ஆசமனம்

2 views
Skip to first unread message

Sivan Krishnan

unread,
Mar 10, 2026, 3:49:50 AM (5 days ago) Mar 10
to amrith...@googlegroups.com
ஆசமனம்  -  நங்கநல்லூர்  ஜே.கே. சிவன் 

ஆசமனம் (Āachamanam) என்பது வேதங்கள் சொல்வது மாதிரி வழிபடுவது.ஒரு முக்கிய கிரியை.  எந்த வேத மந்திர ஜபம், பூஜை, ஹோமம், ஸந்த்யாவந்தனம், திதி, தர்ப்பணம் பண்ணும்போதும்,  முதலில்  அதை பண்ணும்  ஆசாமியின்  உடல். உள்ளம்,  வாக்கு, எல்லாமே  சுத்தமாக இருக்க வேண்டும்  என்பதற்காக  செய்வது தான்  ஆசமனம்.
ஆ = அருகில், கிட்டே , சமனம் =   பருகுவது , குடித்தல் / உள்வாங்குதல்.அதாவது மந்திரத்துடன் ஜலத்தை கொஞ்சம் உதட்டில் வைத்து பருகுவது. 

சுத்த நிலையில் கர்மம் செய்யக் கூடாது; ஆசமனம் செய்து சுத்தமாவதே முதலில் பண்ண வேண்டிய  காரியம்.  வலது கை விரல்களை சேர்த்து உள்ளங்கையை குவித்து குழி மாதிரி,  கோகர்ண முத்திரை மாதிரி போல வைத்துக் கொள்ள வேண்டும். அதில் இருக்கும் ஜலம் 'பிரம்ம தீர்த்தம் – ஆசமனம் செய்ய ப்ரம்ம தீர்த்தம் , பித்ரு தீர்த்தம் – தர்ப்பணம்
தேவ தீர்த்தம் – தேவர்களுக்கு அர்ப்பணம் என்பதால் மூன்று முறை ஆசமனம் பண்ணுகிறோம்.

முதலாவது முறை   ''ஓம் கேசவாய ஸ்வாஹா. பஞ்ச பாத்திரத்திலிருந்து ஒரு துளி உத்ரணி மூலம் வலது உள்ளங்கையில் விட்டு உதட்டில் பருகுவது.

2வது முறை  ''ஓம் நாராயணாய ஸ்வாஹா''  ரெண்டாவது முறை பருகுவது.
3வது முறை  ''ஓம் மாதவாய ஸ்வாஹா''  மூன்றாவது முறை பருகுவது.

பிறகு கைகளை சுத்தம் செய்து விஷ்ணு நாமங்கள் சொல்ல வேண்டும். விஷ்ணுவின் பன்னிரண்டு  நாமங்கள்  துவாதச நாமம் எனப்படும்  12  நாமங்கள் : கேசவாய நம:
நாராயணாய நம: மாதவாய நம:  கோவிந்தாய நம: விஷ்ணவே நம: மதுசூதனாய நம:
திரிவிக்ரமாய நம: வாமனாய நம: ஸ்ரீதராய நம: ஹ்ரிஷீகேசாய நம: பத்மநாபாய நம:
தாமோதராய நம:

ஆசமனம் செய்யும் போது  மேலே சொன்ன  நாமங்களைச் சொல்லும்போது:  உதடு
கைகள்,கண்கள்,தலை,மார்பு -- இதெல்லாம் தொடுவதை  ''அங்க ந்யாஸம்' என்கிறோம். 

ஆசமனம்  என்றால் நம்மைப் பொறுத்தவரை  மூணு தடவை சும்மா கொஞ்சம் தண்ணி குடிப்பது இல்லை..இதற்கு ஆழமான தத்துவம் உள்ளது. மனம் வாக்கு காயம் மூன்றும் சுத்தமாக  மூன்று தடவை ஆசமனம் அவசியம். 

 நாராயணன் எனும் விஷ்ணு சர்வ வியாபி.எங்கும் எதிலும் உள்ளவர் என்பதால் அவரை  வணங்கி அவரது 12 நாமங்களை சொல்லி  ஆசமனம் செய்வதால்  நன்மை என்று ஸயன்ஸ் , விஞ்ஞான ஆராய்ச்சி கூட  தலை ஆட்டுகிறது. இதனால் ஆயுர்வேத சாஸ்திரம் சொல்வது சரி என்று நிரூபணம் ஆகிறது. 

ஆசமனம் செய்வதால்  ஜீரணம் மேம்படும், ஜீரணத்தை தூண்டும். மன அமைதி கிடைக்கும். நரம்பு அமைதி, செயல்பாடு  மேம்படும் .

