   மஹாபாரதம் ஒரு கதையல்ல,  ஒரு தத்துவம் என்றஅளவு தான் புரிகிறது''
“நீ கெட்டிக்காரன்.  ஆமாம் மஹாபாரத யுத்தம்  ஒரு  தத்துவம் தான். உன் மனதில் எழுகிற சந்தேகங்கள்  எனக்கு புரிகிறது சொல்கிறேன் கேள்.  
சஞ்சயா  நீ  இருந்த இடத்திலிருந்தே  குருக்ஷேத்திர  மஹா பாரத  யுத்தத்தை முழுதும்  திவ்ய தரிசனம் பெற்று  திருத ராஷ்டிரனுக்கு எடுத்துச்  சொன்னவன் அல்லவா?.  நான் கேட்பதற்கு பதில் சொல்.
'' பாண்டவர்கள்  யார்?
''நீங்களே  சொல்லுங்கள்''
''உன்னுள்ளே  இருக்கும் ஐந்து புலன்கள் .
''கௌரவர்கள் யார் தெரியுமா?
''தெரியவில்லை, அதையும் சொல்லுங்கள் சுவாமி''
 “உனக்கு உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் நூறு தப்பிதங்கள். ஒவ்வொரு  நாளும் உன்னுடைய ஐந்து புலன்கள் அவற்றோடு போராடுகிறதே.  எப்படி என்று தெரியுமோ?''
'சத்தியமாக  என்னால்  உணர முடியவில்லை சுவாமி சொல்லுங்கள் ''
“ கிருஷ்ணன் குதிரைகளை   ஓட்டினானே , அந்த குதிரைகள் தான் உன் மனம், ஐம் புலன்கள். குதிரைகளை அடக்கி  ஓட்டியவன் தான் உன் உள்ளே இருக்கும் ஆத்மா, அந்தர்யாமி. மனசாக்ஷி.  வழி காட்டி.  அவன் உன்னை செலுத்தும்போது வாழ்க்கை குதிரை ஜோராக ஓடும்..''
''சுவாமி, ஒரு சந்தேகம்?கெட்டவர்கள் என்று தெரிந்தும் ஏன்  பீஷ்மாச்சார்யார், த்ரோணர்  போன்றவர்கள் கௌரவர்களுக்கு உதவி யுத்தம் புரிந்தார்கள்?''
'சஞ்சயா, வயதானால் மட்டும் ஒருவன் பெரியவன் இல்லை.  தவறு செய்வது எல்லோர்க்கும் சகஜம். தெரிந்து செய்வது தான் குற்றம்.  அதற்கு எல்லோரும் தண்டனை பெற்று  பலனை அனுபவிக்கவேண்டும்.  பாண்டவர்கள்  அவர்களையும் போரிட்டு அழிக்கத்தான் வேண்டியிருந்தது.  அது புரியவேண்டுமானால்  முதலில்   கீதை  சொல்வது உனக்கு புரிய வேண்டும். கிருஷ்ணன்  கீதையை நமக்கு அதற்காகத் தான்  உபதேசித்தான்.”
''கர்ணன்  என்பது...?."
'கர்ணன் என்பது உனது புலன்களோடு ஒட்டிய உறவு. சகோதரன் மாதிரி. அதன் பெயர்  ஆசை. ஆசையால் தான் எல்லா துன்பங்களும் விளையும். திருமூலர் சொன்னது நினைவிருக்கிறதா.  ' ஆசை படப் பட  ஆகி வரும் துன்பங்கள். ஈசனோடா
யினும் ஆசை அறுமின்கள்.''    தவறுகளைச் செய்ய தூண்டிவிடுவது தான் ஆசை. கௌரவர்களுக்கு கர்ணன் போல...''
சஞ்சயன்  மனதில் எண்ணங்கள் சுழன்றன. நடந்ததை எல்லாம் ஆரம்பத்திலிருந்து  மீண்டும்  சினிமாவை ரீ வைண்ட்  REWIND  பார்ப்பது போல்  கவனித்தான். 
குருக்ஷேத்திர பூமியை மீண்டும் சுற்றி முற்றிலும் பார்த்தான்.
''ஆஹா, ஆசையால் விளைந்த  பலன் இது தான்.. பேராசை பெரு நஷ்டம்..பொறாமை...... புரிந்துவிட்டது.    
சஞ்சயன்  முகம் வியர்த்தது.  நெஞ்சம் படபடத்தது. சத்யம் வெல்லும். பொறுத்தார் பூமி ஆழ்வார்....  பாண்டவர்கள் வென்று பூமி ஆண்டார்கள்... உண்மை புலப்பட்டது.  
கிழவரை வேறு ஏதோ கேட்க  திரும்பினான்..  எங்கே  அந்த  துறவி.....  
வாழ்க்கை தத்துவம் தான்  இத்தனை நேரம்  உருவமெடுத்து என் முன் தோன்றியதோ??.ஒருவேளை  அது தான் கிருஷ்ணனோ? இல்லை என்னுள்  ஆத்மா பேசுவதை யாரோ பேசுவது போல் உணர்கிறேனோ?
கீதையை உடனே  மீண்டும் முதலிலிருந்து படிக்கவேண்டும்.

ARR

unread,
Sep 8, 2023, 8:36:04 PM9/8/23
to iye...@googlegroups.com, iyer12...@googlegroups.com, Guruvayoour, amrith...@googlegroups.com, sanathana-dhar...@googlegroups.com
Dear Family,

I want to express my heartfelt thanks to everyone who has joined my YouTube channel, SANATANA SHRUTHI. In today's world, some individuals with questionable motives seek to erase the rich heritage of Sanatana Dharma from our collective memory. As a devout follower of Sanatana Dharma, I have taken it upon myself to contribute by creating this channel. However, achieving success in this endeavor requires your support as well.

 I kindly request those who haven't subscribed yet to consider subscribing to our channel. Our latest post on the SANATANA SHRUTHI channel is... 

1. Soundarya Lahari


2. Sri Rudram


3. Agrepaschyami


4. Madurai Meenakshi Temple


Many more good informative videos will be posted in coming days.

I request you subscribe my channel and forward this mail to your family, friends and other groups who may be interested the above posts.

Namaskaram

A.R.RANGANATHAN

sivan jaykay

unread,
Sep 8, 2023, 8:36:04 PM9/8/23
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம்  -   நங்கநல்லூர்  J K   SIVAN 

கடைசி ஆசை 

மோக்ஷம் என்பது செத்துப் போன பிறகு வேறு எந்த லோகத்திற்கோ போய் அனுபவிப்பது என்றால் அதை நம்மால் இப்போது புரிந்து கொள்ள முடியாது.  மனிதனின் நினைவு மரணத்துக்கு பிறகு புதிய பிறவியில் தொடர்ந்தாலும் அதை உணரமுடிவதில்லை. ஆகவே  கை கண்ட பலனாக இந்த உலகில் இருக்கும் போதே   மோக்ஷம் அனுபவிக்க ஒரு சுலப வழி   முடிந்தவரை எப்போதும் பிறருக்கு நல்லது செய்வது.  இப்போதெல்லாம் கஷ்டம், சுகம் என்று அழுது கொண்டு இருந்து விட்டு செத்துப் போன பின் மோக்ஷம் கிடைக்கிறது என்பதில் பிரயோஜனம் இல்லை. பிரதி பலன் கருதாது நீ செய்யும் கர்மங்களுக்கு  பிரதி பலனாக கிடைக்கும் ஆனந்தமே மோக்ஷம். இது இப்பிறவியிலேயே கிடைக்கும்.அனுபவிக்க முடியும்  என்கிறார்  மஹா பெரியவா.

''Moksha is not an experience to realize after we die and go to some other place. It needs to be experienced right here while we live in this world. If we do good things we reap good benefits. There is no point in getting Moksha if all through our life we complain about good and bad experiences. Moksha is nothing but a blissful state for all the Karmas we do without any expectations. That can be attained in this Janma itself. – Sri Kanchi Maha Periyava''

மஹா பெரியவாளின் அம்மா  மஹா லக்ஷ்மி  பெயரில் உள்ளது போலவே  மிக பெரிய மோக்ஷ செல்வத்தை பெற்றவள். மோக்ஷம் அளிக்கும் மஹா பெரியவாளை பெற்றதாலேயே   மோக்ஷ சாம்ராஜ்யம் அடைந்தவள். 

வீட்டில் எதிரொலிக்கிறது  பலத்த  வேத கோஷம் .!! எந்த ஊரில்? தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள ஈச்சங்குடி கிராமத்தில். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை  என்ன வென்றால்  நடமாடும்  பேசும்  தெய்வமாய் திகழ்ந்த காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார்  மஹா லக்ஷ்மி  பிறந்த புண்ணிய பூமி இது!   

ஈச்சங்குடி நாகேஸ்வர சாஸ்திரியின் மகள் மஹா லக்ஷ்மி. வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்த 18 வயதான சுப்ரமணியத் துக்கும், 7 வயது மகாலக்ஷ்மிக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது. இவர்களின் இரண்டாவது புதல்வனுக்கு, சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியை மனதுள் நினைத்து, சுவாமிநாதன் என நாமகரணம் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். அப்பனுக்
குப் பாடம் சொன்ன சுவாமிநாத ஸ்வாமியைப் போல், தன் மகன் இந்த உலகுக்கே ஞான உபதேசம் செய்யப் போகிறான் என்பதை அந்த பெற்றோர்களோ  மற்றவர்களோ அப்போது அறியவில்லை!

ஒருநாள்… காஞ்சி சங்கர மடத்தின் ஆச்சார்யராகப் பொறுப்பேற்கிற பாக்கியம் கிடைத்தபோது, பெற்ற வயிறு குளிர்ந்து போனது மகாலக்ஷ்மி அம்மாளுக்கு!   
13 வயதிலேயே  காஞ்சி  காமகோடி 68வது  பீடாதிபதியாக  ஜகத்குருவாக  ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் எனும் திருநாமம் பெற்றார்.   தேச மெங்கும்  திக்விஜயம்  பல்லக்கிலும் பாத யாத்திரையிலும்  மேற் கொண்டார்.  நூறு ஆண்டுகள்  அனைவருக்கும் ஆசி வழங்கி, அருளி னார். அவரை பக்தர்கள் அனைவரும் காஞ்சி பெரியவா, மஹா சுவாமி,  எனப் பெருமையுடன் அழைத்து போற்றிப் பூரித்தனர்.

ஒரு
1932ல்  ஜூன்  14  அன்று  ஆந்திராவில்  நகரி என்னும்  ஊரில் மஹா பெரியவா  முகாமிட்டிருந்தபோது தான் தாயார்  மஹாலக்ஷ்மி அம்மாள்  காலமான செய்தி வந்தது.  தாய்க்கு  ஸ்நானம் செய்து விட்டு   பிராமணர்களுக்கு தானம் வழங்கினார்.  அதோடு  அந்த  சந்நியாசி தன்னைப்  பெற்ற  தாய்க்கு   ஒரு சந்நியாசியின்  கடமையை முடித்தார்.  அப்போது தான்  அவர் மனதில் ஒரு எண்ணம் உதயமாயிற்று.  தனது தாய் பிறந்த  பழைய வீட்டை  ஈச்சங்குடியில் ஒரு  வேத பாடசாலையாக்கினால் என்ன?  வேத சப்தம் ஒலிக்கட்டுமே . இந்த எண்ணம் பூர்த்தியாக   பல வருஷம்  ஆகியது.    எண்ணம்  எப்போது  செயலாகியது?

1993ல் ஒருமுறை  பெங்களூர்  ஹரி  என்ற  பக்தர்  தரிசனத்துக்கு வந்தபோது மகா பெரியவா  " நீ   ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர்  கோயிலை  புனருத்தாரணம் பண்ணப்  போறியா?

''பெரியவா அனுக் ரஹத்தோடு  அப்படி ஒரு எண்ணம் இருக்கு ''

''ரொம்ப  சந்தோஷம். நிச்சயம் அது பூர்த்தியாகும்.  அங்கே தான்  நான்  சின்ன வயசிலே   அம்பாளை காருண்ய வல்லியை  , கச்சபுரீஸ் வரரோடு நிறைய  தரிசனம் பண்ணி இருக்கேன்.  வேதம் எல்லாம் கத்துண்டேன். ஞாபகம் இருக்கு ''  என்று  மஹா பெரியவா சிரித்தார்.

''சீக்கிரமே  ஆரம்பிக்க  ஏற்பாடு பண்றேன். எல்லாம் பெரியவா ஆசீர்வாதம் அனுக்கிரஹம்''

''நான் உன்னை ஒண்ணு  கேட்கட்டுமா. எனக்கு உபகாரம்  பண்ணுவியா?''

''மஹா பெரியவா ஆக்ஞா எதுவா இருந்தாலும்  அதை நிறைவேற்றுவேன் பெரியவா''

''ஸ்ரீ காருண்யவல்லி சமேத கச்சபுரீஸ்வரர் அனுக்கிரஹம் உனக்கு   கிடைக்கட்டும்.  நான் என் பூர்வாஸ்ரம தாயார் பிறந்து  வளர்ந்த  ஒரு பழைய வீடு ஈச்சங்குடியிலே  இருக்கே உனக்கு தெரியுமா?  அதை  குழந்தைகளுக்கு வேதம் கத்துக்கொடுக்கிற  பாடசாலையா புனருத்தாரணம் பண்ணனும் னு மனசிலே வெகுகாலமா ஒரு எண்ணம். அங்கே  வேதம் என்னிக்கும் ஒலிக்கணும்.   நாலு பேருக்கு ஊரிலே  உபயோகமான இடமாக அதை மாத்தணும்''

ஹரி உணர்ச்சி வாசத்தோடு கண்களில் ஆனந்த கண்ணீர்  வடிய  ''மஹா பெரியவா,   இது  எனக்கு கிடைச்ச  பெரிய  பாக்கியம்!  என் பூர்வ ஜென்ம புண்யம்.  உடனே அதற்கு  செயல்படறேன்''

இத்தனை வருஷம்  எவரிடமும்  சொல்லாத  மனதில் தேக்கி வைத்திருந்த ஒரு  எண்ணத்தை  மஹா பெரியவா சொன்னதற்கு  காரணம் இருந்திருக்கிறது.  அந்த பழைய  வீட்டை  அப்போதைய உரிமையாளரிடம் பேசி வாங்க  வேண்டும், இடித்து  பாடசாலை கட்ட  ஒரு வருஷமாக ஆகும். தனது வாழ்நாளில் அங்கே வேத பாடசாலை நிறுவிய சேதி காதில் விழவேண்டும் என்பதற்காக காத்திருந்தார். 

அந்த  பழைய  வீடு  உரிமையாளரிடமிருந்து  விலை பேசி வாங்கப்பட்டு பக்தர்களின் ஒத்துழைப் போடு  விரைவில்  பாடசாலையாகியது.

1994  ஜனவரி  8  உலகம் மஹா சோகத்தில் ஆழப்போகிறது என்று அந்த காலை வேளை  ஒருவருக்கும் தெரியாது.  உடல் நலம் ஒத்துழைக்காததால் பக்தர்களுக்கு தரிசனம் தர இயலவில்லை.    தனது கருணைப் பார்வையாலும் தீர்க்க தரிசனத்தாலும் உலக மக்களை உய்வித்த அந்த நடமாடும் தெய்வம், அன்றைய தினம் ஸித்தி அடையப் போகிறார் என்று யாருக்குத்தான் தெரியும்?! ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம். பிரபலங்களின் வருகையும் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது.  அருகே இருந்தவர்  உரக்க காதில் சொன்னார்: 

பெரியவா  பெங்களூர்  ஹரி   ந்திருக்கார்’ என்றும் சொல்லப் பட்டது. சட்டென்று கண் திறந்த பெரியவா, மெள்ள நிமிர்ந்தார். அருகில் வரச் சொன்னார். பாதுகைகளை அணிந்துகொண்டார். அன்பரை ஆசீர்வதித்தார்.
' யாரு  பெங்களூர் ஹரியா? எங்கிருந்து?
''ஈச்சங்குடியிலிருந்து ,  பெரியவாளுடைய  அப்பா அம்மா படம், பாதுகை கொண்டு வந்திருக்கார்''
''அழைச்சுண்டு வா''
வெள்ளிப் பாதுகைகளை   காலில்  மெதுவாக அணிந்துகொண்டார். ஹரிக்கு ஆசீர்வாதம் பண்ணினார்.
 ''பெரியவா உங்க  அனுக்ரஹத்தோடு  ஈச்சங்குடியிலே  அந்த  இல்லத்தில்  பாடசாலையை  ஆரம்பிக்க நாள் குறிச்சாச்சு.  பத்திரிகை  வெளியிடணும் . பெரியவா கையாலே  தொட்டு ஆசிர்வாதத்தோடு ஆரம்பிக்கணும் . 
புன்னகையோடு  பெரியவா அந்த  பாடசாலை ஆரம்ப விழா பத்திரிகையை வாங்கிப் படித்தவர், தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தைப்  பார்த்து விட்டு  கண்களில் ஒற்றிக் கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை  ஹரியிடம் கொடுத்தார். 
"இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!' என சொல்லாமல் சொல்லி, ஆசி வழங்கினார்.
ஹரி  தான்  கடைசியாக இந்த உலகத்தில்  மஹா பெரியவாளுடன்  பேசி  அவர் ஆசிபெற்ற  பக்தர்.  என்ன பாக்யம்.  இதெல்லாம் நடந்த  ரெண்டு மூணு  மணி நேரத்தில் மஹா பெரியவா சித்தி அடைந்துவிட்டார்.

ஈச்சங்குடி வேத பாடசாலை, அவரின் பேரருளால் இன்றைக்கும் இயங்கி வருகிறது. ஸ்ரீஜெயேந்திரரின் முயற்சியால், வேத பாடசாலையில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன. கீழ்த் தளத்தில் வேத பாடசாலை, மேல் தளத்தில் பள்ளிக்கூடம் எனக் கட்டுகிற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.    பெரியவாளின் தாயாரால் வணங்கப் பட்டு, பெரியவாளின் முயற்சியால் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஸ்ரீகச்சபுரீஸ்வரர் கோயில், அழகுறத் திகழ்கிறது. இவரை வணங்கினால், நிலம் மற்றும் வாஸ்து பிரச்னைகள் யாவும் நீங்கி,  குறையின்றி வாழ்வர் . அருகே யுள்ள  பாடசாலையில்  பெரியவாளின் பாதுகைகளை நமஸ்கரித்தால், ஞானகுருவின் பேரருளும் கிடைக்கும் என்பது உறுதி!
 

sivan jaykay

unread,
Sep 8, 2023, 8:36:19 PM9/8/23
to amrith...@googlegroups.com
ஸுர் ஸாகரம்  -  நங்கநல்லூர்  J K   SIVAN  

மாறாத  சோகம் தானோ?

ஒவ்வொரு  நாளும்  திருவிழாவா, தீபாவளி கோலாகலமா?   எப்படி சொன்னாலும் பொருத்தமாக இருக்குமே. அப்படிப்பட்ட  பிருந்தாவனம்  களையிழந்து நிற்கிறதே.  24 மணி நேரம் கூட ஆகவில்லையே.  அதற்குள்ளாகவா  உயிரிழந்து வெறிச்சோடி விட்டது.  கிருஷ்ணன் ஜீவசக்தி என்பதில் சந்தேகமே இல்லை.  அவன் தேரில் பலராமனோடும் , அக்ரூரருடனும் மதுராவுக்கு சென்ற போது  அவ்வளவு சோகம் தெரியவில்லை.   சீக்கிரம் வந்துவிடுவான் என்று ஒருபக்கம் நம்பிக்கை. அவன் இல்லாவிட்டால் பிருந்தாவனம் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றுவிடும் என்ற பயமும்  எதிர்பார்ப்பும் அப்போது தெரிய வில்லை.   கலகலவென்று சிரிப்பு சப்தம் கேட்டு அதற்குள் ஒரு நாளாகி விட்டதே! இனி எப்படி ஒவ்வொருநாளும் தள்ளுவது?   யாரையும்  தெருவில்  காணவில்லையே. கன்றுக்குட்டிகள்  விடாமல் 'அம்மா'  என்று யாரைக்  கூப்பிடுகிறது? அவற்றின் அம்மாக்கள், தாய்ப்பசுக்கள் அருகிலேயே இருக்கும்போது அவற்றுக்கு  வேறு  ''அம்மா'' யார்?  கண்ணன் தான். அவன் தான் செவிலித்தாய் எல்லா பசுக்களுக்கும். கன்றுகளுக்கும் .ஏன்  பிருந்தாவனத்தில் எல்லா ஜீவராசிகளுக்கும் கூட.

யசோதை கன்னத்தில் கையூன்றி அசைவற்று  தூணில் சாய்ந்து உட்கார்ந்து  கொண்டிருக்கிறாள்.  அவ்வளவு பெரிய  நந்தா கோபன்  மாளிகை நிசப்தமாக இருக்கிறது.  தனிமை வாட்டுவது என்றால் என்ன என்று இன்றுதான் புரிகிறது எனக்கு என்கிறாள். கண்ணில் நீர் வடிந்து வற்றிப்போய் கன்னத்தில் காய்ந்து விட்டது.  இந்த பெரிய வீட்டில் எல்லாம் வைத்தது வைத்தபடியே   இருக்கிறதே. இப்படி அவன் இருந்தால் இருக்காதே.  ஒவ்வொரு கணமும் துறுதுறுவென்று ஏதாவது ஒரு விஷமம் பண்ணுபவனாயிற்றே. 

பொழுது  விடிந்தவுடன் ஆரம்பமாகிவிடுமே  அவனுடைய வெண்ணை திருட்டு அட்டகாசம். என்னுடைய கைகளில் இருந்து வெடுக்கென்று பிடுங்கி கொண்டு ஓடுவான்.   உயிரற்ற ஜடம்போல்  கோபியர்கள் நடமாடுகிறார்கள். ஒருவளிடமிருந்தும்  எந்த கம்ப் ளைண்ட்டும்  COMPLAINT வரவில்லையே.  இதல்லவோ அதிசயம்?  

திடீரென்று வாழ்க்கை ஏன் எனக்கு வெறுத்து விட்டது? யசோதை திணறினாள். எண்ணற்ற கேள்விகள் பொங்கி எழுந்ததே தவிர, எதற்கும் பதில் தெரியவில்லை.   ஒரே பதில். கிருஷ்ணன் இல்லை.   பிரிந்தாவனத்தின் மொத்த சந்தோஷம் நேற்று தேரில் ஏறி மதுராவுக்கு  போய்விட்டதே. 

ரிஷிகள், முனிவர்கள் கூட சந்தோஷமாக  அவனைத் தேடுவார்கள். அவர்களே  ஏன் சோர்ந்து உட்கார்ந்து  விட்டார்கள் .

இந்த ஸூர் தாஸின்  எஜமானன்,  ப்ரபு , கிருஷ்ணன் இல்லை யென்றால்  பிருந்தாவனம் தம்பிடிக்கு கூட  பிரயோஜன மில்லை . ஆமாம் சுத்த வேஸ்ட்.

அருமையான  ஸூர் தாஸ் பாடல் இது  என்று நீங்களும் ஒப்புக்கொள்கிறீர்களா?


In her lonely house
Yashoda remembers her son.
‘Nothing is disturbed
by my prince: Kanha.
As soon as he got up
he grabbed butter from my hand.
The young women of Braj,
still gather together
but nobody brings any
complaints to me.’
Yashoda’s agony is intense.
The happiness that reigned
once in Braj
was not available even, to holy men.
Without Surdas’s Lord,
Braj is not worth a penny.

 

sivan jaykay

unread,
Sep 8, 2023, 8:36:27 PM9/8/23
to amrith...@googlegroups.com
ராதையின் நெஞ்சமே .....   நங்கநல்லூர்  J K  SIVAN  

மனித மனம் விநோதமானது, விசித்திரமானது.  எண்ணற்ற சிந்தனைகள் அதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.  ஒருவர் எண்ணம் போல் மற்றவர்க்கு இல்லை. எண்ண ஓட்டத்துக்கு  எல்லையே இல்லை.  அது இருபக்கமும்  கூரான கத்தி.  நல்லதும் எண்ணும் , தீயதும் எண்ணும் . ஆசை, பேராசை, கோபம், அஹங்காரம் சகல வேண்டாதவையும்  உருவாவதற்கு அதுவே  ஆதாரம். அதைக்   குரங்கு என்று பலர் சொன்னால் தப்பில்லை.   அதை ஒரு நிலையில் நிறுத்து என்று கீதை   திருப்பி திருப்பி சொன்னாலும் நமக்கு  அது  மட்டும் நம்மால்  முடிவதே இல்லை.   ஒரு வழி இருக்கிறது.  நல்ல விஷயங்களை மட்டுமே  நினைத்து, பேசி, கேட்டுக்கொண்டு வந்தால், கொஞ்சம் மனதின் ஓட்டம்  குறையும்.  கேட்பதற்கு  சத் விஷயங்கள் பல இருக்கிறது. பேச்சைத் தவிர அருமையான பாடல்கள் நிறையவே  இருக்கிறது. அவற்றை  கேட்கும்போது மனது உருகும்.  பக்திக்கு மனதில் இடம்  கிடைக்கும். 

மனத்தை உருக்கும் ஒரு தெய்வீக ராகம்  ஸஹானா.  துக்கத்தையும், ஏமாற்றத்தையும், பிரதிபலிக்கும்  ராகம்.  எப்போது துக்கம், ஏக்கம் எல்லாம் வருகிறது?  நினைப்பது நடக்காவிட்டால், எதிர்பார்த்தது  இல்லை என்றால். ஆசை நிராசை யாகும்போது.  

கண்ணன் மகிழ்வூட்டுவான், அருகே வந்து கொஞ்சி விளையாடுவான், அடுத்த வினாடி கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போவான். அவன் சில நேரங்களில் இப்படி பிருந்தாவனத்தில் மறைந்து போவது, ஒளிந்து கொள்வதையே  தாங்க முடியவில்லையே,  என்றும் இனிமேல் கண்ணன் பிருந்தாவனத்தில் இல்லை என்ற  நிலையில் ராதையின் நெஞ்சம் எப்படி துடித்திருக்கும்?.  

நிலவைப் பிரிந்த வானம், மணத்தை  இழந்த மலர்,  சுகத்தை தொலைத்த  தென்றலாக ஆகிவிட்டாள்  ராதா. பார்க்கும் இடங்களில் எல்லாம் கண்ணன் முகம் தெரிந்தது. அருகே சென்றால் அவனைக் காணோம். கேட்கும் ஒலியெல்லாம் கிருஷ்ணனின் புல்லாங்குழல் கீதமாக  செவியில் புகும்.  அருகே  ஓடிச்சென்றால் மரத்தின் அசைவு இலைகளின் சப்தம் மட்டும் கேட்கும். . பறவைகள் ஊமைகளாகி விட்டனவே .

யு ட்யூபில்  ஏதோ ஒரு  சினிமா பாடல். மனதைத் தொடும்  ஸஹானா ராக  பாடல்  நேற்றிரவு நெஞ்சைத் தொட்டது. அருமையான சிரஞ்சீவி ராகம்.  எப்போதோ பல வருஷங்களுக்கு முன்பு கேட்ட சினிமா பாடல்.  யாரோ  ஒரு  தலைவி தலைவனை நினைத்து உருகி பாடுவதில்  ராதையின் நெஞ்சம் உணர்ந்தேன்...

மயக்கும் குரலில் மனதைத்  தொட்ட பி.சுசீலாம்மாவுக்கு நன்றி. நூறு வருஷங்கள் பாடிக்கொண்டே வாழவேண்டும். கிளிக் பண்ணி என்னைப்போல் சுகம் அனுபவிக்க    https://youtu.be/Virhwz9nyTQ
 
''எங்கோ பிறந்தவராம்  எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்
சிங்காரமாக வந்து சிரித்து மயக்கி பேசியவர்
சிட்டாக பறந்து விட்டாரே முல்லை மொட்டாக இருக்க விட்டாரே.

விழி வாசல் தனைக் கடந்து வழி முழுதும் தெரிந்தவர்போல்
குழைவாக மனக்கோவில் குடி புகுந்தாரே

மொழி ஏதும் பேசாமல் மோகவலை வீசி என்னை
மோன நிலையாக்கி விட்டு வழி மறந்தாரே..

நிலவுதன்னை பழித்தொரு நாள் என் முகத்தை அவர் புகழ்ந்தார்
நிலவும் என்னை வெறுத்ததம்மா துணையும் இல்லையே

மலரை மிஞ்சும் அழகி என்று மகிழ்ந்து சொன்ன வார்த்தையினால்
மலரும் கோபம் கொண்டதம்மா தூதும் இல்லையே.

தென்றலைப் போல் ஆடி வரும் திருமகளே என்று அழைத்தார்
தென்றலுக்கும் பகை ஆனேன்வழியும் இல்லையே

ஒன்று சேர்ந்து கலந்தபோது நடந்ததெல்லாம் கதையும் இல்லை
உண்மை என்று சொல்லி சேர்க்க யாரும் இல்லையே.
 

sivan jaykay

unread,
Sep 8, 2023, 8:36:40 PM9/8/23
to amrith...@googlegroups.com
BE HAPPY   -  NANGANALLUR  J K SIVAN

Quite often, we come across someone  who  gives us  novel ideas bringing happiness.  It may be something  for which we have been toiling and struggling  without an answer or  solution.  Anything , even a piece of advice whch comes from a friend, or through a speech of someone,  or from a  book ,or just an insight during a dream... oh,  they are beneficial, and we learn 

As said already,  happiness is what we  realise within  ourselves.  The secret  to happiness is the acceptance of yourself as you are,  Happiness is an internal state.   Money can’t make anyone happy,  It is  self contentment in mind, which removes worry, and restlessness.   Remember, it is our own choice,  liberty and right to choose our own destiny.  We define our own path and tread on.   Remember what all  your mother taught you, because  it  came from the most sacred place of love that exists in this world.
Never argue with any one for anything.  Argunements  make the heart heavy.  The easiest  solution and remedy is to forget and forgive. 

Be grateful to Krishna  for this moment, because it is all there is,  available for us to enjoy and live happily. 
Atleast  try to spend  an hour  alone with only yourself every day.  Go with yourself, never against yourself.  You have to be your own best friend. It is essential because  you cant walk away from what you say to yourself, as you do with what others say.
Be truthful to yourself and speak the truth always.  It will set you free,  Your thoughts create the reality.
Remember  being  kind  is more  important than being right.
Your  heart guides you because it is the best  compass showing the right direction.
Love is  the supreme expression of life.   It alone produces in you creative thoughts.
Kindness is  nothing but loving people more than they deserve.  
I am giving you some tips  for the secret of happiness alphabetically. If you are happy and agree with me please send it to as many of your friends and contacts. so that they can also be happy, and make their contacts and friends also happy by further circulating this.  


Without  hesitation we all say, we want to be happy in life?  But   we are not so. We look for it everywhere without realising it WITHIN us. What are the things we should do to be happy is  given alphabetically : 
Accept  everyone and everything  ''as they are''  .  No  criticism or expectation.
Break away from everything that interrupts your aim  to be happy and make everyone happy.
Create  ''family'' of friends. share with them, your hopes, dreams, sorrows, and happiness.'
Decide and be firm that that you'll be successful and happy under any circumstances.
Explore and experiment things and action to ensure it  brings happiness for all. 
Forgive and forget the  deeds and words of others. No grudges need be there. Everyone  does mistakes.
Grow up  hopefully  with a positive frame of mind.
Hope  always, for the best to serve others..
Ignore the negative thoughts. Nip it in the bud in your mind. 
Journey along  to enjoy  newer vistas, newer possibilities, always with an open mind.
Know that nothing remains bad. Think positively that everything will improve and get better.
Love people, living beings and nature.  No place for hatred in the heart. .
Manage your time and  expenses prudently.
Never ignore the poor, infirm, helpless, weak, or suffering. Helping them bring immense happiness.
Offer your help and  assistance in whatever possible way, with kindness.
Play with children and  pets.  They are  the ''living''  happiness  born of pure love.
Quotes of the greatmen, Rishis and Upanishads  greatly help our 
thinking and improve our knowledge
Remember  nothing is permanent.  Enjoy every minute of your life to be always happy.
Share your talent, skills, knowledge, and time with others. You will get plenty in return.
Try to meet  friends whenever possible and speak to them.  They are your assets.
Use your time and  knowledge to share with other to bring happiness to all.
Value  your friendship and relationship with everyone  with maximum gratitude.
Work hard every day to be the best person you can be unmindful of your age .The Sun takes no holiday.
X-Ray in the hearts of those around you . You will see nothing but  goodness and beauty within.
Yield  not to  pressures,  temptations and  greed.  Remain dedicated to service with no returns.
zoom  to a happy get together with everyone to achieve your goal of  obtaining maximum happiness in life.

 

 

sivan jaykay

unread,
Sep 10, 2023, 8:14:26 PM9/10/23
to amrith...@googlegroups.com
சுகர் சொன்ன கலிகாலம் : நங்கநல்லூர் J K SIVAN

கலிகாலம்  இப்போது  தான் புதிதாக   நடக்கிற மோசமான  காலம்  என்று  நினைக்கவே வேண்டாம்.  நான்கு யுகங்களில் கடைசியாக  நாலாவது  கலியுகம்.  இந்த நாலு யுகங்களும் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக  வந்து கொண்டே இருக்கும்.  அதற்கு பல கோடி வருஷங்கள் ஆகும். ஒவ்வொரு யுகமும் நமது கணக்கில்  பல  லக்ஷ வருஷங்கள்  கொண்டது.  இந்த பிரபஞ்சம்  தோன்றியதிலிருந்து இது நடந்து வருகிறது.  சொன்னால்  அசந்து போவீர்கள்.   இது வரை  1.8 கோடி கலியுகங்கள்   ப்ரம்மாவின்  50 வருஷ  ஆட்சியில் வந்து முடிந்து விட்டது.  அதாவது அந்த 50 ப்ரம்மாவின் வருஷத்தில்  453 கலியுகங்கள் நடந்து விட்டது.  இப்போது ப்ரம்மாவின்  51வது வருஷம் நடக்கிறது.  அதில் நடப்பது முதல் பாதத்தில்  இப்போது நாம்  அனுபவிக்கும் கலியுகம் 454வது...  இது நீடிக்கும் காலம்  432000  வருஷங்கள்!  போதுமா?.  நாம் 80 தாண்டுவதே  அதிர்ஷ்டம்.  அதற்குள் ஆஹா  ஊஹூ  கலி காலம் ரொம்ப மோசம் என்கிறோமே, இனி வரப்  போவது எப்படி இருக்கும்?  இதற்கு முன்   453 கலிகாலங்கள் எப்படி  இருந்தது?  யாருக்கு தெரியும்?  இதை விட மோசமாக இருந்திருக் குமோ? யார் கண்டார், யார்  எழுதி வைத்தார்?.  

இப்போது நடக்கும் கலிகாலத்தில் என்ன  நடக்கும் என்பதை சுகப்பிரம்ம ரிஷி  பரீக்ஷித் மகாராஜாவுக்கு சொன்னதால் நமக்கும் தெரிந்தது.  நாம்  அன்றாடம் கண்ணால் கண்டு  அனுபவிக்கும் அதிர்ச்சிகள்  ''கலி காலம் எப்படி இருக்கு பார்த்தாயா?'' என்று உலுக்குகிறது.  சுகர்  கலிகாலத்தை பற்றி சொல்வது ஸ்ரீமத் பாகவதத்தில் 12வது காண்டத்தில் 2வது அத்தியாயத்தில்  இருக்கிறது. அதன் சாராம்சங்களைப்  படித்தேன். அதைச் சொல்கிறேன்.
 நான் ஜவந்திப்பூ மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு சப்பளாங்கால் போட்டு உட்கார்ந்து உரக்க கதை சொல்லும் பௌராணிகன் இல்லை. உங்களில் ஒருவன்.  

சுக  ப்ரம்ம  ரிஷியால் எப்படி  இவ்வளவு துல்லியமாக  5000 வருஷங்களுக்கு  முன்பே  நமது இப்போதைய  கலிகாலத்தில் என்னென்ன வெல்லாம் நடக்கப்போகிறது என்று அறிய முடிந்தது என்று கேட்டால் சுலபமான பதில் ''ஞான திருஷ்டி'' என்று சொல்லிவிடலாம். நமக்கு பகலிலேயே எதிரே வரும் தண்ணீர் லாரி , கண்ணாடி போட்டுக்கொண்டும்  தெரியவில்லையே.

இதைச் சொன்ன சுக ப்ரம்ம ரிஷியை விட எதிர்கால கவலையில் கேள்விகேட்டு அவரை துளைத்து இதைச் சொல்ல வைத்த பரீக்ஷித் மகாராஜாவுக்கு தான் நாம் ரொம்ப ரொம்ப  நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவன் இத்தனை கேள்விகளை ஏழு நாளில் கேட்டு ஏழு ஜன்மத்துக்கு நமக்கு போதுமான விஷயங்களை சுகப்ரம்மத்திடமிருந்து பெற்றுத் தந்திருக்கிறானே.

நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் எழுதி இன்னும் பெரிதாக எழுதுங்கள் என்று சில நண்பர்கள் அறிவுரை சொல்கிறார்கள். ''ஐயா, சுருக்கி எழுதும் இதைப் படிக்கவே ஆளில்லை.  மத்யமர்  என்ற  குழுவில்   பலரில் நான்  இன்றும் ஒருவன்.    மத்யமர் குழுவில்  ஆரம்பத்தில்  பதிவுகளை போடுவதில் எத்தனையோ கண்டிஷன்கள். அவை எனக்கு ஒத்து வராது. நான் நினைத்தபோது அதை உடனே எழுதுபவன். ஒரு நாளைக்கு பத்து கட்டுரைகள் பல தலைப்புகளில் எழுத தாகம் உள்ளவன். ஒரு நாளைக்கு ஒன்று என்று மீதி நேரம் நகம் கடித்துக் கொண்டு சும்மா உட்காரும் டைப் இல்லை.   அப்படி அந்த குழுவில் பதிவிட்டாலும் யார்  படிக்க போகிறார்கள்?  ஆன்மீக கட்டுரைகளை படிக்க ஆளில்லை. அதில் என் எழுத்துகளைப்  படிப்பவர்கள் ஒரு சிலர் ஏற்கனவே எனக்கு நண்பர்கள். அவர்கள் அங்கே படித்தால் என்ன. இங்கே படித்தால் என்ன என்று அந்த குழுவுக்கு எழுதுவதை நிறுத்தி விட்டு  என் முகநூல் பக்கத்தில் பதிவிடுகிறேன். எதற்கு சொல்கிறேன் என்றால், அந்த குழுவிலும் சரி, மற்ற  குழுக்களிலும் சரி,  ஆன்மீக கட்டுரைகள் படிப்பதை விட அவரைக்காய் பொரிச்ச குழம்பு பண்ணுவது பற்றி தெரிந்து கொள்ள நாட்டம் தான்  அதிகம்  உள்ளது. 

அவனவன் ஆபிஸ் போகும்போது, பஸ்ஸில் தொங்கிக் கொண்டு காதில் ஒயரை ear phone wire செருகிக் கொண்டு நிற்கும்போது, பக்கத்தில் இருப்பவனை இடித்துக்கொண்டு ரயிலில் பயணிக்கும்போது படிப்பதற்கு ஒரு எண்ணம் வந்து பத்து நிமிஷம் செலவழித்தால்  அவன் நிச்சயம்  பூர்வ ஜென்ம புண்ணியம் பண்ணவனாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் அவனைப் பிடிக்க சின்னதாக  சுருக்கி எழுதினால் தான் உண்டு. இல்லையேல் அலமாரியில் பரிமேலழகர், நாலடியார், திரிகடுகம், திவ்ய பிரபந்தம், பெரிய புராணம்,ராமாயண  பாரதம், பாகவதம் புத்தகங்கள்  பக்கத்தில் என் புத்தகமும் அமர்ந்து கொள்ளும் என அறிவேன். அதற்கெல்லாம் சொந்தக்காரன்  அந்த புத்தகங்களை வாங்கியவன் இல்லை. பழைய பேப்பர் காரன். 
வாட்சாப் வந்தாலும் வந்தது, மூணு மணி நேரம் கதை சொல்கிறவர்கள் கூட மூணு நிமிஷத்தில் மொபைலில் சுருக்கிச் சொல்ல  முன் வந்து 
விட்டார்கள்.  யூ  ட்யூப்,  டிவி செய்திகள் , கட்சிக் கொடி பூசல்,   லஞ்ச  பேரம், ஊழல், நில ஆக்கிரமிப்பு கோர்ட் கேஸ்கள்  பற்றி கூட சுக  பிரம்ம ரிஷி அப்போதே தெரிந்து வைத்திருக் கிறார்
விவரமாக படிக்க இங்கே யாரும் இல்லை.  நூறு வருஷங்களுக்கு முன்பே  ராமலிங்க வள்ளலார்  ''கடை விரித்தேன்  கொள்வார் இல்லை'' என்று அனுபவ பூர்வமாக சொல்லி விட்டார்.   அவசரமாக பார்க்க, நுனிப்புல் மேய, பொம்மைகல் மூலம் பதில் சொல்ல மட்டுமே தேவையாகிறது.  மீம்ஸ் memes என்பது வடிவேல் சுவாமிகளால் உயிர்பெற்று ஊரெல்லாம் கொரோனா போல் பரவி இருக்கிறதே. யார் சுகப்ரம்மத்தின் ஸ்லோகங்களை படிப்பார்கள்?

சுகர் பரிக்ஷித்துக்கு எந்த தேசத்தில் எந்த  ராஜாவுக்கு அப்புறம் எவனைக் கொன்று எவன் வருவான் என்று சரித்திர பக்கங்களை அது எழுதப்படுவதற்கு முன்பே சொல்கிறார்.

சத்யம்  என்றால்  நிறைய பேருக்கு தெரியாமல் போய்விட்டது.  சத்யம்   தெரியுமா? என்று கேட்டால், தெரியுமே, இப்போ 'அங்கே என்ன படம் ஓடுகிறது?'' என்று  கேட்பது தான் ஞானம். 

மூக்குக்கு மேல் கோபம் எல்லாவற்றிலும், எதற்கும், எவருக்கும்  வருகிறதே.  பொறுமை, கருணை சகிப்பு தன்மை, எங்கிருந்து வரும்? 

கலிகாலத்தில் பணம் ஒன்றே தான் பிரதானமாக செயல்படும். காசே தான் கடவுளடா. உண்மை, நேர்மை, சத்யம் எல்லாமே பணத்திற்கும், அது தரும் பதவிக்கும் அதிகாரத்திற்கும் அடிமையாகிவிடும். (நாம் தான் நிறைய பார்க்கிறோமே, படிக்கிறோமே). பணம் இருந்தால் படிக்காதவன் கூட டாக்டர். ஊசி போடுபவர் அல்ல, நீளமான தொள புளா கோட்டு மாதிரி கருப்பாக ஒன்று போட்டுக்கொண்டு தலையில் சதுரமான தொப்பி போட்டுக்கொண்டு கையில் சுருட்டி இருக்கும்  நூல் சுற்றிய காகிதத்தைப் பலபேர் முன்னிலையில் கைதட்டலுடன் ஒன்றுமே தெரியாமல், செய்யாமல் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொள்பவன். தடி எடுத்தவன் தண்டல்காரன்.

சுகப்ரம்மம் இப்போது நம்மோடு வாழ்பவரைப் போலவே, நமது அனுபவங்களை தானும் அனுபவித்தவர் போலவே ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு எப்படி உணர்ந்திருக்கிறார்?  என்பது தான் ஆச்சர்யம். மஹான்களால் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்லமுடியும்.

''பரிக்ஷித்,  இனி எதிர்காலம் கலியுகத்தில் தடுமாறும். படிப்பு, நேர்மை, நாணயம் இதற்கெல்லாம் மதிப்பில்லை என்று சொன்னேனே, அதோடு பக்தியையும் சேர்த்துக்கொள். காசு மட்டும் இருந்துவிட்டால் இதெல்லாம் இருப்பதாக உலகம் உன் தலையில் கற்பூரம் ஏற்றி அடித்து சத்தியம் செய்யும்.
பணத்தை இன்னொருவனிடமிருந்து அபகரிக்க பெண்ணையும் பிள்ளையும் பலி ஆடுகளாக காட்டி இரக்கமில்லாத பெற்றோர்களே சுயநல விரும்பிகளாக மாறிவிடுவார்கள்.
நமது கலாச்சாரங்கள், புராணங்கள், வேதங்களை விற்பனை பொருளாக மாற்றி சிலர் யோகிகளாக, ஞானிகளாக சாதிகளாக ( டம்பாச்சாரிகளாக என்று வார்த்தையை உபயோகிக்கிறார்) ஏமாற்றுவித்தையில் சிறந்தவர்கள் பிழைப்பார்கள்.
ஏமாற்றுவித்தையில் சிறந்தவர்கள் பிழைப்பார்கள். கடவுளையே திருடி விற்பார்கள். பொற்சிலைகளை சுரண்டி பித்தளைச் சிலைகள் பொன் பாலிஷ் போட்டுக் கொண்டு விடும். பழங்கால  ராஜாக்கள் பிரதிஷ்டை பண்ணிய ஐம்பொன் சிலைகள்  கோவிலை விட்டு பறந்து வெளிநாடுகளில் கண்ணாடிப்பெட்டியில் வைத்து விற்கப்படும்.
சாமியைப் பார்ப்பதற்கே  அதிக காசுகொடுத்தால் தான்  சீக்கிரம்  ஸ்பெஷல் வரிசையில் பணம் கொடுத்து தூரக்கே இருந்து ஒரு நிமிஷத்துக்கு கம்மியாக  பார்க்க  விட்டு பிடித்து  போ , ' ஜருகண்டி 'என்று தள்ளுவார்கள். 

சுகப்பிரம்ம ரிஷி ஸ்லோகங்கள் சொல்லும்போது நடுநடுவே  கலிகாலம் பற்றிய  அதிர்ச்சிகரமான  ஸ்வாரஸ்யமான விஷயங்கள் வரும். காத்திருங்கள். 


sivan jaykay

unread,
Sep 10, 2023, 8:14:34 PM9/10/23
to amrith...@googlegroups.com
பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K சிவன்

''சைக்கிள் பெடல்''-  ஒரு அணா  புஸ்தகம். 

மஹா பெரியவா நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். 13 வயது பள்ளிக்கூடத்தில் படிக்கும்  பையன் ஒரே நாளில்  சந்நியாசியாகி  ஜகத் குருவானதாக உலகத்தில்  எங்காவது கேள்விப்பட்டதுண்டா?. தன்னைத் தியாகம் செய்து கொண்டு சனாதன தர்மத்தைக் காப்பாற்றி வலுப்படுத்த பகவானே அவதாரம் செய்த உருவம் தான் மஹா பெரியவா. நூறு வருஷங்கள்.     ஒரு நாள் வியாதி என்று படுத்ததில்லை. எப்போதும் லோக க்ஷேமத்துக்கு பூஜை, தவம், தியானம், மௌனம், உபவாசம்,     கால்நடையாக  நடந்தே நாடு பூரா திக்விஜயம்  சென்றவர்.  உலகெங்கும் பேசும் தெய்வம் என்று போற்றப்படும் ஒரே எளிய மனிதர் உலகில் இருந்தார் என்றால் அது நம் மஹா பெரியவா.   ஆஹா  என்ன அதீத ஞானம். சிந்தனை. ஸ்புடம் போட்ட ஆராய்ச்சி. அலசல். எந்த விஷயத்தையும் ஆய்ந்து ஆராய்ந்து நுண்ணறிவோடு பகுத்து பார்க்கும் பேரறிவாளன், ப்ரம்ம ஞானி மஹா பெரியவா.

நாம்  தான் உலகத்தில் புத்திசாலி நம் வாயால்  உதிர்த்த  சொற்கள் எல்லாம் பொன்னெழுத்தில் பொறிக்கத்தக்கவை என்று எண்ணி இறுமாந்து போகிறோம்.  உண்மையில் பொன்னாலான சொற்களை உதிர்த்த அந்த மஹா புருஷரின் வாக்கு  ஒரு அணா  புஸ்தககமாக  வெளிவந்தது.  சில ஓரணா புஸ்தகங்களை நான் படித்து உங்களுக்கும் அனுப்புபவன்.இதோ ஒரு  ஓரணா  புஸ்தகம். 1930-40களில்  மஹா பெரியவா  எழுதியதைச் சுருக்கி தருகிறேன் படித்துப் பாருங்கள். நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
மஹா பெரியவா சின்ன வயசில் சைக்கிள் ஒட்டி பழகி இருக்கிறார் போலிருக்கிறது. அனுபவ பூர்வமாக சொல்கிறார்.

''ஒருத்தன் சைக்கிள் ஓட்டறான் . பெடலை வேகமாக மிதித்து சுற்றுகிறான். சைக்கிள் வேகமாக ஓடுகிறது. கெட்டியாக கைப்  பிடியை பிடித்துக்கொண்டு காலுக்கு ரெஸ்ட் கொடுக்கிறான். அவன் பெடலை மிதிக்கா  மலேயே வண்டி வேகமாக ,முன் நோக்கி ஓடுகிறது. 

இப்போ  மேலே சொன்ன  உதாரணமான சைக்கிளை விட்டு வேறு ஒரு விஷயம் சிந்திப்போம். அரசாங்கம் எல்லோருக்கும் பல போட்டிகள், பரிக்ஷை கள் வைத்து வேலைக்கு ஆள் தேர்வு செய்கிறது. அந்த பரிக்ஷைகள், போட்டிகளில் அதிக மார்க் வாங்கி ப்ராமண பிள்ளைகள் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள். நன்றாக படித்து குறிப்பிட்ட மார்க் வாங்கினால் மெரிட் ஸ்காலர்ஷிப் தந்து காசில்லாமல் மேலே படிக்க வசதி தந்தால் அதிலும் ப்ராமண பிள்ளைகள் அதிக மார்க் வாங்கி முதலிடங்களை எல்லாம் பெறுகிறார்கள்.
மற்ற வகுப்பு பிள்ளைகளுக்கும் அவர்களுக்கும் என்ன வித்யாசம்.?   மற்ற வகுப்பு பிள்ளைகள் சிலரும் ஆசார அனுஷ்டா னங் களில் ப்ராமண பிள்ளைகளைவிட சிறந்தவர்களாகவும் இருக்கிறார்களே. எப்படி ப்ராமணபிள்ளைகள் பாஸ் ஆகிறார்கள்? அந்தணர்களை விட மற்றவர்கள் மோசம் இல்லையே? சில பிராமணர்கள் மற்றவர்களை விட ரொம்பவே மோசமாகவும் இருக்கிறார்களே. பகவான் எந்த பாரபக்ஷமும் காட்டுவதில்லை. அப்படி இருக்கும்போது பிராமணர்களின் வெற்றிக்கு என்ன காரணம்?

இன்றைக்கு மூன்று நான்கு தலைமுறைக்கு முன் இருந்த அந்தணர்கள், ப்ரம்ம தேஜஸ் பெற தேவைக்கு மேல் அனுஷ்டானங்களை விடாமல் ஸ்ரத்தையாக கடைப்பிடித்து, பக்தியோடு புனித வாழ்க்கை எனும் ''சைக்கிள் பெடலை அழுத்தி மிதித்து வேகமாக சுற்றி விட்டுவிட்டார்கள்.'' அவர்கள் மிதித்த மிதியில் இன்றும் சைக்கிள் வேகமாக ஓடுகிறது. அவர்களை மாதிரி அனுஷ்டானம் செய்யாமலேயே அவர்கள் பெயர் எனும் ''சைக்கிள் கைப்பிடியை'' கெட்டியாகப்  பிடித்துக் கொண்டு பேசாமல் அமர்ந்திருக்கிறோம். தானாகவே சைக்கிள் ஓடுவது போல் நாம் நமது முன்னோர்கள்  செய்த பலனால் ''பாஸ்'' செய்து விடுகிறோம்.

நம் முன்னோர்களுக்கும் நமக்கும் அப்படி என்ன வித்யாசம்?அவர்கள் காலை 4 மணிக்கு ப்ரம்ம முகூர்த் தத்தில் எழுந்து குளித்து விட்டு அனுஷ்டானங்கள், பூஜைகள் செய்தவர்கள். நாம் சூரிய உதயத்திற்கு அப்புறம் ரெண்டு மூணு மணி கழித்து எழுந்து அனுஷ்டானம் செய்யாதவர்கள்.  

 அவர்கள் காலத்தில் சந்தியாவந்தனம் செய்யாதவனை தேடி கண்டுபிடிக்கவேண்டும். இப்போது பண்ணுவனைத்  தேடி கண்டு பிடிக்க வேண்டி இருக்கிறது.

விடி காலையிலும் , சாயங்காலத்திலும்  அப்போதெல்லாம்  ஆற்றங்கரை, குளக்கரையில் படித்துறையில் ஸந்த்யாவந்தன கும்பல் இருக்கும். இப்போது காலையிலும் சாயந்திரமும் ''காபி ஹோட்டல் க்ளப்', வேறுவித ''க்ளப்'' களில் தான் நம் கும்பலை காண்கிறோம்.
ஆத்மாவுக்கு உணவூட்டாமல் அனாத்மாவுக்கு படைக்கிறோம். ஆத்மாவை குற்றுயிராக்கி ஆத்ம சக்தி இழக்கிறோம்.
இதர மதத்தினர் ஒவ்வொருநாளும் குறிப்பிட்ட நேரத்திலாவது, வாரத்தில் ஒருநாளாவது  இறைவனை வழி பட்டு ஈசன் பலத்தினால் உலக நியாயம் சம்பந்தமில்லாமல் ஒரு ராஜ்யத்தையே பிடுங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.
ஹரிஹர புக்கனின் குரு வித்யாரண்யர், சத்ரபதி சிவாஜியின் குரு சமர்த்த ராமதாசர் ஆகியோர் ஆசார சீலர்கள், அனுஷ்டான தத் பரர்கள் , அனுபூதி நிஷ்டர்கள், நம் தர்மத்தைக் குலைக்க வந்த பாழ் செய்த எதிரிகளை ஒழித்து தர்ம சாம்ராஜ்யத்தை நிலை நாட்டினவர்கள்.

முன்னோர்கள் சரீரத்தில் ஏற்படும்  மலஜல சுத்திகளுக்காக மண், ஜலபாத்திரமின்றி இருந்த தில்லை. அவ்வளவு பரிசுத்தம். ஜலமல சுத்தியைக்கூட சாஸ்த்ர பிரஹாரம் செய்பவர் இப்போதில்லை. மிருகங்களாகி விட்ட நாகரீக மனிதர்கள் நாம். சௌசம் எனும் முதல் ஆசாரத்தை கோட்டை விட்டவன் செய்யும் மற்ற எந்த கர்மாநுஷ்டானமும் பயனில்லாதது. வெறும் சாம்பலில் செய்யும் ஹோமம்.

