A DISCUSSION

27 views
Skip to first unread message

Sivan Krishnan

unread,
Nov 30, 2014, 8:46:33 PM11/30/14
to sivan

                                                                              தாத்தாவும்  பேரனும் 


என்ன  தாத்தா    உங்களுக்கு நீங்களே சிரித்துக்கொண்டிருக்கிரீர்கள்.

ஒண்ணுமில்லேடா கோபு ,  யாரோ  ஒரு  ப்ரஹஸ்பதி  இங்கிலிஷ்லே  பொளந்து  கட்டியிருக்கான்.   அவனுக்கு இப்படி ஒரு இங்கிலீஷ் எங்கேயிருந்து  வந்தது என்று ஆச்சர்யபட்டுக்கொண்டிருந்தேன்.

ஏன்   தப்பா ஏதாவது  எழுதியிருக்கிறானா  அவன் தாத்தா?

இதோ   பார் கோபு   நாம  யாரையும்   தப்பு என்று  சொல்வதற்கில்லை.  அவரவர்  தனக்குத் தெரிந்ததை   தான் சொல்ல முடியும், செய்ய முடியும்.   அது மற்றவருடைய சொல்லிலிருந்தோ,  செயலிலிருந்தோ, எண்ணத்திலிருந்தோ   மாறுபாடுடன் தான்  இருக்கமுடியும்.   இருவர் ஒரே  மாதிரி ஒரு  எண்ணத்தைக்   கொண்டதாக  சரித்திரம் கிடையாது.  

 இந்த மனிதன்   எவ்வாறு வேறுபடுகிறான்?

 இவன் தனக்கு   தெரிந்த  சில ஆங்கில  வார்த்தைகளை நிரப்பி ஒரு   பத்திரிகையில் ''கல்யாண  மாலை''  மாதிரி ஒரு  திருமண விளம்பரத்தில்  பெண்  தேடி யாரோ  ஒரு  பெண்ணுக்கு தன்னைப்பற்றி  விமரிசையாக விவரித்திருப்பது  தான்  இந்த  கடிதம்.

தவறாக  இருக்கிறதா ?

எண்ணம்  எழுத்திலே  படுகொலை  செய்யப்பட்டிருக்கிறது.  இந்தா   நீயே படி  " 

.................................
Madam, I am one young gentleman living only with myself in Patna . I am seeing your advertisement for marriage purpose in the daily newspaper. So I decide to press myself on you and I am hopping you will make the marriage with me.

 I am the son of my father & mother of agriculture family from inside Patna . I having no sister and no brother also. I become big in Patna only. I educate myself in the Zuarilal Himmatlal High School ,Bezna Road .. I am nice and big, six foots tall and six inches long. My body is filled with hardness why because I am working hardly. I am playing also hardly.

 Especially I am liking the cricket. I am a good batter also I am fast baller. Whenever I am coming running for the balling, all batters are running everywhere why because they are afraiding my balls. Balls are bouncing too much high. That is very danger for them.

I am very nice gentleman. I always laughing loudly at everyone. I am happy always and gay also. Ladies they are saying I am nice and soft because I giving respect to them. I am always liking if ladies are on top. That is how nice I am.  I am not having any bad habits. I drink milk only and no other bad things. I am not chewing cigarettes or eating gutka paan why because it not good for all the peoples. So I am not doing so. I am keep fitting everyday. Morning I am going to jim and I am pumping like anything. Daily I am pumping and pumping. If you want you can came and see how I pumping the dumb bells in the jim. And now good muscles are come outing everywhere.

I am having very much money in my pant everyday and my pant is everyday open for you why because I am nice gentleman, but still I am living with myself only. What to do? So I am taking my things into my own hands everyday. That is why I want to press myself on you, so that you will come and take my things into your hands.

Madam, if you are marrying me, I am telling you, I will be hardly loving you everyday. If you are not marrying me then I will press you and press you until you come. I am at your feet and slowing looking up, with hope. I am waiting very badly for your reply why because I am stiff with excitement and anticipation.

Expecting good answer and replies to me in the future.

Namaste.
Yours,
Hiralal

''தாத்தா  ஹிரலால் பவுன்சர்  போடுவானாம்.  பில் ஹ்யூஸ்  மாதிரி  எல்லாரையும்  இங்கிலீஷ் பவுன்சர்லேயே கொல்லக் கூடியவன்  தான்  இவன்.   ஷேக்ஸ்பியர்    இருந்தா  தூக்குப்போட்டுக்குவான்  நிச்சயம் தாத்தா ''

Sivan Krishnan

unread,
Nov 30, 2014, 8:47:14 PM11/30/14
to sivan

  

                          தாத்தாவும்  பேரனும்   -      சமத்து சுப்புணி


தாத்தா  எனக்கு   ஒரு கதை  சொல்லுங்க:


என்ன  கதை வேணும்?


நீங்க  நீதி கதை  சாமி கதை சொல்லுவீங்க,   அதுலே ஏதாவது ஒண்ணு 

 

தாத்தா  கொஞ்சம்  வெந்நீர்  பிளாஸ்கிலிருந்து எடுத்து  குடித்துவிட்டு   தொண்டையைக்  கனைத்துக்கொண்டார்.  கதை வந்தது. 

