Groups
Groups

154 views
Skip to first unread message

sivan jaykay

unread,
Jul 18, 2025, 8:18:53 PMJul 18
to amrith...@googlegroups.com
ஒரு கணம் நினைப்போம் - நங்கநல்லூர் J K சிவன்
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பகவான் நம்மோடு நம் அருகிலேயே இருந்து கொண்டு தாயன்போடு கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நம் நலத்தில் அவனை விட அக்கறை கொண்டவர் வேறு யார்?
நாம் செய்யவேண்டியது அவனை சதா நினைத்து அவனிடம் முழுசாக சரணடைவதே. அவனிடம் நம்மை ஒப்புவித்தால் அப்புறம் நமக்கு தனியாக என்ன கவலை?
'பகவானே வெங்காயத்தின் தோலை உரிப்பது போல் என்னிடமுள்ள சுயநலம் , பொறாமை, கோபம் போன்ற தீய குணங்களை அகற்றி விடு. ' என வேண்டிக் கொள்வோம்.
நமக்கு நடக்கும் நல்லது கெட்டது எல்லாமே நம் கர்ம வினைகளால் நமக்கு நாமே உற்பத்தி செய்து கொண் டவை. அதன் பலனிலிருந்து தப்ப முடியாவிட்டாலும் அவற்றின் பலனை அனுபவிக்கும்போது கஷ்டங்களை குறைத்தும் சுகம் அதிகரிக்கவும் அவன் அருள் தேவை. எல்லாம் அவன் செயல் என ஏற்றுக்கொள்ள மனம் பக்குவப்பட வேண்டும்.
';அவனன்றி ஓர் அணுவும் அசையாது' என்பது அடிக்கடி நெஞ்சில் சதா நிற்கவே ண்டிய ஒரு அற்புத வாக்கியம். சத்ய வாக்கு. மறையும் வரை உலக நாடக மேடையில் நம்மை ஆடவைத்து ரசிக்கும் தாய் அந்த தாயுமா னவன். ஆசாபாசங்கள் தானே நமது ஆட்டம்.
நாம் அவனை குட்டிக் குரங்கு தாயை கெட்டியாக பற்றிக்கொண்டு கிளைக்கு கிளை தாவும் தாய்க் குரங்குடன் எங்கும் செல்வதைப் போல அவனைக் கெட்டியாக பிடித்துக்கொண்டால் வலிக்காமல் தூங்குகின்ற குட்டிகளை வாயில் கவ்விக்கொண்டு ஒவ்வொரு இடத்துக்கும் ஜாக்கிரதையாக தூக்கிச் செல்லும் தாய்ப் பூனை போல் போற்றி காப்பாற்று வான். இது தான் 'மர்க்கடஞாயம் மார்ஜால ஞாயம்'.
நீ முழு மனசோடு என்னை சரணடைந்தால் உன்னை காப்பாறுவது என்னுடைய கடமை என்று கிருஷ்ணன் கீதையில் சொல்வதும் இது தானே.'
நன்றியோடு அவனை எந்நாளும் நினைப்போம்.

sivan jaykay

unread,
Jul 25, 2025, 7:39:55 PMJul 25
to amrith...@googlegroups.com

முருகனின் மறுபெயர் அழகு...    நங்கநல்லூர் J K  SIVAN 

எனக்கு  நினைவு  தெரிந்து நான் வளர்ந்த இடம் கோடம்பாக்கம் வடபழனி முருகன் ஆலயத்தை ஒட்டிய  ஒரு பிள்ளைமார் தெருவில்.  அப்போது பழனியாண்டிக்கு  பெரிய கோவில் இல்லை. ஓலைக் குடிசை. ஒரு பெரிய  கோவணாண்டி படம் மட்டுமே.   ஐந்து வயது முதல்  என் மனதில் எப்படியோ  ஒரு  நிரந்தர இடத்தை பிடித்தவன்  சுப்ரமணியன். 86லும்  தினமும் மனதில் நான் தொழுபவன், பாடுபவன்.
அடிக்கடி  நான் 'தேவன்' கதைகளை படிப்பவன். அதில்  வடபழனி செந்தூர் முருகர்கள் அவசியம் வருவார்கள். தேவன் மாதிரி ஷண்முகனை வர்ணிக்க  இன்னொருவர் இனிமேல் தான் பிறக்க வேண்டும்.
தூத்துக்குடியில் நான்  சில காலம் இருந்தபோது அடிக்கடி  திருச்செந்தூர்  முருகனைக் காண   ஸ்கூட்டரில் போவேன். அங்கே பன்னீர் இலை விபூதி பிரசாதம். விசேஷம்.

அபிநவகுப்தன் என்ற மாந்த்ரீகன் செய்வினையால்  ஆதி சங்கரரை சூலை நோய்  வியாதி வாட்டியபோது அவரை செந்தூர் முருகன் அழைத்து குணப்படுத்தினான். அப்போது அவர் இயற்றி பாடியது தான் சுப்ரமணிய புஜங்கம். அதை தமிழில்  புத்தகமாக எழுதி இருக்கிறேன்  சிறு புத்தகம் அந்த  ebook     முகநூலில்  இணைக்க முடியாது. வாட்சாப்ப்  9840279080ல்  தொடர்பு கொண்டால் தருகிறேன். ஆகவே  சங்கரரை  குணமாக்கியது செந்தூரானின் “பன்னீர் இலை விபூதி தான்.

கும்பினி ஆட்சியில்  கலெக்டர் லூஷிங்டனின் மனைவி சூலை நோயால் பாதிக்கப்பட்டபோது, செந்தூர்  முருகனின் பன்னீர் விபூதி குணமாக்கியதால்  அந்த கலெக்டர் ஷண்முகன் ஆலயத்துக்கு பல  வெள்ளி பாத்திரங்களை காணிக்கையாக கொடுத்தான். வீரபாண்டிய கட்டபொம்மனை இஷ்ட  தெய்வம். 

சிக்கல் முருகனுக்கு  வியர்வை சுரக்கும்.  செந்தூரனுக்கும் அப்படி த்தான்.
எத்தனையோ  பக்தர்கள் வாழ்வில்  அதிசயங்களை நிகழ்த்தியவன்  பன்னிருகையான்.
 ஸூனாமியின்  தாக்கம், அதனால் நேர்ந்த  அழிவு,  மற்ற இடங்களில்  கருணையின்றி  இயற்கையின் கோபத்தை காட்டினாலும்  கடற்கரையிலேயே உள்ள  திருச்செந்தூர் ஷண்முகன் ஆலயத்தை  வெறுமனே தொட்டு  பாதத்தில்  வணங்கி திரும்பியதோடு சரி.

17ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள்  ஷண்முகன்  சிலையாய் திருடிச்சென்றார்கள்.  கடல் சீற்றம் கொண்டு அவர்களை  விழுங்கியது.   ஒரு பக்தன் கனவில் தோன்றி செந்தூரன்  கனவில் தோன்றி, கடலில் மிதக்கும் எலுமிச்சைப் பழத்துக்கு மேலே கருடன் வட்டமிடும் இடத்தில் கடலில் என்னை காண்பாய் எடுத்து கோயிலில்  வைத்து  வழிபடு என்றதும்  அந்த இடத்தை அடையாளம் கண்டு கடலில்  மூழ்கி அந்த இடத்தில் கிடைத்த  உற்சவர் இன்றும்  கோயிலில் குடிகொண்டு நமக்கு அருள் பாலிக்கிறார். 

திருவாடுதுறை ஸ்ரீல ஸ்ரீ தேசிக தம்பிரான்  மேல கோபுர  திருப்பணிக்கு  வேலையாட்களுக்கு  சம்பளம் கொடுக்க பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலிக்குப் பதிலாக  பன்னீர் இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பாருங்கள் என்று  சொன்னார். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி தங்கக்காசாக மாறியதைப் பார்த்து  கூலியாட்கள்  அதிசயித்தனர்  என்கிறது ஸ்தலபுராணம். 

 செந்தூரன் இலைத்திருநீறு  பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு மாதிரி புகழ் பெற்ற பிரசாதம். 
ஒரு விஷயம் தெரியுமா? பன்னீர் மர இலையில் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என   ரெண்டு பக்கத்திலும் ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னிரு கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது   பன்னீர் திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குபவன். பன்னீர் செல்வம் என்று  அதற்கு பெயர். பன்னீர்  இலை  ஆறுமுகன் வேல் மாதிரி உருவம் கொண்டது. நோய்  தீர்ப்பது. 

சுப்ரமணிய  புஜங்க ஸ்தோத்ரத்தில் ஒரு ஸ்லோகம்; 
“அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ  ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்  விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே”

“தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்.”

கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி,  ஆதிசங்கரர்  தனது  நோய் தீர  செந்தூர் வந்து  கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.
அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து வந்த து தான் சுப்ரமணிய புஜங்கம். புஜங்கம்;  சர்ப்பம். 
ஒரு பக்தருக்கு வீடு முழுவதும் தீ பிடித்து எரிந்து போனாலும்  வீட்டில் உள்ள திருச்செந்தூர் வைத்தி ருந்த இடத்துக்கு மட்டும்  தீ பரவவில்லை. 

திருச்செந்தூர் முருகனின் மாலையை ஒரு குருக்கள் ஒரு கண் இழந்த சிறுவனின் மீது வைத்துப் பிரார்த்தனை செய்தபோது, குழந்தைக்கு மறுபடியும் பார்வை கிடைத்தது.  எண்ணற்ற பேர்  வாழ்வில்  முருகன்  விளையாடி இருக்கிறான்.  அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்த்தி உள்ளான். 

எத்தனையோ  சந்தர்ப்பங்களில் என்னை காத்து என்னை மீட்டு தன்னைப்பற்றி  எழுத இன்றும் விட்டு வைத்திருக்கிறான் என்பதை   உணரும்போது முருகா முருகா  என்று நெஞ்சார அவனை நன்றியோடு நினைக்க வைக்கிறது. கண்கண்ட தெய்வம் கந்தசாமி.

sivan jaykay

unread,
Jul 25, 2025, 7:39:57 PMJul 25
to amrith...@googlegroups.com
ஆடி வெள்ளி அம்பாள்  தரிசனம்  -   நங்கநல்லூர் J K  SIVAN 

இன்று  ஆடி வெள்ளிக்கிழமை. என் பெண் வீட்டில்  உள்ள அற்புதமான  ராஜராஜேஸ்வரி விக் ரஹத்துக்கு  அபிஷேகம் பூஜை.சர்க்கரை பொங்கல் நைவேத்தியம். 

காலில் அடிபட்டு ஐஸ்கட்டி பாக்கெட் வீக்கத்தின் மேல் வைத்து அசையாது படுத்திருந்தாலும் காதில் அம்பாள்  ஸ்லோகங்கள் ஒலிக்கிறது. அம்பாள் காருண்ய தேவதை.அருள் ப்ரவாஹத்தை வாரி வழங்குபவள் 

மஹாபெரியவாளின்  காமாக்ஷி. நெமிலியில் சுண்டுவிரல் அளவு தங்க விக்ரஹ   பாலா  திரிபுரசுந்தரி
 குசஸ்தல ஆற்றில்  பக்தருக்கு கனவில் தோன்றி தான் இருப்பதை அறிவித்து அவர் கையில் கிடைத்து நெமிலியில்  அவர் வீடே  ஆலயமானவள்.

லலிதாம்பாள்  ஆசியோடு  ஆயுதம் தங்கி ஒன்பது வயதில் பண்டாசுரனை எதிர்த்தவள். அவனையும் அவன் சேனையையும்  அழித்து அம்பாளோடு ஐக்யமானவள்.  ஒரு கையில் ஜெப மாலை, மற்றொரு கை புஸ்தக பாணி. நெமிலியில் சாக்லேட் நைவேத்தியம். கை நிறைய எனக்கு சாக்லேட்  பிரசாதம் கொடுத்தார்கள். மூர்த்தி சிறியது கீர்த்தி மிகப்பெரியது. 

ஸ்ரீ  வித்யா உபாசனை  மிகவும் பொறுப்பாக  ஜாக்கிரதையாக சாஸ்த்ரோக்தமாக செய்யவேண்டியது.  மந்த்ர உச்சாடனம் சரியாக இருக்கவேண்டும். ஸ்ரீ லலிதாம்பிகை சிவந்தவள். உதய சூரியனுடனும் குங்குமம் எனும் சிந்தூர வண்ணம். மாணிக்க சிவப்பு கற்களை ஆபரணமாக அணிந்தவள். பிறைச் சந்திரனை சைகையில் சூடியவள் பிரசன்ன வதனம்.   இவல்   மஹா பெரியவாளுக்கு   எங்கள் நங்கநல்லூரில்  நேரில் தரிசனம் தந்து   குடிக்க தீர்த்தம் தந்ததைப்  பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். இப்போது சுருக்கமாக  மீண்டும் சொல்கிறேன்.

மஹா பெரியவா நடந்தே எல்லா சிவஸ்தலங்களும் செல்பவர். ஒருதடவை திரிசூலம் மலை அடியில் உள்ள அருமையான அமைதியான திரிசூலநாதர் கோவிலை விஜயம் செய்துவிட்டு திருசூலநாதர் திரிபுர சுந்தரி தரிசனத்துக்குப் பிறகு மெதுவாக வடக்கு நோக்கி நடந்து வந்தார். அப்போது மீனம்பாக்கத்துக்கும் பரங்கிமலைக்கும் இடையே பழவந் தாங்கல் ரயில் நிலையம் கிடையாது. பரங்கிமலை ரயில் நிலையம் அருகேபுராதனமான  நந்தீஸ்வரர் பிருங்கி மகரிஷிக்கு தரிசனம் கொடுத்த சிவாலயம்  இருக்கிறது. அம்பாள் ஆவுடை நாயகி  அழகி. அவளை தரிசிக்க நங்கநல்லூர் வழியாக நடந்து வந்தார். நங்கநல்லூர் உருவாகாத காலம்.  பழவந்தாங்கல் கிராமம் வழியாக நல்ல வெயில் நேரத்தில் நடந்தார். ரொம்ப களைப்பு.  வழியில் ஒரு அரசமரம். அதன் அடியில் சற்று இளைப்பாற அமர்ந்தார்.  தொண்டர்கள்  சற்று தள்ளி வெவ்வேறு இடங்களில் அமர்ந்து சிரம பரிகாரம் செய்தார்கள். மஹா பெரியவாளுக்கு தாகம், தொண்டை வறள  மெல்லிய குரலில் சற்று தள்ளி அமர்ந்திருந்த மடத்து தொண்டர்களில் ஒருவரைக் கூப்பிட்டு ''கொஞ்சம் குடிக்க ஜலம் கொண்டுவாடா '' என்றார், 
தொண்டர் எழுந்து எங்கோ சென்றார். உண்மையில் பெரியவா ஜலம் கேட்டது தொண்டர் காதில் விழவில்லை. அவர் வேறு  எதற்கோ எழுந்து போய் இருக்கிறார்.
''சரி அவன் வரட்டும் என்று  மஹா பெரியவா காத்திருந்தபோது ஒரு சிறு பெண் குழந்தை குரல் கேட்டது. ஜபம் பண்ணிக்கொண்டிருந்த பெரியவா  கண்ணைத் திறந்து பார்த்தார்.
லக்ஷணமாக ஒரு ஐந்து ஆறு வயது  சிறு பெண் கையில் ஒரு சுத்தமான சொம்பு நிறைய ஜலத்தோடு  எதிரில் நிற்கிறாள் . .
'இந்தாங்கோ   குடிக்க ஜலம் ' . சொம்பை நீட்டினாள்.
மிக சந்தோஷத்தோடு சொம்பு ஜலத்தைபருகி விட்டு அந்த பெண்ணிடம் சொம்பை திருப்பிக் கொடுத்தார். முகத்தில் புன்னகையோடு அந்த பெண் சொம்பை வாங்கிக் கொண்டு, அவரைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள். அப்போது தான்   வெளியே சென்றிருந்த  தொண்டரும் அருகே வந்து நின்றார்.
'யாரடா அந்த குழந்தை, அது கிட்டே ஜலத்தோடு சொம்பை   நீ  கொடுத்து அனுப்பினே?''
''பெரியவா க்ஷமிக்கணும். நீங்க ஜலம் கேட்டதே எனக்கு தெரியாது. நான் எந்த குழந்தையும் இங்கே பாக்கலியே . யார் கிட்டேயும் தீர்த்த சொம்பு கொடுத்து அனுப்பலையே ''

சுற்று முற்றும் ஜன நடமாட்டம் இல்லாத இடம். மஹா பெரியவா மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்தார்.
அந்த குழந்தையின் முகம், அவள் உடை ஆபரணம் எல்லாமே அவர் மனதில் அந்த குழந்தை ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி என்று புரிந்துவிட்டது. அடடா அம்பிகையே அல்லவோ வந்து எனக்கு ஜலம் கொடுத்திருக் கிறாள்''

அந்த கிராம பெரியவர்களை எல்லாம் அழைத்துவரச் சொன்னார். பெரியவா வந்திருக்கும் செய் தி
அதற்குள் பரவிவிட்டதால் ஊர்மக்கள் தரிசனத்துக்கு வந்துவிட்டார்கள்.

"இந்த இடத்தில் ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி எங்கோ பூமிக்கடியில் இருக்கிறாள். உடனே ஊர்க்காரர்கள் ஒன்று கூடிப்பேசி தோண்டி கண்டுபிடியுங்கள்'' என்று சொன்னார் மஹா பெரியவா.  பிறகு பெரியவா பரங்கிமலை நோக்கி நடந்துவிட்டார்.

ஊர்க்காரர்கள்  மஹா பெரியவா சொன்ன இடத்தில், தோண்டிப் பார்த்த போது  அழகே வடிவான அம்பிகை கிடைத்தாள் , தொடர்ந்து ஸ்ரீ சண்டிகேஸ் வரி விக்ரஹமும் கிடைத்தது. காஞ்சிபுரத்திற்கு சென்று மஹா பெரியவாளுக்கு விஷயம் சொன்னார்கள். அம்பாள் பெயர் '' ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி .இவளுக்கு ஒரு ஆலயம் எழுப்பி அம்பாளை பிரதிஷ்டை பண்ணி நித்ய பூஜை விடாமல் செய்ய ஏற்பாடு பண்ணுங்கள்'' என்று ஆசிர்வதித்தார்.

இந்த விஷயம் தெரிந்தவர்கள் அந்த ஆலயத்துக்கு தரிசனம் செய்ய தவறுவதில்லை.. நான் பலமுறை சென்றிருக்கிறேன். அமைதியான ஆலயம். பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து நேரு காலனி 2வது தெருவில் இந்த ஆலயத்துக்கு நடந்தோ, ஆட்டோ ரிக்ஷாவிலோ கூட வரலாம்.
--

sivan jaykay

unread,
Jul 27, 2025, 8:24:51 PMJul 27
to amrith...@googlegroups.com

வைராக்ய சதகம்    -  பர்த்ருஹரி -   நங்கநல்லூர்  J K  SIVAN 
ஸ்லோகங்கள்   31-40

31. भोगे रोगभयं कुले च्युतिभयं वित्ते नृपालाद्भयं   माने दैन्यभयं बले रिपुभयं रूपे जराया भयम् ।शास्त्रे वादिभयं गुणे खलभयं काये कृतान्ताद्भय    सर्वं वस्तु भयान्वितं भुवि नृणां वैराग्यमेवाभयम् ॥ 

Bhoge rogabhaya.n kule chyutibhaya.n vitta nR^ipaalaadbhayaM  maane dainyabhayaM bale ripubhaya.n ruupe jaraayaa bhayam.h . shaastre vaadibhaya.n guNe khalabhaya.n kaaye kR^itaantaadbhaya.n sarva.n vastu bhayaanvitaM bhuvi nR^iNaa.n vairaagyamevaabhayam.

போ⁴கே³ ரோக³ப⁴யம் குலே ச்யுதிப⁴யம் வித்தே ந்ரு’பாலாத்³ப⁴யம் மாநே தை³ந்யப⁴யம் ப³லே ரிபுப⁴யம் ரூபே ஜராயா ப⁴யம் । ஶாஸ்த்ரே வாதி³ப⁴யம் கு³ணே க²லப⁴யம் காயே க்ரு’தாந்தாத்³ப⁴யம் ஸர்வம் வஸ்து ப⁴யாந்விதம் பு⁴வி ந்ரு’ணாம் வைராக்³யமேவாப⁴யம் .

க்ஷணபங்கு³ரே ததி³தரே போகே³ ரதிம் மா க்ருதா:²  40


புலன்களை உபயோகித்து மகிழும் நமக்கு வியாதி பற்றிய பயம் நீங்குவதில்லை. ராஜாக்களுக்கும் பிரபுக்களுக்கும்  எங்கே  தமது வாரிசு நின்று விடுமோ என்று பரம்பரை பற்றிய பயம் உண்டு. பணக்காரனுக்கு தனது சொத்து வேறு யார் கைக்காவது போய்விடுமோ என்ற பயம் தூக்கமில்லாமல் பண்ணிவிடும்.  அரசியல், ஆளுமை இதில் எதிரிகள் பற்றிய பயம் நடுங்க வைக்கும்.  மக்கள் செல்வாக்கு குறைந்து விடுமோ என்ற பயம் நடுக்கம் தரும். அழகு குலைந்து வருகிறதோ,  வயதாகிறதே எப்படி சுருக்கத்தை, நரையை மறைப்பது என்ற கவலை பலருக்கு , அதிலும் முக்யமாக  நடிகர் நடிகைக்கு  உண்டு. அழகு நிரந்தரம் என்று யார் சொன்னது?  கல்வியில் பெருமை, பேருக்கு போட்டி - அரைகுறைகளுக்கு  இது  நிம்மதியை குலைக்கும்..ஒவ்வொரு நிலையிலும் மனித வாழ்க்கையில்  பயம் ஏதாவது இருந்து கொண்டே இருக்கிறது. காரணம் போகமும்  ரோகமும் தான்  புத்தியில் கிளர்ச்சியை தருகிறது.  உலகப்பற்றில்லாதவனுக்கு எந்த  கவலையும் இல்லை. 

32.  आक्रान्तं मरणेन जन्म जरसा चात्युज्ज्वलं यौवनं  सन्तोषो धनलिप्सया शमसुखं प्रौढाङ्गनाविभ्रमैः । लोकैर्मत्सरिभिर्गुणा वनभुवो व्यालैर्नृपा दुर्जनैः अस्थैर्येण विभूतयोऽप्युपहता ग्रस्तं न किं केन वा ॥ ३२॥

ஆக்ராந்தம் மரணேந ஜந்ம ஜரஸா சாத்யுஜ்ஜ்வலம் யௌவநம்  ஸந்தோஷோ த  நலிப்ஸயா ஶமஸுக²ம்
 ப்ரௌடாங்க³ நாவிப்ரமை। லோகைர்மத்ஸரிபிர்கு³ணா வநபுவோ வ்யாலைர்ந்ருʼபா து³ர்ஜநை:  அஸ்தை²ர்யேண 
விபூதயோப்யுபஹதா க்³ரஸ்தம்  கிம் கேந வா  32 ॥ 


 ஜனனம் என்றாலே  அதை தொடர்ந்து உடனே  மரணம் மெதுவாக அதை விழுங்க வருகிறது.  கவரும்  யௌவனம் என்றால் அதன் நிழலாக தொடர்ந்து வருவது  முதுமை.  இருப்பதில் கொண்டாடி மகிழும்  திருப்தியை தின்பதற்கு  வருவது  பேராசை  அமைதியான மனம் என்றால் அதை சலனப்படுத்த்த  பெண்ணாசை. வனத்தில் சென்று இருப்போம் என்றால்  அங்கே  நம்மை அடித்து உண்பதற்கு காத்திருக்கும்   கொடிய வன விலங்குகள்  பற்றிய  பயம். நேர்மையான  நீதி மான் கள்  ராஜாக்களுக்கும்  ஒரு வித பயம். அவர்களின்  கொடிய மனம் கொண்ட  மந்திரிகள். எவர் எப்போது . எப்படி துரோகம் செய்து கவிழ்ப்பாரோ?  அதிகாரம்,  பணம்  எல்லாமே நிரந்தரம் தான்.எப்போது  இந்த உலகத்தில் பயமோ  அநித்யமோ  விலகப்போகிறது?

33   . आधिव्याधिशतैर्जनस्य विविधैरारोग्यमुन्मूल्यते   लक्ष्मीर्यत्र पतन्ति तत्र विवृतद्वारा इव व्यापदः । जातं जातमवश्यमाशु विवशं मृत्युः करोत्यात्मसात्

तत्किं तेन निरङ्कुशेन विधिना यन्निर्मितं सुस्थिरम् ॥ ३३॥


 (33) ādhivyādhiśatairjanasya vividhairārōgyamunmūlyatē lakṣmīryatra patanti tatra vivr̥tadvārā iva vyāpadaḥ । jātaṁ jātamavaśyamāśu vivaśaṁ mr̥tyuḥ karōtyātmasāt tatkiṁ tēna niraṅkuśēna vidhinā yannirmitaṁ susthiram ॥ 33॥


ஆதிவ்யாதிஶதைர்ஜநஸ்ய விவிதைராரோக்³யமுந்மூல்யதே லக்ஷ்மீர்யத்ர பதந்தி தத்ர விவ்ருʼதத்³வாரா இவ வ்யாபத:³ ।  ஜாதம் ஜாதமவஶ்யமாஶு விவஶம் ம்ருʼத்யுகரோத்யாத்மஸாத் தத்கிம் தேந நிரங்குஶேந விதிநா யந்நிர்மிதம் ஸுஸ்தி²ரம்  33 


மனித உடம்பை  நூற்றுக்கணக்கான  வியாதிகள் சூழ்ந்து கொள்கிறது.  அவனது ஆரோக்யத்தை  பாழாக்குகிறது., மஹா லக்ஷ்மி எனும் செல்வம் தரும்  தெய்வம் நம்மிடம் வராமல் எத்தனையோ  தீய சக்திகள்  தாக்குகிறது. சாஸ்வதமான, மனிதனின் இயல்பான  ஆனந்தத்தை  துய்க்க விடாமல்  மரணம் எனும் பயத்தையம்,  புலன்களால் உருவாகும்  உணர்வுகளையும்  நிரப்பி மனதை கெடுக்கிறது.     பகவான் நமக்கு அருளிய  சதானந்தத்தை அனுபவிக்க முடியாமல் நாம்  திண்டாடுகிறோம். இது தான் சம்சார சாகர அவஸ்தை. 


34  भोगास्तुङ्गतरङ्गभङ्गतरलाः प्राणाः क्षणध्वंसिनः स्तोकान्येव दिनानि यौवनसुखस्फूर्तिः प्रियासु स्थिता । तत्संसारमसारमेव निखिलं बुद्ध्वा बुधा बोधकाः लोकानुग्रहपेशलेन मनसा यत्नः समाधीयताम् ॥ ३४॥


(34) bhōgāstuṅgataraṅgabhaṅgataralāḥ prāṇāḥ kṣaṇadhvaṁsinaḥ stōkānyēva dināni yauvanasukhasphūrtiḥ priyāsu sthitā । tatsaṁsāramasāramēva nikhilaṁ buddhvā budhā bōdhakā lōkānugrahapēśalēna manasā yatnaḥ samādhīyatām ॥ 


போ⁴கா³ஸ்துங்க³தரங்க³ப⁴ங்க³தரலா: ப்ராணா: க்ஷணத்⁴வம்ஸிந: ஸ்தோகாந்யேவ தி³நாநி யௌவநஸுக²ஸ்பூ²ர்தி: ப்ரியாஸு ஸ்தி²தா । தத்ஸம்ஸாரமஸாரமேவ நிகி²லம் பு³த்³த்⁴வா பு³தா⁴ போ³த⁴கா: லோகாநுக்³ரஹபேஶலேந மநஸா யத்ந: ஸமாதீ⁴யதாம் ॥ 34 ॥

கடலில் ஹோ  வென்று  உயர எழும்பி  மோதி தாக்கும்  அலைகள்  நிலையானவை இல்லை. அது போல்  தான் வாழ்வில்  நம்மை  தாக்கும்  எண்ண அலைகளும். சாஸ்வதமாக நிரந்தரமாக இருப்பவை போல தோன்றினாலும்  அவை அழிவன . புலன்கள் துய்க்கும்  இன்பம் அப்படிப்பட்டது தான். வாழ்வு எந்நேரமும்  முடிவுக்கு வந்துவிடும். யௌவனம், கவர்ச்சி, அற்ப  சுக போகங்கள் சந்தோஷங்கள் எல்லாமே  கொஞ்ச காலம் தான்.  ஞானிகள், கற்றவர்கள், ஆச்சார்யர்கள்  நமக்கு இதெல்லாம் எடுத்துச் சொல்பவர்கள். அதெல்லாம் கேட்டு  பயனுற  யாருமே  தயாராக இல்லையே  என்ன செய்வது?


35. भोगा मेघवितानमध्यविलसत्सौदामिनीचञ्चला आयुर्वायुविघट्टिताब्जपटलीलीनाम्बुवद्भङ्गुरम् । लोला यौवनलालसास्तनुभृतामित्याकलय्य द्रुतं

योगे धैर्यसमाधिसिद्धसुलभे बुद्धिं विधध्वं बुधाः ॥ ३५

(35) bhōgā mēghavitānamadhyavilasatsaudāminīcañcalā āyurvāyuvighaṭṭitābjapaṭalīlīnāmbuvadbhaṅguram । lōlā yauvanalālasāstanubhr̥tāmityākalayya drutaṁ yōgē dhairyasamādhisiddhasulabhē buddhiṁ vidhadhvaṁ budhāḥ ॥ 35॥ 

போ⁴கா³ மேக⁴விதாநமத்⁴யவிலஸத்ஸௌதா³மிநீசஞ்சலா ஆயுர்வாயுவிக⁴ட்டிதாப்
³ஜபடலீலீநாம்பு³வத்³ப⁴ங்கு³ரம் । லோலா யௌவநலாலஸாஸ்தநுப்⁴ருʼதாமித்யாகலய்ய த்³ருதம் யோகே³ தை⁴ர்யஸமாதி⁴ஸித்³த⁴ஸுலபே⁴ பு³த்³தி⁴ம் வித⁴த்⁴வம் பு³தா:⁴ ॥ 35 ॥

புலன்களால் நாம்  துய்க்கும்  சுகம்  இன்பம் என்பது க்ஷண கால நேரத்துக்கு தான்.  மின்னல் மின்னும்  நேரம் கூட  இல்லை. தாமரை இலை மேல்  அழகாக  உருளும்  நீர்  உருண்டை  எந்நேரமும்  கீழே  விழலாம் மறையலாம். அது போல்  தான் மின்னல்  போலாகும் இந்த  மானுட வாழ்க்கை.  யௌவனம், ஆசை  எல்லாமே  அப்படிதான். அதனால் தான் ஞானிகள், பெரியோர்கள்  கற்றுணர்ந்த ஆச்சார்யர்கள் நமக்கு அடிக்கடி  மனதை  சாஸ்வதமான  ஆத்மாவை அறிந்து கொள்வதில்  ஈடுபடுத்து  என்று உணர்த்துகிறார்கள்.  அப்போது மனதில் பயம் விலகும் , தைர்யம் கூடும், உண்மை புலப்படும். 

36.  आयुः कल्लोललोलं कतिपयदिवसस्थायिनी यौवनश्रीः अर्थाः संकल्पकल्पा घनसमयतडिद्विभ्रमा भोगपूगाः । कण्ठाश्लेषोपगूढं तदपि च न चिरं यत्प्रियाभिः प्रणीतं ब्रह्मण्यासक्तचित्ता भवत भवभयाम्बोधिपारं तरीतुम् ॥ ३६॥


(36) āyuḥ kallōlalōlaṁ katipayadivasasthāyinī yauvanaśrīḥ arthāḥ saṁkalpakalpā ghanasamayataḍidvibhramā bhōgapūgāḥ । kaṇṭhāślēṣōpagūḍhaṁ tadapi ca na ciraṁ yatpriyābhiḥ praṇītaṁ brahmaṇyāsaktacittā bhavata bhavabhayāmbōdhipāraṁ tarītum 


ஆயு: கல்லோலலோலம் கதிபயதி³வஸஸ்தா²யிநீ யௌவநஶ்ரீ:  அர்தா:² ஸங்கல்பகல்பா க⁴நஸமயதடி³த்³விப்⁴ரமா போ⁴க³பூகா:³ ।  கண்டா²ஶ்லேஷோபகூ³ட⁴ம் தத³பி ச ந சிரம் யத்ப்ரியாபி:⁴ ப்ரணீதம்ப்³ரஹ்மண்யாஸக்தசித்தா ப⁴வத ப⁴வப⁴யாம்போ³தி⁴பாரம் தரீதும் ॥ 36 ॥

ஆசையே  அலைபோல்,  நாமெல்லாம் அதன் மேலே. வாழ்க்கையே நீர் மேல் மிதக்கும்   நீர்க் குமிழி . ஓரிடத்தில் நிலைத்து நில்லாமல்  உருண்டோடுவது தான் செல்வம்.  யௌவனம் அழகு கவர்ச்சி அப்படித்தான். எண்ணங்கள் போல  தோன்றி மறைவது.  கீழ்வான மின்னல் தான் வாழ்க்கை.  சொந்த பந்தம், ஆசை பாசம் எல்லாம் நிரந்தரம் அல்ல. ஜனன மரணசுழலில்  சிக்காமல்  என்றும் சாஸ்வதமான பிரம்மத்தின் மேல் மனதை ஈடுபடுத்தவேண்டும்.  கஷ்டம் ஒன்றுமில்லை. மனதை விடாமல் அதையே சிந்திக்க வைத்தால்  அதுவே பழக்கமாகிவிடுமே. 


37. कृच्छ्रेणामेध्यमध्ये नियमिततनुभिः स्थीयते गर्भवासे  कान्ताविश्लेषदुःखव्यतिकरविषमो यौवने चोपभोगः ।वामाक्षीणामवज्ञावि हसितवसतिर्वृद्धभावोऽप्यसाधुः  संसारे रे मनुष्या वदत यदि सुखं स्वल्पमप्यस्ति किंचित् ॥ ३७॥

 kr̥cchrēṇāmēdhyamadhyē niyamitatanubhiḥ sthīyatē garbhavāsē kāntāviślēṣaduḥkhavyatikaraviṣamō yauvanē cōpabhōgaḥ । vāmākṣīṇāmavajñāvihasitavasativr̥ddhabhāvō'pyasādhuḥsaṁsārē rē manuṣyā vadata yadi sukhaṁ svalpamapyasti kiṁcit ॥ 37॥  

க்ரு’ச்ச்²ரேணாமேத்⁴யமத்⁴யே நியமிததநுபி:⁴ ஸ்தீ²யதே க³ர்ப⁴வாஸே காந்தாவிஶ்லேஷது:³ க²வ்யதிகரவிஷமோ யௌவநே சோபபோ⁴க:³ । வாமாக்ஷீணாமவஜ்ஞாவிஹஸிதவஸதிர்வ்ரு’த்³த⁴பா⁴வோऽப்யஸாது:⁴ ஸம்ஸாரே ரே மநுஷ்யா வத³த யதி³ ஸுக²ம் ஸ்வல்பமப்யஸ்தி கிஞ்சித் ॥ 37॥

நம் வீட்டில் ஒரு  குழந்தை பிறக்கப்போகிறது  என்றால்,  மனைவியோ,  மகளோ,  மறுமகளோ கர்ப்பம் தரித்தால்  எத்தனை சந்தோஷம் நமக்கு. எவ்வளவு பெருமைப் படுகிறோம். ஆனால்  கர்ப்பவாசம் அனுபவித்த ஒவ்வொருவருக்கும் அதன் துன்பம் நினைவிருக்கிறதா?  சதா இருட்டு, குறுகிய நெரிசலான இடம், நகர இடமில்லை, ஒரே மாதிரிதான் அசையாமல் கைகால்களை மடக்கிக்கொண்டு விடுதலைக்கு ,வெளிச்சத்துக்கு  காத்திருக்க  உட்கார்ந்திருக்க வேண்டும். சுற்றிலும்  மலம் மூத்திரம் அதற்கு நடுவே இந்த கர்ப்பவாசம். சரி பிறந்து விட்டோம், வளர்ந்தோம்,யௌவன பருவம். அதில் எத்தனை  சோகம், மோகம், ஏமாற்றம், காதல், பிரிவு  வருத்தம், அலுப்பு, வெறுப்பு..... வயதாகி விட்டது கிழம் ஒரு மூலையில் படுத்திருக்கிறது. யாரும் அதை லக்ஷியம் பண்ணுவதில்லை. சீக்கிரம் போய்த் தொலைய மாட்டேன் என்று இழுத்துக்கொண்டு இருக்கிறதே  என்ற  அவமதிப்பு.   சொல்லுடா எப்போது நாம்  உலகில் சந்தோஷமாக இருந்தோம்??

38. व्याघ्रीव तिष्ठति जरा परितर्जयन्ती  रोगाश्च शत्रव इव प्रहरन्ति देहम् । आयुः परिस्रवति भिन्नघटादिवाम्भो  लोकस्तथाप्यहितमाचरतीति चित्रम् ॥ ३८॥


(38) vyāghrīva tiṣṭhati jarā paritarjayanti rōgāśca śatrava iva praharanti dēham । āyuḥ parisravati bhinnaghaṭādivāmbhō lōkastathāpyahitamācaratīti citram


வ்யாக்ரீவ திஷ்ட²தி ஜரா பரிதர்ஜயந்தீ ரோகா³ஶ்ச ஶத்ரவ இவ ப்ரஹரந்தி தே³ஹம் ஆயுபரிஸ்ரவதி

 பிந்நகடாதி³வாம்போ⁴ லோகஸ்ததா²ப்யஹிதமாசரதீதி சித்ரம்  38 


யாரையாவது கேட்டுப்பாருங்கள், உனக்கு முதுமை  வேண்டுமா? பிடிக்குமா? என்று. யாரிடமாவது ஒரு மாமியிடம்  '' ஆஹா இந்த  வயதிலும் நீங்கள் எவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள்?  மனைவியிடம்  உனக்கு  இவ்வளவு வயாகியது தெரியவில்லையே  என்று  நாலு பேர் எதிரில் சொல்லிப்பார். புரியும்.  யாருக்குமே  வயோதிகம், முதுமை ஒரு வேண்டாத  விஷயம். ஆனால் அதை தவிர்க்க முடியாது. புலி வருகிறது என்றால் தோன்றும்   பயம்  போல  தான்  முதுமை வருவதும். எதிரிகள்  போல் நிற்பதாக்ஷண்யமாக நோய்கள் வியாதிகள் நம் உடலை தாக்கும். ஓட்டைப்பாத்திரத்தில்  எத்தனை நேரம் தண்ணீர்  தங்கும்? இந்த உடலில் உயிர் அப்படி தான். பிறந்தது முதலே  மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நாளும்  மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறான்.
 

39 भोगास्तुङ्गतरङ्गभङ्गतरलाः प्राणाः क्षणध्वंसिनः  स्तोकान्येव दिनानि यौवनसुखस्फूर्तिः प्रियासु स्थिता । तत्संसारमसारमेव निखिलं बुद्ध्वा बुधा बोधकाः लोकानुग्रहपेशलेन मनसा यत्नः समाधीयताम् ॥ ३४॥


(39) bhōgā bhaṅguravr̥ttayō bahuvidhāstairēva cāyaṁ bhavaḥ tatkasyēha kr̥tē paribhramata rē lōkāḥ kr̥taṁ cēṣṭitaiḥ । āśāpāśaśatōpaśāntiviśadaṁ cētaḥ samādhīyatāṁ kāmōtpattivaśātsvadhāmani yadi śraddhēyamasmadvacaḥ ॥


போ
கா³ ங்கு³ரவ்ருʼத்தயோ ³ஹுவிதாஸ்தைரேவ சாயம் தத்கஸ்ஹ க்ருʼதே

 பரிப்ரமத ரே லோகாக்ருʼதம் சேஷ்டிதை। ஆஶாபாஶஶதோபஶாந்திவிஶத³ம் சேதஸமாதீயதாம் காமோத்பத்திவஶாத்ஸ்வதாமநி யதி³ ஶ்ரத்³தேயமஸ்மத்³வச 39 


உற்றார் ஊரார் சதமல்ல, வாழ்க்கை நிலையில்லை,  நீரின் மேல்  ஜ்வலிக்கும் நீர்க்குமிழி .இளமை, அழகு, எல்லாமே  மாயை.  கற்றோர் பெரியோர், ஆச்சார்யர்கள், குரு  உதவியோடு  ஆத்ம விசாரம் செயது எது நிரந்தரம் என்று அறிந்து அதை பின்பற்ற  இந்த வாழ்க்கை காலம் போதுமானது.   வாழ்க்கை தரும்  அற்ப  சுகங்களில் போகத்தில் மதி இழந்து சிக்கி திண்டாடுபவன் மீண்டும் பிறவி எடுத்து அதே மாதிரி  வாழ்வையே தொடர்கிறான். 


40. ब्रह्मेन्द्रादिमरुद्गणांस्तृणकणान्यत्र स्थितो मन्यते  यत्स्वादाद्विरसा भवन्ति विभवास्त्रैलोक्यराज्यादयः । भोगः कोऽपि स एक एव परमो नित्योदितो जृम्भते  भो साधो क्षणभंगुरे तदितरे भोगे रतिं मा कृथाः ॥ ४०॥
 
brahmēndrādimarudgaṇāṁstr̥ṇakaṇānyatra sthitō manyatē yatsvādādvirasā bhavanti vibhavāstrailōkyarājyādayaḥ । bhōgaḥ kō'pi sa ēka ēva paramō nityōditō jr̥mbhatē bhō sādhō kṣaṇabhaṁgurē taditarē bhōgē ratiṁ mā kr̥thāḥ

ப்³ரஹ்மேந்த்³ராதி³மருத்³³ணாம்த்ருணகணாந்யத்ர ஸ்தி²தோ மந்யதே யத்ஸ்வாதா³த்³விரஸா வந்தி விபவாஸ்த்ரைலோக்யராஜ்யாத³ போ:³ கோபி  ஏக ஏவ பரமோ நித்யோதி³தோ ஜ்ரும்பதே போ⁴ ஸாதோ க்ஷணாபங்குரே  ததிதரே போகே ரதிம் மா க்ருதா;


 ஹே  வைராக்ய சித்தனே, உன் மனம்  சித்தம்  எல்லாமே  பிரம்மத்தை  தேடுவதில் அதில் திளைப்பதில் ஈடுபடும்போது உனக்கு என்ன புரியும் தெரியுமா?  பிரம்மா,  இந்திரன் முதலான தேவாதி தேவர்கள் எல்லோருமே  வெறும்  புல்  மாதிரி,  மூன்று  உலக சாம்ராஜ்ய சக்ரவர்த்தி  பதவியும் வெறும் குப்பை  என்றும்  பிரம்மானந்தம் ஒன்றே  என்றும் நிலையான  சதானந்தம் என்றும்  அறிவாய்.  உன் சித்தத்தை அதிலிருந்து  ஒரு கணமும் விலகாமல் வைராக்யத்தோடு இருப்பாய். 





sivan jaykay

unread,
Jul 27, 2025, 8:24:51 PMJul 27
to amrith...@googlegroups.com
ஞாயிறு. -  நங்கநல்லூர்   J K  SIVAN 

இன்று  ஞாயிறு.   வாரத்தில் ஒருநாள். எல்லோருக்கும்  விடுமுறை. நிதானமாக எழுந்திருக்கலாம். வீட்டு வேலைகளில்  கவனம் செலுத்தலாம். குடும்பத்தோடு  உறவாடலாம், எங்காவது வெளியே போகலாம். ஸ்பெஷலாக  சமைத்து சாப்பிடலாம்.  அல்லது ஓட்டல்ககளில்  நாற்காலி  கிடைக்க  மணிக்கணக்காக காத்திருக்கலாம். ஆர்டர் செய்த ஐட்டங்கள் தயாரித்து  மேசைக்கு  யாரோ ஒரு நேப்பாளியோ,  பீஹாரியோ கொண்டு வந்து ஒன்று ஒன்றாய் கொடுக்க  பல  பசி மிகுந்த கைகள் அவற்றை காக்கை கூட்டம்போல் பிய்த்து தின்று விட்டு அடுத்த ஐட்டம் வர காத்திருக்க வேண்டும்..

ஆனால்  ஓரே ஒரு விண்ணப்பம். முடிந்தால் குடும்பத்தோடு ஏதாவது ஒரு பழைய கோவிலுக்கும் செல்லலாமே.

ஞாயிறு என்றால் ஒரு கிழமை மட்டுமில்லை. சூரியன். பகலவன் கதிரவன், வெய்யோன்,  ஒளி கொடுப்பவன், உயிரளிப்பவன்.  நவகிரஹங்களில் முதல்வன் என்றும்  அர்த்தம் உண்டு.  அவனுக்கு எத்தனையோ கோயில்கள் இருக்கிறது.  

மேலே சொன்னது தெரிந்த விஷயம் என்பதால்  தெரியாத விஷயம் அல்லவோ சொல்லவேண்டும்?  திருவள்ளூரில் ஒரு கிராமத்துக்கும்  பெயர் ஞாயிறு தான்.   

ஆயிரங்காலத்து சிவன் கோயில் ஒன்று அங்கே இருக்கிறது. அமைதியான அந்தக்  கோவிலில் சிவன் பெயர் புஷபரதேஸ்வரர்.  அம்பாள்  ஸ்வர்ணாம்பிகை. இன்னொரு பெயர்  பால சுகாம்பிகை.   உற்சவர்  ஸோமாஸ்கந்தர் .  சூரியனே சிவனை வழிபட்ட ஆலயம் இது.  நாகலிங்க மரம் தான் ஸ்தல விருக்ஷம்.

சூரியன் பூஜித்த லிங்கம் தாமரை தடாகத்தில் உள்ளேயே  வெகுகாலம் இருந்தது,  சோழமன்னன் ஒருவன் கண்ணில்   மின்னும் தாமரை  ஒன்று தடாகத்தில் தென்பட அதை பறிக்க முயலும்போது அது நகர்ந்து கொண்டே சென்றது.  எப்படியோ  மன்னன் சிவலிங்கத்தை கண்டுபிடித்துவிட காரணம் அவன் சிவபக்தன்.  ரதம் போல்  தாமரை புஷ்பம் மிதந்து சென்று அதில் சிவலிங்கம் கிடைத்ததால் புஷ்பரதேஸ்வரர் என்ற நாமம்.  மூலவர் எதிரே  சூரியன் சந்நிதி. 

ஒவ்வொரு  சித்திரை மாத பிறப்பின் போதும்  முதல் 7 நாட்கள் புஷ்பரதேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை ஆகியோர் மீது சூரிய ஒளி படுகிறது.  சிவனுக்கு உச்சி கால பூஜைகள் செய்வதில்லை. 

சுந்தர  மூர்த்தி நாயனார்  மனைவி சங்கிலி நாச்சியார்  பிறந்த ஊர் இது.  இவருக்கும் இங்கு சந்நிதி இருக்கிறது. மகர சங்கிராந்தி தினமான தை பொங்கல் தினத்தில் சூரியனுக்கும், சிவனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.   ஒரு வினோதம்.  இந்த ஆலயத்தில்  கிரீடம் இல்லாத விநாயகரை தரிசிக்கலாம். தனது தந்தையான சிவபெருமானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக விநாயகர் இக் கோலத்தில் காட்சியளிப்பதாக  ஐதீகம். பல்லவ விநாயகர் எனப்  பெயர் கொண்டவர். கண்வ மகரிஷி இங்கு சிவனை வழிபட்டிருக்கிறார். இவருக்கும் இங்கு சந்நிதி இருக்கிறது. கண் தொடர்பான நோய்கள் தீர இங்கு வந்து வழிபட அவை தீருமாம். 

 திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் இக்கோயிலுக்கு வந்து சிவனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், பிரிந்த தம்பதிகள் சீக்கிரம் வாழ்வில் ஒன்றிணைவர்கள் என்றும் பல் சம்பந்தமான பிரச்சனைகள் தீரவும் இங்கு வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்றும்  கூறுகின்றனர். 

 காலை 7.30 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

sivan jaykay

unread,
Jul 27, 2025, 8:24:52 PMJul 27
to amrith...@googlegroups.com
ஏடு கொண்டல வாடா.. -   நங்கநல்லூர்  J K  SIVAN .

ஹிந்துக்கள் மற்ற மதத்தினரைப் போல அல்ல.  கிருத்துவர்கள்  தவறாமல் ஞாயிற்றுக்கிழமை  தேவாலயம் போகிறவர்கள் . இஸ்லாமியர்கள் அதுபோல் வெள்ளிக்கிழமையை விடுவதில்லை. நமக்கு  வாரத்தில் ஒருநாள் என்ற நிர்பந்தம், கட்டாயம்  எதுவுமே கிடையாது. ஏன்?  நமக்கு  பக்தி போதாதா?
இது காரணம் இல்லை. நமக்கு  எல்லாநாளுமே, ஏன், எல்லா நேரமும், உடலில் மூச்சு இருக்கும் வரை எந்நேரமுமே கடவுள் சிந்தனை தான் இன்பம் தந்து நம்மை  உய்விக்கிறது என்று புரியவேண்டும். 

இதை நினைவூட்ட  ஒவ்வொருநாளும் ஏதாவதொரு ஒரு பண்டிகை, நோன்பு, விரதம்,  அலங்கார, அர்ச்சனை, வீதி உலா  என்று ஏதாவது ஒரு விசேஷ நினைவூட்டல் இருந்து கொண்டே இருக்கிறது. 

இன்று சனிக்கிழமை.  
நமது மனம் நம்மை அறியாமல்  திருப்பதி வெங்கடாசலபதியிடம்  செல்கிறது. 
தேவர்களுக்கு கொடுத்த வாக்கின் காரணமாக  ஸ்ரீமன் நாராயணன்,  விஷ்ணு பகவான், பல அவதாரங்கள் எடுத்து  தீமையை,   தீயவரை,  அழித்து நமக்கு காக்கும் கடவுளாக இருக்கிறார் என்றாலும் துவாபர யுகத்தில்  வசுதேவர் தேவகி மகனாக பிறந்து  அதே சமயம்  நந்தகோபன்  யசோதை மகனாக  வளர்ந்தார்.  இரு பெற்றோர்களுக்கும்  மகிழ்ச்சி. அவரவர் முன்  ஜென்ம ஆசை நிறைவேறியது. 

பிருகு முனிவரின் சாபத்தால்,  மஹா லக்ஷ்மி தேவி பூமியில் அவதரித்து, திருமலைக்கு வந்து ஸ்ரீனிவாசனை மணக்க வேண்டியிருந்தது. மேலும், விஷ்ணு பகவான், தனது பக்தர்களுக்கு நன்மை செய்வதற்காகவும், கலியுகத்தில் ஏற்படும் துன்பங்களைத் தீர்ப்பதற்காகவும், ஸ்ரீனிவாசனாக அவதரித்தார்  என்பது நமக்கு தெரியும்.   

வகுளா  தேவி  யார்?  ஏன் ஸ்ரீனிவாசனின் தாயானார்?

கிருஸ்ணனின் வளர்ப்பு தாய்  யசோதை.ஆசையோடு பாசத்தோடு அவனை வளர்த்தும்  பத்து பதினைந்து வயதுக்குள் கிருஷ்ணன் பிருந்தாவனத்தை விட்டு மதுராவிற்கு சென்று விட்டான். பிறகு அவன் பிருந்தாவனம் திரும்பவில்லை.   அப்பா அம்மா வளர்த்து படிக்க வைத்து செலவு செய்து 
அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கே பனமோகத்தில்  பெர்மனெண்ட்டாக இருக்க  வழி செய்துகொண்டு   அப்பா அம்மாவை பார்க்க இந்தியா திரும்பி வராத பிள்ளைபோல இல்லை கிருஷ்ணன்.

 அவன் அவதார புருஷன். அவனது ஒவ்வொரு வினாடியும் கடமை.   யசோதைக்கு  ரொம்ப  ஆசைக் கனவுகள்.அதில் பிரதானமானது கிருஷ்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று.. அது முடியாததால் அவள் ஆசையை நிறைவேற்றினான் அவளது அடுத்த ஜென்மத்தில் கிருஷ்ணன்.    

''யசோதாம்மா,  நீ அடுத்த பிறவியில் எனக்கு தாயாக இருந்து எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போகிறாய்''  என்று  அவளுக்கு மனச் சாந்தி அளித்து யசோதை  கலியுகத்தில்  வகுளாதேவி யாக பிறந்தாள். திருமலையில் வாழ்ந்தாள் . ஸ்ரீனிவாசனைக் கண்டு  அவன் மேல் அளவற்ற பிரியம் கொண்டு அவனுக்கு பொருத்தமாக  ஸ்ரீனிவாசன் என்ற பெயரையும் சூட்டினாள் .

ஸ்ரீனிவாசனுக்கு ஆகாச ராஜாவின் வளர்ப்பு மகளான பத்மாவதியை திருமணம் செய்து வைக்க, வகுளா  தேவி நடையாய்  நடந்தாள் . ஆசை நிறைவேறியது. 

விஷ்ணு பகவான், கலியுகத்தில் மக்களுக்கு நன்மை செய்ய ஸ்ரீனிவாசராக அவதரித்தார். அவரைப் பொறுத்தவரை  ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். ஒன்று லோக க்ஷேமத்துக்காக  ஸ்ரீனிவாச அவதாரம். அதே சமயம் யசோதைக்கு கொடுத்த வாக்கு, அவள் ஆசையை நிறைவேற்ற சந்தர்ப்பம். 

ஸ்ரீனிவாசன், பத்மாவதி  தாயார்  கல்யாணம்  அன்றாடம்  திருமலையில்   நடைபெற்று எண்ணற்ற  வேங்கடேசன் பக்தர்களுக்கு  மன நிறைவை தருகிறது.   மாதக்கணக்கில்  வரிசையில்   பக்தர்கள் காத்திருக்கிறார் கள்.   பகவான் எப்படியெல்லாம் பக்தர்களின்  ஆசைகளை பூர்த்தி செய்கிறான் என்று நாம் உணரவேண்டும். 


sivan jaykay

unread,
Jul 30, 2025, 8:11:36 PMJul 30
to amrith...@googlegroups.com

மனசாக்ஷி – நங்கநல்லூர் J K SIVAN
மனித மனம் ஒரு நிலையில் நில்லாத எங்கெங்கோ மின்னல் வேகத்தில் பறப்பது. குரங்கு கிளைக்கு கிளை தாவுவது போல் ஒரு எண்ணம் மாற்றி இன்னொரு எண்ணம் ஏதாவதொன்றில் நம்மை கடல் அலைபோல் விடாமல் ஆக்ரமிக்கும். எண்ணங்கள் தோன்றுவது நல்லது தான். ஆனால் அநேகமாக அவை எல்லாமே நல்ல எண்ணங்களாக இல்லாதது தான் நமது துரதிர்ஷ்டம்.
எண்ணங்கள் தாமாக உண்டாகவில்லை என்பது ஞாபகம் இருக்கட்டும். நாம் தான் அவற்றின் ப்ரம்மா. களிமண் சேற்றைக் குழைத்து உருவம் பண்ணும்போது அவை நல்ல பொம்மைகளாக இருக்கட்டுமே . எதற்கு தேளும் பாம்பும்? நல்ல எண்ணங்கள் என்றால் என்ன? சுயநலம் கலக்காத, பிறர்க்கும், நமக்கும் உதவும் எண்ணங்கள், பகவான் மேல் சிந்தனை, எல்லோரிடமும் பாரபக்ஷமற்ற அன்பு, போன்று எத்தனையோ இருக்கிறதே. அதைத்தான் சொன்னேன்.
அடிக்கடி மனஸாக்ஷி என்கிற வார்த்தை உபயோகிக்கிறோம். மேலே சொன்ன மனத்தின் ஓட்டத்தை அமைதியாக யாரோ ஒருவர், எதுவோ ஒன்று அமைதியாக, எதிலும் குறுக்கிடாமல், கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருப்பது. எஜமான், மேலதிகாரி பார்க்கிறான் என்றாலே ஆசாமி தப்பு பண்ண மாட்டான். மன சாக்ஷி தான் நம் எல்லோருக்குள்ளும் பகவான் வைத்து அனுப்பிய ஆத்மா. யாராவது ஒரு காரியம் செய்யும்போது அது நல்ல காரியமாக இருந்தால் பரவாயில்லை. தீய, கெட்ட காரியமாக இருந்தால் சுற்று முற்றிலும் யாரவது கவனிக்கிறார்களா, என்று பார்த்து விட்டு அதை செய்கிறோம். அது தவறு என்று நமக்குத் தெரிந்தும் செய்கிறோம். யாராவது பார்த்துக்கொண்டிருந்தால் அதைச் செய்ய மாட்டோம் அல்லவா. ஆகவே தான் நமது காரியங்கள் எண்ணங்கள் எப்போதுமே நல்லவையாக இருக்கவேண்டும் என்று உள்ளே ஆத்மா என்ற ஒரு காவல்காரனை வைத்தருக்கிறான். மனசாக்ஷி இதைச் செய்யாதே என்று எச்சரிக்கும். அதன் மெல்லிய குரலை நாம் உதாசீனப்படுத்துகிறோம். கஷ்டப்படுகிறோம். மஹாத்மா காந்தி அடிக்கடி ‘ I am guided by the little voice within ” என்பார். மனசாக்ஷியின் படி நடந்தால் ஒரு துன்பமுமில்லை. ஒழுங்கான நடத்தை, சுத்தமான மனம் உண்டாகும்.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஒரு ஸ்லோகம்;
पूतात्मा परमात्मा च मुक्तानां परमा गतिः ।अव्ययः पुरुषः साक्षी क्षेत्रज्ञो अक्षर एव च ।। २ ।।
Pootatma Paramatma cha MuktaanaamParamaaGatihi; Avyayah Purushas Saakshee Kshetragno Akshara Eva Cha
நம்முள் இருக்கும் ஆத்ம ஸ்வரூபனான பரமாத்மா இந்த ஜீவன் ஆகிய நாம் செய்யும் காரியங்களுக்கு சம்பந்தமில்லாதவன். அவன் சாக்ஷியாக நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான், இதை செய்ய வேண்டாம், இதை நினைக்கவேண்டாம் என்ற உணர்வை அளிக்கும் மனசாக்ஷியை நாம் மதிப்பதில்லை. அதை மதிப்பவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் இந்த தவறுகளுக்கு மனதில் இடம் கொடுக்காதவர்கள். ஞானிகள்.
மனக் குழப்பம், கலக்கம் மற்றும் நிம்மதியின்மை — இவை மூன்றும் மனித மனத்தில் ஏற்படும் முக்கியமான உணர்வுப் பிரச்சனைகள். இவை ஒருவரது வாழ்க்கைத்தரத்தையும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடியவை. அளவற்ற எண்ண சிக்கல்களால் தெளிவாக எதையும் சிந்திக்க முடியவில்லை. அதனால் தான் குழப்பம். நிம்மதியின்மை.
அதிக மன அழுத்தம் ஒரு பெரிய வியாதியாக வந்து அவஸ்தைப் படுத்துகிறது.
சிலர் மதுபானம் அருந்தி இதை குறைக்க பார்க்கிறார்கள். எரியும் தீயில் எண்ணெய் விடும் சமாச்சாரம் அது.
மனதில் குழப்பம், குழசல், எதிர்மறையான எண்ணங்கள், நிலைத்தன்மை இல்லாமை போன்ற உணர்வுகள் கலந்து வரும் நிலை வெளியில் இருந்து நமக்குள் புகுவதில்லை. எல்லாமே நாம் உருவாக்கியவை. எல்லாம் நமது குழந்தைகள் தான்.! இதனால் தான் உறவுகளில் பிரச்னை, வேலை யில் தொய்வு, எதிர்பாராத ஷாக், மரணம் தோல்வி, தூக்கம் பாதிப்பு, உள்ளம் உடல் சோர்வு. பயம். கோப தாபங்கள், காம உணர்வுகள் என்று பலமாக நாம் தாக்கப்படுகிறோம். தற்காப்பு இல்லையே.
மனம் காலியாக இருந்தால் தானே மேற்படி எண்ணங்கள் உள்ளே புகும். மனதை சும்மா இருக்க விடாமல், தியானத்தில் ஈடுபடுத்தலாம், ப்ராணாயாமம் எனும் உடல் பயிற்சியில் யோகமார்கமாக ஈடுபடுத்தலாம். கீதை பாகவதம் போன்ற நூல்களை படிக்கலாம். ஆன்மீக ப்ரவசனங்கள் கேட்கலாம், பஜனை கீதங்கள் கேட்கலாம். நல்ல நண்பர்களோடு பழகலாம். சங்கீதங்களை கேட்கலாம், பாடலாம். சாத்வீக உணவருந்தலாம். நமக்கு நாமே வாத்யார்.


sivan jaykay

unread,
Jul 30, 2025, 8:11:36 PMJul 30
to amrith...@googlegroups.com


வைராக்ய சதகம் - பர்த்ருஹரி -   நங்கநல்லூர்  J K  SIVAN 

ஸ்லோகங்கள்   41-50.

 

41.सा रम्या नगरी महान्स नृपतिः सामन्तचक्रं  तत्  पार्श्वे तस्य  सा विदग्धपरिषत्ताश्चन्द्रबिम्बाननाः । उद्वृत्तः   राजपुत्रनिवहस्ते बन्दिनस्ताः कथाः

 सर्वं यस्य वशादगात्स्मृतिपथं कालाय तस्मै नमः  ४१॥


ஸா
 ரம்யா நக³ரீ மஹாந்ஸ ந்ருʼபதிஸாமந்தசக்ரம்  தத்  பார்ஶ்வே தஸ்ய  ஸா வித³க்³பரிஷத்தாஶ்சந்த்³ரபி³ம்பா³நநா
உத்³வ்ருʼத்த  ராஜபுத்ரநிவஹஸ்தே ³ந்தி³நஸ்தாகதா:² ஸர்வம் யஸ்ய வஶாத³கா³த்ஸ்ம்ருʼதிபத²ம் காலாய தஸ்மை நம 41 


புகழ்பெற்ற பேரரசர்களின் வரலாற்றை நினைத்துப் பார்க்கும்போது அவர்கள் வாழ்ந்த காலத்தில் மிகவும் போற்றப்பட்டவர்களாக, புகழ்பெற்றவர்களாக, அதிகசக்தி, செல்வம்  உடையவர்களாக இருந்திருப்பார்கள் ஆனால் காலம் சென்றதும் அவர்களுடைய புகழ், பெருமை வரலாற்று புத்தகத்தில் சில பக்கங்களாக சுருங்கிவிடுகிறது. அவர்களுடைய வாழ்ந்த காலத்தின் பெருமையானது இப்படி சுருங்கி இருக்கும்போது சாதாரண மக்களின் நிலைமையை பற்றி சொல்லவே வேண்டாம்.   எங்கேடா காணோம் அவர்களை?  ஹர்ஷன், அக்பர், சந்திரகுப்தன், ராஜராஜன்.... எல்லாம் மண்ணுக்குள். வந்த இடத்துக்கே போயாச்சு. அழகிய நகரங்களை ஆண்ட  சக்ரவர்த்திகள். எல்லாம்  கருப்பும் வெள்ளையுமா  அச்சிட்ட புத்தகங்களில் பெயர்களை மட்டும்  தான்  சின்ன எழுத்தில்  பார்க்கமுடிகிறது. ராஜாக்கள் மட்டும் இல்லை. வித்வான்கள், பிரபுக்கள், கலையரசிகள், கவிஞர்கள்,  கலைஞர்கள் ,அழகிகள்....  யாரும் இவரக்ளை பற்றி நினைப்பது கூட இல்லை.இவர்கள் கதியே இப்படி என்றால் நம்மைப்போன்ற  அல்ப  புழுக்களின்  நிலையை ஒரு வினாடி நினைத்துப் பாருங்கள். யார் இதெல்லாம் இப்படி மாற்றுவது தெரியுமா....  கால தேவன் ஒருவனே..  காலமே  உனக்கு    எல்லோரும் சமம்.


42. यत्रानेकः क्वचिदपि गृहे तत्र तिष्ठत्यथैको  यत्राप्येकस्तदनु बहवस्तत्र नैकोऽपि चान्ते । इत्थं नेयौ रजनिदिवसौ लोलयन्द्वाविवाक्षौ

कालः कल्यो भुवनफलके क्रीडति प्राणिशारैः  ४२॥ 


யத்ராநேகக்வசித³பி க்³ருʼஹே தத்ர திஷ்ட²த்யதை²கோ  யத்ராப்யேகஸ்தத³நு ³ஹவஸ்தத்ர நைகோபி சாந்தே 
இத்த²ம் நேயௌ ரஜநிதி³வஸௌ லோலயந்த்³வாவிவாக்ஷௌ காலகல்யோ புவநப²லகே க்ரீட³தி ப்ராணிஶாரை 42 


நமக்கே  இப்போது  நிதர்சனமாக தெரிகிறதே.  ஒருகாலத்தில் கூட்டுக்  குடும்பமாக  கலகலவென்று இருந்த  வீடுகள் இப்போது களையிழந்து ஒருவரோ இருவரோ மட்டும் இருக்கும்  நிசப்த குடில்களாக காணப்படுகிறது.  ஒவ்வொருவராக  இல்லங்களிலிருந்து தனித்து சென்று விட்டார்கள்.  கடைசியில்  ஒருவருமில்லாத பாழ் மனையாகிவிடும்.  எல்லாம் காலத்தின் கோலம் தான்.  வெகு அழகாக  கால தேவன்  வாழ்வில் உலகில்  இந்த சொக்கட்டான் விளையாட்டை விளையாடி ஜெயிக்கிறான். மனிதன் தோற்கிறான். பகடைக்காய்கள் இதில்  நாம் தான். உலக வாழ்க்கை ஒரு  பரமபத படம். சத்தியமான விளையாட்டு.   அதில்  ஜீவன்கள் தான் நகரும் காய்கள். மேலும் கீழும்  அசைந்து செல்வன. இரவும் பகலும் தான்  ரெண்டு  தாயக்  கட்டை.  அது காட்டும் எண்  தான் அந்தந்த ஜீவனின் கர்மவினை. அதில் மேலே  ஏற்றிபெருமை கொடுக்கும்  ஏணிகளும் உண்டு.  எங்கிருந்தபோதிலும்  கீழே அழுத்திதள்ள  பெரும்  பாம்புகளும்  உண்டு. எல்லாம்  எண்கள்  சொல்லும் வித்தை.  எத்தனையோ வீடுகளில் ஆளே    இல்லை.ஒருவர் இருந்த இடத்தில்  பலர், பலர் இருந்த இடத்தில் ஒருவருமே இல்லாத நிலையும் மாறி மாறி வரும்.  முடிவில் காலமே  எல்லாவற்றையும் தீர்மானிக்கும். 


43. आदित्यस्य गतागतैरहरहः संक्षीयते जीवितं  व्यापारैर्बहुकार्यभारगुरुभिः कालोऽपि  ज्ञायते । दृष्ट्वा जन्मजराविपत्तिमरणं त्रासश्च नोत्पद्यते

पीत्वा मोहमयीं प्रमादमदिरामुन्मत्तभूतं जगत्  ४३॥


ஆதி³த்யஸ்ய ³தாக³தைரஹரஹஸங்க்ஷீயதே ஜீவிதம்  வ்யாபாரைர்ப³ஹுகார்யபாரகு³ருபி:⁴ காலோபி  ஜ்ஞாயதே 

த்³ருʼஷ்ட்வா ஜந்மஜராவிபத்திமரணம் த்ராஸஶ்ச நோத்பத்³யதே பீத்வா மோஹமயீம் ப்ரமாத³மதி³ராமுந்மத்தபூதம் ஜக³த்  43 


ஒவ்வொருநாளும் குறித்த நேரத்தில் சூரியன் உதிக்கிறான். நாள்  துவங்குகிறது. அவன் அஸ்தமனத்தோடு நாள் முடிகிறது. நமது வாழ்க்கை  காலத்துக்குள் அடங்குவது.  எத்தனை  பிறப்புகள் எத்தனை இறப்புகள் நாள் தோறும். வியாதி, அவஸ்தை, வலி, துன்பம். நமது  பேராசையில்  மோகத்தில் நமது  இன்ப துன்பங்கள் வளர்கின்றன, வீழ்கின்றன. திரும்ப திரும்ப இதே  வாடிக்கையாக அல்லவோ போய் விட்டது.


44 रात्रिः सैव पुनः  एव दिवसो मत्वा मुधा जन्तवो   धावन्त्युद्यमिनस्तथैव निभृतप्रारब्धतत्तत्क्रियाः । व्यापारैः पुनरुक्तभूत विषयैरित्थंविधेनामुना   संसारेण कदर्थिता वयमहो मोहान्न लज्जामहे  ४४॥


ராத்ரிஸைவ புந ஏவ தி³வஸோ மத்வா முதா⁴ ஜந்தவோ தாவந்த்யுத்³யமிநஸ்ததை² நிப்ருʼதப்ராரப்³தத்தத்க்ரியா
வ்யாபாரைபுநருக்தபூ விஷயைரித்த²ம்விதேநாமுநா ஸம்ஸாரேண கத³ர்தி²தா வயமஹோ மோஹாந்ந லஜ்ஜாமஹே 


ஒவ்வொருநாளும்  பகலும்  தொடர்ந்து இரவும்  விடாமல்  மாறி மாறி வருவதைப் பார்க்கிறோம்.  இந்த நேரத்தில் உயிர்கள் அனைத்தும் ஓடி ஆடி சுறுசுறுப்பாக தான் விரும்புபவைகளைத் தேடி அலைகிறது. எல்லாம் ஆசையின் காரணத்தால், சிரருக்கு  பேராசை காரணம். துளியும்  இப்படி அலைவதில் நமக்கு வெட்கமே இல்லை.   ஒரு ஜென்மம் முடிந்து இன்னொன்று ஆரம்பித்தாலும் நமது  அலைச்சல், வேட்கை, தீரவில்லையே.  மரணம் ஆசையை மறக்கச் செய்யவில்லை.  

 

45.  न ध्यातं पदमीश्वरस्य विधिवत्संसारविच्छित्तये  स्वर्गद्वारकवाटपाटनपटुर्धर्मोऽपि नोपार्जितः । नारी पीनपयोधरोरुयुगलं स्वप्नेऽपि नालिङ्गितं

मातुः केवलमेव यौवनवनच्छेदे कुठारा वयम्  ४५॥\


 த்யாதம் பத³மீஶ்வரஸ்ய விதிவத்ஸம்ஸாரவிச்சி²த்தயே ஸ்வர்க³த்³வாரகவாடபாடநபடுர்தர்மோபி நோபார்ஜித
நாரீ பீநபயோதரோருயுக³ளம் ஸ்வப்நேபி நாலிங்கி³தம் 
மாதுகேவலமேவ யௌவநவநச்சே²தே³ குடா²ரா வயம்  45 


நமக்கு தெரியும், எத்தனையோ முறை பல பல வேதாந்த புத்தகங்களில் படித்தும், பிரசங்கங்கள் கேட்டும், இந்த உலக பந்தத்திலிருந்து விடுதலை பெற,  பகவானின் திருவடிகளை நினைப்பதில்லை,ஆத்மாவை ப்ரம்மம் என்று உணர முடியவில்லை,  ஆத்மா என்பது என்ன என்று விசாரம் செய்ய முயற்சிக்க வில்லை.  உலக ஈர்ப்புகள் கனவுகளிலும் நம்மை  ஆக்கிரமித்து  அடிமையாக்குகிறது. ஆசை நாளுக்கு நாள் அதிகமாகிறதே தவிர  குறைவதாக இல்லை.  இப்படி  மாறி மாறி வரும் துன்பக்கடலிலிருந்து விடுபட என்றாவது நாம்  இறைவன் திருவடியை  நினைத்து  தியானம் செய் கிறோமா?  ஸ்வரகத்தின் கதவுகளை திறக்கும்  வழி காட்டம் மந்த்ரங்கள், ஜெபங்களையாவது, யாகம் ஹோமம் ஏதாவது ஒன்றிலாவது ஈடுபடுகிறோமா ? ஆனால் கனவிலும் நினைவிலும்  பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை மூன்றும் தாம் நம்மை படுகுழியில் தள்ளுகிறது.


46. नाभ्यस्ता प्रतिवादिवृन्ददमनी विद्या विनीतोचिता   खड्गाग्रैः करिकुम्भपीठदलनैर्नाकं  नीतं यशः कान्ताकोमलपल्लवाधररसः पीतो  चन्द्रोदयेतारुण्यं गतमेव निष्फलमहो शून्यालये दीपवत् 

நாப்யஸ்தா ப்ரதிவாதி³வ்ருʼந்த³³மநீ வித்³யா விநீதோசிதா ²ட்³கா³க்³ரைகரிகும்பபீட²³லநைர்நாகம்  நீதம் யஶ

காந்தாகோமலபல்லவாதரரஸபீதோ  சந்த்³ரோத³யே தாருண்யம் ³தமேவ நிஷ்ப²லமஹோ ஶூந்யாலயே தீ³பவத்  46 


சிறந்த கல்வியறிவு   இருந்தால் பெருமை வாய்ந்த  பண்டிதர்களை வாதத்தில் வெல்லலாம்.  அறிவு, ஞானம் இல்லையே.  வானளாவும்  பேரும் புகழும் இல்லை.  தேக பலத்தால்  ஒரு  வாள் வீச்சால்  யானையின் தலையைக் கூட  துண்டிக்கும் சக்தி யும் கிடையாது.  பெண்கள் என் மேல்  மோகம் கொள்ளும் அழகோ, அந்தஸ்தோ எதுவும் இல்லை.  பின் எதற்காக  இந்த இளமை. அதனால் என்ன பிரயோஜனம்?  யாருமில்லாத  கைவிடப்பட்ட  வீட்டில் ஒரு தீபம்  மாதிரி. 


47.  विद्या नाधिगता कलङ्करहिता वित्तं च नोपार्जितं  शुश्रूषापि समाहितेन मनसा पित्रोर्न सम्पादिता ।  आलोलायतलोचनाः प्रियतमाः स्वप्नेऽपि नालिङ्गिताः कालोऽयं परपिण्डलोलुपतया काकैरिव प्रेर्यते ॥ ४७॥

 
வித்³யா நாதி⁴க³தா கலங்கரஹிதா வித்தம் ச நோபார்ஜிதம் ஶுஶ்ரூஷாபி ஸமாஹிதேந மநஸா பித்ரோர்ந ஸம்பாதி³தா । ஆலோலாயதலோசநா: ப்ரியதமா: ஸ்வப்நேऽபி நாலிங்கி³தா: காலோऽயம் பரபிண்ட³லோலுபதயா காகைரிவ ப்ரேர்யதே ॥

குறையில்லாத  அறிவும், ஞானம் எதுவும் பெறவில்லை. தனமும் சேமிக்கவில்லை,  சரஸ்வதி லட்சுமி இருவரின் கடாக்ஷம் எப்போதும் கிடையாது.  பெற்றோரை தெய்வமாக மதித்து வணங்கி ஆசி பெறாத ஜென்மம்.  எப்போதும் உலகத்தில், எதையோ தேடி, அலுத்து, ஏமாந்து, களைத்து  விழுந்து கிடைக்கும்ஆசைகள் நிறைவேறாத மூடனாக தான் வாழ்கிறேன். என் முழு  வாழ்க்கையும்  வ்யர்த்தம். 

48. वयं येभ्यो जाताश्चिरपरिचिता एव खलु ते   समं यैः संवृद्धाः स्मृतिविषयतां तेऽपि गमिताः । इदानीमेते स्मः प्रतिदिवसमासन्नपतना   गतास्तुल्यावस्थां सिकतिलनदीतीरतरुभिः  ४८॥


வயம் யேப்யோ ஜாதாஶ்சிரபரிசிதா ஏவ ²லு தே ஸமம் யைஸம்வ்ருʼத்³தா:⁴ ஸ்ம்ருʼதிவிஷயதாம் தேபி ³மிதா
இதா³நீமேதே ஸ்மப்ரதிதி³வஸமாஸந்நபதநா ³தாஸ்துல்யாவஸ்தா²ம் ஸிகதிலநதீ³தீரதருபி:⁴  48 


என் நிலையை ஒரு க்ஷணம் யோசித்து பார்க்கிறேன். என்னைப்  பெற்ற  அருமைத்தாய், தந்தை இந்த மண்ணை மறந்து காணாமல் போய் எத்தனை வருஷம் ஆகிவிட்டதே. பகவான் திருவடியில் என்னை மறந்து ஆனந்தமாக இருக்கிறார்களோ? என்னோடு உடன் பிறந்த ஜீவன்களும் எங்கே போய்விட்டார்கள்?  வெறும் எண்ணத்தில், மனத்திரையில் சித்திரமாக தோன்றி மறைபவர்களாகி விட்டார்கள். நான்? இப்போது  வ்ருத்தாப்யன். சக்தி இழந்தவன்.  முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பவன்.  என் நிலை என்ன தெரியுமா? ஆற்றங்கரை மண்ணில் வேர்ப் பதித்து நிற்கும் மரம். எப்போது ஆற்றில் வெள்ளம் வருமோ?  வெள்ள நீர்  பலமாக  என்னை வேரோடு கிளப்பி அடித்துக் கொண்டு போகுமோ?

49,  आयुर्वर्षशतं नृणां परिमितं रात्रौ तदर्धं गतं    तस्यार्धस्य परस्य चार्धमपरं बालत्ववृद्धत्वयोः । शेषं व्याधिवियोगदुःखसहितं सेवादिभिर्नीयते    जीवे वारितरङ्गचञ्चलतरे सौख्यं कुतः प्राणिनाम्  ४९॥

ayurvarsasatam nrnam parimitam ratrau tadardham gatam tasyardhasya parasya cardhamaparam balatvavrddhatvayoh sesam 
vyadhiviyoga  duhkhasahitam sevadibhirniyate jive varitaraṅgacancalatare saukhyam kutah praninam ॥ 49 

ஆயுர்வர்ஷஶதம் ந்ரு’ணாம் பரிமிதம் ராத்ரௌ தத³ர்த⁴ம் க³தம் தஸ்யார்த⁴ஸ்ய பரஸ்ய சார்த⁴மபரம் பா³லத்வவ்ரு’த்³த⁴த்வயோ: । ஶேஷம் வ்யாதி⁴வியோக³து:³க²ஸஹிதம் ஸேவாதி³பி⁴ர்நீயதே ஜீவே வாரிதரங்க³சஞ்சலதரே ஸௌக்²யம் குத: ப்ராணிநாம் ॥ 49॥

இந்த கலிகாலத்தில் ஒருவரை வாழ்த்தும்போது  ''சதமானம் பவதி. .. சதாயுஸ் '  நூறு வயது வாழ்வீராக என்று சொல்கிறோம். நூறு வயது ரொம்ப பெரிய வயதாகிவிட்டது இப்போது.  
நூறு வயது இருந்தாலும்  அதில் பாதி ஐம்பது வருஷம் இரவில் தூக்கத்தில் போய்விடுகிறது.  இருக்கும் ஐம்பது வருஷத்தில் பால்யம், விருத்தாப்பியம் என்று  பயன்படாமல் பாதி வயசு போய்விடுகிறது.  மீதி இருக்கும் வருஷங்களில் இறைவனை சிந்திக்காமல் தடுக்க இருக்கவே இருக்கிறது வியாதி, துக்கம், பொழுது போக்கு. சந்தோஷம்.  ஆகவே  நீர்மேல் குமிழி வாழ்க்கை தான் வாழ்கிறோம். சொச்சம் இருக்கும் வருஷங்களிலாவது சில நேரங்கள் ஆத்மாவை அறிகிறோமா?

50. .क्षणं बालो भूत्वा क्षणमपि युवा कामरसिकः  क्षणं वित्तैर्हीनः क्षणमपि च सम्पूर्णविभवः । जराजीर्णैरङ्गैर्नट इव वलीमण्डिततनुः  नरः संसारान्ते विशति यमधानीयवनिकाम् ॥ 

ksanam balo bhutva ksanamapi yuva kamarasikah ksanam vittairhinah ksanamapi ca sampurnavibhavah । jarajirnairaṅgairnata iva valimanditatanuh narah samsarante visati yamadhaniyavanikam ॥ 50 ॥

க்ஷணம் பா³லோ பூ⁴த்வா க்ஷணமபி யுவா காமரஸிக: க்ஷணம் வித்தைர்ஹீந: க்ஷணமபி ச ஸம்பூர்ணவிப⁴வ: । ஜராஜீர்ணைரங்கை³ர்நட இவ வலீமண்டி³ததநு: நர: ஸம்ஸாராந்தே விஶதி யமதா⁴நீயவநிகாம் ॥ 50॥

வாழ்க்கையில் என்னென்ன  வேஷம் போடுகிறோம்.  குழந்தையாக சில வருஷங்கள், அப்புறம்  யௌவன வாலிபனாக, சில வறுஷங்கள்  வருமானம் போதாமல் பணத்தை தேடி அலைந்து பிச்சைக்காரனாக,  சில வருஷங்கள் பணம் சேர்ந்த பணக்காரனாக திமிரோடு,  உடல் குறுகி, நோய்வாய்ப்பட்டு சக்தி இழந்து, சருமம் சுருங்கி, கூன் விழுந்து செவிடாகி, மரண பயத்தில் நடுங்கி சாகாமல் சாகிறோம்.  அதுவரையில் ஒவ்வொரு  கால கட்டத்திலும் மனிதன் சிறந்த  நாடக நடிகன்.

sivan jaykay

unread,
Jul 30, 2025, 8:11:37 PMJul 30
to amrith...@googlegroups.com
ஆடிப் பூரக்காரி   -     நங்கநல்லூர் J K  SIVAN 

இன்று சாயங்காலம் ஆரம்பித்து நாளையும்  ஆடிப்பூரம். விசேஷ நாள். இந்த உலகத்தில் எத்தனை பெண்களுக்கு   ஆண்டாள் என்ற பெயர் உள்ளதோ அத்தனை பெண்களுக்கும் எனது வாழ்த்துக்கள்/பெரியவர்களாக இருந்தால் நமஸ்காரம். அவர்களுக்கு  ஏன்  ஆண்டாள் என்று பெயர்? எப்படி அந்த பெயர் கிடைத்தது? சுமார்  1300 வருஷங்கள் முன்பு நடந்த ஒரு அற்புதத்தை சொன்னால் தான் விடை கிடைக்கும். 

கலியுகத்தில்  நள  என்கிற  வருஷம் 60 வருஷத்துக்கு ஒரு முறை திரும்ப வரும். இப்படி ஆரம்பத்திலிருந்து 98வது தடவை வந்தது. அன்று இதே ஆடி மாசம்.  சுக்ல பக்ஷம் சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாள்.  சரி நாள் சொல்லி ஆகிவிட்டது. எங்கே எப்படி எப்போது?

தமிழ்நாட்டின் தென்கோடியில்  வில்லிப்புத்தூர் எனும் கிராமம் அப்போது ஒரே காடு.  அந்த காட்டிற்குள் ஒரு   சாதாரண காட்டை அழித்து அதை ஒரு பூந்தோட்டமாக,  ஒரு பெரிய நந்தவனமாக  மாற்றி  அதில் துளசியை (பிருந்தா; துளசி)காடாக துளசி வனம் , பிருந்தாவனமாக்கி  தினமும்  விடிகாலை குளித்துவிட்டு  ஹரி நாமம் சொல்லிக்கொண்டே துளசி தளங்களையும்  புஷ்பங்களையும் நிறைய  பறித்து நந்தவனத்தில் பறித்த்துக்கொடு  ஆஸ்ரமத்தில் அவற்றை  மாலையாக  தொடுத்து  அருகே  இருக்கும் வடபத்ர சாயி  கோயிலில்  ரெங்கமன்னார்  எனும் அரங்கனுக்கு  மாலை சூட்டுபவர் ஒருவர்.  அவர் பெயர்  தான் விஷ்ணுசித்தர் எனும் வைஷ்ணவ சாது. பிற்காலத்தில் பெரியாழ்வார். 
மேலே சொன்ன  நாளில்,  ஆடிப்பூரத்தன்று வழக்கம் போல் புஷ்பம் துளசி பறிக்க நந்தவனத்துக்குள் நுழைந்தார். 

எங்கும் அறையிருள். நிசப்தம். சுற்றிலும் ஜீவராசியே கண்ணில் படவில்லை.  துளசிவனத்தில் அருகே சென்றபோது ஒரு  சின்னஞ்சிறு சிசுவின் அழுகுரல். திடுக்கிட்டார். அருகே சென்று குனிந்து பார்த்தார். அதிரூப சுந்தரியாக ஒரு பெண் குழந்தை. சுற்றி முற்றி யாராவது தென்பாடுகிறார்களா என்று பார்த்தால்  கண்ணுக்கெட்டியவரை  எவருமே தென்படவில்லையே. எப்படி இங்கே ஒரு சின்னஞ்சிறு சிசு வந்தது?  இப்போது தானே இந்த விடியற்காலையில் குரல்? சற்று முன் தான் அவள் அங்கே தோன்றி இருக்க வேண்டும்? முன்பே இருந்தால் அவள் குரல் என் காதில் கேட்டிருக்கும். நான் இங்கே தானே விழித்துக்கொண்டு இருந்தேன். ஓஹோ  இது மனிதர்கள் செய்த வேலை இல்லை. பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் லீலை இது. மீண்டும் குனிந்து அந்த தெய்வீக குழந்தையை உற்றுப்பார்த்தார்.  முதல் நாள் பெய்த மழையில்  துளசி இலைகள் குளுமையாக மெத்துமெத்து என்று படுக்கையாக அந்த குழந்தைக்கு அமைந்திருந்தது.  அவரைப் பார்த்ததும் அழுகையை நிறுத்திவிட்டு அந்த சிசு சிரித்தது. 
'இனி என்ன செய்வது?. இதுவும் அந்த நாராயணன் செயலே. எனக்கு அவன் கொடுத்த கட்டளை இந்த சிசுவை நான் வளர்க்கவேண்டும் என்று எடுத்துக் கொள்கிறேன்'' விஷ்ணு சித்தர்  அந்த சிசுவை அணைத்து தாய் போல வளர்த்தார்.   “கோதை”( பூமியிலிருந்து  பிறந்தவள்),    என பெயரிட்டு வளர்த்தார்.  பூமாதேவிக்கு வேறு என்ன பெயர் பொருத்தமாக இருக்கும்? 

சிறந்த தமிழறிஞர், விஷ்ணு பக்தர் என்பதால் பாசுரங்கள் சொல்லி கொடுத்தார். வெகு சீக்கிரமே  அவள் தந்தையை மிஞ்சிய தனயளாக வளர்ந்தாள். விடாமல்  பெருமாள் பெருமை,மஹிமை, கம்பீரம், அழகு எல்லாம் சொல்லி வளர்க்கப்பட்டதால்  துளசி இயற்கையாகவே நறுமணத்தோடு இருப்பது போல்  ஆண்டாள்   எம்பெருமான் மேல்  ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்டு தானும்  விஷ்ணுசித்தை ஆனாள் . 

விஷ்ணு சித்தர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர் தொடுத்த மாலைகளை  தானே  சூடிக்கொண்டு  கண்ணாடி முன் நின்று ''அரங்கா, நானுனக்கு பொருத்தமானவளா? '' என கேட்பாள். ஆண்டவனுக்கு ஆண்டாள் தானே பொருத்தமானவள் .

மனதளவில் அரங்கனும் ஆண்டாளும் ஒன்றானதை ஆழ்வார்  அறியமாட்டார்.  ஒருநாள் அவள் சூடிக் கொடுத்த  மாலையில்  அவள் தலை முடி ஒன்று இருந்ததால்  ஆலயத்தில் பட்டாச்சாரியார்  இது யாரோ அணிந்தது. வேறு கொண்டுவாருங்கள் என்று மாலையை திருப்பி தந்துவிட்டார்.  ஆழ்வாருக்கு ஆண்டாள் செய்த வேலை இது என்று தெரிந்து அவளைக் கோபித்து வேறு புதிதாக ஒரு மாலை தொடுத்து ஆண்டவனுக்கு சாற்ற  எடுத்துச் சென்றார். அன்று கனவில்  அரங்கன்  ஆழ்வாரிடம் ''ஆண்டாள்  சூடிய  மாலை மட்டுமே  மணமுடையதும் நம் விருப்பத்திற்கு உகந்ததும் ஆகும்” எனக்  கூறினான்.
 அன்று முதல்  ஆழ்வாருக்கு ஆண்டாள் மகளல்ல. அவளை பூமாதேவியாகவே  மதித்து போற்றினார்.  

பத்து வயதானால்  மணப்பருவம்  அக்காலத்தில்.   ஆகவே ஆண்டாளுக்கு யாரை மணாளனாக மணமுடிப்பது?  
உனக்கு யார்  அம்மா வேண்டும் ? என்று கேட்டார் ஆழ்வார்.
'மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன்” என்றும் ”மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்” என்றும் கூறினாள் . அதாவது எந்த மனிதனையும்  நான் கணவனாக ஏற்க மாட்டேன். அவர்களை பற்றி என்னிடம் பேசினால் உயிரோடு இருக்கமாட்டேன்.''.
''சரி அப்படியென்றால் இந்த 108 திவ்ய தேசங்களில்  வாழும் எம்பிரான்களில் உனக்கு  யார்  அம்மா  வேண்டும்?''
''அவர்களை பற்றி எல்லாம் சொல்லுங்கள்? நான் பதில் சொல்கிறேன்'' என்றாள்  ஆண்டாள்.

ஆழ்வார் வில்லிப்புத்தூரில் தொடங்கி பாண்டி மண்டலம்,தொண்டை மண்டலம், மலைநாடு, சோழநாடு, வட திசைத் திருப்பதிகளில் உறையும் எம்பிரான்கள் மற்றும் திருவேங்கடவன், அழகர், திருவரங்கன் ஆகியோரது பெருமைகளை விரிவாக கூறினார். 
அரங்கத்துறையும் அழகிய மணவாளனின் கண்ணழகு குழலழகு ஆகியவற்றால் கவரப் பட்ட கோதை அவரையே தன் மணாளராக வரித்தாள். அந்த நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றும் கனாக்கண்டாள்.
எப்படி  ஆண்டாள் அரங்கனை மணமுடிக்க முடியும்?  
விஷ்ணு சித்தருக்கு இது பெரிய கவலை. .
அரங்கத்தம்மானே  அவர் கனவில் தோன்றி “கோதையை திருவரங்கத்துத்  திருமுற்றத்துக்கு அழைத்து வருக. அங்கே தக்க முறையில் அவள்  கைத்தலம் பற்றுவோம்.” என்று சொன்னான்.
அரங்கத்துக் கோயில் பரிவாரம் முற்றும் எம்பிரானின் சத்ரம், சாமரம் போன்ற வரிசைகளோடு வில்லிபுத்தூர் வந்து பெரியாழ்வாரைப் வணங்கி  ஆண்டாளை அழைத்து வர அரங்கன் கட்டளையிட்டதாக  சொன்னார்கள். 

ஆழ்வாரும் மற்றோரும் ஆண்டாளை பட்டுத் திரையிட்ட பல்லக்கில் ஏற்றி பல்வகை இசைக்கருவிகள் இசைத்து “சூடிக் கொடுத்த  சுடர்க்கொடி வந்தாள் சுரும்பார்க் குழற்கோதை வந்தாள். திருப்பாவைபாடிய செல்வி வந்தாள். தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்.”  
 பெரிய  முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தை  எல்லோரும் அடைந்தனர்.  பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற பக்தர்களும் புடைசூழ கோவிற் பரிவாரமும் பார்த்திருக்க பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார். ஆண்டாள் பட்டுச் சேலை யணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, சீரார் வளையொளிக்க, சிலம்புகள் ஆர்க்க, அன்ன நடையிட்டு அரங்கன் பால் சென்று நின்றாள். அவனைக் கண்களாரக் கண்டு அவன் அரவணை மீதுகால் மிதித் தேறி அவனடி சேர்ந்தாள். அங்கிருந்த அனைவரும் வியக்க மறைந்து போனாள். அதிக பக்ஷம் அவளுக்கு அப்போது வயது பதினைந்து இருக்கலாமோ?

ஆண்டாள்  மார்கழி நீராடி  மாதவனை எண்ணி நோன்பு நோற்று, திருப்பாவை, நாச்சியார் திருமொழி  ஆகிய பிரபந்தங்களைப் பாடி நமக்கு அருளியவள்..   வில்லிப்புத்தூர்  கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்  சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால்  நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர்.
 
என்னுடைய ''பாவையும் பரமனும்''  புத்தகத்தில் ஆண்டாள் சரித்திரத்தை திருப்பவையோடு இணைத்து சொல்லி இருக்கிறேன். படிக்க பிடிக்குமா?  அணுக: 9840279080
 




sivan jaykay

unread,
Aug 5, 2025, 7:54:21 PMAug 5
to amrith...@googlegroups.com

சனைஸ்சரன்  -  நங்கநல்லூர்  J K SIVAN

இன்று  சனிக்கிழமை .  சனீஸ்வர பகவான்  நினைவு வருவது ஞாயமே. சனீஸ்வரனிடம் நமக்கு பக்தி ஜாஸ்தியா  பயம் ஜாஸ்தியா?என்றால்  பயம் தான். ஏன்?. அவர்  ரொம்ப படுத்துவார் நம்மை என்று வெகுகாலமாக  எல்லோரும்  சொல்லி நமக்கு அவரைப் பற்றி அப்படி ஒரு அபிப்ராயம்.  சனீஸ்வரன் பெயர் உண்மையில் சனைச்சரன்  மெதுவாக நடப்பவன்.  மற்ற கிரஹங்கள் ஒரு ராசியில் இருக்கும்  காலத்தை விட  சனைஸ்சரன் வந்து தங்கி  கிளம்பி போக  ரெண்டரை   வருஷம் எடுத்துக் கொள்பவன்.   ஒவ்வொருவருக்கும்  மூன்று முறை  இப்படி  ரெண்டரை வருஷங்கள் வரும் என்பதால்  அவனுக்கு ஏழரை நாட்டான் என்று  பெயர்  பெயர்.   ஒருவரை பிடிக்கவில்லையென்றால் அவர் வந்து விட்டால், ''சனி வந்து தொலைந்து விட்டது. சரியான  ஏழரை நாட்டான்''  என்று முணுமுணுக்கிறோம் அல்லது நெருங்கியவர்களிடம் சொல்கிறோம்  அல்லது மனதிலேயே  திட்டுகிறோம்.  சனைஸ்சரன்  வந்து போவதை சனிப்பெயர்ச்சி என்கிறோம்.  அவனைத் திருப்தி படுத்தினால்  நம்மை ரொம்பப்படுத்த மாட்டான் என ஒரு நம்பிக்கை.   இது ஒரு வித ஆன்மீக  லஞ்சம்.   அவன் பார்வையால்  காரியங்கள் சரியாக நடக்காது, மனக்கிலேசம், நிம்மதியின்மை, வியாதி, போன்ற பல துன்பங்கள் நேரும் என்று ஒரு பயம். சனி தோஷ  பரிஹார ஸ்தலங்கள் என்று பல கோவில்கள் உள்ளன.எல்லா கோவில்களும்  சைவர்கள் விஜயம் செய்பவை.  சிவன் மூல விக்ரஹம்.   சனி நம்மை பிடிப்பதற்குள் நாம் அவனைப் பிடித்து  எப்படியாவது அவன் நல்லது செய்ய வேண்டிக் கொள்ளத்தான்  பரிஹார ஸ்தலங்களுக்கு செல்கிறோம்.  சனீஸ்வரன்   நவக்கிரஹங்களில் ஒருவன். நல்லது செய்பவன் என்பதை  மறந்துவிடுகிறோம். சனிபெயர்ச்சி அன்று எல்லா கோவில்களிலும் அதிக கூட்டம் அம்முகிறது.   நமது தேசத்தில்  சனி பகவானுக்கு கோவில்கள் உள்ளன. 

