மகாபாரதக் கால அட்டவணை
மஹாபாரத சம்பவங்கள் கலியுகத்திற்கு (Friday (BC 3102-2-20) at 2-27-30 P.M.) முன்னரே நடந்தன
1. கர்ணனின் பிறப்பு : மாசி மாத வளர்பிறை முதல் நாள். அவன் {கர்ணன்} யுதிஷ்டிரனைவிட 16 வருடங்கள் மூத்தவன் என்று சொல்லப்படுகிறது.
2. பிரம்மகூடத்தில் உள்ள சப்தசிருங்க மலையை மன்னன் பாண்டு ஐப்பசி மாத வளர்பிறை ஐந்தாவது நாளில் அடைந்தான். இது யுதிஷ்டிரன் பிறந்து ஒரு வருடத்தில் நடந்தது.
3. யுதிஷ்டிரன் பிறப்பு : யுதிஷ்டிரன் பிரஜோத்பத்தி வருடம், ஐப்பசி மாத வளர்பிறை 5வது நாளில் கேட்டை நட்சத்திரத்தில், தனுசு லக்கினத்தில், மதிய வேளையில் அபிஜித் முகூர்த்தத்தில் பிறந்தான். அது கலியுக ஆரம்பத்திற்கு 127 வருடம் 5 மாதம் 25 நாள் முன்னதாக நடந்தது. (அநேகமாக கி.மு. 3229 - 8 -15)
4. பீமன் பிறப்பு : பீமன் ஆங்கீரச வருடம், ஐப்பசி மாதம் தேய்பிறை 9வது நாளில் மக நட்சத்திரத்தில் மதிய வேளைக்குப் பிறகு பிறந்தான். அவன் யுதிஷ்டிரனை விட 1 வருடம் 19 நாட்கள் இளையவனாக இருந்தான்.
5. அர்ஜுனன் பிறப்பு : ஸ்ரீமுக வருடம் பங்குனி மாதம் பௌர்ணமிபகலில்
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தான். அவன் பீமனை விட 1 வருடம்
15நாட்கள் இளையவனாக இருந்தான்.
{பீமனை விட 1வருடம் இளையவன்}
{யுதிஷ்டிரனை விட 2வருடம் இளையவன்}
{கர்ணனை விட 18 வருடம் இளையவன்}
6. நகுலன் சகாதேவன் பிறப்பு : பவ வருடம், பங்குனி மாதம் பௌர்ணமி நாள் மதிய வேளையில் அசுவினி நட்சத்திரத்தில்
பிறந்தனர். அவர்கள் அர்ஜுனனை விட 1 வருடம் 15நாட்கள் இளையவர்களாக இருந்தனர்.
{அர்ஜுனனை விட 1வருடம் இளையவர்கள்}
{பீமனை விட 2வருடம் இளையவர்கள்}
{யுதிஷ்டிரனை விட 3வருடம் இளையவர்கள்}
{கர்ணனை விட 19 வருடம் இளையவர்கள்}
7. கிருஷ்ணன் பிறப்பு : ஸ்ரீ முக வருடம் ஆவணி மாதம் தேய்பிறை எட்டாம் நாள் {ரோகிணி நட்சத்திரம்} நள்ளிரவில் ரிஷப லக்னத்தில் பிறந்தான்.
8. துரியோதனன் பிறப்பு : பீமன் பிறந்த அடுத்த நாள் பிறந்தான். அந்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் 99 கௌரவர்களும் அவர்களது ஒரு தங்கையும் பிறந்தனர். அதே போல, ஹிடிம்பன், பகன், மற்றும் கீசகன் ஆகியோர் அதே காலகட்டத்தில் மகம் மற்றும் சுவாதி நட்சத்திரங்களுக்கு இடையில் பிறந்தனர்.