                                                                      

ஏழு  வயசு சுப்புணி அம்மாவோடு ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் சென்று ஒரு இனிப்பு கடையில் அந்த கடைக்காரர்

சுப்புணியை ரொம்ப பிடித்துப் போய் " டே , குட்டி பயலே ! இந்தா  உனக்கு கைநிறைய சாக்லேட் எடுத்துக்கோ'' என்று ஒரு கண்ணாடி ஜாடியை நீட்டினார்


சுப்புணி அதற்குள் இருக்கும் சாகலேட்களை எட்டி பார்த்துவிட்டு தலையை வேண்டாம் என்று ஆட்டினான். எவ்வளவு சொல்லியும் அவன் கேளாததால் அவன் அம்மா "டே செல்லம் அவர் அவ்வளவு சொல்லியும் மாட்டேன் என்று சொல்லிவிட்டாய் அம்மா,  நான் சொல்கிறேன் நீ உன் கை நிறைய எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கோ" என்றாள்


" சரி அங்கிள் நீங்களே உங்கள் கையாலே எடுத்துகொடுத்தால் வாங்கிக்கறேன்" என்றான் சுப்புணி.


'' என்ன நல்ல பையன் பார்த்தீர்களா. குழந்தையை நன்றாக வளர்த்திருக்கிறீர்கள். மற்றவர் பொருளை அவர்கள் கொடுத்தால் மட்டுமே வாங்கிக்கொள்ளும் பழக்கம். பிரமாதம். இதோ நானே கை நிறைய தருகிறேன்''  என்று அவர் தன்னுடைய கை நிறைய சாக்லேட் எடுத்து சுப்புணியிடம் நீட்டினார். " 


தை வாங்கி கொண்ட சுப்புணி அப்பறமாக ஏன் இவ்வாறு செய்தாய் என்று வீட்டில் கேட்ட அம்மாவிடம்  என்ன சொன்னான்?



"என் கை சின்னது. கொஞ்சமாக தான் சாக்லேட் வரும். அவர் கை பெரிசு. நிறைய கிடைக்குமல்லவா?! என்றான்


ஒரு நீதி கூட உதயமாகிறது இதிலிருந்து:


நாமாக எதையாவது தேடி அடைவதை காட்டிலும் கடவுள் நமக்கு அருள்வது அதிகம் அல்லவா!!

 

Sivan Krishnan

unread,
Dec 2, 2014, 8:51:40 PM12/2/14
to sivan

                                                          தாத்தாவும்   பேரனும்.

''தாத்தா  இன்னிக்கி உங்க  கிட்ட சில  விஷயம்   கேக்கப்  போறேன்.''

சரிடா  கோபு   கேளு.

என்  புத்தகத்தில்  ஐம்புலன்களை அடக்க வேண்டும்  என்று  படித்தேன்  புரியவில்லை.   அது பற்றி சொல்லுங்க.

நமது  மனம்   போன  போக்கெல்லாம் போக வேண்டாம்   என்று  படித்திருக்கிறாயே  அது   தான். மனம்  தான்  முதலில் கட்டுபாட்டுக்குள்  வரவேண்டும். மற்றதெல்லாம் -கண்,  மூக்கு, வாய்,  செவி, நாக்கு   எல்லாமே  வழிக்கு தானே   வந்துவிடும்.
அதுக்கு  உனக்கு   ஒரு கதையா சொல்லட்டுமா.  புரியும்.  

ராமர்  காட்டில்  இருக்கும்போது  ஒரு  ஆற்றங்கரையில் அதுவரை பார்த்திராத துறவி ஒருவரைப் பார்த்தார். ஆச்சார சீலராகக் காட்சி தந்தார் அவர்.

ஆற்றில் மூழ்கி தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிறகு ஜபம் செய்யத் தொடங்கினார் துறவி. சிறிது நேரத்தில், ஹோமம் செய்வதற்கான சமித்துகளை எடுத்துக் கொண்டு அமர்ந்தார். சரி இவர் வேள்விதான் செய்யப் போகிறார் என்று எண்ணி, ஓர் ஓரத்தில் அமர்ந்து அவர் செய்வதை கவனித்தார் ராமபிரான்.

துறவியோ, கையில் வைத்திருந்த துணி மூட்டையில் இருந்து,  கோதுமை  மாவு எடுத்து பாத்திரத்தில் இட்டுப் பிசைந்து, சமித்துகளில் தீ மூட்டி, ஆறு ரொட்டிகளைச் சுட்டார். இரண்டில் தேனும், இரண்டில் நெய்யும், மீதி இரண்டில் ஊறுகாயும் தடவி வைத்தார். பிறகு மீண்டும் ஜபம் செய்தார். சிறிது நேரம் சென்றது. கண்திறந்த துறவி, ரொட்டிகளை எடுத்து வைத்து, சாப்பிட அமர்ந்தார்.

அந்த நேரம், பசியால் வாடிய பெரியவர் ஒருவர் அவ்வழியே வந்தார். பார்க்க பரிதாபமாக இருக்கவே, துறவி அவரை அழைத்து, ஊறுகாய் தடவிய ரொட்டிகளைக் கொடுத்து உண்ணச் சொன்னார். மீண்டும் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.