சனீஸ்வரன்  நியாயவாதி. நேர்மையானவன். நல்லவன். நல்லதே செய்பவன். வீட்டில் அவன் படத்தை, விக்ரஹத்தை வைத்து வணங்குபவர்களை இன்றுவரை பார்த்ததில்லை. 

சூர்ய பகவானுக்கு ரெண்டு பிள்ளைகள்  பெரியவன் யமன். சின்னவன்  சனைஸ்சரன். பெரியவன் ஆயுளை முடிப்பவன். சின்னவன் நீண்ட ஆயுளைக்  கொடுப்பவன்.  எல்லா கோவில்களிலும்  நவகிரஹ சந்நிதியில் சனி பகவான் இருந்தாலும் சில கோவில்களில் பிரதான தெய்வமாக இருக்கிறார். சனிபகவான் சந்நிதியில் யாரும் நேரே அவரை நின்று பார்ப்ப தில்லை. நம் பார்வை தான் அவர் மேல் படவேண்டும். அவர் பார்வை படவேண்டாம் என்பது ஐதீகம். 

சனீஸ்வரன்  பிறந்த நாள் புராட்டாசி சனிக்கிழமை ரோஹிணி  நக்ஷத்ரம். காஸ்யப கோத்ரம்.  அம்மா சாயா  தேவி.அப்பா சூர்யன். காக்கை வாஹனம். கருப்பு நிறம்.  ரொம்ப நீதி நியாயவான்.

வடக்கே  மஹாராஷ்டிராவில் சனி சிங்கணாப்பூர்  என்ற இடத்தில் ரொம்ப பெரிய  கோவில். அஹ்மத் நகரில் தேவாஸா  எங்கிற கிராமத்தில்    5 1/2 அடி  உயர கருப்பு கல் ரூபத்தில்  அருள்  பாலிக்கிறார்.   மேலே கூரை இல்லாத கோவில். உலகப்ரஸித்த  சனி பகவான் கோவில்.  ஏக்கர் கணக்கான  பரப்பளவு கொண்ட கோவில்.  சென்று பார்த்து அதிசயித்தேன்.

பம்பாயில்  தியோனார் அருகே  ஒரு சனீஸ்வரன் கோவில். 7 அடி  உயர சனி பகவான் கருப்பாக நிற்கிறார்.  சனிக்கிழமைகளில் பூஜை முடிந்து அர்ச்சகருக்கு சாமி வந்து சனீஸ்வரன் அருள் வாக்கு சொல்கிறாராம்.

மஹாராஷ்டிராவில்  தானே மாவட்டத்தில்  தித்வாலா எனும் ஊரிலும்  ஒரு சனி பகவான் இருக்கிறார். புராதன கோவில். இன்னும் பார்க்கவில்லை. 

தெற்கே  தமிழ்நாட்டின்  அருகே புதுச்சேரி காரைக்கால் பக்கம்  திருநள்ளாறு க்ஷேத்ரத்தில் அற்புதமான  தர்ப்பாரண் யேஸ்வரர் ஆலயத்தில் சனி பகவான் தனி சந்நிதியோடு  இருக்கிறார். தரிசிக்காத ஹிந்துக்களே இல்லை எனலாம். அங்கே  நள தீர்த்தத்தில் நீராடியோ அல்லது ஜலத்தை ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டூ   சனீஸ்வர பகவானை வணங்கினால், ஏழரை சனி போன்ற  பிரச்னைகள் தீரும்.  திருஞான சம்மந்தர், சுந்தரர், அப்பர் என மூவராலும் பாடல்பெற்ற இந்தத் திருத்தலம், காவிரி தென்கரையில் 52-வது சிவ ஸ்தலம்.

டில்லியில்  சனி தாம்  என்று  சந்தர்பூர்  சாலையில் ஒரு சனீஸ்வரன் கோவில் இருக்கிறது. நான் இன்னும்  சென்று தரிசிக்கவில்லை. பதேபூர் பெரி அருகே  அசோலோ பக்கமாம். சக்தி பீடமாக  சனீஸ்வர ஆலயம் திகழ்கிறது.  உலகத்திலேயே  ரொம்ப பெரிய சனி பகவான் இங்கே தான். பக்தர்களே  சனிபகவானை தொட்டு பூஜை பண்ணுகிறார்கள்.  கடுகு எண்ணெய்  அபிஷேகம். நம் ஊரில் நல்லெண்ணெய் தான் பிரதானம்.  
மத்திய பிரதேசத்தில் சனி சாரா  கோவில் ஒன்று  சனி பர்வதம் என்ற  பகுதியில்  இருக்கிறது.  குவாலியரிலிருந்து 25 கி.மீ. ஹனுமான்  லங்கையை வாலால் எரித்த பின் சனி பகவான் அவரை சந்தித்த இடம். விக்ரமாதித்யன் கட்டிய கோயில் என்கிறார்கள்.
இந்தூரில் ஒரு சனி பகவான் இருக்கிறார். மராத்தி  ராணி  ஹோல்கர் வம்சத்தவள்  அஹல்யா பாய் கட்டிய கோவில். அதற்கு முன்னாலே யும் புராண காலத்து கோவில் தான்.  கோபால் தாஸ் திவாரி என்ற கண் தெரியாதவர் கனவில் சனி பகவான் வந்து மலையில் ஒரு இடத்தில் தோண்டி எடுத்த கோவில் என்று  சொல்கிறார்கள்.  

''எனக்கு கண் தெரியாதே நான் எப்படி உன்னை கண்டுபிடிப்பேன்?''
"கண்ணை திறந்து பார் தெரியும்'' என்றான் சனீஸ்வரன்.
 திவாரிக்கு கண் திறந்து மலையைத் தோண்டி சனீஸ்வரன் சிலை அகப்பட்டது என்று கதை செல்கிறது. சனைஸ்சரன்  சனீஸ்வரன்  ஆகி  நவகிரஹங்களில் சனி ஒருவருக்கே  ஈஸ்வரன் பட்டம்  தானாகவே  கிடைத்துவிட்டது.

ஆந்திர தேசத்தில்  தெலுங்கானாவில்  மேடக் மாவட்டத்தில்  எர்டானுர்  என்ற கிராமத்தில் ஒரு சனீஸ்வரன் கோவில் இல்லிறது.   சனிபகவான் 20 அடி  உயரம்.  அண்ணாந்து பார்த்து வேண்டிக்கொள்ள வசதி. யார் தலையும் மறைக்காது.
ஆந்திராவிலேயே இன்னொரு இடத்தில் மண்டபள்ளி என்கிற ஊரில் மாண்டேஸ்வர சுவாமி கோயில்  சனி பகவான் சந்நிதி ரொம்ப விசேஷம்..
கர்நாடகாவில்  உடுப்பிக்கு பக்கத்திலேயே  பன்னஞ்சே என்ற ஊரில் ஒரு சனி க்ஷேத்திரம் உள்ளது.  23 அடி  உயர சனி பகவான் பக்தர்களை ரக்ஷிக்கிறார்.
நம் தமிழகத்தில்  தேனீ பக்கத்தில்  குச்சனுரில் உள்ள  ஸ்வயம்பு  சனீஸ்வரன் பிரபலமானவர். சனிப் பெயற்சியின் போது நிற்க இடம் தேடவேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் வானூர்  கோரி மெட்டுக்கு அருகே மொரட்டாண்டி என்ற கிராமம்.  அங்கே வெட்டவெளியில் 27 அடி  உயரத்தில் சனி பகவான் நிற்கிறார். நான் பார்த்திருக்கிறேன். “பக்தானுக்ரஹ ஸ்ரீவிஸ்வரூப மகாசனீஸ்வரர்’ என    நீளமான பெயர்.  பஞ்சலோக விக்ரஹம். பீடத்தையும் சேர்த்தால்  33 அடி . ரொம்ப  பெரியவர்.  இங்கே  அவர் வாஹனம் காக்கை இல்லை  கழுகு.   ஆகமம் அப்படி தான் சொல்கிறதாம்.  நான்கு கரங்கள். மேல் வலதுகரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்.கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரத  ஹஸ்தங்கள். நல்ல கூட்டம் எப்போதும் சனியை   பொங்கு சனி  மங்கு சனி என்று அழைப்பது வழக்கம்.  சனி தசையின் பொது கஷ்டங்கள் மேலே மேலே வந்தால் மங்குசனி. அதிர்ஷ்டங்கள் நிறைய அடித்து எதிர்பார்க்காத  நன்மை,சுகம் கிடைத்தால் அந்த சனிதசை  பொங்கு சனி. வாரியும் கொடுப்பான், வாரியும்  விடுபவன்  சனி.

பம்பாயிலிருந்து  ஒருநாள் காலையில்  முதலில் ஷீர்டி சென்றேன்.300 கிமீ. தூரத்தை  ஆடி அசைந்து  கார் தூக்கிக் கொண்டு சென்றது.   பம்பாய் நகர எல்லையைக் கடந்து மஹாராஷ்ட்ர பிரதேச  கிராமங்களுக்கு செல்லும்  ஹைவே யில் சென்றபோது  எலும்புகளின் பலத்தை சோதனை செய்யும் குட்டி  குட்டி  மலை போன்ற  வேகத்தடைகள்  (ஸ்பீட் பிரேக்கர்கள்)  நிறைந்த  சாலைகள்.

ஷீரடியில்  சாயந்திரம் பாபாவுக்கு   ஆரத்தி பார்த்து விட்டு   சனி சிங்கணாப்பூர்  சென்றேன்.  கிட்டத்தட்ட 73 கி.மீ.  தூரத்தில்  அஹ்மத் நகர் ஜில்லாவில் உள்ள க்ஷேத்ரம்.

வழியெல்லாம்  சென்ற பாதையில் இருந்த  மாதிரி ரோடு தான். எங்கும் புழுதி,   சோம்பேறி மயமான  அழுக்கு   ஹிந்தி  கிராமங்கள்.  தமிழகத்தில் சாலையின் இருமருங்கிலும்  பச்சைப் பசேல் என்று இருக்குமே.  ஏன் எங்கே  வறண்ட பிரதேசமாக இருக்கிறது?  இந்த ஊரில்  சனீஸ்வரர்  ஆலயம் தவிர வேறு ஒன்றுமில்லை என்று அறிந்தேன்.  ஆனால் அது ஒன்றே  போதுமே. அவர் ப்ரத்யக்ஷமாக இன்றும் அங்கே இருக்கிறார். அவர் தரிசனம் பெற ஆயிரக்கணக்கானோர் இந்த பாதையில் தான் வருகிறார்கள்.

சனி சிங்கணாப்பூரில்  சனீஸ்வரன் சிலை வடிவில், விக்ரஹ  உருவத்தில் இல்லை.  ஒரு பெரிய   கரும் பாறைக் கல்லாக தரிசனம் அளிக்கிறார்.   எப்போதிலிருந்து  சனீஸ்வரர் இங்கே  வாசம் செயகிறார் என்ற கேள்விக்கு கலியுக  ஆரம்பத்தில் சில  ஆட்டிடையர்களின் கண்ணில்  இந்த பாறை பட்டதால்  என்று பதில். அப்படியென்றால் நிச்சயம் ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு.

நல்லெண்ணெய் எங்கும் நிறைந்திருக்கிறது.   அதுவே கூட  இவ்வாலயத்தின் பிரசித்தம் போல் இருக்கிறது. சனீஸ்வரன் பாறையாக இங்கே  தானாகவே எழும்பியிருப்பதால்  இங்கே  சனீஸ்வரர்  ஸ்வயம்புவாக  வழிபடப் படுகிறார்.   சனீஸ்வரர் உருவத்துக்கு அருகே  ஒரு பெரிய  திரிசூலம்.  தெற்கு பக்கம் ஒரு  நந்தி.
முன்பெல்லாம் இங்கே  ஸ்த்ரீகள் அனுமதிக்கப்படவில்லை.   நான் சென்றபோது ஸ்த்ரீகள் தான் அதிகம் கண்ணில் பட்டார்கள்.
இங்கே இன்னொரு அதிசயம்.  எங்கும் சனீஸ்வரர்  கண்காணிப்பதால் இந்தப்பக்கத்தில் எந்த வீட்டிற்கும் கடைகளுக்கும்   வாசல் கதவே இல்லை.  திருடர்கள் ஆசையோடு வந்தால்  அவர்களிடம் பணமோ பொருளோ பிடிபடாது. சனீஸ்வரன் பிடித்துக் கொள்வார் என்கிற பயமே போதும்.

சனி சிங்கணாப்பூர்  ஈஸ்வரனுக்கு மேலே  கோபுரம் கூரை எதுவும் கிடையாது. வானமே கூரை.  இதற்கு  ஒரு கதை நிலவுகிறது.
கலிகால ஆரம்பத்தில் சில  ஆட்டிடையர்கள்  ஐந்தரை அடி  உயர  ஒரு கரும் பாறையை கண்டார்கள் அல்லவா. இந்த விசேஷ பாறையை பார்த்த அந்த ஆட்டிடையன் தனது கையில் இருந்த கம்பியோ கோலோ அதன் கூறிய முனையால் இந்த பாறையை சீண்ட, அதிலிருந்து ரத்தம் வழிந்தது. அவ்வளவு தான் மிரண்டு போன அந்த ஆட்டிடைய சிறுவன் ஓடிப்போய் ஊரில் மற்றவர்களிடம் இந்த அதிசயத்தைச் சொன்னான். அன்றிரவு அந்த ஆட்டிடையர்களில்  பக்தி நிரம்பிய  ஒருவனின்  கனவில் சனீஸ்வரர் தோன்றி  ''அடே,  பயலே நான் சனீஸ்வரன்,  சூர்ய புத்ரன். என்னை எப்படி வழிபடவேண்டும் என்று உனக்கு சொல்கிறேன்''  என்று விவரங்கள் சொன்னாராம்.

''சாமி  உனக்கு நாங்க  எங்கே கோவில் கட்டணும்?'' என்று கேட்டான்.

''எனக்கு கோவில் எதுவும் வேண்டாம்டா.. மேலே  ஆகாயம் தான் கூரை. தினமும் பூஜை பண்ணு .  சனிக்கிழமை தைல அபிஷேகம் செய்தால்  போதும்''  என்றார் சனீஸ்வரன்.

தினமுமே   அரை லக்ஷம்  பக்தர்களுக்கு  குறையாமல் வருகிறார்கள் என்று  அறிந்தேன். அமாவாசை அன்று இங்கே கும்பல் அதிகம். சனீஸ்வரர் ஆலயம் விஸ்தீரணமாக இருக்கிறது. அதில் புதிதாக  என்னென்னவோ சந்நிதிகள் எல்லாம் கட்டிக்  கொண்டிருக்கிறார்கள், சனீஸ்வரனுக்கு தவிர.

சனி சிங்கணாபூர்   செல்லும்போது வழியெல்லாம்  நிறைய  மாட்டுவண்டிகளை பரிதாபமாக பார்த்தேன்.  சுமக்க முடியாமல் வாயில் நுரை தள்ள  கரும்புகளை சுமக்கும் மாட்டு வண்டிகள் ஏராளம்.  வழியெல்லாம் தரகர்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது.  வாங்க  எங்கள்  விடுதியில் தங்குங்கள்  என்று அநேகர்  வழிமறித்து பாதி வழியிலேயே துரத்து கிறார்கள்.   ஷீர்டி அணுகும்போதும் இதே தொல்லை.

ஏன்  பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்று விசாரித்தபோது  ''இங்கே  சனீஸ்வரன்  சந்நிதியிலிருந்து ஒரு  சக்தி அதிர்வு வீச்சு பெண்கள் உடலுக்கு அவ்வளவு நல்லதில்லை'' என்று பதில் வந்தது. அதற்கு மேல் விவரம் கேட்கவில்லை.  சபரி மலை அய்யப்பன் சந்நிதிபோல் இங்கு ஏதோ சாந்நித்யம் பெண்களை அதுவும் கர்ப்பவதிகளை  அனுமதிக்கவில்லை என்று தெரிந்து கொண்டால் போதுமானது.  அத்துமீறல் எங்குமே  எப்போதுமே  உள்ளது தானே.

அற்புதமான  கோவில் இது. ப்ரத்யக்ஷமாக இருக்கும்  சிங்கணாப்பூர சனீஸ்வரனை ஒரு தரமாவது தரிசித்து அருள் பெற வேண்டும்.
சனீஸ்வர பகவானை  வழிபட ஒரு சின்ன  சக்தி வாய்ந்த   ஸம்ஸ்க்ரித  மந்த்ரம் :

ॐ नीलांजनसमाभासं रविपुत्रं यमाग्रजम। छायामार्तण्डसम्भूतं तं नमामि शनैश्चरम् ||
Om Nilanjana Samabhasam Ravi Putram Yamagrajam | Chhaya Martanda Samhubhutam Tama Namami Shanescharam ||
ஓம்  நீலாஞ்ஜன ஸமாபாசம் ரவி புத்ரம்  யமாக்ரஜம், சாயா  மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி  சனைஸ்சரம்  

சனீஸ்வர பகவான் பெயரால்  சனிக்கிழமை  விசேஷம் என்று சொல்ல அவசியமே இல்லை.  சனீஸ்வரன் சூரியனின் புத்ரன் .யமனின் சகோதரன். சின்ன  வயசிலிருந்தே சனீஸ்வரனுக்கு  கிருஷ்ணன் மேல்  ஒரு  பாசம், நேசம். சனீஸ்வரனால் நமக்கு  வாழ்வில்  துன்பமில்லை. நமது கர்ம பலத்தினால்,  செய்த பாபங்களால், அதன் பலனை நாம் அனுபவித்து கடனை வட்டி யோடு  செலுத்துவதை  கண்காணிப்பவன்.  யமனுக்கும்  நரக  லோகத்தில்  அது தானே வேலை.
சனீஸ்வரனும் யமனும்   உண்மையில் பாரபக்ஷம் பார்க்காத நீதிமான்கள்.
அது சரி  வேங்கடேசனுக்கும்  இந்த சனிக்கிழமைக்கும் என்ன தொடர்பு?
முதலில்  ஒரு சனிக்கிழமை அன்று தான்  வேங்கடேசன்  வேங்கடாத்ரி  மலையில் காணப்பட்டான்.
அன்று தான்  மஹா விஷ்ணு திருமலை வேங்கடேசனாக  அவதரித்து காட்சி தர துவங்கினார்.
ஒரு சனிக்கிழமை அன்று தான் மஹாலக்ஷ்மியை   தனது மார்பில் உறையச்செய்தார்.
ஒரு சனிக்கிழமை தான்  பத்மாவதியை வேங்கடேசன்  மணந்தார்.
ஒரு சனிக்கிழமை தான்  ஓம்காரம் அங்கே உதித்து ஒலித்தது.
சனிக்கிழமை ஸ்திரவாரம்  எனப்படுவதிலிருந்தே  எதை அன்று செய்தாலும்  உறுதியாக மாறாமல் இருக்கும் என தெரிகிறது.
சனீஸ்வரனால் நமக்கு ஏற்படும் துன்பங்கள்,    நாம் அப்படி நினைத்தால், அது சனிக்கிழமைகளில் வெங்கடேசனை வணங்கும்  போது  விலகும்.  வேங்கடேசா , உன் பக்தர்கள் சனிக்கிழமைகளில் உன்னை வந்து வேண்டி வழிபட்டால் என்னால் ஒரு துன்பமும்  இல்லாமல்  அவர்கள்  துன்பம் விலகச்செய்வேன்.  த்ரயோதசி  சனிக் கிழமைகளில்  நேர்ந்தால் அது இன்னும் ரொம்ப விசேஷம். .இன்னும் பலன் அதிகம்.  

சனிக்கிழமைகளில் கற்பூர ஹாரதி  வெங்கடேசனுக்கு  ரொம்ப பிடிக்கும்.  கை மேல் பலன்.  செல்வம் கொழிக்கும்.

sivan jaykay

unread,
Aug 5, 2025, 7:54:23 PMAug 5
to amrith...@googlegroups.com
  பதினெட்டாம் பெருக்கு  -   நங்கநல்லூர்  J K  SIVAN

இன்று   ஆடிப்பெருக்கு.   ஆடி மாதம் 18ம் நாள்  வருஷா வருஷம்  ஆடிப்பெருக்கு  பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.  வடக்கே எப்படி  கங்கை முக்கியமோ அந்த அளவு  தென்னிந்தியாவில்  காவேரி நமக்கு ஜீவாதாரமான நதி.  தஞ்சை ஜில்லா  டெல்டா  தான் நமது நெற்களஞ்சியம். காவிரியின் பங்கு நமக்கு பசி தீர்ப்பதில் மிகப்  பெரியது. வெகு ஆவலாக  விவசாயிகள் பயிர்த் தொழிலாளர்கள், பொது மக்கள்  மேற்கு தொடர்ச்சி மலையில் தென் மேற்கு பருவகாற்றின் விளைவாக  பெருகும் மழை நீர் ப்ரவாஹமாகி  ஓடி  காவிரியை நிரம்பச்  செயது அணைக்கட்டுகள் திறந்தோ திறக்காமலோ உபரி நீர்  ஆடி மாதம்  தமிழகத்தை அடைவது ஒரு அற்புதமான நாள் அல்லவா?  பெருக்கம்  என்றால் அதிகரித்தல்.  மேட்டூர் அணையிலிருந்து  காவிரி நதி நீர்  திறந்து விடப்படும்  காவிரி நீர்  தீர்மானிக்கப்பட்ட அளவு  தமிழக சோழநாட்டு வயல்களுக்கு சென்றடையும். 
ஆங்கில மாதம்  ஜூன்   ஜூலை  முதல்  தென்னகத்தின்  மேற்கே  மலைகளில் தென்மேற்கு பருவக் காற்றால் உந்தப்பட்டு பொழியும்  மழைநீர்  மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பெருகி ஆறுகளாக  ஓடும். இருக்கும் அத்தனை ஆற்றிலும் நீரின் வரத்து அதிகமாகும்.  பதினெட்டு தேதிகளில்  அணைக்கட்டு நிரம்பி  காவிரிக்கு நீர் திறந்து விடுவார்கள்.  தஞ்சை ஜில்லா டெல்டா பிரதேசங்களில்  கொண்டாட்டம்.  
பெருக்கு என்பது "பெருக்கம்" என்பதை குறிக்கும் — அதாவது, நதி நீரின்  அளவு அதிகரிப்பு, வளர்ச்சி, நலமுடனான வாழ்க்கை போன்றவற்றை குறிக்கும்.  

இந்த ஆடி 18ம் நாள் தான் ஒரு மஹா வீரன் குதிரை மேல் ஏறிக்கொண்டு  வீராணம்  ஏரிக்கரையில் வந்துகொண்டிருந்தான்  என்று  வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனை தனது அமர காவியமான  ''பொன்னியின் செல்வனில்''பேராசிரியர் அமரர்   கல்கி அறிமுகப்படுத்தியது நினைவுக்கு வருகிறது. 

அந்த ஏரி கடல் போல் விரிந்து பரந்து காணப்படுவது. தமிழகத்துக்கு முக்கியமாக  சென்னை மாநகரத்துக்கு  இப்போது நீர் தரும் வள்ளல்.  

ஆடிப்பெருக்கின்  போது  சோழ நாட்டு நதிகளில் எல்லாம்  தண்ணீர்  வெள்ளமாக  நிரம்பி, கொள்ளிடம் வழியாக  வீராணம் ஏரிக்குள் நீர் குபுகுபு என்று புகும். அழகே தனி.  விவசாயிகளுக்கு குதூகலம்,  ஆடிப்பட்டம் தேடி விதைப்பவர்கள் அல்லவா?  ஆறுமாதத்தில் தைமாதத்தில் அறுவடை, பொங்கல் விழா நடக்கும்.

ஆடி பெருக்கு (Aadi Perukku) என்பது தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பாரம்பரிய விழாவாகும். இது இயற்கை, மகளிர், நதி வழிப்பாடுகள், வளம், மற்றும் மழைக்கால மகிழ்ச்சி ஆகியவற்றை சார்ந்த ஒரு பண்டிகை ஆகும்.

ஆடிப்பெருக்கு அன்று கிராமத்தில் குழந்தைகள்  தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு விலாயுடுவதை மக்கள்  கும்பலாக ரசிப்பார்கள்.  பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங் எல்லோரும்  புத்தாடை அணிந்து மகிழ்வார்கள். தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய்  அவர்கள் சிரங்களை  அலங்கரிக்கும். வட்டமாக  முட்டு முட்டாக  குடும்பத்தினர், நண்பர்களோடு,  கரையோரங்களில் பாக்கு மட்டைகளில், வாழை இலைகளில்,  வித வித  சித்திரான்னம் உண்பார்கள். காவேரியில் வெள்ளம் பெருக்கெடுத்தால்  சோழ நாட்டு வயல்கள் செழிக்கும், தமிழக மக்கள் வயிறு நிரம்பும். நடந்தாய் நீ, இப்போது  ஓடம்மா, வாழி காவேரி  என்று பாட தோன்றும். 

மக்கள் நதிக்கரையில் சென்று கங்கை, காவிரி, வெள்ளாறு, பொன்னையாறு போன்ற நதிகளில் நீராடி வழிபடுவார்கள். 
விவசாயத்திற்கும், பயிர்களின் நலத்திற்கும் நீர் முக்கியமானது என்பதால், மக்கள் இந்த நாளில் வளமான மழைக்காலம் வர வேண்டும் , மழை நீர் மூலம் காவேரியில் நீர் மட்டம் அதிகரிக்கவேண்டும் என்று  வேண்டுவார்கள். கல்யாணம் ஆன பெண்கள் தங்கள் குடும்ப நலத்திற்காக நதியில் தீபம் ஏற்றி விடுவர்.

வணிகத்தில், விவசாயத்தில், கல்வியில், அல்லது குடும்ப வாழ்க்கையில் புதிய முயற்சிகளை தொடங்க இது  சிறந்த நாள் . 
காவிரி, வெள்ளாறு, நதிக்கரைகளில்  கூட்டமாக மக்கள் சென்று, வாழை  இலையில்  பலவகை சித்ரான்னம் வைத்து உணவு பரிமாறுவர்.  பெண்கள் புளியோதரை, தயிர்சாதம், இனிப்புகள், வெற்றிலைக்கடலம் முதலியவை கொண்டு சென்று  நதிக்கு அளித்து  காவேரி அன்னையை  வணங்குவார்கள்.கற்பூரம் ஏற்றி, தீபம் வைத்தும் தீபங்கள்  நதியில் மிதக்கும். 
சிலர் புது தொட்டிலில் குழந்தையை மஞ்சள் கயிற்றுடன் கட்டி ஆடிப்பாடி மகிழ்வது வழக்கம்.  சென்னை போன்ற பட்டணங்களில் நதியை மனதில் நினைத்துக் கொண்டு குழாய்த்தண்ணீரில்  பிளாஸ்டிக்  குடுவையில் எடுத்து குளித்துவிட்டு  தேங்காய் சாதம், வெல்ல சாதம், புளியஞ்சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம்  தேங்காய் பால்  என்று கலர் கலராய் தட்டில் சாப்பிடுவதோடு பதினெட்டாம் பேருக்கு  ஓவர். 

ஆடிப்பெருக்கு தான்  ஆரம்பம். இனிமே மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டி தீர்க்கபோகிறது என்று எல்லோரும் மகிழும்  நாள் ஆடி பதினெட்டு. பார்ப்போம்  வருண பகவான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ?

sivan jaykay

unread,
Aug 5, 2025, 7:54:24 PMAug 5
to amrith...@googlegroups.com

ரா  கணபதி  -    நங்கநல்லுர்  J K SIVAN 

தெய்வத்தின் குரல் போன்ற ஒரு அற்புத ஆன்மீக நூலை  எவரால் எழுத முடியும்? அதற்கென்று பிறந்தவர் தான்  ஸ்ரீ  ரா. கணபதி. ஆசார சீலர்.   மஹா பெரியவா பக்தர்.  இந்த பூலோக வாழ்க்கை  76-77 வருஷங்கள் . எப்பேர்ப்பட்ட  பிறப்பு. பிறந்தது விநாயக சதுர்த்தி அதனால்  தான் பெயர்  'கணபதி'. மறைந்தது மஹா சிவராத்ரி. சிவனின் அவதாரமான
 சங்கரர், மஹா பெரியவாளோடு ஐக்கியம்.  பிறந்த ஊர்  சிதம்பரம் . அப்பா  ராம சந்திரய்யர் அம்மா ஜெயலக்ஷ்மி .  சிவபக்த குடும்பம்.  BA  HONS  படித்த எழுத்தாளர். நிறைய  மஹா பெரியவா பற்றி எழுதியவர்.  மஹா பெரியவளுடன்  அருகிலேயே இருந்து அவர் சொல்வதை எல்லாம் எழுதிக்கொண்டு  அவர் உபன்யாசங்களை கேட்டு தொகுத்து ஒரு அமரக்காவ்யமாக அமைந்தது தான்  ''தெய்வத்தின்  குரல்''  ஏழு பாகங்கள். 

நாம் எப்போதோ கொஞ்சம் புண்யம் செய்திருப்பதால் நம்மில் சிலருக்கு கிடைத்த  ஒரு பெரிய  பாக்யம், அதிர்ஷ்டம்  காஞ்சி  மஹா பெரியவா வாழ்ந்த  காலத்தில்  நாமும்  வாழ்ந்தோம்,  அவர்  சுவாசித்த காற்றை நாமும்  சுவாசித்து,  அவர்  நடந்த  மண்ணில்  நாமும்  நடந்தோம், அவரை  நேரில் பார்த்தோம்,  அவர் தரிசனம் செய்தவர் இன்னும் அதிக புண்யசாலிகள். அவரோடு பேசியவர்கள், அவர் பேச்சை நேரில் கேட்டவர்கள் ரொம்ப ரொம்ப கொடுத்து வைத்தவர்கள். மஹா  புருஷர்கள்.  அவரோடேயே  இருந்தவர்களைப்பற்றி  கேட்கவே வேண்டாம்  அவர்களுக்கு  மறு  பிறப்பே  கிடையாது  என  தைரியமாக  கூறலாம். நான் ஒரு விதத்தில் அப்படி பாக்கியசாலி, அவரை நேரில் பார்த்து பல முறை பேசி ஆசி பெற்றவன்.

கணபதி எளிய வாழ்க்கை வாழ்ந்தவர், உபவாசம், விரதம், பூஜை எல்லாம் உண்டு. அதிகம் பேசமாட்டார். தனது முடிவு நெருங்கிவிட்டதை முன்கூட்டியே  உணர்ந்தவர். ''எனக்கு முடிவு  நெருங்கி விட்டது என்று சில நாட்கள் முன்பாகவே அருகில் இருந்தவர்களிடம் சொல்லியவர். ஆகாரம் வெறும் கஞ்சி , அதுவும்  சில  டீஸ்பூன்கள் தான். அதனால் அவர் ஆன்மீக சக்தி துளியும் குறையவில்லை.  எழுத்து சேவை தொடர்ந்து கொண்டே இருந்தது.  சிவராத்திரி அன்று  ஜபம் பண்ணிக்கொண்டிருந்தார்  இரவு  7.10 . ஏதோ ஒரு நோட் பக்கத்தில் தமிழில்  ''மோக்ஷ தேவதை எனக்காக  காத்திருக்கிறாள். சாதாரணமாக அல்ல  நான் நடந்துவர, என்னை  வரவேற்க  முத்து நவரத்ன  கம்பளத்தை விரித்து  வைத்துக்கொண்டு''  என்று  எழுதி வைத்திருக்கிறார்.  பள்ளிப்பருவத்தில்  வடபழனி முருகன் மேல் ஒரு அபார பக்தி.
கணபதிக்கு  நல்ல சங்கீத ஞானமுண்டு அதனால் தான் சங்கீத சம்பந்த கட்டுரைகள் அற்புதமாக அமைந்தன. பிரம்மச்சாரி எளிய வாழ்க்கை. சன்யாசம் தேடவில்லை.  பெரியவாளின் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு உபதேசமாக  ஏற்றுக்கொண்டவர். நிறைய சிந்தித்தவர்.    தியாகராயநகரில் அவர் அறையில் ஒரு கட்டில் , மேஜையில் சில மருந்துகள், நிறைய  சுவாமி படங்கள், புத்தகங்கள்.  பெரியவா சம்பந்தப்பட்ட அனைத்து சம்பவங்கள், இடங்கள் எல்லாம் சென்று, சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரையும் சந்தித்து  விஷயம் சேகரித்தவர். 

1929  பிறகு 1944  ஆகிய வருஷங்களில் மஹா பெரியவா  ஜீவன் முக்தரான ரமண மஹர்ஷி வாழ்ந்த  திருவண்ணாமலைக்கு சென்று கிரி ப்ரதக்ஷிணம் பண்ணி இருக்கிறார்.   காஞ்சி மட சம்பிரதாயத்தின் ஆச்சார விதிகளின் படி  ரமணாஸ்ரமம் கிடையாது ஆகவே  பரமாச்சார்யா  ஆஸ்ரமத்துக்குள் செல்ல வில்லை.   ஜகத் குரு மற்றொருவரை போய் சந்திப்பது ஐதீகம் இல்லை. காஞ்சி பீடம் கட்டுப்பாடுகள், சம்பிரதாயங்கள், நிறைந்தது. ரமணாஸ்ரமம்  கட்டுப்பாடுகளை ஸம்ப்ரதாயகளை சர்வ சுதந்திரமானது. பெரியவா சம்பிரதாயத்துக்கு கட்டுப்பட்டவர் என்பதால் மகரிஷியை சந்திக்கவில்லை. மகரிஷியும் சுதந்திரமானவர், எவரையும் வரவேற்பதுமில்லை, சென்று பார்ப்பதுமில்லை. ஒவ்வொருவரும்   ப்ரம்ம ஸ்வரூபம் என்ற நிலைப்பாடு கொண்ட ஞானி. 

கணபதி சிறு வயது முதல் ரமண மகரிஷியை பல முறை பார்த்து இருக்கிறார். அவர் அப்பா  திருவண்ணாமலையில் சப்-மாஜிஸ்திரேட் ஆக இருந்தார். 

தெய்வத்தின் குரல்  மற்றும் பல நூல்களில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் மஹரிஷிகள் கவிகளாக இருந்தனர். வேதவியாசர்  வால்மீகி, பட்டினத்தார், ராமலிங்க ஸ்வாமிகள் போன்ற  எண்ணற்ற மஹான்கள் அத்தனைபேரின் நூல்களும் பகவானை நேரில் பார்த்த அனுபவங்களை கொண்டது.  மந்த்ர த்ரஷ்டா எனப்படும் மந்திர அக்ஷரங்கள் தெய்வீக உருவத்தை அறிந்தவர்கள் அவர்கள்.   ரா. கணபதி அப்படி வாழ்ந்த  ஒரு கலியுக ரிஷி. அவரைப்போல் மற்றவர்களின் எழுத்து பரிமளிக்காததன் காரணம் இது தான். அவர் எழுத்தில் தெய்வீகம் தெய்வம் ரெண்டுமே  நிறைந்துள்ளது. எனக்கு பிடித்த  எழுத்தாளர்.  ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாக எழுத முடிந்தவரை.  என் மானசீக குரு   ரா.க. ,என்னைவிட  நாலு வயசு பெரியவர்.  தி நகரில் சிவ விஷ்ணு ஆலயத்தில், மற்றும்  காஞ்சி மடத்தில் சில சந்தர்ப்பங்களில் சந்தித்ததுண்டு. ஒரு சில வார்த்தைகள் பேசியதும் உண்டு. 

sivan jaykay

unread,
Aug 5, 2025, 7:54:24 PMAug 5
to amrith...@googlegroups.com

ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திராள்   -  நங்கநல்லூர் J K SIVAN

ஏறக்குறைய  240 வருடங்கள் முன்பு நமது  தமிழகத்தில்  மௌன யோகியாக வாழ்ந்து,  பிரம்மத்துடன் ஐக்யமான   ஜீவன் முக்தர்  ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்திரர்.  அப்போதைய காஞ்சி காமகோடி பீட ஆசார்யார் (57ஆம் ஆசார்யார்) பரமசிவர் என்பவரிடம் தீக்ஷை பெற்றவர். ஸதாசிவ பிரம்மேந்திரர் கைவல்யம் அடைந்து சுமார் 120 வருடங்கள் கழித்து நடந்த நிகழ்ச்சி ஒன்றை சொல்கிறேன் கேளுங்கள்.

சிருங்கேரியில் ஆசார்யராக இருந்த ஸ்ரீ சச்சிதானந்த சிவ அபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகளுக்கு ப்ரம்ம ஞானத்தில் ஏதோ சந்தேகம் எழுந்ததாம்.  அப்பேற்பட்ட  ஞானியால் வேறு யாரிடம் அதை உரையாடி தெரிந்து கொள்ள முடியும்? ப்ரம்ஹ ஞானத்தை அடைந்தவர், உணர்ந்தவர் மட்டுமே அல்லவா அனுபவபூர்வமாக அதைத் தெளிவிக்க முடியும்?  சிருங்கேரி ஆசார்யாளுக்கு ஸதாசிவ ப்ரம்மேந்திராளைப்  பற்றி நன்றாகவே  தெரியும்.  ஆகவே ஆச்சார்யாள் விஜய யாத்திரையில் தென் பகுதிக்கு வரும் போது நெரூர் சென்று பிரம்மேந்திராளின் அதிஷ்டானத்தில் அமர்ந்து தியானம் செய்ய தீர்மானித்தார்.

சிருங்கேரி மடத்தின் கிளை ஒன்று கரூர் அருகில் இருக்கும் மஹாதானபுரம் கிராமத்தில் உள்ளதால் அங்கே வந்த சிருங்கேரி ஆசார்யர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானத்திற்கு பல்லக்கில் போனாராம். போகும் பல்லக்கு மிகவும் நிதானமாகச் செல்வதாக உணர்ந்து  பல்லக்கு தூக்கும் போகிகளிடம் கேட்டார் ;

''ஏன் பல்லக்கு தடுமாறுகிறது. முன்னால் சரியாக நகரமுடியவில்லையே  என்ன காரணம்?''

''குருநாதா. நாங்கள் பல்லக்குடன் முன்னே செல்கையில் யாரோ பலமாக பின் நோக்கி  பல்லக்கை இழுப்பது போல் உணர்கிறோம் என்னவென்று புரியவில்லை. மேலே செல்வது கஷ்டமாக இருக்கிறது''

சிருங்கேரி ஆச்சார்யாள் ஞான திருஷ்டியில் தான் இப்படி  பல்லக்கில் சென்று  பிரம்மேந்திரரைப் பார்க்கச் செல்வது  சரியான முறையல்ல என்று  தோன்றியது.  பல்லக்கிலிருந்து இறங்கி தமது கை நீட்டி அது நீளூம் வரையில் நடந்து, அங்கே   ஒரு நமஸ்காரம் செய்து பின்னர் இன்னொரு கை தூரம் நடந்து அங்கே  மீண்டும் நமஸ்காரம் செய்வதுமாக  இப்படியே  அந்த  சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து நெரூரில் ப்ரம்மேந்திரரின்  அதிஷ்டானத்தை அடைந்தாராம்.

நெரூரில் சிருங்கேரி ஆசார்யார் தமது அனுஷ்டானங்களைக் காவிரிக் கரையில் முடித்துக் கொண்டு பிரம்மேந்திராளின் அதிஷ்டான வளாகத்தினுள் சென்ற பொழுது, வேறு யாரையும் உள்ளே விட வேண்டாம் என்றும் தாமே திரும்பி வந்து பேசும் வரையில் யாரும் தன்னோடு தொடர்பு கொள்ளவேண்டாம். எல்லோரும்  சுவற்றுக்கு வெளியே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுவிட்டுதான் உள்ளே சென்றார்.

அன்ன ஆகாரமின்றி, யாரிடமும் ஏதும் பேசாது ப்ரம்மேந்திராளின்  அதிஷ்டானத்தின் முன்பு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக சிருங்கேரி ஆச்சாரியார்  த்யானம் பண்ணினார். காலை-மாலை  வேளைகளில்  காவேரிக் கரைக்கு வந்து ஸ்னாநாதிகளை முடித்துக் கொண்டு செல்வாராம். ஏதும் பேசுவதோ, அல்லது பிக்ஷை எடுத்துக் கொள்ளவோ இல்லையாம்.

பக்தர்கள் எல்லோரும் அதிஷ்டானத்தின் வெளிப்பக்கம் சுவற்றுக்கு அப்பால் காத்திருந்தார்களாம். மூன்றாம் நாள் இரவு அதிஷ்டானத்திற்குள்  ரெண்டு பேர் பேசும் சத்தம் வெளியே அவர்களுக்கு கேட்டதாம். ஒரு குரல் சிருங்கேரி ஆச்சார்ய ருடையது. இன்னொன்று நிச்சயம் ஸதாசிவ பிரம்மேந்திராளுடையதாக தான் இருக்கவேண்டும்.

நான்காம் நாள் ஆசார்யார் வெளியே வந்து சொல்வார் என்றும் ஆசார்யார் சதாசிவ பிரம்மத்திற்கு பூஜை செய்தால் அதன் மூலம் அவரது குருவாக சதாசிவத்தை ஏற்றது தெரியும் என்றும் முடிவு செய்து காத்திருந்தனர்.

எதிர்பார்த்தது போலவே சிருங்கேரி ஆச்சார்யாள் மறுநாள் வெளியில் வருகையில் ஸ்ரீ சதாசிவ பிரம்மத்தை போற்றி 45 ஸ்லோகங்களை [ஸ்ரீ சதாசிவேந்த்ர ஸ்தவம்] எழுதி எடுத்து வந்து சதாசிவ பிரம்மத்திற்கு தாம் பூஜை செய்ய ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னாராம். அங்கிருந்து கிளம்பும் போது ஸ்ரீ சதாசிவ பிரம்மத்தின் படத்தை பல்லக்கில் வைத்து சிருங்கேரிக்கு எடுத்துச் சென்றதாக வரலாறு.

இப்போதும் சிருங்கேரி ஆசார்யர்கள் தமது தமிழக விஜயத்தில், குறிப்பாக பட்டமேற்ற பிறகு வரும் முதல் பயணத்தில் நெரூர் வந்து பூஜைகள் செய்து காணிக்கைகள் அளிக்கிறார்கள்.

இவ்வாறாக பிரம்மத்தில் கலந்து 130 வருடங்கள் கழிந்த பின்னாலும் தன்னை நோக்கி சிரத்தையுடன் வந்த சிருங்கேரி ஆசார்யாளுக்கு அனுக்ரஹித்துள்ளார் ஜீவன் முக்தரான  சதாசிவ ப்ரம்மேந்திரர்.

 மேற்சொன்ன நிகழ்ச்சியின் போது சிருங்கேரி ஆசார்யார் எழுதிய 45 ஸ்லோகங்களில் சிலவற்றை சொல்லி நாமும் அந்த பரபிரம்மத்தை வணங்குவோம்.

''பரமசிவேந்த்ர கராம்புஜ ஸம்பூதாய ப்ரணம்ர வரதாய பததூத பங்கஜாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய''

பரமசிவேந்திரர் என்னும் மஹானின் (சதாசிவ ப்ரமேந்திராளின் குரு. தீக்ஷை அளித்தவர்) கரகமலத்தால் கிடைத்தவரும்,  நமஸ்கரித்தவர்களுக்குப் பரதத்துவத்தை அருளுபவரும், வரமளிப்பவரும், பகவானின் திருவடிகளில் அவதூதராக
 இருப்பவரும், தாமரை போல் பரிசுத்தமானவருமான ஞான குரு ப்ரம்மேந்திராளை நமஸ்கரிக்கிறேன்.

''கரமாஹி த்விஜ பதயே சமதம முக திவ்ய ரத்னவாரிதயே சமனாய மோஹ விததே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய''

காமம் என்னும் பாம்புகளுக்கு கருடனாக இருப்பவரும், சமம், தமம் போன்ற உத்தம ரத்னங்களிருக்கும் சமுத்ரமுமான ஸ்ரீ சதாசிவேந்த்ரரை மோக சமுத்ரம் அடங்குவதற்காக நமஸ்காரம் செய்கிறோம்.

''ப்ரணதாய யதி வரேண்யைர் கண நதாப்ய ஹார்ய விக்ன ஹ்ருதே குணதா ஸீக்ருத ஜகதே ப்ரணதிம் குர்ம:
ஸதாசிவேந்த்ராய''

யதி ஸ்ரேஷ்டர்களால் நமஸ்கரிக்கப்படுபவரும், விக்னேஸ்வரராலும் போக்க முடியாத விக்னங்களைப் போக்குபவரும், குணங்களால் உலகத்தையே தாஸபாவமடையச் செய்தவருமான ஸ்ரீ ஸதாசிவேந்த்ரரை நமஸ்காரம் செய்கிறோம்.

sivan jaykay

unread,
Aug 5, 2025, 7:54:25 PMAug 5
to amrith...@googlegroups.com
சக்தி பீடம்: தாரிணி பர்வதம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஆடி வெள்ளிக்கிழமை அம்பாளை ஒவ்வொரு வீட்டிலும் விசேஷமாக  அலங்கரித்து, அர்ச்சித்து  நைவேத்தியம் அளித்து பிரசாதம் உண்கிறோம். 
ஒரு சக்தி பீடம் அநேகர் அறியாத ஒன்று ஒரிஸ்ஸாவில் இருக்கிறது. அது பற்றி தான் இந்த பதிவு.

ஒரிசா மாநிலத்தில் கஞ்சம் ஜில்லாவில்  பிரம்மபுரி என்று இருந்த  ஒரு நகரம் தான் இப்போது பெர்ஹாம்பூர் ஆகிவிட்டது.  குங்குமத்துக்கு பேர் போன ஊர்.  அதன் அருகே ருஷிகுல்யா என்கிற நதி ஓடுகிறது. இந்த நதியை சரஸ்வதி நதியின் சகோதரி என்பார்கள். அந்த நதிக்கரையில் அருகே ஒரு சிறிய குன்று உள்ளது. அந்த குன்றின் பெயர் குமரி மலை. அந்த மலையின் மீது அமைந்துள்ள அற்புதமான சக்தி ஆலயத்தின் பெயர் தான்  தாரா தாரிணி அம்மன் ஆலயம். மிக புராதனமான ஒரு சக்தி பீடம். 

இந்த பிரதேசத்தில் உள்ள  முக்கியமான நான்கு முக்கிய   தந்த்ர உபாசன , சக்தி பீடங்கள்  1. தாரா தாரிணி அம்மன் ஆலயம் (ஸ்தன காண்டம் ) இது பிரம்மபுரியில், 2 பிமலா தேவி ஆலயம் , பாத காண்டம் ) பூரி ஜகன்னாதர் ஆலயத்தில், 3. காமாக்யா தேவி (யோனி காண்டம்) இது கௌஹாத்தி அருகே உள்ளது. 4. தக்ஷிண காளிகா தேவி ஆலயம் . (முக காண்டம்) இது கொல்கத்தாவில் உள்ள காளி கோவில்.   மொத்தத்தில் 52 மற்ற சக்தி பீடங்கள் இந்தியாவெங்கும் உள்ளன. எல்லாமே மாதா  சதியின் உடலிலிருந்து தெறித்து விழுந்த பாகங்கள் என்பதை முன்பே சொல்லியிருக்கிறேன்.

தாரா தாரிணி அம்மன் ரெட்டையாக தாரா, தாரிணி என்ற பெயரில் இரு கற்சிலையாக வடிக்கப்பட்ட உருவம். தங்க வெள்ளி ஆபரணங்கள் சாற்றி இருக்கிறார்கள். பித்தளையில் இரு தலைகள் அம்மனின் வடிவங்களாக இந்த இரு சிலைகளின் இடையே ஸ்தாபிக்கப்பட்டு வழிபடப்படுகிறது. ஒரிசாவில் பிரம்மபுரியிலிருந்து சுமார் 30 கி.மீ. கிழக்கே சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம். குமரி மலை என்று சொன்னேனே அதற்கு இன்னொரு பெயர் தாரிணி பர்வதம். மஹா பாரத யுத்தத்தின் போது ''அர்ஜுனா,  நீ  தாரா தாரிணி அம்மனைச் சென்று வேண்டிக்கொள். வெற்றி நிச்சயம் ''என்று கிருஷ்ணன் அனுப்பின ஸ்தலம்.

அசோகரால் கலிங்கப் போரில் ஜெயிக்கப்பட்டு, புத்த பிக்ஷுக்கள் கலிங்க தலைநகர் ஸமாபாவில் மலிந்தனர். அது தாரிணி ஆலயத்திலிருந்து 7 கி.மீ. தூரம் தான். தாரா என்பதே பௌத்த வார்த்தை என்கிறார்கள்.

ஆரம்பத்தில் மஹாயான பௌத்த மதம் கலிங்கப்போருக்கு முன்னால் சிலை வழிபாட்டில் ஈடுபட வில்லை. பிறகு கலிங் கத்தில் தாரிணி அம்மன் அவர்களை கவர்ந்தாள் . பௌத்தர்கள் தாந்த்ரீக சாஸ்திரம் கற்றார்கள். தாரிணியை வழிபட்டார்கள்.

இந்த ஆலயத்தை பற்றி ஒரு சின்ன கதை. 17ம் நூற்றாண்டில் ஒருநாள் இரவு பாசு ப்ரஹராஜ் என்பவர் வீட்டு கதவை யாரோ ''பட பட'' வென்று தட்ட, திறந்து பார்த்த பாசு,  ரெண்டு பெண்கள் நிற்பதை பார்த்து வீட்டுக்குள் அழைக்கிறார். பாசு, நன்றாக வேதம் கற்ற பிராமண அம்பாள் பக்தர். புத்ர பாக்யம் இல்லாதவர். ஜெகந்நாத பூர் கிராமத்தை சேர்ந்தவர். சிலகாலம் அவர் வீட்டில் அந்த இரு பெண்களும் விருந்தாளிகளாக வசிக்கிறார்கள். சில வருஷங்கள் கூட ஓடிவிட்டது. ஒருநாள் அவர்கள் பாசுவின் வீட்டை விட்டு செல்கிறார்கள். அந்த இரு பெண்களும் பாசு வீட்டிலிருந்து தாரிணி பர்வதம் சென்றதை சில கிராமத்தார்கள்கள் பார்த்ததாக சொல்கிறார்கள். அங்கே அவர்கள் தாரிணி சந்நிதியில் மறைந்ததாக சிலர் கூறினார்களாம்.

பாசு அவர்களைத் தேடி சென்று இதெல்லாம் அறிகிறார். ''அடாடா அம்பாள் அல்லவோ தாரா தாரிணியாக நம் வீட்டிற்கு வந்து சில வருஷங்கள் வாழ்ந்து அருளினார்கள் என்று அறியாமல் போய்விட்டோமே'' என்று வருந்துகிறார். அவர்களை வரவேற்று உபசரித்த சந்தோஷம். அன்றிரவு அவர் கனவில் தாரிணி அம்மன்கள்  பேசினார்கள்;

''பாசு,  நாங்கள் உன் பெண்களாக வந்து மகிழ்ந்தோம். இனி நீ இந்த கோவிலை தாரிணி பர்வதத்தில் புனருத்தாரணம் செய்து பக்தர்களுக்கு தரிசனம் கிடைக்க வழி செய்'' என்கிறாள், அதற்கு பிறகு பாசு தாரிணி பர்வதத்தில் இப்போதுள்ள ஆலயத்தை நிறுவி, சாஸ்த்ரோக்தமாக மந்த்ர தந்த்ர பூஜைகளோடு அதை ஒரு சிறந்த சக்தி பீடமாக அமைத்து அம்பாள் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார்.    இனி நாம்  செய்வது என்ன பாக்கி  இருக்கிறது?  முடிந்த பொது இந்த ஆலயத்துக்கு சென்று  அம்மன்களை தரிசித்து மகிழ வேண்டியது ஒன்று தான். 

sivan jaykay

unread,
Aug 5, 2025, 7:54:26 PMAug 5
to amrith...@googlegroups.com
மஹரிஷி  ரமணானுபவம்  -  நங்கநல்லூர்  J K  sivan 

துறவியின்   சயனம்  

அருணாசலத்தில்,   மஹரிஷி  ரமணர் ஆஸ்ரமத்தில் எந்த கட்டுப்பாடும் கண்டிப்பும் கிடையாது.  பகவான் எல்லோருடனும் பழகுவார், அவரும்  சமையல் கட்டில் அப்பப்போ வந்து ஏதாவது  காரியம் செய்வார். 1949ல் அழகம்மாள்  தேஹ வியோகம் அடைந்து  அவள் சமாதி ஒரு  கோவிலாக, மாத்ரு பூதேஸ்வரர் சந்நிதியாக  உருவாகிவிட்டது. அந்த கோவில் கும்பாபிஷேகம் ஏற்பாடுகளை ஆசிரமத்து பக்தர்களே ஏற்பாடு  பண்ணிக்கொண்டிருந்த சமயம்.   கோவிலை ஒட்டி  ஒரு விஸ்தாரமான மண்டபமும்  உருவானது. பகவானை தரிசிக்க வரும் பக்தர்களை சந்திக்க  ஆசி பெற  அந்த  மண்டபம் தேவைப்பட்டது.

வழவழவென  கருங்கல்லில்   ஒரு  சாய்வு மேடை. அதில் மெத்து மெத்தென்று பட்டு மெத்தை தலையணைகள் போட்டு மஹரிஷி  அமர்வதற்கு  வசதி பண்ணி இருந்தார்கள்.  அவர் வலது  கை ரணமாக இருந்தது. அதை வைத்துக் கொள்ள  ஒரு தலையணை. முதுகு சாய்ந்துக்கொள்ள,  காலுக்கு கீழே எங்கேயும் மெத்தைகள்.

அந்த  மண்டபத்தில் ஒரு நாள்  சூரி நாகம்மா நுழையும்போது மஹரிஷி யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.

''இதோ பார்  எத்தனை மெத்தை தலைகாணிகள்,  ஒண்ணு  ஒண்ணும்  சரிந்து சாய்ந்து விழுகிறது. ரொம்ப  விலையுயர்ந்த மெத்தைகள் தலைகாணிகள் இருந்தால் தான்  மஹரிஷிக்கு  சௌகர்யம் என்று எல்லோரும் நினைத்துக் கொள்ளவா  இந்த ஏற்பாடுகள்? இதில் உண்மையில் என்னால் சௌகர்யமாக உட்காரவே முடியாது.  முன்பு நான் உட்கார்ந்திருந்த கல் மேடையே சுகமானது.  அதுவே  போதுமே. எதற்கு இதெல்லாம்? ஒரு ரிஷி  இப்படித்தான் அவஸ்தைப்பட்டார். ''

''பகவான்  அந்த  ரிஷி கதை சொல்லவேணும்''  என்று  பக்தர்கள்  கேட்டார்கள்.  மஹரிஷி  சிரித்துக் கொண்டே  தலையாட்டினார்
'' சொல்கிறேன் கேளுங்கள்''
எல்லோரும் மதித்த  ஒரு  முனிவர் காட்டில் ஒரு மரத்தடியில்  வாழ்ந்து வந்தார்.   அவரிடம்  மூன்று  பாறைக்  கல்கள்  இருந்தன.  அது தான் படுக்கை சோபா எல்லாமே அவருக்கு.  படுக்கும்போது   ஒரு கல் தலைக்கு தலைகாணி மாதிரி.  இடுப்புக்கு கீழே முதுகுக்கு  ஒன்று. சாய்ந்து கொள்ள.  மூன்றாவது கல்  கால்களுக்கு கீழே  தலைகாணிமாதிரி..

எனக்கும்  அவரைப் போலவே  மூன்று கற்பாறை துண்டுகள் கிடைத்தால்  விருபாக்ஷ குகைக்கு எடுத்துச் சென்று சௌகர்யமாக நானும் அந்த ரிஷி போல அமர்வேன்,  படுப்பேன்.

அந்த  துறவி மரத்தடியில் இந்த கல்கள் மேல் படுப்பார், மேல் வஸ்த்ரத்தால் உடம்பை மூடிக்கொள்வார். அது தான் போர்வை. மழை பெய்தால் அவர்மேல் ஜலம் பட்டு   கீழே வழிந்து இந்த மூன்று கற்கள் இடைவெளியில்   ஓடும். அவர் உடம்பு தான் அந்த மூன்று கற்கள் மேல்  இருக்குமே .அதனால் கொட்டும் மழையிலும் அவர் தூக்கம் கலையாது.  தரையில் உட்காரும்போது அந்த மூன்று கற்கள்  மேல்  ஒரு ஸ்டூல் மேல் உட்கார்வது போல் அமர்வதால்  கீழே பாம்பு தேள்  போன்ற ஜந்துக்கள் கவலையில்லாமல் தரையில் நடமாடும். 

 யாராவது உணவு கொண்டு வந்து கொடுத்தால் தான் அவருக்கு  சாப்பாடு. இல்லையேல் வெறும் நீர் தான் ஆகாரம்.

ஒருநாள் அந்த காட்டில் வேட்டையாடவந்த ராஜா  இந்த  ரிஷியைப் பார்த்து ரொம்ப வருத்தமடைந்தான். ''பாவம் இப்படி கல்லின் மேல் அமர்ந்து படுத்து கஷ்டப்படுகிறாரே  என்று  மந்திரி பிரதானிகளை அனுப்பி ரிஷியை  எப்படியாவது அரணமனைக்கு  அழைத்து வரும்படி அனுப்பினான்.  நீங்கள் அவரை  அழைத்து வராவிட்டால்  தக்க தண்டனை கிடைக்கும்''
என்று வேறு கட்டளையிட்டதால்  அவர்கள் எப்படி யோ வற்புறுத்தி, அந்த ரிஷியை  அரண்மனைக்கு கொண்டு வந்தார்கள்.
அந்த  ஆட்கள் மேல் பரிதாபத்தால்  அவர்கள் தன்னால் வீணாக தண்டனை பெறவேண்டாமே என்ற தாராளா இறக்க மனசோடு தான்  ரிஷி அவர்களோடு அரண்மனைக்கு வந்தார்.  அவர் தன்னுடன்  கொண்டு சென்றது  ஒரு கோவணம், போர்வை, மூன்று கற்கள்.

எல்லோரும்  ''இது ஒரு பைத்தியம், ராஜா அரண்மனைக்கு  போகும்போது கூட  எதற்கு  கிழிசல் துணி,  கற்கள் ?  என்று சிரித்தனர்.
துறவியோ  இந்த சாமான்களோடு பல்லக்கில் வந்து இறங்கினார்.

ராஜா  ரிஷிக்கு ஒரு தனி அறை , சப்ர மஞ்ச கட்டில் , மெத்து மெத்து  பட்டு மெத்தைகள் தலைகாணிகள்  போட்டு  தயாராக வைத்தருந்தான்.   அன்று இரவு  ரிஷி அந்த கட்டில்  மெத்தைமேல்  தனது மூன்று கற்களையும் வைத்து படுத்துக்கொண்டு  அந்த கிழிசல் துணியை போர்த்திக்கொண்டு தூங்கினார்.

மறுநாள் காலை ராஜா  ரிஷியைப்  பார்த்து வணங்கி கேட்டான்; 
'சுவாமி நேற்று இரவு உங்களுக்கு  இங்கே வசதியாக இருந்ததா?”
''ராஜா, எனக்கு ஒரு குறையும் இல்லை, எப்போதும் சந்தோஷம் தான்''
''இல்லை  சுவாமி, தாங்கள் காட்டில் மழையிலும் வெயிலிலும் மரத்தடியில்  வசதியில்லாமல் கல்லின் மேல் படுத்துக் கொண்டு இருப்பீர்களே, இங்கே  கஷ்டப்படாமல்  படுக்க சௌகர்யமாக  இருந்ததா என்று கேட்டேன்''
''ராஜா, என் படுக்கையிலே எந்த வித்தியாசமும் இல்லையே அப்பா. எனக்கு எப்போதும் சந்தோஷம் தானே''

ராஜா  ஆச்சர்யப்பட்டு ரிஷியின் அறைக்குள் சென்று பார்த்தான்.
சப்ரமஞ்ச கட்டிலாக இருந்தும் பட்டு மெத்தைகள் அதன் மேல் இருந்தும், அவற்றுக்கு மேலே மூன்று கற்கள், ஒரு கிழிசல் துணி இருந்ததை பார்த்தான்.

''அடாடா, எவ்வளவு பெரிய  மஹான் இவர்.  இவருடைய  அருமை பெருமை தெரியாமல் நான் முட்டாள் தனமாக நடந்து கொண்டேனே என்று வருந்தினான்.

 ''சுவாமி  என்னை மன்னித்து விடுங்கள்'' என்று விழுந்து வணங்கினான்.  ரிஷி அவனை ஆசிர்வதித்து விட்டு தன்னுடைய   கற்களோடு காட்டுக்கு புறப்பட்டார்.

இந்த கதையை சொல்லி விட்டு மகரிஷி ரமணர்  ''பெரிய மாட மாளிகையில் இருந்தாலும் அது சிறை தான். அமைதியும் சந்தோஷமும் மனதில் தானே இருக்கிறது. உடம்பில் ஏது?''  என்றார்.

அடுத்த  நிமிஷமே ரமணாஸ்ரமத்தில்  கல் சோபாவில் இருந்த  பட்டு மெத்தைகள் தலையணைகள் எல்லாம்  அப்புறப்படுத்தப்பட்டன .

sivan jaykay

unread,
Aug 5, 2025, 7:54:26 PMAug 5
to amrith...@googlegroups.com

அதிவீர ராம பாண்டியன்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

வெற்றிவேற்கை (நறுந்தொகை )

தமிழர்களுக்கு  தமிழ் தெரியாத  நிலையை உண்டாக்கியது நமது கல்வி திட்டம் அல்ல. நமது பண மோகம். ஆங்கிலத்தில் தான் கல்வி, ஆங்கிலம் தான் படிக்கவேண்டும், பேசவேண்டும், எழுதவேண்டும் என்று குழந்திகளை தமிழ் தெரியாமல் வளர்த்து ஆளாக்கி, அமெரிக்க அனுப்பி, அவர்களை முற்றிலும் இழக்கும் சமுதாயம் தனிமையில் வயதான காலத்தில் ஏங்கி என்ன லாபம்?  நாங்கள் படித்த காலத்தில் பள்ளியில் முதலில் கற்றது ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை ஆகியவை. இன்னும் மறக்கவில்லை.  வெற்றி வேற்கை என்கிற பெயர் ஞாபகம் இருக்கிறதா?

 ஆயிரமாயிரம் வருஷங்களாக   தஞ்சாவூர் ஜில்லா  எல்லையில்  கடலோ ரத்தில் இப்போது இருக்கும் ஒரு ஊர் பெயர்   அதிராம்பட்டினம்.  அதன் உண்மை பெயர் அதை ஆண்ட  ஒரு ராஜா தான்  அதிவீர ராம பாண்டியன் பெயர் கொண்ட  அதிவீரராம பட்டினம். ராஜா  சிறந்த கல்விமான். பிரபலமான எழுத்தாளனாக  இருக்கிறான்.  கொஞ்சம் பலான  விஷயங்கள்  பற்றியும் ஆராய்ந்து புத்தகம்  எழுதி இருக்கிறான். நாம் அதைத் தொடப் போவதில்லை.இவன் பெயரில் ரெண்டு மூன்று பேர் இருக்கிறார்கள்.  ஆகவே கெட்ட சமாசாரம்  வேறே இன்னொரு அ .வீ.ரா. பாண்டிய னுடையதாக போகட்டுமே.  
நான் சொல்கிற  ராஜா முதலாம் அதிவீர ராமன் எனும்  பிற்கால பாண்டிய மன்னன்.  (1564-1606) என செப்பேடுகள் நிறைய சொல்கிறது.  இலக்கியப்  பணியோடு  கோவில் திருப்பணிகளும்  செய்தவன். 
  தென்காசியில்  உள்ள அருமையான சிவன் கோவில் இவன் கட்டியது  அழகான  கோவில் சென்று  பார்த்தேன்.  ஏதோ  ஒரு பாக்கியம்பாடல் :   ஸமஸ்க்ரிதம்  அறிந்தவன்.  ஹர்ஷன் எழுதிய  நைஷதம்  தமிழில் இந்த ராஜா இயற்றிய  நைடதம்  ஆகும். 

பாண்டியனின் வெற்றி வேற்கை எனும்  நறுந்தொகையில்  சில  அளிக்கிறேன்; 
1. ''எழுத்தறி வித்தவன் இறைவ னாகும். ''நமக்கு  கல்வி கற்பிக்கும் வாத்யார், கையைப் பிடித்து முதன் முதலில் ''அ, ஆ'' எழுத சொல்லிக்கொடுத்த  டீச்சர் தான் முதல் தெய்வம் ''
2. ''கல்விக் கழகு கசடற மொழிதல்'' -   ஏதோ கற்றுக்கொண்டோம் என்று தப்பும் தவறுமாக எல்லாம் தெரிந்தமாதிரி பேசுவது கல்விக்கு  நாம் கொடுக்கும்  அவமரியாதை. 
3. ''செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்''--  ஒரு தனவான், பணக்காரன், பிரபு, தான் மட்டும் தனது மனைவி மக்களோடு சுகமாக வாழ்வதைத் தவிர்த்து  தனது சுற்றத்தார் அனைவருக்கும்  உதவுவதே அவனுக்கு  அழகு, பெருமை .
4. ''வேதியர்க் கழகு வேதமும் ஒழுக்கமும்'' -   வேதத்தைக்  கற்பிப்பதை  தொழிலாக கொண்டு வாழும் வேதியர்கள் தாங்கள் முதலில் வேதம் சொல்வதை  பின்பற்றி, அது சொல்வதை கடைப்பிடித்து  உதாரணர்களாக வாழ வேண்டும்''
5. ''மன்னவர்க் கழகு செங்கோல் முறைமை''    ராஜாவாக இருப்பவன்  நீதி நெறி தர்மம் நியாயம்  தவறாது முறையோடு ஆட்சி அரசு செய்வதே அரசர்க்கு அழகு.
6. ''வணிகர்க் கழகு வளர்பொரு ளீட்டல்''    தொட்டதெல்லாம் பொன்  என்ற பெயர் எடுக்கும்படி  தேர்ந்தெடுத்து பொருள்களில் வியாபாரம் செய்து குன்றாத குறையாத  செல்வத்தை மேலும் பெருகவைக்கும் நேர்மை, நியாய  திறன் கொண்டவர்களாக வணிகர்கள் இருக்க வேண்டும்''
7. ''உழவர்க் கழகு ஏர் உழுதூண் விரும்பல்''  தக்க காலத்தை அனுசரித்து, வானிலை அறிந்து, மண்ணை திருத்தி  நன்றாக பயிர் விளைந்து  பல  போகங்கள் சாகுபடி செய்யும்படி விவசாயம் செய்து  உண்பதே உழவர்கள்  விவசாயிகளுக்கு  அழகு, பெருமை.
8  ''மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல்''  ஒரு  ராஜாவுக்கு மந்திரியாக இருப்பவன்  நன்றாக ஆலோசித்து, கவனமாக  கணித்து, வரப்போவதனைத்தையும்  முன்கூட்டியே ஆராய்ந்து  தக்க நேரத்தில் ராஜாவுக்கு எடுத்துரைப்பவன் தான் சித்தாந்த மந்திரி. அது தான் அவனுக்கு பெருமை''
9. ''தந்திரிக் கழகு தறுகண் ஆண்மை''   அதே போல  ஒரு சேனைத் தளபதியானவன் நெஞ்சிலே துளியும் பயம் இல்லாத,  தைர்யவானாக, வீரனாக தன்னுடைய வீரர்களை அதேபோல்  பழக்கி  சேனையைப் பலப்படுத்துவது தான் அவனுக்கு பெருமை, அழகு. 
10. ''உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்''.   மற்றவர்களுக்கு விருந்தளிப்பவர்கள்  தமது விருந்தினரோடு, மகிழ்ந்து சரி சமமாக, சம பந்தியில் உண்பது தான் அவர்களுக்கு அழகு. பெருமை. 

இது ஒரு சாம்பிள். இன்னும் நிறைய இருக்கிறது. அப்பப்போ சொல்கிறேன். 

sivan jaykay

unread,
Aug 9, 2025, 8:47:03 PMAug 9
to amrith...@googlegroups.com
யஜுர் உபாகர்மா — நங்கநல்லூர் J K SIVAN
ஆவணி அவிட்டம்.
விடிந்தால் பூணல் போட்டுக்கொள்ளும் நாள் என்ற அளவுக்கு தான் ஆவணி அவிட்டம் பற்றியும் யஜுர் உபாகர்மா பற்றியும் என்னையும் சேர்த்து எல்லோருக்கும் தெரியும். ஒரு பழைய ஞாபகம் நினைவுக்கு வருகிறது.
ஆவணி அவிட்டம் என்று சொல் தமிழ் மாதத்தை குறிக்கிறது மற்றும் அவிட்டம் 27 நட்சத்திரங்களில் ஒன்றாகும். மேலும் எல்லா பிராமண சமூகங்கள் ஆவணி அவிட்டம் சடங்கிய முழு அர்ப்பணிப்புடனும் பக்தியுடனும் கடைபிடிக்கின்றன. குறிப்பாக எஜுர் வேத பிராமணர்களுக்கு இந்த நாள் மிகவும் முக்கியம் வாய்ந்தது. ஆவணி அவிட்டத்தில் பிராமணர்களுக்கு ஒரு புனித பூ நூல் வழங்கப்படுகிறது மற்றும் மூன்றாவது கண், அதாவது ஞானத்தின் கண் திறக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆவணி அவிட்டம் நாளில் போன வருஷத்தில் நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு புனித சபதம் எடுக்கப் படுகிறது. இந்த நேரத்தில் புனித மந்திரங்கள் உச்சரிப்பார்கள். பிராமணர்கள் சூரிய உதயத்தில் புனித நீராடுவார்கள். ஆவணி அவிட்டம் அன்று பிராமணர்கள் ஜனேயு அல்லது ய்ஜ்பவித் எனப்படும் புதிய புனித நூலை அணிவார்கள் . இது ஆவணி அவிட்டத்தின் மிக முக்கியமான சடங்கு மற்றும் இந்த நேரத்தில் வேத மந்திரங்கள் உச்சரிக்கப்படும் இது பொதுவாக ஒரு நதி அல்லது குளத்தின் கரையில் நடத்தப்படும். எங்கள் நங்கநல்லூரில் குளம் ஆறு நதி எதுவும் கிடையாது. குளம் சிவன் கோவில் அருகே இருந்தது. அதன் கரையில் தான் மரத்தடியில் வாத்யார் எல்லோருக்கும் பூணல் போட்டு வைப்பார். புதிய நூல் அணிந்த பிறகு பழையது ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கும் வகையில் நிராகரிக்கப்படுகிறது.
தெய்வங்களுக்கு எல்லாம் ஒவ்வொரு பண்டிகை ஒவ்வொரு மாதமும் வருகிறது என்றால், வேதத்துக்கு உண்டான பண்டிகை என்றால் அது ஆவணி அவிட்டமே. ஆவணி அவிட்டம் என்றால் அந்தணர்கள் புதிய பூணூலை மாற்றிக் கொள்ளும் ஒரு சடங்குத் திருவிழா என்று மட்டும் இல்லை. இது வேத பாடங்களைக் கற்றுக் கொள்ள தொடங்கும் ஒரு திருநாளாகவே ஆரம்பத்தில் இருந்து வந்துள்ளது. ஆவணி அவிட்டத்தை ‘உபாகர்மா’ என அழைக்க காரணம் உபாகர்மா என்றால் ஆரம்பம், வேதாரம்பம் என்று அர்த்தம். ஆடி அமாவாசைக்குப் பிறகு வரும் பௌர்ணமியே ஆவணி அவிட்ட நாள்.
வேதங்கள் பரப்பிரம்மமான கடவுளிடம் இருந்து ரிஷிகளுக்கு ஓதப்பட்டு அவை மண்ணுலகில் சகல ஜீவன்களின் நன்மைக்காக பயன்படுகின்றன. அன்றாடம் பூஜைகள், ஹோமங்கள் என பல்வேறு சடங்குகளில் ஓதப்படும் இந்த வேதங்களுக்கும் தோஷங்கள் உண்டாகின்றன என்று ஆன்றோர்கள் கூறுவர். குறிப்பிட்ட கால இடைவெளி இன்றி வேகமாகச் சொல்லுதல், புரியாமல் அரைகுறையாகச் சொல்லுதல், சுருக்கமாக முடித்துக் கொள்ள பாதி மந்திரத்தை விழுங்கி விடுவது மந்திரங்களை அர்த்தம் புரியாமல் சொல்லுதல் எனப் பல தவறுகள் வேத பாராயணத்தின் போது நடந்து விடலாம். இப்படி தப்பாக, குறைபாடுடன் வேத பாராயணம் செய்வதால் இந்த பூமிக்கும் ஜீவராசிகளுக்கும் எதிர்மறையான விளைவுகள் உண்டாகி விடலாம். அதனால் தெரிந்தோ தெரியா மலோ வேத பாராயணத்தின்போது உண்டாகும் தோஷங்களை இந்த ஆவணி அவிட்ட நாளில் தேவர்களை அழைத்து தோஷ நிவர்த்தியாக வேத விற்பன்னர்கள் சில சாந்தி மந்திரங்களையும் வழிபாட்டையும் மேற்கொள்வர். இதனால் சகலருக்கும் நன்மையும் சந்தோஷமும் உண்டாகும் என்பது ஐதிகம்.
அதுமட்டுமின்றி இந்த ஆவணி அவிட்ட நாளில் எல்லா தேவதைகளையும் மானசீகமாக வணங்கி தாங்கள் உச்சரிக்கும் வேத மந்திரங்கள் எல்லோருக்கும் நன்மைகளை உண்டாக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்வார்கள். லோக க்ஷேமார்த்தம் என்பது இது தான்.
இந்த நாளில் புதிதாகக் குழந்தைகளுக்கு உபநயனம் செய்தும் வைப்பார்கள். ஒற்றைப்படை வயசில் 5,7,9 11ல் தான் முக்கால்வாசி உபநயனம் அப்போதெல்லாம் நடந்தது. இன்றும் சிலர் விடாமல் இதை கடைப்பிடிக் கிறார்கள்.
உபநயனம் என்றால் துணையான கண்கள் என்று பொருள். அதாவது ஏற்கெனவே இருக்கும் இரண்டு கண்கள் மட்டுமின்றி, வேதம்; ஒழுக்கம் எனும் இந்த உப கண்கள் ஞானத்தை அறிய உதவும் என்பது நம்பிக்கை. ‘நமக்குத் துணையாக வரும் இன்னுமொரு கண்’ என்று பொருள்படும் உபநயன தத்துவத்தை ஆத்மார்த்தமாக உணர்ந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதே முக்கியம்.
உபநயனம் எனும் பூணூல் மற்றும் மந்திர உபதேசங்கள் ஏற்றுக்கொண்ட பிள்ளைகள் அன்று முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் ஆகியவற்றை தங்கள் வாழ்க்கை நடை முறையாகக் கடைசி வரையில், கடைப்பிடிக்க வேண்டும் என்பது கட்டளை. உபநயனம் என்பது குருவின் துணையுடன் இறைவனுக்கு அருகில் அழைத்துச் செல்லும் ஓர் ஆன்மிக நோக்கம். பெரியோர், தகப்பனார், ஆச்சார்யன் ஆகியோர் வழியாகவே உபநயனம் செய்விக்கப்பட வேண்டும் என்பது விதி.
ஆவணி அவிட்ட நாளில் அதிகாலை நீராடி ஆண்ட வனைத் துதித்துப் புத்தாடைகள் உடுத்தி சந்தியா வந்தனம், பிராணயாமம் போன்ற ஜபதபங்கள் செய்ய வேண்டும். பிறகு , பாரத தேசத்தில் உறையும் தெய்வங்கள்,தேவியர்கள், நதிகளை அழைத்து மகா சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். இதில் லோக க்ஷேமமே முதல் காரணமாக இருக்க வேண்டும். காமோ கார்ஷீத் (ஆசை, கோபம் என்னை விட்டு விலக வேண்டும் ) என்ற ஜெபத்தை 108 முறையாவது சொல்லவேண்டும். பிறகு மீண்டும் அவரவர் வசதிக் கேற்ப நீர் நிலைகளிலோ, வீட்டிலோ நீராடி புது ஆடைகள் அணியவேண்டும். ஆவணி அவிட்ட நாளில் இரு முறை நீராட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். முறையான பூஜைகளும் ஆசார்யர்களுக்கான தானங்களும் ஆதரவற்றோருக்குச் செய்யும் தருமங் களும் நிச்சயம் இந்த பூமியைக் காக்கும் என்பதே இந்த நாளின் தாத்பர்யம். ஆவணி அவிட்ட மறுநாள் காயத்ரி ஜெபத்துக்கு என பிரத்யே கமானது.
இதுவரை ஓதிய வேத மந்திரங்களில் ஏதேனும் குறையி ருப்பின் அதை நிவர்த்தி செய்யவும், இனி கற்க இருக்கும் வேத மந்திரங்களை முழுமையான பலத்துடன் கற்கவும் இந்நாளில் காயத்ரீ ஜபம் செய்ய வேண்டும் என ஆன்மிக கூறுகின்றன. இந்தப் பிரபஞ்சமும் அதில் வாழும் சகல ஜீவராசிகளும் சிறப்புற்று வாழ வேண்டும். இந்தப் பிரபஞ்சத்தைப் பரிபாலிக்கும் சகல தேவதைகளும் திருப்தியோடு செயல் புரியவும் இந்த நாளில் சங்கல்பம் ஏற்க வேண்டும். பூமியில் குற்றங்கள் குறைந்து அன்பும் ஒழுக்கமும் பெருகி எல்லோரும் இன்புற்று வாழவேண் டும் என்று பிரார்த்திப்பதே ஆவணி அவிட்டத்தின் நோக்கம் என்பர் பெரியோர்.
‘மூலத்தில் பிடித்ததை அவிட்டதில் விடு” என்பார்கள் பெரியோர்கள். அதாவது தேவதைகள் திருப்தி பெற, சகல உயிர்களும் இன்புற்று வாழ தினமும் காயத்ரீ மந்திரங்களைச் சொல்ல வேண்டும் என்பது விதி. ஒருவேளை தினமும் சொல்ல முடியாதவர்கள் மாதத்தில் மூல நட்சத்திர நாளில் தொடங்கி அவிட்டம் வரையா வது, ஐந்து நாள்களிலாவது காயத்ரீ மந்திரத்தை விடாமல் ஜபிக்க வேண்டும் என்பார்கள். அவிட்ட நாளில் ஓதப்படும் வேத மந்திரங்கள் வலுவானவை என்பதும் ஆன்றோர் வாக்கு. ஆவணி அவிட்ட நாளில் பூணூலை மாற்றிக் கொண்ட பிறகு கொஞ்ச நேரமாவது வேதாரம் பத்தை செய்து கொள்ள வேண்டும் என்பது காஞ்சி மகா முனிவரின் விருப்பம்.
பூணூல் போடுபவர்களுக்கு மட்டுமான பண்டிகை மட்டு மல்ல இது. மற்றவர்கள் சூரியனை நமஸ்கரிக்கவும், ஆலய வழிபாடுகள் செய்யவும், புதிய கல்வி, கலைகளைக் கற்றுக்கொள்ளவும் ஏற்ற நாள் இது.

sivan jaykay

unread,
Aug 9, 2025, 8:47:03 PMAug 9
to amrith...@googlegroups.com
ரமணானந்தம் -   நங்கநல்லூர்  J K  SIVAN 

ரமணரைச்சுற்றி மனிதர்கள் மட்டுமல்ல  அநேக  விலங்குகளும் பக்ஷிகளும்  கூட  கொஞ்சமும் பயமின்றி சந்தோஷமாக இருப்பதை  பக்தர்கள் பார்த்திருக்கிறார்கள். உலகத்தையும் அதன் ஈர்ப்புகளையும் முற்றிலும் வெறுத்து விட்ட ஆத்மஞானிக்கு இத்தனை உறவுகளா  என்று ஆச்சர்யமாக இருக்கும். 

பல பக்தர்கள் தங்கள் குறையைச் சொல்லி ஆறுதல் கேட்க  வருவார்கள். யாரையும் விரட்ட மாட்டார். அவரவருக்கு தகுந்த உபதேசங்களை அருள்வார்.  

ஒருநாள் ஒரு பக்தர்  அழுத முகத்தோடு மகரிஷியை பார்க்க காத்திருந்தார். சந்தர்ப்பம் கிட்டியபோது  மகரிஷி அருகே உட்கார்ந்து குமுறி குமுறி அழுதார்.  பொறுமையாக அவர் அழுது முடிக்க காத்திருந்து மகரிஷி '' என்னை எதற்குபார்க்க வந்தாய்/'' என்று கேட்டார். 
''என் ஒரே மகன் இறந்து விட்டான் சுவாமி.எனக்கு உங்களிடம் சொல்லி ஆறுதல் கிடைக்கும் என்று தான் வந்தேன்''
பகவான் அந்த பக்தர் சொல்லி முடிக்கும் வரை காத்திருந்தார். 
''சரி எனக்கு துக்கம், அழுகிறேன் என்கிறாயே, யார் நீ, யாருக்கு அந்த துக்கம் சம்பவித்தது என்று யோசித்தாயா?''
அந்த பக்தருக்கு புரியவில்லை. அவர் சோகமும் குறையவில்லை என்பதால் மகரிஷி 
''நான் உனக்கு  ஒரு சம்பவம் சொல்கிறேன் கேட்கிறாயா?'' என்கிறார் 
பக்தர் கண்ணைத்துடைத்துக்கொண்டு கைகட்டி தலையாட்டினார். 
''இது விசார சாகரம் என்கிற நூலில் இருந்து சொல்கிற சம்பவம்.  ரெண்டு பிரம்மச்சாரிகள்,  நண்பர்கள்.  ராமன், கிருஷ்ணன் என்ற பேர் கொண்டவர்கள்  ஒரே ஊரிலிருந்து  வடதேசம் போகிறார்கள். தங்களுடைய  அப்பா அம்மாவுடைய ஆசிகளோடு அந்த ரெண்டு பெரும் வடக்கே போய்   சரியான குருவிடம் கல்வி கற்று உத்யோகம் செய்து சம்பாதிக்க செல்கிறார்கள். சில காலம் ஓடியது.  ரெண்டு பேரில் ஒருவன் இறந்து விட்டான். மற்றவன் கல்வி கற்று உத்யோகத்தில் பொருள் ஈட்டி சௌகர்யமாக வாழ்ந்திருந்தான்.  அவன் ஒரு நாள் யாரோ ஒரு வியாபாரி தனது சொந்த ஊருக்கு வியாபார விஷயமாக செல்வதை அறிந்து அவனிடம் தனது பெற்றோர்களையும், இறந்து போனவன் பெற்றோர்களையும்  சந்தித்து தான் சந்தோஷமாக இருப்பதையும்  மற்றவன் இறந்து விட்டதையும் தெரிவிக்க கேட்டுக்கொண்டான்.

அந்த வியாபாரி தவறுதலாக  இறந்து போனவன் பெற்றோரிடம் அவர்கள் பையன் நன்றாக சம்பாதித்து சௌக்யமாக
 இருப்பதாகவும், உயிரோடு இருப்பவன் பெற்றோரிடம் அவர்கள் மகன் இறந்து விட்டததாகவும் சொல்லி விடுகிறான். இதனால் என்ன ஆச்சு என்றால், இறந்து போனவன் பெற்றோர்கள் தங்கள் மகன் வசதியோடு வாழ்கிறான், என்றாவது ஒருநாள் சீக்கிரமே திரும்பி வருவான் என்றும் மகிழ்ந்தார்கள். அதே சமயம், சொல்லி அனுப்பிய  உயிரோடு இருக்கும் ப்ரம்மச்சாரியின் அப்பா அம்மா தங்கள் மகன் இறந்துவிட்ட சேத்தி கேட்டு சோகத்தில் ஆழ்ந்தனர். 
 
ரெண்டு பெற்றோர்களும் உண்மையில் தங்கள் பிள்ளைகளை நேரில் பார்க்கவில்லை, யாரோ சொன்ன ஒரு செயதி மட்டுமே அவர்களை மகிழ்வித்தும், துக்கத்தில் ஆழ்த்தியும் ஆட்டி படைத்தது. 

நாமும் அப்படித்தான் அப்பா. எதையும் நம்பிவிடுகிறோம், மனதில் உணர்ச்சிகளை ஏற்றுக்கொள்கிறோம். அதன் ஆக்கிரமிப்பில் மகிழ்கிறோம், அல்லது வருந்துகிறோம். இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாததாகவும் நினைக்கிறோம்.  மனதை மதிக்காமல் அதன் தாக்கத்தை தவிர்த்து, ஹ்ருதயத்தில் அந்த பிள்ளை இருப்பதை உணர்ந்தோமானால் சதா  ஆனந்தம் தான்.  வெளியே  அந்த  பிள்ளையை பார்க்க வேண்டியதேயில்லை.''

ரமணர் சொன்ன இந்த கதையை உன்னிப்பாக  கேட்டு மனதில் வாங்கிக்கொண்ட அந்த பக்தர் தனது மகன் இறக்காமல் தன்னுள்ளே இருப்பதை அனுபவிக்க தொடங்கினார். மகரிஷியை வணங்கிவிட்டு  ஊருக்கு நடந்தார். 

sivan jaykay

unread,
Aug 9, 2025, 8:47:05 PMAug 9
to amrith...@googlegroups.com
ஸூர்தாஸ்  - நங்கநல்லூர்   J K  SIVAN

''இணையற்ற  ஒரு கிருஷ்ண பக்தர்

எனக்கு  86.வயது.  75 வயதுக்கு முன்  எழுதியதில்லை.  வேலை  வேலை என்று  கப்பல் வேலையிலேயே  இரவும் பகலும் எப்போதும் ஒரு டென்ஷனோடு  மூழ்கி இருந்தாலும், எப்போதும் என் மனதில் கிருஸ்ணன்  உண்டு. அவனை வெளிக்கொணர நேரமோ வாய்ப்போ அவன் அருளோ அப்போதெல்லாம் இல்லை.  75க்கு பிறகு நான் தனிக்காட்டு ராஜா. நிறைய நேரம் கிடைத்தது. ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் நிறுவனம் துவங்கி  எழுத முயன்றேன்.  நிறைய  நிகழ்ச்சிகள்  நடத்தினேன்.  அதன் மூலம் எண்ணற்ற நண்பர்கள்  ஆன்மீக பக்தர்கள் அறிமுகமானார்கள்.  அவர்களில் ஒருதம்பதி  ஸ்ரீமதி பார்வதி  &  ஸ்ரீ முத்துஸ்வாமி மோகன்  குடும்பம் எனக்கு பரிச்சயமாநார்கள்.  அவர்கள் குடும்பமே திருவண்ணாமலை ப்ரம்ம ஞானி ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் பக்தர்கள். அவர்களால் தான் ''ஒரு அற்புத ஞானி'' என்று அந்த   மஹானின்  சரித்திரத்தை புத்தமாக்கினேன்.   அந்த புத்தகம் வெளியிடும் விழாவில்  அவர்கள் நெருங்கிய  உறவினரான ஸ்ரீ ''கிருஷ்ண குமார்'  என்ற  அன்பர் ஒரு அன்புக்கட்டளை எனக்கு இட்டார்.
கிருஷ்ணார்ப்பணம் என்று  கிருஷ்ணன் பற்றி நிறைய  நேரம் செலவழிக்கிறீர்களே, நீங்கள் பக்த சூர் தாஸ் பற்றி எழுத  வேண்டும். அவரைப் போன்ற  சிறந்த கிருஷ்ண பக்தரை எவரும் காணமுடியாதே .  அவரைப் பற்றி புத்தகமாக்க என்ன செலவானாலும் நான் தருகிறேன். இதோ பிடியுங்கள் அட்வான்ஸ் ரூபாய் இருபதாயிரம்.....''

ரூபாயை  முதலில் வாங்கி வைத்துக்  கொண்டால் போதுமா? எழுதவேண்டாமா? அதற்கு நிறைய படிக்க வேண்டாமா? ''கன்னாபின்னா''   விஷயமா இது?   ''கண்ணா,  என் மன்னா''   உன் சமாச்சாரம் ஆச்சே ? எனக்கு  ஸூர்தாஸ் என்ற பெயரே புதுசாக  பாய்ந்தது. எப்படி அவரைப் பற்றி.???......அன்றிரவே கிருஷ்ணன்   கட்டளையாக  தலைமேற்கொண்டு  சிரத்தையாக ஸூர்தாஸை தேட தொடங்கினேன். மோகன் குடும்பத்தைத் தெரிந்த அளவு  ஸூரதாஸ்  எனக்கு பழக்கமில்லையே.  பேர் மட்டும் எங்கேயோ கேள்விப்பட்ட பெயராக தோன்றியது...  அவ்வளவு தான்.  அவரைத் தேடியபோது தான்  ஆஹா  எப்பேர்ப்பட்ட  கிருஷ்ண பக்தர் பிறவிக்குறடாக இருந்தும் கிருஷ்ணனை மனக்கண்டால் கண்டு துவாபர யுகத்தில்  அவனோடு வாழ்கின்றவர்  என்பது புரிந்தது.  அப்படி  நான் சேகரித்த  எண்ண  முத்துக்கள் இனி தொடராக வரும்.

அது இருக்கட்டும்.  முதலில் உங்களில் யாருக்காவது ஸூர் தாஸை தெரியாமல் இருந்தால் இதோ அறிமுகம் செய்விக்கிறேன். தெரிந்து கொள்ளுங்கள் அந்த அபூர்வரை .

16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு விழியற்ற கிருஷ்ண பக்தர்  ஸூர்தாஸ். இது அவர் பெயர் அல்ல. ''ஸூர் '' என்றால் அவர் பேசிய  பாஷையில் குருடன் என்று அர்த்தமாம்.  அவர் ஒரு பிறவிக்குருடர்.  யாரும் அவரை லக்ஷியம் பண்ணாமல்  அவரை வீட்டை விட்டு அனுப்பி விட்டார்கள்.   ஆறு வயதில் உலகில் தள்ளப்பட்ட  கண்ணற்ற  ஸூர் தாஸ் மெதுவாக நடந்து ப்ரஜ் என்கிற உ.பி. தேசத்தில் வாழ்ந்தார். கண்ணன் பிறந்த மதுரா அருகில் உள்ளது இந்த ப்ரஜ் கிராமம்.

ஹிந்தியில் கவிதைகளை ப்ரஜ் பாஷா எனும் அந்த ஊர் ஹிந்தி பாஷையில் தான் பாடினார். நம்மூரில் கொங்கு தமிழ், திருநெல்வேலி தமிழ், மெட்ராஸ் டமில் என்று இருப்பதை போல. ஸூர் தாஸ் கிருஷ்ணனை பற்றி ப்ரஜ் பாஷை ஹிந்தியில் தான்  பாடினார்.    'எழுதினார்' என்று  படிப்பில்லாதவர்,  பார்வை யற்றவரைப் பற்றி எப்படி சொல்ல முடியும்.

ஸூர் தாஸ் பாடிய கண்ணன் பாடல்களை ஸூர் சாகர் ( கிருஷ்ண சமுத்திரம்) என்று சொல்வார்கள். எல்லாமே குழந்தை கண்ணனை பற்றியே என்றால் எவ்வளவு சுகம்!

வழக்கம் போலவே ஸூர்தாஸ் எப்போது  பிறந்தார் என்பதில் ஏதாவது  தகராறு இருப்பின் அது நமக்கு தேவையற்ற சமாச்சாரம்.  வேண்டவே வேண்டாம்.  ஸூர் தாஸ் தான் எப்போதும்  இருக்கிறாரே  ''ஸூர் சாகரி'' ல், அவரது அற்புத  கவிதைகளில்.  அது போதும். சரித்திரம் நமக்கு வேண்டாம். அது தப்பைக்கூட நிஜமாக்கிவிடும்.

''ராதா--  கிருஷ்ணா''    என்று இரு பெயர்களை நினைத்தாலே   போதும்.  பக்தி கடல் போல பொங்கி  கற்பனை சம்பவங்கள்  வெள்ளமாக  கவிதையாக  ஓடிவரும்  ஸூர் தாஸ் என்ற பிறவிக் குருடருக்கு.     இதயம் நிரம்பிய  அந்த அமுத ப்ரவாஹத்தை  மனம்  அனுபவிக்கும் போது   புறத்தில் கண் விழி இருந்தென்ன,  இல்லாதென்ன.?  

ஒரு லக்ஷத்துக்கும் மேலே கண்ணன் பாட்டுகள்.... யாரையா அதையெல்லாம் பாதுகாத்து அச்சடித்து புத்தகமாக இலவசமாக செய்யமுடியும். ? கிருஷ்ணார்ப்பணம் சேவா ட்ரஸ்ட்டா  இருந்தது அப்போது? எவ்வளவோ நமக்கு கிடைக்காமல் போய் விட்டதே!!! எவ்வளவு பெரிய துர்பாக்கியம். ஏதோ அவர் எழுதியதாக ஒரு 8000 பாடல்கள்   மிஞ்சி இருக்கிறது. தெற்கே தான் அபாக்யசாலிகள்  நிறைய  என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வடக்கேயுமா? நல்ல விஷயங் களை கோட்டை  விடுவதில் நாம்  மன்னர்கள்,  நாடெங்குமா?

ஸூர் தாஸ் வாழ்ந்த  காலத்தில்  நமது பாரதத்தை அப்போது முகலாய பேரரசன் அக்பர் ஆண்ட சமயம். அவன் ஸூர்  தாஸ் கவிதை ரசிகன்.

ஒருநாள்  காட்டு வழியாக கண்ணற்ற ஸூர் தாஸ் நடந்து செல்லும்போது  தரையோடு தரையாக இருந்த பெரிய கிணறு ஒன்றில் விழுந்து விட்டார். கண்ணன் காப்பாற்றினான்.   கிருஷ்ணனுக்கு தன்னைப் பாட  ஸூர்  தாஸ்  வேண்டாமா?    அதனால் அவர்  அவனுக்காகவும் நமக்காகவும் கிடைத்தார். இந்த கதை அப்புறம் சொல்கிறேன்.

வழக்கமாக  உட்கார்ந்து பாடும்  கிருஷ்ணன் கோவிலில் ஒருநாள்   ராதையின் கொலுசை பிடித்து இழுத்து வைத்துக்கொண்டு ''அவனை வரச்சொல்லு'' என்று சொல்லி அவள் கிருஷ்ணனை கூப்பிட்டுக்கொண்டு வர ....... இது ஒரு கதையும் இருக்கிறது சொல்கிறேன்.

