♨️♨️♨️♨️♨️♨️🌴♨️♨️♨️♨️♨️
♨️. சங்கராம்ருதம்
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்
திருவிடைமருதூரைச் சேர்ந்த T.A. சுவாமிநாதன் சொல்கிறார். 1933-ஆம் ஆண்டு திருவிடைமருதூரில் தைப்பூசத் திருவிழா
♨️♨️♨️♨️♨️🐄♨️♨️♨️♨️♨️♨️
எட்டாம் நாள் தேர் உலா. கொல்லன்கோடி மூலையில் தேர் அடைந்தபோது முட்டுக்கட்டைகள் நசுங்கிவிட்டதால், தேர் நேரே வடம்போக்கித் தெருவழிச் சென்று பள்ளத்தில் இறங்கிவிட்டது.
அந்த ஆண்டு கும்பகோணம் மஹாமகத்திற்கு ஸ்ரீபெரியவா விஜயம் செய்து புனித நீராடலை முடித்துக் கொண்டு திருவிடைமருதூருக்கு வந்து பச்சையப்பன் தெருவில் தங்கினார்கள்.
மஹாலிங்கசுவாமி தேர் தடைப்பட்டு நிற்பதைக் கேட்டறிந்து ஒருநாள் தீடீரென்று ஏதோ தேன்றியதுபோல் புறப்பட்டு வேகமாக நடக்கலானார். மக்கள் கூடவே பின் தொடர்ந்தனர். பெருங்கூட்டமே சேர்ந்துவிட்டது. ஸ்ரீபெரியவா தேர் நின்ற இடம் வந்து மகாலிங்கேஸ்வரரைச் சுற்றிவந்து தரிசித்தார். பின் தேரின் வலப்புறமாக சென்று தேரின் வடத்தை தம் கரங்களால் பற்றி, கூடியிருந்த பக்தர்களைப் பார்த்து ஒன்றாக தேர் இழுக்குமாறு பணித்தார். அதற்குள் கோயில் அதிகாரிகளும் பணியாளர்களும் வந்துவிட்டனர். எங்கிருந்து அத்தனை பலம் எல்லோருக்கும் வந்ததோ தெரியவில்லை. ஆராவாரத்துடன் இழுக்க ஆச்சர்யப்படும் வகையில் தேர் பள்ளத்திலிருந்து மேலே வந்தது. எல்லோருக்கும் உற்சாகமாக இழுக்க தேர் வேகமாகச் சென்றது. அன்று மாலை வடக்குவீதி வந்தது. மறுநாளும் எல்லோரையும் வருமாறு ஸ்ரீபெரியவா உரக்கக் கூற அப்படியே வந்து தேரை இழுத்து நிலைக்கு சேர்ந்தனர்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளே இப்படிப்பட்ட பெரும் சக்தியைக் கொடுத்தருளியதை அனைவரும் உணர்ந்திருக்க வேண்டும்.
அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம்
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
♨️♨️♨️♨️♨️🐄♨️♨️♨️♨️♨️♨️