திரும்பவும் கண்விழித்து எழுந்து, தேன் தடவிய இரண்டு ரொட்டிகளை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தார். அந்த நேரம் வாடிய நிலையில் ஒரு சிறுமி அவ்வழியே வந்தாள். அவளைப் பார்த்து இரக்கப்பட்ட துறவி, அந்த ரொட்டியை அவளுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். பிறகு மீதி இருந்த நெய் தடவிய ரொட்டியை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றார். ரொட்டிகளை சிறிதுசிறிதாகப் பிய்த்து, மீன்களுக்குப் போட்டார். பிறகு திரும்பி வந்து, சமித்துகள் எரிந்த சாம்பலை எடுத்து பாத்திரத்தில் வைத்து, ஆற்று நீரை அதில் சேர்த்து, சாம்பலைக் கரைத்து குடித்துவிட்டு அமர்ந்தார்.

துறவியின் இந்த செய்கை, ராமபிரானுக்கு ஆச்சரியத்தை அளித்தது. நேரே துறவியிடம் சென்று அவர் செய்கைக்கான காரணத்தைக் கேட்டார்.

துறவி சொன்னார்: ”ஸ்நானம் செய்து முடித்து ஜபத்தில் அமர்ந்தேன். அப்போது, பையில் இருந்த மாவுதான் நினைவுக்கு வந்தது. அந்த மாவினை ரொட்டி சுட்டு, தேனும் நெய்யும் கலந்து சாப்பிட வேண்டும் என்று மனது ஆசைப்பட்டது. அந்த மனதை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக ரொட்டி சுட்டேன்…”

”ரொட்டி சுட்டீர்கள் சரி… ஆனால் நீங்கள் ஏன் அவற்றை உண்ணவில்லை ?” – கேட்டார் ராமபிரான்.

”துறவி என்பவன் புலன்களை அடக்க வேண்டும். எவ்வளவோ முயற்சி செய்து அடக்கினேன். ஆனால், மனது மட்டும் அவ்வப்போது அடம் பிடிக்கிறது. அதன் போக்கில் விட்டு, பிறகுதான் அதற்கு தண்டனை தரவேண்டும். சாம்பலாகப் போகும் இந்த உடலுக்குள் இருந்து கொண்டு, என்னமாய்ப் படுத்துகிறது இந்த மனது?! அதனால், இந்தச் சாம்பல்தான் இன்று ஆகாரம் என்று மனதுக்குக் கட்டளையிட்டு அதையே சாப்பிட்டேன். இதுதான் அடங்க மறுக்கும் மனத்துக்கு அடியேன் அளிக்கும் தண்டனை!” என்றார் மெதுவாக!

 நல்ல கதை  தாத்தா. மனத்தை  அடக்க   எப்படி  பயிற்சி செய்யவேண்டும்?

எண்ணங்களை சீர்  செய்துகொள்ளவேண்டும்.  மனதுக்கு   அலைபாயாத  பழக்கம்  தரவேண்டும்.  இதற்கு தான்  த்யானம், ஜபம்  பாராயணம்,  பஜனை,   சத்சங்கம் எல்லாம்  வைத்திருக்கிறார்கள்.   தனியாக இருக்கும்போது   எண்ணம்  எங்கெங்கோ ஓட்டும்.  நல்ல   விஷயங்களை மற்றவர்களோடு  பரிமாறிக்கொள்ளும்போது  அதற்கு வேறு  இடம்  தாவ சந்தர்ப்பம்  கிடைக்காது.  படிக்கும்போதும்  மனதை  அதில் செலுத்தி    படிக்கவேண்டும்,  நல்ல  விஷயங்களை  கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்

தாத்தா  இதற்கு  ஒரு  குருவின்  உதவி  அவசியமில்லையா?

கோபு ,  இதே கேள்வியை  ஒரு  பக்தர் ரமண  மகரிஷியிடம் கேட்டதற்கு  அவர்   சொன்ன பதில்:

'' நீ  இப்போது  குருவிடமிருந்து தள்ளிப்போய்   எங்கோ   தூர  இருப்பதாக  எண்ணமா?'' என்றார்

அதற்கு  அந்த பக்தர் '' சுவாமி  அந்த  குருவின் அருகில் இருப்பது  அவசியமில்லையா'' ?''

''நீ  என்ன  சொல்ல வருகிறாய்.  அந்த  குருவின்   உடலும் உன்  உடலும்  அருகில்  இருக்க வேண்டாமா  என்று .  அதால் என்ன  பிரயோஜனம்?  மனமல்லவோ  குருவின் மனதுடன்  சேர்ந்திருக்க வேண்டும் ''  என்றார்.  அப்படி  இறைவனின்  மேல்  மனதை நாட்டம் கொள்ள செய்வதற்கு   தான்  சத்சங்கம்,   பூஜை ,  பஜனை, பிரசங்கம்,  பாராயணம் என்று   எத்தனையோ வழிகள் உள்ளன.   அதில்  ஒன்று  மனதை அவன் பால்   செலுத்தி த்யானம் பண்ணுவது.   மௌனமாக உள்ளே  அவனைக்  காண்பது.  

இதெல்லாம்  எல்லோராலும் முடியுமா தாத்தா?