ஆபஸ்தம்ப கிருஹ்ய சூத்திரம்,  ஆஸ்வலாயன கிருஹ்ய சூத்திரம்,போதாயன கிருஹ்ய சூத்திரம்   இவை எல்லாம் ஆசமனத்தை அவசியமான சுத்திகரிப்பு கிரியா என்று கூறுகின்றன. 

ஆசமனம் உட்கார்ந்து தான் செய்யவேண்டும். நிற்கும் போதுநடக்கும் போது,அழுக்கான இடத்தில், பேசிக்கொண்டே  எல்லாம்  பண்ணக்கூடாது.  பொதுவாக  ஜலம், நீர், என்பது 
ப்ராண சக்தி. அதை மந்திரத்துடன் உடலுக்குள் கலந்து கொண்டால்  ப்ராணன்  சுத்தமாகும்
மனம் சுத்தமாகும் அதனால் தான்  ஆசமனம் இல்லாமல் கர்மம் செய்யக் கூடாது என சாஸ்திரம் சொல்கிறது. 

சந்தியா வந்தனம், , பிரம்ம யக்ஞம், ஔபாஸனம், ஸமிதாதானம், பித்ரு தர்ப்பணம் கோயிலில் ஆறுகால பூஜைகள், வீட்டில் நித்ய பூஜை போன்ற பல முறைகளிலும் மல ஜலங்கழித்தபின் தேக சுத்தி  இது  எல்லாவற்றுக்கும் முதலில்  அவசியம்..என்ன பூஜை செய்கிறோமோ, அதற்கான ஸங்கல்பத்திற்கேற்றவாறு ஆசமன மந்திர விளக்கங்கள் மாறும்.
 உடல் சுத்திக்காக செய்யும் ஆசமனத்தில் உடலில் உள்ள தேவதைகளே அதை ஏற்றுக்கொள்வார்கள்.
சந்தியாவந்தனத்தில் சூர்ய சவிதா மண்டல தேவதைகளும் தேவ மண்டல தேவதைகளும் ஆசமனத்தை ஏற்பார்கள்.

பஞ்சபாத்ரத்தில்  இருக்கும் வரை அது சாதாரண நீர்!  ஆனால் வலது கை உள்ளங்கையில் ஊற்றப் பட்டவுடன் அது “பிந்து கோஷ்ட தீர்த்தம் “.   கிழக்கே பார்த்து அமர்ந்து வலது உள்ளங்கையை தீர்த்தம் ஏற்க குழியாக மடித்தால் அது தான் “பிந்து கோஷ்டம்” .

பிந்து கோஷ்டத்தில் தீர்த்தத்தை ஏந்தி “கேசவா, நாராயணா,   அச்யுதா, அனந்தா என்று நாராயணனை  ஸ்தோத்ரம் பண்ணும்போது உள்ளங்கையில் உள்ள நீர்  ஆசமன பூஜைக்கேற்ப தேவதீர்த்தம், பித்ரு தீர்த்தம், ஸ்வதா தீர்த்தம், ஸாவித்ரீ தீர்த்தம் என பல வகைப் பெயர்களில் அனுக்ரஹ சக்திக்கேற்ப மாறிவிடுகிறது.

கிழக்கே இந்திர மண்டலத்தின் பகுதியில் வாலகில்ய மஹரிஷிகள் தவம் புரிகின்றனர். இவர்கள் பிந்து கோஷ்ட தீர்த்தத்தை மட்டுமே அருந்திக் கடுமையான தவம் புரிபவர்கள்.
.எதற்கு? யார் ஒருவர் பிந்து கோஷ்ட தீர்த்தம் மூலம் விஷ்ணு நாமங்களுடன் ஆசமனம் செய்கின்றார்களோ அவர்களுடைய கர்ம வினைகளில் ஒரு சிறிதைத் தாங்கள் ஏற்று அனுபவிப்பதற்காக!   அடாடா   என்ன தியாகம்!
அதனால் வாலகில்ய மஹரிஷிகள் தவம் மேம்படுவதற்காகவும், அவர்களுடைய ஆசியினைப் பெறவும் கிழக்கு நோக்கி ஆசமனம் செய்கிறோம்.
வடக்கு திசையில் ஆசமனம் .எதற்கு தெரியுமா?
ஸ்ரீவித்யா மேரு சக்கரத்தில் 43 கோடி அம்பிகைகள், தெய்வ மூர்த்திகள் உறைவதாக ஐதீகம்.  வடக்கு காந்ததிசைப் பகுதியில் “சுக்ல வர்ணா” என்ற அம்பிகை அருள்பாலிக்கிறாள்