சிறு வயதில் பெற்றோராலும் மற்றோராலும் புறக்கணிக்கப்பட்ட ஸூர் தாஸ் தனிமையில் தான் வளர்ந்தார். ஒரு நாள் அவர் உட்கார்ந்த திண்ணை அருகே தெருவில் சிலர் கிருஷ்ண பஜனை செய்து கொண்டு சென்றது காதில் விழுந்தது. '

 'ஆஹா எனக்கும் கிருஷ்ணன் மேல் பாட  வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?  ஏன் முடியாது? ஒருநாள் என்னையும்  கிருஷ்ணன் பாட வைப்பான்'' என்ற நம்பிக்கையோடு  மெதுவாக அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொண்டார்.
கூட்டத்தில் ஒருவன் ''டேய் ஏன் எங்களை தொடர்ந்து வருகிறாய்?" என்றான். 
'கிருஷ்ணன் பாட்டு நீங்கள் பாடுவது பிடிக்கிறது. எனக்கும் உங்களை மாதிரி பாட ஆசையா இருக்கு''
''சரி வா''
இரவு வந்தது. சாப்பிட ஆகாரம் கொடுத்தார்கள். எதற்கு இந்த குருட்டு பையனை அழைத்து போகவேண்டும். அவனால் உபத்திரவம் தானே வந்து சேரும்''
இந்த முடிவை  ஸூர் தாஸிடம் சொல்லாமலேயே அந்த பக்தர் கூட்டம் மறுநாள் காலை  ஸூர்தாஸை  அங்கேயே சத்திரத்தில்  விட்டு விட்டு  சென்றது.  பகவானே  நீயே  துணை  என்று  ஸூர்  தாஸ்  அவன் மேல் நம்பிக்கையோடு அங்கேயே இருந்து  கண்ணன்  அருளால் கிடைத்ததை  உண்டு  அவன் நினைவாகவே  வாழ்ந்தார்.  அப்புறம்???
தொடரும்..  (இப்படித்தான்  தமிழ் வாணன் நகத்தை கடிக்கவைத்து துப்பறியும் கதைகளை  நிறுத்துவார்....)

 

sivan jaykay

unread,
Aug 9, 2025, 8:47:06 PMAug 9
to amrith...@googlegroups.com
'லக்ஷ்மி வீட்டுக்குள்  வாம்மா, வரம் கொடும்மா  ''-    நங்கநல்லூர்_J_K_SIVAN

ஆடி  மாதம்   23தேதி ஆகிவிட்டதே.  ஆடியும்  மார்கழி போல் ஒரு சிறந்த தெய்வீக மாதமாக  முடியப்போகிறது.  இன்று ஆடி வெள்ளிக்கிழமை.  8ம் தேதி ஆகஸ்ட்  2025. வரலக்ஷ்மி விரதம் அநேக இல்லங்களில் கொண்டாடப்படுகிறது.

மஹா லக்ஷ்மியை நினைத்து வேண்டி  விரதம் இருந்து அவளிடமிருந்து வரம் பெறும்  பண்டிகை வரலக்ஷ்மி விரதம்.  செல்வம், வீரம், வெற்றி, குழந்தைப்பேறு, தானியங்கள், வேலைவாய்ப்பு, கல்வி, தைரியம் ஆகிய வரங்கள்  பெற  வேண்டும் வழிபாடு.  சுமங்கலிகள் குடும்ப நன்மை, குழந்தைகளின் நலம், ஆரோக்கியம், கல்வி, கணவரின் ஆயுள், தொழில் விருத்தி ஆகியவற்றிற்காகவும், கன்னிப்பெண்கள் நல்ல கணவன் மற்றும் வளமான குடும்ப வாழ்வு வேண்டியும் வரலக்ஷ்மியை  வேண்டுகிறார்கள்.

வரலக்ஷ்மி நோன்பு அனுஷ்டிக்கும் வீடுகளில் வர லக்ஷ்மி  விரத சொம்பு ஒரு கலசம் (சொம்பு ) உண்டு. வெள்ளி, தாமிர, பித்தளை என்று அவரவர் வசதிக்கேற்ப தனியாக வைத்திருப்பார்கள் அந்த சொம்பில்  வர லக்ஷ்மி முகம் ஒரு கொக்கியில் தொங்கவிட்டு, கலசத்தின் மேல் தேங்காய் வைத்து, அலங்கரித்து, கைகள் அணிவித்து  பார்ப்பதற்கு  ரொம்ப அழகாக  இருக்கும்.

ஆந்திரா , மகாராஷ்டிரா, குஜராத், ஒரிசா, தமிழ்நாடு என்று பல மாநிலங்களிலும்  வெளிநாடுகளில் உள்ள  ஹிந்துக்களும்   வருஷா வருஷம் கொண்டாடும் பண்டிகை.  மஞ்சள் சாமந்தி ப்பூ  ஒரு  முழம்  என்பது எழுபது ரூபாய் கூட  தாண்டி விடும் போல் இருக்கிறது.  வெற்றிலை தங்கம் விலைக்கு உயர்ந்து விடும். கண்ணுக்கு தெரியாத  மஞ்சள் வாழைப்பழம் ஒன்று பத்து ரூபாயைக் கூட தொடும் நாள் வெகு தூரத்தில் இல்லை..

காலை ராகு காலத்துக்கு முன்போ அல்லது அன்று மாலையோ, ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவே தனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலக்ஷ்மியை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பாடத்தெரிந்தால் பாடி, தெரியா விட்டால் , ''லக்ஷ்மி மா இண்டிகி ரா வம்மா '' என்ற ஒரு அடியை யாவது மனப்பூர்வமாக லக்ஷ்மி வாம்மா, என் வீட்டுக்குள் வா '' என்று பக்தியுடன் அழைக்கலாம். குரலைக் கேட்டு லக்ஷ்மி பயப்பட மாட்டாள். அவளுக்கு தெரியும். நிறைய வீடுகளில் கேட்டு அவளுக்கு பழக்கம். தாராளமாக காதைப் பொத்திக் கொண்டு உள்ளே வருவாள்.

 முதலில் பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும். அஷ்ட லக்ஷ்மிகளுக்கு பிடித்தமான அருகம் புல் பூஜை செய்யலாம். பிள்ளையார் பிடிக்க மஞ்சள் பொடி, நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தாம்பாளம் , பஞ்சபாத்திரம், உத்தரணி, கிண்ணம், கற்பூரத் தட்டு எல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

புதிய வஸ்திரம் சாற்றி, நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் முக பிம்பத்தை வைத்து, பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும். விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களை நீக்கும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்குகிறோம். 

அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலக்ஷ்மி பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலக்ஷ்மியை வேண்டிக் கொண்டு, ஆவாஹனம் செய்கிறோம்.  கலசத்தில் வரலக்ஷ்மி அம்மன் வந்து இருப்பதாக ஐதீகம் . மங்களகரமான ஸ்தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாடி தேவியை வழிபடுகிறோம்.  சிலர் அபிராமி அந்தாதி படிப்பார்கள், சிலர் மஹா லக்ஷ்மி ஸ்தோத்ரம், அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்ரம், கனக தாரா ஸ்தோத்ரம் கூட சொல்வார்கள். லலிதா சஹஸ்ரநாமம் கூட சொல்வதுண்டு. பூஜை அறையில், கிழக்கே, / தென் கிழக்கில் சந்தனத்தால் அம்மன் முகம் அமைக்க வேண்டும். சுவராக இருந்தால் குத்துவிளக்கு நடுவே மஹாலக்ஷ்மி முகம் வரைய வேண்டும். சில வீடுகளில் சுவற்றில் நான் பார்த்திருக்கிறேன்.
முன்பெல்லாம்  சுவற்றில் வரலக்ஷ்மி படம் வரைந்து பூஜை செய்வோம். நான் குடியிருந்த மைலாப்பூர்  திருவல்லிக்கேணி, அப்புறம் குடியேறிய  நங்கநல்லூர்  வீட்டு சுவர்களில் என் கை வண்ணத்தில் வரலக்ஷ்மி காணப்பட்டாள் ரொம்ப கஷ்டப்பட்டு  ஒரு வட்டம் வரைந்து அதில் நல்ல அழகிய முகமாக வரைய வேண்டும்
என்று ஒரு லக்ஸ் சோப்பு விளம்பர முகத்தை தேர்ந்தெடுத்து அதற்கு  புல்லாக்கு  காதுக்கு கம்மல், தொங்கட்டான் வரைந்து கடைசியில் கோரமான காளி உருவம் அமையும். சுவற்றில் எழுதியதை அழிக்கவும் வழியில்லாமல் நிறைய பச்சை சிகப்பு  மாலைகளாக வரைந்து  முகத்தை பாதிக்கு மேல்  மறைத்தாலும் கண்கள் கோபாக்னியோடு  என்னைச் சாடும். ஆண்கள் 
தன்னை இப்படி பழி  தீர்த்துக் கொள்வதால் அம்பாள் கோபப்படமாட்டாள். சிரித்துக்கொண்டே மன்னித்துவிடுவாள். தாயல்லவா. எல்லோரும் ரவி வர்மா இல்லையே!

என் இள வயதில் எங்கள் வாடகை வீட்டு சுவற்றில் லக்ஷ்மி உருவம் வரைந்து கொடுத்திருக்கிறேன். நிறைய பேர் அதைப் பார்த்து பயந்திருக் கிறார்கள். பூசணிக் காய் உடைக்க மஞ்சள் சிவப்பில் பெயிண்ட் அடித்து உருவம் இருக்குமே அதன் தத்ரூபம் என் கை வண்ண ஓவியம்.

வெள்ளி முகம் வைத்திருப்பவர்கள் வெள்ளி, தாமிர, பித்தளை சொம்பை சந்தன குங்குமம் இட்டு, புனித ஜலம் கொஞ்சம் நிரப்பி, மாவிலை, தேங்காய், முகம் செருகி, கோலம்போட்ட பலகை மேல் வைத்து, தாழம்பூ மற்றும் புஷ்பமாலைகளால் அலங்கரித்து பூஜை செய்வார்கள். பலகை இல்லாவிட்டால் வாழை இலை மேல் பச்சரிசி பரப்பி, மாவிலை, தேங்காய், எலுமிச்சை, பொன், பழங்களோடு வைப்பது வழக்கம். ஐந்து வகையான ஆரத்தி தட்டு வைத்து பூஜை செய்வார்கள். அரிசி பரப்பி மஹாலக்ஷ்மி கலசம் வைப்பது அன்ன பூரணியாக அவள் அருளை வேண்டுவதாகும்.

வீட்டிற்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம் கொடுப்பார்கள். நெய்வேத்தியமாக வெல்ல கொழுக் கட்டை பண்ணுவார்கள். பொங்கல், பாயசம், அப்பம், வடை, ல ட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

இப்படியெல்லாம் செய்ய முடியவில்லை என்றாலும் ஒரு தப்பும் இல்லை. மனதை நல்லெண்ணங்கள் மட்டும் நிறைந்ததாக வைத்துக்கொண்டால் போதும். உண்மையில் அது தான் இறைவன் அம்பாள், லக்ஷ்மி குடியிருக்கும் இடம். ஸ்ரீ நிவாஸம். இதய சுத்தியுடன் ஈடுபாட்டோடு, மகாலக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடைக் கையில் கட்டிக் கொள்ளலாம். வீட்டில் உள்ள வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி, நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, இந்த விரத பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

வரலக்ஷ்மி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சுமங்கலி பெண்கள் இந்த பூஜையின் போது மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும். வரலக்ஷ்மி விரதம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதற்காக  ரெண்டு கதை சொல்கிறேன்.

சௌராஷ்டிர தேசத்தில் பத்ரஸ்ரவா என்று ஒரு ராஜா. ரொம்ப நல்ல ராஜா. கசந்திரிகா அவன் மனைவி. அவனுக்கேற்ற நல்ல மனைவி. மிருதுவாக, நல்ல வார்த்தைகளையே பேசுபவள். அவர்களுக்கு ஒரு அழகிய பெண். சியாமா. கசந்திரிகா மஹாலக்ஷ்மி பக்தை. நாள் தவறாமல் லக்ஷ்மிக்கு பூஜை செய்யாமல் சாப்பிடமாட்டாள். கணவன், மாமனார், மாமியார் உறவினர் எல்லோரிடமும் அன்பு, மரியாதை ஜாஸ்தி. மஹா லக்ஷ்மிக்கு கசந்திரிகாவை பிடித்துவிட்டது.
ஒரு ஆடி வெள்ளிக்கிழமை வயதான சுமங்கலி ஒருத்தி அரண்மனைக்கு வந்தாள். ராஜா ராணி எல்லோரும் பூஜை முடித்து, சாப்பிட்டு தாம்பூலம் தரித்த சமயம்.

''வாங்கோம்மா '' என்று அந்த வயதான சுமங்கலியை கசந்திரிகா வரவேற்று உபசரித்தாள். வெற்றிலை, பாக்கு, குங்குமம், மஞ்சள் முதலிய மங்கலப் பொருட்களைக் கொடுத்தாள்.

“தாயே, நீங்க யார்? என்ன விஷயமாக வந்தீர்கள்?
“அதை அப்புறம் சொல்கிறேன். என் கேள்விக்கு நீ முதலில் பதில் சொல்லு ராணியம்மா. லக்ஷ்மி தேவி அவதார தினமாச்சே இன்று , யாராவது ஒரு அதிதி க்கு போஜனம் இல்லாமல் நீ இப்படி வயிறார சாப்பிட்டு தாம்பூலம் தரித்துக் கொண்டது நியாயமா?” என்றாள் முதியவள். கோபமே வராத கசந்திரிகாவுக்கு ஏனோ ஆத்திரம் வந்து விட்டது
“நீ யாரோ ஒரு பிச்சைக்காரக் கிழவி, எனக்கு புத்தி சொல்வதா?” என்று கேட்டு கிழவியை கன்னத்தில்  பளாரென்று  அறைந்தாள் . கிழவி கண்கள் அழுது சிவக்க வெளியேறும் போது இளவரசி சியாமா எதிரே வந்தாள் .
“யாரம்மா நீ ? ஏன் கண்கள் சிவந்திருக்கிறது . அழுகிறாய்? என்று கேட்டாள் .

“சியாமா, உன் அம்மாவுக்கு எப்படி லக்ஷ்மி பூஜை பண்ணனும்னு சொன்னேன். அடித்து அனுப்பினாள்''
” மன்னிக்கவேண்டும் எனக்கு அந்தப் பூஜை பண்ணும் முறை சொல்லி தாருங்கள்.முறைப்படி செய்கிறேன்” என்றது சியாமாவுக்கு முதியவள் பூஜை முறைகளை அருளிச் செய்தாள். வருஷா வருஷம் வரலக்ஷ்மி வ்ரதம் அனுஷ்டித்து பூஜை செய்தாள்.
முதியவளாக வந்த மகாலக்ஷ்மியை அடித்து விரட்டியதால் பத்ரஸ்ரவாவின் செல்வங்கள் வேகமாக குறைய ஆரம்பித்தன. பரம ஏழையாகு முன் மகள் ஸ்யாமாவுக்கு கல்யாணம் செய்துவைத்தான். சியாமா வருடந்தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்த பலனால் அவளை போற்றிப் பாதுகாக்கும் கணவனாக மாலா தரன் என்ற ராஜா வாய்த்தான். சியாமா கணவன் வீடு சென்றாள்.

பத்ரஸ்ரவாவின் எதிரிகள் அவனையும், அவனது மனைவியையும் நாட்டை விட்டுத் துரத்தி விட்டு சிம்மாசனத்தைப் பிடித்துக் கொண்டனர். ஒரு பிடி சோற்றுக்குக் கூட வழியின்றி காட்டில் அலைந்தனர் இருவரும்.
பெற்றோரின் இந்த அவல நிலையில் சியாமா வருந்தி னாள். தன் நாட்டுக்கு அழைத்து உணவிட்டு பாதுகாத் தாள் . ஒரு குடம் நிறைய பொற்காசுகளைப் போட்டு ' 'இதை வைத்து பிழைத்துக் கொள்ளுங் கள்'' என தாய் கசந்திரிகாவிடம் கொடுத்தாள் . கசந்திரிகா தொட்டதும் பானையில் இருந்த பொற்காசுகள் எல்லாம் கரித் துண்டு களாகி விட்டது.
''அம்மா நீ அடித்து விரட்டிய கிழவி தான் மஹாலக்ஷ்மி'' என்று உணர்த்தினாள் மகள். தனது தவறை உணர்ந்த கசந்திரிகாவும் அப்போதிலிருந்து வரலக்ஷ்மி பூஜை முறையை தனக்குக் கற்பிக்குமாறு மக்கள் ஸ்யாமாவிடம் கேட்டு அறிந்து நித்ய மகாலக்ஷ்மி பூஜை செய்தாள் . பலன் கைமேல் தெரிந்தது. பத்ரஸ்வரா மீண்டும் படை வீரர்களை சேர்த்துக் கொண்டு தனது நாட்டை ஆக்கிரமித்த எதிரி மன்னனை வீழ்த்தி மீண்டும் ராஜா வானான். இழந்த செல்வங்கள் வைபவங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றாள் கசந்திரிகா.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் வரலக்ஷ்மி விரத பூஜை எனும் மஹா லக்ஷ்மி பூஜை மஹாத்மியம் புரிய. யாரையும் அடிக்கணுமா வேண்டாமா என்பது அவரவர் சௌகர்யம்.

இன்னொரு  கதையில் சாருமதி  ஹீரோயின்.
மகத தேசத்தில் குண்டினபுரம் என்னும் ஊர்க்காரி சாருமதி, கற்புக்கரசி. தன் கணவன், மாமனார், மாமியாருக்கு குழந்தைகளுக்கு என்று வேண்டிய நற்பணிகளை, சேவையைச் செய்வதையே வாழ்நாள் பாக்கியமாகக் கொண்டவள். சாதாரண குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, மணந்த ஒரு பெண். அவள் பக்தியை மெச்சி மகாலக்ஷ்மி ஒருநாள் சாருமதி கனவில் வந்து வரலக்ஷ்மி விரதத்தைப் பற்றி எடுத்துக் கூறினாள். மறுநாள் எழுந்த சாருமதி தான் கண்ட கனவைப் பற்றிக் கூற அதைக் கேள்விப்பட்ட பலரும் அந்தப் பூஜையை செய்தனர். அதனால் நன்மக்கட் பேறுடன் என்றும் சுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெற்றனர். சாருமதி மேற்கொண்ட விரதமே வரலக்ஷ்மி விரதம். அதன் பயனாக பதினாறு செல்வங்களையும் பெற்றாள் சாருமதி.
சித்திரநேமி என்றொரு தேவகுலப் பெண் நடுநிலை தவறாதவள் என்று பெயரெடுத்தவள். அதனால் தேவர்களிடையே எழும் சில சச்சரவுகளுக்கு அவளே நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குவாள்.
ஒரு முறை அவள் நடுநிலை தவறி தீர்ப்பு சொல்லி விட்டாள். அதனால் அவளுக்கு தொழு நோய் பீடிக்கும்படி சாபம் கொடுத்தாள் அன்னை உமையவள். தன்னை மன்னிக்கும்படி வேண்டி கேட்டுக் கொள்ள, மனமிரங்கிய தேவி கங்கை நதிக்கரையில்  வர லக்ஷ்மி விரதத்தை அனுஷ்டி. உன் தொழு நோய் நீங்கும்'' என்றாள் .
சித்ரநேமியும் அவ்வாறே கங்கைக் கரை வந்து  வரலக்ஷ்மி பூஜை செய்து நோய் நீங்கி நல்லுருவம் பெற்றாள். “என்னைப் போல புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சிந்து, காவிரி, தாமிபரணி முதலிய நதிகளில் நீராடி இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு எல்லாம் நல்ல பலன் பல மடங்கு கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டாள். வரலக்ஷ்மியும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தாள் அதனால் இந்த பூஜையை நதிகளில் நீராடிய பின் செய்வது மிகவும் சிறப்பு என்பது ஐதீகம்.

sivan jaykay

unread,
Aug 9, 2025, 8:47:07 PMAug 9
to amrith...@googlegroups.com
கைவல்யோபநிஷத் --   நங்கநல்லூர்  J K  SIVAN

அச்சு இயந்திரம், புத்தகங்கள் செய்வது நமக்கு  ரொம்ப லேட்டாக தான் தெரியும். ஆயிரம் ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு ரிஷிகள் ஒரு அற்புதமான முறையை கையாண்டு அச்சுக்கும் புத்தகத்துக்கும்  அவசியம் இல்லாமல் பண்ணி இருக்கிறார்கள்.
ரிஷிகள் அருந்தவம் இருந்து  விண்வெளியில், மந்த்ரங்களைக்  கற்றார்கள். அதெல்லா வற்றையும்  அடிக்கடி  தமது சிஷ்யர்களோடு சேர்ந்து அவர்களும் திரும்ப திரும்ப சொல்லி மனதில் அது பாடமாகிவிட்டது. ஒவ்வொரு சிஷ்யனும் பிரகாலத்தில் குருவாகி அவனது சிஷ்யர்களுக்கு இப்படி உபதேசித்து மந்திரங்கள் சிந்தாமல் சிதறாமல் முழுமையாக, தப்பில்லாமல், சரியான உச்சரிப்போடு பல தலைமுறைகளுக்கு கிடைத்தது.  இது தான் கர்ண பரம்பரை.  கர்ணம் என்றால்  காது.காதால் நன்றாக கேட்டு  அறிந்தது. சிலர்  இதையெல்லாம்  ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்தார்கள். காலப்போக்கில்  பின்னர்  அச்சு இயந்திரம்  புத்தகங்களில் இதை அளிக்க வெள்ளைக்காரர்கள் உதவினார்கள். அவர்களே  சமஸ்க்ரிதம் கற்று நமது வேதநூல்களுக்கும், உபநிஷதங்களுக்கும்  விளக்கம் எழுதினார்கள். உபநிஷத்துகளை  வெள்ளைக்காரர்கள் மொழிபெயர்த்து நாம் அறிவது ஒருவகை.  நமது ரிஷிகள் எழுதியதை  சமஸ்க்ரிதம்  மிக நன்றாக அறிந்த  ஹிந்து  பண்டிதர்கள் விளக்குவது வேறு வகை.  

தனக்கு சம்பந்தமில்லாத  ஸமஸ்க்ரித  மொழியை  ஓரளவு  கற்று ஹிந்து ஸநாதன தர்மம் முற்றிலும் அறியாதவர்கள்  எழுதும் விளக்கத்தை விட  நமது ஹிந்து பண்டிதர்கள் சொல்வது பொருத்தம் என்பதை ரொம்ப லேட்டாக உணர்ந்து வருகிறோம்.  எல்லாம் ஆங்கிலத்தையே  நம்பியதால் வந்த  வினை.  ஆங்கிலேயர்கள் போய் பல வருஷங்கள் ஆனாலும் ஆங்கிலம் இன்னும் நம்மை விட்டு எங்கேயும் போகவில்லை.

அர்த்தம் அனர்த்தம் ஆகும்  கதை தான் சனாதன தர்மம் அறியாத மற்றவர்கள் நமக்கு நமது வேத நூல்களை, உபநிஷதங்களை விளக்குவது.
வெள்ளைக்காரர் ஒருவர்  சொன்னது:  உப நி  ஷத் என்றால்  ‘’கிட்டே-கீழே-உட்கார்ந்து-கற்றது…
நமது  பண்டிதர்கள் உரைப்பது:   ஷத் என்றால் அழிப்பது. ஆகவே  உபநிஷத் என்றால் எது நம் அறியாமையை ஞானத்தீயால் பொசுக்குகிறதோ  அது.  மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள ஒற்றுமை தான் மேலே சொன்ன ரெண்டு விளக்கங்களும். ஆகவே புரியாத விஷயங்களை நன்றாக அறிந்த ஞானிகள், குருவிடம் கற்க வேண்டும் என்பது புரிகிறதா ?

280 உபநிஷதங்கள் நம்மிடம் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் 110 பரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. இன்னும் எத்தனையோ நமக்கு தெரியாதது இருக்கலாம். எந்த மஹானுபவன் அதையெல்லாம் கண்டு பிடிப்பானோ? எப்போதோ?  இந்த  110 ல்  சிலவற்றுக்கு ஆதி சங்கரர், ராமானுஜர்  மத் வாச்சார்யர் ஆகியோர் உரை எழுதி இருக்கிறார்கள். அதில்  11 உபநிஷதங்கள் மிக முக்கியமானவை.  உபநிஷதங்கள் நமது வாழ்கைக்கு வழி காட்டிகள். உயர்ந்த தத்துவங்கள், ஆத்ம ஞான ரஹஸ்யங்கள். அறிய முடியாத  ஆத்மாவை அறியச் செய்பவை.
உப நிஷதங்கள்  வேதங்களின் சாரம். சமீபத்தில் ‘’கைவல்யோபநிஷத்’’  படித்தேன் சுவாமி சின்மயானந்தா  அற்புதமாக இதை விளக்கி இருக்கிறார்.  ரொம்ப பிடித்தது. அதை சுருக்கமாக அளிக்க எண்ணம். அதர்வண வேதத்தின் சாரம் அது.

எந்த  வேதம், உபநிஷத் கற்பித்தாலும்  குருவும் சிஷ்யர்களும் சேர்ந்து ஒன்றாகவே  முதலில்  தினமும்  பகவானை  பிரார்த் தனை பண்ணிக்கொண்டு  குரு பாடம் சொல்ல, சிஷ்யர்கள் கேட்க ஆரம்பிப்பார்கள்.  எழுத்தில் எதுவும்  கிடையாது மனதில் பதியவைத்துக் கொள்வது, மனனம் செய்வது தான் அக்கால முறை. எழுத்துப்பிழை, புத்தகம் காணாமல் போவது எல்லாம் இதில் கிடையாது. விடாமல் தினமும் சொல்வதால் சாகும் வரை நினைவில் இருப்பது. இப்போது பள்ளிக்கூடங்களில் மனப்பாடம் கிடையாதே.

குரு சிஷ்யர்கள் சேர்ந்து சொல்லும் பிரார்த்தனை
ॐ सहनाववतु । सह नौ भुनक्तु । सह वीर्यं करवावहै । तेजस्विनावधीतमस्तु । मा विद्विषावहै ॥ ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

Om Saha NaAvavatu | Saha Nau Bhunaktu | Saha Veeryam Karavaavahai |Tejasvi NaAvadheetam-Astu Maa Vidvishaavahai | Om Shaanti: Shaanti: Shaanti: ||

ஓம்  சஹநானாவவது   சஹநௌ புனக்து, ஸஹவீர்யம் கரவாவஹை தேஜஸ்வி நாவதீதம் அஸ்து மா  வித் விஷாவஹை  ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
இதற்கு என்ன அர்த்தம்?
பரமாத்மா, குருவாகிய என்னையும் சிஷ்யர்களாகிய இவர்களையும்  போஷித்து  காப்பாற்று. நாங்கள் இருவருமே சேர்ந்து தான் ஞானம் பெறுகிறோம். விஷய ஞானம் பெறுவதில் எங்கள் எண்ணமும் செய்கைகளும் ஒன்றாகவே இருக்கட்டும் இருவருமே ஞான ஒளி பெறவேண்டும். ஒருவரை ஒருவர் வெறுக்கக்கூடவே கூடாது

ॐ सहनाववतु । सह नौ भुनक्तु । सह वीर्यं करवावहै । तेजस्विनावधीतमस्तु । मा विद्विषावहै ॥  ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
இது எல்லோரும் ஒரு முறையாவது கோவில்களில்  வீட்டு விசேஷங்களில் வாத்யார் கோஷ்டிகள் உச்சரித்து காதால் கேட்டது தான். அநேக  உபன்யாசங்களில், பிரசங்கங்களிலும் இது நம்மை அடைந்திருக்கிறது.  எனக்கு தெரிந்து பல பள்ளிக் கூடங்களில் பிரார்த்தனை கூடங்களில் இதை  குழந்தைகள் மனப்பாடம் பண்ணி  கோரஸாக ஒன்று சேர்ந்து உச்சரித்து கேட்டு ஆனந்தம் அடைந்திருக்கிறேன்...ஆனால் அர்த்தம் தெரியுமா என்பது சந்தேகம் தான்.  

ॐ सह नाववतु ।  सह नौ भुनक्तु । सह वीर्यं करवावहै । तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

Om Saha Naav[au]-Avatu | Saha Nau Bhunaktu |  Saha Viiryam Karavaavahai |  Tejasvi Naav[au]-Adhiitam-Astu Maa Vidvissaavahai |
Om Shaantih Shaantih Shaantih ||

ஓம் ! ஸஹநாவவது । ஸஹ நௌ புநக்து । ஸஹ வீர்யம் கரவாவஹை தேஜஸ்விநாவதீதமஸ்து மா வித்விஷாவஹை ॥ ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

இந்த  சின்ன மந்திரம் கைவல்யோபநிஷதத்தில் தான் முதலில் அறிந்து கொண்டேன்.  கைவல்யோபநிஷதத்தை விரிவாக பதிவிட உத்தேசம்.  அடுத்த பதிவிலிருந்து ஒருநாளைக்கு ஒரு ஸ்லோகம் சேர்ந்து பார்ப்போம். 

sivan jaykay

unread,
Aug 9, 2025, 8:47:07 PMAug 9
to amrith...@googlegroups.com
பூணூலைப் பற்றி கொஞ்ச விஷயம்.      நங்கநல்லூர்  J K  SIVAN

 இன்று  9.8.2025 சனிக்கிழமை  ஆவணி அவிட்டம். யஜுர் உபா கர்மா.   யஜுர் வேத பிராமணர்கள் மற்றும் பூணல் போட்டுக் கொள்பவர்கள்  புது பூணல் போட்டுக்கொள்ளும் நாள். ஆகவே  பூணூல் பற்றி  சில விஷயங்களை பகிர்கிறேன்.

பூணூல் ப்ராமணர்கள் மட்டும்  அணிவதில்லை, வைசியர்கள், க்ஷத்ரியர்கள்,  ஆசாரி வகுப்பினர் கூட  அணிகிறார்கள். ஆனால் உபநயனம், சந்த்யா வந்தனம், நித்ய கர்மாநுஷ்டானம் முறையாக  பின்பற்றுபவர்கள் அந்தண வகுப்பினர். எல்லோரும் அல்ல.  ஒருகாலத்தில்  தான் எல்லோரும்.  இக்காலத்தில்  சிலரே அதை அனுஷ்டிக்கிறார்கள்.

 பூணூல் வெளுப்பாக  இருந்தாலே  தெரிந்துவிடும்,  அதை அணிபவர் அனுஷ்டானம் பண்ணுபவர் என்று.  சில பேர் பூணூல்  ஆணியில் தான் தொங்கும். எல்லாம் காலத்தின் கோலம்.

இந்த உடம்பு ஒன்பது வாசல் கோவில்,அதற்குள் ஹ்ருதயத்தில்  இருக்கும் ஆத்மா தெய்வம். அதை  கோயிலை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ அப்படி பராமரிக்க வேண்டும். அதற்கு  தான்  குளியல், சுத்த மடி வஸ்திரம்,  விரதம், உபவாசம், அனுஷ்டானம், த்யானம் போன்றவை  கோவிலில் பூஜை போல் அவசியமாகிறது.  பூணூல்  அணிந்து நித்ய கர்மானுஷ்டானம் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது போல் அனுசரிப்பது தான் முறை.
பூணூலை எப்பொழுதெல்லாம் மாற்ற வேண்டும் ?
மாதம் ஒரு முறையாவது மாற்றிக்கொள்ள வேண்டும் . அமாவாசை தர்ப்பணத்தின் போது பூணூல் மாற்றிக்கொண்டு தர்ப்பணம் பண்ணலாம் . நாம் சொன்னால் வாத்தியார் மாற்றி விடுவார் .                          
தீட்டு உள்ள இடங்களுக்குச் சென்று வந்தால் பூணூல் மாற்ற வேண்டும்  பத்து நாட்களுக்குள் துக்கம் விசாரிக்கச் சென்று வந்தால் பூணூல் மாற்ற வேண்டியது அவசியம் . மயானத்திற்கு சென்று வந்தால் கண்டிப்பாக பூணூல் மாற்றிக் கொள்ள வேண்டும் .    
                       
பிரசவம் ஆன வீடுகளுக்கு , புண்யாஹ வசனத்திற்கு முன் போய் வந்தால் மாற்றிக்கொள்ள வேண்டும் . பொதுவாக  பத்து  நாட்கள் வரை பிரசவத்தீட்டு . இது அவரவர்கள் வீடுகளிலும் உண்டு. பதினோராவது  நாள் புண்யாஹ வசனம் ஆன பிறகு தான்  தீட்டு போகும் . அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறக்கும் சில வீடுகளில் , தாயின் உடல் நலம் கருதி 21 ம் நாள் புண்யாஹ வசனம் செய்வதும் உண்டு . அது வரை தீட்டுத்தான் . புண்யாஹ வசனம் என்று நடக்கிறதோ அன்றைக்குத்தான் தீட்டுப் போகும் . அன்றைய தினம் பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டும் .  
                                   
இது தவிர , உறவினர்கள் இறந்தால் , பங்காளிகளுக்கு பத்து  நாள் தீட்டு .  அதற்கு மறு நாள் பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டும் . இந்த தீட்டுக்கள் விஷயத்தில் பலருக்கு அடிக்கடி சந்தேகம் வரும் . யார் இறந்தால் யாருக்கு.. எத்தனை நாட்கள் தீட்டு .. ? தீட்டு என்றால் என்ன .. ? யார் யார் தீட்டு அனுசரிக்க வேண்டும்.. ? தீட்டு என்பது பேய் பிசாசு என்பது போல ஒன்றா .. ? தீட்டு என்று சொன்னால் பலர் பயப்படுவதற்கு என்ன காரணம் .. ?

ஆஸ்பத்ரி, HOSPITAL   போய் விட்டு வந்தால் பூணூல் மாற்ற வேண்டும்.  அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு பஸ், ரயிலில் பயணம் செய்து விட்டு வந்தாலே பூணூல் மாற்றி கொள்வர் . இது  இப்போது சாத்தியம் இல்லை. காலத்தோடு க்ருத்யங்களும் மாறுவது காலத்தின் கட்டாயம்.

ஸ்ராத்த தினத்தன்று வேறு பூணூல் மாற்றிக் கொண்டுதான் ஸ்ராத்தம் ஆரம்பிக்க வேண்டும் . இன்று பொது இடங்களில் , மடங்களில்   ஸ்ராத்தம் பண்ணினால் பல வாத்தியார்கள் கண்டு கொள்ளாமல் ஸ்ராத்தம் பண்ணி வைத்து விட்டுப் போய் விடுகிறார்கள் . பூணூல் மாற்றி விடுங்கள் என்று சொல்ல வேண்டும் . முதல் நாள் ஆவணி அவிட்டம் என்றாலும் , அடுத்த நாள் ஸ்ராத்தம் வந்தால் , அன்றைக்கும்  புதிய பூணூல் போட்டுக் கொண்டுதான் ஸ்ராத்தம் பண்ண வேண்டும் .    
                                               
இது தவிர  வீட்டில் நடக்கும் எந்த  ஒரு  வைதீக காரியம் என்றாலும் புதிய பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம் .                                      
சட்டை , பனியன் கழட்டும் பொழுது சில சமயங்களில்  அதோடு  பூணூலும் சேர்ந்து  உடம்பை விட்டு  கழன்று  விடும் . அப்பொழுது அதை உடனடியாக மாட்டிக் கொள்கிறோம்.  ஒரு தடவை  பூணல் உடலை விட்டு விலகினால் பூணல் போட்டுக்கொள்ளும்போது சொல்லவேண்டிய மந்திரம் சொல்லிவிட்டு தான்  வேறு பூணலை மாற்றிக்கொள்ளவேண்டும். சும்மா மாட்டிக்கொள்வதால் பூணல் போட்டுக்கொள்வதால் எந்த பயனும் இல்லை.    
                                                                 
பூணூல் என்பது கர்ணனின் கவச குண்டலங்கள் போன்றது . அதை அணிந்திருப்பவனை தீய சக்திகள் மற்றும் பேராபத்து களிலிருந்து காக்கும் சக்தி பூணலுக்கு  உண்டு.  அதில் உள்ள முடிச்சுக்கு பிரம்ம முடிச்சு என்று பெயர் .

பூணூலில் காயத்ரி மந்திரத்தைச்  சொல்லி சக்தி ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் . அப்படி வைத்திருந்தால் தான்  ஆபத்துக்களிலிருந்து நாம்  காப்பாற்றப்படுவோம் என்பது நம்பிக்கை. . எனவே அதற்கு உரிய மரியாதை கொடுத்து பராமரிக்க வேண்டும் .சாதாரண நூல் தானே என்று அலட்சியமாக , அதை முதுகு அரிப்பை  சொரிந்து கொள்வதற்காக உபயோகிப்பது தப்பு. 

குழந்தையாயிருந்த  பையனுக்கு ஐந்து,  ஏழு,  ஒன்பது என்று ஒற்றைப்படை வயதில் , அவன் தானே மந்திரங்களைச் சொல்கிற சமயத்தில் உபநயனம்  எனும் பூணூல் கல்யாணம்  நடக்கிறது. "பிக்ஷாசர்யம் சர" (பிக்ஷை எடு) என்று இந்தச் சடங்கில் சொன்னால் பூணூல்காரப் பையன் "அப்படியே செய்கிறேன்''  என  பதிலளிக் கிறான். உபநயனத்துக்கு முன்பே "பிக்ஷாசர்யம் சர" என்று சொன்னால் அதைப் புரிந்து கொள்வதற்கான ஸம்ஸ்கிருத ஞானம் தேவைப்படுமே . வேதகாலத்தில் பேச்சு ஸமஸ்க்ரிதத்திலேயே  இருந்ததால்  எளிதாக போய்விட்டது.  ஐந்து வயதில் படிக்க ஆரம்பித்தால் இரண்டு அல்லது மூன்று வருஷத்தில்  ஸமஸ்க்ரித  பாஷா ஞானம் வந்துவிடும். ஆதலால்  ஒன்பது  வயதில் பூணூல் போடவேண்டும் என்றாகிறது.
ஒன்பது  வயசுக் குழந்தைகள் அர்த்தம் தெரிந்து பூணூல் போட்டுக் கொண்டு ஜபம் பண்ணிவிட்டால் லோகமெல்லாம் நன்றாக ஆகிவிடும். இப்போதோ இளம் மனசுகளில் நாஸ்திகத்தைத் தான் ஏற்றி யிருக்கிறோம்! ஸமஸ்க்ரிதம்  வெறுக்கப்படுகிறது.  அப்படியும்  சிலர்  பாடசாலைகள் நடத்தி  சிறு குழந்தைகளுக்கு ஸமஸ்க்ரித ஞானம், சாஸ்திர , வேத ஞானம் அளித்து வருவது லோகத்துக்கு க்ஷேமம் தரும். கொஞ்சமாவது நமது காலத்தில் அதனால் தான் மழை பெய்கிறதோ? 

பூணூல் இடது தோளில்  அணிவது “உபவீதம்” என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு  செய்யும்  காரியங்களுக்கு  பூணூல் இடது தோளில் (உபவீதமாக)  இருக்க வேண்டும்.  நம் முன்னோர்களுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் வலது தோளில் இருக்க வேண்டும். நம் ரிஷிகளுக்கு செய்யும் காரியங்களுக்கு  பூணூல் மாலையாக  இரு  தோள்களில்  இருக்க வேண்டும்.

முன்னோர்கள் பித்ரு லோகம் தென்திசையில் உள்ளது. அதுபோல,  தேவ லோகம் வட திசையில் உள்ளது. பொதுவாகவே, எந்த வேத சம்பந்தமான பூஜையோ, யாகமோ கிழக்கு திசை பார்த்துதான் செய்ய வேண்டும். ஒருவருக்கு நமஸ்காரம் செய்தால் கூட,  பொதுவாக  கிழக்கு  திசை  பார்த்து தான் செய்கிறோம். கிழக்கு திசை பார்த்தே பெரும்பாலும் வேத காரியங்கள், நல்ல  காரியங்கள்  செய்வதால், கிழக்கு நோக்கி நிற்கும்போது  நமக்கு  இடப் பக்கம் வடக்காக இருப்பதால், பூணூல் இடமாகவே போட்டு கொள்கிறோம். நமக்கு வலப்பக்கம் தெற்குதிசை இருப்பதால், முன்னோர்களுக்கு  தர்ப்பணம்,  திவச காரியங்கள் செய்யும்போது, பூணூல்  வலமாக  போட்டுகொள்கிறோம். ரிஷிகள்  எங்கும் இருப்பதால், இரண்டு தோளும் படுமாறு  மாலையாக  போட்டு  ரிஷி கடனை  அடைகிறோம்.

பூணூல்  முப்புரி நூல்  எனப்படும். மூன்று நூல்கள். அந்த மூன்று நூலும் சேர்ந்து ஒரு முடிச்சு.   அதை “ப்ரம்ம முடிச்சு” என்கிறோம். . மூன்று நூல்கள் எதற்கு? ஒவ்வொரு மனிதனும்  மூன்று   கடன் பட்டவன்.  ஒன்று  பித்ரு  கடன், இரண்டு, ரிஷி கடன்,  மூன்றாவது, தேவ கடன்.

மோக்ஷம் அடையாத கோடிக்கணக்கான  ஜீவாத்மாக்களாக  இருக்கிறோம் நாம்.  இன்று வரை மோக்ஷம் அடைய முடியாததால் உலகத்தில் பல பிறவிகள் எடுக்கிறோம். 84 லக்ஷம் ஜென்மங்கள் நாம்  ஒவ்வொருவரும் எடுக்கிறோம்  என்கிறார்கள். நமக்கு, “மனித உடல் கொடுத்து”  இந்த  உலகில் வாழ வழி செய்தவர்கள்” நம்பெற்றோர்கள்”.  நமக்கு கொடுக்கப்பட்ட இந்த உடலை வைத்துகொண்டு, நாராயணனிடம் பக்தி செய்து மோக்ஷம் அடைந்து விட முடியும்.. இந்த  உடலை வைத்து கொண்டு,  உலக விஷயங்களில் ஈடுபடவும் முடியும்..  “உடலை கொடுத்த நம் பெற்றோர்களுக்கு, நாம் நன்றி செய்ய கடன்பட்டுள்ளோம்”. இதை நமக்கு எப்பொழுதும்  “நினைவுபடுத்தவே”, பூணூல் அணிகிறோம்.  

பூணூலில் உள்ள ஒரு நூல் “பித்ரு கடன் உனக்கு உள்ளது”  என்று நம்மை ஞாபகப்படுத்துகிறது.  தந்தை, பாட்டி, தாத்தா, பாட்டனார்கள் அனைவருக்கும் இந்த உடல் கடன் பட்டுள்ளது. அவர்கள் உயிருடன் இருக்கும் வரை, அவர்களை அனாதையாக விட்டு விடாமல், அவர்களுக்கு சேவை செய்து இந்த கடனுக்கு பதில் செய்ய  வேண்டும். அவர்கள் உயிர் பிரிந்து “பித்ரு லோகம்”  சென்றாலும், அவர்கள் வேறு பிறவியே எடுத்தாலும்,  அவர்கள் எங்கு இருந்தாலும் நன்றாக  இருக்க வேண்டும் என்று பித்ரு தேவதைகளிடம் வேண்டி, அவர்கள் உயிர் பிரிந்த  நாட்களில் திதி (திவசம்/சிரார்த்தம்) செய்து பித்ரு கடனை அடைக்க வேண்டும்.  மாதாமாதம் அமாவாசை அன்று தர்ப்பணம் பண்ணுகிறோம். நமக்கு உடல் கொடுத்த பெற்றோருக்கு நாம் செய்யும் நன்றிக்  கடன்.

சூரிய தேவன், “கண்” என்ற உறுப்பிற்கு “பார்க்கும்” சக்தியை கொடுக்கிறார். அக்னிதேவன், மனித உடலுக்கு ஏற்ற சூட்டை கொடுத்து, உறுப்புகளை வேலை செய்ய உதவுகிறார். வாயுதேவன், ஐந்து வித வாயுவாக, அதுவும் பிராணவாயு என்ற முக்கியமாக உயிரை கொடுத்து,  உடல் முழுவதும் இருந்து, உடல் உறுப்புகள் அசைந்து வேலை செய்ய  உதவுகிறார். இப்படி முப்பத்து முக்கோடி தேவர்களும், நம் உடலை இயங்க செய்ய உதவுவதால், உடலை அழுகிவிடாமல் காக்கும் தேவர்களுக்கும் நாம் “கடன்” பட்டு இருக்கிறோம்.

தினமும் மூன்று வேளை சந்தியாவந்தனம்  செய்வதன்  மூலமாகவே  “தேவ கடனுக்கு”  நாம் நன்றி  செய்ய முடிகிறது. சந்தியாவந்தனத்தில், நவ க்ரஹங்களை திருப்தி செய்கிறோம்.. எமனுக்கு கூட வந்தனம் செய்கிறோம்.. “யோவ: சிவதமோரஸ:” என்று சிவபெருமானை தியானித்து கொண்டே நம்மை சுத்தி செய்து கொள்கிறோம்… “சர்வாப்யோ தேவதாப்யோ நமோநம:” என்று அனைத்து தேவதைகளுக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்கிறோம்… சந்தியாவந்தனம் ஒழுங்காக செய்தாலே, நாம் “தேவ கடனை ” அடைத்து விடலாம்.

 “சிவாய நம, நமோ நாராயணா, முருகா போற்றி” என்று சொல்வதும், ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்கள், நாயன்மார் பதிகங்கள் போன்றவை , நாம் செய்யும் ஸ்தோத்திரங்களே. இதன் மூலம்  “தேவ கடனை” அடைக்கிறோம். அது தவிர ,தினமும் பூஜை அறையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் நன்றியுடன் பூஜை செய்வது மூலமாகவும், குல தெய்வத்தை மறந்து விடாமல் வழிபடுவதின் மூலமாகவும், கோவில் திருப்பணிகளில் உடல் ரீதியாகவும், பொருள் ரீதியாகவும் முடிந்த உதவி செய்வதாலும், “தேவ கடனை” அடைக்கிறோம்.


sivan jaykay

unread,
Aug 10, 2025, 7:38:09 PMAug 10
to amrith...@googlegroups.com

மா விளக்கு – நங்கநல்லூர் J K SIVAN
ஆடி வெள்ளிக்கிழமை, தை வெள்ளிக்கிழமை, வரலக்ஷ்மி விரதம், காரடையான் நோன்பு போன்ற விசேஷ தினங்களில் அநேகர் க்ரஹங்களில் மாவிளக்கு போடுவது உங்களுக்கு தெரியுமல்லவா? எனக்கு பிடித்த பக்ஷணங்களில் அதுவும் ஒன்று. அதைப்பற்றி இன்றிரவு ஒரு அருமை நண்பர் கேட்டார். இதோ எனக்கு தெரிந்த விவரங்கள் தருகிறேன்.
என் சிறுவயது முதல் எங்கள் வீட்டில் அம்மா பாட்டி எல்லோரும் மா விளக்கு போடுவது ஞாபகம் வருகிறது. அது ஒரு அம்பாள் வழிபாட்டு முறை.
பெண்கள் தலைக்கு குளித்து விட்டு, சம்பிரதாயப்படி ஆடை உடுத்து, பூஜை அறையில் தரையை பெருக்கி, கோலம்போட்டு, செம்மண் பார்டர் border கட்டி, நடுவே நுனி வாழை இலையை நன்றாக அலம்பி, ஒரு பலகை மேல் வைத்து அதில் மாவு தயார் செய்து வைப்பார்கள். மாவு என்றால் அது பச்சரிசி மாவு, வெல்லம், நெய், மற்றும் ஏலக்காய் போன்ற பொருட்களை ஒன்று சேர்த்த கலவை. கெட்டியாக இருக்கும். மாவுக்கு நடுவே குழி யாக ஒரு குளம் வெட்டி அதில் நெய்யை வார்த்தவுடன் அது நெய் குளம் போல் காட்சி அளிக்கும். அந்த நெய்க்குள் பஞ்சு திரி, அல்லது நூல் திரி, அநேகமாக நூல் திரி தீபம் ஏற்றுவார்கள். நூல் திரி முழு நெய்யும் காலியாகும் வரை நின்று எரியும். எல்லா நெய்யும் எரிந்து மலையேறும் வரை ஸ்த்ரீகள் அம்பாள் ஸ்தோத்திரங்கள் , மற்றும் இஷ்ட தெய்வங்களுக்கான ஸ்தோத்திரங்களை, பாராயணம் செய்வார்கள். மாவிளக்கு பூரணமாக எரிந்தபிறகு நெய்வேத்யம் பண்ணிவிட்டு, கல்பூர தீபாராதனைக்கு பிறகு குடும்பத்தில் எல்லோருக்கும் பிரசாதமாக விநியோகமாகும். .
குடும்பத்தில் முக்கியமாக ஏதாவது கல்யாணம், கிரஹப்பிரவேசம், சீமந்தம், உபநயனம் போன்ற விசேஷங்கள் வந்தால் முன்பாக குடும்ப தெய்வத்துக்கு வேண்டிக்கொண்டு மாவிளக்கு போடுவது வழக்கம். நெய் தீபம் எரியும் போது அந்த நெய்க்குளத்தின் கரை மாவு உஷ்ணத்தால் உள்ளூர வேகும்.
எதற்கு மாவிளக்கு? நமது ஆத்மா பஞ்ச கோஷத்தால் மூடப்பட்டது. அன்னமய கோசம் அன்னம் ஜீவாதாரம் என்பதை உணர்த்துகிறது. மாவு தான் கோசம். தீபம் தான் ஆத்மா.
அதே போல் ப்ராணமய கோசம் – ஜீவன் உடலை ஆதரித்து அசைய வைக்கிறது. அதற்கு முக்கியம் ப்ராணன் . காற்று. அந்த காற்று தான் தீபத்தை அணையாமல் சுற்றி வருகிறது. மனம் தான் ஜீவனை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
விஞ்ஞானமய கோசம் என்பது அறிவியல் மற்றும் நமது அறிதல், புரிதலின் ஆதாரம்.மாவுக்கு ருசி கொடுப்பது. .
ஆனந்தமய கோசம் – உடல் உள்ளம் மனம் எல்லாம் தாண்டிய ஆனந்த ஸ்தலம். ஒவ்வொரு நிமிடமும் நாம் ஆனந்தமாக இருக்க உதவக்கூடியது. மாவிளக்கின் இன்ப ருசி.
மாவிளக்கின் ஒளி அறிவுக்கும் ஆன்மீக நகர்வுக்கும் மூலாதாரமாக இவ்வாறு நமது முன்னோர்களால் அறியப்பட்டது. இருட்டு நிறைந்த மனத்தை ஞானப்பிரகாசம் பெற வைப்பதை உணர்த்துவது மாவிளக்கு. மாவு. அஞ்ஞான உடல், தீபம் ஞானம். அதனால் மாவு ருசிக்கிறது.
சிலர் வேண்டிக்கொண்டு கோவில்களில் சென்றும் மாவிளக்கு போடுவது இன்னும் சில குடும்பங்களில் வழக்கமாக இருக்கிறது. மேலே சொன்ன புனித தினங்களில் போடப்படும் மா விளக்கால் அம்பாள் மனம் குளிர்ந்து அருள் புரிவாள். மாவிளக்கு அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கும், குல தெய்வங்களுக்கும் கூட வேண்டிக்கொண்டு அர்பணிக்கப்படுகிறது. மனிதனின் பூலோக வாழ்க்கை தெய்வ நம்பிக்கையிலும் தன்னம்பிக்கையிலும் தான் அனுபவமாகிறது.


sivan jaykay

unread,
Aug 10, 2025, 7:38:09 PMAug 10
to amrith...@googlegroups.com
கைவல்யோபநிஷத் - நங்கநல்லூர்  J K  SIVAN 
ஸ்லோகம்  1-5

வேதங்களின் முடிவு, அந்தம், தான் வேதாந்தம்,   அது தான் உபநிஷதம்.  எல்லாம் வெவ்வேறு ரிஷிகள் பல காலம் தவம் இருந்து சிந்தித்து, உணர்ந்து நமக்கு அறிவித்த உயர்ந்த விஷயங்கள். மந்திரங்களாக ஸ்தோத்ரங்களாக குட்டி குட்டி வாக்கியங்களாக  நமக்கு அளிக்கப்பட்டவை.  படித்து தெரிந்து புரிந்துகொண்டு  நாம் பயன் பெறுவது நமது சௌகர்யம். 
    
கைவலியோபநிஷதத்தில் முதலில்  வழக்கம் போலவே  குருவும் சிஷ்யனும் சேர்ந்து பிரம்மாவை வேண்டுகிறார்கள்.:

''நாங்கள் இருவரும் ஒன்றாக  கூடி  வேதங்கள் வேதாந்தங்களை கற்றுக் கொள்வோம். கற்றுக்கொள்வதில் ஆசிரியர் மாணவன் வித்தியாசமில்லை.   இதை அறிந்து   ரெண்டு பேருமே மகிழ்வோம். யாக யஞங்களை  சேர்ந்தே புரிவோம்.  மனதை செலுத்தி ஒரே சிந்தனையாக தொழுவோம். இவ்வாறு நாங்கள் அற்புதமான விஷயங்களை அறிந்து நன்றாக் புரிந்து கொள்வோம். சிந்திப்போம், இந்த முறையில் எங்களிடையே எந்த வெறுப்புணர்ச்சியோ, வித்யாசமோ, குறையோ நெஞ்சில் தோன்றாது.   எங்கும்  பேரமைதி நிலவுக பேரமைதி நிலவுக  பேரமைதி நிலவுக. ''

உலக இன்பம்  என்பது வாழ்க்கையின் லக்ஷியம் இல்லை. ஞானம் ஒன்று தான்.  பள்ளி, கல்லூரி படிப்பு  ஞானம் ஆகாது. . ஆத்மா எனும் பிரம்மத்தை அறிவது ஒன்றே  ஞானம். எல்லையற்றது, முடிவற்றது. எதிலும்  எங்கும்  இறைவனோடு இணைப்பது. சாஸ்வதமானது. ஆனந்தமானது.

1. ॐ अथाश्वलायनो भगवन्तं परमेष्ठिनमुपसमेत्योवाच । अधीहि भगवन्ब्रह्मविद्यां वरिष्ठां सदा सद्भिः सेव्यमानां निगूढाम् । ययाऽचिरात्सर्वपापं व्यपोह्य परात्परं पुरुषं याति विद्वान् ॥ १॥ (यथाऽचिरात्)  

oṃ athāśvalāyano bhagavantaṃ parameṣṭhinamupasametyovāca .adhīhi bhagavanbrahmavidyāṃ variṣṭhāṃ sadā sadbhiḥ sevyamānāṃ nigūḍhām .yayā’cirātsarvapāpaṃ vyapohya parātparaṃ puruṣaṃ yāti vidvān ..1.

இப்படி  சீடர்களோடு த்யானம் பண்ணும்  ஆஸ்வலாயன ரிஷி பிரம்மாவிடம் வேண்டுகிறார்;
''பகவானே, சத்யம் எனும் ஞானத்தை எங்களுக்கு உபதேசியுங்கள்.  அதைத்தானே  ஞானிகள் அரும்பாடு  பட்டு பெற்றவர்கள். எளிதில் மனிதனுக்கு கிடைக்குமா அது, மறைந்திருக்கும் ரஹஸ்ய  புதையல் அல்லவா அது? அதை அறிந்தால் பாபங்களிலிருந்து விடுபட முடியுமே. அதன் மூலம்  புருஷன் என்ற பேருக்கு தகுதியான பிரம்மத்தை அடையலாமே .ஐக்யமாகலாமே. ”

2. तस्मै स होवाच पितामहश्च श्रद्धाभक्तिध्यानयोगादवैहि ॥ २॥
tasmai sa hovāca pitāmahaśca śraddhābhaktidhyānayogādavaihi .. 2..

ப்ரம்மா பதில் சொல்கிறார்.  ''ஆஸ்வலாலயனரே, பிரம்மத்தை பெற  அயராத நம்பிக்கை, பக்தி, தியானம் முக்யம்.'' 

3.न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः । परेण नाकं निहितं गुहायां विभ्राजते यद्यतयो विशन्ति ॥ ३॥
na karmaṇā na prajayā dhanena tyāgenaike amṛtatvamānaśuḥ .pareṇa nākaṃ nihitaṃ guhāyāṃ vibhrājate yadyatayo viśanti .. 3..

விவேகானந்தர்  அடிக்கடி சொல்லும்  மந்திரம் இனி வருகிறது.  எல்லோரும் மனப்பாடம் பண்ண வேண்டிய சின்ன மந்திரம் இது.  ந கர்மணா, ந ப்ரஜயா, தனேனா , த்யாகேனைகே, அம்ருதத்வமானசு; '' அப்பனே, இந்த  இறப்பை வென்ற பிரம்மஞானத்தை  எவனும்  ஏதேனும்  காரியம் கர்மம்  செய்தோ ,மக்கள் மூலமாகவோ, செல்வத்தினாலோ, பெற வாய்ப்பில்லை. விண்ணை மிஞ்சியது அது. புத்தி  அறிவுக்கெட்டாத  மறைந்த  ஹ்ருதய ரஹஸ்ய குகையில் உறைவது.ஒளிவீசுவது. அதை விடாப்பிடியாக  சகலத்தையும் துறந்த ஞானிகள் தியானத்தின் மூலம் மட்டுமே அடையமுடியம். , 

4. वेदान्तविज्ञानसुनिश्र्चितार्थाः संन्यासयोगाद्यतयः शुद्धसत्त्वाः ।  ते ब्रह्मलोकेषु परान्तकाले परामृताः परिमुच्यन्ति सर्वे ॥ ४॥
vedāntavijñānasuniśrcitārthāḥ saṃnyāsayogādyatayaḥ śuddhasattvāḥ .te brahmalokeṣu parāntakāle parāmṛtāḥ parimucyanti sarve .. 4..

பற்றுகளற்ற  சித்தன் சகல பந்தங்களையும் துறந்து தியாகியாக, தியானம் செய்வதன் மூலம் ஞானத்தின் மஹிமையை அறிகிறான். அதுவே  உபநிஷதங்கள் சொல்லும்  விஷயம். பிரம்ம லோகத்துக்கு வழிகாட்டி. முக்தி தருவது. சாகாவரம் தருவது. என்றும் சதானந்தத்தில் திளைக்க வைப்பது. 

5. विविक्तदेशे च सुखासनस्थः शुचिः समग्रीवशिरःशरीरः । अत्याश्रमस्थः सकलेन्द्रियाणि निरुध्य भक्त्या स्वगुरुं प्रणम्य ॥ ५॥ (अन्त्याश्रमस्थः)
viviktadeśe ca sukhāsanasthaḥ śuciḥ samagrīvaśiraḥśarīraḥ .atyāśramasthaḥ sakalendriyāṇi nirudhya bhaktyā svaguruṃ praṇamya.

அமைதியான, எந்த  இடையூறும் இன்றி, பரிசுத்தமான இடத்தில், அசையாமல்,  சௌகர்யமான் விதத்தில் அமர்ந்து தலை முதுகு, உடம்பும் எல்லாம்   நேர்கோணத்தில் இருக்க நிமிர்ந்து அமர்ந்து சந்நியாசியாக புலன்கள் வசப்படாமல், குருவை பக்தியோடு வணங்கி ஹ்ருதய கமலத்தில் பிரம்மத்தை இருத்தி தியானம் செய்யவேண்டும். 

அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்.அதற்கு முன் ஒரு வார்த்தை.  மேலே சொன்னதெல்லாம் நம்மால் முடியுமா என்றால் ஆம்  முடியும் என்பேன். ஒரே நாளில்  MA , MBA  ஆகமுடியாது.  அ, ஆ கற்றுக்கொண்டு படிப்படியாக பல வருஷங்கள் படித்து கற்று பிரயாசைப்பட்டு தானே  மேலே சொன்ன  பட்டங்கள் பெறுகிறோம். அதற்கே இப்படி என்றால் ப்ரம்ம ஞானத்தை  நான் எழுதி அதனால்  நானோ  நீங்களோ ப்ரம்ம ஞானியாக ஆகிவிடமுடியுமா. முயற்சி திருவினையாக்கும். நிச்சயம் நாம் அனைவருமே  ப்ரம்ம ஞானியாக முடியும். சித்தம் அதற்கு தயாராகி, புலன்களை கொஞ்சம் கொஞ்சமாக வென்று பற்றுகளை துறந்து உலா ஈர்ப்புகளுக்கு இடம் கொடுக்காமல் முன்னேறினால்  ப்ரம்மம் பாதி வழி தானாகவே வந்து நம்மை கை நீட்டி அழைத்துக் கொள்ளும். அப்படி தான்  சாதாரண மனிதன் ஸ்வாமிநாதனாக இருந்தவர் பரமாச்சார்யராக நமக்கு தெய்வமாகியவர் . ரமணரும் அப்படித்தான். ராமக்ரிஷ்ணரும் அப்படித்தான். தவயோகிகள் அனைவருமே அந்த வழியில் வந்து ப்ரம்மஞானி பட்டம் பெற்றவர்கள்.

sivan jaykay

unread,
Aug 10, 2025, 7:38:10 PMAug 10
to amrith...@googlegroups.com
ஸ்ரீ ராதாகிருஷ்ணய்யா.  -   நங்கநல்லூர்  J K SIVAN 

 47 வருஷங்களுக்கு முன்பு,  நங்கநல்லூரில்,, கட்டை குட்டையான உருவம் என்று சொல்லும்போது  ஆஜானு பாஹுவாக
 இல்லாமல்  ஐந்தரை அடிக்கு மேல் உயரமான மனிதர் என்று எடுத்துக் கொள்ளலாம். வெள்ளை முழுக்கையோ, அரைக்கைசட்டையோ  பேண்டுக்குள் திணித்து பெல்ட்  பிடித்துக் கொள்ள, காலில் ஷூ அணிந்தவாறு கண்ணாடி போட்டுகொண்டு  அசப்பில் S V ரங்காராவ் போல் ஒரு ஆந்திரர்  சைக்கிளில் ஏறி எங்கள் காலனிக்கு அடுத்த வோல்டாஸ் காலனி வீட்டிலிருந்து காலை எட்டு எட்டரை மணிக்கு  ரயில்வே ஸ்டேஷனுக்கு கிளம்பினால்  அவர் தான் என் மனம் நிறைந்த நண்பர்  ஸ்ரீ ராதா கிருஷ்ணய்யா.  பல வருஷங்கள் உயர்பதவியில் இருந்து எல்லோருக்கும்  சேவை செய்து நற்பெய ரோடு ஒய்வு பெற்றவர் அதோடு நிற்கவில்லை. வீட்டில்  செடி வளர்ப்பதில் ஆர்வம். நேரம் கிடைத்தபோதெல்லாம்  கீதை, கிருஷ்ணன், என்று மனதை செலுத்தி ஒரு காகிதம் விடாமல், அதில் துளியும் இடம் வீணாக்காமல்  கீதை ஆராய்ச்சி எண்ணங்களை வடித்தவர். ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, சமஸ்க்ரிதம் ஆகிய மொழிகளில் வல்லுநர்.  பல இடங்களுக்கு சென்று கீதை பிரசங்கம் உபதேசித்தவர்.   வெள்ளை ஜிப்பா,  பைஜாமா,  தோளில்   ஜோல்னா பையில்  கீதை புஸ்தகங்கள், கருப்பு கண்ணாடி, வெள்ளை தொப்பியோடு நடையாய் நடந்து நண்பர்கள் வீடுகளுக்கு சென்று  கீதை சொல்லிக்கொடுக்கும் குரு.  என் வீட்டுக்கு  வாரத்தில் பல நாள்  காலை மாலைகளில் வந்து உபதேசிப்பார்.  நானும் அவர் வீட்டுக்கு சென்று  நாய் கட்டிப்போடப்பட்டிருக்கிறதா என்று தெரிந்து  கொண்டு மாடியில் அவர் அறைக்கு சென்று மணிக்கணக்காக  அவரிடம் பாடம் கேட்பேன்.  என்னைப்  பாச்சொல்லி ரசிப்பார்.  ஏதேனும் ஒரு கோயில் பிரசாதம், கல்கண்டு திராக்ஷை இல்லாமல் அனுப்பியதே இல்லை.  வீடு தேடி வந்து  என்னை சந்திக்கும் போது ஏதோ ஒரு இனிப்பு  அவர் இனிய கீதோபதேசத்தோடு என்னை வந்தடையச்செய்த ஆசார்யன் ஸ்ரீ ராதாகிருஷ்ணய்யா. அவருடைய நிழலாக இருந்தவர் இன்னொரு நண்பர்  ஸ்ரீ  ராகவன். அவரும் சைக்கிளில்  ராகவனகரிலிருந்து அடிக்கடி குருவோடு பேசிக்கொண்டிருப்பவர். 

கடைசியாக ஒருநாள் ''போதும் உனக்கு  என் வேலை, என்னிடம் வா, என்னோடு இரு, ஒய்வு பெறு'' என்று அழைத்தபோது நெற்றியில் நாமத்தோடு, அசையாமல் மீளாத்தூக்கத்தில் அவர் வீட்டு மாடியில் தலைமாட்டில் தீபத்தோடு, விஷ்ணு சஹஸ்ரநாமம், கீதா பாராயணத்தோடு  அவரைப் பார்த்த காட்சி என்றும் என் நெஞ்சிலிருந்து மறையாது. 
எனக்கு  கீதையில்  ஆர்வம் உண்டாக்கிய  மானசீக குரு ஆசார்யன். அதற்குப் பிறகு அந்த இல்லத்துக்கு  செல்ல ஏனோ கால் வரவில்லை.

நானும் அவரும் ஒன்றாக  எங்கள்  தெற்கு நங்கநல்லூர்  காலனிகள் பொது நல  சங்கத்திற்காகவும்,  திருமால் மருகன் ஆலய நற்பணிக் கமிட்டியில்  ஒன்றாக இணைந்து அநேக காலம்  பொதுப்பணியில் ஈடுபட்டதும்  நினைவுக்கு வருகிறது. 
மிகச்சிறந்த மனித நேயம் கொண்ட ஒருவர்  ஸ்ரீ ராதாகிருஷ்ணய்யா.  

ஒரே ஒரு வருத்தம்  அவரோடு  ஒரு படம் கூட எடுத்துக் கொள்ளவில்லை. அப்போதெல்லாம் கேமிரா எல்லோரிடமும் இருக்கவில்லை. படம் எடுத்துக் கொள்ளும்  வழக்கமும் இல்லாத  வாழ்க்கை. படம் எடுக்க  போட்டோகிராபரை தேடவேண்டும். ஒரு படம் ரெண்டுபடம் எடுத்தாலும்  காமிராவில்  படச்சுருள் முழுதும் படம்  பிடித்து முடித்த பின் தான் புகைப்பட சுருளை ஸ்டுடியோக்காரர்  இருட்டு அறையில்  காமிராவில் இருந்து பிரித்த்து டெவலப் செய்து   பிரிண்ட் போட்டு கொடுப்பார். சில நாட்கள், ஏன் வாரங்களே கூட ஆகிவிடும்.  ராதாகிருஷ்ணய்யாவின் படம் என்னிடம் இல்லாததற்கு  நான் தான் காரணம்.  

sivan jaykay

unread,
Aug 15, 2025, 8:04:56 PMAug 15
to amrith...@googlegroups.com
அனுபவம் தரும் உண்மை;  நங்கநல்லூர்  J K  SIVAN 
 
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறேன் பேர்வழி என்று  வாழ்க்கைத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால், தவறான ஆசைதான் அதிகமாகும். நிம்மதி தொலைந்து போகும். திருப்தி கானல் நீராகிவிடுகிறது.
எத்தனை சம்பாதித்தாலும் போதாமல் நாட்டின் வறுமைதான் மிஞ்சும்.   பணம் இருக்கிற  மேல் மட்டத்தில்   கூட ஏன் யாருமே  சந்தோஷமாக இல்லை? 
நற்குணங்களுடன் இறைபக்தியுடன் வாழும் வாழ்வே தரமான வாழ்க்கை.திருப்தி கொண்ட  மனதோடு இருப்பது.
மனதால் உயர்ந்த, உண்மையான வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதே  புத்திசாலித்தனம். 
ஆதி சங்கரர் உபதேசம் கொஞ்சம் கேட்டால் இது விளங்கும்;
 நம்மை நம் மனம் தான்  கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.  உருவமில்லாத  இந்த மனம்  கிங் காங் போன்ற  பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம்  அலைக்கழிக்கிறது, ஆட வைக்கிறது! மனதுடன் நடத்தும் போராட்டம் கடல் அலை போல்  ஓய்வதில்லை, ஒழிவதில்லை,.  ஜாக்ரதா எனும் விழிப்பு நிலையில் மட்டுமல்ல,   கனவு  நிலையிலும் கூட மனதின் போராட்டம் அப்பப்பா  என்ன வேகத்தோடு செயல்படுகிறது!. 
 அனைத்து சாஸ்திரங்களும், வேதநூல்களும் மனதை அடக்கு என்று திரும்ப திரும்ப சொல்கிறது. எப்படி? அது சொல்கிற படி  நம்மால் செய்ய முடியவில்லை. பகவான் தான் அருள் புரியவேண்டும். 

உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வளவு தான் அனுபவித்தாலும்  எவனாவது போதும் எனக்கு இனிமேல் வேண்டாம். திருப்தி யாக இருக்கிறது என்று சொன்னதுண்டா?.  காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய், தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாகக் கடித்து துன்பத்தை அடையும். அதுபோல் மனிதனும் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.

மேலே சொன்னதை இன்னொரு தரம் சொல்கிறேன்.  மனதில் தோன்றும் ஆசை, கனவு இன்பங்கள்,  வாழ்வில் உண்டாகும் இன்பங்கள் எல்லாமே  எலிக்கு பொறியில் வைக்கப்பட்ட மசால் வடை சமாச்சாரம். ஏமாற்றக்கூடியவை. நிரந்தரமானதல்ல.

ஒரு அப்பனுக்கு  அவன்  கடனைத் தீர்த்து வைப்பதற்கு பிள்ளைகள் இருக்கலாம்.  ஆனால் அறியாமைத் தளையை நீக்கி விடுவித்துக்கொள்ள  ஒவ்வொருவனும் அவனாகவே தான் முயலவேண்டும்.  வேறு எவரும் உதவ முடியாதே. 
 சிரத்தையும், பக்தியும், தியான  யோகமும் முக்திக்குக் காரணங்கள் என வேதம் கூறுகிறது. யார் இவைகளில் நிலை பெற்றிருக்கிறாரோ அவர்கள்  தான்  உலகத் தளைகளில் இருந்து  விடுபட்டு  முக்தி அடைகிறார்கள்.  முயலும் வரை நமக்கு இது எட்டாத உச்சாணிக்கிளை. 

ஒவ்வொரு நாளும் பகவானிடம்  சொல்வோம்;  ''அப்பனே, என்னைப் போல் பாவம் செய்தவன் வேறெவனும் இல்லை.  உன்னைப் போல் பாவத்தைப் போக்கும் சக்தி கொண்டவரும்  வேறு  இல்லை.  பகவானே, பகவதியே , என் நிலை கண்டு கருணை கொண்டு உன் இஷ்டம் போல செய். என்னை காப்பாற்று. ''

அரிது அரிது நமக்கு கிடைத்த இந்த மானிடப் பிறவி, ஞானத்தில் நாட்டம், மகான்களின் தொடர்பு இவை களும் அதோடு நமக்கு கிடைத்தால்  தெய்வத்தின் அருளால்  நாம்  முக்தி அடையலாம். நாம் செய்யும் நற்செய்கை களால்  மட்டும் இது சாத்தியம். 

ஆதி சங்கரரின் பஜகோவிந்தத்தில் ஒரு ஸ்லோகம்  '' பகவத் கீதையைச் சிறிதாவது படிப்பவன், கங்கை நீரை ஒரு துளியாவது பருகியவன், பகவானை  வேண்டி ஒருமுறை யாவது த்யானம் செய்தவன்... இப்படிப்பட்டவனுக்கு எம பயம் கிடையாது.
மீண்டும்    ஏற்கனவே சொன்னதையே சொல்கிறேன்;  நமது சுற்றம் உற்றார் உறவினர் நட்பு எல்லாமே   நம்மிடம் ஐவேஜி  இருக்கும் வரை தான் கண்ணில் படுவார்கள். அன்போடு இருப்பார்கள்.  நோயினால் தளர்ந்தபோன பின் ஒரு ஈ காக்கை கண்ணில் படாது. 
வெளிச்சம் தான்   இருட்டில் இருப்பதை காட்டும்.  அதுபோல உள்மனதில் தன்னைப் பற்றிய ஆத்ம விசாரம் துவங்கினாலொழிய  ஞானத்தை அடைய முடியாது. கண்ணாடி போன்ற தூய்மையான மனதில் ஞானம் தானாகவே விளங்கித் தோன்றும். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் மனதை பரிசுத்தமாக்குவதில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
அனலிலிட்ட   பொன்  அழுக்கு நீங்கி பிரகாசிப்பது போல், ஒரு குருவிடம் உபதேசம், கேள்வி முதலியவற்றைக் கற்றால், மனமும் அழுக்குகள் நீங்கப்பெற்று ஒளியுடன் பிரகாசிக்கும்.
பகலும், இரவும், மாலையும், காலையும் பருவகாலங்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு காலம் விளையாடுகிறது. வயது கழிகிறது. ஆனால்,   இதில் எந்த காலத்தில்  ஆசை மனிதனை விட்டு வைத்தது? 

ஒவ்வொருவரும் அவருடைய நிலைக்கேற்ப பணி செய்து, கிடைக்கின்ற பொருளில் மகிழ்ச்சியாக வாழ்தலே அறிவுடை மையாகும்.

எவரையுமே,  எதிரி, நண்பர், சொந்தம் சுற்றம் உறவு என்று  பிரித்துப் பார்க்காமல், சமமாக  பார்க்க வேண்டும்.முடியுமா பாருங்கள், இது முடிந்தால்  அடுத்த வகுப்புக்கு  ப்ரோமோஷன் உங்களுக்கு கிடைத்துவிட்டது. 

sivan jaykay

unread,
Aug 15, 2025, 8:04:56 PMAug 15
to amrith...@googlegroups.com
கைவல்யோபநிஷத் - நங்கநல்லூர்  J K  SIVAN
ஸ்லோகம்   6-10

6.  अचिन्त्यमव्यक्तमनन्तरूपं शिवं प्रशान्तममृतं ब्रह्मयोनिम् ।तथादिमध्यान्तविहीनमेकं विभुं चिदानन्दमरूपमद्भुतम् ॥६॥
acintyamavyaktamanantarūpaṃ śivaṃ praśāntamamṛtaṃ brahmayonim .tathādimadhyāntavihīnamekaṃ vibhuṃ cidānandamarūpamadbhutam 

நாம்   எதை அடைய வேண்டுகிறோமோ அதைப் பற்றி  தெரியுமா?  தெரியாதே. அது எண்ணத்தில் அடங்காததாயிற்றே, நினைத்துப்பார்க்கக்  கூட  முடியாதது,  தோற்றமில்லாதது, தோற்றத்தில் அடங்காதது, முடிவில்லாதது, பரிபூர்ண புனிதம் கொண்டது, அமைதியானது, அழிவற்றது,  பகவானையே உருவாக்கியது அல்லவா?  ஆரம்பமோ, நடுவோ, முடிவோ எதுவுமே இல்லாதது, எங்கும் நிறைந்தது, ஆனந்தமயமானது. அது தான்  உருவமற்ற, அருவமான ஆச்சர்யமான ப்ரம்மம். 

7.  उमासहायं परमेश्वरं प्रभुं त्रिलोचनं नीलकण्ठं प्रशान्तम् । ध्यात्वा मुनिर्गच्छति भूतयोनिं समस्तसाक्षिं तमसः परस्तात्
umāsahāyaṃ parameśvaraṃ prabhuṃ trilocanaṃ nīlakaṇṭhaṃ praśāntam .dhyātvā munirgacchati bhūtayoniṃ samastasākṣiṃ tamasaḥ parastāt ..

7. யாரை நினைத்து வணங்கி தொழுது அதைப் பெறமுடியும் என்றால், எவர் பரமேஸ்வரனோ, உமையொருபாகனோ,  சர்வ சக்திமானோ,  முக்கண்ணனோ, நீலகண்டமுடையவனோ, சாந்தஸ்வரூபனோ,  உலக   காரணனோ, சர்வ சகல சாக்ஷியாக உருப்பவனோ, இருளற்ற சதா ஞான ஒளியோடு கொடியவனோ  அது அந்த சதா சிவன் தான். 

8. स ब्रह्मा स शिवः सेन्द्रः सोऽक्षरः परमः स्वराट् । स एव विष्णुः स प्राणः स कालोऽग्निः स चन्द्रमाः ॥ ८॥
sa brahmā sa śivaḥ sendraḥ so’kṣaraḥ paramaḥ svarāṭ .sa eva viṣṇuḥ sa prāṇaḥ sa kālo’gniḥ sa candramāḥ .

அவரை நாம் பல நாமங்களில் வணங்குகிறோம், தியானிக்கிறோம், அவரே  பிராம்ம, அவரே சிவன், அவரே இந்திரன், அவரே மாற்றம் எதுவும் இல்லாதவர்,  சர்வேஸ்வரன்,  ஞானஒளிவீசுபவர், அவர் தான் விஷ்ணு.  சகல ஜீவர்களுக்கு  பிராணன் அவர் தான். காலம்,  அக்னி,சந்திரன் எல்லாம் அவரே. 

9.स एव सर्वं यद्भूतं यच्च भव्यं सनातनम् । ज्ञात्वा तं मृत्युमत्येति नान्यः पन्था विमुक्तये ॥ ९॥
sa eva sarvaṃ yadbhūtaṃ yacca bhavyaṃ sanātanam . jñātvā taṃ mṛtyumatyeti nānyaḥ panthā vimuktaye .. 9..

9.பிரபஞ்சம் தோன்ரும்முன்னே இருந்தவரும் அவரே, பிரபஞ்சம் தோன்றியபின் இருப்பவரும் அவரே, என்றும் பிரபஞ்சம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இருப்பவர் அவரே, சாஸ்வதமான அவருக்கு மரணம் என்று ஒன்று இல்லை, அவரை  போற்றி வணங்கி சரணடைந்தவர்களுக்கும் மரணமில்லை, இதை  விட வேறு வழி ஒன்றுமில்லை  மோக்ஷம் பெற. 

10 सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि । सम्पश्यन्ब्रह्म परमं याति नान्येन हेतुना ॥ १०॥
sarvabhūtasthamātmānaṃ sarvabhūtāni cātmani sampaśyanbrahma paramaṃ yāti nānyena hetunā .

தன்னைப் போல் பிற உயிர்களையும் நினைக்க வேண்டும். நமது ஆத்மா தான் எல்லா உயிர்களிலும் உள்ளது என்பதை எவர் உணர்ந்து அதை மறவாமல் கடைப்பிடிக்கிறாரோ, அவர்களே உன்னதமான பிரம்மத்தை அடைய தகுதி உள்ளவர்கள் ஆவார்கள். 

sivan jaykay

unread,
Aug 15, 2025, 8:04:56 PMAug 15
to amrith...@googlegroups.com
 
ஸூர்தாஸ் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

2.  கை தூக்கி  ஆள்பவன்.  

உண்மையான  பக்தன் மனதில்  ஊற்றாக பக்தி பெருகும்போது அதை வெளிப்படுத்த  அவனுக்கு தனியாக  ஒரு  குளுகுளுஅறை , நிறைய  பேனா, பேப்பர் வேண்டியதில்லை.  வயிறு நிறைய  ஆகாரம்  தாக  சாந்தி..... எதுவும் வேண்டாம்.  நினைத்த இடத்தில் அமர்ந்து அவன் கண்ணை மூடி வாய் திறந்தால்  மடை திறந்த வெள்ளமாக  பாடல்களும் பாசுரங்களும், பதிகங்களும் வெளி வருவதை பற்றி நாம் அறிவோம். எண்ணற்ற மஹநீயர்கள் நமக்கு அவ்வாறு வாரி வழங்கி இருக்கிறார்கள். நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் அவை. நாம் தான் அவற்றை தொட்டு பார்ப்பதுமில்லை, சீண்டுவதுமில்லை,   ஏன், அவை இருப்பதே தெரியாமல் கூட  வாழ்கிறோம் .

 சூர்  தாஸ் இப்படித்தான்  ஒரு மரத்தடியில் அமர்ந்து மனதில் தோன்றிய கற்பனை வளத்தை உபயோகித்து இட்டு கட்டு பண்ணி கிருஷ்ணன் வாழ்க்கை பற்றிய  சம்பவங்களை  பாடல்களாக  பாடினார்.ஒரே ஒரு  வித்யாசம்  அவர்  கண்ணை மூடிக்கொண்டு  பாடவில்லை, கண் பார்வை பிறவியிலிருந்தே கிடையாதே.  

அவர் பாடல்களைக் கேட்டு வருவோர் போவோர் கொடுத்த ஆகாரம் தான் ஜீவனம். அருகே ஒரு பெரிய ஏரி. பிருந்தாவனம் மதுரா போவோர்  செல்லும் வழி. அங்கே வந்து மரத்தடியில் தங்கி ஓய்வெடுப்பார்கள். அவர்கள்  பேச்சுகள்  மூலம் காதில் விழுவது தான்  கிருஷ்ணனைப் பற்றிய  செய்திகள், சரித்திரம், உலக ஞானம்.

பதினாலு வயதில்  ஸூர்தாஸுக்கு  அருள் வாக்கு  மாதிரி ஏதோ குறி சொல்ல வந்தது.   அவர் சொன்னது நடந்தது. ஊர் மக்கள் அவரை போற்றி பாதுகாத்தனர்.  கிருஷ்ணன் தன்னை நம்பினோரை ஏமாற்றுவானா?   அவருக்கு இப்படி ஒரு வழி காட்டினான்  . ''இவன் ஒரு அதிசய பையன்'' என்று  அந்த ஊரே நம்பியது. ஸூர்தாஸை பாதுகாத்தது.

அந்த ஊர் பஞ்சாயத்து தலைவனின் பிள்ளை  ஒரு சிறு பையன் ஒருநாள் வழி தவறி எங்கோ போய் விட்டான். பஞ்சாயத்து தலைவன்  திண்டாடுகிறான்.  ஸூர்தாஸிடம்  வந்து கேட்டான்.   அவர்  மனதில் தோன்றிய  ஏதோ ஒரு இடத்தின் பெயர் சொல்லி  'அங்கே போய் பார் உனக்காக உன் பிள்ளை அழுதுகொண்டிருப்பான்' என்று சொல்லி,   அந்த தலைவன் அங்கே சென்று பார்க்க  அந்த பையன்  அழுது கொண்டு நின்றான்.   அப்புறம் என்ன ? கிருஷ்ணன் அருளால்  ஸூர்  தாஸுக்கு ஒரு கூரை போட்ட ஆஸ்ரமம் கிடைத்தது.   ஊர்க்காரர்கள் ஒரு ஒற்றை கம்பியாலான   ''டொய்ங்   டொய்ங் ''  வாத்யம் ஒன்றை  ஸுர் தாஸிடம்   கொடுத்தார்கள். அதை உபயோகித்துக் கொண்டே ஏதோ ஒரு சுருதியில் அதை சேர்த்து,   அதோடு கூடவே கிருஷ்ணன் பாட்டுக்கள் பாடுவார் ஸூர்
தாஸ். நிறைய சிஷ்ய பிள்ளைகள் சேர்ந்தார்கள். அவர்கள் தான் ஸூர்  தாஸ் பாடப்  பாட  அவர் பாடலைகளை எழுதி வைத்தவர்கள்.  அதில் தான் நமக்கு  125000த்தில்  ஏதோ   8000 மிஞ்சியது  என்று சொன்னேன்.  அதில்  ஒரு  நூறாவது எனக்கு  ஆங்கில அர்த்தத்துடன் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக உங்களுக்கு எழுதுவேன்!!எல்லாம் கிருஷ்ணன் அருள்!

''ஸூர் தாஸ்,    இங்கிருந்து கிளம்பி நீ பிருந்தாவன் வா. நான் அங்கே உனக்காக காத்திருக்கிறேன்.'' ஒரு இரவு கண்ணன்  ஸூர் தாசை  அழைத்தான்.

''ஆஹா அப்படியே '' -- ஸூர் தாஸ் கிளம்ப சிஷ்யர்கள் வருந்தினார்கள். 
''ஏன் எங்களை விட்டு போகிறீர்கள். நாங்கள் என்ன தப்பு, அவமரியாதை செய்தோம்?''

''அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு பிருந்தாவனம் செல்ல வேண்டும். நடக்க ஆரம்பிக்கிறேன்''

 வழி யெல்லாம்  கண்ணனை பாடிக்கொண்டே செல்கிறார். இங்கேயே இருங்கள் என்று போகும் வழியெல்லாம் அழைப்பு. 

''நான் ஒரு பர தேசி. ஒரு இடத்திலும் நிற்காதவன்'' என்று ஒரே பதில் அனைவருக்கும் கிடைக்கிறது.  ஸூர்தாஸின் கால்கள் பிருந்தாவனத்தை நோக்கியே நகர்கின்றன. வழியே காட்டில் ஒரு பெரிய கிணறு. யாரும் இல்லாத இடம். கண்ணில்லாத ஸூர்தாஸை அந்த கிணறு விழுங்கியது. உடலில் காயம். எப்படி மேலே ஏறி வருவது? பசியோடு ஏழு நாள் கிணற்றில்.

''தாத்தா உன் கையை நீட்டு. மேலே இழுக்கிறேன்'' என்று ஒரு குரல்.

எங்கிருந்தோ அந்தப்பக்கம் வந்த ஒரு மாடு மேய்க்கும் பையன் குரல் காது அருகில் கேட்கிறது. அவன் கிணற்றில் இறங்கி உதவுகிறான்.  அப்புறம்  என்ன?  மேலே ஏற்றிவிட்ட பையன் ஏன் காணாமல் போய் விட்டான்? . கோபால கிருஷ்ணன் ஒரே இடத்தில் இருப்பவனா?  எங்கெல்லாமோ யாருக்கெல்லாமோ உதவ ஓடுபவ னாச்சே!  ஸூர்தாசுக்கு யாரோ ஒரு பையன் உதவினான் என்று தான் தெரியும். யார் என்றோ, அவன் வந்ததும் போனதும் தெரிய கண் இல்லையே.

ஒருநாள்  யாரோ ஒரு பக்தர்  ஸூர் தாஸிடம் ''ஸூர்தாஸ்,   விஷயம் தெரியுமா உங்களுக்கு? இன்று பிரபல கிருஷ்ண பக்தர் சுவாமி வல்லபாச்சாரியார் இந்த ஊர் வருகிறார்.''

''ஹாஹா....நான் அவரை சென்று நமஸ்காரம் பண்ண முடியுமா?''

ஸூர்தாஸ் எப்படியோ தட்டு தடுமாறி தன்னை சந்திக்க வரும் முன்பே வல்லபாச்சாரியார்,  ஸூர்தாஸை தேடி வந்து விட்டார். வல்லபாச்சார்யர் திருவடிகளை பிடித்துக்கொண்டு கதறுகிறார்  ஸூர்தாஸ்.

''ஸூர்தாஸ், நான் வந்ததே உங்கள் திவ்ய கிருஷ்ண கானத்தை கேட்கத்தான்''.  தொடர்ந்து வெகுநேரம் ஸூர் சாகர  சுனாமி அங்கே கான  வெள்ளமாக பெருகுகிறது.  
வல்லபாச்சார்யர் சில நாள் தங்கிய போது கிருஷ்ணனை பற்றிய சகல சரித்திரங்களையும் விஷயங்களையும்  அவர் மூலம் ஸூ ர்தாஸ் காதல் கேட்டு மனதி  இருத்தி வைத்துக் கொள்கிறார்.  அவ்வளவும் பாடல்களாகி  நமக்கு  கிடைத்துள்ளதே.

வல்லபாச்சாரியார் ஸூர்தாஸை பிருந்தாவனம் அழைத்துச்  செல்கிறார். பிருந்தாவனத்தில் கோவர்தன கிரிதாரி ஆலயத்தில்  ஸூர்தாஸ் ஆஸ்தான வித்துவான் ஆகிறார்.

தான்சேன் மூலம் சூர் தாஸ் கீர்த்தனங்களை கேட்ட அக்பர்  '' ஸூர்தாஸ் நீங்கள் எனது சாம்ராஜ்ய அரண்மனை  வந்து பாடுங்கள்'' என்று செய்தி அனுப்புகிறார்.  

''சக்ரவர்த்தி, என்மேல்  உங்களுக்கு இவ்வளவு அன்பா?. எனக்கு கிருஷ்ணனின் சமஸ்தானம் ஒன்றில் தான் பாட்டே வரும் '' என்று பதில் அனுப்புகிறார் ஸூர்தாஸ்.
அக்பர் நேரில் வந்து ஸூர்தாஸை ஆலயத்தில் சந்தித்து அவர் கிருஷ்ண கானாம்ருதத்தை கேட்டு மகிழ்கிறார்.
ஸூர்தாஸ் இயற்றிய கிருஷ்ண கான சமுத்திர அலை இன்னும் பல இல்லங்களில் ஒலித்துக் கொண்டிருக் கிறதே. தமிழ் நாட்டிலும்  பரவ வேண்டாமா?  நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பரப்புவோமா?  நான் எழுதுகிறேன். நீங்கள் பாடுங்கள், புத்தகமாக்குவோம், எல்லோரும் படிக்கட்டும்.  நமது கைகள் ஒன்று சேர்ந்தால் எதுவேண்டுமானாலும் நிறைவேறும்.

 

                                 

sivan jaykay

unread,
Aug 15, 2025, 8:04:56 PMAug 15
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K SIVAN
மஹா பெரியவாளிடம் நூறு கேள்விகள்

ஆஞ்சநேயர்

''என்னடா  யோசனை?''
''பெரியவா ஹநுமானைப் பத்தி அற்புதமா பேசியிருக்கிறதை உங்க வாயாலே கேட்கணும்னு ஒரு ஆசை''
''எனக்கு ஆஞ்சநேயனை ரொம்ப பிடிக்கும். அவர் மாதிரி இன்னொருத்தர் இல்லே.  கேளு சொல்றேன்; நான்  ஏற்கனவே சொன்னது தான் இது;

ஆஞ்சநேயர் பத்தி  ஒரு சின்ன ஸ்லோகத்தில் அவர் முழு ரூபமும் கிடைக்கும்; बुद्धिर्बला यशो धैर्यं निर्भयत्वं आरोग्यताम् अजाड्यं वाक् पटुत्वं च हनुमत् स्मरणात् भवेत्॥ புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதாம் அஜாட்யம் வாக் படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத்  பவேத்''
ரொம்ப நன்னா படிச்சிருப்பா. உடம்புலே பலம் இல்லே.  சோம்பியிருப்பான். எது வந்தாலும் எதிர்கொள்ள தைர்யம் இருக்காது.நல்ல தேகபலம். பலிஷ்டனா, நன்னா கொழுத்து இருப்பான்.ஆனா  பக்தி இருக்காது. முரட்டுத்தனம் கேட்ட வழியிலே போவான். ஞானமில்லாத மூடனா  இருப்பான்.

ஆஞ்சநேயர்  நவ வ்யாக்ரணமும் தெரிஞ்சவர். பண்டிதன்.அவரோட பேசறச்சே ஜாக்கிரதையா பேசுன்னு ராமர் கிட்டே வால்மீகியே சொல்றார்.தத்வ    ப்ரம்ம ஸாக்ஷாத்காரம் அறிஞ்சவர் .  கீதைக்கே  ஹனுமத் பாஷ்யம்  பைசாச பாஷ்யம்ன்னு பேரு .ஆதிகாலத்தலே ஆறு ப்ராகிருதத்திலே பைசாச்சி ன்னு ஒரு பிசாசுபாஷை. ஞானம், வித்யை, பலம், யஸஸ், வீர்யம்,விநயம்  பக்தி இதிலே  ஹனுமனை மிஞ்சி யாரும் இல்லே.

தமிழ் பேசற ஊர்லே  அவர் ஹனுமார். மஹாராஷ்ட்க்ரா, தெலுங்கு தேசத்திலே ஆஞ்சநேயன், ஆஞ்சநேயலு,  கன்னட தேசத்திலே ஹனுமந்த, ஹனுமந்தப்பா, மஹாராஷ்ட்ராலே,   அவர்  மாருதி.  அதைத்தாண்டி  சென்ட்ரல் ப்ராவின்ஸ், பஞ்சம் காஷ்மீர் பக்கம் போய்ட்டாஅவர்  மஹா பீர்.   பஜ்ரங், பலிஷ்டர் னு  பிரார்த்தனை பண்ணுவா. மஹா வீரன்னு அர்த்தம்.  

ஹநுமானைப் பத்தி தெரியுமோல்லியோ?  
''यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकांजलिम् बाष्पवारिपरिपूर्णालोचनं मारुतिं नमत राक्षसान्तकम् ॥

யத்ர  யத்ர ரகுநாத கீர்த்தனம், தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்சலிம்  பாஷ்பவாரி பரிபூர்ண லோச்சனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் னு அற்புதமான ஸ்லோகம் இருக்கே.   எங்கே  'ராமா''  ன்னு சின்ன பாட்டு, ப்ரசங்க  சப்தம் கேட்டாலும் போறும். எங்கிருந்தோ ஓடிவந்துடுவார். பெரிய கண்  நிறைய ஆனந்த கண்ணீரோட, கையை கூப்பிண்டு, அப்படியே  முடியாரவரைக்கும் கேட்டுண்டு சிலையா இருப்பார். அவ்வளோ ராம பக்தி, எல்லாத்திலேயும்  உச்ச நிலை. ,  

தக்ஷிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் பன்றார் என்கிறது மாதிரி  ஸ்ரீ  ராமர்  ஹநுமானுக்கு உபதேசம் பன்றார்.