எல்லோராலும்  எதெதுவோ  செய்ய முடிகிறபோது  இது மட்டும்  முடியாமலா  போகும். பயிற்சி  தேவை.   நீ எப்படி  இப்போது  9 வது  படிக்கிறாய்.  எட்டு  வருஷம் படித்தபிறகு தானே.  அது  போல் தான்.''


Sivan Krishnan

unread,
Dec 3, 2014, 8:19:24 PM12/3/14
to sivan
தாத்தாவின் உபநிஷத்
விளக்கம்

ப்ரபந்தம் வேதா மாமி ஒரு மாத்வரைக் கூட்டிக்கொண்டு தாத்தாவை
சந்தித்தாள்'' ''யார் வேதா இந்த சுவாமி?
'' ரகோத்தம ராவ் உங்களைப்பத்தி கோவில்லே பேசிண்டிருந்தேன் . உடனே
பாக்கணும்னார். அழைச்சிண்டு வந்தேன்.''
'' நமஸ்காரம் உக்காருங்கோ. என்ன வேண்டும் சொல்லுங்கோ ''
''நீங்க ஏதோ படிச்சிண்டு இருக்கேளே அதையே சொல்லுங்களேன் ''
'' இது முண்டகோப நிஷதிலே ஓர் ஸ்லோகம்' (2.2.4). அது என்ன சொல்றதுன்னா
'' ப்ராணவோ தனு.. ஸரோ ஹ்யத்மா பிரம்ம தல்லக்ஷ்யமுச்யதே'
அப்ரமத்தேன வேத்தவ்யம் சர்வான் தன்மயோ பவேத் ''

'' அர்த்தம் தமிழ்லே புரிகிற மாதிரி சொன்னா தெரிஞ்சுக்க முடியும் ''
''சொல்றேன் ''
ஒரு பெரிய சக்திவாய்ந்த வில் இருக்கு. அது தான் ''ஓம்'' என்கிற
பிரணவ மந்த்ரம். ப்ரணவத்திலேருந்து தான் பிராணன் (உயிர்) என்கிற
வார்த்தை. ப்ரணவஸ்வரூபம் தான் முருகன். ஓம் என்று எழுதிதான்
அதுக்கு நடுவிலே முருகன் படம் போடுவா. பிள்ளையாரையும் இப்படி போடறது
உண்டு.

வில்லு என்றால் அம்பு வேண்டுமே? அது தான் மனசு. மனசுலே ஓம் என்று
இணைத்து நாம் எதை நோக்கி அம்பு எய்கிறோம் தெரியுமா. பிரம்மம்
என்கிற பரம்பொருள். மனசு ஓம் மூலம் பிரம்மத்தை அடையும் என்று
இவ்வளவு கவித்வம் இந்த ஸ்லோகத்தில் உள்ளது. அதாவது ஒன்றிலேயே
குறியாக மனதை ஈடுபடுத்துவது. பிரம்மத்தை அடைய செய்யக்கூடியது.

அப்படி மனத்தை கட்டுப்படுத்தி பிரம்மத்திடம் செலுத்துபவன்
பிரம்மமாகிவிடுகிறான். அதாவது பிரம்மத்தோடு இரண்டறக் கலந்து விடுவான்.
ஒரு எதன் மீதாவது பட்டால் அதிலேயே நுழைந்து தங்கிவிடுகிறதல்லவா.
எவ்வளவு அழான உதாரணம் இது'. புரிகிறதா?

'' ரொம்ப நேர்த்தி''

''இதை நமது திருமந்திரத்தில் வேறு சிம்பிளாக திருமூலர்
சொல்லியிருக்கிறார் என்று அடிக்கடி சொல்வேனே''.

''மறுபடியும் சொல்லுங்களேன். நானும் கேட்கிறேன்''

'' அன்பும் சிவமும் வேறென்பார் அறிகிலார்
அன்பே சிவமாவது யாருமறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே ''

அதவாது நாம் எதை நினைக்கிறோமே அதாகவே ஆகிவிடுகிறோம். இதைத்தான்
கிருஷ்ணன் கீதையிலும் நமக்கு நினைவூட்டுகிறான். எல்லா உபநிஷத்க்ளும்
வேதங்களும் வெவ்வேறு விதமாக ஒரே உண்மையையே பலவாறாக எடுத்துச்
சொல்கின்றன.

விப்ரா பஹுதா வதந்தி -- அறிந்தவர்கள் அவர்கள் அறிந்ததை அவர்கள்
வழியில் சொல்கிறார்களே தவிர சொல்வது ஒன்று தான்.

ரொம்ப தேங்க்ஸ் சார். உங்களை அடிக்கடி வந்து சந்திக்க ஆவலாக உள்ளேன்.

Sivan Krishnan

unread,
Dec 3, 2014, 8:19:37 PM12/3/14
to sivan

                                           தாத்தாவும் பேரனும்

தாத்தா  உங்க  கிட்ட எங்க  ஹெட்மாஸ்டர்  ராதா கிருஷ்ணன்  சார்  தேங்க்ஸ்  சொல்ல சொன்னார். ''

எதுக்குடா கோபு  எனக்கு தேங்க்ஸ்  எல்லாம் ?''

