200 கோடி செலவில் திருமணம் :15 ஹெலிபேடுகள் அமைப்பு !

1 view
Skip to first unread message

sivarajan amirthalingam

unread,
Nov 16, 2016, 8:22:37 AM11/16/16
to saibaba, amirt...@googlegroups.com, K.Mohan Mohan

200 கோடி செலவில் திருமணம் :15 ஹெலிபேடுகள் அமைப்பு !

200 கோடி

பிரபல சுரங்க தொழில் அதிபரும் முன்னாள் அமைச்சருமான  காளி ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிரமானிக்கும் ஹைதரபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் விக்ரம் தேவாரெட்டியின் மகன் ராஜிவ் ரெட்டிக்கும் வருகிற நவம்பர் 16ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்காக எல்ஈடி திரையுடன் கூடிய அழைப்பிதழ் பிரின்ட் செய்யப்பட்டிருந்தது.திருமண அழைப்பிதழைத் திறந்தால் காளி ஜனார்த்தன ரெட்டி, அவரது மனைவி மகள் மற்றும் மருமகன் ஆகியோர் திரையில் தோன்றி திருமணத்திற்கு வருமாறு அழைப்பார்கள். திருமண அழைப்பிதழே நாடு முழுவதும் பிரபலம் அடைந்தது. தனது ஒரே மகளின் திருமணத்தை ரூ.200 கோடி செலவில் நடத்த காளி ஜனார்த்தன ரெட்டி திட்டமிட்டுள்ளார்.

திருமணத்தில் 30 ஆயிரம் விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர். விருந்தினர்கள் பலர் ஹெலிகாப்டர்களில் வரவிருப்பதால் திருமணம் நடைபெறும் இடத்தின் அருகே 15 ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களுரு மற்றும் சுற்று வட்டாரங்களில்  1,500 நட்சத்திர ஹோட்டல்களில் அறைகள் புக் செய்யப்பட்டுள்ளன. பண்டைய அரச குடும்பத்தில் திருமணம் நடந்தால் எப்படி இருக்குமோ அதுபோலவே தனது மகளின் திருமணத்தையும் அரண்மனை போன்ற இடத்திலேயே அமைக்க ரெட்டித் திட்டமிட்டுள்ளார். இதனால், திருமணம் நடைபெறும் இடம் அரண்மனை போன்றே அமைக்கப்பட்டுள்ளது. 

இதற்காக 38 ஏக்கர் நிலத்தில் செட்டுகள் அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.  திருமணம் நடைபெறும் இடத்தில் திருப்பதி கோயில் போன்றும் வெங்கடேஷ்வரரின் சிலையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹம்பி நகரத்தில் விருபாக் ஷா கோயிலும் கூட  உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கானப் பணிகளை ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள் உருவாக்கி வருகின்றனர். திருமணத்தை நடத்தி வைக்க திருப்பதியில் இருந்து வேதம் ஓதுபவர்கள் வருகின்றனர்.அரங்கில் அமைக்கப்பட்டுள்ள திருப்பதி வெங்கடேஷ்வரா உருவச்சிலையின் முன்பாக பிரமானி - ராஜிவ் திருமணம் நடைபெறவுள்ளது. 

தமிழகத்தில் இருந்து நாதஸ்வரக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.அதுபோல் பல மாநிலங்களில் இருந்தும் கலைஞர்கள் வரவைக்கப்பட்டுள்ளனர் ஞாயிற்றுக்கிழமை காலையில் திருமணமும் மாலையில் திருமண வரவேற்பும் நடைபெறுகிறது. திருமணத்தில் மட்டும் 5 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர். திருமணத்திற்காக இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து அரிய வகை மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மலர்களைக் கொண்டுதான் அரங்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வெங்கடேஷ்வரா சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. 

அரங்கத்திற்குள்ளேயே மணமக்கள் குடும்பத்தினர், முக்கிய விருந்தினர்கள் தங்குவதற்கு வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையும் சகல வசதிகளும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 15 மற்றும் 16ம் தேதி என இரு  நாட்கள் இங்கேயே தங்குவதால் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநில முறைப்படி விருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  திருமணத்தில் பாலிவுட்டின் அலியா பட், வருண் தவான் போன்றவர்களும் டோலிவுட் நடிகர் நடிகைகளும் கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். முன்னதாக நடிகர் ஷாருக்கான், பிரபுதேவா போன்றவர்கள் திருமணத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இது குறித்து எந்த உறுதிப்படுத்தப்பட்டத் தகவலும் இல்லை. கடந்த ஆண்டில் கேரளத்தில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகளின் திருமணத்தை 55 கோடி ரூபாய் செலவில் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Reply all
Reply to author
Forward
0 new messages