Advisory for Sastrahatha Mahalayam – Honoring War Martyrs Tomorrow is Śāstra-hata Mahālayam (Sastrahatha Mahalayam), a sacred occasion to remember those who departed by weapons.
According to dharmic tradition, martyrs, soldiers, and all who laid down their lives for dharma and the nation may be included under Karunika Pitṛs (compassionate ancestors).
All are encouraged to perform Mahalaya Śrāddham or Tarpanam tomorrow for these brave souls so that we stand united in gratitude and prayer.
Suggested Sankalpam Addition
“Śāstra-hata Vīra-martya-pitṟbhyaḥ, karuṇika-pitṟbhyaḥ namah.”
(For the valiant martyrs felled by weapons, and the compassionate ancestors, salutations.)
After your regular Mahalaya offerings, offer an extra Tarpanam or a small prayer:
“May the noble souls of all martyrs attain peace and divine grace.”
Let us join together in this act of respect and remembrance.
சஸ்திரஹத மஹாளயம் – போரில் உயிர்நீத்த வீரர்களை நினைவுகூரல்
நாளை சஸ்திரஹத மஹாளயம் (Sastrahatha Mahalayam) ஆகும். ஆயுதங்களால் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் புனிதமான நாள் இது. தர்ம சாஸ்திரப்படி, வீரமரணம் அடைந்த வீரர்கள், படைவீரர்கள் மற்றும் தர்மத்திற்கும் நாட்டிற்கும் உயிர்தந்தவர்கள் அனைவரையும் கா ருணிக பித்ருக்கள் (அனுதாபமுள்ள முன்னோர்) ஆகக் கொண்டு தர்ப்பணம் செய்யலாம்.
எல்லோரும் நாளை மஹாளய ஶ்ராத்தம் அல்லது தர்ப்பணம் செய்து, இவ்வீரர்களுக்காக நன்றி மற்றும் பிரார்த்தனையுடன் ஒன்றுபட வேண்டும்.
சங்கல்பத்தில் சேர்க்க வேண்டிய சொற்கள்:
“சஸ்திர-ஹத வீர-மர்த்த்ய பித்ருப்ய: கா ருணிக-பித்ருப்ய: நம:.”
(ஆயுதத்தால் உயிர்நீத்த வீரர்களுக்கும் கருணையுள்ள முன்னோர்களுக்கும் நமஸ்காரம்.)
வழக்கமான மஹாளய தர்ப்பணத்திற்குப் பின், சிறிய தர்ப்பணம் அல்லது பிரார்த்தனை செய்யவும்:
“அனைத்து வீரமரண ஆன்மாக்களும் அமைதி பெற்று தெய்வ அனுகிரகத்தை அடையட்டும்.”
நாம் அனைவரும் ஒன்றுபட்டு இவர்களின் தியாகத்தை நினைவுகூருவோம்.
N Jambunathan , Chennai