 சில வார்த்தைகளுக்கு   அர்த்தம்  சொன்னீங்களே  அதை  எல்லாம்  எல்லோருக்கும்  ஸ்கூல்லே  போர்ட்லே  எழுதிப்போட்டு  நிறைய  பேரன்ட்ஸ்  அவருக்கு  போன்  பண்ணி  தேங்க்ஸ்  சொன்னதை  உங்களுக்கு  போய்  சேரவேண்டியது  என்றார். உங்களை  மீதி  ஏதாவது எழுத  சொல்லி  வாங்கிண்டு வா ''என்றார்.

இந்த  நோட்டிலே  கொஞ்சம்  சேகரிச்சு  எழுதி வச்சிருக்கேன்  அதை  கொண்டு போய்  கொடு.  நீயும்  படி  ''

கோபு  படிக்கும்போது  நாமும்   தாத்தாவின்  ''நோட்ஸ்''  அவன் படிப்பதை  சேர்ந்து  படிப்போமா ?

11. हल्दी   ஹல்தி --  வீட்டில்  மஞ்சள் நீர்  தெளிப்பது -  வீட்டில்  ஒரு  விசேஷம்  என்றால்  நிறைய பேர்  வருவார்களே.  அவர்களில்  யாருக்கு  என்ன  உடல் உபாதை, வியாதி,நோய்  இருக்குமோ,  அது  எளிதில்  அடுத்தவருக்கு  பரவக்கூடுமே.  மஞ்சளுக்கு  நோய்  தடுப்பு சக்தி,  நுண் கிருமி நாசினியாக செயல்படுவது  போன்ற சக்தி  இருப்பதை  உணர்ந்த  நம் முன்னோர்கள்   அதை ஒரு சடங்காக, புனிதப்படுத்தி கட்டாயம்  செய்ய வேண்டிய ஒரு  சடங்காக செய்திருக்கிறார்கள். மஞ்சள் நீராட்டு  விழா,  மஞ்சள்  தேய்த்து  குளிப்பது  என்பது   பெண்களுக்கு ஒரு கிருமிகளிடமிருந்து  உடல்  பாதுகாப்பு  என்பதாவது  புரிகிறதா?   அது   சரி அவர்கள்   எந்த காலேஜில்  MBBS, MD?  

12. गोबर  --   கோபர் -- பசுஞ்சாணம் பிசைந்து  சுவற்றில்  விரட்டி தட்டி வைத்திருப்பார்களே  அந்த  காலத்தில்  ஞாபகம்  இருக்கிறதா?   விரட்டி தட்டி   வைத்த வீட்டில்  ஒரு  வியாதியும்  நுழையாது.   பசுஞ்சாணி  ஒரு  அண்டி பயாடிக் மட்டுமல்ல  சக்தி வாய்ந்த  தாதுப்பொருள்கள் கொண்டது.  விரட்டியை  எரித்த  சாம்பலிலிருந்து   தான் விபூதி.  அதை குழைத்து  நெற்றியில், கையில், மார்பில்  ஏன்  பூசுகிறோம்   என்று புரிகிறதா?   அது ஒரு  கவசம்  தம்பி!

13. गोमूत्र       கோமூத்ர -  பசுவின் கோமியம்  எத்தனையோ  வியாதிகளை  குணப்படுத்துகிறது  என்று   பல நூறு  ஆண்டுகளுக்கு  முன்பே  கண்டுபிடித்து  வைத்திருக்கிறார்கள்   நம் முன்னோர்கள். பித்தம்,  கபம்,  இதய நோய், விழ முறிவு சக்திகளை  கொண்டது. பஞ்ச கவ்யம்   என்கிற வார்த்தை  கேள்விப்பட்டதுண்ட   தெரியாதவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளவும்.  அதை  ஒவ்வொரு  முக்ய பண்டிகைகளிலும்  விசேஷங்களிலும்  அனைவருக்கும் கொடுப்பது  ஒரு  அவ்ஷத மாகவே தான்.  உள்ளும்  வெளியும்  பரிசுத்தமாவதற்கு.
.
14.शिक्षा  -   சிக்ஷா -   தண்டனை. -  முட்டி போடுவது -   தோப்புகரணம் போடுவது -   இதை நான்  சின்ன  வயதில்   பள்ளிக்கூடத்தில் அனுபவப்பட்டிருக்கிறேன்  -   ரெண்டு  கையாலும் ரெண்டு காதைப் பிடித்துக்கொண்டு   தோப்புக்கரணம்  போடுவதால்   புத்தி கூர்மையாகிறது   என்று இவ்வளவு   லேட்டாக  கண்டு பிடித்திருக்கிறார்கள். முடக்கு வியாதி ,Asperger’s Syndrome, படிப்பில்  மந்தம்,  மற்றும்      எல்லாம்  நீங்கிவிடுமாம். 

15. दिया      தியா -    எண்ணெய் ,  நெய்    விளக்கு கோவிலிலும்  வீடுகளிலும் ஏற்றுவது.  இது சுற்றுப்புறத்திலும்   மனத்திலும்  நல்ல  எண்ணங்களை உண்டாக்கும். நமது அறிவும்   புத்தியும் வளர்கிறது.  