மூன்று தலைமுறைக்கு முன்னர் வேகமாக பெடலை மிதித்து அவர்கள் செலுத்தியது இன்னும் எத்தனை நாளுக்கு நாம் பெடல் செய்யாமலேயே நம் வாழ்க்கை சைக்கிள் ஓடும்? 

இப்போதே சைக்கிளின் ஓட்டம் வேகம் சற்று குறைந்துவிட்டதே. மங்கி விட்டதே.
 ஒரு தலைமுறை முந்தி நாம் பால்யத்தில் பார்த்த பிராமண சிறுவர்கள் முகத்தில் இருந்த தேஜஸ் இப்போது பல முகங்களில் காணோமே. படிப்பு திறமையும் அப்படியே ஆகிவிட்டது.

நமக்குப் பின் வரப்போகும் தலைமுறைகள், ஈஸ்வர அனுகிரஹத்திலும், ப்ரம்ம தேஜஸிலும், உத்தம மேதையில் குறையாமலிருக்க, வாழ்வு இனி வர வர மேலும் க்ஷீணமடையாமல் இருக்க, நாமும் கட்டாயம் தர்ம சாஸ்த்ரங்கள் எனும் சைக்கிளின் கர்மாநுஷ்டானம் எனும் சக்ரம் வேகமாக ஓட ஆசரணம் எனும் பெடலை விடாமல் இப்போதிலிருந்தே அழுத்தி வேகமாக மிதிக்க வேண்டும்.'' ++

கும்பகோணத்தில் 1930-40களில் மஹா பெரியவா பேசியவைகளை, வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை புத்தங்களாக்கி ஓரணாவுக்கு விற்று பரப்பி தர்மத்தை நிலைநாட்டியதற்கு உங்கள் சார்பில் என் நமஸ்காரம்.. யாரிடமாவது இது போல  ஓரணா  புஸ்தகங்கள் இருந்தால் எனக்கு  ஸ்கேன் பண்ணி அனுப்புங்கள். அதை பதிவிடுகிறேன் . மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்குமே? என்ன சொல்கிறீர்கள் ?


sivan jaykay

unread,
Sep 10, 2023, 8:14:35 PM9/10/23
to amrith...@googlegroups.com
அறுபத்து மூவர்     -      நங்கநல்லூர்    J K SIVAN
புகழ்ச்சோழ நாயனார்  

புகழ்ச்சோழ நாயனார்  என்ற  பெயர் கொண்ட   ஒரு  சிறந்த சிவனடியாரைப் பற்றி  ஒருநாளாவது ஒரு விநாடியாவது  நாம்   யோசித்ததுண்டா? புகழ்ச்சோழன் என்ற பெயராவது  தெரியுமா?  சரி.  இத்தனை வருஷம்  சிவன் கோவில்களுக்கு போயிருக்கிறோமே,   ஒரு நிமிஷமாவது எந்த கோவிலிலாவது  ப்ரஹாரத்தில் வரிசையாக  ரெண்டு அடி  உயரத்துக்குநிற்கும்  63 நாயன்மார்கள் பேரையாவது பொறுமையாக  படித்ததுண்டா?  எந்த கேள்வி கேட்டாலும் ஒரே பதில்  'இல்லை'' என்பதே வழக்கமாகி விட்டது. .

ஆகவே  இன்று கட்டாயமாக  இந்த சிவனடியாரை உங்களுக்கு  அறிமுகப்படுத்திவிட்டு தான் வேறு வேலை என்று முடிவெடுத்ததால்  இந்த சின்ன பதிவு..
 
உறையூர்  சில காலம் சோழர்கள் தலைநகராக இருந்தது.  அதில் ஒரு நல்ல ராஜா. உண்மையான சிவ பக்தன்  என்று சொல்வது ரொம்ப பொருத்தம். சிவனுக்கும் அடியார்க்கும் தொண்டு புரிந்து மகிழ்பவர். ராஜ்ய பரிபாலன  சௌகர்யங்கள் காரணமாக  தலைநகரை  கரூர்க்கு மாற்றியவர்.

 கரூர் என்ற பெயர்  இப்போதெல்லாம்  ரொம்ப  அரசியல்  செய்திகளில்  அடிபடுகிறதே  அதே கரூர் தான்.  அங்கே  ஒரு  புராதன  சிவன் கோவில். சிவனுக்கு  கல்யாணபசுபதீசுவரர்  என்று  பெயர்.  தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு  சிவஸ்தலம்.  பதினெட்டு சித்தர்களில்  ஒருவரான  கரூவூராருக்கு  தனி சந்நிதி. இங்கே  இன்னொரு சிவனடியார், எறிபத்த நாயனார்   சிவத்தொண்டு  புரிந்திருக்கிறார்.  

கல்யாண பசுபதீஸ்வரர்  லிங்கத்தின் ஆவுடையார், சதுர  வடிவம்.  மாசி மாதத்தின் ஐந்து நாட்கள், மூலவரின் மீது சூரிய ஒளி  தரிசனம். மூலவரின் இடதுபக்கத்தில் அலங்காரவல்லி அம்பாள்  சந்நிதி.  இன்னொரு  சந்நிதியில் சௌந்தரநாயகி   அம்பாள்.   கல்யாண பசுபதீஸ்வரர்  எதிரே  உட்கார்ந்திருக்கும்  நந்திக்கு    புகழ்ச்  சோழ  நாயனார் சிலை  இருக்கிறது. புகழ்ச்சோழர் மண்டபம், நூறுகால் மண்டபம்  எல்லாம் கட்டி இருக்கிறார்கள். 

 கரூர்  அமராவதி ஆற்றங்கரையில்  அமைந்த அருமையான  ஊர்.  கோவில்  கொடிமரம் அருகே   தலையைத் தட்டில் வைத்து கையில் ஏந்தியவாறமைந்த புகழ்ச்சோழ நாயனாரின் சிற்பமும், மறுபுறம் சிவலிங்கமும், சிவலிங்கத்தை நாவால் நக்குகின்ற பசுவும் அருமையாக உள்ளது.  கர்பகிரஹம் சதுர வடிவம். அதன் விமானம் வட்டம். அதன் மேல் கலசம்.  புராதனமான இக்கோவில் பலமுறை சிதிலமாகி புனருத்தாரணம் பண்ணப்பட்டது.  நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு நன்றி. 

காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன், 'பசுபதீஸ்வரர்' என்றும், 'ஆநிலையப்பர்' என்றும்  பெயர் கொண்டவர். 

எல்லோராலும் கப்பம் கட்ட முடியவில்லை  என்பதால் கரூருக்கு  தலைநகரை மாற்றி  பல சிற்றரசர்கள், குறுநில மன்னர்கள்   புகழ்ச்  சோழனுக்கு  கப்பம் கட்டினார்கள்.   கப்பம் கட்டும் அரசர்கள் குதிரைகள், யானைகள்,  பொற்குவியல்கள், விலை மதிக்கத்தக்க கற்கள் போன்றவற்றைச் செலுத்தி வந்தார்கள். ஒருமுறை அதிகன் என்னும்  சிற்றரசன்  மட்டும்  புகழ் சோழனுக்கு  கப்பம் கட்டாமல் இருந்தான்.

''மந்திரி,  அந்த அதிகனிடம் சென்று ஏன் கப்பம் கட்ட வில்லை என்று கேளுங்கள். தக்க காரணம் கூறாவிட்டால் அவனை வென்று சிறைப்படுத்துங்கள்''  என  புகழ்ச்சோழன் கட்டளை இட்டான்.  கப்பம் வராத  நிலையில்  அதிகனோடு  போர் தொடர்ந்தது.  சோழன்  படைகள்  அதிகனை வென்று அங்கிருந்த பொருள் செல்வங்கள், படைகள் கொண்டு வந்து  சோழன் எதிரே  சமர்பித்தார்கள்.   

போரில் மாண்ட  யானை, குதிரை, பெண்கள், வீரர்கள் தலைகளை எல்லாம் பார்வையிட்ட  சோழன்  ஒரு தட்டில் இருந்த  தலையைப் பார்த்து  அதிர்ச்சியடைந்தான்.  அதில்  சடைமுடி தரித்த சிவனடியார்  தலை.   சோழன் சிவ பக்தன்.  கல்யாண பசுபதீஸ்வரர்  அடிமை.  ஆகவே  அந்த சிவனடியார் தலையைக் கண்டதும்  'ஐயோ என்று அலறினான் சோழன்.  உள்ளம் பதைத்தது. கண்களில் தாரை தாரையாக  நீர்சொரிந்தது. தது.  ''அடடா, எவ்வளவு பெரிய தப்பு , மஹா பதக்கம் பண்ணி விட்டேன்''   சிவனடியார்க்கு பாதுகாப்பு அளிக்காத நான் இனி ராஜாவாக இருக்க தகுதியற்ற கொடுங்கோலன் '' என்று   அலறிய  சோழன்  தனது ராஜ்ய  பாரத்தை என்று  ராஜ்யத்தை  மந்திரிகளிடம் ஒப்படைத்தான். 

ஜடாமுடி தரித்த  தலையை  ஒரு தங்கத்தட்டில் வைத்து  ஓம் நமசிவாய  என்று ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் தியானித்தவாறே  தீமூட்டி,  அந்த நெருப்புக்  குண்டலத்தை வலம் வந்தான். பிறகு பொற்றாமரைக் குளத்தில் இறங்குவது போல் அந்த  ஜடாமுடி தலை யை தட்டில் ஏந்தியவாறு  எரியும்  நெருப்புக் குண்டலத்தில் இறங்கினான் சோழன்.   சுற்றியிருந்தவர்கள் மன்னனின் பக்தியைக் கண்டு உருகினார்கள். மன்னர் மன்னராக மட்டுமல்ல மகானாக வாழ்ந்திருக்கிறார் என்றார்கள். சோழன் புகழ்ச் சோழ நாயனார் என்ற  பெயர்  பெற்றான். கல்யாண பசுபதீஸ்வரர்  அவன் பெருமையை  உலகிற்கறிவிக்க  இந்த  நாடகமாடி  புகழ்ச்சோழனை தனது   திருவடி நிழலில் அணைத்துக்கொண்டார்


sivan jaykay

unread,
Sep 10, 2023, 8:14:42 PM9/10/23
to amrith...@googlegroups.com
மஹா கவி பாரதி  தினம்  -   நங்கநல்லூர்   J.K. SIVAN

''காலா.  வா,  உன்னைக் காலால்  உதைக்கிறேன்''

குழந்தை சாப்பிடும்.  ஆனால்  ரொம்ப  அம்மாவை  கஷ்டப்படுத்தி தான் சாப்பிடும்.  அம்மா  டான்ஸ் ஆடுவாள், பாடுவாள், ஓடுவாள், இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு வெளியே வானத்தில் காக்கா குருவி காட்டுவாள், இரவானால்  சந்திரனை காட்டுவாள். நிலா நிலா வா வா  என்று கை அசைத்து  கூப்பிட்டு சாதம் ஊட்டுவாள். 

எனக்கு கிருஷ்ணனை பிடிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக அவனை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அப்படி எனக்கு கிருஷ்ணனை காட்டி பிணைத்தது  மஹா கவி அமர கவி, தேசிய கவி சுப்ரமணிய பாரதியார். ஒவ்வொரு வருஷம்   செப்டம்பர் 11 வந்தால் மனம் வெடிக்கிறது. கண்களில் என்னை அறியாமல் நீர் கோர்த்துக்கொண்டு எதிரே  எழுத்தை மறைக்கிறது. அந்த அமரன்  ஏழ்மையில் வாடி, பாதி நாள் பசியோடு வாழ்ந்து  மறைந்த நாள். 

வெள்ளைக்கார அரசாங்கம் ஆஸ்பத்திரியில் இருந்த  பாரதியாரின் மறைவு நாள் செப்டம்பர் 12, 1921  என்று அவரது இறப்பு சான்றிதழில்  சொன்னாலும்  நிறைய  பேர்  நேரில் பார்த்தவர்கள்  செப்டம்பர் 11 என்கிறார் கள்.   செப்டம்பர்  நள்ளிரவில் இறந்த பாரதியின் தேதி 12.9.1921 என்று காட்டப்பட்டாலும் அது தப்பு,  ''பாரதி தான் சாகவில்லையே''.அவனை யார் சாகடிக்க முடியும்? அமரனுக்கு மரணம் ஏது? என்றும், தமிழ் இருக்கிற வரை,  பாரதியும் சிரஞ்சீவியாக   வாழ்பவர்.  11 என்று  எழுதினால் என்ன, 12 என்று  எழுதினால் என்ன. பாரதி என்றும் தமிழனின் நெஞ்சை விட்டு நீங்காதவராயிற்றே.

நானும்  ஒரு தமிழன் தான். ஆரம்ப கல்வியே கூரைக்கட்டு ,  மண் தரை,  பள்ளிக்கூடத்தில் தான்.  எனக்குத் தெரிந்த பேசும் எழுதும் தமிழ் வேறு,  நான் புத்தகத்தில் கற்ற தமிழ் வேறு. மெட்ராஸ் பாஷை எனும் தமிழ் கம்பனுக்கோ, வள்ளுவனுக்கோ, இளங்கோவுக்கோ பாரதிக்கோ  தெரியாது.   ஆகவே  தான்  என்னைப் போல பலரால்  தமிழ் மூலம்  அவர்களை அணுக முடியவில்லை.  எத்தனையோ  பேருக்கு   நல்ல விஷயங்கள் தெரியாமலேயே வாழ்க்கை பெரும்பாலும் முற்றுப்  புள்ளியோடு நிற்கிறது.   இதில் ஒரு ஆறுதல் என்ன தெரியுமா?    பாரதி தமிழ்  அவ்வளவு கடினம் இல்லை. எளியது. என் போன்றவர்களுக்கு  படிக்கும்போதே 
பாரதியின் எண்ணம்  தெளிவாக புரிகிறது.  பாரதியின் தமிழ் என்னை ஈர்த்தது. அதனால் தானோ என்னவோ  அவரது  இறுதி நாள் பற்றி நினைக்கும்போது என்னையறியாமலே கண்களில் பனிப்படலம்.

ஒவ்வொரு வருஷமும் செப்டம்பர் 11  அன்று   காலண்டர் சீட்டைக்  கிழிக்கும்போது  ''பாரதி நினைவு நாள் ''அந்த  சிறு காகித துண்டாக மறந்து, மறைந்து போகிறது.   செப்டம்பர் 11  1921  என்ற அந்த  மஹா கவியின் கடைசி நாள் சம்பவத்தை நினைத்தால் நெஞ்சு யாருக்குமே  கனக்கும். இவரைப்  பாதுகாக்காமல் 
 விட்டு விட்டார்களே  என்ற குற்ற உணர்வு  நெஞ்சைப் பிழியும். சோகம் கண்ணீராக வரும்.

''அடாடா. இவ்வளவு  அற்புதமான ஒரு மஹானை வறுமையில் வாட விட்டு அவர் மஹிமையை உணராத  நாம் தமிழர்கள்  என்று எந்த தைரியத்தில் சொல்லிக்கொள்ளலாம்?  இறந்தபின் அவன் அருமை தெரிந்து அதனால் அவருக்கென்ன? ஒரு வேளை சந்தோஷமாக அவர்  குடும்பம் சாப்பிட , வாழ, அனுமதித்தோமா?  செல்லம்மா வோடு வறுமையையும் சேர்த்தல்லவோ  மணந்தவர் அவர்.   39 வருஷமே வாழ்ந்த  குறுகிய   கால அவகாசத் தில்  அவர் சாதித்தது முன்னூறு வருஷமானாலும் எவனாலும் முடியாதது.

திருவல்லிக்கேணியில் பாரதியை   அறியாதவர்கள், மதிக்காதவர்கள் நிறைய பேர் இருந்தார்களோ? இன்று உலகமே அறிகிறதே அவர்  வாழ்ந்த வீடு என்ற அந்த திருவல்லிக்கேணி வீட்டுக்கு நான் சென்று அமைதியாக அமர்ந்து தியானிப்பேனே.  அந்த வீட்டின் சுவர்களில் எத்தனை பாரதி திருவுருவங்கள். எத்தனை எழுத்துக் கள். தமிழிலும், சமஸ்க்ரிதத்திலும், ஆங்கிலத்திலும் நிபுணன் அந்த காவிய  நாயகன். சரஸ்வதிக்கு பிடித்த அவனை ஏன் லக்ஷ்மிக்கு பிடிக்கவில்லை?

வாய் திறவாமல் அவனை வளைய வந்த ஒன்பது கஜ ஒல்லிப்  பெண்மணி செல்லம்மா. பாரதி மனைவி என்ற புகழால் தமிழ் நெஞ்சங்களின் மனதில் செல்லம்மாவின் பெயர் என்றும் கவிதையாக நிலைத்து விட்டதே. அவளுக்கு நீ கொடுத்த அந்தஸ்து ஆபரணம் இது தானா பாரதி? நீ ஒருவேளை தங்கம் மட்டும் கொடுத்திருந் தால் அது மறைந்திருக்கும்.    அதனால்  இல்லாத தங்கத்தில் பெண்ணுக்கு பெயராக வைத்து  தங்கம்மா  என்ற பெண் மூலம் உன் பாரதி வம்சம் வளர்ந்துவிட்டது. 

பிராமண சமூகமே  உன்னை  அவமதித்த காரணம் அவன் ''காக்கை குருவி எங்கள் ஜாதி'' என்றதாலா? நீங்கள் இல்லாவிட்டால் எனக்கென்ன?   ''கடலும் மலையும் எங்கள் கூட்டம்'' என்றதாலா? அவன் ராஜாவாகவே வாழ்ந்தான், மைசூர் மஹாராஜாவுக்கு மட்டுமா முண்டாசு? அவனுக்கும் தான் அற்புதமாக இருந்து எத்தனை படத்தில் முறுக்கு மீசையோடு பார்க்கிறேன். அவன் படத்தை நானே  போட்டிருக்கிறேன்.

முண்டாசு கவிஞன் என்று பெயர் பெற்றவன் பாரதி. இலை முன்னால் சாப்பிடும் விதம் ஒரு ராஜா மாதிரி கம்பீரமாக இருந்து என்ன பயன்?. இலையில் அவனுக்கு மாதம் பத்து நாள் மட்டும் தான் ஏதாவது காய்கறி  விழும். வசதி இல்லை  அவனுக்கு . மற்ற  நாள் வெறும் சீரக  ரசமும் சுட்டப்பளமும் தான் அந்த அமர கவிக்கு சாப்பிட முடிந்ததோ?   ''தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தையே அழித்துவிடுவேன்'' என்ற அந்த பொது நல தியாகிக்கு அவ்வளவு தான் கொடுப்பினையோ?.

பாரதிக்கு மனதில் தான் உறுதி. உடலில்  தளர்ச்சி.
 பாதி நாள் வெள்ளையன் அரசாங்கத்தின் பிடியிலிருந்து தப்பவே நேரம் சரியாக இருந்தது. சிறை வாசம்.

1921 ஜூலை மாதம் பார்த்தசாரதி கோவில் யானைக்கு ஏன் பாரதியை பிடிக்கவில்லை? 
வாழைப் பழம் தேங்காய் கொடுத்த பாரதியை, ''போ உனக்கே உணவில்லை எனக்கு  ஏன் கொண்டு வந்தாய்''? என்று அன்பாக தள்ளி விட்டதோ?  அதுவே ஆபத்தாகி விட்டதா? கஜேந்திரன் பலம் எங்கே பட்டினிக் கவிஞன் உடலின் சக்தி எங்கே? அந்த அதிர்ச்சி, எலும்பு முறிவு, தொடர்ந்து காய்ச்சல், வயிற்றுப் போக்கு... தக்க மருத்துவ வசதிக்கு வழி இல்லை. அதோடு ஜீவனத்துக்கு உழைப்பு வேறு. ரெண்டு மூன்று மாதம் வாட்டி எடுத்தது.

பாரதி வாழைப்பழம் தேங்காய் எடுத்துக் கொண்டு பார்த்தசாரதி கோவில் யானையை நெருங்கிய  போது அருகில்  யாரோ  ''யானை கிட்டே போகாதேங்கோ'' என  எச்சரித்தும் பிடிவாதக்கார பாரதியின்  காதில் அந்த எச்சரிக்கை  விழவில்லை.   யானை அமைதியாக நின்றுகொண்டிருந்ததால்  எச்சரிக்கையை லக்ஷியம் பண்ணவில்லையோ?. ஆனால் திடீரெண்டு அன்று  யானை தனது  துதிக்கையால் தேங்காய் பழத்தைப் பற்றாமல் பாரதியின் இடுப்புக்கு மேலே சுற்றி தன் நான்கு கால்களுக்கும் நடுவே அவரை தூக்கி வீசியது . நல்லவேளை  காலால் மிதிக்க வில்லை.
கண்ணிமைக்கும் நேரத்தில் குவளைக்  கண்ணன் என்ற பாரதியின் சிநேகிதனான  ஓரு புண்ணிய ஆத்மா தன் உயிரையும் பொருட் படுத்தாது யானையின் கால்களுக்கு நடுவே புகுந்து குனிந்து பாரதியை அகற்றி தன் தோளில் போட்டுக் கொண்டார். இருவரும்  உயிர் தப்பினார்கள்.  யானை நினைத்திருந்தால் தன் கால்களுக்கு நடுவே இருக்கும் இருவரையும் அக்கணமே நசுக்கி சட்னி செய்திருக்க முடியும். கஜேந்திரன் உணர்ந்துகொண்டார். தான் தாக்கியது  ஒரு சாதாரணன் இல்லை கிருஷ்ணனின் பக்தன் என்று புரிந்ததோ என்னவோ!. அதற்குப்  பிறகு அவரையும் குவளைக் கண்ணனையும் தாக்க வில்லை. யானையிடம் எந்த சலனமும் இல்லை.    கீழே பாரதி விழுந்த போது முண்டாசு இருந்ததால் பின்புற மண்டை தப்பியது ஆனால் கட்டாந் தரையில் முகம் மூக்கு தோள்பட்டை முழங்கை மற்றும் முழங்கால்களில் பலத்த ரத்தக் காயத்தோடு பாரதி மயங்கினார்.
காயம்பட்ட கவிஞனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில்  நண்பர் சீனுவாசாச்சாரியார்  கொண்டு போய்ச் சேர்த்தார். பகைவனுக்கும் அருளச் சொன்ன பாரதி தன்னைப் பழுதாக்கிய யானையைப் பழித்தாரா? இல்லவே இல்லை. கொஞ்சம் நினைவு வந்ததும் '' ஹா ஹா '' என்று வழக்கமான அட்டகாசமான சிரிப்பு. இது தான் பாரதி:  typical  பாரதி:
''யானை முகவரி தெரியாமல் என்னிடம் மோதி விட்டது.என்ன இருந்தாலும் என்னிடம் இரக்கம் அதிகம் தான் இல்லை யென்றால் என்னை உயிரோடு விட்டிருக்குமா ?''

பாரதிக்கு உடல் காயம்  ஆறத்தொடங்கியது. அன்றாட உணவுக்கு உத்யோகம் அவசியமாகியது. உடலுக்கு ஒய்வு போதவில்லை. எழுத்துப்  பசி சுதேசமித்திரன் ஆபீஸூக்கு ஐந்தாறு மாதங்கள் சிரமத்தோடு செல்ல வைத்தது. காயம் ஆறினாலும் யானை தந்த அதிர்ச்சி சில அவசர வியாதிகளை கிளப்பி விட்டது. சீதபேதி பாரதியின் உடலைச் சிதைக்கத் தொடங்கியது. மீண்டும் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில். செப்டம்பர் 12  1921. அதிகாலை இரண்டு மணி. மஹா கவி பாரதியாரின் உடலைவிட்டு உயிர் பிரிய முடிவெடுத்து விட்டது.

''போதும் பாரதி,   நான் உன்னோடு இந்த உலகத்தில், இந்த நன்றிகெட்ட சமூகத்தில் இருந்தது'' என்று அதற்கு மேலும் அவரோடு இருக்க  அவர் உயிருக்குப்  பிடிக்க வில்லை. வெளியேறத் துடித்து   பாரதியின்  உடலை உதைத்துக் கொண்டிருக்கிறது. வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை.  சில நிமிடங்களில் துடிப்பு அடங்கியது.     39 வருஷ   உடல் - உயிர் தாம்பத்யம் முடிவு பெற்றது. எழுத்துக்கு உயிர் அளித்த அந்த கவிஞனின் உடல் உயிரை இழந்தாலும்  தனது அற்புத  தமிழை உலகுக்கு விட்டு சென்றது.

ஒரு எரிமலை குளிர்ந்து போனது. இனி எங்கே பொங்கும்? அக்னிக் குஞ்சொன்று வெந்து தணிந்தது. அந்த ஞானக்கடல்  வங்காள விரிகுடா  உப்புக்  கடல் அருகே வாழ்ந்து கரைந்து மறைந்து போனது.

குவளைக்  கண்ணன், லக்ஷ்மண ஐயர், ஹரிஹர சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா பரசு நெல்லையப்பர் -- இந்த ஐவரின் தோள்களும் அந்த ஞான சூரியனின் சடலத்தை மாற்றி மாற்றி  சுமந்து கிருஷ்ணாம் பேட்டை மயானம் நோக்கி நடந்தன. இன்று பாரதி என்றால் அகில உலகமும் போற்றும் அந்த கலைஞன், கவிஞனின் இறுதி ஊர்வலத்தில் அவன் பூத உடலைத் தூக்கிய நால்வரையும் சேர்த்து மொத்தமே பத்தோ பதினொன்றோ ஆசாமிகள் தான். அவர் உடலில் மொய்த்த ஈக்கள் கூட எண்ணிக்கையில் அதிகமாகவே இருந்தது. இது தான் நமது சமுதாயம் ஒரு மாபெரும் தமிழ் கவிஞனுக்கு நாம் அளித்த கடைசி மரியாதை. சே என்ன வெட்கக்கேடு!.

கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் சுரேந்திரநாத் ஆர்யா மஹாகவி பாரதியின் பெருமையைச்  சொல்லி முடித்ததும் ஹரிஹர சர்மா சிதைக்குத் தீ மூட்டுகிறார்.

''தமிழ் உலகமே நீங்கள் கொடுக்காத வரவேற்பை அமர கவி பாரதிக்கு நான் கொடுக்கிறேன்'' என்று அக்னி பகவான் அன்போடு அவர் உடலை ஆரத்தழுவினான் அந்த கவிஞனின் உடலை. நம் எண்ணத்தில் சாகா வரம் பெற்ற சுப்ரமணிய பாரதியாரின்  பூத  உடம்பு மண்ணில் பிடி சாம்பலானது.  புகழுடம்பு எழுத்தாக  என்றும்  ஒளி வீசுகிறது. ஒளி படைத்த கண்ணா  என்று பாடுகிறது. 

 

sivan jaykay

unread,
Sep 11, 2023, 7:24:45 PM9/11/23
to amrith...@googlegroups.com
கல்யாணமாம் கல்யாணம்   -   நங்கநல்லூர்  J K   SIVAN 

சித்திரை, ஆவணி, தை  என்று எத்தனையோ கல்யாண மாதங்கள் ... நிறைய பத்திரிகைகள், பலவித மண்டபங் கள், வித விதமான உணவு வகைகள் ... எல்லாம் கிட்டத் தட்ட  ஒரே மாதிரியாகிவிட்டது.

கொஞ்சம்  திரும்பி பார்த்தால், இந்த  84+ வருஷங்களில் எத்தனை கல்யாணங்கள்  பார்த்தாகி விட்டது. ஒவ் வொன் றும் ஒரு விதம். சிலவற்றின்  சொந்த  பந்தங்கள்  முகம் அதிகம் தெரிந்தவை.சில  உயர்மட்ட வகை. சிலது ரொம்ப தாழ்ந்த  பணவசதி கொண்டவை. சில படாடோ பமானவை. சில பட்டவர்த்தனமான  சாஸ்த்ர பூர்வமா னவை. சில கிராமத்து மோஸ்தர், சில  மேனாட்டு பாணி. மேடையிலிருந்து இறங்கி  பெண், பிள்ளை, அப்பா அம்மா சொந்தம் எல்லாம்    டப்பாங்குத்து ஆடி  பலர்  விசில் அடிப்பது..

அப்போதெல்லாம்  கல்யாண மேடைகளில் வாத்யார்  கோஷ்டி மந்திரம் சொல்வது மட்டும் தான்.இப்போது  வீடியோ போட்டோகிராபர்கள் தான் அதிகம் மேடை யில் காண்கிறார்கள். அது தவிர  கையை தலைக்கு மேல் தூக்கி மொபைல் வீடியோ படம் எடுக்கும் கும்பல்  மேடையில் இருப்பவர்களை மறைக்கிறது.

''என்னடா சௌக்யமா?'' என்று கேட்டு  மாமிகள் மாமாக்கள் குசலம் விசாரிப்பது மறைந்து போய் விட்டது.  யூனிபார்ம் அணிந்த பெண்கள் முகத்தில் அன்னியத்தோடு தட்டை நீட்டி அதில் ஜூஸ் டம்ளரை  காட்டு கிறார்கள். வாசலில்  மேஜைக்கு பின்னால் அதே மாதிரி இன்னொரு கோஷ்டி. சிரிப்பு, அறிமுகமில்லாத இயந்திர வரவேற்பு.

கல்யாணம்  உறவுக்குள் நடப்பது நின்று விட்டது.  பணம், அமெரிக்காவில் உத்யோகம்  என்பது கட்டா யமாகி  விட்டது.  சில கல்யாணங்கள்  ஏற்கனவே  அமெரிக்காவிலோ  ஆஸ்திரேலியாவிலோ நடந்து போனதன் பிறகு , அல்லது முடிவான பிறகு, இங்கே  'சும்மனாங் காட்டியும்'  பெற்றோர் மற்றோர்  பூ இதழ், அக்ஷதை போட மட்டும் நடத்தப்படுகிறது.  தெருவை யே  மடக்கி பந்தல் போட்டு, ஊரெல்லாம் கூடிகொண்டா
 டிய  ஐந்து நாள்  ஆறுநாள்  கிராம கல்யா ணம்  பழைய புத்தகங்களில் தான் காணப்ப டுகிறது. ஒருநாள் ஒன்றரை  நாள்  கல்யாணத்தில் உற்சாகமே காணோம். ரோபோக்கள் மாதிரி காலை  டிபன், கொஞ்ச நேரம்  மொபைல் பார்ப்பது,  மொய் எழுதி, மலர் தூவிவிட்டு சாப்பாடை முடித்துக் கொள்வது மேடையில் வரிசையில் சென்று  போட்டோ எடுத்டுக கொண்டு  சாத்துக்குடி பையை வாசலில் அவுட்பாஸ் மாதிரி வாங்கிக்கொண்டு  ஓலா,  ஊபர்  ஆட்டோ தேடுவதோடு நின்று போகிறது.  ஒரே மண்டபத்தில் ரெண்டு மூணு கல்யாணம் நடந்து நான் யார் கல்யாணத்திற்கோ போகவேண்டியவன் இன்னொரு  கல்யாணத்துக்கு  கூப்பிடாமலேயே சென்று யாருக்கோ கொண்டுவந்த  பரிசை வேறு யாருக்கோ கொடுத்துவிட்டு   வாழைப்பட்டை தட்டில் தயிர் சாதம்   எலுமிச்சங்கா ஊர்கா சாப்பிட்டது நினைவிருக்கிறது.

இப்போது கல்யாணமானவுடன் வாசுகி  வள்ளுவர்களை தேடவேண்டாம்.  எத்தனையோ கல்யாணங்கள் ஏதோ நடக்கவேண்டும் என்று நடப்பவையாக தான் இருக்கிறது.  முறியாமல் தொடர்ந்தால் பேரதிர்ஷ்டம்.  மிலிட்டரி காரனை கல்யாணம் பண்ணிக்கொண்டால் கட்டளைக்கு கீழ்ப்படுவான்,தானே சமைத்துக் கொள் வான், துணி துவைப்பான். படுக்கையை போட்டு சரியாக மடித்து வைப்பான்.

யார் சொன்னது இது? ''கல்யாணம் என்பது ஒரு வயலின் மாதிரி.  பாட்டு முடிந்தாலும் கம்பிகள் மிடுக்காக தான் இருக்கும் '' கொஞ்சம் நிதானமாக தான் யோசிக்க வேண்டும். இதை சொன்னவர்  எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படி சொன்னார் என்று அப்போது தான் கொஞ்சம் புரியும்.   கல்யாணம் என்றாலே சேர்ந்து வாழ்வது என்று தொடருமானால் நூறாண்டு வாழ்த் துக்கள்.   பிள்ளையின் அப்பா அம்மா உண்டா என்று கேட்காதீர்கள்.  பதில் சொன்னால் வருத்தமாக இருக்கலாம்.

கல்யாணம் ஆனபின்னும் அது இனிக்காமல்  போவது ஏன்? இனிப்பை விட்டு உப்பை தேடி அலைவதால் தான்.
சில பெண்கள்  கல்யாணம் ஆனபின் கொள்ள சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.  ''அப்பாடா, நமக்கு என்று இனி ஒரு காசு கொடுக்காமலேயே  சதா சொன்னவண்ணம் செய்யும் பெருமாளாக   எடுபிடி வேலைக்கு  ஒரு ஆள்  கிடைத்து விட்டான்''.

யாரோ  ஒரு கலி கால  ரிஷி சொன்ன வாக்கியம் இது:    ''கல்யாணம் என்பது  ஒரு  வினோத  யுத்தம். அதில் ஒன்றில் தான் எதிரி பக்கத்திலேயே  படுத்து குறட்டை விட்டு  தூங்குவான் ''

சில அனுபவசாலியான  ஆண்களின்  பொன்மொழி:   ''கல்யாணம் என்பது  சுடச்சுட  வெந்நீரில் குளிப்பது போல.  பழக்கமாகிவிட்டால்  வழக்கமாகிவிடும்''
கல்யாணம் என்பது  இருவரை ஒருவராக்குவது என்று சொல்வது சரி என்கிறார்கள் சிலர்.  பின்னே என்ன. கல்யாணம் ஆன பிறகு ஆண்  காணாமல் போய்  பெண்ணில் ஐக்யமாகிவிடுகிறானே.

'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்''  என்று ஒரு அருமையான பாடலை பல முறை கேட்டிருக்கிறேன்.   மனைவி  யார்?  பிரம்மச்சாரியாக  நீ இருந்த போது  நீ படாத கஷ்டங்களை கல்யாணமாகி நீ படும்போது உனக்கு அவற்றை வழங்கி உன்னோடு இருப்பவள்'' என்று உபதேசித்தவர் ஒரு அனுபவ கல்யாண கிருஷ்ணன்.

மேலே சொன்னதெல்லாம்  காதில் விழுபவை.  என் வாழ்வில் நான் ஆனந்தமாக இருக்கிறேன் என் மனைவி மிகவும் சந்தோஷமாக என்னை வைத்துக் கொண்டி ருக்கிறாள். நல்ல சாப்பாடு போடுகிறாள்  (என் மனைவி என் கட்டுரைகளை படிக்கிறாள் என்பது நினைவிருக் கட்டும்)

sivan jaykay

unread,
Sep 11, 2023, 7:24:45 PM9/11/23
to amrith...@googlegroups.com
கலியுகம்   -   நங்கநல்லூர்  J K  SIVAN 

பலே பலே   சுகப்பிரம்ம ரிஷி. 

யாரைப்பார்த்தாலும்  காலம் கெட்டுவிட்டது ஸார்  என்கிறார்கள்.   எல்லாமே  தலைகீழ்.  இப்போது இருப்பது  அக்ரமத்தின் உச்ச கட்டம் என்று முடிவு கட்டவேண்டாம்.  இப்போது நாம் இருப்பது  பிள்ளைப்பருவம். இன்னும் பல லக்ஷம் வருஷங்கள் இருக்கிறதாம். நாம் எந்த  உருவத்தில் பிறந்து அதெல்லாம்  அனுபவிப்போம் என்று யோசிக்க வழி இல்லை.   கலிகாலம் 5000 வருஷங்களுக்கு முன் துவங்கியது.  கிருஷ்ணன் மறைவுக்குப்  பிறகு  வளர்ந்து தலை விரித்தாடுகிறது.  கலி   காலத்தில் என்ன நடக்கும்,நம்முடைய   வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அப்போதே  அதே  5000 வருஷங்கள்  முன்பு சுகப்பிரம்ம ரிஷி நன்றாக கணித்து பரீக்ஷித்  ராஜாவுக்கு சொல்லும்போதே நமக்கும் தெரிந்து விட்டது.  உண்மையை சொன்னால் கேட்பதற்கோ படிப்பதற்கோ கஷ்டமாகத்தான் இருக்கும்.

 ''ஸார்,  நீங்கள்  எங்கே இருக்கிறீர்கள் ?
''நங்கநல்லூரில் ''   இப்படி சொன்னால்  புரியும், அதில் ஆச்சர்யம் இல்லை.    ''நான் கலியுகத்தில் இருக்கிறேன் '' என்றால் பதில் சொன்னவரை ஒரு தடவை உச்சி முதல் உள்ளங்கால் வரை கொஞ்சம் கோணலாக அவரைப்  பார்த்து விட்டு  ''ஐயோ பாவம்,சின்ன வயசிலேயே  புத்தி ஸ்வாதீனம் இல்லை....'' என்று நகர்வோம்.  ஸ்ரீ மத் பாகவதத்தில்   சுகப்பிரம்ம ரிஷி சொன்ன விஷ யங்களை  வரிசைப்படுத்தி  'ஆஹா''  என்று பிரமித்துப்  போக  உங்களை அழைக்கிறேன்..

யார்  இந்த பரீக்ஷித்?  என இன்னும் தெரியாதவர்களுக்கு : பரீக்ஷித் அர்ஜுனன் பேரன், அபிமன்யு பிள்ளை.   ''தக்ஷன் என்ற பாம்பு   கடித்து இன்னும்   ஏழு நாளில்   நீ  சாகப் போகிறாய்  என்று  மரண நோட்டீஸ் கொடுக்கப்பட்டவன்.    நம்மைப் போல   வீடு வாசல், பணம், பெண்டாட்டி, குழந்தைகளைக்   கட்டிக் கொண்டு  ''ஐயோ, நான் உங்களை விட்டு போகப்போகிறேனே''  என்று அழாமல்  சுகப்பிரம்ம மகரிஷியை அழைத்து  துளைத்து எடுத்து  என்னென்னவோ  நிறைய நல்ல  விஷயங்கள் இரவும் பகலுமாக கேட்டுத்  தெரிந்து கொண்டவன்.  
பரீக்ஷித்  நல்ல  ராஜா. அவனால் நாம்  எத்தனையோ ஞானம்  நாம் இன்று பெறுகிறோம். இனி பரீக்ஷித்   சுகர் சம்பாஷணையை கேட்போம்.
 ''மகரிஷி, அடுத்ததாக  ஏதோ ஒரு யுகம் வருமாமே. அது என்ன?''
'' கலியுகம்.''
''பேரே நன்றாக இல்லையே. சரி, அதில் என்ன நடக்கப்போகிறது மகரிஷி ? சொல்ல முடியுமா?''
ஆஹா  சாஸ்திரங்கள்  அதைப்  புட்டு புட்டு வைத்திருக்கிறதே. கேள். அரசனே ''

ततश्चानुदिनं धर्म: सत्यं शौचं क्षमा दया । कालेन बलिना राजन् नङ्‌क्ष्यत्यायुर्बलं स्मृति: ॥ १ ॥
tatas canu-dinam dharmah satyam saucam ksama daya kalena balina rajan nanksyaty ayur balam smrtih  .12.2.1.

''ஒவ்வொருநாளும்  கொஞ்சம் கொஞ்சமாக  மதம், சத்யம், உண்மை, நாணயம்  ( காசு இல்லை, இது  நேர்மை) சுத்தம்,  மன்னிக்கும் குணம், தயை, கருணை, ஆயுள், உடல் வலிமை ஞாபகம் எல்லாமே குறைந்து கொண்டே வரும். காலம் இதை தீர்மானிக்கும்.   (நாமே   இப்போதுள்ள நிலையில் இதெல்லாம் அனுபவிக்கிறோம். இன்னும்  வேறு நிறைய பாக்கி  இருக்கிறதோ?)
பரீக்ஷித் ராஜாவுக்கு  அவனது வாழ்வின் கடைசி ஏழு நாட்களில் எத்தனையோ விஷயங்களை சொல்கிறார் சுக ப்ரம்மம். அதில் அவர் அவனுக்கு பிறகு  இந்த உலகம் கலியுகத்தில்  எவ்வாறு இருக்கும் என்று  தனது ஞான த்ரிஷ்டியால் கவனித்து சொல்வது நமது இன்றைய நிலைமையை தான்.  ஆஹா  எப்படித்தான்  இவ்வளவு  கன  கச்சிதமாக  சுக ப்ரம்ம ரிஷி முன்கூட்டியே  ஆணி அடித்தது மா திரி சொல்கிறார்!  
ஒரு விஷயம்  தெரியுமா?
ஆரம்பத்தில்  சத்ய யுகம் 18,00,000 வருஷ காலம். மனிதனின் வயது அப்போது பத்து லக்ஷம் வருஷம்.  யமனுக்கு சுத்தமாக வேலையே இல்லை.  எத்தனை பிள்ளை, குட்டி, பேரன் பேத்தி, கணக்கு கம்ப்யூட்டரில் கூட போடமுடியாது.
அப்புறம்  த்ரேதா யுகம்  - ராமர் காலம் - 12,00,000 வருஷ காலம். அப்போது சராசரி ஒவ்வொரு மனிதனுக்கும் பத்தாயிரம் வருஷம் வயசு.   LIC  கிடையாது.   அட  சத்ய  யுகத்தைவிட  பத்து மடங்கு வயது குறைந்து விட்டதே.
அடுத்தது துவாபர யுகம்  -   800,000  வருஷ காலம்.   மனிதன் வயது  அப்போது சராசரி ஆயிரம் வருஷங்கள்.    ஐயோ  இதென்ன அக்கிரமம். வயஸு  இன்னும்   பத்து மடங்கு குறைந்து விட்டதே.
 இப்போது கலியுகம்   நடக்கிறது.  இதில் நமக்கு அதிக பக்ஷ வயஸு 100.   இன்னும்  பத்து மடங்கு குறைந்து விட்டது.  நூறு வயதே ஜாஸ்தி.   சராசரி  70 தாண்டினாலே அப்புறம் ஒவ்வொரு  நாளும்  போனஸ்.  
இன்னும் போகப்போக 20 வயது 30 வயது  ஆகிவிட்டாலேயே  அவன் தொண்டு கிழவன். தாத்தா  பட்டம் கட்டி விடப்போகிறார்கள்.
இது எப்படி இருக்கு?  இப்போதே  அங்கும் இங்குமாக ஒரு சில  30-35 வயது ஹார்ட் அட்டாக் மரணங்கள் . படிக்கவோ கேட்கவோ ஷாக்  அடிக்கிறது.   ஞாபக சக்தி குறைந்து போய்விட்டது.   கேட்க கேட்க , படிக்க படிக்க  எதுவுமே   மறந்து கொண்டே போகிறது.  நமது தாத்தா  கொள்ளு தாத்தா, காவேரியில் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டார், பனை மரம் ஏறி நுங்கு பறித்தார், தேங்காயை பல்லால் கடித்து உறித்தார்.  தோட்டத்தில் கரும்பு கண்ணில் பட்டால் ரெண்டு மூன்று கரும்பை கடித்தே நின்றார்..  இதெல்லாம் ஆச்சர்யமான விஷயங்கலாக வாயைப் பிளந்து கேட்கிறோம்.  ஆஞ்சநேயர் கோவில் மிளகு வடையை கூட  நம்மால் கடிக்க முடியவில்லை. பல் அவ்வளவு வீக். WEAK.

கலியுகத்தில் மதம்,  பக்தி, மரியாதை, பதவிசு, எல்லாம் குறைந்து விடும்.
இப்போதே  மதம்  என்று எவனாவது பேசி  எசகு பிசகு  பண்ணினால்,  சொன்னால்,  உடனே  பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள்......மதச் சார்பற்ற.... இதற்கு என்ன அர்த்தம் என்றே எனக்கு  இன்னும்  புரியவில்லை.  சனாதனம் என்றால்  விஷயமே  தெரியாமல்  தலைக்கு தலை  பேசுகிறார்கள். கோவில்கள் சிலரது  வாழ்க்கைக்கு  சௌகரியங்களை தேடித்தரும்  சுலப, வசதியான,  வழியாகி விட்டதே.  கிராமங்களில் கோவில்களில் ஆளே இல்லை. சில கோவில்களில் சாமியே  காணோம். அமெரிக்காவுக்கோ எங்கோ சென்று விடுகிறது.   கோவில் நிலங்கள் பிளாட் ஆகி விட்டன.  அன்னதானம் நிச்சயம் என்று தெரிந்த சில கோவில்களில்  பிச்சைக்காரர்கள்,  உழைக்காமல் பிழைப்பவர்கள் தான் சாப்பாட்டு நேரத்தில் கண்ணில் படுகி றார்கள். பக்தர்களுக்கு  இலவச உணவு சுத்தமாக  கிடைக்குமோ?.  

கருணையாவது, காருண்யமாவது, தயையாவது.   ஒரு ரூபாய்க்கு குழந்தையை விற்கிறார்கள்.  அசந்தால் அறுபதுக்கு மேலே கிழவிகள் தங்கச் சங்கிலி தங்கள் உயிர் இரண்டையும் கோட்டை விடுகிறார்கள்.  மூன்று வயது பெண் குழந்தையை பாலின வன்மையில் கொல்கிறார்கள்.  பத்திரிகை  டிவி  எல்லாமே   நிமிஷத்துக்கு நூறு கொலை கொள்ளை பற்றி தான் செய்தியும் படமும் போடுகிறது.  நல்ல  விஷயம் எதையும் சொல்ல பிடிக்கவில்லையா?  சொல்வதற்கு எதுவும் இல்லையா? நடப்பது இப்படி இருந்தால் அதைத்  தானே  காட்ட, சொல்ல முடியும்.

वित्तमेव कलौ नृणां जन्माचारगुणोदय: ।धर्मन्यायव्यवस्थायां कारणं बलमेव हि ॥ २ ॥ 12.2.2
vittam eva kalau nṝṇāṁ  janmācāra-guṇodayaḥ dharma-nyāya-vyavasthāyāṁ kāraṇaṁ balam eva hi

கலியுகத்தில்  எல்லோரும் பணம் ஒன்றை தான் மதிப்பார்கள். பணம் உள்ளவன் தான் சிறந்த குலத்தில் உதித்தவன், காசே தான் கடவுளடா பாட்டு எங்கும் கேட்கலாம்.  காசுள்ளவன் தான்  நல்லவன், அருமையான குணம் படைத்தவன்.  நேர்மை,  நீதி, நாணயம் எல்லாம்  அவன் பக்கம் தான் பேசும்.   நீதி அவன் பக்கம் பேசுவதை தான் இப்போது கண்கூடாக  பார்த்து, படித்து  அதிசயிக்கிறோம்.


 

sivan jaykay

unread,
Sep 13, 2023, 8:10:01 PM9/13/23
to amrith...@googlegroups.com

கதையும் அதன் கருவும்.  --    நங்கநல்லூர்  J K  SIVAN 

அவன் சாமியாரல்ல.  நினைவு தெரிந்ததிலிருந்து அப்பா  அம்மா  யாரென்று தெரியாமல் வளர்ந்தவன்.   மண்ணாங்கட்டின்னு  அந்த ஊரிலே நிறைய பேருக்கு  நாமகரணம். ஆகவே  அவனையும் மண்ணாங்கட்டின்னு தான் எல்லோரும் கூப்பிட்டாங்க.

அவன்  பள்ளிக்கூடம் பார்த்ததில்லை.  யார் யாரோ கொடுத்த  ஆடைகளை உடுத்து அவரவர் கொடுத்த  ஆகாரங்கள் உண்டு பட்டினத்தார்  சமாதியில் இரவு படுத்து இப்போது  ஐம்பது வயசுக்கு மேலாகி விட்டது. வருவோர் போவோர்  பாடுவது பேசுவது எல்லாம் கேட்டு கேட்டு தன்  அறிவை வளர்த்துக் கொண்டவன்.  மனதில் எல்லா வார்த்தைகளையும்  பதித்துக் கொண்டவன்.தனக்குத் தானே கேள்வி கேட்டு சந்தேகங்கள் தீர்த்துக் கொண்டவன்.  மண்டபத்தில்  இத்தனைவருஷங்களாக  எத்தனை பிரசங்கங்கள் கேட்டிருக்கிறான், எத்தனை பாடல்கள்  கேட்டவன் , எல்லாம் இறைவன் அருள். அவன் எண்ணப்படியே தான் எதுவுமே  எல்லாமே நடக்கும் என்று அடிக்கடி விபூதி கேட்டவர்களுக்கு கொடுக்கும்போது  சொல்வான்.  அந்த ஊர்  தாமோதர முதலியார்  தான் அவனை ஆரம்பத்திலிருந்து  கவனிச்சு  அவனுக்கு தேவையானதை எல்லாம் கொடுத்தவர்.
அவரையே  அப்பான்னு கூப்பிடுவான்.

அவர் கடவுள்னு  எல்லோர் கிட்டேயும் சொல்வான்.   ஒருநாள்  கொட்டற  மழை.  பக்கத்து ஊர்லேருந்து  பரசுராம சாஸ்திரிகள் னு ஒருவர்  வந்து கடவுள் நம்பிக்கை பத்தி  பேசப்போறார்னு மண்டபம் வாசலிலேயே  பலகையில் எழுதி வச்சிருந்தது.  மழையினால் அவர் வரலே. எல்லோரும் காத்திருந்தாங்க.  யாரோ ஒருத்தர் '' ''இதோ நம்ம இந்த  மண்ணாங்கட்டி சாமியாரையே  பேச வச்சிடுவோம்'' னு சொன்னாக.
 
மண்ணாங்கட்டியை மேடைக்கு அழைத்தார்கள்.   அவன்  மறுத்தான்.

''நான் கல்வி அறிவில்லாத மூடன், எனக்கு என்ன  பேசத்  தெரியும்.  யாரோ ஒருவர் சொன்ன  கதையை ஞாபகம் இருக்கும் வரை சொல்கிறேன். அவ்வளவு தான்.

''சரி அந்த கதையை சொல்லுங்க'' என்று கேட்டார்கள்.  
''மேடை மேல் ஏறமாட்டேன் , இதோ இஞ்சே தரையில் உட்கார்ந்து கிட்டே  தெரிஞ்சதை சொல்றேன்''  என்று   ஆரம்பித்தான்.

ஒரு ஊர்லே ஒரு பெரிய பணக்காரன். எல்லாவித சுக போகங்களும் அனுபவித்தவன்.  குழந்தைகுட்டி எதுவும் இல்லை என்று தான் குறை.   எல்லோரும் எனக்காக  வேண்டிக்கொள்ளுங்கோ, எனக்கு ஒரு பிள்ளை பிறந்து என்  வாரிசாக  இதெல்லாம் கட்டி காக்கட்டும். குடும்பத்தின் நல்ல பேரை தொடர்ந்து  நாலு பேருக்கு நல்ல  வழி காட்டட்டும்''  என்று கேட்டுக் கொள்வான்.

கடவுள் கண் திறந்து பார்த்தார். ஒரு பிள்ளை பிறந்தான்.  சுப்பிரமணி என்று பேர் வைத்தான். அவனை நன்றாக படிக்க வைத்தான்.   வாத்தியார்கள் வைத்து வாழ்க்கையில் அவன் முன்னேற  எல்லாம் கற்பித்தான்.  வயசானது.   சுப்பிரமணி க்கு கல்யாணம் நடந்தது.  தம்பதிகள் சந்தோஷமாக எல்லோரும் போற்றும்படி  கவலையில்லாமல்  வாழ்ந்தார்கள். சுப்பிரமணி கோவிலுக்கு எல்லாம் போகிறவன் இல்லை. வீட்டிலேயும் பூஜை எல்லாம் பண்ணமாட்டான். சாது. கடவுள் இல்லேன்னும் சொல்ல மாட்டான். சாமின்னு சொல்லி திருநீறு மட்டும் இட்டுக்குவான். 
ஊரில்  கொரோனா நோய்  பரவி  சுப்ரமணியோட  அப்பா அம்மா  ரெண்டு பேத்துமே  செத்துட்டாங்க. 
சுப்பிரமணி  ஊரில் எல்லோருக்கும்  உதவி செய்ய  அலைந்த நேரத்தில் அவன்  வீட்டில் திருடர்கள் புகுந்து எல்லாவற்றையும் கொள்ளை அடித்துக் கொண்டு போய்விட்டார்கள்.   சுப்ரமணியும் அவன்  மனைவியும் இப்போது ஒன்றுமில்லாத அனாதைகள். இத்தனை காலம் ஒட்டிக்கொண்டிருந்த  நண்பர்கள் உறவுகள் ஒவ்வொன்றாக பிய்த்துக்கொண்டு போய்விட்டார்கள். 
சுப்பிரமணி மனைவிக்கு  அப்போ நிறை  கர்ப்பம். அவன் கவலைப்பட்டான்.
''ஆஹா  என்  அப்பா அம்மா  நான் பிறந்ததுக்கு  எவ்வளவு சந்தோஷப்பட்டாங்க.  எப்படி எல்லாம் என்னை வளத்தாங்க.  நான் ஒண்ணுமில்லாதவனாய்ட்டேனே, எப்படி என் பிள்ளையை வளர்ப்பேன்?என்னை எப்படி வசதியோடு வளர்த்தாங்களோ அந்த வசதியை என்னால் என் பிள்ளைக்கு கொடுக்க முடியாதே''என்று அழுதான். அவன் மனைவி சரசா அவனைத்  தேற்றினாள்.   

''நீ அழுவாதேப்பா,சாமி பார்த்துப்பார். அவரை நம்பு.  இது வரையில் நம்மை நல்லாத்தானே  வச்சிருக்கார்.  இனிமேலும் நல்லாவே  கவனிச்சுப்பார். கண்ணு தொடச்சுக்கோ'' என்றாள் .

 சுப்பிரமணிக்கு ஒரு பிள்ளை பிறந்தான். ஆனால்  அவன் அல்பாயுசு, பிறந்த சில மணி நேரத்திலேயே  செத்துட்டான்.   அழுதுண்டே  போய் சுப்பிரமணி  சிசுவை பொதைச்சான் . வீட்டிலே அவன் மனைவி சரசா மயங்கி கிடந்தாள்.  முகத்திலே தண்ணி தெளிச்சு அவள் தலையை மடிமேல் போட்டுக்கிட்டு  அழுதான்.  கொஞ்ச  நேரத்தில் சரசா கண்ணை திறந்தாள். அவனைப் பார்த்துக்கிட்டே இருந்தவள் ஏதோ சொல்ல நினைச்சு  முடியாம, பெர்மனெண்டா கண்ணை மூடிட்டா.