9. மன்னன் பாண்டு சர்வதாரி ஆண்டு, சித்திரை மாத, வளர் பிறை உத்திரம் நட்சத்திரத்தில் இறந்தான். அப்போது அர்ஜுனன் பிறந்து 14 வருடங்களும் 7 நாட்களும், யுதிஷ்டிரன் பிறந்து 16 வருடங்களும் 6 மாதங்களும் 7 நாட்களும் ஆகியிருந்தன.
10. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்கு சர்வதாரி வருடம், சித்திரை மாதம் தேய்பிறை 13வதுநாள் அழைத்து வரப்பட்டனர். அதாவது அவர்கள் தந்தை {பாண்டு} இறந்து 16 நாட்களுக்குப் பிறகு. சர்வதாரி வருடம் சித்திரை மாத தேய்பிறை 13வது நாளில் இருந்து வைகாசி மாதம் வளர்பிறை 10வது நாள் வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு பாண்டுவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 16 வருடம், 6 மாதம், 28 நாளாகும்.
11. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தில் 13வருடங்கள் தங்கி இருந்தனர். அதாவது சர்வதாரி வருடம் வைகாசி மாத வளர்பிறை 10ம் நாளிலிருந்து, பிலவ வருடம் வைகாசி மாதம் 10ம் நாள் வரை இருந்தனர். அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 29 வருடம் 6 நாள் 23 நாட்கள் ஆகும். பாண்டவர்கள் துரோணரிடம் வில்வித்தை பயின்றனர்.
12. வில்வித்தைக் கண்காட்சி : பிலவ வருடம் வைகாசி மாதம் பௌர்ணமி அன்று நடைபெற்றது. {அப்போது யுதிஷ்டிரனுக்கு 30-31 வயது}
13. மன்னன் துருபதனைத் தாக்கியது : பிலவ வருடம் வைகாசி மாத தேய்பிறை 5வது நாளில் ஆரம்பித்து 1 வருடம் 4 மாதம் 5 நாட்களுக்கு நடந்தது. அதாவது சபகிருது வருடம் திருவாதிரை மாதம் வளர்பிறை 10 வது நாள் வரை நடந்தது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது-------
31வருடம் 5நாள்.
{துருபதனை கைதாக்கிய போது பீமனுக்கு 30 வயது,
அர்ஜுனனுக்கு 29 வயது, நகுல
சகாதேவர்களுக்கு 28வயது என அறியவும்}
15. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தில்
5 வருடம் 4 மாதம் 20 நாட்களுக்கு, அதாவது பிலவங்க வருடம் மாசி மாதம் அமாவாசை
வரை இருந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 36 வருடம் 4 மாதம் 25 நாள்.
16. பிலவங்க வருடம், மாசி மாதம் வளர்பிறை 8ம் நாளில் பாண்டவர்கள் வாரணாவதத்திற்குள் நுழைந்தனர். அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 36 வருடம் 4 மாதம் 3 நாட்கள்.
17. கீலக வருடம், பங்குனி மாதம் 13 / 14ம் நாள் இரவு மூன்றாம் ஜாமத்தில் அரக்கு மாளிகைக்கு தீ வைக்கப்பட்டது. (ஒரு நாள் என்பது 8 ஜாமம் கொண்டது. 4 பகலிலும், 4 இரவிலும்) {இரவை நான்காகப் பிரித்தால் வரும் 3வது ஜாமத்தில் தீ வைக்கப்பட்டது}. பாண்டவர்கள் கீலக வருடம் பங்குனி மாத அமாவாசை அன்று பகலில் கங்கை நதியைக் கடந்தனர்.
18. ஹிடிம்ப வதம் : சவுமிய வருடம், சித்திரை மாதம், வளர்பிறை முதல் நாளில் ஹிடிம்பன் கொல்லப்பட்டான்.