16.जनोई ‘  ஜனொயீ   -  பூணல்  -   (  அநேகருக்கு இதன்  உபயோகம் முதுகு  சொறிவதற்கு மட்டுமல்ல)   ஆகு ப்ரெஷர்  வைத்தியத்தையும்  சேர்ந்தது. இதை பூணுவதால்  எத்தனையோ   வியாதிகள் வராமல்  தடுக்க  முடியும். .

17. तोरण    தோரணம்   -   வாசலில் கட்டி தொங்க விடுகிறோமே அது.   வாசலுக்கே  தோரண வாயில்   என்று  பெயர்  அந்த காலத்தில்.   மாவிலை தோரணம்,  வேப்பிலை தோரணம்,   அசோகா மர  இலை  தோரணம்  சுற்றம்  சூழ்நிலையை  பரிசுத்தமாக்குகின்றன.   இதால் வியாதி  அந்த  வீட்டிலுள்ளவர்களுக்கு  பரவுவதில்லை.  அம்மை  போட்டு   இருந்தால்  அந்த  வீட்டில்  வேப்பிலை     பார்த்தாலும்  சொருகி வைக்கும்  வழக்கம்  இருந்தது அப்போது. வாசலில்  ஒரு  பக்கெட்டில் வேப்பிலை  மஞ்சள்  கலந்த தண்ணீர்  வைப்போம்.  அதால்  கை  கால்  சுத்தம்   செய்து கொண்டு   தான்  உள்ளே வர விடுவார்கள்.   தலையில் ப்ரோக்ஷனம்  செய்துகொள்வோம்.    இதெல்லாம் தடுப்பு  மருந்துகள்.   அதை வலியுறுத்தத்  தான்  மஹமாயீ என்று அவளை  வேண்டிக்கொள்வோம். 

18.चरणस्पर्श    சரணஸ்பர்சம்  --  பெரியவர்களின்  கால்களை  தொட்டு  கும்பிடுவது.  இப்படி  அடிக்கடி   குனிந்து எழுவதால்  முதுகெலும்பு  நல்ல அமைப்பை பெறும் . ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.    உடலுக்கும் நல்லது.  பெரிசுகளுக்கும்  மரியாதை.  அதுகள்  சந்தோஷமாக வாழ்த்துவதும் கிடைக்குமே. 

19. चिताग्नि   சிதாக்னி   --  இறந்தவர்களுக்கு   ஸ்மசானத்தில்  எரியூட்டுவது.   இறந்த உடலை  சுத்தமாக  அழிப்பது. அதிலுள்ள கிருமிகள்   பரவாமல் அழிப்பது.

20. ॐ    ஓம்   மந்திரம் உச்சாடனம்.  --  இதயத்துடிப்பை  சீர் படுத்தும். மனத்தை  ஒருமைப்படுத்தும். புலன்களின் சக்தியை   ஒரு கட்டுபாட்டுக்குள்  வைக்க  உதவும். இதற்கு மேல்   என்ன பரிசு  வேண்டும்.?

21. हनुमान चालीसा   ஹனுமான்  சாலிசா -   இதைப்பற்றி  ஏதாவது சொல்வதற்கு  முன்பு ஒரு  உண்மையை சொல்லிவிடுகிறேன்.  NASA,  அமெரிக்காவில்  உள்ள  விண்  வெளி ஆராய்ச்சி நிபுணர்கள்  இரவும் பகலும் உழைத்து    சாப்பிடாமல், தூங்காமல்  கண்டுபிடித்தது என்னவென்றால் ஹனுமான்  சாலிசாவில் சூர்யனுக்கும்  நமது பூமிக்கும் இடையே உள்ள  தூரத்தை எப்படி அளப்பது  என்று  சொல்கிறதாம்.  ஹனுமான்  தான்  சின்னவயதிலேயே  NASA  பற்றி   தெரியாமலேயே சூரியனை  ஒரு பழம் என்று  கருதி அதனிடம்  சென்று அதை  விழுங்கி  வாய் புண்ணாகி  வெண்ணை  தடவிக்கொண்டவராயிற்றே.  பூமி-சூரியன் தூரம்  தெரியாமலா  தாவினார்.

22.शंख     சங்கு  -   சங்க  நாதம்  ஒலிக்கற்றைகளை  அவிழ்த்து  விடுகிறது.   இதனால் கெடுதல்,   தீமை விளைவிக்கும்  கிருமிகள்  மடிகின்றன.  சிறிய தீமை  செய்யும் பூச்சிகள்  இறக்கின்றன. கொசு  குடும்பம் திண்டாடுகிறதாம்.  அவற்றின் உற்பத்தி எண்ணிக்கை  குறைவதால்  மலேரியா  நோய்  அதிகமாக பரவாதாம். .

Sivan Krishnan

unread,
Dec 5, 2014, 8:10:41 PM12/5/14
to sivan
தாத்தாவும் பேரனும்

தாத்தா நேற்று உன்னைச் சுற்றி நிறைய தாத்தாக்கள் பார்க்கில்
உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்களே என்ன விஷயம்.

ஒன்றுமில்லை அவர்கள் சங்கத்தில் ஏதோ தகராறு. ஒன்றுமில்லாத விஷயத்தை
பெரிதாக பண்ணி அவர்களுக்குள்ளே ஒரு சச்சரவு. பூசல். கூச்சல்.
என்னிடம் கேட்டபோது நான் சங்கத்திற்கு வரமாட்டேன். எனக்கு அமைதி தேவை
என்றேன். பொதுவாக வயதானவர்கள் மதிக்கப்படவேண்டுமானால்

1. தேவையற்ற பேச்சைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.