உச்சிக் காலத்திலும் மாலையிலும் சுக்ல வர்ணா அம்பிகையிடம் பூசுவர்ணா, நீளாக்ய வர்ணா, பர்பராலிக வர்ணா, பலிபந்தன வர்ணா, பாச வர்ணா என்று ஐந்து உபதேவியர் உண்டு. இவர்கள்  தான்  நமது பஞ்சேந்திரியங்கள் செய்த தீவினைகளின் தீயசக்தியை ஓரளவு குறைத்து நம் தேகத்தை புனிதப்படுத்துபவர்கள். மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்தினாலும் நாம் செய்கின்ற நல்ல, தீய காரியங்களுக்கேற்ப நம் தேகத்தின் பஞ்சபூத சக்தி கூடும்/குறையும்.
மனிதன் நீண்ட ஆரோக்யத்துடன் வாழ பஞ்சபூத சக்தி தேவை.  நித்ய ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம் இதைத் தருகிறது   தீய காரியங்களில் எண்ணங்களில், ஈடுபட்டால் இப்பஞ்சபூத சக்தி குறையும். அதன் விளைவாக நோய்கள், மனவருத்தங்கள் உண்டாகிறது.

வடக்குத் திசையில் செய்கின்ற ஆசமனத்தின் போது உள்ளங்கையில் ஏந்துகின்ற தீர்த்தமானது 'சுக்ல கோஷ்ட தீர்த்தம்'    இதில் கேசவா, நாராயணா,அச்சுதா, அனந்தா என்ற நாராயண நாமங்கள் சேர்ந்தால்  இவற்றையே சுக்ல தாரிணியின் ஐந்து உபதேவிகள் நம் உடலில் 72 ஆயிரம் நாடிகளிலும் சுழலச் செய்கின்றனர். அவர்கள் தான் 'கோவிந்தா' என்று ஆசமனத்தின் கடைசி மந்திரத்தின்  மூலம்  நாம் கையில் உள்ள  தீர்த்தத் தைக் கீழே விடும்போது  அதை அர்க்யமாக ஏற்று நம்முடைய பஞ்ச இந்தியங்களினால்  விளைந்த தீவினை கர்ம வினைகளை நீங்கச் செய்பவர்கள்.

இந்த ஆசமனம் செய்த பின்னர் தான் அடுத்து வரும் பூஜையைச் செய்வதற்கான தகுதியை நம் தேகம்  பெறுகிறது.

இது தெரிந்து போய்விட்டதால் இனிமேல் ஆசமனத்தை ஏதோ மூணு தடவை கொஞ்சம் தண்ணீர்  குடிக்க வேண்டும், கடைசியில் ஒரு தடவை கீழே  ஊற்ற வேண்டும் என  அர்த்தம் தெரியாமல் சாதாரணமாக நினைக்காமல்  ஆச மனம ஹிமையாய்  புரிந்து கொண்டு ந்து சிரத்தையுடன் பண்ணுவோமா?

கோயில் தீர்த்தக் குளங்களைப் போல் ஒரு சாதாரண மனிதனும் தன்னுடைய வலக்கை உட்புறத்தைக் குழிவாக அமைத்துப் பிந்து கோஷ்டத் தீர்த்தம், சுக்ல கோஷ்ட தீர்த்தங்களை எளிமையான மந்திரங்கள் மூலம் உருவாக்கி  பெற முடியுமென  அறியும்போது  மா, எவ்வளவு பாக்கியசாலிகள் என்று உணர முடியும். நமக்கு எவ்வளரு அற்புத மந்திரங்கள் கிடைத்துள்ளது என்று மகிழலாம்.

ஆசமன மந்திரம்   ரொம்ப சிம்பிள். எல்லோருக்கும் உரித்தானது. நாள் முழுதும் பூஜை, ஹோமம், தர்ப்பணம் போன்ற எவ்வழிபாட்டிற்கும் முன்னரும் இந்த எளிய ஆசமனத்தைச் செய்து அனைவரும் பயனுற வேண்டும்  

ஆசமனம் (Āchamanam / Ācamana) என்பது வேத வழிபாட்டு முறைகளில் மிகவும் முக்கியமான ஒரு சுத்திகரிப்பு கிரியை. எந்த வேத மந்திர ஜபம், பூஜை, ஹோமம், ஸந்த்யாவந்தனம், திதி, தர்ப்பணம் போன்றவற்றை செய்யும் முன்பும் உடல்–மனம்–வாக்கு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆசமனம் செய்யப்படுகிறது.



Reply all
Reply to author
Forward
0 new messages