वैदेहीसहितं सुदुमतले हैमे महामंटपेमध्ये पुष्पक आसने मणिमये वीरासने सुस्थितम् । अग्रेवाचयति प्रभजनसुते तत्वं मुनिभ्यःपरं व्याख्यान्तं भरतादिभिः परिवृतं रामभजे श्यामलम् ।।வைதேஹி சஹிதம், சுரத்ரு மதலே  ஹைமே  மஹா மண்டபே மத்யே  புஷ்பகமாஸனே மணிமயே  வீராசனே சுஸ்திதம்; அக்ரே வாசயதி  ப்ரபஞ்சன ஸுதே தத்வம் முனிப்ய பரம், வ்யாக்யாந்தம் பரதாதிபி; பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம் ''
எதுக்கு சொல்றேன்னா,  உபதேசம் யாராவது ஒருத்தருக்கு அவர் எதிரே அமர்ந்துண்டு அவரை பார்த்ததுண்டு தானே  பேசணும்.  இங்கே ராமர்  ஆஞ்சநேயருக்கு உபதேசம் பண்றார் .       தெலுங்குல  பெரிய  அத்வைத க்ரந்தம் ஒண்ணு  ''சீதாராம ஆஞ்சநேயம்''  னு இருக்கு  பக்கத்திலே  சீதா தேவிக்கும், ஆஞ்சநேயருக்கும்  ராமர்  உபதேசம் பண்றது.  
தமிழ் தேசத்திலே  அத்வைத க்ரந்தம் ''கைவல்ய நவநீதம்'' னு இருக்கறாப்பல வடக்கே  விசார சாகரம், பக்தி ப்ரபோதனம்னு அத்வைத  க்ரந்தங்கள் இருக்கு. தெலுங்குல அது மாதிரி தான் சீதாராம ஆஞ் சநேயம்  யோகம்  ஞானம் ரெண்டு பத்தியும் சொல்றது. சகலத்திலேயும் நிறைஞ்சு இருக்கிறவர்  ஆஞ்சனேயஸ்வாமி. உத்தம  உன்னத ப்ரம்மச்சரியம். ஒரு க்ஷணம் கூட ஸ்த்ரீ புருஷாள் காமம் இச்சைங்கிற  ஞாபகமே கூட  கிட்ட வராத சர்வ ஸாஸ்த்ர ஞானி.

அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை நினைச்ச மாத்திரத்திலேயே நமக்கு தைர்யம் வரும். பயம்  நிவர்த்தியாகும். பக்தி பெருகும்.ஞானம் வரும். வித்யை வந்து சேரும். அவ்வளவு பெரிய மஹா புருஷன் ஆஞ்சநேயர். ஆகவே அவரை  நினைச்சாலே, ஸ்மரணம் பண்ணினாலே,   நமக்கு  ,பலம், தைர்யம்,  வியாதி நெருங்காது,  ஞானம், பக்தி கிடைக்கும்.  பயம் போயிடும்,  ஜாட்யம் என்கிற  மந்த புத்தி, சோம்பேறித்தனம் அழியும், வாக் சாதுர்யம் கிட்டும், ஆகவே  எல்லோரும் ஹனுமனை பிரார்த்தனை பண்ணினா, சகல சாஸ்த்ர  ஸம்பத்தோடு மேலே சொன்னதெல்லாம் கிட்டி,  சௌக்யமா இருக்க  அவர் அனுக்ரஹம் பண்ணுவார். ஆஞ்சநேய ஸ்வாமிக்கி  ஜெய் .''

sivan jaykay

unread,
Aug 15, 2025, 8:04:56 PMAug 15
to amrith...@googlegroups.com
மஹா  பெரியவாவுக்கு  இன்னொரு  பெரியவா       --- நங்கநல்லூர்  J.K. SIVAN

மஹா பெரியவா  உங்கள் எல்லோருக்கும் தெரியும்.  காஞ்சி பெரிவா , பெரியவா,  பெரிய பெரியவா, பரமாச்சார்யா, உம்மாச்சி தாத்தா, தாத்தா உம்மாச்சி.... எவ்வளவோ பேர் அவருக்கு.  இந்த மஹா பெரியவா ரொம்ப  மரியாதையோடு இன்னொருத்தரை  ''பெரியவா'' என்று தான் சொல்வார். அவரைப் பற்றி தான் இந்த கட்டுரை. 

நாம் ஒருவரை ''பெரியவாள்’ என சொல்வதானால் அவர் வித்வத்திலும், அன்பிலும், பண்பிலும் தெய்வீகத்திலும், ஆன்மீகத்திலும் தவத்திலும் தியானத்திலும் சிறந்தவராக இருக்கவேண்டும். இதெல்லாமும் தவிர, இன்னமும் இன்னமும் கூட அதிகமாகவும் இருப்பதால் தான் நாம் காஞ்சி முனிவரை '' மஹா பெரியவா '' என்கிறோம். அவரே இன்னொருவரை ''மன்னார்குடி பெரியவா'' என்று சொல்லும்போது எவ்வளவு மரியாதைக்குறியவர்  மன்னார்குடி ஸ்ரீ ராஜு சாஸ்திரிகள்.  

மன்னார்குடி மஹா மஹோபாத்யாய தியாகராஜ மஹி ராஜு சாஸ்திரிகள் ( 28.5.1815- 4.3.1903)  பாரத்வாஜ   வம்ச ஒரு வேத வியாசர்.  அடையபலம் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் குடும்பம். திருவாரூர் கூத்தம்பாடி கிராமத்தில் பிறந்தவர். அம்மா மரகதவல்லி ஜானகி அம்மாள் அப்பா மார்க்க ஸஹாய அப்பா தீக்ஷிதர்.   மன்னார்குடியில் முதல் அக்ரஹாரத்தில் குருகுலம் அமைத்து ஆயிரக்கணக்கான வித்யார்த்திகளுக்கு வேத சாஸ்திரம், அனுஷ்டானம் கிரந்தம் எல்லாம் கற்பித்தார். வெளி மாநிலங்களி ருந்தெல்லாம் மாணவர்கள் வந்து கற்றார்கள். அனைவருக்கும்  அன்னதானம், வஸ்திரதானம் அளிக்க  அநேகர் உதவி னார்கள்.  ராஜு சாஸ்திரிகள் பாடம் கற்பிப்பதில் ரொம்ப  ஸ்ட்ரிக்ட் . கண்டிப்பு.  கோபிப்பார். அதே சமயம் புரியவில்லை என்றால்  திரும்ப திரும்ப சொல்லித் தருவார்.

தினமும்   வடக்கே நடந்து கைலாசநாதர் கோவில் அருகே தான் காவேரி ஸ்நானம். சிஷ்யர்கள் தெற்கே மீனாட்சி அம்மன் ஆலய படித்துறையில் ஸ்னானம் செய்வார்கள்.  ஒரு  சிஷ்யன் தான் பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள்.  அவர்  ஒரு  தடவை தர்க்கத்தில் விடை சொன்னதை   ராஜு சாஸ்திரிகள் அவமரியாதை, கர்வம் என்று எடுத்துக்கொண்டு தண்டிக்க  குருகுலத்தை விட்டு அனுப்பிவிட்டார். கிருஷ்ண சாஸ்திரி வெளியே சென்று ராமாயண ப்ரவசனங்கள் நடத்தினார்.

இதர சிஷ்யர்கள் மூலம் கிருஷ்ணசாஸ்திரியின் பிரசங்கங்கள் நன்றாக இருப்பதைக் கேள்விப்பட்டு தனது சிஷ்யனின் பிரசங்கத்தை நேரில் சென்று கேட்டு  ராஜூ சாஸ்திரிகள்  மகிழ்ந்தார். ராமனின் கல்யாண குணங்களை பற்றி பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் கடல் மடை திறந்தாற்போல் பேசிக்கொண்டிருந்தார். அன்று ''ராமனின் பொறுமை'' பற்றி பிரசங்கம். ''என் கண்ணைத்  திறந்துவிட்டது கிருஷ்ணன் பேச்சு '' என்று அதிசயித்தார் மன்னார்குடி பெரியவா. பிரசங்கம் முடிந்து கிருஷ்ணசாஸ்திரிகள் தனது குருவந்திருந்ததை அறிந்து அவரை நமஸ்கரித்து பவ்யமாக கைகட்டி நின்றார்.

''அப்பா கிருஷ்ணா, இன்னிக்கு நீ  என் கண்ணை திறந்துட்டே. அடடா ஸ்ரீ ராமனின் கல்யாணகுணங்களை பத்தி நீ பேசினது அற்புதம். அதுவும் பொறுமையைப் பத்தி . அபாரம். நீ ஒரு மஹாநுபாவன். எத்தனையோ ஜனங்களுக்கு நீ உன்னதமான சந்தோஷத்தைத்  தரப்போறே. நாளையிலேர்ந்து  நீ மறுபடியும் வா. நான் உனக்கு நிறைய இன்னும் சொல்லித்தரணும்''

இந்த நிகழ்ச்சி  மன்னார்குடி பெரியவாளை மாற்றி அவரிடம் இருந்த கோபம் மாயமாக மறைந்து விட்டது.  அவரை இரக்க
 குணம், அமைதி, பொறுமை உள்ளவராக்கி விட்டது..

1864ல் அப்பாவுக்கு சோமயாகம் பண்ணினார். அப்பா சொல்படி அப்பாவின் சகோதரர் அப்பய்ய தீக்ஷிதர் பிள்ளை நீலகண்ட சாஸ்திரியை தத்து எடுத்துக்கொண்டார். இருவருமாக  குருகுலம்  நிர்வாகம் செய்தார்கள். . பல சந்யாசிகள் கூட வந்து மாணவர்களாக சேர்ந்து வேத சாஸ்திரம் கற்றார்கள். அந்த குருகுலம் பிற்காலத்தில் சங்கரமடமாகியது. இதற்கு தவியவர் வேறு யாருமில்லை. நமது மஹா பெரியவா பரமாச்சாரியார் தான். அந்த குருகுலத்தில் உருவான மஹான்கள் சிலர் பெயர்களை சொல்கிறேன்:

பைங்காநாடு கணபதி சாஸ்திரி, நடுக்காவேரி ஸ்ரீனிவாச சாஸ்திரி, பழமானேரி சுந்தர சாஸ்திரி, கோஷ்டிபுரம் ஹரிஹர சாஸ்திரி, திருப்பதி வேங்கடசுப்ரமண்ய சாஸ்திரி. மல்லாரி ராமகிருஷ்ண சாஸ்திரி, பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி, காசி ப்ரஹ்மானந்த ஸ்வாமிகள், பாலக்ரிஷ்ணானந்த ஸ்வாமிகள், ராமக்ரிஷ்ணானந்த ஸ்வாமிகள், மஹாதேவ ஸ்வாமிகள், தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள், மகாராஷ்டிரா ஸ்வாமிகள், சச்சிதானந்த ஸ்வாமிகள் , தென்னாங்குளம் வைஷ்ணவ, நீலகண்ட சாஸ்திரி, யஞஸ்வாமி சாஸ்திரி, சுத்தமல்லி ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள் யதீந்திராள்.   இவர்களில்  யாரையாவது விவரமாக உங்களுக்கு தெரிந்தால்,  யாருடைய  உறவினராக, அந்த சந்ததியாக இருந்தால், நீங்கள்   அவர்களைப்  பற்றிய  முழு விவரங்கள் எனக்கு அனுப்பினால்  எல்லோருதானும் சேர்ந்து அனுபவிக்கலாம்.  எல்லோரும்  இந்த  மகான்களை அறியவேண்டாமா?

மன்னார்குடி பெரியவா தனது  தாத்தாவிடம் சாமவேதம் கற்றார். அப்பாவிடம் காவ்யம், நாடகம் எல்லாம் கற்றார். பதினைந்து வயதில் ஸம்ஸ்க்ரிதத்தில் எழுத, படிக்க, பேச, கவிகள் இயற்ற திறமை பெற்றார். ஸ்ரீ நாராயண சரஸ்வதியிடம் மேற்படிப்பு. ஸ்வயம்பிரகாச யதி களிடம் வேதாந்தம். மேல காவேரி சின்னண்ணா தீக்ஷிதரிடம் மஹா பாஷ்யம் கும்ப கோணம் ஸ்ரீ ரகுநாத சாஸ்திரிகளிடம் மீமாம்சம் பாடம் பெற்றார்.

1887ல் பிரிட்டிஷ் ராணி விக்டோரியாவின் தங்கவிழா. மஹாமஹோபாத்யாய பட்டம் கொடுக்க ராஜு சாஸ்திரிகள் பேர் தேர்வு ஆனது. டில்லிக்கு கூப்பிட்டார்கள். தனது நித்ய கர்மாநுஷ்டானம், பூஜைகள் எக்காரணம் கொண்டும் தடை படக்கூடாது என்று ''டெல்லி எல்லாம் நான் போகமாட்டேன் எனக்கு பட்டம் வேண்டாம்''  என்று சொல்லிவிட்டார்.   இந்திய கவர்னர் ஜெனெரல் தஞ்சாவூர் கலெக்டரை அழைத்து அவர் நேரில் வீட்டுக்கே  வந்து பட்டத்தை அளித்ததால் பெற்றுக் கொண்டார்.
மஹா பெரியவா கூட்டிய அத்வைத மாநாடுகள், சபைகளில் பிரதம பண்டிதராக பங்கேற்றவர் மன்னார்குடி பெரியவா.

ராஜு சாஸ்திரிகள் 30 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். பல ஆசிரியர்களுக்கு தனது அனுபவங்களை கொடுத்திருக்கிறார். வேத சாஸ்த்ர , ஹிந்து நீதி நெறி விஷயங்களில் வழி காட்டியாக இருந்திருக்கிறார்.அவர் எழுதிய நூல்களின் பெயர்கள்:
சத் வித்யா விலாசம், வேதாந்த வாத சங்கிரஹம் , உபாதிவிசாரம், ப்ரம்ம வித்யா தரங்கிணி வியாக்யானம், நியாயேது சேகரம், அத்வைத  சித்தி, சாம ருத்ர சம்ஹிதா பாஷ்யம், சிவா தத்வ விவேக தீபிகா, சிவ மஹிமா விவேக தீபிகா, ஸ்துதி சிவ மஹிமா ஸ்துதி வ்யாக்யானம், புருஷார்த்த ப்ரபோத ஸங்க்ரஹம், துர்ஜனோக்தி நிராசம், காவேரி நவரத்னமாலிகா, தியாகராஜஸ்த்வம் , தாம்ரபரணீஸ்த்வம், காவேரிஸ்த்வம், தீக்ஷித நவ ரத்னமாலிகா, தீக்ஷிதவம்சாபரணம் .

அவருடைய சிஷ்யர்கள் பைங்காநாடு கணபதி சாஸ்திரி, பருத்தியூர் கிருஷ்ணசாஸ்திரிகள் ஆகியோர் தங்கள் குருவை பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்.

காலம் சென்றது. விருத்யாப்பியம் மன்னார்குடி பெரியவாளையும் விடவில்லை. 1903ல் 88 வயது. உடம்பு ரொம்ப க்ஷீணமாகிவிட்டது. சுயமாக எழுந்திருக்க நடக்க முடியாத நிலை. அவர் மருமகள் அவரை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாள் .
''எனக்கு பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி ப்ரவசனங்களை கேட்கவேண்டும் போல் இருக்கிறதே'' என்றார். செய்தி கிருஷ்ண சாஸ்திரியை எட்டியது. எவ்வளவு குரு பக்தி ஸ்ரத்தையான சிஷ்யன் பாருங்கள், கிருஷ்ண சாஸ்திரிகள் .  உடனே புயலாக மன்னார்குடி ஓடினார். சில  மாதங்கள் அங்கேயே தங்கி குருவுக்கு முன்னால் அமர்ந்து பிரத்யேகமாக அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும்  நண்பர்கள், சிஷ்யர்களுக்கும்  மட்டுமாக அவருக்கு பிடித்த ராமாயண ப்ரவசனங்கள் புரிந்தார். மன்னார்குடி பெரியவாளுக்கு பரம சந்தோஷம்.  மனப்பூர்வமாக ஆசிர்வதித்தார்.

மன்னார்குடி பெரியவா, மார்ச் 4, 1903அன்று 88 வயதில் விதேக முக்தி அடைந்தார். நாடு நகரம் முழுதும் அவரது மறைவுக்கு வருந்தியது.
எனக்கு ஒரு அதிர்ஷ்டம் கிட்டியது.  நான்  ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்  தமிழில் விளக்கம் எழுதும்போது  ஒரு அபூர்வ மனிதர் நண்பராக கிடைத்தார். ஸ்ரீ சுந்தரராமமூர்த்தி, பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகளின் கொள்ளு பேரன், அப்போது  அவருக்கு 76-77 வயது. ( இப்போது  அவர் இல்லை).  நங்கநல்லூர்  அருகே நன்மங்கலம் எனும்  ஊரில்  அவரது ஒரு மகன் வசிக்கும் வீட்டுக்கு வரும்போது  மூன்று முறை நேரில் சென்று பார்த்தேன்.  என் புத்தங்களை விரும்பி பெற்றுக்கொண்டார்.  சிறந்த  சமஸ்க்ரித விற்பன்னர், தங்க மெடல், கோப்பைகள் பெற்றவர். பருத்தியூர் வம்சமாயிற்றே.  ஸ்ரீ வித்யா உபாசகர், 45-50 வருஷங்களாக தினமும் லலிதா ஸஹஸ்ரநாம பூஜை, நவாவரண பூஜை செய்பவர்.   ஒவ்வொருநாளும்  நித்ய  பூஜை பாராயணத்துக்கு  குறைந்தது  கிட்டத் தட்ட ஆறு ஏழு மணி நேரம்ஆகும்.  பம்பாயில்   ஒரு கம்பெனியில் உத்யோகம் பார்த்தவர். பருத்தியூர்   கிருஷ்ண சாஸ்திரிகள் எழுதிய - விஸ்வாமித்ர  ரிஷி  ''ராமன் யார்  தெரியுமா  தசரதா,  நீ நினைக்கிறது போல்  சாதாரணன் அல்ல,  அவன் யார் என்று உனக்கு தெரியாது.  நான் அறிவேன் '' என்று நூறு  உதாரணம் காட்டும் சின்ன புஸ்தகம்.  ''ரஸ  நிஷ்யந்தினி '' . அதை ஏற்கனவே  எழுதி இருக்கிறேன். வேண்டுமானால் இன்னொருமுறை அதை அளிக்கிறேன்.

 

sivan jaykay

unread,
Aug 15, 2025, 8:04:56 PMAug 15
to amrith...@googlegroups.com
கொல்லூர் மூகாம்பிகை.-   நங்கநல்லூர்  J K  SIVAN 

இன்று கடைசி ஆடி வெள்ளி. அம்பாளுக்கு உகந்த நாள்.  பாரத தேசம் சுதந்திரம்  பெற்று 79வருஷ ஆரம்பம். என் தந்தையாரின் ச்ராத்தம். இந்த மூன்றையும் நான் இன்று   பொறுப்பாக  பங்கேற்று என் கடமையை புரிந்தேன்.  பாரத தாய்க்கு மனதார என் நமஸ்காரங்களை செலுத்தி அவளுக்கு நாம் சத் புத்ரர்களாக செய்யவேண்டியதை ஒரு கட்டுரையாக வெளியிட்டேன். என் தந்தைக்கு  பக்தி சிரத்தையாக ஸ்ராத்தம் செய்தேன் .  கடைசி ஆடி வெள்ளி ஆகிய இன்று  தாய் மூகாம்பிகை பற்றி சில விஷயங்களை இதோ பகிர்கிறேன். 

மிகவும்  சக்தி வாய்ந்த அம்பாள் மூகாம்பிகையை தரிசிக்காத ஹிந்துக்கள்  இல்லை எனும் ஆளாளுக்கு எண்ணற்றோர்  கர்நாடகாவில் உள்ள  கொல்லூர்  க்ஷேத்ரம் சென்று அவளை தரிசிக்கிறார்கள்.   சிவனிடம்  வரம்பெற்ற  கௌமாசுரன் எல்லோரையும் துன்புறுத்தி  வந்தான். அவர்கள் துன்பம் தவிர்க்க  அசுரகுரு சுக்ராச்சாரியார் அவன் ஒரு பெண்ணால் கொல்லப்படுவான் என்று கூறுகிறார். பார்வதி தேவியே  பெண்ணாக இதற்கென தோன்றுவாள் என்று சொல்கிறார். அசுரன் மிகவும் கடினமாக தவமிருந்து வரம் பெறும்  நிலையில் அம்பாளுக்கு தெரிகிறது  ''ஆஹா   இந்த அசுரன் வரம்  கேட்டு பெற்றால் உலகத்துக்கு நாசம்'' என்று.  எனவே  தவப்பயனாக சிவன் தோன்றி வரமளிக்கும் சமயம் அம்பாள் கௌமாசுரனை  பேச்சற்ற ஊமையாக்குகிறாள்.  மூகம் என்பது பேசாமை. ஊமை. அம்பாள் சக்தியால் கௌமாசுரன் மூகாசுரன்  ஆகிவிட்டான். கொல்லூரில்  அம்பாள் அவனை கொல்கிறாள் மூகாம்பிகை என்று எல்லோராலும் வணங்கப்படுகிறாள். அந்த இடத்திற்கு  ''மரண கட்டே'' என்று கன்னடத்தில் பெயர்.  அம்பிகைக்கு இங்கே  சங்கு சக்கரம் கைகளில் உண்டு.  பத்மாசனத்தில் அமர்ந்த கோலம்.

கொல்லூர் சிவன் ஸ்வயம்பு லிங்கம். சிவனோடு சேர்ந்த சக்தி என்பதால் கொல்லூர் தேவி அபார சக்தி படைத்தவள்.  இன்னொரு விசேஷம் இங்கே என்ன தெரியுமா?  அம்பாளுடன்  ப்ரம்ம விஷ்ணு சிவன், லட்சுமி சரஸ்வதி பார்வதி சக்தியும் சேர்ந்துள்ளது.  ஆதி சங்கரர் ஸ்தாபித்த சக்தி பஞ்சலோக அம்பாள்  இங்கே உள்ளாள்.  ஆதி சங்கரர்  சௌபர்ணிகா நதியின் கரையில் யந்த்ரம்  பிரதிஷ்டை செய்து  ஸ்தாபித்து  அம்பாளின் சர்வ சக்தி அங்கே வியாபித்து இருக்கிறது என்று நம்பிக்கை. 

1200 வருஷ கோவில் இது.  ராணி சென்னம்மா கட்டினது . ஆலயத்தில்  அம்பாள் சந்நிதி தவிர  லக்ஷ்மி  மண்டபம்  நான்கு   ஸ்தம்பங்கள் (135  அடி )  கொண்ட நீளமான மண்டபம். தூண்களில் சிற்பங்கள் ஏராளம்.  ஆமை முதுகில் நிற்பது போல் ஒரு உயர தீபஸ்தம்பம். 21 வட்டங்கள் கொண்டது.

வெளிப்பிரகாரத்தில்  முருகன், சரஸ்வதி,  ப்ராணலிங்கேஸ்வரர், ப்ராணதார்த்தீஸ்வரர் , வீரபத்திரன்  ஆகியோருக்கு சந்நிதிகள் . 

உடுப்பியிலிருந்து 73 கி.மீ.   முருதேஸ்வரிலிருந்து 60 கி.மீ.     மங்களூரிலிருந்து 133 கி.மீ.  குடஜாத்ரி மலைச்சிகர கோவில் . பரசுராமர் ஸ்தாபித்த  7 முக்தி ஸ்தலங்களில்  இது ஒன்று.  நிறைய பேரை நான்  கர்நாடக பக்தி புனிதப்பயணத்தில் அழைத்து சென்றிருக்கிறேன்.  தமிழக முன்னாள் முதல்வர்  எம்.ஜீ ஆர்.   மூகாம்பிகை பக்தர்.  ஒரு சமயம்  ஒரு  தங்க வாள் அம்பாளுக்கு சாற்றி இருக்கிறார்.

கோவிலுக்கு அருகே  செல்லலும் சௌபர்ணிகா நதியின்  ஜலம் பல மொழிகளின் சக்தி கொண்டது.  சர்வ வியாதி நிவாரண குணம் உடையது.  அதில் ஸ்னானம் பண்ணி  வியாதி குணமானவர்கள் அநேகம். 
எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்துபவள்  கொல்லூர் அம்பாள் மூகாம்பிகை;  ஒரு சிலவற்றை கோடிட்டு காட்டுகிறேன்;

ஒரு பக்தர், மிகவும் ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள்  “இனி எதுவும் செய்ய முடியாது” என்று கைவிட்டுவிட்டார்.  குடும்பம் கொல்லூர் ஓடியது.   மூகாம்பிகை அம்மன் முன் தீபம் ஏற்றி, “உயிரை காப்பாற்றுங்கள்” வியாதியஸ்தர் பிரார்த்திக்க,  அன்று இரவே  அம்பாள் கனவில்  தோன்றி,  ''சௌபர்ணிகா நதியில் குளித்து, கோவிலில் கிடைக்கும் கஷாய ப்ரசாதம் குடி '' என்றாள் .  மறுநாளே  அம்பாள் சொல்படி செய்ய  சில நாட்களில்  நோயாளி முற்றிலும் குணமடைந்தார்.

மஹா லக்ஷ்மி என்ற பெண்ணுக்கு  பல வருஷங்களாக பிள்ளைப்பேறு பாக்யம் இல்லை.  கணவருடன் கோல்லூர் வந்து, 41 நாட்கள் “மஹாத்ரிபுரசுந்தரி மந்திரம்” ஜபம் செய்து, தினமும் அம்மனுக்கு மலர் அர்ச்சனை செய்தார். அம்பாள்  கனவில் தோன்றி, “உன் கர்ப்பம் விரைவில் நிறைவேறும்” என்று அருளுரை கூறினாள்.  அந்த பெண் அந்த  முடிவுக்குள்ளேயே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். அப்புறம் வருஷா வருஷம் குழந்தையோடு அம்பாளை தரிசித்தார். 

ஒரு சிறுவன்  பிறவி  ஊமையாக  இருந்து  மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்கவில்லை.   மூகாம்பிகையிடம் வந்தார்கள் . அம்மா கை  விடுவாளா ?  அம்பாளுக்க்கு  அர்ச்சனை முடிந்தது.  கோவில் பிரசாதம் பையனுக்கு கொடுத்து குடி என்கிறார் அர்ச்சகர்.  அந்த பையன்  முதல் வார்த்தை பேசினான்.   "அம்மா" . அவன் அம்மாவையும் அம்பாளையும் அல்லவா கூப்பிட்டிருக்கிறான். 

குண்டபுரம் அருகே உள்ள சில மீனவர்கள், கட்டுமரத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது பெரிய புயல் அடித்தது. படகுகள் மூழ்கும் நிலையில் இருந்தது. அவர்களில் ஒருவன் மனதில் “மூகாம்பிகை தாயே, எங்களை காப்பாற்று” என்று பிரார்த்தித்தான்.   அதிசயமாக, புயல் திடீரென அமைதியாகி, அவர்கள் பாதுகாப்பாக கரைக்கு வந்தனர்.  இன்றும் அந்த கிராமத்தார்கள்  கொல்லூர் மூகாம்பிகைக்கு  விசேஷ பூஜை செயகிறார்கள். 
கடவுளை நம்பினோர் கை விடப்படார் என்பது எவ்வளவு நூற்றுக்கு ஆயிரம் மடங்கு சத்தியமான  வாக்கியம்.

 

sivan jaykay

unread,
Aug 15, 2025, 8:04:56 PMAug 15
to amrith...@googlegroups.com

  நாரதரைத் தெரியுமா?   நங்கநல்லூர்  J K   SIVAN 

 

''எல்லாம்  அந்த  கோண்டு  பயலாலே. சரியான  நாரதர்  அவன்''.  நாரதர்  என்றாலே  கலகம்  செய்பவர்.  நட்பைக்  கலைத்து  விரோதம் மூட்டுபவர்  என்று தான் நம் காது பட பலர் சொல்கிறார்கள்.  நாரதர் திரிலோக சஞ்சாரி. வைகுண்டம்  கைலாசம், மற்றும்  விண்ணுலகத் தில்  ''சற்று முன் வெளியான''  செய்தி  அப்பப்போ சொல்பவர்.  சிறந்த  முதன்மையான  விஷ்ணு பக்தர். உண்மையில் நாரதர் பற்றி  என்னதான் விஷயம் என்று ஏன் நாம்  அறிய முற்படவில்லை. யார் அந்த ஸார் நாரதர்?

 

நாரதர் அநேகமாக  எல்லா புராணங்களிலும்  பாரதம், ராமாயணம் போன்ற  இதிகாசங்களிலும், பாகவதத்திலும்  பவனி வருபவர். நீதி நெறிகளை  கதையாக  சொல்பவர். அவர் இல்லாத  இடமே கிடையாது. பகவானின் பல அவதாரங்களில் கூடவே இருப்பவர்.  ரிஷிகளில் முதன்மை ஸ்தானம் வகிப்பவர். கையில் மஹதி என்ற  வீணையை வைத்துக் கொண்டு   ஹரிநாமம் பாடும்   சங்கீத ஞானி. 

 

''நாராயணா'' என்று சதா சொல்லிக்கொண்டே  திரிபவர். சினிமாக்களில் கூட  தலையில் ஜடையை மேலே தூக்கிக் கட்டி முடித்துக்  கொண்டு  கையில் தம்புராவுடன் நெற்றியில் நாமத்துடன் ஹரிநாமம் பாடிக் கொண்டே விண்ணில் பறந்து வருவதாக தான்  நாரதரை நாம் பார்க்கிறோம்.  MSS  அம்மா கூட  'சகுந்தலை' யில்  நாரதர்  வேடம் போட்டு படம் சக்கை போடு போட்டது.  பாலமுரளி கிருஷ்ணா  தெலுங்கு தமிழ் படம் பக்த ப்ரஹலாதாவில் நாரதராக  வந்து அருமையாக  பாடியிருக்கிறார்.  

 

நாரதர்  சர்வஞர். சாதுர்யமாக  பேசுபவர்.சகல வேதம் உபநிஷத்துகள் கரைத்துக் குடித்தவர். மகரிஷி சனத் குமாரரிடம் ப்ரம்ம வித்யை கற்றவர்.   வால்மீகிக்கு ''மரா மரா''  என்று  சொல்லவைத்தே, ராமநாமம் சொல்லி  ராமாயணம் எழுத வைத்தவர் நாரதர்.  

 

தக்க சமயத்தில் உண்மையை  போட்டுடைத்து ரஹஸ்யத்தை காலி  செய்து எல்லோருக்கும் கலக்கம் உண்டாக்கி  பாத்ரூம் ஓட வைப்பதில்  நாரதர் வல்லவர். அவரை  ஒரு வில்லனாக  தப்பாக  காட்டுவது தவறு.  நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் என்று எல்லோரும் சொல்வதுண்டு.  கட்டுரை ஆரம்பத்தில் சொன்ன  கோண்டு மாதிரி இல்லை நாரதர்.  அவன் விஷமி.

 

நாரதருக்கு என்று கோவில்கள் இல்லை. சிலையும் கோவில்களில் இல்லை. கர்நாடகாவில்  நாரத முனி கோவில் ஒன்று சிகதேரி என்ற ஊரில்  கர்நாடகாவில் இருக்கிறதாம். நான் சென்று  இன்னும்  தரிசிக்க வில்லை


பாகவத  புராணம்  என்ன சொல்கிறது என்றால்: 

 நாரதர்  முற்பிறவியில் ஒரு கந்தர்வ பாடகர்.  பகவானைப் பாடாமல்  உபதேவதைகளைப் பாடியதால் சாபம் பெற்று    முனிவர்களுக்கு  பணிவிடை செய்யும்  பெண்மணியின் மகனாக பிறந்து  அந்த முனிவர்கள் மகிழ்ந்து அளித்த விஷ்ணு ப்ரசாதத்திலும்  ஆசியிலும்  வளர்ந்தவர். நாராயணனைப் பற்றி அறிந்து மகிழ்ந்து தவம் இருந்தவர்.  விஷ்ணு ப்ரத்யக்ஷமாகி  ''அடுத்த பிறவியில் நீ என்னோடு'' என்று வரமளித்தார்''. 


நாரதர்  விஷ்ணுவுக்கே  சாபம் இட்டிருக்கிறார் என்று ஒரு கதை.  

பரமேஸ்வரன் ஒருமுறை  '' நாரதா, நீ  தபோவனம் செல். அங்கே  யார் இடையூறும் இல்லாமல் நீ தவம் செய்யலாம்'' என்று அனுப்பினார்.  நாரதர் தவவலிமை தன்னை பாதிக்குமோ என்று அஞ்சி இந்திரன்  வருணன் அக்னி, வாயு ஆகியோரை நாரதர்   தவத்தைக் கலைக்க அனுப்பி  அவர்கள் தோற்று, மன்மதனை அனுப்பினான். தவம் வெற்றிகரமாக முடித்த பின் நாரதர்  கைலாசம் சென்று சிவனிடம் தான் எப்படி இந்திரன் அனுப்பிய  தேவர்களை தோற்கச் செய்தார் என்று சொல்கிறார். 


 ''நாரதா இதெல்லாம் போய் நீ விஷ்ணுவிடம் சொல்லவேண்டாம்'' என்று பரமேஸ்வரன் அறிவுறுத்துகிறார்.அதையும் மீறி  விஷ்ணுவிடம் தன் தவவலிமை பற்றி நாரதர் சொல்ல, ''நாரதா  ரொம்ப  பெருமைப்படாதே.கவனமாக இரு. தியானத்தை தொடர்வாய் '' என்று சொல்கிறார் விஷ்ணு.

 

திரும்பி வரும் வழியில் ராஜா ஷீலாநிதி அரண்மனையில் ஒரே கோலாகலம். என்ன என்று உள்ளே நுழைகிறார்.  இளவரசி  ஸ்ரீமதிக்கு ஸ்வயம்வரம் நடக்கிறது.  அவள் அழகில்  நாரதர் மயங்கி அவளை கல்யாணம் செய்துகொள்ள ஆசை பிறக்கிறது. அவளைப்பார்த்த  உடனேயே அவருக்கு ஞான திருஷ்டியில் அவளை  மணப்பவன்  திரிலோக சக்ரவர்த்தி என்று அறிகிறார். நேராக விஷ்ணுவிடம் செல்கிறார்.  

''ஹரி, என்னையும் உன் போல் அழகானவனாக ''ஹரி''அவதாரமாக  மாற்று'' என்று வேண்டுகிறார்.  விஷ்ணு சரியென்று தலையாட்ட, நாரதர்  ஸ்வயம்வரத்துக்கு செல்கிறார். 

 

ஸ்வயம்வரத்தில்  அந்த இளவரசி  நாரதன் முகத்தைப் பார்த்துவிட்டு சிரிக்கிறாள். மாலையிடவில்லை. 

''நான் அழகானவன்  என்னை ஏன் நீ தேர்வுசெயது மாலையிடவில்லை? என்று நாரதர் கேட்க,

''உனக்கு ராஜகுமாரி கேட்கிறதா  போய் உன்  முகத்தை கண்ணாடியில் பார்'' என்று அவள் தோழிகளும் மற்றவர்களும் சொல்லி சிரிக்க கண்ணாடியில் தன் முகத்தை பார்த்த நாரதர் அது ஒரு குரங்கின் முகத்தைக்   காட்டுகிறது.

கடும் கோபத்தோடு நாரதர்  விஷ்ணு விடம்  சென்று '' நீ செய்த  வேலையால்நான் விரும்பிய இளவரசியை இழந்தேன். அழகானவனாக மாற்று என்று கேட்டதற்கு இப்படி செய்துவிட்டாயே, ஞாயமா?

''நாரதா, நீ  தானே 'ஹரி' போல் இருக்கவேண்டும் என்று கேட்டாய்.  ஹரி என்றால் குரங்கு என்று ஒரு அர்த்தம் என்பது மறந்து விட்டதா உனக்கு?'' என்கிறார் விஷ்ணு.

''உன் சாமர்த்தியத்தை அறிந்தேன்.  மகா விஷ்ணு, நீ  மனிதனாக பிறப்பாய், மஹாலக்ஷ்மி உன் மனைவியாக  பிறந்து  ஸ்வயம்வரத்தில் உன்னை அடைவாள். ஆனாலும்  உன் ஆசை மனைவியை நீ  பிரிந்து பலகாலம் தவிப்பாய்.  குரங்குகள் உனக்கு உதவி  உன் மனைவியை மீண்டும் பெறுவாய்''  


நாரதன் சாபத்தால் ராமாயணம் நடந்தது. இது என்னுடைய  உடான்ஸ் இல்லை.  ராமசரித மனஸ்  ஸ்லோகங்களில் துளசிதாசர்  பாடி இருக்கிறார். 

 

sivan jaykay

unread,
Aug 15, 2025, 8:04:56 PMAug 15
to amrith...@googlegroups.com

வாழ்க பாரதம்.    நங்கநல்லூர்  J K  SIVAN 

1947ம் வருஷம் ஆகஸ்ட் 15ம் தேதி  ரெண்டு கைகள் வெட்டப்பட்டது போல்  பஞ்சாப் , வங்காளம் ரெண்டு பெரிய மாநிலங்களும் பாதியாக  துண்டிக்கப்பட்ட  பாரத தேசம் வெள்ளைக்காரர் ஆட்சியிலிருந்து   சுதந்திரம் அடைந்தது.
எண்ணற்ற சோதனைகள் வேதனைகள் தொடர இன்றோடு 78 வருஷங்கள் ஓடிவிட்டது. நமது கனவுகள் மெய்ப்பட வில்லை. வெள்ளையர்கள் போனாலும் சில  கொள்ளையர்கள் தொந்தரவு இருந்து கொண்டு தான் இருக்கிறது

தேச சேவை என்பதில் நாம் ஒன்றும் புதிதாக  இந்த அற்புத புண்ய தேசத்துக்கு எதுவும் செய்ய வேண்டியதேயில்லை.  இயற்கை அன்னை வாரி வழங்கிக் கொண்டு தான் இருக்கிறாள்.  தேசத்தை பிரித்து, எனது உனது என்று பல பிரிவுகளாக அவரவர் ஆங்காங்கே  ஆட்சி பீடத்தில் அமர்ந்து நாட்டு மக்கள் நலனை  மனதில் கொள்ளாமல்  இருக்க விட்டது நமது தவறு.  நாட்டின் செல்வம் அனைத்தும் அனைவருக்கும் சொந்தம். எல்லோரும் சமம். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டியதின்றி  வேறொன்றறியேன் பராபரமே.

 மக்கள் பயம் அற்று, தைரியமாக தங்கள் உரிமையை  நேர்மையோடு நிலை நாட்டிக்கொள்ள வேண்டும்.  

தேச சேவை என்பது  தேசத்தில் வாழும் அனைத்து உயிர்களின் நலனுக்காக  இருக்க வேண்டும்; இந்த எண்ணத்தை மட்டும் மனதில் கொண்டு, சுயநலம்  இல்லாமல் நமக்கு  ஆங்காங்கே  உண்மையான மக்கள் நலம் கருதும்  பிரதிநிதிகள் கிடைத்தால் நம்மைப் போல் பாக்கியசாலிகள் யாரும் இல்லை. பாரதமாதாவும்  ''என்  அருமைக்  குழந்தைகளா'' என்று அவர்களை சீராட்டிப்  பாராட்டுவாள். 

மக்கள் சேவையில்  எங்கும் எதிலும்  லஞ்சமோ, காலதாமதமோ  அல்லாமல் நேர்மை நீதி நெறியோடு ஈடுபட வேண்டும். .  ஜாதி மத பாகுபாடு இல்லாமல்  எல்லோருக்கும் திறமை  தகுதியின்  அடிப்படையில்  வாய்ப்புகள் நிறைய இருக்க வேண்டும்.  ஆதரவளிக்க வேண்டும். கல்வி ஒழுக்கம்  இரண்டும் இரு  கண்களாக  சிறந்தோங்க வேண்டும். 

விலை வாசி ஏறுவதற்கு காரணம்  விளைநிலங்கள் வேறு விதத்தில் பயன்படுத்தப்படாமல்  விவசாயம் சிறப்பாக நடைபெறவேண்டும். ஆங்காங்கே  நடுவில் தரகர்கள் சுயலாபம் கருதி, கலப்படம் செய்து,  பொய்யான வறட்சியை ஏற்படுத்தி  தட்டுப்பாடுகள் உண்டாக்குவதோ கண்டிக்கப்பட்டு  விலைகள் நிர்ணயிக்கப்படவேண்டும்.  சமூக  விரோத நடவடிக்கைகள் அடியோடு  களையப்படவேண்டும்.  தவறு செய்தவர்கள் யாரானாலும் தக்க தண்டனை பெற வேண்டும்

மேலே சொன்னதை தவிர  இன்னும் எத்தனையோ குறைபாடுகள்  இருக்கின்றன. இங்கே  வரிசைப்படுத்த முடியாது. வருஷம் போதாது. அனைத்தும் சகலரும் அறிந்ததே. ஆள்பவர்களுக்கும் தெரியும்.  ஆகவே  ஆட்சியில் அமர்ந்திருப்போர்  புரிவோர்  இதெல்லாம் கருத்தில் கொள்பவர்களாக அமையவேண்டும்.  நல்லவர்கள் ஆண்டால்  நல்லதே தான் நடக்கும்.அல்லவா?.  நமது நாட்டில் திறமும் நேர்மையும், தேச சேவை இரத்தத்தில் ஊறியவர்கள் இன்னும்  காணாமல் போகவில்லை. நிறையவே இருப்பார்கள்.

யார்  உண்மையில் மக்களுக்கு உழைக்கிறார்களோ அவர்களே நம்மை ஆளவேண்டும். இப்படி ஒரு கனவு கண்டேன் என் வாழ்நாளில் நிறைவேறுமா? சந்தேகம் தான் என்று சொல்லமாட்டேன். இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.  நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் மழை பெய்யும்போது நாடும் சீராக நிறைய நல்லவர்கள் தோன்ற மாட்டார்களா? நம்மிடம் சரக்கு இல்லையா என்ன?  எண்ணற்றோர் தயாராக இருக்கிறார்கள், வாய்ப்பு கிடைக்க வேண்டும்.  இறைவன் அருள் இதற்கு உதவட்டும். 

 தாய்ப்பாசம் எப்படியோ அதைவிட  கொஞ்சம் உயர்ந்தது தாய்நாட்டு பாசம் என்று சொன்னால் பொருத்தம் என்று தான் தோன்றுகிறது. இப்படி எல்லோரும் நினைத்தால்  பாரத தேசம் ஸ்வர்க பூமி தான். 
வாழ்க  பாரதம், வாழ்க சுதந்திர  பாரத மக்கள் அனைவரும்.

sivan jaykay

unread,
Aug 15, 2025, 8:04:56 PMAug 15
to amrith...@googlegroups.com
வைராக்ய சதகம்- பர்த்ருஹரி -  நங்கநல்லூர்   J K SIVAN
ஸ்லோகங்கள்  61-70

61. परेषां चेतांसि प्रतिदिवसमाराध्य बहुधा  प्रसादं किं नेतुं विशसि हृदय क्लेशकलितम् । प्रसन्ने त्वय्यन्तः स्वयमुदितचिन्तामणिगणो विविक्तः संकल्पः किमभिलषितं पुष्यति न ते ॥

பரேஷாம் சேதாம்ஸி ப்ரதிதி³வஸமாராத்⁴ய ப³ஹுதா⁴ ப்ரஸாத³ம் கிம் நேதும் விஶஸி ஹ்ருʼத³ய க்லேஶகலிதம் ।
ப்ரஸந்நே த்வய்யந்த: ஸ்வயமுதி³தசிந்தாமணிக³ணோ விவிக்த: ஸங்கல்ப: கிமபி⁴லஷிதம் புஷ்யதி ந தே ॥ 61 ॥

'ஹே  மனமே, எப்போதும்  எப்படியாவது மற்றவர்களை திருப்திப்படுத்தி அதன் மூலம் பெருமை அடையவேண்டும் என்று பிரயாசைப் படுகிறாயே , எதற்கு இந்த வெட்டி வேலை?  ஒரு கணமாவது, உன் சந்தோஷத்தை உன்னிடமிருந்து பெற முயலவில்லையே.  உன்னுள்ளே   புதையலாக சந்தோஷம் உள்ளதே.  உன் எண்ணம் உள் நோக்கி சென்றால்,  அற்புதமான சர்வ சக்தி பொருந்திய சிந்தாமணி எனும் உன் சிந்தைக்குள்ளேயே இருக்கும் ஆத்மா எனும்  மாணிக்கம் உனக்கு ஆனந்தம் அளிக்குமே. உன் கவலைகள் எல்லாம் தீருமே.   உன் ஹ்ருதயத்தில்  ஆத்மா குடிபுகுந்தால் அதன் ஆனந்தத்தை நீ உணர்ந்தால்  உன்னைப்போல்  பாக்கியசாலி எவன்?  அது உன்னை அழகாக  நன்றாக வழி நடத்துமே . 

62.  परिभ्रमसि किं मुधा क्वचन चित्त विश्राम्यतां  स्वयं भवति यद्यथा भवति तत्तथा नान्यथा ।  अतीतमननुस्मरन्नपि च भाव्यसंकल्पयन् नतर्कितसमागमाननुभवामि भोगानहम् ॥

பரிப்⁴ரமஸி கிம் முதா⁴ க்வசந சித்த விஶ்ராம்யதாம்  ஸ்வயம் ப⁴வதி யத்³யதா² ப⁴வதி தத்ததா² நாந்யதா² ।அதீதமநநுஸ்மரந்நபி ச பா⁴வ்யஸங்கல்பயந் நதர்கிதஸமாக³மாநநுப⁴வாமி போ⁴கா³நஹம் ॥ 62 ॥

பர்த்ருஹரி  இந்த ஸ்லோகத்தில் மனதுக்கு புத்திமதி சொல்கிறார்.   ஹே  மனமே, எதற்கு வீணாக, வியர்த்தமாக அங்குமிங்கும்  அலைகிறாய்? ஓரிடத்தில் நிலையாக நில்.  எது நடக்கவேண்டுமோ அதை  எவரும், எதனாலும் நிறுத்த முடியாது.  உனக்கு அப்பாற்ப்பட்ட ஒரு சக்தி உன்னுள்ளேயே இருக்கிறதே அது நடத்தும் வேலை அது. உன் செயல்பாட்டில் எதுவும் இல்லை. அதெல்லாம் முன்கூட்டியே  திட்டமிடப்பட்டவை. ஆத்மாவை உணர்ந்து  அமைதியாக இரு.  உன் திட்டம் எதுவும்  நடக்காது.  வருவதை ஏற்றுக்கொள்ள தயாராக இரு. பதட்டம் வேண்டாம். பயம் வேண்டாம். உணர்ச்சிகளுக்கு அங்கே இடமில்லை.  நடந்ததோ, நடப்பதோ, நடக்கப்போவதோ எதுவும் உன் கையில் இல்லை. 

63. एतस्माद्विरमेन्द्रियार्थगहनादायासकादाश्रय  श्रेयोमार्गमशेषदुःखशमनव्यापारदक्षं क्षणात् ।  स्वात्मीभावमुपैहि संत्यज निजां कल्लोललोलां गतिं  मा भूयो भज भङ्गुरां भवरतिं चेतः प्रसीदाधुना ॥ ६३॥

 ētasmādviramēndriyārthagahanādāyāsakādāśraya śrēyōmārgamaśēṣaduḥkhaśamanavyāpāradakṣaṁ kṣaṇāt । svātmībhāvamupaihi saṁtyaja nijāṁ kallōlalōlāṁ gatiṁ mā bhūyō bhaja bhaṅgurāṁ bhavaratiṁ cētaḥ prasīdādhunā

ஏதஸ்மாத்³விரமேந்த்³ரியார்த²க³ஹநாதா³யாஸகாதா³ஶ்ரய ஶ்ரேயோமார்க³மஶேஷது:³க²ஶமநவ்யாபாரத³க்ஷம் க்ஷணாத் । ஸ்வாத்மீபா⁴வமுபைஹி ஸந்த்யஜ நிஜாம் கல்லோலலோலாம் க³திம் மா பூ⁴யோ ப⁴ஜ ப⁴ங்கு³ராம் ப⁴வரதிம் சேத: ப்ரஸீதா³து⁴நா ॥ 63 ॥

என்  மனமே, ஹ்ருதயமே , உங்கள் ஆரோக்யம எதில்  இருக்கிறது தெரியுமா?  இந்த   அடர்ந்த காடு போன்ற உலகத்தின் மாயா ஜாலங்களில் மயங்காமல்  ஜாக்கிரதையாக  அதிலிருந்து விலகி இருப்பதில் தான்.  இந்த அடர்ந்த காட்டில் நீ புகுந்து கடந்து தான் போகவேண்டும். ஆகவே  உன் பாதையை  ஒளிமயமாக்கிக் கொள் . துன்பம் தவிர். அதற்கான ஞானம் உன்ன்னுள்ளே பெறு . வைராக்கிய சித்தத்தோடு  நட . அப்போது உன்னை எந்த  இடர்ப்பாடும் நெருங்காது.  புலன்களை அடக்கி ஆள்.  அதன் வழி போகாதே. 

64. . मोहं मार्जय तामुपार्जय रतिं चन्द्रार्धचूडामणौ  चेतः स्वर्गतरङ्गिणीतटभुवामासङ्गमङ्गीकुरु । को वा वीचिषु बुद्बुदेषु च तडिल्लेखासु च श्रीषु च ज्वालाग्रेषु च पन्नगेषु च सुहृद्वर्गेषु च प्रत्ययः ॥ ६४॥

 mōhaṁ mārjaya tāmupārjaya ratiṁ candrārdhacūḍāmaṇau cētaḥ svargataraṅgiṇītaṭabhuvāmāsaṅgamaṅgīkuru । kō vā vīciṣu budbudēṣu ca taḍillēkhāsu ca śrīṣu ca jvālāgrēṣu ca pannagēṣu ca suhr̥dvargēṣu ca pratyayaḥ

மோஹம் மார்ஜய தாமுபார்ஜய ரதிம் சந்த்³ரார்த⁴சூடா³மணௌ  சேத: ஸ்வர்க³தரங்கி³ணீதடபு⁴வாமாஸங்க³மங்கீ³குரு ।
கோ வா வீசிஷு பு³த்³பு³தே³ஷு ச தடி³ல்லேகா²ஸு ச ஶ்ரீஷு ச  ஜ்வாலாக்³ரேஷு ச பந்நகே³ஷு ச ஸுஹ்ருʼத்³வர்கே³ஷு ச ப்ரத்யய: ॥ 64 ॥

அடாடா,  இந்த புலன்கள் எவ்வளவு தீய சக்தி கொண்டவை !  எப்படி புத்தியை, மனத்தை, கலக்குகிறது. தவறான வழியில் வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்கிறது. அதை எதிர்த்து தடுத்து, அப்புறப்படுத்த மனதை கல்லாக்கிக் கொள் . உறுதியாக இரு.  அதற்கு அந்த கங்கையும் பிறையும்  சூடிக்கொண்டு  இருக்கிறானே பரமேஸ்வரன் அவனை துணைக்கோள்.  கங்கை நதி உனக்கு அருகிலேயே இருக்கிறாளே, அங்கே  முழுகி  கரையோரம் அமர்ந்து தியானம் செய். 
யை நினைத்தாலே உன்னை புனிதமடையச் செய்வாள்.  ஜாக்கிரதை. நீர்க்குமிழி மேல் அமர்ந்து நீ கடலில் பிரயாணம் பண்ண முடியாது.  யோசித்துப்  பார். இந்த நிரந்தரமில்லாத உலகத்தில் எதை நீ அடைய முடியும், எது உன்னோடு என்றும் இருக்கும்?  மயங்காதே  மனமே, மாய உலகு உன்னை மயக்க முயற்சிக்கும். இடம் கொடுக்காதே. 


65. चेतश्चिन्तय मा रमां सकृदिमामस्थायिनीमास्थया   भूपालभ्रुकुटीकुटीविहरणव्यापारपण्याङ्गनाम् । कन्थाकञ्चुकिनः प्रविश्य भवनद्वाराणि वाराणसी      रथ्यापङ्क्तिषु पाणिपात्रपतितां भिक्षामपेक्षामहे ॥ ६५॥

cētaścintaya mā ramāṁ sakr̥dimāmasthāyinīmāsthayā bhūpālabhrukuṭīkuṭīviharaṇavyāpārapaṇyāṅganām । kanthākañcukinaḥ praviśya bhavanadvārāṇi vārāṇasīḥ athyāpaṅktiṣu pāṇipātrapatitāṁ bhikṣāmapēkṣāmahē

சேதஶ்சிந்தய மா ரமாம் ஸக்ருʼதி³மாமஸ்தா²யிநீமாஸ்த²யா பூ⁴பாலப்⁴ருகுடீகுடீவிஹரணவ்யாபாரபண்யாங்க³நாம் ।
கந்தா²கஞ்சுகிந: ப்ரவிஶ்ய ப⁴வநத்³வாராணி வாராணஸீ ரத்²யாபங்க்திஷு பாணிபாத்ரபதிதாம் பி⁴க்ஷாமபேக்ஷாமஹே ॥ 6

செல்வத்தை நாடாதே. ஓரிடத்தில் நிற்காத வாஸ்து அதை நீ எப்படி உனதாக்கிக் கொள்ள முடியும்?  நிழலைப் பிடிக்க லையாதே. ரமா எனும் அந்த லக்ஷ்மி  அடிக்கடி இடம்  மாறுபவள்.  அவளை ஸாஸ்வதம்  என நினைத்து ஏமாறாதே. பேராசை பல பெரிய சாம்ராஜ்யங்களையே  அழித்திருப்பதை ஞாபகத்தில் வை. 

66.अग्रे गीतं सरसकवयः पार्श्वयोर्दाक्षिणात्याःपश्चाल्लीलावलयरणितं चामरग्राहिणीनाम् । यद्यस्त्वेवं कुरु भवरसास्वादने लम्पटत्वं नो चेच्चेतः प्रविश सहसा निर्विकल्पे समाधौ ॥ ६६॥
 agrē gītaṁ sarasakavayaḥ pārśvayōrdākṣiṇātyāḥ paścāllīlāvalayaraṇitaṁ cāmaragrāhiṇīnām । yadyastvēvaṁ kuru bhavarasāsvādanē lampaṭatvaṁ nō cēccētaḥ praviśa sahasā nirvikalpē samādhau ॥ 66
 
அக்³ரே கீ³தம் ஸரஸகவய: பார்ஶ்வயோர்தா³க்ஷிணாத்யா: பஶ்சால்லீலாவலயரணிதம் சாமரக்³ராஹிணீநாம் ।
யத்³யஸ்த்வேவம் குரு ப⁴வரஸாஸ்வாத³நே லம்படத்வம் நோ சேச்சேத: ப்ரவிஶ ஸஹஸா நிர்விகல்பே ஸமாதௌ⁴ ॥ 66 ॥

ஹே , மனமே, உனக்கு  ரெண்டு  வித வாய்ப்பு.  அங்கே பார்  உன் எதிரே  ஒரு நாட்டிய மேடையில்    வாத்ய இசையோடு, கை வளையல்கள், கங்கணங்கள்  ஒலிக்க  ஒரு பெண்   வனப்போடு அழகாக நடமாடுகிறாள். அது உன்னை  ஈர்க்க வேண்டுமா, அல்லது திரும்பி உட்கார்ந்து மனதை  ஒரு நிலையில் ஈடுபடுத்தி ஆத்ம விசாரத்தில் செலுத்தி, கண்ணும் கருத்தும் உள்நோக்கி தேடலில் தியானத்தில்  ஈடுபடுத்த போகிறாயா?  எதை நீ விரும்புகிறாய் என்பதை பொறுத்து உன் நிம்மதி ஆனந்தம்  காத்திருக்கிறது. புத்திசாலி மனதை  த்யானத்தில் தான் ஈடுபடுத்தி பயனடைவான். 

67. प्राप्ताः श्रियः सकलकामदुघास्ततः किं    न्यस्तं पदं शिरसि विद्विषतां ततः किम् । सम्पादिताः प्रणयिनो विभवैस्ततः किं       कल्पस्थितास्तनुभृतां तनवस्ततः किम् ॥ ६७॥

prāptāḥ śriyaḥ sakalakāmadudhāstataḥ kiṁ nyastaṁ padaṁ śirasi vidviṣatāṁ tataḥ kiṁ । sampāditāḥ praṇayinō vibhavaistataḥ kiṁ kalpasthitāstanubhr̥tāṁ tanavastataḥ kim ॥ 67

ப்ராப்தா: ஶ்ரிய: ஸகலகாமது³கா⁴ஸ்தத: கிம் ந்யஸ்தம் பத³ம் ஶிரஸி வித்³விஷதாம் தத: கிம் । ஸம்பாதி³தா: ப்ரணயிநோ விப⁴வைஸ்தத: கிம் கல்பஸ்தி²தாஸ்தநுப்⁴ரு’தாம் தநவஸ்தத: கிம் ॥ 67॥

ஹே , மனமே  உன்னிடம்  நறுக்கென்று நாலு கேள்விகள் கேட்கிறேன்.  1.  உன்னிடம்  உலகத்தின் அத்தனை செல்வம் இருந்தால்   ஒன்று பாக்கியில்லாமல் உனது அத்தனை ஆசைகளும் பூர்த்தியடைந்துவிடுமா?  அதனால்  உன்னையே  நன்றியோடு நினைக்கும் நண்பர்கள் உறவினர்கள்  கிடைப்பார்களா? 2  உன் தேகம் உலகம் உள்ளவரை சாஸ்வதமாக இருந்துவிடுமா?   3.எந்த வஸ்துவால் உன் புலன்களின் ஆசைகள் விருப்பங்கள் மனோரதங்கள் எல்லாம் முழுதுமாக நிறைவேறிவிடும்?  எந்த வஸ்துவால் உன் சகல எதிரிகளும் உன்னை சரணடைவார்கள்?4.  எந்த பட்டம், விருது உன்னை அமரனாக்கிவிடும்? அதற்கப்புறம் எந்த கவலையும் இல்லாமல் வைக்குமா? எதுவும் வேண்டாம் போதும் என்று சொல்ல வைக்குமா?

68. भक्तिर्भवे मरणजन्मभयं हृदिस्थं  स्नेहो न बन्धुषु न मन्मथजा विकाराः । संसर्गदोषरहिता विजना वनान्ता    वैराग्यमस्ति किमितः परमर्थनीयम् ॥ ६८ 

bhaktirbhavē maraṇajanmabhayaṁ hr̥disthaṁ snēhō na bandhuṣu na manmathajā vikārāḥ । saṁsargadōṣarahitā vijanā vanāntā vairāgyamasti kimitaḥ paramarthanīyam

ப⁴க்திர்ப⁴வே மரணஜந்மப⁴யம் ஹ்ருʼதி³ஸ்த²ம் ஸ்நேஹோ ந ப³ந்து⁴ஷு ந மந்மத²ஜா விகாரா: । ஸம்ஸர்க³தோ³ஷரஹிதா விஜநா வநாந்தா வைராக்³யமஸ்தி கிமித: பரமர்த²நீயம் ॥ 68 ॥

மனதில்  ஜனனம் மரணம் திரும்ப திரும்ப நேருவதைப் பற்றியும், அதனால் விளையும் சம்சார சாகர தூரம், துன்பம் பற்றிய  பயம் இருந்தால்  அதிலிருந்து மீள ஒரே வழி பரமேஸ்வரனை மனதில் நினைப்பது ஒன்றே. சொந்த பந்தம் நட்பு எல்லாம் உலக சம்பந்தங்கள் தான்.  உலக சம்பந்தப்பட்ட எதுவுமே  மாறிக்கொண்டே தான் இருப்பது, அழியப்போவது. அமைதியான வனத்திற்கு சென்று  தனியாக  தியானம் செய். உலகத்தின் பிடியிலிருந்து உன்னை  விடுவித்துக் கொள்  என்கிறார் பர்த்ருஹரி.  பற்றற்று இப்படி பரமனைப் பிடித்தவனுக்கு நிகர்  எவனும் இல்லை.

69. तस्मादनन्तमजरं परमं विकासि  तद्ब्रह्म चिन्तय किमेभिरसद्विकल्पैः ।  यस्यानुषङ्गिण इमे भुवनाधिपत्य- भोगादयः कृपणलोकमता भवन्ति ॥ ६९॥

tasmādanantamajaraṁ paramaṁ vikāsi tadbrahma cintaya kimēbhirasadvikalpaiḥ । yasyānuṣaṅgiṇa imē bhuvanādhipatya - bhōgādayaḥ kr̥paṇalōkamatā bhavanti ॥ 69

தஸ்மாத³நந்தமஜரம் பரமம் விகாஸி தத்³ப்³ரஹ்ம சிந்தய கிமேபி⁴ரஸத்³விகல்பை: । யஸ்யாநுஷங்கி³ண இமே பு⁴வநாதி⁴பத்ய- போ⁴கா³த³ய: க்ருʼபணலோகமதா ப⁴வந்தி ॥ 69 ॥

உன் மனது எதை நாட வேண்டும் தெரியுமா? என்றும் சாஸ்வதமான, காலத்தை வென்ற, மிக உன்னதமான, ஞான  ஒளி மிக்க, ஸத்யத்தை , பிரம்மத்தை, ஆத்மாவை.  அதைவிட்டு எதற்கு இந்த  தற்காலிக சுக நாட்டம்?  குப்பை குப்பையாக உலக ஈர்ப்பு எண்ணங்கள்,   வெறும் கற்பனையான அற்ப சுகங்கள் மீது ஆர்வம்? ஞானி இதை அறிந்து  ப்ரம்ம ஆனந்தத்தை தேடி அடைகிறான். 

70.  .पातालमाविशसि यासि नभो विलङ्घ्य   दिङ्मण्डलं भ्रमसि मानस चापलेन । भ्रान्त्यापि जातु विमलं कथमात्मनीनं    न ब्रह्म संस्मरसि निर्वृतिमेषि येन ॥ ७०॥

 pātalamāviśasi yāsi nabhō vilaṅghya diṅmaṇḍalaṁ bhramasi mānasa cāpalēna । bhrāntyāpi jātu vimalaṁ kathamātmanīnaṁ na brahma saṁsmarasi nirvr̥timēśi yēna

70. பாதாலமாவிஶஸி யாஸி நபோ⁴ விலங்க்⁴ய தி³ங்மண்ட³லம் ப்⁴ரமஸி மாநஸ சாபலேந । ப்⁴ராந்த்யாபி ஜாது விமலம் கத²மாத்மநீநம் ந ப்³ரஹ்ம ஸம்ஸ்மரஸி நிர்வ்ரு’திமேஷி யேந ॥ 70॥

மனமே  உன் கதியைப்  பார்த்தாயா? எவ்வளவு துர்பாக்கியம் உனக்கு?   ஒரு நிலையில்லாமல்,  அலைமோதி, தடுமாறி, ஆசை வயப்பட்டு  நீ  பூமியிலிருந்து பாதாளத்தை நோக்கி தலை குப்புற விழுகிறாயே ,   மேலே எழும்புகிறாய், காற்றாடி போல் திசை தெரியாமல் அலைகிறாய்.  தள்ளாடும் மனிதனால் நேர்வது இதெல்லாம்.   செல்வத்தை நாடாதே, உலக பற்று  ஈர்க்கும் ஆசா பாசங்களுக்கு  ஆளாகாதே.   சாஸ்வதமான பிரம்மத்தை நாடு, பற்றை அறு . நிம்மதி பெறு .பேரானந்தம் உனக்காக காத்திருக்கிறதே. எங்கும் அதை தேடி  ஓட வேண்டாம். உனக்குள்ளேயே அது  உள்ளதே.

sivan jaykay

unread,
Aug 15, 2025, 8:04:56 PMAug 15
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

'' நீ  ஆடிண்டே இரு''  

மஹா பெரியவா என்றால்  அந்த  ஒருவர்  தான் அந்த தகுதிக்கு பெருமைக்கு உரியவர். வேறு எவரையும் அப்படி ;அழைக்க முடியாது. மஹா பெரியவா இருந்த போது  இருந்த காஞ்சி மடம் வேறு இப்போது வேறு.  நான் புனிதத்தை பற்றி சொல்லவில்லை, அங்கே குழுமிய பக்தர்கள் கூட்டத்தை பற்றி சொல்கிறேன். உலகத்தின் பல பாகங்களிலிருந் தெல்லாம். மஹா பெரியவா பக்தர்கள் வந்து கொண்டே இருந்த காலம் அது. 

 இரண்டு இளைஞர்கள் - நிறைய  ஆங்கிலத்தில் படித்தவர்கள்,   கர்நாடக இசை, பாரத நாடிய கலை  பாண்டித்யம் பெற்ற  பல்கலைக்கழக பட்டதாரிகள்  சென்னையில் சரியான உத்யோகம் கிடைக்க காத்திருந்தார்கள்.  ரெண்டுபேரில் ஒருவருக்கு  மஹா பெரியவா மேல் சின்ன வயதிலிருந்தே  அதீத பக்தி. அடிக்கடி மடத்துக்கு வந்து பெரியவா தரிசனம் பெற்றவர். 

அந்த பெரியவா பக்தன் மற்றவனிடம்  ஒருநாள் காலை ''டேய் , வா நாம் இன்று காஞ்சிபுரம் போய் மடத்தில் பெரியவா தரிசனம் பண்ணுவோம்'
''சரி, பெரியோயவா என்கிறாயே அவருக்கு டான்ஸ் லே விருப்பம் உண்டா? .நான் டான்ஸ் எக்ஸ்பர்ட் expert  ஆச்சே. அது பத்தி சொன்ன புரியுமா?
''தெரிஞ்சிருக்கலாம், எதுக்கும்  நீ  உன்  நடன வேஷ்டி, மேல் துண்டு எடுத்துண்டு வா. அங்கே போய் உடுத்துண்டு அவர் பெர்மிஷன் குடுத்தா  ஆடு. அவர் முன்னாலே ஆட நீ பாக்யம் பண்ணி இருக்கணும்.  எனக்கும் அவர் முன்னாலே பாட புண்யம் கிடைக்கும்''

காஞ்சிபுரத்துக்கு பஸ்ஸில் சென்று ரெண்டு மணி நேரத்தில்  மடத்தை அணிந்தார்கள். 
''பெரியவா இப்போ,இங்கே இல்லையே. ஓரிக்கையில் னா  இருக்கார். அங்கே போய் பாருங்கோ''  என்று மடத்தில் சேதி கேட்டு  ஓரிக்கை போனார்கள். 

ஓரிக்கையில் மஹா பெரியவா  ஒரு சிவன் கோயிலில் மேடையில் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி வழக்கம்போல் பெரிய கூட்டம்.
ரெண்டு இளைஞர்களும் கையைக் கட்டிக்கொண்டு கும்பலில் நின்றார்கள்.  மெதுவாக கிட்டே போக  நேரம் கிடைத்ததும் விழுந்து நமஸ்கரித்தார்கள்.  அன்று  மஹாபெரியவா காஷ்ட மௌனம் அனுஷ்டித்தார்.  சைகைகள் மூலமாக மிக முக்யமானவைகளை மட்டும் மற்றவருக்குத் தெரிவிக்கும் விதமான மெளனத்தில் இருந்தார்.

சங்கீதம் பாடும் இளைஞர். வாய்பொத்தி அவரிடம்   '' பெரியவா, இவன் என் நண்பன்  பரதநாட்டியம் நன்னா கத்து ண்டவன். பெரியவா முன்னாலே ஆட  ஆசையா இருக்குங்கிறான். உத்தரவு கொடுக்கணும்''  என்றான். 

ஆடு  என்று அவனைப்பார்த்து பெரியவா சைகை காட்ட அடுத்த கணமே அந்த இளைஞன் ஓடி ஆடை மாற்றிக்கொண்டு வந்தான்.   சங்கீதம் தெரிந்த  இளைஞன் '' நடனம் ஆடினார்..'' என்ற பாடலை ஜம்மென்று ஆரம்பிக்க  டான்ஸ் இளைஞன் பர்த நாட்ய அபிநயம் பிடித்தான். 
அந்த சின்ன இடத்தில்  பெரியவா உட்கார்ந்த  இடம் தவிர மற்ற  கொஞ்ச இடத்தில்  அவனுக்கு  ஆட  முடிந்தது.  “குதித்த மெட்டு” என்றழைக்கப்படும் ஜதியுடன்  டான்ஸ் இளைஞன் ஆட ஆரம்பித்தான்.  ஜதியுடன் காலைத் தூக்கி நடராஜர் அபிநயம் பிடிக்கவும், அவரது, கால்விரல்கள் மஹாபெரியவருக்கு மிக அருகில் வரவேண்டியதாயிற்று.

அருகிலிருந்த மற்ற பக்தர்கள், “நிறுத்து, நிறுத்து, அபசாரம், அபசாரம்” என்று கூவ, மஹா பெரியவரோ, தன் திருக்கை களில் ஒன்றால், மற்ற பக்தர்களை நோக்கி “ சும்மா இருங்கள்.  நிறுத்துங்கள்” என்பதாகவும்,   சிரித்துக்கொண்டே  டான்ஸ் ஆடிய  இளைஞரைப் பார்த்து, “  நீ தொடர்ந்து ஆடு''   என்பதாகவும் ஒரே நேரத்தில் அவரும் சைகையில்  அபிநயம் பிடித்து காட்டினார். 

ஆட்டமும் பாட்டும்  மஹா பெரியவா முன்  அரங்கேற்றம் ஆகி ரெண்டு இளைஞர்களும் பிரசாதம் பெற்றுக்கொண்டு 
திரும்பினார்கள்.  
பாரத நாட்யம் ஆடின இளைஞர்  பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் மற்றும் பரோடா எம்.எஸ்.பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்து, 1992 ஆம் வருடம்  ரிடையர் ஆகி  Head of the Faculty of Performing Arts of M.S. University , Baroda வில் பட்டம்  பெற்றார்.  1993 வருடம் சங்கீத நாடக அகாடமி விருதும், 2008 ஆம் வருடம் காளிதாஸ் ஸம்மான்  விருதும், 2011 ஆம் வருடம் ''பத்ம பூஷன்'' விருதும் கிடைத்தன..  60 ஆண்டுகளுக்கு மேலாக  பல உலக  மேடைகளிலும்  ஆடி, விருதுகள் பெற்று, தனது 80ஆவது வயதிலும், பரதநாட்யம்  ஆடினார்.  எல்லாம்  அந்த  ஒருநாள்  இளைஞனாக முதன் முதலில் மஹா பெரியவா முன் ஓரிக்கையில்  ஆடி  ''தொடர்ந்து ஆடு'' அனிரு அவரிடம்  ஆசி வாங்கியதின் பலன் என்று நம்பினார். 
அந்த டான்ஸ் ஆடிய  இளைஞர் தான் பிரபல புகழ்  பெற்ற  '' பத்மபூஷன் ஸி.வி.சந்த்ரசேகர்''


sivan jaykay

unread,
Aug 15, 2025, 8:04:57 PMAug 15
to amrith...@googlegroups.com
ஒரு  ''அரை நிமிஷம்''   -   நங்கநல்லூர்  J K  SIVAN

 நான் தமிழன். என் மொழி இனியது, அளவற்ற இன்பம் தருவது. இதில்  சங்கநிதி பதுமநிதி போன்ற எல்லையற்ற செல்வத்தை ஆழ்வார்களும் நாயன்மார்களும் அள்ளித்  தந்திருக்கிறார்கள். எண்ணற்ற ஞானிகள் அருட்கவிகள், அமர கவிகள் பேசிய மொழி.  இந்த தமிழுக்கென்றே  அமைந்த  ஒரு கடவுள் தான் முருகன். கந்தன். குமரன். அவனை நினைத் தாலே இன்னொரு பெயர் கட்டாயம் ஞாபகத்துக்கு வந்தே தீரும்.  அது வேறு யாருமில்லை.சாக்ஷாத்  அருணகிரி நாதர் தான். அவர் எழுதிப்  பாடிய  திருப்புகழை ''அரை  நிமிஷ''  நேரமாவது ஆனந்தமாக  பாடவேண்டும்.  அரை நிமிஷ நேரம் பற்றி அவரே பாடிய ஒரு பாடல் ஒன்றை  இன்று  படிப்போம்.   அருணகிரி நாதர் முருகன் எங்கெல்லாம் குடி கொண்டிருக் கிறானோ அங்கெல்லாம் சென்று தரிசித்து அவனைப் புகழ்ந்து பாடியவர்.   ஆயிரக் கணக்கான பாடல்களைக் கொண்டது அவரது  திருப்புகழ்.

 ஒரு தடவை  அருணகிரிநாதர்  நடந்து  ஸ்வாமிமலைக்கு சென்றார். வெயில் நேரம். தாகம். ஒரு சிறுவன் அருகில் தென்பட்டான்.   தம்பி   இங்கே முருகன் கோயிளுக்கு எப்படி போகணும்?''
எனக்கு குடிக்க  சிறிது நீர் இங்கே கிடைக்குமா?
''ஒரு அரை நிமிஷம் இருங்க ஐயா '' வழி சொல்றேன். 
பையன் கன்றுக்குட்டியை மரத்தில் கட்டிவிட்டு வந்தான்.  ஒரு ''அரை நிமிஷம் இப்படிப்போய் திரும்புங்க''  கோயில் வரும். 
''தம்பி  உன் கையில் செம்பு இருக்கிறதே கொஞ்சம் குடிக்க நீர் தருகிறாயா?''
''செம்பு காலிங்க , ஒரு அரை நிமிஷம் நில்லுங்க கொண்டு வந்து  தாரேன்''. 
 என்று அந்த பையன் சொல்லியிருப்பானோ?.  அவனைப் பார்த்தால் அருணகிரிக்கு முருகனாக தோன்றியதோ?
தகப்பன் சாமியோ?
அவருக்கு  நீர் அளித்தான். வயிறும் மனமும்  நிறைந்தது. அடிக்கடி அவன் சொன்ன  ''அரை நிமிஷம்'' நெஞ்சில் ரீங்காரம் செய்து   ஒரு திருப்புகழுக்கு  அடியெடுத்து தந்ததோ?

''சரணகம லால யத்தில் அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க …… அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க …… முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற …… குமரோனே
கடகபுய மீதி ரத்ன மணியணிபொன் மாலை செச்சை
கமழுமண மார்க டப்ப …… மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க …… பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த …… வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த …… மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழனிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் …… முருகோனே

''கந்தவேளே , முருகப்பா, நான் எப்படிப்பட்ட  வாழ்க்கை வாழ்ந்தவன் என்று உனக்கு தெரியாதா?  வேண்டியவர்க்கு என்றும் சரணாலயமாக   அடைக்கலம் கொடுக்கும் உன்னுடைய  தாமரை மலர்ப்  பாதங்களை  நான் ஒரு அரை நிமிஷம்  கூட  நினைக்கவே இல்லையடா குமரா. எத்தனையோ மஹான்களைப் போல் அறிவுள்ளவனாக  நான் உன் திருவடியே சரணம் என்று என்றாவது   ஒருநாளும் தியானம், மனனம் செய்ததில்லையே.   நான் தான் கசடன் , மூடனாயிற்றே. பொய்யன், பிறவிபெருங்கடலில் தத்தளிப்பவன். தங்கம் இருக்க தகரம் தேடிய முட்டாள். இல்லாவிட்டால் உன்  அருள் செல்வத்தை நாடி இருக்க மாட்டேனா?

சர்வேஸ்வரன் பரமேஸ்வரன் சிவனின் மைந்தனே, தந்தைக்கு  ப்ரணவ மந்திரம் உபதேசித்தவனே. என் தவறை மன்னித்து என் மேல் கருணை புரியாமல் கால தாமதம் செய்யலாமா?  நீ கருணைக்கு கடலல்லவா?

நான் தான் என் தவறுகளுக்கு வருந்தி உன் திருவடிகளையே  பிராயச்சித்தமாக  கெட்டியாக பிடித்துக்கொள்ள அலைகிறேனே .
உன் அழகை என்னென்று சொல்வேன்?  நீ  வீராதி வீரன். தேவ சேனாபதி.  தோள்களில்  கட்கம் அணிந்த வீரன். உன் திண் தோள்களில்  நவ ரத்தின மணிமாலைகள் அணிந்தவன், தங்கமாலை,  வெட்சி,  கடம்ப மலர் மாலைகள் அணிந்தவன்.
 
இதோ பார் முருகா,  நல்ல சமயம் இது  நழுவ விடக்கூடாது.   மணி வாசகர் போல் நானும்  உன்   திருப் பாதங்களைச் 'சிக்' கெனப்  பிடித்துக்கொண்டேன். நான் உன்னிடம்  வேண்டும் செல்வம் உன் அருள் ஒன்றே. உனைப்பாடும் பெரு வாழ்வு ஒன்றே.
உனக்கெனவே  சிறப்பாக  அமைந்த  பளபளவென்று  ஒளிவீசும்  வேலாயுதம் கொண்ட  வடிவேலா, எனக்கு  சிவ ஞானம் தா.  முக்தி அளிப்பாய். உன் திருவடி நிழலில் சிறிது இடம் கொடு.  சாதாரண பாதங்களா  அவை.  செவ்விதழ் கொண்ட  செந்தாமரை மலர்களல்லவோ!  அனுதினமும்  விடாமல் துதி செய்ய தக்கவை ஆயிற்றே!    எனக்கு  'முத்தைத் தரு'   என்ற அடியெடுத்துக் கொடுத்து உனைப் பாட  வைத்த  தமிழ்க்  கடவுளே. மாமயில் வாகனனே.  சொல்லச்  சொல்ல  வாயினிக்கும்  வானோர் வந்து தொழும் பழனியாண்டி,  கோவணாண்டியாகி கண்ணைப் பறிக்கிற  பாலகுமாரா. திருவேரகத்தோனே.
என்று முருகன் புகழ் பாடும்  அருமையான பாடல் இது.

குறை தீர்க்கும் குமரன்  கால் களை  நாமும்  அரை  நிமிஷம் இல்லாவிட்டாலும்  ஒரு   ''கால் நிமிஷ''   நேர மட்டிலாவது நினைப்போம்.  ஒருக் கால் நாமும் அருணகிரி போல் மோக்ஷம் பெற  வாய்ப்பு இருக்கும் இந்த தருணத்தை வீணாக்காமல் பயன் பெறுவோம்.

 

sivan jaykay

unread,
Aug 16, 2025, 5:35:10 AMAug 16
to amrith...@googlegroups.com

ஜீவன் முக்தர்கள். -    நங்கநல்லூர்  J K  SIVAN 

திரு அண்ணாமலை எனும் அருணாசலேஸ்வரம் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்று. அக்னி க்ஷேத்ரம். நினைத்தாலே முக்தி தருவது. எண்ணற்ற சித்தர்கள் இன்றும்   உலவும்  பூமி.  ஒரே  காலத்தில் ரமண மஹர்ஷியும் சேஷாத்ரி ஸ்வாமிகளும் வாழ்ந்த காலத்தில் அவர்களை தரிசித்த பக்தர்கள் புண்யசாலிகள் .

 இந்த ஸ்தலத்தில் வாழ்ந்தவர்களில் இன்னும் ஒரு  சில  மஹான்கள்  பெயர்கள் மட்டும்  உடனே ஞாபகம் வருகிறது.  அருணகிரிநாதர், குகை நமசிவாயர், குரு நமசிவாயர், ஈசான்ய தேசிகர், விசிறி சாமியார். 

ரமணர்  பதினாறு வயது  சிறுவனாக அருணாச்சலம் வந்தபோது அவரைப்  பாதாள லிங்க சந்நிதியில் சந்தித்து போக்கிரி  மாடு மேய்க்கும் சிறுவர்களின் தொந்தரவிலிருந்து  விடுவித்து ரமணரை பாதுகாக்க ஒருவரை  நியமித்தது   சேஷாத்ரி ஸ்வாமிகள்.  சேஷாத்ரி பெரிய சாமி,ரமணர் சின்ன சாமி என்று தான் பக்தர்கள் அழைப்பார்கள். 

 சேஷாத்ரி ஸ்வாமிகள் ப்ரம்ம ஞானி. தொட்டதெல்லாம் தங்கமாகும் சித்தர்.  சேஷாத்ரி ஸ்வாமிகள் அதிசயங்களை பற்றி  ''ஒரு அற்புத ஞானி'' என  புத்தகம் ஒன்று எழுதி வெளியிட்ட பாக்யம் எனக்கு கிடைத்தது.

ஸ்வாமிகள் பதினாறு வயதிலேயே  திடீரென்று தனது வீட்டு மாடியில்  அதிசயமாக  மரண அனுபவம் என்றால் என்ன என்பதை  ப்ரத்யக்ஷமாக  உயிரோடு உணர்ந்தவர்.  அதற்குப்பிறகு  ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டு  ப்ரம்ம ஞானியானவர். 

சில மாதங்கள் முன்பு  நான் காவேரிப்பாக்கத்தில் முக்தீஸ்வரர் ஆலயம் சென்றபோது அங்கே தான் சேஷாத்திரி ஸ்வாமிகள் ஒரு மரத்தடியில் ஒரு பெரிய கருநாகம் தனது கழுத்தை சுற்றி சுகமாக அமர்ந்து இருக்க  சிவபெருமான் போல் காட்சி யளித்தார்  என்று பலர் பார்த்ததை கேள்விப்பட்டிருக்கிறேன்.  மக்கள் கூட்டம் சேர்ந்த போது  ஸ்வாமிகள் கழுத்தை விட்டு  அந்த நாகம் இறங்கி மறைந்தது என்று சொல்லப்பட்ட  இடத்தைப்  பார்த்தேன். அதிசயித்தேன்.  என்ன தான் 
படித்தாலும்  சில  க்ஷேத்ரங்களை நேரில் சென்று பார்வையிடும்போது நாம் அடைகிற  சந்தோஷத்துக்கு ஈடு இணை இல்லை. முக்தீஸ்வரர் ஆலயத்தில் சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு ஒரு மண்டபம் இருக்கிறது.  நாராயணன் என்ற ஒரு வாலிபர் அந்த கோயில் இன்றும்  பராமரித்து வருகிறார்.. விசேஷ காலங்களில் மட்டும் பக்தர்கள் வருகிறார்கள் என்று அறிந்து வருந்தினேன். 

சேஷாத்ரி ஸ்வாமிகள்  நாற்பது வருஷங்கள் ஒரே இடத்தில் இருந்தது திருவண்ணாமலையில் தான். அங்கிருந்து பத்து கி.மீ. தூரத்தில் விடோபா ஸ்வாமிகள் என்பவர் வாழ்ந்த போளூர்  இருக்கிறது.  

சேஷாத்ரி ஸ்வாமிகள்  த்ரிகால ஞானி. பறவைகள் விலங்குகள் பாஷை தெரிந்தவர்.  விண்ணில் தேவர்களை
 தெய்வங்களை  கந்தர்வர்களை பார்க்கும் சக்தி படைத்தவர்.  பற்றற்ற  துறவி.  எந்த நேரத்தில் எங்கே இருக்கிறார் என்று சொல்ல முடியாதபடி எங்கும் காணப்படுபவர்.   எங்காவது யாருடைய கஷ்டத்தை  யாவது போக்கிக்கொண்டு,  எவர் துயரையாவது துடைத்தவாறு  அருள்  பாலித்தவராக வாழ்ந்தவர்.

ஸ்வாமிகள்  ஸ்ரீ வித்யா உபாசகர்.   திருவண்ணாமலை மூன்று லிங்கங்களை கொண்டது, ஒன்று அருணாசலேஸ்வரர், ரெண்டாவது ரமணர், மூன்றாவது சேஷாத்ரி  ஸ்வாமிகள் என்பார்கள்.  

அவருடைய உறவினர் ஒருவர் தம்பதி சமேதராக என்னை நங்கநல்லூரில் சந்தித்தபோது ஸ்வாமிகள் தொட்டு வணங்கிய  நவநீத கிருஷ்ணன் சிறிய விக்ரஹம்  அவர்கள் வீட்டில் பூஜையில்  இருப்பதாக  அறிந்தேன். 

ஒன்று மட்டும் நிச்சயம்.  மஹான்கள் பூத உடலை விட்டு மறைந்தாலும் சூக்ஷ்ம சரீரத்தோடு பக்தர்களின் குறைகளை தீர்த்து அனுக்ரஹம்  பண்ணிக்கொண்டு தான் இருக்கிறார்கள். மஹா பெரியவா ஒருவரே போதும் உதாரணத்துக்கு. 



sivan jaykay

unread,
Aug 20, 2025, 8:14:12 PMAug 20
to amrith...@googlegroups.com
பக்தரின் சேவகர்கள்  -- நங்கநல்லூர் J.K. SIVAN

மாசு நீங்கி பொன்னொளி வீசவேண்டுமானால்  தங்கம்  நெருப்பில் உருகி  ஸ்புடம் போட்டு,நன்றாக அடிக்கப்பட்டு  வளைத்து வெட்டி  ஒட்டி தான் பளபளவென்று ஆபரணமாகிறது.  அது போல் தான்  நாமும்.  நம்மை பல  விதத்தில்  சோதனைக்கு  ஆளாக்கி  பதப்படுத்த்தி பக்தி நீங்காமல் அவனை நாம் தொடர்ந்து பணித்து வணங்கினால் நமக்கு சகல நன்மைகளும் அருள்வான். பல  மஹான்கள் இப்படி சோதிக்கப்பட்டவர்கள்.  அறுப்பத்து மூவர் கதைகளை படியுங்கள், பாண்டுரங்கன் பக்தர்கள் சரித்திரம் படியும் இதெல்லாம்  புரியும். பத்ராச்சலத்தில் ஒரு பக்தர், அவர் பெயரே மறந்து போய்விட்டது. உலகமெங்கும் அவர் அறியப்படுவது  பத்ராசல ராம தாஸர்  என்று தான். 

 கோபன்னா தான்  பத்ராசல  ராமதாஸர். கோல்கொண்டா  சிறையில் வாடி பாடிய பாடல்கள்  பக்தி பூர்வமானவை. ராமனை  நம் கண்முன்னே கொண்டு நிறுத்துபவை.  

கோபன்னாவின்  மாமா மத்தன்னா, கோல்கொண்டா சுல்தான் அப்துல் ஹசன் தானாஷா வின்  மந்திரி.    அவர் செல்வாக்கால் சுல்தானிடம் கோபன்னாவுக்கு உத்யோகம் கிடைத்து, கஜானா விலிருந்து பணம் எடுத்து சிதைந்து போயிருந்த பத்ராசலம் ராமர் கோவிலைபுனருத்தாரணம் பண்ணி கட்டிவிட்டார்.  விஷயம்  சுல்தான் காதுக்கு எட்டி  தானா ஷா கொதித்தான்.

''கோபன்னா, கஜானாவில் இருந்து  நீ  எடுத்த  பணத்தை உடனே செலுத்தி  உன் தலையை காப்பாற்றிக்கொள்''.  மத்தன்னா  கெஞ்சி கேட்டுக்கொண்டதால்  கோபன்னாவின் தலை தப்பியது. ஆனால்  பன்னிரண்டு வருஷம் கோல்கொண்டா சிறையில் வாசம். 

சிறையில்  ''ராமா  உன்னை பார்க்க முடியவில்லையே என்று  கோபன்னா வாடி ராமனையே நினைந்து உருகி பாடினார்.   கோபன்னாவின் குரல் கோதண்ட ராமனுக்கு கேட்காமலா போகும்? பன்னிரண்டு வருஷமும்  ஒவ்வொரு வினாடியும்  ராம ஸ்மரணை.  கண்ணீர் மல்க  ராமனை பணிந்து வேண்டுதல்.

ஒருநாள் காலை தானா ஷாவின் அரண்மனை வாசலில்  சுல்தானைப் பார்க்க  ரெண்டு வாலிப வீரர்கள் வந்தார்கள்  . ஒருவர்  தோளில்  பெரிய மூட்டை ஒன்று. வாசல் காவலர்கள் சுல்தானின் அனுமதி பெற்று உள்ளே  சென்றார்கள்.
''யார் நீங்கள் ? என்ன விஷயம்? என்றான் தானாஷா '
''உங்கள்  சிறையில் அடைத்திருக்கிறீர்களே  கோபன்னா , நாங்கள் அவருடைய  சேவகர்கள்.''
''ஓ அப்படியா. என்ன விஷயமாக வந்தீர்கள்?
''அவர் உங்களுக்கு பணம் திருப்பி தர வேண்டுமாம்.  எங்களுக்கு  கட்டளை இட்டிருந்தார். நாங்கள் அதை வட்டியோடு சேர்த்து கொண்டு வந்திருக்கிறோம்.  சுல்தான் அதை எண்ணி  சரி பார்த்து பெற்றுக்கொண்டு கோபன்னாவை உடனே சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்.
''அப்படியா? என் கஜானாவிற்கு சேரவேண்டிய பணம் வந்து சேர்ந்துவிட்டால் எனக்கு கோபன்னா வை விடுதலை செய்வதில் தயக்கம் இல்லை. எங்கே பணம்?
''இதோ''  மூட்டை சுமந்த வாலிப வீரன் அதை  சுல்தான் எதிரே இறக்கி வைத்தான்.
ஒரு பெரிய பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அதில் மூட்டையிலிருந்த  தங்க மோஹராக்களை  கலகலவென்று  வந்த இருவரும் கொட்டினார்கள்.
''அளந்து கொள்ளுங்கள், எண்ணிக் கொள்ளுங்கள்'' .
சுல்தானின்  ஆட்கள் மொத்த பணத்தை எண்ணினார்கள். வந்த இருவரும் உட்காரக் கூட இல்லை. நின்று கொண்டே இருந்தார்கள். பணத்தை எண்ணினதில்   சுல்தானுக்குச்  சேர வேண்டிய தொகையை விட அதிகமாகவே ரொக்கம் இருந்தது. சுல்தானுக்கு பரம சந்தோஷம்.  கடன் பைசலாகி  வசூலானதற்கு  அத்தாட்சியை சுல்தான் முத்திரையோடு அவர்களுக்கு காட்டினான்.  
''சரி, கோபன்னாவை விடுதலை செய்யுங்கள் நாங்கள் வருகிறோம்'' - வந்த வீரர்கள் இருவரும் புறப்பட்டு விட்டார்கள்.
சிறையில் வாடி ராமனை வேண்டி உருகிக் கொண்டிருந்த கோபன்னாவின் முன்னால் சுல்தானின் ஆட்கள்.
'ஐயா  எங்களோடு வாருங்கள். சுல்தான் அழைத்து வர கட்டளை இட்டிருக்கிறார்.
''ஓஹோ, எனக்கு சிரச்சேதமா? அதற்கு தான் தான் அழைப்பா? எதுவானால் என்ன. எல்லாம் ராமனின் சித்தம்.''
சுல்தான் முன்னே நின்றார் கோபன்னா.  
 சுல்தான் முக மலர்ச்சியாக இருந்தான்.
'கோபன்னா, நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்தர் என்பது தெரியாமல் உங்களை அவமானப் படுத்தி விட்டேன். எனக்குச் சேர வேண்டிய பணத்தாய் விட  கூடுதலாகவே  நீங்கள்  திரும்ப செலுத்த்தி விட்டீர்கள்.  உங்களைச் சிறையில் இத்தனை காலம் துன்பப்படுத்திவிட்டதற்கு வருந்துகிறேன். நீங்கள் இப்போது விடுதலையாகி விட்டீர்கள். இனி நீங்கள் என் விருந்தாளி''.
கோபன்னாவுக்கு  ஒன்றுமே  புரியவில்லை.
'சுல்தான்,  என்ன சொல்கிறீர்கள்?  எனக்கு ஒன்றுமே  புரியவில்லையே.  நான் செல்வந்தனா?  செப்பாடித்த காசு ஒன்று கோடா என்னிடம் இல்லையே.  என்னுடைய  ஆட்கள் வந்து  உங்களுக்கு சேரவேண்டிய பணத்தை தந்தார்களா? யார் அவர்கள்?, எனக்கு அப்படி யாருமே ஆட்கள்  கிடையாதே, என்னிடம் செல்வமே இல்லையே? - குரல் தழுதழுக்க தட்டு தடுமாறி கேட்டார் கோபன்னா.

'என்ன விளையாட்டு இது? எவ்வளவு பெரிய தனவந்தர் நீங்கள்  வேஷம் போடுகிறீர்களே கோபன்னா?  இரண்டு வீரர்கள் ஆஜானுபாகுவாக பொன்னிற சரீரத்தோடு, காதில் குண்டலம், ஜடாமகுடம் தரித்து, கையில் நீண்ட வில் வைத்துக் கொண்டு இங்கே வந்து  என்னை சந்தித்தார்களே, அதில் கொஞ்சம் பெரியவன் நீல நிறத்தில் இருந்தான். மற்றவன் பளபளக்கும் பொன்னிறமாக இருந்தான். இளையவன் தான் கையில் தங்க மோஹராக்கள் கொண்ட மூட்டை இருந்தது.

''சுல்தான் சுல்தான்.....என்ன சொல்கிறீர்கள். எனக்காக  யார் வந்து யார் பணம் கட்டியது?  அவர்கள் யார் ? என்ன பெயர் சொன்னார்கள் எப்படி இருந்தார்கள்  மீண்டும் சொல்லுங்கள்''
''என்ன கோபன்னா, உங்களது பணியாளர்கள் என்றார்கள், ஆனால் நீங்கள் அவர்களைத்  தெரியவில்லை என்கிறீர்களே. நான் அவர்கள் பெயரைக்  கூட கேட்டேனே.''
கோபன்னாவுக்கு உடல் நடுங்கியது.
''சுல்தான் யாரும் எனக்கு சேவகர்கள், பணியாட்கள் இன்றுவரை இல்லையே. அவர்கள்  என்ன பெயர் சொன்னார்கள் ? ஸ்ரீ ராமா இது என்ன சோதனை!
''கொஞ்சம் இருங்கள் எனக்கு அவர்கள் பெயர் மறந்து விட்டது. இதோ என் சேனாதிபதி. அவர் அப்போது அருகில் இருந்தார் அவருக்கு  நினைவு இருக்கும்.. அவரைக் கூப்பிடுகிறேன்''
சேனாதிபதி கை கட்டிக்கொண்டு அருகே வந்தான்.
 ''அஹமத், இங்கே கடன் தீர்க்க  வந்தவர்கள் என்ன பெயர் சொன்னார்கள்?''
' நீல நிறமாக கொஞ்சம் பெரியவராக இருந்தவர் பெயர் 'ராமோஜி, மற்றவர் லக்ஷ்மோஜி''

 கோபன்னா சிலையானார்.இரு கைகளும் சிரத்தின் மேல் சென்றது. கண்களில் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் வழிந்தது. கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய இரு கைகளை தலைக்கு மேலே தூக்கி வணங்கிய வாறு சிலையாக நின்ற கோபன்னா தனக்காக பணம் கொண்டு வந்து கடனைத் தீர்த்தவர்கள் ராம லக்ஷ்மணர்களே என்று புரிந்து கொள்ள வெகு நேரமாக வில்லை.

தானா ஷாவுக்கும்  கோபன்னா  கஜானா பணத்தை எல்லாம் செலவழித்து கோவில் கட்டி  வழிபட்ட தெய்வமே தனக்கு முன் காட்சியளித்தவர்கள் என்று புரிந்து கொண்டு ஆச்சர்யப்பட்டான். அவன் கோபன்னாவை பல்லக்கில் ஏற்றி பத்ராசலம் அனுப்ப, அவர் அங்கேயே தங்கி ''ராமதாசனாக'' சேவை செய்து வாழ்ந்தார். ராமர் கொடுத்த தங்க மோஹராக்கள் சில இன்னும் அங்கே இருக்கிறதாம். நான் சென்றபோது ஆலய அரும்பொருள் காட்சி நிலையத்தில் கண்ணாடி பெட்டகத்தில் சில காசுகள் பார்த்தேன்.