''என்ன  சாமி  இப்படி பண்ணிட்பிட்டியே''  நீ எங்களை  கவனிக்கவே இல்லையே'' என்று சுப்பிரமணி முறையிட்டான்.இப்போ தான் அவனுக்கு சாமி கிருஷ்ணன்  ஞாபகம் வந்தது.

'சுப்பிரமணி, நான் எப்படா  உன்னை  மறந்தேன். நீ தான் என்னை நினைக்கவே இல்லையே'' என்றான் கிருஷ்ணன்.

''இல்லே  நீ  எங்கேயோ இருந்தே, என்னை  கவனிச்சிருந்தா  இப்படி நடக்குமா என் வாழ்க்கையிலே''

''சுப்பிரமணி,  உளறாதேடா.  இதுவரையில்  நீ  உன்னைப் பத்தி தானேடா நினைச்சுட்டிருந்தே. என்னை எங்கே கூப்பிட்டே, நினைச்சே? என்னைப்  பார்க்கணும் னு கூட  உனக்கு தோணலை.  உண்மையா நான் எப்போதும் உன்கூடவே தான் இருந்தேன். இருக்கிறேன். நான் உன் பக்கத்துலே  வந்து உட்கார்ந்தா தான் சந்தோஷம் னு நினைக்காதேடா.  நான் இருக்கிறேன், எங்கே இருந்தாலும் உன்னை கவனிச்சிட்டே இருக்கேன் னு நம்புடா. நீ  படர கஷ்டம்  எல்லாம்  நீ  ஏற்கனவே  செஞ்ச பாவத்தால் வந்ததுடா. அதை நான் குறைக்க உனக்கு வழி எல்லாம் சொல்லிக்கொடுத்தாலும் நீ  செவிடனா, குருடனா நடந்துக்கிட்டு என் மேலே  குறை கண்டுபிடிக்கிறியே. 
 உன் மனசிலே எனக்கு இடம் கொடுத்தா போதும் டா. அங்கே போய் உட்கார்ந்து கொண்டே  உன்னை கவனிப்பேன். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதிலே என்னை நினைக்கல்லியேடா.  அதெல்லாம்  என்னை நினைக்கறதுக்கு, என் உதவி தேடறதுக்கு தானேடா. அது  உன்  மனசை விசாலப்படுத்தும். உண்மை எதுன்னு கண்ணை திறக்கும். அப்புறம் தான் நீ என்னை நினைக்கணும் னு  தோணும். என்னை நினைச்சுட்டீன்னா  மனசிலே நிம்மதி வந்துடும் டா.  உன் சக்தி எல்லாம் காலியான  பிறகு, என் உதவி தேவைப்படும்போது,   நீ தேடும்போது  நான் உனக்கு உதவாம போயிடுவேனா, சொல்லு? நான் எப்பவுமே   எல்லோருக்குமே உதவ காத்திருக்கிறேண்டா சுப்பிரமணி'' என்று  கிருஷ்ணன் சாமி சொன்னார். 

எனக்கு கதைஎல்லாம் ஒழுங்கா சொல்ல தெரியாது. அவ்வளவு தான். சாமியை நினைக்கணும் அம்புட்டு தான்.''  
மண்ணாங்கட்டி கதையை நிறுத்தியபோது மழை விட்டிருந்தது. எல்லோரும் சுண்டல் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போனாங்க.


sivan jaykay

unread,
Sep 13, 2023, 8:10:22 PM9/13/23
to amrith...@googlegroups.com
கள்வன் பிடிபட்டனா?   நங்கநல்லூர் J K SIVAN

நம் எல்லோர்  வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறது. குழந்தைகள்   என்றால் விஷமம் செய்வதற்கென்றே  பிறந்தவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.  சில பெற்றோர்கள் கண்டிக்கிறார்கள். சில பெற்றோர்கள் என்னதான் போட்டு உடைத்தாலும் பரவாயில்லை, குழந்தை என்றால் அப்படித்தான் செய்யும் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டே  இன்னும் புதிதாக உடைப்பதற்கு  வாங்கித் தருபவர்கள். சிலர்  அடிப்பவர்கள், பயமுறுத்துபவர்கள். சில குழந்தைகள் பயப்படும், சில அழும், சில அடிவாங்கும். சில எப்படியாவது சிரித்து மயக்கி தப்பிவிடும்.  கண்ணன் எனும் கிருஷ்ணன் இந்த கடைசி ரகம்.  அவனுக்கென்றே ஒரு கூட்டம், சகாக்கள் பிருந்தாவனம் பூரா இருந்தார்கள். 
 
வெல்லம் இனிப்பு இவை இருப்பது, எறும்புக்கு எப்படி தெரிகிறது. பேப்பரில் படித்தோ, டிவி யில் பார்த்தோ, வாட்சப்பில் படித்தோ வா அறிகிறது?. அதுபோல் தான் கிருஷ்ணன் வெளியே வந்திருக்கிறான் என்று ஒரு நண்பனுடன் அவன் பேசிக்கொண்டிருந்ததை மற்றவர்களும் அறிந்து கொண்டு விட்டார்கள். எல்லோரும் யமுனை நதிக்கரைக்கு ஓடினார்கள். அங்கே வழக்கமாக விளையாடும்  ஒரு பெரிய மகிழ மரத்தடியில் தான் சந்திப்பது வழக்கம். யார் யார் என்னென்ன தின்பண்டங்களை கொண்டுவந்தாலும் அங்கு தான் பங்கு போட்டுக் கொள்வது.  அவர்களது  அடுத்த கட்ட  திருட்டு  நிகழ்வுகளை திட்டம் போட்டு நிறைவேற்றுவது. இதற்கெல்லாம் தலைவன் கிருஷ்ணன். 

''கிருஷ்ணா எனக்கு பயமாக போய்விட்டதடா?'' என்றான் ஒருவன்.
'எதற்கு ?''
''உன் வீட்டில் எல்லோர் அம்மாக்களும் சேர்ந்து வந்து ஏதோ  கோள்  சொல்லி  விட்டார்களாமே. நம்மைப் பற்றியா?''
''இல்லையே. உங்களைப்  பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. என்னைப் பற்றி தான் எல்லோருமே  முறையிட்டார்கள். நான் அதை பொய் என்று சொல்லிவிட்டேன்''.
'' எனக்கு பயமாய் இருக்கிறதடா கிருஷ்ணா, நாம் இனிமேல் எந்த வீட்டுக்கும் போய் வெண்ணெய் தேடவேண்டாம்,  திருட வேண்டாம்''
''சரி  அப்படியென்றால் நான்  இனிமேல் வீட்டை விட்டு வெளியே வரப் போவதில்லை .''
''ஐயோ,  கிருஷ்ணா,  உன்னோடு விளையாடாமல்   எங்களால் இருக்க முடியாதுடா  கிருஷ்ணா. கட்டாயம் நீ எங்களோடு சேர்ந்து தினமும் ஏதாவது சொல்லிக்  கொடுத்து  நாங்கள்  அதை செய்ய வேண்டும். அதில் இருக்கும் சுகமே தனி'' என்றான் ஒரு பையன்.
''சரி இப்போது  எல்லோரும் யமுனையில் குதியுங்கள் நீரில் சற்று விளையாடுவோம்.'' என்றான்  கிருஷ்ணன்.
''தொப் தொப்'' என்று அந்த சிறுவர்கள் நீரில் குதித்தார்கள். மூழ்கி தண்ணீரின் அடியில் ஒருவரை ஒருவர் பிடித்து விளையாடினார்கள். நீச்சல் போட்டி வைத்து அடுத்த கரை வரை நீந்தினார்கள். மரங்கள் மீது ஏறி அங்கிருந்து குட்டிக்கரணம் போட்டு நீரில் குதித்தார்கள். பொழுது போயிற்று. நதியின் அடியில் இருந்து மண் எடுத்து மேலே சீக்கிரம் யார்  வருகிறார்கள் என்ற விளையாட்டு.
ரொம்ப நேரம் விளையாடிவிட்டு  கிருஷ்ணன்  கரை ஏறினான். அவர்களும்  அவனைப் பின் தொடர்ந்தார்கள்.

இத்தனை நேரம் கண்ணன் கவனித்துக் கொண்டிருந்த அந்த தனி வீட்டில் இருந்து ஒரு கோபி வெளியே வந்தாள் . தனது குடிசையின் வாசலை மறைத்துக் கொண்டிருந்த தட்டிக் கதவை சாற்றினாள் . இடுப்பில் குடத்துடன் யமுனை நோக்கி நடந்தாள் . சூரியன் மேலே நடு வானம் வந்துவிட்டான். சுள்ளென்று உஷ்ண காற்று வீசியது. கிருஷ்ணனும் மற்ற நண்பர்களும் மெதுவாக மரங்களின் பின் நகர்ந்து அந்த குடிசையை அடைந்தார்கள்.
ஏற்கனவே போட்டிருந்த திட்டம் தான்.
வெகுநேரம் நீரில் ஆடிய பையன்களுக்கு கபகப என்று பசித்தது. எப்போதுமே குளித்தவுடன் பசி தெரியும். கண் வயிறு இரண்டுமே ஆகாரம் தேடும்.
கண்ணன் தன்னையும் சேர்த்து தலை எண்ணினான். ஏழு பையன்கள் . ரெண்டு பேர் அந்த குடிசையின் வாசலில் இருந்த மரத்தின் மேல் ஏறி அங்கிருந்து ஆற்றைக்  கண்காணித்தார்கள்.
ஒருவன் அந்த கோபியின் வீட்டு வாசலில் தட்டி கதவை திறந்து மற்றவர்களை உள்ளே அனுப்பி கதவை முக்கால் வாசி மீண்டும் மூடி அதன் வழியாக மரத்தில் இருப்பவர்கள் சைகைக்கு காத்திருந்தான். நாலு பேர் கிருஷ்ணன் உட்பட உள்ளே  கிடு கிடுவென்று  நுழைந்தார்கள். அந்த பெரிய குடிசை வீட்டில் வாசலை அடுத்து ஒரு பெரிய அறை . அதை அடுத்து ஒரு சிறு அறை . அதை ஒட்டி எதிர்புறம் இன்னொரு சின்ன  இருட்டு அறை அதன் கூரையில் ஒரு மாமர உத்தரம் குறுக்கே ஒரு சுவரில் இருந்து இன்னொரு சுவரின் மேல் படிந்து இருந்தது. பத்தடி உயரம். அதில் நான்கு உறி கள் தொங்கின. ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று சட்டிகள் ஒவ்வொரு உறியிலும். இந்த விஷயம் நேற்றே தெரிந்து விட்டது. இன்று அதை கொள்ளை அடிப்பது தான் அவர்களது  திட்டம்.  கண்ணன் இது வரை காத்திருந்தது அந்த கோபி  வீட்டை விட்டு எப்போ வெளியே போவாள் என்று கண்காணிப்பதற்கு தான். 

கிருஷ்ணன் கண்கள் துழாவின. எப்படி அந்த உயரத்தை அடைவது. எங்கும் ஏணியோ பலகையோ எதுவும் காணப்படவில்லை. படு பாதகி அந்த  கோபி. எப்படி உயரத்தில் நமக்கு தேவையான வஸ்துவை நாம்  எடுத்து விடக்கூடாது என்று நமது  கைக்  கெட்டாமல் மேலே  தொங்க  வைத்திருக்கிறாளே.  கிருஷ்ணன் ஒரு கணம் யோசித்தான். நேரம் நழுவிக்கொண்டிருக்கிறதே.  கோபி  வருவதற்குள் காரியம் முடிந்தாகவேண்டுமே.

''கிருஷ்ணா,,,நம்மை என்ன வென்று நினைத்துக்கொண்டிருக்கிறாள் அவள் . நம்மால் முடியாதது என்ன? '' என்றான் ஒருவன்.

''சரி இப்படி செய்வோம்''. இருப்பவர்களில் பெரிய பையனை குனிந்து நிற்க செய்தான். முதல் அறையில் ஒரு சுவர் மீது நீளமான ஒரு கொம்பு சாற்றி வைத்திருந்ததை கண்டு பிடித்து விட்டான் . அதை பிடித்துக்கொண்டு முதல் பையன் குனிந்தான்.அந்த பையன் மேல் இன்னொருவன் ஏறி அவனும் கொம்பை பிடித்துக்கொண்டு முதலில் குனிந்து நின்றவன் மேல் ஏறி குனிந்து கொண்டான். மூன்றாமவன் சற்று சிறியவன் அவன் குதிரை மேல் ஏறுவது போல் தாவி கீழே இருந்த இருவரின் முதுகிலும் ஆடாமல் ஆசையால்  ஏறி  ஸ்திரமாக குனிந்து கொண்டான். இரு கைகளாலும் கொம்பை கெட்டியாக அவனும்  பிடித்துக் கொண்டான். அடுத்தது கிருஷ்ணன். அவன் ஆதாரமான கொம்பை பிடித்துக்கொண்டு மூன்று பேரின் மேலும் மெதுவாக ஏறி அந்த உயர கொம்பை இடது கையால் பிடித்துக்  கொண்டு வலது கையை உயர்த்தினான். சட்டிகளை தொட முடிந்தது. சற்று எம்பி அந்த உறியில் இருந்த சட்டிகளை எடுத்து கீழே அனுப்பினான். அவை தரையில் இறங்கின. மெதுவாக நகர்ந்த அந்த சிறுவர்கள் அடுத்து இரண்டு உறிகளையும் அணுகி சட்டிகளை தரை இறக்கினர். நான்காவது உறியை நெருங்கும் சமயம் மரத்தில் இருந்த இருவர் சைகை கொடுத்து விட்டனர்

 வாசலில் காவல் காத்துக் கொண்டிருந்தவன் ''டேய் கிருஷ்ணா அந்த கோபி வீட்டுக்கு  திரும்பி  வந்து கொண்டிருக்கிறாள்.'' என்று எச்சரித்தான்.

 கண்ணன் மேலே இருந்து குதித்தான். மற்ற மூவரும் எழுந்தார்கள். ஒன்பது சட்டியிலும் பால், தயிர், வெண்ணெய் இருந்தது. பாலை எல்லாம் மடக் மடக்கென்று கண் இமைக்கும் நேரத்தில் குடித்து விட்டு சட்டிகளை தரையில் வீசினார்கள். தயிரையும் வெண்ணையும் பெரிதாக இருந்த நான்கு சட்டிகளில் நிரப்பிக்கொண்டு ஆளுக்கு ஒன்றை தூக்கிக்கொண்டு சிட்டாக ஓடினார்கள். வீட்டை திறந்து போட்டு விட்டு கொம்பை ஒரு அறையில் வீசி விட்டு அவர்கள் யமுனைக் கரையில் வழக்கமான மரத்தடியில் சந்தித்தார்கள்.

கிருஷ்ணனின் மயில் இறகு அவன் கீழே குதித்தபோது தலையிலிருந்து விழுந்ததை அவன் கவனிக்க வில்லை.
யமுனை நதியிலிருந்து அந்த கோபி நீர்க்  குடத்தோடு வீடு திரும்பியவள் ''ஏன் வீடு  திறந்து கிடக்கிறது? கதவை நான் சரியாக மூட வில்லையோ? கவனக்குறைவு ரொம்ப இருக்கிறது எனக்கு '' என்று தன்னைத் தானே சாடிக்  கொண்டு உள்ளே சென்றவள் கண்ணில் உடைந்த சில சட்டிகள் தென்பட்டன. எப்படி இந்த உறி சட்டிகள் உடைந்தன?. உறி அறுந்து விட்டதோ என்று பார்த்தாள். உறி  மேலே  தொங்கிக்கொண்டிருந்ததே. ஏன் சட்டிகளில் இருந்த பால் தயிர் வெண்ணெய் கீழே சிதறாமல்,கொட்டாமல் சட்டிகள் மட்டும் உடைந்திருக் கிறது. அதில் இருந்ததெல்லாம் என்ன ஆயிற்று?   சே  பூனைகள்  தொந்தரவு ரொம்ப இருக்கிறது இந்த பக்கத்தில். .. ஒரு உறியில் மூன்று சட்டிகள் அப்படியே வைத்தபடியே இருக்கிறதே.

என்ன அதிசயம் இங்கே நடந்தது?. அவள் கண்கள் துழாவும்  போது   தரையில்  கிடந்த மயில் இறகு காற்றில்  அசைந்தது. மயில் இறகு இங்கே எப்படி வந்தது? ஒரு கணம் யோசித்தவளுக்கு கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அன்று காலை  யசோதையிடம் முறையிட்டது கவனத்துக்கு வந்தது. அந்த கிருஷ்ணன் பயல் அல்லவோ இது போன்ற பெரிய மயில் இறகைத்  தலையில் செருகிக் கொண்டு காட்சி அளிப்பவன். அவன் தான் வந்தி ருக்கிறான். உடனே சென்று யசோதையை அழைத்து வந்து இங்கு நடந்ததை காட்டவேண்டும்..... என்று யசோதை வீட்டை நோக்கி கோபமாகவும்  வேகமாகவும்  நடந்தாள். கையில் மயில் இறகை மறக்காமல்  எடுத்துக்கொண்டு போனாள்.

யமுனைக்கரையில் எல்லோரும் வெற்றியைக் கொண்டாடினார்கள். கூத்தாடினார்கள். கை நிறைய, வாய் நிறைய தயிர், வெண்ணெய் . ஏழு ஆயர்பாடி சிறுவர்களுக்கும் விருந்து....

கண்ணன் மெதுவாக வீடு திரும்பினான். ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது...அவன் அம்மா யசோதையும் கோபமாகவும் அவன் வருவதற்கு காத்திருந்தாள். 

sivan jaykay

unread,
Sep 13, 2023, 8:10:29 PM9/13/23
to amrith...@googlegroups.com

 LOOK TO JAPAN FOR GUIDANCE.   -   J K SIVAN 

GOOD  things  we should learn from anyone without discrimination.  Japan is  a land tested by nature and time because of the frequent  volacanoes  besides the disaster of 2nd world war   atom bomb dropped at Hiroshima and Nagasaki by USA.
inspite of the difficulties and disasters, Japan has rebuilt herserlf to be in the fore front all because of the discipline of Japanese.  

Today I am writing this for you to read it completely and train your children without fail for their betterment in life. Those who are teachers and are connected with schooling and education of children should make a note and follow these practices as much as possible for creating a better society for our children.

 1.  Japanese children clean their schools every day for a quarter of an hour with teachers. This has created the emergence of a Japanese generation who is modest and keen on cleanliness.

2 Japanese citizen who has a dog must carry bag and special bags to pick up dog droppings. Hygiene and their eagerness to address cleanliness is part of Japanese ethics. Unfortunately in India  the dog shit is right front of our houses every morning and the dog owners  who take thedogs for walk permit it to make nuisance in front of houses without caring for others. This should stop.

3 - Did you know that hygiene worker in Japan is called "health engineer" and can command salary of USD 5000 to 8000 per month, and a cleaner is subjected to written and oral tests!!

4 Japan  has no  natural resources  except  earth quakes and tremours, everyyear. Unmindful of this  they are the leading and enjoy  largest economy in the world today.

5  Within a decade of of the atom bombing of  Hiroshima, it has returned to  be  economically vibrant because of the hard work of the Japanese.

6.You will be thrilled to note that Japanese are not using mobile in trains, restaurants and at any  public indoor places. 

7.  Japanese  students in schools are  taught  from the first to sixth standards  mainly ethics in dealing with people -

8 .Japanese , though they are the average  richest people in the world  do not empoy any servants. The parents are responsible for the house and children

9 .In Japanese schools  no examinations are conducted  for students from the first to the third primary level;  They concentrate in  instilling  concepts and character building.  Marks are  secondary for them. 

10.  At any  buffet restaurant in Japan  people eat only as much as they need without any waste.  My god  what an amount of wastage of precious food in our hotels, inns and wedding halls.....When will we learn the value of food & money?

11. Trains in Japan  arrive and depart punctually.  Maximum delay  is hardly 7 seconds per year!! Japanese are prosperous and hapy because they appreciate and know the value of time and being punctual in whatever they do. 

12.  Japanese children at schools,  brush their teeth (sterile) and clean their teeth after a meal at school; They maintain their health from the very early age. 

13.  Japanese school students take half an hour to finish their meals to ensure right digestion, because they know the value of their health for a happy life. 

sivan jaykay

unread,
Sep 13, 2023, 8:10:30 PM9/13/23
to amrith...@googlegroups.com
அறுபத்து மூவர்  -   நங்கநல்லூர்  J K   SIVAN 
கூற்றுவ நாயனார் 

இந்த  84 வருஷங்களில்   எனக்குத் தெரியாத ஒருவர்  கூற்றுவ நாயனார்.  எப்படி மறந்தேன்?  ஏன் மறந்தேன்?  மறக்காவிட்டாலும்   யார்  இந்த கூற்றுவர்  என்று ஏன்   ஒரு கணம் கூட யோசிக்கவே இல்லை? எல்லாவற் றுக்கும் நேரம் காலம் என்று ஒன்று உண்டு. அது இப்போது வந்துவிட்டதால் இவரைப் பற்றி அறிய ஒரு ஆவல் தோன்றியிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?.   சைவ  மதத்தின் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்  கூற்றுவ  நாயனார். 

களந்தை என்னும் ஒரு ஊருக்கு  ஒரு குட்டி ராஜா  இந்த கூற்றுவர்.  களப்பாளர்கள் என்ற மரபை  சேர்ந் தவர்.   அவர்  ஒரு ராஜா என்பதைக் காட்டிலும்  சிறந்த சிவ பக்தர் என்ற பெருமை  தான்  ஜாஸ்தி.   சிவநாமத்தை ஒருபோதும் மறக்காதவர். ஓம் நமசிவாய என்பது தான் அவர் மூச்சு.  சிவனடியார்களைத் தேடி அவர்களுக்கு சேவை செய்ய அலாதி பிரியம் கொண்டவர். 

எதிரிகளுக்கு யமன் போல்  நல்ல சக்தி வாய்ந்த ராஜா என்பதால் கூற்றுவன் என்று பெயர்.  வளநாடுகளையெல்லாம் கவர்ந்து  வென்றார். எவரும் தடுக்கவோ எதிர்க்கவோ முடியவில்லை.  சகலரையும் வென்று சக்ரவர்த்தியாக முடி சூட்டுக்கொள்ள விரும்பிய கூறுவர்  தில்லை வாழ் அந்தணர்களை தமக்கு முடி சூட்டும்படி  கேட்டுக்கொண்டார். 

''மஹாராஜா, மன்னிக்கவேண்டும், சோழர் குல முதல்வர்களுக்கு அன்றி மற்றவர்க்கு நாம்  முடி சூட்ட மாட்டோம்'' என்று மறுத்துவிட்டார்கள்.    இப்படி பளிச்சென்று சொல்லிவிட்டோமே.  ராஜா கோபத்தில் தீங்கிழைக்கலாம் என்ற பயத்தில்  சிதம்பரத்தை விட்டு   தில்லைவாழ் அந்தணர்கள் பலர் சேர நாட்டிற்குச் சென்றுவிட்டனர்.

இதை கேள்விப்பட்ட   ராஜா  கூற்றுவர்  மிகவும் மனம் தளர்ந்து சோகமுற்றார். அன்று இரவு  கனவில் சிதம்பரம் நடராஜா காட்சி அளித்தார். 

'பரமேஸ்வரா, எனக்கு  சக்ரவர்த்தி கிரீடம் வேண்டாம், உனது திருப்பாதம் ஒன்றே என் சிரசில் நிலையாக  பெற வேண்டும், அதுவே எனக்கு முடி, அதுவே என் முடிவு” என்று ஆடவல்லானைப்  போற்றி வணங்கினார். 
அவ்வாறே  ஆடல்வல்லான் தனது திருவடிகளை  கூறுவர் சிரசில் வைத்து ஆசிர்வதித்தார். 

எங்கெல்லாம் சிவாலயங்கள் உண்டோ அங்கெல்லாம் சென்று சிவனை வணங்கி மகிழ்ந்தார். தனது சிரத்தை அங்கெல்லாம் சிவனடியில் வைத்து வணங்கினார். காலம் கடந்தது  கூறுவர்  தனது அந்திம காலத்தில் சிவனடியே சேர்ந்தார். 

சிவனார் மேல் ஆழ்ந்த அன்பும் பெரும் பக்தியும் கொண்டமையால் கூற்றுவ நாயனார் என்று ஆனார். ஆதலால் இவரின் இயற்பெயர்  அறிய இதை எழுதும்போது வரை  தெரியவில்லை.  நிறைய பேர்களின் அப்பா அம்மா வைத்த  இயற்பெயர் தெரியாமல், ஏதோ காரணப்பெயர்களில் தான் நாம் அறிகிறோம். 
அவரது வீரத்தால் அவருடைய   தேர்ப் படை, காலாள் படை, குதிரைப் படை மற்றும் யானைப் படை என நால்வகையான படைகளும்  சக்தி வாய்ந்து எதிரிகளுக்கு எமனாக, கூற்றுவனாக இருந்தார் என்று அறியப்பட்டவர். சேர, சோழ, பாண்டியன் உள்ளிட்ட மூவேந்தர்களையும் மேலும் பல மன்னர்களையும் போரில் வென்று  சக்ரவர்த்தி என்று முடி சூட்டிக்கொள்ள தருணம் வந்தபோது எனக்கு  சிதம்பரம் நடராஜன் எனும் என் சிவனின் பக்தர்கள் தில்லை வாழ் அந்தணர் தாம் முடிசூட்டவேண்டும் என்று விருப்பம் தோன்றியது.  ஆனால்  அவர்கள் தான் மறுத்து விட்டார்களே.  மூவேந்தர்களின் வழியில் நாம்  பிறக்கவில்லை என்ற குறை  கூற்றுவ ராஜாவை வாட்டியது. மன்னர்கள் தாமாக முடி  சூடிக் கொள்வதில்லை. வேளாளச் செல்வர்கள் தரச் சிறந்த அந்தணர்கள் உரிமையுடைய மன்னர்களுக்கு மணிமுடியைச் சூட்டுவார்கள்.   சிதம்பரம்,  திருவாரூர், உறையூர் மற்றும் பூம்புகார் ஆகிய இடங்களில் சோழ மன்னர்கள் முடிசூடிக் கொள்வார்கள் ளுவது வழக்கம். கூற்றுவ ராஜா  சிதம்பரத்தை தேர்ந்தெடுத்தார்.   சோழ ராஜாக்களுக்கு   கிரீடத்தை  தில்லைவாழ் அந்தணர்கள் தாம்  சூட்டினார்கள்.  ஆனால்  கூறுவர்  மூவேந்தர் பரம்பரை இல்லையே, அதுவும் சோழ ராஜ பரம்பரை இல்லையே.   ஆகவே தான் சோழ ராஜாக்களுக்கு தவிர மற்றவை ராஜாக்களுக்கு மரபை  மீறி  திருமுடி  சூட்டி அணிவிக்க மாட்டோம்.” என்று மறுத்து விட்டார்கள். 
‘தில்லைவாழ் அந்தணர்கள் எனக்கு திருமுடியைச் சூட  வழி இல்லாவிட்டால் என்ன.பரவாயில்லை.  அவர்களில் முதல்வனாகிய  சிதம்பரம் நடராஜன் திருவடியே எனக்கு முடி என்று கூற்றுவ ராஜா முடிவெடுத்துவிட்டார்.   நடராஜன் திருவடியை விட, குஞ்சித  பாதத்தை,  முடியில் சூடிக்கொள்வதை விட  வேறே கிரீடம் இருக்கிறதா?   இதை கனவில் சிவனே  உணர்த்த  விழித்தெழுந்த நாயனார் தாம் பெற்ற பேற்றை எண்ணி மகிழ்ந்தார். இறைவனின் திருவருளை எண்ணி எண்ணி உருகினார்.  தில்லை வாழ் அந்தணர்கள்  நான் உங்கள்  அடிமை, எல்லோரும் திரும்பி வாருங்கள் என்று ஓலை அனுப்பி அவர்களும் சேரநாட்டிலிருந்து  சிதம்பரத்துக்கு  திரும்பி வந்தனர்.கூற்றுவ ராஜா  இனி கூற்றுவ நாயனார். 

 கூற்றுவ நாயனார்  நிறைய  சிவஸ்தலங்களுக்கு சென்றார். சிவ தரிசனம் பெற்று மகிழ்ந்து இறுதியில் நிலைத்த இன்பமான வீடுபேற்றினை அடைந்தார். குருபூஜை ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடந்து வருகிறது. 
திருத்தொண்ட தொகையில் ‘ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்‘ என்று சுந்தரர்  போற்றுகிறார்

sivan jaykay

unread,
Sep 13, 2023, 8:10:46 PM9/13/23
to amrith...@googlegroups.com
பகவான் ரமண மஹரிஷி   -   நங்கநல்லூர்  J K  SIVAN 

நினைத்தாலே  போதும்.

சாந்தம்மாவுக்கு  பகவான் ரமண மகரிஷி மேல் இருந்த அன்புக்கும் பாசத்துக்கும் எல்லையே கிடையாது. அதை வார்த்தைகளால் எழுதி முடிக்க முடியாது. எழுத  சரியான வார்த்தையும்  புதிதாக  எங்காவது
இருக்கிறதா  என்று  தேடவேண்டும்.  

அன்று  ஞாயிற்றுக்கிழமை. ஆஸ்ரமத்துக்கு  வழக்கத்தை விட  அதிகமாக பக்தர்களின் வருகை உள்ள தினம்.  சாந்தம்மாவுக்கு ஒத்தாசையாக பலர்  சமையல்  கட்டில்  வேலை செய்தார்கள். வருவோர்க்கெல்லாம்  மத்தியானம்  சாதம், சாம்பார், ரசம், உருளைக்கிழங்கு கறி , மோர், ஊறுகாய். குறைந்தது நூறு இலையாவது  விழும் என்று எதிர்பார்த்து தயார் செய்தார்கள். 

இலையில் எல்லோருக்கும் பரிமாறினார்கள். சாந்தம்மா எல்லோருக்கும்  ரெண்டு மூணு  உருளைக்கிழங்கு கறி  இலையில் வைத்தவள்  மஹரிஷியின் இலையில்  ரெண்டு கிழங்கு  கூடவே வைத்தாள் .  அவள் பண்ணியது   அது.  அதை அவர் அதிகம் சாப்பிட வேண்டும் என்ற ஆசையோ? அவர்  அதை கவனித்து முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். கோபமோ?   அதற்கப்புறம் பரிமாறுபவர்கள் முகத்தையே பார்க்கவில்லை.  எது வந்தாலும் போதும் வேண்டாம் என்று சொல்லி விட்டார். 

சாயந்திரம் விளக்கேற்றிவிட்டு  தீபாராதனை முடிந்து பஜனை கோஷ்டி ஒன்று திருப்புகழ் தேவாரங்கள் பாடியது. 'உள்ளது நாற்பது'  பாடல்களை  ஒரு கோஷ்டி பெண்கள் பாடினார்கள்.  மகரிஷி பேசாமல் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். மாலை ஏழுமணியாகியது.  கூட்டம்  கலைந்துபோய்விட்டது. சாந்தம்மா மகரிஷியிடம் வந்தாள். அவர்  பேசாமல் பார்த்துக்கொண்டே இருந்தார்.  பேசவே இல்லை.

''ஏன் அப்பா என்னோடு இன்னிக்கு பேசவே இல்லை? கோபமா?  நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா''
''இன்னிக்கு நீ என்ன பண்ணினே?''
“Iஎனக்கு தெரியலையேப்பா, நான் என்ன தப்பு பண்ணினேன்?''
''எல்லோருக்கும் பரிமாறும்போது எனக்கு மட்டும் எதுக்கு உருளைக்கிழங்கு  ரெண்டு கூடவே போட்டே?'
சாந்தாம்மாவுக்கு சிரிப்பு வந்தது.  ''இது தானா?“
''அதுனாலே என்ன தப்பு அப்பா. ஆசையா இருந்தது பக்தியோடு  கால் கரண்டி கூட போட்டுட்டேன்''
“ மற்றவர்களை விட  நான் அதிகமாக சாப்பிடறது எனக்கு ரொம்ப அசிங்கமா இருந்தது.  எங்கிருந்தோ வந்த நீ  என்னை கொழுக்க வைக்கணும் என்கிற திட்டத்தோடு தான் இங்கே வந்தியா?  மற்றவர்களை விட எனக்கு நீ கொஞ்சம் குறைவாகத் தானே போடணும்.  எனக்கு கொஞ்சம் கூடவே   உருளைக்கிழங்கு போட்டா  உனக்கு அதனாலே ஸ்பெஷலா  மோக்ஷம் கிட்டப்போறதா?
“எனக்கு உங்க மேலே இருக்கிற அதீத அன்பு, பக்தியால் அப்படி வித்யாசமா  நடந்துண்டுட்டேன் அப்பா.  என்னை மன்னிச்சுடுங்கோ'
“மற்றவர்களை   நீ என்னைவிட  அதிகமாக  நேசிப்பதன்  மூலம் நீ என்னை அதிகமா நேசிக்கலாம். புரியறதா'' 
சாந்தம்மா ''அதற்கப்புறம் இந்த மாதிரி தப்புகள் பண்ணாமல் ஜாக்கிரதையாக நடந்து கொண்டேன்'' என்கிறாள்.
பகவான்  ரொம்ப கண்டிப்பான  ஒழுக்க சீலர். எல்லோரையும்  கண்காணித்து வருபவர்.  வாயைத் திறந்து ஒன்றும் சொல்லாமலேயே  சகலமும் சரிவர நடந்தது.   ''தோ  அங்கென்  பாரா  ஹாத்'' , ரெண்டு கண்கள் பல கைகள்  என்ற  தீர்மானம் அவரைப் பார்த்து தான்  பிறகு சாந்தாராமுக்கு  தோன்றியதா?  அந்த ஆஸ்ரமத்தில். ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு பரிசோதனையில்  நாங்கள் தேறி ஸ்புடம் போட்டவர்களாக மாறினோம் என்று கூட சொல்லலாம்''என்கிறாள்  சாந்தம்மா .

எங்களுடைய  ''நான், எனது'' என்கிற  எண்ணங்கள் அவருடைய ஆத்ம ஞான  பார்வை எனும் பாறையில் மோதி சுக்குநூறாக வெடித்து சிதறியது.  அவரோடு  பழகி  பாடம் கற்றவர்கள்  அத்தனைபேரும் பாக்கியசாலிகள்.

''பகவானை தரிசிக்க வரும் அத்தனை பேரும்  சிறந்த பக்தர்கள் என்று சொல்ல முடியாது. அத்தனை  பேரும்  அவர் அருளைப்  பெறுவார்கள் என்றும் சொல்ல முடியாது.   அவர்  எல்லோரையும்  தனது கண்களால்  அழைத்து உறவாடுபவர். அவரது ஞானத்தையும் அருளையும்  மெளனமாக  கண்கள் மூலம்  நயன தீக்ஷை யாக  வழங்குபவர்.  அவர் உடலிலிருந்து வெளி கிளம்பும்   ஆத்ம அதிர்வலைகள் அந்த ஹாலில் அமர்ந்திருக்கும் அனைவர் மேலும் பாயும். அதில்   சிலர்  உடல்கள் மட்டுமே அதை  ஏற்கும் தகுதி பெற்றவை.  மரக்கட்டை மீது மின்சார சக்தி பாயாதே . சிலருக்கு கற்பூரம் உடனே  தீபத்திலிருந்து  ஒளியைப்  பற்றிக்கொண்டு சுடர் விடுவது போல் ஏற்கனவே தங்களை தயார் படுத்திக்கொண்டு அவரை தரிசிக்க வரும் நிலையில்  நிச்சயம் நல்ல பயன், பலன்  உண்டு.  சந்தோஷமாக  ''எனக்கு என்னவோ ஒரு  இனம் புரியாத சந்தோஷம், ஆனந்தம் கிடைத்தது''என்கிறார்கள். 

 மற்றவர்களின் மேல்  பாயும் ஞானசக்தி விரயம் ஆகி மஹரிஷியின் உடலை  சக்தி இழக்க செய்யும். அதை பகவான்  தியானம், ஆத்ம  விசாரத்தால் யோகத்தால்,  மீண்டும் பாட்டரி  ரீ  சார்ஜ்   செய்து கொள்வது போல் தன்னுடைய உடலில் புதுப்பித்துக் கொள்வோம்'' என்று  லக்ஷ்மண சாமி என்ற அணுக்க தொண்டர் சொன்னதை அருகிலிருந்த எல்லோரும்  ஆமோதித்தார்கள்''  என்கிறாள் சாந்தம்மா.   மஹரிஷியை தரிசிக்க  நூற்றுக்க ணக்கானோர் தினமும்   ஆஸ்ரமத்துக்கு வரத் தொடங்கி விட்டார்கள். சிலருக்கு புன்சிரிப்பு மூலம் ஞானம் வழங்கினார். 

''சுவாமி, நீங்க நாடு முழுதும் பிரயாணம் பண்ணி  இங்கே  ஆஸ்ரமத்துக்கு  வர முடியாதவர்களுக்கு  தர்சனம் கொடுப்பீர்களா?''  என்று கேட்டார் ஒரு பக்தர். 

''நான் என்ன  புதுசா எல்லோரிடத்திலும் இல்லாத ஒன்றை கொடுக்க முடியும்.  இங்கிருந்தே எல்லோரையும்  நான் தரிசனம் செய்ய முடியுமே. அருணாசலன்  அப்படித்தானே  செய்கிறான்.நினைத்தாலே போதுமே  ' என்ற பதில் தான் வந்தது அவரிடமிருந்து. 


sivan jaykay

unread,
Sep 14, 2023, 7:35:23 PM9/14/23
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம்  -   நங்கநல்லூர்   J K  SIVAN 

நீ என்னோட வரியா?

மஹா பெரியவாளைப்  பற்றி தெரியாதவர்களைப்  பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.  பெயர் தெரிந்தவர்கள், நேரில் பார்க்காதவர்கள்  கொடுத்து வைக்காதவர்கள்.   நேரில் சந்தித்தவர்கள் பாக்கியசாலிகள் என்று அடிக்கடி சொல்வேன்.  எப்போதும் அவர் படத்தையாவது பார்த்துக்  கொண்டிருப்பவர்கள் புண்யவான்கள். அப்படி இருக்கும்போது அவருடனேயே இருந்து, அவருக்கு சேவை சிஷ்ருஷை செய்துகொண்டு  அவருடனேயே  வாழ்ந்தவர்களை என்ன சொல்வது? அவர்களுக்கு கிடைத்தஅதிர்ஷ்டத்தை எதனோடு ஒப்பிடுவது? .  அப்படி சில பெயர்கள் நமக்கு தெரியும்,  வேதபுரி, ராயவரம் பாலு,கண்ணன், ஸ்ரீ கண்டன்  என்று  அவர்கள் தான் அநேக  அதிசயங்களை மஹா பெரியவா சத்தம் போடாமல் நிகழ்த்தியதை நிதர்சனமாக கண்டவர்கள். அவர்கள் மூலமும், அனுபவித்த  மற்ற பக்தர்கள் மூலமும்   தான்  நாம் மஹா பெரியவா மஹிமையை அறிந்து கொள்ள முடிகிறது.  மஹா  பெரியவா போன்ற  கலியுக மனித தெய்வங்கள் தமது பெருமையை தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் இல்லை.  காசுக்காக வேஷம் போடுபவர்கள் இல்லை.  இப்படி  மஹா பெரியவாளின் அணுக்க தொண்டர்களாக இருந்தவர்களில் முக்யமான ஒருவர்   ப்ரம்ம ஸ்ரீ   வேதபுரி மாமா.  அவர்  தானாக  பெரியவாளை தேடி வந்தவர் இல்லை என்பது தான் அதிசயம்.  அவரைப் பற்றி  என்னைவிட உங்களுக்கு நன்றாக தெரிந்திருந்தாலும்  கொஞ்சம்  மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். அற்புதமாக நான் இதைப்   படித்து ஆனந்தித்ததை உங்களுக்கு பரிமாறுகிறேன்.

மஹா பெரியவாளின் அணுக்க தொண்டனாக  என்ன qualification   தகுதி வேணும்?  காலேஜ் படிப்போ, பணமோ, பெரிய குடும்ப  சிபார்சோ எதுவும் இல்லை.... பூர்வ ஜென்ம புண்யம் அமோகமாக  இருப்பது ஒன்றே. வேதபுரிக்கு அந்த பாக்யம் இருந்தது.  

எசையனூர் ராணிப்பேட்டை வட்டத்தில் ஆற்காடு ஜில்லாவில்  ஒரு சின்ன  க்ராமம்.  அதில் வாழ்ந்தவள்  கோகிலா பாட்டி எனும் கோகிலாம்பாள்.  ரொம்ப வசதியான  குடும்பம். துர்பாக்யசாலியாக இளம் வயதிலேயே   கணவனையும்  குழந்தைகளையும் இழந்து  அனாதையானவள். அவள் கொடுப்பினை என்னவென்றால்   ஞானம், குரு பக்தி,திட சித்தம்,  வைராக்யம் .அந்த இளம் வயதிலேயே  காஞ்சி  பரமாச்சார்யாளிடம் பக்தி . மஹா  பெரியவாளே கதி என்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டவள். மடத்தில்  அவளுக்கு செல்வாக்கு அதிகம். பெரியவாளுக்கு அம்மா மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம்.    மற்றவர்களை அவள் எந்த அளவுக்கு அதிகாரமாக  பேசி வேலை வாங்குவாள் என்பதற்கு ஒரு சில  வாக்கியங்கள்:  

“ஏண்டா, ராமமூர்த்தி! பெரியவா இன்னிக்கிச் சரியாக பிக்ஷை 
பண்ணினாளோடா? ஏன் தான் இந்த ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் சேர்ந்தாப்போல வரதோ? தசமி ஆரம்பிச்சு நாலு நாளைக்குப் பட்டினியா? இப்படிக் காய்ஞ்சா அந்த உடம்பு என்னத்துக்குடா ஆகும்?”

“மேலூர் மாமா! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்கோ. நீங்க சொன்னாத்தான் பெரியவா கேட்பா! இப்படி ஒரே திரியாகக் கபம் கட்டிண்டிருக்கே! இருமக்கூட முடியாமல் தவிக்கிறாரே! வென்னீர் போட்டுக் கொடுத்து  அதிலே  ஸ்நானம் பண்ணச் சொல்லுங்கோ .”

“ஏண்டா, விஸ்வநாதா! பெரியவா கொஞ்ச நேரம் தூங்கட்டுமேடா! எதுக்குடா அவர்கிட்டே பேச்சுக் கொடுத்திண் டிருக்கேள்?”
 “இல்லே பாட்டி! பெரியவா தான் பேசறா. நாங்க கேட்டிண்டிருக்கோம்.”
“ஏண்டாப்பா! நெய்வேத்யக் கட்டிலே இத்தனை பேர் இருக்கேளே? பெரியவாளை ஸ்நானத்துக்குக் கூப்பிடுங்களேன். காலா காலத்திலே பூஜை  பண்ணிட்டு பிக்ஷை பண்ணட்டுமே? நேரமாறுதே  உடம்பு வாடுமே.''
பெரியவாளை மேனாவில் வைத்து தூக்கிச் செல்லும் சவாரிகாரர்களிடம் பாட்டி விறுவிறுவென்று
 போவாள்.
“நீங்கள் எல்லோரும் புண்யாத்மாக்கள். நன்னா இருங்கோ! இந்தாங்கோ! கொஞ்சம் பட்சணம் கொண்டு வந்திருக்கேன். எல்லாருமாச் சாப்பிடுங்கோ! (டின் நிறைய பட்சணம்) பாவம் உங்களுக்கு நேரம் காலமே கிடையாது. பெரியவா எப்ப கிளம்பராளோ? தயாரா இருக்கணும். வழியிலே ஜாக்ரதையாப் பார்த்துக் கோங்கோ ! இருட்டிலே கண்ட இடத்திலே மரத்தடியிலே படுத்துக்கிறேன்னு ஆரம்பிச்சுடுவா பெரியவா. தீவட்டியை எடுத்துண்டு சுத்திவரப் பாருங்கோ. பாம்பு, பல்லி இருக்கப்போறது. கவனமா இருங்கோடாப்
பா! உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் உண்டு.” என்பாள்.

மற்றவர்களிடம் மஹா  பெரியவா:    “எசையனூர்ப் பாட்டி எதாவது சொல்லப் போறா. ஜாக்ரதையாக இருங்கோ!”    என்பார். அந்த அளவுக்கு மடத்தில் அவளுக்கு செல்வாக்கு.

அந்த எசையனூருக்கு  மஹா பெரியவா ஒரு தடவை  சாதுர்  மாஸ்ய விரத  விஜயம் செய்தார். அங்கே தான் மஹா பெரியவாளுக்கு  தனக்கு  யார் அணுக்க தொண்டனாக இருக்கவேண்டும் என்று ஒரு  இன்டர்வ்யூ  நடத்திய ருசிகர சம்பவம்.
தாயற்ற சிறுவன். பெயர்  வேதபுரி.  எட்டு வயசு.  எசையனூர்  கோகிலா பாட்டியின் வளர்ப்பு. அவனை கூப்பிட்டு பாட்டி சொன்னாள் :
"வேதபுரி. பெரியவா வந்திருக்கா  நம்ம ஊருக்கு.  நீ  தெனோமும் வயல்லேர்ந்து பூ எல்லாத்தையும் பறிச்சிண்டுவா.  வந்து, பெரியவாளுக்கு முன்னால வெச்சுட்டு நமஸ்காரம் பண்ணு! பல்லு தேச்சுட்டு, விபூதி இட்டுண்டு பூவை பறிக்கணும்...என்ன?"
கர்ம ஶ்ரத்தையோடு பாட்டி சொன்னதை சிறுவன் வேதபுரி  follow  பண்ணினான். ஒருநாள், ஶ்ரீமடத்தில்,  ஶ்ரீசந்த்ரமௌலீஶ்வரர் பூஜை முடிந்ததும், பெரியவா எல்லாருக்கும் தீர்த்தம் குடுத்தார்.  கூட்டத்தில் நின்ற  சிறுவன் வேதபுரி தானும்   தீர்த்தம் வாங்க கையை நீட்டினான் .வேதபுரியின் குட்டிக் கைகளில் மஹா பெரியவா  அளித்த தீர்த்தம். விழுந்தது. அவரிடம் இருந்து ஒரு குட்டி கட்டளையும் கூட  வெளி வந்தது.
"நீ இங்கியே...சத்தே ஓரமா நில்லுடா ...."
வேதபுரிக்கு பயம். திரு  திருவென்று முழித்துக் கொண்டு ஓரமாக  போய் நின்றான். 
"பயப்படாதடா! ஒங்கிட்ட  நா பேசணும்!..அதுக்காக தான் உன்னை நில்லுன்னு சொன்னேன்.."
பக்தர்கள் எல்லாருக்கும் தீர்த்தம்  கொடுத்தாகி விட்டது.  
''உன் பேர் என்ன?
''வேதபுரி''
''ஆமா....தெனோமும் பூ கொண்டு வரியே?...... நீயா கொண்டு வரியா? இல்லேன்னா... யாராவுது சொன்னதுனால கொண்டு வரியா?..."   
எட்டு வயது குழந்தைக்கு இட்டு கட்டி பொய்  பேசு ம்  கபடம் தெரியுமா?
"கோகிலா பாட்டிதான் எங்கிட்ட, ' நீ  தெனோமும் பெரியவாளுக்கு இப்டிப் பண்ணு'-ன்னு சொன்னா! 
"ஓஹோ! பாட்டி சொல்லித்தான் செய்வியோ? ஏன்? ஒனக்கே தெரியாதா?......."
"எனக்கு என்ன தெரியும். ஆத்துல யாராவது பெரியவா சொல்லிக் குடுத்தாத்தானே  தெரியும்? செய்வேன்.''   
பேசும் தெய்வம் புன்சிரிப்போடு மகிழ்ந்தது. 
"எனக்கு ஒன்ன ரொம்ப பிடிச்சிருக்கு..... நீ.... எங்கூட வரியா?.என்ன ஸம்பளம் வேணும்  உனக்கு ? சொல்லு......"
"உம்மாச்சி... என்ன குடுக்கறேளோ, அத... வாங்கிக்கறேன்"
யோசிக்காமல்  பையன் வேதபுரி சொன்னதில் பெருமகிழ்ச்சி  பெரியவாளுக்கு 
''ஆத்திலே யார் யார் இருக்கா?''
"உங்கள உம்மாச்சின்னு கூப்பிடணும் னு பாட்டி சொன்னா. எனக்கு அம்மா இல்லை... சின்னவனா இருக்கச்சயே செத்துப் போய்ட்டாளாம் ! அப்பாதான் என்னை வளக்கறார். அப்பா கிட்ட சொல்றேன். அப்பா சரின்னு  சொன்னா நா  ஒங்களோட வரேன்"
"உன்னோடு கூட பிறந்தவா இருக்காளா?...."
"நா..... ஒரு அக்கா, ரெண்டு தம்பி. ஒரு தம்பி செத்துப் போய்ட்டான். அக்காவுக்கு கல்யாணமாயி அவாத்துக்கு போய்ட்டா .."
"அப்போ சரி டா,  வேதபுரி . ஒன்னோட தம்பி  இருக்கானோல்லியோ, அவன்  ஒங்கப்பாவை பாத்துக் கட்டும்..! நீ  என்னை பார்த்துக்கோ, நீ  என்னோட வா!....."
வீட்டிற்கு போனதும் கோகிலா பாட்டி கேட்டாள் .
  "ஏண்டா வேதபுரி...! பெரியவா என்னடா பேசினா உன்கிட்ட ? சொல்லு...."
"என்னை பாத்து, 'எங்கூட வரயா?'ன்னு கேட்டா.... என்ன ஸம்பளம் வேணுன்னு கேட்டா....."
"நீ என்னடா சொன்ன?..."
"நா.....பெரியவா... என்ன குடுக்கறேளோ, வாங்கிக்கறேன்னு சொன்னேன்....."
"அட  அஸடே! பெரியவாகிட்ட ஸம்பளம்-லாம் வாங்கப்டாதுடா ! அவரோட க்ருபா கடாக்ஷமே போறும்..!ஒங்க குடும்பத்தை காப்பாத்தும்..!"
"சரி  பாட்டி......"
மீண்டும்  ஒருநாள்  பெரியவாளுக்கு வழக்கம் போல் பூ கொண்டு போனபோது  அவர் கேட்டார் 
"ஏண்டா என் கூட வரதுக்கு உனக்கு என்ன சம்பளம் வேணும் னு கேட்டேனே... சொல்லு?
பாட்டி சொல்லிக்கொடுத்தபடி வேதபுரி பட்டென்று பதில் சொன்னான்: 
''எனக்கு... பெரியவாளோட அனுக்ரஹம் மட்டும் போறும்..."
"ஓஹோ! என்ன? அந்த பணக்காரப்பாட்டி இப்படி சொல்ல  சொன்னாளாக்கும்?..."
"ஆமா......."
சாதுர்மாஸ்யம் முடிந்ததும், பெரியவா எஸையனூரை விட்டுக் கிளம்பும் சமயம். சிறுவன் வேதபுரியின் வீட்டுவாசலில்,  மஹா பெரியவாளின்  மேனா  நின்றது. வீட்டில்  அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உள்ளவர்கள் எல்லாரும் பெரியவா  தரிசனம் பெற்று  நமஸ்கரித்தார்கள். வேதபுரி வாசலில் வந்து நின்றான். 
"அன்னிக்கி என்னோட வரேன்னியே?....இப்போ ..வரியா?...."
"ஓ ! வரேனே!..."
கோகிலா பாட்டியிடம்  பெரியவா கேட்டார்.  
''நான் இந்தக் கொழந்தைய அழைச்சுக்கட்டுமா?........"
"ஈஶ்வரா! பெரியவா இஷ்டம்! பாவம்.... தாயில்லாக் கொழந்தை! பெரியவாதான்... பாத்துக்கணும்"
".நீ.....நெறைய்ய செஞ்சுட்ட..! இனிமே.....இந்தக் கொழந்தைய... நா..... பாத்துக்கறேன்! ஒங்கிட்ட கேக்கறதுக்கு முந்தியே,  நா இவன்ட்ட, எங்கூட வரியான்னு கேட்டேன்.. அவனும் வரேன்னுட்டான் ..."
"வேதபுரி  போடா,   ஒங்கப்பாக்கு அபிவாதயே சொல்லி, நமஸ்காரம் பண்ணிட்டு, அவர் கிட்ட,
'பெரியவா என்னை கூப்பட்றா...... நா... அவரோட போறேன்-ன்னு சொல்லிட்டு வா . .ஒங்கப்பா, 'மடத்ல.. ஒன்னை யாரு பாத்துப்பா?-ன்னு கேப்பார்.  அதுக்கு நீ......"என்னை பெரியவா பாத்துப்பா! ஒன்ன.... தம்பி பாத்துப்பான்னு சொல்லு!.."
அப்படியே  வேதபுரியின் அப்பா சீதாராமய்யர் கேட்டார். வேதபுரி , பெரியவா சொன்னபடி, அக்ஷரம் மாறாமல் அப்பாவுக்கு பதிலளித்தான்.  ஆனந்தமாக அப்பா வேதபுரியை பெரியவளோடு அனுப்பி வைத்தார். பெரியவா குரல்  மேனாவிலிருந்து கேட்டது. ..
"வேதபுரி  வரும்போது ஒரு வேஷ்டி, துண்டு, சொம்பு...... எடுத்துண்டு வா!...."அவ்வளவுதான்!
அந்தக்ஷணத்திலிருந்து  வேதபுரி  என்ற சிறுவன் மகா பெரியவா எனும்  உம்மாச்சியிடம் 
 அடைக்கல
மானான் .
"வேதபுரி  நீ....கொழந்த.!... ஒன்னால நடக்க முடியாது! அதுனால, பின்னால சின்ன மாட்டுவண்டி வருது பாரு! அதுல ஏறிக்கோ!..."  பின்னால் வந்த மாட்டுவண்டிக்கு ஓடினான்.  வண்டியில் இருந்தவர்களோ.....
"நீ சின்னக் கொழந்தடா! ஆத்துல ஒன்ன..... தேடுவா! நீ போ!..''என்று விஷயம் தெரியாமல்  அவனை திருப்பி அனுப்பினார்கள்.  மறுபடியும்  பெரியவாளிடம் ஓடினான் 
''உம்மாச்சி...! என்னை வண்டில ஏத்திக்க மாட்டேங்கறா!..."
"ஸெரி....அதோ..... அங்க மண்ணாதி [ஸவாரி] குதிரை மேல  ஒருத்தன்  போறான் பாரு! அவனைக் கூப்டு!..."மண்ணாதி என்ற குதிரை ஸவாரி, டக்கா என்ற வாத்யம் வாஸிக்கும் கோஷ்டி, தபால் என்று அந்தந்த ஊர்களில் ஸ்ரீமடத்துக்கு வரும் லெட்டர்களை ஸேகரிப்பது, மஹா பெரியவா திக் விஜய  பரிவாரங்களும் கூடவே போகும். 
வேதபுரி போய்க் கூப்பிட்டதும், குதிரை ஸவாரிக்காரன், பெரியவாளின் பல்லக்கு அருகில் வந்தான்.
"இந்தக் கொழந்தைய... ஒன்னோட குதிரைவண்டில ஏத்திக்கோ!...."
"ஸரிங்க எஜமான்.."அடுத்து  எங்கோ  ஒரு 
 ஊரில் மேனா  நின்றதும், பெரியவா ரொம்ப ஞாபகமாக வேதபுரியை  கூப்பிட்டார். .
"சரி  இப்போ சொல்லு.... எந்த மாமா ஒன்னை மாட்டு வண்டில ஏத்திக்க மாட்டேன்னு சொன்னா?......"
"................................''   வேதபுரி பதில் சொல்லலை. 
''ஏண்டா பயப்படற? அவா... ஒன்ன... ஆத்துக்கு அனுப்பிடுவான்னு பயமா?...."
"இல்ல.. ஒங்களுக்கு கைங்கர்யம் செய்ய முடியாம போயிடுமே ன்னு, பயமா இருக்கு பெரியவா"
"நா..... இருக்கேன்! பயப்படாம காட்டு"    மாட்டு வண்டியில் இருந்த  வெங்கட்ராமய்யரை கை  காட்டினான் வேதபுரி. 
"வெங்கட்ராமா! நாந்தான்... கொழந்தைய அழைச்சுண்டு வந்தேன்.....! ஜாக்ரதையா பாத்துக்கோ...!"
"உத்தரவு பெரியவா......"
மஹா பெரியவா  பார்த்து தேர்ந்தெடுத்த  அணுக்க தொண்டர்   ப்ரம்ம ஸ்ரீ  வேதபுரி கைலாச பதவி அடையும் வரை நமக்கு மஹா பெரியவாளுக்கு இடையே பாலமாக இருந்தவர். 