2. குற்றம் குறை இருந்தாலும் பொறுமையாக இனிமையான வார்த்தைகளால்
எடுத்து சொல்லவேண்டும். நாம் சொல்வதோ செய்வதோ தான் முறை என்ற
தவறான எண்ணம் கூடாது. நமக்குத் தெரியாதது மற்றவருக்கு
தெரிந்திருக்கலாமே என்ற ஞானம் உள்ளே இருக்கவேண்டும்.

3. மூத்தவர்களின் ஒவ்வொரு செயலும், சொல்லும் பிற ருக்கு
எடுத்துக்காட்டாக முன்னுதாரணமாக, பின்பற்ற ஏற்றுக்கொள்ளத் தக்கதாக அமைய
வேண்டும்.

4. பெரியவர்கள் வாழ்ந்து அனுபவம் பெற்றவர்கள் என்ற
எதிர்பார்ப்புக்குத் தக்க நடந்துகொள்ள மேற்சொன்னவையே சான்றாக
இருத்தல் அவசியம்.

5. விரோத மனப்பான்மை மனதில் இருந்து அகன்று அந்த இடத்தில் மற்றவர்
மீது அன்பும் மரியாதையும் கலந்து நிரம்பி இருக்கவேண்டும்.''

''தாத்தா பணம் சேர்த்து வைத்தால் தவறு என்கிறார்களே?''

பணம் செல்வம் என்ற பெயர் கொண்டது. ''செல்வோம்'' என்று அது கை
மாறிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் தான் அதற்கு முன்னோர்
இந்த பெயரிட்டு இருக்கிறார்கள். ஒரே இடத்தில் தங்கி யாருக்கும்
பிரயோசனமாக இல்லாவிட்டால் அதால் வரும் துன்பங்கள் தான் அதிகம்.
நிறைய சொத்துக்கள் இவ்வாறு நீதி மன்றங்களில் முடங்கி கிடக்கிறது.
ஆகவே தான் இருக்கும்போதே நிறைய தர்மம் தானம் செய்ய வேண்டும் என்று
அனைத்து சாஸ்திரங்களும் சொல்கின்றன. வள்ளுவர் குறள் ஒன்றில் ''
ஊருணி நீர் நிறைந்தற்றே பேரறிவாளன் திரு '' என்கிறதன் அர்த்தம், எப்படி
ஒரு ஊரில் இருக்கும் பொதுக்கிணறு அந்த ஊர் மக்கள் இறைக்க இறைக்க
மேலே மேலே நீர் ஊறிடுமோ அது போல் செல்வந்தன் ஒருவன் அறிவுள்ளவனாக
இருப்பின் அவன் அளிக்கும் தானமும் தர்மமும் மேலே மேலே அவனை அதில்
ஈடுபட செய்யும். மிடாஸ் என்ற ஒருவன் எதைத் தொட்டாலும் தங்கமாக மாற
வரம் பெற்று பசியில் உணவைத் தொட்டபோது அதுவும் தங்கமாக மாறி உண்ண
முடியாமல் தவித்த கதை தெரியுமல்லவா.

நாம் எப்படி உதவ வேண்டும் என்று ஒரு கதை சொல்கிறேன்.

பரசுராம நகர் 3 வது தெருவில் உள்ள ஒரு சின்ன பார்த்தசாரதி சுவாமி
கோவிலில் ஏறக்குறைய இருபது முப்பது பேர் தன்னுடைய கதையை கேட்க
வந்திருப்பதில் ஸ்வரபூஷண சங்கீத ஸ்லோக கதா காலக்ஷேப சிம்மம் சுப்பு
சாஸ்திரிக்கு பரம சந்தோஷம். கர்ணனின் தான தர்மங்களை விஸ்தாரமாக
சொல்லி முடித்தார்.

வெகு நன்றாக பிரசங்கம் செய்து முடித்து சபையை பெருமிதத்துடன்
நோக்கியபோது பித்தளை செம்பு கும்பகோண பாத்திரக்கடை சோமசுந்தரம்
பிள்ளையின் தலை குனிந்து விசனத்துடன் இருப்பதைக் கண்டார்.

" என்ன சோமு, எதையோ பறி கொடுத்தமாதிரி..!! எல்லோருக்கும் நல்லதையே
செய்யும் நாராயணன் உன்னை சந்தோஷமாக வாழ வைத்திருக்கும்போது
ஏன் கவலை?? என்றார்.

"சாமி, என்னை எல்லோரும் கஞ்ச பிரபு கருமி என்கிறார்களே, என் சொத்து பூரா
இந்த கோயிலுக்கு தானே எழுதி வச்சிருக்கேன். ??

இதுக்கா கவலை? உனக்கு பசுவும் பன்றியும் என்கிற கதை சொல்றேன் கேள்.
பசுவை பார்த்து பன்றி கேட்டது.

"உன்னை மட்டும் எல்லோரும் கொண்டாடறாங்களே, என்னை திட்றாங்களே.??!! நீ
பால் மட்டும் தான் கொடுக்கிறே.நான் என்னுடைய உடல் இறைச்சியையே
கொடுக்கிறேனே. விதவிதமாக தின்னுட்டும் இளக்காரமா பேசுறது ஏன்??