பத்ராசல ராமதாஸ் தெலுங்கு பக்திப் பாடல்கள் மனதை உருக்கக்கூடியவை. தெலுங்கு தெரியவேண்டும் என்பது தேவையில்லை. பக்தி பாவம் ஒன்றே போதும்.அவர் பாடிய பாடல்களில் ஒன்று :

eteeruga nanu dayachoosedavo inavamsottama rama
na tarama bhava sagara meedanu naLina daLekshana rama ॥
Charanam:
sree raghu nandana seeta ramana srita jana poshaka rama
karunyalaya bhakta varada ninu kannadi kanupu rama ॥

kroora karmamulu neraka jesiti neramulenchaku rama
daridryamu pari haramu cheyave daiva sikha mani rama ॥

vasava nuta rama dasa poshaka vandana mayodhya rama
bhasura vara sadguna mulu kalgina bhadradreeswara rama ॥

''ஹே ராமா, ரவிகுல சோமா, ரகுகுல திலகா, நீ எந்த விதத்திலாவது, எப்படியாவது ஒரு வழியில், என் மீது கருணை காட்டமாட்டாயா உத்தமா? தாமரைக்கண்ணா, உன் தயவில்லாமல், அருளில்லாமல், கருணையில்லாமல் என்னால் இந்த கொடிய சம்சார சாகரத்தை கடக்க முடியுமா? நீ தானே தாரக ராமன்.
ராகவா. ரகுராமா, சீதா மணாளா, ரகுநந்தனா, பக்தர்களை அரவணைத்து காக்கும் பக்தவத்சலா.   கருணை நிரம்பிய ஆலயமே, பக்தர்கள் வேண்டும் வரமளிப்பவனே,கோசலைக்கு மகனாக பிறந்து அவளுக்கு வரமளித்தவனே,  ராமா நான் எண்ணற்ற கொடூர குரூர செயல்கள் புரிந்தவன் என்றாலும் உன்னை நம்பி வந்துவிட்டேன் அப்பா, என் கொடுமைகளை புறக்கணித்து, என்மீது கருணை கொள்வாய்.நான் நிரம்ப அவஸ்தை பட்டுவிட்டேன் அதற்கெல்லாம் பரிகாரமாக, என் பக்தியை ஏற்று அருள்வாய்.என் தெய்வ சிகாமணியே. ஓ ராமா என் துன்பத்திலிருந்து என்னை விடுவி.இந்திராதி தேவர்கள் வணங்கும் தசரதன் மகன் தாசரதீ எனக்கு அபயம் அளிக்க வேண்டும். பக்த பரிபாலனம் செய்யும் பட்டாபிராமா''

வழக்கம் போல அவரது தாய் மொழியிலான இந்த தெலுங்கு பத்ராசல ராமதாசர் கீர்த்தனையை அற்புதமாக மனமுருகி பாடி இருக்கிறார் ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா. எத்தனையோ பேர் பாடிஇருந்தாலும் இது மனதை தொட்டதால் நானும் பாடிப் பார்த்தேன். யூ ட்யூப் லிங்க் கிளிக்     https://youtu.be/MKXTj0qH42g

 

sivan jaykay

unread,
Aug 20, 2025, 8:14:12 PMAug 20
to amrith...@googlegroups.com



ரெண்டு   பேர்  விழா. --   நங்கநல்லூர்  J K  SIVAN 

இன்று ரொம்ப ரொம்ப விசேஷமாக அமைந்து விட்டது. மாமன் மருகன் ரெண்டு பேருக்கும் கொண்டாட்டமோ இல்லையோ  பக்தர்களுக்கு படு குஷி.  என் வீட்டுக்குப்  பக்கத்தில்  நான் ஆரம்பகாலத்தில்  ஸ்தாபிதம் செய்ய புண்யம் பண்ணிய  திருமால் மருகன் கோவிலில் கோலாகலம்.   காலையிலிருந்து கந்த சஷ்டி கவசம், முருகன் பாடுகள், வெற்றி வேல் வீர வேல், என்று கோஷம்.   ஆமாம் இன்று  முருகனுக்குகந்த  ஆடி க்ரித்திகையும்   முருகன் மாமன் மாதவன் பிறந்த நாளும் ஒன்றாக கொண்டாடப்படுகிறதே.

ஆடி கிருத்திகை “சுப கிருத்திகை” என்றும் சொல்லப்படுகிறது.   பரமேஸ்வரனின் நெற்றிக்கண்  ஞானாக்னி யில் தீப்பொறியாக  தோன்றியவன் ஷண்முகன்.  சரவணப்பொய்கயில் அந்தத் தீப்பொறிகளை ஆறு கிருத்திகை பெண்கள் அக்னி தேவியின் சகோதரிகள் வளர்த்தனர். ஆகவே தான் அவன் “கார்த்திகேயன்” அல்லது “கிருத்திகேசன்” . தாரகாசுரணை வேறு யாரும் வெல்லவோ கொல்லவோ  முடியவில்லை. அவனை  வதம் செய்ய  வல்லமை படைத்தவன்  முருகன் மட்டுமே.   வெள்ளி மலையில் தரகாசுரனைச் சம்ஹாரம் செய்த நாள் “ஆடி கிருத்திகை” என்று சில புராணங்கள்  சொல்கிறது. அறுபடை வீடுகளில் இன்று பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காது.  முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம், தேன், பழம், பஞ்சாமிர்தம் முதலிய அபிஷேகங்கள் அற்புதமாக நடக்கும்.

கிருஷ்ண ஜெயந்தியைப் பற்றி எழுதவோ சொல்லவோ  வார்த்தை போதாது. எண்ணம் பறக்கிறது  பின்னோக்கி.... பறப்பவனுக்கு திசை எதற்கு...இலக்கின்றி சந்தோஷத்தில் மிதப்பவன் கிழக்கு மேற்கு நோக்கியா மிதப்பான்?.  காலம் பின்னோக்கி அவனை யுகம் கடந்து  செல்ல வைத்தது. காற்றைக் காட்டிலும் வேகமாக மனோவேகமாக  தூக்கி செல்லப்பட்டு அவன்  இப்போது துவாபர யுக கோகுலத்தில் இருக்கிறான். மெதுவாக நடக்கிறான்.

இன்று போல் தான் அன்றும்.  ஸ்ராவண  மாசம்  அஷ்டமி.    வானம்  குமுறிக்கொண்டு வந்தது.  வயதான  கோபன் ஒருவன்  கோகுலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தான்.  மாலை  நேரம்.  இன்னும் இரவு  முழுதாக  வானை  கருநிறப் போர்வையால்  மூட வில்லை.  கோபனால் நடக்க முடியவில்லை. எங்கோ இலக்கின்றி சென்றவனை  ஏதோ ஒன்று  பிடித்திழுத்தது.  அவன்  கால்  ஊனம். மெதுவாகவே  நடந்தான். எனினும் அவன் கால்கள் அவனை  நந்தகோபன் அரண்மனைப் பக்கமாக  அழைத்து சென்றன.  ஜேஜே  என்று கூட்டம்.  கிருஷ்ணன் தான்  துவாரகையில் இருக்கிறானே. பல வருஷங்கள் ஆகிவிட்டதே அவன் சென்று என்று  மனம் நினைக்க வைத்தது.

எனினும் நந்தகோபன்  யசோதை தம்பதியருக்கு  என்றும் கிருஷ்ணன் கோகுல வாசி தான். அவன் அங்கே தான் வாசம் செய்கிறான் என்று மனதில்  தீர்மானம்  ஆயிற்றே.  அன்று அவன் பிறந்தநாள் ஆயிற்றே. வாசலெல்லாம்  சிறிய  சிறிய  கிருஷ்ணன் பாதங்கள்  வெள்ளை வெளேரென்று  அரண்மனைக்குள்  கூட்டிசென்றது.  எங்கும்  கண் நிறையும்  கோலங்கள்.  வாசலில் தோரணம். உள்ளே   கோலாகலம். பாட்டும் பேச்சும்  --  எல்லாம் கிருஷ்ணன், கிருஷ்ணன், க்ரிஷ்ணமயம்.

நிறைய  கோபர்களும் கோபியரும்  வந்து போய்க் கொண்டிருந்தனர்.  நந்தகோபன்  அன்று  முதன் முதலில்  எப்படி  சந்தோஷமாக  கிருஷ்ணன் பிறந்தநாளைக் கொண்டாடினானோ அவ்வாறே  இன்றும். ஏன்  என்றுமே  தான்  அவனுக்கும் அந்த  யசோதைக்கும்  இந்த நாள்  பொன்னாள்..  அவளைப்பற்றி ஒரு வார்த்தையும் சொல்ல முடியவில்லை.  வார்த்தைகளே அகப்பட வில்லையே  அவள் மகிழ்ச்சியை பற்றிச் சொல்ல.  நீல உடை உடுத்தி, கிருஷ்ணனை நினைவூட்டினாள் கிருஷ்ணனுக்கு பிடித்த நிறமல்லவா!  

'' நீல நிற மாதவா,  நீல நிறக் கண்ணா,நீல மயில் வாகனா, நீல மயில் பீலி அணிந்தவா. நீலமேக ச்யமாளா''  என்று எப்படியெல்லாம்  கொஞ்சுவாள் பாடுவாள் அவனைப் பார்த்து. நெஞ்சில் அன்பும் கீதமும் ஊறுமே  அவளுக்கு.  முகம்  அன்றலர்ந்த தாமரை அவளுக்கு.

அத்தனை மகிழ்ச்சி.  உள்ளே   பலர் நடுவே  ஒரு  முத்தும் மணியும், புஷ்பங்களும் நிரம்பிய  ஒரு  தொட்டில்.  அதில்  தான் சிறு யாதவன் சிரித்த முகத்துடன். அந்த கிருஷ்ணன் பதுமை யசோதைக்கு  கிருஷ்ணனை  தன்னை விட்டு அகலாமல்  இருக்க செய்த  சாதனம் ஆயிற்றே.

அதற்கு பொன்னிற ஆடை, பீதாம்பரம், நெற்றியில் சந்தனம்.  மலர் மாலைகள்,  பட்டு மெத்தைமேல்  அவன், கோகுல கிருஷ்ணன்  சயனித்திருக்க, அந்த தொட்டிலை  சிறிதாக  சுகமாக  ஆட்டிக்கொண்டே  வந்த கோபியர் கோபர்கள்  மனம் திறந்து  பாடினர்.  கிருஷ்ணன் மேல் தான் எத்தனை பாட்டுகள். வயதான கோபன் உள்ளே நுழைந்தவன் கோகுலத்தில் தனை மறந்த நிலையில்  கிருஷ்ணன் தொட்டிலை  ஆட்டினான்.  ஆடாது அசங்காது வா கிருஷ்ணா  என்று  மனம் பாடியது.  MKT  பாகவதர்  கிருஷ்ணா முகுந்தா முராரே  பாடினார்.  ஏழிசை மன்னவராயிற்றே, கந்தர்வ கான குரல் மன்னன். அது சரி. கோகுலத்தில் MKT  எப்படி வந்தார்??  இதற்கு ஒரே பதில். கிருஷ்ணன்  அன்று, இன்று என்று இல்லாமல் என்றுமே  இருப்பவன். அவனுக்கா  MKT  யை பாட வைக்க முடியாது. அல்லது  MKT  காலத்தில்  கோகுலத்தை  அங்கே  கொண்டு வரமுடியாதா.  பாட்டிலேயே கோகுலம் செல்ல வைக்கும் தன்மை தான்  MKT க்கு இல்லையா?

எல்லோருக்கும்  யசோதை  விரை தானம் செய்தாள் . நாவல் பழம்  கண்ணன் நினைவாக  அனைவரும் உண்டனர்.  அவன் சேஷ்டிதங்கள் .... ''வாயைத் திற  ஏன்  மண்ணோடு  நாவல் பழம் தின்றாய். வாயெல்லாம் மண்.  திற வாயை.....  வெகுநேரம்  திறக்காமல் இருந்தவன் அவளது விடாத கோப  ஆணைக்கு கட்டுப்பட்டு  வாயை மெல்ல திறந்தான்......அங்கே தானே  அதிசயம் காத்திருந்தது.  அண்ட  பகிரண்ட, ஈரேழு புவனங்கள் தெரிந்தது...... அந்த நாவல் பழம் கிழ  கோபனுக்கும்  கிடைத்தது. மென்றான். மயங்கினான்.  தனை மறந்தான்.   வந்தவர்க்கெல்லாம்  எண்ணற்ற  பக்ஷணங்கள்  தானே அந்த  யசோதை  பண்ணி  விநியோகம் செய்தாள்.  அவன் தொட்டிலுக்கு அருகேயும்  சில ஒரு தட்டில்..... அவனுக்கு  நேரம் காலம் ஏது?   எங்கிருந்தாலும் கண்ணன், கிருஷ்ணன்  அவளிடம்  தானே  கட்டுண்ட மாயன்.

வந்த கோபியர் கோபர்க்கேல்லாம்  யசோதை  வெண்ணை வழங்கினாள் . கிருஷ்ணன்  பார்த்துக்கொண்டே இருந்தான் தொட்டிலிலிருந்து.  உனக்கில்லாமலா?  என்று அவனது தொட்டிலை  ஆட்டிக்கொண்டே   கிழ கோபன் யசோதை அளித்த  வெண்ணெய்  உருண்டையை  கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி  விழுங்கினான்.  அவன் வியாதி நீங்கும் என  தோன்றியது..  மனம்  புத்துணர்ச்சி பெற்றது.  இனி அவன் நடப்பான். நடக்கவைப்பவன் கபட நாடக சூத்ரதாரி அல்லவா.
 
வாயில் வெண்ணையோடு, கையில் கிருஷ்ண பிரசாதங்களோடு, மனம் பூரா  கிருஷ்ணனோடு,  நந்தகோபன் யசொதையிடம் விடைபெற்று  குட் நைட்  டா கிருஷ்ணா என்று அவனிடம்  வாழ்த்தி வணங்கி  விடைபெற்று  கிழவன் நடந்தான்.. மனோவேகத்தில் பூலோகம் வந்தான் தனது வீடு சேர்ந்தான்.   நான் தான் அவன்... கன்னிகா காலனியில் தொப்பென்று படுக்கையில் விழுந்துவிட்டேன். இடது கால் வலி இன்னும் முழுசாக போகாமல் படுத்துகிறது. 

sivan jaykay

unread,
Aug 20, 2025, 8:14:13 PMAug 20
to amrith...@googlegroups.com
காரணம் தெரியுமா? -   நங்கநல்லூர்  J K  SIVAN 

நாம்  எத்தனையோ காரியங்கள் செய்யும்போது  ஏன், எதற்கு என்ற காரணம் தெரியவுமில்லை. தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் இல்லை. எல்லோரும் செயகிறார்கள் நாமும் செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை தான் காணப்படுகிறது.

உதாரணமாக  ஒன்று சொல்கிறேன். நதிகளில் குளங்களில்  பலர்  வேண்டிக்கொண்டு  காசு போடுவதை பார்த்திருக்
கிறீர்களா? கேட்டால்  கங்காமாதாவுக்கு  காவேரி அம்மாவுக்கு  சமர்ப்பணம் என்று சொல்வார்கள்.  அதனால் அதிர்ஷ்டம் வரும் என்பார்கள். விஞ்ஞான பூர்வமாக  இதற்கு   காரணம் இருக்கிறதே.  இப்போதெல்லாம் காசு எப்படி வருகிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், stainless  ஸ்டீல், வெள்ளையாக  துருப்பிடிக்காமல் இருக்கிறது. ஐந்து பைசாவா ஐந்து ரூபாய, ஒன்றா இரண்டா என்று கூட தெரியவில்லை. முன்பெல்லாம் குருடன் கூட  காசை தடவிப்பார்த்து  அது எவ்வளவு என்று சொல்லும் அளவுக்கு அதன் அங்க லாவண்யம் இருக்கும். காசு  செம்பில் இருந்தது. நன்றாக ஞாபகம் இருக்கிறது  காலணா, அரையணா, கால் ரூபாய்  எல்லாம் தாமிரத்தில் இருந்தது.  தாமிரம் உடம்புக்கு நல்லது என்று கையில் காப்பு மாதிரி மாட்டிக்கொள்வதுண்டு.  செப்புக்காசுகளை குளத்திலோ ஆற்றிலோ ஏரியிலோ போட்டால் தண்ணீரை சுத்தீகரிக்கும். இப்போது கூட விஷயம் தெரிந்தவர்கள் பலர்  வீடுகளில் செப்புத்தவலைகளில், செப்புக்  குடங்களில்   குடிநீர் வைத்து குடிக்கிறார்கள். 

காலில் மெட்டி போடும் பழக்கம் ஹிந்து பெண்மணிகளுக்கு இருக்கிறதே அதைப்  பற்றியும் கொஞ்சம் சொல்லலாமா? கால் ரெண்டாவது விரலில்  வெள்ளி மெட்டி போட்டுக்கொண்டிருந்தால் அவள் மணமானவள் என்று அர்த்தம். இறுக்கமாக  அந்த மெட்டி கால்விரலை அழுத்தும்போது கருப்பை வலுப்படுகிறது. இதயத்துக்கு ரத்த ஓட்டம் சீராகிறது.  மாதாந்திர விடாய் சீராக  குறித்த கால இடைவெளியில் நேரும். ஸ்ரமம் இருக்காது.  வெள்ளி ஒரு கிரியா ஊக்கி.  உடலுக்கு நல்லது செய்யும் நண்பன். 
 
ஆலயமணி பற்றியும் சொல்ல தோன்றுகிறது. சொல்கிறேன். வடக்கத்தியார்  கோவில் சென்றால்  மேலே கட்டியிருக்கும் மணியின் கயிற்றை இழுத்து ஓசைப்    படுத்துவார்கள்.  ஆகம சாஸ்திரத்தில்  கோவில் சந்நிதி மணிகளின் சப்தத்தில் தீய சக்திகள் விரட்டப்படும் என்று இருக்கிறது. பஞ்ச லோக மணி சப்தம் கேட்கும்போது சேவிக்கினிமையாகவும்  ஆன்மீக உணர்வை தூண்டுவதாகவும்  உள்ளது.   நமது கவனம் திசைமாறி  இறைவன் பால் இழுக்கப்படும்.   மூளையின் இடது வலது பாகங்கள் நன்றாக செயல்படும்.   பஞ்சலோக மணி சப்தம்  பல வினாடிகளுக்கு  எதிரொலிக்கும்.  அந்த சப்தம் உடலின் பல பாகங்களில் வியாதி கிருமிகளை அழிக்கும். நோய்கள் குணமாகும். எண்ணங்கள் நல்லதையே நினைக்க செய்யும். 

இன்னும் நிறைய  இது மாதிரி நல்ல விஷயங்கள் ஞாபகம் வந்தபோது சொல்லலாம் என்று தோன்றுகிறது.  யாரும் படிக்கவில்லை என்றாலும் நானே எனக்கு இன்னொரு முறை படிப்பதற்காகவாவது உபயோகப்படட்டும் . 

sivan jaykay

unread,
Aug 20, 2025, 8:14:13 PMAug 20
to amrith...@googlegroups.com
நம்பிக்கை        --  நங்கநல்லூர்  J K SIVAN                    

என்னவோ தெரியலே.  இப்போதெல்லாம்   நாம் இருவர் நமக்கொருவர் ஆக இருக்கிறது. எந்த வீட்டிலேயும்  ரெண்டு குழந்தைகள் இருந்தாலே   அது ஜாஸ்தியாக தோன்றுகிறது. 

 எங்க காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது  அரை டஜன் நண்டு சிண்டுகள்  இருந்தது. . நான் சொன்னது குறைந்த அளவு.  10  குழந்தைகள் இருக்கும்  குடும்பங்கள்  ஏராளம். அந்த   காலத்தில் மருத்துவ வசதி, விஞ்ஞான வளர்ச்சி இல்லை, சிசேரியன் ஆப்பரேஷன் தெரியாது. மருத்துவச்சி வந்து தான் வீட்டிலேயே பிரசவம்.  குழந்தைகள் மரணம் ஜாஸ்தி.  வியாதிகள் விவரம் தெரியாது.  வியாதிக்கு  ஒண்ணு நாட்டு,  கை வைத்தியம். இல்லையென்றால்  வைத்யநாத ஸ்வாமிக்கோ, குலதெய்வத்துக்கோ  வருவதாக வேண்டிக்கொண்டு  காசு முடிந்து வைப்பது தான் பழக்கம்.  முடி கொடுப்பதற்காக  தாடி மீசை, ஜடா முடியோடு பலர் இருந்தார்கள்.  இப்படித்தான் வாழ்க்கை கவலையில்லாமல் நடந்தது. 

ஊரிலே  இங்கிலிஷ் டாக்டர்கள் கிடையாது.    மூலிகை வாத்யம், பாட்டி வைத்தியம், பத்தியம்  இதில் தான்  வியாதி  குணமாகும்  என்று  நம்பிக்கை எல்லோருக்கும் இருந்த காலம்.   பாரத தேசம்  சுதந்திரம் அடைந்த பொது  இந்தியனின் சராசரி வயது 27 என்று இருந்ததாக  ஞாபகம்.   இப்போது  90ஐ நெருங்கிவிட்டிருக்கும். .

ஆயிரம்  பேரை கொன்றவன்  அரை வைத்தியன்  என்ற வாக்கு ஒருவேளை அக்காலத்தில்   பொய்க்காமல்  இருந்திருக்குமோ  என்று   தோன்றுகிறது.  பத்து  பன்னிரண்டு  குழந்தைகள் உள்ள குடும்பத்தில்   நான்கு  ஐந்தாவது  தேறாதா  என்ற  ஆதங்கம் பெற்றோர் மனதில்  இருந்தது.  குழந்தைகளுக்கு கடவுள்களின் பெயரை வைத்தார்கள். குல தெய்வம் காப்பாற்றும் என நம்பிக்கை. திருப்பதி வெங்கடாசலபதிக்கு  காசு முடிந்து வைக்கும்  பழக்கம் எங்கள் குடும்பத்தில் இன்றும்  தொடர்கிறது.

 யமன்  குழந்தைக்கு  மூக்கிலோ  காதிலோ  துளை இட்டு  பின்னம் பண்ணினால்  நெருங்க மாட்டான்,  கசப்பான  வேம்பு, மூக்காண்டி, பிச்சை, என்றெல்லாம் பேர் இருந்தால் அருவருப்போடு  கிட்டே  வரமாட்டான், விட்டுவிடுவான்   என்றெல்லாம்  நம்பிக்கை. குழந்தைகள்  பகவான் இட்ட,போட்ட,  பிச்சை.  நிறைய குடும்பங்களில்  இன்றும்  பிச்சைகள், வேம்புகள்  இருக்கிறார்கள்.  என் அண்ணா பெயர்  பிச்சை தான்.  கூகிள்   தலைவர்  பெயர்  சுந்தர் பிச்சை அப்படி தான் போலிருக் கிறது. பெரியவர்கள் பெயரை குழந்தைக்கு  வைத்து  அந்த  பெயரைச்  சொல்லி  கூப்பிடுவது  அவ மரியாதை என்று  அந்த  பெயர் கொண்ட குழந்தைகள்  கடைசிவரை  அம்பி, பெரியம்பி, சின்னம்பி,  அண்ணு , அண்ணப்பா, அங்கச்சி.  அம்மாளு , அம்மாளம்  என்ற பெயர்களோடேயே  வாழ்ந்து  மறைந்தார்கள்.  சிலர்  நீண்ட  ஆயுசோடு இருந்தார்கள்.   பக்தி  அவர்களை காப்பாற்றியது  என்று  தாராளமாக  கூறலாம்.

 எனக்கு ஒரு மகிழ்ச்சி.  என்னால் முடிந்தவரை  பக்தியை பரப்புகிறேன். அது தான் நான் செய்யும் ஒரே ஒரு சேவை என்று மனதில் படுகிறது.  கடவுள் நம்பிக்கை வளர்ந்து கொண்டு தான் வருகிறது.  விஞ்ஞானம், நவீனம் அதை இன்னும் விழுங்கவில்லை.

sivan jaykay

unread,
Aug 20, 2025, 8:14:13 PMAug 20
to amrith...@googlegroups.com
பாலமுகுந்தாஷ்டகம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN

ஆவணியில் அஷ்டமி திதி நாளைக்கு.  5000 வருஷம் முன்பு பிறந்த கோபால கிருஷ்ணன் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குட்டிக்கால் சுவடோடு  நாளை வரப்போகிறான்.  எட்டு போட்டு அதன் மேல் ஐந்து ஒரே அளவு கோடு  போட்டு ரெண்டு காலும் ஒரே மாதிரி வரையும் ராஜா ரவிவர்மாக்கள்  ஒவ்வொரு வீட்டிலும் உண்டே.  ரெண்டு கால் சுவடும் ஒன்றன் பின் ஒன்றாக இல்லாமல் ஜோடி ஜோடியாக  அவன்  இந்த விசித்திர காலுடன் குதித்து குதித்து வரப்போகிறான் போல் இருக்கிறது. 

கேரளத்தில் குருவாயூரில்  உண்ணி கிருஷ்ணன் பக்தர்களில் ஒருவர் பில்வமங்கள்.  எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிருஷ்ண பக்தர். அவர் எழுதிய சுவடிகளில் ஏதோ ஒன்று  வங்காளத்தில்  உதித்த  சைதன்ய பிரபு,  ஆந்திரா வந்த போது கிடைத்தது. ஸம்ஸ்க்ரிதம்  என்பதால் அதன் ருசி உணர்ந்து மீதி சுவடியைக் கண்டுபிடித்து கொண்டுவர   சிலரை திருவனந்தபுரம் அனுப்பினார்.   அப்படி கிடைத்தது தான்  கிருஷ்ணகர்ணாம்ருதம்.

 ''டேய்  என்னோடு வா'' என்று  பில்வமங்கள் ( லீலா சுகர்  என்றும் அறிமுகம்) கூப்பிட்டால் குருவாயூரப்பன் அவர் பின்னாலேயே போவான்.  லீலா சுகர் எழுதியது தான்  கிருஷ்ண கர்ணாம்ருதம்.  இன்றும்   எத்தனையோ வித்வான்கள் பாடும் பிரபல  ஸ்லோகங்கள் கொண்டது.  300க்கும் மேலே உள்ள அற்புத ஸ்லோகங்கள்.  லீலாசுகர்  கிருஷ்ணனை பாலக்ரிஷ்ணனாகவும்  வாலிப கிருஷ்ணனாகவும் நமக்கு காட்டுகிறார்.   கிருஷ்ண கர்ணாம்ருதம் பாடல்களை பின்னர் முழுதும் ஒருநாள் எழுதுகிறேன். ஆசையாக இருக்கிறது. அதற்கு முன் நாளை  ஜன்மாஷ்டமிக்காக  ஒரு   எட்டு  குட்டி ஸ்லோகங்கள் கொண்ட  ''பால முகுந்தாஷ்டகம்''  ரசியுங்கள்; 

1.करारविन्देन पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तम् । वटस्य पत्रस्य पुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥१॥

Kara-Aravindena Pada-Aravindam Mukha-Aravinde Vi-Niveshay-Antam |Vattasya Patrasya Putte Shayaanam Baalam Mukundam Manasaa Smaraami ||1||

கராரவிந்தேன பதாரவிந்தம் முகாரவிந்தே விநிவேசயந்தம் |வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||

குட்டி கிருஷ்ணனை நினைத்தால் அவன் சிவந்த தாமரைப் பாதங்கள் தான் நம் முன் தோன்றுகிறது.பிஞ்சு கரங்களால் தனது கால் கட்டைவிரலை வாயில் வைத்து சுவைக்கும்  ஆலிலை கிருஷ்ணன் பார்த்திருக்கிறீர்களா? (TSR  கோகுல் ஆயில் என்ற கம்பெனி அற்புதமாக  ஆலிலை கிருஷ்ணன் காலண்டர்கள் போடுவார்கள். எங்கள் வீட்டில் வெகுகாலம் முன்பு இருந்தது ஞாபகம் வருகிறது.  ஆலிலை கிருஷ்ணன் தான் ஸம்ஸ்க்ரிதத்தில்  வட பத்ர சாயி.

2. संहृत्य लोकान् वटपत्रमध्ये  शयानमाद्यन्तविहीनरूपम् ।सर्वेश्वरं सर्वहितावतारं  बालं मुकुन्दं मनसा स्मरामि ॥२॥

Samhrtya Lokaan Vatta-Patra-Madhye Shayaanam-Aady[i]-Anta-Vihiina-Ruupam | Sarve[a-Ii]shvaram Sarva-Hita-Avataaram Baalam Mukundam Manasaa Smaraami ||2||

ஸம்ஹ்ருத்ய லோகான் வடபத்ரமத்யே சயானமாத்யந்த விஹீனரூபம் | ஸர்வேச்வரம் ஸர்வஹிதாவதாரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||

மஹா பிரளயத்தின் போது  சர்வ ஜீவராசிகளும் மறைந்தபோது ஆலிலையில் மிதந்துவந்தவன் பாலகிருஷ்ணன். உலகத்தையே மீண்டும் ஸ்ரிஷ்டித்தவன். அவன் ஆதி அந்தமில்லாதவன்.  சர்வ லோக நாயகன். எந்தனுள்ளத்தில்  கொள்ளை கொண்டு விளையாடுபவன்.

3. इन्दीवरश्यामलकोमलाङ्गं इन्द्रादिदेवार्चितपादपद्मम् । सन्तानकल्पद्रुममाश्रितानां बालं मुकुन्दं मनसा स्मरामि ॥३॥

Indiivara-Shyaamala-Komala-Anggam Indra-[A]adi-Deva-Arcita-Paada-Padmam | Santaana-Kalpadrumam-Aashritaanaam Baalam Mukundam Manasaa Smaraami ||3||

இந்தீவரச்யாமள கோமளாங்கம் இந்த்ராதி தேவார்ச்சிதபாதபத்மம் |ஸந்தான கல்பத்ருமமாச்ரிதானாம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||

இந்த குட்டிப்  பையன் கருப்பன், கருநீல வர்ணன்.  கார்மேகவண்ணன்.  மெத்து மெத்து என்று  வழ வழா பையன். இந்திராதி தேவர்கள் சரணடைந்து பணிந்து வணங்கும்  அவனது அந்த சின்னஞ்சிறு பதங்கள்  பார்க்கத்தான் சின்னவை.  மூன்று உலகத்தையும்  இரண்டு அடிகளில்  அளக்க வல்லவை. கேட்ட வரம் தருபவை. ஜாக்ரதை. மூர்த்தி சிறிது. கீர்த்தி பெரிது. 

4. लंबालकं लंवितहारयष्टिं शृङ्गारलीलाङ्कितदन्तपङ्क्तिम् ।बिंबाधरं चारुविशालनेत्रं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥४॥
Lamba-Alakam Lamvita-Haara-Yassttim Shrnggaara-Liila-Angkita-Danta-Pangktim | Bimba-Adharam Caaru-Vishaala-Netram Baalam Mukundam Manasaa Smaraami ||4||

லம்பாலகம் லம்பிதஹாரயஷ்டிம் ச்ருங்கார லீலாங்கிததந்தபங்க்திம் |பிம்பாதரம் சாருவிசாலநேத்ரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||

உருண்டு திரண்டு, சுருண்ட  மெல்லிய   நீண்ட  கேசங்கள் கொண்டவன் அந்த அழகன்.  அழகிய வன மாலைகள், காட்டுப்பூக்களால்  தொடுத்த மாலை அணிந்தவன். வனமாலி.  முத்துப்போல  பல்லழகன். கோவைக்கனி இதழ்களும் அலைபாயும்  நீலோத்பல  விழிகளும் கொண்டவன்.   இவனை யாராலாவது நினைக்காமல் இருக்க முடியுமா?

5.  शिक्ये निधायाद्य पयोदधीनि बहिर्गतायां व्रजनायिकायाम् ।भुक्त्वा यथेष्टं कपटेन सुप्तं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥५॥

Shikye Nidhaaya-Adya Payo-Dadhiini Bahir-Gataayaam Vraja-Naayikaayaam |Bhuktvaa Yathessttam Kapattena Suptam Baalam Mukundam Manasaa Smaraami ||5||

சிக்யே நிதாயாத்யபயோததீநி பஹிர்கதாயாம் வ்ரஜநாயிகாயாம் |புக்த்வா யதேஷ்டம் கபடேன ஸுப்தம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி II

திருடன் அவன். மனமாகிய வெண்ணையை திருடுபவன்.   உறியில் சட்டியில் திருடிய வெண்ணை  அவன்  நம் இதயத்தை கொள்ளை கொள்வதை குறிக்கிறதோ?  அதனால் தான் அவன்  உள்ளங்கவர் கள்வன் எனப்படுபவனோ? அவனுக்கு அவன்
 உடல் மட்டும் நிழல் அல்ல.  வ்ரஜ பூமியில் வசித்த அனைத்து  கோபியரும் அவன் நிழல்கள். அவனை இணை பிரியாதவர் கள்.  அவன்  பலே நடிகன். ஆயர்பாடி மாளிகையில் தூங்குவது போல் நடிப்பவன். யாரவனைத் தூங்க6விட்டார் தாலேலோ?

6. कलिन्दजान्तस्थितकालियस्य फणाग्ररङ्गे नटनप्रियन्तम् ।तत्पुच्छहस्तं शरदिन्दुवक्त्रं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥६॥
Kalinda-Ja-Anta-Sthita-Kaaliyasya Phanna-Agrar-Angge Nattana-Priyantam |Tat-Puccha-Hastam Sharad-Indu-vaktram Baalam Mukundam Manasaa Smaraami ||6||
களிந்தஜாந்தஸ்தித காளியஸ்ய பணாக்ரரங்கே நடனப்ரியந்தம் |தத் புச்சஹஸ்தம் சரதிந்துவக்த்ரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||

யமுனையில்,  காளிந்தி நதி பிரதேசத்தை ஆக்கிரமித்த  கொடிய விஷம்கொண்ட  காளிங்கன் சிரத்தின் மேல்  குதித்து நடன மாடி, அவன்  தவறு செய்தாலும் அவனைக் கொல்லாமல்  உயிர்ப்  பிச்சை அளித்து அப்புறப்படுத்தியவன் கண்ணன்..  தனது அழகிய பிஞ்சு கையால் காளிங்கன் வால் நுனியைப்  பிடித்துக் கொண்டு  ஒரு கால் தூக்கி,    படமெடுத்து ஆடும் காளியன் தலையில்  பால  கிருஷ்ணன் நிலவொளி வீசும்  வதனத்துடன்  ஆனந்த  புன்முறுவலுடன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் காட்சி காளீய  நர்த்தனம் என்று நிறைய சிலைகளாகவும், படங்களாகவும்  பார்த்ததெல்லாம் இதோ வரிசையாக கண் முன் தோன்றுகிறது.

7. उलुखले बद्धमुदारशौर्यं उत्तुङ्गयुग्मार्जुनमङ्गलीलम् ।उत्फुल्लपद्मायतचारुनेत्रं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥७॥
Ulukhale Baddham-Udaara-Shauryam Uttungga-Yugma-Arjunam-Angga-Liilam | Utphulla-Padma-[A]ayata-Caaru-Netram Baalam Mukundam Manasaa Smaraami ||7||
உலூகலே பத்தமுதாரசௌர்யம் உத்துங்க யுக்மார்ஜுன பங்கலீலம் |உத்புல்ல பத்மாயத சாருநேத்ரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||

''அடாடா, உன் விஷமம் தாங்கமுடியவில்லையடா கிருஷ்ணா'' என்று அன்னை யசோதை  அவனை ஒரு கல் உரலோடு கயிற்றால் பிணைத்து  கயிற்றின்  மறு முனையை  கண்ணன் வயிற்றில் கட்டியபோது அந்த கட்டுண்ட மாயன் கண்களில் ஜலம்  ததும்ப கட்டுண்டவன் கண்களில் ஜலத்துடன் அம்மாவிடம் கெஞ்சும்  காட்சி மறக்க முடியுமா? அதையே  சாக்காக வைத்தல்லவோ  குபேரனின் புத்திரர்கள்  நளகூபன், மணிக்ரீவன் ஆகியோருக்கு  சாப விமோசனம் அருளினான்.  இரு மருத  மரமாக நின்ற அவர்களுக்கிடையே  உரலோடு சென்று  மரங்களை சாய்த்து அவர்களை விடுவித்து விண்ணுலகுக்கு அனுப்பினான். அடே பாலமுகுந்தா நீ படே ஆளப்பா !.

8. आलोक्य मातुर्मुखमादेण  स्तन्यं पिबन्तं सरसीरुहाक्षम् ।सच्चिन्मयं देवमनन्तरूपं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥८॥
Aalokya Maatur-Mukham-Aadenna Stanyam Pibantam Sarasii-Ruha-Akssam | Sac[t]-Cinmayam Devam-Ananta-Ruupam Baalam Mukundam Manasaa Smaraami ||8||
ஆலோக்ய மாதுர்முகமாதரேண ஸ்தன்யம் பிபந்தம் ஸரஸீருஹாக்ஷம் | ஸச்சின்மயம் தேவமனந்தரூபம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி II
இதோ  ஒன்றுமறியாத பாலகனாக, தாய் மடியில் படுத்து  அவள் பாலூட்ட  சுவைத்து ருசித்து குடிப்பவனைப் பாருங்கள். தாமரைத் தடாகத்தில் மலர்போல் விழிகள்!. காக்கும் தெய்வமே  கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா நின்னைச் சரணடைந் தேன்.

 

 

sivan jaykay

unread,
Aug 20, 2025, 8:14:13 PMAug 20
to amrith...@googlegroups.com
வழித்துணை   -  நங்கநல்லூர்  J K  SIVAN

அந்த  காலத்தில் பட்டணத்தில் சொந்த வீட்டுக்காரர்களை விட  வாடகைக்கு குடியிருப்பவர்கள்  அதிகம் பேர்  இருந்தார்கள்.  நாங்களும் அதில் சேர்த்தி. சென்னையில் பல இடங்களில் பல வீடுகளில் குடி இருந்தவர்கள்.  என் இளமைக்காலம்  குழந்தைப் பருவத்தில் திருவல்லிக்கேணியில்  பெல்ஸ் ரோடிலும்  பிறகு எனக்கு நினைவு தெரிந்து நான் விளையாடியது கோடம்பாக்கத்தில் வடபழனி ஆண்டவர் கோவில் அருகாமையில்  பிள்ளைமார் தெருவில். அப்புறம்  சிவன் கோவில் அருகே, ஆற்காட் ரோடு பக்கம், சமரபுரி முதலியார் வீட்டில்.அப்புறம்  சூளைமேட்டில், அஜீஸ் நகரில்  என்று முடிந்தது.   
என் தந்தை ஸ்ரீமான்  ஜே .கிருஷ்ணய்யர்  மும்மொழிகளில் வல்லுநர், ஸமஸ்க்ரிதம் , ஆங்கிலம், தமிழ் இவற்றில் சரளமாக  பேசுவார் எழுதுவார். பலராலும்  விரும்பப்பட்ட  சிறந்த ஆசிரியர்.  கடைசிவரை சொந்தவீடு வாங்காத  ஆசிரியர்/ அவரது மாணவர்கள் இன்னும்  முகநூலில் இருக்கிறார்கள்,  என்னோடு தொடர்பு கொள்கிறார்கள் என்பதில் எனக்கு மிகவும் பெருமை .
அப்பாவுக்கு கடைசி காலத்தில் காது முக்கால்வாசி கேட்கவில்லை.  83 வயது வாழ்ந்தார். தனியாக  தெருவில் போக வேண்டாம் என்று  பிள்ளைகளும் மனைவியும்  எத்தனை முறை சொன்னாலும்  விடுவிடுவென்று தெருவில் நடக்க கிளம்பிவிடுவார்.  நங்கநல்லூருக்கு  ரெண்டு கிமீ. தூரத்தில் என் சகோதரர்கள் இருந்த  உள்ளகரத்துக்கு  நினைத்தபோதெலாம்  போய் வருவார். நடக்கும்போது  ஏதாவது ஒரு ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டே நடப்பார். அதிகம் கைத்தடியை உபயோகிப் பதில்லை.  

''அப்பா இப்படி  தனியாக  போகாதீர்கள். கண் பார்வை போதாது,  காதும் கேட்கவில்லை.  தெருவில் வண்டிகள் வேகமாக போகிறதே, விபத்து நேரிடலாம் என்று என்று சொன்னபோதெல்லாம் 
 ''எனக்கென்னடா கவலை,  எனக்கு முன்னாலே முன்னால்  விநாயகர்  வழிகாட்டுகிறார்,  பின்னால்  ஆஞ்சநேயர் துணையாக  வருகிறார்'' என்பார்.   அது உண்மை என்று ஒரு சம்பவத்தை பற்றி படித்தபோது புரிந்தது.

ஒரு  வெள்ளைக்கார பெண் தனியாக வேலைக்கு செல்கிறாள். பரம ஏழை.  வாகனங்கள் வாங்க வசதி இல்லாதவள்.  வீட்டில் சிறு குழந்தைகள் இருவர் தனியாக இருக்கிறார்கள்  அவள் குடியிருந்த வீட்டு சொந்தக்காரி, அடுத்த வீட்டுக்காரி கருணையால்  குழந்தைகளை அவர்கள் பாதுகாப்பில் விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறாள். எப்படியும் தினமும் சாயந்திரம் ஆறு மணிக்குள் திரும்பிவிடுவாள்.

ஒருநாள் இரவு ஒன்பது மணியாகிவிட்டது.  முதலாளி சக்கையாக பிழிந்து வேலை வாங்கிவிட்டு  தான் அனுப்பினான். வேறு வழியில்லாமல் பயந்து பயந்து இரவில் தனியாக நடந்து வந்தாள். அவள் வீடு எங்கோ ஒரு ஒதுக்குப்புற  சந்தில்.  இருண்ட பகுதி. அதிக ஜனநடமாட்டம் இல்லை.  ஒரு   குறுகிய சந்து வழியாக போகும்போது யாரோ ஒரு குடிகாரன்  எதிரே  தெரு முனையில்  நின்று கொண்டிருந்தான்.  வழிப்பறி, கொள்ளை, கொலை, கற்பழிப்பு,  எல்லாம் சர்வ சகஜமான ஊர்  அது.

அந்த பெண் பயத்தில் நடுங்கினாள். எங்கும் ஓடமுடியாது .  ''பகவானே  எனக்கு உன்னை விட்டால் வேறு கதி இல்லை. எப்படியாவது என் உயிரைக் காப்பாற்று. என் குழந்தைகளுக்கு என்னைவிட்டால் வேறு கதி இல்லை. அவர்களை அனாதை களாக்கி  விடாதே. ப்ளீஸ். என்னை ஜாக்கிரதையாக வீடு போய்ச் சேர உதவு, தெய்வமே'' என்று வேண்டிக்கொண்டு  விடுவிடுவென்று அந்த  ஆளைத் தண்டி வேகமாக நடந்தாள் .  ஆள்  நடமாட்டம் இல்லாத  அந்த சந்தில், அவன் அவளை தூரத்திலேயே பார்த்து விட்டான்.  பாக்கெட்டில் கூரான கத்தி இருந்தது. அவன் கை  அதைத் தொட்டுக்கொண்டிருந்தது. அவள் செல்வதை அவன் உற்றுப் பார்த்துக்  கொண்டிருந்தவன்  அவள்  அதிர்ஷ்டம் அவன் அவளை ஒன்றும் செய்யவில்லை. அவன் கொடூர முகம் அவள் மனதில் படமாகிவிட்டது.

வீடு வந்து சேர்ந்ததும்  பகவானுக்கு நன்றி செலுத்தினாள் .  அடுத்த  நாள் காலை  ஒரு செய்தி. அவள் நடந்து வந்த சந்தில் யாரோ ஒரு பெண் கத்தியால் குத்தி  கொலை செய்யப்பட்டிருந்தாள் .    இந்த சம்பவம்  அந்த  ஏழைப் பெண்  நடந்து வந்த  சந்தில்  அவள் வந்த  பிறகு அரை மணி நேரத்தில் நடந்திருக்கிறது.  நடுங்கி போனாள் .

"எவ்வளவு  அதிர்ஷ்டம் எனக்கு. பகவான் எப்படி என்னை காப்பாற்றியிருக்கிறார்'' என்று  மனதார  நன்றி செலுத்தினாள் .  அந்த கொலைகாரனை அடையாளம் தெரியாமல் தேடி வருவதாக  செய்தித்தாளில் அறிந்ததால் நேராக  காவல் நிலையம் சென்றாள் . முதல் நாள் இரவு நடந்ததை விவரித்தாள். போலீஸ் அதிகாரி அவளை பாராட்டி  நாங்கள் சிலரை சந்தேகத்தில் பிடித்து வைத்திருக்கிறோம். உன்னால் அடையாளம் காட்டமுடியுமா பார்  என்றபோது ''ஆஹா  எனக்கு அவன் முகம் மனதில் இருக்கிறது '' என்று  நான்கு பேரில்  குடிகார கொலையாளியை தவறாமல் அடையாளம் காட்டினாள்.

அவனை போலீஸ்  ''அவர்கள் முறையில் விசாரித்த போது'' குற்றத்தை ஒப்புக்கொண்டான். அப்போது அந்தப் பெண் அவனை ஒரு கேள்வி கேட்க விரும்பினாள் . போலீஸ் அனுமதித்தது.
''சரி கேள்''  
''நான் அதே சந்தில் அரை மணி நேரம் முன்பு தனியாக நடந்து வந்தேனே என்னை நீ ஏன் தடுத்து நிறுத்தவில்லை, என்னை ஒன்றும் செய்யவில்லை? அதற்கு என்ன காரணம்?'' .
அந்த கொலையாளி என்ன பதில் சொன்னான் தெரியுமா?:

''நான் உன்னைப் பார்த்தவுடன் என் கத்தியை வெளியே எடுத்தேன். உன்னைக்  கற்பழித்து கொன்று உன்னிடம் இருந்த பணம், நகைகளை பறிக்க எண்ணினேன். ஆனால் நீ தனியாக நடக்கவில்லையே.  ஏன்  பொய் சொல்கிறாய்.  உன் இருபக்கமும்  பலம் வாய்ந்த இரு ஆண்கள் உனக்கு பாதுகாப்பாக நடக்கும்போது உன்னைத் தாக்க நான் என்ன  முட்டாளா?''

ஆஹா   இது தான் என் அப்பா நம்பிய பிள்ளையாரும் ஆஞ்சநேயருமா?!

 

sivan jaykay

unread,
Aug 20, 2025, 8:14:14 PMAug 20
to amrith...@googlegroups.com


கதை கதையாம் காரணமாம்...   நங்கநல்லூர் J K  SIVAN 

ஒரு கேள்வி கேட்கிறேன்.  உங்களுக்கு தெரிந்து  இது வரை யாராவது  ''கதையா?  வேண்டாம், எனக்கு கதை பிடிக்காது '' சின்னதுண்டா.  பல் முளைக்கும்  பருவத்திலிருந்து பல்லிழந்த படு கிழம் வரை கதை என்றால் ஜரூராக எழுந்துஉட்கார்ந்து  ''சொல்'' என்று தானே கூறுகிறது. 

கதை  கேட்டு  வளராத  குழந்தைகளைப் பார்க்க முடியாது.  கதை அப்படிப்பட்ட ஒரு  வசிய மந்திரம். அறுபது வருஷங்கள் முன்பு என் நங்கநல்லூர் வீட்டில் வாசலில் வேப்ப மரத்தடியில் என்னைச் சுற்றி உட்கார்ந்திருந்த பல வயசு குழந்தைகளின்  பரவச  முகங்கள்  இப்போதும் கண் முன் தோன்றுகிறது.  அப்பப்பா   என்ன உற்சாகம்  என்ன  உணர்ச்சி  மயம். என்  அண்ணா  குழந்தைகள்,  என்  மனைவியின்  சகோதரி  அடுத்த  தெருவில்  இருந்தால்.  அவர்கள்  குழந்தைகள், தெருவில்  அண்டை அசல்  வீட்டு  குழந்தைகள்  என்னை  எப்போதுமே  சுற்றிக்  கொண்டிருக்கும்  எத்தனையோ  நாட்கள் அவை.  என்னைக் கண்டால்  கதை  சொல்லு  என்று  அவர்கள்  கேட்டபோதெல்லாம்   நான்  உலகிலேயே  மிகப்பெரிய  கதை  சிருஷ்டி கர்த்தா  என்ற  எண்ணம் எனக்கு அப்போது தோன்றியது.  86லும்  இன்னமும் உங்களுக்கெல்லாம் கதை சொல்லும் பழக்கம் என்னை விடவில்லையே. 

ஏதோ கதை  ஆரம்பிப்பேன்  அதில்  எதையெதையோ  கலந்து  ஒரு  காக்டெயில்  COCKTAIL பண்ண  அவசியம்  ஏற்படும்.  கதை  வரண்டபோது  கற்பனை கை கொடுக்கும்  ''தாக்லா  மோக்லா '' (ஒன்றுக்கொன்று  சம்பந்தமில்லாமல்  சொல்வதை  இப்படி  ஒரு  வார்த்தையால்   வர்ணிப்பது எங்கள்  குடும்ப   வழக்கம்.  இந்த  சொல்லின்  ஆதி பூர்வோத்தரமோ, , ஜனன  விபரமோ எனக்கு  இன்றும்  தெரியாது)  

நான் ஐந்தாவது படிக்கும்போது எங்கள்  வகுப்பில்   சரோஜினி  டீச்சர்  சொன்ன  மிகப்பெரிய  கதை  எது  தெரியுமா?. எங்களை  எல்லாம்   மௌனமாக இருந்தால்  ஒரு  பெரிய  கதை  சொல்லப்   போறேன்  என்பாள்.  நாங்கள்  ஆவலுடன்  கப் சிப்.    தொண்டையை  கனைத்துக்கொண்டு  எங்கள்  எல்லோரையும் ஒரு முறை  வெற்றிகரமாக  பார்த்துவிட்டு  ஆரம்பிப்பாள்.
''ஒரே ஒரு  ஊரிலே  ஒரு  நரி.  அதோடு கதை சரி''.     இது தான் கதை.  நான்  கேட்ட  கதைகளில் எல்லாம்   முக்கால்வாசி நரி  தான்  ஏமாறும்.  ஆனால்  இந்த  சரோஜினி டீச்சர்  கதையில்  நரி  எங்களை  ஏமாற்றியது.

ஹோமர்  கதையில்  தேவைப்பட்டால்  பாரதத்தின்  சில நிகழ்வுகள்,  துப்பறியும்  கதைகளில்  தேவன், தமிழ்வாணன், கொஞ்சம்  ஷெர்லக் ஹோம்ஸ் , வேறு எங்கோ எப்பவோ  தெரிந்துகொண்டது  எல்லாவற்றையும்  கற்பனையால்  சாந்து பூசி  என்ன தோன்றுகிறதோ  அப்படியெல்லாம்  ஒரு கலக்கு  கலக்கி  குழப்பி  கதையைக்  கொண்டு போவேன்.  இதில்  மயங்கி  அந்த  சிறுவர்  குழாம் என்னை  மகுடி கேட்ட  நாகமாக  வளைய வரும்.  

எங்கள் வீட்டு  வாசலில்  வேப்ப மரத்தடி,  அதன் எதிரே  மொட்டை மாடிக்குச்  செல்லும்  படிக்கட்டுகள், கொல்லையில்  துணி   துவைக்கும்  கல்  அருகே  என்று  குழந்தைகளின் எண்ணிக்கையை பொறுத்து என்  சௌகரியம்  போல கதை ஸ்தாபனத்தை  இடம்  மாற்றிக்கொள்வேன்/  சுரேஷ்  வாயில்  விரல்  போட்டுக்கொண்டே ரசிப்பான்.  அவனது நிழல்  என் மகள் மீனா.  விரல் சுவை  கதைச்சுவை  இரண்டிலும்  திளைத்திருப்பார்கள்.  திருடன்  கதையில்  வரும் சந்தர்ப்பங்களில்  வித்யா  பக்கத்தில்  யாரையாவது  கெட்டியாக  பிடித்துக்கொண்டு  டென்ஸ் ஆக  இருப்பாள்.  வேகமான  ரயிலில்  இருந்து  பாலத்தில் அது  வளைந்து போகும்போது  கதாநாயகனை  கீழே  குதிக்க வைப்பேன். அவன்  ஆழமான  நதியில்  குதித்து  லாவகமாக  நீந்தி  கரை ஏறுவான்.  என் அண்ணன் மகள் கௌரிக்கு  இதயத் துடிப்பு  பட பட  என்று மூன்று வீட்டுக்கு கேட்கும்.  முகம் வியர்த்து போகும்.  ''அய்யோ  அப்பறம்.'????    ரெண்டு  பசியான  முதலைகள்   உணவு தேடிக்கொண்டு இருக்கும்  ஆற்றில் குதித்த  அந்த திருடனை ஆகாரமாக  ஏற்றுக்கொள்ள  வேகமாக  வந்தும்  நீச்சல்  போட்டியில் அவனிடம்  தோற்று,   ஏமாந்ததாக  சொல்லும்போது  என்  அண்ணன்  மகன்  ரங்கு  துடிப்பான்.  என்  கதையின்   வீரன்  சீக்ரம்  சீக்ரம்   முதலைகிட்டேந்து  தப்பிக்கணுமே   என்ற  கவலை  அவன்  முகத்தில்   தேங்கி நிற்கும்.  வீரன் கரையேறி  முதலைக்கு  டாடா  காட்டும்  சம்பவத்தில்  த ன்னை மறப்பான்.  அப்போது  வெளிப்பட்ட  ரங்குவின் சந்தோஷத்தை இன்றும் என்னால் எழுத முடியாது.
நான்  சொன்ன  கதைகளைவிட  நான்  ரசித்த  கதைகளை  இப்போது  நினைவுக்கு  கொண்டுவர  நினைக்கிறேன் .
பன்னியூர்  படாடோப சர்மா  என்று  வடுவூர்  துரைசாமி அய்யங்கார்  கதை எழுதுவார். கருங்குயில்  குன்றத்துக்  கொலை,  என்று எல்லாம்  எழுதுவார்.   ஒரே  மேடையில்  அமர்ந்து  திருடனும்  ஜமிந்தாரும்  காப்பி  குடித்தார்கள்  என்று  எழுதுவார்.  நீள  நீளமாக பெயர்  எல்லாம்  வைப்பார்  கதைக்கு.   கொலை , குத்து,  கொள்ளை அடிதடி விஷயங்களை  வைத்து  என் போன்றோர்களை  சிறு  வயதில் மடக்கிப்போட்டவர் அய்யங்கார். .  

ஆரணி குப்புஸ்வாமி முதலியார் கதைகள்  கொஞ்சம் இப்படித்தான்  இருக்கும்.  ஆனால்  அதில்  வருபவர்கள்  சண்டை சச்சரவுக்கு எல்லாம்   துரைசாமி அய்யங்கார்  ஆட்கள்  போல் போக மாட்டார்கள். ரொம்ப  நேரம்   ஆ.கு.  முதலியார்   புஸ்தகம் சேர்ந்தால்  போல்  படிக்க  பிடிக்காது.    ராஜம்  அய்யர் எழுதியது மனதில் நிற்கவில்லை.   நிறைய  பெண்கள்  அழுவார்கள்  அவர்  கதைகளில்.  எனக்கு  தாங்காது .  மற்றுமொரு  வித்யாசமான  எழுத்தாளர்.  மாயூரம்  வேத  நாயகம் பிள்ளை.   அவரது  பிரதாப  முதலியார்  சரித்திரம்  எதோ  உண்மையிலே  ஒரு  சரித்திர  பாட  புஸ்தகம்  படிப்பது  போலவே இருக்கும்.  நிறைய  ஒவ்வொரு  பாராவிலும்  பக்கத்திலும்  கதா பாத்திரங்கள் வாயிலாக நீதி  நெறிகள் சொல்வார்.  அதை  எல்லோரும்  படித்தால்  அதன்  படி நடந்தால்  நாட்டில்  போலீஸ்   இலக்காவுக்கு  கோவிலில் பூக்கட்டிக்கொடுக்கிற  வேலை கொடுக்கலாம்.   கோர்ட்  நாட்டில் தேவைப்படாது. 

பம்மல் சம்பந்த  முதலியார்  புத்தகங்கள்   நாடக பாணியில்  இருக்கும்.  எனக்கு  அதில்  வருபவர்கள்  பேசுவது  ஆச்சர்யமாக  இருக்கும்.  ஒரு  சின்ன  கேள்விக்கு   தாம்பரம் லேருந்து  பீச் வரை  பதில் சொல்வார்கள்.  கதை விறுவிறுப்பு  திருப்பங்கள்  எல்லாமே  சுவாரசியம் குறையாமல்  இருக்கும்.  

நாலணா  ஒரு  வாரத்திற்கு என்று  மாம்பலம்  ஸ்டேஷன் கிழக்கு பகுதியில் தெருவில்  ஒரு  மாடியில்  லெண்டிங் லைப்ரரியில்   புத்தகம்  எடுப்பேன்.  அவர்கள்  அதிகம்  ஆங்கில  புத்தகம்  தான்  வைத்திருப்பார்கள்.  எர்ல்   ஸ்டேன்லி  கார்டினர்  பெர்ரி மேசன் கதைகள்  நிறைய  படித்தேன்.  நூறுக்கு மேல்  இருக்கும்.  அப்பப்போ   A  A  பேர் என்று  பேர்  மாத்தி   எழுதுவார்.  தமிழ் வாணனின் சங்கர்லால்  பெர்ரி மேசனிலிருந்து   விளைந்தவரோ என்று  பிறகு  யோசிக்க வைத்தது.   லெப்டினண்ட்  கர்னல்  ட்ரேக்  trag  என்ற போலிஸ்  அதிகாரி  ஒவ்வொரு  கதையிலும்  10-15வது  பக்கத்திற்கு மேல்  தான்  தலை காட்டுவார்.  மேசனை நம்பமாட்டார்.  யோக்யமான  போலிஸ் அதிகாரி.  பால் ட்ரேக் drake    என்று  துப்பறிவாளன்  சமய  சஞ்சீவியாக  மேசனுக்கு  துப்பு  கொடுப்பான்.  டெல்லா ஸ்ட்ரீட்  என்று  ஒரு  பெண்  உதவியாளி  மேசனுடன்   பேசிக்  கொண்டே இருப்பாள். அவள் பேச்சிலிருந்து கூட  மேசனுக்கு புது யுக்தி கிடைக்கும்.  பாதி  புஸ்தகத்துக்கு  மேல்  நீதிமன்ற  கேள்வி  பதில்கள்   என்னை  அசர  வைத்தது.  ஒவ்வொரு  கதையிலும்   புத்தகத்திலும் வரும்  பெர்ரி மேசனின்  கட்சிக்காரர் ஒத்துழையாமை  இயக்க  ஆசாமியாகவே  இருப்பார்.  பொய் சொல்வார்.  முக்கால்  வாசி பெண்கள்  தான்.    அவர்கள்  சொன்னதை  வைத்துக்கொண்டு  சொல்லாததை  கண்டுபிடிப்பார்.  ஹமில்டன்  பர்ஜர்  என்று   ஒரு  அராங்க  வக்கீல்  ஒவ்வொரு  கதையிலும்  தோத்துப்  போவதற்கென்றே  வருவார்.   சரியான  கெடுபிடி  ஆசாமி.   மேசனுக்கு   ஜன்ம  வைரியாகவே  தன்னை   அவதாரம்  செய்து கொண்டவர்.      இந்த புத்தகங்கள்  இன்னும்  நிறைய  படித்திருந்தேனானால் நான்  போலீசில்  சேர்ந்திருக்கலாம்.  இல்லையென்றால்  கோர்ட்  குமாஸ்தா  உத்தியோகமாவது  விருப்பத்தோடு  செய்திருக்கலாம்.  இப்படி முகநூலில் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன் .

நாலணா கொடுத்து  கொடுத்து நான் வாங்கி  விரும்பி  படித்த மற்றுமொரு  வாடகை  புத்தக ஆசிரியர்  ஜேம்ஸ் ஹேட்லி  சேஸ் .  பெயருக்கு  வைக்கும்  பேரே  ஒவ்வொரு  புஸ்தகத்திலும்  ஆச்சர்யமாகவும்   நூதனமாகவும் இருக்கும்.  முதல் வரி  யிலிருந்து  முடியும் பக்கத்துக்கு  முன்னூறு  பேரை வெட்டுவதும்  சுடுவதுமாக  இருக்கும்.  இது  துப்பறியும்  கதை இல்லை.  காசுக்கு  கொலை செய்யும்  இதயமற்ற மெஷின்கள்.  எல்லா  கதைகளிலும் எல்லா  புத்தகங்களிலும்  வருவார்கள்.  ஒட்டு மொத்தமாக  அவர்கள்  அனைவருமே   கிராதகர்கள்.  இதயத்தை  கழட்டி எங்கோ  தொலைத்தவர்களாக இருப்பார்கள்.  என்னவோ  தெரியவில்லை.  இது மாதிரி  புத்தகங்கள்   நிறையவே சின்ன வயதில்  என்னைப்  போல்  நிறைய  பேர்  படிப்பார்கள்.  என்  கண் பார்வையைக்   கெடுத்தவர்களில்  முக்யமானவர்  ஜேம்ஸ் ஹேட்லி சேஸ்.  மட்டமான  பிரிண்ட்  சின்ன  எழுத்தில். அகாதா  கிறிஸ்டி கதைகள்  எனக்கு ரொம்ப  பிடித்தது.எத்தனையோ  இரவுகள்  கதை முடியும் வரை  இரவில் அரிக்கன் லைட்டில்  ஷெர்லாக் ஹோம்ஸ் என்னை தூரோகத்தை இழக்க வைத்தவர்.   அம்மாவிடம் என்னை திட்டு வாங்க செய்தவர்.  என்னவோ  கெடுமதி  யாரை  விட்டது. தமிழில் விக்ரமாதித்தன் கதைகள் அரு . ராமநாதன் எழுதியது, பஞ்ச தந்த்ர கதைகள். பரமார்த்த குரு, தெனாலி ராமன், ராஜாஜி எழுதிய  ராமாயண பாரத  கதைகள் பிடித்தது. 

இதிலிருந்து  விடுபட்டு  வளர்ந்து  சில காலத்தில்  தேவனுக்கும்  கல்கிக்கும்  தாவினேன்.  என்  எண்ணங்கள்  விரிந்தன.  சொர்க்க  பூமிக்கு கொண்டு செல்லப்பட்டேன்.  JHC யை கைவிட்டேன்.   மறுபடியும் அவரைத்  தொடவில்லை.  தேவனைப்பற்றியும்  கல்கி  பற்றியும்   நிறையவே  எழுதவேண்டும்.  இதற்கென்று  ஒரு  தனிக்கட்டுரையை  வைத்துக்கொண்டால்  என்ன  என்று  தோன்றுகிறது.  நீங்கள் என்ன  சொல்கிறீர்கள்?

sivan jaykay

unread,
Aug 20, 2025, 8:14:14 PMAug 20
to amrith...@googlegroups.com

கைவல்யோபநிஷத் - நங்கநல்லூர்  J K  SIVAN

ஸ்லோகம் 21-25

இந்த பதிவோடு கைவலியோபநிஷத் நிறைவு பெறுகிறது.  நிச்சயம்  வாசகர்கள்  இந்த உபநிஷத் என்ன சொல்கிறது என்று கேட்டால்  மோட்டுவளையை பார்க்க கூடும். இது இந்த உபநிஷத் படித்தால் மட்டும் அல்ல  எந்த உபநிஷத் படித்தாலும் ஏற்படக்கூடிய .அனுபவம் தான். காரணம்.  மிக உயர்ந்த அத்வைத தத்துவமாக  ஆதி சங்கரர் விளக்கும் இந்த உபநிஷதமும்  ஆத்மா ப்ரம்மம் ரெண்டும் ஒன்றே. அதை எவன் முயற்சியெடுத்து தான் வேறு ஆத்மா வேறு என்று வித்த்யாசமின்றி  ஆணாக காண்கிறானோ அவனே ப்ரம்ம ஞானி என உணர்த்தும்  சிறந்த தத்வம்.  

நிறைய படிக்கவேண்டும் என்பதை விட  அடிக்கடி அதையே படித்துக் கொண்டுவரவேண்டும். அதுவும் போதாது. படித்ததை மனதில் ஆழ்ந்து யோசிக்க  வேண்டும். திரும்ப திரும்ப  அது என்ன சொல்கிறது என்று ஆராயவேண்டும். அப்போது தான் உயர்ந்த தத்துவங்களை புரிந்து கொள்ள முடியும்.  உங்களுக்கு அறிமுகப்படுத்தவே  இந்த உபநிஷதங்களை அடிக்கடி எழுதுகிறேன். நீங்கள் தான் அதை ஆழ்ந்து உணர்ந்து பயன் பெறவேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

21.अपाणिपादोऽहमचिन्त्यशक्तिः पश्याम्यचक्षुः स श‍ृणोम्यकर्णः । अहं विजानामि विविक्तरूपो न चास्ति वेत्ता मम चित्सदाऽहम् ॥ २१
apāṇipādo’hamacintyaśaktiḥ paśyāmyacakṣuḥ sa śṛṇomyakarṇaḥ .ahaṃ vijānāmi viviktarūpo na cāsti vettā mama citsadā’ham .. 21

நான் அங்கமில்லாதவன். கையில்லாதவன். கால்கள் அற்றவன். கண்ணற்றவன். காது இல்லாததால் எதையும் கேட்க இயலாதவன். ஆனால்  விவரிக்க வொண்ணா சக்தி உள்ளவன்.  விழிகள் இல்லாமலேயே  சகலத்தையும் பார்க்க முடித்தவன். காதில்லாமலேயே  எங்கோ  கேட்கும் சப்தத்தை துல்லியமாக   கேட்க முடித்தவன். உருவமற்றவன். என்னால் சகலத்தையும் சர்வத்தையும்  அறிய  முடியும்.  ஆனால் என்னை ஒருவரும் எளிதில் அறிய முடியாது. என்னை முழுமையாக அறிந்தவர் எவருமே இல்லை.  நான் ஞானம். ப்ரம்ம ஞானம். ஆத்ம ஞானம். .

22.वेदैरनेकैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम्  न पुण्यपापे मम नास्ति नाशो न जन्म देहेन्द्रियबुद्धिरस्ति ॥ २२॥ ।
vedairanekairahameva vedyo vedāntakṛdvedavideva cāham .na puṇyapāpe mama nāsti nāśo na janma dehendriyabuddhirasti .. 22..

22.எல்லா வேதங்களும் கூறும்  உண்மை நானே. உபநிஷதுகள் அனைத்தின் உட்பொருள் நானே. வேதங்களின் முடிவு எனப்படும்  வேதாந்த சாரம் நானே. வேதங்கள் சொல்வது அனைத்தும் நான் அறிந்ததே. என்னை விலாவாரியாக இப்படிப்பட்ட தன்மை என்று சொல்லவும் முடியாது. இப்படிப்பட்டது  இல்லை  என்று விலக்கவும்  முடியாது.  அழிவு முடிவு என்று எதுவுமே  இல்லாதவன் நான்.  எனக்கு எப்போதும்  ஜனனமும் இல்லை, மரணமும் இல்லை.   உடல், தேகம், உருவம் எதுவும் இல்லை.  புலன்களோ அவற்றின் உணர்வோ எதுவும் இல்லாதவன். என்னை மனத்திலோ, புத்தியிலோ, தேடினாலும் கிடைக்காதவன்.  கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று என்னை வெகு அழகாக  ஞானிகள் சொல்கிறார்கள்.

23 न भूमिरापो न च वह्निरस्ति न चानिलो मेऽस्ति न चाम्बरं च । एवं विदित्वा परमात्मरूपं गुहाशयं निष्कलमद्वितीयम् ॥ २३
na bhūmirāpo na ca vahnirasti na cānilo me’sti na cāmbaraṃ ca .evaṃ viditvā paramātmarūpaṃ guhāśayaṃ niṣkalamadvitīyam .. 23

24.समस्तसाक्षिं सदसद्विहीनं प्रयाति शुद्धं परमात्मरूपम् ॥
samastasākṣiṃ sadasadvihīnaṃ prayāti śuddhaṃ paramātmarūpam ..24

 மேற்கண்ட  ரெண்டு  ஸ்லோகங்களையும் ஒன்றாக  இணைத்து  விளக்கம் சொல்கிறேன்.  எனக்கு பூமி, ஆகாசம்,அக்னி, ஜலம் ,வாயு என்ற  பஞ்ச பூதங்களும் கிடையாது.  பரமாத்மா என்பது நான் தான். என்னை நீ அப்படி உணர்வாய்?   நான் ஓவ்வொரு ஹ்ருதயத்தின்  குகையிலும் நிரந்தரமாக இருக்கிறேன்.  என்னை பாகங்களாக பிரித்தே பார்க்க முடியாது.
எனக்கு அடுத்தது, நான் முதல் இது ரெண்டாவது என்ற  எந்த வரிசையும்  கிடையாது. நான் சர்வ ஸாக்ஷி . ஒவ்வொரு கணத்திலும், நான் சகலமும் நடப்பதை உணர்பவன். காண்பவன்  அதற்கு சாக்ஷியாக உள்ளவன். இருப்பது, இல்லாதது, உள்ளது அல்லது என்று எதையும் என்னைப்பற்றி கூறவே முடியாது.   இதெல்லாம் பிரம்மம் பேசுவதாக அறிவோம்.

25. यः शतरुद्रियमधीते सोऽग्निपूतो भवति सुरापानात्पूतो भवति स ब्रह्महत्यायाः पूतो भवति स सुवर्णस्तेयात्पूतो भवति स कृत्याकृत्यात्पूतो भवति तस्मादविमुक्तमाश्रितो भवत्यत्याश्रमी सर्वदा सकृद्वा जपेत् ॥  

ya śatarudriyamadhīte so’gnipūto bhavati surāpānātpūto bhavati sa brahmahatyāyāḥ pūto bhavati sa suvarṇasteyātpūto bhavati
sa kṛtyākṛtyātpūto bhavati tasmādavimuktamāśrito bhavatyatyāśramī sarvadā sakṛdvā japet ..

கைவலியோபநிஷதம் முடியும் தருவாயில்  ரிஷி ருத்ரம், ருத்ரன்,  சத ருத்ரீயம் பற்றி சொல்கிறாரே அதைப் பற்றி கொஞ்சம் விளக்க வேண்டாமா?
சிவாலயங்களில் பரமேஸ்வரனுக்கு அபிஷேகம்  பண்ணும்போது உச்சரிக்கும் மந்திரம் ருத்ரம், ஸ்ரீ ருத்ரம்,  மிக சக்திவாய்ந்த, வேத மந்திரம்.  சதா ருத்ரீயம்  என்றால்  நூறு  ருத்ரனைப்  போற்றி ஸ்தோத்ரம் பண்ணுவது ருத்ரம்,  ருத்ரனை நூறு விதமாக  ஸ்தோத்ரம் பண்ணுவது சத ருத்ரீயம்.   கிருஷ்ண யஜுர்வேதத்தின் தைத்ரியஸம்ஹிதையில் காணப்படுவது ஸ்ரீ ருத்ரம்.  நமகம்  சமகம்  என இருபகுதியாக காணப்படுகிறது.  ருத்ரன் தான் வேதகாலத்தில் அறியப்பட்ட  பரமேஸ்வரன்.   நமக்கும் எனும் பகுதி  நமோ என ஆரம்பிக்கும்  மந்த்ரங்கள். எல்லா ரூபத்திலும் சிவனை வணங்குவது. ''நமஸ்தே ருத்ர மன்யவ உத்தோதிஷவ நமஸ்தே அஸ்து தன்வநே பாஹுப்யாமுத தே நம꞉”  என்று ஒரு மந்திரத்தை உதாரணமாக கொடுக்கிறேன். இதற்கு அர்த்தம். "அழிவை ஏற்படுத்தும் ருத்ரா! உன் வில்லுக்கும் அம்புக்கும், உன் கரங்களுக்கும் வணக்கம்."  அடுத்த பகுதி சமகம்  என்பதில்  பகவானிடம் என்ன வேண்டிக்கொள்ளவேண்டும் என்று நமக்கு அறிவிப்பது. பரமேஸ்வரனின்  ஆசீர்வாதங்களையும், வளங்களையும் வேண்டுவது.  சமே சமே  என்று  முடியும் மந்திரங்கள்.  அதற்கு ஒரு உதாரணம்;  ''சமே ருத்ர ப்ரயுஞ்சீஷ்வ, சமே ருத்ர ப்ரயுஞ்சீஷ்வ" --  ருத்ரா,  என்னை ஆசீர்வதியுங்கள், ருத்ரா, , ருத்ரா     "சமே அஸ்வ சமே அஸ்வ"-  எனக்கு குதிரைகள் கிடைக்கட்டும், "சமே கௌ சமே கௌ" எனக்கு பசுக்கள் கிடைக்கட்டும்,    இதெல்லாம் வேதகால வேண்டுகோள்கள். இப்போது கடவுள்  உனக்கு குதிரை வேண்டுமா என்று கேட்டால்  வேண்டாம் நீயே வைத்துள்ள்ளப்ப, ஒரு  மொபைல் டெலிபோன் கொடுப்பாயா  என்று தான் கேட்போம்.  ஆனாலும்  பகவானிடத்தில் அன்றும் இன்றும் என்றும் ரிஷிகள் கேட்ட சமகம் தான் தப்பில்லாமல் சொல்வது  முறை. சம்ப்ரதாயம். 

இந்த மந்திரத்தில்  ரிஷி   சதருத்ரீயம் எவன் சொல்கிறானோ அவன் அக்னியால் பரிசுத்தம் அடைந்தவனாகிறான். மது இத்யாதிகளிலிருந்து விடுபடுகிறான். ப்ரம்மஹத்தி தோஷம்  நிவர்த்தியாகிறது. சர்வ பாவங்களிலிருந்தும்  விடுதலை பெறுகிறான்.  சிவனோடு இணைகிறான். ஒரு தடவையாவது ருத்ரம் படிக்க வேண்டும். பாராயணம் பண்ண வேண்டும்.  சம்சார சாகரத்திலிருந்து கரையேற முடியும். இது ஒன்றே  அடையப்பட  வேண்டியது.கைவல்யம் இது தான். 

25.अनेन ज्ञानमाप्नोति संसारार्णवनाशनम् । तस्मादेवं  विदित्वैनं कैवल्यं पदमश्नुते कैवल्यं पदमश्नुत इति ॥
anena jñānamāpnoti saṃsārārṇavanāśanam . tasmādevaṃ viditvainaṃ kaivalyaṃ padamaśnute kaivalyaṃ padamaśnuta iti ..

இப்படி  கைவல்யத்தை உணர்ந்தவன் ஞானம் பெறுகிறான். எந்த மாற்றமும் அவனை நெருங்காது. அதிலேயே  திளைத்து ஒன்று படுவான். கைவல்யம் அடைகிறான். அதாவது முக்தி பெறுகிறான். இதைத்த்தான் கைவல்ய உபநிஷதம் நமக்கு உணர்த்துகிறது. 

sivan jaykay

unread,
Aug 20, 2025, 8:14:15 PMAug 20
to amrith...@googlegroups.com

பரிஹாரம் — நங்கநல்லூர் J K SIVAN


நான் திருப்பதி வேங்கடேசனைப் பற்றி ஏன் சிலநாட்களாக எழுதவில்லை என்று எனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டேன். ஒரு காரணமும் இல்லை. அவனைப் பற்றி நினைக்காததால் என்று சொல்லவே முடியாது. ஒவ்வொருநாளும் அவன் நாமம் சொல்லாத வேளையே இல்லையே.
இப்படி தனிமையில் சிந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டு வெளியே சென்று பார்த்தேன். மொட்டைத் தலை யோடு ஒரு நண்பர். சிரித்துக்கொண்டே கையில் இருந்த ஒரு பையை என்னிடம் நீட்டினார்.
”திருப்பதி போயிருந்தேன். இந்தாங்கோ பிரசாதம்”
பையில் லட்டு, ஸ்ரீ பாத ரேணு. வடை, முறுக்கு, மனோக ரம் என்று பக்ஷணங்கள். திருப்பதிவேங்கடேசன் ஆலயத்
தில் பிரத்யேகமாக கிடைப்பவை.
‘ வெங்கடேசா. என்னே உன் கருணை”. என் மனம் திருப்தி அடைந்தது. கம்பியூட்டர் முன் அமர்ந்தேன்.
அவனைப் பற்றி சில வார்த்தைகள் எழுத கை முனைந்தது.
ஸ்ரீவேங்கடேசனின் அருள் கடாட்சத்தை தெரிந்து கொள்ளாத, புரிந்து கொள்ளாத பக்தர்கள் கிடையவே கிடையாது. எப்படியாவது பக்தர்கள் வாழ்க்கையில் எப்போது தேவையோ அப்போது தானே அவர்களுக்கு உணர்த்தி அவர்ளுக்கு உதவும் கலியுக வரதன் அல்லவா அவன் ?
ஹிந்துக்களுக்கு மட்டும் அல்ல, இதரர்களுக்கும் அருள் புரிபவன் அவன். நான் ஏற்கனவே எழுதி இருந்த ஒரு சம்பவத்தை மீண்டும் நினைவூட்டுகிறேன்.
சென்னையில் தீவுத் திடலில் island ground பகுதில் குதிரை மேல் அமர்ந்த மன்றோ சிலை பார்த்திருக் கிறீர்களா? பார்க்காதவர்கள் உடனே சென்று தரிசியுங் கள். சிறந்த வேங்கடேச பக்தனை பார்ப்பது வெங்கடேச னையே பார்ப்பது போல் அல்லவா?
சார் தாமஸ் மன்றோ ஒரு வெள்ளைக்கார கலெக்டர். அவர் கலெக்டராக இருந்தபோது சென்னை மாகாணத் தில் சித்தூர் மாவட்டம் அடக்கம். சித்தூர் மாவட்டத் தில் தான் திருப்பதி திருமலை இருக்கிறது. வெள்ளைக் கார அரசாங்கத்தில் அப்போதெல்லாம் கலெக்டர்கள் தான் ராஜா. சர்வ அதிகாரம் படைத்தவர்கள்.
மன்றோ ஒரு சரியான கெடுபிடி அதிகாரி. அலுவல் ரீதியாக திருமலை-திருப்பதிக்கு அடிக்கடி அவர் போய் வர நேர்ந்தது. திருப்பதி திருமலை பற்றி வேங்கடேசன் பெருமை, மஹிமையைப் பற்றி ஏற்கனவே அவருக்கு பலர் சொல்லி இருந்தார்கள். அதை இந்த காதில் வாங்கி, அந்தக் காதில் விட்டுவிடுவார். மன்றோவின் ஒரே குறி ‘திருப்பதியில் தினம்தோறும் நிறைய பேர் பணம் செலுத்துகிறார்களே . எவ்வளவு வசூல் தினமும் ஆகிறது? வெள்ளைகார அரசாங்கத்துக்கு அங்கிருந்து எவ்வளவு பணம் திரட்டி அனுப்ப லாம்?’ என்பது மட்டுமே லக்ஷியம்.
திருமலைக்குப் போகும்போதெல்லாம் பெருமாள் சன்னிதி பக்கம் எட்டிக்கூடப் பார்க்காமல், உண்டியல் கலெக்ஷனிலும், ஆலய அலுவலகத்தில் வசூலாகி இருக் கும் தொகையிலும் கவனமாக இருப்பார் மன்றோ. அர்ச்சகர்களை, அதிகாரிகளை கண்டபடி திட்டி அவம திப்பார். ‘கோயில் அதிகாரிகள் பணத்தைச் சுருட்டி விடுகிறார்களோ?’ என்று சந்தேகம். ஆகவே கோயில் பணியாளர்களையும், அர்ச்சகர்களையும் தாறுமாறாகத் திட்டித் தீர்ப்பார். அவர்கள் வருந்துவார்கள். துரையின் பேச்சை எவர் எதிர்க்க முடியும்?. கலெக்டர் பேச்சை எவர் தான் எதிர்க்க முடியும், பதில் சொல்ல முடியும்? வேறு வழி தெரியாமல் தலையைக் குனிந்தவாறு இதயம் உடைந்து கண்ணீர் உகுப்பார்கள்., அதிகாரி களும் அர்ச்சகர்களும் கண்ணீர் விட்டு ”வேங்கடேசா, நாங்கள் படும் பாட்டை நீ அறியமாட் டாயா? நீ தான் இதற்கு ஒரு வழி பண்ண வேண்டும்’ என்று கதறி பெருமாளிடமே முறையிட்டுக் கண்ணீர் சிந்துவார்கள்.
ஏழு மலையானுக்குத் தலைமுடி காணிக்கையாகக் கொடுக்க வருகிற பக்தர்களைப் பார்த்து, மன்றோ சிரிப்பார்.
”உள்ளூர்லயே செய்ய வேண்டிய க்ஷவரத்தை ஏனையா இந்த மலையில் வந்து செய்கிறீர்கள்?” என்று கிண்டல் செய்வார்.
முடி காணிக்கை கொடுத்து விட்டு, மொட்டைத் தலை யுடன் செல்லும் இரு நபர்களைப் பிடித்து, ஒருவர் தலையுடன் இன்னொருவரின் தலையை மோத விட்டுப் பார்ப்பார். குரூரமான இந்தச் செயலைக் காண நேரிடும் அர்ச்சகர்களும், கோயில் பணியாளர்களும் ‘அபசாரம்… அபசாரம்’ என்று வாயைப் பொத்திக்கொண்டு நகர்ந்து விடுவார்கள். யார் கலெக்டரை எதிர்த்து தட்டிக் கேட்க முடியும்? ஒரு வார்த்தை பேசினால் உடம்பில் உயிர் இருக்காதே.
ஆனால் வேங்கடேசன் இதெல்லாம் பார்த்துக்கொண்டு ரொம்ப நாள் சும்மாவா இருப்பான்? பொறுமைக்கும் ஒரு லிமிட், எல்லை உண்டல்லவா?
மன்றோவின் அட்டகாசங்களுக்கு ஒரு முடிவு கட்டி, அவரை மன்னித்து, தன் பக்தன் ஆக்கிக்கொள்ள வேண் டும் என்று வேங்கடேசன் முடிவெடுத்தான். மன்றோ பாக்யசாலி. அவனுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம்.
ஒரு சமயம் வழக்கம் போலவே திருப்பதி கோவில் வசூல் விவரங்களைப் பார்வையிட, உண்டியல் கலெ க்ஷன் பணம், எல்லாம் கணக்கு பார்த்து, கொண்டு போக, படையுடன் திருமலைக்கு வந்தார் மன்றோ. உண்டியல் வசூல், வழிபாடுகள் மூலம் சேர்ந்த தொகை, காணிக்கையாக வந்தது, கையிருப்பில் இருக்கும் தொகை, அனைத்துக்கும் கணக்கைத் தயாராக வைத்துக் கொண்டு, மன்றோவின் வருகையை எதிர்பார்த்திருந்தனர் அதிகாரிகள்.
ஆலயத்துக்குள் நுழைந்த மன்றோ, வசூலைப் பார்வை யிடுவதற்கு முன்னதாக, ஆலயத்தை மிடுக்குடன் வலம் வந்தார். புனிதம் நிரம்பிய அந்தப் ப்ராஹாரத்தை, மேற்பார்வை இட்டுக்கொண்டு அதிகார தொனியில் அவர் பவனி வந்ததைக் கண்ட பலரும் சங்கடத்தில் நெளிந்தனர்.
ஒரு மூலையில் பக்தர்கள் சிலர் அமர்ந்து பெருமாளின் பிரசாதமான வெண் பொங்கலை, சாப்பிட்டுக் கொண்டி ருந்தனர். தரையில் ஒரு இலையில் வைத்துக் கொண்டு, அவர்கள் பிரசாதம் சாப்பிடுவதைப் பார்த்த மன்றோ, முகம் சுளித்தார்; அருவருப்படைந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்த பக்தர்களைப் பார்த்து, ”சே…சே என்ன உணவு உணர்கிறீர்கள். மனிதர்களா நீங்கள்? இது… பாக்கவே ஒரு மாதிரியாய் இருக்கே, அருவருப்பாக இருக்கிறதே,… இதைச் சாப்பிட்டால் என்னென்ன வியாதிகள் வருமோ? எல்லாரும் முதல்ல வாயிலிருந்து அதைத் துப்புங்கள் ” என்று முகத்தை அஷ்ட கோண லாக்கிக் கொண்டு, கண்டிப்பான குரலில் உரக்க கத்தினார் மன்றோ. பக்தர்கள் பதறிப் போனார்கள். துரைக்குப் பயந்து துப்பியவர்களும் உண்டு; பெருமாளுக்கு பயந்து விழுங்கியவர்களும் உண்டு.
அடுத்த கணம் ஒரு ஆச்சர்யம் அங்கே நடந்தது. அது தான் இந்த கட்டுரை நான் எழுத முக்கியமான விஷயம். மன்றோ மேலே சொன்னபடி பக்தர்கள் மனதை புண் படுத்தி கடின வார்த்தைகளை சொல்லிவிட்டு ப்ராஹாரத்தில் ஒரு சில அடிகள் தான் எடுத்து வைத்தார். அடுத்த சில வினாடிகளில் மன்றோ திடீரென்று உரக்க இங்கிலீஷில் கத்தினார்.
”ஐயோ என் வயிறு வலிக்கிறதே ஈட்டியால் குத்து கிறதே என்னன்னு தெரியாம குடையுதே. ஐயோ எனக்கு வலி தாங்க முடியலியே ”.
ப்ரஹாரத்திலேயே அடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு அலறிக் கொண்டு கீழே சுருண்டு விழுந்தார் கலெக்டர் மன்றோ. கூடவே வந்த அதிகாரிகளும், கோயில் ஊழி யர்களும் பதறிப் போனார்கள். நடக்கவே முடியாமல் இருந்த கலெக்டர் மன்றோவை கைத் தாங்கலாகப் பிடித்து, அவரது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். வலி நிற்கவே இல்லை வயிற்றில் சுருக்கென்று ஈட்டி விடாமல் குத்தியது. வெள்ளைக்கார டாக்டர்கள் வந்து வைத்தியம் செய்தனர். அவர்களால் , வயிற்று வலிக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. எந்த மருந்து கொடுத்த்தும் வைத்தியத்தால் வலி குறை யவே இல்லை.மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் போட்டும் ஹுஹும், எந்த நிவாரணமும் இல்லை. இரவும் பகலும் வயிற்றில் குத்து வலி. நாட்கள் ஓடின. ஆரோக்யமான மன்றோ கிழிந்த நாராகி விட்டார். படுத்த படுக்கை. மரணம் நெருங்கிக் கொண்டே இருந்தது. விடாமல் அழுதார்.
ஒரு சனிக்கிழமை திருப்பதியில் இருந்து, அலுவல் விஷய மாக மன்றோவைச் சந்திக்க கோவில் அர்ச்சகர் வந்தார். மன்றோ இப்போது பழை திமிர் பிடித்த ஆசாமி இல்லை. துவண்டு போன சாதாரண மனிதன். தனது உடல் நிலை நிலை அவஸ்தை யை அர்ச்சகரிடம் கூறி புலம்பினார் மன்றோ. அர்ச்சகர் ஒரு கணம் கண்ணை மூடி வேங்கடேசனை மனமார வேண்டியவாறு பேசினார்.
”மன்றோ துரைஅவர்களே, நான் ஒன்று சொன்னால் நீங்கள் கோவிக்க மாட்டீர்களே. உத்தரவாதம் கொடுத் தால் நான் சொல்லலாமா? என்று மெள்ள ஆரம்பித்தார் அந்த அர்ச்சகர்.
”அர்ச்சகரே, தாராளமாக சொல்லுங்கள்…எனக்கு கோபமே வராது. எனக்கு எப்படியாவது இந்த வயிற்று வலி தீர வேண்டும். கடைசியாக நான் கோயிலுக்குள் வந்த போது திடீரென்று தொடங்கிய இந்த வயிற்று ஒரு மருந்திலும் இன்னும் குணமாகவில்லை. பல நாட் களாக தூக்கம், ஆகாரம் இன்றி வலி இன்னமும் நீங்கிய பாடில்லாமல் துடிக்கிறேன். நீங்கள் ஏதாவது சொல்லுங் கள், எனக்கு ஏதாவது உதவி செய்யமுடியுமா?’
அர்ச்சகர் வெங்கடாசலபதி மேல் பாரத்தைப் போட்டு விட்டு, தைரியமாகப் பேசினார்.
”துரை , அன்னிக்கு நீங்கள் பெருமாளோட பிரசாதத் தை மரியாதைக் குறைவாய் பேசின அபச்சாரத்தாலே தான் இப்படி ஒரு நிலைமை உங்களுக்கு உண்டாகி இருக்கும்னு எனக்கு மனசிலே படுகிறது. நீங்க பண் ணினது பெரிய தெய்வ குற்றம். இதுக்கு ஒரே ஒரு பரிகாரம்தான் இருக்கு”
மன்றோ மெதுவாக படுக்கையில் எழுந்து உட்கார்ந் தார். கண்களில் நீர். எலும்பும் தோலுமாக இருந்தவர் அர்ச்சகர் கையை பிடித்துக் கொண்டார்.
”அர்ச்சகரே ப்ளீஸ், எனக்கு சொல்லுங்க.. உடனே சொல்லுக்கு ப்ளீஸ். என்ன பரிகாரம்? எதுவாக இருந்தாலும் உடனே மறுவார்த்தை சொல்லாமல் திருப்தியாக செய்யத் தயாராய் இருக்கிறேன்”. மண்டி யிட்டார் துரை. அர்ச்சகர் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
” துரை, இப்போ இங்கே வரும்போது கூட நான் பெருமாளோட வெண்பொங்கல் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். பெருமாளை மனசுக்குள்ள தியானம் பண்ணிண்டு, இதை கொஞ்சம் சாப்டுங்கோ. தானாக வந்த வலி தானாக போயிடும்”
மன்றோவின் முகம் பிரகாசமானது. மறுவார்த்தை பேசாமல், வேங்கடேசனின் பிரசாதமான வெண் பொங்கலை கையில் வாங்கிக் கொண்டு கண்ணில் ஒற்றியவாறு ஒரு வாய் வெண்பொங்கலை கண்களை மூடி பெருமாளை தியானித்து, உண்டார்.
தவறை ஒப்புக்கொண்டால், மன்னிப்பது வெங்கடாசலபதிக்கு வழக்கம் தானே.!
ஒவ்வொரு கவளமாக வெண் பொங்கலை மன்றோ சாப்பிடச் சாப்பிட , அதுவரை இருந்த வயிற்று வலியும், குத்தல் வலியும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. பிரசாதம் முழுக்கத் தீர்வதற்கும், வயிற்று வலி முற்றிலு மாகத் தீர்வதற்கும் சரியாக இருந்தது.  ஆச்சரியப்பட்டார் மன்றோ. எங்கள் தேசத்து மருத்துவர் கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் தீராத இந்த வயிற்று வலி, உங்கள் பெருமாள் பொங்கல் பிரசாதத் தால் தீர்ந்தது என்றால், அது வேங்கடவனின் அருளாசி தான்” என்று நெகிழ்ந்து போனார்.  இதோடு நிற்கவில்லை; தன்னைக் குணமாக்கிய இந்த வெண்பொங்கல் பிரசாதம், காலா காலத் துக்கும் பெரு மாளுக்கு இனிமேல் விடாமல் நடக்க வேண்டும், பக்தர் களுக்கு கிடைக்க வேண்டும் என்று வயல்பாடு தாலுகா வில் உள்ள ‘கோடபாயல்’ என்ற கிராமத்தின் வருமானம் முழுவதையும் திருப்பதி பெருமாளுக்கே எழுதி வைத்து உத்தரவு போட்டார்.
இது தவிர உடல் நலமாகி பழையபடி ஆரோக்யத் தோடு மன்றோ துரை ஒரு வேங்கடேச பக்தனாக மாறி திருப்பதிக்கு போய் பிரம்மோத்ஸவம், சகஸ்ர கலசாபிஷேகம் போன்றவற்றை நடத்தி, பெருமாளை வணங்கிப் பேறு பெற்றார்.
கோடபாயல் கிராமத்தின் வருவாயில் இருந்து எழுதி வைக்கப்பட்ட அந்த வெண் பொங்கல் பிரசாதம், இன்றைக்கும் திருப்பதி ஆலயத்தில் நண்பகல் வழி பாட்டுக்குப் பிறகு நடந்து வருகிறது ‘மன்றோ பிரபு கங்காளம்’ என்று அதற்கு பெயர்.
கலெக்டர் பதவியிலிருந்து 1820-ல் சென்னை மாகாண ஆளுநராக பதவி உயர்வும் கிடைத்தது. எல்லாம் வேங்கடேச பிரசாதம்.


monro.jpg
monro 2 .jpg

sivan jaykay

unread,
Aug 20, 2025, 8:14:16 PMAug 20
to amrith...@googlegroups.com

இதல்லவோ  கவிதை... நங்கநல்லூர்  J  K  SIVAN 

கவிதை  எல்லோராலும்  எழுத முடியாத ஒரு கலை .  நிறைய சிந்திக்க வேண்டும். வார்த்தைகளை  பொருத்தமாக  பயன்படுத்த்தி சிறப்பாக அளிக்க முடியவேண்டும். எல்லோராலும் ரசிக்க முடியவேண்டும். திருப்பி திருப்பி படிக்க வைக்கும்படியாக அமையவேண்டும்.  இது பாரதியால், கம்பரால், ஒளவைப்  பாட்டியால் இன்னும் பலரால் முடிந்தது.  

என்னால் முடியவில்லை.  அது சரி.   கவிதை எழுத முயன்று ஒரு ஆயிரம் காகிதத்தை கிழித்து கசக்கிப் போட்ட குவியலுக்கு நடுவே அமர்ந்து ஒரு நாலு வரி எழுத திண்டாடும் அனுபவம் உங்களில் யாருக்காவது  இருக்கிறதா?
நான்கு வரி எழுதுவது பெரிதல்ல, முடியாததல்ல. அப்படி எழுதினால் அது கவிதையா?   இப்போதைய சினிமாக்களில் நிறைய ' பாடல்கள்'  (அப்படிச் சொல்லலாமா அதை ?) வருகிறதே. யார் யாரோ பாடி டிவியில்  ஒலிக்கிறதே. உதாரணத்துக்கு ஒன்று...''எவண்டி உன்னை பெத்தான், கையிலே கிடைச்சா செத்தான்...''  மிக அற்புதமான பாடல் இல்லையா இது ??? இதை ரசிப்பவனால்  எப்படி கம்பனை, பாரதியை ரசிக்க முடியும்?

இதுபோல் தான் சரியாக, முறையாக கல்லாதவன் ஒருவன் கற்றவனைப்போல் தானும் எழுதுகின்ற கவிதை. இதற்கு
புரியும்படியாக மண்டையில் தட்டினாற் போல ஒரு உதாரணம் கொடுக்கிறாள் கிழவி.

காட்டில் அநேக பறவைகள் இருக்கின்றன. ஒரு மயில் மிக அழகாக தனது பெரிய சிறகை விரித்து ஆனந்த நடனம் புரிகிறது. நிறைய மிருகங்கள், பறவைகள் இதைப்பார்த்து வாயைப் பிளந்து ஆச்சர்யப்படுவதைப் பார்த்து விட்டு பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்த ஒரு வான்கோழி முதலில் தனக்குப் பின்னால் இருக்கும் சிறகைப் பார்கிறது. அடே, நமக்கும் தான் மயிலைப் போல சிறகு உள்ளது. மயில் மட்டும் தான் ஒசத்தியா? நானும் மயிலும் ஒன்று தானே. ரெண்டு பேருமே பறவைகள் ஜாதி தானே. நாமும் ஆடுவோம் என்று தனது அரைகுறை அவலக்ஷண சிறகை விரித்துக்கொண்டு ஆடுகிறதைப் போலவாம். எப்படி, பலே கிழவியின் உதாரணம் ?