VEDHAPURI 3.jpg
vehapuri.webp
VEMANA.jpg

sivan jaykay

unread,
Sep 17, 2023, 8:02:20 PM9/17/23
to amrith...@googlegroups.com

சுப்பண்ணாவின் அட்வைஸ்  -     நங்கநல்லூர்  J K SIVAN  

''தாத்தா  உன்னை எல்லோரும்  ரொம்ப கரெக்ட்  ஆசாமிங்கறாளே  எதனாலே அப்படி?   எனக்கும்  அந்த வித்தையை சொல்லித்தறியா?''  கோபுக்கு  14 வயசு.  பளிச்சுனு தாத்தா  சுப்ரமணிய சாஸ்திரியை கேட்டான். 

சுப்பண்ணா, இது தான் சுப்ரமணிய சாஸ்திரியை  ராமசாமி கோவில் மண்டபத்தில்  எல்லோரும் கூப்பிடற பேர்.     தொண்டையை கணைத்துக் கொண்டு பேசுகிறார்.

'' கோபு, நீ எதை சொன்னாலும்  அழுத்தம் திருத்தமா  அதை சொல்லணும். வழவழா கொழகொழா  சமாச்சாரம்  எது சொன்னாலும் அதிலே  இருக்க கூடாது. புரியறதா? மனதிலே எது நியாயம் னு படறதோ அதை நம்பி பேசு.  பேச்சு மாத்தாதே .  நீ என்ன சொல்றியோ  அதன்படி நட.  மத்தவங்களை பத்தி ஏதும்  கமெண்ட் பண்ணாதே. அதுக்கு உனக்கு எந்த அதிகாரமும் இல்லே.   உன் பேச்சிலேயே  உன் நாணயம், சத்யம், உண்மை கணீர்னு தெரியணும்டா. 

எதையும் உன் சம்பந்தப்பட்டதா உள்  வங்கிக்காதே.  மத்தவங்க செய்றாதெல்லாம் உனக்கு எதிராக என்கிற தப்பான எண்ணம் உன்னை புழுவாக துடிக்க வச்சிடும்.  ஒண்ணு  நல்லா  புரிஞ்சுக்கோ.  மத்தவங்களுக்கு அவங்க கவலையே பெரிசா இருக்கு. உன்னைப் பத்தி என்றதும் ஏது  நேரம்? அவங்க கனவு நனைவாகணும் னு தலையாலே  தண்ணி குடிக்கும்போது உன்னை பத்தி யாருய்யா  நினைப்பாங்க?

பிறத்தியார்  அப்படி உன்னை பத்தி என்னவாவது சொன்னாலும்,யாரு எதைவேணாலும்  சொல்லிட்டு போகட்டும் னு  அதை லக்ஷியம் பண்ணாத குணம் உனக்கு வேணும். அப்போ தான் உன்னை கவலை துன்பங்கள்எல்லாம்  வாட்டாது.  நீயாகவே  எதையாவது நினைச்சு  அலட்டிக்காதே.

எதையாவது கேக்கணும் னா தைரியமா கேளு. தீர்மானமாக நீ நினைக்கறதை சொல்லு. பேச்சு மாத்தாதே.
சரியாக  மத்தவங்க பேசறதை புரிஞ்சுக்கோ,  அதாலே  மனஸ்தாபம் வராம  தடுக்கலாம். சந்தோஷமா இருக்கலாமே.
நீ செய்ய நினைக்கிறதே  சுத்தமாக நேர்மையாக  சந்தோஷமாக செய். உன் உடம்பு ஆரோக்கியமா இருக்கும். 
என்ன நான் சொல்றது புரியுதாடா..''

மண்டபத்திலே  கோபுவுக்கு  சுப்பண்ணா  சொல்லிக் கொண்டிருந்தது என் காதிலும் விழுந்தது. அடடே இது கொஞ்சம் நல்ல விஷயமா இருக்கே. நாலு பேருக்கு சொல்வோமே என்று தோன்றியதால் இந்த பதிவு. 





sivan jaykay

unread,
Sep 17, 2023, 8:02:20 PM9/17/23
to amrith...@googlegroups.com

ஸ்ரீங்கேரி சாரதா பீட  மஹிமை  -    நங்கநல்லூர்  J K SIVAN 

வெள்ளிக்கிழமைக்கு சொந்தக்காரி  ஸ்ரீ அம்பாள்.   அம்பாள் என்றவுடன் கண் முன்னே தோன்றுவது ஸ்ரீ ஆதிசங்கரரும்  அவர் உபாசித்த ஸௌந்தர்ய  பரமேஸ்வரி,   சிருங்கேரியில்  உறையும் ஸ்ரீ சாரதாம்பாளும்  மட்டுமா.  மஹா பெரியவா எனும்  காமாக்ஷி அம்பாள் திருவுருவமும் தான். 

ஆதி சங்கரர்  பரமேஸ்வரன் அவதாரம். திரிசூர்  வடக்குநாத சுவாமி யை வேண்டி சிவகுருவும்  ஆர்யாம்பாளும் தியானம் செய்  வடக்குநாத  ஈஸ்வரனே  சங்கரனாக  அவதரித்தவர்.

எட்டாவது வயசில் வித்யாப்பியாசம் பூர்த்தி பண்ணி  காலடியில் தனது  வீட்டுக்கு ஆதி சங்கரர் திரும்பினார். அப்பா  சிவகுரு  கைலாச பதவி அடைந்தாகிவிட்டது.. அம்மாவுடன்  சிறிது காலம்  காலடியில் இருந்தார். அவருடையய மாத்ரு பக்தியை புரிந்து கொள்ள  மாத்ரு பஞ்சகம் படியுங்கள். பலமுறை எழுதி இருக்கிறேனே. 

வயசாகி  அதிக நடமாட்டம் இல்லாத  ஆர்யாம்பாளுக்கு பணிவிடைகள் பண்ணின  ஆதி சங்கரர்  அம்மாவால் இப்போதெல்லாம்  தினமும்  ஆலவாய்ப்புழைக்கு  போய்  ஸ்னானம்  பண்ண முடியவில்லை. அது அவளுக்கு ரொம்ப வருத்தம்.  புண்ணிய தீர்த்தம் என்பதால் அந்த அம்மாள் அங்கே போய்த்தான் தினமும் ஸ்நானம் செய்வாள் .
 “சங்கரா  நான்  என்னடா பண்ணுவேன், இன்னிக்குப் புண்ய காலம். புண்ணிய தீர்த்த ஸ்நானம் பண்ண முடியலியே'' 
“நான் பகவான் கிட்டே பிரார்த்தனை பண்றேன்  மா''.  அம்மாவுக்கு மட்டும் இல்லை . எல்லோருக்குமே  பயன் படட்டுமே . காலடியிலேயே  ஒரு நதி ஓடட்டுமே''   பகவானை சங்கரர்  ஸ்தோத்ரம் பண்ணினார்.  காலடியில் வீட்டுக்கு பின்னாலேயே  அது ஓடினாள் அம்மாவாலும் ஸ்னானம் பண்ண முடியுமே  என்று பிரார்த்தித்தார். நதி  குபுகுபு  என்று ஓடிவந்தது.  வரும் வழியில் ஒரு கிருஷ்ணன் கோயில். காலடியில் ஆதி சங்கரர் வீட்டருகே இன்றும் பார்க்கலாம்.  காட்டாறு  வேகமாக  தடம் மாற்றி வந்ததில் கோயிலுக்கு கொஞ்சம்  ஹீனம் ஏற்பட்டுவிட்டது.   புனருத்தாரணம் பண்ணவேண்டும். எந்த நல்ல தானாலும் கஷ்டமாகவும் கொஞ்சம் கலந்துதானே வருவதாயிருக்கிறது?

காலடியில் நதி ஓடி வந்ததில் எல்லோருக்கும் ஆனந்தம். விஷயம் ராஜாவின் காதுக்கும் எட்டியது. யார் அந்த பிராம்மண சிறுவன்?. அவன் பிரார்த்தனைக்கு இப்படி ஒரு சக்தியா? ஆச்சர்யத்தோடு ராஜா ஓடிவந்தான். 
சங்கரர்  ராஜாவிடம் கிருஷ்ணன் கோவிலை   ஜீர்ணோத்தாரணம் பண்ண வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். ஆதி சங்கரரின் விருப்பம் நிறைவேறியது. 
காலடியில் இன்றும்  கிருஷ்ணன் கோயில் ஆற்றுப் படுகையிலிருந்து கொஞ்சம் மேடான பூமியிலிருக்கிறது. 

இன்னொரு அற்புத சம்பவம் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.  பின்னர்  ஆதி சங்கரர்   தெற்கே விஜயம் செய்தபோது துங்கபத்ரா நதி தீரத்திற்கு வந்து வந்துவிட்டார்.  அங்கே உள்ள  ஒரு மலை பிரதேசத்தில் உள்ளது சிருங்கேரி க்ஷேத்திரம். ஒரு பீடத்தை அங்கே   நிர்மாணிக்க வேண்டும் எங்கே  அமைக்கலாம் என்று  யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்   ஆதி சங்கரர்  கண் எதிரே ஒரு அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்தது... என்ன ஆச்சர்யம்.!   நிறை மாத  கர்ப்பத்தோடு  ஒரு பெண் தவளை ப்ரஸவிக்க   சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது. உச்சி வேளை  வெய்யில் கொளுத்துகிறது.   ஆஸ்வாசத்தோடு தவளை முனகுகிறது.   அந்த தவளைக்கு வெயில் படாமல் ஒரு  நாகப்பாட்டு  படம் விரித்து   குடை பிடித்துக் கொண்டிருக்கிறதே..  பாம்புக்கு  பிடித்த உணவு  தவளை.  ஆனால்  இங்கு நடப்பதோ விசித்திரம்..  வெகுநேரம்  அங்கே நின்று ஆசார்யாள்  தியானம் பண்ணிக்கொண்டிருந்தார். 

ஆஹா இங்கே நடப்பதற்கு காரணம்  இந்த  பிரதேச  மஹிமை. தூய்மை. புனிதம்.  பாம்புக்கும் தவளைக்கு  த்வேஷம் தெரியாத இங்கே அல்லவோ  காருண்ய சீலி ஸ்ரீ  சாரதாம்பாளுக்கு  ஒரு கோவில் அமைய வேண்டும்.. ஒருவிஷயம் சொல்ல  மறந்து விட்டேன்.    ஆச்சார்யாள்  பீட ஸ்தாபனம் பண்ண புறப்படும்போது அவர் பின்னால்  மஹேஸ்வரி  நானும் உன்னோடு பின்னாலேயே வருவேன். நீ திரும்பி  என்னைப்  பார்க்கக்கூடாது. அப்படிப்பார்த்தால் அந்த இடத்திலேயே  நின்றுவிடுவேன். ''  ந
''சரி அம்மா, நீ என் பின்னாலேயே  வருகிறாய் என்பதை  நான் திரும்பிப் பார்க்காமல் எப்படி தெரிந்து கொள்வது?''
''அதற்காக தான் என் கால் கொலுசு சப்தம் உன் காதுக்கு கேட்டுக்கொண்டே இருக்குமே'' என்றாள்  அம்பாள்.
து தான்  அம்பாள்  ஆச்சார்யாள்  ரெண்டுபேருக்குமான ஒப்பந்தம்.  

சிருங்கேரியில் ஆசார்யாள் துங்கபத்ரா நதிக்கரையில் போய்க்கொண்டிருந்த்தபோது  இந்த பாம்பு தவளை அதிசயத்தை பார்த்தவுடன்   அவருக்கு ஒரு சந்தேகம்.  ஏன் கொலுசு சப்தம் கேட்கவில்லை?   ஆற்றங்கரை வரும் வரை கேட்டதே?   திரும்பி பார்த்தார்.  சட்டென்று 'ஜல் ஜல்' கொலுசு சப்தமும்  நின்றது. 
'அடடா என்ன ஆச்சு?'  துங்கபத்ரா ஆற்றின் மணலில்  அவர் பின்னாலேயே நடந்து வந்துகொண்டிருந்த அம்பாளின் பாதம் மணலில் ஆழமாக   புதைந்து, புதைந்து அவள் நடந்து வந்ததால்  கொலுசு  ஓசை எழுப்பவில்லை.. ஆச்சாரியாள்  திரும்பிப் பார்த்ததால்  ஒப்பந்தப்படி  அம்பாள் அங்கேயே  சிலையாக நின்றுவிட்டாள்.
'எல்லாம் நல்லதற்கே. நாம் நினைத்ததற்கே அவளுடைய நிபந்தனையும் சாதகமாயிடுத்து!' என்று ஆசார்யாள் சந்தோஷித்து அங்கேயே சாரதாம்பாளை பீடப் பிரதிஷ்டை பண்ணி அமர்த்திவிட்டார்.
அந்த இடம் அவருக்கு ரொம்பப் பிடித்துவிட்டதால் அங்கேயே மடம் ஸ்தாபித்து பல காலம் வாசம் பண்ணி அவளை உபாசித்துக்கொண்டிருந்தார். புத்தகங்கள் எல்லாம் முதல் பதினாறு வயசில் எழுதி முடித்த ஆசார்யாள், அப்புறம் இரண்டாம் பதினாறு வயசில்தான் - பதினாறே வருஷத்தில்தான் - தேசம் முழுக்க சஞ்சாரம் செய்து, அநேக காரியங்கள் பண்ணினது. 

சிருங்கேரி மடத்துக்குத் தனி விசேஷம் என்ன தெரியுமா?   மற்ற மடங்கள் ஆசார்யாள் உத்தேசித்து ஸ்தாபனம் பண்ணிது.   வித்யாதி தேவதை  சாரதாம்பாளே சிருங்கேரியில்  சாரதா பீடம் ஏற்படும்படியாகப் பண்ணிவிட்டாள்.  சிருங்கேரிக்கு பிறகு  காஞ்சீபுரம்.   அங்கே  காமகோடி  பீடத்தில் காமாட்சியாக குடி கொண்டாள் . முக்கியமான இந்த ரெண்டை மட்டுமே  சொன்னேன்.. இன்னும் எத்தனையோ...

sivan jaykay

unread,
Sep 17, 2023, 8:02:20 PM9/17/23
to amrith...@googlegroups.com
திருமங்கை ஆழ்வார் கொடுத்த ஒரு பரிசு.  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

சின்ன வயதில் அப்பா  அடிக்கடி  பாடுவதைக்  கேட்டிருக்கிறேன். அப்புறம்  சில  பெருமாள் கோவில்களில் சுவற்றில் அதைப்  படித்திருக்கிறேன்... அற்புதமான அந்த பாசுரம்  என் மனதில் பதிந்து விட்டது.என்ன ஆழமான பக்தி பூர்வமான எளிமையாக  புரியும் பாடல். 
  
'குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்  படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான்  கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமமே''

இதைப் பாடிய  ஆழ்வார்  திருமங்கை ஆழ்வாராம் . அருமையான  கெட்டிக்கார  ஆழ்வார். நிறைய  பாசுரங்கள் திவ்யப்ரபந்தத்தில் பாடியவர்  இவர் தான்.  எண்ணற்ற  பெருமாள் கோவில்கள் சென்றவர். அவர் பார்க்காத  பெருமாள் கோவில்கள் நிறைய இருக்கிறது. அவர் ஏன் அந்தக் கோவில்களுக்கெள்ளாம்  போகவில்லை? முக்கியமான  காரணம், அத்தனை கோவில்களும் அவர் காலத்துக்கு அப்புறம் யார் யாராலோ  கட்டப்பட்டவை.
  
நாராயணன் என்றால் என்ன அர்த்தம்?  உலகத்தில் உள்ள  அனைத்து தாவர ஜங்கம , உயிரினங்களையும்  தனக்குள் கொண்டவன். அவனையும்  தாங்குவதையும் தன்னில் கொண்டவன் திரு நாராயணன்.
நாராயணா  என்று ஓரே ஒரு தடவை சொன்னாலே போதும். 'கப்' பென்று நம்மை அப்படியே கருடனை விட்டு தூக்கிக் கொண்டு போய் வைகுண்டத்தில் இறக்கி விடுபவன்.   அது நாம்  இந்த பூலோகத்தை விட்டு சென்றபிறகு நடப்பதல்லவா? இருக்கும்போது  என்ன பலன்?  ஆஹா  அருமையான  மென்மையான எல்லோரும் புகழும்   நல்ல  குலம்  நமக்கு அமையும்.  இக வாழ்வுக்கு தேவையான  செல்வத்தை அவன் மனைவி லக்ஷ்மி  தருவாள்.  ஒரு கஷ்டமும் வராது.  ஏற்கனவே சொல்லிவிட்டேன்  பரமபதம்  பர்மனெண்டாக காரண்டீ.  அம்மாவை விட  பெருமாள் நம்மை நன்றாக ஆசையாக பாசமாக பார்த்துக்  கொள்வான்.  நீ  மறக்காமல் செய்யவேண்டிய ஒரே  வேலை. ''நாராயணா'' என்று ஒருநாளைக்கு ஒரு தடவையாவது சொல்வது தான். நிறைய குழந்தைகளுக்கு நாராயணன் என்ற பெயர் அதற்கு தான் வைணவர்கள் வைப்பார்கள்.  நாராயணா  என்று  விஷமம் பண்ணும்போது  பிள்ளையைக் கூப்பிட்டு முதுகில் நாலு சாத்து  சாத்த   கத்தினாலும் கூட , நிஜமான நாராயணன்  நம்மை வைகுண்டத்துக்கு காசில்லாமலேயே  கருடன் மேல் அமர்த்தி கூட்டிச்செல்வான். உடனே இந்த  பாசுரத்தை மனப்பாடம் பண்ணிவிட்டு வீட்டில் மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

sivan jaykay

unread,
Sep 17, 2023, 8:02:33 PM9/17/23
to amrith...@googlegroups.com
லிங்காஷ்டகம்  -    நங்கநல்லூர்  J K  SIVAN
ஆதி சங்கரர்
                                   
லிங்காஷ்டகம்  1    
சிவா, உன்னை மறந்தவர்  எவர் வாழ்ந்தார்?  உன்னை நினைத்தவர் எவர் தாழ்ந்தார்? உலகமறிந்த உண்மை இது. ஆதி அந்தமில்லாத  முழு முதற் கடவுளே, மகாதேவா,  அடி முடி  காண முடியாத  விஸ்வ பிரமமே உன்னை ஸ்லோகங்களில்  பாடித்  தொழுதவர்கள்  எண்ணற்றவர்கள்.. எண்ணிப்பார்க்கக் கூட  முடியாத  அளவுக்கு உன்  பக்தர்கள்  உலகெங்கும்  உள்ளார்கள்.  ஆதி சங்கரரின் அற்புதமான ஒரு  எட்டு ஸ்லோகம்  உன்னை பற்றி அவர் பாடியது  என்னை  ஈர்த்தது.  அதைப்பற்றி கொஞ்சம் சொல்ல  ரொம்ப  ஆவல்.  

மஹாலிங்கமே ,  உன்னை  எட்டு  சுலோகங்களில்  பாடியதற்கு பெயர்  லிங்காஷ்டகம்.  எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் கேட்கக் கேட்க  அலுக்கவில்லை.  பாடப் பாட  நா மணக்கிறதே  தவிர வெறுக்க வில்லையே. என்ன  ரகசியம்  இதில்?

சிவனை விஷ்ணுவும்  பிரம்மாவும்  வணங்குகிறார்கள். விஷ்ணுவை  சிவனும் பிரம்மாவும்  கோடி கோடி  தேவர்களும் வணங்குகிறார்கள். இவ்வாறு  ஒருவரை  ஒருவர் வணங்குவதால்  யாரும் யாருக்கும் இளைத்தவர்களோ  சளைத்தவர்களோ இல்லை என்றும் பொருள் கொண்டாலும்,  மகாதேவா , நீ  ஒன்றே சாஸ்வதம், வேண்டுவோர்  வேண்டிய வண்ணம்  பலராக, பலவாக, நிறைவாகத் தோன்றுகிறாய்  என்று  புரிந்து நமஸ்காரம் பண்ணுகிறேனே .நீ  துக்க நாசனம்  பல பிறவிகளில் சேர்த்து வைத்துக்கொண்ட , சர்வ  பாப நாசனம் பண்ணுபவனல்லவா. ஆத்ம  ஒளி தரும்  ஜாஜ்வல்ய லிங்கமல்லவா.  லிங்கமென்றாலே   எனக்கு  என்ன  தோன்றுகிறது? .  அருவத்தை  ஏதோ உருத்தெரியாத  ஸ்வரூபமாகக் காட்டுவது என்று. ஆனால்  பார்க்கும்போதே மனத்தை காந்தமாக  ஈர்க்கிறதே. இனம்  புரியாத பக்தி, பரவசம், உள்ளே உலவுகிறதைப்  புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் வெளியே சொல்லத்தெரியவில்லையே.பொங்கி வரும்  நன்றிபபெருக்கால்  நான் சொல்ல முடிந்தது ''சிவ சிவா''  ஒன்றே தான். இது தான்  என் ஜபம்.  இதைச் சொன்னாலேயே கேட்டதெல்லாம் கொடுப்பவனாச்ச்சே நீ.  எத்தனை  ராக்ஷசர்களும் கொடியவர்களும்  கூட  உன்னை வேண்டினதும்  அருள் புரிந்தவனல்லவா.  .

லிங்காஷ்டகம் மொத்தத்தில் சின்ன சின்னதாக  ஒரு  எட்டு  குட்டி  ஸ்லோகங்கள்.  அவற்றுள்  அடக்கம் இந்த  பிரபஞ்சமே என்கிற மாதிரி  எளிதில்  புரிகிற  வார்த்தைகள்.  இதை படித்தோ புரிந்து கொள்ளவோ  ஸமஸ்க்ரிதம்  விசேஷமாக  தெரியவேண்டியதே இல்லை.  அன்றாட  வாழ்க்கையில்  காதில்  விழும்  சில  வடமொழிச் சொற்கள் புரிந்தால்  அதுவே  போதும்.

எட்டு  அஷ்டகத்தில்  முதல்  ரெண்டு ஸ்லோகம்  கீழே  தருகிறேன். மற்றவற்றை அடுத்தடுத்த  பதிவுகளில் அறியலாம்.
 
 ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गं निर्मलभासितशोभितलिङ्गम् ।
जन्मजदुःखविनाशकलिङ्गं तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥1॥

பிரம்ம முராரி சுரார்ச்சித  லிங்கம் நிர்மல பாசித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ  லிங்கம்

 brahma muraari suraarchitha lingam  nirmala bhaasita shobhita lingam
 janmaja duhkha vinaashaka lingam  tatpranamaami sadaasiva lingam    ( 1 )

பிரம்மனும்  விஷ்ணுவும்  தேவர்களும்  மனிதர்களும்  வணங்குமே  லிங்கமே,எண்ணுவோர்  எண்ணமாய்  விகசிக்கும்  நிம்ர்மலமான  ச்வயம்ப்ரகாசமான  லிங்கமே   பிறப்பறுக்கும்  பிஞ்ஞகா   ஜரை  மூப்பு துக்கம்  இவற்றின்  துன்பத்திலிருந்தெல்லாம்  விடுவிக்கும்  விஸ்வநாதா நினைத்தாலே  இனிக்கும்  நிர்மலா  சதாசிவ லிங்கமே     -- உனக்கு  நமஸ்காரம்  

देवमुनिप्रवरार्चितलिङ्गं कामदहं करुणाकरलिङ्गम् ।
रावणदर्पविनाशनलिङ्गं तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥२॥

Devamuni Pravaraarchita Lingam Kaama Dahana Karunaakara Lingam
Ravana Darpa Vinaasaha Lingam Tatpranamaami Sadaashiva Lingam (2)


தேவமுனி ப்ரவரார்சித லிங்கம்   காமதஹன கருணாகர லிங்கம் |
ராவண தர்ப வினாஶன லிங்கம்   தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 2 ||

குளிர்ந்த பனிமலை.  எங்கும்  நிசப்தம்  காற்றின் அசைவைத்தவிர.  குளிரையும்  பணியில் நனைந்து  உடலைத் துளைக்கும் காற்றையும்  லட்சியம் செய்யாத  பொன்னிற மேனி.  மலையின் மேல்  ஒரு  சிலையாக  அமர்ந்து மனமே  பிரபஞ்சமாக   பிரபஞ்சமே நெஞ்சாக  வியாபித்த ஏகாந்த  ஒரு நிலையில்  தியானம்.   முகத்தில்  சாந்தம்.  அக்னிஸ்வரூபம் ஒரு  பனிமலை மேல்  உட்கார்ந்திருந்தால், அதையே  தெற்கே அண்ணாமலை  தீபம் என்று வணங்குகிறோமோ?  செஞ்சடையான ஜடாமுடியே  கிரீடம். அதன் மேல்  ஒரு  ஓரத்தில்  அழகாக வளைந்த மூன்றாம்  பிறைச்சந்திரன்.  மறுபுறம் அதற்கேற்றாற்போல் வெள்ளியை உருக்கி வார்த்தது போல்  ஒரு  பய பக்தியோடு  சிரசிலிருந்து பதவிசாக  வழியும்  கங்கை புண்ணிய நதி. கங்காதரன். கழுத்தை அணைத்தாற்போல இது வரை  யாரும்  அணியாத  ஒரு ஆபரணம்.  நாகாபரணம்.  அதை ஒட்டி ஜடாமுடியில்  பிணைத்த  அதே போன்ற  ருத்ராக்ஷ மணி மாலை. 

ஆகாசத்திலிருந்து  பூமியை  இணைப்பது போன்ற  பால்  வெண்ணீறு  பூசிய  பரந்த நெற்றி கொண்ட  இந்த  திரு உருவத்தின் இடையில்  புலித்தோல்.  நெற்றி நடுவில் மூடிய  முக்கண்.  திறந்தால்  பனி மலையே அக்னியால்  அழிந்துவிடும் அல்லவா?. ஒரு கையில்  சக்திவாய்ந்த  ஒரு  திரிசூலம்.  பனி ச்சிகரத்துக்கு  அழகூட்டும் அமர்ந்த திருக்கோலத்தில் ஒரு கால்  மடித்து ஒரு கால்  கீழே. இன்னும்  வர்ணித்துக்கொண்டே  போகலாமே  உன்  திருவுருவை.  

ஹே,    மகாதேவா, உன்  பெயரே  விளக்குகிறதே,   நீ  தேவர்களுக்கெல்லாம் தலைவன், முதல்வன்,  பெரியவர் களுக்குள்ளேயே ஒருவரை நாமெல்லாம்  மகா பெரியவா  என்று  போற்றி வணங்கு கிறோமே அதே போல்   தேவர்களுக்குள்ளேயே  மிகப்  பெரிய  மகத்தான  பூஜிக்கத் தகுந்த  தேவனே,  நீ  மகா தேவன் என்பதால்  தான் தேவர்களும்  முனீச்வரர்களும்  உன்னை வணங்குகிறார்கள். நீ  யார்?. தவத்தில் முதிர்ந்த, சிவந்த, பரம சிவன். உனது  தவத்தைக் கலைக்க முனைந்த அந்த  மன்மதனை நீ  ஒன்றும்  செய்யவில்லை. உன்னை  காமத்தால் வெற்றி  கொள்ளவந்த மன்மதன் மேல் நெற்றிக்கண் பார்வை சற்றே பட்டதும் எரிந்து போனான்.

அசுரனாக  இருந்தாலும்  உன் மீது  அளவில்லா பக்தி கொண்டவன் ராவணன்.  பத்து  தலை  இருந்தாலும் அவனுக்கு அது அத்தனை யிலும் அகம்பாவம் ''தலைக்கேறி'' விட்டதால்  உன்னையே  அசைக்கப்   பார்த்தான்.  பலசாலி யாயிற்றே. உன்னிடமே  வரம் பெற்றவன் அல்லவா? கயிலாயத்தையே  கையால்  தூக்க  முயற்சித்த  அவன்  கர்வம், அவன்  தற்பெருமை அனைத்தையும்  நீ உன்  கால் கட்டைவிரலில்  ஒரு ''அழுத்து'' அழுத்தி போக்கினவனாயிற்றே   மஹா தேவா, சதாசிவா, உன்னை  நெஞ்சிலிருத்தி நாவினிக்க மனம் மணக்க  போற்றுகிறேன்.  உன்னை ஒன்றும்  கேட்க மாட்டேன். எனக்கு  என்ன வேண்டும்  என்று  என்னைக்காட்டிலும் நீ  யல்லவோ  நன்றாக  உணர்ந்தவன்.ன வேண்டும் என்று என்னைக்காட்டிலும் நீயல்லவோ உணர்ந்தவன்.

ஒரு தடவை மதுரை போயிருந்தேன். பல வருஷங்களுக்கு முன்பு.  மதுரையில்  மீனாட்சியம்மன்  கோவில்  கிழக்கு  வாசலில்  எதிரே  ஒரு  அழகிய மண்டபம் உள்ளது.  அதில்  சிற்பத்தை  தேடுவோர்கள்  அங்கிருக்கும்  தகரம், இரும்பு, பிளாஸ்டிக், தட்டுமுட்டு சாமான்களை மெதுவாக  கண்களால்  நகற்றி நாயக்கர் மன்னர்கள்  நமக்கு சொத்தாக  விட்டுப்போன அருமையான  கற் தூண்  சிற்பங்களை பார்க்க  முயற்சிக்கலாம்.   முயற்சி வீண் போகாது.  எனக்கு  போகவில்லை.  ஒரு  ராவணன் கிடைத்தான். அவனை இணைத்திருக்கிறேன்.   அற்புதமான  ராவணன் கைலாய மலையை பார்வதி பரமேஸ்வரர்களோடு தூங்குகிறான். அது அவனுக்கு கனமாக தோன்றவில்லை.  இப்போது வியாபாரிகள், பிளாஸ்டிக், அலுமினியம், தகரம், என்று பல உலோக தட்டு முட்டு சாமான்களை அவன் மேல் ஒட்டி வைத்து துன்புறுத்துவது அவனுக்கு மட்டும் அல்ல பார்த்த எனக்கும் பிடிக்க வில்லை. என்ன செய்வது. கவனிக்க வேண்டியவர்கள் கண்ணை மூடிக்கொண்டால் என்ன பண்ணமுடியும். காசு கண்ணை மறைக்கிறது...அவர்களுக்கு, அவர்களால் ராவணன் நமக்கு மறைந்து போகிறான். 
https://youiandkrishna.org/16/09/2023/lingashtakam-j-k-sivan/
 

sivan jaykay

unread,
Sep 17, 2023, 8:02:33 PM9/17/23
to amrith...@googlegroups.com
மயிலிறகு சாக்ஷியா? -  நங்கநல்லூர்  J K SIVAN

பச்சை புடைவை  கோபியின் வீட்டில் கொள்ளையடித்த வெண்ணையை யமுனை ஆற்றங்கரையில் எல்லோரும்  விழுங்கி விட்டு   கிருஷ்ணனும்   நண்பர்களும் ஆற்றில் குதித்து வெகுநேரம் விளையாடி விட்டு கரையேறி னார்கள். 

கிருஷ்ணன் வீட்டுக்கு திரும்பினான்.   கிருஷ்ணன் பார்வை  எங்கு செல்கிறது என்று மற்ற பையன்களும்  கவனிக்கத் தவறவில்லை. 

 வீடு திறந்து கிடந்ததையும்  மேலே  உறியில் இருந்த வெண்ணெய் பானைகள் உடைந்து கிடப்பதையும், அத்தனை வெண்ணையும் பறிபோனதையும் பார்த்து பதைத்த  கோபியின்  
 வீட்டில் என்ன நடக்கிறது என்றும் சேதி வந்தது.

வெளியே ஒளிந்துகொண்டு அந்த கோபி வீட்டில் நுழைந்து என்ன செயகிறாள் என்று ஒரு சில பையன்கள் நோட்டம் விட்டனர். அவள் கோபமாக தனக்குத்  தானே பேசிக்கொண்டாள். ''கிருஷ் ணன் கிருஷ்ணன்'' என்ற பெயர் அவள் கோபமாக பேசும்போது வெளிப்பட்டது. சற்று நேரத்தில் வெளியே வந்தாள் . அவள் கையில் ஒரு மயிலிறகு.  ஒருவன் ஓடிப்போய் கிருஷ்ணனிடம் சொல்லிவிட்டான்.

''கிருஷ்ணா, நாம  வெண்ணெய்  இன்னிக்கு
 எடுத்தோமே அந்த வீட்டு  மாமி உங்க வீட்டுக்கு 
  கையில் ஒரு  மயிலிறகோடு வேகமாக  உடைஞ் ச  வெண்ணை சட்டைகளையும்  எடுத் துண்டு போயிருக்கா.  நிறைய கோபி மாமிகள்  உங்க  வீட்டுக்குள்ளே  உட்கார்ந்து உங்கம்மா கிட்டே  என்னமோ பேசறாங்கடா''
 
''ஆமாம்  அந்த பச்சை புடவை கோபி வீட்டிலே நாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே  வெண்ணை எடுத்தோமே அந்த மாமி தான் ரொம்ப கோபமா உரக்க பேசறா. உங்கம்மா பதில் சொல்றது காதிலே  கேட்டுதுடா ''

''உங்கம்மா யசோதை , ''அந்த பயல் வரட்டும்  விசாரிக்கிறேன். இன்னிக்கு இருக்கு  அவனுக்கு  சரியான பூஜை''  நீ கவலைப்படாம  போ. இனிமே  அவனை வெளியிலேயே விடமாட்டேன். நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்'' என்று சொல்றாடா.''
''கிருஷ்ணா, நீ வகையாக மாட்டிக்கொண்டாய். 
அது சரி,   கிருஷ்ணா,   உன் தலையில் நீ செருகி வைத்திருப்பாயே அந்த மயிலிறகு எங்கே காணோம் ?'' என்று கேட்டான். கிருஷ்ணன் தனது தலையை தொட்டுப் பார்த்துக் கொண்டவன் சிரித்தான்.
''ஓஹோ என் தலையிலிருந்து தான் நான் உறியை காலி பண்ணிவிட்டு கீழே குதிக்கும்
போது அங்கே விழுந்திருக்கிறது. நான்  தான் அவள்  வீட்டுக்கு வந்திருந்தேன் என்பதற்கு சாக்ஷி என்று சொல்ல  அந்த  மயிலிறகை எடுத்துண்டு  என் வீட்டுக்கு  போனாள்  போல்  இருக்கிறது ''என்றான் கிருஷ்ணன்.

''கிருஷ்ணா உன்னை எப்படி காப்பாற்றுவது ன்னு எங்களுக்கு தெரியலடா. நாம பண்ணது தப்பு தானேடா.  உன்னோடும்  நாங்களும் 
 அங்கே சென்று வெண்ணெய் சட்டியை உடைத்தது. வெண்ணெய் எடுத்து தின்றது எல்லாம் வெளியே வரப்போகிறது. இப்போ  என்ன பண்றது?' என்று கவலைப்பட்டான் கிருஷ்ணனின் பால்ய  நண்பன் விஜயாக்ஷன்.

ஒரு கணம் யோசித்த கிருஷ்ணன் சுற்று முற்றும் பார்த்தான் . வசந்தகாலத்தின் எழிலில் மரங்களும் கொடிகளும் செடிகளும் பூத்து குலுங்குகின்றன. யமுனையில் கரை புரண்டு குளுமையான நீர் ஓடுகிறது.. . கிருஷ்ணன்  இடுப்பில் செருகி இருந்த புல்லாங்குழலை எடுத்து இதழ் ஓரம் கொண்டு போனான். கண நேரத்தில் இன்னிசை வெள்ளம் பெருகியது. மழை வரலாம் என்று அறிவிக்க கார்முகில் கூட்டம் மெல்ல மெல்ல கவிந்து வர அந்த பிரதே சத் தில் உள்ள மயில்களுக்கு கொண்டாட்டம். இந்த சூழ்நிலையில் தானாகவே தோகை விரித்தாடும்,   மயில்களை கண்ணனின் குழலோசையின் பதங்கள் சற்று அதிக சந்தோஷத்துடனேயே ஆட வைத்தது.

"என்னமாக வாசிக்கிறான் இந்த கிருஷ்ணன் பார்த்தாயா?" என்றது மயில் கூட்டத்தின் தலைவன் மயில் ராஜா தன் ராணியிடம்.

"நீ எப்போதும் தப்பாகவே தான் எதையும் செய்வாய், சொல்வாய்" என்றது மயில் ராணி.

" நான் என்ன தப்பாக சொல்லி விட்டேன்" என்று ஆட்டத்தை நிறுத்தி கேட்டது ராஜா மயில்.

" பின்னே என்ன, கிருஷ்ணன் குழல் ஓசையை பார்த்தாயா, என்கிறாயே. கேட்டாயா என்று தானே சொல்லணும்.

''ஓ, நீ அப்படி சொல்கிறாயா?? என்ன செய்வது சொல்; கிருஷ்ணனைப் பார்த்தால் எல்லாம் மறந்து விடுகிறதே. அப்பறம் எப்படி கேட்பது?"
உனக்கு எப்போதும் எங்கோ எதிலோ யார் மேலோ தான் ஞாபகம் என்று என்று ராணி மயில் வழக்கம் போல் சொல்லவே
 "ஆமாம் நீ எப்பவும் எதிலும் சரியே" என்று பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தது ஆண் மயில்.

"இவ்வளவு அழகாக இன்னிசை பொழிந்த கண்ணனுக்கு நாம் என்ன பரிசு கொடுப்பது?" என்று கேட்டது தலைவன். எதாவது தப்பாக சொல்லி மாட்டிக் கொள்வதை விட ராணியையே யோசிக்க வைக்கலாமே என்று சாமர்த்தியமாக கேட்டது.
"நீ தான் நம் கூட்டத்திலேயே அழகன், உன்னிடம் என்ன அழகான பொருளோ அதையே அவனுக்கு கொடேன்" என்றது ராணி மயில்.

யோசித்து பார்த்த ராஜா மயில் நடமாடிக் கொண்டே கிருஷ்ணனை அணுகியது. அவன் மடியில் தன் தலையை வைத்து கொண்டது. குழலை வாயிலிருந்து எடுத்து விட்டு கிருஷ்ணன் கேட்டான்.
"அழகிய மயிலே எதற்கு என்னிடம் வந்தாய்.
சொல்."
"கிருஷ்ணா, எங்களை உன் கீதத்தால் பரவசப் படுத்திய, ஆடவைத்த நீ எல்லோரையும் பரவசப் படுத்த வேண்டும் என்பதற்காக உனக்கு நாங்கள் மயில்கள் எல்லாரும் சேர்ந்து எங்களால் இயன்ற ஒரு பரிசு தருகிறோம் ஏற்றுக் கொள்வாயா சொல் ?"
"மிக சந்தோஷமாக பெற்றுகொள்கிறேன் மயில் ராஜா "
" இந்தா" என்று அந்த அழகு ஆண் மயில் தன்னி டத்தில் இருந்த ஒரு அழகிய இறகை கண்ண னுக்கு பரிசாக கொடுத்து " என்னிடம் பெருமைப் பட இருப்பது இது ஒன்றுதான்; இதை எப்போதும் உன்னிடம் வைத்துக் கொள்வாயா?" என்றது
" அப்படியே அழகு மயிலே, இந்த உன் அழகிய மயில் இறகு இந்த கணம் முதல் என்றும் என் தலையில் செருகப்பட்டு இருக்கும் திருப்தியா" என்றான் கிருஷ்ணன்.

எல்லோரும் வீடு திரும்பினார்கள். கிருஷ்ணன்  வீடு திரும்பியபோது  கோபிகள் போய் விட்டார் கள்.  யாரும் இல்லை  என்று அவன்  நினைத்தது தப்பு.  
''அம்மா.. அம்மா'' என்று தேனொழுக குரல் கொடுத்தான் கிருஷ்ணன். யசோதை வெளியே வந்தாள் . அவளோடு வெண்ணெய் பறி கொடுத் த  பச்சை புடவை கோபியும் இருந்தாள் .

இருவர் கண்களும் கண்ணனின் முகத்தை பார்க்க வில்லை. அவன் தலையில் செருகி இருந்த மயிலிறகை மட்டுமே பார்த்தன.

''கண்ணன் தலையில் மயிலிறகை பார்த்தாயா.. இருக்கிறதா இல்லையா ?'' என்றாள் யசோதை.
''ஆமாம் ..
அவன் ஒரு மயிலிறகுக்கு மேல் செருகிக் கொள்வ தில்லையே...அது தெரியுமல்லவா உனக்கு ?''.. யசோதை கோபியிடம் கேட்டாள் .

''என்ன அம்மா என் தலை மயிலிறகு பற்றி பேச்சு. நீ தானே இன்று காலை இதை வழக்கம்போல் செருகி விட்டாய்.''

''அப்போது.... நான் பார்த்த என் வீட்டில் இருந்த மயிலிறகு....பச்சை புடவை கோபி  தயங்கினாள்.

''காற்றில் எங்காவது பறந்து வந்திருக்கும்... உன் வீட்டைச் சுற்றி மயில்கள் நடமாட்டம் அதிக மாச்சே.'' என்றாள் யசோதை. பச்சை புடவை ஒன்றும் புரியாமல் தனக்குத் தானே ஏதோ சொல் லிக்கொண்டு வேகமாக வீட்டுக்கு புறப்பட்டாள்''
கேட்க வேண்டிய கேள்வி எதுவும் யசோதை கேட்கவில்லை. கண்ணனை வாரி அணைத்துக் கொண்டாள் .
''கிருஷ்ணா, எங்கேடா இத்தனை நேரம் போயிருந்தே ''
''அம்மா  நான்  யாரோடும் பேசவில்லை, யார் வீட்டுக்கும் போகவில்லை மா.  பேசாம, நண்பர் களோடு   யமுனைக்கரையில்  புல்லாங்குழல் மட்டும் வாசித்துக்கொண்டு  இருந்தேன்..  மான்கள் பறவைகள்,  ராதை, அவள் தோழிகள் எல்லோரும் விளையாடிக்கொண்டிருந்தோம். பசிக்கிறது மா. ஏதாவது சாப்பிடக் குடுக்கிறீயா?''

கபட நாடக சூத்ரதாரிக்கு உணவு கொண்டுவர  யசோதை உள்ளே  ஓடினாள்.  https://youiandkrishna.org/16/09/2023/krishna-j-k-sivan/

Jambunathan Iyer

unread,
Sep 17, 2023, 8:02:33 PM9/17/23
to Rajaram Krishnamurthi, ARR, YM - markandeya101091, venkat giri, Yeddanapudi Markandeyulu, SRIRAMAJAYAM, Srinivasan Sridharan, gopala krishnan, Chittanandam V R, N. Sekar

For the path of *jñāna-yoga, *Jagadguru Shankaracharya* states the *eligibility*:

vivekino viraktasya śhamādigua śhalina

mukukhoraiva hi brahma jijñāsā yogyatā matā

“Only those who possess the *four qualifications—discrimination, detachment, disciplined mind and senses, and a deep yearning for liberation*—are eligible for practicing the path of jñāna-yoga. The point being any person who head these qualities willm perform the rituals with sincerity ann's bhakti.

In the path of *karma kāṇḍa (Vedic rituals)*, there are six conditions to be met:

deśhe kāle upāyena dravya śhraddhā samanvitam

pātre pradīyate yattat sakala dharma lakhaam

“Six criteria must be fulfilled for the fruition of ritualistic activities—*the proper place, the correct time, the exact procedure and correct enunciation of mantras, utilization of pure materials, a qualified Brahmin who performs the yajña, and staunch faith in its efficacy.*”

We can see this for ourselves. Whenever we perform any ritual with bhakti and sincerity we feel a huge sense of gratification and we also feel blessed.

In the path of *ahāg-yoga* as well, there are strict regulations:

śhuchau deśhe pratihhāpya   (Bhagavatam 3.28.8)

*“Perform haha-yog in a pure place, while seated immovably in the proper asana.”*

In contrast, *bhakti-yoga* is such that it can be done by anyone, at any time, place, and circumstance, and with any material.

na deśha niyamastasmin na kāla niyamasthathā   (Padma Purā)

This verse states that God is not concerned with the time or place where we perform devotion.  He only sees the love in our heart.  *All souls are the children of God, and He is willing to accept everyone with open arms, provided they come to Him with genuine love.”* This only requires our full and complete submission to the Lord in all respects.

N Jambunathan Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004

" What you get by achieving your goals is not as important as what you become by achieving your goals. If you want to live a happy life, tie it to a goal, not to people or things "


sivan jaykay

unread,
Sep 17, 2023, 8:03:02 PM9/17/23
to amrith...@googlegroups.com
லிங்காஷ்டகம்  -    நங்கநல்லூர்  J K  SIVAN
ஆதி சங்கரர்
                                   
லிங்காஷ்டகம்  3-4    

பரமேஸ்வரா, உன் பெயரை எனக்கு  ''சிவன்''  என்று வைத்த  என் பெற்றோருக்கு   எப்படி நன்றிக்கடன்  செலுத்துவேன்?. என்னைச்  சிவா  என்று கூப்பிடுபவர்கள் எல்லோரும்  அதன் மூலம்  உன்னை மறவாதிருப்பதின் மூலம்  அவர்களுக்கு பெருமை சேர்ப்பதே  என் கடன்.  'நின்  கடன்  அடியேனையும் தாங்குதல்  என் கடன்  பணி  செய்து கிடப்பதே\.   அசைவு  ஓயாக்கடலில்  ஆனந்தமாக அசைவற்று  நின்று காட்சியளிக்கும்  வரமே,  உனக்கு கோடி நமஸ்காரங்கள்.  

सर्वसुगन्धिसुलेपितलिङ्गं बुद्धिविवर्धनकारणलिङ्गम् ।
सिद्धसुरासुरवन्दितलिङ्गं तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥३॥

Sarva Sugandha Sulepitha Lingam Buddhi Vivardhana Kaarana Lingam
Siddha Suraasura Vanditha Lingam Tat Pranamaami Sadaa Shiva Lingam

ஸர்வ ஸுகம்த ஸுலேபித லிங்கம்   புத்தி விவர்தன காரண லிங்கம் |
ஸித்த ஸுராஸுர வம்தித லிங்கம்  தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 3 |

அறியாமலா, தெரியாமலா,  புரியாமலா,  எண்ணற்ற  மஹனீயர்கள் ,  மஹா பெரியவர்கள், புண்ய புருஷர்கள் எல்லாம் உன்  சிவலிங்க ஸ்வரூபத்தை  ஆராதித்தார்கள்.  நமக்குத் தெரியாதவற்றை நாம்  மனதிலிருந்து அகற்றி விடுகிறோம்.   விலையில்லா  மாணிக்கங்களை  மதிப்பு தெரியாமல்  வீசி எறிகிறோம்.  ஒரு  ரஷ்ய விஞ்ஞானியை நமது  சிவலிங்கம்  ஈர்த்தது.  டாக்டர் வ்ளாடிமீர்  ஆராய்ச்சி பண்ணினார்.  என்ன கண்டுபிடித்தார்?  அதையே  இன்று  அலசுவோம்.

''லிங்கம்  என்ற உருவம் , சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்ற கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருக்கிறது.   ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும்  ஒவ்வொரு  அர்த்தம்  தருகிறது.  இது ரொம்ப  ஆச்சர்யமான உண்மை''  என்கிறார்  ரஷ்யர்  விளாடிமிர். 

 குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க ஸ்வரூபத்தில்  விலாவாரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்பு தரும், காற்று தரும்,  கேட்டதை  எல்லாம் தரும் என  நம்புகிறேன்''  என்கிறார் ரஷ்யர் விளாடிமிர். 

எங்கோ ஒரு  ரஷ்யர்  உன்னை  அறிந்து கொண்ட அளவு,  மஹா தேவா,  உன்னை  நாங்கள்  இன்னும்  முழுமையாக  அறியவில்லையோ ? அதற்கு காரணம்  அவர் அறியாமலேயே  அவரது பூர்வ ஜென்ம புண்யமோ!

இன்னும் என்ன சொல்கிறார்  டாக்டர் விளாடிமீர் :
'' இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும்  லிங்க ஸ்வரூபங்கள் தவிர பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாக  வெளிப்படுகிறது .ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்  பிணைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறது .'  இந்த  ரஷ்யர் ரொம்பவே  தவம் செய்வது போல  உன்னை நினைத்து  ஆராய்ச்சி பண்ணி இருக்கிறார்.  கோட்டு போட்டுக்கொண்ட ரிஷி.

மஹா தேவா,  உன்னை  இந்த  லிங்க  ஸ்வரூபத்தில்  பஞ்ச பூதங்கள் சதா சர்வ காலமும்  ஆராதிக் கின்றன என்பதை  நமது  முன்னோர்கள் சொன்னதை  காற்றில் விட்ட  பெருமைக்குரியவர்கள்  நாங்கள். அதனால் தான்  ரஷ்ய விஞ்ஞானி  வ்ளாடிமீர்  சொல்வதைக்  கேட்டு ஆச்சர்யப்படுகிறோம்.  எங்களை  எங்கள்  முன்னோர் பாதைக்கே மீண்டும்  கொண்டு  செல்கிறாயா ? .

நமது  தேகமே பஞ்ச பூதங்களினால்  தான் உருவானது. திரும்பி  கடைசியில்  அவற்றிலேயே  நாம்  கரைகிறோம், மீண்டும் அவ்வாறே  தோன்றுகிறோம்  --புனரபி ஜனனம் புனரபி மரணம்.   இதெல்லாம்  எத்தனை முறை  ஸ்லோகத் திலும்,  பேச்சிலும்,  படிக்கிறோம், கேட்கிறோம்.  ஆனால்  ஒரு கணமாவது அதைப் பற்றி கொஞ்சமாவது  சிந்திக்கிறோமா?  அது தானே இல்லை.    இதெல்லாம் சதா நமது உணர்வில்  நிற்கிறதா? 

 ''மனித சரீரத்திலும்  பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன'' என்று   ரஷ்ய விஞ்ஞானி கண்டுபிடித்துச்  சொல்லும்போது  கை  தட்டுகிறேனே ''  ஏன்,?   போடா  ரஷ்யா, இதெல்லாம் ஏற்கனவே  காலம்  காலமாக  எங்க  ரிஷிகள், முனிவர்கள்,  ஆச்சார்யர்கள்  சொன்னவை ஏராளம் ஏராளமாக  இருக்கு  என்று ஏன்  நாம்  ஒருவராவது சொல்வதில்லை?   எத்தனை   அற்புத அதிசய  விஷயங்கள் நம்மிடம்  புதையலாக இருந்தும்  அவற்றை  லட்சியம்  செய்யாதிருக்கிறோமே  எதற்கு? . --  ஒவ்வொருவரும்  இதை தனக்குத் தானே   கேட்டுக்கொள்வோமா?.
நாம்  எல்லோரும்  பஞ்ச பூதங்கள் வழிபடும், போற்றும்,   லிங்கஸ்வரூபங்கள்  தான்.  ஏனென்றால்  நம்மில்  அந்த  சர்வேஸ்வரன் உள்ளான்.  ' அஹம்  ப்ரம்மாஸ்மி'  ஒவ்வொருவரும்  ஸ்வயம்பு லிங்கம்  தான்.   ரஷ்ய விஞ்ஞானி  வ்ளாடிமீர்  இன்னும் சொல்வதை  கேட்போம்.

'' சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்னி,  மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள்''  

 மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார்  ரஷ்ய விஞ்ஞானி.. ஸ்வயம்பு  லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் ''என்கிறார்   டாக்டர்  வ்ளாடிமீர் . அவனன்றி ஓர்  அணுவும் அசையாது.

எங்கும்  எதிலும்  மாறி மாறி  தோன்றுவதே  இந்த மாயா லோகம்,  மனிதக் கூட்டம் .  இந்த  மாறுதல்  தான்  என்றும்   மாறாத  ஒன்று..