பசு சொன்னது: "தம்பி நான் உயிரோடிருக்கும்போதே எல்லோருக்கும் பால்
தினமும் தரேன். நீ செத்தப்புறம் தான் உன் சதையை திங்கிறாங்க.
புரிஞ்சுதா? .

இந்த கதை அர்த்தம் சோமசுந்தரத்துக்கு புரியாவிட்டாலும் நாம் புரிந்து
கொள்ளவேண்டியது

நீதி:

"வாழும் போதே உன்னாலான உதவியை எப்போதும் இடைவிடாமல் செய். பசுவாக உன்னை
போற்றுவார்கள். "

sree krishna

unread,
Dec 7, 2014, 8:48:22 PM12/7/14
to jks...@vsnl.com
  தாத்தா  சொன்ன சாமி தாத்தாவின்   விளக்கம்  

''நமஸ்காரம் .  ராமகிருஷ்ணன் ''
யாரு  தெரியல்லியே?
உங்க  பேரன் கோபுவும்  என்  பையன்  ராஜாவும் க்ளாஸ்மேட் . உங்களைப்பத்தி அடிக்கடி  வீட்டிலே  சொல்லுவான்.  உங்களைப்பார்த்து  இன்னிக்கு  ஆசீர்வாதம்  வாங்கிக்க வந்தேன்.
என்ன விசேஷம்  இன்னிக்கு 
எனக்கு  பர்த்டே.  
ரொம்ப சந்தோஷம்   எல்லாம் அந்த  கிருஷ்ணன்  க்ரிபை.  நாம எல்லோரும்  நன்றாக வாழ  என்னென்னவெல்லாம்  செய்திருக்கிறான்  அந்த  கிருஷ்ணன். அவனே  ராமனாகவும்  கருனாசாகரமா இருந்து  சேவை  பண்ணியிருக்கிறான்.  அருமையான  பேர்  உங்களுக்கு.  எந்த  ஊர்  உங்களுக்கு?''  
ஈரோடு.
அப்படியா  ரொம்ப   அருமையான ஊரு.   நான் போயிருக்கேன் . பவானிலே  ஸ்நானம் பண்ணியிருக்கேன்.  அருமையான சிவன் கோவில்  கரையிலே இருக்கே.  அதுசரி  உங்க ஊருக்கு அந்த  விசேஷ பேர்  எப்படி  வந்துதுன்னு  உங்களுக்கு  தெரியுமோ?
ஈரோடு என்றால்  என்ன அர்த்தம்   என்றே தெரியவில்லை எனக்கு.   ஈ  தெரியும்   ரோடு  தெரியும்   ரெண்டுக்கும் என்ன  சம்பந்தம் என்று  தெரியாது  என்று  சிரித்தார்  ராமகிருஷ்ணன் 
ஈரோடு பேர் வந்த காரணம்  நான்  சொல்லலே.  மஹா பெரியவா சொன்னது.

பெரியவாளை வணங்க வந்த ஒருவரை ஊர்,பேர் விசாரித்தார்  ஈரோட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. உன்  ஊருக்கு அந்தப் பேர் எப்படி வந்தது தெரியுமா" என்றார்.
அவருக்குத் தெரியவில்லை. "சரி உங்க ஊர் சுவாமி பேரென்ன?"
என்றார். "ஏதோ வித்தியாசமாக இருக்கும் மறாந்து போச்சு.."
என்றார். "ஆர்த்ர கபாலீசுவரர்னு பேரோ?" என்றார் பெரியவா.
"ஆமாம்..ஆமாம்!" என்று அவர் சொல்லவே,
 "அதற்குத்தான் 'ஈரோடு'னு அர்த்தம்.
 'ஆர்த்ரம்னா ஈரம்; கபாலம்னா மண்டையோடு. ஈர ஓட்டைக் கையிலே  வைத்திருப்பதால் [ஈரோடு} சுவாமிக்கு  அந்தப் பெயர். பிரும்மாவோட அஞ்சு தலைலே ஒரு தலையை சிவபெருமான் திருகி எடுத்ததால், பிரம்மஹத்தி தோஷத்தினால்  சிவன் கையிலேயே கபாலம் ஒட்டிக் கொண்டுவிட்டது. திருகி
எடுத்தால் ரத்தம் சொட்டிய ஈரத்துடன் கூடிய ஓட்டைக் கையிலே
வைத்திருக்கும் சுவாமியை உடைய ஊர் 'ஈரோடு' என்றார்.[ஈர+ஓடு]!"

சார்  இன்னிக்கு  தான்  ஈரோடு  பேர்   மகிமை எனக்கு தெரிஞ்சுடு  என்றார்  ராமகிருஷ்ணன். 

அசாத்யம்.  பெரியவா   ஒரு மொபைல்  என்சைக்ளோபீடியா.  தெரியாத விஷயமே கிடையாது.  அதில்  ஒண்ணும்   ஆச்சர்யம்  இல்லை.  தெய்வத்துக்கு  ஒண்ணுமே  தெரியாம  இருக்கமுடியுமா?   

 
Reply all
Reply to author
Forward
0 new messages