{பீமனால் ராட்சசன் ஹிடிம்பன் கொல்லப்பட்ட போது பீமனுக்கு சுமார் வயது37}
19.கடோத்கசன் பிறப்பு:
சவுமிய வருடம், ஐப்பசிமாதம் வளர்பிறை இரண்டாம்நாளில் கடோத்கசன் பிறந்து அன்றே பெரிய மனிதனாக வளர்ந்தான்.
{பீமனுக்கும் ராட்சசி ஹிடிம்பிக்கும் கடோத்கசன் பிறந்த போது பீமனுக்கு சுமார் வயது37}
20. பாண்டவர்கள் சாலிஹோதாஸ்ரமம் என்ற இடத்தில் 6மாதங்கள் தங்கியிருந்தனர். அது சவுமிய வருடம் ஐப்பசி மாத வளர்பிறை 2ம் நாளில் இருந்து சாதாரண) வருடம் சித்திரை மாதம் வளர்பிறை 2ம் நாள் வரை ஆகும். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 38 வருடம் 5 மாதம் 7 நாட்கள் ஆகும்.
21. பாண்டவர்கள் ஏகசக்கரபுரத்தில்
6மாதங்கள் தங்கியிருந்தனர். அது சாதாரண வருடம், சித்திரை மாதம் வளர்பிறை 2ம் நாளில் இருந்து, ஐப்பசி மாதம் வளர்பிறை 2ம்நாள் வரைஆகும்.
22. பகன் வதம் : சாதாரண வருடம் வளர்பிறை 10ம் நாளில்பகன் வதம் நேர்ந்தது.. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 39வருடம் 5நாள் ஆகும்.
23. பாண்டவர்க்ள
ஏகச்சக்கரபுரத்தில் மேலும் 1 மாதமும் 10 நாட்களுக்கும் தங்கினர். அதாவது சாதாரண வருடம் மார்கழி மாதம், தேய்பிறை 5ம் நாள் வரை தங்கியிருந்தனர். பிறகு அவர்கள் பாஞ்சால நாடு நோக்கி நடந்து மூன்று நாட்களில் தௌமியரின் ஆசிரமத்தை அடைந்தனர். அங்கே அவர்கள் பதினைந்து நாட்கள் தங்கினர். பதினெட்டாவது நாளில் அவர்கள் {பாண்டவர்கள்} பாஞ்சால நாட்டுத் தலைநகரத்தை அடைந்தனர். அதாவது சாதாரண வருடம் தை மாதம் 7ம் நாள் அடைந்தனர்.
24. திரௌபதி சுயம்வரம் சாதாரண
வருடம் தை மாதம் வளர்பிறை 10ம் நாளில் நடைபெற்றது.
25. பாஞ்சால நாட்டில் பாண்டவர்கள் ஒரு வருடம் 15 நாட்கள் தங்கியிருந்தனர். அதாவது விரோதி கிருது வருடம், தை மாதம் அமாவாசை நாள் வரை தங்கியிருந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 40 வருடம் 3 மாதம் 25 நாள் ஆகும்.
26. விரோதிகிருது வருடம், மாசி மாதம் வளர்பிறை 2ம் நாள் அன்று பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் அழைக்கப்பட்டு பாதி நாட்டைப் பெற்றார்கள். அவர்கள் ஹஸ்தினாபுரத்தில் 5 வருடம் 6 மாதங்களுக்குத் தங்கினர். அதாவது பிங்கள வருடம் ஆவணி மாதம் வளர்பிறை 2ம் நாள் வரை தங்கினர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 45 வருடம் 9 மாதம் 27 நாள். இந்திரப்பிரஸ்த நகரம் அந்தக் காலத்தில் தான் கட்டப்பட்டது.
27. பிங்கள வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 10ம் நாளில் யுதிஷ்டிரன் பட்டம்சூட்டப்பட்டான். அப்போது அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} வயது சரியாக 46 வருடம்.