'' புராணவழியாக  நிறைய நாம்   அறிந்து கொள்ளும் '' சிவம் ''தனித்தன்மை  உடையது.  புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து  இது முக்கியமான  மூன்றாவது ஸ்தானத்தில் உள்ளது.  ஏ, மனிதர்களே, முடிந்தால் என்னைப் புரிந்துகொள்ளுங்கள் '' என்று  அது  சவால்  விடுகிறது  ''  என்கிறார் டாக்டர் வ்ளாடிமீர்!”

sivan jaykay

unread,
Sep 17, 2023, 8:03:05 PM9/17/23
to amrith...@googlegroups.com
பிள்ளை  யார் ?   - நங்கநல்லூர்  J K  SIVAN 

நாளை 18.9.2023  திங்கட்கிழமை இந்த வருஷம்  விநாயக சதுர்த்தி/பிள்ளையார் சதுர்த்தி என்று நாடெங்கும் ஹிந்துக்கள் கொண்டாடுகிறார்கள். மிகவும் பிரபலமான ஹிந்து பண்டிகை. கணேசன் பிறந்தநாள். ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தி . வருஷா  வருஷம்   ஆகஸ்ட் /செப்டம்பரில் வருவது. வடக்கே பத்து நாள் கொண்டாடு வார்கள். அனந்த சதுர்தசி வரையில் கோலாகலமான பண்டிகை. சிவபெருமான் பார்வதிக்கு  மூத்த பிள்ளை கணேசன். யானைத்  தலை மனித உடம்பு, அழகிய தொந்தி, நான்கு கரங்கள், கண்ணைக் கவரும் உருவம். ஒரு  கையில் சூலம். இன்னொன்றில் அங்குசம். ஒன்றில் தாமரை, இன்னொன்றில் ருத்ராக்ஷம் சில படங்களில் அதில் மோதகம் எனும் தேங்காய் பூரண கொழுக்கட்டை இருக்கும். 

 விநாயகர் என்றாலே வினைகளை தீர்ப்பவர்,எடுத்த காரியத்தை எதிர்பார்த்த நன்மையுடன் முடித்து வைப்பவர். அவரை நினைத்து ஒரு சுழி ''உ'' மாதிரி போட்டுவிட்டு ஆரம்பிக்கும் அத்தனையும் ஜெயமாக முடியும் என்ற நம்பிக்கை அளிப்பவர்.

தனது பக்தர்கள் தன்னை கார்கில் ராணுவ வீரனாக, மத்தள, நாதஸ்வர வித் வானாக, மோட்டார் சைக்கிள் ஓட்டுபவனாக, கிரிக்கெட் வீரனாக எப்படி சித்தரித்தாலும் மகிழ்பவர், மகிழ்ச்சி  தருபவர். வேறு எந்த ஹிந்து கடவுளுடனும்  நமக்கு  இப்படி நெருக்கம் கிடையாது.

புராணத்தில் '' பார்வதி குளிக்கும் போது மஞ்சள் கலவையில் ஒரு கூம்பு வடிவத்தில் படைத்து உயிரூட்டி உருவானவர் பிள்ளையார்.

''பிள்ளையாண்டானே, நான் குளித்து விட்டு வரும் வரை இங்கே நீ வாசலில் காவல் இரு. எவரையும் உள்ளே விடாதே என்று கட்டைளை யிட்ட பார்வதியின் வாக்கை  மதித்து  காவல் காத்து நிற்க, அப்போது அங்கே பார்வதியை சந்திக்க வந்த சிவனை யார் என்று அறியாமல் விநாயகர்  தடுக்க, பார்வதியால் பிள்ளையார் தோன்றியதை அறியாத சிவனது கோபத்தால்  தனது  சிரத்தை இழந்து, பின்னர் பார்வதியின் மூலம் விஷயமறிந்த சிவன் தவறை உணர்ந்து ''முதலில் கண்ணில் படும்  எந்த உயிரின் தலையாவது கொண்டுவா'' என்று சிவகணங்களுக்கு கட்டளையிட, ஒரு யானை தலை இழந்து அதன் தலை பிள்ளையாரின் தலை யாயிற்று'' என்று புராணம். பிள்ளையார்  ஒரிஜினல் தலையோடு இருக்கும் சில கோவில்கள் பற்றி எழுதி இருக்கிறேன். படம் தந்திருக்கிறேன்  வடக்கே தலையில்லாத பிள்ளையாரையும் ஒரு கோவிலில் வழி படுவதை பற்றியும் எழுதி இருந்தேன். 

பிள்ளையார் சிவ கணங்களுக்கு அதிபதி, தலைவனாகி ''கணபதி'' ''கண ஈசன்'' (கணேசன்) ஆகிறார். குறைபாடுகளை விக்னங்களை, தீர்க்கும் விக்னேஸ்வரர் ஆகிறார். எல்லா வீட்டிலும், சிவ ஆலயங்களிலும் முதலில் காவல் தெய்வமாக காண்பவர் பிள்ளையார்.

சரித்திரத்தின்  பக்கங்கள், சாதவாஹன, ராஷ்டிரகூட, சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் இருந்தே
 விநாயக சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்  பட்டதை சொல்கிறது. சத்ரபதி சிவாஜி மஹாராஜா மராத்தி தேசத்தில் விநாயக சதுர்த்திக்கு பிரதானம் கொடுத்தார். இன்றும் அங்கே தான் முதன்மை யாக பிள்ளையார் போற்றப்படுகிறார். மராத்திய பேஷ்வாக்களுக்கு பிள்ளையார் குலதெய்வம். 1818 முதல் 1892 வரை உன்னத மாக கொண்டாடப்பட்டது

1857ல் சிப்பாய் கலகத்தின் போது வெள்ளையன் ஆதிக்கத்தை சிப்பாய்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும் தோற்றனர். அதுவே முதல் சுதந்திர போராட்டம். நெருப்பு அணைந்தாலும் புகை பரவிக்  கொண்டு தான் வந்தது. லோகமான்ய பாலகங்காதர திலகர் தலைமையில் விநாயக சதுர்த்தி விழா மூலம் போராட்டத்துக்கு ஆட்கள் ஒன்று சேர்ந்தனர். தேசிய விழாவாக மக்களை இணைக்க பிள்ளையார் உதவினார். பத்து நாள் விழாவாக பட்டி தொட்டியிலெல்லாம் பிள்ளையார் இருந்தார். இன்றும் இருக்கிறார்.  என்றும் அவ்வாறு இருந்து  ஹிந்துக்கள்  நம் அனைவரையும் ஒன்றிணைப்பார். 

கணபதி பப்பா மோரியா, புத்சா வர்ஷி லௌகர்யா '' (பிள்ளையாரே வாழ்க, அடுத்த வருஷம் புதிதாக வா '') அந்த மாதம் முழுதுமே  கணேஷ் சதுர்த்திக்கு முன்னாலும் பின்னாலும் எங்கும் மஹாராஷ்டிராவில் குஜராத்தில்   கேட்கும். 

பிள்ளையார்  என்றாலே  ப்ரணவஸ்வருபம்,  ஓம்காரவடிவம்.
யானைமுகததான். குறையாவும் அகற்றி நம்மை காப்பவன்.
மன நிறைவையும் , இகவாழ்கைக்கு தேவையான பொருளும்,அக நிறைவுக்கு வேண்டிய அருள்நிறைவையும் அளிப்பவன். நம்பிக்கையோடு தும்பிக்கையானை பணிந்து சரணடைந்தால் வேண்டியவை யாவையும் வேண்டாமலேயே வாரி வழங்கும் வள்ளல்.
கொஞ்சம்   களிமண் உருட்டி  நாம் எல்லோரும் கூட  நாளைக்கு குட்டி பிள்ளையாரை உருவாக்கி வணங்கலாம். 
கணபதி அழகன்,  எல்லோருக்கும் பிடித்தவன்.  அவனுக்கு சுவையான பழங்கள் நிறைய பிடிக்கும், அப்பம் அவல் கொடுத்தால் ஆசையாக உண்பான். யானையை யாருக்கு தான்  பிடிக்காது?  நாளெல்லாம் பார்த் தாலும் அலுக்காதே . எண்ணுக்கும் எழுத்துக்கும் முதலான அவன் திருவடிகளை வணங்கி தான் கற்றவர்கள் மற்றவர்கள் எல்லோரும் அவனை மனதில் நிறுத்திக் கொள்கிறார்கள்.  கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பக தரு அவன்.
 அவன் அப்பாவின் சிரத்தில் என்ன பார்க்கிறோம்? ஊமத்தை மலர்,  கங்கை, பிறைச் சந்திரன். அப்பாவின் சக்தி எல்லோருக்கும் தெரியுமே. திரிபுரமெரித்தவர் அல்லவா? பிள்ளையும் திரள் புஜன். பலசாலி. மத யானைக்கு ஒப்பானவன்.   பெருவயிறு ஒரு அழகு,  நமக்கு அல்ல, அவனுக்கு. மத்தளம் போன்ற வயிறன்  என்று சொல்வார் கள்.  உமாதேவி மனமுவந்து உயிர்கொடுத்து வளர்த்த பிள்ளை அவன்.  அவனை வேண்டினால் நிறைவேறாதது எதுவுமில்லை. வினை தீர்ப்பவன்,  விநாயகன்,  என்றே அவனுக்கு பெயர்.  அன்றலர்ந்த புத்தம் புதிய மொட்டு அவிழாத மலர்களால் அவனை பூஜிப்போம். மனமார வேண்டுவோம்.  இயல் இசை நாடக மெனும் முத்தமிழுக்கும் அதிபதி அவன்.  சங்கத்தமிழ் மூன்றும் தா என்று ஒளவை அதனால் தானே அவனைக் கேட்டாள் . முழு முதல் கடவுள் அவனை வேண்டி தான் மற்ற தெய்வங்களை வணங்குகிறோம்.  மஞ்சளில் குட்டியாக பிள்ளையார் பூஜைக்கு அப்புறம் தான் எல்லாம்.  அப்பாவே  இதை மறந்ததால் அவருடைய தேர் சக்கரம் அச்சு கழன்று விழுந்து  சக்கரம் ஒடிந்து, தேர் நின்றது. இன்றும் அச்சிறுபாக்கம் ஊர்  இருக்கிறதே அதன் ஞாபகமாக.  ஆனைமுகன்  தம்பி ஆறுமுகன் ஒரு அற்புதன். அவன் ஒரு வேடுவப்பெண்ணை காதலித்தான்.அவனும் வள்ளல், அவளோ வள்ளி.  காதல்  கடிமணமாக  நிறைவேற  அண்ணாவை வேண்டினான். அடுத்த கணம்   தினைப்புனத்தில்  யானையாக தோன்றி  அந்த வேடுவப் பெண்ணை மிரட்டி  விரட்டி வேலவனோடு  சேர்த்தான் விநாயகன்.  எல்லோருக்கும் எப்போதும் அருள் புரியும் விநாயகா  உன்னை வணங்குகிறேன்.

 இது என் கவிதை அல்ல, அருட்கவி, அருணகிரியாரின் அருமையான சந்தப்  பாடல். எல்லோரும் மனப்பாடம் செய்ய வேண்டிய, முக்கியமாக குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய  திருப்புகழ்.  எங்கள் காலத்தில் பள்ளிக்கூடத்தில் தினமும் காலையில் கடவுள் வணக்கம் என்ற பெயரில் நின்று கைகூப்பி  எல்லோரும் சேர்ந்து பாடுவோம். இப்போதைய பள்ளிக்கூடங்களுக்கு  இதெல்லாம் மறந்து போய் விட்டது. வீட்டிலாவது சொல்லிக்கொடுப்போம்.  

''கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.''

சமீபத்தில்  என் பேத்தி கல்யாணம் நிச்சயிக்க   ஏற்பாடு செயதிருந்த ஒரு  மண்டபத்தில்  அழகான தஞ்சாவூர்  வண்ண ஓவியங்களில்  விநாயகர்  அற்புதமாக  காட்சி அளித்தார். இணைத்திருக்கிறேன். 


VINAYAKAN 20230910_090441.jpg

sivan jaykay

unread,
Sep 18, 2023, 7:59:07 PM9/18/23
to amrith...@googlegroups.com
அப்பா  கணேசா....   -  நங்கநல்லூர்  J K  SIVAN 

எந்த  காரியம் ஆரம்பித்தாலும், எந்த பூஜை  செய்யும்போதும், எந்த சுப காரியம் துவங்கும்போதும் எந்த மந்திரம் உச்சரித்தாலும், முதலில்  விக்னேஸ்வரனை தியானிப்பது நமது  பாரம்பரிய சம்ப்ரதாயம்.  ஒரு குறையும், குறைவும் இல்லாமல் சந்தோஷமாக, வெற்றிகரமாக  எடுத்த காரியம்  நிறைவேற,  பூர்த்தி பண்ண, அவன் துணையை நாடுபவர்கள் நாம்.. அதில் நல்ல பலனைக் கட்டாயம் கண்டவர்கள். 

எந்த பூஜை பண்ணினாலும் முதலில்   गणपति ध्यानं ॥கணபதி தியானம்  ஒரு சின்ன  ஸ்லோக, மந்திரத்தோடு ஆரம்பிக்கிறோம்.

शुक्लांबरधरं * विष्णुं * शशिवर्णं * चतुर्भुजं * | प्रसन्नवदनं * ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ||
SuklAMbaradharaM  * viShNuM * SaSivarNaM * chaturbhujam *। prasanna  vadanaM* dhyAyet sarvavighnopaSAntaye ॥
சுக்லாம்பரதரம் * விஷ்ணும் * சஷிவர்ணம் * சதுர்புஜம் * | ப்ரசன்னவதனம் * த்யாயேத் சர்வவிக்னோப சாந்தயே ||

எங்கள் குடும்ப  மளிகை கடைக்காரர்  சமரபுரி முதலியார்  உப்பு புளி மிளகாய், மூக்குப் பொடி  வாங்கினாலும் துண்டு காகிதத்தில் முதலில் 'கடவுள் துணை' என்று எழுதி விட்டு , ஒரு   ''உ''  என்ற  பிள்ளையார் சுழி போட்டு விட்டுதன  கிறுக்கி கிறுக்கி கையெழுத்து புரியாமல் தமிழில் எழுதுவார். அதிகப்படிப்பு நாலாம் க்ளாஸ் FAIL.  நம்மிடையே   இன்னும்  லக்ஷக்கணக்கில் பிள்ளையார் சுழி போட்டு எழுதுபவர்கள்   இருக்கிறோம். பிள்ளையார் சுழி போடாமல் எழுதி கையில் முட்டியில் சுப்ரமணிய  ஐயரிடம்  ஸ்கேலால் SCALE  அடி  வாங்கியவன் நான்.  

மேலே சொன்ன மந்த்ர ஸ்லோகத்டத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டால் பிள்ளையார் பெயரே இருக்காது. அவரை வர்ணிப்பதாகவே  இருக்கும்.:

 வெள்ளை வஸ்த்ரம்  உடுத்தியவர்.  ஸரஸ்வதியும் ஈச்வரனும் கூட  வெள்ளை  வஸ்திர தாரிகள் தான்.  மஞ்சள், சிவப்பு கட்டிக்கொள்கிற விஷ்ணு  அம்பாளை பீதாம்பரதாரி, ரக்தாம்பரதாரி  என்கிறோம்.  ‘சுக்லாம்பரதரர்’ என்பது பிள்ளையாரையும்  சேர்த்து, அவரை மாத்திரம் குறிப்பிட்டு  சொல்லவில்லை என்பது அற்புதம். “விஷ்ணு'' பேர் இதில் வருகிறதே.  விஷ்ணு என்றால்  எல்லா இடத்திலும்  வியாபித்திருப்பவர், ஸர்வ வியாபி என்று அர்த்தம். பிள்ளையார் எங்கேயும்  கண்ணில் படுபவர், ஆற்றங்கரை, குளத்தங்கரை, தெருவில், சந்து முனையில்,  எதிர் குத்து, முட்டு, திருப்பங்களில, அரச மரத்தடியில்,  எங்கும்  இருப்பவர். 
“சசிவர்ண” என்றால்   பூரண  சந்திரன்  பால் நிலா மாதிரி என்று அர்த்தம்.  ஈச்வரனும், ஸரஸ்வதியும் கூட  அப்படித்தானே இருப்பவர்கள். 
“சதுர்புஜ”: நாலு  கரங்கள் உடையவர்.  நிறைய  கடவுளுக்கு, ஆணாகட்டும் பெண்ணாகட்டும்  நாலு, எட்டு பதினாறு கைகள் இருக்கிறது.  பிள்ளையாரும் ஒரு சதுர்புஜம். தும்பிக்கையை சேர்ந்து ஐங்கரன். . 
“ப்ரஸந்ந வதந”: மலர்ந்த முகம் உடையவர்.  யானையை எத்தனை நேரம் அருகில் நின்று பார்த்தாலும் அலுப்பு தட்டுவதில்லை. குழந்தைகளை எளிதில் கவரும் உருவம்.  உடம்பை ஆட்டிக்கொண்டு காடை விசிறிமாதிரி  அசைக்கும் அழகு, தும்பிக்கை விஷமம் பார்க்க  அலுக்காது. 

 பக்தர்களிடம் அநுக்ரஹத்தோடு ஆனந்தம் நிறைந்த முகத்தோடு இருப்பவர்களில் பிள்ளையாரும் உண்டு. ஆனந்தம் சொட்டும்  ஆனை முகன்.    ஒவ்வொரு வார்த்தை சொல்லும்போது தலையில் ரெண்டு பக்கமும் நெற்றி பக்கம் குட்டிக் கொள்கிறோம்.   சிரஸில்  உச்சியில் உள்ள, அம்ருதம் உடம்பில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பரவ தான் குட்டிக் கொள்வது. 
பிள்ளையார் ஒருவருக்கு தான் காதைப் பிடித்துக்கொண்டு  தோர்ப்பி  கர்ணம் , தோப்புக்கரணம், போடுகிறோம். 
‘த்யாயேத்’  என்றால்  தியானம் செய்வது. 
பிள்ளையாரை எதற்கு  தியானிக்கிறோம் என்றால்  “ஸர்வ விக்ந உப சாந்தயே”- எல்லா  குறைகளையும், குறைவுகளையும், நீக்க, தடைகள் நீங்க,  இடையூறுகள் விலக .
சின்னதாக கொஞ்சம் மஞ்சள் பொடியில் பிள்ளையார் பிடித்து ஆவாஹனம் பண்ணி பூஜை பண்ணிவிட்டு தன எந்த  சுப  காரியங்களையும்   ஆரம்பிக்கிறோம்.  https://youiandkrishna.org/18/09/2023/ganesh-chathurthi/



sivan jaykay

unread,
Sep 18, 2023, 7:59:07 PM9/18/23
to amrith...@googlegroups.com
லிங்காஷ்டகம்  -    நங்கநல்லூர்  J K  SIVAN
ஆதி சங்கரர்
                                   
லிங்காஷ்டகம்  4
 
அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றன   என்கிறார்   ரஷ்யர்  விளாடிமிர்.  நிறைய  ஆராய்ச்சி செய்தவர். ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவன்  தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார். அது என்ன காரணம்?

உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப் படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக , லிங்கமாக, எழும்பி நிற்கிறது.

அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது.

இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட,  ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் டாக்டர்  வ்ளாடிமீர் கருத்து! விளாடிமிர்  நீயே   ஒரு  ரிஷி தான் யா!  

குழந்தைகளுக்கு   முன்னோர்  பெயர் வைக்கும்  வழக்கம் அருமையான ஒரு  செயல்.  அந்த  முன்னோர் பெயர்கள்  இறைவன்  பெயராகவே  இருந்ததும் ஹிந்துக்களின்   மரபு.  இன்றோ  நம்  குழந்தைகளுக்கு அர்த்தமில்லாத, ஏதோ  நாம்  புதிதாக  கண்டுபிடித்த  அற்புதப் பெயர்  என்று  கருதி  சில  சப்தங்களை நாமகரணம்  செய்கிறோம்.  ஒருவேளை  அப்பர், சுந்தர்  சம்பந்தர்  மணி வாசசகர்  தான் அதேபோல்  வ்ளாடிமீர் என்ற  புதுப்பெயரில்  கோட்டு  சூட்டு  போட்டுக்கொண்டு  பேசுகிறார்களோ?  இப்படி அவர்கள் வந்து  சொன்னால்  தான்  நமது பெருமை நமக்கே தெரியவருமோ?  ஏற்குமோ?  அறிவோமோ?
 
திருநாவுக்கரசர்  என்கிற  நம்  அப்பர்  சொன்னது  நினைவிருக்கிறதா?  ''உன் கடன்  அடியேனையும் தாங்குதல்,  என் கடன்  பணி  செய்து கிடைப்பதே''.   பணி   மனிதனுக்கு  மனிதன்  வேறு படும். செய்யும்  தொழில்  தான்  தெய்வம். இறைவனை  எதிலும்  பார்ப்பது  நமது  இந்து  தர்மம். நமது முன்னோர்கள்  காட்டிய  மெய்  வழி.
 

சிதம்பரம்  நடராஜனைப்  பற்றி  ஒரு  அருமையான  ருசிகர  தகவல் அடிக்கடி  சொல்லிக்கொண்டே  இருக்கிறார்களே  நீங்களும் தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதை மறுபடியும் இங்கே  சொல்லாவிட்டால்  மண்டை வெடித்து விடும்  போல  இருக்கிறது.  ஏற்கனவே தெரிந்தால்  இன்னுமொரு முறை  நீங்கள் தெரிந்து கொள்வதில்  தப்பில்லை.  தெரியாதவர்களுக்கு  இது ஒரு  பிள்ளையார் சதுர்த்தி  போனஸ்.

நாம்  வாழும்  ''பூமி'' யின் மையம்  எது என்று  தெரியுமா?  தெரிந்தால்  அற்புதம்  ஆச்சர்யம்  என்று  குதிப்பீர்கள்.   நமது  பூமியின்  மையத்தில்,  நாம்  சொல்கிற   'நடு சென்டரில்''    உள்ள நாடு  எது  தெரியுமா?
அடுத்தது இன்னும்  கொஞ்சம்  ரகசியமான  கேள்வி.   
அப்படி  உலகின் மையத்தில்  உள்ள  நாட்டில்  ''நடு சென்டரில்' உள்ள  இடத்தின் பெயர்  என்ன?'

'மேற்கண்ட முதல் ரெண்டு  கேள்விக்கு   ''இந்தியா'' என்கிற  பாரதம்' தான் விடை.   இந்த  விடை தெரிந்தவர்கள்  அந்த  விடையேறிய உமை பங்கனின்  அருளைப் பெறுவார்கள்.

மூன்றாவது கேள்விக்கு  ரகசியமான விடை  ''சிதம்பரம்''  -- இது தெரிந்தவர்களுக்கு  சிதம்பர  ரகசியமே  தெரிந்து விட்டதாக  எடுத்துக்  கொள்ளலாம்.

ரகசியம்  தெரிந்தால்  மட்டும் போதுமா?   பரம  ரகசியம்  தெரிய வேண்டாமா?,  இதோ  அதையும்  போட்டு உடைத்து விடுகிறேன்.

உலகத்தின்  நாடுகளில்  மத்யமத்தை,  நட்ட நடுவை,  புள்ளியாக  துல்லியமாக  சுட்டிக்காட்டுவது எது  தெரியுமா   சிதம்பரம்  ஸ்ரீ  நடராஜரின்  தூக்கிய திருவடியின்  இடது கால்  கட்டை விரல் நுனி. இது நான்   விடும்  'கப்ஸா'  இல்லை.   இதை  அறிந்து சொன்னவர்கள்  ஞானிகள்.   நாம்  நமது  முன்னோர் களையும் அவர்களது  ஞானத்தையும்   அலக்ஷியம்  செய்யும்  கும்பலில்  நீங்கள் இருந்தால்  சற்றே  நகர்ந்து போய்   சயன்ஸ் படித்து  ஊரினவர்கள்  தான் இதை  சொல்பவர்கள்  என்பதையாவது நம்புங்கள். 

உலகம்  உருள்வது, நகர்வது எல்லாமே  சாக்ஷாத்   நடராஜனின் கால் கட்டைவிரல் நுனியிலிருந்து தான்.    தெரியாமலா  மகான்கள்  தீர்க்க தரிசியாக  பாடியிருக்கிறார்கள்   ''மானாட,  மயிலாட, மங்கை  சிவகாமியாட..........  சகலமும்  ஆட,  ஆடும்  அந்த   சுழற்சியே   தான்  பிரபஞ்சத்தின்  ஓட்டம்.   அசைவில்  தான் அகிலம்  தழைக்கிறது.  ஆட்டுவிப்பவன்  ஆடலரசன்.   அந்த நடம் புரியும்  நடராசன்.  அவனைத்தான்  லிங்\காஷ்டகத்தின்  4 வது  சுலோகம்  மூலம் வணங்குகிறோம்.

कनकमहामणिभूषितलिङ्गं फणिपतिवेष्टितशोभितलिङ्गम् ।
दक्षसुयज्ञविनाशनलिङ्गं तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥४॥

Kanaga Mahaamani Bhooshitha Lingam  Panipati Veshthitha Sobitha Lingam
Daksha Suyajna Vinaasana Lingam Tatpranamaami Sadaashiva Lingam (4)


கனக மஹாமணி பூஷித லிங்கம்   பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்  தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்  (4)

பொன்னார்  மேனி கொண்ட புண்ணியா, வைரம், கோமேதகம், மரகதம், முத்து, பவழம், மாணிக்கம்  உனக்கு இவற்றால்  ஆன ஆபரணங்களைச் சூட்டி  மகிழ்கிறோம்.  இது  பக்தர்கள் பூட்டி  மகிழ்வது.  நீ  விரும்பி அணியும் ஆபரகம்   நாகம். நீ நாக பூஷணன். அரவாபரணன்.  அதன் கொடிய நஞ்சே  உன் நீல கண்டம்,  சாம்பல் பூச்சு.  உனக்குகந்த  நகை  நீயே  விரும்பி அணியும்  ஊமத்தை, சங்கு புஷ்பம் ,  நீ கொன்றை வேந்தன்... உன்னை அவமதித்த  தக்ஷனை  நாசம் செய்த பரம லிங்கா,  சதா சிவா,  சர்வேஸ்வரா,  மகாதேவா, உன்னைப்  பாட,  போற்ற,  பல பிறவி  வேண்டுமே  எனக்கு. 
 .

sivan jaykay

unread,
Sep 18, 2023, 7:59:08 PM9/18/23
to amrith...@googlegroups.com
சுகர் சொன்ன கலிகாலம் : நங்கநல்லூர் J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் 12ம் காண்டம். 2ம் அத்யாயம். ஸ்லோகம். 3-6.

இப்போது நடக்கும் அக்ரமங்களை  பட்டியல் போடவேண்டிய அவசியமே இல்லை. எல்லோரும் நன்றாக அறிந்த உண்மைகளை எதற்கு மீண்டும் சொல்லவேண்டும்?  கிழவர் கிழவிகள் தனியாக வீட்டில் வசிப்பதே அபாயம்.  குழந்தைகள் பாலியல். வாத்தியார்கள்,வண்டி டிரைவர்கள் வீட்டு   வேலைக்காரர்கள், காவல் காப்போர்  இவர்களே  இதில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்களே. மணல் முதல்  மலை வரை எங்கும் கொள்ளை, கட்டு காட்டாக கக்கூஸில் நோட்டுகள்..வோட்டுக்கு காசு. பள்ளிக்கூடம் எதிரிலேயே  சாராயக்  கடை, குட்கா கஞ்சா வியாபாரம்.... படங்கள் வக்ரமாக, கொடுமையாக, கொலை கொள்ளையை மையமாக கொண்டவையாக,  கோவில் நிலம் ஏமாந்தவன் நிலம் பறிபோக..... சே  சே. இன்னும்  எவ்வளவு மோசமாக போகிறதோ? என்கிறார்  சுகப்பிரம்ம ரிஷி.

दाम्पत्येऽभिरुचिर्हेतुर्मायैव व्यावहारिके ।स्त्रीत्वे पुंस्त्वे च हि रतिर्विप्रत्वे सूत्रमेव हि ॥ ३ ॥12.2.3
dāmpatye ’bhirucir hetur māyaiva vyāvahārike  strītve puṁstve ca hi ratir vipratve sūtram eva hi

தேகத்தின்  மேல் உள்ள  ஆசை தான் ஆண்  பெண்ணை  தம்பதியாக்கும்.  ஏமாற்றுவது தான் சிறந்த  புத்திசாலித்தனம் என்று  வியாபாரம் நடக்கும்.  ஆணும் பெண்ணும்  உடல் கவர்ச்சியால் தான்  மதிக்கப்படுவார்கள்.  வெறும் பூணல் கயிறை, நூலை மாட்டிக்கொண்டவன் பிராமணன் என்று  அறியப்படுவான்.

लिङ्गमेवाश्रमख्यातावन्योन्यापत्तिकारणम् । अवृत्त्या न्यायदौर्बल्यं पाण्डित्ये चापलं वच: ॥12.2.4
liṅgam evāśrama-khyātāv anyonyāpatti-kāraṇam  avṛttyā nyāya-daurbalyaṁ pāṇḍitye cāpalaṁ vacaḥ

கலிகாலம்   மனிதனின்  மனம் குரங்கு என்பதை நிரூபிக்கும். பக்தி  ஊசலாடும்.  ஒருவனின்  பக்தி அவன் மனநிலையை, நம்பிக்கையைப்  பொறுத்தது.  அது ஒருநாள்  சிவன்  உலகிலேயே உயர்ந்த தெய்வமாக வழிபட  வேண்டியவர்  என்று நினைக்கும்.  பத்து நாள் கழித்து வேறே  ஒருவர்  விஷ்ணு மஹாத்ம்யம் சொன்னதை கேட்டு இனிமேல்  நமக்கு ஒரே  தெய்வம்  மஹா விஷ்ணுவே, இந்த சுடுகாட்டு சாம்பல்   சிவன் இல்லை என்று  சிவ வழிபாட்டை நிறுத்த  வைக்கும்.  ரெண்டு நாள் தான் இது. யாரோ  ஒரு சிலர் சாமர்த்தியமாக   பேசுவதைக் கேட்டு  அம்பாள் சக்தி தான் சிறந்த தெய்வம் என்று பேசும்.  அப்புறம் கிருஷ்ணன் தான் பெஸ்ட்  BEST என்று சொல்லும்.  அவ்வளவு தான் ஒரு வாரம் கூட  ஆகியிருக்காது. யாரோ சொல்வார் கிருஷ்ணன் புல்லாங்குழல் படம் வீட்டில் இருக்கக்கூடாது. நரசிம்மர் வேண்டாம்  என்றெல்லாம். இதெல்லாம்  மனதில் தோன்றும்   சாதக பாதக சமாச்சாரங்கள். இதற்கு முக்கியம் வேண்டாம்.  
உனக்கு எந்த உருவத்தில் நம்பிக்கையோ அதில் நான் இருப்பேன் என்கிறான் கிருஷ்ணன்.  சரியாக நமது மகோன்னதமான கோட்பாடுகளை புரிந்து  கொள்ளாததால்  வேறு மதங்களில் ஈர்ப்பு உண்டாகிறது.   யாரும்   சரியாக  நமது சனாதன தர்மத்தை  அறியாமலும்  யாரிடமும் கேட்டு ஞானம் பெறாததாலும் இந்த சங்கடம்.  அடிக்கடி நமது    மேன்மையான  கோட்பாடுகளை உணர்த்திக் கொண்டே இருக்கவேண்டும். அதற்காக தான் திரும்ப  திரும்ப சொன்னதையே  நானும் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டே இருப்பது. பலபேர் பலமுறை படிக்கட்டும்,  அல்லது  சிலர் ஒருமுறையாவது படிக்கட்டும்.. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். தெரிந்தவர்கள் மறக்காமலிருக்கட்டும் என்பதற்காக.

சுக ப்ரம்ம ரிஷி  தீர்க்க தரிசி.   கலியுகத்தில் எப்படி மக்கள் இருப்பார்கள், வாழ்க்கை எவ்வாறு  நடக்கும் என்று நன்றாக  அறிந்தவர.  இன்னும் எழுநாளில் சாகப்போகும்   பரிக்ஷித்துக்கு கலிகாலம் எப்படி இருக்கும் என்று  எதற்கு தேவை?   இருந்தாலும் அவர் அவனுக்கு சொல்வது நமக்காக  சொல்லப்பட்ட  சமாச்சாரம்.  

கலியுகத்தில் வார்த்தை ஜாலங்கள், பொய்யில் கோட்டை கட்டுபவன்,  சிறந்த கல்விமானாக   அறிஞனாக, கலைஞனாக, கவிஞனாக கெட்டிக்காரனாக  மதிக்கப்பட்டு, மரியாதை பெற்று,  கை தட்டப்படுவான்.  வெறும் வேஷதாரி, ஞானியாக,  பக்திமானாக காட்சி  அளிப்பான்.  காசு பண்ணுவான்.  

 எவ்வளவு தான் யோக்கியனாக, நாணயமாக, நேர்மையாக இருந்தாலும் காசில்லாதவன் நிராகரிக்கப்படுவான். அவனுக்கு சமூகத்தில் அந்தஸ்து பெருமை  இருக்காது.  இதனால் தான்  வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்ற பழமொழி  உருவானதோ?  என்ரூ தோன்றுகிறது  மேலே  உள்ள  சுகப்ரம்மரின் ஸ்லோகம் படிக்கும்போது.

வெறும்  வேஷத்தில் தான் ஒருவனை ஆன்மீக வாதி, என்று மதிப்பார்கள். ஒவ்வொருவனும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வேஷம் போட்டு வாழ்வான்.  பணத்தை வைத்து தான் ஒவ்வொருவனையும் எடை போடுவார்கள்.  வார்த்தை ஜாலத்தால் ஆகாசத்தில் பந்தல் போடுபவர்கள் தான் புத்திசாலிகளாக, சிறந்த அறிஞனாக  கருதப்படுவார்கள். அடேயப்பா  எவ்வளவு துல்லியமாக சுகப்பிரம்ம ரிஷி 5000 வருஷங்களுக்கு முன்பே இப்போதுள்ள நிலையை அற்புதமாக  விவரிக்கிறார்.  சரியான ப்ரம்ம ஞானி!.

अनाढ्यतैवासाधुत्वे साधुत्वे दम्भ एव तु । स्वीकार एव चोद्वाहे स्न‍ानमेव प्रसाधनम् ॥ ५ ॥12.2.5
anāḍhyataivāsādhutve sādhutve dambha eva tu  svīkāra eva codvāhe snānam eva prasādhanam

பணமில்லாதவன் அசுத்தமானவன் என்பார்கள்.  ஏமாற்று வித்தை  நயவஞ்சகம்  போன்றவை ஒருவனின் சிறந்த குணமாக ஏற்கப்படும். கல்யாணம் என்பது பேச்சு சாமர்த்தியத்தால் நிச்சயிக்கப்படும்.  ஒரு பக்கெட்  தண்ணியோ, ஐந்தாறு சொம்பு தண்ணீரோ  மேலே ஊற்றிக்கொண்டாலே  ஒருவன் சமூகத்தில் சுத்தமானவனாக அங்கீகாரம் பெறுவான்.

பரீக்ஷித் மஹாராஜா,    கலியுகம் என்பது எப்படி இருக்கும்,  மக்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் தெரியுமா?ஸ்ரீமத் பாகவதம்  12.2. 6  ஸ்லோகம் இது தான்  

दूरे वार्ययनं तीर्थं लावण्यं केशधारणम् । उदरंभरता स्वार्थ: सत्यत्वे धार्ष्ट्यमेव हि । दाक्ष्यं कुटुम्बभरणं यशोऽर्थे धर्मसेवनम् ॥ ६ ॥

dūre vāry-ayanaṁ tīrthaṁ lāvaṇyaṁ keśa-dhāraṇam udaraṁ-bharatā svārthaḥ satyatve dhārṣṭyam eva hi
dākṣyaṁ kuṭumba-bharaṇaṁ yaśo ’rthe dharma-sevanam

ஊரைக்கூட்டுற அளவு  மூக்கைத் துளைக்கிற  சென்ட்,  பளபள  ஜிலுஜிலு  பட்டு சட்டை வேஷ்டி, புடவை நகைகள், இதனால்  அலங்காரம் செய்தவர்கள் எல்லாம், அழகானவர்களாக அறியப்படுவார்கள்.   இயற்கை யான  இன்றெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க தோன்றும்  சுதந்திர  அழகு புறக்கணிக்கப்படும்.    முரட்டுத்  தனமான  பொய் நிறைய கலந்த அடாவடி பேச்சு, உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும்.  பணத்துக்காக   மதம் மாறும் . வெறித்தனமாக  மேலே மேலே  எல்லோரையும் பிடித்து காசு கொடுத்து  ஆட்களை மதம் மாற்றி  தமது மதத்தாராக சேர்த்துக் கொள்வதையும், பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லக்ஷ்யமாக  இருக்கும். 
 அன்றாட சர்வ சாதாரண  நிகழ்வு  என்பதை நாம் கண்கூடாக இப்போது பார்க்கிறோம். ஆனால் சுகப்ரம்மம் அப்போதே  இதை அறிந்திருக்கிறாரே !  

க்ஷேத்ரம்  என்றால்  பகவான் அவதரித்த ஸ்தலம், புண்ய காரியங்கள் நடந்த இடம்,  பல மஹான்கள் சஞ்சரித்த, அவதரித்த,  வாழ்ந்த  இடம், சில  நல்ல பலன்களை கொடுக்கும் ஸ்தலம்  என்பதெல்லாம் ஏனோ  கலிகாலத்தில்  நமக்கெல்லாம்  மறந்து விடும், எல்லாம்  போகப்போக   மறைந்தும்  விடும்.  எங்கோ  ஒரு  இடத்தில்  பூமியில் பள்ளத்தில் சற்று நீர் நிறைந்திருந்தால் அந்த குட்டை  தான்  புனித ஸ்தலம், க்ஷேத்ரம்  என்று கலியுகத்தில் மக்கள்  நம்பி  மகிழ்வார்கள்.  இது அவர்கள் தப்பில்லை.  இப்படி  கொஞ்சம் கொஞ்சமாக  அழிவை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதன் ஆதாரம்.

அழகு  என்பது சாமுத்திரிகா லக்ஷணம்  இல்லை.  ஒருவன் தலைமுடி ஸ்டைல் எப்படி  இருக்கிறதோ  அது தான் அழகு என்ற நிலை வந்துவிடும்.  இப்போது  MKT  பாகவதர்  கிராப்  யாராவது அழகு என்று ஒப்புக் கொள்வார்களா?  யாராவது  கிருஷ் ணன், ராமன்  மாதிரி  நீளமாக தலைமுடி வளர்த்துக் கொண்டு  மயில் இராகு செருகிக் கொள்வோமா?  ஒரு காலத்தில் கை  ரிக்ஷா இழுத்துக்கொண்டு போகிறவன், குதிரை வண்டி ஓட்டுபவன் கூட  MKT   பாகவதர்  மாதிரி  தலை முடி வளர்த்து   ''மன்மத லீலையை'' பாடிக்கொண்டு  போவதை  நானே சிறுவபதில் கோடம்பாக்கத்தில் பார்த்திருக்கிறேன். இப்போது யாரிடமாவது  பாகவதர் படம் வீட்டில்  இருக்கிறதா? எவனாவது அவர் பாட்டை பாடுகிறானா? அவர்போல் ஜில்பா, கடுக்கன், அங்கவஸ்திரம், ஜவ்வாது பொட்டுடன்  திரிவானா? ஊரே அவனைக் கேலியாக  பார்க்காதா??  இது தான் கலி முற்றிக்கொண்டே வருவதன் அடையாளம்.

அமெரிக்காவில் புதுப்  புது  HAIR ஸ்டைல்.  ஏன்  நாம்  பார்க்கும்  IPL  விளையாட்டுகளில், ஒலிம்பிக் விளையாட்டுகளில்  பங்கேற்கும் சில  வீரர்கள், வீராங்கனைகள் தலைகாலை சிகை அலங்காரத்தை பார்க்கும்போதே   பொட்டுக்கூடை  தகவல் அது சொல்ல வில்லையா?  அதற்கென்றே  நிறைய  பணம் செலவு  செய்து  நம் வீட்டு பிள்ளைகள் தலையை அப்படி  அலங்கரித்துக் கொண்டு வந்து,  வீட்டில் தாத்தா  பாட்டிகளிடம்  சாபம்  வாங்குவது தெரியாதா?   சமீபத்தில் கரோனா சமயத்தில் பலர் தலைகள்  முகங்கள்  எல்லாமே   ரிஷிகள் தலைகளாக  காணபட்டாலும் இன்னும்  அப்படியே இருக்கிறார்களே. தாடி குடுமி இல்லாத பையனை பார்க்கமுடிகிறதா? அப்படியே  ஒருவேளை நிலைத்துவிடுமோ? அப்படித்தான்  தோன்றுகிறது. அட கலிகாலமே !


sivan jaykay

unread,
Sep 18, 2023, 7:59:41 PM9/18/23
to amrith...@googlegroups.com

ஒரு  வலம்புரி விநாயக  தரிசனம்.   
நங்கநல்லூர்  J K  SIVAN 

நான்  அதிகம் கேள்விப்பட்ட,  படித்து அறிந்த,  ஆனால்  எனது   84 வருஷங்களில் நேரில் பார்க்காத ஒருபிள்ளையார்  கோவில்.  ஒரு வருஷம் முன்பு  இவ்வளவு  பிரபலமான,  புகழ்பெற்ற பிள்ளையாரைப் பார்க்க  ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.  பிரமித்தேன்.  ரொம்ப சின்ன உருவம் தான்.  நம் ஊர்  முக்குறுணி
 பிள்ளையார் போல் பெரியவர் இல்லை.  மூர்த்தி சிறிது  என்றாலும்  கீர்த்தி பெரிது.   சீக்கிரமே  நான் தங்கி இருந்த மரோல் பகுதியிலிருந்து  விடிகாலை  கிளம்பி 15-20 நிமிஷத்தில்  ப்ரபாதேவி பகுதிக்கு செல்ல முடிந்தது. போக்குவரத்து இன்னும் தூக்கத்தில் இருந்தவர்களை  எழுப்பவில்லை. 

சித்தி விநாயகர்  பம்பாயில் ப்ரபாதேவி என்ற  ஊரில் இருக்கிறார்.  ஒரே கல்லால்  செதுக்கிய  உருவம் ஆனவர் . சுமார் 750 மி.மீ. அல்லது 2 அடி 6 அங்குலம் உயரமும், 2 அடி (600 மி.மீ.) அகலமும் உடைய விக்ரஹம் . இவர்  வலம்புரி  சதுர் புஜ  சிவப்பு நிற  விநாயகர்.   வலது கையில் தாமரை,, இடது கையில் கோடரி,  கீழ் வலது கையில் ஜப மாலை,  இடது கையில் ஒரு கிண்ணம். அதில் ஒன்றுக்கு  மேல் சில "மோதகங்கள்.  நம் ஊரில்  ஒரே ஒரு பெரிய மோதகத்தை உள்ளங்கையில்  ஏந்திக்  கொண்டிருப்பார்.  இங்கே கிண்ணத்தில் தான்  நாகரீகமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.    தோளிலிருந்து  வயிறு வரை ஸர்ப்ப  பூணல்.   நாக உபவீதம். 
ரொம்ப விசித்திரம் என்பதா, விசேஷம் என்பதா  என்று இன்னும் கூட  புரியவில்லை .  இந்த சித்தி விநாயகருக்கு  அப்பாவைப்   போலவே நெற்றியில்  மூன்றாவது கண் இருக்கிறது.  நல்ல கும்பல். . 
நம் ஊர்  விநாயகர்கள் ஒத்தைப் பூணல் பிரம்மச்சாரிகள், தனிக்கட்டைகள்.  ஆற்றங்கரையிலோ, தெரு முக்கிலோ,  அரசமரத்தடியிலோ குளக்கரையிலோ  தனியாக  உட்கார்ந்திருப்பவர்கள்.   மேலே கூரை இல்லாதவர்களும் உண்டு. 
பம்பாய்  சித்தி விநாயககர்  ஐந்தடுக்கு மாளிகை கொண்டவர்  மட்டும் இல்லை.  ரெண்டு பக்கமும்  ரித்தி, சித்தி என்ற இரண்டு பெண்   தெய்வங்களைக் கொண்டவர்.  நம் ஊரில்  சித்தி புத்தி என்று கேள்விப் பட்டிருக்கிறோம். இங்கே ரித்தி,  சித்தி.     ரெண்டு பேருமே  சித்தி விநாயகர் பக்கத்திலே இருந்து  எழுந்து வருவது போல்  இருக்கிறார்கள். ஒரு ஆணின் பிரபலம் பெருமைக்கு பின்னால்  ஒரு பெண்  உண்டு என்பார்கள்.   பம்பாயில் இங்கே  ரெண்டு பெண்  போல் இருக்கிறது. 

சர்வ சக்தி வாய்ந்த விநாயகர் இந்த சித்தி விநாயகர்.   வெற்றி, வளமை , செழிப்பு, காரிய சித்தி,  அளவற்ற செல்வம்,  இதெல்லாம் தரும்  தெய்வங்கள்  தான் இந்த  ரித்தியும்  சித்தியும்  என்று  அங்கே  அறிந்தேன்.  

இருநூறு வருஷங்களுக்கு முன்பே இருந்தவர் இந்த பிள்ளையார். 1801 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு  வியாழக்கிழமை அன்று   கும்பாபிஷேகம்  நடந்தது.  அப்போது  3.60க்கு x 3.60 சதுர மீட்டர் பரப்பளவில் தரையில்  ஒரு தளத்தில்  இருந்த ஆலயம். 

பிரபாதேவி ரொம்ப  பிஸியான  ஊர்  அதில்   ஒரு தெருவுக்கு பெயர்  காகா சாஹேப் தெரு. இன்னொன்று  எஸ்.கே. போலே  தெரு.  ரெண்டும்  சந்திக்கும் மூலையில் இந்த சித்தி விநாயகர் அமர்ந்திருக்கிறார்.  அடேயப்பா என்ன கும்பல், என்ன போக்குவரத்து நெரிசல்.  வண்டி   நகரவே  தடுமாறும்போது  எங்கே  நிறுத்த  இடம்?  . நான் ஏற்கனவே சொன்னபடி,  பம்பாயில்  தாராள  தான தர்ம  மனம் படைத்தவர்கள்  அதிகம். அவர்களில் குறிப்பாக மாதுங்காவில் உள்ள  ஒரு  பணக்கார பெண்மணி ருமதி தியூபாய் பாட்டில் பணத்தை வாரி வழங்க,   ஒரு நல்ல  கட்டிட காண்ட்ராக்டர் திரு. லக்ஷ்மண் விது பாட்டில் இந்த ஆலயத்தை சிறப்பாக கட்டினார். பாவம்  தியூபாய் பாட்டில் அம்மாவுக்கு  செல்வம் நிறைய இருந்தும் மழலைச் செல்வம் இல்லையே.   அவருக்கு    இந்த சித்தி விநாயகர் மேல் அளவு கடந்த பக்தி. 
அந்த அம்மாவிடம் ஒரு  காலண்டர் இருந்தது. அதில் ஒரு விநாயகர் படம்.  அதே மாதிரி பிள்ளையார்
விக்ரஹம் பண்ணி  கோயில் அமைக்க  விருப்பப்பட்டார்.  காலண்டரில் இருந்த பிள்ளையார்  பாங்கங்கா 
வால்கேஷ்வரில் உள்ள விக்ரகம்  மாதிரியே இருந்தது.  500  வருஷ புராதனமான விக்ரஹம்.  இப்போது ஐந்தடுக்கு  மாளிகையான  மாடிக் கோவில்.   அந்த பெண்மணியை  கையெடுத்துக் கும்பிடுவோம் . என்ன  நல்ல மனசு பாருங்கள் அந்த  பெண்மணி தியூபாய் பாட்டில் அம்மாவிற்கு.  இந்த கோயிலை கட்டும் நோக்கம் தியூபாய் பாட்டிலுக்கு ஒரு நாள் விநாயகர் வழிபாட்டின் போது உதயமானது.

"எனக்கு குழந்தை இல்லாவிட்டாலும், குழந்தை பாக்கியம் இல்லாத மற்ற பெண்மணிகள் இந்த கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் புத்திர பாக்கியம் அருள வேண்டும். பிள்ளாயாரப்பா, எல்லோரும் திருப்தியாக  வாழ அருள்வாய் "       தியூபாய் மனமார   சித்தி விநாயகரை வேண்டிக் கொண்டாள்.  அவள் வேண்டுகோளை இன்றளவும் அமோகமாக  சித்தி விநாயகர் ரித்தி சித்தியோடு நிறைவேற்றி வருகிறார் என்று பக்தர்கள் சொல்கிறார்கள். 
மராத்தி  தான்   தாய் மொழி அநேகருக்கு பம்பாயில்.  ஆகவே  அந்த மொழியில்  "நவசச்சா கணபதி"  "நவசால பவனார கணபதி"  எல்லோராலும்  போற்றப்படுகிறார் சித்தி விநாயகர்.  கணபதி பப்பா  மோரியா என்கிற  சப்தம் காதைப் பிளந்தது. நானும் உரக்க முதல் முறையாக விடாமல் சொல்லிக்கொண்டே  நீளமான  க்யூவில் நகர்ந்தேன்.  ஒரு புது அனுபவம் இது எனக்கு. 

இன்னும் ஒரு சந்தோஷமான சமாச்சாரம்.  ஸ்பெஷல் தரிசனம் என்றோ  உள்ளே நுழையவோ எங்குமே
எந்தக் கோவிலிலுமே   டிக்கெட் விற்கவில்லை.  போட்டோ பிடிக்க கூடாது என்று பல இடத்தில் எழுதி இருந்தாலும் நிறைய  மொபைல் போன்கள்  படம் பிடித்துத் தள்ளிக்  கொண்டே இருந்தன.   அழகான க்யூ வரிசை அரேஞ்ஜ்மென்ட்.  யாரும் மொபைலை பிடுங்கவில்லை. 

 "நவசால பவனார கணபதி என்றால் ரொம்ப எளிமையானவர் சத்யமானவர், நம்பக்கூடியவர் என்று  புகழ் பெற்றவர் இந்த சித்தி விநாயகர்.  இல்லாவிட்டால் அவ்வளவு கும்பல் எப்போதும் காலை ஐந்து மணி யிலிருந்தே  சேருமா?   நான்  கோவிலுக்கு சென்றபோது பல வித வண்டிகளிருந்து சாரி சாரியாக பக்தர்கள் குடும்பத்தோடு  வந்துகொண்டே இருந்தார்கள்.  என்  செருப்பு புதிது தான்.  அதை  நான் வாசலில் எங்கோ ஒரு மூலையில் விட்டிருந்தேன். அது அப்படியே காணாமல் போகாமல் இருந்தது.  இதுவே ஒரு அதிசயம். 
 என்னால் இது பற்றி நம் ஊரில் காரண்டீ கொடுக்க முடியாது.  

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலய வாசலில் வைத்த ஒரு புது செருப்பு  அரைமணியில் அந்தர்தானம் ஆகி விட்டது. அது என்னோடு ஆலயத்துக்குள் வந்த  விருந்தாளி  ஒரு பிரபல இன்கம்டாக்ஸ் கமிஷனரின் புதிய செருப்பு.  ரொம்ப மனசு கஷ்டமாக இருந்தது.  பாவம் அவர் ஒன்றுமே சொல்லவில்லை. வெறும் காலோடு நடந்து காருக்கு சென்று  வீடு  திரும்பினார் அவர். 

சித்தி விநாயகர்  கர்ப்ப க்ரஹம்  மேலே   சுமார் 12 அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட கலசம் உள்ளது.
பழைய காலத்தில்   இந்த சித்தி விநாயகர்  ஆலயம் அருகே ஒரு பெரிய ஏரி இருந்தது.  எல்லாம்  இப்போது  காங்க்ரீட்  அசுரனால்  விழுங்கப்பட்டு வானளாவிய  உயர  கட்டிடங்கள்  தான் தெரிகிறது.

1952ஆம் ஆண்டில்  பம்பாயில்  எல்பின்ஸ்டன் தெரு  பக்கம்  சயானி தெருவை  விசாலமாக்கினார்கள். அப்போது  ஒரு ஹனுமார் புதைந்திருந்தவர்   கண்டெடுக்கப்பட்டார். அவரையும் இங்கே  சித்தி விநாயகர்  ஆலயத்தில்  தரிசித்தேன்.   மஹராஷ்டிர தேசத்தில் பிள்ளையார் சதுர்த்தி ரொம்ப  விசேஷம்.  அப்போது போவதற்கு பதிலாக  நங்கநல்லூரில் என் வீட்டு வாசலில் நின்றாலே போதும். க்யூ  நீளமாக  மும்பை வரை கொண்டு சேர்க்கும் என்று தோன்றுகிறது.  
https://youiandkrishna.org/18/09/2023/bombay-sidhdhi-vinayakar-j-k-sivan/


sivan jaykay

unread,
Sep 19, 2023, 8:22:53 PM9/19/23
to amrith...@googlegroups.com
ஆதி சங்கரர்-   நங்கநல்லூர் J K  SIVAN
லிங்காஷ்டகம் 5

कुङ्कुमचन्दनलेपितलिङ्गम् पङ्कजहारसुशोभितलिङ्गम् ।
सञ्चितपापविनाशनलिङ्गम् तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥५॥

குங்கும சந்தன லேபித லிங்கம் பங்கஜ ஹார ஸுஶோபித லிங்கம் |
ஸஞ்சித பாப வினாஶன லிங்கம் தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || (5)

Kungkuma-Candana-Lepita-Linggam Pangkaja-Haara-Su-Shobhita-Linggam |
San.cita-Paapa-Vinaashana-Linggam Tat Prannamaami Sadaashiva-Linggam ||5||

மஹேஸ்வரா, உன்னை நினைத்து எழுத உட்கார்ந்தபோது எண்ணற்ற எண்ண அலைகள் மனதில் ஓடின. ஆதி அந்தமில்லாத அநாதி நாதா. மங்கள தாயகா. எவ்வளவுக் கெவ்வளவு நீ எளிமையானவனோ அவ்வளவுக் கவ்வளவு  நீ  மஹா சக்திமான் என்பதும் உணர்கிறேன். . சாந்தமான நீ மோன நிலையில் காணப்பட்டாலும் கண் பார்வை ஒன்றிலேயே காலாக்னியாக ஊழித்தீயாக அழிக்கும் தன்மையன். எரிமலையை உள்ளடக்கிய  பனிமலை நீ.   ஹாலஹால விஷத்தையே  உள்ளே கொண்ட  மதுர  ஸ்வபாவன். 

கும்கும சந்தனங்களால் உன்னை அலங்கரித்து கண் குளிர தரிசிக்கிறோம். தாமரை மலர்களை மொட்டு களோடு ஸஹஸ்ர தாமரை மாலையாக சாற்றி வணங்குகிறோம். முன் பிறவிகளின் பாப வினைகளின் சாபம் தீர்க்கின்ற  ஒரே அடைக்கலமான, கருணை பொழியும் வள்ளலே,  உனக்கு நமஸ்காரம்.