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

அடுத்தது மரங்களைப் பற்றி ஒரு ஆராய்ச்சி.   காடு பெரியது. அடர்ந்து, மெலிந்து, உயர்ந்து, பருத்து, தனித்து, கூட்டமாக, கிளையின்றி, கப்பும் கிளையுமாக எத்தனையோ வித மரங்கள் அதில் உள்ளன. இவை மரங்கள் தான் நம்மைப் பொருத்தவரை. ஆனால் கிழவி நம்மைப் போன்ற பார்வை கொண்டவள் அல்லவே. இதுவா மரம்? சீ சீ. நான் காட்டுகிறேன் பார் உனக்கு சரியான ஜாதி நல்ல மரம், என்னுடன் வா என்று அழைத்துப் போகிறாள் நம்மை.
அவள் அழைத்துப் போகிறாளே இது என்ன இடம்?

ஒரு பெரிய சபை. நிறைய பேர் அமர்ந்திருக்கிறார்கள். அங்கு அனைவரும் படித்தவர்கள், புலவர்கள், ஞானஸ்தர்கள். அவர்களில் ஒருவன். அவனது போறாத காலம், அஷ்டமத்தில் சனி. அவைத் தலைவர் அவனை அணுகி, அவர்கள் அலசிக்கொண்டிருந்த ஒரு விஷயம் பற்றிய ஒரு ஓலைச் சுவடியைக் கொடுத்து, ''அய்யா, மற்றவர்கள் எல்லாம் தங்கள் தங்கள் கருத்துகளைச் சொன்னார்கள். எனக்கு என்னவோ அது இன்னும் ஏற்புடையதாகவில்லை. நீங்கள் அமைதியாக இருந்ததைப் பார்த்தேன். நீங்கள் ஒருவேளை ஒரு நல்ல கருத்தைக் கொண்டவராக இருக்கலாம் என்று தோன்றியது. இந்தாருங்கள் இதைப் படித்து உங்கள் அபிப்ராயம் சொல்லுங்கள்'' என்று சொன்னபோது. அவன் திரு திருவென்று விழித்தான். அவன் நின்று கொண்டிருந்தாலும் அவன் கால் நடுங்கியது. தலை சுற்றியது. வியர்த்தது. நா உலர்ந்தது. ஓலைச்சுவடி அவன் கையில் தலைகீழாக வீற்றிருந்தது. ஏன்? அவன் கல்வியறிவில்லாதவன். தன்னைக் கற்றோரில் ஒருவனாக காட்டிக் கொண்டு எல்லோருடன் அவையில் தானும் நுழைந்தவன். போறாத காலம். வகையாக (எங்கள் தஞ்சாவூரில் ' வபையாக' என்போம். மாட்டிக் கொண்டவன்.
'' அவனைச் சுட்டிக் காட்டி, இதோ நிற்கிறான் பாருங்கள் இவன் தான் உண்மையிலேயே நல்ல மரம்' என்கிறாள் அந்த பொல்லாத கிழவி.
எளிமையான அவள் தமிழுக்கு தனியாக அர்த்தமே சொல்ல வேண்டாம்.

'கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்.

அடுத்ததாக கிழவியின் பார்வை ஒரு லோகல் டாக்டர் மேல் பாய்கிறது. லோகல் மருத்துவரை சந்திப்போமா?

ஒரு நாட்டு வைத்தியன் காட்டுப்பாதையில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு நடக்கிறான். அந்தக்காலத்தில் வைத்தியர் வீடு வீடாக செல்பவர். அவரது பையிலோ பெட்டியிலோ, நிறைய சூரணங்கள், தைலங்கள், லேஹியங்கள், பொடிகள், திரவங்கள், குளிகைகள், எல்லாம் வைத்திருப்பார். ஒரு வீட்டில் போய் திண்ணையில் உட்கார்ந்தால் அந்தவீட்டில் இருக்கும் அத்தனை பேர் வியாதிகளுக்கும் அவர் பையிலோ, பெட்டியிலோ மருந்து இருக்கும். தலைவலி, வயிற்றுவலி, பல் வலி, சரும கோளாறு, கண் நோய், காது குத்தல், முடக்கு வலி, வாயு உபத்திரம் எல்லாவற்றிற்குமே ஒரே சர்வ ரோக நிவாரணி. ''இந்தா இதை ரண்டு நாள் சாப்பிடு, வெறும் வயிற்றில் தண்ணியோடு குடி, எண்ணையை சேர்க்காதே, கத்திரிக்கா வேண்டாம்'' போன்ற கன்சல்டேஷன் வைத்தியம் நடைபெறும். எல்லா வியாதிக்கும் ஒரே மருந்து தான்!! நான் என் சின்ன வயதில் முனுசாமியிடம் நிறைய மருந்து இவ்வாறு சாப்பிட்டு இருக்கிறேன்.

வைத்தியர் திண்ணையை விட்டு இறங்கிப் போகும்போது அரிசி, காய்கறி, துணி, பழங்கள், நெய், போன்றவை அவருக்கு கன்சல்டஷன் பீஸ். அடுத்த மாதம் தான் மீண்டும் வருவார். பல வீடுகளுக்கு, இது போல் பக்கத்து ஊர்களுக்கும் செல்வதுண்டு. எப்போதுமே பிஸி அவர். அவரோடு அவர் பையன் கூட வருவான் பெட்டியோ பையோ தூக்கிக்கொண்டு. அவன் தான் ஜூனியர். அடுத்த டாக்டர்.

இப்படிப்பட்ட வைத்தியன் ஒரு நாள் ஒரு காட்டுக்குள் நடந்து செல்லும்போது வழியில் பட்டை பட்டையாக் பெரிய மஞ்சள், கருப்பு மினு மினுக்க ஒரு புலி. வழியில் குறுக்கே உறுமிக்கொண்டு படுத்திருக்கிறது. தனது முன்னங்கால்களில் ஒன்றை நக்கிக்கொண்டு இருக்கிறது. நகரவில்லை. நமது டாக்டர் பயந்து ஓடவும் வழியில்லை. அது எங்காவது முதலில் நகரட்டும் என்று ஒரு மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டு நிற்கிறார். மணிக் கணக்காக டாக்டர் மறைந்து நின்றும் புலி நகரவில்லை. கண்களில் நீர். அவருக்கல்ல, புலிக்கு. அதன் சப்தத்தில் ஒரு வலி தெரிகிறது. டாக்டர் பார்க்கிறார். நீட்டிக் கொண்டிருந்த அதன் முன்னங்காலில் ஒரு பெரிய கம்பியோ முள்ளோ குத்தி அதைச்சுற்றி சீழும் ரத்தமும் வடிகிறது. ஆஹா, இந்த புலிக்கு வலி இந்த கம்பி முள்ளால் தான். அதை எடுத்து விட்டால் அதன் வலி குறையுமே, அதற்கு காயம்பட்ட இடத்தில் கொஞ்சம் மருந்து வைத்துக் கட்டினால் அது மறுபடி பழைய படி நடக்கமுடியுமே.

அவர் டாக்டரல்லவா?. உடனே வைத்திய உதவி செய்ய தோன்றியது. நோயாளி புலியைப் பார்த்து அருகில் சென்று தன் பையிலிருந்து ஒரு குறடை எடுத்து அதன் காலில் இருந்த கம்பி முள்ளை பிடுங்கி எடுத்து, சீழ் ரத்தம் எல்லாம் அகற்றி மருந்து வைத்து கட்டுபோட்டார். என்ன ஆச்சர்யம். வலி போய்விட்டது. புலி அடிபட்ட காலை முன்போல் ஊன்றி வைக்க முடிந்தது.

இப்போது புலியின் கண்களில் மலர்ச்சி. எழுந்தது புலி. வைத்தியரிடம் வந்தது. அவரை அணைத்தது.
நாட்டு வைத்தியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தனது வைத்தியத்தில் ஆஹா புலிக்கு என்ன நன்றி உணர்ச்சி!!!
சற்று நேரத்தில் புலி சந்தோஷமாக நாக்கால் உதட்டை தடவிக்கொண்டு நடந்து சென்றது.
ஆனால் வைத்தியர் எங்கே போனார்? வைத்தியரின் தலைப்பாகையும், செருப்பும் பையும் தான் அங்கு இருந்தது. வைத்தியர் பசித்த புலிக்கு அன்றைய ஆகாரமானார்.
அவர் பையன் இதைப் பார்க்க அங்கில்லை. அவன் தான் எப்போதோ ஓடிவிட்டானே.
இது எது போலவாம்?

பாவம் ஏதோ கஷ்டப்படுகிறானே என்று ஒரு நன்றி கெட்டவனுக்கு நாம் நல்ல எண்ணத்தோடு செய்யும் உதவி ஒரு கல்லின் மீது தவறி விழுந்த பானையின் கதிக்கும் மேலே சொன்ன டாக்டரின் கதிக்கும் சமமாகும்என்று கிழவி புரியவைக்கிறாள்.

''வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல் - பாங்குஅறியாப்
புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம்.


sivan jaykay

unread,
Aug 20, 2025, 8:14:17 PMAug 20
to amrith...@googlegroups.com
கைவல்யோபநிஷத் - நங்கநல்லூர்  J K  SIVAN

உபநிஷதங்களில்  பெரிசும்  இருக்கிறது குட்டியும் இருக்கிறது.  சின்னதுகளில் ஒன்று தான் இந்த கைவல்ய  உபநிஷதம். உருவம் தான் சிறிசே தவிர  விஷயம்  பெரிசு.  ஆதி சங்கரர்  பாஷ்யம் எழுதியவற்றை பெரிசு எனலாம். அவ்வளவவு தான் வித்யாசம்.  கைவல்யம்  என்ற வார்த்தை '' கேவலம்''  அதாவது  ''ஒன்றே''  என பொருள்படும்.  தர்மார்த்த  காம மோக்ஷ புருஷார்த்தங்களை விளக்குவது.

ஸ்லோகங்கள்  11-20

आत्मानमरणिं कृत्वा प्रणवं चोत्तरारणिम् ।ज्ञाननिर्मथनाभ्यासात्पाशं दहति पण्डितः ॥ ११॥ 
ātmānamaraṇiṃ kṛtvā praṇavaṃ cottarāraṇim .jñānanirmathanābhyāsātpāśaṃ dahati paṇḍitaḥ .. 11.. 

பண்டைக்காலத்தில்  காட்டில்  முனிவர்கள்  ரிஷிகள்  அக்னி மூட்டுவதற்கு  அரணிக்கட்டைகள் என்று என்று ரெண்டு மரத்துண்டுகளை  வைத்திருப்பார்கள்..  கீழே  ஒன்று மேலே ஒன்று என்று கயிற்றை கட்டி மத்தில் தயிர் கடைவது போல் வேகமாக  அந்த அரணிக்கட்டைகளை தேய்த்தால்  உஷ்ணம் ஏற்பட்டு  தீப்பொறி கிளம்பும். அதால் யாகத்தீ வளர்த்தார்கள்.  இதை எதற்காக சொல்கிறார் ரிஷி என்றால்  ego  எனப்படும்  அஹம்பாவம்   ஓம் என்ற  ப்ரணவத்தோடு வேகமாக இணைந்தபோது தான் ஞானத்தீ பிறக்கும் என  உணர்த்துவதற்காக.  திருப்பி திருப்பி  நமது எண்ணங்களை  ஞானத்தை தேடும் வேளையில் ஈடுபடுத்தினால் தான்  ஆத்மாவை உணரமுடியும். இதை தான் ஞான நிர்மதன 
 அப்பியாசம் என்பார்கள். உங்க பந்தத்தை அறுக்க உதவுவது. 

12.  स एव मायापरिमोहितात्मा शरीरमास्थाय करोति सर्वम् । स्त्र्यन्नपानादिविचित्रभोगैः स एव जाग्रत्परितृप्तिमेति ॥ १२॥ 
sa eva māyāparimohitātmā śarīramāsthāya karoti sarvam .stryannapānādivicitrabhogaiḥ sa eva jāgratparitṛptimeti .. 12.. 

12.  ஆத்மா, மாயையால்  மறைக்கப்பட்டு மூடப்பட்ட நிலையில் ஜீவன் உடம்போடு சேர்ந்து மனத்தின் ஆக்கிரமிப்பில் சகல காரியங்களிலும்  ஈடுபட்டு  உணர்ச்சிகள்,  சுக துக்கங்கள்  ஐம்புலனால்  அனுபவிக்கிறான். அவன் எண்ணங்கள் அவனைத் தின்றுவிடுகிறது.  மது, மாது, உணவு சுகமாக தென்படுகிறது. கடைசியில் துக்கம் ஒன்றே அவன் பெறுவது. 

13. स्वप्ने स जीवः सुखदुःखभोक्ता स्वमायया कल्पितजीवलोके । सुषुप्तिकाले सकले विलीने तमोऽभिभूतः सुखरूपमेति ॥ १३॥ 
svapne sa jīvaḥ sukhaduḥkhabhoktā svamāyayā kalpitajīvaloke . suṣuptikāle sakale vilīne tamo’bhibhūtaḥ sukharūpameti .. 13.. 

13. இந்த ஜீவன் தான்  மேற்சொன்ன விழிப்பு நிலையில் அனுபவித்ததை   கனவு நிலையிலும் தொடர்ந்து அனுபவிக்கிறது.  .மலையிலிருந்து விழுகிறான். பெண்ணோடு ஊர் சுற்றுகிறான். பணத்தில் மிதக்கிறான். எல்லாம் கனவு. மாயலோகம். அதனால் என்ன பயன்? வெறும் துக்கம் ஒன்றே கடைசியில் மிச்சம்.   ஆழ்ந்த உறக்க  நிலையில் உலகமும் இல்லை, உள்ளமும் இல்லை. உள்ளது  ஒன்றே. ஆத்மானுபவம். அதனால் தான் ஆனந்தமாக தூங்கினேன் என்கிறான்.

14. पुनश्च जन्मान्तरकर्मयोगात्स एव जीवः स्वपिति प्रबुद्धः । पुरत्रये क्रीडति यश्च जीवस्ततस्तु जातं सकलं विचित्रम् । आधारमानन्दमखण्डबोधं यस्मिँल्लयं याति पुरत्रयं च ॥ १४॥
punaśca janmāntarakarmayogātsa eva jīvaḥ svapiti prabuddhaḥ .puratraye krīḍati yaśca jīvastatastu jātaṃ sakalaṃ vicitram .
ādhāramānandamakhaṇḍabodhaṃ yasmim̐llayaṃ yāti puratrayaṃ ca .. 14..

14. பூர்வ ஜென்மங்களில் புரிந்த கர்மாக்களின் பலன் இவ்வாறு தான் கனவிலும் நினைவிலும் அவனை துரத்துகிறது. . அவனுள்ளே  இன்னும் ஒன்று இருக்கிறதே,  ஆத்மா அதை அறியாமல் கஷ்டப்படுகிறான்.  தேகம் உலகம் தான் உண்மை சாஸ்வதம்  சுகம்  என  விட்டில் பூச்சியாக  அதிலே மயங்கி விழுந்து மாய்கிறான். 

15.  एतस्माज्जायते प्राणो मनः सर्वेन्द्रियाणि च । खं वायुर्ज्योतिरापश्च पृथ्वी विश्वस्य धारिणी ॥ १५॥ 
etasmājjāyate prāṇo manaḥ sarvendriyāṇi ca .khaṃ vāyurjyotirāpaśca pṛthvī viśvasya dhāriṇī .. 15..

15. பகவானிடமிருந்து  தான் சகலமும் உருவாகிறது.  ப்ராணன் எனும் உயிர்கள். மனம் எனும் அந்தக்கரணம், இந்திரியங்கள் எனும் ஐம்புலன்கள், ஆகாசம், வாயு, அக்னி, ஜலம், பூமி எனும்  ப்ரித்வி எல்லாம் தோன்றுகிறது. அதையெல்லாம் பார்க்கும்போது  இவை வெறும் கருவிகள், இவற்றை  இயக்குபவன்,காரண கர்த்தா ப்ரம்ம் எனும்   பரமாத்மா என்பது மறந்து போகிறது. 

16.यत्परं ब्रह्म सर्वात्मा विश्वस्यायतनं महत् । सूक्ष्मात्सूक्ष्मतरं नित्यं तत्त्वमेव त्वमेव तत् ॥ १६॥
yatparaṃ brahma sarvātmā viśvasyāyatanaṃ mahat . sūkṣmātsūkṣmataraṃ nityaṃ tattvameva tvameva tat .. 16..

16. எதை பரமம்,  ப்ரம்மம்  என்கிறோம். எது உன்னதமானதோ, உயர்ந்ததோ அதை. பிரபஞ்சத்தின்  உயிர்நாடி அது.  பெரிது என்றால்  மிக மிக பெரிதானது.  துக்குணியூண்டு என்று  கருதினால்  கண்ணுக்கே  தெரியாதது.  ஸாஸ்வதமானது . பகவானே, பிரம்மமே,  பரமாத்மாவே நீ தான் அது.

17.जाग्रत्स्वप्नसुषुप्त्यादिप्रपञ्चं यत्प्रकाशते । तद्ब्रह्माहमिति ज्ञात्वा सर्वबन्धैः प्रमुच्यते ॥ १७॥
jāgratsvapnasuṣuptyādiprapañcaṃ yatprakāśate .tadbrahmāhamiti jñātvā sarvabandhaiḥ pramucyate .. 17..

நமக்கு மூன்று   உணர்வுகளில்  வாழ்க்கை கழிகிறது.   விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம்.  இதை தான் ஜாக்ரதா,  ஸ்வப்ன,  சுஷுப்தி, எனும் மூவுலக  நிலை என்கிறோம். இந்த  மூன்றுக்குமே ஒளி கொடுப்பது  ப்ரம்மம் எனும் உள்  நின்று ஒளிரும் ஆத்மா தான்.  வெறும் சாட்சிபூதமாக  செயல்படுவது.  ஜாக்ரதா, ஸ்வப்னா இரண்டிலும்  மனமும் உலகமும் உள்ளது.  ஆழ்ந்த உறக்க நிலையில் ஆத்மா ஒன்றே உள்ளது. அதனால் தான் நன்றாக  மரக்கட்டை போல் தூங்கினேன், ஆனந்தமாக தூங்கினேன்  சுகமான தூக்கம்  என்கிறோம்.  
மனம், உலகம், ரெண்டும்  இல்லாத போது  தான் பேரானந்தம் கிட்டும் என்பதற்கு இதுவே சாக்ஷி.   இந்த மூன்றும் கடந்த நிலை தான்  துரீயம்.

18.त्रिषु धामसु यद्भोग्यं भोक्ता भोगश्च यद्भवेत् । तेभ्यो विलक्षणः साक्षी चिन्मात्रोऽहं सदाशिवः ॥ १८॥
triṣu dhāmasu yadbhogyaṃ bhoktā bhogaśca yadbhavet .tebhyo vilakṣaṇaḥ sākṣī cinmātro’haṃ sadāśivaḥ .. 18.

ஸமஸ்க்ரிதத்தில் த்ரிபுடி என்று ஒரு வார்த்தை.  ஒன்றே  மூன்றும் என்ற அமைப்பு.  உதாரணமாக  பாடுபவன், பாடும் செயல், பாட்டு  மூன்றும் ஒன்று.  காண்பவன், காணும் செயல், காட்சி  மூன்றும் ஒன்று. ஒன்று இல்லையானால் மற்றொன்று இல்லை. ஒன்றே மூன்றாக காணப்படுவது. மூன்றும் ஒன்றே. வெவ்வேறு நிலையாக தோன்றுகிறது.  ஆகவே  ப்ரம்மம், அதை அனுபவிக்கும் ப்ரம்ம ஞானி, பிரம்மத்தை துய்க்கும் செயல்  மூன்றும் ஒன்றே.

19..मय्येव सकलं जातं मयि सर्वं प्रतिष्ठितम् । मयि सर्वं लयं याति तद्ब्रह्माद्वयमस्म्यहम् ॥ १९॥
mayyeva sakalaṃ jātaṃ mayi sarvaṃ pratiṣṭhitam .mayi sarvaṃ layaṃ yāti tadbrahmādvayamasmyaham ..

நாம்  எதை  இந்த உலகம், ப்ரபஞ்சம்  என்று காண்கிறோமோ, நம்புகிறோமோ,  அது வெறும் மாயை. இல்லாதது இருப்பது போல் தோன்றுவது.  அதை தான்  நாம்  நமது மூன்று நிலைகளில்  ஜாக்ரதா, ஸ்வப்னா, சுஷுப்தி,  வெவ்வேறு காட்சிகளாக மனம் போனபடி காண்கிறோம். அனுபவிக்கிறோம். சுக துக்கங்கள் நேரிடுகிறது . பற்று வலுக்கிறது.  இதை எவ்வளவு  அழகாக கிருஷ்ணன் கீதையில் சொல்கிறார் பாருங்கள்; '' அடே, அர்ஜுனா,  எதெல்லாம்  நீ பார்க்கிறாயா, அதெல்லாமே நான் தானடா.  என்னுள்ளே  உருவாகிறவை யாவுமே.   வேறாக உன் கண்ணில் படுவது.  என்னுள்ளே  எல்லாம்  கறைந்து விடுகிறது.  நான் ஒருவனே, ஒன்றே, எல்லாம்.

20. अणोरणीयानहमेव तद्वन्महानहं विश्वमहं विचित्रम् । पुरातनोऽहं पुरुषोऽहमीशो हिरण्मयोऽहं शिवरूपमस्मि ॥ २०॥
aṇoraṇīyānahameva tadvanmahānahaṃ viśvamahaṃ vicitram .purātano’haṃ puruṣo’hamīśo hiraṇmayo’haṃ śivarūpamasmi .. 20..

ப்ரம்மம்  என்பது  சின்னதில் ரொம்ப சின்னதாகவும், பெரியதில் மிக மிகப் பெரியாதாகவும்  தோற்றமளிப்பது. நாம் எப்படி அதை ஏற்கிறோமோ அப்படி நம து மனத்துக்கு  த்ருப்தியளிப்பது.  ப்ரம்மம்  ஆதி அந்தமில்லாதது. புராதனமானது. புருஷன் எனப்படுவது. ஞான ஒளி வீசுவது.புனிதமானது.  அது  துய்ப்பவன், துய்யப்படும் செயல், துய்யப்படுவது  என்ற   மூன்றாக அறிகிறோம்.

sivan jaykay

unread,
Aug 20, 2025, 8:14:17 PMAug 20
to amrith...@googlegroups.com


 விருந்து  -   நங்கநல்லூர்  J K   SIVAN 

ராமாயணமும்  மஹா பாரதமும்  ஹிந்துக்களின்  இரு கண்கள் என போற்றத்தகுந்த இதிகாசங்கள்.  இதிஹாஸம்  என்றாலே  சமஸ்க்ரிதத்தில் 'இப்படித்தான் நடந்தது'' என்று அர்த்தம். அவை உண்மையில் நடந்தவை. கட்டுக்கதை அல்ல.  
வாசகர்களுக்கு மஹா பாரதத்திலிருந்து ஒரு விருந்து இந்த கட்டுரையில் அளிக்க விரும்புகிறேன். அதுவும் ஒரு விருந்து பற்றிய விபரம் தான். 

ஹஸ்தினாபுரம்  முழுதும்   கோலாகலமாக இருந்தது. ஊரெல்லாம்   மக்கள்  குதூகலமாக உலவினர்.   கூடி கூடி  பேசினர்.  
” யுத்தம் வரும்போல் தான்  இருக்கிறது.  
கிருஷ்ணன் கூட வந்திருக்கிறானாமே?? .
''என்னமோ நடக்க போகிறது!!.
“கிருஷ்ணன்  யுத்தம் நடக்காமல் செய்தால்  நமக்கெல்லாம்  நல்லதல்லவா?”  
“அதெப்படி சொல்லலாம்.  யுத்தம்  நடந்து  தர்மன்  ராஜாவானால் நமக்கு என்ன குறையா வந்துவிடும்? கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!!.  
'' துரியோதன ராஜா  மட்டும் என்ன  நமக்கு கெடுதி செய்தான்? நம்மை ஏதாவது பாடு படுத்தினானா??.  
''அவர்களுக்குள்ளே அண்ணன் தம்பி  சண்டை----''
'அதுக்கென்னய்யா , அது தான் வீட்டுக்கு வீடு இருக்கிறதே . ராஜாக்கள் வீட்டில்  நடந்தால் பெரிதாக  பேசப்படுகிறது.  
''விஷயம் ஒன்றுதானே.  உருவம் தானே பெரிசு   -
''கிருஷ்ணன்  அதி புத்திசாலி.  எப்படியாவது  சுமுகமாக காரியத்தை முடிப்பான். பார்க்கலாம்””  .

ஊர் மக்கள் அவரவர் மன நிலைக்கு தக்கவாறு இவ்வாறு  சிந்திக்கையில் கிருஷ்ணன் ஹஸ்தினாபுரத்தில்  சமாதான   பேச்சுக்கு வந்துவிட்டான்.  நாளைக்  காலை ராஜ  தர்பாரில்  விவாதம் கார சாரமாக இருக்கபோகிறது.   பீஷ்மர்  கையை  பின்னால்  கட்டியவாறு கட்டி தலையை அசைத்து தனக்குள்ளேயே ஏதோ கேள்வி பதில  சொல்லிக்கொண்டு  குறுக்கும்  நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார்.  துரியோதனனும் கர்ணனும் மற்ற  சில சகோதரர்களுடனும் நாளைய  நிகழ்ச்சியை, தமது திட்டத்தை, ஒத்திகை பார்த்துகொண்டிருந்தனர். 

கிருஷ்ணனுக்கு  என்று ஒரு  சிறப்பான  வரவேற்பு ஒன்றும்  கொடுக்க கூடாது என்று சிலர் வாதிக்க, கிருஷ்ணனுக்கு தக்க மரியாதை எள்ளளவும்  குறையக் கூடாது என்று   சிலரும் போதிக்க   கடைசியில் கிருஷ்ணன் தங்குவதற்கு  துரியோதனன் அரண்மனையில் ஒரு  மாளிகை தயார் செய்யப்பட்டது  

கிருஷ்ணனின்  ரதம் ஹஸ்தினாபுரத்துக்குள்  நுழைந்து விட்டது. 
”தாருகா, ரதத்தை  மெதுவாக செலுத்து””   என்றான் கிருஷ்ணன்.    அமைதியான  அந்த    நகரத்தை  முழுதும் ரசித்து  பார்த்தபோது  பழைய,  பழகிய இடங்கள்,  மக்களின் களிப்பு  எல்லாம் அவனை கவர்ந்தது.   இவற்றுக்கு  தீங்கு நேரக்கூடாது  என மனதில்  தோன்றியது.  துரியோதன மகாராஜா அரண்மனையை  நோக்கி ரதம்  திரும்பியது. 
 “ நில். அரண்மனைக்கு  எதிரில்  இருந்த வீதியில் வளைந்து  செல்லும்  பாதைக்கு செல்”  என்றான் கிருஷ்ணன்.

 தொலை  தூரத்தில் இருந்த  ஒரு  சிறிய பழைய  பர்ணசாலை  கண்ணில் பட்டது.  அந்த வீதியில்   நடமாட்டம் கிடையாது.   முதியவர் விதுரன் மட்டும் தான்  அந்த பர்ணசாலையில் வாழ்ந்து வந்தார்.  அவர்  வீட்டின் முன் ரதம்   நின்றதும் உள்ளே யிருந்து  ஆச்சர்யத்துடன்  'யார்  இங்கு  வருகிறார்கள்?'  என்று பார்க்க  வெளியே வந்த  விதுரன்  கிருஷ்ணன்  தேரிலிருந்து தனியே  இறங்கி  வருவது கண்டார்.  
“கிருஷ்ணா!!! என்  கண்களையே நம்பமுடியவில்லையே??.  நீயா????  இங்கு இந்த ஏழையின் இல்லத்துக்கு வந்தவன்?”
 “கிருஷ்ணன் என்பது  நான்   ஒருவன் தானே விதுர மாமா?  வேறு யாரவது என்  பெயரில்  உங்களுக்கு  தெரிந்தவர்கள் இருக்கிறார்களா?””
”கிருஷ்ணா,  உன் வேடிக்கைப்   பேச்சை கேட்டு எத்தனை   காலம் ஆகிவிட்டது?? ---. கிருஷ்ணா!  நான்  பாக்யவான். நீ  ஹஸ்தினாபுரம்  வரப் போகிறாய் என்று அறிந்தேன். ஆனால்  உன்னோடு பேசமுடியுமா?  என்ற   ஐயம்  இருந்தது.
”பேசமுடியுமாவா??”  விதுரமாமா பேசுவது மட்டும்  இல்லை இங்கு  உங்களோடு தங்கவும் தான்  வந்திருக்கிறேன். இடம் கொடுப்பீர்களா??”
“கிருஷ்ணா, என்  மனத்திலேயே  இடம் பிடித்த நீ  என்  குடிசையில்  தங்க இடம்  கேட்கவேண்டுமா "
“மாமா,   அரண்மனை வாழ்வு  எனக்கும்  அலுத்து விட்டது.  இங்கேயே தங்கிவிடலாமோ  என்றும் தோன்றுகிறது””
“கிருஷ்ணா  நீ  செய்ய  வேண்டியது  இன்னும் நிறைய இருக்கிறதே.  உனக்கேது ஒய்வு? நீ  ஒய்வு  எடுத்தால் உலகே ஓய்ந்து விடாதா??”  
“மாமா, அதெல்லாம் இருக்கட்டும் , பசியோடு வந்திருக்கிறேன். ஏதாவது   பருகவும்  உண்ணவும்  தருவீர்களா??.    

“கண்ணா,உன்னை  கண்டவுடன்   எனக்கு  ஆனந்ததத்தில்  கையும்  காலும்  ஓடவில்லையப்பா.  பழங்கள் உள்ளன. தருகிறேன்”.

விதுரன்கண்ணனோடு ஆனந்தமாக  பேசிக்கொண்டே  பழங்களை எடுத்து  பக்குவமாக அடுக்கி அவைகளின்  தோல் நீக்கி எறிந்து விட்டு  ஒரு  தட்டில் கண்ணன் எதிரே வைத்தான்.

 இருவரும்  ராஜ்ய வியவகாரங்களையும் தர்ம ஞாயங்கள்  பற்றியும்  நேரம்போவது தெரியாமல் பேசினர்.  கடைசியில்  கண்ணன்  சொன்னான்  

“ மாமா, வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான்  மிக்க மகிழ்ச்சியுடன் வயிறார உண்டேன்!!.   ஹஸ்தினா புரத்திலிருந்து   த்வாரகை திரும்பும்  வரை பசியே இருக்காது  போல் தோன்றுகிறது”.  

“நான்  என்ன  உனக்கு விருந்தா வைத்தேன்?”   இந்த  ஏழையின்  குடிசையில்  கொஞ்சம் பழங்கள் தான்  இருந்தது”   என்று சொல்லிக்கொண்டு  விதுரன் கண்ணன்  முன்  இருந்த  தட்டை  பார்த்தான்  பழங்கள்  தோல்  உறிக்கப்பட்டு வீசியதில் வெளியே சிதறிக் கிடந்தன. பழங்களின்  தோல்கள்  எல்லாம்  தட்டில் நிரம்பியிருந்தது”  அவற்றை தான் கண்ணன்  நிறைய  உண்டிருக்கிறான்!!!!
 
“கிருஷ்ணா,   நான்   எத்தகைய மஹா பாவி,  உனக்கு  பழங்களை கூட  அளிக்க யோக்யதை அற்றவனானேனே !!!”   நீயும் ஏன் கண்ணா வெறும் தோல்களை  மட்டும்  உண்டாய்?

"மாமா,   எனக்கு   என்னவோ ஒரு  பழக்கம்.  யார்  எதை அன்போடு கொடுத்தாலும்  ஏற்றுகொள்வது.  பழங்கள் போல்  தோலும்  எனக்கு  இனித்தது “மாமா. நீங்கள்   கொடுத்த துளசி ஜலம் பூரண  திருப்தியை  அளித்தது. வேறொன்றும் எனக்கு வேண்டாம் "  

பாரத  போர்  ஆரம்பத்தில்  இதையே  கண்ணன்  அர்ஜுனனுக்கும் ஏன் அதன்மூலம்  நமக்கும் சொன்னானே!!!!

     

 

sivan jaykay

unread,
Aug 20, 2025, 8:14:17 PMAug 20
to amrith...@googlegroups.com
ஸூர்தாஸ்  --  நங்கநல்லுர்  J K  SIVAN 

 ''தாத்தா  என் கையை பிடித்துக்கொள் ''

 கிருஷ்ணன் என்பவனைப் பற்றி எப்போது தெரிந்து கொண்டாரோ, அந்த கணம் முதல் ஸூர்தாஸ் மனதிலிருந்து கிருஷ்ணன் அகலவில்லை. பிரிஜ்பாஷா என்ற அவருக்கு தெரிந்த மொழியில், அந்த கண்ணற்ற பக்தரின் வாக்கில் தேனாக உருவெடுத்து நம்மை

16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு விழியற்ற கிருஷ்ண பக்தர் சூர்தாஸ். இது அவர் பெயர் அல்ல. 'சூர்' என்றால் அவர்கள் பாஷையில் குருடன் என்று அர்த்தமாம்.  அவர் ஒரு பிறவிக்குருடர்.  யாரும் அவரை லக்ஷியம் பண்ணாமல்  அவரை வீட்டை விட்டு அனுப்பி விட்டார்கள்.   ஆறு வயதில் உலகில் தள்ளப்பட்ட  கண்ணற்ற சூர் தாஸ் மெதுவாக நடந்து வ்ரஜபூமி  என்கிற உ.பி. தேச பகுதியில்  வாழ்ந்தார். கண்ணன் பிறந்த மதுரா அருகில் உள்ள பகுதி..

ஹிந்தியில் ப்ரஜ் பாஷா  எனப்படுவது  நம்மூரில் கொங்கு தமிழ், திருநெல்வேலி தமிழ், மெட்ராஸ் டமில் என்று இருப்பதை போல. சூர்தாஸ் கிருஷ்ணனை பற்றி ப்ரஜ் பாஷயில்   பாடினார்.  'எழுதினார்' என்று  படிப்பில்லாதவர்,  பார்வையற்ற வரைப் பற்றி எப்படி சொல்ல முடியும்?

சூர் தாஸ் பாடிய கண்ணன் பாடல்களை சூர் ஸாகர் ( கிருஷ்ண சமுத்திரம்) என்று சொல்வார்கள். எல்லாமே குழந்தை கண்ணனை பற்றியே என்றால் எவ்வளவு சுகம்!

 சூர்தாஸ் எப்போது  பிறந்தார் என்பது சரியாக தெரியாவிட்டால் பரவாயில்லை. நம்மைப் பொறுத்தவரை ஸூர் தாஸ் தான் இன்னும் இருக்கிறாரே  அவரது  ஸூர் ஸாகரம் எனப்படும் அவரது அற்புத  கவிதைகளில்.    அது போதும். சரித்திரம் நமக்கு வேண்டாம். அது தப்பைக்கூட நிஜமாக்கிவிடும்.

''ராதா--  கிருஷ்ணா''    என்று இரு பெயர்களை நினைத்தாலே   போதும்.  பக்தி கடல் போல பொங்கி  கற்பனை சம்பவங்கள்  வெள்ளமாக  கவிதையாக  ஓடிவரும் ஸூர் தாஸுக்கு.  இதயம் நிரம்பிய  அந்த அமுத பிரவாகத்தை  அகம் எனும் மனம்  அனுபவிக்கும் போது  புறத்தில் கண் விழி இருந்தென்ன இல்லாதென்ன.'  

ஒரு லக்ஷத்துக்கும் மேலே கண்ணன் பாட்டுகள்.... யாரையா அதையெல்லாம் பாதுகாத்து அச்சடித்து புத்தகமாக இலவசமாக செய்யமுடியும். ?  ஏதோ அவர் எழுதியதாக ஒரு 8000 பாடல்கள்   மிஞ்சி இருக்கிறது. தெற்கே தான் அபாக்யசாலிகள்  நிறைய  என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வடக்கேயுமா? நல்ல விஷயங்களை கோட்டைவிடுவதில் மன்னர்கள் நாடெங்குமா?

சூர்தாஸ் வாழ்ந்த  காலத்தில்  நமது பாரதத்தை அப்போது முகலாய பேரரசன் அக்பர் ஆண்ட சமயம். அவன் சூர் தாஸ் கவிதை ரசிகன்.

சிறு வயதில் பெற்றோராலும் மற்றோராலும் புறக்கணிக்கப்பட்ட  நிலையில்  ஸூர் தாஸ்  தனிமையில் தான் வளர்ந்தார். ஒரு நாள் அவர் உட்கார்ந்திருந்த  திண்ணை அருகே தெருவில் சிலர் கிருஷ்ண பஜனை செய்து கொண்டு சென்றது காதில் விழுந்தது.   'கிருஷ்ணன் கிருஷ்ணன்  என்கிறார்களே  யார் அது.  அவனைப் பற்றி கேட்கும்போது மனது இனிக்கிறதே. 'ஆஹா எனக்கும் கிருஷ்ணன் மேல் பாட  வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?  ஏன் முடியாது?  ஒருநாள் என்னையும்  கிருஷ்ணன் பாட வைப்பான்'' என்ற நம்பிக்கையோடு  மெதுவாக அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொண்டார்.
கூட்டத்தில் ஒருவன் ''டேய் ஏன் எங்களை தொடர்ந்து வருகிறாய்?""
'கிருஷ்ணன் பாட்டு நீங்கள் பாடுவது பிடிக்கிறது. எனக்கும் உங்களை மாதிரி பாட ஆசையா இருக்கு''
''சரி வா''
இரவு வந்தது. சாப்பிட ஆகாரம் கொடுத்தார்கள். எதற்கு இந்த குருட்டு பையனை அழைத்து போகவேண்டும். அவனால் உபத்திரவம் தானே வந்து சேரும்'' இந்த முடிவை  சூர்தாஸிடம் சொல்லாமலேயே அந்த பக்தர் கூட்டம் மறுநாள் காலை   அவரை அங்கேயே  விட்டு விட்டு  சென்றது.   ஸூர் தாஸ் கவலைப்படவில்லை. அவர் எண்ணம்மெல்லாம்  கிருஷ்ணன் மேலே இருந்தது.
ஒரு இரவு கண்ணன்  ஸூர் தாசை  அழைத்தான்.
''ஸூர் தாஸ்,    இங்கிருந்து கிளம்பி நீ பிருந்தாவன் வா. நான் அங்கே உனக்காக காத்திருக்கிறேன்.
''ஆஹா அப்படியே '' -- ஸூர் தாஸ் கிளம்விட்டார். பிருந்தாவனம் எங்கே இருக்கிறது.? தான் போவது எந்த பக்கம்? எது பற்றியும் கவலைப்படாமல் கால் போன போக்கில் நடந்தார். வாய்  கிருஷ்ணன் பற்றியே  ஏதேதோ பாடியது.
 வழி யெல்லாம்  கண்ணனை பாடிக்கொண்டே சென்றவரை ஆங்காகே  ஜனங்கள்  நீங்கள்  இங்கேயே எங்கள்  ஊரில்  இருங்கள் என்று அழைப்பு.
''நான் ஒரு பர தேசி. ஒரு இடத்திலும் நிற்காதவன். நான் போக விரும்புவது பிருந்தாவனம் '' என்று ஒரே பதில் அனைவருக்கும் கிடைக்கிறது.  ஸூர்தாஸின் கால்கள் பிருந்தாவனத்தை நோக்கியே நகர்கின்றன. வழியே காட்டில் ஒரு பெரிய கிணறு. யாரும் இல்லாத இடம். கண்ணில்லாத ஸூர்தாஸை அந்த கிணறு விழுங்கியது. உடலில் காயம். எப்படி மேலே ஏறி வருவது? பசியோடு ஆறு நாள்  யாரும் கவனிக்காமல்  கிணற்றில் கிடந்தார். ஏழாம் நாள் ஒரு குரல் கேட்டது.
''தாத்தா உன் கையை நீட்டு. 
 என் கையை பிடித்துக்கொள் .மேலே இழுக்கிறேன்'' என்று ஒரு குரல்.
எங்கிருந்தோ அந்தப்பக்கம் வந்த ஒரு மாடு மேய்க்கும் பையன் குரல் காது அருகில் கேட்கிறது. அவன் கிணற்றில் இறங்கி உதவுகிறான்.  அப்புறம்  என்ன?  மேலே ஏற்றிவிட்ட பையன் ஏன் காணாமல் போய் விட்டான்? . கோபால கிருஷ்ணன் ஒரே இடத்தில் இருப்பவனா?  எங்கெல்லாமோ யாருக்கெல்லாமோ உதவ ஓடுபவ னாச்சே!  ஸூர்தாசுக்கு யாரோ ஒரு பையன் உதவினான் என்று தான் தெரியும். யார் என்றோ, அவன் வந்ததும் போனதும் தெரிய கண் இல்லையே.
ஸூர்தாசுக்கு மட்டுமல்ல, நாமும் கண்ணனை நினைத்தால் கைதூக்கி ஆள்வான்.


sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:16 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com
அப்பா  கணேசா.. -  நங்கநல்லூர்  J K  SIVAN

 நாளை  விநாயக சதுர்த்தி.  விசேஷ நாள்.  பிள்ளையாரைப் பற்றி மனம் நினைக்கிறது. 
 நமக்கு ஒரு பெருமை.   எந்த  கிராமத்திலும் பட்டணத்தில் தெருவிலும் கூட  பிள்ளையார் கோவில் கொண்டு இருப்பார். ஆற்றங்கரை, குளக்கரை, அரசமரத்தடி, முச்சந்தி  எங்குமே  பிள்ளையார் அமர்ந்திருப்பர்.  சிவபெருமானுக்கு  மூத்த பிள்ளை  நமக்கு  மரியாதை கலந்த பெயராக   ''பிள்ளை'' யார். குழந்தை சுவாமி. பிள்ளையாரைப் பார்க்கும்போது அவரது வளைந்த  தும்பிக்கை  ஓம் எனும் பிரணவ மந்த்ரத்தை ஸ்வரூபமாக காட்டும். கஷ்டங்களை, விக்னங்களை, குறைகளை தீர்க்கும் விக்னேஸ்வரர்.  எந்த விசேஷமாக இருந்தாலும் பூஜையாக இருந்தாலும் முதல் வழிபாடு பிள்ளையாருக்கே. சிவகணங்களுக்கு அதிபதி, கணேசன், கணபதி, கணநாதன்.   ஒரு சொடக்கு போடும் நேரத்தில் ஒளவைப்பாட்டியை  கைலாசத்துக்கு  தும்பிக்கையால் தூக்கி அனுப்பி வைத்தவரல்லவா?. பக்தர்கள் நம்மையும் கை  தூக்கி விடுபவர்.
பாரத தேசமெங்கும்  விநாயக சதுர்த்தி, பிள்ளையார் சதுர்த்தி, கணேஷ் சதுர்த்தி என்று  கொண்டாடப்பட்டாலும் மராட்டியர்களுக்கு இது ரொம்ப ரொம்ப விசேஷ பண்டிகை. ''கணபதி பப்பா மோரியா''  சப்தம்  கேட்காத இடமே இல்லை. 
 சாதாரண   எருக்கம்பூ கூட  முழம் நூறு ரூபாய்க்கு விற்கும் .எல்லாகோவில்களிலும் சிறப்பு அர்ச்சனை அபிஷேகம் பூஜைகள். கொழுக்கட்டை,  சுண்டல், அவல்,  பொரி, அப்பம்  நைவேத்தியம் செய்வார்கள்.  லாண்டிரிக்கு துணி போட்டாலும், அன்றாட காய்கறி வாங்க  லிஸ்ட்  எழுதும்போதும் பிள்ளையார் சுழி இல்லாமல் எதையும் எழுதும் பழக்கம் இல்லை. பிள்ளையார் சுழி , 'உ'' ' தான்.   இந்துக்களிடையே   அதிகமாக வழிபடப்படும் ஒரு தெய்வம்  விநாயகர் எனலாம்.

எல்லோரும் அறிந்த ஒரு பிள்ளையார் மந்திரம் ஸ்லோகம் ;शुक्लांबरधरं * विष्णुं * शशिवर्णं * चतुर्भुजं * | प्रसन्नवदनं * ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ||SuklAMbaradharaM  * viShNuM * SaSivarNaM * chaturbhujam *। prasanna  vadanaM* dhyAyet sarvavighnopaSAntaye ॥
சுக்லாம்பரதரம் * விஷ்ணும் * சஸி வர்ணம் * சதுர்புஜம் *  ப்ரசன்னவதனம் * த்யாயேத் சர்வவிக்னோப சாந்தயே ||

மேலே சொன்ன த்யான ஸ்லோகத்தில் பிள்ளையார் பெயரே இல்லை.  அவரை வர்ணனை செய்யும் ஸ்லோகம். 
 ''வெள்ளை வஸ்த்ரம்  உடுத்தியவர்.  ஸரஸ்வதியும் ஈச்வரனும் கூட  வெள்ளை  வஸ்திர தாரிகள் தான். '' மஞ்சள், சிவப்பு கட்டிக்கொள்கிற விஷ்ணு  அம்பாளை பீதாம்பரதாரி, ரக்தாம்பரதாரி  என்கிறோம்.  ‘சுக்லாம்பரதரர்’ என்பது பிள்ளையாரை  மாத்திரம் குறிப்பிட்டு  சொல்லவில்லை என்பது அற்புதம். “விஷ்ணு'' பேர் இதில் வருகிறதே.  விஷ்ணு என்றால்  எல்லா இடத்திலும்  வியாபித்திருப்பவர், ஸர்வ வியாபி என்று அர்த்தம். பிள்ளையார் எங்கேயும்  கண்ணில் படுபவர், ஆற்றங்கரை, குளத்தங்கரை, தெருவில், சந்து முனையில்,  எதிர் குத்து, முட்டு, திருப்பங்களில, அரச மரத்தடியில்,  எங்கும்  இருப்பவர்.  “சசிவர்ண” என்றால்   பூரண  ச ந்திரன்  பால் நிலா மாதிரி என்று அர்த்தம்.  ஈச்வரனும், ஸரஸ்வதியும் கூட  அப்படித்தானே இருப்பவர்கள். “சதுர்புஜ”: நாலு  கரங்கள் உடையவர்.  நிறைய  கடவுளுக்கு, ஆணாகட்டும் பெண்ணாகட்டும்  நாலு, எட்டு பதினாறு கைகள் இருக்கிறது.  பிள்ளையாருக்கும்  சதுர்புஜம். தும்பிக்கையை சேர்ந்து  அவர் ஐங்கரன்.  ப்ரஸந்ந வதந”: மலர்ந்த முகம் உடையவர்.  யானையை எத்தனை நேரம் அருகில் நின்று பார்த்தாலும் அலுப்பு தட்டுவதில்லை. குழந்தைகளை எளிதில் கவரும் உருவம்.  உடம்பை ஆட்டிக்கொண்டு காதை  விசிறிமாதிரி  அசைக்கும் அழகு, தும்பிக்கை விஷமம் பார்க்க  அலுக்காது. குழந்தைகள்  யானையைக் காண்டல் குதூகலத்தோடு  மணிக்கணக்காக  ரசிப்பவர்கள்.

எது எழுதினாலும்  பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுதுபவர்கள் இன்னும்  நம்மிடையே  லக்ஷக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். 

எங்கள் 3ம் வகுப்பு வாத்யார் சுப்ரமணிய அய்யர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.  பிள்ளையார் சுழி  போடாமால்  எழுதினால் கையில் முட்டியில்   ஸ்கேலால் SCALE  அடிப்பவர். ஓரிரு  முறை அடி  வாங்கியவன்  நான்.  
எதை வேண்டுமானாலும் கேட்கலாம். வேண்டிக்கொள்ளும்போது தலையில் ரெண்டு பக்கமும் நெற்றி பக்கம் குட்டிக் கொள்கிறோம்.   சிரஸில்  உச்சியில் உள்ள, அம்ருதம் உடம்பில் உள்ள எல்லா  நாடிகளுக்கும் பரவ தான் குட்டிக் கொள்வது.தோர்ப்பிகரணம்  (காதுகளை பிடித்துக்கொள்வது)  இரு கைகளாலும் மாற்றி  காது மடல்களை பிடித்துக்கொண்டு  உட்கார்ந்து எழுவது தான் தோப்புக்கரணம். சிறந்த உடற்பயிற்சி.  பழைய காலத்தில் பள்ளிக்கூடத்தில் தோப்பு கரணம் போடுவது தான் தண்டனை. 
‘த்யாயேத்’  என்றால்  தியானம் செய்வது.

பிள்ளையாரை எதற்கு  தியானிக்கிறோம் என்றால்  “ஸர்வ விக்ந உப சாந்தயே”- எல்லா  குறைகளையும், குறைவுகளையும், நீக்க, தடைகள் நீங்க,  இடையூறுகள் விலக .

சின்னதாக கொஞ்சம் மஞ்சள் பொடியில் பிள்ளையார் பிடித்து ஆவாஹனம் பண்ணி பூஜை பண்ணிவிட்டு தன எந்த சுப  காரியங்களையும் வீடுகளிலும், விழாக்களிலும் ஆலயங்களிலும்  ஆரம்பிக்கிறோம்.

sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:16 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com

sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:16 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com
சத்யமேவ ஜெயதே --   நங்கநல்லூர்  J K SIVAN 

''அந்த பயல் கோவிந்தசாமி,  அவன் சொல்ற  பொய்கள் அனைத்தும்   சொல்லி  ''நான் சொல்றது உண்மை தான் ஸார் ''  என்கிறான்.  அவன் என்ன பெரிய  ஹரிச்சந்திரனா?'' என்கிறோம்.

இதிலிருந்து யாரோ ஒருத்தன் ஹரிச்சந்திரன்  என்ற பெயரில் இருந்திருக்கிறான். அவன் உண்மை, உண்மை, உண்மை, தவிர எனக்கு வேறெதுவும் எனக்கு தெரியாது  என்று சொல்பவனாக இருந்திருக்கிறான் என்று புரிகிறது.  அதனால் அவனுக்கு என்ன பலன் விளைந்தது?   மேலும் மேலும் கஷ்டங்கள், துயரங்கள். நஷ்டங்கள்.   இருந்தும் அந்த வைராக்ய புருஷன் உண்மை தான் சத்யம் என்று உணர்ந்தவனாக  வைராக்யமாக  வாழ்ந்தான்.  சகலமும்  அதனால் இழந்தும் அவன் மனம் தளரவில்லை. அதனால்  தான் என்றும்  நமது மனதில் ஈடு இணையற்ற சத்யவானாக  நினைவிலிருக்கிறான்.எங்களுக்கு சின்ன வயதில் ஹரிச்சந்திரன் கதை சொல்லிக்கொடுத்ததால் இன்னும் ஞாபகம் இருக்கிறது.  இக்காலத்தில்  அவனைப்பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? அவனைப்  போல் பொய்யே பேசாதவன் எவனாவது இருக்கிறானா? இருக்க முடியுமா? அதுவும் கடவுள்  தலையிலேயே கல்பூரம் ஏற்றி, கீதைமேல் அடித்து கூசாமல் பொய் சொல்லும் இந்த காலத்தில் !  ஆகவே இன்று அரிச்சந்திரன் பற்றி எல்லோருக்கும் சொல்ல ஒரு ஆசை. தெரியாவிட்டால் நீங்களும் தெரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளுக்கும் கதையாக சொல்லுங்கள் . குழதைகள்  பொய்  பேசாமல் வளர்க்கப்பட வேண்டும் .
++
காசி (பனாரஸ்), வாரணாசி  எனப்படும் புண்ய க்ஷேத்ரத்தில் அநேக ஹிந்துக்கள்  இறந்தவர்கள் உடலை  கங்கைக் கரையில் அரிச்சந்திர மயானத்தில் எரித்தால் அவர்கள் சொர்க்கலோகம் அடைவார்கள் என்கிற நம்பிக்கை  இதை நான் எழுதும் வரை உள்ளது. அப்புறமும் இருக்கும். ஹரிச்சந்திரா காட் எனப்படும் ஹ
ரிச்சந்திர மயானத்தில்  உடலை கொளுத்தி  அஸ்தியை கங்கையில் கரைக்கும் வழக்கம் பல்லாயிரம் வருஷங்களாக உள்ளது.  ஹரிச்சந்திரன் காசி மயானத்தின் காவலனாக இருந்து   படாத கஷ்டங்கள் பட்டு கடைசியில்  காசி விஸ்வநாதர் அனுக்ரஹத்தோடு  மோக்ஷம் அடைந்ததால்   மயானங்களில்  ஹரிச்சந்திரன் சிலைகள் காணப்படும்.  அவன் அனுமதி பெற்ற பிறகே மயானத்துக்குள் நுழைந்து இறந்த உடலுக்கு ஈமச்சடங்குகள் செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது. 

காசியில் நடப்பது போல ஒவ்வொரு  ஊரிலும்  சடலத்தை  எரித்து சாம்பலை  சமுத்ரத்திலோ, ஆற்றிலோ  கரைக்கிறோம். ஆற்றங்கரையில் தான் அக்காலத்தில்  மயான பூமி இருந்தது.  அங்கே தான் ஊரில் பிணங்கள் எரிக்கப்படும்.

 ஹரிச்சந்திரன் சூரிய குலத்தின் 28 வது ராஜா. மஹாத்மா காந்தியை சின்ன வயதிலிருந்தே மனம் கவர்ந்த உண்மை பேசுபவன். மஹாத்மா ''சத்ய சோதனை'' எழுத காரணமானவன். அவர் அம்மா கதை சொல்லி தெரிந்து கொள்ளப் பட்டவன். 

விசுவாமித்திர  ரிஷி ஒருநாள்  ராஜா  ஹரிசந்திரனிடம் வந்தார்.   அவரை வரவேற்று  உபசரிக்கிறான். 
''ஹரிச்சந்திரா  நான் எதற்கு உன்னிடம் வந்தேன் தெரியுமா/''
''சொல்லுங்கள்  சுவாமி''
''நேற்று என் கனவில் உன்னை கண்டேன்.  நீ  ''மகரிஷி,  இந்தாருங்கள் என் ராஜ்ஜியம், இனி இது உங்களது''என்று வாக்களித்தாய்.  நீ  சொன்ன சொல் தவராதவன், பொய் சொல்லாதவன் என்று எனக்கு தெரியும்''  என்கிறார் ரிஷி. 
''ஆஹா  அப்படியே சந்தோஷமாக நடக்கட்டும் குருவே'' 

 ராஜா ஹரிச்சந்திரன் கட்டின துணியோடு, மனைவி சந்திரமதி, மகன் லோகிதாசனோடு , ராஜ்யத்தை விஸ்வாமித்ரருக்கு அளித்துவிட்டு நடக்கிறான். 
''நில் ஹரிச்சந்திரா''.  நிற்கிறான் மன்னன்.
''குரு ஒருவர் வந்தால் அவருக்கு  தானம் அளிப்பதோடு  குரு தக்ஷணை  கொடுக்கும் வழக்கம் உனக்கு தெரியாதா?''''
''அடாடா, மன்னிக்க வேண்டும் சுவாமி''

அவனிடம் தக்ஷணை ஒடுக்க சல்லிக்காசும் இல்லையே. ஆகவே  யோசித்து  தனது மனைவியையும் பிள்ளையையும் ஒரு பிராமணனுக்கு அடிமையாக விற்றுவிட்டு அந்த காசை விஸ்வாமித்ர ரிஷிக்கு அளிக்கிறான். 
''ஹரிச்சந்திரா நீ கொடுத்த  தக்ஷணை  ரொம்ப ரொம்ப குறைவாக இருக்கிறதே''
''சுவாமி என்னையும்  யாருக்காவது விற்று அந்த பணத்தை தருகிறேன். மனமுவந்து ஏற்றுக்கொள்ளவேண்டும். ''
ஹரிச்சந்திரன்  காசியில் சுடுகாட்டில் பிணம் எரிக்கும் ஒருவனுக்கு அடிமையாக தன்னை விற்றுக்கொண்டு  அந்த பணத்தை விஸ்வாமித்ரரிடம் அளித்து வணங்கிச் செல்கிறான்.

பிராமணன் வீட்டில் வேலைக்காரியாகிவிட்ட  ராணி சந்திரமதியும்  ராஜகுமாரன் லோகிதாசனும் ரொம்ப கஷ்டப்படு கிறார்கள். ஒருநாள்  எஜமானருக்கு  பூஜைக்கு  புஷ்பம் பறிக்க சென்ற லோகிதாசனை ஒரு நாகம் தீண்டி அவன் இறக் கிறான். எந்த உதவியும் இல்லாத  ஏழை சந்திரமதி பிள்ளையின் சடலத்தை தானே சுமந்து காசி மயானம் செல்கிறாள். ஹரிச்சந்திரன் தான் அங்கே பிணம் எரிக்கும் வேலையில்  இருக்கிறான். அவனிடம்  பிணத்தை எரிக்க  உதவி கேட்கிறாள். இருவருமே  ஒருவரை ஒருவர் அடையாளம் தெரிந்து கொள்ளமுடியாமல் மாறி போயிருந்தனர். 

''அம்மா, என் எஜமானருக்கு   இங்கே  பிணத்தை எரிக்க நான்  காசு வசூலித்து  கொடுக்கவேண்டும்.  பணம் கொடு ''
''ஐயா,  என்னிடம் சலிக்காசு கூட இல்லாத  பரம ஏழை. என் மகன் நாகம் தீண்டி இறந்துவிட்டான். நான் ஒரு அடிமை. எப்படியாவது இவன் உடலை எரிக்க  உதவுங்களேன்'' என்று அழுகிறாள் ''

அப்போது தான் ஹரிச்சந்திரன் கண்ண்ணுக்கு சந்திரமதியின் கழுத்தில் உள்ள தங்க தாலி தெரிகிறது.''
'அம்மா உன் கழுத்தில் தங்க மாங்கல்யம் உள்ளதே அதை விற்றாவது காசு கட்டலாமே. என் எஜமானனுக்குவரி  செலுத்திவிட்டு உங்கள் மகனை எரிக்கிறேன் ''

இங்கே ஒரு  அதிசய, அற்புத விஷயம் சொல்லவேண்டும்.  பிறந்தபோதே  சந்திரமதி\யின் கழுத்தில் ஒரு தாலி இருந்தது. அதைப்  பற்றி பலரிடம் அவள் பெற்றோர்கள் விசாரித்து அறிந்தனர்.   பிரபல ஜோசியர்கள்  ''இது தெய்வ குழந்தை. இந்த  தாலி பெற்றோர் உங்களைத்  தவிர இந்த பெண்ணின் கணவனாக எவன் வருவானோ அவன் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்கள் கண்ணுக்கு  இது தெரியவே தெரியாது '' என்கிறார்கள்.இது சந்திரமதிக்கும் தெரியுமே. அதனால் எதிரே பேசும்  வெட்டியான் தான்  ராஜா  ஹரிச்சந்திரன்,  தனது கணவன்,  என்று அறிகிறாள்.  இருவரும் ஒருவரை  ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு அழுகிறார்கள். தன்மகன் இறந்த துக்கத்தில் ஹரிச்சந்திரன் அழுதாலும் அவன் பிணத்தை எரிக்க மறுத்துவிட்டான்.   ஏற்கனவே சந்திரமதி  தான்  கட்டியிருந்த,அவளிடமிருந்து ஒரே  சேலையில் பாதியை கிழித்து இறந்து போன லோகிதாசன் மேல் போர்த்தி இருந்தாள் . மற்ற  பாதியை இடுப்பில்  கோணா மாணா வென சுற்றி இருந்தாள் 

''அதையாவது அவிழ்த்து கொடு சந்திரமதி,  பிணம் எரிக்க வரியாக  அதை  எஜமானனிடம்  கொடுத்த்து கெஞ்சி நமது பிள்ளையை எரிக்க  அனுமதி கேட்டு கெஞ்சுகிறேன் '' என்கிறான் ஹரிச்சந்திரன்.

சந்திரமதி இடுப்பில் உள்ள பாதி சேலையை அவிழ்க்கிறாள். அவளுடைய கிழிந்த புடவை அவிழும் முன்பு  எதிரே  விஷ்ணு, தேவர்கள், விஸ்வாமித்ர ரிஷி எல்லோரும் தோன்றுகிறார்கள்.  எல்லோரும் ஹரிச்சந்திரனின் நேர்மையை, சத்தியத்தை,   நற்குணத்தைப்  போற்றி பாராட்டி,  லோகிதாசனை  உயிர்ப்பித்து ஹரிச்சந்திரனை மீண்டும் காசி ராஜாவாக்குகிறார்கள்.  நீங்கள் எங்களோடு ஸ்வர்கத்துக்கு வரவேண்டும் என்று அழைக்கிறார்கள். 

 ஹரிச்சந்திரன் அவர்களை வணங்கி   ''ராஜ்யபதவி வேண்டாம்,  தான் மட்டும் குடும்பத்தோடு ஸ்வர்கம் வர  மனது ஒப்புக்கொள்ள வில்லை.  என் நாட்டு மக்கள் அனைவருமே ஸ்வர்க பதவி பெறவேண்டும்'' என வேண்டுகிறான். 

''ஹரிச்சந்திரா, ஒவ்வொருவரும் அவரவர் வினைப்பயன் விளைவாகவே சுவர்க்கம் செல்ல முடியும்.  நீ செய்த தர்ம சத்ய பலனால்  உனக்கும் உன் குடும்பத்துக்கும் ஸ்வர்கம் கிடைத்தது.''

''பகவானே, அப்படியென்றால் எனது தான, சத்ய ,புண்ய பலன் அனைத்தையும் என் குடிமக்களுக்கு அளித்துவிடுகிறேன் அவர்களை மட்டுமாவது ஏற்றுக்கொள்ளுங்கள் '' என வணங்குகிறான் ஹரிச்சந்திரன். 

விஸ்வாமித்ரர் இதைக் கேட்டு  மனமகிழ்ந்து  ''என் சோதனையில்  ஹரிச்சந்திரா,  நீ ஜெயித்தாய் நான் தோற்று விட்டேன் ஹரிச்சந்திரா, இந்த சோதனை எதற்கு என்றால் உலகத்தில் ஒருவர் விடாமல் அனைவரும் ஹரிச்சந்திரன் எப்படிப்பட்ட சத்யவான், உண்மைக்காக உயிரையே கொடுப்பவன் என்று புரிந்துகொள்வதற்காகவே.   ஆகவே  உன் வேண்டுகோள் படி இங்கே வாழும் எல்லோருக்கும் ஸ்வர்க பதவி உண்டு'' என வாழ்த்துகிறார்.
 சுபம் சுபம் சுபம். 

sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:17 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com
இப்போதைய நிலைமை -   நங்கநல்லூர் J K SIVAN
கலியுகம் எப்படி இருக்கும் என்ற 5000 வருஷத்துக்கு முந்திய கணிப்பு.

ஸ்ரீமத் பாகவதம்  ஸ்லோகங்கள்  12.2.7 

7. एवं प्रजाभिर्दुष्टाभिराकीर्णे क्षितिमण्डले । ब्रह्मविट्‍क्षत्रशूद्राणां यो बली भविता नृप: ॥ ७ ॥
evaṁ prajābhir duṣṭābhir ākīrṇe kṣiti-maṇḍale brahma-viṭ-kṣatra-śūdrāṇāṁ yo balī bhavitā nṛpaḥ
ஏவம் பிரஜாபீர் துஷ்டபிர் அகிர்ணே க்ஷிதி மண்டலே ப்ரம்ம வித் க்ஷத்ர சூத்ரானாம் யோ பாலி பவிதா ந்ருபா:

சுகரின் கணிப்பில் கலிகாலத்தில் பார்க்கு மிடமெங்கும் நீக்கமற அயோக்யர்கள் அதர்மவான்கள், அந்யாயக்கரார்கள், அக்ரமம் செய்பவர்களாக கூட்டம் கூட்டமாக காணப்படுவார்கள். உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக் கொள்பவன், அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான் அப்படித்தானே இப்போது நடந்து வருகிறது என்று தோன்றுகிறது. (டும்பத்தை நடத்துபவன் சாமர்த்தியசாலி அதி புத்திசாலி என்று கருதப்படுவான். ஆன்மிகம், பக்தி வழிபாடு என்பது நாலு பேர் மெச்சுவதற்காக என்று ஆகிவிடும்.

ஏழு நாளில் சாகப்போகிற ராஜா பரீக்ஷித் சுகப்பிரம்ம ரிஷியை கசக்கி பிழிந்து கேள்விகள் கேட்டு ஞானம் பெறுகிறான். அப்படி அவன் செய்தது அவனுக்காக இல்லை. அவன் தான் சாகப்போகிறானே, அது நமக்காக. கலியுகம் எப்படி இருக்கும் என்று கவலையோடு கேள்வி கேட்டு ரிஷியின் பதிலை நமக்கு அட்வான்ஸ் வார்னிங் warning மாதிரி அப்போதே கொடுத்திருக்கிறார் சுகப்ரம்மம். ஆகவே இது முன்பே தெரிந்தது என்பதால் நாம் அதிர்ச்சி அடையவேண்டாம். எப்படி சமயோசிதமாக நம்மை ஆபத்துகளிலிருந்து காத்துக் கொள்கிறோம் என்பதில் தான் நமது சாமர்த்தியம், புத்திசாலித்தனம் எல்லாம் உள்ளது.

 கலியுகத்தில் பேச்சு தான் முக்யத்வம் அடையும். எவனால் மற்றவனை மட்டம் தட்டி பொய்யும் கற்பனையும் கலந்து பேச, அல்ல, கெட்ட வார்த்தைகளால்  இகழ முடியுமோ அவன் தான் யோக்ய மானவன், சிறந்த தலைவன், நாவலன், காவலன், பேரறிஞர், கலைஞன் என  கைதட்டப்படுவான். கருதப்படுவான். வார்த்தை ஜாலம் தான் அவனது சக்தி ஆயுதம் ஆகும். அதுவே சத்யம் ஆகும்.

மனைவி மக்களை வீட்டில் சௌகர்யமாக வசதிகளோடு காப்பதே அரும் பெரும் செயலாகும். ரெண்டுக்கு மேல் குழந்தைகள் இருந்தாலே அவன் பாடு தர்ம சங்கடம். உணவு, உடை, மருந்து, கல்வி, -- அப்பப்பா இதை சமாளிக்கவே அவன் என்ன வெல்லாம் தகிடு தத்தம்  செய்யவேண்டியிருக்கும் என்று சுகர் தெரிந்து வைத்திருக்கிறார். அப்பல்லோ மருத்துவ செலவுகள் பற்றி முன்பே  அவருக்குத் தெரியும் போல் இருக்கிறது.

திருமணம் என்றால் கலிகாலத்தில்  ஓட்டமாக ஓடிவிடுவான்.  அவன் ஓடவில்லை என்றால் பெண் வீட்டார் கண்டிஷன்கள் அவனை ஓடவைக்கும். அதனால் திருமணமற்ற உறவு புழக்கத்திலா, பழக்கத்திலா? என்பது புரியாது. ''மணம்புரியா  தம்பதிகளாக''  சேர்ந்து வாழ்வடைத்தவிர  இன்னொரு ஷாக் கூட  இருக்கிறது.   ஆணோடு ஆணும் சேர்ந்து கணவன் மனைவியாக  மாற நீதிமன்றம் கூட அனுமதிக்கும், இப்படிப்பட்ட  அதிசய தம்பதிகள் இருக்க்கிறார்கள்.  அது நேரும்,  என்று சுகப்ரம்மம்  அப்போதே தெரிந்து வைத்த்திருக்கிறாரே.

ஐயா சுக ப்ரம்ம மகரிஷியே,  நீர் எந்த அளவுக்கு மஹா யோகி, எதிர்காலத்தை துல்லியமாக கணிப்பவர் என்பது நன்றாகவே தெரிகிறது. இன்றைக்கு காலை சுடச்சுட தினத்தந்தி, தினமலர், தினகரன் (அவரைப் பற்றியும் கூட) டிவியில் சில சேனல்கள் பார்த்துவிட்டு வந்து பேசுவது போல் சொல்கிறீர்களே.   ஆமாம் தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற பழமொழி கேட்டிருக்கிறேன். அதை நடைமுறையில் பார்க்கிறேன். லஞ்சம், ஊழல், அக்கிரமம், அனாச்சாரம், எல்லாம் தலைக்குமேலே போய்விட்ட நேரத்தில் இப்படிப்பட்ட ஜனங்களுக்கு இடையே எவன் மிக சிறந்த அயோக்கியனோ அவனே யோக்கியன் என்று நாடு அறிந்து கொண்டுள்ளது இப்போது.  எப்படி உமக்கு இது தெரிந்தது அப்போதே?

ஆடையிலாதவன் ஊரில் கோவணாண்டி கேலிக்கிட மாவான். சிரிக்கப்படுவான். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பார்களே அப்படியென்றால் நாமெல்லாம் நம்மை ஆள்பவர்கள் போல் தான் ஆசாமிகளா. ஏன்  கண்ணாடி  பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா? எல்லோருமே இப்படி என்றால் யாரையும் குறை சொல்வது மஹா தப்பு அல்லவா? உன்னை நீ பார்த்துக்கொள் அப்படித்தான் எல்லோருமே. அதை தான் ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்கிறார்களோ?

''கோனுயர குடி உயரும்'' என்ற பிரகாரம் ஆள்பவன் தூய்மையாக கைகள் நீளமில்லாமல் சரியான அளவில் இருந்தால் குடி என்ற ''குடி'' மக்கள் அவ்வாறே கண்ணாடியில் பார்ப்பது போல் பிரதிபலிப்பார்களாம். இங்கே 'குடி' யும் ம்  அதன் விலையும்  உயர்ந்து கொண்டே போகிறதே. எங்கும் கலாட்டா நடக்கிறது. அப்படியும் நிறைய தாக சாந்தி தீர்க்கும் இடங்கள் இருக்கும் குடி தான் உயர்கிறது.  இதற்கு மேல் இதை விவரிப்பது அனாவசியம் என்பதால் அடுத்த  ஸ்லோகத்தில்  சுக ப்ரம்ம ரிஷி கலிகாலத்தில் என்ன என்னவெல்லாம் நடக்கும் என்று சொல்கிறார்,பார்ப்போம்.

என்னை  சிலர்  உபன்யாசகரா என்று கேட்கும்போது நெளிகிறேன்.   நான்  ஜவந்திப்பூ மாலையை  கழுத்தில் போட்டுக்கொண்டு  சப்பளாங்கால் போட்டு உட்கார்ந்து உரக்க கதை சொல்லும் பௌராணிகன் இல்லை.  உங்களில் ஒருவன்.

sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:17 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com
                           
பரிஹாரம் -- நங்கநல்லூர் J K SIVAN

நான் திருப்பதி வேங்கடேசனைப் பற்றி ஏன் சிலநாட்களாக எழுதவில்லை என்று எனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டேன். ஒரு காரணமும் இல்லை. அவனைப் பற்றி நினைக்காததால் என்று சொல்லவே முடியாது. ஒவ்வொருநாளும் அவன் நாமம் சொல்லாத வேளையே இல்லையே.

இப்படி தனிமையில் சிந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டு வெளியே சென்று பார்த்தேன். மொட்டைத் தலை யோடு ஒரு நண்பர். சிரித்துக்கொண்டே கையில் இருந்த ஒரு பையை என்னிடம் நீட்டினார்.
''திருப்பதி போயிருந்தேன். இந்தாங்கோ பிரசாதம்''

பையில் லட்டு, ஸ்ரீ பாத ரேணு. வடை, முறுக்கு, மனோக ரம் என்று பக்ஷணங்கள். திருப்பதிவேங்கடேசன் ஆலயத்
தில் பிரத்யேகமாக கிடைப்பவை.
' வெங்கடேசா. என்னே உன் கருணை''. என் மனம் திருப்தி அடைந்தது. கம்பியூட்டர் முன் அமர்ந்தேன்.

அவனைப் பற்றி சில வார்த்தைகள் எழுத கை முனைந்தது.

ஸ்ரீவேங்கடேசனின் அருள் கடாட்சத்தை தெரிந்து கொள்ளாத, புரிந்து கொள்ளாத பக்தர்கள் கிடையவே கிடையாது. எப்படியாவது பக்தர்கள் வாழ்க்கையில் எப்போது தேவையோ அப்போது தானே அவர்களுக்கு உணர்த்தி அவர்ளுக்கு உதவும் கலியுக வரதன் அல்லவா அவன் ?

ஹிந்துக்களுக்கு மட்டும் அல்ல, இதரர்களுக்கும் அருள் புரிபவன் அவன். நான் ஏற்கனவே எழுதி இருந்த ஒரு சம்பவத்தை மீண்டும் நினைவூட்டுகிறேன்.
சென்னையில் தீவுத் திடலில் island ground பகுதில் குதிரை மேல் அமர்ந்த மன்றோ சிலை பார்த்திருக் கிறீர்களா? பார்க்காதவர்கள் உடனே சென்று தரிசியுங் கள். சிறந்த வேங்கடேச பக்தனை பார்ப்பது வெங்கடேச னையே பார்ப்பது போல் அல்லவா?

சார் தாமஸ் மன்றோ ஒரு வெள்ளைக்கார கலெக்டர். அவர் கலெக்டராக இருந்தபோது சென்னை மாகாணத் தில் சித்தூர் மாவட்டம் அடக்கம். சித்தூர் மாவட்டத் தில் தான் திருப்பதி திருமலை இருக்கிறது. வெள்ளைக் கார அரசாங்கத்தில் அப்போதெல்லாம் கலெக்டர்கள் தான் ராஜா. சர்வ அதிகாரம் படைத்தவர்கள். 

மன்றோ ஒரு சரியான கெடுபிடி அதிகாரி. அலுவல் ரீதியாக திருமலை-திருப்பதிக்கு அடிக்கடி அவர் போய் வர நேர்ந்தது. திருப்பதி திருமலை பற்றி வேங்கடேசன் பெருமை, மஹிமையைப் பற்றி ஏற்கனவே அவருக்கு பலர் சொல்லி இருந்தார்கள். அதை இந்த காதில் வாங்கி, அந்தக் காதில் விட்டுவிடுவார். மன்றோவின் ஒரே குறி ‘திருப்பதியில் தினம்தோறும் நிறைய பேர் பணம் செலுத்துகிறார்களே . எவ்வளவு வசூல் தினமும் ஆகிறது? வெள்ளைகார அரசாங்கத்துக்கு அங்கிருந்து எவ்வளவு பணம் திரட்டி அனுப்ப லாம்?’ என்பது மட்டுமே லக்ஷியம்.

திருமலைக்குப் போகும்போதெல்லாம் பெருமாள் சன்னிதி பக்கம் எட்டிக்கூடப் பார்க்காமல், உண்டியல் கலெக்ஷனிலும், ஆலய அலுவலகத்தில் வசூலாகி இருக் கும் தொகையிலும் கவனமாக இருப்பார் மன்றோ. அர்ச்சகர்களை, அதிகாரிகளை கண்டபடி திட்டி அவம திப்பார். ‘கோயில் அதிகாரிகள் பணத்தைச் சுருட்டி விடுகிறார்களோ?’ என்று சந்தேகம். ஆகவே கோயில் பணியாளர்களையும், அர்ச்சகர்களையும் தாறுமாறாகத் திட்டித் தீர்ப்பார். அவர்கள் வருந்துவார்கள். துரையின் பேச்சை எவர் எதிர்க்க முடியும்?. கலெக்டர் பேச்சை எவர் தான் எதிர்க்க முடியும், பதில் சொல்ல முடியும்? வேறு வழி தெரியாமல் தலையைக் குனிந்தவாறு இதயம் உடைந்து கண்ணீர் உகுப்பார்கள்., அதிகாரி களும் அர்ச்சகர்களும் கண்ணீர் விட்டு ''வேங்கடேசா, நாங்கள் படும் பாட்டை நீ அறியமாட் டாயா? நீ தான் இதற்கு ஒரு வழி பண்ண வேண்டும்' என்று கதறி பெருமாளிடமே முறையிட்டுக் கண்ணீர் சிந்துவார்கள். 

ஏழு மலையானுக்குத் தலைமுடி காணிக்கையாகக் கொடுக்க வருகிற பக்தர்களைப் பார்த்து, மன்றோ சிரிப்பார்.
''உள்ளூர்லயே செய்ய வேண்டிய க்ஷவரத்தை ஏனையா இந்த மலையில் வந்து செய்கிறீர்கள்?” என்று கிண்டல் செய்வார்.

முடி காணிக்கை கொடுத்து விட்டு, மொட்டைத் தலை யுடன் செல்லும் இரு நபர்களைப் பிடித்து, ஒருவர் தலையுடன் இன்னொருவரின் தலையை மோத விட்டுப் பார்ப்பார். குரூரமான இந்தச் செயலைக் காண நேரிடும் அர்ச்சகர்களும், கோயில் பணியாளர்களும் ‘அபசாரம்… அபசாரம்’ என்று வாயைப் பொத்திக்கொண்டு நகர்ந்து விடுவார்கள். யார் கலெக்டரை எதிர்த்து தட்டிக் கேட்க முடியும்? ஒரு வார்த்தை பேசினால் உடம்பில் உயிர் இருக்காதே.

ஆனால் வேங்கடேசன் இதெல்லாம் பார்த்துக்கொண்டு ரொம்ப நாள் சும்மாவா இருப்பான்? பொறுமைக்கும் ஒரு லிமிட், எல்லை உண்டல்லவா?

மன்றோவின் அட்டகாசங்களுக்கு ஒரு முடிவு கட்டி, அவரை மன்னித்து, தன் பக்தன் ஆக்கிக்கொள்ள வேண் டும் என்று வேங்கடேசன் முடிவெடுத்தான். மன்றோ பாக்யசாலி. அவனுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம்.

ஒரு சமயம் வழக்கம் போலவே திருப்பதி கோவில் வசூல் விவரங்களைப் பார்வையிட, உண்டியல் கலெ க்ஷன் பணம், எல்லாம் கணக்கு பார்த்து, கொண்டு போக, படையுடன் திருமலைக்கு வந்தார் மன்றோ. உண்டியல் வசூல், வழிபாடுகள் மூலம் சேர்ந்த தொகை, காணிக்கையாக வந்தது, கையிருப்பில் இருக்கும் தொகை, அனைத்துக்கும் கணக்கைத் தயாராக வைத்துக் கொண்டு, மன்றோவின் வருகையை எதிர்பார்த்திருந்தனர் அதிகாரிகள்.

ஆலயத்துக்குள் நுழைந்த மன்றோ, வசூலைப் பார்வை யிடுவதற்கு முன்னதாக, ஆலயத்தை மிடுக்குடன் வலம் வந்தார். புனிதம் நிரம்பிய அந்தப் ப்ராஹாரத்தை, மேற்பார்வை இட்டுக்கொண்டு அதிகார தொனியில் அவர் பவனி வந்ததைக் கண்ட பலரும் சங்கடத்தில் நெளிந்தனர்.

ஒரு மூலையில் பக்தர்கள் சிலர் அமர்ந்து பெருமாளின் பிரசாதமான வெண் பொங்கலை, சாப்பிட்டுக் கொண்டி ருந்தனர். தரையில் ஒரு இலையில் வைத்துக் கொண்டு, அவர்கள் பிரசாதம் சாப்பிடுவதைப் பார்த்த மன்றோ, முகம் சுளித்தார்; அருவருப்படைந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்த பக்தர்களைப் பார்த்து, ''சே…சே என்ன உணவு உணர்கிறீர்கள். மனிதர்களா நீங்கள்? இது… பாக்கவே ஒரு மாதிரியாய் இருக்கே, அருவருப்பாக இருக்கிறதே,… இதைச் சாப்பிட்டால் என்னென்ன வியாதிகள் வருமோ? எல்லாரும் முதல்ல வாயிலிருந்து அதைத் துப்புங்கள் '' என்று முகத்தை அஷ்ட கோண லாக்கிக் கொண்டு, கண்டிப்பான குரலில் உரக்க கத்தினார் மன்றோ. பக்தர்கள் பதறிப் போனார்கள். துரைக்குப் பயந்து துப்பியவர்களும் உண்டு; பெருமாளுக்கு பயந்து விழுங்கியவர்களும் உண்டு.

அடுத்த கணம் ஒரு ஆச்சர்யம் அங்கே நடந்தது. அது தான் இந்த கட்டுரை நான் எழுத முக்கியமான விஷயம். மன்றோ மேலே சொன்னபடி பக்தர்கள் மனதை புண் படுத்தி கடின வார்த்தைகளை சொல்லிவிட்டு ப்ராஹாரத்தில் ஒரு சில அடிகள் தான் எடுத்து வைத்தார். அடுத்த சில வினாடிகளில் மன்றோ திடீரென்று உரக்க இங்கிலீஷில் கத்தினார்.

''ஐயோ என் வயிறு வலிக்கிறதே ஈட்டியால் குத்து கிறதே என்னன்னு தெரியாம குடையுதே. ஐயோ எனக்கு வலி தாங்க முடியலியே ”.

ப்ரஹாரத்திலேயே அடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு அலறிக் கொண்டு கீழே சுருண்டு விழுந்தார் கலெக்டர் மன்றோ. கூடவே வந்த அதிகாரிகளும், கோயில் ஊழி யர்களும் பதறிப் போனார்கள். நடக்கவே முடியாமல் இருந்த கலெக்டர் மன்றோவை கைத் தாங்கலாகப் பிடித்து, அவரது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். வலி நிற்கவே இல்லை வயிற்றில் சுருக்கென்று ஈட்டி விடாமல் குத்தியது. வெள்ளைக்கார டாக்டர்கள் வந்து வைத்தியம் செய்தனர். அவர்களால் , வயிற்று வலிக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. எந்த மருந்து கொடுத்த்தும் வைத்தியத்தால் வலி குறை யவே இல்லை.மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் போட்டும் ஹுஹும், எந்த நிவாரணமும் இல்லை. இரவும் பகலும் வயிற்றில் குத்து வலி. நாட்கள் ஓடின. ஆரோக்யமான மன்றோ கிழிந்த நாராகி விட்டார். படுத்த படுக்கை. மரணம் நெருங்கிக் கொண்டே இருந்தது. விடாமல் அழுதார்.

ஒரு சனிக்கிழமை திருப்பதியில் இருந்து, அலுவல் விஷய மாக மன்றோவைச் சந்திக்க கோவில் அர்ச்சகர் வந்தார். மன்றோ இப்போது பழை திமிர் பிடித்த ஆசாமி இல்லை. துவண்டு போன சாதாரண மனிதன். தனது உடல் நிலை நிலை அவஸ்தை யை அர்ச்சகரிடம் கூறி புலம்பினார் மன்றோ. அர்ச்சகர் ஒரு கணம் கண்ணை மூடி வேங்கடேசனை மனமார வேண்டியவாறு பேசினார்.

''மன்றோ துரைஅவர்களே, நான் ஒன்று சொன்னால் நீங்கள் கோவிக்க மாட்டீர்களே. உத்தரவாதம் கொடுத் தால் நான் சொல்லலாமா? என்று மெள்ள ஆரம்பித்தார் அந்த அர்ச்சகர்.

''அர்ச்சகரே, தாராளமாக சொல்லுங்கள்…எனக்கு கோபமே வராது. எனக்கு எப்படியாவது இந்த வயிற்று வலி தீர வேண்டும். கடைசியாக நான் கோயிலுக்குள் வந்த போது திடீரென்று தொடங்கிய இந்த வயிற்று ஒரு மருந்திலும் இன்னும் குணமாகவில்லை. பல நாட் களாக தூக்கம், ஆகாரம் இன்றி வலி இன்னமும் நீங்கிய பாடில்லாமல் துடிக்கிறேன். நீங்கள் ஏதாவது சொல்லுங் கள், எனக்கு ஏதாவது உதவி செய்யமுடியுமா?'

அர்ச்சகர் வெங்கடாசலபதி மேல் பாரத்தைப் போட்டு விட்டு, தைரியமாகப் பேசினார்.

''துரை , அன்னிக்கு நீங்கள் பெருமாளோட பிரசாதத் தை மரியாதைக் குறைவாய் பேசின அபச்சாரத்தாலே தான் இப்படி ஒரு நிலைமை உங்களுக்கு உண்டாகி இருக்கும்னு எனக்கு மனசிலே படுகிறது. நீங்க பண் ணினது பெரிய தெய்வ குற்றம். இதுக்கு ஒரே ஒரு பரிகாரம்தான் இருக்கு”

மன்றோ மெதுவாக படுக்கையில் எழுந்து உட்கார்ந் தார். கண்களில் நீர். எலும்பும் தோலுமாக இருந்தவர் அர்ச்சகர் கையை பிடித்துக் கொண்டார்.
''அர்ச்சகரே ப்ளீஸ், எனக்கு சொல்லுங்க.. உடனே சொல்லுக்கு ப்ளீஸ். என்ன பரிகாரம்? எதுவாக இருந்தாலும் உடனே மறுவார்த்தை சொல்லாமல் திருப்தியாக செய்யத் தயாராய் இருக்கிறேன்''. மண்டி யிட்டார் துரை. அர்ச்சகர் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
'' துரை, இப்போ இங்கே வரும்போது கூட நான் பெருமாளோட வெண்பொங்கல் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். பெருமாளை மனசுக்குள்ள தியானம் பண்ணிண்டு, இதை கொஞ்சம் சாப்டுங்கோ. தானாக வந்த வலி தானாக போயிடும்”

மன்றோவின் முகம் பிரகாசமானது. மறுவார்த்தை பேசாமல், வேங்கடேசனின் பிரசாதமான வெண் பொங்கலை கையில் வாங்கிக் கொண்டு கண்ணில் ஒற்றியவாறு ஒரு வாய் வெண்பொங்கலை கண்களை மூடி பெருமாளை தியானித்து, உண்டார்.

sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:17 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com

பஞ்ச தந்த்ர  கதைகள்  -   நங்கநல்லூர் J K SIVAN

ஆப்பசைத்த  குரங்கு  

பழங்காலத்தில், எங்கும்  காடுகளாக  வனாந்தரமாக தான் இருந்தது.  கிராமங்கள்  ஆங்காங்கே  அதில் இருந்தன.ஆகவே  மிருகங்கள் பறவைகளும்  மனிதர்களை விட கூடுதலாகவே இருந்தன. உங்களை  இப்போது என்னோடு அந்த மாதிரி ஒரு பிரதேசத்துக்கு அழைத்து செல்கிறேன். தெற்கே  அந்த  பிரதேசம்  மஹிளா ரோப்யம் என்ற பெயரில் இருந்தது.   அந்த பிரதேசத்துக்கு ராஜா  அமரசக்தி.   ராஜா  நன்றாக  கல்வியறிவு கொண்டவன். அவனுக்கு  மூன்று பிள்ளைகள்.  பஹு சக்தி,  உக்ர சக்தி, அனந்தசக்தி என்று அவர்களுக்கு பெயர்கள். மூன்று பேருக்குமே  கல்வியில் நாட்டமில்லை . படிக்காதவர்களாவே வளர்ந்தவர்கள்.
ராஜாவுக்கு வருத்தம்.  மந்திரிகளை அழைத்தான்.

''எனக்கு வயதாகிறது, இந்த மூன்று பிள்ளைகளை எப்படியாவது திருத்த வேண்டும். இவர்களை நம்பி நாட்டையும் மக்களையும் எப்படி ஒப்படைப்பது?  நீங்கள் எல்லோரும் யோசித்த்து ஒரு வழி சீக்கிரம் சொல்லுங்கள் '' என்று கேட்டான்.
மந்திரிகள்  யோசித்து ஆலோசித்து  ராஜாவிடம் வந்தார்கள்.

''அரசே,  நமது நாட்டில் விஷ்ணு சர்மா என்று ஒரு அந்தணர் இருக்கிறார். நன்றாக கற்ற புத்திசாலி. அவரிடம் இந்த மூன்று பிள்ளைகளையும் அனுப்பலாம் சீக்கிரமே  அவர்களை திருத்தி விடுவார்'' என்கிறார்கள்.
ராஜா விஷ்ணு சர்மனை அரண்மனைக்கு அழைத்தான் .

''ப்ராம்மணரே,  எப்படியாவது என் மூன்று பிள்ளைகளையும் கல்விமான்களாக்குங்கள் உங்களுக்கு நூறு கிராமங்கள் குரு தக்ஷணையாக தருகிறேன்'' என்றான் ராஜா.

''மஹாராஜா, நான் சொல்வதை நீங்கள் சற்று  செவி மடுக்க வேண்டுகிறேன். கல்வி ஞானம் உள்ள ஒருவன் அதை விற்க கூடாது. எல்லோருக்கும் சேவையாக அதை அளிக்க வேண்டும்.  இன்னும் ஆறே மாதத்தில் உங்கள் பிள்ளைகளை அறிவாளிகளாக முழு முயற்சியில் ஈடுபடுவேன். பகவான் அனுக்ரஹம்  கிடைக்கட்டும். என்னுடன் உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள்''.  
 
விஷ்ணு சர்மன்  ஆஸ்ரமத்தில் அந்த  மூன்று பிள்ளைகளுக்கும்  நீதி நெறியை, நல்லொழுக்கத்தை,  வாழ்க்கையில் கற்க வேண்டிய பாடங்களை எவ்வாறு கதைகள் மூலம்  மனதில் வைத்தான்  என்பதை கதைகளாக அறிந்து நாமும் கற்போம்.

'' ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் தச்சு வேலைகள், மர  சாமான்களை தயார் செய்பவன்.  தன்னுடைய வீட்டில் ஒரு மண்டபம்  தயார் செய்ய மரம் தேடினான்.  மர வேலை செய்யும் தச்சர்கள் காலையில் வேலைக்கு வந்து பகல் உச்சி நேரம் வரை வேலையை  முடித்தபின் சாப்பிட வீட்டுக்கு சென்று மாலை தான் வருவார்கள்.   ஒரு பெரிய நிழல் தரும் மரத்தடியில்  உட்கார்ந்திருந்த தச்சர்கள்  இப்படி பாதி வேலையில்  விட்டு விட்டு எழுந்து செல்வதை  அந்த மரத்தின் மேலிருந்த குரங்குகள் கவனித்தன. 

ஒரு தச்சர்  ஒரு பெரிய  மரத்துண்டை  ரெண்டாக பிளந்து கொண்டிருந்தார்.  பாதி பிளந்திருந்த மரத்தை மீண்டும் ஒன்று சேராமல் இருக்க  அந்த பிளவில் ஒரு  மரத்துண்டை  ஆப்பாக  செருகி விட்டு சாப்பாட்டுக்கு சென்றார்.  எல்லோரும் சென்றபின்  மரத்திலிருந்து குரங்குகள் கீழே  வந்தன.  தச்சர்கள் விட்டுச்சென்ற  மரச்  சாமான்களையோடு விளையாடின.  தூக்கி எறிந்தன. குதித்துக்கொண்டு இப்படி அவை மகிழ்ந்தபோது ஒரு குரங்கின் கவனம்  பாதி பிளக்கப்பட்டு நடுவே  ஆப்பு  பெருகியிருக்கும் மரத்தின் மேல் சென்றது.  மெதுவாக அந்த மரத்தின் அருகே வந்தது. அதன் மேல் ஏறி உட்கார்ந்தது.  ஆப்பை கவனித்தது. மரத்தின் நடுவே எதற்கு இது என்று இரு கைகளாலும் அசைத்து அந்த மரத்துண்டு ஆப்பை பிடுங்கி வெளியே இழுத்தது.  ஆப்பு வெளியே வந்துவிட்டது. ஆனால் குரங்கு க்ரீச் என்று வலியோடு கத்தியது.  ஏன்?  அது அந்த பிளவுபட்ட மரத்தின் மேல் உட்கார்ந்தி ருக்கும்போது மரப்பிளவுக்கிடையே  இருந்த இடைவெளியில் அதன் வால் நுழைந்திருந்ததை குரங்கு கவனிக்கவில்லை.  ஆப்பை  எடுத்தவுடன்  அந்த பெரிய   நீளமான  மரம் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டது. குரங்கின் வாழும் நடுவே மாட்டிக்கொண்டு குரங்கினால் எங்கும் நகரமுடியவில்லை. மற்ற குரங்குகள் ஓடிவிட்டன.மீண்டும் மரபாத்தில் ஏறி ஆப்பில் அகப்பட்ட  குரங்கை கவலையோடு பார்த்தன.   மரத்தில் வால் மாட்டிக்கொண்ட குரங்கு கத்தியது.  அந்த பக்கமாக சென்ற ஒரு வழிப்போக்கன் காதில் இந்த சத்தம் விழுந்தது. அருகே வந்து பார்த்தவன் மரப்பிளவை  விலக்கி  குரங்கின் வாலை  வெளியே எடுத்து விட்டான்.   குரங்கு தப்பித்தோம் பிழைத்தோம் என்று குதித்து ஓடிவிட்டது.  

இதிலிருந்து என்ன நீதி;
எந்த காரியத்தையும்  அதனால் வரும் விளைவை பற்றி யோசிக்காமல்  செய்ய துணியாதே .  ரெண்டாவது  மற்றவர்கள் வேலையில்  குறுக்கிடாதே. அதனால் விளையும் துன்பங்கள் நீயாக வரவழைத்துக் கொண்டதாகும்.  இப்படித்தான் நம்மில் பலர்  தேவையில்லாமல் தாமாகவே பிறர் விஷயங்களில் மூக்கை நுழைத்து, வாயைக்கொடுத்து,  சிக்கலில் மாட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் தவிக்கிறோம். 

sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:17 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com
பாஷ்ப வாரி பரிபூர்ண லோசனன். ஹனுமான்.     - நங்கநல்லூர்  J .K. SIVAN

 நாம்  வாழும் இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு நல்லெண்ணத்தோடு  பரமன்  பஞ்ச பூதங்களை அனுப்பி இருக்கிறான். காற்று, நீர்,  வெளிச்சம், நடக்க, படுக்க ஒரு இடம் இல்லாமல்  உண்ண  தாவரங்கள், இல்லாமல் ஒரு நாள் நாம் இருக்க முடியுமா?    காற்று, வாயு,   காற்று  எங்கு இல்லை?  ஒரு  சில நிமிஷ நேரமாவது பிராணவாயு  காற்றில் நமக்கு கிடைக்க வில்லை  யென்றால்  உயிரோடு இருக்கமுடியுமா?  அப்படி முக்கியமான ஒரு  பகவான் அளித்த இலவச பரிசை  குப்பியில் அடைத்து  உயிரைக் காக்கிறார்கள்.  உயிர் வாழ  அதை குழாயில் செருகி  மூக்கில் நுழைத்து   உயிர் வாழ  ஆஸ்பத்திரிகளில் நாம் நிறைய  பணம் கொடுக்க வேண்டும்.  ஆஞ்சநேயன் அருளால்  இந்த கொடுமையான அனுபவம் நம் யாருக்கும்  நிகழவேண்டாம்.  ஒரு  நாளாவது  இரு கரம் சிரம்  மேல் தூக்கி கூப்பி நன்றி செலுத்துகிறோமா?   ஏன்  ஆஞ்சநேயனைக் கூப்பிட்டேன்? அவன் காற்று, வாயு, வாயு புத்ரன். சிரஞ்சீவி.  ஹனுமான்  உயிர் காப்பவன் . மாருதி என்றால்  மாருதம் என்ற காற்றின் பெயரோடு சம்பந்தப்பட்டது.  அனுமனை நினைத்தால் போதும்.  நடக்க வேண்டியதெல்லாம் நடந்துவிடும், இது என் தந்தையார் வாழ்வில்  கண்ட அனுபவம்.

