1 view
Skip to first unread message

sivarajan amirthalingam

unread,
Dec 1, 2016, 11:54:38 AM12/1/16
to Sivarajan Amirthalingam, amirt...@googlegroups.com, saibaba, Sankaravadivel S (Google+), Prabhakaran S (Google+)

டிசம்பர் மாதம் ஆரம்பித்துவிட்டது.இனி பனிக்காலம் தான். இதில் மழையும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேணாம். இந்த குளிர்காலத்தில் தான் ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் உள்ளவர்கள் அதிகம் சிரமப்படுவார்கள். குளிரை கட்டுப்படுத்த சூடான சூப் குடிப்பார்கள். காபி, தேநீர் பழக்கமும் அதிகமாகும். இதனால் தற்காலிமாகத் தான் குளிரைக் கட்டுப்படுத்த முடியும். இயற்கையான சில உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலின் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் குளிர்காலத்தில் தாக்கும் ப்ளூ காய்ச்சலை வரவைக்கும் வைரஸ் உடலை தாக்காமல் கட்டுப்படுத்தலாம்.

இனிப்பு உருளைக்கிழங்கு

இதில் பீட்டா கரோட்டினும், வைட்டமின் சி சத்தும் உள்ளது. இதை உணவில் போதிய அளவு சேர்த்துக்கொள்ளுவதன் மூலம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம். இதனால், இயற்கையாவே உடலுக்கு கதகதப்பு கிடைக்கும். போதிய நார்ச்சத்தும் இனிப்பு உருளைக்கிழங்கில் உள்ளது. வெறும் மசித்த உருளைக்கிழங்கை கொஞ்சம் உப்பு போட்டு மாலை நேர உணவாக கூட எடுத்துக்கொள்ளலாம்.

கேரட்

கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது.குளிர்கால ஃப்ளு வைரஸ் தாக்காமல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.எதிர்ப்புசக்தியை சீராக்கி சுவாச மண்டலத்தை சரியான முறையில் இயங்க வைக்கிறது. கிச்சடி, உப்புமா போன்ற உணவுகளில் கூட போதிய அளவு கேரட்டை சேர்த்து கொள்ளுங்கள். நல்ல பயனை அளிக்கும். கண்கள் நலமாக இருக்கவும், சருமம் மிருதுவாக குளிர் தாங்கவும் கேரட் உணவில் அவசியம்.

திராட்சை பழம்

திராட்சை பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என பலரும் நினைக்கிறார்கள். அது தவறு.திராட்சை பழத்தில் போதிய அளவு வைட்டமின் சி உள்ளது. ஆரஞ்சு பழத்திலும் போதிய அளவு வைட்டமின் சி உள்ளது. இந்த இரண்டு பழங்களையும் காலையில் சாப்பிட்டு வருபவர்களுக்கு அந்நிய வைரஸ் எதுவும் உள்ளே நுழையாமல் குளிர்காலத்தில் உங்கள் உடலை பாதுகாக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகமாக்கும் தன்மையும் இந்த பழங்களுக்கு உண்டு.

பேரீச்சம் பழம்

குளிர்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டியது பேரீச்சம் பழம். இந்த பழம் உடலுக்கு போதுமான கலோரிகளை அளித்து குளிருக்கு உடலை கதகதப்பாக மாற்றும். இரும்பு,பொட்டாசியம், தாமிரம், மக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே போன்ற உயிர்ச்சத்துக்களும் அடங்கியிருக்கின்றன. தினமும் இரண்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு கொழுப்புகள் உடலில் குறையும்.சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும்.

மாதுளம் பழம்

மாதுளம் பழத்தில் ஆண்டி ஆக்சிடென்டுகள் அதிகமாக உள்ளன. வெளிக்காரணிகள் உடலை மாசுபடுத்தாமல் பாதுகாக்க பயன்படுகிறது. உடலுக்கு போதிய எதிர்ப்பு சக்தியை அளித்து,கெட்ட கொழுப்புகளை குறைப்பதிலும் மாதுளம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்கவும் மாதுளை பயன்படுகிறது.


Reply all
Reply to author
Forward
0 new messages