சதாசிவா, மகாதேவா,  உன்னை எப்படியெல்லாம் ஆயிரமாயிரம் நாமங்களால் போற்றினாலும் இன்னும் தொடர்ந்து நினைக்கவே தோன்றுகிறதே. நீ இருக்கும் கைலாசமலையும் ஒரு பனி லிங்கமாக காண்கிறதே. நேரில் கைலாச யாத்ரை போக முடியவில்லை.  வயசாகி விட்டதால் இனிமேல்  சந்தர்ப்பம் கிடையாது.ஒருவேளை அடுத்த ஜென்மத்தில்....... மனிதனாக பிறந்தால்.....உன் கைலாசமலையை தரிசிக்க  நீ  உதவு வாயா?  ஒருநாள்  கைலாச வாசியாக வேண்டும்.  முயற்சிப்பதைத் தவிர என்னால் செய்ய இயல்வது வேறேதுமில்லை.   உன்னை மனத்தில் இருத்தி, படத்தில் பார்க்கத்தான் என் போன்றோருக்கு இயன்றது.

எல்லையில்லா இந்த நீல துல்லிய வானத்துக்கு அடியில், வெண்ணிற மேகங்கள் உனது சிவ கணங்களாக உலவிக்கொண்டிருக்க, அமைதியும்,நிம்மதியும் சூழ்ந்த இந்த பனிமலையில் காட்சி தரும் எம்பெருமானே. மகாதேவா உனக்கு நமஸ்காரம். கைலாச மலைக்கு மேலே  மேகங்கள் செல்லாதாம். படித்தேன். ஆச்சர்யம். 

பசுபதி நாதா, நீ உறையும் பனிமலையே உன்னை நாங்கள் வணங்கும் சிவலிங்கமாக காட்சியளிக் கும் அதிசயம் தான் என்ன. ஆஹா   அற்புதம்.  உனது எண்ணற்ற திருவிலையாடல்களில் இதுவும் ஒன்றோ?

பவளம்   போல் மேனியில் பால்  போல்  வெண்ணீர் அணிந்த பரமனே. சூரியனையும் எரிக்கும் தகிக்கும் நெற்றிக்  கண்ணின் மேல் சிரசில் குளிர்ந்த சந்திரனை அணிந்த சந்திரசேகரா,

அக்னியில் ஸ்புடம் போட்டது போல் மின்னும் பொன்னார் மேனியனே, தாமிர வண்ணனே, எவராலும் வெல்ல முடியாத திரிசூல பாணியே . புலித்தோல் அணிந்த பரிசுத்தனே,

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் முன் தோன்றிய முழு முதற் கடவுளே, காலனுக்குக் காலனே,     நெஞ்சில் பயம் நீக்கி உரம் தரும் உமாபதி.
 
என்ன சொல்லி முடிப்பேன்.?அடுத்த ஸ்லோகத்தில் உன்னைச்  சந்திக்கும் போது  ஒரு அதிசயம் சொல்லு கிறேன். சிவன் உறையும் பனி மலையும் மேலே இருந்து பார்த்த போது ஓம் என்று வட  மொழியில் எழுதியது போல் பனியில் உறைந்து காண்பதை நேரிலோ படத்திலோ கூட பார்த்தவர் களுக்கு இனி அடுத்த பிறவியேது.

குழந்தைகளே, (பெரியவர்கள் இதைப் படித்து உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லுங்கள்)

கீழே கொடுத்திருப்பது என் வாக்கியங்கள் அல்ல. மகா பெரியவா குழந்தைகளுக்கு (வளர்ந்த குழந்தைகள் நமக்கும் கூடத்தான்) அழகாகச்சொன்ன முத்துக்கள்:

'' மனத்தில் அன்பும் சந்தோஷமும் இருக்கிற போது தான் புத்தி தெளிவாக இருக்கு . புத்தி வெளிவாக இருக்கிற  போது படித்தால் தான் பாடம் நன்றாக ஏறும்.  கோபம், ஆத்திரம், அழுகை, பொறாமை எல்லாம் உண்டாகிறபோது புத்தி குழம்பிப்  போறுது. அப்போது படிப்பும் ஏறமாட்டேன் என்கிறது.

தினமும் கொஞ்ச நாழி ஸ்வாமியை பார்வதி - பரமசிவனாகவோ, மகாலக்ஷ்மி- மஹா விஷ்ணு வாகவோ நினைத்து கொண்டு விட்டீர்களானால் மனம் நல்லதாக ஆகும். புத்தியும் தெளிவாக ஆகும். அதனால் படிப்பும் நன்றாக வரும். நன்றாக பாஸ் பண்ணிடலாம்.   குழந்தைகளுக்கு இதை எடுத்துச் சொல்லணும். புரிய வைக்கணும். பெற்றோர்கள் டூட்டி இது. 

ரொம்ப புத்திசாலியாக இருந்து நிறைய மார்க் வாங்கி பாஸ் பண்ணினால் கூட நல்லவன் என்ற பெயரெடுக்கா விட்டால்  அவனுக்கும் பிறருக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை.

நல்ல பெயர் இல்லாவிட்டால் பிற்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது.நல்லவனாக இருந்து விட்டால் அது நமக்கும் சந்தோஷம். மற்றவர்களுக்கும் சந்தோஷம். பெரியவனான பின் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கும் அது தான் உதவும்.

நம்மை நல்லவர்களாக, புத்திசாலிகளாக இரண்டுமே ஆகவும் செய்வது ஸ்வாமியிடம் நாம் வைக்கிற பக்தி தான்.

sivan jaykay

unread,
Sep 20, 2023, 8:15:28 PM9/20/23
to amrith...@googlegroups.com
சித்தர்கள் -   நங்கநல்லூர்  J.K. SIVAN

குதம்பை சித்தர்

சினிமா பாட்டுகளில் குதம்பாய் குதம்பாய் என்று பாடுகிறோம்  அது கண்ணதாசன் இல்லை.  அவருடைய  எத்தனையோ குருக்களில் ஒருவர்.  தமிழகத்தில் எத்தனையோ சித்தர்கள் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று பலர்  பிறக்கிறார்கள்.  சித்தர்கள்  சித்தி படைத்தவர்கள், மண்ணை பொன்னாக்குவார்கள், பார்ப்பார்கள் தண்ணீருக்கடியில் பல வருஷம் வாழ்வார்கள். பற்றற்றவர்கள். எதிர்காலத்தை  நாம்  வாட்ஸாப்  செய்திகள் படிப்பதுபோல் நன்றாக தெரிந்து சொல்பவர்கள்.  
சிலருக்கு  விநோதமான எண்ணங்கள் தோன்றும். ஒருவர் என்னை கேட்டார்.  சார்  நீங்கள் குதம்பை சித்தர் பாடல்கள் பற்றி எழுதுகிறீர்கள்  ஏன்  அவர் குதம்பாய் என்று ஒரு பெண்ணை பார்த்து இதெல்லாம் சொல்கிறார். ஆணுக்கு சொன்னால் என்ன ?. அவனுக்கு தேவை இல்லையா?  கேட்கமாட்டானா? பெண்ணுக்கு தான் இந்த அறிவுரை அவசியமா?   என்று கேட்டார்.
''ரொம்ப நியாயமான கேள்வி. கட்டாயம் குதம்பை சித்தரை சந்தித்தால் இந்த கேள்வியை கேட்டு பதிலைப் பெறுகிறேன்''என்று சொல்லி   நழுவினேன். 

 கவிஞர்கள் பெண்ணே, தோழி, என்று பாரதியார் போல் சிலர் விஷயங்களை கூறுவது ஆழ்வார்கள்  நாயன்மார்கள் காலத்திலிருந்தே இருக்கிறது. ஆண்  பெண்ணை விட மன உறுதி குறைந்தவன் என்று சொல்வதை விட, அவன் தனக்கு தேவையானதை மட்டுமே  யோசிப்பவன். நல்ல விஷயம் தேட ஆரம்பித் தானானால் அவனுடைய வேகத்துக்கு  ஈடு கொடுக்க முடியாது. பெண்ணை  விட ஆண்  சுதந்திரமானவன். கட்டுப்பாட்டுக்குள் அவனை கொண்டு  வருவது கஷ்டம்.

ஒரு பெண்ணுக்கு  நல்ல விஷயம்  ஒன்று சொன்னால் ஒரு வம்சத்துக்கே  சொன்ன  மாதிரி. குதம்பை சித்தருக்கு இது தெரிந்திருக்கலாம். அல்லது வேறொருவரும் கிடைக்காமல் குதம்பை என்கிற பெண்  ஓட வழியில்லாமல் அவரிடம் மாட்டிக் கொண்டிருப்பாளோ  என்னவோ ?

ஒரு உண்மை என்னவென்றால்,  'குதம்பை'  என்பது ஒரு காதணி, கம்மல், தோடு மாதிரி.  குதம்பை சித்தரின் அம்மா அவருக்கு சிறு வயது முதல்  அதை அணிவித்து அழகு பார்த்தவள்.  அவர் காதோடு குதம்பை எப்போதும் இருந்ததால் அவரையே குதம்பை என்று அழைத்து  பின்னர்  சித்தரானபோதிலும் அந்த பெயர் நிலைத்து விட்டது. அவரும் தனக்கே உபதேசித்துக் கொள்ளும் தத்துவங்களாக  பாடல்கள் அமைந்துள்ளது. அதுவும் வழக்கத்தில் உள்ளது தான்.  வேமனா  சதகத்தில் வேமனா தனக்கே சொல்லிக் கொள்வது போல் தான் நீதி அறிவுரைகள் சொல்வார். ஏற்கனவே  வேமனா பற்றி சொல்லி இருக்கிறேனே.
 
எந்த உயிர்க்கும் இரைதரும் ஈசனைச்
     சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய்
     சந்ததம் வாழ்த்தடியோ.''

கல்லினுள் தேரைக்கும், கருப்பை  உயிர்க்கும்  புல்லுணவாவது தருபவன் ஈசன். அவனை என்றும் மறவாதே. வாழையடி வாழையாக வணங்கப் பட  வேண்டியவன்.

காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை
     நாணாமல் ஏத்தடியே குதம்பாய்
     நாணமற் ஏத்தடியே.
 
என்றும் இறுதி, முடிவு இல்லாத அற்புதமான அந்த இறைவனை   முடிவற்ற கல்ப காலத்திற்கு அப்பால் பட்ட அழிவற்ற உண்மையை  போற்றிப் பாடு குதம்பாய் .

அணுவாய் பல்அண்டமாய் ஆனசிற்சோதியைத்
     துணிவாய்நீ போற்றடியோ குதம்பாய்
     துணிவாய்நீ போற்றடியோ.19

 அவன் அணுவுக்குள் அணு. பெரிதிலும் பெரிதானவன்.  அண்ட  பகிரண்ட  ஞான தீபம். அவனை மனம் விரும்பி போற்றிப்பாடு குதம்பாய்.
 
மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக்
     காணிக்கை நன்மனமே குதம்பாய்
     காணிக்கை நன்மனமே.20

இப்படிப்பட்ட அந்த பரமேஸ்வரன் நமக்கு கேட்காமலேயே எல்லாம் அருள்கிறானே, அவனுக்கு  என்ன காணிக்கை தருவது என்றா கேட்கிறாய், குதம்பாய், வேறொன்றும் வேண்டாம்,  அந்த சுத்த ஜாதிக்கு நம்மால் கொடுக்க முடிந்த காணிக்கை, அவன் விரும்பும், நமது நல்ல மனம் ஒன்றே.

sivan jaykay

unread,
Sep 20, 2023, 8:15:28 PM9/20/23
to amrith...@googlegroups.com

ஸ்ரீ மத் பாகவதம்      - நங்கநல்லூர் J K  SIVAN
கலிகாலம்  பா:  12.2. 6- 11

ஏதாவது ஒன்று நடக்கப்போகிறது என்று ஏற்கனவே  தெரியாவிட்டால்  தான் அதிர்ச்சியடைகிறோம்.  . எதிர்பார்த்தது நடக்கிறது  என்றால்  அதை ஏற்று, அதற்கேற்ப  நம்மை தயார்  படுத்திக்கொண்டு அட்ஜஸ்ட் பண்ணிக்  கொள்ளவேண்டும். அது தான் புத்திசாலித்தனம்.  இன்றோ நேற்றோ அல்ல   ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பே  இது தெரிந்த விஷயம்.  கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக்கொண்டே வரும்போது  தான் பாதிப்பு  தெரிகிறது.  ஸ்டாக் இன்னும் நிறையவே இருக்கிறது.
ஏழு நாட்களில் சாகப்போகும் பரீக்ஷித் மகாராஜாவுக்கு  சுக ப்ரம்ம ரிஷி கலிகாலம் எப்படி இருக்கும், அதில் மனிதர்களின் நடத்தை எவ்வாறு இருக்கும் என்று தனது  ஞான திருஷ்டியால் கணித்து சொல்கிறார். ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது அவர் கணிப்பு. அப்பட்டமான  உண்மை என்று நாம் இப்போது நாம் தெரிந்து கொள்கிறோம்.

दूरे वार्ययनं तीर्थं लावण्यं केशधारणम् । उदरंभरता स्वार्थ: सत्यत्वे धार्ष्ट्यमेव हि ।  दाक्ष्यं कुटुम्बभरणं यशोऽर्थे धर्मसेवनम् ॥ ६ ॥ 12.2.6

dūre vāry-ayanaṁ tīrthaṁ  lāvaṇyaṁ keśa-dhāraṇam  udaraṁ-bharatā svārthaḥ satyatve dhārṣṭyam eva hi dākṣyaṁ kuṭumba-bharaṇaṁ yaśo ’rthe dharma-sevanam

எங்கேயாவது ஒரு குட்டையில் தண்ணீர் தேங்கி நின்றாலே போதும். அது ஒரு புண்ய க்ஷேத்ரம்  என்பார்கள்.  தலையை கன்னா பின்னா என்று மனம் போனபடி சிரைத்துக் கொள்வது தான் அழகு, நாகரீகம் என்று கருதப்படும்.  வயிற்றை நிரப்புவது ஒன்று தான் வாழ்வின் லக்ஷ்யமாகும்.  அடாவடித்தனம் தான் தலைவனாவதற்கு தகுதி. அதையே  அவசியம் நியாயம் என நம்புவார்கள்.  குடும்பம் நடத்துவதே ரொம்ப கெட்டிக்காரத்தனம்  ஆகிவிடும்.  ஊருக்காகவும்  பேருக்காகவும் தான்  ஆன்மிகம், தெய்வீகம் என்று ஆகிவிடும்..  இது தான் கலிகால பண்பு, என்று இன்று நடப்பதை, அன்றே,  சுகர்  சொல்லியிருக்கிறார்.

एवं प्रजाभिर्दुष्टाभिराकीर्णे क्षितिमण्डले । ब्रह्मविट्‍क्षत्रशूद्राणां यो बली भविता नृप: ॥ ७ ॥12. 2.7
evaṁ prajābhir duṣṭābhir ākīrṇe kṣiti-maṇḍale brahma-viṭ-kṣatra-śūdrāṇāṁ yo balī bhavitā nṛpaḥ

லஞ்சம், ஊழல், கொள்ளை, களவு, இதெல்லாம் மலிந்த  சமூகம்,   ஜனங்கள்,  தான் எங்கும் இருப்பார்கள். இதில் அதிக திறமை படைத்தவன்  தான்  மற்றவர்களை அரசியலில் வெற்றிபெற்றவனாக மற்றவர்களை  அதிகாரத்தோடு ஆள்வான்.  அடக்கடவுளே,  சுகர்  நிச்சயம்  இப்போது எங்கோ மறைந்து வாழ்கிறார். இல்லாவிட்டால்  இப்போதைய நிலைமை எப்படி 5000 வருஷங்களுக்கு முன்பே தெரியும்? எனக்கென்னவோ  நம்மைப்போல்  வாட்ஸாப்ப்  யூட்யூப்  ''சற்று முன் கிடைத்த செய்தி'' கேட்கிறார்,   படிக்கிறார் என்று தோன்றுகிறது.

प्रजा हि लुब्धै राजन्यैर्निर्घृणैर्दस्युधर्मभि: । आच्छिन्नदारद्रविणा यास्यन्ति गिरिकाननम् ॥ ८ ॥12.2.8
prajā hi lubdhai rājanyair nirghṛṇair dasyu-dharmabhiḥ ācchinna-dāra-draviṇā yāsyanti giri-kānanam

நல்லவர்கள்  இந்த மாதிரி  ராஜ்யத்தில் வாழமாட்டார்கள்.  மனைவி மக்களை சொத்தை எல்லாம் இழக்க நேரிடும். கொடுமையான  பேராசை பிடித்த,  மனசாட்சியற்ற  கொடியவர்களிடமிருந்து தப்பி வேறெங்கோ  ஓடிவிடுவார்கள்.  அடேயப்பா  அமெரிக்கா ஐரோப்பா என்று நம்மவர்கள்  ஓடுவது பற்றி  சுகர்  தெரிந்து வைத்திருக்கிறாரே .

शाकमूलामिषक्षौद्रफलपुष्पाष्टिभोजना: । अनावृष्टय‍ा विनङ्‌क्ष्यन्ति दुर्भिक्षकरपीडिता: ॥ 12.2.9
śāka-mūlāmiṣa-kṣaudra- phala-puṣpāṣṭi-bhojanāḥ anāvṛṣṭyā vinaṅkṣyanti durbhikṣa-kara-pīḍitāḥ

மக்கள்  பஞ்சத்தாலும்,  அதிக  வரி சுமையாலும் துடிப்பார்கள். கிழங்கு, இலை  காய் பூ, பட்டை, விதை என்று எதையாவது சாப்பிட்டு உயிர்வாழ்வார்கள்.

शीतवातातपप्रावृड्‌‌हिमैरन्योन्यत: प्रजा: ।क्षुत्तृड्भ्यां व्याधिभिश्चैव सन्तप्स्यन्ते च चिन्तया ॥ १० ॥ 12.2.10
śīta-vātātapa-prāvṛḍ- himair anyonyataḥ prajāḥ kṣut-tṛḍbhyāṁ vyādhibhiś caiva santapsyante ca cintayā

எங்கும்  வியாதி பரவி அவதிப்படுவார்கள்,  அநேகமாக   எல்லோருமே குளிர், பனி, வாயு, உஷ்ணம், மழை, ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள்.  சண்டைகள், பசி, தாகம், வியாதி, மனதில் சங்கடம், பயம் என்று பலவித துன்பங்களில் தவிப்பார்கள்.

त्रिंशद्विंशतिवर्षाणि परमायु: कलौ नृणाम् ॥ ११ ॥ 12.2.11
triṁśad viṁśati varṣāṇi paramāyuḥ kalau nṛṇām

நாம் ஒருவரை ஒருவர்  ''நூறாண்டு வாழ்க'' என்று வாழ்த்துகிறோம். ரொம்ப சரி.இப்போதைக்கு இது முடியலாம். இன்னும் காலம் செல்லச் செல்ல, கலியுகத்தில் அதிக பக்ஷம் ஒவ்வொருவருக்கும் வயது ஐம்பது தானாம் . ரொம்ப  போனால் நாம்  ஐம்பது வயது வாழ்வதே  பேப்பரில் நம் படம் வரும் அளவுக்கு ஒரு அதிசயமாகிவிடும்.  சுகர் சொன்னால் அது பொய்யாகாது.  நாளுக்கு நாள் மோசமாக தான் கலிகாலம் செல்லும். அப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. நாமே அனுபவிக்கிறோம்.

இப்போது நடக்கும்  கலிகாலம்  ஏதோ புதிதாக நடக்கும்  ஒரு  மோசமான  காலம் இல்லை.  சதுர் யுகங்களில்  நாலாவது க்ரித  யுகம் த்ரேதா யுகம், துவாபர யுகம்  அப்புறம் நமது  கலியுகம்.  இந்த நாலு யுகங்களும் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக  வந்து கொண்டே இருக்கும்.  அதற்கு பல கோடி வருஷங்கள் ஆகும். ஒவ்வொரு யுகமும் நமது கணக்கில்  பல  லக்ஷ வருஷங்கள்  கொண்டது.  இந்த பிரபஞ்சம்  தோன்றியதிலிருந்து இது நடந்து வருகிறது.  சொன்னால்  அசந்து போவீர்கள்.   இது வரை  1.8 கோடி கலியுகங்கள்   ப்ரம்மாவின்  50 வருஷ  ஆட்சியில் வந்து முடிந்து விட்டது.  அதாவது அந்த 50 ப்ரம்மாவின் வருஷத்தில்  453 கலியுகங்கள் நடந்து விட்டது.  இப்போது ப்ரம்மாவின்  51வது வருஷம் நடக்கிறது.  அதில் நடப்பது முதல் பாதத்தில்  இப்போது நாம்  அனுபவிக்கும் கலியுகம் 454வது...  இது நீடிக்கும் காலம்  432000  வருஷங்கள்!  போதுமா?.  நாம் 80 தாண்டுவதே  அதிர்ஷ்டம்.  அதற்குள் ஆஹா  ஊஹூ  கலி காலம் ரொம்ப மோசம் என்கிறோமே, இனி வரப்  போவது எப்படி இருக்கும்?  இதற்கு முன்   453 கலிகாலங்கள் எப்படி  இருந்தது?  யாருக்கு தெரியும்?  இதை விட மோசமாக இருந்திருக் குமோ? யார் கண்டார், யார்  எழுதி வைத்தார்?.  
கலிகாலத்தில் என்ன  நடக்கும் என்பதை சுகப்பிரம்ம ரிஷி  பரீக்ஷித் மகாராஜாவுக்கு சொன்னதால் நமக்கும் தெரிந்தது.  நாம்  அன்றாடம் கண்ணால் கண்டு  அனுபவிக்கும் அதிர்ச்சிகள்  ''கலி காலம் எப்படி இருக்கு பார்த்தாயா?'' என்று உலுக்குகிறது.  சுகர்  கலிகாலத்தை பற்றி சொல்வது  ஸ்ரீமத் பாகவதத்தில் 12வது காண்டத்தில் 2வது அத்தியாயத்தில்  இருக்கிறது. அதன் சாராம்சங்களைப்  படித்தேன். அதைச் சொல்கிறேன்.
 நான் ஜவந்திப்பூ மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு சப்பளாங்கால் போட்டு உட்கார்ந்து உரக்க கதை சொல்லும் பௌராணிகன் இல்லை. உங்களில் ஒருவன்.  

சுக  ப்ரம்ம  ரிஷியால் எப்படி  இவ்வளவு துல்லியமாக  5000 வருஷங்களுக்கு  முன்பே  நமது இப்போதைய  கலிகாலத்தில் என்னென்ன வெல்லாம் நடக்கப்போகிறது என்று அறிய முடிந்தது என்று கேட்டால் சுலபமான பதில் ''ஞான திருஷ்டி'' என்று சொல்லிவிடலாம். நமக்கு பகலிலேயே எதிரே வரும் தண்ணீர் லாரி , கண்ணாடி போட்டுக்கொண்டும்  தெரியவில்லையே.

இதைச் சொன்ன சுக ப்ரம்ம ரிஷியை விட எதிர்கால கவலையில் கேள்விகேட்டு அவரை துளைத்து இதைச் சொல்ல வைத்த பரீக்ஷித் மகாராஜாவுக்கு தான் நாம் ரொம்ப ரொம்ப  நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவன் இத்தனை கேள்விகளை ஏழு நாளில் கேட்டு ஏழு ஜன்மத்துக்கு நமக்கு போதுமான விஷயங்களை சுகப்ரம்மத்திடமிருந்து பெற்றுத் தந்திருக்கிறானே.

நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் எழுதி இன்னும் பெரிதாக எழுதுங்கள் என்று சில நண்பர்கள் அறிவுரை சொல்கிறார்கள். ''ஐயா, சுருக்கி எழுதும் இதைப் படிக்கவே ஆளில்லை.  மத்யமர்  என்ற  குழுவில்   பலரில் நான்  இன்றும் ஒருவன்.    மத்யமர் குழுவில்  ஆரம்பத்தில்  பதிவுகளை போடுவதில் எத்தனையோ கண்டிஷன்கள். அவை எனக்கு ஒத்து வராது. நான் நினைத்தபோது அதை உடனே எழுதுபவன். ஒரு நாளைக்கு பத்து கட்டுரைகள் பல தலைப்புகளில் எழுத தாகம் உள்ளவன். ஒரு நாளைக்கு ஒன்று என்று மீதி நேரம் நகம் கடித்துக் கொண்டு சும்மா உட்காரும் டைப் இல்லை.   அப்படி அந்த குழுவில் பதிவிட்டாலும் யார்  படிக்க போகிறார்கள்?  ஆன்மீக கட்டுரைகளை படிக்க ஆளில்லை. அதில் என் எழுத்துகளைப்  படிப்பவர்கள் ஒரு சிலர் ஏற்கனவே எனக்கு நண்பர்கள். அவர்கள் அங்கே படித்தால் என்ன. இங்கே படித்தால் என்ன என்று அந்த குழுவுக்கு எழுதுவதை நிறுத்தி விட்டு  என் முகநூல் பக்கத்தில் பதிவிடுகிறேன். எதற்கு சொல்கிறேன் என்றால், அந்த குழுவிலும் சரி, மற்ற  குழுக்களிலும் சரி,  ஆன்மீக கட்டுரைகள் படிப்பதை விட அவரைக்காய் பொரிச்ச குழம்பு பண்ணுவது பற்றி தெரிந்து கொள்ள நாட்டம் தான்  அதிகம்  உள்ளது.

அவனவன் ஆபிஸ் போகும்போது, பஸ்ஸில் தொங்கிக் கொண்டு காதில் ஒயரை ear phone wire செருகிக் கொண்டு நிற்கும்போது, பக்கத்தில் இருப்பவனை இடித்துக்கொண்டு ரயிலில் பயணிக்கும்போது படிப்பதற்கு ஒரு எண்ணம் வந்து பத்து நிமிஷம் செலவழித்தால்  அவன் நிச்சயம்  பூர்வ ஜென்ம புண்ணியம் பண்ணவனாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் அவனைப் பிடிக்க சின்னதாக  சுருக்கி எழுதினால் தான் உண்டு. இல்லையேல் அலமாரியில் பரிமேலழகர், நாலடியார், திரிகடுகம், திவ்ய பிரபந்தம், பெரிய புராணம்,ராமாயண  பாரதம், பாகவதம் புத்தகங்கள்  பக்கத்தில் என் புத்தகமும் அமர்ந்து கொள்ளும் என அறிவேன். அதற்கெல்லாம் சொந்தக்காரன்  அந்த புத்தகங்களை வாங்கியவன் இல்லை. பழைய பேப்பர் காரன்.
வாட்சாப் வந்தாலும் வந்தது, மூணு மணி நேரம் கதை சொல்கிறவர்கள் கூட மூணு நிமிஷத்தில் மொபைலில் சுருக்கிச் சொல்ல  முன் வந்து விட்டார்கள்.  யூ  ட்யூப்,  டிவி செய்திகள் , கட்சிக் கொடி பூசல்,   லஞ்ச  பேரம், ஊழல், நில ஆக்கிரமிப்பு கோர்ட் கேஸ்கள்  பற்றி கூட சுக  பிரம்ம ரிஷி அப்போதே தெரிந்து வைத்திருக் கிறார்
விவரமாக படிக்க இங்கே யாரும் இல்லை.  நூறு வருஷங்களுக்கு முன்பே  ராமலிங்க வள்ளலார்  ''கடை விரித்தேன்  கொள்வார் இல்லை'' என்று அனுபவ பூர்வமாக சொல்லி விட்டார்.   அவசரமாக பார்க்க, நுனிப்புல் மேய, பொம்மைகல் மூலம் பதில் சொல்ல மட்டுமே தேவையாகிறது.  மீம்ஸ் memes என்பது வடிவேல் சுவாமிகளால் உயிர்பெற்று ஊரெல்லாம் கொரோனா போல் பரவி இருக்கிறதே. யார் சுகப்ரம்மத்தின் ஸ்லோகங்களை படிப்பார்கள்?

சுகர் பரிக்ஷித்துக்கு எந்த தேசத்தில் எந்த  ராஜாவுக்கு அப்புறம் எவனைக் கொன்று எவன் வருவான் என்று சரித்திர பக்கங்களை அது எழுதப்படுவதற்கு முன்பே சொல்கிறார்.

சத்யம்  என்றால்  நிறைய பேருக்கு தெரியாமல் போய்விட்டது.  சத்யம்   தெரியுமா? என்று கேட்டால், தெரியுமே, இப்போ 'அங்கே என்ன படம் ஓடுகிறது?'' என்று  கேட்பது தான் ஞானம்.

மூக்குக்கு மேல் கோபம் எல்லாவற்றிலும், எதற்கும், எவருக்கும்  வருகிறதே.  பொறுமை, கருணை சகிப்பு தன்மை, எங்கிருந்து வரும்?

கலிகாலத்தில் பணம் ஒன்றே தான் பிரதானமாக செயல்படும். காசே தான் கடவுளடா. உண்மை, நேர்மை, சத்யம் எல்லாமே பணத்திற்கும், அது தரும் பதவிக்கும் அதிகாரத்திற்கும் அடிமையாகிவிடும். (நாம் தான் நிறைய பார்க்கிறோமே, படிக்கிறோமே). பணம் இருந்தால் படிக்காதவன் கூட டாக்டர். ஊசி போடுபவர் அல்ல, நீளமான தொள புளா கோட்டு மாதிரி கருப்பாக ஒன்று போட்டுக்கொண்டு தலையில் சதுரமான தொப்பி போட்டுக்கொண்டு கையில் சுருட்டி இருக்கும்  நூல் சுற்றிய காகிதத்தைப் பலபேர் முன்னிலையில் கைதட்டலுடன் ஒன்றுமே தெரியாமல், செய்யாமல் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொள்பவன். தடி எடுத்தவன் தண்டல்காரன்.

சுகப்ரம்மம் இப்போது நம்மோடு வாழ்பவரைப் போலவே, நமது அனுபவங்களை தானும் அனுபவித்தவர் போலவே ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு எப்படி உணர்ந்திருக்கிறார்?  என்பது தான் ஆச்சர்யம். மஹான்களால் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்லமுடியும்.

''பரிக்ஷித்,  இனி எதிர்காலம் கலியுகத்தில் தடுமாறும். படிப்பு, நேர்மை, நாணயம் இதற்கெல்லாம் மதிப்பில்லை என்று சொன்னேனே, அதோடு பக்தியையும் சேர்த்துக்கொள். காசு மட்டும் இருந்துவிட்டால் இதெல்லாம் இருப்பதாக உலகம் உன் தலையில் கற்பூரம் ஏற்றி அடித்து சத்தியம் செய்யும்.
பணத்தை இன்னொருவனிடமிருந்து அபகரிக்க பெண்ணையும் பிள்ளையும் பலி ஆடுகளாக காட்டி இரக்கமில்லாத பெற்றோர்களே சுயநல விரும்பிகளாக மாறிவிடுவார்கள்.

நமது கலாச்சாரங்கள், புராணங்கள், வேதங்களை விற்பனை பொருளாக மாற்றி சிலர் யோகிகளாக, ஞானிகளாக சாதிகளாக ( டம்பாச்சாரிகளாக என்று வார்த்தையை உபயோகிக்கிறார்) ஏமாற்றுவித்தையில் சிறந்தவர்கள் பிழைப்பார்கள்.
ஏமாற்றுவித்தையில் சிறந்தவர்கள் பிழைப்பார்கள். கடவுளையே திருடி விற்பார்கள். பொற்சிலைகளை சுரண்டி பித்தளைச் சிலைகள் பொன் பாலிஷ் போட்டுக் கொண்டு விடும். பழங்கால  ராஜாக்கள் பிரதிஷ்டை பண்ணிய ஐம்பொன் சிலைகள்  கோவிலை விட்டு பறந்து வெளிநாடுகளில் கண்ணாடிப்பெட்டியில் வைத்து விற்கப்படும்.
சாமியைப் பார்ப்பதற்கே  அதிக காசுகொடுத்தால் தான்  சீக்கிரம்  ஸ்பெஷல் வரிசையில் பணம் கொடுத்து தூரக்கே இருந்து ஒரு நிமிஷத்துக்கு கம்மியாக  பார்க்க  விட்டு பிடித்து  போ , ' ஜருகண்டி 'என்று தள்ளுவார்கள்.

sivan jaykay

unread,
Sep 21, 2023, 8:15:49 PM9/21/23
to amrith...@googlegroups.com
 லிங்காஷ்டகம்  6  -   நங்கநல்லூர்   J K  SIVAN 
ஆதி சங்கரர் 

பரமேஸ்வரனுக்கு பல  பெயர்கள்,  ஆயிரக்கணக்காக  பக்தர்கள் போற்றி  துதிப்பவை. ஸஹஸ்ர நாமன்.,
 என்றாலும்  நடராஜன்  நடேசன்  என்ற  பெயர்  பிரசித்தம்.  சிவன் ஆடல்  வல்லான்.  அவனது  ஆடலில்  ஒரு  ரகசியம்  இருக்கிறது.  இடது கையில்  ஒரு  டமருகம்.  உடுக்கை.   ஆடி முடிக்கும்போது  அதை  14  தடவை ஒலிக்கிறான்.  இதை  த்தான்   ' மஹேஸ்வ ராணி சூத்ராணி'    எனும்  ஸம்ஸ்க்ருதத்தின்  ஆதார  அக்ஷரங்கள் சப்தங்கள்  என அறிகிறோம். சமஸ்க்ரிதம் தவிர   மற்ற  மொழிகளுக்கும்  கூடத்தான்.   பாணினி இதைத்தான்  ''அஷ்டா த்யாயி''யில்  சொல்கிறார். .

ஒரு கதை சொல்லவேண்டியது இங்கே அவசியமாகிறது. 
சமஸ்க்ரித பண்டிதர்   பாணினி  பாடலி புத்ரத்தில் படித்துக்கொண்டிருந்த  காலம்.  ரொம்ப  மந்த  புத்தி, லாஸ்ட்  பெஞ்ச்  ஸ்டுடென்ட்  அவர்.   எனவே  இமயமலைக்குச் சென்று  தவம்  செய்ய  புறப்பட்டார்.  அங்கே  தவம் செய்யும்போது தான்  பரமசிவனின் ஆனந்த  நடனம் காணும் பாக்யம் கிடைக்கிறது.  டமருகத்தின்  ஒலி கேட்கிறது.  14 முறை அது  ஒலித்ததை கேட்டவர் பாடலிபுத்ரம்  திரும்புகிறார்.  பின்னால்  புகழ் பெற்ற இலக்கண மேதையாகிறார். இந்த  மஹேஸ்வராணி சூத்ராணி யை    தனது   அஷ்டாத்யாயியில்  இலக்கண  விதிகளுக்கு  குறுக்கு  வழியாக  அளிக்கிறார்.

முதலாவது சூத்ரம்   ''அ '' என்கிற  ஒலி யில்  ( अ )  அக்ஷரத்தில் ஆரம்பித்து   கடைசி   அக்ஷரம் ல்''லு''  ( ल् ),  எனவே  ''அலு '' ( अल् ) வரை  சப்தம்  ஒலிக்கும்.  எல்லாவற்றிற்குமே  இந்த   ''  அ,   லு''  தான்  ஆணி வேர்.  இங்க்ளிஷில்    அல்பபெட் எனும்  வார்த்தையில்  '' அ ல் '' AL  வந்துவிட்டதே.   ஆடல்வல்லானின்  திரு நடம்  தான்  சகலத்திற்கும்   ஆதாரம்  

சிவபெருமானை  லிங்கமாக  வழிபடுகிறோம்.   லிங்கம்  என்பது  அருவத்தின்  ஒரு  உருவம். லிங்கத்தின் பீடம்  பராசக்தி.  ஸ்வயம்புவாக  இருக்கும் பல  லிங்கங்கள் சிவனாக  கோவிலில்  பூஜிக்கப்படுகிறது.    

லிங்கம்  என்பது  12  வஸ்துக்களின்  கலவை.   மணல்,  அரிசி,  சாதம், களிமண்,  பசுஞ்சாணம், வெண்ணை, ருத்ராக்ஷம், சாம்பல்,  சந்தனக்கட்டை, தர்பை, மாலை, பாகு என்பவை  அவை என்று சிவபுராணம் சொல்கிறது.

லிங்கம்  என்பதே  ஒரு அடர்ந்த  ஒளிக்கற்றை, பிழம்பு, என்று   வேதங்கள் கூறுகிறது.  அடி முடி காண  முடியாதது.  நம்  உடலின் உள்ளே  இருக்கும்   ஜீவன் தான் சிவன்.  குண்டலினி  என்னும்  சக்தி நாண் , மூன்றரை  சுற்றாக அதோடு 
பிணைந்திருக்கிறது.  இதை உணர்த்தவே   லிங்கத்திற்கு   நாக ஆபரணம் அணிவிக்கிறோம்.   இதன்  தத்வம், பரமாத்மா  சிவன்,   சக்தி நாகமாகிய  குண்டலினி.     இதிலிருந்து  தான்  எவ்வாறு  மூல பிரக்ரிதி,   ஏனைய விக்ரிதிக்களை ஆகர்ஷிக்கிறது  என்பது புலப்படும்.    உலகத்தின்  செயல்பாடுகள்  புரியும்.    ஆகவே   உருவமற்ற  சிவன்,  உருவமற்ற   அசைவற்ற  அண்ட பகிரண்டத்தைக் குறிக்கிறது.   சக்தியோடு சேர்ந்த போது அசைகிற  சக்தியால்  பிரபஞ்சத்தில் சலனம்  ஏற்படுகிறது.
 
சிவன்  தான்  ப்ரஹத் என்றும்  புருஷன்   என்றும்  ஆணாக அறியப்படுகிறது.   தஞ்சாவூர்  சிவலிங்கத்தின் பெயர்  ப்ரஹதீஸ்வரர் .  சக்தி தான் பார்க்கா  என்று பெண்ணாக, பிரக்ரிதியாக  உணரப்படுகிறது.  பிரபஞ்சத்தில்  ஆக்கல்  இவ்வாறு  உருவாகிறது.  ஆவுடையார் சக்தி தான்  பிரக்ரிதி,  லிங்கம் தான்  புருஷன்.  இவ்வாறு தான்  பல  கோடி  ஜன்மாக்கள்  திரும்ப திரும்ப தோன்றி மறைகிறது.  ஜீவன் பிறக்கிறது.   மாயை  என்னும்  பிரக்ரிதியில் மூழ்கி மறைந்து பின்னும் தோன்றுகிறது.   இது தான் பிரபஞ்ச ரகசியம்.

நமது உடலில் 5  கலைகள் தான்  உள்ளன. பகவான்  ஸ்ரீ  கிருஷ்ணன், சிவன்,  போன்றோரிடம் 16 கலைகள்  உள்ளன என்பதாலேயே  அவர்கள்  போற்றத்தக்கவர்கள். பதினாறு மட்டுமல்ல  இன்னும்  எத்தனையோ கூட. ''நிஷ்களா''  என்று  அதனால்  தான்  ஸ்தோத்ரங்கள் புகழ்கின்றன. சிவலிங்கம்  அப்படிப் பெருமை வாய்ந்தது.

ஞாபகம் இருக்கிறதா?  யார் பெரியவர்  என்ற  போட்டியில்  விஷ்ணுவும் பிரம்மாவும்  மோத இடையில் ஒரு ஒளிப்பிழம்பு ஆகாசத்திற்கும்  பாதாளத்திற்கும் பரவி  நிற்க.  இதன் முடியும்  அடியும் யார்  கண்டவர்களோ அவர்களே  பெரியவர் என்று சிவன் ஸ்தம்பமாக நிற்க (ஸ்தாணுமாலயன் என்ற பெயர் அதால்  தான்)  அடிமுடி காண  முடியாத இருவரும்  சிவனின் பெருமையை  உணர்ந்து  பிணக்கு தீர்ந்தனர் என்று  ஒரு  புராண சம்பவம்.   அனைத்து கலைகளுடன் கூடிய  உரு ''ச-கல' வும் நான்  தான்,  ஒன்றுமே  இல்லாத  '' நிஷ்கலா''வும்  நான் தான். இந்த  ஒளிப்பிழம்பும்  நான் தான்  என்று  சிவன்  அவர்களுக்கு  அறிவுறுத்துகிறார்.  16 கலைகளுடன் என்னை  ''சகல''னாகவும்  ஒன்றுமே  அறிய ஒண்ணா நிஷ்கலாவாக   உள்ளபோது பிரமம்  என்றும்  அறியப்படுபவன்  என்று  காட்டுகிறார்.     ''பிரம்மம்''  அளவிடமுடியாதது '' ப்ரிஹத்''  அதாலே தான் சிவன் ''ப்ரஹதீச்வரன் '' .   லிங்கம்  அம்மையப்ப  தத்தவத்தை  அறிவிக்கிறது.  அசலம், சலம்,  எனும் பிரபஞ்ச சக்தி ரகசியம்  தெரிகிறது.  சகல உயிர்களும் தோன்றக் காரணமாக இருப்பதால்   தான்   சிவனும் சக்தியும் உலகத்துக்கே அம்மா  அப்பா---  அம்மையப்பன்.

பாண  லிங்கம் கோழி முட்டை வடிவம்  போல  ஈஸ்வரனுக்கு  முடிவோ ஆரம்பமோ எதுவும் இல்லை என  விளக்கும்.

லிங்கோற்பவர் என்ற  லிங்கம், அருவத்தின் ஒரு உரு  என  கொள்ளளலாம்.  சிவராத்ரியில் நள்ளிரவில் தோன்றிய உரு. எனவே தான்  சிவராத்ரியன்று நள்ளிரவு வரை  பூஜைகள்,  வழிபாடுகள். லிங்கோற்பவரை  முக்ய  சிவன்  கோவில்களில் மூல விக்ரஹத்தின் வெளி பிரகாரத்தில்  காணலாம்.

சிவலிங்கத்தின்  அடி பாகம்   பிரம்மபாகம், பிரம்ம பீடம் என்ற பெயரில்  பிரம்மனைக்குறிக்கும். அதற்கு மேல்   உள்ள நடு பாகம் எட்டு பக்கம்  கொண்ட  விஷ்ணு பாகம்.  இது  விஷ்ணு பீடம் என்று  காக்கும்  கடவுள் விஷ்ணுவைக் குறிக்கும். இவை இரண்டுமே சிவலிங்கத்தை  தாங்கி நிற்கின்ற  பாகம். இவற்றின் மேலே காணப்படும்  உருளை பாகம்  தான்  ருத்ர பாகம். சிவ பீடம் எனப்படும்.  இதற்கு  பூஜா பாகம்  என்றும்  பெயர் உண்டு.   இதைத்தான்    முக்யமாக வழிபடுகிறோம். இந்த மேல் பாகம்  அக்னி பிழம்பாகவும் ஏற்றுக் கொள்ளப்படுவதால்  சிவனை அழித்தலைக்  கையிலெடுத்த  சம்ஹார  மூர்த்தி  என்கிறோம்.  

இந்தியாவில்  12 அதி முக்ய ஜோதி லிங்கங்கள் பரவி இருக்கின்றன.  கேதார்நாத், காசி விஸ்வநாத், சோம்நாத், வைத்யநாத், ராம்நாத், க்ரிஷ்நேச்வர் , பீமசங்கரர், மஹாகாளர்  , மல்லிகார்ஜுனர் , அமலேஸ்வரர், நாகேஸ்வரர், த்ரையம்பகேஸ்வரர், என்று அவருக்குப்  பெயர்கள்.  பஞ்ச பூதங்களில் சிவன்  விரைவி  நிற்பதை, காளஹஸ்தி, ஜம்புகேஸ்வரம், அருணாசலம், காஞ்சி, சிதம்பரம், ஆகிய லிங்கங்களில் காளஹஸ்தீஸ்வரர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர், ஏகாம்பரநாதர், நடராஜர் என்றும், திருவிடைமருதூரில்   மகாலிங்கமாகவும் வணங்குகிறோம்.

சில  கோவில்களில்  பாதரச லிங்கம்  காணலாம். இவை  சக்தி வாய்ந்தவை. 'பராத்பரா'' என்ற பெயரில் ''பராத்'' பாதரசத்தைக் குறிக்கும்  சொல். சிவ தாது என்றும்வடமொழியில் அதற்குப் பெயர். பாதரச லிங்கங் கள்  தெய்வீக சக்தி கொண்டவை. இம்மாதிரி பாதரச லிங்கங்களை வழிபட்டு  பெருகின்ற  பலன், நூற்றுக்கணக்கான அஸ்வமேத யாகங்கள் செய்த  பலனுக்கு  சமம். இன்னொன்றும்  சொல்லலாம்.  இந்த சிவலிங்க  பூஜையின்  பலனுக்கு  முன்பு,  பல  லக்ஷம்  பசுக்களை கோ தானமாகக் கொடுத்த  புண்யம் கூட ஈடாகாது.  எந்த  இல்லத்தில்  பாதரச சிவலிங்கம்  பூஜிக்கப்படுகிறதோ, அங்கு  சகல சம்பத்துகளும்  தானே கூடும். எடுத்த  காரியம்  யாவிலும் வெற்றி. சிவனே  அந்த வீட்டில்  ஒருவராக  இருக்கிறாரே.  வாஸ்து குறை பாடுகள்  எதுவும்  நெருங்காது.  பிரதி திங்கள்  அன்று  பாதரச சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வந்தால் மந்திர  தந்திர தீவினைகள்  எதுவும்  அந்த வீட்டையே அணுகாது.  லட்சோப லட்சம் சிவலிங்கங்களுக்கு செய்த  பூஜா பலன்  ஒரு  பாதரச சிவலிங்கத்திற்கு செய்த  பூஜையின்  பலனுக்கு சமானமாகும் என்று  சிவ புராணம்  சொல்கிறது. அந்த  லிங்கத்தைத் தொட்டாலே  மோக்ஷம்.

இன்னொரு விஷயம்.  சிவலிங்கத்தின்  மீது குளிர்ந்த  ஜல தாரை எதற்கு என்றால், சிவனின்  ஜடாமுடி மீது கங்கை ஆகாசத்திலிருந்து இறங்கியதை குறிக்கிறது. சிவ வழிபாட்டில் ஹோமத்தில்  இடும்  நெய், நம்மையே அந்த  சர்வ சக்திமான்  சிவனுக்கு அர்ப்பணிப்பதாகும்.   இன்று  உன்னை  நினைத்து எழுத  உட்கார்ந்தபோது  எண்ணற்ற  எண்ண  அலைகள்  மனதில்  ஓடின. ஆதி அந்தமில்லாத  அநாதி நாதா.  மங்கள தாயகா எவ்வளவுக்கெவ்வளவு நீ எளிமையானவனோ அவ்வளவுக்கவ்வளவு சக்திமான்  என்பது தெரிகிறது.  சாந்தமான  நீ  மோன நிலையில்  காணப்பட்டாலும் கண் பார்வை ஒன்றிலேயே  காலாக்னி யாக  ஊழித்தீ யாக  அழிக்கும்  தன்மையன்.


देवगणार्चितसेवितलिङ्गं भावैर्भक्तिभिरेव च लिङ्गम् ।
दिनकरकोटिप्रभाकरलिङ्गं तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥६॥

Deva Ganaarchita Sevitha Lingam Bhavair Bhakhi Bhirevacha Lingam
Dinakara Koti Prabhaakara Lingam Tatpranamaami Sadaashiva Lingam (6)

தேவகணார்சித ஸேவித லிங்கம் பாவை-ர்பக்திபிரேவச லிங்கம் |
தினகர கோடி ப்ரபாகர லிங்கம் தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 6 ||

சகல தேவர்களும் பூத கணங்களும், ரிஷிகள், முனிவர்கள், நரர்கள் அனைவரும்  போற்றி சேவிக்கும்  மகாதேவா,  பக்தி யொன்றே பிரதானமாக ஏற்கும் பரமேஸ்வரா , கோடி கோடி  சூர்யன்  ஒன்றாக கூடி  அளித்தாலும்  அந்த பிரகாசத்தை விட பல மடங்கு  ஒளி  மிக்க  ஓங்கார நாதா.  உன்னை வணங்காவிடில் பின்  யாரை வணங்குவேன் என்று  நாயன்மார்கள்  அடியார்கள் போற்றும் மனப்பூர்வ வெளிப்பாடு  நன்றாக  புரிகிறது.

sivan jaykay

unread,
Sep 21, 2023, 8:16:03 PM9/21/23
to amrith...@googlegroups.com
அறுபத்து மூவர்  -   நங்கநல்லூர்   J K  SIVAN
சோமாசிமாற நாயனார்

''அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்”

சமோசா, சமூசா , சோமாசி  என்று பல  பக்ஷண வகைகள் நமக்கு தெரியும் அளவுக்கு  சோமாசி மாற நாயனரைத் தெரியாத காரணம் யாரும் அவரைப் பற்றி நமக்கு தெரிவிக்க முன் வரவில்லை என்பதே. சிறுவயதிலிருந்தே  அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிலைகளை சிவாலயங்களில் யார் நமக்கு எடுத்துக் காட்டி  இவர் தான் அவர் என்று அவர் புராணத்தை சொல்லி இருக்கிறார்கள்.  நாமாக தெரிந்து கொள்ளாவிட்டால் பேசாமல் சமோசா, சோமாசியுடன் நிறுத்திக் கொள்வது தானே முடியும். 
அதுசரி இன்று தெரிந்து கொள்வோம். யார் இந்த சோமாசி மாற  நாயனார்?

அம்பர்நகர் அந்தணர்சோ மாசி மாறர்
    அன்பர்களாம் யாவர்க்கும் அன்பின்அமு த்ளிப்பார்
உம்பர்நிகழ் வகையாகம் பலவுஞ் செய்யும்
    உண்மையினார் ஐந்தெழுத்தும் ஓவா நாவார்
நம்பர்திகழ் திருவாரூர் நயந்து போற்றும்
    நாவலர் கோன் அடிபரவும் நன்மை யாலே
இம்பர்தொழ உம்பர்பணிந்து ஏத்த வேலை
    ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

அம்பர் பெருந்திருக்கோவில்
இறைவன் பெயர்பிரம்மபுரீஸ்வரர்
இறைவி பெயர்பூங்குழல் அம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1

சோமாசியாரை தெரிந்துகொள்வதற்கு முன் அம்பர் நகரத்தை அறிந்து கொண்டு அங்கே செல்லவேண்டும்.  மமயிலாடுதுறை யிலிருந்து  திருவாரூர்  போகும் வழியில் பூந்தோட்டம் என்ற ஒரு அழகிய ஊர்  இருக்கிறது. அதில் சரஸ்வதி தேவி இருக்கிறாள். அங்கே இருந்து 3 கி.மீ. தூரத்தில்  அம்பர்  கிராமம் இருக்கிறது. பூந்தோட் டம் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 23 கி.மீ.  பேரளம் என்ற ஊரிலிருந்து பூந்தோட்டம் வழியாக காரைக்கால் செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ.  மேலே சொன்ன அம்பர் கிராமத்துக்கு அம்பர் மாகாளம் என்ற பெயர் உண்டு.  சிறந்த பாடல்  பெற்ற ஸ்தலம். அங்கே   பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து மேற்கே 1 கி.மீ.    நான்  அரிசிலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இவ்வாலயத்திற்கு சென்ற  போது  மூன்று நிலை  ராஜகோபுரம் கண்ணில் பட்டது.  யானை ஏறமுடியாதவாறு படிக்கட்டுகள் அமைத்துச் சிறு  மலை போல் கோவில்.  கோச்செங்கட் சோழன்  காலத்திய  கிழக்கு பார்த்த மாடக்கோவில்.  இராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் பெரிய  வெற்றிடம்.  சுதையாலான பெரிய நந்திகேஸ்வரர்  சிவனை நோக்கி இருக்கிறார். இடது பக்கம் உள்ள  கிணறு தான் "அன்னமாம் பொய்கை". பக்கத்தில் சிவலிங்க மூர்த்தம். பிரம்மா இக்கிணற்றுத் தீர்த்தத்தில் நீராடி, பக்கத்தில் உள்ள சிவலிங்கமூர்த்தியை வழிபட்டு அன்ன வடிவம் பெற்ற சாபம் நீங்கப்பெற்றார் என்பது ஸ்தல புராணம். 

கிழக்கு மதில் சுவர் மாடத்தில் கிழக்கு நோக்கித் தல விநாயகரான படிக்காசு விநாயகர் தரிசனம் தருகிறார்.  அடுத்தடுத்து மூன்று சிறிய விநாயக மூர்த்தங்கள்.   ப்ரஹாரத்தில்  உள்ள விநாயகர் சந்நிதியிலும் மூன்று பிள்ளையார் விக்ரஹங்கள். சுப்பிரமணியர், மகாலட்சுமி, ஜம்புகேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன.   நின்றபடி  தரிசனம் தரும் அம்பாள்  சுகந்த குந்தலாம்பாளுக்கு  தனி சந்நிதி. வெளியில் இருபுறமும் ஆடிப்பூர அம்மன் சந்நிதியும் பள்ளியறை.  ப்ரதக்ஷிணம் வந்து படிகளேறி மேலே சென்றால் சோமாஸ்கந்தர் சந்நிதியும் மறுபுறம் விநாயகர், கோச்செங்கட் சோழன், சரஸ்வதி, ஞானசம்பந்தர், அப்பர் ஆகிய மூலத்திருமேனிகளும் உள்ளன. துவாரபாலகர்களையும் விநாயகரையும் வணங்கிச் சென்று சிறிய வாயில் வழியாக உள்ளே  இருக்கிற  ஸ்வயம்பு  பிரம்மபுரீஸ்வரரை  தரிசிக்கலாம். வலதுபுறம் நடராஜனுக்கு  சபை.   கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா  அருள் பாலிக்கிறார்கள். 

அம்பன், அம்பரன் என்ற இரு அசுரர்கள்   இங்கே  சிவனை பூஜை செய்து இறவா வரம் பெற்றனர். அவர்கள் வழிபட்டதால் இத்தலம் அம்பர் எனப் பெயர் பெற்றது. அம்பன், அம்பரன் ஆகிய இருவரும்  மற்ற  ராக்ஷசர் களைப் போலவே  தவமிருந்து  பெற்ற  பலத்தால் உலகிற்கு தேவர்களுக்கு எல்லாம்  தொந்தரவு கொடுத்தார்கள்.  தேவர்கள் வழக்கப்படி சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். பார்வதியை அனுப்பினார்  சிவன்.   அவள் காளியாக உருமாறி,  கன்னி உருவெடுத்து அவர்கள் முன்  வந்தாள் . ராக்ஷர்கள் அம்பன் , அம்பன் ரெண்டு பேருமே   அவளை சாதாரணப் பெண் எனக்கருதி  அவளை அடைய சண்டையிட் டனர். இருவருக்கும் இடையில் நடந்த சண்டையில்  அம்பன்  இறந்தான். அம்பரனைக் காளி கொன்றாள். காளி அம்பரனைக் கொன்ற இடம் தான் அம்பகரத்தூர். 