நான் வாழும் நங்கநல்லூருக்கும் ஆஞ்சநேயருக்கும் நெருங்கிய சம்பந்தம். அவர் இலங்கையில் அசோக வனத்தை தேடி சீதையை கண்டுபிடித்தது பழைய கதை. நங்க நல்லூருக்குள் நுழைந்து அதை புரட்டி போட்டுவிட்டது புதுக் கதை. ஆஞ்சநேயர் நங்கநல்லூர் வருவதற்கு முன் நங்கநல்லூர்  ஒரு அசோகவனம் தான்.
வயல்வெளி. அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து ஒரு அங்குலம் இடம் கூட  இல்லாமல்  இந்த ஊரைப் பண்ணியவர்  ஹனுமான் தான். 

எண் சாண்  உடம்புக்கு சிரஸே பிரதானம்.  நங்கநல்லூரின் பெருமைக்கு,  வளர்ச்சிக்கு,  பிரபலத்துக்கு  மூல காரணம்  ஆதி வியாதி ஹர  பக்த ஆஞ்சநேயர் தான்.  

காலை மாலை இரவு என்று வந்தோர்க் கெல்லாம் சுவையான ஆகாரம் சஞ்சீவியாக உயிர்வாழ அளிப்பவர் . வயிற்றுக்கு மட்டுமா? செவிக்கு தான் எத்தனை அற்புத படே படே நிகழ்ச்சிகள். ஜேஜே என்று எப்போதும் கூட்டம். அதனால் காய்கறி, கடைகள் ,வியாபாரம், வண்டிகள், ஆட்டோ. வங்கிகள்,துணி கடைகள், ஆஸ்பத்திரிகள், நகைக்கடைகள், உணவு விடுதிகள், அடுக்கு மாடி கட்டிடங்கள்.....அடேயப்பா ஆஞ்சநேயர் வந்தால் எல்லாமே வந்துவிடும் போல் இருக்கிறது. காற்றில் அனைத்தையும் சுழற்றி கொண்டு வந்து விடுபவர்.   'மனோர் ஜவம்  மாருதி  துல்ய வேகம்'....வாயு  புத்ரன் அல்லவா.

ஆஞ்சநேயர் ஜெயந்திகள்  வருஷா வருஷம்  உற்சாகம் ஊட்டுபவை.  ஒரு  ஹனுமத் ஜெயந்தி  மறக்க முடியாத நாள் எனக்கு. சில வருஷங்களுக்கு முன்பு  கூடுவாஞ்சேரியில் ஸ்ரீ யோக சந்தோஷ பீடம் நிறுவனர்  ஸ்ரீ  மாருதி தாசர், என்னை அழைத்து ஸ்ரீ த்ரிநேத்ர சதுர்புஜ நவகிரஹ யோக ஆஞ்சநேயர் முன்பாக நான் எழுதிய ''ஐந்தாம் வேதம் '' எனும் மகா பாரத முழுமையான நூலுக்காக பாராட்டி அடியேனுக்கு ''அபிநவ வியாசர்'' என்று ஒரு விருது அளித்தார்.  பாவம் வியாசர்! அவருக்கு இப்படி  ஒரு அவமானமா!

உலக முழுதும் உள்ள  ஹிந்துக்களில்  ஹனுமான்  பக்தர்கள் அநேகர்.  தைரியம், நோயற்ற ஆயுள், ஆரோக்யம், பயமின்மை, சக்தி, சொல்வன்மை எல்லாம் அள்ளித் தருபவர். வடக்கே வாய்க்கு வாய் பஜ்ரங்க் பலி. வாயு புத்திரன் ஹனுமான் சிவனின் அம்சம். பரம ராம பக்தன்.

அஞ்சனை தேவலோக அழகி. ''நீ காதல் வசப்பட்டால் உன் முகம் வானர முகமாகும்'' என்று ஒரு ரிஷியால் சாபம் பெற்றவள். பூமியில் கேசரி என்கிற வானர ராஜாவை காதலித்து முகம்  வானரமுகமாக மாறி  அவன் மனைவி யாகிறாள். சிவ பக்தை. சிவனை நோக்கி தவமிருக்க, ''அஞ்சனா, உன் ரிஷி சாபம் நீங்க நானே உனக்கு மகனாகப் பிறக்கிறேன்'' என்று சிவன் அருள, அந்த  நேரம் அயோத்தியில் தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் வளர்த்து அதில் பாயசம் வர, அதை அவன் தனது மூன்று மனைவிகளுக்கு தர, முதல் மனைவி கௌசல்யாவின் பாயசத்தில் ஒரு சிறு பாகம் ஒரு பருந்தால் கவரப்பட்டு அது பறந்து அஞ்சனை தவமிருக்கும் இடம் வந்து வாயுவால் அவள் கையில் விழ, அவள் அதை சிவப்ரசாதமாக உண்ண, வாயு புத்திர னாக ஆஞ்சநேயன் பிறக்கிறான். இப்படி சுவாரஸ்யமான ஒரு வரி கதை.

சீதை தனது நெற்றியில் நடு வகிட்டில் சிந்தூரம் தடவிக் கொள்வதை பார்த்த ஹனுமான் ''அம்மா உனக்கு  இது எதற்கு நெற்றியில் வகிடுக்கு நடுவே?'' என வினவ, ''  ஆஞ்சநேயா,இது கணவனின் மீது மனைவிக்கான, பாசம், தியாகம்,நேசம், பக்தி, நட்புக்கு   என் ராமன் மேல் எனக்கு இருக்கும் பக்தி,  பதிவிரதா அடையாளம்'' 

''ஓஹோ. என் ராமன் மீது எனக்கும்  அளவு கடந்த நேசம் பாசம், பக்தி உண்டே. நீ  வெறும் நெற்றி உச்சியில் வைத்
 துக்கொள்கிறாய்.  இந்த க்  கணம் முதல் பார்.  என்  உடல் முழுதும் சிந்தூரம் பூசி  என் ராம  பக்தி,  ராம  நேசத்தை  நானும்   தெரிவிக்கிறேன்  என்று  சிந்தூர களஞ்சியமாக  நிற்கிறார்  ஹனுமான் . அவர் பக்தியை மெச்சி ''எவர் சிந்தூர ஹனுமனை வணங்குகிறார்களோ அவர்கள் துன்பம் விலகும் என்று ராமன் ஆசீர்வதிக்கிறார் '' என்று வடக்கே ஹனுமான் சிகப்பாகவே எங்கும் காண்கிறார். வடக்கே  சிந்தூரம் நெற்றியில் இட்டுக் கொள்பவர்கள்  ஆண்களும் பெண்களும்  தெற்கை விட அதிகம்.

''ஹனு'' என்றால் தாடை. ''மான் '' என்றால் அது உருமாறியவன் என குறிக்கிறது. பால ஹனுமான் சூரியனை பழம் எனக் கவ்வ முயற்சிக்க, இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் அவன் முகத்தில் தாக்க, தாடை உருவம் இழக்கிறபடியால் ''ஹனுமான் '' என்ற அடையாளப்பெயர் .

ஹனுமான் இலங்கையில் தனது வாலிலிட்ட தீயால் ராவணனின் தேசத்தை எரித்த போது அவரது நுனி வால் கடலில் மூழ்கி குளிர்ச்சி பெறும்போது அவரது சில வியர்வைத் துளிகளை ஒரு பெரிய மீன் (மகரம்) உண்டு அதற்கு ஒரு மகன் பிறக்கிறான். அவன் தான் மகரத்துவஜன். ஆஞ்சநேய புத்ரன் என்பார்கள். சென்னையில் ஆஞ்சநேயர் மனைவியோடு காட்சி தரும் ஒரு கோவில் உள்ளது.   அனுமனும் அவன் மகன்  மகரத்வஜனும் சந்தித்து, யுத்தம் புரியும் சம்பவத்தை  மயில் ராவணன் கதையில் எழுதினேனே  ஞாபகம் இருக்கிறதா?

நாரதர் ஒரு கலகம் பண்ணுகிறார். ராமன் அயோத்தி அரசனாகி ஆண்டபோது ராமனுக்கும் ஹநுமானுக்கும் இடையே ஒரு பூசலை உண்டுபண்ண நேராக அங்கே இருந்த ஹநுமானிடம்

''ஆஞ்சநேயா  இங்கு உள்ள எல்லா ரிஷிகளையும் உபசாரம் செய்.  ஆனால் அதோ இருக்கிறாரே, அந்த விஸ்வாமித்ரரை மட்டும் கண்டு கொள்ளாதே'' என்கிறார்.
''ஏன்  நாரத மஹரிஷி ?'' என்கிறார் ஹனுமான்.
''விஸ்வாமித்ரர் ஒரு ராஜாவாக இருந்தவர் மற்ற ரிஷிகள் போல் இல்லை. அதனால் தான் '' - நாரதர்.
ஹனுமான் அவ்வாறே செய்ய விஸ்வாமித்ரர் அதை லக்ஷியம் பண்ணவில்லை. நாரதர் சும்மா இருப்பாரா?  நேராக விஸ்வா
மித்ரரை அணுகி '' விஸ்வாமித்ரா, என்ன திமிர் பார்த்தாயா இந்த  ஹநுமானுக்கு, உன்னை  சபையில் எல்லோர் முன்னும் எப்படி அவமதித்தான்' என்று உசுப்பி விட்டு அந்த கோபக்கார ரிஷி ராமனிடம் சென்று ''ராமா, இந்த திமிர் பிடித்த ஹநுமானுக்கு மரண தண்டனை கொடு '' என்று சொல்ல, குருவின் வார்த்தை மீற முடியாமல் ஹனுமனை அம்புகளால் துளைக்க ஹனுமான் ராமநாம ஜபம் சொல்லிக் கொண்டிருந்ததால் ராமனின்  அம்புகள் பயனற்று கீழே விழுகின்றன. ப்ரம்மாஸ்திரமும் சக்தியற்று போகிறது. இப்படி ஒரு கதை.   ஹனுமானின் ராம பக்தி உலகிற்கு தெரிய இந்த நாடகம் என்கிறார் நாரதர்.  நாரதர் கலகம்  நன்மையில் தான் எப்போதும்  முடியும்.

ராமாயண யுத்தம் முடிந்து தவம் செய்ய புறப்பட்ட ஹனுமான் தனது நகங்களால் ஹிமாலய மலைப் பாறைகளில் முழு ராமாயணத்தையும் வால்மீகி போல் எழுதினார் என்பார்கள். ஒருநாள் அந்தப் பக்கம் வந்த வால்மீகி மலைப்பாறைகள் முழுதும் இருந்த ராமாயணத்தை படித்து விட்டு ''அடடா நான் இவ்வளவு விவரமாக எழுதவில்லையே, இதல்லவோ சிறந்தது '' என்று தான் எழுதிய ராமாயணம் பயனற்றது என்று விசனம் கொள்கிறார். வால்மீகி ராமாயணம் உலகில் சிறப்பாக பரவ வேண்டும் என்பதற்காக ஹனுமான் பாறைகளில் தான் எழுதிய ராமாயணத்தை அழித்து விடுகிறார் என்று ஒரு விபரம்.

பீமனின் கர்வத்தை ஒடுக்க அவன் சௌகந்தி புஷ்பம் தேடி வரும்போது அவனால் தனது வாலைக் கூட நகர்த்த முடியாமல் செய்து தான் அவன் சகோதரன் வாயு புத்ரன் என்று ஹனுமான் காட்சி அளித்து ஆசீர்வதிக்கிறார்.

ராம அவதாரம் முடிவுறும் சமயம், ஹனுமான் தான் மானுட உரு நீங்கி வைகுண்டம் திரும்புவதை ஹனுமான் சகிக்க  மாட்டான் என்று அறிந்து ''ஹனுமா என்னுடைய மோதிரம் கீழே விழுந்து பாதாளம் சென்றுவிட்டது. அதை தேடி எடு.'' என்கிறார். ஹனுமான் பாதாள லோகம் செல்கிறான். அங்கு பாதாள லோக அதிபதி ''ஆஞ்சநேயா, ராமனின் மானுட அவதாரம் முடியும் நேரம் அவரது மோதிரம் கீழே விழுந்து மறையும்'' என்று நான் அறிவேன்'' என்கிறான். அவன் மீண்டு வருவதற்குள் ராம அவதாரம் முடிந்தது.

'' குழந்தாய் ஆஞ்சநேயா, இந்தா உன் உதவிக்கெல்லாம் என் பரிசு என்று தனது முத்து மாலையை அவனுக்கு அணிவிக்கி றாள் சீதை. அதை எடுத்து ஒவ்வொரு முத்தாக கடித்து எறிகிறார் ஹனுமான்.
'' விலைமதிப்பற்ற இந்த முத்துக்களை ஏன் இப்படிவீணாக்கினாய் ஹனுமா?''
''ராமனின் நாம சம்பந்தமில்லாத எதுவும் எனக்கு மதிப்பற்றது தாயே. இதோ பாருங்கள் என்று தனது மார்பை பிளந்து காட்டுகிறார் ஹனுமான். அங்கே சீதா - ராமன்''
ஹநுமானைப்  பற்றி எழுதப்போனால்  இன்னும்   நீளும்போல்  இருக்கிறது.அவன் விவரங்களும்  அவன் வா
லைப்போல்  நீளமானவை என்பதில் சந்தேகமில்லை.


 

sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:36 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com
 அரசும் வேம்பும் –   நங்கநல்லுர்  J K  SIVAN

நம் எல்லோருக்கும்  அரசமரமும் வேப்ப மரமும் தெரியும். அநேக கோவில்களில் அரசமரமும் வேப்ப மரமும் ஒன்றோடொன்று  பிணைந்து ஒன்றாக இருக்
கும். அதை எல்லோரும் சுற்றி வந்து  நமஸ்கரிப்பதை
 பார்த்திருக்கிறீர்களா? ஆனால் ஏன், எதற்கு என்று எப்போவாவது, கொஞ்சமாவது நினைத்ததுண்டா?  

வெள்ளைக்காரர்களின்  ஏசோப் நீதிக் கதைகளில் கூட  அரசமரம், வேப்பமரம் சமாசாரமொன்று  ஸ்வாரஸ்ய மாக இருப்பதை அறிவீர்களா.? அதிலிருந்தே ஆரம்பிக் கிறேன்.

 ஒரு பெரிய திடகாத்திரமான ஆலமரம், அதைத்தான் வெள்ளைக்காரன் அரசமரம் என்று சொல்லியிருக் கிறான்.அதன் பக்கத்தில் ஒரு  வேப்ப மரம். ரெண்டும் பேசுகிறது;

ஆலமரம்; '' ஏய்,  சோனி வேம்பு,  உன்னைப்  பார்த்தாலே  சிரிப்புவருகிறது. என் பக்கம் நிற்கிறாய். என் ஆகிருதி, அகன்ற கிளைகள், விழுதுகள்.  என் உயரத்தைப் பார்த் தாயா. வானத்தையே தொடுகிறேனே.    உன்னைப் பார், குச்சி குச்சியாக சின்ன கொம்புகள் தான் உன் கிளைக ளா? என்  அந்தஸ்து அதிகாரம் உனக்கு எப்போதாவது கிடைக்குமா சொல்?

வேப்ப மரம்;  "அண்ணா, நிமிர்ந்து நிற்பது நல்லது.  ஒன்று புரிந்து  கொள் . நீ உயரமாக இருக்கலாம். ஆனால் பேய் காற்றில் உன் உறுதி பிரயோஜனம் இல்லை. வளைந்து கொடுக்கும்  தன்மை வேண்டும். இல்லையென்றால் உன் கதி அதோகதி தான்."

அடுத்த பெரும்  புயலின் போது அரசமரம்  காற்றில் பேயாட்டம் ஆடியது. அது வளைந்து கொடுக்காமல் காற்றை எதிர்த்துநின்றது. வேரோடு சாய்ந்து விழுந்தது. வேப்பமரம் பழையபடியே நின்றது.  

பணிவு தாழ்மை, நெகிழ்ச்சி தான் வாழ்க்கையில் நமக்கு அவசியம் என்பதை உணர்த்தும் கதையே தவிர இதற்கும் அரசமரத்துக்கும் ஸ்நானப்ராப்தி கூட கிடையாது.

நாம் ஹிந்துக்கள். அரசும் வேம்பும்  நமக்கு  ரொம்ப ரொம்ப புனித மானவை.  ஆற்றங்கரை, கோவில் அருகே , கோவிலுக் குள்ளே  கூட  இவை ஒன்று சேர்ந்து  இணைந்து  பிணைந்து உள்ளவை. வணங்கப்படுபவை.   அரசமரம்; விஷ்ணு.  கீதையில் அஸ்வத விருக்ஷம் என்று ஸ்லோகத்தில் வரும். கிருஷ்ணன்  'நான் மரங்க ளில் அரசமரம்' "அஸ்வத்த:ஸ்மி  ''சர்வ வ்ருக்ஷா ணாம்"   (अश्वत्थः सर्ववृक्षाणाम्)   கீதை 10.26.  அரசமரத்தின்  விஷ்ணு, கிருஷ்ணன், ப்ரம்மா வாஸம் பண்ணுகிறார்கள். அரசமரத்தடியில் பிள்ளையார் அவசியம் இருப்பார்.  
அரச மரத்தை அநேகமாக பௌர்ணமி, மற்றும்  சனிக் கிழமை   108 தடவை ப்ரதக்ஷிணம் பண்ணுவார்கள்.

அரசமரத்தடியில் உட்கார்ந்து தியானம் பண்ணும் போது  மனம் அமைதி பெருகிறது . பல கோவில்களில் இந்த அனுபவம் எனக்குண்டு.

அரசமர வேர், இலை, மரத்தின் பால்  பல நோய்களுக்கு ஒளஷதம். மருந்து,  வியாதி நிவாரணி. வேப்ப மரம்   அம்பாள், சக்தி, அம்மன், அம்மன் கோவில்களில் கண்டிப்பாக இருப்பது.  வேப்பமரத்தடியில்  நாகர்   சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.

சித்திரை புது வருஷம் அன்று வேப்பம்பூ பச்சடி ஒரு முக்யமான ஐட்டம். வேப்பமரத்துளிர்  தினமும் வெறும் வயிற்றில் கடித்து விழுங்கினால் ரொம்ப கசக்காது. நூறு வயது நிச்சயம் என்பார்கள்.

வேப்பமர குச்சி தான் நமது முன்னோர்களுக்கு டூத் ப்ரஷ்.  ஆற்றங்கரையில் பல் தேய்த்துவிட்டு குளத்தில் ஆற்றில் குதித்து ஸ்னானம் பண்ணிவிட்டு  நெற்றியில் பட்டையாக  விபூதியோடு  மரத்தடி பிள்ளையாருக்கு  தோப்புக் கரணம் போடுவோம்.  வேப்பம்பூ  கமகம என மணக்கும். ரசம் பண்ணினால் தேங்காய் துவைய லோடு  தேவாம்ருதம்.  வேப்பம்பழம் சுவையாக இருக் கும்.   வீட்டுக்குள் வேப்பிலை கொத்து  வைப்பது  ஒரு ரக்ஷை.  வியாதி நிவாரணி.  

பழைய கால அம்மன் கோவில்களில்  வேப்பமரத் தடி யில்  பெரிய புற்று இருக்கும்.  நாகத்துக்கு   சுப்ர மணி யம் என்று  பெயர் உண்டு.    குழந்தைகளுக்கு வேப்பி லை யால் மந்திரித்து  வியாதி, தோஷம் எல்லாம் அகலும். இந்த வழக்கம் இன்றும் உள்ளது. வேப்பமரத்தடி புற்றுக்கு பால்  வார்க்கும் வழக்கம் இன்றும் உள்ளது.  

அரசும் வேம்பும் ஸ்த்ரீ புருஷ தெய்வங்கள். சிவ சக்தி.  ரெண்டுக்கும் கல்யாணம் உற்சவம் பண்ணுவார்கள். அரச மரத்துக்கு வேஷ்டி, வேம்புக்கு  புடவை சாற்று வார்கள்.  ரெண்டு மரமும்  தானாகவே  ஒன்றாக வளர் வது அதிசயம். யாரும் நடுவதில்லை.

அரச ப்ரதக்ஷிண பலன்
;ஞாயிறு :   காலையில் அரசமரத்தை   ப்ரதக்ஷிணம் வந்து  சூரியனைப் பிரார்த்தனை செய்தால்  கஷ்டங்கள் நீங்கும்.
திங்கள் :  சிவபெருமானுக்கு  புஷ்ப பூஜை பண்ணி
அரசமரத்தை வலம் வந்தால் சகல சௌபாக்
யங்களும் கிட்டும்.
செவ்வாய் : அம்பாள்  உமாவை பூஜித்து அரசமரத்தை வலம் வந்தால் காரியசித்தி, உத்தியோக உயர்வு.
புதன் : தேவகணங்களை நமஸ்கரித்து அரசமரத்தை வலம் வருபவர்களுக்கு கேட்டது நிறைவேறும். .
வியாழன் : தக்ஷிணாமூர்த்தியை வணங்கி அரச மரத்தை பிரதட்சிணம் செய்தால் கல்வி ,ஞானம், கீர்த்தி பெறலாம்.
வெள்ளி : லக்ஷ்மியை நமஸ்கரித்து  அரசமரத்தை வலம் வந்தால் அமோக ஐஸ்வரியமும் யோக சுபிட்சங்களும் குவியும்.
சனி : மகாவிஷ்ணுவை பணிந்து நைவேத்தியங்கள் செய்து அரசமரத்தை வலம் வந்தால் சர்வ துக்கமும் போகும்.

அரசமரத்தை வலம்  வரும்போது வேக வேகமாக  நடக் காமல் மெதுவாக நடக்கவேண்டும். கைகளை ஆட்டா மல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றி வர வேண்டும்.பேசிக் கொண்டே சுற்றக் கூடாது. அதற்கு பதிலாக ஏதாவது ஒரு துதிப் பாடலை பாடி வர வேண்டும்.  குறைந்தபட்சம் 7 முறை வலம்வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை சுற்றி வரலாம்.சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது. சுற்றி முடித்தபின் அரசமரத்தை கட்டிக் கொள்ள வேண்டும். வயிறு மரத்தின்மீது பட்டால் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை.

அரச மரத்தை சுற்றி வந்து அடிவயிற்றை பார்த்தல் இது தான்.

ஒரு சாதாரண விஷயம் என்று நாம் நினைப்பதற்கு பின்னால்  எவ்வளவு ஆச்சர்யமான சமாசாரங்கள்  இருக்கிறது பார்த்தீர்களா?

sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:36 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com
ஸூர்தாஸ்  - நங்கநல்லூர்  J K SIVAN  

 ''வெண்ணையா?  நான் பார்க்கவே இல்லையே ''

'மய்யாமோரி'  என்கிற ஹிந்தி  பாட்டு  அர்த்தம் புரியாவிட்டாலும்  MSS  அம்மா குரலில் அவர் ரசித்து பாடும்போது  மனக்கண்ணில்  கிருஷ்ணன் தோன்றுவான்.  செவியில் இன்பத்தேன் பாயும்.  ஸூர்தாஸ்  பாடல் என்பதால் இந்த இனிமையோ?

பாடலை கேட்கும்போது கண் எதிரே ஒரு காட்சி தோன்றுகிறது..
''டேய் கிருஷ்ணா இங்கே வா. ?''
''............................''
''எங்கேடா இருக்கே, கூப்பிடறேனே காதில் விழலை. வா இங்கே உடனே.''
'...........................''.
''என்னடா கிருஷ்ணா  பதிலே பேசாமல் இருக்கிறாய், எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறாய்? ''
யசோதையின் குரல் ஓங்குகிறது. கையில் மத்து தயாராக இருக்கிறது.  
.''...............................''
 ''உன்னை விட்டேனா பார்?''
ஒரு தூணின் பின்னல் ஒளிந்துகிண்டிருந்த  கண்ணனை யசோதை  பிடித்து விட்டாள் .  கையைப்பிடித்து அவனை தர தர வென்று கூடத்துக்கு வெளிச்சத்தில் இழுத்துக் கொண்டு வருகிறாள்.
''எங்கே இப்போ சொல்லு ? வெண்ணை எடுத்து திருட்டுத்தனமாக தின்றாயா, இல்லையா ?''
''அம்மா அம்மா, நீ என் ஆசை அம்மா இல்லை நீ.    நான் பொய் சொல்வேனா? நான் வெண்ணையை தொடவே இல்லை. அப்புறம் தானே சாப்பிட  முடியும்? நீ சொன்ன மாதிறியே தான் நான் செய்தேன். பொழுது விடிந்ததும்  எழுந்தேன். பசுக்களை கட்டி அணைச்சுண்டேன். அதுகளோடு மது வனம் போனேன். அங்கே அதெல்லாம் மேயும் போது மரத்தடியில் உட்கார்ந்து இடுப்பிலே இருந்த புல்லாங்குழலை எடுத்து ஊதினேன். பொழுது போச்சு. அந்தப்  பக்கமெல்லாம் சுத்தினேன். சாயந்திரம் ஆனதும் பசுக்களை அழைத்துக்கொண்டு  நேரே இங்கே  வந்துட்டேன்..இப்போ சொல்லு? நான் எப்போ வெண்ணை எடுத்து தின்பதற்கு நேரம்? நான்  எங்கே  வெண்ணையைப் பார்த்தேன், எப்போ எடுத்தேன், நீயே சொல்லு?
'நீ  உறியில் இருக்கிற வெண்ணையை எடுக்கலை ? பொய்  சொல்லாதே''
''நான் வெண்ணையை மேலே ஏறி  உறி யிலிருந்து  எங்கேயோ எடுத்தேன் என்கிறாயே . நான் என்ன உயரமானவனா?
 எப்படி எனக்கு மேலே வைத்திருக்கும் வெண்ணைப் பானை எட்டும்? நீயே சொல்லு?''
''உன் மேலே எப்படி  வெண்ணை பால் வாசனை வந்தது அப்போ?''
''இந்த கன்னுக்குட்டிகள் எல்லாம் அம்மா கிட்டே பால் குடிக்கிறதில்லையா. வாய் நிறைய வெள்ளை நுரையோடு என்னை வாயிலே முகத்திலே, ,உதடுலே எல்லாம் ஆசையாக நக்கும். அதனாலே என் மேலே பால் வாசனை. அது என் தப்பா?''

கிருஷ்ணன் வக்கீல் போல வாதாடினான் ..
''அம்மா இந்தா, என்கிட்டே இருக்கிற கொம்பு கம்பளி எல்லாம். போதும் இது.  எனக்கு வேண்டாம் இனிமே.  இப்போ தான் தெரிகிறது நீ என் அம்மா இல்லை என்று ? அதனால் தான் என் நண்பர்கள் இல்லாததும் பொல்லாததும் என்னைப்பற்றி சொல்வதை எல்லாம் நம்புகிறாய். நீ  அம்மா  இல்லை .வேறே யாரோ?''
கண்ணன்  முகத்தை சுளித்து விம்மினான்.
''ஐயோ, என் கண்மணி கிருஷ்ணா, அப்படி எல்லாம் பேசாதேடா''.
கிருஷ்ணனின் வாயைப்   பொத்துகிறாள் யசோதா. கண்களில் நீர் துளிர்க்கிறது.

''என் கண்ணப்பா,  நீ நல்லவன். உண்மை தான் சொல்கிறாய். நீ வெண்ணை எடுத்து தின்னவில்லை . ஆமாம் நீ வெண்ணையைத்  தொடவே இல்லை ஒப்புக்கொள்கிறேன்.....''  என்கிறாள் யசோதை.

''அம்மா அம்மா இப்போ உண்மையை சொல்றேன். நான் தான் வெண்ணையை எடுத்துத்  தின்றவன் '' என்று சிரிக்கிறான் கிருஷ்ணன்.
கண்ணில்லாத ஸூர்தாஸ் எப்படி நமது கண் முன்னால் மேலே சொன்ன காட்சியை கொண்டு நிறுத்துகிறார் பார்த்தீர்களா?
கண் எதற்கு?
அது டிவி, யூட்யூப் வாட்ஸாப்  பார்ப்பதற்கும் பத்திரிகை படிப்பதற்கும் தேவையானவர்களுக்கு உபயோகப்படட்டும் . மனக்கண் தான் வேணும் எனக்கு.

o maiyyā morī, maiń nahiń mākhan khāyo
bhor bhayo gaiyana ke pāche
(tune) madhubana mohi paṭhāyo
cāra prahara vaḿśī vaṭa bhaṭakyo
sāñjha paḍe ghara āyo
(maiyyā, maiń kab mākhan khāyo)

maiń bālaka vahi yan ko choṭo
yeh chīko vidhī pāyo
gvāla bāla sab bair paḍe haiń
bar-bas mukha lapaṭāyo

yeh le apani lakuṭa kamarīya
bahuta hī nāca nacāyo
jiye tere kachu bheda upaj hai
jāni parāyo jāñyo

sūra dāsa tab hasī yaśodā
le ura kaṇṭha lagāyo
(naina nīra bharī āyo)
(tai nahin mākhan khāyo)


sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:36 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com
அப்பண்ணா   -  நங்கநல்லூர்  J K  SIVAN

சினிமா  என்பது ஒரு சக்தி வாய்ந்த சாதனம். மனதை கெடுக்கும் அல்லது  நல்ல புத்தியும் கொடுக்கும்.  படித்தால், கேட்டால், மனதில் பதியாததெல்லாம்  பார்த்தால்  சட்டென்று மனதில் இடம் பிடிக்கிறதல்லவா.  அப்படிப்பட்ட சினிமா  நல்ல விஷயங்களை ஒருகாலத்தில் MKT, KBS , சிவாஜிம் AP  நாகராஜன்  போன்றவர்கள் மூலம் மக்களுக்கு  கொடுத்தது  நமது அதிர்ஷ்டம் என்று சொல்லவேண்டும்.  அப்படிப்பட்ட மனதிலிருந்து நீங்காத படங்களில் ஒன்று  ஸ்ரீ ராகவேந்திரர்.

தெய்வ ஸ்வரூபமான  மஹான்களை  நினைக்கும்போது அவர்களது சிஷ்யர்களும்  நம் கண் முன் தோன்றுகிறார்கள்.  ஆதி சங்கரர் படம் பார்க்கும்  போதெல்லாம்  அவர் எதிரே அமர்ந்திருக்கும் சிஷ்யர்கள் உருவம் நமக்கு பழக்கமானது.  தக்ஷிணா மூர்த்தி சிலை, விக்ரஹம்,  படம் தரிசிக்கும்  போதெல்லாம் சனகாதி முனிவர்கlளையும் பார்த்து வணங்குகிறோம்.     ராமகிருஷ்ணர் என்றால் விவேகானந்தர் தோன்றுகிறார்.  ஞானாநந்தர் என்றால்  ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள், அப்படித் தான்  ஸ்ரீ ராகவேந்திரர் என்றால் நமக்கு உடனே ஞாபகம் வருவது அப்பண்ணாச்சாரியார்.

 ரஜினி காந்த் என்ற நடிகனை பல படங்களில் மிடுக்காக, கெட்டவனாக, நல்லவனாக,  விதவிதமாக பார்த்தாலும்  ஸ்ரீ ராகவேந்திரராக பார்த்தது மட்டுமே  என் மனதில் நிலையாக நிற்கிறது. அதிலும் டெல்லி கணேஷ் அப்பண்ணாவாக தோன்றிய சில காட்சிகள், கடைசி நேரங்கள் மனதில் திரும்ப திரும்ப அலைமோதுகிறது. அது பாத்திர விசேஷம்;  அதன்  மஹிமை.  குரு ராகவேந்திரரின்  ப்ரபாவத்தை பரப்பிய பெருமை அப்பண்ணாவுக்கு  நிறைய உண்டு.  பிச்சாலி (பிக்ஷாலயா  தான் இப்படி உருமாறி விட்டது)  ஆஸ்ரமத்தில், குருகுலத்தில்,  எண்ணற்ற  சிஷ்யர்களுக்கு குருவின் மஹிமையை உணர்த்தியவர் அப்பண்ணா. பிச்சாலியில்   ஜெபடே கெட்டே  என்ற  கல்மேடை இன்னும்  உள்ளது. இந்த மேடையின் மேல்  குரு ராகவேந்திரர் அமர்ந்திருக்க   அப்பண்ணா அவருக்கு  சேவை செய்வார். பன்னிரண்டு வருஷம் இங்கே குருநாதர்  இருந்து உபதேசம் செய்திருக்கிறார்.

மந்த்ராலயத்த்தில் குரு ராகவேந்திரர் இன்னும் சில  கணங்களில்  பிருந்தாவனத்தில்  ஜீவன்முக்தராக ஜீவ சமாதி அடையப் போகிறார் என்ற சேதி காதில் விழுந்ததும்  எங்கோ  துங்கபத்திரை நதியின் அக்கரையில் இருந்த  அப்பண்ணா  துங்க பத்ரையில் இறங்கி  நீந்தி  நடந்து ஓடி வருகிறார். அப்போது அவர் சொல்லிக்கொண்டே வரும்  ஸ்தோத்ரம் தான்  ''பூர்ணபோத ஸ்தோத்ரம்'' .  என் கையில் இருக்கும் ஜபமாலை எப்போது நகராமல் நிற்கிறதோ அப்போது இந்த பிருந்தா வனத்தை மேலே கடைசி கல்லை வைத்து மூடிவிடுங்கள் என்று குரு ராகவேந்திரர் சொல்லி ஒவ்வொரு கல்லாக அடுக்கிக் கொண்டே வந்தார்கள் சிஷ்யர்கள்.  அப்பண்ணா பூர்ண போத  ஸ்தோத்ரம்  சொல்லிக்கொண்டே ஓடி வருகிறார். 32 ஸ்லோகங்கள் கொண்ட ஸ்தோத்ரம்.    ஸ்லோகத்தின் கடைசி அடியை சொல்லும்போது ஜபமாலை அசையாமல் நிற்க கடைசி கல்லை வைத்து  மற்ற பக்தர்களால்  குரு ராகவேந்திரரின் ஜீவன் முக்த பிருந்தாவனம் மூடப்படுகிறது.  இந்த காட்சி ராகவேந்திரர்  சினிமா படத்தில்  பலர் மனங்களை  நெகிழ வைத்து தொட்டு விட்டு,  இன்னமும் என்  மனதில் நிற்கிறது.

''எனக்கு அப்புறம் நீ தான் மடாதிப'' தி என்று குரு ராகவேந்திரர் கூறியபோதும் அதற்கு நான் அறுகதையற்றவன் என்று மரியாதையாக மறுத்தவர் அப்பண்ணா. புகையிலை போடும் வழக்கம் கொண்டவர் அப்பண்ணா. இதையே காரணம் காட்டி மடாதிபதியாக தகுதியில்லை என்றவர்.  குருவை விட ரெண்டு வயது பெரியவர் அப்பண்ணா என்றாலும் பரம சிஷ்யர். குருவுக்கு அன்றாடம் மடியாக  பிக்ஷை சமைத்தவர்.  சிறந்த கல்விமான்.   பிச்சாலி ஆஸ்ரமத்தில்  இன்னும்  அப்பண்ணா வம்சத்தவர்கள் பூஜை செய்து கொண்டு வருகிறார்கள்.  

 பல வருஷங்களுக்கு முன்பு எனக்கு  மந்த்ராலய தரிசனம் செய்யும் பாக்யம் கிட்டியது. ராகவேந்திரரை தரிசனம் செய்து விட்டு, பின்னர் மந்திராலயத்தில் நடைபெறும் அன்னதானத்தில் மதியம் பிரசாதம் சுவீகரித்தது  நினைவுக்கு வருகிறது.
மந்த்ராலயத்தில் இருந்து பிச்சாலிக்கும் பஞ்சமுகிக்கும் சென்றேன். இரண்டுமே   துங்கபத்ரையின் மறு கரையில்  கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளன.  பிச்சாலி மந்திராலயம் ரோட்டிலிருந்து 15 கி.மீ தூரத்தில்  துங்கபத்ரை நதிக்கரையில் அமைந்துள்ளது. மந்திராலயத்திலிருந்து சுமார் 20 கி.மீ .மந்திராலயத்திலிருந்து துங்கபத்ரா பாலம் வழியாக செல்வ தென்றால், முதல் மாதவரம் சென்று அங்கிருந்து வலப்பக்கம் திரும்பி, ரெய்ச்சூர் செல்லும் வழியில் துங்கபத்ரா பாலத்தை கடந்து கில்லேசுகர் முகாம் வந்து அங்கிருந்து இடப்பக்கம் திரும்பினால் பிச்சாலியை வந்தடையலாம். நதியில்  பரிசல் வழியாக பிச்சாலி  செல்லவும் வசதி உண்டு.

ஸ்ரீ பூர்ண போத ஸ்தோத்ரத்தில்  33வது  ஸ்லோகம் தான் இது:  

''பூஜ்யாய ராகவேந்திராய ஸத்யதர்மரதாய ச  பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே  || (33) முழு  பூர்ண போத  ஸ்தோத்ரம் அர்த்தமும் முடிந்தபோது எழுத உத்தேசம்.
 

sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:36 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com
விக்னேஸ்வரி - நங்கநல்லூர் J K SIVAN

இன்று 27/8/2025 பிள்ளையார் சதுர்த்தி. எங்கு நோக்கினும் பிள்ளையார் பற்றிய பேச்சு, எழுத்து தான் கண்ணில் படுகிறது, பாட்டு ஸ்லோகம், கோவில் பூஜா மணி, மந்திர சப்தம் தான் காதில் விழுகிறது.
நல்லது கெட்டது ரெண்டும் சேர்ந்தது தான் உலகம். நல்லதை நினைக்கிற போது கெட்டதை நினைக்க மனதில் இடம் இருக்காது. பிள்ளையார் நினைப்பு கெட்டதை மனதிலிருந்து விலக்கும். பிள்ளையாரை நினைத்தால் மனது குதூகலம் அடைகிறது. களி மண்ணை பிசைந்தால் எந்த உருவமும் நாம் நினைக் கிறபடி அளிக்கும். பிள்ளையார் அதனால் தான் நாம் நினைத்ததை அளிக்கிறார். களிமண்ணால் உருவம் பெற்று நம் வீட்டுக்கு இன்று வருகிறார்.
மனித ஸ்வபாவம் வேடிக்கையானது. எதிர்மறையாக சில நேரங்களில் மனது யோசிக்கும். மனசுக்கு எப்போதும் மாறுதல் ரொம்ப பிடிக்கும். ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் கற்பனை செய்து, சிங்காரித்து, பெயர் வைத்து மகிழ்வது. பெண்ணை பிள்ளையாக ''டா'' போட்டு அழைப்பது பேசுவது இன்னும் சில வீடுகளில் பழக்கம். என் ஆறு வயது பேத்தி மாயா எனக்கு ''டா'' தான். எத்தனையோ வீடுகளில் பிள்ளையை பெண்ணாக சிங்காரித்து அழகு பார்ப்பதும் உண்டு. எத்தனையோ வீடுகளில் ஆண் குழந்தைகள் தலையில் பின்னலோடு, கவுன் போட்டுக் கொண்டு, கண்ணில் மை இட்டுக்கொண்டு, காலில் கொலுசு போட்டுக் கொண்டு 7-10 வயது வரை கூட பார்த்து இருக்கிறேன். என் ரெண்டு அண்ணாக்கள் பெண் வேடத்தில் இருக்கும் பழைய புகைப்படம் வெகுநாள் என்னிடம் இருந்தது. தேடினால் இப்போது காணோம். எங்கே தொலைத்தேனோ தெரியவில்லை.
பெண்ணாக கிருஷ்ணனையே பாவித்து நிறைய பாரதியார் பாடி இருக்கிறார். அத்தனையும் அற்புதங்கள். என்னுடைய '' எந்தையே நந்தலாலா'' புத்தகத்தில் நிறைய தேடி பிடித்து எழுதி இருக்கிறேனே.
ஆழ்வார்களும் பக்தி பரவசத்தில் பராங்குச நாயகி, பரகால நாயகி என்று பெயரோடு விளங்கி இருக்கி றார் கள். நடாதூர் அம்மாள் என்று ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர் ஒருவருக்கு பெயர். நாயன் மார்களில் இப்படி படி சிலர் உண்டு. திருவானைக் கா கோவிலில் நடுப்பகலில் சிவாச்சாரியார் புடவை தரித்துக்கொண்டு அகிலாண்டேஸ்வரி சந்நிதியில் வழிபாடு நடத்துவது அங்கே சென்று தரிசித்தவர்களுக்கு தெரியும். இது தினமும் நடைபெறுவது.
கடவுளையும் பெண்ணாக சேர்த்தே வழிபடுவதும் நமக்கு வழக்கம். சிவன் அர்த்தநாரி. விஷ்ணு மோஹினி.ஆனால் விக்னேஸ்வரரை விக்னேஸ்வரி யாக பார்த்த போது ரொம்ப ஆச்சர்யம். அதிசயம். எந்தெந்த உருவில் எல்லாம் பார்த்தாலும் அலுக்காதவர் விக்னேஸ்வரர். விநாயகர் பெண்ணாக பல கோவில் களில் இருக்கிறார். வினாயகி, கணேசனி, கணேஸ்வரி, கஜானனி என்று பெயர்கள் .பிள்ளை யாரை சக்தியாக யோகினி தேவதையாக கொண்டா டும் பக்தர்கள் அநேகர்.
கணேசர் பிரம்மச்சாரி. ஒண்டிக்கட்டை. எங்காவது சாதுவாக மரத்தடியில், நாற்சந்தியில், தெருவில், குளத்தங்கரை, ஆற்றங்கரை, அரசமரத்தடியில் பார்த்திருக்கிறோம். சித்தி புத்தி என்று இருவரோடும் பார்த்த துண்டு. மதுரையில் வியாக்ரபாத கணபதி யாக அவருக்கு புலிப் பாதங்கள். யானைத் தலை. மனித உரு. ஆனால் பெண் உடம்பு. வினாயகி!! சுசீந்திரத்தில் கணேசனி தாணுமாலய ஆலயத்தில் இருக்கிறாள். வடக்கே நிறைய இடங்களில் கஜானனி இருக்கிறாள். புராணங்கள் அவளைப் பற்றி சொல்கிறது.
ராஜஸ்தானில் சிகார் என்று ஒரு ஊரில் விக்னேஸ்வரி யை ஒரு பழைய சிவன் கோவிலில் வழிபடுகிறார்கள். வேதங்களில் கூட வித்யா கணபதியை பெண்ணுருவில் தான் காட்டியிருக்கிறது. வல்லப கணேசனி என்றும் பெயர்.
ஜபல் பூரில் பேரகாட் என்ற ஊரில் 64 யோகிநிகளுக்கு ஒரு கோவில். அதில் முதல் யோகினி கணேசனி. இவளை மற்ற சௌசதா யோகினி கோவில்களில் ரிகியன், ஹிரபூர், ராணிப்பூர், ஜாரியல் ஆகிய ஊர்களில் பார்க்கலாம். வடக்கே நிறையவே இருக்கிறாள். பண்டைய காலத்தில் பல தேசங்களில் இவளை வழிபட்டார்கள். திபெத்தில் கூட கஜானனி தெய்வமாக நிற்கிறாள்.
தென்னகத்தில் விக்னேஸ்வரர் அதிகமாக பெண் தெய்வ மாக வணங்கப் படவில்லை. அதிக வழிபாடு களும் பரவலாக இல்லை. வேதங்கள், புராணங்களும் கொஞ்சம் சைலென்ட் தான். வினாயகி ஒரு புத்த மத பெண் தெய்வமாக கணபதி ஹ்ரிதயா என்ற பேரில் தாந்த்ரிக வண்ண ஓவியங்களில் நேபாளத்தில் காணலாம். பாலித் தீவிலும் கணேந்த்ரி திக் தேவதை யாக உள்ளாள் . வாயுவின் திசையில் அமர்ந்திருக் கிறாள்.
புத்த மதம் இவளைத் தத்து எடுத்திருக்கிறது. ஜைனர்க ளிடம் இருக்கிறாள். ஜங்கிணி என்று பீடத்தில் ஜம்மென் று அமர்ந்திருக்கிறாள். முதலாவது நூற்றாண்டு ராஜஸ் தான் இவளை தந்தம் இல்லாமல் பெண்ணாக வணங்கியது.
கணேசா நீ எப்படியெல்லாம் உருவெடுத்தாலும் உள்ளம் கொள்ளை போகுதே. வீட்டிலேயே ஐந்து நிமிஷத்தில் விநாயகர் தயாராகிவிடுவார். மற்றவை இணைப்பில் தெரிந்துகொள்ளலாம். https://youtu.be/0SU4zgdkVbM

sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:36 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com

வாதாபி கணபதி  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

சாளுக்கியர்கள்  முதலில் தெற்கே வந்து பல பிரதேசங்களை ஆக்ரமித்தபோது  பல்லவர்கள் யுத்தத்திற்கு தயாராக இல்லை. அவர்களால் புலிகேசியின் படையை வெல்ல முடியவில்லை.  இதை ஜீரணிக்க முடியாத  நரசிம்ம பல்லவன் அன்று முதல் தனது  படையை வலுப்படுத்தி  சாளுக்கியர் நாட்டிற்கே  படையோடு சென்று அவர்களை வென்று பழி தீர்க்க வைராக்யம் கொண்டான். அவனுடைய  படைத்தளபதி பரஞ்சோதி மஹா வீரன். ராஜாவுக்கு தன் உயிரையும் கொடுக்க தயாராக இருந்தவன். பல்லவராஜாவின்  தலைமையில் பெரும்படை ஒன்று வடக்கு நோக்கி நகர்ந்தது.  இப்போது  பாதாமி எனப்படும் நகரம் அப்போது  வாதாபி என்ற பெயரில் சீரும் சிறப்புமான  சாளுக்கியர்கள் தலைநகரம். 

கி.பி 642ல், நரசிம்ம பல்லவன் பெரும் படையோடு வாதாபியை முற்றுகை இட்டான். புலிகேசியின் படை  பல்லவர்களின் வீரப்படைக்கு முன்  ஈடு கொடுக்க முடியாமல் தோற்றது.  வாதாபி பற்றி எரிந்தது.  பரஞ்சோதி சிறந்த சிவபக்தர் . அந்த ஊர் சிவனை தரிசனம் செய்தவர்   வாதாபி கோவிலில் இருந்த   விக்னேஸ்வரர் அழகில் தன்  நெஞ்சை பறிகொடுத்தார்.  அதுவே அவருடைய  வாதாபி வெற்றிக்கு  காரணம் என்று வாதாபி கணபதியை  ஜாக்கிரதையாக எடுத்துக்கொண்டு திரும்பினார் .   வாதாபி கணபதியை தன்னுடைய  சொந்த  ஊரான திருச்செங்காட்டங்குடியில் கோயிலில் பிரதிஷ்டை செய்து வழிபட்டவர் பரஞ்சோதி.  திருச்செங்காட்டங்குடி  திருவாரூர் ஜில்லாவை சேர்ந்தது. 

இந்த பரஞ்சோதியே  பின்னர்  அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனார். தனது ஒரே பிள்ளையை மனமுவந்து மனைவி  அவனை மடியில் வைத்துப் பிடித்துக் கொள்ள  வெட்டி கறி  சமைத்து  அதிதி யாக வந்த சிவனடியார் கேட்டபடியே அமுது படைத்தவர்.  இவர்களை சோதனை செய்த அந்த சிவனடியார் சாப்பிட உட்காருகிறார்.  

''எங்கே உன் பிள்ளையை கூப்பிடு, அவனும் வந்து என்னருகே  சாப்பிடட்டும் '  என்கிறார். கண்ணீர் மல்க நாயன்மாரும் அவர் மனைவியும் நிற்க, ''ஏன்  பேசாமல் நிற்கிறீர்கள் இருவரும். கூப்பிடுங்கள் உங்கள் மகனை. அவனும் வந்தபிறகு தான் சாப்பிடுவேன்'' என்கிறார்  சிவனடியார்'' 

''பரமேஸ்வரா, இதென்ன சோதனை, எங்கள் ஒரே மகன் சீராளனை இந்த சிவனடியார் கேட்டுக்கொண்டபடி வெட்டி சமைத்து அல்லவோ போஜனம் தயார் பண்ணினோம் . அவனை எப்படி  கூப்பிடுவேன், அவன் எங்கிருந்து  வருவான்?. இருந்தாலும்  சிவனடியார் சொற்படியே  கூப்பிடுகிறோம்  என்று ''சீராளா  வா அப்பா, நீயும் இங்கே வா சிவனடியார் அருகே அமர்ந்து போஜனம் செய்'' என்கிறார்கள்.  சீராளன் உள்ளே இருந்து வருகிறான். சிவனடியார் இலை  எதிரே அமர்ந்தவர் எழுந்து நிற்கிறார். அவர் நிற்கும்போது தான் வந்த சிவனடியார் வேறு யாருமில்லை சாக்ஷாத்  சிவபெருமானே என்று சிறுத்தொண்டருக்குத்  தெரிந்து கணவனும்  மனைவியும் அவர் திருவடியில் பிள்ளை சீராளனோடு சேர்ந்து விழுந்து வணங்கி அருள் பெறுகிறார்கள். 

இந்த வாதாபி கணபதி விக்ரஹத்தை  முத்து சுவாமி தீக்ஷிதர்  தரிசித்து  பாடிய பாடல் தான்  'வாதாபி கணபதிம் பஜே,''  என்று  எல்லா  சங்கீத நிகழ்ச்சிகளிலும்  முதலில் விக்னேஸ்வரரை போற்றி பாடும்  ஹம்சத்வனி ராக கீர்த்தனை.

பாபநாசம் சிவன் இந்த வாதாபி கணபதியை பற்றி பாடிய பாடலை சஹானா ராகத்தில் மஹாராஜபுரம்  சந்தானம்  அவர்கள் பாடிய கீர்த்தனையைக்  கேட்டு  ரசித்து  இன்று விநாயக சதுர்த்தி அன்று நானும் 86+ல் பாடிப்பார்த்தேன். இருமல் விடுமா என்னை பாட? நடுவில்  தானும் குரல் கொடுத்தது.  இருந்தாலும் விடாப்பிடியாக பாடி முடித்தேன். நீங்களும் கேளுங்கள்  https://youtu.be/ZDK_6NMVw84

sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:36 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com
வல்ல நாட்டார்  -    நங்கநல்லூர்  J K  SIVAN 

சாது சிதம்பரம் ஸ்வாமிகள் .
 
எண்ணற்ற ஞானிகள், சித்தர்கள், ரிஷிகள்  வாழ்ந்த புண்ய பூமி நமது பாரத தேசம்.  இன்னும் ஜீவசமாதியில் இருந்து கொண்டு அருள் புரியும் மஹான்கள் இருக்கிறார்கள்.  அப்படி ஒருவர்  தான் வல்லநாட்டார் எனப்படும் சிதம்பர ஸ்வாமிகள். பாறைக்காடு எனப்படும் கிராமத்தில் வல்லநாட்டில்  உள்ளது. வல்லநாடு   தூத்துக்குடி ஜில்லாவில்  திருநெல்வேலியிலிருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ளது.   வல்ல நாட்டு அரசர்கள் தான் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய  மூன்றாம்  ப்ரஹாரத்தில் உள்ள ரெண்டு கோபுரங்களை  நிர்மாணித்தவர்கள். ஸ்வாமிகளின் தந்தை ஒரு நாட்டு மருந்து வைத்தியர். சாது என்று வணங்கப்பட்டவர்.  

இளம் வயதில் சிதம்பரம் ஸ்வாமிகள் ஆடுகளை மேய்ப்பவர்.  மரத்தடியில் தூங்கும்போது அவரைச்சுற்றி நிறைய  நாகங்கள் காணப்படும்.  பள்ளிச்  சிறுவர்களுக்கு  கொட்டாங்கச்சியில்  ஆட்டுப்பால் கொடுப்பார்.  இயற்கையாக பள்ளி செல்லாமலேயே அவருக்குள் ஆன்மீக  ஞான ஊற்று சிறந்ததால் அவர் பேசும் தெய்வீக விஷயங்கள்  அந்த  சிறுவர்களுக்கு   புரியாது.  நாகங்களுக்கு பால் வார்ப்பார்.  மீதி பாலை சிறுவர்களுக்கு கொடுத்தால்  குடிக்க பயப்படுவார்கள். ''இதை குடித்தால் விஷ பயம் கிடையாது '' என தானே குடிப்பார்.  வாலிப வயதில் புனித க்ஷேத்ராடனம் பண்ணியவர். இடையில் கோவணம், அல்லது முழங்கால் வரை மட்டும்  வெள்ளை  வேட்டி.  சில சமயம் மொட்டைத்தலை, சிலசமயம் தாடி மீசை ஜடாமுடி.
வள்ளலாரை  குருவாக மானசீகமாக ஏற்றவர்.  திருவருட்பா,  சிவ புராணம், ஒளவையாரின்  அகவல் பாடல்களை பாடிக்கொண்டே இருப்பார்.  தனது காலில் யாராவது விழுந்து வணங்கினால் தானும் அவர்கள் காலடியில் விழுந்து வணங்குவார். கை கூப்பி வணங்கினால் தானும் கைகூப்பி வணங்குவார்.  சதாநேரமும்  'அருட் பெரும் ஜோதி, அருட் பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை, அருட்பெரும் ஜோதி' என்று சொல்லிக்கொண்டே இருப்பார். 

வல்லநாட்டில் நாச்சியப்ப கௌண்டர் என்ற தனவந்தருக்கு  உடலில் சரும வியாதி. எந்த மருந்திலும் குணமாகவில்லை. அவரிடம் ஸ்வாமிகள்  இந்த மலைக்கு ஒரு படி அமைத்துக் கொடுங்கள். வியாதி உடனே குணமாகும் என்றார். 
கௌண்டருக்கு சந்தேகம்.  இருந்தாலும் படி அமைக்க உதவினார். பக்தர்கள் உதவியோடு படி கட்டியாகி விட்டது.  ஸ்வாமிகளோடு கூலியாட்களோடு சேர்ந்து வேலை செய்தார்.  அமாவாசைக்கு முதல் நாள் ஒரு பெரிய பீப்பாய் நிறைய  நல்லெண்ணெய், தேங்காயெண்ணை, கடலை எண்ணை , இலுப்பை  எண்ணெய், விளக்கெண்ணெய்   எல்லாம் கலந்து அதில் ஒரு பெரிய வெட்டி ஒன்றை திரியாக போட்டு தீபம் ஏற்றினார்.  இருளில் தீப ஒளி எல்லோரையும் பிரமிக்க வைத்தது. 
பக்தர்களுக்கு உணவு பிரசாதம் அளிக்கப்பட்டது. 

கௌண்டருக்கு இன்னும் சரும வியாதி குணமாகவில்லையே என கோபம். ஸ்வாமிகளை  ஏமாற்று பேர்வழி என்றெல்லாம்  கடுமையாக ஏசினார். 

''இந்தாருங்கள் இதை இதை மூன்று படி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அது ரெண்டு குவளை நீராக சுண்டியதும் குடியுங்கள் வியாதி குணமாகும் என்று காதருகே திடீரென்று தோன்றிய ஒரு  சில  தர்ப்பைகளையும், எதிரே இருந்த புதரில் இருந்த ஏதோ ஒரு மூலிகை இலைகளையும் பறித்து அவரிடம்  கொடுத்தார்.  அரைமனதோடு  கௌண்டர் அவ்வாறே 
செய்தார்.  பல வருஷங்கள் குணமாகாத வியாதி காணாமல் போயிற்று.

ஒரு நாள் ஒரு  ஒற்றைக்கொம்பன் காட்டு  யானை ஸ்வாமிகள் தங்கி இருந்த குடிசை வாசலில் வந்து நின்றது.   ஸ்வாமிகள் அதை தடவிக் கொடுத்து அவரோடு 11 வருஷங்கள் அந்த யானை வாழ்ந்து  இறந்தது.  அதன் தலை மூலிகைகளால் அப்படியே பாதுகாக்கப்பட்டு அவருடைய த்யான அறையில் கெடாமல்  இருக்கிறதாம். பார்த்தவர்கள் சொல்லுங்கள்.

மற்றொரு சமயம் ஒரு யானைக்குட்டி அவரிடம் வந்து வளர்க்கப்பட்டது.  அவர் சமாதியடைந்ததும்  அந்த யானை ஆகாரம் எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருந்து உயிரை விட்டது. அதை அவர் சமாதிக்கருகிலேயே புதைத்தார்களாம்.   மாசி பௌர்ணமி அன்று ஸ்வாமிகள் ஆராதனை பூஜைகள் நடக்கிறது.  லக்ஷம் பக்தர்கள் குழுமுகிறார்கள்.  மூன்றுநாட்கள் அனைவருக்கும் போஜனம்.

எல்லோருக்கும் அவர் உபதேசம் ''விநாயகர் அகவல், சிவபுரபானம், அருட்பெரும்ஜோதி நாமம் பாராயணம் பண்ணுங்கள். விளக்கேற்றுங்கள் . அன்னதானம் செய்யுங்கள். எளிமையான பரிசுத்தமான வாழ்க்கை வாழுங்கள்''

sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:36 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com
ஸூர்தாஸ்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

 பாபிகளுக்கெல்லாம் நான் சக்ரவர்த்தி''

ரொம்ப  மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை  ஸூர் தாஸை  அறியாதவர்கள் போல்,  ஏற்கனவே  அவரை  அறிந்தவர்களும்  இந்த  ஸுர்தாஸ் கட்டுரைகளை  ஆர்வத்தோடு, ஆவலோடு படிக்கிறார்கள் என்று கேள்விப் படும்போது எனக்கு உண்மையிலேயே வயசு குறைந்து கொண்டே வருகிறது. அடடா,  எவ்வளவு அதிர்ஷ்டம் , அப்படி யென்றால் இன்னும் கூட நிறைய எழுதலாமே!  கட்டுரைகள் எழுத நிறைய  தேட வேண்டி இருக்கிறது தேடியதை குப்பையாக  சேர்த்துவைத்த தை,  பூணல் சிக்கு பிரிப்பதுபோல் அவசரம் இல்லாமல் பிரித்து  என் வழியில்  நான் புரிந்து கொண்ட வகையில் உங்களுக்கு அளிப்பது தான் என் வேலை.  நான் பட்ட ஸ்ரமம்,  நீங்கள் ரசித்து படித்து எனக்குத் தெரிவிக்கும் போது, என் கஷ்டங்கள் ஆனந்தமய  இன்ப  அனுபவமாக இனிக்கிறது. 18-20மணி நேரம் தினமும் உழைப்பவனை இன்னும்  நேரம் கிடைக்குமா  என்று தேட வைக்கிறது.

எனக்கே தெரிகிறது.  நான் நிறைய   பெரிய பெரிய  விஷயங்களை ஒரே  நேரத்தில் கையாள்கிறேன் என்று,.

ஸ்ரீமத் பாகவதம், மஹா பாரதம், மகா பெரியவா,  ஸ்லோகங்கள், சூர் தாசர், கிருஷ்ண  கர்ணாம்ருதம், கீத கோவிந்தம், சித்தர்கள், ஆச்சார்யர்கள்,  தாகூர், ரமணர், விவேகானந்தர் ...திவ்ய க்ஷேத்ரங்கள், சிவாலயங்கள், ஆச்சார்யர்கள் வாழ்க்கை, சிறந்த கவிஞர்கள், எழுத்தா ளர்களின் அமர படைப்புகள்   கிருஷ்ணனை பற்றிய  நிறைய விஷயங்கள், விக்ரமாதித்தன், சாணக்கியன் போன்ற அற்புத மனிதர்கள் விஷயங்கள் என்று ...என்னென்னவோ....  

ஏதோ நம்மால்  சில நல்ல காரியங்கள் எளிமையாக தர முடிந்தால்  அதை மனப்பூர்வமாக செய்வோமே   என்ற நப்பாசை....  உடல் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது.  வயது, விருத்தாப்யம்   (86)   கொஞ்சம் படுத்துகிறது. பரவாயில்லை. என் இரும்பு மனது அதை லக்ஷியம் செய்யவில்லை... கிருஷ்ணன் ஒத்துழைக்கிறான். தொடர் கிறேன்.. சரி இனி ஸூர்தாஸை பிடிப்
போம்... ஸூர்தாஸ்  எழுதிய பிரிஜ்பாசி, ஹிந்தி,பாடல்  ஒன்றின் ஆங்கில மொழி பெயர்ப்பு  எனக்கு அகப்பட்டது:

'' 0 lord, I  am the crown amongst the sinners.The others are just the beginners
I have been born a crook.
To Ajamil, the hunter, and to the whore, 
even to poison-breasted Putana you granted salvation.
You have shown favors to all but me. This hurts.
I claim, emphatically, confidently that nobdy else  is as capable of sinning as 1 have been.
Still amidst the sinners, and crooks,
I , Sur, die of shame, for not having had your favor.
Who else, deserves your grace more than I? 

இந்த பாடலில்  தன்னை எவ்வளவு கடை  நிலை  மனிதனாக, இழிந்தவனாக  காட்டிக்கொள்கிறார்  பாருங்கள் ஸூர்தாஸ். ''என் அப்பனே கிருஷ்ணா, என் தெய்வமே, நான் யார் என்று உனக்கு தெரியாதா? பஞ்சமகா பாதகங்களை செய்த பாபிகளுக்கு நடுவே  நான் தானடா,  முடிசூடா சக்கரவர்த்தி.. நான் செய்த பாவங்களோடு  மறவர்கள் புரிந்த  பாபங்களை  ஒப்பிட் டால் அவர்கள்  அனைவருமே  கற்றுக்குட்டிகள். அதெல் லாம் வெறும் ஜுஜுபி.   நான் கருவில் இருக்கும்போதே பெரிய மஹா பாபியாக  உருவானவன் ஆயிற்றே. .

அஜாமிளன் எனும்  கொடிய வேடுவன், மற்றும்  வேசி ஒருவள்,  கொடிய விஷம் தடவிய தனது  முலையில் பால் அருந்த செய்து  உன்னைக் கொல்ல  வந்த பூதகி ஆகியோருக்கெல்லாம்  கருணாசாகரமாக நீ முக்தி அளித்தாய். என்னை கவனிக்கவே மாட்டேன் என்கிறாயே?.

எனக்கு நெஞ்சே வெடித்து  விடும் போல் இருக்கிறதே.  நான்  மறுபடியும் சொல்கிறேன் கிருஷ்ணா, நான்  ரொம்ப ரொம்ப  மஹா பாவி, கொடியவன், என்னைவிட  அதிக பாபங்கள் செய்தவன் இருக்கவே முடியாது. என் போன்றவர்களை அல்லவோ நீ  முதலில் அருள்  புரிந்து ரக்ஷிக்க வேண்டும்.  இன்னும்  உன் கடைக்கண் பார்வை கூட என் மேல் படாமல் இருப்பது   எனக்கே  அவமானம் அதிகமாகி மண்டையைப்  போட்டு விடுவேனோ என்று தோன்றுகிறது. பகைவனுக்கும் அருளும் பகவானே, என்னைவிட  உன் கருணையை  எதிர்பார்த்து  வாடும் ஒருவன் உண்டா சொல் ? ''    
  

sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:36 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ரெண்டே ரெண்டு ஆசை தான் 

என்னுடைய  மனசை மட்டும் அல்ல, படிப்போர் கேட்போர் எல்லோர்  மனதையும்  கசக்கி பிழிந்து  கண்ணில் நீரை  வெள்ளமாக  கொட்டச் செய்யும்  மஹா பெரியவா  வாழ்க்கை சம்பவம் இது. ஏற்கனவே பதிவிட்டிருந்தாலும்  இன்னொரு முறை உங்களுக்கு. இதன் மூலம்  ஸ்ரீ ரமணி அண்ணா  எழுதியது  பதிமூணு பக்கம் சக்தி விகடன்லே.   முடிஞ்சவரை ரசானுபவம்  குறையாம  சுருக்கி (இதுக்கு மேலே  சுருக்க  எனக்கு தெரியலை)கொடுக்கிறேன்.                                                      
ரெண்டே ரெண்டு ஆசை தான் 
++
 
எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு  ஒரு தடவை  மஹா பெரியவா ஸ்ரீ  சைலதுக்கு விஜய  யாத்திரை போகிற வழியில் கர்னூலில்  வரவேற்பு, பெரியவா பிரசங்கமும்  பண்ணி  பிரயாணம் தொடர்ந்தது.  திடீரென்று  மழை. 

 "பெரியவா,  சிவிகையில் ஏறிக்கணும்" அணுக்க தொண்டர்கள் வேண்டிக்கொண்டார்கள்.
“ அதெப்படி?  இத்தனைபேர் மழையிலே நனைஞ்சுண்டு  நடந்து வரும்போது  நான் மட்டும்  சிவிகையிலா? “ஹூம்  ஹூம் நானும்  நடந்தே வரேன்"  

மேற்கொண்டு  நடக்க முடியாதபடி  மழை பலத்தது. அவர்கள் இருந்த அந்த சின்ன  க்ராமத்தில்  ஒரு  பழைய  சிவன் கோயில் கண்ணில் பட, அங்கே, மழைக்குத்  தங்கி மஹா பெரியவா  காஷாயம் மாற்றிக்கொண்டார்.   காட்டு தீ போல மஹா பெரியவா சிவன் கோயிலில்  இருக்கிற செய்தி   பரவ  ஊர்  ஜனங்கள் அனைவரும்  பெரியவாளுக்கு  பூரண  கும்பத்தோடு  வரவேற்பு தந்து அலை மோதினர். அனைவருக்கும்  ஆசி வழங்கிவிட்டு  மழைவிட்டபின்  மேற்கொண்டு  யாத்திரை  தொடர்ந்தார்  பெரியவா.   இன்னும்  ஏழு எட்டு மைல்  தூரத்தில் இன்னொரு கிராமம்.  அங்கே வந்ததும்  அந்த ஊர் ஜமிந்தார் விஷயம் கேட்டு ஓடிவந்தார்.  கிராமமே  அவரை சூழ்ந்து கொண்டு தங்கள் கிராமத்தில் பெரியவா  தங்கி  அருள்  செய்ய  வேண்டிக்  கொண்டார்கள்.  பெரியவாளுக்கு  என்ன தோன்றியதோ? 

''நான்  இங்கு  21 நாள்  தங்கப் போறேன்''   என அறிவித்தார்.  ஊரில் சத்திரம்  ரெடி பண்ணி  விறு விறென்று  கீற்றுக்  கொட்டகை போட்டு  மஹா பெரியவா தங்க இடம் தயாரானது.   மறுநாள்  காலை.  பெரியவா அருகில் இருந்த  புஷ்கரணிக்கு  ஸ்நானத்துக்கு  போனார் . மடத்து  காரியஸ்தருக்கு  மஹா  கவலை.  அந்த  கிராமத்தில்  பூஜைக்கு  வில்வம் எங்கேயுமே  கிடைக்கவில்லை. மூன்று தள வில்வம்  ஒன்றை  மாதிரிக்கு  காட்டி  ஊர்  ஜனங்களிடம்  ஒரு   கூடை  நிறைய இதுபோல  இருக்கிற  வில்வம் கொண்டு வர வேண்டும்  என  கெஞ்சினார் காரியஸ்தர். எங்கு தேடியும் வில்வம் கிடைக்கவில்லை.  மணி பத்தரை ஆயிற்று,  பெரியவா பூஜை சாமான்களையெல்லாம்  பார்த்துவிட்டு  "வில்வம் இல்லையா?" என்று கேட்டார்.  கண்ணில் ஜலம் வழிய  காரியஸ்தர், “சுவாமி, ஜமிந்தார் எல்லா ஆட்களையும் அனுப்பி யிருக்கார். வந்துடும்”  என்றார்.  

பெரியவாளோ  மெளனமாக   சத்திரத்துக்கு  பின்னால்  மாட்டு தொழுவத்தருகில் ஒரு  கல் பாறைமேல்  உட்கார்ந்து தியானம் பண்ண்ணிக்கொண்டிருக்கா. . பதினொன்றரை  மணி ஆகியும்  இன்னும்  வில்வம்  வரவில்லை.  சரி  இன்னிக்கு  சந்திர மௌலீஸ்வரருக்கு  பூஜையோ  பெரியவாளுக்கு  பிக்ஷையோ  இல்லை போலிருக்கே.  இன்னும்  இருபது  நாள் வேறு  இங்கு  இருக்கணுமே”???

த்யானம்  பண்ணிகொண்டிருந்த  பெரியவா  கண்  திறந்தா.  முகத்தில் ஒரு சிறு  புன்னகை..
அந்த சமயம்  மடத்துலே   பூஜா கைங்கர்யம் பண்ணும்   பையன்  ஓடிவந்தான். தலையிலே  ஒரு  பெரிய  கூடை  பச்சை பசேலுன்னு நிறைய  மூணு  தள  வில்வம்!!!. பெரியவாளுக்கு  சந்தோஷம். 

 “”வில்வமே  கிடைக்காதுன்னு  சொன்னாளே  எப்படி கிடைச்சுது??.யார் இவ்வளவு  ஸ்ரத்தையா  வில்வதளம்  பின்னமாகாமல் பறிச்சிருக்கா??. வில்வம் தான் வந்துடுத்தே பூஜை  ஆரம்பிப்போம்””. பெரியவா  சாஸ்த்ரோக்தமா  பூஜை  பண்ணி எல்லாருக்கும்  பிரசாதமும்  வழங்கியாச்சு. 

” யார்  வில்வம்  கொண்டுவந்தாளோ  அவாளை  கூப்பிடுங்கோ  பிரசாதம் வாங்கிக்கட்டும்””  பெரியவா சொன்னபோது  ஸ்ரீ  கார்யம்  நடுங்கிக்கொண்டே  கிட்டே  வந்தார்.

  "பெரியவா, இந்த வில்வம்  யார் கொண்டுவந்தா ன்னே தெரியலே, கீழண்டை வாசலிலே  மண்டபத்து ஓரத்திலே
மறைவா ஒரு  திண்ணையிலே  இந்த  கூடை  இருந்தது.  யார்  வச்சதுன்னே  தெரியலே."

“ ஒருக்கால் சந்திரமௌலீஸ்வரரே தன்னுடைய  பூஜைக்கு எடுத்துண்டுவந்திருக்கலாம்”” என்று பெரியவா சிரிச்சுண்டே  சொன்னா. அன்று முழுதும்  கோலாகலமா  பூஜா,  சங்கீதம்  பஜனை, பிரவசனம், பிரசங்கம் எல்லாம்.  ஊர்  ஜனங்களுக்கு  பரம  சந்தோஷம். ஸ்ரீகார்யதுக்கு மட்டும்  வயத்திலே  புளி கரைச்சுது.  நாளைக்கு என்ன  பண்றது??? . மறுநாள்  காலை. வில்வம்  கண்டுபிடித்து கொண்டுவந்த  பையனையே  கெஞ்சினார் "

 “அடே ஆபத்பாந்தவா!!! இன்னிக்கும் அந்த மண்டபம்  மூலைலே பந்தக்கால் பக்கத்துக்கு  திண்ணையிலே  வில்வம்  கிடைக்குமா  பாரேன்!!” 

 சொல்லிவச்சாப்போல்அதே  இடத்துலே  இன்னிக்கும்  ஒரு  பெரிய கூடை நிறைய  வில்வம்!!!  
மகாபெரியவா பூஜைக்கு தயாராகி  பூஜா  திரவியங்களை  நோட்டம்  விட்டு  வில்வ  கூடையை பார்த்துவிட்டு  ஸ்ரீ கார்யத்தை  அர்த்தபுஷ்டியுடன்  நோக்கினார்.
  "ஆமாம்!,   பெரியவா  இன்னிக்கும்  யாரோ கொண்டுவச்ச  வில்வ கூடை தான்  இது.” 
“ யார்  இப்படி  ரகசியமா  கொண்டு வக்கிரான்னு  கண்டுபிடி.  நாளைக்கு  விடிகாலம்பர முதல்ல  நீ  கண்காணி.  அந்த  ஆசாமியை  கையோட எங்கிட்ட   அழைச்சுண்டு வா””.

 மஹா பெரியவா  உத்தரவுப்படி  ஸ்ரீ  கார்யம்  மறுநாள்  அதிகாலை  மண்டபத்து ஓரம்  மறைந்துகொண்டு  வில்வம்  யார் கொண்டுவந்து  வைக்கிறார்கள்  என்று   காத்திருந்தபோது  எட்டரை  மணி சுமாருக்கு   ஒரு  தெலுங்கு பையன்,  தலையிலே  கட்டு குடுமி,  அழுக்கு வேஷ்டி மூலகச்ச வேஷ்டி,  தலையிலே  ஒரு  கூடையில்  வில்வம் எடுத்து வந்து  வழக்கம்  போல  பந்தக் கால்  அருகே வைத்துவிட்டு திரும்பும் போது  எதிரே  ஸ்ரீ கார்யம்  வழி மறித்து நின்றார்.  பையன்  ஸ்ரீ கார்யம்  காலில்  விழுந்து வணங்கினான்.  ஸ்ரீ கார்யம்  அரை குறை தெலுங்கிலே 

 "போய்  குளிச்சுட்டு,  தலையை  முடிஞ்சுண்டு, நெத்திக்கு  ஏதாவது  இட்டுண்டு  துவைத்த  வேஷ்டி வஸ்த்ரத்தொடு   மத்யானம் வா, சாமிகிட்டே அழைச்சுண்டு போறேன்””. என்றார்.   பையன்  தலையாட்டிவிட்டு  நழுவினான். 

மூணுமணி  சுமாருக்கு   வெள்ளை வேஷ்டி,  நெத்தி பூரா விபுதி,  எண்ணெய் வழிய  தலை வாரி குடுமி முடிஞ்சுண்டு  பயபக்தியோடு  அந்த  பையன்  மெதுவா  உள்ளே  நுழைஞ்சான்.  எதையோ  தேடிக்கொண்டிருந்த  பெரியவாளுடைய 
 விழிகள் அந்த பையனை பார்த்தவுடன்  மலர்ந்தது.  நமஸ்காரம் பண்ணி  ஓரமா  நின்ற  பையனை  அருகே  அழைத்தார்.
“நீ யாரப்பா  உன்னோடைய  பேர்  என்ன?
“புரந்தர கேசவலு”’ங்கய்யா.
“தமிழ்  பேசறியே,  எப்படி??”
“சாமி,  எங்கப்பாரு   தாங்க தமிழ் பேச சொல்லி  கொடுத்தாங்க. அம்மா ரெண்டு வயசிலேயே  பூட்டாங்க. நாங்கல்லாம்  மதுரை பக்கம்  உசிலம்பட்டிங்க.  அப்பாரு  புழைப்புக்கு  இங்க  எனக்கு  ஆறு வயசு இருக்கும்போது  கூட்டியாந்தாரு. ஜமீன்லே  மாடு மேக்கற  வேலை. பள்ளிக்கூடம்  போகலே.  அப்பாரு பாட்டுன்னா உயிரையே  விட்டுடுவாரு.  தியாகராஜ சாமி பாட்டு புரந்தரதாசரு  பாட்டு  எல்லாம்  பாடுவாரு.  எனக்கும்  சொல்லி குடுத்தாரு. இப்ப இல்லீங்க ரெண்டு வருஷம் முன்னாலே   பூட்டாரு.  நான்  தான்  இப்ப ஜமீன்லே  மாடு மேக்கறேன்.  பன்னண்டு  வயசுங்க  இப்போ””.
”அது சரி.  இந்த  ஊர்லே  வில்வம்  கிடையாதாமே .உனக்கு  மட்டும் எப்படி  எங்கே  கிடைச்சுது??”
“நாலு கல்லு  தாண்டி  மலை அடிவாரத்துலே மாடு மேக்கும்போது  ஒருதடவை  அப்பாரு, “” ஏலே,  புரந்தரா  இதோ
அந்தாக்கலே இருக்கு பாரு  மூணு  மரம்  அது தான்  வில்வம் மரம்.  சிவன்  சாமிக்கு  அது போட்டு  பூஜை பண்ணுவாங்க. ரொம்ப  விசேஷமான  இலை”” அப்படின்னு  சொன்னாரு. 
மூணு நாள்  முன்னே  ஜமீன்லே  அந்த  இலை  அர்ஜண்டா வேணும்  ண்டு  பேசிக்கிட்டாங்க.   சாமி,  மடத்துக்காரங்க  கூட
 இலையைக்காட்டி  வேணும்னு கேட்டாங்க. மாடு மேக்கறவன்   நா கொடுத்தா பூஜை செய்ய   வாங்க மாட்டாங்களோ ன்னு பயத்திலே தான்  யாருக்கும் தெரியாம  கூடையிலே  தெனமும்  கொண்டு வச்சேங்க.  சாமி  சத்தியமுங்க.  மன்னிப்பு கேக்கறேங்க””

மஹா பெரியவா  அவனை  கண்ணால்  பரிபூர்ணமாக  பார்த்தார் 
”புரந்தரகேசவலு  உனக்கு  என்ன  வேணும் கேள். ஏதாவது  ஆசை  இருந்தா சொல்லு மடத்திலேருந்து  செய்ய சொல்றேன்””  

 "சிவ சிவா!!  சாமி,  எங்கப்பாரு “ஏலே புரந்தரா,  எதுக்கும்  ஆசை படக்கூடாதுடாம்பாரு.  ஆனாலும்  எனக்கு  ரெண்டே  ரெண்டு ஆசைங்க.  ஒன்னு  இப்போ சொல்றேன் மத்தது  சாமி  இந்த ஊர்லேருந்து  போற  அன்னிக்கு  சொல்றேன்””  

கண்லே  பொலபொலன்னு  கண்ணீரோடு  அவன் சொன்னதை கேட்டு  மகாபெரியவா  மிக்க  பரிவுடன் 
”புரந்தரா,  உன்னுடைய  முதல்  ஆசையை என்கிட்டே சொல்லு”  .
'சாமி  எங்கப்பாரு  எனக்கு   புரந்தர தாசர்  தியாகராஜர்  பாட்டு எல்லாம் கொஞ்சம்  சொல்லி கொடுத்ததை  சாமி முன்னாலே நீங்கள் இந்த  ஊரிலே  இருக்கிறவரை   நான்  பாடி காட்டி  சாமி அதை கேக்கணும்””.  

மஹா பெரியவாளுக்கு புளகாங்கிதம் 
 “அப்படியே  ஆகட்டும்டா புரந்தரா.  நீ  பாடு  நான் கேக்கறேன். சந்திர  மௌலீஸ்வரர் கிருபை  உனக்கு உண்டு. க்ஷேமமா  இருப்பே”.   பெரியவா  பிரசாதமும் தன் கழுத்திலிருந்து  ஒரு  துளசி மாலையும்  அவனுக்கு  கொடுத்து  ஆசிர்வதித்தார்.

பெரியவா  ஊரில்  இருக்கும்வரை  தினமும்  வில்வமும்  புரந்தரன்  பாட்டும்  பெரியவாளுக்கு கிடைத்தது. அவன் குரல் இனிமையாக  இருந்தும்  உச்சரிப்பு பிழைகளை  அவ்வப்போது  பெரியவா  திருத்தி அவன் பாட்டில்  மகிழ்ந்தார்.

21 ம் நாள்  பெரியவா  ஊரை விட்டு  கிளம்பினார். அனைவருக்கும்  ஏக்கம். பிரசாதங்கள்  வழங்கி புறப்படும்போது பெரியவா கண்கள் எதையோ  தேடியது.  ஓரத்தில்  கண்களில் நீரோடு  ஒரு கம்பத்தை கட்டிக்கொண்டு  புரந்தரன் நின்று கொண்டிருந்தான்.  அவனை  கை காட்டி  அருகில் அழைத்து

” புரந்தரா, என்கிட்டே வா. உன்னுடைய  இரண்டாவது ஆசையை  இன்னிக்கு  சொல்றேன்னியே  அது  என்ன?  

“ சாமி  மாடு மேக்கறச்சே நாங்க  பேசிக்குவோம். அப்பாரு சொல்வாரு   ''இத பார்றா  புரந்தரா,  நமக்கு  சாமி கிட்டே ஒரு ஆசை தான்  கேக்கணும்.  செத்துட்டம்னா  மோட்சம் வேணும்னு  அது மட்டும்  தான்   கேக்கனும்பாரு.   சாமி,   எனக்கு  மோட்சம்  கிடைக்கணும்னு  அருள் செய்யுங்க,” 

இதைக்கேட்டு  அதிர்ந்து போன பரப்ரஹ்மம்  வாஞ்சையோடு  அவனுக்கு  அருளிற்று.
” புரந்தரா,   உரிய  காலத்தில்  உனக்கு  மோக்ஷம்  கிடைக்க  நான்  சந்திர மௌலீஸ்வரரை வேண்டிக்கறேன். நீ  சந்தோஷமா போ”.  ஆசிர்வதித்தார். பிறகு  ஜமீன்தாரை  கூப்பிட்டு   இந்த  புரந்தரகேசவன்  சம்பந்தமா  எல்லா  விஷயங்களையும் மடத்துக்கு  தெரியப்படுதுங்கோ””  என்றார்.

பல வருஷங்களுக்கு பிறகு ஒருநாள்  மத்யானம்  ரெண்டு மணி,    மடத்திலிருந்த மஹா பெரியவா திடீரென்று  எழுந்து காமாக்ஷி அம்மன் கோயில்  புஷ்கரணிக்கு  சென்று  ஸ்நானம்  பண்ணிவிட்டு  தியானத்தில்  அமர்ந்தார். விட்டு  விட்டு  ஒரு மணிக்கொருதரம்  புஷ்கரணியில்  ஸ்நானம், ஜபம்.  ஆறு மணி வரை  இது  தொடர்ந்தது. பெரியவா  கரையேறினா.   அப்போ ஏழு மணியிருக்கும்.  ஸ்ரீ கார்யம்  மடத்திலேருந்து  வேகமாக  சுவாமிகள் கிட்ட  வந்தார் . 
''என்ன?''  என்று  கண்களால் மஹா பெரியவா கேட்டார்.
”கர்னூல்லே இருந்து  தந்தி.  யாரோ ” புரந்தரகேசவலு சீரியஸ்””  னு  அனுப்பியிருக்கா.  யார்னு தெரியலே  பெரியவா””  .

 ஸ்ரீ கார்யத்திடம்  பெரியவா  சொன்னது இது தான்:

”புரந்தர கேசவன்  இப்போ இல்லை. விஷ ஜுரத்திலே அவஸ்தைப்பட்டு போய்ட்டு   வேறே பிறவி எடுத்துட்டான்.  அவனுக்கு  இன்னும்  ஆறு பிறவி இருக்கு.  அதுக்கப்பறம்  அவன்  மோக்ஷம்  போகணும்னு  சந்திர மௌலிஸ்வரரை  பிரார்த்தனை  பண்ணி  அவனுடைய  அடுத்த ஆறு பிறவிக்கும்  ஸ்நானம்  பண்ணி ஜபம் பிரார்த்தனை  பண்ணி அந்த  நல்ல  ஆத்மாவுக்கு  என்னுடைய  கடமையை செஞ்சுட்டேன்".  

 

sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:36 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com
விக்னேஸ்வரர் விக்னங்களை அகற்றுபவர் – எந்த காரியம் துவங்கும் முன்பும்  விநாயகரைப் பூஜிப்பதால் விக்னங்களை (தடைகளை) விலக்குவார். விநாயகர் அறிவின் கடவுள் – கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், ஞானம் எல்லாவற்றுக்கும் பிரதிநிதி.  ''பிள்ளையார் சுழி" போட்டு தான் எல்லாம் ஆரம்பம்.

பிள்ளையார்  ரூபா மஹத்வம்: – யானைத் தலை, மனித உடல் எனும் அரிய வடிவம். பெரிய காது (எல்லாமே கேட்க )), சிறிய கண்கள் (ஆழ்ந்த கவனம்), பெரிய வயிறு (எல்லாவற்றையும் ஏற்க,)  எல்லோரும் விரும்பும் பொதுவான தெய்வம்.  மோக்ஷம், பொருள், கல்வி, ஆரோக்கியம், அமைதி, செல்வம், நீதி,  எல்லாம் தருபவர்.
ஷோடஸ  நாமா;   16  பெயர்கள் ஸ்தோத்ரம்; மனப்பாடம் பண்ணலாம்;

சுமுகாய நமः – அழகிய முகமுடையவரே! வணக்கம்.  
ஏகதந்தாய நமः – ஒரே ஒரு தந்தமுடையவரே! வணக்கம்.
கபிலாய நமः – கபில நிறம் (சிகப்பு கலந்த மஞ்சள் நிறம்) உடையவரே! வணக்கம்.
கஜகர்ணகாய நமः – யானை போன்ற பெரிய காதுகள் உடையவரே! வணக்கம்.
லம்போதராய நமः – பெரிய வயிறு உடையவரே! வணக்கம்.
விகடாய நமः – வியப்பூட்டும் தன்மை உடையவரே! வணக்கம்.
விக்னராஜாய நமः – விக்னங்களை (தடைகளை) அகற்றும் அரசனே! வணக்கம்.
கணாத்யக்ஷாய நமः – கணங்களின் (தேவகணங்களின்) தலைவரே! வணக்கம்.
பாலசந்திராய நமः – தலையில் இளம் பிறை நிலவைத் தாங்கியவரே! வணக்கம்.
கஜானனாய நமः – யானை முகமுடையவரே! வணக்கம்.
வக்ரதுண்டாய நமः – வளைந்த தந்தமுடையவரே! வணக்கம்.
சூர்பகர்ணாய நமः – சூர்ப்பம் போல (விசிறி போல) பெரிய காதுடையவரே! வணக்கம்.
ஹேரம்பாய நமः – சகலருக்கும் அருள் புரிவோனே! வணக்கம்.
ஸ்கந்தபூர்வஜாய நமः – முருகனின் அண்ணனே! வணக்கம்.
விநாயகாய நமः – அனைத்திற்கும் முதல்வனே! வணக்கம்.
விக்னேஸ்வராய நமः – தடைகளைக் களைப்பவனே! வணக்கம்.

sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:36 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com
துருவன் -   நங்கநல்லூர்  J K  SIVAN 

ஹிந்து சரித்ரங்களில், புராணங்களில், சில  சிறுவர்கள்  மங்காப்  புகழ் கொண்ட அற்புதர்கள். திருஞான சம்பந்தர், பிரஹலாதன், நசிகேதஸ், துருவன், மார்க்கண்டேயன்... இன்னும் எத்தனையோ பெயர்கள்.  இது போல் வேறு மத புராணங்களில் காண்பது அரிது.  இப்போது  துருவனைப் பற்றி பேசுவோம்.  அவனை ஞாபகம் இருக்கிறதா? வானிலே  தோன்றும் துருவ நக்ஷத்ரம் அவனை நினைவூட்டுகிறதா? அவன் சரித்திரம் தெரியுமா?  அவனை குழந்தைகளுக்கு சொல்வீர்களா? அவர்களுக்கு தெரிய வேண்டாமா? பள்ளிக்கூட பாடத்தில் துருவன் இருக்க மாட்டானே.

ஸ்வயம்பு மனு என்ற  ஆதிகால ப்ரம்மாவின் வம்சாவளியில்  ஒருவர். அந்த வம்சாவழியில்  ஒரு  ராஜா உத்தானபாதன்.  அவனுக்கு  ரெண்டு மனைவிகள். சுனிதி,  சுருசி,  ராஜாவுக்கு சுருசி மேல் தான் பிரியம் அதிகம். சுனிதிக்கு பிறந்த மகன்  துருவன். சுருசிக்கும் ஒரு பிள்ளை. அவன் செல்லப்பிள்ளை. 

ஒருநாள்  ராஜா  உத்தானபாதன் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டிருந்தபோது  சுருசியின் பிள்ளை ஓடிவந்து அப்பாவின் மடியில் உட்கார்ந்தான். அதைப் பார்த்த இன்னொரு சிறுவன் துருவன் தானும் அப்பா மடியில் உட்கார வந்தான்.  அந்த குழந்தையை சுருசி தடுக்கிறாள். 

“நீ ராஜா மடியில் உட்கார முடியாது. நீ  எங்கள் மகன் இல்லை. உன் அம்மாவை ராஜாவுக்கு பிடிக்காது. போ '  என்று பிடித்து அவனை தள்ளுகிறாள்.  துருவன் அழுதபடி  அம்மா  சுனிதியிடம் நடந்ததைச் சொல்கிறான். 
நிர்க்கதியான சுனிதி அழுது கொண்டே மகனை அணைத்துக் கொண்டு  ஆறுதல் சொல்கிறாள்.

 ''துருவா, உன் சித்தி  சுருசி சொன்னது  உண்மைதான்.  அப்பாவுக்கு என்னையும் உன்னையும் பிடிக்கவில்லையடா. உனக்கும்  எனக்கும் இந்த உலகில் அன்பும் மரியாதையும் தரக்கூடியவர்  ஒருவர் தான்  இருக்கிறார். அவர் தான்  பகவான். அவர் அருளால் மட்டும் தான் உன் நிலை உயரும்''

''யார்  அம்மா அவர், அவரைப் பார்க்க  நான் என்ன செய்யவேண்டும்?''

''துருவா நீ காட்டுக்கு போ. அங்கே பகவானே என்று தியானம் பண்ணு  அவர் கிடைப்பார். உனக்கு உதவுவார்''

ஐந்து வயது துருவன் காட்டுக்கு செல்கிறான்.   பாதி காட்டு வழியில்  நாரதர் அவன் எதிரே வருகிறார்.

“யாரப்பா குழந்தை நீ, எதற்கு இந்த கொடிய வனவிலங்குகள்  உள்ள காட்டுக்கு வந்தாய்?''

''தாத்தா,  நான் துருவன், என் அம்மா என்னை காட்டுக்குப்  போய்  தவம் பண்ண  அனுப்பினாள்''  என்று நடந்ததை சொல்கிறான் துருவன்''

''துருவா,  நீ குழந்தை, உனக்கு தவம் செய்யும் வயதில்லை, வீட்டுக்கு போ'' என்கிறார் நாரதர். துருவன் பிடிவாதமாக '' இல்லை தாத்தா, நான் கட்டாயம் தவம் செய்ய வேண்டும்  பகவானைப் பார்க்க வேண்டும்'' என்கிறான்.

''அப்படியானால்  நீ நாராயணனை ப்ரார்த்தனை செய்,  “ஓம் நமோ பகவதே வாஸுதேவாய” என்று மந்திரம் சொல்லி தவம் செய். நாராயணன் உனக்கு முன் தோன்றுவார் '' என்று உபதேசிக்கிறார். 

யமுனை நதிக்கரையில் அமர்ந்து துருவன் விடாது  தவம் செய்கிறான். அன்ன ஆகாரம் இன்றி  ஐந்து மாதங்கள் தவம் தொடர்கிறது.  நாராயணன், மஹா விஷ்ணு துருவன் முன் பிரசன்னம் ஆகிறார். துருவனை அணைத்து  அவர் அனுக் ரஹத்தால்  துருவன்  ராஜாவாகிறான். சிறந்த நேர்மையான ராஜாவாகி, பின்னர்  இறைவன் அருளால்  என்றும் நிரந்தரமான துருவ நக்ஷத்ரமாகிறான்.  polaris ,  north  star  என்று இன்றும் அவனை நாம் காண்கிறோம்.   உலகத்துக்கே  திசை காட்டியாக வழி நடத்துகிறான். 


sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:36 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com
 திருமந்திர சித்தர்.-   நங்கநல்லூர் J K  SIVAN 

'நான்''

பசுக்களை  மேய்க்கும்  ஒரு நல்ல  இடையன் திடீரென்று மாரடைப்பால் இறந்து விடுகிறான்.  வீட்டுக்கு மாலையில் மேய்ச்சல் முடிந்து பசுக்களை அழைத்துச் செல்ல அவன் இல்லை. பசுக்கள் கண்ணீர் விட்டு ''அம்மா '' என்று கதறுவதை அங்கே வந்த ஒரு சித்தர் பார்க்கிறார். அவருக்கு சகல சித்துக்களும் கை வந்த கலை . ஆகவே  கூடு விட்டு கூடு பாயும்   வித்தையை  பிரயோகித்து தன்னுடைய  உடலை அந்த மாட்டிடையன் உடலில் செலுத்தி  மூலன் எனும் அந்த இடையனா கிறார்.  வீட்டிற்கு சென்ற  மூனின்  நடவடிக்கை, பேச்சு, ஞானம் எல்லாமே  வித்யாசமாக இருந்ததால் அவன் மனைவி ஆச்சர்யமும் சங்தேகமும்  கொள்கிறாள்.   ஊரில் பஞ்சாயத்தார்  கூடி விசாரித்து  மூலனின் உடலில் இருப்பது யாரோ ஒரு ஞானி என அறிகிறார்கள். 'மூலன்'வீட்டை விட்டு தனியே  சென்று த்யானத்தில் அமர்ந்து சித்தனாக வாழ்கிறான்.

'மூலன்' தான் அவனுள்ளே இருக்கும் சித்தர் ''திருமூலர்''.  மூவாயிரம் வாழ்ந்த சித்தர் அவர் ஒருவர் தான்.  வருஷத்துக்கு ஒரு மந்திரம் உரைத்தவர்.  மந்திரம் என்பது அவரது நாலுவரி  தமிழ்ப்  பாடல். அற்புதமானது. ஈடிணையற்றது. ஒரு சிலவற்றை அறிவோம். அதற்கு முன் நேற்றைய சம்பவம் ஒன்று.  

நேற்றிரவு  TMS   குரல் கணீரென்று  யூட்யூபில் கேட்டது  ''நான் யார். நான்,யார் நீ யார், நாலும் தெரிந்தவர் யார் யார்?''  இந்த பாட்டில்  TMS   கேட்கும் கேள்வியை நாம் கேட்டிருக்கிறோமா?  நாம் யார்?  சித்தர்கள், மஹரிஷிகள் அறிவார்கள். 

TMS  கேள்விக்கு பதில் தேடவேண்டாமா? நான் யோசிக்கும்போது தான் என் புத்தக அலமாரியில்  திருமூலர்  திருமந்திர மாக தெரிந்தார்.  எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.  புத்தகத்தைப்   பிரித்தேன். 

''உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்.
உடம்பினுக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே.''