{பீமனுக்கு வயது 45, அர்ஜுனனுக்கு வயது 44, நகுல சகாதேவர்களுக்கு வயது 43}
28. அர்ஜுனன் 12 வருடம் தீர்த்த யாத்திரை சென்றான். அவன் {அர்ஜுனன்} காளயுக்தி வருடத்தில் சென்று பிரமோதூத வருடத்தில் திரும்பினான். பிரமோதூத வருடம் வைகாசிமாத வளர்பிறை 10ம் நாளில் அர்ஜுனன்
சுபத்திரையைத் திருமணம் செய்தான். அபிமன்யு பிரமோதூத வருடத்தில்தான் பிறந்தான்.
{அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் திருமணம் நடைபெறும் போது அர்ஜுனனுக்கு சுமார் வயது 57. பிறகு அபிமன்யு பிறந்தான்
29. அதே வேளையில் திரௌபதி தனது ஐந்து கணவர்கள் மூலம் ஐந்து மகன்களைப் பெற்றெடுத்தாள்.
30. பிரமோதூத வருடம் ஆவணி மாத வளர்பிறை 2ம் நாளில் காண்டவ வனம் எரிக்கப்பட்டது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 58 வருடங்கள் 10 மாதங்கள் 15 நாட்கள். மயன் கட்டிய சபாமண்டபத்தைக் கட்டி முடிக்க 1 வருடம் 2 மாதம் ஆகியது.
31. பாண்டவர்கள் மயசபைக்குள் பிரசோத்பத்தி வருடம் ஐப்பசி மாத வளர்பிறை 10ம் நாளில் நுழைந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 60 வருடம் 5 நாள் ஆகும்.
32. பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தை 16 வருடங்கள் ஆண்டு வந்தனர். அதாவது சர்வஜித் வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 10ம் நாள் வரை ஆண்டனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 5 நாட்கள் ஆகும்.
33. பீமனுக்கும் ஜராசந்தனுக்கும் இடையில் நடைபெற்ற மல்யுத்தம் சர்வஜித்த வருடம் கார்த்திகை மாதம் வளர்பிறை 2ம் நாள் துவங்கி 14 நாட்கள் தொடர்ந்து, 14வது நாள் மாலையில் ஜராசந்தன் கொல்லப்பட்டான்.
34. சர்வதாரி வருடம் சித்திரை மாத பௌர்ணமியில் ராஜசூய வேள்வி தொடங்கியது. அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 76 வருடம் 6 மாதம் 15 நாள்.
35. பகடை ஆட்டம் : இரண்டு பகடை ஆட்டங்களும் சர்வதாரி வருடம் ஆவணி மாத தேய்பிறை 3ம் நாள் முதல் 7ம் நாள் வரை நடைபெற்றது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 10 மாதம் 2 நாள்.
ஆக பாண்டவர்கள் விரோதிகிருது வருடம் மாசி மாத
வளர்பிறை 2ம் நாள்
தொடங்கி சர்வதாரி வருடம் ஆவணி மாதம் தேய்பிறை 7ம் நாள் வரை 36 வருடம் 6 மாதம் 20
நாட்களுக்கு இந்திரப்பிரஸ்தத்தை ஆண்டார்கள்.
பகடை ஆட்டம் நடைபெற்றபோது
யுதிஷ்டிரனுக்கு வயது :76
பீமனுக்கு வயது :75
அர்ஜுனனுக்கு வயது :74
நகுல சகாதேவர்களுக்கு :73
துரியோதனனுக்கு வயது :75
கர்ணனுக்கு வயது :92
கிருஷ்ணனுக்கு வயது 74
\(ஆதாரம் டாக்டர் K.N.S.Batnaik –ஆங்கிலம்) (http://www.hindunet.org/hindu_history/ancient/mahabharat/mahab_patnaik.html - விரிவான விளக்கங்களுக்குச் செல்லவும் )
தொகுத்தவர்
உமாபாலசுப்ரமணியன்