63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார்  என்கிற  பிராமணர்  பிறந்த  ஸ்தலம் இது.  சிறந்த சிவபக்தர்.  இவருக்கு சோமயாகம் செய்ய வேண்டும் என்ற ஒரு  ஆசை.  அதுவும் யாகத்தின் அவிர்பாகத்தை சிவபெருமானே நேரில் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என விருப்பம்.  
 சோமாசி மாறருக்கு யாகத்தீயில் தாம் பூஜிக்கும் பழங்கள், வஸ்திரங்கள், நைவேத்ய பொருள்கள் போன்றவற்றைச் சிவனாரே நேரில் வந்து பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது. சோம யாகங்கள் பண்ணுவதில் ஆர்வம் என்பதால் அவர் பெயரே  சோமாசிமாறன் என்று ஆகிவிட்டதாம்.

சிவபெருமானை  நேரில் கண்டு அழைக்க முடியாதே என்ன செய்வது?  சிவபெருமானிடம் தூது செல்ல அவரது அன்புக்கு பாத்திரமான சுந்தரராரிடம் நட்பு கொள்ள வேண்டும் என்றும் நினைத்தார். எம்பெருமானுக்கும், சுந்தரருக்கும் இருக்கும்  தோழமை  அவருக்கு தெரியுமே. முதலில்  சுந்தரரின் நட்பை  பெறுவது எப்படி? சுந்தரருக்கு தூதுவளை கீரை பிடிக்கும் என்று  கேள்விப்பட்டு   தூதுவளைக்கீரையைத் தினமும் பறித்து கொடுத்து அதன் மூலம் நட்பை வளர்க்கலாம் என்றுஎண்ணினார்.  தினமும்  ஆற்றில் குளிக்கும்போது அடுத்த  கரைக்கு நீந்திச்சென்று தூதுவளைக்கீரையைப் பறித்துவந்து சுத்தம் செய்து சுந்தரருக்கு கொடுத்து அனுப்பினார்.    யார்  தனக்கு தினமும்  பிடித்த தூது வளைக்கீரை அனுப்புகிறார் என்று அறிய  சோமாசி மாற நாயனாரைப் பார்க்க சுந்தரர் வந்தபோது அவரிடம்  எப்படியாவது  தான் நடத்தும்  சோம யாகத்திற்கு   பரமேஸ்வரனை அழைத்து வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். 

 சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும்  ஒப்புக்கொண்டார். ஆனால்  தான்  எந்த வேடத்தில் வருவேன் என்பது ரகசியமாக இருக்கும்   அதை ஏற்பதானால்  தான்  வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்திற்கு வருவதாக வாக்களித்தார்  பரமேஸ்வரன்.

இறைவனே நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது. நான்கு வேதங்களை நான்கு நாய்களாக மாற்றி, இறந்த ஒரு கன்றினை சுமந்தபடி நீசனைப் போல் உருமாறி வந்தார் சிவன். அவருடன் பார்வதி தேவி தலையில் மதுக்குடத்துடன் வந்தாள். கீழ்சாதிப் பிள்ளகள் போல் உருமாறிய பிள்ளையாரும், முருகனும் அவர்களுடன் வந்தனர். இவர்களை அடையாளம் தெரியாததால், யாகத்தில் ஏதோ தவறு நடந்து விட்டதாகக் கருதி வேதியர்கள் ஓடிவிட்டனர். சோமாசிமாற நாயனார் இறைவன் வருவார் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் இவ்வாறு நீசன் ஒருவன் குடும்பத்தோடு வந்திருக்கிறானே என்று வருத்தப்பட்டார். உடனே விநாயகர் தன் சுயரூபத்தில் சோமாசிமாறருக்கும், அவர் மனைவிக்கும் காட்சி தந்து, வந்திருப்பது சிவன் என்பதை உணர்த்தினார். மகிழ்ந்த சோமாசிமாறர் சிவனாகிய தியாகராஜருக்கு அவிர்பாகம் கொடுத்து சிறப்பு செய்தார். தியாகராஜரும் நீசக்கோலம் நீங்கி, பார்வதி சமேதராக சோமசிமாறருக்கு காட்சி கொடுத்து அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.

 சோமாசிமாறர் யாகம் செய்த இடம் அம்பர் பெருந்திருக்கோவிலில் இருந்து அம்பர் மாகாளம் செல்லூம் சாலை வழியில் சாலையோரத்தில் உள்ளது.  அம்பல் அல்லது அம்பர்  பிரம்மபுரீசுவரர் கோயில் (அம்பர் பெருந் திருக்கோயில்) காவிரி தென்கரைத் தலங்களில் 54ஆவது சிவஸ்தலம்.  பூந்தோட்டம் செல்கிறபோது அவசிய அம்பர் மாகாளம் சென்று  பிரம்மபுரீஸ்வரரை  சுகந்த குந்தளாம்பிகையையும்  சோமாசிமாற நாயனாரையும் தரிசிக்க  பிளான் போடுங்கள். https://youiandkrishna.org/21/09/2023/arupaththu-moovar-j-k-sivan-10/


sivan jaykay

unread,
Sep 21, 2023, 8:16:03 PM9/21/23
to amrith...@googlegroups.com
ஸூர்தாஸ் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

 பவ சாகர படகோட்டி

ஸூர்தாசருக்கு ஒரு சௌகர்யம்.    சுற்றியுள்ள மனிதர்களோ, உலகமோ கண்ணில் பட்டு தொந்தரவு செய்யாது. இருண்ட வெளியுலகு என்றாலும் வெளிச்சமான உள்ளுலகம். அங்கு எல்லாம் கண்ணைப்பறிக்கும் இயற்கை வளம்.   அவரது அகக்கண்ணில்  எல்லாமே அழகிய  பிருந்தாவனமாக காட்சி அளிக்கிறது. அங்கே  விளையாடிக்கொண்டு அந்த கண்ணன்  எனும் சுட்டிப்  பயல் வேறு இருக்கிறானே! இப்படி ஊனக்கண்ணின்றி ஆனந்தமாக வாழ்ந்த சூர்தாஸரின் ஒரு பாடல் இன்று ரசிப்போம்.

''கிருஷ்ணா ஒரே ஒரு வேண்டுகோள். நான் சுத்தமானவன் இல்லை. என் மனதில் எத்தனையோ கோணல் மாணல் எண்ணங்கள். விபரீதங்கள். எவ்வளவோ முயற்சித்தும் எப்படியோ உள்ளே புகுந்து என்னை குடை குடை என்று குடைகிறது. யாரிடம் மறைத்தாலும்  அதை 
 உன்னிடம் மறைக்க முடியாதே. நீ தான் எதிலும் எங்கும் எப்போதும் நிறைந்தவனாயிற்றே. ஆகவே தான் தயவு செய்து  என் குறைகளை எல்லாம் லக்ஷியம் பண்ணாதே. உன்னை சமதர்ஸி என்பார்களே. நல்லது கெட்டது எல்லாம் ஒன்றே தானே உனக்கு. அப்படியே என்னையும் பார்த்துவிடு.
சாக்கடை நீர்  கங்கை நீர் எல்லாமே ஒன்றாக கடலில் கலந்த பின் கங்கை எது, கழிவு நீர் எது? எல்லாம் சாகரம். நீ அப்படிப்பட்ட கருணா சாகரமல்லவா? நீ குடி புகுந்த பின் என் மனத்தில் கெட்டது எது? எல்லாமே நீ யான பின் எல்லாம் நல்லதாகமட்டுமே தானே இருக்க முடியும்!.

இரும்பு எல்லாமே ஒன்று தான். ஒன்று நம் வீட்டில் பூஜை அறையில் வைத்திருக்கும் விளக்கு சங்கிலி. இன்னொன்று ஆடு மாடுகளை வெட்டும் கத்தி. ரெண்டையும் கொண்டுவந்து தங்கமாக்கும் மந்திரக் கல்லில் தேய்த்தால் ரெண்டுமே தங்கமாகி  விடுகிறது அல்லவா?. அதே போல் தான் அப்பா,   என் மனதில் உள்ள அநேக தீய எண்ணங்களும் ஒரு சில நல்ல எண்ணங்களும்.    நீ வந்து குடிபுகுந்தபின் எல்லாமே தங்கமயம். எல்லாமே உயர்ந்த உன் மீதான எண்ணம் ஆகிவிடுமே..

ஆகவே என் குறைகளை மன்னித்து என்னை உன் திருவடி நிழலில் எந்நேரமும் இருக்க அருள்புரிவாய். இன்னொன்று கட்டாயம் உன்னைக் கேட்டு தான் ஆகவேண்டும். அது நிறைவேறும் வரை உன்னை நான்  விடமாட்டேன். விடப்போவதுமில்லை. 

இதோ பார் என் ஆணவத்தால் என்னால் இந்த சம்சார சாகரத்தை கடக்க இயலாது. இந்த பவ சாகரத்தை நீல மேக சியாமளா,  நீ தான் நான் கடக்க உதவ வேண்டும். உன்னைத்தவிர வேறு படகோட்டி யாரப்பா? நீ தேரையும்  ஓட்டுவாய் பாரையும் ஓட்டுவாய். படகு மட்டும் ஓட்டமாட்டாயா என்ன?.

 நான் தான் கேள்விப் பட்டேனே கண்டசாலா பாடி. ''ஆஹா இன்ப நிலாவினிலே''.... எவ்வளவு அழகாக  நீ  படகோட்டினாயாம்.   https://youiandkrishna.org/21/09/2023/surdas-j-k-sivan-4/
 .
அந்த அற்புத சூர் தாஸ் பாடல் இது தான்:

Prabhu more avagun chit na dharo
samdarshi hai naam tiharo chahe to paar karo
ek nadiya ek naar kahave mailo neer bharo
jab dou mil ke ek baran bhaye sursari naam paryo
ek loha pooja mein raakhat ek ghar badhik paryo
paaras gun avagun nahi chitvat Kanchan karat kharo
ek jeev ek brahma kahave Sur Shyam jhagaro
abki ber mohi paar utaaro nahi pan jaat taryo


sivan jaykay

unread,
Sep 22, 2023, 8:25:38 PM9/22/23
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம்   ---   நங்கநல்லூர்  J K  SIVAN 

 திருச்சிலே  போய்  இரு .

நேற்று காலை  அனுஷ நக்ஷத்ரம் என்று காலண்டர் காகிதம் நினைவுறுத்தியதும் மஹா பெரியவா பற்றி ஏதோ என் நினைவுக்கு வந்ததை எங்கோ படித்ததை எழுதி வைத்தேன். நண்பர்களுக்கு  முகநூல், வாட்ஸாப்ப்,  டெலெக்ராம், வலைதளம் இதிலெல்லாம் பதிவிட மறந்து போயிருக்கிறேன்.  வயதானால் இதெல்லாம் நேரும் போல் இருக்கிறது. 

இன்று  பேங்க்ல  ஒரு  இளம்  வயதினள்  எனக்கு   பணம் காட்டும் சலான் எழுதிக் கொடுக்க முன்வந்தாள். எனக்கு அவள் உதவி தேவைப்பட்டதன்  காரணம்  அந்த  பேங்க் செலான்  ரொம்ப ரொம்ப  பொடி  எழுத்துக்களாக  அச்சடிக்கப் பட்டிருந்தது? ஏன் இப்படி செயகிறார்கள், வயதானவர்கள் கண் பார்வை குறைந்தவர்கள் எப்படி அதை படிப்பார்கள்?  காகிதம் கொஞ்சம் பெரிதாக இருந்தால் என்ன, எழுத்துக்கள் பெரிதாக இருந்தால் என்ன? இதெல்லாம் யார்  கவனிக்கிறார்கள்.  அந்த பெண்ணை நீ என்ன படித்திருக்கிறாய் என்று கேட்டேன்.MSC  இன்ஜினியரிங்  என்றாள் . தூக்கி வாரிப்போட்டது.  இது தான்  நிலைமையா இப்போது? அவள்  செய்யும்  இந்த வேலைக்கு  10வது வரப்பிற்கு படித்தாலே  போதுமே.  வேலை வாய்ப்பு இந்த நிலையிலா இருக்கிறது?  பலரது படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லையே.  பிழைக்க வயிறு கழுவ, ஏதோ ஒரு வேலையா?  என்று இந்த தேசத்தில் அவரவர் படிப்புக்கு ஏற்ற  உத்யோகம் 
கிடைக்கும்?

 எங்கள்  காலத்தில்  வேலைக்கு  பஞ்சமில்லை.  நூற்றில்  தொண்ணுறு பேர்   sslc  படித்தவுடனே, குறுக் கெழுத்து  தட்டச்சு  கற்றுக்கொன்று  ஓரிரு  வருடங்களில்  higher   என்கிற  மேல்  நிலை தகுதி பெற்றவுடன்  வேலை  அவர்களுக்கு  தானாகவே  கிடைத்தது.  அரசாங்க உத்தியோகங்களைவிட  தனியார்  துறையில்  வேலை  கிடைப்பது  நம்பிக்கை யூட்டியது.  வேலை  கடினமாகத்தான்  இருந்தது.  நேரம் அதிகம்  செலவழிக்கவேண்டியிருந்தது.  பிழிந்தெடுப்பது  என்றால்  என்ன  என்று  புரிந்தது. ஆனால்  செய்த வேலைக்கு  திருப்தியாக  அந்த  கால  வரை முறைக்குத்  தக்க  ஊதியம் கிடைத்தது.  கிளைக்கு  கிளை  குரங்கு தாவுவது போல்  அடிக்கடி  அதிக சம்பளத்துக்கு  வேலையும்  தனியார்  துறையில்  தாவ  முடிந்தது.   எனக்கு  இந்த  அனுபவம் இருந்தது.   எங்கோ  படித்ததில் சில விஷயம் இப்போது  சேர்த்துக்கொள்கிறேன்.

ஒருவர்   தனியார் ஆபீஸில் தன்னுடைய பதினெட்டாவது வயஸில், shorthand, typewriting, SSLC certificates உடன் வேலைக்கு சேர்ந்தவர், ஐம்பத்தெட்டாவது வயஸில் retire ஆகி வீட்டில் உட்கார்ந்தார் ஒரு  மஹா பெரியவா  பக்தர். அவர் வஹித்த பதவி, அவருக்கு ஏகப்பட்ட பணம், செல்வாக்கு எல்லாவற்றையும் கொடுத்திருந்தாலும், அவருடைய உள் மனஸில் வெறும் சூன்யமாகவே இருந்தது. வேலை, வேலை என்று உயிரைக் குடுத்து உத்யோகம் பார்த்ததில், "நான் யார்?" என்று அரை நிமிஷம் கூட சிந்திக்காமல் விட்டுவிட்டார். அதன் பலன்? retire ஆனதும், அத்தனை நாள் மாங்கு மாங்கென்று எந்தக் கம்பெனிக்காக உழைத்தாரோ, அந்த routine, நண்பர்கள்,எல்லாமே ஒரு நொடியில், ஒரு பிரிவுபசார பார்ட்டியோடு அவரை வாசலுக்கு வெளியே  தள்ளிவிட்டு மறந்து போய்விட்டது. !

பெற்ற பிள்ளையும் மாட்டுப்பெண்ணும் வேறு  ஊரில்  வடக்கே  இருந்தார்கள். அங்கேயெல்லாம் போனால், போய் இறங்கின அன்று இருக்கும் மரியாதையும் உபசரிப்பும், நாலு நாளைக்கு மேல் நீடித்தால், அது அவர் செய்த பாக்யம்!   மருந்தும் விருந்தும்  மூன்று  நாள்   என்று  அனுபவித்துத்  தானே  பெரியோர்கள்  சொல்லியிருக்கிறார்கள்.

பிள்ளைக்கு   நல்ல உத்தியோகம்; ரொம்ப நல்லவன்; ஆனால், என்ன ப்ரயோஜனம்? மாட்டுப்பெண்ணும் நல்லவள்தான்....யாருக்கு? பிள்ளைக்கு! பெற்றவர்களை ஒதுக்கி விட்டு, பிள்ளையை மட்டும் தன்னுடைய குடும்பமாக நினைப்பவள்; பிறந்த வீட்டார் மேல் அபரிமிதமான கரிசனம்; இப்படி இருக்கும் வீட்டில் தான் போய் அதிக நாட்கள் தங்கினால், இப்போதிருக்கும் பேச்சு வார்த்தை கூட அறுந்து போய்விடும் என்று அப்பா  தயங்கினார். யார் வழி காட்டுவார்கள்?

"நீனே அநாத பந்து" என்று  மஹா பெரியவாளுடைய திருவடியில் வந்து விழுந்தார். மனசுக்குள், எங்கே போவது? யாருடன் தங்குவது? ஜன்மாவை கடைத்தேற்றிக் கொள்ளாமல் ஐம்பத்தெட்டு வர்ஷம் கோட்டை விட்டாச்சு!....என்று ஒரே குழப்பம். எதுவுமே பேசாமல் நமஸ்காரம் பண்ணிவிட்டு ஒரு ஓரமாக நின்றார்.

காஞ்சியில்  மஹா பெரியவா கடாக்ஷம்  அவர்  மீது  விழுந்தது.  தலை  ஆடியது.  ..... முதியவர்  உடனே பெரியவா  அருகில் வந்து மிகவும் பவ்யமாக,

"பெரியவா அநுக்ரஹத்ல அனேகமா எல்லா க்ஷேத்ரங்களும் தர்சனம் பண்ணிட்டோம். போனவாரம் தலைக்காவேரி போயிட்டு, அப்டியே காவேரிப்பூம்பட்ணம் போய்ட்டு வந்தோம்..."
"காவேரி உற்பத்தி ஸ்தானத்லயும், சங்கமத்துலேயும் ரொம்ப குறுகலாத்தானே இருக்கு?"
"ஆமா  பெரியவா ....."
"காவேரி, ரொம்ம்...ம்ப அகலமா இருக்கற மத்ய ஸ்தானத்துக்கு என்ன பேரு?"
"அகண்ட காவேரி"
"அது எங்க இருக்கு தெரியுமா?"
"திருச்சி பக்கத்ல ..."
"அந்த ப்ரதேசத்துக்கு என்ன பேரு?"
பக்தர் முழித்தார்!.....
"மழநாடு...ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?"
"எங்க தாத்தா சொல்லுவார்"
"காவேரி தீரம்தான் மழநாடு; ரொம்ப ஆசாரக்காரா இருந்த நாடு; ஒன்னோட தாத்தா இருந்த எடம்"

பக்தருக்கு இதெல்லாம் எதுவுமே தெரியவில்லை. நெளிந்தார். ஆஹா! அடுத்து  மஹா பெரியவா, இவர் எதுவும் சொல்லாமலேயே, இவருடைய குழப்பத்தை தீர்த்து வைத்தார்!

"நீ  கிளம்பி போய்  திருச்சில ஜாகை வெச்சுக்கோ! தெனோமும் ஒரு கோவிலுக்கு போ! உச்சிப் பிள்ளையார், மாத்ருபூதேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, ஜம்புலிங்கம்,ஸ்ரீரங்கம் ரங்கநாதர், வயலூர் முருகன், குணசீலம் ஸ்ரீநிவாஸ பெருமாள்....இப்டியா தர்சனம் பண்ணிண்டு இரு!"

" பேசும்  தெய்வம்''  என்று எழுதுகிறீர்கள்  தெய்வம்  பேசுமா?"...என்று சந்தேஹம் வருபவர்களுக்கு, இதோ! தெய்வம் பேசுகிறது! என்று உண்மையான மஹான்கள் முன்னால் கொண்டு போய் நிறுத்தி விடலாம். கண்களில் நன்றிக் கண்ணீரோடு நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவா சொன்னபடி திருச்சியில் ஜாகை பார்க்கச் சென்றார். மலைக்கோட்டை தெருவில் அம்சமான வீடும் கிடைத்தது! பெரியவா சொன்னபடி தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டபடியால் கட்டாயம் "வீடு பேறும்" கிடைக்கும்.  நம்பிக்கை தான்  வாழ்க்கைக்கு மூலதனம். 

sivan jaykay

unread,
Sep 22, 2023, 8:25:50 PM9/22/23
to amrith...@googlegroups.com

கிருஷ்ண  த்வைபாயானர்.  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
   
அவரை மாதிரி  இன்னொரு  மகரிஷியை  நினைத்துப் பார்க்கவே கூட முடியாது. அடேயப்பா. என்ன அசுர வேகமாக  எண்ணற்ற  ஆயிரம்  ஸ்லோகங்களைப்   பாடி எழுதி இருக்கிறார்.   வேதங்களை  அலசி பகுத்து நான்காக  பண்ணி கொடுத்திருக்கிறார்.  அதனால் தான் அவர் பெயர்  வேத வியாஸர் என்று மனதில் நின்று இயற் பெயர்  மறந்து போய்விட்டது.  அவருடைய மற்ற பெயர்கள்  கிருஷ்ண த்வைபாயனர் , பாதராயணர் .  அவர் பெயரில் பாதராயண கோத்ரம்  இருக்கிறது. அதில் என்னுடைய  நண்பர்கள், உறவினர்கள் பலர், தவிர   மற்றவர்களும்  இருக்கிறார்கள்.  எல்லோருக்கும் நமஸ்காரம். பகவானின் அவதாரம் வியாஸர் .

 ராமாயணம்,  பாரதம், பாகவதம், கீதை,  புராணங்கள் இன்னும் எத்தனையோ தந்தவர். அளவற்ற  ஆன்மீக  தெய்வீக செல்வங்களை வாரி வழங்கியவர். நாம் எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள், செல்வந்தர்கள். செல்வம் இருந்தும் அனுபவிக்கத்   தெரியாதவர்கள்.  

வியாஸரின்  புத்திரர்  சுகப்பிரம்ம ரிஷி. அப்பா எட்டடி என்றால் பிள்ளை பதினாரடி பாய்பவர். நைமிசா ரண்ய வனத்தில் ரிஷிகளுக்கு  அவரும்  சௌனகரும் சகலமும் சொல்லிக்  கொடுத்தவர்கள் .  பரீக்ஷித் மகாராஜாவுக்கு சுகர்  உபதேசித்தது ஸ்ரீமத் பாகவதத்தில் சில அருமையான பகுதிகள்.   சப்தாஹமாக  வருஷா வருஷம்  பலரால்  அனுஷ்டிக்கப்படுவது. அப்பா எழுதிய  மஹா பாரதத்தில் விட்டுப்போனவை. தொடர்ச்சி என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.   எல்லாமே இப்போது நமக்கு அழகான புத்தகங்களாக  கிடைத்துவிட்டது.  புத்தகம் கூட வேண்டாம்.  வாட்ஸாப்ப்  யூட்யூபில் கூட படிக்கலாம், கேட்கலாம், எழுதலாம், பாடலாம்.  
பகவானின் அவதார அனுபவமாக தான்  ராமாயணம்  மஹாபாரதம், பாகவதம் எல்லாம் அறிகிறோம். பக்தி வளர்கிறது. ஆன்மிகம் செழிக்கிறது. சனாதனம் புரிகிறது.  ரெண்டு ரிஷிகளும்  ப்ரம்ம ஞானிகள். 

சூத பௌராணிகருக்கு இன்னொரு பெயர்  உக்ரஸ்ரவஸ்.  இவர்  ரோம ஹர்ஷண ரிஷியின்புதல்வர்.  மஹா பாரதம்,  புராணங்கள் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்து எல்லோருக்கும் சொன்னவர். வியாசர் தலைமை யில் அவர்  ஏனைய  ரிஷிகளுக்கு  நிகழ்த்திய  உபதேச  பிரசங்கங்கள் தான்  நைமிசாரண்யத்தில் எதிரொ லித்தது.  இந்த சூத  பௌராணிகர் சுக ப்ரம்மம் கங்கைக்கரையில் பரீக்ஷித் மகாராஜாவுக்கு ஸ்ரீமத் பாகவதம் எடுத்துச் சொன்னபோது கூட இருந்து கேட்ட  ஒரு மஹரிஷி.  

சில  ரிஷிகள்  வியாசரை சில கேள்விகள் சட்டென்று  கேட்டபோது பட்டென்று அவர் சொன்ன பதில் இது:'

''மகரிஷி,  உலகில் ஜனங்களுக்கு  எது ஸ்ரேயஸ்  அதாவது  மன நிறைவு தரும்?''
''வேறென்ன , பகவான் மேல் பக்தி அதனால்  கிடைக்கும்  மனத்தூய்மை தான்''
''சாஸ்திரங்கள் சொல்வதின் தாத்பர்யத்தில் எது மனதை தூய்மை படுத்தும்?''      
''உண்மையான  பக்தி''
''பகவான் ஏன் கிருஷ்ணன் அவதாரம் எடுத்தார்?""
''ஜனங்களோடு ஜனங்களாக இருந்து லோக க்ஷேமம் பண்ண அப்படி ஒரு ஆசை. ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்கள் எல்லாமே  துஷ்ட நிக்ரஹ சிஷ்ட  பரிபாலனம் தானே.''
''கிருஷ்ணனின் விளையாட்டுகள்  எது?''
''எதெல்லாம்  உலகில் ஜனங்களை நல்வழிப்படுத்தி  நல்லோரை பாது காக்குமோ அதெல்லாம் தான் ''
''மத்ஸ்யாவதாரம் மற்ற அவதாரங்களின்  காரணம் என்ன?''
''ப்ரளயத்துக்குப் பிறகு  பிரபஞ்சத்தை  உருவாக்குவது அதை பராமரித்து ,பாதுகாப்பது''
''கிருஷ்ணனின் அவதாரம் முடிந்த பிறகு தர்மம் எதை தஞ்சம் அடைகிறது''
''ஸ்ரீமத் பாகவதம் புராணங்களின்  வாக்குகளில் தர்மம் உறைகிறது. அவற்றை நாம் அனுசரித்து பின் பற்றவேண்டும்''

இன்னும் சில எண்ணங்கள்  மனதில் அப்பப்போ  தோன்றும்போது அடுத்த பதிவு இடுகிறேன். https://youiandkrishna.org/22/09/2023/vedha-vyasa-j-k-sivan/

sivan jaykay

unread,
Sep 23, 2023, 8:39:31 PM9/23/23
to amrith...@googlegroups.com

தோட்ட கோபிநாதன்.  -    நங்கநல்லூர்  J K  SIVAN 

பாரத தேசத்தில் எங்கு திரும்பினாலும் ஏதோ ஒரு அதிசயம்   ஆச்சர்யம்  நமக்காக காத்திருக்கும் என்று சொல்லலாம். அவ்வளவு சிறந்த  ஆன்மீக பூமி பாரதம். இதுபோல் வையத்தில் வேறெங்கும் இல்லை என்று பாடியவர்கள் அனுபவஸ்தர்கள். ஒரு கோவிலைப் பற்றி சொல்கிறேன். அதை அநேகர்  அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தோட்டா என்று ஒரு ஊர்   அங்கே  ஒரு கிருஷ்ணன் கோவில். கோபிநாதன் என்று கிருஷ்ணனுக்கு பெயர். ரொம்ப அழகானவன்.  சரி  இதில் என்ன ஆச்சர்யம் என்றால்.  இங்கே தான் கிருஷ்ணன்  சப்பளிக்க  கால்களை மடக்கிக்கொண்டு  நாதஸ்வர வித்துவான் போல் உட்கார்ந்து கொண்டு புல்லாங்குழல் ஊதுகிறான்.  எங்கேயும் கால்களை பின்னிக்கொண்டு நின்று கொண்டு ஊதும் கிருஷ்ணனைத்தானே  நமக்கு தெரியும்.  சைதன்ய மஹா பிரபு  இங்கே வந்து  கிருஷ்ணனைப் பார்த்து  மயங்கி இருக்கிறார். 

தோட்டா  எங்கே இருக்கிறது?    ஒரிஸ்ஸா, ஜெகந்நாத பூரி யில். கௌர்பத் சதக் பர்பத் புருஷோத்தம  கௌடியா மட ஆலயத்திலிருந்து  பொடி நடையாக  ஐந்து ஆறு நிமிஷம் நடந்தால்  யாமேஸ்வர தோட்டா எனும் சிறிய  ஊரில் இந்த கிருஷ்ணனை பார்க்கலாம்.  தோட்டா கோபிநாத்  ஆலயம் என்று பலகை தெரியும். வாசலில் ரெண்டு கல் சிங்கங்கள் வரவேற்கும். 

அங்கே ஒரு  சின்ன கச்சேரியே  நடக்கிறது. கிருஷ்ணன் ஸார்  புல்லாங்குழல். ராதிகா  அம்மா கையில் கச்சபி  வீணை.  லலிதா சகி என்னும் தோழி பின்பாட்டு புல்லாங்குழல்.  கிருஷ்ணனுக்கு இடமும் வலமும் இந்த  வித்வான்கள். 

கிருஷ்ணனுக்கு  ஜோடியாக  ராதிகாவும் லலிதாசகியும் கூட  கருப்பு நிறத்தவர்கள். எல்லோருமே  டான்ஸ்  ஆடுபவர்கள் என்பதால் ஒரு  நளினம். 

இன்னோரு பக்கம்  பலராமன்  மனைவி ரேவதியோடு வாருணியும்  ரசிக்கிறாள்.   கௌர கதாதரர் அடுத்த பக்கம்  ராதா மதன  மோஹனனோடு நிற்கிறார்.  உலகத்தில்  எவன்  மிகச்சிறந்த  நாஸ்திகனோ அவனை இங்கே கொண்டு வந்து   கோபிநாதன் முன்பு  நிறுத்தினால் அடுத்த கணமே  அவன் பரம கிருஷ்ண பக்தனாகி விடுவான் என்று சொல்லும் அளவிற்கு கிருஷ்ணன் மனதை கவர்கிறான். 

இந்த அதிசயத்திற்கு மூல காரணம் கதாதர பண்டிதர் தான்.  அவர்  தினமும் மத்தியானம் இங்கே வந்து  கிருஷ்ணன் முன்னால்  நின்றுகொண்டு  ஸ்ரீமத் பாகவதத்தை  பாராயணம்  பண்ணுவார்.  சைதன்யரும்  இங்கே வந்து ப்ரஹ்லாத துருவ சரித்திரங்களை நூறு தடவை  சொல்லுவார். 

கிருஷ்ணனுடைய  பிரிவை  சைதன்யரால் தாங்க முடியவில்லை.  எங்கே என் கிருஷ்ணன் மஹா பிரபு என்று தேடுவார்.  கத்துவார்.  பின்னால் தோட்டத்தில் பூமியை தோண்டி அங்கே இருக்கிறானா என்று பார்ப்பார். அப்படி தோண்டும்போது கிருஷ்ண விக்ரஹ  சிலையின்  தலை தெரிந்தது. சைதன்யருக்கு   பரம சந்தோஷம். 

''கதாதாரா, இதோ பார்  எனக்கு கிடைத்த  ஒரு அதிசயத்தை.உனக்கு வேணுமா?'', என்று  கிருஷ்ணன் சிர  விக்ரஹத்தை  காட்டினார் சைதன்யர்.  முழுதும் தோண்டினார்கள். முழு  கோபிநாதன் கிடைத்தான். தோட்டத்தில் கிடைத்ததால்  தோட்டா கோபிநாத். இங்கே  இவனுக்கு சின்னதாக ஒரு கோவில் காட்டுவோம். இனிமேல்  கதாதர  பண்டிதா  நீ தான் அர்ச்சகன்''

ஒரு முக்கியமான கேள்விக்கு பதில் இனிமேல் தான் வரவேண்டும்.  நின்றிருந்த கோபிநாதன் எப்படி காலை பத்மாசனம் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான்?

47 வயதே  ஆனாலும் கதாதர பண்டிதருக்கு  வியாதியின் காரணமாக  முதுகு கூன் விழுந்துவிட்டதே என்ன செய்வார்?   கையைத்  தூக்க முடியவில்லை. கோபிநாதனுக்கு  அலங்காரம் பண்ணமுடியவில்லை.  நின்றுகொண்டிருக்கும் கோபிநாதனுக்கு நெற்றியில் எப்படி சந்தனம் வைப்பது? எப்படி அவன் கழுத்தில் மாலை சாற்றுவது?  கதாதர பண்டிதர்  தீவிரமாக சிந்தித்தார். மன வருத்தத்தோடு  வேறே  யாராவது ஒரு அர்ச்சகரை நியமித்து  அலங்காரம் மாலை எல்லாம் அழகாக கோபிநாதனுக்கு அணிவிக்கலாம் என்று தோன்றியது.   தேட ஆரம்பிக்கும் முன்னாலேயே  கனவில் கோபிநாதன் வந்துவிட்டான். 

''கதாதரா, என்ன யோசனை, வேறு யாரும் எனக்கு  அர்ச்சனை பண்ணவேண்டும். நீயே பண்ணு . உனக்கு என்ன ப்ராப்ளம்.?

''கோபிநாத பிரபு, நான் என்ன செய்வேன். என்னால் நிற்க முடியவில்லை. கை  எட்டவில்லையே?''
''இது தான் உன் பிரச்னையா?  நாளை முதல்  நான் உனக்கு கை  எட்டும் அளவுக்கு என்  உயரத்தை குறைத்துக் கொள்கிறேன். நீ அர்ச்சனை அலங்காரம் பண்ணிக்கொண்டே  பாடினால் தான் எனக்கு பிடிக்கும்''  என்றான் கோபிநாத்.

கனவு கலைந்து  மறுநாள் கதாதர பண்டிதர் கோவிலுக்கு சென்றபோது  அதிசயம் காத்துக் கொண்டிருந்தது.  கோபிநாதன் சப்பளிக்க பத்மாசனம் போட்டு கைக்கு எட்டுமளவுக்கு உயரம் குறைந்து உட்கார்ந்து கொண்டிருந்தான்.  உலகத்திலேயே உட்கார்ந்துகொண்டு  ஊதும் கிருஷ்ணன் இவன் தான்.  கதாதர பண்டிதர்  தோட்ட கோபிநாதன் முழங்கால் வழியாக அவனோடு  ஐக்கியமாகி விட்டார். அர்ச்சகர் இதற்கு அடையாளமாக  கோபிநாதன் முழங்காலில்  ஒரு  தங்கமயமான  வடுவை,  கீரலை,  அடையாளம் காட்டுகிறார். 

பூரி ஜெகந்நாதரை தரிசிக்கும் சந்தர்ப்பம் எனக்கு இன்னும் கிட்டவில்லை. ஒருநாள் தோட்ட கோபி நாத னையும் தரிசிக்க வேண்டும். எல்லாம் அவன் அனுக்ரஹம் இருந்தால் தானே நடக்கும்.  https://youiandkrishna.org/23/09/2023/thota-gopinath-temple-j-k-sivan/

sivan jaykay

unread,
Sep 24, 2023, 8:16:06 PM9/24/23
to amrith...@googlegroups.com
HEAR  WHAT  SWAMIJI SAYS:   -     J K SIVAN 
Swami Vivekananda  

The Hindus believe that creation has come out of the Vedas.
 How do you know there is a cow?
 Because the word cow is in the Vedas.
 How do you know there is a man outside? 
Because the word man is there. If it had not been, there would have been no man outside. That is what they say. Authority with a vengeance! And it is not studied as I have studied it, but some of the most powerful minds have taken it up and spun out wonderful logical theories round it. They have reasoned it out, and there it stands — a whole system of philosophy; and thousands of the brightest intellects have been dedicated through thousands of years to the working out of this theory. Such has been the power of authority, and great are the dangers thereof. It stunts the growth of humanity, and we must not forget that we want growth. Even in all relative truth, more than the truth itself, we want the exercise. That is our life.

The monistic theory has this merit that, it is the most rational of all the religious theories that we can conceive of. Every other theory, every conception of God which is partial, little, and personal is not rational. And yet monism has this grandeur that it embraces all these partial conceptions of God as being necessary for many. Some people say that this personal explanation is irrational. But it is consoling; they want a consoling religion and we understand that it is necessary for them. The clear light of truth very few in this life can bear, much less live up to. It is necessary, therefore, that this comfortable religion should exist; it helps many souls to a better one. Small minds whose circumference is very limited and which require little things to build them up, never venture to soar high in thought. Their conceptions are very good and helpful to them, even if only of little gods and symbols. But you have to understand the Impersonal, for it is in and through that alone that these others can be explained. Take, for instance, the idea of a Personal God. A man who understands and believes in the Impersonal — John Stuart Mill, for example — may say that a Personal God is impossible, and cannot be proved. I admit with him that a Personal God cannot be demon strated. But He is the highest reading of the Impersonal that can be reached by the human intellect, and what else is the universe but various readings of the Absolute?
 It is like a book before us, and each one has brought his intellect to read it, and each one has to read it for himself. There is something which is common in the intellect of all men; therefore certain things appear to be the same to the intellect of mankind. That you and I see a chair proves that there is something common to both our minds. Suppose a being comes with another sense, he will not see the chair at all; but all beings similarly constituted will see the same things. Thus this universe itself is the Absolute, the unchangeable, the noumenon; and the phenomenon constitutes the reading thereof. For you will first find that all phenomena are finite. Every phenomenon that we can see, feel, or think of, is finite, limited by our knowledge, and the Personal God as we conceive of Him is in fact a phenomenon. The very idea of causation exists only in the phenomenal world, and God as the cause of this universe must naturally be thought of as limited, and yet He is the same Impersonal God. This very universe, as we have seen, is the same Impersonal Being read by our intellect. Whatever is reality in the universe is that Impersonal Being, and the forms and conceptions are given to it by our intellects. Whatever is real in this table is that Being, and the table form and all other forms are given by our intellects.

sivan jaykay

unread,
Sep 24, 2023, 8:16:06 PM9/24/23
to amrith...@googlegroups.com

ஸூர்தாஸ்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

உன்னை முதல் முதலாக பார்த்த போது .......

''ஸூர்தாஸ்   பற்றி  ஒரு  மூன்று நாள்  எழுதாமல் இருந்தால்  என்னவோ போல் இருக்கிறது.  அவரை மறப்பது என்பது   எனக்கு  முடியாத காரியம்.  கிருஷ்ணனை மறந்தால் தான்  ஸூர்தாஸை   மறக்க  முடியும். கிருஷ்ணன் என்றாலே   ஸூர்தாஸ்  தான்  முதலில்  கண்  முன்னால்  நிற்பவர். 
கிருஷ்ணனை எப்படி மறக்க முடியும்? மூச்சு விடாமல் யாராவது  வாழ முடியுமா?'

கிருஷ்ணன்   எதில் இல்லை, எவரில் இல்லை.  ஆகவே  மறைமுகமாக, எதிலும் எவற்றிலும் மறைந்திருக்கும், மறைகள் போற்றும்  அவனை  ஏதோ விதத்தில்  தெரிந்தவரை  முடிந்தவரை  நான்  எழுதிக் கொண்டு தானே வருகிறேன்.  ஒரு ஸூர் தாசின்   ஹிந்தி  பாட்டு கிடைக்கவில்லை. யாரோ இங்கிலீஷில் எழுதியதை  படித்து விட்டு  அர்த்தம் மனதில் புரிந்துகொண்டு   என் வழியில் சொல்கிறேன்:

''சூரியன் வெகு மும்முரமாக கண்ணில் பட்டதை எல்லாம் தங்க நிறமாக்கிக் கொண்டிருந்தான். ஆகவே அது பொன்  மாலை வேளை.   சூரியனின் தங்க  ரஸவாத  வித்தை  எதிலும்  காணப்பட்டது.    காற்று சுகமாக வீசியது. பிருந்தாவன சிறுவர்கள் குதூகலமாக தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆடை எல்லாம் வியர்வை. தெருப் புழுதி.   அவர்கள் நடுவிலே  அதோ பாருங்கள் கருப்பாக  மினுமினுவென்று ஒரு பயலை. கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலருன்னு   கண்ணைக் கவர்கிறானே யார் தெரிகிறதா?
அவன் தான் கண்ணன். செல்லப்பெயர். அவன் பெயர் கருப்பன், அதாவது கிருஷ்ணன்.  அவன் இடுப்பில் மஞ்சள் வஸ்திரம். பொன் வெயிலில் அவனது மஞ்சள் ஆடை பளபளக்கிறது.  புத்தி விளையாட்டில் இருப்பதால்  அவனது  புல்லாங்குழலுக்கு  ஒய்வு. இடுப்பில் தலையை நீட்டிக்கொண்டு  இடையில்  இறுக்க  கட்டியிருந்த  வஸ்த்ரத்தில் செருகப்பட்டு இருக்கிறது. ஒரு கூட்டம் அவனைச் சுற்றி  எப்போதும் உண்டே.

ஓஹோ, கையில் சாட்டை எனும் கயிற்றால் பம்பரத்தை சுற்றி வேகமாக அதை  வீசி சுழல வைக்கிறார்கள். பம்பர விளையாட்டா?

அவன் தலையில் அழகிய ஒரு மயில் பீலி இறகு , பல வண்ணங்களோடு கண்ணைப்  பறிக்கிறது. அவன் குனிந்து நிமிர்ந்து ஓடி ஆடும்போது அவன் காதுகளில் அணிந்துள்ள குண்டலங்கள் ஆடுகின்றன. சூரிய ஒளியில் பல சூரியன்களாக மின்னுகிறது.

ஏதேதோ சிரிப்பாக பேசுகிறான் போல் இருக்கிறது.    கூட இருக்கும் அத்தனை பையன்களின்  முகங்களும் பிரகாசித்து ஆனந்த மயமாக காட்சி அளிக்கிறதே. கிருஷ்ணன் வாய் கொள்ளாமல் சிரிக்கும்போது அவன் முத்துப் பல் வரிசையின் அழகை எந்த வார்த்தையை உபயோகித்து என்னால் எழுத முடியும்?  உங்கள் மனத்தில் நீங்களே கற்பனை பண்ணி பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய சந்திரன்களை பூரண ஒளியோடு வாயில் வைத்துக்  கொண்டிருக்கிறானோ? உடம்பு பூரா கம கமக்கும் சந்தன பூச்சு.

விளையாடிக்  கொண்டிருந்த கிருஷ்ணனின் பார்வை யதேச்சையாக சற்று தூரத்தில் இருந்த யமுனா நதிக்கரை மேல் சென்றது. யார் யாரோ அங்கே நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
அது யார் ?

நெற்றியில் மஞ்சள் திலகம்... தொள தோளவென அவளை சுற்றிக்கொண்டு இருந்த ஆடை. விரிந்த பல கொசுவங்கள் கொண்ட நீண்ட பாவாடை இடையில் பாந்தமாக அணிந்திருக்கிறாள். அதற்கு ஏற்றாற்போல் நீல நிறத்தில், அவனுக்கு பிடித்த வண்ணத்தில், மேலே உடலை மறைத்த சட்டை. நீண்ட அலை அலையாக கூந்தல் பின்னல் கருநாகம் போல் அவள் நடைக்கேற்ப நெளிகின்றதே . அடேயப்பா, இவ்வளவு அழகா? அழகிய மற்ற பால்காரி களுக்கிடையே அவள் தனித்து தென் படுகிறாளே. வெண்மேக கூட்டத்திடையே தங்க நிலா போல அல்லவோ இருக்கிறாள்.

கிருஷ்ணனின் ஊடுருவிய பார்வை அந்த பெண்ணின் பார்வையை சந்தித்தது. கடல் போன்ற அன்பும் ப்ரேமையும் கொண்டு அவள் பார்வையை கிரஹித்தது. அவள் பார்வையிலிருந்து அது உள்ளே இறங்கி அவள் மனதை நிரப்பியது. அதே வேகத்தில் திரும்பி அவள் மனத்தை தூக்கிக் கொண்டு வந்து அவன் மனதோடு இணைத்தது. என்ன அதிசயம் இவ்வளவு சீக்கிரம் நடந்திருக்கிறது! கண்ணன் அவளைப் பார்த்துக்க்க்க்க்க்க்க்க் கொண்டே இருந்தான்.

சூர்தாஸ் கிருஷ்ணன் ராதையை முதல் முதலாக பார்த்ததை வர்ணிக்கிறார்.  
https://youiandkrishna.org/24/09/2023/surdas-j-k-sivan-5/

Krishna went playing in the lanes of Braj,
a yellow silk garment round his waist,
holding a top and a string to spin it with,
a crown of peacock-feathers adorning his head
his ears with charming ear-rings decked,
his teeth flashing brighter than the sun's rays,
his limbs anointed with sandalwood-
On the Yamuna bank he chanced to see Radha;
a tika mark of turmeric on her brow,
dressed in a flowing skirt and blue blouse,
her lovely long wreathed hair dangling behind,
a stripling, fair, of beauty unsurpassed
with he a bevy of fair milkmaids:
Krishna's eyes met her's;
love woke in his heart,
says Suradasa, bewitched by her,
he gazed and gazed.

sivan jaykay

unread,
Sep 24, 2023, 8:16:23 PM9/24/23
to amrith...@googlegroups.com

ஸ்ரீ மத் பாகவதம் - நங்கநல்லூர் J K SIVAN
''12 வது காண்டம்   கலி காலம்,  12.2.12-  12.2.20 

क्षीयमाणेषु देहेषु देहिनां कलिदोषत: । वर्णाश्रमवतां धर्मे नष्टे वेदपथे नृणाम् ॥ १२ ॥
पाषण्डप्रचुरे धर्मे दस्युप्रायेषु राजसु । चौर्यानृतवृथाहिंसानानावृत्तिषु वै नृषु ॥ १३ ॥
शूद्रप्रायेषु वर्णेषुच्छागप्रायासु धेनुषु । गृहप्रायेष्वाश्रमेषु यौनप्रायेषु बन्धुषु ॥ १४ ॥
अणुप्रायास्वोषधीषु शमीप्रायेषु स्थास्नुषु । विद्युत्प्रायेषु मेघेषु शून्यप्रायेषु सद्मसु ॥ १५ ॥
इत्थं कलौ गतप्राये जनेषु खरधर्मिषु । धर्मत्राणाय सत्त्वेन भगवानवतरिष्यति ॥ १६ ॥  12.2.12-2.16.
चराचरगुरोर्विष्णोरीश्वरस्याखिलात्मन: । धर्मत्राणाय साधूनां जन्म कर्मापनुत्तये ॥ 12.2.17 ॥

kṣīyamāṇeṣu deheṣu dehināṁ kali-doṣataḥ  varṇāśramavatāṁ dharme naṣṭe veda-pathe nṛṇām pāṣaṇḍa-pracure dharme  dasyu-prāyeṣu rājasu
cauryānṛta-vṛthā-hiṁsā-nānā-vṛttiṣu vai nṛṣu  śūdra-prāyeṣu varṇeṣu  cchāga-prāyāsu dhenuṣu  gṛha-prāyeṣv āśrameṣu yauna-prāyeṣu bandhuṣu aṇu-prāyāsv oṣadhīṣu śamī-prāyeṣu sthāsnuṣu vidyut-prāyeṣu megheṣu  śūnya-prāyeṣu sadmasu itthaṁ kalau gata-prāye
janeṣu khara-dharmiṣu dharma-trāṇāya sattvena  avatariṣyati
carācara-guror viṣṇor īśvarasyākhilātmanaḥ dharma-trāṇāya sādhūnāṁ janma karmāpanuttaye


சுகப்பிரம்ம ரிஷி  தொடர்கிறார்:

''பரீக்ஷித், சொல்கிறேன் கேள்.  தக்க நேரம் வந்தால்,கலி  முற்றினால்,  துஷ்டர்களை அழிக்க, சிஷ்டர்களை பரிபாலனம் செய்ய,  பாதுகாக்க, பராமரிக்க  தாவர ஜங்கம ஜீவன்கள் அனைத்தையும் பாதுகாக்கும்  பரந்தாமன், கலிகாலத்தில் அவதரிப் பார்.. ஒவ்வொரு யுகத்திலும் நிகழ்வது இது''

शम्भलग्राममुख्यस्य ब्राह्मणस्य महात्मन: । भवने विष्णुयशस: कल्कि: प्रादुर्भविष्यति ॥ १८ ॥  12.2.18
śambhala-grāma-mukhyasya brāhmaṇasya mahātmanaḥ bhavane viṣṇuyaśasaḥ kalkiḥ prādurbhaviṣyati

கலியுகத்தில்   பரந்தாமன்  எப்படி அவதரிப்பார்  என்ற  விவரமும் தருகிறார்  சுகர்:
''ஸம்பலா  எனும் கிராமத்தில் (இது எங்கே இருக்கிறதோ, நமக்கு தெரியவில்லை ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு சுகர் துல்லியமாக கணிக்கிறார்.)  ஒரு முக்கிய  வைஷ்ணவ ப்ராமண குடும்பத்தில் கல்கி என்ற நாமதேயத்தோடு  நாம் எதிர்பார்க்கும் மஹா விஷ்ணு    இதோ வருகிறார் கலியுகத்தில் கல்கி பகவானாக.   இது தசாவதாரத்தில் 10வது அவதாரம்.  லோக சம்ரக்ஷணத்துக்காக  மஹா விஷ்ணுவின்  இந்த அவதாரம்  விநோதமானானது.   அவர் பிறக்கப்போவது  எங்கே என்று கூட  ஏற்கனவே  ஸ்ரீமத் பாகவத்தத்தில்  சொல்லப்பட்டிருக்கிறதே.  ஒரு  பிராமணர் . அவர் பெயர்  விஷ்ணுயாஸர் , அவர் வசிக்குமிடம்  சம்பாலா கிராமம்.   அது எங்கே  என்று என்னை கேட்காதீர்கள். கலியுகம்   இன்னும்  நாலரை லக்ஷம் வருஷம்  இருக்க போகிறது.  ஒவ்வொரு நாளும் மாறுதல் இருந்து கொண்டே  இருக்கும் இந்த உலகத்தில் அத்தனை வருஷம் கழித்து கலியுகம் முடியும் சமயம்  கல்கி பகவான் அவதரிப்பார் என்றால் சம்பலா  கிராமம் அப்போது எப்படி இருக்கும், எங்கே தோன்றும் என்று யாருக்கு தெரியும்.  நிச்சயம்  பாரத தேசத்தில் இமயமலை பக்கம் எங்காவது என்று மட்டும் சொல்கிறார்கள்.  எனக்கு தெரிந்தவுடன்  உங்களுக்கு ஏதாவது ஒரு ஜென்மத்தில் நான் மனிதனாக பிறந்தால் நிச்சயம் சொல்கிறேன். . 

19-20:  अश्वमाशुगमारुह्य देवदत्तं जगत्पति: ।  असिनासाधुदमनमष्टैश्वर्यगुणान्वित: ॥ 12.2.19 ॥
विचरन्नाशुना क्षौण्यां हयेनाप्रतिमद्युति: ।  नृपलिङ्गच्छदो दस्यून्कोटिशो निहनिष्यति ॥ 12.2.20 ॥

aśvam āśu-gam āruhya devadattaṁ jagat-patiḥ asināsādhu-damanam aṣṭaiśvarya-guṇānvitaḥ
vicarann āśunā kṣauṇyāṁ hayenāpratima-dyutiḥ  nṛpa-liṅga-cchado dasyūn koṭiśo nihaniṣyathi 

கலியுகம்  முடியும் சமயம்,  எல்லா ஜீவராசிகளின் உடம்பும்  ரொம்பவே குறுகி, சிறுத்து காணப்படும்.  பாரம்பரிய தெய்வ, மதநம்பிக்கை, கோட்பாடுகள், எல்லாம் சிதறிவிடும்.  வேதங்கள்  புறக்கணிக்கப்படும். வேதம் காட்டும்  வழி  காற்றில் பறக்கும்.  நாஸ்திகம் தலை தூக்கி  எங்கும் நாஸ்திகர்கள் தான் காணப் படுவார்கள்.  ராஜாக்கள்,  அரசாங்க தலைவர்கள் எல்லாம் திருடர்களாக மாறலாம். எங்கும் அராஜகம்  தலை தூக்கும்.  பணமில்லாதவன் தான் தாழ் குலத்தான்.  பசுக்கள் ஆடு அளவுக்கு சுருங்கிவிடும். வேத  ஆசிரமங்கள் வெறும் வீடுகளாகும். குடும்பம் சுருங்கி ரெண்டு பேர் தான்  அதிகம் என்று ஆகிவிடும்.  தாவரங்களும் அளவில் சிறிதாகிவிடும்.  மேகங்கள்  வெறுமே  பளிச்பளிச் எனும்  மின்னலாக மாறும். பக்தி  காணாமல் போகும்.  மக்கள் கழுதைகளாவார்கள் என்று  சொல்கிறார்  சுக ப்ரம்ம ரிஷி.  இப்படி நிலை ரொம்ப மோசமாக புகும் சமயம் தான் மீண்டும் விஷ்ணு அவதரிப்பார்.   கல்கி  பகவான் தேவதத்தம்  எனும் வேகமாக  ஓடும் குதிரை மேல் ஏறிக்கொண்டு வருவார்.  கையில்  கூரிய  வாள் . ராஜா  வேஷத்தை போட்டுக்கொண்டு மக்களை கொள்ளையடிப்பவர்கள் அத்தனைபேரையும் காலி பண்ணி விடுவார்.ராஜா  தான் இல்லையே  என்று கவலைப்படவேண்டாம்.   ராஜா  என்றால்  வெள்ளைச்சட்டை போட்டுக்கொண்டு  பாக்கெட்டில் ஏதோ ஒரு பொம்மை  வெளியே தெரியும்படி வைத்துக்கொண்ட வெள்ளை வேட்டிக்கார என்று அதிகாரத்தில் இருப்பவர்கள்  என்று எடுத்துகொள்வோம்.   கல்கி  பகவான் கலியுகத்தின்  முடிவில் தான் வருவாரோ?    கலியுகத்தில் முதல் பாதத்தில் தான் இப்போது இவ்வளவு அக்கிரமங்களை சகித்துக்கொண்டு வாழ்கிறோம். இன்னும் மூன்று பாகங்கள் இருக்கிறது. அதுபற்றி நமக்கு கவலை வேண்டாம். நிச்சயம் அத்தனை லக்ஷம் வருஷங்கள் நாம் இருக்கப்  போவதில்லையே. அப்போதும் பிறவி எடுப்போம் என்றால் என்ன பிறவி கிடைக்குமோ? 

கலியுகத்தில் சில நல்ல சேதிகளும்  காதுக்கும்  கண்ணுக்கும் கிடைக்கிறது.  நமது பூமியை நாம்  பூகோள புத்தகத்தில் கோடுகளாக பார்த்திருக்கிறோம், வரைபடங்கள் எனும் MAP  இது தான் இந்தியா, ரஷ்யா அமேரிக்கா ஆஸ்திரேலிய கண்டங்கள் என்று வர்ணம் அடித்து காட்டுவது தெரியும்.  பூமி உருண்டை  என்பதை சொல்லிக்  கேட்டிருக்கிறோம். பூமியில் இருந்து  கொண்டே பூமி உருண்டையாக நீலமாக  ஜலங்களோடு  ஆகாசத்தில் தெரிவதை இப்போது பார்க்க முடிகிறது.  யு ட்யூபில் சந்திராயண விண்கலம்  பிரக்யான்  ரோவர் எல்லாம்  படம்பிடித்து நமக்கு எவ்வளவு துல்லியமாக காட்டி இருக்கிறது. நிறைய  தங்கப்  பாறைகள் இருக்கிறதாம்.  சந்திரநில் திருடர்கள்  கிடையாது என்பதால் ஜாக்கிரதையாக  இருக்கிறது.  GRT  அங்கே போய்  தங்க நகை கடை வைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை போலிருக்கிறது. நாமும் இன்ஸ்டால்மென்டில் தங்கம் வாங்கலாம்.  இப்படிப்பட்ட கலிகாலத்தை  நன்றாக  யோசித்து  சுகப்பிரம்ம ரிஷி  பரீக்ஷித் மகாராஜாவுக்கு சொல்வதை தான் நாம் ஸ்ரீமத் பாகவதத்தில் படிக்கிறோம். 