ஆஹா, இந்த  86+ வரை உண்மையிலே எனக்கு இந்த உடம்பை பற்றி தெரிந்ததெல்லாம் சொல்பம் தான். ஏதோ  ஒரு காலத்தில் இளம்  வயதில் சுகமாக வெந்நீரில் குளித்து, நிறைய பவுடர், வாசனாதி திரவியம் அணிந்து, நல்ல பளபள பாட்டாடைகள் அணிந்து அதற்கு அங்கங்கே ஆபரணங்கள் பூட்டி கண்ணாடியையே சுற்றி வந்து அதன் அழகை முன்னும் பின்னும் பார்த்து இதற்கு ''நான்'' என்று ஒரு பெயரும் சூட்டி அடிக்கடி கலர் கலராக போட்டோ வில் ''நான்'' என்னையே பார்த்துக்  கொண்டு ''அச்சில் வரும் ''என்னை'' --அதாவது என் பெயரையே--திரும்ப திரும்ப படித்துக்கொண்டிருக்கிறவன். என் பெயரோ படமோ பத்திரிகை யில் வந்தால், அதை வெட்டி, ஒட்டி வைத்துக் கொண்டிருந்த காலமும் உண்டு.  இந்த உடம்பை பற்றி அப்பப்போ கொஞ்சம் பயமும் உண்டு. வயோதிகம், வியாதி, நரை திரை, வழுக்கை., சுருக்கம் இதெல்லாம் பயமுறுத்தும்  போது ஏதாவது சினிமா பாட்டு பாடிக்கொண்டு மறந்து விடுவேன்.

என்னவோ தெரியவில்லை. மேலே சொன்ன திருமூலர் மந்திரம் ( திருமூலரின் நான்கு வரிப்பாடல்கள் திருமந்திரம் எனப்படும்) என்னை அடியோடு கவிழ்த்துப் போட்டுவிட்டதே. என்னை மட்டுமா?  எத்தனையோ பேரை. அவர்கள் கொஞ்சம்  திருமூலர் பாடல்களை ஊன்றி  படித்தால் சாமியாராக  மாறிவிடுவார்கள்.   அழகாக இருந்த உடல் அழுக்கு  மூட்டையாக தெரியும்.

உடம்பு என்றால் ஏதோ ஒரு அசுத்தமான ஒன்று அதை அடிக்கடி சுத்தம் செய்து வாசனையாக வைத்துக்கொள்ளவேண்டும், வியாதி, வயோதிகம், நரை திரை, உள்ளது என்று தான் நினைத்தேன்.  ஆனால் அதற்குள்ளே இதுவரை ''நான்'' அறியாத ஏதோ ஒன்று இருப்பதை கண்டுகொண்டேன். அடாடா என் உடல் உண்மையில் ஒரு கோயிலா? இதையா நான் குப்பைக்கூடையாக வைத்துக்கொண்டிருந்தேன்? அந்த கோயிலில் பரமன்   ஆத்மநாதன் அல்லவே குடியிருக்கிறான். தெரியாமல் போய்விட்டதே.    ஆமாம்.   இதை உடம்பும் அதில் இருப்பதும்  உண்மையில்  ''நான்'' அல்ல, இது இன்னொருத்தர்  -- ''பெரும்-ஆள்'' (பெருமாள்) இருக்கும் இடம் போல இருக்கிறதே என்று புரிந்து கொண்டேனா?. அதற்கப்புறம் என்ன ஆச்சர்யம். நான் கோவிலுக்கு போகவில்லை சார்..... இந்த உடம்பையே அவன் ஆலயமாக கருதி என்னுள்ளே அவனை வணங்கிக் கொண்டிருக்கிறேன்.''

இத்தனை கழுதை வயதிலும் (எங்கள் காலத்தில் பரமேஸ்வர வாத்யார் யாரைப் பார்த்தாலும் அவனுக்கு நாலு கழுதை வயது, எட்டு கழுதை வயது என்று தான் சொல்வார். அவருக்கு எத்தனை கழுதை வயது இருக்கலாம் என்று எனக்கு தெரியாத வயது) தெரியாத இந்த சிறிய நாலு வரி மந்திரத்தை எனக்கு ஒரு பழைய புத்தகக் கடையில் ரெண்டு ரூபாவுக்கு அட்டை போன கிழிசலாக வந்த திருமூலர் அல்லவோ உபதேசித்தார். இனி அவரை விடுவதில்லை. அவர் சகலருக்கும் அல்லவோ குரு. அவர் நிறைய சொல்கிறாரே.   நிறைய திருமந்திரம் படிப்போம். பேசுவோம். 

sivan jaykay

unread,
Aug 30, 2025, 2:49:47 AM (7 days ago) Aug 30
to amrith...@googlegroups.com
ராவ்ஜிக்கு பாடம் - நங்கநல்லூர் J K SIVAN

நம்மில் சிலர் தொட்டாசிணுங்கிகள் . எப்போது எதற்காக கோபம் வரும் என்று சொல்ல முடியாது. பொசுக்கென்று கோபம் வந்து விடும் கத்துவார்கள்.
என் நண்பர் ரகோத்தம ராவ் அப்படி ஒருவர். சில சமயம் மாலை மாலையாக கண்ணீர் விடுவார். தேம்பி தேம்பி ஸ்லேட்டு குச்சி, பலப்பம் தொலைத்த பையன் போல் அழுவார். சின்ன விஷயங்களைக்கூட பல வருஷங்கள் ஞாபகம் வைத்துக்கொண்டு சிரிப் பார், பல்லைக் கடிப்பார், பெருமூச்சு விடுவார். நிறைய பேர் இப்படி இறைவன் படைப்பில் உண்டு.
ராவ்ஜிக்கு குடும்பத்தில் ஆயிரம் உட்பூசல். என்னிடம் வந்து முறையிடுவார். பேசாமல் கேட்பதோடு சரி. அவர் ஆற்றாமைக் காக தானே வந்து சொல்கிறார். பேசாமல் கேட்டுக்கொண்டு இருந்தாலே மனம் ஆறுதல் பெறும்.
போன சனிக்கிழமை காலையிலேயே வந்து விட்டார். அன்று ஏதோ விசனமாக இருந்தார்.
'' ராவ்ஜி டல்லாக இருக்காதேங்கோ. எந்த கவலையம் மனசில் படாதேங்கோ. அனாவசியமாக மனதைப் போட்டு அலைக் கழிக்காதேங்கோ.
''இந்த வார்த்தைக்காக தான் நான் உங்க கிட்டே வரேன். வம்பு கேட்காம ஏதோ ஆறுதல் சொல்றேள். நிம்மதியா இருக்கு. இன்னிக்கும் மனசுக்கு தெம்பு மூட்டறாமாதிரி ஏதாவது சொல்லுங்கோ ஸார் ''.
''ஆஹா எனக்கு தெரிஞ்சதை சொல்றேனே. இந்தாங் கோ பழைய டையரிலே அப்பப்போ தோணறதை எழுதி வச்சிருக்கேன் வீட்டுக்கு எடுத்துண்டு போய் படியுங் கோ.
''நீங்களே ஒரு தடவை படிச்சு சொல்லுங்கோ கேக்க றேன் ''
'இதெல்லாம் படிச்சா மட்டும் போதாது ராவ்ஜி. கொஞ் சம் யோசிக்கணும். தனியா உட்கார்ந்து அதைப் பத்தி சிந்தனை பண்ணனும். அது தான் ரொம்ப அவசியம். வெறுமே படிச்சுட்டு தலையாட்றதாலே கழுத்து தான் சுளுக்கிக்கும். விஷயம் மூளைக்கு போகணும். அப்போ தான் உபயோகப்படும். எத்தனையோ மஹான்கள், அனுபவஸ்தர்கள் சொன்ன வார்த்தைகள் இதெல்லாம். கேளுங்கோ. இதைப் படிக்கும் நண்பர்களே உங்களுக் கும் தான். கவனியுங்கள்
.++
1. பிறத்தியார் உன்னை எப்படி பாக்கணும்னு நினைக் காதே. நீ எப்படி இருக்கணும் னு நினைக்கிறாயோ அப்படியே இரு. மற்றவர் மதிப்பீடு உன் எதிர்பார்ப்பு மாதிரி இருக்காது என்பதை முதலில் தெரிஞ்சுக்கோ .
2. வாழ்க்கை வாழ்வதற்கே. நடிப்பதற்கு அல்ல. மற்ற வரை கவர முயற்சிக்காதே. அதனால் எந்த பயனும் இல்லை. இதனால் மற்றவர் மட்டுமல்ல உன்னையும் நீ ஏமாற்றிக்கொள்வாய்.
3. சந்தோஷம் வேண்டுமானால் வாழ்க்கையில் எது அத்யாவசியமோ அதைத் தேடு. பார்ப்பதை, ஆசைப் படுவதை எல்லாம் துரத்தாதே. ஏமாற்றும். கனவை துரத்தினவனுக்கு அது அகப்பட்டதே இல்லை. கானல் நீர் கதை தான்.
4. எவ்வளவோ மழை நீர் கடலில் விழுந்தாலும் இருந்த இடம் தெரியாது. ஒரு துளி இலையின் மேல் பட்டால் அது முத்துப் போல் ஜொலிக்குமே. எங்கு உன் திறமை யைக் காட்டவேண்டுமோ அங்கு காட்டு. நீயும் அது போல் ஜொலிப்பாய்.
5. நீ வெற்றி அடைந்தால் உன்னை வாழ்த்துபவர் நீ யாரென்று அறிவார்கள். நீ வீழ்ந்த சமயம் தான் உன் னை உண்மையாக நேசிப்பவர் கண்ணில் படுவார்கள்.
6. உன் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை நீ அன்றா டம் விடும் மூச்சு அளப்பதில்லை. எந்த சந்தர்ப்பத்தில் மூச்சு வெளியேறியது என்பது தான் நிர்ணயிக்கும்.
7. தைரியம் என்பது உன் தவறுகளை நீ ஏற்றுக் கொள் வதும் திருத்திக் கொள்வதும் தான். மற்றவர்களை அடக்கி ஆள்வதில் இல்லை.
8. முயற்சி தான் முக்கியம் என்பது வாஸ்தவம். ஆனால் எங்கே? எதற்காக? ஏன் முயற்சி அவசியம் என்பதை நன்றாக அறிந்து பிறகு அதை தொடங்க வேண்டும். இது தான் வெற்றி பெறுபவர்களுக்கும் பெறாதவர்களுக்கும் உள்ள வித்யாசம்.
9. கோபாலன் சொன்னான், கோவிந்தன் சொன்னான் என்று எதையும் ஏற்காதே. சரியான அனுபவஸ்தன், உன்னிடம் உண்மையான அக்கறை கொண்டவனைப் பின்பற்று. இல்லாவிட்டால் கருங்கல்லை பொறுக்குவ திலேயே காலம் போய்விடும். அதனால் எப்படி வைரம் கிடைக்கும்?. வாழ்வில் இது முக்ய பாடம்.
10. ரொம்ப ''உறுதியானவன்'' என சொல்லும்போது , வலி என்றால் என்ன என்றே அறியாதவன் என்று அர்த்தம் அல்ல. உண்மையிலேயே, உறுதியானவன் தான் வலியைப் பற்றி நன்றாக தெரிந்தவன். அதை ஏற்பவன்.உனது வலியின் காரணமாக எவனாவது சிரித்தது உண்டு என்றாலும் உனது சிரிப்பினால் மற்றவன் காயம் அடையக்கூடாது.
11. எதிர்பார்ப்பதெல்லாம் தானாகவே வரவே வராது. உழைப்பு, வியர்வை சிந்தி, முட்டி மோதி அடைந்ததாக இருந்தால் அதற்கு தனி மதிப்பும் பெருமையும் கிடைக் கும். உன்னை யார் என்று உலகம் அறிய வைக் கும். குழந்தைகளை இளம் வயதிலேயே உழைப் பு என்றால் என்ன என்று புரிய வைக்க வேண் டும். வாழ்க்கை சுலபமானதல்ல என்று அறிந்தால் அவர்கள் பின்னால் கஷ்டப்பட மாட்டார்கள். கஷ்டம் வந்தால் அதை எதிர் கொள்ள தெரியாமல் திண்டாடுவார்கள்.

sivan jaykay

unread,
Aug 30, 2025, 2:49:47 AM (7 days ago) Aug 30
to amrith...@googlegroups.com
 திருமந்திர சித்தர்  -   நங்கநல்லூர்  J.K. SIVAN

ஆன்மிகம்  என்பது  இப்போது சிலருக்கு  கிள்ளுக்கீரையாகி விட என்ன காரணம்?   ஆன்மீகத்தைப் பற்றிய  சரியான விஷயங்கள் போதிய அளவு  பரவாதது.  ஆரவாரம் அமைதியற்ற  ஆக்ரோஷம்,  விஷயம் புரியாத எதிர்ப்பு, இவற்றை    அடையாளம் கண்டுகொண்டவர்களுக்கு மட்டுமே  ஆன்மிகம் புரியும்.   தங்களை ஆன்மீக வாதிகளாக பிரபலப்படுத்திக் கொள்பவர்களால் தான் ஆன்மீகத்துக்கே  இழுக்கு.  ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவையே இல்லை.  அது ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும்  அன்பால், பண்பால்  வளர்வது.. ஆன்மிகம்  வாழ்வை சீர்படுத்தவே அன்றி ஒரு பிழைக்கும் வழியானது சந்தர்ப்பவாதிகளால் தான். ஆன்மீகம்  வருமானம்  ஈட்ட அல்ல. இருப்பதை அள்ளிக் கொடுக்கும் மனத்தை வளர்க்க.   உண்மையான ஆன்மீக குருமார்களுக்கு இடையே  வேறுபாடு, வித்யாசம், சர்ச்சைள்  என்றும் நெருங்காது.  சுயநலம்  உள்ளே இருப்பவர்களுக்கிடையே தான் யுத்தம்.

காற்று வாக்கில் இது இப்படி தான் இருக்கப்போகிறது என்பது  ஆயிரமாயிரம் 
 வருஷங்களுக்கு முன்பே திருமூலருக்கு தெரிந்திருக்கிறது. ஒரு குருவை நாம் ஏற்றுக் கொள்வதானால் அவர் எப்படிப் பட்டவராக இருக்க வேண்டும். எவரை நாம் குரு வென சுவீகரிக்க வேண்டும் என்று தெளிவாக ஒரு திருமந்திரத்தில் அழகாக எளிமையாக நல்ல உதாரணத்தோடு கூறுகிறார் பாருங்கள்.

திருமூலர் எப்போதுமே பளிச்சென்று எதையும் சொல்பவர். அஞ்ஞானத்தில் தான் உழன்றுகொண்டு, அதுவே புரியாமல் அடுத்தவனுக்கு அஞ்ஞானத்தை போக்க முயலும் ஒருவன் குருவா? இப்படிப்பட்ட குருவை ஒருவன் அடைவது எது போலவாம்?   ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு வழிகாட்டப்  போய் ரெண்டு குருடும் சேர்ந்து வழியில், ஒரு குழியில் விழுந்தது மாதிரி   என்கிறார்.  

''குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்,
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழுமாறே''

திரிபுரம் அழித்து திரிபுராந்தகனை சிவன் வென்றான் என்று புராணங்கள் சொல்கிறது இருக்கட்டும். உண்மையிலேயே திரிபுராந்தகனின் மூன்று  கோட்டைகளும் அழிந்ததோ இல்லையோ இதற்கு வேறு ஒரு அருமையான அரத்தத்தை திருமூலர் விளக்கும் திருமந்திரம் ஒன்று இதோ.

''அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே

கங்கை நீரைத் தனது விரித்த செஞ்சடை மேல் தாங்கிய முழு முதல் கடவுள் பரம சிவன் திரிபுராந்தகனின் மூன்று வலிமையான கோட்டைகளை  எரித்தான். உண்மையிலேயே அவை வேறொன்றுமில்லை. மும்மலங்கலான ஆணவம், கன்மம், மாயை என்கிறவற்றை அழித்ததையே குறிக்கும்.. சிவன்  இவ்வாறு செய்த பெருஞ்செயலை யாரால் அறிய முடியும்? என்று வியக்கிறார் திருமூலர்.

கடைசியாக ஒன்று.

'ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்
ஒருவனு .மேஉல கோடுயிர் தானே''

இ ந்த மந்திரம் சொல்லும் உண்மை:   சிவன் ஒருவன் தான் சதாசிவன் என்கிற உயர் தெய்வம் . ஏழ் உலகங்களும் படைக்க காரணன். அவன் தான் இந்த ஏழு உலகங்களையும் படைத்ததோடு அல்லாமல் காக்கின்றான். அது மட்டுமா. அந்த ஏழு உலகங்களையும் கண்ட்ரோலில் வைத்து ஒடுக்குகிறான். உலகம் என்று சொல்லும்போது அதனுள் வாழும் எண்ணற்ற பல கோடி உயிர்களையும் தான் குறிப்பிடுகிறார்.அவை அத்தனைக்கும் அவனே வாழும் உலகமாகவும் அவற்றினுள்ளே உயிராகவும் உள்ளான். ஹரன்  தான்  ஹரி, எப்பெயரிலும் இருப்பவன் அவன் ஒருவனே. 
 

sivan jaykay

unread,
Aug 30, 2025, 2:49:47 AM (7 days ago) Aug 30
to amrith...@googlegroups.com

கற்றுக் கொள்வோம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

மஹா பெரியவா தனது நூறு வருஷங்கள்  ஜகத் குருவாக  உபதேசித்த  அற்புத வார்த்தைகள் மறக்க முடியாதவை. பலரையும் சென்றடைய வேண்டியவை.  என் மனதில் நான்  சேர்த்து   வைத்திருக்கிற சில குறிப்புகள் இவை. உங்களுக்கு பிடித்திருந்தால், எல்லோர்க்கும் உபயோகப்படும் என்று தோன்றினால் இந்த  வார்த்தைகளை உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லோரிடமும் பரப்புங்கள்.  இன்னும் சொல்கிறேன்.

"புண்ய கர்மா என்றால் என்ன?  ஒவ்வொருத்தருக்கும் வேதம் விதித்த கர்மம் தான். இந்த பூலோக வாழ்க்கை ஆகட்டும், அறிவினால் நடக்கிற கார்யம்,  ராஜாங்க ரீதியில் நடப்பவை,  சரீர   உழைப்பினால் நடக்கிற காrரியம் எல்லாமே  ஒன்றுக்கொன்று  வித்யாசமாக, முரண்பட்டு இல்லாமல் ஒத்துப்போகணும்.   சமூகம் அப்போ தான் சீர் படும். பாப சிந்தனைகளுக்கு  இடம் கொடுக்காமல் புண்ணிய எண்ணங்கள் மனதில் வளரணும். பிற உயிர்களுக்கு நம்மாலான  சேவை செய்யணும்.   இதை தான் ''அன்பு''  ன்னு சொல்லி இருக்கிறார்கள்.  எதை செய்தாலும் அதில் சுயநலம், அசூயை, வஞ்சனை இருக்கவே கூடாது. 

நாம் கண்ணால் பார்க்கும் வஸ்துக்களை வேறு படுத்தி பார்க்கிறோம். இது ரோஜா, இது ஊமத்தை என்கிறோம்.  ஞானப்
பார்வையில் எல்லாமே ஒன்று. எல்லாமே  ஆனந்தம் தான்.  சித்தத்தில் அழுக்கு சேர்ந்தால் தான் வித்யாசமாகும். 
ஒருத்தனுக்கு  கொஞ்சம் நிலம் இருந்தது.  வருஷா வருஷம் நல்ல விளைச்சல்.  ''என்னுடைய வயல்''  என்று பெருமை, ஆனந்தம்.  விளைச்சல்  குறைய ஆரம்பித்தது. வயலை விற்று விட்டான்.   இப்போது அதில் அபரிமிதமாக விளைச்சல். அப்போது அவனுக்கு வயிற்றெரிச்சல்..  எனது என்று வரும்போது தான் இந்த வித்யாசம். புரிகிறதா?

சித்த ஸ்வாதீனம் இல்லாதவனிடம்  ''இந்தா இந்த கழியை  கால்மணிநேரம்  பிடித்துக்கொண்டு இரு  ''என்றால் அவனால் முடியாது. அவன் சிந்தனை அவன் கட்டுப்பாட்டில் இல்லை.  நாமும்  சித்த சுவாதீனம் இல்லாதவர்கள் தான்.  எந்த நல்ல எண்ணத்தையும் நம் மனதால் பிடித்து வைத்துக்கொள்ள முடிவதில்லை.  மனம் மாறிக்கொண்டே இருக்கிறது.

மனம் முழுதும் ஈடுபட்ட சங்கீதத்தால்  பக்தி வளரும்.  ஈஸ்வர அனுக்ரஹம் பெறலாம். க்ஷத்திரியன் என்பவன் பிறரை பாதுகாப்பவன்.  அது தான் க்ஷத்ர தர்மம்.     நமது மனதில் தீமை நெருங்காமல்   அதை இரவும் பாது காக்க  காவல் இருந்து  நாம் ஒவ்வொருவரும் க்ஷத்ர தர்மத்தை கடைப்பிடிக்கலாமே .

இதமான  மிருதுவான வார்த்தைகளையே அளவோடு  உபயோகிப்போம். பிறர் மனது மகிழும். எதற்கு கனி இருக்கும்போது காய் என்கிறார் வள்ளுவரும்.  'கனியிருப்ப காய் கவர்ந்தற்று'  அற்புதமான வாக்கு. இப்படி பேசும்போது புத்தியில் ஒரு
தீக்ஷண்யமும், வாக்கில் ஒரு பிரகாசமும். சக்தியும்  சேரும்.   ''நா காக்க''  இது தான்.

எண்ணற்ற ஆசைகள்  மனதில் உண்டாகிறது.  அத்தனையும்  நிறைவேறுவது சாத்தியமா?இதனால் ஏமாற்றம், கோபம், பொறாமை வளர்கிறது.  ''போதும்'' என்கிற மனம் பொன் .

பொழுது போனால் திரும்ப வராது.  ஒவ்வொரு கணத்தையும்  வீணாக்காமல் திருப்தியாக லோகசம்ரக்ஷணைக்காக  செலவழிக்க கற்றுக்கொள்ளவேண்டும். உல்லாஸ  பொழுது போக்கு  நிரந்தர ஆனந்தம் இல்லையே.

மனமும் வாக்கும் ஒன்றுபட வேண்டும்.  அது தான் சத்யம்.  'உள்ளொன்று வைத்து புறமொன்று வேண்டாம்''என எவ்வளவு அழகாக  வள்ளலார்  பாடியுள்ளார். 

சிறு  பிராயத்திலிருந்தே  ஆத்மீகம், பக்தியில் நாட்டம் ஏற்பட பெற்றோர் முயற்சி செய்தால்  அடுத்த தலைமுறை அற்புதமாக உருவெடுக்கும். எங்கும் சுபிக்ஷம் நிலவும்.  இப்போது நாம் காணும்  கொலை, கொள்ளை, எல்லாமே நல்ல வழியில் செல்லாத, மனசாட்சியை மறுக்கும்  சிலரால் என்பது  புரிய வேண்டும்.  பல  வருஷங்களுக்கு முன்  பள்ளிக் கூடங்களில்  மனப்பாடம் செய்ய நல்ல பாடல்கள் ஸ்லோகங்கள் கற்று கொடுத்தார்கள், பக்தி , பொதுநல சேவை, தர்மம், சத்யம் போன்றவை பாடங்களில் சில பக்கங்களில்  இருந்தது..  இப்போது அவை மறைந்தது காலத்தின் கோளாறினால்.

sivan jaykay

unread,
Aug 30, 2025, 2:49:47 AM (7 days ago) Aug 30
to amrith...@googlegroups.com
ஞானக் குழந்தை  --  நங்கநல்லூர்  J K  SIVAN 

 நான் அறுபத்து மூன்று நாயன்மார்களை பற்றி எழுதும்போது என்னையறியாமல் அதிசயத்தில் திகைத்தது  திரு ஞான சம்பந்தர் வரலாறு பற்றி விரல்கள் கம்ப்யூட்டரில் ஓடும்போது.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்  அல்லது சம்பந்தர் என்பவர்  அப்பர் எனும் திரு நாவுக்கரசர் காலத்தவர். சைவ சமய குரவர்கள்  நால்வரில் முக்யமான ஒருவர்.   இவருடைய வேறு பெயர்கள் சம்பந்தர், காழி வள்ளல், ஆளுடைய பிள்ளை, பாலரா வாயர், பரசமய கோளரி என்பன.  7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

அவர்  ஆயுட்காலம் பதினாறு வருஷங்கள் தான். அடடா  என்ன அற்புத சேவை.  அதற்குள்  16000 தேவாரங்களா??  (நமக்கு கிடைத்ததோ 384 தான் ) எண்ணற்ற சிவ  ஸ்தலங்களுக்கு விஜயம், எத்தனையோ மத வாதி களோடு தர்க்கத்தில் வெற்றி.  புத்த சமண மதங்களின்  ஆதிக்கத்தை வீழ்த்தி சைவ சமயத்தை தழைத்தோங்க செய்தவர்.  பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் சம்பந்தர்  தேவார பாடல்கள்.  சம்பந்தர் வரலாற்றை  சேக்கிழார்   பெரியபுராணத்தில் 1256 பாடல்களில்  விவரிக்கிறார். 

ஞான சம்பந்தருக்கு ஆலயம் ஒன்று  தஞ்சாவூரில்,  ஒரத்த நாட்டில்  பேய்க்கரும்பன்கோட்டை என்ற கிராமத்தில் உள்ளது.  ஒரு நாள் போக வேண்டும். இங்கே  சம்பந்தர் தான் மூலவர். உத்ஸவர்  ரெண்டுமே.  , தஞ்சாவூர் -- பட்டுக்கோட்டை சாலையில் புலவன்காடு  எனும் கிராமத்துக்கு  கிழக்கே   ஒன்றரை  கி.மீ. ல் உள்ள கோவில். 

காஞ்சிபுரத்தில் பிள்ளையார்பாளையம் திருமேற்றளித் தெருவில்   சம்பந்தருக்கு ஒரு கோவில் இருக்கிறது.  திருவள்ளூர்  வடமதுரை கிராமத்தில்  ஒரு கோவில் உள்ளது. 

சோழ ராஜ்யத்தில் சீர்காழிக்கு பலபெயர்கள் உண்டு.  பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சை வயம், கழுமலம் என்பவை அவை.   அந்த ஊரில்  கவுண்டின்ய ரிஷி கோத்திரத்தில் சிவபாத ஹ்ருதயர், பகவதி தம்பதியருக்கு பிறந்தவர்  சம்பந்தர்.  அக்காலத்தில்  சமண புத்த மதங்கள் எங்கும்  தலை தூக்கி நின்றன.  ஹிந்து வேத நெறி வளர்ச்சி குன்றியிருந்தது..

''பரமேஸ்வரா, என்ன அக்கிரமம் இது. இந்த  மாந்தர் களின் ஆணவத்தை ஒடுக்கி, அடக்கி, வேதநெறி பின்பற்றும் சைவ மதம் சிறந்தோங்க   நீ என்ன செய்யப் போகிறாய். யாராவது  ஒரு ஞானியை  நீ ஏன் இன்னும் தரவில்லை?. எனக்கே  ஒரு மகனாக அப்படிப்பட்ட ஒருவரை தந்தருளவேண்டும் '' என்று பிரார்த்தித்தார்.   அவர் இருந்த இடத்தில்  மூலவராக  அருள் பாலித்தவர்  திருத்தோணி யப்பர். 

சிவபாத ஹ்ருதயர் வேண்டுகோளுக்கு தோணி யப்பர்  செவி சாய்த்து,  கோள்கள் உச்ச நிலையில் அமைந்த ஒரு நன்னாளில்  அந்த தம்பதியருக்கு  திருவாதிரை  அன்று  சீகாழிப்பதியில், ஞான சம்பந்தர்  பிறந்தார்.

ஞான சம்பந்தர்  மூன்று வயது  பாலகனாக இருந்த சமயம்  ஒரு நாள் காலையில் சிவபாத ஹ்ருதயர்  வழக்கம்போல்  தமது நித்யானுஷ்டான  ஸ்நானத்துக்கு  கோயி லுள்ளிருக்கும் பிரமதீர்த்தத்திற்குப் புறப்பட் டார்.   அப்பா  வெளியே செல்வதைக் கண்ட குழந்தை ஞான சம்பந்தர்  அவர் கால்களைக் கட்டிக்கொண்டு  ''நானும் வருவேன்'' என்று அழ, அவரைக் கூட அழைத் துச்  சென்றார்.   பிரம தீர்த்தக் கரையில்  குழந்தை சம்பந்தனை உட்கார்த்தி வைத்துவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு  குளத்தில்  இறங்கி னார்  சிவபாத ஹ்ருதயர்.  சில நிமிடங்கள்   ஜலத்தில் முழுகி அகமர்ஷண மந்திரங்களை உச்சரித்தார்.

குளக்கரையில்  உட்கார்ந்திருந்த  ஞான சம்பந்தர் அப்பாவைக் காணோமே என அழுதார்.  கண்களில் எதிரே  தோணி மலை  தெரிய  அதை பார்த்து கை களைப்  பிசைந்து கொண்டு  ''அப்பா  அம்மா'' என உளங்கனிந்து கூவினார்''

ஞான சம்பந்தனின்  ''அம்மா அப்பா'' எனும் அழுகுரல்  தோணி அப்பருக்கும்  அம்பாளுக்கும்  மனதைப்  பிழிய ரிஷ பாரூடர்களாக   சீர்காழி சிவன் கோயில் குளக் கரைக்கு வந்துவிட்டார்கள்.

''உமா, இந்த சிறு குழந்தை பசியால் அழுகிறான் என தோன்றுகிறது அவனுக்கு பாலூட்டு '' என பணிக்க,  அம்பாள்  ஒரு பொற் கிண்ணத்தில் தனது முலைப்பால் நிரப்பி  சம்பந்தன் அருகே சென்று  அழுகின்ற குழந் தைக்கு  பாலூட்டி அவன் அவன் அழுகையை நிறுத்தி னாள். ஆஹா  சகல  தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக் காத பேரின்பம் பெற்ற நிலையில் அந்த பாக்ய சாலி சம்பந்தன் திருஞானசம்பந்தராக  அபரஞானம் பரஞானம் அனைத்தும் தெய்வானுக்ரஹத்தால் பெற்றான்.

''எண்ணரிய சிவஞானத் தின்னமுதம் குழைத்தருளி
உண்ணடிசில் எனஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக் கையில்பொற் கிண்ணம்அளித்(து)
அண்ணலைஅங்கு அழுகைதீர்த்து அங்கணனார் அருள்புரிந்தார்.

சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை அறமாற்றும் பாங்கினில்ஓங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்

என இதை சேக்கிழார் இந்த காட்சியை  விவரிக்கிறார்.  ''அரன் சொற்படி அம்பிகை  பொற்கிண்ணத்தில் தனது முலைப்பாலூட்டி அதன் பலனாக  சம்பந்தன்  சகல ஞானமும் பெற்றவனாக  ஞான சம்பந்தனானான் ''

சில மணித்துளிகள்  கழிந்தன. குளத்தில் மூழ்கி ஜப தபங்களை  நித்யானுஷ்டான  நியமங்களை முடித்து சிவபாத ஹ்ருதயர் குளத்தை விட்டு கறியேறினார்.  அற்புத தோற்றத்தோடு  வாயில் பால் வழிய  படித் துறையில் நிற்கும் சம்பந்தனைக் கண்டு ''எப்படி  குழந்தை வாயில் பால் வழிகிறது. யார் பால்  ஊட்டியது? என அதிசயித்து,

''குழந்தே, சம்பந்தா,  யாருப்பா உனக்கு  பால்  தந்தது? யார் இப்படி எச்சில் ஒழுகும்படி பால் தந்தது? யாராவது பால் கொடுத்தால் குடிக்கலாமா நீ?  என்ற கோபத்தில் குச்சி ஒன்றை எடுத்து அவனை அடிக்க ஓங்கினார்..

 ''எனக்கு பால்  கொடுத்தது யார் என்றா கேட்கிறாய். சொல்கிறேன் கேள் ''  என அந்த ஞானக்குழந்தை  முதல் தேவார பாடலைப்   பாடியது. அந்த பாடல் உலகப் பிரசித்தி பெற்றது. இன்றும்  நான் மறவாமல் பாடுவது. 


' தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடிக்
காடு உடைய சுட லைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் உன்னை நாள் பணிந்து  ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே''

 ஆஹா பரமேஸ்வரன் பார்வதி எதிரே தோன்றி தனக்கு அம்பாள் தாயக  ஞானப்பால் ஊட்டியதை  படம் பிடித்து காட்டு கிறது மூன்று வயது ஞானக்குழந்தை. 

காதில் தோடு அணிந்து,  ரிஷபத்தின் மேல் ஏறி, வெள்ளை வெளேரென்று பிறைச்சந்திரனை தலையில் சூடிக்கொண்டு,    சுடு காட்டில் உள்ள   வெள்ளை நிற சாம்பலை  உடல் எல்லாம் பூசி என் உள்ளத்தை கவர்ந்த கள்வன், தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன் அன்று பணிந்து பூசை செய்ய, அவனுக்கு அருள் வழங்கிய சிறந்த சீர்காழி என்ற ஊரில் இருக்கும் பெருமான்  தோணியப்பர்  தாயார் சகிதம் வந்த போது  அந்த  லோக மாதா  எனக்கு பாலூட்டினாள் எனப் பொருள் படும் அற்புத பாடல். எல்லோரும் மனப்பாடம் பண்ண வேண்டிய ஒரு அருமையான தமிழ்ப் பாடல்.

sivan jaykay

unread,
Aug 30, 2025, 2:49:47 AM (7 days ago) Aug 30
to amrith...@googlegroups.com
அரவிந்த  ஆஸ்ரமம்   -  நங்கநல்லூர்   J K  SIVAN

ஸ்பெயின்,  ஹாலந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்த்துகீஸ்,  போன்ற  ஐரோப்பிய நாடுகளிலிருந்து கப்பலை கிளப்பிக்கொண்டு  புறப்பட்ட சில மாலுமிகள் இந்தியாவின் மேற்கு,கிழக்கு  கடற்கரையை அடைந்து அங்கே உள்ள கிராமங்களை தாமதாக்கிக் கொண்டார்கள்.  அப்படி கிழக்கு கடகரையில் ஒரு பகுதி புதுச்சேரி என்ற கிராமம். பிரான்ஸ் நாட்டவர்கள் அதை ஆக்கிரமித்து உள்ளூர்  தமிழ் மக்கள் பாஷையில் புதுச்சேரி  என்ற பெயரை பாண்டி சேரி என்று அழைத்து அதுவே அதன் பெயராகி விட்டது.    "சேரி" என்றால் குடியிருப்பு,  புதிய  குடியிருப்பு என்ற புதுச்சேரி என்ற 'பழைய' பெயர் இப்போது அதிகார பூர்வமாகிவிட்டாலும் புதுச்சேரி  இந்தியாவின் ஒரு  பகுதியான  பிரான்ஸ் நாட்டு காலனி, என்ற உறவோடு தனித்து விளங்குகிறது. சங்ககாலத்தில் கூட அந்த பகுதி "புதிய சேரி" யாக தான் இருந்தது. 

வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்ட காலத்தில்  புதுச்சேரி அவர்கள் ஆதிக்கத்தில் இல்லை என்பதால் அவர்கள் அதிகாரம் அங்கே செல்லவில்லை.  ஆங்கிலேய அரசை எதிர்த்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பாரதியார், அரவிந்தர் போன்றோர் புதுச்சேரியில் குடியேறினார்கள். 

ஒரு காலத்தில்   மதுபானம் குடிக்க மட்டுமே பலர் புதுச்சேரி சென்று கொண்டிருந்தார்கள்.  அரவிந்தராலும் அன்னையாலும் ''பான ''போதைக்கு  மட்டுமே சென்றவர்கள் அதை மறந்து ''ஞான பாதைக்கு'' வழி காணவும் இப்போது அடிக்கடி செல்கி றோம்.
அரவிந்தர் ஆஸ்ரமம்  அடிக்கடி சென்றிருக்கிறேன்.  அங்கே இனம் கூறமுடியாத ஒரு மன  அமைதி  பெறுவதை அனுபவத் தில் மட்டுமே  உணரலாம். எழுத்தில் அறிய முடியாது.  படிப் படியாக  ஞானத்தில் தியானத்தில்  முன்னேற  அங்கே  வழி இருக்கிறதே. அமைதியை, ஆனந்தத்தை  பாட்டில் பாட்டிலாக bottle   குடிக்கலாமே.
அரவிந்தர் கண்டெடுத்த முத்து  அன்னை. பிரான்ஸ் நாட்டு மங்கையற்கரசி. மிர்ரா அல்பாஸா Mirra Alfassa (21.2.1978-17.11.1973)  நமக்கு அன்னை என்றால் மட்டுமே தெரிந்தவர்.  அரவிந்தர் வைத்த பெயர் தான் அன்னை. அவர் அரவிந்த ஆஸ்ரமத்துக்காக  தன்னை அர்பணித்துக் கொண்டவர்.   ஒரு  சாதாரண  பிரென்ச் பெண்மணியாக  சமர்த்தாக  கல்யாணம் பண்ணிக்கொண்டு  புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும்  ஓவியர்களாக  புகழ் பெற்று,  பிள்ளை பெற்று,  மிர்ராவின்  ஓவியங்கள்  கலைக்கூடங்களில்  பரிசு பெற்றது.  ஆனாலும்   மிர்ராவின்   நெஞ்சில் ஏதோ  ஒரு தாகம் தணியாமல் இருந்தது.  அடிக்கடி அடையாளம் தெரியாத ஒரு  யோகியின் முகம்   தோன்றி தோன்றி மறைந்தது. யார் அது? இது தான் ஆன்மீக தேடலா?  புரியவில்லை. தெரியவில்லை.  அதை வெளிப்படுத்தாமல்  உள்ளேயே வளரவிட்டுக் கொண்டிருந்தாள் .  ஒருநாள்  விவேகானந்தரின்  ராஜ யோகம் புத்தகம் கிடைத்தது.  நாத்திகம் அவள் மனதை  ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நேரம் அது.  மனதில் எழும்பிய விடை காணாத கேள்விகளுக்கு  விவேகானந்தர் புத்தகம் பதில் தந்ததில் திருப்தி.  அதன் பலனாக  பிரென்ச் மொழியில் பகவத் கீதா  அவளைக் கவர்ந்தது.  பிரபஞ்ச தத்வ  ஈர்ப்பு  கவனத்தை இழுத்து  சிந்திக்க வைத்தது.

இந்த  பிரபஞ்ச தத்வ தேடலின் பொது தான் பிரென்ச்  அரசியல்வாதி ரிச்சர்டுடன் ரெண்டாவது  கல்யாணம்.  ரிச்சர்டு பிரெஞ்சு அரசியலில் பங்கேற்க பாண்டிச்சேரி வந்தபோது  அவன் மனைவியாக  1914ம் வருஷம்   மார்ச்  29ம் தேதி   மிர்ரா பாண்டிச்சேரிக்கு வந்தாள் .  

முதன் முதலாக  பாண்டிச்சேரியில்  இருந்த அரவிந்தரை தரிசித்தபோது தான்  தனது கனவில் அடிக்கடி  கண்ட  உருவம்  அவரே என  தெரிந்து கொண்டாள்.   மனதில்  அலைகளாக ஓயாமல் எழும்பிய  சஞ்சலம் அமைதியில் மறைந்தது. கணவர்  ரிச்சர்டு அரவிந்தரின் யோகத்தில்  ஈடுபாடு கொண்டு பத்திரிகை வெளியிட்டார்.  ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும்  ''ஆர்யா''  பத்திரிகை ஆன்மீகத்தில்  ஆர்வம் கொண்டவர்களுக்கு  விருந்தாக  ருசித்தது.
 ஆங்கிலேய  அரசு  அரவிந்தரை சுதந்திர  தீவிரவாதியாக   சிறைபிடிக்க முடியாமல் திணறியது.  ரிச்சர்ட்   மிராவோடு   ஜப்பான் சென்றார்.  

1920  ஏப்ரல் 24  மீண்டும்  பாண்டிச்சேரி திரும்பிய அன்னை  அரவிந்தாஸ்ரமம் அருகே  ஒரு  அறையில் வசிக்க ஆரம்பித் தார்.   அரவிந்தரின் ஆன்மீக சொற்கள்  பலரை  பாண்டிச்சேரி யில் அவரது  ஆஸ்ரமத்தில் சீடர்களாக  மாற்றியது. ஆஸ்ரமம் கொஞ்சம் கொஞ்சமாக  விரிவடைந்து  பெருகியது.  இரண்டாம் உலக மஹா யுத்தம்  ஆரம்பமாகியது.  

1938ல்  அமெரிக்க ஜனாபதி  உட்ரோ வில்ஸன் மகள்  மார்கரெட்  பாண்டிச்சேரிக்கு  அரவிந்தர் ஆஸ்ரமத்துக்கு அவரை  தரிசிக்க வந்தவள் அப்புறம்  தாயகம் திரும்பவில்லை.  அரவிந்த ஆசிரமத்திலேயே தங்கி விட்டாள் .

 1943 டிசம்பர் 2ம் தேதி அன்னை ஒரு பள்ளிக்கூடம் துவங்கினார்.  ஆன்மீக பயிற்சி  பெற அநேகர்  அதில் சேர  பள்ளி  உலக அளவில்  புகழ் பெற்றது.
அரவிந்தர்  1950 டிசம்பர்  5 அன்று சமாதியடைந்தார். அதன் பிறகு ஆஸ்ரமம், யோகப்பயிற்சி  முழுப் பொறுப்பும்  அன்னை எடுத்து நிறைவேற்றினார்.   1973 நவம்பர் 17 அன்று அன்னை  சமாதி அடையும் வரை  அவரது தொண்டும் சேவையும் உலகெங்கும் பரவி இருந்த பக்தர்களுக்கு  அளவின்றி கிடைத்தது. புதுச்சேரி சென்று ஆஸ்ரமத்தில் இருவர்   ஜீவ சமாதிகளையும்  வணங்கி அமைதியாக அமர்ந்து தியானம் செய்து  திரும்புபவர்கள் புதிய ஜீவர்களாக மாறுவதில் சந்தேகமென்ன இறுக்கிறது?.  

 

 

sivan jaykay

unread,
Aug 30, 2025, 2:49:47 AM (7 days ago) Aug 30
to amrith...@googlegroups.com
ஆதி சங்கரர்-   நங்கநல்லூர்  J K  SIVAN 

ஓம்  நமசிவாய;  சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்

என் தந்தை அடிக்கடி  சொல்லும் ஸ்தோத்திரம் சிறுவயது முதல் என் செவிகளில் புகுந்து மனதில் இடம் பெற்று விட்டது. தவிர  இந்த ஐந்து ஸ்லோகங்களை  ஐந்து வித ராகங்களில் மனதுக்கு இதமாக, செவிக்கு இனிமையாக  பாடிய  MSS அம்மாவின் குரல் சங்கீதத்தில்  ஒரு பிடிப்பு இதனால் உண்டானது. 

அப்போதெலாம்  அர்த்தம்  புரியாமல், தெரியாமல் இசையில் மயங்கிய காலம் .பக்தி பூர்வமாக  பாடப்பட்ட இந்த ஸ்தோத்ரம் என்னுள் பரமேஸ்வரன் மேல் ஒரு பக்தியை உருவாக்கியது.  அடிக்கடி இதை கேட்கவேண்டும், மனப்பாடம் செய்ய வேண்டும் என்று  ஒரு  அதிர்வலை நெஞ்சில்  தாகத்தை ஏற்படுத்தியது.  ஏற்படும்.  அதே போல் கோவில்களில் சென்று பாட வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அப்படியே செய்தேன்.   அப்புறம் தான்  வயது ஏற  ஏற  இந்த பசு மாடு நிழலில்  அமர்ந்து விச்ராந்தியாக  அசை போட்டது. இது வரை புரியாதது தெளிவாக புரிந்தது.  ஆனந்தம் தந்தது.

அடேயப்பா,   எத்தனை கைகள் இருந்தாலும் போதாது. ஆதி சங்கரரை வணங்க. 32 வயதில் இத்தனை பக்தி ஸ்லோகங்களா. கடவுளே மனிதனாக தோன்றினதால் தான் இது சாத்தியமோ?  நம்மால்   ''மனிதனென்பவன் தெய்வமாகலாம்''   பாட்டு மட்டும் தான் பாட முடிகிறது. அப்படி  ஆவதற்கு  பல  ஜென்மங்கள் தேவை போல் தோன்றுகிறது.''

 நமது தேகம் ஐந்து பூதங்களால் உண்டானது. இந்த பஞ்சாக்ஷர மந்திரத்தின் ஐந்து அக்ஷரங்களும் அதை நினைவு படுத்துவன . ந:  மண் எனும்  நிலம்.   ம: நீர்.  சி:  அக்னி;   வா:  வாயு:    ய:  ஆகாசம். இந்த ஐந்தும் தான் மஹாதேவன்.

ஓம்  நமசிவாய  என்பது பஞ்சாக்ஷரம் எனும் ஐந்தெழுத்து மந்திரம். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ஸ்லோகம் பாடுகிறார் சங்கரர்.

முதலில்   ந:  
1.नागेन्द्रहाराय त्रिलोचनाय  भस्माङ्गरागाय महेश्वराय । नित्याय शुद्धाय दिगम्बराय  तस्मै न_काराय नमः शिवाय ॥१॥
நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய  பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய  நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை நகாராய நமசிவாய

என்னப்பனே, பரமேஸ்வரா, உன்னுடைய  விசித்திர ஆபரணங்களை எவனும் கொள்ளை  அடிக்கமாட்டான் . அறுத்துக் கொண்டு ஓடமாட்டான்.  அருகில் வந்தால் நாலுபேருடன் தான் வரவேண்டும். அப்போது தான் அவனை தூக்கிச் செல்ல முடியும்.  விஷம் கக்கும் நாகங்களை ஆபரணமாக பூண்டவனே, கழுத்தில் மாலை, தலையில்  ப்ரோச்.  கையில் வாகு வளையம், கங்கணம், பூணலாக கூட மெல்லிய பாம்பு.  முக்கண்ணா , மூன்றாவது  கண்ணை  நீ திறந்தால்  அவ்வளவு தான். அதன் பார்வை பட்ட அனைத்தும் சாம்பல்..  உன்  பவழம் போல் மேனியில் பால் வெண்ணீறு.  ஆதி அந்தமில்லா அநாதி நாதா,    பரிசுத்தத்தின் உருவமே ,  சாஸ்வதனே,  நான்கு திசைகள்  தான் உன் ஆடைகளா? சிவனே, பரமேஸ்வரனே, 'ந' என்ற எழுத்தில் மிளிர்பவனே. உன்னை வணங்குகிறேன்.

2. मन्दाकिनीसलिलचन्दनचर्चिताय  नन्दीश्वरप्रमथनाथमहेश्वराय । मन्दारपुष्पबहुपुष्पसुपूजिताय  तस्मै म_काराय नमः शिवाय ॥२॥
மந்தாகினி சலில சந்தன சர்சிதாய  நந்தீச்வர பிரமதநாத மகேஸ்வராய  மந்தார முக்ய பஹுபுஷ்ப சுபூஜிதாய தஸ்மை மகாராய நமசிவாய
''ம''  ரெண்டாவது எழுதது.   வடக்கே ஓடும்  புண்ய நதிகளில் ஒன்று மந்தாகினி. அதன் நீரால்  சிவனுக்கு  அபிஷேகம் செய்கிறார்கள். வாசமிகு சந்தனம் ஏன்  அவன் உடலெங்கும் பூசிக்கொள்கிறான்?  அவன் அக்னி ஸ்வரூபம் இல்லையா?. எப்போதும்  உஷ்ணம். உள்ளே  ஹாலஹால  விஷம்  பாய்லர் வெந்நீர் போல் கொதிக்கிறது.   ஆத்ம ஞானாக்னியின் உஷ்ணம் வேறு. ருத்ரன் என்பதால் எப்போதும் ரௌத்ரம்.  கேட்கவேண்டுமா  உஷ்ணத்தின் அளவுக்கு?   ஆகவே  அவனை குளிர்ச்சிப்படுத்த  தலையின் மேல்   சில்  என்று பனி உருகிய  கங்கை, சில்லென்று வாழைத்தண்டு போல்  நாகம், உஷ்ணத்தை குறைக்கும் ருத்ராக்ஷம்.  குளிர்ந்த பால் போல் வெள்ளையான  சந்திரன், உஷ்ணத்தை உறியும்  விபூதி. சாம்பல்.   குளிர்ந்த பனி மலை வாசம், உடலெங்கும் சந்தனம். சதா அபிஷேகம்.   சிவன் நந்தி வாஹனன். பைசாசங்களும் சிவகணங்களும் அவன் உதவியாளர்கள். ஸம்ஹார  மூர்த்தி அல்லவா?   மந்தார புஷ்பம், தும்பை கொன்றை    பாரிஜாதம்  போன்ற மலர்களால்  வில்வ இதழ்களால்  பூஜிக்கும்போது மகிழ்ந்து அருள்பவன்.  கேட்டதை யோசிக்காமல் வாரி  அள்ளி வீசுபவன்.   பரமேஸ்வரா  பஞ்சாக்ஷரத்தில் ரெண்டாம் அக்ஷரம்  '' ம''  எனும்    எழுத்தால் உன்னை வணங்குகிறேன் பரமேஸ்வரா அருள் புரிவாய்.

3.  शिवाय गौरीवदनाब्जवृन्द_ सूर्याय दक्षाध्वरनाशकाय । श्रीनीलकण्ठाय वृषध्वजायतस्मै शि_काराय नमः शिवाय ॥३॥
சிவாய கௌரி வதநாப்ஜ வ்ருந்த  சூர்யாய தக்ஷாத்வர நாசகாய ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை சிகாராய நமசிவாய.

சி. மூன்றாவது எழுதது.  ஆதி சிவன்  மங்களகரன் .  கௌரி எனும்  தாமரை முகத்தாளின்  வதனத்தை மலரச்செய்யும் சூர்யன்.   சிவை இல்லாவிட்டால் சிவன் இல்லை.  காலாக்னி போல் கோபம் கொண்டு தக்ஷ பிரஜாபதியின்  யாகத்தை கலைத்து அவனைக்  கொன்றவன்.   திருப்பாற்கடலில்  அமிர்தம் வரும் முன்பு  வாசுகியால் வெளியேற்றப்பட்ட  ஹாலஹால விஷம் நிரம்பிவிட்டது. அதை என்ன செய்வது என்று தேவர்கள் கலங்கியபோது ஒரு மடக்கில் அப்படியே விழுங்கியதால்  பார்வதி தேவி  அது உள்ளே இறங்காமல் கழுத்தில் பிடித்து நிறுத்தி விட்டதால் நீல கண்டன் என பெயர் பெற்றவன்.
ரிஷபாரூடன்.  பரம சிவா  உன்னை  பஞ்சாக்ஷர மூன்றாம்  அக்ஷரமான  ''சி''  என்ற  எழுத்தை நினைக்கும்போது தரிசிக் கிறேன். வணங்குகிறேன்.

4. वशिष्ठकुम्भोद्भवगौतमार्य_ मूनीन्द्रदेवार्चितशेखराय ।  चन्द्रार्कवैश्वानरलोचनाय तस्मै व_काराय नमः शिवाय ॥४॥
வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய முனீந்தர தேவார்சித்த சேகராய சந்த்ரார்க்க வைச்வானர லோச்சனாய
தஸ்மை வகாராய நமசிவாய.

 நாலாவது  அக்ஷரம்  வ.   தேவலோக ரிஷிகளில் முதன்மையான  வசிஷ்டர், கும்பமுனி எனும்  அகஸ்தியர், கௌதமர்  போன்ற மஹரிஷிகள்  சூழ்ந்து கொண்டு  உன்னை வணங்கி  பூஜிக்கிறார்கள்.  அவர்களுக்கு பின் எண்ணற்ற  தேவர்கள்  இதர ரிஷிகள், முனிகள், கந்தர்வர்கள், கின்னரர்கள், போன்றோர்  துதிக்க, நடுநாயகமாக  பிறைச்சந்திரனை  தலையில் அழகாக கொண்ட பிறை சூடி,   சூர்ய சந்திரர்களை கண்களாக கொண்டவன்.  த்ரிநேத்ரன்,   பரமேஸ்வரா, உன்னை   பஞ்சாக்ஷரத்தின் நாலாவது அக்ஷரமான  ''வ '  எனும் எழுத்தாக  வணங்குகிறேன்.

5. यज्ञस्वरूपाय {यक्षस्वरूपाय} जटाधराय पिनाकहस्ताय सनातनाय । दिव्याय देवाय दिगम्बराय  तस्मै य_काराय नमः शिवाय ॥५॥
யஞ ஸ்வரூபாய ஜடாதராய  பினாகஹஸ்தாய சனாதனாய திவ்யாய தேவாய திகம்பராய....!!! தஸ்மை யகாராய நமசிவாய. 

5வது எழுதது  ய. பரமேஸ்வரன்  யாக யஞங்களின்  ஸ்வரூபன்.  பினாகம் எனப்படும் திரிசூல தாரி. சாஸ்வதன் . ஆதி முதல் வன். நாற் திசையும் ஆடையானவன்.  அதாவது எங்கும் காணப்படுபவன். பரமேஸ்வரா,  ஐந்தாவது பஞ்சாக்ஷரமான  ''ய'' எனும் எழுத்தானவனே. உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.

பலச்ருதி;  ஸ்தோத்ர பாராயண பலன்.  

पञ्चाक्षरमिदं पुण्यं यः पठेच्छिवसंनिधौ । शिवलोकमावाप्नोति शिवेन सह मोदते ॥६॥
 பஞ்சாக்ஷரம் இதம் புண்யம் யப்படேஸ் சிவ சன்னிதெள சிவலோகம்  அவாப்னோதி  ஷிவேனா சக மோததே

சிவன் கோவில் சென்றால் இந்த பஞ்சாக்ஷர ஐந்து ஸ்லோகங்களை எவன் மனதார சொல்கிறானோ அவனுக்கு மோக்ஷம் நிச்சயம் என்று ஆதி சங்கரர்  கடைசியாக பலஸ்ருதியில்  காரண்டீ அளிக்கிறார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

sivan jaykay

unread,
Aug 30, 2025, 10:37:15 PM (6 days ago) Aug 30
to amrith...@googlegroups.com
வடக்கே ஒரு ஆண்டாள்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் சிறந்து விளங்குவது கிருஷ்ணாவதாரம்.  சாதாரண  யாதவ குடும்பத்தில் தானாக தன்னை இணைத்துக்கொண்டு  கோகுலத்திலும் பிருந்தாவனத்தில் அவர்களோடு  வளர்ந்து  வாழ்ந்து அவர்களில் ஒருவனாக இருந்தாலும்  அவன்  ராஜ வம்சத்தவன் என்பதால் அவனது 13-15 வயதில்  மதுராபுரியை ஆண்ட தனது மாமன் கம்சன் அரண்மனைக்கு சென்று அவனை ஸம்ஹாரம்  செய்து தனது தாய் தந்தையரை, கம்சனின் தாய் தந்தையரை எல்லாம் சிறை மீட்டு மதுராபுரிக்கு  அரசனாகவும்  நேர்ந்தது.   

கண்ணன் எனப்படும் கிருஷ்ணனின் பக்தர்கள் எண்ணிலடங்காதவர்கள்.  துவாபர யுகம், இந்த கலியுகம் ரெண்டிலும்  அநேக ஆண்கள் பெண்கள்  கிருஷ்ண பக்தர்கள்.  கிருஷ்ண பக்தர்களில்  முக்கியமானவர்கள் என்றால் ஆண்டாள், மீரா, ராதை  என்று மூன்று பெண்களை  பெயரிடலாம்.  

மீரா  ராஜபுதனத்து ராஜகுமாரி.  ஐந்து வயது முதல் கிரிதாரி என்ற அவள் கிருஷ்ண விக்ரஹத்தின் மேல்  அளவற்ற பக்தியும் பாசமும் கொண்டவள்.  

அவளது ஐந்தாவது வயதில் நடந்த ஒரு சம்பவம் இதோ ;

ராஜபுத்திர ராணா  வம்ச அரண்மனைக்கு வெளியே  சாலையில் ஒரு ஊர்வலம்.  வாத்தியங்கள் கோஷங்கள் கேட்டு  அந்த அரண்மனையிலிருக்கும்  ஐந்து வயது  குழந்தை ஒன்று  உப்பரிகையிலிருந்து  எட்டிப்பார்க்கிறது. எதிரே  தெருவில் ஒரு பெரிய ஊர்வலம்  வருவதை பார்த்து  அம்மாவிடம் கேட்கிறது; 

“இது என்னம்மா? எதுக்கு எல்லோரும்  இப்படி  டமாரம், மேளம் எல்லாம் அடிச்சுண்டு,   பீ பீ ன்னு  வாத்தியம் எல்லாம் ஊதிண்டு போகிறார்கள்?''  
''இது ஒரு  கல்யாண  ஊர்வலம் டீ  கண்ணு!”
''நடுவிலே  குதிரை மேலே யாரோ ஒருவர்  உட்கார்ந்திருக்கிறாரே  அவர் யாரு?  அதோ  சிவப்பு   தலப்பா  கட்டிண்டு இருக்காரே அவர் ?”.  
“அது  தான் கல்யாண மாப்பிள்ளை. அவன்  தான் அதோ அந்த சின்ன பெண்ணுக்கு  கணவன்”.
“ எனக்கும்  இது மாதிரி  கல்யாணம்  பண்ணுவியா?”
“ ஆமாம் இதை விட  தடபுடலா”
“அப்போ எனக்கு  யாரு  மாப்பிள்ளே, அந்த மாதிரி தலப்பா கட்டிண்டு ?”
“வா  காட்றேன்.”  
ராணி தனது பெண்ணை 
பூஜா அறைக்கு கூட்டிக்கொண்டு போகிறாள்.
ராணி கிருஷ்ண பக்தை. அதனால் தான்  மீராவுக்கு கிருஷ்ணன் மேல் பக்தி வளர்ந்தது.   
பூஜை அறையில் அவர்கள் எதிரே குழலூதிக்கொண்டு  மயில் பீலி சிரத்தில் அணிந்த புன்னகைக்கும்  கிருஷ்ணனின்  படம்.
“இதோ  இவன் தான் உனக்கு  மாப்பிள்ளை,  கணவன்”
மீரா விழுந்து வணங்கினாள்.
இந்த விஷயத்தை  ஏதோ சாதாரணமாக  எடுத்துக்கொண்டு அதன் பின்  விளைவு பற்றி  யோசிக்காமல் அந்த ராணி சொல்லி விட்டாளே  தவிர  ராஜகுமாரி  மீரா,  மனதில் அதை கெட்டியாக பிடித்துகொண்டாள்.  
எரியும்  விளக்குக்கு  எண்ணையும்  ஒரு நாள்  கிடைத்தது.  
ஆம் . 
அரண்மனைத் தெருவில் ஒருநாள்  ஒரு  பொம்மை  விற்பவன்  ஒரு சின்ன  அழகிய  கிருஷ்ணன்  பொம்மை  வைத்தி ருப்பதை  பார்த்து விட்டு  அதை வாங்கினால் தான் விடுவேன்  என்று அடம் பிடித்து  அதை வாங்கி கடைசியில்  தன்  உயிர் போகும்  வரை  வைத்திருந்தாள்  மீரா.  அவள்  மூச்சு,  பேச்சு  எல்லாமே  கிருஷ்ணன்  தான். அவனுக்கு பெயர் வைத்தாள் . ''கிரிதாரி''.
விளையாட்டு  வினையாக  போய்விட்டதே என்று  ராஜாவுக்கும் ராணிக்கும் கவலை  அரித்து தின்றது.  சீக்கிரமாகவே ஒரு  மேவார்  ராஜ புத்ர  ராணாவுக்கு   மீராவை கல்யாணம் செய்து வைத்தனர்.  ராஜஸ்தானில் சிறு வயதிலேயே கல்யாணம் செய்து வைப்பார்கள்.  பேருக்கு  தான்  அந்த  கல்யாணம் நடந்ததே தவிர  மீராவை  முழுசாக  ஆக்ரமித்தவன்  கிருஷ்ண னே.  
மீராவின்  கணவன் ராணா, ஒரு  போரில்  மாண்டான். இருபது வயதுக்குள்ளேயே  மீரா  தனியள் ஆனாள் . மீராவின் உலகில் ஒரே  ஒரு ஜீவன் தான்.. அதுவே  கிரிதாரி எனும் அவள்  கிருஷ்ணன்.   அவளை  எல்லோரும்  ஒரு இளம்  சன்யாசினி யாகவே  கண்டனர்.   அரண்மனையை விட்டு  தெருவுக்கு சென்று விட்டாள் மீரா.  கண்ணன் மீது மட்டற்ற காதல் அவளை  அவன்  கோபியாகவே மாற்றியது. கண்ணனை நினைத்து  இரவும்  பகலும்  ஆட்டம்  பாட்டம்  கொண்டாட்டம். பூஜை, பஜனை. பக்தர்களும்  ஆவலுடன் சேர்ந்து கொள்ள  அவளது  ராஜ  வம்சம்  இந்த  பழக்கத்தை கடுமையாக எதிர்த்தது.

 மீராவைக் கொன்றால் தான் இதற்கு முடிவு என்று அவளுக்கு  உணவில்  விஷம்  வைத்தார்கள்.  அவதூறு பேசினார்கள்.  எதற்கும்  மசியவில்லை  அவள் மாசற்ற பக்தி பரவசம்,  கிருஷ்ண பிரேமை.  
அவள் குடித்த  விஷத்தை  அம்ருதமாக  மாற்றினான்  கிருஷ்ணன்.
 படுக்கையில்  கூரான  விஷம் தோய்ந்த  ஆணிகள் வைத்தார்கள். அனைத்து  விஷ ஆணிகளையும் ரோஜா இதழ்களாக  மாற்றினான் கிருஷ்ணன்.
 “இந்தா உன் கிருஷ்ணனுக்கு  அர்ச்சனை பண்ண புஷ்பம் ”   என்று  பூக்குடலைக்குள்  கொடிய விஷம் கொண்ட கருநாகம்  ஒன்றை வைத்தனர்.   பாவம்,  விஷயம் தெரியாத மீரா  அந்த பூக்குடலைக்குள்  ஆசையாக கிருஷ்ணனுக்கு அர்ச்சிக்க  புஷ்பம் எடுக்க  கையை விட்டாள்  மீரா.  கருநாகம் மல்லிகை  மாலையாயிற்று. ஆதேசேஷன் மேலே படுப்பவன் தனது பக்தையை ஒரு சாதாரண கருநாகம் தீண்ட அனுமதிப்பானா?

“நீங்கள் மிக பிரசித்த கிருஷ்ண பக்தர்  உங்கள் வாயிலிருந்து  கண்ணன்  பெருமையை   கேட்க ஆசையாய் இருக்கிறது”.
என்று ஒருநாள் சைதன்யரின்  சிஷ்யரான  ரூப  கோஸ்வாமியை சந்தித்து மீரா கேட்க  விரும்பினாள்.  அவரைச்  சந்தித்து வணங்க  காத்திருந்தாள்.  

“நான்  ஸ்திரீகளைப்  பார்ப்பதில்லை  பேசுவதில்லை. புருஷர்களுக்கு தான் அனுமதி. அவள் போகலாம்'' என்று அவளை பார்க்க  மறுத்து  விட்டார்  கோஸ்வாமி. .
மீரா பணிவாக அவருக்கு பதில் சீடர்கள் மூலம் தெரிவித்தாள் ; 
'' ஐயா  புருஷர்கள் என்று யாருமே இந்த  உலகில் இல்லையே.  இருப்பது ஒரே  ஒரு  புருஷன். மஹா புருஷன் அந்த  கிருஷ்ணன் ஒருவனே. நாம் எல்லோருமே  ஸ்த்ரீ பக்தர்கள் தானே''
பிறகு என்ன?
கோஸ்வாமி  ஓடிவந்து  மீராவின்  காலடியில்  சரணமடைந்தார்.  ஊர்  ஊராக  பாடிக்கொண்டே  ஆடிக்கொண்டே  மீரா  காசிக்கும் சென்று  கபீர் தாஸுடன்  கிருஷ்ண பஜன்  செய்தாள்.

நேரமாகி விட்டது.   கிருஷ்ண ப்ரேமையின்  உச்சகட்டம்  வந்து விட்டது. கிருஷ்ணனுக்காகவே வாழ்வை அர்ப் பணித்து எண்ணற்ற பக்திப்  பாடல்களை கர்ணாம்ருதமாக  வழங்கிவிட்டு  துவாரகையில் எல்லாரும்  பார்க்க  மீரா  கிருஷ்ணனோடு கலந்தாள் என்பது வரலாறு.  மீரா வடக்கே ஒரு ஆண்டாள்  ஆகிவிட்டாள் .

இறைவனோடு  கூடிய  வாழ்க்கைக்கு  ஈடு உண்டா?

 

sivan jaykay

unread,
Aug 30, 2025, 10:37:15 PM (6 days ago) Aug 30
to amrith...@googlegroups.com

ஸூரதாஸ்   .-   நங்கநல்லூர்  J K SIVAN   

கண் விழியடா  கண்ணா...

யசோதா  தூங்கும் கிருஷ்ணனைப்  பார்க்கிறாள். முகத்தில் விஷம ரேகைகள் பளிச்சிட  அழகே உருவாக ஆனந்தமாக  படுத்திருக்கிறான். இவனை எழுப்ப வேண்டும் என்று அவனை தடவிக்  கொடுக்கிறாள். பட்டுப்போல் கன்னம். கரிய மினுமினுக்கும் சிறிய தேகம்.   அவன் சுருண்ட கேசத்தை மென்மையாக  தடவிக்கொண்டே  அவனை எழுப்புகிறாள்.
 
கிருஷ்ணா, என் கண்மணி, எழுந்திரடா..  அதோ பார் மேலே கருப்பாக இருந்த உச்சி வானம் வெளுக்க ஆரம்பித்து விட்டது. கீழ் வானம் செந்நிறமாக சிவந்துவிட்டது.   நீயும்  உன் தாமரை  இதழ்  கண்களைத் திற .  அழகிய அல்லி விழிகளை மெல்ல மெல்ல திற .  வயிறு முட்ட தேனைக் குடித்து விட்டு தேனீக்கள் திருப்தியாக ரீங்காரம் பண்ணிக் கொண்டு மலர்களை விட்டு கிளம்புவதைப்   பார். செடிகளும் கொடிகளும் காற்றில் ஒரு புது நாளை வரவேற்க என்னமாக ஆடுகின்றன பார்.
கொக்கரக்கோ....எங்கோ ஒரு சேவல் கத்துகிறது.  அதைத் தொடர்ந்து  பல திசைகளிலிருந்தும் எதிரொலி போல் மற்ற சேவல்களும் கத்துவது வேடிக்கையாக இல்லை?
மடியில்  பால்  சுமந்து  பசுக்கள்  தொழுவங்களில் தமது   கன்றுகளைத்  தேடுகிறதா? அல்லது   உன்னைத் தேடுகிறதா  ம நீயே  எழுந்து போய்ப் பார்.

''நண்பா,  சூர்யா, எனக்கு டூட்டி முடிந்து விட்டது ''என்று சந்திரன் விடை பெறுகிறான்.  சூரியனும்  
அவனுக்கு குட் மார்னிங் 
சொல்கிறானே.

ஆயர்பாடி  கிராமம்  உயிர்  பெற்று விட்டது. கோபியர்கள் எழுந்து விட்டார்கள்.  கலீர் கலீர் என்று அவர்கள் கால் தண்டை கொலுசு கை வளையல் சப்தம் கேட்கிறதே.   கோபர்கள் ஏற்கனவே எழுந்து யமுனை  ஆற்றங்கரைக்குச்  சென்று விட்டார்களே. அவர்கள் உன்னைப்  பாடும் சப்தம்  உன் காதில் விழவில்லையா கண்ணா?

தாமரைக் கண்ணா  எழுந்திரு  இன்று நிறையவே  நீ விளையாட வேண்டுமே. அதைக் காணவே தானே பொழுதும் விடிந்து விட்டது.

 நேரில் நம்மை கோகுலத்துக்கும்  பிரிந்தாவனத்துக்கும்  கொண்டு சென்று கண்ணனை   அன்னை யசோதை துயிலெ
ழுப்பும் க்காட்சியைக் காண வைக்கிறது  ஸூரதாஸின் கற்பனை நயம்.   ஆங்கிலத்தில் நான் படித்த ஸூரதாஸ்  கவிதை;

Awake, Krishna, awake 
the lotus-petals open the water-lilies droop 
the bumblebees have left the creepers 
cocks crow, and birds chirp on the trees.
The cows are in the byre lowing;
they run after their calves;
the moon fades before the sun.
Men and women arise and joyfully sing their songs;
Krishna, of hands lotus-like awake,
for the day is about to dawn.

sivan jaykay

unread,
Sep 1, 2025, 9:38:44 PM (4 days ago) Sep 1
to amrith...@googlegroups.com



ஸ்ரீ  கிருஷ்ணார்ப்பண க்ஷேத்ர யாத்ரா    31.8.28.

1. பொன்பதர்கூடம் 

திடீரென்று மனதில் ஒரு எண்ணம் தோன்றி , சிலரை சேர்த்துக்கொண்டு  ஒரு வண்டியை  வாடகைக்கு எடுத்துக் கொண்டு  மனம் போனபடி க்ஷேத்ராடனம் சென்று விட முடியாது. கஷ்டம்  தான் மிஞ்சும்.  முதலில் எங்கே போகிறோம்?, அங்கே என்ன காணப்போகிறோம்?, வழி எப்படி, அருகே வேறெங்கே எல்லாம் செல்லலாம், அங்கெல்லாம் என்னென்ன விசேஷம்,  போகும் இடங்கள்  எல்லாமே ஏற்கனவே எல்லோரும் பார்த்தவையா? பார்த்தத்தையே  திரும்ப பார்க்க விருப்பம் இருக்குமா?  இதற்கான கால அவகாசம் எவ்வளவு?  அங்கங்கே  வயதான ஆண் பெண்கள் இளைப்பாற, சாப்பிட,  தங்க, ரெஸ்ட்ரூம் போக  வசதிகள்  இருக்குமா?  கோவில்கள் ஸ்தலங்கள் செல்கிறோமோ அவை திறந்திருக்கும் நேரம், மூடும் நேரம் என்ன? என்றெல்லாம் ஆராயாமல் சென்றால் உடல் மனம், பணம் எல்லாமே கஷ்டப்படும். கூட வந்தவர்கள் வாய் நிறைய திட்டுவார்கள்.  மறுபடி கூப்பிட்டால் ஓடிவிடுவார்கள்.

இதெல்லாம் அனுபவ பூர்வமாக ஆராய்ந்து நாங்கள் திட்டமிடுவோம். குறைந்த நேரத்தில் அதிகமான ஸ்தலங்களுக்கு சென்று தரிசித்து  ஆனந்தம் பெற  முன்கூட்டியே  வரை படங்களை, விவரங்களை சேமிப்போம்.  ஆங்காங்கே  உள்ளவர்களை கலந்து ஆலோசிப்போம். பிறகு தான் ஏற்பாடு பண்ணி நண்பர்களை அழைத்து ஒன்று கூடி சென்று செலவினங்களை பகிர்ந்து கொள்வோம். ஆங்காங்கே முடிந்தவரை தானம் தர்மம் செய்வோம்.

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா யாத்ரா குழு அப்படி தான் 31.8.2025   ஞாயிறு அன்று விடிகாலை நான்காவது முறையாக,  மாதாந்திர  க்ஷேத்ராடனம் சென்றோம்.

முதல் நாள் சனிக்கிழமை  பின்  இரவு மழை வெகுநேரம் பொழிந்தபோது மனதில் ஒரு இறுக்கம். விடிகாலை கிளம்ப முடியுமா? எல்லோரும் வந்து சேர்வார்களா? 25 பேர் பயணிக்கும் மினி பஸ் குறித்த நேரத்தில் வந்து சேருமா?  முதல் நாள் இரவு பத்து மணிக்கு சேலத்தில் இருந்து வந்து கொண்டிருந்த வண்டி இரவு சென்னை வந்தடைந்து  டிரைவர் அபிலாஷு டன் பேசி காலை எப்படி எங்கள் வீட்டுக்கு வரலாம் என்று வழி அனுப்பி,  ஞாயிறு அன்று காலை 5 மணிக்கு ட்ரைவரை துயிலெழுப்பி பஸ் ''கௌசிக்',   6.15am  மணிக்கு  என் வீட்டு  வந்து சேர்ந்துவிட்டது. குளுகுளு AC  வண்டி . சாந்தி மாமி அனுப்பிய,  சுடசுட  பொங்கல் வடை சாம்பார் பாத்ரங்கள்  வண்டியில் ஏறிவிட்டன..  குடிநீர் CAN  பிஸ்கட், தட்டுகள், டம்பளர்கள் , ஆங்காங்கே கோயில்களுக்கு அளிக்க,  விளக்கேற்றும் எண்ணெய் சீசாக்கள், புது வஸ்திரங்கள், திரி, இத்யாதிகளுடன்  திட்டமிட்டபடி  6.30am  கிளம்பிவிட்டோம். 

விஷ்ணு சஹஸ்ரநாமம், மற்றும் ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள் எல்லாம் நண்பர்கள் அற்புதமாக  பாடிக்கொண்டே வந்தார்கள். நேரம் போவதே தெரியவில்லை.

 பழவந்தாங்கல்  GST  சாலையில் காத்திருந்த  முத்து பர்வதம் அம்மையாருடன் மறைமலைநகர்  பெட்ரோல் BUNK  சென்று அங்கே வழக்கம்போல்  எங்கள் குழு சௌகர்யமாக ஒரு இடத்தில் காலை உணவை முடித்து  காப்பியும் குடித்து விட்டு ரெஸ்ட்ரூம் வசதைகளை உபயோகித்துவிட்டு  செங்கல்பட்டு தாண்டி  பொன்பதற்கூடம் போவதற்கு முன்பு தாம்பரத்தில்  பஸ் நிலைய வாசலில் காத்திருந்த  துர்க்கா தேவியையும் ஏற்றிக்கொண்டு,  காலை ஒன்பது மணிக்கு சதுர்புஜ ராமரை தரிசித்தோம். கிராமக் கோயில்களில் முழுநேரமும் கோயில் திறந்திருப்பதில்லை.  அர்ச்சகரை அழைத்து வந்து கதவு திறந்து தரிசனம் பெற்று.  காணிக்கை செலுத்தினோம் . ஏற்கனவே பொன்பதற்கூடம் பற்றி விரிவாக எழுதி ஆலய படங்களை அனுப்பிஇருந்ததால் எங்கள் குழுவினருக்கு நேரில்  தரிசிக்க சந்தோஷம்.

செங்கல்பட்டிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீராமன் சதுர்புஜ ராமனாக  அமர்ந்த கோலத்தில்  அருள்பாலிக்கும் ஆயிர வருஷ  க்ஷேத்ரம் பொன்பதர் கூடம்.  108 திவ்ய  இங்கே  ராமர் தானியங்களைத் தூற்றியபோது, பொன் நெல்மணிகளின் பதர்கள் (தோல் உமி) சுமார் 2 கி.மீ. தூரத்தில் விழுந்ததால் உருவானது.  ஊருக்கும் பேர் கிடைத்து விட்டது. இப்படி  சதுர் புஜத்தோடு  ராமன் காட்சி கொடுத்தது நாலு பேருக்கு மட்டுமே. அம்மா கௌசல்யாவுக்கு பிறந்த போது , ஆஞ்சநேயன்  ரிஷியமுக பர்வதத்தில் சந்தித்தபோது, திரிசடையின் கனவில், அப்புறம்  ராவணனோடு யுத்தம் முடிந்து அவன் மாண்டபிறகு அவன் மனைவி மண்டோதரிக்கு.  அப்புறம் விக்ரஹ ரூபத்தில்  க்ஷேத்ரத்தில்.  உத்சவ ராமர் விகிரஹத்தின் உள்ளங்கையில் ரேகைகள் தெரிகிறது. மோதிரம் கழட்டி விரலில் போட முடிகிறது. விரல் நகங்கள் தெரிகிறது.


sivan jaykay

unread,
Sep 1, 2025, 9:38:44 PM (4 days ago) Sep 1
to amrith...@googlegroups.com
ஞான சம்பந்தர் -   நங்கநல்லூர் J K  SIVAN 

 அறுபத்து  மூன்று நாயன்மார்களில் ப்ரதானமான  பெயர்கள்  அப்பர், சுந்தரர்,  சம்பந்தர், மணிவாசகர் எனும் நான்கு கு சைவ சமய குரவர்க. அவர்களில் சிறிய குழந்தையாக  அறியப்படுபவர்  திரு ஞான சம்பந்தர்.  ஒரு சாதாரண    மூன்று வயது பிராமண குழந்தை சம்பந்தன்  அழும் போது  ககன மார்க்கத்தில்   ரிஷபாரூடராக  பரமேஸ்வரனும் பார்வதியும் வந்து தோன்றி  பார்வதி தேவியே  அந்த குழந்தைக்கு  பொற் கிண்ணத்தில் பால் ஊட்டியது  சீர்காழியில் நடந்த அற்புதம்.   இன்றும்  அந்த சட்டநாதர் சிவாலயத்தின்  குளக்கரையில்  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த  இந்த சம்பவத்தை ஒவ்வொரு கணமும் நினைவு கூர்கிறோம். 
   
ஞான சம்பந்தர் குழந்தை ஞானப்பால்  ஊட்டப்பட்டு  மூன்று வயதிலேயே  அற்புதமான தேவாரப்  பாடல்கள் இயற்றியவர். எத்தனையோ குழந்தை மேதாவிகள்  இருந்தாலும் சம்பந்தர் போல் அவர்கள் ஆக முடியாதே. பெயரே ஞான சம்பந்தன்.  1300- 1400  வருஷங்களுக்கு முன் அவர் எழுதிய தேவாரங்களைப்  பாடி  இன்றும் கோடிக்கணக்கான பக்தர்கள் மகிழ்கிறார்களே.  எளிதான காரியமா இது? என்ன காரணம்?  அவர் பாடலின் வார்த்தைகள் மந்திர சக்தி வாய்ந்தவை.  விரும்பியதை கேட் காமலேயே  தர வல்லவை.  சிறந்த நீதி நெறிகளை  போதிப்பவை. எண்ணற்ற  அற்புத பாடல்கள் ஓலைச்சுவடிகளில் இருந்து அவற்றை நாம் இழந்து விட்டோம். ஞானிகள், மஹான்கள் எவ்வளவு தான்  வாரி வழங்கினாலும்  நாம் வழக்கம்போல் கோட்டை விட்டுவிடும்  விசித்திர சமுதாயமாகவே இன்னும் மாறாமல் இருக்கிறோம்.  நமது  ஹிந்து சனாதன மஹான்கள் சிலரால்  பாதுகாக்கப்பட்டு  இருக்கும் சிலவற்றை மட்டும்  இன்னும் அழியாமல்  காப்பது நமது கடமை. எல்லாம் இறைவன் சித்தம். 
ஏதோ சுமார் 4000 பாடல்கள் தேவாரங்கள் நமக்கு கிடைத்ததே நமது மிகப்பெரிய  பாக்யம் என்று கருதுவோம்.  ஒரு சில முன்னோர்கள் ஸ்ரத்தையாக எதிர்காலத்தை மனதில் கொண்டு இதையாவது நமக்கு காப்பாற்றி கொடுத்ததற்கு அவர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

சம்பந்தர் வாழ்வில் நிறைய அதிசயங்கள் நடந்திருக்கிறது. தமிழகத்தில் அவர் தரிசிக்காத சிவன் கோவிலே இல்லை எனலாம்.  அவரது பாடல் ஒலித்த ஆலயங்கள் நிறைய உள்ளது.  அக்கால நிலை, சரித்திரம், மக்கள் வாழ்க்கை, ராஜாங்கம், நீதி,  நேர்மை  எல்லாம் அவற்றின் மூலம் அறியமுடிகிறது.

சேக்கிழார்,  இப்படிப்பட்ட ஞானிகளுடைய  வாழ்க்கை,  அவர்களால்  நிகழ்ந்த அதிசயங்கள், அவர்கள் பாடல்கள்  எல்லாவற்றையும்  முடிந்தவரை  அழகாக ஒரு ''பெரிய''  புராணமாக படைத்திருக்கிறார்.

பாண்டியன் நெடுமாறன் மதுரையை ஆண்டு கொண்டிருந்த போது  சமண மதத்தில் அவன்  பற்றுக் கொண்டிருந்தான்.  அவனை சமண  மதத்திலிருந்து மீட்டு  மீண்டும் சைவனாக்கிய பெருமை சம்பந்தருக்கு உண்டு.  சமணர்கள்  பொதுவாக  சாதுக்கள். அஹிம்ஸா வாதிகள். தமிழ் பற்று அதிகம் கொண்டவர்கள்.  நாம் தான் நாலடியார் அடிக்கடி படிக்கிறோமே. ஆனால் நெடுமாறன் காலத்தில் இருந்த அவன்  அரசவை புலவர்கள் சமணர்கள் ஆக்ரோஷமாக இருந்தார்கள்.  அவர் களோடு வாதத்தில் ஈடுபட்ட சம்பந்தர் அவர்களை வென்றார்.  அதனால் தான் பாண்டியனும்   சைவனானான்.  சம்பந்தர் மதுரை வந்திருப்பதை அறிந்த சமணர்கள் அவர் தங்கியிருந்த மடத்திற்கு  தீ மூட்டினர்.  சைவ சமண விரோதம் தலை தூக்கி யிருந்த காலம் அது.  இந்த தீ மூட்டிய விஷயம் எங்கும் பரவி விரோதம் வலுத்தது. சம்பந்தர் மதுரை  விஜயத்தால் அது ஒடுங்கியது.

திருவோத்தூர் என்கிற ஊரில் ஒரு அதிசயம். ஒரு சிவபக்தன் பனை மரங்கள் வளர்த்தான். அவற்றின் கனிகளை விற்று ஜீவனம். அதில் கிடைப்பதில் சிவன் கோவிலுக்கு பக்தர்களுக்கு கைங்கர்யம் பண்ணுபவன்.  மேற்கொண்டு  சேவை அதிகரிக்க எண்ணி, நிறைய பனை விதைத்தான். என்ன துரதிர்ஷ்டம்... அத்தனை பனை மரங்களும் ஆண் பனை. எப்படி காய்க்கும்?  அவன் தன் சிவத்தொண்டுக்கு  இப்படி ஒரு சோதனையா என்று அழுதான்.

''என்னய்யா, நீ சிவ பக்தனாயிற்றே. உன் கடவுள் உனக்கு உதவவில்லையா?'உன் சிவன் உனக்கு உதவலையா ?''. 
ஊரார் ஏளனம் செய்தார்கள். அந்த ஊருக்கு ஞான சம்பந்தர் வந்திருப்பதை அறிந்து  சிவபக்தன்  அவரிடம் சென்று முறையிட்டு அழுதான். சம்பந்தர் நேராக  திருவோத்தூர் சிவன் கோவிலுக்கு சென்றார். பதிகம் பாடினார். அவனது குறையை நீக்க வேண்டினார்.  
சிவன் சாதாரண மானவனா?  சம்பந்தர் பாடல்களை கேட்க அல்லவோ இந்த நாடகம் ஆடியவன்.  சம்பந்தரின் பதிகங்களில் மகிழ்ந்து
''குரும்பை ஆண் பனை ஈனும் ''என அருளினார் சிவபெருமான்  என்கிறார் சேக்கிழார்.
சம்பந்தர் அந்த பக்தனோடு நடந்து பனைமரங்களைச்  சென்று பார்த்தபோது அவற்றில் பனம்பழங்கள் தொங்கின. அந்த சிவ பக்தன் சந்தோஷத்தை,   

''ஸாரி , என்னால் எழுத முடியவில்லை. எழுத தெரியவில்லை.  ''உபமன்யு பக்த விலாசம்'' என்ற  ஸம்ஸ்க்ரித ஸ்லோகத்தில்  இது குறிப்பிடப்படுவதை பழம்பெரும்  சரித்திர, புதை பொருள் ஆராய்ச்சி நிபுணர்,   டாக்டர்  R நாகசாமி  எடுத்துக்காட்டி இருக்கிறார்:  ''Tala: pumamsa: sruthvai the bhavanthu paritha: palai'' .

திருக்கோயிலூர் சென்ற சமயம் தூர இருந்த  ஒரு   ஆலய கோபுரம்  சம்பந்தர் கண்ணில் பட்டவுடனேயே விழுந்து வணங்கினார்.  அருகில் இருந்தவர்களுக்கு ஆச்சர்யம்.

''என்ன இது. தெரிவது  சமணர் கோவில் கோபுரம் , இந்த சிவபக்தர் விழுந்து வணங்குகிறாரே. ஒருவேளை அவருக்கு   இது சைவ கோயிலா வேறு ஏதாவதா என்று சரியாக தெரியாதோ?''

''சுவாமி  எதிரில் தெரிவது சமணர்களின் கோவில்.'' என்று அவருக்கு எடுத்துரைத்தார்கள்.  சம்பந்தர் காதில் வாங்க
வில்லை. நேராக அந்த ஆலயத்திற்குள் நுழைந்தார்.  என்ன ஆச்சர்யம். கர்ப்ப கிரஹத்தில்  சிவன் காட்சி தந்தார்.  என்ன ஞான சக்தி? எப்படி காலம் காலமாக இருந்த சமண சிலை  திடீரென சிவலிங்கமாயிற்று.. இது உபமன்யு  பக்த விலாசத்தில் வருகிறது.

திருஞான சம்பந்தர் நிகழ்த்திய  அதிசயங்கள் பற்றி எழுதப்போனால் அது ஒரு தலைகாணி புஸ்தமாகிவிட நிறைய  வாய்ப்பு உண்டு. இருந்தாலும் விடப்போவதில்லை. அதில்  சிலதையாவது அவ்வப்போது  அறிந்து கொள்வோம்.

 

 

 

sivan jaykay

unread,
Sep 2, 2025, 7:59:48 PM (3 days ago) Sep 2
to amrith...@googlegroups.com

பத்ரகிரியார் புலம்பல்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

பர்த்ருஹரி குப்த வம்ச ராஜா. பெரிய  மௌரிய வம்சாவழி  சாம்ராஜ்யத்தை ஆண்ட அந்த மன்னனுக்கு ஒரு அழகி மேல் கொள்ளை ஆசை. அவள் யார் என்ன பூர்வோத்திரம்? எதுவும் தெரியாமல் அவளை ராணியாக்கிக் கொண்டான். அவளுக்கு அவன் மேல் துளியும் ஆசையோ அன்போ கிடையாது. அரண்மனை குதிரை லாயத்தில் பணி புரிந்து கொண்டிருந் தவன் மேல் கண்மூடித்தனமாக காதல். 

ஒருநாள்  ராஜாவுக்கு ஒரு ரிஷி என்றும் இளமையாக இருக்கும் ஒரு தேவலோக மாம்பழம்  கொடுத்தார். அதை பர்த்ருஹரி இந்த திருட்டு ராணிக்கு கொடுத்தால் என்றும் அவள் தனக்கு இளமையான அழகிய மனைவியாக இருப்பாள் என்று எண்ணிஅவளுக்குக்  கொடுக்க, அந்த  மாம்பழம் அவள் மூலம் குதிரைலாயக்  காரனுக்கு செல்ல. அவனுக்கு  அங்கே சாணி பொறுக்கும்  பெண் மேல் காதல் இருந்ததால் அவன்  அவளுக்குக்   கொடுக்க, அவள்  ராஜாமேல்  பக்தி விசுவாசம் கொண்டவளாததால்  ''நமது ராஜா என்றும் இளமையாக இருந்து நாட்டை ஆள வேண்டும்''   என்று  ராஜாவிடம் அந்த மாம்பழத்தை கொடுக்கிறாள்.  

நீங்கள் ராஜாவாக இருந்தால் என்ன நினைப்பீர்களோ அதை தான் பர்த்ருஹரி அப்போது விஷயம் அறிந்து துடித்தான். தான் இத்தனை காலம் ஏமாற்றப்பட்டதை அறிந்து, தான் இவளிடம் உயிரையே வைத்தருந்தானோ அவள் துரோகி என்று அறிந்து  கோபாக்னி கொண்டு ராணி, குதிரைக்காரன் எல்லோரையும் தீர்த்துக் கட்டுகிறான்.  ''இனி எனக்கு ராஜ்ஜியம் வேண்டாம்'' என்று வாழ்க்கையை  வெறுத்து சன்யாசியாகிறான். தனது தம்பி விக்ரமாதித்யனிடம் ராஜாங்க பொறுப்பை ஒப்படைத்து நாடெங்கும் திரிந்து தெற்கே திருவிடைமருதூர் வந்து  பட்டினத்தாரின் சிஷ்யனாகிறான். தமிழ் நன்றாக அறிந்து கண்டு விட்ட தால் அவனை எல்லோரும் பத்ரகிரியார் என்று  போற்றும் ஞானியாகிவிட்டான். பத்ரகிரியார் வாழ்க்கை வெறுத்து பாடிய  பாடல்கள் தான்  பத்திரகிரியார் புலம்பல் எனும் அருமையான  பாடல் திரட்டு. சில புலம்பல்கள் படிக்கலாம். எளிமையான தமிழில் உன்னத தத்துவங்கள் கொண்ட எளிதில் அர்த்தம் புரிபவை.

மனிதனுக்கு  ஏக்கம், சோகம், ஏமாற்றம் என்பது   அவன் மனதின் அடிவாரத்தில் தேங்கி நிற்கும்  வண்டல் எனலாம்.அவனை அடிக்கடி துன்புறுத்த்துவது. அது வெளியே அடிக்கடி வருவதில்லை.   அது வந்தால்  அதன் வெளிப்பாடு  எப்படியெல்லாமோ  இருக்கும்.  சிலர்  அழுவார், சிலர் வெறுப்பில் சிரிப்பார், சிலர்  கோபிப்பார்,  சிலர்  பொறாமைப் படுவார்,  வாடி  தனிமை யில் வதங்குவார்.  ஏக்கம், சோகம், ஏமாற்றம் எல்லாம்  எதனால் வருகிறது?.  நினைத்தது நடக்காமல் போனால், எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால்,  முயன்ற போதும் தோல்வி, பலவித  சோதனைகள்  பல  மேலும் மேலும் தலை நீட்டி  உற்சாகத்தை கொல்லும்போது.  வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் அனுபவித்தும் தான் ஏமாற்றப்பட்டதை, சோகம் நேர்ந்ததை பத்ரகிரி உணர்ந்து  அதிலிருந்து தப்ப  நமக்கு பாடம் சொல்லித்தருகிறார். வேதாந்தம் அப்போது நன்றாக புரியும். மனம் ஆறுதல் தேடும்போது  இறைவனை  நாடுகிறது. நண்பர்களின் உறவினர்களின்  ஆதரவும் ஆதங்கமும்  சோகத்தை தணிக்கிறது.  

தத்துவங்கள் எப்போதும்  அதைச்  சொல்பவர்கள் மூலம் வாயில் வரும்.  கேட்பவர்களுக்கு செவியின் மூலமும் உள்ளே நுழையும்.     பத்ரகிரி  ரெண்டு அடியில் வள்ளுவர் போல் தத்வ உபதேசம் செய்பவர்.   கஷ்டம் என்று நாம் நினைக்காமல்  படிக்க விருப்ப  மூட்டும் எழுத்து வன்மை. .
 
சில இடங்களில்  வேதாந்த   ஆத்ம ஞான  தத்வ வார்த்தைகள் வரலாம். பயப்படவேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக என்ன வென்று தெரிந்து கொண்டால் ரசிக்க முடியும். உதாரணமாக  'மும்மலம், சுழுமுனை, இட பிங்களை ''.

மிகவும் சக்தி வாய்ந்த  மருந்துகளை  antibiotic நிறைய  சாப்பிடக்கூடாது.  வெறும்  வயிற்றில் அம்மாதிரியான  மருந்துகளை   உட்கொள்ளக்கூடாது.  அதுபோலவே  இந்த  நீதி வாக்யங்களை ஒவ்வொன்றாகத்  தான்  அனுபவித்து  படிக்கவேண்டும்.  அது  பற்றி  சிந்திக்க வேண்டும்.  அப்போது  தான்  அவற்றின்  உள்ளே  புதைந்து கிடக்கும்    உயர்ந்த கருத்து  புலப்படும்.   எனவே  கொஞ்சூண்டு  மட்டும் விட்டு விட்டு அப்பப்போ  சொல்கிறேன்.

 ''எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே, அழுத்தமாய்ச் சிந்தையை வைத்தன்பு கொள்வது எக்காலம்?
''இறைவா,  ஓம் என்ற ஒற்றை அக்ஷரத்தை என் மனம் இதுவரை நாடாமல் விட்டுவிட்டதே. அதை என் மனதில் ஆழப் பதித்து அதன் ஆனந்தத்தை இன்பத்தில் நான் அறிந்து கொள்வது எப்போது அப்பனே?''

 ''அருளாய் உருவாகி ஆதி அந்தம் ஆகின்ற  குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம்?''
என்னிடம் இல்லாது எதுவுமில்லை, நான் ராஜா என்று முட்டாளாக நல்லது எதுவும் தெரிந்துகொள்ளாமல், அதற்கு ஒரு தக்க குருவை தேடி உபதேசம் பெறாமல் வாழ் நாளை வீணாளாக்கி விட்டேன், எப்போது குருவருள் கிடைக்கும் ''
(நல்வழிக்கு  குருவை தேடாமல் இருந்து விட்டேனே)

''நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம்  தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம்?'
(இத்தனை நாள்  என்னுள்ளே உன்னை  ஆத்மாவாக  அறிந்து கொள்ளாமல் இருந்தேனே!)

என் மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்த பின்பு தன் மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம்?
(நான், எனது, என் சுகம், எனக்கு இன்பம்  என்று  சுயநலமாக  இருந்தேனே. இனி நீயே எல்லாம்  என்று அறியவேண்டுமே)

இது கொஞ்சம் தான். நிறைய இருக்கிறது. அடுத்து ஒரு பதிவில் இதை வளர்ப்போம்.

''ஒளியில் ஒளியாம் உருப்பிறந்த வாறதுபோல் வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம்?'
(சர்வம் பிரம்ம மயம், பார்க்குமிடமெங்கும் நீக்கமற  நிறைந்த பொதுவில் நடனமிடும் தெய்வம் உன்னை  உணர்வது எப்போது?)

''காந்தம் வலித்து இரும்பைக் கரத்திழுத்துக் கொண்டதுபோல்  பாய்ந்து பிடித்திழுத்துன் பாதத்தில் வைப்பது எக்காலம்?
(எளிதில் புரியும். மனதை அடக்குவது பற்றி இதற்கு மேல் எவராலும் எளிமையாக சொல்ல முடியாதே.  காந்தம் எப்படி இரும்புத் துண்டுகளை பிடித்து இழுத்துத் தன்னோடு  இணைத்துக் கொள்ளுமோ அது போல்  காந்தசக்தி கொண்ட பராசக்தி உன்னை என் மனம் என்றைக்கு கெட்டியாக பிடித்து மனதை நிறைத்துக் கொள்ளும்? நீதான் அதற்கு வழி வகுக்க வேண்டும்}
Reply all
Reply to author
Forward
0 new messages
Search
Clear search
Close search
Google apps
Main menu