ஹிந்துக்களுக்கு   மஹா பாரதம்  ராமாயணம்  ஸ்ரீமத் பாகவதம்  எல்லாம்  தெய்வீக  நூல்கள் ..பாகவதம்  அவற்றில் பெரியது  18000 ஸ்லோகங்களை கொண்டது. 355  அத்தியாயங்கள்.   காண்டங்கள் எனப்படுபவை. இவற்றில் எண்ணற்ற  கதைகள் உண்டு. . 

பாகவதத்தில்  10  வது காண்டம் கிருஷ்ணன் வாழ்க்கையை பற்றி சொல்கிறது.   அதை ஒவ்வொரு பதிவாக  போட்டுக்கொண்டு வருகிறேன்.

எல்லாவற்றிலும் நாராயணனின் அவதாரங்கள் பல வடிவங்களில்   புராணங்களில்  தலைவனாக அவனை காட்டுகிறது.  பக்தர்கள் பாகவதர்கள் என்று பக்தி ஸ்வரூபிகளாக  அறியப்படுகிறார்கள்.   பாகவதன் என்றால்  அதிர்ஷ்டசாலி என்று பொருள்.  அதிர்ஷ்டம் என்றால் இங்கே உலகில் வாழ  தேவையான பொருள்களை  அடைவது அல்ல.  உண்மையான   செல்வம் என்பது நாம் செய்யும்    சத்காரியம்,பக்தி, புண்யம்,    தானம், தர்மம், அன்பு  அறிவு,  ஞானம், பற்றின்மை  ஆகியவை தான்.  நிரந்தர செல்வம்.   அவையே  மோக்ஷமார்கத்துக்கு  இட்டுச்  செல்லும் படிக்கட்டுகள்.

ஸ்ரீமத் பாகவதத்தை  பாரதத்தின் தொடர்ச்சியாக எழுதவேண்டுமானால்  பாண்டவ வம்சத்திலிருந்து தான் தொடரவேண்டும். பாண்டவர்களுக்கு பின், வம்சம் அர்ஜுனன் பேரன் பரிக்ஷீத் மூலம் தான்  தொடர்கிறது.
அவனும்  சாபத்தில் ஏழு நாட்களில் மரணமடையும் நிலையில் சுகப்பிரம்ம ரிஷி  ஏழு நாட்களில் அவன் முடியும் வரை  பாகவதத்தை ஒரு சப்தாஹமாக சொல்வதாக  அமைகிறது.  ஸ்ரீமத் பாகவதம்  மஹாபுராணம் எனப்படுவது.  காலக்ரமத்தோடு வரிசையாக வரும் சரித்திர புத்தகமல்ல.   கேள்விகளுக்கு  பதிலாக வழங்கப்பட்டது.  பிரபஞ்ச தோற்றத்திலிருந்து  கலியுகம் வரை  பாரதத்தில் இல்லாத  சம்பவங்கள்  தொடர்கிறது.

அருவத்தை நாம்  உணரமுடியாது என்று அறிந்து  மகோன்னதமான  ஒரு கிருஷ்ணன்  உருவத்தை
 ஸ்ரீமத் பாகவதத்தில்  அளித்து நாம்  அவனை  உணர்ந்து வழிபட வைத்த புண்யவான்  வேதவியாசர்.
 பாகவதத்தை ஸ்ரத்தை யோடு   பக்தியோடு படிப்பவன், பாராயணம் செய்பவன்  வேண்டியது எல்லாம்  கேட்காமலேயே  அடைவான்.   https://youiandkrishna.org/24/09/2023/srimad-bhagavatham-12th-canto-j-k-sivan/

sivan jaykay

unread,
Sep 25, 2023, 7:17:08 PM9/25/23
to amrith...@googlegroups.com
ஆலங்குடி பெரியவா  -    நங்கநல்லூர்  J K  SIVAN 

ஆலங்குடி பற்றி என்ன தெரியும் என்றால்  அது  குரு ஸ்தலம். நிறைய பேர்  பரிஹாரத்துக்கு செல்வார்கள் என்றும்  அந்த ஊர் பெயர் கொண்ட ஒரு  கடம் வித்வான் ராமச்சந்திரன் என்றும் மட்டும் தெரியும். அங்கே இன்னொரு விசேஷம் பற்றி தெரிந்துகொண்டதால் அதை இப்போது சொல்கிறேன்.   

நாராயணய்யர் என்ற ஒரு கிருஷ்ண பக்தர் வாழ்ந்து வந்தார். கோபாலக்ரிஷ்ணன் அருளால் ஒரு புத்ரன் பிறந்தான். அவனுக்கு ராமகிருஷ்ணன் என்று பெயரிட்டார். எல்லா பிராமண சிறுவர்கள் போல அவனுக்கும் உபநயனம், வேதாப்யாசம் நடந்தது. கல்யாணம் பண்ணவும் ஏற்பாடு நடந்தது. ராமகிருஷ்ணன் ஒரு பிறவி சந்நியாசி என்பதால் சம்சார பந்தத்தில் அவனுக்கு விருப்பமில்லை. எப்படி அப்பா அம்மா பந்தத்திலிருந்து தப்புவது என்று யோசிக்கும்போது    பாலக்ரிஷ்ணானந்த ஸரஸ்வதி  ஸ்வாமிகள் கனவில் நரசிம்ம மந்திரம் உபதேசித்தார்.   நரசிம்ம பக்தனாகவும் ராமகிருஷ்ணன் மாறினான். ஸ்ரீமத்  பாகவதத்தில் தீவிரமாக மனம் செலுத்தினான் . அவன் விருப்பத்தை மீறி பெற்றோர் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தார்கள். அந்த காலத்தில் சிறுவர் சிறுமிகளுக்கு கல்யாணம் செய்யும் பால்ய விவாகம் நடைமுறையில் இருந்தது.   எப்படி சம்சார பந்தத்திலிருந்து தப்புவது என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ஒருநாள் காலை சிறுமியான அவன் மனைவி  அவள் பெற்றோர் வீட்டிலேயே இறந்து விட்டாள்  என்ற சேதி வந்து அவளுக்கு கணவனாக செய்யவேண்டிய  ஈமக்கடன்கள் செய்து முடித்தான்.  பெற்றோர்  அவனுக்கு மறு விவாகம் பண்ண முயற்சி செய்ததால்  ஒருநாள் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டான்.  வயது 28 ஆகியது. உன்மத்தனாக  ஜடாதாரியாக  மெளனமாக என்றும் ஆடையின்றி  திகம்பரராக  அவதூதராக அலைந்து கொண்டிருந்தார். சதா  நரசிம்மன் பிரஹலாதன் நினைவு மட்டுமே. பாகவத  பாராயணம்  சப்தாஹம் நடக்காத ஊரில் தங்கமாட்டார். 

 பல ஊர்களுக்கு சென்ற  இந்த ஆலங்குடி சந்நியாசி ராமகிருஷ்ணன்  ஒருநாள் திருவிசநல்லூர் சென்றார். அங்கே  பாகவதத்தில் சந்தேகம் கேட்ட ஒரு பண்டிதருக்கு  விளக்கம் சொன்னார்.  காமாக்ஷி புரம்  என்ற ஊரில்  தங்கி  பாகவத உபன்யாசம் செய்யும்போது  ஆடையற்ற திகம்பரராக இல்லாமல்  பனங்குடி ஸ்வாமிகள் என்ற குருவிடம் ஆஸ்ரம தீக்ஷை பெற்று  ஸ்வயம்பிரகாசதானந்த ஸரஸ்வதி  என்ற  தீக்ஷா நாமம்  பெற்றார். சன்யாஸாஸ்ரமம் அடைந்தபின்  தண்டம் கமண்டலத்துடன் காஷாயம் உடுத்து, ஊர்த்வ புறம் அணிந்து  பக்தர்களுக்கு  பாகவத பிரவசனம் செய்தவர்.  அவரை அப்புறம் உலகம்  ஆலங்குடி ஸ்வாமிகள், ஆலங்குடி பெரியவா என்றபெயரில் அறிந்தது.  வெறும் கௌபீன வஸ்திரத்தோடு  ஊர்  ஊராக சென்று பாகவத பிரவசனம் செய்தார். ஆகார நியமம் கொண்டவர் என்பதால் மாதக்கணக்கில்  சத்துமா,  தானே திருகிய தேங்காய் துருவல், க்ஷீரம் இதிலேயே  ஜீவித்தார். குழந்தைகளோடு விளையாடுவார்.  குளம் இல்லாத  ஊர்களில் குளம் வெட்டுவார். பலர்  உதவுவார்கள்.  காசைக்  கையால் தொடாத ஒரு ஆச்சர்யமான சாமியார் என்று சொல்லலாம். 

ஆனந்த தாண்டவபுரம் பட்டாபிராமய்யர் என்று ஸ்வாமிகளுக்கு ஒரு சிஷ்யர். யாரோ அவருக்கு பில்லி சூன்யம் வைத்துவிட்டார்கள்.  தானே  உபதேசிக்காமல்  கோதண்டராமய்யர் எனும் சிஷ்யரை விட்டு பட்டாபிராமய்யருக்கு நரசிம்மமந்திரம் உபதேசிக்க செய்தார். அப்புறம்  என்ன  பட்டாபிராமய்யர் எந்தத்  தொந்தரவும் இன்றி சுகமாக இருந்தார்.  எத்தனையோ  ஊர்களில்  ஸ்வாமிகள் பாகவத சப்தாஹம் நடத்தினார். பல  இடங்களில் கஜேந்திர மோக்ஷம்  ப்ரஹ்லாத சரித்திரம் விடாமல் சொல்வார். 

ஒருநாள் கொள்ளிடத்தின்  சிற்றாறு ராஜா வாய்க்காலில் ஸ்னானம் செய்து  கொண்டிருக்கும்போது ஸ்வாமிகள் காலை ஒரு  முதலை கவ்விக்கொண்டது. இருகைகளையும்  கூப்பி ஹரே ஹரே என்று பிரார்த்தித்தார். அடுத்த கணமே  முதலை அவர் காலை விட்டுவிட்டு ஓடிவிட்டது. காலில் பெரிய காயம். இதை ஒரு பண்டிதன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன்  பகவானை விட்டு  மற்ற  உபதேவதைகளை, மற்ற ஜீவன்களுக்கு முக்யத்துவம் கொடுத்து வணங்கக்கூடாது என்ற கொள்கை கொண்டவன். ஆகவே கஜேந்திர மோக்ஷத்தை பாராயணம் பண்ண மாட்டான். மேலே சொன்ன முதலை சம்பவத்தை கவனித்தவன் அன்றுமுதல் மாறிவிட்டான்.  முதலை கடித்த காயம் பெரும் புண்ணாக மாறி அதற்கு தைலம் சூடாக காய்ச்சி மேலே  ஊற்றச்சொன்னார். பக்தர்கள் பயந்தார்கள். தானே கொதிக்கும் அந்த எண்ணை  தைலத்தில் தனது கால் மேல் ஊற்றிக்கொண்டார். உடல் வேறு ஆத்மா வேறு.  நான் உடல் அல்ல. என்னை உடல் உபாதை எதுவும் பாதிக்காது என்று என்று போதித்து நிரூபித்தார்.  

கூத்தனுர்  அரசலாற்றங்கரையில் ஒரு தோப்பில்  சப்தாஹம். . பிற்பகல்‌ மூன்று மணி இருக்கும்.  திடீரென்று அங்கே  ஒரு பெரிய சர்ப்பம் வந்துவிட்டது.  பாம்பு  என்ற சொல் கேட்டதுமே  பலர்  பிரவசனம் வேண்டா மென்று ஓடிவிட சிலர்  பாம்பை அடிக்க  பயத்தோடு   முயன்றனர். நாகம்   ஸ்வாமிகள் உட்கார்ந்துகொண்டிருந்த  பலகைக்கு அடியில் பதுங்கி விட்டது. 

''சுவாமி  எழுந்திருங்கோ  சீக்கிரம் சீக்ரம்.  பாம்பு ஆபத்து. ''என்று உளறிக்கொட்டி  கத்தினார்கள்‌. 
'எல்லாமே  பகவான்  ஸ்வரூபம்.  பேசாமல்  உட்கார்ந்துகொண்டு  உபன்யாசம் கேளுங்கோ '' என்று சொன்னார்  ஸ்வாமிகள். தன்னுடைய  யோக சக்தியால் பிரவசனம் மூலம் அவர்கள் உட்கார்ந்து கேட்கும்படியாக  பண்ணிவிட்டார்.   பிரவசனம் முடிந்தது ஸர்ப்பமும்  சரசரவென்று அங்கிருந்து ஓடிவிட்டது. 

பிற்காலத்தில் ஸ்வாமிகளுக்கு கண்பார்வை மங்கியது. ஆபரேஷன் பண்ண ஒரு கண் டாக்டர் வந்து.மயக்க மருந்து, வலி மரத்துப்போக எதுவும் செய்யவேண்டாம்.உடல் வலி என்னை பாதிக்காது என்று ஸ்வாமிகள் மறுத்துவிட இரு விழிகளும் ஆபரேஷன்   அன்ஸதேஷியா இல்லாமலேயே   பண்ணப்பட்டது.  ஸ்வாமிகள் அசையவே இல்லை. கட்டு பிரித்தாகிவிட்டது. பார்வை தெரிந்தது. 

தனது முடிவு எப்போது என்று ஸ்வாமிகளுக்கு தெரிந்துவிட்டது.  அது நரசிம்ம ஜெயந்தி அன்று நிறைவேற பிரார்த்தித்தார். அன்று கோலாகலமாக  ஜெயந்தி நடந்தது.  ப்ரஹ்லாத சரித்திர  உபன்யாசமும் ஜோராக நடந்தது . பிரவசனம் முடிந்தது. ஸ்வாமிகளின் பிராணனும் விடைபெற்றது. 

ஒருநாள் மஹா பெரியவா  எங்கோ ஒரு இருட்டு அறையில் காலை நீட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தார். வெளிச்சம் வந்தபிறகு பார்த்தபோது  அந்த அறையில் ஒரு சன்யாசி படம். அது ஸ்வாமிகள் படம்.   மஹா பெரியவா மற்றவர்களை கூப்பிட்டு  இவர்  ஒரு பெரிய சந்நியாசி ''ஆலங்குடி ஸ்வாமிகள்'' என்று பக்தியோடு மற்றவர்களிடம்  சொன்னார். https://youiandkrishna.org/25/09/2023/alangudi-periyava-j-k-sivan/



sivan jaykay

unread,
Sep 25, 2023, 7:17:09 PM9/25/23
to amrith...@googlegroups.com

தேனான வேமனா  -   
 நங்கநல்லூர் J K SIVAN

பாரத தேசத்தில் பல பாகங்களில் பல விதமான மொழிகள் பேசப்படுகிறது. அது அத்தனையும் தெரிந்திருக்க ஞாயமில்லை.  அதனால் ஒரு நஷ்டமுமில்லாத படி  ஒரு  பொது மொழியாக  ஆங்கிலம் பல நூற்றாண்டுகளாக  இயங்கி வருகிறதே. அதன் மூலம் மற்ற மொழி செல்வங்களை நாம் ஓரளவு  அனுபவிக்கிறோம்.  அப்படித்தான்  ஸூர்தாஸ்,  தாகூர்,புரந்தரதாசர்  வேமனா,  போன்ற  பிறமொழி மகான்களை நாம் அனுபவிக்கிறோம்.

வேமனாவைப்பற்றி  ஒரு வார்த்தை.   அவர் சிவ பக்தர். பொய்மை வேஷம்  கொண்ட  பக்தர்களையோ   சந்நியாசிகளையோ சாடுவதில்  அவருக்கு  நிகர் அவரே. ரெண்டே வரிகளில் பளிச்சென்று சொல்லிவிடுபவர்.  ஒவ்வொரு நீதியையும் சொல்லிவிட்டு கடைசி வரியில்   தனக்குத்  தானே  "என்னடா  வேமா  சொல்கிறாய்,  சரிதானே?"  என்பது போல் அவர் பாடல்கள் அமைந்துள்ளது

nIvu nilici yunDu nikhilambu niluvadu nilici yunDu enDu nIru valenu
nIvu niScayambu nikhilambu mAyayau viSvadAbhi rAma vinura vEma.

இந்த உலகமே    பரமனின்  அசைவில், இயக்கத்தில் தான் இயங்குகிறது,  ஜீவிக்கிறது. அசைவு நின்றால்.......? ''நான் அசைந்தால் அசையும் இந்த அகிலமெல்லாமே அறிவாய் மனிதா'' பாட்டு சிவாஜி கணேசன் கண்ணை உருட்டி விழித்து,  அதை  இரு ஓரங்களுக்கும் அசைத்து சிரிப்பாரே   அது  ..... அசைவு நின்றால் பிரபஞ்சம் ஸ்தம்பிக்கும். அதனால் தான் இறைவன் நடராஜன். ஆடிய பாதன், ஆடல் வல்லான்.    நீ ஒருவன் தான் அசைவில்லாத ஸாஸ்வதன். மற்றெல்லாம் அசையும் மாயை.

Pedavela joodu pendlamu gunamu...................పేదవేళ జూడు పెండ్లము గుణము
Viswadhaabhuraama, Vinura Vema................విశ్వధాభిరామ, వినుర వేమ

கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் உனக்கு வரும் வேளையில் தான் உன்மேல் உன் பந்துக்களின் அக்கறை எவ்வளவு என்பது தெரிந்துகொள்வாய் . உன் எதிரிகளின் பலத்தை நீ பயத்தில் இருக்கும்போது புரிந்துகொள்வாய். நீ எல்லாம் இழந்து பரம ஏழையாகும்போது தான் உன் மனைவி யார் என்பது புரியும்.  ''இல்லானை இல்லாளும் வேண்டாள்'' பாட்டு அர்த்தம் ''நச்'' சென்று புரியும்.

அடேடே    இந்த  தெலுங்கு பட்டினத்தார்  வேமனாவை நம் வாசகர்களுக்கு  பிடிக்கிறதே.  இந்த தத்துவங்கள் வேதாந்தங்கள் எல்லாம்  ரசிக்கிறார்களே .  நாம்  நல்ல காரியம் தான் செய்த்திருக்கிறோம் என்று  ஆத்ம  திருப்தி ஏற்படுகிறது.  மேற்கொண்டு சில  பாடல்களை அறிவோம்:

வேமனா  தன்னுடைய  பாடல்களில்,  தத்துவங்களை தனக்கே  சொல்லிக்கொள்வது போல்  அமைந்திருக்கிறது.  என்னடா  வேமா, புரிகிறதா,தெரிந்துகொள்ளடா?  என்கிற டைப்பில் பாடி இருக்கிறார்.


Anuvu gani chota Nadhikulamanaradu...................అనువు గాని చోట అధికులమనరాదు
Kochmayina nadiyu kodava gadu..........................కొంచమైన నదియు కొదవ గాదు
konda addamandu knochami undada...................కొండ అద్దమందు కొంచమై ఉండదా
Viswadhaabhiraama, Vinura Vema........................విశ్వధాభిరామ, వినుర వేమ

ஏண்டா,  வேமா,  நேரம்  இடம்   சரியில்லை என்றால்  வெற்றி யேது  நிம்மதியேது? அதனால்  உன்னுடைய  திறமை   சக்தியெல்லாம்  மட்டமாகி விடுமா? சின்னக்  கண்ணாடியிலே பார்க்கும் போது  பெரிய மலை   கூட  குட்டியாகத் தான்  தெரியும். ஞாபகம் வைத்துக்கொள்ளடா''

எனது  தெலுங்கு  தெரிந்த  நண்பர்களே,   மற்றவர்களை விட  உங்களுக்கு மிக்க பெருமை யளிக்கும்  பதிவு இல்லையா இது?  உங்களை விட  வேறு யார்  வேமனாவை ரசிக்க முடியும்.

 உங்கள்  அபிமான தத்துவஞானியைப் பற்றி  எழுதப்ப ட்ட  இந்த  பதிவுக்கு உங்கள் ஆதரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.  எனக்கு தெலுங்கு  எழுதவோ, படிக்கவோ, அவ்வளவாக பேசவோ தெரியாது என்பதில் மிக வருத்தம். ஆங்கிலத்தில்  யாரோ  எழுதியதை வைத்துக்கொண்டு  முடிந்தவரை  தமிழில் தருகிறேன்.

வேமனாவைப்பற்றி  ஒரு வார்த்தை  சொல்லவேண்டுமே.   அவர் சிவ பக்தர். பொய்மை வேஷம்  கொண்ட  பக்தர்களையோ  சந்நியாசிகளையோ சாடுவதில்  அவருக்கு  நிகர் அவரே   அதைப்பற்றி  பாடுவதை நான் எழுதுகையில் கோபம்  என்மீது திரும்ப வேண்டாம்.

 தெலுங்கில்  உள்ள   அவர்  பாடல்களில்    முதல்  அடி  அவர்  கருத்தைச்சொல்லும்.   அடுத்தது  தன்னைத்  தானே  "என்னடா  வேமா  சொல்கிறாய்,  சரிதானே?"  என்பது போல்  அமைந்துள்ளது

Apadaina velanarasi bandhula joodu................ఆపదైన వేళ నరసి బంధుల జూడు
bhayamuvela joodu bantu tanamu...................భయమువేళ జూడు బంటు తనము
Pedavela joodu pendlamu gunamu...................పేదవేళ జూడు పెండ్లము గుణము
Viswadhaabhuraama, Vinura Vema................విశ్వధాభిరామ, వినుర వేమ

கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் உனக்கு வரும் வேளையில் தான் உன்மேல் உன் பந்துக்களின் அக்கறை எவ்வளவு என்பது தெரிந்துகொள்வாய் . உன் எதிரிகளின் பலத்தை நீ பயத்தில் இருக்கும்போது புரிந்துகொள்வாய். நீ எல்லாம் இழந்து பரம ஏழையாகும்போது தான் உன் மனைவி யார், அவளுக்கு உன்மேல் எவ்வளவு அக்கறை  என்பது புரியும்.  ''இல்லானை இல்லாளும் வேண்டாள்'' பாட்டு அர்த்தம் ''நச்'' சென்று புரியும்.

Gangi govu paalu garitadainanu chaalu...................గంగి గోవు పాలు గరిటడైనను చాలు
Kadivedainanemi kharamu paalu............................కడివెడైననేమి ఖరము పాలు
Bhakti kalugu koodu pattedainanu chaalu................భక్తి కలుగు కూడు పట్టెడైనను చాలు
Viswadhaabhiraama, Vinura Vema...........................విశ్వధాభిరామ, వినుర వేమ
 
"ஒரு உத்ரணி சுத்தமான காராம்பசுவின் பாலுக்கு  ஒரு குடம்   கழுதையின் பால்   ஈடாகுமா? .  அன்பாக உபசரித்து  உண்மையான  பாசத்தோடு ஒரு  கரண்டி சாதம் போதுமே,  "இந்தா  கொட்டிக்கோ"  என்று மனதில் நினைத்துகொண்டு  ஒரு வாழை இலை நிறைய விருந்து வைப்பதை விட"

 Atmasuddhi leni acharamadi ela...................ఆత్మశుద్ధి లేని అచారమది ఏల
Bhandasuddhi leni pakamadi ela...................భాండశుద్ధి లేని పాకమేల
Chittasuddi leni sivpujalelara........................చిత్తశుద్ది లేని శివ పూజలేలర
Viswadhaabhiraama, Vinura Vema................విశ్వధాభిరామ, వినుర వేమ

ஆத்மாவில்   சுத்தமில்லாமல்  ஆச்சாரமாக  மடியாக இருந்து   என்ன பயன்?   பாத்திரத்தை  சுத்தமாக  துலக்காமல்  பாயசம் அதில்  பண்ணி என்ன  புண்ணியம்?  சித்தத்தை அவன்   பாலே   வைக்காத சிவன்  பூஜையால் யாருக்கு  பலன் ?

Kaligi dharmam iiyan Kaanani vaaru nu Kaligi tinaka caala Kraagu vaaru  Kalimin ecat`a cuud`an Kaanaka ced`uduru Vis`vada abhi raama Vinura Veema!

கலிகி  தர்மம் லியன் காணனி  வாறு  னு  களிக்க  தினக  சாலை  கிராகு  வாறு  கலீமின்    எக்கட்ட  சூடான  காணக   சேடுரு விஸ்வாதாபி ராம  வினுரா  வேமா.

கடவுள் அருளால் நிறைய செல்வம் இருந்தும் அதை  எப்படி தர்மம் செய்ய வேண்டும் என்று  தெரியவும் மில்லை, அறியவும்  இல்லை. செல்வம் எதற்காக  தரப்பட்டுள்ளது?  நாம் அதை  எப்படி  உபயோகிக்க வேண்டும்  என்றும்  எவரும்  இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. இப்படிப்பட்டவனிடம் செல்வம் இருந்து  என்ன  பயன்.? அவனுக்கே அது   பயனில்லை.  அது அவனை  விட்டு  வெகு  சீக்கிரம் நீங்கிவிடும் என்றும்  அவன் அறியமாட்டான்.பாவம் ஏதோ கனவில் இருக்கட்டுமே. என்ன டா சொல்கிறாய்  வேமா, சரிதானே.?

Taamu gad`ana seeyu Dhanamu tamadi ani  Nammi umd`u verri Narulu bhuvi ni Taamu okarik iccu Dhanam imtiyee kaaka
Kad`amadi tana keela Kalugu Veema!

தாமு கடனதமது சீயு தனமு தமதி  அணி நம்மி  உண்டுவெர்ரி  நருலு புவி  நீ  தாமு  ஒக்கரிக்கிச்சு  தானம்  இமடியே காக  கடமடி   தான  கீழ  கலுகு  வேமா.\

"அடே முட்டாளே ,  நன்றாக புரிந்துகொள். உன்னிடம் நிறைய பணம் இருக்கிறது.   அதை  நீ சம்பாதித்தது என்று மனப்பால் குடிக்காதே.  வந்த வழியே அது செல்வதால் தான் அதற்கு ""செல்""வம் என்று பெயர். கடைசியில் உன்னிடம் மிஞ்சப்போவது நீ செய்த  ( எந்த ஜென்மத்திலாவது கொஞ்சம் செய்திருந்தால்!!)   அந்த தர்மத்தின் பலன் மட்டுமே. புரிகிறதாடா வேமா நான் சொல்வது?

Aakal anna vaanik Annambu pet`t`ina  Harunak arpitamu gan Aaaragimcu
Dhara vihiinunakunu Daanamu at`u vale Vis`vada abhi raama vinura Veema!

"பசி  காதடைக்க  வயிறு ஒட்டி கண் பஞ்சடைந்து நிற்கிறானே  அவனுக்கு  சோறு  போடு.  அவன் சந்தோஷமாக  சாப்பிடுவதைப்பார். உற்றுப்பார்த்தால்  நீ  அந்த  பரம சிவனுக்கே  அன்னமிட்டதை  உணர்வாய். அதன் இணையற்ற  பலனும் உன்னைச்சேரும்.

Taanu tinaka at`ula Dharmamu seeyaka Kod`ukulak ani dhanam Kuud`a pet`t`I
Teliya ceppa leeka Tiiri pooyina venka Sommu parula namdu Cuud`u Veema!

ராவும்  பகலுமாக  பணத்தைத் தேடி  அலைவான்.  பணத்துக்காக  எதையும்  செய்வான்.  நிறைய  பணம் சேர்ந்துவிட்டதே! தானமும் இல்லை  தர்மமும் இல்லை.  எங்கோ  திருடனுக்கும்  ராஜாவுக்கும்  வரிக்கும்  பயந்து  சேமித்து புதைத்து வைத்திருப்பான்.  தனது  பிள்ளை குட்டிக்கு  என்று.   அந்த பிள்ளை குட்டிக்கு  அவன்  தனது செல்வம் எங்கிருக்கிறது என்று சொல்வதற்குள்  திடீர்  என்று  செத்தும் போவான்.  கடைசியில்  யாருக்கோ  ஒருவனுக்கு  அது  புதையலாக  கிடைக்கும்! அப்படித்தானேடா  வேமா?

Daana dharmamulunu Daya yu satyamu niiti Vinaya dhairya s`aurya Vitaran`amulu
Raaju paalit`iki ivi Raaja yogamulu Vis`vada abhi raama Vinura Veema.

ராஜா என்று  பேருக்கோ  அல்லது  ராஜா என்ற  பேரோடோ  பணத்தை சுருட்டிக்கொண்டு ஒருவன்  இருந்தால் எத்தகைய  ராஜா அவன்?.   ஒரு  ராஜா  எப்படியிருக்க வேண்டும்  என்றால்   வினயத்தோடு, தர்ம  சிந்தனை யோடு, தயையோடு, தானத்தில் ஈடுபட்டுக்கொண்டு, வீரத்தோடு, தைர்யத்தொடு, விதரணையோடு  இருந்தானானால் அவனுக்கும்  அவனால்  அந்த  ஊருக்கே  பெரும் புகழ் சேரும். இல்லையாடா  வேமா, நீ என்ன சொல்கிறாய்?

kallu kumd`ak enni ghana bhooshan`amu lid`d`a amdulooni kampu cimdul id`ade?
tulava padavi konna toli gun`ameemagu? Vis`wadaabhi raama vinura Veema.

வீச்சம் என்றோ  துர்கந்தம்  என்றோ  நாம்  அடையாளம்  காணும்  ஒரு  மொந்தை  புளித்த  கள்ளை  அழகான தங்கக் குடுவையில்  வைத்து  மூடி  அதன் மீது  விலையுயர்ந்த  ஆபரணங்களை போர்த்தி வைத்தாலும்,  அதிலிருந்து  ஒரு துளி   கள் எங்காவது வெளியே சிந்தினால்  அதன்  குணத்தைக்காட்டிவிடாதா?   முழு முட்டாள், கொடியவன் மிக உயர்ந்த  பெரிய  பதவியில் இருந்தால்  அவன் குணம் என்ன  என்பது  அவன்  ஒரு செய்கையிலே, அவன் பேச்சிலேயே   புரிந்துவிடுமே! நம் தான் தினமும் யூட்யூபில்  பார்க்கிறோமே.     சரியாத  வேமா ?

Kooti pat`t`i tecci krotta put`t`amu kat`t`i  komd`a mruccul ella kolicin at`lu
niiti hiinun odda nirbhaagyul umduru Vis`wadaabhi raama vinura Veema.
 
சிங்கவால்  கருப்பு  வாய்  குரங்கு கூட்டம்  ஒரு  ராஜா  இல்லையே  என்று  வேறு சாதாரண குரங்கை பிடித்து சாயம் பூசி  துணி சுத்தி  ராஜாவாக பண்ணினால்  ராஜாவின் யோக்யதாம்சம் வந்துவிடுமா.  பெரிய  பொறுப்பில் அமர்ந்துகொண்ட  தகுதியற்றவன் என்ன  சாதிக்க முடியும்? நாம் தான் கண் கூடாக  பார்க்கிறோமே  உலகில் நடப்பதை எல்லாம். நீ என்னடா சொல்கிறாய்  வேமா?

emta seeva ceesi yee paat`u pad`inanu  raaca mooka nammaraadur anna
paamu tood`i pomdu padi veelak ainanu Vis`wadaabhi raama vinura Veema.

இந்தா பத்தாயிரம் பொற்காசு.  இதோ இருக்கிறதே  இந்த  கரு நாகம்.  அதோ  டு நட்பு கொண்டு  வாழ் என்றால்  யார்  ஒப்புக்கொள்வான். சர்வாதிகாரியான  ஒரு  ராஜாவுடன்  சிநேகமும்  அவ்வாறே. நம்பமுடியாது எப்போது  கழுத்துக்கு  கத்தி  என்று.

Gaali leeni diipa Kal`ika camdambunan Alalu sul`l`u leeni Jaladhi riiti
Nischala aatma unna Nirvikaarambuna Mukti amd`ru daani Mogini Veema!

காற்றின் அசைவு இன்றி தான்  தீபம்  ஒளிரும்.  அலையின்  கொந்தளிப்பு  இன்றிதான்  கடலின்  அமைதி  காணப்படும்.   எண்ணங்களின்  பிரதிபலிப்பு  இன்றி  தான்  மனம்  ஒருமைப்பட்டு  இறைவனை அறியும்  முக்தி  கிடைக்கும். புரிகிறதா வேமா?

அரய  நாஸ்தியனக யட்டு   மாடாடக தட்டுவடக மதிநி தன்னுகோக
தனதி   காதனுகொநி  தா பெட்டுநனதேபெட்டு   விஸ்வதாபி  ராம வினுர வேமா ''

பார்க்கும்போதே  தெரிகிறதே  யாரோ  ஒரு  வயதான  அதிதி  பசியுடன் நம்பிக்கையுடன்  நம்மை  நோக்கி வருகிறார்  என்று.  அவர்  வருவதற்குள்ளேயே  போய்   அவர்  வாசலுக்குள் நுழையுமுன்னேயே '' ஒண்ணுமில்லை  போ  போ '' என்று  விரட்டாமல்  ஏதோ  தம்மாலான  ஒரு சிறு பொருளாவது யாசிப்பவனுக்கு  அளிப்பது தான்  உண்மையான  தானம்.  காசு  உண . வு  எதுவுமே  கொடுக்காமல்  வந்தவர்  மனதை நோகடிப்பதால்  என்ன பயன்? இத்தகைய பணக்காரன்  விரைவில்  ஒட்டாண்டியாவான்  என்கிறார் வேமனா.


sivan jaykay

unread,
Sep 26, 2023, 8:00:33 PM9/26/23
to amrith...@googlegroups.com
'அதிசய ராகம், அபூர்வ ராகம்''   நங்கநல்லூர்  J.K. SIVAN

எத்தனையோ விஷயங்கள் பற்றி  எழுதுகிறேன். என்ன எழுதினேன் என்பதே நிறைய  மறந்து போகிறது. இதை எப்போதோ எழுதியது இன்று  எங்கோ கண்ணில் பட்டது.  என் எழுத்துகளை என் பேர் இல்லாமலேயே பலர்  உலவ விடுகிறார்கள்  என்பதில் சனிஷதமும் வருத்தமும் கலந்திருக்கிறது. சந்தோஷம் என்ன வென்றால் நல்ல விஷயங்களை எல்லோரும் பரப்புகிறார்கள் என்று. வருத்தம்.  ஏன் என் பெயரை இருக்கக் கூடாது தங்கள் பெயர் தான் இருக்கவேண்டும் என்று என் குழந்தையை  அபகரிக்கிறார்கள் என்று.
பரவாயில்லை. இதனால் எந்த நஷ்டமும் எனக்கில்லை. என் பெயர் பிரபலமாவதால்   எனக்கு  யார்  என்ன கிரீடம் சூட்டப்போகிறார்கள். மலர்மாலை சாற்றப்போகிறார்கள்... ஒண்ணுமே  தேவையில்லையே.

பிளிட்ஸ் என்ற சுவாரஸ்யமான தினசரியோ, வாராந்திர பத்ரிக்கையோ ஞாபகமில்லை, பல வருஷங் களுக்கு முன்பு  ஆங்கிலத்தில்  ஸ்ரீ R .K கரஞ்சியா எழுதி நடத்திவந்தார். பாபுராவ் படேல் MOTHER INDIA என்று ஒரு அருமையான  மாதாந்திர  பெரிய பத்திரிகை நடத்தி வந்தார். ரொம்ப  சுவாரஸ்யமான பத்திரிகை அது. பாபுராவ்  கேள்வி பதிலுக்காகவே அதை படிப்போம். சரியான கிண்டல் நிபுணர். ILLUSTRATED WEEKLY என்று பத்திரிகை  வாரா வாரம் வரும். அதில் பேண்ட் மேல் ஜட்டி போட்டுக்கொண்டு தலை முக்காடுடன் ஒரு மொட்டை கழுத்து டைட்  பனியன் முழுக்கையையும் தலையையும்  மூட, கண்ணுக்கு மூடி போட்டுக்கொண்டு  ஒரு வீரன் நிற்பான். PHANTOM   என்று அவனுக்கு பெயர். PHANTOM  SKULL CAVE   என்ற  மண்டியோட்டுக் குகையில்  வசிப்பவன். அங்கே தான் அவன் சிம்மாசனம்.  அவன் சாகசங்களை வண்ணச் சித்திரத்தில் LEE  COCK என்பவர் போடுவார். பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.  எங்கள் பள்ளிக்கூடத்தில்   லைப்ரரியில் வாராவாரம்  இல்லஸ்ட்ரடேட்  வீக்லி  ஒரு காபி  பார்ப்பதற்கு கிடைத்தது.  PHANTOM க்கு 'குரன்' என்று தொப்பி போட்ட குள்ளன்  ஒரு கையாள் .   'டெவில்' என்கிற குதிரை நிற்கும். எனக்கு ரொம்ப  பிடிக்கும். 
 ஷங்கர் வீக்லி என்ற கார்ட்டூன் பத்திரிகை எல்லோரையும் சிரிக்க வைக்கும். கார்ட்டூன்  அரசியல் சம்பந்தமாக சுவாரஸ்யமாக இருக்கும்.  அதிகம் அரசியல் தெரியாத வயது எங்களுக்கு. 

ILLUSTRATED WEEKLY யில் ஒரு அற்புத கட்டுரை வந்திருந்தது.  அதில்  பிரபல ஷெனாய் வித்துவான் உஸ்தாத் பிஸ்மில்லா கான் பத்திரிகை ஆசிரியரிடம் சொன்னதாக ஒரு விபரம்:

பிஸ்மில்லா கானின் மாமா அலி பக்ஸ். அந்த மாமா அடிக்கடி தன் வீட்டுக்கருகே இருந்த பாலாஜி (மஹாவிஷ்ணு) கோவில் வேலைக்கு போவார். அங்கே நாள் முழுதும் ஷெனாய் வாசித்தால் மாசம் நாலு ரூபாய் சம்பளம். கூடவே மருமான் சிறுவன் பிஸ்மில்லாகானும் போவான். மாமா வாசிப்பதை கவனிப்பான். பாலாஜி கோவில் அறைகளில் ஒன்று அலிபக்ஸ் ஒய்வு எடுக்க கொடுத்திருந்தார்கள். அதில் பிஸ்மில்லா கான் மாமாவோடு சேர்ந்து தங்குவான். அங்கே மாமா விடாமல் ஷெனாய் வாசித்து மேலும் நன்றாக வாசிக்க பழகுவார். சாப்பாடு நேரம் வரை பிராக்டிஸ் பண்ணுவார். பசியோடு அவரை பார்த்துக்கொண்டே இருப்பான். கொஞ்சம் கொஞ்சமாக அவனும் வாசிக்க ஆரம்பித்து விட்டான். தனியாக வாசிக்கும் திறமை வந்து விட்டது.
ஏன் மாமா அந்த பாலாஜி கோவில் அறையில் தனியாக வாசித்து பழகுகிறார்? வீட்டில் நிம்மதியாக வாசிக் கலாமே என்று பிஸ்மில்லா யோசித்தான். அதை மாமாவிடம் ஒருநாள் கேட்டும் விட்டான். மாமா பதில் சொல்லவில்லை. அவன் தலையை தடவி ''பையா உனக்கும் ஒருநாள் தானாகவே புரியும்'' என்கிறார்.
''மாமு நான் என்றைக்கு வாசிக்க தொடங்குவது? என்றான் பிஸ்மில்லாகான்.
''என்றைக்கா? இன்றைக்கே என்கிறார் மாமா.
அன்றைக்கு சாயங்காலம் மாமா பிஸ்மில்லா கானை மஹா விஷ்ணு கோவிலுக்கு கூட்டி சென்றார். தான் வாசித்து முடித்ததும் அங்கேயுள்ள தனது தனி அறைக்கு அவனை இட்டுச் சென்றார். பதினெட்டு வருஷம் அவர் வாசித்து பழகிய அறை அது.
''இதோ பார் பிஸ்மில்லாகான். இங்கே வாசி. இது தான் சிறந்த இடம் வாசிக்க. ஒரு விஷயம். முக்கியமாக கவனி. இந்த கோவிலில் நீ ஏதாவது அதிசயமாக அபூர்வமாக கண்டால் அதை எவரிடமும் சொல்லாதே.'' என்கிறார் மாமா அல்லா பக்ஸ்.
பிஸ்மில்லா நாலு மணிமுதல் ஆறுமணிநேரம் ஒவ்வொருநாளும் அந்த அறையில் தொடர்ந்து வாசிக்க பழகினான். அந்த நான்கு சுவர்களுக்குள் வெளி உலகத்தில் அவன் அறியாத அபூர்வ சங்கீத சங்கதிகள் அவனுடைய ஷெனாய் வாத்தியத்தில் பேசின. மேலும் மேலும் அதில் சஞ்சரிக்க அவனுக்கு ஆர்வம் மேலிட்டது. நாதக் கடலில் மூழ்கிப் போனான்.
ஒரு நாள் அதிகாலை நாலு மணிக்கு பிஸ்மில்லா கான் பாலாஜி கோவில் அறையில் வாசித்துக் கொண்டிருந்தான். அதி அற்புதமாக அவனது ஷெனாய் வாசிப்பு தொடர்ந்தது. யாரோ அவன் அருகில் அமர்ந்து கொண்டு அவன் வாசிப்பதை தலையாட்டி ரசிப்பது போல் உணர்ந்தான்.. யார் என்று பார்த்தான். அவனுக்கு தெரிந்த முகம். அந்த கோவில் நாயகன் மஹாவிஷ்ணு. கிருஷ்ணன். . அவன் அருகே ரசித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது சாக்ஷாத் பாலாஜி கிருஷ்ணன் தான்.
அவனுக்கு மயிர்க்கூச்செரிந்தது. வாசிப்பதை நிறுத்தினான். பாலாஜியை வைத்த விழி வாங்காமல் பார்த்தான்.
''ஏன் நிறுத்தி விட்டாய் வாசி'' புன்சிரிப்பு. தொடர்ந்து வாசித்தான். பாலாஜி மாயமாக மறைந்தார்.
அதிர்ச்சி அடங்கவில்லை பிஸ்மில்லாகானுக்கு. மாமா எச்சரித்தது நினைவுக்கு வந்தது. மாமாவும் குருவுமான அல்லாபக்ஸ் காலில் விழுந்தான். நடந்ததைச் சொன்னான்.
கன்னத்தில் அறைந்தார் மாமா.
''யாரிடமும் சொல்லாதே என்று சொன்னேனே ஏன் என்னிடம் சொன்னாய்?''
உஸ்தாத் பிஸ்மில்லா கான் என்ற உலகப்புகழ் பெற்ற பிரபல ஷெனாய் வித்துவான் ஸ்ரீ கிருஷ்ணனை நேரில் பார்த்தவர். ஜாதி எங்கிருந்து வந்தது பூரண பக்தியில், நாத உபாசனையில்?. அவருக்கு கிருஷ்ணன் மேல் வாத்சல்யம் இருந்தது. அதனாலேயே கண்ணன் காட்சி தந்தான்.
இந்த சம்பவத்தை பிஸ்மில்லா கானிடம் நேரில் கேட்டவர் மலையாள மனோரமா பத்திரிகையை சேர்ந்த டாக்டர் மது வாசுதேவன்.
சில வருஷங்களுக்கு பின் ஜாம்ஷெட் பூரிலிருந்து வாரணாசிக்கு ஒரு ரயில் பயணம். ஜிக் புக் கரி என்ஜின். மூன்றாம் வகுப்பில் பிஸ்மில்லா கான் பயணம். நடுவில் எங்கோ ஒரு சிற்றூரில் இரவில் ரயில் நின்றபோது ஒரு மாடு மேய்க்கும் பையன் அந்த பெட்டியில் ஏறினான். கருப்பு ஒல்லி பையன். கையில் புல்லாங்குழல். ரயில் பெட்டியில் வாசிக்க ஆரம்பித்தான். பிஸ்மில்லா கானுக்கு அவன் வாசித்த ராகம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அதன் த்வனி நெஞ்சை தொட்டது. அகலவில்லை. ஆஹா அவன் தான் விரும்பிய கிருஷ்ணன் தான். இல்லாவிட்டால் இவ்வளவூர் அபூர்வ ''பிடிகள்'' வாசிக்கமுடியாது. ஷெனாய் மாஸ்டர் என்பதால் வாசிப்பதற்கு அது எவ்வளவு கடினம் என்று அவருக்கு தெரியும். கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது. வேணுகானம் அவ்வளவு அமிர்தத்தை பொழிந்தது. நிறுத்தினான். அவரைப் பார்த்தான் அந்த பையன். தன்னிடமிருந்த ரூபாய்களை அள்ளி அவனிடம் தந்தார். '
'இன்னும் வாசி'' என்று கெஞ்சினார் ''
''சரி'' என்று தலையாட்டி மீண்டும் தொடர்ந்தான் அந்த பையன். சங்கீத ஆனந்தத்தில் கண்களை தன்னையறிமால் மூடி சுகமாக ரசித்தார். வைகுண்டத்தில் மதுராவில், பிருந்தாவனத்தில் கண்ணனோடு உலாவிக்கொண்டுருந்த பிஸ்மில்லாகான். கண்ணை திறந்த போது அந்த பையனை ரயில் பெட்டியில் காணவில்லை.
உண்மையில் என்ன நடந்தது தெரியுமா. கும்பமேளா உற்சவம் நேரம் அது. மறுநாள் பிஸ்மில்லா கானின் நிகழ்ச்சி. அதற்கு வாசிக்கத்தான் போய் கொண்டிருந்தார். அவர் நிகழ்ச்சியில் அன்று வாசித்தது
அந்த '' கிருஷ்ண பையன்'' வாசித்த அதே ராகம். நீண்ட ஆலாபனையுடன் கண்ணை மூடி அவனை தியானித்து காற்றில் அவர் கீதம் எங்கும் வியாபித்தது.
''மீண்டும் வாசியுங்கள்'' என்று அவர் அந்த கிருஷ்ண பையனிடம் கெஞ்சியதைப் போலவே எல்லா ரசிகர்களும் கெஞ்சினார்கள்.
''என்ன ராகம் அது நீங்கள் புதிதாக வாசித்தது?'' என்று எல்லோரும் கேட்டபோது பிஸ்மில்லா கான் அது தான் ''கண்ணையா ராகம்'' என்கிறார்.
மறுநாள் செயதித் தாள்கள் அவரது நிகழ்ச்சி பற்றி, அவர் கண்டுபிடித்த அபூர்வ ''கண்ணையா ராகம்'' அதன் காந்த கவர்ச்சி பற்றி எல்லாம் பக்கம் பக்கமாக எழுதின. புல்லாங்குழல் மேதை ஹரிப்ரசாத் சவுராசியா அந்த ராகம் பற்றி பிஸ்மில்லாகானிடம் கேட்டு தெரிந்து கொள்ள விரும்பினார். அவரிடம்  ரயில் சம்பவத்தை  சொன்னார் பிஸ்மில்லாகான். புல்லாங்குழல் மேதை ஹரிப்ரசாத் கண்களிலும் கங்கை ஆறு. கண்ணன் தாமரை இதழ்களிலிருந்து புறப்பட்ட சங்கீதம் கண்ணையா ராகம் இனிக்காதா என்ன?  இது பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் உருவுக்கெல்லாம் இது  போன்ற சத் விஷயங்களை பரப்புங்களேன். அட்வான்ஸ் நன்றி.  CLICK OUR WEBSITE   
https://youiandkrishna.org/26/09/2023/a-rare-raga-by-ustad-bismillaa-khan-j-k-sivan/

sivan jaykay

unread,
Sep 26, 2023, 8:00:33 PM9/26/23
to amrith...@googlegroups.com


அறுபத்து மூவர்  -   நங்கநல்லூர்  J K   SIVAN 
நரசிங்க  முனையரைய  நாயனார்

இப்படி  ஒரு  நாயனார்  இருப்பது முதலில் தெரியாது. இன்னொரு விஷயம். அவர்  நம்பி ஆரூரர்  எனப்படும்  சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்பு தந்தை என்பது.   சுந்தரர் வரலாறு படித்த போது  இப்படி ஒரு விஷயம் எனக்கு கண்ணில்  படவில்லை.  காதிலும் இதுவரை விழவில்லை.     

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்  என்றாலே சிறந்த சிவபக்தர் என்று சொல்லாமலேயே நாம்   அறிவோம்.  நாயனார்   பட்டை பட்டையாக  விபூதி பூசிக்கொண்டு  யார் வந்தாலும் தடால் என்று காலடியில் விழுந்து வணங்குபவர்.
அரையர் என்றாலே  ஏதோ ஒரு குறுநில மன்னர் என்று தெரியும்.  பெரிய பழுவேட்டரையர், சின்ன பழு வேட்டரையர் என்று சோழநாட்டில் சக்தி வாய்ந்த  குட்டி சமஸ்தானாதிபதிகள் இருந்திருக்கிறார்கள். பொன்னியின் செல்வனில் பலமுறை படித்தது  நினைவிருக்கும்.  இந்த நாயனார் அப்படி ஒரு குட்டி குறுநில மன்னர். 

நடுநாடு என்பது பண்டைய தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி. அதில் திரு முனைப்பாடி நாடு என்பது ஒரு பெருமை வாய்ந்த பகுதி. அதற்கு ஒருகாலத்தில் ராஜா வாக இருந்தவர் இந்த  நரசிங்க முனையரைய நாயனார்.

பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் திருகோவலூரில் இருந்த தெய்வீகன் என்ற அரசனுக்கு ஒளவையார் திருமணம் செய்து வைத்ததாகவும், தெய்வீகனின் வழித்தோன்றலில் வந்தவர் நரசிங்க முனையரைய நாயனார் என்றும்சொல்கிறார்கள்.  தனது ராஜ்யத்தில் இருந்த சிவாலயங்களை நன்றாக  பாதுகாத்து பராமரித்தவர். ராஜாக்கள் எல்லோருமே  கத்திச்சண்டை குதிரை ஏற்றம், யானையேற்றம் போன்றவற்றில் பயிற்சி பெற்றவர்கள். நரசிங்க முனையரையர்  ஒரு சிறந்த வீரர். இல்லாவிட்டால் ராஜாவாகி  இருக்க முடியுமா?

திருவாதிரை நாட்களில்  எல்லா  சிவபக்தர்களுக்கும்  அடியார்களுக்கும்   உணவும் உடையும் அளிப்பார். கையில்  நூறு பொற் காசுகள் வேறு கொடுப்பார்.  கூட்டம் அவரைத்தேடி வருமா வராதா?  ஒரு திருவாதிரை அன்று வந்த பக்தர்களுக்கு நடுவே  ஒரு  தொழுநோயாளி. அருவருப்பாக  காட்சி தந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் நெற்றியில் பட்டையாக விபூதி.   அந்த வியாதியஸ்தரைக் கண்டதும் மற்ற பக்தர்கள் ஒதுங்கி தூரமாக  நின்றார்கள். நரசிங்க முனையரையர் கண்ணில் அந்த வியாதியஸ்தர் பட்டதும் ஓடிவந்தார். அவரை அணைத்துக்கொண்டு வணங்கி அவர் காலில்  விழுந்தார். எல்லோரையும் விட  அன்று அந்த வியாதியஸ்த  அஃதற்குக்கு ரெட்டை மடங்கு உபச்சாரம். நூறுக்கு பதில் இருநூறு பொற்காசுகள். சிவபக்தர்களிடையே  ஏழை பணக்காரன், வாலிபன் வயோதிகம், ஆண்  பெண்,உயர்ந்த  ஜாதி தாழ்ந்த ஜாதி,  அழகன், கோரமானவன்  என்ற பாகுபாடு வித்யாசம் இல்லாத  சிவபக்தர். 
.
திருவாதிரை திருநாளன்று இறைவனைப் போற்றி வழிபட்டு, சிவனடியார்களுக்கு உணவும் உடையும் அளிப்பார். அவற்றுடன் அவர்களுக்கு நூறு பொன்னையும் கொடுத்து மகிழ்வார். திருநீறு அணியும் சிவனடியார்களுக்கு விரும்பிய‌தைக் கொடுத்து, வழிபாடு செய்து பெரும் பொருள் கொடுத்தமையால் அவரை நாடி வரும் அடியார்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.

ஒருமுறை திருவாதிரைத் திருநாளில் அடியார் வழிபாட்டின் போது, வந்திருந்த அடியார்கள் கூட்டத்தில் ஒருவர் தொழுநோயால் தாக்கப்பட்டு எல்லோரும் வெறுக்கத் தக்க மேனியைக் கொண்டவராய் இருந்தார். ஆனாலும் அவர் வெண்ணீறு அணிந்து இருந்தார்.   அவரைக் கண்டதும் அங்கிருந்தோர் எல்லோரும் அவரை விட்டு சற்று விலகி நின்றனர். அவர் மட்டும் அக்கூட்டத்தில் தனித்து விடப்பட்டார். அதனைக் கண்ட நரசிங்க முனையரையர், ‘எத்தன்மையானாராலும், திருநீறு அணிந்திருந்தால் அவர்களை இகழக் கூடாது’ என்று கூறியவாறு அவரை எதிர்கொண்டு அழைத்து வணங்கினார்.

ஒருமுறை நரசிங்க முனையரையர் திருநாவலூர் வீதியில் செல்லும்போது அங்கு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சுந்தரரைக் கண்டார். சுந்தரரை தம்முடைய வளர்ப்புப் பிள்ளையாகக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உதித்தது.

சுந்தரரின் தந்தையான சடையனாரைச் சந்தித்து தம்முடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார் நரசிங்க முனையரையர். சடையனாரும் நரசிங்கரின் விருப்பத்திற்கு உடன்பட்டு சுந்தரரை தத்துக் கொடுத்தார்.
சுந்தரர் தம்முடைய திருமணப் பருவம் வரை நரசிங்க முனையரையரின் வளர்ப்பில் திருநாவலூரில் இருந்து பின்னர் இறைவனாரால் ஆட்கொள்ளப்பட்டார். அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஒருவராக அருளப்பட்டார்.
நரசிங்க முனையரைய நாயனார் குருபூசை புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
PLEASE  VISIT OUR WEBSITE  FOR READING ALL POSTS AND OUR BOOKS FREELY   
https://youiandkrishna.org/26/09/2023/arupaththu-moovar-narasinga-munaiyaraiyar-j-k-sivan/
It is loading more messages.
0 new messages